PDA

View Full Version : மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 [12] 13 14 15 16 17

Gopal.s
20th September 2014, 08:41 AM
கிருஷ்ணா,

ஆப்கி கசம் பாடல் எனக்கு உயிர்.நன்றி.

ராஜேஷ்,

நீங்கள் பதிவு நிறைய போட்டதாக சொன்னதாக நினைவில்லை.obsession ரொம்ப. என்றுதான் சொன்னேன்.யாரும் எனக்காக எதையும் நிறுத்த வேண்டாம்.போரடித்தால் நான் பார்ப்பதையும்,பதிப்பதையும் நிறுத்தி விடுவேன்.எனக்கு பரஸ்பரம் முதுகு சொரிந்து கொண்டு நட்பு நாடும் வழக்கமே இல்லை. நண்பர்களிடம் உள்ளதை சொல்வேன். இங்கு ஆஹா ஓஹோ என்போரின் தனி பட்ட கருத்துக்கள் எனக்கு தெரியும்.நானோ ரொம்ப வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு type .எனக்கு மாசம் 15 லட்சம் கொட்டி கொடுத்த முதலாளி கிட்டேயே நான் அப்படித்தான்.யாருடனும் எனக்கு பகைமை இருந்ததேயில்லை.

autism ,dyslexia ,compulsive -obsessive neurosis இவற்றுடன் சம்பத்த பட்ட பெற்றோர்கள்,ஆசிரியர்கள் போராடட்டும். நமக்கென்ன என்று போய் விடுவேன்.

வாசு,

பல தனிபட்ட அலுவல்களுடனும் தங்கள் புதுமை கண்ணோட்டங்கள் பிரமிப்பை தருபவை.எதிர்பாரா தன்மை.

சி.க - ரொம்ப literary value கலந்த சுவாரஸ்யம்.தங்கள் இயல்பான நகைச் சுவை குறைந்து வருகிறது.

ராஜ் ராஜ்- கிட்டத்தட்ட 1937 இல் பிறந்து, கம்ப்யூட்டர் துறையில் தேர்ந்து,எழுத்திலும் பரிச்சயம் கொண்ட எங்கள் திரி சுஜாதாதான் நீங்கள்.வருக.

மது-செம சப்போர்ட் நீங்க. எது கேட்டாலும் கிடைக்கிறதே.

Richardsof
20th September 2014, 08:43 AM
MANORAMA SPECIAL- TO DAY
http://i59.tinypic.com/mtmanb.jpg

Richardsof
20th September 2014, 08:45 AM
http://i60.tinypic.com/2yv0yli.jpg
http://i60.tinypic.com/mkgm4g.jpg
http://i60.tinypic.com/16iy6w6.jpg

Richardsof
20th September 2014, 08:48 AM
http://youtu.be/KP4-jhptrEg

Gopal.s
20th September 2014, 08:56 AM
ராஜா இசையமைக்காத பாரதிராஜா படங்களில் எந்தப் படப் பாடல்கள் இன்றைய வரைக்கும் மனதிற்கு மிக நெருக்கமாக இருக்கிறதென்றால் என் அனுபவத்தில் வேதம் புதிதுதான்.

வெங்கிராம்,

நீங்கள் சொன்ன படி வேதம் புதிது பாடல்கள் அருமை என்றாலும் புத்தம் புது ஓலை வரும் தவிர எதுவுமே extraordinary என்று சொல்ல முடியாது.

கண்ணுக்குள் நூறு நிலவா சராசரி சண்முகப்ரியா ராக பாடல்.(மந்திரம் மிக்ஸ் பண்ணினாலே விழுந்து விடுகிறீர்கள் )

வேதம் புதிது படம் structuring ரொம்ப flawed and uninteresting .நோக்கங்கள் புனிதமானால் ,நீதி கருத்து நாடும் சராசரி தமிழ் கும்பல்கள் எந்த குப்பையையும் கொண்டாடி விடுமே.

கிழக்கு சீமையிலே, இசையிலும் தரத்திலும் ,கிழக்கே போகும் ரயில்,முதல் மரியாதை அளவு வந்த படம். ரகுமான் rustic nativity கொண்ட இசையில் என்னை ஆச்சர்ய படவே வைத்தார். கண்களால் கைது செய்,தாஜ் மகால் படமாக்கத்தில் சொதப்பி, ரகுமான் உழைப்பை
வீணாக்கியவை.நீங்கள் சொன்ன படி தீக்குருவியும்,சொட்ட சொட்டவும் தனி பாடல்களாகவே மிஞ்சின.

Gopal.s
20th September 2014, 09:03 AM
அடப் பாவி,

மனோரமா பற்றி போடுவதற்கு தேர்த் திருவிழாதானா கிடைத்தது?சட்டையை கிழித்து கொண்டு ஓடும் அளவா வெறி முற்றி விட்டது?

கிட்டத்தட்ட எங்கள் ஆட்களாலேயே நிரம்பிய இத்திரியில் எல்லோரும் எவ்வளவு balanced ஆக பதிக்கிறார்கள்? வாசுவும்,கிருஷ்ணாவும் நல்ல உதாரணங்கள். எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை என்று நண்பர்கள் வருந்தவே செய்கிறார்கள்.

venkkiram
20th September 2014, 09:04 AM
வெங்கிராம்,

நீங்கள் சொன்ன படி வேதம் புதிது பாடல்கள் அருமை என்றாலும் புத்தம் புது ஓலை வரும் தவிர எதுவுமே extraordinary என்று சொல்ல முடியாது.

கண்ணுக்குள் நூறு நிலவா சராசரி சண்முகப்ரியா ராக பாடல்.(மந்திரம் மிக்ஸ் பண்ணினாலே விழுந்து விடுகிறீர்கள் )

வேதம் புதிது படம் structuring ரொம்ப flawed and uninteresting .நோக்கங்கள் புனிதமானால் ,நீதி கருத்து நாடும் சராசரி தமிழ் கும்பல்கள் எந்த குப்பையையும் கொண்டாடி விடுமே.

கிழக்கு சீமையிலே, இசையிலும் தரத்திலும் ,கிழக்கே போகும் ரயில்,முதல் மரியாதை அளவு வந்த படம். ரகுமான் rustic nativity கொண்ட இசையில் என்னை ஆச்சர்ய படவே வைத்தார். கண்களால் கைது செய்,தாஜ் மகால் படமாக்கத்தில் சொதப்பி, ரகுமான் உழைப்பை
வீணாக்கியவை.நீங்கள் சொன்ன படி தீக்குருவியும்,சொட்ட சொட்டவும் தனி பாடல்களாகவே மிஞ்சின.

நான் வேணா என் பதிவை நீக்கிவிடுகிறேன். தயவுசெய்து ஒப்புமை என்ற பெயரில் எனக்கு ஒவ்வாமை ஏற்படுத்தி விடாதீர்கள். எதைவைத்து இப்படி சொல்றிங்க என கழுத்துல துண்டைப் போட்டு ஒவ்வொரு விஷயத்தையும் அக்குவேறு ஆணி வேறாக பேச ஆரம்பித்தால் கி.சீமையிலே பாடலின் மீதுள்ள எனது கொஞ்ச நஞ்ச நல்ல அபிப்ராயமும் விரோதமாகிவிடும். ஏ கிளியிருக்கு என்ற ஒரே பாடலின் அமைப்பினைப் பற்றி பேசினாலே போதும்.. .. தமிழ்த் திரையுலகின் எல்லாவித தெம்மாங்கு பாடல்களுக்கும் தண்ணி காட்டிடும். என்னை விட்டுடுங்கோ.

Gopal.s
20th September 2014, 09:08 AM
நான் வேணா என் பதிவை நீக்கிவிடுகிறேன். தயவுசெய்து ஒப்புமை என்ற பெயரில் எனக்கு ஒவ்வாமை ஏற்படுத்தி விடாதீர்கள். எதைவைத்து இப்படி சொல்றிங்க என கழுத்துல துண்டைப் போட்டு ஒவ்வொரு விஷயத்தையும் அக்குவேறு ஆணி வேறாக பேச ஆரம்பித்தால் கி.சீமையிலே பாடலின் மீதுள்ள எனது கொஞ்ச நஞ்ச நல்ல அபிப்ராயமும் விரோதமாகிவிடும். என்னை விட்டுடுங்கோ.

:idontgetit:

Richardsof
20th September 2014, 09:16 AM
வாப்பா http://i61.tinypic.com/2wd9i8p.jpg

Richardsof
20th September 2014, 09:19 AM
முடிந்தால் உமக்கு தெரிந்த மனோராமாவை பற்றி விமர்சனம் செய்யவும் . அடுத்தவர் பதிவை
கண்டு மனம் வெதும்பி , புழுங்கி ,....பாவம் கோபால் . பரிதாப படுகிறேன் .

Gopal.s
20th September 2014, 09:29 AM
முடிந்தால் உமக்கு தெரிந்த மனோராமாவை பற்றி விமர்சனம் செய்யவும் . அடுத்தவர் பதிவை
கண்டு மனம் வெதும்பி , புழுங்கி ,....பாவம் கோபால் . பரிதாப படுகிறேன் .

நான் மட்டும் இல்லையப்பா. வாசு போன்றவர்களுக்கும் சங்கடம்தான். எவ்வளவுதான் நாசுக்காக சொல்வது என்று பெருந்தன்மை காத்து வெதும்புகிறார்கள்.புழுங்குகிறார்கள்.நான் சொல்வது எப்போதுமே என் ஒருவனின் கருத்து மட்டுமல்ல நண்பரே. விஷயத்தை பாருங்கள்.சொன்னவனை விடுங்கள்.

rajraj
20th September 2014, 09:32 AM
மதுண்ணா தேன் சொட்ட சொட்ட பேசுவதற்கு எங்க ஊரு கொடைவா தான் காரணமா ?? ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இப்பத்தானே ரகசியம் வெளியே வருது :)

Rajesh: ippadi pOttu udaikkalaamaa? :lol: May be, next time I will take ''Red pepper chocolate" and see what happens! :)
I will consider ginger chocolate also !

Richardsof
20th September 2014, 09:48 AM
நடிகர் திலகம் அனுப்பிய செய்தி ;
http://i58.tinypic.com/2epljxe.jpg
என் உயிர் ரசிகன் கோபால் . என் அண்ணன் எம்ஜிஆர் புகழ் பாடும் ரசிகர்களை கண்டால் ஏனோ
தேவை இல்லாமல் பதறுகிறான் . துடிக்கிறான் . தவிக்கிறான் தனிமையில் .. அது மட்டுமா என்

கோபாலுக்கு ஜெய்சங்கர் - விஸ்வநாதன் - ஜானகி - இன்னும் பலர் பிடிக்கவில்லை என்றால் தரமற்ற
முறையில் எல்லோரிடமும் வம்புக்கு சென்று வருவது வாடிக்கை .

பராசக்தி அருளால் விரைவில் என் கோபால் பூர்ண குணமடைய வாழ்த்துகிறேன்

கோபாலுக்காக என் விருப்ப பாடல் .

http://youtu.be/ft44mIGumqY

chinnakkannan
20th September 2014, 09:56 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

ராஜ்ராஜ் சார்.. தருணி யான். எந்துசெய்ய.. அழகாய் இருக்கிறது அல்லல் தீர்க்கும்பத்மனாபனோடு அன்போடு நீ செல்லு.. பாடல்..அர்த்தம் முழுக்கப் புரியவில்லை..படப்பாடலா அல்லது தனிப்பாடலா .. தாங்க்ஸ் க்ரீன் டீ எல்லாம் ஓகே.. ப்ராஜக்டப் படிச்சீங்களா இல்லையா..விட்டுப் போன வெண்ணிலா கொடுத்தீங்கன்னா பார்ட் டூ எழுதிடுவேன்!

புரட்டாசி சனிக்கிழமை என நினைவு படுத்தியமைக்கு நன்றி..பானுமதி குரல் வெகு இனிமை..ஒரு வேளை இளமையென்பதால் இருக்குமோ.. (பிற்கால ராமனுக்கு மன்னன் முடி…பாட்டில் லாம் கொஞ்சம் கனத்த குரல் இருக்கும்) தாங்க்ஸ் மதுண்ணா..

இன்னொரு ஸ்ட்ராங்க் வாய்ஸ் கே.பி.எஸ் பாடல் நினைவுக்கு வருகிறது..
ஏழு மலையிருக்க நமக்கென்ன மனக்கவலை

மஞ்சள் உடை தரித்து நெற்றியில் நாமம் இட்டு மஞ்சள் உடையில் வெங்கட்ரமணா கோவிந்தா எனக் குரலிட்ட படியே செல்லும் கோஷ்டிகள் – ம்ம் பார்த்தது எல்லாம் ஒருகாலத்தில்..
//கண்ணுக்குள் நூறு நிலவோ, மந்திரம் சொன்னேன், புத்தம்புது ஓலை, மாட்டு வண்டி சாலையிலே, சந்திக்கத் துடித்தேன்// வெங்க்கிராம்.. எனக்குப் பிடித்த பாட்டு கண்ணுக்குள் நூறு நிலவா (பிக்சரைஸேஷன் ஹாரிபிள்) புத்தம்புது ஓலைவரும் (பா..ச..தா சொர்ண புஷ்பம் அழகு!).. ஆனால் படம் நிஜம்மாகவே சொதப்பல் தான்.. பாரதிராஜா மேல் கோபம் தான் வந்தது.. இன்னும் கூட இருக்கிறது..சத்யராஜ் நன்றாகவே நடித்தாலும் விழலுக்கு இறைத்த நீர் தான்..

பாரதி ராஜாவின் மற்ற படங்கள் கண்களால் கைது செய், தாஜ்மகால் அன்னக் கொடி…வேணாம் நான் அழுதுடுவேன்

மனோரமா லிஸ்ட் கொடுத்தீங்க ஓ.கே எஸ்வி சார்..ஆனா அதுக்காக “எனக்குத் தெரிந்த மனோரமா”ன்னுல்லாம் கட்டுரை எழுதணுமா.. நான் ஆட்டைக்கே வரலை! வேணும்னா எனக்குத்தெரிந்த ப்ரியா ஆனந்த், க்ருஷ்ணாஜிக்குத் தெரிந்த அஷா ந்னு வேணும்னா எழுதலாம்! :)

கோபால் சார்.. நன்றி..மீண்டும் கூட்ட முயற்சிக்கிறேன்..

வாசு ஜி.. கோபுவுக்கு பி.எம் லாம் அனுப்பறீங்க.!...நாளைக்கு ப் ப்ரோக்ராம் ல நீங்க எப்படி இருப்பீங்க..என்ன கலர் சட்டை.. ஒன்பது மணி என்றால் இங்கு ஏழரை.. ஆஃபீஸிலிருந்து வந்துவிடுவேன்.பட் பார்க்க முடியுமா எனத் தெரிய்வில்லை…யூட்யூபில் தான்பார்க்கணும்..

ஹப்பாடி..இத்துடன் இன்றைய ஹோம் ஒர்க் முடிந்தது..:)

இந்த கத்ரிங்கற வாத்யம் டூயட்ல வந்ததுக்கப்புறம் தான் கத்ரி பத்தியே தெரியும் எனக்கு…இதற்கு முன் பழைய படங்களில் உபயோகப் படுத்தப் பட்டு இருக்கிறதா..

rajraj
20th September 2014, 10:19 AM
chinnakkaNNan: It was nice write up about veNNilaa. We are getting ready to leave for California. I will give you a few more veNNila songs later.
Tharuni jnan is a composition by Swati Tirunal. Meaning is available in swathithirunal website. It is the usual pleading - What will I do tharuni. He has forgotten me. You can guess the rest ! :) I don't think it was in any movie.
Since we are going to spend time with our grandchildren " paappaa paattu" may be appropriate for the next assignment beginning with Odi viLaiyaadu paappaa ! :)

gkrishna
20th September 2014, 11:26 AM
காலையில் வெங்கட நாராயணா ரோடு திருப்தி தேவஸ்தானம் செம கூட்டம் வண்டி ஓட்டவே முடியல (ஸ்கூட்டர்). புரட்டாசி சனிகிழமை
வந்து பார்த்தல் எஸ்வி சார் ஆரம்பித்து இருக்கிறார் . வாழ்க நீ எம்மான் .பொன்னியின் செல்வன் ஆழ்வார்கடியான் நினைவு வருகிறது .மது சார் வெங்கடசலபதி பாடலுக்கு நன்றி
எங்காத்து காரரும் கச்சேரிக்கு போறார் அப்படின்னு சில பேர் சொல்வாள் .
நானும் ஒரு பாட்டு அதை மாதிரி போடறேன்

http://www.youtube.com/watch?v=knTo2E7SQUw

gkrishna
20th September 2014, 11:33 AM
எஸ்வி சார்

நடிகர் திலகம் போட்டோ அருமை அதை விட அருமை அதில் உள்ள தகவல்கள். நகைச்சுவையில் உள்ளம் கவர்ந்த மனோரமா பற்றிய தொகுப்பு செய்திகள் பழைய ஆவணகளுடன் தரும் போது ஒரு சுகம் தான்

gkrishna
20th September 2014, 11:42 AM
http://2.bp.blogspot.com/_C8anHXCj7CY/S4xsWDPPkkI/AAAAAAAAAHI/vT8Fy0rND60/s320/spb1.jpg

வேன்கிராம் sir ,சி கே சார்

கண்ணுக்குள் நூறு நிலவா பாடல் - ஷன்முகப்ரியாவின் இன்னொரு தளத்தை தெரிந்து கொள்ள வாய்த்த பாடல் .
'மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன' நயம் அக்மார்க் உடன் சுசீலாவின் கந்தர்வ குரல்
ஆண் பாவம் 'காதல் கசக்குதையா ' ராஜாவின் ஷன்முகப்ரியவை இன்னொரு தளத்தில் பயணிக்க வைக்கும் பாடல்

சாருலதா மணி அவர்கள் சென்னை காமராஜ் அரங்கத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் திரு பாலசுப்ரமணியம் அவர்களுடன் இந்த பாடலை பாடிய நினைவு வந்தது .

chinnakkannan
20th September 2014, 11:43 AM
கறுப்பு உருவம்.. திடகாத்திரமான தேகம்..கண்களில் கொஞ்சம் அனுபவ அறிவு..இருபது வயதுக்கு அதிகம் தான்.. நான் சொல்வது என் கல்லூரி சினேகிதன் ரகுராமனைப் பற்றி..செல்லமாய் ஆர்க்யூப் என்றழைப்பேன்.(ஆர்.ரகுராம்)..

அந்த ரகுராம் ஒரு நாள் கல்லூரியில் “வாடா.. அபிராமின்னு புதுசா ஒரு தியேட்டர்..அதுல ஒரு நல்ல ஹிந்திப் படம் போகலாம்” எனக் கேட்க லவ்லெட்டர் கொடுத்த இளைஞனை முறைக்கும் இளைஞியைப் போல் முறைத்தேன்..

“டேய்.. எனக்கோ ஹிந்தி சுட்டும் வராது..உனக்குத் தெரியும்.. தியேட்டர்ல நான் என்ன பண்ண” “ச்சும்மா வாடா..பிகு பண்ணாம”என மூன்றாம் பீரியட் தமிழை வெட்டி விட்டு, தரதரவென்று பஸ்ஸில் இழுத்துச் சென்று கல்லூரியிலிருந்து 45 நிமிஷப் பயணத்தில் பெரியார் பஸ்ஸ்டாண்ட் வந்து அரக்கப் பரக்க 4ம் நம்பர் பெரியார் பேருந்து நிலையம் டு தெப்பக்குளம் பஸ் ஏறி அலங்கார் தியேட்ட்ருக்கு அடுத்த ஸ்டாப்பான அபிராமி என இறங்கி இருந்தபெட்டிக்கடையில் ‘அபிராமி’ என விசாரிக்க(அப்போ குணாவெல்லாம் வரவில்லை) புது தியேட்டராப்பு என எதிர் தெரிந்த சந்தினைக் காட்டினார் பெட்டிக்க்டைக்காரர்..

வாடா என ரகு அவசரப் படுத்த வேக வேகமாக சந்துகளில் புகுந்துபுறப்பட்டு தியேட்டரில் நுழைந்து ‘என்ன படம்டா..எனக்குப் பசிக்குதே” எல்லாம் உள்ள வாங்கித் தரேன் வா – படம் பேரு கர்ஸ் எனச் சொல்ல ஏண்டா என்னை சபிக்கிறே எனச் சொன்னதும் என்னை ரகுமுறைத்தது இன்னும் நினைவிருக்கிறது..

உள் நுழைந்து சந்தோஷமாய் சூடாய்க் கிடைத்த ஏதோ வடையோ சமோசாவோ உள்ளே தள்ளி தியேட்டரில் நுழைந்தது முதல் அவனைக் கலாய்த்துக் கொண்டுதானிருந்தேன்..

மூக்கும் முழியுமாய் குட்டிப் பெண்ணாய் லட்சணமாய் அவ்வப்போது குட்டைப் பாவாடையில் டினா முனிம், செவேலென்று வார்த்த ஸ்பெஷல் ரோஸ்ட் தோசை நிற்மாய் ரிஷிகபூர் என படம் புரிவதற்கு ஒன்றும் கஷ்டமில்லை தான்..இருந்தாலும் து சோல பரஸ்கி மே சத்ர பரஸ்கா என பாட ஆரம்பிக்க என்னடா அவ சோழ தேசத்தவ இவன் பல்லவன் கறானா என அப்பாவியாய் நான் கேட்க வெகுசீரியஸாய் படத்திலிருந்துகண்ணெடுக்காமல் ரகு பதில் சொன்னான்..- அவளுக்கு பதினாறு வயசு இவனுக்குபதினேழு வயசுங்கறாண்டா.. ஓம் சாந்தி ஓம் பாடலின் போது யாருடா அந்த சாந்தி..அதுபாட்டுடா.. இப்படியே பல விஷயங்கள் வாரிக்கொண்டிருந்தேன்..

பிற்காலத்தில் ஒருவருஷமோ இருவருஷமோ கழித்து எனக்குள் ஒருவன் பார்த்தபோது கர்ஸ் பார்த்த திருப்தி ஏற்படவில்லை..

முந்தா நாள் ஸீ க்ளாஸிக் சினிமாவில் கர்ஸ் பார்த்த போது இந்த நினைவெல்லாம் வர, கண்ணில் நீர் முட்டியது..ஏனெனில் நான்கு வருடம் முன்பே ரகு சடன் ஹார்ட் அட்டாக்கில் இறந்ததாய்க் கேள்விப் பட்டேன்..அதுவும் அவனைப் பார்த்தே பல வருடங்கள் இருக்கும்..என்றாவது ஒரு நாள் பார்க்கலாம் என்றிருந்த போது அந்த எ ஒ நா வராமலேயே போய்விடும் என நினைத்துக் கூட ப் பார்க்கவில்லை..

(சில மாதங்களுக்கு முன் முக நூலில் எழுதியது)

chinnakkannan
20th September 2014, 11:47 AM
யாருமே இல்லியா..அதான் இந்த சோக வெடி.. டினா முனிம் பாட்டுல்லாம் வருமே.

தேடி எடுத்துப் போட்டால் கிருஷ்ணா ஜி வந்துவிட்டார்..வாங்கோ..திருப்பதி சென்று..பாட்டு நல்லபாட்டு...

gkrishna
20th September 2014, 11:54 AM
'மழை வருவது மயிலுக்கு தெரியும் '

ரிஷிமூலத்தில் இடம் பெற்ற ஷண்முகப்ரியா ராக பாடல்
மிருதங்கம்,வீணை,புல்லாங்குழல் போன்ற கருவிகளுடன் இசைக்கபட்ட இனிய இடை இசை .ராஜாவின் ராஜாங்கத்தை இந்த பாடலில் நன்கு அறியலாம் .


http://www.youtube.com/watch?v=gSZQtUZ51xw

gkrishna
20th September 2014, 11:59 AM
சி கே சார்
அட்டகாசம் . உங்கள் மலரும் நினைவுகள்
ஒரு சோக செய்தியை இவ்வளவு சுகம் பட எழுதும் திறைமை
கண்ணதாசனின் 'திரை போட்ட போதும் அணை போடவில்லை '
கண்களில் ஒரு துளி நீர் வரவழைக்க வைத்தது

gkrishna
20th September 2014, 12:05 PM
வென்கிராம் சார்,சி கே சார்

நான் சமீபத்தில் படித்த வேதம் புதிது படத்தின் தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன் . (நன்றி மாலைமலர்) நீங்களும் படித்து இருப்பீர்கள்

http://mmimages.maalaimalar.com/Articles/2014/Jun/033f1666-7e32-49ae-a78a-46a668f4202d_S_secvpf.gif

"வேதம் புதிது'' படத்தில் பாலுத்தேவராக வாழ்ந்து காட்டினார், சத்யராஜ். பாரதிராஜாவின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றான "வேதம் புதிது'' படம் சத்யராஜை மிகச்சிறந்த குணசித்ர நடிகராகவும் வெளிப்படுத்தியது. அவருக்கு 6 விருதுகள் கிடைத்தன.

"முதல் மரியாதை'' படத்தில் சிறு வேடத்தில் மட்டும் நடித்த சத்யராஜை, தனது கிராமத்துக் காதல் கதையான "கடலோரக் கவிதைகள்'' படத்தில் கதாநாயகன் ஆக்கினார், பாரதிராஜா. "கடலோரக் கவிதைகள்'' படத்தின் வெற்றிக்குப் பிறகு, "மதங்களை கடந்தது மனிதநேயம்'' என்ற கருத்தை வெளிப்படுத்தும் "வேதம் புதிது'' படத்திலும் சத்யராஜையே நடிக்க வைத்தார். பாலுத்தேவர் என்ற கம்பீரமான குணச்சித்திர வேடத்தில் சத்யராஜ் வாழ்ந்து, ரசிகர்களை பிரமிக்க வைத்தார். படமும் வெற்றி பெற்றது.

இந்தப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி சத்யராஜ் கூறியதாவது:-

"என் நடிப்பு வரலாற்றில் நிச்சயம் ஒரு மைல்கல் `பாலுத்தேவர்' கேரக்டர்.

பாரதிராஜாவின் "வேதம் புதிது'' கதையை என்னிடம் சொல்லும்படி சித்ரா லட்சுமணனிடம் பாரதிராஜா கூறியிருக்கிறார். அவர் என்னிடம், "கதையின் அவுட்லைனை கேட்டுக் கொள்ளுங்கள்'' என்றார்.

"நான் டைரக்டர் பாரதிராஜா சாரிடம் முதல் மரியாதை படத்தில் என் கேரக்டர் என்ன என்பது பற்றி கேட்கவில்லை. கடலோரக் கவிதைகள் படத்திலும் கதை கேட்கவில்லை. இந்தப் படத்திலும் கதை கேட்கப்போவதில்லை. நான் கதை கேட்டு முடிவு செய்கிற நிலையை கடந்தவர் அவர்'' என்று சித்ரா லட்சுமணனிடம் கூறி, கதை கேட்க மறுத்துவிட்டேன்.

இந்தப் படத்தில் நடித்த பிறகு வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் மத்தியிலும், எனக்கு பெரிய அளவில் மரியாதை கிடைத்தது.

நான் அப்போது பெரியார் கொள்கைகளுக்குள் வந்திருந்த நேரம். படத்தில் வரும் பாலுத்தேவர் கேரக்டர் `நாத்திகர்' என்பது எனக்கு மிகவும் வசதியாகி விட்டது.

படத்துக்கு கண்ணன் என்பவர் வசனம் எழுதியிருந்தார். இந்தப்படத்துக்கு அவர் வசனம் எழுதிய பிறகு, `வேதம் புதிது கண்ணன்' என்று அழைக்கப்பட்டார். அந்த அளவுக்கு படத்துக்கு வசனங்களும் உயிர் நாடியாக அமைந்தன.

"பராசக்தி'', "வீரபாண்டிய கட்டபொம்மன்'', "மனோகரா'' போன்ற படங்கள் வசனங்களுக்காகவும் பேசப்பட்டவை. "காக்கி சட்டை'' படத்தில் நான் இரண்டு தடவை சொன்ன `தகடு தகடு' வசனம் சினிமாவில் என் நடிப்புக்கு புதிய பாதையை உருவாக்கித் தந்தது.

இப்படி வசனங்கள் மூலம் கிடைக்கும் பெருமை, இந்தப் படத்தில் கண்ணன் வசனத்துக்கும் கிடைத்தது. கதைப்படி, என் மகன் தாமிரபரணி ஆற்றில் விழுந்து இறந்திருப்பான். அது தெரியாத உறவினர்கள், அவனைக் காணோம் என்று தேடிப்போயிருப்பார்கள். அவர்கள் வீட்டுக்கு வந்ததும் நான் பதட்டத்திலும் பரபரப்பிலும் "கிடைச்சிட்டானா?'' என்று கேட்பேன். அவர்கள் பதிலோ, "கிடைச்சிட்டுது'' என்பதாக இருக்கும்.

மகன் உயிரோடு இல்லை என்பதை இந்த வசனம் நெற்றிப்பொட்டில் அடிக்கிற மாதிரி உணர்த்தி விட்டது.

மகன் உயிரோடு இல்லை என்பதை இந்த ஒரு வரி வசனத்தில் சொல்லி, கதைக்கே ஒரு ஜீவன் கொடுத்திருந்தார், கண்ணன். படத்தில் இந்தக் காட்சிக்கு, காட்சியின் சோகம் தாண்டியும் கைதட்டிய ரசிகர்கள் அதிகம். என் படங்களில் நான் பேசிய வசனங்களிலேயே சிறந்த வசனமாக இதைக் கருதுகிறேன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடந்தபோது, ஊர்க்காவலன் படப்பிடிப்புக்காக ரஜினி சாரும் அங்கே வந்திருந்தார். அவர் நடித்த படப்பிடிப்பு முடிந்ததும் எங்கள் படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார். 2 மணி நேரம் எங்களுடன் இருந்தார். என் `பாலுத்தேவர்' கெட்டப் அவரை ரொம்பவே கவர்ந்திருக்கிறது. அதுபற்றிப் பேசி பாராட்டினார்.

படத்தில் நடிகை அமலா என் மருமகளாக நடித்திருந்தார். இதே அமலா என் அடுத்த படமான "ஜீவா''வில் என் ஜோடியாக நடித்தார்! அதுமாதிரி, `மிஸ்டர் பாரத்' படத்தில் அம்பிகா எனக்கு மருமகள். அடுத்து வந்த "மக்கள் என் பக்கம்'' படத்தில் என் ஜோடி! இரண்டு விதமான வேறுபாட்டையும், ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

"வேதம் புதிது'' படத்தில் பாலுத்தேவராக நடித்த என் நடிப்புக்கு `பிலிம்பேர்' பத்திரிகை உள்பட 6 பத்திரிகைகள் விருது கொடுத்து சிறப்பித்தன.

மத்திய அரசின் விருது கமிட்டியில் அப்போது ஜுரியாக இருந்தவர்களில் நடிகை லட்சுமியும் ஒருவர். இந்தப்படத்தில் என் நடிப்புக்கு விருது கொடுப்பதற்கான பரிசீலனையில், சின்ன விஷயத்துக்காக `விருது' வாய்ப்பு தவறி விட்டதாக லட்சுமி என்னிடம் சொன்னார். அதாவது என் கேரக்டருக்கு `விக்' பயன்படுத்தியிருந்தது விருதுக்கு தடையாக அமைந்திருந்ததை தெரிந்து கொண்டேன். ஆனாலும் ரசிகர்களின் பாராட்டை எனக்கு கிடைத்த பெரிய விருதாக ஏற்றுக்கொண்டு மகிழ்ந்தேன்.

ஜெயலலிதா மேடம் முதல்-அமைச்சராக இருந்தபோது ஒரு தடவை அவர்களை சந்தித்து பேசினேன். அப்போது நான் பல படங்களில் நடித்திருந்தாலும் `பாலுத்தேவர்' கேரக்டர் பற்றியே அதிகம் பாராட்டிப் பேசினார்கள்.

படத்தில் ஒரு காட்சியில் நானே ஆடிப்போய்விட்டேன். என் வளர்ப்பு மகனாக வரும் சிறுவனை நான் தோளில் தூக்கி வைத்தபடி கதை சொல்லிக்கொண்டே வருவேன். ஆற்றைக்கடக்கும்போது அந்த சிறுவன் என்னிடம், "உங்க பெயர் என்ன?'' என்று கேட்க, "நான் பாலுத்தேவர்'' என்பேன். "பாலு உங்கள் பெயர். தேவர் என்பது நீங்கள் படிச்சு வாங்கின பட்டமா?'' என்று அந்த சிறுவன் கேட்பான்.

இந்தக் காட்சியை, தனக்கே உரிய ஆற்றலில் மிகத் திறமையாக இயக்கினார், பாரதிராஜா. இந்தக் கேள்வியால் அந்தச் சிறுவன் என்னை கன்னத்தில் அறைவதாக உணர்வேன். `ஜாதிய சமூகத்தை தாண்டியது மனித நேயம்' என்பதை சொல்லாமல் சொல்கிற அந்தக் காட்சி, என் நடிப்பிலும் மறக்க முடியாத காட்சியாகி விட்டது.

படம் தயாரான பிறகு வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பிட்ட மதத்தை புண்படுத்துவதாக ஒரு தகவல் உலாவந்து படத்துக்கு பிரச்சினையாக அமைந்தது. இதுபற்றி முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு சொல்லப்பட்டபோது அவர் படத்தை பார்க்க விரும்பினார். ஏவி.எம். தியேட்டரில் படம் பார்த்தபோது என்னையும் அவர் அருகே அமர வைத்துக்கொண்டார். முழுப்படத்தையும் ரசித்துப் பார்த்தவர், "இந்தப்படத்தில் சர்ச்சைக்குரிய விஷயம் எதுவும் இல்லையே!'' என்றார். என் நடிப்பையும் பாராட்டினார்.

முதல்-அமைச்சர் பாராட்டிய பிறகு, படத்தின் வெளியீட்டுக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. ரசிகர்கள் உணர்ச்சி மயமாய் ரசித்ததோடு, படத்தையும் வெற்றி பெறச்செய்தார்கள்.

"வேதம் புதிது'' பாலுத்தேவர் கேரக்டர் என்னை ரசிகர்களிடம் பெரிய அளவில் வெளிப்படுத்தியதால்தான் இன்றைக்கு "பெரியார்'', "ஒன்பது ரூபாய் நோட்டு'' போன்ற படங்களிலும் நடிப்பில் என்னை நிலைநிறுத்த முடிந்தது.''

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

gkrishna
20th September 2014, 12:21 PM
இரட்டை வேடம்

நாம் நிஜ வாழ்வில் சந்திக்கும் நிறைய மனிதர்களில் இரட்டை வேடம் போடுபவர்கள் இருக்கிறார்கள் .சந்தர்பம் வரும் போது தான் தெரிகிறது அவர்களின் இரட்டை வேடம் . சரி சரி வேதாந்தம் வேண்டாம் என்று பலர் முணுமுணுப்பது காதில் விழுகிறது.

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர். சிவாஜி, ஜெய்சங்கரில் தொடங்கி ரஜினி, கமல், விஜயகாந்த், அஜீத், என அத்தனை முன்னணி நடிகர்களும் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்கள். கதாநாயகர்கள் இரட்டை வேடத்தில் நடிப்பது என்பது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால் கதாநாயகிகளுக்கு இரட்டை வேடத்தில் நடிக்க வாய்ப்புக்கள் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. மிகவும் சொற்ப அளவிலே கதாநாயகிகளுக்கு அத்தகைய வாய்ப்புக்கள் கிடைத்திருக்கின்றன.

பொதுவாக நடிகர்கள் அனைவரும் எதாவது ஒரு திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து விடுவார்கள். அதை எல்லா நடிகர்களுமே விரும்புவார்கள். அப்படி நடிக்கவில்லை என்றால் கூட, இயக்குநர்களிடம் வற்புறுத்தியாவது ஏதாவது ஒரு திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துவிடுவார்கள். ஆனால் நடிகைகள்? யோசித்து பார்த்தால் கேள்விக்குறிதான் மிஞ்சும். எந்த நடிகையும் இரட்டைவேட கதாபாத்திரத்தை வற்புறுத்துவது இல்லை. அவர்கள் வற்புறுத்துவதற்கான வியாபார சூழ்நிலையும் அவர்களுக்கு அமைவதில்லை. இந்த முட்டுக்கட்டை நிலைகளை தாண்டியும் சில நடிகைகள் இரட்டை வேட கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். சில இயக்குநர்கள் அப்படிப்பட்ட கதைகளை அமைத்து இருக்கிறார்கள். இது கதாநாயகர்களுக்கான உலகம். அவர்களை சார்ந்துதான் வியாபாரம் என்று சுட்டிக்காட்டப்படும் தமிழ்சினிமாவில், அத்தகைய சில தடைகளை தாண்டி சில நாயகிகளுக்கு இரட்டைவேடத்தில் நடிக்க வாய்ப்புக்கள் கிடைத்திருக்கின்றது. தமிழ் சினிமாவில் அவ்வாறு இரட்டை வேடத்தில் நடித்த சில கதாநாயகிகளை பற்றி பார்க்கலாமா ?

நடிகையர் திலகம் சாவித்திரி - காத்திருந்த கண்கள்
கலை செல்வி மாண்பிகு அம்மா அவர்கள் - அடிமை பெண், வந்தாளே மகராசி,யார் நீ
வாணிஸ்ரீ - இருளும் ஒளியும்,வாணி ராணி

இப்படி மற்ற நடிகைகள் தொடருங்களேன் ப்ளீஸ்

http://2.bp.blogspot.com/__bVV7cl6ynA/StGXLCN6vtI/AAAAAAAACYE/3gPtlka3UlA/s320/Vani+Rani+Tamil+Movie+Watch.JPGhttps://i.ytimg.com/vi/5Qd8lWXPXu4/mqdefault.jpghttps://i.ytimg.com/vi/Zp9rCBH0I_8/mqdefault.jpg

Russellmai
20th September 2014, 01:02 PM
கிருஷ்ணாஜி சார்,
இதயக்கமலம் திரைப்படத்தில் கே.ஆர்.விஜயா இரட்டை
வேடத்தில் நடித்துள்ளார்.
கோபு

gkrishna
20th September 2014, 01:12 PM
கிருஷ்ணாஜி சார்,
இதயக்கமலம் திரைப்படத்தில் கே.ஆர்.விஜயா இரட்டை
வேடத்தில் நடித்துள்ளார்.
கோபு

ரொம்ப சரி கோபு சார் .மிக்க நன்றி சார்

நீங்கள் சொன்ன உடன் நினைவிற்கு வருகிறது

காவியத்தலைவி - சௌகார்ஜானகி

chinnakkannan
20th September 2014, 01:24 PM
கிருஷ்ணா ஜி நன்றி..(டினா முனிம் அமோல் பலேகர் பாட்டு நினைவுக்கு வருதா) எஸ்.வாசுதேவன் சார் காணோமே..

வேதம் புதிது கட்டுரைக்கு நன்றி.பட் அந்தப் படத்தில் சில காட்சிகள் எனக்குப் பிடிக்காது..மனித நேயம் என்றால் சக மனிதர்களைப் புண்படுத்தாமல் இருப்பதுவும் தான்..

சே..கிருஷ்ணாஜி..இது ஒரு ஆணாதிக்க உலகம் போல இருக்கிறதே இரட்டை வேட நடிகைகள் என வரிசையில் வரவே மாட்டேன் என்கிறதே நினைவில் சரி சரி.. ஹேமாமாலினி – சீதா அவுர் கீதா..:)

gkrishna
20th September 2014, 02:00 PM
சுஜாதா - முத்தான முத்தல்லவோ

Richardsof
20th September 2014, 02:05 PM
1965 - kalangarai vilakkam - saroja devi - duel role.

gkrishna
20th September 2014, 02:05 PM
esvee sir

excellant

Richardsof
20th September 2014, 02:10 PM
THANKS KRISHNA SIR

http://youtu.be/_KbwxuVlTfI

gkrishna
20th September 2014, 02:11 PM
டினா முனிம் அமோல் பலேகர்
எனக்கு பதான் பதான் மெயின்1979 நினைவு உண்டு சி கே சார்
http://upload.wikimedia.org/wikipedia/en/0/0f/BatonBatonMein_Poster.jpg

http://www.youtube.com/watch?v=i7GXesH8P34

ராஜேஷ் ரோஷன் மியூசிக்

chinnakkannan
20th September 2014, 03:55 PM
கிருஷ்ணா சார் அழகான பாட்டு.. தாங்க்ஸ்.. இதே படத்தில் தானே தன தன்னன ப்யார் கரோ என்ற வேகப் பாடல் வரும்?

sss
20th September 2014, 03:57 PM
ஜெயலலிதா இரட்டை வேடம் - படம் - "நீ" ,

நேற்று சன் லைப்-இல் கிளைமாக்ஸ் பார்த்தேன்...
ஒரு ஜெயலலிதா நல்ல குணவதி கணவனை நினைத்து அடிக்கடி மயக்கம் போடும் கேரக்ட்டர்...
மற்றொருவர் உல்லாச வாழ்க்கை வாழ்பவர். எல்லோருக்கும் ஆள் மாறட்ட குழப்பம்.
இறுதியில் ஒருவர் ஜெயசங்கருடன் இணைவார் ...மற்றொருவர் போலீஸ்வசம்..

ராட்சசி பாடிய "வந்தாலென்ன " பாடல் அருமை...
வீடியோ கிடைக்கவில்லை
https://www.youtube.com/watch?v=AaOi1sEaF4k

,

gkrishna
20th September 2014, 04:16 PM
ஜெயலலிதா இரட்டை வேடம் - படம் - "நீ" ,

நேற்று சன் லைப்-இல் கிளைமாக்ஸ் பார்த்தேன்...
ஒரு ஜெயலலிதா நல்ல குணவதி கணவனை நினைத்து அடிக்கடி மயக்கம் போடும் கேரக்ட்டர்...
மற்றொருவர் உல்லாச வாழ்க்கை வாழ்பவர். எல்லோருக்கும் ஆள் மாறட்ட குழப்பம்.
இறுதியில் ஒருவர் ஜெயசங்கருடன் இணைவார் ...மற்றொருவர் போலீஸ்வசம்..

ராட்சசி பாடிய "வந்தாலென்ன " பாடல் அருமை...
வீடியோ கிடைக்கவில்லை
,

சூப்பர் sss சார்
நீ படத்தில் நல்ல சில பாடல்கள் உண்டு என்று நினைவு
'வெள்ளி கிழமை விடியும் வேளை வாசலில் கோலம் இட்டேன் '
'ஒன்டே ஒன் பாய் ஒன் கேர்ள் ஹனி மூன் ' pbs நாகேஷ் டான்ஸ் எல்லாம் சேர்ந்து கலக்கும்
ராமண்ணா இயக்கம்

vasudevan31355
20th September 2014, 04:37 PM
இன்றைய ஸ்பெஷல் (75)

75 ஆவது சிறப்புப் பதிவு

இன்றைய ஸ்பெஷலில் அன்றைய அமர்க்களமான பாடல். இலங்கை வானொலியில் கலக்கிய ஒரு பாடல்.

இசைக்காகவும், குரலுக்காகவும், நடிகையர் திலகம் சாவித்திரியின் நடனத்திற்காகவும், 'நடிப்பிசைப் புலவர்' கே.ஆர்.ராமசாமியின் இடை வசனத்திற்காகவும் மிகவும் புகழ் பெற்ற பாடல்.

http://i.ytimg.com/vi/n7uduJj0y_k/hqdefault.jpg

நாயகன் திருமணம் ஆனவன் என்றாலும் இன்னொருத்தியின் அழகுக்கும் அன்புக்கும் அடிமை ஆகிறான். அவளுக்காக நிறைய பொருள் சம்பாதிக்கிறான். ஆனால் விதிவசத்தால் சிறைத்தண்டனை பெறுகிறான். உடல்நிலை சரியில்லையென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து தப்பித்து தன் காதலியைப் பார்க்க ஓடோடி வருகிறான்.

ஆனால் அவன் அங்கு காதலியைக் கண்ட நிலை.... கொடுமை!

அங்கு அவன் காதலி இன்னொருவனுடன் கும்மாளமிட்டுக் கொண்டிருக்கிறாள். அவளின் புதுக் காதலன் இசைக்கருவியுடன் இசை மீட்ட, அவள் அழகாக நடனமாடுகிறாள். பார்த்த முன்னாள் காதலன் தப்புக் கணக்கு போடுகிறான். ஆனால் உண்மை அதுவல்ல. ஒரு நடன நிகழ்ச்சிக்கு அவள் அங்கு ஒத்திகை பார்க்கிறாள். அவள் போதாத காலம் அந்த நேரம் அவன் அங்கு சேர்கிறான். இப்போது அவள் என்ன சொன்னாலும் அவன் நம்பப் போவதில்லை. அவன் கண்கள் அவனை ஏமாற்றாதே!

இந்தக் கொடுமையைக் கண்டு துப்பாக்கியுடன் வருகிறான். பாடி ஆடிக் கொண்டிருக்கும் அவளும், அவள் தோழனும் இதைக் கண்டு அதிர்ச்சியில் உறைகிறார்கள். அவன் துப்பாக்கியைக் காட்டி அவளை தொடர்ந்து ஆடச் சொல்கிறான். அவள் புதுத் தோழனை இசைக்கருவியை இசைக்கச் சொல்கிறான். உயிருக்கு பயந்து அவள் ஆட, இவன் தொடர்ந்து மிரட்ட, ஆட்டம் பாடலுடன் வேகமெடுக்கிறது. துப்பாக்கி தன்னை குறி வைக்க அவள் சுழன்று சுழன்று ஆடுகிறாள். நிற்காமல் ஆடுகிறாள். இசைக்கருவி வைத்து இசைக்கும் அவள் தோழனுக்கு தோளில் துப்பாக்கி குண்டு பரிசாக விழுகிறது. அப்போதும் அவன் வாசித்தே தீர வேண்டும். ஏனென்றால் துப்பாக்கி முனையில் இருவர் உயிரும் ஊசலாடுகிறதே!

அவள் ஆடுகிற வரைக்கும் ஆடி மயங்கி விழுகிறாள். அவளை வார்த்தைகளால் துப்பாக்கிக்கு பதிலாகக் கொன்றுவிட்டு "உங்களைக் கொன்றால் எனக்குத்தான் அவமானம்... என் தாய், என் மனைவி கற்றுத் தராத பாடத்தை நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்து விட்டீர்கள்" என்று வெறுப்புடன் அவர்களிடம் கூறிவிட்டு வெளியேறுகிறான்.

இதுதான் பாடலின் சிச்சுவேஷன். நாயகனாக கே.ஆர்.ராமசாமி, ஆடும் நாயகியாக, நாட்டியத் தாரகையாக நடிகையர் திலகம், அவள் தோழனாக பாலையா. 'செல்லப் பெண்' என்ற படத்தில்தான் இத்தகைய அருமையான சிச்சுவேஷன் பாடல்.

மூவர் கூட்டணியில் முத்தான பாடல். சந்தோஷமாக அமைதியாக ஆரம்பிக்கும் பாடல் ராமசாமி துப்பாக்கியுடன் வந்ததும் ஜெட் வேகமெடுக்கிறது நம் மதுர கானம் திரி போல. சாவித்திரியின் பயந்து நடுங்கும் வேக ஆட்டம் அற்புதமான ஒன்று. காதலி துரோகம் செய்ததை குத்திக்காட்டி ராமசாமி பேசும் வசனங்கள் அழியாப் புகழ் பெற்றவை. அந்தக்காலத்தில் அனைவருக்கும் இவ்வசனங்கள் மனப்பாடம்.

இசைக்கருவி கொண்டு வாசிக்கும் பாலையாவை ராமசாமி துப்பாக்கியால் தோளில் சுட்டவுடன் "ஐய்யய்யோ" என்று அவர் அப்பாவியாக பயந்து அலறும் விதமே தனி. அப்புறம் 'வாசிக்கிறேன் வாசிக்கிறேன்' என்று அவர் தொடை நடுங்கி அலறுவது ரொம்ப பிரபலம்.

ஜிக்கியின் அற்புதக் குரல்வளம். அருமையான மாடுலேஷன்கள். இன்பமும் துன்பமுமாக மாறி மாறி விறுவிறுவென்று ஒலிக்கும் அந்த ஜிகினாக் குரல். ஆபத்தை பாடலின் இடையே உணர்த்தும் அற்புத மியூசிக். சுழன்று சுழன்று சுனாமியாய் ஆடும் சாவித்திரி, இடையே அழகாக செருகப்பட்ட வீறுகொண்ட ராமசாமியின் 'கணீர்' வசனங்கள் என்று அனைத்தும் நிறையப் பெற்ற அம்சமான பாடல்.

ஜாவர் சீத்தாராமன் திரைக்கதை வசனம் எழுத, அப்போதைய ஏ.வி.எம்மின் ஆஸ்தான இசை அமைப்பாளர் சுதர்சனம் இசையமைக்க, ஏ.வி.எம்.பேனர் இப்படத்தைத் தயாரிக்க, உடுமலை நாராயணகவி, கே.பி.காமட்சிசுந்தரம் பாடல்களை இயற்ற, எம்.வி.ராமன் இயக்கிய படம் 'செல்லப்பிள்ளை'. 1955 ஆம் ஆண்டு வெளிவந்த படம் இது.

http://s1.dmcdn.net/0xnA/526x297-L5e.jpg

இனி பாடலின் முழு வரிகள்

மதனா எழில் ராஜா நீ வாராயோ
பருவமிதே பயனிதுவே
இன்பம் தாராயோ

மதனா எழில் ராஜா நீ வாராயோ
பருவமிதே பயனிதுவே
இன்பம் தாராயோ

என்னைப் போல ஒரு பெண்ணை
உன்னுடைய கண்ணால் கண்டதுண்டோ
இளமை பேரழகும் இனி
என்றும் வாய்ப்பதுண்டோ
வாழ்வில் என்றும் வாய்ப்பதுண்டோ

என்னைப் போல ஒரு பெண்ணை
உன்னுடைய கண்ணால் கண்டதுண்டோ
இளமை பேரழகும் இனி
என்றும் வாய்ப்பதுண்டோ
வாழ்வில் என்றும் வாய்ப்பதுண்டோ

தருணமிதுவே பாராயோ
கருணை புரிந்து வாராயோ
தருணமிதுவே பாராயோ
கருணை புரிந்து வாராயோ
பருவமிதே பயனிதுவே
இன்பம் தாராயோ

மதனா எழில் ராஜா நீ வாராயோ
பருவமிதே பயனிதுவே
இன்பம் தாராயோ

மின்னல் இடையழகும், அன்ன நடையழகும் கண்டு

(அப்படியே ராமசாமியைக் கண்டு அதிர்வில் சாவித்திரி ஸ்டாப்)

(இப்போது வசனம்)

சாவித்திரி: ஆங்! நீங்களா?!

கே.ஆர்.ராமசாமி: (துப்பாக்கியை நீட்டியபடி) ஏன் நிறுத்திவிட்டாய்? ஆடு! (பாலையாவைப் பார்த்து) ம்...வாசி

(பாலையா 'கெக்கே பிக்கே' என்று அசடு வழிய)

கே.ஆர்.ராமசாமி: ஏன் கோவேறு கழுதை போல் கனைக்கிறாய்? காதல் அகராதியில் இன்னும் பல ஏடுகள் புரட்ட வேண்டுமே என்று சிந்திக்கிறாயா? குப்பை மேட்டில் முளைத்த காளானைப் போல சிதறப் போகிறது உன்னுடைய சிந்தனை பீடம்.

சாவித்திரி: (நடுவில் இடைமறித்து) இல்லீங்க...ஒத்திகை.

கே.ஆர்.ராமசாமி: ஷட்-அப். (ஆங்கிலம் வேற) கற்பின் கலங்கரை விளக்கமே! காதலின் பொதுக் களஞ்சியமே! பாடியே சாகும் அன்னப் பட்சி போல் நீ ஆடியே சாக வேண்டும். ம்... ஆடு. (துப்பாக்கி மேல் நோக்கி சுடுவார்)

(பாடல் தொடரும்)

மின்னல் இடையழகும், அன்ன நடையழகும்
கண்டும் மறுப்பதேனோ
உனையே நான் நினைந்தே மனம் உருகுதல் சரிதானோ
மனமும் உருகுதல் சரிதானோ

(பின்னால் வாசித்துக் கொண்டிருக்கும் பாலையாவுக்கு விழுமே தோளில் ஒரு துப்பாக்கி சூடு!)

பாலையா: (வலி தாங்க மாட்டாமல் அலறி) அய்யய்யய்யையோ....ஐயய்யோ! எம்மா! ஐயய்யோ! வாசிக்கிறேன்! வாசிக்கிறேன். வாசிக்கிறேன். (என்னமாய் அலறுவார் மனிதர்!)

(பாடல் தொடரும்)

மின்னல் நடையழகும் அன்ன நடையழகும்
கண்டும் மறுப்பதேனோ
உனையே நான் நினைந்தே
மனம் உருகுதல் சரிதானோ
மனமும் உருகுதல் சரிதானோ
தருணமிதுவே பாராயோ
கருணை புரிந்து வாராயோ
தருணமிதுவே பாராயோ
கருணை புரிந்து வாராயோ
பருவமிதே பயனிதுவே
இன்பம் தாராயோ

மதனா எழில் ராஜா நீ வாராயோ
பருவமிதே பயனிதுவே
இன்பம் தாராயோ

கே.ஆர்.ராமசாமி: ஏன்? காலால் இட்டதை தலையால் செய்து வந்த காதலன் இப்படி பேசுகிறானே என்று ஆச்சரியப் படுகிறாயா? ஊராரின் பேச்சை உதறித் தள்ளி, உன் பொருட்டு வீடு, வாசல், வேண்டியவர்கள், எல்லாவற்றையும் துறந்து, உன் சந்தோஷ வாழ்வுக்காக சட்டத்தின் வரம்பையும் மீறி, பணம் தேடிக் கொண்டு வந்த நாயகனா இப்படி பேசுகின்றான் என்று சிந்திக்கிறாயா? ம்...ஆடு.

(துப்பாக்கியைக் கண்டு பயந்தபடி காதலனை முறைக்கும் சாவித்திரியின் அபார பார்வை. உயிருக்கு பயந்து, நிலைதடுமாறி, வேக வேகமாக பம்பரமாகச் சுழன்று அவர் ஆடும் ஆட்டம் படு மிரட்டல். 'நடிகையர் திலகம்' நடிகையர் திலகம்தான்)

(பாடல் அதனுடன் சேர்ந்த ஆடல் படு வேகமெடுக்க ஆரம்பிக்கும்)

என்னைப் போல ஒரு பெண்ணை
உன்னுடைய கண்ணால் கண்டதுண்டோ
இளமை பேரழகும் இனி
என்றும் வாய்ப்பதுண்டோ
வாழ்வில் என்றும் வாய்ப்பதுண்டோ

கே.ஆர்.ராமசாமி: ம்..வாசி! ம்...ஆடு! ம்...ஆடு! ம்..

என்னைப் போல ஒரு பெண்ணை
உன்னுடைய கண்ணால் கண்டதுண்டோ
இளமை பேரழகும் இனி
என்றும் வாய்ப்பதுண்டோ
வாழ்வில் என்றும் வாய்ப்பதுண்டோ

(ஆஹா! இந்த இடத்தில் ஒலிக்கும் அந்த அற்புத அருமையான இசையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அவ்வளவு வேகம்... அவ்வளவு விறுவிறுப்பு)


http://www.dailymotion.com/video/xmm5yd_madhana-ezhil-raja_creation

Russellcaj
20th September 2014, 04:45 PM
Mr. Vasudevan
Mr. Krishna
Mr. Rajesh
Mr. Karthik
Mr. Madhu
Mr. Gopal
Mr. Raj Raj
Mr. Chinna Kannan
Mr. Esvee

all your articles are very very good. Particularly the special articles are very informative.

I am fully enjoying this forum with rare videos, rare photos, unknown informations and all.

Thanks.

stl

Russellcaj
20th September 2014, 04:53 PM
Mr. Krishna

a small request.

when you recap any article in copy & paste method, please put the courtesy on top of the post.

we are reading it as your own article, surprising about you, but at the end we find it was written by somebody and copy & paste from somewhere.

Gopal.s
20th September 2014, 04:54 PM
வாசு,

செல்ல பிள்ளை ஒரு வித்தியாச படம். இதில் ஒரு காமெடி பாடல்.குண்டு பசவப்பா கரி பசவப்பா கண் மூடி தூங்கப்பா என்று..டி.எம்.எஸ் பாடுவார்.

Russellcaj
20th September 2014, 04:55 PM
Mr. Vasudevan

your 'today special' articles are excellent and very enjoyable.
stl

gkrishna
20th September 2014, 04:59 PM
Mr. Krishna

a small request.

when you recap any article in copy & paste method, please put the courtesy on top of the post.

we are reading it as your own article, surprising about you, but at the end we find it was written by somebody and copy & paste from somewhere.


stella rock

thanks for your valuable feedback .

definitely will put the courtesy on top of the post

sometimes due to the urgency or negligence this courtesy also was missed out by me in some of my posts.

once again thanks for your feedback

regards

krishna

gkrishna
20th September 2014, 05:05 PM
வாசு சார்
செல்ல பிள்ளை
இதை பற்றி சொல்லணும் சார் . இன்று காலையில் ஏவிஎம் பற்றி ஒரு கட்டுரை படித்து கொண்டு இருந்தேன் . ஆனால் அவர் இந்த படத்தை பற்றி குறிப்பிட்டு உள்ளார். மேலும் ஏவிஎம் இன் ஆரம்ப கால படங்களை மெய்யப்ப செட்டியார் அவர்களே இயக்கினார் . பின்னாட்களில் ஏவிஎம் படங்களை எம் வீ ராமன் என்பவர் இயக்கினார் அதில் குறிப்பிட்டு சொல்ல கட்டிய படங்களில் ஒன்று செல்ல பிள்ளை
இன்று அதில் இருந்து நீங்கள் பாடலை இன்றைய ஸ்பெஷல் ஆக குறிப்பிட்டு உள்ளீர்கள் . நடிப்பிசை புலவர் ராமசாமி நடித்த இறுதி படம் நம்நாடு என்று படித்த நினைவு

chinnakkannan
20th September 2014, 05:23 PM
//மதனா எழில் ராஜா நீ வா
பருவமிதே பயனிதுவே
இன்பம் தாராயோ // வாசு சார்..அருமையான பாடல் அண்ட் அருமையான அலசல்.. நன்றி..

JamesFague
20th September 2014, 07:58 PM
Mr C K Thanks for remembering me. Now the melody king Dr K J Yesudoss song for you.

Enjoy.
http://youtu.be/l_q_d8zgfto?list=PL9MdiVgAbTMlyo94hKop2iq_V2YYMayc g

JamesFague
20th September 2014, 08:03 PM
Mr C K one more melody for you. Enjoy the beautiful number and a pleasant one.



http://youtu.be/KqpIIaCJggY?list=PLA0F2FCE7DECCABFA

vasudevan31355
20th September 2014, 08:56 PM
கிருஷ்ணா சார்,

மரபின் மைந்தன் எழுதிய 'ரோஜாவின் ராஜா' 'ஜனகனின் மகளை மணமகளாக இராமன் நினைத்திருந்தான்' பாடல் ஆய்வைப் படித்தேன். நன்றாக இருந்தது. பாடல் நன்கு அலசப்பட்டிருந்தது. ஆனால் பாடலை ரசித்த மைந்தன் மரபை சற்று மறந்து நடிப்பின் தந்தையை மறந்து விட்டது சற்றே வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்த பாடல் சிச்சுவேஷனுக்கு எப்படி நடித்தால் அப்பாடல் இன்னும் சிறப்பாக அமையும் என்று நடிகர் திலகம் நன்றாக யோசித்து நடித்திருப்பது நமக்கு நன்கு புலப்படும். பேச நா எழாமல் போய், பேய் அறைந்தாற் போல எவ்வித சலனமுமின்றி அப்படியே கற்சிலை போல் அமர்ந்து, பார்வையை ஒரே இடத்திலேயே பார்த்து வெறித்தபடி, ஒரு வினாடியில் வாழ்க்கையையே இழந்துவிட்ட கோலத்தை, சோகத்தைக் காட்டும் பரிதாபமான அந்த பாத்திரம். அந்த 3 நிமிட நேரத்தில் பாடலைப் பார்ப்பவர்கள் இதயங்கள் அனைத்தையும் ஒருசேர கனக்க வைக்கும் கதாபாத்திரம். குய்யோ முய்யோ என்று கத்தாமல், அழுது புலம்பாமல், கண்ணீர் வடிக்காமல், எரிச்சலை வெளிப்படுத்தாமல் நம் தலைவிதி இதுதான் போல என்று உணர்ந்து, நொந்து, சலனமில்லாமல் இந்தக் காட்சியில் நடித்து... இல்லை இல்லை... தப்பு... வாழ்ந்து காட்ட ஒரே ஒரு ஜீவன்தான் உலகில் உண்டு.

வாணிஸ்ரீ நன்றாக ஸ்கோர் பண்ணியிருந்தாலும், 'மெல்லிசை மன்னர்' பிரித்து மேய்ந்தாலும், கவிஞர் கரை கண்டிருந்தாலும், சுகுமாரி அற்புதமாய் சமாளித்தாலும், (வாணிஸ்ரீயையும் சேர்த்து) சுசீலாம்மா இதயத்தில் ஊடுருவினாலும் வழக்கம் போல வெற்றிக்கொடியை வானளாவ இங்கேயும் பறக்க விடுவது எங்கள் நடிகர் திலகமே!

அந்த முகத்தின் பிரதிபலிப்புகளை இங்கே கவனியுங்கள்.

கிருஷ்ணா சார்,

நீங்கள் கேட்டதும் இதிலேயே அடங்கிவிடும்.(பாடலின் இடையே வரும் விசில் சப்தங்களுக்கு நடிக மாமன்னரின் முகபாவங்கள்) (உதடு கடித்த பாவம் முதலிடம் பெறும். உதடு சுழித்தது அடுத்து).


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355015/RojavinRajaFullMoviePart7-YouTubemp4_000546896.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355015/RojavinRajaFullMoviePart7-YouTubemp4_000546896.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355015/RojavinRajaFullMoviePart7-YouTubemp4_000550020.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355015/RojavinRajaFullMoviePart7-YouTubemp4_000550020.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355015/RojavinRajaFullMoviePart7-YouTubemp4_000623881.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355015/RojavinRajaFullMoviePart7-YouTubemp4_000623881.jpg.html)

rajeshkrv
20th September 2014, 10:48 PM
வாசு ஜி,

அருமை அருமை

எஸ்.வி ஜி,
படங்கள் அருமை

madhu
21st September 2014, 04:45 AM
madhu: I did not forget your 'green tea' comment. Next time I will bring you a can (tin) of green tea bags instead of Godiva chocolates! :lol:
vathiyarayya.. Green tea OK... But இங்கிலீஷில் எனக்கு பிடிக்காத வார்த்தை "instead". அதனால் 50-50 வச்சுக்கலாம் :)


Rajesh: ippadi pOttu udaikkalaamaa? :lol: May be, next time I will take ''Red pepper chocolate" and see what happens! :)
I will consider ginger chocolate also !

ethukkaagavum Godiva-vai vittu kodukka maatten.

madhu
21st September 2014, 05:22 AM
http://i60.tinypic.com/2yv0yli.jpg

esvee sir..

மனோரமாவின் ஒரு பாடல். படம் மறந்து போச்சு. கடவுள் மாமா ரிலீஸ் ஆன சமயம் என்று நினைவு.
உடன் பாடியது ஏ.எல்.ராகவன் என்று நினைவு. படத்தில் தேங்காய் சீனிவாசன்.

திக்கு வாய் மனைவியாக வந்து கணவனை அடித்துத் திருத்தும் காட்சி.. பாட்டு இப்படி போகும்

"முத்தழகு முத்தழகு முன்னழகு முத்தழகு
சத்துணவு சத்துணவு காதலுக்கு சத்துணவு

( முத்தழகு )

போன பிறப்பில் நீயும் நானும் லைலா மஜ்னு ஆனோம்
கண்ணே லைலா..
ம..ம..மச்சான் மஜ்னு
போன பிறப்பில் நீயும் நானும் லைலா மஜ்னு ஆனோம்
புத்தி மாறி காதலாலே பை..பை..பை..
(கஷ்டம்.)
பைத்தியமாகி போனோம்
ஆமா.. பைத்தியமாகி போனோம்
மானே உன்னை சாவில் கூட பிரியவில்லை நானே
எங்கு போனபோதும் உன்னைத் தொடர்ந்து வரவில்லையா நானே

( முத்தழகு )

அம்பிகாவதி அமராவதி உள்ளம் நமக்கு இருக்கு
அற்பாயுசில் முடிந்த காதல் கற்பனை இன்னும் எதுக்கு
அடிக்கிற கை அணைக்கும் என்று தெரியுமம்மா எனக்கு
தொட்டு அணைக்கிற கை அடிக்கும் என்னும் நினைப்பில்லையா உமக்கு

( முத்தழகு )

கடைசியில்.. ஒவ்வொரு சத்துணவுக்கும்.. ஒரு டிஷ்யூம்..

யாருக்காவது இந்தப் பாடலைப் பற்றிய விவரங்கள், லிங்க் தெரிந்தால் ஷேர் செய்யுங்க ப்ளீஸ்..

madhu
21st September 2014, 05:37 AM
வாசு,

செல்ல பிள்ளை ஒரு வித்தியாச படம். இதில் ஒரு காமெடி பாடல்.குண்டு பசவப்பா கரி பசவப்பா கண் மூடி தூங்கப்பா என்று..டி.எம்.எஸ் பாடுவார்.

கோபால் ஜி..
அதுதான் டி.எம்.எஸ்ஸும் சுசீலாவும் சேர்ந்து பாடிய முதல் பாடல் ( டூயட் இல்லை ) என்று கேள்விப்பட்டேன்.

கோவில் காளை நீ பாப்பா.. குண்டு பசவப்பா
கோமாளி குட்டிப் பாப்பா.. கண் மூடி தூங்கப்பா..
என்று ஆரம்பிக்கும்.

ஜமீன்தார் ஜாவர் சீதாராமன் தன்னை சிறு குழந்தையாக எல்லோரும் எண்ண வேண்டும் என்று சொல்லிக் கொண்டு தூளியில் படுத்து ஆடி மற்றவர்களைப் பாடச் சொல்லுவாராம்...

அணுகுண்டு போட்டாலும் அஞ்சாத இளஞ்சிங்கம்
துளியூண்டு கடுகைக் கண்டால் துள்ளியே பயந்தோடும்...

vaasudevan ji, gopal ji
thanks for bringing back the song in my mind... :)

Gopal.s
21st September 2014, 07:41 AM
சுனில் என்பவரின் ஆங்கில பதிவு.

ARR(திலிப்) detractors could possibly be enjoying KT secretly but with I that have found an opportunity spew again in no time.
ARR (திலிப்) detractors are at it again! ARR(திலிப்) is forever evolving but has had to pay the price of it in between. He has maintained and increased his popularity over the last two decades which collates and proves the his struggle. There's no need for futile strifes, we appreciate the truth might hurt you detractors but your insecurities are backed by more and more bizarre statements now. I pray you get justice for what you think you are trying to achieve. Time willing you shall see the light at the end of the tunnel. Other than that, you can carry on tagging him as a mere keyboard player, computer wizard and other silly and amusing names. ARR(திலிப்) moving with times cannot be bracketed as aping styles to maintain his stronghold in today's music scene. If you fail to acknowledge his inventions than it only proves that you haters will always hate .

ரகுமானிடம் (திலிப்) என்னை கவர்ந்த அம்சமே அதுதான்.1990 களில் அவர் பாணியே மூன்று பத்தாண்டுகள் அவருக்கு comfort Zone கொடுத்து முதல் ஸ்தானத்திலேயே நிறுத்தியிருக்கும். அவர் மாறி ,மாறி புதுசாக ஏதேனும் செய்ய சோதனை செய்து ,மேற்செல்கிறார்.எவ்வளவு பெரிய ரிஸ்க் !!!??? அவரை தொடரும் நல்ல இசை ரசிகனான (புதுமைகளை வரவேற்கும் மெர்சலான இள மனம்)எனக்கே பல முயற்சிகள் கவராத போதும் தொடர்கிறார். பிறகு பயணங்கள் முடிவுற்ற பின்னும் பொன் வசந்தம் இருப்பதாக நம்பி அதே ஜல்லியடிப்பை தொடரும், ஓய்வு பெற்ற பின்பும் பணத்திற்கு ஏங்கும் பழைய குமாஸ்தா மனநிலை கொண்ட இசையமைப்பாளர்கள் மத்தியில், ரகுமான்(திலிப்) உச்சத்தில் உள்ள போதே தன்னை மாற்றி புதுப்பிப்பது வரவேற்க தக்கதே.

rajraj
21st September 2014, 09:59 AM
vathiyarayya.. Green tea ok... But இங்கிலீஷில் எனக்கு பிடிக்காத வார்த்தை "instead". அதனால் 50-50 வச்சுக்கலாம் :)



ethukkaagavum godiva-vai vittu kodukka maatten.

ok. 50-50 ! :)

rajeshkrv
21st September 2014, 10:43 AM
Mr C K Thanks for remembering me. Now the melody king Dr K J Yesudoss song for you.

Enjoy.
http://youtu.be/l_q_d8zgfto?list=PL9MdiVgAbTMlyo94hKop2iq_V2YYMayc g

My fav song

"aaj se pehle aaj se zyada kushi aaj tak nahin mili "

aaha aaha .. eppo anthaksharinnalum idhu thaan paaduven ... my all time fav

chinnakkannan
21st September 2014, 01:11 PM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்.. ஹாப்பி ஞாயித்துக் கிழமை..

ஏ.எம்.ராஜா நினைவு..

அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ

இதயம் என்பது ஒரு வீடு அன்றும் இன்றும் அவள் வீடு
அது மாளிகையானதும் அவளாலே பின்
மண் மேடானதும் அவளாலே

ஒரே சோகம் கவ்வும் மனசை கேக்கும் போது.. படம் பார்த்ததில்லை களத்தூர் கண்ணம்மா.

ம்ம் டி.எம்.எஸ்ஸோட சோகம்

கல்யாண மேளங்கள் மணியோசை
என் கவலைக்கு தாளமடி
சொல்லாத எண்ணங்கள் பலகோடி
என் துன்பத்தின் தீபமடி
பெண்ணாக நான் நினைத்த மண் வீடு கரைந்து
தண்ணீரில் போனதடி
என் பட்டம் என் திட்டம் என் சட்டம்
அடி ராக்கம்மா காற்றாக பறந்ததடி

பி.பி.எஸ்ஸோட சோகம்..

என் இதயத்தில் பூட்டிவைத்தேன்
அதில் என்னையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே

பி.சுசீலாவின் சோகம்..

கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே ஆசை வந்தால் நீரிலும் தேனூறும்
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்

நெல்லிலே மணியிருக்கும் நெய்யிலே மணமிருக்கும்
பெண்ணாகப் பிறந்து விட்டால் சொல்லாத நினைவிருக்கும்
சொல்லாத நினைவிருக்கும்
தன் சிறகை விரித்தாளே

சீர்காழி கோவிந்த ராஜனின் சோகம்..

கண்ணிலே நீரெதற்கு ஹோய் காலமெல்லாம் அழுவதற்கு
நெஞ்சிலே நினைவெதற்கு...

எல்.ஆர்.ஈஸ்வரியின் சோகவரியா தெரியவில்லை

உனது மலர் கொடியிலே
எனது மலர் மடியிலே
உனது நிலா விண்ணிலே
எனது நிலா கண்ணிலே

ம்ம் போங்க ஒரே சோகமா இருக்கு யாருமில்லாம..வாங்க வாங்க :)

Richardsof
21st September 2014, 01:25 PM
என்னை மறந்ததேன் தென்றலே
இன்று நீ என்னிலை சொல்லிவா
காற்றோடு வளரும் சொந்தம்
காற்றோடு போகும் மன்னவா
கண்ணோடு மலரும் அன்பு
கனியாக மாறாதோ

கலையாத காதல் நிலையானதென்று
அறியாமல் சொல்லிவைத்தாயோ -
உன்னைஅறியாத பெண்ணின் மனவாசல் கண்டு
திறவாமல் எங்கே சென்றாயோ

நிழலான தோற்றம் நிஜமானதென்று
நீயாளும் நாளும் வருமோ - இந்த
நிலமாளும் மன்னன் நீயானபோதும்
நானாளும் சொந்தம் இல்லையோ

கண்டாலும் போதும் கண்கள்
என் ஆவல் தீரும் மன்னவா
சொன்னாலும் போதும் நெஞ்சம்
கனியாக மாறாதோ(என்னை)

Richardsof
21st September 2014, 01:26 PM
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ


பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
சென்ற இடம் காணேன்
சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்
சென்ற இடம் காணேன்
சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்


கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ


நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே


கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ

Richardsof
21st September 2014, 01:31 PM
Just recall- 1960 onwards ....

1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்


அடுத்த வீட்டுப் பெண்
அன்புக்கோர் அண்ணி
ஆட வந்த தெய்வம்
ஆளுக்கொரு வீடு
இரும்புத்திரை
அவன் அவனேதான்
இருமனம் கலந்தால் திருமணம்
உத்தமி பெற்ற ரத்தினம்
எங்கள் செல்வி
எல்லோரும் இந்நாட்டு மன்னர்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
கடவுளின் குழந்தை
களத்தூர் கண்ணம்மா
கவலையில்லாத மனிதன்
குறவஞ்சி
குழந்தைகள் கண்ட குடியரசு
கைராசி
கைதி கண்ணாயிரம்
சவுக்கடி சந்திரகாந்தா
சங்கிலித்தேவன்
சிவகாமி
சோலைமலை ராணி
தங்கம் மனசு தங்கம்
தங்கரத்தினம்
தந்தைக்குப்பின் தமையன்
திலகம்
தெய்வப்பிறவி
தோழன்
நான் கண்ட சொர்க்கம்
பக்த சபரி
படிக்காத மேதை
பாக்தாத் திருடன்
பார்த்திபன் கனவு
பாட்டாளியின் வெற்றி
பாதைதெரியுது பார்
பாவை விளக்கு
புதிய பாதை
பெற்ற மனம்
பெற்றவள் கண்ட பெரு வாழ்வு
பொன்னித் திருநாள்
மகாலட்சுமி
மன்னாதி மன்னன்
மீண்ட சொர்க்கம்
யானைப்பாகன்
ரத்தினபுரி இளவரசி
ராஜபக்தி
ராஜா தேசிங்கு
ராஜமகுடம்
ரேவதி
விஜயபுரி வீரன்
விடிவெள்ளி
வீரக்கனல்

Richardsof
21st September 2014, 01:46 PM
http://youtu.be/BfxTiJtDgTs

chinnakkannan
21st September 2014, 02:08 PM
//ராஜா தேசிங்கு// இது எம் ஜி ஆர் படம் தானே எஸ்.வி சார்..சமீபத்தில் ஒரு பாட்டு க்கேட்டேன் மறந்து போய்டுச்சு..எஸ் எஸ் ஆர் பத்மினி - ராஜா தேசிங்கு என்று போட்டதாக நினைவு..

vasudevan31355
21st September 2014, 02:43 PM
வணக்கம் வினோத் சார்/ சின்னக்கண்ணன் சார்.

அருமையான பாடல்களுக்கு நன்றி!

சி.க.சார்,

என்ன பிள்ளை சோகத்தில் ஆழ்ந்து விட்டது?

இன்றைக்கு சண்டே இல்லையா? கிருஷ்ணா சாருக்கு லீவ். நான் முதல் ஷிப்ட் முடிச்சுட்டு இப்பதான் வந்தேன். அதான் யாரும் இல்லாம பிள்ளை அழுதுடிச்சா? அதுக்குள்ள எஸ்வி வந்துட்டாரே! செல்லம். அழப்படாது.

madhu
21st September 2014, 02:54 PM
//ராஜா தேசிங்கு// இது எம் ஜி ஆர் படம் தானே எஸ்.வி சார்..சமீபத்தில் ஒரு பாட்டு க்கேட்டேன் மறந்து போய்டுச்சு..எஸ் எஸ் ஆர் பத்மினி - ராஜா தேசிங்கு என்று போட்டதாக நினைவு..

http://youtu.be/8uWQnL-xrec

chinnakkannan
21st September 2014, 02:59 PM
//இன்றைக்கு சண்டே இல்லையா? கிருஷ்ணா சாருக்கு லீவ். நான் முதல் ஷிப்ட் முடிச்சுட்டு இப்பதான் வந்தேன். அதான் யாரும் இல்லாம பிள்ளை அழுதுடிச்சா? அதுக்குள்ள எஸ்வி வந்துட்டாரே! செல்லம். அழப்படாது.// வாங்க வாசு சார் :) ரெஸ்ட் எடுத்துக்கிட்டு வாங்க.. ( நாங்க வெள்ளி சனில்ல (எங்க லீவ் நாள்) தான் நிறைய இங்க ஒர்க் பண்ணுவோமாக்கும் :))

மதுண்ணாவ்.. தாங்க்ஸ்.. வனமேவும்ராஜ குமாரா..பாட்டு அப்படியே வரிவராமல் மனதைக் குடைந்து கொண்டிருந்தது..அப்படியே அந்த டினா முனிம் அமோல் பலேகர்..தன்ன ஹம்மரதும் ஹ்ம் தும்பம்..டகடக் ..டக்க கரோ என்பது போல் ஒரு பாட்டு அதுவும் எடுத்து விடுங்கோ.. :)

chinnakkannan
21st September 2014, 03:03 PM
சோலைமலை ராணி
தங்கம் மனசு தங்கம்
தங்கரத்தினம்
தந்தைக்குப்பின் தமையன்
திலகம்
பெற்றவள் கண்ட பெரு வாழ்வு
சவுக்கடி சந்திரகாந்தா

இதெல்லாம் கேள்வி ப் படாத படங்கள்.. இந்த தங்கரத்தினம் மட்டும் - ஒன்மேல கொள்ள ஆச உத்தமியே ரத்தினமே சத்தியமாச் சொல்லுறேண்டி தங்கரத்தினமே - இந்த்ப்பாடல் இடம்பெற்ற படமா..

madhu
21st September 2014, 03:04 PM
கொஞ்ச நாள் முன்னாடி இந்தப் பாட்டைப் பற்றி இங்கே பேசப்பட்டது. இன்னைக்கு வசமா வீடியோ சிக்கிக்கிச்சு.

படம் : ராமாயி வயசுக்கு வந்துட்டா
ஜெயச்சந்திரன், ஜானகி

நாலு வகை பூவில் மலர் கோட்டை

http://youtu.be/mZVTWL_s3sk

chinnakkannan
21st September 2014, 03:05 PM
மேனகா நடிச்ச சாவித்ரில கூட ஒரு நல்ல பாட்டு இருக்கே..மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவை..அதுவா..

madhu
21st September 2014, 03:13 PM
மதுண்ணாவ்.. தாங்க்ஸ்.. வனமேவும்ராஜ குமாரா..பாட்டு அப்படியே வரிவராமல் மனதைக் குடைந்து கொண்டிருந்தது..அப்படியே அந்த டினா முனிம் அமோல் பலேகர்..தன்ன ஹம்மரதும் ஹ்ம் தும்பம்..டகடக் ..டக்க கரோ என்பது போல் ஒரு பாட்டு அதுவும் எடுத்து விடுங்கோ.. :)

http://youtu.be/5m2oqxvrpbQ

madhu
21st September 2014, 03:15 PM
மேனகா நடிச்ச சாவித்ரில கூட ஒரு நல்ல பாட்டு இருக்கே..மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவை..அதுவா..

இதுவா ?

http://youtu.be/z6xgMKs-s7A

vasudevan31355
21st September 2014, 04:09 PM
இன்றைய ஸ்பெஷல் (76)

'இன்றைய ஸ்பெஷலி'ல் 'முகத்தில் முகம் பார்க்கலாம்' என்றொரு படத்திலிருந்து அப்போது ஹிட்டடித்து, இப்போது கேட்க இயலாமல் போன ஒரு பாடலைத் திரும்பக் கேட்டு இன்புறலாம்.

http://cdn.raaga.com/r_img/250/t/t0002810-no-cd.jpg

மலேஷியா வாசுதேவன், சுசீலா குரல்களில் ஒலிக்கும் இனிமையான பாடல்தான். சுமித்ராவும், விஜயகுமாரும் ஜோடி சேர்ந்து களித்துப் பாடும் டூயட்.

இந்தப் பாடலைக் கேட்கும்போது ஏதோ இனம் புரியாத மெல்லிய சுகம் நம்முள் படர்வதை உணர முடிகிறது.

இளையராஜாவின் ஆரம்ப கால அட்டகாசங்களில் இதுவும் ஒரு பாடல்.

கம்பீரமாக ஒலிக்கும் மலேஷியாவின் குரல். அதிஇனிமையாக ஒலிக்கும் சுசீலா அம்மாவின் குரல். இசைக்கருவிகள் மிக அழகாக உபயோகப் படுத்தப் பட்டிருக்கின்றன. முக்கியமாக புல்லாங்குழல் இப்பாடலில் அற்புத பங்கு வகிக்கிறது.

விஜயகுமாருடன் இணை சேர்ந்தால் சுமித்ராவுக்கு அப்படி என்ன உற்சாகமோ!

இனி பாடலின் வரிகள்.

ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை
அன்பே ஒருமுறை அணைத்தாய் மறுமுறை
நான் நினைத்து நினைத்து தவிக்கிறேனே
நீ வரும் வரை

ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை

பொங்கி வரும் அலை பூச்சரம் சூட
பூமியை சேர்கின்றது
பொன்னிறம் போய் எழில் வெண்ணிற வானில்
மன்மதன் தேர் வந்தது

மலர்க்கணைகள் விழி வழியே
மது மயக்கம் மொழி வழியே
மாற்றம் இங்கே தோற்றம்
வா இப்போது

ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை
வாழ்ந்திருந்தால் தினம் நானும் உன்னோடு
வாழ்வினைப் பார்த்திருப்பேன்
வாழ்க்கை எல்லாம் சுகம் வளர்வது போலே
நான் உனைச் சேர்ந்திருப்பேன்

கனவுகளே நினைவில் வரும்
நினைவுகளே நிதமும் சுகம்
கண்ணா இன்றும் என்றும்
நான் உன்னோடு

ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை

காலமெல்லாம் உந்தன் காலடி தேடி
காவியம் பாட வந்தேன்

கண் விழித்தால் உன்னைக்
காண்பதைப் போலே
கனவினில் நான் இருந்தேன்

உறவிருந்தால் தனிமையில்லை

தனித்திருந்தால் இனிமை இல்லை

இனிமேல் பிரிவே இல்லை
நாம் ஒன்றானோம்

ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை
அன்பே ஒருமுறை அணைத்தாய் மறுமுறை
நான் நினைத்து நினைத்து தவிக்கிறேனே
நீ வரும் வரை

ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை


http://www.youtube.com/watch?v=vCHrooOEF7M&feature=player_detailpage

gkrishna
21st September 2014, 04:36 PM
இன்றைய ஸ்பெஷல் (76)

'இன்றைய ஸ்பெஷலி'ல் 'முகத்தில் முகம் பார்க்கலாம்' என்றொரு படத்திலிருந்து அப்போது ஹிட்டடித்து, இப்போது கேட்க இயலாமல் போன ஒரு பாடலைத் திரும்பக் கேட்டு இன்புறலாம்.



குட் எவனிங் ஆல்

வீட்டில் இருக்கும் போது சிஸ்டம் கிடைக்க பெரும் அக்க போர் அதனால் தான் பதிவு போட முடியவில்லை . ஆனாலும் நினைவு கூர்ந்த அனைவர்க்கும் நன்றி

வாசு சார்
முகத்தில் முகம் பார்க்கலாம் 'இளசுவின் ஆரம்ப கால அட்டகாசம் ' என்ன ஒரு அருமையான வார்த்தை .உண்மையில் அட்டகாசம் போங்கள் பாடலும் தான்

மது சார்

ராமாயி வயசுக்கு வந்துட்டா பாடலை நினைவு செய்ததற்கு நன்றி
1980 களில் தமில் நாட்டில் தேர்தல் நேரம் 77 தேர்தல் கூட்டணி மாறி விட்டது . அப்போது இந்த படம் அரசியில் வியாதிகள் மன்னிக்கவும் வாதிகள் மேடையில் பலமாக அடிபட்டது. 'ராமாயி வயசுக்கு வந்துட்டா தாலிக்கு தங்கம் எங்கே - அப்படின்னு ஒரு வசனம் .பதில் 'இப்போது தானே வயசுக்கு வந்துருக்கா .கல்யாணம் போது பார்க்கலாம் ' இப்ப அவள் கிழவியாகி செத்து போயிருப்பா ஆளும் கட்சி எதிர கட்சி யாராவது தங்கம் கொடுதாங்களானு தெரியவில்லை :)

gkrishna
21st September 2014, 04:38 PM
சி கே சார் /மது சார்
மேனகாவின் நல்ல டூயட்
நெற்றிக்கண் 'ராமனின் மோகனம் ஜானகி மந்திரம் ' மொட்டையின் ஆரம்ப கால அட்டகாசம் . அதே மாதிரி 'பாச மலரே அன்பில் விளைந்த வாச மலரே ' பாடகர் திலகம் நடிகர் திலகம் கலக்கும் அமரனின் அற்புதம்

http://www.cineshots.in/images/photos/images/menaka.jpg

gkrishna
21st September 2014, 04:42 PM
சைவம் படத்தைத் தொடர்ந்து விஜய் இயக்கும் புதிய படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்பது தெரிந்த செய்தி. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இவர் மலையாள நடிகை. ஒரு சில மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் கதாநாயகி நடிகையாக அறிமுகமான படம் கீதாஞ்சலி. பிரபல இயக்குநர் பிரியதர்சன் இயக்கியிருந்த இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்திரந்தார் கீர்த்தி. அடுத்து கீர்த்தி சுரேஷ் நடித்த படம் ரிங்மாஸ்டர். இதில் திலீப்புக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்தப் படங்களை தொடர்ந்தே விஜய் இயக்கும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவிருக்கிறார். இந்த கீர்த்தி சுரேஷ் யார் தெரியுமோ? பிரபல நடிகை மேனகாவின் மகள். எண்பதுகளில் வெளியான ராமாயி வயசுக்கு வந்துட்டா, நெற்றிக்கண் உட்பட பல தமிழ்ப் படங்களில் நடித்தவர்தான் மேனகா. தமிழ்ப்படங்களின் வாய்ப்பு குறைந்ததும் மலையாளப் படங்களில் கவனம் செலுத்திய மேனகா, மலையாளப்படத் தயாரிப்பாளர் சுரேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு கேரளாவிலேயே செட்டிலானார். சுரேஷ் - மேனாகா தம்பதியின் மகள் கீர்த்தி அம்மா மேனகாவைப்போலவே தற்போது கதாநாயகியாகி இருக்கிறார்.
http://2.bp.blogspot.com/-wOtuVWiJldc/U-0m3UJ4TKI/AAAAAAAANUM/Xju3gVFXWVk/s1600/Keerthy-Suresh.jpg

gkrishna
21st September 2014, 04:46 PM
dear esvee sir

உங்கள் சோகத்தை போக்கும் பாடல்கள் நிச்சயம் சின்ன கண்ணன் அவர்களின் சோகத்தை போக்கி இருக்கும் .நல்ல பாடல்கள் selection

Richardsof
21st September 2014, 05:08 PM
Thanks krishna sir

காதலனின் ஏக்கப்பாடல்கள் பல வந்துள்ளது என்றாலும் என்னுடைய விருப்பமான ஏக்க பாடல்கள் .

1. எங்கே அவள் ...என்றே மனம் ... தேடுதே ஆவலாய் ...

2. பவள கொடியிலே முத்துக்கள் ..........

3. காற்று வாங்க போனேன் ...ஒரு கவிதை .....

4, யார் அந்த நிலவு ...ஏன் இந்த கனவு

5, ஒரே பாடல் உன்னை அழைக்கும் .....

6. நான் உன்னை அழைக்கவில்லை ...என் உயிரை

7. அன்பே வா உள்ளம் என்றொரு கோயிலிலே .....

8. ஆயிரம் நிலவே வா ..ஓராயிரம் நிலவே வா

9. பாட்டுக்கு பாட்டெடுத்து ..நான் பாடியதை ..

10. நேற்று பறித்த ரோஜா .. நான் பார்த்து ....

இனி நண்பர்கள் தொடரலாம் .......

vasudevan31355
21st September 2014, 06:27 PM
மாலை மதுரம் (3)

http://i.ytimg.com/vi/qlnpuXG2I1A/movieposter.jpg

ஏ.எம்.ராஜா ஜிக்கி இணைந்து பாடும் அருமையான பாடல். 1956 ஆம் ஆண்டு வெளியான 'ஆசை' திரைப்படப் பாடல். என் மனம் கவர்ந்த பாடல் இந்தியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும். மருதகாசியின் பாடலை ஜிக்கி ராஜாவுடன் சேர்ந்து பாட, இசை அமைத்தது டி .ஆர்.பாப்பா. ஜெமினி, பத்மினி இணைந்து இப்பாடலில் நடித்துள்ளனர். பாடலுக்கான செட்டிங்கும், பத்மினியின் மயக்க வைக்கும் ஆழகும், ஆடையும் பிரமாதம். ஜெமினி கம்பீரம் மிஸ்ஸிங். சொதப்பல்.

'ஆசை பொங்கும் அழகு ரூபம்'

http://i.ytimg.com/vi/wbNRK_DchYE/0.jpg

ஜிக்கி : ஆசை பொங்கும் அழகு ரூபம்
ஆசை பொங்கும் அழகு ரூபம்

ராஜா : அணைந்திடாத அமர தீபம்...யாரோ

ஜிக்கி : ஆசை பொங்கும் அழகு ரூபம்

ராஜா: அணைந்திடாத அமர தீபம்...யாரோ

ஜிக்கி : ஆ...

ராஜா: ஆ...

சிங்கார வதனம் மங்காத நிலவோ

ஜிக்கி : தெய்வீக தோற்றம் திருமாறன் வடிவோ

சிங்கார வதனம் மங்காத நிலவோ

ஜிக்கி : தெய்வீக தோற்றம் திருமாரன் வடிவோ

ராஜா: மங்கை அங்கம் மது ஊரும் மலரோ

ஜிக்கி : பொங்கும் கடலில் உண்டான அமுதோ...யாரோ

ராஜா: மங்கை அங்கம் மது ஊரும் மலரோ

ஜிக்கி : பொங்கும் கடலில் உண்டான அமுதோ

ஆசை பொங்கும் அழகு ரூபம்

ஜிக்கி, ராஜா: அணைந்திடாத அமர தீபம்...யாரோ

ராஜா: சுந்தரி :

ஜிக்கி: சேகர்

ஜிக்கி : ஆ.. ஆ

ராஜா: ஆ...ஆ

ராஜா : கண்ணே உன் கன்னம் கண்ணாடி தானோ

ஜிக்கி : அன்பான மொழியே சுவை ஊரும் தேனோ

ராஜா: கண்ணே உன் கன்னம் கண்ணாடி தானோ

ஜிக்கி : அன்பான மொழியே சுவை ஊரும் தேனோ

ராஜா: இன்பம் நீதான் என் ஆசை ராணி

ஜிக்கி: எல்லாம் நீதான் என் ஆசை ராஜா

ராஜா : இன்பம் நீதான் என் ஆசை ராணி

ஜிக்கி : எல்லாம் நீதான்


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=wbNRK_DchYE

chinnakkannan
21st September 2014, 06:28 PM
//ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை
அன்பே ஒருமுறை அணைத்தாய் மறுமுறை
நான் நினைத்து நினைத்து தவிக்கிறேனே
நீ வரும் வரை // கேட்டிருக்கேன்னு நினைக்கறேன் வாசு சார் ..ஹோம் ஒர்க் பண்ணித் தான் சொல்லணும் நல்ல பதிவு..

மதுண்ணா கேட்டதும் கொடுப்பவரே கிருஷ்ணா கிருஷ்ணா - ஹிந்திப்பாட்டு, மழைக்காலப் பாட்டு நாலுபுறம் கோட்டை பாட்டு ஆல்க்கும் நன்றி :) வனமேவும் ராஜ குமாரியில் கொஞ்சம் மிக அழகாகபத்மினி இருப்பார் என என் தாத்தா சொல்லியிருக்கிறார்..:)

கிருஷ்ணா ஜி வாங்க வாங்க..உங்களுக்கும் வாசு சாருக்கும் என்ன வித்யாசம்.. அவர் இ.கா படங்கள் கொடுப்பார் நீங்கள் இ.கா தலைமுறையின் படம் போடுவீர்கள்..:) என்று ஆன்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள்..

எஸ்வி சார் நினைக்கத் தெரிந்த மனமே தான் டபக்குன்னு வருது கண்ணுக்குள்ற..அப்றம் வர்றேன்

vasudevan31355
21st September 2014, 06:44 PM
1955 இல் வெளியான 'jhanak jhanak payal baje' படத்தில் ஹேமந்த் குமாரும், லதாஜியும் பின்னி எடுத்த 'nain so nain nahi milao' பாடல்தான் நான் 'மாலை மதுர'த்தில் மேலே கொடுத்துள்ள 'ஆசை' படத்தின் தமிழ்ப் பாடலாக மாறியுள்ளது. இந்தியில் நம்ம கோபி கிருஷ்ணாவும், சந்தியாவும் காதலர்கள். ரதி, மன்மதன் போல இருவரும் ஆடுவது அருமை. இசை வசந்த் தேசாய். இயக்கம் V.சாந்தாராம்.

இதையும் பார்த்து களியுங்கள். ஏனென்றால் இது வண்ணம். படப்பிடிப்பு, லொகேஷன்கள் அருமை.


http://www.youtube.com/watch?v=jX7m86CMDIg&feature=player_detailpage

madhu
21st September 2014, 09:12 PM
அருமையான நீயா நானா - நடிகர் திலகம் ஸ்பெஷல் - விஜய் டி.வி.யில் ஸ்டார்ட் ஆகி ஓடிக்கிட்டு இருக்கு..

புருவத்தை வளைத்து நம்ம நண்பர் பேசியதைக் கேட்டுக் கொண்டே இதை பதிவு செய்கிறேன். மத்ததெல்லம் அப்பாலிக்கா கண்டுக்குறேன்.

rajraj
21st September 2014, 10:41 PM
karam chaaya karam chaaya
orNaathan vaayyaa
saappittu poyyaa

http://www.youtube.com/watch?v=d0LPCtsxwmo

When I was in 9th and 10th standards ( 4th and 5th forms)(1951-53) I had to walk a mile to school. At the end of the day I used to feel a little hungry. To gain some energy to walk back I used to stop by the tea stall (tea kadai) near the school and have one aamai vadai and a glass of tea. The glass of tea was mukkaalaNaa (3/4 anna). Otherwise it was a Parrys chocolate for half anna( araiyaNaa) from the pettikkadai near the tea stall.

In this song it is one anna (oraNaa). :)

Not sure what it costs now. May be 10 rupees?





.......

vasudevan31355
21st September 2014, 11:26 PM
அமர்க்களமான விஜய் தொலைக்காட்சியின் 'நீயா நானா'? உணர்ச்சிப் பெருக்கில் உருகிய ரசிகர் கூட்டம். சின்னத் திரையில் மட்டுமல்ல. ஒவ்வொரு சிவாஜி ரசிகனும் உணர்ச்சிகள் மேலிட தாரை தாரையாய் கண்ணீர் வடித்தான்.

இறந்த போது கூட நான் அழவில்லை. இன்று என்னையுமறியாமல் தேம்பித் தேம்பி அழுதேன். என் தெய்வத்தின் இடத்தை நிரப்ப யார்? ஒவ்வொரு குடும்பத்திலும் பாசம் விதைத்த அந்த நடிப்பு உழவன் ஒவ்வொரு நெஞ்சத்திலும் தெரிந்தோ தெரியாமலோ அந்தக் குடும்பத்தில் ஒருவனாக வாழ்கிறான் என்பதுதான் 'நீயா நானா' இன்று உலகத்திற்கு உணர்த்திய உண்மை. நன்றி விஜய் தொலைக்காட்சிக்கு. பங்கு கொண்ட தலைவரின் அன்பு ரசிகர்களுக்கு. நடிகர் திலகத்தை அன்பாய்க் காதலித்த அன்பு சகோதரிகளுக்கு.

நன்றி ராகவேந்திரன் சார், முரளி சார், கிருஷ்ணா சார் மற்றும் சந்திர சேகரன் சார்.


இதோ 'நீயா நானா' முடிந்த சூட்டோடு சூடாக அதில் பங்கு கொண்ட நமது அன்பு ஹப்பர்கள்.

ராகவேந்திரன் சார்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/MP2_Sep21_210025_0mpg_001229847.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/MP2_Sep21_210025_0mpg_001229847.jpg.html)

முரளி சார்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/MP2_Sep21_210025_0mpg_001057212.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/MP2_Sep21_210025_0mpg_001057212.jpg.html)

கிருஷ்ணா சார்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/MP2_Sep21_210025_0mpg_000485771.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/MP2_Sep21_210025_0mpg_000485771.jpg.html)

சந்திர சேகரன் சார்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/MP2_Sep21_210025_0mpg_001155882.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/MP2_Sep21_210025_0mpg_001155882.jpg.html)

chinnakkannan
21st September 2014, 11:44 PM
நானும் பார்த்தேன் வாசு சார்.. முதல் முக்கால் மணி நேரம் பார்க்க இயலவில்லை..வெளியில் சென்றிருந்ததால்... நல்ல ஒரு ஷோ.. பல நினைவுகளைத் தூண்டியது..அன்பு நண்பர்களின்படமிட்டமைக்கு நன்றி..

பெண்பார்க்க வந்த மாப்பிள்ளையை சிவாஜியின் சாயல் இருப்பதாகக் கூறிய பெண்மணி.. நீங்க ஏதோ கேள்விலாம் கேட்டுடுவீங்களோன்னு 4 நாள்ல முப்பத்தஞ்சு படம் பார்த்தேன் டிவிடி காரன் கூட என்ன இந்தம்மா இப்படிப் பண்ணுதுன்னு பார்த்தான் – என்றது.. மூக்கு சிந்தரதக் கூட அழகா ப் பண்ண முடியுமாங்க –அதே பெண்மணியா வேறு நபரா..

தொழிலாளிகள் எல்லாம் படம் பார்த்தாங்க..ஆனா முதலாளியா நடிச்ச சிவாஜியோட ஒரே சைகையில மனமகிழ்ந்துட்டாங்க..

தாய்க்கு ஒரு தாலாட்டு ரிலீஸீங்க..கல்யாணம் அப்பதான் கட்டி மறுவீடு போனேன்..அதக் கூட மறந்துட்டு படத்துக்குப் போனேனா இவன் எங்க பார்த்துக்குவான் பொண்ணன்னு கலாட்டா ஆச்சு

சேரன் செங்குட்டுவன் வசனத்தை மூச்சுவிடாமல் பேசிய தாடிக்கார மனிதர்..
அந்த சிகரெட் பிடிக்கறதுகூட ஒரு நேர்க்கோட்டில இருக்கும் – ஊட்டி வரை உறவு பற்றி ஒரு வாலிபர்.. உடனே கோபிநாத் ஸ்டேட்ஸ்மென் என்கிற ஆங்கிலப் பத்திரிகையில் கூட இதைப் பற்றி வந்திருந்தது என்றார்..

பாசமலர் எப்ப ப் பார்த்தாலும் அழுதுடுவேன்..

ம்ம் எனக்கு சிவாஜி மாதிரி புருஷன் கிடைக்காதான்னு இருந்துச்சு – சொன்ன மூதாட்டி

வசந்த மாளிகை..ஆஹா லதான்னு ஒரு பொண்ணக் காதலிச்சுக்கிட்டிருந்தசமயம் அது..என்று ஆரம்பித்த ரசிகர்..

வசந்த மாளிகையா எத்தன தடவ பார்த்திருக்கேன் நு கணக்கே இல்லை என்று சொன்ன ரசிகர்கள்..
ம்ம்.. நன்றாக இருந்தது ஷோ.. நானெல்லாம் தம்மாத்தூண்டு ரசிகன் தான் என உணரவும் வைத்தது..

RAGHAVENDRA
21st September 2014, 11:57 PM
வாசு சார்
தங்களுடைய அன்பிற்கு என் உளமார்ந்த நன்றி. உடனுக்குடன் நம் நண்பர்களின் நிழற்படங்களைப் பதிவிட்டு தங்களுடைய சிறப்பை உணர்த்திவிட்டீர்கள்.

இன்றைய விஜய் டி.வி. நடிகர் திலகம் ஸ்பெஷல் நீயா நானா ஒரு பார்வையாளன் என்ற முறையில் பார்த்தால் நிச்சயம் பாராட்டத் தக்கதாய் இருந்தது. நாங்கள் அன்று ஏமாற்றமாக உணர்ந்தது வாஸ்தவம் தான். ஆனால் ஒரு பார்வையாளனாக சரியான முறையில் இந்நிகழ்ச்சி இன்று அமைந்திருந்தது. குறிப்பாக இயக்குநர் சார்லஸ் அவர்களுக்கு முழு பாராட்டும் சேர வேண்டும். We have to rediscover நடிகர் திலகம் என்று அவர் கூறிய போதும் பேராசிரியர் ராமசாமி ஸ்லானிஸ்லாவ்ஸ்கியைப் பற்றிப் பேசும் போதும் நான் கோபாலை பெரிதும் மிஸ் பண்ணி விட்டோம், இந்நிகழ்ச்சியில் அவர் இல்லாமலே போய் விட்டாரே என உணர்ந்தேன். முரளி சாரிடமும் சொன்னேன். அதுவும் குறிப்பாக நாம் தொடங்கிய Sivaji School of Acting என்ற அதே சொற்றொடரை கோபிநாத் கூறிய போது ஒரு கணம் நினைத்தேன், நம் மய்யம் திரியிலிருந்து இதை எடுத்திருப்பார்களோ என்று கூட...

அந்த வகையில் பார்த்தால் இந்நிகழ்ச்சி முழு அளவில் வெற்றி பெற்றதோடு மட்டுமில்லாமல் சரியான கோணத்தில் மக்களிடம் நடிகர் திலகத்தைக் கொண்டு சென்றுள்ளது எனத் தான் நான் நினைக்கிறேன். அந்த பெண் ரசிகர்கள் இருவரும் இந்த ஒட்டு மொத்த சிவாஜி ரசிக சமுதாயத்தின் பிரதிபலிப்பாக இன்று என் கண் முன் காட்சியளித்தனர். எந்த அளவிற்கு நடிகர் திலகம் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை இன்றைய தலைமுறை உணர்ந்து கொள்வதற்கு இது சரியான அளவுகோலாகத் தான் எனக்குத் தோன்றுகிறது.

நம்மைப் போன்றவர்களின் யானைப் பசிக்கு எவ்வளவு கிடைத்தாலும் அது சோளப் பொறிதான். ஆனால் நடிகர் திலகம் என்ற ஆளுமையைப் பற்றிக் கூறிய வரையில் இந்நிகழ்ச்சி மறக்க முடியாத நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. குறிப்பாக SIVAJI GANESAN SCHOOL OF ACTING, அவருடைய நடிப்பை மிகை நடிப்பு எனக்கூறுவோருக்கு வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சி மூலம் ஒரு அன்பர் கொடுத்த சவுக்கடி இவை நிச்சயமாக நடிகர் திலகத்தின் புகழுக்கு விஜய் டி.வி. அளித்த நல்ல Tribute எனவே நான் உணர்கிறேன்.

எது எப்படியிருந்தாலும் உலக அளவில் இன்றைய தலைமுறையினரிடையே நடிகர் திலகத்தின் நடிப்பைத் தாண்டி அவருடைய ஆளுமை, அவருக்கு இருந்த இருக்கும் இருக்கப் போகும் ரசிகர்களின் உணர்வு போன்றவற்றிற்கு ஒரு சிவாஜி ரசிகன் என்கிற முறையில் என் மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும்.

madhu
22nd September 2014, 04:27 AM
அருமையான நிகழ்ச்சி. மீண்டும் நிதானமாக யூடியூபில் ரசித்துப் பார்க்க வேண்டும். தாடி இல்லாமல் ராகவ்ஜியை கண்டுபிடிக்க முடியலீங்கோ.. சாரிங்கோ..!
எதிர்பாராத விதமாக என் உறவினர் ஒருவரை அங்கே கண்டேன். ஒரு நல்ல நிகழ்ச்சி மூலமாக நடிகர் திலகம் எனும் வைரத்தின் ஒளியை இன்றைய தலைமுறையின்
இதயத்தில் ஒளிர வைத்த நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கும் பங்கு கொண்டு பூமாலையில் மணம் சேர்த்த மலர்களான நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுகளும் நன்றிகளும்.

venkkiram
22nd September 2014, 05:20 AM
P_r போன்றவர்களும் இதுபோன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தால் காலம் கடந்து இன்றைய தலைமுறையினையும் சிவாஜி எப்படி கவர்ந்து இழுக்கிறார் என்பதை எல்லோரும் கண்டுகளிக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கும்.

rajeshkrv
22nd September 2014, 05:33 AM
நான் நாளை யூடியுபில் தான் பார்க்கவேண்டும்.. பார்த்து ரசித்து எழுதுகிறேன்

Richardsof
22nd September 2014, 05:47 AM
இனிய நண்பர் வாசு சார்

நீயா நானா - நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஒலி பரப்பான '' பொன் மகள் வந்தாள் '' பாடலை அரங்கத்தில் இருந்த அனைவரும் தங்களை மறந்து ரசித்த காட்சி

அவன்தான் மனிதன் - இறுதி காட்சியில் நடிகர் திலகத்தின் மரணத்தை தாங்கி கொள்ள முடியாத சோகம் பற்றி
ஒரு பெண் ரசிகை

படம் வெளியான முதல் தின அனுபவங்களை பகிர்ந்த கொண்ட ரசிகர்களின் வித்தியாசமான அனுபவங்கள்

மையம் திரியின் நண்பர்கள் திரு ராகவேந்திர , திரு கிருஷ்ணா , திரு முரளி , திரு சந்திரசேகர் வீடியோவில்
காணும் வாய்ப்பு

மொத்தத்தில் விஜய் டிவி யின் சிறப்பான நிகழ்ச்சி .

http://youtu.be/Y4WGotsRPSs

Gopal.s
22nd September 2014, 06:19 AM
பம்மலார் அவர்களுக்கு மேலும் நூறாண்டு சிறப்பான வாழ்வு காண வாழ்த்துக்கள். ஆசிகள்.

இவர்தான் மிக சிறந்த சிவாஜி ரசிகர் என்று உணர்ந்தோ ,என்னவோ ,விஜய் டீவீ ,அவர் பிறந்த நாளன்று ,நீயா நானா ஒலி பரப்பியது வெகு பொருத்தம்.

ஒரு தேர்ந்த சிவாஜி பக்தன் என்ற விதத்தில் ஏமாற்றம் அளித்தாலும், ஒரு சராசரி பார்வையாளன் என்ற விதத்தில் பார்த்தால், இந்த நிகழ்ச்சி ,சிவாஜியின் சில சிறப்புகளையாவது ,உணர்வு பூர்வமாக உணர்த்த கூடியதாகவே அமைந்திருந்தது. வாழ்த்துக்கள்.

ராகவேந்தர் சார் ,பிரெஞ்சு தாடி இல்லாமல் ,தங்களிடம் ஏதோ குறைந்தது போல இருந்தது. கிருஷ்ணாவும் ,நீங்களும் சகோதரர்கள் போலவே
தோற்றமளித்தீர்கள்.

ஏனோ, சிவாஜியை பற்றி குறிப்பிடும் போது Stanislavsky பற்றி மட்டுமே பொத்தாம் பொதுவாக பேசுகிறார்கள். அவர் கிட்டத்தட்ட இது போல 10 குறிப்பிடத்தக்க பள்ளிகளின் மொத்த கலவை. என்னை மிஸ் பண்ணியதாக குறிப்பிட்ட ரகவேநதரன் அவர்களுக்கு நன்றி. நானும்தான் மிஸ் பண்ணி விட்டேன்.சில நேரம் எல்லாவற்றையும் உதறி போதும் என்று ஊர் வந்து விடலாமா என்று தோன்றுகிறது.

vasudevan31355
22nd September 2014, 07:29 AM
அன்பு சகோதரர் பம்மலார் அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/RojavinRajaFullMoviePart4-YouTubemp4_000400315.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/RojavinRajaFullMoviePart4-YouTubemp4_000400315.jpg.html)

rajeshkrv
22nd September 2014, 09:09 AM
பம்மலாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்


வாசு ஜி, பி.எம் அனுப்பியுள்ளேன் பாருங்கோ

vasudevan31355
22nd September 2014, 09:44 AM
ராஜேஷ் சார்,

பதில் p.m பார்க்கவும்.

gkrishna
22nd September 2014, 09:48 AM
அன்பு நண்பர் பம்மலர் அவர்களுக்கு இதயம் கலந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் .

அன்பு வாசு சார்

நமது திரியின் அன்பு நண்பர்களை தொலை காட்சியில் கண்டு மகிழ்ந்ததை உடனடியாக படத்துடன் செய்தி வெளியிட்டு சிறப்பித்த உங்கள் பண்பு மெய் சிலிர்க்க வைக்கிறது . தலை வணங்குகிறேன்

ராகவேந்தர் சார் அவர்கள் கருத்துடன் நிறைய உடன்பாடு உண்டு

Richardsof
22nd September 2014, 09:50 AM
http://i57.tinypic.com/15x2wyu.jpg

vasudevan31355
22nd September 2014, 09:54 AM
'நீயா நானா' வில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்து கலந்து கொண்டு நமக்கும், நமது ஹப்பிற்கும் பெருமை தேடித் தந்தவர்களை முதலில் நாகரீகமாக வாழ்த்துவோம் ராஜேஷ்ஜி. அதில் கலந்து கொண்டு சிறப்பித்த நடுத்தர வயது இளைஞர்களையும் மனதார வாழ்த்துவோம்.

gkrishna
22nd September 2014, 09:55 AM
எஸ்வி சார்

அமர்க்களம் எந்த ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம். எந்த நிகழ்ச்சியில்
கொஞ்சம் மேல் தகவல்கள் கிட்டுமா

vasudevan31355
22nd September 2014, 09:56 AM
அத்துணை இசைக் கலைஞர்களையும் ஒரு சேரக் கண்டு களிக்க வைத்த வினோத் சாருக்கு நன்றி!

Richardsof
22nd September 2014, 10:12 AM
வாசு சார்

எந்த ஆண்டு என்று நினைவு இல்லை . அநேகமாக 2001 இருக்கலாம் .புத்தகத்திலும் குறிப்பிடவில்லை .

http://i62.tinypic.com/2rnvf3k.jpg

vasudevan31355
22nd September 2014, 10:12 AM
மதிப்பிற்குரிய ஸ்டெல்லா மேடம்,

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். அனைவரையும் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். நீங்கள் தவறாமல் திரியை வாசித்து வருவது பெரு மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஒரு சிறு வேண்டுகோள். தாங்கள் அடிக்கடி இங்கு பெற வேண்டும். தங்களுக்கு எது விருப்பமாயினும் இங்கு கேட்டுப் பெறலாம். எங்களால் முடிந்ததை தருகிறோம். மது அண்ணா, ராகவேந்திரன் சார், ராஜேஷ் சார், கோபால் சார், கார்த்திக் சார் போன்ற ஜாம்பவான்கள் கலந்து கொண்டு பெருமைப்படுத்தும் திரி இது. இவர்கள் கீழ் பணி புரிவது சொர்க்கத்திற்கு இணையானது. அதை மகிழ்வுடன் நான், எனதருமை கிருஷ்ணா, சின்னக் கண்ணன் சார், கோபு சார், வினோத் சார் மற்றும் அனைத்து நண்பர்களும் செய்து வருகிறோம்.

தங்களைப் போன்றோரின் ஆதரவினால் திரி வெகு விரைவில் மூன்றாம் பாகத்தைப் பிடிக்க உள்ளது. நன்றி!

அடிக்கடி கலந்து கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

vasudevan31355
22nd September 2014, 10:31 AM
மெல்லிசை மன்னர்களை வாழத்தி நடிக மன்னர் பேசுகிறார். அற்புதமான புகைப்படம்.

vasudevan31355
22nd September 2014, 10:35 AM
மதுஜி,

'நாலுவகைப் பூவில்' பாடலை இப்போதுதான் ஆனந்தமாக தங்கள் புண்ணியத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்டு களித்தேன். நன்றி!

chinnakkannan
22nd September 2014, 10:43 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்

ஒரு இனிய ஷோவில்கலந்துகொண்டு இனிமையாக ந.தி பற்றி வழங்கிய இனிய நண்பர்கள் ராகவேந்தர் சார், முரளி சார், கிருஷ்ணா சார், சந்திரசேகர் சார் ஆகியோருக்கு என் இனிய வாழ்த்துக்களுடன் கூடிய நன்றி.. நேற்றே சொல்லியிருக்கவேண்டும் தூக்கக் கலக்கம்..டபக்குன்னு மனசுல இருக்கறத க் கொட்டிட்டு சமத்தா பொசுக்குன்னு சி.குழந்தை மாதிரி தூங்கிட்டேன்..காலைல எழுந்தா தளுக்கு, குலுக்கு கோழைன்னு வசனம் தான் நினைவுக்குவருது..! ( நான் அசல் மதுரைக் காரனாக்கும்..ழ அவ்வளவாய் வராது!)

(அந்தச் சுரிதார் பொண்ணு பாக்க அசப்புல கோடி வீட்டு கோமளாபாட்டியோட பேத்தி மாதிரி இருந்துச்சே..(கண்ணா உன்னைத்திருத்தவே முடியாதுடா)

சுமதி என் சுந்தரியில் பொட்டு வைத்த முகமோ ஷர்ட் என் சகோதரியும் சொல்லியிருப்பதாக நினைவு..

மறுபடியும் யூ.ட்யூபில் பார்க்க வேண்டும் வார இறுதியில்..

ம்ம் நம் நினைவுகள் தொடரட்டுமே..யா இன்னிக்கு

இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே

ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான் ஏனோ ....

எண்ணப்பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா
உன் இமைகளிலே உறக்கம் வர கண்கள் மறுக்கின்றதா


நினைவோ ஒரு பறவை விரிக்கும் தன் சிறகை..

பசுமை நிறைந்த நினைவுகளே..பாடித்திரிந்தபறவைகளே

நெஞ்சினிலே நினைவு முகம் நெஞ்சினிலே நினைவு முகம்
நிலவிலும் தெரிவதும் அழகு முகம் ஆசைமுகம்

ம்ம் நினைவுகள் தொடரட்டும்..அப்புறம் வர்றேன் :)

gkrishna
22nd September 2014, 11:01 AM
dear vaasu sir

ரோஜாவின் ராஜா 'ஜனகனின் மகளை' பாடலை பற்றிய கட்டுரை ஒரு முழுமை பெறாமல் போல் இருந்தது . நடிகர் திலகம் படங்களுடன் நீங்கள் வெளியிட்ட கருத்துகள் அந்த பாடலை முழுமையாக மீண்டும் ஒரு முறை ரசிக்க வைத்தது . எங்கு ஆரம்பித்தாலும் முடிவது என்னவோ நடிகர் திலகத்திடம் தான் என்பது மீண்டும் ஒரு முறை நிருபிக்கபட்டு விட்டது

rajeshkrv
22nd September 2014, 11:12 AM
'நீயா நானா' வில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்து கலந்து கொண்டு நமக்கும், நமது ஹப்பிற்கும் பெருமை தேடித் தந்தவர்களை முதலில் நாகரீகமாக வாழ்த்துவோம் ராஜேஷ்ஜி. அதில் கலந்து கொண்டு சிறப்பித்த நடுத்தர வயது இளைஞர்களையும் மனதார வாழ்த்துவோம்.

கட்டாயமாக. எல்லா நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். கோட்டு போட்ட கோபினாத் உங்களை எல்லாம் பேச விட்டாரா ??

rajeshkrv
22nd September 2014, 11:13 AM
வாசு ஜி

இதோ சகுந்தலையே பாடும் பாடல்

நான் முனி குமாரி எனக்கு காதல் எப்படி தெரியும் நான் எப்படி அதை சொல்வேன் என்ற பொருள் பட இசையரசி ஜமாய்க்கும் பாடல்

http://www.youtube.com/watch?v=pRxGLMhF_R8

vasudevan31355
22nd September 2014, 11:20 AM
மதுஜி,

http://www.thehindu.com/multimedia/dynamic/00005/cptb25_chella_pillai__5521f.jpg

இதோ 'செல்லப் பிள்ளை' படத்தில் நம் சிந்தை கவர்ந்த வித்தியாசமான பாடல் முழு வரிகளுடன். பாடலை ஞாபகப்படுத்திய தங்களுக்கும், கோபாலுக்கும் நன்றி! என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த பாடல். 'ஜாவர்' தொட்டிலில் அமர்ந்து அமர்க்களம் செய்வாராம். ஆனால் விவரமான குழந்தையாம். வட்டிக்கு விட்டு சம்பாதிக்குமோ?! பாடல் அப்படித்தான் அர்த்தமாகிறது. அது என்ன பசவப்பா? கன்னடத்துக் குண்டுக் குழந்தையா?

அது ஒரு பக்கம் இருக்கட்டும். சுசீலா அம்மாவின் குரல் சுட்டிக் குழந்தையின் குரல் போல் தேவார்மிதமாய் காதில் பாய்கிறதே. பாடகர் திலகத்திற்கும் அப்படித்தான்.

அதுவும் ஒவ்வொரு முறை ஆ..ராரோ முடிந்தவுடன் 'கொகைங்க் ...கொகைங்க்' என்று வரும் மியூசிக் அப்படியே நம்மை வாரி அள்ளிக் கொள்கிறதே.

பாடலின் முழு வரிகள்

ஆராரோ ஆராரோ ஆ..ராரோ
ஆராரோ ஆராரோ ஆ..ராரோ

கோவில் காளை நீ பாப்பா
குண்டு பசவப்பா
கோவில் காளை நீ பாப்பா
குண்டு பசவப்பா
கோமாளி குட்டிப் பாப்பா
கோமாளி குட்டிப் பாப்பா
கண் மூடி தூங்கப்பா
ஆராரோ ஆராரோ ஆராரோ

கரிபசவப்பா குண்டு பசவப்பா
கண் மூடி தூங்கப்பா

பாவ புண்ய விவகாரம்
அது பரமசிவன் பாரம்
பாவ புண்ய விவகாரம்
அது பரமசிவன் பாரம்

அது பரமசிவன் பாரம்
அது பரமசிவன் பாரம்

பணம் வட்டி வியாபாரம்
பணம் வட்டி வியாபாரம்
நம்ம பாப்பாக்கு அதுவே போதும்
நம்ம பாப்பாக்கு அதுவே போதும்

ஆராரோ ஆராரோ ஆ..ராரோ

கைராசி உனக்கிருக்கு
கைராசி உனக்கிருக்கு
கடன் கேக்க ஆளிருக்கு
இங்கே கடன் கேக்க ஆளிருக்கு

தாலாட்ட நானிருக்கேன்
தாலாட்ட நானிருக்கேன்
மனம் தளராமே நீ தூங்கு
மனம் தளராமே நீ தூங்கு

ஆராரோ ஆராரோ ஆ..ராரோ
ஆராரோ ஆராரோ ஆராரோ
கரிபசவப்பா குண்டு பசவப்பா
கண் மூடி தூங்கப்பா

அணுகுண்டு போட்டாலும்
அஞ்சாத இளஞ்சிங்கம்
அணுகுண்டு போட்டாலும்
அஞ்சாத இளஞ்சிங்கம்

அஞ்சாத இளஞ்சிங்கம்
அஞ்சாத இளஞ்சிங்கம்

துளியூண்டு கடுகைக் கண்டால்
துளியூண்டு கடுகைக் கண்டால்
துள்ளியே பயந்தோடும்
பாப்பா துள்ளியே பயந்தோடும்
ஆராரோ ஆராரோ ஆ..ராரோ

கரிபசவப்பா குண்டு பசவப்பா
கண் மூடி தூங்கப்பா

எட்டு அஞ்சு வயசிருக்கும்
பாப்பா புட்டியிலே பால் குடிக்கும்
எட்டு அஞ்சு வயசிருக்கும்
பாப்பா புட்டியிலே பால் குடிக்கும்
தொட்டிலிலே தான் தூங்கும்
தொட்டிலிலே தான் தூங்கும்
ரொம்ப கெட்டிகாரன் போல் நடிக்கும்
பாப்பா கெட்டிகாரன் போல் நடிக்கும்

ஆராரோ ஆராரோ ஆ..ராரோ

கரிபசவப்பா குண்டு பசவப்பா
கண் மூடி தூங்கப்பா

கரிபசவப்பா குண்டு பசவப்பா
கண் மூடி தூங்கப்பா

கரிபசவப்பா குண்டு பசவப்பா
கண் மூடி தூங்கப்பா

அன்பர்கள் இந்த அருமையான பாடலை தரவிறக்கம் செய்து கேட்கவும். ஆமா! எப்ப வீடியோ பார்ப்பது? ரொம்ப ஆசையா இருக்கே!

https://www.mediafire.com/folder/89ah8s21fa8xp/Chella_Pillai_%281955

gkrishna
22nd September 2014, 11:28 AM
1979 கால கட்டத்தில் வெளி வந்த நிறம் மாறாத பூக்கள் திரை படத்தில் இடம் பெற்ற பாடல் . சுதாகர் ராதிகா ஜோடியாக ஒரு ஜாலி பாடல் . உற்சாகம் தரும் பாடலாக பாரதி ராஜா இயக்கத்தில் பாலசுப்ரமணியம் பாடிய முதல் பாடல் என்று நினைவு
பதினாறு வயதினிலே,கிழக்கெ போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் மூன்று படத்திலும் பாலாவுக்கு வாய்ப்புகள் இல்லாத போது இந்த படத்தில் தான் முதன் முதலில் பாலா பாடுகிறார் .கண்ணாதசன் எழுதியது.இளையராஜாவின் ஆரம்பச் சூரத்தனம் பாட்டு முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும்
இளையராஜாவும் ஜானகி அம்மாவும்,எஸ்.பி,பி யும் கைபிடித்தும் மனம் பிடித்துமாய் கூட்டிக்கொண்டு போவார்கள். பாலாவின் கெஞ்சலையும் கொஞ்சலையும் ரசிக்க வைக்கும் பாடல்.பாடல் பாடும் போதே பாலாவின் நடிப்பு திறமை வெளிப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறன். அதனால் தான் பின்னாளில் அவர் நடிகர் ஆகவும் வெற்றி பெற்றார் அதே நேரத்தில் ஜானகியின் ஆதிக்க குரல் .காதல் என்றாலே அங்கே ஊடல் சகஜம் தானே. அப்புறம் காதலன் தான் கெஞ்சி கூத்தாடி பாட்டு பாடணும். அம்மணி எறங்கி வரவே மாட்டாங்க.

அதிலும் ரெண்டாவது சரணத்தில் 'ஐய்யயோ! சும்மா தான் ஜாடை சொன்னேன்! கண்ணே கண்மணியே' இதுல 'ஐய்யயோ' சும்மா 'ஐயோ' என்று இருக்குங்க. மனுசன் குரலிலேயே நடிக்கிறார். ரெண்டாவது சரணத்தின் இடை இசையில் 'எழிலா சிற்பமாக' என்று கீச்சுக்குரல் வரும். அதுவும் பாலா தானே?.

முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே
முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே
என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே
முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே

சீதா என் காதல் கொடியே கண் பாரம்மா
ஆதாரம் நீயில்லாமல் வேறேதம்மா
சீதா என் காதல் கொடியே கண் பாரம்மா
ஆதாரம் நீயில்லாமல் வேறேதம்மா

ஆசையுடன் நம்பி வந்த பெண்ணை இன்று
மோசம் செய்த துரோகியே
உன் கோபம் தேவைதானா அன்பே ஆருயிரே
அது யாரந்த பெண்
ஒரு நடிகையம்மா
அந்த கழுதையை நீ கொஞ்சி அணைப்பது தவறு

முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தாயோ
நீ காதல் மன்மதனோ நான் பறந்து போவேனோ
முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே

ஜீனத் என் கனவில் வந்தாள் உன் போலவே
சிங்காரப் பாவை உந்தன் வடிவாகவே..
ஜீனத் என் கனவில் வந்தாள் உன் போலவே
சிங்காரப் பாவை உந்தன் வடிவாகவே..

ஜீனத்தமன் போல் என்னை எண்ணி வந்து
பாட்டு பாடும் துரோகியே
ஐயய்யோ... சும்மா தான் ஜாடை சொன்னேன்
கண்ணே கண்மணியே
என்னை போல் ஒரு பெண்
இந்த உலகில் இல்லை
ஒரு நடிகையை போல் என்னை பார்ப்பது தவறு.

முதல் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே
என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே
முதல் முதலாக காதல் டூயட் பாட வந்தாயோ.

https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTpfNW35EtfKCmLYHloqfeNYixL71sbh iFL2PoqM-Smafhrmzn1Zg

chinnakkannan
22nd September 2014, 11:39 AM
வாங்க கிருஷ்ணா சார்..நினைவுகள் நு சொன்னவுடனே முதன் முதலாகப் பாடின டூயட் நினைவுக்கு வருதாக்கும்..:) நல்ல பாட்..ஆண்டாண்டு காலமாய் பெண்கள் ஊடல் கொள்வதும் ஆண்கள் தவித்து சமாதானப் படுத்துவதும்.. நோ எண்ட் டு இட்..அதே ஆண்கள் ஊடல் கொண்டால் அதற்குப் பெயர் கோபமாம்..:)

ஆடிக்குப் பின்னே ஆவணி மாதம் வருவது உண்டு தான் நினைவுக்குவருகிறது..

madhu
22nd September 2014, 11:51 AM
ஆஹா... அன்போடு குண்டு பசவப்பாவை அள்ளிக் கொண்டு வந்து தந்த வாசுதேவன் ஜி-க்கு ஒரு "ஓ" போடவா ? "விசில்" போடவா ?
இதை பல நாள் முன்பு coolgoose-லிருந்து தரவிறக்கம் செய்து வைத்திருந்தேன். காணாம போயிடுச்சு.
coolgoose பிறகு cooltoad ஆகி இப்போ அதுவே காணாம போயிடுச்சு.

கண்டேன் குண்டு பசவப்பாவை !! :lol:

vasudevan31355
22nd September 2014, 12:11 PM
கிருஷ்ணா சார்,

செம ரிலாக்ஸ் பாடல்.

'முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே'

http://www.sylvianism.com/wp-content/uploads/2013/02/illayaraja-bharathiraja-old-unseen-still.jpg

நான் முதன் முதலாகக் கேட்ட போதே வித்தியாசத்தை உணர்ந்தேன். இரவு 9.30 சென்னை விவிதபாரதி விளம்பரதாரர் நிகழ்ச்சியில் கேட்டது இப்போது நினைவுக்கு வருகிறது. எல்.ஆர்.சாமி.

ராதிகா செம ஜோர்.

சுதாகர் மண்ணும் பார்க்கும்படி பண்ணியிருக்கும்.

கிருஷ்ணா சார்!

'நிறம் மாறாத பூக்களில்' ஒரு வயதான பெண்மணி சுதாகரைப் பார்த்து,

"சுதாகரு... சுதாகரு" அப்படின்னு ஜொள்ளு விடுமே! ஞாபகம் இருக்கா?

பாடலுக்கும், பாடல் வரிகளுக்கும் நன்றி சார்.


http://www.youtube.com/watch?v=ZLkWuiLJgPc&feature=player_detailpage

vasudevan31355
22nd September 2014, 12:32 PM
இன்றைய ஸ்பெஷல் (76)

'மலர்களே மலருங்கள்' இன்றைய ஸ்பெஷலில் மலர்கிறது.

http://www.inbaminge.com/t/m/Malargale%20Malarungal/folder.jpg

மிக மிக அருமையான பாடல். என்னை வசியம் செய்த பாடல். விஜயனும், ராதிகாவும் விஜயா கார்டனில் அமைதியாக பாட, தேவாமிர்தம் இந்தப் பாடல். ஜெயச்சந்திரனும், ஜானகியும் அனுபவித்துப் பாடிய பாடல். இனிமை கொட்டிக் கிடக்கிறது இப்பாட்டிலே. விஜயன் அவ்வளவாக உறுத்தவில்லை.(முக இறுக்கத்தை மனிதர் மாற்றவே மாட்டாரே!) ராதிகா சமாளித்து விடுவார்.

அருமையான வரிகள். எம்.ஜி.வல்லபன் கவிதை நயத்தில் நயம்பட எழுதியிருப்பார். அதுவும்

'ரசிப்பில் ஒரு ராஜ பல்லவன் நீ' வரி ரகளை.

பாடியிருக்கும் ஜானகியும் அருமையாக இந்த வரிகளை உச்சரித்திருப்பார்.

கங்கை அமரன் அருமையான டியூன் போட்டிருப்பார்.

http://i.ytimg.com/vi/AXnub2eMI8w/hqdefault.jpg

இனி பாடலின் வரிகள்.

https://i.ytimg.com/vi/unLH4KwrqM0/hqdefault.jpg

இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண் மூடி மௌனமாய்
நாண மேனியில் கோலம் போடும் போது
இசைக்கவோ

ராசலீலை வாசல் திறப்பாய் பூஜை நேரத்தில்
ராஜதாள மேடை அழைப்பாய் பாதி ஜாமத்தில்

வீதி வலம் போகும் நாளிலே
தேவன் தோளிலே மலர்வேனே
நாதஸ்வரம் பாட சூழ்ந்து நலம்
காண வாழ்த்தவே தருவேனே

சிரிப்பில் புது ராகமாலிகை நீ....

ரசிக்கவோ நம் கல்யாண ராகம்
கண் மூடி மௌனமாய்
நாண மேனியில் கோலம் போடும் போது
ரசிக்கவோ

பாதை மூடி ஜாதி மலர் போல்
பார்வை ஏங்குதே
ராஜவீதி மார்பில் மலர்ந்தேன்
பாரி ஜாதமாய்

போதும் இது காதல் போதையே
காணும் பூவையே போராடு
மீதி வரும் நாளில் நாமம்
திருநாளைக் காணவே நீ ஆடு

ரசிப்பில் ஒரு ராஜ பல்லவன் நீ

இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண் மூடி மௌனமாய்
நாண மேனியில் கோலம் போடும் போது

ரசிக்கவோ


http://www.youtube.com/watch?v=unLH4KwrqM0&feature=player_detailpage

gkrishna
22nd September 2014, 12:39 PM
வாசு சார்

அந்த வயசான அம்மா பதினாறு வயதினிலே படத்தில் குருவம்மாள் எதிராக வெள்ளையம்மாள் ஆக வருவார் என்று நினைவு .
சின்ன வீடு படத்தில் சின்ன அனுவுக்கு பாட்டி ஆக வருவார் .
சமீபத்தில் ஒரு படத்தில் கூட பார்த்த நினைவு
இது தானே அந்த பா(ர்)ட்டி 'ஈரை பேனாக்கி பேனை பெருமாள் ஆக்கி' என்ற கலைமணியின் இவர்
பேசும் வசனம் மிகவும் பிரபலம்


https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQUyV7DO8wfzhYw3P_cyocw3IRG6aIp7 ypC0S4HLq9bKdqAltPU

vasudevan31355
22nd September 2014, 12:45 PM
இரண்டாவது ஷிப்டிற்கு டைம் ஆயிடுத்து. போயிட்டு நாளைக்கு வர்றேன்.

மது அண்ணா! ரொம்ப நன்றி! இன்னும் நிறைய உங்களை சந்தோஷப் படுத்தணும்.

கிருஷ்ணா சார்! கலக்கல் பதிவுகள்.

சி.க.சார்! சோகமெல்லாம் போயிடுச்சா?

வினோத் சார்! ஆவணம் பாக்கி இருக்கா? இன்னொரு கலர் ஸ்டில்... இதுவரை போடாத நடிகர் திலகத்தின் ஸ்டில் போடுங்களேன்.

ராஜேஷ் சார்! தாங்கள் பதிந்துள்ள பாடலைப் பார்த்து விட்டு எழுதுறேன்.

கோபால் சார்! மெல்லிசை மன்னர் தொடரை தொடரவும். கார்த்திக் சார் வந்தால்தான் தொடருவேன் என்று கங்கணம் கட்டி இருக்கிறீர்களா?

ராகவேந்திரன் சார்,

உங்கள் பொங்கும் பூம்புனல் இல்லாமல் வாக்கிங் போகவே இல்லை.

கோபு சார்,

முதன் முதலாக நேற்று கைபேசியில் இரண்டு மணி நேரம் ஜாலியாகப் பேசி மகிழ்ந்தோம். ரொம்ப சந்தோஷமாய் இருந்தது.

சிவா சார்,

நேற்று தங்கள் போனைக் கண்டு மிக்க ஆனந்தமடைந்தேன். உங்களுடனும் நேற்றுதான் முதன் முதல் உரையாடினேன். மகிழ்ச்சி. தங்கள் சிங்களத் தமிழ் அவ்வளவு அழகு. அதை விட ரொம்ப அழகான உங்கள் குரல்.

நாளை சந்திப்போம்.

chinnakkannan
22nd September 2014, 12:53 PM
முக நூல்ல கத்திக்கிணையில்லை காண் நு கடைசி லைன் கொடுத்து எழுதச் சொல்லியிருந்தாஙக்ளா..எழுதினேனா..

புத்தம் புதுமலராய்ப் பூவையவள் பார்வையிலே
மொத்தமாய்ப் பூவுலகை மென்னிதயம் தான்மறந்து
முத்தமொன்று மோகினியைக் கேட்கையிலே பாய்ந்தவிழிக்
கத்திக் கிணையில்லை காண்.

இந்த ஆயுதங்கள்ளாம் வர்ற பாட்டுக்கள் லிஸ்ட் கொடுக்கலாமா

கத்தியைத்தீட்டாதே உந்தன் புத்தியைத்தீட்டு

அப்புறம் ?:)

gkrishna
22nd September 2014, 12:55 PM
dear ceekay sir

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்

chinnakkannan
22nd September 2014, 01:18 PM
கிருஷ்ணா சார்..கார்த்திக் சார் பாட்டு

வேலாலே விழிகள் இங்கு ஆலோலம் இசைக்கும்..

gkrishna
22nd September 2014, 01:56 PM
http://lh3.ggpht.com/-0lAkGkzpYl0/VB4MvlZSViI/AAAAAAAANVE/7LpCshZCVkg/w1280/100000.jpghttp://lh6.ggpht.com/-xQtOhEWXvWQ/VB4Mv2f4dFI/AAAAAAAANVI/A9plXkJiQbs/w1280/100001.jpghttp://lh5.ggpht.com/-5n6rf9uqIGo/VB4Mwg9AbVI/AAAAAAAANVA/-kKC34bGh_A/w1280/100002.jpghttp://lh5.ggpht.com/-kX0aJp8MFE0/VB4Mx66f-kI/AAAAAAAANVk/g28rsbW098c/w1280/100003.jpghttp://lh3.ggpht.com/-tpj_M1JuKGk/VB4MyEJ42_I/AAAAAAAANVc/wXvokfXR-7Y/w1280/100004.jpg

madhu
22nd September 2014, 02:06 PM
சிக்கா..

வேலும் வில்லும் விளையாட வெள்ளைத் தாமரை கதை சொல்ல
வேலோடு விளையாடும் முருகையா
வெற்றிவேல் வீரவேல் சுற்றி வந்த
வணங்கிடும் கைகளின் வடிவத்தை பார்த்தால் வேல் போல் இருக்குதடி
தோள் கண்டேன்... வாள் கண்டேன் வாளே கண்டேன்
பெண் மானம் காக்கும் எங்கள் சூலம்
திரிசூலம் சத்தியம் புலித்தோலில் தத்துவம்

இதெல்லாம் பல்லவியிலேயே ஆயுதங்கள் இருக்கும் பாடல்கள்..
இன்னும் உள்ளே ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கும் பாடல்கள் எக்கசக்கம்.
அது சரி.. காசு, பணம், துட்டு. மனி மனி... இதுல ஒரே ஆயுதத்துக்கு நாலு பேரு சொல்றாங்க கவனிச்சீங்களா ?

Richardsof
22nd September 2014, 02:07 PM
மாப்பிள்ளை கோலத்தில் மெல்லிசை மன்னர்

http://i58.tinypic.com/2dtc2dk.jpg

http://youtu.be/dSs1Q_MAN40

Richardsof
22nd September 2014, 02:10 PM
http://i59.tinypic.com/11s012o.jpg
http://youtu.be/BYBP71Hpccg

chinnakkannan
22nd September 2014, 02:11 PM
//அது சரி.. காசு, பணம், துட்டு. மனி மனி... இதுல ஒரே ஆயுதத்துக்கு நாலு பேரு சொல்றாங்க கவனிச்சீங்களா// மதுண்ணா :) ம்ம் லிஸ்ட்க்கு தாங்க்ஸ்.. வேல் வாள் சூலம் ஓகே. மற்றவை..

gkrishna
22nd September 2014, 04:11 PM
ஆசையே அலை போலே நாமெலாம் அதன் மேலே..! என்ற அற்புதமான பாடல்

ஜனவரி 14, 1958, தைத் திருநாளன்று ஏ.கே.வேலன் கதை, திரைக்கதை, இயக்கம் தயாரிப்பில் வெளியான ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலாகும்.

கவியரசர் கண்ணதாசனில் வைர வரிகளுக்கு, திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனின் அட்டகாசமான இசையமைப்பில், திருச்சி லோகநாதன் அவர்கள் பாடிய பாடலிது...

இப்பாடலில் மனிதன் வாழ்வை இரண்டே சரணங்களில் அடக்கி விடுவார் கவிஞர். முதல் சரணத்தில் பருவ வயதும், இரண்டாம் சரணத்தில் முதுமை வாழ்வும் பற்றி எளிதாக விளக்கி விடுவார்... வாழ்க்கையில் எது வரவு எது செலவு என்பதை மூன்றாவது சரணத்தில் சொல்லி விடுவார்... அந்த வரிகள்....

‘வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு இருப்பது கனவு!
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்?’

இனி சுவாரசிய செய்திகள்
@அக்காலத்தில் கோடம்பாக்கத்தில் ரயில்வே கிராஸிங் மட்டுமே இருந்தது. மேம்பாலம் கிடையாது. ரயில் வந்து செல்லும் வரை இருபுறமும் இரயில்வே கேட்டை பூட்டி விடுவார்கள். சினிமா பிரபலங்கள் எல்லோரும் அந்த கேட்டில் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருப்பார்கள். அப்படி ஒரு முறை ரயில்வே க்ராஸிங் சிக்னலுக்காக, கண்ணதாசன் காத்திருந்த போது, இப்பாடலை சிகரெட் பாக்கெட்டில் எழுதி வைத்தாராம். சிகரெட் பெட்டியில் சிந்திய வரிகள்... பின்னாளில் தமிழக மக்களின் செவிகளிலும் தேனிசையாய் சிந்தியது இப்பாடல்.

@இப்பாடலின் இசையமைப்பாளர் திரை இசைத் திலகம். கே.வி.மகாதேவன் அவர்கள்... இவர் பாட்டுக்குத்தான் மெட்டு போடுவார் ! பாட்டு எழுதும் கவிஞர்களை வதைக்காமல், அவர்கள் எழுதிக் கொடுத்ததை அப்படியே பயன் படுத்துவார் ! அப்படி அந்த பாட்டு மெட்டுக்குள் அடங்கவில்லை என்றால் " விருத்தம் " ஆக்கி பாட்டின் சுவையைக் கூட்டிவிடுவார் !

@1940 களின் ஆரம்பத்தில் – கே.வி. மகாதேவன் அவர்கள் சேலம் ‘மாடர்ன் தியேடர்ஸ்’-ல் உதவி இசை அமைப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார்!
அப்போது அதிபர் டி.ஆர். சுந்தரம் அவர்கள் ஓர் இளைஞனை மகாதேவனிடம் அழைத்து சென்று "மகாதேவா

, இவருக்கு குரல் வளம் எப்படி இருக்கின்றது என்பதை பரீட்ச்சை செய்து அனுப்பு!" என்றார் !

மகாதேவனும் அந்த இளைஞன் குரலை சோதனை செய்து பின்னர் வரச் சொல்லிப் பணித்தார் ! அவர் அங்கேயே தயங்கி நிற்கவே " ஊருக்குப் போவதற்கு பணம் இருக்கா ? " என்று அவரைப் பார்த்து கேட்டார் ! அந்த இளைஞன் உதட்டைப் பிதுக்கவே , மகாதேவன் அந்த இளைஞனுக்கு 2 .00 ரூபாய் பணம் கொடுத்து, கூடவே ஒரு சட்டையும் கொடுத்து அனுப்பினார் !

அந்த இளைஞன் யார் தெரியுமா ? - அவர்தான் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் !

@திருச்சி லோகநாதன் சம்பள விஷயத்தில் கறார் பேர்வழி, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த தூக்குத் தூக்கி திரைப்படத்தில் இடம்பெற்ற 8 பாடல்களையும் பாட வாய்ப்பு வந்தபோது ஒரு பாடலுக்கு ரூ 500 சம்பளம் கேட்டார், தயாரிப்பாளர்கள் சம்பளத்தை குறைக்கச் சொல்ல, ‘மதுரையிலிருந்து புதுசா ஒருத்தர் வந்திருக்கார், அவரை பாடச் சொல்லுங்க’ என்று கூறிவிட்டார். திருச்சி லோகநாதன் சுட்டிக்காட்டிய அந்த மதுரைக்காரர்தான் தூக்குத் தூக்கி படத்தில் பாடினார், அவர்தான் நம்ம டி. எம். செளந்தரராஜன்.

http://www.tubetamil.com/watch-tamil-songs/watch-old-songs-tamil-song/aasaiye-alai-pole-video-song.html

abkhlabhi
22nd September 2014, 05:30 PM
சிட்டுக்குருவி படத்தில் ‘என் கண்மணி’ பாடலை பற்றி இளையராஜா கூறியதாவது:-

"மேல் நாட்டு இசையில் Counterpoint என ஒரு விஷயம் இருக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட வேறு வேறு டியூன்கள் ஒரே நேரத்தில் இசைக்கப்படுவதுதான் அது. அதில் Harmony என்ற அம்சம் உள்ளடங்கி இருக்க வேண்டும்.

இதை எனது இரண்டாவது படமான ‘பாலூட்டி வளர்த்த கிளி’ படத்தில் ‘நான் பேச வந்தேன்’ என்ற பாடலின் போதே தொடங்கி விட்டேன். அந்தப் பாடலின் இடையே வரும் இசையின் Humming-ல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஒரு டியூன் ‘ஹம்’ செய்ய, எஸ்.ஜானகி வேறு டியூனில் ஹம்மிங் செய்து பதில் சொல்வது போல அமைத்திருந்தேன்.

இது படத்தின் டைரக்டருக்கோ, இசைக் குழுவில் வாசித்தவர்களுக்கோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இசைக் குழுவில் Advanced ஆக இருக்கும் ஓரிரு கலைஞர்களுக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம்".


சென்ற வாரம் ETVயில் SPB வழங்கிய "பாடுத தியக" வில் harmony பற்றி தெளிவாக சொல்லி இருப்பார் .

இளமை உஞ்சலாடுகிறது படத்தில் வரும் "ஒரே நாள்" பாடலில் வரும் ஹம்மிங், ‘நான் பேச வந்தேன்’ பாடலில் வரும் ஹம்மிங்கை இணைத்து கம்போஸ் செய்திருப்பார் இளைய ராஜா

பாலூட்டி வளர்த்த கிளி’ படத்தில் ‘நான் பேச வந்தேன்’ என்ற பாடல்

http://www.youtube.com/watch?v=9ZNJncW2220

SPB Paadutha Thiyaga Show

http://www.kaburlu.in/?url=x260pmf&source=daily

JamesFague
22nd September 2014, 07:38 PM
Superb melody from the Movie The Great Gambler - Starring Amithabh and Zeenat. Enjoy the song


http://youtu.be/waeAGdCvJd8

JamesFague
22nd September 2014, 07:44 PM
Enjoy the song from the movie Abdullah - Music by the Great R D Burman


http://youtu.be/YnywvI8SHV8

madhu
22nd September 2014, 07:46 PM
இன்று பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களின் பிறந்த நாள். ஏற்கனவே போட்டாச்சா என்று நினைவில்லை என்றாலும்
இதை எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும் என்பதால் பதிகிறேன்

படம் : தாயின் கருணை
குரல் : பி.பி.ஸ்ரீனிவாஸ்
இசை : ஜி.கே.வெங்கடேஷ்
நடிப்பு : கல்யாண்குமார்
பாடல் : ????? ( நண்பர்களே... உங்க உதவி தேவை )

பூந்தென்றல் இசை பாட புகழ் பாணர் கவி பாட
சான்றோர்கள் மடிதன்னில் விளையாடும் தமிழ் வாழ்க

( பூந்தென்றல் )

அறிவான முப்பாலும் கனி கொடுக்க
திருவாசகம் வந்து பனி தெளிக்க
கொடி போன்ற இளம் பெண்கள் கற்பினிலே
கொலு கொண்டு முதிராத தமிழ் வாழ்கவே

( பூந்தென்றல் )

வேல் தேடி எறிகின்ற வீரமுண்டு
நூல் தேடித் தருகின்ற ஞானமுண்டு
சூல் கொண்ட குலமங்கை திருமுகம் போல்
சுடர்கின்ற புது மஞ்சள் தமிழ் வாழ்கவே

( பூந்தென்றல் )

http://youtu.be/zgoxSlDf_so

JamesFague
22nd September 2014, 07:48 PM
Enjoy the song of First Superstar of Hindi Cineme Rajaesh Khanna with the Music by one & only R D Burman with the voice of Kishoreji


http://youtu.be/1PoKegwKnVo?list=AL94UKMTqg-9CLOtEC0MP3yYWOiG1OdH2z

rajraj
22nd September 2014, 11:32 PM
I did not watch the show being discussed here. We are in our son's place. They don't subscribe to Indian channels.

I watched Parasakthi in 1952, the year of release, in a touring talkies (tent theatre) near Nagapattinam. Here is a song from Parasakthi.

konjum mozhi sollum kiLiye sezhum komaLa thaamarai poove.....

http://www.youtube.com/watch?v=jXB9taCW50s

It will be nice if all the songs from his first movie are posted here as a mark of respect for the actor.

rajeshkrv
23rd September 2014, 03:24 AM
I did not watch the show being discussed here. We are in our son's place. They don't subscribe to Indian channels.

I watched Parasakthi in 1952, the year of release, in a touring talkies (tent theatre) near Nagapattinam. Here is a song from Parasakthi.

konjum mozhi sollum kiLiye sezhum komaLa thaamarai poove.....

http://www.youtube.com/watch?v=jXB9taCW50s

It will be nice if all the songs from his first movie are posted here as a mark of respect for the actor.

rajraj sir

just youtube is enough. no need for indian channels

https://www.youtube.com/watch?v=FQgfTMSl9MM

rajraj
23rd September 2014, 05:04 AM
rajraj sir


enna aachchu rajesh? naan uncle (ankil) illaiyaa? :lol:

I watched about 40 minutes of the show. I expected the show to open with a scene from Parasakthi (pagattu kaattiyadhu oru aNil? ) or the song 'dhesam gnaanam kalvi eesan poosaai ellaam'.
I will watch rest later. :)

rajeshkrv
23rd September 2014, 07:22 AM
enna aachchu rajesh? naan uncle (ankil) illaiyaa? :lol:

I watched about 40 minutes of the show. I expected the show to open with a scene from Parasakthi (pagattu kaattiyadhu oru aNil? ) or the song 'dhesam gnaanam kalvi eesan poosaai ellaam'.
I will watch rest later. :)

ankil'nnu thaan poda ninaichen intha thread'l sir/ji enbadhal apapdi vandhu vittadhu . mannikkavum

RAGHAVENDRA
23rd September 2014, 07:22 AM
பொங்கும் பூம்புனல்

தவிர்க்க இயலாத காரணங்களால் நடுவில் ஏற்பட்ட சிறிது இடைவெளிக்குப் பின் மீண்டும் தொடர்வதில் மகிழ்ச்சி.

இன்றைய பொங்கும் பூம்புனலாக மலர்வது 1983ல் வெளிவந்த ஆசை மச்சான் திரைப்பட இசைத்தட்டிலிருந்து ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம் குரல்களில் சங்கர் கணேஷ் இசையில் என் ஜீவனே உன் பாடலில் புது ராகம் கேட்கிறேன் எனக் கூறும் அருமையான பாடல்.

http://play.raaga.com/tamil/browse/movies/year-1980-1983/popular/Aasai-Macchan-T0003604

rajeshkrv
23rd September 2014, 07:25 AM
இப்படி ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்த விஜய் தொலைக்காட்சிக்கு மனமார்ந்த நன்றி.

இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம் என்பது என் கருத்து .. ரசிகர்கள் பேசினார்கள் இருந்தாலும் நடிகர் திலகம் என்ற இமயத்தின் பல பரிமாணங்கள் பேசப்படவில்லை என்பது என் கருத்து.

கிருஷ்ணா ஜி, என்ன இது உங்கள் விவாதம் என்ற வெள்ளத்தில் தொபுக்கடீர் என நனைய நினைத்த என்னை ஏமாற்றி விட்டீர்களே
ஒரே ஒரு வரி பேசி விட்டு மெளனம் சாதித்து விட்டீரே நியாயமா

RAGHAVENDRA
23rd September 2014, 07:31 AM
பொங்கும் பூம்புனல்

வெளிவந்த நாள் தொட்டு ரசிகர்கள் நெஞ்சில் அமர்ந்து விட்ட இனிமையான பாடல். ராகங்கள் மாறுவதில்லை திரைப்படத்தில் இளையராஜா இசையில் எஸ்.பி.பாலா குரலில் விழிகள் மீனோ மொழிகள் தேனோ...

http://play.raaga.com/tamil/browse/movies/year-1980-1983/popular/Raagangal-Maaruvathillai-T0002901

rajeshkrv
23rd September 2014, 07:34 AM
ராகவ் ஜி காலை வணக்கம்
பொ.பூ அருமை தொடருங்கள்

RAGHAVENDRA
23rd September 2014, 07:38 AM
பொங்கும் பூம்புனல்

இது போன்ற இனிமையான டூயட் பாடலை டி.எம்.எஸ். சுசீலா குரலில் கேட்பது மிக மிக மிக அபூர்வமானது.. வெளிவராத படங்களில் இன்னும் எத்தனை பொக்கிஷங்கள் உள்ளனவோ தெரியவில்லை...

1984ம் ஆண்டு வெளிவந்ததாக ராகா இணைய தளம் இசைத்தட்டு தகவல் கூறுகிறது. படம் சென்று வா நிலா. இசை ஆண்ட்ரூ குமார் என உள்ளது.

மேலதிக விவரங்கள் யாராவது தெரிவித்தால் நலம்.

ஆனால் பாடல்.... பாட்டிலேயே வரும் வரிகள் போல ...இன்று பாடுகின்ற பாடல் எல்லாம் ஆனந்தம்...

http://play.raaga.com/tamil/browse/movies/year-1980-1984/popular/Chendru-Vaa-Nila-T0003608

RAGHAVENDRA
23rd September 2014, 07:42 AM
பொங்கும் பூம்புனல்

நன்றி ராஜேஷ்...

வெளிவராத அதிகாரம் படத்திலிருந்து இளையராஜா இசையில் இனிமையான பாடல். ஐவகை மலர்களின் எனத்துவங்கும் பாடல். எஸ்.என்.சுரேந்தர் எஸ்.ஜானகி பாடிய பாடல். வாலியின் வரிகளில்...

http://play.raaga.com/tamil/browse/movies/year-1980-1980/popular/Adhikaram-T0001523

vasudevan31355
23rd September 2014, 08:06 AM
காலை வணக்கம் ராஜேஷ்ஜி.

நேற்று நீங்கள் அளித்த இசையரசி பாடிய 'சகுந்தலா'வின் 'பிரியதமா' பாடல் இனிமை. "ஞான் ஒரு முனி குமாரிகை அல்லே" மிக அமர்க்களம். மனம் நிறைய காதலை ரொப்பிக் கொண்டு 'என்னை காதல் என்ன செய்யும்?' என்ற பொருள் பட அந்தக் கள்ளி பாடும் பாடல். கே.ஆர்.விஜயா சகுந்தலையாக அழகாகத் தெரிகிறார்.

'மரவுரி தரித்த இந்த மானின் உடலில் மன்மதன் அம்புகள் எப்படி பாயும்? என்றும் கேட்பது போல இருக்கிறது. சரிதானே ராஜேஷ் சார்? எனக்கு மலையாளம் அவ்வளவாகத் தெரியாது. நல்ல இனிமையான குரலில் மனதை வருடும் அருமையான பாடல்.

venkkiram
23rd September 2014, 08:13 AM
Dedicating this song to Mr (Merasalaayitten) G!

https://soundcloud.com/sajeepan-raj/lingu-anthem-v20

:)

rajeshkrv
23rd September 2014, 09:17 AM
காலை வணக்கம் ராஜேஷ்ஜி.

நேற்று நீங்கள் அளித்த இசையரசி பாடிய 'சகுந்தலா'வின் 'பிரியதமா' பாடல் இனிமை. "ஞான் ஒரு முனி குமாரிகை அல்லே" மிக அமர்க்களம். மனம் நிறைய காதலை ரொப்பிக் கொண்டு 'என்னை காதல் என்ன செய்யும்?' என்ற பொருள் பட அந்தக் கள்ளி பாடும் பாடல். கே.ஆர்.விஜயா சகுந்தலையாக அழகாகத் தெரிகிறார்.

'மரவுரி தரித்த இந்த மானின் உடலில் மன்மதன் அம்புகள் எப்படி பாயும்? என்றும் கேட்பது போல இருக்கிறது. சரிதானே ராஜேஷ் சார்? எனக்கு மலையாளம் அவ்வளவாகத் தெரியாது. நல்ல இனிமையான குரலில் மனதை வருடும் அருமையான பாடல்.

நன்றி வாசு ஜி, ஆம் கிட்டத்தட்ட அதே பொருள் தான் .. மரவுரி மூடிய இந்த மாரில் அந்த அம்புகள் எப்படி பாயும் என்பது தான் பொருள்

பாடல் உங்களுக்கு பிடித்திருந்ததில் வல்லிய சந்தோஷம்

rajeshkrv
23rd September 2014, 09:24 AM
மேனகா பற்றி சில பக்கங்கள் முன்பு சலசலப்பு வந்ததே ..
நல்ல தரமான வேடங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை மேனகா

இதோ ஷ்யாமின் இசையில் இசையரசி மேனகாவிற்கு பாடிய அற்புத பாடல் .. பாடகி சுஜாதவிற்கு மிகவும் பிடித்த பாடல்
ஹம்மிங் ஷ்யாமே ..

http://www.youtube.com/watch?v=FyVvag6yLj4

gkrishna
23rd September 2014, 09:59 AM
இப்படி ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்த விஜய் தொலைக்காட்சிக்கு மனமார்ந்த நன்றி.

இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம் என்பது என் கருத்து .. ரசிகர்கள் பேசினார்கள் இருந்தாலும் நடிகர் திலகம் என்ற இமயத்தின் பல பரிமாணங்கள் பேசப்படவில்லை என்பது என் கருத்து.

கிருஷ்ணா ஜி, என்ன இது உங்கள் விவாதம் என்ற வெள்ளத்தில் தொபுக்கடீர் என நனைய நினைத்த என்னை ஏமாற்றி விட்டீர்களே
ஒரே ஒரு வரி பேசி விட்டு மெளனம் சாதித்து விட்டீரே நியாயமா

அன்பு ராஜேஷ் சார்

உங்கள் பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது. அன்று நிறைய பேச வேண்டும் கலந்து உரையாட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அங்கு எல்லோருமே
கூடினோம். என்னை பொறுத்த வரை எனக்கு அந்த நிகழ்ச்சி பற்றி ஒரு முறையான புரிதல் இல்லாததால் நிகழ்ச்சியில் சோபிக்க முடியவில்லை.
ஒரு கட்டத்தில் பார்வையாளராகவே நீடிக்க முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

gkrishna
23rd September 2014, 10:06 AM
மேனகா பற்றி சில பக்கங்கள் முன்பு சலசலப்பு வந்ததே ..
நல்ல தரமான வேடங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை மேனகா

இதோ ஷ்யாமின் இசையில் இசையரசி மேனகாவிற்கு பாடிய அற்புத பாடல் .. பாடகி சுஜாதவிற்கு மிகவும் பிடித்த பாடல்
ஹம்மிங் ஷ்யாமே ..



நடிகை மேனகா பற்றிய இந்த பாடல் 80களில் கேட்ட பாடல் என்று நினைவு
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவரது திரும்பி பார்கிறேன் தொலை காட்சி தொடர் ஜெயாவில் பார்த்த நினைவு . இளைய திலகம் பிரபு பற்றி நிறைய பேசினார் .

gkrishna
23rd September 2014, 10:08 AM
இன்றைய பொங்கும் பூம்புனல் அருமை வேந்தர் சார்

வெளி வராத படங்களில் இருந்து பாடல்களை அள்ளி தந்து உள்ளீர்கள்.
இளையராஜாவின் அதிகாரம் பட பாடல் நினைவில் உண்டு

ராகங்கள் மாறுவதில்லை பாடலும் அருமை

Richardsof
23rd September 2014, 10:13 AM
MSV - FILE
http://i57.tinypic.com/2yxogva.jpg

Richardsof
23rd September 2014, 10:14 AM
MSV- FILE
http://i58.tinypic.com/90cdg1.jpg

vasudevan31355
23rd September 2014, 10:29 AM
இன்றைய ஸ்பெஷல் (77)

'இன்றைய ஸ்பெஷலி'ல் 'பெண்ணே நீ வாழ்க' படப் பாடல்.

http://cdn.spicyonion.com/cache/images/profile/movie/1967/penneneevazhga-225x300.jpg

ஜெய்சங்கர் நடித்து பெண்ணே நீ வாழ்க, மகனே நீ வாழ்க, பெண்ணை வாழ விடுங்கள் போன்ற பல 'வாழ்க' படங்கள் அப்போது நிறைய வந்ததால் எந்தப் படத்தில் எந்தப் பாட்டு என்று ஒரே குழப்பமாக இருக்கும்.

'பெண்ணே நீ வாழ்க' 'மக்கள் கலைஞர்' ஜெயசங்கர், கே.ஆர்.விஜயா, விஜயகுமாரி நடித்தது. இயக்கம் பி.மாதவன். இசை. 'திரை இசைத் திலகம்' கே.வி.மகாதேவன். 1967-இல் வெளிவந்த இப்படத்தின் பாடல்களை வாலி எழுதியிருந்தார்.

http://i.ytimg.com/vi/T-ZT_8dsYn4/hqdefault.jpg

'உயிர் நீ.. உனக்கொரு உடல் நான்' என்ற இன்னொரு அருமையான பாடலை சுசீலா பாடியிருப்பார். நமது ராஜேஷ்ஜி நேற்று 'சகுந்தலா' என்ற மலையாளப் படத்திலிருந்து 'பிரியதமா' என்ற பாடலை அளித்தாரே! அதே போல இந்தப் பாடலிலும் கே.ஆர்.விஜயாவுக்கும் சகுந்தலா போன்ற வேடம்.

http://i.ytimg.com/vi/B-pJ4oyZOLc/hqdefault.jpghttp://i.ytimg.com/vi/pGa38sIVtxs/hqdefault.jpg

'இன்றைய ஸ்பெஷல்' பாடலில் நாயகனுக்கு நாயகி மீது சந்தேகம் போல. அழகாக, கள்ளம் கபடமற்று தன் காலைத் தொட்டு இழுக்கும் அந்த மழலையின் அழகில், சிரிப்பில் மயங்கி அதனிடம் தன் மனக் குமுறலை அமைதியாகக் கொட்டுகிறான். அவனுக்கு அந்த மழலையின் மேல் கோபமில்லை. ஆனால் 'யார் வீட்டுத் தோட்டத்திலே பூத்ததிந்த ரோஜாப் பூ?' என்று சந்தேகம் கிளப்புகிறான். 'தெய்வமும் நேரில் வராததால் அதுவும் சாட்சி இல்லை... குழந்தையும் பேசத் தெரியாததால் அதுவும் சாட்சி இல்லை... யாரைச் சொல்லியும் பயன் இல்லை... என் வழக்கு தீராது' என்று வெதும்புகிறான்

அவளுக்குத் தெரியாமல் அவன் குழந்தையுடன் நெருக்கமாக இருப்பதைக் கண்டு அவள் தன் நிலையை விளக்கி பாட ஆரம்பிக்கும் போது அவன் குழந்தையை விட்டு போலித்தனமாக நழுவுகிறான்.

அவளோ 'உன் சந்தேகத்தால் நான் தனிமரமாக நிற்கிறேன். ஆனால் உன்னைத் தழுவி நிற்கும் அந்த தளிர்க்கொடி உனக்கும் எனக்குமான பழக்கத்தில் பிறந்தது' என்று பாடல் மூலமாக அவனுக்கு தான் நிரபராதி உணர்த்துகிறாளோ!

மிக மிக அமைதியான அருமையான பாடல். பாடலில் வரும் மழலை நெஞ்சை அள்ளுகிறது. சந்தேகக் கண் கொண்டு ஜெய் வருத்திப் பாடுவதும், அதற்கு விஜயா பதில் தருவதும் அருமை.

பாடகர் திலகமும், இசையரசியும் மிக ஆழ்ந்து அமைதியாக அர்ப்பணிப்புடன் இப்பாடலை பாடி அசத்தி இருப்பார்கள். நம் மனதிற்குள் மிக அம்சமாக இப்பாடல் நகூரம் போட்டு அமர்ந்து கொள்ளும்.

இனி பாடலின் வரிகள்.

பொல்லாத புன்சிரிப்பு
போதும் போதும் உன் சிரிப்பு
பொல்லாத புன்சிரிப்பு
போதும் போதும் உன் சிரிப்பு
யார் வீட்டுத் தோட்டத்திலே
பூத்ததிந்த ரோஜாப் பூ
பொல்லாத புன்சிரிப்பு
போதும் போதும் உன் சிரிப்பு
யார் வீட்டுத் தோட்டத்திலே
பூத்ததிந்த ரோஜாப் பூ
பொல்லாத புன்சிரிப்பு

மங்கையரைப் பார்த்ததுண்டு
மனத்தைக் கொடுத்ததில்லை
மலர்களைப் பார்த்ததுண்டு
மாலையாய் தொடுத்ததில்லை
மணக்கோலம் பார்த்ததுண்டு
மாப்பிள்ளையாய் ஆனதில்லை
மணக்கோலம் பார்த்ததுண்டு
மாப்பிள்ளையாய் ஆனதில்லை
யார் வீட்டுத் தோட்டத்திலே
பூத்ததிந்த ரோஜாப் பூ

பொல்லாத புன்சிரிப்பு

தெய்வம் ஒரு சாட்சி என்றால்
நேரிலே வருவதில்லை
பிள்ளை மறு சாட்சி என்றால்
பேசவே தெரியவில்லை
யாரைச் சொல்லி என்ன பயன்
என் வழக்கு தீரவில்லை
யாரைச் சொல்லி என்ன பயன்
என் வழக்கு தீரவில்லை
யார் வீட்டுத் தோட்டத்திலே
பூத்ததிந்த ரோஜாப் பூ

பொல்லாத புன்சிரிப்பு

உன்வீட்டுத் தோட்டத்திலே
ஒருமரம் தனிமரமாம்
தனிமரம் தவிக்கக் கண்டு
தளிர்க்கொடி தழுவியதாம்
ஒன்றுக்கொன்று மாலையிட்டு
அன்று முதல் பழகியதாம்
ஒன்றுக்கொன்று மாலையிட்டு
அன்று முதல் பழகியதாம்
பழகிய பழக்கத்திலே
பூத்ததிந்த ரோஜாப் பூ

பொல்லாத புன்சிரிப்பு
போதும் போதும் உன் சிரிப்பு
யார் வீட்டுத் தோட்டத்திலே
பூத்ததிந்த ரோஜாப் பூ
பொல்லாத புன்சிரிப்பு


http://www.youtube.com/watch?v=pGa38sIVtxs&feature=player_detailpage

gkrishna
23rd September 2014, 10:29 AM
மேனகா நடித்த சாவித்திரி திரைப்படம் பற்றி சி கே குறிப்பிட்டு இருந்தார்

1980இல் பரதன் இயக்கத்தில் மேனகா நடித்து வெளியான 'சாவித்ரி' திரைப்படம் எதிர்ப்பு அலையை சந்தித்தது. வயோதிகரை மணந்து கொள்ளும் இளம் அந்தணப் பெண் வேறு ஜாதியைச் சேர்ந்த ஒரு இளைஞனோடு உறவு கொள்வதாக எடுக்கப்பட்ட அந்த படத்தை தடை செய்யக் கோரி பிராமண சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டது தமிழக வரலாற்றில் முதல் முறை.

'வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன் ' வாணியின் அருமையான பாடல். நடுவில் ஒரு இடத்தில வெறுமையான சிரிப்பு ஒன்று சிரிப்பார்
அருமையாக இருக்கும். மெல்லிசை மன்னரின் இசை

gkrishna
23rd September 2014, 10:32 AM
காலம் என்று ஒரு படம். சங்கர் கணேஷ் இசை அமைத்தது
நடிகை மேனகா இடைகுரலில் மலேசிய வாசுதேவன் பாடிய 'மஞ்சளுக்கு சொந்தக்காரி' என்ற பாடல்

http://www.mediafire.com/listen/8gl46fwnpdoiah2/KAALAM_-_Manjalukku_Sonthakkaari.mp3

gkrishna
23rd September 2014, 10:43 AM
வாசு சார்

பாடகர் திலகம்,கண்ணிய பாடகி அமைதியாக பாடும் பாடல்
.சிலோன் ரேடியோ ஹிட் மதியம் 3 மணி பூவும் போட்டும் மங்கையர் மஞ்சரி நிகழ்ச்சியில் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் இந்த பாடலை விளக்கி கூறியது இப்போது நினைவிற்கு வருகிறது . துஷ்யந்தன் சகுந்தலை காதல் கதை எத்துனை படங்களில் எப்படி எப்படி எல்லாம் பாடல்களாக பயன்படுத்தப்பட்டு உள்ளது .
நல்லதொரு பாடலை நினைவு படுத்தி விட்டீர்கள்

ஜெய்சங்கர் நடித்த சில படங்கள் பஞ்சவர்ணக்கிளி, வல்லவன் ஒருவன், இருவல்லவர்கள்,பெண்ணே நீ வாழ்க, நான் யார் தெரியுமா,பூவா தலையா,மன சாட்சி,நிலவே நீ சாட்சி,மாணவன்,வீட்டுக்கு ஒரு பிள்ளை,அக்கரைப் பச்சை,கல்யாணமாம் கல்யாணம் ஆகியவை. என் நினைவுக்கு வந்தவை

vasudevan31355
23rd September 2014, 11:07 AM
நன்றி கிருஷ்ணா சார்.

மேனகா பற்றிய மேலதிகப் பதிவுகள் நன்று. எனக்கு 'நெற்றிக்கண்' படத்தில் ரஜனி, மேனகாவின் 'ராமனின் மோகனம்' ஜானகி மந்திரம் ரொம்பப் பிடிக்கும். ராஜா சக்கரவர்த்தியாக மாறி பின்னிப் பெடலெடுப்பார். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதே!


http://www.youtube.com/watch?v=418BPuMZnqc&feature=player_detailpage

vasudevan31355
23rd September 2014, 11:15 AM
கிருஷ்ணா சார்,

'மெல்லிசை மன்னரி'ன் இன்னொரு அருமையான ,ஆனால் மறக்கப்பட்ட பாடல். இதுவும் மேனகா நடித்ததுதான். நம் தலைவர் படம் 'கீழ் வானம் சிவக்கும்' படம்தான் அது. 'ஜென்டில்மேன்' சரத்பாபுவுடன் மேனகா பாடும் டூயட். பாடலின் ஆரம்ப இசை அழகு நீளம். மேனகா பார்த்தால் நடிகை போலவே இருக்க மாட்டார். வெரி சிம்பிள். காய்கறி மார்கெட்டில் நாம் அன்றாடம் சந்திக்கும் பெண் போல. இப்பாடலுக்கு நன்றாக நடனமாடுவார். சுத்தமாக மறந்து விட்ட பாடல். முதல் நாள் தீபாவளி ரசிகர் காட்சியில் (26.10.1981) டீக்கடையில் நல்ல வியாபாரம். காட்சியில் தலைவர் இல்லை அல்லவா!

நான் கூட பின்னாளில்தான் பார்த்து ரசித்தேன். ரொம்ப அபூர்வ பாடல். ஒளிப்பதிவு அம்சம். குளுமை.

உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். பார்த்துவிட்டு சொல்லுங்கள்.


http://www.youtube.com/watch?v=Hk3hVBfSjUM&feature=player_detailpage

gkrishna
23rd September 2014, 11:22 AM
மேனகா:) வை மறக்காத விஸ்வாமித்ரர் வாசு சார்

அபூர்வ பாடல் கீழ் வானம் சிவக்கும் நினைவு கூர்ந்து உள்ளீர்கள்
அது தான் வாசு (தில்லு முல்லு நாகேஷ் )

chinnakkannan
23rd September 2014, 11:24 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

ஓரிரு வாரங்கள் ஹாய் மட்டும் சொல்லிவிட்டு லைக்ஸ் மட்டும் போட்டுக் கொண்டு இருக்கலாம் என நினைத்தேன்..காரணம் ஹோம் வொர்க்கும், எழுத நினைத்த சிலவும் எழுத நேரம் கிடைக்காதது தான் காரணம்..இருந்தாலும் நுழைந்த போது பின்னூட்டம் போடாமல் இருக்க முடியலை..வாசுசாரின் பொல்லாத புன் சிரிப்பு :) வும் ஒரு காரணம்..

வாசு சார் எனக்குப் பிடித்த பாடல் இது..வழக்கம் போல அழகான பதிவு..

யாரைச் சொல்லி என்ன பயன்
என் வழக்கு தீரவில்லை
யார் வீட்டுத் தோட்டத்திலே
பூத்ததிந்த ரோஜாப் பூ

அகெய்ன் தாங்க்ஸ்..

மேனகா பற்றி கிருஷ்ணா ஜி.. தாங்க்ஸ்.. ழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்.. மிக அழகிய பாடல்

இது பற்றி முன்பு ஒரு மலரும் நினைவுகள் எழுதியிருந்தேன்அது..கொஞ்சம் தள்ளி..கீழே..

வாங்க ராகவேந்தர் சார்..பொங்கும் பூம்புனலும் க்கு நன்றி.. புகைப்படத்தில்பார்த்ததில் மிக்க சந்தோஷம்..என் நமஸ்காரங்கள்

சந்திரசேகரன் சார் முன்பே பார்த்திருக்கிறேன்.. கிருஷ்ணா ஜியையும்.. பட் இந்த ஃபோட்டோவில் கொஞ்சம் டிஃபரண்ட் லுக்.. முரளி சாரும் முதல் தடவை பார்க்கிறேன்.. மிகச் சந்தோஷம்..ஒன்று மட்டும் தெரிந்தது.. எல்லாருக்கும் இளையவன் நான்..சார் போடுவதில் தப்பில்லை என (அதே இருபத்து நாலு வயது தான் :) )

எஸ்வி சாரின் பதிவுகள் எஸ்வாசுதேவனின் பாடல்கள் ராஜேஷ் ஜியின் பாடல் அனைத்துக்கும் ஒரு தாங்க்ஸ் + ஓ

**
கொஞ்சம் ம. நி..

கல்லூரி முடித்திருந்த காலகட்டம்.. வேம்பு என்ற ஒருவர் என் நண்பனின் அண்ண்னின் நண்பர் எம்.எஸ்ஸி மேத்ஸ் எம்ஃபில் எனப் படித்து வேலை தேடிக் கொண்டிருந்தார்..ஒரு நாள் எங்களை திருமோகூர்பக்கம் வந்தால் அவர் ஊர் திருவாதவூருக்கு வாருங்கள் எனச் சொல்லி இருந்தார்..ஸோ அந்த நாளும் வந்தது..திருமோகூர் சென்று ஒம்மாச்சி சேவித்துவிட்டு வந்த மொஃபசல் பஸ் பிடித்து திருவாதவூர் இறங்கினால் எதிரில் வேம்பு..கண்டும் காணாதவர் போல் செல்ல ஹ்லோ..வேம்பு.. பட்டெனத் திரும்ப..

ஓ.. நீங்கள் வேம்புவின் நண்பர்களா வாங்க..வேம்பு வீட்ட்ல இருக்கான் நான் அவன் அண்ணன் என (பேர் மறந்துவிட்ட்து)ச் சொல்லி வீட்டிற்கு அழைத்துச் சென்றால் முகமலர்ந்த வேம்பு உள்ளே தங்கைக்கு ஜாடை காட்ட பின் வந்தது சுடச் சுட தண்ணீர் கலக்காத கள்ளிச் சொட்டுக் காஃபி..

பின் வேம்பு வாங்க பக்கத்துல அண்ணன் வேலை பாக்கற இடம் இருக்கு..அங்க போய்ப் பேசலாம்..எனச் சொல்ல போனால் அது ஒரு டூரிங்க் டாக்கீஸ்

காலை வேளை என்பதால் பளபளவென் வெயில் மேக்கப் போட்டது போல் அடித்துக் கொண்டிருக்க உள்ளே சென்று மரபெஞ்சில் நான், உடன் வந்த என் நண்பர்கள் இருவர் வேம்பு என அமர்ந்து.. ஆமா ஒங்க அண்ணன் இங்க என்னவா இருக்கார்..

வேம்புவின் கண்களில் குட்டியாய்ச் சிரிப்பு..இங்க ஒரு டீக்கடை வைத்திருக்கிறார்..என்ன படிச்சுருக்காரா..எம்.எஸ்ஸி ஸூவாலஜி...

எங்களுக்குப் பேச்சு வராமல்..என்ன வேம்பு..இப்படிச் சொல்றீங்க..ம்ம் என்ன பண்ண வேலை கிடைக்கும் வரை இப்படி கடை வைத்திருக்கிறார் எனச் சொல்லி எதிரே தெரிந்த வெண் திரையை ஒரு நிமிடம் வெறித்துப் பார்த்துவிட்டு..பின் சொன்னார்..

”உங்களுக்குத் தெரியுமா சாவித்திரி ப்டம்.. ஓ..மேனகா நடிச்சது தானே..யா. அதை இந்தத் தியேட்டர்ல போட்டாங்க ரெண்டு மாசத்துக்கு முன்னால.. சுத்த பத்த ஊரெல்லாம் வண்டி கட்டிக்கிட்டு பாக்க வந்துட்டாங்க..சத்யவான் சாவித்திரி படம்னு நினச்சு..பின்ன என்ன..மாட்னி ஃபுல் ஈவ்னிங்க் ஈ காக்கை கூட வரலை..படத்தை எடுத்துட்டோம்.!.”

பின் பேசி முடித்து மறுபடி வேம்புவின் வீடு வந்தால் அமர்க்களமான சாப்பாடு..மோர்க்குழ்ம்பு, பால் பாயசம், தயிர்வடை, தயிர்ப் பச்சடி.. வேம்பு எங்களுக்கு எதுக்கு இவ்ளோ கிராண்டா..

மறுபடியும் சிரித்த வேம்பு..”நல்லா இருக்குல்ல..ஒரு ரகசியம் சொல்லட்டா.. நேத்துக்கு கரெண்ட் கட்..தியேட்டர் ஓடலை..வாங்கின பால்லாம் மீந்து.. சரியா நீங்க வந்தீங்க..வேஸ்ட் ஆக்லை..”.. எதுவும் சொல்லாமல் ஒரு வித கனத்துடன் பிரிந்தொம்(வேம்புவிற்கு அருப்புக்கோட்டையில் லெக்சரர் வேலை பின் கிடைத்தது..அவர் அண்ணனைப் பற்றி மறந்து விட்டது)..

இன்று இருவரிடமும் எனக்குத் தொடர்பில்லை..மனதில் இருப்பது நினைவு மட்டுமே

**

gkrishna
23rd September 2014, 11:30 AM
நன்றி திரைஅரங்கம் வலைபூ

மேனகா (1935)


தமிழ்நாட்டில் அக்காலத்தில் பல நாடகக் கம்பெனிகள் கோலோச்சிக் கொண் டிருந்தன. அந்த நாடகக் கம்பெனிகள் நடத்திய பல நாடகங்கள் திரைப்படங் களாகத் தயாரிக்கப்பட்டன. அவ்வாறு புகழ் பெற்ற நாடகக் கம்பெனிகளில் டி.கே.எஸ். சகோதரர்களின் ஸ்ரீ பால சண்முகானந்த சபா புகழ் பெற்று விளங்கியது.

டி.கே.எஸ். சகோதரர்களின் புகழ்பெற்ற நாடகங்களுள் ஒன்று “மேனகா’. துப்பறியும் கதை நிபுணர் என்று போற்றப்பட்ட வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய நாவலை “மேனகா’ நாடகமாக டி.கே.எஸ். சகோதரர்கள் நடத்தி வந்தனர். அந்த நாடகத்தைப் பார்த்த எம். சோமசுந்தரமும், எஸ்.கே.மொகிதீனும் (பிற்காலத்தில் ஜூபிடர் பிக்சர்ஸ் என்ற படநிறுவனத்தின் அதிபர்கள்), “மேனகா’வைத் திரைப் படமாகத் தயாரிக்க முடிவு செய்தனர். இதற் காக டி.கே.எஸ். நாடகக்குழு முழுவதையும் ரூ. 14 ஆயிரத்துக்கு ஒப்பந்தம் செய்தனர்.

கதை: டெபுடி கலெக்டர் சாம்பசிவ ஐயங் காரின் மகள் மேனகா. வக்கீல் வராகசாமிக்கு மனைவியான மேனகா, புகுந்த வீட்டில் பல கொடுமைகளுக்கு ஆளாகிறாள். வராக சாமியின் சகோதரிகள் மேனகாவைக் கொடுமைப் படுத்தியதுடன், வராகசாமிக்கு மறுமணம் செய்விக்கும் நோக்கத்தில், மேனகாவை நைனா முகமது என்ப வனுக்கு ஐயாயிரம் ரூபாய்க்கு விற்க ஏற்பாடு செய்கின்றனர். இதற்கு சாமா என்பவன் உதவி செய்கிறான்.

வஞ்சிக்கப்பட்ட மேனகாவை நைனா முகமது பலாத்காரம் செய்ய முயலும்போது, தனது கற்பைக் காப்பாற்றிக் கொள்ள தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறாள். அப்போது நைனா முகமதுவின் மனைவி நூர்ஜஹானால் காப்பாற்றப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாள்.

இதற்கிடையில் மேனகா, ஒரு நடிகனுடன் ஓடிப் போய் விட்டதாக, வராகசாமியின் சகோதரிகளும், சாமாவும் கதை கட்டி விட, அதை வராகசாமியும் நம்பி விடுகிறான்.

ஒருதடவை நூர்ஜஹானுடன் மேனகா காரில் சென்று கொண்டிருக்கும்போது, வராகசாமி பார்த்து விடுகிறான். தன்னை ஏமாற்றிய அவளைக் கொல்வ தற்காக, பின்தொடரும்போது, விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். மருத்துவ மனையில் மேனகா நர்ஸ் வேடத்தில் கணவனுக்குப் பணிவிடை செய்கிறாள். இறுதியில் உண்மை தெரிய வர, வராகசாமியும், மேனகாவும் ஒன்று சேர்கின்றனர்.

கலைவாணரின் முதல் படம்: ஒரு மாதத்தில் படமாக்கப்பட்ட மேனகா 1935ஆம் ஆண்டு வெளிவந்து மகத்தான வெற்றியைப் பெற்றது. மும்பை ரஞ்சித் ஸ்டுடியோவில் ரம்மியமாகப் படமாக்கப்பட்ட “மேனகா’ அந்த ஆண்டில் வெளிவந்த 31 படங்களில் பெரும் வெற்றி பெற்ற படமாகும். அகில இந்திய அளவில் நடிகராகவும், இயக்குநராகவும் விளங்கிய தமிழ்நாட்டின் புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜா சாண்டோ இயக்கினார். டி.கே.எஸ். நாடகக்குழுவினர் நன்கு ஒத்திகை பார்த்து “மேனகா’ நாடகத்தில் நடித்தி ருந்ததால், அந்தக் குழுவினரே படத்திலும் நடித்தனர்.

டி.கே.பகவதி வராகசாமியாகவும், எம்.எஸ். விஜயாள் மேனகாவாகவும் நடித்தனர். நாடகத்தில் சாமா பாத்திரத் தில் சிறப்பாக நடித்த என்.எஸ். கிருஷ்ணன் படத்திலும் அந்த வேடத்தில் பிய்த்து உதறினார். பிற்காலத்தில் கலைவாணர் எனப் புகழ்பெற்ற என்.எஸ்.கே.யின் திரையுலகப் பிரவேசம் மேனகாவின் மூலம்தான் நடந்தது. அவருக்கு மாத்திரம் அல்லாமல் டி.கே.சண்முகம் சகோதரர்கள், எஸ்.வி. சகஸ்ரநாமம், கே. ஆர். ராமசாமி, டி.என்.சிவதாணு போன்றோருக்கும் அரங்கேற்றம் அளித்தது “மேனகா’தான்.

டி.கே.சண்முகம் நைனா முகமதுவாகவும், கே.டி.ருக் மணி நூர்ஜஹானாகவும் நடித்த இந்தப் படத்தில் டி.கே.எஸ். சகோதரர்கள் நான்குபேருமே நடித்தனர். மேனகாவின் தந்தை சாம்பசிவ ஐயங் காராக டி.கே.சங்கரன் நடித்தார். பெருந்தேவி என்னும் விதவைப் பெண் வேடத்தில் வேடப்பொருத் தத்துடன் டி.கே. முத்துசாமி தோன்றி பாராட்டுப் பெற்றார்.

பெண்கள் கூச்சப்பட்டு நடிக்க முன்வராத அந்தக் காலத்தில் நாடகங்களில் ஆண்களே பெண் வேடமிட்டு நடிக்கும் முறையைப் பின்பற்றி டி.கே.சண்முகத்தின் சகோ தரர் முத்துசாமி தலையை மழித்து விதவைப் பெண் வேட மிட்டு நடித்தார். அதேபோல வேலைக்கார ரங்கராஜனின் மனைவி மற்றும் மகள் வேடங்களிலும் முறையே டி.என். சுப்பையா, பி.எஸ்.திவாகரன் என்ற ஆண்களே நடித்தனர் என்பதும், அவ்வை சண்முகி போன்ற வேடங்களுக்கு இதுவே முன்னோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரைப்படமான முதல் நாவல் என்பதுடன், முதல் சமூகத் தமிழ்ப் படம் என்ற பெருமையையும் “மேனகா’ பெற்றது.
1955ல் “மேனகா’ மீண்டும் புதுவடிவில் வெளியானது. 1935மேனகாவில் சிறிய வேடத்தில் அறிமுகமான கே.ஆர்.ராமசாமி கதாநாயகனாக நடித்து 1955இல் வெளிவந்த மேனகா, முந்தைய “மேனகா’வைப் போல வெற்றிவாகை சூடவில்லை

vasudevan31355
23rd September 2014, 11:44 AM
மேனகா:) வை மறக்காத விஸ்வாமித்ரர் வாசு சார்

அபூர்வ பாடல் கீழ் வானம் சிவக்கும் நினைவு கூர்ந்து உள்ளீர்கள்
அது தான் வாசு (தில்லு முல்லு நாகேஷ் )

அதான் கிருஷ்ணா. 'கோல் மால்' இல்லாத கிருஷ்ணா.

விஸ்வாமித்திரர் கோபக்காரரயிற்றே.

chinnakkannan
23rd September 2014, 11:48 AM
என்னுடைய போஸ்ட் இட்டு விட்டு அடுத்து மேனகாவின் ராமனின் மோகனத்தையும், கீ.வா.சி யில் ஒரு பாடல் என்றும் எழுதலாம் என நினைத்து இடுவதற்குள் வாசு சார் இட்டுவிட்டார்....எக்ஸ்பிரஸ் வேகம்..

vasudevan31355
23rd September 2014, 11:50 AM
வாருங்கள் சின்னக் கண்ணன் சார்.

பொல்லாத புன்சிரிப்பு வரவழைத்தது உங்களுடைய வேம்பு பதிவு. வேம்பு கடைசியில் உங்களைக் கசக்க வைத்து விட்டாரே! தண்ணீர் கலக்காத கள்ளிச் சொட்டுக் காஃபியா?

ஆமாம்! வேம்புவின் தங்கைக்கு கல்யாணம் ஆகி விட்டதா?:)

chinnakkannan
23rd September 2014, 12:04 PM
வாசு சார்..ஆகியிருக்க வேண்டும் எனத்தான் நினைக்கிறேன்.. தொடர்பு இல்லையேகுரு.. பலவருடங்கள் ஆகிவிட்டது..

மதுரை தொடர்பே விட்டு பலவருடம் ஆகி விட்டன :sad:



வாருங்கள் சின்னக் கண்ணன் சார்.

பொல்லாத புன்சிரிப்பு வரவழைத்தது உங்களுடைய வேம்பு பதிவு. வேம்பு கடைசியில் உங்களைக் கசக்க வைத்து விட்டாரே! தண்ணீர் கலக்காத கள்ளிச் சொட்டுக் காஃபியா?

ஆமாம்! வேம்புவின் தங்கைக்கு கல்யாணம் ஆகி விட்டதா?:)

chinnakkannan
23rd September 2014, 12:08 PM
பழைய மேனகா படபதிவுக்கு நன்றி கிருஷ்ணா சார்.. இப்போது தான் அதுபற்றித் தெரியும்..வடுவூர் துரைசாமி ஐயங்கார் ஓரிரு நாவல்கள் படித்திருக்கிறேன் சில வருடம் முன்பு..அந்தக் கால நடை..

vasudevan31355
23rd September 2014, 12:20 PM
கிருஷ்ணா சார்

மேனகா 1935 அருமையான நினைவூட்டல். நன்றி

அப்போ இது என்ன மேனகா? அதற்கு பிறகு வந்த இன்னொரு மேனகாவா?

டி.கே.ராமச்சந்திரன் இருக்கிறாரே.

http://www.inbaminge.com/t/m/Menaka/folder.jpg

gkrishna
23rd September 2014, 12:26 PM
கிருஷ்ணா சார்

மேனகா 1935 அருமையான நினைவூட்டல். நன்றி

அப்போ இது என்ன மேனகா? அதற்கு பிறகு வந்த இன்னொரு மேனகாவா?



1955 களில் வந்த கே ஆர் ராமசாமி நடித்த மேனகா அது என்று நினைவு வாசு சார்

vasudevan31355
23rd September 2014, 12:29 PM
Thanks to cinema express magazine

திருப்புமுனைத் திரைப்படங்கள்: 7

1935 - மேனகா

தமிழில் வெளிவந்த முதல் சமூகச் சித்திரம்!

தமிழ் சினிமாவின் நீண்ட வரலாற்றுப் பக்கங்களில் அதன் பொன் எழுத்து பளிச்சென்று தெரிந்தது 1935-ஆம் ஆண்டில்தான். 1931-ல் ஒன்று, 1932-ல் நான்கு, 1933-ல் எட்டு, 1934-ல் பதினான்கு என்றிருந்த பேசும் சினிமாவில்.. 1935-ம் ஆண்டில் 34 படங்கள் வெளிவந்தன. இந்த ஆண்டு வெளியான படங்களை வரிசைப்படுத்திப் பார்க்கிறபோது, அப்படி என்ன புரட்சி? படங்களின் எண்ணிக்கைதானே அதிகரித்துள்ளது என்று சொல்லத் தோன்றும்.

ஆனால், எண்ணிக்கை என்பதைத் தாண்டி குறிப்பிடத் தகுந்த புரட்சிகள் பல நடந்துள்ளன.

புராண, இதிகாசக் கதைகளாகவே அதுவரை சினிமா இருந்து வந்தது. அதிலும் பெரும்பாலும் இந்து சமயம் மற்றும் இந்து மதக் கடவுள்களைப் பற்றிய சினிமாக்களாகத்தான் இருந்தன. ஏற்கெனவே தெருக்கூத்தாகவும், நாடகமாகவும் கதாகாலாட்சேபமாகவும் பல்லாயிரம் முறை கேட்டு, பார்த்து சலித்துப் போயிருந்த ரசிகர்கள், புதுமையாக திரையில் ஏதாவது பார்க்க மாட்டோமா என்று ஏங்கிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் ரசிகர்கள் வயிற்றில் பால் வார்த்த படம்தான் "மேனகா'.

மர்மக் கதைகள் பல எழுதிவந்த வழுவூர் துரைசாமி, "மேனகா' என்ற சமூகக் கதையை எழுதி அப்போது புகழ் பெற்றிருந்தார். அந்தக் கதை, அதே பெயரில் நாடகமாகி அமோக வரவேற்பைப் பெற்றிருந்தது. நாடகத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து திரைப்படமாக

உருவானது.

கதைச்சுருக்கம்

வக்கீல் தொழில் பார்க்கும் வராகசாமி என்ற இளைஞனுக்கு பெருந்தேவி, கோமளா என்று இரண்டு இளைய சகோதரிகள். துரதிர்ஷ்டவசமாக திருமணமாகி சிறிது காலத்திலேயே இருவரும் விதவைகளாகி விடுகின்றனர்.

கால ஓட்டத்தில் வராக சாமிக்கும், டெபுடி கலெக்டர் சாம்பசிவம் என்பவரின் மகள் மேனகாவுக்கும் திருமணம் நடக்கிறது. பேரழகியான மேனகாவின் மீது வராகசாமி உயிரையே வைத்திருக்கிறான்.

வாழ வேண்டிய வயதில் விதவைகளாகிவிட்ட வராகசாமியின் சகோதரிகள், தங்களிடமிருந்து வராகசாமியை மேனகா பிரித்துவிடுவாளோ என்று அஞ்சுகிறார்கள். இதனால், மேனகாவிடம் தன் தம்பி அன்பு செலுத்தவிடாமல் சூழ்ச்சிகள் பல செய்கிறார்கள்.

சகோதரிகள் கிழித்த கோட்டைத் தாண்டாத வராகசாமி, சகோதரிகள் மனதைக் குளிர வைப்பதற்காக நாளடைவில் மனைவியை அடித்துத் துன்புறுத்த ஆரம்பிக்கிறான்.

இந்நிலையில் வராகசாமிக்கு வேறு பெண்ணை மறுமணம் செய்துவைக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள் பெருந்தேவியும், கோமளாவும். வராக சாமியின் மறுமணத்திற்கு மேனகா சம்மதிக்க மாட்டாள் என்பதால் சாமா அய்யர் என்ற கொடியவனுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டுகின்றனர். வராகசாமி கோர்ட்டுக்கு சென்றிருக்கும் நேரத்தில் மேனகாவைக் கடத்திக் கொண்டு போய் நைனா முகமது என்பவனிடம் ஐயாயிரம் ரூபாய் பணத்திற்கு விற்றுவிடுகிறான் சாமா அய்யர். பணம் கொடுத்து வாங்கிக் கொண்ட தைரியத்தில் மேனகாவின் கற்பைச் சூறையாட முயற்சிக்கிறான் நைனா முகமது. தற்செயலாக அங்கே வரும் நைனா முகமதுவின் மனைவி நூர்ஜஹான் மேனகாவைக் காப்பாற்றி அவளது தந்தையிடம் சேர்ப்பிக்கிறாள்.

நடந்த நிகழ்ச்சியால் பிரமை பிடித்தவள்போல் ஆகிவிடும் மேனகாவை, ஒரு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைத்து சிகிச்சை அளிக்கிறார் மேனகாவின் தந்தை.

மேனகாவை விற்ற செய்தி தெரிந்தால், வராகசாமியின் வெறுப்பை சம்பாதிக்க நேரிடும் என்பதால் சாமா அய்யருடன் சேர்ந்து மீண்டும் ஒரு சூழ்ச்சி செய்கிறார்கள் பெருந்தேவியும், கோமளாவும்.

மேனகாவுக்கும் ஒரு சினிமா நடிகனுக்கும் தொடர்பு இருந்ததாகவும், அவனுடன் அவள் ஓடிப்போய்விட்டாள் என்றும் கதை கட்டுகிறார்கள். அதற்கு ஆதாரமாக மேனகாவின் பெட்டியில் அந்த நடிகனின் போட்டோவை வைத்து வராகசாமியிடம் காட்டுகிறார்கள்.

இதையெல்லாம் பார்த்த பிறகு, மேனகா ஓடிப்போய்விட்டதாக வராக சாமியும் நம்பி விடுகிறான்.

மனைவி பிரிந்த ஏக்கத்தில், சித்தம் கலங்கிய நிலையில் பைத்தியக்காரனைப் போல் ஆகிவிடுகிறான் வராகசாமி. ஒருமுறை சாலையில் நூர்ஜஹானோடு காரில் மேனகா போய்க் கொண்டிருப்பதைப் பார்க்கிறான்.

மேனகாவைப் பார்த்த உடன், "சண்டாளி.. உன்னை ஒழித்துக் கட்டுகிறேன் பார்..' என்று ஒரு பாறாங்கல்லைத் தூக்கிக் கொண்டு அவளது காரைத் துரத்துகிறான். அப்போது எதிரில் வரும் கார் ஒன்றின் மேல் மோதி படுகாயமடைகிறான். படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறான்.

கணவனுக்கு ஏற்பட்ட விபத்தையும், அவன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதையும் அறிந்த மேனகா கணவனைப் பார்க்கத் துடிக்கிறாள். நூர்ஜஹான் ஆலோசனையின் பேரில் மேனகா நர்ஸ் உடை தரித்து ஆஸ்பத்திரிக்குச் செல்கிறாள். மயக்கம் தெளிந்த வராகசாமிக்கு நர்ஸ் வேடத்திலிருக்கும் மேனகா மூலமாக எல்லா உண்மைகளும் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய வருகிறது.

நூர்ஜஹானின் தந்தை மரக்காயர் உதவியால் சாமா அய்யரை போலீஸ் கைது செய்கிறது. வராக சாமியின் சகோதரிகள் மனம் திருந்தி, தன் சகோதரனுடன் மேனகாவைச் சேர்த்து வைக்கிறார்கள். சுபம் என்று படம் நிறைவடைகிறது.

திரைக்குப் பின்னால்..

தயாரிப்பு: சண்முகானந்தா டாக்கி கம்பெனி

கதை: வழூவூர் துரைசாமி அய்யங்கார்

வசனம்: கந்தசாமி முதலியார்

இயக்கம்: ராஜா சாண்டோ

இசை: டி.கே. முத்துச்சாமி,

பாடல்: இதயக்கோட்டை பூமிபாலதாஸ்

நடிகர், நடிகையர்: டி.கே.சண்முகம், டி.கே.பகவதி, டி.கே.சங்கரன், டி.கே. முத்துச்சாமி, என்.எஸ். கிருஷ்ணன், மொய்தீன், எம்.விஜயா, கே.டி.ருக்மணி, டி.கே.ராமசுந்தரி, டி.கே.விமலா.

நீளம்: 17,000 அடி

வெளியான தேதி: 06.04.1935

சில சுவாரஸ்யங்கள்:

இந்தப் படத்தை இயக்கிய ராஜா சாண்டோ தமிழ்நாட்டைச் சேர்ந்த பம்பாய் வாசி. "மேனகா' டி.கே.எஸ். சகோதரர்களால் நாடகமாகத் தயாரிக்கப்பட்டு, அமோக வரவேற்பைப் பெற்றிருந்தது. பலமுறை நாடகத்தில் நடித்த நடிகர்களே சினிமாவிலும் நடித்ததால், அவர்களின் நடிப்பில் இயல்பும் யதார்த்தமும் வெளிப்பட்டு காட்சிகள் சிறப்பாக அமைந்திருந்தன.

டி.கே.எஸ். சகோதரர்களில் ஒருவரான, டி.கே.எஸ். முத்துச்சாமி பிராமண விதவைப் பெண் வேடம் ஏற்று நடித்திருந்தார். படம் பார்த்தவர்கள் "பிரமாதமாக நடித்திருக்கிறாளே.. யார் அந்தப் பெண்?' என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். டி.கே.எஸ். முத்துச்சாமிதான் அந்தப் பெண் என்று படக்குழுவினர் சொன்னபோது யாரும் நம்பவில்லை.

அதேபோல சுப்பையாவும், இசையமைப்பாளர் திவாகரும் பெண் வேடத்தில் நடித்து ரசிகர்களை ரசிக்க வைத்தார்கள்.

நகைச்சுவை வேடங்களில் பிற்காலத்தில் நட்சத்திரமாக ஜொலித்த என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த முதல் திரைப்படம் "மேனகா' என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகி மேனகாவைத் துன்புறுத்தும் சாமா அய்யர் வேடத்தில் நடித்து படம் பார்த்த தாய்க்குலங்களின் வசவுகளுக்கு வஞ்சகமில்லாமல் ஆளானார். என்.எஸ்.கிருஷ்ணன் "சதிலீலாவதி'யில் நடிக்க ஆரம்பித்திருந்தாலும் முதலில் வெளிவந்தது "மேனகா'தான்.

ராஜா சாண்டோ முதன்முதலாக இந்தப் படத்தில் ஒரு நீண்ட முத்தக்காட்சியை அறிமுகப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். டி.கே. சண்முகமும், கே.டி.ருக்மணியும் நடித்திருந்த இந்த காட்சி பலத்த எதிர்ப்புகளை சம்பாதித்தது. ஆனாலும், இந்தக் காட்சிக்காகவே, படத்தைப் பலமுறை பார்த்த ரசிகர்களும் உண்டு.

பேசும்படம் வருவதற்கு முன்னரே நடிகராகவும், இயக்குநராகவும் பெயர்பெற்ற ராஜா சாண்டோ இந்தப் படத்தில்தான் நடிகர், நடிகைகளின் பெயரை டைட்டிலில் போடும் முறையை அறிமுகப்படுத்தினார். மும்பையில் உள்ள ரஞ்சித் ஸ்டுடியோவில் மூன்று மாதத்தில் இந்தப் படம் எடுக்கப்பட்டது. நாவல் ஒன்று, நாடகமாகி, பின் சினிமாவாகி வெற்றி பெற்றது ஒரு புதிய டிரண்டை ஏற்படுத்தியது.

முதல் சமூகப்படமாக வெளிவந்து வசூலையும் பாராட்டையும் பெற்ற "மேனகா' வேறு பல சமூகப்

படங்கள் தயாரிக்க வழிகாட்டியாகவும் அமைந்தது.

vasudevan31355
23rd September 2014, 12:31 PM
Thanks to cinema express magazine

(சினிமா எக்ஸ்பிரஸ் பார்வைபடி)

திருத்தம் செய்பவர்கள் புகுந்து விளையாடலாம்.

http://www.cinemaexpress.com/Images/article/2014/9/15/karnan.jpg

அபூர்வ தகவல்கள் சிவாஜி

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் திரைப் பிரவேசம், 1952ஆம் ஆண்டில் 'பராசக்தி' மூலமாகத்தான் என்பதில், ஒரு சிறு திருத்தம் மேற்கொள்ளலாம். ஹெச்.எம்.ரெட்டி என்பவர் தயாரித்து - இயக்கிய "நிரபராதி' என்ற படத்தில், நாயகனாக நடித்த முக்காமலா கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு, நமது நடிகர் திலகம் பின்னணிக் குரல் கொடுத்ததன் மூலமாக, "பராசக்தி'க்கு முன்பே 1951 ஆம் ஆண்டிலேயே திரையுலகப் பிரவேசம் செய்துவிட்டார். ("நிரபராதி' தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட படம்.)



* கே.வி.மகாதேவனின் உதவியாளர் டி.கே.புகழேந்தி தனித்து இசையமைத்த (4 படங்களில்) ஒரு படம், "குருதட்சணை' என்ற சிவாஜி கணேசன் நடித்த படமாகும்.



* சிவாஜி கணேசனுக்கு இயக்கவும் தெரியும் என்றால் நம்ப முடிகிறதா? அவர் ஒரு திரைப்படத்தை இயற்றி இருக்கிறார். அவர் முழுப் படத்தையும் இயக்கவில்லை என்றாலும், ஒரு படத்தை இயக்கியுள்ளார் என்று வைத்துக் கொள்ளலாம். "ரத்தபாசம்' என்ற படத்தை இயக்கியவர், பாதி படத்திற்கு மேல் இயக்க முடியாததால், மீதிப் படத்தை சிவாஜியே இயக்கினார். படத்தின் எழுத்துப் பகுதியில் (டைட்டில்) இயக்கம் என்ற பெயர் வர வேண்டிய இடத்தில் எவரது பெயரும் திரையில் வராமல், சிவாஜி கணேசனின் குளோசப் போட்டோக்கள் மட்டுமே திரையில் காண்பிக்கப்படும்.



* நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த "இரு துருவம்' என்ற படத்தின் கதையை எழுதியவர் இந்தி நடிகர் திலிப்குமார். இது "சங்கா உடுடு' என்கிற இந்திப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.



* நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த "சரித்திர நாயகன்' என்ற படத்தின் கதையை, தெலுங்கு நடிகர் என்.டி.ராமாராவ் எழுதியுள்ளார். தெலுங்குப் படத்தில் என்.டி.ஆர்.தான் கதாநாயகன். அதன் தழுவலாக எடுக்கப்பட்ட படம் "சரித்திர நாயகன்'.



* சி.எஸ்.ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீனிவாஸ், டி.எம்.செüந்தர

ராஜன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் ஆகியோர் சிவாஜி கணேசனுக்காக ஒரு படத்தில் யாராவது ஒருவர் மட்டும் பின்னணி பாடியிருப்பார்கள். ஆனால், "வணங்காமுடி' என்ற படத்தில் மட்டும் சிவாஜிக்கு சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம்.ராஜா, டி.எம்.செüந்தரராஜன் ஆகிய மூன்று பேரும் வெவ்வேறு பாடல்களுக்குப் பின்னணி பாடியிருப்பார்கள். அதேபோல, "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி'என்ற படத்தில் மட்டும் சிவாஜிக்கு ஜே.பி.சந்திரபாபு, ஏ.எம்.ராஜா, வி.என்.சுந்தரம் ஆகிய மூன்று பேர் பின்னணி பாடியிருப்பார்கள்.



* நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக, வி.என்.சுந்தரம் இரண்டு பாடல்களை பின்னணி பாடியுள்ளார். "வீரபாண்டிய கட்டபொம்மன்' என்ற படத்தில் வெற்றி வடிவேலனே என்ற பாடலையும், "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' என்ற படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.



* நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக எஸ்.சி.கிருஷ்ணன், "ராஜா ராணி' என்ற படத்தில் (கண்ணற்ற தகப்பனுக்கு) பூனை கண்ணை மூடினால் என்ற ஒரே ஒரு பாடலை மட்டுமே பின்னணி பாடியுள்ளார்.



* நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக அஜித்சிங் என்பவர், "தவப்புதல்வன்' என்ற படத்தில் லவ் ஈஸ் ஃபைன் டார்லிங் என்ற ஒரே ஒரு ஆங்கிலப் பாடலை பின்னணி பாடியுள்ளார்.



* நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக, இசையமைப்பாளர் கண்டசாலா, "கள்வனின் காதலி' என்ற படத்தில் வெய்யிற்கேற்ற நிழலுண்டு என்ற ஒரே ஒரு பாடலை மட்டும் பின்னணி பாடியுள்ளார்.



* நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக தெலுங்கு பின்னணிப் பாடகர் எம்.சத்தியம் என்பவர், "மங்கையர் திலகம்' என்ற படத்தில் "நீ வரவில்லை எனில் ஆதரவேது' என்ற ஒரே ஒரு பாடலை மட்டும் பின்னணி பாடியுள்ளார்.



* நடிகர் திலகம் நடித்த படங்களில், பாரதியார் பாடல்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஒரே படம், "கப்பலோட்டிய தமிழன்.'



* பூஜ்ஜியம் என்ற சொல் இடம்பெற்ற ஒரே பாடல், (நடிகர் திலகம் நடித்த "வளர்பிறை' படத்தில் வரும்) "பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை" என்ற பாடலாகும்.

* பன்னிரண்டு மாதங்களின் பெயர்களும் இடம்பெற்ற இரு திரைப் பாடல்களில் ஒன்று, நடிகர் திலகம் நடித்த "ராஜராஜ சோழன்' படத்தில் இடம்பெற்ற, "மாதென்னைப் படைத்தான்' என்ற பாடலாகும்.



* சிவாஜி நடித்த படங்களில் பாடல்கள் இருந்தும், சிவாஜி பாடாமல் இருக்கும் படங்கள் "மோட்டர் சுந்தரம் பிள்ளை', "தில்லானா மோகனாம்பாள்' ஆகிய படங்களாகும்.



* பாடல்களே இல்லாத முதல் தமிழ்த் திரைப்படம் நடிகர் திலகம் நடித்த "அந்தநாள்' படமாகும்.



* இலங்கை நடிகை மாலினி பொன்சேகா நடித்த ஒரே தமிழ்ப் படம், நடிகர் திலகம் நடித்த "பைலட் பிரேம்நாத்' என்பதாகும்.



* எம்.ஜி.ஆர். நடித்த தேவர் பிலிம்ஸ் படங்களை மட்டுமே இயக்கிய இயக்குநர் எம்.ஏ.திருமுகம், நடிகர் திலகம் நடித்த "தர்ம ராஜா' என்ற ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கியுள்ளார்.



* மனோரமா, நடிகர் திலகத்தின் ஜோடியாக நடித்த ஒரே படம், "ஞானப் பறவை' மட்டுமே.



* தமிழ் சினிமாவின் முதல் அகன்ற திரைப் (சினிமா ஸ்கோப்) படம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'ராஜராஜ சோழன்' திரைப் படமாகும்.



* தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் முழு நீள ஈஸ்ட்மென் வண்ணப் படம், நடிகர் திலகம் நடித்த "வீரபாண்டிய கட்டபொம்மன்' (1956) படமாகும். (1952 இல் திரையிடப்பட்ட "ஆன்' (கௌரவம்) என்ற படம், முழு நீள டெக்னிக் வண்ணப் படம் என்றாலும், அது இந்தியிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் (டப்பிங்) செய்யப் பட்ட படமாகும். (எம்.ஜி.ஆர். நடித்த "அலிபாபாவும் 40 திருடர்களும்' (1956) என்ற படம், தமிழ் சினிமாவின் முதல் முழு நீள கேவா வண்ண படமாகும்).



* நடிகர் திலகம் கெüரவ வேடத்தில் நடித்த தமிழ் படங்கள் மர்ம வீரன், குழந்தைகள் கண்ட குடியரசு, தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை, தாயே உனக்காக, சினிமா பைத்தியம், உருவங்கள் மாறலாம், நட்சத்திரம், தாவணிக் கனவுகள், மருமகள், சின்ன மருமகள், பசும்பொன், ஒன்ஸ்மோர், தேவர் மகன், என் ஆச ராசாவே, மன்னவரு சின்னவரு, புதிய வானம், ஜல்லிக்கட்டு, படையப்பா, பூப்பறிக்க வருகிறோம் ஆகியவை.



* நடிகர் திலகம் இரு வேடங்களில் நடித்த படங்கள் உத்தம புத்திரன், எங்க ஊர் ராஜா, கெüரவம், என் மகன், மனிதனும் தெய்வமாகலம், சந்திப்பு, ரத்த பாசம், சிவகாமியின் செல்வன், பாட்டும் பரதமும், என்னைப் போல் ஒருவன், புண்ணிய பூமி, எமனுக்கு எமன், விஸ்வரூபம், வெள்ளைரோஜா, பலே பாண்டியா (3 வேடங்கள்), தெய்வ மகன் (3 வேடங்கள்), திரிசூலம் (3 வேடங்கள்), நவராத்திரி (9 வேடங்கள்) .



* "பராசக்தி' படத்தை இயக்கிய கிருஷ்ணன் பஞ்சு முதல், பூப்பறிக்க வருகிறோம் படத்தை இயக்கிய ஏ.வெங்கடேஷ் வரை, சுமார் 100 இயக்குநர்களின் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்துள்ளார். சிவாஜியை வைத்து அதிக படங்களை இயக்கியவர்கள் ஏ.சி.திருலோகசந்தர் (20 படங்கள்), ஏ.பீம்சிங் (17 படங்கள்) .



* படத் தயாரிப்பைப் பொறுத்த வரையில் நடிகர் திலகத்தை வைத்து அதிக (17 படங்கள்) படங்களை தயாரித்தவர் நடிகர் கே.பாலாஜி மட்டுமே.



* பண்டரிபாய் முதல் சுமார் 55 கதாநாயகிகள் சிவாஜியுடன் இணைந்து நடித்துள்ளார்கள். இவர்களில் கே.ஆர்.விஜயா 40 படங்களிலும், பத்மினி 38 படங்களிலும் இணைந்து நடித்துள்ளார்கள்.



* ஜெயலலிதாவின் தாயார் சந்தியா அவர்கள், "பலே பாண்டியா' படத்தில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாகவும், "சாந்தி' படத்தில் தாயாகவும் நடித்துள்ளார்.



* ஜெயலலிதா, "மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் நடிகர் திலகத்துக்கு மகளாகவும், பல படங்களில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாகவும், "பாட்டும் பரதமும்' படத்தில் நடிகர் திலகத்துக்கு தாயாகவும் நடித்துள்ளார்.



* நடிகை லட்சுமியின் தாயார் குமாரி ருக்மணி, "கப்பலோட்டிய தமிழன்'படத்தில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாகவும், "ரோஜாவின் ராஜா' படத்தில் தாயாகவும், "விளையாட்டுப் பிள்ளை' படத்தில் மாமியாராகவும் நடித்துள்ளார்.



* நடிகை லட்சுமி, எதிரொலி, தங்கைக்காக, அருணோதயம் ஆகிய படங்களில் நடிகர் திலகத்துக்கு தங்கையாகவும், ராஜராஜ சோழன் படத்தில் மகளாகவும், உனக்காக நான், தியாகம், நெஞ்சங்கள், ராஜரிஷி, ஆனந்தக் கண்ணீர் ஆகிய படங்களில் ஜோடியாகவும் நடித்துள்ளார்.



* நடிகை ஸ்ரீதேவி, நடிகர் திலகத்தின் மகளாக பைலட் பிரேம்நாத் படத்திலும், ஜோடியாக விஸ்வரூபம், சந்திப்பு ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.



* நடிகை சுமித்ரா, அண்ணன் ஒரு கோயில் படத்தில் நடிகர் திலகத்துக்கு தங்கையாகவும், வீர பாண்டியன் படத்தில் ஜோடியாகவும் நடித்துள்ளார்.



* விஜயகுமாரி, பார் மகளே பார் படத்தில் நடிகர் திலகத்துக்கு மகளாகவும், குங்குமம், ராஜராஜ சோழன் ஆகிய படங்களில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாகவும், பச்சை விளக்கு படத்தில் நடிகர் திலகத்துக்கு தங்கையாகவும், அன்பைத் தேடி படத்தில் நடிகர் திலகத்துக்கு அக்காவாகவும் நடித்துள்ளார்.



* தம்மை விட வயதில் மூத்தவரான பி.பானுமதியுடன் சில படங்களில் சிவாஜி இணைந்து நடித்துள்ளார்.



* குங்குமம், லாரி டிரைவர் ராஜாக்கண்ணு ஆகிய இரு படங்களில் சிவாஜி பெண் வேடங்களில் நடித்துள்ளார்.

* பாபு, சம்பூர்ண ராமாயணம், லட்சுமி கல்யாணம், காவல் தெய்வம், படிக்காத பண்ணையார், மூன்று தெய்வங்கள் இன்னும் சில படங்களில் சிவாஜி நடித்த பாத்திரங்களுக்கு, கதாநாயகிகள் கிடையாது.



* மராட்டிய மாமன்னர் வீர சிவாஜியாக நடிகர் திலகம் முழுப் படத்தில் நடிக்கவில்லை என்றாலும் "ராமன் எத்தனை ராமனடி' படத்தில் ஒரு காட்சியில் மட்டும் சிவாஜியாக சிவாஜி நடித்திருக்கிறார்.



* தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முதலாக 80 அடி உயர விளம்பர பலகை (கட் அவுட்) வைக்கப்பட்டது, சிவாஜி நடித்த வணங்காமுடி (1957) படத்திற்கே.



* "திரையுலக இளவரசன்' நடிக்கும் என்ற விளம்பரத்துடன், மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த திரும்பிப் பார் (1953) என்ற படத்திற்குதான், தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முதலாக பட முன்னோட்டம் (டிரெய்லர்) காட்டப்பட்டது.



* இலங்கை வானொலியில் நல்ல தமிழ் கேட்போம் என்ற தலைப்பில், வாரத்தில் ஒரு நாள் 30 நிமிடங்களுக்கு புகழ் பெற்ற திரைப்படங்களின் கதை -வசனங்களை ஒலி பரப்புவார்கள். அந்த நிகழ்ச்சியில் சக்தி கிருஷ்ணசாமி, ஏ.பி.நாகராஜன், மு.கருணாநிதி, இளங்கோவன், தஞ்சை ராமையாதாஸ், எஸ்.டி.சுந்தரம் போன்ற சிறந்த படைப்பாளிகளின் திரைக்கதை வசனங்கள் ஒலிபரப்பப் படும். சிவாஜி நடித்த திருவிளையாடலில் தருமியும் சிவனும் பேசும் வசனம், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையிடம் கட்டபொம்மன் பேசும் வசனம், பராசக்தியில் நீதிமன்றக் காட்சி, ராஜா ராணியில் உள்ள சாக்ரடீஸ், சேரன் செங்குட்டுவன் நாடகங்கள் ஆகிய வசனங்களே அதிக தடவை ஒலிபரப்பப்பட்டுள்ளன.

- சிவ.குகன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

நடித்த மொத்த படங்கள் - 306



கதாநாயகனாக நடித்த

தமிழ் படங்கள் - 262



கதாநாயகனாக நடித்த

பிறமொழி படங்கள் - 14



கௌரவ வேடத்தில் நடித்த

தமிழ் படங்கள் - 19



கௌரவ வேடத்தில் நடித்த

பிறமொழி படங்கள் - 11



நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெற்ற விருதுகள்

1960 இல் கெய்ரோவில் நடந்த ஆசிய, ஆப்பிரிக்க பட விழாவில், சிறந்த நடிகருக்கான விருதை சிவாஜி கணேசனுக்கு "வீரபாண்டிய கட்டபொம்மன்' படம் பெற்று தந்தது.

1966 இல் பத்மஸ்ரீ விருது பெற்றார்.

1969 இல் தமிழக அரசு வழங்கிய சிறந்த நடிகர் விருது பெற்றார்.

1969 இல் தமிழக அரசு வழங்கிய கலைமாமணி விருது பெற்றார்.

1984 இல் பத்மபூஷன் விருது பெற்றார்.

1986 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்தது. நடிகர் திலகம், சிம்மக் குரலோன், கலைக் குரிசில் - என்ற பட்டப் பெயர்களாலும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார். இந்திய அஞ்சல் துறையானது, இவரின் படம் பதித்த 4 ரூபாய்க்கான அஞ்சல் தலையை வெளியிட்டு நடிகர் திலகத்தை கௌரவம் செய்தது. "கப்பலோட்டிய தமிழன்' படத்திற்கு, அரசு வரிவிலக்கு அளித்து, வ. உ.சி அவர்களையும், நடிகர் திலகம் அவர்களையும் கௌரவம் செய்தது.

1995 இல் பிரான்ஸ் நாட்டில் வழங்கப் பட்ட செவாலியே விருது பெற்றார்.

1996 இல் குடியரசுத் தலைவரிடம் தாதாசாகிப் பால்கே விருது பெற்றார்.

gkrishna
23rd September 2014, 12:35 PM
இளைய நிலா பொழிகிறது

1982 – 1983 காலகட்டம்.- பெல்பொட்டம், தடிப்பான பெல்ட், அகண்ட காலர் ஷேர்ட், காதை மறைத்து நிற்கும் தலைமுடி, கமல்ஹாசனின் மீசை என இளைஞர்கள் திரிந்த காலம். அந்தக் காலத்தில் பயணங்கள் முடிவதில்லையில் வெளிவந்த இந்தப் பாட்டு தமிழ்த் திரைப் பாடல்களின் ட்ரெண்டிலும் இளசுகளிலும் ஏற்படுத்திய தாக்கம் கொஞ்ச நஞ்சமல்ல

ஒரு பாட்டிலே, அதன் மெட்டு, ஆர்கெஸ்ட்ரேஷன், பாடலின் வரிகள், பாடியவர், அதற்கு நடித்தவர் ... என எல்லாமே அட்டகாசமாக அமைவது வெகு கடினம். ஆனால் இந்தப்பாட்டில் மேற்கூறிய எல்லாவற்றுடனும் இன்னொருவரையும் சேர்த்தே ஆகவேண்டும் அவர்தான் இந்தப்பாட்டில் Accoustic கிட்டார் வாசித்த கலைஞர்.

தமிழ் திரை இசையைப் புரட்டிப் போட்டு ஒரு 'ட்ரெண்டையே' உருவாக்கிய இசைஞானியின் அதி உச்ச இசைக்கற்பனையை நடைமுறைப்படுத்திய அந்தக் கலைஞர் யார் ?

இசைஞானி இளையராஜா, ராசையாவாக சென்னை வந்த புதிதில் இசைக்குழுக்களில் இசைக்கலைஞராகப் பணிபுரிந்து மேடை நிகழ்ச்சிகளில் வாசித்துள்ளார். கிட்டாரும் அவர் வாசித்தவைகளில் அடங்குகின்றது. அதன்பின் ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராகச் சேர்ந்த போதும் அங்கே கிட்டாரிஸ்ட்டாக வாசித்துள்ளார். அதை விட இன்னொரு முக்கியமான விடயம் அவர் , Trinity College of Music, London என்ற கலாசாலையில் கிட்டார் இசைப் புலமைக்காக தங்கப்பதக்கமும் பெற்றுள்ளார்.

இதை இங்கே குறிப்பிடுவதற்குக்காரணம் 80 களிற்குப் பிறகு இசைஞானியின் ஆளுமையின் கீழ் தமிழ்த்திரையிசை வந்தபின் தமிழ்த் திரையிசைப்பாடல்களில் கிட்டார் என்ற இசைக்கருவி லாவகமாக உபயோகிக்கப் பட்டிருப்பதற்கும் அந்த இசை அந்தப்பாடல்களில் மேலதிக ஒன்றாகக் காணப்படாமல் பாடலின் ஜீவனுடன் ஒன்றரக் கலந்திருந்ததற்குக் காரணம் என்னவென்பதை தெரியப்படுத்துவதற்குத்தான்.

கிட்டார் என்ற இசைக்கருவியில் அதீத நாட்டத்தையும் இயற்கையிலேயே அதி உச்சப் புலமையையும் பெற்றிருந்த இசைஞானி, தனது பாடல்களில் கிட்டாரை ஏனோதானோவென்று பாவிக்காமல் அதி அற்புதமாகப் பாவித்து வந்துள்ளார். அதற்காக அவர் தன்னுடன் கூட வைத்துக்கொண்ட கிட்டார் கலைஞர்கள் மிகச்சிறந்த விற்பன்னர்கள். நான் அறிந்தவரையில் அவர்கள் மொத்தம் எட்டு பேர்கள்.

அவர்கள் வருமாறு அவர்களைப்பற்றிய தகவலை அளித்த நண்பர் வெங்கிக்கும், நெப்போலியன் செல்வராஜ் அவர்களுக்கும் நன்றிகள் .

சதாசுதர்சனம், சந்திரசேகர், ராதா விஜயன், காலம் சென்ற கிட்டார் கலைஞர் சாய்பாபா, கங்கை அமரன், சசி , டேவிட் ஜெயக்குமார், சந்தானம் ஆகியோரே அந்த கலைஞர்களாவர்..

மேலே குறிப்பிட்டுள்ளவர்கள்தான் கடந்த 30 வருடங்களாக கேட்டு ரசித்து, மெய்மறந்து, கிறங்கிய பாடல்களை இசைஞானி உருவாக்கத்துணை நின்றோர்.

இவர்களில், 'இளைய நிலா பொழிகிறதே....' யில், பாடலின் தொடக்கம் இடையிசை முடிவு என அதற்கு ஜீவன்கொடுக்கும் கிட்டார் Accoustic Guitar.. அதை வாசித்தவர் சந்திரசேகர் ரங்கநாதன் என்ற மாபெரும் கலைஞன். இசைஞானியிடம் பலவருடங்களாக ட்ரம்மராகவும் பின்
கண்டக்டராகவும் பணியாற்றிய புருஷோத்தமனின் அண்ணன்.

சந்திரசேகர் ரங்கநாதன் யார் ? அவர் தனியே ஒரு கிட்டார் இசைக்கலைஞன் மட்டும்தானா ?? இல்லை அவர் ஒரு பன்முகத்திறமைசாலி .
http://metronews.lk/uploads/others/11_Chandrasekhar-Ranganathan2.jpg

இவர் ஒரு பொறியியலாளர். கீபோர்ட் கலைஞர், கிட்டாரிஸ்ட், ஒலிப்பதிவாளர், ஒலிப்பொறியியலாளராக (Sound Programmer) கடமையாற்றியுள்ளார்.

சமூக இணையத்தளங்களில் பாடல்கள் சம்பந்தமான மேலோட்டமான கட்டுரைகள் கருத்துக்கள எழுதுவோர், ..'இளைய நிலா பொழிகிறதே....' பற்றி எழுதும் போது அதில் கிட்டார் வாசித்தவரின் பெயரை தமது விருப்பத்துக்கு ஏற்ப தாம் நினைத்தப்படி எழுதுகிறார்கள்.

இந்தப்பாட்டில் தனது புலமையை காட்டிய கலைஞனுக்கு கிடைக்கவேண்டிய கௌரவமும் மரியாதையும் கிடைத்தே தீரவேண்டும். அது அவருக்கான உரிமை.

தமிழ் இசைக்குழுக்களின் மேடைகளிலும், பின்னணிப்பாடகர்கள் பங்குபற்றும் மேடைகளிலும் குறிப்பாக எஸ்.பி.பாலு. பங்குபற்றும் கச்சேரிகள், மேடைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அதிகளவில் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான தடவைகள் பாடப்பட்ட பாடலாக இந்தப்பாடல்தான் இருக்கும்

ஒரு 'ட்ரெண்டை' உருவாக்கிய பாடல். இன்றுவரை அலுக்காமல் புதியதாகவே இருக்கும் பாடல். பல சந்ததிகள் கடந்தும் இதில் சம்பந்தப்பட்ட அனைவரினதும் குறிப்பாக கிட்டாரிஸ்ட்டின் பேர் சொல்லும் பாடல் இது.

சகோதரி ஸ்டெல்லா ராக் அவர்கள் எங்கிருந்து எடுக்கப்பட்ட கட்டுரை என்று கட்டுரை ஆரம்பத்திலேயே குறிப்பிட சொல்லி இருந்தார் . அதனால் தலைப்பில் நன்றி குறிப்பிடப்பட்டு உள்ளது

first interlude

http://www.youtube.com/watch?v=uw-JwiTJ4_A

final interlude

http://www.youtube.com/watch?v=xtEOMMk22kw

full song
http://www.youtube.com/watch?v=U__3CxAueys

gkrishna
23rd September 2014, 12:38 PM
மன்னிக்கவும் வாசு சார்

நடிகர்திலகத்தை பற்றிய தகவல் சுரங்கம் அருமை .அதே நேரத்தில் நான் இளைய நிலா பொழிகிறது பற்றி பதிவு இட்டு விட்டேன் .

chinnakkannan
23rd September 2014, 12:45 PM
மேனகா பற்றிய பேச்சு என்றவுடன் விச்சு வின் (விஸ்வாமித்ரர்) நினைவு வந்து அத்துடன் ந.தி ராஜரிஷி நினைவும் வந்தது..அதில் மேனகாவாக யாராவது நடித்தார்களா என்ன.. அப்புறம் மான்கண்டேன் மான்கண்டேன் பாட்டும் நினைவில் பிரபு..அண்ட் ஷார்ட் சுலோச்சு..!

chinnakkannan
23rd September 2014, 12:46 PM
இளைய நிலா பற்றி ஒரு வியாசமே எழுதலாம்..அவ்வளவு என் மனம் கவர்ந்த பாடல் ..அண்ட் மனம் கவர்ந்த இசை அண்ட் ம.க.பூர்ணிமை..+ம.க. லிரிக்ஸ்.. கிடார் கலைஞர் பற்றிய கட்டுரைக்கு நன்றி கிருஷ்ணா ஜி..

gkrishna
23rd September 2014, 12:47 PM
சி கே சார்

ராஜரிஷியில் மேனகா லக்ஷ்மி என்று நினைவு

மாதவனே மா தவம் ஏன் என்ற ஒரு அருமையான பாடல் நினைவில் உண்டு லக்ஷ்மி நடிகர் திலகம் இணையில்

gkrishna
23rd September 2014, 12:54 PM
ஆ ஆ ஆ ஆ ஆ...ஆ ஆ ஆ ஆ ஆ...


மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே

மா துறவை நீ அறிந்தாய் மாதுறவை ஏன் மறந்தாய்

தவமும் தனமும் சுகமும் என் வசம்

மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே



செவ்விதழாய் இது தேன்கனி கோவை...ஆ ஆ ஆ ஆ... (2)

தேவா உன் வானமுதம்...(2)

சேயிழை நூலிடை பின்னல் தோரணம் காமனின் கோயிலில் நானே கோபுரம்

தேனூறும் ஆகாய கங்கை சலசலசலவென வருகிறதே

வழிகிறதே...ஆ ஆ நதியினில் நீராடு...



மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே



தாரகைகள் ஒரு ஆயிரம் கோடி...ஆ ஆ ஆ ஆ...(2)

நானங்கே தங்கநிலா...ம் ம் ம் ம்...

ஞானியின் ஐம்புலன் என்னில் சங்கமம் யாகமும் யோகமும் என்ன நாடகம்

ஆ ஆ ஆ ஆ...ஆ ஆ ஆ ஆ...ஆ

பிரம்மாவின் கைவண்ணம் நானே இளமையில் ஒரு மயில் தனிமையிலே

தவிக்கிறதே...ஏ ஏ ஒருமுறை பாராயோ...



மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே



அந்தி மாகலையில் இந்த மேகலைகள் அசையும் அசைவிலே இசைவிலே

இடை ஒடிய ஒடிய நடைகள் பயிலும் மயில் இதுதானே

தத்தஜம் ததகிடஜம் தக தகதீம்த தகதீம்த தகதாம்தக

தகிட திகிட தொம்கிட நம்கிட தகதிமி

தரிகிடதாம் தரிகிடதாம் தரிகிடதாம்

விழியிலே மரகதம் இதழ்கள் சோமபாணம்

தகிடதாம் தகிடதாம் தகிடதாம்த

தரிகிடதாம் தரிகிடதாம் கிடதக தரிகிடதாம்

நித்தம் பரிமாற வரவா தலைவா

ரிம்ம ரிமபப மபநிநிபமப...ரிம்ம ரிமபப மபநிநிபமப

தாம்த தகதாம்த தகதீம் தகதாம்

இளைய தேகம் இரவுநேரம் விரகதாபம் எரியுதே

தகிடஜம்த திகிடஜம்த தோம்கிடஜம்த நம்கிடஜம்

முகிலிலாத குழலும் உந்தன் உறவுதேடி அலையுதே

தகிடஜம்த திகிடஜம்த தோம்கிடதஜம்த நம்கிடதஜம்

...

தவமது கலைவது தெரிகிறது...அருள்கொடு மா தேவா...அருகினில் மாதே வா...



மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே

மா துறவை நீ அறிந்தாய் மாதுறவை ஏன் மறந்தாய்

தவமும் தனமும் சுகமும் என் வசம்

மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே

http://music.cooltoad.com/music/song.php?id=298153


மான் கண்டேன் மான் கண்டேன் - பிரபு நளினி சி கே சார்

madhu
23rd September 2014, 01:09 PM
வெளிவந்த நாள் தொட்டு ரசிகர்கள் நெஞ்சில் அமர்ந்து விட்ட இனிமையான பாடல். ராகங்கள் மாறுவதில்லை திரைப்படத்தில் இளையராஜா இசையில் எஸ்.பி.பாலா குரலில் விழிகள் மீனோ மொழிகள் தேனோ...

http://youtu.be/Pbcp9VAZc6U

vasudevan31355
23rd September 2014, 01:11 PM
மேனகா பற்றிய பேச்சு என்றவுடன் விச்சு வின் (விஸ்வாமித்ரர்) நினைவு வந்து அத்துடன் ந.தி ராஜரிஷி நினைவும் வந்தது..அதில் மேனகாவாக யாராவது நடித்தார்களா என்ன.. அப்புறம் மான்கண்டேன் மான்கண்டேன் பாட்டும் நினைவில் பிரபு..அண்ட் ஷார்ட் சுலோச்சு..!

ராஜரிஷியில் தலைவருடன் லஷ்மி


http://www.youtube.com/watch?v=IiGc3aAp0rU&feature=player_detailpage

ராஜரிஷியில் மான் கண்டேன் மான் கண்டேன் பாடலில் சகுந்தலையாக துஷ்யந்தன் பிரபுவுடன் நளினி


http://www.youtube.com/watch?v=KJ8qspUpRb0&feature=player_detailpage

அபிநய சுந்தரி ஆடுகிறாள்' மிருதங்கச் சக்கரவர்த்தியில் பிரபுவுடன் உங்கள் சுலோச்சு

போட்டாச்சு :)
போட்டாச்சு
'போட்டாச்சு


குழப்பம் தீர்ந்ததா?

chinnakkannan
23rd September 2014, 01:17 PM
கிருஷ்ணா ஜி.. நைஸ்.. மேனகா பாட்டு புகையாக நினைவில்.. கேட்கிறேன்..

யா.. கொஞ்சம் உணர்ச்சி வசப் பட்டு வ.பி செய்துவிட்டேன்..யா..பிரபு நளினி..

பிரபு சுலோச்சு பாடும்பாடல் எனக்குப் பிடிக்குமே..உணர்ச்சிகரமான படத்தில் டபக்கென கணீர்க்குரல் ஒலிக்கும் பாடல்..பிரபு கம்பீரமாக உயர நடை நடகக் கொஞ்சம் தரையை நோக்கில் சுலோ தென் படுவார்.. என்ன பாட்டாக்கும் அது..

அபிநய சுந்தரி ஆடுகிறாள் என் ஆசைக் கனலை ஊதுகிறாள்
விழிகளில் கடிதம் தீட்டுகிறாள் இன்ப வீணையில் ஸ்ருதி மூட்டுகிறாள்

நீ மயிலுக்கு நாட்டியக் கலை சொன்னவள்
அந்த மதனுக்கும் காதலின் பொருள் சொன்னவள்

அழகிய மேகலை அசைவதும் ஓர் கலை
உனதுடல் மிருதங்கமே
பலவகைத் தாளங்கள் சுகம் தரும் நாதங்கள்
பயில்வதும் சுகமல்லவோ..

உன் சிறு இடை என்பது இடைச்சங்கமோ
உன் சதங்கையில் வந்தது தமிழ்ச்சந்தமோ..
இளமையின் சீதனம் இசையினில் மோகனம் (கோபால் சாரத் தான் கேக்கணும்!0
என்பதும் நீயல்லவோ..

கவி நயம் மேவிடும் இலக்கியம் யாவிலும்
கற்பனை நீயல்லவோ (சுலோக்கு இது கொஞ்சம்ஜாஸ்தி!)


*

எழுதியது யாரெனத் தெரியவில்லை..படம் மிருதங்கச் சக்கரவர்த்தி..மதுரை அமிர்தத்தில் சின்ன வயதில் ம்க்கும் வாலிப வயதில் பார்த்தது..பாடியது சீர்காழி டாக்டர் சிவசிதம்பரம்.. புலிக்குப் பிறந்த புலி..

madhu
23rd September 2014, 01:18 PM
திரைப்படம் மேனகா, நடிகை மேனகா என்று அந்த இந்திரலோகமே இங்கு வந்தது போலவே உணர்ச்சி கொடுத்துட்டீங்க...

பெண்ணே நீ வாழ்க படத்தின் கதை கொஞ்சம் வித்தியாசமானது. கல்லூரியில் ஒன்றாகப் படித்த ஜெய்சங்கர் வீட்டுக்கு குழந்தையுடன் வரும் விஜயா அது அந்த வீட்டின் வாரிசு என்று சத்தியம் செய்ய ஜெய்சங்கரோ தான் தவறே செய்ய்வில்லை என்று வாதாடுவார்.

பல விஷயங்களில் சான்றை நிரூபிக்கும் விஜயா வீட்டோடு தங்க வைக்கபட்டு இறுதியில் உண்மை வெளியாகிறது. அதாவது ஜெய்சங்கரின் அண்ணனால் ஏமாற்றப்பட்ட விஜயாவின் அக்காவுடைய குழந்தைதான் அது என்பது.

இப்போது பாடல் வரிகளை மீண்டும் கவனித்தால் இருவரது வார்த்தைகளுக்கும் அர்த்தம் நன்றாகவே புரியும். தாங்க்ஸ் வாசுதேவன் ஜி !

chinnakkannan
23rd September 2014, 01:19 PM
இதானே வேண்டாங்கறது..ஒரு சின்னப் பையன் பார்த்துப் பார்த்து டைப்படிச்சு பாட் போட்டாக்க பாடலைப் பத்தி போடறது விக் விக் விக் ( கட் பேஸ்ட் செலி.காம்ல பண்ண முடியலை) மிக்க நன்றி வாசு சார் :) (அது என்ன என்னோட சுலோச்சு..:) )

madhu
23rd September 2014, 01:20 PM
சிக்கா.. நைஸாக தெரியாத மாதிரி தூண்டில் போட்டு கேட்டு வாங்குவதில் நீர் புலிக்கும் புலி.

chinnakkannan
23rd September 2014, 01:21 PM
என்ன தான் இருந்தாலும் பையனை விட தகப்பனார் துஷ்யந்தன் தான் பிடிக்கும்..புரிஞ்சு போயிருக்குமே..வீடியோவருமே..

madhu
23rd September 2014, 01:22 PM
*பூஜ்ஜியம் என்ற சொல் இடம்பெற்ற ஒரே பாடல், (நடிகர் திலகம் நடித்த "வளர்பிறை' படத்தில் வரும்) "பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை" என்ற பாடலாகும்.

மத்தது எப்படியோ தெரியலை.. ஆனால் இதே நடிகர் திலகம் நடித்த "வா கண்ணா வா" படத்தில் இடம் பெற்ற அதே டி.எம்.எஸ் பாடிய பாடல்

"ஒரு காலத்திலே என்னைக் கட்டிப் போட ஒரு ராஜ்ஜியம் இருந்தது.. அன்பு ராஜ்ஜியம் இருந்தது
அந்த ராஜ்ஜியத்தை ஆண்ட ராஜாவின் பின்னால் பூஜ்ஜியம் இருந்தது.. ஒரு பூஜ்ஜியம் இருந்தது"

ஒரு வேளை பூஜ்ஜியம் என்று ஆரம்பிக்கும் பாடல் என்று சொல்ல நினைத்திருப்பார்களோ ?

Richardsof
23rd September 2014, 01:40 PM
http://i59.tinypic.com/2eyf9t1.jpg
http://i58.tinypic.com/2mrt82f.jpg

Richardsof
23rd September 2014, 01:41 PM
http://i61.tinypic.com/nfgqhx.jpg

madhu
23rd September 2014, 01:47 PM
ரொம்ப நாளாக பல பேர் பார்க்க ஆசைப்பட்ட பாடல்

படம் : என்னடி மீனாட்சி
எஸ்.பி.பி. வாணி ஜெயராம்
சிவச்சந்திரன், ஸ்ரீப்ரியா

ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை

http://youtu.be/175dGyxupQU

gkrishna
23rd September 2014, 02:10 PM
என்னடி மீனாட்சி 'ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை ' பாடலை தரவேற்றியதற்கு நன்றி மது சார் சிவச்சந்திரன் (பெயரில் நடிகர் திலகத்தையும்,மக்கல்திலகதையும் சேர்த்த அர்த்தநாரீஸ்வரர் .பெயரில் மட்டும் தான் :)),ஸ்ரீப்ரியா equation chemistry பாடலில் நன்றாக விளக்கப்பட்டு இருக்கும் . சிவகுமாரும் உண்டு. மலேசிய வாசுதேவன் குரலில் ஜானகி உடன் என்று நினைவு ஒரு பாடல் உண்டு கே எஸ் மாதங்கன் இயக்கம் .பின்னாட்களில் சாமந்தி பூ என்ற படமும் இயக்கினார்

உங்கள் 'பெண்ணே நீ வாழ்க' திரை கதை சுருக்கம் அருமை

madhu
23rd September 2014, 02:28 PM
மேனகா நடித்த சாவித்திரி திரைப்படம் பற்றி சி கே குறிப்பிட்டு இருந்தார்

'வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன் ' வாணியின் அருமையான பாடல். நடுவில் ஒரு இடத்தில வெறுமையான சிரிப்பு ஒன்று சிரிப்பார்
அருமையாக இருக்கும். மெல்லிசை மன்னரின் இசை

கிருஷ்ணா ஜி..

http://youtu.be/9vXrRO5OfAo

chinnakkannan
23rd September 2014, 03:14 PM
//என்னடி மீனாட்சி 'ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை ' பாடலை தரவேற்றியதற்கு நன்றி

உங்கள் 'பெண்ணே நீ வாழ்க' திரை கதை சுருக்கம் அருமை// நான் இதை வழி மொழிகிறேன் மதுண்ணா :)

வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேனுக்குமொரு தாங்க்ஸ்

//சிக்கா.. நைஸாக தெரியாத மாதிரி தூண்டில் போட்டு கேட்டு வாங்குவதில் நீர் புலிக்கும் புலி.// அப்படில்லாம் இல்லீங்க்ணா..தப்பா அடிச்சுட்டேன் பாட்டை :)

gkrishna
23rd September 2014, 03:23 PM
thanks madhu gi

for posting saavithri vaani song

gkrishna
23rd September 2014, 03:46 PM
சினிமா நடிகர் பி.யு. சின்னப்பா மரணம் அடைந்த நாள் (செப். 23- 1951)

முதன் முதலில் ஜூபிட்டரின் சவுக்கடி சந்திரகாந்தா மூலம் சினிமாவில் பிரவேசித்தார் சின்னப்பா. அதனைத் தொடர்ந்து 1938-ம் ஆண்டில் பஞ்சாப் கேசரி, அனாதைப்பெண், யயாதி போன்ற படங்களில் நடித்தார். தொடர்ந்து சுமார் 25 படங்களில் அவர் நடித்திருந்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் தாபனத்தினரின் மனோன்மணி (1942) வசூலில் பெரும் வெற்றியடைந்தது. டி. ஆர். ராஜகுமாரியுடன் சேர்ந்து இப்படத்தில் நடித்தார்.

1944-ம் ஆண்டில் பிருத்விராஜ் படத்தில் தன்னுடன் நடித்த ஏ. சகுந்தலா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ராஜாபகதூர் என்ற ஒரு மகனும் உண்டு. ஜகதலப்பிரதாபனில் பிரதாபனாகத் தோன்றி ஐந்து இசைக்கருவிகளை வாசித்து அமர்க்களப்படுத்தினார். மங்கையர்க்கரசியில் மூன்று வேடங்களில் நடித்தார். mangaiyarkarisi படத்தில் அவர் பாடிய காதல் கனிரசமே.. பாடல் இன்றும் ரசிகர்களால் விரும்பிக்கேட்கப்படுகிறது. 1951-ம் ஆண்டு செப்டம்பர் 23-ல் தமது 35-வது வயதில் சின்னப்பா புதுக்கோட்டையில் காலமானார்.

இறப்பதற்கு முன் இவர் நடித்து வெளிவந்த படம் வனசுந்தரி. கடைசியாக இவர் நடித்துக்கொண்டிருந்த படம் சுதர்சன் இவர் இறந்தபின்னர் வெளிவந்தது.



http://www.youtube.com/watch?v=dXCR4Yje514

Russellmai
23rd September 2014, 05:12 PM
GKrishna Sir,
பி.யூ.சின்னப்பா அவர்களின் காதல் கனி ரசமே பாடலைப் பதிவிட்டு மலரும்
நினைவுகளை மலர விட்டமைக்கு எனது பாராட்டுக்கள்.ஆனால் ஒரு சந்தேகம்.இப்பாட்டு
மங்கையர்க்கரசி படத்தில் உள்ளதா?கிருஷ்ணபக்தி படத்தில் இடம் பெற்றதா?
கோபு

sss
23rd September 2014, 05:27 PM
அன்புள்ள கிருஷ்ணா ஜி அவர்களே

pu சின்னப்பா வுக்கு பதில் சக போட்டியாளர் பாகவதர் போட்டோ போட்டு விட்டீர்களே ?

Dc டேனியல் என்கிற படத்தில் அந்த வேடத்தில் நடித்த ப்ரிவிதிராஜ் ஒரு பல் டாக்டர் , அவரிடம் சின்னப்பா பல் வலிக்கு சிகிச்சைக்கு வருவதாக காட்சி உண்டு.
அதில் சின்னப்பாவாக நடித்திருந்தவர் "ஹி ஹி... சிரிப்பு.." புகழ் மதன்பாப் ...

chinnakkannan
23rd September 2014, 05:31 PM
என்னது பி.யூ.சின்னப்பா செத்துட்டாரா.. :) பாருங்க நானுமே பி.யூ.சி முகம் மாதிரி இல்லையேன்னு யோசிச்சேன். எஸ்எஸ் எஸ் சார் சொல்லிட்டார்..

வெகுசின்ன வயதில் சாந்தியிலோ ஸ்ரீதேவியிலோ ஆர்யமாலா - முழுப்படம் - கிட்டத்தட்ட 3.30 மணி நேரம் என நினைக்கிறேன் - பார்த்த நினைவு..படம் எப்ப முடியும்னு அழுதது மட்டும் நினைவிலிருக்கிறது!

sss
23rd September 2014, 05:34 PM
நன்றி : மாலை மலர்


"நடிக மன்னன்" என்று புகழ் பெற்றவரும், வீரதீரச் செயல்கள் செய்வதில் இணையற்ற வருமான பி.யு.சின்னப்பா, யாரும் எதிர்பாராத வகையில் ரத்த வாந்தி எடுத்து மரணம் அடைந்தார். அப்போது, அவருக்கு வயது 35. சின்னப்பா மிகவும் சிக்கனமானவர். பீடிதான் குடிப்பார்; சாராயம்தான் அருந்துவார்.

சினிமா மூலம் கிடைத்த வருமானத்தை வீணாக்காமல், புதுக்கோட்டையில் வீடுகள் வாங்கிக் குவித்தார். எங்கு பார்த்தாலும், சின்னப்பாவின் வீடுகள். இதுபற்றி புதுக்கோட்டை மன்னருக்கு தகவல் போயிற்று. "இனிமேல் சின்னப்பா வீடு வாங்கக்கூடாது" என்று தடை விதிக்கப்பட்டது. இதனால், சென்னையில் வீடுகள் வாங்கினார்.

1951_ல் "வனசுந்தரி" என்ற படத்தில் சின்னப்பா நடித்தார். ஜோடி டி.ஆர்.ராஜகுமாரி. படம் சுமார் ரகம். இந்த சமயத்தில், தமிழ்ப்பட உலகில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், பின்னணி பாடும் முறை வந்துவிட்டது. எனவே, கதாநாயகனாக நடிப்பவர்கள் சொந்தமாகப் பாடும் திறமை பெற்றிருக்க வேண்டும் என்ற நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

1946_ல் வெளிவந்த "ஸ்ரீவள்ளி" மூலம், டி.ஆர்.மகாலிங்கம் ஒரு சூப்பர் ஸ்டாராக உருவானார். "நாம் இருவர்" படம், அவர் புகழை மேலும் உயர்த்தியது. ஜ×பிடர் தயாரிப்பான "ராஜகுமாரி" மூலம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக அறிமுகமாகி முன்னேறிக்கொண்டிருந்தார். கே.ஆர்.ராமசாமியும் நட்சத்திர அந்தஸ்து பெற்றார்.

"சந்திரலேகா", "ஞானசவுந்தரி", "ஏழைபடும்பாடு", "வேலைக்காரி" முதலிய தரமான படங்கள் வெளிவந்து வெற்றி பெற்று, ரசிகர்களின் ரசனையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. இதனால், சின்னப்பாவின் முன்னேற்றத்தில் தேக்க நிலை ஏற்பட்டது. படம் குறைந்து போனதால், சின்னப்பா ஸ்பெஷல் நாடகங்களில் நடித்தார்.

"வானவிளக்கு" என்ற பெயரில் நடத்தி வந்த நாடகத்தை சொந்தத்தில் படமாகத் தயாரிக்கத் திட்டமிட்டார். கத்திச்சண்டையில் "சுருள் பட்டா" என்பது புதுமையானது; ஆபத்தானது. சுருளின் முனையில் கூரிய கத்தி பொருத்தப்பட்டு இருக்கும். கைப்பிடியை பிடித்தபடி "சுருள் பட்டா"வை வீசினால், கத்தி சுழன்றபடியே சென்று, எதிரியின் தலையை கொய்து கொண்டு வரும்! குறி தவறினால், வீசியவனின் தலைக்கு ஆபத்து!

இந்த "சுருள் பட்டா" சாகசச் செயலை "வான விளக்கு" படத்தில் புகுத்த சின்னப்பா திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், யாரும் எதிர்பாராத நிலையில் 1951 செப்டம்பர் 23_ந்தேதி சின்னப்பா மரணம் அடைந்தார். புதுக்கோட்டையில் தன் வீட்டில் தங்கியிருந்த சின்னப்பா, அன்றைய தினம் "மணமகள்" சினிமா படம் பார்க்க நண்பர்களுடன் சென்றார்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சொந்தமாகத் தயாரித்து, டைரக்ட் செய்திருந்த படம் இது. லலிதா, பத்மினி, டி.எஸ்.பாலையா நடித்திருந்தனர். படம் பார்த்துவிட்டு இரவு சுமார் 10 மணிக்கு வீடு திரும்பிய சின்னப்பா, நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். திடீரென்று, "மயக்கம் வருகிறதே" என்றார். உடனே ரத்த வாந்தி எடுத்தபடி மயங்கி விழுந்தார்.

ஒரு சில நிமிடங்களில் மரணம் அடைந்தார். உடன் இருந்த நண்பர்கள் கதறி அழுதனர். சின்னப்பா இறந்தபோது, அவருடைய தந்தை உலகநாதப் பிள்ளை உயிருடன் இருந்தார். மகன் புகழின் சிகரத்தை அடைந்ததைக் கண்டு மனம் மகிழ்ந்திருந்த அவர், மகனின் எதிர்பாராத மரணத்தால் கதறித் துடித்தார். மறுநாள் இறுதி ஊர்வலம் நடந்தது.

ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். சின்னப்பாவின் சொந்த தோட்டத்தில், அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறக்கும்போது சின்னப்பாவுக்கு வயது 35தான். நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருந்த அவர் திடீரென்று மரணம் அடைந்தது, திரை உலகை அதிர்ச்சி அடையச் செய்தது.

இறக்கும்போது, "சுதர்சன்" என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே சின்னப்பா நடித்துக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் படமாகி முடிந்துவிட்டன. "கோராகும்பர்" என்ற பெயரில் ஏற்கனவே படமாக வெளிவந்த புராணக் கதைதான் இது. சின்னப்பாவுடன் ஜோடியாக கண்ணாம்பாவும் (யோக) மங்களமும் நடித்தனர்.

பாகவதர் நடித்த "ஹரிதாஸ்" படத்தை எடுத்த ராயல் டாக்கீசார்தான் இப்படத்தைத் தயாரித்தனர். கதை வசனத்தை ஏ.எஸ்.ஏ.சாமியும், இளங்கோவனும் இணைந்து எழுதினர். "ஹரிதாஸ்" படத்தை இயக்கிய கந்தர்ராவ் நட்கர்னியும், ஏ.எஸ்.ஏ.சாமியும் டைரக்ட் செய்தனர். சின்னப்பாவின் மரணத்துக்குப் பின்னர் இந்தப்படம் வெளிவந்தது. சரியாக ஓடவில்லை.

gkrishna
23rd September 2014, 05:39 PM
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQdvute2IrgkoEj3aFPcBNSUHHfsig7t PHqTsU1i0wXPpiWSX0V

http://4.bp.blogspot.com/_hwdv3bttE4I/Sym64q2C0KI/AAAAAAAABFY/ESODiUX0E5g/s320/P.U.CHINNAPPA.jpg


நன்றி கோபு சார்,sss சார்,சி கே சார்

தவறு திருத்தப்பட்டது . சுட்டி காட்டியமைக்கு நன்றி

1951 இல் puc மரணம் சரிதானா இல்லை அதுவும் தவறா

கொஞ்சம் confirm செய்யவும்

sss
23rd September 2014, 05:43 PM
கிருஷ்ணா ஜி அவர்களே

மரணம் வருடம் சரி தான்,... அந்த கட்டுரைக்கு நான் கொடுத்துள்ள தலைப்பு எப்படி ??

madhu
23rd September 2014, 05:44 PM
1951 இல் puc மரணம் சரிதானா இல்லை அதுவும் தவறா
கொஞ்சம் confirm செய்யவும்

இணையத்தில் அவர் வாழ்க்கை வரலாறு என்ற பக்கத்தில் இப்படித்தான் போட்டிருக்கு
"தமிழ் திரையுகில் முதன் முதலில் நடிக மன்னன் என புகழப்பட்ட சின்னப்பா 23/09/1951 ம் ஆண்டு இரவு 9.45 மணிக்கு தனது முப்பத்தி ஐந்தாவது வயதில் இம்மண்ணுலக வாழ்வை நீத்தார்."

Link இதோ

http://www.lakshmansruthi.com/legends/puc.asp

gkrishna
23rd September 2014, 05:48 PM
எதுகை மோனை உள்ள அருமை தலைப்பு sss சார்

gkrishna
23rd September 2014, 05:50 PM
"தமிழ் திரையுகில் முதன் முதலில் நடிக மன்னன் என புகழப்பட்ட சின்னப்பா 23/09/1951 ம் ஆண்டு இரவு 9.45 மணிக்கு தனது முப்பத்தி ஐந்தாவது வயதில் இம்மண்ணுலக வாழ்வை நீத்தார்."

Link இதோ


மது சார்

இன்னும் 4 hours உள்ளது மௌனம் அனுஷ்டிக்க:) or :mrgreen:

Russellisf
23rd September 2014, 07:58 PM
வியரசரின் வைரவரிகள்............


அக்காலத்தில் 1982ல் “இதயம் பேசுகிறது” இதழ் “கவியரசு கண்ணதாசனின் பாடல்களில் உங்களுக்குப் பிடித்தமான இரண்டு வரிகளை எழுதி அனுப்புங்கள்” என்று வாசகர்களைக் கேட்டுக் கொண்டது. உடனே எண்ணற்ற வாசகர்கள் இந்தப் பகுதிக்கு எழுதி அனுப்பி விட்டாரகள்.

அதில் எனக்குப் பிடித்த வரிகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்!!

1. அன்னையின் கையில் ஆடுவதின்பம்
கன்னியின் கையில் சாய்வதுமின்பம்
தன்னையறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்........கவலை இல்லாத மனிதன்.

2.உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்---தலை
வணங்காமல் நீ வாழலாம் ....வேட்டைக்காரன்.

3.உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும். ....சூரியகாந்தி.

4.ஊரெல்லாம் தூங்கையிலே
விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே
அழுதிருக்கும் அந்த நிலவு. ....ஆயிரத்தில் ஒருவன்.

5.ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே விழைவது மழலையடா......வாழ்க்கைப்படகு

6.காலம் ஒருநாள் மாறும்--நம்
கவலைகள் யாவும் தீரும். ...பாவமன்னிப்பு.

7.சந்திரனைத் தேடிச்சென்று குடியிருப்போமா
தமிழுக்குச் சேதி சொல்லி அழைத்துக் கொள்வோமா..பறக்கும்பாவை.

8. சிரித்துச் சிரித்து என்னை சிறையிலிட்டாய்--கன்னம்
சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய். ..தாய்சொல்லைத்தட்டாதே.

9. சொல்லென்றும் மொழியென்றும் பொருள்
..ஒன்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை..பாலும்பழமும்.

10.நீலவானம் போபங் கொண்டா நிலவு தேய்ந்தது..கண்ணா
நேரம் பார்த்து மறுபடியும் ஏன் வளர்ந்தது.....அவர்கள்

.................நிறைய வரிகள் உள்ளன. மீதி இன்னொரு நாளில்,,,,,

Russellisf
23rd September 2014, 08:13 PM
டி.எம் .எஸ்.;....... தேன் மல்லி பூவே!...பூந்தென்றல் காற்றே!

என் கண்ணே !...என் ராணி !....

நீ இன்றி ...நான் இல்லயே !

ஜானகி ;...

தேன் மல்லி பூவே!....பூந்தென்றல் காற்றே !

என் கண்ணா !...என் மன்னா!...

நீ..இன்றி ..நான் இல்லயே !

[ஜானகி ,டி .எம்.எஸ்.,கங்கை அமரன் ,இளயராஜா..]

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/j_zps3ccbfb1c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/j_zps3ccbfb1c.jpg.html)

chinnakkannan
23rd September 2014, 10:00 PM
//சின்னப் பிள்ளை செய்யும் தொல்லை
இன்னும் என்னவோ நீயும் கண்ணனோ..// சமத்தா ஆஃபீஸ்லருந்து வந்து குளிச்சுட்டு பாட்டுக் கேட்டுட்டேன்..
மலையாள சகுந்தலை – கே.ஆர்.விஜயா - ராஜேஷ்
ஆசை பொங்கும் அழகு ரூபம் பத்மினி அப்புறம் ஹிந்திவெர்ஷன்
பொல்லாத புன்சிரிப்பு – வாசு சார்
எஸ்.வாசுதேவன் சார் கொடுத்த ஹிந்திப் பாடல்கள்
மேனகா பாடல்கள் எல்லாம் கேட்டுட்டேன்.. கொடுத்தவர்களுக்கு மிக்க்க நன்றி..
பி.யூ சின்னப்பா -35 வயதில் இறந்த்து மிகக் கஷ்டம் தான்.. நன்றி எஸ் எஸ் எஸ் சார்..பட் அந்தக் கால பி.யூ.சி, எம்.கேடி. என்.எஸ்.கே சந்திரபாபு எல்லாம் ஏனிப்படி ஒரு சோக முடிவாக ஆனார்கள்..ம்ம்

RAGHAVENDRA
24th September 2014, 12:48 AM
Ringtones for Mobile

நண்பர்களே,
நம் பல்வேறு அலுவல்களுக்கிடையில் கைப்பேசி அழைப்பினை உதாசீனப்படுத்தாமல் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்போம். அப்போது நமக்கு பிடித்த பாடலின் முன்னிசை இருந்தால் நன்றாக இருக்குமே என விரும்பியிருப்போம். அவ்வாறு விரும்பக் கூடிய நமது நண்பர்களுக்காக இனி வரும் நாட்களில் பழைய பாடல்களின் முன்னிசைத் தொகுப்பினை அழைப்பிசையாக வைத்துக்கொள்ள உதவும் பொருட்டு இங்கே வழங்க எண்ணியுள்ளேன். இதன் தொடர்ச்சியான பங்களிப்பு இதற்கு கிடைக்கும் வரவேற்பினைப் பொறுத்ததே எனவும் கூற விரும்புகிறேன்.

தொடக்கமாக ஆளுக்கொரு வீடு திரைப்படத்தில் இடம் பெற்ற அன்பு மனம் கனிந்த பின்னே பாடலின் முன்னிசையில் வரும் சாரங்கி .. அதனூடே ஒலிக்கும் சிதார்... கூடவே ஒலிக்கும் வயலின்... என்ன மறக்க முடியாக இசை... இதனை தங்களுடைய அழைப்பிசையாக வைத்துக் கொண்டு சில நாட்கள் பாருங்களேன்.

பதிவிறக்கிக் கொள்ளுங்கள்... பரீட்சித்துப் பாருங்கள்...

https://www.mediafire.com/?sg3ul2581kmavh6

chinnakkannan
24th September 2014, 01:00 AM
விட்டுப்போன முக்கால்மணி நேரத்தை இன்று மறுபடி பார்த்தேன் – நீயா நானா.. நிகழ்ச்சியை..

புருவத்தை வளைக்கிற மாதிரி இருக்கற போஸ்ச்சர் நல்லா இருக்கும் – கிருஷ்ணா ஜி..

பட ரிலீஸ்- சைக்கிள் டிக்கெட் வாங்கற்தே ஒரு திருவிழா..
தில்லானா மோகனாம்பாளுக்கு குங்குமச் சிமிழ் வாங்கிக் கொடுத்தோம்..
கிராமத்திலிருந்து வந்தவன் நான்.. முதல் நாள் அங்கு வராது..ரீரன்னுக்குத் தான் கிராமத்திற்கு வரும்..அதற்கே வீட்டில் சொல்லி – சந்திரசேகர் சார்..- அதற்கு மார்க் வாங்கினால் தான் பார்க்க முடியும்னு கண்டிஷன் வீட்டில்- அதெல்லாம் ஃபுல் ஃபில் பண்ணிட்டேன்..என்னைக் கூட்டிப் போ என்று அடம்பிடிச்சுக் கூட்டிக்கிட்டுப் போவோம் – (என்ன சந்தோஷம் முகத்தில்)

என்ன டெகரேஷன்ஸ் பார்த்தீங்க..

கர்ணன் படத்துல சாந்தி தியேட்டர்ல வளைவுகள் வைத்து ஒவ்வொரு வளைவுக்கும் ஒரு – நடித்தவர்களின் கட் அவுட் வைத்திருப்பார்கள்..எனில் ஊரில் இருந்து யார் வ்ந்தாலும் அவர்களை அந்தப்படத்திற்குக் கூட்டிப்போவோம்.இப்ப நினைச்சாலும் சிலிர்க்குது – ஒரு மாமி..

சொர்க்கம் படத்தில தேவி தியேட்டர் (?)ல அம்பதடில மரம் வச்சுருந்தாங்க அப்புறம் அவர் படுக்கற போஸ்ல ஒரு கட் அவுட்…அ ந்த மரத்துலயே ரூபா நோட்டு படத்துல வரமாதிரி நிஜத்துல போட்டு செக்யூரிட்டிஸ் பாத்துண்டே இருப்பாங்க – ராகவேந்தர் சார்..

பேசும் தெய்வத்துக்கு திருப்பதி செட்..அந்தப் படத்துல பெருமாளுக்கு திருப்பதி மாதிரி கத போகும் அதனால திருப்பதி செட் போட்டு முதல் நாள் வந்தவங்களுக்குலட்டு கொடுத்தாங்க.. – முரளி சார்.. (ஸோ ஸ்வீட்)

பெங்க்ளூர்ல திருவிளையாடலுக்கு நவ்ரங்க் தியேட்டர்ல சிவலிங்கம் மாதிரி செட்லாம் போட்டு வச்சுருந்தாங்க – ஒரு ரசிகர்
சிவசக்தி தியேட்டர் ரோஜாவின் ராஜான்னு சினிமா சுத்திவீர ரோஜாசார்..ஜஸ்ட் இமாஜின் தியேட்டர்னா எவ்வளவு பெரிசு சுத்திலும் ரோஜா..ஃபுல்லா ரோஸ் வேற மலரே கிடையாது _ வெல்டன் மேஜர் கிருஷ்ணா ஜி..

கலந்துகொண்ட ஹப் நண்பர்கள் அனைவருக்கும் மறுபடி ஒரு பெரிய ஓ :)

ம்ம் தூக்கம் வருது வரட்டா..

rajraj
24th September 2014, 04:08 AM
From Avan, Tamil dubbed version of Aah

kalyaaNa oorvalam varum......

http://www.youtube.com/watch?v=s-z6t7eehUQ

From the original Aah

raajaa ki aayegi baraat......

http://www.youtube.com/watch?v=TLFAAYUHML4

We sing these songs as jugalbandhi in our annual music party. I sing the Tamil version and one of our North Indian friends sings the Hindi version.

Another jugalbandhi pair:

aaLai aaLai paarkkiraar (RathakkaNNeer)/ jhoome jhoome dil mera chanda ke chandni mein (Poonam)

Our annual music party this year is set in November. You are invited. Make sure you can sing at least one song. Don't worry about your singing or missing a note or two here and there. I will lock the front door so that nobody leaves ! :lol:

Let us have fun (with food and music). :)

RAGHAVENDRA
24th September 2014, 06:43 AM
பொங்கும் பூம்புனல்

சந்திரிகா - 1950ல் வெளிவந்த திரைப்படம். டி.எஸ்.பாலய்யா, கே.சாரங்கபாணி மற்றும் பலர் நடித்து, வி.எஸ்.ராகவன் இயக்கிய படம். இசை யாரெனத் தெரியவில்லை. ஆனால் லீலா அவர்களின் குரலில் இப்பாடல் மிகவும் இனிமையானது. விண்ணின் தாரை போலே...

http://www.inbaminge.com/t/c/Chandrika/

இப்படத்தில் இன்னொரு பாடலும் இதே போல் மனதை மயக்கும். கண்ணில் விளையாடும் காதலே.. கேட்டு மகிழுங்கள் இதே இணைப்பில்.

RAGHAVENDRA
24th September 2014, 06:50 AM
பொங்கும் பூம்புனல்

டி.ஆர்.மகாலிங்கத்துடன் இப்பாடலை இணைந்து பாடியவர் யாரெனத் தெரியவில்லை. ஆனால் பாடலின் துவக்க இசையும் பின்னணி இசையும் மனதை மயக்குவது நிஜம். புல்லாங்குழலுடன் இனிமையாகத் துவங்கும் இப்பாடல் நிச்சயம் நம்மில் பலர் கேட்டிருக்க மாட்டோம்.

இசை எஸ்.வி.வெங்கட்ராமன் மற்றும் சி.ஆர். சுப்பராமன் என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பாடலைக் கேட்கும் போது சி.ஆர்.எஸ்.ஸின் ஸ்டைல் தான் தெரிகிறது.

கேட்டு மகிழுங்கள் - 1950ல் வெளிவந்த பாரிஜாதம் திரைப்படத்திலிருந்து

http://www.inbaminge.com/t/p/Parijatham%201950/

RAGHAVENDRA
24th September 2014, 06:55 AM
பொங்கும் பூம்புனல்

அடுத்து இடம் பெறுவது 1950ம் ஆண்டில் வெளிவந்த ராஜ விக்ரமா படத்திலிருந்து...

கெம்ப்ராஜ் அர்ஸ், ஜெயம்மா, எம்.வி.ராஜம்மா, கணபதி பட் மற்றும் பலர் நடித்த படம். யூனிட்டைப் பார்த்தால் கன்னட மொழி மாற்றப் படமாகத் தோன்றுகிறது. இசை எஸ்.ராஜம் ... எஸ்.பாலச்சந்தரின் மூத்த சகோதரர்.

இந்தப் பாடல் அப்படியே வாழ்க்கை படத்தில் இடம் பெற்ற உன் கண் உன்னை ஏமாற்றினால் பாட்டையும், எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே என்ற இன்னொரு பழைய பாடலையும் சேர்த்து அமைத்த மெட்டாக ஒலிக்கிறது.

எது எப்படியோ பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அலுக்கவே அலுக்காது.

http://www.inbaminge.com/t/r/Raja%20Vikrama/

இதில் இடம் பெற்ற இன்னொரு பாடலான பாழும் அடுப்பை ஊதி ஊதி பாடலைக் கேட்க மறக்காதீர்கள். மந்திரி குமாரி படத்தில் பிரபலமான எஸ்.ஏ.நடராஜனும் பி.லீலாவும் இணைந்த பாடல் நகைச்சுவையாகவும் யதார்த்தமான பேச்சு வழக்கில் பாடல் வரிகளும் இப்பாடலை சுவையாக அமைத்துள்ளன.

இதையும் கேட்டு மகிழுங்கள். பி.லீலா வின் குரலில் சென்னைத் தமிழைக் கேளுங்கள்.

இது மட்டுமின்றி எஸ்.ராஜம் அவர்களே பாடிய நாதோபாஸனையே பாடலையும் கேட்க மறக்காதீர்கள். பி.யு. சின்னப்பாவின் காதல் கனிரசமே பாடலின் மெட்டு.

RAGHAVENDRA
24th September 2014, 07:06 AM
பொங்கும் பூம்புனல்

சி.ஆர்.சுப்பராமனைத் தமிழ்த் திரையுலகம் மிகவும் மிஸ் பண்ணுகிறது. 1950ல் வெளி வந்த விஜயகுமாரி திரைப்படம் மிகச் சிறந்த உதாரணம். குறிப்பாக ஆணவத்தினாலே என்ற இந்த கோரஸ் பாடல் ... என்ன வெரைட்டி... மேற்கத்திய மெட்டையும் நம்முடைய இசையையும் கலந்து அருமையாக அளித்துள்ளார். நடுவில் கைதட்டல் ஒலியும் அவ்வப்போது இணைந்துள்ளது. அருமையான பாடல்..

http://www.inbaminge.com/t/v/Vijayakumari/

RAGHAVENDRA
24th September 2014, 07:10 AM
பொங்கும் பூம்புனல்

ஆசைக்கிளியே உன் ஜோடி எங்கே சொல் ...என்று கேட்கும் சாக்கில் தன் காதலனைத் தேடுகிறாளோ இவள்..

எப்படியெல்லாம் கிளியை தாஜா செய்கிறார் பாருங்கள்.. உன் கனிமொழி கேளாதாரே இந்த உலகினிலே தான் கிடையாதே...

நல்ல பெண்ணாய் தேடி பிடிக்க வேண்டுமாம் அந்தக் கிளி..

ரசிக்க வைக்கும் வரிகள்..

ஏழை படும் பாடு படத்திலிருந்து அருமையான பாடல்

http://www.inbaminge.com/t/y/Yezhai%20Padum%20Paadu/

rajeshkrv
24th September 2014, 07:17 AM
குமரிமுத்து அந்த சிரிப்பே போதுமே
அவரை பல நாட்களுக்கு பிறகு பார்த்தபோது மகிழ்ச்சி

http://www.youtube.com/watch?v=67EqPFuXQR4

இதோ வினுச்சக்ரவர்த்தி .. கம்பீர குரலுக்கு சொந்தக்காரரை இப்படி பார்க்க கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது

http://www.youtube.com/watch?v=mk2N2u1XFP0

vasudevan31355
24th September 2014, 08:10 AM
இன்றைய ஸ்பெஷல் (78)

பின்னாட்களில் வந்த ராட்சஸியின் பாடல்களில் மிகச் சிறப்பு வாய்ந்த பாடல்களில் இது ஒன்று.

http://i45.tinypic.com/2qx4vhy.jpg

எனக்கு மிக மிக பிடித்ததொரு பாடல். இப்பாடலைக் கேட்டு நான் சொக்கிப் போகாத நாளே இல்லை எனலாம். ஆனாலும் அவ்வளவாக சேனல்களிலோ, வெளியிடங்களிலோ கேட்க முடியாத பாட்டு. தீவிர நடிகர் திலகத்தின் ரசிகர்கள் வேண்டுமானால் ஓரளவிற்கு தெரிந்து வைத்திருக்கலாம் அல்லது மது அண்ணா, ராஜேஷ்ஜி போன்ற சிறந்த ஞாபக சக்தியாளர்களுக்கு தெரிந்திருக்கலாம்.

பொதுவாகவே ஈஸ்வரி அக்காவின் குரல் ஜெயலலிதா அவர்களுக்கு அப்படியே அருமையாகப் பொருந்தும். நீ, குமரக் கோட்டம், நம்நாடு, ஒளிவிளக்கு, நான், வந்தாளே மகராசி என்று நிறையப் படங்களை சொல்லலாம். அவ்வளவு ஏன். மேடத்தின் முதல் படமான 'வெண்ணிற ஆடை'யிலேயே 'நீ என்பதென்ன' என்ற ஒரு ஈஸ்வரியின் அட்டகாசமான பாடலுக்கு ஜெயலலிதா அற்புதமாக பாடி ஆடி நடித்திருப்பார். ஈஸ்வரி மிகக் கடினப்பட்டு அப்பாடலைப் பாடியிருப்பார்.

"எல்லோரும் 'சிவந்த மண்' படப் பாடலான 'பட்டத்து ராணி' பாடலுக்குத் தான் நான் ரொம்ப சிரமப்பட்டேன் என்று சொல்வார்கள் ஆனால் நான் மிகச் சிரத்தை எடுத்து சிரமப்பட்டு பாடிய ஒரு பாடல் எதுவென்றால் அது 'நீ என்பதென்ன' பாடல்தான்" என்று ராட்சஸியே ஒருமுறை பேட்டி அளித்திருந்தார்.

அப்படி அம்மாவும், அக்காவும் கூட்டணி அமைத்துக் கொண்டு நமக்கு அளித்த இன்னொரு காலத்தால் அழிக்கமுடியாத பாடல்தான் இன்றைய ஸ்பெஷலாக வரும் 'காலம் உண்டு பருவம் உண்டு' என்ற 'சித்ரா பௌர்ணமி' படப்பாடல்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355016/KaalamUnduParuvamUndu-ChitraPornami-Jayalalithamp4_000113957.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355016/KaalamUnduParuvamUndu-ChitraPornami-Jayalalithamp4_000113957.jpg.html)

நடிகர் திலகம் ஹீரோவாக, செங்கோடனாக அட்டகாசம் செய்ய அவரது காதலியாக மேடம். படத்தில் ஜெயலலிதா அறிமுக சாங் இது. 'உத்தமன்' படத்தில் 'படகு படகு' பாடலின் ஸ்கேட்டிங் போல ஸ்கேட்டிங் பண்ணியபடியே ஜெயலலிதா பாடுவது போல் அமைந்த ஒரு பாடல்.

'மெல்லிசை மன்னர்' இசை. அருமை என்று சொல்வது எளிதான வார்த்தை. அவ்வளவு அட்டகாசமான கோரஸ். அவ்வளவு அருமையான இடையிசை. டிரம்பெட் கலக்கல். பாடலின் ஆரம்ப இசையும், முடிவிசையும் அற்புதம். ஈஸ்வரியை இன்னும் அலட்சியமாகப் பாட வைத்திருப்பார். மாதவன் இயக்கம்.

இனி பாடலின் வரிகள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/KaalamUnduParuvamUndu-ChitraPornami-Jayalalithamp4_000092039.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/KaalamUnduParuvamUndu-ChitraPornami-Jayalalithamp4_000092039.jpg.html)

காலம் உண்டு
பருவம் உண்டு
மனம் போல் ஆடல் பாடல்
அதிகம் உண்டு

காலம் உண்டு
பருவம் உண்டு
மனம் போல் ஆடல் பாடல்
அதிகம் உண்டு

வான் கொண்ட மேகம்
நான் கொண்ட கூந்தல்
தேன் கொண்ட செவ்வாய்
மீன் கண்ட கண்கள்
எவர் கண்ட போதும்
கவி வந்து மோதும்
எவர் கண்ட போதும்
கவி வந்து மோதும்
கன்னித்தேன் ஊரில் ஒன்று
உலவும் இன்று

காலம் உண்டு
பருவம் உண்டு
மனம் போல் ஆடல் பாடல்
அதிகம் உண்டு

(அருமையான கோரஸ்)

ரோம் நாட்டு ராணி
பால் போன்ற மேனி
கலை கொஞ்சும் வாணி
கரை கண்ட ஞானி
ரோம் நாட்டு ராணி
பால் போன்ற மேனி
கலை கொஞ்சும் வாணி
கரை கண்ட ஞானி
கதை இந்தக் கண்ணில்
சுகம் இந்தப் பெண்ணில்
புள்ளி மான் ஊரில் ஒன்று
உலவும் இன்று

(அந்த

'ரோம் நாட்டு ராணி
பால் போன்ற மேனி'

வரிகளில் ஈஸ்வரி காட்டும் அலட்சிய பாவம் நம்மை வியக்க வைக்கிறது. அடுத்து வரும் 'புள்ளி மான்' வரிகளில் 'மா...ன்' என்று 'மா'வுக்கு ஒரு அழுத்தம் கொடுத்து தூக்குவது இன்னும் இன்னும் வியப்பு)

காலம் உண்டு
பருவம் உண்டு
மனம் போல் ஆடல் பாடல்
அதிகம் உண்டு

ஆண்டாண்டு காலம் நாடாண்ட மன்னன்
தான் சாய்ந்த மஞ்சம்
பெண் கொண்ட நெஞ்சம்
மலர் எங்கள் தேகம்
மனம் கொண்ட யோகம்
நான் பெண்மை என்னும் பெருமை உண்டு

காலம் உண்டு
பருவம் உண்டு
மனம் போல் ஆடல் பாடல்
அதிகம் உண்டு

http://www.youtube.com/watch?v=fA0o1I2lflo&feature=player_detailpage

rajeshkrv
24th September 2014, 09:30 AM
வாசு ஜி வருக வருக
காலை வணக்கம்

vasudevan31355
24th September 2014, 09:46 AM
ராஜேஷ்ஜி

வணக்கம்.

விருந்தினர் பக்கம் குமரிமுத்து, வினு பேட்டிகளை இங்கு பதிப்பித்ததற்கு நன்றி!

மறைந்து போனவர்களையும், மறந்து போனவர்களையும், மறக்கடிக்கப் பட்டவர்களையும் நமது திரி எவ்வளவு அழகாக நினவு கூறகிறது!

vasudevan31355
24th September 2014, 09:47 AM
ராகவேந்திரன் சார்,

இன்றிலிருந்து வாக்கிங் மறுபடியும் போகிறேன்.

vasudevan31355
24th September 2014, 09:47 AM
கிருஷ்ணா சார்,

'காதல் கனி ரசமே' சின்னப்பாவின் சிகரப் பாடலுக்கு நன்றி!

சந்திரசேகர் ரங்கநாதன் கிடாரிஸ்ட் பற்றிய வெளியே தெரியாத தகவல்களைத் தந்து அந்த கலைஞனுக்கு பெருமையும், புகழும் சேர்த்து விட்டீர்கள். உன்னதமான உங்கள் பணி பாராட்டுக்குரியது மட்டுமல்ல போற்றுதலுக்கும் உரியது.

ராஜரிஷியின் அருமையான பாடலான மாதவம் ஏன் பாடலின் வரிகளுக்கு உங்களுக்கு ஒரு 'ஓ'

vasudevan31355
24th September 2014, 09:48 AM
மதுஜி!

'பெண்ணே நீ வாழ்க' கதை சுருக்கத்தை சிறப்பாக அளித்து என் நெடுநாளைய சந்தேகத்தைப் போக்கி விட்டீர்கள். நான் அந்தப் படம் இன்னும் பார்க்க வில்லை. பாடல் வரிகளை வைத்து ஒருவேளை இப்படித்தான் கதை இருக்குமோ என்று சந்தேகத்துடன்தான் நேற்றைய ஸ்பெஷலை எழுதினேன். அதற்கு மணிமகுடம் சூட்டியது போல அற்புதமான விளக்கம் அளித்து விட்டீர்கள். தங்கள் கதைச் சுருக்கத்தைப் படித்தவுடன் பாடல் வரிகளின் அர்த்தம் அழகாகப் புரிகிறது.

'ராகங்கள் மாறுவதில்லை' படத்தின் 'விழிகள் மீனோ' பாடலும் அற்புதம். எனக்கு இன்னொரு பாடல் ரொம்பப் பிடிக்கும். ஜானகி அம்பிகாவுக்காக கோரஸுடன் பாடுவார்.

'வான் மீதிலே அதிகாலை நேர ராகம்
நான் பாடுவேன் மனதோடு இன்ப ராகம்

அருமையோ அருமை. ராஜா பின்னல்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=fBPENj0q_Iw

அதே போல வாழ்நாள் கீதமான 'ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை' பாடலை அளித்து ஆசையை தீர்த்து வைத்ததற்கு நன்றி!

இப்போது பாடலை விட ஸ்ரீப்ரியா அதிகம் கவர்கிறார்.:) ம்.. எல்லாம் நம் சி.கா கூட்டினால் வந்த வினை.:) ஆனால் சி.காவுடன் நட்பு இதே போலத் தொடர இன்னும் விருப்பம்.:)

vasudevan31355
24th September 2014, 09:50 AM
சி.க.சார்,

அபிநய சுந்தரி பாடல் வரிகளை கொடுத்ததற்கு நன்றி! நீயா நானவை சுருக்கி அழகாக அளித்ததற்கு பாராட்டுக்கள்.

உங்களுக்கு வயது இருபது என்றால் நானெல்லாம் இன்னும் பிறக்கவே இல்லை தலைவா!

vasudevan31355
24th September 2014, 09:51 AM
வினோத் சார்,

சலபதி ராவ் பற்றிய ஆவணம் படித்து மகிழ்ந்தேன். அபூர்வமான பதிவு. நன்றி.

vasudevan31355
24th September 2014, 09:51 AM
யுகேஷ் சார்,

பாடகர் திலகம், ஜானகி, இளையராஜா, கங்கை அமரன் புகைப்படம் அபூர்வம். நான் இப்போதுதான் பார்க்கிறேன். மிக்க நன்றி. பிடித்த பாடல் வரிகளுக்கும் நன்றி!

rajeshkrv
24th September 2014, 09:51 AM
வாசு ஜி
இதோ உங்களுக்காக இசையரசியின் ஆரம்ப கால அற்புத பாடல்

https://www.youtube.com/watch?v=Hd8H1Vr_V0E

gkrishna
24th September 2014, 10:01 AM
ரகேவேந்தர் சார் காலை வணக்கம் .

காலையில் சேவல் கூவுகிறதோ இல்லையோ திரு ராகவேந்தர் அவர்களின் பொங்கும் பூம்புனல் சப்தம் காதுகளில் ரீங்காரத்தை ஏற்படுத்துகிறது. அருமை ராகவேந்தர் சார் . தொடர வேண்டும் உங்கள் பணி.

gkrishna
24th September 2014, 10:02 AM
வாசு சார்

சித்ரா பௌர்ணமி செங்கோடனை மறக்க முடியுமா ?
வந்தாலும் வந்தானடி ராஜா அவன் வந்த பின்னே நானும் கூட ராஜா
1973 களில் கேட்ட பாடல். படம் 1976 ரிலீஸ் என்று நினைவு .
ஈஸ்வரி அவர்களின் அபூர்வ பாடல் கலக்கல் . ஈஸ்வரியின் ஸ்பெஷல் brand இழுப்பு எல்லோரையும் ரசிக்க வைக்கும் .

gkrishna
24th September 2014, 10:02 AM
சி கே சார்

நீயா நானா நிகழ்ச்சி பற்றிய அருமையான் உங்கள் பின்னோட்டம் பெரிய பலம் .

gkrishna
24th September 2014, 10:03 AM
ராஜேஷ் சார்

சிறு விண்ணப்பம். உங்கள் பங்கு இன்னும் அதிகமாக வேண்டும் என்று சின்ன சின்ன ஆசை . நிறைய பாடல்கள் மற்றும் அது பற்றிய தகவல்கள் உங்களிடம் உள்ளன . எங்களிடமும் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்கள் .
அறிய காத்து இருக்கிறோம்

gkrishna
24th September 2014, 10:04 AM
பேராசிரியர் rajraj சார்

ஒரு பாடல் என்றாலும் அருமையான பாடல் . இன்னும் நிறைய பதிவிடுங்கள் அனுபவிக்க காத்து இருக்கிறோம்

gkrishna
24th September 2014, 10:05 AM
வினோத் சார்

மிக அபூர்வமான புகைப்படம் மற்றும் அதுனுடன் கூடிய பாடல் அருமை

vasudevan31355
24th September 2014, 10:05 AM
'சினிமா எக்ஸ்பிரஸ்' நடிகர் திலகம் பற்றிய அபூர்வ தகவல்களில் கண்டசாலா 'வெயிற்கேற்ற நிழலுண்டு' பாடல் (கள்வனின் காதலி) மட்டுமே நடிகர் திலகத்திற்காகப் பாடியுள்ளார் என்று தகவல் அளித்துள்ளார்கள்.

கண்டசாலா 'தெனாலிராமன்' படத்தில் நடிகர் திலகத்திற்காக

'உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்'

பாடலைப் பாடியிருப்பார்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=aE80C7G9xAo

அது போல 'மணமகன் தேவை' திரைப்படத்தில் மிக மிக அருமையான பாடலான 'வெண்ணிலா ஜோதியை வீசுதே' பாடலை பிதாபுரம் நாகேஸ்வரராவ், பானுமதி அவர்களுடன் இணைந்து நடிகர் திலகத்திற்காகப் பாடியிருப்பார்.


http://www.youtube.com/watch?v=9Ulu2WlcFjc&feature=player_detailpage

gkrishna
24th September 2014, 10:08 AM
யுகேஷ் சார்

அடிகடி நீங்கள் வரவேண்டும் எங்களை எல்லாம் இன்ப வெள்ளத்தில் மூழ்கடிக்க வேண்டும் . நல்ல பல தகவல்கள் இடம் பெற வேண்டும் .
மறந்து போன அல்லது மறகடிக்கபட்ட திரை தகவல்கள் எல்லாம் பகிர்ந்து கொள்ள வேண்டும் . பசுமையான வாடா மலர்கள் அல்லவா
அவை .மற்ற எல்லா மக்கள் திலகத்தின் அன்பு உள்ளங்கள் எல்லாம் இந்த திரியில் கலந்து கொண்டு தங்கள் பங்கை வழங்க வேண்டும் என்று உங்கள் மூலமாகவும் திரு எஸ்வி சார் அவர்கள் மூலமாகவும் வேண்டுகோள் விடுக்கிறோம்

Richardsof
24th September 2014, 10:08 AM
VASU SIR / KRISHNA SIR

GNANA OLI - TELUGU - PEDDHA MANUSHI

http://i58.tinypic.com/52asmv.jpghttp://i59.tinypic.com/11sgzd0.jpghttp://i59.tinypic.com/rbayz8.jpg

gkrishna
24th September 2014, 10:10 AM
வாசு சார்

சினிமா எக்ஸ்பிரஸ் தகவல்களில் விட்டு போன சில தகவல்கள் உங்களை போன்றவர்களுக்கு தான் தெரியும்.அதை எல்லாம் தெரிய படுத்துங்கள். வரலாறு மாற்றப்பட கூடாது

sss
24th September 2014, 10:11 AM
இந்தப் பாடலை விரும்பி கேட்ட மது சார், வாசு சார் உங்களுக்கு ,,,,

மனோரமா 70 களுக்குப் பிறகு பாடிய ஒரு பாடல். கடவுள் மாமா படத்தில் இடம் பெற்ற

'முத்தழகு முத்தழகு முன்னழகு முத்தழகு
சத்துணவு சத்துணவு' ........

http://www.mediafire.com/listen/mozdx1dn4mt/Mutthazhagu.mp3

vasudevan31355
24th September 2014, 10:12 AM
ராஜேஷ்ஜி!

'பால கோபாலா... நந்தபால கோபாலா' அருமை. 'இளங்குரல்' இசையரசி பங்கு அருமை. நடனம் சிறப்பு. ஆடுபவர்கள் அபிநயம் அற்புதம். ஜமுனா அழகு. ராஜேஷ் ரகளை.

gkrishna
24th September 2014, 10:15 AM
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcTU2CscH7Ritx1IgcELWSaMkD6bULcSp C37wwGA0mQrWbFYkhwP-Q

வினோத் சார்

அருமை ஞான ஒளி பற்றிய தெலுகு பட செய்தி தாள் விளம்பரம்
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcT79wo5CwZ7o610ju6kIY083AAbHznJX qjfjbfZ4kQEV5ow9jaS8Q
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSqXwYhakoMqBS-gw9C0HYyJAwiyzEFhPGzik80d0Z0Gww90wxa

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.யின் வித்தியாசமான மெட்டமைப்பில்....
'மணமேடை.... மலர்களுடன் தீபம்....' என்ற தேன் சொட்டும் பாடல். கேட்கக் கேட்கத்திகட்டாத விருந்து. சுசீலாவின் விரசமில்லாத குரல்

(இதே போல நடிகர்திலகத்துக்கும் விஜயநிர்மலாவுக்கும் 'அம்மா கண்ணு சும்மா சொல்லு ஆசையில்லையோ' என்ற அருமையான டூயட் பாடல் உண்டு.

http://www.youtube.com/watch?v=cfUedZ9DCjs

vasudevan31355
24th September 2014, 10:19 AM
இந்தப் பாடலை விரும்பி கேட்ட மது சார், வாசு சார் உங்களுக்கு ,,,,

மனோரமா 70 களுக்குப் பிறகு பாடிய ஒரு பாடல். கடவுள் மாமா படத்தில் இடம் பெற்ற

'முத்தழகு முத்தழகு முன்னழகு முத்தழகு
சத்துணவு சத்துணவு' ........

http://www.mediafire.com/listen/mozdx1dn4mt/Mutthazhagu.mp3

மிக்க நன்றி sss சார். ரொம்ப நாளாக கேட்க வேண்டும் என்று நினைத்த பாடல். மது அண்ணா ஞாபகப்படுத்தினார்.
நீங்கள் பதிவாகவே பாடலைத் தந்து அசத்தி விட்டீர்கள். மிக்க நன்றி!

அதே போல சின்னப்பா பற்றிய மாலைமலர் தகவல்களும் அருமை.

vasudevan31355
24th September 2014, 10:23 AM
என் வாழ்வின் ஒளியாகத் திகழும், என்னை எந்நேரமும் ஆண்டு கொண்டிருக்கும் என் உயித் தெய்வம் ஆண்டனி மற்றும் அருணை இங்கே தெலுங்கு வடிவில் பதித்ததற்கு நன்றி வினோத் சார்.

chinnakkannan
24th September 2014, 10:25 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

வாசு சார் கிருஷ்ணா ஜி நன்றி..

காலங்கார்த்தால மன் மேடை மலர்களுடன் தீபமா ..மனுஷன் வேலை பார்க்க வேணாமா ( நற நற ) :)

ம்ம் ஹாப்பி நவராத்திரி டு ஆல்..

வெள்ளி ரதம் என்ற படத்தில் வருதாமே ஒரு நவராத்திரிப் பாட்டு..வாசு சார் போட்டுட்டாரா.. இருந்தாலும் நாலுவரி..

எம்கலைமகள் அலைமகள் மலைமகள் மூவரும்
உலவிடும் ராத்திரி...நவராத்திரி....
எந்தன் தலைவனை அழகிய இளைஞனை முதல் முதல்
தரிசித்த ராத்திரி நவராத்திரி...ஷுபராத்திரி...

ஒரு மகள் அழகினில் திருமகள் என இவன்
தரிசித்த ராத்திரி....நவராத்திரி
அவள் விலைமகள் இலை ஒரு குலமகள் என இவன்
அறிந்த நல் ராத்திரி....மண ராத்திரி....நடுராத்திரி...ஷுப ராத்திரி

அப்புறம் யூஸீவல் சாவித்ரீப் பாட்டு

காளையர்க்கு ஓர் இரவு சிவராத்திரி ஆனால்
கன்னியர்க்கு ஒன்பது நாள் நவராத்திரி

நவராத்திரி சுபராத்திரி நவராத்திரி சுபராத்திரி

ஜெயந்தியும் செளகாரும் மோதிக்கொள்ளும் பாட்டு..

புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மணிக்காக
அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக

புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் இருவருக்காக
இந்த பாமா ருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக

திருமதி ஒரு வெகுமதி யில் கோகி பாடும் பாட்டு

பார்த்து சிரிக்குது பொம்மை அதைப் பாடி மறைக்குது பெண்மை
தடுமாறும் நிலை கண்டு.. மறந்து போச்ச்

ம்ம் வேற நவ்ராத்ரிப் பாட்டு இருக்கா ..

rajeshkrv
24th September 2014, 10:36 AM
ஞான ஒளி
என்ன அற்புத படம்.. நடிகர் திலகமும் சரி, சாரதாவும் சர் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள்
சொல்ல வார்த்தை இல்லை


வாசு ஜி, பால கோபாலா உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி

கிருஷ்ணா ஜி, நிச்சயமாக இன்னும் பாடல்கள் தருகிறேன்

rajeshkrv
24th September 2014, 10:39 AM
இருளும் ஒளியும் திரையில் வானிலே மன்னிலே பாடல் மிகவும் அற்புதம்


http://www.youtube.com/watch?v=22TU__YgGic

இதன் ஒரிஜினல் கன்னட வடிவம் அதுவும் இசையரசியின் குரலில்

http://www.youtube.com/watch?v=jNW8FluwKvA

chinnakkannan
24th September 2014, 10:43 AM
அந்தப் பாட்டு முடியற வரைக்கும் புரியாது..அம்மாக்குத் தான் பாடறாங்கன்னு நினைக்கத் தோணும்..அப்புறம் தான் நெஞ்சுக்குள்ற பல்ப் எரிஞ்சு இயற்கைன்னு தெரியும்.. ரொம்ப தாங்க்ஸ் ராஜேஷ் ஜி.. படி வெச்சாச்சா..என்ன சுண்டல்..(எங்காத்துல சுண்டல் மட்டும் தான்.. நேத்துககு ப்ரோ லாக்காட்டமா குட்டி வடை)

Richardsof
24th September 2014, 11:31 AM
ACTRESS PADMINI - NINAIVU NAAL
http://i62.tinypic.com/346qrlu.jpg
http://youtu.be/vN4CNRtAy70

vasudevan31355
24th September 2014, 11:39 AM
நன்றி: ஈகரை தமிழ்க் களஞ்சியம்.

நன்றி: 'டாக்டர்' எம்கே ஆர் சாந்தாராம்

பாகவதர் - சின்னப்பா - இவர்கள்

எப்படிப்பட்டவகள் ?


எம் கே டி பாகவதர் :


https://www.filepicker.io/api/file/0WlZsE2iTZeugWT7sdvQ+DSC07119.JPG


1. பொன்னிற சட்டை, கழுத்தைச் சுற்றி ஜொலிக்கும் அங்கவஸ்திரம்,

காதில் மின்னும் வைரக் கடுக்கன் கள்,

கையில் வைர மோதிரம் !

நெற்றியில் அழகான ஜவ்வாதுப் பொட்டு சகிதம்,...

வெற்றிலையை மென்ற வாறு நடப்பார் !



2. அவர் சாப்பிட பயன்படுத்துவது தங்கத் தட்டுதான் !

அந்த தட்டு எப்படியும் 100 பவுன் கள் இருக்கும் !

இன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத் தட்ட ரு. 2.25 கோடி

இருக்கலாம் !




3. பாகவதர், தன் பாடும் திறமையாலும், அழகினாலும்

அந்த கால ரசிகர்களை - குறிப்பாக ரசிகைகளை மிகவும் கவர்ந்தார் !



4. இவரின் திரைப்படப் பயணம் 1934 ஆம் ஆண்டில்

தொடங்கியது ! ( பேசும் சினிமா வந்ததே 1931 ஆம் ஆண்டில் தான் -

தமிழில் ! )

" பவளக் கொடி " - கே . சுப்பிரமணி , நாடகத்தில் நடித்து வந்த

பாகவதரை முதன் முதலாக இந்த திரைப்படத்தில் அறிமுகம்

செய்தார் !



5. 1934 ஆம் ஆண்டில் தொடங்கிய பாகவதரின் சினிமா

வாழ்க்கை தொடர்ந்து ஏறுமுகம் தான் !

அவர் நடித்த எல்லா படங்களும் 'ஹிட்' ஆயின!

பாடல்களும் 'ஹிட்' ஆயின!

எதுவரை ?


1944 ஆம் ஆண்டு - ' ஹரிதாஸ்' வெளியாகி , பாகவதர்,

'லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில் '

கைதாகும் வரை !



6. " சரி, அது என்ன . " லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு ? "

என்கிறீர்களா ?

சொல்றேன்.......ஆனா.......அதைப் பற்றி விரிவாக சொல்லப் போனால்

இந்த கட்டுரையின் தலைப்பையே மாற்ற வேண்டி வரும் !

அந்த 'மேட்டர்' அத்தனை பெரியது...அது மட்டுமல்ல...மிகவும்

ஆவலைத் தூண்டக்கூடியது !

எனவே அதனை " ஓரம் கட்டி " தனியே 5 அல்லது 6 பகுதிகளை

உடைய தொகுதிகளை வைத்து எழுதுகிறேன் !


இப்போது நான் சொல்ல வந்தது...


'லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில் ' பாகவதர் கைதான போது

அவரின் திரைப்பட வாழ்க்கையில் " இறங்கு முகம் " தான் !




பி . யு . சின்னப்பா .:


https://www.filepicker.io/api/file/05qzobdvS6W45uoEGtsJ+P.U.-Chinnappa-1916-1951.jpg


1. 'அந்த கால கருப்பு நாயகன் பி யு சின்னப்பா !

கருத்த மேனி, குண்டு உருவம் , 'பீடி' குடிக்கும் பழக்கம்

உடையவர் !

குட்டையான உருவம் !



2. ஆனால் பாடினால் ?

மிக மிக நன்றாக பாடுவார் !


நடிப்பில் ?

சிவாஜி கணேசனுக்கும் முன்னோடி !

" நவராத்திரி' யில் சிவாஜிக்கு 9 வேடங்கள் - 1965 ஆம் ஆண்டு !

" ஆர்ய மாலா " படத்தில் சின்னப்பா வுக்கு 10 வேடங்கள் - 1941 ஆம் ஆண்டு !


சண்டைக் காட்சியில் ?


எம்ஜிஆருக்கும் சீனியர் !

மல்யுத்தம், குஸ்தி, வாட்சண்டை, சுருள் பட்டை வீச்சு,

கம்பு சண்டை - இவைகளில் வல்லவர் !



3. இவரின் சினிமா வாழ்க்கை 1936 ஆம் ஆண்டில்

தொடங்கியது ! ' சந்திரகாந்தா ' என்கிற படம் !

" சுண்டூர் இளவரசன் " என்கிற வேடத்தில் வெளுத்துக் கட்டினார்!



4. 1936 ஆம் ஆண்டில் தொடங்கிய இவரது சினிமா

வாழ்க்கை 1951 ஆம் ஆண்டு அவர் அகால மரணம் அடைந்த

பிறகு முடிவடைந்தது !



சரி, பாகவதர் - சின்னப்பா

ரசிகர்கள் எப்படி ?


பாகவதரின் ரசிகர்கள் !


1 .. 1934 ஆம் ஆண்டு 'பவளக் கொடி ' தொடங்கி பாகவதருக்கு ரசிகர்கள்

பட்டாளம் தான் !!

' பாகவதர் முடி ' - இது பற்ற்றி உங்க்களுக்குத் தெரியுமா ??


அது என்ன்ன ' பாகவதர் முடி ? "


ஒண்ணும் பதில் சொல்ல ' முடி'யாட்த கேள்வி அல்ல இது !

" சலூன் " க்கு போகாமல் இருந்தால் உங்கள் முடிக்கு

நேரும் " கதி " தான் ' பாகவதர் முடி ! "

பாகவதார் 'பீல்ட்' டுக்கு வந்த போது நிறைய தமிழர்களுக்கு

பாகவதர் முடிதான் !


2. ஒரு தடவை ஓர் ஊரில் நாடகம் நடத்த போனார் பாகவதர்.

நாடகம் முடிந்து வெளியே வந்த பின்னர் ,, ஒரு ரசிகரை சந்தித்தார்.

அவர் பையில் இருந்து புத்தம் புதிய சீப்பு ஒன்றைக் பாகவதரிடம்

கொடுத்து, :


" பாகவதரே ! உங்களின் தலையை இந்த புதிய சீப்பால்

வாரிக்கொள்ளுங்கள்ள் ! "



என்று கேட்டுக்கொண்டார் !



"" சரி ! நம்ம தலைமுடி கலைந்திருக்கிறது போலும் !

எனவே இந்த ரசிகர் நம் தலை முடியை இந்த புதிய

சீப்பால் வாரச் சொல்கிறார் ! "


என்று நினைத்து எம்கேடி பாகவதர் தன் தலை முடியை அந்த

புதிய சீப்பால் வார்ர்ர்ர்ர்ரிக்கொண்டார்!


அப்புறம் நடந்ததுதான் தமாஷ் !


பாகவதர் வாரி முடித்தவுடன் அந்த சீப்பை பாகவரிடம் பிடுங்காத குறையாக

வாங்கி தன் பையில் போட்டுக்கொண்டார் !


அப்புறம், அந்த ரசிகர் தன் பையில் இருந்து

தன் கைகளைத் துழாவி இன்னொரு


" கேவலமான " ' பொக்கை ' மற்றும் ' மொக்கை ' சீப்பு


எடுத்து பாகவதரிடம் காட்டினார் !


" இது என்ன தெரியுமா, பாகவதரே ? " என்றாராம் அந்த ரசிகர் !


திரு. பாகவதர் , " திரு " திரு" என்று முழிக்க அந்த ரசிகரே பதில் சொன்னாராம் !

........சொல்லட்டுமா.... !


" இந்த பழைய சீப்பு போன வருடம் நீங்கள்

பொள்ளாச்சிக்கு வந்த போது வாரின சீப்பு ! "


இப்படி " சீப்பா" ன ரசிகர்கள் அப்போது பாகவதருக்கு உண்டு !


3. பெண் ரசிகைகள் ?

என்ன அப்படி கேட்டு விட்டீர்கள் !

பாகவதருக்கு வரும் ' காதல் கடிதங்கள் ' ஏராளம் !

பாகவதர் வருகிறார் என்றால் அவருக்காக மணிக்கணக்கில் காத்துக் கிடக்கும் பெண்கள் ஏராளம் !

பாகவதர் நடந்து போன பாதையின் மண்னைத் தொட்டு கும்பிடும்

ரசிகைகள் ஏராளம் ! பாகவதரை எப்படியாவது

சந்தித்துவிட வேண்டும் என்று 'கங்கணம் ' கட்டி

வீட்டை விட்டு ஓடி வந்த பெண்கல் ஏராளம் !


4. பாகவதர் நாடகங்களைக் காண பல நூற்றுக்கணக்கான

'மைல்' களைக் கடந்து ( அப்போது 'மைல்' தான், கிலோ மீடர் கிடையாது ! )

வண்டிகளைப் பூட்டி வருபவர்கள் ஏராளம் ! நாடகங்களைப் பார்க்க

உட்கார இடம் அல்லது 'டிக்கட்' கிடைக்க வில்லை என்றால்

......' நோ டென்ஷன் ! ' ........மரங்களில் ஏறி நின்று

தேள்கள் , கட்டெறும்புகள் கடித்து ..பல்லைக் கடித்து .

..பாகவதரின் நாடகங்களை காணுவார்கள் !

அப்படி மரங்களில் ஏறி மாண்டவர்கள் ஏராளம் !



4. பாகவதர் ரயிலில் போகிறார் என்றால்.....போகும் வழியில் இருக்கும்

அனைத்து ரயில் நிலையங்களிலும் ' பிளார்பார டிக்கட்' கள்

விற்று தீர்ந்துவிடும் ! அனைத்து ரயில் நிலையங்களிலும்

ஒரு கூட்டம் நின்று கொண்டு டிரைனில் பயணம் செய்யும் பாகவதரை

'தரிசனம் ' செய்து மகிழ்வர் ! அப்படிப் பார்த்தால்

கூடுவாஞ்சேரி போன்ற சிறிய ஸ்டேஷன் களில்

'பிளாட்பார்ம் டிக்கட் ' வாங்கி காத்திருக்கும் மக்களின்

கதி எப்படி ? டிரைன் அங்கே நிற்காதே !

அந்த "ப---பு " அங்கே வேகாது ! தண்டவாளத்தில் நின்று கைகளை

ஆட்டுவார்கள் ! டிரைன் நிற்கும் !

பாகவதர் ' காட்சி -கம் - தரிசனம் ' தருவார் ! பின்னரே டிரைன் நகரும் !

மகாத்மா காந்தி க்குப் பிறகு

பாகவதருக்குத்தான்

இந்த வரவேற்பு !


5. கீழே எழுதியதையும் படித்து விடவும் !

.......ஆனாலும் கொஞ்சம் 'ஓவர்' தான்

சார், இந்த சம்பவம் !




இந்த இடத்தில் பாகவதரின் அன்றைய செல்வாக்கு

எந்த உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது என்பதை

இப்போது அடியேன் சொல்லப்போகும் சம்பவத்தில்

இருந்து தெரிந்து கொள்ளலாம்!

இந்தியாவில் எந்த சூபர் ஸ்டாருக்கும் இந்த மாதிரியான

சம்பவம் நடந்திருக்காது !


" பாகவதரின் நணபர் ஒரு பணக்காரர்.

திருவாரூர்காரர்.பாகவதர் திருவாரூர் வந்தால் இவரின்

பங்களாவில்தான் தங்குவார்.

பாகவதருக்கென்று :

ஒரு குதிரை சாரட் வண்டி அவருக்கென்று தயார்

நிலையில் இருக்கும்! அந்த வண்டி பாகவதருக்கு

மட்டும்தான் ! யாருக்கும் கிடையாது !

அது மட்டுமா !

பாகவதருக்கென்று ஒரு தனி " பாத் ரூம்" ஒன்று இவர்

கட்டினார் ! அந்த பாத் ரூம் அந்த மாளிகையின் பின்

கோடியில் தனியாக கட்டப்பட்டிருக்கும் . அதனை பயன்

படுத்த முடியாத அளவுக்கு பூட்டு ஒன்று தொங்கிக் கொண்டு

இருக்கும் !

" பாத்ரூம் " என்றால் " பார்ரிவேர்" கம்பனியில் வாங்கி

சலவைக் கல்லால் " பள" பள " என்று கட்டப்பட்டது

அல்ல ! அவை எல்லாம் அப்போது கண்டுபிடிக்கப்

படவில்லை ! வெறும் ஓலைத் தடுப்புக்களால்

வேயப்பட்டது.

அன்று........

பாகவதார் திருவாரூர் வந்தார், நண்பர் பங்க்களாவுக்கு

வந்தார். அங்கே தங்கியிருந்தார். அவருடன் அந்த பணக்காரர்

வீட்டு மக்களும்- பெரிய தட்டு - மேல் தட்டு வர்க்கங்கள்-

குடும்பத்துடன் வந்திருந்தினர் !

காலை உணவு முடித்து பேசி விட்டு வெளியே கிளம்பும்

முன் "' பாத்ரூம் " போய்விட்டு வருகிறேன் ! "

என்று பின் பக்கம் போன பாகவதர் வெகு நேரம் கழிந்தும்

திரும்பி வரவில்லை !

அவருக்கு சர்க்கரை வியாதி அப்போது இல்லை !

எனவே பாத் ரூம் போனவர் ஏன் இன்னும் வர வில்லை

என்று அனைவரும் கலக்கத்தில் இருக்க, .......

திடீரென்று..........கூச்சல் ! கூச்சல்!


" என்னை விட்டுவிடுங்கள் ! என்னை விட்டுவிடுங்கள்! "


யார் குரல் அது ?

பாகவதரின் குரல்தான் அது !

என்ன ஆச்சு ?

நண்பர்கள் எல்லோரும் கொல்லைப் பக்கம்

ஓடினார்கள் !

அங்கே அவர்கள் கண்ட காட்சி !


பாகவதரின் சில்க் சட்டை கிழிந்திருந்தது........

வேஷ்டி பயங்கரமாக கிழிக்கப்பட்டு, தன்

" மானத்தைக் " காப்பாற்ற இரண்டு கைகளால்

வேஷ்டியை மூடிக்கொண்டு ஓடி வர,

அவரின் " பாகவதரின் 'கிராப்" கலைய

தன் நண்பர்களைப் பார்த்து ஓடிவந்தார் !

நண்பர்கல் அதிர்ச்சியில் நிலை குலைய....

என்ன ஆச்சு பாகவதருக்கு ?


பின்னால்............

மேல்தட்டு அழகிய பெண்கள் ! நண்பர் பங்களாவில்

விருந்துக்கு வந்த பணக்காரப் பெண்கள் !


மகாபாரததில் ' கெளரவர்கள் " ஆண்கள் !

இங்கே பெண்கள் !


அங்கே பாஞ்சாலி பெண் !

இங்கே " பாஞ்சாலன் " -- பாகவதர் !


இப்போது பாகவதர் உயிருடன்

இருந்து , இப்போது அந்த சமாச்சாரம் நடந்தி

ருந்ததால, பாகவதர் என்ன பாட்டு பாடியிருப்பார்?




" வொய் திஸ்

கொல வெறி, கொல வெறி,

கொல வெறி டீஸ் ! "

என்றுதானே பாடியிருப்பார் !

பி . யு . சின்னப்பா வின் ரசிகர்கள் !

இப்போது 'சூபர் ஸ்டார் ' ரஜினிக்கு இருக்கும் 'இமேஜ் ' ஐ விட

பல மடங்கு பெரும் புகழ் மற்றும் 'இமேஜ் ' கொண்டவர் சின்னப்பா !

என்னதான் இவத சின்னப்பா கரிய நிறத்தவராக இருந்தாலும் அவருக்கும்

பெண் ரசிகர்கள் ஏராளம் !


ஒரு முறை சின்னப்பா நடிப்பதை நிறுத்திக்கொண்டு ....

( இப்போது சமீபதித்தில் நடிகை ரஞ்சிதா போல் ! )

ஆன்மீகத்தில் ஈடுபட்ட போது சின்னப்பா மெளன விரதம்

மேற்கொண்டார் !

அப்போது இந்த செய்தியை கேள்விப்பட்டு ...

இரு ரசிகைகள் தற்கொலை செய்து கொண்டார்களாம் !


' முக்கூடல் பிராண்ட் ' பீடி !

" இந்த பீடியை புகைத்தீர்களா ? "

என்று விளம்பரம் பண்ண இதைக் கேட்க வில்லை !

" பிண்ணே எதுக்குய்யா ? "

என்றா கேட்கிறீர்கள் !

சொல்றேன் !

இந்த பீடித் தயாரிப்பாளர் ஹரிராம் சேட் என்பவர் ,

பி யு சின்னப்பாவின் தீவிர ரசிகர் !

இவருக்காகவே ' கிராம போன் பெட்டியையும் எக்கசக்க மான

சின்னப்பாவின் இசைத்தட்டுக்களை வாங்கி கேட்டு மகிழ்ந்தார் !

என் எஸ் கிருஷ்ணன் , இவருக்கு நண்பர் !


( ஒரு வேலை கலைவாணரும் கூட " முக்கூடலில் "

சங்கமம் தானா ! )

ஒரு முறை திருநெல்வேலியில் பாகவதர் கச்சேரி நடந்த போது ,

கிருஷ்ணன் , ஹரி ராம் சேட் ஐ அந்த கச்சேரிக்கு அழைத்தார் !

நம்ம ( ! ) சேட் வும் வேண்டா வெறுப்பாக பாகவதரின் கச்சேரிக்கு

சென்றார் !

பாகவதரின் கச்சேரியைக் கேட்டவுடன் , அந்த சேட் என்ன செய்தார்

தெரியுமா !

நேரா தன வீட்டுக்கு சென்றார், சின்னப்பா வின் இசைத்தட்டுக்களை

ஒன்னொன்றாக வெளியெ போட்டு சுத்தியால் உடைத்தார் !

என்ன காரணம் ?

ஒண்ணும் இல்லே !

பாகவதரை விட சின்னப்பா சரியாக பாடவில்லையாம் !

அப்போது பாகவதரும் கிருஷ்ணனும் அவர் வீட்டுக்கு வந்தனர் !

இசைத்தட்டுக்கள் உடைந்து கிடந்ததைப் பார்த்து கிருஷ்ணன்

" 10 ஷன் " - அத்தான் - " டென்ஷன் " - Tension - ஆகி விட்டார் !


" ஏன்னா ஓய செய்கிறீர் , சேட்டு ? "

- கிருஷ்ணன் !


" இந்த பாகவதர் கச்சேரியை இப்போதுதான் முதன் முறையாக

கேட்கிறேன் !

இவர் கச்சேரியைக் கேட்ட பிறகு சின்னப்பா வின் பாட்டுக்களை

கேட்க பிடிக்கவில்லை ! "


பாகவதவர் , சேட் ஐ தீர்க்கமாக பார்த்தார் , பின்னர்

அவரைப் பார்த்து கேட்டார் :


" அப்போ , சின்னப்பா கச்சேரியை நீங்கள் நேரில் கேட்டால்

என்னுடைய பாடல்களைக் கொண்ட இசைத்தட்டுக்களை இப்படித்தான்

சுத்தியலால் போட்டு உடைப்பீர்கள ? "


சேட் வாயடைத்து நின்றார் !


இப்போது அந்த சேட் உயிருடன் இருந்திருந்தால்

என்ன செய்திருப்பார் ?


என்ன செய்வார் .........

இசைத்தட்டுக்களுக்குப் பதில் :

" Hard Disc " களை 'சகட்டு மேனி'க்கு போட்டு

நொறுக்கி இருப்பார் !

vasudevan31355
24th September 2014, 11:44 AM
http://www.betsywoodman.com/wordpress/wp-content/uploads/2013/02/Sisters-cousins-Chandran-Ev-2.jpg

http://www.betsywoodman.com/wordpress/wp-content/uploads/2013/03/Ragini-Padmini1.jpg

vasudevan31355
24th September 2014, 11:45 AM
http://www.betsywoodman.com/wordpress/wp-content/uploads/2013/03/Padmini-with-Woodmans.jpg

vasudevan31355
24th September 2014, 11:48 AM
http://i.ytimg.com/vi/k_Bd0f9kEt4/0.jpg

http://dancingqueenpadmini.files.wordpress.com/2013/07/asdfg.jpg?w=773&h=978

vasudevan31355
24th September 2014, 11:48 AM
http://www.betsywoodman.com/wordpress/wp-content/uploads/2012/08/RRW-Padmini-Lalita-c-1954.jpg

vasudevan31355
24th September 2014, 11:52 AM
http://dancingqueenpadmini.files.wordpress.com/2012/10/post-6151-1181994887.jpg

http://i1323.photobucket.com/albums/u585/padminifan/PadminiHusband_zps1fb6a4ed.jpg (http://s1323.photobucket.com/user/padminifan/media/PadminiHusband_zps1fb6a4ed.jpg.html)

vasudevan31355
24th September 2014, 11:54 AM
http://i49.fastpic.ru/big/2013/0802/0f/0caf49029ff5a01ef762506e588ef80f.jpg

vasudevan31355
24th September 2014, 11:55 AM
http://harveypam.files.wordpress.com/2010/06/vlcsnap-144112.png

http://i.ytimg.com/vi/sbzd0XwWqDA/hqdefault.jpg

vasudevan31355
24th September 2014, 12:12 PM
11 வினாடிகளே ஓடக் கூடிய, பத்மினியும், அவர் தோழியும் (ரூத் வுட் மேன்) நட்புடன் பேசி வரும் ரியல் காட்சி. ரொம்ப அரிதான வீடியோ.


http://www.youtube.com/watch?v=aGeCc89YYwA&feature=player_detailpage

vasudevan31355
24th September 2014, 12:16 PM
வைஜயந்திமாலா பத்மினி போட்டி நடனம் அதிகம் பார்த்திருப்பீர்கள். இப்போது அக்காவும் தங்கையும் போட்டி போட்டு ஆடுவதைப் பாருங்கள். ('விக்கிரமாதித்தன்' படத்தில்)


http://www.youtube.com/watch?v=npRikzImNgI&feature=player_detailpage

gkrishna
24th September 2014, 01:48 PM
அற்புதமான நடிகை பத்மினி நிழல் படங்கள் அவருடைய நினைவு நாளில் பதிவிட்டு சிறப்பு சேர்த்துவிட்டீர்கள் வாசு சார் .
நினைவு கூர்ந்த எஸ்வி சார் அவர்களுக்கு நன்றி

gkrishna
24th September 2014, 01:51 PM
thanks to maalaimalar

http://mmimages.maalaimalar.com/Articles/2013/Sep/060290c9-b6ea-4707-8c42-43a9f4c872df_S_secvpf.gif

பழம்பெரும் நடிகை பத்மினி மாரடைப்பால் 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ந்தேதி காலமானார். அவருக்கு வயது 74.

கேரளத்தைச் சேர்ந்த பத்மினியும் அவரது சகோதரி லலிதாவும் பரத நாட்டிய விற்பன்னர்கள். திருவாங்கூர்சகோதரிகள் என்ற பெயரில் புகழ் பெற்று விளங்கிய இருவரும் 1951-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமாயினர். இதையடுத்து வந்த எல்லா படங்களிலும் அவர்களது நடனம் நீக்கமற நிறைந்திருந்தது. முன்னதாக தனது 17-வதுவயதில் கல்பனா என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் பத்மினி. அங்கு தொடர்ந்து வாய்ப்புக்கள் இல்லாததால் தமிழுக்கு வந்தனர்.

தமிழில் காலடி எடுத்து வைத்தது முதலே பத்மினி மாபெரும் வெற்றிகள் கண்டார். 'ஏழை படும் பாடு' படத்தில் முதன் முதலாக கதாநாயகியாக நடித்தார். சிவாஜியின் இரண்டாவது படமான பணம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். எம்ஜிஆர் உள்பட அந்த கால சூப்பர் ஸ்டார்களுடன் எண்ணற்ற படங்களில் நடித்தார். இந்தி, தெலுங்கு, தாய்மொழி மலையாளத்திலும் சுமார் 250 படங்களில் நடித்துள்ளார் பத்மினி. தூக்குத் தூக்கி, தில்லானா மோகனாம்பாள் ஆகிய படங்கள் பத்மினிக்கு பெரும் பெயரை பெற்றுத் தந்தன.

பின்னர் வாய்ப்புக்கள் குறைய ஆரம்பித்ததும் கேரளத்தைச் சேர்ந்த டாக்டர் ராமச்சந்திரனை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் குடியேறினார். அங்கு நாட்டியப் பள்ளி நடத்தி வந்தார். 1981-ல் கணவரின் மறைவுக்குப் பின் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்து இங்கேயே வசித்து வந்தார். சில படங்களிலும் நடித்தார். 2006-ம் ஆண்டு பத்மினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதில் இருந்து மீண்டு வந்த அவர் செப்டம்பர் 24-ம்தேதி மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

gkrishna
24th September 2014, 02:03 PM
எதிர்பாராத அடி - நடிகை பத்மினியுடன் ஒரு சந்திப்பு
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcSY95tnqq76KSIDp50BI9Hc4CCtCGgm_ n5HlxcMWPOk8Omo8Ijl
அ.முத்துலிங்கம்

நான் எங்கு போவதானாலும் குறித்த நேரத்துக்கு போய்விடுவேன். எனக்கு ஒருவரையும் காக்க வைத்து பழக்கமில்லை. ஆனபடியால் கனடா விமான நிலையத்துக்கு நான் ஐந்து நிமிடம் முன்பாகவே சென்றுவிட்டேன். ஆனால் அன்று பார்த்து விமானம் 25 நிமிடங்கள் முன்னதாக வந்து என்னை லேட்டாக்கிவிட்டது. பார்த்தால் அங்கே ஏற்கனவே பெரும்கூட்டம் திரண்டிருந்தது.

நான் நடிகை பத்மினியை நேரே கண்டவன் அல்ல; சினிமாவில் பார்த்ததுதான். ஆகையால் அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா என்ற ஐயம் இருந்தது. மிகச் சாதாரண உடையில் மேக்கப் கூட இல்லாமல் இருந்தார். வரவேற்க வந்தவர்களும், இன்னும் ஏர்போட்டில் கண்டவர்களுமாக அவரை சூழ்ந்துவிட்டார்கள். அவருக்கு எழுபது பிராயம் என்று நம்பமுடிகிறதா. ஆனாலும் அவரைச் சுற்றி ஓர் ஒளி வீசியது. அவருக்கு கிடைத்த 'உலக நாட்டியப் பேரொளி ' பட்டம் சரியானதுதான் என்று அந்தக் கணத்தில் எனக்கு உறுதியானது.



என் நண்பர் ஒருவர் பத்மினிக்கு மிகவும் வேண்டப்பட்டவர். அவருடைய தயவில் கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க பத்மினி வருகிறார். இந்தச் சமயம் மூன்று நாட்கள் பத்மினி என் வீட்டில் தங்குவதாக ஏற்பாடு.

பத்மினி வந்து கனடா மண்ணில் இறங்கி சரியாக அரை மணி நேரத்துக்குள் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. உலகத்திலேயே அகலமான 401 அதிவேக சாலையில், ஏர்போர்ட்டில் இருந்து இருபது மைல் தூரத்திலும், என் வீட்டில் இருந்து ஐம்பது மைல் துரத்திலும் கார் பயணிக்கும்போது அந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. வெளியே பனி கொட்டுகிறது. அந்தப் பனிப் புதையலில் கார் சறுக்கியபடி அப்பவும் வேகம் குறையாமல் நகர்கிறது.

பத்மினியை சந்திக்க வந்த பெண்மணியின் மனதில் இந்தக் கேள்வி முப்பத்தைந்து வருடங்களாக இருந்ததாம். இப்பொழுது வட்டியும் குட்டியும் போட்டு மிகவும் கனத்தோடு அது வெளியே வருகிறது. 'நீங்கள் ஏன் சிவாஜியை கல்யாணம் செய்துகொள்ளவில்லை ? '

இதுதான் கேள்வி. மூடத்தனத்துக்கு சமமான பிடிவாதத்துடனும், பிடிவாதத்துக்கு சற்று கூடிய வெகுளித்தனத்துடனும் ஓர் ஐம்பது வயது அம்மையார் இந்தக் கேள்வியைக் கேட்டார். பத்மினி என்னைப் பார்க்கிறார். பிறகு கேள்வி கேட்டவரைப் பார்க்கிறார். பதில் பேசவில்லை. அந்தக் கேள்வியும் நாலு பக்கமும் கண்ணாடி ஏற்றிய காருக்குள் ஒரு வட்டம் சுற்றிவிட்டு கீழே விழுந்துவிடுகிறது. பத்மினி தங்கியிருந்த மூன்று தினங்களிலும் இதே கேள்வியை அவரிடம் வெவ்வேறு நபர்கள் இருபது தடவைகளாவது கேட்கிறார்கள்.

இவர்களுக்கு வேறு கேள்விகளே இல்லையா ? ஆனால் நான் அதிசயப்பட்ட அளவுக்கு பத்மினி ஆச்சரியம் காட்டவில்லை. இந்தக் கேள்விக்கு மிகவும் பழகிப் போனவர்போல காணப்பட்டார்.

சிவாஜியை பற்றி பேச்சு வரும் போதெல்லாம் அவர் கண்களில் ஒரு சிறு மின்னல் புகுந்துவிடுவதை நான் கவனித்திருந்தேன். நீங்கள் சிவாஜியை முதன்முதல் சந்தித்தது ஞாபகத்தில் இருக்கிறதா என்றார் ஒருவர்.

சிவாஜி இன்னும் சினிமாவுக்கு வரவில்லை. நான் ஏற்கனவே சினிமாவில் நடித்து புகழ் பெற்றிருந்தேன். அப்போது ரத்தக்கண்ணீர் நாடகம் பார்க்கப் போயிருந்தேன். எம்.ஆர்.ராதாவின் நாடகம். அதில் சிவாஜிக்கு பார்ட்டே இல்லை. ஆனால் மேடையில் பின்னால் நின்று உதவிசெய்து கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது என்னுடன் நடிக்கவேண்டும் என்ற தன் ஆசையை ஓப்பனாக சொன்னார். அப்பொழுது எனக்கு தெரியாது. அவருக்கும் தெரியாது. நாங்கள் 60 படங்கள் தொடர்ந்து செய்யப்போகிறோம் என்பது.

அவருடன் நடித்த நாட்கள் மறக்க முடியாதவை. எட்டு மணிக்கு ஷூட்டிங் என்றால் 7.55க்கே வந்து உட்கார்ந்துவிடுவார். நாங்கள் வழக்கம்போல மேக்கப் எல்லாம் போட்டு வரும்போது நேரம் எப்படியும் ஒன்பது ஆகிவிடும். பொறுமையாக 'என்ன பாப்ஸ், லன்ச் எல்லாம் ஆச்சா ? ' என்பார்.

ஏதாவது பேசி சிரிப்பு மூட்டுவதுதான் அவர் வேலை. சேலைத் தலைப்பை தூக்கிப் பிடித்துக்கொண்டு அந்தக் காலத்து கதாநாயகி லட்சணமாக நான் ஒயிலாக அசைந்துவரும்போது 'என்னம்மா, துணி காயவைக்கிறாயா ? ' என்று கிண்டலடித்து அந்த shot ஐ திருப்பி திருப்பி எடுக்க வைத்துவிடுவார். காதல் பாடல் வேளையின்போது இரண்டு பக்கமும் குரூப் நடனக்காரர்களை திரும்பி திரும்பி தேடுவார். 'என்ன பாப்ஸ், ஆரவாரப் பேய்களைக் காணவில்லை ' என்பார். இன்னும் போரடிக்கும் நேரங்களில் 'யாரப்பா, ரொம்ப நாழியாச்சு இருமி. ஒரு சிகரட் இருந்தாக் குடு ' என்பார். இப்படி சிரிக்க வைத்தபடியே இருப்பார். அடுத்ததாக அழுகை சீன் இருந்தால் வெகு கஷ்டம்தான்.

பத்மினியுடைய முதல் படம் மணமகள். என்.எஸ்.கிருஷ்ணன் எடுத்தது. அதில் மூன்று சகோதரிகளும் நடித்திருந்தார்கள். நான் அப்பொழுது போர்டிங்கில் இருந்து படித்துக் கொண்டிருந்தேன். என்னுடன் படித்தவர்கள் எல்லாம் இந்தப் படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளினார்கள். எப்படியும் பத்மினியை பார்த்துவிடவேண்டும் என்ற வெறி பிறந்தது. என்னுடன் படித்த 'சண் ' என்ற சண்முகரத்தினம் இந்த சதிக்கு உடன்படுவதாக கூறினான்.

சண் மெலிந்துபோய், முதுகு தோள் எலும்புகள் பின்னுக்கு தள்ள, நெடுப்பாக இருப்பான். திங்கள் காலை போட்ட உடுப்பை வெள்ளி இரவுதான் கழற்றுவான். ஒருநாள் இரவு களவாக செக்கண்ட் ஷோ பார்க்கும் ஆர்வத்தில் கேட் ஏறிப் பாய்ந்து அவனுடன் புறப்பட்டேன். அந்தப் படத்தில் பத்மினியின் அழகும், ஆட்டமும் நெருக்கமானது. ஓர் இடத்தில் கூந்தல் வழியாக என்னை மாத்திரம் பார்த்து சிரிப்பார். அதற்கு பின்னர் எங்களுக்கு தமிழ் படிப்பித்த ஆசிரியர் 'செறி எயிற்று அரிவை ' என்று சொல்லும் போதெல்லாம் பத்மினியின் நெருங்கிய பற்கள் என் கண்முன்னே தோன்றி இடர் செய்யும்.

திரும்பும்போது பஸ் தவறிவிட்டது. 12 மைல் தூரத்தையும் நடந்தே கடந்தோம். மரவள்ளிக் கிழங்கு தோட்டங்களை குறுக்கறுத்து, நட்சந்திரங்கள் வழிகாட்ட சண் முன்னே நடந்தான். அங்குசக்காரன்போல நான் பின்னே தொடர்ந்தேன். வானத்திலே நட்சத்திரங்கள் இவ்வளவு கூட்டமாக இருக்கும்போது உற்சாகத்துக்கு குறைவேது. 'தெருவில் வாரானோ, என்னைச் சற்றே திரும்பிப் பாரானோ ' என்று சண் பெருங்குரல் எடுத்துப் பாடினான். சில தெரு நாய்கள் எங்களைத் திரும்பிப் பார்த்ததுமல்லாமல் எங்கள் பயணத்தை இன்னும் துரிதப்படுத்தின.

திரும்பி வந்தபோதும் கேட் பூட்டியபடியே கிடந்தது. அதை வார்டனோ, காவல்காரனோ, வேறு யாரோ ஞாபகமறதியாக எங்களுக்காக திறந்து வைத்திருக்கவில்லை. கேரளாவில் இருந்து வந்து எங்களுக்கு பெளதிகம் படிப்பித்த ஜோஸப் மாஸ்டர்தான் வார்டன். பெருவிரல்கள் மாத்திரம் தெரியும் பாதி சப்பாத்து அணிந்திருப்பார். மிகவும் கண்டிப்பானவர். கேட் ஏறி இருவரும் 'தொம் தொம் ' என்று குதித்தோம். அன்று வார்டனிடம் பிடிபட்டிருந்தால் இன்று இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருந்திருக்க மாட்டேன். சண்ணும் ஆழநீர் பாதைகள் பற்றி விரிவுரைகள் செய்துகொண்டிருக்க மாட்டான்.

இந்தக் கதையை கேட்டுவிட்டு பத்மினி கலகலவென்று சிரித்தார். இதுபோல இன்னும் எத்தனை கதைகளை அவர் கேட்டிருப்பாரோ!

முன்னூறு வருடங்களுக்கு முன் மாரிமுத்தாப்பிள்ளை யாழ்ப்பாணத்தில் 'காலைத்தூக்கியவர் ' அதற்கு பிறகு அதை கீழே இறக்கவே இல்லை. அங்கே பரதநாட்டியம் படித்த பெண்களின் எல்லை 'காலைத்தூக்கி ' ஆடும் நடனம்தான். அது 1959ம் ஆண்டு பத்மினி 'ராணி எலிஸபெத் ' கப்பலில் சிலோனுக்கு வந்து ஒரு நாட்டியக் கச்சேரி செய்தபோது மாறியது என்று சொல்லலாம். பரதநாட்டியம் கற்பதில் ஓர் ஆசையும், புது உத்வேகமும் அப்போது எங்கள் பெண்களிடம் பிறந்தது. மற்றவர்கள் விஷயம் எப்படியோ என்னுடைய தங்கை நடனம் கற்பதற்கு காரணமான குற்றவாளி அவர்தான் என்று சொன்னேன். நாற்பது வருடம் லேட்டாக அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

பத்மினியின் காலத்துக்கு முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் கதாநாயகன், காதலியை கட்டிப் பிடிக்கும்போது, காதலி தன் இரண்டு கைகளையும் முன்னே மடித்து கேடயமாக்கி தன் மார்புகளை ஒரு கோட்டையைப்போல காப்பாற்றிவிடுவாள். பத்மினி நடிக்க வந்த சமயம் இந்த சம்பிரதாயம் உடைந்து போனது. வஞ்சிக்கோட்டை வாலிபனில் 'கோட்டை கொத்தளத்தோடு ' பத்மினியை கட்டிப்பிடித்து ஜெமினி தன் ஆசையையும், ரசிகர்களின் ஆவலையும் தீர்த்து வைப்பார்.

பத்மினியை அழவைத்த சம்பவம் ஒன்றும் இந்தப் படப் பிடிப்பில்தான் நேர்ந்தது. இத்தனை வருடமாகியும் அதைச் சொல்லும்போது பத்மினியின் கண்கள் கலங்குகின்றன. வழக்கம்போல வாசன் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக எடுக்க தீர்மானித்தார். அப்போது பத்மினி தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரம். அதே சமயம் இந்தி சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர் வைஜயந்திமாலா.

தேவதாஸ் படத்தில் ஐஸ்வர்யாராயுக்கும், மாதுரி தீட்சித்துக்கும் இடையில் ஒரு போட்டி நடனம் இருக்கிறது அல்லவா ? அதுபோல வஞ்சிக்கோட்டை வாலிபனிலும் மிகவும் பிரபலமான ஒரு போட்டி நடனம் வரும். ஹீராலால் என்ற டான்ஸ் மாஸ்டர் இரு நாட்டிய தாரகைகளுக்கும் நடன அசைவுகள் சொல்லித்தந்தார். இதிலே ஒரு பிரச்சினை. வாசனிடம் ஒரு கொள்கை இருந்தது. அவரிடம் வேலை செய்தவர்கள் எல்லாம் எழுபது வயதை தாண்டி இருக்கவேண்டும். மேக்கப், லைட்போய், காமிராக்காரர், வசனகர்த்தா இப்படி எல்லாரும் வாசனுடைய வயதுக்காரர்களாக இருந்தார்கள். ஒரு லைட்டை தள்ளி வைப்பது என்றால்கூட அரை மணி நேரம் எடுக்கும். அதனால் படப்பிடிப்பு ஆமை வேகத்தில் நகர்ந்தது. பத்மினிக்கு மற்றப் படப்பிடிப்புகள் இருந்தன. வைஜயந்திமாலா வடக்கில் இருந்து இதற்காகவே வந்திருந்தார். பத்மினி இல்லாத சமயங்களில் வைஜயந்திமாலா ஹீராலாலிடம் ரகஸ்யமாக சில அசைவுகளை ஒத்திக்கை பார்த்து வைத்துக்கொள்வார்.

படப்பிடிப்பு சமயம் பத்மினியின் நடனம் அமோகமாக அமைந்தது. வைஜயந்திமாலா புளகாங்கிதம் அடையவில்லை. அவர் 'சாதுர்யம் பேசாதேடி, என் சலங்கைக்கு பதில் சொல்லடி ' என்று தோளிலே சடை துவழ, காலிலே தீப்பொறி பறக்க புயல்போல சுழன்றபடி மேடையிலே தோன்றுவார். ஒருமுறை இருவரும் ஆடும்போது பத்மினியின் நிழல் வைஜயந்திமாலாவில் விழுந்தது. பத்மினி மன்னிப்பாக நடனத்தை நிறுத்தி 'என்னுடைய நிழல் உங்கள்மேலே விழுகிறது ' என்றார். உடனேயே வைஜயந்திமாலா ஆங்கிலத்தில் இரண்டு அர்த்தம் தொனிக்க 'It 's only a passing shadow ' என்றார். தமிழ் நாட்டு முதல் நடிகையை பார்த்து 'நகரும் நிழல் ' என்று சொன்னது பத்மினியை புண்படுத்திவிட்டது. அந்த இரண்டு வார்த்தைகளுக்காக தான் இரண்டு இரவுகள் தொடர்ந்து அழுததாக பத்மினி கூறினார். படம் வெளிவந்தபோது நாட்டிய தாரகை யார் என்பதில் ஒருவருக்கும் சந்தேகம் இருக்கவில்லை.

'எதிர்பாராதது ' படத்தில் சிவாஜி வழக்கம்போல பத்மினியின் காதலனாக வருகிறார். சந்தர்ப்பவசத்தால் சிவாஜியின் தகப்பன் நாகய்யாவுக்கு பத்மினி மனைவியாகிவிடுகிறார். காதலன் இப்போது மகன் முறை. சிவாஜி ஒரு சமயம் பத்மினியை பழைய நினைவில் அணுகியபோது பத்மினி கன்னத்தில் ஒரு அறை கொடுக்கிறார். படம் எடுத்தபோது அந்த நேர உணர்ச்சி வேகத்தில் பத்மினி நிஜமாகவே அறைந்துவிடுகிறார். சிவாஜியுடைய கன்னம் வீங்கிப்போய் மூன்று நாட்களாக அவர் படப்பிடிப்புக்கு வரவில்லை. மூன்றாவது நாள் சிவாஜியை பார்க்க அவர் வீட்டுக்கு பத்மினி வருகிறார். அப்பொழுது ஒரு பியட் கார் சிவாஜிக்கு பரிசு கொடுத்தார். அதுதான் சிவாஜியுடைய முதலாவது கார்.

என் மூளையில் இருக்கிற வெற்று இடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக இருள் படிய ஆரம்பித்திருக்கிறது. புத்தகத்தின் தலைப்பு தெரிந்தால் எழுதியவர் பெயர் மறந்து விடுகிறது; எழுதியவர் பெயர் ஞாபகத்தில் இருந்தால் புத்தகத்தின் பெயர் மறந்துவிடுகிறது. இரண்டும் ஞாபகத்தில் இருந்தால் அந்த புத்தகத்துக்குள் என்ன இருக்கிறது என்பது மறந்துபோய் விடுகிறது.

ஆனால் பத்மினியின் ஞாபகசக்தி அப்படியல்ல. அசரவைக்கிறது. எந்த ஒரு சம்பவத்தையும் கூறமுன்பு அது நடந்த வருடத்தை கூறியபடிதான் ஆரம்பிக்கிறார். '1944ல் உதயசங்கருடைய கல்பனா படத்தில் டான்ஸ் ஆடினேனா ' என்று தொடங்கி அந்த விவரங்கள் எல்லாவற்றையும் தருவார். சினிமா என்றால் தயாரிப்பாளர் பெயர், டைரக்டர் பெயர், நடிகர்கள் பட்டியல் எல்லாமே நினைவில் வைத்திருக்கிறார். அவர் மூளையில் பெரிய தரவுத்தளம் (database) ஒன்று ஒருவித வைரஸ் பாதிப்பும் இல்லாமல் இயங்குகிறது.

விழாவுக்கு பத்மினியின் அலங்காரம் பிரமாதமாக இருந்தது. இருட்டில் போத்தல் தேனை கவிழ்த்து குடித்ததுபோல இதழ்களில் உருகி வழியும் லிப்ஸ்டிக். அவருடைய எடைக்கு சரிசமமான எடையோடு இருக்கும் சரிகை நிறைந்த சேலை. இரண்டு கைகளிலும் எண்ணிக்கை சரி பார்த்து திருப்பி திருப்பி எண்ணி அணிந்த வளையல்கள். முகத்திலே விழுந்த சிறு சுருக்கத்தை தவிர, ஒரு சிறகு மட்டுமே உதிர்த்த தேவதைபோல, அந்தக் காலத்து ஏ.பி. நாகராஜனுடைய 'விளையாட்டுப்பிள்ளை ' சினிமாவில் வந்த பத்மினியாக காட்சியளித்தார்.

நீண்ட வசனங்களை எல்லாம் பத்மினி மேக்கப் போடும்போதே பாடமாக்கி விடுவார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். இந்த நாட்கள்போல இல்லாமல் அந்தக் காலத்தில் நடிகைகள்தான் (கொடுமை) தங்கள் வசனங்களையும் பேசவேண்டும். ஆனால் விழாவில் மேடை ஏறியதும் அவர் புதிய பத்மினியாகிவிட்டார். கைதேர்ந்த பேச்சுக்காரி மாதிரி விழா சம்பந்தப்பட்டவர்கள் பேர்கள் எல்லாவற்றையும் ஞாபகத்தில் வைத்து சுருக்கமாகப் பேசிமுடித்தார். அந்தச் சில நிமிடங்கள் சபையோர்கள் அவருடைய பிரசன்னத்தில் மயங்கி 'நலம்தானா ? நலம்தானா ? ' என்று கூக்குரலிட்டபடியே இருந்தார்கள்.

பத்மினிக்கு அப்பம் என்றால் மிகப் பிரியம். கேரளாவுக்கு போகும்போது அவர் விரும்பி சாப்பிடுவது அப்பம்தான். ரொறொன்ரோவில் முட்டை அப்பம், பால் அப்பம், வெள்ளை அப்பம் எல்லாம் கிடைக்கும், சீனி சம்பலுடன். எல்லாம் அசல் யாழ்ப்பாண முறைப்படி தயாரித்தது. கடைசி நாள் அவரை ஒரு அப்பம் உணவகத்துக்கு நானும் மனைவியும் அழைத்து போனோம்.

அங்கே ஆட்கள் வந்தார்கள்; போனார்கள். சேவகர்கள் உணவு பரிமாறினார்கள். ஆனால் ஒருவருக்கும் பத்மினியை அடையாளம் தெரியவில்லை. தன்னை வெளிப்படுத்த சேவகனுடன் பேச்சுக் கொடுத்துப் பார்த்தார். அவனோ கல்லுளிமங்கனாக இருந்தான். பத்மினியின் முகத்தில் கொஞ்சம் ஏமாற்றம் தெரிந்தது.

முதல் நாள் இரவு ஒரு விருந்துக்கு போயிருந்தோம். அங்கே நாங்கள் போனபோது ஒரு விவாதம் நடந்துகொண்டிருந்தது. No Fly Zone என்றால் 'இலையான்கள் இல்லாத தேசம் ' என்றார் ஒருத்தர். மற்றவர் 'சிப் இழுத்து மூடாத பிரதேசம் ' என்றார். இந்த சமயத்தில் பத்மினி போனதும் அவரை மொய்த்துவிட்டார்கள். தலை மயிர் கூராக்கின இளைஞனில் இருந்து, மேற் சொண்டில் வளையம் குத்திய குமரி வரை பத்மினியிடம் கையெழுத்து கேட்டு இம்சைப் படுத்தினார்கள். 'தப்பினோம், பிழைத்தோம் ' என்று நாங்கள் திரும்பி வரும்போது 'ஐயோ அம்மா, கால் கை எல்லாம் பிச்சு எடுத்திட்டாங்க ' என்று பத்மினி ஓயாது புலம்பியது ஞாபகத்துக்கு வந்தது.

இப்போது பாதி இருள் உணவகத்தில் அதே நாட்டியப் பேரொளிக்கு முகம் வாட்டமுற்றது. உதாசீனமாக உணர்ந்தார் போலும். பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்களுக்கு விழும் மிகப் பெரிய அடி 'பாராமுகம் ' என்பது அப்போது எனக்கு மெள்ளப் புரிந்தது.

சிவாஜியை எப்போது கடைசியாக சந்தித்தீர்கள் ?

அவர் இறப்பதற்கு இரண்டு வருடங்கள் முன்பு அவரைப் பார்க்கப் போயிருந்தேன். சிவாஜி மெலிந்து ஆள் மாறிப் போயிருந்தார். தண்ணீர் கூட அவர் விருப்பத்திற்கு குடிக்க முடியாது. ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் தண்ணீர்தான். கொஞ்சம் கூடக் குடித்தாலும் உடம்பில் தண்ணீர் கட்டி உப்பிவிடும். மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

சிவாஜி மாடியிலேயே தங்கியிருந்தார். கீழேயே வருவதில்லை. அவரைப் பார்ப்பவர்கள் மேலே போய் பார்த்துவிட்டு அப்படியே போய்விடுவார்கள். சிவாஜி சாப்பாட்டு பிரியர்; என்னைப் போலவே. அவருக்கு விருப்பமான அத்தனை அயிட்டமும் எனக்கும் பிடிக்கும். அன்று மேசை நிறைய சாப்பாட்டு வகைகள். காடை, கெளதாரி, கோழி, ஆடு, மீன், றால் என்று எனக்கு பிடித்தமான அத்தனை கறி வகைகளும் சமைத்திருந்தார்கள்.

அதில் ஒன்றைக்கூட சிவாஜி உண்ண முடியாது. அப்படியும் என் ஒருத்திக்காக அவ்வளவு சமைத்திருந்தார்கள். சிவாஜியை ஒரு நாற்காலியில் உட்காரவைத்து நாலு பேர் அவரை மாடியில் இருந்து தூக்கி வந்தார்கள். அவர் எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு 'சாப்பிடம்மா, சாப்பிடு. நல்லா சாப்பிடு ' என்றார். முகம்மது அலி என்ற குத்துச்சண்டை வீரரைப்பற்றி ஒரு காலத்தில் பாடல் இருந்தது. 'வண்ணத்துப் பூச்சிபோல மிதப்பார்; குளவி போல குத்துவார். ' அவருடைய கால்கள் தரையில் பாவாமல் துரிதமாக இயங்குமாம். இன்று அவருக்கு பார்க்கின்ஸன் வியாதி. ஒரு அடி எடுத்து வைக்க ஒரு நிமிடம் எடுக்கிறார். அதுபோல ஒரு கொடுமைதான் இதுவும். உணவின் சுவை அறிந்தவர் அதை ருசிக்க முடியாத கொடுமை. அவருக்கு பிடித்தமான அத்தனை உணவையும், வெறுமனே பார்த்தபடி இருந்தார்.

அதுதான் கடைசி நினைவு. வேறு ஏதாவது நினைவாக இருந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.

சாதி வெறி பற்றி நான் படிக்காத கட்டுரைகள் இல்லை. டானியலின் 'பஞ்சமர் ' நாவலில் தொடங்கி, மாதவய்யாவின் 'கண்ணன் பெரும் தூது ' சிறுகதையில் இருந்து, சமீபத்தில் ஜெயமோகனின் 'கடைசிவரை ' சிறுகதை வரை படித்தவன்தான். ஆனாலும் சில விஷயங்கள் கேட்கும்போது மனதை திடுக்கிட வைத்துவிடுகின்றன.

மாலை ஆறுமணி இருக்கும். பத்மினி மஞ்சள் கரை வைத்த வெள்ளை சுரிதார் அணிந்து காலுக்கு மேல் கால் போட்டு சோபாவில் சாய்ந்து அமைதியாக உட்கார்ந்திருக்கிறார். அவர் தேநீர், கோப்பி போன்ற பானம் ஒன்றும் அருதுவதில்லை. ஒரு கிளாஸில் பழ ரசம் மெல்லிய மிடறுகளில் சுவைத்தபடி இருந்தார். உடம்பும் மனமும் ஒருமித்து மிதக்கும் ஒரு தருணம் அது. அவருடைய சம்பாஷணை எங்கோ தொடங்கி எங்கோ தொட்டு தொட்டு செல்கிறது. திடாரென்று சொன்னார். 'நான் நாயர் பொண்ணு. அவர் கள்ளர் ஜாதி. நடக்கிற காரியமா ? '

நான் திடுக்கிட்டு விட்டேன். கடந்த இரண்டு தினங்களாக இருபது தடவைகளுக்கு மேலாக கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் பதில் கூறுகிறார் என்று எனக்கு அப்போதுதான் புரிந்தது. அவர் கண்கள் பளபளவென்று மின்னிக் காட்டிக்கொடுத்தன.

பத்மினி திரும்பிப் போன அன்று டெலிபோன் மணி ஓசை நின்றது. கதவு மணி ஓய்ந்தது. பத்திரிகை நிருபர்களின் தொல்லை விட்டது. சொல்லியும் சொல்லாமலும் வந்த விருந்தாளிகளின் ஆரவாரம் முடிந்தது. மாடிப்படிகளில் குடுகுடுவென்று ஓடிவரும் ஒலியும், கலகலவென்ற பத்மினியின் ஓயாத பேச்சும் மறைந்துபோனது. திடாரென்று வீட்டில் மறுபடியும் இருள் சூழ்ந்தது போன்ற ஓர் உணர்வு.

ஆனாலும் ஒரு லாபம் இருந்தது. நாட்டியப் பேரொளி போனபோது ஒரு சிறு ஒளியை எனக்காக விட்டுப் போய்விட்டார். ரோட்டிலே நடை செல்லும்போதும், உணவகத்தில் சாப்பிடப் போனபோதும், வீடியோ நிலையத்திலும், சாமான் வாங்கும் கடைகளிலும் என்னைப் பார்த்து இப்போது 'ஹாய் ' என்று சொல்கிறார்கள்.

(ஆனந்த விகடனில் வெளியான சுருக்கப்பட்ட கட்டுரையின் முழு உருவம்)

madhu
24th September 2014, 02:06 PM
முத்தான பாடலைத் தந்த அழகான மனம் கொண்ட sss அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள் !

சிக்கா... எங்கே போனாலும் நவராத்திரி பாட்டைப் பார்த்து சலித்தே போச்சு. அதனால் இங்கே பதியவில்லை. வேணுமானால் "தேங்கா மாங்கா பட்டாணி சுண்டேல்" பாட்டு ஆடியோ பதியட்டுமா ? :rotfl:

gkrishna
24th September 2014, 02:16 PM
மங்கையர் திலகம்

https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcRq2JxPP8DB3FQ8eE479i63bVadhd_gj 2p-Fqla3eJLHKJ92rgt

1955 ஆகஸ்டில் வெளிவந்த "மங்கையர் திலகம்" பத்மினியின் மிகச்சிறந்த நடிப்பைக் கொண்ட அருமையான படமாகும்

இதில் பத்மினி, எஸ்.வி.சுப்பையாவின் மனைவியாக அதாவது சிவாஜியின் அண்ணியாக நடித்தார்.

பல படங்களில் சிவாஜியும், பத்மினியும் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. சிவாஜியின் அண்ணியாக பத்மினி நடிப்பதை ரசிகர்கள் ஏற்பார்களா? என்று, பட உலகத்தினர் சந்தேகப்பட்டனர். ஆனால் கதையின் வலிமை, சிவாஜி பத்மினியின் நடிப்பு, வலம்புரி சோமநாதனின் வசனம், எல்.வி. பிரசாத்தின் டைரக்ஷன் ஆகியவற்றால், படம் `சூப்பர் ஹிட்' ஆகியது.

ஒப்பற்ற அழகால் ரசிகர்களை கவர்ந்திருந்த பத்மினி, அருமையான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கக் காரணமான படம் "மங்கையர் திலகம்."

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcS30fAt9FOvi8Ykiu8J_pqE85AY_x0Sq y-J8XKC4fkGoviqlWNo

thanks to maalaimalar

http://www.youtube.com/watch?v=r4H5gzfuBlo

madhu
24th September 2014, 02:18 PM
பத்மினி பற்றிய பல விவரங்களை வழங்கிய கிருஷ்ணாஜிக்கு நன்றி.
ராகவ் ஜி... அரிய பாடல்களுடன் அன்பு மனம் ரிங்டோன் தந்த வள்ளன்மைக்கு நன்றி..