View Full Version : மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம
Pages :
1
2
3
4
5
6
[
7]
8
9
10
11
12
13
14
15
16
17
vasudevan31355
30th August 2014, 10:39 AM
http://i.ytimg.com/vi/MdyU9LGLhzY/hqdefault.jpg
http://video.globaltelevision.tv/uploads/thumbs/mbq5psadbgfa53xf.jpg
http://i.ytimg.com/vi/D8KIBvUrE3g/hqdefault.jpg
vasudevan31355
30th August 2014, 10:40 AM
http://www.thehindu.com/multimedia/dynamic/01781/TH-FR17RAJSRI2_JPG_1781741g.jpg
http://www.thehindu.com/multimedia/dynamic/01148/19cbmppsg_ART_GU75_1148144g.jpg
http://i.ytimg.com/vi/PSwjIxq4OLo/maxresdefault.jpg
rajeshkrv
30th August 2014, 10:42 AM
வாசு ஜி காலை வணக்கம்
RAGHAVENDRA
30th August 2014, 10:46 AM
காலை வணக்கம் அன்பு நண்பர்களே,
இன்று ராஜஸ்ரீ ஸ்பெஷலோ...
அன்பில் ஆடுதே பாடல் தான் உடனே நினைவிற்கு வருகிறது..
ஜி.கே.வெங்கடேஷ் இசையில் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் தாக்கம் இருக்கும். இப்பாடலில் அது நன்றாகவே தெரியும். துவக்க இசை அப்படியே தென்றல் உறங்கிய போதும் பாடலை நினைவூட்டும்.
http://www.youtube.com/watch?v=LBTKLtrz1xk
RAGHAVENDRA
30th August 2014, 10:47 AM
இதே படத்தில் நம்மை மெய் மறக்கச் செய்யும் இசையரசியின் குரலில்
கதை ஒன்று நான் சொல்லவா..
http://www.youtube.com/watch?v=owhnvP56jDE
RAGHAVENDRA
30th August 2014, 10:52 AM
நமது நண்பரும் மய்யத்தின் அங்கத்தினருமான பேராசிரியர் கந்தசாமி அவர்கள் தமிழ்த் திரையிசைக்குத் தன்னாலான பங்களிப்பாக ஒரு இசை நூலகம் மற்றும் ஆய்வகம் ஒன்றை அமைத்திருக்கிறார். அது மட்டுமின்றி யூட்யூப் இணைய தளத்தில் ஏராளமான பழைய அபூர்வ பாடல்களைத் தரவேற்றியுள்ளார். நாம் காணும் பல அபூர்வ பாடல்கள் இவருடைய தரவேற்றல் மற்றும் வேம்பார் மணிவண்ணன் போன்ற நண்பர்களின் தயவினால் தான் என்றால் மிகையில்லை. இதில் நம் முடைய வாசு சாரின் பங்களிப்பும் யூட்யூப் இணையதளத்தில் குறிப்பிடத் தக்கதாகும். தமிழ்த் திரையிசை எதிர்காலத்தில் அடுத்த தலைமுறைக்குச் சென்று சேர இவர்களின் பங்களிப்பு வரலாற்றில் இடம் பெற்றதாகும். இவர்களைப் போன்ற பங்களிப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் இத்தருணத்தில் நம் உளமார்ந்த பாராட்டுக்கள். அனைத்துக்கும் மேலாக இம்மய்யம் இணையதளத்திற்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.
பேராசிரியர் கந்தசாமி தம்முடைய இசை ஆய்வகத்தைப் பற்றிக் கூறுவதைப் பாருங்கள், கேளுங்கள்..
http://www.youtube.com/watch?v=Sn3PaRHp7K4
இன்னொரு அன்பர்
http://www.youtube.com/watch?v=vH5t5hvEcKw
இந்த இசை ஆய்வகம் தொடர்பான காணொளிகள் மேலும் உள்ளன. இவற்றை பேராசிரியர் சேக்கரகுடி கந்தசாமி அவர்களின் யூட்யூப் சேனலில் காணலாம்.
மேற்காணும் காணொளிகள் ஒரு தகவலுக்காக மட்டுமே இங்கு தரப்படுகின்றனவே தவிர வேறோர் இணையதளத்தைப் பற்றி சொல்வதற்காக அல்ல என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
chinnakkannan
30th August 2014, 10:58 AM
வாசு சார்.. பார்த்து நேற்றே எழுதி விட்டேனே..
ஏழு சுந்தர ராத்ரிகள் ஏகாந்த சுந்தர ராத்ரி- முழுதும்பார்த்தேன் ராஜேஷ் ஜி நன்னி :)
வாசு சார்..புதுமஞ்சள் மேனிச் சிட்டு நான் கேட்டிராத பார்த்திடாத பாடல்.. நல்லாயிட்டு இருக்கு.. நன்றி (ராகவேந்தர் சார் சந்தோஷப் படுவார்) மதுண்ணா க்ருஷ்ணாஜி கார்த்திக் சார்லாம் காணோம்..
கார்த்திக் சார்.. உண்மை தான்..எடுத்து இடும் போது நான் செக் செய்யவில்லை..சட்டெனத் தோன்றவும் இல்லை..மன்னிக்க.அந்த சி..எ. நிருபரைத் தேடணும் :)
வாசு சார், ராஜேஷ் ஜி, ராகவேந்த்ர் சார்..ராஜஸ்ரீ பாடல்களுக்கு நன்றி.. வாசு சார் ஸ்டில்களுக்கும்.. (தெலுகு பாட் மட்டும் தான் ஒன்று பார்த்தேன்..அடுத்த போஸ்ட் போட்டு விட்டு நிதானமாய்ப் பார்க்கணும்..(தி தி தே -2)
RAGHAVENDRA
30th August 2014, 10:59 AM
நான் பேச நினைப்பதெல்லாம் பாடல் தொடர்பான ஒரு தகவல் இலங்கை வானொலியில் ஒலிபரப்பபட்டது. அதனுடைய ஒலித்தொகுப்புடன் இப்பாடலின் காணொளி பேராசிரியர் கந்தசாமி அவர்களால் தரவேற்ரப் பட்டுள்ளது.
இதில் ஒலிபரப்பாகும் இலங்கை வானொலித் தொகுப்பாளரின் குரல் யாருடையது எனத் தெரியவில்லை.
http://www.youtube.com/watch?v=iHH2DFb6oO4
RAGHAVENDRA
30th August 2014, 11:04 AM
பொங்கும் பூம்புனல்
நாம் இருக்கும் இடத்தை சுத்தமாய் வைத்திருக்க வேண்டும். அதுவும் நாமே செய்ய வேண்டும் மற்றவர்களை எதிர்பார்க்கக் கூடாது. நம்மவர் பாட்டு ஞாபகத்துக்கு வருகிறதா. இதுவும் புதிதல்ல
1951ல் சிங்காரி படத்தில் பத்மினி பாடுவதாக வரும் காட்சியில் எல்லோரும் சேர்ந்து வீட்டை சுத்தம் செய்யும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதன் நவீன வடிவமே நம்மவர் படத்தில் இடம் பெற்றது எனக் கொள்ளலாம்.
http://www.youtube.com/watch?v=lkhlyTZtNeg
பாடல் - கண்ணதாசன்
குரல் - ஜிக்கி
இசை - டி.ஏ.கல்யாணம்
படம் - சிங்காரி
ஆண்டு 1951
chinnakkannan
30th August 2014, 11:04 AM
திரையிசையூடே திரவியம் தேடு…
****
அத்தியாயம் இரண்டு..
**
அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
கூடவே
அடித்து நொறுக்க
அப்பனும் நோக்கினான்..!
இந்தக் கவிதை எழுதியது மு. மேத்தா.. இந்தக் கருவை – அதாவது காதல்னு இருந்துச்சுன்னா அது தோல்வில தான் முடியும் என்ற படி எண்பதுகளில் பல படங்கள். வந்தன..சில வெற்றி, பல தோல்வியைத் தழுவின..
ஆனால் காதல் என்ற ஆதர்ச சக்தி என்ன செய்யும்.. பிற்காலத்தில் வந்த ஒரு பாட்டு என்னவாக்கும் அது பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத் தான் ஆசை..எஸ்.. ஆனால் யாராலும் அதைக் கண்டுபிடிக்க முடியாது.. அதே போலத் தான் இந்தக் காதல் என்பதும்..என்று இருக்குமோ..
கல்லூரியில் தமிழ் இருந்தது இருவருடங்கள்..அப்போதா அல்லது ப்ளஸ்டூவிலா நினைவில்லை..இந்த சங்கப்பாடல் உண்டு..பாடலுக்குமுன் சிச்சுவேஷன் என்னன்னாக்க..
அந்த யூத் இஸ் வெய்ட்டிங்க் ஃபார் ஹிஸ் லவர்.. (மேஜர் சுந்தர் ராஜனைப் போல): எஸ்..அந்த க் கட்டிளம் காளை தன் மனம் கவர்ந்த கட்டிளம் காளிக்காக (ஓ அர்த்தமே மாறிடுதோ) இளமை ததும்பும் மங்கைக்காக அந்த மாமர நிழலில் மாலை நேரத்தில் காத்துக் கொண்டிருக்கிறான்..
“ஹாய்” எனத் துள்ளிக் குதிக்கும் சூரிய காந்திப்பூவாட்டாம் அவளும் வேகமாய் வந்து அவனைப் பார்க்கிறாள்..”ஸாரிப்பா (மே.சு..:மன்னிங்க அத்தான்!) கொஞ்சம் தாமதமாய்டுச்சு.. ரொம்ப நேரமாக் காத்துக்கிட்டு இருந்தீங்களோ..
”இல்லை டியர்.. வாழ்க்கைங்கறது என்ன..கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தால் காத்திருத்தல் தானே..
வார்த்தை வருமென்று மழலையிலே காத்திருந்து
…வாகாக அன்னையினை அழைத்துவிட்டுப் பூத்திருந்து
கூர்ந்து கவனித்துக் கல்விதனைக் கற்கையிலே
..கொள்ளை கொண்டுவிடும் இளமைக்காய்க் காத்திருந்து
சேர்ந்தே வாலிபமும் வந்துவிட துணைதேடல்
..செல்லும் வாழ்க்கையிலே மகவுக்காய்க் காத்திருந்து
ஊற்றும் ஒருகாலம் வற்றிவிடல் போலத்தான்
..ஓடிவந்த முதுமையிலே காத்திருப்போம் முடிவுக்கே..
இல்லையா டியர்”
“ஹேய் வாட் ஹேப்பண்ட் ( மே.சு.: அன்பான முட்டாள் அத்தானே என்னாச்சு..கொப்பும் குலையுமா மப்பும் மந்தாரமுமா இந்த மாலைவேளையில் ஒரு ஒய்யாரச் சிங்காரி சிருங்காரங் கொண்டு உன்னைத் தேடி ஓடி வந்தாக்க இப்படியா சொல்றது.! இவ்ளோ நீள வாக்கியம்கறதால கொஞ்சம் மூச்சு வேற வாங்குது! )
”ஒண்ணுமில்லை பயந்துடாதே காதலி..கொஞ்சம் நினைச்சுப் பார்..ரெண்டு மாசத்துக்கு முன்னாடி நீயார் நான் யார்னு தெரியாது உன் ஊர் இருக்கற எடம் எனக்குத் தெரியாது (மெஷின் ஆஸ்பத்திரி ஸ்டாப் தெரியும்.ஆனா நான் செய்ன்ட் மேரீஸ்ல தான்படிச்சேன்.. நீ செய்ண்ட் ஜோசப் கான்வெண்ட்னு தெரியாது ) என் ஊர் இருக்கற இடம் தெரியாது.. எங்க அப்பா பேங்க்கர்..ஒங்க அப்பா எஸ்.பின்னு நீ சொல்லித் தான் தெரியும்( முன்னாடியே தெரிஞ்சா நான் ஏன் உன்னை டாவடிக்கறேன்!) இருந்தாலும் பாரு இவளே. மழையில விழற துளி மண்ணுல கலந்துடும்..அதுவே செம்மண்ணா இருந்தா வேகமா மிக்ஸாய்டும்..(அந்தச் செம்மண் சகதி தான் நன்னா வழுக்கும்!) அந்த மாதிரி நம்ம மனசு கலந்துடுச்சு டார்லிங்க்..!”
“என்ன சாங்க்ப்பா அது (மே.சு: அன்பரே.. நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது.. சங்கப் பாட்டுப் பாடப் போகிறீர்கள் தானே)
“இது தான் செல்லம்..
யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யாயும் நீயும் எவ்வுள மறிதும்
செம்புலப் பெயர் நீர் போல
அன்புடை நெஞ்சம் தான்கலந்தனவே”
**
இந்தப் பாட்டையே முழுக்க நிமிண்டி அந்தக்காலப் படத்தில் வரவேண்டும் என்பதற்காக கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல்..இருவர் படத்தில் விஷீவலில் மோகன்லால், மதுபாலா, ஐஸ்வர்யா ராய்…(மோகன்லால் கொடுத்துவச்சவர்)
.பாடியவர்கள்..உன்னிக் கிருஷ்ணன்.பெண்குரல் மறந்து போச்.
**.
நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் நெற்றித்தரள நீர்வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா
திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே வேல்விழி மொழிகள் கேளாய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில்
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா
மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன
பாண்டினாடனைக் கண்டு என் மனம் பசலை கொண்டதென்ன
நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும்
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையினில் மேகலை இருக்கவில்லை
யாயும் யாயும் யாராகியரோனென்று நேர்ந்ததென்ன
யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன
**
பாடல் படமாக்கப் பட்டது கறுப்பு வெள்ளையில்..இடையில் தான் கொஞ்சம் கலர் வரும்..
*
என்னமோ போங்க.. முடிக்கறச்சே கவிஞர் மீரா எழுதின கவிதை தான் நினைவுக்கு வருது!
உனக்கும் எனக்கும் ஒரே ஊர்
வாசுதேவ (!) நல்லூர்
உன் தந்தையும் என் தந்தையும்
உறவின் முறை
மாமன் மச்சான்
நானும் நீயும் ஒரே குலம்
திருநெல்வேலி சைவப் பிள்ளை மார்..
எனில்
அன்புடை நெஞ்சம் தான் கலந்தனவே!
*
இந்த நறுமுகையே பாட்டிலருந்தே இன்னொரு பாட்டோட(சங்ககாலம் தாங்க) ஒரு வரியை எடுத்திருக்கார் கவிஞர்..அந்தப் பாட்ட வச்சே ரெண்டு மூணு பாட்டு வந்திருக்கு
அது என்னன்னாக்க..
(தேடுவோம்..)
gkrishna
30th August 2014, 11:05 AM
ராஜஸ்ரீ – சிலப்பதிகாரத்தின் கதையை மையமாக வைத்து வெளியான தமிழ்த் திரைப்படம் பூம்புகார். இப்படத்தில் மாதவியாக நடித்து புகழ்பெற்ற பழம்பெற்ற நடிகை ராஜஸ்ரீ. பல்வேறு படங்களில் நடித்து மக்கள் மனதைக் கவர்ந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.
சினிமா எக்ஸ்பிரஸ் வார இதழிலிருந்து எடுக்கப்பட்டு அன்று கண்ட முகம் என வலைப்பூவில் பதிந்து அங்கிருந்து இங்கே இடப்பட்டது.(கிருஷ்ணாஜியைப் பின்பற்றும் சி.க)
சி கே சார்
ராஜஸ்ரீ அருமை .அதாவது அவர் பற்றிய கட்டுரை அருமை
நடிகர் திலகத்தின் சொர்க்கம்,ரவி ஜெய நடித்த அக்கரை பச்சை , நாகேஷ் இன் உலகம் இவ்வளுவு தான் போன்ற படங்கள்லயும் ராஜஸ்ரீ நடித்து இருப்பார் என்று நினைவு . எனக்கு என்னவோ இவரை பார்க்கும் போது ambassador நினைவிற்கு வரும் .
RAGHAVENDRA
30th August 2014, 11:07 AM
சி.க. சார்
கம்பன் இன்று இருந்திருந்தால் இப்படித் தான் எழுதியிருப்பார்
"அண்ணலும் நோக்கியா.. அவளும் நோக்கியா.."
chinnakkannan
30th August 2014, 11:08 AM
ராகவேந்தர் சார்..அந்த வாய்ஸ் இளமையான பி.ஹெச் அப்துல் ஹமீதா (லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு)..கே.எஸ். ராஜா குரல் வேற மாதிரி..கணீர்னு இருக்கும்.. மயில்வாகனம் என்றொருவர் நினைவு..அவர் குரலில்லை என நினைக்கிறேன்..
gkrishna
30th August 2014, 11:10 AM
vasu sir
நேற்றைய ஸ்பெஷல் (அதாவது நேற்று போட்ட இன்றைய ஸ்பெஷல்) அருமை. உமியின் அம்மா சுமியின் பெருமைகள் ஓஹோ . இந்த புது மஞ்சள் மேனி சிட்டு பாட்டு கொஞ்சம் மரோ சரித்திர பாட்டு நினைவிற்கு வரும் . முதல் பாகத்தில் பாலா அவர்கள் இந்த பாடலை (பாடலை மட்டும்) இட்ட நினைவு
நாகேஷ் கோயில் பூசாரியாக வந்து கொஞ்சம் உணர்ச்சி பூர்வமாக நடித்து இருப்பார்
chinnakkannan
30th August 2014, 11:10 AM
வாங்க க்ருஷ்ணா ஜி.. தாங்க்ஸ் ஆனா கட்டுரையை எழுதியது நானில்லை :sad:
ராகவேந்தர் சார் :) நோக்கியான்னு வைரமுத்து அன்னியன் ல எழுதிட்டார்.. இப்பல்லாம் சாம்ஸங்க், ஐ ஃபோன் தான்..
chinnakkannan
30th August 2014, 11:12 AM
//எனக்கு என்னவோ இவரை பார்க்கும் போது ambassador நினைவிற்கு வரும் // கிருஷ்ணா சார் :) இதைப் படிக்க விட்டு விட்டேன்...
vasudevan31355
30th August 2014, 11:13 AM
வாங்கோ கிருஷ்ணா சார்.
vasudevan31355
30th August 2014, 11:14 AM
வணக்கம் ராகவேந்திரன் சார்.
தங்கள் உயர்ந்த உள்ளத்திற்கு என் நன்றி. எங்கே நேத்து ஆளையே காணோம்? கொழுக்கட்டை பலமா?:)
gkrishna
30th August 2014, 11:15 AM
முதலில் காலை வணக்கத்தை விட்டு விட்டேன் மன்னிக்கணும்
எல்லோரும் கொள்ளுகட்டை (அதாவது கொழுக்கட்டை ) உண்டீர்களா ?
ராகவேந்தர் சார்
பொங்கும் பூம்புனல் பொங்கி பிரவாகம் எடுக்கிறது
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02084/kalaivanar_2084352g.jpg
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சித்திரை திருநாள் மகாராஜாவுடன் என்.எஸ்.கிருஷ்ணன். உடன் அவரது மனைவி மதுரம்
ஒரு காலத்தில் ஒட்டுமொத்த குமரி மாவட்டமும் ஆச்சரியத்தோடு வியந்து பார்த்த வீடு அது.கன்னியாகுமரி மாவட்டத்தில் எழுப்பப்பட்ட முதல் கான்கிரீட் வீடும் அதுதான். மொசைக் தரை போட்ட அந்த வீட்டை பார்க்க மாட்டு வண்டி கட்டி வந்தவர்களும் அதிகம். வீட்டு கிரகப்பிரவேசம் அன்று சாப்பிட வந்தவர்களின் எண்ணிக்கையே பல ஆயிரங்களை தாண்டும்.
இப்போதும் பழங்கால திரையரங்குகளை நினைவூட்டும் வகையில் கம்பீரம் குறையாமல், அதே நேரத்தில் பராமரிப்பு இன்றி நிற்கிறது நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மதுர பவனம்.
தமிழகத்தின் கடைக்கோடி பகுதியான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் பிறந்து நாடறிந்த திரைப்பட கலைஞர், சிரிப்பு நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனின் வீடுதான் அது. இன்றும் அப்பகுதிவாசிகளின் அடையாள சின்னமாய் மாறி நிற்கும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் வீட்டில் இப்போது அவரது வாரிசுகள் வாழ்ந்து வருகின்றனர். என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு நாளான இன்று (சனிக்கிழமை) அவர் குறித்த நினைவலைகளை நம்மோடு பகிர்ந்து கொள்கின்றார் அவரது பேரன் என்.எஸ்.கே.கே.ராஜன்.
இவர் ‘நாகரீக கோமாளி’ திரைப்படத்தில் அறிமுகமானவர். இப்போது எழில் பாரதி இயக்கத்தில் உருவாகி வரும் ‘பகல்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராக உள்ளார்.
‘’தாத்தா ஆரம்ப காலத்தில் டென்னிஸ் கிளப்ல பந்து பொறுக்கி போடுற வேலைகூட பார்த்திருக்காங்க. பிற்காலத்தில் பெரிய நடிகனானதும் நாகர்கோவில் நகராட்சி சார்பில் ஒரு பாராட்டு விழா நடத்துனாங்க. அப்போ தாத்தாவுக்கு தனியா பெரிய நாற்காலி போட்டிருந்தாங்க. ஆனா அவர் அதில் உட்காரல. தரையில் போடப்பட்டிருந்த கடல் மண்ணில் போய் உட்கார்ந்தாரு. எல்லாரும் இது பத்தி கேட்டப்போ இந்த இடம்தான் எப்போதும் நிரந்தரம்ன்னு சொல்லிருக்காரு. அந்த எளிமைதான் அவரோட சிறப்பே. நாடகக் கொட்டகையில் சோடா விற்பவராக இருந்து படிப்படியாக உயர்ந்ததால்தான் அத்தனை பக்குவம்.
கலைவாணருக்கும், எம்.ஜி.ஆருக்கும் ஆழ்ந்த நட்பு இருந்தது. கலைவாணர் உச்ச நடிகராக இருந்தபோதே எம்.ஜி.ஆர். பெரிய நடிகராக பிற்காலத்தில் வருவார் என தட்டிக் கொடுத்திருக்கின்றார். கலைவாணர் மறைவுக்கு பின்பு அவரது தாயார் இசக்கியம்மாள் உயிருடன் இருந்தவரை எம்.ஜி.ஆர். பண உதவி செய்தார். கலைவாணர் ஈகை பண்பால் சேர்த்து வைத்த செல்வத்தையெல்லாம் கரைத்துவிட்டு மரண படுக்கையில் இருந்தார். அப்போதும் எம்.ஜி.ஆர் வந்து பார்த்து சென்றார்.
கலைவாணர் இறந்த பிறகு அவரது மகன் கோலப்பனையும் ‘பெரியஇடத்து பெண்’ என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார். கலைவாணரின் 2 மகள்களுக்கும் எம்.ஜி.ஆர்.தான் திருமணம் செய்து வைத்தார். கலைவாணரின் மறைவுக்கு பின்பு இந்த வீடு ஏலத்துக்கு போனபோதும் எம்.ஜி.ஆரே மீட்டுக் கொடுத்தார். கலைவாணர் இருந்த சமயம் குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்தது. அப்போது சித்திரை திருநாள் மகாராஜா மன்னராக இருந்தார். சமஸ்தானத்தில் உள்ள சில பகுதிகள் புயலால் பாதிக்கப்பட்டபோது நாடகம் நடித்து அந்த பணத்தை சமஸ்தானத்துக்கு கொடுத்தார். மன்னருக்கு கலைவாணரின் நடிப்பு, சமூக சேவை பிடித்துப் போய் என்.எஸ்.கே.வுடன் படம் பிடித்துக் கொண்டார். அது இன்றும் இந்த வீட்டில் பொக்கிஷமாய் உள்ளது. தியாகராஜ பாகவதர்கூட இந்த வீட்டில் வந்து பாடல் பாடியுள்ளார். நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள நகராட்சி பூங்காவில் தாத்தா காந்தியடிகளுக்கு நினைவாக கட்டிக் கொடுத்த நினைவுத் தூண், இந்த வீடு ஆகியவை தாத்தா எங்களுடனே இருப்பதைப்போல் உணர்வை தருகின்றது” என்றார்.
நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் உள்ள மணிமேடை சந்திப்பில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு எம்.ஜி.ஆரால் திறக்கப்பட்ட சிலை கம்பீரமாக நின்று அவரது புகழை பரப்பிக் கொண்டிருக்கிறது.
நாகர்கோவில் சுடலையாண்டி பிள்ளை கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. அவர் வாழ்வும் 49 ஆண்டுகளில் சுருக்கமாக முடிந்தாலும் வரலாறு அவர் பெயரை வாரி அணைத்துக் கொண்டது என்பது மட்டும் உண்மை.
From Tamil THE HINDU
gkrishna
30th August 2014, 11:16 AM
எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கே.: இன்று என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு தினம்
வாசு சார் ராகவேந்தர் சார்
நம்ம நடிகர் திலகத்தின் இரண்டாவது படம் இவர் தானே direction or production
gkrishna
30th August 2014, 11:24 AM
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02083/ramachandran_2083739g.jpg
நகைச்சுவை நடிகர்களின் பெரும் புகழைப் பார்த்து அவர்களுக்கு ஏற்ற கதையை எழுதி, நாயகனாக்குவது இன்றைய கண்டுபிடிப்பு அல்ல. அந்தக் காலத்திலேயே தொடங்கிவிட்டது. அப்படித் தொடங்கி வைத்தவர்களில் ஒருவர்தான் டி.ஆர். ராமச்சந்திரன். இவர் ஹீரோவாக நடித்த ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ படத்தில், அன்று முன்னணி நாயகனாக வளர்ந்துவிட்ட சிவாஜி கணேசன் இரண்டாவது ஹீரோவாக நடித்தார் என்றால், பார்த்துக்கொள்ளுங்கள். இதில் சிவாஜிக்கு ஜோடி பத்மினி என்றால் ராமச்சந்திரனுக்கு ஜோடி ராகினி. நகைச்சுவை நாயகனாக அடைந்த வெற்றியால், ராகினி மட்டுமல்ல, வைஜெயந்திமாலா, அஞ்சலிதேவி, சாவித்ரி, ரஞ்சனி எனப் பல முன்னணிக் கதாநாயகிகள் இவருக்கு ஜோடியாக நடிக்கத் தயங்கவில்லை. டி.ஆர். ராமச்சந்திரன் நாடகம் வழியாக சினிமாவுக்கு வந்தவர். 25 படங்களில் கதாநாயகனாக நடித்த இவர், அதன் பிறகு நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களில் சுமார் 30 ஆண்டு காலம் நிலையான செல்வாக்குடன் சாதனை படைத்தவர்.
காவிரி மைந்தர்
கரூரிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் திருக்காம்புலியூர் என்ற கிராமத்தில் 1917-ல் பிறந்தவர். அப்பா ரங்காராவ் எளிய விவசாயி. ராமச்சந்திரன் நான்கு வயது சிறுவனாக இருக்கும்போதே அம்மாவை இழந்தார். தாயை இழந்த ஏக்கம் தெரியக் கூடாது என்பதற்காக மகனுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்த்தார் அப்பா. ஆறு வயதில் திண்ணைப் பள்ளியில் சேர்த்தார். ஆனால் பள்ளிக்கூடத்திலிருந்து திடீர் திடீரென்று ராமச்சந்திரன் காணாமல் போய்விடுவார். தேடிப்போனால், ஆடுகள், கோழிகளோடு அன்புடன் பேசிக்கொண்டிருப்பார்.
உள்ளூர் பள்ளிக்கூடம் சரிவராது என முடிவு செய்து குளித்தலையில் ஒரு குருகுலப்பள்ளியில் சேர்த்துவிட்டு வந்துவிட்டார் அப்பா. வீட்டு ஞாபகமாகவே இருந்த ராமச்சந்திரனுக்கு படிப்பு பாகற்காய் ஆனது. பள்ளிக் கல்வியைக் கஷ்டப்பட்டு முடித்தவரைத் திருச்சி நேஷனல் கல்லூரியில் சேர்க்க நினைத்திருக்கிறார் அப்பா. ஆனால் படிப்பு வேண்டாம் எனக்கு நடிப்பு போதும் என்று கிளம்பிவிட்டார் ராமச்சந்திரன்.
பாட்டு போட்டுக் கொடுத்த ரூட்
பரீட்சை முடிந்து விடுமுறைக்கு வரும்போதெல்லாம், மகனை வாய்ப்பாட்டு கற்றுக்கொள்ள வைத்தார் அப்பா. வாய்ப்பாட்டுடன் ஆர்மோனியமும் கற்றுக்கொடுத்தவர் கரூர் ராகவேந்திராவ். இவர் நாடகங்களில் பின்பாட்டுப் பாடும் பாடகர். அவர் நடிப்பது போன்ற பாவனைகளுடன் பாடக் கற்றுக்கொடுக்க, ராமச்சந்திரனுக்கு நடிப்புமீது காதல் வந்துவிட்டது. பிறகு அப்பா அனுமதியுடன் ராகவேந்திரராவுடன் ஒட்டிக்கொண்ட ராமச்சந்திரன் திருச்சி, தஞ்சாவூர், மதுரை என்று நாடகக் குழுக்களுடன் ஊர் சுற்றியிருக்கிறார். பிறகு மதுரையில் தங்கியபோது அங்கே நாடகக் கம்பெனியில் சேர அனுமதி கேட்டு அப்பாவுக்குக் கடிதம் எழுத, மகனின் விருப்பத்துக்கு அவர் தடை போடவில்லை.
3 ரூபாயிலிருந்து 25 ரூபாய்
மதுரையின் புகழ்பெற்ற நாடக கம்பெனிகளில் ஒன்றான ‘பாலமோகன ரஞ்சித சங்கீத சபா’வில் நடிகராகச் சேர்ந்தார் ராமச்சந்திரன். ஜெகன்நாத ஐயர் வாத்தியாராகவும் முதலாளியாகவும் இருந்து நடத்திவந்த இந்த நாடகக் குழுவில் ஸ்திரீ பார்ட் போடுபவர்களுக்குத் தோழியாக நடிக்க ஆரம்பித்தார் ராமச்சந்திரன். தங்க இடம், மூன்று வேளை சாப்பாடு உட்பட மாதம் 3 ரூபாய் சம்பளத்துடன் கலை வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது நடிப்புத்திறமையைக் கண்ட சக நடிகரான எஸ்.வி. வெங்கடராமன் (மீரா படத்துக்கு இசையமைத்தவர்) பின்னாளில் தனியாக நாடக கம்பெனி தொடங்கியபோது 25 ரூபாய் சம்பளத்துடன் ராமச்சந்திரனை அழைத்துக் கொண்டு வந்தார்.
நண்பரின் கம்பெனியில் சேர்ந்த அதிர்ஷ்டம் உடனடியாக அவருக்குப் படவாய்ப்பைக் கொண்டுவந்தது. காரைக்குடியில் வெங்கட்ராமன் குழு திறமையைக் கண்ட ஏ.வி.மெய்யப்பச் செட்டியார், பிரகதி பிக்சர்ஸ் கம்பெனியுடன் இணைந்து தயாரித்த ‘நந்தகுமார்’படத்தில் நடிக்க வெங்கட்ராமன் நாடகக் குழுவில் இருந்த அத்தனை பேரையும் ஒப்பந்தம் செய்தார். இதுதான் ராமச்சந்திரன் நடித்த முதல்படம். இதில் சின்னக் கதாபாத்திரம் என்றாலும் தனித்துத் திறமையைக் காட்டிய ராமச்சந்திரனை மெய்யப்பச் செட்டியாருக்குப் பிடித்துப் போய்விட்டது.
திருப்புமுனை
இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மக்கள் மன இறுக்கத்துடன் இருந்தார்கள். இந்த நேரத்தில் நகைச்சுவைப் படங்கள் ரசிகர்களுக்கு நல்ல ரிலீஃபாக இருக்கும் என்று நினைத்த மெய்யப்பச் செட்டியார், பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நகைச்சுவை நாடகமான ‘சபாபதியை’அதே பெயரில் படமாக்குவது என்று முடிவு செய்தார். நாடக வடிவில் இருந்ததைத் திரைக்கு மாற்றி எழுதும்படி ஏ.டி. கிருஷ்ணசாமியைக் கேட்டுக்கொண்டார். ஏற்கனவே சபாபதி நாடகத்தில் நடித்திருந்த ராமச்சந்திரனை நாயகனாக்கினார் செட்டியார்.
மிகப் பெரும் வெற்றியை பெற்ற இந்தப் படம், ராமச்சந்திரனுக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரின் செல்லப் பிள்ளையானார் ராமச்சந்திரன். உலக போர் முடிந்த பிறகு சென்னைக்கு ஏ.வி.எம் ஸ்டூடியோ இடமாற்றம் செய்யப்பட்டது. இதன்பிறகு ஏ.வி.எம் தயாரித்த பெரும்பாலான வெற்றிப் படங்களில் ராமச்சந்திரனுக்காவே ரகளையான காமெடி கதாபாத்திரங்கள் முக்கியவத்துடன் உருவாக்கப்பட்டன.
உயர்தட்டு நகைச்சுவைக்கு உதாரணம்
40களில் செல்வச் செழிப்புடன் வளர்ந்த மேட்டுக்குடி இளைஞர்களைப் பிரதிபலிக்கும் கேலியான கதாபாத்திரங்களில் வெளுத்துக் கட்டியவர். முட்டாள்தனம், புத்திசாலித்தனம் ஆகியவற்றின் கலவையுடன் குறும்புத்தனம், அப்பாவித்தனம், வெட்கமும் கொஞ்சம் அம்மாஞ்சித்தனமும் கலந்த காதல் உணர்ச்சி, இவற்றுடன் தனது அபாரமான உடல்மொழியால் ரசிகர்களை வயிறுகுலுங்கச் சிரிக்கவைத்த நகைச்சுவைக்கு டி. ஆர். ராமச்சந்திரன் சிறந்த உதாரணம். கதாநாயகிகள் தங்களது கண்களை நடிக்கப் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ, இவர் தனது உருண்டையான கண்களைப் பயன்படுத்தினார். இவர் உருட்டி விழிப்பதைப் பார்த்ததுமே ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்கள். அவர் ஏற்றுக்கொண்ட பெரும்பாலான பாத்திரங்கள் மேட்டுக்குடி வாழ்வை நகைச்சுவையாக்கின.
50க்கும் அதிகமான படங்களில் தனக்கான பாடல்களைப் பாடி நடித்த இவர், ரசனையுடன் பல படங்களைத் தயாரித்தும் நடித்திருக்கிறார். திரைப்படங்களிலிருந்து ஓய்வுபெற்றபின் அமெரிக்காவில் தன் மகள்களுடன் வசித்துவந்தார். கடந்த 1990-ம் ஆண்டு, இதய அறுவை சிகிச்சையின்போது காலமானர். அவர் மறைந்தாலும் அவரது உருண்டையான கண்களையும் வித்தியாசமான உடல் மொழியையும் ரசிகர்களால் மறக்கவே முடியாது.
ஏதோ என்னாலே முடிஞ்சது
from தமிழ் ஹிந்து
gkrishna
30th August 2014, 11:27 AM
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02083/kadhalika_2083746g.jpg
“இப்போதெல்லாம் கோடிகளைக் கொட்டி ரூம் போட்டுக் கதை விவாதம் என்று சொல்லி இங்கும் அங்கும் பறக்கிறார்கள். ஆனால் போகிற போக்கில் அவரோட காரில் அமர்ந்து எழுதின கதைதான் இந்த ரொமாண்டிக் கலாட்டா கதை. படம் வெளிவந்தபோது அவரை ‘தென்னாட்டு சாந்தாராம்’என்று பத்திரிகைகள் புகழ்ந்து தள்ளின. இப்படி என் நண்பனைப் பற்றி பேசிக்கொண்டே போகலாம். படத்தோட தலைப்பைப்போல அதுக்கு இங்கே நேரமில்லை”
தனி முத்திரை கொண்ட தன் படங்களால் தமிழ் சினிமாவிற்குப் பெருமை சேர்த்த இயக்குநர் ஸ்ரீதரைப் பற்றி, சமீபத்தில் நடைபெற்ற ‘காதலிக்க நேரமில்லை’படத்தின் 50 ஆண்டுப் பொன்விழா மேடையில் ‘சித்ராலயா’ கோபு பகிர்ந்துகொண்ட வார்த்தைகள்தான் இவை.
இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் 1964-ம் ஆண்டு வெளிவந்த முழுநீள ரொமாண்டிக் காமெடிப் படம் ‘காதலிக்க நேரமில்லை. இந்தப் படத்தின் 50-ம் ஆண்டு பொன்விழா, சமீபத்தில் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடந்தது. நடிகைகள் காஞ்சனா, ராஜஸ்ரீ, சச்சு, இயக்குநர் ‘சித்ராலயா’கோபு, நடிகர் வி.எஸ். ராகவன், பின்னணிப் பாடகி எல்.ஆர். ஈஸ்வரி, கே.ஜே. ஜேசுதாஸ் உட்பட அப்படத்தில் பணியாற்றிய பல கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினர்கள்
சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ரவிச்சந்திரனின் மனைவி விமலா, கிரேஸி மோகன், இயக்குநர்கள் மனோபாலா, சேரன், நடிகர் ஆனந்த்பாபு, காந்தி கண்ணதாசன், ‘ஆல்பா மைண்ட் பவர்’ டாக்டர் விஜயலட்சுமி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் சில காட்சிகளும், பாடல்களும், திரையிடப்பட்டன. ஒய்.ஜி. மெலடி மேக்கர்ஸ் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடந்தது.
‘கல்யாணப் பரிசு’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ மாதிரியான படங்களைக் கொடுத்துவிட்டு முழு நீளக் காமெடி கதையைக் கொடுத்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்கிற அச்சம் அப்போது ஸ்ரீதருக்கு இருக்கவே செய்தது. உடன் இருந்த நண்பர்கள் உற்சாகப்படுத்தவே துணிந்து இறங்கியதால்தான் இந்தக் காமெடி காவியமே உருவாகியிருக்கிறது.
குமாரி சச்சு நாயகியாக வளர்ந்துகொண்டிருந்த காலக் கட்டத்தில் இந்தக் காமெடி கேரக்டரைப் பற்றி விளக்கியபோது முதலில் நடிக்கச் சம்மதிக்காமல்தான் இருந்திருக்கிறார். ‘‘படத்தில் ராஜஸ்ரீ ஒரு நாயகி, காஞ்சனா ஒரு நாயகி, நீயும் ஒரு நாயகி’ என்று சொல்லித்தான் என்னை ஏமாற்றி நடிக்க வைத்தார்கள். அன்று நான் இந்தப் படத்தில் நடிக்காமல் போயிருந்தால் இன்று இந்த சச்சு இல்லை. இதற்கு ஸ்ரீதருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்” என்று 50 ஆண்டுகளுக்கு முந்தைய நடிப்பு அனுபவத்தைப் பூரிப்போடு பகிர்ந்துகொண்டார் சச்சு.
மறக்க முடியாத அனுபவங்கள்
“தொடர்ந்து எங்கள் மீது கேமரா வெளிச்சம் விழுவதற்குக் காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர், ஸ்ரீதர்” என்ற காஞ்சனாவின் வார்த்தைகளும், “புதுமுகம் ரவிச்சந்திரனுக்கு ஜோடியாக நடிக்க யோசித்தாலும் ஸ்ரீதர் படம் என்பதால் எந்த மறுப்பும் சொல்லாமல் நடித்தேன்” என்ற ராஜஸ்ரீயின் கணிப்பும் இன்றைய இளைய இயக்குநர்கள் குறிப்பெடுத்து வைத்துக்கொள்ள வேண்டிய வார்த்தைகள்.
“உம் பேருதான் கோபுவா. நீதான் ஸ்ரீதருக்கு சோத்துக் கையாமே” என்று திருவல்லிக்கேணி பகுதியினர், தன்னை அன்பாக விசாரிப்பார்கள் என்று தனக்கே உரிய நகைச்சுவையுடன் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் கோபு”. என் மூன்றாவது பையன் ஸ்ரீராம், ‘என்னா கோபு, எப்படியிருக்கே? ’ என்பான். என்னடா பெத்த அப்பனையே பேர் சொல்லிக் கூப்பிடுறேன்னு கேட்டா.. ‘ ரோட்டுல போற வர்றவன் எல்லாம் கூப்பிடுறான், நான் கூப்பிட்டா என்ன என்று கேட்பான். அந்த அளவுக்கு என்னைப் பிரபலமாக்கிய பெருமை நண்பன் ஸ்ரீதரைத்தான் சேரும்” என்ற, கோபுவின் பேச்சு நிகழ்ச்சியில் அனைவரையும் சிரிக்கவும் நெகிழவும் வைத்தது.
காதலிக்க நேரமில்லை படத்தை மீண்டும் ரீமேக் செய்யப்போவதாகச் சொன்னார்கள். இப்போது ஸ்ரீதர் இங்கே உயிரோடு இருந்து ‘வாடா கோபு நாமளே படத்தை ரீமேக் செய்வோம்’ என்று கேட்டாலும் வேண்டாம் என்பேன். காரணம், பாலையாவுக்கு எங்கே போவது,? நாகேஷ் - பாலையா காம்பினேஷனை யார் நிரப்புவார்? ரவியோட டான்ஸ் மூவ்மெண்ட், வின்செண்ட் போட்டோகிராபி, கங்காவோட ஆர்ட் இதெல்லாம் இனி சாத்தியப்படுத்த முடியுமா?’ அதனால்தான் வேண்டாம் என்று சொல்வேன்” என்றார் கோபு.
“ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு படத்தை, அதே கலைஞர்கள் பங்கேற்றுக் கொண்டாடும் இந்த மேடை காலத்தை வென்ற இயக்குநர் ஸ்ரீதர் மாதிரி ஒரு இயக்குநரால் மட்டுமே சாத்தியம்” என்றார் நிகழ்ச்சியை வடிவமைத்து ஒருங்கிணைத்த ஒய்.ஜி. மகேந்திரன். இவரது எண்ணத்தில்தான் இந்த நிகழ்ச்சிக்கான கரு உருவானது என்பதையும் படம் சம்பந்தப்பட்ட கலைஞர்களைத் தொடர்புகொண்டு விழாவுக்கு வரவழைத்தவரும் இவரே என்பதையும் இங்கே நினைவுகூர வேண்டும்.
அதே குரல் அதே பாடல்
‘என்ன பார்வை இந்தப் பார்வை’, ‘மாடி மேல மாடி வச்சி’ பாடல்களிலிருந்து ஓரிரு வரிகள் பாடி அரங்கத்தில் ஆரவாரத்தை ஏற்படுத்திய பாடகர் ஜேசுதாஸ், அந்தக் காலகட்ட இசைப் பயணம் குறித்த தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அதை மேடைக்குக் கீழே அமர்ந்து ரசித்துக்கொண்டிருந்த பாடகி எல்.ஆர். ஈஸ்வரி 50 ஆண்டுகளுக்கு முன் தான் பாடிய ‘மலரென்ற முகமொன்று’ பாடலைத் துடிப்பான இளம் பாடகியைப்போலப் பாடியபோது அவரது முகத்தில் நினைவுகளின் ஆனந்தத் தாண்டவம்.
இந்த நிகழ்ச்சியை ‘தி இந்து டாக்கீஸ்’ உடன் இணைந்து ஆல்பா மைண்ட் பவர், காஞ்சிபுரம் எஸ்.எம். சில்க்ஸ், ராம் பிராப்பர்ட்டீஸ், ஹுண்டாய் மோட்டார் பிளாசா, அசோக் குரூப்ஸ், வெற்றி ரியல்ஸ், அப்பாஸ் கல்சுரல் ஆகியவை இணைந்து வழங்கின.
மூன்று மணிநேரத்துக்கு நிகழ்ச்சி நீண்டாலும் வந்திருந்த அனைவரும் நிகழ்ச்சி முடியும்வரை மேடை நிகழ்வுகளோடு லயித்துப்போய் உட்கார்ந்திருந்ததே ‘காதலிக்க நேரமில்லை’யின் காலத்தை வென்ற தன்மையைக் காட்டியது. நாகேஷ் பாலையாவுக்குக் ‘கதை’ சொல்லும் காட்சியை நிகழ்ச்சியின் கடைசியில் திரையிட்டது விழாவுக்குப் பொருத்தமான முத்தாய்ப்பாக அமைந்தது.
gkrishna
30th August 2014, 11:39 AM
டியர் சி கே சார்
வாசு சார் போடும் அன்றைய நாயகிகளின் இப்ப உள்ள படம்
https://lh5.googleusercontent.com/-nUH3HrKxmXw/UZYnOaINpMI/AAAAAAAA3lM/2BwVvqeTjVQ/s1600/Rajashree-Sathyapriya-Anushia-Roy-Antonys-wedding.jpg
Richardsof
30th August 2014, 11:45 AM
RAJASREE- IST ROUND OVER .
SRIPRIYA . .....
http://i62.tinypic.com/30nbrth.jpg
http://i59.tinypic.com/24y8j2f.jpg
Richardsof
30th August 2014, 11:47 AM
http://youtu.be/dXXFfq3Bz1Y
chinnakkannan
30th August 2014, 12:20 PM
வாசு சார்.. நீ காற்று நான் மரம்.. கவிதைக்காகத் தான் எழுதினேன். பாட்டு கேட்க சுமார் தான்..விஷீவலில் கொழுக் மொழுக் வக்கீல் சுவலட்சுமி..வட்ட நிலா முகம்..(என் ஒரு கதையில் எழுதிய உவமை – காம்ப்பஸை நடு மூக்கில் குத்தினால் வட்டம் வரைந்துவிடலாம்..என்பதற்கேற்ற வட்ட முகம்..
கார்த்திக் சார்.. குளிக்கும் போது ஞானோதயம்..அந்த சினிமா எக்ஸ்ப்ரஸ் நிருபர் ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள் பாட்டு நினைவில் எழுதியிருப்பார்.. எல்.பியில் கேட்ட பாட்டு படத்தில் ரசித்த எல்.வி..ம்ம்
chinnakkannan
30th August 2014, 12:25 PM
க்ருஷ்ணா ஜி என்.எஸ்.கே பணம் என்ற படத்தை டைரக்ட் செய்ததாக நினைவு..ந.,தியின் இரண்டாவது படமா என நினைவிலில்லை..
chinnakkannan
30th August 2014, 12:28 PM
எஸ்.வி. சார்.. ஸ்ரீப்ரியா வின் ஸ்டில் பருத்தி எடுக்கையிலே பாட்டுக்கு நன்றி.. ஆனாக்க லேட்டஸ்ட் ஃபோட்டோ வரை போட்டு அவரை (ப்ப்ற்றி) தோய்த்து அலசிக் காயப் போட்டாயிற்றே :) வேற யாரைச் சொல்லலாம்..ம்ம் வாசு சாருக்குப் பிடித்த உஷா நந்தினி (அவர் வந்து அடிக்க வ்ருமுன் எஸ்ஸ்கேப்)
chinnakkannan
30th August 2014, 12:29 PM
க்ருஷ்ணா ஜி..சத்யப் ப்ரியா என்னிக்கும் என்னைக் கவர்ந்தவரில்லை..(தீபத்தில் வருவார் என நினைவு) ராஜஸ்ரீ தான் - அவரது உருமாற்றத்தை க் கண்ட பாரதிராஜா சொன்னது - காலம் இவ்வளவு மாற்றும் என நம்ப முடியவில்லை -
vasudevan31355
30th August 2014, 12:30 PM
சூடாக சுவையாக தயாராகிக் கொண்டிருக்கிறது 'இன்றைய ஸ்பெஷல்' ரொம்ப ஸ்பெஷலாக.
mr_karthik
30th August 2014, 12:30 PM
என் விருப்பம் (6)
அது ஒரு நிர்ப்பந்தத்தில் நடந்த திருமணம். மகாபாரத யுகம் போல பெண்ணை தேர்தலில் பணயப்பொருளாக வைத்து, அதில் கதாநாயகன் ஜெயிக்க, கதாநாயகிக்கு கொஞ்சமும் விருப்பமில்லாமல், ஆனால் தாயின் மாங்கல்யத்தை காப்பாற்ற, இளம்பருவத்திலிருந்து தன் வாழ்க்கை எப்படியெல்லாம் அமைய வேண்டுமென்று கண்டிருந்த கனவுகளை தியாகம் செய்து செய்துகொண்ட திருமணம். ஆனால் நாயகனுக்கோ அவள்மீது கொள்ளைப்பிரியம். அவளை அடைவதற்கு இதைவிட்டால் வேறு வழியில்லை என்று தேர்தலில் பணயப்பொருளாக அவளை வென்று மணந்து கொள்கிறான்.
அவன் ஆவலோடு எதிர்பார்த்த முதலிரவு. ஆனால் அவள் கொஞ்சம்கூட எதிர்பார்த்திராத மோசமான முதலிரவு. அவன் அவள்மீது தனக்குள்ள காதலையெல்லாம் முதல்முறையாக விவரமாக சொல்லி வெளிப்படுத்தி, (அருமையான வசனங்கள், ஆனால் இது பாடலை பற்றிய பதிவு என்பதால் விவரிக்கவில்லை) மனைவி என்ற உரிமையில் தொடப்போக, நாயகியின் திடீர் ஆணை "தொடாதீங்க, நீங்க மான ரோஷமுள்ளவராயிருந்தால் என் அனுமதியில்லாமல் என்னைத் தொடக்கூடாது" என்று உத்தரவு போட, ரோஷத்தில் எல்லோரையும் மிஞ்சிய அந்த மானஸ்தன் சத்தியம் செய்கிறான் "நீயாக விரும்பி என்னைக்கு என்னைத்தொடுறியோ அதுவரை உன்னைத்தொட மாட்டேன். இது என் தாய்மீது சத்தியம்". சொல்லிவிட்டு வெளியேற, இந்த அதிர்வலையை எதிர்பாராத நாயகி திகைத்து நிற்க......
எந்தவித அதிரடியும் இல்லாமல் (கதாநாயகனின் நடைக்கேற்ப) அமைதியான, அதே சமயம் இரவின் சூழலை நமக்கு உணர்த்த தவளைகளின் 'கரகர' சத்தத்துடன் முன்னிசை முடிய பாடல் ஆரம்பம்.
நிலவைப்பார்த்து வானம் சொன்னது
என்னைத்தொடாதே
நிழலைப்பார்த்து பூமி சொன்னது
என்னைத்தொடாதே
நதியைப்பார்த்து நாணல் சொன்னது
என்னைத்தொடாதே
நாளைப்பார்த்து இரவு சொன்னது
என்னைத்தொடாதே
ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக தொடரும் இடையிசை.
இந்த மண்ணுக்கு தீண்டாமை என்பது புதியதா என்ன?, அதுவும் கீழ்த்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த நான் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த உன்னைப்பார்த்து இந்த வார்த்தையைச் சொல்லியிருந்தால் இது சற்று புதுமையாக இருந்திருக்கும். ஆனால், மேல்வர்க்கமான நீ என்னைப்பார்த்து சொல்வது காலம் காலமாக நடப்பதுதானே. அப்படியாவது நீ சொந்தமாக ஏதாவது சொன்னாயா?. ஏற்கெனவே திருநீலகண்டனைப் பார்த்து அவன் மனைவி சொன்ன 'தொடாதே' என்ற வார்த்தையை இரவல் பெற்றுத்தானே என்னிடம் பிரயோகித்துள்ளாய்?.
புதியதல்லவே தீண்டாமையென்பது
புதுமை அல்லவே அதை "நீயும்" சொன்னது
சொன்ன வார்த்தையும் இரவல்தானது
திருநீலகண்டனின் மனைவி சொன்னது
திருநீலகண்டனின் மனைவி சொன்னது
நிலவைப்பார்த்து வானம் சொன்னது
என்னைத்தொடாதே
நிழலைப்பார்த்து பூமி சொன்னது
என்னைத்தொடாதே
ஒரு பாடலில் தாளமும் ராகமும் ஒரே விதத்தில் அமைந்தால் மட்டுமே அந்தப்பாடலை மனம் விரும்பி ஏற்றுக்கொள்ளும். இரண்டும் வெவ்வேறு விதமாக அமைந்தால் அந்தப்பாடல் மனதுக்கு அன்னியமாகித்தானே போகும். (அடுத்த இரண்டு வரிகளுக்கு விளக்கம் தேவையில்லை. கிட்டத்தட்ட ஏழு, எட்டு வயதிலிருந்து அனைவரும் அறிந்தது)
தாளத்தை ராகம் தொடாத போதிலே
கீதத்தை நெஞ்சம் தொடாமல் போகுமே
தந்தைதன்னையே தாய் தொடாவிடில்
நானும் இல்லையே நீயும் இல்லையே
நானும் இல்லையே நீயும் இல்லையே
நிலவைப்பார்த்து வானம் சொன்னது
என்னைத்தொடாதே
நிழலைப்பார்த்து பூமி சொன்னது
என்னைத்தொடாதே
தங்கச்சுரங்களில் தங்கத்தைத் தோண்டியெடுப்பவர்கள் எல்லோரும் தங்கத்தை அணிந்து ஜொலிக்கிரார்களா, அவர்கள் வீடுகளில் தாண்டவமாடுவது வறுமையே. கோயிலை எழுப்ப அஸ்திவாரம் தோண்டுவதிலிருந்து, அது கட்டி முழுமை அடையும்வரை கல்சுமந்து, மண்சுமந்து கோயிலை கட்டுவது நாங்கள். ஆனால் எல்லாம் முடிந்து, நாம் கட்டிய கோயில்தானே என்று நுழைய எத்தனித்தால் எங்கிருந்தோ ஒரு குரல் வரும் 'நுழையாதே' , நீயும் அப்படிப்பட்ட கூட்டத்தில் ஒருத்தியாக இருப்பதில் என்ன அதிசயம்?.
தங்கம் எடுத்த கை தங்கம் பார்த்ததா
தர்மம் காத்த கை சமதர்மம் கண்டதா
ஆலயம் செய்வோம் அங்கே அனுமதியில்லை
நீ அந்தக்கூட்டமே இதில் அதிசயமில்லை
நீ அந்தக்கூட்டமே இதில் அதிசயமில்லை
நிலவைப்பார்த்து வானம் சொன்னது
என்னைத்தொடாதே
நிழலைப்பார்த்து பூமி சொன்னது
என்னைத்தொடாதே
நதியைப்பார்த்து நாணல் சொன்னது
என்னைத்தொடாதே
நாளைப்பார்த்து இரவு சொன்னது
என்னைத்தொடாதே
நிலவைப்பார்த்து வானம் சொன்னது
என்னைத்தொடாதே
நிழலைப்பார்த்து பூமி சொன்னது
என்னைத்தொடாதே
நடிகர்திலகத்தின் 150-வது வெற்றிக்காவியமான 'சவாலே சமாளி' படத்தின் உயிர்நாடிப்பாடல் இது. கிட்டத்தட்ட கதையின் சாராம்சத்தை உள்ளடக்கியது. மெல்லிசை மன்னரின் ஆர்ப்பாட்டமில்லாத அதே சமயம் மனதைத்தொடும் இசை, பாடகர்திலகத்தின் அலட்டிக்கொள்ளாத குரல், நடிகர்திலகத்தின் அமைதியான, அதே சமயம் அழுத்தமான நடிப்பு. (நடிகர்திலகம் பாடலுக்கு பொருத்தமாக வாயசைக்கக் கூடியவர் என்பதால் நிறைய ஸைட் குளோசப் காட்சிகள்). இரவுக்காட்சியை அருமையாக ஒளிவடிவமாக்கியிருக்கும் வின்சென்ட்டின் நேர்த்தியான ஒளிப்பதிவு. ஆண்குரல் பாடலாக இருந்தாலும் அதற்கு அருமையாக முகபாவம் காட்டியிருக்கும் 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்கள்.
இப்படத்தில் இடம்பெற்ற மற்ற பாடல்களும் அருமையே. 'சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு' இசையரசிக்கு இரண்டாம் முறையாக தேசிய விருதைப் பெற்றுத்தந்தது. 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்களின் அருமையான இருவேறுபட்ட பெர்பாமன்ஸில் 'என்னடி மயக்கமா சொல்லடி' பொங்கல்திருவிழாவன்று நடிகர்திலகம் பாடியாடும் 'ஆனைக்கொரு காலம் வந்தா' என அனைத்துப்பாடல்களும் இனிமையே. கூடவே மனதைக்கவரும் தீம் மியூசிக். ஒரு கிராமத்துப் பின்னணி படத்துக்கு இதைவிட என்ன இசையைத்தரவேண்டும்?.
மக்கள் திலகத்தின் பாடலொன்றை இங்கும், மக்கள்திலகம் திரியிலும் பதித்ததுபோல, இப்பாடலையும் நடிகர்திலகத்தின் திரியிலும் பதிக்க விருப்பம்தான். என்ன செய்வது?. "(ஒன்று முதல் பதினொரு பாகம் வரை) ஆலயம் செய்தோம் (இப்போது அங்கே) அனுமதியில்லை" (என் அனுமதியின்றி யாரும் இதை ‘அங்கே’ மீள்பதிவு செய்யவேண்டாம்)
'நிலவைப்பார்த்து வானம் சொன்னது' எப்போதும் என் விருப்பங்களில் ஒன்று...
chinnakkannan
30th August 2014, 12:34 PM
பல வருடங்களுக்கு முன்னால்(88/89 என நினைவு) துபாயில் ஒரு பட்டு ஜவுளிக் கடையில் செல்கையில் உள்ளிருந்த கட்டை குட்டை சிகப்பு நிறம்+வயதானவரைப் பார்த்தேன்..(அப்போ (வும்) நான் இளைஞன்) என் சகோதரி சகோதரி கணவர் உடன் இருந்தார்கள்..அவர் கடையை விட்டுச் சென்றதும் என்னிடம் சொன்னார்கள்..அவர் தான் டி.ஆர்.ராமச்சந்திரன் என்று. அவர் உடன் இருந்தவர் அவரது மகள் என்றும் அவர்கள் ஷார்ஜாவில் இருப்பதாகவும் சொன்னார்கள்..அன்பிலீவபிள்.. கொஞ்சம் டோட்டலாய் மாறிய முகம்..(அன்பே வாவில் கடைசியாய்ப் பார்த்தது) ம்ம் பேசச் சந்தர்ப்பம கிடைக்கவில்லை..
ரைட் அப்பிற்கு நன்றி க்ருஷ்ணா ஜி..
gkrishna
30th August 2014, 12:36 PM
http://antrukandamugam.files.wordpress.com/2013/11/usha-nandini-ponnunjal.jpg?w=593https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcT0mwKz5Kj2KaN83DYrjSXs2IjRq2ReI kfYKrFubL9VPHB0Wa43
உஷா இப்ப உள்ள போட்டோ கிடைக்க வில்லை சி கே சார்
இவங்க நடிச்ச அத்தைய மாமியா ஸ்டில் ஒன்னு நினைவில் உண்டு
ஜெய் உஷாவோட ஒரு மாதிரி ஒரு இடத்தில சாஞ்சுண்டு
vasudevan31355
30th August 2014, 12:37 PM
கார்த்திக் சார்
தங்கள் அற்புத ஆய்வுக்கு ஏற்ப முதலில் பாடல்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=FSdL74sUCNE
sss
30th August 2014, 12:37 PM
மங்கம்மா சபதம் - கமல் மாதவி நடிப்பில் சங்கர கணேஷ் இசையில் வெளிவந்தது
சொர்க்கத்தின் வாசல் இங்கே - பாடல் வேறு வடிவில் அதே படத்தில் ஊத்திக்கோ ராசா ராசா என்றும் வந்தது
இந்த டியூன் அப்பட்டமான காப்பி என்பது ஊரறிந்த விஷயம்.
அண்ணா நகர் டவர் மீது ஆடிப்பாடும் சொர்க்கத்தின் வாசல் இங்கேபாடல் இதோ:
https://www.youtube.com/watch?v=MH-3bnzjy7A
http://www.mediafire.com/listen/yz1m1ujmilm/Sorggaththin_Vasal_SPB_VJ_Mangamma_Sabatham.mp3
ஊத்திக்கோ ராசா ராசா - கேட்க மட்டும்
http://www.mediafire.com/listen/yytgzjghmdy/Uththikko_Rasa_SPB_VJ_Mangamma_Sabatham.mp3
gkrishna
30th August 2014, 12:38 PM
http://www.youtube.com/watch?v=FSdL74sUCNE
கார்த்தி சார்
நடிகர் திலகத்தின் எவர் கிரீன் சாங்
வாசு சார் முந்தி கொண்டு விட்டார்
முந்தி முந்தி வாசுவே
chinnakkannan
30th August 2014, 12:40 PM
கார்த்திக் சார்.. நிலவைப் பார்த்து - நைஸ்..வெகு சின்ன வயதில் பார்த்த போது இந்தப் பாடல் புரியாமலேயே இந்தப் பாட்டைப் பாடிக் கொண்டிருப்பேன்..ந.தி வெகு இயல்பு.. ஜூரம் வந்துவிட்டது என்றதும் பதற்றம்..தொடமுடியாது என்ற ஏக்கம் - வழக்கம்போல வெகு நன்றாக இருக்கும்..
gkrishna
30th August 2014, 12:41 PM
மங்கம்மா சபதம் - கமல் மாதவி நடிப்பில் சங்கர கணேஷ் இசையில் வெளிவந்தது
sss sir
சொர்கத்தின் வாசல் பாட்டு வரிகள் எத்தனை எத்தனை மீனிங் சார்
chinnakkannan
30th August 2014, 12:42 PM
உஷா போட்டோவிற்கு வாசு சார் சார்பாக நன்றிகள் :) ஜோடியாய் மிகவும் ரசித்தது பொன்னூஞ்சல்.. க்ளைமாக்ஸில் தான் ஒரு வழி பண்ணியிருப்பார்கள்..ந.திக்கும் உ.நவுக்கும் இடையே கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் ஆகியிருக்கும் எனப் பெரியவர்கள் சொல்லுவார்கள்! :)
chinnakkannan
30th August 2014, 12:45 PM
எஸ்.எஸ்.எஸ். மங்கம்மா சபத்ம் கொஞ்சம் நிறையவ்வே போரடித்த படம்..அதில் ரிலீஃப் என ப் பார்த்தால் இந்தப் பாட்டு ஒன்று தான்.. நன்றி
chinnakkannan
30th August 2014, 12:48 PM
ஒரு பாட்டு சொல்ல ஆசை..ஆனால் ஹீரோயினின் இந்தக்காலப் புகைப்படத்தைப் போடமாட்டேன் என்று வாசு சார், க்ருஷ்ணா சார் மற்றும் அனைத்து நண்பர்களும் சத்தியம் செய்தால் தான் சொல்வேன்..அந்த நடிகைபற்றிக் க்ளூ.. மதுரைக்காரி..
gkrishna
30th August 2014, 01:01 PM
யார் அந்த மதுரை மல்லி ?
ரெட்டை ஜடை ரங்கம்மா வா அல்லது கோண வாய் கோகிலவா
mr_karthik
30th August 2014, 01:22 PM
டியர் வாசு சார்,
நேற்றைய ஸ்பெஷலான 'ருத்ர தாண்டவம்' படத்தின் விஜயகுமார்-சுமித்ரா டூயட் பாட்டு ரொம்ப நன்றாக இருந்தது. நீங்கள் சொன்னதுபோல சுமித்ரா பல ஜாடிகளுக்கு ஏற்ற மூடி. குறிப்பாக ஜெய்கணேஷ் (இருவருக்கும் சில காலம் லடாய் இருந்தது எல்லோருக்கும் தெரிந்ததே)
ருத்ர தாண்டவம் நல்ல நகைச்சுவை மற்றும் கருத்துப்படம். நகைச்சுவைக்காக என்றாலும் சிவன் வி.கே.ஆர். ஆங்கிலம் பேசுவதைத் தவிர்த்திருக்கலாம் (டி.ஆர். பாணியில் 'பூசாரி, ஐயாம் ஸாரி')
முற்பாதியில் 'நான் கண்ட சொர்க்கம்' படத்தையும், பிற்பாதியில் 'ருத்ரதாண்டவம்' படத்தையும் கொண்டுதான் நடிகர்திலகத்தின் 'எமனுக்கு எமன்' வந்தது...
chinnakkannan
30th August 2014, 01:22 PM
ஹையா… க்ருஷ்ணா ஜி கண்டுபிடிக்கலை..:)
ஒரு பல்லாண்டுகாலம் வளர்ந்த பழைய மரம் மதுரையில் இருந்தது..அந்த இடம் பஸ் நிறுத்தமாக வைத்திருந்தார்கள்..டிவிஎஸ் ஸ்டாப்..அதையொட்டி ஒருமஹா பழைய பெரிய வீடும் இருந்தது..
காலப் போக்கில் அந்த வீட்டை இடித்துஇரண்டு தியேட்டர் வந்தது – சக்தி ஏசி, சிவம் தியேட்டர்.. அந்த மரத்தையும் ஈவிரக்கமில்லாமல் வெட்டி விட்டார்கள்.. டி.வி.எஸ் ஸ்டாப்பும் இடம் மாறி சேதுபதி ஸ்கூலுக்கு ஆப்போஸிட்டாகப் போய் விட்டது (இப்போதும் அதே நிலைமையா தெரியாது நான் சொல்வது ரொம்ப காலம் முன்பு)
அந்த சிவம் தியேட்டர் வந்த ஒரு வருடமோ ரெண்டுவருடமோ அப்போது பார்த்த படம் இது.. செல்லமாக க் கல்லூரியில் குதிரை எனச் சொல்வார்கள் அந்த ஹீரோயினை..ரொம்ப அழகெல்லாம் இல்லை சுமார் தான்..ஆனால் மதுரை நேட்டிவ்..எனில்..
படம் காதல் கதை தான்..சர்ப்ரைஸாக எம்.எஸ். விஸ்வ நாதன் இசை (அப்போது இளையராஜா இசையில் நிறையப் படஙக்ள் வந்த காலகட்டம்..) இந்தப்பாட்டு சொய்ங்க்கென்று தேனாக காதுகளில் பாய்ந்து ஓடிவிடும்..
மலேசியா வாசுதேவன் வாணி ஜெயராம்..படம் சரணாலயம்..பாடல் வாலிப க் கவிஞர் வாலி (வரிகள் அழகு)
*
இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்
கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்.
நீல நதிக்கரையில் ஊர்க்கோலமாம்
முகில் நீந்தி விளையாடும் கார்காலமாம்
பாக்கு மரங்களின் நிழலோரம்
நல்ல பவழ மல்லிகைபாய் போட
மாலைப் பொழுது பனிதூவ
மெல்ல மாறன் விளையாட்டு அரங்கேற
ரதி மாறன் விளையாட்டு அரங்கேற
சோலை வனங்களின் வழியோரம்
சின்னஞ்சிறியமின்மினிகள் விளக்கேற்ற
போதை மேதுவாகத் தலைக்கேற
வண்ணப் பாதம் பதியாமல் தடுமாற
இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்
கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்.
*
http://www.inbaminge.com/t/s/Saranalayam/Indru%20Katrukkum.eng.html
இதிலேயே,
நெடு நாள் ஆசை ஒன்று
இந்த நெஞ்சினில் உதித்தது உண்டு..
அதை நேரிடையாகச் சொல்ல
நான் நாணமில்லாதவள் அல்ல
எஸ்.பி.பி – அதை நேரிடையாகச் சொல்ல
கண்ணைத் தூதுவிட்டேன் கொஞ்சம் மெல்ல..
– அழகுப்பாட்டு எஸ்.பி.பி..சுசீலா. சுசீலாம்மாவின் குரல் வெகு அழகு..இதுவும் வாலி..
http://www.inbaminge.com/t/s/Saranalayam/Nedunal%20Aasai.eng.html
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
இரு விழியால் இந்தப் பூங்கோதை..
இதுவும் நல்ல பாட்டு..மலேசியா வாசுதேவன்..
http://www.inbaminge.com/t/s/Saranalayam/Ezhudhukiral.eng.html
*
ஹச்சோ.. ஹீரோயின் பேர் சொல்லலியே நளினி.. தோடி ராகத்தில் சேஷ கோபாலனுடன் ஜோடியாக அறிமுகமாகி உயிருள்ள வரை உஷாவில் இந்திர லோகத்துசுந்தரியாக கனவினில் வந்து நூறாவது நாளில் அலறித்துடிக்கும் நங்கையாக நடித்து பின் பின்…… ராமராஜனை மணம் புரிந்து பின் பிரிந்து செட்டில் ஆனவர்..
*
ஹீரோ..ம்ம் மைக் மோஹன்..
*
gkrishna
30th August 2014, 01:27 PM
http://cinemachaat.files.wordpress.com/2012/08/sangarshana_nalini-as-rekha.pnghttp://dc693.4shared.com/img/TAbkvUA5/s3/13b1dca6a58/tamil-tv-actress-nalini.jpg
சி கே சார்
இவங்க தானா ? நீங்கள் சொல்ல வந்த நடிகை
மன்னிக்கணும் சி கே சார்
இரண்டாவது போட்டோ இப்ப உள்ள போட்டோ இல்லை
mr_karthik
30th August 2014, 01:30 PM
டியர் கிருஷ்ணாஜி
'எடுத்துப்போடும்' வேலையை ரொம்ப சிரத்தையாக செய்யத்துவங்கி விட்டீர்கள் போலும். நடத்துங்க.
டியர் சி.க.சார்,
மங்கம்மா சபத்தத்தில் இடம்பெற்ற 'சொர்க்கத்தின் வாசல் இங்கே' பாடலில்தான் முதன்முதலாக கம்ப்யூட்டர் எடிட்டிங் பயன்படுத்தப்பட்டதாக ஒரு இடத்தில் படித்தேன். உண்மையா என்று ஆன்றோர்கள்(??) தான் சொல்ல வேண்டும்.
சத்யராஜின் சில டயலாக் டெலிவரி தவிர சிறப்பாக படத்தில் ஒன்றுமில்லை. சத்யராஜின் மகன் நளினிகாந்த் என்பது இன்னொரு கொடுமை...
mr_karthik
30th August 2014, 01:37 PM
ஒரு பாட்டு சொல்ல ஆசை..ஆனால் ஹீரோயினின் இந்தக்காலப் புகைப்படத்தைப் போடமாட்டேன் என்று வாசு சார், க்ருஷ்ணா சார் மற்றும் அனைத்து நண்பர்களும் சத்தியம் செய்தால் தான் சொல்வேன்..அந்த நடிகைபற்றிக் க்ளூ.. மதுரைக்காரி..
நளினியின் இன்றைய படத்தை எதுக்கு தேடிஎடுத்துப்போடனும்?. அதான் மடிப்பாக்கம் மாதவன் நகைச்சுவை சீரியலில் இப்போது தினமும் நம்வீட்டுக்கு வந்துகொண்டிருக்கிறாரே.
chinnakkannan
30th August 2014, 01:41 PM
க்ருஷ்ணா ஜி :) :) கார்த்திக் சார்..:):)
க்ருஷ்ணா சார்.. சின்னவயசுல பார்க்கபிளாத் தான் இருக்காங்க.. நீங்க போட்ட ஃபோட்டோவே பழசுன்னா இப்போ...???!
கார்த்திக் சார்..ஆன்றோர்க்கும் தெரியாத விஷயம் உண்டு என்பது இப்போது தான் தெரிந்தது :) மங்கம்மா சபதம் மேட்னி ஷோ அலங்கார் தியேட்ட்ர் என நினைவு..சைக்கிளில் மதியக்காட்சி சென்று தலைவலியோடு திரும்பி வந்ததோர் காலம்!
vasudevan31355
30th August 2014, 01:43 PM
இன்றைய ஸ்பெஷல் (65)
'இன்றைய ஸ்பெஷலி'ல் நம், காதுகளில் மனதில் என்றும் ரீங்காரமிடும் 'பொன்வண்டு'
https://i.ytimg.com/vi/6L3QEOhuQks/mqdefault.jpg
படம்: பொன்வண்டு
நடிகர்கள்: ஜெய்சங்கர், பாரதி, உஷாநந்தினி, சுபா, மனோரமா, ஜெயசித்ரா
பாடல்கள்: வாலி, ஆலங்குடி சோமு
கதை, வசனம், டைரெக்ஷன்: என்.எஸ்.மணியம்
இசை: மெல்லிசை மாமணி வி.குமார்
ஒரு ஜாலியான படம். அதிலிருத்து செம ஜாலியான ஒரு பாடல்.
http://i.ytimg.com/vi/-3fTvxj6BAY/0.jpg
பணக்காரத் தந்தையின் பணத்தில் சொகுசாக வாழும் ஒரு ஊதாரி மகன் தன் தந்தையின் சவாலை ஏற்று சுயமாகச் சம்பாதிக்க கிளம்புகிறான். ஒரு சினிமாவில் கதாநாயகனாக நடிக்க அவனுக்கு சான்ஸ் கிடைக்கிறது. அதற்கு ஏகப்பட்ட தடங்கல்கள். அதனால் அவன் இயக்குனர், கதாசிரியர், தயாரிப்பாளர் இவர்களின் மகள்களை காதலிப்பது போல நடித்து, அவர்களை வைத்து தன் காரியத்தை சாதித்து, தன்னுடைய படத்தை வெற்றிகரமாக முடிக்கிறான். இறுதியில் தான் காதலித்த பெண்களின் துரத்தல்களில் இருந்து தப்பிக்க சாமியார் வேடம் பூண்டு ஏமாற்றி, தப்பிக்கிறான். வழியில் விபத்து ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதியாகி, குணம் பெற்று, தான் இறந்து விட்டதாகக் கதை கட்டி, தான் காதலித்த பெண்களால் ஏற்பட்ட பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டு வந்து, தான் சம்பாதித்த பணத்தைத் தன் தந்தையிடம் தந்து, பணத்தின் அருமையை தான் உணர்ந்து கொண்டதாகக் கூறுகிறான். தன் உறவுக்கார நொண்டிப் பெண் ஒருத்தியை திருமணமும் செய்து கொள்கிறான் அந்த நல்மனம் படைத்த வாலிபன்.
நாயகனாக ஜெய். அவர் தந்தையாக அசோகன். (நன்றாக நடித்திருப்பார்)
ஜெய்யைக் காதலித்து ஏமாறும் நாயகிகளாக ஜெயசித்ரா, சுபா, பாரதி, உஷா நந்தினி என்று நாயகியர் கூட்டம் ஏராளம். இதில் வயதான தயாரிப்பாளர் நாயகி மனோரமாவும் அடக்கம்.
(மனோரமாவிற்கு ஜெய்யைக் காதலித்து தோவியடைந்த நிலையில் 'வசந்தமாளிகை' டைப்பில் 'யாருக்காக' என்ற முழுநீளக் காமெடி பாடல் அவருடைய வசந்த மாளிகையில் சோகமாக உண்டு)
இறுதில் நொண்டிப் பெண் நாயகிதான் கதையின் உண்மையான நாயகி. பி.ஆர்.வரலஷ்மி.
இதுவல்லாமல் தேங்காய், சோ, சுருளி, ஐ.எஸ்.ஆர் என்று காமெடிப் பட்டாளம்.
இதில் தன்னைக் காதலிக்கும் ஜெயசித்ரா, சுபா, உஷாநந்தினி, பாரதி ஆகியோருடன் தனித்தனியாக பிளேபாய் கணக்கில் ஜெய் பாடும் செம அமர்க்களமான, ஜனரஞ்சகமான பாடல்தான் இன்றைய ஸ்பெஷலில் வரும் 'வாடியம்மா' பாடல்.
டி.எம்.எஸ்.பிரித்து மேய்ந்து அதகளம் பண்ணியிருப்பார். ஜெய்யும் அமர்க்களம். ரெண்டு ரெண்டு வரிகளுக்கு வந்தாலும் நாயகிகளும் சூப்பர்.
ஈகோ, இமேஜ் எல்லாம் பார்க்காமல் படு கேஷுவலாக வந்து பாடி ஆடிவிட்டுப் போவார்கள் அவரவர்களின் தனித்தன்மையான முத்திரை கொஞ்சமும் கெடாமல்.
இந்த மாதிரிப் பாடல்கள் என்றாலே மியூசிக் டைரக்டர்களுக்கு உற்சாகம் பீறிடும் போல. குமார் பட்டை கிளப்பியிருப்பார். இனிமை. ஒவ்வொரு சரணமும் வித்தியாசமான டியூன்களைக் கொண்டவை.
சுசீலா, ஈஸ்வரி என்று அதகளம் நடக்கும்.
http://i1.ytimg.com/vi/x7RTO13aa9I/0.jpghttp://i1.ytimg.com/vi/0RLXatsOS5I/0.jpg
நடிகர் திலகம் 'உத்தம் புத்திரனி'ல் பல நாயகிகளுடன் வெளுத்து வாங்கும்,
'யாரடி நீ மோகினி'
'தாயம் ஒண்ணு' படத்தில் இளையராஜா தூள் கிளப்பும், அர்ஜுனன் பல நாயகிகளுடன் பாடும்
'நானே உன் காதலி'
'உழைப்பாளி' படத்தில் ரஜனி ஸ்டைலில் வித வித நாயகிகளுடன் கலக்கும்
'ஒரு மைனா மைனாக் குருவி'
பாடல்கள் வகையைச் சார்ந்ததுதான் இப்பாடல்.
http://i.ytimg.com/vi/tE1-MdDuZWE/hqdefault.jpg
கோடி முறை கேட்கச் சொனாலும் நான் இப்பாடலைக் கேட்டுக் கொண்டிருப்பேன். அவ்வளவு மனத்துக்கு பிடித்த ஒரு பாடல். ஒவ்வொரு பூவாக கதாநாயகியரை வர்ணித்து இளமையோடு வளமை பொங்கும் பாடல்.
இப்பாடலைக் கேட்டுதான் குமார் அவர்களின் தீவிர ரசிகனானேன். 'பனி மலரோ' என்ற பாடகர் திலகத்தின் அற்புத பாடலும் இப்படத்தில் இடம்பெற்று உள்ளது.
இனி பாடலின் முழு வரிகள்
https://i.ytimg.com/vi/lX1wfECAFPQ/mqdefault.jpg
ஹெஹேஹே
பொன் வண்டு பொன்வண்டு பொன்வண்டு
ஹொஹோஹோ
பொன் வண்டு பொன்வண்டு பொன்வண்டு
ஹஹாஹா
பொன்வண்டு பொன்வண்டு
வாடியம்மா...
(ஜெயசித்ராவுடன்)
வாடியம்மா மல்லிகைப் பூ
நீ வாடி விழாத வாசனைப் பூ
வாடிக்கைக்காரன் நான்தான்
உன் வாடிக்கைக் காரன் நான்தான்
வந்திடுக தந்திடுக இன்பம் பொங்கும் சேர்ந்தால்
தேவை தேவை என்று பூவை எதிர்பார்த்து
வண்டு பறந்தாடுமோ
கோவை இதழ் மீது கொத்தும் கிளி போல
கோலம் வரைந்தாடுமோ
வான் தொடும் மேகத்தைப் போலே
உன்னை நான் தொடும் மோகத்தினாலே
பனி மலர் கொண்ட கனி இதழ்
கொஞ்சம் சிவந்துதான் போகுமோ
மணிவிழி மெல்ல மயங்கியே
தன்னை மறந்துதான் போகுமோ
ஹெஹேஹே
பொன்வண்டு பொன்வண்டு பொன்வண்டு
வாடியம்மா
(உஷாநந்தினியுடன்)
வாடியம்மா தாமரைப் பூ
புது வசந்தம் அம்மா உன் புன்சிரிப்பு
வாடிக்கைக்காரன் நான்தான்
உன் வாடிக்கைக் காரன் நான்தான்
வந்திடுக தந்திடுக இன்பம் பொங்கும் சேர்ந்தால்
வாடியம்மா
இலையுதிர்க் காலம் நேற்று
தளிர் விடும் காலம் இன்று
இலையுதிர்க் காலம் நேற்று
தளிர் விடும் காலம் இன்று
பூவிரித்தக் கொடி காய் சுமந்தபடி
வா வா வா
நான் நினைத்தபடி பூப்பறிக்க இடம்
தா தா தா
மலர்த் தோட்டம் எங்கெங்கே
வரும் வண்டு அங்கங்கே
மலர்த் தோட்டம் எங்கெங்கே
வரும் வண்டு அங்கங்கே
ஒன்றல்ல இன்பங்கள் நூறாயிரம்
ஹெஹேஹே
பொன் வண்டு பொன்வண்டு பொன்வண்டு
(சுபாவுடன்)
வாடியம்மா செண்பகப் பூ
தினம் வளருமம்மா நம் சந்திப்பு
வாடிக்கைக்காரன் நான்தான்
உன் வாடிக்கைக்காரன் நான்தான்
வந்திடுக தந்திடுக இன்பம் பொங்கும் சேர்ந்தால்
வாடியம்மா
சிட்டுக்கள் தொட்டுத்தான் ஒன்றையொன்று கொஞ்சுது
சிட்டுக்கள் தொட்டுத்தான் ஒன்றையொன்று கொஞ்சுது
தென்னையும் தென்றலும் ஒன்னுக்கொன்னு பின்னுது
உன்னோடு என் உள்ளம் பின்னோடு வருது
என்னென்ன உண்டோ நீ கண்ணோடு எழுது
பூவாட்டம் என்னை எடுத்து
ஒரு வெள்ளோட்டம் மெல்ல நடத்து
பூவாட்டம் என்னை எடுத்து
ஒரு வெள்ளோட்டம் மெல்ல நடத்து
பொல்லாத நாணம் இல்லாத நேரம்
பாராட்டு என்னை அணைத்து
ஹெஹேஹே
பொன் வண்டு பொன்வண்டு பொன்வண்டு
(பாரதியுடன்)
வாடியம்மா ரோஜாப் பூ
என்னை வாட்டுதம்மா உன் நினைப்பு
வாடிக்கைக்காரன் நான்தான்
உன் வாடிக்கைக்காரன் நான்தான்
வந்திடுக தந்திடுக இன்பம் பொங்கும் சேர்ந்தால்
வாடியம்மா
வயது பதினேழு வளர்ந்த இளமாது
உள்ளம் உனதல்லவோ
விழிகள் நான்கோடும்
வழிந்து புரண்டோடும் வெள்ளம் நமதல்லவோ
நூறுதரம் கேட்டுத் தருவது உண்டு
கேட்காமல் எடுத்துக் கொள்வது இன்று
இன்று தொட்டு நாளை தொட்டு
அள்ளி அள்ளி அணைக்க
மிச்சம் என்று மீதம் என்று
சொல்லி சொல்லிக் கொடுத்து
இன்னும் இன்னும் பக்கம் வந்து
என்னென்னவோ சொல்லவா
வாடியம்மா
பொன் வண்டு பொன்வண்டு பொன்வண்டு
வாடியம்மா
பொன் வண்டு பொன்வண்டு பொன்வண்டு
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lX1wfECAFPQ
chinnakkannan
30th August 2014, 01:45 PM
//அதான் மடிப்பாக்கம் மாதவன் நகைச்சுவை சீரியலில் இப்போது தினமும் நம்வீட்டுக்கு வந்துகொண்டிருக்கிறாரே.// கார்த்திக் சார்.. நான் தமிழ் சீரியல்கள் பார்ப்பதில்லை..பார்த்தால் உடலில் பாய்ல்ஸ் கொப்புளங்கள் எனக்கு வந்து விடும் :) ( ஹிந்தி சீரியல்கள் (வீட்டில் பார்ப்பதால்) அவ்வப்போது காதில் விழும்..சிலசமயம் பார்த்தால் முதுகுகள் .தான் கண்ணில் படும்..அதுவும் அந்த ஒப்பனை முகங்க்ள்..ஓ.என்ன சொல்ல எப்படி எழுத......
chinnakkannan
30th August 2014, 01:57 PM
//பூவாட்டம் என்னை எடுத்து
ஒரு வெள்ளோட்டம் மெல்ல நடத்து // வாசு சார்.. நன்றி, தாங்க்ஸ், ஷூக்ரான், தன்யவாத்.. ஜெயச்சித்ரா,உஷா நந்தினி, சுபா,பாரதி என ஸம்மர் ஸர்ப்ரைஸ் போல ஒரு பேக்கேஜாவேக் கொடுத்துட்டீங்க்.. நல்ல பாட்டு..முன்பு கேட்டிருக்கிறேன்..இப்ப முழுக்கப் பாட்டுப் பார்த்துட்டுத் தான் எழுதுகிறேன்..இருக்கறதுலேயே பிடித்த காஸ்ட்யூம் வரிசை சுபா, ஜெயசித்ரா,பாரதி உஷா நந்தினி.. அகெய்ன் தாங்க்ஸ்.. வாழ்க உம் தொண்டு :)
gkrishna
30th August 2014, 02:08 PM
வாசு சார்
பொன் வண்டு banner famous -சூரிய காந்தி படத்தில் வரும் .
நாம் ஏற்கனவே 'பனி மலரோ குளிர் நிலவோ ' பாட்டை பற்றி பேசி இருக்கிறோம் . இந்த படத்தின் டைரக்டர் NS மணியம் ஸ்ரீதர் உதவியாளர் ஆக பணி ஆற்றி உள்ளார் என்பது படித்த நினைவு . 78-79 கால கட்டத்தில் டாக்ஸி டிரைவர் வரை வந்தார் . அப்பறம் காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம் பெற்று விட்டார் .
உஷா நந்தினி பற்றி சி கே காலையில் சொல்லி இருந்தார் .நீங்கள் போட்டு விட்டீர்கள் பாட்டை . கொஞ்சம் சுபா,பாரதி,உஷா நந்தினி,ஜெயசித்ரா ,மனோரமா போட்டோ போடலாம்னா கார்த்திக் சார் கோவித்து கொண்டு விடக்கூடாது
உள்ளே நடிகர் திலகத்தின் போட்டோ நுழைகிறீர்கள் பாருங்கள் அது தான் உங்க தனி திறமை வாசு சார்
வாழ்த்துகள்
gkrishna
30th August 2014, 02:25 PM
http://lh6.ggpht.com/-n5KfllGSZmE/VAE-T9ih4KI/AAAAAAABFsE/GFm0gxfFk-0/w1280/page0124_i2.jpghttp://lh4.ggpht.com/-2SVsOxEeOpg/VAE-URXZ69I/AAAAAAABFsI/UEnbN0YfVCA/w1280/page0125_i2.jpghttp://lh5.ggpht.com/-8lEAB1DNvsI/VAE-VsnxhfI/AAAAAAABFsU/r65TYBg2Gmg/w1280/page0126_i2.jpghttp://lh4.ggpht.com/-6bK9iK9rBtY/VAE-ZjHIexI/AAAAAAABFs0/VHf_l1E_nB4/w1280/page0127_i2.jpghttp://lh4.ggpht.com/-IJiRwADh21U/VAE-adgZhnI/AAAAAAABFs8/ZHA-S6GMgJ0/w1280/page0128_i2.jpghttp://lh3.ggpht.com/--iThBcwXous/VAE-hLpp6RI/AAAAAAABFtk/m23fDY9o3M8/w1280/page0130_i2.jpg
sss
30th August 2014, 02:31 PM
ஒத்தையடி பாதையிலே படத்தில் இடம் பெற்ற ஏ உன்னத்தான் எங்கே பாக்குற... செப்புக்குடம் தூக்கிபோற
வானொலியில் ஒலிக்காத நாளே இல்லை எனலாம்..
(சங்கர்) ஒரு புதுமுக நடிகையுடன்???? நடித்த இந்த பாடல் இதோ..
https://www.youtube.com/watch?v=pV5-tT5Q33c
mr_karthik
30th August 2014, 02:31 PM
டியர் வாசு சார்,
இன்றைய ஸ்பெஷல் விருந்தாக தாங்கள் படைத்திட்ட பொன்வண்டு படத்தின் "வாடியம்மா" பாடல் அருமையோ அருமை. மக்கள் கலைஞர் ஜெய் ஜாலியாக அனுபவித்து நடித்த படங்களில் ஒன்று. முதல் வெளியீட்டிலேயே பார்க்கும் வாய்ப்பு அமைந்த படம். முதல்தடவை பார்த்தபோதே படம் பிடித்திருந்தது. பின்னர் பலமுறை வீடியோவில் பார்த்து மகிழ்ந்த படம்.
படம் நன்றாக ஓடி வெற்றி பெற்றது. இப்படத்திற்குப்பின் ஜெயின் மார்க்கெட்டில் நல்ல ஏறுமுகம் தென்பட்டது. அவருடைய 150-வது படமான 'டாக்ஸி டிரைவர்' படத்தை தயாரித்ததும் இதே என்.எஸ்.மணியம்தான்.
இந்தப்படம் வெளிவந்த சில நாட்களில் தன்னுடன் நடிக்க ஸ்டுடியோவுக்கு வந்த மனோரமாவைப் பார்த்து நடிகர்திலகம் "என்ன ஒரு படத்துல என்னை கிண்டல் பண்ணி நடிச்சிருக்கியாமே" என்று ஜாலியாக கேட்க பதறிப்போன மனோரமா 'ஐயோ அண்ணே, கிண்டலெல்லாம் பண்ணலீங்க. காதல் தோல்வியடைஞ்ச ஒரு பெண் பாடுவதாக இந்தப்பாடலை டைரக்டர் வச்சுட்டார்" என்று சொல்ல, நடிகர்திலகம் 'ஏன் பதறுரே, சும்மாதான் கேட்டேன்' என்றாராம். அப்போதைய பத்திரிகையில் வந்த செய்தி இது.
அப்போதே வண்ணப்படங்கள் சர்வ சாதாரணமாக வந்துவிட்ட நேரத்தில் இப்படத்தை கலரிலேயே எடுத்திருக்கலாம் என்று தோன்றியது. இன்னும் பெரிய வெற்றி வாய்ப்பு கிடைத்திருக்கும். நாயகியர் நால்வரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்க, ஜெய்யோ உற்சாகத்தில் சிகரம் தொட்டிருப்பார்.
சிறப்பான ஆய்வு..., வாழ்த்துக்கள்...
sss
30th August 2014, 02:35 PM
ஷ்யாம் இசையில் வெளிவந்த பஞ்சகல்யாணி பட பாடல்...
யார் இந்த கல்யாணி ... வசந்தியா ??
ராசா வந்தானடி ரோசமுள்ள ராசா வந்தானடி...
https://www.youtube.com/watch?v=mRAC1AuBi-o
ஆமணக்கு தோட்டத்திலே (இன்னொமொரு சூப்பர் ஹிட் பாடல்)
https://www.youtube.com/watch?v=zq8KkZd9UQ4
பூமாதேவி போலே வாழும்
https://www.youtube.com/watch?v=TINLquHD1y0
sss
30th August 2014, 02:36 PM
ஷ்யாம் இசையில் வெளிவந்த பஞ்சகல்யாணி பட பாடல்...
இந்த படத்தின் 75 -வது நாள் விழாவுக்கு நெல்லை ராயல் திரை அரங்குக்கு இந்த அப்படத்தில் நடித்த கழுதை யை கூட்டி வந்ததாக ஞாபகம்... பேப்பரில் படித்தேன்,... கிருஷ்ணா ஜி மேலும் தகவல் தருவார்...
அடி அடி வாங்கடி
https://www.youtube.com/watch?v=HlMC9q61530
mr_karthik
30th August 2014, 02:47 PM
கொஞ்சம் சுபா,பாரதி,உஷா நந்தினி,ஜெயசித்ரா ,மனோரமா போட்டோ போடலாம்னா கார்த்திக் சார் கோவித்து கொண்டு விடக்கூடாது
டியர் கிருஷ்ணாஜி,
இதென்ன வம்பு?. நான் எதற்கு கோபிக்கப்போகிறேன். நீங்க தாராளமாக போடுங்க. நானும் சேர்ந்து ரசிக்கிறேன். (மனோரமா போட்டோவுமா?. எதுக்கு?) மற்றவர்கள் ஓ.கே...
gkrishna
30th August 2014, 03:07 PM
https://i.ytimg.com/vi/b1r8fXYTiQc/mqdefault.jpghttps://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQrrOJroNVetaZM6x3NHFTNHNhT24U2S dJxD4R_Hw0nMctV3i2V
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcRJET57hJ9F60gTSlqQunAL3Jp1VCDtp aqA0vVAjiwNiQnRtutIVAhttp://antrukandamugam.files.wordpress.com/2013/08/jayachithra-kadavul-mama-3.jpg?w=487http://antrukandamugam.files.wordpress.com/2013/11/sivaji-usha-nandini-ponnunjal-1.jpg?w=593http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20Three/PonVanduBanerMtRd.jpg
கார்த்திக் சார்
நடிகர் திலகம் பற்றி வைரமுத்து பேட்டி படித்தீர்களா?
chinnakkannan
30th August 2014, 03:09 PM
//நானும் சேர்ந்து ரசிக்கிறேன். (மனோரமா போட்டோவுமா?. எதுக்கு?) மற்றவர்கள் ஓ.கே... // அதானே கார்த்திக் சார் :) நான் உங்களை வழிமொழிகிறேன்..
chinnakkannan
30th August 2014, 03:10 PM
வைரமுத்து பேட்டி போனவாரத்திலேயே குமுதத்தில் படித்தேன் க்ருஷ்ணாஜி..இப்போது இன்னொரு முறை..நன்றி..படங்களுக்கும் சேர்த்து..:)
vasudevan31355
30th August 2014, 03:20 PM
டியர் கார்த்திக் சார் ,
'வாடியம்மா' பாட்டிற்கு தங்களுடைய பாராட்டிற்கும்,மேலதிக மனோரமா தகவலுக்கும் மிக்க நன்றி!
அது கிடக்கட்டும். இன்ப அதிர்ச்சி. தலைவரின் 'சவாலே சமாளி' 'நிலவைப் பார்த்து வானம் சொன்னது' பாடல் ஆய்வைத்தான் சொல்கிறேன்.
அற்புதம் சார். மிக அழகான விரிவுரை.
'தங்கம் எடுத்த கை தங்கம் பார்த்ததா
தர்மம் காத்த கை சமதர்மம் கண்டதா
ஆலயம் செய்வோம் அங்கே அனுமதியில்லை
நீ அந்தக்கூட்டமே இதில் அதிசயமில்லை
நீ அந்தக்கூட்டமே இதில் அதிசயமில்லை'
படத்தில் மூன்றாவது சரணம். ஆனால் ரேடியோவில் கேட்க முடியாது. இரண்டு சரணங்களோடு முடிந்து விடும். ஆனால் இப்போது சானல்களில் முழுப் பாடலையும் கேட்டு ரசிக்க முடிகிறது அந்தப் புண்ணியவான்கள் திமிரெடுத்து பாதியிலேயே நிறுத்தித் தொலைக்காமல் இருந்தால்.
இந்த வரிகளுக்கான தங்கள் விளக்கம் ரொம்ப சூப்பர்.
http://i.ytimg.com/vi/H1Qf_xEI428/maxresdefault.jpg
'ராஜா'வில் மாடர்ன் ராஜா. 'சவாலே சமாளி'யில் அதே அழகு கொஞ்சும் முகத்துடன் கிராமத்து மாணிக்கம். அந்த நீள் கிருதாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அதுவும் சைட் போஸ் இருக்கிறதே. உலகின் ஒட்டுமொத்த அழகையும் பிரம்மன் அந்த முகத்தில் கொண்டு வந்து கொட்டி உருவாக்கியிருப்பான்.
Richardsof
30th August 2014, 03:36 PM
http://i57.tinypic.com/23lmkcn.jpg
http://youtu.be/fOBCfEVnCv4
Richardsof
30th August 2014, 03:41 PM
http://i58.tinypic.com/4q1qvq.jpg
RAGHAVENDRA
30th August 2014, 03:42 PM
டியர் கார்த்திக் சார் ,
'வாடியம்மா' பாட்டிற்கு தங்களுடைய பாராட்டிற்கும்,மேலதிக மனோரமா தகவலுக்கும் மிக்க நன்றி!
அது கிடக்கட்டும். இன்ப அதிர்ச்சி. தலைவரின் 'சவாலே சமாளி' 'நிலவைப் பார்த்து வானம் சொன்னது' பாடல் ஆய்வைத்தான் சொல்கிறேன்.
அற்புதம் சார். மிக அழகான விரிவுரை.
'தங்கம் எடுத்த கை தங்கம் பார்த்ததா
தர்மம் காத்த கை சமதர்மம் கண்டதா
ஆலயம் செய்வோம் அங்கே அனுமதியில்லை
நீ அந்தக்கூட்டமே இதில் அதிசயமில்லை
நீ அந்தக்கூட்டமே இதில் அதிசயமில்லை'
படத்தில் மூன்றாவது சரணம். ஆனால் ரேடியோவில் கேட்க முடியாது. இரண்டு சரணங்களோடு முடிந்து விடும். ஆனால் இப்போது சானல்களில் முழுப் பாடலையும் கேட்டு ரசிக்க முடிகிறது அந்தப் புண்ணியவான்கள் திமிரெடுத்து பாதியிலேயே நிறுத்தித் தொலைக்காமல் இருந்தால்.
இந்த வரிகளுக்கான தங்கள் விளக்கம் ரொம்ப சூப்பர்.
http://i.ytimg.com/vi/H1Qf_xEI428/maxresdefault.jpg
'ராஜா'வில் மாடர்ன் ராஜா. 'சவாலே சமாளி'யில் அதே அழகு கொஞ்சும் முகத்துடன் கிராமத்து மாணிக்கம். அந்த நீள் கிருதாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அதுவும் சைட் போஸ் இருக்கிறதே. உலகின் ஒட்டுமொத்த அழகையும் பிரம்மன் அந்த முகத்தில் கொண்டு வந்து கொட்டி உருவாக்கியிருப்பான்.
வாசு சார்
தாங்கள் கூறியது மிகச் சரி. அழகு என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள இந்த முகத்தை ஒரு முறை பார்த்தால் போதும். அதன் சரியான விளக்கத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
gkrishna
30th August 2014, 03:44 PM
http://www.maalaisudar.com/images/stories/120709/pillai.jpg
நேற்று முரசு தொலை காட்சியில் பிள்ளையோ பிள்ளை திரை படத்தின் சில பாடல்களை ஒலி பரப்பினார்கள் .அடிகடி இந்த திரை படத்தின் பாடல்களை நீங்கள் முரசு தொலை காட்சியில் பார்க்கலாம் .அது சம்பந்தமாக மாலைசுடர் 2009 நாள் இதழில் வெளி வந்த ஒரு விமர்சனம்
1971 ஆம் ஆண்டு திமுக தேர்தல் பிரச்சாரத்தின் போது எம்ஜிஆர் மாதிரி வேடமணிந்து பிரச்சார நாடகங்களில் நடித்தார் முதலமைச்சர் கருணாநிதி யின் மகன் மு.க.முத்து. 1972 ஆம் ஆண்டு அவர் கதாநாயக னாக நடித்த "பிள்ளையோ பிள்ளை' திரைப்படத்தை கலைஞரின் அஞ்சுகம் பிக்சர்ஸ் தயாரித்தது. கதை, வசனம் கருணாநிதி. படத்தை இயக்கினார்கள் கிருஷ்ணன்பஞ்சு.
.
இந்தப் படத்தில் மு.க.முத்து எம்ஜிஆர் போலவே நடை, உடை பாவனையுடன் நடித்தார். பாடினார். சண்டை போட்டார். அதுவும் முதல் படத்திலேயே எம்ஜிஆர் போல இரட்டை வேடம்.
கொடியவன் கங்காதரன் தனது முதல் மனைவி பார்வதியைக் கொலை செய்கிறான்.இரண்டாவது மனைவி காஞ்சனாவையும் கர்ப்பிணி யாகத் துரத்தியடிக்கிறான். பார்வதி யின் மகன் குமாரை அவளைக் கொன்றவன் என்று கங்காதரனால் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்த வேலைக்காரன் முருகனை வளர்த்து வாலிபனாக்கி டாக்டருக்குப் படிக்க வைக்கிறான்.
காஞ்சனாவின் மகன் கண்ணன் கடமை வீரனாக வளர்கிறான். உருவத்தால் ஒன்றுபட்ட குமாரும், கண்ணனும் மோத வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இவர்களுடைய வாழ்க்கையில் பப்ளிக்பிராசிக்யூடர் ராதா குறுக்கிடுகிறாள். காதலில் மோதல்,முடிவிலே சுபம். வில்லன் கங்காதரனை பழிவாங்குவதிலும் சகோதரர்கள் வெற்றி பெறுகிறார்கள்.
வண்ணத்தில் தயாரான "பிள்ளையோ பிள்ளை'யில் மு.க.முத்துவின் அறிமுகக் காட்சியே அமர்க்களமானது.
"உயர்ந்த இடத்தில் இருப்பவன் நான்
ஓய்வில்லாமல் உழைப்பன் நான்'
என்று பாடியவாறு அவர் ஆடிப் பாடுவதை ரசிகர்கள் வரவேற்கவே செய்தனர். ஆனால் மு.க.முத்துவின் திரையுலகப் பிரவேசம், கருணாநிதி எம்ஜிஆர் உறவில் விரிசல் ஏற்படுத்தி கட்சியே உடையக் காரணமானதாகக் கூறுவார்கள்.
கவிஞர் வாலியின் பாடல்களுக்கு மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் இசையமைத்தார்.
"ஏழையின் சிரிப்பில் இறைவன்
இருப்பதைச் சொன்னான் தலைவன்
அண்ணனவன் சொல்லிய சொல்லை
நான் எந்நாளும் மறந்தது இல்லை'
"மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ நீ மூவேந்தர் வழிவந்த மன்னவனோ'
"மீனாட்டம் கண்கொண்ட மீனாட்சி கோபங்கள் கூடாது காமாட்சி'
"வெள்ளை மலரில் ஒரு வண்டு அள்ளித் தருதே சுகம் இங்கு'
சுசீலாவின் அருமை ஆன ஒரு பாடல் சார் இது லக்ஷ்மியும் விஜயகுமாரியும் இந்த பாடலில் தோன்றுவார்கள் மெல்லிசை மன்னரின் திறமைக்கு இந்த பாடல் ஒரு மகுடம் .இந்த பாட்டிற்கு விடியோ கிடைக்க வில்லை
போன்ற பாடல்களை டிஎம்எஸ் சுசீலா ஆகியோர் பாடி, அவை ஹிட்டும் ஆனது.
கலைஞரின் வசனத்தில் அண்ணாவின் பழக்கவழக்கங்கள் சுட்டிக் காட்டப்பட்டிருந்தன.
"கணையாழி உனக்கு, கசையடி எனக்கா' என மு.க.முத்து மற்றொரு முத்துவிடம் கேட்கும் வசனம் அக்காலத்தில் பிரபலம்.
எம்ஜிஆர் படத்துக்கு சண்டைப் பயிற்சி அளிக்கும் சியாம்சுந்தர்தான் "பிள்ளையோ பிள்ளை' படத்துக்கும் சண்டைகளை அமைத்தார். "பிள்ளையோ பிள்ளை' முதற் காட்சி விழாவில் புரட்சி நடிகர் எம்ஜிஆர் தான் எனது ஆசான் என்று மு.க.முத்து கூறினார். இதைக் குறிப்பிட்ட ம.பொ.சிவஞானம், துரோணரை ஆசானாகக் கொண்டு ஏகலைவன் வில்வித்தையில் தேர்ச்சி பெற்றது போல, எம்ஜிஆரை ஆசானாகக் கொண்ட முத்துவும் அவரைப் போல புகழையும், சிறப்பையும் பெற வாழ்த்துகிறேன்.
இறுதியாக எம்ஜிஆர் வாழ்த்திப் பேசினார். என்னை ஆசானாக ஏற்றுக் கொண்டிருப்பதாக தம்பி முத்து பேசினார். அதைக் கேட்டு பெருமைப் படுகிறேன்.ஆனால் முத்து ஒருநாள் கூட என்னிடம் நடிப்புக்காக வந்ததில்லை. ஏகலைவன் மானசீகமாகக் குருவை எண்ணி வித்தையில் தேர்ந்தான் என்பது போல என் படங்களைப் பார்த்து அதன்படி நடிக்க விரும்புகிறார் முத்து என்று எண்ணுகிறேன்.
ஒவ்வொரு வரிடமும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. அதில்தான் செல்ல வேண்டும். முத்து தனக்கென்று தனிவழியை நடிப்பதற்கு வகுத்துக் கொண்டு நடிகராக வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.
ஆனால் அதை மு.க.முத்து கடைப்பிடித்தது போலத் தெரிய வில்லை. அதனால் சில படங்களில் மட்டுமே அவரால் சோபிக்க முடிந்தது. எனினும் "பிள்ளையோ பிள்ளை' ரசிகர்களைக் கவரத் தவறவில்லை.
RAGHAVENDRA
30th August 2014, 03:45 PM
கார்த்திக் சார்
சவாலே சமாளி பாடல் ஒரு சர்ப்ரைஸ் பதிவு.. சூப்பர் சார்...
gkrishna
30th August 2014, 04:10 PM
கண்ணா நீயும் நானுமா?
http://www.thehindu.com/multimedia/dynamic/00555/22fr_gauravam2_jpg_555734g.jpg
வியட்நாம் வீடு சுந்தரத்தின் ‘கெளரவம்’ படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் ‘கண்ணா நீயும் நானுமா’ என்ற பாடலைப் பாட வந்த போது.
படத்தின் கதை, அந்தப் பாடலைப் பாடப் போகும் கதாபாத்திரத்தின் குண நலன்கள் மற்றும் மனோ பாவம், ஆகியவற்றைப் பற்றி நன்கு கேட்டுத் தெரிந்து கொண்டு அந்தக் கதாபாத்திரமாகவே தம்மையும் மாற்றிக் கொண்டு,இன்னும் சொல்லப் போனால் கூடு விட்டுக் கூடு பாய்வது போல அந்தக் கதாபாத்திரத்தின் உடலில் புகுந்து கொண்டு உணர்வு பூர்வமாகப் பாடிக் கொடுத்தார் டி.எம்.எஸ்.
அந்தப் பாடல் காட்சியில் நடிப்பதற்காக படப் பிடிப்புத் தளத்துக்கு வந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனிடம் பாடலைப் போட்டுக் காட்டினார்கள்.
‘இன்னும் ஒரு தடவை போடுங்கள் இன்னும் ஒரு தடவை’ என்று பல தடவை திரும்பத் திரும்ப அந்தப் பாடலை மிக உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டே இருந்தார் சிவாஜி.இது அங்கிருந்த பலருக்கும் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது!காரணம், பொதுவாக சிவாஜி ஒரு பாடல் காட்சியில் நடிப்பதற்கு முன்பு ஒரு தடவை அல்லது மிஞ்சிப் போனால் இரண்டு தடவை தான் அந்தப் பாடலின் ஒலி நாடாவை ஒலிக்க விடச் சொல்லிக் கேட்பது வழக்கம்.
ஆனால் இந்தப் பாடலை அவர் பத்துத் தடவைக்கு மேலாக கண்களை முடிக் கொண்டே மறுபடியும் மறுபடியும் கேட்டுக் கொண்டே இருந்தார்.
இதை நீண்ட நேரமாகவே கவனித்துக் கொண்டிருந்த வியட்நாம் வீடு சுந்தரம், நடிகர் திலகத்தின் அருகே சென்று அவரிடம் மிகவும் பணிவான குரலில் தமது சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.
‘ஒரு தடவை, அல்லது இரு தடவை பாடலைக் கேட்டு விட்டு உடனே நடிக்க வந்து விடும் நீங்கள் இந்தக் குறிப்பிட்ட பாடலை மட்டும் பத்து தடவைக்கு மேல் திரும்பத் திரும்பக் கேட்பதன் ரகசியம் என்ன?
‘சுந்தரம்! டி. எம். எஸ். இந்தப் பாடலை, மிகுந்த உணர்ச்சிப் பிரவாகமாகப் பாடி இருக்கின்றார்.
பல்லவியில் ஒரு விதமான பாவம் ஆக்ரோஷம்
அடுத்த சரணத்தில் இன்னொரு விதமான தொனி
மற்ற சரணத்தில் இன்னொரு பரிமாணம் என குரலால் அற்புதமாக நடித்துக் கொடுத்திருக்கிறார் டி.எம்.எஸ்.
ஒரே வரியையே இரண்டு இடத்தில் ‘ரிபீட்’ பண்ணும் போது இரண்டு விதமான தொனிகளில் பாடுகிறார்.
உதாரணமாக ‘நீயும் நானுமா?’ என்ற வரியை ஒவ்வொரு முறை உச்சரிக்கும் போதும் ஒவ்வொரு பாவத்தில் அர்த்தத்தில் உச்சரிக்கிறார்.
இப்படியெல்லாம்... அற்புதமாக அவர் பாடிக் கொடுத்த பாட்டை கவனமாக நான் நடித்துக் கொடுக்கா விட்டால் இதைப் பாடிய டி.எம்.எஸ். என்னைப் பற்றி என்ன நினைப்பார்? என்றாராம் சிவாஜி.
நடிகர் திலகத்தின் செய் தொழில் நேர்த்திக்கும், ஆத்மார்த்தமான தொழில் ஈடுபாட்டுக்கும், தன்னடக்கத்திற்கும், சக கலைஞர்களின் திறமைகளைப் பகிரங்கமாக மதிக்கும் பரந்த தன்மைக்கும் இது ஒரு சிலிர்க்க வைக்கும் எடுத்துக்காட்டு.
http://www.youtube.com/watch?v=HEaY_qGscLo
gkrishna
30th August 2014, 04:45 PM
http://kavingarvaali.files.wordpress.com/2012/04/vali-server-sundaram.jpg?w=570
இந்த போட்டோ ஏற்கனவே ராகவேந்தர் sir போட்டு விட்டாரா ?
gkrishna
30th August 2014, 04:48 PM
dear esvee sir
ஷீலாவும் லதாவும் இருக்கும் இந்த போட்டோ எந்த திரைப்படம் சார் ?
gkrishna
30th August 2014, 05:12 PM
கவிஞர் கண்ணதாசனை பற்றி நெல்லை கண்ணன்
http://kannadasan.files.wordpress.com/2012/05/kanna-6.jpg?w=390
தந்தையைக் காண முடியாமல் தவிக்கின்ற குழந்தை ஒன்று அதனை வளர்க்கின்ர மாமன் அதற்கு ஆறுதல் சொல்லிப் பாடுகின்றான் பார்த்தால் பசி தீரும் என்ற படம்.
பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி வந்தாயோ இல்லை
இறைவனை நம்பி வந்தாயோ
என்று கேட்கின்றார் கவியரசர்
ஆமாம் உனக்கு ஒரு தந்தை உண்டு மகனே. ஆனால் உன் தந்தைக்கும் ஒரு தந்தை உண்டு .அவர் தான் இறைவன் என்கின்றார்.
அடுத்த கேள்வி மிக மிக ஆழமான கேள்வி. ஆமாம் உனக்குத் தெரிய வாய்ப்பில்லை மகனே அந்த தந்தையாக உருவெடுத்த அந்த ஒருவனையா நம்பி நீ வந்துள்ளாய். இல்லை இல்லை அவனுக்கும் தந்தையான இறைவனை நம்பியல்லவா வந்துள்ளாய் என்கின்றார். ஏனெனில் உன் தந்தையையும் இயக்குவது அவனல்லவா என்கின்றார்.
உன் தந்தை உன் தாயை மறந்திருக்கக் கூடும் உன் தந்தை உனக்கு தந்தையென்று ஊரார் அறியச் சொல்லாமலிருக்கக் கூடும். ஆனால் இறைவனாகிய தந்தையோ நீ அழைக்க வேண்டும் என்று காத்திருக்க மாட்டான் அவனாகவே வந்து அவனது கடமைகளைச் சரியாகச் செய்வான்.
தாயாரைத் தந்தை மறந்தாலும்
தந்தை தானென்று சொல்லாத போதும்
ஏனென்று கேட்காமல் வருவான் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
அடுத்துத் தான் கவியரசரின் சிந்தனையின் தெளிவும் உயர்வும் வந்து விழும் வரிகளாக.
கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கின்ற பணக்காரர்களுக்கு எல்லாம் சொந்தமாகக் காட்சியளிக்கும் என்கின்றார்.
செல்வமற்ற ஏழைகளுக்கு மிகப் பெரிய செல்வமாக இறைவன் அளித்த உள்ளங்கள் சொந்தமாக இருக்கும் என்கின்றார். அதனால்தான் இறைவன் என்ன செய்வானாம் கள்ளமற்ற உள்ளங்கள் வாழும் இல்லாதவரின் இல்லங்கள் தேடி வருவானாம். அவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் என்கின்றார்.
உள்ளோர்க்குச் செல்வங்கள் சொந்தம் அது
இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
இல்லாத இடம் தேடி வருவான் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
கவியரசரின் வரி வடிவங்கள் இறைவன் அவருக்கு அளித்த கொடை.
vasudevan31355
30th August 2014, 06:23 PM
ஜஸ்ட் ரிலாக்ஸ்.(தொடர்)
http://www.aqnb.com/wp-content/uploads/2012/12/Gustav-Metzger.-Just-Relax..jpg
https://lh5.googleusercontent.com/-Ds8AqyeTTF0/UwrJpwH7a1I/AAAAAAADws4/GCH8VyZ_9T4/s1600/CV-Rajendran-Kreshna-Kaivalyas-wedding-reception.jpg
இயக்குனர் வரிசை சி.வி.ராஜேந்திரன்.
http://sim03.in.com/62/b23ef79115dcd4b2a3f6324a8c990922_pt_xl.jpg
சி.வி.ஆர். இயக்கிய இன்னொரு காமெடிப் படமான 'நவாப் நாற்காலி' படத்திலிருந்து ஒரு அறுவைத்தனமான கலாய்ப்புப் பாடல். நாகேஷ் அறுவைப் பொன்மொழிகள் பேசி அடிக்கும் கூத்து ரகளை. தமிழ் அதிகம் தெரியாத ரமாபிரபாவுடன் இவர் பாடும் செம ஜாலியான ஒரு பாடல்.
படம் முழுக்க நாகேஷின் அறுவைக் கச்சேரி களை கட்டும். அதனால்தான் இந்த சப்பாத்தி சப்பாத்திதான் ரொட்டி ரொட்டி தான்..(அப்போதெல்லாம் அறுவை ஜோக் புகழ் பெறத் தொடங்கியிருந்த காலம். இதை பகிரங்கமாக ஆரம்பித்து வைத்தவர் நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள். ஸ்ரீகாந்த் என்றாலே அறுவை ஜோக் என்று ஒருகாலத்தில் பெயர் எடுத்தவர் அவர். இத்தனைக்கும் படங்களில் இல்லை. நேரில் அவர் அடிக்கும் அறுவைக் கூத்துகளைக் கண்டு சக நடக்க நடிகையர்கள் அலறி ஓடுவார்களாம். 'சிவாஜி ரசிகன்' இதழில் கூட ஸ்ரீகாந்தின் அறுவை ஜோக்குகள் பல தொடர்ந்து வந்துள்ளன)
தமிழ் சரியாக வராத ரமாபிராபாவிடம் நாகேஷ் அறுவை தத்துவங்கள் சொல்லிப் பாடுவார். நடுவில் பிரபாவின் சந்தேகங்களுக்கு பதில் வேறு.
ரொம்ப இனிமையான பாடல் இல்லை. ஆனா ஜாலியான ஒரு பாடல்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-52.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/1-52.jpg.html)
சப்பாத்தி சப்பாத்திதான்
ரொட்டி ரொட்டிதான்
'வாட் சப்பாத்தி? அது ஏப்டி இருக்கும்'? (ரமாபிரபா கேள்வி)
சப்பாத்தி சப்பாத்திதான்
ரொட்டி ரொட்டிதான்
'சவ் ரொட்டி இல்லே சவ் ரொட்டி அதூ அதூ' (நாகேஷ் பதில்)
அவனுக்கும் அவளுக்கும் வருவது காதல்
ஆனாலும் அவன் அவனேதான்
அவள் அவளேதான்
அரிசியும் உளுந்தும் சேர்ந்தது தோசை
ஆனாலும் அரிசி அரிசிதான்
உளுந்து உளுந்துதான்
ம்ஹூம்... இன்னாது அது உளுந்து? (ரமாபிரபா கேள்வி)
'உளுந்துமில்லே எளுந்துமில்லே... டால்' (நாகேஷ் பதில்)
கொடியில் வந்தது மல்லிகைப்பூ
அது கொண்டையில் ஏறுதம்மா
கொம்பில் முளைத்த முருங்கைக்காய்கள்
அது குழம்புக்குப் போகுதம்மா
குழம்புக்குப் போகுதம்மா
'முருங்குக்காய்!. இன்னாது அது முருங்குக்காய்'?
'டிரம்ஸ் ஸ்டிக்... டிரம்ம்மு...ரம்மு'
செடியில் பிறந்த பருத்தியில் இருந்து சேலைகள் வளருதம்மா
சேரும் ஆம்பள பொம்பளைக்கெல்லாம் திருமணம் ஆகுதம்மா
ஆம்பள ஆம்பளதான்
பொம்பள பொம்பளதான்.
வெள்ளரிக்காய பழுக்க விட்டால்
அது வெள்ளரிப் பழமாகும்
விதையை எடுத்து பூமியில் வச்சா மறுபடி காயாகும்.
மறுபடி காயாகும்.
'வெள்ரிப் பழம்! அது எப்படி இருக்கும் வெள்ரிப் பழம்?'
'உன் பேஸ் மாதிரி இருக்கும்'
காதல் பழுத்தால் ஒருநாள் அதுவும் கல்யாணம் ஆகி விடும்
கல்யாணம் முடிஞ்சா பொம்பள வயத்தில் மறுபடி பிஞ்சு வரும்
காதல் காதல்தான்
கல்யாணம் கல்யாணம்தான்.
லவ்வு லவ்வுதான்
மேரேஜு மேரேஜுதான்
லவ்வு லவ்வுதான்
மேரேஜு மேரேஜுதான்
பாடல் 1.36.13 to 1.39.07 வரை
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ejPNTXbtxZE
JamesFague
30th August 2014, 06:24 PM
Enjoy the song from Khel Khel Mein sung by Kishoreji and Asha
http://youtu.be/z4W2n7eosMA
JamesFague
30th August 2014, 06:26 PM
One more melody from Khel Khel Mein. Nice pair of Rishi & Neetu sung by Kishorji and Asha
http://youtu.be/roHRS-SWon4
RAGHAVENDRA
31st August 2014, 12:01 AM
வாசு சார்
நவாப் நாற்காலி பற்றிய ஜஸ்ட் ரிலாக்ஸ் பதிவு அருமை. அந்நாளைய நினைவுகள் நிழலாடுகின்றன. நவாப் நாற்காலி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அந்த நாசமா நீ போனயா ஜோக் தான். நேசமணி பொன்னையா என்ற பெயரைக் குத்திக் குதறி அவள் சொல்லும் முன் கோபம் வந்து விடுகிறது. நாகேஷுக்கு முன் நமக்கு.. அந்த அளவிற்கு அருமையான பாத்திரப் படைப்பு...மறக்க முடியாத படம்.. மறக்க முடியாத பதிவு
இதோ தங்களுக்காக ஜெயச்சந்திரன் எஸ்.ஜானகி குரல்களில் கருடா சௌக்கியமா படத்திலிருந்து அருமையான பாடல்
மொட்டு விட்ட வாசனை மல்லி..
http://www.inbaminge.com/t/g/Garuda%20Sowkiyama/
RAGHAVENDRA
31st August 2014, 12:08 AM
இரவின் மடியில்
ஆஹா... என்ன சுகமான கானம்.... சந்தன மலரின் சுந்தர வடிவில் உனை நான் காணுகிறேன்... அந்த ஹம்மிங் நிழலாடிக் கொண்டே இருக்கிறதே... பாலாவின் வசீகரக் குரலில் இப்பாடல் நெஞ்சை விட்டு அகலாத இனிய கானமாகும். குறைவான இசைக் கருவிகள் நிறைவான இசை... இதை விட என்ன வேண்டும் பாடல் உடனே மனதில் நிலைத்து விடுவதற்கு...
அதானே மெல்லிசை மன்னர்..
கருடா சௌக்கியமா படத்திலிருந்து சந்தன மலரின் சுந்தர வடிவில் உனை நான் காணுகிறேன்.
http://www.inbaminge.com/t/g/Garuda%20Sowkiyama/
RAGHAVENDRA
31st August 2014, 12:12 AM
இரவின் மடியில்
மௌத் ஆர்கன் எனப்படும் இதழிசைக் கருவியின் இனிய நாதத்துடன் துவங்குகிறது இப்பாடல்... வாணி ஜெயராமின் வசீகரக்குரலில் எழுப்பும் கேள்விகளுக்கு விடையை நாம் தரவேண்டுமா..
சிலை வண்ணம் யாரோ
ஸ்ருங்காரம் யாரோ
தமிழ்ச்சங்கம் யாரோ
சங்கீதம் யாரோ..
விடையை தாங்கள் அறிவீர்கள்..
ஹிட்லர் உமாநாத் படத்திலிருந்து நம்மை மெய்மறக்கச் செய்யும் இனிய பாடல்..
இசை மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்
http://www.inbaminge.com/t/h/Hitler%20Umanath/
RAGHAVENDRA
31st August 2014, 12:23 AM
இரவின் மடியில்
மெல்லிசை மாமணி வி.குமாரைப் போன்று ஷ்யாம் அவர்களின் இசையும் குறைந்த அளவிலான இசைக்கருவிகளுடன் இனிமைக்கு முதலிடம் தந்து பாடல்களின் இசை புனையப் பட்டிருக்கும். வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொருள் பொதிந்தவையாக இருக்கும். அந்த வரிசையில் இனியவளே வா திரைப்படத்தில் எஸ்.பி.பாலா அவர்களின் மதுரக் குரலில் மயக்கும் கீதம் இதோ..
பூமேகம் சூடும் செவ்வானமே.. வா வா என்னோடு பாடவே..
என்ன ஒரு இனிமையான பாடல்..
ஒலிப்பதிவின் தரம் சற்றே குறைவு என்றாலும் பாடலின் மெட்டு நம்மை மயக்கி விடும்.
கேளுங்கள்..
http://www.inbaminge.com/t/i/Iniyavale%20Vaa/
chinnakkannan
31st August 2014, 10:22 AM
குட்மார்னிங் ஆல்..
ஹாய் ராக்வேந்தர் சார்..இரவின்மடியில் பாடல்களுக்கு நன்றி..
எஸ்.வாசு தேவன்.. கேல் கேல் மெய்ன் பாட்டுக்களுக்கு தாங்க்ஸ்...
காலையில் ஒலிக்கும் கானம் என்னவோ
பல்லவ நாட்டு ராஜ குமாரிக்குப் பருவம் பதினெட்டு
இவள் ஒரு சீதை - விஜயகுமார் சுமித்ராவாம்.. நான் படம் பார்த்ததில்லை பாட் மட்டும் கேட்டிருக்கிறேன்..
Richardsof
31st August 2014, 10:29 AM
ANAIVARUKKUM INIYA KALAI VANAKKAM
http://youtu.be/d3VgNkkkADA
Richardsof
31st August 2014, 10:33 AM
MELODY SONG
http://youtu.be/nINe0IgR0c8?list=PLRQ95THIk3kUUqVm0HQXgC71hOrOLGM_ 8
mr_karthik
31st August 2014, 11:09 AM
டியர் வாசு சார்,
ஜஸ்ட் ரிலாக்ஸ் வரிசையில் நவாப் நாற்காலி படத்தில் இடம்பெற்ற 'சப்பாத்தி சப்பாத்திதான்' பாடலை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஒரு சாதாரண பாடலுக்கு கூட ரொம்ப சிரத்தையெடுத்து பதித்துள்ளீர்கள். படம் வந்த காலத்திலேயே ரொம்ப கேலி செய்யப்பட பாடல் இது. பாடல்தான் என்றில்லை, படத்தின் வசனங்கள் கூட தத்துபித்து டைப்தான் (உதாரணத்துக்கு நாகேஷ் பேசும் "வெள்ளை சாக்பீசில் கோடுபோட்டால் வெள்ளிக்கோடுதான் வரும். மஞ்சள் சாக்பீசில் கோடுபோட்டால் மஞ்சள் கோடுதான் வரும்" என்பன போன்ற அறுவை தத்துவங்கள்). சப்பாத்தி பாடலின்போது குளோப் தியேட்டர் ஸ்டால்களில் நல்ல விற்பனை. முக்கால்வாசி கூட்டம் வெளியில்தானே.
தரமான நகைச்சுவைப் படங்கள் வந்துகொண்டிருந்த அன்றைய காலகட்டத்தில் நவாப் நாற்காலி, ஹலோ பார்ட்னர் போன்ற படங்கள் நகைச்சுவைப் படங்களின் ஆர்வத்தைக் குறைத்தன. இந்தப்படம் ஜெய்சங்கருக்கோ, சி.வி.ஆருக்கோ, நாகேஷுக்கோ எந்த விதத்திலும் கிரெடிட் தரவில்லை. அதிலும் அப்போது சி.வி.ஆர். சிறந்த பொழுதுபோக்குப் பட இயக்குனராக கொடிகட்டிப் பறந்த நேரத்தில் இப்படம் அவருக்கு சற்று சறுக்கியது உண்மை.
இப்படத்திலும் கூட ஒரு பாடலை எடுத்து அதையும் சுவைபட பதிப்பிக்க முடியும் என்று காட்டியுள்ளீர்கள்.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்...
mr_karthik
31st August 2014, 11:46 AM
டியர் சின்னக்கண்ணன் சார்,
நறுமுகையே பாடல் உதித்நாராயணன் அல்ல, உன்னிகிருஷ்ணன் பாடியது. ஒருமுறை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இப்பாடலின் ஒரு வார்த்தையை தவறாகப்பாடிய ஒருவரைப்பார்த்து உன்னிகிருஷ்ணன், தானும் ரிக்கர்டிங்கின்போது இதுபோல தவறாக உச்சரித்ததாகவும், அருகிலிருந்த (அந்தப்பாடலை எழுதிய) வைரமுத்து தவறைத் திருத்தியதாகவும் சொன்னார்...
chinnakkannan
31st August 2014, 12:02 PM
கார்த்திக் சார், நன்றி.. தவறாக எழுதி விட்டேன். .மாற்றி விடுகிறேன்..பெண் குரல் யார்..
டியர் சின்னக்கண்ணன் சார்,
நறுமுகையே பாடல் உதித்நாராயணன் அல்ல, உன்னிகிருஷ்ணன் பாடியது. ஒருமுறை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இப்பாடலின் ஒரு வார்த்தையை தவறாகப்பாடிய ஒருவரைப்பார்த்து உன்னிகிருஷ்ணன், தானும் ரிக்கர்டிங்கின்போது இதுபோல தவறாக உச்சரித்ததாகவும், அருகிலிருந்த (அந்தப்பாடலை எழுதிய) வைரமுத்து தவறைத் திருத்தியதாகவும் சொன்னார்...
vasudevan31355
31st August 2014, 01:10 PM
டியர் கார்த்திக் சார்,
நன்றி! தாங்கள் சொல்வது உண்மைதான். நாற்காலி ஓட்டை நாற்காலிதான். அதுவும் பணத்தாசை பிடித்த கேரக்டராக சகஸ்ரநாமத்தைக் கேவலப்படுத்தி இருப்பார்கள். அவரும் இப்படி நடித்திருக்க வேண்டாம். குழந்தைகள் கல்லால் அடிக்க, துணியெல்லாம் கிழிந்து அரை நிஜாருடன் வேறு ஓடி... கொடுமைடா சாமி.
ஆனால் ஒரே ஒரு ஆறுதல். பாடல்கள்.
அப்போது கேட்டபோது பிடிக்கவில்லை. ஆனால் இப்போது என்னவோ பிடித்திருக்கிறது.
'செஞ்சிக் கோட்டையை ஆண்டு கொண்டிருந்தான் தேசிங்கு மகராஜா.
ராஜா நவாபு மகராஜா'
என்ற பாடல் நன்றாகவே இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=KhDBxLbcmfQ&feature=player_detailpage
கண்ணாமூச்சி விளயாடும் பாடல் ஒன்று இருதரம் வரும். லஷ்மி குழந்தைகளுடன் இணைந்து பாடுவது போல் அதே சாக்கில் ஜெய்யிடம் காதலை உணர்த்துவது போலவும்.
'ஏண்டி கண்ணா அதிசயமா
எங்கே போறே ரகசியமா'
என்றும்,
ஜெய்யை கலாய்த்து
'ஏம்மா கண்ணா அதிசயமா
எங்கே போறே ரகசியமா'
என்றும்
இருமுறை ராட்சஸி கலக்கியிருப்பார்.
'கள்ள நகை புரிவதென்ன
கொள்ளையிட நினைத்ததென்ன'
என்ற வரிகளை குறிப்பாக அருமையாக பாடியிருப்பார்.
அவசியம் கேட்டுப் பாருங்கள்.
அப்புறம் நாகேஷின் அறுவை பற்றி எழுதியிருந்தீர்கள். அந்த வகையில் இன்னொன்று.
நாகேஷ்.: மோதிரத்தை ஏன் விரலிலே போடறாங்க தெரியுமா?
ரமாபிரபா: ஏன்?
நாகேஷ்: கழுத்துல போட்டா மூச்சு திணறி செத்துப் போயிடுவாங்க.
அதனாலதான் விரலிலே போடறாங்க.
அப்புறன் ஏன் தியேட்டர் கேண்டீன்ல வியாபாரம் மும்மரமா நடக்காது?
ஆனா எனக்கு பிடிச்சிருந்துது. படம் இல்லே. நாகேஷ் அறுவை.
http://www.inbaminge.com/t/n/Nawab%20Narkali/
vasudevan31355
31st August 2014, 01:19 PM
வினோத் சார்,
அந்த லதா கருப்பு வெள்ளை புகைப்படம் ஜோர். வேறு லதாவுடையது இன்னும்....
Richardsof
31st August 2014, 01:29 PM
வினோத் சார்,
அந்த லதா கருப்பு வெள்ளை புகைப்படம் ஜோர். வேறு லதாவுடையது இன்னும்....
http://i58.tinypic.com/fvigxf.jpg
vasudevan31355
31st August 2014, 01:31 PM
கிருஷ்ணா சார்,
குமுதம் இதழின் நடிகர் திலகம் புகழ்பாடும் வைரமுத்துவின் கட்டுரையைப் பதிபித்ததற்கு நன்றி! என்ஜாய் பண்ணி படித்தேன். சிங்கம் பற்றிய கட்டுரையாயிற்றே.
அதே போல சின்ன வயது நளினி போட்ட்வுக்கு மட்டும் நன்றி!
வினோத் சார் போட்டிருந்த லதாவும், ஷீலாவும் இணைந்திருந்த புகைப்படம் சினிமாப் பட ஸ்டில் அல்ல என்று நினைக்கிறேன். ஷீலா நடித்த 'யக்ஷகானம்' படத்தில் ஷீலாவின் ரோலை லதா தமிழில் நடித்தார் அல்லவா 'ஆயிரம் ஜென்மங்கள்' படத்தில்? அந்தப் படத்தின் துவக்க விழாவிலோ அல்லது ஷூட்டிங் சமயத்திலோ எடுத்த ஸ்டில்லாக இருக்கலாம் என்பது என் கணிப்பு.
vasudevan31355
31st August 2014, 01:33 PM
யப்பா! ஜெட் வேகம் வினோத் சார் நீங்கள். அருமை. இன்னும் கருப்பு வெள்ளையில் ஏதாவது இருந்தால் தேவலை
vasudevan31355
31st August 2014, 01:39 PM
கிருஷ்ணா சார்,
'நீயும் நானுமா' பாடலுக்கு நடிகர் திலகம் எடுத்துக் கொண்ட சிரத்தை பற்றிய கட்டுரை சுவை. நன்றி1
'பிள்ளையோ பிள்ளை' படப் பாடல்கள் அலசலும் மிக நன்று. எனக்கும் இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களும் பிடிக்கும்.
'ஏழையின் சிரிப்பில் இறைவன்'
பாடலில்
ஹிப்பி இளைஞர்க்ளைப் பார்த்து முத்து
'வாலிபர்கள் முடியை வளர்க்கப் பாடுபட்டார்
முகத்தில் இரண்டு தூண்கள் வைத்தார் (கிருதாவிற்கு கிண்டல்)
என்ற வரிகள் வரும் என்று நினைவு.
அப்படியே முத்து எம்ஜியார் ஜெராக்ஸ் பாடலும் சரி, நடிப்பும் சரி, படமும் சரி. ஏதோ ஓடித் தொலைத்தது. பாடல்கள் மட்டுமே அருமை.
mr_karthik
31st August 2014, 02:49 PM
டியர் வாசு சார்,
இதோ உங்களுக்குப் பிடிக்காத படத்திலிருந்து முழுப்பாடல்...
ஏழையின் சிரிப்பில் இறைவன்
இருப்பதைச்சொன்னான் தலைவன்
அண்ணனவன் சொல்லிய சொல்லை
நான் எந்நாளும் மறந்தது இல்லை
முதல் சரணம்
(ராணுவ வீரர்களுடன்)
தாயகத்தின் மானம் காக்கும் வீரரெல்லாம்
மதித்து போற்றத் தகுந்தவராம்
கோழை போல வாழ்பவரை
பெற்ற தாயும் வெறுப்பாளாம்
(தொழிலாளர் மத்தியில்)
தோழர்களே கடமை செய்து முடித்த பின்னே
உரிமை கேட்கப் புறப்படுங்கள்
தொழில் நடத்தும் சீமான்கள்
உழைப்புக்கேற்ற பொருள் கொடுங்கள்
உழைப்புக்கேற்ற பொருள் கொடுங்கள்
ஏழையின் சிரிப்பில் இறைவன்
இருப்பதைச்சொன்னான் தலைவன்
அண்ணனவன் சொல்லிய சொல்லை
நான் எந்நாளும் மறந்தது இல்லை
இரண்டாவது சரணம்
(ஹிப்பிகள் மத்தியில்)
வாலிபர்கள் முடியில் பாதி முகம் மறைத்தார்
முகத்துக்கிரண்டு தூண்கள் வைத்தார்
மூளைவளரும் காலத்திலேயே
முடியை வளர்க்கப் பாடுபட்டார்
(நாகரீக மங்கையர் மத்தியில்)
கன்னியரே அலுங்கி குலுங்கி நடப்பதற்கு
ஆடை லுங்கிதான் எதற்கு
சேலை செய்த பாவமென்ன
மேலைநாட்டு மோகமென்ன
மேலைநாட்டு மோகமென்ன
ஏழையின் சிரிப்பில் இறைவன்
இருப்பதைச்சொன்னான் தலைவன்
அண்ணனவன் சொல்லிய சொல்லை
நான் எந்நாளும் மறந்தது இல்லை...
JamesFague
31st August 2014, 02:54 PM
Fantastic Melody from the great music of R D Burman in Love Story starring Kumar Gaurav & Vijeta Pandit. Enjoy the song.
http://youtu.be/yAkU0o-3wyI
JamesFague
31st August 2014, 02:59 PM
Enjoy one more melody from Love Story by the Great R D Burman.
http://youtu.be/C9ZFqhkoWpE
Richardsof
31st August 2014, 06:47 PM
RARE ADVT- 1969
http://i60.tinypic.com/dus6o.jpg
http://youtu.be/F5qWVAAw7xo
Richardsof
31st August 2014, 06:54 PM
http://i62.tinypic.com/24npwcz.jpg
http://youtu.be/EnVtrqIm52U
Richardsof
1st September 2014, 05:03 AM
இசைத்தட்டாகச் சுழலட்டும் இனிய வாழ்க்கை
பாடலின் ஊடாக ஒலிக்கும் இசையால் பல பாடல்கள் உயிர்ப்புடன் துள்ளுகின்றன.
பாடல்கள், குறிப்பாக சில திரைப்பாடல்கள் தரும் இன்பத்தை அத்தனை எளிதில் கடந்துவிட முடியாது. நம் காதுகளுக்குப் பழக்கப்பட்ட ஒரு பாடல், காற்றில் மிதந்து வந்ததும், உள்ளம் அதில் தோய்ந்து அதனோடு பயணம் செய்யத் தொடங்குகிறது. இன்ன இன்ன இடத்தில், இந்த இந்த இசைக் கருவி ஒலிக்கும், பாடல் தொடரும், பல்லவி முடிந்து, தாளக் கட்டு இப்படியாக மாறும் என்று சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கும். இதெல்லாம் ஒரு திரைப்பாடல் நம் மனதுக்குள் நிகழ்த்தும் அதிசயங்கள். பாடலுடன் இணைந்து ஒலிக்கும் இசையையும், அதுதரும் சுகானுபவத்தையும் பிரித்துப் பார்க்க முடியுமா?
மெல்லிசை மென்மையாக உள்ளத்தை ஊடுருவிச் செல்கிறது. மழையோ, வெயிலோ, பனிக் காற்றோ, இளம் தென்றலோ அந்தந்தப் பாடலுக்கு ஏற்றவாறும், கேட்பவர் மனநிலைக்குத் தக்கவாறும் உணர்வுகளைக் கிளர்த்துகிறது. கேக் துண்டின் மீது நம்மைப் பார்த்துக் கண்ணடிக்கும் செர்ரிப் பழம் போலவோ, மயிலின் கொண்டை அழகாகவோ பாடலின் மீது சிலபோது மிதக்கிறது இசை.
ஊடுபாவாக…
‘நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு' (படம்: நாடோடி) என்ற அருமையான பழைய பாடலில்
டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா இருவரின் குரல்களோடு மூன்றாவது குரலாகவே ஒலிக்கும் ஹார்மோனியம் இசையையே எடுத்துக்கொள்ளுங்களேன். அடடா... என்ன இன்பம் அந்த இசைக் குறுக்கீடு! நெசவுத்தறியில் ஊடுபாவாகக் குறுக்கும் நெடுக்கும் அந்த இசை துள்ளித் துள்ளிச் செல்லும். அதே படத்தில் இடம் பெறும் ‘அன்றொரு நாள் இதே நிலவில்' பாடலில் வரும் இசையும் அத்தனை இனிமையானது.
சர்க்கஸ் ‘பார்' விளையாட்டில் இந்த முனையிலிருந்து தாவிச் செல்லும் ஒருவரை அடுத்த முனையில் இருப்பவர் தாவித் தன்னோடு இணைத்துச் செல்வதுபோல, இசையின் ஒரு முனையில் விடுபடும் சொற்கள் அதே இசையின் அடுத்த முனையில் வந்து பற்றிக்கொண்டு தொடரும் சாகசத்தை எத்தனை பாடல்களில் பார்த்திருக்கிறோம்.
பழைய தலைமுறை மனிதர்கள், ‘குங்குமப் பூவே கொஞ்சு(ம்) புறாவே' (மரகதம்) என்கிற திரைப்பாடலுக்கு ஈடாக என்னவும் தரத் தயாராக இருப்பார்கள். சந்திரபாபு – ஜமுனா ராணி குரல்களில் துள்ளத் துள்ள இசைக்கும் அந்தப் பாடலின் பல்லவியில்,போக்கிரி ‘ராஜ்ஜா....’ என்று ஜமுனா இழுக்கும்போது ‘போய்ங்... போய்ங்…’ என்று இழைக்கும் இசைக் கருவியை தவிர்த்து அந்தப் பாடலை யோசித்துப் பார்க்க முடியுமா?
வயலினுக்கு வாழ்க்கைப்பட்ட பாடல்கள்
‘வான் நிலா நிலா அல்ல' (பட்டினபிரவேசம்) பாடலும், ‘கால காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்' (புன்னகை மன்னன்) பாடலும் வயலின் கருவியோடு வாழ்க்கைப்பட்ட ரசம் ததும்பும் கீதங்கள் அல்லவா? அந்த இசைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு யார்தான் இந்தப் பாடல்களை ரசிக்க முடியும்?
பக்திப் பாடல்களில் தனி முத்திரை பதித்த மதுரை சோமுவின் புகழ்பெற்ற பாடலான ‘மருதமலை மாமணியே முருகய்யா’ தரும் பக்திப் பரவசம் சாதாரணமானதா! அதன் ஒரு சரணத்தில், ‘பனி அது மலை அது நதி அது கடல் அது’ என்று அவர் மூச்சு விடாது பட்டியல் போட்டு வரும் ராகத்தின் கம்பியைப் பிடித்தபடி புல்லாங்குழல் ஓசை ஒரு பாம்பைப் போல இசைத்து நழுவிச் செல்லும் அந்த ரசனை மிக்க இடத்தை யார்தான் இழக்கச் சம்மதிப்பார்கள்? ‘உயிரே... உயிரே…' (பம்பாய்) என்று ஹரிஹரன் குரலெழுப்பும்போது அந்தக் காதல் ஏக்கத்தைச் சிந்தாமல் சிதறாமல் மூங்கிலில் சேகரித்துக்கொள்ளும் குழலோசை பின்னர், நேயர்களின் உயிரையே உருக்கி வார்த்துவிடுவதில்லையா?
‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' (அவளுக்கென்று ஒரு மனம்) என்ற எஸ். ஜானகியின் இனிமை கொஞ்சும் பாடலை எடுத்துக்கொள்ளுங்கள். அந்தப் பாடலில் திருமண நிகழ்வைக் குறிக்கும் வாத்திய இசை புறப்பட்டு, அப்படியே மென்மையாக ஆர்கெஸ்ட்ரா இசையோடு கலந்து, கடைசி சரணத்தை எடுத்துக் கொடுக்கும் இடம், கேட்பார்ப் பிணிக்கும் தகையவாய், கேளாரும் விரும்பித் தேடுவதாக இருக்கும் அல்லவா?
வாணி ஜெயராம் பாடிய ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்' (தீர்க்க சுமங்கலி) என்ற பாடலின் சரணத்தில், ‘வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல் திங்கள் மேனியைத் தொட்டுத் தாலாட்டுது' என்ற இடத்தைத் தபேலா தாளக்கட்டு தன்னுள் வாங்கி வெல்வெட் மெத்தை போல இதப்படுத்தி உருட்டி, திரும்ப விடை கொடுக்கும் இடத்தில் பாடகி, 'குளிர்க் காற்றிலே தளிர் பூங்கொடி' என்று அடுத்த அடியை எடுத்துப் பாடவும் உள்ளம் எவ்வளவு கிறக்கம் கொள்கிறது!
ஜேசுதாஸின் ‘என் இனிய பொன் நிலாவே' (மூடுபனி) பாடலில், அப்படியே கிடாரின் கம்பியாக மாறும் அவரது குரலும், அவரது குரல்நாணாக உருமாறும் கிடார் இசைத் தந்தியும் போட்டி போட்டு நடத்துவது ஒரு ரசவாதமே! ஜாகிங் ஓட்டத்துக்கு ஏற்ப இளையராஜா இசையமைத்த ‘பருவமே புதிய பாடல் பாடு' (நெஞ்சத்தைக் கிள்ளாதே) பாடலில் கால்களின் ஓட்ட ஜதியை ஒலிக்கும் தாளக் கட்டு எத்தனை பிரிக்கவியலா பந்தம் கொண்டிருப்பது!
மெல்ல மெல்லச் சுழன்று இசைக்கும் இசைத் தட்டு அதே சுழற்சியின் அதிராத தேய்தலில் ஒரு கட்டத்தில் இயல்பாக அமைதி நிலையை வந்தடைகிறது. அதே போன்று நிறைவடையும் வாழ்க்கை அமையுமானால் அதுவும்கூட ஓர் இசைத்தட்டுதானே!
- எஸ்.வி. வேணுகோபாலன்,
courtesy - the hindu
rajeshkrv
1st September 2014, 08:29 AM
காலை வணக்கங்கள்
gkrishna
1st September 2014, 09:46 AM
முதலில் நினைவுக்கு வருவது அந்த நாசமா நீ போனயா ஜோக் தான். நேசமணி பொன்னையா என்ற பெயரைக் குத்திக் குதறி அவள் சொல்லும் முன் கோபம் வந்து விடுகிறது. நாகேஷுக்கு முன் நமக்கு
ராகவேந்தர் சார்
நீங்கள் சொன்னது போல் இந்த காமெடி பின்னாட்களில் அண்ணாமலை படத்தில் குஷ்பூ,ஜனகராஜ் காமெடி ஆக வரும் . வறட்சி
வாசு சார்
நாவப் நாற்காலி பள்ளி கூட நாட்களில் சக மாணவர்களிடம் பாடிய பாடல் . நெல்லை மதுரை திரவியம் தாயுமானவர் ஹிந்து உயர் நிலை பள்ளி என்ற பள்ளிடத்தில் படிக்கும் போது திரு வானமாமலை
என்று ஒரு வாத்தி
(நடிகர் திலகத்தின் மிக சிறந்த ரசிகர் NT படம் முதல் நாள் லீவ் போட்டு படம் பார்க்கிறவர். அதனால் NT படம் ரிலீஸ் அன்று இவர் வகுப்பு ப்ரீ. அதே போல் சங்கரநாராயண பிள்ளை என்று ஒரு வாத்தி மக்கள் திலகம் ரசிகர் அதனால் MT படம் ரிலீஸ் என்றால் அவர் வகுப்பு ப்ரீ. இந்த நேரத்தில் டபுள் கிராஸ் என்று ஒரு ஆங்கில படம் காலை காட்சி நெல்லை நியூ ராயல் நாங்கள் லீவ். அடி பின்னிட்டார் இந்த வானமாமலை வாத்தி எதுக்குன்னா 'ஏலே ஜிவாஜி படத்துக்கு லீவ் போடு எம்சீயார் படத்துக்கு லீவ் போடு அது என்னலே இங்கிலீஷ் படத்துக்கு லீவ். abcd யே தெரியாது . உனக்கு என்னலே புரியும் ? இந்த கேள்விக்கு எங்கள் பதில் 'சார் சீன் எல்லாம் நல்ல இருக்கும் .ரெண்டு குளியல் சீன் உண்டு சார் '. 'அப்படியாலே இந்தா இன்னும் ரண்டு அடி வாங்கு )
இந்த பாடலை moral கிளாஸ் வகுப்பில் விவரித்த நினைவு இந்த பாட்டை அடிகடி சிலர் பாடுவதை கேட்டு 'ஏலே இங்க வாங்கலே .அந்த சப்பாத்தி சப்பாத்தி தான் ரொட்டி ரொட்டி தான் பாட்டை பாடுங்களே '
என்றுடன் செல்லையா என்ற மாணவரும் ஆணை முத்து என்ற மாணவரும் சேர்ந்து பாடிய நினைவு . சொந்தமாக சில வரிகள் கூட பாடினார்கள் . 'தோசை தோசை தான் இட்லி இட்லி தான் வடை வடை தான் ' . எல்லா மாணவர்களும் சேர்ந்து விசில் அடித்து நாலு சாத்து சாத்தி பாட்டை நிறுத்தினார்கள்
இசை அரசியின் பிள்ளையோ பிள்ளை 'வெள்ளை மலரில் ஒரு வண்டு ' பாடல் விடியோ கிடைத்ததா ?
chinnakkannan
1st September 2014, 10:27 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
ராகங்களைப் பற்றி அறியப் பிரியப் படுகி்றோம் அப்பா.. காலையில் பாடு்ம் ராகம் என்னவோ..
கொய்ங்க் என்று எழுந்து டிகே பகவதி ராவணன் சொல்லும் பதில் பூபாளம்..
பூபாளம் இசைக்கும்பூமகள் ஊர்வலம் என பாட்டு நினைவுக்கு வருதே..
வேற பூபாளங்கள்..
rajeshkrv
1st September 2014, 10:42 AM
ராட்சசி மெதுவாக ஆர்ப்பாட்டமில்லாமல் பாடிய அற்புத பாடல்
https://www.youtube.com/watch?v=I45CdaIzdFI
vasudevan31355
1st September 2014, 11:18 AM
வணக்கம் ராஜேஷ்ஜி
ஈஸ்வரியம்மா பாடல் அருமை. கலக்கல். வித்தியாசம்.
vasudevan31355
1st September 2014, 11:23 AM
ராஜேஷ்ஜி
தாங்கள் அளித்த மலையாளப் பாடல்களுக்கு (ஏழு சுந்தர ராத்ரிகள்) பதில் அளித்து இருந்தேனே. பார்த்தீர்களா?
vasudevan31355
1st September 2014, 11:38 AM
கிருஷ்ணா சார்,
சப்பாத்தி சப்பாத்திதான். உங்கள் ஸ்கூல் நினைவுகள் சிரிப்பை வரவழைத்தன. அது என்ன வாத்தி. நம்ம காலத்துல வாத்தியார்கள் எல்லாம் பாவம் கிருஷ்ணா சார்.
நாங்கள் வைத்த பட்டப் பெயர்கள்
டான் குயக்சாட்
கொத்தட்ட வாத்தி
மூல பவுத்திரம்
இன்னும் என்னன்னவோ.
வாத்தியார் உட்காரும் நாற்காலிக்கு அடியில் வத்தி கொளுத்தி வத்தியின் கீழ் ஊசிப்பட்டாசை கட்டி அத்தி புகைந்து கொண்டே (டைம் பாமாம்) வர, நாங்கள் எல்லோரும் திக் திக் என்று உட்க்கார்ந்திருக்கா வாத்தியார் மும்முரமாய் பாடம் நடத்த, இறுதியில் வத்தியில் இருந்து நெருப்பு பட்டாசில் பிடித்து வெடித்து வாத்தியார் பின்புறம் காலி. அப்புறம் நாங்க எல்லோரும் காலி.
அதெல்லாம் ஒரு வெடிக்காலம் சார்.
gkrishna
1st September 2014, 11:47 AM
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcR2s8Jl3lsh_krsY6eji7-9Vhy4SsOaM02p_NaYVaCBHJNOUYa-
https://www.facebook.com/photo.php?v=562186820540050&set=vb.218550298237039&type=2&theater
கோயில்கள் இருப்பது எதற்காக ? VKR நாகேஷ் கேள்வி பதில் காமெடி
மிகவும் ரசித்த ஒன்று வாசு சார் ருத்ர தாண்டவம் படத்தில்
நமது திருவிளையாடல் போல் இருக்கும் .
gkrishna
1st September 2014, 11:55 AM
vasu sir
எங்கள் பள்ளிடத்தில் சில வாத்தியார் பட்ட பெயர்
பஜ்ஜி (பஜ்ஜி மாதிரி உப்பி இருப்பார் ) உண்மை பெயர் ராமகிருஷ்ணன் .
கிளாஸ் (அடிகடி கிளாஸ் கிளாஸ் என்று கூறுவார். ஒரு பெயன் உண்மையில் ஒரு கிளாஸ் தண்ணீர் கொண்டு வைத்தான் . கிளாஸ் என்றால் அமைதி என்பது மீனிங் என்று பின்னாளில் தெரிந்து கொண்டேன் ).
சூத்து சுப்பிரமணி (இவர் pant back சைடு கொஞ்சம் இறங்கி இருக்கும் )
half buttocks அனந்த ராமன் (back தேஞ்சு இருக்கும் )
அல்லவா சுந்தர்ராஜன் (அடிக்கடி அல்லவா அல்லவா என்று கூறுவார் .பிறகு சுருங்கி அல்வா சுந்தர்ராஜன் ஆனார் )
ஒரு வாத்தியார்க்கு பெயர் தொலி (காரணம் தோல் என்ற சயின்ஸ் பாடம் எடுக்கும் போது அடிக்கடி தொலி தொலி என்றே கூறுவார் )
gkrishna
1st September 2014, 11:58 AM
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcS4usE8HCe_b2Qjzvq14DCHFx10RtGYY 2e3GwdMSdZxzHEWlD-saw
இது ஒரு படம் கூகிள் இல் பார்த்தேன் வாசு சார்
என்ன படம் இது ?
பெண் நடிகை முகம் லாவண்யாவை நினைவு ஊட்டுகிறது
vasudevan31355
1st September 2014, 12:07 PM
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcS4usE8HCe_b2Qjzvq14DCHFx10RtGYY 2e3GwdMSdZxzHEWlD-saw
இது ஒரு படம் கூகிள் இல் பார்த்தேன் வாசு சார்
என்ன படம் இது ?
பெண் நடிகை முகம் லாவண்யாவை நினைவு ஊட்டுகிறது
கிருஷ்ணா சார்!
நான் போட்டிருந்தேனே! 'ருத்ர தாண்டவம்' படத்தில் ராதாரவி, லாவண்யாதான் அது. ருத்ர தாண்டவம் இன்றைய ஸ்பெஷல் பாருங்கள். ஒரு வேளை மறந்திருக்கலாம்.
vasudevan31355
1st September 2014, 12:12 PM
ராஜேஷ் சார்,
எனக்கு மிக பிடித்த பாட்டு. இசையரசி 'வாணி ராணி' திரைப்படத்தில் வாணிஸ்ரீக்கு பாடிய
'கதை உண்டு... ஒரு கதை உண்டு... இதன் பின்னே மறுகதை உண்டு'
http://www.youtube.com/watch?v=gx1Vdtpillg&feature=player_detailpage
gkrishna
1st September 2014, 12:15 PM
தெலுகு இயக்குனர் வம்ச விருக்ஷம் பாபு காலமானார்
http://www.andhraheadlines.com/g12/news/la/134859.JPG
Sattiraju Lakshmi Narayana, popularly known as Bapu died in Chennai on Sunday evening. He was 80.
According to family sources, Bapu died of heart attack while undergoing treatment for some age-related ailments at Malar Hospital in Chennai.
He was a music artiste, painter, illustrator, cartoonist and designer. In 2013, he was awarded the Padma Shri, for his contribution to Indian art and cinema. He directed 51 films in his career. Of them, the number of Hindi films were 12. The last film he directed was “Sriramarajyam” starring Nandamuri Balakrishna and Nayanatara.
Bapu used to make films with his friend Mullapudi Venkata Ramana. The duo was famous as Bapu-Ramana. Ramana died in 2011. Bapu won two National Film Awards, five Andhra Pradesh State Nandi Awards and two Filmfare Best Director Awards for Telugu films “Seeta Kalyanam” and “Vamsa Vruksham” and a Filmfare Lifetime Achievement Award – South for the year 2012.
On hearing the news of Bapu’s passing away, AP Chief Minister N. Chandrababu Naidu, Telangana Chief Minister K. Chandrasekhar Rao, veteran film director Raghavendra Rao and the entire Telugu cine industry condoled his death.
இவர் இயக்கிய முத்யால முக்கு மிக சிறந்த குடும்ப சித்ரம் .சங்கீதா இநத படத்தில் தான் அறிமுகம் என்று நினைவு .இதே படம் தமிழ் இல் ஜெய் சங்கீதா ஜோடி யாக மஹா லக்ஷ்மி என்று வந்த நினைவு
'ஆகாய குளத்தில் தாமரை மலரும் காலையிலே அதி காலையிலே 'என்ற சுசீலாவின் பாடல் மிகவும் ஹிட்
மேலும் பாலாவின் குரலில் 'தெக்கச்சி சீமையில் அக்கச்சி பாடுறா '
என்ற பாடலும் நினைவில் உண்டு
கிருஷ்ணா ஜமுனா நடித்த Sri Rajeswari Vilas Coffee Club மிக சிறந்த குடும்ப சித்ரம்
திரு ராஜேஷ் சார் கூட இநத படத்தின் பாடலை பற்றி ஒரு பதிவு இட்டு இருந்தார்
gkrishna
1st September 2014, 12:21 PM
கிருஷ்ணா சார்!
நான் போட்டிருந்தேனே! 'ருத்ர தாண்டவம்' படத்தில் ராதாரவி, லாவண்யாதான் அது. ருத்ர தாண்டவம் இன்றைய ஸ்பெஷல் பாருங்கள். ஒரு வேளை மறந்திருக்கலாம்.
http://www.ava360.com/uploads/thumbs/55289b33f-1.jpg
ஆமாம் வாசு சார் . நீங்கள் குறிப்பிட்டு உள்ளீர்கள் ருத்ர தாண்டவம் திரை பட இன்றைய ஸ்பெஷல் 29 ஆக் 2014
நன்றி
chinnakkannan
1st September 2014, 12:52 PM
துள்ளல் பாட்டு என சிந்தித்ததில் கண்ணில் பட்டது..
http://www.inbaminge.com/t/c/Chittukuruvi/Kaveri%20Karai.eng.html
பொன்னுல பொன்னுல பண்ணின மூக்குத்தி மின்னுது மின்னுது
ஒத்த்க் கல் மூக்குத்தி
போக்கிரிப் பெண்ணுக்கு பங்குனி மாசம் கல்யாணம்..கச்சேரி
பொய்க்காலுக் குருதையிலே ஊர்கோலம்..
மூக்குத்தி..அது மூக்குத்தியா அது..மனங்கொத்தி :) ஆமா எதுக்காக பெண்கள்மட்டும் மூக்குத்தி அணியறாங்க..
தேடிப் பார்த்ததில் :
//மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம் இன்றும் கூட பேஷன் உலகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. சிறு குழந்தைகளுக்கு மூக்குத்தி குத்தும் பழக்கம் இல்லை. பருவப்பெண்களே மூக்குத்தி அணிய வேண்டும் .பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப் பகுதியில் சில வாயுக்கள் காணப்படுகிறது.
இந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றுவதற்கு தான், மூக்கில் துளை இடும் பழக்கம் உருவானது. இதனால் பெண்களுக்கு மூக்கு தொடர்பான பிரச்சனைகள் நிவர்த்தியாகும்.
காற்றை வெளியேற்றுவதில் ஆண்களுக்கு வலப்புறமும் பெண்களுக்கு இடப்புறமும் பலமான வலுவான பகுதிகளாகும். வலது புறமாக சுவாசம் செல்லும் போது தான் உடலுக்கும் மனதுக்கும் பலன் கிடைக்கும். முறையான சுவாச பரிமாற்றத்துக்கு உதவுகிறது மூக்குத்தி.
நமது மூளையின் அடிபகுதியில் நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக்கூடிய சில பகுதிகள் உணர்ச்சி களை செயல்படுத்தும். இந்த பகுதியின் செயல் பாட்டை பெண்களுக்கு அதிகப்படுத்த மூக்குத்தி அவசியப்படுகிறது.பெண்களின் இடதுபுற மூக்கில் குத்தக்கூடிய மூக்குத்தி, வலது புற மூளையையும் வலது புற மூக்கில் குத்தும் மூக்குத்தி இடதுபுற மூளையையும் இயக்க கூடியதாக உள்ளது.
இன்று இருபுறமும் மூக்குத்தி அணிந்தாலும் சாஸ்திரப்படி பெண்கள் இடப்புறம் தான் அணிய வேண்டும். இடப்புறம் அணிவதால் சிந்தனா சக்தி,மனம் ஒரு நிலைப்படுத்தபடுகிறது.
நமது முன் நெற்றிப்பகுதியில் இருந்து சில நரம்புகள் மூக்கு தூவாரம் வரை கீழ் இறங்கி மூக்கு பகுதியில் மெல்லிய துவாரங்களாக இருக்கும். இதில் அணியப்படும் தங்க மூக்குத்தி உடல் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சி அளிக்கும்.
மூக்கு மடலில் ஏற்படுத்தப்படும் துவாரம் நரம்பு மணடலத்தில் உள்ள அசுத்த வாயுவை அகற்றும். ஒற்றைத்தலைவலி, நரம்பு நோய்கள், உளச்சோர்வு ஏற்படமால் மூக்குத்தி தடுக்கிறது.//
செகப்புக்கல்லு மூக்குத்தி சிரிக்க வந்த மான்குட்டி
அட தங்கமுகத்துல குங்குமப் பொட்டு வச்சுக்கிட்டு
நீ எங்கடி போற சுங்குடிச் சேல கட்டிக்கிட்டு (என்னபடம்)
மூக்குத்திப் பூ மேலகாத்து ஒக்காந்து பேசுதம்மா (மெளன கீதங்கள்)
சின்னச் சின்ன மூக்குத்தியாம்
செகப்புக் கல்லு மூக்குத்தியாம்
கன்னிப் பெண்ணே ஒன் ஒய்யாரம் கண்டு
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம் (என்ன படம்)
சிறு கண்ணாடி மூக்குத்தி மணிமாலை
கண்ணீரில் நனையுதடி ( சந்தோஷப் பாட்டில் மூக்குத்தி வருதா என்ன)
கண்ணிமைகளை வருத்தி கனவுகளைத் துரத்தி
என் மனதினால் முடித்த மூக்குத்தி (மணியே மணிக்குயிலே -நாடோடித் தென்றல்
விட்டுப் போனதச் சொல்ல மாட்டீங்களா என்ன..
gkrishna
1st September 2014, 12:53 PM
http://www.photofast.ca/files/products/6395.jpg
படம் : பத்தாம் பசலி (1970)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தர்ராஜன், K.ஸ்வர்ணா
இசை : V குமார்
பாடல் : ஆலங்குடி சோமு
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
முல்லைச்சரமே செல்லக்கிளியே
கண்மூடித் தூங்கம்மா
கண்மூடித் தூங்கம்மா
ஆராரோ ஆரீரோ ஆரீரோ ஆரிரரோ
காற்றடிக்கிது மழையும் கொட்டுது
ஓலைக் குடிசையிலே
காற்றடிக்கிது மழையும் கொட்டுது
ஓலைக் குடிசையிலே
இங்கு கட்டிலுமில்லை மெத்தையுமில்லை
உனக்கும் தூக்கம் இல்லை
காசுமில்லை படிப்புமில்லை
அன்புக்கு பஞ்சமில்லை
உன்னைக் காலமிங்கே அனுப்பி வச்ச
கணக்கும் புரியவில்லை
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
முல்லைச்சரமே செல்லக்கிளியே
கண்மூடித் தூங்கம்மா
கண்மூடித் தூங்கம்மா
தூக்குக்கயிற்றை தொட்டில் கயிறாய்
மாற்ற வந்தாயோ
தூக்குக்கயிற்றை தொட்டில் கயிறாய்
மாற்ற வந்தாயோ
அந்த தூக்கத்துக்கு தடை விதிச்சி
பார்க்க வந்தாயோ
துன்பத்திலே சிரிக்கச் சொல்லி
ரசிக்க வந்தாயோ
தெய்வம் ஒண்ணு இருக்குதின்னு
காட்ட வந்தாயோ
இங்கு தெய்வமொண்ணு இருக்குதின்னு
காட்ட வந்தாயோ
ஆராரோ ஆரீரோ ஆரீரோ ஆரிர*ரோ
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
முல்லைச்சரமே செல்ல கிளியே
கண்மூடித் தூங்கம்மா
கண்மூடித் தூங்கம்மா
ஆராரோ ஆரீரோ ஆரீரோ ஆரிர*ரோ
http://www.youtube.com/embed/p7F3cit3zuE
இதே போல் பெற்ற மனம் பித்து 1973 படத்தில்
ஏழை தாய் தந்தையரின் தாலாட்டு.
இசை: V குமார்
பாடல்: பூவை செங்குட்டுவன்
நடிப்பு: முத்துராமன், ஜெயா
இயக்கம்: S P முத்துராமன்
காலம் நமக்குத் தோழன்
காற்றும் மழையும் நண்பன்
காலம் நமக்குத் தோழன்
காற்றும் மழையும் நண்பன்
பொன்னூஞ்சல் இல்லை
பூமெத்தை இல்லை
நீ வந்த வேளையிலே
பொன்னூஞ்சல் தானே தாயின் மனம்
பூமெத்தை தானே தந்தை மனம்
பொன்னூஞ்சல் தானே தாயின் மனம்
பூமெத்தை தானே தந்தை மனம்
ஆராரோ பாடும் அன்பான நெஞ்சம்
கண்ணே நீ துயிலும் மஞ்சமடா
மஞ்சமடா… மஞ்சமடா !
காலம் நமக்குத் தோழன்
காற்றும் மழையும் நண்பன்
செல்லமகள் செல்வமகள் சீரோடு வாழ்ந்த மகள்
ஏழையுடன் வந்தாளடா
ஸ்ரீராமன் அடிதொட்டு பின் செல்லும் சீதைக்கு
பெருமைகள் வேறேதடா
பெத்தமனம் பித்தாக பேதைமனம் கல்லாக
பெத்தமனம் பித்தாக பேதைமனம் கல்லாக
தன் சொந்தம் வெறுத்தாளடா
தந்தை மனம் தவித்திருக்க
பரமனுடன் துணை நின்ற
பார்வதியும் பெண்தானடா
காலம் நமக்குத் தோழன்
காற்றும் மழையும் நண்பன்
தனிமரமாய் நின்றவனை
தழுவுகின்ற பூங்கொடியாள்
சுகமென்ன கண்டாளடா
கொடியுண்டு மரமுண்டு
குழந்தையெனும் கனியுண்டு
குறையென்ன கண்டேனடா
உனதன்னை துயர்தன்னை
நான் தீர்க்கும் முன்னாலே
உன்கவலை கொண்டேனடா
கண்ணனாக நீயிருக்க மன்னனாக அவர் இருக்க
கவலைகள் எனக்கேதடா
காலம் நமக்குத் தோழன்
காற்றும் மழையும் நண்பன்
ஆரிராரிராரோ ஆராரிராரிராரோ ஆராரிராரிராரோ
http://www.youtube.com/watch?v=karD1Q_p-1s
இரண்டும் வி குமார் இன் தாலாட்டு
ஆனால் காட்சி அமைப்பு வேறு
முதலாவது தூக்கு கயிறு மாட்டி சாக போகும் நாகேஷை காப்பாற்றிய குழந்தையை தூங்க வைக்க
இரண்டாவது பணக்கார வீட்டு பெண் ஏழை வேலைக்காரனை திருமணம் செய்து கொண்டு பிறந்த குழந்தையை தூங்க வைக்க
gkrishna
1st September 2014, 12:58 PM
சி கே சார்
முக்குத்தி பூ மேலே காத்து உட்காந்து பேசுதம்மா
இநத முக்குத்தி பூ எப்படி இருக்கும்
gkrishna
1st September 2014, 01:02 PM
செகப்புக்கல்லு மூக்குத்தி சிரிக்க வந்த மான்குட்டி
எல்லோரும் நல்லவரே (முத்து ராமன் மஞ்சுளா - ஜெமினி நிறுவனம் தயாரிப்பு
gkrishna
1st September 2014, 01:04 PM
dear cee kay sir
கே. சி. எஸ். அருணாசலம், ஒரு தமிழ்க் கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர் மற்றும் திரைப்பாடலாசிரியர். பல துறைகளில் ஈடுபட்டிருந்தாலும் கவிதைக்கு முக்கியத்துவம் அளித்தவர். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு பூர்வீக வாள். இவரது கவிதைகளில் குறிப்பிடத்தக்கவை, கவிதை என் வாள், பாட்டு வராத குயில் ஆகும். இவர் ஒரு மரபுக் கவிஞர். இவர் புதுக் கவிதைக்கு எதிரானவர் என்றாலும் புதுக்கவிதை படைப்பவர்களோடு நட்புடன் பழகியவர் .
பாதை தெரியுது பார் திரைப்படத்திற்காக இவர் எழுதிய சின்னச் சின்ன மூக்குத்தியாம் பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
20 ஆண்டுகள் தாமரை இதழில் பணியாற்றினார். தனது இறுதி நாட்களில் பொள்ளாச்சி மகாலிங்கத்தின் தந்தை, நாச்சிமுத்துக் கவுண்டரின் வாழ்க்கை வரலாற்றை எழுதத் தொடங்கினார். ஆனால் தொடங்கிய பணியை முடிக்கும் முன் காலமானார்.
ஆதாரம்[தொகு]
பாடிப் பறந்த குயில், தினமணி, அக்டோபர் 28, 2012
vasudevan31355
1st September 2014, 01:11 PM
கிருஷ்ணா சார்,
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்னு
வேடிக்கை காட்டுது ஒன்னும் தெரியலைன்னு
புரியுதா. தேங்க்ஸ் பார் லிரிக்ஸ்.
ஆனால் படம் செம போர்.
vasudevan31355
1st September 2014, 01:14 PM
வைத்ய சிகாமணி மூக்குத்தி சின்னக்கண்ணன் சார் வருக. :)
ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலித்தது மறந்துடுச்சா?
chinnakkannan
1st September 2014, 01:16 PM
//வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்னு
வேடிக்கை காட்டுது ஒன்னும் தெரியலைன்னு// :) கிருஷ்ணா சார், வாசுசார்.. தாங்க்ஸ்..
நெசம்மாவே தெரியலைன்னு தான் கேட்டேன்..
இந்த மூக்குத்தி இருக்கே பலப் பல டிசைன்ல பண்ணுவாங்க க்ருஷ்ணா சார் (ஆஹா என்ன ஒரு இன்வென்ஷன்)
ஒத்தைக் கல்லு தான் மோஸ்ட்லி இருந்தாலும் சின்னதா பூ டிசைன்ல அந்த க் காதலி போட்டுக்கிட்டிருக்காளாம் -அதுவும் கொஞ்சம் நிறம் மங்கிய மூக்குல (சரிதா ?!)..எனில் அந்த மூக்குத்திப் பூமேல காத்து ஒக்காந்து பேசுதுன்னு கவிஞரோட கற்பனை!
vasudevan31355
1st September 2014, 01:16 PM
குகநாதன் அப்படின்னாலே ஜெயா வந்துடுவாரே!
chinnakkannan
1st September 2014, 01:17 PM
//ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலித்தது மறந்துடுச்சா?// ஒரு ஓரமா காதுலகேக்குதே..அப்புறம் காதோரம் லோலாக்குன்னு நினைவுக்கு வருது!
vasudevan31355
1st September 2014, 01:18 PM
http://www.inbaminge.com/t/s/Sudarum%20Sooravaliyum/Sudarum%20Sooravaliyum.jpg
vasudevan31355
1st September 2014, 01:20 PM
http://www.photofast.ca/files/products/7845.jpg
chinnakkannan
1st September 2014, 01:21 PM
கே.சி.எஸ். அருணாசலம் பற்றிய தகவலுக்கு நன்றி.கிருஷ்ணா சார்...இவரது மரபுக் கவிதைகளைத் தேடிப் பார்க்கணும்
gkrishna
1st September 2014, 01:44 PM
http://media.dinamani.com/2014/08/31/p3.jpg/article2407425.ece/alternates/w460/p3.jpg
"அந்தக் காலத்தில் ஏ.கே. சேகர், கனு தேசாய், சுதேந்து ராய் போன்ற ஆர்ட் டைரக்டர்கள் இருந்தார்கள். நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களோ? என்னவோ?'' என்று தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார் தோட்டா தரணி. சென்னை தினத்தை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி அது. தோட்டா தரணியின் பின்னால் அவர் வரைந்த தேசிய ஆர்ட் காலரியும், கபாலி கோயிலும், சாந்தோம் சர்ச்சும் கறுப்புக் கோட்டோவியங்களாக் சட்டங்களுக்குள் உயிரோடு இருந்தன.
""நான் சின்னப் பையனாக இருந்த போதே என் அப்பா வெங்கடேசுவர ராவுடன் ஸ்டூடியோக்களுக்குப் போவேன். மல்லீசுவரி என்ற சரித்திரப் படத்துக்கு என் அப்பாதான் ஆர்ட் டைரக்டர். அவர்களுடைய உழைப்பெல்லாம் இப்போது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இப்போது திரைப்படங்களில் ஆர்ட் டைரக்டரின் பங்கே மாறிவிட்டது என்று நான் சொன்னால் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
கங்கா என்று ஒருவர் இருந்தது உங்களுக்கு நினைவு இருக்கலாம். புராணப்படங்களுக்கு அவர் மாதிரி யாரும் உழைத்திருக்க மாட்டார்கள்''
இரு நூறு திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றிய தோட்டா தரணியின் சொற்பொழிவில் அப்பட்டமான உண்மை தெரிந்தது. தாபம் தெரிந்தது.
அந்த நாட்களில் சென்னைதான் தெலுங்கு, மலையாள, கன்னட, இந்தி திரைப்படங்கள் அதிகம் தயாரிக்கும் மையமாக இருந்தது. சில ஆங்கிலப் படங்கள் கூட இங்கே தயாரிக்கப்பட்டன. பிறகுதான் நாகேசுவர ராவ் ஹைதராபாதுக்கும், பிரேம் நசீர் கேரளாவுக்கும், ராஜ்குமார் பெங்களூருக்கும் ஸ்டூடியோக்களைக் கொண்டு போனார்கள்.
""சிறுவனாக அப்பாவுடன் ஸ்டூடியோக்களுக்குப் போன போது எம்.ஜி.ஆரைப் பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். மறு நாள் பள்ளிக்கூடத்தில் போய் சினேகிதர்களிடம் பெருமையாகச் சொல்லிக் கொள்வேன் சிவாஜி, ஜெமினி எல்லாருடனும் பேசி, பழகி இருக்கிறேன். அப்போதெல்லாம் ஆர்ட் டைரக்டருக்கும் சீன் டிசைன் பண்ணுபவருக்கும் இடையில் ஒரு பாலமாக இருப்பாராம் மேஸ்திரி. திறமை வாய்ந்த ஆசாரிகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் எல்லாம் இருந்த காலம் அது. திரைப்பட இயக்குநர் செட் டிசைன் பற்றிப் பேச மாட்டார். தயாரிப்பாளர்தான் ஆர்ட் டைரக்டரிடம் பேசுவாராம் 35000 ரூபாய் ஆகும் செட்டை, 10000 ரூபாய்க்குள் முடிக்க முடியாதா? என்று கேட்பார்களாம்.''
ஆனால் தோட்டா தரணியின் செட்டுகள் மட்டும் ஏன் மக்கள் மத்தியில் பேசப்பட்டன?
""நிஜம் போல இருக்க வேண்டும் என்ற அக்கறைதான். ஒரு தடவை ஒரு செட்டுக்காக நல்ல உலர்ந்த புல் தேவைப்பட்டது. முதல் நாள் பெய்த அடை மழையில் எங்கே கிடைக்கும் உலர்ந்த புல்? நான் சோர்ந்துவிடவில்லை. என்னுடைய ஆட்கள் வீடு வீடாகப் போய் ஆறு லாரிகளில் உலர்ந்த புல்லைச் சேகரித்துக் கொண்டு வந்தார்கள்.''
தோட்டா தரணியின் சென்னை அனுபவங்களைக் கேட்க வந்திருந்த ரசிகர் கூட்டத்தை அவர் ஏமாற்றவில்லை. திரைப்படத் துறைத் தகவல்களாகக் கொட்டினார். ஒரு பான் வாங்கிக் கொண்டு வர என்றே ஒரு கார் போகுமாம்
""நாங்கள் நிறைய நாட்கள் நெடுந்தூரம் நடந்ததும் உண்டு. இரவு இரண்டு மணிக்கு, கோடம்பாக்கத்திலிருந்து ஆழ்வார்பேட்டைக்கு நடந்து சென்றதுண்டு. ஆட்டோவில்தான் அதிகம் பயணம். புரொட்யூசரைத் தேடிப் போனால், இன்றைக்கு நேரம் இல்லை சார். நாளைக்குப் பார்க்கலாம் என்று திருப்பி அனுப்பிவிடுவார்கள். பின்னர் ஒரு கட்டத்தில் ஒரு பழைய அம்பாசிடர் கார் வாங்கிய போது, "கார் வாங்கிட்டான் பாரு' என்று கிசுகிசுத்தார்கள். ஒரு பிரம்மாண்டமான அறைக்கு வர்ணம் பூசச் சொன்னார்கள். ஒரே நாள். அதற்கு 200 ரூபாய் தந்தார்கள்'' என்று தம் பழைய நினைவுகளை எல்லாம் பகிர்ந்து கொண்டார் தோட்டா தரணி.
தோட்டா தரணி ஒரு தடவை பாரீசுக்குப் போன போது கிடைத்த ஓய்வு நேரத்தை, காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த படங்களை வரையப் பயன்படுத்திக்கொண்டார். அவருடைய படங்கள் காலண்டர்களிலும், ஒரு சில விளம்பரங்களிலும் வந்திருந்தாலும், அவர் வரைந்த சில முக்கியமான ஓவியங்கள் உலகின் பல பாகங்களிலும் உள்ள அவருடைய ரசிகர்களின் தனிப்பட்ட கலெக்ஷனில் இருக்கிறதாம்.
""பம்பாயில் ஆறு மாசம் ஒரு விளம்பர கம்பெனியில் வேலை பார்த்தேன். இவன் இங்கே இருந்தால் ஆபத்து என்று என்னை சென்னைக்கே அனுப்பிவிட்டார்கள்'' என்று சொன்னபோது மெல்லிய சிரிப்பலை.
உடையலங்காரம் எல்லாம்கூட ஆர்ட் டைரக்டர்தான் அன்றைக்கு டிசைன் செய்து கொடுத்தாராம். திருவல்லிக்கேணியில் உள்ள தையல்காரர்கள் வேண்டிய மாதிரி, நேரத்தில் தைத்துக் கொடுத்துவிடுவார்களாம். "அஞ்சலி' படத்துக்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பு செட் போட டிசம்பர் 25ஆம் தேதி சொன்னார்கள். மறு வாரம் முதல் தேதி செட் தயாராக இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அந்தக் கடுமையான சோதனையை வெற்றிகரமாக முடித்தாராம் தரணி. நாயகன், தளபதி செட்டுகள் எல்லாம் பிரபலமாகப் பேசப்பட்டவை.
""மதுரை மீனாட்சி அம்மன் கோயில், உள்ளே பொற்றாமரைக்குளம் எல்லாம் ஒரு செட் போட்டீர்களே எல்லோரும் நிஜம் போல அதை எல்லாம் வணங்கினார்கள். அதை எல்லாம் அப்படியே வைத்திருந்தார்களா?'' என்று ஒருவர் கேட்டார். "" ஊஹும்'' என்றார் தோட்டா தரணி.
""ஒரு செட்டை படப்பிடிப்பு முடிந்ததும் பிரித்துவிடும்போது, உங்களுக்கு எப்படி இருக்கும்?'' என்பது இன்னொரு ரசிகர் கேள்வி.
""அது அழிக்கப்படும்போது அதைப் பார்க்க நான் அங்கே இருக்க மாட்டேன்'' என்றார் தரணி.
முதலில் தம்மைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல ஆரம்பித்தாலும், பதினைந்து நிமிடங்களுக்குத் தம் படைப்புகளை ஒரு குறும்படமாகக் காண்பித்த பிறகே, தம் பேச்சைத் தொடர்ந்தார் தோட்டா தரணி. வி. ஸ்ரீராம் தரணியை ஆரம்பத்தில் அறிமுகம் செய்து பேசினார். முடிவில்,""தரணி, நீங்கள் வரைந்ததிலேயே எனக்குப் பிடித்தது ஏ.வி.எம் செட்டியார் அவர்களின் புகைப்படம்தான். மத்திய அரசு அவருடைய தபால் தலை வெளியிடுவதற்காகக் கேட்டபோது அதை வரைந்து கொடுத்தீர்கள். அதன் பிரதியை மட்டும் நான் மத்திய அரசுக்குக் கொடுத்துவிட்டு, அதன் அசலை பத்திரமாக வைத்திருக்கிறேன், அதில் உங்கள் கையெழுத்துக்காக'' என்றார் மோகன் ராமன்.
gkrishna
1st September 2014, 01:49 PM
கார்த்திக் சார்
நீங்கள் பூபாளம் பற்றி ஒரு பதிவு ஆரம்பிதீர்கள் .'இது குழந்தை பாடும் தாலாட்டு ' என்ற பாடலுடன்.
தீடீர் என்று பதிவை காணவில்லை
gkrishna
1st September 2014, 01:51 PM
வாசு சார்
பெற்ற மனம் பித்து ஜெயா சாவித்திரி ஸ்ரீகாந்த் நாலாவது கூலிங் கிளாஸ் யாரு சார் ?
ஹீரோ நவரச திலகம் காணோமே ?
gkrishna
1st September 2014, 01:57 PM
http://www.thehindu.com/multimedia/dynamic/00776/09Theatre_G2D3CAJ76_776841g.jpg
நவாப் நாற்காலி எஸ் வி சஹஸ்ரநாமம் பற்றி திரு வாசு அவர்கள் கூறிய ஒரு கருத்து ரொம்பவே சிந்திக்க வைத்தது.அதன் விளைவே இநத பதிவு
("திரும்பிப் பார்க்கிறேன்' என்ற சுயசரிதை நூலில் பாரதி கலைஞர் எஸ்.வி.சஹஸ்ரநாமம்).
தாயாரின் அரவணைப்பு இல்லாததால் பொள்ளாச்சியில் பெரிய தகப்பனார் இல்லத்தில் தங்கிப் படிக்கும்படி நேரிட்டது. பள்ளியில் நடக்கும் ஆண்டு விழா நாடகங்களில் சிறு வேடங்கள் ஏற்று நடிக்க வாய்ப்புக் கிடைத்தது.
அந்தச் சமயத்தில்தான் மதுரை ஸ்ரீபால ஷண்முகானந்த சபா என்ற பெயரில் சிறுவர்களைக் கொண்ட குழு ஒன்று பொள்ளாச்சியில் நாடகம் போட்டுக் கொண்டிருந்தது. இதே குழுதான் பின்னர் டி.கே.எஸ் நாடக சபா என்ற பெயரில் பல சமுதாய, சரித்திர, நாடகங்களை நடத்திப் பிரபலமாக இருந்து வந்தது. அந்தக் குழுவினர் நடத்திய "அபிமன்யூ சுந்தரி' என்ற நாடகத்தில் டி.கே.சண்முகம் அபிமன்யுவாகத் தோன்றித் துடிப்பாக வசனம் பேசி நடித்து மக்களின் கரவொலியைப் பெற்றபோது நாமும் இந்தக் குழுவில் சேர்ந்து நடித்தால் நம்மையும் பாராட்டுவார்களே என்ற ஆசை என் மனதில் வேர்விட்டது. அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். பொள்ளாச்சியிலிருந்து குழு கோவைக்கு முகாமை மாற்றியபோது என்னுடைய புதிய ஆங்கிலப் புத்தகத்தை ஆறாணாவுக்கு விற்றுவிட்டு வீட்டுக்குத் தெரியாமல் கோவைக்கு ரயில் ஏறி விட்டேன்!
அடுத்த நாள் நாடகக் குழு மானேஜர் திரு.காமேஸ்வர அய்யரைப் பார்த்து என் ஆசையை வெளியிட்டபோது அவர் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ""அவ்வளவு சுலபமாக உன்னைச் சேர்த்துக்கொள்ள முடியாது. ஒன்று உன் பெற்றோர் நேரில் வரவேண்டும் அல்லது கடிதமாவது கொடுக்க வேண்டும்'' என்றார் கறாராக! கடிதம் வாங்கி வருவதாகச் சொல்லி விட்டுப் புறப்பட்டேன். அப்பாவிடம் நாடகக் கம்பெனி பேச்சை எடுத்தால் என்ன நடக்குமென்று எனக்குத் தெரியும். ஒரு முடிவுக்கு வந்தேன். என் தகப்பனார் எழுதுவதுபோல் ஒரு கடிதத்தை எழுதி மானேஜரிடம் சேர்த்தேன். அவர் பார்வை என்னை நம்பவில்லை என்பதைச் சொல்லியது! ""இது உன் அப்பா கையெழுத்தா?''
என்று கேட்டார். ""ஆமாம்'' என்று அடித்துச் சொல்லி விட்டேன்! அவர்களோடு தங்க அனுமதி கிடைத்தது.
மறுநாள் மாலை மூன்று மணியிருக்கும். இன்னொரு உறவினரோடு அப்பாவை நாடகக் குழு இருந்த இடத்தில் பார்த்ததும் என் சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது! மானேஜர் ஆள் மூலம் அப்பாவுக்குத் தகவல் அனுப்பி வரவழைத்திருக்கிறார்! இந்த இக்கட்டிலிருந்து எப்படித் தப்புவது? நாங்கள் தங்கியிருந்த இடத்துக்குப் பின்னால் ஒரு பெரிய கேணி. உள்ளே படிக்கட்டுகள். அதில் இறங்கி ஒளிந்து கொண்டேன். சமையல் உதவியாளர் ஒருவர் இதைப் பார்த்துச் சொல்லிவிட்டார்! மானேஜர் முன்னிலையில் அப்பா கேட்டார்: ""படிப்பா? நாடகமா?''
""நாடகம்தான்'' என்று தயங்காமல் சொன்னேன்! ""தலை எழுத்துப்படி நடக்கட்டும்!'' என்று ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு ஊர் போய்ச் சேர்ந்தார்! இப்போது நான் மதுரை ஸ்ரீபால ஷண்முகானந்தா சபாவில் ஒரு நடிகன்!
vasudevan31355
1st September 2014, 02:11 PM
கிருஷ்ணா சார்,
http://www.frontline.in/static/html/fl2319/images/20061006000707901.jpg
சகஸ்ரநாமம் பதிவு ரொம்ப இன்ட்ரெஸ்ட்டிங். நல்ல நடிகர். இவர் நடித்த படங்களிலேயே எனக்கு 'பேசும் தெய்வம்' தான் ரொம்பப் பிடிக்கும். பலர் 'போலீஸ்காரன் மகள்' என்பார்கள். சகஸ்ரநாமம் 'பர்மா ராணி' என்ற மாடர்ன் தியேட்டர்ஸ் படம் மிகப் பழைய படம் (1945)ஒன்றில் சிறு வேடத்தில் வருவார். டிஆர்.சுந்தரம் அதில் வில்லன். மிக வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்ட படம். சமீபத்தில்தான் பார்த்தேன். ரொம்ப பிடித்திருந்தது. ஹொன்னப்ப பாகவதர்தான் ஹீரோ. ஹீரோயின் யார் என்று கேட்கிறீர்களா? அப்புறம் நம்ம சி.க.வுக்கு என்ன வேலை இருக்கிறது?:)
mr_karthik
1st September 2014, 02:26 PM
டியர் சின்னக்கண்ணன் சார்,
மூக்குத்தி பற்றிய ஆராய்ச்சிப்பதிவு உண்மையிலேயே அசர வைத்தது. இதுவரை மூக்குத்தி வெறும் அழகுக்காக அணிந்து வந்ததாகவே நினைத்திருந்தேன். அடுத்து, காது தோடுக்கு என்ன மருத்துவக்காரணம்?. இப்படி ஒவ்வொரு நகைக்கும் காரணம் கண்டுபிடித்தோமானால் அப்புறம் வீட்டில் நச்சரிப்பு தாங்க முடியாதே. அப்புறம், தொப்புளில் குத்திக்கொள்கிறார்களே ஒரு தொங்கட்டான் அதுக்கும் ஒரு மருத்துவ காரணம் இருக்கணுமே.
vasudevan31355
1st September 2014, 02:33 PM
இன்றைய ஸ்பெஷல் (66)
இன்றைய ஸ்பெஷலில் 'பிரேமாலயா'வின் '47 நாட்கள்' படப் பாடல். 47 ஜென்மமானாலும் மறக்க முடியாத பாடல்.
'மான் கண்ட சொர்க்கங்கள்
காலம் போகப் போக யாவும் வெட்கங்களே'
http://i.ytimg.com/vi/8wVhsnprGrQ/maxresdefault.jpg
பாடலை மட்டும் ஆய்வு செய்ய நினைத்தால் மனம் கேட்கவில்லை. அதுவும் பாலச்சந்தரின் அதிதீவிர ரசிகர்கள் வேறு இருக்கிறார்களா! 'மன்மத லீலை'க்கு அவ்வளவு வரவேற்பு இருந்ததே! அதனால் கொஞ்சம் படத்தைப் பற்றியும் சொல்லிவிடலாம் என்று. அப்புறம் நண்பர்கள் நீங்கள் புகுந்து பிரித்து மேய்ந்து விட மாட்டீர்களா என்ன!
முதலில் இப்படத்தின் கதையை கொஞ்சம் பார்த்து விடுவோம்.
விஷாலி என்ற வைஷாலி ஒரு அப்பாவி பிராமணப் பெண். அவளை திருமணம் செய்து கொள்கிறான் குமார் என்ற இளைஞன். அவன் வேலை பார்க்கும் பாரீஸுக்கு அவளை அழைத்துச் செல்கிறான். தம்பதியர் சந்தோஷமாக நாட்களைக் கழிக்கும் தருணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக குமாரின் நடத்தைகள் மேல் விஷாலிக்கு சந்தேகம் வரத் தொடங்குகிறது. ஆமாம். அவள் சந்தேகப்பட்டது மாதிரி எல்லாம் நடக்கிறது. குமார் ஏற்கனவே லூஸி என்ற பிரஞ்ச் பெண் டாக்டரை மணந்து கொண்டவன். லூஸியிடம் விஷாலியைத் தன் தங்கை என்றும், விஷாலியிடம் லூசியை தன் சிநேகிதி என்றும் பொய் சொல்லி வைத்திருக்கிறான் குமார். தன் பேச்சு சாதுரியத்தின் மூலமும், கிரிமினல் புத்தி மூலமும் மேல் அபார்ட்மெண்டில் லூஸியுடனும், கீழே விஷாலியுடனும் வெகு சாமர்த்தியமாக குடித்தனம் நடத்துகிறான் அந்தக் கயவன்.
விஷாலி உண்மையைக் கண்டு பிடித்துக் கேட்டதும் வேறு வழியில்லாமல் அவளிடம் தன் முதல் திருமணத்தை ஒத்துக் கொள்கிறான் குமார். லூஸியிடம் பணம் நிறைய இருக்கிறது என்றும் அது வேண்டுமானால் அவளையும், தன்னையும் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்று கூறுகிறான் குமார். ஆனால் விஷாலி மறுக்கிறாள். தாய் வீ(நா)ட்டிற்கு போக வேண்டும் என்று துடிக்கிறாள்.
http://pesumpadam.com/wp-content/uploads/2014/02/47-Naatkal-620x453.jpg
விஷாலி தனக்கு எல்லா விதத்திலும் தடையாய் இருப்பதாக நினைத்து அவளை பல்வேறு சித்ரவதைகளுக்கு உள்ளாக்குகிறான் குமார். அவன் கொடுமையிலிருந்து தப்பிக்க பலவகையிலும் முயலும் விஷாலி மொழி தெரியாததால், தன் நிலைமையை மற்றவர்களிடம் உணர்த்த முடியாததால் ஒவ்வொரு முறையும் அதில் தோல்வி அடைகிறாள். கர்ப்பம் தரித்திருக்கும் விஷாலியை அடிவயிற்றில் சூடு போட்டு கர்ப்பத்தைக் கலைக்கும் அளவிற்கு கொடுமைக்காரனாகப் போய் விடுகிறான் குமார்.
பாரிஸில் அனாதையாக சுற்றிக் கொண்டிருக்கும் துணிச்சல் மிக்க நல்ல மனம் கொண்ட ஒரு தமிழ்ப் பெண்ணும், மனிதாபமுள்ள ஒரு டாக்டரும் இறுதியில் வைஷாலியின் நிலைமை அறிந்து அவளுக்கு உதவி செய்து குமாரிடமிருந்து அவளைக் காப்பாற்றி அவளை இந்தியா கொண்டு வந்து அவளது தாய்வீட்டில் சேர்க்கிறார்கள். கணவனை வெறுத்து வெறுத்து ஒதுக்கி விட்டு புக்ககத்திலிருந்து மீண்டும் பிறந்தகம் வந்து, வேறு கல்யாணமும் பண்ணிக் கொள்ளாமல் தன் பிறந்த வீட்டிலேயே சோகமாக வாழ்கிறாள் விஷாலி.
குமாரின் கபட நாடகங்களைத் தெரிந்து கொண்ட அவன் முதல் தாரம் லூஸியும் தன் திருமண மோதிரத்தைத் தூக்கி எறிந்து குமாரை உதறித் தள்ளுகிறாள். விஷாலியும் இல்லாமல், லூசியும் இல்லாமல் தனியே விழிக்கிறான் குமார்.
விஷாலியின் கதையை சினிமாவாக எடுக்க முடிவு செய்கிறார்கள். நடிகை சரிதா விஷாலியின் பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி அந்த கேரக்டரை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் விஷாலியை நேராக சந்தித்து விஷயங்களை தெரிந்து கொள்ள விஷாலியின் கிராமத்திற்கு செல்கிறாள். முதலில் சரிதாவிடம் எதையும் சொல்லாமல் எறிந்து விழுகிறாள் விஷாலி. விஷாலியின் அண்ணன் சரிதாவிடம் தன் தங்கையின் கதையை சொல்கிறான்.
பின் விஷாலி சமாதானமாகி சரிதாவை வழி அனுப்பி வைக்கிறாள்
'சினிமாவிலாவது எனக்கு மறு கல்யாணம் செய்து வையுங்கள்' என்று.
சொல்லியபடி.
சிவசங்கரியின் புகழ் பெற்ற பெருத்த வரவேற்பைப் பெற்ற கதை. பாலச்சந்தர் கதை கெடாமல் அதே சமயம் பாரிஸின் கண்கவர் அழகை படம் நெடுக விஷாலிக்கு சிரஞ்சீவி சுற்றிக் காண்பிப்பது போல நமக்குக் காட்டி நல்ல நடிகர்களை நடிக்க வைத்து இப்படத்தை நன்றாக இயக்கியிருப்பார். 'எல்லோரும் சதையை எடுத்துக் கொண்டு வெளிநாடு சென்றால் பாலச்சந்தர் கதையை எடுத்துக் கொண்டு வெளிநாடு சென்று வெற்றி பெற்றிருக்கிறார்' என்று ஒரு பத்திரிகை அப்போது விமர்சனம் எழுதியிருந்தது.
http://i1.ytimg.com/vi/PsQ1cLMrfus/hqdefault.jpg
குமார் என்ற அயோக்கிய நரிக் கணவனாக 'ஆந்திர சூப்பர் ஸ்டார்' ஆரம்ப கால சிரஞ்சீவி, நம் எரிச்சலை அவர் மேல் அழகாக வரவழைப்பார். (இப்படிப்பட்ட திறமைசாலிகள் ஓடும் விமானத்தைத் தனி ஆளாக தடுத்து நிறுத்துவதும், ஒத்தையாய் ஒரு நூறு பேரை அடிக்கும் மாஸ் ஹீரோவானது பற்றி என்ன சொல்வது!)
http://i.ytimg.com/vi/7966bSNuAP4/default.jpg
பரிதாப நாயகி விஷாலியாக சாமுத்ரிகா லட்சண அழகி ஜெயபிரதா. மிக அழகான, இயல்பான, பரிதாபப்பட வைக்கும், அழகுடன் சேர்ந்த அளவான நடிப்பு. ஜெயபிரதாவைக் காப்பாற்றும் உத்தம ரவுடிப் பெண்ணாக 'தம்'மடிக்கும் ரமாபிரபா, (ரமாபிரபாவுக்கு வாணியின் குரலில் வித வித காஸ்டியூம்களில் 'இவள் உன்னை நினைத்த போதே மடக்குவாளய்யா'என்ற பாடலும் உண்டு) டாக்டராக பாலச்சந்தரின் 'ஜென்டில் மேன்' சரத்பாபு, (ஒரிஜினல் கணவன் மனைவி) மற்றும் பாலச்சந்தரின் (கிருஷ்ணா சாரின்) ஆஸ்தான ரமணமூர்த்தி, அனுமந்து அனைவரும் உண்டு
ஜெயபிரதாவிற்கு நடிகை சுஜாதா குரல் கொடுத்திருப்பார். சிரஞ்சீவிக்கு 'டெல்லி' கணேஷ் என்று நினைக்கிறேன். சரிதா நடிகையாக சிறு ரோலில். ஆன் பட்ரீஷியா என்ற பிரெஞ்ச் நடிகை லூஸி என்ற சிரஞ்சீவியின் முதல் காதலியாக
ரகுநாத ரெட்டி காமரா. கண்கவர் பாரீஸ் இவர் திறமையால் நேரே நம் கண் முன்னாடி.
இசை 'மெல்லிசை மன்னர்'. பாடல்களை மட்டுமல்ல. ரீரிக்கார்டிங்கில் அதம் பறக்கிறது. குறிப்பாக இறுதியில் விஷாலி குமாரிடம் இருந்து தப்பி பாரிஸ் நகரத்தில் ஓடும் காட்சி.
இந்த ஒரு பாடல் போதும் அவருடைய ஒட்டு மொத்தத் திறமைக்கு. 'தொட்டுக் கட்டிய மாப்பிள்ளை' என்ற அருமையான இன்னொரு பாடலும் உண்டு. (பாலா வித் வாணி)
இப்பாடலின் ஆரம்ப பிரம்மிக்க வைக்கும் இசையைக் கேட்காமல் விட்டு விடாதீர்கள்.
http://i1.ytimg.com/vi/3xjLSr2sz7E/mqdefault.jpg
விஷாலி படத்தில் தன் கணவனால் அனுபவிக்கும் கஷ்டங்களின் போது துண்டு துண்டாக பின்னணியில் ஒலிக்கும் பாடல் படம் முழுக்க வரும்.
பாடலைக் கேட்கும் போதெல்லாம் நம் நெஞ்சை அடைப்பது போல ஓர் உணர்வு நமக்கு வருவது தவிர்க்க முடியாதது. அது பாலாவுக்கும், மன்னருக்கும் கிடைத்த வெற்றி
பாலாவுக்கு முழு கிரெடிட்டும் போய் சேரும். மனிதர் அப்படி பாடலின் தன்மை அறிந்து, குழைத்து, விஷாலியின் மேல் படம் பார்ப்போரின் இரக்கத்தை அதிகப்படுத்தும் அளவிற்கு உணர்ந்து பாடி பிரமாதப் படுத்தியிருப்பார்.
பாலாவின் மிக முக்கியமான பாடல்களில் மிகச் சிறப்பான தலையாய மனதைப் பிசையும் பாடல் இது.
கண்ணதாசனின் அட்டகாசமான, எளிமையான, விஷாலியின் துன்ப நிலையை மிக அழகாக நம் நெஞ்சில் பதிய வைக்கும் வரிகள்.கதைக்குத் தகுந்தாற்போல தாய்நாட்டின் பெருமையையும் சேர்த்து வரிகளாக்கிய சாமர்த்திய திறமைசாலி.
இப்பாடல் படத்தில் மொத்தம் விட்டு விட்டு 7 நிமிடங்களுக்கு வரும். ஆனால் வீடியோவில் பாதியளவு பாடல்தான் உள்ளது. இறுதி 2 சரணங்கள் மிஸ்ஸிங். எனவே இப்பாடலின் ஆடியோ இணைப்பும் தந்துள்ளேன். அனைவரும் முழுப் பாடலையும் கேட்டு தன் வசம் இழக்கலாம்.
http://www.4shared.com/mp3/W44Qsj6s/47Naatkal_-_Maan_Kanda_sorgang.html?locale=en
கொஞ்சம் பெரிய பாடல். பாடலில் மொத்தம் நான்கு சரணங்கள். ஒவ்வொரு நிலையிலும் விஷாலி படும் துயரங்களை விளக்கும் பாடல்.
இனி பாடலின் முழு வரிகள்
http://i.ytimg.com/vi/8ZaRiSOmA8E/hqdefault.jpg
மான் கண்ட சொர்க்கங்கள்
காலம் போகப் போக யாவும் வெட்கங்களே
மான் கண்ட சொர்க்கங்கள்
காலம் போகப் போக யாவும் வெட்கங்களே
ஏன் ரெண்டு பக்கங்கள்
பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே
ஏன் ரெண்டு பக்கங்கள்
பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே
மான் கண்ட சொர்க்கங்கள்
காலம் போகப் போக யாவும் வெட்கங்களே
தாமரைப் பூவென்றான்
காகிதப் பூவானான்
ராமனைப் போல் வந்தான்
ராவணன் போலானான்
தாமரைப் பூவென்றான்
காகிதப் பூவானான்
ராமனைப் போல் வந்தான்
ராவணன் போலானான்
பண்பாடு இல்லாமல் பெண்பாடு
பெரும்பாடு இப்போது
ஊருக்கு ஒரு உள்ளம்
ஊருக்கு ஒரு எண்ணம்
யாருக்கு அவன் சொந்தம்
யாருக்கு அவன் மஞ்சம்
கண்ணீரில் நீராட கடல் தாண்டி
வந்தாளே பொன்மங்கை
மான் கண்ட சொர்க்கங்கள்
காலம் போகப் போக யாவும் வெட்கங்களே
பேதங்கள் அறிகின்றான்
வேதனை தருகின்றான்
நல்லவன் செல்லாத
பாதையில் செல்கின்றான்
பேதங்கள் அறிகின்றான்
வேதனை தருகின்றான்
நல்லவன் செல்லாத
பாதையில் செல்கின்றான்
அப்பாவிப் பெண் உள்ளம்
இப்பாவி செயல் கண்டு தள்ளாடுது
காலையில் ஓர் வண்ணம்
மாலையில் ஓர் வண்ணம்
மாறுது அவன் பாதை
வாடுகிறாள் பாவை
பூச்சூடி வந்தாளே
புரியாமல் நின்றாளே இப்போது
மான் கண்ட சொர்க்கங்கள்
காலம் போகப் போக யாவும் வெட்கங்களே
ஏன் ரெண்டு பக்கங்கள்
பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே
ஆசையில் ஓர் நாளில்
பாடிய ஓர் பாட்டில்
தாயென ஆனோமே
சேயினைக் கண்டோமே
ஆசையில் ஓர் நாளில்
பாடிய ஓர் பாட்டில்
தாயென ஆனோமே
சேயினைக் கண்டோமே
ஏன் இந்த சேய் என்று தாளாத
நோய் கொண்டாள் இப்போது
பாசத்தில் நீராடி பந்தத்தில் போராடி
வேஷத்தைத் தொடர்வாளா
வேதனை பெறுவாளா
ஊரில்லை உறவில்லை
தனியாக நின்றாளே பூமாது
மான் கண்ட சொர்க்கங்கள்
காலம் போகப் போக யாவும் வெட்கங்களே
ஏன் ரெண்டு பக்கங்கள்
பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே
தன் வழி செல்கின்றாள்
சஞ்சலம் கொள்கின்றாள்
எவ்விடம் செல்வாளோ
எவ்விதம் செல்வாளோ
தன் வழி செல்கின்றாள்
சஞ்சலம் கொள்கின்றாள்
எவ்விடம் செல்வாளோ
எவ்விதம் செல்வாளோ
எங்கெங்கும் மேகங்கள்
எங்கெங்கும் பனிமூட்டம் இப்போது
இந்தியத் தாய்நாட்டை எண்ணுகிறாள் மங்கை
சென்றிட வழியில்லை தேம்புகிறாள் நின்று
தாய் வீட்டுத் தெய்வங்கள்
துணையாக வாராதா இப்போது
மான் கண்ட சொர்க்கங்கள்
காலம் போகப் போக யாவும் வெட்கங்களே
ஏன் ரெண்டு பக்கங்கள்
பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே
(பாடல் முடிந்தவுடன் பாடலின் பல்லவி இசையருவியாய் மட்டும் கொட்டும் இன்பத்தைக் கேட்டு அனுபவியுங்கள்)
http://www.youtube.com/watch?v=O1e-GBfFw2c&feature=player_detailpage
gkrishna
1st September 2014, 02:41 PM
வாசு சார்
47 நாட்கள் மனதை பிழிந்த படம் மற்றும் பாடல்
படத்தில் பிட் பிட் ஆக வரும் (பிட் என்று தப்பான அர்த்தத்தில் சொல்லவில்லை ) . காட்சிகளுக்கு நடு நடு வே வரும்
வைஷாலி ஒரு முறை தப்பி செல்லும் போது வழிகாட்டி போர்டு அருகில் நின்று கொண்டு இருக்கும் போது கவிஞர் ஒரு வரி எழுதி இருப்பார் .பிறகு சிங்கப்பூரில் உள்ள அம்மன் கோயில் ஒன்றை காட்டுவார் இயக்கனர் பாலச்சந்தர் . பாடலின் ஊடே கதை சொல்லும் பாங்கு
தன் வழி செல்கின்றாள்
சஞ்சலம் கொள்கின்றாள்
எவ்விடம் செல்வாளோ
எவ்விதம் செல்வாளோ
சென்றிட வழியில்லை தேம்புகிறாள் நின்று
தாய் வீட்டுத் தெய்வங்கள்
துணையாக வாராதோ இப்போது
mr_karthik
1st September 2014, 02:48 PM
டியர் கிருஷ்ணாஜி,
தோட்டா தரணி மற்றும் சகஸ்ரநாமம் பற்றிய பதிவுகள் மிகவும் அருமை. எனக்கு போலீஸ்காரன் மகள், பேசும் தெய்வம், படித்தால் மட்டும் போதுமா என பல படங்களில் அவர் நடிப்பு பிடிக்கும்.
'நான் படைத்த செட்கள் அழிக்கப்படும்போது நான் அங்கு இருக்க மாட்டேன்' என்று தோட்டா தரணி சொல்லியிருப்பது தொழிலில் அவருள்ள ஈடுபாட்டைக் காட்டுகிறது. பார்த்துப்பார்த்து படைத்தவை அல்லவா?. மனது வலிக்கத்தானே செய்யும். ஒருமுறை ஒரு இயக்குனர் சொன்ன தகவல். பானை செய்பவர் ஒருவரிடம் ஒரு சண்டைக்காட்சிக்காக பானைகள் விலைக்குக் கேட்டபோது மறுத்துவிட்டாராம். எவ்வளவு கஷ்டப்பட்டு நான் பார்த்து பார்த்து உருவாக்கியவை அநியாயமாக உடைந்து சிதறுவதை என்னால் பார்க்க முடியாது என்று அவர் மறுத்ததில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்ட இயக்குனர், பானைகள் இல்லாமலே சண்டைக்காட்சியை படமாக்கினாராம்....
gkrishna
1st September 2014, 02:51 PM
மணியனின் இதயம் பத்திரிகையில் வெளி வந்த சிவசங்கரி யின் 47 நாட்கள் தொடர் கதை பாலச்சந்தர் இன் கை வண்ணத்தில் திரை கதை ஆயிற்று . திருமணம் முடிந்து சிரஞ்சீவி உடன் வைஷாலி (ஜெயப்ரதா இவருக்கு கால் பாதத்திற்கு (மன்னிக்கவும் பரதத்திற்கு) முலாயம் சிங்க் மச்சான் அமர்சிங் அடிமை :) ) பாரிஸ் சென்று இறங்கும் போது அந்த விமான நிலையத்தில் ஒரு குழந்தை கொடி காட்டி கொண்டு இருக்கும் காட்சி அமைத்து இருப்பார் .அதற்கு ஒரு விளக்கம் படித்த நினைவு
ராமாயணத்தில் சீதா ராமரை மணந்து கொண்டு அயோத்திக்கு முதன் முதலில் செல்லும் போது அங்குள்ள மக்கள் கொடி அசைத்து வரவேற்பார் . ஆனால் கம்பன் கற்பனை மட்டும் மாற்றி இருந்தது. இநத நகருக்கு வராதே நிறைய கஷ்ட பட போகிறாய் என்பது போல் இருந்ததாம் .அது போல் வைஷாலி கஷ்ட பட போகிறாள் என்பதை சொல்லாமல் சொல்லுவார் இயக்குனர்
gkrishna
1st September 2014, 03:00 PM
47 நாட்கள் என்ற படத்தில் வரும் மிக நீண்ட பாடலான "மான் கண்ட சொர்கங்கள்" மிகவும் அருமையானது. இதன் இசை அப்போதைய கலப்பிசைக்கு சவாலாக அமைந்திருக்கும். ஆனால் இந்தப் பாடல் பெரிய அளவில் பேசப்படவில்லை என்பது ஒரு வருத்தமான நிகழ்வு.
vasudevan31355
1st September 2014, 03:05 PM
47 நாட்கள் என்ற படத்தில் வரும் மிக நீண்ட பாடலான "மான் கண்ட சொர்கங்கள்" மிகவும் அருமையானது. இதன் இசை அப்போதைய கலப்பிசைக்கு சவாலாக அமைந்திருக்கும். ஆனால் இந்தப் பாடல் பெரிய அளவில் பேசப்படவில்லை என்பது ஒரு வருத்தமான நிகழ்வு.
இனி மேலாவது பேசப்பட வேண்டும் என்றுதான் இவ்வளவு மெனக்கெடல். சரியாக 4 மணி நேரப் பதிவு இது. ஒவ்வொன்றையும் கவனித்து பார்த்து பார்த்து செதுக்கிய பதிவும் கூட.
gkrishna
1st September 2014, 03:10 PM
47 நாட்கள் - ஜெயப்பிரதாவின் அழகும் திறமையும் சேர்ந்து வெளிப்பட்டது -
மான் கண்ட சொர்கங்கள் பாலுவின் குரலில் ரீங்காரமிடும் பாடல்
by our beloved rajesh krv sir in another site
gkrishna
1st September 2014, 03:13 PM
இனி மேலாவது பேசப்பட வேண்டும் என்றுதான் இவ்வளவு மெனக்கெடல். சரியாக 4 மணி நேரப் பதிவு இது. ஒவ்வொன்றையும் கவனித்து பார்த்து பார்த்து செதுக்கிய பதிவும் கூட.
உண்மை வாசு சார்
1977 அவர்கள்,
1978 நிழல் நிஜமாகிறது
1979 நினைத்தாலே இனிக்கும்
1980 வறுமையின் நிறம் சிகப்பு ,தண்ணீர் தண்ணீர்
1981 கால கட்டத்தில் 47 நாட்கள்
பாலாவின் கொடி பட்டொளி வீசி பறந்து கொண்டு உடன் மெல்லிசை மன்னர் கவி அரசர் இவர்கள் எல்லோரும் சேர்ந்து கொடுத்த முத்து சரங்கள் எத்துனை எத்துனை
gkrishna
1st September 2014, 03:20 PM
From maalaimalar
பிரபல எழுத்தாளர் சிவசங்கரியின் "47 நாட்கள்'' என்ற நாவல், கே.பாலசந்தர் டைரக்ஷனில் படமாகியது. இதில், சிரஞ்சீவி (இன்றைய தெலுங்குப் பட உலகின் சூப்பர் ஸ்டார்) கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.
வெளிநாட்டில் வசிப்பவர்கள், தமிழ்நாட்டுக்கு வந்து நல்லவர்கள் போல் நடித்து அழகிய பெண்களை திருமணம் செய்து அழைத்து செல்வது, பிறகு சித்ரவதை செய்து விரட்டி விடுவது பற்றிய செய்திகள் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளியாகின்றன அல்லவா?
இதை மையமாக வைத்து, ஏற்கனவே எழுத்தாளர் சிவசங்கரி "47 நாட்கள்'' என்ற நாவலை எழுதினார். இது, பாலசந்தர் டைரக்ஷனில் 1981-ல் படமாக வெளிவந்தது.
இதுபற்றி சிவசங்கரி எழுதியிருப்பதாவது:-
"முதன் முதலாக பாலசந்தரை சந்தித்த நிமிஷத்தில் கொஞ்சம் சந்தோஷம், கொஞ்சம் பயம், கொஞ்சம் படபடப்பு என்று நான் அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தது நிஜம்.
நான் எழுதிய "47 நாட்கள்'' கதையை பாலசந்தர் திரைப்படமாக்கப்போகிறார் என்ற சந்தோஷம், இத்தனை பெரிய டைரக்டருக்கு சமமாய் உட்கார்ந்து விவாதிக்கப் போகிற அளவிற்கு சினிமாவைப் பற்றி எனக்கு என்ன தெரியும் என்ற பயம், படபடப்பு. ஆனால் அந்த பயமும், படபடப்பும் சரியாய் இரண்டு நிமிடங்களில் மாயமாய் மறைந்து போனதுதான் ஆச்சரியம்.
தன்னோடு பேசுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களைப் பரவசத்தில் ஆழ்த்துவது என்பது சிலருக்கு மட்டுமே சாத்தியமான காரியம். என்னைப் பொறுத்தவரையில், அந்த சிலரில் பாலசந்தரையும் நான் சேர்க்க விரும்புகிறேன்.
பாலசந்தர் என்னிடம், "47 நாட்கள் ரொம்பவும் பிரபலமான கதை. நான் அதைப்படம் எடுக்கும்போது ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும். படம் நன்றாக அமையாவிட்டால், சிவசங்கரியின் கதையை பாலசந்தர் கெடுத்துவிட்டார் என்றுதான் சொல்வார்கள். அதனாலே, அந்த பயம் எனக்கு இருக்கிறது'' என்றார்.
திரைப்பட உலகிற்கு முன்னோடியாக, ஒரு வழிகாட்டியாக திகழ்பவருக்கு பயமா!
என் வியப்பை நான் வெளியிட்டதும், பாலசந்தர் "ஆமாம்'' என்று தலையசைத்தார்.
"ஆம். அந்த பயம் அடிமனதில் உறுத்திக்கொண்டே இருந்தால்தான் கவனத்துடனும், சிரத்தையுடனும் என்னால் வேலை பார்க்க முடியும். படம் சிறப்பாக அமைய இந்த பயமும், தவிப்பும் முக்கியம்'' என்றார், பாலசந்தர்.
"47 நாட்கள்'' படத்தில் கதாநாயகனாக நடித்தவர், சிரஞ்சீவி. அவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் இதுதான். அவர் இப்போது ஆந்திராவில் சூப்பர் ஸ்டாராக விளங்குகிறார்.
கதாநாயகியாக நடித்தவர் ஜெயப்பிரதா.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் எல்லாம் நடந்தது. படம் நன்றாக அமைந்தும், எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.
http://mmimages.maalaimalar.com/Articles/2014/Jan/7dc16368-8ae1-4629-8a6f-c4a6292dc97a_S_secvpf.gif
gkrishna
1st September 2014, 03:24 PM
ஒவ்வொரு காட்சியிலும் செயபிரதாவும் சரி சிரஞ்சீவியும் சரி அப்படி ஒரு போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கும் படம் இது.
நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது சிரஞ்சீவி மேல் அனைவருக்கும் கோபம் பொத்துக்கொண்டு வரும். அந்த அளவிற்கு அந்த பாத்திரபடைப்பு.
அனந்துவின் கதையாக இருந்து இருந்தால், செயபிரதா பேசி இருக்கும் வசனங்களில் சீற்றம் இருந்திருக்கும். ஆனால் சிவசங்கரியின் வசனமானதால், அந்த வசங்கள் எல்லாம் மகேந்திரனின் வசனங்களில் வருவது போல் இயல்பாகவும், உண்மையில் பேசினால் எப்படி பேசுவார்களோ அப்படி இருந்தது.
அதிகபடியாக அந்த செயபிரதா பேசும் வசனம் இது ஒன்று தான் 'போடா, பாரீசு தான பரவாயில்லை' அவ்வளவு தான். இதுவே அனந்துவாக இருந்திருந்தால், சுகாசனி அதிக படங்களில் பேசி நடித்த அத்தணை வசனங்களும் இந்த ஒரு படத்திற்கு மட்டுமே வந்திருக்கும்.
தப்பிக்க நினைக்கும் அத்தனை சந்தர்பங்களும் அடிபட்டு போகும் போது, ஆதிச்ச நல்லூருக்கு நாமளே ஒரு எட்டு போய் சொல்லிட்டு வந்தால் என்ன என்று தோன்றும் அளவிற்கு கதையும் சம்பவங்களும் அருமையாக இருக்கும்.
எல்லா பாலசந்தரின் படங்களிலும் வருவது போல் ஒரு வல்லுரவு காட்சியை அதுவும் ஒரு கடிதத்தை படிப்பதற்காக என்ற நச்சு விதையை மெல்ல தூவி இருப்பார் இந்த படத்திலும். அதாவது அந்த வல்லுரவு காட்சியில் அவர் சொல்ல நினைப்பது இது தான். பெண்களுக்கு கரியம் என்று வந்துவிட்டால், மற்றது எல்லாம் ஒரு கணக்கும் இல்லை வழக்கும் இல்லை என்று சொல்வது.
From panimalar website
chinnakkannan
1st September 2014, 03:26 PM
//மூக்குத்தி பற்றிய ஆராய்ச்சிப்பதிவு உண்மையிலேயே அசர வைத்தது// நன்றி கார்த்திக் சார்..அடுத்தது தண்டை (இதைப் பற்றி எழுதும் போது கார்த்திக் சார் ஓடி வந்து விடுவார் என எழுதலாம் என நினைத்திருந்தேன்!
கிருஷ்ணா ஜி..எஸ்வி சகஸ்ர நாமம் தோட்டா தரணி பற்றிய பதிவுகளுக்கு நன்றி..
எஸ்.வி.எஸ்.ன் நாடக அனுபவங்கள் என என்னவோ தலைப்பு அவரது சுயசரிதை படித்திருக்கிறேன்..எங்கேயோ காணாமற் போய்விட்டது.. நன்றாக இருக்கும்..அவரது ட்ரூப்பில் தான் ப்ரிமளா என்ற ஒரு நடிகை நடித்திருந்தார்..முன்பே எழுதியிருக்கிறேன் என நினைவு..அவர் தான் பிற்காலத்தில் தேவிகா என அழைக்கப் பட்டார்..
தோட்டா தரணியின் கலையை நேரில் காணும் அனுபவம் இங்கு -மஸ்கட்டில்- எனக்கு ஏற்பட்டது..அவரும் வந்திருந்தார் ..எதற்கு..கல்கியின் சிவகாமியின் சபதம் நாடக்த்திற்கு..இங்கு இரண்டு நாட்களில் நான்கு காட்சிகள் போட்டிருந்தார்கள்.. நான்காவது காட்சிக்குத் தான் நான் சென்றிருந்தேன்..அவர் செய்த ப்ராஜக்ட்ஸ் எல்லாம் ஒரு குறும்படமாய்ப் போட்டுக் காட்டி விட்டே தான் நாடகமே ஆரம்பித்தார்கள்.. செட்டிங்க்ஸ் அவர் தான்..வாவ். கோட்டை கொத்தளங்கள்.. கோட்டைகள் பூஞ்சோலைகள் மதில் சுவர் என வெகு அழகு..ஆறோ ஏழோ தான்..ஆனால் இறுதிக்காட்சி என்பதால் சீன்களைக் குறைத்து விட்டார்கள் எனக் கேள்விப் பட்டேன்.. தோ.த. நினைவூட்டலுக்கு அகெய்ன் நன்றி க்ருஷ்ணா சார்..
மான் கண்ட சொர்க்கங்கள் நல்ல பாட்டு தான்..ஆனால் படம் பார்த்ததில்லை..47 நாட்கள் தொடர் படித்திருக்கிறேன்..அந்தக் காலத்தில் மினிப்ரியாவில் வந்த படம்.. அப்புறம் டவுனுக்கெல்லாம் வரவில்லை எனில் பார்க்கவில்லை! அழகிய பதிவுக்கு மிக்க்க்க நன்றி வாசு சார்
chinnakkannan
1st September 2014, 03:32 PM
//பர்மா ராணி' என்ற மாடர்ன் தியேட்டர்ஸ் படம் மிகப் பழைய படம் (1945)ஒன்றில் சிறு வேடத்தில் வருவார். டிஆர்.சுந்தரம் அதில் வில்லன். மிக வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்ட படம். சமீபத்தில்தான் பார்த்தேன். ரொம்ப பிடித்திருந்தது. ஹொன்னப்ப பாகவதர்தான் ஹீரோ. ஹீரோயின் யார் என்று கேட்கிறீர்களா? அப்புறம் நம்ம சி.க.வுக்கு என்ன வேலை இருக்கிறது// தெரியலீங்களே..கே.எல்.வி.வசந்தா கேள்வியே படாத பெயர்.. கதை..வில்கிப் பீடியாவில் இருந்து..
இந்திய விமானப்படை வீரன் கப்டன் குமார் (ஹொன்னப்ப பாகவதர்) சப்பானியர் ஆக்கிரமித்த பர்மாவில் விமானத்தாக்குதல் நடத்தும் போது விமானம் பழுதடைய, குமார் தனது சகாக்களுடன் பாரசூட்டில் இறங்கி மாறு உடையில், சப்பானிய சிப்பாய்களை ஏமாற்றி ரங்கூன் பையா கோவிலை அடைகிறான். தனது நண்பரான பெரியபொங்கியிடம், குண்டுராவையும் (சகஸ்ரநாமம்), சோனியையும் (தசரதராவ்) இரகசியமாக ஒளித்து வைத்து விட்டுத் தன்னைப் பின்தொடர்ந்த வேவுகாரனை ஏமாற்றி விட்டு ஒரு வீட்டு மாடி சாளரம் வழியாக உள்ளே குதிக்கிறான்.
அந்த வீட்டுக்கு உரியவரான பர்மிய அமைச்சர் ஊசோவின் (கே. கே. பெருமாள்) மகள் ராணி (கே. எல். வி. வசந்தா) குமாரிடம் அனுதாபம் கொண்டு, தகப்பனுக்குத் தெரியாமல் அவனை மறைத்து வைக்கிறாள். ராணி ஒரு இந்தியப் பெண்ணென்றும், சப்பானிய பொம்மை அரசாங்கத்தின் அமைச்சர் ஊசோவினால் வளர்க்கப்படுகிறவள் என்றும் தெரிந்து கொள்ளுகிறான் குமார். ராணிக்கு குமாரிடமிருந்த அனுதாபம் காதலாக மாறுகிறது.
சப்பானியச் சக்கரவர்த்தியின் பிறந்த நாள் விழாவிற்காக சப்பானிய இராணுவத் தளபதி பச்சினாவின் தூண்டுதலால் ராணியின் நடனம் இடம்பெறுகிறது. ராணியின் மீது மோகம் கொண்ட பச்சினா, ராணி வீட்டில் இருக்கும் போது பலாத்காரம் செய்ய முயலுகையில் ஊசோ அவனைக் கண்டிக்கிறான். பச்சினா கோபமடைந்து போகிறான். பிறகு பச்சினா, ஏழரை லட்சம் அரிசி மூட்டைகளை டோக்கியோவுக்கு அனுப்பும் உத்தரவில் ஊசோ கையெழுத்திட மறுத்த குற்றத்திற்காக சிறையிலடைத்து விட்டு சப்பானியச் சக்கரவர்த்தியின் அழைப்பின் பேரில் ஊசோ டோக்கியோவுக்குப் பயணமானார் என்ற பொய்ச் செய்தியை ஒலிபரப்புச் செய்து தனது வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்கிறான். எவ்வளவு இம்சை செய்தும், ஒற்றர்களின் இருப்பிடத்தை சொல்லாத ரஞ்சித்சிங் (பாலையா) என்ற இந்திய ஒற்றனை மறுநாள் காலை சுட்டுவிடும்படி உத்தரவிடுகிறான். இச்செய்தியைக் கேட்ட குமார், ரஞ்சித் மூலம் ஒற்றர் தலைவைன் இருப்பிடத்தை தெரிந்து கொள்ளலாமென்று ராணியை பொங்கியிடம் அனுப்புகிறான்.
சப்பானிய எதிர்ப்பு[தொகு]
இந்தப் படத்தில் சப்பானிய எதிர்ப்பு அதிகமாகவே இருந்தது. அதே சமயம் இந்தியாவைப் புகழ்ந்து படத்தின் கதாநாயகி கே. எல். வி. வசந்தா, பாடியபாடல்
“
ஈகைமிகும் இந்தியர்
நாமே-வாஞ்சையை
ஈன்றோரும் நாமே
தானுதவி நினைய
வானுதவும் மழைபோல
தாராளமும் தானமும்
மானமும் யாதினும்
மேலோரும் நாமே
”
ஓகேங்களா..
gkrishna
1st September 2014, 03:35 PM
தமிழ் சினிமாவில் மெல்ல மெல்ல வெளிப்பட்டு பின் இன்னிசைச் சக்கரவர்த்தியாக இளையராஜா ஆட்சி செலுத்த ஆரம்பித்த நேரம் அது.
http://www.envazhi.com/wp-content/uploads/2009/07/81da4_msv240609_1.jpg
தமிழ்த் திரையிசையின் ஆதார ஸ்ருதியாக இளையராஜாவே போற்றும் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதனும் தன் பங்குக்கு வெகு அரிதான பாடல்களை, முற்றிலும் புதிய பாணியில் தந்து கொண்டிருந்தார்.
ராஜா – எம்எஸ்வி இருவரும் ஒருவரையொருவர் பரஸ்பரம் எப்படியெல்லாம் நேசித்துக் கொள்கிறார்கள் என்ற உண்மையை அன்றைக்கு வெளிப்படுத்த மீடியா இல்லாத நிலையில், ராஜா ரசிகர்கள் என்றும் எம்எஸ்வி ரசிகர்கள் என்றும் பிரிந்து நின்று ஒருவருக்கொருவர் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்த எண்பதுகளின் ஆரம்ப வருடம் அது.
http://www.envazhi.com/wp-content/uploads/2009/07/vlcsnap01zf9.png
அப்போதுதான் (1981) இந்தப் பாடல் வெளிவந்தது.
திடீரென்று முகத்தில் அறையும் பூந்தூரல் மாதிரி அத்தனை புதிதான உத்தியுடன், மாறுபட்ட மெட்டாக இந்தப் பாடல் வெளிவந்தது. பொதுவாக எம்எஸ்வியின் பாடல்களில் தபேலாவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்தப் பாடலில் டிரம்ஸ் மற்றும் பேஸ் காங்கோ மட்டுமே முழுக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
படம் கே பாலச்சந்தர் இயக்கிய 47 நாட்கள். இதே பெயரில் தொடர்கதையாக வெளியான சிவசங்கரியின் நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். சிரஞ்சீவி இதில்தான் ஒரு எதிர் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டார். ஜெயப்ரதா கதாநாயகி.
http://www.envazhi.com/wp-content/uploads/2009/07/vlcsnap03qy6.png
இந்தப் படத்தில் இரண்டு பாடல்கள்தான். ஆனால் அதில் ஒன்று காலத்தை வென்ற காவியமாகிவிட்டது. ஒரு காரணம் மெல்லிசைமன்னர் எம்எஸ்வி என்றால், இன்னொரு காரணம் கவிச் சக்கரவர்த்தி கண்ணதாசன்.
ஒவ்வொரு வரிகளும் மனதின் ஆழம்வரை ஊடுருவின. அத்தனை எளிமை, ஆனால் எக்கச்சக்க அர்த்தங்கள்… தமிழில் வெளியான மிக நீளமான பாடல்களில் ஒன்று இது. நான்கு சரணங்கள். ஆனால் சிவசங்கரி 47 வாரங்கள் தொடர்கதையாக எழுதியதை, கண்ணதாசன் அவர்கள் நான்கு சரணங்களுக்குள் சொல்லி முடித்திருப்பார். தெய்வீகப் புலவன் திருவள்ளுவன் ஜாதியல்லவா…(கவிஞர் ஜாதி என்பதைச் சொல்கிறேன்)
http://www.envazhi.com/wp-content/uploads/2009/07/vlcsnap10co3.png
பாடலை தொடர்ச்சியாகக் காட்டாமல், ஒவ்வொரு சரணத்தையும் பொருத்தமான சூழலுக்கு பயன்படுத்தியிருப்பார் கேபி.
மான் கண்ட சொர்க்கங்கள்…
காலம் போகப்போக யாவும் வெட்கங்களே…
ஏன் ரெண்டு பக்கங்கள்
பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே…
சென்னையில் கட்டுப்பெட்டித்தனமான மிடில்கிளாஸ் பெண்ணான நாயகி, கணவனை நம்பி பிரான்ஸுக்குப் போகிறாள். போன இடத்தில்தான் அவனது மன்மத லீலைகள் ஒவ்வொன்றாக முடிச்சவிழ்கின்றன.
அந்த சூழலை கவிஞர் வார்த்தெடுக்கும் விதம் பாருங்கள்….
…தாமரைப் பூவென்றான்
காகிதப் பூவானான்
ராமனைப் போல் வந்தான்
ராவணன் போலானான்
பண்பாடு இல்லாமல் பெண்பாடு பெரும்பாடு இப்போது
ஊருக்கு ஒரு உள்ளம்
ஊருக்கு ஒரு எண்ணம்
யாருக்கு அவன் சொந்தம்
யாருக்கு அவன் மஞ்சம்
கண்ணீரில் நீராட கடல் தாண்டி வந்தாலே பொன்மங்கை….
நம்ப வைத்து கழுத்தறுக்கும் கயமை குணம் கொண்ட கணவன் பற்றிய வர்ணனைகளை கவியரசர் சொற்களுக்குள் இப்படி சிறைப்பிடித்திருப்பார்…
…வேதங்கள் அறிகின்றான்
வேதனை தருகின்றான்
நல்லவன் செல்லாத பாதையில் செல்கின்றான்
அப்பாவி பெண்ணுள்ளம்
இப்பாவி செயல் கண்டு தள்ளாடுது
காலையில் ஓர் வண்ணம்
மாலையில் ஓர் வண்ணம்
மாறுது அவள் பாதை
வாடுகிறாள் பாவை
பூச்சூடி வந்தாளே புரியாமல் நின்றாளே இப்போது!
சோகம், விரக்தியின் உச்சம் என்னவென்பதை கீழ் வரும் வரிகள் படித்தால்… கேட்டால் புரிந்து கொள்ளலாம்.
“ஏன் இந்த சேய் என்று தாளாத நோய் கொண்டாள் இப்போது…” – எத்தனை கொடுமையை தன் கணவனிடம் அனுபவித்திருந்தால் ஒரு பெண் இப்படியெல்லாம் எண்ணுவாள்…
இந்தக் கேள்வியை, பாடலைக் கேட்பவர் ஒவ்வொருவர் மனதிலும் எழ வைத்திருப்பது கவிஞரின் வரிகளுக்கு மட்டுமே உள்ள வலிமை.
…ஆசையில் ஓர் நாளில்
பாடிய ஓர் பாட்டில்
தாயென ஆனோமே சேயினைத் தந்தோமே…
ஏன் இந்த சேய் என்று தாளாத நோய் கொண்டாள் இப்போது…
பாசத்தில் நீராடி
பந்தத்தில் போராடி
வேஷத்தைத் தொடர்வாளா
வேதனைப் பெறுவாளா
ஊரில்லை உறவில்லை
தனியாக நின்றாலே பூமாது!
எப்படியாவது அந்த கொடியவனிடமிருந்து தாய்நாட்டுக்கு தப்பித்துப் போய்விட வேண்டும்… ஆனால் போக வழி தெரியாது… இத்தனைநாள் வழிபட்ட கடவுளாவது காப்பாற்ற வரமாட்டாரா? – இதுதான் இயலாமையின் உச்ச கட்டம். அந்தக் கடைசி வரிகளைக் கேட்பவர் கண்ணோரங்கள் நிச்சயம் கசிந்துவிடும்… பாடலை அத்தனை பாவத்துடன் பாடியிருப்பார் எஸ்பிபி.
தன் வழி செல்கின்றாள்
சஞ்சலம் கொள்கின்றாள்
எவ்விடம் செல்வாளோ
எவ்விதம் செல்வாளோ
எங்கெங்கும் மேகங்கள் எங்கெங்கும் பனிமூட்டம் இப்போது
இந்தியத் தாய்நாட்டை எண்ணுகிறாள் மங்கை
சென்றிட வழியில்லை தேம்புகிறாள் நின்று
தாய்வீட்டு தெய்வங்கள் துணையாக வாராதோ இப்போது!
-இந்தப் பாடலை ஒவ்வொரு முறை கேட்டு முடிக்கும் போதும், 20 வருடங்கள் பின்னோக்கிப் பயணித்துவிட்டு திரும்ப வந்த ஒரு உணர்வு. யாரோ நமக்கு நெருக்கமான உறவை சிக்கலிலிருந்து மீட்டுக் கொண்டு வந்துவிட்ட நிறைவு…!
(from envazhi)
gkrishna
1st September 2014, 03:46 PM
For his dada saheb balke award
அவரது படங்கள் எல்லாம் ‘Class’ ரகம். அவற்றை புரிந்து ரசிப்பதற்கு மெத்த அறிவும், புதுமைகளை வரவேற்கும் முற்போக்கான எண்ணங்களும் அவசியம். அவருடைய கதைகள் காலத்தின் மாற்றங்களை நமக்கு எடுத்துரைத்தன ; கதாநாயகர்கள் மாறுபட்டு சித்தரிக்கப்பட்டிருந்தார்கள் ; கதாநாயகிகள் முன்னிறுத்தப்பட்டு பெண்களின் முக்கியத்துவத்தை உணர்த்தினார்கள் ; சிறு கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள் கூட கதையின் முக்கிய திருப்பத்திற்கு காரணமானார்கள் ; பாடல்கள் உறுத்தாமல் மிகவும் இயல்பாக இருக்கும் ; முடிவுகள் எதிர்பாராததாய், புதுமையாய், வரவேற்கத்தக்கதாய், விவாதத்துக்குரியதாய் அமையும் ; இவை யாவும் அவரது படங்களின் சிறப்பு. அவர் இயக்கிய படங்கள் ‘திருக்குறள்’ போன்று எல்லா காலத்திற்கும் உகந்தவை.
திரு கே.பாலச்சந்தரின் படங்களில் மிகவும் பிடித்த ஒன்று, அவரது கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள். அவ்வளவு பொருத்தமான, அறிவார்ந்த, தேர்ந்தெடுத்த சொற்களால் அமைந்த, நறுக்கு தெரித்தாற் போன்ற வசனங்கள். அவரது கதாநாயகிகள், அறிவில், அழகில், பண்பில், குணத்தில், திறமையில் உயர்ந்திருப்பதை வசனங்கள் உணர்த்தும். என்னுடைய இளம் வயதில், பேசத் தெரியாமல் திணறும் பல சந்தர்ப்பங்களில், திரு. K.B. சார் நமக்கும் வசனம் எழுதிக் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றும். என்ன அருமையான, சிந்திக்க வைக்கும், முற்போக்கான வார்த்தை பிரவாகங்கள். உங்களைப் பாராட்ட உங்கள் வார்த்தைகளையே இரவலாக்குகிறேன் ;
‘அண்ணலே
ஒரு முறைக் கேட்டேன்
கேட்டதும் பரவசம் அடைந்தேன்,
பரம ரசிகை ஆகி விட்டேன்
அதென்ன,
அப்படியொரு வார்த்தை ஜாலம் உங்கள் தமிழில்
அபூர்வமான இயக்குநர் சார், நீங்கள்.’
ஏக் துஜே கே லியே, மரோ சரித்ரா, நினைத்தாலே இனிக்கும், அக்னி சாட்சி, வறுமையின் நிறம் சிவப்பு, 47 நாட்கள், என்று இளமையை இனிமையாக்கிய படங்கள் என்றும் மறக்க முடியாதவை.
உங்களின் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் சார்பாக, தேன் தமிழ் சொற்களால் அலங்கரிக்கப்பட்ட பூங்கொத்தை உங்களுக்கு மானசீகமாக சமர்ப்பிக்கிறேன.
Richardsof
1st September 2014, 04:00 PM
http://i62.tinypic.com/qrbuk0.jpg
http://youtu.be/Ku1Ek0yaex0
Richardsof
1st September 2014, 04:04 PM
http://i62.tinypic.com/s1nnk2.jpg
http://youtu.be/rZpItOq-pTM
mr_karthik
1st September 2014, 04:06 PM
// இசை 'மெல்லிசை மன்னர்'. பாடல்களை மட்டுமல்ல. ரீரிக்கார்டிங்கில் அதம் பறக்கிறது. குறிப்பாக இறுதியில் விஷாலி குமாரிடம் இருந்து தப்பி பாரிஸ் நகரத்தில் ஓடும் காட்சி.
இந்த ஒரு பாடல் போதும் அவருடைய ஒட்டு மொத்தத் திறமைக்கு. 'தொட்டுக் கட்டிய மாப்பிள்ளை' என்ற அருமையான இன்னொரு பாடலும் உண்டு. (பாலா வித் வாணி)
இப்பாடலின் ஆரம்ப பிரம்மிக்க வைக்கும் இசையைக் கேட்காமல் விட்டு விடாதீர்கள்.//
என்ன பிரயோஜனம்?. எவன் படத்தைப்பார்த்தான்?. எவன் பாடலைக்கேட்டான்?. அப்போது இசைக்கடவுளாக வந்து யாரோ குதித்துவிட்டார் என்பதற்காக எம்.எஸ்.வி.யின் எத்தனை அருமையான படைப்புகள், உழைப்புகள் புறந்தள்ளப் பட்டன. அவற்றில் இதுபோன்ற வைரங்கள், மாணிக்கங்கள் எத்தனை எத்தனை?. இவையென்ன சிவாஜி, எம்.ஜி.ஆர். படங்களா, முதல் வெளியீட்டில் குறைந்தாலும் அடுத்த வெளியீடுகளில் சரிக்கட்டிவிடுமென சமாதானம் அடைய. இந்த மாதிரிப் படங்களெல்லாம் முதல் வெளியீட்டில் தியேட்டர்களைக் காண்பதோடு சரி. அப்புறம் பெட்டிக்குள்தான். அப்படியிருந்தும் முதல் வெளியீட்டில் எவன் இந்தப்படங்களைப் பார்த்து ஆதரவளித்தான்?. படம் படுதோல்வி. தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்ட்டம். இயக்குனருக்கும் இதர கலைஞர்களுக்கும் சோர்வு. இருக்காதா பின்னே உழைத்த உழைப்பெல்லாம் விழலுக்கிறைத்த நீராகும்போது?.
விஸ்வநாதனின் இசையைக் கேட்டறியாத விடலைகளெல்லாம் அப்போது அவரை ஏளனம் செய்தனர். 'இசைக்கடவுள்' காறித்துப்பும்போது எச்சில் கூட இசையோடு வந்து விழுகிறது' என்று எக்காளமிட்ட விடலைக்கூட்டங்கள். பிடித்தவரை தலையில் தூக்கி வைத்து ஆடட்டும். அது அவரவர் உரிமை. ஆனால் ஒரு உண்மையான திறமையாளர் தூக்கி எறியப்பட்டார். இன்றைக்கும் கூட வசவுகள் நின்றனவா என்ன?.
அன்றைக்கும் இன்றைக்கும் நம்மைப்போன்ற சிறுபான்மைக்கூட்டம் (சிறுபான்மை என்றால் அளவில் சிறியவர்கள்) இப்பாடலைக் கொண்டாடலாமே தவிர, இப்பாடலை எங்காவது ஒரு இடத்தில், சேனல்களில் கேட்டதுண்டா?. எத்தனை கலைஞர்களின் அபார உழைப்பு கிஞ்சித்தும் கண்டுகொள்ளப்படவில்லையே...
Richardsof
1st September 2014, 04:06 PM
Vasu sir
super song.- 47 natgal. Very nice.
chinnakkannan
1st September 2014, 05:18 PM
க்ருஷ்ணா சார், கே.பி யின் பிற்காலப் படங்களான வானமே எல்லை, கல்யாண அகதிகள், பார்த்தாலே பரவசம், இன்னொன்று (ஹீரோ சமீபத்தில் கூட தற்கொலை செய்து கொண்டார் என நினைவு) யெஸ் படம் பெயர் பொய்(?!) இதெல்லாம் எனக்கு ஏமாற்றத்தை அளித்தன..அந்தக் காலப் படங்களிலும் சில ஏமாற்றம் தான்..(உதாரணம் - வீட்டுக்கு ஒரு கண்ணகியோ என்னவோ நினைவு.. சீமா என ஞாபகம்.. ஹாரிபிள்..அவர் எடுத்ததா எனச் சந்தேகப் பட வைத்த ஒன்று; நான்கு சுவர்கள் சின்ன வயதில் பார்த்தபோதே பிடிக்கவில்லை.இப்போ சுத்தமா கதை மறந்துவிட்டது)
இலவுகாத்த கிளி என்ற மணியனின் கதைக்கு சொல்லத் தான் நினைக்கிறேன் என அழகாகத் திரையில் நெய்திருப்பார்.. அதுவும் ஒரு பாட்டு.. பல்லவி ஒன்று மன்னவன் கேட்க பாடுவேனடி..(வாசு சார் எழுதலாம்) எம். எஸ்.வி. கணீர்க் குரல் சொல்ல நினைத்தது சொல்லாமல் போனது, டைட்டில் சாங்க் சொல்லத் தான் நினைக்கிறேன்..அப்புறம் கமலின் ஒரு பாட்டு ஸ்வீட் செவண்டீன் அண்ட் அழகான ஜெயசுதா..(குமுதத்தில் பாலச்சந்தருக்கு வயது இருபத்து நாலு என்று போட்டிருப்பார்கள்)
ஆனால் அதே சமயம் டி.வி.சீரியலில் படைத்த ரயில் சினேகம், காதல் பகடை..அப்புறம் சில குறுந்தொடர்கள் எல்லாம் ஏ.க்ளாஸ்.. கையளவு மனசு பார்த்ததில்ல..அதிலேயும் அண்ணி ப்ரேமி என்று ஆரம்பித்த சீரியல்களில் கொஞ்சம் நழுவித் தான் சென்றிருப்பார்..
gkrishna
1st September 2014, 05:19 PM
//
என்ன பிரயோஜனம்?. எவன் படத்தைப்பார்த்தான்?. எவன் பாடலைக்கேட்டான்?. அப்போது இசைக்கடவுளாக வந்து யாரோ குதித்துவிட்டார் என்பதற்காக எம்.எஸ்.வி.யின் எத்தனை அருமையான படைப்புகள், உழைப்புகள் புறந்தள்ளப் பட்டன. இப்பாடலைக் கொண்டாடலாமே தவிர, இப்பாடலை எங்காவது ஒரு இடத்தில், சேனல்களில் கேட்டதுண்டா?. எத்தனை கலைஞர்களின் அபார உழைப்பு கிஞ்சித்தும் கண்டுகொள்ளப்படவில்லையே...
கார்த்திக் சார்
உங்கள் கோபம் நியாயமானதே .
இப்போதைய ரசிகர்கள் எல்லோருமே 1976-77 கால கட்டத்திற்கு பின் தான் தமிழ் சினிமா என்ற ஒன்று ஆரம்பமானது என்பது போல் பேசி கொண்டு இருக்கிறார்கள். அதிலும் ஆரம்ப இசை,இடை இசை,முடிவு இசை என்பதே 75 கால கட்டத்திற்கு பின் வந்த இசை அமைப்பாளர்களால் தான் ஆரம்பிக்க பட்டது என்று ஒரு கூட்டம் சொல்லி கொண்டு இருக்கிறது வலை பூக்களில் . திரு காரிகன் அவர்கள் தனது வலைப்பூவில் 70 ஏகாந்த காற்று என்ற தலைப்பில் வெளியிட்டு இருந்த கட்டுரை - பகிர்வு பதிவு தான் இது . ஆனாலும் பல கருத்துகள் ஏற்புடுயவை
இந்த பதிவு ஏற்கனவே நமது திரியில் பதிவிடப்பட்டு விட்டதா ? என்று நினைவில் இல்லை . திரு வாசு அவர்கள் உறுதி செய்தால் நன்று
70 களில் நமது திரையிசை ஜி ராமநாதன், கே.வி மகாதேவன்,விஸ்வநாதன்-ராமமூர்த்தி போன்ற மகத்தான இசைச் சுழலின் ஆதிக்கத்தை விட்டு வெளியேறி ஒரு நவீன இசை பாரம்பரியத்தை படைக்கத் துவங்கியிருந்தது. இது நமது மரபிசையின் தொடர்ச்சியாகவும் அதே சமயத்தில் ஒரு நவீனத்தின் துவக்கமாகவும் இருந்தது. அதாவது பச்சையிலிருந்து நிறம் மாறி மஞ்சள் வண்ணம் தோன்றும் விதமாக நளினமான, இயல்பான முரண்பாடில்லாத மாற்றமாக இருந்தது. அறுபதுகளின் வசந்தம் ஓய்ந்து விட்டது என்றாலும் After glow எனப்படும் இன்பத்தின் அனுபவத்தை அது முடிந்தபின் நாம் அசைபோடும் ஒரு ஏகாந்தத்தின் நீட்சியாகவே எழுபதுகள் இருந்தன.
எழுபதுகள்: ஏகாந்தக் காற்று
பொதுவாக தமிழ்த் திரையிசை விவாதிப்பவர்களில் அல்லது அதைப் பற்றி எழுதுபவர்களில் பலர் தமிழின் காவிய கானங்களைப் பற்றிச் சொல்லும் வேளையில் ஆனந்த ஐம்பதுகளையும் அற்புதமான அறுபதுகளையும் சிலாகித்து தென்றலாக வீசிய எழுபதுகளின் மீது மவுன அஞ்சலி செலுத்துவார்கள். நல்ல இசையின்றி நம் தமிழ் சமூகம் ஒரு ஐந்து வருடங்கள் இருந்தது என்ற எண்ணத்தை விதைக்கும் இந்த மவுனம் ஒரு வழக்கமான பிழை. காலத்தால் அழியாத பல இனிமையான காவியப் பாடல்களை நாம் வேற்றுமையின்றி ரசித்தாலும் எம்ஜியார், சிவாஜி, ஜெமினி, எம் எஸ் வி, கே வி மகாதேவன், ஜி ராமநாதன்,பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம், கண்ணதாசன்,வாலி பாடல்கள் என்று பெயரிட்டு அவைகளை நாம் அலங்கரித்து அகமகிழ்ந்தாலும் எழுபதுகளின் தாலாட்டும் சுகமான கீதங்களை வழங்கிய பல இசை மேதைகளின் சாதனைகளை giant leap போல தாண்டிச் செல்வது என்னைப் பொருத்தவரை ஒரு முரண்பாடான இசை ரசனை . சரியான தகவல்களில்லாத ஒரு இருண்ட பிம்மமும், இருந்ததை உள்ளதுபடியே பிரதியெடுக்காத பொய்த் தோற்றமும், சாதனைகளை வசதியாக மறந்துவிடக்கூடிய நமது பண்பாடற்ற அணுகுமுறையும் எழுபதுகளை ஒரு களப்பிரர் காலம் போல உருமாற்றிவிட்டன.
ஆனால் உண்மையிலேயே எழுபதுகளின் திரை இசைப் பாடல்கள் எவ்வாறு இருந்தன என்று சற்று ஆராய்ந்தோமானால் நமக்கு வியப்பே ஏற்படுகிறது. 70 -75 காலகட்டங்களை ஒரு வித சில்லறைத்தனமான அலட்சியத்துடன் பார்க்கும் அந்தப் பொது பிம்பம் உடைபடுகிறது. ஏனென்றால் நிஜத்தில் இவ்வாறன பொய்யுரைகளை பொடிப் பொடியாகும் பொன்னான பாடல்கள் எழுபதுகளை வழி நடத்திச் சென்றிருக்கின்றன என்று நாம் அறிகிறோம். ஒன்றா இரண்டா? கணக்கில்லாமல் ஏகத்துக்கு ஏராளமான பாடல்கள் எழுபதுகளின் இசை பாணியை மிக நளினமாக செதுக்கி நமது இசைப் பாரம்பரியத்தின் நீட்சியை வேரற்றுப் போகவிடாமல் பாதுகாத்து வந்திருக்கின்றன. மழை ஓய்ந்ததும் காற்றில் பரவி நம் மனதை நிரப்பும் மண் வாசனை போல் இவை நம்மை தொடர்ந்து பரவசப்படுத்தி வந்திருக்கின்றன. அறுபதுகளின் அந்த ஆனந்தத் தொடுகை தொலைந்து போகவில்லை மாறாக தொடர்ந்தது. இதோ ஓய்ந்துவிட்டார் என்று எண்ணப்பட்ட எம் எஸ் வி எழுபதுகளை அனாசயமாக ஆட்சி செய்தார். ஒரு புதிய இசை வடிவத்தை நோக்கி நகர்ந்த நம் தமிழ்த் திரையிசை எழுபதுகளில் மரபும் நவீனமும் ஒருங்கே கலந்த ஒரு ஆச்சர்ய அவதாரம் எடுத்தது. இந்த அரிதாரத்தின் வண்ணங்கள் அபாரமானவை. அற்புதத்தின் அடுத்த அத்தியாயம் ஆரம்பித்தது.
கொஞ்சம் 1970இல் வந்த சில படங்களின் மறக்கமுடியாத பாடல்களை மீண்டும் நினைவுக்கு கொண்டுவருவோம். பட்டியலைப் படித்ததும் மேகத்தை அனைத்துக் கொண்ட உணர்வு உங்களுக்கு உண்டானால் எனக்கு மகிழ்ச்சியே.
எங்க மாமா- செல்லக் கிளிகளாம் பள்ளியிலே, என்னங்க சொல்லுங்க, எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்,(குறிப்பாக எல்லா பாடல்களுமே சிறப்பானவையே)
சி ஐ டி ஷங்கர்- நாணத்தாலே கண்கள் மெல்ல மெல்ல,
நவகிரகம்- உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது.
ராமன் எத்தனை ராமனடி- அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு.(எங்கேயோ நம்மை அழைத்துச் செல்லும் கானம். இதிலுள்ள இன்னொரு காவியப் பாடலைப் பற்றி பிறகு ஒரு பத்தி வருகிறது.)
எங்கிருந்தோ வந்தாள்- நான் உன்னை அழைக்கவில்லை, ஒரே பாடல் ,
கண்ணன் வருவான்- பூவிலும் மெல்லிய பூங்கொடி.(மெல்லிசையின் மென்மையை இதுபோல அனுபவித்துச் சொன்ன பாடல்கள் வெகு குறைவே.)
மாணவன்- கல்யாண ராமனுக்கும், (சங்கர் கணேஷின் இசையில் டி எம் எஸின் குரலுக்கு பொருத்தமில்லாத கமலஹாசன் குதித்து ஆடிப் பாடும் விசிலடிச்சான் குஞ்சுகளா என்ற பாடல் இதில் இருக்கிறது. இதுவே வெகு வருடங்கள் கழித்து வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் என்று பிரதி எடுக்கப்பட்டது.)
சொர்க்கம்- பொன் மகள் வந்தாள் (எ ஆர் ரஹ்மானின் ரீமிக்ஸ் இதன் அருகே சற்றும் நெருங்க முடியாது.), ஒரு முத்தாரத்தில் முப்பது முத்துக்கள், சொல்லாதே யாரும் கேட்டால்.
வியட்நாம் வீடு- உன் கண்ணில் நீர் வழிந்தால்,
வீட்டுக்கு வீடு- அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம், அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ,( அற்புதமான பாடல். 70களின் துவக்கத்தில் கல்லூரி விடுதிகளில் அதிகம் விரும்பப்பட்ட அல்லது பாடப்பட்ட பாடல் இது என்று என் உறவினர் ஒருவர் சொல்லக்கேள்வி. சாய்பாபா என்ற எம் எஸ் வி யின் குழுவில் இருந்த ஒரு கிடாரிஸ்ட் பாடிய பாடல்.இதை ஒரு நகைச்சுவைப் பாடல் என்று கருதி பலர் கடந்து செல்லக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஒரு முறை கேட்டுத்தான் பாருங்களேன்.)
மேற்கண்ட பாடல்கள் just the tip of the iceberg வகையே. இன்னும் ஏராளமிருக்கின்றன. 71, 72 என்று ஆண்டு வாரியாக பட்டியலிட ஆரம்பித்தால் எழுபதுகள் பற்றிய நம்முடைய முட்டாள்தனமான கண்ணோட்டத்தை நாம் மாற்றிக்கொள்வோம்- நிச்சயமாகவே.
எழுபதுகளின் மத்தி வரை எம் ஜி ஆர், சிவாஜி என்ற இரண்டு மகா ஆளுமைகளின் ஆதிக்கம் குறைந்தபாடில்லை. இவர்களைச் சுற்றியே திரையுலகம் பெரும்பாலுமிருந்தது. இவர்களின் இரண்டு குறிப்பிட்ட படங்கள் எழுபதுகளின் குரல்களாக ஒலித்தன.
முதலாவது 72இல் கே வி மகாதேவனின் இசையில் வந்த சிவாஜியின் வசந்த மாளிகை. அதன் பாடல்கள் பெருத்த வெற்றியைப் பெற்றன என்று சொல்வது ஒரு மிக சாதாரண வாக்கியமாக இருக்கும். நான் 77,78ஆம் ஆண்டுகளில் கூட அப்பாடல்களை மிக சத்தமாக ஒலிபெருக்கிகளில் தொடர்ந்து கேட்டதுண்டு- நிறைய அலுப்புடன். எல்லா பாடல்களும் மக்களால் ரசிக்கப் பட்டாலும் தனிப் பட்டவிததில் கலைமகள் கைப் பொருளே உன்னை கவனிக்க ஆளில்லையோ பாடலை இப்போது நான் அதிகம் ரசிக்கிறேன்.
இரண்டாவது 73இல் அரசியல் தலையீட்டால் தட்டுத் தடுமாறி வெளிவந்து பின் ஒரு புலியின் வேகத்துடன் தமிழகம் முழுதும் பாய்ந்த எம் எஸ் விஸ்வநாதனின் இசையில் வந்த எம் ஜி ஆரின் உலகம் சுற்றும் வாலிபன். இதன் பாடல்கள் பட்டி தொட்டி மூலை முடுக்கெங்கிலும் படையெடுத்து மக்களை பரவசப்படுத்தின. என்ன பாடல்கள்! எம் எஸ் வி யின் இசை வாழ்வில் இது ஒரு மைல் கல் என்று தயக்கமில்லாமல் சொல்லலாம். அவளொரு நவசர நாடகம், லில்லி மலருக்கு கொண்டாட்டம், சிரித்து வாழ வேண்டும், பச்சைக் கிளி முத்துச்சரம், பன்சாயீ, உலகம் உலகம் அழகு கலைகளின் சுரங்கம், தங்கத் தோனியிலே தவழும் பெண்ணழகே, நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ எதை சேர்ப்பது எதை விடுவது? படத்தின் பாடல்கள் மட்டுமில்லாது பின்னணி இசையும் ஒரு வசீகரம்தான். இதற்கு முன்னரே தமிழில் முதன்முறையாக வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட சிவந்தமண் படத்திலும் எம் எஸ் வி மிகச் சிறப்பான இசை அமைத்திருந்ததை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
இங்கே கொஞ்சம் நின்றுவிட்டு அப்போது இடைவிடாது ஒலித்த மற்ற சில பிரபலமடைந்த பாடல்களைப் பார்ப்போம்.
கடலோரம் வாங்கிய காற்று புதிதாக இருந்தது நேற்று, அழகிய தமிழ் மகள் இவள் - ரிக்ஷாக்காரன்.
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போல-நினைத்ததை முடிப்பவன்.
திருவளர்ச் செல்வியோ நான் தேடிய தலைவியோ, நல்லது கண்ணே கனவு கனிந்தது நன்றி உனக்கு- ராமன் தேடிய சீதை.
காதல் என்பது காவியமானால் காதாநாயகி வேண்டும், நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது, நாளை நமதே, அன்பு நானொரு மேடைப் பாடகன், என்னை விட்டால் யாருமில்லை - நாளை நமதே.
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே, -உரிமைக்குரல்.
நேரம் பௌர்னமி நேரம்- மீனவ நண்பன்.
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை, அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ, பாடும் போது நான் தென்றல் காற்று - நேற்று இன்று நாளை. (எல்லா பாடல்களும் தேன்சுவை வழியும் மெல்லிசை கீதங்கள்)
ஒன்றே குலமென்று பாடுவோம், போய் வா நதி அலையே - பல்லாண்டு வாழ்க. கே வி எம்.
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் - சிரித்து வாழ வேண்டும்.
யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே, நீயும் நானுமா கண்ணா, மெழுகுவர்த்தி எரிகின்றது- கெளரவம்.
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ கண்ணா, மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று -அவன்தான் மனிதன். உள்ளதை உருக்கும் இந்த தத்துவப் பாடலை என் கல்லூரி நாட்களில் கேட்டபோது பாடலின் ஊடே ஓடும் துயர ரேகையும் வாழ்ந்து வீழ்ந்த மனிதனின் வேதனைச் சுவடுகளும் என் மனதை கலைத்தன.
தந்தை தவறு செய்தான்.
தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்துவிட்டோம்
வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்
என்ற வரிகள் என்னுள் மின்னல் போல இறங்கின. முன்பு எப்போதோ வானொலியில் கேட்ட இப் பாடலை தொன்னூறுகளில் ஞாபகமாக பதிவு செய்து கேட்குமளவுக்கு என் மன ஆழத்தில் இது துடித்துக் கொண்டிருந்தது. 70களின் ஏகாந்ததைச் சொல்ல இது ஒரு சிறிய துணுக்கு என்றே எண்ணுகிறேன். இன்னும் எத்தனை இருக்கின்றன ஆராய்வதற்கு.
கீழே உள்ளவைகள் நம் பொது சிந்தனையில் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ள சில அபாரமாக புனையப்பட்ட அபத்தங்கள்.
எழுபதுகள் மத்தி வரை தமிழர்கள் தமிழ்ப் பாடல்களையே கேட்கவில்லை.
ஏனெனில் அப்போது எந்தவிதமான சிறப்பான பாடல்களுமே நம்மிடம் உருவாக்கப்படவில்லை.
இதனால் தமிழர்கள் ஹிந்தி கானங்களை வீதிக்கு வீதி வீட்டுக்கு வீடு கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
அன்னக்கிளி படத்திற்குப் பிறகே தமிழ் திரையிசை பொலிவடைந்தது.
அதன் பின்னரே நாம் தமிழ்ப் பாடல்களை கேட்க ஆரம்பித்தோம்.
இதில் சிலவற்றில் கொஞ்சமாக உண்மைகள் இல்லாமலில்லை. அந்நியக் காற்று என்ற ஹிந்தி இசை பற்றிய என் பதிவில் இந்த மையப் புள்ளியை நான் சற்று தொட்டிருக்கிறேன்.(விரிவாக என்று சொல்லமாட்டேன்.) தங்களுக்குப் பிடித்த ஒரு குறிப்பிட்ட இசை அமைப்பாளரை முன் நிறுத்த வேண்டிய ஒரு இல்லாத அவசியத்தின் மீது கட்டப்பட்டு உண்மைக்கு எதிராக வெடித்த புனைவுகள் மேற்கூறப்பட்டவைகள். இந்த கருப்பு வண்ணம் நமது எழுபதுகளை வெளிச்சத்திற்கு வருவதிலிருந்து தடுக்கிறது என்பது என் எண்ணம். எழுபதுகளின் மீது படர்ந்திருக்கும் இந்தத் தூசிகளை துடைத்துவிட்டு நோக்கினால் நமக்குக் கிடைக்கும் பிம்பம் வேறு கதையை நமக்குச் சொல்கிறது.
பல பாடல்களைக் குறித்து இங்கே பேசினாலும் சில மறையாத கானங்களைப் பற்றி சற்று அதிகம் ஆராய்வது அவசியமாகிறது. உதாரணமாக சுசீலாவின் அற்புதக் குரலில் நான் என் சிறு வயதில் ஒரு இளந்தென்றல் காற்று உரசிய உணர்வைக் கொடுத்த பாடல் ஒன்றைக் கேட்டிருக்கிறேன். எழுபதுகளில் எல்லா வானொலி அலைவரிசைகளிலும் ஒய்யாரமாக நடைபயின்றது அப்பாடல். அந்தப் பாடலை நான் குறிப்பிட்டால் பலரும் சட்டென்று "அடடா ஆமாம். இந்தப் பாடலுக்கு இணையே இல்லை." என்று சொல்லி என்று என் கருத்தை வழிமொழிவார்கள் .
இத்தனை அழுத்தமாக நான் குறிப்பிடுவது ராமன் எத்தனை ராமனடி (1970) என்ற படத்தின் "சித்திரை மாதம் பவுர்ணமி நேரம் முத்துரதங்கள் ஊர்வலம் போகும்" என்ற பாடலே. இந்தப் பாடலில்தான் எத்தனை விதமான ராக வளைவுகள் தோன்றி நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன! பாடலின் அற்புதமான இசையமைப்பை தன் குரலினால் சுசீலா ஏறக்குறைய பின்னுக்கு தள்ளிவிடுகிறார். பாடலின் பிண்ணனியில் தொடர்ச்சியாக ஒலிக்கும் ரயில் ஓசையும், அற்புதமான இடையிசையும் எவ்வளவு நவீனமாக இருக்கின்றன என்ற ஆச்சர்யத்தைத் தருகின்றன. தேரில் வந்த ராஜ ராஜன் என் பக்கம் என்ற வரிகளைத் தொடர்ந்து வரும் தட தடக்கும் இடையிசையின் துவக்கம் ஒரு அற்புதமான மேற்கத்திய கலப்பு. கண்ணதாசனின் கவிச் சுவை கொண்ட வரிகளும், சிவாஜி என்ற அபார நடிகனின் இணையில்லாத முகபாவணைகளும், எம் எஸ் வி என்ற இசைச் சிகரத்தின் சிலிர்ப்பான இசையும், பி சுசீலா என்ற இசை இன்பமும் இந்தப்பாடலை ஒரு விண்ணிலிருந்து வந்த கானமாக மாற்றிவிடுகின்றன. மேற்கத்திய இணைப்பை தமிழில் "இவர்தான்" செய்தார் என்று கூப்பாடு போடும் கூட்டத்தாருக்கு இந்தப் பாடல் மட்டுமல்ல இதைப் போன்ற பல எம் எஸ் வி யின் கானங்கள் கசக்கவே செய்யும்.
பள்ளிநாட்களில் அப்போது பிரபலமாக ஒலித்துக்கொண்டிருந்த இனிமை குன்றிய தரமில்லாத சில பாடல்களை நான் விரும்பிக்கேட்ட தினங்களில் எங்கள் வீட்டில் இசை விவாதங்களுக்கு குறைவே இருக்காது. நான் எனது வயதின் இயல்பான ஈர்ப்பின்படி புதிய பாடல்களை பாதுகாத்துப் பேச, என் சகோதரிகள் பழைய பாடல்களின் இனிமையை ஏற்றுக்கொள்ளாத என் மனதில் திணித்திருக்கிறார்கள். அப்போது அவர்கள் மேற்கோள் காட்டி சொன்ன ஒரு பாடல் இந்த சித்திரை மாதம் பாடல். பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஒரு எதிர்பாராத தருணத்தில் இப்பாடலை கேட்க நேர்ந்த போது எம் எஸ் வி போன்ற இசை மேதைகள் நமக்கு கொடுத்திருக்கும் இசைப் புதையல்களை நாம் எவ்வளவு இலகுவாக அலட்சியம் செய்திருக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி எழுந்தது.
இசைக்கு மட்டுமே நாம் முதல் முறையாக ஒரு பாடலைக் கேட்ட கணத்தின் நிகழ்வை மீண்டும் உயிர் பெறச் செய்யும் சக்தி இருக்கிறது. நம் மூளைக்குள் சிறைப்பட்டுக்கிடக்கும் பழைய ஞாபகங்களின் ஒரு குறிப்பிட்ட கதவை ஒரு பாடல் சட்டென திறந்து விடுகிறது. நாம் மீண்டும் காலத்தில் பின்னோக்கி பயணம் செய்து மறைந்த தினங்களுக்குள் புகுந்து கொண்டு முடிந்துவிட்ட ஒரு சில சம்பவங்களை மறுபடியும் ருசி பார்க்கிறோம். சவாலே சமாளி படத்தின் சிட்டுக் குருவிக்கென கட்டுப்பாடு என்ற பாடல் எனக்கு இதை செய்யத் தவறுவதில்லை. இதே போல் இதே படத்தின் நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே பாடலும் என்னை என் பால்ய தினங்களுக்குள் அடைத்துவிடுகிறது ஒரே நொடியில். எனது தந்தையின் தோளின் மீது சாய்ந்துகொண்டு இந்தப் பாடலை வானொலியில் கேட்ட அந்த நினைவை இந்தப் பாடல் இன்னமும் உயிரோடு வைத்திருக்கிறது.
72இல் வந்த ஒரு படம் கண்ணா நலமா? பெற்றடுத்த உள்ளமென்றும் தெய்வம் தெய்வம் என்றொரு மனதை பிழியும் பாடல் இதில் இருக்கிறது. வானொலிகளில் இதை எத்தனை முறைகள் கேட்டிருக்கிறேன்! என்ன ஒரு காவியப் பாடல் இது! பாடலே படத்தின் கதையை நமக்குச் சொல்லிவிடும். வி குமாரின் அசாத்திய இசை மேதமையை வெளிக்கொணர்ந்த பாடல்களில் இது மிக முக்கியமானது. ஒரு குழந்தை இரு தாய்கள் என்ற கிளாசிக் சாலமன் கதையை டி எம் எஸ் தன் மந்திரக் குரலில் மனம் உருகும் விதத்தில் பாடும்போது கேட்பவர்கள் நெஞ்சுக்குள் கண்ணீர்த் துளிகள் நிச்சயம்.
இதே சமயத்தில் வந்த மற்றொரு பாடலும் அப்போது மிகப் பிரபலமாக வானொலிகளில் உலா வந்த ஞாபகமிருக்கிறது. அது திக்குத் தெரியாத காட்டில் என்ற படத்தின் பூப்பூவா பறந்து போகும் பட்டுபூச்சி அக்கா என்ற குழந்தையின் குதூகலத்தை கேட்பவர்களிடத்தில் உண்டாக்கும் அருமையான பாடல். எம் எஸ் வி யின் இசை என்ன ஒரு மாயாஜாலத்தை நடத்திக்காட்டி விடுகிறது இப்பாடலில் என்ற ஆச்சரியம் இதைக் கேட்கும்பொழுதெல்லாம் எனக்கு அடங்குவதேயில்லை. இந்தப் பாடல் ஒரு ஆழமான ஆனந்தத்தை நமக்குள் செலுத்திச் செல்லும் வலிமை கொண்டது. குழந்தைகளின் பாடலை அவர்களின் குரலில் அவர்களின் உலகத்தை அவர்களின் கண் கொண்டே பார்க்கும் அற்புத இசையமைப்பு.
எம் எஸ் வி தனியாக இசை அமைத்த காலங்கள் நம் தமிழிசையில் வசந்தத்தின் நீட்சி என்பதை உணர்த்தும் பல கானங்கள் இன்னும் நம்மிடம் துடித்தபடியே இருக்கின்றன. பிராப்தம் படத்தில் வரும் "சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது" என்ற பாடல் ஒரு இனிமையான தாலாட்டின் சுகம் கொண்டதை யாரால் மறுக்க முடியும்? இப்பாடல் எங்கிருந்தோ வந்தாள் படத்திலுள்ள சிரிப்பினில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே பாடலின் மறுவடிவமாக இருந்தாலும் கேட்கும்போது ஒரு புதுவித இன்பத்தை தருகிறது. இப்படியான இரட்டை கானங்களை எம் எஸ் வி யின் இசையில் வெகு அரிதாகவே கேட்கமுடியும்.
இதற்கு முன்பே 69 இல் எம் எஸ் வி நில் கவனி காதலி படத்தில் ஒரு அபாரத்தை அரங்கேற்றியிருப்பதை இங்கே கொஞ்சம் அடிக்கோடிடுவது மிக அவசியம் என்றுனர்கிறேன். ஜில்லென்ற காற்று வந்ததோ என்ற அப்பாடல் ஒரு இசைத் தென்றல். உண்மையில் ஜில்லென்ற உணர்ச்சி இதைக் கேட்கும்போது நம்மை உரசிச் செல்வதைப் போன்றே தோன்றும். ரம்மியத்தை தேனுடன் குழைத்துக் கொடுத்ததைப் போல ஒரு இன்னிசை இது. இதேபோல இதே ஆண்டில் ஒளி பிறந்தபோது மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா, பவுர்ணமி நிலவில் பனிவிழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா என்ற ரம்மியமான பாடல்கள் கன்னிப்பெண் படத்தில் இடம்பெற்றிருந்தன. மற்றொரு வைர கானம் வேதாவின் இசையில் ஒளிர்ந்தது. அது செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் சிரித்தது எனைப் பார்த்து என்ற பாடல். சுசீலாவின் குரல்தான் என்னென்ன மாயங்கள் நிகழ்த்துகிறது! சுசீலா என்ற இந்த இசை தேவதையின் தேன்மதுரக் குரலில் வந்த ஏறக்குறைய அனைத்துப் பாடல்களும் மென்மையான சுகத்தைத் தரக்கூடியவை. இசைக் குயில் என்ற பெயர் அவரைத் தவிர வேறு எவருக்கும் இத்தனை பொருந்தியதேயில்லை. என்னைப் பொருத்தவரை நைடிங்கேல் ஆப் இண்டியா என்ற பதம் லதா மங்கேஷ்கரை விட சுசீலாவுக்கு அதிக நெருக்கமானது. இப்படி எண்ணுவது நான் மட்டுமாக இருக்கமாட்டேன் என்பதும் எனக்கும் தெரியும். கீழுள்ள பாடல்களின் பட்டியலைப் பார்த்தாலே என்ன ஒரு பரவசம் பீறிடுகிறது!
சொன்னது நீதானா,
மன்னவனே அழலாமா?
அத்தையடி மெத்தையடி ஆடி விளையாடம்மா,
தமிழுக்கும் அமுதென்று பேர்,
மலர்கள் நனைந்தன பனியாலே,
ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்,
வெள்ளிக்கிழமை விடியும் நேரம் வாசலில் கோலமிட்டேன்,
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி,
நினைக்கத் தெரிந்த மனமே,
கங்கைக்கரை தோட்டம் கன்னிப்பெண்கள் கூட்டம்,
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே,
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
போன்ற கானங்கள் சுசீலாவின் குரலினில் இருக்கும் இனிமையைத் தாண்டி வேறொரு உலகத்துக்கு கேட்பவரை அழைத்துச் சென்று விடுகின்றன. குரலிலேயே அவர் தாயாக சகோதரியாக தோழியாக துணைவியாக தோற்றம் கொள்கிறார். இந்த அற்புதத்தை நிகழ்த்தும் சுசீலாவின் குரலுக்கு இசைக் குயில் என்ற அடைமொழி மிகப் பொருத்தமானதுதான். இருந்தும் சில தலைவலி ஏற்படுத்தும் கதவுக்கடியில் சிக்கிக்கொண்ட எலி போன்று கிறீச்சிடும் சில அவஸ்தைகளை மக்களில் சிலர் சின்னக் குயில், பெரிய குயில் என்று பெயரிட்டு அழைப்பதைப் பார்க்கையில் இதுவெல்லாம் நம் தமிழிசைக்கு நேர்ந்த கொடுமை என்ற எண்ணம் வலுப்பெறுகிறது . இந்தக் குயில் புராணம் போதாதென்று எண்பதுகளை நமது தமிழிசையின் பொற்காலம் என்று சொல்லும் ஒரு புரட்டும் இணையத்தில் அரங்கேறிவருகிறது. மக்கள் கொஞ்சம் மவுனியாக இருக்கும் பட்சத்தில் இளையராஜாவின் வருகைக்கு முன் நம் தமிழ்நாட்டில் மக்கள் ரசனைக்குரிய பாடல்களே வரவில்லை என்று சொல்லும் அற்பத்தனமும் மோசடித்தனமும் கூட விற்பனை செய்யப்படும் ஆபத்து நம் கதவினருகே காத்திருக்கிறது.
செயின்ட் ஜோசப் கல்லூரி விடுதியில் கட்டிடங்களுக்கு இடையே அவ்வப்போது பெரிய திரை கட்டி தமிழ்த் திரைப்படங்கள் காட்டுவது உண்டு. இரண்டாம் ஆண்டில் அப்படி நான் விடுதித் தோழர்களோடு இரவில் கூட்டமாக சேர்ந்து கும்மாள உணர்வுடன் பார்த்த ஒரு படம் காதலிக்க நேரமில்லை. ஆங்கில இசைக்குள் நான் மூழ்கிக்கிடந்த அவ்வேளையில் அந்தப் படத்தின் பாடல்கள் என்னை ஆச்சர்யப்படுத்தின. குறிப்பாக அனுபவம் புதுமை என்ற பாடலை கேட்டபோது வார்த்தைகளில் வடிக்க முடியாத எதோ ஒரு வசீகரம் என் மனதை தொந்தரவு செய்துகொண்டே இருந்தது. மேற்கத்திய இசைக்கும் நமது பாரம்பரிய இசைக்கும் இடையே இருக்கும் தூரத்தை அப்பாடல் எத்தனை அனாசயமாக தாண்டி வந்திருக்கிறது! மேற்கத்திய பாணியில் இருந்தாலும் இப்பாடல் நம் மண்ணுக்குரிய இயல்பான உணர்சிகளை சற்றும் நெருடலின்றி நமக்குப் புரிய வைத்து விடுகிறது. இன்றைக்கும் புதுமையாக ஒலிக்கும் இந்தப் பாடல் ஒரு வியப்பே. மேற்கத்திய இசையும் நமது மரபின் இசையும் ஒரே குரலில் ஒரு சேர ஆரத் தழுவிக் கொண்டு பிணைந்தது எம் எஸ் வி என் மகத்தான இசைஞனிடம்தான். Fusion என்ற இவ்வைகையான கானங்களை அவரைப் போன்று சிறப்பாக அமைத்தவர்கள் வெகு குறைவே.
திரையிசை சாராத ஆன்மீகப் பாடல்களில் நான் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. காரணங்கள் பல இருந்தாலும் மிக முக்கியமாக இவைகளில் சொல்லப்படும் கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லாததால் இவ்வகைப் பாடல்களை நான் எட்டவிரும்பாத தூரத்திலேயே வைத்திருக்கிறேன். பெருவாரியான ஆன்மீகப் பாடல்கள் ஒரே இரைச்சலாக பாடகர்கள் பெருங்குரலெடுத்து உச்ச ஸ்தானியில் பாடுவதைக் கேட்கும்போது ஒரு சலிப்பான உணர்வு வருவதை தவிர்க்கமுடிவதில்லை. ஆனால் இம்மாதிரியான மிகை உணர்சிகளின்றி மிக நளினமாகவும் இயல்பாகவும் பாடப்பட்ட கேட்கும் போதே நம்மைத் தாலாட்டும் ஒரு கானத்தை நான் என் பள்ளிநாட்களில் கேட்டிருக்கிறேன். இன்றும் அப்பாடல் என்னை தாலாட்டத் தவறுவதில்லை. அது ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் என்ற மிக அருமையான பாடல். தென்றல் போன்ற குரலால் வருடும் எஸ் பி பியா அல்லது எந்த இடத்திலும் தறிகெட்டு ஓடாமல் ஒரு குழந்தையின் துயிலை கொஞ்சமும் இடைஞ்சல் செய்யாமல் மிருதுவாக ஒலிக்கும் இசையமைப்பா அல்லது அந்த துயில் கொள்ளும் ராகத்தை வார்த்தைகளிலும் இசையிலும் துல்லியமாக வடித்தெடுத்த இசைக் கோர்ப்பா? பாடலின் சிறப்பு என்று எதைக் குறிப்பிடுவது என்ற குழப்பம் வருகிறது. இதற்கு இசை அமைத்தது எம் எஸ் வி என்று வெகு தாமதமாகத்தான் அறிந்தேன். கண்டிப்பாக வியப்பே ஏற்படவில்லை. பின் வேறு யாரால் இவ்வாறான தேவ கானங்களைத் தர முடியும்?
கண்ணனை தாலாட்டிய அதே எம் எஸ் வி ஞான ஒளி படத்தில் தேவனே என்னைப் பாருங்கள் என்ற பாடலில் கிருஸ்துவ மதத்தின் விசுவாக வேர்களை எத்தனை அருமையாக கொண்டுவந்திருக்கிறார் என்று பாருங்கள். இதிலுள்ள மற்றொரு அபாரமான கானம் மணமேடை மலர்களுடன் தீபம் என்ற காதல் கானம். இதன் இசைகோர்ப்பும் நேர்த்தியானது. காமம் மேலோங்கிய ஒரு பெண்ணின் காதலை எத்தனை நேர்த்தியாகவும் கண்ணியமாகவும் எல்லோரும் கேட்கும் விதத்தில் முகம் சுளிக்காதவாறு எம் எஸ் வி படைத்திருக்கிறார் என்று பாருங்கள். இவருக்குப் பின் வந்தவர்களிடம் நாம் இந்த பண்பாட்டு முதிர்ச்சியை காணமுடியாது போனது ஒரு விதத்தில் தமிழிசைக்கு ஏற்பட்ட இழப்பே.
இதைத் தவிர புனித அந்தோனியார் (1976) படத்தில் வரும் மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார் என்ற பாடல் விண்ணிலிருந்து மண்ணில் இறங்கிய தேவ இசையின் ஒரு துளி. மேற்கத்திய தேவாலய கோரஸ் இசையையும் கர்நாடக ராகத்தையும் ஒரே புள்ளியில் இணைத்த அற்புதப் பாடல். வாணி ஜெயராமின் நளினமான குரல் கண்ணதாசனின் எளிமையான வரிகளின் உள்ளே இருக்கும் ஆழமான உணர்வை நமக்குள் கொண்டுவர, எம் எஸ் வி யின் மிகச் சிறப்பான இசையமைப்பு கேட்பவரை கண்மூடி அமைதி கொள்ளச் செய்துவிடுகிறது. ஆர்ப்பாட்டமான ஆன்மீகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி. Dear M.S.V. You're a legend.
1971இல் முகம்மது பின் துக்ளக் என்ற படம் பெருத்த சிக்கல்களைச் சந்தித்தப் பின் வெளிவந்தது. படத்தின் இயக்குனர் நடிகர் சோ இதைப் பற்றிய நினைவூட்டலில் ஒரு தகவலை வெளியிட்டார். அப்போதைய அரசியல்வாதிகள் இந்தப் படத்தை ஒடுக்குவதில் தீவிரமாக இருந்து, படம் எல்லா பிரச்சினைகளையும் தாண்டி வெளிவரவேண்டிய நேரத்தில் இது இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று ஒரு புதிய திரியை பற்ற வைக்க, படத்தை எதிர்க்க வந்த சிலர் படத்தின் ஆரம்பத்திலேயே கை தட்டி ரசிக்கத் துவங்கிவிட்டார்களாம். காரணம் ஒரு பாடல். அதுதான் எம் எஸ் வி பாடிய அல்லா அல்லா நீ இல்லாத இடமே இல்லை நீதானே உலகின் எல்லை என்ற பாடல். உலகில் சமாதானத்தை கொண்டுவர இசையைத் தவிர வேறு சக்திகளும் உபயங்களும் நம்மிடம் இல்லை என்று எண்ணத் தோன்றுகிறது. நெற்றி முழுவதும் திருநீறு பூசிக்கொண்ட ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சார்ந்த ஒரு ஆத்திகவாதி எவ்வாறு மற்ற சமயங்களின் இசைப் பாரம்பரியங்களுக்குள் புகுந்து கொள்ளும் மந்திரத்தை கற்றார் என்ற திகைப்பும், இதைத் தவிர நாத்திகம், இன்பம், காதல், மோகம், நட்பு, வேதனை, தியாகம், விரக்தி, துன்பம், தத்துவம், வேடிக்கை என பல வாழ்வியல் கூறுகளையும் எத்தனை நேர்த்தியாக அதன் உருவங்கள் விகாரப்படாமல் கொடுத்திருக்கிறார் என்ற வியப்பும் எம் எஸ் வி இசையோடு வரும் இலவச (விலையில்லா?) ஆச்சர்யங்கள்.
மீண்டும் கேட்கும்போது வெறும் நாஸ்டால்ஜிக் உணர்வைத் தாண்டிய சுவை கொண்ட பாடல்கள் கீழே உள்ளன. எம் எஸ் வி இசையமைக்காத பாடல்களுக்கு அதன் இசை அமைப்பாளர்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளேன்.
ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு, மங்கையரில் மகாராணி மாங்கனிபோல் பொன்மேனி, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், மலர் எது என் கண்கள்தான் என்று சொல்வேனடி -அவளுக்கென்று ஓர் மனம்.
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே- பாபு. மனதை நெகிழச் செய்யும் கானமிது.
எங்கே அவள் என் தேவதை-குமரிக்கோட்டம்.
ஒ மைனா ஒ மைனா- நான்கு சுவர்கள்.
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா - பொன்னூஞ்சல். இந்தப் பாடல் ஒரு அதிசயம்தான். இதைக் கேட்கும்போது தோன்றும் எண்ணங்கள் மிக ரசனையானவை. என்ன ஒரு இசை!
வானிலே மண்ணிலே நீரிலே பூவிலே, திருமகள் தேடிவந்தாள் - இருளும் ஒளியும் கே வி எம். வானொலியில் திருமகள் தேடிவராத நாட்களே இல்லை அப்போது.
பார்த்தேன் பார்க்காத அழகை கேட்டேன் கேட்காத இசையை,தேன் சொட்ட சொட்டச் சிரிக்கும் ஒரு திருமண வேளை - கெட்டிக்காரன். சங்கர் கணேஷ்.
அம்பிகை நேரில் வந்தாள் - இதோ எந்தன் தெய்வம்.
தன்னந்தனியாக நான் வந்த போது - சங்கமம். இதில் என்னமோ செய்யுங்கள் தள்ளியே நில்லுங்கள் என்று சுசீலா பாடும் அழகே தனி.
உலகில் இரண்டு கிளிகள்- குலமா குணமா? கே வி எம்.
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ - உத்தரவின்றி உள்ளே வா. காவிய கானம். மென்மையின் இசை இலக்கணம் இது என்று தாராளமாக சொல்லலாம். இதில் ஒலிக்கும் கிடாரின் இசைதான் எத்தனை மயக்கத்தை தருகிறது!
மெல்லப் பேசுங்கள் பிறர் கேட்கக்கூடாது, இன்று வந்த இந்த மயக்கம்- (பொருத்தமில்லாத நடிகர்கள் கொண்ட அருமையான பாடல்கள் வரிசையில் இதுவும் ஒன்று. இன்னொன்று அடுத்து வருகிறது.) -காசேதான் கடவுளடா.
காதலின் பொன்வீதியில்- பூக்காரி. என்ன நேர்த்தியான காதல் கானம். காட்சியை காணாது பாடலைக் கேட்பது உத்தமம்.
மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமன்றோ - பிள்ளையோ பிள்ளை. காண சகிக்காத காட்சியமைப்பு இந்த நல்ல பாடலை ரசிக்கவிடாமல் செய்துவிடுகிறது.
மிக சமீபத்தில் பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே என்றொரு அருமையான பாடலைக் கேட்க நேர்ந்தது. பல வருடங்களுக்கு முன்னே இதைக் கேட்டிருந்தாலும் மீண்டும் கேட்கும் போது இனந்தெரியாத இன்பம் அதிலிருப்பதை கண்டுகொண்டேன். இது 1973இல் ஸ்ரீதரின் இயக்கத்தில் வந்த அலைகள் என்ற படத்தின் பாடல். பாடகர் ஜெயச்சந்திரன் முதல் முறையாக தமிழில் பாடிய இந்த சிறப்பான பாடலை அமைத்தவர் எம் எஸ் வி. இது போன்று உயிர்ப்பான நம் மரபின் ராகங்களை இசையின் மீது வண்ணங்கள் போல தெளித்து ஒரு நளினமான இசையோவியத்தை படைப்பதில் எம் எஸ் வி மேதமை கொண்டவர். இதற்கு சான்றுகளாக பல பாடல்கள் இருக்கின்றன. எண்பதுகள் வரை எம் எஸ் வி யின் இசைத் தென்றல் வீசிக்கொண்டிருந்ததின் அடையாளமாக அவை ஆர்ப்பாட்டம் விளம்பரங்களின்றி மவுனமாக நிற்கின்றன நம்மிடையே. வாடிய வசந்தம் போலில்லாமல் எழுபதுகளின் இனிமையை இசையாக வடித்த கானங்கள் பல இன்னமும் பலரால் அறியப்படாமலே இருக்கின்றன. விளைவு எழுபதுகளின் வசீகரம் சற்று திசை மாறிப் போனது போல ஒரு தோற்றம் இப்போது உருவாகியிருக்கிறது.
இந்தப் பதிவில் நான் குறிப்பிட்டுள்ளது எழுபதுகளின் மத்திவரை உள்ள பாடல்களில் சில மட்டுமே. 75ஐ தாண்டிய பாடல்களை அவ்வளவாக இங்கு நான் தொட்டுச் செல்லவில்லை. என் அடுத்த பதிவில் அது தொடரும். எழுபதுகளை இசை வறட்சி என்று வர்ணிக்கும் இசையறிவு பக்குவப்படாதவர்களின் பிழையான கருத்தை நாம் முற்றிலும் உடைத்துப் போடுவது அவசியம். வி குமார், ஷங்கர் கணேஷ், ஆர்.தேவராஜன், ஷ்யாம், எம் பி ஸ்ரீநிவாசன், விஜய பாஸ்கர் போன்றவர்களின் பாடல்கள் குறித்து நான் எழுதியுள்ள பதிவுகளையும் எழுபதுகள் பற்றிய இந்த சிறிய அறிமுகத்தையும் படித்த பின்னும் உங்களுக்கு எழுபதுகள் ஒரு இசை இருட்டு என்ற எண்ணம் மாறாமல் இருந்தால் உங்களின் இசையறிவும் இசை ரசனையும் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருக்கிறது என்பதன் கவலை கொள்ளச் செய்யும் அறிகுறி.
chinnakkannan
1st September 2014, 05:22 PM
//உண்மை வாசு சார்
1977 அவர்கள்,
1978 நிழல் நிஜமாகிறது
1979 நினைத்தாலே இனிக்கும்
1980 வறுமையின் நிறம் சிகப்பு ,தண்ணீர் தண்ணீர்
1981 கால கட்டத்தில் 47 நாட்கள் // க்ருஷ்ணா ஜி.. அச்சமில்லை அச்சமில்லை விட்டு விட்டீர்களே..ரசித்துப் பார்த்த படம்..
gkrishna
1st September 2014, 05:23 PM
க்ருஷ்ணா சார், கே.பி யின் பிற்காலப் படங்களான வானமே எல்லை, கல்யாண அகதிகள், பார்த்தாலே பரவசம், இன்னொன்று (ஹீரோ சமீபத்தில் கூட தற்கொலை செய்து கொண்டார் என நினைவு) யெஸ் படம் பெயர் பொய்(?!) இதெல்லாம் எனக்கு ஏமாற்றத்தை அளித்தன..அந்தக் காலப் படங்களிலும் சில ஏமாற்றம் தான்..(உதாரணம் - வீட்டுக்கு ஒரு கண்ணகியோ என்னவோ நினைவு.. சீமா என ஞாபகம்.. ஹாரிபிள்..அவர் எடுத்ததா எனச் சந்தேகப் பட வைத்த ஒன்று; நான்கு சுவர்கள் சின்ன வயதில் பார்த்தபோதே பிடிக்கவில்லை.இப்போ சுத்தமா கதை மறந்துவிட்டது)
ஆனால் அதே சமயம் டி.வி.சீரியலில் படைத்த ரயில் சினேகம், காதல் பகடை..அப்புறம் சில குறுந்தொடர்கள் எல்லாம் ஏ.க்ளாஸ்.. கையளவு மனசு பார்த்ததில்ல..அதிலேயும் அண்ணி ப்ரேமி என்று ஆரம்பித்த சீரியல்களில் கொஞ்சம் நழுவித் தான் சென்றிருப்பார்..
உண்மை சி கே சார் உங்கள் கருத்து ஏற்பு உடைய கருத்து.அது எங்க ஊரு கண்ணகி சி கே சார்
gkrishna
1st September 2014, 05:25 PM
அச்சமில்லை அச்சமில்லை விட்டு விட்டீர்களே..ரசித்துப் பார்த்த படம்..
ஆமாம் சி கே சார் சேர்க்க வேண்டிய படம்
chinnakkannan
1st September 2014, 05:56 PM
தண்டை என்பது காலில் பெண்கள் அணியும் கொலுசு டைப் ஆபரணம்..ஆனால் கொலுசு இல்லை..வட்டமாக உள்பகுதி சற்றே ஹாலோவாக் இருக்கும்.. என்பது எனக்குத் தெரிந்த வரை நான் அறிந்தது..ஆனால் இந்த கார்த்திக் சார் பாட்டில்(?!) ..
தண்டை சத்தம் கலகலன்னு முன்னால் வருகுது
வாழைத் தண்டு போல கால் நடந்து பின்னால் வருகுது..
அது சரி எப்படி தண்டை யில் சத்தம் வரும்.. அதாவது கொலுசாக மாற்றப் பட்ட தண்டை என்று தான் வைத்துக் கொள்ள வேண்டும்..மணிகள் கோர்க்கப் பட்டு சிலுங்க் சிலுங்க் என்று குட்டிக் குட்டி ஐஸ்கட்டிகள் கண்ணாடிக் கிண்ணங்களில் மோதுவது போலச் சிரிக்கும் இளம்பெண்ணின் சிரிப்பொலி போல சிலுங்க் சிலுங்க் எனக் கொலுசொலி இருக்கும் என ஆன்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள்..!
கொலுசு..ஒய் எ ஃபீமேல் ஷுட் வியர் தட்.. என்பதற்கு தேடியதில்..
//ஆரம்ப காலத்தில் நாம் எல்லோரும் கொலுசு அணிந்தோம். பின்னர் இடைப்பட்ட காலத்தில் அது பழங்கால பழக்கம் என்று கைவிடப்பட்டது. தற்பொழுது அது மீண்டும் வழக்கத்திற்கு வந்ததுள்ளது. அதிலும் ஒற்றைக் காலில் கொலுசு அணிவதுதான் பேஷன். பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம்.
தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை. அத்துடன் வெள்ளி நகைகள் நம் ஆயுளை விருத்தி செய்யக் கூடியவை. நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும்.
சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு கொலுசு அணிவித்து விடுகின்றோம். குழந்தைக்கு நடக்கும்போது எப்போதும் சங்கீதம் கேட்க வேண்டும் என்பதாலும் குடும்பத்தினருக்கு குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிப்பதற்கும் கொலுசு அணிவிக்கப்படுகிறது.
உணர்ச்சி வசப்படுதல் என்பது எப்பொழுதும் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. மேலும் பெண்களின் இடுப்பு பகுதியை ஸ்திரப் படுத்தவும் கொலுசு பயன்படுகிறது.// இருக்கலாமாயிருக்கும்!
சரீ ஈ ஈ.. நமக்கென்ன என்னல்லாம்ப்பா பாட்டு இருக்குன்னு பார்த்தா..
//அல்லித் தண்டு வெள்ளித் தண்டை
முத்துச் செண்டு கன்னங்கள்
மின்னல் என்று மின்னக் கண்டு துள்ளிச் செல்லும் எண்ணங்கள் // ஆக அல்லித் தண்டுக் காலில் இருக்கற வெள்ளித் தண்டையும் சரி, டபக்குன்னு மேல முகத்தைப் பார்த்தா இந்த பேர்ள்ஸ் எல்லாம் கோர்த்த செண்டாட்டமா பஃப்னு இருக்கற கன்னங்களும் சரி மின்னல் மாதிரி மின்னறதப் பார்த்தா .. எங்கெங்கோ செல்லும் உன் எண்ணங்கள் அப்படிங்கறா..
//கொட்டடி சேலை தழுவ தழுவ
தண்டை ஒரு பக்கம் குலுங்க குலுங்க சலக்கு சலக்கு சிங்காரி // என்னவாக்கும் படம்..
//அண்டம் பகிரண்டம் உனை அண்டும்படி வந்தாய்
தண்டை ஒலி ஜதி தருமோ கமல பாதம் சதிரிடுமோ// வேதம் நீ இனிய நாதம் நீ
கஞ்சிக் கலயம் சுமந்து நானும் தண்டை குலுங்க நடக்கணும்
நடந்து வரும் அழகைப் பார்த்துப் பசியும் கூடப் பறக்கணும்/ அய்யனாரு நிறஞ்ச வாழ்வு கொடுக்கணும்(காவல் தெய்வம்.)
இ.கா.படங்கள்ளயும் ஓரிரு பாடல்கள்ள தண்டை வருது..அ.கா.படங்கள்ள சொல்லடி அபிராமியிலையும் வருது ..அது அப்புறம் ..
mr_karthik
1st September 2014, 07:07 PM
டியர் கிருஷ்ணாஜி,
தங்களின் பதிவு எண் # 1649 -ஐ கண்களில் நீர் சொட்டசொட்ட படித்து முடித்தேன். திரு தாரிகன் அவர்களின் இனிய சாட்டையடி மிகமிகப்பிரமாதம். 70-களில் மெல்லிசை மன்னரின் பாடல்களின் தாக்கத்தை எவ்வளவு அழகாக தொகுத்தளித்திருக்கிறார். அபாரம், அற்புதம் என்பதெல்லாம் மிக மிக சாதாரண வார்த்தைகள்.
இந்தப்பதிவு "சிலருக்கு" தெளிவு ஏற்படுத்தியிருக்கும். இருந்தாலும் வரட்டுப்பிடிவாதத்தினால் ஏற்க மறுப்பது போல நடிக்கக்கூடும். மெல்லிசை மன்னரின் தாக்கத்தை விவரிக்கும் அதே வேளையில் கூடவே இசையரசியின் புகழ் பாடியிருப்பதும் அருமையோ அருமை. 'கதவில் மாட்டிய எலிகளின்' குரல்கள் எக்காலமும் இவரை நெருங்க முடியாது.
தெளிவு ஏற்படுத்தும் தீர்க்கமான பதிவு. பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. நிறைய சொல்லலாம். உணர்ச்சிப்பெருக்கில் வார்த்தைகள் வர சிரமப்படுகின்றன.
gkrishna
1st September 2014, 07:16 PM
தங்களின் பதிவு எண் # 1649 -ஐ கண்களில் நீர் சொட்டசொட்ட படித்து முடித்தேன். திரு தாரிகன் அவர்களின் இனிய சாட்டையடி மிகமிகப்பிரமாதம். 70-களில் மெல்லிசை மன்னரின் பாடல்களின் தாக்கத்தை எவ்வளவு அழகாக தொகுத்தளித்திருக்கிறார். அபாரம், அற்புதம் என்பதெல்லாம் மிக மிக சாதாரண வார்த்தைகள்.
தெளிவு ஏற்படுத்தும் தீர்க்கமான பதிவு. பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. நிறைய சொல்லலாம். உணர்ச்சிப்பெருக்கில் வார்த்தைகள் வர சிரமப்படுகின்றன.
திரு கார்த்திக் சார்
உங்களை போலவே நானும் இன்னும் இந்த கட்டுரையில் இருந்து வெளி வர முடியாமல் தவித்து கொண்டு இருக்கிறேன். நேர் கோட்டில் பயணிக்கும் நம் அனைவரின் உள்ள கிடைக்கையை வெளி படுத்திய கட்டுரை .
இந்த கால கட்டத்திய பாடல்கள் இன்னும் நிறைய உள்ளன .. நீங்கள், வாசு சார், கோபால் சார், ராகவேந்தர் சார் ,ராஜேஷ் சார்,மது சார்,சி கே சார் sss சார் ,கோபு சார்,நெய்வேலி வாசு சார்,முரளி சார் மற்றும் பெயர் விடுபட்டு போன பலரும் இந்த பணியை தான் செய்து கொண்டு இருக்கிறோம்
mr_karthik
1st September 2014, 07:16 PM
டியர் கிருஷ்ணாஜி,
நான் அவ்வளவு கோபமாக பதிவு இட்டதும் நல்லதுக்குத்தான். அதனால்தான் இப்படியொரு அருமையான கட்டுரையை இங்கே பதிவிட்டீர்கள். 'கண்ணா நலமா' படமும் மெல்லிசை மன்னர் இசைதான். வி.குமார் என்பதாக தாரிகன் குறிப்பிட்டிருந்தார்...
gkrishna
1st September 2014, 07:34 PM
நன்றி கார்த்திக் சார்
உங்கள் பதிவை திரு காரிகன் பதிவில் பின்னூட்டமிடுகிறேன் உங்களின் சார்பாக
mr_karthik
1st September 2014, 07:40 PM
டியர் வினோத் சார்,
'ஊட்டிவரை உறவு' மற்றும் 'சித்தி' விளம்பர ஆவணங்களுக்கும், பாடல்களின் வீடியோக்களுக்கும் மிக்க நன்றி...
vasudevan31355
1st September 2014, 08:10 PM
டியர் கார்த்திக் சார்,
எனக்குப் பிடிக்காத படமான பிள்ளையோ பிள்ளை படத்திலிருந்து பிடித்த பாட்டின் பாடல் வரிகளைக் கொடுத்து விட்டீர்களே. அருமை. (47 நாட்களில் மூழ்கி விட்டதால் கொஞ்சம் லேட். ஸாரி) மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி, மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ, வெள்ளை மலரில் ஒரு வண்டு, குண்டூரு ஹனுமந்தப்பா என்று எல்லாப் பாடல்களும் பிடிக்கும். லஷ்மியின் தொப்பை,:) (காஸ்ட்யூம் கேவலம்) மு.க.முத்துவின் பெண்பிள்ளைத் தனமான நடிப்பு, மேக்-அப் பிடிக்கவே பிடிக்காது. எம்.ஆர்.ஆர்.வாசு ஒரு ஆறுதல்.
மெல்லிசை மன்னர் மட்டுமே பெருத்த ஆறுதல்.
rajeshkrv
1st September 2014, 08:40 PM
ராஜேஷ்ஜி
தாங்கள் அளித்த மலையாளப் பாடல்களுக்கு (ஏழு சுந்தர ராத்ரிகள்) பதில் அளித்து இருந்தேனே. பார்த்தீர்களா?
ஆம் பார்த்தேன் ஈ பூ இத்திரிப்பூ அபாரம். நீங்கள் ஷீலாவை ரசித்த விதமும் தெரிந்தது.
rajeshkrv
1st September 2014, 08:42 PM
டியர் கிருஷ்ணாஜி,
தங்களின் பதிவு எண் # 1649 -ஐ கண்களில் நீர் சொட்டசொட்ட படித்து முடித்தேன். திரு தாரிகன் அவர்களின் இனிய சாட்டையடி மிகமிகப்பிரமாதம். 70-களில் மெல்லிசை மன்னரின் பாடல்களின் தாக்கத்தை எவ்வளவு அழகாக தொகுத்தளித்திருக்கிறார். அபாரம், அற்புதம் என்பதெல்லாம் மிக மிக சாதாரண வார்த்தைகள்.
இந்தப்பதிவு "சிலருக்கு" தெளிவு ஏற்படுத்தியிருக்கும். இருந்தாலும் வரட்டுப்பிடிவாதத்தினால் ஏற்க மறுப்பது போல நடிக்கக்கூடும். மெல்லிசை மன்னரின் தாக்கத்தை விவரிக்கும் அதே வேளையில் கூடவே இசையரசியின் புகழ் பாடியிருப்பதும் அருமையோ அருமை. 'கதவில் மாட்டிய எலிகளின்' குரல்கள் எக்காலமும் இவரை நெருங்க முடியாது.
தெளிவு ஏற்படுத்தும் தீர்க்கமான பதிவு. பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. நிறைய சொல்லலாம். உணர்ச்சிப்பெருக்கில் வார்த்தைகள் வர சிரமப்படுகின்றன.
கார்த்திக் ஜி. அருமை அருமை..
rajeshkrv
1st September 2014, 08:44 PM
டியர் கார்த்திக் சார்,
எனக்குப் பிடிக்காத படமான பிள்ளையோ பிள்ளை படத்திலிருந்து பிடித்த பாட்டின் பாடல் வரிகளைக் கொடுத்து விட்டீர்களே. அருமை. (47 நாட்களில் மூழ்கி விட்டதால் கொஞ்சம் லேட். ஸாரி) மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி, மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ, வெள்ளை மலரில் ஒரு வண்டு, குண்டூரு ஹனுமந்தப்பா என்று எல்லாப் பாடல்களும் பிடிக்கும். லஷ்மியின் தொப்பை,:) (காஸ்ட்யூம் கேவலம்) மு.க.முத்துவின் பெண்பிள்ளைத் தனமான நடிப்பு, மேக்-அப் பிடிக்கவே பிடிக்காது. எம்.ஆர்.ஆர்.வாசு ஒரு ஆறுதல்.
மெல்லிசை மன்னர் மட்டுமே பெருத்த ஆறுதல்.
மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடம்ன்றோ என்ற வரியை கேட்டுவிட்டு வாலி மீது எம்.ஜி.ஆர் கோபம் கொண்டாராம் என்னய்யா மூன்று தமிழ் அவரிடம் தான் தோன்றியதோ அதற்கு வாலி சொன்னாராம், புது பையன் முதல் பாடல் அதனால் தான் அப்படி என்று , உடனே எம்.ஜி.ஆர் ஹ்ம்ம்ம் சரி சரி தமாஷுக்கு சொன்னேன் பையன் நல்லா வரட்டும் என்று சொன்னாராம்..
rajeshkrv
1st September 2014, 08:50 PM
பதிவு எண் # 1649
மெய் சிலிர்க்கிறது கிருஷ்ணா ஜி. அருமை அருமை. உங்கள் அனுமதியுடன் இதை உங்கள் பெயரிலேயே முகனூலில் இசையரசியின் குழுமத்தில் பதிக்கலமா?
Gopal.s
1st September 2014, 08:57 PM
மான் கண்ட சொர்க்கங்கள் எனக்கும் பிடித்த பாட்டுத்தான்??/ இதற்கு போய் கண்ணீர்,உணர்ச்சி என்று அந்த கால பத்மினி ரேஞ்சிற்க்கு சிலர் உணர்ச்சி வச படுவது கொஞ்சம் ஓவர். ஒரே ஒரு பாட்டு!!!!ஹூம் ,காலத்தின் கோலத்தை பாருங்கள்.ஒரே ஒரு situation Song .(படத்தின் கருத்தை ஒட்டியே).பெரிய புதுமையும் இல்லை. சகாவோடு, ஐந்து வருடத்தில் எத்தனை முத்துக்கள். தேடி தேடி பாராட்டி அலைய வேண்டிய எழுபதுகள்!!!
Gopal.s
1st September 2014, 09:36 PM
இசையை கண்டு பிடித்ததே எழுபத்தாறுக்கு பிறகுதான் என்று சொல்வோருக்கு ,பதிலளித்தே வருகிறோம்.ஆனால் எழுபதுகளை,
அறுபதுகளோடு,எண்பதுகளோடு ஒப்பிட்ட ஒரு அபத்த பதிவை, எவன் என்ன எழுதினாலும் ,சங்கீதம் தெரிந்த ஒருவர் ,இங்கு வந்து பதிப்பிப்பிப்பது, நகைப்புக்குரியதே. எப்படி இளைய ராஜாதான் எல்லாம் சாதித்தார் என்பது நகைப்புக்குரியதோ, அதை விட நகைப்புக்குரியது ,அவமான பட வேண்டிய எழுபதுகளை கொண்டாடுவது. மதுர கானங்கள் என்று பெயரிட்டு ,மன சாட்சியை துறக்க வேண்டாம் கிருஷ்ணா.
இளையராஜாவின் சங்கீத புத்துயிர்ப்பு, நிச்சயம் கொண்டாட படத்தான் வேண்டும்.
chinnakkannan
2nd September 2014, 12:09 AM
//இளையராஜாவின் சங்கீத புத்துயிர்ப்பு, நிச்சயம் கொண்டாட படத்தான் வேண்டும்// அண்ணா.. நீங்க நல்லவரா கெட்டவரா (எஸ்ஸ்கேப்) :)
rajeshkrv
2nd September 2014, 01:28 AM
கோபால் ஜி, கிருஷ்ணாஜியின் பதிவு 70’களில் தான் இசையின் ராஜாங்கமே தொடங்கியது என்றும் அது ராஜாவினுடையது மட்டுமே என்று சொல்பவர்களுக்காக எழுதிய பதிவு அது. எப்படி இருந்தாலும் 50’கள்/60’களின் பாட்லகளே பொற்காலம் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது.
Gopal.s
2nd September 2014, 01:47 AM
கோபால் ஜி, கிருஷ்ணாஜியின் பதிவு 70’களில் தான் இசையின் ராஜாங்கமே தொடங்கியது என்றும் அது ராஜாவினுடையது மட்டுமே என்று சொல்பவர்களுக்காக எழுதிய பதிவு அது. எப்படி இருந்தாலும் 50’கள்/60’களின் பாட்லகளே பொற்காலம் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது.
70 களில் கேட்கும் படியான பாடல்கள் சில வந்தாலும் ,அவை ரெகார்ட் செய்ய பட்ட விதம் ,interludes படு மோசம்.அன்பு நடமாடும், அழகான பாடல்.அதில் டி.எம்.எஸ் pitching படு மோசமாக இருக்கும். இதை கூடவா ஒரு இசையமைப்பாளர் கவனிக்க முடியாது?
நிச்சயமாக இசையின் பொற்காலம் 1960 கள் ,1980 கள் ,1990 கள் .காரணகர்த்தாக்கள்
விஸ்வநாதன்-ராமமூர்த்தி,கே.வீ.மகாதேவன்,இளையராஜா,ரகுமான்.ம ற்ற இசையமைப்பாளர்களில் குமாரை சிறிதேயும்,வித்யாசாகரை சிறிதேயும் குறிப்பிட முடியும்.
கிட்டத்தட்ட 71 இலிருந்து 75 வரை நேரடி படங்கள் 350 வந்ததாக கொண்டாலும்,குறிப்பிட கூடியவை 25 க்கும் மேல் தேறாது இசையில்.
இதை பற்றி முழு ஆய்வு எழுதவும் நான் ரெடி.எவனோ ஞான சூனியம் சொன்னதை வேலை மென கேட்டு குறிப்பிட்டு ,இதற்கு ஒப்பாரி வேறு.
ஒரு உண்மையான இசை ரசிகனாக,அன்றிருந்த விடலைகளில் ஒருவனாக,இதயத்தில் கை வைத்து சொல்கிறேன். 70 களில் செத்து கொண்டிருந்த திரை இசையை உயிர்ப்பித்தவர் ,இளைய ராஜா,இளைய ராஜா,இளைய ராஜாவே.
rajeshkrv
2nd September 2014, 05:40 AM
கோபால் ஜி, இப்படி வேண்டுமானால் சொல்லலாம் ஹிந்தி ஆதிக்கமாக இருந்த நேரத்தில் தமிழிசையை மீண்டும் திரும்பி பார்க்க செய்தவர் என்று வேண்டுமானால சொல்லலாம் ஆனால் எத்தனை எத்தனை டியூன் மற்றவருடையது (ஜி.கே.வி, டி.வி.ஜி என எல்ல குருக்களின் டியூன் தான் இவர இசையானது)
Gopal.s
2nd September 2014, 07:44 AM
கோபால் ஜி, இப்படி வேண்டுமானால் சொல்லலாம் ஹிந்தி ஆதிக்கமாக இருந்த நேரத்தில் தமிழிசையை மீண்டும் திரும்பி பார்க்க செய்தவர் என்று வேண்டுமானால சொல்லலாம் ஆனால் எத்தனை எத்தனை டியூன் மற்றவருடையது (ஜி.கே.வி, டி.வி.ஜி என எல்ல குருக்களின் டியூன் தான் இவர இசையானது)
இளையராஜா செய்தவற்றை இப்படியெல்லாம் புறம் தள்ளி விட முடியாது.அவர் classical ,western எல்லாவற்றுக்கும் குருக்கள் இருக்கலாம்.ஆனால் சரியான அளவில் பிறவி திறனும்,பலவித அனுபவங்களும்,எல்லாவற்றையும் கற்கும் மனமும் கொண்டு, இசையில் புதுமைகள் செய்து ,பாமரர்,படித்தவர் அனைத்து தரப்பினரையும் உடனடியாக ஈர்த்தார்.
பலருக்கு கிரெடிட் கொடுக்கும் பண்பு அவருக்கு இருந்ததில்லை என்பது உண்மையே. உதாரணம் ,அன்னக்கிளி உன்னை தேடுதே,மச்சானை,ராமன் ஆண்டாலும் போன்றவை பத்மா சுப்ரமணியம், அண்ணி ஷ்யாமளா ஆகியோரிடமிருந்து பெற்று ,பாவலர் பேரை சொல்லி ஜல்லி அடித்ததாய் அப்போது பல பத்திரிகைகளில் வந்தது. ஆனாலும் நரசிம்மன் பேரை, டி.வீ.ஜி பேரை சொல்லியே வந்துள்ளார்.
அவர் சாதனையோடு நுழைந்தார்.ஈர்க்கும் இசை தந்தார். தமிழ் நாட்டை தன் வசம் திருப்பினார். இசையில் ,அவரளவு நுண்ணிய மன உணர்வுகளை கூட இழை இழையாக தந்தவர்கள் உலகில் வெகு சிலரே. இசையில் அவர் ஒருங்கமைக்கும் விதம்,நோட்ஸ் எழுதும் திறன்,recording perfection ,technological upgradation , interlude fineness ,என்று பக்கம் பக்கமாக விவரிக்கலாம்.
பொதுவாக ,நடிகர்களை சார்ந்து இயங்கி பம்மி அவர்களுக்காக,இசையமைத்து, சில குறிப்பிட்ட பாடகர்களை மட்டுமே உபயோக படுத்திய நிலை மாறி, நடிகர்கள் இசையமைப்பாளரை தொழும் status cult உருவாக்கிய அவரின் constructive arrogance என்னை கவர்ந்த ஒன்று. எத்தனை அசுர உழைப்பு!!!
வருடத்தில் 30 படங்களுக்கு இசையமைத்து, அதிலும் அவர் தந்த தரமான இசை ,அவருடைய தேர்ச்சியை , குறுகிய காலத்தில் செயல் பட்ட creative திறனை ,உலகுக்கு பறை சாற்றும்.
இசை ரசிகனாக அவர் மேல் விமரிசனம் வைக்கலாம்.அவர் இசையை மீறி போகும் போது இசைவற்றதை குத்தலாம். இஷ்டத்துக்கு பண்ண படும் துதிகளை மீறி ,தர படுத்தலாம். ஆனால் அவர் இசை மேதைமையை ,ஆளுமையை புறம் தள்ளுதல் ,தேர்ந்த இசை ரசிகர்களுக்கு அழகல்ல.
நிச்சயமாக தமிழ் பாடல்களின் தரத்தை மட்டுமல்ல, இந்திய பாடல்களின்,படங்களின் தரத்தையே தன் இசையால் உயர வைத்தவரே.
அவரிடம் நான் கண்ட சில குறைகள்... ஒரு சொன்னது நீதானா போலவோ, மன்றத்தில் ஓடி வரும் போலவோ, அதிசயத்தை அவரால் தரவே முடிந்ததில்லை. சில ராகங்களையே சுற்றி சுற்றி வந்து ,கேட்கும் படி, ஆனால் பெரிய கற்பனை திறனற்ற பாடல்கள், ஏராளம் செய்தார்.
சில அபூர்வ ராகங்களை தொட்டாலும் பெயரளவே அது இருந்தது. விஸ்வநாதன்-ராமமூர்த்தி ,ரகுமான் போன்றவர்களின் மேதமை கூறு அவர் பாடல்களில் நான் ஸ்பரிசித்ததில்லை. ராகங்களை வெகு சுலபமாகவே இனம் காணும் அளவிலேயே ,நேரடியானவை .ஒரு கர்ணன்,ஒரு சங்கராபரணத்துடன், காதல் ஓவியம்(வைர முத்து மின்னினாலும்) ஒப்பிட படவே முடியாது.அதனாலேயே அவர் பாடல்களை அந்த தராசிலே ஆய்வேன்.
பின்னணி இசை, interludes ,experimentation ,என்றெல்லாம் எடுத்தால் naushad உடன் ஒப்பிடும் அளவு தேர்ந்தவர் இளையராஜா.அப்பப்பா பீ.ஜி.எம் என்பது படத்திற்கே ஜீவன் தர முடியும் என்று நிரூபித்த மேதை.இவர் உயரம் தொட இன்னொருவர் பிறந்து வர முடியுமா என்பதே கேள்வி குறி. இவரளவு மண்ணின் நுகர்வு,அனுபவ கூறுகள் ,அழகுணர்ச்சி,இலக்கிய பரிச்சயம்,இசையறிவை தேடும் தன் முனைவு இன்னொருவருக்கு வாய்ப்பது இயலவே இயலாது. நான் திரை படம் எடுத்திருந்தால் இளைய ராஜாவையே உபயோக படுத்தி இருப்பேன் என்று அடித்து கூறுவேன்.
vasudevan31355
2nd September 2014, 07:54 AM
வணக்கம் ராஜேஷ்ஜி.
நலம்தானே!
'கணவன் மனைவி' திரைப்படத்திலிருந்து பாடகர் திலகமும், இசையரசியும் பாடிய ஓர் அருமையான பாடல். 'மெல்லிசை மாமணி' குமார் இசை. நல்ல வரிகள். கொஞ்சம் வித்தியாசம்.
'மலைகளில் மேகங்கள் ராகங்கள் பாடும்
மழைத்துளி மண் மீது வந்தாக வேண்டும்'
https://www.youtube.com/watch?v=32yDjjhjHec&feature=player_detailpage
Gopal.s
2nd September 2014, 08:07 AM
இசையரசியின் புகழ் பாடியிருப்பது அருமையோ அருமை. 'கதவில் மாட்டிய எலிகளின்' குரல்கள் எக்காலமும் இவரை நெருங்க முடியாது.
தெளிவு ஏற்படுத்தும் தீர்க்கமான பதிவு. பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. நிறைய சொல்லலாம். உணர்ச்சிப்பெருக்கில் வார்த்தைகள் வர சிரமப்படுகின்றன.
நான் தங்களுடன் 1000000000000000000000000 சதவிகிதம் உடன் படுகிறேன்.
vasudevan31355
2nd September 2014, 10:13 AM
இன்றைய ஸ்பெஷல் (67)
இன்றைய ஸ்பெஷலில் மிக மிக வித்தியாசமான ஓர் பாடல்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/notice.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/notice.jpg.html)
இந்தியா இலங்கை கூட்டுத் தயாரிப்பான கமலாலயம் மூவிஸ் 'வாடைக் காற்று' என்ற ஈழத் தமிழ் திரைப்படத்திலிருந்து.
சிலோன் ரேடியோ கேட்டவர்கள் அனைவருக்கும் இப்பாடலைக் கேட்டவுடன் சட்டென்று ஞாபகம் வந்து விடும். அந்த அளவிற்கு தமிழ்ப்ப் பாடல்களுக்கு இணையாக புகழ் பெற்று இலங்கை வானொலியில் தினம் தினம் ஒலிபரப்பப்பட்ட பாடல்.
இப்படத்தைப் பற்றியும், இப்படத்தில் நடித்த கலைஞர்கள் பற்றியும் கீழே பதிந்துள்ள நோட்டீஸ்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-51.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/2-51.jpg.html)
பிழைப்புக்காக மீன்பிடித் தொழிலுக்கு செல்லும் மீனவர்கள் பாடும் பாடல். அழகாக அமைந்த பாடல். நடுவில் பரிதாபமாக ஒலிக்கும் பெண் குரல்களின் கோரஸ். ஏ.எம்.ராஜா அவர்களை நினைவு படுத்தும் குரல். இந்தப் பாடலைக் கேட்கும் போது அந்தக்கால சம்பவங்கள் நம் நெஞ்சில் நிழலாடுவது உண்மை.
http://4.bp.blogspot.com/_HuvjSCif-nM/Rf3tKb3fogI/AAAAAAAAAN4/WRN80OO6s4Y/s1600/Vadaikatru2.JPGhttp://photos1.blogger.com/blogger/720/620/1600/VAKA%20%20Viru%2006.jpg
http://photos1.blogger.com/blogger/720/620/1600/SAVE0009.jpghttp://photos1.blogger.com/blogger/720/620/1600/VAKA%20Viru%2004.jpg
http://photos1.blogger.com/blogger/720/620/1600/VAKA%20Sem-Philo.jpg
இனி பாடலின் முழு வரிகள்
வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே
நல்ல வாழ்க்கை உண்டு எங்களுக்கு ஓடத்திலே
இரவினிலே தொழிலுக்காகச் செல்லுகின்றோம்
அந்த இறைவனைத்தான் நம்பி இங்கு வாழுகின்றோம்.
(கோரஸ்) அந்த இறைவனைத்தான் நம்பி இங்கு வாழுகின்றோம்.
வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே
நல்ல வாழ்க்கை உண்டு எங்களுக்கு ஓடத்திலே
இரவினிலே தொழிலுக்காகச் செல்லுகின்றோம்
அந்த இறைவனைத்தான் நம்பி இங்கு வாழுகின்றோம்.
(கோரஸ்) அந்த இறைவனைத்தான் நம்பி இங்கு வாழுகின்றோம்.
வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே
ஏலோ ஏலோ ஏலேலோ
ஏலோ ஏலோ ஏலேலோ
ஒ........................................ஒ
நீலக்கடல் மீதினிலே ஓடமிது
நீங்கி வரும் காலையிலே நாளுமிது
நீலக்கடல் மீதினிலே ஓடமிது
நீங்கி வரும் காலையிலே நாளுமிது
வலை வீசி வாழுகின்ற கூட்டமிது
நாங்கள் வாழுறது கடலோரம் குடிசையிலே
எங்க குடிசையிலே
வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே
நல்ல வாழ்க்கை உண்டு எங்களுக்கு ஓடத்திலே
இரவினிலே தொழிலுக்காகச் செல்லுகின்றோம்
அந்த இறைவனைத்தான் நம்பி இங்கு வாழுகின்றோம்.
அந்த இறைவனைத்தான் நம்பி இங்கு வாழுகின்றோம்.
வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே
ஏலோ ஏலோ ஏலேலோ
ஏலோ ஏலோ ஏலேலோ
ஒ........................................ஒ
https://www.youtube.com/watch?v=cRicFOhbO4E&feature=player_detailpage
இந்தப் பாட்டோடு போனஸாக 10 நிமிட 'பொங்கும் பூம்புனல்' இலங்கை வானொலி நிகழ்ச்சியை (விருப்ப நேயர்கள் பெயர் அறிவிப்போடு) கேட்டு என்ஜாய் செய்யுங்கள்.
https://www.youtube.com/watch?v=GN_h0ioona0&feature=player_detailpage
gkrishna
2nd September 2014, 10:44 AM
வாசு சார்
உங்கள் ரசனை மெய் சிலிர்க்க வைக்கிறது .1975 கால கட்டங்களில்
சிலோன் வானொலி நிலையம் மீண்டும் மீண்டும் ஒலி பரப்பிய ஒரு பாடல்
இந்த பாடலை கேட்ட உடன் நினைவில் வந்த இன்னொரு பாடல்
'ஈழ திரு நாடே என் அருமை தாயகமே '
மேலும் இன்னொரு பாடல் அது மக்கள் வங்கி விளம்பர பாடல் என்று நினைவு
கலை இலக்கியம் இதழியல் சினிமா வானொலி ஊடகத்தில்
‘அதிசயங்கள்’ நிகழ்த்திய பல்கலைவேந்தன் சில்லையூர் செல்வராசன் கமலினி பாடிய
'அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
கேள்வி ஒன்று கேட்கலாமா உன்னை தானே '
தொலைக்காட்சியின் அறிமுகம் இல்லாத அந்தக்காலத்தில் இலங்கை வானொலியின் தமிழ் தேசிய சேவையும் வர்த்தகசேவையும் இலங்கையில் மட்டுமல்ல தமிழகத்திலும் நன்கு பிரபல்யம் அடைந்திருந்தது. மயில்வாகனம், செந்திமதி மயில்வாகனம், சில்லையூர், கே.எஸ்.ராஜா, அப்துல்ஹமீட், ராஜேஸ்வரி சண்முகம், சற்சொரூபவதி நாதன் சுந்தா சுந்தரலிங்கம், புவனலோஜினி வேலுப்பிள்ளை, சரா இம்மானுவேல், ஜோக்கிம் பெர்ணான்டோ, ராஜகுரு சேனாதிபதி , கனகரத்தினம், ஜோர்ஜ் சந்திரசேகரன் முதலான பலரது குரல் நாடெங்கும் பிரசித்தம். இவர்கள் தமிழ்வானொலி நேயர்களை வானொலியின் அருகே அழைத்து கட்டிப்போட்டவர்கள் என்று சொல்வதுகூட மிகையான கூற்று அல்ல.
இக்காலத்தில் தொலைக்காட்சி நாடகங்களை அலுப்புச்சலிப்பின்றி பார்த்து ரசிக்கும் எண்ணிறைந்த மக்களைப்போன்றுää அந்நாட்களில் தமது ரஸனைக்கு விருப்பமான தொடர் நிகழ்ச்சிகள்ää நாடகங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும் வேளைகளில் தமது அன்றாடக்கடமைகளையும் ஒருபுறம் வைத்துவிட்டு வானொலிக்கருகே வந்துவிடுவார்கள்.
அல்லது. குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை செவிமடுப்பதற்கு ஏற்றவாறு தமது வீட்டுப்பணிகளுக்கு நேரவரையறை செய்துகொள்வார்கள்.
பிரேம்நாத் மொறாயஸ் இயக்கத்தில் 1978ம் ஆண்டு வெளிவந்த ஈழத்து திரைப்படம் வாடைக்காற்று. இந்த படத்தில் இடம் பெற்ற பாடல் வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலேயே. இப்பாடல் வானொலி மூலம் இலங்கை, இந்திய ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பாடலில் ஏலேலோ என்ற ஹம்மிங் கேட்க மிகவும் அழகாக இருக்கிறது.
gkrishna
2nd September 2014, 10:51 AM
நன்றி தமிழ் விக்கி
வாடைக்காற்று 1978 ஆம் ஆண்டில் வெளிவந்த ஈழத்துத் தமிழ்த் திரைப்படம். செங்கை ஆழியானின் வாடைக்காற்று என்ற புகழ் பெற்ற புதினம் அதே பெயரில் திரைப்படமாக்கப்பட்டது. கமலாலயம் மூவிஸ் தயாரித்த இந்த திரைப்படம் மன்னார் பகுதியில் உள்ள பேசாலையிலும், வட்டுக்கோட்டை, கந்தரோடை, கல்லுண்டாய், வல்லிபுரம் ஆகிய பகுதிகளிலும் படமாக்கப்பட்டது. மீனவ சமூகத்தின் வாழ்வினை கூறும் இத்திரைப்படம் 1978 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற விருதினைப் பெற்றது.
இத்திரைப்படத்தில் ஏ. இ. மனோகரன், கே. எஸ். பாலச்சந்திரன், கலாநிதி கே. இந்திரகுமார், எஸ். ஜேசுரட்னம், ஆனந்தராணி பாலேந்திரா (இராசரத்தினம்), சந்திரகலா, கே. ஏ. ஜவாஹர் முதலானோர் நடித்திருந்தனர். பல சிங்களத் திரைப்படங்களை இயக்கிய பிரேம்நாத் மொறாயஸ் இந்த திரைப்படத்தை இயக்கினார். கே. எஸ். பாலச்சந்திரன் உதவி இயக்குனராக பணியாற்றினார். ஈழத்து இரத்தினம், சில்லையூர் செல்வராசன் ஆகியோர் இயற்றிய பாடல்களை ஜோசப் ராசேந்திரன், வி.முத்தழகு, சுஜாதா அத்தநாயக்க ஆகியோர் பாடினார்கள். நடன அமைப்பை வேல் ஆனந்தனும், சண்டைப் பயிற்சியை நேருவும் கவனித்துக் கொண்டார்கள்.
கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
வாடைக்காற்று காலத்தில் வெளியிடங்களிலிருந்து வந்து வாடி போட்டு மீன் பிடிக்கும் வெளியூர்க்காரர்களுக்கும், உள்ளூர் வாசிகளுக்கும் ஏற்படும் உறவு, பகை, நட்பு, கோபம் என்பனவற்றை அடிநாதமாகக் கொண்டது இக்கதை. முந்திய வருடத்தில் அங்கு வந்து வாடி போட்டுத் தொழில் செயத சம்மாட்டி செமியோன் (மனோகரன்) உள்ளூர்ப் பெண்ணான பிலோமினா (சந்திரகலா)வுடன் கொண்ட உறவு அவளது தந்தை (பிரான்சிஸ்), தமையன் (கந்தசாமி) ஆகியோருடன் ஏற்பட்ட மனக் கசப்பினால் முறிந்து போய் விடுகிறது. உள்ளூர்க்காரரான பொன்னுக் கிழவர் (ஜேசுரட்னம்) பெற்றார் இல்லாத தன் பேத்தி நாகம்மாவை (ஆனந்தராணி) கண்போல வளர்த்து வருகிறார். முயல் வேட்டையாடிக் கொண்டு திரியும் அவளது முறை மாப்பிள்ளையான விருத்தாசலத்துக்கு (பாலச்சந்திரன்) அவளை திருமணம் செய்து வைக்கவேண்டுமென்ற ஆசை அவருக்கு.
மீண்டும் அடுத்த பருவகாலம் வருகிறது. வெளியூர் மீனவர்கள் வருகிறார்கள். வெகு தூரத்திலிருந்து கூழக்கடாக்கள் என்ற் பறவைகளும் வருகின்றன. ஆனால் இந்தமுறை புதிதாக மரியதாஸ் (இந்திரகுமார்) என்ற சம்மாட்டி வந்து சேர்கிறான். அவனோடு பிரச்சினைகளும் வருகின்றன. செமியோன் சம்மாட்டி வழக்கமாக வாடி போடும் இடத்திலே தான் வாடி போட்டுத் தொழில் செய்கிறான். பணத்தைக் காட்டி உள்ளூர் மீனவத் தொழிலாள்ர்களை தன்பக்கம் இழுத்துக் கொள்கிறான். போதாதற்கு நாகம்மாவையும் மனம் மாற்றி தன்னுடன் அழைத்துப் போய் விடுகிறான். இதனால் விருத்தாசலமும், பொன்னுக்கிழவரும் வேதனையினால் வெந்து போகிறார்கள். செமியோனுக்கும், மரியதாஸுக்கும் நடக்கும் தொழில் போட்டியிலும் மரியதாஸுக்கே வெற்றி கிடைக்கிறது. முறைப்பெண்ணான நாகம்மாவை எங்கிருந்தோ வந்தவனுக்கு பறிகொடுத்த விருத்தாசலத்தை, சுடலைச் சண்முகம் (ஜவாஹர்) கிண்டல் செய்கிறான்.
ஊர்த் திருவிழா நடக்கிறது. செமியோன் சம்மாட்டி தன் காதலி பிலோமினாவை ரகசியமாக சந்திக்கிறான். இந்த நேரத்தில் யாரோ மரியதாஸ் சம்மாட்டியின் வாடிக்கு தீ வைத்து விட்டார்கள். அதைப் பார்க்க செமியோன் அவசரமாகப் போக, தனியாக இருட்டில் போன பிலோமினாவை, சுடலைச் சண்முகம் கற்பழித்து கொலை செய்து விடுகிறான். நடந்ததை ஊகித்து அறிந்து கொண்ட விருத்தாசலம் சுடலைச் சண்முகத்தை துரத்திச் சென்று, தனது ஈட்டியினால் எறிந்து கொல்கிறான். விருத்தாசலமும், செமியோனும் தங்கள் இழப்பினால் வருந்த, மரியதாஸும், நாகம்மாவும் ஊரை விட்டுப் போகிறார்கள். மீண்டும் ஒரு மீன்பிடிப் பருவம் முடிவுக்கு வருகிறது.
சில குறிப்புகள்[தொகு]
'வாடைக் காற்று' நாவலின் கதைக்களம் நெடுந்தீவாக இருந்தபோதிலும், அதே இயற்கைச்சூழலில், பனங் காணிகள், மட்டக் குதிரை (Ponies), கரை வலை என்பனவுள்ள பேசாலைக் கிராமத்தில் தான் பெரும்பகுதி படமாக்கப்பட்டது.
இலங்கைத் தமிழ்த் திரைப்படமொன்றின் பாடல்கள் இசைத்தட்டாக முதலிலேயே வெளிவந்தது என்ற பெருமையைப் பெற்றது, 'வாடைக்காற்று' பாடல்கள்தான்.
வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே என்ற பாடலைப் பாடிய ஜோசப் ராசேந்திரன், இலங்கை வானொலியின் ஒரு அறிவிப்பாளர். இந்தப் பாடல் வானொலி மூலம் இலங்கை, இந்திய ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
'விருத்தாசலம்' (கே. எஸ். பாலச்சந்திரன்) பாத்திரத்தில் நடிப்பதற்கு பிரபல சிங்கள நடிகர் காமினி பொன்சேகாவைத் தான் முதலில் அணுகினார்கள்.
பிரபலமான கலைஞர்கள் பலர் ஒன்றிணைந்து நடித்த இந்தத் திரைப்படத்தில் பின்னணிக் குரல் கொடுத்தவர்களும் சளைத்தவர்களல்ல. 'தணியாத தாகம்' வானொலி நாடகத்தில் 'யோக்ம்' பாத்திரத்தில் நடித்த விஜயாள் பீற்றர், 'அப்புக்குட்டி' ரி. ராஜகோபால், அருட்பிதா. கரவையூர்ச் செல்வம் ஆகியோரே அவர்கள்.
வீரகேசரிப் பிரசுரங்களான செங்கை ஆழியானின் வாடைக் காற்று, அ. பாலமனோகரனின் நிலக்கிளி எனும் இரண்டு நாவல்களிடையே ஒன்றைத் தெரிவுசெய்து தரும்படி, இயக்குனர் பாலு மகேந்திராவிடம், அவரது நெருங்கிய நண்பரான தயாரிப்பாளர் சிவதாசன் கேட்டபொழுது, நிலக்கிளி நாவலில் வரும் 'பதஞ்சலி' பாத்திரத்தில் நடிக்க தென்னிந்தியாவிலும் நடிகைகள் இல்லை. 'வாடைக்காற்றை' இலங்கைச் சூழலுக்கேற்ப இலகுவாக படமாக்கலாம்" என்றார் பாலு மகேந்திரா.
vasudevan31355
2nd September 2014, 11:01 AM
கிருஷ்ணாவா! கொக்கா!
'வாடைக்காற்று' மேலதிக தகவல்களுக்கு மிக்க நன்றி சார். அவ்வளவும் உபயோகமான அருமை.
gkrishna
2nd September 2014, 11:03 AM
http://photos1.blogger.com/blogger/2746/1940/320/vaadai%20001.jpg
செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்று என்ற நாவலின் மூலம் ஒரு முகவரி தேடிக்கொண்டவர் எழுத்தாளர் செங்கை ஆழியான். வாடைக்காற்று நவீனம், நாவல் உலகில் ஒரு மைல்கல் என்றார் இரசிகமணி கனக செந்திநாதன். ஈழத்து நாவல் உலகே கண்டிராத அதிசயமாக, செட்டிக்குளம் வாழ் மக்கள் 1974 ஆம் ஆண்டு மாசி 22 ஆம் திகதி விழா எடுத்ததும் இந்த நாவலுக்குத் தான். இந்த நாவலைச் சமீபத்தில் மீண்டும் வாசித்துமுடித்தபோது எனக்குள் இப்படி நினைத்துக்கொண்டேன் நான் "இந்த நாவல் இவ்வளவு கெளரவங்களையும் பெற உண்மையில் தகுதியானதே". இணையமூடாக அரங்கேற்றும் என் முதல் நூல் விமர்சனம் என்பதிலும் நான் பெருமையடைகின்றேன்.
நெடுந்தீவுப் பிரதேச மீனவர் வாழ்வு, வாடை பெயர்ந்ததும் பேசாலை, கரையூர் முதலான பகுதிகளில் இருந்து நெடுந்தீவுக்கு வரும் மீனவர்களுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் ஏற்படும் தொழிற்போட்டி, காதல், குழிபறிப்பு, மீனவர் போராட்டங்கள் இவை தான் இந்நாவலின் மூலக்கரு. சொல்லப்போனால் இந்தக் கதையில் தனியே ஒருவனோ ஒருத்தியோ மையப்படுத்தப்படாமல், பயணிக்கும் பெரும்பாலான கதைமாந்தர்களே நாயகர்கள். ஓவ்வொருவர் பக்கம் தமக்குரிய நியாயம் என்ற வரையறைக்குள் இவர்கள் நன்றாகச் செதுக்கப்பட்டிருக்கிறார்கள். சொல்லப்போனால் இயக்குனர் படம் என்று சொல்வது போல இது செங்கை ஆழியான் இதன் பிரம்மாவாக இருந்து பாத்திரங்களை தனித்துவமானவர்களாகக் காட்டியிருக்கின்றார்.
இவர் அடிப்படையில் ஒரு புவியியல் ஆசிரியர்/ஆய்வாளன் என்பதால் இந்த நாவல் வெறும் கதைக்கோர்வையாக மட்டுமில்லாது மீன்பிடிப்பிரதேச வாழ்வியலையும், அவர்கள் மீன்பிடிக்கும் முறையையும் விளக்கும் விபரணப் படைப்பாகவும் திகழ்கின்றது. மற்றய படைப்பாளிகளிடம் இருந்து தனிக்கென ஒரு பாணியை ஏற்படுத்துகையில் களம் பற்றிய புவியியல் ஆதாரங்களை அவரின் மற்றைய படைப்புக்களிலும் அவதானிக்கலாம். இது வாசகர்களுக்கு சுவாரஸ்த்தையும் புவியியல் அறிவையும் தரும் என்பது மறுக்கமுடியாத உண்மை. தீவிற்கு குறிப்பிட்ட பருவகாலத்தில் வந்துபோகும் பெலிகன் எனப்படும் கூழக்கடா பற்றிய குறிப்பும் இந்நாவலில் வருகின்றது.நெடுந்தீவின் சிறப்பாக இருக்கும் போனிக்குதிரைகள், அவற்றின் சவாரி பற்றிய குறிப்பும் உள்ளது.
இவரின் உருவங்கள் பற்றிப் பேசும் போது நெருடலான ஒரு விடயத்தையும் சொல்லவேண்டும். பெண்களை வர்ணிக்கும் போது அவர்களின் மார்பழகை மையப்படுத்தி சில இடங்களில் ஒரே மாதிரியாக வர்ணிப்பதை அவர் தவிர்த்திருக்கலாம் (உதாரணம் பக் 19)
இக்கதையில் பல சுவாரஸ்யமான பாத்திரங்கள் இருந்தாலும் அனுதாபத்தை அள்ளிப்போவது நாகம்மாவின் முறைமாமன் விருத்தாசலம் பாத்திரம்.கூழக்கடாவை வேட்டையாடிக் கொண்டுபோய் நாகம்மாவைக் கவர அவன் போடும் திட்டமும், கதையின் இறுதியை முடித்துவக்கின்ற அனுதாபத்துக்குரிய பாத்திரமாகவும் அவன் படைக்கப்பட்டிருக்கின்றான்.
படிக்கும் போது அவதானித்த இன்னோர் விடயம், இந்த நாவலை சில இடங்களில் பாத்திரங்களுக்கு இடையில் வரும் உரையாடல் மூலம் கதை நகர்த்தல், இது படிக்கும் போது சுவையாக இருக்கிறதே என்று நினைக்கும் போது, அடுத்த அத்தியாயம் ஏனோ தானோவென்று கடமைக்காக எழுதப்பட்டது போல சிலபக்கங்களில் நிரப்பப்பட்டிருக்கின்றது.
மரியதாஸ் பாத்திரம், மீன்பிடிக்க நெடுந்தீவை நாடி வந்து தொடர்ந்து ஒன்றும் கிடைக்காமல் நொந்து போவது, பின் தன் புதிய யுக்தியைக் கொண்டு மீன்களை அள்ளுவது இந்தச் சம்பவக்கோர்வைகள் ஒரு தேர்ச்சிபெற்ற மீனவனின் யுக்தியோடு அழகாகக் காட்டப்படிருக்கின்றன.
செமியோன் -பிலோமினா காதல், மரியதாஸ் நாகம்மா காதல் இன்னொரு திசையில் பயணப்படும் சுவையான பக்கங்கள்.
இக்கதையில் வரும் பாத்திரங்களின் சம்பாஷணைகளை முழுமையாகப் பேச்சுவழக்கில் எழுதுவதா அல்லது இலக்கணத்தமிழில் எழுதுவதா என்று எழுத்தாளர் திணறியிருக்கிறார் போலும். சில இடங்களில் பாத்திரங்கள் இலக்கணத் தமிழ் பேசுவதன் மூலம் அன்னியப்பட்டிருக்கின்றன.
இந்தக் கதை 1974 ஆம் ஆண்டில் செங்கை ஆழியானின் ஆரம்ப கால எழுத்தாக வந்திருக்கிறது. இதை மீண்டும் விரிவாக எழுதும் போது "செம்மீன்" போன்ற கனகாத்திரமான இன்னும் உயர்ந்த இலக்கியப்படைப்பாக இருக்கும் என நினைக்கிறேன். என் இந்த ஆதங்கத்தை அண்மையில் வானொலிக்காக இவரை நேர்காணல் கண்டபோது கேட்டிருந்தேன்.
" எனக்கும் அந்த உணர்வு இருக்கின்றது, ஆனால் அது எப்பவோ எழுதி முடித்தகதை அதை அப்படியே விட்டுவிடுவோம்" என்றார் செங்கை ஆழியான் என்னிடம்.
நாவலைப் படித்து முடிக்கும் போது, கதையின் அவலமுடிவு மனதைப் பிசைகின்றது. இறுதி அத்தியாயம் படு விறுவிறுப்பாகவும் எழுதப்பட்டிருக்கிறது.
வாடைக் காற்று நாவல் ஒரு காட்டாறு போன்றது. இந்நாவலின் ஆழ அகலத்தை ஒரு குறுகிய விமர்சனப் பார்வையில் அடக்கிவிடமுடியாது. ஈழத்து நாவலை நுகரும் ஓவ்வொரு வாசகனும் கட்டாயம் வாசிக்கவேண்டிய நவீனம் இது. வாடைக்காற்று நாவலைப் படித்து முடிக்கும் போது என் உள்ளுணர்வு சொன்ன விடயம் இதுதான். "ஆஹா என்னதொரு அழகான திரைக்கதை பொருந்திய நவீனம் இது. எமக்கென ஒரு நல்ல திரைப்படத் தொழில்நுட்பக்குழுவும் , நல்லதொரு நடிகர் பட்டாளமும் வரும்போது இந்நாவல் மீண்டும் திரைப்படமாக உருவானால் சர்வதேசப் படங்களுக்கு மத்தியில் துலங்கும் எம் தனித்துவமான படைப்பாக இது திகழும்.
இந்த நாவலின் முக்கியபகுதிகளை எடுத்து இன்னொரு களத்தை மையப்படுத்தி இயக்குனர் பாரதிராஜா தன் கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தில் பயன்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டு உண்டு. இது பற்றியும் நான் அவரின் நேர்காணலில் கேட்டபோது" படப்பிடிப்புக்காக இலங்கை வந்த மேஜர் சுந்தரராஜன் வாடைக்காற்று படத்தைப் பார்த்ததாகவும், பின் தன்னிடம் இந்த நாவல் பிரதியைப் பெற்றதாகவும், பின் அந்தப் பாத்திரப் படைப்புக்களோடு கல்லுக்குள் ஈரம் படம் சில வருடங்களில் வந்ததாகவும் செங்கை ஆழியான் குறிப்பிட்டார். பின் இது பற்றி சுந்தரராஜனிடம் இவர் கேட்டப்போது இந்த நாவலைப் படமாகவில்லையே சம்பவங்களையும் முக்கிய பாத்திரப்படைப்புக்களைத் தானே எடுத்து " கல்லுக்குள் ஈரம்" வந்தது என்றாராம்.83 கலவரத்தில் ஈழத்துத்திரைப்படங்கள் அழிந்தபோது, ஒரு ரீல் மட்டும் தீக்கிரையாகி ஆனால் முக்கிய காட்சிகள் தப்பிவிட்ட வாடைக்காற்று திரைப்படம் தன்னிடம் இருப்பதாக செங்கை ஆழியான் குறிப்பிட்டார்.
வாடைக்காற்று திரைப்படமான போது
கமலாலயம் மூவிஸ் சார்பில் ஏ.சிவதாசன், பா.சிவசுப்பிரமணியம் ஆகியோர் இந்தக் கதையைத் திரைப்படமாக்கினர். இவர்கள் தெரிவு செய்த இன்னொரு நாவல் பாலமனோகரன் எழுதிய நிலக்கிளி . ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான பாலுமகேந்திரா இவ்விரு நாவல்களையும் ஒப்பிட்டு பின் , "நிலக்கிளியில் வரும் பதஞ்சலி பாத்திரத்தில் நடிக்கக் கூடிய நடிகையைத் தென்னிந்தியாவிலேயே தேடமுடியாது , வாடைக்காற்று நாவலை இலங்கையின் சூழலுக்கு ஏற்ப படமாக்கலாம்" என்றாராம்.
நடிகர்கள்: ஏ.ஈ.மனோகரன் (செமியோன்) , டொக்டர் இந்திரகுமார் (மரியதாஸ்), சந்திரகலா (பிலோமினா) , ஆனந்த ராணி (நாகம்மா), எஸ்.ஜேசுரட்ணம் (பொன்னுக்கிழவர்), ஜவாகர் (சுடலைச்சண்முகம்), பிரான்சிஸ்( சவரிமுத்து), கே.எஸ். பாலச்சந்திரன் (விருத்தாசலம்) , கந்தசாமி (சூசை).
ஒளிப்பதிவு: ஏ.வி.எம்.வாசகர்
திரைக்கதை, வசனம்: செம்பியன் செல்வன், செங்கை ஆழியான்
இசை: ரீ.எவ்.லத்தீப்
உதவி இயக்கம்: கே.எஸ்.பாலச்சந்திரன்
இயக்கம்: பிறேம்நாத். மொறாயஸ்
படப்பிடிப்பு ஆரம்பம்: 10.02.77
(கதைக்களம் நெடுந்தீவு என்றாலும் பேசாலையில் 43 நாட்களில் படமாக்கப்பட்டது)
திரையிட்ட தேதி: 30.03.1978
இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் பரவலாகத் தமிழர் அதிகம் வாழும் பகுதிகளில் திரையிடப்பட்டது. அதிக நாட்கள் ஓடிய தியேட்டர் யாழ் ராணி தியேட்டர் 41 நாட்கள்
முதற்தடவையாக சிறந்த படத்துக்கான ஜனாதிபதி விருது (1978) கிடைத்த தமிழ்த் திரைப்படம் இது. யேசுரட்ணம் சிறந்த துணை நடிகராகத் தேர்வு (ஆதாரம்: இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை)
"வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே" ஒரு காலத்திலே இலங்கை வானொலியில் தென்னிந்தியப்பாடல்களுக்கு நிகராக வலம் வந்த பாடல்.
மறக்கமுடியுமா இதை.
http://photos1.blogger.com/blogger/2746/1940/400/vaadai%20002.0.jpghttp://photos1.blogger.com/blogger/2746/1940/320/vaadai%2014.jpghttp://photos1.blogger.com/blogger/2746/1940/320/vaadai%2013.jpghttp://photos1.blogger.com/blogger/2746/1940/320/vaadai%2015.jpghttp://photos1.blogger.com/blogger/2746/1940/320/vaadai%2012.jpghttp://photos1.blogger.com/blogger/2746/1940/320/vaadai%2011.jpghttp://photos1.blogger.com/blogger/2746/1940/320/vaadai%2004.jpg
thanks to ceylon kana prabha
vasudevan31355
2nd September 2014, 11:06 AM
விருத்தாசலமும் பொன்னுக் கிழவரும்
http://photos1.blogger.com/blogger/720/620/1600/VAKA%20Virutha%2002.jpg
mr_karthik
2nd September 2014, 11:09 AM
மீண்டும் மீண்டும் வாதிடுவதால் யாரும் யாருடைய கருத்தையும் மற்றிக்கொள்ளப் போவதில்லையென்று தெரியும். இருந்தாலும் சொல்லியாக வேண்டிய நிலை.
ஒரேயொரு 47 நாட்கள் படத்தின் சிச்சுவேஷன் பாடலுக்காக நான் அந்தப்பதிவை, (சிலர் பார்வையில் ஒப்பாரிப்பதிவை) இடவில்லை. 70 முதல் 75 வரை தமிழ்த்திரையிசை செத்துக்கிடந்தது என்ற போலியான, பொய்யான, மனசாட்சிக்கு விரோதமான தாக்குதலை நடத்திவந்த சிலரின் கருத்தை முறியடிக்கும் வண்ணம், அந்த காலகட்டத்தில் வந்த அருமையான பாடல்களில் சிலவற்றை (எல்லாவற்றையும் அல்ல, சிலவற்றை) பட்டியலிட்டிருந்தாரே தாரிகன் என்ற நண்பர், அவரையும் அதை நமக்குக் காணச்செய்த கிருஷ்ணாஜி அவர்களையும் பாராட்டியிருந்தேன்.
திரும்பத்திரும்ப எம்.எஸ்.வி. ஆள்பார்த்து இசையமைத்தார் என்ற தவறான குற்றச்சாட்டை வன்மையாக மறுக்கிறேன். தனிப்பட்ட நடிகர்கள் மீது சில அபிமானங்கள் இருக்கலாம், அதை தொழிலில் காட்டியதில்லை. காட்டியிருந்தால் ஒரு 'பொன்மகள் வந்தாள்' நமக்குக் கிடைத்திருக்குமா?. ஒன்றுதான் என்று நினைக்கக்கூடாது ஒரு உதாரணத்துக்குத்தான். பிரம்மாண்ட நீரும் நெருப்பும் பாடல்கள் ஹிட்டாகாத நிலையில் சாதாரண பாபு படத்துக்கு அருமையான பாடல்களை ஹிட்டாகித்தந்தவர். பிராப்தம், டாக்டர் சிவா, பொன்னூஞ்சல் படங்களையும் ஓடிய கொஞ்ச நாட்களையும் தன பாடல்களால் ஓட வைத்தவர். இல்லைஎன்று மனசாட்சியுள்ளவர்கள் மறுக்க மாட்டார்கள். இவரா ஆள் பார்த்து இசையமைத்தவர்?. ஜெய்சங்கர் நடித்து மதுரை திருமாறன் இயக்கிய படங்களில் எந்த எம்.ஜி.ஆர். நடித்தார்?. முக்தாவின் சூரியகாந்தி உள்பட பல படங்களில் எந்த எம்.ஜி.ஆர். நடித்தார்?. பாடல்கள் ஹிடாகவில்லையா?. இவரா ஆள்பார்த்து இசையமைத்தவர். 'ஒருசிலரின் கடவுள்' நுழைந்த 76-ல் கூட இவர் பாடல்மூலம் வாணி ஜெயராம் தேசிய விருது பெற்றார்.
இன்னொரு குற்றச்சாட்டு ஒரு சில பாடகர்களையே பயன்படுத்தினார். இதுவும் ஒரு அபத்தக் குற்றச்சாட்டு. சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெய், ரவி குரல்களுக்கு டி.எம்.எஸ். குரல் பொருந்தியது போல யார் குரலும் பொருந்தவில்லை. அதுபோல ஜெமினி, ராஜன், முத்துராமன் ஆகியோருக்கு பி.பி,எஸ். பொருந்தினார் என்பதற்காக அவரைப்பயன்படுத்தினார். ஈஸ்வரியையும் தேவையறிந்து பயன்படுத்தினார். அதற்காக புதியவர்களை அறிமுகப்படுத்தவில்லை என்பதோ அவர்களைப் பயன்படுத்தவில்லை என்பதோ கிடையாது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜேசுதாஸ், ஜானகி, வாணி ஜெயராம் ஆகியோர் மெல்லிசை மன்னரிடம் ஏராளமாக பாடியபிறகுதான் இசைக்கடவுள் வந்தார். இவர்களின் குரல்களை வைத்து தன்னை நன்றாக வளர்த்துக்கொண்டார். இதுதான் உண்மை.
என்ன ஒன்று, இவற்றை விவரமாக எடுத்துரைக்க என்னிடம் மைக் இல்லை. விஜய் ஆதிராஜ் போன்ற விடலைகளின் கையில் மைக் இருக்கிறது. உளறித்தள்ளுகிறார்கள்.
சில நண்பர்கள் புதிய தொடர்களைத் துவங்குகிறார்களாம். துவங்கட்டும். இதுவரை அவர்களின் அனைத்துப்பதிவுகளையும் (அவை ஒருவரிப்பதிவோ அல்லது முழு ஆராய்ச்சியோ) விடாமல் படித்தவன் நான். இனிமேல் சில பதிவுகளை படிக்காமல் தள்ளிவிட வேண்டியிருக்கும். அவ்வளவே...
vasudevan31355
2nd September 2014, 11:11 AM
செமியோனாக நம் பாப் இசை சிலோன் மனோகர்
vasudevan31355
2nd September 2014, 11:17 AM
அழியாத கோலங்கள்/வாடை காற்று/ புகழ் கே. எஸ். பாலச்சந்திரன் அவர்களின் நினைவுகள் | சிறப்புப் பதிவு (படத்தொகுப்புடன்)
கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் பாலச்சந்திரன் என்ற கே.எஸ்.பாலச்சந்திரன் கனடாவில் சுகவீனம் காரணமாக காலமானார். 10 ஜூலை 1944 கரவெட்டியில் பிறந்த இவர் பின் புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்தார்.
இவர் ஈழத்தின் நாடக, திரைப்படக் கலைஞர், எழுத்தாளர், உள்நாட்டு இறைவரித்திணைகளத்தில் வரி உத்தியோகத்தராக பணி புரிந்தவர்.
http://www.vanakkamlondon.com/wp-content/uploads/2014/02/Vadai-Katru-Film-Srilanka-1.jpg
இலங்கை வானொலி நடிகர்களில் ஒருவர். ஏறக்குறைய 20 ஆண்டுளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவையிலும், வர்த்தக சேவையிலும் ஒலிபரப்பான ஏராளமான வானொலி நாடகங்களில் நடித்ததோடு, தணியாத தாகம் என்ற பலரும் அறிந்த வானொலி தொடர் நாடகத்தில் சோமுஎன்ற பாத்திரத்தில் நடித்தவர். இலங்கை ரூபவாகினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாடகங்களானநிஜங்களின் தரிசனம், உதயத்தில் அஸ்தமனம், திருப்பங்கள் போன்றவற்றில் நடித்ததோடு காதம்பரி நிகழ்ச்சியில் பல குறு நாடகங்களை எழுதி நடித்திருக்கிறார்.
1965ல் நெல்லை க. பேரன் எழுதி, நெல்லியடி ஐக்கிய கலாசாலையில் மேடையேறிய “புரோக்கர் பொன்னம்பலம்” என்ற நகைச்சுவை நாடகத்தில் நடிக்கத் தொடங்கி 1990ல் கொழும்பில் வெள்ளி விழா கொண்டாடியவர். இதிகாசம், சமுக, நவீன, நகைச்சுவை, பாநாடகம் என அனைத்து வகையான மேடை நாடகங்களிலும் நடித்தவர். இலங்கையில் வாடைக்காற்று, அவள் ஒரு ஜீவநதி, நாடு போற்ற வாழ்க, ஷார்மிளாவின் இதய ராகம், Blendings (ஆங்கிலம்) அஞ்சானா (சிங்களம்)ஆகிய திரைப்படங்களிலும், கனடாவில் உயிரே உயிரே, தமிழிச்சி, கனவுகள் மென்மையான வைரங்கள், சகா, என் கண் முன்னாலே, 1999 ஆகிய திரைப்படங்களிலும் நடித்தவர்.
இலங்கை வானொலிக்காக ஏராளமான நகைச்சுவை நாடகங்களையும், தனி நாடகங்களையும், தொடர் நாடகங்களையும் எழுதியவர். தொடர் நாடகங்களில் கிராமத்துக் கனவுகள் இவரது பிறந்த இடமான கரவெட்டியை பின்னணியாக கொண்டிருப்பதும், வாத்தியார் வீட்டில் இவர் வாழ்ந்த இடமான இணுவிலை பின்னணியாகக் கொண்டிருப்பதும் தனிச்சிறப்பாகும்.
எமது வானொலியில் “மனமே மனமே” என்ற தொடர் நாடகத்தை எழுதி, இயக்கி தயாரித்து வழங்கியிருக்கிறார். கனவுகளும் தீவுகளும், தலைமுறைகள், குரங்கு கைத்தலையணைப் பஞ்சுகளாய், காரோட்டம், கலாட்டாக்காரர்கள் முதலான 20க்கு மேற்பட்ட மேடை நாடகங்களை எழுதி, இயக்கி, மேடையேற்றியுள்ளார்.
தினகரன், வீரகேசரி முதலான பத்திரிகைகளில் ‘மலர் மணாளன்’ என்ற புனைபெயரில் சிறுகதைகள் எழுதியதோடு, சிரித்திரன் இதழில் பல ‘சிரிகதை’களை எழுதியுள்ளார். தினகரன், ஈழநாடு, முரசொலி போன்ற பத்திரிகைகளில் திரைப்படம், விளையாட்டுத் துறை தொடர்பான பல கட்டுரைகளையும் எழுதினார். ஐரோப்பாவில் வெளிவரும் ‘ஒரு பேப்பர்’ என்ற பத்திரிகையில் ‘கடந்தது..நடந்தது’ எனும் நகைச்சுவை கட்டுரைத் தொடரையும், கனடாவில் “தாய் வீடு” பத்திரிகையில் வாழ்வியல் சம்பந்தமான கட்டுரைத் தொடரையும், “தமிழ் ரைம்” சஞ்சிகையில் “என் கலைவாழ்வில்” என்ற அனுபவத்தொடரையும் எழுதியவர். அண்மையில் தாய்வீடு பத்திரிகையில், “வாத்தியார் வீட்டிலிருந்து வான்கூவர் வரை” என்ற தொடரையும், “தூறல்” என்ற காலாண்டு சஞ்சிகையில் “என் மனவானில்” என்ற தொடரையும் எழுதி வந்தார். “வாடைக்காற்று”, “நாடு போற்ற வாழ்க”, “நான் உங்கள் தோழன்”, “அவள் ஒரு ஜீவ நதி” போன்ற படங்கள் இவரின் ஈழத்து சினிமா உலகின் பங்களிப்புக்கள்.
இலங்கையில் ரூபவாகினிக்காகவும், கனடாவிலுள்ள ரிவிஐ தொலைக்காட்சிக்காகவும் இவர் எழுதிய பல தொலைக்காட்சி நாடகங்களை எழுதியிருந்தார். அவற்றில் திருப்பங்கள் குறிப்பிடத்தக்கது. 2003ல் இவர் ஒளிபரப்பிய ‘Wonderful Y.T.Lingam Show’ இவரது படைப்பே எம்மிடையே முதலாவது தொலைக்காட்சி நிகழ்ச்சி யாகும். “நாதன், நீதன், நேதன்” என்ற நகைச்சுவைதொடரை 2007 இலிருந்து 6 மாதங்களாக எழுதி, நெறிப்படுத்தி ஒளிபரப்புச் செய்தார்.
கனவுகளும் தீவுகளும், தலைமுறைகள், குரங்கு கைத்தலையணைப் பஞ்சுகளாய், காரோட்டம், கலாட்டாக்காரர்கள் முதலான 20க்கு மேற்பட்ட மேடை நாடகங்களை எழுதி, இயக்கி, மேடையேற்றியுள்ளார்.
http://www.vanakkamlondon.com/wp-content/uploads/2014/02/Nadu-Potra-Valka-Srilanka-Film.jpg
http://www.vanakkamlondon.com/wp-content/uploads/2014/02/1959729_10152257168572661_1976149106_n.jpg
இலங்கையில் வாடைக்காற்று, Blendings (ஆங்கிலம்) ஆகிய திரைப்படங்களின் உதவி இயக்குனராகவும் கனடாவில் எங்கோ தொலைவில், மென்மையான வைரங்கள் ஆகிய திரைப்படங்களின் இயக்குனராகவும் செயற்பட்டவர். இவர் தாகம், வாழ்வு எனும் வட்டம் (சிறந்த திரைக்கதைக்கான விருது பெற்றது), உனக்கு ஒரு நீதி (சிறந்த இசைக்கான விருது பெற்றது) ஆகிய குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.
1992ம் ஆண்டில் கொழும்பில் நடைபெற்ற அவுஸ்திரேலியா-இலங்கை டெஸ்ட் துடுப்பாட்டப் போட்டித் தொடரிலும், அதே ஆண்டில் நியூசிலாந்து-இலங்கை அணிகளின் டெஸ்ட் ஆட்டத் தொடரிலும் வானொலி நேர்முக வர்ணனையளராக பங்காற்றியவர். 1991ல் கொழும்பில் நடைபெற்ற ஐந்தாவது தெற்காசிய கூட்டமைப்பின் விளையாட்டு போட்டிகளின் போது, கூடைப் பந்தாட்டத்தின் வானொலி நேர்முக வர்ணனையாளராக பணியாற்றியவர்.
இலங்கை வானொலியில், ‘கலைக்கோலம்’ சஞ்சிகை நிகழ்ச்சியையும், ‘விவேகச் சக்கரம்’ என்ற பொதுஅறிவுப் போட்டி நிகழ்ச்சியையும் தயாரித்து வழங்கியிருக்கிறார்.
1973ல் இலங்கை வானொலி நிலையத்தில் ரசிகர்கள் முன் ஒலிப்பதிவாகி, 1974ல் யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மகாநாட்டில் அரங்கேறி, 33 ஆண்டுகளாக உலகின் பல நகரங்களில் மேடையேறிய ‘அண்ணை றைற்’ இவரது புகழ்பெற்ற தனிநடிப்பு நிகழ்ச்சியாகும்.
அண்ணை றைற், ஓடலி இராசையா, தியேட்டரில் உள்ளிட்ட தனி நடிப்பு நிகழ்ச்சிகள் இறுவட்டாக வெளிவந்துள்ளன. இவர் கரையைத் தேடும் கட்டுமரங்கள் (நூல்), (புதினம், 2009, வடலி வெளியீடு), நேற்றுப் போல இருக்கிறது, (கட்டுரைத் தொகுப்பு, 2011, கனகா பதிப்பக வெளியீடு) ஆகிய நூல்களை வெளியிட்டார்.
கே.எஸ்.பாலச்சந்திரன் எழுதிய ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்” என்ற புதின நூலுக்கு 2009ம் அண்டுக்கான அமுதன் அடிகள் இலக்கிய விருது கிடைத்தது. அவர் எழுதிய “நேற்றுப் போல இருக்கிறது” என்ற கட்டுரைத் தொகுப்பு இலங்கை சாகித்ய விருதுக்காக சிறந்த நூலாக நானாவித பிரிவில் தேர்ந்தெடுக்கபட்டது. “நேற்றுப் போல இருக்கிறது” என்ற கட்டுரைத் தொகுப்பு 2011ல் இலங்கை இலக்கியப் பேரவை – யாழ் இலக்கியவட்டம் வழங்கிய சிறந்த நூலுக்கான (நானாவிதப்பிரிவு) விருதையும் பெற்றது.
gkrishna
2nd September 2014, 11:33 AM
http://photos1.blogger.com/blogger/2746/1940/400/vaadai%207.0.jpghttp://photos1.blogger.com/blogger/2746/1940/320/vaadai%209.jpghttp://photos1.blogger.com/blogger/2746/1940/320/vaadai%206.jpghttp://photos1.blogger.com/blogger/2746/1940/320/vaadai%205.jpghttp://photos1.blogger.com/blogger/2746/1940/320/vaadai%208.jpg
வாடைகாற்றின் மேலும் சில நிழல் படங்கள்
gkrishna
2nd September 2014, 11:42 AM
--கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் அனுபவக் குறிப்பிலிருந்து...
சினிமாத்துறையில் நடிகனாக எனது பிரவேசம் எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்பாராத வகையில் நிகழ்ந்தது. எனது நண்பர் சிவதாசன், மேடை நாடகத்துறையின் மூலம் எனக்கு அறிமுகமானவர், செங்கை ஆழியானின் "வாடைக்காற்று" நாவலை திரைப்படமாக்குவதின் மூலம் சினிமாத்துறையில் கால் வைத்தார்.
வீரகேசரி பிரசுரமாக வெளிவந்த "வாடைக்காற்று" நாவலை நான் வாசித்தபோதே இதுதிரைப்படமாக உருவாக்குவதற்கு ஏற்ற கதை என்று நினைத்தேன். உண்மையில் "விருத்தாசலம்" தான் எனக்கு பிடித்த பாத்திரமாக இருந்தது.
அந்தப்பாத்திரத்தில் காமினி பொன்சேகா நடிக்கப்போவதாக சிவதாசன் ஆரம்பத்தில் எனக்கு சொன்னார்.
பிரேம்நாத் மொறாயஸ் (இவர் தமிழர்தான்) என்பவரை இயக்குனராக போட்டதே அவர் மூலம் காமினி பொன்சேகாவை நடிக்க எடுத்துப்போடலாம் என்ற நம்பிக்கையினால்தான் என்றும் சொல்லப்பட்டது. காரணம் அவர்கள் இருவரும் சிங்கள சினிமாத்துறையில் மிகநெருங்கிப் பணியாற்றியவர்கள்.
ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை.காமினி பொன்சேகா வாடைக்காற்றில் நடிக்க மறுத்துவிட்டார். பலரையும் அந்தப்பாத்திரத்துக்கு யோசித்துவிட்டு, சிவதாசனும் அவரது தேர்வுக்குழுவும் கடைசி, கடைசியாக என்னில் வந்து நின்றார்கள்.
நான் ஒரு மூவி டெஸ்டடுக்கு அழைக்கப்பட்டேன். (மேக் அப் டெஸ்ட் அல்ல) என் நல்ல காலத்துக்கு பிரேம்நாத் மொறாயஸ் என்னிடம் ஆடுவாயா, சண்டைபோடுவாயா, குதிரை ஓடுவாயா என்ற வழ்க்கமான கேள்விகள் எதுவும் கேட்கவில்லை. ஒருமுறை என்னை (படத்தில் இருப்பதைப் போல) நிமிர்ந்து பார்த்தார். அவ்வளவுதான் சரியென்று சொல்லிவிட்டார்.
"சம்மாட்டி" பாத்திரங்களில் நடிப்பதற்கு இருவர் தேர்ந்தெடுக்கப்ப்ட்டார்கள்.ஒருவர் அக்காலத்தில் பிரபலமான பொப்பிசைப் பாடகர். ஏ.ஈ.மனோகரன், அவருக்காவது யாழ்ப்பாண்க் கல்லூரிக் காலத்தில் ஜோ தேவானந்தின் "பாசநிலா" என்ற 16 மி.மி. படத்தில் நடித்த அனுபவம் இருந்தது. ஆனல் 'மரியதாஸ்' சம்மாட்டியாக நடிக்க வந்தவர், ஒரு மருத்துவர், விஞ்ஞான எழுத்தாளரும் கூட.ஆனால் டொக்டர் இந்திரகுமாருக்கு நடிப்பு அனுபவம் இருந்ததாக தெரியவில்லை.
"வாடைக்கற்று" நாவலின் கதைக்களம் நெடுந்தீவு. ஆனால் நாவல் வெளிவந்த காலத்தில், நாவலின் குறிப்பிடப்பட்ட சில உவமைகளையிட்டு.அந்த ஊர்வாசிகளுக்கும் செங்கை ஆழியானுக்கும் முரண்பாடுகள் இருந்தன. இதனால் நாவல் அங்கு பகிரங்கமாக எரிக்கப்பட்டதாகவும் ஒரு கதை அடிபட்டது.இந்த நிலையில் அங்கு படப்படிப்பை வைப்பது உசிதமாகப் படவில்லை. எனவே அதேமாதிரியான ஒரு இடம் என்பதினால் "பேசாலை" தேர்ந்தெடுக்கப்பட்டது. பனைக்கூடல்கள், மட்டக்குதிரை,(Ponies) கரைவலை போடும் மீனவர்கள் என்று பலவகையிலும் நெடுந்தீவுக்கு ஒத்ததாக இருந்தது.அத்தோடு பேசாலைக்கு நெடுந்தீவைப்போல படகில்போக வேண்டியதில்லை. கொழும்பிலிருந்து, மன்னார் புகையிரதத்தில் நேராகப் போய் இறங்கி விடலாம்.
கதையின்படி, விருத்தாசலம், மட்டக்குதிரையில் கையில் முயல் வேட்டைக்காக ஈட்டியுடன் எந்த நேரமும் அலைந்துகொண்டிருப்பவன். தயாரிப்பு நிர்வாகி சிவதாசன், எனக்காக பொலிஸ் குதிரை ஒன்றை வாடகைக்கு பெற்றுக் கொண்டுவரத் தீர்மானித்தார்.ஆனால் கதாசிரியர் செங்கை ஆழியானோ, விருத்தாசலம், மட்டக்குதிரையில்தான் சவாரி செய்யவேண்டுமென்று நிர்த்தாடசண்யமாக சொல்லி மறுத்துவிட்டார்.எனவே எனது எம்.ஜீ.ஆர் கனவு பலிக்காமல் போனது.
VIRUTHASALAMஇந்த இடத்தில் மட்டக்குதிரையைப்பற்றி சொல்லித்தானாக வேண்டும். அது
குள்ளமானது. கட்டக்காலியாக பனைக்கூடல்களில் மேய்ந்து கொண்டு திரியும். உள்ளூர் சிறுவர்கள் எப்படியோ மடக்கிப் பிடித்து ஏறி சவாரி செய்வார்கள். அவர்களே படப்பிடிப்புக்காக எனக்கு ஒரு மட்டக்குதிரையை பிடித்து தந்தார்கள். அதன் மேல் சவாரி செய்வது சிரமமாக இருந்தது. புது ஆள் (நான் தான்) ஏறியதும் சண்டித்தனம் செய்தது. அடிக்கடி என்னை தூக்கி மணலில் எறிந்தது. ஆனால் நாளைடைவில், அதற்கும் 'சினிமா ஆசை' வந்து விட்டது போலும். என்னோடு சகஜமாக ஒத்துழைத்து நடித்த்து. கீழே உள்ள படத்தில், வாசலடியில் தெரிகிறதே..அதுதான்..
விருத்தாசலம் நாகம்மாவிடம்
http://2.bp.blogspot.com/-8DanUZLb-K0/Uxud_eK5NEI/AAAAAAAACDU/K6L-1wwqP7E/s1600/6666666666.JPG
(நான் விரும்புகிற ஒரே ஒரு சொத்து இந்த வீட்டிலைதான் இருக்கு. அதை எக்காரணம் கொண்டும் இழக்க தயாரில்லை) நானும், ஆனந்தராணி ராஜரட்னமும் (பாலேந்திரா) இதற்கு முதலே பல வானொலி நாடகங்களில், குறிப்பாக இள்ங்கீரன் எழுதிய" வாழ்ப்பிறந்தவர்கள்" தொடர்நாடகத்தில் இணைந்து நடித்திருந்ததினால் எங்களுக்குள் ஒரு புரிந்துணர்வு இருந்தது. எனவே வாடைக்காற்றில் இருவரும் சேர்ந்து நடிப்பது சிரமமாக இருக்கவில்லை. .
Viruthasalam and Semiyon(A.E.Manoharan)
http://3.bp.blogspot.com/-k6KI7XjCzn0/Uxud4YWWlgI/AAAAAAAACC0/sYQR_Eh7Qmg/s1600/7777777.jpg
அதேபோல பொப்பிசைப்பாடகர் ஏ.ஈ.மனோகரனும் இலங்கை வானொலியில்தயாரிப்பளராக வேலை பார்த்த காலத்தில் இருந்தே என்னுடைய நண்பர். தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்கவேண்டுமென்பதெ அவரது கனவாக இருந்த்தது. வாடைக்காற்றில் நடித்த பின்னர், தென்னிந்தியா சென்று, இலங்கையரான இயக்குனர் வி.சி.குகநாதனின் உதவியால், மாங்குடி மைனர் என்ற படத்தில் நடித்து, தொடர்ந்து, பல தமிழ், தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்தவர். அண்மைக்காலத்தில், சின்னத்திரை நாடகங்களில் தோன்றி வருகிறார்.
படப்பிடிப்பின் பெரும்பகுதி பேசாலையிலும், மிகுதி யாழ்ப்பாணத்தில், கல்லுண்டாய் வெளி, காக்கைதீவு, துணைவி (வட்டுக்கோடை), குரும்பசிட்டி போன்ற பகுதிகளிலும் நடந்தன. ஏ.ஈ.மனோகரன்,சந்திரகலா சம்பந்தப்பட்ட காதல் பாடல் காட்சியொன்று, வல்லிபுரக் கோவில் சூழ்லில் உள்ள மணல் திட்டிகளில் படமாக்கப்பட்டது.
இவர்களைவிட, "சுடலைச் சண்முகம்" என்ர்ற முரட்டுப்பாத்திரமொன்றில் பிரபல நடிகரான கே.ஏ.ஜவாஹர் நடித்தார். அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
Viruthasalam and Shanmugam (K.A.Jawahar)
http://4.bp.blogspot.com/-KOVczpRqBEI/UxueHC3X6JI/AAAAAAAACDs/KGV6D1wDR50/s1600/88888888888.jpg
பாட்டனாராக நடித்த எஸ்.ஜேசுரத்தினம் அவ்வாண்டின்(1978) சிரந்த தமிழ் துணை
நடிகராக தேசிய விருது பெற்றார். வாடைக்காற்று 1978ம் ஆண்டின் சிறந்த
தமிழ்ப்படம் என்ற ஜனாதிபதி விருது பெற்றது. கே.கந்தசாமி, வசந்தா அப்பாத்துரை, பிரான்சிஸ் ஜெனம், எஸ்.எஸ்.கணேசபிள்ளை, லடிஸ் வீரமணி, சி.எஸ்.பரராஜசிஙகம், சிவபாலன், நேரு, டிங்கிரி, சிவகுரு போன்ற பல கலைஞர்கள் நடித்தார்கள்.
வாடைக்காற்று திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ரி.எப்.லத்தீப். ஈழ்த்து இரத்தினம் எழுதிய "வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே" என்ற புகழ்பெற்ற பாடலை, ஜோசெப் இராஜேந்திரனும் குழுவினரும் பாடியிருந்தார்கள். இலங்கைத் திரைபடப் பாடல்களில் அதிகமாக வானொலியில் ஒலித்த பாடல் இது. முன்னர் குறிப்பிட்ட காதல் பாடலை (அலைகடல் ஓயாதோ) முத்தழ்குவும் சுஜாதாவும் பாடினார்கள். இவற்றைவிட "ஆடும் எந்தன் நெஞ்சில்" என்ற தனிப்படலையும் சுஜாதா பாடினார். திரைப்படம் வெளிவருவதற்கு முன்னரே எனது முயற்சியால், புறக்கோட்டை விசாகமால்ஸ் நிறுவனத்தின் அதிபர் ஹெட்டியாரச்சி இந்தப்பாடல்களை இசைத்தட்டாக வெளியிட்டார்.
வாடைக்காற்று திரைப்படத்தின் உதவி இயக்குனராகவும் என்னை நியமித்தார்கள். நானும், படத்தின் எடிட்டர் இராமநாதனும், உதவி எடிட்டர் எல்மோ ஹலிடேயும் (தற்போது சிங்கள திரைப்பட இயக்குனர்) சிலோன் ஸ்டுடியோவில் படத்தை தொகுத்து கொண்டிருக்கும்போது, வெளியில் 1977 கலவரம் உக்கிரமாக நிகழ்ந்து கொண்டிருந்தது. 13 நாட்கள், இரவும், பகலும் ஸ்டுடியோவிலேயே தங்கி, படத்தை முடித்தது தனி அனுபவம்,
"வாடைக்காற்று" 1978ல் வெளியானது. யாழ்ப்பாணத்தில் ராணி தியேட்டரில் திரையிடப்பட்டது.அங்கு 41 நாட்கள் தொடர்ந்து ஓடியது. அதே நேரத்தில், கொழும்பில் கெயிட்டியிலும், படப்பிடிப்ப்ய் நடந்த பேசாலை போலின் தியேட்டரிலும் 21 நாட்கள் ஓடியது. அதே போல வவுனியா முருகனில் 20 நாட்களும், திருமலை நகரில் சரஸ்வதியில் 20 நாட்களும் ஓடியது.
http://4.bp.blogspot.com/-AzhN5rSAmq4/UxueI30IsKI/AAAAAAAACD0/nlMj8AG7yXE/s1600/pppppppppppp1.jpg
mr_karthik
2nd September 2014, 11:46 AM
டியர் வாசு சார்,
இதுவரை பார்த்திராத 'வாடைக்காற்று' படப்பாடலைத் தந்து, திறமை எங்கிருந்தாலும் அதை நமது மதுரகானம் திரி போற்றும் என்று நிரூபித்துள்ளீர்கள். கிருஷ்ணாஜி அவர்கள் தந்துள்ள மேலதிக விவரங்கள் (அடேயப்பா...!!!, எவ்வளவு தகவல்களைத் திரட்டியுள்ளார்) தங்கள் பதிவுக்கு மேலும் பலம் சேர்க்கிறது. பாடல் உண்மையிலேயே அருமையாக உள்ளது. இணைப்பாக படத்தின் ஸ்டில்கள் கூடுதல் அழகு சேர்க்கின்றன.
முதன்முறையாக இப்போதுதான் இப்பாடலைக் கேட்கிறேன். முதல் தடவையே மனதை ஈர்க்கிறது. இந்த பாடல்களையெல்லாம் எங்கிருந்துதான் தேடிப் பிடிக்கிறீர்களோ. மிகவும் அருமை சார்...
gkrishna
2nd September 2014, 11:54 AM
நன்றி கார்த்திக் சார் உங்கள் பாராட்டு மிக்க மகிழ்வை தருகிறது
gkrishna
2nd September 2014, 12:01 PM
வாடைகாற்று அசைக்கமுடியாத இலங்கைத் தமிழரின் சரித்திர சாதனை : நாவுக் அரசன்
http://inioru.com/wp-content/uploads/2014/03/vadaikkaaRRu-300x211.jpg
Tweet
யாழ்பானத்தில் ராணி தியேடரில் ஓடிய , இலங்கைக் கலைஞ்சர்கள் பலர் ஒன்றாக சேர்ந்து உருவாக்கிய ஒரு முக்கியமான படைப்பு வாடைகாற்று என்ற கறுப்பு வெள்ளைப் படம், அது இன்று வெறுமே அதைப் பார்த்தவர்களின் நினைவுகளில் மட்டுமே வாழ வேண்டிய ஒரு அவல சூள்நிலை இலங்கைத் தமிழரின் வரலாற்றில் நடந்திருப்பது ஜோசிக்கவே கஷ்டமா இருக்கு. மீனவ சமூகத்தின் வாழ்வினை கூறும் 1978 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற விருதினைப் பெற்ற தமிழ்த் திரைப்படமொன்றில்,பாடல்கள் இசைத்தட்டாக முதலிலேயே வெளிவந்தது என்ற பெருமை பெற்ற ‘வாடைக்காற்று’ படத்தை இன்று இப்படி நான் கதை வடிவில் எழுதுவதை நினைக்க உண்மையில் கவலையா இருக்கு, இத்திரைப்படத்தின், ஒரு சின்னப் துண்டுப் படம் தன்னும் யாரிடமும் இல்லை என்கிறார்கள் ,அது எவளவு பெரிய இழப்பு என்று இள வயதில்என்னைப்போல அந்தப் படம் பார்த்த பலருக்கு தெரியும்.
செங்கை ஆழியன் என்ற கலாநிதி கந்தையா குணராசா எழுதிய வீரகேசரிப் பிரசுரமா வந்த வாடைக்காற்று நாவலாக வாசித்த காலத்திலேயே கொஞ்சம் ஜனரஞ்சகமா. கிளாசிகல் சுவாரசியமா இருந்த அதை , நாவலின் பெயரானா வாடைக்காற்று பெயரிலேயே திரைப்படமாக்க, கதை நெடுந்தீவில் நடப்பதால் அங்கேதான் ஏ. வீ. எம். வாசகம் என்ற காமராமான் ,கமராவை வைச்சு சுழட்டி எடுத்து இயற்கைக்கு உயிர் கொடுத்து இருப்பார் எண்டு நினைத்திருந்தேன், உண்மையில், வெள்ளித் திரையில் கறுப்பு வெள்ளை படத்தொகுப்பிலும் மின்னிய ,கடல் கரை, அதை தழுவும் அலைகள், பனங் காணிகள், கன்னாப் பத்தைகள் ,பனை வடலிகள், கோவேறு கழுதைகள்,பிளமிங்கோ பறவைகள், மணல் கும்பிகள் எல்லாம் ,கமலாலயம் மூவிஸ் தயாரித்த இந்த திரைப்படம் மன்னார் பகுதியில் உள்ள பேசாலையிலும், வட்டுக்கோட்டை, கந்தரோடை, கல்லுண்டாய், வல்லிபுரம் ஆகிய பகுதிகளிலும் படமாக்கப்பட்டது என்று படித்த போது ஆச்சரியமா இருந்தது.
வாடைக்காற்று காலத்தில் மன்னாரில இருந்து வந்து வாடி போட்டு மீன் பிடிக்கும் வெளியூர்க்காரர்களுக்கும், உள்ளூர் வாசிகளுக்கும் ஏற்படும் உறவு, பகை, காதல் ,ஒரு கற்பழிப்பில் சூடு பிடிச்சு, ஒரு கொலையில் முடியும் இதுதான் கதை . கதை இரண்டு பருவங்களில் ,பிளமிங்கோ பறவைகள் ரசியாவின் சைபிரியாவில் இருந்து நெடுந்தீவு வந்து இறங்க,அவைகளின் வரவோடு கதை தொடங்கி , மனிதர்களின் விரிசல்களோடு கதை நடக்கும். சில வருடம் முன் மன்னாரில் இருந்து வந்து வாடிவீடு கட்டி தொழில் செயத சம்மாட்டி செமியோன் ஆக பொப் இசைப் பாடகர் மனோகரன் நடிக்க , உள்ளூர்ப் பெண்ணான பிலோமினா என்ற பெண்ணாக சந்திரகலா நடித்து இருந்தார். செமியோனுக்கும்,பிலோமினாவுக்கும் இடையில் இருந்த ஒரு வித காதல் கலந்த உறவு, அவளது அப்பா , அண்ணன் ஆகியோருடன் செமியோன்க்கு ஏற்பட்ட மனக் கசப்பினால் முறிந்து போய் விடுகிறது.
உள்ளூர்க்காரரான பொன்னுக்கிழவர் ஆக நடித்த “முகத்தார் வீடு ” புகழ் ஜேசுரட்னம், பெற்றார் இல்லாத தன் பேத்தி நாகம்மாவை கஷ்டப்பட்டு வளர்த்து வருகிற அவர், உள்ளுரில் கோவேறு கழுதையில் சுற்றித் திரியும், பத்தைக் காடுகளில் முயல் பிடிக்கிற அவளது முறை மாப்பிள்ளையான விருத்தாசலம் ஆக நடித்த அண்மையில் மறைந்த கே எஸ் பாலச்சந்திரனுக்கு அவளை கலியாணம் செய்து வைக்கவேண்டுமென்று ஆசைப்பட, மன்னாரில் இருந்து வந்த சம்மாட்டி வேதக்கார செமியோன்,சைவக்கார நாகம்மாவையும் மனம்மாற்றி மயக்கிக் கொண்டுபோக சண்டை தொடங்குது.
இந்தப் படத்தில மரியதாஸ் என்ற பாத்திரத்தில் நடித்த ,வைத்திய நிபுணர்,சில வருடம் முன் லண்டனில் மறைந்த டாக்டர் இந்திரகுமார் சிமியோனுகுப் போட்டியா வர சம்மாட்டியா நடித்து இருந்தார், ஒரு டாக்டர் எதுக்கு தமிழ் சினிமாவில நடிச்சார் எண்டு இன்னுமே விளங்கவில்லை. செமியோன் சம்மாட்டி வழக்கமாக மரியதாஸ் வாடி போடும் இடத்திலே பலாத்காரமா வாடி போட்டுத் தொழில் செய்ய, பணத்தைக் காட்டி உள்ளூர் மீனவத் தொழிலாள்ர்களை தன்பக்கம் இழுக்க, இவளவு நாட்டாண்மை செய்தும் செமியோனுக்கும், மரியதாஸுக்கும் நடக்கும் தொழில் போட்டியிலும் மரியதாஸுக்கே அதிகம் லாபம்,தொழில் வெற்றி கிடைக்க தொடங்க கதையில் வாடைக்காற்று அடிக்க தொடங்குது.
டாக்டர் இந்திரகுமார் அவரது தொழில்சார் துறையாகிய மருத்துவத்துறையில் நிபுணராக விளங்கியதுபோதும்,தமிழ் மொழியின் மீதும், நடிப்புத் துறைமீதும் அதிகம் விருப்பம் இருக்க அவருடைய திறமைக்குச் சான்றாக அவர் மரியதாஸ் ஆகா நடித்த வாடைக்காற்று திரைப்படம் ஜனாதிபதி விருதினைப் பெற்றுக் கொடுத்திருக்கு. எழுத்தாளராகவும், மருத்துவராகவும் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கிய டாக்டர் இந்திரகுமார் 1983 கலவரத்தில் லன்டனுகுப் புலம் பெயர்த்து 25 வருடங்கள் அங்கே பிரபல வைத்திய நிபுணரா வேலை செய்த அவர்தான் வாடைக்காற்றுபடத்தில , உயர்த்திக் கட்டிய சரத்தோட , சேட்டும் போடாமல், ” அப்புவைக் கேட்டுத்தான் எல்லாம் செய்வியா ” எண்டு ஒரு ” பன்ச் டயலக் ” எப்பவுமே அவரின் காதலி நாகம்மாவிடம் குறும்பாகக் கேட்டு ,கடற்கரை எங்கும் மணல் வெளியில்க் காவியம் எழுதிய மரியதாஸ் எண்டு பலருக்கு தெரியாமலே போனது…..
சுடலைச் சண்முகம் என்ற பாத்திரமாக ஜவாஹர் பெர்னாண்டோ நடித்து இருந்தார் ,உண்மையில் அந்தப் பாத்திரம் தான் படத்தின் கதையில் முக்கியமான பல திருப்பங்களைக் கொண்டுவரும் .ஊர்த் திருவிழா நடக்கிற நேரம் , செமியோன் சம்மாட்டி தன் காதலி பிலோமினாவை ரகசியமாக சந்திக்கிற இரவு இருட்டு நேரத்தில , இந்த நேரத்தில் யாரோ மரியதாஸ் சம்மாட்டியின் வாடிக்கு தீ வைத்து விட. அதைப் பார்க்க செமியோன் அவசரமாகப் போக, தனியாக இருட்டில் போன சிமியோனின் மீன் கொத்தி பறவை போல அழகான காதலி பிலோமினாவை, சுடலைச் சண்முகம் கற்பழித்து கொலை செய்து விட நடந்ததை ஊகித்து அறிந்து கொண்ட விருத்தாசலம் சுடலைச் சண்முகத்தை துரத்திச் சென்று, தனது ஈட்டியினால் எறிந்து கொல்ல , விருத்தாசலம் பாத்திரமாகவே மாறி கேஸ் எஸ் பாலச்சந்திரன் அதில் நடித்து இருகிறார்..
இவளவு குழப்பமும் வெளியூர் மீனவர்களால் உள்ளுரில் நடக்க அதை எங்கள் செங்கை ஆழியன் கதையாக எழுத வெள்ளித்திரையில் பல சிங்களத் திரைப்படங்களை இயக்கிய பிரேம்நாத் மொறாயஸ் டைரக் செய்து, கே. எஸ். பாலச்சந்திரன் உதவி இயக்குனராக பணியாற்றி, ஈழத்து இரத்தினம், சில்லையூர் செல்வராசன்எழுதிய, பாடல்களை ஜோசப் ராசேந்திரன், வி.முத்தழகு, சுஜாதா அத்தநாயக்க பாட, இராஜகோபால் என்ற இயற்பெயருடைய செம்பியன் செல்வன் திரைக்கதை எழுத , ஒரு சம்பவம் , ஒரு கதை உயிர் ஆகி எங்கள் உள்ளம் கொள்ளை கொண்ட வாடைகாற்று அசைக்கமுடியாத இலங்கைத் தமிழரின் சரித்திர சாதன..
இலங்கை, இந்திய ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற அந்தப் படத்தின் ” தீம் மூசிக் “ஆனா, இலங்கை வானொலியின் அறிவிப்பாளர் ஜோசப் ராசேந்திரன் பாடிய இதயம் பிழியும்” வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே ,நல்ல வாழ்க்கை உண்டு எங்களுக்கு ஓரத்திலே …” என்ற பாடலைப் பின்னணியில் நீலக்கடல் அலைகள் பாடிக்கொண்டிருக்கும் போது, விருத்தாசலம் ஆசையோடு கனவோடு காத்திருந்த அவரின் காதலி மரியதாஸ் சம்மட் டியோடு போக மனநிலை நொந்துபோக , சம்மடடி செமியோனும் பிலோமினா கற்பழிக்கப் பட்டுக் கொலை செயப்பட இழப்பினால் வருந்த, மரியதாஸ சம்மாட்டி நாகம்மாவை ஊரை விட்டுப் கூடிக்கொண்டு போக ,கூளைக்கிடாய் என்ற பிளமிங்கோ பறவைகளும் தங்கள் சொந்த ரஸ்சிய நாட்டு சைபிரியாவுகுப் போக ,மீண்டும் ஒரு மீன்பிடிப் பருவம் முடிவுக்கு வருகிறது. வாழ்கை தொடருது ….
கண்களில் கண்ணீரை வரவழைத்து , உலகம் மறந்து கடற்கரை மணல் வெளி எங்கும் வலியோடு யதார்த்தமாய் வாழ்க்கை சொன்ன அழகின் அற்புதம் வாடைக்காற்று’ , தென்னிந்திய சினிமா ஜிகிணா முகப் பூச்சு , அளவுக்கு அதிகமான மேக் அப் , நேரம் கெட்ட நேரத்தில கனவுக் காட்சி, ஹீரோவுகுக் கும்மியடிக்கும் குறுப் டான்ஸ் , இதுபோல ஒண்டுமே இல்லாமல் , மீனவ மக்களின் வியர்வையின் வாசத்தை, அவர்களின் இளகிய இதயத்தை திரையில உணரவைத்த அந்தப் படம், ஒரு கவிதை போல ஜோசிக்க வைத்து முடிவு இன்னொரு பருவத்தின் தொடக்கமாகி முடிகிறது…………………
நாவுக் அரசன்
28-02-2014
ஒஸ்லோ.
gkrishna
2nd September 2014, 12:21 PM
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
இப்பதிவில் இலங்கையிலிருந்து வெளிவந்த திரைப்படங்களையும் சில திரைப்படங்களின் விபரங்களையும் உள்ளடக்க முனைகிறேன் நான் சிறியவன் ? ? சில திரைப்படங்கள் விடுபட்டிருக்கலாம். தெரிந்தவர்கள் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தினால் மிகவும் உதவியாயிருக்கும் நூலகமொன்றில் நேரம்போகாமல் ? ? புத்தகமொன்றைப்புரட்டிக்கொண்டிருந்த போது கண்ணுற்றேன் விடுவேனா ! உடனே எழுதி முடித்துவிட்டேன் எனினும் ஏனைய திரைப்படங்களின் முழுமையான விபரம் கிடைக்கவில்ல
1 ) சமுதாயம் (1962)
2) தோட்டக்காரி (1963)
3) கடமையின் எல்லை (1966)
இயக்குனர் : எம். வேதநாயகம்
தயாரிப்பாளர் : எம். வேதநாயகம்
கதை : வில்லியம் ஷேக்ஸ்பியர்
திரைக்கதை : வித்துவான் ஆனந்தராயர்
நடிப்பு : தேவன் அழகக்கோன் , எம். உதயகுமார் , பொனி ரொபேர்ட்ஸ் , ஏ.,ரகுநாதன் , ஐராங்கனி , ஜி. நிர்மலா , ஆர். அமிர்தவாசகம் , எஸ். ரி. அரசு , கே. துரைசிங்கம் , ஆர். காசிநாதன் , எஸ். பஸ்தியாம்பிள்ளை
* யாழ்ப்பாண ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆங்கில விரிவுரையாளரான எம். வேதநாயகத்தினால் தயாரிக்கப்பட்டது. இது ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்(Hamlet) என்ற ஆங்கில நாடகத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட சரித்திரப்படம் ஆகும்.
4) பாச நிலா (1966)
5) டாக்சி டிறைவர் (1966)
6) நிர்மலா (1968 )
7) மஞ்சள் குங்குமம் (1970)
8) வெண் சங்கு (1970)
9) குத்துவிளக்கு (1972)
இயக்குனர் : மகேந்திரன்
தயாரிப்பாளர் : எஸ். துரைராஜா
நடிப்பு : ஆனந்தன் , ஜெயகாந்த் , லீலா நாராயணன் , பேரம்பலம் , எம். எஸ். ரத்தினம் , எஸ். ராம்தாஸ் , நாகேந்திரா
பெரும்பாலான வெளிப்புறக்காட்சிகள் வடமராட்சியில் பருத்தித்துறையை அண்டிய பகுதிகளில் படமாக்கப்பட்டன. பிரபல கட்டிடக்கலை நிபுணரான வீ. எஸ். துரைராஜா தயாரித்தார்
10) மீனவப் பெண் (1973)
11) புதிய காற்று (1975)
12) கோமாளிகள் (1976)
13) பொன்மணி(1977)
இயக்குனர் : தர்மசேன பத்திராஜா
நடிப்பு : பாலச்சந்திரன் , சுபாஷினி , சித்திரலேகா மெளனகுரு , எம். எஸ். பத்மநாதன் , கலாநிதி செ. சிவஞானசுந்தரம்(நந்தி) , கைலாசப்தி
* சிங்களத் திரைப்பட இயக்குனரான தர்மசேன பத்திராஜாவினால் இயக்கப்பெற்றது.
14) காத்திருப்பேன் உனக்காக (1977)
இயக்குனர் : எஸ். வி. சந்திரன்
தயாரிப்பாளர் : எம். ஜெயராமச்சந்திரன், எம். தீனதயாளன், எம். செல்வராஜ்
கதை : எம். செல்வராஜ்
திரைக்கதை : நவாலியூர் நா. செல்லத்துரை
நடிப்பு : என். சிவராம்,கீதாஞ்சலி , ரவி செல்வராஜ்,விஸ்வநாதராஜா ,நவாலியூர் நா. செல்லத்துரை ,ருக்மணி தேவி,எம். எம். ஏ. லத்தீப் , தர்மலிங்கம்
* சிறந்த நடிப்பு,இனிய பாடல்கள், நல்ல திரைக்கதை என்று இருந்தபோதிலும், நாட்டில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக, எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
15) நான் உங்கள் தோழன் (1978)
இயக்குனர் : எஸ். வி. சந்திரன்
தயாரிப்பாளர் : வி. பி. கணேசன்
கதை : கலைச்செல்வன்
நடிப்பு : வி. பி. கணேசன் , சுபாஷினி , எஸ். ராம்தாஸ் , எம். எம். ஏ. லத்தீப் , கே. ஏ. ஜவாஹர் , கலைச்செல்வன் , ஹரிதாஸ் , ருக்மணி தேவி , ஜெனிடா , சந்திரகலா , எஸ். என். தனரட்னம் , விமல் சொக்கநாதன் , ஜெயதேவி
1978ம் ஆண்டு இலங்கை திரைப்பட உலகிற்கு ஒரு முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டில் மொத்தம் 6 ஈழத்து தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. வி. பி. கணேசன் தனது முதலாவது படமான புதிய காற்றுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து எடுத்த திரைப்படம்.அவரே இந்தமுறையும் பிரதான பாத்திரத்தில் நடித்தார்.
* கொழும்பு, மலையகம் என்பவற்றோடு யாழ்ப்பாணத்து நகர வீதிகளிலும், மட்டக்களப்பு மாமாங்கத் திருவிழாவிலும் கூட படப்ப்டிப்பு நடத்தினார்கள்.
* அக்கால இந்தியப்படங்களில் சிலவேளைகளில் அரசியல் தலைவர்களின் மகாநாடுகள், இறுதி ஊர்வலங்கள் என்பனவற்றை இணத்துக் கொள்வதைப் போல, இத்திரைப்படத்தில் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களின் இறுதி ஊர்வலம் இணைக்கப்பட்டது.
16) வாடைக்காற்று (1978)
இயக்குனர் : பிரேம்நாத் மொறாயஸ்
தயாரிப்பாளர் : ஏ. சிவதாசன், ஆர். மகேந்திரன், எஸ். குணரட்னம்
கதை : செங்கை ஆழியான்
திரைக்கதை : செம்பியன் செல்வன், கே. எம். வாசகர்
நடிப்பு : ஏ. இ. மனோகரன் , கே. எஸ். பாலச்சந்திரன் , Dr.கே. இந்திரகுமார் , சந்திரகலா , ஆனந்தராணி , இராசரட்னம் , எஸ். ஜேசுரட்னம் , ஏ. பிரான்சிஸ் , கே. ஏ. ஜவாஹர் , எஸ். எஸ். கணேசபிள்ளை , ஜெயதேவி , லடிஸ் வீரமணி , டிங்கிரி கனகரட்னம் , சிவகுரு , சிவபாலன் , நேரு
கமலாலயம் மூவிஸ் தயாரித்த இந்த திரைப்படம் மன்னார் பகுதியில் உள்ள பேசாலையிலும், வட்டுக்கோட்டை, கந்தரோடை, கல்லுண்டாய், வல்லிபுரம் ஆகிய பகுதிகளிலும் படமாக்கப்பட்டது. மீனவ சமூகத்தின் வாழ்வினை கூறும் இத்திரைப்படம் 1978 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற விருதினைப் பெற்றது.
* பல சிங்களத் திரைப்படங்களை இயக்கிய பிரேம்நாத் மொறாயஸ் இந்த திரைப்படத்தை இயக்கினார். கே. எஸ். பாலச்சந்திரன் உதவி இயக்குனராக பணியாற்றினார். ஈழத்து ரத்தினம், சில்லையூர் செல்வராசன் ஆகியோர் இயற்றிய பாடல்களை ஜோசப் ராசேந்திரன், முத்தழகு, சுஜாதா அத்தநாயக்க ஆகியோர் பாடினார்கள். நடன அமைப்பை வேல் ஆனந்தனும், சண்டைப் பயிற்சியை நேருவும் கவனித்துக் கொண்டார்கள்.
* 'வாடைக் காற்று' நாவலின் கதைக்களம் நெடுந்தீவாக இருந்தபோதிலும், போக்குவரத்துச்சிரமங்களின் காரணமாக அதே இயற்கைச்சூழலில், பனங் காணிகள், மட்டக் குதிரை (Ponies), கரை வலை என்பனவுள்ள பேசாலைக் கிராமத்தில் தான் பெரும்பகுதி படமாக்கப்பட்டது.
* இலங்கைத் தமிழ்த் திரைப்படமொன்றின் பாடல்கள் இசைத்தட்டாக முதலிலேயே வெளிவந்தது என்ற பெருமையைப் பெற்றது, 'வாடைக்காற்று' பாடல்கள்தான்.
* வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே என்ற இந்தப் பாடல் வானொலி மூலம் இலங்கை, இந்திய ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
மேலும் விபரங்களுக்கு கானாபிரபா அண்ணாவின் வாடைக்காற்று பற்றிய பதிவு
17) தென்றலும் புயலும் (1978)
இயக்குனர் : எம். ஏ. கபூர்
தயாரிப்பாளர் : மருத்துவர் எஸ். ஆர். வேதநாயகம்
திரைக்கதை : எஸ். ஆர். வேதநாயகம்
நடிப்பு : சிவபாதவிருதையர் , ஹெலன்குமாரி , சாம்பசிவம் , எஸ். ஆர். வேதநாயகம் , சித்தி அமரசிங்கம் , ஏ. ஜவாஹர் , டீன் குமார் , செல்வம் பெர்னாண்டோ , சந்திரகலா , தனரட்னம
யாழ்ப்பாணத்தில் ஒரேநேரம் "லிடோ" திரையரங்கில் "தென்றலும் புயலும்" திரைப்படமும், "ராணி" திரையரங்கில் "வாடைக்காற்று" திரைப்படமும் காண்பிக்கப்பட்டன. இப்படி இரண்டு ஈழத்து தமிழ்த்திரைப்படங்கள் ஒரு நகரத்தில் சமகாலத்தில் திரையிடப்படுவது மிகவும் அரிதானதென அந்தக்கால இளைஞர்கள் கதைத்தனர்
18) தெய்வம் தந்த வீடு (1978)
19) ஏமாளிகள் (1978)
இயக்குனர் : எஸ். இராமநாதன்
தயாரிப்பாளர் : ஏ. எல். எம். மவுஜூட்
கதை : கே ஏ எஸ். ராம்தாஸ்
நடிப்பு : என். சிவராம் , ஹெலன்குமாரி , ராஜலட்சுமி , ரி. ராஜகோபால் , எஸ். செல்வசேகரன் , கே. ஏ. ஜவாஹர் , இரா பத்மநாதன்
இசை : கண்ணன் - நேசம்
கோமாளிகள் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து எஸ். ராம்தாஸ் கதை, வசனம் எழுதி வெளியிட்ட இரண்டாவது படம்.
20) அனுராகம் (1978)
இயக்குனர : யசபாலித்த நாணயக்கார
தயாரிப்பாளர் : யசபாலித்த நாணயக்கார
திரைக்கதை : பி. எஸ். நாகலிங்கம்
நடிப்பு : என். சிவராம் , சந்திரகலா , அனோஜா , எஸ். என். தனரட்னம் , எஸ். விஸ்வநாதராஜா , டொன் பொஸ்கோ , செல்வம் பெர்னாண்டோ
* சமகாலத்தில் தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே கதை படமாக்கப்பட்டது .கீதிகா என்ற பெயரில் சிங்களப் படமாக தயாரித்தார்கள்.பிரதான பாத்திரங்களில் சிங்களப் படத்தில் விஜய குமாரணதுங்கவும், மாலினி பொன்சேகாவும் நடித்தார்கள்.
* இத்திரைப்படத்தை தயாரித்து இயக்கிய யசபாலித்த நாணயக்கார என்பவரே இதே போல இரண்டு மொழிகளிலும் படமாகிய நாடு போற்ற வாழ்க திரைப்படத்தையும் இயக்கியவர். இவர் இடதுசாரி அரசியல்வாதியான வாசுதேவ நாணயக்காரவின் உடன் பிறந்த சகோதரர் ஆவார்.
21) எங்களில் ஒருவன் (1979)
22) மாமியார் வீடு (1979)
23 ) நெஞ்சுக்கு நீதி (1980)
24) இரத்தத்தின் இரத்தமே (1980)
25) அவள் ஒரு ஜீவநதி (1980 )
இயக்குனர் :ஜே. பி. ரொபேர்ட், ஜோ மைக்கல்
கதை :மாத்தளை கார்த்திகேசு
நடிப்பு : கே. எஸ். பாலச்சந்திரன் , டீன் குமார் , விஜயராஜா , எம். ஏகாம்பரம் , கார்த்திகேசு , திருச்செந்தூரன் , அனுஷா , ஆர். சிதம்பரம் , சீதாராமன் , , கந்தையா , ஸ்ரீதர் , மோகன்குமார் , சந்திரகலாஈழத்து ரத்தினம், சி. மெளனகுரு, கார்த்திகேசு ஆகியோர் இயற்றிய பாடல்களுக்கு, இசை அமைப்பாளர் எம். எஸ். செல்வராஜா இசை அமைக்க, வி. முத்தழகு, கலாவதி, எஸ். வி. ஆர். கணபதிப்பிள்ளை, சுஜாதா அத்தனாயக்க, ஜோசப் ராஜேந்திரன் ஆகியோர் பாடினார்கள்.
26) நாடு போற்ற வாழ்க (1981)
இயக்குனர் : யசபாலித்த நாணயக்கார
கதை : எஸ். என். தனரட்ணம்
நடிப்பு : வி. பி, கணேசன் , கே. எஸ். பாலச்சந்திரன் , கீதா குமாரதுங்க , ஸ்வர்ணா மல்லவராச்சி , எஸ். ராம்தாஸ் , ஏ. லத்தீப் , எம். ஏகாம்பரம் , உபாலி செல்வசேகரன் , டொன் பொஸ்கோ , மணிமேகலை , புஸ்பா , ரஞ்சனி
* இலங்கையின் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான வி. பி. கணேசன் தயாரித்த மூன்றாவது திரைப்படம் இது. மலையகத்தில் தியத்தலாவை, பண்டாரவளை, ஹப்புத்தளை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது.
* ஒரே நேரத்தில் இந்தக்கதை 'அஞ்சானா' என்ற பெயரில் சிங்களப் படமாகவும் எடுக்கப்பட்டது. இதில் பிரபல நடிகர்களான விஜய குமாரதுங்க ரொபின் பெர்னாண்டோ இருவரும் முக்கிய பாத்திரங்களில் ந்டித்தார்கள்.
27) பாதை மாறிய பருவங்கள் (1982)
28) ஷார்மிளாவின் இதய ராகம் (1993)
இயக்குனர் : சுனில் சோம பீரிஸ்
தயாரிப்பாளர் : பேராதனை ஜுனைதீன், ஜெக்கியா ஜுனைதீன்
கதை : ஜெக்கியா ஜுனைதீன்
திரைக்கதை : பேராதனை ஜுனைதீன்
நடிப்பு : சசி விஜேந்திரா , வீணா ஜெயக்கொடி , கே. ஏ. ஜவாஹர் , எஸ். ராம்தாஸ் , கே. எஸ். பாலச்சந்திரன் , எம். எம். ஏ. லத்தீப் , ஜோபு நசீர் , எஸ். விஸ்வநாதராஜா , எஸ். என். தனரட்ணம், கமலஸ்ரீ , ராஜம் , திவானி , ஜெயப்பிரியா , பாத்திமா , சுஸ்பிகா
* இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது தமிழ் வர்ணத்திரைப்படம்.
* 1989ல் த்யாரித்து முடிக்கப்பட்ட இந்தத் திரைப்படம் 4 வருடங்கள் கழிந்தபின்னரே 1993ல் திரைக்கு வந்தது.
* இத்திரைப்படம் "ஒப மட்ட வாசனா" என்ற தலைப்பில் சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
இப்போது தமிழ்ப்படங்கள் முற்றிலுமாக வெளிவருவது இல்லை காரணம் அயல்மொழி திரைப்படங்களின் காரணமாயிருக்குமா ?
நன்றி மாயா
Gopal.s
2nd September 2014, 12:28 PM
மீண்டும் மீண்டும் வாதிடுவதால் யாரும் யாருடைய கருத்தையும் மற்றிக்கொள்ளப் போவதில்லையென்று தெரியும். இருந்தாலும் சொல்லியாக வேண்டிய நிலை.
சில நண்பர்கள் புதிய தொடர்களைத் துவங்குகிறார்களாம். துவங்கட்டும். இதுவரை அவர்களின் அனைத்துப்பதிவுகளையும் (அவை ஒருவரிப்பதிவோ அல்லது முழு ஆராய்ச்சியோ) விடாமல் படித்தவன் நான். இனிமேல் சில பதிவுகளை படிக்காமல் தள்ளிவிட வேண்டியிருக்கும். அவ்வளவே...
பாடல்களை பொறுத்த வரை என்றுமே முதல் நம் விஸ்வநாதன் -ராமமூர்த்தி தான் தலைவா. அதை நான் ஆணித்தரமாக சொல்லியே உள்ளேனே? பிறகென்ன ,நான் partial என்ற வகையில் சந்தேகிக்கிறீர்கள்?
மனசை தொட்டு சொல்லுங்கள், 1976 க்கு பிறகு,ஒரு புத்துணர்வு நம் இசையில் தென் படவில்லையா?
gkrishna
2nd September 2014, 12:57 PM
தமிழ் திரையிசையின் குறிப்பிட்டு சொல்லகூடிய ஆளுமைகளான எஸ்.ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன் குரல்களில் தனித்தனியாக ஒலித்த சிறந்த பாடலிது . 1978 ஆம் ஆண்டு இன்னிசை வேந்தர்கள் சங்கர் கணேஷின் சிறப்பான இசையமைப்பில் வெளிவந்த " கன்னிப்பருவத்திலே " படத்தில் இப்பாடல் இடம் பெற்றது . வேறு ஏதாவது படத்தில் இப்படி ஒரே பாடலை இவர்கள் இருவரும் தனித்தனியே பாடியிருக்கிறார்களா என்று தெரியவில்லை . எஸ்.ஜானகியும் ,மலேசியா வாசுதேவனும் எவ்வளவு அற்புதமான உயிரோட்டமான பாடகர்கள் என்பதை அறிய இந்த ஒரு பாடலே போதும் . இந்தக்குரல்கள் நம்முள் ஏற்படுத்தும் உணர்வுகள் அலாதியானது ;நம்மை மெய்மறக்கச் செய்வது . புலமைப்பித்தனின் பாடல் வரிகள் பாடலை மேலும் அழகாக்குகின்றன . மனைவி கணவன் மீதும் ,கணவன் மனைவி மீதும் வைத்திருக்கும் எல்லையற்ற அன்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த எழிலான பாடல் . இந்தப்பாடலில் நடிகை வடிவுக்கரசி வெளிப்படுத்தும் முகபாவங்கள் அவ்வளவு அருமை . தமிழ் சினிமா இவரது நடிப்பை அதிகம் பயன்படுத்தவில்லையோ என்று தோன்றுகிறது .
http://1.bp.blogspot.com/-1wffB3-3XII/UIQbrJy79dI/AAAAAAAAAhc/tv_z-j3XotA/s1600/Kanniparuvathile.jpg
பட்டு வண்ண ரோசாவாம். பார்த்த கண்ணு மூடாதாம். பாசமெனும் நீரிறைச்சேன். ஆசையில நான் ...
http://www.youtube.com/watch?v=TeXza5I9qIw
http://www.youtube.com/watch?v=khBtT36CB0U
பாடல் மெட்டு 'உச்சி வகுந்தெடுத்து பிட்சி பூ வைச்ச கிளி ' பாடலை நினைவு படுத்தும்
vasudevan31355
2nd September 2014, 01:33 PM
டியர் கார்த்திக் சார்,
புதிய பதிவுகளாய் இருந்தாலும் சரி! பழைய பாடல்கள், படங்கள் பதிவுகள் என்றாலும் சரி அதை முழுவதுமாய் படித்து ரசித்து விட்டு தங்கள் கருத்தை எழுதும் பாணியும், பதிவாளர்களை உறசாகப் படுத்தும் பாணியும் தங்களுக்கே உரித்தானவை. என்னுடைய வேண்டுகோள் எல்லாம் தங்களைப் போல அனைவரும் பதிவு முழுதையும் படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே. நான் வாடைக் காற்றைத்தான் பிடித்தேன். அதையே கிருஷ்ணா சுனாமியாக்கி விட்டார். அற்புதமான பல பதிவுகள் அவர் மூலம் நமக்குக் கிடைத்திருக்கின்றன.
பாடலையும், பதிவுகளையும் பார்த்து ரசித்து எழுதியதற்கு தங்களுக்கு என்னுடைய மனம் கனிந்த நன்றிகள்.
உங்களுக்காக இதோ இன்னுமொரு அற்புதமான சிலோன் தமிழ்ப் பாடல். அது கொஞ்சம் சோகமென்றால் இது முழுதும் ஜாலி. இந்தப் பாடலைப் பாடும் பெண்ணின் (கமலாம்பாள் சதாசிவம்) குரல் நம்மை கிறங்க வைத்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துகிறது. கவர்ச்சிக் குரல். மிக இனிமையாகவும், ஜனரஞ்சகமாகவும் உள்ளது.
'கோமாளிகள்' திரைப்படத்திலிருந்து ஒரு பாடல். இதுவும் ஈழத்து தமிழ்ப் படம்தான். இசை கண்ணன் மற்றும் நேசன். இயக்கம். எஸ்.ராமநாதன்.
'ஹேய் மாமா நீ ஒரு கோமாளிதான்
எல்லோரும் என் முன்னே ஏமாளிதான்
வாயாட்டம் போடாதே ஏமாற்றம்தான்
யேய் மாமா நான் ஒன்று சொல்லட்டுமா
அங்கிள் மைனர் அங்கிள்
நீங்க மாட்டிகிட்டு முழிக்கிறது போதும்
அங்கிள் மைனர் அங்கிள்
ஹோய் ஹோய் மாட்டிகிட்டு முழிக்கிறது போதும்'
ரகளை பாட்டு சார். ஜாலியாய் கேட்டுக் கொண்டே இருக்கலாம். கிருஷ்ணா சாரும் ரசிப்பார் என்று தெரியும்.
ஈழத்து பொப் இசைப் பாடலகளையும், இந்த மாதிரிப் பாடல்களையும் கேட்பதில் ஒரு தனி அலாதி சுகம் கிடைக்கத்தான் செய்கிறது.
https://www.youtube.com/watch?v=VkqRl9GbRQ4&feature=player_detailpage
vasudevan31355
2nd September 2014, 01:40 PM
நண்பர்கள் விருப்பபட்டால் இன்னும் புகழ் பெற்ற நாம் கேட்டு மகிழ்ந்த ஈழத் திரைப்படப் பாடல்களை அளிக்கலாம்.
vasudevan31355
2nd September 2014, 01:46 PM
Eelaththu Tamil Feature films Details
Film is a one of the popular medium in the world. Film was invented by Lumiere brothers. Cinema is the production of films as an art or industry. Films have motion pictures.
In early period we had motion pictures. Several names called as film .Such as cinema, picture shows, flicks, movies, photo plays and silver screen. Film influences the people and their life strongly. Films used as entertainment, educate, inform the audience.
Each and every film is reflecting their cultures and their life style. People don’t interest in what is happening around us. But they are interesting in cinema very well. Films reach even the rural areas also.
There are number of film industries in the world. Tamil Cinema, Telungu cinema, Kannada cinema, Malayalam cinema, Hindi cinema, Sinhalese cinema &Srilankan Tamil cinema are some of it.
Sri Lankan Tamil film industry began with 1951s. Although there is a well-established Sinhala cinema in Sri Lank there is no a well-established Tamil cinema here. Even though many Tamil films were produced and released in Sri Lanka. Such a way following films are some of it.
1. Samuthayam (1962)
2. Thottakkari (1962)
3. KadamiyinEllai(1966)
4. PasaNila (1966)
5. Taxi Driver (1966)
6. Nirmala (1968)
7. ManjalKungumam (1970)
8. Vensangu (1970)
9. KuththuVilakku (1972)
10. Meenava Penn (1973)
11. PudhiyaKattru (1975)
12. Komaligal (1976)
13. Ponmani (1977)
14. KaathirupaenUnakaaha (1977)
15. NaanUngalThozhan (1978)
16. Vadaikkattru (1978)
17. ThendralumPuyalum (1978)
18. TheivamThanthaVeedu (1978)
19. Aemalikal (1978)
20. Anuragam (1978)
21. EngalilOruvan (1979)
22. MaamiyarVeedu (1979)
23. NenjukkuNeethe (1980)
24. RathathinRathamae (1980)
25. AvalOruJeevanathi (1980)
26. Nadu PotraVaalka (1981)
27. PathaiMaariyaParuvangal (1982)
28. SharmilavinIthayaRagam (1993)
29. Aanivaer (2006)
30. Mann (2006)
31. Operation Ellalan (2010)
JamesFague
2nd September 2014, 01:46 PM
The famous Chinna Mamiye Song. Enjoy
http://youtu.be/FfRTYAOzXng
mr_karthik
2nd September 2014, 01:54 PM
மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடம்ன்றோ என்ற வரியை கேட்டுவிட்டு வாலி மீது எம்.ஜி.ஆர் கோபம் கொண்டாராம் என்னய்யா மூன்று தமிழ் அவரிடம் தான் தோன்றியதோ அதற்கு வாலி சொன்னாராம், புது பையன் முதல் பாடல் அதனால் தான் அப்படி என்று , உடனே எம்.ஜி.ஆர் ஹ்ம்ம்ம் சரி சரி தமாஷுக்கு சொன்னேன் பையன் நல்லா வரட்டும் என்று சொன்னாராம்..
ஆனால் வாலி அவர்களின் கூற்று வேறுமாதிரி இருந்தது.
தேவி பாரடைஸ் தியேட்டரில் பிள்ளையோ பிள்ளை வெளியீட்டு விழாவில் (ஆனால் படம் ரிலீசானது பக்கத்திலிருந்த பிளாசா தியேட்டரில்) கலந்துகொண்டு முழுப்படத்தையும் பார்த்த எம்.ஜி.ஆர். தன்னுடன் காரில் வந்த வாலியுடன் எதுவும் பேசவில்லையாம். மூன்று நாட்கள் கழித்து தோட்டத்திலிருந்து வாலிக்கு போன்செய்து சின்னவர் பேச விரும்புவதாக அழைக்க, வாலி சென்றாராம். இறுக்கமான முகத்துடன் இருந்த எம்.ஜி.ஆர். வாலியைப்பார்த்ததும், சைகையால் உட்காரச்சொன்னவர் "என்ன எழுதியிருந்தீங்க, மூன்று தமிழ் தோன்றியது மு.க.முத்துவிடமா?. இந்த பாட்டை ஏன் என்னுடைய படத்துக்கு எழுதவில்லை?' என்று கேட்க ஆடிப்போன வாலி, "அப்படியெல்லாம் இல்லீங்க. பாட்டெழுதும் முன்னர் கலைஞர் என்னிடம் 'வளர்கின்ற பையன் முத்து, அதனால் நல்ல இலக்கிய நயமா ஒரு டூயட் எழுதிக்கொடுங்க' என்று கேட்க, சட்டென்று எனக்குத்தோன்றிய இந்த வரிகளை சொன்னேன். அவருக்கும் மற்றவர்களுக்கும் பிடித்துப்போக அதைவைத்தே மற்ற வரிகளையும் எழுதினேன். அதனால் என்ன உங்க அடுத்த படத்துக்கு இதைவிட பிரமாதமா எழுதி தந்துடுறேன்" என்று சமாதானப்படுத்தினாராம். இருந்தாலும் எம்.ஜி.ஆர். சமாதானம் அடைந்ததாக தெரியவில்லை என்று வாலி கூறியிருந்தார்...
gkrishna
2nd September 2014, 02:08 PM
வாசு சார்
ஈழ பாடல்கள் தொகுப்பு உங்களின் ரசனைக்கு மேலும் ஒரு மகுடம் என்றால் அது மிகை ஆகாது . ஏமாளிகள் மற்றும் கோமாளிகள் இரண்டுமே திரு ராமதாஸ் அவர்களின் வெற்றி படைப்பு .அந்நாளைய சிலோன் ரேடியோவில் இதன் விளம்பரம் மிகவும் பிரபலம்
vasudevan31355
2nd September 2014, 02:31 PM
வாசுதேவன் சார்,
'சின்ன மாமியே' பாடலுக்கு மிக்க நன்றி! டைமிங் பதிவு.
gkrishna
2nd September 2014, 02:50 PM
கோமாளிகள் 1976இல் வெளிவந்த ஓர் ஈழத்துத் திரைப்படம் ஆகும். இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்ட புகழ் பெற்ற கோமாளிகள் கும்மாளம் என்ற வானொலித்தொடர் நாடகமே கோமாளிகளாக திரைப்படமாக்கப்பட்டது. எஸ். ராம்தாஸ் எழுதிய இந்த தொடர் நாடகத்தில் நடித்தவர்களில் சிலர் திரைப்படத்திலும் நடித்தார்கள். புதிய கதாபாத்திரங்களும் திரைப்படத்திற்கென உருவாக்கப்பட்டன.
எஸ். ராம்தாஸ், ரி. ராஜகோபால், எஸ். செல்வசேகரன், அப்துல் ஹமீட், கே. சந்திரசேகரன், சுப்புலட்சுமி காசிநாதன், ஆன்ந்தராணி பாலேந்திரா (இராசரத்தினம்), சில்லையூர் செல்வராஜன், கமலினி செல்வராஜன், கே. ஏ. ஜவாஹர் போன்ற பலர் நடித்தார்கள். முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்கெனவே வானொலி மூலம் பிரபலமாக இருந்தது இத்திரைப்படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. சிறந்த படத்தொகுப்பாளராக சிங்களப்படங்களில் பணியாற்றிய எஸ். ராமநாதன் இத்திரைப்படத்தின் இயக்குனராவார்.
யாழ்ப்பாணத்தில் பிரபல இசைக்குழுவான கண்ணன் இசைக்குழுவைச் சேர்ந்த எம். கண்ணன், கொழும்பில் பிரபலமான டிறம் வாத்தியக்கலைஞரான நேசம் தியாகராஜா இருவரும் இணந்து இசை அமைத்தார்கள். சில்லையூர் செல்வராஜன், சாது, பெளசுல் அமீர் ஆகியோர் இயற்றிய பாடல்களை, மொஹிதீன் பெக், வி. முத்தழகு, கலாவதி, சுஜாதா, ராம்தாஸ் ஆகியோர் பாடினார்கள்.
சிங்களத் திரைப்படங்களில் பின்னணி பாடிய மொஹிதீன் பேக் முதன்முதலாக தமிழ்த் திரைப்படத்தில் பாடியது இத்திரைப்படத்தில் தான்.
1995ல் வெளியான மணிரத்தினத்தின் பம்பாய் திரைப்படத்தில், பிறப்பால் இஸ்லாமியரான நடிகர் நாசர் ஒரு இந்துவாகவும், இந்துவான நடிகர் சிட்டி இஸ்லாமியராகவும் நடித்தது சிறப்பாக பேசப்பட்டது. ஆனால் ஏற்கெனவே 1976ல் வெளியான கோமாளிகள் திரைப்படத்தில் இஸ்லாமியரான பி. எச். அப்துல் ஹமீட் இந்துவாகவும், பிறப்பால் இந்துவான எஸ். ராம்தாஸ் இஸ்லாமியராக அதாவது "மரிக்காராக"வும் நடித்திருந்தார்கள்
http://cinema.zoftcdn.com/photos/thumbs/srilanka/films/k/komaligal002.jpg
பெண் வேடத்தில் இருப்பவர் இடது புறம் திரு ராமதாஸ்
''கோமாளிகள் ஒலிபரப்பு நேரத்தை மாற்ற முடியுமா என்று குணரட்னம் என்னிடம் கேட்டார்...''
கோமாளிகள்' புகழ் மரிக்கார் ராமதாஸ்
மரிக்கார் என்றதும் எவருக்குமே அடுத்ததாக ஞாபகத்தில் வரும் பெயர் ராமதாஸ் என்பதாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு மக்களை வசீகரித்தவர் இவர். தொழில்என்ற ரீதியில் இவர் நிறுவனங்களில் வேலை செய்திருந்தாலும் இவரது பிரதான தொழில் நாடக மேடையாகவும் பின்னர் சினிமா, டெலி நாடகங்களாகவுமே இருந்தன. இலங்கைத் தமிழ் ரசிகர்களை எடுத்துக் கொண்டால் அவர்களை அதிகம் சிரிக்க வைத்த ஒரே நபர் ராமதாஸாகத்தான் இருக்க வேண்டும். சிரிக்க வைப்பது ஒரு சிரமமான கலை என்பது அனைவரும் அறிந்த விஷயம். அதை சுலபமாகச் செய்த, செய்ய முடிந்த நபர் ராமதாஸ் என்றால், அவர் எத்தனை ஆளுமை கொண்டவராக இருக்க வேண்டும்! மேலும் அறுபதுகளைச் சேர்ந்த நம்மூர்க் கலைஞர்களில், கலையில் கரைந்தவர்கள்தான் அதிகம் பேர். வாழ்ந்தவர்கள் மிகக் கொஞ்சமானவர்களே. இவ்வகையில் நாடகம், சினிமா என கலைத்துறையிலும் விளம்பரத்துறையிலும் ஈடுபட்டு அவற்றின் மூலம் பொருளாதார வளத்தையும் பெருக்கிக் கொண்டவர் இவர் என்பது இன்னொரு விசேஷமான தகவல்.
“ராமநாதபுர மாவட்ட சிவகங்கையில் தான் நான் பிறந்தேன். நான் பிறந்து ஆறு மாதத்திலேயே என்னை கொழும்புக்கு தூக்கிக்கொண்டு வந்து விட்டார்கள்.
என் அப்பா பெயர் சத்தியவாகீஸ்வரன். அம்மா நாகலட்சுமி. ஆசாரமான ஐயர் குடும்பத்தில் வந்தவர்கள் அவர்கள். குடும்பத்தில் நான்தான் மூத்தவன் . எனக்கு நான்கு சகோதரிகள். எனது இரண்டு சகோதரிகளுக்கு கர்நாடக இசையில் நல்ல ஈடுபாடு என் அம்மா நாகலட்சுமி இலங்கை வானொலியில் கர்நாடக சங்கீதம் இசைத்தவர். என் அப்பாவும் ஒரு நல்ல ரசிகர். என்னை அழைத்துச் சென்று பழைய படங்களைக் காட்டுவார். பழம்பெரும் நடிகர் பி. யூ. சின்னப்பா என் உறவுக்காரர்தான். அதனால் என்னவோ நான் நடிகனாக வேண்டும் என்பது என் அப்பாவின் விருப்பமாக இருந்தது. ஆனால் அதை அவர் வெளிப்படையாக சொல்லவில்லை.
வெள்ளவத்தை கிரீன்லைன் கல்லூரியில் தான் என் முதல் அரிவரி தொடங்கியது. இப்போது அந்தக் கல்லூரியின் பெயர் ஹிசிபதன மகா வித்தியாலயம்.
அப்பாதான் என்னை அந்தப் பாடசாலைக்கு அழைத்துச் செல்வார். திருமதி ஆறுமுகம் டீச்சர் எனக்கு ‘அகரம்’ கற்பித்த ஆசிரியை.
அந்தப் பள்ளியில் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். ரியோ தியேட்டர் உரிமையாளர் நவரத்தினம், கனகேந்திரா, கனகரட்ணம், அன்டன், இப்ராஹீம் உள்ளிட்ட சிலரைக் குறிப்பிடலாம்.
நான் பள்ளிக்கூடத்தில் எஸ். எஸ். சி. வரையும் சும்மா போய் வந்தேன் என்றுதான் கூறவேண்டும். படித்தேன் என்றால் அது தவறாகிவிடும். வரலாற்றில் பதிவு செய்யும் படி நான் பெரிய குறும்பு செய்யவில்லை தான். ஆனால் குறும்பு இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. கிரீன்லைன் கல்லூரியின் தலைமை ஆசிரியர் குருப்பு தன் சேவைக்காலத்தில் என்னைத்தான் அதிகமாக அடித்திருப்பார். ஆனால் என் அம்மாவும், அப்பாவும் என்னை எப்போதும் அடித்ததே இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு என்னைக் கண்டாலே பயம்’ என்று சொல்லும் ராமதாஸ் தனது கலையுலக பிரவேசம் பற்றி இப்படி கூறுகிறார் :
“கலைப் பிரவேசம் பற்றி சொல்லவதென்றால் என் தங்கை மஞ்சுளா சிறுவர் மலர் நிகழ்ச்சியில் பாட்டு பாடுவாள். அவளை வானொலி நிலையத்திற்கு அழைத்துச் செல்வதுதான் என் வேலையாக இருந்தது. என் தங்கையைப் போல என் குரலும் வானொலியில் வரவேண்டும் என்பதில் எனக்கு ஒரே ஆசை. ஒருநாள் சிறுவர் மலர் நிகழ்ச்சியை நடத்தி வந்த சரவணமுத்து மாமாவிடம் நேரிடையாக சென்று எனக்கு ஒரு வாய்ப்பு தரும்படி கேட்டேன். அவரும் என் குரலை பரிசோதித்துவிட்டு சிறுவர் மலர் நாடகத்தில் ‘சிங்காரம்’ என்ற பாத்திரத்தில் நடிக்க ஒரு சந்தர்ப்பம் வழங்கினார். அதன் பிறகு எனக்கு தொடர்ந்து நாடகத்தில் நடிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. பிறகு தமிழ் நாடக தயாரிப்பாளராக இருந்த சானாவின் நாடகத்திலும் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.
எனக்கு அந்த நாடகத்தில் 45 ரூபா சம்பளமும் கிடைத்தது. எனக்கு கிடைத்த முதல் சம்பளமும் அதுதான். நான் வானொலி உலகில் பிரவேசம் செய்யும் போதே ஹமீத், எஸ். செல்வசேகரன், கே. சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் எனக்கு நண்பரானார்கள். என் கலை வாழ்க்கையும் அவர்களோடு பயணித்தது. சானா தயாரித்து வந்த ‘மத்தாப்பூ’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நான், ராஜேஸ்வரி சண்முகம், ரொசரியோ பீரிஸ், சற்சொரூபவதி நாதன் ஆகியோர் நடித்திருந்தோம். அந்த அனுபவங்களை நினைத்தாலே இன்றும் மெய்சிலிர்க்கிறது.
திடீர் வெடி, நடிகர்கள், வாடகை வீடு, புரோக்கர் கந்தையா உள்ளிட்ட பல மேடை நாடகங்களில் நான் தொடர்ந்து நடித்ததால் ராமதாஸ் என்ற என் பெயர் கலையுலகில் பிரகாசிக்க தொடங்கிய போதுதான் எனக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. முதல் படம் ‘குத்து விளக்கு’, அதன் பிறகு எனது நண்பரான வி. பி. கணேசனின் ‘புதியகாற்று’ படத்தில் நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
எம். ஜி. ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் என்ற கட்டுமஸ்தானா உடல்வாகுடன் அழகான தோற்றம் கொண்ட நடிகர்கள் உலாவந்த அந்தக் காலத்தில் இலங்கை சினிமாவால் கதைக்கேற்றபடி ஒரு சாதாரண குடும்பத்து இளைஞன் எப்படியிருப்பான் என்பதை கிரகித்து அதன்படியே ஒரு ஹீரோ அறிமுகமானார். அவர்தான் வி. பி. கணேசன். பார்க்க தனுஷ் மாதிரி இருப்பார்.
இப்போது கதைக்கேற்றபடி நாயகர்கள் வருகிறார்கள் என்று சினிமா விமர்சனத்தில் எழுதுகிறார்களே அந்த நாயகர்களின் முன்னோடியாக விளங்கியவர் தான் வி. பி. கணேஷ் என்ற அடித்துச் சொல்வேன். புதிய காற்றை தொடர்ந்து ஏமாளிகள், மாமியார் வீடு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறேன்’ என்ற ராமதாஸ், தினகரன் நாடக விழாவில் முதல் பரிசு பெற்ற ‘சுமதி’ நாடகத்திலும் நகைச்சுவை வேடத்தில் நடித்து விருதும் வென்றேன் என்கிறார் மகிழ்ச்சியுடன்.
நாடக வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் பற்றி ராமதாஸ் எம்மிடம் விளக்கினார். ‘அப்போது நான் நடித்த கோமாளிகளின் கும்மாளம் நாடகம் இலங்கை வானொலியில் ஞாயிறு தோறும் மாலை நான்கு மணிக்கு இலங்கை வங்கியின் அனுசரணையுடன் ஒலிபரப்பாகி வந்தது. ஒருநாள் பிரபல திரைப்பட இறக்குமதியாளர் சினிமாஸ் குணரட்ணம் என்னிடம் தொலைபேசியில் அழைத்து என்னை சந்திக்க விரும்புவதாக கூறினார்.
உடனே நான் அய்யய்யோ நீங்கள் எவ்வளவு பெரிய மனிதர் நீங்கள் என்னை சந்திப்பது அழகாக இருக்காது நான் உங்களை வந்து சந்திக்கிறேன், என்று கூறிவிட்டு அவரின் இல்லத்திற்கு சென்றேன். என்னைக் கண்டதும் குணரத்தினம் கட்டிப்பிடித்து ‘நீங்கள் நடிக்கும் கோமாளிகள் தொடரை தொடர்ந்து நான் கேட்டு வருகிறேன் ரொம்பவும் நன்றாக இருக்கிறது என்று பாராட்டியவர் கூடவே ஒரு வேண்டுகோளையும் முன்வைத்தார்.
ஞாயிற்றுக்கிழமை நான்கு மணிக்கு கோமாளிகள் நாடகம் ஒலிபரப்பாவதால் தாங்கள் இறக்குமதி செய்து திரையிட்டுள்ள தமிழ்ப் படங்களின் பிற்பகல் காட்சிக்குக் கூட்டம் வருவது குறைவாக இருப்பதாகவும் பெரும்பாலானோர் கோமாளிகள் நாடகத்தையே அந்த நேரத்தில் ரேடியோவில் கேட்கிறார்கள் என்றும் சொன்னவர் இந்த எனது கோமாளிகள் நாடகம் ஒலிபரப்பாகும் நேரத்தை மாற்றும்படி வேண்டிக் கொண்டார். அதிர்ச்சியடைந்த நான் இதை நீங்கள் என்னிடம் கேட்பதைவிட இலங்கை வங்கியிடம் தான் கேட்க வேண்டும்... ஏனென்றால் அவர்கள்தான் அந்த நாடகத்தை ஒலிபரப் புகிறார்கள் என்றேன்.
(பிறகு குணரத்தினம் இலங்கை வங்கி தலைவரிடம் தன் கோரிக் கையை முன்வைக்க அவர் மறுத்து விட்டார்.” நாடக திரைப்பட நடிகரான அவரிடம் காதல் அனுபவங்கள் பற்றிக் கேட்டோம். நிறையவே களஞ் சியத்தில் இருக்கும் என்பது என் எண்ணம்.
“இப்போது எனக்கு அறுபத்தி மூன்று வயதாகிறது. பழைய ஞாபகங்கள் அப்படியே தான் இருக்கின்றன. எனக்கு கண் பார்வைதான் கொஞ்சம் மங்கி விட்டது. சிலரை அடையாளம் காண்பது ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது. ஆனால் என் மனைவியோ வீட்டுக்கு எந்த பொம்பிளை வந்தாலும் நல்லா அடையாளம் தெரியுது ஆனால் ஆண்களை மட்டும்தான் அடையாளம் தெரியிறதே இல்லைன்னு சொல்றா.
ஒருநாள் சென். பெனடிக்ஸ் மண்டபத்தில்ல ஒரு கலை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நானும் அதைப் பார்ப்பதற்காக அங்கு சென்றிருந்தேன். எனக்கு பின் வரிசையில், பெயர் ஞாபகத்தில் இல்லை, ஏதோ மேரின்னு ஒரு பெயர், அந்தப் பொண்ணும் நின்னுக்கிட்டு இருந்தது. அந்தப் பொண்ணு இலங்கை வானொலியில் ஒரு சில நாடகங்களில் நடித்திருந்தது. என்னைப் பார்த்த அந்தப் பொண்ணு நீங்கதானே ராமதாஸ்! உங்க நாடகங்க எல்லாமே ரொம்பவும் நல்லா இருக்கு என்றாள். நானும் ‘தேங்ஸ்’ என்றேன். அடுத்ததாக அவள் என்னிடம் ஒன்றை கேட்டாள்.
‘உங்களை எனக்கு பிடிச்சிருக்கு. நான் உங்களை காதலிக்க ஆசைப்படுகிறேன்’ என்றாள். அப்போது மேடையில் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்ததால் இரைச்சலாக இருந்தது. எனக்கும் அவள் என்ன சொன்னாள் என்றே புரியவில்லை. என்ன சொன்னீர்கள் என்று நான் திரும்பவும் கேட்க ‘நான் உங்களை காதலிக்கிறேன்’ என்று அவள் சத்தமாக சொன்னாள். நான். ஒரு நிமிஷம் அப்படியே ஆடிப் போயிட்டேன்.
பிறகு சுதாகரித்துக் கொண்ட நான் என்னை நம்பி நாலு தங்கச்சிங்க இருக்காங்க! அவங் கள கரைசேர்ப்பதுதான் என் முதல் கடமை அதனால இந்த காதல் எல்லாம் எனக்கு தேவையில்லை சாரி! என்றேன். அதற்கு அவள் நன்றாக யோசித்து சொல்லுங்க என்றாள். எனக்கு நல்லா யோசித்து சொல்லுற அளவுக்கு மூளை கிடையாதுங்க என்றேன். அவள் சிரித்தாள். அவ்வளவுதான் அதற்குப் பிறகு நான் அவளை பார்க்கவே இல்லை.
அவள் இன்று எங்கு இருக்கிறாளோ? என்று சொல்லும் ராமதாஸ் இந்த விசயம் இதுவரைக்கும் என் மனைவிக்குக்கூட தெரியாது. அப்படித் தெரிந்தாலும் பயமில்லை... அப்படி அவ வந்தாள் அவளுட னேயே போயிடுங்க.. எனக்கும் நிம்மதின்னு சொல்லுவா” என்று சொல்லிச் சிரிக்கிறார் ராமதாஸ்.
திருமணம் பற்றிக் கேட்டோம். வீட்டில் ஒரு படத்தைக் காட்டி, உனக்கும் வயது வந்திருச்சி... இந்தப் பெண்ணை கட்டிக்கிறியா? என்று கேட்டார்கள். நானும் சரி என்று சம்மதம் சொல்லிவிட்டேன். ஏனென்றால் என் மனைவி இப்போ இருக்கிறதவிட அப்போ அழகாதான் இருந்தாள். எனக்கு திருமணம் பேசிய விடயம் பற்றி எனது நண்பிகளாக பி. எச். அப்துல் ஹமீதின் துணைவியான சசிகலா, அவரின் தங்கை கீதாஞ்சலி ஆகியோரிடம் கூறினேன். அவர்களும் போட்டோவை காட்டுங்க நாங்கள் பார்த்துவிட்டு பொண்ணு நல்லா இருக்கான்னு சொல்லுறோம் என்றார்கள். நானும் வீட்டில் கேட்டு போட்டோவை வாங்கி சசிகலா, கீதாஞ்சலியிடம் கொடுத்தேன். அவர்களும் அந்தப் போட்டோவை பார்த்துவிட்டு பொண்ணு நல்லா இருக்கு என்று நற்சான்றிதழ் வழங்கினார்கள்.” என்று சொல்லி அது ஒரு காலம் என்று பெருமூச்சி விடுகிறார் ராமதாஸ். ராமதாஸின் திருமணம் வெள்ளவத்தை பிள்ளையார் கோயிலில் நடைபெற்றதாம். திருமணத்திற்கு கலை உலகை சேர்ந்த பலர் கலந்து சிறப்பித்தார்கள் என்று சொல்கிறார் ராமதாஸ். மறக்க முடியாத நபர்கள் பற்றி கேட்டதற்கு பி. எச். அப்துல் ஹமீதை என்னால் மறக்க முடியாது என்கிறார்.
ம்... அது ஒரு காலம் என்று நீங்கள் ஏங்குவது?
‘கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு நண்பர்கள் யாராவது வெளிநாட்டிலிருந்து வரும்போது அவர்களை அழைத்துவர நான் எனது நண்பர்கள் சிலரோடு விமான நிலையம் செல்வது வழக்கம். அப்படி செல்லும் போது சீதுவையில் இருந்த ஒரு மதுச்சாலைக்குச் சென்று கொஞ்சமாக ஏற்றிக் கொள்வோம்.
விமான நிலையத்திலி ருந்து வரும் போதெல்லாம் அந்த மதுக்கடை ஞாபகத்திற்கு வரும்... சீதுவையை கடக்கும் போதெல்லாம் காரின் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி மதுக்கடையை தேடுகிறேன்... பார்க்க முடியவில்லை....’ என்று அந்தக் காலத்தை நினைத்து ஏங்கும் ராமதாஸிடம், இன்றைக்கும் பயப்படுகிற விடயம் எது என்று கேட்டேன். ‘எழுபத்தி மூன்றாம் ஆண்டிலிருந்து என் பொண்டாட் டிக்குதான் பயப்படுகிறேன். ஏனென்றாள் என் கல்யாணம் 73ல் தான் நடைபெற்றது.”
உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?
என்று கேட்டதற்கு ராமதாஸ் இப்படி பதிலளிக்கிறார். “இருக்கிறது. என் குலதெய்வம் திருநெல்வேலி கலக்காடு மாரியம்மன்தான். வருடந்தோறும் அந்தக் கோயிலுக்கு சென்று படையல் போட்டு சாமி கும்பிடுவது எங்கள் குடும்ப வழக்கம்.’ வாழ்க்கையை பற்றி ராமதாஸ் கூறும் போது... ‘வாழ்க்கை இனிமையானது. ஆனால் இன்னும் நான் வாழ்க்கையில் முழு நிறைவுபெற்றதாக நினைக்கவில்லை. இன்னும் ஏதாவது செய்ய வேண்டும், கலை சார்ந்த ஒரு வேலையை செய்ய வேண்டும் என்பதுதான் எனது ஆசை!”என்று தனது பழைய ஞாபகங்களின் தேடல்களிலிருந்து விடைபெற்றுக் கொள்கிறார் ராமதாஸ்.
http://www.thinakaran.lk/vaaramanjari/2010/05/23/f-4-6.jpghttp://www.thinakaran.lk/vaaramanjari/2010/05/23/f-4-3.jpghttp://www.thinakaran.lk/vaaramanjari/2010/05/23/f-4-4.jpg
chinnakkannan
2nd September 2014, 03:15 PM
ஹாய் ஆல் ..குட் ஆஃப்டர் நூன்
காலையில் வர இயலவில்லை.. இப்போதும் கொஞ்சம் லஞ்ச்ல் தான் படித்தேன்
வாடைக்காற்று பாடல் தந்த வாசு சாருக்கும் விரிவான பதிவுகள் தந்த கிருஷ்ணா சாருக்கும் ஒரு ஓ + பல நன்றிகள்.. இலங்கைத் திரைப்பட லிஸ்ட்க்கும் நன்றி..சின்ன மாமியே மட்டும்கேட்டிருக்கிறேன். அண்ட் அத்தானே அத்தானே அதுவும் கேட்டிருக்கிறேன்.பட் வாடைக் காற்று பற்றிக் கேட்டதாக நினைவில்லை..பாடல் இனிமேல் தான் கேட்கணும்..
//சில நண்பர்கள் புதிய தொடர்களைத் துவங்குகிறார்களாம். துவங்கட்டும். இதுவரை அவர்களின் அனைத்துப்பதிவுகளையும் (அவை ஒருவரிப்பதிவோ அல்லது முழு ஆராய்ச்சியோ) விடாமல் படித்தவன் நான். இனிமேல் சில பதிவுகளை படிக்காமல் தள்ளிவிட வேண்டியிருக்கும். அவ்வளவே...// ஹை..அப்படியெல்லாம் விட்டுவிடுவோமா கார்த்திக் சார்.. பி.எம் அல்லது இமெய்ல் அனுப்பிடுவோம்.. ஹி ஹி :)
கோமாளிகள் பதிவுக்கும் நன்றி கிருஷ்ணாஜி.. அந்தப் பொண்ணு யாரு.. ஹூ இஸ் த ப்ளாக் ஷீப் என்று குரலொலிக்க படிப்பினை ஊட்டும் குடும்பச் சித்திரம்னு ஒரு படம் வரும் அதோட ஹீரோயின் கூட இலங்கைப் பொண்ணு தானே.. (ஹப்பாடா மத்யானமும் வெடி போட்டாச்சு) :)
mr_karthik
2nd September 2014, 03:18 PM
இலங்கையில் உருவான தமிழ்ப்படங்களின் பாடல்களையும், அங்கு மிகவும் பிரபலமான 'சின்ன மாமியே' மற்றும் 'சுராங்கனி' போன்ற ஈழத்து பப்பிசைப் பாடல்களைப்பற்றியும் விவாதிக்கப்பட்டு வரும் இந்நேரத்தில், இந்திய இலங்கை கூட்டுத் தயாரிப்பான பைலட் பிரேம்நாத் படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடலை பதிவிடுவது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.
இலங்கை மண்வாசனையோடு மெல்லிசை மன்னர் மெட்டமைத்திருக்கும் இப்பாடலில் நமது ராட்சசியும் சிலோன் மனோகரும் இணைந்து கலக்கியிருப்பார்கள். படத்துக்குப்போருத்தமான இசையைத்தருவதில் வல்லவரான மெல்லிசை மன்னரின் இன்னொரு பரீட்சாத்த முயற்சியின் வெற்றி சாதனை இந்தப்பாடல்...
கோப்பித்தோட்ட முதலாளிக்கு
கொழும்புலதானே கல்யாணம்
கண்டியில வாங்கி வந்த
சண்டி குதிரை ஊர்கோலம்
மெருமகனா வந்தவருக்கு
அறுபதுதானே வயசாச்சு
மென்மகனா இருக்கிறாரு
மூக்கு முழியைப் பார்த்தாச்சு
குங்குருக்கு.. குங்குருக்கு
குங்குருக்கு காமாட்சி
குழந்தைகுட்டி பொறக்கலையா
கட்டிக்கொடுத்து நாளாச்சு
திரிகோண மலையிலதானே திருமணத்தை ப்பார்க்க
யாழ்ப்பாண மக்களெல்லாம் வந்திருந்து வாழ்த்த
பளபளன்னு பப்பாளி போல மணமகளும் சிரிக்க
பார்த்து பார்த்து மாப்பிள்ளைக்கிழவன்
பித்துப் பிடிச்சு கிடக்க
gkrishna
2nd September 2014, 03:19 PM
http://1.bp.blogspot.com/-gIDm2IOkqHs/U94MV9HNAVI/AAAAAAAAVB8/bj0Jj0wDbaY/s1600/Kannadasan.gif
திரையிசைப்பாடல்கள் வழியாகவே நம்மில் பெரும்பான்மையோருக்கு அறிமுகமானவர் கவிஞர் கண்ணதாசன் என்றாலும் திரைப்பாடலாசிரியர் என்பதைத் தவிரவும் எண்ணற்ற பன்முகங்களைக் கொண்ட அவர் என் பார்வையில் ஆகச்சிறந்ததொரு இலக்கியவாதியாகத்தான் புலப்படுகிறார்.இலக்கியங்களிலிருந்து வரிகளையும் கருத்துக்களையும் தான் எடுத்தாள்வதைக் கவிஞரே நேர்மையாக ஒப்புக்கொண்டபடியால்,இலக்கியங்களைக் களவாடி கவிதைகளில் புகுத்துகிறார் என்பவர்களின் குற்றச்சாட்டை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. பந்தியில் பரிமாறப்படும் உணவுக்கான பாராட்டு பரிசாரகரிடம்தான் வழங்கப்படுகிறது. ஆனால் அது தனக்கானதில்லை என்பதை அவரும் அறிவார்; நாமும் அறிவோம்.
தமிழிலக்கியம் என்பது பாமர மக்களில் சிலருக்கு எட்டிக்காய், சிலருக்கோ எட்டாக்கனி. புலவர்களும் தமிழறிஞர்களும் ஆய்வறிஞர்களுமே இலக்கியங்களின் நயத்தையும் இன்பத்தையும் மாந்தி மகிழும் பேறு பெற்றவர்களாய் இருக்கிறார்கள். ஆர்வமிருக்கும் பலருக்கு அதற்கான வாய்ப்பு அமைவதில்லை. வாய்ப்பு அமைந்த பலரும் பிறருக்கு அவற்றை அறியத்தரும் முயற்சியில் இறங்குவதில்லை. அதனால் நம்மில் பலர் வாழ்நாளில் தமிழின் இலக்கிய இன்பங்களை நுகரும் வாய்ப்பு கிட்டாமலேயே வாழ்ந்து மறைந்துபோகிறோம்.
இலக்கியப் பாற்கடலைக் கடைய கதியற்ற பாமரர்களுக்காக கவிஞர், தானே கடைந்தெடுத்துக் கொண்டுவந்த கவி வெண்ணெயை நம் நாவிலும் தடவி ருசிக்கச்செய்கிறார். அத்தன்மையதான அமரத்துவம் வாய்ந்தவையன்றோ இலக்கியஞ்சார்ந்த அவரது அமுதகானங்கள்?
நம்மில் எத்தனை பேர் கம்பராமாயணத்தையும் கலித்தொகையையும் கலிங்கத்துப்பரணியையும் நளவெண்பாவையும் படித்திருக்கிறோம்? அந்தப் பெயர்களையாவது கேள்விப்பட்டிருப்பவர்கள் எத்தனை பேர்? எத்தனை பேர் திருக்குறளின் அத்தனை அதிகாரங்களையும் வாசித்து அர்த்தம் புரிந்து பரவசப்பட்டிருக்கிறோம்? பள்ளியில் படித்திருக்கும் ஒரு சில குறள்கள் தவிர பிறவற்றை நாம் அறிய முனைந்ததே இல்லை.
பள்ளியிலும் கூட முப்பாலில் மூன்றாம் பாலான இன்பத்தை ஒதுக்கிவிட்டு அறமும் பொருளும்தான் போதிக்கப்படும். காமத்துப்பாலில் காதலின் அத்தனைப் பரிமாணத்தையும் அழகாக அலசியிருக்கும் வள்ளுவரின் திறனை நாம் அறியாமலேயே போய்விடுகிறோம். திருக்குறள்மட்டுமல்ல, கடலென விரிந்துகிடக்கும் சங்க இலக்கியம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம்,மணிமேகலை போன்ற காப்பியங்கள் பலவற்றுள் இருக்கும் இலக்கியச்சுவை இன்னதென அறியாமலிருக்கிறோம்.
நம்மைப் போன்ற இலக்கியம் அறியாதோருக்காக, பல கவிஞர்களும் தங்கள் பாடல்களில் இலக்கியங்களை நயமாகப் புகுத்தி இலக்கிய நயத்தை நாம் அனுபவிக்கத் தந்திருக்கிறார்கள். ஆனால் அனைவரிடத்தும் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பங்கு அலாதியானது. சங்க இலக்கியம் முதல் சிற்றிலக்கியங்கள் வரை, பாரதியார் முதல் பட்டினத்தார் வரை யாதொரு தெளிவுரை, பதவுரையின் தேவைகளின்றி எளிதில் எவரும் விளங்கிக்கொள்ளும் வண்ணம் இனிய தமிழ் வார்த்தைகளால் திரைப்பாடல்களின் வழியே இலக்கியத்தைப் பகிர்கிறார் இந்த இன்சுவைக் கவிஞர்.
யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
யானும் நீயும் எவ் வழி அறிதும்,
செம் புலப் பெயல் நீர் போல,
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
என்ற குறுந்தொகைப் பாடலை அறியாதோர் அநேகருண்டு. ஆனால் கண்ணதாசனின் இப்பாடலை அறியாதோர் யாவர்?
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே
இதே பாடலில் காமத்துப்பாலில் குறிப்பறிதல் அதிகாரத்திலிருந்து ஒரு குறளையும் நமக்குச் சுட்டியுள்ளார்.
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.
நம் கவிஞர் என்ன சொல்கிறார்?
உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே
இதோ இன்னொரு குறள் அதே குறிப்பறிதலில் இருந்து…
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
‘கலையே உன் எழில் மேனி கனியாவதேன்’ பாடலில் கவி சமைத்த எளிய வரிகள்…
இரு வேறு பொருள் கூறும் கண்பார்வை ஏன்
ஒன்று நோய் தந்ததேன் ஒன்று மருந்தானதேன்
பருவத்தின் ஒரு பார்வை நோயாகுமே
எழில் உருவத்தின் துணை சேர மருந்தாகுமே
தமிழிலக்கியம் கற்க எனக்கு ஆர்வமிருந்தும் அதற்கான வாய்ப்பு அமையவில்லை என்பதை தமிழறிஞரான என் மாமனாரிடம் ஆதங்கத்தோடு வெளியிடுவதுண்டு. அவர்களும் அவ்வப்போது இலக்கியங்களிலிருந்து சில பாடல்களை எடுத்து நான் அறியத் தருவார்கள்.
ஒருநாள் கலித்தொகையில் புலவர் பெருங்கடுங்கோ பாடிய ஒரு பாடலை சிலாகித்து விளக்கினார்கள். தனக்குப் பிடித்தவனுடன் பெண் ஊரைவிட்டுப் போகும் பழக்கத்தை அன்று ‘உடன்போக்கு’ என்பார்களாம். இன்றைய வழக்கத்தில் ‘ஓடிப்போதல்’ என்போம். அப்படி உடன்போக்கு போன பெண்ணை அவளுடைய வளர்ப்புத்தாய் தேடிக்கொண்டு போகிறாள். வழியில் எதிர்ப்படுபவர்களைப் பார்த்து ‘இந்த வழியே என் மகள் ஒரு ஆடவனோடு போனதைப் பார்த்தீர்களா?’ என்று அழுதுகொண்டே கேட்கிறாள். அவ்வழியே வந்த பெரியவர்கள் அவளைத் தடுத்து நிறுத்தி அவளுக்கு அறிவுரை சொல்கிறார்கள்.
பலஉறு நறுஞ் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என்செய்யும்?
நினையுங்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை,
நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என்செய்யும்?
தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழுளே பிறப்பினும், யாழ்க்கு அவைதாம் என்செய்யும்?
சூழுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே
“மலையிலுள்ள காட்டிலிருந்து பெறப்படும் சந்தனத்தால் அதைப் பூசுவாருக்கு அல்லாமல் மலைக்கு என்ன பயன்? கடலிலிருந்து கிடைக்கும் முத்தால் அதை அணிபவர்க்கு அல்லாமல் கடலுக்கு என்ன பயன்? யாழிலிருந்து கிடைக்கும் இனிய இசை, அதைக் காதால் கேட்பவர்க்கு அல்லாமல் அந்தக் கருவிக்கு என்ன பயனைத் தரும்? அதுபோல் உன் மகளும் உரிய காலத்தில் தலைவனைச் சேர்தலே முறை. அவ்வாறின்றி அவளை உன்னோடு தக்கவைப்பதால் உனக்கென்ன பயன்?” என்று கூறி அவளை சமாதானப்படுத்தித் திருப்பி அனுப்பினர்.
ஆஹா.. என்னவொரு அற்புதமான வாழ்வியல் தத்துவம். என் மாமனார் சொல்லிக்கொண்டிருக்கும்போதே எனக்குள் ஏதோ குறுகுறுத்தது. இதை.. எங்கோ கேட்டிருக்கிறேன்.. எங்கே..? ஆங்…. அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னும் பாடலில் இந்த வரிகளைக் கவியரசர் இப்படிக் குறிப்பிடுகிறார்.
மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
காலம் மாறினால் காதலும் மாறுமோ...
இப்படித் தொடர்கிறது அப்பாடல். கலித்தொகைப் பாடலைப் புரிந்துகொள்ள எனக்கொரு தமிழறிஞரின் உதவி தேவைப்பட்டது. ஆனால் கண்ணதாசனின் பாடலை எவர் உதவியுமின்றி அழகாக ரசித்து மகிழமுடிகிறதே..
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாள்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் - செங்கையால்
காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தளைக் காணென்றான் வேந்து.
புகழேந்திப் புலவர் பாடிய இந்த நளவெண்பா பாடலை நம்மில் எத்தனைப் பேர் அறிவோம்? இந்த உவமையின் ஒரு பாதி கையாளப்பட்டத் திரைப்பாடல் இந்நேரம் நினைவுக்கு வந்திருக்கவேண்டுமே... ஆம், அதேதான்.
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற...
கவியரசரின் இந்தப் பாடல் மூலம் நளவெண்பாவின் அறிமுகம் கிடைத்தது எனக்கு.
புலவர் செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணியில் ஒரு பாடல். போர் முடிந்து நெடுநாள் கழித்து வீடு திரும்பிய கணவர்களிடம் ஊடல் கொண்டு வாயிற்கதவைத் திறக்க மறுக்கும் மனைவியரின் ஊடல் தீர்க்க புலவர் பாடுவது….
வாயின் சிவப்பை விழிவாங்க
மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்கத்
தோயக் கலவி அமுதளிப்பீர்
துங்கக் கபாடம் திறமினோ.
இந்த வரிகளின் நயத்தைக் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் வெளிப்படுத்திய திரைப்பாடல் வரிகள்…
வாயின் சிவப்பு விழியிலே
மலர்க்கண் வெளுப்பு இதழிலே
கவிஞரை ஈர்த்த கலிங்கத்துப்பரணியின் மற்றுமொரு பாடல்,
கலவிக் களியின் மயக்கத்தால்
கலைபோய் அகலக் கலைமதியின்
நிலவைத் துகிலென் றெடுத்துடுப்பீர்
நீள்பொற் கபாடம் திறமினோ
கவிஞர் நமக்கு வழங்கும் எளிய வரிகள்….
ஆடையிதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது வழக்கம்
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
- -- - இது திருநாவுக்கரசரின் திருத்தாண்டகப் பதிகம்
அன்றொருநாள் அவனுடைய பேரைக்கேட்டேன்
அடுத்தநாள் அவனிருக்கும் ஊரைக்கேட்டேன்
இன்றுவரை அவன் முகத்தை நானும் காணேன் - அவன்
என்னைத்தேடி வரும்வரைக்கும் விடவும் மாட்டேன்
- ---- இது பதிகத்தைப் பாமரர்க்குக் கவியரசர் கொண்டு சென்ற வ(ழி)ரி..
இலக்கியச் சான்றுகளை ஆங்காங்கே தொட்டுக்காட்டி “உள்ளே வாருங்கள், இன்னும் இன்னும் அனுபவிக்கலாம்” என்று ஈர்க்கிறார் தமிழின் சுவையறியத் துடிக்கும் உள்ளங்களை.
நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கண் முனிவின்று
நனந்தலை யுலகமுந் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.
ஊர் உறங்கிவிட்டது, உலகம் உறங்கிவிட்டது. உரியவன் அருகில் இன்மையால் நான் மட்டும் உறங்காமல் விழித்துக்கிடக்கிறேனே என்ற பொருள்படும் குறுந்தொகைப்பாடலின் சாரத்தை எடுத்துக்கொண்டார் கவிஞர். தலைவியின் கூடவே நிலவும் உறங்காமல் விழித்திருப்பதாக கற்பனை கூட்டி எளிய வரிகளால் நமக்களிக்கிறார்.
பூ உறங்குது பொழுதும் உறங்குது
நீ உறங்கவில்லை நிலவே
கானுறங்குது காற்றும் உறங்குது
நான் உறங்கவில்லை....
கண்ணதாசன் அவர்களின் மகன் காந்தி கண்ணதாசன் ஒருமுறை தந்தையாரிடம் சென்று, “நானும் பாட்டு, எழுதலாம் என்றிருக்கிறேன் அப்பா” என்றாராம். “பாட்டெழுதுவதில் கஷ்டம் இல்லை. ஆனால், சில விஷயங்கள் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும். கம்பராமாயணம் தொடங்கி தமிழிலக்கியம் எல்லாவற்றையும் படிக்கவேண்டும். பிறகு அனுபவங்களுடன் கற்பனையைக் கலந்தால் பாட்டு தானாக வருகிறது” என்று தந்தை பதிலளித்தாராம். பாட்டு எழுதுவது வெகுசுலபம் என்பது போல் சொன்னாலும் தமிழிலக்கியத்தை நன்கு கற்றுணர்ந்திருக்கவேண்டும் என்ற அவரது வார்த்தையில் எவ்வளவு அழுத்தம்! கவியரசரின் பாடல்களில் பலவற்றுள் கம்பராமாயணத்தின் ஈர்ப்பிருப்பதைக் காணமுடியும்.
நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை; அற்றே
பதியின் பிழையன்று; பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?' என்றான்.
இந்த வரிகள் கண்ணதாசனின் எண்ணத்தில்
நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
நதி செய்த குற்றமில்லை
விதி செய்த குற்றமின்றி வேறு யாரம்மா?
என்று அழகிய பாடலாய் விரியும்.
கண்ணில் தெரியும் பொருளினைக்
கைகள் கவர்ந்திட மாட்டாவோ?-அட
மண்ணில் தெரியுது வானம்,
அதுநம் வசப்பட லாகாதோ?
என்னும் பாரதியின் வரிகள் கவிஞரின் கவிவண்ணத்தில் மிளிர்கிறது இப்படி!
கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ?
என் சொந்தக் கருத்துக்களோடு இணையத்திலிருந்து பெறப்பட்ட பல தகவல்கள் இக்கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டிருந்தாலும் இலக்கியத்தின்பால் என்னை வழிநடத்தி அழைத்துச் சென்றவை கண்ணதாசன் பாடல்களில் காணப்பட்ட இலக்கியச்சுவடுகளே. சங்கப் பாடல்களின் பொருளுணர்ந்து அவற்றுள் என்னால் சங்கமிக்க இயல்வதற்கும், நளவெண்பாவையும் கலிங்கத்துப் பரணியையும் கம்ப ராமாயணத்தையும் வாசித்து வாசித்து இன்புற்றுக் களிப்பதற்கும் பத்துப்பாட்டில் ஒன்றான நெடுநல்வாடையை எளிய தமிழில் புதுக்கவிதை பாணியில் எழுதும் துணிவைப் பெற்றமைக்கும் முக்கியக் காரணம் இலக்கியம் சார்ந்த கவியரசரின் இனிய பாடல்களே என்றால் அது கிஞ்சித்தும் மிகையில்லை.
நன்றி கீதமஞ்சரி
gkrishna
2nd September 2014, 03:25 PM
dear kaarthik sir
http://www.youtube.com/watch?v=yXrpKMeB71E
http://upload.wikimedia.org/wikipedia/en/2/2c/Pilot_premnath.jpg
எல்லா விஷயமும் இவரிடம் தான் முடிகிறது
chinnakkannan
2nd September 2014, 03:27 PM
பட்டு வண்ண ரோஜாவாம்க்கு கிருஷ்ணா சாருக்கு தாங்க்ஸ் + இ.கா படம் போடாததற்கும்
இலங்கையின் இளம் குயில் என்னோடு இசைபாடுதோ - பாட் கேக்கறதுக்கு முன்னால அதே படத்திலருந்து இன்னொரு பாட்டுக்கு கார்த்திக் சாருக்கு நன்றி..
இலக்கியக் கம்பேரிசன் பதிவுக்கு க்ருஷ்ணாஜிக்கு தாங்க்ஸ்..கீத மஞ்சரியில் எழுதியவர் யார்..
gkrishna
2nd September 2014, 03:35 PM
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcSnHbZABSCQXuZpGruPm4N6EtQjrzhNq nFX_udzXSJWmfdVu4Zu
அழகி ஒருத்தி இளநீ விக்கிறா கொழும்பு வீதியிலே
அருகில் ஒருத்தன் உருகி நிக்கிறான் குமரி அழகிலே
http://www.youtube.com/watch?v=AqOm9iL0ES4
gkrishna
2nd September 2014, 03:45 PM
THE HINDU REVIEW - PILOT PREMNATH
Sivaji Ganesan, Malini Fonseca, ‘Thengai’ Srinivasan, ‘Major’ Sundararajan, Vijaykumar, C.R. Manorama, Sridevi, Jai Ganesh, Jayachitra, Satyapriya and Venkat. Srilankan cast — Mara Sinha, Vijayendran, Chinnaiah, Srisankar and Abraham
This film was an Indo-Sri Lankan joint-venture produced by businessman T.M. Menon and M.M. Saleem, noted building contractor (son of Mohammed Meeran, the famed architect and civil engineer who designed and built the landmark Gemini flyover on Mount Road) and D.M. Chandrasena of Sri Lanka. This film in colour was shot entirely in the picturesque island nation and the post-production work done in Madras (now Chennai).
Sivaji Ganesan played the title character, a Sri Lankan pilot, whose lovely wife, played by Sri Lankan star Malini Fonseca (currently she is a member of the Sri Lankan Parliament), dies in a stove explosion while making tea for her husband.
The story is by R. Venkat, about whom nothing is known, and the dialogue is by the well-known screenwriter Aaroor Das. Screenplay and direction were handled by A.C. Thirulokachandar (popularly known as ‘ACT’), one of the leading filmmakers of India with an enviable number of hits and classics in Tamil and Hindi to his credit.
‘ACT’ hails from an aristocratic Mudaliar family. After his M.A. degree, he did not want to take up a job since he was keen on appearing for the Indian Administrative Service exams. Even as a student, he wrote short stories that went on to be published in magazines; soon the writer in him took over and he became a screenwriter. He joined the top-of-the-bracket production house AVM and became one of its creative pillars. He wrote and directed many of the AVM productions and promoted his own production company and made successful films. Now in his 80s, he is retired and lives in his happy home in Kilpauk.
The picturesque scenic splendour of Sri Lanka and more particularly Colombo, especially at night, was brilliantly recorded on camera by talented cinematographer Vinayagam.
Music was composed by maestro M.S. Viswanathan, assisted by Joseph Krishna, with lyrics by Vaalee. One of the songs, which conveys the central idea and theme of the film, ‘Who Is The Black Sheep…?’ (voice, T.M. Soundararajan) became a hit and is still popular.
Pilot Premnath (Sivaji Ganesan) has three children — two sons (Vijayakumar, JaiGanesh,) and a visually challenged daughter (Sridevi). The children are the apples of his eye, especially the girl. His wife (Malini) dies in an accident.
The deceased wife continues to live in the hero’s heart, and every time he returns from a flight journey, he goes to their room, and sees her in his mind’s eye. Once while talking about her in the room with his co-pilot (‘Thengai’ Srinivasan), he shows him the bundle of her letters. One letter is found, not posted. In it, the wife states that one of the three children was not born to her!
The world around him shatters and it is then he breaks into the song ‘Who Is The Black Sheep…?’ The suspense is revealed later. Premnath goes to America for training, leaving his pregnant wife behind. She delivers a stillborn child. Simultaneously, his friend Balu’s (‘Major’ Sundararajan) wife gives birth to a visually-challenged baby girl and to prevent tragedy in Premnath’s family, Balu substitutes his baby with Premnath’s.
The two sons find sweethearts (Jayachitra and Satyapriya) and the daughter falls in love with a young man (Prem Anand), who saves her from a thief near a shop. All get married and happiness is restored once more in the household. ‘
'Thengai’ Srinivasan as the co-pilot and his wife (Manorama) speaking Sri Lankan Tamil were quite impressive. So were Vijayakumar and Jai Ganesh, and Prem Anand in a brief role, which includes a fight with the robber.
The film was made at Vijaya Studio, Colombo. It has songs rendered by T.M. Soundararajan, P. Susheela, Jikki, Jayachandran, Vani Jairam and ‘Ceylon’ Manohar.
Noted choreographer P.N. Chopra and Chandrakala from Sri Lanka composed the dances. Well-known art director Chalam handled the art. The film was later dubbed into Sinhala and released in that country. It was a reasonable success in India and Sri Lanka.
Remembered For The interesting storyline, the fine performances of Sivaji Ganesan, Malini Fonseca, Major Sundararajan, Sri Devi and others, the pleasing music, deft direction and impressive cinematography.
நடனம் A கே சோப்ரா என்று நினைவு . இந்த சந்திரகலா தான் வாடைகாற்று கதாநாயகி
madhu
2nd September 2014, 03:49 PM
இருபதுக்கும் மேற்பட்ட பக்கங்களின் எண்ணற்ற செய்திகளை உள்ளடக்கிய அத்தனை பதிவுகளையும் நுனிப்புல் மேய்ந்து விட்டு வந்திருக்கிறேன்.
இவற்றை எல்லாம் முழுசா படிச்சு முடிக்கும் முன் இன்னும் இருபது பக்கங்கள் ஓடிடும் என்று தோணுது.
மான் கண்ட சொர்க்கங்கள் வலது புறம் இழுக்க வாடைக் காற்று இடது புறம் இழுக்க.. தென்றலாய் மற்றவை முகத்தின் மேல் வீச..
எதை எடுப்பது எதை விடுப்பது என்று குழப்பம்... ( எதையுமே விட முடியாதுங்கோ )
ஈழத் தமிழ்த் திரைப்படப் பாடல்களை சமீபத்தில் யூடியூபில் கண்டு ஒவ்வொன்றாக கேட்டு பழைய நினைவுகளில் மூழ்கி மகிழ்ந்து கொண்டு இருந்தேன்.
அதை ரசிக்கும் நண்பர்களை இங்கே கண்டு பூரிப்படைந்தேன். லேட்டஸ்டாக அந்த பாடல்களை பதிந்த ஒருவரிடம் என் ம்னதில் இடம் பிடித்திருந்த
ஓரிரு பாடல்களைக் கேட்டிருந்தேன். விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இப்போதும்.. பாடல் கிடைத்தபின் அந்தப் பாடலை அப்போதும் பகிர்வேன்.
"அத்தானே அத்தானே" பாடல் ஒரு விளம்பரப் பாடல்தானே.. ?
"தோழன் ஒருவன் தோள் தருவான் துணை புரிவான் கண்ணே" என்று ஆரம்பித்து.. "மக்கள் வங்கியே நம் தோழன்" என்று Peoples Bank பெருமை பாடும் பாடல் அல்லவோ ?
"அப்பா அப்பா கடைக்கு போறியா ?
ஆமாம் கண்ணு உனக்கென்ன வேணும் சொல்லு
டாலர் பிஸ்கட் டாலர் பிஸ்கட் டாலர் பிஸ்கட் வேணும்"
ஹி ஹி.. இது கூட இலங்கை வானொலி விளம்பரம்தானுங்க..
madhu
2nd September 2014, 04:02 PM
உறவுகள் என்றும் வாழ்க்.. இந்தப் படத்தில் முத்துராமன் ஹிப்பி ஸ்டைலில் ஆட உடன் ஆடும் கருப்பு கலரார் யாருங்கோ ? சிவகுமாரா ?
ஆட்டம் எப்படி இருந்தாலும் பாட்டு.... ம்ம்ம்.. நம்ம எஸ்.பி.பி. எப்போதுமே ஒரு,,, ம்ம்ம்ம்..தான். !!
http://youtu.be/JVNygFG80fo
gkrishna
2nd September 2014, 04:06 PM
"அத்தானே அத்தானே" பாடல் ஒரு விளம்பரப் பாடல்தானே.. ?
"தோழன் ஒருவன் தோள் தருவான் துணை புரிவான் கண்ணே" என்று ஆரம்பித்து.. "மக்கள் வங்கியே நம் தோழன்" என்று Peoples Bank பெருமை பாடும் பாடல் அல்லவோ ?
வாங்க மது சார்
இந்தோ இலங்கை கூட்டு தயாரிப்பான நங்கூரம் 1979 பற்றி தகவல் ஏதும் கொடுக்க முடியுமா ? ப்ளீஸ்
லக்ஷ்மி முத்துராமன் ஆனால் லக்ஷ்மிக்கு ஜோடி இலங்கை நடிகர் என்று நினைவு .குமார் இசை
பாலாவின் குரலில் உடன் ஸ்வர்ண என்று நினைவு
இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே
எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே
madhu
2nd September 2014, 04:08 PM
இதுவும் ஒரு எக்ஸ்பெரிமெண்ட் என்று வச்சுக்கலாமா ?
ஒரு இந்தியக் கனவு படத்தில் ராஜீவ், சுஹாசினி நடிப்பில் எஸ்.பி.பி.,வாணி ஜெயராம் குரலில் வைரமுத்துவின் வார்த்தைகளுக்கு... ம்ம்.. வார்த்தைகளுக்க்கு... எம்.எஸ். வி போட்ட டியூன்.
என் பெயரே எனக்கு மறந்து போன இந்த வனாந்தரத்தில் என்னைப் பெயர் சொல்லி அழைத்தது யார் ?
http://youtu.be/2WCxNjuyziM
madhu
2nd September 2014, 04:28 PM
வாங்க மது சார்
இந்தோ இலங்கை கூட்டு தயாரிப்பான நங்கூரம் 1979 பற்றி தகவல் ஏதும் கொடுக்க முடியுமா ? ப்ளீஸ்
லக்ஷ்மி முத்துராமன் ஆனால் லக்ஷ்மிக்கு ஜோடி இலங்கை நடிகர் என்று நினைவு .குமார் இசை
பாலாவின் குரலில் உடன் ஸ்வர்ண என்று நினைவு
இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே
எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே
கிருஷ்ணா ஜி.. கொஞ்சம் பிசி.. அதனால் அவசரப் பதிவு
நங்கூரம் படத்தில் முத்துராமன் ஜோடிதான் லட்சுமி..
விஜே குமாரதுங்க என்ற இலங்கை நடிகர் ஒருதலையாக லட்சுமியை காதலித்து கடேசில புத்த பிட்சு ஆகிவிடுவார்
சட்டுனு நினைவுக்கு வருவது ரெண்டு பாடல்கள்..
ஒரு பார்வை பார்க்கும்போது
http://youtu.be/3X1Lm4mz28Y
ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி
http://youtu.be/XRnZ-LzJKPA
gkrishna
2nd September 2014, 04:35 PM
கொஞ்சம் பிசி.. அதனால் அவசரப் பதிவு
மிக்க நன்றி சார்
gkrishna
2nd September 2014, 04:45 PM
http://4.bp.blogspot.com/-CCJWn_gKpp4/U9TlEpgACgI/AAAAAAAAU9Q/T_SpcN92yTU/s1600/MAKENTHIRAN.jpg
“இன்றைய நமது சினிமா, காட்சிகளையும், ஒலியையும் உயிரோட்டமாகக் கொண்ட ஒரு மீடியா என்பதே சரியாகப் புரிந்துகொள்ளப்படாமல் இருக்கிறது என்று கருதுகிறேன். வசனமே இல்லாமல்கூட ஒரு படத்தை ரசனைக்கு உரியதாகப் படைக்க முடியும். ஆனால், அத்தகைய முயற்சியில் ஈடுபடும் ஒரு கலைஞனுக்குக் கற்பனைத் திறன் அதிகமாகத் தேவைப்படுகிறது” - மகேந்திரன்.
தமிழ் சினிமாவில் சாதனை படைத்த படைப்பாளிகளில் மகேந்திரன் குறிப்பிடத் தகுந்தவர். தமிழ் சினிமாவில் யதார்த்தமான படங்கள் எப்போதாவது ஒருமுறை வருவதுண்டு. அவற்றில் 1970-கள் வரை குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை: ஏழை படும் பாடு (1950), அவன் அமரன் (1958), பாதை தெரியுது பார் (1960), கலைக்கோவில் (1964), உன்னைப் போல் ஒருவன் (1965), ஆலயம் (1967), புன்னகை (1971) எனச் சில. 1978-ல் முள்ளும் மலரும் என்ற மிகச் சிறந்த படைப்பின் மூலம், யதார்த்தப் படங்களுக்கு ஒரு சிறந்த பாதையை அமைத்துக் கொடுத்தவர் இயக்குநர் மகேந்திரன். இன்று பிறந்தநாள் காணும் அவரை யதார்த்த சினிமாவின் ஆசான் என்று வாழ்த்துவது தகும்.
டைரக்டர் எரி வான் ஸ்ட்ரோஹிம் 1920-களில் (படம்: தி கிரீடு, 1923) தொடங்கிவைத்த பாணி, ஒரு கற்பனைக் கதையை, யதார்த்தப் பாணியில் படமாக்குவது. ஏறத்தாழ 55 வருடங்களுக்குப் பிறகு, அதைத் தமிழ் சினிமாவில் கடைப்பிடித்து, தொடர்ந்து 12 படங்களை அதே பாணியில் தந்தவர் மகேந்திரன்.
மகேந்திரன் 1977வரை கதை-திரைக்கதை-வசனகர்த்தாவாகப் பல படங்களில் பணியாற்றியவர். தங்கப்பதக்கம் (1974), வாழ்ந்து காட்டுகிறேன் (1975), வாழ்வு என் பக்கம் (1976) போன்ற வெற்றிப் படங்கள் இதற்கு உதாரணங்கள். பெயர் பெற்ற வசனகர்த்தாவான அவர் இயக்கிய முதல் படத்தில் வசனங்களே குறைவு என்பதே அவர் எப்படிப்பட்ட படம் எடுக்க ஆசைப்பட்டார் என்பதை விளக்குகிறது.
அவர் இயக்கிய 12 படங்களில் (முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, நண்டு, மெட்டி, அழகிய கண்ணே, கை கொடுக்கும் கை, கண்ணுக்கு மை அழகு, ஊர் பஞ்சாயத்து மற்றும் சாசனம்) பல தேசிய அளவில் பாராட்டப்பட்டவை. முள்ளும் மலரும் (1978), உதிரிப் பூக்கள் (1979), மற்றும் நெஞ்சத்தைக் கிள்ளாதே (1980) ஆகியவை 30 வருடங்களுக்கும் மேலாகத் தமிழ் சினிமாவில், யதார்த்தப் படங்களுக்கான வழிகாட்டிகளாக இருந்துவருகின்றன. இந்த மூன்று படைப்புகளுடன், ஜானி (1980), நண்டு (1981), சாசனம் (2006) ஆகியவை என்னுள் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
முள்ளும் மலரும்
சினிமா ஒரு விஷுவல் மீடியம் என்பதைத் தமிழ் சினிமா மறந்து, பாடல்களிலும், பக்கம் பக்கமாக வசனங்கள் பேசுவதிலும் திளைத்தது. 47 வருடங்கள் இப்படிக் கடந்த பின், குறைவான வசனங்களுடன், காட்சிப் படைப்பின் மூலமும், பின்னணி இசை மூலமும் கதையை நகர்த்தி, மாபெரும் புரட்சியைச் செய்தது இப்படம். தேசிய விருதுகளுக்கு இப்படம் அனுப்பப்படாவிட்டாலும், இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்டு, பெரும் பெயரைப் பெற்றது.
உதிரிப் பூக்கள்
யதார்த்தமும் அழகியலும் கலந்த இப்படம், நூற்றாண்டு கால இந்திய சினிமாவின் 100 சிறந்த படங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டது. சாடிஸ்டான ஒருவனை முன்னிறுத்தி, கடைசிவரை அவனின் கதாபாத்திரத் தன்மையை மாற்றாமல், அதற்கான தண்டனையை அவன் பெறுவது ஒரு புதுமை. மிகக் குறைந்த வசனங்களுடன், பின்னணி இசை மூலம் ஒரு சிக்கலான மனநிலை சம்பந்தப்பட்ட படத்தைத் தந்தது மகேந்திரனின் சிறப்பான இயக்கத்துக்குச் சான்று. இப்படமும் தேசிய விருதுகளுக்கு அனுப்பப்படவில்லை. ஆனால், இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்டுப் பெயர் பெற்றது.
நெஞ்சத்தைக் கிள்ளாதே
தேசிய விருதுக்கு அனுப்பப்பட்ட மகேந்திரனின் முதல் படம், மூன்று விருதுகளைப் பெற்று வந்தது. காட்சிப் படைப்பும், ஒளிப்பதிவும், பின்னணி இசையும் ஒரு படைப்பை உன்னத இடத்துக்குக் கொண்டுசெல்ல முடியும் என்று மகேந்திரன் மீண்டும் ஒருமுறை நிரூபித்தார். தன்னம்பிக்கை உள்ள பெண்ணின் காதலைக் கவிதையாகச் சொல்லி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். வணிக வெற்றியுடன், பல விருதுகளைக் குழுவினருக்குப் பெற்றுத் தந்த இப்படம், உயர்ந்த தரத்திற்காக என்றென்றும் பேசப்படும்.
ஜானி
இரட்டை வேடங்கள் உள்ள இப்படத்தில் இரண்டையுமே நல்ல கதாபாத்திரங்களாகப் படைத்து, அதில் ரஜினிகாந்தின் சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்தார் மகேந்திரன். தேவியின் பண்பட்ட நடிப்பிலும், காட்சி அமைப்பிலும், அற்புதமான ஒளிப்பதிவிலும், இசையிலும் மிளிர்ந்த இந்தப் படம், அழகான வெகுஜனக் கவிதை.
நண்டு
வடக்கத்தியக் கலாச்சாரத்தையும், இந்தி மொழியையும் (இரண்டு முழுமையான இந்தி பாடல்களைப் படத்தில் வைத்து) தைரியமாகவும் அதே சமயம் சரியாகவும் உபயோகப்படுத்திய படம். நோய்வாய்ப்பட்ட ஒருவன் தனக்கான ஆதரவையும் காதலையும் தமிழ்நாட்டில் பெறுகிறான். சொந்த ஊரில் இது அவனை எவ்வாறு பாதிக்கிறது என்பதை மகேந்திரன் அழுத்தமாகச் சொல்லியிருப்பார்.
சாசனம்
செட்டிநாடு என்கிற சமூகத்தின் பழக்கவழக்கங்களையும், வாழ்க்கையும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்த படம். குறைந்த செலவில், நிறைவாக எடுக்கப்பட்ட இப்படம், சரியான நேரத்தில் வெளிவந்திருந்தால், பல சாதனைகளைச் செய்திருக்கும்.
இவருக்கு, இதுவரை, தேசிய அளவில் பத்ம விருது அங்கீகாரம் தராதது வருத்தம் தருகிறது. பிறமொழிகளில் இவரை விடவும் குறைவான சாதனைகள் புரிந்தவர்கள் பத்ம விருதுகளைப் பெறும்போது, தமிழ் சினிமாவின் தரம் உயர அதிகம் பங்களிப்பு செய்த இவருக்கு அத்தகைய அங்கீகாரம் விரைவில் கிடைக்க இந்த நேரத்தில் பிரார்த்திக்கிறேன்.
அவரின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக, சினிமா துறையில் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள, அவரின் புத்தகமான ‘சினிமாவும் நானும்’ என்ற புத்தகத்தையும் குறிப்பிடலாம். சினிமா துறையில் நுழைய விரும்புபவர்களும், அதில் உள்ளவர்களும், கண்டிப்பாகப் படிக்க வேண்டிய புத்தகம்.
இந்தப் புத்தகத்தில், “மறக்க முடியாத பெருமைக்குரிய படங்கள் என்பவை, வெற்றியும் கண்டு, காலத்தால் அழியாதவையாக மக்கள் மனத்தில் நிலைத்து நிற்கும். அத்தகைய பெருமைக்குரிய படங்கள் நமது மண்ணின் பெருமையையும் கலாச்சாரத்தையும், நம் மக்களின் நிஜமான வாழ்வையும் பிரதிபலிப்பவையாக இருக்கும். அவை நமது மண் சார்ந்த இதர கலைகளின் மகிமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும்” என்று மகேந்திரன் சொல்லியிருக்கிறார்.
இந்த ஆசானின் படைப்பாற்றலைத் தமிழ் சினிமா மீண்டும் ஒரு திரைப்படம் மூலம் காணப் போகிறது என்ற செய்தி மகிழ்ச்சி தருகிறது.
From Tamil Hindu
chinnakkannan
2nd September 2014, 06:21 PM
கலைக்கோவில் (1964),ஆலயம் பார்த்ததில்லை ..எப்படி இருக்கும்..
திடுமென பானுப்ப்ரியாவின் முதல்படம் நினைவுக்கு வந்த்து..மெல்லப் பேசுங்கள்..வசந்த் கதானாயகன் என நினைவு..செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு, காதல் சா..கா..து..உயிர் போ..கா..து என அழகுப் பாடல்கள்..பாரதிராஜா அல்லது இளையராஜாவின் சொந்தப் படம்..படம் சரியாகப் போகாததால் பானுப்ரியா தெலுகுக்குப் போய் சித்தாரா என்னும் படமோ என்னவோ கிருஷ்ண வம்சியால் மோதிரக்கை குட்டு வாங்கி பின் பாடும் பறவைகள் (தெலுகில் இருந்து தமிழில் டப் செய்யப் பட்டு) மூலமாகமறுபடி தமிழ் மார்க்கெட்பிடித்தார் என நினைக்கிறேன்.. பாடும் பறவைகளில் கூட இரண்டு நல்ல பாடல்கள்..கீரவாணி, ஏகாந்த வேளை..ம்ம்
vasudevan31355
2nd September 2014, 08:35 PM
வாருங்கள் மதுஜி.
வந்தவுடனேயே அமர்க்களமான பாடல்கள் வந்து விழுகின்றன. உச்சம் 400 பூக்கள். ரொம்ப நாள் இப்படித்தான் இருக்க வேணும் என்று கற்பனை பண்ணி வைத்திருந்த பாட்டு. பரவாயில்லை. கற்பனைக்கு வெற்றிதான்.
ஆனால் உற்சாக பாலாவின் அந்த தேன் மதுரக் குழைவுக் குரலுக்கு முத்து தூள் கிளப்பியிருக்க வேண்டாமோ! சரியான அசமந்தம். இப்பத்தான் 'துலாபாரம்' படத்தில் 'சிரிப்போ இல்லை நடிப்போ'வில் மனிதர் பிச்சி உதறியிருந்ததை வானாளாவ புகழ்ந்து எழுதியிருந்தேன். இங்கு மனிதர் முகத்தில் கரி பூசி விட்டாரே!
நீங்கள் சொன்னது போல் எது எப்படி இருந்தால் என்ன? அட்டகாசமான மியூசிக்கும், பாலாவின் பட்டை கிளப்பும் குரலும், 'பாபி பாபி பாபி' கோரஸும் இந்தப் பாடல் என்றும் வாழ்க என்று கூப்பாடு போட வைக்குதே.
அநியாயத்துக்கு உங்களுக்கு தேங்க்ஸ் மதுஜி.
கொலம்பியாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.பல முத்தான பாடல்கள் கிடைக்க அந்த நிறுவனம் ஸ்டோர் செய்து வைத்த ஒளி நாடாக்கள்தான் காரணம். இன்று கிடைக்காத பல பொக்கிஷங்களை நாம் அந்த நிறுவனம் தரும் படங்கள், மற்றும் பாடல்கள் மூலம் ரொம்ப ஈசியாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட அபூர்வ பாடல்களை தரவேற்றும் அருமை நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். அவற்றைத் தேடிக் கண்டுபிடித்து இங்கே அளிக்கும் பணியைச் செவ்வனே செய்யும் தங்களுக்கும் கோடி நன்றிகள்.
ஆங். மறந்து விட்டேனே. அந்த கருப்பு ஹிப்பி கட்டழகன் :)நம்ம 'ஜூனியர் பாலையா' மது சார்.
RAGHAVENDRA
2nd September 2014, 10:30 PM
வாசு சார்
வாடைக் காற்றம்மா... வாடைக்காற்றம்மா... வாலிப மனசை நாளுக்கு நாளாய் வாட்டுவதென்னம்மா... என்ற இந்தப் பாட்டுத் தான் நம் மக்களுக்கு வாடைக் காற்று என்றால் உடனே நினைவுக்கு வரும். ஆனால் இலங்கை வானொலியின் வாடைக்காற்றி நினைவில் வைத்து அருமையாக படைத்த தங்களின் ஆற்றலை என்னென்பது.
சென்னை நகர மக்களைப் பொறுத்த வரையில் வாடைக்காற்றம்மா பாடலை அதிகம் பேர் கேட்டிருக்க வாய்ப்பில்லை. 70 களின் பிற்பகுதியில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் சென்னை நகரில் இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் கேட்கவில்லை. அப்போது அலைவரிசை மாற்றம் ஏற்பட்டிருந்தது. 60களிலிருந்தே சிற்றலையில் தான் கேட்டு வந்த காலம். சிற்றலையில் ஒலி சீராக இருக்காது. மீடியம் வேவ் எனப்படும் அலைவரிசையில் சீராக இருக்கும். இலங்கை வானொலியின் மீடியம் வேவ் வானொலி நெல்லை கன்னியாகுமரி தொடங்கி அதிகபட்சம் விழுப்புரம் திண்டிவனம் எனப்படும் சுற்று வட்டாரம் வரையில் மட்டுமே கேட்கும். சென்னையில் மிகவும் கஷ்டம். சிற்றலையில் மட்டுமே கேட்கும். அதுவும் இலங்கை வானொலியின் தமிழ் சேவை 2 .. இது தான் திரைப்படப் பாடல்களை அதிகம் ஒலிபரப்பு செய்யும் அலைவரிசை..சென்னை நகரில் சிற்றலையில் காலையில் கொஞ்ச நேரமும் மாலையில் கொஞ்ச நேரமும் மட்டுமே கேட்கும். எஞ்சிய நேரங்களில் அலைவரிசை ஒன்று ஒலிபரப்பாகும்.
இந்த கால கட்டத்தில் இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவை இரண்டை அதிகம் கேட்க முடியாமல் அவதிப்பட்ட துரதிருஷ்டசாலிகள் சென்னை மக்கள். எப்போதாவது வெளியூருக்கு போகும் சந்தர்ப்பம் கிடைத்தால் மட்டுமே இலங்கை வானொலி கேட்க முடிந்தது.
இந்த கால கட்டத்தில்தான் வாடைக் காற்று படமும் பாடலும் மிகப் பெரிய புகழடைந்தது. வெளியூரிலிருந்து வரும் நண்பர்கள் இப்பாடலைப் பற்றி சொல்லும் போதெல்லாம் நாம் கேட்க முடியவில்லையே என வருந்தியதுண்டு. அதன் பின் இலங்கை வானொலியின் ஒலிபரப்பு படிப்படியாக சென்னையில் குறைந்து விட்டது.
எப்படியோ அந்தக் காலத்தில் ஓரிரு முறை கேட்க நேர்ந்த பாடலை இப்போது வழங்கி என்னைப் போன்ற ரசிகர்களின் ஆவலைப் பூர்த்தி செய்த வாசு சாருக்கும், மேலதிக விவரங்கள் தந்த கிருஷ்ணாஜி அவர்களுக்கும் பாராட்டுக்கள்.
rajeshkrv
3rd September 2014, 06:53 AM
நான் தங்களுடன் 1000000000000000000000000 சதவிகிதம் உடன் படுகிறேன்.
நானும் தான் நான் 10000000000000000000000000000000000000000000000000 00000000000000000 சதவிகிதத்திற்கும் மேலே உடன்படுகிறேன்
vasudevan31355
3rd September 2014, 07:31 AM
கலைக்கோவில் (1964),ஆலயம் பார்த்ததில்லை ..எப்படி இருக்கும்..
'கலைக்கோயில்' காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள் இருந்தும் ஏனோ தானோ என்று எடுக்கப்பட்டு பொருத்தமற்ற நடிகர்களின் தேர்வினால் 'கொலைக் கோயில்' ஆனது.
'ஆலயம்' ஆர்ட் மூவி ரேஞ்சுக்கு ஓர் அருமையான படம். மேஜரின் பண்பட்ட நடிப்பு. பாடல்களும் ஓ.கே.
vasudevan31355
3rd September 2014, 07:33 AM
மிக்க நன்றி ராகவேந்திரன் சார். தங்கள் ஆதரவும், ஆசீர்வாதமும் என்றும் எங்கள் துணை நிற்கும். இரண்டு நாட்களாக தங்கள் 'பொங்கும் பூம்புனல்' பார்க்காமல் என்னவோ போல் உள்ளது, ப்ளீஸ்.
vasudevan31355
3rd September 2014, 07:37 AM
வணக்கம் ராஜேஷ்ஜி.
எங்கே அவ்வளவாகக் காணோம். நல்ல கன்னடப் பாடல் ஒன்று வழங்குங்கள். பார்த்து நாட்களாகி விட்டது. ராட்சசி பாடலும் முடிந்தால்.
(உங்கு உன்னடா செல்வமே'போல வெகு வித்தியாசமாய்)
vasudevan31355
3rd September 2014, 07:42 AM
சி.க.சார்,
'மெல்லப் பேசுங்கள்' வசந்த். என்னுடைய மைத்துனருக்கு மிக நெருங்கிய நண்பர். அதனால் எனக்கும் நண்பரானார். என்னுடைய மைத்துனர் சென்னை வந்தால் இருவரும் வசந்த் வீடு சென்று அவரை கட்டாயம் பார்த்து விட்டுதான் வருவோம். மிக நல்ல மனிதர். ஏனோ காலன் அவரை சீக்கிரம் அழைத்துக் கொண்டான்.
http://i.ytimg.com/vi/iCdkj4jlygA/hqdefault.jpg
https://www.youtube.com/watch?v=iCdkj4jlygA&feature=player_detailpage
vasudevan31355
3rd September 2014, 07:45 AM
'பாடும் பறவைகள்' படத்தில் அனைவருக்கும் பிடித்த கீரவாணி பாடல். டப்பிங் பட பாட்டு போலவே தெரியாது. அவ்வளவு அற்புதமாக இசை அமைத்திருப்பார் இளையராஜா. சூப்பர் ஹிட் பாடல் வரிசையை சேர்ந்தது.
https://www.youtube.com/watch?v=JBNGCH2845s&feature=player_detailpage
vasudevan31355
3rd September 2014, 07:48 AM
அதே படத்தில் 'ஏகாந்த வேளை இனிக்கும்... இன்பத்தின் வாசல் திறக்கும்' பாடல். பானுபிரியா கொள்ளை அழகு. இவரிடம் பிடிக்காதது ஸ்ரீதேவியை அப்படியே இமிடேட் செய்வார். சிரிக்கும் போது அப்படியே ஸ்ரீதேவியை காப்பி அடிப்பது தெரியும். நல்ல திறமையான நடிகைதான். நல்ல குரலுக்கும் சொந்தக்காரர்.
https://www.youtube.com/watch?v=XETdjUmVpfA&feature=player_detailpage
vasudevan31355
3rd September 2014, 07:57 AM
'பாடும் பறவைகளி'ல் இன்னொரு திகில் பாட்டு.
'நிழலோ நிஜமோ நெஞ்சில் போராட்டமோ' 'ஆவ்... வீல்' சத்தம், முகமூடி கொலை வெறித் துரத்தல். உயிர்ப் பயத்தில் மரமெல்லாம் ஏறித் தப்பிக்கும் பானு. வனாந்திரம், தொங்கும் வவ்வால்கள், 'ஹோ' என்று திகிலூட்டும் கோரஸ். 'ஸநிதபமகரிச' குரல்கள். ஜானகி ரசிகர்கள் 'ராக்கிங்' என்று எழுதுவார்கள். ராஜா பின்னல். நிஜமாகவே குலை நடுங்க வைக்கும் திகில்தான்.
https://www.youtube.com/watch?v=u5qjY6mCuDk&feature=player_detailpage
vasudevan31355
3rd September 2014, 08:04 AM
பானுபிரியா. சில அபூர்வ கருப்பு வெள்ளை புகைப்படங்கள்
http://i96.photobucket.com/albums/l167/strangerinthemi/Bhanupriya-Sitara.jpg (http://s96.photobucket.com/user/strangerinthemi/media/Bhanupriya-Sitara.jpg.html)
http://i96.photobucket.com/albums/l167/strangerinthemi/Bhanupriya-Anveshana.jpg
http://i605.photobucket.com/albums/tt139/mithunsheets/54.jpg
http://sphotos-g.ak.fbcdn.net/hphotos-ak-ash3/540975_491287600887170_247515634_n.jpg
vasudevan31355
3rd September 2014, 08:10 AM
http://sphotos-b.ak.fbcdn.net/hphotos-ak-ash3/558171_515030331846230_1963615893_n.jpg
http://sphotos-h.ak.fbcdn.net/hphotos-ak-ash3/561693_515030415179555_885818616_n.jpg
http://2.bp.blogspot.com/-8Sqpjvh2opk/TjOFv6Gju4I/AAAAAAAAA3A/hYn59IZ2ZOY/s1600/swarnakamalam+banupriya+4.jpg
http://www.bollygallery.com/show/Bhanupriya/Bhanupriya%20-%2032.jpg
http://moviesecret.files.wordpress.com/2013/02/bhanupriya-12.jpg
http://moviesecret.files.wordpress.com/2013/02/bhanupriya_gopuravaasalile9.jpg
http://mohanasangeetham.files.wordpress.com/2010/07/vlcsnap-154242.png
vasudevan31355
3rd September 2014, 08:11 AM
'காஷ்மோரா'வில் பயமுறுத்தும் பானுப்பிரியா
http://qa-temp.aptalkies.com/modules/gallery/galleries/Movies/Kashmora%20(1986)/posters/Kaashmora%20(1986)1.jpg
vasudevan31355
3rd September 2014, 08:19 AM
http://4.bp.blogspot.com/_u0aDDmyy-Ik/S-zg65BaM9I/AAAAAAAAApQ/CHCUE_yjWHk/s400/mohanlal_in_shooting_location35.jpg
Richardsof
3rd September 2014, 08:26 AM
http://i60.tinypic.com/1zn6fpd.jpg
Richardsof
3rd September 2014, 08:30 AM
http://i61.tinypic.com/10hlv9w.jpg
Richardsof
3rd September 2014, 08:32 AM
http://i62.tinypic.com/nq8isj.jpg
Richardsof
3rd September 2014, 08:34 AM
http://i61.tinypic.com/24biuma.jpg
vasudevan31355
3rd September 2014, 08:43 AM
Vinodh sir,
All ads are excellent. Only done by you. Thanks.
Richardsof
3rd September 2014, 08:43 AM
இனிய நண்பர் வாசு சார்
பானுப்ரியா நிழற் படங்கள் - வீடியோ பாடல்கள் - அருமை .90 களில் பானுப்ரியா மற்றும் சுகன்யாஇருவரும் ஒரு கலக்கு கலக்கினார்கள் .
rajeshkrv
3rd September 2014, 08:49 AM
என்ன வாசு ஜி. நலம் தானே ...
இரண்டு மூன்று நாட்கள் கொஞ்சம் இந்த பக்கம் வரமுடியவில்லை
இதோ உங்களுக்காக இன்னொரு மலையாள காவியப்பாடல்
இசையரசியின் குரலும் தேவராஜன் மாஸ்டரின் இசை வயலாரின் வரிகள்
அதாவது சகுந்தலை துஷ்யந்தனை பார்த்தவுடன் அவன் ஞாபகமாகவே இருப்பதால் அவள் பாடுவதாக அமைந்த பாடல்
அவள் கேட்கிறாள் மந்திரங்களை சொல்லும் உதடுகள் காதலை எப்படி பாடும் என்பது போல் பல வகையான கேள்விகளை அழகாக பாடுகிறார்
http://www.youtube.com/watch?v=pRxGLMhF_R8
rajeshkrv
3rd September 2014, 08:51 AM
இனிய நண்பர் வாசு சார்
பானுப்ரியா நிழற் படங்கள் - வீடியோ பாடல்கள் - அருமை .90 களில் பானுப்ரியா மற்றும் சுகன்யாஇருவரும் ஒரு கலக்கு கலக்கினார்கள் .
சுகன்யா எனக்கு மிகவும் பிடித்த நடிகை. நல்ல திறன் இருந்தும் மிகப்பெரிய இடத்திற்கு வர முடியவில்லை காரணம் தமிழச்சியோன்னோ
சுகன்யா எஸ்.டி.சுப்புலெட்சுமியின் பேத்தி என்பதாக நினைவு(வீணை பாலச்சந்தர் அவருக்கு மாமா தாத்த முறை )
Richardsof
3rd September 2014, 08:55 AM
MELODY SONG
http://youtu.be/Jyg-fNuiN_Q
Richardsof
3rd September 2014, 08:56 AM
http://youtu.be/U4r1JRy48R0
rajeshkrv
3rd September 2014, 09:15 AM
ente favourite of sukanya
http://www.youtube.com/watch?v=jZtM1FkD0Xo
vasudevan31355
3rd September 2014, 10:02 AM
http://i.ytimg.com/vi/O2-oanVA-eQ/maxresdefault.jpg
ராஜேஷ்ஜி,
நலமே!
மலையாள சகுந்தலையை பார்த்து விட்டு எழுதுகிறேன்.
அதற்குள் இன்னொன்று. 'கண்ணன் வந்ததாலே நன்மை வந்தது' பாடல் சுகன்யா அருமை.
இந்தப் பாடல் 'தம்பி பெண்டாட்டி' என்ற படத்தில் வருவது. இந்தப் பாட்டை நீங்கள் போடும் போதே தங்கள் ரசனையின் உச்சம் புரிகிறது. இது புகழ்ச்சிக்காக அல்ல.
ஏனென்றால் பின்னாளில் 80 களுக்கு மேல் வந்த பல படங்களில் மிகச் சிறந்த படமாக இதை நான் தேர்ந்தெடுப்பேன். பலருக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால் மிக அருமையாக எடுக்கப்பட்ட மிக இயல்பான படம் இது. இப்படத்தைப் பற்றி தனியே எனக்குள்ளாகவே நான் பலமுறை சிலாகித்துக் கொள்வதுண்டு. (மற்றவர்களிடம் பகர்ந்து கொண்டால் அடி விழும். பல பேருக்கு இப்படமே தெரியாது)
ஒரு ஆச்சாரமான குடும்பத்துப் பெண் ஒரு மேற்போக்கான சிந்தனை உடைய, ஒரு ஜாலியான, ஜோவியலான, எல்லோரிடமும் கள்ளம் கபடம் இல்லாமல் பழகக் கூடிய ஒரு நல்ல குடும்பத்தில் வாழ்க்கைப் படுகிறாள். ஆனால் அவளுக்கு தன் கணவன் வீட்டார் செய்வது எல்லாமே தப்பாகப் படுகிறது. (மாமனார் நாகேஷ் தன் மனைவி கவிதாவிடம் வெகு சகஜமாக பேசி தொட்டு விளையாடுவார்) எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிக்கிறாள். கணவன் மிக பொறுமைசாலி. தன் வீட்டாரை தன் மனைவி புரிந்து கொள்ளவில்லையே என்று ஆதங்கப்படுகிறான். அவளுக்கு விளக்க எவ்வளவோ முயற்சி செய்கிறான். அந்நாள் அவள் பிடிவாதமாக அவனை தனிக் குடித்தனம் அழைத்துச் சென்று அவனை அவன் குடும்பத்தாரிடம் இருந்து பிரித்து விடுகிறாள். தன் வீட்டாரை மறக்க முடியாமல் தவிக்கிறான் அவன். இப்படிப் போகும் கதை.
ஆச்சார மருமகளாக சுகன்யாவும், கணவனாக ரகுமானும் நடித்திருப்பார்கள். இல்லை இல்லை வாழ்ந்திருப்பார்கள். மிக அருமையான திரைக்கதையைக் கொண்ட பஞ்சு அருணாச்சலத்தின் பிரமாதமான படம் இது. நல்ல படமாயிற்றே! ஓடுமா? பெட்டியில் படுத்து சுருண்டு கொண்டது.
இளையராஜா இந்தப் படத்தில் பிரமாதப் படுத்தியிருப்பார். ரம்யா கிருஷ்ணனும், ரகுமான் கானும் பங்கு பெறும் ஒரு பாடல் காட்சி என்றைக்கும் மறக்க முடியாதது. ராஜா இந்தப் பாடலில் தனி முத்திரை பதித்திருப்பார். மிக மிக பிரமாதமான பாடல்.
'உன் எண்ணம் எங்கே எங்கே
நீ தேடும் வண்ணம் இங்கே'
அதுவும் அந்த 'டம டம டிங் டிங்'
ரொம்ப ரொம்ப அருமை.
நான் மிக மிக ரசித்து அனுபவித்த பாடல். வித்தியாச டியூன் கொண்டது. 'இன்றைய ஸ்பெஷல்' பாடல் பதிவுக்காக நான் தேர்வு செய்து வைத்திருந்த பாடல். பரவாயில்லை. இப்போது தங்கள் அனைவருக்கும் அளிப்பதில் மிகவும் சந்தோஷம். ஒரு அருமையான படத்தை நினைவு கூற வைத்தமைக்கு நன்றி ராஜேஷ்ஜி. ஒரே ஒரு பாடலைப் பதிந்து அந்தப் படத்தையே நெஞ்சில் ஓட வைத்து விட்டீர்களே! இதுதான் ஒரே நேர்க்கோட்டு ரசனையோ!
(ராஜேஷ்ஜி,
இந்தப் பாடலைப் பற்றிய தங்களது கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்)
http://www.youtube.com/watch?v=6HNmHC-5JxE&feature=player_detailpage
vasudevan31355
3rd September 2014, 10:06 AM
ஒவ்வொருவரும் கட்டாயம் பார்த்து ரசிக்க வேண்டிய படம் இது இல்லை இல்லை பாடம் இது. இப்படத்தை இங்கு அளித்துள்ளேன். நேரம் கிடைக்கையில் அனைவரும் அவசியம் பார்க்கவும்.
http://www.youtube.com/watch?v=O2-oanVA-eQ&feature=player_detailpage
chinnakkannan
3rd September 2014, 10:30 AM
குட்மார்னிங் ஆல்..
வாசு சார்..பானுப்ரியா பற்றிய படங்க்ள், பாடல்கள்வசந்த் பற்றிய பதிவு (அவர் இறந்து விட்டாரா..எனக்குத் தெரியாது), தம்பி பெண்டாட்டி (பார்த்ததில்லை) படம் பாடல் அனைத்துக்கும் நன்றி.. த.பெயில் மெய்னாக த் தெரிவது ரம்யா க்ருஷ்ணனோன்னோ ( நாராயண நாராயண!) :)
பானுப்ரியாவைப் பொறுத்தவரை அவரதுசொந்த வாழ்க்கை மிக சோகம்.. ஜெயா டிவியில் தகதிமி தாவோ என்னவோ ஒரு ஷோவில் சுகாசினி பேட்டி கண்ட போது அவரது குரல் போய் முகமும் மிக வாடி கொஞ்சம் பாவமாகவே இருந்தது..
சுகன்யா நல்ல நடிகை என்பதை விட அந்தக் கால கட்டத்தில் அவரை ஒழுங்காக யாரும் உபயோகப் படுத்திக் கொள்ளவில்லை..ஆஹாவில் சிறு ரோல்..ம்ம்
எஸ்வி.சார்.. அந்த பழைய விளம்பரங்களுக்கு நன்றி .. ராதா மட்டும் நினைவுக்கு வருகிறது..மலையாள சகுந்தலை வீட்டுக்குப் போய்த் தான் பார்க்க வேண்டும்.. நன்றீ ராஜேஷ்
mr_karthik
3rd September 2014, 10:46 AM
டியர் வாசு சார்,
'தம்பி பொண்டாட்டி' படம் எனக்கும் பிடித்ததுதான். பஞ்சு அருணாச்சலம் டைரக்ட் செய்த ஒரே படம். நன்றாகத்தான் செய்திருந்தார். ரஹ்மான், நிழல்கள் ரவி, அவர் மனைவியாக வரும் ரம்யாகிருஷ்ணன் என எல்லோரும் நன்றாக நடித்திருந்தனர். சுகன்யா பாத்திரம் மட்டுமே கொஞ்சம் எரிச்சலூட்டும்.
பஞ்சுவின் மீது எனக்கு அவ்வளவு பிடிப்பு கிடையாது. பொன்னெழில் பூத்தது புதுவானில், சின்னஞ்சிறிய வண்ணப்பறவை, காதலின் பொன் வீதியில் காலத்து பஞ்சுவைப்பிடிக்கும். ஆனால் 75-க்குப்பின் மாறிப்போனார். வித்தியாசமாக யதார்த்தம் பக்கம் மாறிக்கொண்டிருந்த தமிழர்களின் ரசனையை திரும்பவும் முரட்டுக்காளை, சகலகலா வல்லவன், பாயும்புலி போன்றவை மூலம் மீண்டும் பழைய அடாசுகள் பக்கம் திருப்பியதில் இவர் பங்கு ரொம்ப உண்டு. தவிர, எனக்குப்பிடிக்காத (இங்குள்ள என் நண்பருக்கு பிடித்த) 'ஒருவரை' தேவைக்கதிகமாக பூஸ்ட் செய்து மேலே கொண்டுவந்ததில் இவருடைய பங்கு அதிகம். ஏ.வி.எம்., கவிதாலயா, சத்யா மூவீஸ், பாலாஜி, போன்ற கம்பெனிகளில் 'அவரை' புஷ் பண்ணி நுழைத்ததும் இவர்தான். கிட்டத்தட்ட 'அவரது' பி.ஆர்.ஓ. மாதிரி செயல்பட்டார்...
mr_karthik
3rd September 2014, 10:55 AM
வசந்த், 'நேர்மை' படத்தில் பேராசிரியர் நடிகர்திலகத்தின் மாணவர்களில் ஒருவராக நடித்திருந்தார். சின்னத்திரை நடிகர்சங்கத் தலைவராகவும் இருந்தார். அவர் நடித்த பல சீரியல்களில் 'அர்ச்சனைப்பூக்கள்' மிகவும் பிடிக்கும். இவ்வளவு சீக்கிரம் மறைவார் என்பது யாரும் எதிர்பார்த்திராத ஒன்று...
mr_karthik
3rd September 2014, 10:59 AM
டியர் வினோத் சார்,
தாங்கள் பதித்த ராதா, என்ன முதலாளி சௌக்கியமா, தெய்வக்குழந்தைகள், பிள்ளையோ பிள்ளை விளம்பர ஆவணங்கள் அனைத்தும் மிக மிக அருமை. நினைவலைகளை கடந்த காலங்களுக்கு இட்டுச்செல்கின்றன.
ஆவணங்கள் அனைத்துக்கும் மிக்க நன்றி...
mr_karthik
3rd September 2014, 11:06 AM
டியர் வாசு சார்,
பானுப்ரியாவின் அருமையான ஸ்டில்களுக்கு நன்றி. அவர் நடித்த படங்களில் 'அழகன்' மிகவும் பிடித்த படம். மரகதமணியின் இசையில் ஏழு பாடல்களும் செம ஹிட் மட்டுமல்ல, வெரைட்டியும் கூட. 'சிலருக்கு' பயத்தையே உண்டாக்கினார்.
அப்படத்தில் அலட்டல் மதுபாலா, அழகான பானுப்ரியா, அமைதியான கீதா எல்லோருமே அருமை. அனைவரையும் தூக்கி சாப்பிட்ட சேட்டன் மம்மூட்டி.
அழகன், வானமே எல்லை, ஜாதிமல்லி மூன்றும் மரகதமணியின் மூன்று மாஸ்ட்டர் பீஸ்கள்...
vasudevan31355
3rd September 2014, 11:30 AM
நன்றி கார்த்திக் சார்.
நடிகர் திலகத்தின் 'நீதியின் நிழல்' படத்தில் கூட வசந்த் ஒரு சிறு பாத்திரத்தில் நடித்திருப்பார்.
பஞ்சு அருணாச்சலம் பற்றி தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை. இவர்தானே பிரபு நடித்த 'மணமகளே வா' எடுத்தது?
நீங்கள் கூறியபடி 'அழகன்' ஓர் அற்புதன் தான். நாயகிகளும் நன்று. ஆனால் எனக்கென்னவோ மதுபாலாவைப் பிடிக்கவே பிடிக்காது. லாரி மோதின பென்ஸ் கார் மாதிரி ஒடுக்கு ஒடுக்கான மூஞ்சி.
gkrishna
3rd September 2014, 11:35 AM
டியர் வாசு சார்,
பானுப்ரியாவின் அருமையான ஸ்டில்களுக்கு நன்றி. அவர் நடித்த படங்களில் 'அழகன்' மிகவும் பிடித்த படம். மரகதமணியின் இசையில் ஏழு பாடல்களும் செம ஹிட் மட்டுமல்ல, வெரைட்டியும் கூட. 'சிலருக்கு' பயத்தையே உண்டாக்கினார்.
அழகன், வானமே எல்லை, ஜாதிமல்லி மூன்றும் மரகதமணியின் மூன்று மாஸ்ட்டர் பீஸ்கள்...
பானுப்ரியா-[பிறப்பு 15.01.1966]-வயது-48.இவர் 1980 முதல் – 1993 வரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னனி நடிகையாகத் திகழ்ந்தார். இவர் 1990-களில் சில இந்தித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராஜமுந்திரியில் ஜனவரி 15, 1966 வருடம் பிறந்த இவர், இளமைக் காலம் முதல் சென்னையில் வசித்து வருகிறார்.
இவருடைய தங்கை நிஷாந்தி, (சாந்திப்பிரியா) என அறியப்பட்ட இவர், பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நிஷாந்தி எங்க ஊரு பாட்டுக்காரன் (1988) திரைப்படம் மூலமாக பிரபலமானார். நிஷாந்தி 2002-ம் ஆண்டு தொலைக்காட்சித் தொடரான ஆர்யமான்-லும், நடித்தார். பானுப்ரியாவின் மற்றொரு தங்கையான ஜோதிப்ரியாவும் தொலைக்காட்சிகளிலும், திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் தெலுங்கில் 55 திரைப்படங்களிலும், தமிழில் 40-க்கும் மேற்பட்டத் திரைப்படங்களிலும், 14 இந்தித் திரைப்படங்களிலும் மற்றும் சில மலையாள மற்றும் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் தன்னுடைய 17-வது வயதில் நடிக்க ஆரம்பித்தார். இவருடைய முதல் தமிழ்த் திரைப்படம், மெல்ல பேசுங்கள் 1983-ம் ஆண்டு வெளியானது. தெலுங்கில் இவர் நடித்த முதல் திரைப்படம் சித்தாரா (1983).
பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கியதால், பெரும்பாலான இவருடையத் திரைப்படங்களில் நடனமாடும் கதாப்பாத்திரமாகவே அமைந்தது. இவருடைய நடிப்பும் நடனமும் சக கலைஞர்களால் பாராட்டப்பட்டது. இவர் தற்போது பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார். இவர் தன்னுடைய கண்களால் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் சிறந்து விளங்கினார். அதன்காரணமாக இவருடைய ஐ-டெக்ஸ் (Eyetex) விளம்பரமானது மிகவும் பிரபலம்.
அமரிக்காவைச் சேர்ந்த விருதுபெற்ற புகைப்படக்கலைஞரும், பிரபல பரதநாட்டிய கலைஞரான சுமதி கவுசலின் மகனுமான ஆதர்ஷ் கவுசல், என்பவரை பானுப்ரியா திருமணம் செய்து கொண்டார்.தற்போது கணவரை விவாகரத்து செய்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். தற்போது சென்னையில் தாயும் சேயும் தனியே வசித்து வருகின்றனர்.
http://antrukandamugam.files.wordpress.com/2014/01/bhakyaraj-bhanupriya-araariro-aariraro-1989-1.jpg?w=487
மெல்ல பேசுங்கள் படத்திற்கு பிறகு ஆராரோ ஆரிரரோ மீள் பிரேவேசம்
சத்யராஜ் கதாநாயகனாக வைத்து கட்டளை என்று நினைவு சொந்த படம் எடுத்தார் . இவர் தம்பி கோபி நடிகை விந்தியாவை திருமணம் செய்து கொண்டு பிறகு விவாகரத்து பெற்றார் என்று நினைவு
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcSpjxJT6G9gIpB7lHVqgq-IopmW7bXXuvIRv8BfesYcF9_tTs6ZXA
vasudevan31355
3rd September 2014, 11:42 AM
இன்றைய ஸ்பெஷல் (68)
'இன்றைய ஸ்பெஷல்' தொடரில் இன்று ஒரு பழைய பாடல். ஆனால் என்றென்றும் புதுமை பொங்கும் ஒரு பாடல். புதுமைகளுக்கு முன் முயற்சி இந்தப் பாடல். இதற்குப் பின் பல புதுமைப் பாடல்கள் வந்தாலும் 'பர்ஸ்ட் ஈஸ் தி பெஸ்ட்' என்பது போல இதன் வித்த்தியாசமே தனிதான். இந்தப் பாடலை எந்தப் பாடலும் இதுவரை அடிக்க முடியவில்லை.
அப்படி என்ன இந்தப் பாடலில் விசேஷம் ?
'எக்கோ' எனப்படும் எதிரொலி ஒலித்த முதல் பாடல்.
மிக அருமையான இசைக்கருவிகளின் சங்கமத்தில், மிகத் தெளிவான ரிக்கார்டிங்கில் தொடங்கும் பாடல்.
நாயகி போருக்குச் சென்று வெற்றி வாகை சூடி வர இருக்கும் தன் நாயகனுக்காகக் காத்திருக்கிறாள். மனமெல்லாம் உறசாகம் கரை புரள தன் கண்ணாளனை நினைத்து தனியே பாடி மகிழ்கிறாள்.
'வெற்றிவாகை சூடி வரும் என் ராஜனோடு பேசி மகிழ்வேனே' என்று ஆனந்தக் கூத்தாடுகிறாள்.
கன்னி மாடத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கும் அந்தத் தோட்டத்திலே அவள் பாடிக் கொண்டே வருகிறாள். அப்போது அங்கு ஒரு கிணறு. எதிர்பாராத விதமாக அந்தக் கிணற்று அருகில் அவள் பாடும் போது அவளுடைய பாடல் ஒலி கிணற்றினுள் விழுந்து அவளுடைய குரலே அவளுக்கு எதிரொலியாய்க் கேட்கிறது. 'ராஜன் வருவாரே' என்று பாடி அவள் ஆவலாய்க் கிணற்றைக் கவனிக்க, அதே வரிகள் அமுதமாய் அவள் காதில் வந்து விழுகின்றன. உற்சாகாமாய் பாடும் அந்த யவன சுந்தரி இன்னும் சந்தோஷமாய் குதூகலித்து தான் காதலனைப் பற்றி பாடி அதை தானே எதிரொலியாகக் கேட்டு மகிழ்கிறாள்.
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'சர்வாதிகாரி' படத்தின் அழகு சுந்தரியாய் அஞ்சலிதேவி. மிக நுணுக்கமான செல்ல சிணுங்கல்களோடு, மிக சுழிப்புகளோடு இளசு, பெரிசு என்று பேதமில்லாமல் அனைவர் தூக்கத்தையும் கெடுக்கிறார்.
'அன்றலர்ந்த தாமரை மலர் அழகா அல்லது எங்களது அஞ்சலி தேவி அழகா? எங்கள் அஞ்சலிதேவி அழகு எவருக்கு வரும்' என்று எங்கள் வீட்டு பெருசுகள் எல்லாம் இன்றும் புலம்பும். உண்மைதானே! யாரும் மறுக்க முடியாதே! எம்.ஜி.ஆர். இப்படத்தின் நாயகர்.
எஸ்.தக்ஷனாமூர்த்தி
http://www.thehindu.com/multimedia/dynamic/01758/hycp16susarla-A_HY_1758103e.jpg
லதாவுடன் எஸ்.தக்ஷனாமூர்த்தி
http://apnaarchive.files.wordpress.com/2012/09/35929_320626874680453_1762254581_n.jpg
எஸ்.தக்ஷனாமூர்த்தி அவர்களின் புதுமையான இசை மறக்கவே முடியாது. அந்தக் காலத்திலேயே (1951) அசாத்தியக் கற்பனைவளம். நாயகி பாட, அந்தக் குரல் அப்படியே கிணற்றுக்குள் இருந்து எதிரொலிக்க வேண்டும். முதலில் 'முடியாது' என்று மறுத்த இசையமைப்பாளர் பின் சவாலாக அதை ஏற்று, இன்றுவரை வெல்ல முடியாத சாதனை ஆக்கிக் காட்டிவிட்டார் இந்த எதிரொலிப் பாடலை.
http://oldmalayalamcinema.files.wordpress.com/2011/10/baburaj-abhayadev-and-p-leela-in-an-undated-recording-session.jpg
பி.லீலா மிக அற்புதமாகப் பாடிய பாடல் இது. அவருடைய புகழை எங்கோ கொண்டு நிறுத்திய பாடல்.
http://i.ytimg.com/vi/rCRxnqYQlrA/hqdefault.jpg
இனி பாடலின் முழு வரிகள்
கண்ணாளன் வருவார்
கண் முன்னே நான் காண்பேன்
(குயில் கூவுது போல அந்த ஒரு வினாடி இசை அருமை)
ஹோ ஹோ ஓ ஓ... உஉஉ...
காதல் பொய் பேசி மகிழ்வேனே
கண்ணாளன் வருவார்
கண் முன்னே நான் காண்பேன்
ஹோ ஹோ ஓ ஓ... உஉஉ...
காதல் பொய் பேசி மகிழ்வேனே
ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஹோ
(அப்படியே கிணற்றிலிருந்து எதிரொலி)
ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஹோ
என் ராஜா
(எக்கோ)
என் ராஜா
வருவாரே
(எக்கோ)
வருவாரே
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ
(எக்கோ)
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ
ஹோ ஹோ ஹோஹோ ஹோ
(எக்கோ)
ஹோ ஹோ ஹோஹோ ஹோ
(இந்த வரிகள் முடிந்தவுடன் வரும் இசைப் பின்னணியைப் பாருங்கள். மெய் சிலிர்த்துப் போவீர்கள். திரும்பத் திருமப்க் கேட்கத் தூண்டும் இசை)
ராஜன் வருவாரே!
(எக்கோ)
ராஜன் வருவாரே!
பேசி மகிழ்வேனே
(எக்கோ)
பேசி மகிழ்வேனே
என் காதல் நாதன்
இன்ப தேவன்
வாழ்வின் ஜீவன்
என் காதல் நாதன்
இன்ப தேவன்
வாழ்வின் ஜீவன்
என்னைத் தேடி விரைவினிலே
ஜெயத்துடனே
என் ராஜன் வருவாரே
என்னைத் தேடி விரைவினிலே
ஜெயத்துடனே
என் ராஜன் வருவாரே
என் ராஜா
(எக்கோ)
வருவாரே
ராஜன் வருவாரே!
(எக்கோ)
ராஜன் வருவாரே!
பேசி மகிழ்வேனே
(எக்கோ)
பேசி மகிழ்வேனே
கலந்து உறவாடும்
கண்களும் கண்களும்
கன்னமும் கன்னமும்
கலந்து உறவாடும்
கலந்து உறவாடும்
கலந்து உறவாடும்
கணமும் இணைபிரியாமல்
கனியும் சுவையும் போல் கலந்தே
மனம் மகிழ்ந்தே வாழ்வோமே
கணமும் இணைபிரியாமல்
கனியும் சுவையும் போல் கலந்தே
மனம் மகிழ்ந்தே வாழ்வோமே
வாழ்வோமே! வாழ்வோமே!
http://www.youtube.com/watch?v=siy0Trr4Plc&feature=player_detailpage
gkrishna
3rd September 2014, 11:56 AM
காட்சி பிழை ஆகஸ்ட் இதழில் திரு முரளி கண்ணன் அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்று
நிலைக்க முடியாத நாயகர்கள்
தமிழ்சினிமாவில் கதாநாயகனாக அறிமுகவாவது எவ்வளவு கடினம் என்பது அதை முயற்சித்துப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். தயாரிப்பாளர்கள், வெற்றிகரமான இயக்குநர்கள், முண்ணனி நடிகர்களின் வாரிசு என்றால் கோடம்பாக்கத்தின் கதவு எளிதாக திறந்து கொள்ளும். அதுவும் முதல் படத்திற்கு மட்டும்தான். அரசியல்வாதி மற்றும் பெரும் பணக்காரர்களின் வாரிசுகளுக்கும் முதல் பட வாய்ப்பு எளிதுதான்.
தமிழ்சினிமா ஆரம்ப காலத்தில் இருந்து இன்றுவரை கவனித்துப் பார்த்தால், கதாநாயக வாய்ப்பு பெறுவது என்பது எளிதாகிக் கொண்டே வருகிறது. பாடவும் நடிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் கூடுதலாக முக லட்சணமும் வேண்டும் என்பது பாகவதர் காலகட்ட தகுதிகள். நாடக மேடை அனுபவமும் முகலட்சணமும் இருக்க வேண்டும் என்பது எம்ஜியார்-சிவாஜி காலகட்டம். எல்லிஸ் ஆர் டங்கனிடம் எம்ஜியார் வாய்ப்பு வாங்க கஷ்டப்பட்டார். சிவாஜி கணேசனும் பராசக்தியில் கிடைத்த வாய்ப்புகூட பறிபோகும் நிலைக்குச் சென்று தயாரிப்பாளரின் ஆதரவால் தப்பித்து பின்னர் சகாப்தம் படைத்தவர்.
முகலட்சணமும் சிகப்பு நிறமும் தகுதியாகப் பார்க்கப்பட்டது ஸ்ரீதர்-பாலசந்தர் காலகட்டம். இந்த காலகட்டத்தில் தான் இயக்குநர்க்கு பிடித்திருந்தால் போதும் கதாநாயகன் வேடம் கிடைத்துவிடும் என்ற நிலைமை வந்தது. பாரதிராஜாவிற்கு பிந்தைய காலகட்டத்தில்தான் நாயகனாக நடிக்க தகுதி,நிறம் தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டது. பாலசந்தர் அறிமுகப்படுத்தினாலும் ரஜினி நாயகன் வாய்ப்பு பெற்றது இதன்பின்னர்தான்.
தொண்ணூறுகளில் தொலைக்காட்சி முக்கிய ஊடகமாக அறியப்பட்ட நேரத்தில், மாடலாக இருப்பவர்கள் திரையுலகுக்கு வரும் வழி உருவாகியது. புதிய இயக்குநர்கள் சிலர் தங்கள் படங்களுக்கான நடிகர்,நடிகைகளை விளம்பர ஏஜென்ஸிகள் மூலமும், விளம்பரங்கள் மூலமும், மாடலிங் ஷோக்கள் மூலமும் தேர்ந்தெடுத்தனர்.
எனவே 80களில் இருந்து கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னால் வரை கூட இயக்குநரை திருப்திப்படுத்த வேண்டும் என்ற நிலையே நிலவியது. தன்னுடைய தேவையை விட அதிகமாக பணம் வைத்திருப்பவரே ஒரு படத்தை தயாரிக்க முன்வருவார். சில லட்சியவாதிகள் மட்டும் விதிவிலக்கு. எனவே ஒருவர் இயக்குநர் ஆவதற்கு நிச்சயம் ஒரு பணக்காரரை சம்மதிக்க வைத்திருக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் ஒருவர் அவ்வளவு பணத்தை வைத்திருந்தால் நிச்சயம் அவரிடத்தில் ஒரு தெளிவு இருக்கும். மது,மாது,சூது, கூடா நட்பு என பலவற்றிடமிருந்து தப்பித்து அதிகப்படியான பணத்தை பாதுகாத்து வைத்திருப்பவர் ஒரு சமநிலையில் தான் இருப்பார். அவரது பணத்தை ஒரு நிச்சயமில்லாத தொழிலில் முதலீடு செய்ய சம்மதிக்க வைக்க எவ்வளவு திறமை வேண்டும்?. அந்த அளவு திறமை உள்ளவர்களே இயக்குநர் ஆகிறார்கள். அவர்கள் தங்கள் படத்திற்கு புது கதாநாயகன் தேடும்போது எவ்வளவு மெனக்கெடுவார்கள்?. ஏனென்றால் படத்தின் வெற்றிதானே அவர்களை திரையுலகில் நிற்க வைக்கும்?
டிஜிட்டலில் படம் எடுக்கும் வசதி மற்றும் குறும்படம் மூலம் வாய்ப்பு பெறும் வசதியால் அதிக அளவு படங்கள் குறைந்த முதலீட்டில் தயாராவதால் கதாநாயகன் வாய்ப்பு கிடைப்பது இப்போது இன்னும் எளிதாகிவிட்டது. இப்போதெல்லாம் ஒரு தொலைக்காட்சி தொடரில் துணை கதாபாத்திரத்தில் நடிப்பவரின் முகம் கூட பொதுமக்களின் ஞாபகத்தில் இருக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர்களின் முகம் ஞாபகத்தில் இல்லை. அவ்வளவு ஏன்? தொடர்ந்து திரைப்படங்களை பார்த்து வருகிறவர்களால் கூட சில நடிகர்களை அடையாளம் காண முடிவதில்லை.
இந்த நிலையில் ஒரு படத்தில் நடித்தாலே வீதியில் சுதந்திரமாக நடக்க முடியாத நிலை இருந்த நாட்களில் இயக்குநரை திருப்திசெய்து நாயகனாக அறிமுகமானவர்கள், அதிர்ஷ்டவசமாக இயக்குநர்களின் கடைக்கண் பார்வைபட்டு கதாநாயகன் ஆனவர்கள், குக்கிராமங்கள் வரை சென்று மக்கள் மனதில் சேர்ந்த பின்னரும் சோபிக்காமல் போனவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய ஒரு பார்வையே இந்த கட்டுரை.
பாக்யராஜ்,பாண்டியராஜன்,பார்த்திபன் போன்றோர் தங்கள் படங்களில் பெரும்பாலும் தாங்களே நடித்துக் கொண்டார்கள். பாரதிராஜா, பாலசந்தர், டி ராஜேந்தர், மணிரத்னம் ஆகியோர் அப்படிச் செய்யமுடியவில்லை. வீர தீரம், சிறந்த நடிப்பு தேவைப்படாத தாங்கள் படைத்த பாத்திரங்களுக்கு சில கதநாயகர்களை அறிமுகப்படுத்தினார்கள். டி ராஜேந்தர் சில படங்கள் கழித்து தானே களத்தில் குதித்துவிட்டார்.
அப்படி பாரதிராஜா அறிமுகப்படுத்திவர்களில் கிழக்கே போகும் ரயில் சுதாகர் பல படங்களில் நாயகனாக தொடர்ந்து நடித்தார். அதில் இரண்டு மூன்று மட்டுமே வெற்றிப்படங்கள். பின்னர் அவர் தனது பூர்வீகமான ஆந்திரத்துக்குச் சென்று காமெடியனாக வெற்றி பெற்றார். நிழல்கள் ரவி, ராஜா ஆகியோர் கதாநாயக வேடத்தில் நடித்தாலும் அவர்களை நாயகனாக யாரும் பார்க்கவில்லை. பாரதிராஜாவின் இன்னொரு குறிப்பிடத்தக்க அறிமுகம் பாண்டியன்.
பாண்டியன்
http://mp3.oohotamil.com/uploads/celeb/tbnail_1/PANDIAN816749.jpg
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கடை வரிசையில் வளையல் மற்றும் அழகு பொருட்கள் கடை உரிமையாளராக இருந்த பாண்டியன், பாரதிராஜாவின் கண்ணில் பட்டு மண்வாசனை பட நாயகனானார். அதற்கு முன்னால் ஜாதி சார்ந்த பேச்சு வழக்குகள், சம்பிரதாயங்களை வைத்து படம் எடுத்திராத பாரதிராஜா, காதல் ஓவியம், வாலிபமே வா வா போன்ற படங்களின் தோல்வியை அடுத்து தேவர் இன முறைமாமன், தாய்மாமன் சீர் ஆகிய சம்பிரதாயங்களைச் சரணடைந்து இயக்கிய படம் மண்வாசனை. ஒரு வகையில் பார்த்தால் தேவர் இனத்தை தூக்கிப்பிடித்து வந்த முதல் படம் இது என்றும் சொல்லலாம். (சிவாஜி கணேசனின் பட்டிக்காடா பட்டணமா போன்ற படங்களில் ஜாதி சொல்லப்பட்டாலும் சம்பிரதாயங்கள் டீடெயிலாக காட்சிப்படுத்தப் பட்டிருக்காது). படமும் வெற்றி பெற்றது. பாண்டியன் தமிழகம் அறிந்த நடிகராக மாறினார்.
அதன் பின் மண்சோறு, நேரம் நல்லாயிருக்கு, பொண்ணு பிடிச்சிருக்கு,தலையணை மந்திரம், கடைக்கண் பார்வை, கோயில் யானை, ஆண்களை நம்பாதே போன்ற படங்களில் நடித்தார். இவை எதுவும் கலை ரீதியாகவும், வணிக ரீதியாகவும் எடுபடாத படங்கள். பாரதிராஜாவின் புதுமைப் பெண், பாண்டியராஜனின் ஆண்பாவம், மணிவண்ணனின் முதல் வசந்தம், ராமராஜனின் மண்ணுக்கேத்த பொண்ணு போன்ற வெற்றி பெற்ற படங்களிலும் நடித்தார். வெற்றி பெற்ற படங்களில் அவ்வப்போது நடித்திருந்தாலும், நான்கு ஆண்டுகளிலேயே ஊர்க்காவலன், குரு சிஷ்யன், பூந்தோட்ட காவல்காரன் போன்ற படங்களில் துணை நடிகர் போல நடிக்க வேண்டியிருந்தது. பின்னர் எம்ஜிஆர் நகரில் நான்கு நண்பர்களில் ஒருவராக நடிக்க வேண்டி வந்தது.
மீண்டும் பாரதிராஜா நாடோடி தென்றலில் ஒரு சிறிய வாய்ப்பு கொடுத்தார். பின்னர் கிழக்கு சீமையிலே படத்தில் வில்லன்களில் ஒருவராக நல்ல வேடம் கொடுத்தார். ஆனால் அவரால் எதிலும் பிரகாசிக்க முடியவில்லை. அடுத்த சில ஆண்டுகள் கழித்து குரு தனபால் இயக்கிய “பெரிய இடத்து மாப்பிள்ளை” படத்தில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக கூட நடிக்க நேர்ந்தது. கடைசியாக அவரது வாழ்க்கையிலேயே ”ஆண்பாவம்” மூலம் பெரிய ஹிட் கொடுத்த பாண்டியராஜனின் “கை வந்த கலை” யில் நடித்தார். பின்னர் தீராத குடிப்பழக்கத்தால் இவ்வுலகை விட்டு மறைந்தார்.
பாண்டியனின் சினிமா வாழ்க்கை நமக்கு உணர்த்துவது ஒன்றுதான். அது இந்த நடிகரால் தான் இந்தப் படம் ஓடியது என்று ஒருபடத்திலாவதுதான் நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் அந்த நடிகனுக்கு இங்கே மரியாதை. அப்படி நிரூபிக்காவிட்டால் எத்தனை படம் ஹிட் கொடுத்தாலும், ஒரு சில சறுக்கலிலேயே காணாமல் போக நேரிடும். நமக்கு என்ன நடிக்க வரும் என்பதை ஒருமுறை நிரூபித்து விட்டால் போதும், நமக்காக இயக்குநர்கள் சிந்திக்க தொடங்கிவிடுவார்கள், நாம் தொடர்ந்து பீல்டில் நிலைக்கலாம்.
தமிழகம் முழுக்க அறிமுகமாகி இருந்தாலும், வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், சிலருக்காவது, நடிகனின் மீது அபிமானம் வர வேண்டும். நடிகனுக்கு அழகு,ஸ்டைல் இதையெல்லாம் விட நல்ல ஆண்மையான குரல் இருக்க வேண்டும். அந்த குரலே அவர்களுக்கு ரசிகர்களைச் சேர்க்கும். துரதிஷ்டவசமாக பாண்டியன் குரலில் ஆளுமை இல்லை. தன் கடைசி காலம் வரை மாடுலேசனை மாற்றாமல் ஒரே மாதிரி பேசிவந்தார். அதுவும் ரசிக்க முடியாத குரலில். இப்போது விமலும் அப்படித்தான் பேசி வருகிறார். ரேவதி,சீதா, ரம்யா கிருஷ்ணன்,இளவரசி என இவருடன் கதாநாயகியாக நடிகைகள் எல்லாம் இன்றும் வெள்ளித்திரை/சின்னத்திரையில் சாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
சுரேஷ்
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQoh_Kja4wAR_AvLLOa5v4bOyIgYmSMy NSJwjM0fxFhMICbaii9Cg
பன்னீர் புஷ்பங்களில் பள்ளி மாணவனாக அறிமுகமாகிய சுரேஷ், அடுத்த ஆண்டிலேயே சில வெற்றிப்படங்களில் நடித்தார். அதில் முக்கியமானது இளஞ்சோடிகள். இராம நாராயணன் இயக்கத்தில் கார்த்திக்கும் சுரேஷும் இணைந்து நடித்த இந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெற்ற படம். ஆனால் அதற்கடுத்து கோழி கூவுது. வெள்ளை ரோஜா போன்ற படங்களில் இரண்டாம், மூன்றாம் நாயகனாகவும், ராம நாராயணன் இயக்கிய உரிமை போன்ற படங்களில் நாயகனாகவும் நடித்தார். பின் பூக்களைப் பறிக்காதீர்கள் படத்தில் நதியா உடன் இணைந்து நடித்தார். அப்போதைய முண்ணனி நாயகிகளான ரேவதி, நதியா உடன் சில படங்களில் நடித்தார். நதியாவுக்கு ஏற்ற ஜோடி எனவும் சிலாகிக்கப்பட்டார். சில ஆண்டுகள் தான் ஆளே காணவில்லை. பின் புது வசந்தம் படத்தில் சிறிய நெகடிவ் பாத்திரத்தில் நடித்தார். 94ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான வீட்ல விசேஷங்க படத்தில் சிறிய வேடம். இப்போது தெலுங்கு திரையுலகில் சில வேடங்களில் நடித்து வருகிறார். காதல் சொல்ல வந்தேன், தலைவா ஆகிய படங்களிலும் சிறிய வேடத்தில் நடித்தார். தற்போது தொலைக்காட்சி ரியாலிட்டு ஷோக்களில் தலை காட்டிக் கொண்டிருக்கிறார்.
பொதுவாகவே தமிழர்களுக்கு சிவப்பான நாயகனைப் பிடிக்காது என்று சொல்வார்கள். எம்ஜியார் கூட கறுப்பு வெள்ளை காலத்தில் அறிமுகமாகி மக்களின் அபிமானத்தைப் பெற்றதால் தப்பித்தார். கமல்ஹாசன் கஜகர்ணம் போட்டாலும் பெருவாரியான மக்களின் அபிமானத்தைப் பெற முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளில் தான் இது மாறியுள்ளது. முதல் சில ஆண்டுகள் ஏற்றுக்கொள்ளப்படாத அஜீத் இப்போது மாஸ் ஹீரோவாக மாறியுள்ளார். ஆனால் 2000 வரையிலும் நல்ல சிகப்பான, பர்சனாலிட்டி உள்ளவர்கள் சாக்லேட் ஹீரோவாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் மனம் கவர் நாயகனாக சினிமாவை அதிகம் பார்க்கும் இளவயது ஆண்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சுரேஷுக்கு நல்ல பர்சனாலிட்டி, குரலும் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் வெரைட்டியான வேடங்கள் செய்யவில்லை. நல்ல கதைகள் தேர்ந்தெடுத்து நடிக்கவில்லை என்பது அவரின் சரிவுக்கு காரணமாய் அமைந்து விட்டது.
chinnakkannan
3rd September 2014, 12:19 PM
//ஆனால் எனக்கென்னவோ மதுபாலாவைப் பிடிக்கவே பிடிக்காது. லாரி மோதின பென்ஸ் கார் மாதிரி ஒடுக்கு ஒடுக்கான மூஞ்சி.//நெடு நெடுவென உயரம்..கொஞ்சம் ஷார்ப் மூக்கு..ஜென் டில் மேனில் வரும் உசிலம்பட்டிப் பெண்குட்டி (ஷாகுல் ஹமீது..சோகமான விஷயம் சடனாக இறந்தது)யில் வரும் ஜென் டில் லேடி.. ஹிந்திக்குப் போய்க் கொஞ்சம் படங்கள் கொடுத்து பின் ஓய்வு பெற்று ரீ எண்ட்ரி இன் வாயை மூடிப் பேசவும்..வாசு சார்..அந்த இன்றைய ஸ்டில் இருந்தால் பாருங்க்ள்..கொஞ்சம் கூட மாற்றமே இல்லாத தோற்றம்..ப்ளஸ் கூடுதல் அழகுடன் இருப்பார்..
chinnakkannan
3rd September 2014, 12:20 PM
பானுப்ப்ரியா தயாரித்த சொந்த ப்படம் காவியத் தலைவன்..ஆங்க்.. மென்மையாய் நடிக்க முயன்றிருந்த படம்..படம் தோல்வி என நினைக்கிறேன்..கட்டளை பற்றித் தெரியாது..
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.