View Full Version : மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம
Pages :
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
[
16]
17
Richardsof
4th October 2014, 01:35 PM
http://i61.tinypic.com/2m5nqe0.jpg
Richardsof
4th October 2014, 01:35 PM
http://i57.tinypic.com/245dppd.jpg
gkrishna
4th October 2014, 03:02 PM
http://www.dailythanthi.com/Section/Images/2014/Oct/30C22606-E596-4FDB-B354-E47873F54454_L_styvpf.gifhttp://www.dailythanthi.com/Section/Images/2014/Oct/8D3E74CE-60BE-476D-90C4-CE40BE7303A3_L_styvpf.gifhttp://www.dailythanthi.com/Section/Images/2014/Oct/7BF67A13-0CFD-4301-AD72-B0A3B47280FF_L_styvpf.gif
அந்தக்காலத்தில், கர்நாடக சங்கீதத்தை முழுமையாகக் கற்றுத் தேர்ந்து, திரைப்பட உலகில் பிரபலமாகத் திகழ்ந்த அமரர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவுக்கு உதவியாக ஒரு பையன் இருந்தான்.
பாலக்காட்டைச் சேர்ந்த அந்தப்பையனுக்கு அப்பொழுது 13 வயது. பெற்றோருக்கு ஒரே பிள்ளை. மூன்றரை வயதாக இருந்தபொழுது அவனது தந்தை இறந்துவிடவே, தனது தாயின் தந்தையான தாத்தாவின் ஆதரவில் அம்மாவும் பிள்ளையும் வாழ்ந்து வந்தார்கள்.
ஓரளவிற்கு அடிப்படைக் கல்வி அறிவுக்குப்பின், அச்சிறுவனின் மூளையில் மேற்கொண்டு படிப்பு ஏறவில்லை. பதிலுக்கு இசை ஞானம் ஏறிற்று! ஒரு பாகவதரிடம் முறையாக கர்நாடகச் சங்கீதம் கற்று, அந்த 13-வது வயதிலேயே கேரளா கண்ணனூர் டவுன் ஹாலில் முதன் முதலாக அவனது பாட்டுக்கச்சேரி அரங்கேற்றம் ஆனது.
பாட்டுப்பாடிக்கொண்டிருந்த அந்த பாகவதப்பையன் நடிப்பு மீது பிடிப்பு கொண்டு தாயிடமும், தாத்தாவிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டை விட்டுப் புறப்பட்டு கோயம்புத்தூர் வந்து, அந்நாளில் மிகப் பிரபலமாயிருந்த சென்டிரல் ஸ்டூடியோவிற்குள் நுழைந்து, புகழ் பெற்ற ஜூபிடர் பிக்சர்ஸ் படங்களில் நடிக்க 'சான்ஸ்' கேட்டான்.
அது 1941-ம் ஆண்டு தமிழ்த் திரைப்படக் கதை வசன கர்த்தாக்களின் பிதாமகரும், முன்னோடியுமான பிரபல 'இளங்கோவன்' திரைக்கதை வசனம் எழுதி, 'தவநடிக பூபதி' என்று அந்நாளில் புகழ் பெற்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த பி.யு.சின்னப்பா கோவலனாகவும், குணச்சித்திர நடிகை பி.கண்ணாம்பா கண்ணகியாகவும் நடித்து ஆர்.எஸ்.மணி இயக்கி, ஜூபிடர் பிக்சர்ஸ் அதிபர்களான எம்.சோமசுந்தரம் - கே.மொய்தீன் தயாரிப்பில் 'கண்ணகி' படப்பிடிப்பு அப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருந்தது.
படத்தின் தொடக்கக் காட்சியில் பாலகோவலனாக நடிப்பதற்கு மீசை அரும்பியும், அரும்பாத இளம் பருவத்தில் இருந்த இந்த பாலக்காட்டுப்பையன் பொருத்தமாக இருப்பான் என்று தேர்ந்து எடுக்கப்பட்டு, இரண்டு மூன்று நாட்கள் படப்பிடிப்பும் நடந்து முடிந்துவிட்டது. பாலகண்ணகி வேடத்தில் ஒரு பருவப்பெண் நடித்திருந்தார்.
'விதி' பாலகண்ணகியை விட்டுவிட்டு, பாலகோவலனாக நடித்திருந்த நம் பாகவதப் பையன் மீது தடுமாறி விழுந்தது. அவன் நடித்திருந்த காட்சிகளை 'ரஷ்' பிரிண்டில் பார்த்தபோது பையனுக்கு வில்லனாக வந்த ஒருவர், பாலகண்ணகியைக் காட்டிலும் பாலகோவலன் மிகவும் இளமையாகக் காணப்படுவதாகக் கூறிய காரணத்தினால், அந்தச் சின்னஞ்சிறிய சினிமாச்செடி முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு விட்டது.
யார் யாருடைய பரிந்துரைகளோ பெற்று கடைசியில் வேறு வழியின்றி, நமது இளம் பாகவதப் பையன் 'ஆபீஸ் பாய்' என்னும் பெயரில் எடுபிடிப் பையனாக ஜூபிடர் பிக்சர்ஸ் அலுவலகத்தில் வேலைக்கு அமர்ந்தான்.
கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவதும், கம்பெனி மியூசிக் ஹாலுக்கு கம்போசிங்குக்கும், ரிகர்ஸலுக்கும் அன்றாடம் வருகின்ற இசை அமைப்பாளர்களான சி.ஆர்.சுப்பராமன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு ஆகியோரைக் கவனித்துக் கொள்வது, ஹாலில் ஜமக்காளம் விரித்துப்போட்டு அதில் ஆர்மோனியப் பெட்டியைக் கொண்டு வந்து வைத்து அதைத் துடைத்து சுத்தப்படுத்துவது, அவர்களுக்கு அவ்வப்போது தேவைப்படுகின்ற காபி, டிபன் வகையறாக்களை வாங்கி வந்து கொடுப்பது, வெற்றிலைப்பாக்குப் புகையிலைத் தட்டு எடுத்து வைப்பது முதலிய பணிவிடைகளை நமது பையன் செவ்வனே செய்து கொண்டிருந்தான். எதிர்காலக் கனவுகள், கற்பனைக்கோட்டைகள் எல்லாமே நடிகன் ஆகவேண்டும் என்ற ஒன்றே ஒன்றுதான்.
இந்த நிலையில், ஜூபிடர் படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஒரு வில்லன் நடிகர், 'என் நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிக்கலாம் வா' என்று ஆசை காட்டி அந்தப் பையனை அங்கிருந்து தள்ளிக்கொண்டு போய்விட்டார்.
சேலம் ஆத்தூரில் அந்த வில்லன் நடிகர் 'சம்பூர்ண ராமாயணம்' நாடகம் போட்டார். அதில் சீதா கல்யாண சீன்! ஒவ்வொரு தேசத்து மன்னரும் முன் வந்து வில்லை எடுத்து ஒடிக்க முயன்று முடியாமல் தோற்றுப்போவது போன்ற அந்தக்கட்டத்தில், கேரள தேசத்து மன்னன் வேடம் அணிந்திருந்த நமது பாலக்காட்டுப்பையன் மேடையில் தோன்றி, வில்லை கம்பீரமாகத் தூக்கினான். ராமன் வேடம் போட்டிருந்தவன் மட்டுமே வில்லை ஒடிப்பதற்கென பொருத்தப்பட்டிருந்த அந்த விசைப் பித்தானில் நமது பையனின் விரல் தவறுதலாகப்பட்டு வெடிச்சத்தத்துடன் வில் முறிந்து விழுந்து விட்டது.
உடனே ரசிகப் பெருமக்கள் பலர் எழுந்தோடி மேடைக்கு வந்து ஏறி நின்று "வில்லை ஒடித்த இந்த இளவரசனுக்கே ஜனக நந்தினியாகிய ஜானகியை மணமுடித்துக் கொடுக்கவேண்டும்" என்று கத்திக்கலாட்டா செய்தனர். மேற்படி வில்லன் நடிகரும், கம்பெனி முதலாளியுமான அவர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் ரசிகர்கள் சம்மதிக்காததால் வேறு வழியின்றி ராமனை விட்டு விட்டு கேரள மன்னன் வேடம் போட்டிருந்த நமது பையனுக்கே சீதையைக் கல்யாணம் பண்ணி வைத்தார்.
அதோடு அந்தக் காட்சியை முடித்துக்கொண்டு, நமது பையனை நயமாக உள்ளே கூட்டி வந்து அவனை அடித்துத் துவைத்துப் பிழிந்த பிழியிலும், பாவம்! இரவோடு இரவாக ஒருவருக்கும் தெரியாமல் ஆத்தூரை விட்டு அதை அடுத்திருந்த சேலத்துக்கு ரெயில் ஏறிப்போய்விட்டான்.
அவனை அழைத்து வந்து அறியாமல் செய்த பிழைக்காக அடித்துத் துவைத்த அந்த வில்லன் நடிகர் வேறு யாரும் அல்ல. பிற்காலத்தில் எம்.ஜி.ஆரோடும், சிவாஜியோடும் மற்றும் பல நடிகர், நடிகைகளோடும் வில்லன் வேடத்திலும், நகைச்சுவை வேடத்திலும் நடித்துத் தனது தனி முத்திரையைப் பதித்துப்புகழ் பெற்ற அண்ணன் அமரர் டி.எஸ்.பாலையா.
அங்கே இங்கே என்று வேறு எங்குமே போகாமல் அடிக்கப்பட்ட பந்து போல மறுபடியும் சினிமா கம்பெனியிலேயே போய் விழுந்தான் அந்தச் சிறுவன். மாடர்ன் தியேட்டர்ஸ் இசை அமைப்புக் குழுவில் அப்பொழுது நிரந்தரமாக அங்கம் வகித்து வந்த ஒரு அய்யரிடம் போய் நின்று தன் வரலாற்றைக் கூறி தனக்கு ஸ்டூடியோவில் ஏதேனும் ஒரு வாய்ப்பளிக்கும்படி கேட்டான். போட்டுக்கொள்வதற்கு ஒரு மாற்றுச்சட்டைகூட இல்லாத தன் கஷ்ட நிலையைக் கூறிக் கெஞ்சினான்.
இவனைப்பார்த்து இரக்கம் கொண்ட அந்த அய்யர் "இங்கே உனக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காது. அதனால் நீ ஏற்கனவே இருந்த ஜூபிடர் பிக்சர்சுக்கே போய்விடு, அதுதான் நல்லது" என்றார்.
1. அறிவுரை, 2. ரெயில் செலவுக்கு இரண்டு ரூபாய், 3. போட்டுக்கொள்வதற்கு ஒரு சட்டை ஆக இம்மூன்று அயிட்டங்களையும் வழங்கி அன்புடன் பையனை திரும்ப கோயம்புத்தூருக்கே அனுப்பி வைத்தார் புண்ணியவான்!
'போன மச்சான் திரும்பி ஜூபிடருக்கே வந்தான் - தனது தந்தை போன்ற இசை அமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு முன்வந்து பரிதாபமாக நின்றான். அன்பிற்கினிய நாயுடு அவனைத் தன் சொந்தப் பிள்ளையாகப் பாவித்து அரவணைத்து ஆதரித்தார்!
அவனோடுகூட இசை சம்பந்தப்பட்ட இரு நண்பர்களும் அங்கு இருந்தனர். 'நாம் மூவர்' நமக்கு ஒரு குருநாதர் என்னும் முடிவில் நடிப்பு ஆர்வத்தை மூட்டைக்கட்டிப்போட்டு விட்டு, இசையிலேயே முழுக் கவனமும் செலுத்தினான் அந்தப் பையன். ஆர்மோனியப் பெட்டியின் மீது நாட்டங்கொண்டு அவ்வப்போது தனிமையில் அவனுக்கு அவனே வாசித்து வாசித்து ஸ்வர வரிசைகள் அத்துப்படியாகி அதில் தேறிக்கரைகண்டு கலைமகள் அருளோடு ஒரு முழுமை பெற்றான். இது அவனோடு இருந்த அந்த இரு நண்பர்களைத்தவிர, கம்பெனியில் வேறு யாருக்கும் தெரியாது.
அந்தச் சந்தர்ப்பத்தில் அதாவது 1946-47 வாக்கில் ஜூபிடர் பிக்சர்ஸ் அபிமன்யு என்ற படம் தயாரித்தனர். ஏ.காசிலிங்கம் இயக்கத்தில் எஸ்.எம்.குமரேசன், யு.ஆர்.ஜீவரத்தினம் நாயக - நாயகியாகவும், ஜூபிடரின் நிரந்தர ஆஸ்தான நடிகராக அந்நாளில் இருந்த எம்.ஜி.ஆர். அர்ஜுனனாகவும் நடித்தார். அந்தப்படத்திற்கு எஸ்.எம்.எஸ்.நாயுடு இசை அமைத்தார்!
'அபிமன்யு'வாக நடித்த எஸ்.எம்.குமரேசனும், அவனுடைய இளம் மனைவி வத்ஸலாவாக நடித்த யு.ஆர்.ஜீவரத்தினமும் இணைந்து ('டூயட்') பாடுவதாக ஒரு காட்சி அமைப்பு:-
"புது வசந்தமாமே வாழ்விலே - நாம் புதிதாய் மணமே பெறுவோமே."
கோவை அய்யாமுத்து என்பவர் எழுதிய இந்தப் பாடலுக்கு நாயுடு என்னென்னவோ - எப்படி எப்படி எல்லாமோ மெட்டுப் போட்டுப்பார்த்தார். எதுவுமே சரியாக அவருக்குத் திருப்தியாக அமையவில்லை. அன்றைய பொழுது கழிந்தது. இரவு வந்தது. இசை அமைப்பாளர் நாயுடுவின் 'பிரசவ வேதனையை அவர் அருகில் நின்று கவனித்துக்கொண்டிருந்த அந்த 'எடுபிடிப்பையன்' - அவன்தான் நமது பாலக்காட்டு பாகவதப் பையன் தனது இரு நண்பர்களின் (ஒருவன் தபேலா, இன்னொருவன் வாய்ப்பாட்டு) தூண்டுதலின் பேரில், ஆர்மோனியத்தின் எதிரில் அமர்ந்து முதன் முதலாக மேற்கண்ட பாடலுக்கு ஒரு 'டியூன்' மெட்டு அமைத்துப் பாடிப்பார்த்தான். சரியாகவும், திருப்தியாகவும் இருக்கவே, நண்பர்கள் அவனைப் புகழ்ந்து உற்சாகப்படுத்தினர்.
மறுநாள் காலை வழக்கம்போல எஸ்.எம்.எஸ். நாயுடு மியூசிக் ஹாலுக்கு வந்து ஆர்மோனியப் பெட்டியின் முன் அமர்ந்தார். அதன் கருப்பு வெள்ளைக் கட்டைகளை அழுத்தியபடி ஏதேதோ தனக்குத்தானே முணுமுணுத்தார். 'மெட்டு' எதுவும் வரவில்லை. கோபம்தான் வந்தது. சலித்துக்கொண்டார்.
இதையெல்லாம் பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டு நின்ற அந்தப்பையன் மெல்ல நாயுடுவின் அருகில் அமர்ந்து தயக்கத்துடன் சொன்னான்...
பையன்:- அண்ணே! ஒண்ணு சொல்றேன். கோச்சிக்கமாட்டீங்களே?
நாயுடு:- சேச்சே, கோச்சிக்கமாட்டேன். தைரியமா சொல்லு.
பையன்:- இந்தப்பாட்டுக்கு நான் ஒரு டியூன் போட்டிருக்கேன்.
நாயுடு:- அப்படியா? எங்கே? அந்த டியூனைப் பாடிக்காட்டு.
பையன்:- கொஞ்சம் நகர்ந்துக்குங்க... பெட்டியை இப்படிக் கொடுங்க.
நாயுடு:- ஆர்மோனியம் வாசிப்பியா? (பையன் புன்னகையுடன் தலையாட்ட)
நாயுடு:- அட! பரவாயில்லியே. இவ்வளவு நாளா எனக்கு ஏன் நீ சொல்லலே? என்று 'பெரிய இசை' சற்று அப்பால் நகர்ந்து கொள்ள 'சிறிய இசை' தன் சினிமா குருநாதரின் கால்களை முதலில் தொட்டுக் கும்பிட்டுவிட்டுப் பிறகு ஆர்மோனியத்தையும் பயபக்தியுடன் தொட்டுக் கண்களில் கையை ஒற்றிக்கொண்டு முந்தின நாள் இரவு அவன் அமைத்த அந்த டியூனை ஆர்மோனியத்தை சுருதியோடு வாசித்த வண்ணம் தனது இளங்குரலில் இனிமையாகப் பாடிக்காட்டினான்.
ஆச்சரியத்தோடும், ஆனந்தத்தோடும் அதைக்கேட்டு ரசித்த நாயுடு, பையனை மேலும் கீழுமாகப் பார்த்து அதிசயித்து கூறினார்:-
நாயுடு:- பலே பலே! தம்பி! நீ போட்டிருக்குற இந்த 'டியூன்' கேக்குறதுக்கு இனிமையாகவும், டூயட்டுக்குப் பொருத்தமாகவும் இருக்கு. இதையே 'பைனல்' பண்ணி வச்சிக்கிறேன்.
பையன்:- (கும்பிட்டு) ரொம்ப நன்றிண்ணே. எல்லாம் உங்க ஆசீர்வாதம்தான்.
நாயுடு:- ஆனா ஒரு கண்டிஷன்...
பையன்:- என்னண்ணே?
நாயுடு:- இந்த டியூன் நீ போட்டதா தப்பித்தவறிக்கூட சத்தியமா யாருக்கும் சொல்லக்கூடாது. கம்பெனிக்கும் தெரியக்கூடாது. சரிதானா?
பையன்:- மூச்! ஒருத்தருக்கும் சொல்லமாட்டேன்.
நாயுடு:- அப்படின்னு இந்த பேப்பர்ல எழுதிக் கையெழுத்துப் போட்டுக்குடு. அப்போதான் நான் நம்புவேன்.
'புது வசந்தமாமே வாழ்விலே' டூயட் பாட்டின் டியூனை நான் போட்டதாக யாரிடமும் சத்தியமாக சொல்லமாட்டேன். இப்படிக்கு... என்று பாவம் அந்த அப்பாவிப் பையன் எழுதிக் கையெழுத்திட்டு தனது குருநாதரிடம் சமர்ப்பித்தான்!
மேற்படி டூயட் பாடல் ஒலிப்பதிவு ('ரிக்கார்டிங்') ஆயிற்று. அதைக்கேட்டு மகிழ்ந்த இயக்குனரும், தயாரிப்பாளரும் நாயுடுவிடம் 'இந்தப் படத்துப் பாடல்களுக்கு ஏற்கனவே நீங்க போட்ட அத்தனை டியூன்களையும் விட இப்போ இந்த டூயட் பாட்டுக்குப் போட்டிருக்கிற டியூன் ரொம்ப பிரமாதமாக அமைஞ்சிருக்கு' என்றனர்.
தன் சீடனிடம் 'சங்கீதச் சரக்கு' நிறைந்திருப்பதை நன்கு அறிந்து கொண்ட குரு நாயுடு, அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு, மேற்கொண்டு அவர் இசை அமைத்த ஒவ்வொரு படத்திலும் குறைந்தது இரண்டு பாடல்களுக்கு அவனையே இசை அமைக்கச் சொல்லி உற்சாகப்படுத்தி வளர்த்துவிட்டார்.
ஒட்டு மொத்தமாக படத்தின் அனைத்துப் பாடல்களுமே நாயுடு இசை அமைத்ததுதான் என்று எல்லோருமே எண்ணி இருந்தார்களே தவிர அவற்றில் பையன் இசை அமைத்த பாடல்களும் கலந்திருக்கின்றன என்ற உண்மை ஒருவருக்கும் தெரியாதபடி, இந்தக் குரு சீடன் உறவு நிலவி நீடித்து வந்தது.
திரை மறைவில் ரகசியமாக நடந்து வந்த பையனின் இந்த இசை அமைப்புக்கு எதிர்பாராத சோதனை வந்தது. ஆட்குறைப்புத் திட்டத்தின்படி அந்தப்பையன் (ஆபீஸ் பாய்) இன்னும் சிலரோடு சேர்த்து திடீரென்று வேலையிலிருந்து நிறுத்தப்பட்டு விட்டதை அறிந்து அதிர்ச்சியுற்று, குருநாதரிடம் கூறிக்கண்கலங்க - இதற்கு மேலும் ரகசியத்தை மூடி மறைக்க மனம் ஒப்பாத அவர் தன் சீடனை முதலாளி எம்.எஸ்.ஸிடம் அழைத்துச்சென்றார்.
மூட்டையை அவிழ்த்தார். முட்டையை உடைத்தார். குறிப்பிட்ட பாடல்களை எல்லாம் எடுத்துக்கூறி, அவற்றிற்கு இசை அமைத்தது இதோ இந்தப்பையன்தான் என்று கூறியதுடன்கூட, முன்பு அவன் தனக்கு சத்திய வாக்களித்து எழுதிக்கொடுத்த கடிதத்தையும் காட்டினார். இதை எல்லாம் அறிந்த முதலாளி ஆச்சரியம் கொண்டு "அப்படியா?
இதை ஏன் முந்தியே நீங்க சொல்லவில்லை?" என்று கேட்க, அதற்கு நாயுடு:-
நாயுடு:- நான் சொல்லி இருந்தா... 'ஆபீஸ் பையன் என்ன மியூசிக் போடுறதுன்னு' அவன் ஆர்வத்தைத் தடுத்திருப்பீங்க. அதோட அவனை வேலையிலேருந்து நீக்குனாலும் நீக்கி இருப்பீங்க. அதனாலதான் நான் மறைச்சு, அவன் மூலமாகூட தெரியக்கூடாதுன்னு அவன்கிட்டே எழுதி வாங்கினேன். இளமையிலேயே அவன்கிட்டே நல்ல இசை ஞானம் குடிகொண்டிருக்கு. பிற்காலத்துல பெரிய ஆளா வருவான். இப்போ ஒரு மாறுதலுக்காக சி.ஆர்.சுப்புராமன் கிட்டே சேரணும்னு ஆசைப்படுறான். நான் சொல்றதைவிட, நீங்க ஒரு வார்த்தை சொல்லி அவர்கிட்டே சேர்த்து விட்டு அவனுக்கு ஒரு நல்ல வழி காட்டுங்க. பாவம்! தகப்பனார் இல்லாத பிள்ளை. தற்சமயத்துக்கு நான்தான் அவனுக்குத் தகப்பனாரா இருந்து கவனிச்சிக்கிட்டு வர்றேன்" என்று கேட்டுக்கொண்டார். அதன்படி முதலாளியால் பரிந்துரைக்கப்பட்ட பையனை இசை அமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார்.
இவ்வளவு நேரமாக நான் போட்டுக்கொண்டு வந்த 'மர்ம முடிச்சை' இப்பொழுது அவிழ்க்கிறேன்.
அந்த 13 வயது பாலக்காட்டுப் பாகவதப் பையன் யார் தெரியுமா?
சொல்லிசைக்கு மெல்லிசை சேர்த்து, சொக்க வைத்த பல ஆயிரம் பாடல்களைச் சிறப்பாக - குறிப்பாக எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் அமைத்து, எண்ணற்ற இசை ரசிகர்களின் இதயங்களில் இடம் பெற்ற எனது அன்பிற்கினிய அருமை அண்ணன் 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.வி. மற்றும் 'விசு' என்று செல்லமாக அழைக்கப்பெறும் எம்.எஸ்.விஸ்வநாதன்!
சேலம் மாடர்ன் தியேட்டர்சில் எம்.எஸ்.விக்கு ரெயில் செலவுக்கு 2 ரூபாயும், போட்டுக்கொள்வதற்கு மாற்றுச் சட்டையும் வழங்கிய அந்த 'அய்யர்' யார் தெரியுமா?
'திருவிளையாடல்', 'தில்லானா மோகனாம்பாள்', 'திருவருட்செல்வர்', 'திருமால் பெருமை' போன்ற இசை அம்சம் நிறைந்த பல படங்களுக்கு மட்டும் அல்லாது நூறு இசைப்படங்களுக்குச் சமமான ஒரு 'சங்கராபரணம்' படத்திற்கு சுத்த கர்நாடகச் சங்கீதத்தில் இசை அமைத்ததன் மூலமாக, அனைத்திந்திய புகழ் பெற்ற என் அருமை அண்ணன், 'திரை இசைத்திலகம்' கே.வி.மகாதேவன்!
அன்றைக்கு கோவை ஜூபிடர் பிக்சர்சில் விசு அண்ணனோடு இருந்த அந்த இரு இளம் இசை நண்பர்கள் யார் தெரியுமா? பிந்நாட்களில் எம்.எஸ்.வி. இசைக்குழுவின் நிரந்தர 'தபேலா' கலைஞர் கோபாலகிருஷ்ணன்! இன்னொருவர் பிற்கால இசை அமைப்பாளரும், பாடகருமான ஜி.கே.வெங்கடேஷ்.
எம்.எஸ்.வி. என்ற இந்த ஆர்மோனியத்துடன் டி.கே.ராமமூர்த்தி என்னும் வயலினை இணைத்து வைத்து இரண்டிற்கும் 'திருக்கல்யாணம்' நடத்தி ஆசீர்வதித்தார் சுப்புராமன்.
திருச்சியைச் சேர்ந்த பிரபல வயலின் வித்துவான் மலைக்கோட்டை கிருஷ்ணசாமி பிள்ளையின் புதல்வரான இந்த டி.கே.ராமமூர்த்தி கர்நாடக இசைப் பரம்பரையில் வழி வழியாக வந்த விற்பன்னராவார்! முறையான இசை பயின்று வயலின் மேதையான டி.கே.ஆர், எம்.எஸ்.வியைவிட வயதில் மூத்தவர். அதனால் எம்.எஸ்.வி. இவரை அன்புடன் அண்ணன் என்றுதான் அழைப்பார்.
விஸ்வநாதன் சி.ஆர்.சுப்புராமனிடம் வந்து சேர்ந்த பின்னர் 'தேவதாஸ்' படத்தின் அனைத்துப் பாடல்கள் ஒலிப்பதிவும் முடிந்து, படமும் நிறைவு பெற்று பின்னணி இசை ('ரீ-ரிக்கார்டிங்') சேர்க்க வேண்டிய நிலையில், அதன் இசை அமைப்பாளரான சுப்புராமன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அகால மரணம் அடைந்து விட்டார். அதனால் தயாரிப்பாளர் அவருடைய உதவியாளர்களான விஸ்வநாதன் - ராமமூர்த்தியையே படத்துக்கு வேண்டிய பின்னணி இசையை அமைக்கும்படி கூறினார். இதுதான் விஸ்வநாதன் ராமமூர்த்தி முதன் முதலாகப் பின்னணி இசை அமைத்த படம் ஆகும்.
gkrishna
4th October 2014, 03:16 PM
எம்.ஜி.ஆரின் பாராட்டு
விசுவநாதனின் திறமையைத் தெரிந்து கொண்டிருந்த 'ஈத்தச்சன்', 'மாத்யூ' என்ற இரு மலையாளக் கிறிஸ்துவப் படத்தயாரிப்பாளர்கள் தங்களுடைய 'சந்திரா பிக்சர்ஸ்' பேனரில் தயாரிக்க இருந்த ஒரு தமிழ்ப்படத்திற்கு இசை அமைக்க விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு முதன் முதலாக வாய்ப்பு வழங்கினார்கள். குறிப்பிட்ட ஒரு நாளில் கீழ்ப்பாக்கம் நியூடோன் ஸ்டூடியோ ரிக்கார்டிங் தியேட்டரில் பாடல் ஒலிப்பதிவுடன் கூடிய படப்பூஜைக்கு ஏற்பாடு செய்து விட்டு, அந்தப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருந்த ஒரு நடிகரையும் ஆரம்ப விழாவிற்கு வந்து கலந்து கொள்ளும்படி அழைத்தனர். விஸ்வநாதன் அந்தப்படத்திற்கு இசை அமைக்கும் விவரமும் அவருக்குச் சொல்லப்பட்டது. இந்தச் செய்தியைக் கேட்ட அந்த நடிகர் கூறினார்:- "என்னது? ஜூபிடர் பிக்சர்ஸ் கம்பெனியில் ஆபீஸ் பாயா இருந்தவன் என் படத்துக்கு மியூசிக் டைரக்டரா? வேற யாரும் உங்களுக்குக் கிடைக்கலியா? அதெல்லாம் சரியாக வருமா?" என்றார் சந்தேகத்துடன்.
ஆனால், " விஸ்வநாதன் மியூசிக் டைரக்ஷன்ல நாளைக்கு 'சாங் ரிக்கார்டிங்'குடன் பூஜை நடந்தே தீரும்" என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்கள் அந்தத் தயாரிப்பாளர்கள்.
அதன்படியே பாடல் ஒலிப்பதிவு செய்தார் அன்றைய பிரபல ஒலிப்பதிவாளர் 'டின்ஷா-கே-தெஹ்ராணி!'
இதைக்கேள்விப்பட்ட அந்த நடிகர் பாடல் ஒலிப்பதிவு ஆன ஒலி நாடா அடங்கிய 'டேப்ரிக்கார்டரை' அந்தக் கம்பெனியில் இருந்து வரவழைத்து பாடலைப் போட்டுக்கேட்ட உடனே காரை எடுத்துக்கொண்டு மயிலாப்பூர் அடைஞ்சான் முதலி தெருவுக்குச்சென்று ஒரு வீட்டின் மாடியில் ஏறினார். விஸ்வநாதன் அங்குதான் வாடகைக்குக் குடியிருந்தார். அவரைக் கண்ட மாத்திரத்தில் அந்த நடிகர் கட்டித்தழுவிக்கொண்டு மகிழ்ச்சியுடன் கூறினார்:-
"விசு! முதல்ல உன்னைப்பற்றி நான் என்னமோ நினைச்சேன். அது தப்பு! நீ டியூன் போட்டு ரிக்கார்டு பண்ணின அந்தப்பாட்டைக்கேட்டேன். ரொம்ப அற்புதமாக இருந்தது. அப்பவே முடிவு பண்ணிட்டேன். இனிமே நான் நடிக்கிற எல்லாப் படங்களுக்கும் நீதான் மியூசிக் டைரக்டர்!" என்று மனதாரப் பாராட்டிக் கூறியது மட்டுமல்ல, பிற்காலத்தில் அவர் மிகப்பெரிய நடிகரானதும் அவர் நடித்த பெரும்பாலான படங்களுக்கு விஸ்வநாதனை இசை அமைக்க வைத்து அவருக்குப் புகழ் தேடிக்கொடுத்து, தானும் அந்தப் பாடல்களைப் பாடிப் புகழ் பெற்றார்!
முதலில் விசு அண்ணனுக்கு ஆதரவு தர மறுத்து,பின்னர் அவரைத் தன் ஆஸ்தான இசை அமைப்பாளராக ஆக்கிக்கொண்ட அந்த நடிகர் வேறு யாரும் அல்ல.
'புரட்சித்தலைவர்' எம்.ஜி.ஆர்.
http://www.dailythanthi.com/Section/Images/2014/Oct/F2A98984-633A-4AFD-A307-1EFB59C71759_L_styvpf.gifhttp://www.dailythanthi.com/Section/Images/2014/Oct/96920828-4C5E-4ACA-AAF7-7A81E6CF1CD5_L_styvpf.gif
அவர், தன் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியாருடனும், அன்றைய பிரபல கதாநாயகி நடிகை பி.எஸ்.சரோஜாவுடனும் நடித்து 1953-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளிவந்து வெற்றி பெற்ற அந்தப்படம் 'ஜெனோவா!' அதுதான் விஸ்வநாதன் - ராமமூர்த்தி முதன் முதலாக இசை அமைத்த படம்!
------
சிறு சந்தேகம் வாசு சார் /எஸ்வி சார் எது விஸ்வநாதன் ராமமுர்த்தி இசை அமைப்பில் முதல் படம் ?
பணம் 27.12.1952 இதுதான் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்து வெளிவந்த முதல்படம் என்று விக்கி சொல்கிறது .ஆரூர் தாஸ் 1953 இல் வெளி வந்த ஜெனோவா விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் வெளிவந்த முதல் படம் என்று சொல்லி இருக்கிறார்
gkrishna
4th October 2014, 03:19 PM
தாயின் கண்டிப்பு
அண்ணன் விஸ்வநாதனின் தாயார் மறைவதற்கு முன்பு வரையிலும் - 7 குழந்தைகளுக்குத் தந்தையான அவர் - சில சந்தர்ப்பங்களில் தனது அன்புத் தாயாரிடம் அடி வாங்கியிருக்கிறார். அது சம்பந்தப்பட்ட எனக்குத் தெரிந்த ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறேன்:-
தேவர் பிலிம்ஸ் தயாரித்த அனைத்துப் படங்களுக்கும் அந்நாட்களில் அண்ணன் கே.வி.மகாதேவன் இசை அமைத்து வந்தார். அதில் ஒரு மாற்றம் வேண்டும் என்று சில விநியோகஸ்தர்கள் விரும்பி தேவரண்ணனிடம் கூற அவரும் அதைக்கேட்டு விசு அண்ணன் வீட்டிற்குச் சென்று மொத்தப்பணத்தையும் நீட்டி தன் படத்திற்கு இசை அமைக்கும்படிக் கூறினார். இதைப் பக்கத்திலிருந்து கேட்டுக்கொண்டிருந்த அவரது தாயார், தேவரண்ணன் முன்னிலையிலேயே தன் மகனின் கன்னத்தில் 'பளார்' என்று பலமாக ஓர் அறை அறைந்து:- 'நன்றி கெட்டவனே! ஒரு காலத்துல நீ வேலை இல்லாம கஷ்டப்பட்டு சேலத்துக்குப்போனப்போ, உங்கிட்டே அன்பு காட்டி, ரெயில் செலவுக்குப் பணம் கொடுத்து, போட்டுக்க மாத்துச்சட்டையும் கொடுத்த அந்தப் புண்ணியவான் தொழில் பண்ற அந்த இடத்துல நீ அடி வைக்கலாமா?'.
பின்னர் தேவரண்ணனைக் கும்பிட்டு:- 'ஐயா! நீங்க எவ்வளவு பணம் கொடுத்தாலும் என் பிள்ளை உங்க படத்துக்குப் பாட்டுப்போடமாட்டான். நீங்க வழக்கம்போல அய்யரையே வச்சிப்போட்டுக்குங்க. அதுதான் உங்களுக்கு நல்லது, போயிட்டு வாங்க' என்று உறுதியாகக் கூறி அண்ணனை அனுப்பிவிட்டார்.
அந்தத்தாயார். இந்த வயதில் தன் பிள்ளையை கன்னத்தில் அறைந்ததைக் கண்ணெதிரில் கண்டு கதிகலங்கிப்போன தேவரண்ணன் திரும்பி அலுவலகத்துக்கு வந்து இதை எங்களிடம் கூறி, 'இப்படி ஓர் அபூர்வ தாயும் பிள்ளையுமா?' என்று அதிசயித்தார்.
gkrishna
4th October 2014, 04:51 PM
கடந்த 1/10/2014 நடிகர் திலகத்தின் பிறந்த நாள் அன்று பாராட்டப்பட்ட பழம் பெரும் நாடக நடிகர் திரு பார்த்திபன் அவர்களை பற்றி ஒரு சிறு தொகுப்பு
பார்த்திபன் – பழம்பெரும் குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகர். அன்று கண்ட முகம், மல்லிகைப்பூ, கோழி கூவுது, வீரபாண்டிய கட்டபொம்மன்,
சுவரில்லாத சித்திரங்கள் போன்ற 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் W.C.ஜாக்ஸன் என்ற வெள்ளைக்கார துரையாக வேடந்தாங்கியவர். ரசிகர்களால் என்றென்றும் மறக்கவியலாத நடிகர்களுள் இவரும் ஒருவர். இவரது நடிப்பைத் தெரிந்து கொள்ள விரும்புவோர் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை ஒரு முறைப் பார்த்தாலே போதும்.
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் W.C.ஜாக்ஸன் என்ற வெள்ளைக்கார துரையாக பார்த்திபன்
http://antrukandamugam.files.wordpress.com/2014/01/parthipan-veerapandiya-kattabomman-1959-2.jpg?w=593http://antrukandamugam.files.wordpress.com/2014/01/parthipan-sivaji-veerapandiya-kattabomman-1959-1.jpg?w=593
மல்லிகை பூ 1973 திரைபடத்தில்
http://antrukandamugam.files.wordpress.com/2014/01/parthiban-malligai-poo-1973.jpg?w=487
80 களில் இளைய திலகம் பிரபு அவர்களுடன் கோழி கூவுது திரை படத்தில்
http://antrukandamugam.files.wordpress.com/2014/01/parthiban-prabhu.jpg?w=593
சுவரில்லாத சித்திரங்கள் [1979] படத்தில் சுதாகர், எஸ்.வரலக்ஷ்மி, சி.ஆர்.சரசுவதியுடன் பார்த்திபன் ((கையில் suitcase உடன் )
http://antrukandamugam.files.wordpress.com/2014/01/parthiban-s-varalaxmi-cr-saraswathy-sudhagar-suvarillatha-chithirangal-1979.jpg?w=593&h=344
நடிகர் திலகத்தால் அன்புடன் அண்ணன் என்று அழைக்கபட்டவர்.இளைய திலகத்துடனும் இணைந்து நடித்து உள்ளார் . மூன்றாவது தலைமுறை இளவல் திலகம் விக்ரம் பிரபு அவர்களுடனும் இணைந்து நடிப்பார் என்று இளைய திலகம் அவர்களால் அன்றைய பாராட்டு நிகழ்ச்சியில் பாராட்டபட்டார்
தகவல் தந்து உதவிய அன்றுகண்ட முகம் வலைபூ திரு நாகேஷ் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி
gkrishna
4th October 2014, 05:01 PM
01/10/2014 நடிகர் திலகத்தின் பிறந்த நாள் நிகழ்வின் போது பாராட்டப்பட்ட திரு பார்த்திபன் அவர்கள்
http://www.onlykollywood.com/wp-content/gallery/sivaji-ganesan-86th-birthday-celebration-photos/375A8603.jpg
gkrishna
4th October 2014, 05:23 PM
Kamal Clicks Sivaji Ganeshan
http://www.tamilcinema24.com/photo-galleries/rare-photos-of-tamil-cinema/images/rare-photos-of-tamil-cinema11.jpg
madhu
4th October 2014, 06:01 PM
ராஜேஷ்ஜி
சின்னஞ்சிறு உலகம் என்ற கே.எஸ்.ஜியின் படம்.
மேஜிக் ராதிகா நாயகி. இவர் தன் தோழியருடன் பாடும்
புதுமைப் பெண்களடி
பூமிக்குக் கண்களடி
பாரதி சொன்னானே
கவி பாரதி சொன்னானே
என்ற அருமையான இசையரசியின் பாடல் ஒன்று உண்டு. கேட்டிருக்கிறீர்களா?
மதுஜி! வீடியோ ப்ளீஸ்.
இந்தப் பாடலின் வீடியோ யூடியூபில் இருந்து காபிரைட்ஸ் காரணங்களுக்காக நீக்கப்பட்டு விட்டது. வேறு எங்கேயும் கிடைக்கவில்லை. யாராவது விரைவில் தரவேற்றுவார்கள் என்று காத்திருப்போம்.
நாளை வரைக்கும் பொறுத்திருங்கள்.. புதுமைப் பெண்களைக் கொண்டு வந்து விடுகிறேன்.
madhu
4th October 2014, 06:06 PM
எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் மிக இனிய ஒரு பாடல்
படம் : அருணகிரி நாதர்
அம்மா தெய்வம் ஆனதுமே தெய்வம் அம்மா ஆகிவிடும்
http://youtu.be/05MQJJZrP5g
vasudevan31355
4th October 2014, 06:38 PM
மாலை மதுரம்
ஓ ஹோ ஹோ ஹோ
கோயா கோயா சாந்த்
குலா ஆஸ்மான்
ஆன்கோ மே சாரி ராத் ஜாயேகீ
தும்கோ பி கைசே நீந்த் ஆயேகீ
'காலா பஜார்' இந்திப் படத்தில் முகமது ரபியின் மறக்கவொண்ணா பாடல். தேவ்ஜி நடித்தது. வண்டி வண்டியாய் இனிமை கொட்டிக் கிடக்குது இப்பாட்டிலே. (குழந்தை மாதிரி சிரிக்கும் வஹிதா ரஹ்மான் ரொம்ப சுமாரான அழகுதான் இப்பாடலில்) கைகளை வீசாமல் அப்படியே வைத்தபடி நடந்து ஓடும் தேவ் ஆனந்த். (அமர்க்களம்) ஷைலேந்திராவின் பாடல் வரிகளுக்கு எஸ்.டி.பர்மன் இசை.
இயற்கை அழகு கொஞ்சும் பகுதிகளில் படமாக்கப்பட்ட இன்னிசைப் பாடல்.
O ho ho ho.... khoya khoya chand khula aasman
Aankho me saree rat jayegee, tumko bhee kaise nind aayegee
Oh oh.... khoya khoya chand khula aasman
Aankho me saree rat jayegee, tumko bhee kaise nind aayegee
Oh oh....... khoya khoya chand
Mastee bharee hawa jo chalee -2, khil khil gayee yeh dil kee kalee
Mann kee galee me hai khalbalee, ke unko toh bulao
O ho ho........ khoya khoya chand khula aasman
Aankho me saree rat jayegee, tumko bhee kaise nind aayegee
Oh oh.... khoya khoya chand
Tare chale, najare chale -2, sang sang mere woh sare chale
Charo taraf ishare chale, kisee ke toh ho jao
Oh ho ho.... khoya khoya chand khula aasman
Aankho me saree rat jayegee, tumko bhee kaise nind aayegee
Oh oh.... khoya khoya chand oh oh oh oh oh oh....
Aisee hee rat, bhigee see rat -2, hatho me hath hote woh sath
Keh lete unse dil kee yeh bat abb toh naa satao
Oh ho ho.... khoya khoya chand khula aasman
Aankho me saree rat jayegee, tumko bhee kaise nind aayegee
Oh oh.... khoya khoya chand
Ham mit chale jinke liye, ham mit chale hai jinke liye
Bin kuchh kahe woh chup chup rahe
Koyee jara yeh unse kahe, naa aise aajmao
Oh ho ho..... khoya khoya chand, khula aasman
Aankho me saree rat jayegee, tumko bhee kaise nind aayegee
Oh oh..... khoya khoya chand, khoya khoya chand.........
http://www.youtube.com/watch?v=oT9kqNvaUoQ&feature=player_detailpage
madhu
4th October 2014, 06:49 PM
வாசு ஜி...
புதுமைப் பெண்களடி வீடியோ இதோ
http://youtu.be/FkyDUTN1RWQ
vasudevan31355
4th October 2014, 06:55 PM
புதுமைப் பெண்களைக் கொண்டு வந்து விடுகிறேன்.
நன்றி மதுஜி. அருமை. இப்போதுதான் படத்தை எடுத்துப் போட்டு பாடல் நேரத்தைக் குறித்தேன். அதற்குள் நீங்கள் அழகாக பாடலை மட்டும் அளித்து விட்டீர்கள்.
பெண்களா இல்லை? என்ன செய்யல பெண்கள்? (அடேயப்பா என்ன கோபம்!)
கவிக்குயில் சரோஜினி
கணக்குக்கு சகுந்தலா
ஐ.நா தலைமை பதவியிலே
அமர்ந்தவள் விஜயலஷ்மி
கணவன் நிழலே மாளிகையாய்
கொண்டு காலத்தைக் கழித்தவள்
கஸ்தூரி பாய்
அன்னை கஸ்தூரி பாய்
தன் மானத்தை உயிரினும் மேலென பேணி
மரணத்தில் வாழ்ந்தவள் ஜான்சி ராணி
மதுரையை ஆண்டவள் மங்கம்மா
வீர மங்கையர் பரம்பரை எங்கம்மா
அந்த பரம்பரை வீரம் பார்வையில் ஏந்தி
பாரதம் ஆள்வது இந்திரா காந்தி
பெண்கள் புகழை வானளாவப் புகழும் பாடல்
vasudevan31355
4th October 2014, 07:18 PM
மாலை மதுரம்
'நேர்வழி' திரைப்படத்தில் ஒரு அபூர்வ பாடல். மக்கள் கலைஞரும், வாணிஸ்ரீயும் மலை அருவிகளில் ஆடிப் பாடுகிறார்கள். சுசீலாம்மா, டி.எம்.எஸ். குரல்களில்.
பட்டப் பகலில் வட்ட நிலவு
வந்ததும் எப்படியோ
அது பத்தரை மாற்று முத்திரை போட்டு
கொண்டதும் எப்படியோ
அது எப்படியோ
சுட்டும் விழிகள் கிட்ட அழைப்பில்
வந்தது வந்ததைய்யோ
சுடர் பட்டு சிவந்து பாவை உருவம்
கொண்டது கொண்டதைய்யோ
அது வந்தது வந்ததய்யோ
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=34vEH5nGCPE
vasudevan31355
4th October 2014, 07:23 PM
மாலை மதுரம்
வம்பு ஏன்?
ஜெய் பாடல் ஒன்று கொடுத்தால் ரவி பாடலும் ஒன்று கொடுத்து விடுவோம்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Ub5wSaPJVko
'டெல்லி மாப்பிள்ளை' படத்தில் ரவியும், ராஜஸ்ரீயும் பாடும் பாடல். அதே பாடகர் திலகம் பாடகியர் திலகம் குரல்களில்.
பாடாத பாடல் எது
இளம் பாவையர் பருவம் அது
மாறாத வண்ணம் எது
எழில் மங்கையர் கன்னமது
மங்கையர் கன்னமது
ஜெயா தொலைக்காட்சி புண்ணியத்தில்.
rajeshkrv
5th October 2014, 12:01 AM
வாசு ஜி, மதுண்ணா, எஸ் வி ஜி பாடல்களும் அபூர்வ படங்களும் அருமை.
vasudevan31355
5th October 2014, 06:33 AM
காலை வணக்கம் ராஜேஷ்ஜி
vasudevan31355
5th October 2014, 08:09 AM
எங்கள் தாய்
எங்கள் தாய்
எங்கள் தாய்
'தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும்'
சில பேருடைய குரலுக்கு உயிரை உருக்கும் சக்தி உண்டு. அது நம் மாமன்னருக்கு நிச்சயம் உண்டு. ரொம்ப கடினமான பாடல்தான். ஆனால் அற்புதம்.
http://www.youtube.com/watch?v=D7KU-tI4j1Q&feature=player_detailpage
vasudevan31355
5th October 2014, 08:18 AM
கிருஷ்ணா சார்!
இந்தக் கூத்தைப் பாருங்கள்.
'நாஸ்திகன்' திரைப்படப் பாடலான
'மா நிலம் மேல் சில மானிடரால்
என்ன மாறுதல் பாரய்யா'
பாடல் இங்கே 'நாக தேவதை' படத்தில் பி.பிஸ்ரீநிவாஸ் குரலில்
'பாவி என் தீவினை
மாய்ந்திட அருள்தரும்
பரம தயாநிதியே
ஹர ஹர சம்போ மஹாதேவா'
ஒலிப்பதைப் பாருங்கள்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=2zup5XcUXYg
rajeshkrv
5th October 2014, 08:21 AM
https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/10670081_855157294501945_1837317276679195488_n.jpg ?oh=2b9add2cc2d3ade67e03a2854067975d&oe=54BEA950&__gda__=1421801704_fc474fcab55ab73913fc36edba5001a d
rajeshkrv
5th October 2014, 08:23 AM
கிருஷ்ணா சார்!
இந்தக் கூத்தைப் பாருங்கள்.
'நாஸ்திகன்' திரைப்படப் பாடலான
'மா நிலம் மேல் சில மானிடரால்
என்ன மாறுதல் பாரய்யா'
பாடல் இங்கே 'நாக தேவதை' படத்தில் பி.பிஸ்ரீநிவாஸ் குரலில்
பாவி என் தீவினை
மாய்ந்திட அருள்தரும்
பரம தயாநிதியே
ஹர ஹர சம்போ மஹாதேவா
ஒலிப்பதைப் பாருங்கள்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=2zup5XcUXYg
அருமையான பாடல். ஆம் இது தெலுங்கு படத்தின் தமிழாக்கம்.
rajraj
5th October 2014, 08:24 AM
From Naastikan, Tamil dubbed version of Nastik (1954)(Hiindi)
Maanilmel Sila Maanidaraal Enna Maarudhal.........
http://www.youtube.com/watch?v=vAuyp_bEwyk
Dekh Tere Sansar Ki Haalat Kyo Ho Gayi Bhagwan........
http://www.youtube.com/watch?v=Zl0OqXbQzaM
The Hndi original was already posted by Krishna.
We sang this jugalbandhi only once. My friend from the north (border state) did not feel comfortable singing it ! :(
......................
Gopal.s
5th October 2014, 08:58 AM
எத்தனை வருஷம் ரெஸ்ட் கொடுத்தாலும் ,சுயமாக சிந்திக்க மாட்டேன் என்று சொல்லும் தன்மான சிங்கங்களை சீண்டியும் திருத்த முடியாது என்பதால் வரவேற்கிறேன். வாருங்கள். ஹிந்து,தினமலர்,கூகுள் இவற்றை புரட்டும் வேலை மிச்சம்.
வாருங்கள் கிருஷ்ணா.(ஜி வாங்கிய பட்டமல்ல என்பதால் தவிர்க்கிறேன்.)
என்னுடைய பிரிய வாசுவின் பதிவை cut paste செய்து அமுக்கியே துவங்கியிருக்கிறீர்கள்.எல்லோருடைய விருப்பமும் தங்கள் சொந்த சரக்கு மட்டுமே. (வாசு,சின்ன கண்ணன்,முரளி,மது உட்பட)புரிந்தததா?
vasudevan31355
5th October 2014, 09:01 AM
'ஜீவிதமோ சபலமோ
என் ஜீவிதமோ சபலமோ
என்று சுகம் மலருமோ
பிரேமை என்றால் மதுரமோ'
'அனார்கலி' தெலுங்கில் இருந்து தமிழ் பேசிய போது நமக்குக் கிடைத்த பாடல். இந்தப் பாடலும் இந்தியிலிருந்து இறக்குமதியானதுதான். ஹிந்தி, தெலுங்கு தமிழ்ப் படுத்தப் படும்போது அதற்கு எல்லோரும் அழைப்பது ஜிக்கி என்ற கிருஷ்ணவேணியைத்தான். இந்தப் பாடலும் அப்படியே. இதில் அனார்கலி அஞ்சலிதேவி. சலீம் நாகேஸ்வரராவ். இசை ஆதி நாராயண ராவ்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=YvQcOyK3Eoc
அதே 'அனார்கலி'(1953) இந்திப் படத்திலிருந்து. பிரதீப் குமார், பினாராய் நடித்த இப்படத்தின் லதா பாடிய பாடலான
'Yeh Zindagi Usi Ki Hai' (orijinal tune)
பாடல் பல மொழிகளிலும் ஹிட்டானது. இசை: சி.ராமச்சந்திரா
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Na2VxqcsvQo
அவ்வளவு ஏன்? ஒரிஜினல் தமிழ்ப்படமான நடிகர் திலகம் நடித்த 'கிருஷ்ணா' பிக்சர்ஸ் தயாரித்த 'காவேரி' படத்தில் பத்மினிக்காக ஜிக்கி பாடிய
'என் சிந்தை நோயும் தீருமா'
பாடலும் 'Yeh Zindagi Usi Ki Hai' பாடலைத் தழுவியதுதான். (இசையமைப்பு: ஜி.ராமநாதன் மற்றும் விஸ்வநாதன் ராமமூர்த்தி)
http://www.youtube.com/watch?v=ODjPNvmvHWM&feature=player_detailpage
ஒரே பாடல் பல மொழிகளில் எப்படியெல்லாம் விளையாடி இருக்கிறது!
rajraj
5th October 2014, 09:08 AM
Rajesh: Here is another song in the same tune as 'dekh tere sansar ki halat....' It was a popular tune in the 50s.
ananganai nikartha azhagane undhan aasai maravene........ by Jikki:
http://www.youtube.com/watch?v=01j-duTX0HA
There is another song in the same tune I am searching for. Transliteration is the problem ! :(
I think I posted more than my share of songs! :) See you later ! :)
RAGHAVENDRA
5th October 2014, 09:22 AM
பொங்கும் பூம்புனல்
மானிட இனம் காதலை வரவேற்கிறதோ இல்லையோ இயற்கை உவகை கொண்டாடுகிறதே காதலை..
டி.ஆர்.மகாலிங்கத்தின் மிக மிக மிக சிறந்த பாடல்களில் ஒன்று... அதுவும் எஸ்.ஜானகியின் குரல் இப்பாடலில் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது...
பாடலின் நடுவில் ஓடம் பயணிப்பது போலே தாளமின்றி மெட்டு இனிமையாக அமைக்கப்பட்டிருப்பது அருமையோ அருமை...
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அபூர்வ பாடல்..
என்னைப் பார் படத்திலிருந்து டி.ஜி.லிங்கப்பா இசையில்
http://play.raaga.com/tamil/browse/movies/year-1960-1961/popular/Ennai-Paar-T0001587
Gopal.s
5th October 2014, 09:24 AM
வாசு,
உன் பதிவுகளை நான் ரசிக்கும் விதமே வேறு. என்னுடைய பதிவு போலவே நேசிப்பேன். இரவு நடக்கின்றது என்னுடைய விருப்ப என் பதிவு போன்றதே.விருந்தினர்களுடன் முழு நாளும் சென்று விட்டதால் ,இன்றுதான் பார்க்க முடிந்தது.
பந்தயம் விசேஷம்.)எனது சிறு வயது ரிலீஸ் பட அனுபவங்கள் ,8 வயது வரை ஆத்தூர் (ஸ்ரீதர்,ஸ்வர்ணா ,ராமச்சந்திரா ),8 இலிருந்து 10 வயது வரை கடலூர் (நான் அவதரித்ததால் புண்ணியம் பெற்ற ஷேத்திரம்)நியூ சினிமா,முத்தையா,பாடலி,கமர் (கொஞ்சம் சென்று பாபு புதுசு),11 வயது முதல் 16 வயது வரை கும்பகோணம் (ஜுபிடர் ,விஜய லட்சுமி,டைமண்ட் ,ராஜா,நூர்மஹால்,(கடைசி கற்பகம்) சம்பந்த பட்ட இனிய நினைவுகள் சுமந்தது.இன்னும் நான் மிக மிக நெருக்கமாக,அணுக்கமாக நேசிக்கும் என் அன்னையின் பெற்றோர்கள் வெவ்வேறு கால கட்டங்களில் வசித்த ஊர்கள்.எங்களுக்கு விடுமுறையில் ஒரே நாதி.தாயார் ஒரே பெண்.தந்தையார் பக்கம் ஏராள உறவினர்கள் நூறுக்கும் மேற்பட்ட இருந்தும் பரிச்சயம் என் கல்லூரி நாட்களின் போது மட்டுமே சுமார் நெருக்கம் ஏற்பட்டது.
பந்தயம் பார்த்தது கடலூர் முத்தையாவில்.8 வயது சிறுவனாக.அப்போதே தனியாக தைரியமாக சினிமா செல்வேன். back bench என்று ஞாபகம்.(55 பைசாவோ,அறுபதோ நினைவில்லை).அதற்கு பிறகு இந்த படம் பார்த்த நினைவில்லை. மனதில் கிளைமாக்ஸ் காட்சி அவ்வளவு தங்கி விட்டது. காரணம் இந்த அபூர்வ பாடல்.நீங்கள் சொன்ன பிறகு கதையே ஒரு நிழல் போல என் நினைவின் அடுக்குகளில் இருந்து பீறிட்டெழுகிறது.என்னுடைய 8 வயது ஞாபங்களை மீட்டெடுக்கிறது. நீங்களும் அங்கே அப்போது இருந்திருக்க வாய்ப்புண்டு.(மதுரை சென்ட்ரல் இல் நானும் ,முரளியும் ஒரு காட்சியில் சந்திப்பை தவற விட்டு (மே 1972 ) 2012இல் 40 வருடம் கழித்தே சந்தித்தோம்.(உங்களையும் 1967 இல் தவற விட்டு 2012 இலேயே சந்தித்தேன்)
நல்ல வேளை வேலூர் போன்ற ஊர்களுக்கு சென்றதே இல்லையாகையால் ,வேண்டாத பழக்கங்கள் உருவாகவே வாய்ப்பில்லை.இன்று வரையும் இல்லை.
வாசு, அணு அணுவாக பாடலில் வாழ்ந்தேன்.
RAGHAVENDRA
5th October 2014, 09:27 AM
பொங்கும் பூம்புனல்
சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை என்று புலம்பும் இவர் ஒரு உண்மையை ஒத்துக் கொள்கிறார். தான் சொல்ல நினைப்பதைத் தன் கண் சொல்கிறதாம்..
காதலி என்ன சொல்கிறாள்.. இனிக்கும் கனவுகள் மறக்குமா எனக் கூறுகிறார்..
சபாஷ் மாப்பிளே படத்தில் திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் இசையரசியின் குரல்களில் அருமையான டூயட் பாடல்
மனதில் இருக்குது ஒண்ணு
http://play.raaga.com/tamil/browse/movies/year-1960-1961/popular/Sabash-Mappillai-T0001472
Gopal.s
5th October 2014, 09:27 AM
வா ராஜேஷ். நடிப்பரசர் படங்களில் இசையரசி பாடலுடன் துவங்கு. (என் விருப்பம் தாய் தந்த பிச்சையிலே,மனம் படித்தேன்,அன்னமிட்ட கைகளுக்கு)
RAGHAVENDRA
5th October 2014, 09:32 AM
பொங்கும் பூம்புனல்
மங்கைக்கு மாங்கல்யமே பாக்கியம்...
இது ஒரு மொழிமாற்றுப் படமாக இருக்கலாம்.. இசை மக்களால் அதிகம் அறியப்படாத ஜீவன் என்பவர்..
இப்படத்தில் ஏ.எம்.ராஜா ஜிக்கி பாடிய அபூர்வ பாடல்
http://play.raaga.com/tamil/browse/movies/year-1960-1962/popular/Mangaykku-Mangalyame-T0002206
rajeshkrv
5th October 2014, 09:41 AM
வாசு,
உன் பதிவுகளை நான் ரசிக்கும் விதமே வேறு. என்னுடைய பதிவு போலவே நேசிப்பேன். இரவு நடக்கின்றது என்னுடைய விருப்ப என் பதிவு போன்றதே.விருந்தினர்களுடன் முழு நாளும் சென்று விட்டதால் ,இன்றுதான் பார்க்க முடிந்தது.
பந்தயம் விசேஷம்.)எனது சிறு வயது ரிலீஸ் பட அனுபவங்கள் ,8 வயது வரை ஆத்தூர் (ஸ்ரீதர்,ஸ்வர்ணா ,ராமச்சந்திரா ),8 இலிருந்து 10 வயது வரை கடலூர் (நான் அவதரித்ததால் புண்ணியம் பெற்ற ஷேத்திரம்)நியூ சினிமா,முத்தையா,பாடலி,கமர் (கொஞ்சம் சென்று பாபு புதுசு),11 வயது முதல் 16 வயது வரை கும்பகோணம் (ஜுபிடர் ,விஜய லட்சுமி,டைமண்ட் ,ராஜா,நூர்மஹால்,(கடைசி கற்பகம்) சம்பந்த பட்ட இனிய நினைவுகள் சுமந்தது.இன்னும் நான் மிக மிக நெருக்கமாக,அணுக்கமாக நேசிக்கும் என் அன்னையின் பெற்றோர்கள் வெவ்வேறு கால கட்டங்களில் வசித்த ஊர்கள்.எங்களுக்கு விடுமுறையில் ஒரே நாதி.தாயார் ஒரே பெண்.தந்தையார் பக்கம் ஏராள உறவினர்கள் நூறுக்கும் மேற்பட்ட இருந்தும் பரிச்சயம் என் கல்லூரி நாட்களின் போது மட்டுமே சுமார் நெருக்கம் ஏற்பட்டது.
பந்தயம் பார்த்தது கடலூர் முத்தையாவில்.8 வயது சிறுவனாக.அப்போதே தனியாக தைரியமாக சினிமா செல்வேன். back bench என்று ஞாபகம்.(55 பைசாவோ,அறுபதோ நினைவில்லை).அதற்கு பிறகு இந்த படம் பார்த்த நினைவில்லை. மனதில் கிளைமாக்ஸ் காட்சி அவ்வளவு தங்கி விட்டது. காரணம் இந்த அபூர்வ பாடல்.நீங்கள் சொன்ன பிறகு கதையே ஒரு நிழல் போல என் நினைவின் அடுக்குகளில் இருந்து பீறிட்டெழுகிறது.என்னுடைய 8 வயது ஞாபங்களை மீட்டெடுக்கிறது. நீங்களும் அங்கே அப்போது இருந்திருக்க வாய்ப்புண்டு.(மதுரை சென்ட்ரல் இல் நானும் ,முரளியும் ஒரு காட்சியில் சந்திப்பை தவற விட்டு (மே 1972 ) 2012இல் 40 வருடம் கழித்தே சந்தித்தோம்.(உங்களையும் 1967 இல் தவற விட்டு 2012 இலேயே சந்தித்தேன்)
நல்ல வேளை வேலூர் போன்ற ஊர்களுக்கு சென்றதே இல்லையாகையால் ,வேண்டாத பழக்கங்கள் உருவாகவே வாய்ப்பில்லை.இன்று வரையும் இல்லை.
வாசு, அணு அணுவாக பாடலில் வாழ்ந்தேன்.
கோபாலரே வருக வருக... பந்தயம் பாடல்களை நீங்கள் ரசித்த விதம் அருமை. அதை பற்றி அழகாக எழுதியுள்ளீர்.
JamesFague
5th October 2014, 09:52 AM
Melody from the movie Oru Kodiyil Iru Malargal.
http://youtu.be/WqaqJuqASxI
vasudevan31355
5th October 2014, 09:52 AM
சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை
திரி நண்பர்கள் பல பேருக்கு அதே நிலைமை ராகவேந்திரன் சார்.:)
vasudevan31355
5th October 2014, 09:55 AM
நல்ல வேளை வேலூர் போன்ற ஊர்களுக்கு சென்றதே இல்லையாகையால் ,வேண்டாத பழக்கங்கள் உருவாகவே வாய்ப்பில்லை.இன்று வரையும் இல்லை.
'கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும் சுடலை மாட சாமி' :)
JamesFague
5th October 2014, 09:56 AM
Enjoy the song from the movie Sathurangam with the music by V Kumar Starring Rajnikanth
http://youtu.be/otCM5zbzABc
JamesFague
5th October 2014, 10:10 AM
Melody Queen P Susheela song from the movie Moondru Deivangal.
http://youtu.be/S8Rqi4SAkAI
JamesFague
5th October 2014, 10:14 AM
One more song of melody queen from the movie Lakshmi Kalyanam.
http://youtu.be/87V-TvibPfI
vasudevan31355
5th October 2014, 10:34 AM
ஆகா! ராகவேந்திரன் சார் பிடித்தீர்கள் பாருங்கள் 'மங்கைக்கு மாங்கல்யமே பாக்கியம்' என்ற அபூர்வ படத்தின் பாடலை.
அதுவும் ஊர் பேர் தெரியாத ஜீவன் என்ற இசையமைப்பாளரின் இசையில்.
மனிதர் சும்மா சொல்லக் கூடாது
மல்லிகைப் பூச்செண்டு பார் அத்தான்
மல்லிகைப் பூச்செண்டு பார் அத்தான்
எனதாசை எண்ணங்கள் நிறைவானதத்தான்
என்று ஜிக்கியையும் ராஜாவையும் துள்ளலோடு பாட வைத்து அசத்தியிருக்கிறாரே.
ஜிக்கி கலக்கி விட்டார். அதுவும்
'மல்லிகைப் பூச்செண்டு பார் அத்தான்'
வரியை 4 முறை வெவ்வேறு விதமாக உச்சரித்து பாடும் அழகை என்ன சொல்வது!
மதுஜி! ராஜேஷ்ஜி
அவசியம் கேட்டு மகிழ வேண்டிய பாடல்.
http://play.raaga.com/tamil/browse/movies/year-1960-1962/popular/Mangaykku-Mangalyame-T0002206
http://www.inbaminge.com/t/m/Mangaikku%20Mangalyame/
Richardsof
5th October 2014, 10:48 AM
'கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும் சுடலை மாட சாமி' :)
வாசு சார்
நல்ல வேளை . கோபால் வேலூர் பார்க்கவில்லை .ஒரு வேளை வேலூர் வந்திருந்தால் நீங்கள் கோபாலை இழந்திருப்பீர்கள்.
vasudevan31355
5th October 2014, 10:58 AM
வாசு சார்
நல்ல வேளை . கோபால் வேலூர் பார்க்கவில்லை .ஒரு வேளை வேலூர் வந்திருந்தால் நீங்கள் கோபாலை இழந்திருப்பீர்கள்.
அப்ப நான்தான் மாட்டினேன் அப்படின்னு சொல்றீங்களா?:)
rajeshkrv
5th October 2014, 10:58 AM
jikkiyin uruttal enakkum migavum pidikkum vasu ji
Richardsof
5th October 2014, 11:02 AM
என்னிடம் சிக்கியிருந்தால் இந்த கோபாலை செம்மை படுத்தி நீங்கள் எல்லோரும் கொண்டாடும் விதமாக ''அவன்தான் மனிதன் '' என்று சொல்லும் அளவிற்கு மாற்றியிருப்பேன் .:exactly::exactly::exactly::exactly::exactly::exa ctly:
vasudevan31355
5th October 2014, 11:04 AM
ஆமாம்ஜி! சிஸ்டத்தில் மல்லிகைப் பூதான் மணம் வீசிக் கொண்டிருக்கிறது இடைவிடாமல் காலையில் இருந்து. செம சூப்பர்ஜி. ராகவேந்திரன் சாருக்கு ஒரு பெரிய நன்றி!
vasudevan31355
5th October 2014, 11:05 AM
என்னிடம் சிக்கியிருந்தால் இந்த கோபாலை செம்மை படுத்தி நீங்கள் எல்லோரும் கொண்டாடும் விதமாக ''அவன்தான் மனிதன் '' என்று சொல்லும் அளவிற்கு மாற்றியிருப்பேன் .:exactly::exactly::exactly::exactly::exactly::exa ctly:
இல்லை இல்லை. நீங்கள் 'என்னைப் போல் ஒருவன்' ஆகி இருப்பீர்கள்.:)
RAGHAVENDRA
5th October 2014, 11:06 AM
பொங்கும் பூம்புனல்
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன... சத்திரங்களில் நடத்தப்படுகின்றன... என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். திருமணம் என்பது இரு மனங்களால் நிச்சயிக்கப்படுவது தான் உண்மை. நேரம் காலம் ஏதும் தேவையில்லை.. இரு மனம் கலந்தால் திருமணம்.. இங்கே பாருங்கள் மாமா பிள்ளை மாப்பிள்ளை மாலையிட்டான் தோப்பிலே யென இவர்கள் சந்தோஷத்தோடு கல்யாணத்தைக் கொண்டாடுவதை..
டி.எஸ்.துரைராஜின் சொந்தத் தயாரிப்பான ஆயிரங்காலத்துப் பயிர் திரைப்படத்திற்காக திரையிசைத்திலகம் இசையில் டி.எம்.எஸ். எஸ்.ஜானகி குரல்களில் மறக்க முடியாத கிராமிய பாடல்..
ஏவி.எம்.ராஜனை அறிமுகப் படுத்திய படம் இது என்பது கூடுதல் தகவல்.
http://play.raaga.com/tamil/browse/movies/year-1960-1963/popular/Ayiram-Kalathu-Payir-T0001521
vasudevan31355
5th October 2014, 11:08 AM
என்னிடம் சிக்கியிருந்தால் இந்த கோபாலை செம்மை படுத்தி நீங்கள் எல்லோரும் கொண்டாடும் விதமாக ''அவன்தான் மனிதன் '' என்று சொல்லும் அளவிற்கு மாற்றியிருப்பேன் .:exactly::exactly::exactly::exactly::exactly::exa ctly:
அப்ப நாங்க கண்டிச்சு வளர்க்கலன்னு அர்த்தம் ஆகுதே! என்னடா இந்த 'மதுர'த்துக்கு வந்த சோதனை?!:)
vasudevan31355
5th October 2014, 11:11 AM
ராகவேந்திரன் சார்,
'மல்லிகைப் பூ' மணம் கொஞ்சமும் வாடவில்லை. அதற்குள் 'ஆயிரங் காலத்துப் பயிரா'? நீங்கள் அளிக்கும் பொங்கும் பூம்புனளைக் கேட்டு மகிழ 'நேரம் காலம் ஏதும் தேவையில்லை' நம் 'இரு மனம் கலந்தால்' நடிகர் திலகமும், இசையும் மட்டுமே.
Richardsof
5th October 2014, 11:11 AM
:exactly::exactly::exactly:
Gopal.s
5th October 2014, 11:16 AM
அப்ப நாங்க கண்டிச்சு வளர்க்கலன்னு அர்த்தம் ஆகுதே! என்னடா இந்த 'மதுர'த்துக்கு வந்த சோதனை?!:)
அட பாவி , தெய்வம், வாழ்க வாழ்க என்பதை தவிர வேறு எதுவும் அறியாத மூளை வளர்ச்சியற்ற நல்லவர்களில் ஒருவனாக என்னை மாற்றுவதில் அவ்வளவு அக்கறையா உனக்கு!!!????:-:-d
vasudevan31355
5th October 2014, 11:24 AM
அட பாவி , தெய்வம், வாழ்க வாழ்க என்பதை தவிர வேறு எதுவும் அறியாத மூளை வளர்ச்சியற்ற நல்லவர்களில் ஒருவனாக என்னை மாற்றுவதில் அவ்வளவு அக்கறையா உனக்கு!!!????:-:-d
கோ, தெய்வம் இருப்பது 'இங்கே'!:)
vasudevan31355
5th October 2014, 11:36 AM
ராகவேந்திரன் சார்,
'கட்டுக் காளை சிக்கிகிச்சாம்
தொட்டுத் தாலி கட்டிகிச்சாம்'
பட்டுப் பொண்ணு பட்டுகிட்டா
கெட்டு பொண்ணு சிக்கிகிட்டா
'ஆயிரங் காலத்துப் பயிரி'ன் அபூர்வ பாடல்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=hXRICtt0k-8
RAGHAVENDRA
5th October 2014, 11:38 AM
பொங்கும் பூம்புனல்
Vasu Sir
எம்.எல்.வசந்தகுமாரி அவர்கள் பாடிய காலத்தால் அழியாத பாடல், காலத்துக்கும் ஏற்ற பாடல்..
http://www.inbaminge.com/t/m/Mamiyar%20Mechiya%20Marumagal/
vasudevan31355
5th October 2014, 11:39 AM
ராகவேந்திரன் சார் அளித்த ஆடியோ பாடலின் வீடியோ வடிவம்
மாமா பிள்ள மாப்பிள்ள
மாலையிட்டான் தோப்பில
'ஆயிரங் காலத்துப் பயிரி'ன் பாடல்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=897yYx6SOW8
RAGHAVENDRA
5th October 2014, 11:42 AM
பொங்கும் பூம்புனல்
ஆஹா.. கேட்கத் திகட்டாத மதுர கானம்.. எம்.எல்.வி.அவர்களின் தேன்குரலில்...
வண்ணத்தமிழ் சொர்ணக்கிளி வாய் திறந்தாள்..
திரை இசைத்திலகம் இசையில் உடுமலை நாராயண கவியின் வரிகள் காவேரியின் கணவன் திரைப்படத்திலிருந்து..
http://play.raaga.com/tamil/browse/movies/year-1950-1958/popular/Kaveriyin-Kanavan-T0002173
vasudevan31355
5th October 2014, 11:47 AM
ராகவேந்திரன் சார் இன்னைக்கு ஒரு வழி பண்ணி விடுவது என்று முடிவு செய்து விட்டது போல் தெரிகிறது.
ரெங்கா! ரெங்கா! ரெங்கா!
RAGHAVENDRA
5th October 2014, 11:48 AM
பொங்கும் பூம்புனல்
வாசு சார் உடனுக்குடன் வீடியோவினை அளித்து ஆனந்தப் படுத்துகிறீர்கள்... மிக்க நன்றி...
தொடர்ந்து..
ராதா ஜெயலக்ஷ்மி, பி.லீலா குரல்களில் வித்தியாசமாக வேதா அவர்களின் கர்நாடக இசையமைப்புப் பாடல்...
மணமாலை படத்திலிருந்து...
http://play.raaga.com/tamil/browse/movies/year-1950-1958/popular/Manamalai-T0002200
பாடலில் ஒலிக்கும் ஜதி கவனிக்கத்தக்கது. அது மட்டுமின்றி இன்னும் ஒரு வித்தியாசமாக, ஹம்மிங்கில் ஆ... என்று ஆரம்பித்து அதை அப்படியே பல்லவியின் முதல் வார்த்தையாகத் தொடர வைத்துள்ள உத்தி..
அருமையான பாடல்
http://play.raaga.com/tamil/browse/movies/year-1950-1958/popular/Manamalai-T0002200
RAGHAVENDRA
5th October 2014, 11:52 AM
பொங்கும் பூம்புனல்
இன்றைய பொழுதைத் துள்ளல் மயமாக்கும் பாடல்.. கேட்ட உடனே எழுந்து ஆட வைக்கும்.. எப்பேர்ப்பட்ட சிடுமூஞ்சியையும் ஆடவைக்கும் பாடல்.. இன்றைய குத்துப் பாட்டுக்கெல்லாம் முன்னோடி.. ஆனால் இதில் ஒரு அர்த்தமிருக்கும்.. இனிமைய இருக்கும்.. உணர்விருக்கும்...
சீர்காழி கோவிந்தராஜன் இசையரசியின் குரலில் திரை இசைத்திலகம் இசையில் ... சூப்பர் டூப்பர் பாட்டு பிள்ளைக்கனியமுது படத்திலிருந்து.
முடிகிறதே என நீங்கள் வருத்தப்படுவது நிச்சயம்.
http://play.raaga.com/tamil/browse/movies/year-1950-1958/popular/Pillaikkani-Amudhu-T0002308
RAGHAVENDRA
5th October 2014, 11:55 AM
பொங்கும் பூம்புனல்
சந்தனப் பொட்டு வெச்சு சொந்த மச்சான் வந்திருக்கும் போது அவளுக்கு அக்கரையில் என்ன வேலை.. உடனே அவனுடன் சேர வேண்டியது தானே...
ஓடுகிற தண்ணியிலே... ஒரசி விட்டேன் சந்தனத்தை... ஆஹா... பாட்டுன்னா இது அல்லவோ...
திரையிசைத் திலகத்தின் நாட்டுப்புற மெட்டுகள் என்றாலே அதை மிஞ்ச இன்னொருவன் பிறந்து தான் வரணும்...
அதே போல் சீர்காழியின் வெண்கலக் குரலும்...
கேளுங்கள்.. இசையரசியின் அட்டகாசமான பாட்டை...
http://play.raaga.com/tamil/browse/movies/year-1950-1958/popular/Pillaikkani-Amudhu-T0002308
vasudevan31355
5th October 2014, 12:12 PM
பொங்கும் பூம்புனல்
சந்தனப் பொட்டு வெச்சு சொந்த மச்சான் வந்திருக்கும் போது அவளுக்கு அக்கரையில் என்ன வேலை.. உடனே அவனுடன் சேர வேண்டியது தானே...
ஓடுகிற தண்ணியிலே... ஒரசி விட்டேன் சந்தனத்தை... ஆஹா... பாட்டுன்னா இது அல்லவோ...
திரையிசைத் திலகத்தின் நாட்டுப்புற மெட்டுகள் என்றாலே அதை மிஞ்ச இன்னொருவன் பிறந்து தான் வரணும்...
அதே போல் சீர்காழியின் வெண்கலக் குரலும்...
கேளுங்கள்.. இசையரசியின் அட்டகாசமான பாட்டை...
இந்தப் பாடலை காணொளி வடிவில் கண்டு மகிழலாம்.
http://www.youtube.com/watch?v=cCxTeBdpw9g&feature=player_detailpage
gkrishna
5th October 2014, 12:26 PM
எத்தனை வருஷம் ரெஸ்ட் கொடுத்தாலும் ,சுயமாக சிந்திக்க மாட்டேன் என்று சொல்லும் தன்மான சிங்கங்களை சீண்டியும் திருத்த முடியாது என்பதால் வரவேற்கிறேன். வாருங்கள். ஹிந்து,தினமலர்,கூகுள் இவற்றை புரட்டும் வேலை மிச்சம்.
வாருங்கள் கிருஷ்ணா.(ஜி வாங்கிய பட்டமல்ல என்பதால் தவிர்க்கிறேன்.)
என்னுடைய பிரிய வாசுவின் பதிவை cut paste செய்து அமுக்கியே துவங்கியிருக்கிறீர்கள்.எல்லோருடைய விருப்பமும் தங்கள் சொந்த சரக்கு மட்டுமே. (வாசு,சின்ன கண்ணன்,முரளி,மது உட்பட)புரிந்தததா?
காலை மற்றும் மதிய வணக்கம்
வாசு சார்
நாஸ்திகன் பட பாடலுக்கு நன்றி
வேந்தர் சார்
பொங்கும் பூம்புனல் பாடல்கள் அனைத்தும் அருமை அதற்கு வாசு அவர்களின் உடனடி நிவராணம் (அம்ருதாஞ்சன் :)) விடியோ பாடல்களை சொன்னேன்
ராஜேஷ் சார்
வணக்கம்
எஸ்வி சார்
இன்றைய ஆவணங்கள் இன்னும் பதிவு வரவில்லேயே ?
எல்லாவற்றிகும் மேலாக வரவேற்ற கோபால் ஜி அவர்களுக்கு தன்மான சிங்கம் கிருஷ்ணாவின் நன்றி.
vasudevan31355
5th October 2014, 12:32 PM
பொங்கும் பூம்புனல்
இன்றைய பொழுதைத் துள்ளல் மயமாக்கும் பாடல்.. கேட்ட உடனே எழுந்து ஆட வைக்கும்.. எப்பேர்ப்பட்ட சிடுமூஞ்சியையும் ஆடவைக்கும் பாடல்.. இன்றைய குத்துப் பாட்டுக்கெல்லாம் முன்னோடி.. ஆனால் இதில் ஒரு அர்த்தமிருக்கும்.. இனிமைய இருக்கும்.. உணர்விருக்கும்...
சீர்காழி கோவிந்தராஜன் இசையரசியின் குரலில் திரை இசைத்திலகம் இசையில் ... சூப்பர் டூப்பர் பாட்டு பிள்ளைக்கனியமுது படத்திலிருந்து.
முடிகிறதே என நீங்கள் வருத்தப்படுவது நிச்சயம்.
'பிள்ளைக்கனியமுது' படத்திலிருந்து
'காக்காய்க்கும் காக்காய்க்கும் கல்யாணமாம்'
கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்'
'சித்திரைத் திருநாளாம் மருதையிலே
நாம சுத்தி சுத்தி பார்த்திடலாம் குருதையிலே'
எஸ்.எஸ்.ஆர், ஈ.வி.சரோஜாவின் பொய்க்கால் குதிரை ஆட்டம்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Gckc63eLJ5s
vasudevan31355
5th October 2014, 12:36 PM
கிருஷ்ணா சார்!
ஞாயிறு காலை வணக்கம். வாங்க வாங்க என் வாய் நிறைய வரவேற்கும்
வாசுதேவன்.
gkrishna
5th October 2014, 12:38 PM
அந்த காலங்களில் மகாபாரத கதை சொல்கிறேன் என்று ப்ரம்ஹஸ்ரீ ப்ரம்ஹசாரி ...... என்று ஒருவர் ஊர் ஊராக சென்று 'மக்களே கல்யாணம் பண்ணிகாதீங்க ப்ரம்ஹசாரியாக வாழுங்க திருந்துங்க இல்லையேல் நீங்கள் உருப்பட மாட்டர்கள்' என்று பிடி சாபம் கொடுத்து விட்டு வேறு ஊருக்கு சென்று அங்காவது மகாபாரத கதை சொல்கிறாரா என்று பார்த்தால் அங்கும் இது போன்று சாபத்தை கொடுத்து விட்டு இறுதியில் என்ன ஆனார் என்று பார்த்தால் கல்யாணம் செய்து கொண்டு 'குடியும்' குடித்தனமாக வாழ்ந்து நிம்மதியாக இருக்கிறார் .:)
gkrishna
5th October 2014, 12:39 PM
எல்லா பதிவர்களுக்கும் ஒரு சின்ன வேண்டுகோள்
இங்கே நான் கட் அண்ட் பேஸ்ட் பதிவு போடுவதில் திரு கோபால் அவர்களுக்கு உடன்பாடு இல்லை அது போல் வேறு சிலருக்கும் உடன்பாடு இல்லை என்று திரு கோபால் இன்று பதிவு இட்டுருக்கிறார் .இதுவாவது பரவாய் இல்லை 30/09/14 அன்று நான் இடும் பதிவுகள் எல்லாம் 'நரிக்குறவன் வாந்தி எடுத்த மாதிரி ' இருக்கு என்றும் மதுர கானம் பாகம் இரண்டு பலவீனம் ஆவதற்கு என்னுடைய பதிவுகள் காரணம் ஆகிவிட்டது என்று சொல்லி இருக்கிறார் .நிறைய சொந்த பதிவுகள் போட்டு உள்ளேன் இரண்டாவது பாகத்திலும் .
உண்மையில் நான் போடும் பதிவுகள் உங்களுக்கு ஏற்பு உடையது என்றால் தொடருகிறேன். இல்லையேல் விலகி கொள்ள தயாராக உள்ளேன் . தயவு செய்து இது மிரட்டல் அல்ல என்னுடைய வேண்டுகோள் தான். ஏற்கனவே திரு கோபு அவர்களும்,திரு எஸ்வி அவர்களும்,திரு ராஜேஷ் அவர்களும் தங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இல்லை என்று சொல்லி உள்ளார்கள் . இன்று திரு கோபால் அவர்கள் வாசு,முரளி,,சின்ன கண்ணன்,மது உட்பட என்று நால்வரின் பெயரை சொல்லி சொந்த சரக்கு தான் வேண்டும் இரவல் சரக்கு வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார் . என்னால் எதை தர முடியுமோ அதை தான் தர முடியும். இந்த திரிக்கு வருவதே ஒரு நல்ல மனதை கவரும் மலரும் நினைவுகளுக்கு ஆக தான். இங்கும் வந்து stress தான் மிச்சம் என்றால் அந்த stress தேவை இல்லை தானே ?
மேலே உள்ள அனைத்தும் எனது சொந்த கருத்துகள் தான் . தமிழ் சங்கதியில் நானே டைப் அடித்தது
gkrishna
5th October 2014, 12:43 PM
வாசு சார்
அருமையான பாடல்களை நீங்களும் ராகவேந்தர் அவர்களும் வழங்கி இருக்கிறீர்கள் இன்று . இனிமேல் தான் ஒன்று ஒன்றாக கேட்கவேண்டும் .
கேட்டு விட்டு கருத்தை பதிவிடுகிறேன்
vasudevan31355
5th October 2014, 12:48 PM
வண்டிப் பாடல்
காரு சவாரி ஜோரு
கையாலே தீண்டிடாமே பேசிடுங்க சாரு
டிரைவரு சாரு
கையாலே தீண்டிடாமே பேசிடுங்க சாரு
டி.ஆர்.ராமச்சந்திரனும், பத்மினி பிரியதர்ஷினியும் காரில் பயணித்து பாடும் உற்சாகப் பாடல்.
'விடிவெள்ளி' திரைப்படத்தில்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=maQyYMw_8J4
vasudevan31355
5th October 2014, 12:51 PM
நன்றி கிருஷ்ணா சார்!
நீங்கள் வருத்தப்பட வேண்டாம். தொடருங்கள். இதையெல்லாம் தாண்டித்தான் பலர் இங்கு வந்துள்ளோம். தங்கள் மனம் புண்பட்டிருப்பது தெரிகிறது. நண்பர்கள் அனைவருக்கும் நீங்கள் தொடர வேண்டும் என்பதே விருப்பம்.
vasudevan31355
5th October 2014, 01:02 PM
'மாங்கலய பாக்கியம்'. 1958 ல் வெளிவந்த படம். இந்தப் படத்தில் மிக அபூர்வ பாடல் ஒன்று. விடுமுறை நாளில் அந்தக் கால அமிர்தப் பாடல்களைக் கேட்டு மகிழுங்கள்.
மாயமாகிய ஜாலம் தனிலே
வந்த மாது நானே உடனே மாறும் எந்தன்
உருவமாகுமே
ஆசையால் எனை யாரும் தொட்டால்
அருவமாகும்தானே
ஆனால் ஆடல் பாடல் எல்லாம் செய்குவேன்.
http://www.youtube.com/watch?v=oXc_R2AzDyo&feature=player_detailpage
gkrishna
5th October 2014, 01:07 PM
நன்றி வாசு சார்
என் பதிவு உங்களை காயபடுத்தி இருந்தால் மன்னிக்கவும் . நிச்சயம் உங்கள் பாடல் தொகுப்புகளை ரசிக்கிறேன்
gkrishna
5th October 2014, 01:10 PM
vaasu sir
விஸ்வநாதன் ராமமூர்த்தி பற்றி திரு ஆரூர் தாஸ் தின தந்தி பத்திரிகையில் வெளியிட்டு இருந்த கருத்தை ஓட்டி ஒரு ஐயப்பாடு எழுந்தது அதை வெளியிட்டு இருந்தேன் . அவர்களது முதல் படம் ஜெனோவா என்று அதில் சொல்லி உள்ளார் . அவர்களது முதல் படம் பணமா(1952) ? அல்லது ஜெனோவா(1953) வா
vasudevan31355
5th October 2014, 02:08 PM
இன்றைய ஸ்பெஷல் (87)
இன்றைய ஸ்பெஷலில் அன்றைய சூப்பர் ஹிட் பாடல் ஒன்று.
படம்: ஓர் இரவு (1951)
http://upload.wikimedia.org/wikipedia/commons/a/aa/Or_Iravu_Poster.jpg
நடிகர்கள்: கே.ஆர்.ராமசாமி, நாகேஸ்வரராவ், பாலையா, டி.கே.சண்முகம், லலிதா.
பாடல் : கு.ம.பாலசுப்ரமணியம்
பாடியவர்: எம்.எல்.வசந்த குமாரி
இசை: ஆர்.சுதர்சனம்
தயாரிப்பு: ஏ.வி.எம்.
இயக்கம்: ப.நீலகண்டன்
பேரறிஞர் அண்ணா ஒரே இரவில் எழுதத் தந்த திரைக்கதை.
http://www.thehindu.com/multimedia/dynamic/00273/24cp_oruiravu_jpg_273763f.jpg
நயவஞ்சகக் கூட்டத்திற்கு நயமாக புத்தி சொல்லும் பாடல். நாடகம் ஒன்றில் 'குறத்தி' வேடம் கொண்ட பெண் பாடும் அற்புத நாட்டுப்புற கானம். எளிமையான வரிகளில் பணத்திமிர் பிடித்த நரிகளின் குணத்தை காட்டிலுள்ள நரிகளுடன் ஒப்பிட்டு 'அதைக் காட்டிலும் இது எவ்வளவோ தேவலை' என்று உரைக்கும், தோலுரிக்கும் பாடல். எம்.எல்.வியின் இனிமையான குரலில்.
1950-ல் வெளிவந்த 'சமாதி' இந்தித் திரைப்படத்தில் வெளிவந்த மிகப் புகழ் பெற்ற பாடலான 'Gore gore o baanke chhore' என்ற பாடலின் (இசை சி.ராமச்சந்திரா) அப்பட்டமான தழுவலாக இப்பாடல் இருந்தாலும் எம்.எல்.வசந்தகுமாரியின் ஈடு இணையற்ற குரல் வளத்தால் இப்பாடல் ஒரிஜினல் இந்தி பாடலைத் தூக்கி ஏப்பம் விட்டு விட்டது.
அதுவும் 'ராய்யா' என்ற தெலுங்கு வார்த்தையும், 'வாய்யா' என்ற தமிழ் வார்த்தையும் அதற்கு ஈடான 'யூ கம்மய்யா' என்ற வார்த்தையும் கலந்த ஒரு அற்புதக் கலைவையாக இப்பாடல் அமைந்தது ஒரு தனிச் சிறப்பு.
அதுவரை துண்டு துக்கடா வேடங்களில் நடித்து வந்த லட்சுமி காந்தம் என்ற நடன நடிகை இந்த குறத்தி நடனப் பாடலின் மூலம் உன்னதப் புகழை அடைந்தார்.
இனி பாடலின் வரிகள்.
http://i.ytimg.com/vi/tg-T9_RhHSs/hqdefault.jpg
ஓ... சாமி
ஐயா சாமி
ஆவோஜி சாமி
அய்யா ராய்யா வாய்யா யூ கம்மய்யா
ஐயா சாமி
ஆவோஜி சாமி
நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ
ஐயா சாமி
ஆவோஜி சாமி
அய்யா ராய்யா வாய்யா யூ கம்மய்யா
ஐயா சாமி
ஆவோஜி சாமி
நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ
ஐயா சாமி
ஓ..ஐயா சாமி
கோழி ஆட்டைப் பிடிக்கும் எங்க குள்ள நரி
ஏழை ரத்தம் குடிக்கும் இங்க உள்ள நரி
பல் இளித்துக் காட்டி
பட்டம் பதவி தேடி
கட்சி பேரைச் சொல்லி ஊரை ஏமாற்றிடும்
ஐயா சாமி
ஆவோஜி சாமி
ஐயா ராய்யா வாய்யா யூ கம்மய்யா
ஐயா சாமி
ஆவோஜி சாமி
நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ
வேட்டையாடிப் பிழைக்கும் எங்க காட்டு நரி
மூட்டை கட்டிப் பதுக்கும் உங்க நோட்டு நரி
வேலை ரொம்ப வாங்கும்
கூலி தர ஏங்கும்
பட்டினியைப் பார்த்தும் புளி ஏப்பம் விடும்
ஐயா சாமி
ஆவோஜி சாமி
ஐயா ராய்யா வாய்யா யூ கம்மய்யா
ஐயா சாமி
ஆவோஜி சாமி
நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ
ஐயா சாமி
ஓ... ஐயா சாமி
காட்டில் உள்ள நரி ரொம்ப நல்லதுங்க
உங்க நாட்டிலுள்ள நரி ரொம்பப் பொல்லாதுங்க
குள்ள நரிக் கொம்பை
கோர்த்துப் போடு சாமி
குள்ள நரிக் கொம்பை
கோர்த்துப் போடு சாமி
புள்ளை குட்டிக்காச்சும்
நல்ல புத்தி வரும்
ஐயா சாமி
ஆவோஜி சாமி
ஐயா ராய்யா வாய்யா யூ கம்மய்யா
ஐயா சாமி
ஆவோஜி சாமி
நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ
http://www.youtube.com/watch?v=DRCEp2ebzZY&feature=player_detailpage
'சமாதி' இந்தித் திரைப்படத்தில் வெளிவந்த மிகப் புகழ் பெற்ற பாடலான 'Gore gore o baanke chhore' பாடல். (original)
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Co42dt6HY8Q
gkrishna
5th October 2014, 02:18 PM
வாசு சார்
ஜெயா மொவீஸ் தொலைகாட்சியில் ராஜா
கலக்கல் ரந்தாவா தலைவர் fight ஓடி கொண்டு இருக்கிறது
gkrishna
5th October 2014, 02:40 PM
டியர் வாசு சார்
ஓர் இரவு எம் எல் வீ யின் அற்புத பாடல் எழுப்பிய சில நினைவலைகள்
அறிஞர் அண்ணா.நெட் வலைப்பூவில் இடம் பெற்று இருந்த ஒரு நல்ல கட்டுரை
அண்ணாவும் நடிப்பிசைப்புலவரும்
கே.ஆர்.ஆர்.கல்யாணி ராமசாமி
1944-ல் கலைவாணர் அவர்களின் அன்பு அரவணைப்பில் இருந்த கே.ஆர்.ஆருக்காக ஒரு நாடகக் கம்பெனியை வாங்கி என்.எஸ்.கே.நாடகசபா என்ற பெயரில் கே.ஆர்.ஆரின் மேற்பார்வையில் ஒற்றைவாடைத் தியேட்டரில் சிறப்பாக நாடகங்கள் நடந்து வந்த நேரம். ஒரு சிலரின் சூழ்ச்சியால் கலைவாணரும் தியாகராஜ பாகவதரும் ஜெயிலுக்குப்போகும் நிலை ஏற்பட்டது.
நாடகம் தொடர்ந்து நடந்து வந்தது. நானும் இதில் நடித்து வந்தேன். அண்ணா நாடகம் பார்க்க அடிக்கடி வருவார். நாடகம் முடிந்ததும் உள்ளே (ஸ்டேஜ்) வந்து கே.ஆர்.ஆரிடம் பேசிவிட்டுப் போவார். அண்ணாவின் வேலைக்காரி நாடகத்தை என்.எஸ்.கே. நாடக சபாவில் கொடுத்திருந்ததார் அண்ணா. இந்த நிலையில் நாடகக் கம்பெனியின் நிர்வாக முறையில் சில மாற்றங்கள் எற்பட்டதால் எல்லோரும் ஒரு குழப்பமான நிலையில் இருந்தார்கள். இதனால் தான் இந்தக் கம்பெனியிலிருந்து விலகுவதாக கே.ஆர்.ஆர். முடிவு செய்து கையெழுத்திட்டு வெளியேறினார். வரும்போதே அண்ணா எழுதிய வேலைக்காரி நாடகத்தையும் வாங்கி வந்துவிட்டார்.
கே.ஆர்.ஆரைப் பின்பற்றி உடனிருந்த நடிகர்கள் மேனேஜர், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் என்ற சுமார் 50 பேர்கள் முக்கியமானவர்கள் எல்லாம் கம்பெனியைவிட்டு வெளியேறினார்கள்.
இதில் எம்.எஸ்.முத்துகிருஷ்ணன், பி.வி.எத்திராஜ், பொன்னுசாமிபிள்ளை, கே.டி.சந்தானம். பி.எஸ்.தட்சிணாமூர்த்தி, எஸ்.ஸி.கிருஷ்ணன், எம்.என்.கிருஷ்ணன், சிவாஜிகணேசன், சிவசூரியன், வி.எஸ்.நடேசன் சின்னபொன்னுசாமி முதல் முக்கியமானவர்கள் எல்லாம் வெளியேறினார்கள்.
இதைக் கண்ட கே.ஆர்.ஆர். அவர்கள் எல்லோரையும் அரவணைத்து என்னை நம்பி வெளியேறிய உங்களை எல்லாம் வைத்து கலைவாணர் பெயரிலேயே நாடகக் கம்பெனி துவங்கப் போகிறேன்என்றார். இதைக்கேட்டு எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
கம்பெனி ஆரம்பிக்க ஒன்றிரண்டு மாதம் ஆகும் அதுவரை ஊருக்குப்போய் வருபவர்கள் எல்லாம் போய் வாருங்கள் என்றார். ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் ஊருக்குப் புறப்பட்டார்கள். அவர்களுக்குக் கொடுக்க பணப் பற்றாக்குறை இருந்ததால் தனக்கு கலைவாணர் கொடுத்த அன்பளிப்பான வைரக் கம்மலை கொடுத்து விற்றுவரச் சொல்லி செலவுக்குக் கொடுத்தனுப்பினார்.
பிறகு காஞ்சீபுரம் சென்று அண்ணா அவர்களிடம் நடந்த விபரத்தைச் சொல்லி வேலைக்காரி கதையை அங்கிருந்து கொண்டு வந்ததையும் தான் கலைவாணர் பெயரில் நாடகக் கம்பெனி துவங்கப்போவதையும் வேலைக்காரி நாடகத்தை தான் நடத்துவதாகவும் கூறினார். அண்ணா இதில் ஆர்வம் காட்டினார்கள். தஞ்சையிலே நாடகங்கள் நடத்துவதற்குண்டான ஏற்பாடுகள் நடந்து வந்தது. நடிகர்கள் எல்லோரையும் வரவழைத்து காஞ்சியில் திராவிடநாடு அலுவலகத்தில் ஒரு மாதம் இருக்கவைத்து உணவு விடுதியில் எல்லோருக்கும் உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
1945-ல் கிருஷ்ணன் நாடக சபா என்ற பெயரில் கே.ஆர்.ஆரின் நாடக மன்றம் துவங்கப்பெற்றது. முதலில் மனோகரா, பம்பாய் மெயில் நாடகங்கள் நடத்தப்பட்டன. சென்னையில் நான்கு ஐந்து படங்களில் படப்பிடிப்பு நடந்து வந்ததால் நேரம் கிடைக்கும்போது ஒன்றிரண்டு நாள் தஞ்சையில் நாடகங்களில் நடிப்பார் கே.ஆர்.ஆர்.
அண்ணாவிடம் கே.ஆர்.ஆர். வேலைக்காரி நாடகம் நடத்த சீன், டிரஸ், செட்டிங்குகள் செய்ய நாளாகும் எனவே வேறு ஒரு சாதாரண கதையாக எழுதித் தாருங்கள் என்று கேட்டார். அண்ணாவும் உடனடியாக ஓர் இரவு கதையை ஒரே நாளில் எழுதித் தந்தார். இந்தக் கதை ஒரே இரவுக்குள் கதையே முடிந்து விடுவதைப் போலவும் அன்றாட வாழ்வில் மனிதன் அவதிப்படும் நிலையும் இரவில் நடக்கும் அவலங்களையும் சம்பவங்களையும் எடுத்துக்காட்டுவதுடன் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதையும் தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது.
இதைப்படித்த கே.ஆர்.ஆர். இதுவரை எவரும் நடத்தாத நாடகமாக இருப்பதைக்கண்டு உடனே எம்.எஸ்.முத்துகிருஷ்ணனிடம் எல்லோருக்கம் பாடம் எழுதிக்கொடுக்கச் சொல்லி சீன் மற்ற எல்லா ஏற்பாடுகளும் செய்யச்சொன்னார். சென்னையில் படப்பிடிப்புகளையெல்லாம் ஒரு மாதம் தள்ளி வைக்கச் சொல்லிவிட்டு, அண்ணாவோடு தஞ்சைக்குச் சென்று கம்பெனியிலேயே தங்கி ஒத்திகையும் பார்த்து நாடகத்தை அரங்கேற்றிவிட்டு சென்னை வந்தார்கள். இந்த நாடகம் மக்களின் ஆதரவைப் பெரும் அளவில் பெற்று வருவதைக் கண்டு இதை அனைத்துக் கட்சியை சேர்ந்தவர்களும் காணவேண்டும் என்று நாடகத்திற்குத் தலைமை ஏற்க பல பெரியோர்களையும் அறிஞர்களையும் அழைத்தார் கே.ஆர்.ஆர்.
கல்கி, மு.வரதராசனார், நாமக்கல் கவிஞர். வே.ராமலிங்கம், பாரதிதாசன், கி.ஆ.பெ.விஸ்வநாதம். எஸ்.சொளந்தரபாண்டியன், கலைவாணர், தந்தை பெரியார், பாரத தேவி ஆசிரியர் சாமரத்தினம், வ.ரா.மூவாலூர் ராமாமிருதத்தம்மையார், சோமசுந்தர பாரதியார், ஜெயப்பிரகாஷ் நாராயண், டாக்டர். தர்மாம்பாள், பிரசண்ட விகடன் ஆசிரியர் நாரண துரைக்கண்ணன், குடந்தை கே.கே.நீலமேகம், குடந்தை சின்ன தம்பி நாடார், அருளானந்த சாமிநாடார், நாவலர் முதல் இன்னும் பல பெரியோர்கள் எல்லாம் அண்ணா அவர்களின் புரட்சிப் படைப்பைக் கண்டு வானாளாவப் புகழ்ந்தார்கள்.
குறிப்பாக ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையேற்க அழைத்தபொழுது இந்தக் கதையில் சுருக்கத்தை எழுதித்தரக் கேட்டார். அண்ணாவிடம் கே.ஆர்.ஆர். ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் எழுதித் தரச் சொன்னார். அண்ணாவும் ஆங்கிலத்தில் எழுதி அனுப்பினார்.
அதைப்படித்த ஜே.பி. இவ்வளவு அருமையாக எழுதக்கூடிய அறிஞர் தமிழகத்தில் இருக்கிறாரா, யார் அவர்? என்று விசாரித்தார்.
கல்கி அவர்கள் நாடகத்திற்கு தலைமை ஏற்றபோது நம் தமிழகத்திற்கு ஒரு பெர்னாட்ஷாவாக அண்ணா இருக்கிறார் என்று மனமார புகழ்ந்தார்.
பாவேந்தர் பாரதிதாசன் தலைமையேற்றபோது கரும்பு நுனியிலிருந்து சுவைத்து வந்தால் போகப்போக எப்படி சுவை அதிகரிக்குமோ அதைப்போல நாடகம் அமைந்திருக்கிறது என்றும் தமிழகத்திற்கு ஒரு பேரறிஞர் அண்ணா கிடைத்திருக்கிறார் என்று வார்த்தைக்கு வார்த்தை பேரறிஞர் அண்ணா என்று பெருமையோடு புகழ்ந்தார்.
கலைவாணர் அவர்கள் தலைமையேற்றபோது, இந்த நாடகத்தில் நாட்டு மக்கள் விழிப்புணர்ச்சி பெற்று, சமுதாயம் சீர்திருந்த, சமுதாயத்தில் நடைபெறும் பல கொடுமைகள் ஒழிய இந்த நாடகம் உதவியாக இருக்கிறது. இந்த நாடகத்தை இவ்வளவு சிறப்பாக எழுதிக் கொடுத்த அண்ணாவை பாராட்டுகிறேன். மக்கள் சீர்திருந்த துணிந்து முதன் முதலாக அதை நடத்திய பெருமை கே.ஆர்.ராசாமியையே சேரும். ஆயிரம் மேடைப் பிரசங்கமும் சரி ஒரு நாடகமும் சரி என்று நிரூபித்தவர் கே.ஆர்.ராமசாமி என்றார் கலைவாணர்.
ஆனைவரும் இதை ஏற்று நடத்திய கே.ஆர்.ஆரை மனமார வாழ்த்தி பெருமைப்படுத்தினார்கள். இதற்குப் பிறகுதான் கே.ஆர்.ஆர் நாடக மன்றதின் நாடக விளம்பரங்களில் தமிழகத்தின் பெர்னாட்ஷா அண்ணா கதை வசனம் என்றும் தமிழகத்தின் பேரறிஞர் அண்ணா கதை வசனம் என்றும் விளம்பரங்கள் முதன் முதலாக செய்யப்பட்டு, அறிஞர் அண்ணாவுக்கு பெருமைகளைச் சேர்த்தார் கே.ஆர்.ஆர். இதற்குப் பிறகுதான் மற்றவர்களெல்லாம் இதைப் பின்பற்றி எழுதினார்கள். இந்த நாடகத்தில் ஒரு சீனில் காளிகோயிலில் காளியிடம் நீதிகேட்டு அதை அலங்கோலம் செய்யும் கட்சி வருவதால், இதை நடத்தினால் மக்களின் ஆதரவு இருக்குமா? நாடகம் நடக்குமா என்ற சந்தேகத்தால் யாரும் நடத்த முன்வரவில்லை. அண்ணா அவர்கள் சார்ந்த திராவிடக் கழகத்தின் கொள்கைகளை ஏற்று மிகத் தீவிரதியாக செயலில் இறங்கி வெற்றியோ தோல்வியே எது வந்தாலும் ஏற்றுக்கொள்வது என்று துணிந்து இதையும் நடத்திக் காட்டினார் கே.ஆர்.ஆர். இதன் வெற்றியும் இமாலயவெற்றியாக யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு தமிழகத்திற்கு வாய்த்தது!
ஓர் இரவு நாடகம் 8 மாதமும் வேலைக்காரி 8 மாதமும் தொடர்ந்து நடந்தது. 1945-ல் துவங்கிய கே.ஆர்.ஆர்.நாடக மன்றத்தை 1950 வரை தொடர்ந்து நடத்தி வந்தபோது அண்ணாவின் மேற்பார்வையில்தான் கம்பெனியை கவனித்து வந்தார்கள். பலதடவைகள் கம்பெனி வீட்டிலேயே தங்கி இருந்து ஆலோசனை கூறி எல்லாவற்றையும் கவனித்துவந்தார்கள். அண்ணா நாடக கம்பெனி எந்த ஊருக்கு போவது எந்த நாடகம் நடத்துவது என்பது முதல் கவனித்துவந்தார்.
கே.ஆர்.ஆர். நாடக மன்றமும் எங்கள் வீடும் அண்ணா அவர்களுக்கு கழக ஆதரவாளர்களையும் கழகத்தையும் வளர்க்க அன்றைக்கு ஒரு பாசறையாகவே விளங்கியது என்று கூறலாம்.
திருச்சியிலிருந்தும் தஞ்சைக்கு வரும் பாசஞ்சர் ரயிலுக்கு ஓர் இரவு ரயில் என்றும் வேலைக்காரி ரயில் என்றும் அன்றைக்கு சொல்வார்கள். இந்த ரயில் தஞ்சைக்கு வந்ததும் மக்களெல்லாம் இறங்கி ரயில் காலியாகிவிடும். சென்னையிலிருந்து கன்யாகுமரி வரையிலுள்ள மக்களும் திரளாக வந்து நாடகத்தை கண்டுகளித்தார்கள். கருத்துக்களை ஏற்றார்கள். எந்த எந்த ஊர்களுக்கு நாடகக் கம்பெனி போய்க்கொண்டிருந்ததோ அங்கெல்லாம் கழகத்தோழர்கள் - ஆதரவாளர்கள் - பொது மக்களின் ஆதரவையும் பெற அண்ணாவுக்கு கே.ஆர்.ஆர். நாடக மன்றம் திரட்டிக் கொண்டிருந்தது. அண்ணாவுக்கு பின்னால் ஒரு அஸ்திவாரமாக அமைந்தது கே.ஆர்.ஆர். நாடக மன்றம் என்றே கூறலாம்.
gkrishna
5th October 2014, 02:49 PM
கல்கி எழுதியது:
http://siliconshelf.files.wordpress.com/2010/09/kalki.jpg?w=497
தற்கால நாடகக் கலையை பற்றி பேசும்போதெல்லாம் ஆங்கிலம் படித்த மேதாவிகள் பெர்னார்ட் ஷாவுடன் இப்சனையும் நினைத்து ஒரு குரல் அழுவது வழக்கம். நாடகம் கீடகம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு பெர்னார்ட் ஷாவுக்கு ஒரு இப்சனுக்கு எங்கே போவது? திருடப் போக வேண்டியதுதான்! என்று சொல்லுவார்கள். அப்படியெல்லாம் திருடவும் கிருடவும் போக வேண்டாம், தமிழ் நாடு நாடகாசிரியர் இல்லாமல் பாழ்த்துப் போகவில்லை என்று சமீபத்தில் தெரிந்து கொண்டேன்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு திருச்சிராப்பள்ளியில் ‘ஓரிரவு’ என்னும் நாடகத்தைப் பார்க்க நேர்ந்தது. பார்த்ததன் பயனாக “இதோ ஒரு பெர்னார்ட் ஷா தமிழ் நாட்டில் இருக்கிறார்! இப்சனும் இருக்கிறார்! இன்னும் கால்ஸ்வொர்த்தி கூட இருக்கிறார்!” என்று தோன்றியது.
ஓரிரவு என்னும் நாடகத்தின் ஆசிரியர் திரு சி.என். அண்ணாதுரை.
– (கல்கி இதழ் 07-12-47)
gkrishna
5th October 2014, 02:56 PM
oor iravu by Randor Guy
Starring: K. R. Ramasami, A. Nageswara Rao, T. K. Shanmugham, B. S. Saroja, Lalitha, T. S. Durairaj, T. S. Balaiah, and T. P. Muthulakshmi
At his disciple Ramasami's request, Annadurai sat up one night and wrote a play and at dawn, it had been written to the last scene with hardly any corrections! The time-frame too was a single night and narrated the events taking place on that night. The hero wore only one costume right through! Hence, for more than one reason Anna titled the play, Ore Iravu!
AV. Meiyappan met Anna who agreed to write the screenplay and dialogue for Rs. 10,000. A week later, he came to the AVM Studio and stayed at No. 10 (Meiyappan's office, now renovated and modernised!). Seated on a mat at a desk without legs, Anna wrote the screenplay, while the dark hours of the night ticked away. When Meiyappan and Neelakantan called on him the next morning they found the Ore Iravu script ready and written on 300 sheets of paper.
Meiyappan gave Pa. Neelakantan the break he had been waiting for and with Ore Iravu began his long and successful career as filmmaker with several box-office hits.
Ramasami played the same role he had played on stage. The story is about a thief, the illegitimate son of a rich zamindar (Shanmugham) who had seduced the mother (Saroja). Poverty drives him to take to stealing. Indeed Anna dealt with the eternal problem of “the haves and the have-nots” in this film. He did this in his Velaikari too. In an interesting turn of events, the thief breaks into his father's house at night when his stepsister (Lalitha) is about to commit suicide! Of course, one is not aware of the real identity of the other.
Lalitha played the zamindar's daughter and Akkineni Nageswara Rao, her lover.
Others in the cast included noted screen villain and character actor T. S. Balaiah as the blackmailer, well-known comedian T. S. Durairaj, and yesteryear star B. S. Saroja.
Ore Iravu had many songs and in true AVM fashion, a dance drama “Shiv-Shakthi”. The dancers were Lalitha-Padmini, and Kumari Kamala (‘Baby' Kamala, now a young woman!). It had a Tamil folk dance (Kurathi dance) too. Interestingly for this dance, a song rendered by M. L. Vasanthakumari, “Ayya Sami... avoji sami...ayya rayyaa vayyaa you comeayaaa...!”, adapted from a popular Hindi film song, “Gorey...gorey...”, was used and it turned out to be a hit. The dancer was a noted starlet — Lakshmikantham.
One of the songs which became popular was “Tunbam nergayil nee.....” It was penned by none other than Bharathidasan (pseudonym of Kanaka Subburatnam, voices V. J, Varma and M. R. Rajeswari.)
T. K. Shanmugham also contributed a song written earlier and used by him in one of the TKS Brothers' plays. “Enga naadu...ithu enga naadu...!” was about India and the problems the country faced.
A song by Bharathiar, “Kottu murasey...kottu murasey...!” also found place and was rendered by K. R. Ramasami and T. S. Bhagavathi.
Ore Iravu was released in April 1951 with much expectation what with the AVM banner, Annadurai's script based on his hit play, dance dramas and melodious music but, it did not do well.
Remembered for: Annadurai's interesting storyline and dialogue, impressive performances by Ramasami and good music (R. Sudarsanam)
gkrishna
5th October 2014, 03:09 PM
ஓர் இரவு படத்தில் இடம் பெற்ற இன்னொரு நல்ல பாடல்
“துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ”
பின்னாட்களில் நிறைய படங்களில் இந்த பாட்டையோ அல்லது பாட்டின் இசையையோ கையாண்டு இருப்பார்கள். நினைத்தாலே இனிக்கும் 1979 திரைபடத்தில் இறுதி காட்சியில் கமல் ஜெயப்ரதா திருமணத்திற்கு சம்மதம் கேட்கும் இடத்தில இந்த பாடலின் இசை இடம் பெற்று இருக்கும் .திருமணத்திற்கு பின் மெல்லிசை மன்னரின் ஹோ ஹோ என்ற ஒலியுடன் கூடிய ஒரு அருமையான ஹம்மிங் .அதே போல் மனதில் உறுதி வேண்டும் திரைபடத்தில் எஸ் பி பாலசுப்ரமணியம் டாக்டர் கதாபாத்திரத்தில் செயின் ஸ்மோகர் ஆக வருவார் .அப்போது அவர் குரலில் இந்த பாடலை கேட்கும் போது மிக அருமையாக இருக்கும்
https://www.youtube.com/watch?v=0HQguKYAQWA
chinnakkannan
5th October 2014, 04:38 PM
திடுதிப்பென்று முந்தா நாள் நண்பருடன் பேசி, நேற்றுக் காலை கிளம்பி சென்று விட்டு இன்று தான் வந்தேன்..எங்கே..என்ன எப்போ என்ற கேள்விகளுக்கான விடை என்னவெனில்..
மஸ்கட்டில் scenic beauty நிறையவே உண்டு..(கந்தசாமியில் வரும் எச்சூஸ்மி மிஸ்டர் கந்தசாமி) தீபாவளியில் வரும் ஜெயம் ரவி பாவனா பாட்டு, என் இதயம் இதயம் துடிக்கிறதே எனத் தாவித்தாவி அனுஷ்கா பாட சூர்யாவும் இசப்பாட்டுப் பாடும் பாடலும் எடுக்கப்பட்டது மஸ்க்ட் தான்..
இருப்பினும் இங்கு உள்ள wahiba sands என்னும் இடத்தில் உள்ள sand dunes களின் அழகு+ஆபத்து எல்லாம் பார்க்காமலேயே போய்விட்டது எனக் குறை உண்டு மனதில்.. நேற்று அதற்கான சந்தர்ப்பம் வாய்க்க சென்று ( நாலு மணி நேரம் டிரைவ்+ பாலைவன நடுவில் ஒரு மணி நேரம் டபக்கென மணலிறக்கத்தில் இறங்கி ஏறிச் சென்று – 1000 arabian nights –என்ற இடத்திற்குச் சென்று டெண்ட் டில் இரவு தங்கி காலைகிளம்பி இப்போது ரூவி..
வெய்யில் அந்த வஹிதா சேண்ட்ஸில் சாரி டைபோ வஹிபா சேண்ட்ஸில் சர்வ சாதாரணமாய் இருந்தாலும் இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் குளிர்ந்து 3 மணிக்கு ஹ்ஹ்ஹ் எனக் குளிரி கம்பளியை இழுத்துப் போர்த்துக் கண்ணை மூட குறுக்கே கனவில் வந்த தமன்னாவை ஸீயூ டுமாரோஎன அனுப்பிவிட்டு(அரைமனதாக) தூங்கியது ஒரு அழகிய அனுபவம்.. ஸாரி சொல்லாமல் கொள்ளாமல் லீவ் போட்டதற்கு..
வந்தால் வழக்கம் போல் வாசு சார் நான் எழுத நினைத்திருந்ததை (அய்யா சாமி ஆவோஜி சாமி) எழுதிவிட்டார்..ம்ம் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு வாசு சார்.. நன்றி.. ஆனால் வேறு விதமாக எழுத நினைத்திருந்தேன்..(இன்னும் சில அவர் பாடிய பாடல்களுடன்..)
கிருஷ்ணா ஜி.. திடீரென குரங்கு குசலா எனப் பதிவெல்லாம் வந்த போது கொஞ்சம் பயம்மாய்த் தான் இருந்தது.. மற்றபடி நீங்கள் இட்ட பதிவுகளில் நான் கற்றுக் கொண்டது அதிகம். நீங்கள்.எழுதிய பதிவுகளில் நாம் மனதளவில் நெருங்கியதும் அதிகம் (ஹைய்யா வழக்கம் போல சமாளிச்சுக் குழப்பியாச்சு:) ).. இந்த இடம் ரிலாக்ஸ் பண்ண வரும் இடம் என்பதில் நானும் உடன்படுகிறேன்..ஜாலியாகவே இடுங்கள் உங்கள் இஷ்டப் படி..
சரி சரி ஹோம் வொர்க் பண்ணிவிட்டு சாயந்திரம் வர்றேன்.. இப்பக் குளிக்கணும் ரெண்டாம் முறையாக...:)
Gopal.s
5th October 2014, 05:09 PM
vaasu sir
விஸ்வநாதன் ராமமூர்த்தி பற்றி திரு ஆரூர் தாஸ் தின தந்தி பத்திரிகையில் வெளியிட்டு இருந்த கருத்தை ஓட்டி ஒரு ஐயப்பாடு எழுந்தது அதை வெளியிட்டு இருந்தேன் . அவர்களது முதல் படம் ஜெனோவா என்று அதில் சொல்லி உள்ளார் . அவர்களது முதல் படம் பணமா(1952) ? அல்லது ஜெனோவா(1953) வா
Genova- M.S.Viswanathan alone.
Panam- M.S.V-T.K.R Combo for the first time.
Richardsof
5th October 2014, 05:17 PM
குடியிருந்த கோயில் - 1968
மெல்லிசை மன்னரின் இசையில் பாடகர் திலகம் - இசை அரசி - இசை அரக்கி மூவரின் கூட்டணியில் மக்கள் திலகத்தின் சிறப்பான பாடல் காட்சிகள் என்றென்றும் இசை பிரியர்களின் மனதில் ஒலித்து கொண்டிருக்கும் பாடல்கள்
என்பதில் ஐயமில்லை . பாடல்கள் - படமாக்கப்பட்ட விதம் - இசையின் தாக்கம் -மனதை மயக்குகிறது .
1. உன் விழியும் என் வாளும் ; மக்கள் திலகத்தின் அட்டகாசமான உடை அலங்காரம் - புதுமையான முறையில் கையில்
வாளுடன் காதலி ராஜஸ்ரீயுடன் பாடும் இந்த பாடல் காட்சி பிரமிக்க வைக்கிறது .பாடகர் திலகம் - இசை அரக்கி இருவரின் குரலில் .....சூப்பர் . வர்ணிக்க வார்த்தைகள் இல்லை .
2. என்னை தெரியுமா ; ஒரு மேடை பாடகராக மக்கள் திலகம் -உலக பேரழகனின் துள்ளல் பாடல் .நான் புதுமையானவன் - உலகை புரிந்து கொண்டவன் - சத்தியாமான வரிகள் .
3. நீயேதான் எனக்கு மணவாட்டி - பாடகர் திலகம் - இசை அரசி இருவரும் கலக்கிய காதல் பாடல் .இளமை ததும்பும்
இனிய காதல் பாடல் .- காதலர் தின பாடல் .
4. நான் யார் நான் யார் - புலவர் புலமை பித்தனின் அறிமுக தத்துவ பாடல் . மக்கள் திலகத்தின் அபார நடிப்பு .சூப்பர் .
5. துள்ளுவதோ இளமை - கிளப் பாடல் . மெல்லிசை மன்னரை புகழ வார்த்தைகள் இல்லை .பாடகர் திலகம் - இசை அரக்கி இருவரின் குரலில் மக்கள் திலகத்தின் வரலாற்று புகழ் பாடல் .
6. ஆடலுடன் பாடலை கேட்டு - பாடகர் திலகம் - இசை அரசி இருவரின் தேன் குரலில் - மக்கள் திலகம் - எல். விஜயலட்சுமி இருவரின் பஞ்சாபி நடனம் - உலக தமிழ் பட ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள் .
7. குங்கும பொட்டின் மங்கலம் - பெண் பாடலாசிரியர் ரோஷன் பேகம் அவர்களின் முதல்பாடல் . இதுவும் காதலர் தின
பாடல் . அத்தனை காதல் ரசம் சொட்டும் மென்மையான காதல் கீதம் .
ஒரே படத்தில் 7 வித்தியாசமான பாடல்கள் - இனிமையான இசை - மனதை மயக்கும் மதுர கானங்கள் .
MY CHOICE NO 1
http://youtu.be/BVCeUMg__ps
Gopal.s
5th October 2014, 05:18 PM
Krishna,
Welcome back and pl.Go ahead. You can do whatever you wish but dont over do like what you did last week. This is my open request.You can not expect my honesty and openness from others. I will putforth my ideas with a meaning only. Have a theme coordination and do relevant articles max one or two per day not 50 or 60 incoherent ones (kuravan Etc). This is my humble suggestion.You already did it correct today.
vasudevan31355
5th October 2014, 07:33 PM
ராஜா
http://i.ytimg.com/vi/fVlJn3Fs3pE/maxresdefault.jpg
அச்சோ! மறுபடியும் 'ராஜ' சொர்க்கம். மதியம் ஜெயா மூவீஸில். ராஜா! இரண்டு எழுத்துக்களை உச்சரிக்கையில் உதடுடன் சேர்த்து உள்ளமும் உவகையுருமே! இருக்கையில் உடல் அமர வில்லையே! கைகளைக் கொட்டாமல் இருக்க முடிய வில்லையே!
இப்போதுதான் ஜனவரி 26 1972 பிறந்தது மாதிரி இருக்கிறது. இன்றுதான் ரிலீஸ் ஆன மாதிரி. அன்று கடலூர் நியூசினிமாவில் ராஜா ரசிகர்களுடன் அனுபவித்த அதே ஆனந்தக் குதூகலம் இன்று வீட்டில் மனைவி பிள்ளைகளுடன். ஒரே வித்தியாசம் அன்று வயது 11. இன்று 53. ஆனால் ராஜா மார்கண்டேய மகராஜன். அவனுக்கு வயது என்பதே இல்லை. மூப்பு என்பதே இல்லை. அவன் உலகம் உள்ளவரை 25 வயது வாளிப்பு வாலிபன். (அதில் யாரோ சிவாஜி என்று ஒருவர் நடித்தாராம் அவருக்கு அப்போது வயது 44 ஆம்)
ராஜாக்களுக்கு வேண்டிய முழுத் தகுதிகளுக்கு மேலும் தகுதி பெறத் தகுதி உள்ளவன் இந்த ராஜா மட்டுமே. அவன் எடையே 50 கிலோவுக்குள் தான் இருக்கும். 18 வயது பருவ மங்கையை அவன் அருகில் வைத்து ஒப்பிட்டுப் பார்த்தாலும் அந்த நங்கை கிழவியாகத்தான் தெரிவாள் அவனுடைய தேஜஸில். இப்போது உணர முடிகிறதா ராஜாவின் இளமை பற்றி.
அவன் முடி இருக்கிறதே. அதுவும் நெற்றிக்கு முன் கற்றையாக நீண்டு. பக்கவாட்டில் பார்த்தால் அந்தக் கொத்து முடியின் உள்பக்கம் சற்றே உள்ளடங்கியவாறு இருக்கும் அந்த வசீகர வதன முகம். அவன் கண்கள் துறுதுறுவென ஏன் அலைபாய்ந்து கொண்டே இருக்கின்றன? நிறைய பொய்களைச் சொல்லும் போது கூட நம்மை அவன் சொல்லும் பாணியால் நிர்மூலமாக்கி விடுகிறானே?
லீலா வினோதங்கள் புரிந்த கிருஷ்ண பரமாத்மாவிற்கு இவன்தான் குருவா? இவன் செய்யும் குறும்புகள் கிருஷ்ணனிடம் இல்லையே? கடைப்பக்கம் போகும் கல்யாணப் பெண்ணை கோட் போட்ட கிருஷ்ணனாக தொடர்ந்து சென்று ஒரு வினாடி கூட நிற்காமல் இவன் செய்யும் அலம்பல்களுக்கு அளவே இல்லையா?
இவனுக்கு எதிரியிடம் மோதும் போது எதிரியை கேலி செய்வது ஒரு பழக்கம். சண்டையிடும் போதே டபக்கென்று கண்ணடித்து கலாட்டா செய்து வெறுப்பேற்றுவான். ரப்பர் பந்து தரையில் பட்டு முதல் தடவை எகிருவதைப் போல சண்டையிடும் போது துள்ளி எழுந்திருப்பான். இவனுக்கு எதையுமே ஸ்டைலாக செய்ய வேண்டும். அப்படித்தான் பிறந்தான். அப்படித்தான் வளர்ந்தான். சண்டையைக் கூட ஸடைலாகத்தான் அவனுக்கு செய்யத் தெரியும்.
இவன் சிகரெட்டை வாயில் வைத்தால் வாயு பகவான் அலறுவான். ஏனென்றால் இவன் ராஜாவின் வாய்க்குள். இவன் சொன்னபடிதான் அவன் கேட்க வேண்டும். ஷூவின் முன்னால் கீழ் உள்ள கேப்பில் ஹாக்ஸா பிளேடை அழகாகச் செருகுவது இவனுக்குக் கைவந்த கலை. கிருஷ்ணன் ஜெயில்தானே பிறந்தான்?! ராஜா அறிமுகமாவதே ஜெயிலில்தான்.
வீம்பு செய்யும் பெண்ணைத் தன் காலடியில் கிடத்துவது இவனுக்கு இலகுவான வேலை. கொள்ளைக் கூட்டத்தில் இருந்தாலும் நம் நெஞ்சைக் கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரன் இவனேயன்றி நாகலிங்கம் இல்லை. நாகலிங்கம் 9 கோடி மட்டுமே சம்பாதித்த கேடி. ராஜாவோ பல கோடி உள்ளங்களைக் கொள்ளையடித்த அன்றைய இன்றைய மோடி. ராஜ சிம்மாசனம் அவன் ஒருவனுக்கு மட்டுமே. அதைத் தொட்டுப் பார்க்கக் கூட எவருக்கும் தகுதி இல்லாமல்தான் போகும். அவன் அப்படித்தான்.
இவனை வீட்டை எல்லாம் விட்டு காதலி துரத்த முடியாது. புகை மாதிரி சந்து பொந்து என்று எப்படியோ நுழைந்து காதலி மடியை மெத்தையாக நினைத்து சாய்ந்து விடுவான். இவனை ஒன்றும் செய்ய முடியாது.
தீராத விளையாட்டுப் பிள்ளை. கோட் , பேண்ட் எல்லாம் இவனிடம் தஞ்சம் புகத்தான் விரும்புமாம். மற்றவர்கள் அணிந்தால் அணிந்தவர்களை இவை அசிங்கப்பட வைத்துவிடுமாம். தானும் அசிங்க்கப்பட்டுப் போகுமாம்.
இவன் சிகரெட் லைட்டரை வைத்து எதிரிகளைப் படம் பிடிப்பானே சிகரெட்டை வாயில் பிடித்தபடி. எவனும் இவனின் அந்த ஸ்டைலில் மயங்கி அதைக் கண்டு பிடிக்கவே முடியாது. அப்படியே யாருக்காவது சின்ன சந்தேகம் வந்தால் செல்லமாக அவர்கள் பின் பக்கம் சிரித்தபடி தட்டி காரியத்தைக் கந்தலாக்கிவிடுவான். கை தேர்ந்த போலீஸ் கேடி இவன். ஜோடியிடம் கூட வாயால் சொல்லாமல் நான் ஒரு போலீஸ் என்று ஜாடையில் காட்டுவான்.
தந்திர நரி! சாகசப் புலி! பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிடலாம் என்று காதலி தூபம் போட்டால் முதலாளிக்கு யோக்கியன் போல நேர்மை காண்பிப்பான். விதவிதமான பெயர்கள் வைத்திருப்பான். குமரேச ஓதுவார் என்பான். ராஜா என்பான் அப்புறம் இல்லை என்பான். சேகர் என்பான். கவர்ச்சிக் கள்ளன். திடீரென கொள்ளையர் கோவிலில் இருக்கும் போது காவல் அதிகாரியாய் அங்கு வந்து நடித்து அனைவரையும் காப்பற்றி நம்ப வைப்பான். அதே சமயத்தில் உண்மையாக காவல் அதிகாரியாயும் இருப்பான். தகிடுதத்தக்காரன். ஆனால் நல்லவைகள் நடக்க மட்டுமே.
வில்லனிடம் இவனும், இவன் கூட்டணியும் அரைமணி நேரத்திற்கு செய்யும் அட்டகாசம் குருஷேத்திரப் போர் போன்று மகா தந்திரங்கள் நிறைந்தது. மூளையை ஷார்ப்பாக வைத்துக் கொண்டு பார்த்தால்தான் இவனுடைய தந்திர வளையங்கள், பின்னல்கள் புரியும். கண்களை நீங்கள் இமைக்கக் கூடாது. இமைத்தால் அவன் செய்யும் ஜாலங்களைக் காணக் கொடுத்து வைக்காத பாவியாகி விடுவீர்கள்.
தன் தாயைக் கொடுமைப் படுத்தும் போது தானும், தன் சகாக்களும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று சிரித்து சந்தோஷமாய் இருப்பது போல் பாவனை காட்டி உள்ளுக்குள் அழுவான். அந்த சிரிப்பழுகையில் எல்லோர் மனதிலும் அவனைப் பற்றிய வெறி விதை விதைப்பான்.
அவன் கிருதா இருக்கிறதே! சும்மா நாயக்கர் மஹால் தூண் மாதிரி! அப்படியே இமயமலையை கயிறு கொண்டு ஏறுவது போல் பிடித்து ஏறலாம். மலை கோணல். இவன் கிருதா இவனைப் போலவே நேரான நேர்மை. பிரம்மன் இவன் உடலை உளி கொண்டு செதுக்கி செதுக்கி பார்த்து பார்த்து படைத்து இவன் ஒருவனைத்தான் நாம் உருப்படியாகப் படைத்திருக்கிறோம் என்று இறுமாருவானாம்.
இவனுக்கு அழிவு என்பதே இல்லை. எதிரிகளை கண்ணாடி பார்த்து அழ வைப்பதே இவனுக்கு தொழில். இவன் அடியொற்றித்தான் எவனுமே பயணிக்க வேண்டும். இவன் செய்யாதது என்று உலகில் ஒன்றுமே இல்லை. உலக அசைவுகள் அத்தனையையும் நிறுத்தியவன் சிவன். அவனையே அசையாது நிறுத்தும் சக்தி படைத்தவன் இவன். அவன்தான் எங்கள்
எவர்க்ரீன் 'ராஜா'.
எங்கள் இதய 'ராஜா'
('ராஜா' சேவை தொடரும்)
rajraj
5th October 2014, 07:43 PM
ஓர் இரவு படத்தில் இடம் பெற்ற இன்னொரு நல்ல பாடல்
“துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ”
krishna: The raga for this song, Desh,was selected by M.M.Dandapani Desikar and was used in the movie with his permission. He talked about this in one of his concerts. I wrote about this in 'Thiraiyil Ilakkiyam' series under the title 'Paasamaa KObamaa', Desh for paasam and Atana for kobam ! :)
vasu: Thanks for 'Gore Gore' and 'Ayyaa Saami'. We sing this in jugalbhandhi ! :)
chinnakkannan
5th October 2014, 08:30 PM
//நான் யார் நான் யார் - புலவர் புலமை பித்தனின் அறிமுக தத்துவ பாடல் . மக்கள் திலகத்தின் அபார நடிப்பு .சூப்பர்// .எஸ்.வி.சார்.. புலமைப்பித்தன் அறிமுகமானது இந்தப் பாட்டா என்ன..இருந்தாலும் எனக்கு பாடக எம்ஜி.ஆரின் துள்ளும் இளமைப் பாட்டுத்தான் பிடிக்கும்..விஷூவலில்..
chinnakkannan
5th October 2014, 08:37 PM
//அன்று வயது 11. // இது தான் ராஜா பக்தி என்பதா..வாசு சார்.. ந.தி என்றவுடன் பிரவாகமாக வருகின்றதே..அப்புறம் சி.க வின் சி.கே. 31355 என்ற எண் எதைக் குறிக்கிறது..?
JamesFague
5th October 2014, 08:37 PM
Mr Krishna Sir,
Everyone coming to this thread to forget problems as well as you have rightly mentioned as stress and if we don't that small joy
while posting here will definitely offend their feelings. If is a open forum if a person who don't have basic courtesy in expressing his
views in a proper manner whoever he may be we have to move further without caring those person. We have to respect to a humanbeing
view than to the otherone. You proceed and post whatever you like which I have informed in person during the NT's function at Chennai.
Regards
rajeshkrv
5th October 2014, 10:16 PM
//நான் யார் நான் யார் - புலவர் புலமை பித்தனின் அறிமுக தத்துவ பாடல் . மக்கள் திலகத்தின் அபார நடிப்பு .சூப்பர்// .எஸ்.வி.சார்.. புலமைப்பித்தன் அறிமுகமானது இந்தப் பாட்டா என்ன..இருந்தாலும் எனக்கு பாடக எம்ஜி.ஆரின் துள்ளும் இளமைப் பாட்டுத்தான் பிடிக்கும்..விஷூவலில்..
yes pulamai pithan's first song is naan yaar naan yaar
JamesFague
5th October 2014, 10:20 PM
Enjoy the super hit song from the movie Karz. OM Shanthi OM Song.
http://youtu.be/kqFr2f6ZTUw
JamesFague
5th October 2014, 10:23 PM
Melody from the movie Dostana starring Amithabh and Shatrughan.
Remaked in Tamil starring Kamal & Sarath Babu - Tiltle Sattam.
http://youtu.be/v-6vR-d8Wzs
rajraj
6th October 2014, 05:08 AM
Dandapani Desikar talks about the raga for 'thunbam nergaiyil.......'
http://www.youtube.com/watch?v=cqsPo7meoFk
vasudevan31355
6th October 2014, 07:24 AM
சின்னக் கண்ணன் சார்!
நன்றி! தங்கள் மஸ்கட் பாலை அனுபவம் சிலிர்ப்பு. 4 வார்த்தைகளில் நச். தமன்னாவுக்கு வாழ்வு கொடுக்காமல் திரும்ப அனுப்பிச்சது ரொம்ப தப்பு இல்லையோ!:)அடுத்த தரம் திரிஷா வந்தா இப்படி பண்ணாதீங்க.:)
vasudevan31355
6th October 2014, 07:31 AM
ராஜ்ராஜ் சார்
நன்றி. ஜுகல்பந்தி பாடல்கள். டாப். நன்னா பாடுவேளா?
தண்டபாணி தேசிகர் கம்போசிங் செய்த துன்பம் நேர்கையில் அரும்மையோ அருமை. மனிதருக்கு காமெடி சரமாரியாய் வருகிறது. பண் என்றால் பண்ணப்படுவது விளக்கம் ரகளை. குழந்தே இங்கே வா என்று பூச்சாண்டி பயமுறுத்துவது போல துன்பம் நேர்கையில் என்று பூதம் மாதிரி கர்ஜித்தால் அந்த பாடல் கேக்கும் போது நிஜமாகவே துன்பம் நேரிடும் என்று நம் நந்தனார் உரைப்பது சிரிப்பான விளக்கம். அருமை சார். ரொம்ப ரசிச்சேன். இயல்பான ஒரு அழகான பதிவு.
Gopal.s
6th October 2014, 07:32 AM
Mr Krishna Sir,
Everyone coming to this thread to forget problems as well as you have rightly mentioned as stress and if we don't that small joy
while posting here will definitely offend their feelings. If is a open forum if a person who don't have basic courtesy in expressing his
views in a proper manner whoever he may be we have to move further without caring those person. We have to respect to a humanbeing
view than to the otherone. You proceed and post whatever you like which I have informed in person during the NT's function at Chennai.
Regards
Can you forget your problem in unimaginative cutpaste way? what is wrong in expressing views? Don't ever think we are here to contribute to intellectual side and turn blind eyes to other things. If you ignore Good advise,you will be in greater trouble.
rajeshkrv
6th October 2014, 07:33 AM
இதோ என் மனசுக்கு பிடித்த பாடல்
மதுரக்குரலோன் திரு p.b.ஸ்ரீனிவாஸ் அவர்களின் குரலில் திரு சி.ராமச்சந்திரா அவர்களின் இசையில் பாட்டொன்று கேட்டேன் படத்தில் ஒலித்த பாடல்
அழகே உருவாய் அவள் வந்தாள் அந்த சிரிப்புடன் அவர் ஆரம்பிக்கும் விதமே அழகு .. பாடலின் மெட்டும் குரலும் என்ன பொருத்தம் .....
இதில் இடம்பெற்ற குங்குமம் பிறந்தது முகத்திலா இசையரசியுடன் மதுரக்குரலோன் பாட அந்த பாடலும் மிகப்பிரபலம்...
சரி அழகே உருவாய் அவள் வந்தாள் பாடலை கேட்டு மகிழுங்கள்
https://www.youtube.com/watch?v=zPUEdORhXi0
rajeshkrv
6th October 2014, 07:35 AM
வாசு ஜி .. ராஜா ராஜா தான் .. நடிப்பு ராஜா ராஜா தான் அதை நீங்கள் பதித்த விதம் பேஷா பேஷாதான் ..
அதே போல் ஓர் இரவு படப்பாடலை இன்றைய ஸ்பெஷலாக கொடுத்ததில் அருமை ..
vasudevan31355
6th October 2014, 07:37 AM
சி.க.சார்,
அது ராஜா பக்தி மட்டுமல்ல ராஜ விஸ்வாசம். விஸ்வம் மாதிரி. வெறி கொண்ட பக்தி.
vasudevan31355
6th October 2014, 07:41 AM
காலை வணக்கம் ராஜேஷ்ஜி!
நன்றி ஷோக்கா ஷோக்காதான்.
ரெடியா ரெடியாத்தான் இருக்கணும் நீங்க மூன்றாம் பாகம் தொடங்கத்தான். (நாளைக்கோ அல்லது நாளை மறுநாளோ)
vasudevan31355
6th October 2014, 07:43 AM
அடடா! 'அழகே உருவாய் அவள் வந்தாள்' அருமையான என்றைக்கும் நான் ரசிக்கும் பாடல்.
vasudevan31355
6th October 2014, 07:51 AM
ராஜேஷ்ஜி
அதே போல் 'பொன்னித் திருநாள்' படத்தில் ஒரு பாட்டு.
வீசு தென்றலே வீசு
வேட்கை தீரவே வீசு
மாசு இல்லாத என் ஆசைக் காதலன்
வந்து செந்தமிழில் சிந்து பாடவே
பாடு கோகிலம் பாடு
பாசமாக நீ பாடு
அருமையான பாடல்.
ராஜேஷ்ஜி
இந்தப் பாடல் வரி அதாவது 'பாசமாக நீ பாடு' மாற்றப்பட்ட வரிகளாம். முன்னாள் 'பாட்டமாக நீ பாடு' என்று இருந்ததாம். பாட்டமாக என்றால் அர்த்தம் தரவில்லை என்று வரிகளை பின்னர் பாடலாசிரியர் மாற்றி விட்டாராம். என்றோ எங்கோ படித்த ஞாபகம். விந்தையாக இல்லை!
http://www.youtube.com/watch?v=wMOjD3P-zZw&feature=player_detailpage
rajeshkrv
6th October 2014, 07:59 AM
காலை வணக்கம் ராஜேஷ்ஜி!
நன்றி ஷோக்கா ஷோக்காதான்.
ரெடியா ரெடியாத்தான் இருக்கணும் நீங்க மூன்றாம் பாகம் தொடங்கத்தான். (நாளைக்கோ அல்லது நாளை மறுநாளோ)
அவ்ளோ சீக்கிரமாகவா ஹ்ம்ம்ம்ம்ம்ம்
vasudevan31355
6th October 2014, 08:02 AM
என் அன்பில் கலந்தாயோ
சீமானே உன்னை அடைந்தேனோ
என் அன்பில் கலந்தாயோ
நான் உம மேல் உயிர் அறிந்தாயோ
தெலுங்குக்கு தகுந்த மாதிரி வார்த்தைகளைத் தமிழில் போட கஷ்டப் பட்டிருக்கிறார்கள். ஆனால் பாடல் இனிமை.
ஜமுனாவும்., என்.டி.ஆரும் மிக ரிச்சாகத் தெரிகிறார்கள்.
http://www.youtube.com/watch?v=4jatHVHOLzM&feature=player_detailpage
rajeshkrv
6th October 2014, 08:03 AM
வீசு தென்றலே வீசு ஆஹா இருவரும் பாடினால் நின்ற தென்றல் கூட வீசுமே ...
அருமை அழகு வேறு என்ன சொல்ல
vasudevan31355
6th October 2014, 08:07 AM
அவ்ளோ சீக்கிரமாகவா ஹ்ம்ம்ம்ம்ம்ம்
இன்னும் 14 பக்கங்கள்தான் பாக்கி ராஜேஷ் சார்.
rajeshkrv
6th October 2014, 08:08 AM
ஜமுனா என்.டி.ஆர் என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது குலேபகாவலி கதா
விஜய கிருஷ்ணமூர்த்தியின் இசையில் எல்லா பாடல்களுமே அருமை அருமை. இன்று தெலுங்கு மக்கள் மயங்கும் கண்டசாலாவும் இசையரசியும்
இசைத்த நன்னு டோச்சு பாடல் காலத்தால் அழியா காவியம்
https://www.youtube.com/watch?v=7QskCsBq8bg
அதே படத்தில் இசையரசி கலக்கிய மதனா சுந்தரனா தொரா பாடலும் அற்புதம் ..
https://www.youtube.com/watch?v=V51u-jHQGqg
vasudevan31355
6th October 2014, 08:10 AM
அமர்க்களம் அமர்க்களம் ராஜேஷ் சார். 'குலேபகாவலி கதா' அடிக்கடி நான் விரும்பிப் பார்க்கும் படங்களில் ஒன்று.
rajeshkrv
6th October 2014, 08:13 AM
கன்னடப்பாடல்களை கொடுத்து உம்மை கெடுத்து வைத்திருக்கிறேன் என்று கூறினீரே இதோ இன்னும் கெட்டு போக ஒரு காவியப்பாடல்
நடிகர் முரளியின் தந்தை சித்தலிங்கய்யா அவர்கள் இயக்கி ராஜ்குமாரும் பாரதியும் நடித்து ஜி.கே.வெங்கடேஷ் அவர்களின் இசையில்
மதுரக்குரலோனும் இசையரசியும் இசைத்த அற்புத பாடல் உங்களுக்காக
https://www.youtube.com/watch?v=Quu9AEA-Y_0
vasudevan31355
6th October 2014, 08:15 AM
'குலேபகாவலி கதா' வில் என்.டி.ஆரின் ஒரு சண்டைக்காட்சி மற்றும் மாய மந்திரக் காட்சி.
http://www.youtube.com/watch?v=8h5wT9UehD0&feature=player_detailpage
rajeshkrv
6th October 2014, 08:18 AM
குலேபகாவலி கதா நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி. ஆம் நல்ல பொழுதுப்போக்கு அம்சமுள்ள படம்.. என்.டி.ஆர் ஜொலிப்பார்
rajraj
6th October 2014, 08:20 AM
ராஜ்ராஜ் சார்
நன்றி. ஜுகல்பந்தி பாடல்கள். டாப். நன்னா பாடுவேளா?
How do I respond to this? In 2010 my engineering batch celebrated its Golden Jubilee ( of our graduation with a B.E) in Madras. I sang a medley of movie songs. ( theme : A college student tries to entice a college girl) . One of the songs was 'pambarak kaNNaale' ! :lol: There were more than 100 people in the audience. Nobody walked out! :) I took it to mean that my singing was tolerable! :lol: There are some ragas I like - Dwijawanti, Brindavana Saranga, Abheri, Hindholam and a few others. I sing for fun and to tease friends. I sing Nannukannadhalli naa bhagyamaa to tease a friend whose name appears in the song! :)
MMD had a good sense of humor. I attended one of his concerts when I was an engineering student. Maharajapuram Santhanam also had a good sense of humor. In one of his concerts the airconditioning went off. The organizers brought a fan. Guess what he said? " ivvaLo fans irukkumpodhu indha fan edhukku?" :)
rajeshkrv
6th October 2014, 08:25 AM
How do I respond to this? In 2010 my engineering batch celebrated its Golden Jubilee ( of our graduation with a B.E) in Madras. I sang a medley of movie songs. ( theme : A college student tries to entice a college girl) . One of the songs was 'pambarak kaNNaale' ! :lol: There were more than 100 people in the audience. Nobody walked out! :) I took it to mean that my singing was tolerable! :lol: There are some ragas I like - Dwijawanti, Brindavana Saranga, Abheri, Hindholam and a few others. I sing for fun and to tease friends. I sing Nannukannadhalli naa bhagyamaa to tease a friend whose name appears in the song! :)
MMD had a good sense of humor. I attended one of his concerts when I was an engineering student. Maharajapuram Santhanam also had a good sense of humor. In one of his concerts the airconditioning went off. The organizers brought a fan. Guess what he said? " ivvaLo fans irukkumpodhu indha fan edhukku?" :)
வாசு ஜி
அங்கிளுக்கு எப்பவுமே குறும்பு ஜாஸ்தி :)
RAGHAVENDRA
6th October 2014, 08:57 AM
பொங்கும் பூம்புனல்
ராட்சசப் பாடகி ஈஸ்வரியின் ஈடு இணையற்ற பாட்டு ... மெல்லிசை மன்னரின் இசையில் பியானோ, கிடார், அக்கார்டின், ட்ரம்ஸ், கோரஸ், பாங்கோஸ், என ஒவ்வொரு அம்சமும் தூள் கிளப்பும் பாடல்... சரணங்களில் தட்டட்டும் எனப்பாடும்போது அந்த ஒரு மாத்திரை இடைவெளியில் ஒரு வைப்ரஃபோன் ஒலிப்பதைக் கேளுங்கள்..
முக்கியமான குறிப்பு.. இப்பாடலை ஸ்பீக்கரில் கேட்காதீர்கள்.. ஹெட்ஃபோனில் கேளுங்கள்...
http://play.raaga.com/tamil/browse/movies/year-1960-1968/popular/Neeyum-Naanum-T0002257
என்ன பாட்டு எனச் சொல்லவில்லையா..
நீயும் நானும் பைத்தியமாய் அலையும் பாட்டு...
குறுக்கே யார் வந்தாலும் யாரடி வந்தார் என விரட்ட வைக்கும் பாட்டு...
RAGHAVENDRA
6th October 2014, 09:02 AM
பொங்கும் பூம்புனல்
இன்னொரு சூப்பர் ஹிட் கலக்கல் பாட்டு...
என்னைப் படம் பிடித்துப் பார்த்தானடி... என ஈஸ்வரி ஆரம்பிக்கும் போதே தூள் கிளப்பும்...
அவள் மர்லின் மன்றோவாம்.. இவர் மார்லன் பிராண்டோவாம்...
சுவையான வரிகள்...
சந்திரபாபுவின் மறக்கமுடியாத பாடல்..
நிமிர்ந்து நில் படத்திலிருந்து புடிச்சாலும் புடிச்சா இவ புளயங்கொம்பா பிடிச்சா
http://play.raaga.com/tamil/browse/movies/year-1960-1968/popular/Nimirndhu-Nill-T0001738
RAGHAVENDRA
6th October 2014, 09:09 AM
பொங்கும் பூம்புனல்
Super orchestration... guitar... trumphet... sax... clarionet... voice effects ... violin..... thavil ... flute... dolak... tabla...
மேற்கூறிய அத்தனை இசைக்கருவிகளும் இருந்தும் கூட பாடல் இரைச்சலில்லாமல் தந்திருக்கும் மெல்லிசை மன்னரின் இசையமைப்பு...
ஈஸ்வரியின் இணையில்லா குரலில் இப்பாடல்... இனிக்கும்... என்பதில் ஐயமில்லை...
அவன் ஒரு சரித்திரம் படத்திலிருந்து...
http://play.raaga.com/tamil/song/album/Avan-Oru-Sarithiram-T0002560/Inkkum-Kannangal-261204
RAGHAVENDRA
6th October 2014, 09:17 AM
பொங்கும் பூம்புனல்
இரு இளம் பெண்கள் தோழியரோடு உரையாடும் போது இடம் பெறும் பாடல்.. ஈஸ்வரியும் இசையரசியும் இணைந்து கலக்கும் பாடல்..
தங்கைக்காக படத்திலிருந்து மெல்லிசை மன்னரின் இசையில்
அழகே நீ ஒரு கதை சொல்லடி..
பாட்டின் துவக்கத்தில் வரும் பியானோவாகட்டும்... சரணங்களின் முன் வரும் சாக்ஸஃபோன் ஆகட்டும்.. அட்டகாசம்..
http://play.raaga.com/tamil/album/Thangaikkaga-T0002392
rajeshkrv
6th October 2014, 09:23 AM
ராகவ் ஜி வாங்க வாங்க பொங்கும் பூம்புனலை அள்ளி தருக தருக
gkrishna
6th October 2014, 09:51 AM
காலையில் செம விளாசல் குரு ராகவேந்தர் ஜி உங்கள் பொங்கும் பூம்புனல் .சென்னை சூப்பர் கிங் ரைனாவின் ரன் மழை போல் வேந்தரின் பாடல் மழை
மன்னிக்கணும் முதலில் எல்லோருக்கும் காலை வணக்கம் .அதை சொல்ல மறந்துட்டேன்
rajeshkrv
6th October 2014, 09:55 AM
கிருஷ்ணா ஜி வாங்கோ வாங்கோ
gkrishna
6th October 2014, 10:00 AM
வாசு சார்
உங்கள் ராஜா சேவை கலக்கல். நேற்று ஜெயா மொவீஸ் கொடுத்த ஞாயிறு விருந்து நமது ராஜா . மனதில் நிறைந்த கதாபாத்திரங்கள் எத்துனை எத்துனை சேகர்,குமரேச ஓதுவார் ,முருகேச ஓதுவார்,நியூஸ் ரீல் பட்டாபி ராமன் ,இடைவேளை ராஜாராமன்,ஜனகனமன ஜானகிராமன்,கமிஷினர் பிரசாத்,நாகலிங்கம்,தர்மலிங்கம் ,ராதா,தாரா,குமார் ,ஜம்பு,பட்டை கிருதா விஸ்வம், இன்ஸ்பெக்டர் ஹரிக்ரிஷ்ணன் (படத்தில் இவர் பெயர் தெரியவில்லை ),படத்தின் தயாரிப்பாளர் சந்தர் என்ற பாபு ,எல்லாவற்றிகும் மேலாக சிகப்பு மண்டை ரங்கா எல்லாமே அருமை .
RAGHAVENDRA
6th October 2014, 10:01 AM
காலை வணக்கம் ராஜேஷ், கிருஷ்ணா ஜீ....
gkrishna
6th October 2014, 10:01 AM
மார்னிங் ராஜேஷ் ஜி
விஜயா கிருஷ்ணமுர்த்தி பற்றி எழுதி உள்ளீர்கள் .எனக்கு பிடித்த அருமையான இசை அமைப்பாளர்
RAGHAVENDRA
6th October 2014, 10:02 AM
பொங்கும் பூம்புனல்
சுறுசுறுப்பான காலை வேளை கூட தூக்கத்தை வரவழைத்து விடும் இப்பாடல்... தாலாட்டுப் பாடலென்றால் அதற்கு இசையரசியை விட்டால் வேறு யார்..
சுதர்ஸனம் இசையில் பூமாலை படத்திலிருந்து கட்டை விரல் வெல்லக் கட்டி..
http://play.raaga.com/tamil/browse/movies/year-1960-1965/popular/Poomaalai-T0001779
rajeshkrv
6th October 2014, 10:07 AM
மார்னிங் ராஜேஷ் ஜி
விஜயா கிருஷ்ணமுர்த்தி பற்றி எழுதி உள்ளீர்கள் .எனக்கு பிடித்த அருமையான இசை அமைப்பாளர்
ஆம் நல்ல அருமையான இசையமைப்பாளர் . உயரத்திற்கு போக முடியவில்லை பாவம்
gkrishna
6th October 2014, 10:11 AM
தேஷ் ராகத்தில் அமைந்த கன கச்சித பாடல் ஒன்று நினைவிற்கு வந்தது
எஸ் ராஜேஸ்வர ராவ் இசையில் 1944இல் வெளியான பூம்பாவை படத்தில் இடம் பெற்ற 'ஓம் நமச்சிவாய என' பாடல் ” நடிப்பிசைப்புலவர் ” என்று அழைக்கப்பட்ட , புகழ் பெற்ற பாடகரும் ,நடிகருமான கே.ஆர்.ராமசாமி பாடியது . இதற்கு ஒலி அல்லது ஒளி வடிவம் கிடைக்கவில்லை . ராகாவில் தேடி பார்த்தேன்
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c0/Poompavai1944.jpg/250px-Poompavai1944.jpg
இதற்கு இசை ராஜேஸ்வர் ராவ் தானா ? ஹிந்து ராண்டார் கை விமர்சனத்தில் இசை அமைப்பாளர் யார் என்று சொல்லப்படவில்லை பாடல்கள் கம்பதாசன் என்றும் மதுரை மாரியப்ப சுவாமிகள் என்று மட்டுமே சொல்லப்பட்டுள்ளது
gkrishna
6th October 2014, 10:32 AM
Poompavai is the first tamil film composed by the stalwart composer Addapalli Rama Rao.
gkrishna
6th October 2014, 10:42 AM
Vijaya Krishnamurthy and Joseph are also introduced as music directors in the film.
ராஜேஷ் சார்
குலேபகாவலி கதா இசை விஜய கிருஷ்ணமுர்த்தி அண்ட் ஜோசப் இசை அமைத்த முதல் படம் என்று படித்தேன். இந்த ஜோசப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா
madhu
6th October 2014, 11:58 AM
இதோ என் மனசுக்கு பிடித்த பாடல்
மதுரக்குரலோன் திரு p.b.ஸ்ரீனிவாஸ் அவர்களின் குரலில் திரு சி.ராமச்சந்திரா அவர்களின் இசையில் பாட்டொன்று கேட்டேன் படத்தில் ஒலித்த பாடல்
அழகே உருவாய் அவள் வந்தாள் அந்த சிரிப்புடன் அவர் ஆரம்பிக்கும் விதமே அழகு .. பாடலின் மெட்டும் குரலும் என்ன பொருத்தம் .....
அப்படியே ஏ.வி.எம்.ராஜன் ராஜஸ்ரீயைப் பார்த்து பாடுவதை கண்டும் மகிழுங்கள்.
http://youtu.be/Wy9W8xbBMX0
gkrishna
6th October 2014, 12:53 PM
மெல்லிசை மன்னன்!- வாலி
என்னை -எங்கே எப்போது பார்த்தாலும் -'எப்படி யிருக்கிறார்?’ என்று...அவர் பற்றி அவர்கள் கேட்பார்கள்;
அவர்பால் அவர்களுக்கு அவ்வளவு மரியாதை;
அதற்குக் காரணம் அவரது - விசும்பை விஞ்சி நின்ற வித்துவத்துவம்;அவரைக் காணாவிடத்தும்
அவர் மாட்டுக் கனிந்திருந்தது -அவர்கள் அனைவர்க்கும்... ஓர் ஓவாக் காதல்!
'அதுசரி;
அவர் யார்? அவர்கள் யார்?
சொல்லவில்லையே!’ என்று
சொல்கிறீர்களா? சொல்கிறேன்!
'பூ மழை பொழிகிறது’ - இது விஜயகாந்த் நடித்த படம்; இசை r.d. பர்மன்!
'ரகசியபோலீஸ்’ - இது சரத்குமார் நடித்த படம்; இசை லட்சுமிகாந்த் பியாரிலால்!
'தாய் வீடு’ -இது ரஜினிகாந்த் நடித்த படம்;இசை பப்பி லஹரி!
'தர்மம்’ -இது சத்யராஜ் நடித்த படம்;இசை உஷா கன்னா!
நான்கு படங்களும், நான் பாடல்கள் எழுதிய படங்கள்; இந்தப் படங்களின் இசையமைப்பாளர்களாகிய -நால்வரைத்தான் -
நான் குறிப்பிட்டேன் 'அவர்கள்’ என்று; அந் நால்வரும் நலம் விசாரித்த -அந்த 'அவர்’
ஆரெனச் சொல்கிறேன்; அதற்கு முன்பு, நான் கொஞ்சம் - என் சொந்த ஊரான ஸ்ரீரங்கம் வரை போக வேண்டியிருக்கிறது!
என் ஊரில் -என் தெருவில் -என் வீட்டிற்கு நான்கு வீடுகள் தள்ளி, அதே வரிசையில்...
'சம்பத்’ என்றொரு சினேகிதன்; அவனுடைய சகோதரியின் கணவர் பெயர் திரு.ரங்கனாதன்.
அந்த ரங்கனாதன், திருச்சியிலிருந்து திருவரங்கத்திற்குத் தன் மாமனார் வீட்டிற்கு வரும்போதெல்லாம் -
'டேய்! உங்க அத்திம்பேர்கிட்ட என்னை அறிமுகம் பண்ணி வைடா!’ என்று நான் சம்பத்தை நச்சரிப்பேன்.
அதற்குக் காரணம் -
திரு.ரங்கனாதன் திரையுலகத்தோடு தொடர்பு உடையவர்!
சினேகிதன் சம்பத் வீட்டில் ஒரு gramo phone இருந்தது; h.m.v. கம்பெனி தயாரித்தது.
சாவி கொடுத்து இசைத் தட்டு மேல் ஊசியை உட்கார்த்தினால் -
'செந்தமிழ்த் தேன் மொழியாள்’ - கேட்கலாம்; 'பிறக்கும் போதும் அழுகின்றாய். இறக்கும் போதும் அழுகின்றாய்’ - கேட்கலாம்.
முன்னது டி.ஆர்.மகாலிங்கம்; பின்னது சந்திரபாபு!
இந்தஇசைத் தட்டுகளை - திரு.ரங்கனாதன் கையோடு கொண்டுவருவார், நான் 'சோறு தண்ணி’ இல்லாமல் கேட்பேன்.
ஒருமுறை திரு.ரங்கனாதனிடம் 'திராவிடப் பொன்னாடே’ போடச் சொல்லி வேண்டினேன்.
'வாலி! நான் ஒரு கேள்வி கேட்பேன்; அதுக்கு கரெக்டா பதில் சொல்லிட்டா - எத்தனெ தடவெ வேணும்னாலும் அந்தப் பாட்டெ நான் போடுவேன்!’ என்றார்அவர்; 'கேளுங்க சார்!’ என்றேன் நான்.
'h.m.v. கம்பெனியின் logo வாக - ஒரு mega phone முன்னாடி உட்கார்ந்திண்டு இருக்கிறதே - ஒரு நாய்...
அது - ஆண் நாயா? பெண் நாயா?’ - இப்படி ரங்கனாதன் கேட்டதும், சற்றும் யோசிக்காமல் நான் -
'சார்! அது ஆண் நாய்!’ என்றேன்.
'எப்படி?’ என வினவினார் ரங்கனாதன்.
'h.m.v. என்றால் - his master's voice என்று அர்த்தம்; தன் எஜமானனின் குரலைச் செவிமடுக்கும் அந்த நாய், பெண் நாயாயிருந்தால் -
h.m.v. என்பதை - her master's voice என்று குறிப்பிட்டிருப்பார்கள்’ என்றேன்.
ரங்கனாதன் மகிழ்ந்தார்; உடனே, நான் இதுதான் தருணமென்று -
'சார்! நான் விஸ்வநாதன் ராமமூர்த்தியோட பரம ரசிகன். ஒரு தடவை நீங்க மெட்ராஸ் போறச்சே - என்னையும் அழைச்சுண்டு போய் அறிமுகப்படுத்திவெக்கணும் சார்!’ என இறைஞ்சினேன்.
ஏன் அவரிடம் அப்படிக் கேட்டேன் என்றால் -
கண்ணதாசன் தயாரித்த 'மாலையிட்ட மங்கை’; 'கவலையில்லாத மனிதன்’ - இந்தப் படங்களுக்கெல்லாம் பண உதவி செய்தவர் திரு.ரங்கனாதன்.
கண்ணதாசனின் ஆருயிர் நண்பர்; இவரைப்பற்றி கண்ணதாசன் 'வனவாச’த்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
திரு.ரங்கனாதனை, சினிமா வட்டாரத்தில் 'அம்பி’ என்றுதான் அழைப்பார்கள்!
ஏன் இதை இவ்வளவு விரிவாக எழுதினேன் எனில் -
எம்.எஸ்.விஸ்வநாதனிடம் ஒரு பாட்டா வது எழுதினால்தான், எனக்கு ஜன்ம சாபல்யம் என -
ஸ்ரீரங்கநாதரை வேண்டிக்கொண்டே இருந்தேன் நான்.
பிரார்த்தனை வீண் போகவில்லை; பெருமாள் திருக்கண் மலர்ந்தருளினார்.
விஸ்வநாத அண்ணனிடம் - 1963-ல் ஆரம்பித்து,
நாளது வரை நாலாயிரம் பாடல்கள் எழுதிவிட்டேன்.
நாலாயிரமும் நாலாயிரம்தான்; திவ்யப் பிரபந்தம் போல் திரைப் பிரபந்தம்!
இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும், இறவாத பாடல்களை -
ஈங்கு விசுவநாதனின் ஆர்மோனியம்தான் ஈன்றது. எம்.ஜி.ஆர்; சிவாஜி - இவ் இருவரின் உதடுகளிலும் விசுவநாதனின் உன்னத மெட்டுகள் உட்கார்ந்ததால் தான்,
உலகத்தார் உள்ளங்களில் அவர்கள் போய் அமர முடிந்தது!
சாதா வார்த்தைகள், அவரது சங்கீதத்தில் தோய்த்தெடுத்த பின் - சாகாவார்த்தை கள் ஆகும்!
பின்னைக்கும் பின்னையாய்; முன்னைக்கும் முன்னையாய் -
பிறங்கும் பரம் பொருள் போல், விஸ்வநாதனின் வித்வத்வம் -
பிராசீனத்திற்கும் பிராசீனமாய்; நவீனத் திற்கும் நவீனமாய், விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது எனலாம்.
'லலிதாங்கி’யையும், 'ஆபோகி’யையும் லகுவாகக் கையாள்வார்; அதே, லலிதத் தோடும் லாகவத்தோடும் -
waltz;
jazz;
- இன்ன பிற மேலை நாட்டு இசை வகைகளையும், piano-வில் பிலிற்றுவார்.
விஸ்வநாதனின் வித்தகம் பற்றி, ஒற்றை வரியில் ஓதுவதாயின் -
விரலிலும் குரலிலும் கலைமகள் கடாட்சம் விரவி நிற்கும் புண்ணியவான் அவர்!
அற்றை நாளில், அவரது பாடல்களில் accordion அழகுற இசைக்கப்படுவதைக் காணலாம்; மற்றும் cello; double-bass- எனப்படும் violin குடும்ப வாத்தியங்களை யும், அவற்றின் தனித்தன்மை துல்லியமாகத் துலங்குமாறு பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.
Violin-களில் - chromaric; மற்றும் pizzicato பாணிகளை இடமறிந்து இடம் பெறச் செய்வார், தான் இசைக்கும் பாடல்களின் பின்னணியில்; அவர் அறியாத மேலை நாட்டுச் சங்கீதமே இல்லை.ஆயினும், அவ் அறிவை அளவோடு பயன்படுத்துவார்; சந்தனம் நிறைய இருக்கிறதே என்று - புட்டத்தில் பூசிக்கொள்ள மாட்டார்.
என் வாழ்வும் வளமும் அவரிட்ட பிச்சை; what i am today i owe him!
வட நாட்டு இசையமைப்பாளர்கள், மிகுந்த மரியாதையோடு -
'எப்படியிருக்கிறார்?’ என நலம் விசாரித்தது -
அண்ணன் விஸ்வநாதனைப் பற்றித்தான்!
ஹோட்டல் கன்னிமாராவில் -
சில ஆண்டுகள் முன்னம்,
'சந்திரமுகி’ படம், கேஸட் வெளியீட்டு விழா நடந்தது; நான்தான் வெளியிட்டேன் - திருமதி.ஆஷா போன்ஸ்லே பெற்றுக்கொண்டார்.
சிவாஜி அவர்களின் புதல்வர்கள், திரு.ராம்குமார்; திரு.பிரபு இருவரும் -
அந்த விழாவில் விஸ்வநாத அண்ணனைக் கௌரவித்தார்கள்; அப்போது நான் விஸ்வநாத அண்ணனைப்பற்றி ஒரு கவிதை வாசித்தேன்.
ரஜினி, அந்தக் கவிதையைக் கேட்டுவிட்டுக் கண்ணீர் மல்க - 'அண்ணா! இந்தக் கவிதையை அப்படியே நான் பாலசந்தர் சாரைப் பார்த்து பாடணும்னு தோணுது’ என்றார்.
அந்தக் கவிதையின் சில வரிகளே நினைவில் உள்ளன; அவை இதோ!
'அண்ணனே! மெல்லிசை -
மன்னனே! - உன்னை
சந்திக்கு முன் - எனக்கு
சோற்றுக்கே வக்கில்லை; உன்னை -
சந்தித்த பின் - எனக்கு
சோறு தின்னவே நேரமில்லை!
வெறும்
விறகு; நான் -
வீணையானேன் - உன்
விரல்பட்ட பிறகு!
பலரிடம் நான்
பாட்டு எழுதியிருக்கிறேன்; என்
வரிக்கெல்லாம்
வருமானம் வந்தது;
உன்னிடம் பாட்டெழுத
உட்கார்ந்த பின்புதான் - என்
வருமானத் திற்கெல்லாம்
வரி வந்தது!’
- இப்படிப் போகும் அந்தக் கவிதை; நான் சொல்ல வருவது யாதெனில்...
'இசையே! எனக்கு
இசை!’ என -
இசையைத் தனக்கு
இசைய வைத்து - அன்னம்
இசைந்த
இசையை -
இசைத்து
இசைத்து - அதன்
இசையைப் பெருக்கிய
இசையமைப்பாளர் -
எம்.எஸ்.வி. அவர்களுக்கு 'ஏன் பத்மா விருதுகள் வழங்கப்பட வில்லை?’ எனப் பலர் கேட்கலாம்.
அதற்கு அடியேன் சொல்லும் பதில் இதுதான்:
'விஸ்வநாதன் சாதனையை - அளப்பது
விருதா?
விருது
வரா விடில் -
விஸ்வநாதன் சாதனைகள் - ஆகுமோ
விருதா?’
madhu
6th October 2014, 01:23 PM
திரு சி.ராமச்சந்திரா அவர்களின் இசையில் பாட்டொன்று கேட்டேன்
இதில் இடம்பெற்ற குங்குமம் பிறந்தது முகத்திலா இசையரசியுடன் மதுரக்குரலோன் பாட அந்த பாடலும் மிகப்பிரபலம்...
ராஜேஷ்..
அதை மட்டும் விட முடியுமா ? இதோ அதுவும் வந்தாச்சு ( கொஞ்சம் வீடியோ குவாலிட்டி சுமார்தான் )
கோபால் ஜி, கிருஷ்ணா ஜி, வாசு ஜி.. இந்த ஹீரோயின் யாரு ?
http://youtu.be/ws-fliwssVk
chinnakkannan
6th October 2014, 02:06 PM
அழகே உருவாய் அவள் வந்தாள் பாட்டுக்கும், குங்குமம் பிறந்தது மரத்திலா குமரிப்பெண்ணின் இதழ்களிலா..பாட்டுக்கும் தாங்க்ஸ் மதுண்ணா..சந்திரன் பிறந்தது வானிலா ஆடவர் கண்களிலான்னு போயும் போயும் ஏவிஎம் ராஜனைப் பார்த்துப் பாடறது மட்டும் பொறுக்க முடியலை!!
gkrishna
6th October 2014, 04:19 PM
""அந்தக் காலத்தில் நாகராஜராவ் என்றொரு புகைப்படக் கலைஞர் இருந்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றோர்களெல்லாம் அவரிடம்தான் போட்டோ எடுத்துக் கொள்ள ஆசைப்படுவார்கள். பிறகு எம்.ஆர். பிரதர்ஸ் என்று பல இடங்களில் கலர் பட ஸ்டுடியோக்கள் வைத்திருந்த முருகப்பன் பெரிய பெயரோடும், புகழோடும் விளங்கினார். இன்றைக்கு இருக்கும் கலர் போட்டோவுக்கு அவர்தான் அடித்தளம் போட்டார். கலர் போட்டோ இயந்திரங்களை முதன் முதலில் தமிழ்நாட்டுக்கு எடுத்து வந்தவர் அவர்தான். பின்னர் நான் ஸ்டுடியோக்களில் படம் எடுத்துக் கொண்டிருக்கும் போது பத்திரிகை புகைப்படக் கலைஞரான "ஸ்டில்ஸ்' ரவி, நடிகர்களைச் செட்டுக்கு வெளியே அழைத்துச் சென்று புகைப்படம் எடுப்பார். அவரிடம் படங்களை வாங்க பத்திரிகை நிருபர்கள் போட்டி போடுவார்கள். அதுபோல சாரதி என்றொரு புகைப்படக் கலைஞர் இருந்தார். வித்தியாசமான கோணங்களில் படங்களை எடுப்பதில் வல்லவர். அவரின் கோணத்தை பார்க்கும்போது, இந்தப் படம் எப்படியிருக்குமோ என்று தோன்றும். படத்தை பார்த்த பின்னர் ஆச்சரியம் அளிப்பார். அது போல்தான் இன்றைக்கு புகைப்பட கலைஞராக இருந்து இயக்குநராக மாறியுள்ள கே.வி.ஆனந்த் வெற்றிப் படத்தை கொடுத்துள்ளார். இவர்களைப் போல் நீங்களும் மாற வேண்டும். உணவு, உடை, உறைவிடம் போன்று, இன்றைக்கு செல்போன், கேமரா, கம்யூட்டர் ஆகிவிட்டது. இவற்றில் நிச்சயம் நீங்கள் முத்திரை பதிக்க வேண்டும்.''
- சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் புகைப்படக் கலை கற்றுக் கொள்ளும் மாணவர்களிடம் இப்படி பேசினார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்.
gkrishna
6th October 2014, 04:38 PM
http://3.bp.blogspot.com/-Ck_KCdvLrmk/Ulb4xWYK_NI/AAAAAAAAEC8/Ck59yu-d78Y/s1600/027.jpg
முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இதயம் கனிந்த பக்ரீத் நல்வாழ்த்துகள். தியாகத் திருநாளாம் பக்ரீத் பெருவிழா இறை நம்பிக்கை, பகிர்வு உணர்வு, ஈகை, ஒற்றுமை, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கட்டும்.
gkrishna
6th October 2014, 05:11 PM
http://3.bp.blogspot.com/-b1QMSMEth8Y/U694J4g8mWI/AAAAAAAACzo/Fkj0-Q3-5Xk/s1600/1186032_502182913201778_827972975_n.jpg
எம். ஜி. ஆரும், நம்பியாரும் கட்டிப்பிடித்து சண்டைபோடும் காட்சியாகட்டும். கமலும், கௌதமியும் இணைந்த முத்தக்காட்சியாகட்டும், அந்தக் காட்சிகளை அப்படியே தத்ரூபமாக படம் பிடித்து பெரிய பேனர்களில் நம் கண்களுக்கு விருந்தாகப் படைப்பது ஒரு கலை. அந்தப் படங்களை 'க்ளிக்' செய்ய கைதேர்ந்த சினிமா ஸ்டில் புகைப்படப்பிடிப்பாளர்கள் பலர் தமிழ் சினிமா உலகில் இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமான ஒருவர்தான் ஸ்டில் ரவி. எம். ஜி. ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் என்று அவர் எடுத்த ஸ்டில்களின் பட்டியல் மிகவும் நீளமானது.
தமிழகத்திலும் நம் நாட்டிலும் செய்திப் பத்திரிகைகளில் ரவியின் சினிமா ஸ்டில்கள்தான் இன்றைக்கும் கண்களுக்கு விருந்து. அவர் கெமராவில் கிளிக்கிய படங்கள் ஆயிரம் ஆயிரம்... ஆனால் இதுவரை ஒரு புகைப்படக் கண்காட்சியைக்கூட அவர் நடத்தியதில்லை.
"எனக்கு கண்காட்சி நடத்துவதில் ஆர்வம் இல்லை. ஆனால், இப்போது நடத்தலாம்னு நினைக்கிறேன். எனக்கு இதுவரை விருதுகள் எதுவும் கிடைக்கலை. ஆனால் அண்மையில் ஃபேஸ்புக் ஊடாக கிடைத்த தொடர்பில் பாண்டிச்சேரி குழந்தைகள் இலக்கிய வளர்ச்சிக் கழகம் என்னைப் பாராட்டி 'ராஜ ரவிவர்மா' விருது வழங்கி கௌரவித்தார்கள்" என்று புன்னகைக்கிறார் ரவி.
http://4.bp.blogspot.com/-88My6SykXKM/U694jUpgaXI/AAAAAAAACzw/BVhBlzOTIB0/s1600/62746_10151817634119478_301325111_n.jpg
மனைவி தன் குழந்தையின் கை வழியே யாருக்கு பரிசு வழங்குகிறார் தெரியுமா?குட்டிப் பயலாக இருக்கும் நடிகர் சூர்யாவுக்குத்தான்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரின் இல்லத்தில் ஒரு இனிய காலை வேளையில்தான் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இல்லம் முழுக்க பரவிக்கிடக்கும் போட்டோக்களுக்கு நடுவே அமர்ந்திருந்த அவரிடம் கேள்விகள் கேட்டு பதிலை கறப்பது கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. ஏனென்றால் அவரு இப்போ ரொம்ப பிஸி.
"கொஞ்ச காலம் படம் இல்லாமத்தான் இருந்தேன். ஆனா, இப்போ கொஞ்சக் காலமா ஃபேஸ்புக்ல இருப்பதால் நிறைய ரசிகர்கள் எனக்குக் கிடைத்தாங்க. அவங்களின் உதவியால் இப்போ நிறைய பட வாய்ப்புகள் கிடைச்சிருக்கு.
http://1.bp.blogspot.com/-AG0k83e26FY/U695K3as5LI/AAAAAAAACz8/DbQmbIaGP-Y/s1600/428913_10151264943239478_114719111_n.jpg
திருமணத்தன்று கமல்,அவரின் முதல் மனைவி வாணி கணபதியுடன்
ஃபேஸ்புக் மூலமாக கிடைக்கும் பாராட்டுக்கள்தான் என் மனசுக்கு ரொம்பவும் ஆறுதலாக இருக்கு. மேலும் எனக்கு ஏதாவது கெமரா சம்மந்தமான பொருட்கள் தேவைன்னா ஃபேஸ்புக்ல ஒரு மெசேஜ் போட்டா போதும். அமெரிக்கா, லண்டன்ல உள்ள நண்பர்கள் வாங்கி அனுப்பிடுறாங்க. இந்த வசதி வேறு எங்கு கிடைக்கும்? பேஸ்புக் வேஸ்ட், அது கெட்ட விசயம்னு சொல்றாங்க, ஆனா எனக்கு அது அப்படி இல்லை. ஃபேஸ்புக் எனக்கு கடவுள் மாதிரி என்று அடித்துச் சொல்லும் ரவியின் முகத்தில் சந்தோசம் ப்ளாஷ் அடிக்கிறது.
"எங்கப்பா அந்தக் காலத்தில் ஒரு ஸ்டில் போட்டோ கிராபரா இருந்தார், ஆனாலும் எனக்கு புகைப்படக் கலைஞனா வர விருப்பம் இருந்தது கிடையாது. ஏனென்றால் அவரோட சில பட சூட்டிங் நடக்கும் இடங்களுக்கு போய் பார்த்திருக்கிறேன். அந்த சமயங்களில் எல்லாம் படத் தயாரிப்பாளர்கள் எங்கப்பா கிட்டே பணம் வாங்கி யுனிட்காரர்களுக்கு டிபன் வாங்கிக் கொடுக்கிறதைப் பார்த்திருக்கிறேன். அப்போதான் இது என்ன பிழைப்புடான்னு எனக்கு அந்த துறை மீது வெறுப்பு வந்தது. பிறகு எப்படி இந்த துறைக்குள் வந்தேன்னு பார்க்கிறீங்களா...." என்று படபடக்க பேசியவர் மேலும் தொடர்ந்தார்.
http://3.bp.blogspot.com/-_ALgx781Cdw/U695400JpaI/AAAAAAAAC0E/z6lQf-qQrRI/s1600/219116_10150266489349478_898938_o.jpg
ரவி எடுத்த படங்களில் வி.ஐ.பி.படமாகக் கருதப்படுவது, இந்தப் படம்தான்..டிஜிட்டல் கெமரா இல்லாத காலத்தில் எடுத்த படம்.
"ராயப்பேட்டையில் உள்ள எங்கப்பா அலுவலக மாடியில்தான் போட்டோ கிராப்பர் சுபாசுந்தரத்தின் அலுவலகம் இருந்தது. அங்கே எல்லா பத்திரிகைக்காரர்களும் வருவாங்க. நானும் அந்த சந்தர்ப்பத்தில் அங்கே இருந்திருக்கிறேன். வந்தவங்களுக்கு சுபாசுந்தரம் மசால் வடையும், டீயும் வாங்கிக் கொடுப்பார். அது எனக்கும் கிடைக்கும். பிறகு அந்த மசால்வடை, டீக்காக நானும் தினமும் அந்த இடத்துக்கு போய்வரத் தொடங்கினேன். சுபா சுந்தரத்திடம் டீ, வடை சாப்பிட்ட நன்றி விசுவாசத்திற்காக படங்களை கழுவும் வேலையை நான் செய்து கொடுத்தேன்.
பிறகு என்னையறியாமலேயே டெவலப்பிங், பிரிண்டிங், போட்டோ கிராபி உள்ளிட்ட விசயங்களை அவரிடம் கற்றேன். அவரோடு படிப்பிடிப்புகளுக்கு உதவியாளராகவும் சென்றேன். எம். ஜி. ஆரின் இதயவீணை, பல்லாண்டு வாழ்க, சிரித்து வாழ வேண்டும் உள்ளிட்ட பல படங்களுக்கு அவரோடு வேலை செய்திருக்கிறேன். சிரித்து வாழ வேண்டும் படத்தில் ஒரு காட்சியில் எம். ஜி. ஆர். சிறைச்சாலைக்குள் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அந்தக் காட்சியை என்னை எடுக்கும் படி சுபா சுந்தரம் சொல்ல நான் கேமராவை எடுத்து கோணம் பார்த்தேன்.
இப்போ மாதிரி சைபர் சாட் கேமராக்கள் அப்போ கிடையாது. அதனால் போட்டோ எப்படி வர வேண்டுமோ அதற்கேற்ப மாதிரி நடிகர்கள் ஆக்ஷன் கொடுக்க வேண்டும். அதனால் நான் எம். ஜி. ஆரிடம் 'சார் கொஞ்சம் சாப்பாட்டு தட்டை மேலே தூக்கி சாப்பிடுவது போல கையை வையுங்கள்' என்றேன். உடனே பக்கத்தில் இருந்த எம். ஜி. ஆரின் உதவியாளர்கள் ஓடி வந்து என் கையைத் தட்டி விட்டு, 'நீ என்ன சொல்றே...? அவரு எப்படி இருக்காரோ அப்படியே எடு' என்றார்கள். உடனே எம். ஜி. ஆர் அவர்களிடம், 'நீங்க சும்மா இருங்க அவர் வேலையை சரியா செய்ய இடம் கொடுங்க. காட்சி தத்துரூபமா வரணும்ணு தம்பி நினைக்கிறான்' என்று கரகரத்த குரலில் சொன்னதும் நான் புல்லரித்து நின்றேன்.
அந்தப் போட்டோதான் நான் பெரிய ஹீரோ ஒருவரைக் க்ளிக் செய்த முதல் தருணம். ஆனால் நான் முதன் முதலில் கெமராவைத் தொட்டு க்ளிக் செய்த போட்டோ திருநீலகண்டர் படத்தில் வரும் நடராஜர் சிலைதான்" என்று தமது கடந்த கால ஞாபகங்களை மீட்டிப் பார்க்கும் ஸ்டில் ரவி, நடிகர் மைக்மோகனின் நெருங்கிய நண்பர்.
ரவியின் திருமணத்தில் மோகன்தான் மாப்பிள்ளை தோழன் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?
ரவியின் மனைவியின் சகோதரி நடிகை சுமலதா முரட்டுக்காளை படத்தில் ரஜினியுடன் நடித்தவர். சுமலாதாவின் கணவர் அம்ரிஸ் கன்னட நடிகர். அவர் இப்போது அரசியலில் இருக்கிறார். ரவியின் ஒரே மகள் ஸ்ருதி திருமணம் முடிந்து துபாயில் இருக்கிறாராம்.
"சுபா சுந்தரத்திடம் நான் வேலை செய்து கொண்டிருந்த போது அன்னக்கிளி கதாசிரியர் ஆர். செல்வராஜ் என்னைக் கேட்காமலேயே அவரின் காமதேனு படத்திற்கான அழைப்பிதழில் ஸ்டில் ரவி என்று என் பெயரைப் போட்டு எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அந்தப் படத்தில் இளையராஜாவின் அண்ணன் ஆர். டி. பாஸ்கர் கதாநாயகராக நடித்தார். ஆனா அந்தப் படம் இடையில் நின்று போனது. அதன் பிறகு நடிகர் சிவகுமாரின் சிபாரிசில் முதலிரவு படத்திலும் நடிகை ஸ்ரீப்ரியாவின் சிபாரிசில் பைரவி படத்திலும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு புலி வாலைப் பிடித்த கதையாக இன்னும் இந்தத் தொழிலை விட முடியாமல் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது" என்கிறார் ரவி.
ரவியின் நண்பர் 1995 இல் இவருக்காக நடித்துக் கொடுத்த படம் 'நான் உங்கள் ரசிகன்'. இதில் ராதிகா நாயகியாக நடிக்க படத்தை டைரக்டர் மனோபாலா இயக்கி இருந்தார். ரவியின் தயாரிப்பில் வெளியான ஒரே படம் இதுதான். அதன் ஓட்டம் சுமாராக இருந்ததால் படத்தயாரிப்பை ரவி கைவிட்டார்.
"கமலுடன் நிறைய படங்களில் வேலை செய்திருக்கிறேன். அவருக்கு என்மீது ஒரு மரியாதை இருக்கு. அவரை ஒரு நடிகராக மட்டும்தான் உங்களுக்குத் தெரியும். ஆனால் அவர் ஒரு நல்ல புகைப்படக் கலைஞர். அவர் எடுத்த சில போட்டோக்களை என்னிடம் காட்டுவார். எனக்கு பிரமிப்பாக இருக்கும். அதைப் பார்த்த பிறகு எனக்கு ஒரு வெறி வரும்... அவர் மாதிரியே நானும் போட்டோக்களை இன்னும் சிறப்பாக எடுப்பதற்கு தீர்மானிப்பேன்" என்று சொன்னவர், ரஜினி பற்றி இப்படிச் சொல்கிறார்.
"ரஜினி 'பைரவி' யிலதான் அன்டி ஹீரோவாக அறிமுகமானார். அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை அவர் படங்களில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். அவருடன் நல்ல பழக்கம் உண்டு. ஒருமுறை ரஜினியின் 'சிவா' படத்தின் படப்பிடிப்பு ஏ.வி.எம் ஸ்டூடியோவில் நடந்தது. அப்போது ரஜினியை ஸ்டில் எடுக்க நான் தயாரானேன். ரஜினியை ஆக்ஷன் பண்ண சொன்னதும் அவர் கடுப்பானார்.
'என்ன நினைச்சுட்டீங்க! ஒவ்வொரு ஷாட்டுக்கு பிறகும் ஸ்டில் எடுக்கணுமா?' என்று முகத்தை கடுப்பாக்கிச் சொன்னதும் எனக்கு என்னவோ போல ஆகிவிட்டது. நான் மறு நிமிடமே கேமராவை படார் என்று மூடி விட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினேன். இனி இவர் படத்தில் வேலை செய்யக் கூடாதுன்னு தீர்மானித்தேன். ஆனால் ஏவிஎம்மின் பிரதான வாயிலை கடப்பதற்குள், ஓடோடி வந்த ரஜினியின் உதவியாளர், சார் உங்கள கூப்பிடுறாரு என்றார். நான் ரஜினி இருக்கும் இடம் நோக்கிப் போனேன்.
உதட்டில் சிகரெட்டோடு புகை விட்டபடி அமர்ந்திருந்த ரஜினி 'என்ன ரவி கோவிச்சுட்டீங்களா?' என்றார். ஆமாம், நீங்கள் எப்படி கஷ்டப்பட்டு நடிச்சு பெயர் வாங்கனும்னு ஆசைப்படுறீங்களோ அதே மாதிரிதான் நானும் கஷ்டப்பட்டு ஸ்டில் எடுத்து பெயர் வாங்கனும்னு நினைக்கிறேன்' என்று நான் சொல்ல, 'மன்னிச்சுடுங்க ரவி, எனக்கு உடம்புக்கு சரியில்ல... அதுதான் கொஞ்சம் கோபப்பட்டுடேன்' என்றார் பதிலுக்கு. ரஜினி சொன்னதும் நான் சமாதானம் ஆகிட்டேன். ஒரு பெரிய நடிகர் தன்னோட தப்பை புரிஞ்சுக்கிட்டு மன்னிப்பு கேட்பது சாதாரண விசயமா?" என்று ரஜினியை பாராட்டுகிறார் ரவி. இவர் இந்தக் கால நடிகர்கள் மீது கொஞ்சம் கடுப்பில தான் இருக்கிறார்.
"அந்தக் காலத்தில் ஒரு நடிகரை பார்ப்பது ரொம்பவும் சுலபம். ஆனால் இன்னைக்கு ஒரு நடிகனின் மெனேஜரைப் பார்ப்பதே ரொம்பக் கஷ்டம். பத்திரிகையாளர்களுக்கு மரியாதை இல்லை. நான் பணியாற்றிய அந்த நாட்களை நான் பொற்காலம் என்றுதான் சொல்வேன். இன்னைக்கு பெரிய படங்களில் வேலை செய்தால் அந்தப் புகைப் படங்களை பத்திரிகைகளுக்கு கொடுக்கும் அதிகாரம் கூட எங்களுக்கு இல்லை. அதனால் நான் சின்ன பட்ஜட் படங்களுக்குத்தான் இப்போது வேலை செய்கிறேன். அதைக்கூட நிறையப்பேரு, என்ன நீங்க போய் சின்னப் படங்களில் வேலை செய்றீங்கன்னு குறையா சொல்றாங்க. ஆனா நான் அந்தக் காலத்தில் வேலை செய்த சின்னப் படங்கள் தான் பிறகு பெரிய படங்களாக மாறின" என்று இந்தக்கால சினிமாவுக்கு ஒரு குட்டு வைத்தார் ரவி.
நன்றி: வண்ண வானவில்
ரவியின் புகைப்படங்கள்தான் அந்தக்கால குமுதம். விகடன் அட்டைகளை அலங்கரித்தன. ரவியின் ஸ்டில்களில், ஜீவா படத்துக்காக சில்க் ஸ்மிதாவை பல வித கோணங்களில் எடுத்ததும் தென்றல் படத்தில் நடிகை அபிலாஷாவின் குளியல் காட்சிகளும் ரவிக்கு பெயர் வாங்கிக் கொடுத்த ஸ்டில்கள்.
"புகைப்படப் பிடிப்பாளராக வருவதற்கு அதை முறையாக படிக்க வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. முறையா படிச்சி வாரவங்க அதை ஒழுங்கா செய்றதுமில்ல. புதுப்புது கிரியேட்டிங்தான் முக்கியம். அதற்காக விலை உயர்ந்த கெமராதான் வேணும் என்று கிடையாது. கெமரா முக்கியமில்லை. பின்னாடி இருக்கிற ஆளுதான் முக்கியம். செல்போனில் கூட ஒரு நல்ல போட்டோவை எடுத்திடலாம். படிப்படியா ரசனை வளர்வதுதான் முக்கியம்" என்று நமது புகைப்பட கலைஞர்களுக்கு ஒரு டிப்ஸ் கொடுத்து விடைபெற்றார் ரவி.
RAGHAVENDRA
6th October 2014, 08:00 PM
இப்படியெல்லாம் அந்தக் காலத்து நினைவுகள் நம் ஒவ்வொருவர் மனதிலும் அவ்வப்போது நிழலாடிக் கொண்டிருக்கும்.. என்னதான் DTS CUBE System Multiplex Online booking with snacks என்றெல்லாம் நவீன மயமாக்கலில் சினிமா உழன்றாலும் அன்றைய தலைமுறையினர் நினைவில் மூழ்கித் திளைப்பதும் இன்றைய தலைமுறை காணத் துடிப்பதும் அந்த டூரிங் டாக்கீஸ் அனுபவங்கள்...
இந்த அனுபவம் சினிமா பார்ப்பதோடு நின்று விடுமா என்ன... அந்த மாட்டு வண்டியில் விளம்பரத் தட்டி, கிராமஃபோன் ரிக்கார்டில் பாட்டு ஒலிப்பது, பிட் நோட்டீஸ் விநியோகம், என பல்வேறு விதங்களில் அந்தக் கால ரசிகர்களின் நெஞ்சில் பல நினைவுகள் சுற்றிச் சுழலும்.
இதையெல்லாம் நாம் கீற்றுக் கொட்டகைத் திரியில் (http://www.mayyam.com/talk/showthread.php?11171-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%A F%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%A E%95%E0%AF%88&p=1170024#post1170024) பகிர்ந்து கொள்வோமே...
chinnakkannan
7th October 2014, 01:56 AM
ஹாய் ஆல்..குட் ஈவ்னிங்க்க்..
கைதி கண்ணாயிரத்தில் ஒரு நகைச்சுவை க் காட்சி என நினைக்கிறேன்.. தங்கவேலு சரோஜாவை (?) மீட் செய்ய ப் போவார் வேஷமிட்டு என நினைக்கிறேன் .. என்ன…எங்கே எப்போ –என்பார்.. பெரும்பாலும் வானொலியில் கேட்டு நகைத்த வசனம் தான் அது..படம் முன்ன்ன்புபார்த்தது.. அவ்வளவாக நினைவில்லை;.. கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் பாடலைத்தவிர..
இந்த என்ன எங்கே எப்போ என்ற கேள்விகளை விட யார் என்ற கேள்வி மனித மனதை அவ்வ்பபோது துளைக்கும் கேள்வியாய் இருக்கும்..
யாரெனத் தேர்ந்தார் இகத்தினில் வாழ்க்கைத்
தேரென்று நிற்கு்மெனத் தான்
இதோ ஒரு பெரும் புலவன் என்ன கேள்வி கேட்கிறான்..
யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி
அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம் - அம்மா
யார் தருவார் இந்த அரியாசனம்?
பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த
பேறு பெறும் இடத்தில் இல்லாதவன்
சேரும் சபையறிந்து செல்லாதவன் - அங்கு
தேர்ந்த பொருள் எடுத்து சொல்லாதவன் தனக்கு
கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா? - உன்
காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா?
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா? - உன்
சிங்காரக் கைக்கு அபிநயம் வேண்டுமா
ந.தி மகாகவி காளிதாஸாகிக் கேட்பது இப்படி..
ம.தி கேட்கும் கேள்வி உள்ளத்தைக் கேட்கி/றார்…உள்ளதைக் கேட்கிறார்.
.
நான் யார் நான் யார் நீ யார்
நாலும் தெரிந்தவர் யார் யார்
தாய் யார் மகன் யார் தெரியார்
தந்தை என்பார் அவர் யார் யார்
ஒரு ஆவி என்ன பாடுகிறது..
நானே வருவேன் இங்கும் அங்கும்
யாரென்று யார் அறிவார்
மயங்கும் கண்ணைப் பாராமல் கலங்கும் நெஞ்சைக்கேளாமல்
பிரிந்து செல்ல எண்ணாதே என் கண்ணீர் பேசும் செல்லாதே..
யார் என்று கேள்வி டைப் செய்தால் அன்றைய பாடல்களை விட இன்றைய பாடல்க்ள் நிறைய இருக்கின்றன..
இப்போது ஒரு தாத்தா பேரன் பாட்டு பார்க்கலாம்..
யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு…
இந்தப் பாடலை ஆன்றோரும் அறிஞரும் அந்தக்கால ப் 501 சோப்பிலிருந்து இந்தக் கால ஃபர்ஃப்யூமிட்ட சர்ஃப் எக்ஸெல் வரை போட்டு அலசி தோய்த்து விட்டதால் ஒருவரி மட்டுமே..
பேரன்.. யா..
அவன் இளைஞன்.. நண்பர்களுடன் ஹோட்டலில் அரட்டை அடிக்கையில் ஒரு பெண்ணைப் பார்க்கிறான்..ஆஹா…பாதி மேகம் மறைத்த விண்மதி போல ஆடை பாதியுடல் மறைத்து மதியை மயக்கும் மதி..
கதியிலை பாவையின் கட்டழகின் முன்னால்
மதியும் மயங்கும் மதி…
அவளிடமே சென்று பேசுகிறான்.. நான் உங்களுக்கு ஒரு பாட்டு டெடிகேட் பண்ணுகிறேன்.. எனச் சொல்லிப் பாடுகிறான்..
சாட்டின் பூவின் வாசம் கண்டேன்
ஒத்த வண்ண சாட்டின் பூ
என் ஊருக்குள்ளே நுழைத்தென்னை
மயக்கி விட்டாள்
இதயத்தை சில நொடி நிறுத்தியே
மறுபடி இயக்கி விட்டாள்
யா...ரோ யார் அவள் யா...ரோ யார் அவள்
ஆர் யு ரெடி கம் ஆன் சிங் வித் மி
யாரோ யார் அவள்……………
காஷ்மீரி தேனா
மும்பை பெண் மானா
கல்கத்தா மீனா
டெல்லி பெண் தானா
என் தோழன் என்னை கேட்டானே
இல்லையென்றே நான் சொன்னேனே
அய்யோ தமிழ் உரைத்தாள்
என் நெஞ்சையே ஓங்கிப் பறித்தாள்
யாரோ யாரோ யாரோ யாரோ யாரோ அவள்
மனதில் வாளை வாளை எரிகிறாள்
அழகி யாரோ யார் அவள்
அழகி யாரோ யார் அவள்
அறையில் தேடினேன்
யார் உந்தன் தேவதை
அழகின் உச்சமாய்
யார் அந்த தாரகை
**
படம் அரிமா நம்பி விக்ரம் பிரபு அண்ட் பாதி ஆடை நிலவு ப்ரியா ஆனந்த்..
பாடியவர்கள்..ஷப்பீர் குமார் ருனா ரிஸ்வி.. இசை டிரம்ஸ் சிவமணி.. கேட்டுப் பாருங்கள்….
*
விட்டுப் போன பழைய யார் பாடல்கள் வரும் தானே..
*
chinnakkannan
7th October 2014, 02:00 AM
//வெங்க்கி ராம்.. மூன்றாம் பாகத்தில் இளையராஜா தொடர் வேணுமே..வாங்க.. வாங்க..மனசுல ஒண்ணும் வெச்சுக்காதீங்க..(வரலைன்னா பேங்க் பேங்க் பட டிக்கெட் எடுத்து அனுப்பி விடுவேன்!:) )
rajeshkrv
7th October 2014, 05:15 AM
சி.க
அக்டோபர் 24 இசையரசி மஸ்கட் வருகிறார்.
rajraj
7th October 2014, 05:35 AM
சி.க
அக்டோபர் 24 இசையரசி மஸ்கட் வருகிறார்.
Rajesh: You are not going? You know she invites people from the audience to sing with her. Here is your chance ! :lol:
rajeshkrv
7th October 2014, 06:02 AM
Rajesh: You are not going? You know she invites people from the audience to sing with her. Here is your chance ! :lol:
அங்கிள்,
ஹ்ம்ம்ம் இசையரசியுடன் இரண்டு வரி பாடி பயந்து நிறுத்தி விட்டேன். சில சமயங்களில் தொலைபேசியில் சில பாடல்களை நினைவூட்டுவதற்கு சில வரிகள் பாடுவதுண்டு ... அம்புட்டுதேன்..
madhu
7th October 2014, 09:11 AM
she invites people from the audience to sing with her.
லேட்டஸ்டா பாடகர் ஜெயச்சந்திரன் ஒரு பேட்டியில் பாடகி சுஜாதாவின் கேள்விக்கு பதில் சொன்னபோது சுசீலாம்மாவுடன் பாடும்போது பயம் இருக்கும் என்றார். அவருக்கே அந்த நிலை..!!
ஆனாலும் சான்ஸ் கிடைச்சா நான் விடமாட்டேன் :) :musicsmile:
chinnakkannan
7th October 2014, 09:59 AM
சி.க
அக்டோபர் 24 இசையரசி மஸ்கட் வருகிறார்.நைஸ் ராஜேஷ்.. எங்கு ப்ரோக்ராம் என்று செக் பண்ணுகிறேன்..முடிந்தால்பார்த்து எழுதுகிறேன்
rajeshkrv
7th October 2014, 10:19 AM
நைஸ் ராஜேஷ்.. எங்கு ப்ரோக்ராம் என்று செக் பண்ணுகிறேன்..முடிந்தால்பார்த்து எழுதுகிறேன்
sankarin sadhaga paravaigal felicitation
gkrishna
7th October 2014, 10:22 AM
லேட்டஸ்டா பாடகர் ஜெயச்சந்திரன் ஒரு பேட்டியில் பாடகி சுஜாதாவின் கேள்விக்கு பதில் சொன்னபோது சுசீலாம்மாவுடன் பாடும்போது பயம் இருக்கும் என்றார். அவருக்கே அந்த நிலை..!!
ஆனாலும் சான்ஸ் கிடைச்சா நான் விடமாட்டேன் :) :musicsmile:
சுசீலாம்மா கச்சேரி பற்றி எல்லோரும் குறிப்பிட்டு இருக்கிறீர்கள் .1969 கால கட்டம் சார் . திருநெல்வேலியில் ஒரு கீற்று கொட்டகையில் நெல்லை சங்கீத சபா என்ற ஒரு இசை சம்பந்தபட்ட நிரந்தரம் இல்லாத (temporary ஷெட்) அரங்கு ஒன்று இருந்தது. அப்போது அங்கு பெஞ்ச் ,சேர எல்லாம் கிடையாது.ஆற்று மணல் குவித்து வைத்த தரை தான்.ஆனால் மாலை இரவு நேரங்களில் குளிர்ச்சியாக இருக்கும்.அப்போதைய ஒருங்கிணைந்த நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரே கலை அரங்கு இது தான் என்று சொன்னால் அது மிகை ஆகாது.
அங்கு பாடகர் திலகம் டி எம் சௌந்தர்ராஜன் ,பி சுசீலா அம்மா இருவரும் வந்து ஒரு மெல்லிசை கச்சேரி நிகழ்ச்சி நடத்தினார்கள். 50,60 காலதிய பாடல்கள் எல்லாம் இடம் பெற்று சபா நிரம்பி வழிந்த நிகழ்வு. நிகழ்ச்சியின் இடையே பாடகர் திலகம் சுசீலாம்மா பற்றி கூறிய ஒரு தகவல் நினைவிற்கு வந்தது .
'தேர் திருவிழா' என்று ஒரு திரை படம் மக்கள் திலகம்,கலைச்செல்வி நடித்து தேவர் பிலிம்ஸ் தயாரித்து வெளி வந்த படம். அந்த படத்தில் 'தஞ்சாவூர் சீமையிலே' என்ற பாடலில் நடுவே
ஹஹெயிங்,ஹஹெயிங்
என்று சில ஹம்மிங் வரும்.பொதுவாக சுசீலம்மா எந்த பாடலை பாடும் போதும் முகத்தில் எந்த வித உணர்ச்சியும் காட்டாமல் பாடலின் ஊடே சிரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அந்த பாட்டுக்கு என்ன சிரிப்பு தேவையோ அதை மட்டும் கொடுத்து விட்டு பாடலின் அடுத்த சரணதிற்கோ அல்லது அனுபல்லிவிக்கோ சென்று விடுவார்கள். அதே போல் பாடலின் ஊடே அழ வேண்டிய நிலை ஏற்பட்டாலும் கூட மெலிதாக ஒரு சினுங்கல் அழுகை அல்லது ஹும்,ஹும் என்று லேசான அழுகை செய்து விட்டு பாட ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் இந்த தஞ்சாவூர் சீமையிலே என்ற பாடலின் நடுவே ஹஹெயிங்,ஹஹெயிங் என்று சொல்லும் போது எல்லாம் சுசீலாம்மா முகத்தில் ஒரு சிரிப்பு ஒரு இடத்தில வாய் விட்டே சிரித்து விட்டார்கள்.திரை இசை திலகம் மாமாவும் அவரது உதவியாளர் புகழேந்தி அவர்களும் சேர்ந்து சிரித்து இறுதியில் அந்த பாட்டின் ரெகார்டிங் முடிவதற்கு இரண்டு நாட்கள் ஆகின.
இப்போது அந்த நெல்லை சங்கீத சபா அரங்கம் மிக பெரிய அளவிலே கட்டப்பட்டு நெல்லையின் நாரத கான சபை என்று சொல்ல தக்க அளவிலே வளர்ந்து விட்டது .
http://www.thehindu.com/multimedia/dynamic/00145/16frNellai_GOD14K2J_145092g.jpg
http://www.thehindu.com/multimedia/dynamic/00145/16frNellai_GOD14K2J_145093g.jpg
80களில் மண்டலின் ஸ்ரீநிவாஸ் புகழ் அடையாத நிலையில் நெல்லையில் இந்த அரங்கில் நடாத்திய ஒரு கச்சேரி
மலரும் நினைவுகளை மீட்டிய அனைத்து பதிவாளர்களையும் அணைத்து நன்றி சொல்கிறேன்
http://www.youtube.com/watch?v=AUPiVztsAuc
chinnakkannan
7th October 2014, 10:35 AM
குட்மார்னிங்க் கிருஷ்ணா சார்.. சுசீலாம்மாவின் மலரும் நினைவுகளுக்கும் ஏ.அப்பு என்னாப்பு இதற்குத்தானே வீராப்பு பாடலுக்கும் நன்றி..முதன் முதல் கேட்கிறேன் என நினைக்கிறேன்..
இந்த ப் பெண்கள் ஆண்களை டீஸ் செய்யும் பாடல்கள் லிஸ்ட் போடலாமே
rajraj
7th October 2014, 10:42 AM
ஆனாலும் சான்ஸ் கிடைச்சா நான் விடமாட்டேன் :) :musicsmile:
You are right madhu! :) I missed (declined) the opportunity when she was here to perform in a 25th wedding anniversary.
Some of my friends asked me to sing with her. I declined because it was after dinner. Singing after dinner is difficult for me ! :( Lost opportunity . Will never come back ! :(
gkrishna
7th October 2014, 10:45 AM
அருமையான யோசனை சி கே சார்
எங்க ஊர் ராஜா 'அத்தைக்கு மீசை வைச்சு பாருங்கடி ' அழகு நடிகர் திலகம் உடன் கலை செல்வி
பாடல் காண கிடைக்க வில்லை . மது சார் ஹெல்ப் ப்ளீஸ்
ஈஸ்வரி கலக்கி இருப்பார்
gkrishna
7th October 2014, 10:49 AM
குமரி பெண் கலைச்செல்வி ரவி சந்திரன்
'வருஷத்தை பாரு 66 ' ஈஸ்வரியின் இன்னொரு டீசிங்
http://www.youtube.com/watch?v=FG5vzPX_w_s
gkrishna
7th October 2014, 10:51 AM
மக்கள் திலகத்தை டீஸ் செய்யும் கலைச்செல்வி
காதல் வாகனம் 'நடப்பது 68'
http://www.youtube.com/watch?v=BpOH9cfQuhM
madhu
7th October 2014, 11:21 AM
அருமையான யோசனை சி கே சார்
எங்க ஊர் ராஜா 'அத்தைக்கு மீசை வைச்சு பாருங்கடி ' அழகு நடிகர் திலகம் உடன் கலை செல்வி
பாடல் காண கிடைக்க வில்லை . மது சார் ஹெல்ப் ப்ளீஸ்
ஈஸ்வரி கலக்கி இருப்பார்
கிருஷ்ணா ஜி... இந்தாங்கோ
http://youtu.be/Mq5HUJSAOx8
gkrishna
7th October 2014, 11:55 AM
'அட அபிஷ்டு நோக்கும் நேக்குமா கல்யாணம் நீ ஒரு அம்மாஞ்சி '
y ஜி மகேந்திராவை கேலி செய்து ஜெயசித்ரா பாடும் பாடல்
சதுரங்கம் 1979 .சுசீலாவின் குரல் .வி குமாரின் இசையில்
http://www.inbaminge.com/t/s/Sathurangam%201978/
gkrishna
7th October 2014, 11:57 AM
மது சார்
இந்த விடியோ பிடிக்கும் ரகசியத்தை சொல்லி கொடுங்கோ
வலையில் சிக்க மாடேங்குதே எல்லாம் பெரிய சுறாவா இருக்கே :)
madhu
7th October 2014, 12:57 PM
மது சார்
இந்த விடியோ பிடிக்கும் ரகசியத்தை சொல்லி கொடுங்கோ
வலையில் சிக்க மாடேங்குதே எல்லாம் பெரிய சுறாவா இருக்கே :)
கிருஷ்ணாஜி.. நான் சாதாரணமாக யூடியூபுக்கு போயி search போட்டு பார்ப்பேன். அனேகமாக தமிழில் டைப் செஞ்சா கிடைப்பதில்லை. இங்கிலீஷில் டைப் அடிச்சுதான் தேடணும். சில சமயம் வார்த்தைகளை தவறாக பதிஞ்சிருப்பாங்க. அதனால் நாமளும் ரெண்டு மூணு விதமாக தப்பு தப்பா அடிச்சு பார்க்கணும் :) ( ஆடுற மாடு.. பாடுற மாடு பழமொழிதான்). இந்தப் பாட்டில் கூட "athaik mesai" அப்படின்னு தேடினா உடனே கிடைக்கும். மத்தபடி ஒரு மேஜிக்கும் இல்லை...
gkrishna
7th October 2014, 01:03 PM
நன்றி மது சார்
டிரேட் மார்க் ரகசியத்தை வெளியிட்டதற்கு நன்றி :)
gkrishna
7th October 2014, 04:44 PM
மக்கள் திலகமும்,கலைச்செல்வியும் இணைந்து நடித்த படம் என் அண்ணன் . இதன் இறுதி சண்டை காட்சி மக்கள் திலகமும் நெல்லை அருகே உள்ள சிமெண்ட் தொழில் சாலை ஒன்றில் நடந்தது. அந்த வகையில் மறக்கமுடியாத படம் .
டி எம் சௌந்தர் ராஜனும் ,எஸ்.ஜானகியும் இணைந்து பாடும் பாடல்.
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQl3-7dxlv-ehihZhtw3Zg5kalMOHkOo4fj81Ws6dGUyrtSu12D
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நடிக்கும் திரைப்படத்தில் இதுபோன்ற கனவுக்காட்சிகளும் பாடல்களும் மிகப் பிரபலமான காலக்கட்டத்தில் அவர்தம் ரசிகர்களுக்கு ஒவ்வொரு பாடலும் தேனில் நனைந்த பலா சுளை தான். கண்ணதாசன் வார்த்தைகள் வழங்க.. திரை இசை திலகம் கே.வி.மகாதேவன் இசையில் முகிழ்த்து வரும் பாடலிது!
இலை மறை காய் விஷயங்களை நயமாய் எடுத்துரைக்கும் கவிஞரின் சாதுரியம் சபாஷ் போட வைக்கிறது! விரசமில்லாமல் நடக்கும் காதல் விருந்தை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாமே!
கண்ணனின் நீலம் கடல் நீலம் என்று கார்மேகவண்ணனைப் பாடிய கண்ணதாசன்.. காதலியின் கண்களிலும் நீலத்தைக் கண்டுபிடித்ததை அப்பட்டமாகச் சொல்லும் அட்டகாசமான பாடல்!
பாடல் முழுவதும் பின்னணியில் நீல நிறத்தில் பதிவு ஆகி இருக்கும்
வானும் கடலும் நீல நிறம் என்பதற்கு காதலன் சொல்லும் காரணம் காதலியின் கண் நீலம் என்பதால் .
தாமரையின் சிவப்பு இதழ்கள் காதலியின் இதழ்கள்
காதலியின் இதழ்கள் சிவந்ததற்கு யார் காரணம் ?:)
வேல்களின் அழகுக்கு காரணம் காதலியின் விழி கொடுத்த அழகு
காதலியின் கருங்கூந்தலின் விளையாட்டு தான் முகில்
காதலியின் தளிர் மேனியே காதலனின் கவிதை விளையாட்டு
கோயிலின் சிலையையும் ,நதியின் வளைவுகளையும் காதலியின் அழகுக்கும் நடிக்கும் சொல்லும் கவிஞரின் கற்பனை .இன்னும் வேண்டுமோ விளக்கம் .பாடலுக்கு செல்வோமே அனுபவிக்க
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்
வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்
தாமரை பூவிலே உன் இதழ்கள் தந்ததென்ன சிவப்போ
வேல்களின் அழகையே என் விழிகள் தந்ததாய் நினைப்போ
அந்த முகில் உந்தன் கருங்கூந்தல் விளையாட்டோ
உங்கள் கவிதைக்கு என் மேனி விளையாட்டோ
(நீல நிறம் )
இலைகளும் கனிகளும் உன் இடையில் வந்ததோர்
அழகோ இயற்கையின் பசுமையே எந்தன் இதயம் தந்ததாய் நினைவோ
அந்த நதி என்ன உனை கேட்டு நடை போட்டதோ
இன்று அதை பார்த்து உன் நெஞ்சம் இசை போட்டதோ
(நீல நிறம் )
கோவிலின் சிலைகளே உன் கோலம் பார்த்த பின் படைப்போ
கோபுரக் கலசமே என் உருவில் வந்ததை நினைப்போ
இது தடை இன்றி விளையாடும் உறவல்லவா
அதில் தமிழ் கூறும் உவமைகள் சுவையல்லவா
(நீல நிறம் )
http://www.youtube.com/watch?v=ijMets1JLfI
gkrishna
7th October 2014, 05:16 PM
http://lh6.ggpht.com/-chCX2z_Rt4U/VDEKR2TV2iI/AAAAAAABQ28/woQYWd3HTsE/w1280/page_30.jpg
gkrishna
7th October 2014, 05:16 PM
http://lh4.ggpht.com/-Qb21_Ue9rmE/VDEKXAd29cI/AAAAAAABQ30/G5qhNbuFwTg/w1280/page_31.jpg
gkrishna
7th October 2014, 05:17 PM
http://lh6.ggpht.com/-Ruf_gDiMFoo/VDEKbRCjUSI/AAAAAAABQ4U/_mLrtHi9IKU/w1280/page_32.jpg
gkrishna
7th October 2014, 05:17 PM
http://lh3.ggpht.com/-Vo4qr66B4tQ/VDEKgNBlVVI/AAAAAAABQ5E/3mT6CF81ctM/w1280/page_33.jpg
Richardsof
7th October 2014, 06:48 PM
இனிய நண்பர் திரு கிருஷ்ணா சார்
என் அண்ணன் படத்தில் இடம் பெற்ற நீல நிறம் ...பாடலை பற்றிய உங்களது கருத்தும் , ரசனையும் பாராட்டுக்குரியது.
மக்கள் திலகம் பாடிய பாடல் ''கடவுள் ஏன் கல்லானான் '' எந்த காலத்திற்கும் பொருத்தமான பாடல் .
vasudevan31355
7th October 2014, 07:52 PM
வெங்கிராம் அய்யா அவர்கள் 'கீற்றுக் கொட்டகை' திரியில் பதித்த பதிவும், அதற்கு என் பதிலும்.
நல்ல நோக்கம்தான் திரு ராகவேந்தர்.. வாழ்த்துக்கள். ஆனால் போகப் போக இதுவும் சிவாஜியின் புகழ் பாடும், சிலாகிக்கும் இடமாக மாறிவிடக் கூடும் என்றே கணிக்கிறேன். 'மனதை கவரும் மதுர கானங்கள்' என்ற திரியிலேயே பாட்டைத் தவிர மற்றதையும் அலசத் தொடங்கிவிட்டோம். சிவாஜிக்கென்று பல்வேறு திரிகள் இருந்தாலும் அவரது சமீபத்திய பிறந்த நாள் தின வாழ்த்துக்களால் 'மனதை கவரும் மதுர கானங்கள்' திரிப் பக்கங்கள் பல நிரம்பி வழிந்தது. எனிவே.. கீற்றுக் கொட்டகை திரியும் எந்தவழியில் பயணிக்கப் போகிறது என கொட்டகையின் வெளியெ நின்றுகொண்டே கவனிக்கிறேன். வாழ்த்துக்கள்!
வெங்கிராம் அய்யா!
என்ன இது? இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன். என்ன இது? என்ன பதிவு இது?
இதுவரை மிக மிக உங்கள் விஷயத்தில் பொறுமை காத்தேன். கிட்டத்தட்ட ஓராண்டுகளுக்கு மேலாக நாகரீகம் கருதி. நீங்கள் ஹப்பில் எனக்கு சீனியர் என்ற மரியாதையில் மிக மிக அமைதியாய் இருந்தேன். நீங்கள் குட்டக் குட்டக் குனிகிறான் வாசு என்று என் மீது மீண்டும் தப்புக் கணக்குப் போட்டு மேலும் குட்ட நினைத்து மேற்கண்ட பதிவை அளித்துள்ளீர்கள்.
குட்டு வாங்கிக் குனிந்தவன் நிமிர்ந்தால் என்ன ஆகும் என்று அகிலம் போற்றும் 'அறிவு ஜீவி'யான உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
உங்களுக்கு ஒரு கதை தெரிந்திருக்குமே! பாம்பு ஒன்று ஆண்டவனின் கட்டளையை ஏற்று தன் சுபாவத்தைக் காட்டாமல் ஒதுங்கியிருந்ததாம். அதுவரை அந்தப் பாம்புக்கு பயந்த மக்கள் இனி பாம்பு நம்மை ஒன்றும் செய்யாது என்று அடித்து துன்புறுத்த ஆரம்பித்தார்களாம். பரிதாபமாக அந்த பாம்பு தன் நிலையை ஆண்டவனிடம் முறையிட்டதாம். அதற்கு இறைவன் 'அட பாம்பே! உன்னை கடிக்க வேண்டாமென்று தான் சொன்னேனே தவிர சீற வேண்டாம் என்று சொல்லவில்லையே"' என்றாராம்.
அது போல எல்லாவற்றுக்கும் பேசாமடந்தையாகி விட்டால் இப்படித்தான் செய்வீர்கள். திரும்ப குணத்தைக் காட்டினால்தான் சும்மா இருப்பீர்கள் போல் இருக்கிறது.
நீங்கள் நடிகர் திலகம் திரியில் என்னை மறைமுகமாக மோசமாக தாக்கி எழுதிய பதிவுகள் கண்டும் பேசாமல் விலகி விட்டேன். திரியை ஆக்கிரமிப்பு செய்கிறேன் என்று நாக்கூசாமல் எழுதினீர்கள். பொறுத்துக் கொண்டேன். கடினப் பட்டு பதிவுகள் போடுகிறேன் என்று இங்கு பதிவுகள் வருகின்றன என்று கேலி பேசினீர்கள். அதையும் பொறுத்துக் கொண்டேன். அதுவுமல்லாமல் நான் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் உங்களை மதுர கானம் திரிக்கு வரவேற்றும் இருக்கிறேன். உங்களுடைய சில பதிவுகளை ரசித்து பாராட்டியும் இருக்கிறேன்.
ஒரு பதிவை முழுமையாக, நேர்மையாக, ஆத்மார்த்தமாக அளிக்க என்னென்ன சிரமங்கள் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனென்றால் நீங்கள் இரட்டை வரி வம்பு வள்ளுவர் ஆயிற்றே. உங்களுக்கு அந்த அருமை பெருமையெல்லாம் எங்கே தெரியப் போகிறது? ஒருவருடைய உழைப்பை கேலி பேசி அதில் மகிழ்ந்து அற்ப சுகம் காணும் உங்களுக்கு நீதி நியாயமெல்லாம் எங்கே தெரியப் போகிறது? புரியப் போகிறது? அடுத்தவன் உழைப்பை கேலி பேசினவர் எவருமே அதன் பலனை அனுபவிக்காமல் போனதில்லை.
ஒரு படத்தை எடுத்து அதை பலதடவை பார்த்து அதன் கதை எழுதி அந்தப் படத்தின் காட்சிகள் வசனங்கள் பாடல்கள் எழுதி அதை முடிந்தவரை தவறில்லாமல் டைப் செய்து தவம் போலத் தர முயன்று பாருங்கள். குறைந்தது மூன்று நாட்களாவது ஆகும். அப்போது அந்த வலி தெரியும் உங்களுக்கு. இதில் நக்கல், நையாண்டி, கேலிப் பேச்சு வேறே. உங்களுக்கே அருவருப்பாய் இல்லை? உங்கள் மனசாட்சி உங்களைக் குத்த வில்லை?
உங்களுக்கு என்ன...எவனும் ஒழுங்காக எழுதிவிடக் கூடாது.. யாரும் வளர்ந்து விடக்கூடாது... எந்தத் திரியும் புகழ் பெற்றுவிடக் கூடாது. உடனே எங்கிருந்தாலும் ஒரு 3 வரியைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்து விட வேண்டியது. அதைக் கெடுக்க வேண்டியது. இது ஒன்றுதானே தங்களுக்குக் கைவந்த கலை. உழைப்பை மதிக்காத உங்களையெல்லாம் என்ன சொல்வது? அட் லீஸ்ட் மதிக்க வேண்டாம். அதை மாசு படுத்தாமல் இருந்தால் போதாதா?
பெரிய நக்கீரன் என்று உங்களுக்கு நினைப்போ?
இப்போது மீண்டும் அதே மாதிரி மிக மோசமாக hurt செய்யும் ஒரு பதிவை அளித்துள்ளீர்கள்.
நீங்கள். ரொம்ப ஜென்டிலாக பதிவுகள் இடுவது போல் இரண்டு மூன்று வரிகளில் அடுத்தவர்களை ஆயுசு முழுக்க நினைத்து வருத்தப் படுமளவிற்கு புண்படுத்தி வருகிறீர்கள். (இதற்கு கோபால் எவ்வளவோ தேவலை. மனதில் உள்ளதை ஒளிவு மறைவு இல்லாமல் நேரிடையாகச் சொல்லிவிடுவார்). அதனுடைய வலி பாதிக்கப் பட்டவர்களுக்குத்தான் தெரியும்.
இப்போது பகிரங்கமாகவே விஷயத்திற்கு வருகிறேன்.
நீங்கள் உங்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்? திரியில் ஏன் இப்படி வம்பளக்கத் திரிகிறீர்கள்?
உங்களை யாரும் தட்டிக் கேட்கவில்லை என்ற தைரியமா? இல்லை எது போட்டாலும் பேசாமல் வாய்மூடி மௌனியாய் இருந்து விடுகிறான் வாசு என்று இளக்காரமா? கிள்ளுக் கீரையாய் நினைத்து விட்டீர்களா?
நடிகர் திலகமே தெய்வம் என்று நினைத்து நடிகர் திலகம் திரியில் என் ஆத்மார்த்தமான பதிவுகளை நாள் அளித்து வந்துள்ளேன். கால, நேரம் எதுவும் பாராமல் நடிகர் திலகம் புகழ் ஒன்றுதான் முக்கியம் என்று என் மனசாட்சிக்குக் கொஞ்சமும் விரோதம் இல்லாமல் அங்கு என் இதய தெய்வத்திற்கு உழைத்து வந்தேன். அது எல்லோருக்கும் ஏன் உங்கள் மனசாட்சிக்கும் தெரியும்.
ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்?
அது பொறுக்கமாட்டாமல் மானசீகமாக நான் போட்ட பதிவுகளை, அதற்கு நானுழைத்த உழைப்பைக் கேவலப்படுத்தி இப்போது போலவே அப்போதும் ஒரு பதிவை இட்டீர்கள். இப்போதுதான் காரணம் அதற்குப் புரிகிறது. நடிகர் திலகத்தின் மீது தங்களுக்கு இருக்கும் வெறுப்பும், காழ்ப்புணர்ச்சியும்.
இப்போது பகிரங்கமாகச் சொல்கிறேன். நடிகர் திலகம் திரியில் நான் பதிவிடாமல் இதுவரை விலகி நிற்பதற்கு வெங்கிராம் என்ற நீங்கள்தான் முழுக் காரணம். இதை நான் முரளி சாரிடமும் சொல்லி இருக்கிறேன். கோபால் சார், மற்ற நண்பர்களிடமும் சொல்லி இருக்கிறேன்.
இப்போது மதுர கானங்கள் திரியில் வந்து உங்கள் வேலையைக் காட்ட வந்திருக்கிறீர்கள்.
மதுர கானங்கள் திரியில் நடிகர் திலகம் பிறந்த நாள் அன்று நடிகர் திலகத்தைப் பற்றிய அபூர்வ செய்திகள், இதுவரை வெளியிடப்படாத படங்கள் வெளியிட்டேன். நீங்கள் ஒரு உண்மையான ரசிகராய் இருந்தால் சிவாஜி ரசிகராய் இல்லை) இல்லை ஒரு சாதாரண ஆறறிவு கொண்ட மனிதனாய் இருந்தால்கூட அந்த உலகப் புகழ் பெற்ற நடிகரின் அரிய புகைப்படங்களைப் பார்த்து பெருமிதம் கொண்டிருந்து இருப்பீர்கள்.
தமிழகத்தின் பெருமையை தன் நடிப்பால் உலகமறியச் செய்த முதல் உலக மகா உன்னத நடிகன். அவர் பெருமையை அவர் பிறந்த நாள் அன்று நான் பதிவிட்டால் உங்கள் வயிறும் உள்ளமும் எரிகின்றது. கேட்டால் மதுர கானங்களுக்கும் அதற்கும் என்ன தொடர்பு என்று சால்சாப்பு வேறு. என்னே உங்கள் ரசனை! என்னே உங்கள் தமிழ்ப் பண்பு!
எல்லாமே தலைப்பிட்டபடிதான் நடக்கிறதா? பல்வேறு கொள்கைகளைக் கொண்ட ஒன்றுக்கொன்று முரண்பட்ட வெவ்வேறு தொலைகாட்சி சானல்கள் கூட அக்டோபர் 1 நடிகர் திலகம் பிறந்தநாள் அன்று அந்த மாபெரும் நடிகரை போட்டி போட்டுக் கொண்டு நினைவு கூர்கின்றன. அவர் நடித்த படங்களையும் அவர் பாடல்களையும் போட்டு அவர் புகழ் பாடுகின்றன. பத்திரிகை உலகம் ஒட்டு மொத்தமும் அவர் பிறந்த நாளை நினைவு படுத்தி மகிழ்கின்றன. ஒரு உன்னத தமிழ் நடிகனுக்கு அனைவரும் அளிக்கும் அன்பு அங்கீகாரம் அது. சினிமா ஸ்பெஷல் என்று போட்டது வரும் விகடனில் கூட சினிமாவைத் தவிர வேறு விஷயங்களும் வருவதுண்டே!
அது போல மதுர கானங்கள் திரியில் அன்று ஸ்பெஷலாக நடிகர் திலகத்தின் பிறந்தநாள் முன்னிட்டு சிறப்பு பதிவுகள் அளிக்கப்பட்டது. நான்தான் முழுக்க முழுக்க சில பக்கங்கள் பதிவிட்டேன். மேற்சொன்ன ஊடகங்களே நடிகர் திலகத்தின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடும் போது மதுர கானங்கள் திரியில் அதுவும் நடிகர் திலகத்தின் பக்தனான நான் எப்படிக் கொண்டாட வேண்டும்? என்னை விடுங்கள். ஒரு ரசிகனாக, ஒரு தமிழனாக கொண்டாடினேன் என்று கூட வைத்துக் கொள்ளுங்கள். அதில் என்ன தப்பு? அதில் என்ன உங்களுக்கு வயிற்றெரிச்சல்...பொறாமை?.
கிருஷ்ணா சார் சொன்னது போல இன்றைய ஸ்பெஷல் என்ற தொடரில் இதுவரை 3 நடிகர் திலகத்தின் பாடல்களை மட்டுமே அலசியுள்ளேன். ஏன் நூறு பாடலுமே நடிகர் திலகத்தின் பாடல்களாக நான் எடுத்து அலசக் கூடாதா? அப்படியே போட்டாலும் அதை ரசிக்கத்தான் இங்கு ஆட்கள் இருக்கிறார்களே ஒழிய உங்களைப் போல் கெடுக்கும் கோணல் புத்திக்கார்கள் யாரும் இல்லை. இதிலிருந்தே தெரியவில்லை. ஒரு உலகப் புகழ் பெற்ற நடிகனைப் பற்றிப் பதிவு போட்டால் உங்களுக்குப் பொறுக்கவில்லை. உங்கள் நெஞ்சு கொதிக்கிறது. வெட்கம் சார். தமிழன் என்று சொல்லவே வேதனையாய் இருக்கிறது. அது கூடப் பரவாயில்லை. அதைப் பற்றி மதுரகானங்கள் திரியில் கூட உங்களால் பதிய முடியவில்லை. 'கீற்றுக் கொட்டகையில்' போய் கோழையாய் பதிகிறீர்கள். ஏன்? எனக்கு நேரிடையாக எழுதுவதுதானே? ராமராஜனையும, ரேகாவையும் நெக்குருக நீங்கள் நெஞ்சில் வைத்துப் போற்றும்போது (உங்கள் அறிவார்ந்த ரசனைக்கு என் தலை சாய்த்த வணங்க்கங்கள்) கலைக்கடவுள் நடிகர் திலகத்தை நாங்கள் எப்படிப் போற்ற வேண்டும் என்று நீங்களே கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். இதுகூடவா அபார மேதையான உங்களுக்குத் தெரியாது?
மதுர கானங்கள் திரியில் ஆயிரக்கணக்கில் பாடல்கள் அனைவராலும் ஒற்றுமையோடு அற்புதமாக அலசப்பட்டுள்ளன. அதெல்லாம் உங்கள் கண்களுக்குப் புலப்படவில்லையா? உங்களுக்கு என்ன கண் அவுட்டா? த்சொ.. த்சொ...ஒவ்வொருவரும் தங்கள் உயிரைக் கொடுத்து இங்கு உழைத்து இந்தத் திரியை உயரத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள். மது அண்ணா, ராஜேஷ், சின்னக் கண்ணன் சார், கிருஷ்ணா சார், ராகவேந்திரன் சார், கார்த்திக் சார், கோபால் சார், முரளி சார் என்று சகோதர உணர்வோடு சண்டை சச்சரவுகள் எதுவும் இல்லாமல் ஜாலியாக சந்தோஷமாக இங்கு பதிவிட்டு வருகிறார்கள். எண்பது சதவீதம் பாடல்கள் என்றால் மற்ற சினிமா விஷயங்கள் மீதி. இதில் என்ன தவறு? இங்கு இருக்கும் அனைத்து சீனியர்களுக்கும் தெரியும் அவர்களுக்கு நான் எவ்வளவு மதிப்பும் மரியாதையும் தருகிறேன் என்று.
இப்படி யாராவது சந்தோஷமாக இருந்தாலோ, திரிகள் உழைப்பால் வளர்ந்தாலோ உங்களுக்குப் பிடிக்குமா?
நீங்கள் விமர்சனம் செய்யுங்கள். இந்தப் பதிவு சரியில்லை இது வேறு மாதிரி இருக்கலாம் என்று. அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோம். விமர்சனங்கள் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்பது கூட தெரியாத மூடன் அல்ல நான். ஆனால் உங்களைப் போல குதர்க்க புத்தி, நொட்டை புத்தி எல்லாம் எங்களுக்குத் தெரியாது.
இனியாவது பதிவாளர்களை புண்படுத்தாத புத்தியை அந்த ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும்.
மேற்கொண்டு நீங்கள் இப்படி மறைமுகமாக இப்படியெல்லாம் வேதனைப்படுத்தும் பதிவுகள் இட்டால் உங்கள் ரேஞ்சைவிட கீழே இறங்க நானும் தயார். அப்படியும் தரம் தாழ்ந்து என்னால் எழுத முடியும். ஆனால் அதனை நான் விரும்பவில்லை. ஆனால் நடிகர் திலகம் திரியிலிருந்து விலகி அமைதியாய் இருந்தது போல் இருந்து விடுவேன் என்று கனவு மட்டும் காணாதீர்கள். இப்போதும் உங்கள் மேல் கொஞ்ச நஞ்ச மதிப்பும், மரியாதையும் நெஞ்சின் ஒரு ஓரத்தில் வைத்துள்ளேன். தயவு செய்து அதையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
அதிக கோபத்துடனும், அதைவிட அதிக வருத்தத்துடனும்
நெய்வேலி வாசுதேவன்.
rajeshkrv
7th October 2014, 09:03 PM
வெங்கிராம் அய்யா அவர்கள் 'கீற்றுக் கொட்டகை' திரியில் பதித்த பதிவும், அதற்கு என் பதிலும்.
வெங்கிராம் அய்யா!
என்ன இது? இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன். என்ன இது? என்ன பதிவு இது?
இதுவரை மிக மிக உங்கள் விஷயத்தில் பொறுமை காத்தேன். கிட்டத்தட்ட ஓராண்டுகளுக்கு மேலாக நாகரீகம் கருதி. நீங்கள் ஹப்பில் எனக்கு சீனியர் என்ற மரியாதையில் மிக மிக அமைதியாய் இருந்தேன். நீங்கள் குட்டக் குட்டக் குனிகிறான் வாசு என்று என் மீது மீண்டும் தப்புக் கணக்குப் போட்டு மேலும் குட்ட நினைத்து மேற்கண்ட பதிவை அளித்துள்ளீர்கள்.
குட்டு வாங்கிக் குனிந்தவன் நிமிர்ந்தால் என்ன ஆகும் என்று அகிலம் போற்றும் 'அறிவு ஜீவி'யான உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
உங்களுக்கு ஒரு கதை தெரிந்திருக்குமே! பாம்பு ஒன்று ஆண்டவனின் கட்டளையை ஏற்று தன் சுபாவத்தைக் காட்டாமல் ஒதுங்கியிருந்ததாம். அதுவரை அந்தப் பாம்புக்கு பயந்த மக்கள் இனி பாம்பு நம்மை ஒன்றும் செய்யாது என்று அடித்து துன்புறுத்த ஆரம்பித்தார்களாம். பரிதாபமாக அந்த பாம்பு தன் நிலையை ஆண்டவனிடம் முறையிட்டதாம். அதற்கு இறைவன் 'அட பாம்பே! உன்னை கடிக்க வேண்டாமென்று தான் சொன்னேனே தவிர சீற வேண்டாம் என்று சொல்லவில்லையே"' என்றாராம்.
அது போல எல்லாவற்றுக்கும் பேசாமடந்தையாகி விட்டால் இப்படித்தான் செய்வீர்கள். திரும்ப குணத்தைக் காட்டினால்தான் சும்மா இருப்பீர்கள் போல் இருக்கிறது.
நீங்கள் நடிகர் திலகம் திரியில் என்னை மறைமுகமாக மோசமாக தாக்கி எழுதிய பதிவுகள் கண்டும் பேசாமல் விலகி விட்டேன். திரியை ஆக்கிரமிப்பு செய்கிறேன் என்று நாக்கூசாமல் எழுதினீர்கள். பொறுத்துக் கொண்டேன். கடினப் பட்டு பதிவுகள் போடுகிறேன் என்று இங்கு பதிவுகள் வருகின்றன என்று கேலி பேசினீர்கள். அதையும் பொறுத்துக் கொண்டேன். அதுவுமல்லாமல் நான் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் உங்களை மதுர கானம் திரிக்கு வரவேற்றும் இருக்கிறேன். உங்களுடைய சில பதிவுகளை ரசித்து பாராட்டியும் இருக்கிறேன்.
ஒரு பதிவை முழுமையாக, நேர்மையாக, ஆத்மார்த்தமாக அளிக்க என்னென்ன சிரமங்கள் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனென்றால் நீங்கள் இரட்டை வரி வம்பு வள்ளுவர் ஆயிற்றே. உங்களுக்கு அந்த அருமை பெருமையெல்லாம் எங்கே தெரியப் போகிறது? ஒருவருடைய உழைப்பை கேலி பேசி அதில் மகிழ்ந்து அற்ப சுகம் காணும் உங்களுக்கு நீதி நியாயமெல்லாம் எங்கே தெரியப் போகிறது? புரியப் போகிறது? அடுத்தவன் உழைப்பை கேலி பேசினவர் எவருமே அதன் பலனை அனுபவிக்காமல் போனதில்லை.
ஒரு படத்தை எடுத்து அதை பலதடவை பார்த்து அதன் கதை எழுதி அந்தப் படத்தின் காட்சிகள் வசனங்கள் பாடல்கள் எழுதி அதை முடிந்தவரை தவறில்லாமல் டைப் செய்து தவம் போலத் தர முயன்று பாருங்கள். குறைந்தது மூன்று நாட்களாவது ஆகும். அப்போது அந்த வலி தெரியும் உங்களுக்கு. இதில் நக்கல், நையாண்டி, கேலிப் பேச்சு வேறே. உங்களுக்கே அருவருப்பாய் இல்லை? உங்கள் மனசாட்சி உங்களைக் குத்த வில்லை?
உங்களுக்கு என்ன...எவனும் ஒழுங்காக எழுதிவிடக் கூடாது.. யாரும் வளர்ந்து விடக்கூடாது... எந்தத் திரியும் புகழ் பெற்றுவிடக் கூடாது. உடனே எங்கிருந்தாலும் ஒரு 3 வரியைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்து விட வேண்டியது. அதைக் கெடுக்க வேண்டியது. இது ஒன்றுதானே தங்களுக்குக் கைவந்த கலை. உழைப்பை மதிக்காத உங்களையெல்லாம் என்ன சொல்வது? அட் லீஸ்ட் மதிக்க வேண்டாம். அதை மாசு படுத்தாமல் இருந்தால் போதாதா?
பெரிய நக்கீரன் என்று உங்களுக்கு நினைப்போ?
இப்போது மீண்டும் அதே மாதிரி மிக மோசமாக hurt செய்யும் ஒரு பதிவை அளித்துள்ளீர்கள்.
நீங்கள். ரொம்ப ஜென்டிலாக பதிவுகள் இடுவது போல் இரண்டு மூன்று வரிகளில் அடுத்தவர்களை ஆயுசு முழுக்க நினைத்து வருத்தப் படுமளவிற்கு புண்படுத்தி வருகிறீர்கள். (இதற்கு கோபால் எவ்வளவோ தேவலை. மனதில் உள்ளதை ஒளிவு மறைவு இல்லாமல் நேரிடையாகச் சொல்லிவிடுவார்). அதனுடைய வலி பாதிக்கப் பட்டவர்களுக்குத்தான் தெரியும்.
இப்போது பகிரங்கமாகவே விஷயத்திற்கு வருகிறேன்.
நீங்கள் உங்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்? திரியில் ஏன் இப்படி வம்பளக்கத் திரிகிறீர்கள்?
உங்களை யாரும் தட்டிக் கேட்கவில்லை என்ற தைரியமா? இல்லை எது போட்டாலும் பேசாமல் வாய்மூடி மௌனியாய் இருந்து விடுகிறான் வாசு என்று இளக்காரமா? கிள்ளுக் கீரையாய் நினைத்து விட்டீர்களா?
நடிகர் திலகமே தெய்வம் என்று நினைத்து நடிகர் திலகம் திரியில் என் ஆத்மார்த்தமான பதிவுகளை நாள் அளித்து வந்துள்ளேன். கால, நேரம் எதுவும் பாராமல் நடிகர் திலகம் புகழ் ஒன்றுதான் முக்கியம் என்று என் மனசாட்சிக்குக் கொஞ்சமும் விரோதம் இல்லாமல் அங்கு என் இதய தெய்வத்திற்கு உழைத்து வந்தேன். அது எல்லோருக்கும் ஏன் உங்கள் மனசாட்சிக்கும் தெரியும்.
ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்?
அது பொறுக்கமாட்டாமல் மானசீகமாக நான் போட்ட பதிவுகளை, அதற்கு நானுழைத்த உழைப்பைக் கேவலப்படுத்தி இப்போது போலவே அப்போதும் ஒரு பதிவை இட்டீர்கள். இப்போதுதான் காரணம் அதற்குப் புரிகிறது. நடிகர் திலகத்தின் மீது தங்களுக்கு இருக்கும் வெறுப்பும், காழ்ப்புணர்ச்சியும்.
இப்போது பகிரங்கமாகச் சொல்கிறேன். நடிகர் திலகம் திரியில் நான் பதிவிடாமல் இதுவரை விலகி நிற்பதற்கு வெங்கிராம் என்ற நீங்கள்தான் முழுக் காரணம். இதை நான் முரளி சாரிடமும் சொல்லி இருக்கிறேன். கோபால் சார், மற்ற நண்பர்களிடமும் சொல்லி இருக்கிறேன்.
இப்போது மதுர கானங்கள் திரியில் வந்து உங்கள் வேலையைக் காட்ட வந்திருக்கிறீர்கள்.
மதுர கானங்கள் திரியில் நடிகர் திலகம் பிறந்த நாள் அன்று நடிகர் திலகத்தைப் பற்றிய அபூர்வ செய்திகள், இதுவரை வெளியிடப்படாத படங்கள் வெளியிட்டேன். நீங்கள் ஒரு உண்மையான ரசிகராய் இருந்தால் சிவாஜி ரசிகராய் இல்லை) இல்லை ஒரு சாதாரண ஆறறிவு கொண்ட மனிதனாய் இருந்தால்கூட அந்த உலகப் புகழ் பெற்ற நடிகரின் அரிய புகைப்படங்களைப் பார்த்து பெருமிதம் கொண்டிருந்து இருப்பீர்கள்.
தமிழகத்தின் பெருமையை தன் நடிப்பால் உலகமறியச் செய்த முதல் உலக மகா உன்னத நடிகன். அவர் பெருமையை அவர் பிறந்த நாள் அன்று நான் பதிவிட்டால் உங்கள் வயிறும் உள்ளமும் எரிகின்றது. கேட்டால் மதுர கானங்களுக்கும் அதற்கும் என்ன தொடர்பு என்று சால்சாப்பு வேறு. என்னே உங்கள் ரசனை! என்னே உங்கள் தமிழ்ப் பண்பு!
எல்லாமே தலைப்பிட்டபடிதான் நடக்கிறதா? பல்வேறு கொள்கைகளைக் கொண்ட ஒன்றுக்கொன்று முரண்பட்ட வெவ்வேறு தொலைகாட்சி சானல்கள் கூட அக்டோபர் 1 நடிகர் திலகம் பிறந்தநாள் அன்று அந்த மாபெரும் நடிகரை போட்டி போட்டுக் கொண்டு நினைவு கூர்கின்றன. அவர் நடித்த படங்களையும் அவர் பாடல்களையும் போட்டு அவர் புகழ் பாடுகின்றன. பத்திரிகை உலகம் ஒட்டு மொத்தமும் அவர் பிறந்த நாளை நினைவு படுத்தி மகிழ்கின்றன. ஒரு உன்னத தமிழ் நடிகனுக்கு அனைவரும் அளிக்கும் அன்பு அங்கீகாரம் அது. சினிமா ஸ்பெஷல் என்று போட்டது வரும் விகடனில் கூட சினிமாவைத் தவிர வேறு விஷயங்களும் வருவதுண்டே!
அது போல மதுர கானங்கள் திரியில் அன்று ஸ்பெஷலாக நடிகர் திலகத்தின் பிறந்தநாள் முன்னிட்டு சிறப்பு பதிவுகள் அளிக்கப்பட்டது. நான்தான் முழுக்க முழுக்க சில பக்கங்கள் பதிவிட்டேன். மேற்சொன்ன ஊடகங்களே நடிகர் திலகத்தின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடும் போது மதுர கானங்கள் திரியில் அதுவும் நடிகர் திலகத்தின் பக்தனான நான் எப்படிக் கொண்டாட வேண்டும்? என்னை விடுங்கள். ஒரு ரசிகனாக, ஒரு தமிழனாக கொண்டாடினேன் என்று கூட வைத்துக் கொள்ளுங்கள். அதில் என்ன தப்பு? அதில் என்ன உங்களுக்கு வயிற்றெரிச்சல்...பொறாமை?.
கிருஷ்ணா சார் சொன்னது போல இன்றைய ஸ்பெஷல் என்ற தொடரில் இதுவரை 3 நடிகர் திலகத்தின் பாடல்களை மட்டுமே அலசியுள்ளேன். ஏன் நூறு பாடலுமே நடிகர் திலகத்தின் பாடல்களாக நான் எடுத்து அலசக் கூடாதா? அப்படியே போட்டாலும் அதை ரசிக்கத்தான் இங்கு ஆட்கள் இருக்கிறார்களே ஒழிய உங்களைப் போல் கெடுக்கும் கோணல் புத்திக்கார்கள் யாரும் இல்லை. இதிலிருந்தே தெரியவில்லை. ஒரு உலகப் புகழ் பெற்ற நடிகனைப் பற்றிப் பதிவு போட்டால் உங்களுக்குப் பொறுக்கவில்லை. உங்கள் நெஞ்சு கொதிக்கிறது. வெட்கம் சார். தமிழன் என்று சொல்லவே வேதனையாய் இருக்கிறது. அது கூடப் பரவாயில்லை. அதைப் பற்றி மதுரகானங்கள் திரியில் கூட உங்களால் பதிய முடியவில்லை. 'கீற்றுக் கொட்டகையில்' போய் கோழையாய் பதிகிறீர்கள். ஏன்? எனக்கு நேரிடையாக எழுதுவதுதானே? ராமராஜனையும, ரேகாவையும் நெக்குருக நீங்கள் நெஞ்சில் வைத்துப் போற்றும்போது (உங்கள் அறிவார்ந்த ரசனைக்கு என் தலை சாய்த்த வணங்க்கங்கள்) கலைக்கடவுள் நடிகர் திலகத்தை நாங்கள் எப்படிப் போற்ற வேண்டும் என்று நீங்களே கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். இதுகூடவா அபார மேதையான உங்களுக்குத் தெரியாது?
மதுர கானங்கள் திரியில் ஆயிரக்கணக்கில் பாடல்கள் அனைவராலும் ஒற்றுமையோடு அற்புதமாக அலசப்பட்டுள்ளன. அதெல்லாம் உங்கள் கண்களுக்குப் புலப்படவில்லையா? உங்களுக்கு என்ன கண் அவுட்டா? த்சொ.. த்சொ...ஒவ்வொருவரும் தங்கள் உயிரைக் கொடுத்து இங்கு உழைத்து இந்தத் திரியை உயரத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள். மது அண்ணா, ராஜேஷ், சின்னக் கண்ணன் சார், கிருஷ்ணா சார், ராகவேந்திரன் சார், கார்த்திக் சார், கோபால் சார், முரளி சார் என்று சகோதர உணர்வோடு சண்டை சச்சரவுகள் எதுவும் இல்லாமல் ஜாலியாக சந்தோஷமாக இங்கு பதிவிட்டு வருகிறார்கள். எண்பது சதவீதம் பாடல்கள் என்றால் மற்ற சினிமா விஷயங்கள் மீதி. இதில் என்ன தவறு? இங்கு இருக்கும் அனைத்து சீனியர்களுக்கும் தெரியும் அவர்களுக்கு நான் எவ்வளவு மதிப்பும் மரியாதையும் தருகிறேன் என்று.
இப்படி யாராவது சந்தோஷமாக இருந்தாலோ, திரிகள் உழைப்பால் வளர்ந்தாலோ உங்களுக்குப் பிடிக்குமா?
நீங்கள் விமர்சனம் செய்யுங்கள். இந்தப் பதிவு சரியில்லை இது வேறு மாதிரி இருக்கலாம் என்று. அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோம். விமர்சனங்கள் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்பது கூட தெரியாத மூடன் அல்ல நான். ஆனால் உங்களைப் போல குதர்க்க புத்தி, நொட்டை புத்தி எல்லாம் எங்களுக்குத் தெரியாது.
இனியாவது பதிவாளர்களை புண்படுத்தாத புத்தியை அந்த ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும்.
மேற்கொண்டு நீங்கள் இப்படி மறைமுகமாக இப்படியெல்லாம் வேதனைப்படுத்தும் பதிவுகள் இட்டால் உங்கள் ரேஞ்சைவிட கீழே இறங்க நானும் தயார். அப்படியும் தரம் தாழ்ந்து என்னால் எழுத முடியும். ஆனால் அதனை நான் விரும்பவில்லை. ஆனால் நடிகர் திலகம் திரியிலிருந்து விலகி அமைதியாய் இருந்தது போல் இருந்து விடுவேன் என்று கனவு மட்டும் காணாதீர்கள். இப்போதும் உங்கள் மேல் கொஞ்ச நஞ்ச மதிப்பும், மரியாதையும் நெஞ்சின் ஒரு ஓரத்தில் வைத்துள்ளேன். தயவு செய்து அதையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
அதிக கோபத்துடனும், அதைவிட அதிக வருத்தத்துடனும்
நெய்வேலி வாசுதேவன்.
வாசு ஜி,
பல திரிகளில் சிலருக்கு இதே வேலை .. அவர்கள் ஒரு திரியை தொடங்கி நடத்தவேண்டியது தானே.. கிடைத்த இடத்தில் எல்லாம் ராஜா புகழையும் அவரது விருப்பத்திற்குள்ளானவர்களின் புகழை அவரும் பாடிக்கொண்டுதான் இருக்கிறார்.. எதற்கு அடுத்தவர்களை குத்தி பார்க்கும் எண்ணமோ பழக்கமோ தெரியவில்லை ... எந்த திரிக்கு சென்றாலும் சிலரை வம்பிழுப்பது என்பது கைவந்த கலையாகி விட்டது. நாம் நம் பதிவுகளை இட்டால் கூட அதற்கு நேராக ஏதோ ஒன்றை பதிக்கவேண்டும் என்ற எண்ணம்
நானும் தெரியாமல் தான் கேட்கிறேன் அவரும் ஹப் மெம்பர். அவருக்கு வேண்டிய திரியை தொடங்கி பதிவுகள் இடவேண்டியது தானே.. அதை விட்டு விட்டு இது என்ன வேலை என்று தெரியவில்லை ..
உங்கள் பதிலடி பதிவு நன்று ..
venkkiram
7th October 2014, 09:08 PM
வாசுதேவன் அய்யா! நீங்க எழுதிய நீண்டதொரு பதிவினைப் பார்த்து வருத்தப் பட்டேன். என்னால் தான் நீங்கள் சிவாஜி திரியில் எழுதுவதை நிறுத்தினீர்கள் என்பதை நம்பமுடியல. தகுந்த ஆதாரம் இருந்தால் எடுத்துப் போடவும். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மன்னிப்பு கேட்கிறேன். சிவாஜி பற்றியெல்லாம் எனக்கு காழ்ப்புணர்ச்சி கிடையாது. சில நேரங்களில் சிவாஜி பற்றிய பதிவுகளின் குவியல்கள் திகட்டுவது போல எனக்குத் தோன்றியதெல்லாம் இந்த தலைமுறை இடைவெளியின் பார்வைக் கோளாறே என உணர்கிறேன். எழுபதுகளின் இறுதியில் பிறந்த எனக்கு ஆரம்பத்தில் சிவாஜியை முழுமனதாக எற்றுக்கொள்ள சில மனத் தடைகள் (அவரது எண்பதுகளின் படங்கள்) இருந்தாலும் முதல்மரியாதை,தேவர் மகன் பற்றிய மையத்தின் பல்வேறு கட்டுரைகளை வாசித்து அவரது கருப்பு வெள்ளை வேர்களைத் தேடிச் சென்று தெளிந்து மனதளவில் நடிப்பிற்கு இலக்கணமே சிவாஜிதான் என துலங்கிவிட்டேன். இந்த மாற்றமே சிவாஜி பற்றிய திரிகளில் எனது கவனத்தை கொண்டுவந்தது. நேற்று கூட ஒரு மூத்த பத்திரிக்கையாளர் சிவாஜியின் நடிப்பை விமர்சித்த போது "தட்டையான புரிதல்" என பதிலளித்தேன்.
மற்றபடி எனது ஹப் பதிவு வரலாற்றிலேயே இதுபோல ஒரு பெரிய எதிர்ப்பு..நீண்ட (வசை)பதிவுகள் வந்ததில்லை. நான் அந்த அளவுக்கு (வசை பாடக்கூட) ஒர்த் கிடையாது என்றே புரிந்துகொள்கிறேன். இனி என் பதிவுகள் சிவாஜி பற்றிய திரியிலும் சரி, மதுர கானங்கள் திரியிலும் சரி இருக்காது. நீங்களும் பழையபடி சிவாஜி திரியிலேயே பதிவுகளை தொடருங்கள். வாழ்த்துக்கள். மற்றபடி, நீங்கள் என்னை "ஆனால் நடிகர் திலகம் திரியிலிருந்து விலகி அமைதியாய் இருந்தது போல் இருந்து விடுவேன் என்று கனவு மட்டும் காணாதீர்கள்." இப்படியெல்லாம் பேசுவீர்கள் என கனவிலும் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் நான் மேலே குறிப்பிட்டுள்ளது படி, நான்தான் நீங்கள் சிவாஜி திரியில் எழுதாதற்கு காரணம் என்பதே நீங்கள் சொல்லித்தான் தெரியும். இந்த அளவுக்கு சென்றுவிட்ட பிறகு, லாவணி பாடி என் தரப்பு கருத்துகளையும் இங்கே வைக்க விரும்பல. ஒரு முற்றுப்பெறாத உரையாடலாக இதை இப்படியே முடித்துக் கொள்ளவே ஆசைப்படுகிறேன்.
:notworthy:
-----
திரு ராகவேந்திரா.. சர்ச்சைக்குரிய எனது பதிவினை கீற்று கொட்டகை திரியிலிருந்து நீக்கிவிடுமாறு கோருகிறேன். என் பதிவு இந்த அளவுக்கு ஒரு அதிர்வினை ஏற்படுத்தும் எனத் தெரியாமல் போய்விட்டது. பறவையின் எச்சம் போல அது அங்கு தனித்து காணப்படுகிறது. அழுக்கினை சுத்தப் படுத்திவிடுங்கள். அப்போதுதான் கீற்றுக் கொட்டகையும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
நன்றி.
----
vasudevan31355
7th October 2014, 09:55 PM
வணக்கம் ராஜேஷ்ஜி. பி.எம்.பாருங்கள்.
rajeshkrv
7th October 2014, 10:11 PM
வணக்கம் ராஜேஷ்ஜி. பி.எம்.பாருங்கள்.
பதில் அனுப்பியுள்ளேன்
vasudevan31355
7th October 2014, 10:21 PM
மாலை மதுரம்
ராஜேஷ் சார்!
நடிகர் திலகத்தின் தூக்குத் தூக்கி திரைப்படத்தில் வரும் 'குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்' பாடல் என் உயிரோடு கலந்த பாடலாகும். கொம்பேறி ஒரு கிளையில் நிலாமல் மரத்துதுக்கு மரம் தாவும் குரங்கின் மனநிலை தானே மனிதனுக்கும். சில குரங்குகள் ரொம்ப விஷமத்தனம் செய்யும். அதனால்தான்
உருண்டையான உலகின் மீது
உயர்ந்தோர் சொன்ன உண்மை இது
உருவ அமைப்பைக் காணும் போது
ஓரறிவு ஈரறிவுயிரென மாறி மாறி மாறிடாத குரங்கு
என்று பாடலோ!
அற்புதம்ஜி. குரங்குகளைப் பற்றி பாடி ஆடும்போது அதுவும் ராகினி, பத்மினி, சட்டாம்பிள்ளை மூவருக்கும் சர்வ சாதரணமாக ஈடு கொடுத்து நடிகர் திலகம் அலட்சியமாக கேலி பரத நடனம் ஆடும் அழகே அழகு. (இது போல எத்தனை குரங்குகளைப் பார்த்தவர் அவர்!)
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=dUkEdNdxvoU
rajeshkrv
7th October 2014, 10:25 PM
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன். எனக்கும் மிகவும் பிடித்த பாடல். சிவாஜி செய்யும் சேஷ்டைகள் அமர்க்களம்
லீலா, கோமளா மற்றும் டி.எம்.எஸ் ஜொலிக்கும் பாடல்
vasudevan31355
7th October 2014, 10:28 PM
பதில் அனுப்பியுள்ளேன்
பார்த்து விட்டேன் ராஜேஷ்ஜி! மிக்க நன்றி!
ஒரு நல்ல அமைதியான நம் இசையரசியின் பாடல் ஒன்றை போடுங்கள் ஜி. நெடுநாள் பாரம் இறக்கி வைத்தது போன்று இருக்கிறது. அமைதியாக அந்த இசைக்குயிலின் பாடலை ரசித்துக் கொண்டே உறங்கச் செல்கிறேன்.
vasudevan31355
7th October 2014, 10:34 PM
மதுஜி!
நீங்கள் கேட்ட 'குங்குமம் பிறந்தது மரத்திலா' ஹீரோயின் யாரென்று நாளை சொல்ல முயற்சிக்கிறேன். நேற்று வெளியூர் சென்று விட்டதால் உடன் பதில் தர முடியவில்லை.
தவிர ரொம்ப தேங்க்ஸ் மதுஜி! அற்புத கிடைத்தற்கரிய பாடல்களை கொடுத்து இன்ப களிப்படையச் செய்து விட்டர்கள். நிஜமாகவே சூப்பர். என் செல்லில் நீங்கள் தந்த பாடல்கள் நிரம்பி என்னுடைய தோழர்களையும் சந்தோஷப்படுத்தி வருகின்றன.
vasudevan31355
7th October 2014, 10:35 PM
கிருஷ்ணாஜி! சின்னக் கண்ணன்ஜி
பதிவுகள் அருமை. நாளை விளக்கமாக எழுதுகிறேன். நன்றி!
rajeshkrv
7th October 2014, 10:45 PM
வாசு ஜி
நீங்கள் உறங்க இதோ இசையரசியின் குரல்
http://www.youtube.com/watch?v=kpyRzoZM3Uc
venkkiram
7th October 2014, 11:24 PM
இப்போது பகிரங்கமாகச் சொல்கிறேன். நடிகர் திலகம் திரியில் நான் பதிவிடாமல் இதுவரை விலகி நிற்பதற்கு வெங்கிராம் என்ற நீங்கள்தான் முழுக் காரணம். இதை நான் முரளி சாரிடமும் சொல்லி இருக்கிறேன். கோபால் சார், மற்ற நண்பர்களிடமும் சொல்லி இருக்கிறேன்.
இப்போது மதுர கானங்கள் திரியில் வந்து உங்கள் வேலையைக் காட்ட வந்திருக்கிறீர்கள்.
அதிக கோபத்துடனும், அதைவிட அதிக வருத்தத்துடனும்
நெய்வேலி வாசுதேவன்.
மையத்தில் நாம் பதியும் ஒவ்வொரு பதிவும் நினைவில் இருப்பதில்லை. சிகப்பு நிறத்தில் தடித்த எழுத்துக்களால் ஒருவர் பெரியதொரு குற்றச்சாட்டாக வைக்கும் அளவுக்கா நம் பதிவு கடந்த காலத்தில் அமைந்துவிட்டது என கொஞ்ச நேரம் சிவாஜி திரிகளில் நேரம் செழவழித்து அப்படிப் பட்ட ஒரு பதிவு ஒருவேளை இதுவாக இருக்க கூடும் என நினைத்து இங்கே எல்லோர் பார்வைக்கும் அதை மீண்டும் வைக்கிறேன்.
http://www.mayyam.com/talk/showthread.php?10567-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-12&p=1092251&viewfull=1#post1092251
அப்போதுள்ள சூழ்நிலையில் அங்கே பதிவுகள் யார் யாரால் எப்படியெல்லாம் பதிவு செய்யப்பட்டன என்பதை என்னால் உறுதிபட சொல்லமுடியல இப்போது. ஏனெனில் சில பதிவுகள் அழிக்கப் பட்டுள்ளன என்பதையும் சிலரது பதிவுகள் சொல்கின்றது. சரி..விஷயத்திற்கு வருவோம்.. சக ஹப்பர் ஹானஸ்ட் ராஜ் சிவாஜி திரியில் தனது அறிமுகப் பதிவாக (அப்படித்தான் நினைக்கிறென்.. ஆனால் மௌனமாக வாசித்துக் கொண்டிருந்ததின் அடிப்படையில்) சிவாஜி திரி போகும் போக்காக அவர் நினைப்பதை பதிவிடுகிறார். அதற்கு நான் வழிமொழிகிறேன். அதே வேளையில் திரு சின்னக் கண்ணன் அவர்கள் மீதான கருத்துத் தாக்குதலை கண்டிக்கிறேன். யாரையும் குறிப்பிட்டு நான் சுட்டிக் காட்டவும் இல்லை. ஹானஸ்ட் ராஜைப் போலவே நானும் எனது பார்வையை வைக்கிறேன். அவ்வளவுதான். இது எப்படி வாசுதேவன் அய்யாவை பாதித்தது எனத் தெரியல. விந்தையாக இருக்கு. வாசுதேவன் அய்யா அங்கே எழுதுவதை நிறுத்த நான் காரணம் என்பதையே திரு ஆர்.கே.எஸ்ஸும் சொல்லியிருக்கிறார் இப்போது. சிவாஜி பற்றிய பல்லாயிரக் கணக்கான பதிவுக் குவியல்களில் மிஞ்சிப் போனால் என் சார்பில் பத்து பதினைந்து பதிவுகளே அடங்கும். அப்படியிருக்க என் பதிவிற்காகவா அப்போது நான்காயிரம் பதிவினை கடந்த ஒரு சீனியர் எங்கே எழுதுவதை நிறுத்திவிட வேண்டும்? அதுவும் யார் யார் என சுட்டிக்காட்டாதத ஒரு பொத்தம் பொதுவான அபிப்ராயத்தின் அடிப்படையில் அமைந்த எனது பதிவில். அதுவும் சக பதிவர் ஹானஸ்ட் ராஜ் சொல்வதை வழிமொழியும் பதிவே என்னுடையது. விந்தையாக இருக்கு. எனிவே.. சிகப்பு எழுத்தில் தடித்த எழுத்துக்களில் குற்றம் சாட்டப்பட வேண்டிய அளவில் எனது அந்த பதிவு பொறுப்பாகாது என்பதே எனது பார்வை. என்னடா! கடைசிப் பதிவு எனச் சொல்லிவிட்டு இன்னொன்று பதிகிறானே என நீங்கள் நினைக்கக் கூடும். இது ஒரு தன்னிலை விளக்கம். அவ்வளவுதான்.
vasudevan31355
8th October 2014, 07:35 AM
வெங்கிராம் அய்யா!
ஒரு குடம் பாலுக்கு ஒரு விஷத்துளி போதும். ஒரே சூட்டுக் கோலால் ஒருவினாடி கால் தொடையில் இழுத்தால் அது மாறாத வடுவாகும். ரணமாகும். அதுதான் உங்களுடைய விவகாரம் உள்ளடக்கிய விஷ வார்த்தை பதிவுகள். அது வெளியே இருப்பவர்கள் உணர்ந்து கொள்ள முடியாது. சம்பந்தப்பட்டவர்களே உணர்ந்து உயிர் வலியை உணரமுடியும். இதை சாமர்த்தியம் என்று நான் நினைக்கவில்லை. 'வைத்தி'தனம் என்றுதான் இதற்கு பெயர்.
கபட நாடகம் ஏன் ஆடுகிறீர்கள் ஒன்றும் தெரியாத அப்பாவி போல. இதற்கெல்லாம் ஏமாந்த காலம் மலையேறி விட்டது. நான் இதுவரை பொறுமை காத்து வந்தது தவறோ என்று நினைக்கிறேன். நான் மனம் நொந்து வருத்தப்பட்டதால் உங்களுடைய அந்த மறைமிக hurt பதிவு மாடரேட்டர்களால் நீக்கப்பட்டுள்ளது. அதைக் கூட சமீபத்தில்தான் நான் பார்த்து தெரிந்து கொண்டேன். எந்த உழைப்பை நீங்கள் மதித்தீர்கள்? உங்களுக்கு மிதித்துதானே பழக்கம்? அடுத்தவரை நோக வைப்பதில்தானே உங்களுக்கு ஆனந்தம்? ஆயிரமாயிரம் பதிவுகளை யார் அம்சமாக அள்ளித்தந்து கலந்து கொண்டாலும் அங்கு வரமாட்டீர்கள். 'வாழ்த்துக்கல்' என்று யாரோ வாழ்த்து அட்டையில் தெரியாமல் போட்டால் 'என்னய்யாஇது' குற்றம் கண்டுபிடிக்க நக்கலடித்தபடி பறந்தோடி வருவீர்கள். உங்கள் நியாங்கள் தர்மங்கள் வாழ்க. உங்கள் மீது திடீரென என்றெல்லாம் நான் குற்றம் சுமத்தவில்லை. அது முன்னமேயே சக பதிவாளர்களுக்கும் தெரியும். ஆனால் நாகரிகம் கருதி என்னைப் போலவே அவர்களும் மௌனம் காத்தார்கள். உங்களுக்கு வர இருந்த கண்டனப் பதிவுகளையும் என் வேண்டுகோளுக்கிணங்க அவர்கள் நிறுத்தியும் வைத்தார்கள். இறுதில் என்னையே கண்டனப் பதிவு போடும் நிர்ப்பந்த நிலைக்கு ஆளாக்கி விட்டீர்கள் திருமத் திரும்ப உங்கள் மனம் புண்படுத்தும் பதிவுகளை நீங்கள் தொடர்ந்ததால்.
சரி வேண்டாம் என்று விலகி வந்தும் இங்கும் வந்து உங்கள் குசும்பு வேலையை நீங்கள் தொடர்ந்ததால்தான் இனியும் சும்மா இருந்தால் ஏப்பம் விட்டு விடுவீர்கள் என்றுதான் அனைத்தையும் வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அது என் தவறல்ல. இதிலும் கண்டுகொள்ளாமல் ஊமையாகி விடுவார்கள் என்று நீங்கள் தப்புக் கணக்கு போட்டிருந்தால் நாங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை.
ஏமாளி எப்போதும் ஏமாளியாகவே இருப்பான் என்று நினைத்தால் அவன்தான் முழு கோமாளி.
உங்கள் அப்பாவி நடிப்பையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிடலாம். இனியாவது அடுத்தவரை நீங்கள் நோக வைக்காமல் இருக்க நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன். அது ஒன்றுதான் சிறந்த வழி
vasudevan31355
8th October 2014, 07:54 AM
வண்டிப்பாடல்
'படிக்காத மேதை' திரைப்படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரனும், சி.ஐ.டி சகுந்தலாவும் ஸ்கூட்டரில் பாடியபடி வரும் பாடல். (நல்லவேளை. நடிகர் திலகம் படமாய் இருந்தால்கூட நடிகர் திலகம் இப்பாடலில் இல்லை. தப்பித்தேண்டா ஆஞ்சநேயா!)
'பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு
கண் பார்வை போடுதே சுர்ர்ருக்கு'
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=yZ3Y2HCj2zs
RAGHAVENDRA
8th October 2014, 08:02 AM
மய்யம் இணைய தளத்தில் பங்கேற்பாளர்களில் சில வகை உண்டு. தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எந்த தலைப்பு தங்களைக் கவர்கிறதோ அதில் தங்களுடைய கருத்தைப் பகிர்ந்து கொள்பவர்கள். சிலர் தங்களுக்கென சில நண்பர்கள் வட்டாரத்தை அறிந்து தேர்ந்தெடுத்து அவர்களோடு சம்பந்தப்பட்ட தலைப்புகளில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்பவர்கள். சிலர் தங்களுக்கு விருப்பமான தலைப்புகளில் தொய்வேற்பட்டால் அவற்றில் வம்பு வளர்ப்பது போன்று சில சர்ச்சைகளை உருவாக்கி அவற்றின் மூலம் அத்தலைப்புகளுக்கு அதிக பார்வையாளர்களை வரவழைப்பது.
இவற்றைத் தாண்டி இம்மய்யத்தில் பங்கு கொள்வதற்கென்றே தங்களுடைய உழைப்பு, நேரம், திறமை போன்றவற்றை அர்ப்பணித்து தங்களுடைய கருத்துக்களை மட்டுமின்றி தங்களுடைய உழைப்பின் மூலம் அரிய ஆவணங்களையும் பகிர்ந்து கொள்வது. இவ்வகையினரின் பங்கேற்பின் மூலம் சமீபகாலமாக சில ஆண்டுகளில் நம்முடைய மய்யம் இணைய தளம் உலக அளவில் அதிகமாக பேசப்படும் இணையதளமாகியுள்ளது என்பது உண்மை. இத்தகைய உழைப்பினை அவர்கள் அளிப்பதற்காக அவர்கள் எதிர்பார்ப்பது ஆதாயம் ஏதுமில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதிகபட்சம் நம் நண்பர்களின் பாராட்டுக்கள் தான் இந்த உழைப்பிற்கேற்ற அங்கீகாரம். இந்த ஆவணங்கள் தமிழ் திரையுலக வரலாற்றிற்கும் பயன்படுவது நமது மய்யம் இணையதளத்திற்கும் சிறப்பாகும்.
சுமார் 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு முந்தைய ஆவணங்கள் இங்கு பகிர்ந்து கொள்ளப்படும் போது அவற்றின் மதிப்பு அளவிடமுடியாததாகும். இவற்றை இங்கு தரவேற்றுவதற்கும் பேருழைப்பு தேவைப்படும்.
இவ்வளவும் செய்து இங்கு தரவேற்றும் போது அவற்றை குப்பைகள் என்றும் பக்கங்களை நிரப்புவதற்கான உத்திகள் என்றும் கொச்சையாக விமர்சனங்கள் வரும் போது எந்த படைப்பாளியும் உள்ளம் வருந்தத்தான் செய்வான். இப்படிப்பட்ட கேலிகளும் கிண்டல்களும் விமர்சனங்களும் சில சமயம் திட்டமிட்டே செய்யப்படுபவையாகக் கூட இங்கே தோற்றமளித்தன. இதனால் மன வருத்தத்துடன் நடிகர் திலகம் திரியிலிருந்து விலகி நின்ற நண்பர்களில் ஒருவர்தான் நமது அன்பிற்குரிய நெய்வேலி வாசுதேவன் அவர்கள். மற்றவர்களில் அன்பிற்குரிய பம்மலார் அவர்களும் அடியேனும் அடங்குவோம். இதே போல இம்மய்யத்திற்கு புகழ் சேர்க்கும் அரிய ஆவணங்களை - அவை பத்திரிகை விளம்பரங்களாகட்டும் - பாட்டுப்புத்தகப் பக்கங்களாகட்டும் - நிழற்படங்களாகட்டும் - வேற்று மொழி பத்திரிகை விளம்பரங்களுமாகட்டும் - பழைய திரையரங்க நிழற்படங்களாகட்டும் - அவற்றை வழங்குவதில் எம்.ஜி.ஆர்.திரி நண்பர்கள் அன்பிற்குரிய வினோத், திருப்பூர் ரவிச்சந்திரன், வேலூர் ராமமூர்த்தி, செல்வகுமார் உள்பட பலர் உள்ளனர்.
எந்த அளவிற்கு திறனாய்வு படைப்புத்திறன் சார்ந்ததோ அதைவிட அதிகமாகவே ஆவணங்கள் தரவேற்றலும் படைப்புத்திறன் சார்ந்ததுவே.
துரதிருஷ்டவசமாக நடிகர் திலகம் திரியில் தான் ஆவணங்கள் சிறுமைப்படுத்தப்பட்டன, அதுவும் வழங்கப்ப்ட்ட ஆவணங்கள் எல்லாமே அந்நாளைய விளம்பரங்கள், பத்திரிகை பக்கங்கள் என அரிய வகையிலானவை. வெறும் நிழற்படங்களைக் கொண்டு நடிகர் திலகம் திரியில் பக்கங்கள் நிரப்பப் படவில்லை.
இவற்றின் அடிப்படையில் தான், பங்கேற்பாளரின் உழைப்பை சிறுமைப்படுத்தப் பட்ட மனவேதனையின் அடிப்படையில் தான் வாசுதேவன் போன்ற சிறந்த உழைப்பாளிகளின் பதிவுகளைப் பார்க்க வேண்டும். அவருடைய மனவேதனையைப் புரிந்து கொண்டால் தான் ஒரு படைப்பாளியின் கஷ்டங்களை உணர முடியும்.
வாசுதேவன், பம்மலார், வினோத், போன்ற சிறந்த ஆவணக்காப்பாளர்கள் கிடைத்தது நம்முடைய மய்யத்தின் மிகச்சிறந்த பெருமை.
அதை பெருமையாகக் கருதி அவர்கள் மனம் நோகாமல் ஊக்கமளிப்பது மற்ற நண்பர்களின் கடமை என நான் எண்ணுகிறேன்.
Gopal.s
8th October 2014, 08:13 AM
வாசு,
உன் நண்பனாக உன் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எனக்கு நீ சொல்லும் வழக்கமான அறிவுரைதான். வெங்கிக்கு p .m அனுப்பி இருக்கலாமே? அவர் என்றுமே சிவாஜிக்கு ஆதரவாக மதிப்பளித்துத்தானே வந்துள்ளார்? இப்படி நாம் இளைய பதிவர்களிடம் தொட்டார்ச்சுருங்கியாக நடந்து கொள்வது, அவர்களை அந்நிய படுத்தி ,தள்ளி வைப்பது நமக்கென்ன லாபம்? 4000 பதிவிட்டவர்,எல்லோருடைய ஏகோபித்த ஆதரவு,பாராட்டை பெற்றவர், யாரோ முகம் தெரியாத குடிமகனுக்காக சீதையை தீயிட்ட ராமன் போல ,வெங்கி ஒருவருக்காக ,நம் நடிகர்திலகத்திற்கு .நாம் செய்த பணிகளை நிறுத்தியிருக்கலாமா?
அப்படி நான் கருதியிருந்தால் எதிர்ப்பை மீறி நான் பதிவு செய்த நடிப்பு பள்ளி நின்றிருக்குமே? என்னுடைய ஆதரவை விடவா,வெங்கியின் எதிர்ப்பு உனக்கு முக்கியமாக படுகிறது? இது உன் குணத்தில் சிறிதே பழுதேற்படுத்தி விடுகிறதே?
யோசித்து ,திரும்ப முந்தைய இயல்பான வாசு தேவனாக மாறு. மனதில் உள்ளதை கொட்டி விட்டாயே?
vasudevan31355
8th October 2014, 08:14 AM
நடிகர் திலகம் அவர்கள் பாடல் காட்சிகளுக்காக எவ்வளவு எல்லாம் சிரமப்பட்டார் என்பது 'படிக்காத பாமரனுக்கு'க் கூடத் தெரியும். காட்சிகளை இயக்குனர் விளக்கி பாடலாசிரியர் பாடல் எழுதுவதும் அதற்கு இசையமைப்பாளர் இசை அமைப்பதும் திரையலகில் வழக்கமாக நடக்கும் ஒன்று.
ஆனால் இங்கே பாருங்கள் நடிகர் திலகத்தின் ஆளுமையை. இங்கேயும் அவர் சாம்ராஜ்யமே. பாட்டும் எழுத சரிவராமல், இசையும் அமைக்க முடியாமல் பாட்டுக்கு மெட்டா அல்லது மெட்டுக்கு பாட்டா என்று குழம்பி இரண்டுமே சரிவாராத நிலையில் உலகப் பெரு உன்னத நடிகரின் நடிப்பை முன்னாலேயே பார்த்து பின் அதற்கேற்ப பாடல் இயற்றி இசையமைத்த விந்தையை என்ன சொல்ல!
(நண்பர்களே! ஒரு அனுமதி தேவை. இது பாடலுடன் சம்பந்தப்பட்ட நடிகர் திலகத்தின் ஒரு ஆவணப்பதிவு. போடலாமா? பயமாய் இருக்கிறது. எதுவும் வசவு வராதே! தப்பு என்று சொன்னால் எடுத்து விடுகிறேன். சரிதானே!?
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/d09b1f38-c8af-4192-976b-edb30ded404b.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/d09b1f38-c8af-4192-976b-edb30ded404b.jpg.html)
vasudevan31355
8th October 2014, 08:31 AM
உன்னால் எல்லாம் வலி உணரமுடியாது கோ. உன் நட்பை சாக்கடைகளில் கலக்காதே. இந்த இடைப்பட்ட வருடம் எவ்வளவு மனம் வெதும்பி இருப்பேன் என்று உனக்குத் தெரியாததல்ல. பஞ்சாயத்துக்கு வராதே!
தெரியுதே லட்சணம்! சிவாஜியை மதிக்கும் லட்சணம். நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும். நீ ஒரு ஏமாளி. பாவம். புரியாத 4 வார்த்தை சேர்த்துப் போட்டால் அறிவாளி என்று ஏமாந்து போவதே உனக்குத் தொழில். இவ்வளவு பேசுகிறாயே! என் அவமானத்தில் உன் பங்கு என்ன எள்ளா? கடைசி வரை இளிச்சவாயனாகவே இரு என்கிறாயா? பேசாதே.
4000 பதிவிட்டவர், எல்லோருடைய ஏகோபித்த ஆதரவு,பாராட்டை பெற்றவரை இகழ்ந்தவர் உன்னால் புகழப்பட்டால் அதுவும் எனக்கு சந்தோஷமே! உண்மையான சிவாஜி ரசிகன் ஒருவரின் செருப்பைத் துடைத்து அவர் காலில் சந்தோஷமாக மாட்டிவிடவும் நான் ரெடி. போலிகளுக்கு அல்ல. வேஷதாரிகளுக்கு அல்ல. நீ சொல்வது போல இருந்திருந்தால் நடிகர் திலகம் பிறந்தநாள் பதிவுகளை அவமானப் படுத்தியிருக்கக் கூடாது. பார்த்து பரவசப்பட்டிருக்க வேண்டும் நீ இப்படி ஏமாளியாய் இருக்கிறாயே. உன்னைப் போல நான் ஏமாந்த சோணகிரி அல்ல. நடிகர் திலகம் இறுதி வரை தனக்கு நேர்ந்த அவமானத்தால் சங்கம் பக்கம் காலடி எடுத்து வைக்கவே இல்லை.
இத்தோடு இந்த விஷயத்தை விடு. மதுரகானத்தில் நிறைய வேலை இருக்கிறது. இரண்டாம் பாகம் முடிவடைந்து மூன்றாவது அருமை நண்பர் ராஜேஷ் அவர்களால் தொடங்க இருக்கிறது.
உன்னுடைய அருமையான பங்களிப்புகளை இங்கு தொடரு. கார்த்திக் வந்தால்தான் மன்னரைத் தொடருவேன் என்று மமதை இறுமாப்பு கொள்ளாதே. தாங்க நான் இருக்கிறேன். வா.
உன்னை கண்டிக்க எனக்கு உரிமை உண்டு கோ.
ஐ மீன் ......
அதே போல உனக்கும்.
venkkiram
8th October 2014, 08:33 AM
வெங்கிராம் அய்யா!
ஒரு குடம் பாலுக்கு ஒரு விஷத்துளி போதும். ஒரே சூட்டுக் கோலால் ஒருவினாடி கால் தொடையில் இழுத்தால் அது மாறாத வடுவாகும். ரணமாகும். அதுதான் உங்களுடைய விவகாரம் உள்ளடக்கிய விஷ வார்த்தை பதிவுகள். அது வெளியே இருப்பவர்கள் உணர்ந்து கொள்ள முடியாது. சம்பந்தப்பட்டவர்களே உணர்ந்து உயிர் வலியை உணரமுடியும். இதை சாமர்த்தியம் என்று நான் நினைக்கவில்லை. 'வைத்தி'தனம் என்றுதான் இதற்கு பெயர்.
கபட நாடகம் ஏன் ஆடுகிறீர்கள் ஒன்றும் தெரியாத அப்பாவி போல. இதற்கெல்லாம் ஏமாந்த காலம் மலையேறி விட்டது. நான் இதுவரை பொறுமை காத்து வந்தது தவறோ என்று நினைக்கிறேன். நான் மனம் நொந்து வருத்தப்பட்டதால் உங்களுடைய அந்த மறைமிக hurt பதிவு மாடரேட்டர்களால் நீக்கப்பட்டுள்ளது. அதைக் கூட சமீபத்தில்தான் நான் பார்த்து தெரிந்து கொண்டேன். எந்த உழைப்பை நீங்கள் மதித்தீர்கள்? உங்களுக்கு மிதித்துதானே பழக்கம்? அடுத்தவரை நோக வைப்பதில்தானே உங்களுக்கு ஆனந்தம்? ஆயிரமாயிரம் பதிவுகளை யார் அம்சமாக அள்ளித்தந்து கலந்து கொண்டாலும் அங்கு வரமாட்டீர்கள். 'வாழ்த்துக்கல்' என்று யாரோ வாழ்த்து அட்டையில் தெரியாமல் போட்டால் 'என்னய்யாஇது' குற்றம் கண்டுபிடிக்க நக்கலடித்தபடி பறந்தோடி வருவீர்கள். உங்கள் நியாங்கள் தர்மங்கள் வாழ்க. உங்கள் மீது திடீரென என்றெல்லாம் நான் குற்றம் சுமத்தவில்லை. அது முன்னமேயே சக பதிவாளர்களுக்கும் தெரியும். ஆனால் நாகரிகம் கருதி என்னைப் போலவே அவர்களும் மௌனம் காத்தார்கள். உங்களுக்கு வர இருந்த கண்டனப் பதிவுகளையும் என் வேண்டுகோளுக்கிணங்க அவர்கள் நிறுத்தியும் வைத்தார்கள். இறுதில் என்னையே கண்டனப் பதிவு போடும் நிர்ப்பந்த நிலைக்கு ஆளாக்கி விட்டீர்கள் திருமத் திரும்ப உங்கள் மனம் புண்படுத்தும் பதிவுகளை நீங்கள் தொடர்ந்ததால்.
சரி வேண்டாம் என்று விலகி வந்தும் இங்கும் வந்து உங்கள் குசும்பு வேலையை நீங்கள் தொடர்ந்ததால்தான் இனியும் சும்மா இருந்தால் ஏப்பம் விட்டு விடுவீர்கள் என்றுதான் அனைத்தையும் வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அது என் தவறல்ல. இதிலும் கண்டுகொள்ளாமல் ஊமையாகி விடுவார்கள் என்று நீங்கள் தப்புக் கணக்கு போட்டிருந்தால் நாங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை.
ஏமாளி எப்போதும் ஏமாளியாகவே இருப்பான் என்று நினைத்தால் அவன்தான் முழு கோமாளி.
உங்கள் அப்பாவி நடிப்பையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிடலாம். இனியாவது அடுத்தவரை நீங்கள் நோக வைக்காமல் இருக்க நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன். அது ஒன்றுதான் சிறந்த வழி
அய்யா.. மையத்தில் என்னை ஒரு அப்பாவியாக எல்லோரும் நம்ப எந்த வேடமும் எங்குமே பூண்டது கிடையாது. அதனால் மேற்கொண்டு உங்களின் பதிவிற்கு பதில் அளிக்கலாம் என நினைக்கிறேன். இதற்கு முந்தைய எனது பதிவில் குறிப்பிட்ட நடிகர் திலகம் சிவாஜி பாகம் 12 திரி பதிவே நீங்கள் சிவாஜி திரியை விட்டு விலக காரணமாக இருந்திருக்கக் கூடும் என்பதே என் இதுவரையிலான கணிப்பு. மாடரேட்டர் எனது பதிவை சரிச்சைக்குரியதாக எண்ணி நீக்கியதாக நீங்கள் சொல்வது நம்பக் கூடியதாக இல்லை. அந்தப் பதிவை சபையில் எல்லோரும் பார்க்க வாய்ப்பிருந்தால் மட்டுமே அதைப் பற்றி பேச முடியும். ஒரு முடிவுக்கு வரலாம். நான் ஒரு திறந்த புத்தகமே. இதே மையத்தில் நான் பழைய காலங்களில் பல்வேறு ரசனைத் தளங்களில் நான் எடுத்த நிலைப்பாடுகள் போகப் போக மாறிவருவதையும் பார்க்கமுடியும். மாற்றம் வருவதும் இயல்பான ஒன்றே. அதனால் இன்னொரு முறை உங்களிடம் நான் கேட்பது அந்த சர்ச்சைக் குரிய பதிவு என்னவென்பதுதான். நினைவு தெரிந்த வரையில் அந்தக் காலக் கட்டத்தில் சிவாஜி திரியில் என் பதிவை நீக்கியதாக தெரியல. மேலும் எப்போதெல்லாம் அப்படி ஒருவரது பதிவு நீக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் மாடரேட்டர் சம்பந்தப் பட்ட நபர்களை எச்சரிக்கை விடுப்பதே மையத்தில் நான் பார்த்தவரையில் உள்ள முறை. அப்படி சிவாஜி திரியில் ஒரு சம்பவம் கூட அதாவது என் பதிவு சர்ச்சைக்குரியதாக மாடரேட்டர் எண்ணி நீக்குவதற்கு முன்பாகவோ அல்லது நீக்கியபின்னோ என்னை கண்டித்ததாக தெரியல. புதிராய்த்தான் இருக்கு.
நடிகர் திலகத்தின் திரியில் நீங்கள் பங்கெடுக்காத காரணத்தினால்தான் (அதுவும் சிகப்பு எழுத்துக்களில் நீங்கள் அப்படி எழுதியனால்தான் எனக்கு உரைத்தது) மதுர காண திரியிலேயே சிவாஜியின் பிறந்தநாள் தினப் பதிவுகளை நிறைய பதிவிட்டிருக்கிறீர்கள் என இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. கீற்றுக் கொட்டகை திரியை திரு ராகவேந்தர் ஆரம்பித்ததை பார்த்தவுடனே 'புதிதாக இன்னொரு திரி எதற்கு? சினிமா சம்பந்தகான எல்லாவற்றையும் பேசும் இடமாக மதுர கானம் மாறிவருகிறதே! அங்கேயே கீற்று கொட்டகை பற்றிய பலரது பார்வைகளையும் பதியலாமே!" என்றே தோன்றியது. சரி.. திரு ராகவேந்தர் இதற்கு பிரத்யேகமாக தனித் திரியோன்று துவங்குகிறார் போல.. வாழ்த்துவோம் என முற்பட்டு பதிவிடும்போது அப்படியும் எழுதிவிட்டேன். மறுபடியும்...இதுவும் ஒரு தன்னிலை விளக்கம். அப்பாவி போல வேடம் பூணுகிறேன் என யாரும் சொல்லிவிடவேண்டாம்.
Gopal.s
8th October 2014, 08:35 AM
வெங்கி ,
உன்னிடம் நான் சற்றே உரிமை எடுக்கலாம். நடிகர்திலகம் எந்த குழுவிற்கும் சொந்தமானவர் இல்லை. எந்த காலத்திலும் அடைக்க பட கூடியவர் இல்லை. தமிழ் பட சம்பந்தமாக எதை செய்தாலும் ,அதில் அவர் இருப்பார். நம் ஒவ்வொரு தமிழனனின் gene அனைத்திலும் சிவாஜி என்ற அணு கலக்காமல் இருக்கவே முடியாது.
அந்த கால கட்டத்தில் ,அந்த கலைஞன் புகழ் வஞ்சிக்க பட்டே வந்தது. 60,70 களில் சராசரிகளை சில இயக்கங்கள் தங்கள் சுயநலத்திற்காக தூக்கி விட்டு, அந்த உண்மை கலைஞனை பற்றி அவதூறு செய்து, படிப்பறிவோ,பகுத்தறிவோ எட்டி பார்க்காத மக்களிடம் பொய்களை பரப்பியது.
சத்யஜித்ரே,திலிப் குமார்,ராஜ்கபூர்,தேவ் ஆனந்த்,சுனில்தத்,லதா மங்கேஸ்கர்,சஞ்சீவ் குமார்,நானா படேகர்,அமிதாப்,கமல்,ரஜினி,சத்யன்,மது,மோகன்லால்,மம் முட்டி,கோபி,திலகன் இவர்களால் வணங்கபட்ட நடிகர்களின் நடிகனுக்கு எத்தனை திரிகள் வந்தாலும் போதாதே?
அவரை முழுவதும் அறிய எங்களுக்கு அறிவும்,அனுபவமும் போதாதே?என்ன செய்வது?
கானங்கள்,கொட்டகைகள்,படங்கள்,நடிப்பு,தமிழ், கலாச்சாரம்,மேலை நாட்டு கலைகள் என்று எதை பேசினாலும், அவர் இல்லாமல் ,அவர் சம்பத்த படாமல் எப்படி பேச முடியும்?
venkkiram
8th October 2014, 08:55 AM
திரு கோபால்..
சிவாஜியின் பெருமைகளாக நீங்கள் சொல்வது எனக்கு புரிகிறது. ஆனால் தொடர் மழைப் பதிவுகள் ஒருசில நேரங்களில் எனக்கு திகட்டிவிடுவது தலைமுறை இடைவெளி மற்றும் மையத்தின் மற்ற திரிகளில் எங்குமே நான் கண்டிராத போக்கு தான் காரணங்கள் என நினைக்கிறேன். . அதுவும் சிவாஜியின் ரசிகர்கள் பொறுமைகாத்து பெரிய பெரிய பதிவுகள் அசராமல் ஆண்டு தோறும் தொடர்ச்சியாக பதிந்துவருவது நிச்சயம் பெரிய சாதனைதான். ஆனால் அதே வேளையில் என் போன்ற அடுத்த தலைமுறை / திரைக் கலைஞர்களது ரசிகர்களாக உருவெடுத்து வந்தவர்கள்களுக்கு திகட்டிவிடுவது இயல்பான ஒன்றே எனக் கருதுகிறேன். என் சமீபத்திய சர்ச்சைப் பதிவிலிருந்து நான் கற்றுக்கொண்ட படிப்பினை இதுதான்.. மூத்த தலைமுறை திரைக்கலைஞர்களது ரசிகர்கள் பங்குகொள்ளும் திரிகளில் கடைசிவரையிலும் ஒரு வாசிப்பாளானாகவே இருந்துவிடல்தான் நலம். உரையாடலில் பங்கெடுத்தால் கொஞ்சம் வார்த்தை பிசகினாலும் வசைகள்கூட பெரிய பதிவாக வருகிறது. படிப்பினை.
vasudevan31355
8th October 2014, 08:55 AM
'திகம்பர சாமியார்' படத்தில் செம பாடல்.
'பாருடப்பா பாருடப்பா பாருடப்பா பார்
பல்லை ஒடடப்பா ஒடடப்பா ஒடடப்பா நீ'
ஊரை ஏயப்போன்
குடியைக் கெடுப்போன்
உண்ணும் சோற்றில் மண்ணையடிப்போன்
கல்லுடைத்து செக்கிழுக்க நேரும்
எந்தக் காலத்திற்கும் பொருந்தும் பாடல். ஜாலியான ஒரு பாடல்.
இந்தப் பாடலுக்கு நடிக்கும் சிறுவன்தான் 'மந்திரிகுமாரி' படத்தின் புகழ்பெற்ற பாடலான 'எருமைக் கன்னுக்குட்டி... என்னெருமை கன்னுக்குட்டி' பாடலில் நடித்தவன். சரியா என்று நண்பர்கள் ஊர்ஜிதம் செய்யவும்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=I6P_Db68pWA
rajraj
8th October 2014, 09:06 AM
From Thigambara Samiyar (1950)
oosi pattaase vEdikaiyaa thee vachchaale vedi dabaar dabaar......
http://www.youtube.com/watch?v=DH-__OEW1wU
The tune is from:
O dilwalon dil ka laganaa......... from Patanga(1949)(Hindi)
http://www.youtube.com/watch?v=7H2-gMLicX0
oosi pattase was a popular song in the 50s and one of my favourites. There was a parody of this song that went like '.........aatchi naariya pochchu....'. It was before the 1952 election ! :lol:
Have fun with 'oosi pattaasu' ! :)
rajeshkrv
8th October 2014, 09:10 AM
வாசு ஜி
திகம்பர சாமியார். நம்பியார் பல வேடங்களில் நடித்த படம். சமீபத்தில் பார்த்து ரசித்தேன் .. அருமையான படம்
பாடலுக்கு நன்றி.
Gopal.s
8th October 2014, 09:15 AM
திரு கோபால்..
சிவாஜியின் பெருமைகளாக நீங்கள் சொல்வது எனக்கு புரிகிறது. ஆனால் தொடர் மழைப் பதிவுகள் ஒருசில நேரங்களில் எனக்கு திகட்டிவிடுவது தலைமுறை இடைவெளி மற்றும் மையத்தின் மற்ற திரிகளில் எங்குமே நான் கண்டிராத போக்கு தான் காரணங்கள் என நினைக்கிறேன். . அதுவும் சிவாஜியின் ரசிகர்கள் பொறுமைகாத்து பெரிய பெரிய பதிவுகள் அசராமல் ஆண்டு தோறும் தொடர்ச்சியாக பதிந்துவருவது நிச்சயம் பெரிய சாதனைதான். ஆனால் அதே வேளையில் என் போன்ற அடுத்த தலைமுறை / திரைக் கலைஞர்களது ரசிகர்களாக உருவெடுத்து வந்தவர்கள்களுக்கு திகட்டிவிடுவது இயல்பான ஒன்றே எனக் கருதுகிறேன். என் சமீபத்திய சர்ச்சைப் பதிவிலிருந்து நான் கற்றுக்கொண்ட படிப்பினை இதுதான்.. மூத்த தலைமுறை திரைக்கலைஞர்களது ரசிகர்கள் பங்குகொள்ளும் திரிகளில் கடைசிவரையிலும் ஒரு வாசிப்பாளானாகவே இருந்துவிடல்தான் நலம். உரையாடலில் பங்கெடுத்தால் கொஞ்சம் வார்த்தை பிசகினாலும் வசைகள்கூட பெரிய பதிவாக வருகிறது. படிப்பினை.
அப்படி பார்க்க போனால் என்னுடைய சக கால பயணிகளான இளைய ராஜா,கமலா ஹாசன் இவர்களை விமர்சிக்கும் உரிமை எனக்கு வழங்கப் பட்டுள்ளதா? உங்கள் திரிகளின் திறந்த மனது காரர்களை, வெளிநாட்டு கிணற்று தவளை தீவிர வாதிகளை எங்கு அடைப்பீர்கள்?
நான் சிவாஜியின் அத்தனை படங்கள்,கமல் அத்தனை படங்கள்,எல்லா இசையமைப்பாளர்களின் எல்லா பாடல்களோடும் பரிச்சயமானவன் என்ற வகையில் உங்கள் குழுவில் என்ன மதிப்பு இருந்தது மாற்று கருத்துகளுக்கு?
எங்கள் திரியில் நானே சிவாஜியை விமரிசனம் பண்ணி உள்ளேனே?அந்த உரிமை எனக்கு வழங்க பட்டுத்தானே இருந்தது? வீண் குற்ற சாட்டுகளை சுமத்த வேண்டாம்.(சந்தேகமிருந்தால் பதிவு எண்களை வழங்குவேன்)
கமலிடமே நேரில் தெரிவித்து ,அவர் ஒப்பு கொண்ட விமர்சனங்களை கூட நான் பதிக்க முடியாது .
vasudevan31355
8th October 2014, 09:43 AM
கோ,
'மஞ்சள் குங்குமம்' படத்தில் ரவி பாடகர் திலகம் குரலில் பாடும் பாடல்.
'கோமாளி கட்டி வச்ச கோட்டை இது தெரிஞ்சுக்கோ
ஏமாளி எழுதிய கதை இதுவே புரிஞ்சுக்கோ'
ரவி செம கலக்கல் அவர் ஸ்டைலில். இந்த மாதிரிப் பாடல்கள் அவருக்கு ஹல்வா சாப்பிடுவது மாதிரி. மனுஷன் பின்னுகிறார்.
உங்களுக்காகவே இந்தப் பாடல். பாடலும் கேட்க செம தூள்.
http://www.dailymotion.com/video/x15k1wy_komaalai-manjal-kungumam-1973_shortfilms
vasudevan31355
8th October 2014, 09:44 AM
காலை வணக்கம் ராஜேஷ்ஜி.
Richardsof
8th October 2014, 09:46 AM
வாலியின் பாடல்களில் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் . பாடல் வரிகள் மற்றும் படமாக்கப்பட்ட விதம் , மக்கள் திலகத்தின் இரு வித தோற்றம் & நடிப்பு மனதை நெருடும் பாடல் .
http://youtu.be/tR6TgUTWI84
vasudevan31355
8th October 2014, 09:50 AM
வாசு ஜி
திகம்பர சாமியார். நம்பியார் பல வேடங்களில் நடித்த படம். சமீபத்தில் பார்த்து ரசித்தேன் .. அருமையான படம்
பாடலுக்கு நன்றி.
உண்மை ராஜேஷ்ஜி.
பாருங்கள். நமது நம்பியார் 'திகம்பர சாமியார்' படத்தில் விதவிதமான கெட் -அப்களில் வருவதை.
http://i.ytimg.com/vi/vnRvQKcnCME/hqdefault.jpg
http://i.ytimg.com/vi/6nPvOqoRXTk/hqdefault.jpg
http://i.ytimg.com/vi/hteSXSQdeOc/hqdefault.jpg
http://i.ytimg.com/vi/WbZ0o4_dmCY/hqdefault.jpg
http://antrukandamugam.files.wordpress.com/2013/12/mn-nambiyar-digambara-samiyar-saamiyar.jpg?w=487
http://antrukandamugam.files.wordpress.com/2013/08/vm-ezhumalai-mn-nambiyar-digambara-samiyar-1jpg.jpg?w=593
http://antrukandamugam.files.wordpress.com/2013/12/mn-nambiyar-digambara-samiyar-saamiyar-post-man.jpg?w=593
http://antrukandamugam.files.wordpress.com/2013/12/mn-nambiyar-tkr-digambara-samiyar-saamiyar-sheik-ravuthar.jpg?w=593
gkrishna
8th October 2014, 10:13 AM
அனைவருக்கும் காலை வணக்கம்
திகம்பர சாமியார் 1950
இயக்குனர் டி. ஆர். சுந்தரம்
தயாரிப்பாளர் டி. ஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
கதை வடுவூர் துரைசாமி ஜயங்கார்
நடிப்பு
எம். என். நம்பியார்
டி. பாலசுப்பிரமணியம்
நரசிம்ம பாரதி
எம். ஜி. சக்கரபாணி
வி. கே. ராமசாமி
திரௌபதி
லக்ஸ்மிப்பிரபா
சி. கே. சரஸ்வதி
இசையமைப்பு ஜி. ராமனாதன்
எஸ். எம். சுப்பைய்யா நாயுடு
வெளியீடு நாட்கள் செப்டம்பர் 29, 1950
1950ல் வெளிவந்த திகம்பர சாமியார் என்னும் இப்படத்தில் எம்.என்.நம்பியார் ஒன்பது தோற்றங்களில் வந்திருக்கிறார். இது வி.சி.கணேசன் ஒன்பது தோற்றங்களில் நடித்து வெளிவந்த நவராத்திரி திரைப்படத்திற்கு முன்பே வந்தபடம்.
அரிதான இப்படம் இப்பொழுது எங்கும் காணக்கிடைக்காதது பெருவியப்பே. இப்படம் அந்நாட்களில் பெரும் பெயர் பெற்றிருக்கிறது.
இணையத்திலும் கூட காணக்கிடைக்காத இதைப்பற்றி அண்மையில் நடிகை மனோரமா கூறுகையில்தான் சில செய்திகள் தெரியவந்தன.
எழுத்தாளர் இராண்டார் கை இந்து நாளிதழில் இதைப்பற்றி எழுதியிருந்த கட்டுரை தேடுபொறி உதவியுடன் சிக்கியது. அதைத்தழுவி எழுதப்பட்டதே இக்கட்டுரை. அதைத்தவிர பிற செய்திகளையும் எடுத்தாண்டிருக்கிறேன்.
இந்தப்படம் வெளிவந்த ஆண்டில் (1950) 13 படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளன. வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய புதினம் இது அக்காலத்தில் மிகவும் புகழ்பெற்ற துப்பறியும் கதையாகும்.
இப்பொழுது பலராலும் பார்க்க விரும்பும் ஒருபடமாக இது விளங்கினாலும், அரிதான இப்படம் இப்பொழுது எங்குமே கிடைக்கவில்லை. யாரிடமாவது இருப்பின் மின்மடலனுப்பவும்.
தமிழில் வெளிவந்த இப்படத்தினைப் பற்றி செய்திகள் அனைத்து இணையத்தில் ஆங்கிலத்தில் கிடைப்பது அடுத்து எழும் விந்தை.
இதில் ஒரு நம்பியார் மட்டுமே வந்தாலும் அவர் வெவ்வேறு தோற்றங்களில் வந்து கடத்தப்பட்ட கதையுடைத்தலைவியினை தேடுவார். அண்மையில் இதைப்பற்றிப் பேசிய மனோரமா இதில் நம்பியார் 15 தோற்றங்களில் வந்திருக்கிறார் என்ற செய்தினைச் சொல்லியிருக்கிறார்.
மார்டன் தியேட்டர்சில் எடுக்கப்பட்ட இப்படம் கும்பகோணம், தஞ்சாவூர்,மன்னார்குடி ஆகிய இடங்களை அடிப்படையாகக் கொண்டது. இதில் நம்பியார் காவல்துறை மறைவு உளவாளியாக வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை பொதிகைத் தொலைக்காட்சியில் மட்டுமே உள்ள இத்திரைப்படம் எப்பொழுதாவது ஒளிபரப்புச் செய்யப்படும். பழங்காலத்தில் வந்த படமாதலால் சிலர் இதில் நம்பியார் பதினொரு தோற்றங்களில் வந்திருக்கிறார் என்றும் புதுச்செய்தி சொல்லிவருகின்றனர் இக்காலத் தலைமுறையினருக்கு.
மனோரமா அக்கால நடிகை என்பதால் அவர் சொல்வதை மட்டும் வைத்துப்பார்த்தால் எம்.என்.நம்பியார் 15 தோற்றங்களில் வந்தார் என்பதை நம்பலாம்.
பல தோற்றங்களில் வந்தாலும், இத்தோற்றங்கள் பெரிதும் பெயர் பெற்றவையாம்.
காதுகேளாத சித்துவேலை செய்பவன், அரபுநாட்டு வணிகன், தொழிலதிபன், நாதசுர கலைஞன், நிலமுள்ள பெருஞ்செல்வந்தன், அஞ்சல்காரன்.
குமாரி கமலா நடமாடும் புகழ்பெற்ற "நாதர்முடி மேலிருக்கும் நல்ல பாம்பே..." பாடல் இப்படத்தில் இடம்பெற்றதே. அந்நாளைய வடமொழிப்பாடல்களிலிருந்து மூன்று பாடல்கள் சுடப்பட்டு இதில் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பது துணைச்செய்தி.
இராமநாதன், சுப்பையா நாயுடு இசையமைத்துள்ள இப்படத்தில் நடித்த இன்னபிற கலைஞர்கள்:
எம்.சி.சக்கரபாணி, ஏ.கருணாநிதி, சி.கே.சரசுவதி,லட்சுமி பிரபா, டி.பாலசுப்ரமண்யம், தனலட்சுமி, டி.கே.இராமசந்திரன், ஏழுமலை.
இப்படத்தை இக்காலத்தலைமுறையினர் வெகுசிலரே பார்த்திருக்கின்றனர். பார்த்தவர்களும் எத்தனை தோற்றம் என்று சரிவர கூறவில்லை. T.R.சுந்தரம் இயக்கிய இப்படத்தினை, நான் நம்பியாரின் தோற்றங்களை எண்ணும் வண்ணம் பார்க்க விரும்புகிறேன். 15 தோற்றங்கள் எனில் அதுதான் உலக சாதனை. உலகநாயகன் செய்தது அல்ல.
http://3.bp.blogspot.com/_iJ0ouXPWdXM/SqWmTlwpoeI/AAAAAAAAB7M/LKG8s2h1wS0/s400/Digambara+Samiyaar.jpg
(நண்பர் ஒருவர் அனுப்பிய மின் அஞ்சலில் கிடைத்த தகவல்கள் )
rajraj
8th October 2014, 10:32 AM
krishna: search youtube with this Thigambara Samiyar 1950 You will get the full movie ! :)
rajraj
8th October 2014, 10:36 AM
Krishna: Here is the link to the full movie "Thigambara samiyar". Looks like you have trouble searching ! :)
http://youtu.be/NUDIPqIFfss
rajeshkrv
8th October 2014, 10:42 AM
thigambara samiyar.. really a nice movie ( nice thought for those days )
gkrishna
8th October 2014, 10:44 AM
நன்றி ராஜ்ராஜ் சார்
உண்மையில் திகம்பர சாமியார் திரைபடத்தில் நம்பியார் எத்தனை வேடங்களில் வருவார் . சிலர் 11 என்றும் 12 என்றும் நடிகை மனோரமா 15 என்றும் சொல்லி இருக்கிறார். உங்களால் நினைவு கூர்ந்து சொல்ல முடியுமா ?
rajraj
8th October 2014, 10:54 AM
நன்றி ராஜ்ராஜ் சார்
உண்மையில் திகம்பர சாமியார் திரைபடத்தில் நம்பியார் எத்தனை வேடங்களில் வருவார் . சிலர் 11 என்றும் 12 என்றும் நடிகை மனோரமா 15 என்றும் சொல்லி இருக்கிறார். உங்களால் நினைவு கூர்ந்து சொல்ல முடியுமா ?
I think it was 11. Not sure ! I remember the songs more than the story ! :) I posted ' Naadhar mudi melirukkum' in another thread. Of course 'oosi pattaase' was fun song for kids, especially the line ' adadaa yanai vedi idhu paaru adhanaalee unai suduvene thaaththaa' ! :lol:
vasudevan31355
8th October 2014, 10:55 AM
இன்றைய ஸ்பெஷல் (88)
இன்றைய ஸ்பெஷலில் அன்றைய 'அபூர்வ சகோதர்கள்' (1949). பின்னாளைய 'நீரும் நெருப்பும்' படத்தின் மூலம். ஆச்சார்யா இயக்க ஜெமினி எஸ்.எஸ்.வாசனின் பிரம்மாண்ட தயாரிப்பு. எஸ்.ராஜேஸ்வரராவ் இசை. கதைக்களமும், வாள் வீச்சுகளும் அப்போதைக்கு ரொம்பப் புதுசு. நாகேந்திரராவின் வில்லத்தனம் அட்டகாசம்.
http://upload.wikimedia.org/wikipedia/en/8/87/Apoorva_Sagodharargal_%281949_film%29.jpg
மிக மிக அருமையான பாடல். பானுமதியும், எம்.கே ராதாவும் இணை. ராதா பியானோ இசைக்க அவருடன் 'அஷ்டாவதானி'யும் சேர்ந்து கொள்ள பானுமதியின் மயக்கும் குரல் வளத்தில் இந்த தேவாமிர்தப் பாடல் ஒலிக்க ஆரம்பிக்கும். என்ன ஒரு அழகான ஆரம்பம்! வெறும் பியானோ இசை மட்டும். ராதா வாசித்தவுடன் பானுமதி தொடர்வார் தன் அழகிய கண்களால் ராதாவை வெட்டியபடியே. பானுமதி செம ஸ்மார்ட்டாக இருப்பார்.
இனி பாடலின் வரிகள்.
http://i.ytimg.com/vi/2FG5rrmrdoo/hqdefault.jpghttp://i.ytimg.com/vi/ew4yuZR67wA/hqdefault.jpg
ஆ ஆ ஆ ....
மானும் மயிலும் ஆடும் சோலை
ஆ ஆ ஆ ....
மானும் மயிலும் ஆடும் சோலை
மாலிள நேரம் மாநதியோரம்
கனவே கண்டேனே
என் ஆசை கனவே கண்டேனே
ஆ ஆ ஆ ....
மானும் மயிலும் ஆடும் சோலை
மாலிள நேரம் மாநதியோரம்
(மதுஜி! இந்த வார்த்தை சரியா? மாலிள நேரம் அதாவது மாலை இள நேரம் என்பதன் சுருக்கமா! ப்ளீஸ்.விளக்கவும் அல்லது சரி செய்யவும் .)
கனவே கண்டேனே
என் ஆசை கனவே கண்டேனே
பூரண சந்த்ரன் போல் அவன் முகமே
புதுமலர் விழியே மதுநிற மொழியே
பூரண சந்த்ரன் போல் அவன் முகமே
புதுமலர் விழியே மதுநிற மொழியே
நினைவும் கனவும் நீ என்றானே
நினைவும் கனவும் நீ என்றானே
நேரினில் வந்தான் நெஞ்சில் நுழைந்தான்
நேரினில் வந்தான் நெஞ்சில் நுழைந்தான்
ஆ ஆ ஆ ....
மானும் மயிலும் ஆடும் சோலை
மாலிள நேரம் மாநதியோரம்
கனவே கண்டேனே
என் ஆசை கனவே கண்டேனே
பூரண சந்த்ரன் போல் அவன் முகமே
புதுமலர் விழியே மதுநிற மொழியே
பூரண சந்த்ரன் போல் அவன் முகமே
புதுமலர் விழியே மதுநிற மொழியே
நினைவும் கனவும் நீ என்றானே
நினைவும் கனவும் நீ என்றானே
நேரினில் வந்தான் நெஞ்சில் நுழைந்தான்
நேரினில் வந்தான் நெஞ்சில் நுழைந்தான்
மானும் மயிலும் ஆடும் சோலை
மாலிள நேரம் மாநதியோரம்
கனவே கண்டேனே
என் ஆசை கனவே கண்டேனே
http://www.youtube.com/watch?v=ew4yuZR67wA&feature=player_detailpage
gkrishna
8th October 2014, 11:04 AM
dear vaasu sir
அபூர்வ சகோதரர்கள் 1949
இந்தப் படத்துக்கு மூன்று இசையமைப்பாளர்கள். எஸ்.ராஜேஸ்வரராவ், எம்.டி.பார்த்தசாரதி, ஆர்.வைத்தியநாதன் ஆகிய மூவரும் இசைப் பொறுப்பைப் பார்த்துக்கொண்டார்கள். இவர்களுக்குள் இருந்த வேலைப்பங்கீடு எப்படிப்பட்டதென்று தெரியவில்லை.
இந்தப் படத்தை ஜெமினி ஸ்டுடியோஸ் இந்திக்கும் கொண்டு போனது. இந்தியிலும் இவர்கள் மூவருமே இசையமைத்தார்கள். பானுமதியே நடித்தார்
இப்படி ஒரு தகவல் படித்த நினைவு உண்டு .சற்று உறுதி செய்யவும்
vasudevan31355
8th October 2014, 11:07 AM
வணக்கம் கிருஷ்ணாஜி.
gkrishna
8th October 2014, 11:10 AM
வெரி குட் மார்னிங் வாசு சார்
இயக்குனர் ஆச்சார்யா பற்றி இணையத்தில் கிடைத்த தகவல்கள்
டாக்டர் சாவித்திரி என்ற திரைப்படம் கதை , திரைக்கதை எழுதியதுடன் வேலன் மற்றும் இளங்கோவனுடன் இணைந்து வசனமும் எழுதி இருப்பவர் ஆச்சார்யா. இந்த ஆச்சார்யா யார் என்பது கண்டிப்பாக ஒவ்வொரு சினிமா ரசிகனுக்கும் தெரிந்து இருக்க வேண்டும்.
அந்த காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சந்திரலேகா படம் இவரது கதையில் இருந்து உருவானதுதான், படத்தை இவர்தான் இயக்குவதாக இருந்தது. பெரும்பாலான காட்சிகளை இவர்தான் இயக்கினார், வாசனுடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் அவர் விலக நேரிட்டது. அந்த படத்தில் வரும் புகழ் பெற்ற டிரம் டான்ஸ் காட்சிகளை இவர்தான் எடுத்தார்.
மங்கம்மா சபதம் , அபூர்வ சகோதரர்கள் போன்ற சூப்பர் ஹிட் படங்கள் எடுத்தார்.
பின்னாட்களில் நடிகர் கமல்ஹாசன் நடித்து இதே படங்களின் தலைப்பை (மங்கம்மா சபதம்,அபூர்வ சகோதரர்கள்) கொண்டு படங்கள் வெளியாகின.
rajraj
8th October 2014, 11:14 AM
krishna: Apoorva SagodharargaL was made in Hindi as Nishaan. There is a song in the same tune as 'maanum mayilum aadum solai maalai nanneram maanadhi oram'. I think I posted the Hindi version in Hindi songs thread long time back. I have to check. :)
gkrishna
8th October 2014, 11:18 AM
மிக்க நன்றி ராஜ்ராஜ் சார்
1940,1950 பற்றிய தகவல்களுக்கு உறுதி செய்ய நீங்கள் இந்த திரிக்கு கிடைத்தது மிக பெரிய பலம்
rajraj
8th October 2014, 11:20 AM
Here is the song from Nishan ( Hindi version of Apoorva SagodharargaL)
Teri Meri Yeh Kahani....
http://www.youtube.com/watch?v=XwvLc2d1rYY
gkrishna
8th October 2014, 11:23 AM
இரட்டை சகோதரர்கள் முதலில் பிரிந்து பின்னர் இணையும் கதைக்கு ஆரம்ப புள்ளி இந்த அபூர்வ சகோதரர்கள் தானே வாசு சார் .உத்தமபுதிரனையும் சேர்த்துக்கலாம் (சின்னப்பா நடித்த)
அந்நாட்களில் மாடர்ன் திடேர்ஸ்,ஜெமினியின்,ஏவிஎம் இன்,பீம்சிங்,பாலச்சந்தர்,ஸ்ரீதர் என்று டைட்டில் கார்டு போடும் போது இதுக்கு எல்லாம் கூட கைத்தட்டு கேட்ட நினைவு உண்டு .
vasudevan31355
8th October 2014, 11:24 AM
நன்றி ராஜ்ராஜ் சார்,
கிருஷ்ணா சார்,
http://www.bollango.com/poster_db/n/nishan%20(1949).jpghttp://i.ytimg.com/vi/qG_PqSB1XDE/hqdefault.jpg
என் மானசீகப் பாடகி ஷம்ஷட் பேகம் அவர்கள் 'இன்றைய ஸ்பெஷல்' 'அபூர்வ சகோதர்கள்' பாடலை இந்தி 'நிஷான்' படத்தில் பானுமதிக்காக பாடுவார். ஆனால் இந்தியில் நாயகன் ரஞ்சன்.
gkrishna
8th October 2014, 11:29 AM
இந்த படத்தின் வில்லன் நினவு உண்டு சார்
கன்னட நாகேந்திர ராவ் னு நினைக்கிறன்
vasudevan31355
8th October 2014, 11:29 AM
கிருஷ்ணா சார்!
ராஜேஷ்ஜி மாலை ரெடியாக இருக்க வேண்டியிருந்தாலும் இருக்கும்.
vasudevan31355
8th October 2014, 11:30 AM
இந்த படத்தின் வில்லன் நினவு உண்டு சார்
கன்னட நாகேந்திர ராவ் னு நினைக்கிறன்
ஸ்பெஷலில் போட்டிருக்கேனே!:)
vasudevan31355
8th October 2014, 11:31 AM
அவரே இவர். மொழி பெயர்ப்பாளர் தேவை:)
http://samvada.org/files/434-R.-Nagendra-Rao1.jpg
vasudevan31355
8th October 2014, 11:33 AM
கிருஷ்ணாஜி!
அப்படியே வேதாத்திரி மகரிஷி போலவே இல்லை!?:)
http://kanaja.in/wp-content/uploads/2012/05/June-23-R.-Nagendra-Rao.jpg
gkrishna
8th October 2014, 11:36 AM
http://www.rnjayagopal.com/blog/wp-content/uploads/2014/05/RNJ_RNR_RJP.png
இவர் மகன் R.N.ஜெயகோபால் மைகேல் மதன கம ராஜன் ,நாயகன் படங்களில் உண்டு
gkrishna
8th October 2014, 11:38 AM
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSeDeEbRNynpAO8kysa7JGfn1rjewRI-ydbyPyDGFLDaaJxy75e
மூன்று generation போட்டோ வாசு சார்
gkrishna
8th October 2014, 11:44 AM
கிருஷ்ணா சார்!
ராஜேஷ்ஜி மாலை ரெடியாக இருக்க வேண்டியிருந்தாலும் இருக்கும்.
ராஜேஷ் மகாராஜா உறங்கிண்டு இருந்தாலும் தட்டி எழுப்பிருங்கோ இல்லேன் சண்முகசுந்தரத்தை விட்டு பூபாளம் வாசிக்க சொல்லுங்கோ :)
vasudevan31355
8th October 2014, 11:44 AM
மதுர கானங்கள் பாகம் இரண்டை வெற்றிகரமாக நடத்தி பெருமை சேர்த்த கிருஷ்ணா சாருக்கு என் மனமுவந்த பாராட்டுக்கள்.
Richardsof
8th October 2014, 11:46 AM
http://i59.tinypic.com/2wftlz9.jpg
gkrishna
8th October 2014, 11:46 AM
http://www.rnjayagopal.com/blog/wp-content/uploads/2009/09/NagendarRaoMKRadha_StrangeBrothers-300x220.jpg
gkrishna
8th October 2014, 11:48 AM
வாங்க வாங்க எஸ்வி சார் சுகமா ? .
வாசு சார் எஸ்வி சார்க்கு ஒரு சோடா கொடுக்கவும் :) நான் பீடா கொடுக்கிறேன் :):)
Richardsof
8th October 2014, 11:48 AM
http://i59.tinypic.com/2ym6fpd.jpg
gkrishna
8th October 2014, 11:50 AM
http://i59.tinypic.com/2wftlz9.jpg
o lovely baanumathi ! how slim she is
chinnakkannan
8th October 2014, 11:51 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
என்னது காலையில் மனதில் ஒலிக்கும்பாட்டா.. நித்தம் நித்தம்மாறுகின்றதெத்தனையோ நெஞ்சில் நினைத்ததெல்லாம் நடந்ததுவும் எத்தனையோ.. என்ன படம் என நினைவிலில்லை..
வாசு சார்..குட்டியாய் இரண்டே இரண்டு பாரா மட்டும்..பின் இதுபற்றிப்பேசமாட்டேன்..முதலிலேயே சொல்லிவிடுகிறேன்..வாசக தோஷ ஷந்தவ்யஹ..
உங்களுடைய பதிவைப் படித்த போது உங்கள் மனத்தில் கனன்று கொண்டிருந்த வேதனையின் வெளிப்பாடு எரிமலையாகப் பொங்கி வழிந்திருக்கிறது என்பது என் எண்ணம்..மிகச்சிறந்த கலைஞர் ந.தி. அவரது மிகச் சிறந்தபக்தர்களுள் ஒருவர் தாங்கள்..ஆனால் ஒருவர் எழுதிய பதிவு புண்படுத்தி ந.தி இழைக்குள்ளேயே போக இயலவில்லை என்ற காரணம் எனக்கு சரிவரப் புரியவில்லை.. சொன்னால் கேட்டுக் கொள்கிறேன்.. சொல்லாவிட்டாலும் ஓ.கே.. ஒரு படைப்பாளியின் வேதனை இன்னொரு படைப்பாளிக்குத்தான் புரியும் அது போல ஒரு தக்குணியூண்டு சின்னதாய் எழுதிப்பார்க்கும் சக படைப்பாளி (?!) என்ற வகையில் எனக்குப் புரிகிறது..
வாழ்க்கையில் வெகுவாய் அடி வாங்கி இதுவும் கடந்து போகும் என்ற கீதையின் மன நிலைக்கு வந்து விட்டவன் நான்..நான் நடிகைகளை வர்ணித்து எழுதுவதெல்லாம் ரசனையின் வெளிப்பாடே..உள்ளொன்று வைத்துப் புறமொன்று எழுதுவதில்லை..எழுதுவது ஒரு சுகம்..அதுவும் எப்படிப்பட்டதையும் எந்த வித சூழ் நிலையையும் எந்த வித நபரையும் நமக்கு மேலான ஆண்டவனையும் சுவாரஸ்யம் குறையாமல் வித்தியாசமாக (அடிப்பது ஜல்லியானாலும்( எழுதிப் பார்க்க வேண்டும் என்பதே எனது ஆசை..அதற்காக இடைவிடாமல் முயற்சியும் செய்து கொண்டு வருகிறேன். எழுதத் தான் வரமாட்டேன் என்கிறது.. அதற்காக என் முயற்சியைத்தவற விடுவதில்லை..
ஒரு காலத்தில் சற்றும் எதிர்பாராத வகையில் மனம் புண்பட்ட போது தொலைபேசிய பல நண்பர்களில் ஒருவர் கோபால்.. அவரது சில கோபத்தின் வெளிப்பாடான இடுகைகள் பார்க்கும் போது எனக்கு சின்னவயது சி.க நினைவு தான் வரும்..(இந்த “சின்ன” என்ற அடைமொழிகூட எனக்கு நான் கொடுத்துக் கொண்டதன் காரணம் வலை வாழ் அறிஞர் தம் அடியார்க்கும் அடியேன் என்பதால் தான்).. நான் மாறியிருக்கிறேன்.. அதே போல மனம் புண்பட்ட காலத்தில் சி.கவை இப்படிப் பேசியிருக்க வேண்டாம் என மொழிந்த பல நண்பர்களில் ஒருவர் வெங்க்கி ராம்.. கவிதைக்குக் கவிதையில் என்னுடன் விளையாடிய நண்பர்களில் ஒருவர். அப்போது தான் அவரது இடுகையை ந.தி திரியில் முதன் முதலில் பார்த்தேன்.. (முன்னால் எழுதியிருக்கலாம் நான் பார்த்ததில்லை)
வாசு சார்.. மனதில் பாரமிறக்கிவிட்டீர்கள் அல்லவா..யூ ஹேவ் டு கோ டு ந.தி த்ரெட் அண்ட் யூ ஹாவ் டுகிவ் யுவர் காண்ட்ரிப்யூஷன்ஸ் ஓவர் தேர் ஆல்ஸோ.. தவிர இந்த மதுர கானங்கள் என்பது மன இளைப்பாறல் என்பதற்கான் திரி என்பதை விட பகிர்ந்ததைப் படிப்பதற்கும் பகிர்ந்து எழுதப் பார்ப்பதற்கும் உண்டான திரி.. எனக்குத் தான் படங்கள் வீடியோபோடுவது மறந்து விட்டது..
( இரண்டு பாரா என்று விட்டு நான்காகி விட்டது..!)
vasudevan31355
8th October 2014, 11:54 AM
மதுர கானங்கள் பாகம் மூன்றை வெற்றிகரமாக தொடங்கவிருக்கும் என் அருமை ராஜேஷ்ஜிக்கு என் மனப்பூர்வமான இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
http://www.pegham.com/images/imported/2009/02/545.jpg
http://www.cottoneauctions.com/uploads/display_item/61/1202ph51.jpg
Richardsof
8th October 2014, 11:57 AM
கிருஷ்ணா சார்
ம.ம. ம. கானம் -பாகம் -2 சிறப்பாக நடத்தி சென்ற உங்களுக்கு எனது அன்பான பாராட்டுக்கள் .
எட்டு வாரங்களில் அறுபத்தி எட்டாயிரம் பார்வையாளர்களுடன் இனிதே இன்றே நிறைவு பெறும்
மதுர கானத்திற்கு வாழ்த்துக்கள் .எத்தனை பாடல்கள் .... அலசலகள் - கட்டுரைகள் - எல்லோருக்கும்
அன்பான பாராட்டுக்கள் .
இனிய நண்பர் திரு ராஜேஷ் அவர்கள் பெருமையுடன் துவக்கும் ம.ம.ம .கானம் -3 வெற்றி பெற
வாழ்த்துக்கள் .
parthasarathy
8th October 2014, 12:00 PM
திகம்பர சாமியாரும் பல தோற்றங்களும் (பாத்திரங்கள் அல்ல!)
நானும் யாராவது சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன். இதுவரை இல்லை என்பதால் எழுதுகிறேன். நெய்வேலியார் சற்றே "கெட்டப்புகள்" என்று சிறிதாக எழுதி இருந்தார்.
இன்றும் கூட பல கலைஞர்கள் இந்த பல்வேறு கெட்டப்புகளில் நடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
திகம்பர சாமியார் படத்தில் மறைந்த நம்பியார் அவர்கள் பல்வேறு கெட்டப்புகளில் தான் நடித்தார். பாத்திரங்களில் அல்ல.
ஆனால், நடிகர் திலகமோ நவராத்தியில் ஒன்பது வெவ்வேறு குணாதிசயம் கொண்ட வேறு வேறு பாத்திரங்களில் நடித்தார் - அல்ல, வாழ்ந்தார்! ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஒவ்வோர் உடல் மொழி, குரல், etc. அவருக்கு செவாலியே விருது வழங்கப்பட்டதற்கு, இந்தப் படத்தில் அவர் காட்டியிருந்த சாதனை தான் மூல காரணம். இத்தனைக்கும், ஹாலிவுட்டின் MGM நிறுவனத்தினர் படம் வந்த புதிதிலேயே, பார்த்து மிரண்டு, இந்த நடிகர் மட்டும் எங்கள் ஊரில் இருந்தால், நாங்கள் தங்கச் சுரங்கத்தையே செய்து விடுவோம் என்றனர்.
எந்த வித தொழில் நுட்ப உத்தியும் இல்லாத காலத்தில் தன்னுடைய கற்பனை வளத்தை மட்டுமே வைத்துக் கொண்டு (கூடுமான வரை, அவரே ஒப்பனையும் செய்து கொண்டு விடுவார்!) ஒன்பது பாத்திரங்களில் நடித்தது, ஒப்பு உயர்வற்ற சாதனை.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
vasudevan31355
8th October 2014, 12:05 PM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
தாங்கள்..ஆனால் ஒருவர் எழுதிய பதிவு புண்படுத்தி ந.தி இழைக்குள்ளேயே போக இயலவில்லை என்ற காரணம் எனக்கு சரிவரப் புரியவில்லை.. சொன்னால் கேட்டுக் கொள்கிறேன்..
தாரளமாக. சின்னக் கண்ணன் சார்! உங்கள் உரிமையை நான் ரொம்ப மதிக்கக் கடமைப்பட்டவன். ஆனால் நீங்களும் குழந்தை போன்றவர். விரைவில் பி.எம்.அனுப்புகிறேன். அப்போது எல்லாம் விவரமாக புரிந்து கொள்வீர்கள். ஆனால் ஒன்று. எந்தக் காலத்திலும் நியாயம் தவறி நடக்கவே தெரியாது. அதுதான் என் தெய்வம் எனக்கு நேரிலே கூட சொல்லிக் கொடுத்த பாடம்.
vasudevan31355
8th October 2014, 12:09 PM
வருக பார்த்தசாரதி சார்! நலமா!
இப்படி பாகம் தொடங்கும் போதும் முடிவடையும் போதும்தான் வருவதா?:) உங்கள் பொன்னான எழுத்துக்களை எவ்வளவு மிஸ் செய்கிறோம் தெரியுமா? இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை என்று சகோதர உரிமையோடு சொல்கிறேன்.
மிஸ் என்றால் சின்னக் கண்ணனார் கனவில் மிட்டாய் நமீதா வருவார்.:) அப்புறம் எங்கள் பாடு திண்டாட்டமே!:)
gkrishna
8th October 2014, 12:09 PM
வாசு சார்
எல்லோருக்கும் பாராட்டு தெரிவிக்க வேண்டிய நேரம் இது.
மனதை மயக்கும் மதுர கானம் பாகம் இரண்டு நிறைய பாடல்களுடன்,
எஸ்வி சார் அவர்களின் ஆவணங்கள்,
மது சார் அவர்களின் கண்டுபிடித்து கொடுத்த பாடல்களின் காணொளி,
ராஜேஷ் சார் அவர்களின் பன்மொழி பாடல்கள்,
கோபு சார் அவர்களின் நன்றி மற்றும் ஊக்க பதிவுகள்,
சின்ன கண்ணன் சார் அவர்களின் கவிதை வரிகள் உடன் கூடிய பல பாடல்கள்,
வெங்கிராம் சார் அவர்களின் பாடல் பதிவுகள்,
குருஜி ராகவேந்தர் சார் அவர்களின் பொங்கும் பூம்புனல்,
கார்த்திக் சார் அவர்களின் ரசனையுடன் கூடிய பாடல் வெளியீடுகள்,
புதிதாக வந்து நிறைய பழைய பாடல்கள் தகவல்களை தந்த பேராசிரியர் ராஜ் ராஜ் சார் அவர்கள்,
விமர்சனத்துடன் சிலாகிக்க கூடிய திரு கோபால் அவர்களின் பதிவுகள்,
சிதூர் வாசு சார் அவர்களின் மெலடி கலந்த ஹிந்தி பாடல்கள்,
முரளி சார் அவர்களின் முக்கியமான பாடல் பதிவுகள்,
எஸ்எஸ்எஸ் அவர்களின் பதிவுகள் ,
ரவி கிரண் சார் அவர்களின் பதிவுகள்,
யுகேஷ் பாபு அவர்களின் பதிவுகள் ,
திகம்பர சாமியார் என்பது தோற்றம் ,நவராத்திரி என்பது பாத்திரங்கள் என்று விளங்க வைத்த நண்பர் சாரதி அவர்களக்கும்
(வேறு யாரவது விட்டு போய் இருந்தால் வாசு சார் அவர்கள் நினைவு படுத்து வேண்டுகிறேன் )
மற்றும் பல சினிமினி தகவல்கள் கலந்து நிறைவடையும் நேரம் இது
வாய்ப்பு தந்த வாசு சார் அவர்களுக்கும் ஓத்துழைப்பு நல்கிய அனைத்து நெஞ்சகளுக்கும் மனமார்ந்த நன்றி
மூன்றாவது பாகத்தை தொடங்க இருக்கும் திரு ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்
என்றும் நட்புடன்
கிருஷ்ணா
vasudevan31355
8th October 2014, 12:11 PM
வணக்கம் வினோத் சார். மதுர கானங்களில் மகத்தான ஆவணப் பங்கு உங்களுடையது. அதற்கான நன்றி எங்களுடையது. அ .ச.புகைப்படம் அம்சம். நன்றி!
vasudevan31355
8th October 2014, 12:16 PM
மதுர கானத்தை கேட்டு, கண்டு, களித்து ஊக்குவிக்கும் ஸ்டெல்லா மேடத்துக்கும் நன்றி சொல்வோம் கிருஷ்ணா சார்.
gkrishna
8th October 2014, 12:19 PM
Here’s a review of the Aboorva sagotharargal movie from the NY Times:
Following up on S. S. Vasan’s 1948 mega-hit Chandralekha, this sequel was inspired by Douglas Fairbanks Jr.’s 1941 film The Corsican Brothers. The film opens with the dastardly Zoravar Singh vanquishing a rival kingdom and usurping its throne. A trusted servant spirits away the twin princes Vikram and Vijay who are heirs to the crown. Though raised separately, Vikram grows up in the city while Vijay lives his childhood in a forest, both become obsessed with avenging their father and both fall for the same beautiful lass (Bhanumathi). This film was produced in three different languages– Tamil, Telugu, and Hindi — with three different directors credited — T. G. Raghavachyran, C. Pullaiah and S. S. Vasan respectively. ~ Jonathan Crow, All Movie Guide
vasudevan31355
8th October 2014, 12:20 PM
கார்த்திக் சார் இந்த நல்ல நேரத்தில் இல்லாதது ஒரு பெரும் குறை.
gkrishna
8th October 2014, 12:20 PM
மதுர கானத்தை கேட்டு, கண்டு, களித்து ஊக்குவிக்கும் ஸ்டெல்லா மேடத்துக்கும் நன்றி சொல்வோம் கிருஷ்ணா சார்.
உண்மை மறந்து விட்டேன் வாசு சார்
வேறு யாரவது இருந்தால் நினைவு படுத்த வேண்டி கேட்டு கொள்கிறேன்
gkrishna
8th October 2014, 12:24 PM
கார்த்திக் சார் இந்த நல்ல நேரத்தில் இல்லாதது ஒரு பெரும் குறை.
ஆமாம் வாசு சார்
அவருடைய பங்கு சற்று குறைந்தது மன வருத்தம் தான்
இறுதியாக 11 செப்டம்பர் 2014 பதிவு என்று நினைக்கிறன்
வண்டி பாடல்கள் பதிவில் கலந்து கொண்டு உள்ளார் கிட்டத்தட்ட ஒரு மாதம் முடிந்து விட்டது
vasudevan31355
8th October 2014, 12:26 PM
அற்புதமான அரிய பாடல்களின் வீடியோக்களை சிரமப்பட்டு இங்கே பதித்த மது அண்ணாவுக்கு ஸ்பெஷல் நன்றிகள்.
vasudevan31355
8th October 2014, 12:30 PM
மனதை மயக்கும் மதுர கானங்கள் பாகம் 2
இதுவரை
Replies: 3,978
Views: 69,030
gkrishna
8th October 2014, 01:31 PM
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மறைந்த தினம் (அக்.8, 1959) (பிறப்பு ஏப்ரல் 13 1930 ) 29 வயதில் மறைந்து விட்டார்
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcRG_MikUwW071hy4UNvrqxhwyurrW4DP 9cxmlOiS7iWZVL_OWbr0A
இவருடைய பாடல்கள் பெரும்பாலும் கிராமியத்தை தழுவியதாக இருககும். பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். 1955-ஆம் ஆண்டு ‘படித்த பெண்’ திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி, சினிமாவில் அழுத்தமான முத்திரையை பதித்தார்.
189 திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் திடீர் மறைவுச் செய்தியை கண்ணதாசனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 'பட்டுக்கோட்டை சாய்ந்ததா? இல்லை பாட்டுக் கோட்டையே சாய்ந்ததம்மா!' என்று கண்ணதாசன் பட்டுக்கோட்டையார் மறைவு குறித்து மிக உருக்கமாக பாடினார்.
பாண்டித் தேவன்' என்ற திரைப்படத்தில் அவர் எழுதிய பாடலில் சில வரியை இங்கே காணலாம்.
'சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதி எழுதி வச்சாங்க
என்ன பண்ணி கிழிச்சீங்க!'
கண்திறந்தது' என்ற படத்தில் மிக புரட்சிகரமான வரிகளை பட்டுக்கோட்டையார் பாடலாக்கி இருக்கிறார்.
'வசதி இருக்கிறவன் தரமாட்டான், அவனை
வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்
வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு
வாயாலே சொல்லுவான் செய்ய மாட்டான்...
எழுதிப் படிச்சு அறியாதவன்தான்
உழுது ஒளச்சு சோறு போடுறான்.
எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி
நல்ல நாட்டைக் கூறு போடுகிறான் இவன்
சோறு போடுறான் அவன்
கூறு போடுறான்...'
இதே போல் 'சங்கிலித் தேவன்' என்ற திரைப்படத்தில் தொழிலாளர் மேன்மையை சொல்லுகிற ஒரு அருமையான பாடலை பட்டுக்கோட்டையார் எழுதி இருந்தார்.
'வீரத்தலைவன் நெப்போலியனும்
வீடு கட்டும் தொழிலாளி!
ரஷ்யா தேசத்தலைவன் மார்சல் ஸ்டாலின்
செருப்புத் தைக்கும் தொழிலாளி!
விஞ்ஞான மேதை ஜி.டி.நாயுடு
காரு ஓட்டும் தொழிலாளி!
விண்ணொளிக் கதிரி விவரம் கண்ட
சர்.சி.வி.ராமனும் தொழிலாளி
எதற்கும் உழைப்பு தேவை!
'திருடாதே' திரைப்படத்தில் (மக்கள் திலகத்தின் துடிப்பான நடிப்பை கொண்ட படம் ) குழந்தைக்கு புத்தி சொல்வது மாதிரி பெரியவர்களுக்கே பொதுவுடமை தத்துவத்தின் சாறு எடுத்து கவிதையாக்கி ஊட்டி இருக்கிறார். அதில் சில வரிகளை பாருங்கள்.
'கொடுக்கிற காலம் நெருங்குவதால் - இனி
எடுக்கிற அவசியம் இருக்காது.
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்கிற வேலையும் இருக்காது.
ஒதுக்கிற வேலையும் இருக்காது.
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம்
வளராது மனம்
கீழும் மேலும் புரளாது
Gopal.s
8th October 2014, 02:53 PM
வாசு சார்
எல்லோருக்கும் பாராட்டு தெரிவிக்க வேண்டிய நேரம் இது.
மனதை மயக்கும் மதுர கானம் பாகம் இரண்டு நிறைய பாடல்களுடன்,
எஸ்வி சார் அவர்களின் ஆவணங்கள்,
மது சார் அவர்களின் கண்டுபிடித்து கொடுத்த பாடல்களின் காணொளி,
ராஜேஷ் சார் அவர்களின் பன்மொழி பாடல்கள்,
கோபு சார் அவர்களின் நன்றி மற்றும் ஊக்க பதிவுகள்,
சின்ன கண்ணன் சார் அவர்களின் கவிதை வரிகள் உடன் கூடிய பல பாடல்கள்,
வெங்கிராம் சார் அவர்களின் பாடல் பதிவுகள்,
குருஜி ராகவேந்தர் சார் அவர்களின் பொங்கும் பூம்புனல்,
கார்த்திக் சார் அவர்களின் ரசனையுடன் கூடிய பாடல் வெளியீடுகள்,
புதிதாக வந்து நிறைய பழைய பாடல்கள் தகவல்களை தந்த பேராசிரியர் ராஜ் ராஜ் சார் அவர்கள்,
விமர்சனத்துடன் சிலாகிக்க கூடிய திரு கோபால் அவர்களின் பதிவுகள்,
சிதூர் வாசு சார் அவர்களின் மெலடி கலந்த ஹிந்தி பாடல்கள்,
முரளி சார் அவர்களின் முக்கியமான பாடல் பதிவுகள்,
எஸ்எஸ்எஸ் அவர்களின் பதிவுகள் ,
ரவி கிரண் சார் அவர்களின் பதிவுகள்,
யுகேஷ் பாபு அவர்களின் பதிவுகள் ,
திகம்பர சாமியார் என்பது தோற்றம் ,நவராத்திரி என்பது பாத்திரங்கள் என்று விளங்க வைத்த நண்பர் சாரதி அவர்களக்கும்
(வேறு யாரவது விட்டு போய் இருந்தால் வாசு சார் அவர்கள் நினைவு படுத்து வேண்டுகிறேன் )
மற்றும் பல சினிமினி தகவல்கள் கலந்து நிறைவடையும் நேரம் இது
வாய்ப்பு தந்த வாசு சார் அவர்களுக்கும் ஓத்துழைப்பு நல்கிய அனைத்து நெஞ்சகளுக்கும் மனமார்ந்த நன்றி
மூன்றாவது பாகத்தை தொடங்க இருக்கும் திரு ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்
என்றும் நட்புடன்
கிருஷ்ணா
கூட்டத்தோடு கூட்டமாக போர் புரிந்த அர்த்த ரதனா நான்? வாட்பிடிக்க (பேனா) தெரியாதவர்களோடு கூட்டத்தோடு என்னை ஒப்பிட்ட கிழட்டு சிங்கமே?இனி நீ இருக்கும் வரை நான் போருக்கு வருவதில்லை.:-d:-d:-d
Richardsof
8th October 2014, 03:04 PM
கோபால் சும்மா சொல்ல கூடாது நீங்கள் இருக்க வேண்டிய இடம் இதுவல்ல . அங்கேயுமல்ல .. இனி எங்கேயும் இல்ல நிம்மதியாக இருக்கவும் ..
gkrishna
8th October 2014, 03:07 PM
ஆடலுடன் பாடலைக் கேட்டு..
https://lh5.googleusercontent.com/proxy/KCQ42yQbxwgWwgMGRLpWkFZy0ObwJcKDt4GIWiYRwDKI1WEb6n Ry2fncNtc3FknSVPsdhIN1jPPQX70V882O0A=w506-h380
தமிழ்த்திரை வரலாற்றில் பஞ்சாபி வகைப் பாடல்கள் இடம்பெற்ற அன்றும் இன்றும் என்றும் இந்தப் பாடல் இசையில் ஒரு குதூகலம்! திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் இப்பாடலுக்கு நிச்சயம் இடம் உண்டு! ஆடல் கலையை பயின்று அறிந்து வைத்திருந்த விஜயலட்சுமி அவர்களுடன் எம்.ஜி.ஆர் பிரத்யேகமாக பயிற்சி எடுத்து இந்தக் காட்சியில் ஆடிய நடனம் அந்நாளில் பரபரப்பாக பேசப்பட்டது
கவிஞர் ஆலங்குடி சோமு எழுதிய உச்சஸ்தாயியில் டி.எம்.செளந்திரராஜனும் பி.சுசீலாவும் இணைந்து பாடிய பாடல் ! இதில் ஆடலும் உண்டு! பாடலும் உண்டு! மெல்லிசை மன்னர் இசையில் புதுமையும் உள்ள முத்திரைப் பாடல்!
ஆடலுடன் பாடலைக் கேட்டு..
ரசிப்பதிலேதான்சுகம்சுகம்சுகம்
ஆசைதரும்பார்வையில்எல்லாம்
ஆயிரம்எண்ணம்வரும்வரும்வரும்
பின்னாட்களில் வெளிவந்த விக்ரமனின் புது வசந்தம் திரை படத்தில் இந்த பாடலுக்கு இரவு நேரத்தில் நிலவு வெளிச்சத்தில் லுங்கி கட்டி கொண்டு நடிகர் ஆனந்த பாபு (நடிகர் நாகேஷ் புதல்வர் ) ஆடும் நடனமும் நளினமாக இருக்கும்
http://www.cinemanewstoday.com/wp-content/uploads/2013/08/IMG_2114.jpg
http://www.youtube.com/watch?v=BqeX54Wmvgw&authuser=0
gkrishna
8th October 2014, 03:11 PM
இதே போன்று நடிகர் திலகத்துடன் ஹலம் ஆடும் பஞ்சாபி பாடல்
மன்னவன் வந்தானடி திரை படத்தில் நம்பியார் வீட்டு வாசலில் ஆடும் பஞ்சாபி நடனமும் அருமையாக இருக்கும்
'ராஜஸ்தானில் யாரோ ஒருவர் ராஜாவாக பொறந்திருக்கனாம் ரா நைனா '
http://www.youtube.com/watch?v=J5MTGhe8cqY
Richardsof
8th October 2014, 03:15 PM
மதுர கானம் திரியில் ஒரு கற்பனையான கிசுகிசு
பிரபல அறிவாளி ஒருவர் தன்னை யாரும் மதிக்கவில்லை என்று சபையை சாபித்து விட்டு அவசரமாக வெளியேறிய நேரத்தில் எதிரே வந்த ஒரு சிங்கத்தை முறைத்து பார்த்தாராம் . சிங்கம்
அவரை பார்த்து ''அண்ணே என்ன கோபமாக ஓடுகிறீர்கள் என்று கேட்டதற்கு அறிவாளி
போதுமடா சாமி ..இனி இருக்கிற கொஞ்ச நாள் ''அவரின் '' புகழ் பாடி விட்டு செல்கிறேன் என்று
கூறினாராம் .
இப்போது மில்லியன் டாலர் கேள்வி
யார் ''அவர்'?
வேலா காப்பாற்று .
gkrishna
8th October 2014, 03:18 PM
கூட்டத்தோடு கூட்டமாக போர் புரிந்த அர்த்த ரதனா நான்? வாட்பிடிக்க (பேனா) தெரியாதவர்களோடு கூட்டத்தோடு என்னை ஒப்பிட்ட கிழட்டு சிங்கமே?இனி நீ இருக்கும் வரை நான் போருக்கு வருவதில்லை.:-d:-d:-d
நீங்கள் என்ன கிழட்டு புளியா ? :) :) சாதாரண புலி அல்ல சாம்பார் புளி (கொட்டை எடுத்ததா? எடுகாததா ? :) )
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQIcI_Iw46UsRF8sBASmYS2G13AyFXZX iIQixFJ501VysHg6ST3
:notworthy:
madhu
8th October 2014, 04:31 PM
இன்றைய ஸ்பெஷல் (88)
மாலிள நேரம் மாநதியோரம்
(மதுஜி! இந்த வார்த்தை சரியா? மாலிள நேரம் அதாவது மாலை இள நேரம் என்பதன் சுருக்கமா! ப்ளீஸ்.விளக்கவும் அல்லது சரி செய்யவும் .)
கனவே கண்டேனே
அடடா.. கொஞ்சம் தாமதமாக வந்திருந்தா ரெண்டிலிருந்து மூன்றுக்கு போயிருக்கும் போலிருக்குதே !!
வாசு-ஜி.. ஏற்கனவே வாத்தியாரையாவும் சொல்லி இருப்பதைக் கண்டேன்.. அது "மாலை நன்னேரம் மா நதியோரம்" என்ற வார்த்தைகள்தான்.
மேலும் "புதுமலர் விழியே மதுநிற மொழியே" என்பதும் "மது நிகர் மொழியே" என்று இருக்க வேண்டும். ( என்ன இருந்தாலும் மதுன்னு இருக்குதில்லே :lol: )
அருமையாக இரண்டாம் பாகத்தைக் கொண்டு சென்று முழுமை பெற வைத்த கிருஷ்ணா-ஜிக்கும் அடுத்த பாகத்தை ஆரம்பிக்கப் போகும் ராஜேஷுக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுகளும், நன்றிகளும்...
இது போல மதுரகானங்கள் திரி இன்னும் பல பாகங்கள் வெற்றியுடன் முன்னேற இறைவனை வேண்டுவோம்.
இத்தனை பதிவுகளுக்கு ஒரு திரி போதாதுங்கோ...
படம் : உண்மையே உன் விலை என்ன
எம்.எஸ்.விஸ்வநாதன்
வி.கே.ராமசாமி
இத்தனை மாந்தருக்கு ஒரு கோயில் போதாது
http://youtu.be/sPP3s7DjccA
chinnakkannan
8th October 2014, 04:38 PM
சக்ஸஸ்ஃபுல்லாக திரியைக் கொண்டு சென்று முடித்த கிருஷ்ணா ஜிக்கு ஒரு பெரிய நன்றியுடன்கூடிய ஓ.
.மதுண்ணா ராஜ்ராஜ் சார் எஸ்.வாசுதேவன் ஆகியோரின் அபூர்வ வீடியோ பாடல்களுக்கும் ராகவேந்திரர் சாரின் அபூர்வ பாடல்களுக்கும் (இந்த பாகத்தில் ஓசைப்படாமல் சிக்ஸர் அடித்து என் மனதை கொள்ளை கொண்டது ராகவேந்திரா சார் தான்! .. வைஷாலி பாடல் வீடியோ ).மதுண்ணா டினா முனிம் பாட்டு..ராஜ்ராஜ் சார் கேட்ட கொஞ்சல் அடுத்த பாகத்தில் எழுதணும்..
. அஸ் யூஸ்வல் இன்”றைய ஸ்பெஷலின் அசுர உழைப்பு ( மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு பாடல் ஸ்டில் படக் கதை பாட்டு அப்புறம் பாட்டு வீடியோ..இவ்வளவு தானே எனத் தான் நினைக்கத் தோன்றும்.. சுவாரஸ்யம் குறையாமல் எழுதுவது என்பது ஒரு கலை..அதில் நன்கு தேர்ந்தவர் வாசு சார் )- முக்கியமாக பாடல் செலக்ட் செய்வது –என எல்லாவற்றையுமே செம்மையாகச் செய்த வாசு சாருக்கு ஒரு பெரிய ஓ ( நிறைய பாடல்கள் நான் கேட்காதது) (மிஸ் நமீதான்னுல்லாம் சொல்ல மாட்டேனாக்கும்.. இப்போ மிஸ் ப்ரியா ஆனந்த் அல்லது மோனல் கஜ்ஜார்!)
ராஜேஷின் சுசீலாம்மா பாடல்கள் கன்னட மலையாளப் பாடல்கள் (அது என்ன கே.ஆர்.விஜயா பாட்டு ராஜேஷ்) - கலக்கல்.. அவருக்கும் ஒரு நன்றி.. ராகத் தொடரைத் தொடரப் போகும் கோபால் சாருக்கு வாழ்த்துக்களும் நன்றியும்… எஸ் எஸ் எஸ் தீராத சந்தேகத்தைத் தீர்த்து வைத்தவர்..அவருக்கும் ஒரு ஓ..+ தாங்க்ஸ். வெங்க்கிராம் – இரு பறவைகள் பாடலுக்கு நல்ல ரைட் அப் – நன்றி..
அப்ப மூணாம் பாகத்துல பார்த்த சாரதி சாருடைய கான் ட்ரிப்யூஷன் நிறையப் பார்க்கலாம்னு பட்சி பட்சி சொல்லுது.:)
.
gkrishna
8th October 2014, 05:43 PM
மிக்க நன்றி மது சார் மற்றும் சி கே சார்
உங்கள் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி
பாகம் மூன்றிலும் உங்கள் முத்தான மற்றும் சத்தான பதிவுகளை நாடும்
என்றும் நட்புடன்
கிருஷ்ணா
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcR6MJuX2rZaUKJRQIMuSiLMskLq1lYHk Jan4MhBLrswI3RGC44I
gkrishna
8th October 2014, 05:47 PM
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcRBlnBiV-d_FMZ1AQtY8jncRU4J5VG7yQsL-qfIYIY58Cbl23M3
ஆரம்பம் இன்றே ஆகட்டும்
ஆறேழு நாட்கள் போகட்டும் என்று சொல்லாமல்
தள்ளி போடாமல்
இப்போதே அள்ளி கொள்ள காத்து இருக்கும்
ராஜேஷ் சார் அவர்களுக்கு
மனதை மயக்கும் மதுர கானம் பாகம் மூன்றை துவக்க நம் திரி நண்பர்கள் அனைவரின் சார்பாக அன்புடன் அழைகிறேன்.
என்றும் நட்புடன்
கிருஷ்ணா
பாலா ஈஸ்வரி இணை குரல்களில் துள்ளல் பாடல் .இளமை ரவியும் கொஞ்சம் கோயம்பேடு முற்றல் முருங்கை சௌகார்
மது ஜி கொஞ்சம் விடியோ ப்ளீஸ் இந்த பாடலுக்கு அடுத்த பாகத்தில் :)
RAGHAVENDRA
8th October 2014, 06:47 PM
வெற்றிகரமாக இரண்டாவது பாகத்தை முடித்து அடுத்த மூன்றாவது பாகத்தில் நுழைய இருக்கும்
மனதை மயக்கும் மதுர கானம்....
மனதை கவரும் மதுர கானம் ....
திரிக்கு வாழ்த்துக்கள்..
துவக்கி வைத்த வாசு சார் மற்றும் கிருஷ்ணா ஜீக்கு வாழ்த்துக்கள்...
இணைந்து கரம் கோர்த்து நடத்தி வைத்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்..
அடுத்த பாகத்தின் ஆரம்பம் யாரிடம்...
ராஜேஷ் உங்களிடம் தான்
http://www.youtube.com/watch?v=fowi1edjaKE
JamesFague
8th October 2014, 07:38 PM
Best wishes to Mr Rajeshji for starting the 3rd part of Madura Ganam.
Regards
madhu
8th October 2014, 08:26 PM
ஆரம்பம் இன்றே ஆகட்டும்
மது ஜி கொஞ்சம் விடியோ ப்ளீஸ் இந்த பாடலுக்கு அடுத்த பாகத்தில் :)
கண்டிப்பாக....
இப்போதைக்கு ...
ஆரம்ப காலத்தில் அது.....
http://youtu.be/qkPmMF_OwPI
rajeshkrv
8th October 2014, 08:28 PM
மூன்றாம் பாகம் ஆரம்பிக்க உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் தேவை
...................சில மணி நேரத்தில் வரும் மூன்றாம் பாகம் .................................................. .(ராஜேஷ்)
rajeshkrv
8th October 2014, 08:30 PM
சக்ஸஸ்ஃபுல்லாக திரியைக் கொண்டு சென்று முடித்த கிருஷ்ணா ஜிக்கு ஒரு பெரிய நன்றியுடன்கூடிய ஓ.
.மதுண்ணா ராஜ்ராஜ் சார் எஸ்.வாசுதேவன் ஆகியோரின் அபூர்வ வீடியோ பாடல்களுக்கும் ராகவேந்திரர் சாரின் அபூர்வ பாடல்களுக்கும் (இந்த பாகத்தில் ஓசைப்படாமல் சிக்ஸர் அடித்து என் மனதை கொள்ளை கொண்டது ராகவேந்திரா சார் தான்! .. வைஷாலி பாடல் வீடியோ ).மதுண்ணா டினா முனிம் பாட்டு..ராஜ்ராஜ் சார் கேட்ட கொஞ்சல் அடுத்த பாகத்தில் எழுதணும்..
. அஸ் யூஸ்வல் இன்”றைய ஸ்பெஷலின் அசுர உழைப்பு ( மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு பாடல் ஸ்டில் படக் கதை பாட்டு அப்புறம் பாட்டு வீடியோ..இவ்வளவு தானே எனத் தான் நினைக்கத் தோன்றும்.. சுவாரஸ்யம் குறையாமல் எழுதுவது என்பது ஒரு கலை..அதில் நன்கு தேர்ந்தவர் வாசு சார் )- முக்கியமாக பாடல் செலக்ட் செய்வது –என எல்லாவற்றையுமே செம்மையாகச் செய்த வாசு சாருக்கு ஒரு பெரிய ஓ ( நிறைய பாடல்கள் நான் கேட்காதது) (மிஸ் நமீதான்னுல்லாம் சொல்ல மாட்டேனாக்கும்.. இப்போ மிஸ் ப்ரியா ஆனந்த் அல்லது மோனல் கஜ்ஜார்!)
ராஜேஷின் சுசீலாம்மா பாடல்கள் கன்னட மலையாளப் பாடல்கள் (அது என்ன கே.ஆர்.விஜயா பாட்டு ராஜேஷ்) - கலக்கல்.. அவருக்கும் ஒரு நன்றி.. ராகத் தொடரைத் தொடரப் போகும் கோபால் சாருக்கு வாழ்த்துக்களும் நன்றியும்… எஸ் எஸ் எஸ் தீராத சந்தேகத்தைத் தீர்த்து வைத்தவர்..அவருக்கும் ஒரு ஓ..+ தாங்க்ஸ். வெங்க்கிராம் – இரு பறவைகள் பாடலுக்கு நல்ல ரைட் அப் – நன்றி..
அப்ப மூணாம் பாகத்துல பார்த்த சாரதி சாருடைய கான் ட்ரிப்யூஷன் நிறையப் பார்க்கலாம்னு பட்சி பட்சி சொல்லுது.:)
.
சி.க அது ப்ரியதமா ப்ரியதமா (கே.ஆர்.வி பாடல்)
rajeshkrv
8th October 2014, 08:33 PM
இரண்டாம் பாகத்தை வெற்றிகரமாக கொண்டு சென்ற அனைத்து ரசிக உள்ளங்களுக்கும் நன்றி ..
chinnakkannan
8th October 2014, 08:48 PM
ஆரம்ப காலத்தில் அது இருக்கும் அம்மம்மா அதிலே சுகம் இருக்கும்..
மேனியைப் பார்த்தால் ஞானியும் சரணம் அது தானே பெண் என்பது… ஜெயசுதா சசிகுமார், ஜெய்ஷங்கர் லஷ்மி, கமல் ?? ட்ரிபிள் ட்ரீட் என்பது இது தானோ..
ஆரம்ப காலத்தில் மழைதரும் மேகம் அந்த மழை நீர் படிய மனதினில் மோகம்.. (தப்போ ?!) :) வாங்க ராஜேஷ் ஜி.. வருக (இந்தாங்க லைட்டர்.. திரியைக் கொளுத்துங்கள்..!) நான் அவ்வப்போது வந்து வெடி போடறேன்.. (கே.ஆர்.வி பாட்டு நினைவு படுத்தியமைக்கு நன்றி!)
JamesFague
8th October 2014, 09:00 PM
Fantastic melody from the music of the Great RD sung by the one & only Kishore Kumar.
Mr Rajeshi Ji listen to this melody and start .
http://youtu.be/jFYlChHSdzo
rajeshkrv
8th October 2014, 09:18 PM
Wow Navin Nischol... very handsome guy. Thanks for the song S.Vasudevan ji
this is a very funny and meaning ful movie .. omprakash was outstanding
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.