View Full Version : மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம
Pages :
1
2
3
4
[
5]
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
Richardsof
25th August 2014, 11:39 AM
THANKS TO ALL - 10 DAYS -1000 POSTINGS - 15,000 VIEWERS. SUPER .
http://i61.tinypic.com/14b842c.jpg
http://i60.tinypic.com/qq8i8z.jpg
mr_karthik
25th August 2014, 12:45 PM
உயர்திரு கோபால் அவர்களுக்கு,
உலகத்திலேயே முதன்முறையாக எங்களுக்கு கவிதை எழுதி கௌரவம் சேர்த்திருக்கும் தங்களுக்கு எங்கள் இனத்தின் சார்பில் நன்றிகள்.
நீங்கள் வருத்தப்பட்டிருப்பது அனைத்தும் ஒப்புக்கொள்ளக்கூடியதே. எங்கள் மூதாதையர்கள் உங்கள் அரிய ஆவணங்களை தின்று அழித்தது அநியாயமே. அதற்காக இப்போது பழிதீர்க்கும் வண்ணம் காகிதமே இல்லாத உலகமாக மாற்றிக்கொண்டு வருகிறீர்கள். வருங்காலத்தில் எங்கள் சந்ததியினரின் வாழ்வாதாரத்தை நினைத்தால் அச்சமாகவே இருக்கிறது. ஏற்கெனவே எங்கள் இல்லங்கள் அனைத்தும் தமிழர்கள் குடியிருப்பை ஆக்ரமித்த சிங்களர்கள் போல அரவங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன.
எங்கள் நிலையையும் தமிழுலகுக்கு உணர்த்திய தங்களுக்கு மீண்டும் நன்றி.
காகிதம் தின்னி கரையான் (தலைவர்)
மரம் தின்னி கரையான் (செயலாளர்)
அகிலஉலக கரையான்கள் சங்கம்.
vasudevan31355
25th August 2014, 12:46 PM
இன்றைய ஸ்பெஷல் (61)
நேற்றைய விடுமுறைக்கும் சேர்த்து 'இன்றைய ஸ்பெஷலி'ல் ஓர் அருமையான பாடலைப் பார்க்கப் போகிறீர்கள்.
உங்களுக்கு மனது சரியில்லையா? சோகமாய் இருப்பது போல் உணருகிறீர்களா? போரடிக்கிறதா? உறசாகம் குறைந்து களையிழந்து காணப்படுகிறீர்களா?
கவலையே படாதீர்கள்.
இன்றைய இந்தப் பாடலை 'புக்மார்க்' செய்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் போது 'கிளிக்'குங்கள். கரை புரண்ட உற்சாக வெள்ளம் உங்களை சூழ ஆரம்பிப்பதை நீங்கள் உணரலாம்.
நான் மிக மிக அனுபவித்து ரசித்து ரசித்து எழுதிய பதிவு இது. 'இன்றைய ஸ்பெஷலி'ல் மிக மிக சந்தோஷமாக நான் இட்ட பதிவும் கூட.
படம்: துலாபாரம்
http://www.inbaminge.com/t/t/Thulaapaaram/folder.jpg
மூலக்கதை: தோப்பில் பாஸி
வசனம்: 'சவாலே சமாளி' புகழ் 'மல்லியம்' ராஜகோபால்.
இசை: தேவராஜன்
ஒளிப்பதிவு: நம்முடைய பி.என்.சுந்தரம்.
தயாரிப்பு: ராமண்ணா
இயக்கம்: வின்சென்ட்
'துலாபாரம்' படத்தில் டேம் பிக்னிக் செல்லும் கல்லூரி மாணவ மாணவிகள். இளமை பொங்கத் துள்ளும் கல்லூரி மாணவன் 'நவரசத் திலகம்' முத்துராமன். படு கியூட்டாக. இதுவரை எந்தப் படத்திலும் பார்த்திராத வகையில் படு ஸ்டைலாக, உற்சாகம் கரைபுரண்டோட செம ஜோர் அண்ணாச்சி. அருமையாக 'tuck in' செய்யப்பட்ட சிறுசிறு கட்டங்கள் அடங்கிய கைகள் மடித்துவிடப்பட்ட செக்டு ஷர்ட். அதற்கு தோதாக 'நச்'சென்று பொருந்தும் வகையில் பிளிட் வைத்து தைக்கப்பட்ட டைட் பேன்ட். பேண்டின் சைடு பாக்கெட்டுகள் இரண்டும் விரிந்து கொடுத்து கொள்ளை அழகாக இருக்கும் முத்துராமனுக்கு. முத்துராமன் அதைவிட அருமையான அழகாக, படு ஸ்லிம்மாக, கல்லூரி மாணவனைப் போல் இருப்பார் இந்தப் பாடலில்.
கண்களை கசக்கி கசக்கிப் பார்த்தேன். முத்துராமனா அது?! அடேங்கப்பா! என்ன ஒரு துள்ளல்! என்ன ஒரு உற்சாகக் கொண்டாட்டம்! என்ன ஒரு சுறுசுறுப்பு! துறுதுறுப்பு! இப்படி இவரைப் பார்ப்பதே அபூர்வம். சிருங்கார ரசம் சொட்ட சொட்ட, ஜாலியாக ஆடிக் கொண்டும் பாடிக்கொண்டும், இளசுகளைக் கலாய்த்துக் கொண்டும் மனிதர் அமர்க்கள அநியாயம் பண்ணி விட்டார் போங்கள். சில இடங்களில் எம்ஜிஆர் அவர்களை ஞாபகப்படுத்தும் விதமாக அவர் ஸ்டைலில் ஆக்ஷன்கள், கை அசைப்புகள் வேறு.
'இளம் கொடிவிட்ட பூவென இடைவிட்ட பூவுக்கு
ஆசையை விரிப்பேனா'
இந்த வரிகள் வரும் இடத்தில் பேண்ட் சைட் பாக்கெட்டுகளின் இரு பக்கங்களிலும் கட்டைவிரல்களால் கிடுக்குப் பிடி பிடித்து, ஸ்டைலாக துள்ளாட்டம் போட்டபடியே ஒரு அருமையான நடை நடப்பார் பாருங்கள் முத்துராமன். நிஜமாகவே அசந்து போவீர்கள். ராஜாங்கம் நடத்துவார் 'நவரசத் திலகம்' அவர்கள். (அப்படியே பின்னாட்களில் அவர் மகன் கார்த்திக் நடப்பது போலவே குறும்பு கொப்பளிப்பதை நன்றாக கவனிக்கலாம்! விதை ஒன்று போட்டால் துரை ஒன்றா முளைக்கும்?) அதே போல பாடலின் இடையிசையின் போது ஓட்டமும், நடையுமாக அவர் நடப்பது இன்னும் அருமை.
கல்லூரி மாணவிகளாக ஊர்வசி சாரதாவும், கட்டழகி காஞ்சனாவும். இணைபிரியா தோழிகளாக இருவரும் கைகளை இணைத்தபடியே.
முத்துராமன் தங்களை சுற்றி சுற்றி வந்து பாடும் போதெலாம் அதுவும் இரட்டை அர்த்தம் தொனிக்க அவர் பாட, அதை தோழியர் இருவரும் புரிந்து கொண்டு வெட்கப்பட்டு ஓடுவதும், திரும்பிக் கொள்வதும் சுகமோ சுகம். 'சிரிப்போ இல்லை நடிப்போ' என்று முத்து பாடும் போதெல்லாம் காஞ்சனாவும் சாரதாவும் 'இல்லை' என்பது போல ஜாலியாக தலையாட்டுமிடம் அப்படியே அள்ளும் சுகம். அதுவும் 'விழிப்போ... வலை விரிப்போ' என்னும் போது காஞ்சனா நாக்கைத் துருத்தி, சற்று வெளியே நீட்டி முத்துவை பழித்துக் காட்டி கேலி செய்யும்போது பார்க்கும் அனைவரும் அம்பேல்! என்ன அழகான பழிகாட்டல்!
'பார்க்கின்ற நெஞ்சுக்கு பால் தருவாள்
என்று பாத்திரம் படைத்தானோ'
என்ற கவிஞனின் பொல்லாக் காம வரிகளின் போது அதைப் புரிந்து கொண்டு காஞ்சனா வெட்கத்துடன் முன்னழகை மறைத்து பின்னழகைக் காட்டி, அதே சமயத்தில் சட்டென்று சாரதாவையும் திருப்பிவிடுவது ரசமான இடம்.
'அந்த பனிமுத்துத் துளிகளைப் பருகிடவே
எனை மாத்திரம் படைத்தானோ'
என்று முத்துராமன் பாடும்போது அதைப் புரிந்து கொண்டு காஞ்சனா சாரதாவிடம் 'பார்த்தியா?' என்பது போல ஒரு பார்வை பார்த்து, பின் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் பெண்மைக்கே உண்டான வெட்க அமைதி காப்பார். காஞ்சனா கொடிகட்டுவார் இந்தக் காட்சியில்.
இப்பாடலுக்கு அர்த்தம் கேட்டீர்களானால் வண்டி வண்டியாக எழுதலாம். அவ்வளவு அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன இந்தப் பாடலில். காமரசம் சொட்டும் இப்பாடலை சற்றும் விரசமில்லாமல் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. அதே சமயத்தில் கவிஞனும் பாடகனும், நடித்தவர்களும், இசையமைப்பாளரும் ஒருசேர வெற்றி பெற்ற பாடல் இது.
மலையாள தேவராஜனின் மயக்கும் இசையில் பாடல்கள் அனைத்தும் மாம்பழச் சுவை.
இப்படத்தின் டைட்டில் பாடல் வாழ்விலே மறக்க முடியாத மகோன்னதப் பாடல்.
சாரதாவும், காஞ்சனாவும் 'கல்லூரி' விழாவில் பாடும்
'வாடி தோழி கதாநாயகி'
ஜேசுதாசின் எவர்க்ரீன் பாடல்
'காற்றினிலே பெருங்க காற்றினிலே'
பாடகர் திலகமும், பாடகியர் திலகமும் அருமையாகப் பாடி அமைதியாக நம் கண்களில் நம்மையறியாமலேயே கண்களில் நீரை வரவழைத்த, நம் நெஞ்சில் ஆழ ஊடுருவிய காவியப்பாடல்
http://i.ytimg.com/vi/gOXox6BwOvw/0.jpg
'பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது கண்ணீரிலே'
'சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப் புலவர் காத்த தமிழ்'
என்று நம் மனதில் ஆழமாய் ஊறிவிட்ட பாடல்கள்.
இன்னொன்று.'ஊர்வசி' விருது என்றாலே சாரதாதான் என்று உடனே நாம் நினைக்குமளவிற்கு மலையாளத்திலேயும்,தமிழிலேயும் 'துலாபாரத்'தில் அருமையாக நடித்து சிறந்த தேசிய நடிகை விருது
பெற்ற, நடிகர் திலகம் தமிழில் நாயகியாக 'குங்கும'த்தில் அறிமுகப்படுத்திய சாரதாவை மறக்க முடியுமா?
சரி! 'இன்றைய ஸ்பெஷல்' பாடலுக்கு வந்து விடுவோம்.
பாடகர் திலகத்தின் பட்டை கிளப்பும் 'கணீர்'க் குரலில்,
இனி பாடலின் வரிகள்
சிரிப்போ இல்லை நடிப்போ
இது சிங்காரப் பொன்னூஞ்சல் அழைப்போ
விழிப்போ வலை விரிப்போ
எனை விருந்து பருகச் சொல்லும் துடிப்போ
சிரிப்போ இல்லை நடிப்போ
இது சிங்காரப் பொன்னூஞ்சல் அழைப்போ
விழிப்போ வலை விரிப்போ
எனை விருந்து பருகச் சொல்லும் துடிப்போ
சிரிப்போ ஹோஹோஹோஹஹோ
சிரிப்போ
கோபுரக் கலசத்தைக் கூந்தலில் மறைக்கும்
கோலத்தை ரசிப்பேனா
கோபுரக் கலசத்தைக் கூந்தலில் மறைக்கும்
கோலத்தை ரசிப்பேனா
இளம் கொடிவிட்ட பூவென இடைவிட்ட பூவுக்கு
ஆசையை விரிப்பேனா
அந்த ஆற்றினில் மிதப்பேனா
ஆற்றினில் மிதப்பேனா
சிரிப்போ இல்லை நடிப்போ
இது சிங்காரப் பொன்னூஞ்சல் அழைப்போ
விழிப்போ வலை விரிப்போ
எனை விருந்து பருகச் சொல்லும் துடிப்போ
சிரிப்போ
ஊர்வலம் போகின்ற தேவியர் மேனியை
நான் வலம் வருவேனா
ஊர்வலம் போகின்ற தேவியர் மேனியை
நான் வலம் வருவேனா
அவர் ஒரு பக்க ஜாடையை கலைவட்ட மேடையை
ஓவியம் வரைவேனா
அவர் ஒரு பக்க ஜாடையை கலைவட்ட மேடையை
ஓவியம் வரைவேனா
அதில் என் உள்ளத்தை வரைவேனா
உள்ளத்தை வரைவேனா
சிரிப்போ இல்லை நடிப்போ
இது சிங்காரப் பொன்னூஞ்சல் அழைப்போ
விழிப்போ வலை விரிப்போ
எனை விருந்து பருகச் சொல்லும் துடிப்போ
சிரிப்போ
பார்க்கின்ற நெஞ்சுக்கு பால் தருவாள்
என்று பாத்திரம் படைத்தானோ
பார்க்கின்ற நெஞ்சுக்கு பால் தருவாள்
என்று பாத்திரம் படைத்தானோ
அந்த பனிமுத்துத் துளிகளைப் பருகிடவே
எனை மாத்திரம் படைத்தானோ
அந்த பனிமுத்துத் துளிகளைப் பருகிடவே
எனை மாத்திரம் படைத்தானோ
இதுதான் வாழ்க்கை என்றுரைத்தானோ
வாழ்க்கை என்றுரைத்தானோ
சிரிப்போ இல்லை நடிப்போ
இது சிங்காரப் பொன்னூஞ்சல் அழைப்போ
விழிப்போ வலை விரிப்போ
எனை விருந்து பருகச் சொல்லும் துடிப்போ
ஹஹ்ஹஹ்ஹஹ்ஹ ஹோ.
https://www.youtube.com/watch?v=k92VcSvmkt8&feature=player_detailpage
Gopal.s
25th August 2014, 12:54 PM
பாட்டுடன் படத்தை போட்டாச்சுப்பா.(பாகம் 1 இல்) ஆனாலும் நன்றாக எழுதியுள்ளாய். (எனக்கு முத்துராமன் போன்றோரை புகழும் பொறுமை இருப்பதில்லை.)
என்னுடைய பள்ளி நாள் தேசிய கீதம் இதுவும்,எங்கெல்லாம் வளையோசையும் .
mr_karthik
25th August 2014, 12:56 PM
டியர் வினோத் சார்,
தாங்கள் அனைத்து திரிகளிலும் பதித்து வரும் ஆவணங்கள் அனைத்தும் அருமையோ அருமை. உண்மையிலேயே கிடைத்தற்கரியவை.
இப்போது நாம் பார்த்து பாராட்டும் பழைய படங்களைஎல்லாம், அவை வெளியான காலங்களில் விமர்சனம் என்ற பெயரில் எப்படி போட்டு தாளித்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது வியப்பாக உள்ளது.
தங்கள் சிரமமான, சிரத்தையான, சிறப்பான பதிவுகளுக்கு மிக்க நன்றி...
Gopal.s
25th August 2014, 12:58 PM
Thanks ESVEE for all the exhibits here,Gemini and Ravi threads.
gkrishna
25th August 2014, 01:45 PM
இன்றைய ஸ்பெஷல் (6)
நேற்றைய விடுமுறைக்கும் சேர்த்து 'இன்றைய ஸ்பெஷலி'ல் ஓர் அருமையான பாடலைப் பார்க்கப் போகிறீர்கள்.
உங்களுக்கு மனது சரியில்லையா? சோகமாய் இருப்பது போல் உணருகிறீர்களா? போரடிக்கிறதா? உறசாகம் குறைந்து களையிழந்து காணப்படுகிறீர்களா?
கவலையே படாதீர்கள்.
இன்றைய இந்தப் பாடலை 'புக்மார்க்' செய்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் போது 'கிளிக்'குங்கள். கரை புரண்ட உற்சாக வெள்ளம் உங்களை சூழ ஆரம்பிப்பதை நீங்கள் உணரலாம்.
நான் மிக மிக அனுபவித்து ரசித்து ரசித்து எழுதிய பதிவு இது. 'இன்றைய ஸ்பெஷலி'ல் மிக மிக சந்தோஷமாக நான் இட்ட பதிவும் கூட.
விடலையில் ரசித்த பாடலை முதுமையிலும் ரசிக்க வைக்கும் பாடல்
யாருக்கு முதுமை
யாருக்கோ ?
அருமை வாசு சார்
கிருஷ்ணா
gkrishna
25th August 2014, 01:49 PM
அன்பு எஸ்வி சார்
கார்த்திக் அவர்கள் சொன்னது போல் இப்போது நாம் (அணைத்து) ரசிக்கும் அனைத்து படங்களும் பாடல்களும் அக்கால கட்டங்களில் எப்படி விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளன என்பதற்கு நீங்கள் இடும் பத்திரிகை ஆவணங்கள் அனைத்தும் சாட்சி
இதயம் அட்டை படம் கோழி கூவுது விஜி தானே சார்
gkrishna
25th August 2014, 02:04 PM
23 ஆகஸ்ட் சென்னை பார்க் ஹோட்டல் அரங்கில் திரு மோகன் ராம் அவர்கள் பாலையா அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் மற்றும் சென்னை 375 heritage சார்பாக அருமையான உரை ஒன்றை நிகழ்த்தினார் .நம்மவர் திரு முரளி அவர்களும் கலந்து கொண்டார்.
அதில் அவர் பகிர்ந்து கொண்ட ஒரு செய்தி
காதலிக்க நேரமில்லை திரை படத்தில் முதலில் செல்லப்பா (நாகேஷ்) கதாபாத்திரம் என்பதே கிடையாது .2 ஹீரோ மற்றும் 2 heroines அவர்கள் சகோதரிகள் என்ற லவ் subject தான் கதை. கிட்டத்தட்ட 3000 அடி எடுக்கப்பட்டது. பின்னர் ஒருநாள் நடிகர் திலகத்தின் சகோதரர் திரு சண்முகம் அவர்கள் அழைப்பின் பேரில் ஸ்ரீதர் மற்றும் கோபு இருவரும் நடிகர் திலகத்தின் அன்னை இல்லத்திற்கு விரைகிறார்கள் . அங்கு திரு தாதா மிராசி அவர்கள் புதிய பறவை திரை படத்தின் கதையை ஸ்பெஷல் எபக்ட் உடன் சொல்வதை பார்த்து ஆர்வமாகி திரும்பி வரும் போது திரு ஸ்ரீதர் அவர்கள் கதா ஆசிரியர் கோபு அவர்களிடம் எப்படியாவது இந்த கதை சொல்லும் காட்சி ஒன்றை காதலிக்க நேரமில்லை திரை படத்தில் புகுத்திவிட வேண்டும் என்று கூறியதின் பேரில் திரு கோபு அவர்கள்,சகோதரிகள் இருவருக்கும் ஒரு சகோதரரை அவர் திரை படம் எடுப்பது போலவும் அந்த திரை படத்திற்கு பினன்சியர் ஆன தனது தந்தையிடமே இந்த கதை சொல்லும் காட்சியை சிறப்புற அமைத்து ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்ததாகவும் மேலும் இதனால் ஒரு காதல் subject திரை படம் கிளாஸ்சிகல் ஹாஸ்ய திரை (பாடமாக) படமாக மாறியதாகவும் மிக அழகாக விளக்கினார்
Richardsof
25th August 2014, 03:12 PM
http://youtu.be/bdQMMyELCGM
http://i61.tinypic.com/jv524j.jpg
Richardsof
25th August 2014, 03:14 PM
http://i58.tinypic.com/1zpqhj9.jpg
gkrishna
25th August 2014, 03:20 PM
டியர் எஸ்வி சார்
அந்த காலங்களில் ரெமி டால்க் என்று ஒரு பவுடர் வரும் (ஒருவித சிகப்பு மற்றும் மெரூன் கலர் என்று நினைவு ) அதன் விளம்பர நகல் கிட்டுமா ?
இருந்தால் பதிவிடுங்கள் . ரசிக்கிறேன் உங்கள் ஆவணங்கள் அனைத்துமே
vasudevan31355
25th August 2014, 03:28 PM
http://4.bp.blogspot.com/-sbYafSwjVeM/ToSiyV0Uw8I/AAAAAAAAEtA/xlBkin5uMi8/s640/hema+malini.jpg
vasudevan31355
25th August 2014, 03:29 PM
http://tasveergharindia.net/cmsdesk/userfiles/image/uploaded/Tasveer%20Ghar/77/01-692.jpg
vasudevan31355
25th August 2014, 03:31 PM
http://img.xcitefun.net/users/2010/08/196465,xcitefun-india-old-ads-1.jpg
vasudevan31355
25th August 2014, 03:31 PM
http://www.pinkvilla.com/files/imagecache/ImageFull/images/helen-lux-ad-211011.jpg
vasudevan31355
25th August 2014, 03:34 PM
http://www.pinkvilla.com/files/imagecache/ImageFull/images/vintage_lux_ad_mala_sinha_600x450.jpg
gkrishna
25th August 2014, 03:36 PM
http://www.pinkvilla.com/files/imagecache/ImageFull/images/vintage_lux_ad_mala_sinha_600x450.jpg
super stills தலை
vasudevan31355
25th August 2014, 03:37 PM
Hindi 'Naseeb' film ad.
http://www.pinkvilla.com/files/imagecache/ImageFull/images/hema29.jpg
vasudevan31355
25th August 2014, 03:39 PM
http://www.pinkvilla.com/files/imagecache/ImageFull/images/hema50_0.jpg
vasudevan31355
25th August 2014, 03:40 PM
http://www.pinkvilla.com/files/imagecache/ImageFull/images/hema51.jpg
gkrishna
25th August 2014, 03:48 PM
NSK இன் மணமகள் திரை படத்தில் திரு டி எஸ் பாலையா அவர்கள் வாயஅசைப்பில் பின்னணி குரல் கொடுத்த திரு v .n சுந்தரம் பாடும் பாரதியார் பாடல் உடன் ML வசந்தகுமாரி அவர்கள் .லலிதா ஆட பத்மினி மற்றும் பாலையா அவர்கள் வீணை வாசிக்க
https://www.youtube.com/watch?v=O0VNOCKk7UI
Richardsof
25th August 2014, 03:57 PM
http://i61.tinypic.com/ta5u9v.jpg
Richardsof
25th August 2014, 03:59 PM
http://i59.tinypic.com/oks7ig.jpg
mr_karthik
25th August 2014, 04:00 PM
டியர் வாசு சார்,
இரண்டு நாட்கள் காணாமல் போய் இன்று ஒரு அருமையான பாடலை 'இன்றைய ஸ்பெஷலாக' கொண்டு களமிறங்கியிருக்கிறீர்கள். வழக்கம்போல அருமை. (தேன் இனிக்கும் என்று ஒவ்வொரு தடவையும் சொல்ல வேண்டியதில்லை, எனினும் சில நேரம் 'நவக்கிரகம் நீங்க நவக்கிரகம்' போன்ற பாடல்களையும் கொண்டு வருவதால் ஒவ்வொரு முறையும் சொல்லிவிடுவது நல்லது).
'துலாபாரம்' பார்த்தாலே மனம்பாரம் அப்போது இளைஞர்களாக இருந்தவர்கள் கிண்டலடிப்பது உண்டு. அந்த அளவுக்கு படத்தின் பிற்பகுதியில் சோகம் நிறைந்திருக்கும். அந்தப்படத்தில் இப்படியொரு பாடல் என்பது ஆச்சரியம்தான். அதுவும் 'பாடல் காட்சிகளென்றாலே அட்டென்ஷன் பொஸிஷனில் நிற்பவர்' என்று பொதுவாக கிண்டலடிக்கப்படும் முத்துராமனிடமிருந்து. நிஜமாகவே வித்தியாசம்தான்.
இந்தப்பாடலை மிகவும் உருகி உருகி சிலாகித்துள்ளீர்கள். ரொம்ப நல்ல மூட்ல இருந்துள்ளீர்கள் என்று தெரிகிறது. முத்துராமனின் ஸ்டலை புகழ்ந்து தள்ளிவிட்டீர்கள்.
'சங்கம் வளர்த்த தமிழ்' பாடலிலும் கவிஞர் கட்டுப்பாடில்லாமல் விளையாடி இருப்பார்.....
'தோட்டத்திலே தென்னை இரண்டு முற்றித்திரண்டு
பக்கம் உருண்டு - அதைத்தொடவோடிய விழியோடொரு
விழிமோதிய கணமே என்னைத் தாக்கித்தகர்த்தவை இரண்டு
முற்றித்திரண்டு பக்கம் உருண்டு' என புகுந்து விளையாடி விடுவார்.
'பூஞ்சிட்டு கன்னங்கள்' சுகம் சோகம் இரண்டு வெர்ஷன்களுமே அற்புதம்.
சூப்பர் பதிவு..., பாராட்டுக்கள்....
vasudevan31355
25th August 2014, 04:18 PM
அன்பு கார்த்திக் சார்,
நன்றி!
நேற்று வெளியூர் பயணம். லீவ். அதற்கு முந்தின நாள் 'தோட்டக்கார சின்ன மாமா' (மாதவி), அதற்கு முன்னால் 'ஊருக்கெல்லாம் பூச்சூட்டும்' (ராஜா வீட்டுப் பிள்ளை) இ.ஸ்பெஷலில் போட்டிருந்தேன். சந்திரபாபு ஆவணம் ஒன்றும் அளித்திருந்தேன்.
'சிரிப்போ' என் இதயம் கவர்ந்த பாடல். எந்தப் படத்திலும் இது போல சுறுசுறுப்புத் திலகமாக இல்லாததால்தான் இந்தப் படத்தில் உங்கள் பெயர் கொண்டவரின் அப்பாவுக்கு புகழுரை. இரண்டு நாகளுக்கு முன்னம்தான் 'சம்சாரம் என்பது வீணை' பாடலில் 'முத்துராமனை பிடிக்காது' என்றுகூட எழுதியிருந்தேன். நல்லதை திறமைகளை எங்கிருந்தாலும் பாராட்டும் குணம் நமக்கு மட்டுமே உண்டு. அதனால்தான் கோபாலிடமிருந்து 'நாடோடி மன்னனு'ம், எனக்கு மிகவும் பிடித்தமான 'பொன்னந்தி மாலைப் பொழுது' 'இதயவீணை' படப் பாடல் பற்றிய தங்களுடைய சிறப்பான ஆய்வும் இங்கு கிடைத்தன.
Richardsof
25th August 2014, 04:22 PM
இனிய நண்பர்கள் திரு கார்த்திக் சார் / திரு கிருஷ்ணா சார் / திரு கோபால் சார் / திரு சி.க சார்
உங்களின் அன்பான பாராட்டுகளுக்கு நன்றி . துலாபாரம் - பாடல் பதிவு மிகவும் அருமை .நன்றி
வாசு சார் .
பொங்கும் பூம்புனல் - இரவின் மடியில் - அருமையான பாடல்கள் நன்றி திரு ராகவேந்திரன் சார் .
கோபால் சார் - கவிதை - புதுமை .
vasudevan31355
25th August 2014, 04:23 PM
டியர் வாசு சார்,
ரொம்ப நல்ல மூட்ல இருந்துள்ளீர்கள் என்று தெரிகிறது.
நீங்க வேற கார்த்திக் சார்,
நேற்று வெளியூர் பயணம் முடிந்து அதிகாலை 3 மணிக்குதான் வீடு வந்தேன். நேற்றே இன்றைய ஸ்பெஷல் போடவில்லையே என்று தூக்கம் கண்ணை சுழற்ற இந்தப் பதிவை தூங்கி வழிந்தபடியே டைப் செய்து போட்டேன். அதுக்கே 2 மணி நேரம் ஆகி விட்டது.. தூக்க மூட்தான்.:)
mr_karthik
25th August 2014, 04:30 PM
டியர் வினோத் சார்,
ஜெய்சங்கரின் "நிலவுக்கு போவோம்" பாடல் வீடியோவுடன், முதன்முதலில் நிலவில் கால்பதித்த அப்பல்லோ-11 வீரர்கள் ஆம்ஸ்ட்ராங், ஆல்டரின், காலின்ஸ் ஆகியோரின் நிழற்படங்களை பதித்த உங்கள் டைமிங் சென்ஸை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை....
Richardsof
25th August 2014, 04:49 PM
THANKS KARTHIK SIR
42 ஆண்டுகள் முன் வேலூர் அப்சரா அரங்கில் தவப்புதல்வன் முதல் நாள் - முதல் காட்சி பார்த்த நினைவலைகள் .
26.8.1972
கல்லூரி நண்பர்களுடன் முதல் நாள் ரசிகர்கள் மன்ற சிறப்பு காட்சி காலை 10 மணிக்கு படம் பார்க்கசென்றோம் .திரை சீலை நீக்கியவுடன் முதலில்பல்வேறு ரசிகர்கள் மன்ற வரவேற்பு சிலைடுகள்காட்டப்பட்டது .
பின்னர் வருகிறது ''வசந்த மாளிகை '' காட்டியவுடன் விசில்கள் - கைதட்டல்கள்
ரசிகர்களின் ஆரவாரத்துடன் படம் பார்த்தோம் . .
http://youtu.be/ORqLDJZ6WJk
gkrishna
25th August 2014, 04:53 PM
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcScLNGQCNhxRaZQuNR1UchdztUzz1c_Z eih56gFkG1IcOgRP_B56Q
எல்லை கோடு 1972
ஜெமினி ராஜஸ்ரீ ரவிச்சந்திரன் விஜயகுமாரி நடிப்பில்
எஸ்.ராகவன் இயக்கம்
மாமா திரை இசை திலகம் இசை யா அல்லது டி.ஆர் பாப்பா வா
இலைகளில் விளையாடும் கனி தோட்டமே
ரவிச்சந்திரன் விஜயகுமாரி இணைந்து பாடும் பாடல்
http://www.dailymotion.com/video/xlgzco_ellai-kodu-ilaigal_music
பாடகர் திலகம்,இசை அரசி குரல்களில்
மேலும் ஜெமினி ராஜஸ்ரீ இணைந்து பாடும் பாடல்
'பாடுவதற்கேற்ற தமிழ் ' இசைஅரசி குரலில்
ஜெமினியின் வேடம் என்ன சொல்ல என்ன சொல்ல
http://www.dailymotion.com/video/xlh1ey_ellai-kodu-paaduvatharkketra-thamizh_music
mr_karthik
25th August 2014, 05:03 PM
டியர் வினோத் சார்,
1024-வது பதிவிலுள்ள மாருதியின் ஓவியப்பெண்ணைப்பார்த்து, இது ஓவியமா அல்லது புகைப்படமா என்று திகைத்துவிட்டேன்.
அவ்வளவு துல்லியமான வரைவு...
madhu
25th August 2014, 05:11 PM
டியர் எஸ்வி சார்
அந்த காலங்களில் ரெமி டால்க் என்று ஒரு பவுடர் வரும் (ஒருவித சிகப்பு மற்றும் மெரூன் கலர் என்று நினைவு ) அதன் விளம்பர நகல் கிட்டுமா ?
இருந்தால் பதிவிடுங்கள் . ரசிக்கிறேன் உங்கள் ஆவணங்கள் அனைத்துமே
டால்கம் பவுடர் எஸ்வி ஜி கொண்டு வரதுக்குள்ள இந்த எண்ணெயை தடவிக்குங்க.. இதுவும் ரெமிதான்
http://lh6.ggpht.com/_ymLqylrIhm4/SdhBHskzNTI/AAAAAAAABhs/4QSwjXQLeeg/s1600-h/FalconComics1966RemiHairOilAd8.jpg
http://lh6.ggpht.com/_ymLqylrIhm4/SdhBHskzNTI/AAAAAAAABhs/4QSwjXQLeeg/s1600-h/FalconComics1966RemiHairOilAd8.jpg
gkrishna
25th August 2014, 05:12 PM
http://www.thehindu.com/multimedia/dynamic/02075/vbk-23-Balaiah_2075025g.jpg
As the city celebrates its 375th birthday, it also celebrated on Saturday the 100th birthday of one of its greatest actors, T. S. Balaiah. Film personality Mohan Raman, who hosted a special talk on the thespian, writes a personal tribute here
How would you describe an actor who could play villain, comedian or a straight emotional role, all with consummate ease? Genius? Tamil cinema was blessed with such an actor in T. S. Balaiah. Like his close friend and senior M.R. Radha, Balaiah could excel in all roles. Radha had different voices, but Balaiah modulated his — changed the pattern of delivery ever so slightly to move from menacing to endearing.
As the sleazy jewellery seller in Thookku Thookki singing ‘Arre pyaari nimmal mele namki maja’, as the veteran thavil player in Thillana Mohanambal who said “enakku anga oru beeda kadai kaarana theriyum” or as the driver Manickam Pillai falsely accused by M.R. Radha in Paava Mannippu, his performance always stood out as being very true to life and sans theatricals. Who can forget the sheer arrogance he portrayed in Thiruvilayadal as Hemanatha Bhagavathar and Balamuralikrishna singing ‘Oru Naal Podhuma’? Balaiah’s voice could tremble or be a sing-song flow… Add to the voice a face that lent itself to every type of character from lecherous to lovable and you are left with brilliant performances.
Balaiah was born on August 23, 1914; and not 22 as many websites claim. This is based on an interview he gave in 1950, where he mentions his birth star as Uththiram, which I can verify as falling only on August 23.
His parents were from Sundankottai, from the Nadar community, but he seems to have moved to Tirunelveli and was adopted by one Subramania Pillai, accounting for the initials ‘T.S.’.
When I visited Sundankottai, I met his older brother’s wife who introduced me to many others in the family. According to his son Junior Balaiah, himself a popular actor and turning producer to launch his son in the industry, “My father was a very private person and never spoke of his early years. We came to know of the Sundankottai link in his later years when he went there to meet his relatives.
Balaiah went to Manthiramurthy High School in Tirunelveli but never really liked to study. Seeing a circus performance, he decided to sign up. Balaiah stole some money from home and ran away with a friend. They finally reached Manamadurai, where they ran out of money. Balaiah found work in a small restaurant and a butcher shop, before going back to Tirunelveli.
At the time, Jagannatha Iyer’s famous drama company was working in Tirunelveli, and Balaiah decided that acting suited him better than a circus career. Sadly, the company dissolved, but one Nagalinga Chettiar decided to start Bala Mohana Sangeetha Sabha with some of Jagannatha Iyer’s cast and crew. Balaiah joined them at the age of 15 as an apprentice without a salary for six months, after which he got paid Rs. 6 a month.
A mischievous and rebellious boy, he was not given many roles. Then, the company staged Shakespeare’s Cymbeline. The actor who was to play Pesanio gave the role to Balaiah challenging him to get applause at least three times. Balaiah’s performance was so riveting he received huge ovation each time he came on stage. This was his first taste of success.
The company was soon dissolved and Balaiah joined Rajambal Company, where he met the famous M. Kandaswamy Mudaliar, father of M.K. Radha. They staged Pathi Bhakthi over 150 times and Balaiah’s performance was greatly acclaimed. Sadly, this company too folded up but Kandaswamy Mudaliar roped him in for a film he was writing and where his son was the hero. This was Sathi Leelavathi, directed by the American Ellis R. Dungan. This was the film that saw MGR introduced to cinema.
Impressed by Balaiah, Dungan continued to cast him, and finally Ambikapathy established him as ‘villain’. He went on to act in Uththamaputhiran (1940), Bhoologa Rambai, Manonmani, and Aryamala. The stage bug bit him and he started Sri Sai Bala Gana Sangeetha Sabha but lost a lot of money and gave it up.
He was living like a hermit when he was offered work again. He did Burma Rani, Saalivahanan, Chithra, Valmiki and many others, some even as hero. Velaikkari and Oru Iravu saw him move to the dialogue era with ease. Bhim Singh used him later in several of his ‘Pa’ series films, while Sridhar exploited his comic timing in Kathalikka Neramillai and Ooty Varai Uravu.
K. Balachander’s Bhama Vijayam (1967) saw him excel as the concerned head of the family. His song ‘Varavu 8 anna, selavu 10 anna’ rings so true in these days of plastic economy... I can't think of a character actor who has immortalised so many songs.
Balaiah was to act in a movie made by M.R. Radha called Suttaan, Sutten, where Radha’s son is played by Junior Balaiah and Balaiah’s son by M.R.R.Vasu. Sadly, Balaiah fell ill and passed away on July 22, 1972 when he was just 58. (இது குறித்து நிறைய விவாதம் உண்டு )
I wish the film fraternity and the government will commemorate this great actor’s centenary in a fitting manner.
chinnakkannan
25th August 2014, 05:33 PM
எஸ்வி சார் இன் மற்ற படங்களை விட் டி.எஸ்.ஆர் கும்பகோணம் நன்றாக இருந்தது..மிக்க நன்றி..(கார்த்திக் சார் ம் வழி மொழிவார் :) )
வாசு சார்..துலாபாரம் நான் பார்க்க மறுத்த பார்க்காத ஒரு படம்..பாட்டு காற்றினிலே (அதுவும் அதில் தானே..) கேட்கும் போது, கேட்டு விட்டு ரெண்டு மூன்று நாள் அதே காதில் ரீங்கரித்த்து உண்டு..உங்கள் பாட்டை ராவில தான் கேக்கணும்..அதாவது நைட்..(மலையாளத்தில் ராவு என்றால் காலை)
அப்புறம் வாசு சார்..அழகழகா பூக்களா விளம்பரங்கள் இறங்கிக் கொண்டிருக்க முள் மாதிரி ஒரு க்ளூக்கோஸ் விளம்பரம்.. ஹையாங்க்..:)
மதுண்ணாவுக்கு ரெமி ஜெ கொடுத்ததுக்கு ஒரு ஜே!
க்ருஷ்ணாஜி..எல்லைக் கோடு பார்த்திராத ஒருபடம்..இப்படி மாத்திக்கலாம்பார்த்திராத படங்களில் ஒன்று..பாடலும் கேட்ட் நினைவில்லை.. எனில், எனிவே நன்றி..:)
gkrishna
25th August 2014, 05:57 PM
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcRVnxfo2yBx1LM9Ck86ckuzBguMUgWMh 9-K6ocXM3EwXoLABpxGhttps://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTcQRNRvx9UhS_xwZrJKUHLj1bxRNPbs SDN9NLi5V3Bqlxj0bHHvw
கார்த்திக் சார் இன் 'பொன் அந்தி மாலை பொழுது ' பாடல் பற்றிய பதிவு படித்த உடன் மனதில் தோன்றிய ஒரு ரம்மியமான பாடல்
மக்கள் திலகமும் லட்டு லத்து இணைந்து கலக்கும்
ஜேசுதாஸ் மற்றும் இசைஅரசி (என்ன ஒரு ச்வீட் வாய்ஸ் )
சங்க காலத்தில் பெண்ணின் பருவங்கள் ஏழாக பிரிக்கப்பட்டுள்ளது.
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்.
மகளிர்பருவம் ஏழனுள்
5 முதல் 8 வயதுவரையுள்ள பெண் பேதை
9 முதல் 10 வயது வரை உள்ள பெண் பெதும்பை
11 முதல் 14 வயது வரை பெண் மங்கை .
15 முதல் 18 வயதுவரை யுள்ள பருவத்துப் பெண் மடந்தை
19 வயதுமுதல் 24 வயதிற்குட்பட்ட பெண் அரிவை
25 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட பெண் தெரிவை
30 வயதுக்கு மேல் 36 வயதுவரையுள்ள பெண் பேரிளம்பெண்
இதுக்கு மேல் உள்ள பெண்கள் என்ன லிஸ்ட் நம்ப வீட்டு அம்மணிகளை எந்த லிஸ்டில் ? (நிச்சயம் துடைப்பம் :))
இந்த 7 இல் இந்த பாட்டின் சுசீலாவின் குரலை எந்த வகையில் சேர்பீர்கள் ?
காதல் என்பது காவியமானால் கதா நாயகன் வேண்டும்
காதல் என்பது காவியமானால் கதா நாயகன் வேண்டும்
அந்தக் கதா நாயகன் உன்னருகே
இந்தக் கதா நாயகி வேண்டும்
அந்தக் கதா நாயகன் உன்னருகே
இந்தக் கதா நாயகி வேண்டும்
காதல் என்பது காவியமானால் கதா நாயகன் வேண்டும்
சாகுந்தலம் என்ற காவியமோ
ஒரு தோகையின் வரலாறு
சாகுந்தலம் என்ற காவியமோ
ஒரு தோகையின் வரலாறு
அவள் நாயகன் இன்றித் தனித்திருந்தால்
அந்தக் காவியம் கிடையாது
நான் பாடும் இலக்கியம் நீயில்லையோ
நாள் தோறும் படித்தது நினைவில்லையோ
காதல் என்பது காவியமானால் கதா நாயகி வேண்டும்
அந்தக் கதா நாயகி உன்னருகே
இந்தக் கதா நாயகன் வேண்டும்
காதல் என்பது காவியமானால் கதா நாயகி வேண்டும்
நீலக்கடல் கொண்ட நித்திலமே
இந்த நாடகம் உனக்காக
நீலக்கடல் கொண்ட நித்திலமே
இந்த நாடகம் உனக்காக
உந்தன் நீள் விழி தன்னில் திறந்திருக்கும்
இந்த நூலகம் எனக்காக
சிங்காரக் கவிதைகள் படித்தேனம்மா
உனகந்த பொருள் கூறத் துடித்தேனம்மா
காதல் என்பது காவியமானால் கதா நாயகன் வேண்டும்
வள்ளல் தரும் நல்ல நன் கொடை போல்
என்னை வாங்கிய மணிச்சரமே
இந்த மேனியில் கொஞ்சம் கொதிப்பெடுத்தால்
வந்து பாய்ந்திடும் மழைச்சரமே
நீ தீண்டும் இடங்களில் குளிர் வந்தது
தீண்டாத அங்கங்கள் கொதிப்பானது
காதல் என்பது காவியமானால் கதா நாயகன் வேண்டும்
அந்தக் கதா நாயகன் உன்னருகே
இந்தக் கதா நாயகி வேண்டும்
காதல் என்பது காவியமானால் கதா நாயகி வேண்டும்
சார் விடியோ ப்ளீஸ் ?
ஹனுமார் சஞ்சீவி மலையை கொண்டு வந்த மாதிரி பறந்து வந்து
கொடுக்க மாட்டீங்களா ? ARC Parcel Service
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQql_krvvyjy1aHPOt76VbwhlCneRZRO 54bItDSmyHGTBEEOLjI
madhu
25th August 2014, 06:19 PM
http://youtu.be/nsbfFV9BgqQ
vasudevan31355
25th August 2014, 06:27 PM
கிருஷ்ணா சார்,
பாலையாவின் நினைவலைகள் அருமை.
http://www.thehindu.com/multimedia/dynamic/02062/17cp_balaiah_3_jpg_2062849g.jpg
http://www.thehindu.com/multimedia/dynamic/02062/17CP_BALAIAH_IN_MA_2062848g.jpg
http://www.thehindu.com/multimedia/dynamic/02037/04TH_DRAMA_2037738f.jpg
http://www.thehindu.com/multimedia/dynamic/02062/17CP_BALAIAH_IN_BH_2062847g.jpg
http://www.inbaminge.com/t/o/Or%20Iravu/Or%20Iravu.jpg
chinnakkannan
25th August 2014, 06:57 PM
//நீலக்கடல் கொண்ட நித்திலமே
இந்த நாடகம் உனக்காக// எல்லாம் க்ருஷ்ணா(ஜி க்களின் ) லீலை..பாட் ஒருத்தர் படம் காட்டறது குட்டிக் கிருஷ்ணன்..ரசிக்கறது சி.க..:)
வாசு சார்.. ப்ளாக் அண்ட் ஒய்ட் போட்டோஸ் உங்க ஆர்க்கைவ்ல எவ்ளோ வெச்சுருக்கீங்க..அனைத்தும் நைஸ்..
gkrishna
25th August 2014, 07:16 PM
நன்றிகள் வாசு சார் ,சி கே சார் ,மது சார்
வாயு வேகம் மனோ வேகம் என்பார்களே அது போல் பாடலை அள்ளி தந்த பூமி '..' அல்லவா
gkrishna
25th August 2014, 07:21 PM
'இந்த மேனியில் கொஞ்சம் கொதிப்பெடுத்தால்
வந்து பாய்ந்திடும் மழைச்சரமே
நீ தீண்டும் இடங்களில் குளிர் வந்தது
தீண்டாத அங்கங்கள் கொதிப்பானது'
நேற்று நைட் சென்னை இரவு 10 மணி வரை அனல்
பிறகு இடி மின்னல் புயல் மழை
வீட்டுக்கு வீடு பட்டு பாகவதர் மாதிரி
gkrishna
25th August 2014, 07:36 PM
http://jagdishk.dinstudio.com/files/mohd-rafi.jpg
எனது உடலின் மீது சந்தனக் கட்டைகளை ஏன் அடுக்குகிறீர்கள் ? நான் இறவாதவன்....எங்கெல்லாம் நீங்கள் வாழ்க்கையில் இடறி விழுந்து துயரத்தை உணர்கிறீர்களோ அங்கெல்லாம் எனது குரல் உங்களுக்ககா ஒலிப்பதை நீங்கள் கேட்கலாம்....
முகமது ரஃபி தனக்காகவே பாடிய பாடல் போல உள்ள இந்தப் பாட்டு இடம் பெற்ற படம் நஹ்னிஹால். படத்தில் ஜவகர்லால் நேருவுக்காக பாடப்படுகிறது.
இந்திய திரையிசைப் பாடகர்களில் முகமது ரஃபிக்கு நிகரானவர் யாருமில்லை. எத்தனை எத்தனையோ குரல்கள் மூலம் நமது திரைப்படப் பாடல்கள் மற்றும் அதன் ரசனை மேம்பட்டு இருப்பினும்,முகமது ரஃபியின் பாடல்கள் துயரத்தின் எதிரொலிகளாக நமது வருத்தமான நேரங்களில் நம்முடன் அழுதும், ஆறுதல் கூறியும் துணை நிற்கின்றன.
முகமது ரஃபியின் குரல் எதிரொலியைப் போன்றது. நமது துயரம் மிகுந்த ஆன்மாவின் தவி்ப்பை இக்குரல் உணர்த்துவதால், வாழ்க்கை என்ற ஒன்று இருக்கும் வரை, அதில் துன்பமும் நீடிக்கும் வரை ரஃபியின் பாடல்களும் நிலைத்திருக்கும்.
மிகவும் அடர்ந்த பெரும் துயரத்துடன் முகமது ரஃபி பாடும் அனுபவம் சில நேரங்களில் தியானத்தைக் கூட பின்னுக்குத் தள்ளி விடுகிறது.அதனுடன் லயிக்கும் போது மனதின் இறுகிய வெளிகள் கசிந்துருகி நெகிழ்வுறுவதைக் காணலாம். கண்களில் நிரப்பாமல் நம்மால் அந்தப் பாடல்களை ரசிக்க முடியாது. அவருடைய சில பாடல்கள் நம்மை உடனடியாக அழ வைக்காது.ஆனால் நெஞ்சில் ஆறாத ஒரு வடுவை கிளறிவிட்டுப் போகும். அது அவ்வப்போது வலிக்கும். அதன் சொல்லியழ முடியாத துக்கம் நம்மை செயலிழக்க வைக்கும். அதுதான் முகமது ரஃபியின் தனித்தன்மை. எனவேதான் அதனை துயரத்தின் எதிரொலி என்று அழைக்கிறேன். ரஃபி பாடும் இடங்கள் திரைப்படத்தில் பெரும்பாலும் துயரமான காட்சிகளை ஒட்டியே இருக்கும். துயரத்தை ரஃபியின் குரல் அழுது. ஆராதித்து நம்மிடம் அதன் வலியை குறைக்காமல் வழங்குகிறது.
முகமது ரஃபி 1924ம் ஆண்டு அமிர்தசரஸ்அருகில் பிறந்தார். பிரிவினைக்குப் பின்னர் அப்பகுதி பாகிஸ்தானுடன் இணைந்து விட்டது. உஸ்தாத் படே குலாம் அலி கான் என்பவரிடம் முறைப்படி சங்கீதம் கற்றார். முகமது ரஃபிக்கு 13 வயதாகும் போதே முதல் பாடல் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது முடிசூடா மன்னராக விளங்கிய பாடகர் சைகல் .இவர் பாடவில்லையென்றால் அந்தப் படத்தை யாரும் பார்க்க மாட்டார்கள்.அப்படியொரு வெறிபிடித்த ரசிகர் கூட்டம் சைகலுக்கு உண்டு. மலையாளத்தின் புகழ்மிக்க எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீரும் தீவிரமான சைகலின் ரசிகர். சைகலின் சோஜா ராஜகுமாரி பாட்டைக் கேட்காமல் தூங்கமாட்டாராம். இப்படிப்பட்ட சைகல் பாடும் போது திடீரென மின்சாரம் தடைபட்டது. கெட்ட சகுனமாக கருதி சைகல் பாட மறுத்துவிட்டார்.அப்போது அவரது பாடல்களை மேடையில் பாடினார் முகது ரஃபி.
பின்னர் 1942ம் ஆண்டு பஞ்சாபி படம் ஒன்றில் ஒரு வாய்ப்பு கிடைத்தது.இசையமைப்பாளர் ஷியாம் சுந்தர் அவருக்கு அந்த வாய்ப்பை வழங்கினார்.அந்தப் பாடல் பெரிதாக கவனம் பெறவில்லை.
1944ல் வாய்ப்பு தேடி மும்பைக்கு சென்ற ரஃபி, அங்கு மெஹ்பூப் ஸ்டூடியோவின் அதிபருக்கு அறிமுகம் ஆனார். அவர் மூலம் இசையமைப்பாளர் நௌஷாத்தின் நட்பு ரஃபிக்கு கிடைத்தது. ஆனாலும் நௌஷாத்தின் கோரஸ் கூட்டத்தில் ஒருவராகத்தான் ரஃபி இருந்தார். பின்னர் ரஃபியின் குரலை அடையாளம் கண்ட நௌஷாத் ஹிந்துஸ்தான் கே ஹை ஹம் என்ற படத்தில் தனியாகப் பாட வாய்ப்பளித்தார். அந்தப் பாடல்தான் ரஃபி பாடிய முதல் இந்திப் பாடல்
1952 ல் வெளியான பேஜூ பாவ்ரா படம் ரஃபியின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. அந்தப் படத்தில் அவர் பாடிய பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தன. இதன் பிறகு பல பிரபல இசையமைப்பாளர்கள் ரஃபியை அழைத்துப் பாட வைத்தனர். நீல்கமல் படத்தில் பாடி தேசிய விருதையும் வென்றார் ரஃபி.பல லட்சம் ரூபாய் வாங்கி பாடிய ரஃபி தமக்கு வேண்டியவர்களுக்கு ஒரு ரூபாய் வாங்கியும் பாடிக் கொடுத்திருக்கிறார்.
ரஃபியுடன் பலநூறு பாடல்களை இணைந்துப் பாடியவர் லதா மங்கேஷ்கர். ஆனால் 1960ல் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானது. 55 சத வீதம் ராயல்டி கேட்டு லதா இசையமைப்பாளர்களை நெருக்கியது ரஃபிக்கு உடன்பாடாக இல்லை. தமது சம்பளத்திற்கு மேல் பாடகர்கள் ராயல்டி கேட்பது சரியல்ல என்று சலீல் சவுத்திரியும் கருத்து தெரிவித்தார். இதனை லதா மங்கேஷ்கர் ஏற்கவில்லை.இப்பிரச்சினையால் ரஃபியுடன் பாடுவதைத் தவிர்த்தார் லதா மங்கேஷ்கர்.பின்னர் இருவருக்கு இடையிலும் சமரசம் ஏற்பட்டது.ஆனால் 1980ல் ரஃபி மறையும் வரை இருவருக்கும் இடையில் இந்த வேறுபாடு நீடித்தே வந்தது.
ரஃபி ஜாலியான பாடல்களையும் பல சந்தோஷமான பாடல்களையும் பாடியிருக்கிறார். நிச்சயம் அவை அற்புதமான பாடல்கள்தாம். ஆனாலும் முகமது ரஃபியின் குரல் துயரமான காட்சியில் ஒலித்த போதெல்லாம் அந்தப் பாடல் சாகா வரம் பெற்றுவிட்டது. சந்தோஷமான பாடல்களை எல்லாம் எத்தனை அலட்சியமாக ரஃபி பாடினார் என்பதை கூறத் தேவையில்லை.
ரஃபி மகிழ்ச்சியாகப்ப பாடிய பாடல்களில் முக்கியமானது நசீப் படத்தி்ல் அமிதாப்புக்காக அவர் பாடிய பாடல். ஜான், ஜானி, ஜனார்த்தன் என்ற அந்தப் பாடல் ஒரு ரம்மியமான அனுபவத்தை ஏற்படுத்தக் கூடியது.
முகமது ரஃபி பிறப்பால் முஸ்லீமாக இருப்பினும் இந்து மதத்தின் திரையிசை பக்திப் பாடல்களை அதிகமாகப் பாடியவர் அவர். அந்தப் பாடல்கள் எல்லாம் இன்றும் அமர்த்துவம் வாய்ந்த பக்தி கீதங்களாக பல்லாயிரம் வீடுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
தேச பக்தி பாடல்களிலும் ரஃபி தனி முத்திரைப் பதித்துள்ளார். ஆயினும் அவரது குரல் அதிகமாக தத்துவம் மற்றும் துயரம் சார்ந்த பாடல்களில் பொன்னாக மின்னியது.
ரஃபியின் பெயருக்கு அடையாளமாக விளங்குபவை அவரது துயரமான பாடல்களே. ரஃபியின் பாடலைக் கேட்டால் நெஞ்சு வலிக்கிறது என்று என் அப்பா கூறுவதைக் கேட்டிருக்கிறேன். எனக்கும் என்றைக்காவது மாரடைப்பு ஏற்பட்டால் அது ரஃபியின் குரல் கேட்டபடி தான் என் உயிர் பிரிந்தது என்று நீங்கள் அனுமானிக்கலாம. அப்படி ஒரு சாவுக்காகத்தான் ஆசைப்படுகிறேன்.
ரஃபியின் பாடல்கள் வலி நிறைந்தவை. ஒவ்வொரு வரியும் வயலின் மற்றும் பியானோவில் கலந்து நம்மை துடிக்க வைப்பது.
நீல் கமல் படத்தில் தேசிய விருதைப் பெற்ற ரஃபியின் பாட்டு பாபுல் கீ துவாயேன் லேத்தி ஜா என்ற பாடல். நடித்தவர்கள் பல்ராஜ் சஹானி என்ற மகத்தான நடிகரும் வஹிதா ரஹ்மானும்.
மகளை மணமுடித்து அனுப்பும் தந்தையின் உணர்வை கூறும் பாடல் இது. தான் பாசமாக கொஞ்சி வளர்த்த குழந்தை பெரியவளாகி திருமணப் பெண்ணாக பிரியும் போது ஒலிக்கத் தொடங்கி விடுகிறது ரஃபியின் குரல் (நடிகர் திலகத்தின் நீதிபதி ,அன்புள்ள அப்பா நினைவிற்கு வரலாம் )
இந்தியில் லாட்லி என்றொரு சொல் உண்டு. செல்லக் குழந்தை என்று அதன் அர்த்தம். மிகுந்த அன்புடன் உச்சரிக்கப்படும் சொல் இதுதான். தாய்மையின் அன்பு பொங்கும் சொல் இது. இந்தப் பாடலில் லாட்லியின் கால்களில் முட்கள் குத்தாமல் இருக்கட்டும் என்று ரஃபி பாடுவார். அப்போது வகிதா ரஹ்மானின் காலில் உடைந்த கண்ணாடிகள் குத்தி ரத்தம் கசியும். ஒரு முள்கூட என் செல்லக் குழந்தையைக் காயப்படுத்தக் கூடாது என்று தாய்மை ததும்பும் குரலில் ரஃபி பாடுவதைக் கேட்டுப் பாருங்கள். லாட்லி என்ற அந்தச் சொல்லை அவர் உச்சரிக்கும் போதே உடைந்து அழுவதை உணரலாம். நம்மையும் நமது குழந்தைச் செல்வங்களை எண்ணி அந்தக் கணம் அழ வைத்து விடும்.ரஃபியின் குரல் நமது உள்ளத்தின் எட்ட முடியாத ஆழத்தை அடைந்து அங்கு வலியாக உறைந்துப் போய் விடுகிறது.
http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/e/ef/Neel_Kamal_1968_film_poster.JPG/220px-Neel_Kamal_1968_film_poster.JPG
http://www.youtube.com/watch?v=pABBYGFNXts
செந்தூரம் இதழில் வெளியான நண்பர் சன் டிவி ஜகதீஷ் அவர்களின் கட்டுரையின் சில பகுதிகள்...
Gopal.s
25th August 2014, 07:43 PM
இரவின் மடியில்
மனோ வின் முதல் தமிழ் பாடல் பூவிழி வாசலிலே,அண்ணே அண்ணே நீ என்ன சொன்னே, இளையராஜா இசையில்.1987 இல்.
http://www.rakkamma.com/filmsongdetails.phtml?filmid=438&songid=1867
ஹரிஹரன் முதல் தமிழ் பாடல் ரோஜாவில் ,தமிழா தமிழா , ஏ.ஆர்.ரகுமான் இசையில் 1992.
https://www.youtube.com/watch?v=oRypXQxL6qY
சங்கர் மகாதேவன் முதல் தமிழ் பாடல் வெண்ணிலவே (சோகம்),மின்சார கனவில், 1997 ,ரகுமான் இசையில்.
https://www.youtube.com/watch?v=drZYK0B-Ze8
கார்த்திக் முதல் தமிழ் பாடல் நேர்ந்துகிட்டேன், ஸ்டார் படத்தில் 2001 இல்,ரகுமான் இசையில்.
https://www.youtube.com/watch?v=dMLWV9bKfRU
gkrishna
25th August 2014, 07:47 PM
நன்றி கோபால்
உங்களின் நௌஷட் பற்றிய பதிவு தான் இந்த mohd - ரபி யின் பகிர்வுக்கு inspiration
gkrishna
25th August 2014, 07:53 PM
http://www.thehindu.com/multimedia/dynamic/02037/04TH_DRAMA_2037738f.jpg
பாலையா அருகில் இருக்கும் நடிகை (சச்சு தவிர ) யார் ?
vasudevan31355
25th August 2014, 08:05 PM
பாலையா அருகில் இருக்கும் நடிகை (சச்சு தவிர ) யார் ?
நடிகை S.D. சுப்புலெட்சுமி
http://raja1630.tripod.com/sitebuildercontent/sitebuilderpictures/sdsubbu.jpg
http://3.bp.blogspot.com/-6pERf6bk51o/TpYmdOyauJI/AAAAAAAAETk/STyVvoQQEus/s1600/S.D+Subbulakashmi+%25281938%2529.jpg
http://www.thehindu.com/multimedia/dynamic/01600/29cp_Anantha_Sayan_1600191f.jpg
Gopal.s
25th August 2014, 08:27 PM
இரவின் மடியில்
தமிழில் பாடகிகளுக்கு கணக்கே இல்லை. இவர்களின் முதல் தமிழ் பாடல்களை கவனிப்போம்.
ஜிக்கி ,படம்- ஞான சௌந்தரி, 1948,அருள் தாரும் தேவ மாதாவே ,எஸ்.வீ. வெங்கட் ராமன் இசையில்.(இது பெரிய நாயகி.ஜிக்கி பாடியது சின்ன நாயகிக்கு. சிக்கவில்லை.
https://www.youtube.com/watch?v=KRM0zm_aptg
பீ.லீலா , படம் பாதாள பைரவி,1951, என்னதான் உன் ப்ரேமையோ , கண்டசாலா இசையில்.
https://www.youtube.com/watch?v=PrH3TZhMJiY
ஜமுனா ராணி,குலுங்கிடும் பூவிலெல்லாம் , வளையாபதி -1952, தக்ஷினாமூர்த்தி இசையில் (டி.எம்.எஸ் கண்டு பிடிக்க முடிகிறதா?)
https://www.youtube.com/watch?v=PIUTLcyYeP4
பீ.சுசிலா ,படம் பெற்ற தாய் ,1953, ஏதுக்கு அழைத்தாய் ,பெண்டியாலா இசையில்.
https://www.youtube.com/watch?v=qIAdFlHhdMY
எஸ்.ஜானகி, விதியின் விளையாட்டு வெளியாகவில்லை. மகதல நாட்டு மேரி,1957 இல் ,கண்ணுக்கு நேரே மின்னிடும் தாரை, பார்த்தசாரதி இசையில்.
http://www.inbaminge.com/t/m/Magadhala%20Naattu%20Mary/Kannukku%20Nere.eng.html
எல்.ஆர்.ஈஸ்வரி -நல்ல இடது சம்மந்தம்,1958, இவரேதான் அவரு, கே.வீ.மகாதேவன் இசையில்.
https://www.youtube.com/watch?v=j6rQ7dvfp9w
Gopal.s
25th August 2014, 08:30 PM
எங்கேயிருந்துதான் பிடிப்பாயோ வாசு?:confused2:
rajeshkrv
25th August 2014, 11:02 PM
வாசு ஜி
நலம் தானா நலம் தானா உடலும் உள்ளமும் நலம் தானா
Gopal.s
26th August 2014, 06:11 AM
வாணி ஜெயராம் , தாயும் சேயும் என்ற படத்துக்காக 1973 இல் சுப்பையா நாய்டு இசையில் பாடிய படமும் பாடலும் வெளிவரவில்லை. 1974 இல் வந்த தீர்க்க சுமங்கலியின் மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடலே முதலாக கருத பட வேண்டும்.எம்.எஸ்.விஸ்வநாதன் இசை.
https://www.youtube.com/watch?v=d9pS3G1ApiI
சுஜாதா ,என் பிரிய இசை நாயகி, அறிமுகம் கவிக்குயில்,இளையராஜா இசையில் ,1977, காதல் ஓவியம் கண்டேன் (அமீர் கல்யாணி ராகம்)
https://www.youtube.com/watch?v=IZ0Nc1smXj0
உமா ரமணன் ,1977 இல் ,கிருஷ்ணா லீலை படத்தில் கோகுல பாலன் , எஸ்.வீ வெங்கட்ராமன்(கடைசி படம்) இசையில் .
https://www.youtube.com/watch?v=fqhNoagRcqs
ஜென்சி ,திரிபுர சுந்தரி படத்தில் 1978 இல் இளைய ராஜா இசையில் ,வானத்து பூங்கிளி.
http://www.inbaminge.com/t/t/Thiripura%20Sundari/
சித்ரா ,இந்த குயிலின் முதல் பாடல் 1986 இல் வெளியான நீதானா அந்த குயில் ,இளையராஜா இசையில் பூஜைகேற்ற பூவிது.
https://www.youtube.com/watch?v=bAaI29Wzrcg
அனுராதா ஸ்ரீராம் ,இந்திரா படத்தில் 1995 இல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் அச்சம் அச்சம் இல்லை.
https://www.youtube.com/watch?v=mXR2Rfq0N7M
rajeshkrv
26th August 2014, 06:23 AM
கோபால் ஜி, பாடகர்களின் முதல் பாடல் தொகுப்பு அருமை
சுஜாதா எனக்கு மிகவும் பிடித்த குரல் ..(இசையரசிக்கு அப்புறம்).. இன்னும் நிறைய பாடியிருக்க வேண்டியது ... என்ன செய்ய ....
vasudevan31355
26th August 2014, 06:58 AM
ராஜேஷ்ஜி
வணக்கம். வணக்கம். நலமே! தாங்களும் நலம்தானே! நைட் ஷிப்ட் முடிந்து இப்போதுதான் வந்தேன். சில நாட்களாக மேச் ஆக முடியவில்லை. எங்கே...சூப்பரான இசையரசி பாடல் ஒன்றைத் தந்து கலக்குங்கள் பார்ப்போம். இன்று அதிலேயே பொழுதை ஓட்ட வேண்டும்ஜி.
madhu
26th August 2014, 07:00 AM
இரவின் மடியில்
தமிழில் பாடகிகளுக்கு கணக்கே இல்லை. இவர்களின் முதல் தமிழ் பாடல்களை கவனிப்போம்.
ஜிக்கி ,படம்- ஞான சௌந்தரி, 1948,அருள் தாரும் தேவ மாதாவே ,எஸ்.வீ. வெங்கட் ராமன் இசையில்.(இது பெரிய நாயகி.ஜிக்கி பாடியது சின்ன நாயகிக்கு. சிக்கவில்லை.
அதிலேயே இருக்குதே கோபால் ஜி.. சின்னப் பெண்ணுக்கு ஜிக்கி குரல் ( சத்தியமா கண்டு பிடிக்க முடியலீங்க ), எம்.வி.ராஜம்மாவுக்கு பெரிய நாயகி குரல்.
RAGHAVENDRA
26th August 2014, 07:24 AM
தமிழில் வாணி ஜெயராம் பாடி வெளிவந்த முதல் படம் வீட்டுக்கு வந்த மருமகள். இதைப் பற்றி நம் திரியில் முன்னர் விவாதித்ததாக நினைவு.
அவரைத் தமிழில் அறிமுகப் படுத்தியதோடு மட்டுமின்றி அதிக அளவில் அவரைப் பாடவைத்த இசையமைப்பாளர்கள் என்ற பெருமையும் சங்கர் கணேஷுக்கு உண்டு.
ஓரிடம் ஓரிடம்... பாடகர் திலகம் டி.எம்.எஸ்.ஸுடன் வாணி ஜெயராம் பாடிய பாடல். தமிழ் சினிமாவில் அவருடைய முதல் பாடல்
http://www.inbaminge.com/t/v/Veettukku%20Vandha%20Marumagal/
RAGHAVENDRA
26th August 2014, 07:28 AM
பொங்கும் பூம்புனல்
கடந்ததை நினைத்து எந்த பயனில்லை.. என்றுமே நல்லதையே நினைப்போம்.. நல்லதே நடக்கும்.. என்ற இந்த பாஸிடிவ் அப்ரோச்சுடன் இன்றைய தொடர் துவங்குகிறது. இசையரசியின் இனிமையான குரலில் மெல்லிசை மாமணி குமாரின் இசையில் கட்டிலா தொட்டிலா திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலைக் கேளுங்கள்..
நான் நல்லவர் இல்லறம் நலம் பெற வேண்டுகிறேன்.
http://www.inbaminge.com/t/k/Kattila%20Thottila/
RAGHAVENDRA
26th August 2014, 07:32 AM
பொங்கும் பூம்புனல்
ஒரு தமிழ்ப் பெண்ணின் அன்றாட வேண்டுதல் இறைவனிடம் இது தானே இருக்க முடியும்...
மல்லிகைப்பூ திரைப்படத்திலிருந்து இசையரசியின் குரலில் பக்திப் பரவசத்துடன்..
http://www.inbaminge.com/t/m/Malligai%20Poo/
vasudevan31355
26th August 2014, 07:33 AM
ராஜேஷ் ஜி
'வாழ்ந்து காட்டுகிறேன்' படத்திலிருந்து ஒரு பாடல்.
முத்துராமனும், சுஜாதாவும் பங்கு பெரும் பாடல். பாலாவும், இசையரசியும் அமைதியாகப் பாடியிருப்பார்கள்.
கொட்டிக் கிடந்தது கனியிரண்டு
எட்டிப் பறித்தது கையிரண்டு
கட்டிப் பிடித்தது கனிவு கொண்டு
தட்டிப் பறிப்பதில் சுகமும் உண்டு
இசையரசியின் பகுதி
'இலைகள் உண்டு
மறைந்து கிடக்கின்ற மலர்கள் உண்டு'
அருமை ஜி.
சுஜாதா சிம்பிள் அழகு. முத்து வழக்கம் போல.
அழகான வரிகள். நல்ல மெலடி.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=U4pi3JomENs
RAGHAVENDRA
26th August 2014, 07:35 AM
பொங்கும் பூம்புனல்
மணிப்பயல் திரைப்படத்தில் எஸ்.ஜானகியின் குரலில் மெல்லிசை மன்னரின் இசையில் அருமையான பாடல்..
நான் ஆடினால் ஒரு வகை போதையில் பல வகை மனிதரும் கூடவே ஆடுவார்..
http://www.inbaminge.com/t/m/Manipayal/
RAGHAVENDRA
26th August 2014, 07:36 AM
வாசு சார்
சூப்பர்... தொடக்கமே.. அட்டகாசம்...
vasudevan31355
26th August 2014, 07:37 AM
ராகவேந்திரன் சார்,
எனக்கு மிகவும் பிடித்த 'கட்டிலா தொட்டிலா' படத்தின்
'நான் நல்லவர் இல்லறம் நலமுற வேண்டுகிறேன்'
பாடலைத் தந்து இன்றைய பொழுதை இனிமையாய்க் கழிக்க வழி செய்து விட்டீர்கள்.
மிக மிக அருமையான பாடல். கல்பனாவும் கலக்கல்.
நன்றி சார்.
http://www.dailymotion.com/video/x16ss72_kattila-thottila-1973-naan-nallavar-illam_shortfilms
madhu
26th August 2014, 07:40 AM
http://youtu.be/Dovf8t3S-Oc
ஓரிடம்.. உன்னிடம் - டி.எம்.எஸ்.,வாணி ஜெயராம் - வீட்டுக்கு வந்த மருமகள்
RAGHAVENDRA
26th August 2014, 07:41 AM
பொங்கும் பூம்புனல்
இந்தப் பாடலை முதன் முதலில் கேட்ட பொழுது, அதுவும் பொன்னூஞ்சல் திரைப்படத்தில் என்று அறிந்த பொழுது மனம் துள்ளி எழுந்தது.. தலைவரை எவ்வளவு விதம் விதமான காஸ்ட்யூம்களில் மனம் கற்பனை செய்து பறந்தது. அதில் ஒன்று குர்தா செட்டும் ஒன்று... உஷா நந்தினி பாடப் பாட தலைவர் அவரைப் பார்த்து புன்னகை புரிய ...
ஹ்ம்... அத்தனையும் பணால்..
பாட்டு கட்...
அத்தனை கனவும் கனவாகவே போய் விட்டதே...
எத்தனை முறை கேட்டாலும் எப்போது கேட்டாலும் அலுக்காத, ஜானகியின் வாழ்நாளில் சிறந்த பாடல்களில் ஒன்றான வருவான் மோகன ரூபன் பாடல் நமக்காக..
http://www.inbaminge.com/t/p/Ponnoonjal/
RAGHAVENDRA
26th August 2014, 07:44 AM
பொங்கும் பூம்புனல்
இசையரசியின் இனிமையான பாடல்களில் மறக்க முடியாத பாடல் பெண்ணை நம்புங்கள் படத்தில் இடம் பெற்ற டூயட் நீ நினைத்த நேரமெல்லாம் வரவேண்டுமோ..
சென்னை விவித்பாரதியில் இப்படத்திற்காக 10 செகண்ட் விளம்பரத்தை இரவு 8.30 மணி சுமாரில் ஒலிபரப்பும் போது இப்பாடலின் பல்லவிதான் இடம் பெறும்..
மெல்லிசை மாமணியின் பரவசமூட்டும் மெட்டு இப்பாட்டை நம் நெஞ்சில் நிலைக்கச் செய்து விடும்.
http://www.inbaminge.com/t/p/Pennai%20Nambungal/
madhu
26th August 2014, 07:45 AM
பொங்கும் பூம்புனல்
கடந்ததை நினைத்து எந்த பயனில்லை.. என்றுமே நல்லதையே நினைப்போம்.. நல்லதே நடக்கும்.. என்ற இந்த பாஸிடிவ் அப்ரோச்சுடன் இன்றைய தொடர் துவங்குகிறது. இசையரசியின் இனிமையான குரலில் மெல்லிசை மாமணி குமாரின் இசையில் கட்டிலா தொட்டிலா திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலைக் கேளுங்கள்..
நான் நல்லவர் இல்லறம் நலம் பெற வேண்டுகிறேன்.
http://www.dailymotion.com/video/x16ss72_kattila-thottila-1973-naan-nallavar-illam_shortfilms
RAGHAVENDRA
26th August 2014, 07:46 AM
பொங்கும் பூம்புனல்
இசையரசியின் குரலில் இன்னொரு இனிமையான பாடல் சங்கர் கணேஷ் இசையில் வாக்குறுதி திரைப்படத்திலிருந்து..
தண்ணீரில் மேனி கொதிக்குதடி..
http://www.inbaminge.com/t/v/Vakkuruthi/
madhu
26th August 2014, 07:47 AM
பொங்கும் பூம்புனல்
இந்தப் பாடலை முதன் முதலில் கேட்ட பொழுது, அதுவும் பொன்னூஞ்சல் திரைப்படத்தில் என்று அறிந்த பொழுது மனம் துள்ளி எழுந்தது.. தலைவரை எவ்வளவு விதம் விதமான காஸ்ட்யூம்களில் மனம் கற்பனை செய்து பறந்தது. அதில் ஒன்று குர்தா செட்டும் ஒன்று... உஷா நந்தினி பாடப் பாட தலைவர் அவரைப் பார்த்து புன்னகை புரிய ...
ஹ்ம்... அத்தனையும் பணால்..
பாட்டு கட்...
அத்தனை கனவும் கனவாகவே போய் விட்டதே...
எத்தனை முறை கேட்டாலும் எப்போது கேட்டாலும் அலுக்காத, ஜானகியின் வாழ்நாளில் சிறந்த பாடல்களில் ஒன்றான வருவான் மோகன ரூபன் பாடல் நமக்காக..
http://www.inbaminge.com/t/p/Ponnoonjal/
ராகவ் ஜி...
பாட்டு பிற்காலத்தில்தான் கட் செய்யப்பட்டு இருக்க வேண்டும். நான் பார்த்தபோது இந்தப் பாடல் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தது.
vasudevan31355
26th August 2014, 07:50 AM
அடுத்த தாக்குதல். முதல் தாக்குதலிலேயே நிலை குலைந்து போய் விட்டேன். அதற்குள் இன்னொரு பிடித்தம்.
கோபால் சாருக்கு பிடித்தமான ஹலம் என்ற ஆலம் அல்லது ஆலம் என்ற ஹலம் ஆடினால் அந்த ஆட்டத்தில்
ஒரு வகை போதையில் பலவகை மனிதரும்
கூடவே ஆடுவார்.
ராகவேந்திரன் சார்,
ஒன்று பார்த்தீர்களா?
70 களில் வெளிவந்த அத்தனை கிளப், காபரே பாடல்கள் அனைத்தும் அப்போது எப்படியோ இப்போது கேட்க அவ்வளவு இனிமை. இந்தப் பாடல்களில் முதலிடம் பிடித்தவர் ராட்சஸி. அவர் இடத்தை நிரப்ப ஆள் இல்லை. அதன் பிறகு இந்த மாதிரி ஒருமாதிரி பாடல்களை ஜானகி, சுசீலாம்மா இன்னும் சிலர் சொற்பமாகவே பாடியிருப்பார்கள்.
இந்த மாதிரி பாடல்களில் 70 களிலேயே கவர்ச்சி சற்று தூக்கல்தான். வீட்டில் அணிவருடனும் அமர்ந்து பார்க்க முடியாது. ஆனால் கேட்டு ரசிக்க முடியும்.
ஹலம், ஜெயகுமாரி, சி.ஐ.டி.சகுந்தலா, எல்.காஞ்சனா, வடக்கத்திய ஹெலன், பிந்து அருணா இராணி, இன்னும் பிறரின் பாடல்களை அனைத்தும் மொத்தமாக ஒரே இழையில் தர முயற்சி செய்யலாம்.
'நான் ஆடினால்' - மணிப்பயல்
http://www.youtube.com/watch?v=2nRmdoCK7Ss&feature=player_detailpage
RAGHAVENDRA
26th August 2014, 07:51 AM
பொங்கும் பூம்புனல்
இந்த மாதிரி இனிமையான பாடல்களைக் கேட்டால் மனம் ஏன் துள்ளல் போடாது, தூண்டில் போடாது...
தலைப்பிரசவம் படத்தில் மெல்லிசை மன்னர் இசையில் எஸ்.பி.பாலா, இசையரசியின் குரல்களில் கண்ணோடு மீனைக் கண்டு...
http://www.inbaminge.com/t/t/Thalai%20Prasavam/
RAGHAVENDRA
26th August 2014, 07:52 AM
ராகவ் ஜி...
பாட்டு பிற்காலத்தில்தான் கட் செய்யப்பட்டு இருக்க வேண்டும். நான் பார்த்தபோது இந்தப் பாடல் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தது.
ஆமாம்.. ஒரு வாரம் மட்டும் தான் இடம் பெற்றது.. எந்த பிரகஸ்பதி புண்ணியம் கட்டிக் கொண்டாரோ தெரியவில்லை... இரண்டாம் வாரம் ஞாயிற்றுக்கிழமை வரையில் இடம் பெற்ற பாடல் திங்கட்கிழமை கட்..
RAGHAVENDRA
26th August 2014, 07:54 AM
வாசு சார்
தாங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி...
எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பல நல்ல பாடல்கள் படமாக்கப் பட்ட விதம் காரணமாகவே மக்களிடம் சென்று சேராமல் போய் விட்டன.. இந்த மாதிரி பாடல்களில் தான் குரலில் முழுத் திறமையையும் கொண்டு வர முடியும். அந்த விதத்தில் பார்த்தால் இன்னும் பல ஆண்டுகளானாலும் ஈஸ்வரிக்கு ஈடாக இன்னொருவர் வர முடியாது.
RAGHAVENDRA
26th August 2014, 07:56 AM
பொங்கும் பூம்புனல்
வாசு சார் ...
நல்லாத் தான் யோசிக்கிறீங்க...
எல்லோர்க்கும் மேலே நீங்க..
கோபால் சாருக்கு பிடித்த பாடலைத் தாங்கள் உடனே வழங்குவதைப் படித்த போது... தங்களைப் பற்றி இந்தப் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வந்தது.
http://www.inbaminge.com/t/s/Sondham/
vasudevan31355
26th August 2014, 07:58 AM
கோ,
தங்களுக்கு மிகவும் பிடித்த ஹலம் ஆடிய கன்னடப் படப் பாடல் ஒன்று. போனஸாக ஜெயமாலினியும், இன்னொரு நடிகை பெயர் தெரியவில்லை ஆடியிருப்பார்கள். ராட்சஸி கன்னடக் கலக்கல். டிராகுலா டைப் வில்லன். அதிர்ச்சியில் விஷ்ணுவர்த்தன். ஜோராக போகும் பாடல். என்ஜாய் டியர்.
http://www.youtube.com/watch?v=_MscSWybcco&feature=player_detailpage
RAGHAVENDRA
26th August 2014, 07:59 AM
பொங்கும் பூம்புனல்
காதலின் பொன் வீதியில் இசைத் தட்டு வடிவம்..
http://www.inbaminge.com/t/p/Pookkari/
RAGHAVENDRA
26th August 2014, 08:02 AM
பொங்கும் பூம்புனல்
இரண்டு விஜயாக்கள் இப்படத்தில் பணியாற்றியிருக்கிறார்கள்.. ஒன்று கே.ஆர்.விஜயா.. இன்னொன்று எம்.ஆர்.விஜயா..
அன்னை அபிராமி திரைப்படத்தில் குன்னக்குடி வைத்யநாதன் இசையில்
நாக தெய்வமே.. நாங்கள் நாடும் தெய்வமே.. நீண்ட நாட்களுக்குப் பின் கேட்போமா..
http://www.inbaminge.com/t/a/Annai%20Abhirami/
vasudevan31355
26th August 2014, 08:02 AM
மதுஜி,
ராட்சஸி பாடிய ஒரு காபரே நடனப் பாடல். 'ஜல்சா ஜல்சா ஜல்சா' என்று தொடங்கும். அதற்கு மேல் நினைவில்லை. பழைய சிடியை தேடிப் பார்க்க பொறுமை இல்லை.
பாட்டாகவோ அல்லது படமாகவோ தர இயலுமா?
venkkiram
26th August 2014, 08:15 AM
இரவின் மடியில்
மனோ வின் முதல் தமிழ் பாடல் பூவிழி வாசலிலே,அண்ணே அண்ணே நீ என்ன சொன்னே, இளையராஜா இசையில்.1987 இல்.
http://www.rakkamma.com/filmsongdetails.phtml?filmid=438&songid=1867
விக்கி தளத்தில் பதிவாகியிருக்கும் இத்தகவல் தவறு போலத் தோன்றுகிறது. விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மனோவே குறிப்பிட்டது - "சொல்லத்துடிக்குது மனசு படத்தில் வரும் தேன்மொழி எந்தன் தேன்மொழி "
https://www.youtube.com/watch?v=ed5k4Qmc_jE
Gopal.s
26th August 2014, 08:21 AM
ராட்சசி ரசிக ராட்சசர்களின் அசுர தாக்குதல், தளபதியாக இசையரசி தாசர், வேந்தரின் அதிகாலை அசுர தாக்குதல்,....
ஏற்கெனவே மோசமான உலக சந்தை நிலையால் நிலைகுலைந்துள்ளேன். வேலையை பாக்கவே விட மாட்டீங்களாப்பா?
vasudevan31355
26th August 2014, 08:24 AM
வேலையை பாக்கவே விட மாட்டீங்களாப்பா?
'சேவை செய்வதே ஆனந்தம்':)
RAGHAVENDRA
26th August 2014, 08:25 AM
கோபால் சார் சொன்னது தான் சரி.. மனோ முதன் முதலில் பாடி திரைப்படத்தில் இடம் பெற்றது பூவிழி வாசலிலே படத்தில் தான் . பூவிழி வாசலிலே 1987ம் ஆண்டு பொங்கல் அன்று வெளிவந்தது. சொல்லத் துடிக்குது மனசு 1986ம் ஆண்டின் மத்தியிலேயே வெளிவந்திருக்க வேண்டியது ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, மிகவும் தாமதமாக 1988ம் ஆண்டு வெளியானது. ஆனால் கேசட்டைப் பொறுத்த வரையில் முதலில் வெளியானது சொல்லத் துடிக்குது மனசு தான். அதற்குப் பிறகு தான் பூவிழி வாசலிலே கேசட் வெளியானது.
vasudevan31355
26th August 2014, 08:26 AM
ஏற்கெனவே மோசமான உலக சந்தை நிலையாழ் நிலைகுளைந்துள்ளேன். ?
எல்லாவற்றையும் சமாளிக்கும் மனோதிடம் உங்களிடம் உண்டு. Don't worry.
Gopal.s
26th August 2014, 08:26 AM
விக்கி தளத்தில் பதிவாகியிருக்கும் இத்தகவல் தவறு போலத் தோன்றுகிறது. விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மனோவே குறிப்பிட்டது - "சொல்லத்துடிக்குது மனசு படத்தில் வரும் தேன்மொழி எந்தன் தேன்மொழி "
https://www.youtube.com/watch?v=ed5k4Qmc_jE
No. In Movie Title of Poovizhi vasalile ,they show Mano as introduction. I don't go by only Wiki though I use it as reference point in some cases. I didn't take the movie first released as first song.First Recorded Song only.(Eg- Chitra Song in poove poochoodava released earlier than neethana antha kuyil, Vani jayaram case also same. First movie was not released.)Thanks for pointing out Venkki.
rajeshkrv
26th August 2014, 08:27 AM
வாசு ஜி, கொட்டி கிடந்தது கனி இரண்டு பாடல் அருமை .. அதில் இன்னொரு சோலோ உண்டு (காவிரி நகரினில் .. வாணியின் குரலிலும் உண்டு இசையரசியின் குரலிலும் உண்டு) அதுவும் அருமையான பாடல்
இதோ இன்று உங்கள் பொழுதைக்கழிக்க
அமர சில்பி ஜக்கன்னாச்சாரி (கன்னடா)
சாலூரி ராஜேஸ்வரராவ்வின் இசையில் இசையரசியின் குரிலில்
செலுவாந்த சென்னிகனே நலிதாடுபா
https://www.youtube.com/watch?v=Pkj41rlz5cg
அதே படல் தெலுங்கிலும் ஒரே சமயத்தில் எடுத்தார்கள்
கன்னடத்தில் கல்யாண்குமார், தெலுங்கில் ஏ.என்.ஆர்.
நாயகி சரோ இரண்டிலும்
https://www.youtube.com/watch?v=tTzru47ghd0
vasudevan31355
26th August 2014, 08:31 AM
ராகவேந்திரன் சார்/கிருஷ்ணா சார்
இணையத்தில் பென்சில் ஆர்ட்டில் தலைவரின் ஓவியம் ஒன்று பார்த்தேன். 'உயர்ந்த மனிதரி'ன் 'அந்த நாள் ஞாபகம்' பாட்டின் காட்சியை வரைந்திருக்கிறார்கள். தத்ரூபமாய் இல்லாவிட்டாலும் மிகவும் ஜீவனுள்ளதாக இருக்கிறது. பாருங்களேன்.
வரைந்த அன்பரை மனதாரப் பாராட்டுவோம்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/andha_naal.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/andha_naal.jpg.html)
venkkiram
26th August 2014, 08:34 AM
No. In Movie Title of Poovizhi vasalile ,they show Mano as introduction. I don't go by only Wiki though I use it as reference point in some cases. I didn't take the movie first released as first song.First Recorded Song only.(Eg- Chitra Song in poove poochoodava released earlier than neethana antha kuyil, Vani jayaram case also same. First movie was not released.)Thanks for pointing out Venkki. சொல்லத் துடிக்குது மனசுக்கு முன்பு பூவிழி வாசலிலே திரைக்கு வந்ததால் அப்படி அறிமுக செய்தியை வெளியிட்டிருக்கிரார்கள் என நினைக்கிறென். பாடல் பதிவாக தேன்மொழியே முதலானது என்பதாலேயே மனோ அதைக் குறிப்பிட்டிருக்கிறார்.
vasudevan31355
26th August 2014, 08:39 AM
https://latchuart.files.wordpress.com/2014/07/shivajiganesan.jpg
rajeshkrv
26th August 2014, 08:42 AM
விக்கி தளத்தில் பதிவாகியிருக்கும் இத்தகவல் தவறு போலத் தோன்றுகிறது. விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மனோவே குறிப்பிட்டது - "சொல்லத்துடிக்குது மனசு படத்தில் வரும் தேன்மொழி எந்தன் தேன்மொழி "
https://www.youtube.com/watch?v=ed5k4Qmc_jE
மனோ மிகச்சிறப்பாக பாடிய பாடல் தேன் மொழி எந்தன் தேன் மொழி .. அதே போல் விழியில் புது கவிதை படித்தேன் பாடலும் அருமையாக இருக்கும்
தீர்த்தக்கரையினிலே
rajeshkrv
26th August 2014, 08:46 AM
மிகவும் சிறப்பான ஒரு பாடல். இசையரசி என்னாளும் நம் இசையரசியே என்று கூறும் வகையில் இளையராஜா இசையமைத்த பாடல்
அ ந் நாளைய மெட்ராஸ் இசைக்கல்லூரியின் தலைமை ஆசிரியருமான திருமதி ராஜேஸ்வரியுடன் இசையரசி பாட பின் கடைசியில் ஜானகி இணைந்து கொள்வார். வாலி ஐயாவின் அற்புதமான வரிகள் ... அருளும் பொருளும் இணைந்ததெது அகந்தை அகன்ற இதயமது ... ஆஹா சொல்லிக்கொண்டே போகலாம்
இசையரசி மேல்ஸ்தாயிலெல்லாம் என்ன லாவகம் ...சிரமமோ பிசிரோ இல்லாத ஒரு குரல் தெய்வீகம் என்றால் அது இது தான்
https://www.youtube.com/watch?v=eeW2okhe9lw
Gopal.s
26th August 2014, 08:55 AM
சொல்லத் துடிக்குது மனசுக்கு முன்பு பூவிழி வாசலிலே திரைக்கு வந்ததால் அப்படி அறிமுக செய்தியை வெளியிட்டிருக்கிரார்கள் என நினைக்கிறென். பாடல் பதிவாக தேன்மொழியே முதலானது என்பதாலேயே மனோ அதைக் குறிப்பிட்டிருக்கிறார்.
இது கொஞ்சம் சங்கட வேலை.நினைவு அடுக்கு,வித்தியாச தளங்கள் என்று போய் தேடினாலும் 100% fool proof என்று சொல்ல முடியாது.சமயத்தில் ,நீங்கள் சொன்னது போல circumstantial evidence தான்.நன்றி.
by the way ,சொல்ல துடிக்குது மனசு ,குரு தனபாலின் ரொம்ப வித்யாசமான படமும் கூட.பல உருவகங்கள் (allegories )தன்னுள் அடக்கியது.புரிந்து கொள்ள படவில்லை.
vasudevan31355
26th August 2014, 08:56 AM
மதுஜி!
நீங்கள் ஆவலுடன் கேட்டிருந்த 'கடவுள் தந்த செல்வம்' படத்திலிருந்து பானுமதி பாடிய
'உன்னோடு என் நெஞ்சமே ஒன்றாய் ஊஞ்சலாடுதடா
நீ ஆடினால் நான் ஆடுவேன் நிழல் போல் உனைக் காத்திடுவேன்'
பாடல் தங்களுக்காக.
இப்பாடலை நான் கேட்டதற்காக எனக்கு தரவேற்றித் தந்த நண்பர் நாகசாமி அவர்களுக்கு மிக்க நன்றி!
மதுஜி! செமை டேஸ்ட். அருமையான பாடல். எனக்கும் இப்போது கேட்டவுடன் நன்றாக ஞாபகம் வந்துவிட்டது. அதற்காக தங்களுக்கு தேங்க்ஸ்.
அஷ்டாவதானி அஷ்டாவதானி தான்.
http://www.mediafire.com/listen/t95iuxmampff3tu/Unnodu+en+nejame+ondraay+-+Kadavul+thantha+selvam+-+Bhanumathi.m
Gopal.s
26th August 2014, 08:59 AM
vasu,
Great work.NT looks fabulous in line drawings also!!!
venkkiram
26th August 2014, 09:00 AM
இது கொஞ்சம் சங்கட வேலை.நினைவு அடுக்கு,வித்தியாச தளங்கள் என்று போய் தேடினாலும் 100% fool proof என்று சொல்ல முடியாது.சமயத்தில் ,நீங்கள் சொன்னது போல circumstantial evidence தான்.நன்றி.
by the way ,சொல்ல துடிக்குது மனசு ,குரு தனபாலின் ரொம்ப வித்யாசமான படமும் கூட.பல உருவகங்கள் (allegories )தன்னுள் அடக்கியது.புரிந்து கொள்ள படவில்லை.
என் நினைவுகளிலிருந்து.. சூரசம்ஹாரம் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் போது, கமலுடன் இணையப்போகும் கதாநாயகி புதுமுகம் நிரோஷா என பத்திரிகை செய்திகள் வந்தன. ஆனால் திரைக்கு அறிமுக கார்டு போட்டு முதலில் வெளிவந்தது அக்னி நட்சத்திரம் என நினைக்கிறென்.
Richardsof
26th August 2014, 09:02 AM
http://i58.tinypic.com/2yyw6cn.jpg
vasudevan31355
26th August 2014, 09:03 AM
மிகவும் சிறப்பான ஒரு பாடல். இசையரசி என்னாளும் நம் இசையரசியே என்று கூறும் வகையில் இளையராஜா இசையமைத்த பாடல்
அ ந் நாளைய மெட்ராஸ் இசைக்கல்லூரியின் தலைமை ஆசிரியருமான திருமதி ராஜேஸ்வரியுடன் இசையரசி பாட பின் கடைசியில் ஜானகி இணைந்து கொள்வார். வாலி ஐயாவின் அற்புதமான வரிகள் ... அருளும் பொருளும் இணைந்ததெது அகந்தை அகன்ற இதயமது ... ஆஹா சொல்லிக்கொண்டே போகலாம்
இசையரசி மேல்ஸ்தாயிலெல்லாம் என்ன லாவகம் ...சிரமமோ பிசிரோ இல்லாத ஒரு குரல் தெய்வீகம் என்றால் அது இது தான்
ராஜேஷ்ஜி!
இப்போது நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள். இன்றைக்கு இப்பாடலை பதிவு செய்யலாம் என்று நேற்றே நினைத்திருந்தேன். ஆனால் அதற்குள்?! மேற்கொண்டு எதுவும் சொல்ல வரவில்லை ஜி.
Richardsof
26th August 2014, 09:05 AM
http://i59.tinypic.com/34627p3.jpg
vasudevan31355
26th August 2014, 09:07 AM
வினோத் சார்
முப்பது பைசா மூணு முழம்
முல்லை மல்லிகை கனகாம்பரம்
கதிரும் 30 பைசாதான். தேங்க்ஸ்.
Richardsof
26th August 2014, 09:07 AM
http://i57.tinypic.com/140m1l0.jpg
Richardsof
26th August 2014, 09:11 AM
http://i58.tinypic.com/25ib1nm.jpg
vasudevan31355
26th August 2014, 09:15 AM
வினோத் சார்,
'நம்ம வீட்டு லஷ்மி' திரைப்படத்திலிருந்து ஒரு பாடல்.
'யாரிடம் யாரிடம் பாடம் கேட்கலாம்'
ஏ.வி.எம்.ராஜன், வாணிஸ்ரீ இணைவில் பாடகர் திலகமும், பாடகி திலகமும் பாடும் அபூர்வ சாங். பந்துலுவின் படம் இது.
http://www.youtube.com/watch?v=saOiJqVSV0Q&feature=player_detailpage
rajeshkrv
26th August 2014, 09:17 AM
ராஜேஷ்ஜி!
இப்போது நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள். இன்றைக்கு இப்பாடலை பதிவு செய்யலாம் என்று நேற்றே நினைத்திருந்தேன். ஆனால் அதற்குள்?! மேற்கொண்டு எதுவும் சொல்ல வரவில்லை ஜி.
நம்புவேன்.. நாம் தான் ரசனை என்னும் ஒரு புள்ளியில் இணைந்துவிட்டோமே... அப்புறம் என்ன
vasudevan31355
26th August 2014, 09:22 AM
நம்புவேன்.. நாம் தான் ரசனை என்னும் ஒரு புள்ளியில் இணைந்துவிட்டோமே... அப்புறம் என்ன
சந்தோஷ 'நச்' :)
rajeshkrv
26th August 2014, 09:35 AM
வாசு ஜி
நான் கொடுத்த கன்னட பாடலை கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்
ராட்சசி பல மலையாள பாடல்களை பாடியுள்ளார், அதில் பட்டைய கிளப்பியுள்ளார்
அப்படி ஒரு பாடல் இதோ
ராட்சசியும் வசந்தாவும்
ராட்சசி வழக்கம்போல் ஆர்ப்பாட்டமாக (வாசு ஜி, கிருஷ்ணா ஜி உங்களுக்கு பிடித்த ஜெய்குமாரி), வசந்த அதையே சோகமாக பாடுவார்(மேஜிக் ராதிகா)
தக்*ஷினாமூர்த்தி ஸ்வாமிகளின் இசை
கலக்கலோ கலக்கல்
https://www.youtube.com/watch?v=0YSwZ-e6fEI
vasudevan31355
26th August 2014, 09:36 AM
இசையரசியின் முதல் இந்திப் பாடல்.
ராஜேஷ்ஜி,
இசையரசி பாடிய தென்னக மொழிப் பாடல்கள் பலவற்றை பார்த்து கேட்டு அனுபவித்து வருகிறோம்.
இப்போது ஒரு வித்தியாசத்திற்காக இசையரசி முதன் முதலாகப் பாடிய இந்திப்பாடல். (சரிதானா ராஜேஷ்ஜி?)
South Indian Singer P. Susheela recording her first Hindi song for Bachpan (1970). Here she is seen with the music director Laxmikant (right) and lyricist Anand Bakshi (left).
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/Xcvb.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/Xcvb.jpg.html)
1970-இல் வெளிவந்த 'பச்பன்' படத்தில் ஒலிக்கும் 'பக்லி மேரா நாம்' பாடல்
இந்தி உச்சரிப்பும், பாடலும் அமர்க்களம். ஆரம்ப 'ஓய் மா... பாலு மானு பக்லி மேரா நாம் ரஹ்தியா' சூப்பரோ சூப்பர்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=GBEy8NjhZsw
rajeshkrv
26th August 2014, 09:42 AM
இசையரசியின் முதல் இந்திப் பாடல்.
ராஜேஷ்ஜி,
இசையரசி பாடிய தென்னக மொழிப் பாடல்கள் பலவற்றை பார்த்து கேட்டு அனுபவித்து வருகிறோம்.
இப்போது ஒரு வித்தியாசத்திற்காக இசையரசி முதன் முதலாகப் பாடிய இந்திப்பாடல். (சரிதானா ராஜேஷ்ஜி?)
http://cineplot.com/gallery/wp-content/uploads/2011/06/p-susheela-anand-laxmi.jpg
1970-இல் வெளிவந்த 'பச்பன்' படத்தில் ஒலிக்கும் 'பக்லி மேரா நாம்' பாடல்
இந்தி உச்சரிப்பும், பாடலும் அமர்க்களம். ஆரம்ப 'ஓய் மா... பாலு மானு பக்லி மேரா நாம் ரஹ்தியா' சூப்பரோ சூப்பர்.
வாசு ஜி, சிறு திருத்தம் 1956’லேயே இசையரசி ஹிந்தியில் பாடிவிட்டார்
படம் குலேபகாவலி (ஞான் தத் அவர்களின் இசையில்)
http://myswar.com/album/gul-e-bakavali-1956
பின் என்.டி.ஆர், அஞ்சலியின் தெலுங்கு படத்தின் ஹிந்தி பதிப்பான டாக்கு பூபத் படத்தில் பி.பீஸ்ரீனிவாசும் இவரும் நிறைய பாடிவிட்டார்கள்
https://www.youtube.com/watch?v=dbL5u_241Tw
rajeshkrv
26th August 2014, 09:44 AM
இதுவும் டாக்கு பூபத் திரையிலிருந்து , எனது ஃபேவரிட்.
https://www.youtube.com/watch?v=gOnkMPWVxGQ
சலீல் இசையரசியை பல முறை ஹிந்தி(பம்பாய்க்கு)அழைத்தும் இசைய்ரசி மறுத்துவிட்டார்.. சலீல் சொல்வாராம் ஆஷா லதா மாதிரி இல்லாமல் வித்தியாசமாக உள்ளது உனது குரல் . பம்பாய்க்கு வா என்று கூறினாராம்.
rajeshkrv
26th August 2014, 09:47 AM
பச்பன் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். நீங்கள் சொன்னது 100/100 உண்மை .. உய்மா உய்மா என்று தொடங்குவதே அமர்க்களம்
இதோ இன்னொரு கிளாஸிக்கல் பாடல் (ஜெயசிம்மா ஹிந்தியில் ஜெய்சிங் ஆனது ) அதில் ஒலித்த அற்புத பாடல்
https://www.youtube.com/watch?v=uHJaZwNBAUw
vasudevan31355
26th August 2014, 09:48 AM
இதற்குதான் எங்கள் ராஜேஷ்ஜி வேண்டுமென்பது. அருமையான தகவல் ராஜேஷ்ஜி. இனி கேட்டு ரசிக்க வேண்டும்.
vasudevan31355
26th August 2014, 09:50 AM
சலீல் இசையரசியை பல முறை ஹிந்தி(பம்பாய்க்கு)அழைத்தும் இசைய்ரசி மறுத்துவிட்டார்..
என்ன கரணம் என்று தெரியுமா ராஜேஷ்ஜி? மிக அருமையாக இன்னும் பல பொக்கிஷங்கள் நமக்குக் கிடைத்திருக்குமே! நேரமின்மை காரணமா?
rajeshkrv
26th August 2014, 09:52 AM
இதற்குதான் எங்கள் ராஜேஷ்ஜி வேண்டுமென்பது. அருமையான தகவல் ராஜேஷ்ஜி. இனி கேட்டு ரசிக்க வேண்டும்.
நன்றி . நேரடி ஹிந்தி பாடல் என்றாக் 1967’ல் வெளியான வொஹி லட்கி படத்தில் பல்சாராவின் இசையில் படா சுல்மி ஹை பாடல் ஆனால் இன்னும் ஒலிவடிவம் கிட்டவில்லை , முயற்சி செய்துகொண்டிருக்கிறோம்.
rajeshkrv
26th August 2014, 09:55 AM
என்ன கரணம் என்று தெரியுமா ராஜேஷ்ஜி? மிக அருமையாக இன்னும் பல பொக்கிஷங்கள் நமக்குக் கிடைத்திருக்குமே! நேரமின்மை காரணமா?
பி.எம். பாருங்கோ
gkrishna
26th August 2014, 10:03 AM
ராகவேந்திரன் சார்/கிருஷ்ணா சார்
இணையத்தில் பென்சில் ஆர்ட்டில் தலைவரின் ஓவியம் ஒன்று பார்த்தேன். 'உயர்ந்த மனிதரி'ன் 'அந்த நாள் ஞாபகம்' பாட்டின் காட்சியை வரைந்திருக்கிறார்கள். தத்ரூபமாய் இல்லாவிட்டாலும் மிகவும் ஜீவனுள்ளதாக இருக்கிறது. பாருங்களேன்.
வரைந்த அன்பரை மனதாரப் பாராட்டுவோம்.
அருமை வாசு சார்
நடிகர் சிவகுமார் அவர்கள் கூட முதன் முதலில் நடிகர் திலகம் அவர்களை மோகன் ஆர்ட்ஸ் மூலமாக அறிமுக சந்திப்பு படலத்தின் போது இது மாதிரி ஒரு பென்சில் ஸ்கெட்ச் வரைந்து தான் தன்னை அறிமுக படுத்தி கொண்டதாக படித்த நினைவு
போட்டோ genic face என்று சொல்வார்களே அது நமது நடிகர் திலகத்திற்கு நன்கு பொருந்தும்
gkrishna
26th August 2014, 10:16 AM
by the way ,சொல்ல துடிக்குது மனசு ,குரு தனபாலின் ரொம்ப வித்யாசமான படமும் கூட.பல உருவகங்கள் (allegories )தன்னுள் அடக்கியது.புரிந்து கொள்ள படவில்லை.
http://www.5eli.com/Lyrics/wp-content/uploads/2011/08/SollaThudikuthuManasu.jpg
மன்னிக்கணும் கோபால் ஜி
சொல்ல துடிக்குது மனசு
லெனின் direction என்று நினைவு
குரு தனபால் தாய் மாமன்,மாமன் மகள்,பெரிய மனுஷன்,முறை மாப்பிள்ளை போன்ற படங்களை எடுத்தவர்கள் என்று நினைவு
இதில் ப்ரியஸ்ரீ னு ஒரு நடிகை வந்தாங்க துணை நடிகை ஆக இருந்து heroine promotion வேற எந்த படதிலவாது நடிதாங்களானு நினைவில் இல்லை
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2011/SollaThudikkuthuManasu00007.jpg
rajeshkrv
26th August 2014, 10:19 AM
http://www.5eli.com/Lyrics/wp-content/uploads/2011/08/SollaThudikuthuManasu.jpg
மன்னிக்கணும் கோபால் ஜி
சொல்ல துடிக்குது மனசு
லெனின் direction என்று நினைவு
குரு தனபால் தாய் மாமன்,மாமன் மகள்,பெரிய மனுஷன்,முறை மாப்பிள்ளை போன்ற படங்களை எடுத்தவர்கள் என்று நினைவு
இதில் ப்ரியஸ்ரீ னு ஒரு நடிகை வந்தாங்க துணை நடிகை ஆக இருந்து heroine promotion வேற எந்த படதிலவாது நடிதாங்களானு நினைவில் இல்லை
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2011/SollaThudikkuthuManasu00007.jpg
she acts in lot of serials and i guess during that time she acted in some malayalam movies
Gopal.s
26th August 2014, 10:22 AM
கோபால் ஜி, பாடகர்களின் முதல் பாடல் தொகுப்பு அருமை
சுஜாதா எனக்கு மிகவும் பிடித்த குரல் ..(இசையரசிக்கு அப்புறம்).. இன்னும் நிறைய பாடியிருக்க வேண்டியது ... என்ன செய்ய ....
சுஜாதா.
இவர் ஜேசுதாசுடன் குழந்தையாக பாடி வரும் போதே ,நான் இவர் ரசிகன்.(அப்போதெல்லாம் சூப்பர் சிங்கர் கிடையாதுங்கோ)இவரை இளைய ராஜா அறிமுக படுத்தியது எனக்கு பெருத்த சந்தோசம். ஆனால் இவரையும் ,உமாவையும் குறைவாக பயன் படுத்தியது எனக்கு மிக மிக வருத்தமே.
உமா ரமணனின் ஆனந்த ராகம், கண்ணனே இரண்டும் அவ்வளவு அழகு.இதில் வராத உணர்வுகளா மற்றதில் வந்தது?
திருவனந்த புரத்தில் ,கேரளா அரசு துறை நிறுவனமொன்றில் managing director பொறுப்பேற்க கடிதம் வந்ததால் (சேரவில்லை), ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது ,சுஜாதா காலை சிற்றுண்டிக்காக அங்கு வந்தார்.அவரிடம் என் மேசையை காட்டி ,நானே அவரை கூப்பிட்டேன்.அமர்ந்தார்.(2009 இல்) .எனக்கு சுசிலா,ஈஸ்வரி அடுத்து நீங்கதான் என்றதும் (உண்மை) அவ்வளவு சந்தோசம்.
timber in the voice ,range ,modulations ,maturity without losing youthful charm என்று சொல்லி கொண்டே போனேன். எனக்கு பிடித்த சொட்ட சொட்ட நனையுது பாட்டில் இருவரும் சொட்ட சொட்ட நனைந்தோம்.(கொஞ்சம் ஜொள் .80 இல் இந்த மாதிரி சந்தித்திருந்தால் ,ரோஜாமலருடன் propose செய்திருப்பேன் என்றதை ரசித்தார். )
பில் நான்தான் தந்தேன்.
rajeshkrv
26th August 2014, 10:27 AM
ஆம் கோபால் ஜி , சுஜாதா flawless voice சில்லென்ற தீப்பொறி ஒன்று ஆஹா என்ன அருமையாக பாடியிருப்பார்.
gkrishna
26th August 2014, 10:28 AM
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02078/sankaraparanam_man_2078429g.jpg
கர்நாடக இசைக்கு முக்கியத்துவம் அளித்து கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கில் வெளியாகி, 4 தேசிய விருதுகளை அள்ளிக்குவித்த படம் ‘சங்கராபரணம்’. இத்திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் தமிழில் தீபாவளிக்கு வெளி வர உள்ளது.
கர்நாடக இசைக்கு இன்றளவும் சிறந்த எடுத்துக்காட்டாக தெலுங்கு திரைப்படமான ‘சங்கராபரணம்’ விளங்கி வருகிறது. இசைக்கு முக்கியத்துவம் அளித்து இயக்குநர் கே. விஸ்வநாத் இயக்கிய இப்படம் கடந்த 1979-ல் வெளியானது. பாலுமகேந்திரா ஒளிப்பதிவாளராக இப்படத்தில் பணியாற்றி இருந்தார். முக்கிய வேடங்களில் மறைந்த நடிகர் சோமயாஜுலு, மஞ்சு பார்கவி, ராஜலட்சுமி, துளசி போன்றோர் நடித்திருந்தனர்.
இப்படத்தில் 10 பாடல்கள், கீர்த்தனைகள் இடம்பெற்றிருந்தன. மறைந்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்த இப்படத்தில், அனைத்து பாடல் களையும் எஸ்.பி. பாலசுப்ரமணியம், வாணிஜெயராம் பாடியிருந்தனர்.
இத்திரைப்படத்தின் பாடல்களைக் கேட்பதற்காகவே பலர் டேப்ரிக்கார் டர்களை வாங்கினர் எனக் கூறுவ துண்டு. இத்திரைப்படம் 4 தேசிய விருதுகளையும், ஆந்திர அரசின் நந்தி விருதையும் வாங்கி குவித்து சாதனை புரிந்தது. தெலுங்கில் வெளியான இத்திரைப்படம், தெலுங்கிலேயே தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டு வெள்ளி விழா கண்டது. மேலும், கர்நாடகா, கேரளா உட்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும் வெளியிடப்பட்டு வெற்றி பெற்றது.
தற்போது இத்திரைப்படம் தமிழில் புதிய தொழில் நுட்பத்துடன் மெருகேற்றப்பட்டு, வரும் தீபாவளிக்கு திரையிடப்படவுள்ளது. சினிமாஸ்கோப்பில் வெளிவர இருக்கும் இப்படத்துக்கு, டிஜிடல் தொழில் நுட்பத்தில் இசை அமைப்பாளர் ரவிராகவ், புதிய இசை வடிவம் கொடுத்துள்ளார்.
மாமா திரை இசை திலகம் இசை திரு ரவி ராகவ் எப்படி கொ(கெ)டுத்து இருக்கிறார் தெரியவில்லை
http://www.youtube.com/watch?v=iZACVIMSbOM
vasudevan31355
26th August 2014, 10:29 AM
she acts in lot of serials and i guess during that time she acted in some malayalam movies
http://i.ytimg.com/vi/DA_Z9RYdriw/0.jpg
Priya acted with Alex in one of the famous malayalam 'A' :)film 'Charavalayam' by Gopalakrishnan.k.s.
Richardsof
26th August 2014, 10:33 AM
http://i60.tinypic.com/2cfb6h2.jpg
gkrishna
26th August 2014, 10:35 AM
This is a rare set of pictures of actress Priya from the film Charavalayam romancing with Lalu Alex.
Charavalayam is an old malayalam movie of extra actress Priya.
In this film actress Priya acts as a jungle living woman is wearing tribal style dress of saree in thigh level withou any blouse.
Actress Priya looks stunning in ths outfit and to tell you all this is extremely a rare photo of this malayalam actress.
Now actress Priya is doing mother roles in tv serials.
Watch the latest photos of actress Priya from the malayalam movie Charavalayam where she is looking attractive and spicy.
http://3.bp.blogspot.com/-0URROuHvhLE/U7ZYA0PRoVI/AAAAAAAAf6g/1DHjoHpZkL0/s1600/malayalam+actress+Priya+in+saree+without+blouse+ol d+movie+photos+(3).jpghttp://2.bp.blogspot.com/-TIhgmqz0KDk/U7ZYAS7z2cI/AAAAAAAAf6M/OI5jwFkA3n4/s1600/malayalam+actress+Priya+in+saree+without+blouse+ol d+movie+photos+(2).jpg
மடிப்பு அம்சா னு யாரோ நடிச்சாங்க படம் நினைவில் இல்லை
Gopal.s
26th August 2014, 10:38 AM
மன்னிக்கணும் கோபால் ஜி
சொல்ல துடிக்குது மனசு
லெனின் direction என்று நினைவு
சரி பார்த்து விட்டேன். சோம சுந்தரேச்வர் (அவள் அப்படித்தான்,மீண்டும் ஒரு காதல் கதை)லெனின் திரைக் கதை.கண்ணன் (அண்ணன்) காமிரா.பங்காளி வீ.டி.விஜயன் எடிட்டிங்.இளையராஜா இசை. லெனின் இயக்கம்.
நல்ல முன் முயற்சி.
gkrishna
26th August 2014, 10:40 AM
ராஜேஷ் சார் தாய் மூகாம்பிகை படத்தின் இனிய பாடலை நினைவு ஊட்டி இருந்தார்
இதில் மலேசியா வாசுதேவன் உடன் இசை அரசி நல்ல பாடல் உண்டே
சிவகுமார் பூர்ணிமா ஜெயராம் ஜோடி
சீனத்து பட்டு மேனி
http://www.youtube.com/watch?v=CDlSgZvhlZA
Richardsof
26th August 2014, 10:41 AM
http://i57.tinypic.com/264p5bb.jpg
rajeshkrv
26th August 2014, 10:46 AM
கிருஷ்ணா ஜி. ஆம் சீனத்து பட்டு மேனி (இசையரசி அழகாக கொஞ்சம் மாற்றி பாடியிருப்பார் சீன மொழி போல)
Richardsof
26th August 2014, 10:50 AM
http://i61.tinypic.com/2wdar5s.jpg
http://youtu.be/K-6LeKibt3U
gkrishna
26th August 2014, 11:02 AM
அனுபவம் புதுமை விமர்சனம் படித்தால் ஒன்று தெரிகிறது
அந்த காலத்திலேயே வாயசைப்பு சரியாக ஒத்து வரவில்லை என்றால் chicklets சுயிங்கம் தான் அரு மருந்து
vasudevan31355
26th August 2014, 11:09 AM
வினோத் சார்,
'அனுபவம் புதுமை' பட விமர்சனம் அருமை. அந்த விமர்சனத்தில் டி.ஆர் ராமச்சந்திரன் அவர்களும், மனோரமாவும் பங்கு பெற்ற 'நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தை இமிடேட் செய்யும் 'என்ன நினைத்து என்னை அழைத்தாயோ' காமெடிப் பாடல். மனோரமா தூள்.
http://www.youtube.com/watch?v=M_hhcnKQvlc&feature=player_detailpage
vasudevan31355
26th August 2014, 11:11 AM
saro with her husband.
http://www.pkp.in/images/b/Saroja%20Devi%20with%20her%20husband.jpg
vasudevan31355
26th August 2014, 11:20 AM
கிருஷ்ணாஜி/வினோத் சார்
மிக அபூர்வமான சரோஜாதேவி திருமண போட்டோ. உதவுமே என்று விஜய் டிவியில் இருந்து எடுத்து வைத்திருந்தேன். வினோத் சார் வேலை வாங்கி விட்டார். :)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/s-3.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/s-3.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/sa-4.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/sa-4.jpg.html)
Richardsof
26th August 2014, 11:37 AM
THANKS VASU SIR
http://i58.tinypic.com/311t7ja.jpg
Richardsof
26th August 2014, 11:39 AM
http://i62.tinypic.com/11l3af5.jpg
Richardsof
26th August 2014, 11:41 AM
http://i60.tinypic.com/2qujb88.jpg[/QUOTE]
mr_karthik
26th August 2014, 12:06 PM
டியர் வினோத் சார்,
தொடர்ந்து பழைய ஆவணங்களை சளைக்காமல் பதித்து வருவதற்கு நன்றி.
'அனுபவம் புதுமை' படத்தின் விமர்சன ஆவணம் கண்டு மனம் மிகவும் வருத்தம் அடைந்தது. விமர்சனம் எழுதியவர் காதைப் பொத்திக்கொண்டு படம்பார்த்தாரா அல்லது சுத்தமாக ஞானசூனியமா என்று தெரியவில்லை. 'கனவில் நடந்ததோர் கல்யாண ஊர்வலம்' பாடல் பற்றி இத்தனை ஆண்டுகள் (கிட்டத்தட்ட 50) கடந்தும் எம்.எஸ்.வி.யின் கம்போஸிங் பற்றி ஆச்சரியமாக பேசுகிறோம். ஆனால் விமர்சனத்தில் பாடல்கள் பற்றியோ, இசை பற்றியோ ஒரு வரிகூட, ஒரு வார்த்தைகூட இல்லை.
இந்த விமர்சனம் என்றில்லை. அன்றைய விமர்சனங்கள் எதிலும் இசையைப் பற்றி எழுதுவதேஇல்லை. என்னவொரு கொடுமை...
chinnakkannan
26th August 2014, 12:09 PM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
காலையிலேயே சில மீட்டிங்க்ஸ் வேகமாக எல்லாவற்றையும் படித்தேன்.. அனுபவம் புதுமை அண்ணாவின் ஆசைக்கு எஸ்வி சார்..முதல் பாடகிகளுக்கு கோபால் சார் (சுஜாதா? - இப்ப அவங்க பொண்ணு ஸோக்யூட் இல்லை).. கிருஷ்ணாஜி, ராகவேந்தர் சார் வாசு சார் ராஜேஷ் ஜி அனைவருக்கும் நன்றி..
//by the way ,சொல்ல துடிக்குது மனசு ,குரு தனபாலின் ரொம்ப வித்யாசமான படமும் கூட.பல உருவகங்கள் (allegories )தன்னுள் அடக்கியது.புரிந்து கொள்ள படவில்லை.//கோபால் சார் .. நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்.. புதிய(அந்தக்காலத்தில்) தியேட்டரான நாட்டியாவோ நர்த்தனாவோ ஏசி 4.50 (ரொம்ப ஜாஸ்தி) கொடுத்து ஏசி போடாமல் வியர்க்க வியர்க்க பார்த்து நொந்த படம்..பாடல்கள் க்ளாஸ் படமாக்கல்..தேன்மொழிக்கு மூன்று பேர்..பூவே செம்பூவே ராதாரவி, சொல்லத் துடிக்குது மனசுக்கு ஹாரிபிள் புலியூர் சரோஜா டான்ஸ்..என..விஷீவலிலும் சொதப்பல்..அந்த்ப் ப்ரிய ஸ்ரீ கொஞ்சம் ஓகே லுக்கிங்க்.. வேறு படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்தேன்..
அனுபவம் புதுமையில் இன்னொரு நல்ல பாட்டும் இருக்கு வாசு சார்..டிவியில் பார்த்தபோது வித்யாச முயற்சி ஆனால் ஒழுங்காக எடுக்கவில்லை என நினைத்திருந்தேன்..
chinnakkannan
26th August 2014, 12:10 PM
//கனவில் நடந்ததோர் கல்யாண ஊர்வலம்' பாடல் பற்றி இத்தனை ஆண்டுகள் (கிட்டத்தட்ட 50) கடந்தும் எம்.எஸ்.வி.யின் கம்போஸிங் பற்றி ஆச்சரியமாக பேசுகிறோம்// கார்த்திக் சார்..தேங்க் யூ..இந்தப் பாட்டு தான் மனசைப் பிறாண்டிக் கொண்டிருந்தது
chinnakkannan
26th August 2014, 12:15 PM
மடிப்பு அம்சா- விசித்ரா என்று நினைவு..தலைவாசல் என்ற படம் எஸ்பிபி கல்லூரி முதல்வர் ஹீரோ நினைவில்லை.. வில்லன் யெஸ் மிக நினைவு.. நாசர்..பீடா சேட் என்ற பாத்திரத்தில் கலக்கியிருப்பார்..இந்தப் படத்தில் தான் விசித்ரா ம.அ வாக அறிமுகம் என நினைக்கிறேன்
chinnakkannan
26th August 2014, 12:21 PM
சார்களே எனக்கொரு டவுட்டு :) சிங்காரத் தேருக்கு சேலைகட்டி படத்தில் ஹேமுவைப் பார்த்துப் பாடியது கள்ளபார்ட் நடராஜன் தானே (சபாஷ்மீனா வில்லன்??).. நிறைய படங்கள் நினைவில்வரலை.. ஸ்ட்ரெட்டா ரேவதி அப்பா ரோல் இன் தேவர் மகன்..(ஹப்பா ரெண்டு நாளா வெடி வெக்காம இருந்து இப்ப தான்மனசுக்கு நிம்மதி :))
gkrishna
26th August 2014, 12:35 PM
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02074/bharathiraja_2074624g.jpg
ஸ்டூடியோக்களுக்குள் முடங்கிக் கிடந்த தமிழ் சினிமாவை கிராமங்களுக்கு அழைத்துச் சென்ற இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு 73-வது பிறந்தநாள். (23-aug-2014) இதை முன்னிட்டு வாழ்த்துகளுடன் அவரைச் சந்தித்தோம்.
‘‘நான் பிறந்தது 23 ஆகஸ்ட் 1942ல். ஆனால் என் அப்பா பள்ளிக்கூடத்தில் என்னைச் சேர்ப்பதற்காக 17-7-1941 என்று என் பிறந்தநாளை மாற்றிக் கூறிவிட்டார். சான்றிதழ்களில் என் பிறந்தநாள் 17-7-1941 என்று இருப்பதால், அனைவருமே அதுதான் என் பிறந்த நாள் என்று நினைக்கிறார்கள். மக்களை குழப்ப வேண்டாம் என்றுதான் நான் இதுவரை என் நிஜ பிறந்தநாளை சொல்லவில்லை’’ என்று பேசத் தொடங்கினார் பாரதிராஜா.
இயக்குநர் பாரதிராஜா தற்போது நடிகர் பாரதிராஜாவாக விருதுகளெல்லாம் வாங்கத் தொடங்கிவிட்டாரே?
50 ஆண்டுகளுக்கு முன்பே நான் நடிகன்தான். நடிப்பு என்பது வேறு, இயக்கம் என்பது வேறு. இயக்குவதற்கு கொஞ்சம் ஞானம் வேண்டும். இயக்குநர் சொல்வதை அப்படியே உள்வாங்கிச் செய்பவன்தான் நடிகன். சுசீந்திரன் சொன்னதற்காக ‘பாண்டிய நாடு’ படத்தில் நான் நடித்தேன். இந்த படத்துக்காக கிடைத்த பெருமைகள் எல்லாம் எனக்கல்ல, சுசீந்திரனுக்குதான். நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் பெரிய விருப்பத்தோடு பண்ணவில்லை. என்னை விருப்பத்தோடு நடிக்கவைத்து ஒரு நடிகனாக அழகு பார்த்தது சுசீந்திரன்தான்.
இயக்குநர் பாரதிராஜாவை மீண்டும் எப்போது பார்க்கலாம்?
விரைவில் பார்க்கலாம். லண்டனில் குடியேறிய ஒரு குடும்பத்தின் வாழ்க்கையைப் பற்றிய படத்தை விரைவில் இயக்கவுள்ளேன். வயதான ஒருவனுக்கும், ஒரு சிறு குழந்தைக்கும் இடையேயான பிணைப்பைச் சொல்லும் படம் இது. இதன் படப்பிடிப்பு லண்டனில் 40 நாட்கள் நடைபெற வுள்ளது. இந்தப்படத்தை இயக்குவதுடன் நான் நடிக்கவும் செய்கிறேன். அந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார்.
பழைய படங்கள் ரீமேக்காகி வரும் இந்த காலகட்டத்தில், உங்கள் படங்கள் எதுவும் ரீமேக் ஆகவில்லையே?
ரீமேக்கில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஒரு படத்தை இன்னொரு மொழியில் ரீமேக் செய்யலாம். அதே மொழியில் ரீமேக் செய்வது தேவையில்லாதது. ‘16 வயதினிலே’ படத்தை இப்போது ரீமேக் செய்தால், யாரால் செய்ய முடியும்? கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இன்னொருவர் மாற்றி எழுத முடியுமா? ‘பொன்னியின் செல்வன்’ நாவலை ஒரு முறைதான் எழுத முடியும். அதனுடைய தொடர்ச்சியை வேண்டுமானால் பண்ணலாம்.
எனக்கும் அப்படி ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தின் தொடர்ச்சியை எடுக்க யோசனை இருக்கிறது. ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தை இந்தக் காலகட்டத்தில் உள்ள ஒரு பையன் பார்த்தால் என்ன செய்வான் என்பதை ஒரு கதையாக உருவாக்கியுள்ளேன். அநேகமாக அந்தப் படத்தை மனோஜ் இயக்குவான். அதேபோல் ‘என் உயிர் தோழன்’ படத்தின் தொடர்ச்சியையும் எடுக்கும் எண்ணம் இருக்கிறது.
நீங்கள் இயக்கிய படங்களில், உங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம் எது?
அதை சொல்ல முடியாது. நான் இப்போது என் எல்லாப் படங்களையும் பார்க்கிறேன். ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு காலகட்டத்தில் பிரமாதமாக பண்ணியிருக்கிறேன். எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. ‘காதல் ஓவியம்’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘ஒரு கைதியின் டைரி’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’ இப்படி எல்லாப் படங்களையும் பார்க்கும்போது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. இவ்வளவு தூரம் பண்ணியிருக்கி றோமா என்று தோன்றுகிறது.
என்னுடைய படங்கள் தோல்வியடைவது என்பது வேறு. ஆனால் அதில் என்னுடைய உணர்வுகள் குறையவில்லை. ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படம்கூட மோசமான படம் அல்ல. திடீரென்று ட்ரெண்ட் மாறியதால், அதில் ஒரு தேக்கம் ஏற்பட்டது. ‘பொம்மலாட்டம்’ படத்தில் யாருமே எதிர்பார்க்காத ஒரு க்ளைமாக்ஸ் பண்ணியிருப்பேன். அதை இப்போது பேசுகிறார்கள். வியாபார யுக்தியில் நான் தோற்று இருக்கலாம். அதேநேரத்தில் இப்போது வரை நான் என்னை அப்டேட் செய்துகொண்டே இருக்கிறேன்.
தொடர்ச்சியாக 5 வெள்ளிவிழா படங்களைக் கொடுத்தீர்கள். ஆனால், இப்போது ஒரு படம் வெற்றியடைந்தாலே இயக்குநர்கள் கோடிகளில் சம்பளம் கேட்கிறார்களே?
கேட்பவர்களை தப்புசொல்லக் கூடாது. ‘நான் உங்களுக்கு தேவைப்பட்டால் எனக்கு இவ்வளவு கொடுங்க’ என்று கேட்கிறான். அவனுடைய விஷயத்தில் அது சரி. இவங்களும் காரணம் இல்லாமல் போவார்களா? 5 கோடி கேட்டால்கூட படம் எடுங்கன்னு ஏன் சொல்றீங்க? இவனால் இவ்வளவு வரும் என்று நினைச்சுதானே போறீங்க! அதனால் கேட்பதில் தவறில்லை.
ரஜினி, கமலை வைத்து ‘16 வயதினிலே’ படம் இயக்கினீர்கள். தற்போது ரஜினி, கமலை ஒன்றிணைத்து உங்களால் படம் பண்ண முடியுமா?
படம் பண்ண மாட்டேன். ஏனென்றால் அவர்களுக்கு தனித்தனி இமேஜ் வந்துவிட்டது. இப்போது கமல் வேறு, ரஜினி வேறு, பாரதிராஜா வேறு. அவர்களை வைத்து நான் படம் செய்தாலும் இது பாரதிராஜா படமா, ரஜினி படமா, கமல் படமா என்ற கேள்வி எழும். எனக்காக ரஜினி வளைய முடியாது, ரஜினிக்காக நான் வளைய முடியாது. அதேபோல எனக்காக கமல் வளைய முடியாது, கமலுக்காக நான் வளைய முடியாது.
தற்போது காமெடி படங்கள் தொடர்ச்சியாக வெற்றியடைவதை எப்படி பார்க்கிறீர்கள்?
இதை இந்தக் காலகட்டத்திற்கான தேவை என்றுதான் சொல்வேன். பாரதிராஜாவின் கிராமத்து படங்கள் வந்தவுடனே, எல்லாரும் கிராமத்து படங்களை எடுத்தார்கள். மணிரத்னம் வந்தவுடன் ஒரு மாற்றம் வந்தது. இப்போது வேறு ஏதோ ஒரு மாற்றம் தெரிகிறது. முன்பெல்லாம் ராம்விலாஸ் உடுப்பி ஹோட்டல்தான் பிரபலமாக இருந்தது. அதற்கு பிறகு முனியாண்டி விலாஸ் பிரபலமானது. இப்போது கே.எஃப்சி, மெக்டொனால்ட் போன்ற உணவகங்கள் பிரபலமாக இருக்கிறது. அதுபோல்தான் சினிமாவும்; இதுவும் மாறும்.
குறும்பட இயக்குநர்கள் நிறையப் பேர் தமிழ் சினிமாவிற்கு வந்து விட்டார்களே?
நல்லதுதான். முன்பு வாய்ப்புக்காக ஃபைலை தூக்கிக் கொண்டு அலைந்தார்கள். இப்போது குறும்படத்தை தூக்கிக் கொண்டு அலைகிறார்கள். அதில் தவறு ஒன்றும் கிடையாது.
உங்கள் படங்களில் கிராமம் சார்ந்த கதைகள் அதிகமாக இருந்ததற்கு என்ன காரணம்?
அமெரிக்கா, லண்டன் என்று போனாலும் அரிசி சோறு சாப்பிடாமல் நம்மால் இருக்க முடியாது. 3 வயசு வரைக்கும் அம்மாவிடம் பால் குடிச்சு வளர்கிறீர்கள். அதற்கு பிறகு அம்மா ஊட்டுற சோறு, குழம்பு. 20 வயதில் கல்யாணம் பண்ணி வைப்பாங்க. அவ ஒரு குழம்பு வைப்பா, அதை ‘எங்கம்மா வைத்த மாதிரியே இல்லை’ என்று சொல்வீர்கள். 18 வயதுவரைக்கும் உங்களை எது பாதிக்கிறதோ, அதுதான் திரையில் வரும். என்னுடைய 20 வயதுவரை என்னை பாதித்தது கிராமமும், கிராம சூழலும்தான். அதைத்தான் அதிகமாக பிரதிபலித்தேன்.
தற்போது கிராமம் சார்ந்த படங்களின் வருகை குறைந்து விட்டதே?
அந்தக் காலகட்டங்களுக்கு கிராமத்து படங்கள் ஓ.கே. இன்றைக்கு டி.வியெல்லாம் வந்துவிட்டது. எல்லா கிராமமும் ஒரு மினி சென்னையாகி விட்டது. சென்னையின் நாகரிகம் எல்லா இடங்களிலும் இருக்கிறது. இப்போதெல்லாம் கிராமங்களில் மண் ரோடு கிடையாது, சிமெண்ட் ரோடுதான். கூரை வீடுகளே கிடையாது. ஆகவே, கிராமம் சார்ந்த படங்களை இனி ரசிக்க முடியாது. என்னுடைய பழைய படங்களையெல்லாம் கிராமங்களுக்கான பதிவு மாதிரி சொல்லலாம். இனியெல்லாம் அது முடியாது.
நீங்கள் இயக்குநராக வேண்டும் என்று சென்னை வந்தபோது, இவ்வளவு பெரிய இயக்குநராக வலம் வருவோம் என்று எதிர்பார்த்தீர்களா?
ஜோசியம் பார்த்தா இங்கு வர முடியும்? நம்பிக்கைதான். நம்பிக்கைதான் எனக்கு எப்போதுமே அடிப்படை. உறுதியும், நம்பிக்கையும், உத்வேகமும் இருந்தால் போதும். போக வேண்டிய இடத்தை முடிவு செய்து பயணம் செய்ய ஆரம்பித்தால் கண்டிப்பாக போய்விடலாம். போவோமா இல்லயா என்று நினைத்தால் முடியாது. நம்பிக்கையோடு இருந்தேன், வந்துவிட்டேன்.
vasudevan31355
26th August 2014, 01:02 PM
சி.க சார்,
வணக்கம். சந்திச்சு நாளாச்சு.
வந்த உடனேயே ஆரம்பிச்சாச்சா? :)
'சிங்காரத் தேருக்கு சேலை கட்டி' 'கள்ளபார்ட்' கிடையாது. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.
எவ்வளவு அழகான 'கனவுக்கனி' ஹேமாமாலினி தேயிலைப் பறிக்கும் சிட்டாக சிறு வேடத்தில் ஜொலிக்கிறார். அதுவும் ராட்சஸியின் குரலில். இவரை போய் ஸ்ரீதர் வேண்டம்னாரே! நடிகர் திலகத்திற்கு ஜோடியாக நடித்திருந்தால் காவியங்கள் இன்னும் அதிகமாகி இருக்குமே! ம்.. நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். தர்மேந்திரா கவ்விட்டாரே. சஞ்சீவ் குமார் மண்ணை.:)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355010/h2.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355010/h2.jpg.html)
vasudevan31355
26th August 2014, 01:07 PM
கிருஷ்ணா சார்,
பாரதிராஜாவின் பேட்டி நன்று. உங்களுக்கு என் 'முதல் மரியாதை'. சின்னக் கண்ணனுக்கு 'சிகப்பு ரோஜாக்கள்':).
mr_karthik
26th August 2014, 01:23 PM
நடிகர்திலகம் சிவாஜி சமூகநல பேரவைத்தலைவரும், அண்ணனின் புகழை அயராது பரப்பி வருபவரும், சளையாத உழைப்பாளியும், எங்கள் எல்லோர் மனங்களிலும் நிறைந்தவருமான நண்பர் கே.சந்திரசேகரன் அவர்களுக்கு இதயம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் சேவையில் அவர் பல்லாண்டு வாழ்க...
madhu
26th August 2014, 01:26 PM
சார்களே எனக்கொரு டவுட்டு :) சிங்காரத் தேருக்கு சேலைகட்டி படத்தில் ஹேமுவைப் பார்த்துப் பாடியது கள்ளபார்ட் நடராஜன் தானே (சபாஷ்மீனா வில்லன்??).. நிறைய படங்கள் நினைவில்வரலை.. ஸ்ட்ரெட்டா ரேவதி அப்பா ரோல் இன் தேவர் மகன்..(ஹப்பா ரெண்டு நாளா வெடி வெக்காம இருந்து இப்ப தான்மனசுக்கு நிம்மதி :))
சிக்கா... நீங்களே பாத்துக்குங்க..
http://youtu.be/R-ZPq5omV_E
madhu
26th August 2014, 01:27 PM
மதுஜி,
ராட்சஸி பாடிய ஒரு காபரே நடனப் பாடல். 'ஜல்சா ஜல்சா ஜல்சா' என்று தொடங்கும். அதற்கு மேல் நினைவில்லை. பழைய சிடியை தேடிப் பார்க்க பொறுமை இல்லை.
பாட்டாகவோ அல்லது படமாகவோ தர இயலுமா?
ஞாபகம் வ்ரவில்லையே ஜி.... இன்னும் ஏதாவது க்ளூ இருந்தா கொடுங்களேன்.
madhu
26th August 2014, 01:37 PM
சிங்காரத் தேருக்கு சேலை கட்டி பாடலைக் கேட்டதும் நினைவுக்கு வந்தது...
அனேகமாக கதா நாயகிகளுக்கு எல்லாம் பி.சுசீலாதான் குரல் கொடுப்பார். ஒரு சில படங்களில் ( குமரிப்பெண் etc. ) ஈஸ்வரியின் சாம்ராஜ்யம் கொடி கட்டிப் பறந்தது. அந்த வரிசையில் வைராக்கியம் என்று ஒரு படம். ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், வெண்ணிற ஆடை நிர்மலா, ஜோதிலட்சுமி ஆகியோரின் நடிப்பில் வந்தது.
தெருவில் கூத்தாடிப் பிழைக்கும் எஸ்.எஸ்.ஆரையும் அவர் சகோதரி நிர்மலாவையும் சுற்றி ஓடும் கதை. நிர்மலாவின் ஜோடியாக படித்த வாலிபன் ஜெமினி.
கூத்தாட உடன் வந்து சேரும் ஜோதிலட்சுமி கடைசியில் கொலைக் குற்றம் செய்த எஸ்.எஸ்.ஆரைக் கண்டு பிடிக்க வந்த சி.ஐ.டி எனும் புதிய பறவைக் கதையில்.. அனேகமாக எல்லாப் பாடல்களுமே பெண் குரலுக்கு எல்.ஆர்.ஈஸ்வரியையே சார்ந்து இருந்தன.
ஆரம்பப்ப் பாடலான "தென் பாண்டிச் சீமையிலே நான் பிறந்தேன்.. தெம்மாங்கு பாட்டுப் பாடி ஆட வந்தேன்" என்று டி.எம்.எஸ் விருத்தம் பாட..
"தேருக்குச் சேலை கட்டி தெருவில் விட்டா.. யாருக்கும் ஆசை வரும் பார்வை பட்டா" என்று ஈஸ்வரி தேன் சொட்டப் பாடலைத் தொடர்வார்.
டி.எம்.எஸ், ஈஸ்வரி டூயட்டான "சொல்லத் துடிப்பது என்ன.. மெல்லச் சிரிப்பது என்னா.. மூடி மறைப்பது என்ன.. மோகம் பிறக்குது வா வா" என்ற பாடலும்..
"ஏண்டா மனுஷன் ஏய்க்கிறான்" என்ற பாடலும் நினைவுக்குள் மீண்டும் இசைக்க... தேடோ தேடென்று தேடியதில் ஒன்றே ஒன்றுதான் வீடியோவாக சிக்கியது. மிச்சம் எல்லாம் ஆடியோ
தேருக்கு சேலை கட்டி
http://www.inbaminge.com/t/v/Vairakkiam%201970/Therkku%20Saalai%20Kaatti.vid.html
சொல்லத் துடிப்பது என்ன
http://www.inbaminge.com/t/v/Vairakkiam%201970/Solla%20Thudippathu%20Enna.vid.html
ஏண்டா மனுஷன் ஏய்க்கிறான்
http://youtu.be/Bclxte_Xopw
அந்த சர்ர்ர்.. சர்ர்.... என்ன அருமையாக ஒலிக்குது ?
gkrishna
26th August 2014, 01:44 PM
நண்பர் ஒருவர் இடம் இருந்து காலையில் ஒரு மெயில் வந்து இருந்தது
அதில் இரண்டு பாடல்களை அனுப்பி இருந்தார்
ஒன்று மாயா பஜார் படத்தில் இடம் பெற்று இருந்த தமிழ் பாடல் 'கல்யாண சமயல் சாதம் ' கண்டசால இசை அமைப்பு
மற்ற ஒன்று பிரெஞ்சு மொழி பாடல் என்று கூறி உள்ளார்
http://www.youtube.com/watch?v=kdcov5ycWdg
http://www.youtube.com/watch?v=tDBEDNyhbSc
குமுதம் 6 வித்யாசங்கள்
vasudevan31355
26th August 2014, 02:03 PM
மதுஜி,
நிஜமாகவே தூள். நானும் வைராக்கியத்துடன் தேடித் தேடி அலுத்து வைராக்கியம் இழந்து விட்டு விட்டேன். ஆனால் நீங்கள் அட்டகாசமாகத் தேடிக் கண்டு பிடித்துத் தந்து விட்டீர்கள் இந்த ராட்சஸி ரசிகனுக்காகவே போலும்.
கொன்னுட்டீங்க பாஸ். தேங்க்ஸ்ஜி. ஆமாம். பானுமதி பாட்டு கேட்டாச்சா?
mr_karthik
26th August 2014, 02:15 PM
அறிவிப்பு
இன்றோ அல்லது நாளையோ அல்லது அடுத்த வாரமோ வாசுதேவன் அவர்களின் 'இன்றைய ஸ்பெஷல்' பாடலாக மலரவிருப்பது, கண்ணதாசனின் கருப்புப்பணம் படத்திலிருந்து (தப்பா எடுத்துக்காதீங்க... கண்ணதாசன் தயாரித்த கருப்புப்பணம்) மெல்லிசை மன்னர்களின் அருமையான இசையில், ஜி.ஆர்.நாதனின் அற்புத ஒளிப்பதிவில், சீர்காழி மற்றும் ராட்சசி அசத்தும் பாடல்
"தங்கச்சி சின்னப்பொண்ணு தலையென்ன சாயுது
எண்ணங்கள் மெல்லமெல்ல எங்கெங்கோ போகுது"
நடனக்குழு மங்கையரின் அழகான ஒருமித்த கைதட்டலுக்காகவே பார்த்துக் கொண்டிருக்கலாம்...
vasudevan31355
26th August 2014, 02:20 PM
மதுஜி!
பழைய ஞாபகத்தை கிண்டிக் கிளறி விட்டீர்கள். ஒரே நாளில் வெளியான நடிகர் திலகத்தின் இரு படங்கள். (சொர்க்கம் & எங்கிருந்தோ வந்தாள். 29.10.1970) கடலூரில் காலையில் நியூசினிமாவில் 'எங்கிருந்தோ வந்தாள்' பார்த்துவிட்டு, மதியம் பாடலியில் 'சொர்க்கம்' பார்த்துவிட்டு, ஈவினிங் ஷோ முத்தையா திரையரங்கில் 'வைராக்கியம்' பார்த்ததாக நினைவு. ('வைராக்கிய'த்தைப் பொறுத்த மட்டில் நினைவுதான். ஊர்ஜிதம் இல்லை. கார்த்திக் சார் மனது வைப்பாராக. 'வைராக்கியம்' ரிலீஸ் நான் சொன்னது சரியா இல்லையா என்று. சரியாய் இருந்தால் 'நல்ல ஞாபக சக்தி' என்று எனக்கு நானே 'ஷொட்டு' வைத்துக் கொள்வேன்:)..)
நீங்கள் இரண்டு வரியில் 'வைராக்கியம்' கதையை எழுதப் போக, வாழை மட்டை மாதிரி இருந்த புத்தி கற்பூரமாய் மாறி பக்கென்று பிடித்துக்கொண்டது. அப்படியே மல்லாக்க சாய்ந்து எண்ண அலைகளில் மூழ்கி விட்டேன். (வீட்டுக்காரம்மா சாப்பிடக் குரல் கொடுப்பது அதையும் மீறிக் கேட்கிறது.:) சாப்ட்டுட்டு வாரேன்)
Gopal.s
26th August 2014, 02:23 PM
அறிவிப்பு
"தங்கச்சி சின்னப்பொண்ணு தலையென்ன சாயுது
எண்ணங்கள் மெல்லமெல்ல எங்கெங்கோ போகுது"
நடனக்குழு மங்கையரின் அழகான ஒருமித்த கைதட்டலுக்காகவே பார்த்துக் கொண்டிருக்கலாம்...
எனக்கு மிக மிக பிடித்த பாடல்களில் ஒன்று. நன்றாக படமாக்க பட்டிருக்கும். ஜி.ஆர்.நாதன் படமாக்கம் எப்போதுமே அருமை. லட்சுமி கல்யாணம்தான் ரொம்ப சுமார். சிவாஜி நடனங்களில் கிளப்பி இருந்தாலும்.
madhu
26th August 2014, 02:52 PM
மதுஜி,
நிஜமாகவே தூள். நானும் வைராக்கியத்துடன் தேடித் தேடி அலுத்து வைராக்கியம் இழந்து விட்டு விட்டேன். ஆனால் நீங்கள் அட்டகாசமாகத் தேடிக் கண்டு பிடித்துத் தந்து விட்டீர்கள் இந்த ராட்சஸி ரசிகனுக்காகவே போலும்.
கொன்னுட்டீங்க பாஸ். தேங்க்ஸ்ஜி. ஆமாம். பானுமதி பாட்டு கேட்டாச்சா?
நீங்கள் எமக்களித்த நெய்வேலி பெருமை கண்டு நாங்கள் உமக்குரைத்த நன்றியே !!!!
பானுமதி பாடல் அருமையோ அருமை.. மறந்து போன வரிகளை எல்லாம் பிரஷ் வச்சு தேச்சு கிளீன் செய்து கொண்டு இருக்கிறேன். !
chinnakkannan
26th August 2014, 03:10 PM
//அறிவிப்பு
"தங்கச்சி சின்னப்பொண்ணு தலையென்ன சாயுது
எண்ணங்கள் மெல்லமெல்ல எங்கெங்கோ போகுது" //அடடா என்னா பாட்டு.. ம்ம் ஐயாம் வெய்ட்டிங்க்..ஓகே ஓகே வி ஆர் வெய்ட்டிங்க்..
மதுண்ணாவ் சேலைகட்டிய சிங்காரத்தேர் வீடியோவுக்கு நன்றி அண்ட் வைராக்கியம் நினைவலைகளுக்கும்..
வாசு சார் //சிகப்பு ரோஜாக்கள்// தாங்க்ஸ்..எதுக்காக்கும் இது :) ஆஹா ஹேமுவோட ஸ்டில்ஸ் அழகு.. அண்ட் அதைப்பற்றிய தகவல்கள்..சஞ்சீவ்குமார் ஹேமுவ லவ் பண்ணாரா என்ன? ந.தியோட ஜோடியா இருந்தா இன்னும் நல்லாயிருந்திருக்கும்..ம்ம்
மாயாபஜார் ஃப்ரென்ஞ்ச் பாட் வீட்டில் போய்த் தான் கேக்கணும் க்ருஷ்ணாசார்..:)
//தேருக்குச் சேலை கட்டி தெருவில் விட்டா.. யாருக்கும் ஆசை வரும் பார்வை பட்டா" எ// எல்லாம் தேர்ப் பாட்டா இருக்கே..வேறென்ன இருக்கு..
தேரு பார்க்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே..இருதுருவம்
மாணிக்கத் தேரில் மரகதக் கலசம் மின்னுவதென்ன - தேடி வந்த மாப்பிள்ளை ?
திருத்தேரில் வரும் சிலையோ
வானமெனும் வீதியிலே குளிர் வாடையெனும் தேரினிலே
ஓடிவரும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள்
என் உறவுக்கு யார் தலைவன் என்று கேட்டுச் செஒல்லுங்கள்
மாதாவைக் கேட்டுச் சொல்லுங்கள் - அன்னை வேளாங்கன்னி - ஜெ&ஜெ
அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர் - // அவ்ளோ குண்டா கதானாயகி ?!// பஞ்சவர்ணக்கிளி
//எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே என்னை தந்தேனே..
தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே.// என்னபடம்னு தெரில்லீங்கோவ்..
வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே டூயட்
//திரு நாள் வந்தது தேர் வந்தது
ஊர்வலம் வருகின்ற நாள் வந்தது ஓடமுடியாமல்
தேர் நின்றது// காக்கும் கரங்கள் இசையரசி..(ஏன் இந்தப் பாட்ட யாரும் அலசலை :)
தேர் ஏது சிலை ஏது திரு நாள் ஏது - சுசீலாம்மா ந்னு நினைக்கறேன் படம் பாடல் மறந்து போச்சே
இவள் ஆவாரம் பூ தானா நடை தேர் தானோ - //போயும் போயும் அந்தக்கால ராதிகா..ம்ம் கி.போ. ரயில்/
மீன்கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான்// வாசு சார் எழுதலாம்..இதப் பத்தி..
அட ரொம்பத் தான் தேரோட்டி இருக்காங்க போல..விட்டுப்போன தேர்களை it is there னு சொல்ல மாட்டீங்களா என்ன..:)
chinnakkannan
26th August 2014, 03:13 PM
//இந்த விமர்சனம் என்றில்லை. அன்றைய விமர்சனங்கள் எதிலும் இசையைப் பற்றி எழுதுவதேஇல்லை. என்னவொரு கொடுமை...// கார்த்திக் சார் அந்தக் கால ப் பட விமர்சனங்கள்ள ஜெனரலா கதை முதலில் தென் பாடல்கள்.. மற்ற விஷயமெல்லாம் அவ்வளவாகச் சொன்னதில்லை என நினைக்கிறேன்.. இந்த நிலை மாறியது எண்பதுகளில் விகடன் மார்க் வழங்கும் உத்தியை ஆரம்பித்ததற்கு அப்புறம் தான்..அப்போதுதான் எடிட்டிங்க் ஒளிப்பதிவு வசனம் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்தன என நினைக்கிறேன்..
chinnakkannan
26th August 2014, 03:15 PM
சரோஜாதேவியின் கணவர் இறந்துவிட்டார் தானே..நோய்? பத்மினியின் டாக்டர் கணவரும் ஹார்ட அட்டாக் தானே..வைஜயந்தியின் டாக்டர் பாலியும் இப்போ இல்லை தானே..பாவம்.
Richardsof
26th August 2014, 03:18 PM
http://youtu.be/oaM_xKSMHlg
chinnakkannan
26th August 2014, 03:22 PM
//தற்போது இத்திரைப்படம் தமிழில் புதிய தொழில் நுட்பத்துடன் மெருகேற்றப்பட்டு, வரும் தீபாவளிக்கு திரையிடப்படவுள்ளது. சினிமாஸ்கோப்பில் வெளிவர இருக்கும் இப்படத்துக்கு, டிஜிடல் தொழில் நுட்பத்தில் இசை அமைப்பாளர் ரவிராகவ், புதிய இசை வடிவம் கொடுத்துள்ளார்.// க்ருஷ்ணா ஜி.. சங்கராபரணம் ..விமர்சனம் விகடனில் அட்டையில் வந்த சமயம்.. கேள்விப்பட்ட போது மதுரையில் மீனாட்சியில் ரிலீஸ்... ஏகப் பட்ட கூட்டம்..மொழிதெரியாமல் தெலுங்கு போய்ப் பார்த்தது - பல புரியாவிட்டாலும் கடைசிப்பாட்டு கொஞ்சம் உருக்கம்.. ராஜலஷ்மி கடல் கண்களோடு படம் பர்த்த இரவில் கனவில் வந்ததாக ஞாபகம்.. நான் அவரை ப் பாடஎல்லாம் சொல்லவில்லை :)
அப்புறம் வெகுகாலத்திற்கு ப் பிறகு புத்தகமாய்வெளிவந்த சோ எழுத்தில் விமர்சனம் படித்தேன்..
பாலு மகேந்திரா ஒளிப்பதிவு..ம்ம் தமிழில் வசனம் மட்டும் வைத்துக்கொண்டு பாட்டு தெலுங்கில் இருந்தால் நன்றாக இருக்கும்..ஆங்கிலப் படங்களெல்லாம் பெயர் மாற்றாமல் இப்போது தமிழில் டிவியில்வருவதைப் போல..(டை அனதர் டே)
இதை எழுதும் போதே ஒரு நினைவு.. அந்தக்கால மதுரை பரமேஸ்வரியில் ஓடுவதாகப் பார்த்த போஸ்டர்..சொர்க்கத்தின் சூடான சுந்தரிகள் எனத் தமிழில் எழுதியிருக்க படத்தின் பெயர் It is hot in paradise..! :)
chinnakkannan
26th August 2014, 03:39 PM
எஸ் வி. சார்.. தங்கத் தேரோடும் வீதியிலே பாட்டு ப் போட்டதுக்கு தாங்க்ஸ் :) மத்தவங்க என்னை த் திட்டப் போறாங்க எப்படி மறக்கலாம்னு..
80 களில் சிலோன் ரேடியோக்களில் சிலோனில் ஓடிய படம் என விளம்பரம்.. படிப்பினை ஊட்டும் குடும்பச் சித்திரம் என கே.எஸ்.ராஜாவின் கணீர்க்குரல் வேறு.. இந்தப் படம் நினைவில் வந்தது (இன்னொன்று பைலட் ப்ரேம் நாத்..) கண்ணில் தெரியும் கதைகள்.. நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் இதிலே இளமை இனிமை இது புதுமை
நிறைய தடவை கேட்டிருக்கிறேன்.. அப்படியே அழகாக வேகமாக ஓடும்.. நடித்தவர் சரத் பாபு எனில் பார்த்ததில்ல.. பாடல் புலமைப் பித்தனாம்..பாடியவர்கள் எஸ்பிபி, சுசீலாம்மா, ஜானகியம்மா.. எனக்குப் பிடித்த பாடல் உமக்கும் பிடிக்குமா..
*
நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே
இளமை இனிமை இது புதுமை
போதை தரும் நாகஸ்வரம்
பாடிடும் செந்தேன் மழை உந்தன் மொழியோ..
பார்வையில் ஆயிரம் கவிதைகள் எழுதிடும் அபினயம்..
பார்வை அழைப்பதும் பாவை தவிப்பதும் ஏனடி ஏனடி பைங்கிளியே
மேகலை வாட்டியது அதை மேனியில் காட்டியது
சிறு ஊடல் விளையாடல் ஒரு கூடல் உறவாடல்
குறி போடல் சுவை தேடல் கவி பாடல்
புதுவித அனுபவமே..?
அறிமுகம் அனுபவம் அது சுகம்
அழகன் மடியில் எனது உலகம்
மாலை வரும் வரும் மாலை தரும் தரும்
மாவிலை பின்னிய தோரணங்கள்
மங்கல வாத்தியங்கள் எங்கும் எங்களின் ராஜ்ஜியங்கள்
ஒரு வானம் கரு மேகம் மழை போலும் மலர் தூவும்
மயில் ஆடும் குயில் கூவும் இவை யாவும் திருமண எதிரொலிகள்
முதல் முதல் இரவென்ன வருவது..
..மகிழ மனது நெகிழ வருக
நானொரு பொன்னோவியம் கண்டேன்
தந்தோம் தனம் தனம் தந்தோம் தனம் தனம்\
என்றொரு மெல்லிசை கேட்பதென்ன
அது என்ன நூதனமோ
உங்கள் ஆசையின் சாதனமோ
மனம் தந்தும் தனம் தந்தும்
இதழ் சிந்தும் ரசம் தந்தும்
தரும் இன்பம் பல தந்தும்
வரும் சொந்தம் இவள் சீதனமோ
பலவித சுகங்களின் தரிசனம்
விழியும் மனமும் உருக வருக
**
Gopal.s
26th August 2014, 03:59 PM
மாரியம்மன் திருவிழா படத்தில் "சிரித்தாள் சிரித்தேன் அவளொரு ராஜகுமாரி "என்ற டி.எம்.எஸ் பாடிய இளையராஜா பாடலொன்று. அப்போதெல்லாம் தேங்காய் ,மனோரமாவிடம் தாராளமாக விளையாடுவார்.
chinnakkannan
26th August 2014, 04:09 PM
//தேங்காய் ,மனோரமாவிடம் தாராளமாக விளையாடுவார்.// :) ஹி ஹி..கோபால்சார்..
இதன் தொடர்பாக இன்னொரு பாட்டும் நினைவில்.. பல்லவ நாட்டு ராஜ குமாரிக்குப்பருவம் பதினெட்டு..
Gopal.s
26th August 2014, 04:34 PM
மழு என்ற இரு எழத்து படத்திற்கு,மாமனாரின் இன்ப வெறி 10 எழுத்து மொழி பெயர்ப்பு.கில்லாடிகளப்பா.
madhu
26th August 2014, 05:26 PM
நிறைய தடவை கேட்டிருக்கிறேன்.. அப்படியே அழகாக வேகமாக ஓடும்.. நடித்தவர் சரத் பாபு எனில் பார்த்ததில்ல.. பாடல் புலமைப் பித்தனாம்..பாடியவர்கள் எஸ்பிபி, சுசீலாம்மா, ஜானகியம்மா.. எனக்குப் பிடித்த பாடல் உமக்கும் பிடிக்குமா..
*
நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே
இளமை இனிமை இது புதுமை
http://youtu.be/V7ZmRuw_0r0
madhu
26th August 2014, 05:27 PM
மழு என்ற இரு எழத்து படத்திற்கு,மாமனாரின் இன்ப வெறி 10 எழுத்து மொழி பெயர்ப்பு.கில்லாடிகளப்பா.
மலையாளப் படங்கள் எல்லாத்துக்குமே இப்படித்தானோ ?
ஈட்டா என்றால் மூங்கில் என்றுதான் அர்த்தமாம். அதை "இன்ப தாகம்" என்றுதான் மொழி பெயர்த்திருந்தார்கள்.
chinnakkannan
26th August 2014, 05:38 PM
நன்றி மதுண்ணா.. இதுவரை வீடியோ பார்த்ததில்லை.. இதிலேயே இன்னொரு பாட்டும் போட்டுத்தேய்ப்பார்கள் ரிகார்டரை.. நான் ஒன்ன நெனச்சேன்.. நீ என்ன நினச்சே..
அதை ஏன் கேக்கறீங்க அந்தக்காலத்தில் மலையாளப் பட டைட்டில்களின் மொழி பெயர்ப்பு.. தமாஷாயிருக்கும்..ஏதோ ராத்திரிகள்னுல்லாம் வரும் சட்டுன்னு நினைவுக்கு வரலை..ஒரு ப்ரதாப் போத்தன் நடிச்ச படத்துக்கு ஒரு வினாடி சுகம் என டைட்டில்..:) இதையும் மீறி மதுரையில் நன்கு ஓடிய - மத்த விஷயம் எல்லாம் இல்லாத- மலையாளப்படம் நியூடெல்லி - சிந்தாமணியில் ஓடியது..
chinnakkannan
26th August 2014, 05:39 PM
மூவர் பாடிய வேறு என்னென்ன பாட்டு இருக்கு..உள்ளங்கள் பலவிதம் தான் நினைவுக்கு வருது..அப்புறம் நெஞ்சினிலே நிலவு முகம்..அதுவும் மூவர் பாடியதுதானே..
madhu
26th August 2014, 06:19 PM
மூவர் பாடியது எக்கசக்கமா இருக்கே...
லிஸ்ட் போட நேரமில்லை..
1. நீயோ நானோ யார் நிலவே - மன்னாதி மன்னன் - சுசீலா, ஸ்ரீனிவாஸ், ஜமுனாராணி
http://youtu.be/jF0scgReHWQ
2. கோவிலிலே வீடு கட்டி - அண்ணாவின் ஆசை - டி.எம்.எஸ்., சுசீலா, ராகவன்
http://youtu.be/boKDWHUH-1w
3. வேறென்ன நினைவு - சுபதினம் - டி.எம்.எஸ், சுசீலா, ராகவன்..
வீடியோ இருக்கு. சட்டுனு சிக்கலை.
இன்னும் நிறைய இருக்கு
mr_karthik
26th August 2014, 06:34 PM
மூவர் பாடிய வேறு என்னென்ன பாட்டு இருக்கு..உள்ளங்கள் பலவிதம் தான் நினைவுக்கு வருது..அப்புறம் நெஞ்சினிலே நிலவு முகம்..அதுவும் மூவர் பாடியதுதானே..
எப்படியும் ஒரு 500 பட்டியலிடமுடியும். அவசரத்துக்கு
கட்டோடு குழலாட ஆட (பெரிய இடத்து பெண்)
ஆணி முத்து வாங்கி வந்தேன் (பாமா விஜயம்)
துள்ளி துள்ளி விளையாட துடிக்குது மனசு (மோ.சு.பிள்ளை)
நீங்க நல்லாயிருக்கோணும் (இதயக்கனி)
பூவைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா (மா.வேலன்)
போடச்சொனா போட்டுக்கிறேன் (பூவா அஜித்தா)
Gopal.s
26th August 2014, 06:35 PM
தம்பி வாடா அடிச்சது யோகம்
நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா
உள்ளங்கள் பலவிதம்
வரவு எட்டணா செலவு பத்தணா
உத்தரவின்றி உள்ளே வா
சுகமெதிலே இதயத்திலா பொன்னான கன்னமா
ஏய் வா மாமா ஒரு பாடம் படிக்கலாமா
வாலிப விருந்து கண்களுக்கு தரும்
ஏன் ஏன் ஏன் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
mr_karthik
26th August 2014, 06:39 PM
மழு என்ற இரு எழத்து படத்திற்கு,மாமனாரின் இன்ப வெறி 10 எழுத்து மொழி பெயர்ப்பு.கில்லாடிகளப்பா.
அது மொழிபெயர்ப்பு அல்ல. இளைஞர்களையும் விடலைகளையும் (ஏன் முதியவர்களையும் கூட) தியேட்டருக்கு இழுக்கும் சதி.
'மழு' என்ற மலையாள வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் 'கோடரி' .
இன்னொரு ஆங்கிலப்படத்துக்கு தமிழில் அடிக்கப்பட்டிருந்த போஸ்ட்டர் "ஆடையை அவிழ்த்துக்காட்டும் அழகிகள்'...
mr_karthik
26th August 2014, 07:33 PM
நான்கு பேர் பாடியவை....
கொடுத்துப்பார் பார் பார் உண்மை அன்பை (விடிவெள்ளி)
மழை கொடுக்கும் கொடையும் ஒரு (கர்ணன்)
அத்திக்காய் காய் காய் (பலே பாண்டியா)
vasudevan31355
26th August 2014, 08:03 PM
மூவர் பாடியவை
ராமன் என்பது கங்கை நதி
இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்
தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே
மாதென்னைப் படைத்தான் உனக்காக
குளிரடிக்குதே கிட்ட வா கிட்ட வா
vasudevan31355
26th August 2014, 08:09 PM
நான்கு பேர் பாடியவை.
ஆட்டுக்கு வாலை அளந்து வச்சவன் புத்திசாலி
உலகில் இரண்டு கிளிகள்
பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம்
chinnakkannan
26th August 2014, 08:39 PM
மூவரைப் பற்றிக் கேட்டேன்
..முத்தெனப் பாடல் தந்தீர்
பாவகை பார்த்தால் மீண்டும்
…பற்றியே கேட்கத் தோன்றும்
ஆவலாய் நால்வர் பாட்டும்
..அழகுறத் தந்தீர் எந்தன்
நாவதும் குழறு தய்யா
.நன்றியில் நெகிழு தய்யா..
மதுண்ணா,கார்த்திக் சார், கோபால் சார்,,வாசு சார்..மிக்க நன்றியுடன் ஒரு ஓ :)
என்னா அழகான பாட்டு லிஸ்ட்..அகெய்ன் தாங்க்ஸ்
chinnakkannan
26th August 2014, 08:45 PM
போடச்சொனா போட்டுக்கிறேன் (பூவா அஜித்தா) :) கார்த்திக் சார்..மெல்லத் தான் புரிஞ்சுது
துள்ளி துள்ளி விளையாட துடிக்குது மனசு (மோ.சு.பிள்ளை)
ராமன் என்பது கங்கை நதி
கொடுத்துப்பார் பார் பார் உண்மை அன்பை (விடிவெள்ளி)
மழை கொடுக்கும் கொடையும் ஒரு (கர்ணன்)
அத்திக்காய் காய் காய் (பலே பாண்டியா) நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா
உள்ளங்கள் பலவிதம்
வரவு எட்டணா செலவு பத்தணா
உத்தரவின்றி உள்ளே வா
சுகமெதிலே இதயத்திலா பொன்னான கன்னமா (பாட் கேட்டிருக்கிறேன் பார்த்ததில்லை)
ஏன் ஏன் ஏன் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
நீயோ நானோ யார் நிலவே - மன்னாதி மன்னன் - இந்தப் பாட்டெல்லாம் எனக்கு ரொம்ப்ப்பப் பிடிக்குமாக்கும்..:)
chinnakkannan
26th August 2014, 08:59 PM
மதுண்ணா…கோவிலிலே வீடுகட்டி ..பாட்டு வெகு நாள்முன்னால் கேட்டது..பார்த்ததில்லை..இன்று உங்கள் புண்ணியத்தால்பார்த்தேன்..
நீயோ நானோ யார் நிலவேயில் அஞ்சலி இருப்பது சுத்தமாக மறந்து விட்டது . எம்.ஜி.ஆருக்கு பி.பி.எஸ்பாட்டு ஆச்சரியமாக இருக்கிறது (சின்னவயதில் படம்பார்த்தது..பாட்டு ஓரிரு தடவை தான் கேட்டிருக்கிறேன்..) வெகு அழகு..
rajeshkrv
26th August 2014, 09:32 PM
கோபால் ஜி, கிருஷ்ணா ஜி, வாசு ஜி , மதுண்ணா தூள் .. ஒவ்வொருவரும் பட்டய கிளப்புகிறார்கள்
chinnakkannan
26th August 2014, 09:40 PM
நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் – ஸ்ரீப்ரியா வடிவாம்பாளா.. வடிவ அடையாளமே தெரிலை ஒல்லியா இருக்கறதுனால.. ஸ்ரீப்ரியா கடோசிலதான் க்ளோஸப்ல ஸ்ரீப்ரியான்னு தெரியறாங்க..
க்ருஷ்ணா ஜி.. கொஞ்சம் கல்யாண சமையல் சாதத்தின் காப்பியோ என வியக்க வைத்தது ப்ரெஞ்ச் பாட்டு.. நல்லாவும் இருந்தது..
சிங்காரத்தேருக்கு சேலை கட்டியும் பார்த்தேன்..ஆஹா.. நடுல சந்த்ர்காந்தா எழுந்தவுடன் நானும் நிறுத்திட்டேன்.. இதுசத்தியம் பத்தி ஒரு தெரிந்த/தெரியாத நியூஸான்னு தெரியாது..அந்த நியூஸ் இதான்.. கதையை சட்டுனு கதானாயகன் வீட்டில ஆரம்பிக்காம கதானாயகன் நண்பன் வீட்டில் இருந்து தான் ஆரம்பித்தாராம் ரா.கி.ரங்கராஜன்..அப்புறம் தான் மூணாவது அத்தியாயத்திலிருந்து செளரி ராஜன் என்ற அசோகன் வருவார்..
அந்த எஸ்.வி சாரோட 1117 போஸ்ட்ல இருக்கற நடிகை கே.ஆர்.விஜயாதானா..வேற மாதிரி இருக்காரே..(கண்ணா வயசாய்டுச்சுடா.. ஞாபக மறதி ஜாஸ்தியாடுத்து நோக்கு)
ப்ரிய ஸ்ரீ யோட படத்தைப் போட்ட வாசு சார், க்ருஷ்ணா சாருக்கு கனவில ப்ரியமானவங்க அடிக்கடி வந்து போகக் கடவது.. (ஹைய்யா..வாசு சார்கிட்டக்க இவங்க வயசான ஃபோட்டா இல்லை…)
ராஜேஷ்..ஜலஜலக்காம் ஜட்டாம் ஜெலரி (அப்டின்னா) பாட்டுக்கு தாங்க்ஸ் சிரிக்க சிலங்கையெல்ல சிலும்புது பூவனம்..துலங்குது யெளவனம்.. தமிழ்ப்பாட்டு மாதிரி இருக்கேங்காணும்..
சுசீலாம்மாவின் இந்திப் பாட்டு நம்ம வீட்டு லஷ்மியின் யாரிடம் யாரிட்ம்பாடம் கேட்கலாம் பாட்டு.. நைஸ் தாங்க்ஸ் வாசுசார்..
ஓரிடம் உன்னிடம்..என் தேவையை நான் கேட்பது வேறுயாரிடம்..ஹையாங்க் லத்து பாட்டா நான்பாத்ததில்லையே..தாங்க்ஸ் மதுண்ணா..(கட்டவா ஒட்டவா கிள்ளவா வரிக்கு ஸ்விம்மிங்க் பூல் தான் சிறந்ததுன்னு யார் சொல்லியிருப்பாங்க..:) )
ஹப்பாடி..இன்னிக்கு வீட்டுக்கு வந்து ஓரளவுக்கு பெண்டிங் ஒர்க்ஸ் முடிச்சுட்டேன்..
RAGHAVENDRA
26th August 2014, 10:55 PM
மூவர் பாடிய தேவாரத்தைப் போன்று மூவர் பாடிய பாடல்களும் தனிப் பதிகம் போடும் அளவிற்கு ஏராளமானவை இங்கே பட்டியலில் இடம் பெறும் போலுள்ளதே... ஒவ்வொருவருக்கும் பாராட்டுக்கள்.
RAGHAVENDRA
26th August 2014, 10:57 PM
இரவின் மடியில்
மஹாராணி உனைத் தேடி வரும் நேரமே..
தாமரை மணாளன் எழுதிய ஆயிரம் வாசல் இதயம் அதே பெயரில் திரைப்படமாக வெளிவந்த போது இப்பாடல் அப்படத்தை இன்றும் நினைவூட்டும் அளவிற்கு பிரபலமானது. படம்.. அதைப் பற்றி சொல்வதற்கு நம்ம கோபால் சார் இருக்கிறாரே..
அதுவரை அந்தப் பாட்டைக் கேட்டு இரவைக் கழிப்போமே..
http://www.inbaminge.com/t/a/Aayiram%20Vaasal%20Idhayam/
RAGHAVENDRA
26th August 2014, 11:01 PM
இரவின் மடியில்
இரவை சுகமாக்க இன்னோர் இனிய பாடல்... எஸ்.பி.பாலா, எஸ்.ஜானகி குரலில் கே.ஜே.ஜாய் இசையில் அந்தரங்கம் ஊமையானது படத்திலிருந்து காதல் ரதியே...
http://www.inbaminge.com/t/a/Antharangam%20Oomaiyanadhu/
RAGHAVENDRA
26th August 2014, 11:10 PM
இரவின் மடியில்
இரவில் இந்தப் பாட்டைக் கேட்டால் நிச்சயம் நீங்கள் தூங்க மாட்டீர்கள்... நினைவுகளைத் தட்டி எழுப்பி விடும்... தங்களுடைய இளமைக் காலங்கள்... தாங்கள் விளையாடிய இடங்கள்.. தங்கள் இளமைப் பருவ பசுமையான நினைவுகள்... இவையெல்லாம் ஒன்று திரண்டு தங்கள் நினைவுகளை ஆக்கிரமித்து விடும்... அதில் அப்படியே லயித்து கண்ணை மூடுவீர்கள்.. கண்ணை மெல்ல மூடுவீர்கள்... மெல்ல மூடுவீர்கள்... மூடுவீர்கள்... .........
கண்ணைத் திறந்து பார்த்தால்...
அட இது உதயகாலமே... பூவே இது பூஜைக் காலமே...
http://www.inbaminge.com/t/g/Gramathu%20Athayayam/
கிராமத்து அத்தியாயம்... இளைய ராஜாவின் இசையில் ஒரு புதிய அத்தியாயம்...
RAGHAVENDRA
26th August 2014, 11:19 PM
பொங்கும் பூம்புனல்
நீண்ட நாட்களுக்குப் பின்னர் உன் பார்வை தந்த மயக்கம்... சங்கர் கணேஷ் இசையில் ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம் குரல்களில் காடு படத்திலிருந்து..
http://www.inbaminge.com/t/k/Kadu/
chinnakkannan
26th August 2014, 11:22 PM
என்னமோ இன்பமிங்கே இங்கே பாட மாட்டேங்குது ராகவேந்தர் சார்.. எனினும் நன்றி..ஆ.வா.இ நினைவு படுத்தியதற்கு நல்ல நாவல்..பைண்ட் தொடராய்ப் படித்தது..இரு ஹீரோயின்கள் ராதிகா வடிவு ஹீரோ சுதாகர்..படம் பார்த்ததில்லை..இப்போ ஆயிரம் எண்ணங்கள் உதயம் படித்துக் கொண்டிருக்கிறேன்!.
RAGHAVENDRA
26th August 2014, 11:25 PM
இரவின் மடியில்
பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே பூமியில் வந்தது எழில் கொண்டு...
ஆஹா.. மனதை வருடிச் செல்லும் இனிய பாடல்..
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே படத்திலிருந்து எஸ்.பி.பாலா வாணி ஜெயராம் (?) குரலில்..
http://www.inbaminge.com/t/k/Kumari%20Pennin%20Ullathile/
RAGHAVENDRA
26th August 2014, 11:26 PM
Google Chrome அல்லது Mozilla Firefox browser பயன்படுத்திப் பாருங்கள் சி.க.சார்
RAGHAVENDRA
26th August 2014, 11:31 PM
இரவின் மடியில்
மிகவும் இனிமையான அதே சமயம் பாடுதற்குக் கஷ்டமான பாடல்... இரவில் இதயத்தை வருடிச் செல்லும் பாடல்களில் இதுவும் அடங்கும்..எனது கண்கள் இரண்டும் நீயே என்று பாடும் போது குரலில் தென்படும் அந்த உணர்வினைக் கேட்டால் தான் தெரியும்...
குறிஞ்சி மலர் திரைப்படத்திலிருந்து என்ன சொல்ல என்ன சொல்ல என் தெய்வமே..
http://www.inbaminge.com/t/k/Kurinji%20Malar/
மன்னன் அணிந்த மாலை ஒன்று வேறு மனிதன் அணிவதா ... இவர் கேட்கிறார்... விடை தாருங்களேன்..
RAGHAVENDRA
26th August 2014, 11:35 PM
இரவின் மடியில்
இன்னும் பல ஆண்டுகளானாலும் இதயத்தை விட்டு நீங்காத பாடல்..
மலர்களே மலருங்கள் படத்திலிருந்து...
கண்மூடி மௌனமாய் நாணம் மேனியில் கோலம் போடும் போது..
இசைக்கவோ ... நம் கல்யாண ராகம்...
http://play.raaga.com/tamil/album/malargale-malarungal-T0001000
RAGHAVENDRA
26th August 2014, 11:45 PM
ராத்திரி நான் தூங்காமத் தான் முழிச்சிருந்தேனே... அது ஆராலே.. ஒரு ஆளாலே...
ஆமாம் ... கோபாலாலே... இரவின் மடியில் என்று தலைப்பு கொடுத்தாலும் கொடுத்தார்... இரவு முழுதும் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தால் எங்கே தூங்குவதாம்..
நான் மட்டுமா.. இங்கே எல்லாருமே அப்படித் தானே..
காரணம்... நாமெல்லாம்..
ஒரு மரத்துப் பறவைகளாச்சே..
http://www.inbaminge.com/t/o/Oru%20Marathu%20Paravaigal/
ஓ..கே.. ஓ...கே.. யாரோ அங்கே அடிக்க ஓடி வராப்பலே இருக்கு ஐயா எஸ்கேப்... நாளைக்குப் பாத்துக்கலாம்...
madhu
27th August 2014, 07:19 AM
இரவின் மடியில்
மஹாராணி உனைத் தேடி வரும் நேரமே..
http://youtu.be/ZhGLhZmkTM8
madhu
27th August 2014, 07:21 AM
இரவின் மடியில்
இரவை சுகமாக்க இன்னோர் இனிய பாடல்... எஸ்.பி.பாலா, எஸ்.ஜானகி குரலில் கே.ஜே.ஜாய் இசையில் அந்தரங்கம் ஊமையானது படத்திலிருந்து காதல் ரதியே...
http://youtu.be/Ajb6VRd5e38
madhu
27th August 2014, 07:22 AM
இரவின் மடியில்
அட இது உதயகாலமே... பூவே இது பூஜைக் காலமே...
http://youtu.be/oYXv7_uumD0
madhu
27th August 2014, 07:25 AM
இரவின் மடியில்
பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே பூமியில் வந்தது எழில் கொண்டு...
ஆஹா.. மனதை வருடிச் செல்லும் இனிய பாடல்..
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே படத்திலிருந்து எஸ்.பி.பாலா வாணி ஜெயராம் (?) குரலில்..
வாணி ஜெயராமுக்கு ஏன் கேள்விக்குறி ? அது அவங்களேதான்..
http://youtu.be/-9TzWT08Of8
madhu
27th August 2014, 07:28 AM
இரவின் மடியில்
மலர்களே மலருங்கள் படத்திலிருந்து...
இசைக்கவோ ... நம் கல்யாண ராகம்...
http://youtu.be/unLH4KwrqM0
madhu
27th August 2014, 07:31 AM
சிக்கிய வீடியோக்களை பதிஞ்சாச்சு.. சிக்காத வீடியோக்களைத் கண்டுபிடித்து தருவதற்கு ???
ஹலோ சிக்கா .... நீங்கதான் பொறுப்பு !
Gopal.s
27th August 2014, 07:54 AM
சிக்கிய வீடியோக்களை பதிஞ்சாச்சு.. சிக்காத வீடியோக்களைத் கண்டுபிடித்து தருவதற்கு ???
ஹலோ சிக்கா .... நீங்கதான் பொறுப்பு !
M- for Magician for Madhu!!!????
Richardsof
27th August 2014, 08:29 AM
http://i61.tinypic.com/wsryw2.jpg
Richardsof
27th August 2014, 08:30 AM
http://i58.tinypic.com/fwn2ar.jpg
Richardsof
27th August 2014, 08:32 AM
http://i57.tinypic.com/b5gn0l.jpg
rajeshkrv
27th August 2014, 08:46 AM
கேட்டதை கேட்டவுடனே தரும் மதுண்ணா ஒரு மந்திரவாதி தான்
Richardsof
27th August 2014, 08:55 AM
http://i61.tinypic.com/2jerajb.jpg
http://youtu.be/1w7wjlK7ZWI
vasudevan31355
27th August 2014, 09:10 AM
வணக்கம் ராஜேஷ்ஜி/ வினோத் சார்.
இன்று இசையரசியின் ஓர் அருமையான பாடல். 'நம்ம வீட்டு லஷ்மி' திரைப்படத்தில்
'வழிவழியே வந்த தமிழ் பண்பாடு
அதை விழி வழியே குலமகளே பண் பாடு'
தமிழ் மகளின் பண்பாட்டை விளக்கும் அருமையான வரிகள். பாரதியின் அழகு. அதைவிடசுசீலா அவர்களின் குரல் அழகு.
https://www.youtube.com/watch?v=saoGh7lyqfk&feature=player_detailpage
rajeshkrv
27th August 2014, 09:14 AM
மணப்பந்தல் ... எஸ்.வி ஜி அருமை ..
கன்னடத்தில் பந்துலு அவர்களும் ராஜம்மாவும் நடித்த ஸ்கூல் மாஸ்டர் திரைப்படம் சக்கை போடு போட்டது
எல்லா மொழியிலும் அந்த படம் வெளியானது (தலையெழுத்து .. தமிழில் தலைப்பு எங்கள் குடும்பம் பெரிசு)
ராதா மாதவ வினோத ராஜா - லிங்கப்பாவின் இசை இசையரசியும் பாடகர் திலகமும் இசைத்த காதல் பாடல்
https://www.youtube.com/watch?v=YU6T2ya7u1I
கன்னட ஒரிஜினல்
https://www.youtube.com/watch?v=ebsvvqMqG_c
rajeshkrv
27th August 2014, 09:17 AM
வணக்கம் வாசு ஜி. காலை வணக்கம் .
என் மனசுக்கு பிடித்த சரோவின் படங்களை அள்ளி தரும் வாசு ஜி மற்றும் எஸ்.வி அவர்களுக்கு நன்றியோ நன்றி
rajeshkrv
27th August 2014, 09:24 AM
மலையாளா ஸ்கூல் மாஸ்டரில் ஏ.எம்.ராஜாவும் இசையரசியும்
நம் கே.பாலாஜியும் அம்பிகாவும்
https://www.youtube.com/watch?v=GYDavN5S19I
rajeshkrv
27th August 2014, 09:27 AM
நமது நாடோடி மன்னன் போல் இந்த படத்திலும் பாடல்களும் சில காட்சிகள் மட்டும் வண்ணத்தில் படமாக்கப்பட்டன
இதோ சத்யன் அவர்களை சுற்றி ஜல தேவதைகள் .. குரல் இசையரசி & யேசுதாஸ்
https://www.youtube.com/watch?v=5D2PJM4H5B8
rajeshkrv
27th August 2014, 09:31 AM
வாசு ஜி,
பாபுராஜ் அவர்களின் இசையில் இது மயக்கும் பாடல்( நீங்கள் கட்டாயம் கேட்க வேண்டும்)
பாலாட்டு கோமன் திரையில் ஏ.எம்.ராஜாவுடன் இசையரசி
திரையில் சத்யன் மற்றும் ராகினி
இந்த பாடல் நம்மை கந்தர்வ லோகத்திற்கே கொண்டு செல்லும்
https://www.youtube.com/watch?v=cEn8SvPR2eI
raagadevan
27th August 2014, 09:34 AM
வாணி ஜெயராமுக்கு ஏன் கேள்விக்குறி ? அது அவங்களேதான்..
http://youtu.be/-9TzWT08Of8
Here is the original version of பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே composed by Shankar/Ganesh...
https://www.youtube.com/watch?v=hUo1gcVDYg4
gkrishna
27th August 2014, 09:45 AM
எல்லோருக்கும் காலை வணக்கம்
ராஜேஷ் சார் இசைஅரசி பாடல் ஒன்று நேற்று நினைவிற்கு வந்தது
'என்னை பார் என் அழகை பார்' னு ஒரு படம்
'தொட்டு பார் பட்டு போன்ற '
இந்த படம் தியாகராஜன் படம் னு நினைவு ilayaraja music
ஜெயமாலினி சில்க் ஸ்மிதா ஜோதி லக்ஷ்மி நடித்து வெளி வந்த படம்
http://www.meditations.jp/images/2500547.png
http://www.inbaminge.com/t/e/Ennai%20Paar%20En%20Azhagai%20Paar/
மேலும் மூவர் பாடிய பாடல் நினைவிற்கு வந்தது
மூன்று தெய்வங்கள் படத்தில்
'திருப்பதி சென்று திரும்பி வந்தால் 'சீர்காழி,வீரமணி,ராதா'
'நடப்பது சுகம் என் நடத்து ' பாடகர்திலகம்,பாலா,சாய்பாபா
வேலைக்காரன் படத்தில்
'தோட்டத்திலே பாத்தி கட்டி ' சைலஜா சாய்பாபா பாலா
வாசு சார்
இந்த வீரமணி ராதா பற்றி குறிப்பு நம்ம திரியில் இதுவரை இடம் பெறவில்லை என் நினைக்கிறன்
vasudevan31355
27th August 2014, 09:52 AM
ராஜேஷ்ஜி,
http://www.leela.tv/uploads/thumbs/0866d23a0-1.jpg
நீங்கள் நேற்று அளித்த 'Nrithasala' மலையாளப் படத்தின் காபரே பாடலை இன்றுதான் பார்த்தேன். த்க்ஷனாமூர்த்தியின் இசையில் பாடல் அமர்க்களம். எங்கள் ஈஸ்வரி எமன் மலையாளத்திலும் காபரே பாடலில் உச்சங்கள் தொடுகிறார். 'பூமணம்... பூமணம்... பூமணம்' அட்டகாசம். ஜெயகுமாரி மற்றவர்களை போல் 'தையா தக்க' என்று குதிக்க மாட்டார். அளவெடுத்து தைதாற் போன்ற கண் கச்சித உடம்பு, குழந்தை போல முகம். அப்பாவித்தன்மை அதிகம் கொண்ட முகம்.
வசந்தா சோக கீதம் அருமை.
ஜி! ஒரு சின்ன திருத்தம். குழந்தைக்குத் தாயாக வந்து தவித்து குழந்தையைக் கவனிக்கமுடியாமல் காபரே ஆடும் நடிகை மேஜிக் ராதிகா அல்ல. அது கனக துர்கா. ஆனால் அச்சு அசலாக 'மேஜிக்' ராதிகா போலவே இருப்பதால் கண்டு பிடிப்பது மிக சிரமம்.
அற்புதமான பாடலுக்கு நன்றி ராஜேஷ்ஜி
vasudevan31355
27th August 2014, 09:56 AM
வணக்கம் கிருஷ்ணாஜி.
vasudevan31355
27th August 2014, 10:00 AM
மதுண்ணா…கோவிலிலே வீடுகட்டி ..பாட்டு வெகு நாள்முன்னால் கேட்டது..பார்த்ததில்லை..
சி.க.சார்,
'கோவிலிலே வீடு கட்டி' பாடல் 'இன்றைய ஸ்பெஷலி'ல் 'பேசும்பட' ஆவணத்துடன் விவரிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் நீங்கள் பார்க்க வில்லை போலும்.
rajeshkrv
27th August 2014, 10:01 AM
வாசு ஜி, திருத்தத்திற்கு நன்றி.ஆம் மேஜிக் ராதிகா போலவே இருந்தார்.
chinnakkannan
27th August 2014, 10:02 AM
ஹாய் ஆல்..குட்மார்னிங்க் :)
வழக்கம் போல ராஜேஷ்வாசு சாரின் ஜூகல் பந்திப் பாட்டுக்கள்..எஸ்வி சாரின் மணப்பந்தல் பார்த்துப் பார்த்து நின்றதிலே..க்ருஷ்ணா ஜியின் என்னைப் பார் என் அழகைப்பார் (எப்ப்டி ஜி இந்தப் படமெல்லாம் நினைவில் வச்சிருக்கீங்க!) மற்றும்
//சிக்கிய வீடியோக்களை பதிஞ்சாச்சு.. சிக்
காத வீடியோக்களைத் கண்டுபிடித்து தருவதற்கு ???
ஹலோ சிக்கா .... நீங்கதான் பொறுப்பு !// மதுண்ணாவின் பாடல்கள்..அனைத்துக்கும் ஒரு நன்றி + ஓ :) இன்னிக்கு ராத்திரி ஹோம் ஒர்க் நிறைய இருக்கும் போல இருக்கே :)
வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி
பறக்கும்பந்து பறக்கும்
ஆனைமுகனே ..(விளையாட்டுப் பிள்ளை)
யா..விளையாட்டுப் பாடல்கள்..விளையாட்டாச் சொல்ல மாட்டீஙக்ளா என்ன..( பொட்டுக் கேப் வெச்சாச்சு :) )
ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை
ராகமே தாளமே பாவமே
ஓடிவா.. ஓடிவா..
chinnakkannan
27th August 2014, 10:11 AM
//கோவிலிலே வீடு கட்டி' பாடல் 'இன்றைய ஸ்பெஷலி'ல் 'பேசும்பட' ஆவணத்துடன் விவரிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் நீங்கள் பார்க்க வில்லை போலும்.// அண்ணாவின் ஆசை விமர்சனம் பார்த்தேன்வாசு சார்.. இது மறுபடி செக் பண்ணிப் படிக்கணும்.. நன்றி
rajeshkrv
27th August 2014, 10:11 AM
சி.க வாங்கோ வாங்கோ .....
rajeshkrv
27th August 2014, 10:13 AM
கிருஷ்ணா ஜி
என்னைப்பார் என் அழகைப்பார் .. பாடல் இசையரசி, சசிரேகா மற்றும் சைலஜா பாடிய பாடல்..
vasudevan31355
27th August 2014, 10:18 AM
இன்றைய ஸ்பெஷல் (62)
http://i1.ytimg.com/vi/vSEfPHftKa0/sddefault.jpg
'இன்றைய ஸ்பெஷல்' பாடலில் மனதை வருடும் அருமையான டூயட் ஒன்று. 'சித்ராங்கி' (1964) திரைப்படத்தில் பாடகர் திலகமும், இன்னிசைக்குயிலும் இணைந்து பாடும் அமைதியான ஒரு காதல் பாடல்.
நிஜ கணவன் மனைவி இணைந்து பாடி நடித்தது. இயற்கை எழில் கொண்ட மலைப்பகுதி, அருவி நீரோடைகளில் இப்பாடல் படமாக்கப் பட்டிருக்கும்.. ஏ வி.எம்.ராஜன் இப்பாடலில் ஸ்லிம்மாக சேவக உடை அணிந்து இருப்பார். புஷ்பலதாவும் வெரி சிம்பிள். வரிகள் மிக மிக எளிமை. பாடகர் திலகம் ராஜன் குரலுக்காக மெனக்கெட்டிருப்பார். சுசீலாம்மாவின் குரல் தெள்ளத் தெளிவு தேவாமிர்தம்.
எனக்கென்னவோ இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் வானத்தில் இறக்கை கட்டிப் பறப்பது போன்ற ஓர் உணர்வுதான் ஏற்படும். கொஞ்சம் அபூர்வ பாடல் வகையைச் சேர்ந்ததுதான் இது.
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த இப்படத்தில் மனோகர், ஷீலா தேவி, ராமதாஸ் போன்றோர் நடித்திருந்தனர். இசை அமைத்தவர் வேதா. இயக்கம் ஆர் .எஸ்.மணி.
http://www.thehindu.com/multimedia/dynamic/00144/16CP_CHITHRANGI_jpg_144911e.jpg
பாடல்கள் ஒவ்வொன்றும் அருமையான வைரமணிகள்.
'நெஞ்சினிலே நினைவு முகம்' நெஞ்சை விட்டு அகலாது என்றும்.
'வேலோடு விளையாடும் முருகையா' சுசீலாவின் பக்திப் பாடல்
'பொழுது புலர்ந்தது பூப்போலே... பூமி வெளுத்தது மா போலே' சுசீலா உற்சாகம்
'அன்ன நடை சின்ன இடை எப்படி' ஜமுனா ராணி மற்றும் கோரஸ் அமர்க்களம். கோபால் சாரின் பேவரிட்.
'இன்று வந்த சொந்தமா' என்றுமே மனதில் சொந்தம் கொண்டாடும்.
என்று பாடல்களுக்குப் பஞ்சமில்லை. இனிமைக்கும்தான்.
http://i.ytimg.com/vi/QBOhV_LXDNk/mqdefault.jpg
இனி பாடலின் வரிகள்
இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே
இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே
இன்று வந்த சொந்தமா
வெண்ணையை அள்ளி உண்டு
வேங்குழல் ஊதி நின்று
கண்ணனாக நீ இருந்த காலத்திலே
என்னையே கொள்ளை கொண்ட
புன்னகை வீசி நின்ற
கன்னிகை ராதையாக
தேடி வந்தாய்
குயில் இசையும்
குழல் இசையும்
குழைந்திடும் வேளையிலே
அன்பில் மிதந்து தன்னை மறந்து
அகம் மகிழ்ந்தாடியது
இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே
இன்று வந்த சொந்தமா
கணையாழி கையில் தந்து
துஷ்யந்தனாக வந்து
காதல் மணம் புரிந்த காலத்திலே
மானோடு நீ வளர்ந்து
சகுந்தலையாக இருந்து
மாறாத அன்பு கொண்டு
மாலையிட்டாய்.
குளிர் நிலவும் மலர் மணமும்
குலாவிடும் சோலையிலே
அன்பில் மிதந்து தன்னை மறந்து
அகம் மகிழ்ந்தாடியது
இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே
இன்று வந்த சொந்தமா
https://www.youtube.com/watch?v=QBOhV_LXDNk&feature=player_detailpage#t=182
chinnakkannan
27th August 2014, 10:21 AM
வாவ் வாசு சார்.. எனக்க்கு ரொம்ப்ப்ப பிடிச்ச பாட்டு இன்று வந்த சொந்தமா... ம்ம் நம் சொந்தம் எப்போதும் தொடர்கதை தான்..:) நன்றி.. சித்ராங்கி பார்த்ததில்லை.. நல்லா இருக்குமா..
chinnakkannan
27th August 2014, 10:21 AM
ஃபார் எ சேஞ்ச்..எனக்குத்தெரிஞ்ச பாட்டைப் போட்டதுக்காக வாசு சாருக்கு மறுபடி ஒரு தாங்க்ஸ்
gkrishna
27th August 2014, 10:23 AM
நெஞ்சுக்கு நீதி 1979 கலைஞ்ர் படம்
ஜெய்சங்கர் சங்கீதா ஜோடி னு நினைவு
சங்கர் கணேஷ் இசை
எனக்கொரு கதை சொல்லு கண்ணே
எனை விட கதை எது கண்ணா
அருமையான ஹம்மிங்
இது பாலா சுசீலா தானே ?
http://www.inbaminge.com/t/n/Nenjukku%20Neethi/folder.jpg
http://www.mediafire.com/?q91b4bayqapkyp1
http://www.mediafire.com/?216mi596d4d6ugu
gkrishna
27th August 2014, 10:25 AM
கிருஷ்ணா ஜி
என்னைப்பார் என் அழகைப்பார் .. பாடல் இசையரசி, சசிரேகா மற்றும் சைலஜா பாடிய பாடல்..
கரெக்ட் ராஜேஷ் சார்
படத்தில் ஜெயமாலினி,ஜோதிலட்சுமி,சில்க் மூன்று பேரும் பாடுவார்கள் என்று நினைவு .
வாசு சார் இன்றைய ஸ்பெஷல் அருமை.நேர்த்தியான இசை
vasudevan31355
27th August 2014, 10:27 AM
வாவ் வாசு சார்.. எனக்க்கு ரொம்ப்ப்ப பிடிச்ச பாட்டு இன்று வந்த சொந்தமா... ம்ம் நம் சொந்தம் எப்போதும் தொடர்கதை தான்..:) நன்றி.. சித்ராங்கி பார்த்ததில்லை.. நல்லா இருக்குமா..
நம் சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் சி.க.சார். நன்றி! நேற்று நீங்கள் பண்ணிய ஹோம் வொர்க்குக்கும் சேர்த்து. (நைட் ஷிப்ட்டில் ரசித்துப் படித்தேன்)
vasudevan31355
27th August 2014, 10:28 AM
ஃபார் எ சேஞ்ச்..எனக்குத்தெரிஞ்ச பாட்டைப் போட்டதுக்காக வாசு சாருக்கு மறுபடி ஒரு தாங்க்ஸ்
கடவுளே! இதுக்கே இப்படின்னா நாளைக்கு?
rajeshkrv
27th August 2014, 10:33 AM
பாரதியின் அழகும் இசையரசியின் பாடலும் அருமை வாசு ஜி.
இன்றைய ஸ்பெஷல் தூள். எனக்கு பிடித்த படப்பாடல்கள் ... நன்றி வாசு ஜி
gkrishna
27th August 2014, 10:33 AM
சி கே சார்
சித்ராங்கி பற்றிய ஹிந்து randor guy விமர்சனம்
AVM. Rajan, Pushpalatha, R. S. Manohar, Sheela, Ramadas, A. Karunanidhi, Pushpamala, Kannan, Navamani, Sulochana, Arunadevi
When Modern Theatres announced this film, many thought it would be a rehash of the old folk myth, Sarangadhara. However, it was quite different, coming from the house of T. R. Sundaram. Chitrangi was the tale of a king, princes and poor women, deftly directed by editor-turned-director R. S. Mani.
The king has a brother (AVM. Rajan) and an ambitious commander eyeing the throne (Manohar). Escaping from the kingdom, the brother meets with an accident and is saved by a young woman (Pushpalatha) who takes him to her humble home and looks after him. The two fall in love. The young woman who has no knowledge of her lover's identity marries him and he leaves her even before their wedding night. She suffers in silence, and then sets out to find her husband. She undergoes many trials and tribulations and finally reaches the capital of the kingdom where she is shocked to find that the king is none other than her husband! More intrigues follow preventing her from joining her husband. However, the problems are solved and the two live happily thereafter...
R. S. Mani, a native of Salem, began his career as editor and had the privilege of working with the American Tamil filmmaker Ellis R Dungan on his film Kalamegam (1938) which featured nagaswaram legend T. N. Rajaratnam Pillai in the lead. Later, Mani joined Jupiter Pictures where he worked as editor and got his break as director with the Jupiter box office bonanza Kannagi (1942). Immediately, he directed another Jupiter film, Kubera Kuchela (1943), a surprise hit featuring P.U. Chinnappa and T. R. Rajakumari.
There was no looking back after these hits, and Mani went on to make many popular movies such as Krishna Bhakthi and Devaki, and turned producer with the successful film, Maman Magal.
Surprisingly, he took to religion later and moved away from the world of films, forgetting all about lens and lightsHe passed away some years ago.
AVM. Rajan and Pushpalatha met during the AVM production, Nanum Oru Penn, fell in love and got married. They appeared in many movies together and one of them was Chitrangi. However, they were not as successful as they were expected to be.
A. Karunanidhi, the talented in-house comedian of Modern Theatres, and Pushpamala provided comic relief. Pushpamala was popular for some time but later faded into oblivion.
Chitrangi was a characteristic Modern Theatres production with fast-paced storytelling — it was sharply edited, which is not surprising, considering Mani was a top-class editor.
However, the film did not prove successful at the box office. It was released after the sad demise of Modern Theatres boss and South Indian movie mogul T. R. Sundaram in 1963 during the making of Konjum Kumari featuring Manohar and Manorama in lead roles.
Remembered for the fast-paced narration and deft direction of R. S. Mani.
rajeshkrv
27th August 2014, 10:33 AM
கடவுளே! இதுக்கே இப்படின்னா நாளைக்கு?
நாளைக்கு காலில் விழுந்துவிடுவார் :)
Richardsof
27th August 2014, 10:35 AM
http://i58.tinypic.com/2edsgv5.jpg
http://youtu.be/usgUR94gVko
rajeshkrv
27th August 2014, 10:36 AM
கிருஷ்ணா ஜி என்ன இது கொடுமை ... Randor Guy Gay ஆகிவிட்டார்....
Subramaniam Ramajayam
27th August 2014, 10:38 AM
வாவ் வாசு சார்.. எனக்க்கு ரொம்ப்ப்ப பிடிச்ச பாட்டு இன்று வந்த சொந்தமா... ம்ம் நம் சொந்தம் எப்போதும் தொடர்கதை தான்..:) நன்றி.. சித்ராங்கி பார்த்ததில்லை.. நல்லா இருக்குமா..
CK sir.
chitrangi much expected avm rajan movie other than songs no other special thing to mention usual raja rani picture average movie only three four weeks ran in city saw it maharaja theatre which was opened with annai illam of NT depawali 63year.
vasudevan31355
27th August 2014, 10:44 AM
கிருஷ்ணா சார்,
என்னைப் பார் என் அழகைப் பார், நெஞ்சுக்கு நீதி என்று சற்று இடைவெளிக்குப் பின் மீண்டும் அதகளம் போல.
(அப்புறம் 'இன்றைய ஸ்பெஷல் அருமை' என்ற வார்த்தை போதாது. அந்தப் பாடலைப் பற்றிய தங்களது கருத்துக்கள் பதிந்தால் சுவையாக இருக்கும். முயலுங்கள்.)
ரபி பற்றிய கட்டுரை இப்போதுதான் படித்து முடித்தேன். சாரி! லேட்.
அருமையான கட்டுரை. ரபி வாழ்வில் பட்ட கஷ்டங்கள் கண்ணீரை வரவழைத்தன. இது போன்ற கட்டுரைகளை தேடித் பிடித்து போடும் தங்களுக்கு என் நன்றிகள்.
'பைஜு பவரா' படத்தில் பரத் பூஷன் அவர்களுக்காக ரபி பாடும் இந்த ஒரு பாடல் போதும் அவருடைய பெயரை வாழ்நாள் முழுக்கக் புகழ்ந்து கூற.
"தூ கங்கா கி மவுஜ்மே ஜமுனா கா'
படகில் மீனாகுமாரி வெட்கத்துடன் பாடல் முழுக்க முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு. அட்டகாசம். (சி.க. கண்டிப்பாக பாருங்கள்)
https://www.youtube.com/watch?v=oj3t5jOTYmw&feature=player_detailpage
gkrishna
27th August 2014, 10:44 AM
வாசு ஸ்ரீ
உங்களை சார் என்று டைப் அடிப்பதற்கு பதில் ஸ்ரீ என்று அடித்து விட்டேன் பரவாய் இல்லை . இதுவும் நன்றாக தான் இருக்கிறது
chitrangi படத்தில் நடித்துள்ள அம்முகுட்டி புஷ்பமாலா பற்றி 2008 இல் வெளிவந்த செய்தி குறிப்பு
In a goodwill gesture, AIADMK General Secretary J Jayalalithaa today gave an assistance of Rs 25,000 to yesteryear actress Ammukutty Pushpamala.
Ms Jayalalithaa gave the assistance to the actress when she called on her at her Poes Garden residence and explained her poor financial condition.
The AIADMK supremo also said Pushpamala, who had acted along with Ms Jayalalithaa in some of the films, would be given a monthly assistance of Rs 5,000 to meet her family expenditure.
Ms Pushpamala, after receiving the assistance, thanked Ms Jayalalithaa for her gesture, an AIADMK release said.
“Ammukkutty” Pushpamala
“அம்முக்குட்டி” புஷ்பமாலா- காதலித்தால் போதுமா, கொஞ்சும் குமரி, நான் வாழவைப்பேன், எதிரிகள் ஜாக்கிரதை, நான்கு கில்லாடிகள், மகளே உன் சமது, வெகுளிப்பெண், காரைக்கால் அம்மையார், என்னைப் போல் ஒருவன் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்த நகைச்சுவை நடிகை. மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் பேரும்பான்மையானவற்றில் இவர் பங்குபெற்றுள்ளார். 1965-1975- களில் தமிழ்ப்படங்களில் இவரது பங்களிப்பு அளப்பரியது. தற்போதும் சென்னையில் உள்ளார். தற்போது இவருக்கு வயது 70 இருக்கலாம்.
தங்கபதக்கம் திரை படத்தில் தம்பி சோவின் மனைவியாக வருவார்
http://antrukandamugam.files.wordpress.com/2013/08/ammukkutty-pushpamala-kumari-rukmoni-ennai-pol-oruvan-1976.jpg?w=593&h=335
http://antrukandamugam.files.wordpress.com/2013/08/ammukkutty-pushpamala-vegulippenn-1971-6a.jpg?w=487
திருத்தத்திற்கு நன்றி ராஜேஷ் ஸ்ரீ
vasudevan31355
27th August 2014, 10:46 AM
கிருஷ்ணா ஜி என்ன இது கொடுமை ... Randor Guy Gay ஆகிவிட்டார்....
ராஜேஷ்ஜி
அய்யய்யோ! தாங்க முடியல.:) வயிற்றுவலி மாத்திரை ப்ளீஸ்.
rajeshkrv
27th August 2014, 10:47 AM
பைஜு பாவ்ரா ... எல்லா பாடல்களும் அருமை அருமை ... பரத் பூஷன் பெரிய இடத்திற்கு வந்திருக்கவேண்டியவர் மறக்கடிக்கப்பட்டார்
vasudevan31355
27th August 2014, 10:47 AM
வாசு ஸ்ரீ
யாருப்பா அது? ஆப்பிள் ஜூஸ் கொண்டா!
rajeshkrv
27th August 2014, 10:48 AM
கிருஷ்ணா ஜி என்ன இன்று ஜி ஸ்ரீ யாக விழுகிறது .. கை கேயாக என்ன நடக்குது ... என்னமோ நடக்குது ..
rajeshkrv
27th August 2014, 10:48 AM
ராஜேஷ்ஜி
அய்யய்யோ! தாங்க முடியல.:) வயிற்றுவலி மாத்திரை ப்ளீஸ்.
கூரியர் அனுப்பியுள்ளேன் நாளை வந்து விடும்
gkrishna
27th August 2014, 10:51 AM
கிருஷ்ணா ஜி என்ன இன்று ஜி ஸ்ரீ யாக விழுகிறது .. கை கேயாக என்ன நடக்குது ... என்னமோ நடக்குது ..
(பாலையா பாணியில் )
பித்த உடம்பு ராத்திரி குளிர் ஜாஸ்தி சென்னையில் கை பதறுது
ஒரு பக்கம்
என்னை பார் என் அழகை பார் சில்க்,ஜெயமாலினி,ஜோதி நடனம் ,
இன்னொரு பக்கம் வாசு ஸ்ரீ in சித்ராங்கி
ஏதோ நடக்கிறது சுகமாய் இருக்கிறது தானே
vasudevan31355
27th August 2014, 10:57 AM
பைஜு பாவ்ரா ... எல்லா பாடல்களும் அருமை அருமை ... பரத் பூஷன் பெரிய இடத்திற்கு வந்திருக்கவேண்டியவர் மறக்கடிக்கப்பட்டார்
கொஞ்சம் பெண்தன்மையுடன் இருப்பதாலோ என்னவோ ராஜேஷ்ஜி.
'இக்கு பரதேசி மேரா தில் லேகயா'
நம் கொலு பொம்மை மதுபாலா, பூஷன் அட்டகாசம்.
பாடல் பட்டை கிளப்பும். மகுடியின் இனிமையான இசை மெய்மறக்கச் செய்து விடுமே! பரத் பூஷன் வித்தியாசமான மேக்-அப்பில். ஆஷா, ரபி ரகளையோ ரகளை. துள்ளல் போட வைக்கும் பாடல். 'பாகன்' திரைப்படத்தில்
https://www.youtube.com/watch?v=c1RyLil-4KY&feature=player_detailpage
gkrishna
27th August 2014, 11:02 AM
http://antrukandamugam.files.wordpress.com/2014/08/galatta-kalyanam-1968-c.jpg?w=593&h=326
http://antrukandamugam.files.wordpress.com/2014/08/galatta-kalyanam-1968-f.jpg?w=593
http://antrukandamugam.files.wordpress.com/2014/08/galatta-kalyanam-1968-g.jpg?w=593
மேல உள்ள இரண்டு டைட்டில் கார்டு கலாட்ட கல்யாணம் படம் சார்
ராஜேஸ்வரி புதுமுகம் - உறவினில் பிப்டி பாட்டில் வரும் நடிகை என்று நினைவு - வாசு சார் கூட இன்றைய ஸ்பெஷல் போட்டு உள்ளார்
இந்த தேவ மனோஹரி புதுமுகம் எந்த ரோல் சார் கலாட்ட கல்யாணம் படத்தில்
சோவின் ஜோடியாக வரும் நடிகை - (ஜெய் விட்டல்) யார் சார்
vasudevan31355
27th August 2014, 11:05 AM
ராஜேஷ்ஜி!
உங்களுக்கு பிடித்த 'அபிநய சரஸ்வதி' ரிகார்டிங் ரூமில் இரு மைக்குகள் முன்னால் டப்பிங் கொடுப்பதைப் பாருங்கள். மிக அபூர்வமான படம். எங்கள் ராஜேஷ்ஜிக்காகவே சேமித்து வைத்திருந்தேன். அப்புறம் அத்துடன் இளவயது சரோஜாதேவியின் படம் போனஸ்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/mic.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/mic.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355011/young.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355011/young.jpg.html)
mr_karthik
27th August 2014, 11:35 AM
டியர் ராகவேந்தர் சார்,
பொங்கும் பூம்புனல் செம ஸ்பீட். பாடல்கள் அனைத்தும் ரொம்ப அபூர்வமானவை. தங்கள் விளக்கம் இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தலாமோ என்று தோன்றுகிறது. அதாவது படம் வந்த காலத்தில் தங்கள் அனுபவம் அது, இது என்று இன்னும் சுவாரஸ்யம் சேர்க்கலாம். இந்த திரியே மலரும் நினைவுகளுக்காகத்தானே....
mr_karthik
27th August 2014, 11:39 AM
டியர் மது சார்,
நீங்கள் ஏதாவது ஜாடியைத் திறக்கப்போய் பூதம் எதுவும் வெளிப்பட்டுவிட்டதா?. இவ்வளவு வேகமாக வீடியோக்களைத் தேடித்தர சாதாரண மனிதனால் முடியாது. அப்படி எதுவும் இருந்தால் அந்த பூதத்தை இங்கே கொஞ்சம் அனுப்புங்களேன்.
வீடியோக்கள் அனைத்தும் அருமை.
நன்றிகள்..
mr_karthik
27th August 2014, 11:53 AM
டியர் சின்னக்கண்ணன் சார், கோபால் சார், ராஜேஷ் சார், கிருஷ்ணாஜி..
பதிவுகள் அனைத்தும் அருமை. பல்சுவையாக அமைந்து களிப்பூட்டுகின்றன. எவ்வளவு அருமையான அபூர்வமான தகவல்கள், வீடியோக்கள் (பல்வேறு மொழிகளிலும்) புகுந்து விளையாடுகிறீர்கள்.
டியர் வினோத் சார்,
கடந்த கால அபூர்வ ஆவணங்கள் அனைத்தும் அருமை. மணப்பந்தல் விளம்பரத்துடன் 'பார்த்துப்பார்த்து நின்றதிலே' பாடலையும் இணைத்து தந்தமைக்கு நன்றி...
vasudevan31355
27th August 2014, 11:54 AM
நண்பர்களே!
ஒளிப்பதிவாளர் ஏ.வின்சென்ட் அவர்களின் கட்டுரை 'சினிமா எக்ஸ்ப்ரெஸ்' (April 2013) இதழில் வெளிவந்தது. படித்து மகிழுங்கள்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-51.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/1-51.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-50.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/2-50.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-34.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/3-34.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4-24.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/4-24.jpg.html)
gkrishna
27th August 2014, 12:22 PM
http://3.bp.blogspot.com/_VaAla-wYdGM/SwJztVK95rI/AAAAAAAAAAU/dLl6kq4d-Vw/s320/Vayanadan_Thampan_300.jpg
வாசு சார் அவர்களின் வின்சென்ட் கட்டுரை படித்த போது சில நினைவுகள் வந்தன .
வயநாடன் தம்பன் கமல் லதா நடித்து இருக்கும் மலையாள hooror movie .
கமல் தன இளமை நீடிப்பதற்காக கன்னி பெண்களை மயக்கி பலி கொடுக்கும் வேடத்தில் நடித்து இருப்பார் .தமிழ் இல் கன்னி வேட்டை என்று டப் ஆகி வந்தது . கமல் 100 வயது கிழவனாக தோல் சுருங்கி வரும் வேடம் நல்ல நினைவில் உள்ளது
y ஜி மகேந்திர குரல் கமலுக்கு பின்னணி குரல் . இரு நிலவுகள் படத்தில் போல்
http://i1.ytimg.com/vi/DFSiKRNArj8/mqdefault.jpg
Richardsof
27th August 2014, 12:27 PM
http://i58.tinypic.com/5aj2tg.jpg
Richardsof
27th August 2014, 12:28 PM
http://i57.tinypic.com/2mzk206.jpg
gkrishna
27th August 2014, 12:34 PM
அதே போல் 'பார்கவி நிலையம்' திரை படம் ஒரு எழுத்தாளர் தனியாக பெரிய வீட்டில் இருந்து கொண்டு கதைகள் எழதும் போது அவருக்கு கிடைக்கும் சில புதுமையான அனுபவங்களை சித்தரிக்கும் திரைப்படம்
விஜய நிர்மலா ஆவியாக வருவார்
http://3.bp.blogspot.com/_VaAla-wYdGM/Sv0PWcUKO9I/AAAAAAAAAAM/PqmBFM5wkAA/s320/Bhargavi1.jpg
Adapted from the Sultan’s short story Neelavelicham from the compilation of his short stories Paavappettavarudey Veshya (The Destitutes’ Whore), the story emphatically told you and showed you the existence of the supernatural and a narrative that was heart-warming and gut-wrenching at the same time, told in simple prose, the way only the Sultan could. Madhu ( The Unnamed One onscreen ), a struggling novelist rents out a mansion considered haunted by the spirit of a young lady who died under mysterious circumstances in it. A die-hard romantic, foolhardy and brave, the author senses a great story in the making, if only he could get it from the “source.” The Spirit, sensing this slowly befriends the novelist, and in their interactions unravel a gripping tale of jealous rage, misdirected and cold vengeance and a cosmic propriety to deliver justice, even after so many years. The movie was also the debut of two actors, the lead actress Vijaya Nirmala in Malayalam cinema and a certain Padmadalakshan who would go on to become the Kuthiravattam Pappu as we know him today, with the moniker borrowed from this movie, MP Kuthiravattam. Bhaskar Rao ( A Vincent’s protege’) was the Director of Cinematography (an amazing job in Black and White! ).
The Songs of Bhargavi Nilayam.
The songs that went on to become a part of the Malayalam cinema’s playback heritage were written by P Bhaskaran, set to music by MS Baburaj.
[ Please click on the respective links to watch the available video clippings ]
Anuragamadhuchashakam S Janaki
Arabikkadaloru KJ Yesudas, P Susheela
Ekanthathayudey Apara Theeram Kamukara Purushothaman
Pottatha Ponnin S Janaki
Pottithakarnna ( Pathos Interlude ) S Janaki
Thamasamenthe Varuvaan KJ Yesudas
Vasantha Panchaminaalil S Janaki
ராஜேஷ் சார்/வாசு சார்/மது சார் சில பாடல்களை கொடுத்த நினைவு
vasudevan31355
27th August 2014, 12:46 PM
அதே போல் 'பார்கவி நிலையம்' திரை படம் ஒரு எழுத்தாளர் தனியாக பெரிய வீட்டில் இருந்து கொண்டு கதைகள் எழதும் போது அவருக்கு கிடைக்கும் சில புதுமையான அனுபவங்களை சித்தரிக்கும் திரைப்படம்
விஜய நிர்மலா ஆவியாக வருவார்
http://avincentfilmmaker.files.wordpress.com/2012/09/vijaya-nirmala-in-bhargavi-nilayam-1964.jpg?w=560&h=373
vasudevan31355
27th August 2014, 12:47 PM
http://yentha.s3.amazonaws.com/contentuploads/5e658b8f_bhargavinilayam.jpg
vasudevan31355
27th August 2014, 12:48 PM
http://3.bp.blogspot.com/_95kIGo4ydv4/TU3_o7lsXgI/AAAAAAAAE-w/HFWN0dbKo7A/s1600/Bhargavi%2BNilayam%2Bcopy.JPG
vasudevan31355
27th August 2014, 12:49 PM
http://i.ytimg.com/vi/zKAzWd_S2Ow/maxresdefault.jpg
gkrishna
27th August 2014, 12:49 PM
வாசு சார்
வின்சென்ட் இன் கட்டுரைகள் சில நினைவலைகளை மீட்டி விட்டன
கேரளாவில் 1980-81 கால கட்டத்தில் இருந்த போது பார்த்த சில படங்களில் பார்கவி நிலையம் திரைப்படம் ஒன்று . நமது தமிழ் நெஞ்சம் மறப்பதில்லை போன்று இருக்கும். மது அருமையாக நடித்து இருப்பார்
இந்த படத்தை பற்றி திருவனந்தபுரம் ஹிந்து பதிப்பில் திரு விஜயகுமார் அவர்கள் எழுதி உள்ள (தமிழ் இல் ராண்டார் கை எழுதுவது போல் )
விமர்சனம்
Madhu, Prem Nazir, P. J. Antony, Vijaya Nirmala, Adoor Bhasi
This first ghost story film in Malayalam is 45 years old. Released on November 22, 1964, the film confirms the existence of supernatural powers unlike some of the early Indian films in this genre.
Even suspense thrillers of the later period, which can also be classified under the ‘ghost story’ group did not deal with ‘real’ ghosts. For example Hindi films like ‘Bees Saal Baad’ (1962), ‘Woh Kaun Thi’ (1964), ‘Kohra’ (1964) had heroines in disguise as ghosts. But in ‘Bhargavi Nilayam,’ the audience, for the first time in Indian cinema, were told about the existence of the supernatural .
This ghost film was developed from a short story, ‘Neela Velicham,’ by Vaikom Mohammed Basheer, which was included in his short story compilation titled ‘Paavappettavarude Veshya’ published in 1952. The script and dialogues of the film was written by the novelist himself. The film was a huge box office hit. The film marked the directorial debut of noted cinematographer A. Vincent. It was noted for its camera work by P. Bhaskar Rao that gelled well with the script. But the highpoint was the haunting music by M. S. Baburaj.
An enthusiastic and talented novelist (Madhu) comes to stay in a desolate mansion named ‘Bhargavi Nilayam.’ The novelist and his servant Cheriya Pareekkanni (Adoor Bhasi) experience the presence of a strange entity here. They come to know from the local people that it is a haunted house. The story is that it is haunted by the ghost of the daughter of the previous owner. The novelist and his servant encounter strange happenings here - the gramophone plays on its own, objects move around. The novelist finds some old letters written to Bhargavi (Vijaya Nirmala) by her lover Sasikumar (Prem Nazir). It is believed that the ghost of Bhargavi now haunts this house.
The letters give some indication about their love affair and their tragic death. The novelist decides to probe the matter. He starts writing the story of Bhargavi. The information gathered from the local people and the hints in the letters help him in his writing. The story develops. Bhargavi falls in love with her neighbour Sasikumar who is a talented poet and singer. Bharagavi’s father’s nephew, Nanukuttan (P. J. Antony) is also in love with Bhargavi. But Bhargavi hates Nanukuttan who is a wicked wastrel. Nanukuttan tries all nasty tricks to separate the lovers. He kills Sasikumar. Bharagavi becomes furious when she comes to know of her lover’s murder. In a scuffle Nanukuttan pushes Bhargavi into a well, killing her. Nanukuttan spreads the news that Bhargavi had committed suicide.
The novelist reads out the story to the ghost who by now has become quite compassionate with him. Nanukuttan overhears the story. He fears that once the story is published the truth behind the death of Bhargavi and Sasikumar will be out. He attacks the novelist and a fight ensues. Both of them fall into the well in which Bharagavi was drowned. The novelist is helped by the ghost but Nanukuttan is killed. This is Bharagavi’s revenge.
Madhu excelled in the role of the novelist. Prem Nazir was at home in the role of a romantic hero. P. J. Antony was stunning as the ruthless Nanukuttan, while Adoor Bhasi provides some light moments with his comedy. Pappu, who later became popular as Kuthiravattom Pappu was cast in a small comic role. His character was called ‘Kuthiravattom,’ a name that stuck for the rest of his career. Vijaya Nirmala excelled in what probably was her first major role.
All the seven songs by P.Bhaskaran and Baburaj are popular even today. ‘Thamasamente varuvaan…’ sung by K. J. Yesudas is still considered by many surveys as the best film song in the language. ‘Vaasantha panchami naalil....,’ ‘Anuraga madhuchashakam...,’ ‘Pottatha ponnin kinavu kondoru...’ and ‘Potti thakarna kinavu kondoru…’ all sung by S. Janaki became super hits. The Yesudas-P. Susheela duet ‘Arabikkadaloru manavalan...’ and Kamukara Purushothaman’s masterpiece ‘Ekanthathayude apaara theeram...’ are the other memorable songs.
Will be remembered: As the first ghost film in Malayalam. The only film for which Vaikom Mohammed Basheer wrote script and dialogues. As the first Malayalam film of Vijaya Nirmala, for its wonderful music, and for the directorial debut of A.Vincent.
B. VIJAYAKUMAR
gkrishna
27th August 2014, 12:51 PM
வாசு சார்
பார்கவி நிலையம் நிழல் படங்கள் அருமை (ஒரு வார்த்தையில் சொல்வதாக நினைக்க வேண்டாம் ) வேறு வார்த்தை வரவில்லை.
பின்னாட்களில் வெளி வந்த லிசா,மீண்டும் லிசா ,மணிசித்திர தாழ்,ஸ்ரீ கிருஷ்ணா:) பருந்து போன்ற படங்களுக்கு பிள்ளையார் சுழி
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.