PDA

View Full Version : மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம



Pages : 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

Gopal.s
16th August 2014, 12:12 PM
Choti Si Baath is one of my all time favourites. Infact Basu Chatterjee is my favourite Director. I saw Choti Si Baath in Devikala(?) atleast 10 times same time period as Manmadha Leelai(K.B Sir).I forgot to mention it in my write-up on Salil Chowdry. Thanks Vasu. It is my favourite and Vidya sinha was homely beauty with lovely back.(Basu also focusses during her walk)

By the way Vidya Sinha was to be booked in a Film with sivaji which had not materialised.

Basu Chatterjee's Shaukeen was to be made in Tamil by Kalakendra with Sivaji,V.K.R,poornam,radha to be directed by C.V.R.It was shelved after a brief shoot.(vayasu appadi)

vasudevan31355
16th August 2014, 12:20 PM
Basu Chatterjee's Shaukeen was to be made in Tamil by Kalakendra with Sivaji,V.K.R,poornam,radha to be directed by C.V.R.It was shelved after a brief shoot.

ennidam (vayasu appadi padaththin 'pesum padam' cutting irunthathu. thedip paarkkiren. thalaivar radhavudan asaththalaaga iruppar.

Richardsof
16th August 2014, 12:21 PM
VETRAN DIRECTOR C.V.SRIDHAR'S BIRTH DAY- TODAY - RE REMEMBRANCE

http://i62.tinypic.com/2gw741s.jpg

Gopal.s
16th August 2014, 12:27 PM
It fitted as we re-visited Sivantha Man only yesterday. We remember you sridhar Sir.

mr_karthik
16th August 2014, 12:29 PM
டியர் வாசு சார்,

இன்றைய ஸ்பெஷலில் 'கங்கா' படப்பாடலைத் தேர்வு செய்துள்ளீர்கள். எப்போது எந்த வகையான பாடலைத் தந்து அசத்துவீர்கள் என்பதே ஒரு புதிராக உள்ளது. பாடலைவிட அதை பன்மடங்கு சிறப்பித்து தரும் உங்கள் எழுத்து வலிமைக்கே என்னுள் முதலிடம். குறிப்பாக நமது ஈடிணையில்லா ராட்சசி (செல்லப்பெயர்). ஆனால் பாடலுக்கு ஆடியவர் ஒரிஜினல் ராட்சசி. நடிகர்திலகத்தின் பல படங்களில் நடித்தும் (தன் நடவடிக்கைகளால்) நடிகர்திலகத்தின் ரசிகர்கள் யாருக்குமே பிடிக்காத ஒரு வினோத ஜென்மம்.

1972 பொங்கலுக்கு வந்த படம். அப்போது சின்னஞ்சிறுவன். நான்கு படங்கள் வெளியானதில் இரண்டு படம் பார்க்க மட்டுமே காசு இருந்தது. எந்த இரண்டு பார்க்கலாம் என்று யோசித்தபோது, நான்கையும் பார்த்தவர்கள் சொன்னது "கண்ணா நலமா, அகத்தியர் பாருங்கள். கங்கா, ராணி யார் குழந்தை வேண்டாம்". அதன்படி கங்காவைப் புறக்கணித்தோம். பின்னர் மறு வெளியீடுகளுக்கென்றே இருந்த கபாலி தியேட்டரில், 1978-ல் பார்த்தேன். (அப்போதெல்லாம் நிறைய ஜெய் படங்களும் மறு வெளியீடுகளில் வரும்). இதற்குப்பின் வந்த 'எங்க பாட்டன் சொத்து' எல்லாம் இதற்கு முன்பே முதல் வெளியீட்டில் சாந்தியில் பார்த்தாயிற்று. (சிவாஜி புரொடக்ஷன்ஸ் ரிலீஸ்)

கேமரா கர்ணன் படம் இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்ததால், பகுத்தறிவைஎல்லாம் கழற்றி தியேட்டர் வாசலிலேயே விட்டுவிட்டு படம் பார்த்ததால் நன்றாக இருந்தது. கர்ணன் மறக்காமல் ராஜ்கோகிலாவை வெள்ளை உடையில் தண்ணீரில் நனைத்துக் காட்டினார். எதிர்பார்த்துப்போனவர்களை ஏமாற்றவில்லை. ஜெய் 'தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்' மட்டுமல்ல 'தென்னகத்து கௌபாயும்' அவர்தான்.

தங்கள் ஆய்வு சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள்...

vasudevan31355
16th August 2014, 12:33 PM
கார்த்திக் சார்.

மிக்க நன்றி!

//ஆனால் பாடலுக்கு ஆடியவர் ஒரிஜினல் ராட்சசி//

வயிறு வலிக்க ஆரம்பித்து விட்டது.:)

vasudevan31355
16th August 2014, 12:36 PM
ராஜேஷ் சார்/ கார்த்திக் சார்/

இன்று மதிய ஷிப்ட். வேலைக்குக் கிளம்பறேன். உங்கள் எல்லோருடைய அருமையான பதிவுகளுக்கும் நன்றி!

ராஜேஷ்ஜி

இரவு மீட் பண்ணுவோம்.

mr_karthik
16th August 2014, 12:56 PM
டியர் சின்னக்கண்ணன் சார்,

கண்ணா நலமா படத்தில் இடம்பெற்ற 'பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம்.. தெய்வம்..' பாடலின் அத்தனை வரிகளையும் அப்படியே தந்துவிட்டீர்கள். மிக அருமையான பாடல். ஆனால் ரேடியோவில் பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென்று ஜெயந்தி பாட ஆரம்பிப்பது நெருடியது. பாலச்சந்தர் படத்திலா இப்படி என்றும் தோன்றியது.

முதலில் பாதிப்பாடலும் கிளைமாக்ஸில் பாதிப்பாடலுமாக பிரித்து தந்திருப்பார். படத்தில் குமாரிபத்மினி (ஏ.பி.என்) செம வில்லி. (ஓ.. நீங்கதான் பாடம் பார்க்கலையோ). வாய்ப்புக்கிடைத்தால் பாருங்கள். நல்ல படம்.

சரி, ஒவ்வொரு பதிவின் முடிவிலும் 'நல்ல பாடல்தானே' என்ற கேள்வி ஏன்?. ஒருவேளை அது உங்க சிக்னேச்சரோ.

உங்களுடைய நிறைய பதிவுகளைப் பாராட்டணும். ஆனால் உங்கள் வேகத்துக்கு ஓடிவர முடியவில்லை...

chinnakkannan
16th August 2014, 02:06 PM
ஹையாங்க்..எல்லாரும் இப்படி த் தப்பா நினச்சுட்டீங்களே.கார்த்திக்சார்,வாசுசார். ராஜேஷ் ஜி... .அந்த நடிகை பல படத்துல நடிச்சது தெரியும்.குறிப்பா ஏன்யா உனக்கு நாதஸ்வரம் வாசிக்க மட்டும் தான் தெரியுமா ன்னு கடோசில சொல்லும் போது கோபம் வரும அவர் மீது! .ஆனா பானுங்கற பேர் மனசுலருந்து எழும்ப மறுத்துச்சு.. நெசம்மா..வேற ஏதோ ஜெய கெளசல்யான்னு பேரு வந்துச்சு (அடுத்த வெடில்லாம் இல்லை,.. நெசம்மா தெரியாது..)ராஜேஷ் நன்றி ஜி..தாம்திதாம் தைததை.. ரொம்பப் பிடிச்ச பாட்டு..

//..நடிகர் திலகத்தின் சிவாஜி நாடக மன்றத்தில் முக்கியப் பங்கு வைத்த நடிகை எம்.பானுமதி. இவர்களைப் பற்றிய முழு விவரங்களை நடிகர் திலகம் திரியில் பதித்திருக்கிறேன். இப்போது ஒன்னும் தெரியாத நம்ம 'சின்ன'ப் பாப்பாவுக்காக.
வியட்நாம் வீடு// ஓ..ஹ்.. எவ்வளவு இன்ஃபோ மிக்க நன்றி வாசு சார் அகெய்ன்.. டாடி எனக்கொரு டவுட்டு..அந்த வாடி ரமணி போடி ரமணிங்கறவர் வேற தானே..(வெடி இல்லை பொட்டு கேப்னுவச்சுக்கலாம் 2..எனக்கு மெய்யாலும் தெரியாது)

//ஏழுமலை வாசா வெங்கடேசா' என்று பக்தி சிரத்தையுடன் மேஜருடன் இணைந்து பாடும் பாடல்.

சி.கவுக்கு பக்திப் பாட்டு மட்டும்தான் பிடிக்குமாம். // நன்றி வாசு சார்..  பக்திப்பாட்டும்பிடிக்கும்.. இந்தப்பாட்டு அழகு..டைகர் தாத்தாச்சாரி பாத்ததில்லையே..

ராஜேஷ்..சங்கம் வளர்த்த தமிழ் கேட்டு நாளாச்சு.. நல்லபாட்டு.. தாங்க்ஸ்ங்கோவ்.

.// முதலில் பாதிப்பாடலும் கிளைமாக்ஸில் பாதிப்பாடலுமாக பிரித்து தந்திருப்பார். படத்தில் குமாரிபத்மினி (ஏ.பி.என்) செம வில்லி. (ஓ.. நீங்கதான் பாடம் பார்க்கலையோ). வாய்ப்புக்கிடைத்தால் பாருங்கள். நல்ல படம்...// கார்த்திக் சார் நன்றி..இன்னும் பயம் கூடுகிறது நன்றாக எழுத் வேண்டுமென..ம்ம் அதுசிக்னேச்சர் இல்லை..ச்சும்மா..

எஸ்.வி.சார்.. காஞ்சனாவின் பிறந்த நாளா. நினைவு படுத்தியமைக்கு நன்றி... எங்கிருந்தாலும் அவர் எல்லா செளகரியஙக்ளும் அடைந்து வாழ வாழ்த்துகிறேன்/றோம் சில வருஷத்துக்கு முன் எழுதிப் பார்த்த குட்டி வெண்பா

தீஞ்சுவை கொண்டநற் தேனைப்போல் தித்திக்கும்
காஞ்சனையைக் கண்டுவந்தார் கண்.. (பாலா சார் வந்து வருத்தப் படுவார்..அப்படியாவது வந்து நல்ல இன்னொரு பாட்டு தருவாரில்லயா)

chinnakkannan
16th August 2014, 02:11 PM
பாலச்சந்தரின் மகன் கைலாசம் அவர்களின் மறைவுக்கு வருந்துகிறேன்..அவர் ஆத்மா சாந்தி அடைவதாக.. பாலச்சந்தருக்கு ஆன்ம பலம் இறைவன் தரட்டும்..

கோபால் சார்.. கைலாசம் மர்மதேசம் தொடர் தயாரிப்பாளராய் டைட்டிலில் பார்த்திருக்கிறேன்..என்ன தெளிவான தயாரிப்பு..ப்ளான்.. அந்த டீம் மின்பிம்பங்கள் நன்றாக இருந்தது.. கே.பியின் இன்னொரு சீரியல் காதல் பகடை அதுவும் மின்பிம்பங்களே..

mr_karthik
16th August 2014, 02:18 PM
ஷோலா அவுர் ஷப்னம்

தமிழில் நிலாப்பெண்ணே என்ற ஒரே படத்துடன், ஹிந்திப்படவுலகில் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டி, மிகக்குறைந்த வயதிலேயே இவ்வுலகை விட்டு மறைந்த எழில்தேவதை திவ்யபாரதியின் கடைசிப்படம். கோவிந்தாவின் மிகச்சிறப்பான நடிப்பில் வந்த அருமையான படம். போலீஸ் கமிஷனரின் மகள் திவ்யபாரதியை பணயக்கைதியாக காட்டுக்குள் வைத்திருக்கும் கோவிந்தா மீது திவ்யாவுக்கு காதல் ஏற்பட, ஆனால் தன் தங்கையின் சாவுக்குக் காரணமாக இருந்த கும்பலைப்பழிவாங்கும் நோக்கத்தில் இருக்கும் கோவிந்தா, திவ்யாவின் காதலை ஏற்க மறுத்து ஒதுக்க, திவ்யா பாடும் பாடல் 'tu pagal premi awara' .

இரண்டு சரணங்கள் பாடிய பிறகும் கோவிந்தா திவ்யாவின் காதலை ஏற்க மறுத்து அவரைப்பிடித்து தள்ளிவிட, சோகமும் விரக்தியும் அடைந்த திவ்யா பாடும் கடைசி சரணம் (இது திவ்யபாரதியின் கடைசிப்படம் என்பதாலும்) நம் மனதை அதிகமாகவே தாக்கும். அந்த கடைசி சரணத்தின் அர்த்தம் (நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டது)

நான் உன்னை விட்டு வெகுதூரம் போகிறேன்
இனி நீ என்னை எப்படி அழைத்தாலும்
திரும்பி வரமாட்டேன்... வரவே மாட்டேன்....

அன்பான திரி நண்பர்கள் இப்பாடலுக்கான வீடியோவை இணையுங்களேன்...

madhu
16th August 2014, 02:34 PM
தாலாட்டு படப் பாடல்

மல்லிகைப் பூப்போட்டு கண்ணனுக்கு மங்கல நீராட்டு
ராஜபாண்டியன், விஜயஸ்ரீ
டி.எம்.எஸ்., சூலமங்கலம் ராஜலக்ஷ்மி

http://youtu.be/gGis1r5R2nc

விளக்கில்லாமல் கணக்கெழுதி

http://youtu.be/OhRkjyzE2rE?list=UUt7EFLq-vYQWV3ZKF_XSlag

madhu
16th August 2014, 02:38 PM
ஷோலா அவுர் ஷப்னம்

நான் உன்னை விட்டு வெகுதூரம் போகிறேன்
இனி நீ என்னை எப்படி அழைத்தாலும்
திரும்பி வரமாட்டேன்... வரவே மாட்டேன்....

அன்பான திரி நண்பர்கள் இப்பாடலுக்கான வீடியோவை இணையுங்களேன்...

இந்தப் பாடலா ?

http://youtu.be/B_zjGN6nt2s

madhu
16th August 2014, 02:43 PM
துணி அலமாரிக்குள் வைத்த கைக்குட்டை ஒன்று முன்னால் வைக்கப்படும் துணிகளால் பின்னால் தள்ளப்பட்டு காணாமல் போய்விடும். அதுபோல புதுப்புது பதிவுகளால் பழைய கோரிக்கை ஒன்று மறைந்து விடக்கூடும் என்ற அச்சத்தில் இழ்ழ்ழ்ழ்ழுது முன்னால் வைத்து விடுகிறேன்


ஹி ஹி... ( அசட்டுச் சிரிப்பு + தலை சொ....)

அதாகப்பட்டது கேட்டதை எல்லாம் கொடுக்கும் சிந்தாமணி, காமதேனு, கற்பக விருட்சம், அட்சய பாத்திரம் போல
இங்கே நம்ம நண்பர்கள் இருப்பதால்...

என் அடுத்த ரிக்வெஸ்டை வைக்கலாம் என்று நினைக்கிறேன்.

"கடவுள் தந்த செல்வம்" என்பது படத்தின் பெயர் என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை..

பானுமதி நடித்து பாடிய

"உன்னோடு என் நெஞ்சமே ஒன்றாய் ஊஞ்சலாடுதடா
நீ ஆடினால் நான் ஆடுவேன் நிழல் போலுனை காத்திடுவேன்"

என்ற பாடல் எங்கும் தென்படவில்லை. கிடைத்தால் கேட்டு ரசிக்கலாம்.

கோரிக்கையை வைத்து விட்டேன்.. ப்ளீஸ் அன்பர்களே !!

Gopal.s
16th August 2014, 02:50 PM
God,Madhu,This is this is the limit.You are a magician.

gkrishna
16th August 2014, 03:28 PM
இயக்குநர் கே.பாலசந்தரின் மகன் பால கைலாசம் சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 54.

இயக்குநர் கே.பாலசந்தரின் மூத்த மகன் பால கைலாசம். ‘பி.கே’ என்று திரையுலகில் எல்லோராலும் அழைக்கப்பட்டவர். பொறியியல் துறையில் பட்டப்படிப்பை முடித்த அவர், அமெரிக்கா சென்று ஆடியோ சவுண்ட் துறையில் பட்டம் பெற்றவர். படிப்பை முடித்து சென்னை திரும்பியதும் ‘மின்பிம்பங்கள்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். சின்னத்திரையில் ‘ரயில் ஸ்நேகம்’, ‘மர்மதேசம்’, ‘கையளவு மனசு’ உள்ளிட்ட பல சீரியல்களை தயாரித்தார். இவர் சின்னத்திரையில் தயாரித்த பெரும்பாலான சீரியல்களை அவரது தந்தை கே.பாலசந்தர், நாகா போன்றவர்கள் இயக்கினர்.

சினிமாவில் பல நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களை பாலசந்தர் அறிமுகப்படுத்தியதுபோல, சின்னத்திரையில் பல நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்திய பெருமை பி.கே.க்கு உண்டு.

சென்னையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி தொடங்கப்பட்ட காலகட்டத்திலேயே சின்னத்திரை தொடர் தயாரித்தவர். தொலைக் காட்சித் தொடர்கள் ஒளிபரப்பாகத் தொடங்கிய தொடக்க காலத்தில் ‘லைவ் சவுண்ட்’ என்ற தொழில் நுட்பத்தை சின்னத்திரையில் கொண்டுவர ஊக்குவித்தவர். இந்திரா சவுந்தர்ராஜன் போன்றவர் களின் கதைகளை தரமான சின்னத்திரை தொடர்களாகக் கொடுத்தவர். கடந்த சில ஆண்டுகளாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஆலோசகராக இருந்தார்.

இந்நிலையில், நிமோனியா காய்ச்சலால் நுரையீரல் பாதிக்கப் பட்டு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். வெள்ளிக்கிழமை மதியம் அவர் காலமானார்.

பால கைலாசத்தின் உடல் மயிலாப்பூரில் கே.பாலசந்தரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12 மணிக்கு பெசன்ட் நகரில் இறுதிச் சடங்குகள் நடக்கின்றன. மறைந்த பால கைலாசத்துக்கு கீதா என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

‘மின்பிம்பங்கள்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் கைலாசம். சின்னத்திரையில் ‘ரயில் ஸ்நேகம்’, ‘மர்மதேசம்’, ‘கையளவு மனசு’ உள்ளிட்ட பல சீரியல்களை தயாரித்தார். இவர் சின்னத்திரையில் தயாரித்த பெரும்பாலான சீரியல்களை அவரது தந்தை கே.பாலசந்தர், நாகா போன்றவர்கள் இயக்கினர்.

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02062/kailasam_2062275g.jpg

mr_karthik
16th August 2014, 03:33 PM
// இந்தப் பாடலா ? //


டியர் மது சார்,

வாவ்...., இதுதான். இதுவேதான்.

அனைத்துலக திவ்யபாரதி ரசிகர்கள் சார்பாக பிடியுங்கள் ஒருகோடி நன்றிகளை.

gkrishna
16th August 2014, 04:14 PM
நண்பர் கார்த்திக் நடிகை திவ்ய பாரதி அவர்களை பற்றி எழுதி இருந்த பாடல் சில நினைவுகளை மீட்டியது.

நடிகை திவ்யபாரதி (25 February 1974 – 5 April 1993)
மொத்தமே 19 வருஷம் 35 நாட்கள் தான் இந்த பூ உலகில் வாழ்ந்தார்
நடிகை திவ்யபாரதி தனது 14வது வயதில் (1988 ம் ஆண்டு) குனஹோன் கா தேவதா படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு பின்னர் விலக்கப்பட்டு
(பின்னர் இந்த படம் அசாருதீன் 2வது மனைவி சங்கீத பிஜலாணி நடித்து வெளிவந்தது ) இப்படியாக 2 ஆண்டுகள் சினிமாவில் அறிமுகம் ஆகாமலேயே 1990 வரை 2 ஆண்டுகள் நிறைய படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டு பிறகு விலக்கப்பட்டு இறுதியில் வெங்கடேஷின் பொப்பிலி ராஜா தெலுகு திரை படத்தில் அறிமுகம் ஆகிறார். படம் சூப்பர் duper ஹிட்.இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் .தமிழில் வாலிபன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளிவந்தது
தி Gods must be crazy போல் கார்ட்டூன் மிருகங்கள் நடித்து வெளி வந்தது [ப].3 வருஷம் 21 படங்கள் [/ப]என்று கொடி கட்டி பறந்து தன்னுடைய 19 வது வயதில் பால்கனியில் இருந்து விழுந்து இறந்து போனார். அவர் பாதியில் விட்டு போன படங்களை எல்லாம் பின்னாட்களில் அவர் ஜாடையில் இருந்த நடிகை ரம்பாவை வைத்து முடித்ததாக 1994 கால கட்டத்தில் (கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்) பேசப்பட்ட தகவல்

அவர் நடித்த முதல் படமான பொப்பிலி ராஜ படத்தில் இருந்து பாலாவும்,எஸ் ஜானகியும் பாடும் ஒரு நல்ல காமெடி ஆன மெலடி பாடல்


http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/e/ea/Bobbili_Raja.png/220px-Bobbili_Raja.pnghttp://drop.ndtv.com/Movies/images/articles/big/divya-bio.jpg

http://www.youtube.com/watch?v=HV8_7jhZpNc

gkrishna
16th August 2014, 04:27 PM
Laadlaa (தமிழ் இல் ரஜினியின் மன்னன் )

நடிகை திவ்யபாரதி இறப்பதற்கு சில நாட்கள் முன் எடுத்த படத்தின் விடியோ காட்சிகள்

பிறகு இந்த காட்சிகள் ஸ்ரீதேவி வைத்து reshoot செய்யப்பட்டது

http://www.youtube.com/embed/YPYzuifkhGg?

gkrishna
16th August 2014, 04:45 PM
நடிகை காஞ்சனாவின் பிறந்த நாள் இன்று . இந்த தகவலை நினைவு ஊட்டிய நண்பர் எஸ்வி அவர்களுக்கு நன்றி .

காஞ்சனா-பிறப்பு-16.8.1939-வயது-72-ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இவரது குடும்பம் இருந்தது.பின்னாளில் இவரது குடும்பம் சென்னையில் குடியேறியது. சென்னையில் தான் இவர் பிறந்தார்.இயற்பெயர் வசுந்தரா தேவி.இதே பெயரில் அப்போது நடிகையொருவர் இருந்ததனால் ஸ்ரீதர் காஞ்சனா என பெயரை மாற்றினார். தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மற்றும் இந்திப் படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.நடிக்க வருவதற்கு முன் விமானப் பணிப்பெண்ணாக இருந்தவர்.இவரது விமானத்தில் ஒரு முறை இயக்குநர் ஸ்ரீதர் பயணம் செய்த போது இவரைக் கண்டறிந்து 1964-இல் காதலிக்க நேரமில்லை படம் மூலம் திரையுலகுக்குக் கொண்டு வந்தார்.1980 வரையில் கதாநாயகியாக நடித்தார்.பின்னர் குறிப்பிட்ட வேடங்களைத் தேர்ந்தெடுத்து நடித்துவந்தார்.தற்போது முழு நேர ஆன்மீக வாதியாகிவிட்டார். சென்னையின் மையப்பகுதியான தியாகராய நகரில் இவருக்கு உரிமைப்பட்ட 4 கிரவுண்ட் நிலத்தை ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து அந்த வழக்கு 25 வருடங்களுக்கும் மேலாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று இறுதியில் இவருக்கு சாதகமாக தீர்ப்பானது. சுமார் 22 கோடி மதிப்பிலான அந்த சொத்தை 2010-ஆம் ஆண்டு இவர் திருப்பதி-திருமலை தேவஸ்தானத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார்

http://snapjudge.files.wordpress.com/2009/03/kanjana-gemini-ganesan-tamil-actress-heroines.jpg

சிவந்த மண் திரை படத்தில் இடம் பெற்ற பாடகர் திலகம் கண்ணிய பாடகி குரல்களில்

இந்த பாடல் பாடுவதற்கு மிகவும் கஷ்டபட்டதாகவும் பின்னர் இஷ்டதெய்வங்களை வணங்கி வேண்டி பின் பாடியதாகவும் ஆனந்த விகடன் பேட்டியில் திரு சௌந்தரராஜன் அவர்கள் கூறிய நினைவு உண்டு . சற்று வசன நடையில் அமைந்த பாடல்களில் இதுவும் ஒன்று

ஒரு நாளிலே...என்னவாம்...உறவானதே...தெரியுமே...
கனவாயிரம்...நினைவானதே...
வா வெண்ணிலா...வா வெண்ணிலா இசையோடுவா
மழை மேகமே அழகோடு வா
மஹராணியே மடிமீது வா (2)
வந்தால்...அணைக்கும்...சிலிர்க்கும்...ம்ஹ்ம்ம் துடிக்கும்...

நாளை வரும் நாளை என நானும் எதிர்பார்த்தேன்
காலம் இது காலம் எனக் காதல் மொழி கேட்டேன்
போதை தரும் பார்வை எனை மோதும் அலை மோதும் (2)
போதும் எனக் கூறும்வரை பூவே விளையாடு
வரும் நாளெல்லாம் இது போதுமே (2)

மஞ்சம் இது மஞ்சம் என மார்பில் விழி மூடு
கொஞ்சும் இதழ் சிந்தும் என் நெஞ்சில் ஒரு கோடு
தஞ்சம் இது தஞ்சம் எனத் தழுவும் சுவையோடு (2)
மிஞ்சும் சுகம் யாவும் வரவேண்டும் துணையோடு
வரும் நாளெல்லாம் இது போதுமே (2)

(ஒரு நாளிலே)

http://www.youtube.com/watch?v=ZNQSCPPTFzc

gkrishna
16th August 2014, 04:56 PM
VETRAN DIRECTOR C.V.SRIDHAR'S BIRTH DAY- TODAY - RE REMEMBRANCE



C. V. Sridhar (22 July 1933 – 20 October 2008)

விக்கி இல் டைரக்டர் ஸ்ரீதர் பற்றி படிக்கும் போது அவர் பிறந்த நாள் 22 ஜூலை என்று போட்டு உள்ளது esvee sir

எது சரி ?

gkrishna
16th August 2014, 05:09 PM
http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/0/07/Rajnigandha%2C_1974.jpg/220px-Rajnigandha%2C_1974.jpg

நண்பர் வாசு அவர்களுக்கு

நடிகை வித்யா சின்ஹாவை பற்றிய நினைவூட்டல் அற்புதம் . மிக அழகான நடிகை. இங்கு கூட அவருடைய அழகு பற்றி விவரிக்கப்பட்டு ஒரு பதிவு போடப்பட்டு இருந்தது. 'ரஜினிகாந்த' என்று ஒரு திரைப்படம் .பாசு சட்டர்ஜி அவர்கள் இயக்கத்தில் வித்யா சின்ஹா அமோல்பலேகர் நடித்து 1974 கால கட்டத்தில் வெளிவந்த வித்யா சின்ஹாவின் முதல் படம் என்று நினைவு . யதார்த்த சினிமா என்பதன் பிள்ளையார் சுழி என்று இந்த திரை படம் பற்றி 1974-75 கால கட்டத்தில் பிலிமாலயா,பொம்மை,பேசும்படம் மற்றும் filmfare போன்ற பத்திரிகைகள் எல்லாம் புகழ்ந்து தள்ளிய படம் . அன்றைய நாளில் தமிழ் திரைப்படம் இயக்க வந்த குடிசை ஜெயபாரதி, அக்ரஹரதில் கழுதை ஜான் ஆபிரகாம்,அவள் அப்படிதான் ருத்ரையா போன்றவர்கள் எல்லாம் எல்லா பெட்டியிலும் இந்த படத்தை புகழ்ந்து தள்ளுவார்கள். இதற்கும் இசை சலீல் சௌத்ரி அவர்கள் தான் .

உங்கள் அழகு நடையில் இந்த திரைபடத்தின் அலசல் எதிர்பார்க்கும்

கிருஷ்ணா

mr_karthik
16th August 2014, 06:28 PM
டியர் கிருஷ்ணாஜி,

எழில் தேவதை திவ்யபாரதி பற்றிய எனது பதிவுக்கு மதுசார் வீடியோ வழங்க, அதைத் தொடர்ந்து திவ்யபாரதி பற்றிய தங்களின் மேலதிக விவரங்கள் அவரைப்பற்றிய இனிய நினைவுகளை... இல்லையில்லை... சோக நினைவுகளை மனதில் கிளறி விட்டுவிட்டன. எப்படியோ புகழடைந்திருக்க வேண்டிய நடிகை. இன்றைகெல்லாம் இருந்தால் 40 வயதுதான் ஆகியிருக்கும். ஆனால் விதியின் விளையாட்டு மிகவும் கோர முடிவை தந்துவிட்டது. ஐந்தாவது மாடியிலிருந்து தவறி விழுந்தாரா அல்லது கொலையா என்ற சர்ச்சை வெகு நாட்கள் நீடித்தது. விஜயஸ்ரீ, படாபட், ஷோபா, சில்க் இவர்களின் மரணத்தைப்போல இதுவும் ஒரு சர்ச்சைக்கு உரிய மரணமாக கருதப்பட்டது.

அவர் நடித்த படங்களில் குறிப்பிடத்தக்கவை கீத், ஜான்ஸே பியாரா, சோலா அவுர் ஷப்னம், தர்மாத்மா, ரங் முதலியவை.

திவ்யபாரதியின் முடிவுக்கு எமனாக அமைந்த பால்கனி இதுதான்...

Gopal.s
16th August 2014, 06:39 PM
Thanks Krishnaji for Kanchana and Divya Barathi Postings.

gkrishna
16th August 2014, 06:43 PM
எழில் தேவதை திவ்யபாரதி சோக நினைவுகளை மனதில் கிளறி விட்டுவிட்டன.


உண்மை கார்த்திக் சார்
2 ஆண்டுகள் 1988 முதல் 1990 வரை கிட்டத்தட்ட 6 அல்லது 7 படங்கள் திவ்யபாரதி அவர்களை ஒப்பந்தம் செய்து பின்பு ரத்து செய்யப்பட்டு ஹிந்தி திரை உலகம் சரிபட்டு வராது என்று தென் இந்திய திரை உலகை தஞ்சம் அடைந்து வசந்த மாளிகை ராமாநாய்டு அவர்களால் tollywood என்று அழைக்கப்படும் தெலுங்கு திரை உலகில் நுழைந்து பின்னர் 3 ஆண்டுகளில் 21 படங்கள் (வருடத்திற்கு 7 படங்கள் சராசரியாக) எந்த பாலிவுட் திரை உலகம் ஒதுக்கியதோ அவர்களே பின்னாட்களில் காத்து கிடந்த வீடு என்பார்கள் திவ்யபாரதியின் மும்பையின் புகழ் பெற்ற அந்தேரி பகுதி வீடு .

பால்கனி போட்டோ அருமை கார்த்திக் சார்

எழில் தேவதை அருமையான பட்டம் சார்

gkrishna
16th August 2014, 06:45 PM
அன்பு கோபால் சார்

உங்கள் ஊக்கத்திற்கு நன்றி

என்றும் அன்புடன்
கிருஷ்ணா

gkrishna
16th August 2014, 07:23 PM
http://www.thehindu.com/multimedia/dynamic/02059/HYF15JAISIMHA_2059226e.jpg

இன்று ஹிந்து ஹைதராபாத் பதிப்பில் ஜெயசிம்ஹா 1955 படத்தை சிலாகித்து எழுதி இருந்தார் விமர்சகர் M.L. NARASIMHAMAM அவர்கள்.

பிரபல ஹிந்தி நடிகை Waheeda Rehman அவர்கள் முதல் படம் என்று எழுதி இருந்தார் . வஹீத ரெஹ்மான் அவர்கள் தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் பிறந்து 50,60,70 களில் ஹிந்தி திரை உலகை கலக்கி கொண்டு இருந்தவர் .இந்த படத்தின் இசை அமைப்பாளர் திரு டிவி ராஜு அவர்களை பற்றி நமது அருமை குருஜி ராகவேந்தர் அவர்கள் மனதை மயக்கும் மதுர கானங்கள் பாகம் ஒன்றில் பெருமை படுத்தி எழுதி இருந்தார் .

T.V. Raju’s music largely contributed to the movie’s success. He was assisted by the talented Sathyam. ‘Jaya Jaya Sri Rama Raghuvara’ (Ghantasala), ‘Madiloni Madhurabhavam,’ (Ghantasala & Rao Balasaraswati) and P. Susheela’s classical rendition ‘Nadireyi Gadichene cheliya…’ became popular. Some of the hit numbers drew inspiration from Hindi songs. The duet ‘Ee naati ee haayi…’ rendered by Ghantasala and P. Leela was taken from Ghulam Mohammed’s composition, ‘Jindagi dene vale sun…’ (‘Dil- E- Naadan’) and Rao Balasaraswati, A.P. Komala’s rendition, ‘Manasaina cheli pilupu…’ adapted from Shyamsundar’s composition, ‘chori chori aagse dilme…’ ( ‘Dholak’) are examples.

தெலுங்கு பாடல்

http://www.youtube.com/watch?v=y0RZuQr_c1I

ஹிந்தியில்
http://www.youtube.com/watch?v=WVI_PsOm84I

சுசீலாவின் இனிய ஆரம்ப கால குரல்

http://www.youtube.com/watch?v=ImPSegqj9c8

http://www.surfindia.com/celebrities/bollywood/images/waheeda-rehman.jpg

Richardsof
16th August 2014, 07:28 PM
KRISHNA SIR

ONE OF THE BEST WAHEEDA SONG

http://youtu.be/CpnLv8nAWkE

gkrishna
16th August 2014, 07:35 PM
ONE OF THE BEST WAHEEDA SONG


thanks for immediate response esvee sir

gkrishna
16th August 2014, 07:36 PM
திரு கோபால் அவர்கள் வளர்பிறை பாடத்தின் பாடலை பற்றி குறிப்பிட்டு இருந்தார் . கண்ணதாசன் அவர்கள் மாமா அவர்களின் இசையை குறிப்பிட்டு எழுதும் போது

பூஜ்ஜியத்துகுள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவ்னைப்
புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்

இந்த வரிகளுக்கு எந்த மாற்றமும் இல்லாமல் இசை அமைத்த திறமையை பாராட்டியது நினைவு (சந்திதேன் சிந்தித்தேன் கட்டுரையில் )

Gopal.s
16th August 2014, 07:49 PM
திரு கோபால் அவர்கள்

திரு, சார், அவர்கள் இதெல்லாம் வேண்டாமே. நான் உங்களை கிருஷ்ணா என்றே அழைக்கிறேன். நீங்களும் கோபால் என்றே அழைக்கலாம்.

Gopal.s
16th August 2014, 07:58 PM
கோபால் வளர்பிறை பாடத்தின் பாடலை பற்றி குறிப்பிட்டு இருந்தார் . கண்ணதாசன் அவர்கள் மாமா அவர்களின் இசையை குறிப்பிட்டு எழுதும் போது

பூஜ்ஜியத்துகுள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவ்னைப்
புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்

இந்த வரிகளுக்கு எந்த மாற்றமும் இல்லாமல் இசை அமைத்த திறமையை பாராட்டியது நினைவு (சந்திதேன் சிந்தித்தேன் கட்டுரையில் )

அது மட்டுமல்ல, வாராவாரம் மெகா டீவீயில் ,ஒரு சதுக்க பூதத்துடன்,தம் தன தம் தன பண்ணி தன் தரத்தை தரை மட்டம் தாழ்த்தி மீட்டர் மேட்டர் என்று இசையமைப்பை ,பீச்சில் கடலை மிட்டாய் விற்பவன் போல பேசும் இசையமைப்பாளர் ஒரு புறம்.

கண்ணதாசனுக்கு கே.வீ.மகாதேவன் ஒரு வர பிரசாதம். உரை நடை ,கட்டுரை கொடுத்தாலும்,கவிஞர் கற்பனை சிதறாமல், வரிகளை மாற்றாமல்,அப்படியே இசையமைக்கும் திறன் கொண்டவர் கே.வீ.மகாதேவன்.அதே மாதிரி யார் ஹீரோ, என்ன கம்பெனி என்றெல்லாம் மோப்பம் பிடித்து இசையமைக்கும் பழக்கம் இல்லாத நேர்மையாளர்.

அதனால்தான் ,கண்ணதாசன் வானம்பாடி,ரத்த திலகம் போன்ற சொந்த படங்களுக்கு கே.வீ.மகாதேவனையே விருப்ப பட்டு தேர்ந்தெடுத்தார். பிறகு finance மேட்டருக்காக மீட்டர் போட்டு ,"நண்பரிடம்"ஓடியது வேறு சமாசாரம்.

Gopal.s
16th August 2014, 08:00 PM
KRISHNA SIR

ONE OF THE BEST WAHEEDA SONG



One of my sweet hearts though I was angry with her for causing Gurudatt to commit suicide. (What a classy movie maker)

JamesFague
16th August 2014, 08:34 PM
Melody from the Hindi Movie DADA. Amjad Khan starrer. The movie was released in Little Anand where it ran to packed
houses.



http://youtu.be/U3WlWQb5Yi4

JamesFague
16th August 2014, 08:36 PM
Fantastic melody from Norriee


http://youtu.be/gQY6f1T5YO0

JamesFague
16th August 2014, 08:58 PM
One of the best Title song of the James Bond movies from Golden Eye. With the voice of Tina Turner and the smartness of Pierce Brosnan the song

has become instant HIT of all the Bond Movies. Now enjoy.


http://youtu.be/bkBYVNrjjIs?list=PL866F9BF1595D665E

chinnakkannan
16th August 2014, 09:26 PM
க்ருஷ்ணா ஜி.. திவ்ய பாரதி, காஞ்சனா பற்றிய தகவல்களுக்கு நன்றி.. அதுவும் காஞ்சனா..கேஸில் ஜெயித்த சொத்துக்களை வழங்கிவிட்டார் எனக் கேட்டதும் மதிப்பு இன்னும் கூடியது அவர் மீது..
திவ்ய பாரதி படம் ஸ்டில்லாகத் தான்பார்த்திருக்கிறேன்.. அழகு + இளமை.. தற்கொலை என்ற செய்தி படித்த போது கொஞ்சம் வருத்தமாக இருந்தது..அதிர்ஷ்டம் தான் ரம்பாவிற்கு..அவரால் தமிழில் புகுந்து சோபித்து ரிட்டயரும் ஆகிவிட்டார்..!

வீடியோ இனிமேல் தான் பார்க்க வேண்டும்..

ஒரு நாளிலே பாடலும் மிகப் பிடிக்கும்..

chinnakkannan
16th August 2014, 09:28 PM
எஸ்.வாசுதேவன் ஜி..கோல்டன் ஐக்கு தாங்க்ஸ்... பாண்ட் படங்களின் தீவிர ரசிகன் என்ற வகையில் எனக்கு லிவ் அண்ட் லெட் டை பாடல் மிகப் பிடிக்கும் :)

gkrishna
16th August 2014, 10:27 PM
Fantastic melody from Norriee


http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/b/be/Noorie.jpg/220px-Noorie.jpg

திரு s.வாசுதேவன் அருமை
79 கால கட்டத்தில் இந்த நூரி பாடல் நான் மிகவும் விரும்பி கேட்ட பாடல்
நினைவு ஊட்டலுக்கு நன்றி

இந்த நூரி படம் பூனம் தில்லான்,பாரூகே shaikue நடித்த சூப்பர் படம்
யாஷ் சோப்ர தயாரிப்பில் வெளி வந்த அந்த ஆண்டின் மிக சிறந்த நடிகை,இயக்கனர்,தயாரிப்பாளர்,இசைஅமைப்பாளர் என்ற filmfare பத்திரிகையின் பல பரிசுகளை பெற்ற படம்.படத்திற்கு இசை khyyaam
இந்த பாட்டு படத்தில் திருப்பி திருப்பி வரும்

படத்தில் ஹீரோ heroine வில்லன் மூணு பேருமே கடைசியில் செத்து போவாங்க. பரத் கபூர் வில்லன் பூனம் தில்லனை கற்பழித்து விடுவார் .இதனால் பூனம் தில்லான் தற்கொலை செய்து கொண்டு விடுவார் .
பழி வாங்க புறப்படும் ஹீரோ faroque ம் வில்லனால் கொலை செய்யபடுவார் . heroine வளர்க்கும் நாய் வில்லனை பழி வாங்கும்

gkrishna
16th August 2014, 10:48 PM
छोटी सी बात

வாசு இன்று காலையில் சோட்டி சி பாத் படத்தின் அருமையான பாடலை வழுங்கி இருந்தார் . காலையிலே இதற்கு பதில் போடவேண்டும் என்று நினைத்தேன் .நடுவில் மறந்து விட்டேன் . இந்த படத்தில் இன்னும் ஒரு பாடல் ஜேசுதாஸ் ஆஷா பாடுவது

janeman ஜானேமன்

திரை படத்தில் அமோல் பலேகர் திரை அரங்கு ஒன்றில் திரை படம் ஒன்று பார்ப்பது போலவும் அதில் தர்மேந்திரா ஹேமா மாலினி இருவரும் ஆடி பாடுவது போல் எடுத்து இருப்பார் பாசு சட்டர்ஜி ,மிகவும் அருமையாக இருக்கும்

https://www.youtube.com/watch?v=ats8Y1yzgPI

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/f/f6/Chhoti_Si_Baat.jpg/220px-Chhoti_Si_Baat.jpg

vasudevan31355
16th August 2014, 10:50 PM
மது அண்ணா!

மிக மிக அரிய 'தாலாட்டு' வீடியோக்களுக்கு நன்றி!

'விளக்கிலாமல் கணக்கெழுதி' என்னை அழ வைத்த ஒரு பாடல். ராஜபாண்டியனும் அருமை. பாடகர் திலகம் பட்டி கிளப்பியிருப்பார். இப்பாடல் நடிகர் திலகத்திற்கு அமைந்திருந்தால்?

chinnakkannan
16th August 2014, 10:53 PM
ஆதெள கீர்த்தனாரம்பத்திலே

எல்லாரும் செளக்கியமா. ம்க்கும் இதுவரைக்கும் இருந்தோம் நு நீங்க நினைக்கறது புரியறது..:)

இன்னிக்குப் பேசற அல்லது பாடற மேட்டர் என்னனனாக்க (எத்தனைன !)

பொடி விஷயம் தான்.

பொடி என்பது அந்தக்கால லாஹிரி வஸ்து(அப்படின்னா) என்ன விதமான விஷயங்கள் அதில் இன்க்ளூடட்னு தெரியாது.. மதுரையில் நான் இருந்த தெருவின் முக்கில் ஒருகடை உண்டு..அதில் காய்ந்த வாழைப் பட்டைகள் சில கட்டுகள், சிலபல ஜாடிகள் வைத்து ஒரு கடை இருக்கும்..

கேட்டால் ஒரு வாழைப் பட்டையை எடுத்து காசிற்கேற்ப ஒன்றிரண்டு சிட்டிகை (அந்த ஸ்பூனும் ரொம்பக்குட்டியாய் அதே சமயத்தில் காம்பு நீளமாக இருக்கும்) போட்டு மடித்துக் கொடுப்பார்கள்.

என் தந்தைக்கும் அந்த வழக்கம் உண்டு.. அந்த வாழைப்பட்டைப் பேக்கிங்கை வெகு லாகவமாகத் திறந்து கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்து ஒரு சிட்டிகை எடுத்து சர்ரென்று மூக்கில் ஏற்றுவார்..பார்க்கக் கொஞ்சம் தமாஷாக இருக்கும்..

மதுரை சித்திரைத் திருவிழாவில் டி.ஏ.எஸ் ரத்தினம் பட்டணம் பொடி என பெரிய பெரிய பேனர், அப்புறம் சென் ட் ரல் சினிமாவைத் தாண்டி மீனாட்சி கோவிலுக்குப் போகும் வழியில் ஒரு அட்டைச் சித்திரம்..ஒரு குண்டோதரன் டைப் படம் கண்கள் விழித்துத் தலையாட்டிய படி இருக்கும் என்.ஏ.எஸ் பொடியோ என நினைவு..

நிற்க. Gentlemen! நாம் பேசப் போவது அந்தப் பொடியில்லை.. பொடி விஷயம் என்பதற்குச் சின்ன விஷயம் என்றும் கொள்ளலாம்..

சின்ன விஷயம் என்றால் என்னைப் போன்ற இளந்தாரிகள்..சரி சரி.. பொதுவாய் இளவட்டப் பசங்கள் சில விஷயத்தைப் பார்த்தாலே உற்சாகம் கொள்வார்க்ள்..

ஒரு வயதான அம்மா – பையனைப் பெற்றவள் என்ன சொல்கிறாள்..

என்னபொடி போட்டாளோ எம்மவனத் தெரியலையே
..எப்பொழுதும் சுறுசுறுப்பாய் சுத்துகிற எளந்தாரி
கண்ணுபட்டுப் போனதுபோல் கருத்திழந்து நிக்குறதும்
…கனவுகண்ட கோழியெனக் கண்டபடி நடக்குறதும்
சொன்னசொல்லைக் கேட்டுப்புட்டு கடைகண்ணி போறவனும்
….சோம்பித்தான் நிக்குறதும் ஏங்கித்தான் தவிக்கறதும்
பெண்ணவளக் கண்டுப்பிட்டா பெத்தஎன்ன ஒதுக்கிவிட்டு
..பேதையாத்தான் இருக்கறத பெருமாளே என்னசொல்வேன்..

ஸோ இந்தம்மா பேசற பொடி சொக்குப் பொடி..ஆளை மயக்குற பொடி..

வட்ட விழிப்பார்வை வாகாக உள்ளத்தைக்
கட்டமிட்டுச் சுண்டுவதைக் காண்

நு யெஸ் .. ஆன்றோர் சொல்லியிருக்காங்க..:)

பாவையரோட கண், மூக்கு, வாய் மத்த பார்ட்ஸ்லாம் செய்யும் தான்.. அதையெல்லாம் விட ஆடைகளும் செய்யுமாக்கும்

சேலாடும் விழியாட செங்காந்தள் விரலாட
..செம்பவள உதட்டினிலே தித்திக்கும் தேனாட
கோலாட்டம் போட்டபடி குதித்திடுதே பின்னாலே
..கொள்ளைகொளும் கூந்தலுமே பலவிதமாய்த் தானாட
தாலாட்டும் தென்றலதைத் தக்கவைத்து நெற்றியிலே
…தகதிமிதா போட்டபடி சுருள்முடியும் தானாட
மேலாடை குறுஞ்சிரிப்புக் கொண்டபடி அங்குமிங்கும்
..மென்மையுடன் சிறிதாட மனமாடி விட்டதடி

(ஹப்பாடா..விஷயத்துக்கு வந்தாச்சு) என்ன இந்த மேலாடை இருக்கே.. ஆண்களுக்கெல்லம் அவ்வளவு சிறப்பில்லை.. பாவம் அந்தக்காலம்னா மன்னா போருக்குப் போய்ட்டு வரட்டுமான்னு சொல்ற தளபதியும் சரி மன்னரும் சரி சரிகைத்தகடி பளபளான்னு போட்டுக்கிட்டு வருவாங்க..அவ்வளவு சுகமில்லை..இந்தக்காலத்திலும் தான் அலுவல்னா பேண்ட் டிஷர்ட் டை சூட் மத்தபடி ஜீன்ஸ் டிஷர்ட் தான்.. இந்தப் பெண்க்ளுக்கு அந்தக்காலத்தில் புடவை இந்தக்காலத்தில் பாவாடை சட்டை தாவணி, சுரிதார் துப்பட்டா..அப்புறம் ஏகப்பட்ட வெரைட்டீஸ்..

நம்ம டை ஆடினா யாரும் பாக்க மாட்டாங்க..அதுவே அவ்விடத்துல..

ம்ம் இன்னிக்கு ப் பாக்கற பாட்டுல இந்த மேலாடையைப் பத்திக் கேள்விபதில் டைப்புல கவியரார் எழுதியிருக்காராக்கும்.. பட்ம் நாணல்..பாடியவர் பாடகர் திலகம் இசையரசி.. அப்புறம் ஆடியவர்கள் முத்துராமன் கே.ஆர்.விஜயா..

வெகு அழகிய பாடல்..எனக்கு மிகவும் பிடிக்குமாக்கும்

*

விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
கண்ணுக்கு மேலாடை காக்கும் இரு இமைகள்
கனவுக்கு மேலாடை தொடர்ந்து வரும் தூக்கம்

மண்ணுக்கு மேலாடை
மண்ணுக்கு மேலாடை மரத்தின் நிழலாகும்
….. வண்ணமயில் இருட்டு
மனதுக்கு மேலாடை வள்ர்ந்து வரும் நினைவு

பத்துக்கு மேலாடை

நிறுத்து ராகம் பாடாதே பதிலச்சொல்லு

பத்துக்கு மேலாடை தெரியலையா சொல்ல்ட்டுமா

பத்துக்கு மேலாடை பதினொன்றேயாகும்
பக்கத்தில் நீயிருந்தால் பலகதை உருவாகும்

காலத்தின் அடையாளம் பருவங்களே ஆகும்
காதலர்கள் நடத்துவது கண்சேர்தல் ஆகும்
இது வரையில் புதுவுலகம் நாம் கண்டதுமில்லை..
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்..

*
நல்ல பாட்டு தானே என கார்த்திக் சார் சொன்ன சிக்னேச்சர் போட்டு முடிக்குமுன் இந்தக் காலத்தில ஒரு பாட்டுல ஒருவரி

தோகை கொண்ட மயிலே அவளின் துப்பட்டாவை பார்த்தாயா..ன்னு காதல்ன் கேக்க்றான்..அது என்ன சொல்லும்..லூசு.. வேற வாங்கிக்கொடேன் இட்ஸ் அவெய்லபிள் இன் நாயுடு ஹால் அண்ட் ஆர்ம்கேவின்னு சொல்லிட்டு ககக்னு பறந்து போயிடுமோல்லியோ..

அப்புறம் வரட்டா..

உருவாய் அருவாய் உளதா இலதா
..
அருள்வாய் குகனே

அன்புடன்
சி.க

vasudevan31355
16th August 2014, 10:57 PM
கிருஷ்ணாஜி

கேப்டன் வொர்க் அருமை. மிக அருமையான பதிவுகள். ஏராளமாக. எதைப் பார்ப்பது எதைப் பாராட்டுவது என்று தெரியவில்லை. குறிப்பாக நாம் மறந்து போன ஜெயசிம்மன் பதிவு. இதற்கு என்னுடைய ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

'ஜானேமன்' பற்றி மதியம் போனிலே உரையாடி விட்டோம். அப்பாவி அமோலின் சிரிப்பு ரொம்பப் பிடிக்கும். ஜேசுதாஸ் இந்தியில் கலக்கி எடுத்தது. அளித்ததற்கு நன்றி!

என் ராட்சசியை மறந்து விட்டீர்களே! கேப்டன் சொன்னால்தான் முழுமை பெறும். ஆகட்டும் பார்க்கலாம்.

vasudevan31355
16th August 2014, 11:06 PM
சி.க.சார்

'பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம்' பாடல் தந்தமைக்கு நன்றி. அதற்கு தங்களுடைய முன்னுரை அருமை.

ஏனோ அவ்வளவாக இந்தப் பாடல் என்னை இம்ப்ரெஸ் செய்யவில்லை அப்போதிலிருந்தே. ஆனால் எல்லோரும் நல்ல பாடல் என்று கொண்டாடுவார்கள். ரொம்ப லெங்க்தி. திரும்பத் திரும்ப 'டொன் டொடன்' ஆரம்ப மியூசிக் வந்து கொண்டே இருக்கும்.அது எனக்கு எரிச்சலாகவே இருக்கும். எனக்குத்தான். ஆனால் அனைவருக்கும் விருப்பமான பாடலை தங்கள் பாணியில் வழங்கி விட்டீர்கள் மிகச் சிறப்பாக.

'கண்ணா நலமா'வில் என்னுடைய பிடித்தம்

'நான் கேட்டேன்
அவன் தந்தான்
தாலாட்டும் தாயானேன்'

சுசீலா பின்னல். ராஜேஷுக்கும் சேர்த்து. (அப்படியே நைஸா நானும் கேட்டு ரசிச்சுக்குவேன்):)


http://www.youtube.com/watch?v=AzX2qah0ij0&feature=player_detailpage

chinnakkannan
16th August 2014, 11:11 PM
வாசு சார். நன்றி :) மெய்னா அந்தப் பாட்டு அடிக்கடி சிலோன் ரேடியோல் வெச்சுடுவாங்க..பாட்டும்பதமும், இசையும் கதையும் இசைக்களஞ்சியம் அப்படின்னு பல நிகழ்ச்சிகள்ல. நான்கேட்டேன் அவன் தந்தானும் பிடிக்கும்.. நன்றி :)

gkrishna
16th August 2014, 11:12 PM
அதை மறப்பேனா ?

இப்போது தான் அந்த பாட்டை கேட்டு ரசித்தேன்

பதம் பதம் பரமபதம் ஈஸ்வரி உச்சரிக்கும் போதே மனசு கொள்ளை கொள்ளுமே . கர்ணனின் அசைக்க முடியாத நம்பிக்கை (சங்கர் சிமெண்ட் :))இறுதி வரை கவ்பாய் படங்களாகவே எடுத்தார் . தமிழ் நாட்டில் எந்த ஊரில் கம்பளியும் தலயில் தொப்பியும் இடுப்பில் பெல்ட் அதற்கு நடுவில் துப்பாக்கி யும் வைத்து கொண்டு மக்கள் அலைகிறார்கள் . ஆனால் கர்ணன் ஆங்கில படம மாதிரி 'உணவு விடுதி ','கேளிக்கை விடுதி ' என்றல்லாம் காட்சிகள் அமைத்து இருப்பார் .
நடுவில் சங்கர் கணேஷ் இன் ட்ஜங்கோ இசை 'டட டண்டண்டை'

கிட்டத்தட்ட 11/2 மணி நேரம் வித்யா சின்ஹா நினைப்பில் இருந்து விட்டேன் . அந்த சோட்டி சி பாத் சற்று மறுந்து இருந்த படத்தை வித்யா சின்ஹா என்ற மருந்தை கொடுத்து நினைவு படுத்தி விட்டீர்கள்

யதார்த்த காதல் என்பதற்கு மிக சிறந்த படம

vasudevan31355
16th August 2014, 11:13 PM
இன்று ஸ்ரீதர், காஞ்சனா, திவ்யபாரதி, எம்.பானுமதி, சலீல் சௌத்திரி. ஆஷா பரேக், பாசு சட்டர்ஜி, வஹீதா ரஹ்மான், வித்யா சின்ஹா என்று ஏகப்பட்ட கலைஞர்களை நமது திரி நினைவு கூர்ந்துள்ளது பெரு மகிழ்ச்சியை அளிக்கிறது. பதிவாளர்கள் அத்தனை பேரும் சும்மா அதகளம் பண்ணி விட்டீர்கள்.

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். மூன்று நாட்களில் பார்வையாளர்கள் மூவாயிரத்தைத் தாண்டி நமது திரி ஒரு நிலையான ஒரு அந்தஸ்த்தையும், ஆதரவையும் பெறத் தொடங்கியுள்ளது.

இதற்கு உழைத்த, உழைத்துக் கொண்டிருக்கும் அத்துணை பேருக்கும் நன்றிகள்.

gkrishna
16th August 2014, 11:15 PM
நாளை உங்களிடம் இருந்து 'ரஜனிகந்தா' படத்தின் பாடல்களை எதிபார்க்கிறேன் ப்ளீஸ்

இன்று மாலையில் மீண்டும் ஒரு முறை கரும்பு படத்தின் ராஜேஷ் குறிப்பிட்ட பாடலை கேட்டேன். மிகவும் அருமை
ராஜேஷ்க்கு எனுடைய சிறப்பு வணக்கங்களை சொல்லவும்
(கோழி கூவுது தம்பி ராமகிரிஷ்ணனுக்கு இந்த கடிதத்தை படித்து காட்டவும் பூவே இளைய பூவே - மலேசிய வாசு இங்கே எங்கள் நெய்வேலி வாசு )

vasudevan31355
16th August 2014, 11:24 PM
கிருஷ்ணா சார்,

குதிரைகள் மெயின்டனன்ஸ், அது இதுன்னு டைட்டிலில் போடுவாரு கர்ணன். ரொம்பக் கஷ்டப்பட்டு எடுப்பாரு. ஆனா?

ஒரு வெள்ளை ஸீ த்ரூ டிரஸ் தண்ணியில் நனைஞ்சுதனாலதான் பணமா கொட்டுச்சு அவரு படத்துக்கு.

நாங்கல்லாம் அள்ளி அள்ளி கொடுத்திருக்கோமில்ல.:):-d

அந்த சூப்பர் சிரிப்பு :-d வேலை செய்ய மாட்டேங்குது பார்த்தீயளா?:)

vasudevan31355
16th August 2014, 11:26 PM
நாளை உங்களிடம் இருந்து 'ரஜனிகந்தா' படத்தின் பாடல்களை எதிபார்க்கிறேன் ப்ளீஸ்

(கோழி கூவுது தம்பி ராமகிரிஷ்ணனுக்கு இந்த கடிதத்தை படித்து காட்டவும் பூவே இளைய பூவே - மலேசிய வாசு இங்கே எங்கள் நெய்வேலி வாசு )

'தூங்கப் போறன்னு' கூச்சப் படாம சொல்லலாமில்லே. கேப்டன் கில்லாடிய்யா.:)

vasudevan31355
16th August 2014, 11:29 PM
'திங்கள் மாலை வெண்குடையான்' காதுல ஒலிச்சுகிட்டே இருக்கே!
மறக்கவே முடியலயே. போட்டவர் அவரு பாட்டுக்கு போட்டுட்டு 'ஜம்'முனு பொஐட்டாரு. இங்கே அனுபவிக்கிறது யாரு தூக்கம் இல்லாம.:)

gkrishna
16th August 2014, 11:32 PM
கிருஷ்ணா சார்,

குதிரைகள் மெயின்டனன்ஸ், அது இதுன்னு டைட்டிலில் போடுவாரு கர்ணன். ரொம்பக் கஷ்டப்பட்டு எடுப்பாரு. ஆனா?

ஒரு வெள்ளை ஸீ த்ரூ டிரஸ் தண்ணியில் நனைஞ்சுதனாலதான் பணமா கொட்டுச்சு அவரு படத்துக்கு.

நாங்கல்லாம் அள்ளி அள்ளி கொடுத்திருக்கோமில்ல.:):-d

அந்த சூப்பர் சிரிப்பு :-d வேலை செய்ய மாட்டேங்குது பார்த்தீயளா?:)

https://i.ytimg.com/vi/hCAWANUxCN0/hqdefault.jpg


நானும் கவனித்தேன்
குதிரைகள் maintenance மாதிரி திரியின் சிறப்பு icon maintenance

ஜெய்யின் அந்த பொடி கண்கள் அப்படியே உருளுமே .முகத்தில் சிரிப்பு என்பது கொஞ்சம் கூட இருக்காது . இங்கே ராஜ் கோகிலா ராஜ் மல்லிகா னு ஒரு கூட்டம் குளிச்சிட்டு இருக்கும் ஆனால் ஜெயின் முகத்தில் கொஞ்சமாவது காதல் காம expression இருக்கணுமே ? மனிதர் அப்பவும் வில்லன் நினைவாகவே இருப்பாரே இந்த மாதிரி எந்த நடிகர் நடிக்க முடியும் ?

vasudevan31355
16th August 2014, 11:38 PM
கிருஷ்ணா சார்!

நாளைக்கு நேரா மீட் பண்ணப் போறோம். இப்பவே சந்தோஷமா இருக்கு.

இப்ப இந்தப் பாட்டு வேற ஞாபகத்துக்கு வருது.

'ஆதிமனிதன்' காதலுக்குப் பின். அந்த ரம்பாவும், ஊர்வசி மேனகாவும், குறிப்பாக 'கன் பைட் காஞ்சனா'வும்தான் துணை. எல்லாம் 'காடின ரஹஸ்யம்'

(நாளைக்கு பதிவாளர்கள் வந்து டோஸ் விடப் போறாங்க. என்னடா சம்பந்தமில்லாம எழுதுறானேன்னு. இது கேப்டனுக்கு மட்டுங்கோ)

gkrishna
16th August 2014, 11:38 PM
வாசு சார்
நேரம் இருந்தால் அந்த நூரி பாட்டை கேட்டுட்டு தூங்குங்க

gkrishna
16th August 2014, 11:40 PM
உஷ் உஷ் உஷ்
ok good night sir
sweet dreams on today's star - vidya sinha

செல்வதற்கு முன்
அந்த வித்யா சின்ஹா புடவை பின்னாடி தலையில் இருந்து நீர் வழிந்து ஈரமா இருந்து அதை அமோல் பார்க்கும் சீன் அப்படியே கிளிஞ்சல்கள் படம னு நினைவு மோகன் பூர்ணிமா ஜெயராமன் - துரை காபி

vasudevan31355
16th August 2014, 11:45 PM
நானும் கவனித்தேன்
குதிரைகள் maintenance மாதிரி திரியின் சிறப்பு icon maintenance

ஜெய்யின் அந்த பொடி கண்கள் அப்படியே உருளுமே .முகத்தில் சிரிப்பு என்பது கொஞ்சம் கூட இருக்காது . இங்கே ராஜ் கோகிலா ராஜ் மல்லிகா னு ஒரு கூட்டம் குளிச்சிட்டு இருக்கும் ஆனால் ஜெயின் முகத்தில் கொஞ்சமாவது காதல் காம expression இருக்கணுமே ? மனிதர் அப்பவும் வில்லன் நினைவாகவே இருப்பாரே இந்த மாதிரி எந்த நடிகர் நடிக்க முடியும் ?

100% correct. மிக அழகான ராஜ் கோகிலா நெருங்கியும் கூட. என்ன மனுஷர்? 'கிருஷ்ணா' மட்டும் அந்த இடத்தில் இருந்திருந்தாருன்னா, அட... நம்ம தெலுங்கு 'சூப்பர் ஸ்டார்' கிருஷ்ணாவை சொல்றேங்க.... ராஜ்கோகிலாவை மல்லியப்பூ மாதிரி அப்படியே அள்ளி எடுத்திருக்க மாட்டார்?:)

https://i.ytimg.com/vi/1WJej1Cc6go/hqdefault.jpg

chinnakkannan
16th August 2014, 11:46 PM
திங்கள் மாலை வெண்குடையான் யார் போட்டா.. நான் தேடினாகிடைக்கலையே..சரி.. வரிகளைப் போட்டுடலாம் :)

திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அது ஓச்சி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி !
புலவாய் வாழி காவேரி !

கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாதொழிதல் கயற்கண்ணாய் !
மங்கை மாதர் பெருங்கற்பென்று
அறிந்தேன் வாழி காவேரி !

மன்னும் மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோல் அது ஓச்சி
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி !
புலவாய் வாழி காவேரி !

கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாதொழிதல் கயற்கண்ணாய் !
மன்னும் மாதர் பெருங்கற்பென்று
அறிந்தேன் வாழி காவேரி !

உழவர் ஓதை மதகோதை
உடை நீர் ஓதை தண்பதம் கொள்
விழவர் ஓதை திறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி !
நடந்தாய் வாழி காவேரி !

விழவர் ஓதை திறந்தார்ப்ப
நடந்ததெல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன் தன்
வளனே வாழி காவேரி !

chinnakkannan
16th August 2014, 11:47 PM
1//00% correct. மிக அழகான ராஜ் கோகிலா நெருங்கியும் கூட// நான் இந்தப் படம்லாம்பார்த்ததில்லை தெரியுமா..:துன்பம்:

vasudevan31355
16th August 2014, 11:49 PM
Vidya Sinha

http://indiansong.org/online/wp-content/uploads/2011/09/na-jaane-kyun-chhoti-si-baat-04.jpg

vasudevan31355
16th August 2014, 11:51 PM
http://im.rediff.com/movies/2013/jun/21snail-mail-in-bollywood6.jpg

http://i.imgur.com/hXNoX.png

chinnakkannan
16th August 2014, 11:51 PM
ஒரே வித்யா சின்ஹா புராணம் தானா..அழகாவும் இருக்காங்க..:)

vasudevan31355
16th August 2014, 11:52 PM
இது கோபாலுக்கு மட்டும்

http://i1.ytimg.com/vi/Brahul3vypc/maxresdefault.jpg

vasudevan31355
16th August 2014, 11:53 PM
http://images.idiva.com/media/content/2012/Dec/bolly.jpg

vasudevan31355
16th August 2014, 11:54 PM
http://i1.ytimg.com/vi/5qa58miSJ-c/0.jpg

http://i1.ytimg.com/vi/83grwLMCI3g/hqdefault.jpg

chinnakkannan
16th August 2014, 11:56 PM
இந்தக்கால போட்டோ?:)

vasudevan31355
16th August 2014, 11:58 PM
http://learningandcreativity.com/wp-content/uploads/2014/04/booklet-cover-of-Chhoti-Si-Baat.jpg

vasudevan31355
16th August 2014, 11:58 PM
சி.க.சார்,

கடினமான திங்கள் மாலை பாடலின் முழு வரிகளைக் கொடுத்து எனக்கு சிரமம் இல்லாமல் பண்ணி விட்டீர்கள். Thanks.

பண்டமாற்று முறையாகத்தான் வித்யா சின்ஹா

உங்கள் பாணியில் சொன்னால்

கங்கை நதிப்புறத்து வித்யா சின்ஹா
புலவாய் வாழி காவேரிக்கு மாறு கொள்வோம்.:)

chinnakkannan
17th August 2014, 12:01 AM
புரியலை.. இருந்தாலும்லைக்போட்டுட்டேன் :) ஜெயாப்ளஸ் ல தமிழ் வித்யா சின்ஹா தேவிகா :) பனியில்லாத மார்கழியா பாட்டு

vasudevan31355
17th August 2014, 12:02 AM
இந்தக்கால போட்டோ?:)

உங்க விதி:)ஆனா இப்பவும் அழகாத்தான் இருக்காக.

http://img2.wikia.nocookie.net/__cb20130730215549/quboolhai/images/f/f0/VidyaSinha.jpg

http://gorky1.wpengine.netdna-cdn.com/wp-content/uploads/2013/03/DSC_0060-2.jpg

vasudevan31355
17th August 2014, 12:05 AM
சி.க.சார்,

இங்கே செம மழை! நீங்கள் போட்ட தி.மா.வெ பாடல் வரிகளை மனசுலே நெனச்சுண்டு சமர்த்தா படுத்துக்கிறேன். நல்ல இரவு. :)

chinnakkannan
17th August 2014, 12:06 AM
தாங்க் தான் போட்டேன்..லைக்லாம் கன்னுக்குட்டி ஃபோட்டோஸ்க்கு தான்.. இவங்களுக்கு பெண் பையன் எத்தனை..

chinnakkannan
17th August 2014, 12:07 AM
குட் நைட் வாசு சார்.. இங்க கொஞ்ச்ம் மெல்லிய குளிர்காற்று...ஸ்வீட் ட்ரீம்ஸ் குரு..:)

Murali Srinivas
17th August 2014, 12:13 AM
மதுர கானங்கள் திரியில் இதை பதிவிடலாமா என்று தெரியவில்லை. ஆனால் மதுர கானங்கள் நிறைந்த படம் படம் என்பதனால் அதை செய்தியை இங்கே பதிவிடுகிறேன்.

இன்று மாலை காமராஜர் அரங்கில் காதலிக்க நேரமில்லை படத்தின் 50-வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டம் நடைபெற்றது. நமது ஒய் ஜி மகேந்திரா அவர்கள் initiative எடுத்து நடத்தினார். அவருக்கு தமிழ் ஹிந்து நாளேடு கை கொடுக்க சிறப்பான விழாவாக நடந்தது.

சும்மா சொல்லக்கூடாது. YGM அவர்கள் மிகுந்த முயற்சி எடுத்து படத்தில் பங்கு பெற்ற அனைவரையும் வரவழைத்திருந்தார். காஞ்சனா, ராஜஸ்ரீ, சச்சு, விஎஸ் ராகவன், ஜூனியர் பாலையா, ஆனந்த் பாபு, அவரின் மகன் (இப்போது திரையில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்), யேசுதாஸ், ஈஸ்வரி, சிவசிதம்பரம், ரவியின் மனைவி விமலா, PBS மகன் பனீந்தர், சித்ராலயா கோபு, CVR, தேவசேனா ஸ்ரீதர் என்று அனைவரையும் மேடையேற்றி கௌரவித்தார். கார்த்திக்கை தொடர்பு கொள்ள முடியவிலையாம், வழக்கம் போல் MSV வரவில்லை. வர வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தும் உடல் நலம் ஒத்துழைக்காத வின்சென்ட், சுசீலாம்மா ஆகியோர் மட்டுமே ஆப்சென்ட்.

இவர்களைப் பாராட்டும் சிறப்பு அழைப்பாளர்களாக சேரன், மனோபாலா, கிரேஸி மோகன், ARS, வித்யாசாகர் என்று ஏராளமான VIPஸ். அங்கேயும் நடிகர் திலகத்தை மறக்காத சேரன் (சிவந்த மண் பற்றி அபப்டி சொன்னார்), கூடுதலாக வித்யாசாகர் பெரிய சிவாஜி ரசிகர் என்பதையும் வெளிப்படுத்தினார். கோபுவின் நகைச்சுவை இழையோடும் fluent நினைவு கூறல் [அவரும் தான் ஒரு முறை நாடகத்தில் நடித்த போது நடிகர் திலகம் நாடகம் பார்க்க வந்திருந்ததையும் மறுநாள் வீட்டிற்கு கூப்பிட்டு பாராட்டியதையும் சொன்னார் (எனக்கு கிடைத்த ஆஸ்கார் பரிசு]. மனோபாலா தான் காதலிக்க நேரமில்லை படத்தின் ரீமேக் உரிமையை ஸ்ரீதரிடம் வாங்கியதையும் பின் அதை பண்ண முடியாது என்று தெரிந்தவுடன் திருப்பிக் கொடுத்ததையும் விவரித்தார். குறிப்பாக பாலையா ரோலிற்குதான் தன்னால் யாரையும் யோசிக்கவே முடியவில்லை என்றார். விஎஸ் ராகவன் நெஞ்சிருக்கும் வரை படபிடிப்பு சமயத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை விவரித்து விட்டு ஸ்ரீதருக்கு சிவாஜி எந்தளவிற்கு மரியாதை கொடுத்தார் என்பதை சொன்னார்.

கடைசி வரை இருந்தது மட்டுமல்லாமல் மேடையேறிய போது பேசியதோடு மட்டுமல்லாமல் என்ன பார்வை உந்தன் பார்வையை ஒரு பிடி பிடித்த தாஸேட்டன் பலத்த கைதட்டல்களை அள்ளிக் கொண்டு போனார். ஈஸ்வரி மேடைக்கு வரும் போது இரண்டு வரியாவது பாடுவார் என எதிர்பார்த்திருக்க அவர் பாடவில்லை. [வாசு உங்கள் நினைவுதான் அப்போதெல்லாம்].

முக்கியமான காட்சிகளையெல்லாம் கிளிப்பிங்க்ஸ் போட்ட YGM, அது மட்டுமல்லாமல் ரீ ரெகார்டிங் பற்றி விவரிக்கவும் செய்தார். அவரின் இசைக்குழு படத்தின் அனைத்து பாடல்களையும் பாட மாடி மேல மாடி வைத்து பாடல் காட்சி மட்டும் ஒரிஜினல் வாய்ஸுடன் கிளிப்பிங் ஆக வந்தது. சிவசிதம்பரம் காதலிக்க நேரமில்லை பாடினார்.

மேடையேறிய அனைவருமே அளவோடு பேசியது மகிழ்ச்சியான விஷயம். வழக்கம் போல் கிரேஸி மோகன் தன trade mark ஸ்டைலில் கலக்கினார். பெருமாள் கோவிலில் சடாரி வைப்பார்கள். சடாரிக்கு மற்றொரு பெயர் சடகோபம். அந்த சடகோபம்தான் இந்த கோப்பு என்றார். அந்த சடாரி சாற்றிக் கொண்டால் நகைச்சுவை எழுத்து தானாக வரும் என்றார். ஆங்கில் கிளாஸிக் படங்களை நினைவு கூற MGM, தமிழ் கிளாஸிக் படங்களை நினைவு கூற YGM என்றார். அவரும் தன பங்கிற்கு நடிகர் திலகம் பற்றி குறிப்பிட்டு விட்டு தான் கல்கியில் கேள்வி பதில் எழுதியபோது வந்த ஒரு கேள்வியைப் பற்றி சொன்னார். அந்த கேள்வியை அனுப்பிய வாசகர் சிவாஜி ஓவர் ஆக்டிங் என என் நண்பன் சொல்லுகிறானே என்று கேட்க அதற்கு கிரேஸி மோகன் இப்படி பதில் சொன்னாராம். உங்கள் நண்பரிடம் கூறுங்கள், சிவாஜிக்கு அப்புறம் ஆக்டிங் ஓவர் என்று.

இறுதியாக நெஞ்சத்தை அள்ளித்தா பாடலை குழுவினர் பாட YGM அருமையாக விஸில் அடிக்க அதன் பிறகு திருமதி தேவசேனா ஸ்ரீதர் மேடையேற்றப்பட்டு படக்குழுவினர் அனைவரும் சேர்ந்து அவரை கௌரவித்தனர். பிறகு அனைவரும் சேர்ந்து YGM அவர்களை கௌரவித்தனர்.

அருமையான மாலைபொழுது! இனிமையான விழா!

அன்புடன்

கிருஷ்ணாஜி, உங்களை கூட்டி செல்லலாம் என்று அலைபேசியில் விளித்தால் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

YGM நடத்தும் விழா என்று சொல்லும்போது மேடையின் பின்னணியில் இருந்து செயல்பட்டவர் நமது ராகவேந்தர் சார் என்பதை சொல்லவும் வேண்டுமோ?

chinnakkannan
17th August 2014, 12:36 AM
நல்ல கவரேஜ்..முரளிசார்.. காதலிக்க நேரமில்லை இன்னும் எவ்வளவு வருடங்கள் ஆனாலும் மனதில் நினைத்து நிற்கும்.. நன்றி..

vasudevan31355
17th August 2014, 03:38 AM
முரளி சார்!

மிக மிக நன்றி! திரியை கௌரவப்படுத்தி பெருமை சேர்க்கும் கட்டுரை. அமர்க்களம். அருமையான கவரேஜ். விழாவை நேரில் கண்டது போல் ஓர் உணர்வு. விழாக் குழுவினர் அனைவரும் நடிகர் திலகத்தை மறக்காமல் குறிப்பிட்டது விழாவின் ஹைலைட் என்று நினைக்கிறேன். சேர மன்னன் சேர மன்னன்தான். விழாவை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தித் தந்த மகேந்திரன் சாருக்கும், அவரது வலது கரமாய் இருந்து செயல்பட்ட நம் அருமை ராகவேந்திரன் சாருக்கும் நமது நன்றிகள்.

Gopal.s
17th August 2014, 03:57 AM
இது கோபாலுக்கு மட்டும்



வழக்கமாக உங்கள் படங்களில் ஒரு "முழுமை "இருக்குமே?அது மிஸ்ஸிங்.

Gopal.s
17th August 2014, 04:32 AM
மதுர கானங்கள் திரியில் இதை பதிவிடலாமா என்று தெரியவில்லை. ஆனால் மதுர கானங்கள் நிறைந்த படம் படம் என்பதனால் அதை செய்தியை இங்கே பதிவிடுகிறேன்.

இன்று மாலை காமராஜர் அரங்கில் காதலிக்க நேரமில்லை படத்தின் 50-வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டம் நடைபெற்றது. நமது ஒய் ஜி மகேந்திரா அவர்கள் initiative எடுத்து நடத்தினார். அவருக்கு தமிழ் ஹிந்து நாளேடு கை கொடுக்க சிறப்பான விழாவாக நடந்தது.

வழக்கம் போல் MSV வரவில்லை.

மெகா டீவீயில் வாரா வாரம் போய் உட்கார்ந்து பேசியதையே பேசி,எல்லோர் மனதிலும் வெறுப்பு வளர்ப்பதை விட,இந்த மாதிரி நாலு function வந்தால் தேஞ்சா போய்டுவார் ?

எம்.எஸ்.வியின் போலி அடக்கத்தை,அகந்தையை, ஆள் பார்த்து நடக்கும் போக்கை அறிந்து கொள்ள அரிய சந்தர்ப்பங்கள் ,அடிக்கடி வாய்க்கின்றன.

டி.கே.ராமமூர்த்தி என்றால்(உயிரோடிருந்தால்),உடல் நிலையையும் பொருட் படுத்தாது வந்திருந்து ,"தான் "இசையமைத்த பாடல்களை பற்றி விவரித்து முழுமை தந்து பெருமை படுத்தியிருப்பார்.

கடவுள் நம்பிக்கை முழுமையாக இல்லாதவன் எனினும் ,ஒன்று சொல்லி கொள்கிறேன். கடவுள் நல்ல மனிதர்களை,திறமைசாலிகளை என்றுமே முழுமையாக ஆசிர்வதிப்பதில்லை.கூட இருந்து அதிர்ஷ்டம் கொடுப்பதில்லை. அதுதான் அபார திறமை கொடுத்து விட்டோமே,அவர்களே தங்களை கவனித்து கொள்வார்கள் என்ற அலட்சியம் போல.

rajeshkrv
17th August 2014, 05:43 AM
தகவல்கள் குவிந்த விதமாக இருக்கிறது . அருமை

எனது தமிழ் ஆசான் திரு வாலி ஐயாவைப்பற்றி மாலை மலரில் வந்த கட்டுரையை அழகாக இங்கே பதித்த கிருஷ்ணாஜி’க்கு கோடி நன்றிகள்

முரளி ஜி, காதலிக்க நேரமில்லை பற்றி முகனூலில் சித்ராலய ஸ்ரீராம் அவர்கள் பதித்திருந்தார் .. நீங்கள் அதற்கு மேலும் ஒரு படி போய் ஒவ்வொரு நிகழ்வுகளையும் அழகாக சொல்லி விட்டீர்கள்

டி.வி.ராஜு பற்றி நினைவு கூறல் நன்றாக இருந்தது, பல தெலுங்கு படங்களுக்கு நல்ல இசை வழங்கினார்.
பின்னர் பெரிய பெயர் பெற்ற இரட்டையர்களான ராஜ்-கோட்டியின் ராஜ் இவரது புதல்வர்.

வழக்கம் போல் சி.க வின் பதிவு, வாசு ஜியின் பதிவுகள், ராகவ் ஜியின் பதிவுகள் என எல்லாமே அடி தூள்

Richardsof
17th August 2014, 06:22 AM
1963-ல் கே.வி.எம் இசையில் “தர்மம் தலைகாக்கும்”, “நீதிக்குப்பின் பாசம்”, “பரிசு”, “காஞ்சி தலைவன்”, “கலை அரசி”, கொடுத்து வைத்தவள், போன்ற எம்.ஜி.ஆர் நடித்த படங்களுக்கும், “அன்னை இல்லம்”, “இருவர் உள்ளம்”, குலமகள் ராதை போன்ற சிவாஜி நடித்த படங்களுக்கும் இசை அமைத்து இருக்கிறார். தவிர வானம்பாடி, நீங்காத நினைவு, நினைப்பதற்கு நேரமில்லை, கடவுளை கண்டேன், காட்டு ரோஜா, ஏழை பங்காளன், ஆசை அலைகள். ஆஸ்திக்கொரு ஆணும், ஆசைக்கொரு பெண்ணும் போன்ற படங்களில் இசை அமைத்து இருக்கிறார். இன்னொரு குறிப்பிடப்படத்தக்க படம் கே.வி.எம், கண்டசாலா இணைந்து இசையமைத்த “லவ குசா” படம்.

எம்.ஜி.ஆர் நடித்த படங்கள் என்றால் கே.வி.எம்முக்கு உற்சாகம் பிய்த்துக்கொள்ளும் போல் இருக்கிறது

இளமையான பாடல்களாய் அள்ளி வீசுவார். தர்மம் தலை காக்கும் படத்தில் .பி.சுசீலா, டி.எம்.எஸ் குரல்களில் “ஹலோ ஹலோ சுகமா”, “தொட்டு விட தொட்டு விட தொடரும்”. “மூடுபனி குளிர் எடுத்து” போன்ற டூயட்களும் “அழகான வாழைமர தோட்டம்”, “பறவைகளே பறவைகளே எங்கே வந்தீங்க” போன்ற தனிப்பாடல்களும் மிக பிரபலமானவை. ஹலோ ஹலோ சுகமா இப்போதும் பிரபலமே.

நீதிக்குப்பின் பாசம் படத்தில் “மானல்லவோ கண்கள் தந்தது”, “வாங்க வாங்க கோபாலய்யா”, “காடு கொடுத்த கனி இருக்கு”, “அக்கம் பக்கம் பார்க்காதே”, “சிரித்தாலும் போதுமே”, “இடி இடிச்சு மழை பொழிஞ்சி” என ஹிட் பாடல்களாக அமைந்தன. பரிசு படத்தில் “எண்ண எண்ண இனிக்குது”, “கூந்தல் கருப்பு குங்குமம் சிகப்பு”, “ஆளைப்பார்த்து அழகைப்பார்த்து” போல ஜோடிப்பாடல்களும். "காலமெனும்நதியினிலே", பொன்னுலகம் நோக்கி போகின்றோம் போன்ற தனிப்பாடல்களும் மக்கள் மனதில் நிலைத்தவை. “

காலமெனும் நதியினிலே” பாடலை பி.சுசீலா அனுபவித்து பாடி இருப்பார். காஞ்சி தலைவன் படத்தில் “ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா” என ஒரு அண்ணன் தங்கை பாடல் பிரபலமாக அமைந்தது. தவிர, “வானத்தில் வருவது ஒரு நிலவு” என டி.எம்.எஸ் உடன் ஒரு ஜோடிப்பாடல், "உயிரை தருகின்றேன்" என ஒரு தனிப்பாடல் என பி.சுசீலாவின் பங்களிப்பு இருந்தது. காஞ்சித்தலைவன், கலை அரசி படங்களில், சொந்தக்குரலில் பாடும் பானுமதி ஹீரோயின் என்பதால் இன்னொரு ஹீரோயினுக்கு பாடினார் பி.சுசீலா.

“நீ இருப்பது எங்கே”, “என்றும் இளமை” போன்ற பாடல்களை குறிப்பிடலாம்.. கொடுத்து வைத்தவள் படத்தில் “ நீயும் நானும் ஒன்று”, “என்னம்மா சவுக்யமா எப்படி இருக்குது மனசு”, “மின்னல் வரும் சேதியிலே” போன்ற பாடலகள் ஹிட் ஆனவை.

நடித்த படங்களான அன்னை இல்லம், இருவர் உள்ளம், குங்குமம், குலமகள் ராதை போன்ற படங்களிலும் கே.வி.எம்மின் இசை சிறப்பாக அமைந்தது. அன்னை இல்லம் படத்தில் “மடி மீது தலை வைத்து” பாடல் அருமையான மெலடி. “சிகப்பு விளக்கு எரியுதம்மா”, “அய்யா பெரியவரே” அத்தானையே உள்ளம்” போல பாடல்கள் பி.சுசீலாவின் குரலில் இடம் பெற்றன.

இருவர் உள்ளம் படத்தின் வெற்றிக்கு இசையும் ஒரு முக்கிய காரணம். “அழகு சிரிக்கின்றது”, “நதி எங்கே போகிறது” என இரு மனதை மயக்கும் அருமையான ஜோடிப்பாடல்கள் இடம் பெற்றன. “இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா” என்ற சோகமான சிச்சுவேஷன் பாடல் இன்றும் விரும்பி கேட்கப்படும் பாடல். “கண்ணே கண்ணே உறங்காதே” ஒரு இனிமையான மெலடி.

குலமகள் ராதை படத்திலும் எல்லா பாடல்களும் சிறப்பாக அமைந்தன. இந்த கால கட்டத்தில் மிக பலமான கதைகளும், கதைக்கு தேவையான சிச்சுவேஷன் பாடல்களும் தேவையாக இருந்தன. குலமகள் ராதை படம் அவ்வகையை சேர்ந்தது. “இரவுக்கு ஆயிரம் கண்கள்”, “பகலிலே சந்திரனை பார்க்கப்போனேன்”, “ஆருயிரே மன்னவரே அன்பு மயில் வணக்கம்”, “சந்திரனை காணாமல் அல்லிமுகம் மலருமா”, “கள்ளமலர் சிரிப்பிலே” என எல்லாமே சூப்பர் ஹிட் பாடல்கள். இதைப்போல் குங்குமம் படத்தில் பாடல்களும் பிரபலமாயின. “தூங்காத கண்ணின்று ஒன்று” ஒரு சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தன. “குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம்” என சூலமங்கலத்துடன் சேர்ந்து பாடும் பாடல் பெண்களுக்கான பாடல் ஆகும். “பூந்தோட்ட காவல்காரா பூப்பறிக்க இத்தனை நாளா” , “காலங்கள் தோறும் திருடர்கள் இருந்தார்” என குறிப்பிடத்தக்க பாடல்கள் படத்தில் இடம் பெற்றன.

இவ்வருடத்தில் இன்னொரு முக்கியமான படம் லவகுசா ஆகும். தெலுங்கில் கண்டசாலாவும் தமிழில் கே.வி.எம் + கண்டசாலா இணைந்தும் இசை அமைத்து இருந்தார்கள். பி.சுசீலா மற்றும் பி.லீலா இணைந்து பாடிய ராமரின் கதை சொல்லும் பாடலான “ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே” பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனது. தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் நீண்ட நேரம் ஒலிக்கும் பாடலாகவும் அது அமைந்தது. மிகவும் சிரமமான பாடல்.

பி.சுசீலாவும், பி.லீலாவும் இணைந்து பாடுவதை கேட்க அத்தனை சுகம். இரு சகோதரிகள் பாடுவது போல் இரு குரல்களும் ஒன்றோடொன்று இணைந்து ஒரே ஸ்ருதியில் பாடும் போது அதை கேட்பது அத்தனை சுகம். இதன் தெலுகு வடிவம் “வினுடு வினுடு இராமாயண ஃகாதா”-வின் டியுனை மாற்றி தமிழுக்கு ஏற்றாற்போல் புது டியூன் போட்டு வெற்றி பெற்றார் கே.வி.எம். அப்படத்தில் “ராம சுகுண சீலா தசரதனின் அருமை பாலா”, “ஜெய ஜெய ராம்” என லீலாவுடன் பாடிய மற்ற பாடல்களும் முக்கியத்துவம் பெற்றன. “ஈடு இணைக்கு நமக்கு ஏது” என ஒரு நடனப்பாடலும் படத்தில் இடம் பெற்றது. தவிர நிறைய ஸ்லோகங்கள் பி.சுசீலா மற்றும் பி.லீலா குரல்களில் இடம் பெற்றன. இப்படத்தின் பாடல்கள் பக்தி இசை சார்ந்த படங்களுக்கு இசை அமைக்கும் நிறைய வாய்ப்புகளை கே.எம்.முக்கு பெற்று தந்தது என்றே சொல்லலாம்.


கண்ணதாசனின் படமான “வானம்பாடி”, கே.வி.எம் இசையில் இக்கால கட்டத்தில் வந்த இன்னொரு முக்கியமான படம். ஒரே இசை மழை தான் !! காலத்தால் அழிக்க முடியாத பாடல்களில் “கங்கை கரை தோட்டம்” பாடலையும் சேர்க்கலாம். கனவில் சுகமும்.

நிஜத்தில் சோகமுமாக உணர்வுகளை மாற்றி மாற்றி பாடும் பி.சுசீலாவும், அதை திரையில் கொண்டு வந்த தேவிகாவும் கவியரசர் கண்ணதாசனின் வரிகளும் அப்பாடலை மறக்க முடியாத பாடலாக செய்து விட்டது. பி.சுசீலாவின் திறமையை பறைசாற்ற அந்த ஹம்மிங் ஒன்றே போதும். கிராமிய மனம் வீசும் “தூக்கணாங்குருவிக்கூடு தூங்க கண்டாள் மரத்திலே” பாடலை ரசித்து ரசித்து கேட்கலாம். (திரையில் ரெக்கார்டிங் தியேட்டரில் தேவிகா பாடுவது போல் வரும்). மிகவும் இயல்பாக உணர்வுகளை சொல்ல கவிஞரின் பேனாவால் தான் முடியும் என்பதை நிருபிக்கும் பாடல் தான் “ஊமைப்பெண் ஒரு கனவு கண்டாள், அதை உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்” பாடல். பி.சுசீலாவின் குரலால் அவ்வரிகளுக்கு உயிர் வந்தது.

டி.எம்.எஸ்-பி.சுசீலாவின் குரலில் வந்த “ஆண் கவியைவெல்ல வந்த பெண்கவியே வருக” பாடல் தனித்தன்மை வாய்ந்தது. ஒரு மேடையில் இருவர் போட்டி போடும் பாடலாக அது தோன்றினாலும், அது முழுக்க முழுக்க கவிஞரின் தமிழ் விளையாடும் களமாகவே அப்பாடல் அமைந்தது.. குரலில் துள்ளலும் குறும்புமாய் பாடகர்களும் கலக்கி இருப்பார்கள். காட்டு ரோஜா படத்தில் “சின்ன சின்ன கண்ணுக்கு என்ன வேண்டும்?”, “ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு”, “கதவுதிறந்ததா”, “வண்டொன்று வந்தது” "சின்ன சின்ன கன்னி எனக்கு" என நல்ல பாடல்கள் இடம் பெற்றன.

ஏழை பங்காளன் படத்தில் “மனதில் என்ன மயக்கம்”, “வீட்டுக்கு வந்த மச்சான்” என குறிப்பிடும் படியான பாடல்களை பி.சுசீலா பாடினார். “கடவுளை ” கண்டேன் படத்தில் “தீபத்தை வைத்துக்கொண்டு திருக்குறளும் படிக்கலாம்”, “அண்ணா அண்ணா சுகம் தானா”, "விடிய விடிய பேசினாலும்" போன்ற பாடல்கள் இடம் பெற்றன. “நீங்காத நினைவு” படத்தில் “எங்கிருந்த போதும் உன்னை மறக்கமுடியுமா” என மனதை வருடும் ஒரு சோகப்பாடல் மிகவும் பிரபலம். “ஓ ஓ ஓ ஓ சின்னஞ்சிறுமலரை மறந்து விடாதே” என எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து பாடும் பாடல் ஒரு ஹிட் பாடல். ஹிந்திப்பட டியூனை உபயோகித்து இருந்தார் கே.வி.எம். இதே தனிப்பாடலாகவும் பி.சுசீலாவின் குரலில் ஒலித்தது. தவிர “கண்பார்வை கவிபாடும்”, “கன்னி பருவம்”, “அன்பு வாழ்க, ஆசை வாழ்க” போன்ற பாடல்களும் இடம் பெற்றன. கைதியின் காதலி படத்தில் “ராஜாவும் வந்திடுவார்”, “மார்கழி போச்சு தை பொறந்தாச்சு” பாடல்கள் குறிப்பிட படத்தக்கவை. நினைப்பதற்கு நேரமில்லை படத்தில் “அத்தான் கடிதம் நல்ல முத்து” பாடல் இடம் பெற்றது. “யாருக்கு சொந்தம்?” படத்தில் “வண்டுக்கு தேன் வேண்டும்” பாடலை குறிப்பிடலாம்.


இதே வருடத்தில் தெலுங்கில் “Mamakaram”, “Atma balam” என இரு நேரடி தெலுங்குப்படங்களுக்கும் இசை அமைத்தார் கே.வி.எம். Atma balam படத்தில் “Ekkadiki pothavu”, “Chitapata Chinukulu”, “Parugulu these nee vayasunaku”, “Gilli kajalu” , “nalugu kallu” என எல்லாமே சிறப்பான பாடல்கள். “Mamakaram” படத்தில் “Ghalluna gajjala ganthulu”, “madhuram madhuram mana” போன்ற பாடல்கள் இடம் பிடித்தன.

courtesy - THIRU KALAIKUMAR - NET

Richardsof
17th August 2014, 06:24 AM
1964-ல் வேட்டைக்காரன், தொழிலாளி, அல்லி. ஆயிரம் ரூபாய், நவராத்திரி போன்ற தமிழ் படங்களிலும் “Dhaagudu mootalu”. “mooga manasulu” போன்ற கே.வி.எம் இசை அமைத்த தெலுங்குப்படங்களிலும் பி.சுசீலா பாடி இருக்கிறார்.

வேட்டைக்காரன் படத்தில் மெதுவா மெதுவா தொடலாமா”, “மஞ்சள் முகமே வருக”, “கதாநாயகன் கதை சொன்னான்”. “என் கண்ணனுக்கெத்தனை கோவிலோ” போன்ற பாடல்கள் ஹிட் ஆனவை. தொழிலாளி படத்தில் டி.எம்.எஸ்ஸுடன் இணைந்து “என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்”, “வருக வருக திருமகளின்”, “வளர்வது கண்ணுக்கு தெரியலே” போன்ற பாடல்களையும் எஸ்.ஜானகியுடன் சேர்ந்து “அழகன் அழகன் பேரழகன்” பாடலையும் “கலை வந்த விதம் கேளு கண்ணே” பாடலை தனிப்பாடலாகவும் பாடினார் சுசீலா அவர்கள். எல்லா பாடல்களும் சிறப்பாக அமைந்தன. நவராத்திரி படத்தில் “நவராத்திரி சுபராத்திரி” என்ற பாடல் இப்போதும் நவராத்திரி காலங்களில் தவறாமல் ஒளிபரப்பப் படும் பாடல். “சொல்லவா கதை சொல்லவா” ஒரு இனிமையான, குளிர்ச்சியான மெலடி. ஆனால் என்னை மிகவும் கவர்ந்தது அந்த தெருக்கூத்து பாடல் தான். “ராஜாதி ராஜா மகாராஜா” என துவங்கும் தெருக்கூத்து பாடலை,

ஆந்திராவில் பிறந்து வளர்ந்து, தெலுங்கை தாய்மொழியாய் கொண்ட ஒரு பெண் இந்த மண்ணுக்குரிய கலையை, தெருக்கூத்துக்கே உரித்தான உச்சரிப்புடன் பாடி அசத்தி விட்டார். அதை சாவித்திரியும் தன் அனாயசமான நடிப்பால் திரையில் ஒளிர செய்தார். ஆயிரம் ரூபாய் படத்தில் சென்னை தமிழில் “ஆனாக்க அந்த மடம் ஆவாட்டி சந்தே மடம் ” என்ற வழக்கத்துக்கு மாறான பி.சுசீலாவின் பாடல் இடம் பெற்றது. “நிலவுக்கும் நிழலுண்டு” ஒரு நல்ல தத்துவ பாடலாகும். “பார்த்தாலும் பார்த்தேன் நான் ஒன்ன போல பாக்கலே” என பி.பி.எஸ்ஸுடன் ஒரு இனிமையான, பிரபலமான பாடல் அமைந்தது. “அல்லி” படத்தில் “உன்னை அன்றி யாரிடம்”. காவேரி மீனடியோ” உட்பட ஆறு பாடல்கள் இடம் பெற்றன.
“Dhaagudumoothalu” படத்தில் “adagaka icchina manase muddu”. “mella mellaga anuvanuvu”, “gorankakenduko kondantha alaka”, “enkochindoy maava edurochindoy”, “devudane vadu vunnada”, “Andalam ekkadamma” போன்ற பாடல்கள் மிக பிரபலாமனவை. சாவித்திரியின் சொந்த தயாரிப்பான “மூக மனசுலு” படம் இன்னொரு மியுசிகல் ஹிட். “Godari gattundi” பாடல் எல்லா மக்கள் மனதையும் கவர்ந்திழுத்த அருமையான கிராமியப்பாடல். “ee Naati ee bandham”, “naa paata nee nota” , “Gowramma nee mogudevaramma” போன்ற பாடல்கள் கண்டசாலா, சுசீலாவின் குரல்களின் வந்த மறக்க முடியாத டூயட்ஸ். “Maanu maakkanu kaanu” மனதைக்கரைக்கும் ஒரு சோகப்பாடல். தவிர சில டப்பிங் படங்களும் இவர் இசையில் வெளி வந்தன.
COURTESY - THIRU KALIKUMAR

Richardsof
17th August 2014, 06:26 AM
1965-ல் "இதய கமலம்", "எங்க வீட்டு பெண்", "காக்கும் கரங்கள்",
"கன்னித்தாய்", "படித்த மனைவி", "சுமங்கலி". "தாழம்பூ". "திருவிளையாடல்", "வீர அபிமன்யு" போன்ற தமிழ் படங்களிலும், "Anthasthulu", "illalu", " kanne manasulu", "Raja drohi", "Sumangali", "tene manasulu", "todu needa", "veerabhimanyu" போன்ற தெலுங்கு படங்களிலும் கே.வி.எம்மின் இசையில் பாடினார் பி.சுசீலா அவர்கள்.


இதய கமலம் படத்தில் எல்லா பாடல்களும் காலத்தால் அழியாதவை. "உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல" பற்றி சொல்லவே வேண்டாம். 50 வருடங்கள் ஆகியும் அழியாமல் நிற்கும் பாடல் இது. "மலர்கள் நனைந்தன பனியாலே" பாடலை காலையில் எழுந்ததும் கேளுங்கள். அன்றைய தினம் மனம் அமைதியாகவும், பிரெஷ் ஆகவும் இருக்கும். அத்தனை இனிமையான பாடல். "என்ன தான் ரகசியமோ இதயத்திலே" பாடலைப்பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். இரு பெண்களுக்கும் பி.சுசீலாவே பாடி இருக்கும் பாடலில் இரு பெண்களின் கதாபாத்திரத்துக்கு ஏற்றபடி குரலால் நடித்திருப்பார் பி.சுசீலா அவர்கள். கே.ஆர்.விஜயாவுக்கு காதல் மனைவியின் வேடமும், ஷீலாவுக்கு மனைவியை பிரிந்து வாடும் கணவனை அவர் பக்கம் இழுக்கும் வேடமும் கிடைத்தன. இருவருமே குடும்பப்பெண்கள் என்றாலும் ஒருவர் குரலில் காதலும், நிறைவும் ஒலிக்க இன்னொருவர் குரலில் கொஞ்சம் ஆசையும் கலந்து ஒலிக்க வேண்டும். காதலில் குழைந்து கே.ஆர்.விஜயா "நினைத்தால்....." என இழுக்க, "எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே" என ஷீலா துவங்கும் இடத்தில் குரலில், எக்ஸ்ப்ரஷனில் அப்படி ஒரு துரிதமான மாற்றம். Hats Off Susheelamma !! பி.பி.எஸ் உடன் இணைந்து பாடிய "தோள் கண்டேன் தோளே கண்டேன்", "நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ" பாடல்களும் ஹிட் ஆகின.


காக்கும் கரங்கள் படத்தில் "திருநாள் வந்தது, தேர் வந்தது", "ஞாயிறு என்பது கண்ணாக", "அல்லித்தண்டு கால் எடுத்து" "அக்கா அக்கா அக்கா அக்கக்கா " பாடல்கள் சிறப்பாக அமைந்தன. "திருநாள் வந்தது" பாடல் சோகம் ததும்பும் அருமையான பாடல். கன்னித்தாய் படத்தில் "மானா பொறந்தா", "என்றும் பதினாறு வயது பதினாறு", "வாயார முத்தம் தந்து வண்ணப்பிள்ளை கொஞ்சுது" போல சில குறிப்பிடத்தக்க பாடல்கள் இடம் பெற்றன. படித்த மனைவி படத்தில் "அப்பா ஒரு கண்ணு", "அந்த முகமா இந்த முகம்" போன்ற பாடல்கள் இடம் பெற்றன. "எங்க வீட்டுப்பெண் படத்தில் "தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்", "கால்களே நில்லுங்கள்" "கார்த்திகை விளக்கு " போன்ற பாடல்கள் பிரபலம் ஆயின.

திருவிளையாடல் படம் தமிழ் திரை உலகில் ஒரு மைல்கல். இப்போது வெளியிட்டாலும் ஹிட் ஆகும். அப்படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களுமே சிறப்பானவை. பி.சுசீலா பாடிய "தேவா மகாதேவா", "நீல சேலை கட்டிக்கொண்ட சமுத்திரப்பொண்ணு" பாடல்களும் மக்கள் மனதில் தனி இடம் பிடித்தன. தாழம்பூ படத்தில் "தாழம்பூவின் நறுமணத்தில்", "வட்ட வட்ட பாத்தி கட்டி", "தூவானம் இது தூவானம்", "ஏரிக்கரை ஓரத்திலே எட்டுவேலி நிலம்", "பங்குனி மாதத்தில் ஒரு இரவு" பாடல்கள் ஹிட் ஆனவை. "வீர அபிமன்யு" படத்தில் "பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன்" பாடலை யாரால் மறக்க முடியும்? தேன் தேன் என ஒவ்வொரு வரியையும் கவிஞர் முடிக்க, தேன் குரலாள் சுசீலாவும், மதுரக்குரலோன் பி.பி.எஸ்சும் குழைந்து பாடியிருக்கும் பாடல். இப்பாடல் தவிர "வேலும் வில்லும் விளையாட", "நீயும் ஒரு பெண் ஆனால்", "போவோம் புது உலகம்", "தொட்ட இடம் குளிருது" போன்ற பாடல்களும் இடம் பெற்றன.

COURTESY - THIRU KALAIKUMAR

Richardsof
17th August 2014, 06:38 AM
எம்.ஜிஆர் நடித்த “குடும்ப தலைவன்” படத்தில் எல்லா பாடல்களும் பெரிய ஹிட்ஸ். “அன்றொரு நாள் அவனுடைய பேரை கேட்டேன்”, “கட்டான கட்டழகு கண்ணா”, “எதோ எதோ எதோ ஒருமயக்கம்”, “குருவிக்கூட்டம் போல நிக்கிற பூவம்மா”, “மழை பொழிந்து கொண்டே இருக்கும்” போல ஹிட் மேல் ஹிட் அடித்த பாடல்கள்.

அதைப்போல் இன்னொரு மியுசிகல் ஹிட் “தாய் சொல்லை தட்டாதே” திரைப்படம். “சிரித்து சிரித்து என்னை சிறையில் இட்டாய்”, “பட்டுசேலை காத்தாட”. “பாட்டு ஒரே ஒரே பாட்டு”, “ஒருத்தி மகனாய் பிறந்தவனாம்”, “காட்டுக்குள்ளேதிருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா”, “பூ உறங்குது பொழுதும் உறங்குது” என ஒன்றை ஒன்று மிஞ்சும் வகையில் சூப்பர்ஹிட் பாடல்கள் வரிசையாய் வந்தன.

அதைப்போல் எம்.ஜி.ஆர் படமான “தாயைக்காத்த தனயன்” படத்திலும் சூப்பர்ஹிட் பாடல்களாகவே அமைந்தன. “கட்டித்தங்கம்வெட்டி எடுத்து”, “காவேரிக்கரை இருக்கு கரைமேலே பூவிருக்கு”, “மூடித்திறந்த இமைஇரண்டும்”, “காட்டுராணி கோட்டையிலே”, “பேரை சொல்லலாமா கணவன் பேரை சொல்லலாமா”, “சண்டிக்குதிரை,நொண்டிக்குதிரை” மிக பிரபலமான, இப்போதும் மக்கள் கேட்டு ரசிக்கும் பாடல்களாக அமைந்தன. ராணி சம்யுக்தா படத்தில் “ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா” என மனதைக் குளிர்விக்கும் ஒரு டூயட். “நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்” என்ற ஒரு செமி-கிளாசிகல் பாடல். “நிலவென்னபேசும்” என இன்னொரு அழகிய டூயட். “பாவை உனக்கு சேதி தெரியுமா” , “மன்னவர் குலம்பாரம்மா” என இரு இனிமையான தனிப்பாடல்கள் என கே.வி.எம்மின் இசை ராஜ்ஜியம் படம் முழுவதும் வியாபித்து இருந்தது.

எம்.ஜி.ஆர் படமான “மாடப்புறா”வில் “மனதில்கொண்ட ஆசைகளை மறந்து போய்விடு” என்ற அருமையான பாடல் ஒலித்தது. “வருவார் ஒரு நாள்இருப்பார் இங்கே”, “வணக்கம் வணக்கம் அய்யா”, “கண்ணை பறிக்குதா, கருத்தை மயக்குதா” என குறிப்பிடத்தக்க பாடல்கள் படத்தில் இடம் பெற்றன.


இவ்வருடத்தில் வெளிவந்த “சாரதா”, “வளர்பிறை”, “வடிவுக்கு வளைகாப்பு”, “முத்து மண்டபம்”, “கவிதா”, “நீயா நானா”. “நான் வணங்கும் தெய்வம்” போன்ற படங்களிலும் சிறப்பான பாடல்கள் அமைந்தன. சாரதா படம் மிகப்பெரிய வெற்றிப்படம். அதில் “ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்” “கண்ணானால் நாயா இமைஆவேன்”, போன்ற பாடல்களை யாரால் மறக்க முடியுமா? ஜேசுதாஸ் அவர்களுக்கு பிடித்த தமிழ் பாடல்களில் “ஒருத்தி ஒருவனை” பாடலும் ஒன்று.

வடிவுக்கு வளைகாப்பு படத்தில் “சீருலாவும்இன்பநாதம் தேவ சங்கீதம்” என டி.எம்.எஸ். சுசீலா இணைந்து பாடும் பாடல் ஒரு தேவ சங்கீதம் தான். அவ்வளவு இனிமையாக பாடி இருப்பார்கள். “சாலையிலே புளிய மரம்ஜமீன்தாரு வச்ச மரம்” என ஜனரஞ்சகமான ஒரு கிராமியப்பாடல். “நில்லடியோ நில்லடியோ” “சில்லென பூத்து சிரிக்கின்ற” என இரு தனிப்பாடல்கள் என சிறப்பான இசை அமைந்த படம். வளர்பிறை படத்தில் “நான்கு சுவர்களுக்கும் எது நடந்தாலும்” என ஒரு சோகப்பாடல் மனதைக்கவரும். “சலசலக்குக்து காத்து” என டி.எம்.எஸ் உடன் ஒரு டூயட், “மௌனம் மௌனம்” “பச்சைக்கொடியில்” என இரு தனிப்பாடல்கள் அமைந்தன.
“அழகு நிலா” படத்தில் “அருவிக்கரை ஓரத்திலே” “காட்டுக்குயிலுக்கும்”, “மூங்கில் மரக்காட்டினிலே” போன்ற பாடல்களை பாடினார் பி.சுசீலா. கவிதா படத்தில் “அப்பாஉன் மகளை பார்த்தாயா” என மனதைப்பிழியும் ஒரு பாடல் இருக்கிறது. “கனவும் பலித்தது” என ஒரு இனிமையான பாடல் “நான் வணங்கும் தெய்வம்” படத்தில் இடம் பிடித்தது.
“முத்து மண்டபம்” படத்தில் “கொடியிலே பூங்கொடியவளே”, “என்ன சொல்லிப் பாடுவேன்”, “போர்க்களம் போர்க்களம்” பாடல்கள் குறிப்பிடப்படத்தக்கவை. “நீயா நானா” படத்தில் “பொன்னும்பொருளும் பெரிசல்ல”, “ஆத்தங்கரை மேட்டினிலே”, “உனக்காகவே இன்று எனை மறந்தேன்”, “கூகூகூகூ குயிலக்கா” போன்ற பாடல்கள் இடம் பெற்றன.

Gopal.s
17th August 2014, 06:43 AM
சின்ன கண்ணன்,

உங்கள் கவிதைகளை பார்த்ததும் ,நான் சிறு வயதில் எழுதிய ஒன்றிரண்டு ஞாபகம் வருகிறது.(சுமார் 15 வயது)

கண்ணே,

என்னை புரிந்து கொள்வாயா ?நானும் நீயும் சேர வேண்டும் என்ற பேராசை எனக்கில்லை. என் "தம்பி"யும் உன் "தங்கை"யும் சேர்ந்தாலே ,நிறைவடையும் பெறு மனம் கொண்டவன்.

இன்னொன்று.

நான் படித்த பழைய பள்ளி கக்கூசில் ,ஒன்னுக்கடிக்கும் சுகம். படம் போட்டு பாகம் குறிப்பதில் சிலபஸ் மாற்றமே இல்லாமல் சுவர்கள்.

Gopal.s
17th August 2014, 06:56 AM
எஸ்வி,

கலை குமாரின் நெட் விஷயங்களுக்கு நன்றி. ஆனால் வழக்கம் போல அரை வேக்காட்டு நெட் கும்பல்களில் ஒரு ஜென்மம் போலிருக்கிறது.

குங்குமத்தையும் மறந்து (கே.வீ.எம் பாடல்களிலேயே சிறப்பானது என பலர் கருதும் "தூங்காத கண்ணென்று ஒன்று")ரத்ததிலகத்தையும் மறந்து, இந்த ஆள் என்னத்தை எழுதி கிழிக்கிறான்?

கே.வீ.எம் பற்றி எழுதியது மகிழ்ச்சியே. ஆனால் இந்த மாதிரி அரைகுறை எழுத்துக்களை பற்றி என்ன சொல்வது?

அது சரி, உங்கள் கருத்துக்களை சொந்தமாகவே எழுதினால் சுவையாக இருக்குமே தலைவா?

chinnakkannan
17th August 2014, 10:25 AM
குட் மார்னிங் ஆல்

கோபால் ஜி.. பாராட்டறீங்களா திட்டறீங்களா புரியலை.. நன்றி..

பாட்டுக்குப் பாட்டு இழையில் இதயமலரில் இருந்து ஒரு பாட்டு..

அன்பே உன் பேர் என்ன ரதியோ
மன்மதன் சொன்னது
ஆனந்த நீராடும் நதியோ
பொங்கியே வந்தது
கண்ணே உன் சொல்லென்ன அமுதோ
செந்தமிழ் தந்தது

வீட்டுக்குப் போய்க் கேக்கணும்

JamesFague
17th August 2014, 10:43 AM
Ennello Janmadha Bandam super song



http://youtu.be/kSC1XHQDe58

madhu
17th August 2014, 10:44 AM
பாட்டுக்குப் பாட்டு இழையில் இதயமலரில் இருந்து ஒரு பாட்டு..

அன்பே உன் பேர் என்ன ரதியோ
மன்மதன் சொன்னது
ஆனந்த நீராடும் நதியோ
பொங்கியே வந்தது
கண்ணே உன் சொல்லென்ன அமுதோ
செந்தமிழ் தந்தது

வீட்டுக்குப் போய்க் கேக்கணும்

http://youtu.be/Sw513TQuwsk

mr_karthik
17th August 2014, 11:46 AM
டியர் முரளி சார்,

தங்களின் 'காதலிக்க நேரமில்லை' பொன்விழா தொகுப்பு பதிவு மிக மிக அருமை. எங்கள் முரளி சார் ஒருவிழாவில் கலந்துகொள்கிறார் என்றாலே எங்களுக்கு, குறிப்பாக தங்களின் தீவிர ரசிகனான எனக்கு மிகுந்த உற்சாகம். ஏனென்றால், நாம் நேரில் சென்று பார்ப்பதை விட அருமையான விழா தொகுப்பை எங்களுக்கு தருவார் என்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கை என்றைக்குமே ஏமாற்றம் தந்ததில்லை. இப்போதும் அதுபோலவே ஒரு அற்புத கவரேஜ் கிடைத்துள்ளது. நன்றியெல்லாம் சொல்லி நம்மிடையே உள்ள தூரத்தை அதிகப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.

விழாவில் கலந்துகொண்டவர்களின் பட்டியல் மனதுக்கு இதமாக இருந்தது. குறிப்பாக இதுபோன்ற விழாக்களில் அதிகம் கலந்துகொள்ளாத தாஸண்ணா, அண்ணி தேவசேனா, அண்ணி விமலா ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தது கண்டு மகிழ்ச்சி. (கார்த்திக் என்று பெயர் வைத்தாலே அவர்கள் தொடர்பு கொள்ள முடியாதவர்களாகத்தான் இருப்பார்கள். என்ன செய்வது அந்த பெயர் ராசி அப்படி).

எம்.எஸ்.வி வரவில்லை என்பதைப்படித்ததும் நண்பர் கோபால் அவர்களைப்போல எனக்கும் முதலில் கோபம் வந்தது. ஆனால் விழாவில் பேசிய அனைவரின் பேச்சிலும் நடிகர்திலகம் நீக்கமற நிறைந்திருந்ததை படித்தபோது, இந்த ஆள் வராமல் இருந்ததே நல்லது என்று தோன்றியது. வந்திருந்தால் தேவையில்லாமல் "வேறு சிலர்" பெயர்களை சொல்லி குழப்பியிருப்பார். ஏனென்றால் ஸ்ரீதர் 'அங்கேயும்' கைவைத்திருக்கிறார். அந்த நிகழ்ச்சிகளை இங்கேயும் இழுத்து ஒருவழி பண்ணியிருப்பார். அவர் அரட்டைகள் சதுக்க பூதத்துடன் நிற்கட்டும்.

அதுசரி, சற்று தலையைத்தூக்கி 'மேல் காலரியைப்' பார்த்தீர்களா?. ஸ்ரீதர் அவர்கள் விழாவை ரசித்துக்கொண்டிருக்க, முத்துராமன், ரவிச்சந்திரன், பாலையா, நாகேஷ் நால்வரும் விழாவைப்பார்த்து உற்சாகமாக பேசிக்கொண்டிருக்க, பி.என்.சுந்தரம் தன் கேமராவில் விழாவைப் படம்பிடித்துக் கொண்டிருக்க, டி.கே.ராமமூர்த்தி அவர்கள் கையில் வயலினுடன், ஹென்றி டேனியல், ஜோசப்கிருஷ்ணா உதவியுடன் விழாவுக்கே ரீ-ரிக்கார்டிங் செய்துகொண்டிருந்த அழகைப் பார்த்தீர்களா?.

இதுபோன்ற அற்புத தருணங்களைத் தருவதில் (ஒய்.ஜி) மகேந்திரன் ஒரு மகா இந்திரன். அவருக்கு கைகொடுக்கும் நமது ராகவ்ஜி ஒரு மகா இயந்திரன்.

அதுசரி, இந்த கவரேஜை இந்த திரியில் பதிக்கலாமா என்று துவக்கத்தில் ஒரு சந்தேக அலையை எழுப்பியுள்ளீர்களே ஏன்?. இதைப்பதிக்க இதைவிட பொருத்தமான திரி வேறெது?.

அடிக்கடி உங்கள் பதிவுகள் இங்கு இடம்பெற வேண்டும். நேரமில்லைஎனினும் என் போன்ற ரசிகர்களுக்காக...

Gopal.s
17th August 2014, 12:55 PM
விழா விவரணையில், முரளி,கார்த்திக்,சாரதா இவர்களை விட்டால் யார்?மூன்றுமே ,நம் திரிக்கு வாய்த்தது ,நமக்கு பேரதிர்ஷ்டம்.

எம்.எஸ்.வீ பற்றி நீங்கள் சொன்னது சரி.இவரை gentle ஆக நடத்தி மதிப்பு தந்தவர்களை விட,ஒரு சராசரி இந்தியன் போல சவுக்காலடித்து ,மோசமாக நடத்தி,,அவ்வப்போது இனாம் தந்தவர்கள் மேலே விசுவாசமாக இருக்கும் கடை நிலை மனிதர்.

JamesFague
17th August 2014, 02:34 PM
The fantasitc melody from Silsila with the golden voice of Kishore & Lata. Enjoy the song.



http://youtu.be/rooHyXf9jWw

JamesFague
17th August 2014, 02:42 PM
The debut movie of Sunny Deol in Betaab with the power packed music from the Legend RD. Lata's scintillating voice makes the song one of the

memorable hit in the 80's.



http://youtu.be/-xqduuyWmnc

Murali Srinivas
17th August 2014, 02:45 PM
காதலிக்க நேரமில்லை பொன் விழா நிகழ்ச்சியைப் பற்றிய பதிவை பாராட்டிய அனைவருக்கும் நன்றி.

நேற்று பதிவிடும் போது விட்டுப் போன இரண்டு விஷயங்கள். Ygm அவர்களே சுமார் 9 வருடங்களுக்கு முன்பு ஸ்ரீதர் படப் பாடல்களை spb அவர்கள் தலைமையேற்று பாட ஒரு நிகழ்ச்சியை 2005-ல் நடத்தியிருந்தார். இந்த விழா தொடங்கியவுடன் அந்த விழாவின் இறுதியில் ஸ்ரீதர் அவர்கள் நாற்காலியில் அமர்ந்திருக்க அவரது மனைவி தேவசேனா அவர்கள் நன்றியுரை ஆற்றிய விஷுவல் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. நேற்று மேடையில் இருந்த அனைவரும் அன்றும் இருக்க இன்று நம்மிடையே இல்லாத ஸ்ரீதர், நாகேஷ் மற்றும் ரவிசந்திரன் ஆகியோர் அன்று மேடையில் இருப்பதை திரையில் பார்த்தபோது அரங்கம் எங்கும் ஒரு சோகம் கப்பியதை உணர முடிந்தது. அந்த இந்த விழாவோடு அற்புதமாக இணைத்த ygm -க்கு ஸ்பெஷல் பாராட்டு.

மற்றொன்று மாடி மேல மாடி கட்டி பாடலுக்கு ரவியுடன் பிரதானமாக நடனம் ஆடிய சுந்தரம் மாஸ்டர் இந்த விழாவிற்காக மைசூர்லிருந்து வருகை தந்தது. இந்த பாடலுக்கு நான் எவ்வளவு சிரமப்பட்டேன் என்பது ராஜிக்கும் கோபுவிற்கும் மட்டும்தான் தெரியும் என்றார். Ygm தன் வழக்கமான பாணியில் அடித்த கமன்ட் இவரை எந்த மேடையில் நான் அறிமுகப்படுத்தினாலும் இவர் மகன்தான் பிரபு தேவா என்றே சொல்லுவேன்.

சேரன் நடிகர் திலகத்தைப் பற்றி நிறைய பேசினார். அதை எல்லாம் எழுதினால் காதலிக்க நேரமில்லை பற்றிய விழா வர்ணனையாக இல்லாமல் சிவாஜி புகழ் பாடும் பதிவாக இருக்கிறது என்று யாரேனும் சொல்லக் கூடும். ஆகவே அதை தவிர்த்து விட்டேன். தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் என்று தெரிகிறது. அப்போது அனைவரும் பார்க்கலாம். சேரன் சொன்ன ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். இன்றைக்கு நான் சினிமாவில் சாப்பிடும் சோறு சிவாஜி எனக்கு போட்டது என்றார் உணர்சிகரமாக.

அன்புடன்

JamesFague
17th August 2014, 02:56 PM
Nandri Maravaa Cheran. Mr Murali, write whatever Director Cheran spoke about our NT. Whether it is right forum or not people must know

the real fact about NT.

Thanks for the update.


Regards

chinnakkannan
17th August 2014, 06:07 PM
யாரும் காணோம் :sad:

முழுக்க முழுக்க மாதஙகளை வைத்து எழுதப் பட்ட பாடல் இது ஒன்று தான் என நினைக்கிறேன்.. ரா.ரா. சோ.. சிவகுமார் குட்டி பத்மினி முத்துலட்சுமி டைப்போ முத்துராமன் லட்சுமி :)

மாதென்னைப் படைத்தான் உனக்காக
மாதங்கள் படைத்தான் நமக்காக்
கீதங்கள் படைத்தான் இசைக்காக
காதலைப் படைத்தான் கணக்காக..

கார்த்திகை மாதத்து தீபங்கள் போல்
எந்தன் கண் பறிக்கும் உந்தன் பேரழகு

மார்கழி மாதத்து பனிமுத்து போல்
இன்று மயக்கியதே உந்தன் சொல்லழகு

தை மகளே அத்தை மகளே
என்னை தழுவிட பிறந்த தமிழ் மகளே

மாசில்லாத என் மாமணியே
இந்த மணமகள் தேடிய மன்னவனே

பங்குனி என் வாழ்வில் பங்கு நீ
இந்த பார்த்திபன் பார்வையில் எங்கும் நீ

சித்திரை மாதத்து வானம் நீ
எங்கள் தெய்வ புலவரின் வேதம் நீ

வைகாசி பிறையின் வடிவமே
வாடாத அழகு பருவமே

ஆனி மஞ்சனம் போலவே
புது அலங்காரம் செய்த தெய்வமே

ஆடி காவிரி வெள்ளமே
வரும் ஆவணி மாதத்து மேகமே

புரட்டாசி திங்களில் ஒரு மனம்
ஐப்பசி மாதத்தில் திருமணம் நம் திருமணம்

**

பாடல் வாலியா கண்ணதாசனா..

chinnakkannan
17th August 2014, 06:13 PM
நான் யார் தெரியுமா என்ற படத்தில் இந்தப் பாட்டாம்.. நான் பாடல் மட்டும் கேட்டிருக்கிறேன்..டி எம் எஸ் அண்ட் சுசீலாம்மா..

விடியும் மட்டும் பேசலாம்
விழித்திருந்து பேசலாம்
முடியும்மட்டும் பேசலாம்
முதலிரவில் கண் மூடி க் கண்மூடிக் கதை பேசலாம் ஹா..

பேசத்தான் இந்த உறவு-தினம்
பெண்ணைத்தேடி வரும் நிலவு
நேசம் காண்பதே இரவு - பக்கம்
நெருங்கிப் பார்க்க வரும் வரவு
இந்த இரவில் பள்ளி அறையில்- கண்ணில்
அலையலையாய் வரும் கனவு...ஹா..

சிவந்த கண்களில் இருந்து வரும்
தேனும் பாலுமே விருந்து
கலந்து வைக்கிறேன் அருந்து வந்த
காலம் போவதை மறந்து
இந்த வயதும் இந்த மனதும் தந்த
இறைவன் ரசனையை நினைந்து...ஹா..

**

நல்ல பாட்டு தான் இல்லையா.. :)

chinnakkannan
17th August 2014, 06:15 PM
//Ygm தன் வழக்கமான பாணியில் அடித்த கமன்ட் இவரை எந்த மேடையில் நான் அறிமுகப்படுத்தினாலும் இவர் மகன்தான் பிரபு தேவா என்றே சொல்லுவேன். // டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் செய்த படங்கள் அனேகம்.. இவரைப் பற்றி இங்கு சொல்லலாமே..

Richardsof
17th August 2014, 06:31 PM
விடியும் மட்டும் பேசலாம் ... மிகவும் இனிமையான பாடல் . ஜெய்யும் பாரதியும் சூப்பராக பாடி நடித்திருப்பார்கள் .

பெண்ணே நீ வாழ்க - படத்தில் இடம் பெற்ற '' உயிர் நீ ''' பிடித்த பாடல்

http://youtu.be/T-ZT_8dsYn4

chinnakkannan
17th August 2014, 06:41 PM
//யாராக இருந்தால் என்ன?. கெடுத்து குட்டிச்சுவர் பண்ணியவர் குன்னக்குடி. // ரா.ரா.சோ குன்னக்குடி வைத்திய நாதனா இசை.. ஓ.. எனக்குத் தெரியாதே.. நன்றி கார்த்திக் சார்..

//விடியும் மட்டும் பேசலாம் ... மிகவும் இனிமையான பாடல் . ஜெய்யும் பாரதியும் சூப்பராக பாடி நடித்திருப்பார்கள் .

பெண்ணே நீ வாழ்க - படத்தில் இடம் பெற்ற '' உயிர் நீ ''' பிடித்த பாடல் // எஸ்வி சார். நன்றி.. அந்தப் பாட்டு நான் பார்த்ததில்லை :sad: உயிர் நீ போய்க் கேட்கிறேன்

gkrishna
17th August 2014, 11:01 PM
இன்று காலையில் நெட் connection கிடைக்கவில்லை. மதியம் திரு நெய்வேலி வாசு சார் அவர்களை நேரில் சந்திக்க செல்ல வேண்டி இருந்தது.மேலும் மாலை நடிகர் திலகம் ரசிகர் மன்ற திறனாய்வு அமைப்பின் 'கை கொடுத்த தெய்வம் ' திரைப்படம் . இரண்டும் சேர்ந்து கொஞ்சம் இங்கு வரகை தர முடியவில்லை .

வாசுவோடு 2 மணி நேரங்கள் நேரம் சென்றதே தெரியவில்லை .நிச்சயமாக அவர்கள் மனைவி மகன் சாபத்திற்கு ஆளாகி இருப்பேன் .
பின் 'நடிகர்திலகம் கை கொடுத்த தெய்வம் '. அருமையான பாடல்கள் சிறந்த நடிப்பு ,மேலும் அருமையான திரைகதை எல்லாம் சேர்ந்து பொன் மாலை பொழுது .

எஸ்வி சார் அவர்களின் கலைக்குமார் பதிவிட்ட கண்ணிய பாடகி சுசீலா பற்றிய பதிவு அருமை . எத்துனை பாடல்கள் . அரச பந்து :) அதில் விடுபட்ட போன பாடல்களையும் குறிப்பிட்டு அந்த பதிவை முழுமை பெற செய்து விட்டார் .வித்யா சின்ஹாவின் முழுமைக்கு பதிலாக அவரின் முதுமை நிழற்படத்தை பதிவிட்டு வாசு புண்ணியம் தேடி கொண்டார் . வழக்கம் போல் ம்ம் சின்ன கண்ணன் எங்கள் செல்ல கண்ணன் அருமையான மாதங்கள் பற்றிய பாடல் பதிவிட்டு இருந்தார்.

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3907a.jpghttp://www.inbaminge.com/t/k/Kai%20Kodutha%20Deivam/folder.jpg

கை கொடுத்த தெய்வம் எல்லா பாடல்களுமே அருமை நான் மிகவும் ரசித்த பாடல் இன்று

'குலுங்க குலுங்க சிரிக்கும் சிரிப்பில் இவள் ஒரு பாபா ' LR ஈஸ்வரி மற்றும் சுசீலாவின் அருமையான கோர்வை . கூட ஆடுவது ஆடல் ராட்சசி சகுந்தலா . அப்போது குழு நடன நடிகை ஆக நடித்து கொண்டு இருந்த கால கட்டம் .சாவித்திரியின் குழந்தைத்தனமான சிரிப்பு எல்லாம் சேர்ந்து பாடலை ரசிக்க வைத்தது .

மேலும் கே ஆர் விஜயா,லட்சிய நடிகர் இணைந்து ஆடும் 'மங்கள மேளம் பொங்கி முழங்கிட மணமகள் வந்தாள்' சுசீலாவின் கான குயில் மற்றும் எளிமையான டோல்கி தபேல இணைவு இசை . பாடலை ரசிக்க வைத்தது .நெல்லை palace de walace திரை அரங்கில் கல்லூரி கால கடத்தின் மறு வெளியீட்டில் விசில் அடித்து ஆடிய நினைவுகளை மீட்டு தந்தது

ஆஹா மங்கள மேளம் பொங்கி முழங்க மணமகள்
வந்தாள் தங்க தேரிலே
ஆஹா மல்லிகை பூவிலும் மெல்லிய மாது மயங்கி
விட்டாளே உன் பேரிலே
ஆஹா மங்கள மேளம் பொங்கி முழங்க மணமகள்
வந்தாள் தங்க தேரிலே
ஆஹா மல்லிகை பூவிலும் மெல்லிய மாது மயங்கி
விட்டாளே உன் பேரிலே

கல்யாண ஊர்வலம் உல்லாசம் ஆயிரம்

ஆஹா மங்கள மேளம் பொங்கி முழங்க மணமகள்
வந்தாள் தங்க தேரிலே
ஆஹா மல்லிகை பூவிலும் மெல்லிய மாது மயங்கி
விட்டாளே உன் பேரிலே

அவள் அன்ன நடை பின்னலிட வந்தாளாம்
என் அண்ணனிடம் கண்ணிரண்டை தந்தாளாம்
அவள் அன்ன நடை பின்னலிட வந்தாளாம்
என் அண்ணனிடம் கண்ணிரண்டை தந்தாளாம்

அந்த அங்கயற்கண்ணியை பார்த்து
அண்ணன் சங்கதி சொன்னதை கேட்டு
அந்த அங்கயற்கண்ணியை பார்த்து
அண்ணன் சங்கதி சொன்னதை கேட்ஸ்

நெஞ்சில் துள்ளி எழுந்தது பாட்டு
அது தொட்டிலிலே தாலாட்டு
ஆரி ஆரிராரிராரோ ஆரிராரிராரோ ஆரிராராரோ
ஆரிராரிராரிராரோ ஆரிராரிராரோ ஆரிராராரோ

ஆஹா மங்கள மேளம் பொங்கி முழங்க மணமகள்
வந்தாள் தங்க தேரிலே
ஆஹா மல்லிகை பூவிலும் மெல்லிய மாது மயங்கி
விட்டாளே உன் பேரிலே
கல்யாண ஊர்வலம் உல்லாசம் ஆயிரம்

நல்ல அத்தை இவள் பெண் மகளை பெற்றாளாம்
அதை அண்ணன் மகன் கண்ணனுக்கே விற்றாளாம்

நல்ல அத்தை இவள் பெண் மகளை பெற்றாளாம்
அதை அண்ணன் மகன் கண்ணனுக்கே விற்றாளாம்

தமிழ்க் குமரன் வள்ளியை போலே
அவர் குலவி கொண்டதினாலே

தமிழ்க் குமரன் வள்ளியை போலே
அவர் குலவி கொண்டதினாலே

அங்கு தழைத்து வந்தது குழவி
அதை தழுவி கொண்டாள் கிழவி
லலலலலலாஆஅ லலலலாஆஅ.....
அஹாஹாஅ...

ஆஹா மங்கள மேளம் பொங்கி முழங்க மணமகள்
வந்தாள் தங்க தேரிலே
ஆஹா மல்லிகை பூவிலும் மெல்லிய மாது மயங்கி
விட்டாளே உன் பேரிலே
கல்யாண ஊர்வலம் உல்லாசம் ஆயிரம்

பாடல் வரிகளை கவனியுங்கள்

தமிழ்க் குமரன் வள்ளியை போலே
அவர் குலவி கொண்டதினாலே
அங்கு தழைத்து வந்தது குழவி
அதை தழுவி கொண்டாள் கிழவி

https://www.youtube.com/watch?v=YCZ-cIZchh4

https://www.youtube.com/watch?v=AIJLC6uQGjY

gkrishna
17th August 2014, 11:18 PM
From The Hindu

http://www.thehindu.com/multimedia/dynamic/02062/17CP_BALAIAH_IN_MA_2062848g.jpghttp://antrukandamugam.files.wordpress.com/2013/09/ts-balaiah-kaathalikka-neramillai-1964-7.jpg?w=593

பழம்பெரும் நடிகர் திரு டி எஸ் பாலையா அவர்களின் நூறாவது ஆண்டு பிறந்த நாள் நினவு

T. S. Balaiah endeared himself to millions of fans with a career spanning nearly four decades, says Randor Guy, in this concluding article on the famous four villains of Tamil cinema

One of Tamil cinema’s brilliant actors, T. S. Balaiah was not only a star villain but also an outstanding character actor capable of playing all kinds of roles. He had a way of delivering his lines, lacing them with wit and humour, and a characteristic mannerism of repeating lines for effect, which won much appreciation and millions of fans across the country and outside. Some of his portrayals in films such as Sridhar’s Kathalikka Neramillai, K. Balachandar’s Bhama Vijayam, A.P. Nagarajan’s Thillana Mohanambal, Ooty Varai Uravu and Thiruvilayaadal are deeply embedded in the minds of Tamil moviegoers.

Balaiah, a stage actor from a ‘Boys’ Company’, entered films as a villain with Ellis R. Dungan’s Sathi Leelavathi. Soon after, he made a splash in Ambikapathi and gradually rose to heights of popularity. He did an amazing variety of roles in a career spanning nearly four decades.

Tirunelveli S. Balaiah was born in Sundankottai, now in Tuticorin District, on August 12, 1914. (Interestingly, this is his birth centenary year, and this article pays homage to his memory.) Hailing from the community of Isai Vellars, he had some kind of training in playing the thavil, but adverse family circumstances made it impossible for him to pursue this career, and he took to the stage. According to historians of Tamil theatre, there were as many as 500 drama companies in South India, most of them in the Tamil-speaking districts of the sprawling old Madras Presidency.

Moving from one company to another, he joined the famous Madurai Original Boys’ Company, which had several talented youngsters who created history in Tamil cinema, including M.K. Radha (Chandralekha), MGR, N. S. Krishnan and T. S. Balaiah. Radha’s father, Madaras Kandaswami Mudaliar, was the ‘master’ (known in Tamil as Vaathiyaar), writer, producer, director and also took care of the boys under his wing.

One of the plays of this troupe was Pathi Bhakthi, which was to be made into a film. However, owing to some dispute between Mudaliar and the owners over the casting of Radha as the hero, the master along with his disciples walked out. In an interesting turn of events, Mudaliar found a novel titled Sathi Leelavathi by S.S. Vasan, serialised in the Tamil weekly Ananda Vikatan. Both Pathi Bakthi and Sathi Leelavathi had similar storylines; even the name of the heroine was Leelavathi! Mudaliar found sponsors among the rich mill owners of Coimbatore and launched the production. Sathi Leelavathi (1936) was directed by Ellis R. Dungan, an American who came seeking his fortune in India and found it in Tamil cinema. The others who took their bow in Tamil cinema along with Dungan were M.K. Radha, MGR, NSK, and T.S. Balaiah. The then pencil-slim Balaiah played villain. The film was a huge hit but stardom was still far in the future for the actor….

It was Velaikkari (1949), written by C.N. Annadurai and directed by A.S.A. Sami, that brought Balaiah fame and fortune. Playing the smart companion of the hero K.R. Ramasami, Balaiah literally stole the thunder, and, as they say, he never looked back….

Balaiah acted in several hits, including Paava Mannippu, Baagha Pirivinai, Madurai Veeran, Mana Magal (a superb performance as a lecherous music teacher), and Kavalai Illaadha Manithan…

Many critics rate his performance in K. Balachandar’s Bhama Vijayam as his career best, where he played the father of three sons, all of whom are henpecked husbands with dominating wives. The song ‘Varavu ettana selavu patthana’ became a huge hit, and the line was later used as the title for a Tamil film.

Another role that deserves mention was in the superhit Thillana Mohanambal, with Sivaji Ganesan and Padmini in the lead roles. The hero was a nagaswaram player, and the film had song sequences that became very famous. One of the thavil players was played by Balaiah, the other by K. Sarangapani. In one song, the famous Tyagaraja kriti in Abheri, ‘Nagumomu Kanaleni’, Balaiah played the thavil in excellent sync with the background song that was recorded earlier in the studio, revealing how adept he really was with the instrument. The film was a super hit, and a copy of the movie was acquired by an American cultural association for their archives to represent quintessential old-world Thanjavur culture.

Though only 58 when he died, Balaiah lived a full life and enjoyed it to the hilt. Agasthiyar, his last film, was released the same year as his death in 1972.

Balaiah lived in a palatial bungalow in T. Nagar, and left behind a sizeable fortune. However, what happened to it is a mystery because his son Junior Balaiah, who showed early promise but faded away, is believed to have lived in poverty.

madhu
18th August 2014, 04:26 AM
விடியும் மட்டும் பேசலாம் ... மிகவும் இனிமையான பாடல் . ஜெய்யும் பாரதியும் சூப்பராக பாடி நடித்திருப்பார்கள் .


மிக அருமையான பாடல் Esvee sir, நான் படம் பார்த்ததில்லை. ஆனால் இதில் பாரதி நடித்திருக்கிறாரா ? சந்தேகமாக இருக்கிறது சார். clarify செஞ்சுடுங்க ப்ளீஸ்.

madhu
18th August 2014, 04:28 AM
யாரும் காணோம் :sad:

முழுக்க முழுக்க மாதஙகளை வைத்து எழுதப் பட்ட பாடல் இது ஒன்று தான் என நினைக்கிறேன்.. ரா.ரா. சோ.. சிவகுமார் குட்டி பத்மினி முத்துலட்சுமி டைப்போ முத்துராமன் லட்சுமி :)



உல்லாசப் பயணம் படத்தில் விஜயகுமாரி நடனத்தில் எஸ்.ஜானகி பாடும் "சித்திரைப் பெண்ணே சித்திரைப் பெண்ணே சிங்காரக் கண்ணே" என்ற பாடலில் எல்லா தமிழ் மாதங்களின் பெயர்களும் வரும் சிக்கா..

ஆண்டுக்கு மாதங்கள் பன்னிரண்டு
ஆண் பெண் வாழ்வின் கண்ணிரண்டு

சித்திரைப் பெண்ணே சித்திரைப் பெண்ணே
சிங்காரக் கண்ணே கண்ணே
உன் திருமணத்தின் வாழ்த்துக்களை
தெரிஞ்சுக்க முன்னே

வித்தையும் கல்வியும் கத்துக்கிட்டா
வெற்றியைத் தந்திடும்
வீண்செலவுக்கு வை காசியின்னா
நஷ்டம் வந்திடும் ஆ..ஆ..ஆ..

ஆ! நீ ஒரு குணவதின்னு
மாமி மதிக்கணும்
ஆடி வரும் மயிலாய் உனை
கணவன் ரசிக்கணும்
ஆ வனிதையை மாயை எனும் பேச்சை மறுக்கணும்
அத்தனையும் புரட்டா சீயின்னு வெறுக்கணும்

நாட்டை பசி வாட்டும்போது கார்த் திகைத்தாலும்
வீட்டிலே சேய் பசியைத் தாய்மார் கழிப்பாரோ
பாட்டில் கருத்தை மாசில்லாமல் காட்டும் வள்ளுவன்
பாங்கினிலே பங்கு நீயாய் வாழ்ந்திடுவாயே

Gopal.s
18th August 2014, 05:06 AM
நான் சிறு வயதில் ரா.கி.ரங்கராஜனின் தீவிர ரசிகன்.இவரின் படகு வீடு,இது சத்தியம்,சுமைதாங்கி,ஹேமா ஹேமா ஹேமா,மூவிரண்டு ஏழு,வயது பதினேழு,பட்டாம் பூச்சி,மறுபடியும் தேவகி,புரபசர் மித்ரா,இருபத்து மூன்றாம் படி,ஒளிவதற்கு இடமில்லை,அழைப்பிதழ்,தாழம்பூ பங்களா,அடிமையின் காதல்,நான் கிருஷ்ணா தேவராயன் எல்லாமே அற்புதம்.வெகு ஜன எழுத்தாளர்களில் எனது பிரியம்.இவரது சுமைதாங்கி ஸ்ரீதரால் அற்புதமாக படமாக்க பட்டது.(ஆனால் இறுதி காட்சியில் ரா.கி.ராவிற்கு உடன்பாடில்லை)இவர் மகாநதியில் கமலுடன் இருந்தார்.

சுமைதாங்கியில் எனக்கு மிக பிடித்த ஜானகி பாடல்.என் அன்னை செய்த பாவம்.(இன்னொன்று ஒ ஒ ஒ மாம்பழத்து வண்டு.

https://www.youtube.com/watch?v=JO0mMM065X8

உல்லாச பயணம் என்ற எஸ்.எஸ்.ஆர் -விஜயகுமாரி படத்தில் கே.வீ.மகாதேவன் விளையாடி இருப்பார். ஜானகியின் வனத்தில் ஆயிரம் பூ மலரும்.
https://www.youtube.com/watch?v=NJn0zvG3v8o

Gopal.s
18th August 2014, 05:09 AM
அதே உல்லாச பயணத்தில் பார்த்த கண்கள் நான்கு.

https://www.youtube.com/watch?v=TkTyxdxoVx8

Gopal.s
18th August 2014, 05:12 AM
விடியும் மட்டும் பேசலாம் -சங்கர் கணேஷ் அற்புத composition .அந்த படம் அவரது மைல் கல்.

Gopal.s
18th August 2014, 05:26 AM
விஸ்வநாதன் -ராமமூர்த்தி இசையில் என்னை சிறந்த இருபது போட சொன்னால் கீழ்கண்ட பாடல்களே இருக்கும்.

1)சொன்னது நீதானா - நெஞ்சில் ஓர் ஆலயம்.
2)இந்த மன்றத்தில் ஓடி வரும்-போலிஸ் காரன் மகள்.
3)பார்த்த ஞாபகம்- புதிய பறவை.
4)காற்று வந்தால் தலை சாயும்- காத்திருந்த கண்கள்.
5)அம்மம்மா கேளடி தோழி-கருப்பு பணம்.
6)மலர்ந்தும் மலராத பாதி மலர் போல-பாச மலர்.
7)தரை மேல் பிறக்க விட்டான்- படகோட்டி.
8)உன்னை நான் சந்தித்தேன்- ஆயிரத்தில் ஒருவன்.
9)கண்கள் இரண்டும் என்று உம்மை -மன்னாதி மன்னன்.
10)என்ன என்ன வார்த்தைகளோ-வெண்ணிற ஆடை.
11)மாலை பொழுதின் மயக்கத்திலே-பாக்ய லட்சுமி.
12)பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்-பாச மலர்.
13)பொன்னொன்று கண்டேன்- படித்தால் மட்டும் போதுமா .
14)உள்ளத்தில் நல்ல உள்ளம்-கர்ணன்.
15)நான் என்ன சொல்லி விட்டேன்-பலே பாண்டியா.
16)காதல் சிறகை காற்றினில்- பாலும் பழமும்.
17)அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்-பாவ மன்னிப்பு.
18)பால் வண்ணம் பருவம் கண்டு- பாசம்.
19)காதல் நிலவே கண்மணி ராதா-ஹலோ மிஸ்டர் ஜமிந்தார்.
20)நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்-சாந்தி.

Gopal.s
18th August 2014, 05:43 AM
கே.வீ.மகாதேவன் இசையில் சிறந்த இருபது.

1)தூங்காத கண்ணென்று ஒன்று- குங்குமம்.
2)தட்டு தடுமாறி நெஞ்சம்- சாரதா .
3)யாரடி வந்தார் என்னடி சொன்னார்- வானம்பாடி.
4)கண்ணெதிரே தோன்றினாள் -இருவர் உள்ளம்.
5)சித்தாடை கட்டிக்கிட்டு- வண்ணக்கிளி.
6)கல்லிலே கலை வண்ணம் - குமுதம்.
7)மடி மீது தலை வைத்து-அன்னை இல்லம்.
8)தொட்டு விட தொட்டு விட- தர்மம் தலை காக்கும்.
9)காதல் எந்தன் மீதில் - விவசாயி .
10)ஒரு நாள் போதுமா- திருவிளையாடல்.
11)மன்னவன் வந்தானடி-திருவருட்செல்வர்.
12)என்னதான் ரகசியமோ- இதய கமலம்.
13)இரவுக்கு ஆயிரம் கண்கள்-குலமகள் ராதை.
14)பனி படர்ந்த மலையின் மேலே-ரத்த திலகம்.
15)மயங்காத மனம் யாவும் -காஞ்சி தலைவன்.
16)சின்னஞ்சிறிய வண்ண பறவை-குங்குமம்.
17)மெல்ல மெல்ல அருகில் வந்து-சாரதா.
18)சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே-திருவருட்செல்வர்.
19)இதயம் பொல்லாதது- அன்று கண்ட முகம்.
20)வா வா உனக்காகவா - செல்வம்.

Gopal.s
18th August 2014, 05:57 AM
இளைய ராஜா இசையில் சிறந்த இருபது.

1) ஹேய் பாடல் ஒன்று ராகம் ஒன்று- பிரியா.
2) சிறிய பறவை சிறகை விரிக்க- அந்த ஒரு நிமிடம்.
3)கொடியிலே மல்லிகை பூ- கடலோர கவிதைகள்.
4)சங்கீத மேகம்- உதய கீதம்.
5)ரோஜாவை தாலாட்டும் தென்றல்- நினைவெல்லாம் நித்யா.
6)கண்ணனே நீ வர காத்திருந்தேன்- தென்றலே என்னை தோடு.
7)காட்டு குயிலு மனசுக்குள்ளே- தளபதி.
8)வளையோசை கலகல- சத்யா.
9)இன்னும் என்னை என்ன செய்ய-சிங்காரவேலன்.
10)காற்றில் எந்த கீதம் - ஜானி.
11)தென்றல் வந்து தீண்டும் போது -அவதாரம்.
12)என் உள்ளில் ஏனோ எங்கும் ஏக்கம் -ரோசாப்பூ ரவிக்கைகாரி.
13)தங்க சிலை நீ சிரிக்க - கடல் மீன்கள்.
14)நாதம் என் ஜீவனே - காதல் ஓவியம்.
15)ஏதோ மோகம் ஏதோ தாகம்- கோழி கூவுது.
16)ஆயிரம் தாமரை மொட்டுக்களே- அலைகள் ஓய்வதில்லை.
17)அந்தி மழை பொழிகிறது- ராஜ பார்வை.
18)செந்தாழம் பூவில் - முள்ளும் மலரும்.
19)பருவமே புதிய பாடல் பாடு- நெஞ்சத்தை கிள்ளாதே.
20)நின்னுகோரி வர்ணம் வர்ணம்- அக்கினி நட்சத்திரம்.

Gopal.s
18th August 2014, 06:11 AM
ஏ.ஆர்.ரகுமான் இசையில் சிறந்த இருபது.

1)வெண்ணிலவே வெண்ணிலவே- மின்சார கனவு.
2)காதலே என் காதலே- டூயட்.
3)நெஞ்சே நெஞ்சே- ரட்சகன்.
4)தென்றலே தென்றலே- காதல் தேசம்.
5)மலர்களே மலர்களே - லவ் பேர்ட்ஸ் .
6)அத்தைக்கு பிறந்தவளே- கிழக்கு சீமையிலே.
7)தீ தீ தித்திக்கும் தீ- திருடா திருடா.
8)நேற்று இல்லாத மாற்றம் -புதிய முகம்.
9)கண்ணாளனே எனது கண்ணை -பாம்பே.
10)ஒட்டகத்தை கட்டிக்கோ-ஜென்டில் மேன் .
11) அத்தினிக்கு சித்தினி- தெனாலி.
12)சந்தன தென்றலை- கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்.
13)சந்தோஷ கண்ணீரே- உயிரே.
14)திறக்காத காட்டுக்குள்ளே- என் சுவாச காற்றே.
15)தீகுருவியாய் தீங்கனி என-கண்களால் கைது செய்.
16)சொட்ட சொட்ட நனையுது தாஜ்மகால்-தாஜ்மகால்.
17)மின்சார பூவே -படையப்பா.
18)நேர்ந்து கிட்டேன் - ஸ்டார்.
19)இன்னும் கொஞ்ச நேரம் - மரியான்.
20)ராசாத்தி என்னுசிரு- திருடா திருடா.

RAGHAVENDRA
18th August 2014, 06:52 AM
உள்ள(த்)தை அள்ளித்தா

நீ........ண்ட நாட்களுக்குப் பின் ...

இசையரசியின் குரலில் கதாநாயகன் திரைப்படத்திலிருந்து முத்துத் தாமரை பாடல்...நல்ல தரத்தில் ....

http://www.mediafire.com/listen/53abw65aeaa3dka/MuthuthamaraiKathanayaganPS.mp3

RAGHAVENDRA
18th August 2014, 06:57 AM
பொங்கும் பூம்புனல்

இவர் அலுத்துக் கொள்கிறாரா அல்லது பாராட்டுகிறாரா ... தெரியவில்லை... பாடல் வரிகள் என்ன அற்புதமாக எழுதப் பட்டுள்ளன... சில சமயம் கடவுளை மக்கள் அலுத்துக் கொள்கிறார்களா அல்லது பாராட்டுகிறார்களா எனத் தெரியாமல் ஏதோ சொல்வார்கள்.. அப்படி ஒரு சூழலில் அமைக்கப் பட்ட பாடல்...

1955ல் வெளிவந்த குணசுந்தரி திரைப்படத்திலிருந்து கண்டசாலாவின் துள்ளல் இசைப் பாடல்...

http://www.inbaminge.com/t/g/Guna%20Sundari/

RAGHAVENDRA
18th August 2014, 07:01 AM
பொங்கும் பூம்புனல்

இதழிசைக் கருவியின் இணைந்த இசையுடன் ஜிக்கியின் இனிமையான குரல் அவ்வளவு அழகாக ஒத்துப் போகும் பாடல்.. மேண்டலின் அவ்வப்போது இசைக்க டோலக் தாளத்தைத் தர, அருமையான பாடல்... விக்ரம் ப்ரொடக்ஷன்ஸின் ஜெயகோபி திரைப்படத்தில் விஸ்வநாதன் (ராமமூர்த்தி) இசையில் அட்டகாசமான பாடல்.

இன்று முழுதும் மீண்டும் மீண்டும் கேட்டுக் கேட்டு மகிழ ஊஞ்சலில் ஒய்யாரம் கொள்ள ஒரு பாடல்

http://www.inbaminge.com/t/j/Jeya%20Gopi/

இந்தப் பாடல் இறுதியில் சட்டென முடிந்து விடுகிறது வருத்தமே.. கிடைத்தவரையில் மகிழ்ச்சியே.

குறிப்பு... இதழிசைக் கருவியென குறிப்பிட்டது மௌத் ஆர்கன்.

RAGHAVENDRA
18th August 2014, 07:09 AM
பொங்கும் பூம்புனல்

ரமணிகரன் என்று ஒரு இசையமைப்பாளர் இருந்தார் எனக் கேள்விப் பட்டதுண்டு. ஆனால் இவ்வளவு பிரபலமான கல்யாணம் செய்துக்கோ படத்திற்கு இசையமைத்தவர் என்பது ரொம்ப நாள் தெரியாமல் இருந்தது. நாட்டுப்புற மெட்டுக்களை பயன்படுத்தி கிட்டத்தட்ட ராகமாலிகையாக இந்தப் பாடலை அமைத்தது அந்த காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்தப் பாட்டும் நம்மைப் போன்ற தலைமுறையினர் அறிந்து கொள்ள உதவியது வழக்கம் போல சிலோன் ரேடியோ தான்.

சீர்காழி கோவிந்தராஜனுடன் ஒலிக்கும் பெண் குரல் பி.லீலாவினுடையதைப் போல் ஒலிக்கிறது. சரியாகத் தெரியவில்லை.

நாட்டுப்பற மெட்டும் கர்நாடக ராக மாலிகையாகவும் இணைந்து ஒலிக்கும் அபூர்வமான பாடல். கல்யாணம் செய்துக்கோ படத்திலிருந்து..

http://www.inbaminge.com/t/k/Kalyanam%20Seydhukko/

RAGHAVENDRA
18th August 2014, 07:11 AM
பொங்கும் பூம்புனல்

கல்யாணம் செய்துக்கோ படத்தில் பலரும் அறிந்து ரசித்திருக்கக் கூடிய பிரபலமான பாடல்.. சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ஜிக்கி பாடிய இனிமையான பாடல்.

வாழ்வின் ஒளியே வருவாய்...அருமையான டூயட் பாடல்.

http://www.inbaminge.com/t/k/Kalyanam%20Seydhukko/

RAGHAVENDRA
18th August 2014, 07:15 AM
பொங்கும் பூம்புனல்

கதாநாயகி ... இத்திரைப்படத்தின் பெயரைச் சொன்னால் உடனே நினைவுக்கு வருவது ஏ.எம்.ராஜா பாடிய கற்பனைக் கனவினிலே பாடல் தான்.. ஆனால் இப்படத்தில் எனக்கு மிக மிக மிக மிக பிடித்த பாடல்... துரையே இளமை பாராய்.. கதைகள் கேளாய்..

இசை மேதை ஜி.ராமநாதன் ஏன் மக்களிடம் பேராதரவு பெற்றார் என்பதற்கு ஒரு சான்று இப்பாடல்.. மினி ஃப்யூஷன் கச்சேரியே நடத்தி இருப்பார்...

குறிப்பாக கண்ணாலே பேசுவதும் என்ற வரிகளின் போது மெட்டும் சரி கூட ஒலிக்கும் கிளாரிநெட் மற்றும் ஹார்மோனியமும் சரி... typical GR Trademark..

http://www.inbaminge.com/t/k/Kathanayagi/

RAGHAVENDRA
18th August 2014, 07:22 AM
பொங்கும் பூம்புனல்

http://www.inbaminge.com/t/m/Maheswari/ -

மஹேஸ்வரி திரைப்படத்தில் இடம் பெற்ற ... மனமே நிறைந்த தெய்வம்.. ஏ.எம்.ராஜா ஜிக்கி பாடிய இப்பாடல் கல்யாண பரிசு படத்தில் இடம் பெற்ற துள்ளாத மனமும் துள்ளும் பாட்டை நினைவூட்டும். இசை மேதை ஜி.ராமநாதன் தமிழ்த்திரையின் முன்னோடி இசையமைப்பாளராக விளங்கியதில் வியப்பில்லை. எவ்வளவு வெரைட்டி.. மெலடி... லிரிகல் வேல்யூ... என அனைத்தும் நிறைந்த பூரணமான பாடல்களைத் தந்து காலத்தால் அழியாத புகழ் பெற்றவர்.

RAGHAVENDRA
18th August 2014, 07:26 AM
பொங்கும் பூம்புனல்

அமர தீபம் படத்தில் இடம் பெற்ற பச்சைக்கிளி பாடுது மெட்டில் இன்னொரு பாடல்... மேனகா திரைப்படத்தில் சி.என்.பாண்டுரங்கன் இசையில் ஏ.பி.கோமளா குரலில் சற்றே வேகமான மெட்டில் ஒலிக்கும் பாடல்..

சி.என்.பாண்டுரங்கன் அவர்களுக்கு ஒரு மெட்டுப் பிடித்து விட்டால் படத்தில் அது இரண்டு அல்லது மூன்று முறை வரும்படி பார்த்துக் கொள்வார் போலும்.. இந்தப் பாடல் கூட படத்தில் இரண்டு மூன்று முறை இடம் பெறுகிறது போலும்.

அய்யா சலாமுங்க...

http://www.inbaminge.com/t/m/Menaka/

பின்னாளில் நடிகர் திலகத்துடன் இணைந்து பார் மகளே பார், ஞாயிறும் திங்களும், தேனும் பாலும் திரைப்படங்களைத் தந்த கஸ்தூரி ஃபிலிம்ஸின் தயாரிப்பு, மேனகா திரைப்படம்.

vasudevan31355
18th August 2014, 07:26 AM
மிக அருமையான பாடல் Esvee sir, நான் படம் பார்த்ததில்லை. ஆனால் இதில் பாரதி நடித்திருக்கிறாரா ? சந்தேகமாக இருக்கிறது சார். clarify செஞ்சுடுங்க ப்ளீஸ்.

அதில் சந்தேகமென்ன? (நன்றி பாலையா அவர்களே) நிச்சயமாக பாரதிதான். அந்தப் பாட்டின் ஸ்டில் இதோ. மது அண்ணா! கோபால் சொன்னா மாதிரி உங்கள் ஜாலி லீலைகளுக்கு எல்லைகள் கிடையாதோ! ரொம்ப சுவாரசியம். அனுபவித்து ரசிக்கிறேன்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/v-4.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/v-4.jpg.html)

RAGHAVENDRA
18th August 2014, 07:34 AM
பொங்கும் பூம்புனல்

கள்ள எண்ணமே கொண்டு என்னிடத்திலே நீ நல்லவனைப் போல் பேசுவதேன் என்னிடத்திலே...இப்படி காதலனை டபாய்க்கும் காதலி .... பாடகர் திலகத்தின் சூப்பரான ஆரம்ப கால குரலில் ஒலிக்கும் அருமையான பாடல்..

ஸ்ரீராம் நடித்த முல்லைவனம் திரைப்படத்திலிருந்து ...

எங்கிருந்தோ இங்கு வந்து...

http://www.inbaminge.com/t/m/Mullai%20Vanam/

RAGHAVENDRA
18th August 2014, 07:38 AM
பொங்கும் பூம்புனல்

What a lovely composition.. simple .. a guitar, clarionet, mandolin, dolak, flute. ... a melodious medley of instruments ...

காயா பழமா சொல்லுங்க.. முல்லை வனம் திரைப்படத்திலிருந்து இன்னொரு இனிய பாடல்..

http://www.inbaminge.com/t/m/Mullai%20Vanam/

நல்ல சாப்பாடு வேண்டுமானால் பொறுமையாக இருக்க வேண்டும் என்ற மாபெரும் நீதி போதனையைத் தரும் பாடல்

RAGHAVENDRA
18th August 2014, 07:40 AM
பொங்கும் பூம்புனல்

முல்லை வனம் திரைப்படத்தில் இன்னொரு சூப்பர் பாடல்..

தந்தானே என்ற தத்தகாரத்தில் தினத்தந்தி பேப்பர் விளம்பரம் போல வருவதைக் கேட்டு ஏமாற வேண்டாம்.. அது தத்தகாரம் தான்.. என்ன சிலேடையான பல்லவி..

http://www.inbaminge.com/t/m/Mullai%20Vanam/

முல்லைவனம் திரைப்படத்திற்கு இசை திரை இசைத் திலகம் என எண்ணுகிறேன்.

madhu
18th August 2014, 08:11 AM
அதில் சந்தேகமென்ன? (நன்றி பாலையா அவர்களே) நிச்சயமாக பாரதிதான். அந்தப் பாட்டின் ஸ்டில் இதோ. மது அண்ணா! கோபால் சொன்னா மாதிரி உங்கள் ஜாலி லீலைகளுக்கு எல்லைகள் கிடையாதோ! ரொம்ப சுவாரசியம். அனுபவித்து ரசிக்கிறேன்.

வாசு ஜி..
சாம்ப்பிள் காட்டிட்டு போனா ஆச்சா ? நல்ல வேளை.. ஒரு வழியா தேடிக் கண்டு பிடிச்சுட்டேன்..

அமரகவி பாரதி ஒரு உலக மகா தீபமடி ! ( ஹி ஹி.. இந்த வரி மெய்யழுத்துக்களே இல்லாமல் வாக்கியம் அமைக்கும் போட்டியில் குமுதம் இதழில் முதல் பரிசு வாங்கியது ).

ஓகே.. ஓகே..இது வேற பாரதி.

ஆனாலும் ஒரு வருடம் பாரதியார் நினைவு நாளன்று "சந்திரோதயம்", "நாடோடி", அன்னமிட்ட கை" என்று எம்.ஜி.ஆர் படமாக டி.வி.யில் போட்டாங்க. ஏன் இப்படின்னு எல்லோரும் பேசிகிட்டு இருந்தப்போ ( அப்போ எல்லாம் யார் வீட்டுல டி.வி. இருக்கிறதோ அங்கேதான் திரைப்படம், ஒலியும் ஒளியும் பார்க்க கூட்டம் கூடும் ) ஒரு மாமி சொன்னார். "எல்லா படத்திலேயும் பாரதி நடிக்கிறாடா.. அதைக் கவனிக்க மாட்டேங்கிறீங்களே ?" என்று....

http://youtu.be/9u_pYPrh3dw

Gopal.s
18th August 2014, 08:26 AM
இசை அல்லது கலை என்பது மரபு,பாரம்பரியம் மற்றும் பிரத்யேக இன ,குண ,மனம் கொண்ட முன்னோர்களின் பங்களிப்பின் சங்கிலி கண்ணி நீட்சி. பழையதை ஒப்பிடாமல் ,இன்றைய பங்களிப்பை மட்டும் கொண்டாட முடியாது.

நடுவில் மாட்டியவர்க்கோ பழையது,புதியது இரண்டும் அளவு கோலாய் நிற்பதை தவிர்க்க இயலாது.

ஒரு எழுத்தாளனையோ அல்லது இசை கலைஞனையோ ,அவன் படைப்புகளை அவன் தனிப்பட்ட வாழ்க்கையின் கூறுகளை கொண்டு(பிரத்யேக வெற்றி-தோல்விகள்,வியாபாரம் இவைகளும் சேர்ந்த.) அளப்பதை தவிர்ப்பவன் நான். ஆனால் தமிழனாக,தமிழ் சூழலில்,இந்த ஆளுமைகள் பொதுவில் உதிர்க்கும் தத்துவ முத்துக்களை பொருக்க ,ஒரு பெரும் கூட்டமே அலையும் போது ,இவற்றை விமரிசிப்பதும் நம் சமூக கடமையாகி விட்டது.திருக்குறளும் ,சங்கங்களும் தோன்றிய அறிவு பூமியில், திருடாதே,பொய் சொல்லாதே,தூங்காதே என்று சொல்வதற்கே ,ஒரு நாயகர் தேவை பட்ட புண்ணிய பூமியில் அவதரித்த அதிர்ஷ்டம் செய்தவர்கள் நாம்.



இந்த சூழலில் ,திடீர் நாயகர்களை உருவாக்கி,பழைய சாதனைகள் புறம் தள்ள படும் போது ,அதுவும் 80களின் ஒரே agenda கொண்ட கும்பல் ஒன்று, nostalgia ,பரிச்சயம், limited exposure கொண்டு ஆளுமைகளை ,வலை தளத்தில் உருவாக்குவது தவிர்க்க முடியாதது.

ஆனால் கலையின் தன்மையையே ஒரு ஆளுமைக்குள் அடக்கி சுரங்களை முதலில் கண்டவர்,மனங்களோடு இணைப்பை ஏற்படுத்தி கொண்ட முதல் படைப்பாளி என்று கலையையும் ,ஆளுமையையும் வைத்து அவியல் பண்ணும் போது ,என்னை மாதிரி கி.மு முதல் நேற்று வரை கலை,இலக்கிய தொடர்ச் சியோடு ஓரளவு பரிச்சயம் கொண்டவர்களின் ஒப்பீட்டால் நன்மை விளையுமே அன்றி,எக்காலமும் கலகம் உண்டாகாது.

புதிதாக வெட்ட பட்டதானாலும் கிணற்றிலேயே நீந்தி களிக்காமல் ,மிக பழமையான,புது புனல்களும் சங்கமமாகும் கடலில் நீந்துவதே எனக்கு உவப்பானது.



வலையை வைத்து கலையை கண்டறிய முடியாது. கலகத்தை வைத்து ஓரளவு கண்டறிய தலை படலாம்.

Gopal.s
18th August 2014, 08:31 AM
நான் கடைசி பதிவை ,இங்கு பதிப்பித்ததன் நோக்கம் ,இங்கு வாருங்கள் வெங்கிராம்.அமெரிக்கர்கள்,பிரிட்டிஷ் காரர்கள் இல்லாமல் சுலபமாக உரையாடலாம்.

எதை வேண்டுமானாலும் ,வன்மம் கலக்காமல்,நட்போடு ,டீ குடிக்கும் சூடும் குறையாமல் விவாதிக்கலாம். நேர்கோடு என்றாலும் எனக்கு சம்மதமே.

vasudevan31355
18th August 2014, 08:40 AM
டியர் ராகவேந்திரன் சார்,

குணசுந்தரி, ஜெயகோபி, கல்யாணம் செய்துக்கோ, கதாநாயகி, மஹேஸ்வரி, மேனகா, முல்லைவனம் என்று மிக மிக அரிய படங்களில் இருந்து 'பொங்கும் பூம்புனலா' க இன்று தங்களால் அள்ளி வழங்கப் பட்டுள்ளது. அனைத்தும் பொக்கிஷங்கள். நன்றி!

ஓஹோ! பிரம்மதேவனே!,

'ஊஞ்சலில் ஒய்யார ராஜா',

'என் ஆசை மச்சான்', ('மானா மதுரையிலே குட்டி மரிக்கொழுந்து வித்தவளே' ஸ்டைல் 'காத்தவராயன்' தலைவர் அமர்க்களம் போல )

'வாழ்வின் ஒளியே வருவாய்,

'துரையே இளமை பாராய்.....கதைகள் கேளாய்', (இன்றைய டாப் இதுதான் மிரள வைக்கும் மெலடி. இந்த ஒரு பாடல் போதும் தங்கள் உயரிய ரசனையை நாங்கள் புரிந்து கொள்ள.)

'மனமே நிறைந்த தெய்வம்',

'எங்கிருந்தோ இங்கு வந்து',

'காயா பழமா சொல்லுங்க... காரியம் பலிக்கும்'

'தந்தானே 'தினத்தந்தி' னானே'[ (குறத்திப் பாடல்) (தங்கள் 'தினத்தந்தி'குறும்பு அட்டகாசம்)

'பானைய இறக்க நானும் பரணை மேலே ஏறும் போது ஆணி மாட்டிக் கிழிஞ்சி போச்சுடா... என் குருவிக்காரா... அவநம்பிக்கை கொள்ள வேணாண்டா.... (ஜரிகை சேலை ஓரம் கிழிஞ்சதற்கு சந்தேகம் கொண்டு கேட்கும் தன் குருவிக்காரனுக்கு அழகாக பதில் தரும் குறத்தி. இப்படி ஒவ்வொரு சந்தேகத்திற்கும் அற்புத விளக்கம்)

ராகவேந்திரன் சார்,

எங்கேயோ போயிட்டீங்க போங்க. சிலோன் ரேடியோ கெட்டது. அருமையான அந்தக் காலப் பாடலகளை அள்ளித் தரும் எங்கள் ராகவேந்திரா

'அய்யா (வுக்கு) சலாமுங்க',

திரியின் 'கை கொடுத்த தெய்வம்' நீங்க.

vasudevan31355
18th August 2014, 09:07 AM
கோ,

அருமை! தங்கள் பதிவின் அடிப்படைக் கருத்துக்களை நன்றாக உணர முடிகிறது. அற்புதமான கருத்துக் கோர்வை.

ஆனால் இன்னொன்று புரியாதது. வேறு இணைய தளங்களில் நடக்கும் நிகழ்வுகளுக்கு தாங்கள் இங்கு வந்தோ அல்லது நடிகர் திலகம் திரியிலேயோ பதில் சொல்லும் போது படிக்கும் நாங்கள் குழம்ப வேண்டியுள்ளது. எது சம்பந்தமாக தங்கள் எதிர் கருத்துக்களை அவர்களுக்கு முன் வைத்து வாதாடுகிறீர்கள் என்பது புரியவில்லை. அந்தத் தளங்களை பார்த்தவர்களுக்கு வேண்டுமானால் 'கோபால் இது சம்பந்தமாகத்தான் வாதிடுகிறார்' என்று புரியலாம். ஆனால் என்னைப் போல் பார்க்காதவர்களுக்கு? தங்கள் பதிவை தவிர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட வாய்ப்பிருக்கிறது. இதற்கு என்ன தீர்வு என்று எனக்குத் தெரியவில்லை. அரைகுறையாகத்தான் புரிந்து கொள்ள நேருகிறது.

நீங்கள்தான் இனி சொல்லவேண்டும்.

//திருக்குறளும் ,சங்கங்களும் தோன்றிய அறிவு பூமியில், திருடாதே,பொய் சொல்லாதே,தூங்காதே என்று சொல்வதற்கே ,ஒரு நாயகர் தேவை பட்ட புண்ணிய பூமியில் அவதரித்த அதிர்ஷ்டம் செய்தவர்கள் நாம்//.

திருக்குறளும், சங்க இலக்கியங்களும் தமிழ் பாமரர்களுக்கு விளங்கததால்தான் 'திருடாதே', 'தூங்காதே' போன்ற எளிய வார்த்தைகளில் தீயோரைத் திருத்த நாயகர்கள் ஏன் அவதாரம் எடுத்திருக்கக் கூடாது என்பது என் வாதம்.:) இதற்கு விவாதம் வேண்டாம்.:):)

vasudevan31355
18th August 2014, 09:16 AM
மது அண்ணா!

அழ வைக்கிறேள்! அதாவது நான் விரும்பிக் கேட்ட 'தாலாட்டு' படத்தின்

'விளக்கில்லாமல் கணக்கெழுதி' பாடலின் வீடியோவைப் போட்டு என்னை அழ வைத்து விட்டீர்கள் என்று சொன்னேன். அழ வைத்ததற்கு நன்றி!

'முடியும் மட்டும் பேசலாம்'.:)

Gopal.s
18th August 2014, 09:27 AM
கோ,

அருமை! தங்கள் பதிவின் அடிப்படைக் கருத்துக்களை நன்றாக உணர முடிகிறது. அற்புதமான கருத்துக் கோர்வை.

ஆனால் இன்னொன்று புரியாதது. வேறு இணைய தளங்களில் நடக்கும் நிகழ்வுகளுக்கு தாங்கள் இங்கு வந்தோ அல்லது நடிகர் திலகம் திரியிலேயோ பதில் சொல்லும் போது படிக்கும் நாங்கள் குழம்ப வேண்டியுள்ளது. எது சம்பந்தமாக தங்கள் எதிர் கருத்துக்களை அவர்களுக்கு முன் வைத்து வாதாடுகிறீர்கள் என்பது புரியவில்லை.

Vasu, This post can be understood and appreciated in isolation on its own merit. But interested and curious readers can click view Forum posts in my name and get the continuity.Actually ,it started here and shifted to other I.R thread and back here for some reasons. Don't worry,it will add new dimension here and will not be an interruption.

gkrishna
18th August 2014, 09:35 AM
நான் யார் தெரியுமா ?

விக்கியில் உள்ள தகவல்

Naan Yaar Theriyuma
V.N. Ramanan
Navasakthi Films
Vedha
Ravichandran, Rajashree, நாகேஷ்

நமக்கு வரலாறு முக்கியம் இல்லையா ?

vasudevan31355
18th August 2014, 09:37 AM
Vasu, Don't worry,it will add new dimension here and will not be an interruption.

நன்றி கோ!

ஒரு சிறு திருத்தம். தடை என்று கண்டிப்பாக யாரும் நினைத்ததே இல்லை. புரிதல் சற்று சிரமம். ஆனால் எனக்கில்லை.:)

Gopal.s
18th August 2014, 09:40 AM
கோ,

அருமை! தங்கள் பதிவின் அடிப்படைக் கருத்துக்களை நன்றாக உணர முடிகிறது. அற்புதமான கருத்துக் கோர்வை.
//திருக்குறளும் ,சங்கங்களும் தோன்றிய அறிவு பூமியில், திருடாதே,பொய் சொல்லாதே,தூங்காதே என்று சொல்வதற்கே ,ஒரு நாயகர் தேவை பட்ட புண்ணிய பூமியில் அவதரித்த அதிர்ஷ்டம் செய்தவர்கள் நாம்//.
திருக்குறளும், சங்க இலக்கியங்களும் தமிழ் பாமரர்களுக்கு விளங்கததால்தான் 'திருடாதே', 'தூங்காதே' போன்ற எளிய வார்த்தைகளில் தீயோரைத் திருத்த நாயகர்கள் ஏன் அவதாரம் எடுத்திருக்கக் கூடாது என்பது என் வாதம்.:) இதற்கு விவாதம் வேண்டாம்.:):)

கி மு வில் உன்னதம் தொட்ட ஒரு கலாசார இனம் 20,21 ஆம் நூற்றாண்டுகளில் ,இப்படி வீழ்ந்து விட்டதா?நல்ல வேளை நம்மை போன்றோருக்கு ,நம் நாயகரிடமிருந்து இவையெல்லாம் தேவை படவில்லை. திருடாமல்,பொய் சொல்லாமல் ,குடிக்காமல்,புகை பிடிக்காமல் வாழ்ந்து கொண்டிருப்பது நம்மில் பெரும்பாலோர்தானே?(உதாரணம்-முரளி,கார்த்திக், நான் சிறிதே குடித்தாலும் மற்றவற்றை கனவிலும் செய்ததில்லை.)

gkrishna
18th August 2014, 09:41 AM
வாசு சார் சொன்னது போல் ராகவேந்தர் இன் பொங்கும் பூம்புனல் நமது திரியின் சிலோன் ரேடியோ தான்.

'வெள்ளத்தில் போகாது வெந்தணலில் வேகாது ' என்ற நாலடியார் ,ஆசார கோவை பாடல்களை போல காலத்தால் அழியாத ஆனால் அருமையான பாடல்கள்

Richardsof
18th August 2014, 09:41 AM
TODAY'S ATTRACTION

http://i61.tinypic.com/jtow1u.jpg

http://youtu.be/DIUNSks6NjE

vasudevan31355
18th August 2014, 09:45 AM
நான் யார் தெரியுமா ?

விக்கியில் உள்ள தகவல்

Naan Yaar Theriyuma
V.N. Ramanan
Navasakthi Films
Vedha
Ravichandran, Rajashree, நாகேஷ்

நமக்கு வரலாறு முக்கியம் இல்லையா ?

வாங்க கிருஷ்ணாஜி. பார்த்து ரொம்ப மணி நேரங்கள் ஆகி விட்டது.

உண்மை.

அதுவேதான் யூடியூபில் 'நான் யார் தெரியுமா'? முழப் பட தரவேற்றியவர் அளித்த விவரத்திலும் எதிரொலிக்கிறது. (eeyadichchaan copy from vikki. 'title' paarththu koodavaa vivaram tharak koodaathu?)

'நாம் யார் தெரியுமா'?:)

vasudevan31355
18th August 2014, 09:47 AM
நான் சிறிதே குடித்தாலும்

nambitten rajaaaaaaaa...:) aduththa murai varum poathu oru super 'full' vaankittu vaanga. romba naalaachchu.:)

Gopal.s
18th August 2014, 09:51 AM
TODAY'S ATTRACTION

http://i61.tinypic.com/jtow1u.jpg


தெய்வமே....தெய்வமே....நன்றி சொல்வேன் தெய்வமே....தேடினேன் .....தேடினேன்.....கண்டு கொண்டேன்.....

vasudevan31355
18th August 2014, 09:53 AM
go,

pm anupchi irukken. paarthu sirichchukko.

gkrishna
18th August 2014, 09:56 AM
காலையில் இரண்டு வார்த்தை படித்தேன்
Be ஷேர் .
வாசு சார் reply பார்த்த உடன் மனிதில் தோன்றியது
பீர் ஷேர் :)

சொல்லத்தான் நினைக்கிறன் படத்தில் எஸ் வீ சுப்பையா சொல்வார்
பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டாரிடம்
மூணே மூணு வார்த்தை . ம்ம் அது என்னவாக்கும்

பின்னாடி ஒரு இடத்தில அதை நான் சொல்றேன்
'பொண்ணா மட்டும் பொறக்கவே கூடாது '.

gkrishna
18th August 2014, 09:59 AM
http://www.youtube.com/watch?v=TBCLN6d3JQQ

எஸ்வி சார்
தேசிய நடிகை தீபா என்ற உன்னிமேரி நினைவூட்டலுக்கு நன்றி

வாசு சார் கோகுலாஷ்டமி சீடை சாபிட்டேளா ?

gkrishna
18th August 2014, 10:02 AM
TODAY'S ATTRACTION

http://i61.tinypic.com/jtow1u.jpg


எஸ்வி சார்
இங்கே connection கொஞ்சம் வீக் யு tube லேட்
கொஞ்சம் பாட்டு போடும் போது அது என்ன படம்னு போட்டேனிங்கனா நல்ல இருக்கும்

gkrishna
18th August 2014, 10:06 AM
http://antrukandamugam.files.wordpress.com/2013/10/deepa-ravichandran.jpg?w=593

தீபா – மலையாளத்தில் உண்ணிமேரி – பிறப்பு- 12.3.1962. வயது-52. கேரளாவில் எர்ணாகுளத்தில் பிறந்தார். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் சிவகுமாருடன் ரோசாப்பூ ரவிக்கைக்காரி, உல்லாசப்பறவைகள், மீண்டும் கோகிலா படங்களில் கமலஹாசனுடனும் ஜானி படத்தில் ரஜனிகாந்துடனும் நடித்துள்ளார். பொதுவாக கவர்ச்சிகரமான வேடங்களிலேயே நடித்தவர். மாந்தோப்புக்கிளியே படத்தில் எவ்வித கவர்ச்சியும் காட்டாமல் குடும்பப்பாங்கான வேடத்தில் சுதாகரின் மனைவியாக நடித்தார்.தற்போது கேரளாவில் கிறித்தவ மத போதகராக செயல்பட்டு வருகிறார்.

ரவியுடன் இருக்கும் படம் எது ?

நக்கீரன் வார பத்திரிகையில் இவரை பற்றி ' தென்னகத்து பமீலா ' என்ற கட்டுரை ஒன்று நினைவில் உண்டு

கார்த்திக் சார் இவரை பற்றி மிகவும் சிலாகித்து எழுதிய சில பதிவுகளும் நினைவில் உண்டு

gkrishna
18th August 2014, 10:08 AM
தற்போது கேரளாவில் கிறித்தவ மத போதகராக செயல்பட்டு வருகிறார்.

பெண் ஏவிஎம் ராஜன்

chinnakkannan
18th August 2014, 10:14 AM
hi all..good morning :)

க்ருஷ்ணா சார்..பாலையா கை கொடுத்த தெய்வம் பற்றிய வைக்கு நன்றி.. ஜூனியர் பாலையா பல படங்க்ளில்- எஸ்பெஷலி பாக்யராஜ் படஙக்ளில் நடித்திருக்கிறார்.. கோபுர வாசலிலே என ஒரு நீச்சல் குளக் கண்கள் கொண்ட பானுப்ரியா படத்திலும் நடித்திருப்பார்.. அது என்ன்வாக்கும் பாட்டு மாலையில் யாரோ மனதோடு பேச..வாவ் ஸாங்க்..

மதுண்ணாவ்..இத இத இததான் நான் எதிர்பார்த்தேன்..சித்திரைப் பெண்ணே..பாட்டுக் கேட்டதில்லை..

ராகவேந்திரர் சார் கொடுக்கிற பாட்டுக்களுக்குலீவ் போட்டுத் தான்கேக்கணும் :) நிறைய்ய.. நன்றி..

தீபா ஸ்டில் போட்டு நாளை ஸ்டார்ட் பண்ணிய எஸ்வி வாசு க்ருஷ்ணா ஜிக்கு ந்ன்றியானு.

பாபா எனச்சொன்னால் பாய்ந்துவரும் கன்றைபோல்
தீபா படமுந்தான் தேன்..

ஏதோ அவசரக் குறள் ஹி ஹி :)

madhu
18th August 2014, 10:16 AM
சிக்க..

தீபா பட முந்தானை தேன்..னு படிச்சிட்டேன்.. ஹி ஹி..

gkrishna
18th August 2014, 10:17 AM
நினைச்சேன் . வந்தார் அய்யா எங்கள் கார்த்திக் ராசா

ஒரு கோடி இன்பங்கள் அய்யா
வாழ்க எங்கள் (உ)ன்னிமேரி புகழ்

('என் தம்பி' வாள் சண்டை சூப்பர் சார் )

chinnakkannan
18th August 2014, 10:19 AM
manni kitta sollattaa...:) முந்தானை முடிச்சுல்லயும் பாட்டு இருக்கோன்னோ..ஆனா நல்லா இருக்க மாட்டாங்க அவ்வளவா..
அது என்னவாக்கும் அந்தரங்கத்துல வர்ற கலர்ப்பாட்டு.. மனசைக் குடையுது..சரி..கொஞ்சம் வேலை அங்கிட்டு போய்ட்டு வாரேன்..

madhu
18th August 2014, 10:23 AM
hi all..good morning :)

கோபுர வாசலிலே என ஒரு நீச்சல் குளக் கண்கள் கொண்ட பானுப்ரியா படத்திலும் நடித்திருப்பார்.. அது என்ன்வாக்கும் பாட்டு மாலையில் யாரோ மனதோடு பேச..வாவ் ஸாங்க்..



மாலையில் யாரோ பாட்டு "சத்ரியன்" படத்தில்...

http://youtu.be/HSLIdYFa4f4

"தாலாட்டும் பூங்காற்று நானல்லவா" கோபுர வாசலிலே படத்தில்

http://youtu.be/060IhqQm1LI

madhu
18th August 2014, 10:24 AM
manni kitta sollattaa...:) முந்தானை முடிச்சுல்லயும் பாட்டு இருக்கோன்னோ..ஆனா நல்லா இருக்க மாட்டாங்க அவ்வளவா..
அது என்னவாக்கும் அந்தரங்கத்துல வர்ற கலர்ப்பாட்டு.. மனசைக் குடையுது..சரி..கொஞ்சம் வேலை அங்கிட்டு போய்ட்டு வாரேன்..

இதுவா ?

http://youtu.be/a513fQZqTXA

அல்லது இதுவா ?

http://youtu.be/hNrjbJfo8q0

ஒரு வேளை இதுவா ?

http://youtu.be/BzD1VdhTM8I

gkrishna
18th August 2014, 10:25 AM
இந்த மீண்டும் கோகிலா முதலில் ஜெமினி பொண்ணு ரேகா booking பின்னர் என்ன நடந்தது தெரியாது பின்னாடி நம்ம தேசிய நடிகை
கமல் அடுப்பு சாரி சாரி
இடுப்பு காமெடி
யங்க ராம சுப்ரமணியன்
தேங்காய்யின் dining டேபிள் 'பாதுஷா நழுவி ' வசனம் famous

பொம்மை பத்திரிகையில் ஒரு ஸ்டில் நினைவில் உண்டு சார்
கருப்பு கலர் ராணி உடையில் ரேகா

chinnakkannan
18th August 2014, 10:27 AM
oh.மதுண்ணாவ்.. தாங்க்ஸ் மூணு பாட்டுக்கும்..இன்னா பாட்டுங்க..வீட் போய் கேக்கறேன்..

chinnakkannan
18th August 2014, 10:28 AM
அந்த ரேகா வோட ஸ்டில்ஸ், நிகழ்வுகள்னு வந்துக்கினே இருந்தது குமுதம் விகடன் என நினைவு..அப்புறம் டபக்குன்னு மாற்றி விட்டுட்டாங்க.. இருந்தாலும் கோகியை நினைவுகூர்ந்தா சின்னஞ்சிறுவயதிலயும் சொல்லியாகணும்..:)

gkrishna
18th August 2014, 10:28 AM
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSf6E6kMjm4oGeoNBmqQzEVEKUbj-Sw2O3DmXpKQet56rNhEjMvYA

சமத்து ஆத்துகாரர் உடன் தேசிய நடிகை இவர் காலேஜ் professor என்று நினைவு

madhu
18th August 2014, 10:31 AM
ippadi thisai maariya paravaiyaai deepa poyittare ?

vasudevan31355
18th August 2014, 10:36 AM
எல்லாம் ராகவேந்திரன் சாரை சொல்லணும்.

காலையில் செம பழைய பாட்டாப் போட்டு தள்ளி அந்தக் காலத்துக்கே அழைத்துச் சென்று விட்டார்.

அதனால் அவருக்கு ஒரு பாடல்.

நம்ம 'ஸ்ரீவள்ளி' முருகன் டி.ஆர். மகாலிங்கம் கோட் சூட்டெல்லாம் போட்டுகிட்டு, (ஆனா இந்த மனுஷர் மீசையை மட்டும் மாற்றவே மாட்டார். அது புராணமாய் இருந்தாலும் சரி! சமூகமாய் இருந்தாலும் சரி! ஓரே டைப் மீசைதான். நாரதர் வேடங்களில் அதிகம் நடித்ததினால் கொஞ்சம் தப்பித்தோம்.) இந்தக் கால இளசுகளுக்கு சவால் விடும் சுடிதாரெல்லாம் அந்தக் காலத்திலேயே போட்டு அழகாக அசத்தும் எஸ். வரலஷ்மியிடம் பியானோ வாசித்தபடி பாடும் ஓர் அருமையான பாட்டு 'மோகனசுந்தரம்' படத்தில். வரலஷ்மி தூள். (சி.க.அண்ணாவுக்கு தூக்கம் போச்சு இன்னைக்கு)

புள்ளி மானைப் போலே வந்து துள்ளி விளையாடி
உள்ளம் கொள்ளை கொண்ட ராணியே
முல்லை நகையாலே
உன் மேல் மோகம் கொண்டேன்

சொல்லலாகுமோ
அந்த சுந்தரி யாரோ
கலை எழில் மேவும் ரம்பைதானோ

ரகளையாய் இருக்கிறது.


http://www.youtube.com/watch?v=aK51KigLXxY&list=UUJ75rc9STIf3k4xQPZ34GKA&feature=player_detailpage

vasudevan31355
18th August 2014, 10:41 AM
சி.க.

வீட் போய்க் கேகீளா? :)

vasudevan31355
18th August 2014, 10:43 AM
சி .க வின் எதிர்பார்ப்பை ஏமாற்றலாமா?

http://4.bp.blogspot.com/-N-9R2xGAnzQ/U3ZaN_iHTkI/AAAAAAAAf6o/pvb8TIP6wcw/s1600/unni-mary_01.jpghttp://www.manoramaonline.com/portal/MM_Photo_Galleries/Movies/Unni_Mary/unni-mary_06.jpg

Gopal.s
18th August 2014, 10:45 AM
M.s.விஸ்வநாதனின் தனிப்பட்ட இசையமைப்பில் என்னுடைய முதல் 20.




1)வெள்ளி கிண்ணந்தான் - உயர்ந்த மனிதன்.




2)முத்துக்களோ கண்கள்- நெஞ்சிருக்கும் வரை.




3)பட்டத்து ராணி - சிவந்த மண் .




4)எங்கிருந்தோ ஆசைகள்- சந்திரோதயம்.



5)என்னை மறந்ததேன் - கலங்கரை விளக்கம்


6)இலக்கணம் மாறுதோ- நிழல் நிஜமாகிறது.




7)துள்ளுவதோ இளமை- குடியிருந்த கோயில்.




8)உள்ளம் என்றொரு- அன்பே வா.




9)ஆடலுடன் பாடலை கேட்டு- குடியிருந்த கோயில்.




10)தேடினேன் வந்தது- ஊட்டி வரை உறவு.




11)ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே - நீலவானம்.




12)மல்லிகை ஹோய் மான்விழி-பவானி.




13)ஒரு நாளிலே- சிவந்த மண் .




14)சொல்லவோ- சிவந்த மண் .




15)கண்ணே கனியே முத்தே-ரகசிய போலிஸ் 115.




16)அன்னமிட்ட கைகளுக்கு- இரு மலர்கள்.




17)ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு- அவளுக்கென்று ஓர் மனம்.




18)பொ ட்டு வைத்த முகமோ- சுமதி என் சுந்தரி.




19)நான் ஒருவரையொருவர் - குமரி கோட்டம் .




20)ஏழு சுரங்களுக்குள் - அபூர்வ ராகங்கள்.




டி.கே.ராமமுர்த்தி அவர்களின் தனி பட்ட இசையில் என் முதல் 20.




1)வசந்த காலம் வருமோ- மறக்க முடியுமா.




2)போதுமோ இந்த இடம்- நான்.




3)காதலன் வந்தான்- மூன்றெழுத்து.




4)ஓம் மேலே கொண்ட ஆசை -காதல் ஜோதி.




5)சந்தன குடத்துக்குள்ளே- தங்க சுரங்கம்.




6)காகித ஓடம் கடலலை மீது- மறக்க முடியுமா.




7)எந்த எந்த நெஞ்சுக்குள்ளே- மெட்ராஸ் டு பாண்டிச்சேரி.




8)வானும் நிலமும் வீடு- மறக்க முடியுமா.




9)கட்டழகு பாப்பா- தங்க சுரங்கம்.




10)சாட்டை கையில் கொண்டு - காதல் ஜோதி.




11)அம்மனோ சாமியோ- நான்.




12)விழியால் காதல் கடிதம்.- தேன் மழை.




13)நெஞ்சே நீ போ சேதியை சொல்ல- தேன்மழை.



14)கல்யாண சந்தையிலே- தேன் மழை.



15)நாடகமே இந்த உலகம்- சாது மிரண்டால்.



16)கள்ள பார்வை- எங்களுக்கும் காலம் வரும்.



17)தூக்கம் கண்ணிலே- சோப்பு,சீப்பு,கண்ணாடி.



18)வண்ண பூப்போட்ட- சங்கமம்.



19)வந்தால் என்னோடு - நான்.



20)ஒரு பாட்டுக்கு பல ராகம்-சங்கமம்.

vasudevan31355
18th August 2014, 10:45 AM
http://3.bp.blogspot.com/-v6N5DKDdYjI/U3ZaMlRq2TI/AAAAAAAAf6g/JanCjHqk3BM/s1600/deepa015.jpg

http://matineestars.com/malayalam/actress/unnimary/unnimary-5.jpg

http://1.bp.blogspot.com/-FRdqGJwDdJ0/UUwdSCm6rSI/AAAAAAAABQ8/5z4pB1deTQ0/s640/unnimary-101.jpg

http://4.bp.blogspot.com/-xZdb7mWJRbY/TianwK06w1I/AAAAAAAABwU/mEenRKRHYho/s1600/672124_f520.jpg

vasudevan31355
18th August 2014, 10:48 AM
http://www.maheedhar.com/albums/userpics/Deepa_Old_01.jpg

gkrishna
18th August 2014, 10:53 AM
super collection vasu sir

regards

gk

Gopal.s
18th August 2014, 10:54 AM
போச்சு ,எனக்கு டீப்பா ,டீப்பான தீபா பைத்தியம் பிடிக்கிறது.



தேசியம் உச்சம் செல்கிறது.



ஏற்றுக இந்திய தீபத்தை., போற்றுக பாரதி நாமத்தை.

vasudevan31355
18th August 2014, 10:55 AM
M.s.விஸ்வநாதனின் தனிப்பட்ட இசையமைப்பில் என்னுடைய முதல் 20.

5)என்னை மறந்ததேன் - கலங்கரை விளக்கம்




கோபால்,

என்னை மறந்ததேன் - சந்திரோதயம் அல்ல... கலங்கரை விளக்கம்.

gkrishna
18th August 2014, 10:58 AM
திசை மாறிய பறவை சுமலதா இல்லையோ ?

நம்ம நடிகர் திலகத்தின் நல்லதொரு குடும்பம்
மாஸ்டர் சேகர் மாஸ்டர் ஸ்ரீதர் குட்டி பத்மினி தேசிய நடிகை
இளைய ராஜா இசையில்
'செவ்வானமே பொன்மேகமே தூவுங்கள் மலர்கள் கோடி சொல்லுங்கள் கவிதை கோடி
இது சிங்கார குயில்கள் சங்கீதம் பாடும் '

மகாராஜன்,சசிரேகா ,ஜெயச்சந்திரன் இவர்களுடன் கல்யாணி மேனன் னு ஒரு பாடகி உடன் பாடவாங்க.கே பாலாஜி படத்தில் மட்டும் தான் பாடுவாங்க னு நினைவு .நம்ம இன்றைய இயக்குனர் ராஜீவ் மேனன் அம்மா தானே இவங்க

http://www.youtube.com/watch?v=zLAsWvvcwew

vasudevan31355
18th August 2014, 10:58 AM
போச்சு ,எனக்கு டீப்பா ,டீப்பான தீபா பைத்தியம் பிடிக்கிறது.

தேசியம் உச்சம் செல்கிறது.

ஏற்றுக இந்திய தீபத்தை., போற்றுக பாரதி நாமத்தை.


சொல்லுங்க 'காஞ்சன' மந்திரத்தை. சுற்றுங்கள் 'வாணி'ப வாலிபத்தை. (ஏன் அதுமட்டும் பாக்கி?)

madhu
18th August 2014, 11:01 AM
vasu sir..

unga pokkishathin edai konjam kurainjirukkum.. !! thanksungo..

vasudevan31355
18th August 2014, 11:02 AM
கோ/சி.க

கெடச்ச தீபாவோட நல்ல படங்கள் அதுதான். வேற நீங்க 'ஜொல்' லுற மாதிரி வேற படம் இருக்கு. போடவா?... திரி இல்லே... மையமே ஆட்டம் கண்டிடும்.:) அப்புறம் 'உலகம் சமநிலை பெற' சீர்காழிதான் வரணும். என்ன தயார்தானா? தயார்தானா?:)

vasudevan31355
18th August 2014, 11:04 AM
vasu sir..

unga pokkishathin edai konjam kurainjirukkum.. !! thanksungo..

மது அண்ணா!

முடியல்லே!:)

vasudevan31355
18th August 2014, 11:07 AM
தீபா பைத்தியத்தில் பாட்டு வர்ற படம் பேரு கூட சிலருக்கு மறந்து போச்சே!

எஸ்.வி சார்... இப்படியா எதிரியை பழி வாங்குறது? அதுவும் ரொம்ப ஈஸியா?

madhu
18th August 2014, 11:11 AM
திசை மாறிய பறவை சுமலதா இல்லையோ ?


அது மிஸ் கோகாகோலாவேதான்.. ( அல்லது தம்ஸ் அப்-பா ? ) ஆனா தீபாவும் பொட்டும் பூவுமாய் போட்டோ எடுத்துகிட்டு கடைசியிலே இப்படி "நன்னா" மாறிட்டாங்களேன்னு சொன்னேன்.

Gopal.s
18th August 2014, 11:28 AM
A.L.Ragavan -List of Songs.(Alphabetical order)

1 ) A For Apple _ Sathu Mirandal(1) ( 1966 ) _ ALR _MD: TKR
2 ) Aambilai pathi pombalai pathi aagalaam _ Mugoortha Naal ( 1967 ) _ ALR,JR _MD: KVM
3 ) Aattam Aattam _ Bagappirivinai ( 1959 ) _ ALR, JR _MD: MSV-TKR
4 ) Aavaramkattukkulle Thevaram Paadikondu _ (Kudumba Gowravam) ( 1958 ) _ ALR _ MD: MSV-TKR
5 ) Adichirukku nallathoru chance _ Nallavan Vaazhvaan ( 1961 ) _ ALR, SJ _ (MD?)
6 ) Ambalaikku Therium _ Engalukkum Kalam Varum ( 1967 ) _ ALR _MD: Deva?
7 ) Ambilaikku pombalai _ Yanai Paagan ( 1960 ) _ ALR, LRE _MD: KVM
8 ) Ambulimama Varuvaye _ Engal Selvi ( 1960 ) _ ALR, MSR _MD: KVM
9 ) Andavan Thodangi _ Kaasethan Kadavulada ( 1972 ) _ ALR, Veeramani K, MSV _MD: MSV
10 ) Andru Oomai Pennalo intru pesum penn _ Paarthaal Pasitheerum ( 1962 ) _ ALR, PS _MD: MSV-TKR

11 ) Angamuththu Thangamuthu _ Thangaikkaga ( 1971 ) _ ALR _MD: MSV
12 ) April fool April fool _ Paniththirai ( 1961 ) _ ALR, PS, LRE _MD: KVM
13 ) Athan Endren(Neram malai neram) _ Kallum Kaniyaagum ( 1968 ) _ ALR, PS _MD: MSV
14 ) Attam Adatho _ Azhagu Nilaa ( 1962 ) _ ALR, PS, JR _MD: KVM
15 ) Ayya ooru Africa kadu _ (Movie?) ( year? ) _ ALR _ (MD?)
16 ) Azhagiya Rathiye Amaravathiye Avasara Padalamma _ Kaakkum Karangal ( 1964 ) _ ALR, LRE _MD: KVM
17 ) Azhagu vilaiyada aruvi _ Panjali ( 1959 ) _ ALR, JR _MD: KVM
18 ) Buddhi Sigamani (Aaraaro Adi Aaraaro) _ Iruvar Ullam ( 1963 ) _ ALR, LRE _MD: KVM
19 ) Chappaathi Chappaathithan Rotti Rottithan _ Nawab Narkaali ( 1972 ) _ ALR _ (MD?)
20 ) Come come Rosi come come _ Amma Enge ( 1964 ) _ ALR,LRE _MD: Veda

21 ) Ellame Vayathukku thanda _ Navagraham ( 1970 ) _ ALR _MD: Kumar V
22 ) Enakku Neethan Mappillai _ (Movie?) ( year? ) _ ALR _ (MD?)
23 ) Engirunthalum Vaazhga _ Nenjil Ore Aalayam ( 1962 ) _ ALR _MD: MSV-TKR
24 ) Enna illai Ennakku _ Annai Illam ( 1963 ) _ ALR _MD: KVM
25 ) Enna Vegam Nillu Bama _ Kuzhandhaiyum Deivamum ( 1965 ) _ ALR, Sadan, TMS _MD: MSV
26 ) Enthan Kannai Unthan Kannu _ (Movie?) ( year? ) _ ALR _ (MD?)
27 ) Gubu Gubu Gubu Gubu naan engine _ Motor Sundaram Pillai ( 1966 ) _ ALR, LRE _MD: MSV
28 ) Idhu nyayama _ Iru Manam kalanthal Thirumanam ( year? ) _ ALR, JR _ (MD?)
29 ) Inbamana iravidhuve idhayam _ Manithan Maaravillai ( 1962 ) _ ALR, PS _MD: Ghantasala
30 ) Inge Deivam Paathi Mirugam Paathi _ chiththi ( 1966 ) _ ALR _MD: MSV

31 ) Kaalgal Nindrathu Nindrathuthan _ Poojaikku Vantha Malar ( 1965 ) _ ALR, LRE _MD: MSV-TKR
32 ) Kaalum Maruthu karuthum Maruthu _ Thaayilla Pillai ( 1961 ) _ ALR, LRE _MD: KVM
33 ) Kaattumullai thottathlie _ Annai ( 1962 ) _ ALR _MD: Sudharsanam R
34 ) Kadavulum nanum oru jathi _ Thaayilla Pillai ( 1961 ) _ ALR _MD: KVM
35 ) Kadhai Kadhiyam Karanamam _ (Movie?) ( year? ) _ ALR _ (MD?)
36 ) Kadhal Yaathiraikku Brindavanamum _ Manithan Maaravillai ( 1962 ) _ ALR, PS _MD: Ghantasala
37 ) Kalam Seitha Komali thanathil _ (Movie?) ( year? ) _ ALR _ (MD?)
38 ) Kalloori Ranigal (Singara Cholayile) _ Bhagyalakshmi ( 1961 ) _ ALR, JR _MD: MSV-TKR
39 ) Kannanum Drivarum Onnu _ (Movie?) ( year? ) _ ALR _ (MD?)
40 ) Kathal entral anum pennum _ Bhagyalakshmi ( 1961 ) _ ALR, PS _MD: MSV-TKR

41 ) Kathal entral kadaiyil vangum porulum illayandroa _ Bhagyalakshmi ( 1961 ) _ ALR, PS _MD: MSV-TKR
42 ) Kondu vanthal athai konduvaa _ Kula Vilakku ( 1969 ) _ ALR, LRE _MD: KVM
43 ) Kovilile vedu katti _ Annavin Aasai ( 1966 ) _ ALR/TMS?, PS _MD: KVM
44 ) Malarndhidum inbam _ Iru Manam kalanthal Thirumanam ( year? ) _ ALR, JR _ (MD?)
45 ) Malarum manam pol iruppom _ Thanthaikku Pin Thamaiyan ( 1960 ) _ ALR, Jikki _ (MD?)
46 ) Mama mama makku mama _ Thirudathe ( 1961 ) _ ALR, PS, Rajeshwari _MD: Subbaiah Naidu S M
47 ) Manamagan Azhagane Manamagal Azhagiye _ Ponnu Mappillai ( 1969 ) _ ALR _MD: Veda
48 ) Mattamana Pechu _ Magane Kel ( 1965 ) _ ALR, Jikki _MD: MSV-TKR
49 ) Melam kalyanam kalyanam _ Edhiroli ( year? ) _ ALR,LRE _MD: KVM
50 ) Miruga inam than uyarnthathu _ Ellorum Innattu Mannar ( 1960 ) _ ALR, TLN, PS _MD: Lingappa T G

51 ) Mullaipoo manakkudhu _ Naan Vanangum Deivam ( 1963 ) _ ALR, Jikki _MD: KVM
52 ) Mutthazhagu Mutthazhagu _ (Movie?) ( year? ) _ ALR _ (MD?)
53 ) My lady cutbody neeye enthan jody _ Vietnam Veedu ( 1979 ) _ ALR _MD: KVM
54 ) Naadodi Naadodi _ Anbe Vaa ( 1960 ) _ ALR, TMS, PS, LRE _MD: MSV
55 ) Naan Paartha Moraikirey(Kannale Kathal Kaditham) _ (Movie?) ( year? ) _ ALR _ (MD?)
56 ) Naan paartha rathi Devi yengey _ Kannil Theriyum Kathaigal ( 1980 ) _ ALR _MD: IR
57 ) Nadagame Intha Ulagam _ Sathu Mirandal(1) ( 1966 ) _ ALR _MD: TKR
58 ) Nambinar Keduvathillai _ Naalu Veli Nilam ( 1959 ) _ ALR _MD: KVM
59 ) Netru nadanthathu ninaivagum _ Thaayin Karunai ( 1965 ) _ ALR, SJ _MD: Venkatesh G K
60 ) Once A Pappa met a mama _ Anbe Vaa ( 1960 ) _ ALR _MD: MSV

61 ) Orey oru oorile ory oru Lailaa _ Annai ( 1962 ) _ ALR, TMS, LRE _MD: Sudharsanam R
62 ) Oru kodi poyai _ Odi vilaiyaadu thaaththaa ( 1977 ) _ ALR _MD: IR
63 ) Oru Kodi Sugam Vanthathu _ Mazhi Megam ( 1977 ) _ ALR, SJ _MD: KVM
64 ) Oru murai parthale pothum _ Panjali ( 1959 ) _ ALR _MD: KVM
65 ) Oruvar Vaazhum Aalayam _ Nenjil Ore Aalayam ( 1962 ) _ ALR, TMS, LRE _MD: MSV-TKR
66 ) Oviyam sirikkuthu ullamthanai mayakuthu _ Malliyam Mangalam ( 1961 ) _ ALR, P.Komala _ (MD?)
67 ) Paarthadhum Aasaiyai _ Naan Yar Theriyuma ( 1967 ) _ ALR, TMS _MD: Shankar Ganesh
68 ) Pakkathile kanni penn irukku _ Padikkatha Methai ( 1960 ) _ ALR, JR _MD: KVM
69 ) Papa Papa Kathai kelu _ Amma Enge ( 1964 ) _ ALR _MD: Veda
70 ) Papa Pattu Padiya Bharathi _ Iru Kodugal ( 1969 ) _ ALR, TMS _MD: Kumar V

71 ) Pattu Siragu Konda _ Karuppu Panam ( 1964 ) _ ALR, LRE _MD: MSV-TKR
72 ) Pennilae nee pennilae _ Alukkoru Veedu ( 1960 ) _ ALR, Rani _MD: MSV-TKR
73 ) Poda Chonnal Pottukkaren Poova Thalaiya ( 1969 ) _ ALR, TMS, Manorama _MD: MSV
74 ) Pokum thisai maranthu _ Kan Sivanthaal man sivakkum ( 1983 ) _ ALR, GA, Sai baba _MD: IR
75 ) Pombalai Oruthi Irunthalam _ Athey Kangal ( 1967 ) _ ALR, TMS _MD: Vedha
76 ) Rasa Maga Polirunthen _ Pathai Theriyudhu Paar ( 1960 ) _ ALR _MD: Srinivasan M B
77 ) Sappidatthan Theriyum Enakku _ (Movie?) ( year? ) _ ALR _ (MD?)
78 ) Seettu Kattu Raja _ Vettaikaran ( 1964 ) _ ALR, LRE _MD: KVM
79 ) Sundara kannu _ Malliyam Mangalam ( 1961 ) _ ALR, JR _ (MD?)
80 ) Suramenaip paru intha viramenai _ Naan Nandri Solven ( 1979 ) _ ALR, PS, GKS _MD: Shyam

81 ) Thambi vada adichathu yogam _ Ninaivil Ninraval ( 1967 ) _ ALR, TMS, PS _MD: Kumar V
82 ) Thingalukku enna indru thirumanamo _ Poojaikku Vantha Malar ( 1965 ) _ ALR, SJ _MD: MSV-TKR
83 ) Unnaithan Azhaikiren _ Gayathri ( 1977 ) _ ALR, SJ _MD: IR
84 ) Uttalangadi giru girunguthu _ (Movie?) ( year? ) _ ALR _ (MD?)
85 ) Vaa Kaathal Seithu Paarpom _ Siritha Mugam ( 1968 ) _ ALR _MD: Shankar Ganesh
86 ) Vaada Macchan Vaada _ Andru Kanda Mugam ( 1968 ) _ ALR _MD: KVM
87 ) Vaada Vethalai Vathanga Vethalai _ Thalai Koduthan Thambi ( 1959 ) _ ALR, JR _MD: MSV-TKR
88 ) Vaanum Nilamum Veedu _ Marakka Mudiyuma ( 1966 ) _ ALR _MD: TKR
89 ) Vaazhai Thandu Pole Udambu _ Panama Pasama ( 1968 ) _ ALR, JR _MD: KVM
90 ) Vandu vanthu mella mella _ Nagamalai Azhagi ( year? ) _ ALR, JR _ (MD?)

91 ) Vazhkkai enbathu jali Athil Vazhnthu parpathey joli _ Kan Kanda Deivam ( 1967 ) _ ALR, Krishnan KC, Ponnusami _MD: KVM
92 ) Vellaikkara kutti En _ Anbu Vazhi ( 1968 ) _ ALR _MD: MSV
93 ) Verenna vendum unnaithavira _ Suba Dhinam ( 1969 ) _ ALR, TMS, PS _MD: KVM
94 ) Vetkamillai Nanam Illai _ Anbe Vaa ( 1960 ) _ ALR, TMS, PS, LRE _MD: MSV
95 ) Yaathum Oorada Ellam Uravada _ Soapu Seepu Kannadi ( 1968 ) _ ALR _MD: TKR

mr_karthik
18th August 2014, 11:31 AM
ஆனா தீபாவும் பொட்டும் பூவுமாய் போட்டோ எடுத்துகிட்டு கடைசியிலே இப்படி "நன்னா" மாறிட்டாங்களேன்னு சொன்னேன்.
தேசிய நடிகை தீபா ஒரிஜினலா சிலுவை செயின் அணிந்த உன்னிமேரிதான். படத்துக்காக புடவையும் பூவும் பொட்டுமாய் வந்தாங்க. வேலை முடிந்ததும் வேஷத்தை கலைச்சிட்டு வெள்ளை அங்கி அணிந்து ஏசுபுகழ்பாட போயிட்டாங்க...

gkrishna
18th August 2014, 11:31 AM
அது மிஸ் கோகாகோலாவேதான்.. ( அல்லது தம்ஸ் அப்-பா ? ) ஆனா தீபாவும் பொட்டும் பூவுமாய் போட்டோ எடுத்துகிட்டு கடைசியிலே இப்படி "நன்னா" மாறிட்டாங்களேன்னு சொன்னேன்.

நான் வாத்து மது சார்

'சொல்லலாகுமோ
அந்த சுந்தரி யாரோ
கலை எழில் மேவும் ரம்பைதானோ '


போற்றுக பாரதி நாமத்தை.

யாரு பாரதியா ? மஹா கவி பாரதிதானே :mrgreen:

'சிந்து நதியின் மிசை நிலவினிலே' பாட்டு எழுதினாரே

vasudevan31355
18th August 2014, 11:35 AM
மது அண்ணா!

கொஞ்ச நாளைக்கு முன்னால வாணியின் 'நிலாவை நேற்று பார்த்தது' கேட்டு ரசிச்சோம் இல்லையா? இப்போ இந்தப் பாடலைப் பாருங்க. அப்படியே கிடார் பிட் ரெண்டுக்கும் ஒத்துப் போகுதில்லே. டிங் டிங் டிங் டிங் டிங் டிங் டிங்.

'அஜீப் தாஸ்தான் ஹே' (தில் அப்னா அவுர் ப்ரீத்தி பராய்)

(Ajeeb daastaan hai yeh
Kahan shuru kahan khatam
Yeh manzile hai kaunsi
Na voh samajh sake na hum) -2

(Yeh roshni ke saath kyoon
Dhuaan utha chiraag se) - 2
Yeh khwaab dekhti hoon main
Ke jag padi hoon khwaab se

Ajeeb daastaan hai yeh
Kahan shuru kahan khatam
Yeh manzile hai kaunsi
Na voh samajh sake na hum

(Mubaarakein tumhe ke tum
Kisi ke noor ho gaye) - 2
Kisi ke itne paas ho
Ke sab se door ho gaye

Ajeeb daastaan hai yeh
Kahan shuru kahan khatam
Yeh manzile hai kaunsi
Na voh samajh sake na hum

(Kisi ka pyaar leke tum
Naya jahan basaaoge) - 2
Yeh shaam jab bhi aayegi
Tum humko yaad aaoge

Ajeeb daastaan hai yeh
Kahan shuru kahan khatam
Yeh manzile hai kaunsi
Na voh samajh sake na hum


http://www.youtube.com/watch?v=eJLdL5_QkVo&feature=player_detailpage

mr_karthik
18th August 2014, 11:38 AM
கோபால் சார்,

ஏ. எல். ராகவன் லிஸ்ட்டை கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு தேடியதில் "சாமி இல்லாமல் ஊர்கோலமா தாலி இல்லாமல் கல்யாணமா" பாடலைக்காணோம்...

gkrishna
18th August 2014, 11:39 AM
கடையநல்லூர் சினி ஆர்ட்ஸ்
தெருவிளக்கு னு ஒரு படம்
பாம்பாட்டி விஜயன் தேசிய நடிகை நடித்து வந்த படம்
எம் எ காஜா இயக்கம்

போடயா ஒரு கடிதாசி இந்த பொண்ணோட நிலைமையை யோசி

http://www.youtube.com/watch?v=CZ6PLjSRqgQ

இந்த படத்தில் கமல் ஒரு பாட்டு ஒன்னு உண்டு . கமல் தான் நடிக்காமல் பாட்டு மட்டும் பாடிய படங்களில் இதுவும் ஒன்று

இசை கங்கை அமரனா இல்லை இளையராஜாவா ?

அந்த கமல் பாட்டு யாரவது இருந்தா போடுங்க ப்ளீஸ்

கேட்டதை கொடுக்கிற காமதேனு கற்பக விருட்சம் னு ஒருத்தர் சொன்னார்

madhu
18th August 2014, 11:49 AM
Gopal ji..

22 ) Enakku Neethan Mappillai _ (Movie?) ( year? ) _ ALR _ (MD?)

http://youtu.be/mkZmqocCDys

26 ) Enthan Kannai Unthan Kannu _ (Movie?) ( year? ) _ ALR _ (MD?)

http://youtu.be/-kFEuTXoscU

chinnakkannan
18th August 2014, 11:51 AM
வாசு சார் :) நன்னி.. அந்தக் கால தீபிகையின் படங்களுக்கு (இந்தக்கால தீபிகை(ஹிந்தி) அ.காலத்துக்கும் மேஜர் வித்தியாசம் என்னனா..இ.கா.தீபிகைக்கு ஒண்ணே முக்கால் முழ இடை..:) க்ருஷ்ணா ஜி என்னடானனா ஆத்துக்காரர் போட்டோ கூட போடறார்.. நன்றி.

கோபால் சார்..சாயந்திரம் கோப்பையோட போய் உட்கார்ந்துக்கிட்டு உங்க லிஸ்ட சாவகாசமாப் படிக்கணும் (காஃபி டபராவைச் சொன்னேன் :) )

chinnakkannan
18th August 2014, 12:01 PM
கேக்கணும்னு இருந்தேன்.. நேத்து யாரும் வராததுனால சோகமா ப்ரெளஸ் இரவு செய்து கொண்டிருந்தபோது.. பாட்டு சிக்கிச்சு..உறவு சொல்ல ஒருவன் பிசுசீலா.. ஆனா நான் கேட்டதில்லையே..

பனிமலர் நீரில் ஆடும் அழகை
ரசிக்க மனதில் சுகமே
நினைவுகள் கோலம் போடும் இளமை..

நடிப்பு பத்மப் ப்ரியான்னு போட்டிருக்குங்காணும்..

chinnakkannan
18th August 2014, 12:08 PM
இன்னொரு பாட்டும்..

நினைக்கும் போதே ஆஹா இனிக்குதே என் மனமே

பயந்து ஓடி வயலில் வீழ்ந்து
இடக்கு பேசி நின்றதை எண்ணியே இனித்ததா..

கன்னம் சிவந்த தனிமையிலே
காண வந்ததை நினைத்திடுதா..
எனையும் காணாமல் தூங்காமல் இருவிழி
இருந்த அந்நாளை என்னு்ள்ளம் மறக்குமா?

குறும்பு செய்து பெண்கள் கையில் பரிசு வாங்கி
நின்றதை எண்ணியே இனிக்குதா?


வம்பு புரிந்தவர் இடத்தினிலே
வாஞ்சை பிறந்தது கணத்தினிலே

மனசை வாயாடிப் பெண்பாவை இழுக்குது
மயங்கி ஆணுள்ளம் திண்டாடித் தவிக்குது
மகுடி முன்னே நாகம் போலே
வசியமாகி அன்பினால் இன்பமாய் ஆடுதே

***

படம் இல்லறமே நல்லறம்.. ஏ.எம்.ராஜா சுசீலா.. நல்ல பாட்டு..அப்படியே காதுல காதலா ஒலிக்குது :) ந.பாட் தானே

gkrishna
18th August 2014, 12:14 PM
படம் இல்லறமே நல்லறம்.. ஏ.எம்.ராஜா சுசீலா.. நல்ல பாட்டு..அப்படியே காதுல காதலா ஒலிக்குது

சின்ன கண்ணா மாய கண்ணா
இந்த பாட்டை எங்கே பிடிச்சீங்க ?

http://www.youtube.com/watch?v=k9fO7yCA42w

gkrishna
18th August 2014, 12:15 PM
கேக்கணும்னு இருந்தேன்.. நேத்து யாரும் வராததுனால சோகமா ப்ரெளஸ் இரவு செய்து கொண்டிருந்தபோது.. பாட்டு சிக்கிச்சு..உறவு சொல்ல ஒருவன் பிசுசீலா.. ஆனா நான் கேட்டதில்லையே..

பனிமலர் நீரில் ஆடும் அழகை
ரசிக்க மனதில் சுகமே
நினைவுகள் கோலம் போடும் இளமை..

நடிப்பு பத்மப் ப்ரியான்னு போட்டிருக்குங்காணும்..

இந்த பாட்டை பற்றி நம்ம வாசு சார் ஒரு பதிவு இன்றைய ஸ்பெஷல்
முதல் பாகம் படிங்க நீங்க விடுமுறையில் இருந்த போது போட்டாரு

சுசீலா அம்மா பற்றி வாசு சார் உருகி உருகி எழுதி இருப்பாரு

பதிவு 1028 - 27 ஜுன் 2014

vasudevan31355
18th August 2014, 12:16 PM
கேக்கணும்னு இருந்தேன்.. நேத்து யாரும் வராததுனால சோகமா ப்ரெளஸ் இரவு செய்து கொண்டிருந்தபோது.. பாட்டு சிக்கிச்சு..உறவு சொல்ல ஒருவன் பிசுசீலா.. ஆனா நான் கேட்டதில்லையே..

பனிமலர் நீரில் ஆடும் அழகை
ரசிக்க மனதில் சுகமே
நினைவுகள் கோலம் போடும் இளமை..

நடிப்பு பத்மப் ப்ரியான்னு போட்டிருக்குங்காணும்..

சி.க அய்யா,

இப்பாடலைப் பற்றி 'இன்றைய ஸ்பெஷலி'ல் முன்னமே விவரமா எழுதியாச்சு. சி.க.வுக்கு ஞாபக மறதி ஜாஸ்தியாயிடுத்தோ!:)

Gopal.s
18th August 2014, 12:18 PM
(கார்த்திக்,இந்த பதிவை தவிர்க்கவும்.தவறி படித்து தொலைத்தால் தலைக்கு விட்டுண்டு ஸ்நானம் பண்ணிடுங்கோ.)



நீதி கருத்துக்கள் பற்றி பேசினாலும் பேசினோம். குடித்தன காரர்கள் குடிக்கு தாவி விட்டனர்.



கிருஷ்ணா- ஒரு படத்தில் விவேக் கேட்பார். மழையிலே ஏதுடா small ,large ,extra -large என்று.அது மாதிரி பீர் லே ஏதுந்காணும் full ,half ,Quarter .இதுக்குத்தான் கத்து குட்டிங்களோட சேராம வாசு மாதிரி professionals கூட நட்பு வெச்சிக்கிறது.நாங்க சொல்றது on the rocks ரா வா அடிக்கும் லேபல் சரக்கு.



சி.க- அப்போ கோப்பையிலே என் குடியிருப்புன்னு கண்ணதாசன் சொன்னது காபியைத்தானா .....இவ்வளவு நாளா அறியாமையிலா மூழ்கி கிடந்தேன்?கண் திறந்தது.ஒளி பிறந்தது.நான் இனி புது மனிதன். வாசு இனி கோப்பை வேண்டாம். அப்படியே சாப்பிடுவோம்.(குடிப்போம்)

Gopal.s
18th August 2014, 12:19 PM
கோபால் சார்,

ஏ. எல். ராகவன் லிஸ்ட்டை கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு தேடியதில் "சாமி இல்லாமல் ஊர்கோலமா தாலி இல்லாமல் கல்யாணமா" பாடலைக்காணோம்...


வெறும் காபி பேஸ்ட் .நான் பொறுப்பேற்க முடியாது.

vasudevan31355
18th August 2014, 12:21 PM
வெறும் காபி பேஸ்ட் .நான் பொறுப்பேற்க முடியாது.

அந்தக் கதையெல்லாம் இங்கே விடாதே அப்பனே!:)

vasudevan31355
18th August 2014, 12:29 PM
கோ,

சின்னப் புள்ளைங்க. மன்னிச்சி விட்டுடுவோம்.

ஆனா ஒரு கோப்பையிலே என் 'குடி'யிருப்பு அப்படிங்கிறதை நம்ம சின்னக் கண்ணன் 'காபி'ன்னு இதுநாள்வரை அர்த்தம் எடுத்துகிட்டிருப்பாருன்னு இதுவரை சத்தியமா நினைக்கல சாமி...அய்யோடா! சுத்தமா பொக்கிஷம் எடை கொறஞ்சி போச்சு மது அண்ணா!

இதுக்கு ஒரு குவார்ட்டர் பீர் உட்டாத்தான் சரிப்படும். இல்ல கோ.

நான் ஸ்கூல்ல படிக்கும் போது ஒரு வாத்தியாருக்கு Don Quixote அப்படின்னு பேரு வச்சிருந்தோம். அவரு கொஞ்சம் தட்டுத் தடுமாறி திக்கி பேசுவார்.

ஒரு பார்ட்டியிலே அவரு எங்ககிட்ட சொன்னது.

"எல்லோரும் பொட்டலத்த குடிச்சிட்டு 'டீ'யை தின்னுடுங்க.?!:) இது எப்படி இருக்கு?

கோ,

நம்ம புள்ளைங்க அந்தக் கணக்கா இல்லே?:)

mr_karthik
18th August 2014, 12:29 PM
வெறும் காபி பேஸ்ட் .நான் பொறுப்பேற்க முடியாது.

கோபால் சார்,

நீங்க விட்டுட்டீங்கன்னு சொல்லலை, பட்டியலில் காணோம்னுதான் சொன்னேன்.

அதாவது, நீங்க (காப்பி & பேஸ்ட்) பதிவிட்ட லிஸ்ட்டை நான் அவ்வளவு கவனமாக பார்த்தேன் அப்படீன்னு சொல்றதுக்காக்கும் ஹி... ஹி...

chinnakkannan
18th August 2014, 12:33 PM
//ஆனா ஒரு கோப்பையிலே என் 'குடி'யிருப்பு அப்படிங்கிறதை நம்ம சின்னக் கண்ணன் 'காபி'ன்னு இதுநாள்வரை அர்த்தம் எடுத்துகிட்டிருப்பாருன்னு இதுவரை சத்தியமா நினைக்கல சாமி...// :)

வாசு ஜி க்ருஷ்ணா ஜி.. நன்றி.. இ.ஸ்பெஷல் தேடிப் பார்க்கணும்
க்ருஷ்ணா ஜி வீடியோவிற்கு தாங்க்ஸ்.. நல்லபாட்டுல்ல ஏம்.எம் ஆரும் பி.எஸ்ஸும் அப்படி யே இழைஞ்சிருப்பாங்க..

சி.க- அப்போ கோப்பையிலே என் குடியிருப்புன்னு கண்ணதாசன் சொன்னது காபியைத்தானா // இருக்கலாம் :) ம்ம் அப்புறம் கொஞ்சம் டைம் கழிச்சு வர்றேன்..கோப்பையிலே பாட்டுல வாடைக்காற்று பாட்டும் காதுல வந்துவாலிப மனசை வாட்டுது :)

gkrishna
18th August 2014, 12:35 PM
http://newsimg.bbc.co.uk/media/images/40843000/jpg/_40843444_brands203.jpg

பீர் இல் கூட கிங் பிஷேர் பெரிய பாட்டில் (750 ml ) சிறிய பாட்டில் (எவ்வளுவு ML என்று தெரியவில்லை ) என்று கேள்வி ஞானம் ஒன்று உண்டு .

வசந்த மாளிகையில் ஆடல் ராட்சசி மற்றும் பாடல் ராட்சசி இணைவில்
கூட பாடகர் திலகம் நடிகர் திலகம்

'எது வரை போகுமோ அது வரை போகலாம் ஆழத்தை இங்கு தானே காணலாம் '

vasudevan31355
18th August 2014, 12:38 PM
கோ,

நீ வேற இம்சைப் படுத்தாதே. கத்துக் குட்டிங்களோட அப்படிங்கிறத 'காது குட்டிங்களோட' அப்படின்னு டைப் அடிச்சிருக்கே. 'சரக்கு' அடிச்சுட்டு டைப் அடிக்கிறியா? காலையிலிருந்து நானும் பாக்கேன். ஒரே தப்பு தப்பா பண்ணிக்கிட்டு இருக்கே. என்னடா ஆச்சு ஆண்டவனே இன்னைக்கு நம் திரிக்கு.! பார்த்'தீபா'! பரந்தாமா! 'பீர்'பாலா! 'மது'ண்ணா!, 'கிர்'ஷ்ணா!

vasudevan31355
18th August 2014, 12:41 PM
பீர் இல் கூட கிங் பிஷேர் பெரிய பாட்டில் (750 ml ) சிறிய பாட்டில் (எவ்வளுவு ML என்று தெரியவில்லை ) என்று கேள்வி ஞானம் ஒன்று உண்டு .

வசந்த மாளிகையில் ஆடல் ராட்சசி மற்றும் பாடல் ராட்சசி இணைவில்
கூட பாடகர் திலகம் நடிகர் திலகம்

'எது வரை போகுமோ அது வரை போகலாம் ஆழத்தை இங்கு தானே காணலாம் '

கிருஷ்ணாஜி,

ஏட்டு பீர் கதைக்கு உதவாதே! (இன்னிக்கு கார்த்திக் சார் கண்டிப்பா வர மாட்டார். அவருக்குப் புடிக்காத மேட்டரு இது)

சும்மா கார்த்திக் சார். வெளையாயாடிகினு கிடக்கறோம் கொஞ்ச நாழிக்கு.

vasudevan31355
18th August 2014, 12:45 PM
சரி! அரட்டை அடிச்சாச்சு. மேட்டருக்கு வருவோம். இந்த 'ரகசியம்' படத்தின் பாட்டுக்கள் கிடைக்குமா? ரகசியம் அப்படின்னாலே தாம்பத்ய ரகசியம்... அது இதுன்னு வருது. மதுண்ணா! சுசீலா பாட்டு கூட ரெண்டு இருக்கே! கேக்க ஆசை. மறுபடி கேட்டாதான் ஏற்கனவே கேட்டதா இல்லையான்னு தெரியும். உதவி.ப்ளீஸ்.

http://psusheela.org/LP/rahasyam.jpg

gkrishna
18th August 2014, 12:48 PM
'நம்ம ஊரு பாப்பா .. சாபிடாது மோர் தான் சாப்பிடும் ' (திரிசூலம்)
கார்த்திக் சார் க்கு பிடிக்காத எதையுமே எழுத கூடாது.
அந்த படத்தை எடுதுருவோமா (தேசிய நடிகை படத்தை சொன்னேன் )
எல்லாமே கலாய் (கலை) தானே

அன்பு
கிர்

gkrishna
18th August 2014, 12:53 PM
சரி! அரட்டை அடிச்சாச்சு. மேட்டருக்கு வருவோம்.

இந்த தெரு விளக்கு படத்தின் கமல் பாடல் ஒன்று சொல்லி இருந்தேன்
(அபபா சந்தடி சாக்குலே நானும் மேட்டர் பேசறேன் )

பாடல் கிடைத்து விட்டது 'மதுரை பக்கம் '


http://www.youtube.com/watch?v=bvez3UUMi6E

vasudevan31355
18th August 2014, 12:53 PM
கோபால் சார்,

நீங்க விட்டுட்டீங்கன்னு சொல்லலை, பட்டியலில் காணோம்னுதான் சொன்னேன்.

அதாவது, நீங்க (காப்பி & பேஸ்ட்) பதிவிட்ட லிஸ்ட்டை நான் அவ்வளவு கவனமாக பார்த்தேன் அப்படீன்னு சொல்றதுக்காக்கும் ஹி... ஹி...

அப்படிப் போடுங்க அருவாமனையை .

vasudevan31355
18th August 2014, 12:54 PM
'மச்சானுந்தான் கை வச்சான் பாரு'.

நான் தேடினேன். கிடைக்கல. நீங்க புடிச்சிட்டீங்க கிருஷ்ணா சார். சூப்பர்.

gkrishna
18th August 2014, 01:15 PM
http://lh6.ggpht.com/-jL_sJPVScEc/U-jFEdocWUI/AAAAAAABIIw/q0IzsE36nms/w1280/page_56.jpghttp://lh5.ggpht.com/-dj378_ZfdWQ/U-jFBjZeA2I/AAAAAAABIIk/EyrBwrFojBM/w1280/page_57.jpghttp://lh5.ggpht.com/-v-p1ExnxjNQ/U-jFE22V93I/AAAAAAABII0/sgPvS3IxUHs/w1280/page_58.jpghttp://lh6.ggpht.com/-Y1-zhhB3lxA/U-jFPt3rwqI/AAAAAAABIJU/fDfSXZeyWQk/w1280/page_59.jpg

mr_karthik
18th August 2014, 01:19 PM
கார்த்திக் சார் க்கு பிடிக்காத எதையுமே எழுத கூடாது.
அந்த படத்தை எடுதுருவோமா (தேசிய நடிகை படத்தை சொன்னேன் )
எல்லாமே கலாய் (கலை) தானே

அன்பு
கிர்

தவறு கிருஷ்ணாஜி,

எந்த தனி மனிதனுக்காகவும் எதையும் நிறுத்த வேண்டாம். எல்லோரும் அவரவர் விரும்பும் யாவற்றையும் பதியுங்கள்.

எனக்கு வேண்டிய விஷயங்களை மட்டும் நான் எடுத்துக் கொள்கிறேன்...

vasudevan31355
18th August 2014, 01:37 PM
பெருந்தன்மைக்கு நிஜமான பெயர் கார்த்திக் (எங்கள்). நன்றி கார்த்திக் சார்.

vasudevan31355
18th August 2014, 01:39 PM
என் ராட்சஸியின் புகழ் பாடும் 'வண்ணத் திரை'யின் பக்கங்களைப் பதிவிட்டதற்கு நன்றி கிருஷ்ணா சார். .

gkrishna
18th August 2014, 01:39 PM
உண்மை வாசு சார்

chinnakkannan
18th August 2014, 01:50 PM
நெஜம்மாவே வண்ணத்திரை ரொம்ப இன்ஃபர் மேட்டிவ் தெரியுமா.. தாங்க்ஸ் க்ருஷ்ணா ஜி :)

gkrishna
18th August 2014, 02:35 PM
20 ஆண்டுகளுக்கு முன் பாலச்சந்தர் இன் நேர்காணல் பிலிமலாயா பத்திரிகையில் வெளி வந்ததின் மீள்பதிப்பு . டூயட் படம் எடுத்து கொண்டு இருக்கும் போது இந்த பேட்டி வெளி வந்து உள்ளது

நேர்காணல் : எம்.ஜி. வல்லபன்

தொகுப்பு: ஆர்.கே. அருள்செல்வன்

நன்றி : பிலிமாலயா 1994

http://andhrabuzz.com/upload/news/17024/kb_1.jpghttps://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcTX2bMZYIMTZARCOFWEVGRCy5hKJQgCk I2u5ztiIJAT4Fa900dG

மனதில் பட்டதை திரைமூடி மறைக்க விரும்பாதவர்,தெரியாதவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.அதனாலேயே அவரை பலர் ஆத்திரக்காரர் என்ற அடைமொழியுடன் அழைப்பதுண்டு. ஆண்டாண்டு காலமாக அடுத்தறிந்தவர் என்பதால் அவருடைய ஆத்திர முட்கள்கூட நமக்கு அன்பு முத்தங்களாகவே தெரிகின்றன.

இங்கே அவரிடம் கேட்ட சில கேள்விகளை மற்றொரு கேள்வியாலேயே தாக்கி காயப்படுத்தியிருப்பதைக் காணும்போது நமக்கு அகமும்,புறமும் மலர்கிறது – அந்த உரிமையை அவர் நம்மிடம் எடுத்துக்கொள்ளலாம் என்ற உணர்ந்திருப்பதை எண்ணி.

வசனங்களின் ஆட்சி நட்சத்திர ஆதிக்கம் விஷூவல் தாக்கம் காட்சிகளில் கவர்ச்சி என பல்வேறு கட்டங்களிலும் எப்படி உங்களால் மட்டும் தாக்குப்பிடித்து வெற்றி பெற்று நிறக முடிகிறது?

முதலில் தாக்குப்பிடித்து என்ற வார்த்தைப் பிரயோகம் தப்பாகத் தெரிகிறது எனக்கு. ஏதோ ஒரு Sigma வோட உள்ள வார்த்தையாய் படுது எனக்கு. நான் ஒரு creative ரைட்டர். டைரக்டர் என்று சொல்வதற்கு முன். ரசிகன், நான் ஒரு ரசிகன் பிறகுதான் எழுத்தாளர், இயக்குநர் எல்லாம் என்னால் எப்படி எந்தெந்த காலகட்டங்களில் ஜனங்களோடு சேர்ந்து திரைப்படங்களை ரசிக்க முடிகிறதோ அதுபோலத்தான் அந்தந்த காலகட்டங்களில் நானும் மாறிக்கொண்டு திரைப்படங்களை எடுத்துக்கொண்டு வருகிறேன். என்னை நானே மாற்றிக்கொண்டு உருவாக்கி வருவதால் தரம் தாழ்ந்து போவதாக அர்த்தம் அல்ல. சுற்றியுள்ள Contemporary Films ஐ பார்த்துப் பார்த்து அதன் தாக்கத்தில் என்னை மாற்றிக் கொண்டேன் என்று சொல்வதை விட என் ரசனையை மாற்றிக் கொண்டேன் என்று சொல்லவே விரும்புகிறேன். அவ்வப்போது ஏற்படுகிற சமுதாயப் பிரச்சினைகளை எரிந்து கொண்டிருக்கிற சமகால ஏக்கங்களை பார்க்கும்போது அதை எடுத்து நம் படங்களில் கையாண்டாலென்ன என்று தோன்றுகிறது.

சமகாலப் பிரச்சினைகள் எரிந்து கொண்டிருக்கும் ஏக்கங்கள் போன்றவற்றை எப்படி உங்களால் பிரதிபலிக்க முடிகிறது?

ஒரு Film maker என்பவன் அரசியல்வாதி மாதிரி. அதாவது politician எப்படி நேர்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அது போலவே film maker ம் நேர்மையாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் நேர்மையாக இல்லை. அவர்கள் நல்லவர்களாக இருக்கவேண்டும், நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். Film maker நாட்டுக்கு நல்லது செய்ய முடியாவிட்டாலும் கெட்டதைச் செய்துவிடக்கூடாது.

கெட்டதை என் படங்கள் மூலமாக புகுத்தி விடக்கூடாது என்ற conviction உடன் இருக்கிறேன். அந்த conviction தான் சமகாலப் பிரச்சினைகளை என் படங்களில் வைப்பதற்கான ஊக்கத்தையும் ஆர்வத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. செத்துப்போன விஷயங்களை வைத்துப் படம் பண்ணுவதில் எனக்கு விருப்பமே கிடையாது. இன்று, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நடந்த ஏதோ ஒரு நிகழ்ச்சியை வைத்து கதை செய்வதில் எனக்கு ஆர்வம் வராது. ஏனென்றால் அது dead affair. செத்துப் போன விஷயம். இன்னமும் நாம் தீண்டாமை பிரச்சினையை வைத்து கதை பண்ணிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. ஏனென்றால் தீண்டாமை என்பதெல்லாம் இன்று ஒழிந்து போன விஷயம். ஏதோ அங்கங்கே தலை காட்டலாம். ஆனால் அது இன்றைக்கு தலையாய பிரச்சினை கிடையாது. அதனால் இன்றுள்ள நடைமுறையில் சந்திக்கிற பிரச்சினைகள்தான் எனக்கு முக்கியமாகப் படுகின்றன. அதனால்தான் தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, உன்னால் முடியும் தம்பி போன்ற படங்களை தர முடிகிறது.

இப்போதுள்ள தங்கள் படங்களில் பழைய attack பாணி மாறி advice- க்கு இறங்கி விட்டதாகத் தோன்றுகிறதே – வயது, பக்குவம் காரணமா..?

நிச்சயம் வயது, பக்குவம் காரணமாக இருக்கலாம். எப்போதும் Attack செய்து கொண்டிருப்பது ஒரு பாணி. அதிலிருந்து மாறி அவ்வப்போது Advice பண்ணுவது ஒரு பாணி. திரைப்படங்களில் Advice பண்ணலாமா கூடாதா என்பது debatable point தான் – சர்ச்சைக்குரிய விஷயம். முன்பே சொன்னேன் film maker க்கு அரசியல்வாதி மாதிரி social responsibility சமூக பிரக்ஞை இருக்க வேண்டும். ஆக…. திரைப்படங்கள் மூலமாக நல்ல விஷயங்களை Advisable ஆக இறங்கிச் சொல்வதில் தவறில்லை. அதுவும் இந்த வயதில் தோன்றுகிறது. இதையே பத்து வருடங்களுக்கு முன்பு கேட்டிருந்தால் வேறுவிதமாகச் சொல்லியிருப்பேன். அட்வைஸ் பண்ணுவதற்கு திரைப்படத்திலிருப்பவன் லாயக்கில்லாதவன். அவன் செய்வது வேண்டாத வேலை. ஜனங்க ரசிக்கும் படியாக பொழுது போக்குப்படம் ஒன்றைக் கொடுப்பதுதான் அவன் கடமை என்று கூட சொல்லியிருப்பேன். ஆனால் இன்று இந்தக் காலகட்டத்தில் நாட்டில் உள்ள Moral Disintegration ஐ மிக அருகிலிருந்து பார்க்கிற இன்றைய சூழலில் திரைப்படத்தில் ஒரு விஷயத்தைச் சொல்ல அட்வைஸ் லெவலுக்கு இறங்கி வருவதில் தப்பில்லை என்ற Metamorphasis க்கு நான் வந்திருக்கிறேன் என்று நீங்கள் ஒப்புக் கொண்டாலும் ஓ.கே.

நீங்கள் அழைத்தால் மணிரத்னம் டின்னருக்கு வருவார். அப்படியிருக்க அதை நீங்கள் ஒரு பேறு என்று கருதி பேட்டி கொடுத்திருப்பதை ஏற்க முடியவில்லையே?

உங்கள் கேள்வியைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் அழைக்கிறது யாரை? என்னைப்போல திரையுலகத்தில் இருக்கிற Intelligent – Contemporary Director ஒருவரைத்தான். என்னோடு தொழில்முறையில் ஈடுபட்டிருக்கிற ஒரு நல்ல கலைஞனை என் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுக்கணும். ஒரு வேளை அவர் ஒத்துக்கிட்டா என் பேறுன்னு சொன்னது எனக்கு எந்த விதத்திலும் தப்பாகப்படவில்லை. சொல்லப்போனால் சாதாரணமா இந்த மாதிரியெல்லாம் கூப்பிட்டால் அவர் வரமாட்டார்… அவர் நல்ல கலைஞன்… அவர் வந்தால் நிச்சயமா நான் ஒரு பேறாகத்தான் நினைக்கிறேன். சூதுவாது நிறைஞ்ச இந்த உலகத்தில் யாரோ ஒரு நாலாந்தர அரசியல்வாதியை வீட்டுக்கு டின்னருக்குக் கூப்பிட்டால்தான் ஏத்துக்க முடியலைன்னு நீங்க சொல்லலாம். ஆனால் திரைக்கலைக்காகவே 24 மணிநேரமும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு பாடுபடுகிற ஒரு நல்ல கலைஞனை – அகில இந்தியாவிலும் பேசப்படுகிற இயக்குநர் என் வீட்டுக்கு வந்து டின்னர் சாப்பிட்டா நிச்சயமாக நான் அதை பேறாகத்தான் கருதுவேன்.

நடிகர்கள் கொடி கட்டிப் பறந்த காலத்திலேயே பாலச்சந்தர் படத்தில் நட்சத்திரங்கள் இருந்ததில்லை. இன்று நட்சத்திரத் துணை தேடுவது ஏன்?

நான் திரைத்துறையில் நுழைந்த போதே நட்சத்திரங்களை ஒழித்துக் கட்டுவது என்று சங்கல்பம் எடுத்துக் கொண்டேனா? இல்லை… நட்சத்திரங்களைப் பயன்படுத்துவதில்லை என்று யாருக்காவது சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேனா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. யார் யாரை எப்படிப்பட்ட கதைகளில் எந்தெந்த நேரத்தில் எப்படிப்பட்ட பாத்திரங்களில் தேர்ந்தெடுக்க வேண்டும் – நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு பண்ண வேண்டியது ஓர் இயக்குநரின் Prerogative உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. இந்தக் கேரக்டருக்கு ஏன் அவரைப் போட்டீங்கன்னு நீங்க கேட்கக் கூடாது. எனக்கு அவர் வேணும்னு தோணுது போடுகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் தோன்றாமலிருக்கலாம். அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. புதுப்புது அர்த்தங்கள்னு ஒரு படம் எடுத்தேன். அதுல ஒரு கேரக்டருக்கு ஓர் ஆர்ட்டிஸ்ட் தேவைப்பட்டது. அதற்கு கீதாவைப் போட்டேன். கீதாவை தேர்ந்தெடுக்கும் முன்னாடி எத்தனை விதமா நான் யோசித்துப் பார்த்திருப்பேன்னு உங்களுக்கு தெரியுமா? அதற்கு புது ஆர்ட்டிஸ்ட்டை போட முடியாது. அறிமுகம் செய்கிற ஒரு நடிகையைப் போட்டு, ஒரு மனைவியா காட்ட முடியாது. அதற்கு perform பண்ஹ ஆர்ட்டிஸ்ட், கொஞ்சம் maturity யா இருக்கணும்னு எதிர்பார்த்தேன். என்னதான் நடிச்சாலும் புதுமுகத்திற்கு கேரக்டருக்கேற்ற maturity இருக்காது. அதனால்தான் கீதாவைப் போட்டேன். அதேசமயம் அந்த ஹீரோ கோவாவில் சந்திக்கிற கேரக்டருக்கு young ஆ fresh ஆ ஒரு முகம் தேவைப்பட்டதால் சித்தாரான்னு ஒரு newface ஐ போட்டேன். ஏன் கீதாவைப் போட்டீங்கன்னு நீங்க கேட்டால் அதில் அர்த்தம் இருக்கா? இந்த நீணீstவீஸீரீ அவ்வளவு சுலபமான வேலை இல்லை. கதை ரெடியான பின், நீணீstவீஸீரீ கிற்காக நான் பல நாள் எடுத்துக்குவேன். இப்ப கமலை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று எனக்குத் தோன்றினால் அவரும் இஷ்டப்படுகிறார்னு வைத்துக் கொண்டால் கமலுக்காகத்தான் ஒரு கதையைத் தயார் செய்ய வேண்டியிருக்கும். ஏன் என்றால் கமல் நிறைய கேரக்டர்ஸ் பண்ணியிருக்கிறார். அரருக்கேற்ற மாதிரிதான் கதை அமைக்க வேண்டும். இப்போ பிரபு இருக்கார். ரொம்ப நாளா சந்திச்சிட்டு வர்றேன். ஒரு சமயம் கூட சொன்னார். சார் உங்க டைரக்ஷன்ல நான் நடிக்க விரும்புறேன்னு அதுவும் ஒரு ஐம்பது படங்களில் நடிச்ச பின்னாடித்தான் கேட்டார். அதை அப்படியே மனதிலேயே வைத்திருந்தேன். அவரை வைத்து படம் பண்ணினால் என்ன என்று தோன்றியபோது அவர் நூறு படத்தை முடிச்சிட்டார். அதற்காக நட்சத்திர நடிகர்களை வைத்து நான் படம் டைரக்ட் பண்ணமாட்டேன்னு சொல்றது என்ன நியாயம்? அவரும் நடிக்க விருப்பப்பட்டார். எனக்கும் ஆசை. சரி… பிரபுவை வைத்துப் படம் பண்ணலாம்னு முடிவு செஞ்சபோது அவருக்காக, ஒரு கதையை ரெடி செய்தேன். அதிலென்ன தவறு? உடனே நடிகர்களுக்காக கதை எழுதலாமான்னு கேட்கக்கூடாது. பாலசந்தர் எந்த நட்சத்திரத்திற்கும் விரோதியல்ல. எனக்கு எல்லா நட்சத்திரங்களும் நண்பர்கள்தான். நட்சத்திரங்களை வைத்துப் படமெடுக்கும் போது அவர்களுக்கேற்ற கதை எழுதப்பட வேண்டுவதுதான் சினிமா. அவர்களை ஓரம்கட்டி விட்டு கதை பண்ணக்கூடாது. திரையுலக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு நேர் எதிரிடையாக போய் முட்டி மோதிச் சாகக் கூடாது.

நீங்கள் பெருமை கொள்ள வைக்கும் இயக்குநர் சிகரம். ஆனால் சாதாரண தயாரிப்பாளர். ஆம் தானே உங்கள் பதில்..?

ஆம். நான் பெருமை கொள்ள வைக்கும் இயக்குநர் சிகரம். நீங்க சொல்றதால ஏத்துக்கறேன். நீங்கள் சாதாரண தயாரிப்பாளர்தானே? ஆம்… ரோஜா என்கிற ஒரு நல்ல படத்தைக் கொடுத்த சாதாரண தயாரிப்பாளர்தான். நல்ல தயாரிப்பாளர், சாதாரண தயாரிப்பாளர் என்பதற்கு என்ன definition? எத்தனையோ படங்கள் எடுத்திருக்கோம். எத்தனையோ நடிகர்கள் எங்கள் படங்களில் நடித்திருக்கிறார்கள். எத்தனையோ துணை நடிகர்கள் பங்கு பெற்றிருக்கிறார்கள். அங்கெல்லாம் போய்க் கேட்டுப் பாருங்கள். அதாவது பாலசந்தர் கம்பெனியிலிருந்து உங்களுக்கு பணம் ஏதாவது பீuமீ இருக்கான்னு கேட்டுப் பாருங்க. சத்தியமா இருக்காது. அவங்க கவிதாலயா கம்பெனியில வேலை செஞ்சது எங்களுக்கு பெருமையா இருக்குன்னுதான் சொல்வாங்க. ஆக… சாதாரண தயாரிப்பாளர்ங்கறதை ஒத்துக்க மாட்டேன். மிகப் பெரிய வெற்றிப் படங்களை எடுத்திருக்கிற தயாரிப்பாளர். ரோஜா மூலம் தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர். சாந்தாராம் பெயரில் இருக்கிற ஜிக்ஷீust தேசிய அளவில் இரண்டாவது மிகச் சிறந்த திரைப்படம் எடுத்ததற்காக விருது வழங்கி சிறப்பித்து இருக்கிறது. ஏ.வி.எம். என்ற நிறுவனத்திற்குப் பிறகு மரியாதைக்குரிய திரைப்பட நிறுவனம் என் கவிதாலயா நிறுவனம். எனவே சத்தியமாக நான் சாதாரண தயாரிப்பாளர் என்பதை ஏத்துக்கவே மாட்டேன்.

ரஜினியை வைத்து படம் பண்ணும் நீங்கள், அவரை இயக்கத் தயங்குவது அவரை அவர் பாணியிலேயே நிலைக்க வைக்கும் அலட்சியமா? அவர் பாணிக்கு நீங்கள் இறங்கி விடக்கூடாது என்ற எச்சரிக்கையா?

இந்தக் கேள்வி mischievous ஆ தெரியுது. அவரை இயக்கத் தயங்குவது அவர் பாணியிலேயே நிலைக்க வைக்கும் அலட்சியமான்னா என்ன? அவர் இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாரா ஆகியிருக்காருல்லே. அவர் சூப்பர் ஸ்டாராகவே இருக்கணும்னு நினைக்கிறது லட்சியமாகவே இருக்கட்டும். இதில் அலட்சியமென்ன..? அவர் சூப்பர் ஸ்டாராகவே இருக்கணும்னு நான் நினைக்கிறது லட்சியமாகவே இருக்கட்டுமே. He should continue to be a Super star. அவர் பாணிக்கு இறங்கி விடக் கூடாது என்ற எச்சரிக்கையாங்கறீங்க… இதுக்கு நான் பலமுறை பதில் சொல்லியிருக்கிறேன். யாராலும் நினைச்சுப் பார்க்க முடியாத Super Star இமேஜ் ரஜினிக்கு வந்திருக்கு. இதுவரை யாருக்கும் கிடைக்காத இமேஜ் அது. அந்த இமேஜை – நிலையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். காப்பாற்றிக் கொள்ள வேண்டும். காப்பாற்றிக்கணும்னு நினைக்கிறபோது, அவர்களுடைய ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி அப்படிப்பட்ட முறையில் என்னால் படத்தை இயக்க முடியுமான்னு என் மேல் ஏற்பட்டிருக்கிற பயத்தினால்தான் அவரை வைத்து இயக்கத் தயங்குகிறேன். ஒரு சின்ன hesitation. அவ்வளவுதான். நாம ஏதாவது ஒன்றைச் செய்யப் போய் அது எதிரிடையா result ஐ கொடுக்கக் கூடாதுங்கற பயம்தான் காரணம்.

முன்பெல்லாம் நீங்கள் அறிமுகப்படுத்தும் நடிகர்களை அவர்கள் நட்சத்திரங்களாகும் வரை அடுத்தடுத்த படங்களில் நடிக்க வைத்து பட்டை தீட்டுவீர்கள். ஆனால், இப்போது அறிமுகத்தோடு விட்டு விடுகிறீர்களே ஏன்?

அப்படி நான் அறிமுகப்படுத்தும் நடிகர்களை, பட்டை தீட்டும் வாய்ப்புக்கு மற்ற இயக்குனர்களிடம் விட்டு விடுகிறேன் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்களேன். அது மட்டுமல்ல… முன்பு வருஷத்துக்கு மூன்று படங்களை இயக்கினேன். இப்போது வருஷத்துக்கு ஒரு படம்தான். நான் அறிமுகப்படுத்தினவங்க என் அடுத்த படத்துல நடிக்க வைக்கிறதுக்குள் பிரபலமாகி விடறாங்க. பிஸியாவும் ஆய்டுறாங்க. நான் கூப்பிட்டா வருவாங்க என்றாலும் ஏன் நாம் disturb பண்ணனும்னு விட்டுட வேண்டியிருக்கு.

ரஜினி, கமல் போன்று இனி ஒரு நட்சத்திரம் உருவாகும் வாய்ப்பே இல்லை எனப்படுகிறது. ஏனெனில் அவர்களுக்குக் கிடைத்த Variety of roles, திறமை மிக்க இயக்குநர்களிடம் பயிற்சி, தவறும்போது தூக்கிவிட உங்களைப் போன்றவர்களின் கைகள்… போன்றவை இன்றைய – இளைஞர்களுக்கு அறிமுகங்களுக்குக் கிடைக்கவில்லையே..?

இது கேள்வி மாதிரி தெரியலை. statement இதுபற்றி தனியா நான் ஒன்றும் சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. ஒரு படத்தில் அறிமுகப்படுத்திய உடனேயே அவர் பிரபலமாகும் போது, அறிமுகப்படுத்தின இயக்குனருக்கே அவருடைய தேதி கிடைக்கலைங்கற போது எப்படி அவரை பட்டை தீட்டுவாருன்னு எதிர்பார்க்கறீங்க? என் நண்பர் பாரதிராஜா நெப்போலியன்னு ஒரு நடிகரை அறிமுகப்படுத்தினார். மறுபடியும் கிழக்குச் சீமையிலேயில் ஒரு Role கொடுத்திருக்கார். அந்த ரோல் கொடுத்ததும் அவருடைய இமேஜ் மிகப்பெரிய அளவில் போச்சு. ஆக… சந்தர்ப்பங்கள் அமையறதுதான். கிழக்குச் சீமையிலே மாதிரி ஒரு கதை அமையவேண்டும். அதுல நெப்போலியனுக்கேற்ற கேரக்டர் அமைய வேண்டும். அவரைப் போடத் தோன்ற வேண்டும். அவரது டேட்ஸ் அமையவேண்டும். பிறகு தான் நடிக்க வைக்கவேண்டும். ஆக… இவ்வளவு விஷயங்கள் அமைந்த பிறகுதான் நெப்போலியனுக்கு பாரதிராஜாவால் நல்ல credit கிடைத்திருக்கிறது. இது அமைய பல circumstances இருக்கின்றன.

மரோ சரித்ரா மாதிரி ஏக்துஜே கேலியே மாதிரி எப்போது இன்னொரு முறை அசத்தப் போகிறீர்கள்?

ஒவ்வொரு படத்தையும் அசத்த வேண்டும் என்றுதான் நினைப்பேன். சில படங்களில் நிஜமாகவே அசத்திடுவேன். சில படங்களிலே இவர் அசத்தினது போதாதுன்னு சொல்றீங்க. எல்லாப் படங்களுமே மரோ சரித்ரா மாதிரி ஏக் துஜே கேலியே மாதிரி அமைய முடியாது.

நான் கேட்பது அதுமாதிரி காதல் கதை எப்போது தரப் போகிறீர்கள் என்று..?

ஆமாம்… Love Story ன்னால் எல்லாரும் விழுந்துடறீங்க. இன்றைக்குள்ள இளைஞர்கள் எல்லாம் படத்துல வருகிற காதலன் – காதலி பிரச்சினையை தங்கள் பிரச்சினையாக நினைக்கிறாங்க. அதனால அவை வெற்றி பெற்றன. ‘புதுப்புது அர்த்தங்கள்’, ‘வானமே எல்லை’ கூட வெவ்வேறு வகை அசத்தல்தான்; வெற்றிகள்தான்.

பாடல் காட்சிகளில் பாலசந்தர் பாணி என்று ஒன்று இருந்தது. இன்று அது போய் நீங்களும் விளம்பரப் பட பாணியில் இறங்கி விட்டீர்களே?

உங்களுக்கு பழைய கேள்வி ஒன்றை ஞாபகப்படுத்துகிறேன். என்ன கேள்வி தெரியுமா? பல கட்டங்களிலும் எப்படி உங்களால் தாக்குப்பிடித்து வெற்றி பெற முடிகிறது என்று முதல் கேள்வியாக கேட்டீர்களே. அதையே இப்போது ஞாபகத்துக்கு கொண்டு வருகிறேன். என்னையே நான் Metamorphasis பணணிக் கொள்வதோ அல்லது என் ரசனையையோ நான் மாற்றிக் கொள்ள விரும்புவதோ என்னுடைய Prerogative– உரிமை அப்படிங்கற முறையில் பாலசந்தர் பாணி என்பதையே மாற்றிக்கொள்ள நினைப்பேனில்லையா? இன்றைக்குள்ள இளைஞர்களுடன் போட்டி போடும்போது அவர்களுடைய முறையில் படம் எடுக்கறதில் என்ன தவறு? இன்றைக்குள்ள ரசிகர்கள் வேகத்தை எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கேற்றபடி வேகமான பாணியில் பாடல்களைக் கொடுத்தால்தான் ரசிக்கிறார்கள் என்பது முக்கியமான விஷயம். பாலசந்தர் பாணியிலேயே பாலசந்தர் இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது தவறென்று எனக்குத் தோன்றுகிறது. என் பாணியிலிருந்து நானே மாற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இதைத்தான் நீங்களும் எதிர்பார்க்க வேண்டும். நான் பாலசந்தர் பாணியிலிருந்து மாறி மணிரத்னம் பாணிக்கு மாறலாம். மணிரத்னம் பாலசந்தர் பாணிக்கு வரலாம் – வரவேண்டும். வந்தால்தான் அது evolution.

ஆனாலும் இப்போது கூட எந்தெந்தப் பாடல்களுக்கு எந்த முறையில் இயக்க வேண்டும் என்கிறதில் மனசுக்குள் ஒரு பார்முலா போட்டிருப்பேன். அந்த பார்முலாவிலிருந்து நான் வெளியே வரமாட்டேன். என்ன சொன்னாலும் பாடல் வரிகளில் உள்ள வார்த்தைகள் ஜனங்களை சென்றடைய வேண்டும் என்பதில் என்னைவிட யாரும் அக்கறை எடுத்துக் கொள்ள முடியாது.

இளையராஜாவுடன் என்ன தகராறு? இருந்தும்… இருவருமே தனித்தனியாகப் பாராட்டிக் கொள்கிறீர்களே..?

இதெல்லாம் நீங்களா உண்டு பண்ணிக்கிட்ட விஷயம். எனக்கும் இளையராஜாவுக்கும் எந்தத் தகராறும் கிடையாது. எம்.எஸ்.விக்கு அப்புறம் இளையராஜாவுடன் பணிபுரிய ஆரம்பித்தபோது எம்.எஸ்.விக்கும் எனக்கும் என்ன தகராறு? ஒன்றும் இல்லை. அதே மாதிரி குமாருடன் சக்சஸ் ஃபுல்லா பண்ணிக்கிட்டிருந்தபோது எம்.எஸ்.வி.கிட்டே வந்தேன். அப்போ குமாருக்கும் எனக்கும் என்ன தகராறு..? ஒண்ணும் கிடையாது. ஆக தகராறு எல்லாம் எந்த விதத்திலும் கிடையாது. ஏதோ நீங்களாக கற்பனை பண்ணிக்கிட்டு ஏதேதோ கேட்கறீங்க. இன்னைக்கும் சொல்றேன் நிச்சயமாக இளையராஜா மாதிரி ஒரு இசை மேதையை உலகத்திலேயே பார்க்க முடியாது. தமிழகத்திற்கே பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் ஒரு இசைக் கலைஞர் அவர்.

பத்திரிகையாளர்களுடன் அடிக்கடி மோதுகிறீர்களே ஏன்..? அபிப்ராயங்கள் ஒரே மாதிரிதான் இருக்க வேண்டும் என்பது உங்கள் வாதமா?

மோதலும் இல்லை; ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. சில நேரங்களில் வரும் out burst – complex out burst(?) அதாவது புத்திசாலித்தனம் எங்கே இருந்தாலும் அதற்கு நான் அடிமையாகி விடுவேன். அது இல்லாத போது எனக்கு என்னை அறியாமல் சின்னதா கோபம் வந்துவிடும். அதாவது தனிநபர் அபிப்ராயங்களுக்கு மரியாதை கொடுப்பவன் நான். அதில் சூதும் வாதும் இருக்கக்கூடாது. ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு பத்திரிகைக்காக ஒருவர் என்கிட்டே interview வுக்காக வந்தார். நானும் நேரம் ஒதுக்கி பேசிக்கிட்டிருந்தேன். கேள்விக் கேட்டுக் கொண்டிருக்கும்போது தண்ணீர் தண்ணீர் படத்தைப் பற்றி refer பண்ணினேன். உடனே நான் தண்ணீர் தண்ணீர் பார்க்கலைன்னார். என் முக்கியமான படம் அது. அதை பார்க்காமலேயே என்கிட்ட எப்படி இன்டர்வியூவுக்கு வந்தீங்கன்னு கோபப்பட்டேன். அதனால் அவர்கிட்டே நான் மோதுவாக எண்ணியிருக்கலாம். அது என் சுபாவம். அவர் அப்படி நினைத்தால் நான் என்ன செய்வது. என் புதுப்புது அர்த்தங்கள் படத்தைப் பற்றி ஒரு பத்திரிகையில் எழுதியிருந்தாங்க. என்ன தெரியுமா? ஒரு கத்துக்குட்டி டைரக்டர் எடுத்த படம் மாதிரி இருக்குன்னு எழுதியிருந்தாங்க. அந்த படத்துக்கு சிறந்த படம்னு தமிழ்நாடு அரசின் பரிசு பெற்றது. பிலிம் ஃபேர் பத்திரிகையின் சிறந்த இயக்குநர் பரிசு பெற்றது. இதுமாதிரி தனி நபரின் சூதும் வாதும் நிறைஞ்ச மாதிரி விமர்சனங்கள் இருக்கிறதால் தான் அந்த மாதிரி நேரத்தில் ரொம்ப கோபம் வருகிறது.

பொதுவாக ஒரு காட்சி பிடிக்கலைன்னா எனக்கு அது பிடிக்கலைன்னு நீங்க சொல்லிட்டா, சரிய்யா… அது உன்னுடைய அபிப்ராயம். ஆனால் எனக்கு அது பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டுப் போய்விடுவேன். ஆனால் பொறுப்பான ஒரு பத்திரிகையில் விமர்சனம் எழுதும்போது உனக்கு அது பிடிக்கவே இல்லைன்னாலும் பாலசந்தர் இன்னும் அதிகமாகச் செய்திருக்கலாம். இன்னும் அவரிடம் எதிர்பார்த்தோம் என்று சொல்லிக் கொள்வது வேறு. ஆனால் ஒரு கத்துக்குட்டி டைரக்டர் இயக்கியது மாதிரி இருக்கிறது என்று எழுதுவது ஒரு விஷமத்தனமான statement அதற்குப் பதிலா பாலசந்தரிடம் இன்னும் எதிர்பார்த்தோம் என்று எழுதினால் நான் உங்களிடம் சண்டைப்போட நியாயமே இருக்காது.

இப்பவும் சொல்றேன். எந்த சந்தர்ப்பத்திலேயும் பத்திரிகையாளர்களோடு எனக்கு மோதல் கிடையாது.

உங்கள் படம், பாலசந்தர் படம்தான் யார் நடித்திருந்தாலும் அப்படியிருக்க அந்தக் காலம் தொட்டு தொடரும் பாடல்கள் அவசியமா?

நான் தெரியாமல்தான் கேட்கிறேன். பாட்டு என்பதை திரைப்படத்தில் வைத்தால் அது ஒரு பாவமா என்ன? அதாவது அந்தக் காலத்திலிருந்து இந்த காலம் வரைக்கும் சங்கீதம் என்பது இந்தியர்களின் குறிப்பா தமிழ் ரசிகர்களின் ரத்தத்திலேயே ஊறிப்போன ஒன்று. Music என்பது நல்ல விஷயம். enjoyable stuff. பொழுது போக்குக்கான முக்கியமான அம்சம். அதை படங்களிலிருந்து எடுக்க வேண்டும் என்று ஏன் கேள்வி கேட்கிறீர்கள்? அந்தக் காலம் தொட்டு வரும் பாடல்கள் அவசியமான்னா என்ன அர்த்தம்? அவசியம்கறது என்ன? சினிமாவுக்கே என்ன அவசியம் இருக்குன்னு நீங்க கேள்வி கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன். பொழுது போக்கு அம்சங்களுடன் ஒரு கதையைக் கொடுப்பதுதான் திரைப்படங்களின் கடமை. அப்படியிருக்கும்போது, பொழுது போக்கில் முக்கிய பங்கு வகிக்கும் music ஐ கொடுத்தால் அதிலென்ன தவறு? என்ன இடிந்து விழுந்து விடப் போகிறது.

எந்த ஆர்ட் பிலிமும் ஓடுவதில்லை. ஜனங்க பார்க்கிறதில்லை. ஏற்கெனவே Parallel Cinema ன்னு கிளம்பி வந்து அது செத்துப் போய் விட்டதே. ஏன் செத்து போகற நிலைமை?

விடாப்பிடியா அந்த Art film makers எல்லாம் என்ன நினைத்துக் கொண்டிருந்தாங்க? ஜனங்களுக்கு பிடிக்கிற விஷயங்களை கொடுக்க மறந்ததுதான் காரணம். அதெல்லாம் கொடுத்தால் என்னவோ தங்களோட கற்பையே இழந்து விடுகிற மாதிரி நினைத்தார்கள். இந்தத் தவறுகளைத் தொடர்ந்து செய்துகொண்டே இருந்ததால்தான் Parallel Cinema வே செத்துப் போச்சு. சினிமா என்பது யாருக்காக? உனக்காக மட்டுமல்ல. உன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்காக மட்டுமல்ல. உன்னுடைய மேல்தட்டு ரசிகர்களுக்கு மட்டுமல்ல. அது வெறும் morning show ருக்காக மட்டுமல்ல. அதை எல்லாரும் பார்க்க வேண்டும். படிப்பறிவு இன்னும் எல்லாருக்கும் கிடைக்கவில்லை என்று வாய் கிழிய பேசிக் கொண்டிருக்கிறோம். ஜனங்களின் தரத்தை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்த வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கும்போது அவர்களுக்குப் பிடித்தமான சில நல்ல அம்சங்களை திரைப்படங்களில் வைத்துதான் அவர்களை கவரவேண்டும். கவர முடியும். 40 வருஷங்களுக்கு முன்பு வந்த தியாகராஜ பாகவதர் படங்களைப் பார்த்தால் 70 பாட்டுகள் 80 பாட்டுகள் என்றிருக்கும். இன்றைக்கு அப்படியா? ஐந்து பாட்டுகள் தானே இருக்கிறது. ஏவி.எம்.மில் பாட்டே இல்லாம அந்த நாள் எடுத்தாங்க. அவார்டெல்லாம் கிடைத்தாலும் படம் ஓடவில்லை. நானும் ஒரு வீடு இருவாசல் படம் எடுத்துப் பார்த்தேன். அதற்கு மியூசிக் தேவையில்லை. பாடலே வேண்டாம் என்று வறட்டுப் பிடிவாதத்தோடு எடுத்தேன். என்ன ஆனது..? ஜனங்க அதை reject பண்ணிவிடுவாங்கன்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் அதை ஒரு experimental ஆ எடுத்துப் பார்த்தேனே. அவார்டு கிடைச்சுது. ஆனா படம்தோல்வி அடைஞ்சுது. உடனே Jurassic park ல் Schindler’s list ‘ல் எல்லாம் பாடல்கள் இருந்ததான்னு கேட்கக்கூடாது. அது அர்த்தமில்லாத கேள்வி. அவங்க பாணி வேறு. பாடல்களோடு கலந்து கொடுக்கிற பொழுது போக்கு அம்சங்கள் உள்ள படங்கள்தான் வெற்றி பெறுகின்றன. அதுமட்டுமல்ல. தனிப்பட்ட முறையில் எனக்கு music பிடிக்கும்.

உங்களிடமிருந்து வந்த உதவியாளர்களில் விசு தவிர (அவர் பாணி வேறு) யாருமே உங்களை நினைவுபடுத்துவதில்லையே ஏன்? தொழில் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வதில்லையா?

விசுவைப் பொறுத்தவரை அவர் என்னிடம் உதவியாளரா இருந்ததில்லை. அவர் என் சில படங்களில் கதை வசனகர்த்தாவாக Associate பண்ணியிருக்கார் என்பதைத் தவிர. ஆனா அவர் என்னைத் தன் மானசீக குருவாக நினைச்சிட்டிருக்கார். அதை விட்டுவிடுவோம். இந்தக் கேள்வியே silly யா தோணுது. நான் ஒரு எதிர் கேள்வி கேட்கிறேன். நீங்க ஒரு பத்திரிகையாசிரியரா இருக்கிறீர்கள். உங்களிடம் உங்கள் பத்திரிகையில் வேலை பார்த்த யாருமே உங்களை நினைவுபடுத்துகிற மாதிரி பின்னால் வரவில்லையே ஏன்? நீங்க பத்திரிகைத் தொழிலின் ரகசியங்களைப் பகிர்ந்துக்கலையான்னு கேட்டால் அது எவ்வளவு silly யா இருக்கு? அதே மாதிரித்தான் இதுவும். உங்களிடம் யாராவது வேலை பார்க்கிறாங்கன்னா, sub-Editor ஆ work பண்றாங்கன்னா அவுங்களா கத்துக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது இல்லையா? நீங்க ஏதோ எழுதிக் கொடுக்கிறீங்க. எழுதிக் கொடுக்கிறதைப் பார்த்து தெரிஞ்சுக்க வேண்டியதுதானே? எந்த மாதிரி நேரத்தில் எப்படி எழுதுறார்னு அவங்களே கற்றுகிட வேண்டியதுதானே? அவங்களை எதிர்த்தாப்புல உட்கார வைத்து, இங்கே பாரு இந்த இடத்துல என்ன போட்டிருக்கேன் பாரு. அந்த Sentence ஐ எப்படி Compose பண்ணியிருக்கிறேன் பாரு. அந்தக் கட்டுரையை எப்படி ஆரம்பிச்சிருக்கேன் பாருன்னு என்ன வகுப்பா நடத்த முடியும் உதவியாளர்களுக்கு..? நடத்த மாட்டீங்க இல்லையா? என் கூட Work பண்ற Assistants ஐ கூட வச்சிக்கிட்டுத் தானே படம் எடுக்கிறேன். நான் மட்டும் தனியா இருந்து கொண்டு இருட்டறைக்குள்ளா படம் எடுக்கிறேன்? எல்லாம் பார்த்துக்கிட்டுத்தானே இருக்காங்க. டயலாக் எப்படி எழுதியிருக்கேன்னு எழுதிய பின்னாடி பார்க்கலாம் இல்லையா… Dialogue எழுதிய பின்னாடி It is a open book தானே? அதில் ஒளிவு மறைவு என்ன இருக்கு? ஒரு காட்சியை எப்படி எடுக்கிறார்… அதற்கு எப்படி வசனம் எழுதுகிறார்னு கவனிச்சுக்க வேண்டியது தானே? இந்தப் பாடங்கள் எல்லாம் அவங்களா கத்துக்க வேண்டியதுதான். Especially சினிமாத் தொழில்ல ரகசியமே கிடையாது. இது என்ன மந்திரத்துல மாங்காய் வரவழைக்கிற ரகசியமா, சொல்லிக் கொடுக்காம இருக்கிறதற்கு? தப்பான ஒரு கேள்வி இது. என்கிட்டே உதவியாளர்களா இருந்தவங்க வெளியில அதிகமான அளவில் வரலைங்கறது ஒரு உண்மை. அவ்வளவுதான். That is fact. எப்படி முன்னேறிக் கொள்ள வேண்டும். எப்படி தங்களைத் தாங்களே வளர்த்துக்க வேண்டும் என்கிறதெல்லாம் அவரவர்களின் ஈடுபாட்டை பொறுத்தது. மணிரத்னம் இவ்வளவு பெரிய டைரக்டர் – அவர் யாரிடம் உதவி இயக்குநராக இருந்தார்? ஏன்… நான் யாரிடம் உதவி இயக்குநராக இருந்தேன்?

திரை இயக்கத்தைப் பொறுத்தவரை நான் ஒரு மாணவன் என்று எதைக் குறிப்பிடுவீர்கள்?

ஒன்றா இரண்டா… எல்லாவற்றையும்தான். ஒரு மாணவன் Pass பண்ணிக் கொண்டே இருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். எல்லாம் தெரிந்து கொண்டான் என்று அர்த்தம். ஆனா மாணவனா இருக்கிறவன் fail ஆகிவிட்டான் என்றால் மறுபடியும் பரீட்சை எழுதித்தானே ஆகவேண்டும்? என் ஒரு படம் வெற்றி பெறுகிறது. தொடர்ந்து மூன்று படங்கள் வெற்று பெறுகின்றன. நான்காவது படம் தோல்வி அடைகிறது. ஐந்தாவது படத்தை வெற்றி படமாக்க நினைக்கிறேன் என்றால் மறுபடியும் நான் பரீட்சை எழுதித்தானே ஆக வேண்டும். அதனால்தான் என்னை நான் மாணவனாக நினைக்கிறேன்.

யாரையாவது பார்த்துப் பொறாமைப்பட்டிருக்கிறீர்களா?

ஏன் பொறாமைப்படவில்லை? ஏன்… இல்லை. அதாவது பாராட்டுவதும் சரி பொறாமைப்படுவதும் சரி,,, அதுதான் பாலசந்தரின் asset. அதுதான் அவரது Technique. அதுதான் அவரிடம் உள்ள நல்ல குணம் என்று நான் நினைக்கிறேன். It is my strong point . பாரதிராஜாவை பார்த்து நான் பொறாமைப்பட்டிருக்கிறேன். அதே நேரம் பாராட்டியும் இருக்கிறேன். அதே மாதிரி மணிரத்னத்தையும் பார்த்து பொறாமைப்பட்டிருக்கிறேன். பாராட்டி இருக்கிறேன். பொறாமைப்படுவதும் பாராட்டுவதும் ஒரு கலைஞனுக்கு அவசியம். especially ஒரு டைரக்டருக்கு அவசியம். அப்போதுதான் வளர முடியும். சில நாட்களுக்கு முன் ஏ.வி.எம். ஸ்டுடியோவுக்கு இந்தி டைரக்டர் மகேஷ்பட் ஷூட்டிங்கிற்கு வந்திருந்தார். முன்னர் அவரை நான் சந்தித்ததில்லை. ஆனால் அவரை எனக்குப் பிடிக்கும். நானே அவரிடம் சென்று என்னை அறிமுகம் செய்து கொண்டு, உங்கள் படங்கள் எல்லாம் எனக்குப்பிடிக்கும். நான் உங்கள் ரசிகன்னு கூட வைத்துக் கொள்ளலாம் என்றேன். உடனே அவரும் அதையே சொன்னார். நான் உங்களுடைய ரசிகன் சார்.I have seen all your Tamil films என்றார். பொறாமையை மனசுக்குள்ளே வைத்துக்கொள்ள வேண்டும். அதை தொழிலில் காட்ட வேண்டும். ஆனால் பாராட்டை மனம் திறந்து வெளிப்படுத்த வேண்டும்.

நீங்கள் ஏன் வெளியார் படங்களை இயக்குவதைத் தவிர்க்கிறீர்கள் except சில படங்கள்..?

என் கூடவே வந்தவர்களுக்கு ஆரம்ப காலத்தில் படம் பண்ணிக் கொடுத்து வந்தேன். அப்படி பண்ணும்போது ஒரு லாபம். நான் கொஞ்சம் experimental ஆ படம் பண்ணும் Opportunity எனக்குக் கிடைக்கும். இல்லாவிட்டால் அந்த தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்திவிடக் கூடாது என்ற ஒரே anxiety யிலேயே நம்முடைய கதை அமைப்பு போன்றவை இருந்துவிடும் என்று, தெரிந்த தயாரிப்பாளர்களுக்கு மட்டும் செய்து கொடுத்து வந்தேன். சொந்தமா திரைப்படக் கம்பெனி ஆரம்பித்த பிறகு லாபமோ நஷ்டமோ அது நம்மோடு போகட்டும், experimental ஆ எது செய்தாலும் நம்மோடு போகட்டும், அதனால மற்றவர்கள் பாதிக்கக் கூடாதே என்ற நல்ல எண்ணத்தில் தான் வெளியார் படங்களை ஆரம்பத்திலிருந்தே தவிர்த்து வந்திருக்கிறேன்.

திரைக்கதை அமைப்பில் ஆரம்பத்திலிருந்தே வித்தியாசம் காட்டி வரும் நீங்கள், உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று எப்போதாவது நினைத்ததுண்டா?

சில கதைகளை எடுத்துக் கொண்டு – இதை ஜனங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதை digest பண்ண முடியவில்லை என்று வரும்போது இதுமாதிரி heavy subject ஐ நாம எடுக்க வேண்டுமா என்று யோசித்ததுண்டு. திரைக்கதை அமைப்பைப் பொறுத்தவரை பாணி என்று எதுவும் கிடையாது. எந்தக் கதைக்கு எப்படிப்பட்ட பாணி வேண்டும் என்பதுதான் முக்கியம் என்று நம்புகிறவன் நான். படவெற்றிக்கு திரைக்கதை அமைப்பு முக்கியம் என்று உணர்ந்திருப்பதால் அது வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். இந்த வித்தியாசத்திற்கு சில கதைகள் தான் இடம் கொடுக்கும் என்பது கொஞ்சம் handicap ஆக இருக்கும் விஷயம்.

டி.வி.யிலும் ஒரு புயலைக் கிளப்பினீர்கள். ஏன் தொடரவில்லை?

டி.வி. ஒரு exciting medium தான். டி.வி.க்காக programme பண்ணும்போது நாம கையைச் சுட்டுக்காம experimental ஆக சில subject ஐ பண்ணுகிற வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் ரெண்டு விஷயத்தினால டி.வி. கஷ்டமா இருக்கு. ஒன்று டி.வி. சட்ட திட்டங்களுக்குக் கை கட்டி நிற்க வேண்டிய சூழ்நிலை. ரெண்டு அவங்க பட்ஜெட்டுக்குள்ள எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம். அதே நேரத்தில் சினிமா எடுத்துப் பழக்கப்பட்டுப் போன நமக்கு அந்த பட்ஜெட்டுக்குள்ள எடுத்துப் பழக்கப்படாதது கொஞ்சம் சிரமமா இருக்கு. அதனால அவங்க பட்ஜெட்டுக்குள் restrict பண்ணி எடுத்தா நமக்கு இருக்கிற expectation க்கு எதிரிடையான result ஐ ஆறுமாதம் கழித்துத்தான் உணர முடியுது. ஆனால் டிவி.யில நம்ம Creative Project ன் result ஐ ஒரு பதினைந்து நாளுக்குள்ளேயே தெரிஞ்சுக்க முடியுது. அது ஒரு சந்தோஷம். Ecstasy அதனால் இந்த டி.வி. மீடியத்தைத் தொடரணும்னு ஆசைதான். பார்க்கலாம். அதற்கேற்றபடி திரையுலகத்திலிருந்து நேரம் கிடைக்கிற போதுதான் அது நிறைவேறும். சன் டி.வி. ஆரம்பிச்ச புதிதில் அவங்களுக்காக பாலசந்தரின் சின்னதிரைன்னு 13 அரைமணி நேர Programme கொடுத்திருந்தேன். அதை 13 எபிசோடா எட்டு கதைகளை வைத்துப் பண்ணிக் கொடுத்தேன். அதைப் பண்ணும் போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. நல்ல கதை. நல்ல Project ஆனால் அந்த பட்ஜெட்டுக்குள்ளே அதை Contain பண்ண முடியாமல் – படத்திலிருந்துதான் கையைச் சுட்டுக்கிட்டேன். நான் ஒப்புக் கொண்ட தொகைக்கு மேல் செலவாய்ட்டுதுன்னு டிவிகாரங்ககிட்டே கேட்க முடியாத நிலையில் ஓசைப்படாம நஷ்டத்தை நான் ஏத்துக்கிட்டேன்.

ஆரம்பத்தில் குமார், அப்புறம் எம்.எஸ்.விஸ்வநாதன், எனத் தொடர்ந்த நீங்கள் இசையமைப்பாளர்கள் விஷயத்தில் இப்போது அடிக்கடி மாற்றம் செய்கிறீர்களே ஏன்?

இசை அமைப்பாளர் என்பது திரைப்படத்தைப் பொறுத்தவரை இன்னொரு Technician. எத்தனையோ நடிகர் – நடிகர்களை வைத்துப் படம் எடுக்கிறோம். கமலை வைத்து எடுக்கிறோம். ரஜினியை வைத்து எடுக்கிறோம். அதேமாதிரி இன்னொரு இசையமைப்பாளரை வைத்துப் படமெடுக்கும்போது – அடுத்த படம் வரும்போது இன்னொரு இசையமைப்பாளரை வைத்துப் படமெடுக்கலாம்னு நினைக்க ஒரு இயக்குநருக்கோ – தயாரிப்பாளருக்கோ உரிமை இருக்கு. அதுமட்டுமல்ல இந்த subject க்கு இந்த மியூசிக் டைரக்டர் இசை அமைச்சா நல்லா வரும்னு தோணும். இல்லையா? சிலபேருடன் rapport ஜாஸ்தி இருக்கிறதால் அவருடன் தொடர்ந்து செய்யலாம். ஆனாலும் subject மாறும்போது அதுக்கேத்த மியூசிக் டைரக்டரை வைத்து பண்ணுவதில் என்ன தவறு? அதுமட்டுமல்ல ஒரு டைரக்டருக்கு கேரமாமேன் தான் ரொம்ப முக்கியம். Because the director sees the entire subject through the cameraman. அதனால் கேரமாமேனுக்கும் டைரக்டருக்கும் உள்ள rapport முக்கியம். டைரக்டர் என்ன நினைக்கிறார் என்பது கேமராமேனுக்குத் தெரியணும். ஒரு கேமராமேன் எப்படியெல்லாம் அதைப் பண்ண முடியும்னு அந்த டைரக்டருக்குத் தெரிஞ்சிருக்கணும். ஆனால் இசையைப் பொறுத்தவரை இந்த subject க்கு இவர் வேணும்னு நினைக்கிற உரிமை டைரக்டருக்கு உண்டு. அந்த முறையில் தான் நான் பல மியூசிக் டைரக்டர்களிடமெல்லாம் ஓர்க் பண்ணியிருக்கேன். இதற்கு உள் நோக்கமெல்லாம் கற்பிச்சால் அதற்கு நான் பொறுப்பில்லை.

என் ஆரம்ப காலத்தில் குமார் இசையமைக்கிறார். அதை அடுத்து எம்.எஸ்.வி. என் நிறைய படங்களுக்கு பண்ணியிருக்கிறார் எம்.எஸ்.வி.யை வைத்து நிறைய success கொடுத்திருக்கிறேன். அதேமாதிரி இளையராஜா. என் படங்களில் இளையராஜாவின் பங்கும் இளையராஜாவின் இசையில் என் படங்களின் பங்கெல்லாம்… உங்களுக்கு தெரிந்தவைதான். இப்ப ரஹ்மான்கறவரை அறிமுகப்படுத்துற வாய்ப்பு மணிரத்னம் மூலம் ரோஜா படத்தில் கிடைச்சது. நான் அறிமுகப்படுத்திய வாய்ப்பு இன்று எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது என்பதை நான் சொல்லவே வேண்டாம். இன்று தமிழர்களால் பேசப்படும் இசையமைப்பாளரா ரஹ்மான் இருக்கிறார். சப்ஜெட்டுக்குத் தகுந்த மாதிரி எந்த டைரக்டருக்கும் மியூசிக் டைரக்டரை மாற்றிக் கொள்கிற உரிமை உண்டு என்பதுதான் என் கருத்து.

நாகேஷின் பல முகங்களைக் காட்டியவர் நீங்கள், நகைச்சுவை நடிகர்களான செந்தில், கவுண்டமணியை மட்டும் இன்னமும் பிடிவாதமாக பயன்படுத்தாமல் இருக்கிறீர்களே ஏன்?

ஐயா… நீங்களே இப்படி கேள்வி கேட்கிறீர்கள். கொஞ்ச நேரத்திற்கு முன் பாலசந்தர் படத்தில் நட்சத்திரங்கள் இருந்ததில்லை. இப்போது நட்சத்திர துணை தேடுவது ஏன்னு கேள்வி கேட்டதும் நீங்கள்தான். நடிகரோ நடிகையோ யார் எப்படிப்பட்ட படத்திற்கு தேவை என்று தீர்மானிப்பது உங்களுடைய உரிமையோ என்னுடைய உரிமையோ அல்ல… ஒரு கதை அந்தக் கதையில் அமைகிற கேரக்டருக்குப் பொருத்தமாக யாரைப் போடலாம் என்று தான் பார்க்கவேண்டும். அதனால் இந்தக் கேள்வியே mischievous ஆ தெரிகிறது. கவுண்டமணி, செந்திலுக்கும் எனக்கும் எந்தவித தகராறும் கிடையாது. அவங்க மேலே எனக்கு நல்ல respect உண்டு. அதேமாதிரி அவங்களுக்கும் என் மேல respect உண்டு. ஆனால் இந்தக் கேள்வியில் பாதி பகுதி rediment ஆகிப் போவுது. ஏன்னா செந்தில் அவர்கள் என் டூயட் படத்தில் நடிக்கிறார்.

நாகேஷை யார் கூடவும் இப்படி compare பண்ணக்கூடாது. ஏன்னா நாகேஷ் கூடவே வளர்ந்தவன் நான். என் கூடவே வளர்ந்தவன் நாகேஷ். நான் பலமுறை சொல்லியிருக்கேன். நாகேஷ் என் வழியா think பண்றவன். நான் நாகேஷ் வழியா act பண்றேன்னு. அப்படிப்பட்ட முறையில் நாகேஷுக்கும் எனக்கும் மேடை நாடகத்திலிருந்து நல்ல rapport இருந்தால் அவருடைய பல பரிமாணங்களை திரைப்படத்தின் மூலம் காட்டும் வாய்ப்பு கிடைத்தது.

அன்று ‘எதிரொலி’யில் அப்பா இன்று ‘டூயட்’டில் மகன். என்ன சொல்கிறது generation gap ?

சின்னவனாக இருந்த என்னை பாலுன்னு அன்பா கூப்பிட்டு பணிபுரிந்த அந்த தந்தையின் பாணி. சார்னு பயங்கலந்த மரியாதையுடன் அழைத்துப் பணிபுரியும் மகன். இதுதான் என்னைப் பொறுத்தவரைக்கும் generation gap ஆ தோணுது. சிவாஜி சார்கிட்டே…. வசனத்தோட modulation ஐ சொல்லிக் கொடுக்கவே எனக்கு பயமா இருக்கும். ஒரே ஒருமுறை வசனத்தைப் படித்துக் காட்டுவேன். அவ்வளவுதான். ஆனா மகன் கூட work பண்ணும் போது எந்தவித பயமோ கூச்சமோ இல்லைன்னாலும் எப்படி வசனத்தைச் சொல்லணும்னு ஒருமுறைக்கு இரண்டு முறை படிச்சுக் காட்டுவேன். அன்னைக்கு எந்த விதத்திலும் சிவாஜி சார் குறுக்கிட்டதோ தலையிட்டதோ இல்லைன்னாலும் இப்படி பண்ணினால் நல்லா இருக்கும் பாலுன்னு என்கிட்டே உரிமையோடு சொல்வார். இப்படி பண்ணினா நல்லா இருக்கும்னு மகன்கிட்டே நான் சொல்ற உரிமையும் அனுபவமும் வயதும் எனக்கு இருக்கு. என் படத்தில் என் இயக்கத்தில் நடிக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டிருக்கிறார் பிரபு. அவரை வைத்துப் படம் பண்ணணும்னு எனக்கும் உள்ளூர ஆசை இருந்தது. எங்க இருவருடைய ஆசைக்கும் ஒரு வடிகால் தான் ‘டூயட்’.

நாடகத்துறையில் தாங்கள் காட்டிய புதுமையை மறந்து விட முடியாது. நலிந்து கிடக்கும் அந்தந்தத் துறைக்கு புதிய ஊக்கம் கொடுக்கும் எண்ணம் உண்டா?

எப்போதாவது ஒரு நாடகத்தைப் பார்க்கும்போது… அடடா நாடகத்தை விட்டு வந்துட்டோமே. திருப்பியும் எப்போ நாடகத்தை எழுதப் போறோம்… திரும்பியும் எப்போ மேடையேற்றப் போறோம்னு தோணும். ஆனால் வீட்டுக்கு வந்தவுடன் நம்ம தொழில், நம்முடைய சினிமா, நம்முடைய responsibilities என்னைப் பற்றிய expectations என்னை நம்பியிருப்போருக்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் இதெல்லாம் வந்துவிடுவதால் நாடகத்தை எழுதணும்கிற ஆசை உள்ளுக்குள்ள மறைஞ்சு கிடந்தாலும் அதைச் செயல்படுத்துகிற opportunity இல்லாமல் போய் விடுகிறது. நிச்சயமாக கொஞ்சம் பெரிய ஓய்வு கிடைக்கிறபோது ஒரு நல்ல நாடகத்தை தயார் பண்ணணும். அதற்கான நேரங்காலம் அமைகிறபோது நிச்சயமா நான் செய்தே தீருவேன்.

எந்த நட்சத்திரத்தையாவது மனதில் வைத்துக் கதை எழுதியிருக்கிறீர்களா?

இந்தக் கேள்விக்கு பதில் முன்பே சொல்லியிருக்கிறேன். உதாரணமா ‘மரோசரித்ரா’ படம் எடுத்தபோது கமல்ஹாசனை முதன்முதலா தெலுங்கில அறிமுகப்படுத்தணும்னு நினைச்சேன். அறிமுகப்படுத்த நினைத்தபோது தெலுங்குப் படங்கள் தயாரிச்சுக்கிட்டிருந்த அரங்கண்ணல் கிட்டே சொன்னேன். கமலஹாசன் நல்ல Performing Artist அவரை தமிழில் அறிமுகப்படுத்தின மாதிரி தெலுங்கிலேயும் பண்ணணும் சொன்னபோது, அந்த வாய்ப்பு வந்தது. அப்போ கமலஹாசனுக்காகத்தான் கதை பண்ண வேண்டியிருந்தது. கமலஹாசன் எப்படிப்பட்டவர் எப்படிப்பட்ட கலைஞன். நல்ல டான்சர், நல்ல நடிகன், நல்ல திறமைசாலி, புத்திசாலி இத்தனையும் மனசிலே வைத்து எழுதியதால்தான் அந்தப் படம் சக்சஸ் ஆச்சு.

‘டூயட்’டில அறிவிக்கப்பட்ட குஷ்பூவுக்கு பதில் மீனாட்சி சேஷாத்ரி, ‘அண்ணாமலை’யில் வசந்துக்குப் பதில் சுரேஷ் கிருஷ்ணா… ஏன் இந்த ஷாக் ட்ரீட்மெண்ட்?

இதுல ஷாக் ட்ரீட்மெண்ட்டும் இல்லை. ஒரு புண்ணாக்குமில்லை. நீங்க பத்திரிகையாசிரியரா இருக்கிறதலா நீங்களா புதுப்புது வார்த்தைகளை create பண்ணிக்கிறீங்க. அதாவது சில சில மாற்றங்களை தவிர்க்க முடியாது. ஒரு படத்தில் யாரைப் போடலாம்கறது பேச்சுவார்த்தை நிலையில் இருக்கிறபோதே பத்திரிகையில் பிரபலமாகி விடுவது உண்மை. அதற்குப் பிறகு யாரைப் போடுவது என்று முடிவு செய்கிறோம். பேசிக்கொண்டே இருக்கும்போது பத்திரிகைகளில் வரும் செய்திகளுக்கு நான் பொறுப்பாக முடியாது. காலத்தின் கட்டாயத்தால் மாற்றிக்கொள்ள நேரும்போது அது Compromise ஆகிவிட முடியாது.

vasudevan31355
18th August 2014, 02:38 PM
அருமை கிருஷ்ணா சார்! பொறுமையாகப் படிக்க வேண்டும்.

vasudevan31355
18th August 2014, 02:44 PM
இன்றைய ஸ்பெஷல் (55)

'இன்றைய ஸ்பெஷலி'ல் மெய் சிலிர்க்க வைக்கும் ஒரு பாடல்.

http://cdn4.static.ovimg.com/m/0zb0wmc/?width=150

1955-இல் வெளிவந்த 'மஹேஸ்வரி' திரைப்படத்தில் இருந்து திரு 'பட்டுக் கோட்டை' கல்யாண சுந்தரம் அவர்களின் அருமையான பாடல். இசை ஜி.ராமநாதன் அவர்கள். பாடியவர்கள் ஏ.எம்.ராஜாவும் ஜிக்கியும். இவர்களுடன் இணைந்து அற்புதமான ஆண், பெண் கோரஸ்.

சாவித்திரி தன் குழுவினருடன் தேவி அன்னையிடம் தம் குலம் தழைக்க வேண்டி பாடும் பாடல். பாடலினூடேயே இணைந்து வரும் கோரஸ் அமர்க்களம்.

ஜெமினி இப்படத்தின் நாயகன்.

அறம் காத்த தேவியே
குலம் காத்த தேவியே
அறம் காத்த தேவியே
குலம் காத்த தேவியே
நல் அறிவில் உருவமான ஜோதியே
கண் பார்த்தருள்வாயே அன்னையே

அறம் காத்த தேவியே
குலம் காத்த தேவியே
நல் அறிவில் உருவமான ஜோதியே
கண் பார்த்தருள்வாயே அன்னையே
அன்னையே

ஏ மாதா
என் தாயே
உன் பாதம் நம்பினேன் அம்மா
ஏ மாதா
என் தாயே
உன் பாதம் நம்பினேன் அம்மா
சத்தியமே லட்சியமாய் சேவை செய்யவே
பராசக்தியே நீயும் வரம் தா
பராசக்தியே நீயும் வரம் தா

சத்தியமே லட்சியமாய் சேவை செய்யவே
பரா சக்தியே நீயும் வரம் தா

துன்பமில்லாமல் எல்லாரும் மனம்
துன்பமில்லாமல் எல்லாரும் மனம்
ஒன்றுகூடி இன்பம் கொண்டாடும் தினம்
ஒன்றுகூடி இன்பம் கொண்டாடும் தினம்

நம் மனதில் உறுதியாகவே
மலிந்த கொடுமை நீக்கவே
இம் மனித வாழ்வில் உயர்வு காணவே
நீ வாழ்த்திடுவாயே தேவியே
தேவியே

நம் மனதில் உறுதியாகவே
மலிந்த கொடுமை நீக்கவே
இம் மனித வாழ்வில் உயர்வு காணவே
நீ வாழ்த்திடுவாயே தேவியே
தேவியே

ஏ பவானி
லோக மாதா
ஏழைகளின் வாழ்வில் சுகம் தா
ஏ பவானி
லோக மாதா
ஏழைகளின் வாழ்வில் சுகம் தா
சத்தியமே லட்சியமாய் சேவை செய்யவே
பராசக்தியே நீயும் வரம் தா
பராசக்தியே நீயும் வரம் தா

சத்தியமே லட்சியமாய் சேவை செய்யவே
பரா சக்தியே நீயும் வரம் தா

(கோரஸ்)

சத்தியமே
சத்தியமே
சத்தியமே
சத்தியமே


https://www.youtube.com/watch?v=yzPpCA9PkTg&feature=player_detailpage

chinnakkannan
18th August 2014, 02:52 PM
ஆதெள கீர்த்தனாரம்பத்திலே..

ம்ம் வெளியில் அவ்வளவா வெயில் இல்லை..இருப்பினும் சூடு..உள்ளே உணவருந்தும் மதிய நேரம்..அதனால என்னன்னாக்க.. நான் சந்திரனை நினச்சேன்..:) யூ நோ..இந்த நிலா இருக்கே நிலான்னு சொன்னா தான் நிலாவாம்.. நிலாவை மதின்னும் சொல்லலாம்..ஆனா நிலவுன்னு சொல்லப் படாதாம் (குழப்பறேனா. இருக்கலாம்..இன்னும் லஞ்ச் சாப்பிடலை)..

நிலவு என்றால் மதியில் இருந்து வருகின்ற கிரணங்கள் .. நிலாவெளிச்சம்னு சிம்ப்பிளா புரிஞ்சுக்கலாம்.. நிலவைப் பார்த்து வானம் சொன்னதுன்னு எழுதியிருக்காங்கள்ளன்னு கேக்கப் படாது.. நிலவு என மதியையும், சந்திரனையும் சொல்லும் வழக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது..

அதே பொல்லாத குறும்புக்கார க் கவிஞர் இன்னொரு பாட்டுல என்ன எழுதியிருக்கார்..

ஆடை இதுவென நிலவினை எடுக்கும், ஆனந்த மயக்கம்!
’அம்மா குளிர்!’ என ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம்,
காலை நேரத்தில் காயங்கள் பார்த்து, களிப்பதென்பதே கவிதையின் விளக்கம்!
கவிஞர் சொன்னது கொஞ்சம், இனிமேல் காணப்போவது மஞ்சம்!

படத்தோட காட்சியை விடுங்க.. ஆக்சுவலா என்னன்னாக்க..

கல்யாணம் ஆச்சு..அப்புறம்..என்ன ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கணுமே.. எல்லா விதத்துலயும்.. ஸோ அந்த ஜோடி என்ன பண்ணுதுன்னா டார்ஜிலீங்க் போறா (பட ஜோடி யில்லை ஓய்)..ஒரு புதுசாக் கல்யாணம் ஆன ஜோடி தேன் நிலவுக்குத் தான்....

நிலா வெளிச்சம்..மெலிசா சாரல் அடிக்கும் மழையோடக் கொஞ்சம் குளிர் காத்தும் வேற..பகக்த்துலயோ
பக்பக்னு துடிக்கிற இதயத்தோட படக் படக்குனு அடிச்சுக்கற இமையோட அப்புறம் என்னவெல்லாமோட காத்து இருக்கற புது மங்கை..சுருங்கச் சொன்னா..இருள் மழை இனிமை தனிமை!

என்ன ஆச்சு அவனும் நிறையக் கேக்கறான்.. அவளும் நிறையக் கொடுக்கறாள்..

பின்ன தூக்கமும் வருது.. தூங்கிடறாங்க..

நடு ராத்திரில்ல செல்லக் கண்ணம்மாவிற்கு உறக்கம் கலையுது கொஞ்சம் குளிரவும் செய்யுது..டபக்குன்னு பார்த்தா..பக்கத்தில புருஷன்..வெக்கங்கெட்ட ஜென்மம் நு மனசுக்குள்ள திட்டிட்டுத் தன்னை த் தானே பார்க்கறா..

அச்சோ..நம்மக் கிட்டயும் ட்ரஸ் காணோமே..ன்னு கொஞ்சம் தேடி சரி சரி இந்த வெள்ளை பெட்ஷீட்டயாவது எடுத்துப் போர்த்திக்கலாம்னு எடுத்தா..ம்ஹீம் வரலை.. மறுபடி ட்ரைபண்ணாலும் வரவேயில்லையே..

வருமா என்ன..அவ எடுக்க ட்ரைபண்ணினது.. நிலவு..அதாவது படுக்கையறை ஜன்னலூடேவந்த வெண்ணிற நிலா வெளிச்சம்..பின்ன தான் மயக்கத்துலருந்துகொஞ்சம் தெளிஞ்சா ரியலைஸ் பண்றா..

இது தான் ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்தமயக்கம்..ங்கறார் கவிஞர்..

வாடையில் தென்றலதும் வாட்டியதால் பெண்ணவளும்
ஆடை எடுத்த அழகு

அப்படின்னு ஆன்றோர்கள் (!) சொல்லியிருக்காங்க..

இனிப் பாட்டு.. கடோசில ஒருவிஷயம் சொல்லுதேன்..

*
இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை?
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கு உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்தக் கோலம்

இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை


பாதிக்கண்களை மூடித் திறந்து பார்ப்பதில் இன்பம்
பாதித் தூக்கத்தில் கூந்தலைத் தடவி ரசிப்பதில் இன்பம்

பாதிப் பாதியாய் இருவரும் மாறி
பழகும் வித்தையே பள்ளியில் இன்பம்
காலை என்பது துன்பம் இனிமேல்
மாலை ஒன்றுதான் இன்பம்


இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை ஆ..

ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம் ஆ..

காலை நேரத்தில் காயங்கள் பார்த்து
களிப்பதென்பது கவிதையின் விளக்கம்
கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல்
காணப் போவது மஞ்சம்

**
ஆக்சுவலா நிலாவப் பத்தி சொல்ல நெனச்ச பாட்டு வேறயாக்கும்..இந்தப்பாட்டு தான்ன்னு நான் சொன்னா நீங்க நம்பணும்..

ஏ.எம்.ராஜா..சுசிலாம்மா..அமர தீபம் :)

*
தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு
திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சொல்லுவாய்

வீணை இன்பநாதம் எழுந்திடும் விநோதம்
விரலாடும் விதம் போலவே
காற்றினிலே தென்றல் காற்றினிலே
காற்றினிலே சலசலக்கும் பூங்கொடியே கேளாய்
புதுமை இதில் தான் என்னவோ?

மீன் நிலவும் வானில் வெண்மதியைக் கண்டு
ஏனலைகள் ஆடுவதும் ஆனந்தம் கொண்டு
மென்காற்றே நீ சொல்லுவாய்

கானமயில் நின்று வான்முகிலைக் கண்டு
களித்தாடும் விதம் போலவே..
கலையிதுவே வாழ்வின் கலையிதுவே
கலையிதுவே சலசலெனும் மெல்லிய பூங்காற்றே
காணாததுமேன் வாழ்விலே

கண்ணோடு கண்கள் பேசிய பின்னாலே
காதலின்பம் அறியாமல் வாழ்வதும் ஏனோ?
கலைமதியே நீ சொல்லுவாய் ஒஓஓஓ
கலைமதியே நீ சொல்லுவாய்

**

நல்ல பாட்டு தானே.. நான் அமரதீபம் பார்த்ததிலலையாக்கும்..

பின்ன வரட்டா :)

அருள்வாய் குகனே :)

அன்புடன்
சி.க

mr_karthik
18th August 2014, 02:57 PM
.திருக்குறளும் ,சங்கங்களும் தோன்றிய அறிவு பூமியில், திருடாதே,பொய் சொல்லாதே,தூங்காதே என்று சொல்வதற்கே ,ஒரு நாயகர் தேவை பட்ட புண்ணிய பூமியில் அவதரித்த அதிர்ஷ்டம் செய்தவர்கள் நாம்.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி சேனலில் பார்த்தது (யாரோ சொன்னது அல்ல, நானே பார்த்தது). ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா. அப்படத்தில் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் மயில்சாமி, அப்படத்தில் வடநாட்டில் அவுட்டோரில் தனக்கு நேர்ந்த சம்பவம் பற்றி மேடையில் கூறினார்.

"இரவு துவங்கும் நேரத்தில் காரில் ஏறினேன். கார்க்காரன் போறான் போறான் போய்க்கிட்டே இருக்கான். நான் "போடுறேன்.. போடுறேன்... போட்டுக்கிட்டே" இருக்கேன். சரக்கும் தீர்ந்து போச்சு. ஆனால் போகவேண்டிய இடம் வந்தபாடில்லை. கடைசியில் விடியற்காலையில் ஸ்பாட்டில் கொண்டுபோய் இறக்கிவிட்டான்"

இதுதான் அவர் பேசியது.

மயில்சாமி 'யாருடைய' ரசிகர், 'எந்த நடிகருடைய' பக்தர், எந்த 'நடிகரின்' படத்தைத்தவிர வேறு யார் படத்தையும் நான் பார்ப்பதில்லை என்று மார்தட்டிக் கொள்பவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்புறம் என்ன அவர் தலைவரின் படத்தைப்பார்த்து திருந்தினார்?. இது பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்தான்.

gkrishna
18th August 2014, 03:00 PM
அன்பு ck சார்

கண்ணதாசன் கூட இந்த விளக்கத்தை நினைத்து இந்த பாடலை எழுதினாரா தெரியவில்லை .உங்கள் விளக்கம் அருமை
அந்த 'கவிஞர் சொன்னது கொஞ்சம் ' பாடும் போது பாடகர் திலகம்
கொஞ்சம் பாலா (SPB ) மாதிரி குழைய முயற்சி செய்வார் பாருங்க

Gopal.s
18th August 2014, 03:01 PM
Thanks krishnaji for wonderful interview of Balachandar. My Idol.

gkrishna
18th August 2014, 03:02 PM
நகைச்சுவை நடிகர் மயில்சாமி, வடநாட்டில் அவுட்டோரில் தனக்கு நேர்ந்த சம்பவம் பற்றி மேடையில் கூறினார்.

"இரவு துவங்கும் நேரத்தில் காரில் ஏறினேன். கார்க்காரன் போறான் போறான் போய்க்கிட்டே இருக்கான். நான் "போடுறேன்.. போடுறேன்... போட்டுக்கிட்டே" இருக்கேன். சரக்கும் தீர்ந்து போச்சு. ஆனால் போகவேண்டிய இடம் வந்தபாடில்லை. கடைசியில் விடியற்காலையில் ஸ்பாட்டில் கொண்டுபோய் இறக்கிவிட்டான்"

இதுதான் அவர் பேசியது.

மயில்சாமி 'யாருடைய' ரசிகர், 'எந்த நடிகருடைய' பக்தர், எந்த 'நடிகரின்' படத்தைத்தவிர வேறு யார் படத்தையும் நான் பார்ப்பதில்லை என்று மார்தட்டிக் கொள்பவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்புறம் என்ன அவர் தலைவரின் படத்தைப்பார்த்து திருந்தினார்?. இது பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்தான்.

அருமையான தகவல் கார்த்திக் சார் அனுபவம் பேசுகிறது

gkrishna
18th August 2014, 03:03 PM
கிள்ளி பார்த்து கொண்டேன் . கனவல்ல நிஜம்

gkrishna
18th August 2014, 03:11 PM
வாசு சார்

இந்த பாட்டை எங்கே இருந்து பிடிக்கிறீர்கள் ? அப்பப்ப சின்ன கண்ணன் ,மது,ராஜேஷ் கூட இந்த மாதிரி எடுத்து விடறார். ராகவேந்தர் கேட்க வேண்டாம் . அது (செல்லமா:)) நான் ஸ்டாப் பூபாளம் நமக்கு தான் இந்த வித்தை கை கூட வில்லை .எவ்வளவோ சொல்லி கொடுக்கறீங்க half,full,quarter,cutting
(உஷ் கார்த்தி சார் இருக்கார் பார்த்து பேசணும் ) ! :)

இதை கொஞ்சம் கத்து தர கூடாதா ? :mrgreen:

really வெரி rare சாங் சார்

உங்களுக்கு பிரைவேட் மெசேஜ் அனுப்ப முயற்சி செய்தேன் .got the following error message

The following errors occurred with your submission
vasudevan31355 has exceeded their stored private messages quota and cannot accept further messages until they clear some space.

madhu
18th August 2014, 03:20 PM
ஆக்சுவலா நிலாவப் பத்தி சொல்ல நெனச்ச பாட்டு வேறயாக்கும்..இந்தப்பாட்டு தான்ன்னு நான் சொன்னா நீங்க நம்பணும்..
ஏ.எம்.ராஜா..ஜிக்கி..அமர தீபம் :)


அது ஜிக்கி இல்லீங்க... நம்ம சுசீலாம்மாவாக்கும்..

http://youtu.be/AhGgNSX545E

madhu
18th August 2014, 03:22 PM
மஹேஸ்வரி படத்தில் இடம் பெற்ற "அறம் காத்த தேவியே" பாடலின் வீடியோ 4.16லிருந்து பாருங்க..

போனஸா இன்னும் மூன்று பட்டுக்கோட்டையார் பாடல்களும் இருக்குந்துங்கோ

http://youtu.be/NYyz4oFCVso

chinnakkannan
18th August 2014, 03:24 PM
நன்றி க்ருஷ்ணாஜி.. ம்.அது வெகு அழகான பாட்டு பாட்டு ஆரம்பிக்கறதும் தெரியாது முடியறதும் தெரியாது..அந்த உவமை கூடக் கொஞ்சம் கலிங்கத்துப் பரணிலருந்து கவிஞர் எடுத்திருப்பார்..

oh.. தமிழிசைல ஜிக்கின்னு போட்டிருந்தாங்க.. பாட்டு க் கேட்டும் நாளாச்சா சரின்னு போட்டுட்டேன்..ஸாரி.. இப்ப மாத்திடறேன் மதுண்ணா..

சொன்னாற்போல பாலச்சந்தர் பற்றி க்ருஷ்ணாஜி,இ.ஸ்பெஷல் வாசு ஜி போஸ்ட்களை மெல்லத்தான்படிக்கணும் கேக்கணும்..

gkrishna
18th August 2014, 03:25 PM
சி கே சார்

சமீபத்தில் விஷால் மற்றும் நடிகர் அர்ஜுன் புதல்வி iswarya நடித்த பட்டத்து யானை (இதற்கு ஒரு வரி விமர்சனம் 'பரிதாப பூனை') படத்தில் இந்த 'இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை ' பாடலை அப்படியே நகல் எடுத்து இருந்தார்கள்

madhu
18th August 2014, 03:29 PM
சிக்கா...

இதோ இப்போதே பாட்டு.. இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை ?

morning and evening மட்டும் போதுமா ?

http://youtu.be/BU-D2Vi2d2M

chinnakkannan
18th August 2014, 03:29 PM
ஓ..நான் பார்த்ததில்லையே..எப்படி இருந்தது க்ருஷ்ணா ஜி..

சமீபத்தில் படத்தில் வராத அழகான பாடலான புத்தம் புதுக் காலையும் இன்னொரு படத்தில் எடுக்கிறார்கள் எனக் கேள்விப் பட்டேன்

chinnakkannan
18th August 2014, 03:30 PM
போதும் போதும்..ஈவ்னிங்க் நிறைய வேலையிருக்கு தாங்க்ஸ் மதுண்ணா :)

madhu
18th August 2014, 03:31 PM
krishnaji, vasuji, gopalji, esveeji ellorum niraiya share senjirukkeenga.
padikkathan neram podhavillai.

vikramadhithan pola marupadi aarambathil irundhu start seyya vendi irukkudhappa !!

chikka.. neenga eppadi chikkaamal padichudareenga ? ( aapeez-la velaiye illaiya ?)

vasudevan31355
18th August 2014, 03:33 PM
மஹேஸ்வரி படத்தில் இடம் பெற்ற "அறம் காத்த தேவியே" பாடலின் வீடியோ 4.16லிருந்து பாருங்க..



வரும்...வீடியோ வரும்...மது அண்ணா கிட்டே இருந்து வரும் அப்படின்னு தெரியும். அதுக்குதான் இம்மாம் நேரம் வெயிட் செஞ்சேன். டிவியில ரெகார்ட் பண்ணி வச்சு இருக்கேன். தேடி எடுக்க சோம்பேறித்தனம். இப்ப சந்தோஷமா ஒரிஜினலைப் பார்ப்பேன்.

தேங்க்ஸ் மது அண்ணா. எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்னு.

chinnakkannan
18th August 2014, 03:34 PM
போனவாரம்கொஞ்ச்ம் ஃப்ரீ..அப்படியும் வீட் போய் தான் படிப்பேன். இந்த வாரம் கொஞ்சம் வேலை ஜாஸ்தி..மீட்டிங்க்ஸும்..அப்பப்ப சந்துல சிந்து பாடறது தானே மதுண்ணா :)

கிள்ளி பார்த்து கொண்டேன் . கனவல்ல நிஜம்// இது எதற்கு க்ருஷ்ணா ஜி.. 50வது பக்கத்துக்கா?

Richardsof
18th August 2014, 03:49 PM
'' MAHESWARI'' EFFECT. TO DAY'S EVENING ATTRACTION .PL ENJOY. NEVER BEFORE.

http://i59.tinypic.com/dw4bjt.jpghttp://i59.tinypic.com/zuplom.jpg

gkrishna
18th August 2014, 03:50 PM
ஓ..நான் பார்த்ததில்லையே..எப்படி இருந்தது க்ருஷ்ணா ஜி..

சமீபத்தில் படத்தில் வராத அழகான பாடலான புத்தம் புதுக் காலையும் இன்னொரு படத்தில் எடுக்கிறார்கள் எனக் கேள்விப் பட்டேன்

பட்டத்து யானை பாட்டு சோ சோ தான்
புத்தும் புது காலை - மேகா னு ஒரு புது படம் இந்த படத்திற்கு இளையராஜா இசை .இந்த படத்தில் தான் இந்த பாடலை உபயோகபடுத்தி இருக்கிறார்கள் .

Richardsof
18th August 2014, 03:51 PM
http://i60.tinypic.com/nozq0k.jpg
http://i58.tinypic.com/8yv0ih.jpg

Richardsof
18th August 2014, 03:55 PM
http://i57.tinypic.com/154ktba.jpg

Richardsof
18th August 2014, 03:57 PM
http://i57.tinypic.com/2iqki.jpg

gkrishna
18th August 2014, 03:58 PM
எஸ்வி சார்
அசத்தலான நடிகையர் திலகம் நிழல் படங்கள் ஒவ்வொன்றும் அருமை
தொடருங்கள் உங்கள் பங்களிப்பை

Richardsof
18th August 2014, 03:59 PM
http://i61.tinypic.com/15ejvp5.jpg

Richardsof
18th August 2014, 04:05 PM
MY FAVORITE SONG

http://youtu.be/aHubhMgHs8o

Richardsof
18th August 2014, 04:18 PM
[QUOTE=esvee;1157491]MY FAVORITE SONG

http://youtu.be/wQ6AvkrcCkU

Gopal.s
18th August 2014, 04:54 PM
Kaaviyathalaivan

By A.R .Rahman.(Dilip)


Kaaviya Thalaivan which stars Siddharth, Prithiviraj, Vedika, Thambi Ramaiah marks the debut collaboration of Vasanthabalan and AR.Rahman and if promos are any indications, the composer is all set to have taken us a trip back to the late 50's-60's.Has he? Let us find out.


vaanga makka


Singers-Hariharan,Dr.Narayanan.


Lyrics: Na.Muthukumar

Here's the first invitation! Vaanga Makka Vaanga in all ways is likely to be the title track of the movie (or for a drama within the movie) Almost all the commonly used stage instruments like veena, tabla, mridhangam, nathaswaram are used in this number and the lyrics by Na.Muthukumar deserves a mention. This track indeed has a relatable factor that connects with the typical stage songs.


Aye Mr.Minor
Singers: Haricharan, Shashaa Tirupati



Lyrics: Pa.Vijay

The first sighting of Jazz! Aye Mr.Minor is a typical nostalgic throwback to the romantic duets of the 60’s with the instrumentation taking a back seat paving way for the singers to take control. The lyrics are easy on the ears and the usage of conga is noticeable. The way the interludes have been done akin to the yesteryear era is a nice ode. Hello Mr.Edhirkatchi 2.0!


Yaarumilla



Singers: Shwetha Mohan, Srinivas



Lyrics: Pa.Vijay

The album's best track is here! Yaarumilla is an earthy, warm melody set to the instrumentation of neatly arranged table, flute and harmoniums. Shwetha Mohan does a commendable job with the rendition while Srinivas chips in with the humming portions. The lyrics do sound odd at the first instance but later we get to know that it is actually a letter being sung to the tune. Perfecto!


Sandi Kuthirai



Singers: Haricharan



Lyrics: Pa.Vijay

Straight out of vintage Nagesh type tracks! Sandi Kuthirai’ is a peppy, 60's type dance number right along the lines of Viswanathan Velai Vendum & Anubavi Raja Anubavi. The track simply oozes fun and the typical rock 'n' roll genre is brought back alive with some lively singing by Haricharan and by some jazz arrangements. Especially the xylophones!


Sollividu Sollividu



Singers: Mukeh



Lyrics: Pa.Vijay



This is a completely lyric dominated track which will not find many takers among modern listeners.Though the opening blow horns reminds us of the composer's recent album Kochadaiyaan, the song stands out with Pa.Vijay’s lyrics.The song shifts tone halfway through and the context of the song appears to have been placed in a Mahabharatha backdrop involving Arjuna & Krishna. Looking forward to the visuals now.


Thiruppugazh



Singers: Vaani Jayaram



Lyrics: Arunagirinathar



Vaani Jayaram is back! And how? With a soulful rendition of an excerpt from Thiruppugazh. This number is just a short, prayer song accompanied by mild instrumentations just around two minutes. And yeah, Vaani Jayaram is sounding just like as she did in her golden days!


Alli Arjuna



Singers: Bela Shende, Haricharan



Lyrics: Vaalee

The epic 8 parter! This track's runtime is a mind boggling 10:28 minutes encapsulating 8 short tracks.The initial Gettimelam (lil Ottagatha Kattiko ode here) begins with Vandhanam Vandhanam after which the song gets ready to unleash itself. Yaadhavanam is more of a lyric utterance show depicting Alli-Arjuna's love story. Alli Varugiral which follows next is relatively peppy and fun to sing along. The song shifts course for a sobered Priyasakhiye where the female voice by Bela Shende gets an introduction. Kanna Kanna has relatively colloquial lyrics and is pretty much on the lines of an Arjuna-Krishna interaction. Naan Annathooviyil is set in the similar backdrop as Idayam (from Kochadaiyaan). Gettimelam is back again - this time signaling a happy ending. Although the context is unknown, the finale of this epic –Nenju Porukkudhilaiye has Haricharan fittingly finishing the proceedings with an amazing rendition.




Kaaviya Thalaivan has AR. Rahman at his creative best! Amidst the array of modern composers, this creative genius stands tall and majestic with one more feather to his cap. Kaaviya Thalaivan may not be remembered as 'THE BEST' Rahman album but it ranks straight up there in terms of experimentation and delivery of a musical extravaganza that has class written all over it.


Verdict: Experimentation with class!



Rating: 4/5

gkrishna
18th August 2014, 05:10 PM
kaaviya thalaivan latest hit

super writing by gopal

thanks

gk

mr_karthik
18th August 2014, 05:12 PM
இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களின் பேட்டி மிகவும் அருமை. ஒவ்வொரு கேள்விக்கும் எவ்வளவு தெளிவாகவும், தீர்க்கமாகவும், விளக்கமாகவும் பதிலளித்துள்ளார்.

எந்த அளவுக்கு தெளிந்த சிந்தனையுள்ளவர் என்பது அவரது பதில்களிலேயே தெரிகிறது.

gkrishna
18th August 2014, 05:17 PM
நேற்று கை கொடுத்த தெய்வம் திரை படம் பார்த்து முடிந்த உடன் வெளியே எல்லோரும் பேசி கொண்டு இருந்த போது ஆத்ய பாடம் என்ற malaiyaala படத்தின் production executive ஆக பனி ஆற்றியவர் திரு முரளி சார் மற்றும் அங்கு குழுமி இருந்தோரிடமும் மிகவும் சகஜமாக பேசி கொண்டு இருந்தார் . தான் ஒரு நடிகர் திலகத்தின் ரசிகன் என்றும் இந்த திரை படம் பெரிய திரையில் பார்க்காத ஒன்று என்றும் அதை பெரிய திரையில் பார்க்க வேண்டும் என்பதற்காகவே வந்ததாகவும் தெரிவித்தார் . அப்போது இந்த ஆத்ய பாடம் என்ற திரை படம் அவர் முதலாளியின் முதல் திரை படம் 'ஆத்ய பாடம்' என்றும் கமல் ஸ்ரீதேவி கூட்டணி முன்னணியில் இருந்த போது எடுத்த படம் என்றும் குறிப்பிட்டார் . மேலும் கோலிலக்கம் திரை படத்தின் போது நடிகர் ஜெயன் எப்படி இறந்தார் என்பதை ஒரு 20 நிமிடங்கள் பகிர்ந்து கொண்டார் . ஒரு சோக சம்பவம் அது .

'ஆத்ய பாடம்' மிக பெரிய நட்சத்ர கூட்டம் நடித்து உள்ள படம்
கமல்,ஸ்ரீதேவி,ஷீலா,ஜெயன்,சுகுமாரி,ஜகதி ஸ்ரீகுமார் ,அடூர் பாசி,சங்கராடி,ஸ்ரீ லதா ,ராகவன்,,பிரதாப சந்திரன்
இசை AT உம்மர்
direction adoor baasi

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/f/f9/AadhyaPaadam.jpg/220px-AadhyaPaadam.jpg

ஒரு பாடல் கிடைத்தது . ஜேசுதாஸ் இன் இனிய குரல்

http://www.raaga.com/channels/malayalam/album/M0001615.html

madhu
18th August 2014, 05:50 PM
krishna ji..

Aadhya paadam படத்தில் நாலு பாடல்கள் இந்த பக்கத்தில்

http://www.malayalachalachithram.com/movie.php?i=728

madhu
18th August 2014, 05:55 PM
Gopal ji..

காவியத் தலைவன் பாட்டெல்லாம் பிரமாதம்..

Bela Shende இதற்கு முன் தமிழில் பாடி இருக்கிறாரா ?
பல வருடங்களுக்கு முன் மும்பையில் இருந்த சமயம் அவர் பாடி ஒரு டிவி சானலில் பரிசு வாங்கிய பாட்டு
இன்னமும் மனசுக்குள் கேட்குது.. நல்ல குரல் வளம்...

http://youtu.be/goGQ79GBII8

vasudevan31355
18th August 2014, 07:51 PM
Gopal ji..

Bela Shende இதற்கு முன் தமிழில் பாடி இருக்கிறாரா ?



http://www.indya101.com/gallery/Singers/Bela_Shende/2012/3/12/Bela_Shendejpg_mlrub_Indya101(dot)com.jpg

பாடி இருக்கிறார். படம் உதயம் NH4.


https://www.youtube.com/watch?v=gTrTgCuKneQ&feature=player_detailpage

Gopal.s
18th August 2014, 08:32 PM
kaaviya thalaivan latest hit

super writing by gopal

thanks

gk

It is not my own writing. It is a review given by a site.

rajeshkrv
18th August 2014, 08:48 PM
bela shinde . marati singer ..
she sang in jodha akbar , also in Ravan (kalvare i guess)

my favourite of hers is the laavni she sang in NAtrang..

https://www.youtube.com/watch?v=Vqq2Tit90_E

vasudevan31355
18th August 2014, 09:04 PM
வாங்க ராஜேஷ்ஜி. நான் நைட் ஷிப்ட் கிளம்பவும் நீங்க லைன்ல வரவும் சரியா இருக்கே. உங்களுக்கு ஒரு பாட்டு. நம் அரசியினுடயது.

'நானோ உன் அடிமை'

'அவள் ஒரு காவியம்' படத்திலிருந்து


https://www.youtube.com/watch?v=X9Uy1vRL2MU&feature=player_detailpage

rajeshkrv
18th August 2014, 09:26 PM
வாசு ஜி,

நானோ உன் அடிமை .. நாமெல்லாம் அந்த குரலுக்கு அடிமை தானே.. அருமையான பாடல் ..
நன்றி நன்றி ..

நலம் தானே ..

madhu
19th August 2014, 04:34 AM
அவள் ஒரு காவியம்... பெயர்க் குழப்பம்..

யாராச்சும் தீர்த்து வையுங்க..

"நானோ உன் அடிமை" பாடல் ஒரிஜினலாக "உன்னை நான் சந்தித்தேன்" என்ற பெயரிடப்பட்ட படத்துக்கு சொந்தமானது.
( வாணி ஜெயராமின் " நிலாவை நேற்று பார்த்தது" இடம் பெற்ற அதே படம்தான்..) .. அதன் பின் "தியாக உள்ளம்" என்று பெயர் மாற்றப்பட்டு வெளிவந்தது.

ஆனால் "தியாக உள்ளம்" என்று பெயரிடப்பட்ட சுமித்ரா நடித்த படம் "அவள் ஒரு காவியம்" என்ற பெயரில் வெளியானது என்று படித்தேன்.

இரண்டையும் ஒன்றாக்கி அந்தப் பாட்டை இந்தப் படம் என்று யூ டியூபில் போட்டு ஒரு முடிவே கட்டி விட்டார்கள். ( முக நூலில் ஒருவர் சண்டைக்கே வந்து விட்டார். யூ டியூபில் சொன்னப்புறம் நீங்க யாரு வேற படம் என்று சொல்வதற்கு என்று.... :) )

நம்ம ஜீ-க்கள் இதை விலாவாரியாக கண்டு பிடித்துக் கொடுக்க வேணுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

RAGHAVENDRA
19th August 2014, 06:45 AM
நானோ உன் அடிமை பாடல் உன்னை நான் சந்தித்தேன் படத்திற்காக பதிவானது. அந்தப் படம் தொடரவில்லை. பின் அவள் ஒரு காவியம் படத்திற்காகத் தான் அந்தப் பாடல் பயன் படுத்த்ப் பட்டு வானொலியில் ஒலிபரப்பானது. பின்னாளில் இந்த அவள் ஒரு காவியம் சில காலம் நின்று விட்டு நீண்ட நாட்களுக்குப் பின் தொடர்ந்து படமாக்கப் பட்டு தியாக உள்ளம் என பெயர் மாற்றப் பட்டு வெளியானதாகத் தான் நான் கேள்விப்ப்ட்டிருக்கிறேன்.

தியாக உள்ளம் டிவிடியில் இப்பாடல் காட்சி இடம் பெற்றுள்ளது. முன்னரே ஒரு முறை இப்பாடலை unbeatable 70s திரியில் பகிர்ந்து கொள்ளப் பட்டுள்ளது.

RAGHAVENDRA
19th August 2014, 06:46 AM
மது கதாநாயகன் படத்தில் இசையரசியின் பாடல் கேட்டீர்களா...

RAGHAVENDRA
19th August 2014, 06:47 AM
பெண்ணுக்குப் பெண்ணு என்னடி செல்வியின் செல்வன் படம் தான். என்னிடண் அப்பாடல் பழைய நைந்து போன கேசட்டில் இருக்கிறது. டேப் ரிகார்டர் தான் இல்லை. எப்படியாவது வெளிக்கொண்டுவர முயல்கிறேன்.

RAGHAVENDRA
19th August 2014, 06:48 AM
பொங்கும் பூம்புனல் தொடருக்கு ஆதரவளித்து வரும் ஒவ்வொரு நண்பருக்கும் என் உள்ளம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

madhu
19th August 2014, 06:51 AM
Thanks Raghav-ji.

ஆனால் "அவள் ஒரு காவியம்" என்ற பெயரில் ஒரு திரைப்படம் ஜெய்கணேஷ், சுமித்ரா நடிப்பில் வெளிவந்திருக்கிறது. அதனால்தான் இந்த குழப்பம்.

அப்படின்னா உ.நா.ச.. மாறி அ.ஒ.கா.வாகி கடைசியில் தியாக உள்ளமாயிடுச்சு.

இந்த இன்னொரு அ.ஒ.கா. அதே பெயரில் வெளியாயிடுச்சு..

எது எப்படி ஆனாலும் இந்தப் பாட்டு தியாக உள்ளம் படத்தில்தான்.. ( பழைய பெயர் என்னவாக இருந்தாலும் ).. சரிதானே !! :)

http://youtu.be/NWC0zJhEi2w

RAGHAVENDRA
19th August 2014, 06:51 AM
பொங்கும் பூம்புனல்

இசையரசி எந்த இசையமைப்பாளருக்குப் பாடினாலும் நிச்சயம் மெலடி இல்லாமல் இருக்காது. அதுவும் மெலடி கிங் மெல்லிசை மாமணி குமார் சுசீலா கூட்டணியென்றால் கேட்க வேண்டுமா..

நான் ஒரு நாள் கேட்டது நேற்றுத் தான் கிடைத்தது...

நல்ல பெண்மணி திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடலைத் தான் சொன்னேன்...

http://www.inbaminge.com/t/n/Nalla%20Penmani/

madhu
19th August 2014, 06:53 AM
கதா நாயகன் பாட்டுதானே... ராகவ் ஜி..

அதுக்குதான் நீங்களே பதில் கொடுத்து விட்டீர்களே .. நல்ல பெண்மணி பாட்டின் மூலம்.

அருமையோ அருமை.