View Full Version : மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம
Pages :
1
2
3
4
5
6
7
8
9
10
[
11]
12
13
14
15
16
17
chinnakkannan
17th September 2014, 01:09 PM
k.r.vijaya k.r vatsala
kaarthika thulasi
வாசு சார்..சாவித்ரியின் படம் மனதை என்னவோ செய்கிறது..காலம்செய்த கோலம்.. ஜெமினியின் பயாக்ரஃபி வீடியோவில் அவருடைய பையனையும் புகைப்படத்தில் காட்டியிருப்பார்கள்..இப்போ ஃபேமிலி சேர்ந்து தான் இருப்பதாகக் கூறியிருந்தார்கள்..
madhu
17th September 2014, 01:09 PM
பானுப்ரியா- நிஷாந்தி
கே.ஆர்.விஜயா - கே.ஆர்.சாவித்திரி
சிம்ரன் - மோனல்
நக்மா - ஜோதிகா
madhu
17th September 2014, 01:10 PM
சாவித்திரியின் பேரன் தான் இராமானுஜன் படத்து ஹீரோ என்று சொன்னாங்களே ! நிஜமா ?
gkrishna
17th September 2014, 01:10 PM
வாசு சார்
ஹை ஸ்கூல் படிக்கும் போது சயின்ஸ் இல் மேரி குய்ரி இன் பாடம் படிக்கும் போது ஒரு கேள்வி உண்டு
'மேரி குய்ரி இன் கண்டுபிடிப்பை படம் வரைந்து பாகங்களை குறிப்பிடுக '
வரும்
நாங்க அதை மேரி குய்ரி இன் படம் வரைந்து பாகங்களை குறிப்பிடுக
அப்படின்னு படிப்போம் :) விளங்குமா படிப்பு அப்பறும்
உங்க படத்தை பார்த்த உடன் வந்த நினைவு
gkrishna
17th September 2014, 01:11 PM
சாவித்திரியின் பேரன் தான் இராமானுஜன் படத்து ஹீரோ என்று சொன்னாங்களே ! நிஜமா ?
அதே அதே சபாபதே மது ஜி
அவர் yg மகேந்திரவுக்கு கூட ஏதோ உறவு
chinnakkannan
17th September 2014, 01:12 PM
நெய்வேலியில் எடுக்கப் பட்ட இன்னொரு படம்..அவள் சுமங்கலி தான்..என்னுடைய தூரத்து உறவினர் எஸ்.டி.சாரி என்ற பெயர் அங்கு வேலை பார்த்திருந்தார்.. அவருடன் தொடர்பு விட்டு இருபது வருடங்களுக்கு மேலாகி விட்டது..இன்னும் அங்கேயே தான் இருக்கிறாரா தெரியாது..என்னுடைய இன்னொரு சகோதரியின் கணவரின் அண்ணன் அக்காக்கள் எல்லாம் நெய்வேலி தான் ..வெகு சின்ன வயதில் அங்கு வந்திருக்கிறேன்..கொஞ்சம் ட்ரையான ஊர்.. நோ கரெண்ட் கட்..பச்சைப் பசேல் தோட்ட வீடுகள்..பச்சை மிளகு முதன் முதலாக அங்கு தான் ருசித்தேன்..வாசு சார்..
gkrishna
17th September 2014, 01:13 PM
பானுப்ரியா- நிஷாந்தி
கே.ஆர்.விஜயா - கே.ஆர்.சாவித்திரி
சிம்ரன் - மோனல்
நக்மா - ஜோதிகா
கே.ஆர்.விஜயா - கே.ஆர்.சாவித்திரி -k.r.vatsala
nagma jothiga roshini (கலப்பட சகோதரிகள் :))
rekaa - gee gee
madhu
17th September 2014, 01:13 PM
நெய்வேலியில் எடுக்கப் பட்ட இன்னொரு படம்..அவள் சுமங்கலி தான்..என்னுடைய தூரத்து உறவினர் எஸ்.டி.சாரி என்ற பெயர் அங்கு வேலை பார்த்திருந்தார்.. அவருடன் தொடர்பு விட்டு இருபது வருடங்களுக்கு மேலாகி விட்டது..இன்னும் அங்கேயே தான் இருக்கிறாரா தெரியாது..என்னுடைய இன்னொரு சகோதரியின் கணவரின் அண்ணன் அக்காக்கள் எல்லாம் நெய்வேலி தான் ..வெகு சின்ன வயதில் அங்கு வந்திருக்கிறேன்..கொஞ்சம் ட்ரையான ஊர்.. நோ கரெண்ட் கட்..பச்சைப் பசேல் தோட்ட வீடுகள்..பச்சை மிளகு முதன் முதலாக அங்கு தான் ருசித்தேன்..வாசு சார்..
என்னது ? டிரையான ஊரா ? உங்க க்ண்ணுல கோளாறு.. அம்புட்டுதான் சொல்லுவேன்.
chinnakkannan
17th September 2014, 01:14 PM
இந்த சகோதரிகளைப் பத்தி முன்னாலேயே சி.க லிஸ்ட் கொடுத்தாராக்கும் :)
chinnakkannan
17th September 2014, 01:15 PM
//என்னது ? டிரையான ஊரா ? // நான் சொல்வது கிட்டத் தட்ட முப்பது வருடங்களுக்கு முன் ஒரு மே ஜூன் மாதப் பொழுதில் நான் சென்றிருந்தேன்..அதுவும் சில நாட்கள்..ரொம்பச்சூடு..அதைத்தான் சொன்னேன்
gkrishna
17th September 2014, 01:16 PM
எப்பவுமே இதை எல்லாருமே மறக்கறீங்க
ஜோதிலட்சுமி - ஜெயமாலினி
மன்னிக்கணும் சி கே
சௌகார் கிருஷ்ணகுமாரி உறவு படித்த உடன் வந்த நினைவு
vasudevan31355
17th September 2014, 01:20 PM
நெய்வேலியில் எடுக்கப் பட்ட இன்னொரு படம்..அவள் சுமங்கலி தான்..என்னுடைய தூரத்து உறவினர் எஸ்.டி.சாரி என்ற பெயர் அங்கு வேலை பார்த்திருந்தார்.. அவருடன் தொடர்பு விட்டு இருபது வருடங்களுக்கு மேலாகி விட்டது..இன்னும் அங்கேயே தான் இருக்கிறாரா தெரியாது..என்னுடைய இன்னொரு சகோதரியின் கணவரின் அண்ணன் அக்காக்கள் எல்லாம் நெய்வேலி தான் ..வெகு சின்ன வயதில் அங்கு வந்திருக்கிறேன்..கொஞ்சம் ட்ரையான ஊர்.. நோ கரெண்ட் கட்..பச்சைப் பசேல் தோட்ட வீடுகள்..பச்சை மிளகு முதன் முதலாக அங்கு தான் ருசித்தேன்..வாசு சார்..
wow.... great c.k sir. எஸ்.டி.சாரி angethaan irukkaaraa theriyaathu sorry. aval sumangalithan directed by visu and the whole movie shooting was taken in neyveli.
gkrishna
17th September 2014, 01:20 PM
கவிதா - வனிதா - பிரீதா - ஸ்ரீதேவி (விஜயகுமார்) - உடன் சகோதரர் அருண் எல்லோருமே திரை உலகம்
gkrishna
17th September 2014, 01:23 PM
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcS6ZiSnmLRH0ZkpN5nnA5C4Gg3pPPbai eMYJuieJD9Fd7ipWbAr
இது தானே வாசு சார்
madhu
17th September 2014, 01:23 PM
ஷாலினி - ஷாம்லி - ரிச்சர்ட்
gkrishna
17th September 2014, 01:28 PM
என் உயிர் தோழன் ரமா – லதா
மேல உள்ள இரண்டு பேர் நினைவு உண்டு
ரமா முகம் நினைவில் உண்டு லதா முகம் மறந்து விட்டது .
volley பால் ஓர் பாஸ்கட் பால் players
பேங்க் employees
vasudevan31355
17th September 2014, 01:30 PM
சி.க.சார்,
இன்னொரு தபா 'டிரை' பண்ணிப் பாருங்க.:)
vasudevan31355
17th September 2014, 01:36 PM
என் உயிர் தோழன் ரமா
http://i.ytimg.com/vi/UxNLfxx0zY4/0.jpg
http://i.ytimg.com/vi/segvuV72W7E/hqdefault.jpg
http://2.bp.blogspot.com/_2I2hYF2DQtI/TUGy3ddXCII/AAAAAAAACVk/uJ6JKyrGDFU/s1600/En_uyir_thozhan-Yeh_rasathi_tamilhitsongs.blogspot.com.VOB_thumbs_ %255B2011.01.27_23.30.25%255D.jpg
chinnakkannan
17th September 2014, 01:47 PM
//சி.க.சார்,
இன்னொரு தபா 'டிரை' பண்ணிப் பாருங்க// கண்டிப்பா மீட் பண்ணனும் எல்லோரும்..பட் எப்போ நடக்கப் போகுதோ..அடுத்த வருஷம் இன்ஷா அல்லாஹ்..
vasudevan31355
17th September 2014, 01:55 PM
மதுஜி
ரிக்வெஸ்ட்.
பாலா, சுசீலா பின்னியெடுக்கும்
'எனக்குப் பிடித்த ரோஜாப்பூவே
எடுத்துச் செல்லலாமா'
பாடல் 'பணம் பெண் பாசம்' படமா?
அல்லது
'பணம் பகை பாசம்' படமா?
அல்லது இரண்டும் ஒன்றா?
மண்டை காய்கிறது. தயவு செய்து வீடியோ ஒரிஜினல் கிடைக்குமா?
http://www.youtube.com/watch?v=3oqgE4-WLuw&feature=player_detailpage
gkrishna
17th September 2014, 02:06 PM
வாசு சார்
ரமா சகோதரி லதா முகம் நினைவில் இல்லை
படம் கிடைத்தால் போடவும்
என் உயிர் தோழன் தென்னவன்(Ramesh Duraisamy) -விக்ரம் ஜெமினியின் கை கதாபாத்திரம் நடித்த நினைவு
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQhOETiNSOH20QPJxg08Au5bcg-YmWHH3z_W4482k3ae-zLx5tD
chinnakkannan
17th September 2014, 02:28 PM
அனுராதா .. ஜோதி மீனா (ச்ச் அம்மா பொண்ணுன்னு சொல்லவந்தேன்)
சக்ர பாணி புத்திசாலி..அவனுக்கு வாழ்க்கையில் பிடித்தது இரண்டே இரண்டு.. ஒன்று பணம்..இரண்டாவதுஅவனது அருமைப் பெண் பாலா எனப் படும் பாலா திரிபுரசுந்தரி.. இந்தப்பணத்திற்காக அவன் செயல் படும் வழிமுறைகள் வியாபாரத் தந்திரங்கள் எல்லாம் க்ரூயல் தான் இருந்தாலும் சொத்த்து சொத்து மேலும் சொத்து செல்வம் செல்வம் மேலும் செல்வம் என அவனை அடைந்தன.. ஒன்றைத் தவிர ..தூக்கம்..பயபுள்ளக்கு தூக்கமே வராது ராத்திரியிலும்.
இதற்காகவே அலுவலகம் பை நைட்டும் அவனுக்கு உண்டு..
பாலா..தேனும் வெனிலா ஐஸ்க்ரீமும்கலந்த கலர்..குளிர்ச்சி தெரிய வேண்டுமா உச்சரித்துப்பாருங்கள்..பா..லா.. உதடு குளிரும்..அழகி ஒரே பெண்..பாலும் தெளிதேனும்பாகும் பருப்புமாய் நாலும் கலந்து உண்டு உடற்பயிற்சியெல்லாம்செய்ததால் அழகான உடல்..படிப்பும் கூட..
சந்தர்ப்ப வசத்தில் தன் அப்பா ஒரு சிலரை வஞ்சித்தது தெரியவர அவர்களின் குடும்பத்துக்கே சென்று தன்னைஅடையாளம் காட்டாமல் ஒரு வேலைக்காரி போல் இருந்து அந்த க் குடும்பத்தை முன்னேற்றி பின் தன் அத்தை பையனான மோகனையே திருமணம் செய்துகொள்ளப் போகுமுன்..
(சொல்ல விட்டுவிட்டேனே..தந்தை செய்த பாபங்களுக்கு இவள் பிராயச் சித்தம்செய்ய ஆரம்பிக்கும் போதே சக்ரபாணிக்கு நன்கு தூக்கம் வருகிறது..!)
வில்லனால் குண்டடி பட்டு விட மூச்சுக்காற்றுக்காகப் போராடி அவளது உயிருக்காக வைத்தியர்கள் போராட..சக்ரபாணிக்குள் நடக்குது மனப் போராட்டம்... தானாகவே புலம்புகிறான்..தெரிந்த கடவுள் எல்லாம் பணம் பணம் தான்.. நிஜமாகவே கடவுளை நாடிக் கோவிலுக்குப் போகிறான்.புலம்புகிறான்.. ஓ காட் என் உயிரை எடுத்துக்கோ என் பொண்ணக் காப்பாத்து எனச் சொல்லி வே..க..மா..கக்
காரை ஓட்டிச் சென்று உச்சியிலிருந்து விழ...
க்ளைமாக்ஸ்..சக்ரபாணிக்குக் கால் போகிறது..பாலா உயிர் பிழைக்கிறாள்..மோகனைக் கல்யாணம்செய்து கொள்கிறாள்..
இது ஜாவர் சீதாராமனின் பணம் பெண் பாசம் என்ற நாவலின் சுருக்க்க்கம்.. வெகு நன்றாயிருக்கும்..பைண்ட் புத்தகமாய்ப் படித்த நினைவு.. படமாய் முத்துராமன் ஒரு லட்சியம் போல எடுத்து நல்ல நடிகர்களைத் தேர்வு செய்யாததால்.. மோகனாய் ஸ்டெப் கட்டிங் விஜயன், பாலாவாய் கருந்திராட்சை சரிதா என ஒருவித அலட்சியத்தில் எடுத்ததாலோ என்னவோ( நான்படம் பார்க்கவில்லை..கோபம்) படம் ஃபெய்லியர் என நினைக்கிறேன்..
இந்தப் பணம் பகை பாசமென்று எந்தப் படமும் வந்தது போல் நினைவில்லை வாசு சார்..மே.பி..ஏதாவது தெலுகு டப் படமாய் இருக்கலாம் :)
gkrishna
17th September 2014, 03:43 PM
சி கே sir
ஜோதி மீனா ஜோதிலட்சுமி பொண்ணு இல்லையோ
அனுராதா பொண்ணு அபிநயஸ்ரீ இல்லையோ
பணம் பகை பாசம் அப்படின்னு ஒரு படம் 1980-81 காலகட்டம்
நம்ம தங்கபதக்கம் ஸ்ரீகாந்த் ,துணிவே துணை ஜெயப்ரபா நடிக்க
பூஜை போட்ட படம் . வாசு சார் போட்ட அந்த பாட்டு
'எனக்கு பிடித்த ரோஜா பூவை எடுத்து செல்லவா '
பாலா சுசீலா குரல்களில் ஒரு சூப்பர் மெலடி
இசை ஷங்கர் கணேஷ்
இந்த படம் வந்த நினைவும் இல்லை
http://www.5eli.com/Lyrics/wp-content/uploads/2011/09/Panam-Pagai-Paasam.jpg
chinnakkannan
17th September 2014, 04:02 PM
ஓஹ். க்ருஷ்ணா ஜி..என்னவொரு வரலாற்றுப் பிழை செய்துவிட்டேன்..ஜோ.ல ஜோ மீ தான் கரெக்ட்.
பணம் பகை பாசம் பற்றிய தகவலுக்கு நன்றி.. ஸ்ரீகாந்தக் கேட்டுப் பார்க்கணும் :)
gkrishna
17th September 2014, 05:05 PM
http://lh5.ggpht.com/-N2wvD2iEN7g/VBW1s8E0fjI/AAAAAAAANPY/LTD-XJtOq9M/w1280/110000.jpghttp://lh4.ggpht.com/-7AeyOmlyI3U/VBW11cFtDXI/AAAAAAAANMM/l1uZ6Eqcftc/w1280/110001.jpghttp://lh6.ggpht.com/-VDp8cbRBsIc/VBW1uelT9XI/AAAAAAAANK8/qov8JjeP4ro/w1280/110002.jpghttp://lh6.ggpht.com/-LuiOUJN8Fi0/VBW1yJ0QGzI/AAAAAAAANLM/3RvOvs1hvpE/w1280/110003.jpg
gkrishna
17th September 2014, 05:15 PM
http://lh4.ggpht.com/-sDCgcL4Ezn0/VBW18Ucdi-I/AAAAAAAANN0/7_7LL5zEAH0/w1280/cine-print16.jpg
மோகன் ஆர்ட்ஸ் மோகன் அவர்கள் தான் திரு சிவகுமார் அவர்கள் நடிகர் ஆக வருவதற்கு உதவிகள் செய்ததாக அவரது 'இது ராஜபாட்டை அல்ல ' புத்தகத்தில் பதிவு செய்து இருக்கிறார்
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த பாசமலர், குங்குமம் போன்ற படங்களைத் தயாரித்த மோகனகிருஷ்ணன் கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி காலமானார்.
இவருடைய தந்தையார் பிரபல நீதிபதியும், பிரபாத் திரையங்கின் மேலளாருமான திரு கண்ணபிரான் ஆவார். அவரே பிரபல மோகன் ஆர்ட்ஸ் நிறுவனத்தை தோற்றுவித்தவர். இந்த நிறுவனம் 1951 ஆம் ஆண்டுமுதல் கட் அவுட் மற்றும் பேனர் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தது.
தமிழ்த்திரையின் மிகப்பழமையான இந்நிறுவனம், மிக உயராமான கட் அவுட்களை உருவாக்கி சாதனை படைத்தது. வணங்காமுடி திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட 80 அடி உயர கட் அவுட் பலருடைய பாராட்டுகளைப் பெற்றது.எலிசபெத் அரசி இந்தியா வந்த போது இவர் வைத்த பல கட் அவுட்கள் அனைவரையும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் அரசியே தனியே அழைத்து நன்றி கூறியதும் குறிப்பிடத்தக்கது.
காந்தி திரைப்படத்திற்கான இவரின் உழைப்பு உலகெங்கிலும் பலரின் பாரட்டுதலைப்பெற்றது. இந்திய ஒவியத்தின் தனிப்பாணியை உருவாக்கிக்கொண்டவர் திரு.மோகன். நடிகர் சிவகுமார் உட்பல பல ஓவியர்களுக்கு வழிகாட்டியாக விளங்கியவர், நடிகர் திலகத்தின் மிக நெருங்கிய நண்பர். பல திரைப்படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றி பல விருதுகளை வென்றிருக்கிறார்.இவருக்கு இந்திய அரசு விகாஸ் ரத்னா விருது வழங்கி சிற்ப்பித்தது.
https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn2/q87/s720x720/970108_645738275443780_1609765595_n.jpg
madhu
17th September 2014, 05:22 PM
மதுஜி
ரிக்வெஸ்ட்.
பாலா, சுசீலா பின்னியெடுக்கும்
'எனக்குப் பிடித்த ரோஜாப்பூவே
எடுத்துச் செல்லலாமா'
பாடல் 'பணம் பெண் பாசம்' படமா?
அல்லது
'பணம் பகை பாசம்' படமா?
அல்லது இரண்டும் ஒன்றா?
மண்டை காய்கிறது. தயவு செய்து வீடியோ ஒரிஜினல் கிடைக்குமா?
பணம் பகை பாசம் படம் ரிலீஸ் ஆனதாக தெரியவில்லை.
சிலோன் ரேடியோவில் இந்தப் பாடல் சில காலம் "தர்மங்கள் சிரிக்கின்றன" என்ற படத்தில்
இடம் பெற்றதாக சொல்லி ஒலிபரப்பப் பட்டதாக நினைவு.
பணம் பெண் பாசம் படத்தில் முத்துராமன், வடிவுக்கரசி, விஜயன், சரிதா நடிக்க ( ஒரு வீடியோ பாட்டு கூட சிக்கவில்லை )
"லக்ஷ்மி வந்தாள்", "கலைமாமணியே","அன்போடும் பண்போடும்","அழகிய முகம் முழுமை நிலா ( படத்தில் பார்த்ததாக நினைவில்லை ) ஆகிய பாடல்கள் இருந்தன.
என்னைக்காவது வலைத் தளத்தில் மாட்டிக்காமல் போகாது. :)
gkrishna
17th September 2014, 05:27 PM
http://media.dinamani.com/2014/09/07/7kdrkk.jpg/article2419343.ece/alternates/w460/7kdrkk.jpg
கவிஞர் கண்ணதாசன் இருபொருள் கொண்ட பாடல்களை எழுதியிருக்கிறார். அந்தப் பாடல்களில் இலக்கிய நயமும் இருக்கும்.
"பாசமலர்' படத்தில் திருமணத்திற்குச் செல்லும் ஒரு பெண்ணின் மனநிலையை சொல்லுவது போல் கவியரசர் ஒரு பாடலில் எழுதியிருந்தார். பாடல் படமாக்கப்பட்ட பின்னர் தணிக்கைக்குச் சென்றது.
"மலராத பெண்மை
மலரும்
முன்பு தெரியாத உண்மை
தெரியும்'
படத்தில் பாடப்பெற்ற இந்தப்பாடல் வரிகளைக்கேட்ட தணிக்கை அதிகாரி சாஸ்திரி, ""இந்தப்
பாடல் வரிகளைச் சுட்டிக்காட்டி இந்த வரியின் உள் அர்த்தத்தை பார்த்தால் வெட்டத் தோன்றுகிறது. ஆனால் இதன் அழகைப் பார்த்தால் வெட்டாமல் விட்டுவிடத் தோன்றுகிறது'' என்றாராம்.
சபீதாஜோசப் எழுதிய "கண்ணதாசன் 100' நூலிலிருந்து.
தேங்க்ஸ் டு தினமணி கதிர் 07/09/14
gkrishna
17th September 2014, 05:30 PM
என்னைக்காவது வலைத் தளத்தில் மாட்டிக்காமல் போகாது. :)
சூப்பர் reply மது ஜி
chinnakkannan
17th September 2014, 05:47 PM
கண்ணதாசனைப் பற்றிக் கிளறி விடாதீங்க கிருஷ்ணா ஜி.. டயம் இல்லை இப்போ :sad:
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்ல் சென்சாரே வெட்டி விட்டிருக்காங்க சில வரிகளை.படத்தில் அவை இருக்காது..இருந்தாலும் அவ்வளவா ஒண்ணும் விரசமாத்தெரியாது..படம் பார்க்கறவங்கள்ளாம் 75 % வயது வந்தவர்கள் தானே..
உன்னை ஒன்று கேட்பேனையே எடுத்துக் கொள்ளுங்கள்..
கண்ணை மெல்ல மூடும்
தன்னை எண்ணி வாடும்
பெண்ணைப் பாடச் சொன்னால்
என்னபாடத் தோன்றும்..
காதலன் வர்றான் காதலியைப் பார்க்கறான்..சந்தோஷமா இருக்காங்க..அந்தம்மாக்கு சந்தோஷத்துல கண் மூடுது.. அப்புறம்
பொழுதாகிப் போனதால டாட்டா காட்டிட்டு காதலன் போயிடறான்..
அச்சோ..இவன் யார் என் லவ்வர் தானே..இவன் கிட்ட என்னை இழந்துட்டேனே அப்படீன்னு பகீர்னு ஒரு பயம் நெஞ்சுக்குள்ற கோயம்புத்தூர் பாஷையா வந்து ஒக்கார்றது.. மனசு சொல்லுது நீயும் என்ஸாய் தானே டி பண்ண அப்படின்னு.. கொஞ்ச செகண்ட்ல அதே மனசு சே சே யூ ஆர் எ வெரி பேட் கேர்ள்..கொஞ்சம் கேர்ஃபுல்லா இருந்துருக்கலாமேடி அப்படிங்குது.. இவளுக்கோ வாட்டமாப் போய்டுது..தன்னையே நினைச்சு நொந்துக்கறா..
அப்படிப் பட்ட காதற்பெண்ணைப் பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும் கறார் கவிஞர் கண்ணதாசன்..இந்த லைன் பாடறச்சே குட்டிப் புறா தன் சிறகை அடிப்பது போல் கன்னடத்து ப் பைங்கிளி கண் சிமிட்டும் அழகே அழகு!
chinnakkannan
17th September 2014, 05:59 PM
எல்லோரும் அனலைஸ் பண்ணி தோச்சு உலர்த்திக் காயப் போட்டிருப்பாங்க கீழ்க்கண்ட பாடல் வரிகளை..
வாயின் சிகப்பு விழியிலே
மலர்க்கண் வெளுப்பு இதழிலே..
சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றிக் கிடந்தோம்
ஒரு துன்பம் போன்ற இனப்த்திலே இருவரையும் மறந்தோம்..
ம்ம் எண்ணிரண்டு பதினாறுலயே இதையெல்லாம் படிச்சு, பார்த்துக் கண்ண தாசனை சிலாகிச்சு, கெட்டுப் போனதாலோ என்னவோ இப்போ மனம் பேரின்பத்தை நாடுதுங்காணும்! :)
vasudevan31355
17th September 2014, 06:22 PM
http://www.pictureshack.us/images/6773_Panam_Penn_Pasam.jpg
'பணம் பெண் பாசம்' தகவல்களுக்கு நன்றி சி.க.சார், மதுஜி.
சி.க. அழகாக கதையை விளக்கி விட்டார். அதுவும்
//(சொல்ல விட்டுவிட்டேனே..தந்தை செய்த பாபங்களுக்கு இவள் பிராயச் சித்தம்செய்ய ஆரம்பிக்கும் போதே சக்ரபாணிக்கு நன்கு தூக்கம் வருகிறது..!)//
அருமை. வாழ்வின் யதார்த்தமான உண்மை. ஜாவரின் நாவல். நான் படித்ததில்லை. நன்றி சி.க சார்.
vasudevan31355
17th September 2014, 06:46 PM
கிருஷ்ணாஜி,
'ரங்கா' படக்கதை பற்றிய பதிவு படித்தேன். நன்றி! ஆனால் கலைஞானம் தூயவனிடம் கொடுத்த கதைக்கும், ரங்கா படத்தில் தூயவன் கொடுத்துள்ள ஸ்க்ரீன்பிளேவிற்கும் மலையளவு வித்தியாசம்.
கதையின் அடிப்படைக் கருவை மட்டுமே எடுத்துக் கொண்டு ரஜனிக்கேற்ப 'ரங்கா' கதை மாற்றப்பட்டுள்ளது. (பில்லா மாயை வேறு அப்போது ரொம்ப ஜாஸ்தி) ரங்கா படமே ஒரு அன்புத் தம்பதியரின் குழந்தையை மையமாகக் கொண்டு அதை ரஜனி கடத்த முயற்சிப்பது, கராத்தே மணி மனம் திருந்தி அந்த குழந்தைக்கு பாடிகார்டாக இருந்து காப்பாற்ற முயற்சி செய்வது எனப் போகும்.
நீங்கள் பதிந்துள்ள பதிவு சில மறைந்துள்ள உண்மைகளை உணர்த்துவதாகத் தெரிகிறது. இரண்டாவது எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கு என்றும் தெரியவில்லை.
நடிகர் திலகம் பற்றிய 'பாசமலர்' மோகன் பற்றிய பதிவுக்கு நன்றி கிருஷ்ணா சார். . மோகன் பற்றிய பல நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.
vasudevan31355
17th September 2014, 06:59 PM
மாலை மதுரம் (2)
http://cdn.raaga.com/r_img/250/t/t0002317-no-cd.jpg
பொற்சிலை என்றொரு படம். அபூர்வமான படமும் கூட. ஜெமினி ஹீரோ.
'அக்கரையில் அவன் இருக்க'
'அழகைப் பாட வந்தேன்'
போன்ற இனிமையான பாடல்கள். படமும் நன்றாக இருக்கும் என்று கோபால் அடிக்கடி சொல்வார்.
இந்தப் படத்தில் சீர்காழி பாடிய அருமையான பாடல். ஆர். கோவர்த்தனன் இசை. 1969-இல் வெளியான படம் என்று நினைவு. கண்ணதாசன் பாடல்களை எழுதி இருந்தார். இப்படம் பற்றிய அதிக தகவல்கள் இல்லை.
நாளை பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று நம்பிக்கை கொள்வாயடா
இறைவன் நம்பிக்கை தருவானடா....
நாளை பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று நம்பிக்கை கொள்வாயடா
இறைவன் நம்பிக்கை தருவானடா
பசியென்று வந்தவர்க்கு புசியென்று தந்தவரை பரமனும் பணிவானடா
கனிந்து பக்கத்தில் வருவானடா....
பசியென்று வந்தவர்க்கு புசியென்று தந்தவரை பரமனும் பணிவானடா
கனிந்து பக்கத்தில் வருவானடா
ஆணென்று பெண்ணென்றும் ஆண்டவன் செய்து வைத்த ஜாதியும் இரண்டேயடா
தலைவன் நீதியும் ஒன்றேயடா....
நாளை பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று நம்பிக்கை கொள்வாயடா
இறைவன் நம்பிக்கை தருவானடா
போட்டி பொறாமைகளும் பொய் சூது சூழ்ச்சிகளும் ஈட்டியின் முனை போலடா
அதனை எய்தவன் மடிவானடா....
போட்டி பொறாமைகளும் பொய் சூது சூழ்ச்சிகளும் ஈட்டியின் முனை போலடா
அதனை எய்தவன் மடிவானடா
சத்திய சோதனையை சகித்து கொண்டே இருந்தால் வெற்றியை காண்பாயடா
அதுவே வேதத்தின் முடிவாமடா....
நாளை பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று நம்பிக்கை கொள்வாயடா
இறைவன் நம்பிக்கை தருவானடா
இறைவன் நம்பிக்கை தருவானடா இறைவன் நம்பிக்கை தருவானடா
http://www.inbaminge.com/t/p/Porchilai/
Richardsof
17th September 2014, 07:07 PM
அன்பு கரங்கள் .....காக்கும் கரங்கள் --- உழைக்கும் கரங்கள் ... துடிக்கும் கரங்கள் ....
இப்படி கைகளுக்குதான் எத்தனை பட்டங்கள் .. கைகள் பற்றிய பாடல்கள்
அன்னமிட்ட கை ....... நம்மை ஆக்கி விட்ட கை
உழைக்கும் கைகளே .உருவாக்கும் கைகளே
இது நாட்டை காக்கும கை
இரண்டு கைகள் நான்கானால் ...
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ....
எனக்கு தெரிந்த சில பாடல்களை சொல்லியுள்ளேன் . நண்பர்கள் தொடரலாம் .....
http://youtu.be/Dd--_uuTi4Q
gkrishna
17th September 2014, 07:12 PM
கிருஷ்ணாஜி,
'ரங்கா' படக்கதை பற்றிய பதிவு படித்தேன். நன்றி! ஆனால் கலைஞானம் தூயவனிடம் கொடுத்த கதைக்கும், ரங்கா படத்தில் தூயவன் கொடுத்துள்ள ஸ்க்ரீன்பிளேவிற்கும் மலையளவு வித்தியாசம்.
கதையின் அடிப்படைக் கருவை மட்டுமே எடுத்துக் கொண்டு ரஜனிக்கேற்ப 'ரங்கா' கதை மாற்றப்பட்டுள்ளது. (பில்லா மாயை வேறு அப்போது ரொம்ப ஜாஸ்தி) ரங்கா படமே ஒரு அன்புத் தம்பதியரின் குழந்தையை மையமாகக் கொண்டு அதை ரஜனி கடத்த முயற்சிப்பது, கராத்தே மணி மனம் திருந்தி அந்த குழந்தைக்கு பாடிகார்டாக இருந்து காப்பாற்ற முயற்சி செய்வது எனப் போகும்.
நீங்கள் பதிந்துள்ள பதிவு சில மறைந்துள்ள உண்மைகளை உணர்த்துவதாகத் தெரிகிறது. இரண்டாவது எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கு என்றும் தெரியவில்லை.
நடிகர் திலகம் பற்றிய 'பாசமலர்' மோகன் பற்றிய பதிவுக்கு நன்றி கிருஷ்ணா சார். . மோகன் பற்றிய பல நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.
வாசு சார்
ரங்கா பற்றி நீங்கள் சொல்லிய கருத்து 100% உண்மை
இதே மாதிரி தினத்தந்தி ஆரூர் தாஸ் அப்பஅப்ப அடிச்சு விடுறார்
நம்ம பார்த்த ரங்கா படம் வேறு .இரண்டாவது ரங்கா மிக பெரிய வெற்றி என்று வேறு சொல்லி இருக்கிறார் . மூன்று முகம் பெற்ற வெற்றியை விட ரங்கா பெற்ற வெற்றி சற்று குறைவு தான் .
உண்மைகள் வெளியில் வந்தால் நல்லது தானே
vasudevan31355
17th September 2014, 07:15 PM
//உண்மைகள் வெளியில் வந்தால் நல்லது தானே//
கண்டிப்பாக கிருஷ்ணா சார்.
vasudevan31355
17th September 2014, 07:25 PM
அவரே என் தெய்வம்
http://media-images.mio.to/various_artists/A/Avare%20En%20Deivam%20(1969)/Art-350.jpg
விஜயகுமாரி, ஜெமினி, நாகேஷ், வரலஷ்மி நடித்தது.
அழகே உனக்கு குணமிரண்டு
என் அடிமை உனக்கு மனமிரண்டு
பி.பி.எஸ்.,ராட்சஸி பாடிய அருமையான பாடல். இப்பாடல் ஏற்கனவே இடம் பெற்றதா எனத் தெரியவில்லை.
பி.பி.எஸ் முதல் அடி பாடி முடித்தவுடன் ஈஸ்வரி ஹா ஹா ஹா என்று கொடுக்கும் ஹம்மிங் ஹல்லிக் கொண்டு போகும்.
http://www.youtube.com/watch?v=MCzE3o3qkdg&feature=player_detailpage
madhu
17th September 2014, 07:33 PM
ஓவ்... கை கை கை கை
http://youtu.be/-PbeWefL9_Q
gkrishna
17th September 2014, 07:35 PM
அருமை வாசு சார்
இசை அமைப்பு யாரு சார் பார்த்தசாரதி யா அல்லது மாமாவா
சி என் ஷனுமுகம் இயக்கம்
நல்ல முடிவு ,கற்பூரம் இப்படி படம் கொடுத்தவர்
madhu
17th September 2014, 07:35 PM
அவரே என் தெய்வம்
விஜயகுமாரி, ஜெமினி, நாகேஷ், வரலஷ்மி நடித்தது.
அழகே உனக்கு குணமிரண்டு
என் அடிமை உனக்கு மனமிரண்டு
பி.பி.எஸ்.,ராட்சஸி பாடிய அருமையான பாடல். இப்பாடல் ஏற்கனவே இடம் பெற்றதா எனத் தெரியவில்லை.
வானொலியில் கேட்டு மயங்கியதுண்டு. இந்தப் பாடல் படத்தில் இடம் பெற்றதா ?
சுசீலாவின் "கட்டான முத்து முத்து சிரிப்பு" பாட்டு நினைவில் இருக்கிறது.
gkrishna
17th September 2014, 07:36 PM
1.ஆயிரம் கரங்கள் நீட்டி
2.கை விரலில் பிறந்தது நாதம்
vasudevan31355
17th September 2014, 07:37 PM
கிருஷ்ணா சார்,
ரங்கா பெரிய வெற்றி இல்லை. கராத்தே மணிக்கு நடிக்கவே தெரியாது. உணர்ச்சி உருண்டை என்ன விலை என்பார். கராத்தே அடிகளுக்காகவே யூஸ் செய்யப்பட்டவர்.
இந்தப் படத்தில் ஒரு வித்தியாமான பாடல் உண்டு. சாலைகளில் ரஜினியும், ராதிகாவும் பாடிக் கொண்டே செல்வார்கள்.
புருஷன்தான் இவன் புருஷன்தான்
இவன் பேரு ரங்கா என்னுடைய பங்கா
ஒட்டிகிட்டான்யா கையக் கட்டிகிட்டான்யா
பங்குனி மாசம் கல்யாணம்
பல்லாக்கிலே ஊர்ல்கோலம்
பொண்டாட்டி இவ பொண்டாட்டி....
வாணி, பாலா பாடும் பாடல். அதிகமாக வெளியே தெரியாத பாடல்.
செம ஜாலி பாடல். உற்சாகம் கொப்பளிக்கும்.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Fk1RnHhI0L8
vasudevan31355
17th September 2014, 07:39 PM
கை வலிக்குது கை வலிக்குது மாமா
கை நிறையக் காசு பை நிறைய நோட்டு
கையிருக்கு காலிருக்கு முத்தையா
கையோடு கை சேர்க்கும் காலங்களே
கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று
தட்டட்டும் கை தழுவட்டும்
ஹோ..தட்டட்டும் கைகள் மெல்லத் தாளக் கட்டோடு
கையில காசு வாயில தோசை
கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்கோ
vasudevan31355
17th September 2014, 07:47 PM
வானொலியில் கேட்டு மயங்கியதுண்டு. இந்தப் பாடல் படத்தில் இடம் பெற்றதா ?
பாடல் படத்தில் உண்டா இல்லையா என்று குழம்பியதுண்டு
vasudevan31355
17th September 2014, 07:53 PM
என்னை தொட்டு சென்றன கண்கள்
ஏக்கம் தந்தே சென்றன கைகள்
gkrishna
17th September 2014, 07:54 PM
கோவர்தனம்
ஜாதகம் (1953) pbs முதல் தமிழ் பாட்டு ,
ஒரே வழி (1959),
கைராசி (1960),
பட்டணத்தில் பூதம் (1967),
பூவும் பொட்டும் (1968),
அஞ்சல் பெட்டி 520(1969)
பொற்சிலை (1969)
வரப்ரசாதம் (1976)
பின்னாட்களில் இளையராஜாவிடம் இசை கண்டக்டர் ஆக இருந்தார் என்று கேள்வி
லொகி லுச்சா லொகி லுச்சா
அழகான பட்டுபூச்சி ஆடை கொண்டது ரவீந்தர் சில்க் டான்ஸ்
ரங்கா
சுசீலாவின் ஒரு சூப்பர் பாடல் கேட்ட நினைவு ரங்காவில் வாசு சார்
மேலும் டூத் பேஸ்ட் இருக்கு பிருஷ் இருக்கு எழுந்திரு மாமா
ஜானகி குழந்தை குரல்
gkrishna
17th September 2014, 07:55 PM
கை வலிக்கலையா ? டைப் அடிச்சு :)
vasudevan31355
17th September 2014, 07:57 PM
அம்மாடி உழைக்கும் கை ஓங்க வேண்டும்
vasudevan31355
17th September 2014, 07:57 PM
கை வலிக்கலையா ? டைப் அடிச்சு :)
கை தூக்கிவிட நீங்கள் இல்லையா?
gkrishna
17th September 2014, 08:00 PM
thanks vaasu sir
இன்றைய பாடல்கள் உள்ளத்தைத் தொடவில்லை என இளையராஜா பேசினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கம்பன் மணி மண்டபத்தில், கவியரசர் கண்ணதாசன் சமூகநல அறக்கட்டளை சார்பில் 24 ஆம் ஆண்டு கவியரசர் கண்ணதாசன் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர், கதை வசனகர்த்தா பஞ்சு அருணாச்சலத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி இளையராஜா பேசியதாவது:
நான் பாட்டு பாடுபவன், பேச்சாளன் கிடையாது. காரைக்குடி சிறப்பு வாய்ந்த மண். இங்குள்ள வீதியில் ஜீவானந்தம் முன்னே செல்ல ஜெயகாந்தன், எம்.ஏ. சீனிவாசன், டி.கே.பாலச்சந்திரன், ரகுநாதன், சிவகாமசுந்தரி, பொன்னி வளவன், தா.பாண்டியன் போன்ற தலைவர்கள் ஊர்வலமாகச் செல்ல அவர்களோடு நான் நடந்து போயிருக்கிறேன். அக்காலங்களில் கவியரசர் கண்ணதாசனும், ஜெயகாந்தனும்தான் எங்கள் சூப்பர் ஸ்டார்கள்.
கண்ணதாசனுக்கு இணையாக உலகில் வேறு எங்குமே இன்னொரு கவிஞன் கிடையாது. சூழலுக்குத் தகுந்தவாறு உடனுக்குடன் பாடல் எழுதும் வல்லமை பெற்றவர் கவியரசர் மட்டுமே. எனது படத்துக்கு முதலில் பாடல் எழுதுகிறார் எனக் கேட்டபோது, மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
அனுபவங்கள் மூலம் பட்டுப்பட்டு தெளிவு ஏற்பட்டு பாடினால்தான் பாட்டு. அந்த அனுபவத்தை பாடல் வரிகளில் வெளிக் கொணர்ந்ததால்தான் கண்ணதாசனின் படைப்புகள் காலத்தை வென்றன. ஆனால், இன்றைய பாடல்கள் எதுவும் உள்ளத்தை தொடவில்லை. அக்காலத்தில், நான் பள்ளிக்கு நடந்து சென்றபோது ஒலிப்பெருக்கியில் ஒலித்த கண்ணதாசனின், மாலைப்பொழுதின் மயக்கத்திலே… எனத்தொடங்கும் பாடல் எங்களை ஈர்த்தது. ஏதோ ஒரு சூழ்நிலைக்கு அவர் எழுதிய பாடல் ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் பொருந்தியது.
காதுகேளாத இசைமேதை பீத்தோவன் இசைத்த இசைதான், இன்றளவும் உலகப் புகழ் பெற்றது. அவரது சாதனையை முறியடிக்க யாரும் இல்லை. நான் சாதனை எதுவும் செய்தவன் இல்லை. மனிதனாகப் பிறந்ததையே பாவமாக நினைக்கிறேன். அதனால் தான் திருவண்ணாமலையாரை சரணடைந்துள்ளேன்.
சினிமாவில் வாய்ப்புகள் தேடி அலைந்தபோது, இசைக்கருவிகளுடன் இசைத்து காட்டியபோதும் எங்களுக்கு யாரும் வாய்ப்பு தரவில்லை. ஆனால் மேஜையில் தாளம் போட்டு பாட்டுப்பாடி காட்டியபோது, பஞ்சு அருணாசலம் அன்னக்கிளி படத்துக்கு வாய்ப்பு கொடுத்தார். பஞ்சு அருணாசலம் எந்தக் கணக்கில் என்னை அறிமுகப்படுத்தினார் எனத் தெரியாது. எனக்கு பெற்றோர் இட்ட பெயர் ஞானதேசிகன், பள்ளியில் ராசய்யா எனச் சேர்த்தனர். ஆனால், பஞ்சு அருணாசலம்தான் எனக்கு இளையராஜா என்ற பெயரையும், இசைஞானி என்ற பட்டத்தையும் வழங்கினார்.
அந்த வகையில் கம்பன், கண்ணதாசன் வாழ்ந்த மண், எத்தனையோ ஆழ்வார்கள், நாயன்மார்கள், அடியார்கள் வாழ்ந்த இந்த மண்ணில் வாழ்வதுதான் எனக்குப் பெருமை. அதனால்தான், சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப்போல வருமா என்ற அனுபவத்தை என்னால் எழுதமுடிந்தது, என்றார்.
Thanks to Tamil Hindu
one comment on this topic
கவிப்பேரரசு வைரமுத்துவை "காதல் ஓவியம்" படப் பாடல்கள் பிரபலமானபோது, ஒரு பேட்டியில் இசைஞானி இளையராஜா அவரை ஆறு கண்ணதாசனுக்கு இணையானவர் என்று வாயாரப் புகழ்ந்தாரே.. அது வெறும் முகஸ்துதி வார்த்தைகளா? முரண்பாடான கருத்துக்களை பெரிய மனிதர்கள் சொல்லும்போது "மலையளவு புகழ்ந்து உடன் வலிக்கும் வரை தாக்குவதில் மனிதரில் நான் தெய்வமிருகம்" என்ற கவியரசின் கவிதை வரிகளே நினைவுக்கு வருகிறது. by thirunavukkarasu
vasudevan31355
17th September 2014, 08:01 PM
கிருஷ்ணா சார்,
இன்னைக்கு பத்து பக்கம் பக்காவா பறந்துடுச்சே. சினா கானாவுக்கு ஹோம் வொர்க் அதிகமாயிடுமே. நம்ம வெடி வச்சு பெண்டு நிமித்துராரு இல்ல. அனுபவிக்கட்டும். அனுபவி கண்ணா அனுபவி:)
vasudevan31355
17th September 2014, 08:03 PM
கிருஷ்ணா சார்,
கோவர்த்தனன் லிஸ்ட்க்கு தேங்க்ஸ்.
vasudevan31355
17th September 2014, 08:07 PM
டியர் கோபு சார்,
இடைவிடாத தங்கள் 'லைக்'குகளுக்கு என் மனமார்ந்த நன்றி! உங்கள் உற்சாகப்படுத்தும் தன்மை மேலும் எங்களை ஊக்குவிக்கிறது. ஒரே ஒரு குறை.நீங்கள் இங்கு அதிகம் பங்கு பெற்று சிறப்பிக்க வேண்டும். நன்றி சார்.
rajraj
17th September 2014, 08:19 PM
Another 'kai':
kaiyile vaanginen paiyile podalai kaasu pona idam theriyalai
:)
vasudevan31355
17th September 2014, 08:45 PM
வெங்கிராம் சார்,
இரு பறவைகள் பாடல் அலசல் அமர்க்களம். அதுவும்
இசைக் கண்ணாடியில் நிறப்பிரிகை நடத்திய ராஜா-கவியரசர்-ஜென்சி.
வரிகளை நிரம்பவே ரசித்தேன். இது போல நிறையத் தாருங்கள்.
vasudevan31355
17th September 2014, 08:47 PM
ராஜ் ராஜ் சார்
வாருங்கள். உங்கள் பங்களிப்புகளை நிறையத் தாருங்கள். இப்போதுதான் உங்களைப் பற்றி நானும், கிருஷ்ணா சாரும் கை பேசியில் பேசி மகிழ்ந்தோம்.
தங்கள் மெல்லிய நகைச்சுவை திரியின் பெரிய பலமாக வேண்டும். நன்றி!
chinnakkannan
17th September 2014, 09:11 PM
//சினா கானாவுக்கு ஹோம் வொர்க் அதிகமாயிடுமே//ஹையா இன்னிக்கு ஹோம் வொர்க் கம்மி தான் :)
வேதா பாடல்கள் லிஸ்டிற்கு நன்றி எஸ்வி சார்.
.
இருபறவைகள் மலை முழுவதும் இப்போது கேட்டேன் இந்தப் பாடலில் ஓ.கே.. //இந்த க் கீச் வாய்ஸ் தான் ஜென்ஸி// கொஞ்சம் ஓவராகத் தான் எழுதிவிட்டேன் ஸாரி.. ஆனால் என் வாழ்விலே.. பொறுத்த வரை கொஞ்சம் கீச்சாகத் தான் இருக்கும்..
அழகே உனக்கு குணமிரண்டு இந்தப் பாட்டுஇப்போ தான் கேக்கறேன் நன்றி வாசு சார்
இந்தக் கை ப் பாட்டுன்னவுடனே நினைவுக்கு வந்தது அக்கக்கோ கை கை மலர்க்கை..அம்மம்மோ கை மேல் கை வை பாட்டுத்தான் நினைவுக்கு வந்து பின்னால் பக்கங்களுக்குள்ள வந்தா மதுண்ணா போட்டுட்டார்.. அதனாலென்ன என்னை மாதிரி நிறைய இளைஞர்களும் இருக்கறதால – நானும் – வை ராஜா வை வலது கையை வை எனவுமொரு லேட்டஸ்ட் பாடல் இருக்குன்னு அடக்கத்தோடு சொல்லிக்கொள்கிறேன்! அப்புறம் கையாலே எனைத் தொட்டால் போதும் உயிரே உனக்காக – மைக் மோகன் + நைல் நதியா..
rajeshkrv
17th September 2014, 09:22 PM
சில மலையாளப் பாடல்கள் நினைவுக்கு வருது. தமிழில் சட்டுனு ஞாபகம் வரலீங்கோ..
her name is Ambili & not Ambuli
sss
17th September 2014, 10:58 PM
[QUOTE=madhu;1165046
பணம் பெண் பாசம் படத்தில் முத்துராமன், வடிவுக்கரசி, விஜயன், சரிதா நடிக்க ( ஒரு வீடியோ பாட்டு கூட சிக்கவில்லை )
"லக்ஷ்மி வந்தாள்", "கலைமாமணியே","அன்போடும் பண்போடும்","அழகிய முகம் முழுமை நிலா ( படத்தில் பார்த்ததாக நினைவில்லை ) ஆகிய பாடல்கள் இருந்தன.
என்னைக்காவது வலைத் தளத்தில் மாட்டிக்காமல் போகாது. :)[/QUOTE]
இதோ மாட்டிகிச்சி.....
பணம் பெண் பாசம்
பாடல்: அன்போடும் பண்போடும்
பின்னணி: பி.சுசீலா
-----------------------------------------------------
Song: Anbodum Panpodum
Singer: P.Suseela
http://www.mediafire.com/?157qza636gqd6a5
பாடல்: அழகிய முகம் முழுமைநிலா
பின்னணி: வாணிஜெயராம் குழுவினர்
--------------------------------------------------------------
Song: Azhagiya Mugam Muzhumainilaa
Singer: Vanijeyaram chorus
http://www.mediafire.com/?vosb4hdhnyb6e6z
பாடல்: கலைமாமணியே...சுவைமாங்கனியே
பின்னணி: பி.ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்
----------------------------------------------------------------------------
Song: Kalaimaamaniye...Suvaimaanganiye
Singers: P.Jeyachandiran & Vanijeyaram
http://www.mediafire.com/?48rbq4a3r64h58h
பாடல்: லக்ஷ்மி வந்தாள்..மகாராணிபோல்
பின்னணி: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.பி.சைலஜா
-----------------------------------------------------------------------------------------
Song: Lakshmi Vanthaal..Maharanipol
Singers: S.P.Balasuvramaniam & S.P.Sailaja
http://www.mediafire.com/?3grtchy09r39lyo
madhu
18th September 2014, 04:01 AM
இதோ மாட்டிகிச்சி.....
நன்றி sss ji..
இதன் ஆடியோ பாடல்கள் வலைத் தளத்தில் கிடைக்குது. நான் குறிப்பிட்டது வீடியோ பாடல்களை.. ( நான் சரியாகக் குறிப்பிடவில்லை. தவறு என்னுடையதே )
madhu
18th September 2014, 04:22 AM
அனேகமாக நாயகிகள்தான் உடைக் குறைப்பு செய்து பாட்டுக்கு ஆடுவாங்க...
சில நாயகர்களை சட்டை போடாமல் காட்டுவதும் உண்டு.
கமல்ஹாசன் ஒரு முறை தன்னை "பொம்பளை ஜெயமாலினி" ஆக்கி விடுவார்களோ
என்று பயந்ததாக சொல்லி இருக்கிறார்.
ஆனால் கமல் கூட இருந்தும் கூட இந்தப் பாட்டில் சிவகுமாரை உள்ளாடையுடன்
ஆட விட்டவருக்கு எத்தனை தைரியம் ?
படம் : தங்கத்திலே வைரம்
சுசீலா, சசிரேகா
சிவகுமார், ஜெயசித்ரா, கமல், ஸ்ரீப்ரியா
அந்தப் பக்கம் ....
http://youtu.be/TcSct-Pse0Q
rajraj
18th September 2014, 04:38 AM
வாருங்கள். உங்கள் பங்களிப்புகளை நிறையத் தாருங்கள்.
Thanks vasu! I will show up once in a while and make some noise,pleasant noise that is ! :)
vasudevan31355
18th September 2014, 07:35 AM
மதுஜி,
கமல் இருக்கும் போது சிவக்குமாரை ஆடை குறைப்பு செய்து அழகு பார்த்த அந்த இயக்குனரை மன்னித்து விடுவோம். பாடலுக்கு நன்றி!
இங்கே ஸ்ரீபிரியா கோழை சிவக்குமாருக்கு தைரியமூட்டி அவரை 'ஆண் பிள்ளை சிங்கமா'க மாற்ற பாடும் ஒரு பாடல். பெரும்பாலும் யாரும் கேட்டிராத பாடல்.
மயக்கம் குழப்பம் நேரும்போது போது
பயந்தால் கோழை நெஞ்சம்
தைரியமாக பொறுப்பை ஏற்கத் துணிந்தால்
ஆண் பிள்ளை சிங்கம்
வா திரும்பி வா
சுசீலா அவர்களின் பின்னல். ஸ்ரீபிரியாவின் இளமை. சிவகுமாரின் குழப்ப சோகம். எல்லோரும் கேமராவைத் தூக்கிக் கொண்டு ஓடும் அப்போதைய அழகான சாத்தனூர். பாஸ்ட் டிராக் பாடல். கொஞ்சம் வித்தியாசம் உணரலாம்.
http://www.youtube.com/watch?v=XQVzgkOE9K8&feature=player_detailpage
vasudevan31355
18th September 2014, 07:57 AM
இன்னொரு அம்சமான வண்டிப் பாடல்
நினைக்கும் போதே ஆஹா
இனிக்குதே என் மனமே
பயந்து ஓடி வயலில் விழுந்து
எடக்கு பேசி நின்றதை
எண்ணியே இனிக்குதா
நாகரீகமான ஜெமினி, அஞ்சலிதேவி. (இருவரும் கொள்ளை அழகு) அஞ்சலி போட்டிருக்கும் அந்த நெக்லஸ் சான்சே இல்லை. வீட்டுக்காரம்மாவுடன் இப்பாடலைப் பார்த்தால் தொலைந்தோம் சி.க.
இளம் தண்டு போன்ற இனிய குரலில் சுசீலாம்மா பிளஸ் ஏ.எம்.ராஜா
நினைப்பதற்கு மேலாக சிறப்பாக பாடி மகுடி முன்னே நாகம் போலே நம்மை வசியமாக்கி இப்பாடலில் நம்மைப் பைத்தியமாக்கி விடுகிறார்கள். பேக் புரஜக்ஷன் காட்சிகள் அதிகம். பாடலில் அதைவிட இனிமை அதிகம்.
அதுவும் சுசீலா இனிமையோடு கொஞ்சும்
'எனையும் தாங்காமல் தூங்காமல் இருவிழி
இருந்த அந்நாளை என் உள்ளம் மறக்குமா'
வரிகளின் சுகம் உச்சி வெயிலில் வேர்க்க விறுவிறுக்க கிரிக்கெட் விளையாடி விட்டு சில்லென்று ஒரு சொம்பு தண்ணீர் குடிக்கையில் ஆறாவது ஏழாவது முடக்கு முழுங்கும்போது கிடைக்குமே ஒரு சுகம்
அது போல ஒரு சுகம் கிடைக்கும்.
http://www.youtube.com/watch?v=xtWBGO29MQk&feature=player_detailpage
madhu
18th September 2014, 08:11 AM
ஆம்பிளை சிங்கம் பாட்டு .... அதிகமாக ஒலிபரப்பப் பட்டதிலை. அனேகமாக "கண்ணடி கையடி பட்டாதானே" பாடலோ "காலம் பல காத்திருந்தோம்" பாடலோதான் கேட்டிருக்கிறேன். இது படத்தில் பார்த்ததோடு சரி.. வாணி ஜெயராம் பாட்டு ஒண்ணு "காசை சேத்துக்கோ" என்று ஒண்ணு இருப்பதாக நினைவு.
rajeshkrv
18th September 2014, 08:17 AM
வாசு ஜி, மதுண்ணா காலை வணக்கம்
Richardsof
18th September 2014, 08:47 AM
CAN ANYONE GUESS THIS ACTRESS ?
http://i60.tinypic.com/20szrpw.jpg
Richardsof
18th September 2014, 08:50 AM
1950's FIRST TAMIL ''DREAM GIRL'' - T.R. RAJA KUMARI
http://i62.tinypic.com/2n7imom.jpg
Richardsof
18th September 2014, 08:51 AM
http://i61.tinypic.com/s2z5oz.jpg
Richardsof
18th September 2014, 08:52 AM
http://i62.tinypic.com/2sbnbcl.jpg
Richardsof
18th September 2014, 08:53 AM
http://i58.tinypic.com/rll2lv.jpg
Richardsof
18th September 2014, 08:53 AM
http://i59.tinypic.com/208ibdf.jpg
rajraj
18th September 2014, 08:55 AM
From Paasam
jal jal jal enum salangai oli .........
http://www.youtube.com/watch?v=yyASKLWGrvg
I posted this song because it brings back memories of my childhood summers. We used to travel by a bullock cart (maattu vaNdi) from Papanasam railway station to our native village along Vettar river. It was fun. More fun was climbing mango trees and tamarind trees for fruits. Nothing like raw mango with salt ! :) Then there was tender coconut (iLaneer) and tender palms(nongu). There was also padhaneer (palm sap). Playing chadu gudu in the river bed or digging for water (ootru) was also fun.
Those were the days. Will never come back! :)
Richardsof
18th September 2014, 09:08 AM
http://youtu.be/05ncSZxuh34
venkkiram
18th September 2014, 09:39 AM
பாடல் ஆரம்பவரியே சாரம்சத்தை சொல்லிவிடும். ராங் நம்பர் என்றாலே நாம் பொதுவாக இணைப்பை துண்டித்துவிடச் செய்வோம். ஆனால் அப்படி துண்டிக்காமல் தொடர வைக்கும் ஒரு கள்ள நட்பைத்தான் இப்பாடல் சொல்கிறது. கதை நாயகன் அப்படிப் பட்டவன். படம் 76-ல் வந்திருக்கிறது என்றால் அப்போதைய காலக் கட்டத்தில் இந்த விஷயம் எந்த அளவுக்கு ஒரு புதுமையானதாக பார்க்கப் பட்டிருக்கும் என்பதை 2014-களில் புரிந்து கொள்ள முடிகிறது. நகரங்களில் டெலிபோன் பழக்கம் அந்த அளவுக்கு பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப் பட்டிருக்காது. 76-களில் உயர்தட்டு மற்றும் நடுத்தரத்திற்கும் மேற்பட்ட அடுக்கு மக்களால் மட்டுமே டெலிபோன் பயன்படுத்தப் பட்டிருக்கும். திருமணமான பெண் திருமணமாகாத இளைஞரிடம் / திருமணமான ஆண் திருமணமாகாத இளைஞியிடம் அந்தரங்கமாக உரையாடுவது.. எனக்குத் தெரிந்து 90-களில் நான் இந்த இருவகை ஆண்களையும் கடந்து வந்திருக்கிறேன். விசித்திரமான உலகம் அது.. அதில் ஒருவன்.. எனக்கும் அவனுக்கும் ஓரிரு அடிகள்தான் தூரம் இருக்கும். ஆனாலும் அவன் டெலிபோனில் என்ன பேசுகிறான் என்பதை ஒட்டுக் கேட்கவே முடியாது. அப்படி ஒரு மிகக் குறைந்த டெசிபலில் (பாம்புக்கு கூட கேட்காத டெசிபல் எனவும் சொல்லலாம்) உரையாடிக் கொண்டிருப்பான் எதிர்முனையில் உள்ள பெண்குரலோடு மணிக்கணக்காக. கட்டணம் அதிகமாக கட்டவேண்டியிருக்குமே என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவன் வேலைபார்த்து வந்த முதலாளியின் தொலைபேசி. பாவம் ஒருவகையில் லாபம் இவனுக்கு. நஷ்டம் முதலாளிக்கு.
https://www.youtube.com/watch?v=wFOccIXS3C0
படத்தின் பெயர் மன்மத லீலை. பாடலோ ஹலோ மைடியர் ராங் நம்பர். படவெளியீடு நாட்களில் மிகவும் கலகமான ஒன்றாக அனைவராலும் பேசப்பட்டிருக்கும் என நினைக்கிறென். எம்.எஸ்.வியின் பாடகர் தேர்வுக்கு பாராட்டுக்கள். இளைஞனாக கமல். பொருத்தமாக யேசுதாஸ். பாடல் நாயகிக்கு அதுவும் கணவருக்குத் தெரியாமல் கள்ளத் தனமான உரையாடல் நடத்தும் பெண் குரலாக எல்.ஆர்.ஈஸ்வரி. ஆரம்ப காலத்திலேயே இப்படி ஒரு பெண்பித்தர் கதாபாத்திரத்தில் நடிக்க இப்போதுள்ள நடிகர்களுக்கு துணிச்சல் வருமா? பாடல் வரிகளுக்கு இடையிடையே no, no no, not yet, really, not mind என பாத்திரங்கள் இயல்பாக பேசிக் கொள்ளுவது போல மெட்டினை உருவாக்கியிருப்பது சிறப்பு. பையன் காஞ்சுபோன மாடுபோல ரொம்பவும் எதிர்பார்ப்போடு இருக்கானே என உணர்ந்து "பொறுமையுடன் இறுங்கள்" என வல்லினம்போட்டு அதட்டுவது, அதற்கு பையன் "முதுமை வரும் வரையோ?" என்பதாக உரையாடல் செல்லும் கண்ணதாசன் ரகளை.
சில நேரம் இமிடேஷன் நகைகள் ஒரிஜினல் அளவுக்கு நெருங்கி வருவதுண்டு. அதுபோலவே இந்த மேடைக்கச்சேரி பாடகர்-பாடகியும். ரொம்ப யதார்த்தமாக ரசித்துப் பாடி அசலின் தரத்தை நெருங்கியிருக்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=TBlbYCt-yCA
gkrishna
18th September 2014, 10:06 AM
From Paasam
jal jal jal enum salangai oli .........
I posted this song because it brings back memories of my childhood summers. We used to travel by a bullock cart (maattu vaNdi) from Papanasam railway station to our native village along Vettar river. It was fun. More fun was climbing mango trees and tamarind trees for fruits. Nothing like raw mango with salt ! :) Then there was tender coconut (iLaneer) and tender palms(nongu). There was also padhaneer (palm sap). Playing chadu gudu in the river bed or digging for water (ootru) was also fun.
Those were the days. Will never come back! :)
பேராசிரியர் சார் (ராஜ்ராஜ் சார் )
மன்னிக்கவும் :) professor என்பதற்கு பேராசிரியர் என்று லிப்கோ ஆங்கில தமிழ் அகராதியில் போடப்பட்டு இருந்தது . அதனால் உங்களை இப்படி அழைக்கிறேன் . பாசம் பற்றிய உங்கள் மலரும் நினைவுகள் அருமை.
பாபநாசம் என்பது தஞ்சை மாவட்டம் பாபநாசம் அல்லது நெல்லை மாவட்ட பாபநாசம் . ஏன் என்றால் நெல்லையிலும் பாபநாசம் என்ற ஒரு ஊர் உண்டு. அங்கு இருக்கும் மலைக்கு மேல் தான் தாமிரபரணி உற்பத்தி . ராமாயணத்தில் வால்மீகி எழுதி உள்ள சில இடங்களில் இந்த தாமிரபரணி நதி பற்றி சொல்ல பட்டு உள்ளது.சமீபத்தில் நடிகர் கமல் கூட இந்த பெயரில் ஒரு படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். தென்காசி ,அம்பசமுதரம் போன்ற ஊர்களில் படபிடிப்பு நடந்து உள்ளது. தீடீர் என்று உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு வீடு திரும்பி உள்ளார். நடுவில் 'இதை வைத்து நாடகம் நடத்த' நினைத்த நண்பர்களுக்கு நன்றி கலந்த எச்சரிக்கை விடுத்தார் .
நீங்க நிறைய பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்து உள்ளீர்கள். நான் இரண்டு தினங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை சொல்கிறேன் .
மீண்டும் மன்னிக்கவும் .அந்த நாட்கள் மீண்டும் வாராது . ஆனால் நீங்கள் மீண்டும் வந்து இது போல் பல பதிவுகள் போட வேண்டும் என்பது எங்களின் அவா
இந்த கொடுக்காபுளி என்று ஒரு மரம் உண்டு அதில் நாங்கள் பள்ளி காலங்களில் மரம் ஏறி பறித்த நினைவு உண்டு . இதன் பழம் மிகவும் இனிமையாக இருக்கும்
gkrishna
18th September 2014, 10:12 AM
அன்பு எஸ்வி சார்
ராஜகுமாரி (tr ) ராஜகுமாரி நிழல்படங்கள் அருமை . இன்னொரு படத்தில் இருக்கும் அந்த நடிகை யார் ? எனக்கு மட்டும் ரகசியமாய் சொல்லுங்களேன் .. பாருங்க ரகசியமாய் என்று சொன்னவுடன் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது . 'ராத்திரிக்கு ராத்திரி என் நினைப்பு வர வேண்டும் .ராஜன் மட்டும் ராணியை தான் ரகசியமாய் தொட வேண்டும் ' சுசீலா பாடல் பிரமீளா பாடுவது போலவே பாடி இருப்பார் மனிதரில் மாணிக்கம் திரை படத்தில் .
ராஜகுமாரி என்றவுடன் ராமண்ணா நினைவுக்கு வருவார் .ஏன் என்றால் ராமண்ணாவின் சகோதரி . மனோஹர வசந்த சேனை ,வானம்பாடி 'நீ பாடும் போது உமா பாடற மாதிரி இருக்கு -கங்கை கரை தோட்டம் ' ,ராஜகுமாரி திரை அரங்கு, அங்கு குடி இருந்த சாவித்திரி இப்படி பல நினைவுகள் கிளம்புது . மிக்க நன்றி
அந்த கை வரிசை பாடல்கள் ரசித்தீர்களா
chinnakkannan
18th September 2014, 10:14 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
ராஜ்ராஜ் சார்..ஆற்றங்கரை நாட்கள் நினைவுகள் சூப்பர்.. நானும் வைகையாற்றிலே ஐந்தோ ஆறாம் வகுப்பிலோ போய்க் குளித்துவிட்டு வந்திருக்கிறேன்..வீட்டிற்குத்தெரியாமல்.. ரொமப நல்லா இருக்கும்..ம்ம் சின்னக் குழந்தையாய் மாறணும்போல இருக்கு..:)
வாங்க் வெங்க்கி ராம்..
//ரொம்பவும் எதிர்பார்ப்போடு இருக்கானே என உணர்ந்து "பொறுமையுடன் இறுங்கள்" என வல்லினம்போட்டு அதட்டுவது, அதற்கு பையன் "முதுமை வரும் வரையோ?" என்பதாக உரையாடல் செல்லும் கண்ணதாசன் ரகளை. // அருமையாய் ரசிக்கிறீர்கள்.. வெரி நைஸ்..கொஞ்சம் அவ்வளவாக ஊறாத தயிர்வடை மாதிரி ஒய்.விஜயா இருப்பார்..இருந்தாலும்கொஞ்சம் வித்யாச அழகு..லைட் மியூசிக்கில் அப்புறம் கேட்டுச் சொல்கிறேன்..கமல்ஹாசனின் மூக்குக் கண்ணாடி எனக்கு ப் பிடிக்கும்..அந்த ஃப்ரேம் இப்போ தான் போட்டிருக்கிறேன்.. நன்றி..
எஸ்வி சார்..என்னது இது திடீர்னு டி.ஆர்.ராஜ குமாரி..இன்னிக்கு நினைவு தினமா.. என் தாத்தா இருந்திருந்தால் பார்த்து சந்தோஷப் பட்டிருப்பார்.....அதென்ன பாமா ஓகே..திடீர்னு ருக்குமணி நினைவு வருது..ருக்குமணியே பரப் பர பர,, ருக்குமணி ருக்குமணி அக்கம்பக்கம் என்ன சத்தம்..அப்புறம் வேற ருக்குமணிப் பாட்டு உண்டா..(ஏனோ குட்டைப் பாவாடை -கெ.வா.பேசும் ஃபராவின் தங்கை- தபுவின் நினைவு தான் வருகிறது..ருக் ருக் ருக் ஹரே பாபா ருக் ஓ மை டார்லிங்க் கிவ் மி எ லுக்)
அப்புறம் வரட்டா
chinnakkannan
18th September 2014, 10:16 AM
ராஜ்ராஜ் சார்..வெண்ணிலா ப்ராஜக்ட் சீக்கிரம் செய்கிறேன்..கொஞ்சம் டைம் கொடுங்கள் ஓரிரு நாட்களில் ஓகேயா :)
rajraj
18th September 2014, 10:18 AM
இந்த கொடுக்காபுளி என்று ஒரு மரம் உண்டு அதில் நாங்கள் பள்ளி காலங்களில் மரம் ஏறி பறித்த நினைவு உண்டு . இதன் பழம் மிகவும் இனிமையாக இருக்கும்
It is Papanasam,Tanjore district. We still have a housing lot (manaikkattu) and some land in the village. The 'manakkattu' has a number of trees including 'kodukkaappuLi'. Then there is 'viLaampazham'. It is a family owned village. I wrote about that in my story "vENdaam thaathaa" in Hub magazine. It is about untouchability.
I will share my memories. In fact, my wife wants me to write a book about my life ! :lol:
gkrishna
18th September 2014, 10:24 AM
மது சார்
தங்கத்திலே வைரம் ஜேசு பாலா குரல்களில் 'என காதலி யார் சொல்லவா '
என்று ஒரு சூப்பர் பாடல் பகோடா காதர் ட்ரம்ஸ் வாசிக்கும், தேங்காய் சீனிவாசன் ட்ரம்பெட் வாசிக்கும், ..சிவகுமார் ஜெயசித்ரா கமல் ஸ்ரீப்ரிய ஜோடி
தயாரிப்பாளர் எங்க ஊர் சூரிய நாராயணன் நகரசபை கவுன்சிலர் . நிறைய படங்கள் எடுத்தார் . நம்ம வாசு சார் போட்ட முதல் பாடல் மறு பிறவி இவரது படம் தான், வைரம்,குப்பத்து ராஜா,குல கொழுந்து இப்படி நிறைய படம் எடுத்தார் . இவரது மகன் MS அண்ணாதுரை சினிமா ஒளிபதிவாளராக இருந்தார் . காமிரா மேதை கர்ணனை வைத்து கூட 'இது நம்ம பூமி' எடுத்த நினைவு .
http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/c/cc/ThangathileVairam.JPG/220px-ThangathileVairam.JPG
வாசு சார்
ஆண் பிள்ளை சிங்கம் எஸ் பி முத்துராமன் இயக்கம் .இளைமையான ஸ்ரீப்ரிய . நவரச திலகம் முத்துராமன் கூட பெரிய கண்ணாடி போட்டு கொண்டு வருவார் .
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQ4xOGn9SiozO7seqP1X-Y-kwYO1rrXS3UYD4YplsqXYb4XMc2V
chinnakkannan
18th September 2014, 10:26 AM
கொடுக்காப்புளி வெளிர் பச்சைக் கலர்ல இருக்கும் கொஞ்சம் புதிதாய் வெட்கப் படும் இளம்பெண்ணைப் போல ஆங்காங்கே சிவந்திருக்கும் (சிவப்பு வித் பச்சை பேக் க்ரெளண்ட்).. உள்ளே முத்துக்கள் கருப்பாய் இருக்கும் இது லேசாய்த் துவர்க்கும் இல்லியோ (பீன்ஸ் ஃபேமிலிக்கு தூரத்து உறவு இல்லியோ..
//I will share my memories. In fact, my wife wants me to write a book about my life ! // கண்டிப்பா எழுதுங்க ராஜ் ராஜ் சார்.. அல்லது ஒரு நாவல் மாதிரி கூட நீங்கள் எழுதலாம்..
gkrishna
18th September 2014, 10:29 AM
நன்றி ராஜ் ராஜ் சார்
நம்ம மூப்பனார் ஊருக்கு (கபிஸ்தலம்) பக்கம் தானே இந்த பாபநாசம்
.108 திவ்ய ஷேத்ரம் பெருமாள் கோயில் ஒன்று நினைவு உண்டு
சுந்தர ராஜ பெருமாள் கோயில் என்று ஊர் பெயரே இருக்கும் '.சோறுடைத்து சோழ நாடு ' பகுதியை சேர்ந்தவர் . சொல் வளத்திற்கும் ,எழுது நடைக்கும் கேட்கவா வேணும்.. நிச்சயம் படிக்கிறேன் உங்கள் வலையை
gkrishna
18th September 2014, 10:30 AM
கொடுக்காப்புளி வெளிர் பச்சைக் கலர்ல இருக்கும் கொஞ்சம் புதிதாய் வெட்கப் படும் இளம்பெண்ணைப் போல ஆங்காங்கே சிவந்திருக்கும் (சிவப்பு வித் பச்சை பேக் க்ரெளண்ட்).. உள்ளே முத்துக்கள் கருப்பாய் இருக்கும் இது லேசாய்த் துவர்க்கும் இல்லியோ (பீன்ஸ் ஃபேமிலிக்கு தூரத்து உறவு இல்லியோ..
//I will share my memories. In fact, my wife wants me to write a book about my life ! // கண்டிப்பா எழுதுங்க ராஜ் ராஜ் சார்.. அல்லது ஒரு நாவல் மாதிரி கூட நீங்கள் எழுதலாம்..
நடுவில் யார் இது சிந்து ஓஹோ நம்ம சி கே சார் ஆ வாங்க வாங்க
'பப்பாளி' கொடுக்காபுளி க்கு ஒப்புமை ஆஹா
gkrishna
18th September 2014, 10:31 AM
சி கே
கொடுக்காபுளி காய் துவர்க்கும் ஆனால் பழம் சூப்பர்
rajraj
18th September 2014, 10:46 AM
'.சோறுடைத்து சோழ நாடு ' பகுதியை சேர்ந்தவர் . சொல் வளத்திற்கும் ,எழுது நடைக்கும் கேட்கவா வேணும்..
Thank you! I don't think I have the fluency in Tamil any more. I started writing when I was in high school. My first story (kuttikkadhai) was published by Kalkandu when I was in the final year of high school in 1954. I continued writing in college joining some class mates who wrote. Our goal was to become another Thi. Janakiraman. :lol: It never happened! :(
Yes. Kapisthalam is near Papanasam.
Richardsof
18th September 2014, 11:01 AM
கிருஷ்ணா சார்
''கை '' பாடல்கள் மிகவும் நன்றாக இருந்தது .
அந்த நடிகை பற்றி ஒரு சிறு தகவல் - ஆறெழுத்து நடிகை . ''அ ''வில் துவங்கும் பெயர்.
கண்டு பிடிப்பீர்கள் என்று நம்புகிறேன் .
சின்ன கண்ணன் சார்
ராஜகுமாரி - நீங்களும் ரசிக்கலாம் . கண்களுக்காக . எல்லா அம்சமும் நிறைந்த நிறைகுடம் .
ருக்குமணியே பர பர .... ஒளிவிளக்கு பாடல் நினைவிற்கு வந்தது .
gkrishna
18th September 2014, 11:02 AM
Thank you! I don't think I have the fluency in Tamil any more. I started writing when I was in high school. My first story (kuttikkadhai) was published by Kalkandu when I was in the final year of high school in 1954. I continued writing in college joining some class mates who wrote. Our goal was to become another Thi. Janakiraman. :lol: It never happened! :(
Yes. Kapisthalam is near Papanasam.
கல்கண்டு மிக பிரபலமான பத்திரிகை அதில் கதை அடித்தவர் :) மன்னிக்கவும் எழுதியவர் இன்று எங்களுக்கு எல்லாம் நண்பர் என்றால் நாங்கள் செய்த புண்ணியம் தான் என்னே என்னே !
1954 களில் ஹை ஸ்கூல் final என்று சொல்லி இருக்கிறீர்கள். அப்படியானால் உங்களிடம் நிறைய வாடாமலர்கள் அதாவது பசுமையான நினைவுகள் நிறைந்து இருக்கும். பகிர்ந்து கொள்ளுங்கள் உங்கள் மலரும் நினைவுகளை. காத்து இருக்கிறோம் அருந்தி மகிழ
gkrishna
18th September 2014, 11:04 AM
கிருஷ்ணா சார்
''கை '' பாடல்கள் மிகவும் நன்றாக இருந்தது .
அந்த நடிகை பற்றி ஒரு சிறு தகவல் - ஆறெழுத்து நடிகை . ''அ ''வில் துவங்கும் பெயர்.
கண்டு பிடிப்பீர்கள் என்று நம்புகிறேன் .
.
அஞ்சலி தேவி
gkrishna
18th September 2014, 11:06 AM
சின்ன கண்ணன் சார்
ராஜகுமாரி - நீங்களும் ரசிக்கலாம் . கண்களுக்காக . எல்லா அம்சமும் நிறைந்த நிறைகுடம் .
சி கே சார்
கண்ணுக்கு மட்டும் தான் :)
Richardsof
18th September 2014, 11:10 AM
ONE MORE CLUE- A....G....M....T....:happydance::happydance:
rajraj
18th September 2014, 11:13 AM
ONE MORE CLUE- A....G....M....T....:happydance::happydance:
angamuththu ! :)
gkrishna
18th September 2014, 11:15 AM
வெங்கிராம் சார்
ஏற்கனவே மன்மத லீலை படத்தை துவை துவை னு துவைச்சு முதல் பாகத்தில் காய போட்டோம் . நீங்கள் மீண்டும் நினைவு கூர்ந்து உள்ளீர்கள். மிக்க நன்றி .
ஒரு சிறு பிளாஷ் back
ஏற்கனேவே முறையற்ற உறுவுகளின் ராக ஆலாபனையாக வெளி வந்த அபூர்வ ராகங்கள் அதிர்ச்சியில் இருந்த மீள முடியாத தமிழ் ரசிகர்கள் இந்த மன்மத லீலையை பாலசந்தர் இன் அதிர்ச்சியூட்டிய அடுத்த ஏவுகனையாகவே பார்த்தார்கள் என்றால் அது மிகை ஆகாது
A movie ahead of its time என்று இப்போது வர்ணிக்கப்படும் இந்தப் படத்தின் துணிகர திரைக்கதை 2000த்தில்தான் இங்கே சாத்தியமானது. பல பெண்களோடு தொடர்பு வைத்துக்கொள்ளும்--அல்லது விரும்பும்--ஆண்களின் இயல்பான குணத்தை பாலச்சந்தர் சமரசங்கள் செய்துகொள்ளாது point blank ஆக சொல்லியிருந்தது அப்போது--ஏன் இப்போதுகூட--ஒரு வியப்பான பிரமிப்பே. மேலும் ஒற்றைக் கோடு போன்று வரைந்த மீசையுடன் ஒய்யாரமாக வலம் வந்துகொண்டிருந்த தமிழ்க் கதாநாயகர்களின் அடையாளத்தை உடைத்து கதாநாயகனை அடர்த்தியான மீசையுடன் அறிமுகம் செய்து ஒரு புதிய மரபை உண்டாக்கினார். கமலஹாசனின் அந்த நவீன தோற்றம் அன்றைய இளைஞர்களின் மத்தியில் மிகப் பிரபலமானதும் விவாதப் பொருளானதும் இப்போது வேடிக்கையாக இருக்கிறது. கதாநாயகனின் மீசையின் அகலம் ஒரு புதிய பாணியை துவக்கியது இதன் பின்னே தொடர்கதையானது. கமல் வெறும் shorts உடன் மேல் ஆடை இல்லாமல் வரும் காட்சிகளில் எல்லாம் பெண்கள் மத்தியில் பின் ட்ராப் silence நிலவும் துணிச்சலான இந்தக் கதைக்குப் பொருத்தமான ஆழமான பாடல்களை எம் எஸ் வி அனாசயமாக அளித்திருந்தார். MSV ஒரு சகாப்தம்
தர்மவதி மதுவந்தி ராகத்தின் அடிபடியில் அமைந்த ஹலோ மை டியர் ராங் நம்பர் என்ற பாடல் இளைஞர்களிடத்தில் அமோகமாக வரவேற்பைப் பெற்றாலும் அவ்வளாக பெண்களிடத்தில் பாராட்டு பெறாததின் காரணம் அதன் கதையமைப்பே என்று தோன்றுகிறது. (இதில் நடித்த ஒய் விஜயாவை இன்றுவரை தமிழ் சகோதரிகள் மன்னிக்கவில்லை.அவரை விஜயா என்று அழைத்தவர்கள் விட ராங் நம்பர் என்று அழைத்தவர்களே அதிகம் ) நகைச்சுவை கலந்த காமம் இதன் கருப்பொருளாக இருந்தாலும் எம் எஸ் வி தேவையில்லாத விரக தாப ஓசைகளை அறிமுகம் செய்யாமல் முடிந்தவரை நளினமாகவே இந்தப் பாடலை அமைத்திருந்தார்.
மன்மத லீலை மயக்குது ஆளை என்ற பாடல் வழக்கமான எம் எஸ் வி- எஸ் பி பி கானம். துடிப்பான இசையுடன் கூடிய ஜாலியான சூழலுக்கானது.
ஜேசுதாஸ் பாடிய மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் காலத்தை கடந்த ஒரு கானம். இப்பாடலில் கண்ணதாசனின் சிறப்பான கவிதையை வியாக்காதவர்கள் வெகு குறைவு. இதில் வரும் கணவனின் துணையோடுதானே காமனை வென்றாக வேண்டும் என்ற வரியை எல்லோரும் வெகுவாக சிலாகித்துப் பேசுவார்கள் . கணவனுக்குப் பதில் மனைவி என்று மாற்றிவிட்டால் பெண்ணுக்கு புத்தி சொல்லும் ஆணுக்கும் இது பொருந்தும். இன்றைக்கும் ஒரு பல ஆண்கள் இந்தப் பாடலின் பல்லவியை ஒரு பழமொழி போல குறிப்பிடுவது இதன் ஹிமாலய வெற்றியின் நீட்சி.
அவ்வளவாக பேசப்படாத ரஞ்சனி ராகத்தின் அடிப்படையில் அமைந்த 'நாதமென்னும் கோவிலிலே ஞான விளக்கேற்றி வைத்தேன்' பாடலை தற்போது கேட்டபோது எப்படி இத்தனை நாள் இந்தப் பாடலை விட்டுவைத்திருந்தோம் என்று கேள்வி எல்லோருக்கும் எழும். 70களில் எம் எஸ் வி கர்நாடக ராகங்கள் மெல்லிசையுடன் பலமாகக் கலந்த பல பாடல்களை வாணி ஜெயராமுக்கு கொடுத்திருக்கிறார். சுசீலாவின் நீட்சி என்ற சொல்ல முடியாவிட்டாலும் வாணி ஜெயராமின் குரல் ஒரு அற்புதம் . அதற்குக் காரணம் அவர் பாடிய பல தேன் சொட்டும் பாடல்களே.
படத்தில் பாலா சுசீலா ஜோடி குரலில் ' சுகம் தானா சொல்லு கண்ணே ' ஒரு சுகமான பாடல் .பாடலுக்கு நடுவே பிளாஸ்டிக் லெட்டர்ஸ் எல்லாம் வைத்து பாலச்சந்தர் ஆடும் கண்ணாமுச்சி அந்நாட்களில் மிக பெரிய புதுமை .பாடல் முடிந்த உடன் ஹலம் கண் விழித்து பார்ப்பது ,உடலில் துணி எதுவும் இல்லாமல் இருப்பது ,கமல் 'கை கொட்டி சிரிப்பார்கள் ' என்று கேலி செய்து பாடுவது ,இறுதியில் கமல் தாடையை சொரிந்து கொண்டே
'அப்பரும் எப்ப சந்திக்கலாம் ' , ஹலம் பதில் 'கோர்ட் இல் '
வாத்சாயனாவின் மறு பிறப்பு பாலசந்தர்
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcRXSDNcxrTDR1SqykhXe1vHXCCbOKYad YOZR0naRm62ddVP5xeYhttps://i.ytimg.com/vi/gbu0aLjoLOc/hqdefault.jpghttps://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcQ1xWogk7gsqL0cyIHTcpDXV_7YlqAr8 AVxYKJUGAtOrqucIDnI
gkrishna
18th September 2014, 11:16 AM
angamuththu ! :)
அருமை எஸ்வி, ராஜ்ராஜ் சார்
இருவருமே கெட்டிக்காரர்கள்
Richardsof
18th September 2014, 11:19 AM
angamuththu ! :)
YOU ARE CORRECT SIR- ACTRESS ANGAMUTHU - 1935 ]PICTURE STILL]
http://i58.tinypic.com/mmbcia.jpg
Richardsof
18th September 2014, 11:22 AM
A SMALL COMPLIMENT TO RAJRAJ SIR & KRISHNA SIR
http://i60.tinypic.com/29401lj.jpg
rajraj
18th September 2014, 11:27 AM
கல்கண்டு மிக பிரபலமான பத்திரிகை அதில் கதை அடித்தவர் :) மன்னிக்கவும் எழுதியவர்
I did not think my story would be published after the teasing I got from my classmates. Tamilvanan announced in Kalkandu that there would be a reward (sanmaanam) of three rupees for published stories (kuttikkadhai). That was the motivator. Those days 'sweet,kaaram,coffee' cost three and a half annas. A floor ticket (tharai ticket) was also three and a half annas and a bench ticket was five annas.
I sent the story to KalkaNdu and told my friends. They burst into laughter. I had no clue as to why they were laughing. Seeing my puzzled look one of them explained that people who wrote for kalkaNdu and kumudham were probably twice my age or more. I was 14 (don't mind revealing my age :lol: ). It was a blow. Three rupees for a high school kid was lot of money those days.
But, to my surprise the story was in the magazine a few weeks later. The sad part is that I never got the three rupees.
May be, I should stop by kalkaNdu office next time I visit India and demand three rupees with interest for 60 years! :lol:
madhu
18th September 2014, 11:37 AM
vathiyarayya..
en peril oru power of attorney koduthidungo. kalkandu office-ukku daily poi natchathireyan maadhiri arichu eduthu vidugiren..
Vettaru papanasathukku vadakka ? therka ? ( kapisthalam vadakkil..thirukkaugavur therkil )
madhu
18th September 2014, 11:40 AM
பாருங்க ரகசியமாய் என்று சொன்னவுடன் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது . 'ராத்திரிக்கு ராத்திரி என் நினைப்பு வர வேண்டும் .ராஜன் மட்டும் ராணியை தான் ரகசியமாய் தொட வேண்டும் ' சுசீலா பாடல் பிரமீளா பாடுவது போலவே பாடி இருப்பார் மனிதரில் மாணிக்கம் திரை படத்தில் .
க்ருஷ்ணா ஜி... ராத்திரிக்கு ராத்திரி பாட்டு எல்.ஆர்.ஈஸ்வரி குரல். ஏற்கனவே இங்கே போஸ்ட் ஆயிடுச்சுன்னு ஞாபகம். ( அகலமான கலர் கலர் பட்டைக்கு காரணம் கூட நண்பரால் விளக்கப்பட்டது )
http://youtu.be/tAmc8Z_XeiA
rajraj
18th September 2014, 11:41 AM
Vettaru papanasathukku vadakka ? therka ? ( kapisthalam vadakkil..thirukkaugavur therkil )
thirukkarugaavur (thirukkaLaavur) vazhiyaathaan enga oorukku pogaNum. appo therkkuthaane !
power of attorney koduthaa pochchu! aanaal kaasu varaadhu! :)
madhu
18th September 2014, 11:47 AM
என்னதான் வாத்தியாரையா வந்திருக்கார் என்றாலும் அங்கமுத்து, டி.ஆர்.ராஜகுமாரி பற்றியே பேசிக்கிட்டு இருப்பது சுதந்திரப் போராட்ட காலத்துக்கே போயிட்ட மாதிரி ஆயிடிச்சு.
அதனால்தான் இந்தப் படங்கள்
http://i1.ytimg.com/vi/8nNQI4Fr65k/0.jpg
அப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டார்
http://sangam.org/wp-content/uploads/2013/08/Kathiresan-Thavamani-Devi-in-1992.jpg
தவமணி தேவி ( யாருன்னு வாசு ஜி, கிருஷ்ணா ஜி, கோபால் ஜி எல்லாரும் சொல்லுவாங்க )
சிக்காவின் கதறலில் ஒரு கழிலடி நெடுஞ்சீர் மாணவப்பா ( ஏன்.. ஆசிரியப்பாதான் இருக்கணுமா ? ) வந்து விழப்போகுது.
gkrishna
18th September 2014, 11:48 AM
பாடல் சுசீலா அல்ல ஈஸ்வரி என்ற திருத்ததிற்கும்,ஏற்கனவே போடப்பட்டது என்ற தகவலுக்கும் நன்றி மது சார் . நீங்கள் நச்சதேரேயன் என்றால் கோபகார கௌசிக மாமுனி யார் ?,உண்மை பேசும் ஹரிச்சந்திரன் நான்
rajraj sir
ஒரு அணா என்பது ஆறு பைசா என்று நினைவு . அதில் இருந்து தான் 50 பைசா நாணயத்திற்கு எட்டு அணா என்று சொல்வார்கள் என்றும் நினைவு
3 1/2 அணாவிற்கு இனிப்பு காரம் காபி மூன்றும் கிடைத்து உள்ளது .அதே நேரத்தில் தரை டிக்கெட் விலையும் அவ்வளவு தான்.
எவ்வளவு பெரிய தகவல் இந்த திரிக்கு இன்று கிடைத்து உள்ளது . 4 அணா அல்லது 31 பைசாகளில் தரை டிக்கெட் பார்த்த அனுபவம் உண்டு.
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் சோழ நாடு ஈன்று எடுத்த முத்தமிழ் வேந்தர் :) . அவர்களே
நீங்கள் எங்களை எல்லாம் வாழ்த்துங்கள்.
gkrishna
18th September 2014, 11:49 AM
என்னதான் வாத்தியாரையா வந்திருக்கார் என்றாலும் அங்கமுத்து, டி.ஆர்.ராஜகுமாரி பற்றியே பேசிக்கிட்டு இருப்பது சுதந்திரப் போராட்ட காலத்துக்கே போயிட்ட மாதிரி ஆயிடிச்சு.
அதனால்தான் இந்தப் படங்கள்
http://i1.ytimg.com/vi/8nNQI4Fr65k/0.jpg
அப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டார்
தவமணி தேவி ( யாருன்னு வாசு ஜி, கிருஷ்ணா ஜி, கோபால் ஜி எல்லாரும் சொல்லுவாங்க )
சிக்காவின் கதறலில் ஒரு கழிலடி நெடுஞ்சீர் மாணவப்பா ( ஏன்.. ஆசிரியப்பாதான் இருக்கணுமா ? ) வந்து விழப்போகுது.
அய்யா இவங்க அந்நாளைய கவுச்சி ராணி ஆச்சே
gkrishna
18th September 2014, 11:53 AM
தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சி நடிகை-தவமணி தேவி
http://4.bp.blogspot.com/-tkTmsVMOzZY/TqPKSt2t1pI/AAAAAAAAACA/kf34tjwkKPY/s320/Vanamohini_jpg_643095e.jpg
சிங்களத்துக் குயில் என்று அழைக்கப் பட்ட யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைச் சேர்ந்த தவமணி தேவியின் தென்னிந்தியத் திரைப் பிரவேசம் உண்மையில் தென்னிந்தியத் திரைப்படத்துறையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. 1930களிலே அதாவது ஆங்கிலேயரிடமிருந்து இலங்கை, இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே தமிழ்த் திரையுலகில் புகுந்து கவர்ச்சி காட்டி நடித்து பலரது புருவங்களை உயர வைத்தவர். ஆடல், பாடல், நடிப்பு ஆகியவற்றுடன் கவர்ச்சியையும் சேர்த்துக் கொடுத்தவர். இன்னும் சொல்லப் போனால் தமிழ்த் திரையுலகிற்கு முதன் முதலில் கவர்ச்சியை அறிமுகப் படுத்தியவர் இவராகத்தான் இருக்கவேண்டும். இவரின் வரவிற்குப் பின்னரே பின்னாளில் திரையுலகில் ஒளிவீசிய சிலரது திரையுலகப் பிரவேசம் நிகழ்ந்திருக்கிறது. ரி.ஆர். ராஜகுமாரி, மாதுரிதேவி, அஞ்சலி தேவி... எனப் பலரை இந்த வரிசையில் சேர்க்கலாம்.
யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தையார் இலங்கையில் பாரிஸ்ரர் தொழிலில் முன்னணியில் திகழ்ந்தவர். தவமணி தேவியின் திறமையை அவதானித்த பெற்றோர்கள் இவரை பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் படிப்பதற்காக ஊக்குவித்தார்கள்.
உடுத்தியிருக்கும் பாவாடை நிலத்தைக் கூட்ட, மண் பார்த்துப் பெண்கள் நடந்த காலம் அது. அந்தக் கால கட்டத்திலேயே காற் சட்டையுடன் துணிச்சலாக நடிக்க வந்த பெண்மணி. அழகான குரலும், பார்த்தவுடன் கவரும் தோற்றமும், பழகும் விதமும், கதைக்கும் தன்மையும் தவமணி தேவிக்கு திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. ரி.ஆர்.சுந்தரம் மொடேர்ன் தியேட்டர்ஸ் என்ற சினிமா கலையகத்தை உருவாக்கி அந்த நிறுவனத்துக்கான முதல் திரைப்படத்தை தயாரிக்கும் வேளையில் அதில் நடிக்கும் வாய்ப்பு தவமணி தேவிக்குக் கிடைத்தது.
சதிஅகல்யா என்ற அந்தத் திரைப்படத்தில் அவருக்கு அகலிகை வேடம். இந்தத் திரைப்படத்தை தயாரிக்கும் வேளையில் ரி.ஆர்.சுந்தரம் பத்திரிகையாளர்களை அழைத்து தனது படத்தின் கதாநாயகியான தவமணிதேவியை அறிமுகப் படுத்தினார். பத்திரிகையில் பிரசுரிப்பதற்காக ரி.ஆர்.சுந்தரம் கொடுத்த தவமணியின் புகைப்படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் ஆச்சரியப் பட்டுப் போனார்கள். நீச்சல் உடையில் ஒய்யாரமாக சாய்ந்திருந்த தவமணி தேவியின் அந்தப் புகைப்படம் அவர்களது புருவங்களை உயர வைத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லைத்தான் ஏனெனில் பெண்கள் இழுத்துப் போர்த்தி சேலை உடுத்தும் காலம் அதுவாக இருந்தது. அந்த படம் எனக்கு கிடைக்க வில்லை ஆகவெ அதனை பதிவிடவில்லை மன்னிக்கவும் :-) :-) :-)
தவமணி தேவியின் அந்தப் புகைப்படம் பத்திரிகைகளில் பிரசுரமானபோது அது பலரது பார்வையைக் கவர்ந்தது. வசிட்டரின் மனைவியான அகலிகையாக நடிக்கப் போகும் பெண் இப்படி உடுத்தலாமா? என்பது போன்று பல விதமான விமர்சனங்களும் கூடவே எழுந்தன. 1930களில் ஒரு ஆசியப் பெண்ணை நீச்சல் உடையில் பத்திரிகைகளில் காண்பது அதுவே முதல் தடவையாக இருந்திருக்கும். இது போதாதா தவமணி தேவி பிரபல்யமாவதற்கு?
சதிஅகல்யா படப்பிடிப்பு தொடங்க முன்னரே தவமணி தேவி மிகப் பிரபல்யமாகி விட்டிருந்தார். ஆகவே 1937இல் வெளியான மொடேர்ன் தியேட்டர்ஸின் சதிஅகல்யா பெரு வெற்றி பெற்றதுக்கு தனியாகக் காரணம் எதுவும் சொல்லத் தேவையில்லை. சதி அகல்யா வெற்றிக்குப் பின் தவமணி தேவி நடித்த மற்றுமொரு வெற்றித் திரைப்படம் வனமோகினி. இந்தத் திரைப்படம் 1940 இல் வெளிவந்தது. கொலிவூட்டில் டோர்தி லமோர் நடித்துப் பிரபல்யமான யங்கிள் என்ற திரைப்படத்தினையே தமிழில் வனமோகினி என்று எடுத்தார்கள். இதில் வனமோகினியாக ஆங்கிலத்தில் டோர்தி லமோர் உடுத்த கவாய் நாட்டுப் பாணியிலான உடையை இடுப்பில் கட்டி இவர் நடித்திருந்தார். இவர் தனது நடிப்போடு காற்றில் ஆடும் சிறு உடையின் மத்தியில் தனது உடல் அழகையும் காட்டிக் கொண்டது அன்றைய கால கட்டத்தில் திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்திருக்கும். இவரது இந்தத் திரைப்படம் பரபரப்பாகப் பேசப்பட்டது மட்டுமல்லாமல் பெரு வெற்றியையும் ஈட்டிக் கொண்டது. அறுபது வருடங்கள் கழிந்தாலும் தென்னகத் திரையுலகில் இன்னமும் வனமோகினி பேசப்படுகிறதென்றால் அன்றைய காலகட்டத்தில் வனமோகினி எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்?
1941இல் இவர் கதாநாயகியாக நடித்து வெளியான மற்றுமொரு திரைப்படம் வேடாவதி அல்லது சீதாஜனனம். இதில் இவர் சீதையாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தை திரையுலகம் தனது முக்கியமான குறிப்பில் இட்டிருக்கின்றது. காரணம் என்னவெனில் அன்று திரைப்படங்களில் அதிக வாய்ப்புகள் கிடைக்காத எம்.ஜி.ஆர். இதில் இந்திரஜித்தாக சிறு வேடம் ஏற்று நடித்திருந்தார். ஆக எம்.ஜி.ஆர். படப்பட்டியலில் வேடாவதியும் இணைந்து கொண்டது.
தவமணி தேவி நடித்த மற்றுமொரு வெற்றித் திரைப்படம் வித்யாபதி. யூபிட்டர் பிக்ஸர்ஸ் சார்பில் ஏ.ரி.கிருஸ்ணசாமி எழுதி இயக்கியிருந்தார். ஆண்களைக் கவருவதற்காகவே இந்தத் திரைப்படம் தயாரிக்கப் பட்டதாக அன்று இந்தத் திரைப்படத்தைப் பற்றிய விமர்சனங்கள் எழுந்தன. இந்தத் திரைப்படத்தில் தேவதாசி மோகனாம்பாள் என்ற பாத்திரத்தில் தவமணி தேவி நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் மேற்கத்திய பாணியிலான இவரது நடனங்களும் பாடல்களும் இடம் பெற்றிருந்தன. இப்பொழுது வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களின் ஆங்கிலத் தலைப்புகளுக்காவும் பாடல்களில் உள்ள ஆங்கிலச் சொற்களுக்காவும் பட்டிமன்றங்களும் விவாதங்களும் வைத்துக் கொள்கிறோம். தமிழ் இனி செத்துவிடும் என்று தலையில் வேறு அடித்துக் கொள்கிறோம். 1946இல் வெளிவந்தை வித்யாபதி படத்தில் தவமணி தேவி பாடி ஆடிய பாடல் இப்படி வருகிறது,
அதோ இரண்டு Black eyes!
என்னைப் பார்த்து Once, twice!
கண்ணைச் சிமிட்டி Dolly!
கை கட்டி Calls me!
Is it true your eyes are blue?
I'll fall in love with you!
I will dance for you!
இந்தப் பாடலில் வரும் ஆங்கில வரிகளை தவமணி தேவியே எழுதியதாக பின்னாளில் இயக்குனர் ஏ.ரி.கிருஸ்ணசாமி அவர்கள் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கின்றார்.
இவர் நடித்து பெரும் புகழையும் வெற்றியையும் ஈட்டிக் கொடுத்த அடுத்த திரைப்படம் 1948இல் வெளியான ராஜகுமாரி. இந்தத் திரைப்படத்தினை ஏ.எஸ்.ஏ.சாமி எழுதி இயக்கியிருந்தார். இலங்கையின் தலைநகர் கொழும்பில்தான் ஏ.எஸ்.ஏ.சாமி தனது படிப்பினை முடித்திருந்தார். ஏ.எஸ்.ஏ.சாமி அவர்கள் பின்னாளில் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டியதொன்று. ராஜகுமாரி திரைப்படத்தையும் யூபிட்டர் நிறுவனமே தயாரித்திருந்தது. இந்த நிறுவனத்துக்கு ஒரு பெருமையிருக்கிறது. பின்னாளில் தமிழகத்தை ஒன்றன் பின் ஒன்றாக ஆண்ட மூன்று தமிழக முதலமைச்சர்களின் திரையுலகப் பிரவேசம் இந்த நிறுவனத்தினூடாகத்தான் நிகழ்ந்திருக்கின்றது. 1949இல் வெளியான யூபிட்டர் நிறுவனத்தின் வேலைக்காரி திரைப்படத்திற்கு கதை எழுதியவர் அறிஞர் அண்ணா ஆவார். யூபிட்டரின் ராஜகுமாரி திரைப்படத்திற்கு கலைஞர் கருணாநிதி கதை வசனம் எழுதியிருந்தார். அதில் முதன் முதலாக எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார்.
தவமணி தேவிக்கு ராஜகுமாரி திரைப்படத்தில் நாயகனை மயக்கும் ராணி வேடம். இவரின் மெய்ப் பாதுகாவலராக சான்டோ எம்.எம்.சின்னப்பாதேவர் நடித்திருந்தார். இந்தத் திரைப்படமே இவரின் திரையுலகப் பிரவேசமாக அமைந்தது.
ராஜகுமாரி திரைப்படத்தில் தவமணி தேவி உடுத்தியிருந்த ஆடை பெரும் கவர்ச்சியாக இருந்ததால் படப்படிப்பு நடந்து கொண்டிருந்த இடத்திலேயே இவருக்கும் இயக்குனர் ஏ.எஸ்.ஏ.சாமிக்கும் இடையில் பெரும் சர்ச்சைகள் நடந்திருக்கின்றன. அந்தத் திரைப்படத்தில் இடம் பெற்ற தவமணி தேவியின் சில காட்சிகள் தணிக்கைக் குழுவின் கத்தரிக்கு இரையானது. ராஜகுமாரி திரைப்படம் பெரும் வெற்றியை ஈட்டிய போது அதில் நாயகனாக நடித்த எம்.ஜி.ஆரின் புகழை மேலும் உச்சிக்குக் கொண்டு போனது. அதன் கதை வசன கர்த்தாவான கலைஞர் மு.கருணாநிதிக்கு தமிழ்த் திரையுலகம் சிறந்த வசன கர்த்தா என்னும் ஒரு அங்கீகாரத்தையும் தந்தது. ஆனால் இந்தத் திரைப்படத்தின் வெற்றி தவமணி தேவிக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. இந்தத் திரைப்படத்தின் பின்னர் அவரது திரையுலக வரலாறு இறங்கு முகமாகவே இருந்திருக்கின்றது. இந்த நிலையில் இவரில் பெரும் மாற்றங்கள் தென்படத் தொடங்கியது.ராஜகுமாரி திரைப்படத்தின் குறுந்தகடு இப்போதும் கிடைக்கின்றது விருப்பமுள்ளவர்கள் வாங்கிப் பார்க்கலாம் :-)
இந்த நிலையில் தவமணி தேவி 1962இல் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கோடிலிங்க சாஸ்திரியை காதலித்து மணந்து கொண்டார். திரைப்படத் துறையை விட்டு முற்றாக விலகி ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். இராமேஸ்வரத்தில் தனது இறுதி வாழ்க்கையைக் கழித்த தவமணி தேவி அவர்கள் தனது 76வது வயதில் 10.02.2001இல் காலமானார்.
1990களில் அதாவது திரைப்படத்துறையை விட்டு தவமணிதேவி அவர்கள் வெளியேறி பல ஆண்டுகளுக்குப் பின் தென்னிந்தியாவில் இருந்து வெளிவரும் ஒரு பிரபல வார இதழ் தவமணி தேவியைப் பற்றி இப்படி எழுதியிருந்தது.
´சுதந்திரத்திற்கு முன் தமிழ்த் திரைப்படவுலகில் புதிதான பூங்காற்று ஈழத்திலிருந்து ஜிவ்வென்று பிரவேசித்தது. தமிழ்ப்பட இரசிகர்கள் அந்த புதுமுகத்தைக் கண்டு ஆனந்தித்தனர், அதிசயித்தனர், பரவசப்பட்டுப் போயினர். படத்தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களுக்குக் கதாநாயகியாக ஒப்பந்தச் செய்ய ஆவலாக இருந்தனர். ´
1937இல் தனது 15வது வயதில் திரைப்படத்துறையில் நுழைந்த தவமணி தேவியின் படங்கள் இன்றும் பேசப்படுகின்றதென்றால் அவர் எந்தளவு பதிவுகளை தமிழ்த் திரையுலகில் விட்டுச் சென்றிருக்கின்றார் என்பதை உணர முடிகின்றது.
Thanks to Raman sir
gkrishna
18th September 2014, 11:56 AM
dear madhu sir
இந்த பாடல் இங்கு இன்னும் போடப்படவில்லை தானே ?videio irukkaa ?
அதோ இரண்டு Black eyes!
என்னைப் பார்த்து Once, twice!
கண்ணைச் சிமிட்டி Dolly!
கை கட்டி Calls me!
Is it true your eyes are blue?
I'll fall in love with you!
I will dance for you!
rajraj
18th September 2014, 12:05 PM
சோழ நாடு ஈன்று எடுத்த முத்தமிழ் வேந்தர் :) . அவர்களே
நீங்கள் எங்களை எல்லாம் வாழ்த்துங்கள்.
I don't know how to act (naatakam) ! No 'muththamizh' ! :lol: I have always been a well wisher for youngsters !
vaazhga vaLamudan. That was what MGR wrote when he autographed a book for me ! :)
gkrishna
18th September 2014, 12:11 PM
பாருங்கய்யா
மக்கள் திலகம் இவருக்கு கை எழுத்து போட்டு கொடுத்து இருக்கார்
பெரிய ஆளுங்க இவரு . ஏகப்பட்ட சரக்கு வைச்சு இருக்காரு .கொஞ்ச கொஞ்சமா (நான் படத்தில் எஸ் எ அசோகன் சொல்வது ) முடிச்சுகள் அவுருது :)
madhu
18th September 2014, 12:15 PM
dear madhu sir
இந்த பாடல் இங்கு இன்னும் போடப்படவில்லை தானே ?videio irukkaa ?
அதோ இரண்டு Black eyes!
என்னைப் பார்த்து Once, twice!
கண்ணைச் சிமிட்டி Dolly!
கை கட்டி Calls me!
Is it true your eyes are blue?
I'll fall in love with you!
I will dance for you!
நான் இப்போதான் கேள்விப்படுகிறேன் கிருஷ்ணா ஜி.. !
madhu
18th September 2014, 12:15 PM
பாருங்கய்யா
மக்கள் திலகம் இவருக்கு கை எழுத்து போட்டு கொடுத்து இருக்கார்
பெரிய ஆளுங்க இவரு . ஏகப்பட்ட சரக்கு வைச்சு இருக்காரு .கொஞ்ச கொஞ்சமா (நான் படத்தில் எஸ் எ அசோகன் சொல்வது ) முடிச்சுகள் அவுருது :)
அவர் கிட்டே வாத்தியார் கையெழுத்து போட்ட புத்தகம் இருக்கலாம்.
என் கிட்டே வாத்தியாரையாவே கையெழுத்து போட்ட புத்தகம் இருக்கே !!
gkrishna
18th September 2014, 12:21 PM
http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/5/55/Ankur_film_poster.gif/220px-Ankur_film_poster.gif
இன்று ஷபனா ஆஸ்மி பிறந்த தினம்
ஷியாம் பெனகலின் ஆங்கூர் இவரது முதல் படம்
வணிக ரீதியான படங்களிலும் நடித்து வெற்றி பெற்றவர்
இன்று ராஜ்ய சபா MP ஆக உள்ளார்
இவர் நடித்த அமர் அக்பர் அந்தோணி மறக்க முடியாத படம்
rajraj
18th September 2014, 12:34 PM
பாருங்கய்யா
மக்கள் திலகம் இவருக்கு கை எழுத்து போட்டு கொடுத்து இருக்கார்
பெரிய ஆளுங்க இவரு . ஏகப்பட்ட சரக்கு வைச்சு இருக்காரு .
sarakku? I am a teetotaller( No alchohol) ::lol:
I met MGR in Washington D.C in 1973 or 74. II think he had just founded the new party. Not sure. He was staaying in a hotel. I called the hotel and asked them to connect mme to his room. To my surprise he picked up the phone. I asked him whether he would have time to let me see him. He asked me to see him the next morning. When I went there I was introduced as a computer engineer by M.S.Udayamurti who was accompanying him. MGR responded saying people like me should be in Tamilnadu (ungaLaippondravargaL thamizhnaattil irukka veNdum). Then I asked him for his autograph in the book " peNNin perumai" by thiru. vi.ka. It was a wedding gift signed by a friend. When he saw the signature he hesitated saying that it had already been signed. I told him that it was the only Tamil book I had. Then he signed it. It was nice of him ! :)
chinnakkannan
18th September 2014, 12:40 PM
அங்க முத்துப் படத்துடனே
...அழகாய்ப் பதிவாய் தவமணியை
இங்கே வந்து இட்டதையே
...என்ன சொல்வேன் என்சொல்வேன் //முட்டிக்கற ஐகான்//
தங்க ராஜ குமாரியென
...தந்தார் நண்பர் என்றாலும்
எந்தன் சிந்தை செல்லுதையா
... எழிலாம் சிருஷ்டி நங்கையிடம்..
(மதுண்ணா நற நற):)
சிருஷ்டி டாங்கே என்று ஒரு ஹீரோயின் மேகா படத்தில்..
டபக்கென வெளிர் மஞ்சள் ஜீராவில் நன்கு ஊறிய குலோப் ஜாமூன் மாதிரி
கன்னங்கள்..பளீர் கண்கள்..சிரிக்கும்போது விழும் கன்னக் குழிகளில் மயங்காதார்
மனம் கூட மயங்கும் என்ற பாடல் நினைவுக்கு வரும்!
மாடர்ன் டிரஸ்ஸீம் பாவாடை சட்டை தாவணி, சேலையும் பொருந்தினாலும்
கொஞ்சம் குண்டு தான்..சில காட்சிகளில் பளீர் சிகப்பு உதட்டுச் சாயம்
எஸ்.வி சார் கிருஷ்ணா சார் போன்றோருக்கு சரோஜாதெவியை நினைவு படுத்தும்..
நடிக்கவும் செய்யுது பொண்ணு..கொஞ்சம் மற்ற ஹீரோக்களுடன்
நடித்தால் மே.பி ஒரு ரவுண்ட் வரலாம்..புத்தம்புது காலை பாட்டு சிச்சுவேஷனை
மாற்றி எடுத்திருந்தது ஏமாற்றமே இருந்தாலும் இந்தப் பாவை இருந்ததால் அது
இட்ஸ் ஓகே என்றாகி விட்டது
( நான் எப்பவுமே அப்டேட் பண்ணிக்குவேனாக்கும்):)
gkrishna
18th September 2014, 12:41 PM
அருமை அருமை ராஜ்ராஜ் சார்
எவ்வளவு பெரிய ஆள் நீங்க
குறைகுடம் கூத்தாடும்.நிறைகுடம் தளும்பாது நீங்க நிறை குடம் .
நடிகர் திலகம் கூட நிறை குடம் படம் நடிச்சவரு .வீ குமார் அவர்களின் இசையில் நல்ல பல பாடல்கள் நிறைந்த படம் அப்பா சிவாஜியை கொண்டு வந்தாச்சு .சினிமா பற்றியும் எழுதியாச்சு
மக்கள் திலகத்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இருந்தால் பதிவிடுங்கள் . எஸ்வி சார் ரொம்ப சந்தோசபடுவார்
சார் சரக்கு னு சொன்னது தகவல்களை அதாவது விஷயங்களை :)
rajraj
18th September 2014, 12:46 PM
மக்கள் திலகத்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இருந்தால் பதிவிடுங்கள் . எஸ்வி சார் ரொம்ப சந்தோசபடுவார்
Those days I used take pictures in slides. My next project is to sort out all the photos I took. When I find my photo with MGR I will definitely post it here. Photography is my hobby ! :)
gkrishna
18th September 2014, 12:47 PM
அங்க முத்துப் படத்துடனே
...அழகாய்ப் பதிவாய் தவமணியை
இங்கே வந்து இட்டதையே
...என்ன சொல்வேன் என்சொல்வேன் //முட்டிக்கற ஐகான்//
தங்க ராஜ குமாரியென
...தந்தார் நண்பர் என்றாலும்
எந்தன் சிந்தை செல்லுதையா
... எழிலாம் சிருஷ்டி நங்கையிடம்..
(மதுண்ணா நற நற):)
சிருஷ்டி டாங்கே என்று ஒரு ஹீரோயின் மேகா படத்தில்..
டபக்கென வெளிர் மஞ்சள் ஜீராவில் நன்கு ஊறிய குலோப் ஜாமூன் மாதிரி
கன்னங்கள்..பளீர் கண்கள்..சிரிக்கும்போது விழும் கன்னக் குழிகளில் மயங்காதார்
மனம் கூட மயங்கும் என்ற பாடல் நினைவுக்கு வரும்!
மாடர்ன் டிரஸ்ஸீம் பாவாடை சட்டை தாவணி, சேலையும் பொருந்தினாலும்
கொஞ்சம் குண்டு தான்..சில காட்சிகளில் பளீர் சிகப்பு உதட்டுச் சாயம்
எஸ்.வி சார் கிருஷ்ணா சார் போன்றோருக்கு சரோஜாதெவியை நினைவு படுத்தும்..
நடிக்கவும் செய்யுது பொண்ணு..கொஞ்சம் மற்ற ஹீரோக்களுடன்
நடித்தால் மே.பி ஒரு ரவுண்ட் வரலாம்..புத்தம்புது காலை பாட்டு சிச்சுவேஷனை
மாற்றி எடுத்திருந்தது ஏமாற்றமே இருந்தாலும் இந்தப் பாவை இருந்ததால் அது
இட்ஸ் ஓகே என்றாகி விட்டது
( நான் எப்பவுமே அப்டேட் பண்ணிக்குவேனாக்கும்):)
மது அண்ணா
இது மாணவபா வா அல்லது கழிசடை பாவா :)
சி கே சார்
சலீம் படத்தின் heroine எப்படி Aksha Pardasany (விஜய் அந்தோனி நடித்து சிவசம்போ பாட்டு கொலை செய்தாரே ) நானும் அப்டேட்
barathi raaja assistant director padathin director
oracle sql ப்ரோக்ராம் அப்டேட் statement சின்டக்ஸ்
gkrishna
18th September 2014, 12:51 PM
Those days I used take pictures in slides. My next project is to sort out all the photos I took. When I find my photo with MGR I will definitely post it here. Photography is my hobby ! :)
ராஜ்ராஜ் சார்
மொத்தமா உங்களை பற்றி சொல்லிருங்க
இவ்வளவு suspense தாங்காது
பேராசிரியர்,கம்ப்யூட்டர் engineer ,கதா ஆசிரியர்,காமிரா மேதை
வேறு என்ன எல்லாம் உண்டு
rajraj
18th September 2014, 01:00 PM
ராஜ்ராஜ் சார்
மொத்தமா உங்களை பற்றி சொல்லிருங்க
இவ்வளவு suspense தாங்காது
பேராசிரியர்,கம்ப்யூட்டர் engineer ,கதா ஆசிரியர்,காமிரா மேதை
வேறு என்ன எல்லாம் உண்டு
ennaip patri naane sollikoLLak koodaadhu. That has always been my policy. But I will add a little. I am a classical music enthusiast. I sing! Well! I try to sing carnatic compositions for fun! :)
Here is a joke:
My sons used to tease me saying 'appa can design a computer. But, he does not know how to use all the software'.
Looks like I am writing my autobiography here. I will take a break for a few days! :lol:
gkrishna
18th September 2014, 01:35 PM
வரே வா
பேஷ் பேஷ் பாடகர் வேறயா (அன்பே வா நாகேஷ் பாணியில்)
தாங்காது ஐயா
விடு ஜுட்
madhu
18th September 2014, 02:09 PM
கிருஷ்ணா ஜி..
இன்னும் வாத்தியாரையா போடும் க்ரீன் டீ பிரம்ம்ம்மாதமாக இருக்கும். :yessir:
gkrishna
18th September 2014, 02:19 PM
கிருஷ்ணா ஜி..
இன்னும் வாத்தியாரையா போடும் க்ரீன் டீ பிரம்ம்ம்மாதமாக இருக்கும். :yessir:
அரே அரே
சமையலும் இவர் தானா .
எத்தனை ரோல் அய்யா இவர் பண்ணுவார்
ஆமாம் உமக்கு எப்படி ஒய் இது எல்லாம் தெரியும்
எங்கேயோ இடிக்குதே
எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது வாணி பாட்டு தானே :mrgreen:
அவன் தான் மனிதன்
நடிகர் திலகம் கலைச்செல்வி பேபி சுமதி டான்ஸ் எல்லாம் சூப்பர் ஆ இருக்கும்
chinnakkannan
18th September 2014, 02:33 PM
என்னதான் இருந்தாலும் ஐ மிஸ் வாசு சார்..அவர் இருந்திருந்தார்னா சிருஷ்டி டாங்கே யோட அந்தக்கால ஃபோட்டோவும் இந்தக்கால ஃபோட்டோவும் போட்டிருப்பார்..ம்ம் :)
gkrishna
18th September 2014, 02:48 PM
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_140815142057000000.jpghttps://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSLr_llKJM-etP6VeKHs3ksYFSCeWa12FmCruUfsMNFtv9tzsgdhttp://images.memsaab.com/files/imagecache/node-gallery-display-750/files/2013/147236/aksha-cute-look-photo-still-rye-rye-platinum-disc-function.jpg
கண்ணா
இரண்டு குழியும் ஒண்ணா
சின்ன (கண்)ணா குழியை கவனியுங்க
மூணாவது யாரு தெரியுதா
madhu
18th September 2014, 02:51 PM
ஆமாம் உமக்கு எப்படி ஒய் இது எல்லாம் தெரியும்
சென்னையில் அவர் வீடு நம்ம வீட்டுப் பக்கம்தானே !
gkrishna
18th September 2014, 02:59 PM
மாம்பலமா ? நங்கனல்லுரா?
உங்க ஆத்தில் இருந்து கூப்பிடு தூரம் தானா ?
gkrishna
18th September 2014, 03:02 PM
இது அரைகுறை மயக்கமல்ல.. ஆனந்த மயக்கம்..
திருவிழாக் காலமல்ல.. மங்கையின் திருமணக்கோலம்
மனதிற்குள் மழைபொழியும்.. கனவுகள் ஆயிரம் தோன்றும்
பருவத்தின் வாசல்தனிலே தேர்வுகள் நடத்தல் போல
உள்ளத்துள் மின்சாரம் அங்கே உற்பத்தியாகும் என்றே
உணர்ந்தவர் சொல்வதுண்டு!. உண்மையதிலே உண்டு!
தன்னிலை மறக்கும் பெண்மை வெட்கத்தில் தலைகவிழ
அந்நிலை என்னென்று கேட்டால் எப்படிச் சொல்லும்?
பெண்மையின் பூரணமே அந்த நாணத்தில் நலம்பாடும்போது
தோன்றும் நயனங்கள் தானே அப்பெண்மையைத் தாலாட்டச்
சொல்லும்? எழுதப்படிக்கத் தெரியாதபோதும்கூட அறிகின்ற
கலைதனில் ஒன்று! மலருக்குள் தேனெடுக்கச் செல்லும்
வண்டின் தேவையை.. மலரா அறியும்?
அறிந்தா இதழ் திறந்து வைக்கும்?
தோன்றிய உயிரனங்கள் அணைத்துகொள்ளும்
தோன்றலின் ரகசியம் தானே!
ஆயினும் இங்கே மனுடன் அனுதினம் தேடும் தெய்வீக ராகம்!
அன்பே.. அன்பே.. பெண்மையும் சொல்லும்
பதில் .. அத்தான்.. அத்தான்..
பாசமலரில் விளைந்த பாட்டு மலரிது..
கற்பனைச் சிறகடித்து கண்ணதாசன் எழுதிய பாட்டு..
பி.சுசீலா குரலால் இனிக்கும் பாடு!
விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் மயங்கலாம் கேட்டு!
மயங்குகிறாள் ஒரு மாது!!
http://www.youtube.com/watch?v=AK7qnBt_gKk
ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம் ஹ்ம்
ஹ்ம்ஹ்ம்ஹ்ம் ஹ்ம்ஹ்ம்ம்
மயங்குகிறாள் ஒரு மாது தன்
மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
திருவாய் மொழியாலே திருவாய் மொழியாலே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?
திருவாய் மொழியாலே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?
ஆஆஆஆஆஆஆஆ
மயங்குகிறாள் ஒரு மாது தன்
மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
மயங்குகிறாள் ஒரு மாது
தோழியர் கதை சொல்லித் தரவில்லையா?
துணிவில்லையா பயம் விடவில்லையா?
தோழியர் கதை சொல்லித் தரவில்லையா?
துணிவில்லையா பயம் விடவில்லையா?
நாழிகை செல்வதும் நினைவில்லையா?
நாழிகை செல்வதும் நினைவில்லையா?
அன்பே அன்பே அன்பே அன்பே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?
ஆஆஆஆஆஆஆஆ
மயங்குகிறாள் ஒரு மாது தன்
மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
மயங்குகிறாள் ஒரு மாது
பார்வையில் ஆயிரம் கதை சொல்லுவாள்
படித்தவள் தான் அதை மறந்து விட்டாள்
காதலை நாணத்தில் மறைத்து விட்டாள்
காதலை நாணத்தில் மறைத்து விட்டாள்
அன்பே அன்பே அன்பே அன்பே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?
ஆஆஆஆஆஆஆஆ
மயங்குகிறாள் ஒரு மாது தன்
மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
மயங்குகிறாள் ஒரு மாது
அஹஹா அஹஹா அஹஹாஹஹஹாஹாஹ
ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம்
https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=d53820920c&view=att&th=1487e6ed66bd395e&attid=0.1&disp=safe&realattid=f_i057s3vk0&zwhttps://mail.google.com/mail/u/0/?ui=2&ik=d53820920c&view=att&th=1487e6ed66bd395e&attid=0.2&disp=safe&realattid=f_i057so6y1&zw
gkrishna
18th September 2014, 03:08 PM
இசையின் மொழியை முற்றிலும் அறிந்த குயில் எம்.எஸ். சுப்புலஷ்மி ...
மீரா திரைப்படத்தில் வரும் இந்த கானம் காற்றினிலே வரும் கீதம்..
இயற்றியிருக்கிறார் கல்கி கிருஷ்ணமூர்த்தி..
எத்தனையோ பாடல்கள் நம் காதில் விழுந்தாலும் எத்தனையோ கானங்கள் நம் நெஞ்சம் நுழைந்தாலும் .. இந்த கானம் தருகிற அமைதியும் ஆனந்தமும் அலாதியானது.
எந்த அலம்பலும் இல்லாமல் அன்பின் மொழியாக .. நந்தவனத்திற்குள் வருகின்ற தென்றல் போலே கேட்போரை நிம்மதியின் சன்னதிக்கு அழைத்துசெல்கிறார்.
கண்ணனை எண்ணி மனம் உருகி.. உச்சநிலையில் உள்ளம் தொடுகிற பணியை
இந்தப் பாடல் எந்த ஆர்பாட்டமுமின்றி செய்துவிடுகிறது.
கர்நாடக சங்கீதத்தில் முதல் நிலையில் விளங்கிய இசையரசி எம்.எஸ். சுப்புலஷ்மி பாடிய ஒரு சில திரைப்பாடல்களில் இதுவும் ஒன்று.
மனம் ஒருமிக்க இந்தப் பாடலில் மயங்கலாம்..
இறை அருள் பெற்ற இசையரசியின் குரல் கேட்டு இன்புறலாம்
எஸ். வி. வெங்கட்ராமன் அவர்களின் இசையில் இழைந்தோடிவரும் இன்ப கானம்!
http://www.youtube.com/watch?v=Fg1XYA0atg8
https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=d53820920c&view=att&th=148819f64a4e73ea&attid=0.2&disp=safe&realattid=f_i063ezl11&zwhttps://mail.google.com/mail/u/0/?ui=2&ik=d53820920c&view=att&th=148819f64a4e73ea&attid=0.1&disp=safe&realattid=f_i063e6ol0&zw
Richardsof
18th September 2014, 03:31 PM
கிருஷ்ணா சார்
அரை நாளில்
மாட்டு வண்டி பாடல் - ஜல் ஜல் சலங்கை ஒலி
கல்கண்டு - அன்றைய நாட்கள்
சிவகுமார் - கமல்
மன்மத லீலை
தவமணி - அன்றும் இன்றும்
ராஜகுமாரி
அங்கமுத்து
ஷப்னா - பிறந்த நாள்
எம்ஜிஆர் ஆட்டோ கிராப்
அமெரிக்காவில் எம்ஜிஆர் -1974
மயங்குகிறாள் ஒரு மாது
கவர்ச்சி படம்
7 பக்கங்கள் சூப்பர் ஸ்பீட் .பல்வேறு தகவல்கள் -அருமை .
போனஸ் ..... ஒரு அரிய் நிழற் படம் ... எல்லோருக்கும் ......
http://i59.tinypic.com/vnjl9v.jpg
gkrishna
18th September 2014, 03:43 PM
கிருஷ்ணா சார்
அரை நாளில்
மாட்டு வண்டி பாடல் - ஜல் ஜல் சலங்கை ஒலி
கல்கண்டு - அன்றைய நாட்கள்
சிவகுமார் - கமல்
மன்மத லீலை
தவமணி - அன்றும் இன்றும்
ராஜகுமாரி
அங்கமுத்து
ஷப்னா - பிறந்த நாள்
எம்ஜிஆர் ஆட்டோ கிராப்
அமெரிக்காவில் எம்ஜிஆர் -1974
மயங்குகிறாள் ஒரு மாது
கவர்ச்சி படம்
7 பக்கங்கள் சூப்பர் ஸ்பீட் .பல்வேறு தகவல்கள் -அருமை .
போனஸ் ..... ஒரு அரிய் நிழற் படம் ... எல்லோருக்கும் ......
எஸ்வி சார்
உங்கள் வெற்றியின் ரகசியம் இதுதான் எஸ்வி சார்
வாழ்த்துவதிலும் சரி தகவல்களை வழங்குவதிலும் சரி மேலும் பரிசு கொடுப்பதிலும் உங்களுக்கு இணை அதுவும் அந்த அபூர்வ பரிசு நடிகர் திலகத்தின் காவல் தெய்வம் ஷூட்டிங் படம் தானே அது
நமது புதிய நண்பர் ராஜ்ராஜ் அவர்கள் மக்கள் திலகத்தை நேரில் சந்தித்து போட்டோ எல்லாம் எடுத்து இருக்கிறார் . நம்ம வாசு சார் கூட நடிகர் திலகத்தை நேரில் சந்தித்து போட்டோ எல்லாம் எடுத்து இருக்கிறார். எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வர இருக்கிறது
உங்கள் வாழ்த்துகளை எதிர்பார்க்கும்
chinnakkannan
18th September 2014, 03:46 PM
ராஜ் ராஜ் சாரின் அமர்க்களமான் மலரும் நினைவுகள் என்னுடைய நாஸ்டால்ஜியாவைக் கொஞ்சம்கிளறிவிட்டது..
அய்யம்பேட்டையில் கல்லூரி முடித்த காலத்தில்அக்காவீட்டில் ஓரிரு மாதங்கள் இருந்த தருணஙகளில் சுற்றியுள்ள தஞ்சாவூர்,கும்பகோணம்,திருவையாறு
எனப் பல ஊர்களைச் சுற்றிப் பார்த்தது, அப்புறம் அக்காவீட்டூப் பக்கத்து வீட்டு ப்ளஸ் டூ செளராஷ்டிரப் பெண் சித்ரா..என.. எனில்
அதைச் சொல்ல நேரம் இல்லை இப்போது!! என்ன சொல்லவந்தேன்..பழங்கதை..இப்படி கதை வரும் பாடல்களைப்
பற்றி எண்ணக் குதிரையை ஓட விட்டதில்..
இப்படி ஓர் தாலாட்டுப் பாடவா அதில் அப்படியே என் கதையைக் கூறவா (அவர்கள்)
நான் நீரோடையில் நீராடையில்
யாரோ வந்து ஏதோ சொல்லி
கன்னத்தைத் தொட்டு நெஞ்சத்தைக் கிள்ளிக் கையைப் புடிச்சான் (ஒரே பாடலில் அஸ்வினியின் ஃப்ளாஷ்பேக் ஒருகை ஓசை)
சொல்லவா கதை சொல்லவா (சாவித்ரீ இன் நவ்ராத்ரி)
முன்னஒரு காலத்தில முருங்கமலைக் காட்டுக்குள்ள
தந்திரம் மிகுந்த நரி வாழ்ந்துவந்தது (மூன்றாம்பிறை கமல் அண்ட் குட்ட்டி ஸ்ரீதேவி)
ஒரேஒரு ஊர்ல ஒரே ஒரு ராஜா (படிக்காத மேதை ந.தி)
கதை கேளு கதைகேளு ரசமான கதை கேளு ( மைக்கேல்மதனகாமராஜன் இளையராஜா டைட்டில் பாட்டு)
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே (லவகுசா பி.சுசீலா பி.லீலா)
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்(பஞ்ச வர்ணக் கிளி பி சுசீலா)
இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது (கமல் எழுதும் குட்டிக்கதை வித் சீதா உன்னால் முடியும் தம்பி)
நான் ஒரு விகடகவி இன்று நான் ஒரு கதை சொல்ல போகிறேன் ஓங்கிய காடு (அ.ஒ.தொ. கமல்ஹாசன்)
சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து
பிரித்த கதை சொல்லவா...(பாச மலர் ந.தி சாவித்ரி)
என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழிப் பார்வையிலே
சொல்லிச் சொல்லி முடித்துவிட்டேன் சொன்ன கதை புரியவில்லை ( வெ.ஆ ..ஜெயலலிதா)
எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே
என்றும் இல்லாத புதுவசந்தம் வீசுதே (சக்கரவர்த்தி திருமகள் எம்.ஜி.ஆர்)
உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை (அவள் அப்படித் தான்?)
விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று ??
ம்ம் நிறைய க் கதை இருக்குங்கோ..விட்டுப் போன கதை..அதான் நீங்க சொல்வீஹளே..
chinnakkannan
18th September 2014, 03:47 PM
krishnaaji.. moonaavathu yaaru.. thanks for only two!!(sripriyaa vEnndaam!)
gkrishna
18th September 2014, 04:22 PM
krishnaaji.. moonaavathu yaaru.. thanks for only two!!(sripriyaa vEnndaam!)
http://filmcircle.com/wp-content/uploads/2014/08/Aksha-Pardasany.jpg
அது தான் சலீம் படத்தின் கதாநாயகி அக்ஷா பர்டசனி
படபடவென எண்ணெய் சட்டியில் பொரியல் வெந்ததை போல இவர் வெடிக்கின்ற அழகே அழகு.. தக்காளியாக இருக்கும் இவரது முகம் கோபத்தில் மேலும் சிவந்து போகிறது.. பாடல் காட்சிகளில் கொள்ளை அழகாக இருக்கிறார்.. போலீஸாரிடம் படபடவென பேசும் காட்சியில் நச் என்று இருக்கிறது அவரது கேரக்டர் ஸ்கெட்ச்.. பாராட்டுக்கள்.. டப்பிங் குரல் என்றாலும் அது தெரியாத அளவுக்கு நடித்திருக்கிறார். நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.. வெல்டன் டைரக்டர்..
http://3.bp.blogspot.com/-mSKcgdqj20w/VAIhrcAqm1I/AAAAAAAAaeQ/nhgKeoW9Dz0/s1600/salim-movie%2Bposter.jpg
ஸ்ரீப்ரியாவை தான் துவைச்சு தொங்க விட்டாச்சே
surf எச்செல்,ரின்,ஏரியல்,நிர்மா ,டெட் ,501 பார் சோப்பு,sunlight சோப்பு,ஊர்வசி சோப்பு,பொன்வண்டு சோப்பு,பவர் தேடேர்கேன்ட் போட்டு (இவ்வளுவுதானா இல்லை மார்க்கெட்டில் இன்னும் இருக்கா )
அதாவது அவங்களை பற்றி நிறைய எழுதியாச்சே
அதான் வேண்டாம் இல்ல வாசு சார் காதுல விழுந்தது அவ்வளுவுதான் தொலைச்சு புடுவார் தொலைச்சு :)
gkrishna
18th September 2014, 04:26 PM
ராஜ் ராஜ் சாரின் அமர்க்களமான் மலரும் நினைவுகள் என்னுடைய நாஸ்டால்ஜியாவைக் கொஞ்சம்கிளறிவிட்டது..
.
யோவ் யோவ் யோவ் சி கே சார்
இவ்வளவு கதை விடாதீங்க :)
ஆனாலும் கதை பாடல்கள் தொகுப்பு அருமை சி கே
வியக்கவும் மலைக்கவும் ரசிக்கவம் வைக்கிறது உங்கள் நடை
வாழ்த்துகள்
gkrishna
18th September 2014, 04:28 PM
வாணி ராணி படத்தில் சுசீலா அம்மா பாடுவாங்க
'கதை ஒன்று விடுகதை ஒன்று '
வாசு சாருக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு
madhu
18th September 2014, 04:35 PM
வாணி ராணி படத்தில் சுசீலா அம்மா பாடுவாங்க
'கதை ஒன்று விடுகதை ஒன்று '
வாசு சாருக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு
கதை உண்டு.. ஒரு கதை உண்டு
இதன் பின்னே ஒரு கதை உண்டு
சொல்லத்தான் நினைத்தது அன்று..
மனம் என்னவோ மயங்குது நின்று
http://youtu.be/ExjVcDAy9Fk
madhu
18th September 2014, 04:40 PM
வாணிஸ்ரீயைப் பார்த்ததும் இந்தப் பாட்டு நினைவுக்கு வந்து விட்டது.
ரொம்ப மனசுக்குள் மார்கழிப் பனிச்சாரல் மாதிரி ஜில்லுனு ஆக்கும் பாட்டு..
அதுவும் ஒவ்வொரு interlude-ம் ரொம்பப் பிடிக்கும்
http://youtu.be/s-g2SiOaT18
gkrishna
18th September 2014, 05:07 PM
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQOuJnS6mDRr1wEo7M5NqCopgpivb-9geX9HLWAaFTkp9IBJekxgAhttps://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSEyJ729v-u98NbXOiCXPJZOxOQtJnIWw-dqZpOh3i8mHiITpj1https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSeetixFq7BFC0JFvzX2jBXChUkQaoZc oVql9neCSZfH3p-UWdD
பதினாறு வயதினிலே,கிழக்கே போகும் ரயில்,கன்னி பருவத்திலே போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து எஸ் எ ராஜ் கண்ணு (இவர் விநியோகஸ்தர் ஆக இருந்து தயாரிப்பாளர் ஆக ஆனவர் ) தனது அம்மன் creation சார்பாக எடுத்த படம் சின்ன சின்ன வீடு கட்டி 1980 களில் வந்த படம்
இன்னிசை வேந்தர்கள் சங்கர் கணேஷ் இசை அமைத்த படம் .
சுதாகர், அனு (இவங்க பின்னாட்களில் பாக்யராஜ் நடித்த சின்ன வீடு படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் வருவார் ). நிறைய தயாரிப்பளர்களின் மனைவிக்கு 'வில்லியும்' ஆனார் என்று படித்த நினைவு உண்டு . மூச்சு விடாத பாடல் என்று கேளடி கண்மணி படத்தில் 'மண்ணில் வந்த காதல் ஒன்று ' பாடலை சொல்வார்கள் . அது சரணத்தில் மூச்சு விடாமல் பாடும் பாடல் அதற்கு முன்னோடியாக இந்த இரண்டு பாடலை கேளுங்கள் . இரண்டும் பல்லவியில் மூச்சு விடாமல்
நாக்கிலே மூக்கில நாத்து பல்லாகிலே (தள தளன்னு வளந்த பொண்ணு)-சின்ன சின்ன வீடு கட்டி. விரசங்களில்லாமல் குதூகலிக்கும் கும்மாளமான நாட்டுப்புற கானம். பாடலின் துவக்கத்தில் அங்கே இங்கே என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டமான அந்த அதிரடித் தாளம் தள தளன்னு வளந்த பொண்ணு தண்ணி மொள்ளும் போதிலே என்ற இடத்தில் வெடித்துக்கொண்டு ஆர்ப்பரிப்பதை கேட்கும் போது அந்த தண்ணீர்க் குடம் நம் தலையில் கவிழும் சிலிர்ப்பை நீங்கள் உணர முடியும். மேலும் தமிழில் வந்த மிக நீண்ட பல்லவி கொண்ட பாடல்களின் ஒன்று என்ற சிறப்பை பெற்றது இது. (இன்னொன்றும் இவர்கள் இசையிலேயே வந்தது. அது பவுர்ணமி நேரம் என்ற பாலைவனச்சோலை படப் பாடல்.) சற்று இந்த பல்லவியைப் பாருங்கள்:
நாக்கிலே மூக்கில
நாத்து பல்லாக்கிலே,
தோப்பு பராக்கிலே,
தாழ்வாரத்திலே,
தோளோரத்திலே,
சிங்காரத்தில,
தள தளன்னு வளந்த பொண்ணு
தண்ணி மொள்ளும் போதிலே
தாவி வந்து அணச்சுகிட்டேன்,
கையிரண்டும் போதல,
(இந்தப் பாடல் வானொலியில் ஒலிக்கும் சமயங்களில் தெருக்களில் இளம் பெண்கள், குறிப்பாக குடத்துடன் பெண்கள் தண்ணீர் எடுக்க செல்ல நேரிட்டால் அவர்கள் காட்டும் முக பாவணைகளைக் கண்டு அவர்கள் கோபப்படுவதாக குமுதத்தில் படித்த நினைவு . இன்று இந்த பாடலை கேட்டால் அப்படி கோபபடுவார்களா முதல்ல யாரு இப்ப தண்ணி குடம் கொண்டு வீதியில் தண்ணி எடுக்க செல்கிறார்கள் )
பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி
மின்னல் போல முன்னாள் போனாள்
பின்னல் கண்டு பின்னால் சென்றேன்
பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன்
காலில் உள்ளது பழசு என்றாள்
ஓ மேலே கேட்காதே
don 't ask me after that
மேல உள்ள பாடல் பாலைவன சோலை படத்தில் உள்ள பாடல்
http://www.youtube.com/watch?v=W7765HIleic
இந்த மாதிரி நீண்ட பல்லவி உள்ள பாடல் ஏதாவது ஒன்று சொல்லுங்களேன் madhu sir/vaasu sir/ck sir/
gkrishna
18th September 2014, 05:08 PM
தேங்க்ஸ் மது சார் வாணியின் அருமையான இரு பாடல்களுக்கு
madhu
18th September 2014, 05:22 PM
நந்தா நீ என் நிலா.. நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ வா... விழி
மீனாடும் விழி மொழி
தேனாடும் மொழி குழல்
பூவாடும் குழல் எழில்
நீயாடும் எழில்
மின்னி வரும் சிலையே மோகன கலையே
வண்ண வண்ண ஒளியே வானவர் அமுதே
ஆசை நெஞ்சின் தெய்வம் நீயே
ஆடி நிற்கும் தீபம் நீயே
பேசுகின்ற வீணை நீயே
கனியிதழ் அமுதினை வழங்கிட அருகினில் வா...
நந்தா நீ என் நிலா...
இது ரொம்ப பெரிய பல்லவி இல்லையோ ?
http://youtu.be/q4huOP5ZgCc
madhu
18th September 2014, 05:24 PM
பாலைவனச்சோலை - பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி
http://youtu.be/9Myz5I5uiGo
gkrishna
18th September 2014, 05:34 PM
நந்தா நீ என் நிலா.. நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ வா... விழி
மீனாடும் விழி மொழி
தேனாடும் மொழி குழல்
பூவாடும் குழல் எழில்
நீயாடும் எழில்
நீ வரும் சிலையே மோகன கலையே
வண்ண வண்ண ஒளியே வானவர் அமுதே
ஆசை நெஞ்சின் தெய்வம் நீயே
ஆடி நிற்கும் தீபம் நீயே
பேசுகின்ற வீணை நீயே
கனியிதழ் அமுதினை வழங்கிட அருகினில் வா...
நந்தா நீ என் நிலா...
இது ரொம்ப பெரிய பல்லவி இல்லையோ ?
அருமை மது சார்
தலை வணங்குகிறேன் உங்கள் இசை அறிவு மற்றும் உடனடி பதிலுக்கு
எல்லாம் வல்ல இறை ஆற்றல் உங்களுக்கு என்றும் கிட்ட அந்த இறை ஆற்றலை வேண்டுகிறேன்
சாமி தக்ஷினமுர்த்தி போட்ட பாடல் இது
நந்தா என் நிலா ஆஆஆஆஆ
நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ வா - விழி
மீனாடும் விழி மொழி
தேனாடும் மொழி குழல்
பூவாடும் குழல் எழில்
நீயாடும் எழில்
மின்னி வரும் சிலையில் மோகனக் கலையே
வண்ண வண்ண மொழியில் வானவர் அமுதே
ஆசை நெஞ்சின் தெய்வம் நீயே
ஆடி நிற்கும் தீபம் நீயே
பேசுகின்ற வீணை நீயே
கனி இதழ் அமுதினை வழங்கிட அருகினில் வா
chinnakkannan
18th September 2014, 05:37 PM
மதுண்ணா.. கோபால்சாரா வாசுசாரா யார் ஓடி வரப் போறாங்கன்னு தெரியலை ரெண்டு பேருக்கும் இந்த அலங்காரம் சிலையாத கலை ஒன்று கண்டேன் ..ஓ டைப்போ.. அ க சி ஒ க ரொம்பப் பிடிக்கும்
யா..அக்*ஷா மாதிரி இருக்கேன்னு நினைச்சேன் கிருஷ்ணாஜி.. நான்பார்த்தது டி.விடில ஜஸ்ட் ஓ.கே ப்ரிண்ட்ல தான்..ஆனா ஃபோட்டோல இருக்கற அளவுக்கு படத்துல அவ்வளவு குட்லுக்கிங்கா இல்லைன்னு நினைச்சேன்..அப்புறம் பாடல் காட்சியெல்லாம் ஓட்டி வேற விட்டுட்டேன்..அதான்.. தாங்க்ஸ்..
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டுத் திக்கு பார்த்திருந்து
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணல்லே
மணி ஏழு எட்டு ஆனபின்னும் ஊரடங்கிப் போன பின்னும்
சோறுதண்ணி வேணுமின்னு தோணல்லே
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென் காத்து ஓடிவந்து
தூதாக போக வேணும் அக்கரையிலே
நான் உண்டான ஆசைகளை உள்ளார பூட்டிவச்சு
ஒத்தையிலே வாடுறேனே இக்கரையிலே
இது பல்லவி தானே..!
chinnakkannan
18th September 2014, 05:40 PM
அதே சின்னத் தாயி படத்தில் வரிகள் எல்லாம் நீளம் நீளமாக இருக்கும்
கோட்டைய விட்டு வீட்டுக்கு வந்த சுடலை மாடசாமி
சுடலைமாட சாமியும் நாந்தான் பூசாரி நீதான் போறவழிகாமின்னு இன்னும் ரெண்டு லைன்ஸ் வரும்
எங்க ஊர் பொங்கலுக்கு நீங்களெல்லாம் வந்துபுட்டு என்று ஒரு இன்னொருபாட்டுமுண்டு..
நல்ல அழகான பாடல்கள்..
chinnakkannan
18th September 2014, 05:46 PM
//சுதாகர், அனு (இவங்க பின்னாட்களில் பாக்யராஜ் நடித்த சின்ன வீடு படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் வருவார் ). நிறைய தயாரிப்பளர்களின் மனைவிக்கு 'வில்லியும்' ஆனார் என்று படித்த நினைவு உண்டு .// இந்த அனு தானே டி.ராஜேந்தரின் ராகம் தேடும் பல்லவி என்ற படத்தில் அறிமுகமானவர்.. யா.. ஒரு அழகானபாடல் உண்டு..
வைகைக் கரைக் காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
மன்னன் மனம் வாடுதுன்னு மங்கை முகம் தேடுதென்று
காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய்ச் சொல்லு..
இவ்ளோ அழகாக எழுதிய கவிஞ டி.ராஜேந்தர்..கொஞ்சம் இன்னொரு சொதப்பல் பாட்டும் எழுதியிருப்பார்..படத்தில் ஜெமா ஜோல டான்ஸ்னு நினைக்கறேன்..
அந்தக் கானாங்கெட்ட கருவாட்டுக்கு கழுத்துல வெள்ள
அந்த மானாமதுர மைனாவுக்கு வாங்கிடும் முல்லை.. என்று போவதாக நினவு..:)
madhu
18th September 2014, 05:52 PM
சிக்கா..
வைகைக் கரை காற்று உயிருள்ளவரை உஷா இல்லையோ..
இது "மூங்கிலிலே பாட்டிசைக்கும்" மற்றும் "ஆழ்கடலில் தத்தளித்து" பாடல்கள் இடம் பெற்ற படம்.
chinnakkannan
18th September 2014, 05:54 PM
யா.. ஸாரி மதுண்ணா..
மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலையைத் தூதுவிட்டேன்
அவள் முக அழகை இவன் பார்த்தபின்னே அந்தப் பெளர்ணமியை
இவன் ரசிக்கவில்லை..
ஆழ்கடலில் தத்தளித்து நானெடுத்த முத்து ஒன்றை
விதியவன் பறித்தது ஏன்னு வரும்
நல்ல பாடல்கள்..சாரி ஃபார்த கன்ஃப்யூஷன்..அண்ட் தாங்க்ஸ் ஃபார்த ஸாங்க்ஸ் மதுண்ணா..
madhu
18th September 2014, 05:56 PM
http://youtu.be/-c5eIXpPWdQ
http://youtu.be/WKf2hXs6L3o
madhu
18th September 2014, 05:57 PM
சிக்காவுக்காக போனஸ் பாட்டு.. உயிருள்ளவரை உஷா
http://youtu.be/d-3EX6_Dsig
gkrishna
18th September 2014, 06:10 PM
அருமை மது சார் /சி கே சார்
தொடர வேண்டும் உங்கள் பணி
chinnakkannan
18th September 2014, 06:17 PM
நன்றி மதுண்ணா இரண்டு + ஒரு போனஸ் பாட்டுக்கு.. தாங்க்ஸ் கிருஷ்ணா ஜி..
டி.ராஜேந்தர் ஒரு நல்ல கவிஞர்..நல்ல இசையமைப்பாளர்.. கவிஞராக இசையமைப்பாளராக மட்டும் இருந்திருக்கலாம்.. சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு ஒரு உதாரணம்.. உ.உ வில் இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ வும் நல்ல பாட்டு..
அதே சமயத்தில் மச்சி எச்சி என்றெல்லாமும் எழுதிக் கொஞ்சம் தமிழைக் கோபப்படவும் வைத்திருக்கிறார்..
rajeshkrv
18th September 2014, 07:11 PM
எல்லா பதிவுகளும் அருமை அருமை
rajraj
18th September 2014, 07:12 PM
வரே வா
பேஷ் பேஷ் பாடகர் வேறயா (அன்பே வா நாகேஷ் பாணியில்)
தாங்காது ஐயா
விடு ஜுட்
If you have been on this earth for a few decades you pick up a few things depending on your curiosity and creative spirit ! :) I am a little bit curious. That is all ! :lol:
gkrishna
18th September 2014, 07:38 PM
If you have been on this earth for a few decades you pick up a few things depending on your curiosity and creative spirit ! :) I am a little bit curious. That is all ! :lol:
ராஜ்ராஜ் சார்
உண்மை. நேற்றே நீங்கள் சொல்லிவிட்டீர்கள்
'இன்னமும் கற்று கொண்டு இருக்கிறேன் ' என்று
அதன் முழு வெளிப்பாடு தான் இன்றைய உங்கள் தொடர் வருகை .
gkrishna
18th September 2014, 07:38 PM
ராஜேஷ் சார் வணக்கம்
gkrishna
18th September 2014, 07:52 PM
ராஜேஷ் சார்
ராஜேந்தர் இன் இசையில் இசைஅரசி சுசீலா பாடல்கள் எடுத்து விடுங்களேன்
நிறைய பாடல்கள் ஜானகி,சசிரேகா,சித்ரா பாடி இருக்கிறார்கள்
எனக்கு பூக்களை பறிக்காதீர்கள் 'அடியே வனிதா அழைத்தால் வாடி ' நினைவில் உண்டு
madhu
18th September 2014, 08:00 PM
ராஜேந்தர் இன் இசையில் இசைஅரசி சுசீலா பாடல்கள் எடுத்து விடுங்களேன்
இதோ வசந்த அழைப்புகளில் ரூபாவுக்காக கங்கை பொங்குது கண்களோரம்
http://www.inbaminge.com/t/v/Vasantha%20Azhaippugal/Gangai%20Pongudhe%20Kangaloram.vid.html
கிளிஞ்சல்களில் பூர்ணிமா ஜெயராமுக்காக சின்ன சின்ன கண்ணா
http://www.inbaminge.com/t/k/Kilinjalgal/Chinna.vid.html
madhu
18th September 2014, 08:06 PM
உறவைக் காத்த கிளியில் சரிதாவுக்காக புள்ளைங்க பேருலதான் தங்கம் வைரம் இருக்குது
http://youtu.be/qVFtRXfRsm0
vasudevan31355
18th September 2014, 09:19 PM
டி.ராஜேந்தர் ஆரம்ப காலங்களில் பல அற்புதமான பாடல்களைத் தந்துள்ளார்.
அவருடைய ஹிட் பாடல்களை விடுத்து சற்று அரிதான அவர் பாடல்கள் மூன்று பார்ப்போம்.
முதலாவது
அவருடைய 'வசந்த அழைப்புகள்' படத்தில் ரூபா, விஜயன் குழுவினர் பங்கு பெறும் ஒரு பாடல்.
வித்தியாசமான காஸ்ட்யூமில் ரூபா. நம்ப முடியவில்லை.
ஜானகி பாடும் இப்பாடல் ஓஹோ என்றில்லா விட்டாலும் கேட்க ஓரளவிற்கு நன்றாகவே இருக்கிறது. இப்போது பார்க்க விஜயனும், ரூபாவும் புதிதாகத் தெரிகிறார்கள்.
'தேவலோகம் அழைத்தாலும்
காமதேனு கிடைத்தாலும்
மோகனம் பாடிட வா
தேவனைத் தேடிட வா'
http://www.youtube.com/watch?v=XOFQeguvCKk&feature=player_detailpage
vasudevan31355
18th September 2014, 09:24 PM
இரண்டாவது
பிரபு,.சரிதா, அமலா நடித்த 'பூப்பூவா பூத்திருக்கு' என்ற ஒரு படம் சற்றும் எதிர்பாராமல் சக்கை போடு போட்டது. இப்படத்திற்கு இசை டி.ராஜேந்தர். இதில் ஒரு அருமையான பாடல்.
வாணி ஜெயராம், மனோ காம்பினேஷன்.
பாடல் சரிதாவிற்கும், பிரபுவிற்கும்.
'வாசம் சிந்தும் வண்ணச் சோலை
என் வாசல் தேடி வந்த வேளை.
இந்த இரண்டு வரிகளுக்குப் பின் வரும்
'ஆனந்தத்தின் எல்லைக்கு நான் சென்றேன்
அன்போடு பிள்ளை என்று சொன்னேன்'
நிஜமாகவே ஆனந்தம் தரும் வரிகள்.
ரசிக்கத் தகுந்த நல்ல பாடல்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Iy7tqavqr4E
rajeshkrv
18th September 2014, 09:26 PM
few more
sattam sirikkudhu - malare malare
idhamana ragam -pookal vidum thoodhu
adiye vanitha neeyum vaadi
chinnakkannan
18th September 2014, 09:37 PM
//தேவலோகம் அழைத்தாலும்
காமதேனு கிடைத்தாலும்
மோகனம் பாடிட வா
தேவனைத் தேடிட வா'// நல்ல பாட்டு வாசு சார் தாங்க்ஸ்..இது நாள் வரை பிடித்த காரணம் ஆடியோ மட்டும் கேட்டது தான்..விக் விக்விக்..:)
வாசம் தரும் வண்ணச் சோலை..ஓ.க்கே. தான்..இளமைபிரபு நன்னா இருக்கார்..
ராஜேஷ்..பாட்டுக் கேட்டால் தான் நினைவுக்கு வரும் என நினைக்கிறேன்.. பூக்களைப் பறிக்காதீர்கள் என்று ஒரு படம் சுர்ரேஷ் நதியா.. காதலர்கள் இணைந்து பிரிந்து இணைந்து பிரிந்து இணைந்து பிரிந்து கடைசியில் பிரிந்து மேலே போகும் படம்.. செம ஓட்டம்.. அதில் வரும் பாட்டு மாலை எனை வாட்டுது மண நாளை மனம் தேடுது
vasudevan31355
18th September 2014, 09:42 PM
மூன்றாவது.
'உனக்காக ஒரு ரோஜா' என்ற படம்
மோகன், அம்பிகா, சுரேஷ் நடித்தது. நம் சி.வி.ஆர்.இயக்கம் என்று நினைவு.
ஒரு மோக ராகம்
நான் பாடும் நேரம்
அன்பினைப் பொழிய
அம்பிகை வந்தாள்
பூக்களைத் தூவினேன்
பாக்களைப் பாடினேன்
மோகன், அம்பிகா காதல் டூயட். பாடல் சுமார்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=4hNCFCgZwAU
chinnakkannan
18th September 2014, 10:02 PM
மறுபடியும் வெகுகாலத்துக்குப் பின் இப்போது தான் இந்த மூங்கிலிலே, ஆழ்கடலில் தத்தளித்து அப்புறம் வைகைக் கரைக் காற்றே நில்லு கேட்கிறேன்..பார்க்கிறேன்..மறுபடியும் தாங்க்ஸ் மதுண்ணா..
//ஒரு மோக ராகம்
நான் பாடும் நேரம்
அன்பினைப் பொழிய
அம்பிகை வந்தாள்
பூக்களைத் தூவினேன்
பாக்களைப் பாடினேன்
மோகன், அம்பிகா காதல் டூயட். பாடல் சுமார்.// இந்தப் பாட்டுக் கேட்டிருக்கிறேன் வாசு சார் தாங்க்ஸ்..பார்த்ததில்லை இப்போது பார்த்தேன்..அந்தக் காலத்தில் எல்லாம் ஏன் திடீரென எல்லாரும் புலியூர் சரோஜாவிடம் போய் விழுந்தார்கள் என்பது எனக்கு இன்னும் ஒரு புதிர்.. நல்ல கணித மேதை அவர்! பெர்முட்டேஷன்ஸ் அண்ட் காம்பினேஷன்ஸ் நன்னாவே தெரியும்..! ஒரு சில படங்களில் ரொம்பவே படுத்தியிருப்பார்கள்..
மழை தருமோ என் மேகம்.. இங்க பேசியாச்சா மனிதரில் இத்தனை நிறங்களா.. ஸ்ரீ தேவி..
rajeshkrv
18th September 2014, 10:42 PM
enna vasu ji
nalam thaane
vasudevan31355
19th September 2014, 07:33 AM
ராஜேஷ்ஜி
நலம்தான். தாங்கள் நலம்தானே! ஸாரி ! ஒரு வாரம் சிஸ்டம் படாத பாடு படுத்திவிட்டது. அதுதான் தங்களுடன் இணையமுடியவில்லை. இப்போது சரியாகி விட்டது. இனி இசையரசி பாடல்களுடன் விளையாடலாம். ஓகே தானே!
vasudevan31355
19th September 2014, 07:38 AM
வண்டிப் பாடல்
ரயில் ஓடிக்கொண்டே இருக்க, டைட்டில் அதனுடன் சேர்ந்து ஓடிக் கொண்டே இருக்க, இவற்றுடன் மெல்லிசை மன்னர்
"இறைவனும், மனிதனும் பயணம் செய்தால் எவரை எவர் வெல்லுவாரோ"
என்று அதிசய கற்பனை செய்து பாட,
'சந்திப்பு வருவது கண்டு பலர் சந்திக்கும் இடங்களும் உண்டு'
என்ற அருமையான வரிகளோடு ஒலிக்கும்
'பயணம் பயணம் பயணம்'
http://www.youtube.com/watch?v=0MC9AJW6g1k&feature=player_detailpage
vasudevan31355
19th September 2014, 07:52 AM
வண்டிப் பாடல்.
இதோ பாருங்கள்.
நடிகர் திலகம் தன் அண்ணன் ராமகிருஷ்ணாவுக்கு சங்கீதாவை கல்யாணம் பண்ணி வைத்து, மாட்டு வண்டி பூட்டிகிட்டு, சிங்காரச் சிட்டுக்களை பல மாட்டு வண்டிகளில் உடன் அழைத்துக் கொண்டு, பொண்ணு மாப்பிளையையும் வண்டியில் கூட்டி வந்து, தலையில் மஞ்சள் நிறத் தலைப்பாகை கட்டி, மாட்டு வண்டி ஓட்டியபடியே வெகு உற்சாகமாக பாடி வரும் அபூர்வ பாடல்.
'புண்ணிய பூமி' திரைப்படத்தில் அழகுச் சிட்டுக்கள் பவானி, ஒய்.விஜயா இவர்களும் வண்டியில் அமர்ந்து வர
ஜில் ஜில் என்றது காளைக் கண்ணு
ஜிலு ஜிலு என்றது நாலு கண்ணு
சிங்காரத் தோப்புக்கு மச்சான வரச் சொல்லு
சங்கீதம் பாடுது சமத்துப் பொண்ணு
'ஹேய் ஹேய்' என்று உற்சாகக் குரலிடும் இளம் கிளிகள், அவர்களுடன் போட்டி போடும் நடிகர் திலகம்.
மாட்டு வண்டிகள் வரிசயாக வேகமாகச் செல்ல, பாடகர் திலகம்,ஈஸ்வரி சும்மா பட்டை கிளப்ப, உற்சாகம் பீறிடும் பாடல்.
டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் .... உங்கொப்பன்தன்னானே!
http://www.youtube.com/watch?v=rN3lEKvr9ug&feature=player_detailpage
vasudevan31355
19th September 2014, 08:07 AM
வண்டிப் பாடல் (!)
கோபால் வண்டிப் பாடல்கள் வரிசையில் எருமை வாகனத்தையும் சேர்த்து விட்டதால் அவருக்காக இந்த பாடல்.:)
ஒரு குற்றம் அறியானடி
உதை பட்டு சாவானடி
எருமைக் கன்னுக்குட்டி
என் எருமைக் கன்னுக்குட்டி
'ஏய்ச்சுப் பொழைக்கிறவன்
ஏழடுக்கு மாளிகையில் எகத்தாளம் போடுறானே
அவன் பேச்சை மறுக்கிறவன் (அல்லது மறைக்கிறவன்?)
பிச்சை எடுக்கிறானே'
'மந்திரிகுமாரி' படத்தின் மறக்கமுடியாத பாட்டு. மாட்டில் பயணிக்கும் சிறுவன் சதுரவட்டை:) தலையோடு, வற்றிய உடலோடு, மார்பெலும்புகள் வெளியே பிதுங்கித் தெரிய பாட, அம்பலம் ஏறும் ஏழை சொல் பாட்டு.
http://www.youtube.com/watch?v=9B5fPkL-vEo&feature=player_detailpage
Richardsof
19th September 2014, 08:40 AM
RARE STILL
http://i60.tinypic.com/2zexrbo.jpg
Richardsof
19th September 2014, 08:41 AM
http://i60.tinypic.com/119zchw.jpg
Richardsof
19th September 2014, 08:42 AM
http://i59.tinypic.com/2qiv0vk.jpg
Richardsof
19th September 2014, 08:43 AM
http://i62.tinypic.com/ng3qmv.jpg
chinnakkannan
19th September 2014, 08:45 AM
குட்மார்னிங் ஆல்
ஹாய் வாசு சார்.. நலம் தானே..
காலையில் பயணம் பாட்டு…சூப்பர்..எப்படி இதை மறந்தோம்
சந்திப்பு வரும் வழி கண்டு
மனிதர் சந்திக்கும் இடங்களும் உண்டு
சிலர் சொந்தங்களாவதும் உண்டு
சிலர் தொடர் கதை யாவதும் உண்டு
இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே
எவரை எவர் வெல்லுவாரோ (இறைவன் தான்)
புகைவண்டி ஓட்டிட ஒருவன்
அது செல்லும் வழிசொல்ல ஒருவன்
அந்த இருவரை நம்பிய மனிதன்…
அழகிய வரிகள் கொண்ட பாடல் தாங்க்ஸ் வாசு சார்.
ஜில் ஜில் ஜில் என்றது காளைக்கன்னு பாடலும் நைஸ்..உற்சாகப் பாடல்.. முதன் முதல் பார்க்கிறேன்..அகெய்ன் தாங்க்ஸ்..என் எருமைக் கன்னுக்குட்டியும் நல்ல பாட்டு. (எனக்கு என் சகோதரி நினைவு தான் வருகிறது.. இருபது வருடம் முன் ஒரு நாய் வளர்த்து வந்தார் துபாயில்..அது ஏதாவது விஷமம் செய்தால் உதைப்பேன் எருமை மாடே என் கூட்ப் பேசாதே என்பார்..அப்புறம் அது பரிதாபமாய் ஒரு பார்வை பார்த்து சுற்றிச் சுற்றி வர என் கன்னுக்குட்டிய திட்டிட்டேனாடா ஸாரி எனக் கொஞ்சுவார்!) தாங்க்ஸ்..
என் கண்மணி காதலி உனைப்பார்த்ததும் இனிக்கின்றதே நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ நீ நகைச்சுவை மன்னனில்லையோ – பஸ் பாட்டு..
அப்புறம் இன்றைய ஸ்பெஷல் என்ன வாசு ஜி..
Richardsof
19th September 2014, 08:46 AM
http://i58.tinypic.com/whfeip.jpg
Richardsof
19th September 2014, 08:47 AM
http://i59.tinypic.com/20j1f08.jpg
chinnakkannan
19th September 2014, 08:51 AM
எஸ்.வி சார்..ரேர் படங்களுக்கு ஒரு ஓ.. தாங்க்ஸ்.. அந்த சந்திரபாபுவுடன் இருப்பது யார்..அவர் மனைவியா..அவர் திருமணஃபோட்டோ இருக்கிறதா என்ன..
Richardsof
19th September 2014, 08:54 AM
CHINNAKANNAN SIR
CHANDRA BABU WITH HIS WIFE
http://i61.tinypic.com/2evapg2.jpg
Richardsof
19th September 2014, 08:56 AM
எஸ்.வி சார்..ரேர் படங்களுக்கு ஒரு ஓ.. தாங்க்ஸ்.. அந்த சந்திரபாபுவுடன் இருப்பது யார்..அவர் மனைவியா..அவர் திருமணஃபோட்டோ இருக்கிறதா என்ன..
thanks sir .
Actress name is not known.
chinnakkannan
19th September 2014, 09:03 AM
ஓ.. உடனே தந்தமைக்கு நன்றி எஸ்வி சார்.. திருமண உறவு நீடித்தது ஒருமாதம் தானே சந்திர பாபுவிற்கும் அவர் மனைவிக்கும்..
சந்திரபாபு என்றவுடன் நினைவுக்கு வருவது உற்சாகப் பாடல்கள் தான்
பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
அவன் கனவில் அவள் வருவாள் அவனைப் பார்த்து சிரிப்பார்
அவள் கனவில் யார் வருவார் யாரைப் பார்த்து அழைப்பார்..
உனக்காக எல்லாம் உனக்காக இந்த உயிரும் உடலும்
ஒட்டியிருப்பது உனக்காக.
மேடை \ஏறி ப் பேசும் போது ஆவல் கொள்ளும் பேச்சு
கீழே இறங்கிப்போகும் போது உள்ளதெல்லாம் போச்சு..
ஆயிரம் ஆயிரம் ஆண்டினிலே ஐயா உன்னை நினச்சேனே
அர்ச்சுனன் போல அழ்கிருக்க அனுமார் ஜாதியைப் பிடித்தேனே என எல் ஆர் ஈ இழுக்க பரம்பரை ஞாபகம் போகலையே பழச இன்னும் மறக்கலியே
மரத்துக்கு மரமும் தாவுறியே மனுஷனக் குரங்கா நினைக்கறியே என்ற போலீஸ்காரன் மகள் பாடல்..
காதல் என்பது எதுவரை கல்யாணக் காலம் வரும் வரை
ம்ம் இன்னும் பலவருடங்க்ள் போனாலும் மறக்காத பாடல்கள் மறக்க முடியாத குரல்
chinnakkannan
19th September 2014, 09:05 AM
எஸ்வி சார். நாடோடி மன்னன் படப்பாட்டை விட்டுட்டேனே
தடுக்காதே என்னை தடுக்காதே தடுத்து தடுத்து என் கணக்கை முடிக்காதே..(லிரிக்ஸ் மறந்து போச்சு)
Richardsof
19th September 2014, 09:09 AM
http://i57.tinypic.com/sw4p5t.jpg
http://youtu.be/q-LtkDKXJ8o
rajraj
19th September 2014, 09:16 AM
Actress name is not known.
Looks like Savithri !
rajraj
19th September 2014, 09:25 AM
chinnakkaNNan: You missed his rock and roll song and nee aadinaal naan aaduven naan aadinaal yaar aaduvaar ! :)
I like 'pambarak kaNNaale'. I sang a medley of songs in our golden jubilee including 'pambarak kaNNaale'. :lol:
gkrishna
19th September 2014, 09:43 AM
வெரி குட் morning டு ஆல் of யு
இது சரியா அல்லது
all of யு வெரி குட் morning
இது சரியா அல்லது
குட் morning every body
எல்லோரும் சந்திரபாபு பத்தி பேசிண்டு பாடிண்டு இருக்கேள்
சந்திரபாபு இங்கிலீஷ் உலக பிரசித்தம் அதான் கேட்டேன்
பூ பூவா பூத்திருக்கு ஒரு சூப்பர் பாட்டு ஒன்னு உண்டு
'எங்கப்பா வாங்கி தந்த குதிரை அதிலே ஏறி போக போறேன் மதுரை '
ராஜேந்தர் மாதிரி மியூசிக்ம் போட்டு பாட்டும் எழுதிய மியூசிக் டைரக்டர் வேறு யாரவது .
இளையராஜா 'ஜனனி ஜனனி' நினைவு உண்டு
சௌம்யன் -சேரன் பாண்டியன்
ராஜேந்தர் வேற யாருடைய பாட்டுக்கு மியூசிக் போட்டு இருக்கிறார் ?
இப்படிக்கு
கேள்வியின் நாயகன்
rajraj
19th September 2014, 09:50 AM
ராஜேந்தர் மாதிரி மியூசிக்ம் போட்டு பாட்டும் எழுதிய மியூசிக் டைரக்டர் வேறு யாரவது .
Papanasam Sivan
gkrishna
19th September 2014, 09:51 AM
RARE STILL
http://i60.tinypic.com/2zexrbo.jpg
எஸ்வி சார்
காலையில் உங்கள் கலக்கல் collection அருமை
அதுவும் சந்திரபாபு பாலிஷ் போடும் இடம் :) (மன்னிக்கவும்) படம் சூப்பர்
வாசு தேவா என்னை மட்டும் ரக்ஷி
gkrishna
19th September 2014, 09:52 AM
Papanasam Sivan
வாவ் எச்செள்ளன்ட் professor
gkrishna
19th September 2014, 09:58 AM
டி ராஜேந்தர் அவர்களின் ஒரு rare சாங் மைதிலி என்னை காதலி
பாலாவின் குரலில்
சாரீரம் இல்லாத சங்கீதமா
சம்சாரம் இல்லாமல் சந்தோசமா
சாரீரம் இல்லாத சங்கீதமா
சம்சாரம் இல்லாமல் சந்தோசமா
கிளியே கிளியே எங்கே போன தூக்கம் வரலேயே
ரதியே ரதியே எங்கே போன பசியே எடுக்கலையே
அட கிளியே கிளியே எங்கே போன தூக்கம் வரலேயே
ரதியே ரதியே எங்கே போன பசியே எடுக்கலையே
உன்னை காணாத கண்ணும் தான் கருந்தேளாகி கொட்டுது
உன்னை பாராத பொழுதும் தான் வெரும் பதராகி போனது
யாரவது வடிவேலு பாணியில் 'எல்லாம் போட்டாச்சு போட்டாச்சு' அப்படின்னு சொல்லுவாங்களா ?
vasudevan31355
19th September 2014, 10:24 AM
சி.க.சார்,
தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி சார்.
'புண்ணிய பூமி' நடிகர் திலகம் முரட்டு ராஜு கேரக்டரில்.
http://i.ytimg.com/vi/Tuc380Ec53s/maxresdefault.jpg
'புண்ணிய பூமி'யில் எல்லாப் பாடல்களுமே அருமையாக இருக்கும். ஆனால் ஹிட்டடிக்கவில்லை படம் சுமாராக இருந்ததால். இடைவேளைக்குப் பிறகு சூப்பர். நடிகர் திலகம் தனி ஸ்டைலில் கலக்குவார். அதுவும் கொள்ளைக் கூட்டத் தலைவனாக தொங்கும் துப்பாக்கியுடன் நடை உடையெல்லாம் அற்புதமாக இருக்கும். இந்தப் படத்தில் வரும் நடையை வேறு எந்தப் படத்திலும் நீங்கள் பார்க்க முடியாது. அப்படி வித்தியாசம் காட்டியிருப்பார். நம்பியார் அப்படியே லஷ்மி கல்யாணம் படத்தில் தான் ஏற்ற பாத்திரத்தை நினைவு படுத்தி விடுவார். நடிகர் திலகத்தின் மேல் எந்தக் குற்றமும் இல்லை. காலம் கடந்து மதர் இந்தியாவை தமிழுக்கு மாற்றியதுதான் குற்றம். முதல் பாதி மகா அறுவை. மறுபாதி செம ஜோர். பொதுவாக படம் போர் என்று முத்திரை குத்தப்பட்டு விட்டதால் இடைவேளைக்குப் பிறகு அற்புதமாய் இருந்தும் பேசப்படாமல் போயிற்று.
முரட்டுத்தன பிள்ளை ராஜு கேரக்டரில் பின்னுவார் தலைவர். அதுவும் கோடாரியை ஓங்கி தன் அண்ணன் ராமகிருஷ்ணாவை கோபத்துடன் வெட்டப் போகும் வேகம், நம்பியாரை இறுதியில் பழிவாங்க அவர் வீடு வந்து பத்திரங்களைக் கொளுத்தி தன் தாயின் தங்க வளையல்களை பறித்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டும் வெறி, இறுதியின் தன் தாய் வாணிஸ்ரீ எச்சரித்தும் ஒய். விஜாயவை (தலையில் சிகப்பு கலர் ரிப்பன் கட்டுடன்) குதிரையில் தாய் தன்னை சுடமாட்டாள் என்று அலட்சியமாக கடத்திச் செல்லும் வேகம், தாய் தன்னையறியாமல் துப்பாக்கியால் சுட்டவுடன் சுட்டது தன் தாய்தான் என்று நம்பமுடியாமல் ஒரு வினாடி வியந்து நோக்கி, தன் தாயிடம் வந்து தங்க வளையல்களை கொடுத்து உயிர் விடும் பரிதாபம், கோவில் திருவிழா ஆட்டம் பாட்டம், ஒய்.விஜயாவுடன் கலாய்ப்பு, அண்ணனிடம் முரட்டுத்தனம் அதே சமயம் பாசம், கண்கள் பேசும் விந்தை. (முழியை பெரிதாகக் காட்டுவார்) சண்டைக் காட்சிகளில் அனல் கக்கும்படி செய்திருப்பார். குதிரைச் சவாரி அமர்க்களம்.
யாருக்கு எப்படியோ...
எனக்கு 'புண்ணியபூமி' இடைவேளைக்குப் பிறகு புண்ணிய புருஷரால் புளகாங்கித பூமி.
rajeshkrv
19th September 2014, 10:42 AM
வெரி குட் morning டு ஆல் of யு
இது சரியா அல்லது
all of யு வெரி குட் morning
இது சரியா அல்லது
குட் morning every body
எல்லோரும் சந்திரபாபு பத்தி பேசிண்டு பாடிண்டு இருக்கேள்
சந்திரபாபு இங்கிலீஷ் உலக பிரசித்தம் அதான் கேட்டேன்
பூ பூவா பூத்திருக்கு ஒரு சூப்பர் பாட்டு ஒன்னு உண்டு
'எங்கப்பா வாங்கி தந்த குதிரை அதிலே ஏறி போக போறேன் மதுரை '
ராஜேந்தர் மாதிரி மியூசிக்ம் போட்டு பாட்டும் எழுதிய மியூசிக் டைரக்டர் வேறு யாரவது .
இளையராஜா 'ஜனனி ஜனனி' நினைவு உண்டு
சௌம்யன் -சேரன் பாண்டியன்
ராஜேந்தர் வேற யாருடைய பாட்டுக்கு மியூசிக் போட்டு இருக்கிறார் ?
இப்படிக்கு
கேள்வியின் நாயகன்
illayaraja wrote rasathi manasula, maniye manikkuyile, ullukkulle
janani janani is by Vaali ayya
gkrishna
19th September 2014, 10:45 AM
sorry to all from dinamani
உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாண்டலின் ஸ்ரீநிவாசன் மரணம் அடைந்தார்.
சென்னை வடபழனியில் உள்ள தனயார் மருத்துவமனையில் உடல் நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாசன் இன்று காலை 9.30 மணிக்கு காலமானார்.
http://media.dinamani.com/2014/09/19/madolin.jpg/article2438985.ece/alternates/w460/madolin.jpg
Richardsof
19th September 2014, 10:48 AM
very sad news.
RIP
chinnakkannan
19th September 2014, 10:52 AM
வாங்க வாங்க ராஜ் ராஜ் சார் க்ருஷ்ணா ஜி..
ராஜ் ராஜ் சார்..ஆமாம் ராக் அண்ட் ரோல் விட்டுட்டேன். இப்பப் பாடறது உண்டா…. பாபனாசம் சிவன் மியூசிக் போட்டிருக்காரா என்ன எனக்குத் தெரியாதே.
மைதிலி என்னைக் காதலி போடல்லாம் இல்லை என நினைக்கிறேன் க்ருஷ்ணா ஜி!
புண்ணியபூமி பற்றிய கதைச் சுருக்கத்திற்கு நன்றி வாசு சார் நான் பார்த்ததில்லை..ஊருக்குப் போய் டிவிடி வாங்கிப் பார்க்கிறேன்.
சந்திர பாபுவைப் பொறுத்த வரை நல்ல நடிகர் நெடு நாள் வாழ்ந்து நாகேஷைப் போல் பேரும் புகழும் பெற்றிருக்க வேண்டியவர்..
நாகேஷ்..மூன்றெழுத்தில் எத்தனை உணர்ச்சிகள் முகபாவங்கள் எவ்வளவு நகைச்சுவை.ரியல் லைஃபில் எப்படி என எனக்குத் தெரியாது..ஆனால் ஒரு ரசிகனாக எனக்கு அவரைப் பிடிக்கும்..அவரும் சந்திரபாபுவும் சேர்ந்து ஒரு படத்தில் லூட்டி அடிப்பார்கள் (போலீஸ்காரன் மகள் இல்லை) என்ன படம் என மறந்து விட்டது.சாது மிரண்டால்?
நாகேஷ் நடனம்.. கன்னி நதியோரம் மின்னி விளையாடும்.. இளமையில்
நாகேஷ் நடனம் வித் பிருந்தா நம்மவரில் ஒரு மியூசிக்கிற்கு இருவரும் ஆடும் அழகே அழகு..அதுவும் பெண் தற்கொலை செய்துகொண்டு இறந்து விட ஒரு தகப்பனின் மன நிலை…துக்கம் தொண்டையடைக்க கமல் “ என்ன சார் தேடறீங்க” அங்குமிங்கும் அலைபாய்ந்தபடி நாகேஷ் “சொல்றேன்..சொல்றேன்” ம்ம் எனத் தேடி ஒரு தலையணையை எடுத்து இறந்த மகள் தலைக்கடியில் வைத்து…தலகாணி இல்லாம தூங்க மாட்டா அவளுக்குத் தலைவலிக்கும் எனப் புலம்பியபடி…. நான்கொஞ்சம் தூங்கட்டா எனக் கமலிடம் கேட்கும் கையறு நிலை..பின் மயானத்தில் எரியூட்டிய பிறகு பார்த்தால் தனியாக மகளுடன் ஆடுவதாகக் கற்பனை செய்து ஆடும் நடனம்.மிக உருக்க்கம்
சர்வர் சுந்தரத்தில் கே.ஆர்.விஜயாவிற்காக ஏங்கிய வேடம்.. இறுதிப் படமான தசாவதாரத்தில் கே.ஆர்.விஜயாவின் கணவராக. ம்ம் சில கனவுகள் பலிப்பதற்குப் பலவருடங்கள் ஆகின்றன..
chinnakkannan
19th September 2014, 10:54 AM
very sad news krishnaji.
RIP அவருக்குச் சின்ன வயதோல்லியோ
rajraj
19th September 2014, 10:57 AM
Mandolin Srinivas
May his soul rest in peace.
I remember attending his concert for the first time when he was a teenager..
vasudevan31355
19th September 2014, 10:58 AM
துயராமான செய்தி. நல்ல இசைக் கலைஞனை நாடு இழந்தது.
vasudevan31355
19th September 2014, 11:00 AM
எஸ்வி சார்
அற்புத அரிய புகைப்படங்களுக்கு நன்றி!
rajraj
19th September 2014, 11:01 AM
அவருக்குச் சின்ன வயதோல்லியோ
About 45.
vasudevan31355
19th September 2014, 11:03 AM
ராஜ் ராஜ் சார்,
தங்களது பல்வேறுபட்ட திறமைகளையும், அதே சமயம் தங்கள் தன்னடக்கத்தையும் நேற்றைய பதிவுகளில் படித்து உணர முடிந்தது. தங்கள் கல்கண்டு கதை, எம்ஜிஆர் அவர்களின் ஆட்டோகிராப், பேராசிரியர் தொழில், பாடும் திறமை, கம்ப்யூட்டர் வடிவமைப்பு என்ற பல்வேறு திறமைகளுக்கு என் வந்தனங்கள். தொடர்க தங்கள் தொண்டு.
vasudevan31355
19th September 2014, 11:05 AM
யாரவது வடிவேலு பாணியில் 'எல்லாம் போட்டாச்சு போட்டாச்சு' அப்படின்னு சொல்லுவாங்களா ?
யாராவது என்ன யாராவது? போடல... போடல... அதே ஆள்தான் இப்படி கூவுது.:smile:
rajraj
19th September 2014, 11:06 AM
ராஜ் ராஜ் சார்,
தங்களது பல்வேறுபட்ட திறமைகளையும், அதே சமயம் தங்கள் தன்னடக்கத்தையும் நேற்றைய பதிவுகளில் படித்து உணர முடிந்தது. தங்கள் கல்கண்டு கதை, எம்ஜிஆர் அவர்களின் ஆட்டோகிராப், பேராசிரியர் தொழில், பாடும் திறமை, கம்ப்யூட்டர் வடிவமைப்பு என்ற பல்வேறு திறமைகளுக்கு என் வந்தனங்கள். தொடராக தங்கள் தொண்டு.
Thank you! I will continue to participate. :)
vasudevan31355
19th September 2014, 11:07 AM
யப்பா! ஈஸ்வரி அக்கா நிஜமாகவே பார்க்க ராட்சஸி மாதிரி இருக்காங்களே எஸ்வி போட்ட படத்துல.
vasudevan31355
19th September 2014, 11:10 AM
ராஜேந்தர் இசையில் சுசீலா பாடிய சில பாடல்களை இங்கு பதிவிடவைத்த சாமர்த்தியசாலி கிருஷ்ணா சாருக்கு பாராட்டுக்கள்.
vasudevan31355
19th September 2014, 11:12 AM
சந்திரபாபுவின் படப் பாடல் வரிகள் சில தந்த சின்னக் கண்ணன் சாருக்கு என் நன்றிகள்.
vasudevan31355
19th September 2014, 11:15 AM
கதை உண்டு.. ஒரு கதை உண்டு
இதன் பின்னே ஒரு கதை உண்டு
சொல்லத்தான் நினைத்தது அன்று..
மனம் என்னவோ மயங்குது நின்று
ஆஹா! ஆஹா! எனக்கு உயிரான பாட்டு
தாய்மையும் தெய்வமும் ஒன்று
அது தன்னைகரில்லாது இன்று
ரெகமண்ட் செய்த கிருஷ்ணாவுக்கும், வாரி வழங்கிய மதுஜிக்கும் நன்றிகள்.
Richardsof
19th September 2014, 11:16 AM
100 % azhagana ratchasi
http://i57.tinypic.com/2dtb3t1.jpg
http://youtu.be/gs1s0rRYZ-A
vasudevan31355
19th September 2014, 11:20 AM
http://i59.tinypic.com/vnjl9v.jpg
இந்தப் பூனையா 'காவல் தெய்வத்'தில் குலை நடுங்க வைக்கும் 'சாமுண்டி' கிராமணியாக வந்தது. உலகம் காணாத அதிசயம். Thanks vinoth sir.
gkrishna
19th September 2014, 11:20 AM
illayaraja wrote rasathi manasula, maniye manikkuyile, ullukkulle
janani janani is by Vaali ayya
நன்றி திரு ராஜேஷ் சார்
ஒருமுறை நாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் அவர்கள் இந்த பாடலை திரு இளையராஜா அவர்கள் எழுதியதாக குறிப்பிட்டார் .அந்த நிகழ்ச்சிக்கு திரு இளையராஜா அவர்களும் வந்து இருந்தார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு எதுவும் சொல்லவில்லை .அதனாலேயே ஜனனி ஜனனி பாடல் இளையராஜா எழுதியது என்று பதிவிட்டேன்
மன்னிக்கவும் நிச்சயம் ஜனனி பாடல் வாலி அய்யா அவர்கள் எழுதியது தான் அதில் சந்தேகமே இல்லை . பின்வரும் சம்பவங்களின் கோர்வையின் அடிப்படையில் ஜனனி ஜனனி பாடல் இளையராஜா என்று சொன்னதாக திரு ஜாகிர் உசேன் அவர்கள் கூறினார்
இளையராஜா அவர்களின் இசையில் எத்தனையோ காலத்தால் அழியாப் பாடல்கள் வெளிவந்திருந்தாலும் அவற்றுள் இன்றும் முதலிடத்தில் இருப்பது சந்தேகமேயின்றி தாய் மூகாம்பிகை படத்தில் வரும் ‘ஜனனி ஜனனி’ பாடல் தான். இன்றைக்கும் அவரது இசை நிகழ்ச்சிகள் பலவற்றில் கடவுள் வாழ்த்து பாடலாக பாடப்படுவது இந்த பாடல் தான்.
கேட்போரை ஜாதி, மதம், இனங்களுக்கு அப்பாற்பட்டு உருகச் செய்வதில் இந்த பாடலுக்குக் நிகர் இந்த பாடல் தான்.
‘உயிரை உருக்கும் இசை’ என்பார்களே அதற்க்கு அர்த்தம் இந்த ‘ஜனனி ஜனனி’ பாடல் தான். இருக்காதா பின்னே…. சாட் சாத் அந்த ஆதி சங்கரரே ஆசியளித்த பாடல் அல்லவா அது….!
சென்ற ஆண்டு சென்னை டிரேட் சென்டரில் நடந்த கான்சர்ட் ஒன்றில் இந்த பாடல் உருவான விதம் பற்றி இளையராஜா கூறியிருந்தார். அது பற்றிய பதிவு ஒன்றை நண்பர் பால் ஹனுமானின் தளத்தில் படித்தேன். அவசியம் நம் வாசகர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதால் இங்கு தருகிறேன்.
காலத்தால் அழியாப் பாடல் உருவான சிலிர்க்க வைக்கும் கதையை தெரிந்துகொள்ளுங்கள். பாடலையும் ஒரு முறை கேளுங்கள். அன்னை மூகாம்பிகை ஆசி அனைவருக்கும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்!
================================================== =============
சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் பவதாரணி, இறைவணக்கப் பாடலாய் ‘ஜனனி ஜனனி’யைப் பாடி முடிக்கவும் மைக் பிடித்த இசைஞானியின் குரு திரு. டி.வி. கோபாலகிருஷ்ணன், “இந்த ஜனனி ஜனனி பாடலைக் காலையில் ஒருமுறைக் கேட்டுவிட்டால் அன்று கோயிலுக்குப் போகவேண்டாம்; பூஜை செய்ய வேண்டாம்; அனைத்தும் இந்த ஒரு பாடலிலேயே பொதிந்திருக்கின்றன. இசைஞானி இளையராஜா தன் இசையின் மூலம் உங்களுக்கெல்லாம் இன்பத்தை அள்ளித்தந்துகொண்டிருக்கும் ஒரு மாமேதை. இசையே ஒரு அழகு. அந்த அழகுக்கு அழகுசேர்த்தவர் இவர்தான். இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பதற்காக நான் இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை மெச்சுகிறேன்” என்று கூறியமர, இருக்கையை விட்டு எழுந்து வந்து, விரிக்கப்பட்டிருந்த தன் பிரத்யேக வெண்மெத்தையில் வந்தமர்ந்தார் இசைப்பிதா.
இளையராஜா பேசும்போது ‘இங்கே என்ன பண்ணப்போகிறேன் என்பது எனக்கே தெரியாது. எதுவும் பண்ணிவிடமுடியாது .. இசையைத் தவிர ..! நான் எது செய்தாலும் அது மியூஸிக்தான்..! நான் உங்களைச் சந்திக்க விரும்பியதன் நோக்கம், நான் என் வாழ்வில் அனுபவித்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான். உங்களை மட்டுமல்ல.. நாடு முழுக்க இதே போல சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தப்போகிறேன். எனக்கு வருங்கால மாணவர்களை, இளைஞர்களைச் சந்திக்கவேண்டும்.
நான் இந்த நிகழ்ச்சியை எந்தப் பாடலுடன் துவங்கவேண்டும் என்று நினைத்து வந்தேனோ அந்தப் பாடலைப் பவதாரிணி பாடிவிட்டாள். இந்தப் பாடல் உருவானபோது என்ன நடந்தது என்பதைச் சொல்கிறேன்.
================================================== =
இளையராஜா : டைரக்டர் கே. ஷங்கர் என்னிடம் ”தாய் மூகாம்பிகை” படத்திற்கென ஒரு சிச்சுவேஷன் சொல்லியிருந்தார். அந்த சமயங்களில் இரவு இரண்டு மணிவரை எனக்கு கம்போஸிங் இருக்கும். மீண்டும் காலையில் ரெக்கார்டிங் இருக்கும். இவர்களுக்கு கம்போஸிங்கிற்காக எனக்கு நேரம் ஒதுக்க இயலாமல் இருந்தது. அந்த சமயத்தில் நான் ‘நார்த் உஸ்மான் ரோட்டில்’ ஒரு வாடகை வீட்டில் இருந்தேன்.
-
அடுத்த நாள் பூஜை..! பாட்டு இன்னும் தயாராகவில்லையே என்று டைரக்டர் பதறத் துவங்கிவிட்டிருந்தார். நான் அவரிடம் ‘பதறத் தேவையில்லை. இரவு வீட்டிற்கு வாருங்கள்.. அங்கேயே கம்போஸிங் வைத்துக்கொள்ளலாம்’ என்று கூறினேன்.
-
‘ஆதிசங்கரர் மூகாம்பிகையை பிரதிஷ்டை செய்கிறார். அவர் தியானத்தில் சர்வ சக்திகளும் ஐக்கியமாக அவருக்குக் காட்சியளிப்பதைப் போன்ற’ காட்சி என்று எனக்கு முதலிலேயே சிச்சுவேஷனைச் சொல்லியிருந்தனர். இரவு அனைவரும் வந்துவிட்டனர். நான் குளித்துவிட்டு, பூஜை அறையைக் கடந்தபோது ஆதிசங்கரரின் படம் என் கண்களில் பட்டது. நான் நின்று, “குருவே..! நீங்க என் பாட்டுல வர்றீங்க..” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். என் பக்தி அவ்வளவுதான்.
-
உள்ளே சென்றால் வாலி சார், டைரக்டர், தபலா கன்னையா அண்ணன், என அனைவரும் வந்தமர்ந்திருந்தனர். மீண்டும் சிச்சுவேஷனைச் சொன்னார்கள். வாலி சாரும் கேட்டுக்கொண்டார். கேட்டவுடன் கம்போஸிங் துவக்கினேன். முழுவதும் முடித்துவிட்டேன். டைரக்டருக்கும் பிடித்துவிட்டது. வாலி பாடலை எழுதத் துவங்கிவிட்டிருந்தார். பல்லவி எழுதி முடித்தார். அனைவரும் காபி சாப்பிடக் கலைந்தனர். நானும் எழுந்தேன். வெளியே வந்து யோசித்தால், “ஆதிசங்கரர் யார்..? எல்லாவற்றையும் துறந்தவர் அல்லவா? அந்தத் துறவறம் இந்தப் பாடலில் தெரிகிறதா? எல்லாவற்றையும் விட்டுவிட்டுப்போன அந்த Detachment தெரிகிறதா? Tune சரியாக இருக்கிறது. ஒரு ராகத்தில் சிறப்பாய் இருக்கிறது. ஆனால் இந்தப் பாடல் ஆதி சங்கரர் பாடுவது போலவே இல்லையே..? ஒரு சங்கீத வித்வான் பாடுவதுபோலல்லவா இருக்கிறது. திருப்தியாக இல்லையே..!” என்று எனக்குத் தோன்றியது.
-
நான் மறுபடியும் சென்று, ‘சார்.. ஓ.கே. பண்ணிட்டீங்க. ஆனால் நான் வேறொன்று செய்து தருகிறேன்’ என்றேன். அதற்குள் பாடகர் யேசுதாஸை பாடலைப் பாடவைப்பதற்காக யோசித்துக்கொண்டிருந்தனர். மறுபடியும் உட்கார்ந்தோம். உட்கார்ந்து துவக்கினால்… ’தரரா.. தரரா… (ஜனனி ஜனனி பாடலின் மெட்டைப் பாடிக்காட்டுகிறார்) என்று முடித்தேன். வாலி சார், ‘ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ; ஜகத்தாரணி நீ பரிபூரணி நீ” என்று எழுதினார்.
-
பாடலை முழுவதும் பாடி முடித்தால், கதாசிரியர், அஸிஸ்டண்ட் டைரக்டர்ஸ் அனைவரின் கண்களும் கலங்கியிருந்தன. ‘பாடல் ரொம்பப் பிரமாதமாக வந்திருக்கிறது சார்..!’ என்றார்கள். அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.
-
கம்போஸிங் முடிந்து .. அனைவரும் கலைந்து சென்றனர். நான் எழுந்தேன். ‘குருவே.. என் Tune’ல் நீங்கள் வந்தீர்கள் என்று எப்படி நான் அறிந்துகொள்வது.?’ என்று மனதுக்குள் நினைத்தேன். அப்போது அங்கு ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியின் காற்றில் மிதந்துவந்த காகிதம் ஒன்று என் கையில் அமர்ந்தது. அதை விரித்தால், ‘பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்..’ என்று இருந்தது. பாடத்துவங்கினேன்.
-
‘பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்..
பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்..’
-
(’ஜனனி ஜனனி’யின் மெட்டில் பாடுகிறார்..)
’ஜனனி ஜனனி’ பாடல்.. ‘பஜகோவிந்தம்’ Meter‘ல் அமைந்திருந்தது. ‘அடடே.. குருவே…!! இப்படித்தான் என் பாடலில் வந்தீர்களா..?’ என்று எனக்குச் சொல்லமுடியாத சந்தோஷம்.
-
அடுத்த நாள் ரெக்கார்டிங். யேசுதாஸ் ஊரில் இல்லை. டைரக்டர், ’யேசுதாஸ் பாடினால்தான் நன்றாக இருக்கும்’ என்று கூறினார். நான் டைரக்டரிடம், ‘நான் பாடுகிறேன். ரெக்கார்டிங் செய்துவிடுவோம். அதன்பின்னர் யேசுதாஸ் வந்தவுடன் அவரைப் பாடவைத்து மிக்ஸ் செய்துகொள்ளலாம்’ என்று கூறினேன். அந்த இடத்தில் வேறு வழியில்லாததால் நானே பாடிவிட்டேன்.
சிவ சக்த்யா யுக்தோ
யதி பவதி சக்த ப்ரபவிதும்
நசே தேவம் தேவோ ந கலு
குசல ஸ்பந்தி துமபி
அதஸ் த்வாம் ஆராத்யாம்
ஹரி ஹர விரிஞ்சாதி பிர் அபி
பிரணந்தும் ஸ்தோதும் வா
கதாம் அக்ருத புண்யப் ப்ரபவதீ
http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Adhi-Sankara.jpghttp://rightmantra.com/wp-content/uploads/2013/03/Ilaiyaraja1.jpg
chinnakkannan
19th September 2014, 11:27 AM
நாலுபக்கம் ஏரி . மிகப்பிடித்த பாடல் எஸ்.வி சார். அந்த எல்.ஆர்.ஈ யோட.இழுப்பு ந்நாலு பக்கம் ந்நாலு பக்கம் ந்நாலு பக்கம் ஏரி ஏரியிலே ஏரியிலே ஏரியிலே தீவு ரொம்பப் பிடிக்கும்.. தாங்க்ஸ்..
vasudevan31355
19th September 2014, 11:56 AM
இன்றைய ஸ்பெஷல் (74)
இன்றைய ஸ்பெஷலில் என் உயிரில் கலந்த பாடல். அது இன்று முதல் உங்கள் உயிரிலும் கலக்கட்டும்.
பாடகர் திலகத்தின் என்னுடைய டாப் 10 இல் இடம் பிடித்த பாடல்.
கௌரிக் கல்யாணம்.
"சரவணன் அளிக்கும் சரவணா கம்பைன்ஸாரின் கௌரிக் கல்யாணம்" என்று டைட்டிலின் போது பின்னால் குரல் ஒலிக்கும்.
http://i.ytimg.com/vi/xcY3fXj13y8/hqdefault.jpg
கே.சங்கர் இயக்க, ஜி.வி.சரவணன் தயாரிக்க, ஜெய், ரவி, ஜெயலலிதா, ஷீலா, நாகேஷ், மனோரமா, பண்டரிபாய் என்று நட்சத்திரக் கூட்டம்.
ஒளிப்பதிவு தம்பு.
கதை வசனம் பிலஹரி.
இப்படத்தின் உதவி இயக்குனராக ரா. சங்கரன் இருந்தார். இந்தப் படத்தில் ஜெய்க்கும், ரவிக்கும் கதிகலக்கும் ஒரு சண்டைக்காட்சி ஒன்று உண்டு.
மெல்லிசை மன்னர் இசை. அருமையான பாடல்கள். கண்ணதாசன், பூவை செங்குட்டுவன், பாரதியார் பாடல்கள்.
வரணும் வரணும் மகராணி, திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும், வெள்ளைக் கமலத்திலே, தொட்டது போலே கனவு கண்டேன் தூக்கக் கலக்கமா... என்று ரகளை பாடல்கள்.
'கௌரிக் கல்யாணம்' படத்தில் போஸ்ட்மேன் ஜெய்சங்கர் சைக்கிளில் அனைவருக்கும் கடிதங்கள் கொடுத்தபடி பாடி வரும்பாடல்.
அப்போதைய கம்யூனிகேஷனுக்கு இருந்த ஒரு சில சாதனங்களில் கடிதம் ரொம்ப முக்கியமானது.
அந்த கடிதத்தின் பெருமையை பறை சாற்றும் அருமையான பாடல் இது.
தபால் இலாகாவுக்கே பெருமை சேர்த்த பாடல். பிரிவுத் துயருக்கு அருமருந்து கடிதத் தொடர்பு. அன்று கன்னியரையும், காளையரையும் இணைத்த பாலம் இந்தக் கடிதம்தானே!
வெளியூரிலிருந்து கஷ்டப்பட்டு சம்பாதித்து அனுப்பும் பணம் மணி ஆர்டர் மூலம்தானே அந்த ஏழைத் தாய்க்கு சென்றடைகிறது!
சகோதர சகோதரிகளின் பிரிவை மறக்கடிக்கச் செய்வதும் இந்தக் கடிதம்தானே!
இந்த தபால்காரன் கடிதம் தருவதோடு மட்டுமல்லாமல் "வெளியூரில் இருக்கும் உன் அன்பு மகன் முருகன் அருளால் விரைவில் ஊர் வந்து சேர்ந்து உன்னிடம் அன்பைப் பொழிவான்" என்று ஆறுதலும் கூறுகிறானே!
தபால்காரனாக மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் சைக்கிளில் சென்று கடிதம் தருவது இயல்பு.
எல்லாப் புகழும் பாடகர் திலகத்திற்கே. ஒரு தபால்காரனின் எண்ணங்களை அப்படியே அச்சு அசலாக உள்வாங்கி, குரல் வழியே ஏற்ற இறக்க பாவங்களுடன் பிரதிபலிக்க இவரால் மட்டுமே முடிந்த ஒன்று.
குரலின் இனிமை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதது.
பாடலின் இடையே உற்சாகமாகப் பொங்கும் அந்த விசில் சப்தம்.... அதுவும் சில இடங்களில் விட்டு விட்டு ஒலிக்கும் போது சொர்க்கம் காண்பேன்.
http://i.ytimg.com/vi/j_bHKBG6_oc/hqdefault.jpg
இனி பாடலின் முழு வரிகள்
ஒருவர் மனதை ஒருவர் அறிய
உதவும் தேவை இது
வாழ்வை இணைக்கும் பாலம் இது
ஒருவர் மனதை ஒருவர் அறிய
உதவும் தேவை இது
வாழ்வை இணைக்கும் பாலம் இது
தாயைப் பிரிந்த பிள்ளை என்றாலும்
தாரம் பிரிந்த கணவன் என்றாலும்
தாயைப் பிரிந்த பிள்ளை என்றாலும்
தாரம் பிரிந்த கணவன் என்றாலும்
உடன் பிறந்தோரின் பிரிவென்ற போதும்
பிரிவித் துயரம் பேசிடும் கடிதம்
ஒருவர் மனதை ஒருவர் அறிய
உதவும் தேவை இது
வாழ்வை இணைக்கும் பாலம் இது
(அருமையான விசில் சப்தம்)
காலமகள் எனும் தெய்வ மகள்
கலங்க வைப்பாள் சிரிக்க வைப்பாள்
எந்தெந்த உறையில் என்ன என்ன கதையோ
எந்தெந்த முகத்தில் என்ன என்ன வருமோ
சுகமும் வரலாம் துன்பமும் வரலாம்
இறைவன் அருளால் நலமே வருக
ஒருவர் மனதை ஒருவர் அறிய
உதவும் தேவை இது
வாழ்வை இணைக்கும் பாலம் இது
கன்னியரே காலம் வரும்
காதலரின் தூது வரும்
பிள்ளை அனுப்பும் வெள்ளிப் பணம் நூறு
அன்னை முகத்தில் ஆனந்தம் பாரு
மகனை நினைத்து மயங்கும் மனமே
விரைவில் வருவான் முருகன் அருளால்
மகனை நினைத்து மயங்கும் மனமே
விரைவில் வருவான் முருகன் அருள்வான்
மகனை நினைத்து மயங்கும் மனமே
விரைவில் வருவான் முருகன் அருளால்
மகனை நினைத்து மயங்கும் மனமே
விரைவில் வருவான் முருகன் அருள்வான்
ஒருவர் மனதை ஒருவர் அறிய
உதவும் தேவை இது
வாழ்வை இணைக்கும் பாலம் இது
http://www.youtube.com/watch?v=j_bHKBG6_oc&feature=player_detailpage
இந்த வரிகளை முதன்முறை பாடும் போது 'முருகன் அருளால்' என்றும், அதே வரி பின்னால் திரும்பப் பாடப்படும் போது 'முருகன் அருள்வான்' என்றும் வரும். பாடல் அப்படித்தான் எழுதப்பட்டதா அல்லது ஏதேனும் தவறு நேர்ந்ததா அல்லது 'பாடகர் திலகம்' மாற்றிப் பாடிவிட்டு அது அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பது என் நெடுநாள் சந்தேகம்.
தந்திருக்கும் பாடல் வீடியோவில் நிறைய வரிகளை 'ஸ்வாஹா' பண்ணி விட்டார்கள். அதனால் முழுப் பாடலையும் கேட்டு ரசிக்க
http://www.inbaminge.com/t/g/Gowri%20Kalyanam/
rajraj
19th September 2014, 11:59 AM
பாபனாசம் சிவன் மியூசிக் போட்டிருக்காரா என்ன எனக்குத் தெரியாதே.
Sivakavi with MKT in the lead. "vadhaname chandra bimbamo" and " vaLLalai paadum vaayaal" are from Siivakavi.
gkrishna
19th September 2014, 12:03 PM
(சின்ன) கண்ணனை (i mean கிருஷ்ணா பரமாத்மா):) பற்றி வைரமுத்துவின் கற்பனை
வைரமுத்து சலங்கை ஒலி படத்தில் வான் போலே வண்ணம் என்ற பாடலில் (இசை இளையராஜா பாடியவர்கள் எஸ் பி பி, எஸ் பி ஷைலஜா) ஒரு ட்விஸ்ட் சொல்கிறார். கன்னியருடன் விளையாடியவன், பெண்களோடு அலைந்தவன் கோபியரின் சேலைகளை எடுத்தது பாஞ்சாலி கேட்கும்போது கொடுப்பதற்காகவே என்று ஒரு ஜோடனை.
பெண்கள் உடை எடுத்தவனே
தங்கைக்கு உடை கொடுத்தவனே
சேலைகளைத் திருடி அன்று செய்த லீலை பலகோடி
கண்ணதாசன் பூவும் பொட்டும் படத்தில் எழுதிய பாடலில் (இசை கோவர்தனம் பாடியவர் பி சுசீலா)
எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழ தன்னை தந்தான் அம்மம்மா
என்ற வரிகளில் பெண் மானம் காக்க கண்ணன் தன்னையே தந்தான் என்கிறார். அவர் கையிலிருந்தே மீட்டர் கணக்கில், பல வண்ணங்களில் சேலைகள் என்பது வழக்கமான விளக்கம்
கருத்துகளை பகிர்ந்து கொள்ள உதவிய நண்பர் மோகனக்ரிஷ்ணன் அவர்களுக்கு நன்றி
vasudevan31355
19th September 2014, 12:07 PM
'Palkon Ki Chhaon Mein' இந்திப் படத்தில் இதே மாதிரி 'கௌரிக் கல்யாணம்' மாதிரி போஸ்ட்மேன் ராஜேஷ்கண்ணா பாடும் பாடல் 'Daakiya Daak Laaya'. தமிழ் மாதிரி வராது. பாடலில் ராஜேஷ்கண்ணாவை மட்டுமே 'கண்ணா' பார்க்கவும். அதை மீறி அருணா இராணி குளித்துவிட்டு வருவதை கண்கள் மேய்ந்தால் நான் பொறுப்பல்ல. இருவருக்கு இந்த அன்பு எச்சரிக்கை. :smile:
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-HhUdym9V2Q
gkrishna
19th September 2014, 12:20 PM
வாசு சார்
இன்றைய ஸ்பெஷல் .இந்த கௌரி கல்யாணம் பற்றி ஒரு சிறு தகவல் என் பொறியில் தட்டியது . சண்டை காட்சிகளை பற்றி இரண்டு தினங்களுக்கு முன் பேசி கொண்டு இருந்தோம். இந்த படத்தில் ஜெய் மற்றும் ரவி இருவரும் சண்டையிடும் காட்சி மிக ஆக்ரோஷமாக இருக்கும். அந்த காலத்தில் பாத்திரக்கடை பைட் என்று சொல்வார்கள். இரண்டு முன்னணி ஹீரோகள் ஒரே திரைபடத்தில் எதிரும் புதிருமாக இருந்தால் இரண்டு தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்த இயக்குனர் மற்றும் சண்டை காட்சி அமைப்பாளர் மிகவும் சிரமபடுவார்கள். இரண்டு ஹீரோகளும் ஈகோ இல்லாமல் காட்சி அமைக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அக்னி நட்சத்திரம் திரை படத்தில் கூட இளைய திலகம் பிரபு ,நவரச நாயகன் கார்த்திக் இருவரும் சண்டை போடும் இறுதி காட்சி குதிரை லாயத்தில் எடுத்து இருப்பார்கள்.
நீங்கள் முதல் பாகத்தில் தபால் காரன் தங்கை படத்தை பற்றி கூறும் போது நாம் இருவரும் இந்த 'ஒருவர் மனதை ஒருவர் அறிய' பாடலை பற்றி விரிவாக அல்லாமல் ஒரு வரி விமர்சனம் எழுதி இருந்த நினைவு.
அப்போது ராஜேஷ் கண்ணா பற்றி ஒரு பேச்சு வந்தது .அது என்ன என்று மறந்து விட்டது .நினைவிருந்தால் தெரியபடுத்தவும்
இந்த பாடலை படிக்க ஆரம்பிக்கும் போதே பாடலின் விசில் சப்தத்தை நிச்சயம் குறிப்பிட்டு இருப்பீர்கள் என்று நினைத்து கொண்டே படித்தேன். நீங்களும் அப்படியே குறிப்பிட்டு இருக்கிறீர்கள் .உண்மையில் அந்த விசில் சப்தம் சொர்க்கம் தான். விசில் என்றுடன் ஒரு நினைவு உண்டு
'ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்து இருந்தான் ' சுசீலாவின் பாடலுக்கு ஊடே இது போன்று ஒரு விசில் சப்தம் வரும்
'நாணம் ஒரு புறம் ,ஆசை ஒருபுறம்
கவலை ஒருபுறம் அவள் நிலைமை திரிபுரம்' என்ற வரிகளுக்கு நடுவே இது போன்று ஒரு விசில் சப்தத்தை நாம் உணரலாம்
அதே போல் எங்க மாமா படத்திலும் 'செல்ல கிளிகலாலம் பள்ளியிலே '
பாடலிலும் இது போன்று ஒரு அனுபவத்தை சந்திக்கலாம்
vasudevan31355
19th September 2014, 12:30 PM
இன்றைய ஸ்பெஷலில் வந்திருக்கும் 'ஒருவர் மனதை ஒருவர் அறிய' பாடலின் ஆரம்ப இசையைக் கேளுங்கள். (ஆடியோ லிங்கில்) இந்தப் படத்திற்கு பின் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் சென்று வெளிவந்த உலகப் புகழ் பெற்ற 'ஆராதனா' படத்தின் 'Mere Sapnon Ki Rani' பாடலின் இசையையும் கேட்டு 'கௌரிக் கல்யாணம்' பாடலின் ஆரம்ப இசையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அசந்து போவீர்கள். லஷ்மிகாந்த் பியாரிலால் பின்னால் தந்த இசையை 3 வருடங்கள் முன்னாலேயே தந்துவிட்டார் ஒன்றுமே தெரியாத நமது விஸ்வநாதன்.
gkrishna
19th September 2014, 12:34 PM
அதனால் தான் அவர் மக்கு (M) எஸ் (S) என்று எல்லாவற்றிகும் மண்டை ஆட்டும் PRO விஸ்வநாதன் :mrgreen:
chinnakkannan
19th September 2014, 12:37 PM
வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே மிகப் பாடல்..!
**
இரவு தான்.. வானில் முழு மதி வெளிச்ச கிரணங்கள் கீழே பாய்ச்சி வந்த போது சற்றே திகைத்தது.
கீழே இருப்பது யார்..இரண்டு பெண்கள்..இளமைப் பருவம்..கண்களில் கனவூறி காண்பவரைக் கொள்ளை கொள வைக்கும் அழகு..ஆனால் இதென்ன.. கிக் கிக் என ச் சிரிக்கவேண்டிய இதழ்கள் மூடியிருக்கின்றன கண்கள் சிவந்திருக்கின்றன. கண்ணோரம் வழியே வழிந்த நீரின் கறை காய்ந்துமிருக்கிறது..இருவரும் எதை வெறித்து ப் பார்க்கிறார்கள்..எதிரே இருந்த மலையை..
கீழே அந்தக் குடிலுக்கு வெளியே இருந்தவர்கள் பாரியின் மகள்கள் அங்கவை சங்கவை.. அவர்களது அழுகைக்குக் காரணம் இந்தப் பெளர்ணமி வெண்ணிலா..
ஆம். போன பெளர்ணமியின் போது அவர்களது தந்தையான பாரி உயிரோடு இருந்தார்..இந்த பெளர்ணமி ஒளி அந்தப் பறம்பு மலையில் பட்ட போது அங்கவை சங்கவை இருவரும் தனது தந்தை தாயொடு மகிழ்ந்து இருந்தார்கள். பறம்பு மலையும் அவர்களது சொந்தமாய் இருந்தது..
இன்றும்பெள்ர்ணமி.. கலகலப்பாய்ச் சந்திரன் வானத்தில்.பறம்புமலையும் இருக்கிறது..என்ன அது அவர்களுக்குச் சொந்தமில்லை.. போன பெளர்ணமியில் இருந்த மன்னன் பாரி அவர்கள் தந்தை உயிருடன் இல்லை.. சந்தோஷ நாட்கள் போய் இப்போது பெளர்ணமியிலும் சோக இருள் சூழ்ந்திருக்கிறது அவர்களை..
பாடல் வருகிறது..
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார்
இற்றைத்திங்கள் இவ்வெண்ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தர் எம்
குன்றும்கொண்டார்யாம் எந்தையும் இலமே (புற நானூறு 112)
சோகம் தான்.கபிலர் தான் அந்தப் பெண்களைக் காத்து மணம் செய்வித்து வைத்தார் என்பது வ்ரலாறு..
*
திரைப்பாடல் நினைவுக்கு வந்திருக்குமே
அன்று வந்ததும் இதே நிலா குழு : சச்சச்சா
இன்று வந்ததும் அதே நிலா குழு : சச்சச்சா
என்றும் உள்ளது ஒரே நிலா குழு : சச்சச்சா
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா ஆ.....ஆ......
அம்பிகாபதி கண்ட நிலா அமராவதியைத் தின்ற நிலா
அம்பிகாபதி கண்ட நிலா அமராவதியைத் தின்ற நிலா
கம்பன் பாடிய வெள்ளி நிலா கவியில்
ஆடிய பிள்ளை நிலா ஆ...ஆ..
கவியில் ஆடிய பிள்ளை நிலா ..
காதல் ரோமியோ கண்ட நிலா கன்னி ஜூலியட் வென்ற நிலா
பாவை லைலா பார்த்த நிலா பாலைவனத்தின் வண்ண நிலா
நாடுதோறும் வந்த நிலா நாகரிகம் பார்த்த நிலா
பார்த்துப் பார்த்து சலித்த நிலா பாதி தேய்ந்தது வெள்ளை நிலா ஆ...ஆ...
**
இனி சோகம்:
அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
இன்பம் தந்ததும் ஒரே நிலா
ஏங்க வைப்பதும் ஒரே நிலா ..
காதல் தந்தது வண்ண நிலா
களங்கமில்லா கன்னி நிலா
மேகம் மூடிய வெள்ளி நிலா
வெள்ளை உள்ளம் கொண்ட நிலா
பேசச் சொன்னது அன்பு நிலா
பிரியச் சொன்னது துன்ப நிலா
தூங்கச் சொன்னது காதல் நிலா
துடிக்க விட்டது கால நிலா
அழகாய் சூழ் நிலைக்கு த் தக்கனவாய் காதல் மகிழ்ச்சி காதல் சோகம் என எழுதியிருப்பார் கவிஞர் .காலப் போக்கில் பிரிவானதால் துடிக்கவிட்டிடுத்தாம்
நிலா காதலர்களை.. ம்ம்
நிலா என எடுக்காமல் நாம் பார்க்க வேண்டியது வெண்ணிலா.. என்பதால் முதலில் வருவது..
இந்தப் பொண்ணைப் பாருங்களேன்.. இளம்பருவம்.. உடலில் பருவத்தால் விளைந்த ஊக்கம், தாக்கம், ஏக்கம் இவையெல்லாம் கூட இரவில் உறக்கம் வரவில்லை. கண்களும் விழித்திருக்கிறது..உள்ளமும் விழித்திருக்கிறது.பாடுகிறாள்..
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
எண்ணிலாக் கனவுகளில் எதையெதையோ நினைத்திருந்தேன்
நாலு வித குணமிருக்கும் அஞ்சுகின்ற மனமிருக்கும்
(அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு என்ற நால்வகைக் குணம் பெண்களுக்கு இருக்கும்..அதில் காதல் வயப்பட்ட பெண்களுக்கு. அச்சோ.. இவனைப் பிடிச்சுருக்கே இந்த படவா கண்ணுலயே மயக்கப் பார்க்கறானே.. மெல்லத் தொட வர்றானே..ஓ. எல்லை மீறக் கூடாதே.என மனசுக்குள் குரல் ஒலிச்சு பயப்படுத்தும்)
ஆறுகின்ற பொழுது வரை அனல் போல் கொதிப்பதெது?
ஆசை கொண்ட இதயமது (இது சும்மாச்சுக்குச் சொல்லிக்கறா.. அனல் போல் கொதிப்பது உடலென்று அறியாத சிறுமியா அவள்)
வான வில்லின் நிறமெடுத்து மேகமென்னும் வெண் திரையில்
மின்னல் எனும் தூரிகையால் நான் வரைந்த கோலமெது?
கன்னி எந்தன் வடிவமது ( ஒரு வேளை ஓவர் கான்ஃபிடன்ஸோ..பரவால்லை தன்னழகுல்ல நம்பிக்கை வைத்திருக்கும் பெண்ணழகு..குட்..)
காமன் கை வில்லெடுத்து அஞ்சு விதப் பூத் தொடுத்து
பூமகளின் நெஞ்சினிலே போர் தொடுக்கும் நேரமெது?
மஞ்சள் வெயில் மாலை அது (பாடறது ராவேளைல. ஆனால் ஈவ்னிங்க் டயத்துலருந்தே ஒரு மாதிரி ஆகிவிடுகிறது ஆசைகொண்ட நெஞ்சமும் உடலும்)
முத்துச் சிப்பி வாய் திறக்க மோகம் கொண்டு துடித்திருக்க
கொட்டும் மழைத் துளி விழுந்து கொஞ்சக் கொஞ்ச என்ன வரும்?
முத்து ஒன்று பிறந்து வரும்
( சீக்கிரம் அம்மா அப்பா கிட்ட பேசி கல்யாணம் பண்ணி வைக்கணும் இந்தக் கன்னிக்கு..காதல் கொஞ்சம் ஓவராகிடுத்து போல..)
**
நெக்ஸ்ட் என்னவாம்.
இன்னொருகாதலனுக்குக் கோபம்.
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னக்கண்டு.. உன்னைக் கண்டு
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே - இதை
எண்ணி எண்ணி .. எண்ணி எண்ணி
எண்ணி எண்ணி என்தன் நெஞ்சம் ஏங்குதே
பின்ன காதல்னா பொஸஸிவ்னெஸ் இல்லாமயா இருக்கும்
இன்னும் இரண்டு ஜோடிகள் அந்த நிலாவொளி தன்னை வாட்டக் கூடாது தன் ஜோடிய வாட்டட்டும்னுபாடிக்கறாங்க.
உள்ளமெல்லா மிளகாயோ
ஒவ்வொரு தே சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்ததுபோல் வெண்ணிலவே நீ சிரித்தாயோ..
கோதையெனைக் காயாதே கொற்றவரைக் காய் வெண்ணிலா
அப்புறம் சேர்ந்திருக்கணும்னு ஆசை வர. இருவரையும் காயாதே தனிமையிலே காய் வெண்ணிலா என்கிறார்கள். இந்த வெண்ணிலா அப்பவாவது திருந்திச்சா என்ன..
**
பாரதியின் தீர்த்தக் கரைதனிலே யில் வரும் பிரிவு ஏக்கப் பாட்டு. வானில் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்..
அழகிய பாடல்..
நிறையபாடல்கள் எல்லாம் காதலைச் சுமந்தே வந்திருக்கின்றன..குட்டிலிஸ்ட் போட்டால்
நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த பெண்ணிலா
வராமல் வந்த என் தேவி.
நீயிலாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா..
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையை
தன்பிடிவாதம் விடாது என்மனம்போல் நடக்காது
தனக்கென ஏதும் சொலாது நம்மையும் தூங்க விடாது.
*
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ மன்னவா வா மன்னவா வண்ணப்
பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ
நேற்று கனவாக நான் கண்ட இன்பம்
இன்று நனவாக நீ இங்கு வந்தாய்
ஆலிலை பனி போல நான் வாழ்ந்த வேளை
அள்ளிய கைகள் உங்கள் கையல்லவா
*
ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அசைந்தாடும் தாரகையாக அசைந்தோடி ஆடுதே ஆனந்தம் தேடுதே (யார்யார்..)
*
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே (மைக், சொர்ண புஷ்பம்
*
ஐஸீம் வைர முத்துவும்..
வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல்
கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல்
தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே சொல்
கண்களை மூடினால் கண் வந்து உள்ளம் கிள்ளும்
கட்டிலை நாடினால் இரவின்று நீளம் கொள்ளும்
வேரோடு துடிக்க யாரோடு உரைக்க
கனாக் கண்ட காட்சிகள் கையில் வருமா
(ஹை.இதையே தான் வெண்ணிலா வானில் வரும் வேளையில் பாட்டும் பேசுதா..)
*
இன்னும் நிறைய வெண்ணிலா இருக்கிறது. ப்ராஜெக்ட் பாஸா இல்லையான்னு தெரியலை.. எனில் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்..-
//vandhu vandhu konjuvadhen veNNilaave
-vaana meedhil neendi Odum veNNilaave
-veNNilavin oLithanil veesum thendral// இது என்ன பாட்டுன்னு தெரியவில்லை.
ஆனால்…எல்லார் வாழ்க்கையிலும் வெண்ணிலா ஒருபங்கு உண்டு.குறிப்பாக அன்று கல்லூரிப் பருவத்தில் மதுரையின் மொட்டை மாடியில் இருந்த போது…..பக்கத்து வீட்டு…(சரி சொன்னால் கதை என்பார்கள்…சொல்லாதே கண்ணா..
பின்ன வரட்டா.:)
vasudevan31355
19th September 2014, 12:40 PM
krishna sir,
antha pachcha bootham rombave uggiramaa payamuruthuthu. naan payanthu enna panaa? muthalla masuthi poai manthirichikkanum.:smile:
chinnakkannan
19th September 2014, 12:48 PM
வாசு சார்.. இன்றைய ஸ்பெஷல் ஒருவர் மனதை ஒருவர் அறிய …சூப்பர்.. பாட்டுக் கேட்டிருக்கிறேன்..இந்த சிச்சுவேஷன் என்று தெரியாது..
அதேபோல் ராஜேஷ் கன்னா ஹிந்திப் பாடலுக்கும் நன்றி அண்ட் ஒருஓ. ..பாவம் அந்த அருணாஇரானிகாரிகை..சமர்த்தா குளிச்சுட்டு கோவிலுக்குப் போற வழில்ல கடிதம் தானே எழுதச் சொல்லுது. நான் அவங்களைப் பார்க்கலை :) இரண்டுக்கும் நன்றி…
gkrishna
19th September 2014, 12:59 PM
krishna sir,
antha pachcha bootham rombave uggiramaa payamuruthuthu. naan payanthu enna panaa? muthalla masuthi poai manthirichikkanum.:smile:
மாரியாத்த காளியாத்த
மாரியாத்த காளியாத்த
gkrishna
19th September 2014, 01:04 PM
http://www.myenergyworks.com/Fullmoon777.jpg
ceekay sir
உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
'வானில் முழு மதியை கண்டேன் '
'வெண்ணிலா முகம் மங்கலம் தரும் '
chinnakkannan
19th September 2014, 01:07 PM
//உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
'வானில் முழு மதியை கண்டேன் '
'வெண்ணிலா முகம் மங்கலம் தரும் ' // இவை இரண்டையும் செலக்ட்செய்து வைத்திருந்தேன்.. விட்டுவிட்டது.. வெண்ணிலா முகம் நல்லபாட்டு..உ. நா பா வெண்ணிலா வேளையில் துள்ளல். வானில் முழுமதில வெண்ணிலா வரலையே
ஆமா எதப் பார்த்து வாசு சார் பயந்துட்டார்.எனக்குப் புரியலை
madhu
19th September 2014, 01:09 PM
பௌர்ணமி நிலவில் என்று ஒரு படம்.. விஜயன் நடித்தது... ஆங்கில "ssssssnake" படம் போல விஜயனின் நாக்கு பாம்பாக மாறுவது போல போஸ்டர் அடிச்சிருந்தாங்க.
அதிலே "முழு நிலவு காயும் நேரம்... தாழை மடல் பூவின் வாசனை.. மனதில் ஒரு காதல் வேதனை" என்று ஜெயச்சந்திரன் பாடும் பாட்டு ஒன்று உண்டு. வீடியோவை நினைக்காவிட்டாலும்.. ஆடியோ கூட எங்கேயும் கிடைக்கவில்லை.
யாராவது உதவுங்க ப்ளீஸ்...
( இன்னும் பழைய ரிக்வெஸ்ட் ரெண்டு pending இருக்குது .... )
vasudevan31355
19th September 2014, 01:10 PM
'மாரியாத்தா காளியாத்தா' எனக்கா இல்ல அருணா இராணி குளிக்கறதப் பார்க்காம இந்தப் பக்கம் திரும்பிகிட்ட நம்ம சினா கானாவுககா கிருஷ்ணா சார்?
மகமாயி... வாழ்க்கையிலேயே அண்டப் புளுக இன்னைக்குதான் கேள்விப்படறேன்.
chinnakkannan
19th September 2014, 01:16 PM
//மகமாயி... வாழ்க்கையிலேயே அண்டப் புளுக இன்னைக்குதான் கேள்விப்படறேன். // :) kannaa unnai yaarumE namba maattEngaraagaLE.unmaiyaich chonnaa! :)
madhu
19th September 2014, 01:17 PM
வானில் முழுமதில வெண்ணிலா வரலையே
முழுமதின்னா வெண்ணிலாதானே ... ( அன்று வந்ததும் இதே நிலா பாட்டில் மட்டும் வெண்ணிலா வந்துதான்னு எதிர்க் கேள்வி கேட்க மாட்டேன் )
வெண்ணிலா முகம் பாடுது அது கண்ணிலே சுகம் தேடுது
வெண்ணிலா நேரத்திலே வேணுகானம்
வெண்ணிலாவும் வானும் போலே வீரனும் கூர்வாளும் போலே
வெண்ணிலா ஜோதியை வீசுதே
வானமீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே
என்றெல்லாம் பழைய பாடல்களும்
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா
என்று புதுப்பாடல்களும் ப்ராஜக்ட்டுக்கு வெயிட்டிங் சிக்கா
chinnakkannan
19th September 2014, 01:19 PM
//புதுப்பாடல்களும் ப்ராஜக்ட்டுக்கு வெயிட்டிங் சிக்கா // கன் டின்யூ பண்ணுகிறேன்..வி.போ பாடல்களை.மதுண்ணா :)
gkrishna
19th September 2014, 01:43 PM
பௌர்ணமி நிலவில் என்று ஒரு படம்.. விஜயன் நடித்தது... ஆங்கில "ssssssnake" படம் போல விஜயனின் நாக்கு பாம்பாக மாறுவது போல போஸ்டர் அடிச்சிருந்தாங்க.
அதிலே "முழு நிலவு காயும் நேரம்... தாழை மடல் பூவின் வாசனை.. மனதில் ஒரு காதல் வேதனை" என்று ஜெயச்சந்திரன் பாடும் பாட்டு ஒன்று உண்டு. வீடியோவை நினைக்காவிட்டாலும்.. ஆடியோ கூட எங்கேயும் கிடைக்கவில்லை.
யாராவது உதவுங்க ப்ளீஸ்...
( இன்னும் பழைய ரிக்வெஸ்ட் ரெண்டு pending இருக்குது .... )
மது சார்
இது காஜா படம் என்று நினைவு கடையநல்லூர் சினி ஆர்ட்ஸ்
விஜயன் கண் நீயா ஸ்ரீப்ரிய போன்று பாம்பு கண்ணு .
கதாநாயகி நினைவில் இல்லை
கங்கை அமரன் இசை இல்லையோ
gkrishna
19th September 2014, 04:35 PM
ரோஜாவின் ராஜா படம்.சிவாஜியும் வாணிஸ்ரீயும் காதலர்கள். சிவாஜியின் நண்பர் ஏவிஎம் ராஜன். பெண்பார்க்கப் போன இடத்தில் தன் காதலியையே நண்பனுக்குப் பெண்பார்க்க வந்திருப்பது நாயகனுக்குத் தெரிகிறது. பெண்ணைப் பாடச்சொல்லிக்கேட்பது அந்தக்காலத்துப் பழக்கம்.தன் நிலையையே பாடுகிறாள் நாயகி. சீதையின் சுயம்வரத்தையே உருவகித்துப் பாடுகிறாள்.
இராமனும் சீதையும் திருமணத்திற்கு முன்னரே ஒருவரையொருவர் பார்த்து இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர் என்பது வான்மீகியில் இல்லாத காட்சி. கம்பனின் கற்பனை. அதையே களமாக்கிப் பாடுகிறபோது கம்பன் கூட சொல்லாத ஒரு காட்சியைத் தன் கற்பனையில் உருவாக்கித்தருகிறார் கண்ணதாசன்.
ஜனகனின் மகளை மணமகளாக இராமன் நினைத்திருந்தான்-
ராஜாராமன் நினைத்திருந்தான்-அவள்
சுயம்வரம் காண மன்னவர் பலரும்
மிதிலைக்கு வந்திருந்தார்....மிதிலைக்கு வந்திருந்தார் என்பது பல்லவி.
மணிமுத்து மாணிக்க மாடத்தில் இருந்து ஜானகி பார்த்திருந்தாள்-இரு
மைவிழி சிவக்க மலரடி கொதிக்க இராமனைத் தேடிநின்றாள்
நாணம் ஒருபுறம் ஆசை ஒருபுறம்
கவலை ஒருபுறம் அவள் நிலைமை திரிபுரம்
கொதிக்கின்ற மூச்சும் மாலையில் விழுந்து மணியும் கருகியதே-அவள்
கூந்தலில் இருந்த மலரும் ஜானகி நிலைமைக்கு உருகியதே
இதுவரையில், பெண் இராமாயணத்தைப் பாடுவது போல்தான் தெரிகிறது. சுற்றியுள்ள மற்றவர்களுக்குத் தெரியாது.அடுத்த சரணம் ஆரம்பமாகிறது.
வந்திருப்பவனே மாப்பிள்ளை என்று பேசி முடிவுசெய்தால் என்ன செய்வது? சபையில் தன் மனவோட்டத்தை அவள் மறைக்க முயல்கிறாள். முடிகிறதா??
நெஞ்சை நினைத்தாள் நினைவை மறைத்தாள் கண்களை மறைக்கவில்லை-அவள்
மஞ்சள் முகத்தில் ஓடிய கண்ணீர் மறைத்தும் மறையவில்லை
முனிவன் முன்புறம்-ஸ்ரீராமன் பின்புறம்
சீதை தனியிடம்-அவள் சிந்தை அவனிடம்
இதுவரை சீதையின் நிலையையும் நாயகியின் நிலையையும் சேர்த்தாற்போல் பாடுகிறார் கவிஞர்.. அடுத்து அவர் பாடுகிற கற்பனைதான் கம்பனில் கூட இல்லாதது.
மன்னவரெல்லாம் சுயம்வரம்நாடி மண்டபம் வந்துவிட்டார்-வேறு
மன்னவன் யாரோ வில்லை எடுத்தான் ஜானகி கலங்கிவிட்டாள் என்கிறார் கவிஞர்.
கம்பனைப் பொறுத்தவரை சுயம்வரத்திற்கு வந்தமற்றவர்களால் அந்த வில்லைஅசைக்கக்கூட முடியவில்லை. விசுவாமித்ரர்,இராமனை, சுயம்வரத்திற்கு வந்ததாகவே ஜனகனிடம் அறிமுகப்படுத்தவில்லை. இங்கு நடக்கும் விருந்தை வேடிக்கை பார்க்கத்தான் வந்தார்கள். உன் வில்லையும் ஒரு கை பார்ப்பார்கள் என்று கிண்டலாகச்சொல்கிறார் விசுவாமித்ரர்."விருந்து காணிய வந்தார்-உன் வில்லும் காண்பார்" என்பது கம்பன் வாக்கு.
ஆனால் காதலன் முன்னிலையிலேயே வேறொருவன் பெண்பார்க்க வந்ததை,
"வேறு மன்னவன் யாரோ வில்லை எடுத்தான் ஜானகி கலங்கி விட்டாள்" என்று கவிஞர் பாடும் உத்தி காட்சிக்குப் புதிய கனத்தையே கூட்டி விடுகிறது.
http://s1.dmcdn.net/0sej.jpghttp://s1.dmcdn.net/0sv1.jpg
நன்றி - மரபின் மைந்தன்
Russellmai
19th September 2014, 04:45 PM
21-9-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 9-00 மணிக்கு விஜய்
தொலைக்காட்சியில் நீயா நானா நிகழ்ச்சியைக் காணத் தவறாதீர்கள்
கோபு
gkrishna
19th September 2014, 05:22 PM
மூன்று மணிநேரம் திரையில் ஓடும் கதையின் அடிப்படை உணர்வை மூன்று நிமிடம் ஒலிக்கும் பாடல் வெளிப்படுத்த முடியுமா? சில திரைப்பாடல்கள் அதை அற்புதமாகச் சாதித்து விடுகின்றன. இவ்வகைப் பாடல்களை ‘உணர்வுகளின் ஊர்வலம்’ என்று கூறிவிடலாம்.
அன்புக்குரிய மனைவியுடன் கலப்படமற்ற பாசத்துடன் பழகும் நண்பனைப் பலர் சரியாகப் புரிந்துகொள்வதில்லை. திரை மட்டும் விதிவிலக்காக இருக்குமா? நண்பனைக் கோபித்துக் கொள்ளாமல் தன் மனைவி மீது சந்தேகப்படும் கதாநாயகன், காலம் கடந்து வருந்தும் உணர்வும், அம்மாதிரி சந்தர்ப்பங்களில் தன்னைச் சரியாகப் புரிந்துகொள்ளாத நண்பனை எண்ணி வருந்தும் கதாநாயகனின் உணர்வும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.
இவ்வாறான உணர்வுச் சங்கமத்தின் இரு அம்சங்களை அழுத்தமாக வெளிப்படுத்தும் இந்தி, தமிழ்த் திரைப் பாடல்கள் அற்புதமானவை.
ராஜேஷ் கன்னா, மும்தாஜ்-சஞ்சீவ் குமார் ஆகியோருடன் இணைந்து நடித்த ‘ஆப் கி கசம்’ (உன் மேல் ஆணை) என்ற வெற்றிப் படத்தில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது. ‘வாழ்வே மாயம்’ என்ற மலையாள வெற்றிப் படத்தின் தழுவல் இது. இப்படத்தின் இப்பாடலை எழுதியவர் ஆனந்த் பக்ஷி. இசை அமைப்பாளர் ஆர்.டி. பர்மன்.
பாடல்:
ஜிந்தகி கா சஃபர் மே குஜர் ஜாத்தே ஜோ மகாம்
வோ ஃபிர் நஹீன் ஆத்தே, வோ ஃபிர் நஹீன் ஆத்தே
ஃபூல் கில்த்தே ஹைன் லோ மில்த்தே ஹைன்
லேக்கின் பர்ஜா மே ஜோ ஃபூல் முர்ஜாத்தே ஹைன்
வோ பஹாரோன் ஆனே ஸே கில்த்தே... நஹீன்
பொருள்:
வாழ்க்கைப் பயணத்தில் தொலைந்துவிட்ட
நொடிக் கண்ணிகள் மீண்டும் வருவதில்லை
மீண்டும் வருவதில்லை.
பூக்கள் மலருகின்றன.
மனிதர்கள் கிடைக்கின்றனர்
ஆனால், மொட்டிலேயே
கருகிவிடும் பூக்கள்
பூக்கும் பருவம் வருவதால் மலர்வதில்லை.
சிலர் ஒரு தருணத்தில் (மற்றவர்களுடன்)
பிணங்கிவிடுகிறார்கள்
ஆயிரம் பேர் பின்னர் (நம்மிடம்) வந்தாலும்
அவர்களின் சந்திப்பு (மீண்டும்) கிடைப்பதில்லை
வாழ்நாள் முழுவதும் அவர்களின் பெயரைக்
கூவி அழைத்தாலும் அவர்கள்
மீண்டும் வருவதில்லை.
மீண்டும் வருவதில்லை.
கண்கள் ஏமாற்றும். கண்ணை நம்பாதே.
கேள் நண்பன் மீது கொள்ளும் சந்தேகம்
நட்புக்கு விரோதமாகும்.
நம் உள்ளத்தில் இது குடி புக
இடம் அளிக்காதீர்கள்
நாளை அல்லல்பட நேரிடும்
தடுத்து நிறுத்த வேண்டியவர்களை (தடுக்காமல்)
நோகடித்துப் போகவிடாதீர்கள்
அப்புறம் விரும்பும்வரை
ஆயிரம் அன்பு வணக்கங்களை அனுப்பினாலும்
அவர்கள் வர மாட்டார்கள். வர மாட்டார்கள்
காலை வருகிறது. இரவு கழிகிறது.
இப்படியே காலம் சென்றுகொண்டிருக்கிறது
நிற்பதில்லை ஒரு நிலையில் அது
முன்னோக்கிப் புறப்பட்டுச் செல்கிறது.
மனிதர்கள் சரியாகப் பார்க்க முடிவதற்குள்
திரையில் காட்சிகள் மாறிவிடுகின்றன.
ஒரு முறை கடந்து செல்லுகின்ற பகல்-இரவு
காலை- மாலை மீண்டும் வருவதில்லை
அவை மீண்டும் வருவதில்லை.
வாழ்க்கைப் பயணத்தில் தொலைந்துவிட்ட
நொடிக் கண்ணிகள் மீண்டும் வருவதில்லை
மீண்டும் வருவதில்லை.
இதே உணர்வுகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தும் சிவாஜி கணேசன் நடித்த ‘பார்த்தால் பசி தீரும்’ படத்தின் பாடல் வெளிப்படுத்துகிறது. கண்ணதாசன் எழுதி, எம்.எஸ்.வி. இசையில் டி.எம். சௌந்தரராஜன் பாடிய பாடல் இது.
உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது நீதி
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது நீதி
உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
தெய்வம் என்றால் அது தெய்வம் - அது
சிலை என்றால் வெறும் சிலை தான்
தெய்வம் என்றால் அது தெய்வம் - அது
சிலை என்றால் வெறும் சிலை தான்
உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை
இல்லை என்றால் அது இல்லை
உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
தண்ணீர் தணல் போல் எரியும் - செந்
தணலும் நீர் போல் குளிரும்
தண்ணீர் தணல் போல் எரியும் - செந்
தணலும் நீர் போல் குளிரும்
நண்பனும் பகை போல் தெரியும் - அது
நாட்பட நாட்படப் புரியும்
நாட்பட நாட்படப் புரியும்
உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது நீதி
உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை.
இரண்டு பாடல்களுமே ஒரே விதமான கதைப் பின்னணியைக் கொண்டிருப்பதோடு, வாழ்வின் பல்வேறு தருணங்களுக்கும் மனச் சிக்கல்களுக்கும் பொருந்தும்வண்ணம் இருப்பதையும் உணர முடியும். திரைப்படத்துக்குப் பாடல் எழுதும் கவிஞன் வாழ்வோடு கொள்ளும் நெருக்கமான உறவுதான் இத்தகைய தன்மையைச் சாத்தியப்படுத்துகிறது.
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02116/hindi_2116083g.jpghttps://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQsVwfDT4EUlVR_h8NMZoWFvAGM3Rc01 vyLd4_aF0bF9citJcZ4Xw
Thanks Tamil Hindu
gkrishna
19th September 2014, 05:46 PM
சென்னையில் விஜயா - வாகினி என்ற புகழ்பெற்ற ஸ்டூடியோவை உருவாக்கிய பி. நாகிரெட்டி தயாரிப்பில், கே.வி. ரெட்டி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவான படம் ‘மாயா பஜார்’. 1957 ஏப்ரலில் வெளியான இந்தப் படம் மகாபாரதத்தின் கிளைக்கதை ஒன்றைத் தழுவி எடுக்கப்பட்டது.
இந்தப் படத்தைப் பார்க்காதவர்களிடம்கூட ‘கல்யாண சமையல் சாதம்’ பாடலை இரண்டு வரிகள் பாடினால் “ஓ அந்தப் படமா?” என்று ஆச்சரியப்படுவார்கள். அந்த அளவுக்கு அந்தப் பாடலில் இடம்பெற்ற மாயாஜாலக் காட்சிகள் பட்டிதொட்டியெங்கும் பிரபலம். நீங்கள் இதுவரை பார்க்காத நவயுகவாசி என்றால் ஒரு சிங்கிள் ‘ஜெல்லி பீன்’ தொடுதலில் உங்கள் ஸ்மார்ட் போன் மூலம் யுடியூபில் பார்த்து ஆச்சரியப்படுங்கள்.
அந்தப் பாடலில் “ஹா…ஹா… ஹா..” என்ற கனத்த சிரிப்பொலியுடன் கடோத்கஜன் என்ற அரக்கனாக நடித்திருப்பார் எஸ்.வி. ரங்கா ராவ். கருப்பு வெள்ளை காலத்தின் பணக்காரக் கதாநாயகியின் கண்டிப்பான அப்பா, பண்ணையார் என்று கலக்கினாரே அதே ரங்காராவ்தான். கல்யாண சமையல் சாதம் பாடலில் ரங்கா ராவின் கையசைப்பிற்கு விருந்து உணவுகள் சமைத்து வைக்கப்பட்ட அண்டா, குண்டா உள்ளிட்ட உணவுப் பாத்திரங்கள் வரிசையாக அவர் அருகில் ஓடி வரும். பருமனான உடலுடன் இருக்கும் அவர், மொத்த விருந்தையும் சாப்பிடுவதற்காகத் தன் உருவத்தைப் பல மடங்கு பெரிதாக்கிக்கொள்வார். பெரிய தாம்பூலத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான லட்டுகள் புவியீர்ப்பு விசையை எதிர்த்து மேலெழுந்து அவர் வாய்க்குள் போய் வரிசையாக நுழையும். இந்தக் காட்சிகளை பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டே வியந்து ரசித்தார்கள்.
கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் வளர்ச்சியுறாத அந்தக் கால கட்டத்தில் இவற்றை எப்படிச் சாத்தியப்படுத்தினார்கள்? கேமரா நகர்வுகள், கேமரா லென்ஸுகள் மற்றும் ஆப்டிகல் முறை ஆகிய தொழில்நுட்பங்களை மட்டுமே பயன்படுத்தி, காகிதத்தில் எழுதிய கற்பனையைக் காட்சியில் சாத்தியப்படுத்தினார்கள்.
http://www.youtube.com/watch?v=8xydB-haXdY
Thanks Tamil Hindu
vasudevan31355
19th September 2014, 05:54 PM
Gopu sir please see my p.m
madhu
19th September 2014, 05:56 PM
கிருஷ்ணா ஜி..
ஆப் கி கசம், பார்த்தால் பசி தீரும் இரு பாடல்களுமே கொஞ்சம் மனசைக் கலங்கடிக்கும் வகை. நடந்து கொண்டே நம்மையும் நடக்க வைக்கும் பாடல்கள்.
http://youtu.be/_1FapXOkQoA
http://youtu.be/e1bidmRMFbU
gkrishna
19th September 2014, 05:58 PM
நன்றி மது சார்
gkrishna
19th September 2014, 06:02 PM
ஆப் கி கசம் 'ஜெய் ஜெய் சிவ சங்கர் ' அந்நாளைய மேடை பாடல். எ வ ரமணன் மெல்லிசை கச்சேரியில் தவறாமல் இடம் பெரும் பாடல் .
கிஷோர்,லதா ஜோடி குரல்களில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கலக்கிய பாடல்
http://www.youtube.com/watch?v=0VKuLL9GGpY
Russellmai
19th September 2014, 09:27 PM
Dear Vasu Sir,Have you received my p.m.?
rajeshkrv
19th September 2014, 09:34 PM
கிருஷ்ணா ஜி
ஜனனி ஜனனி பாடலை பற்றிய பதிவு அருமை ..
ஸ்ரீராகவேந்திரர் மற்றும் தாய் மூகாம்பிகை
வாலி ஐயா எழுதியதே .
rajeshkrv
19th September 2014, 09:35 PM
கோபால் ஜி நான் நிறைய பாடல்களை பதிவிட்டுவிட்டேன் என்று சொன்னதால் இனி மற்றவர்கள் பதிவுகளை ரசித்து கருத்துக்கள் சொல்லலாம் என நினைக்கிறேன்.. கொஞ்ச நாட்களுக்கு நோ பாடல் பதிவுகள் :)
rajeshkrv
19th September 2014, 09:38 PM
சென்னையில் விஜயா - வாகினி என்ற புகழ்பெற்ற ஸ்டூடியோவை உருவாக்கிய பி. நாகிரெட்டி தயாரிப்பில், கே.வி. ரெட்டி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவான படம் ‘மாயா பஜார்’. 1957 ஏப்ரலில் வெளியான இந்தப் படம் மகாபாரதத்தின் கிளைக்கதை ஒன்றைத் தழுவி எடுக்கப்பட்டது.
இந்தப் படத்தைப் பார்க்காதவர்களிடம்கூட ‘கல்யாண சமையல் சாதம்’ பாடலை இரண்டு வரிகள் பாடினால் “ஓ அந்தப் படமா?” என்று ஆச்சரியப்படுவார்கள். அந்த அளவுக்கு அந்தப் பாடலில் இடம்பெற்ற மாயாஜாலக் காட்சிகள் பட்டிதொட்டியெங்கும் பிரபலம். நீங்கள் இதுவரை பார்க்காத நவயுகவாசி என்றால் ஒரு சிங்கிள் ‘ஜெல்லி பீன்’ தொடுதலில் உங்கள் ஸ்மார்ட் போன் மூலம் யுடியூபில் பார்த்து ஆச்சரியப்படுங்கள்.
அந்தப் பாடலில் “ஹா…ஹா… ஹா..” என்ற கனத்த சிரிப்பொலியுடன் கடோத்கஜன் என்ற அரக்கனாக நடித்திருப்பார் எஸ்.வி. ரங்கா ராவ். கருப்பு வெள்ளை காலத்தின் பணக்காரக் கதாநாயகியின் கண்டிப்பான அப்பா, பண்ணையார் என்று கலக்கினாரே அதே ரங்காராவ்தான். கல்யாண சமையல் சாதம் பாடலில் ரங்கா ராவின் கையசைப்பிற்கு விருந்து உணவுகள் சமைத்து வைக்கப்பட்ட அண்டா, குண்டா உள்ளிட்ட உணவுப் பாத்திரங்கள் வரிசையாக அவர் அருகில் ஓடி வரும். பருமனான உடலுடன் இருக்கும் அவர், மொத்த விருந்தையும் சாப்பிடுவதற்காகத் தன் உருவத்தைப் பல மடங்கு பெரிதாக்கிக்கொள்வார். பெரிய தாம்பூலத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான லட்டுகள் புவியீர்ப்பு விசையை எதிர்த்து மேலெழுந்து அவர் வாய்க்குள் போய் வரிசையாக நுழையும். இந்தக் காட்சிகளை பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டே வியந்து ரசித்தார்கள்.
கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் வளர்ச்சியுறாத அந்தக் கால கட்டத்தில் இவற்றை எப்படிச் சாத்தியப்படுத்தினார்கள்? கேமரா நகர்வுகள், கேமரா லென்ஸுகள் மற்றும் ஆப்டிகல் முறை ஆகிய தொழில்நுட்பங்களை மட்டுமே பயன்படுத்தி, காகிதத்தில் எழுதிய கற்பனையைக் காட்சியில் சாத்தியப்படுத்தினார்கள்.
http://www.youtube.com/watch?v=8xydB-haXdY
Thanks Tamil Hindu
மார்க்கஸ் பார்ட்லி மற்றும் பாபுபாய் மிஸ்த்ரி விட்டலாச்சார்யா போன்றோர் அன்றைய காலத்திலேயே அழகாக மாயாஜால வித்தைகளை நம்பும்விதமாக அழகாக செய்தனர், இன்றைய கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் சிரிப்பு மூட்டுகிறதே ஒழிய திறம்பட ஒன்றும் இல்லை.
chinnakkannan
19th September 2014, 09:55 PM
ராஜேஷ். தாங்கள் இடும் கன்னட மலையாள தெலுங்கு பாடல்கள் எல்லாம் நான்கேட்டதே கிடையாது அதே போல சில தமிழ்பாடல்களும் தான்.எனில் அப்படிச் சொல்லாதீர்கள்.எங்கே எனக்கு ஒரு மயக்கும் மலையாள மழைப் பாடல் கொடுங்கள் பார்க்கலாம் :)
chinnakkannan
19th September 2014, 10:07 PM
கிருஷ்ணாஜி ஜிந்தகி கா சஃபர் மே குஜர் ஜாத்தே ஜோ மகாம் - ஓரளவிற்குப் புரிந்த அர்த்தத்திலேயே நான் மிகவும் ரசித்த பாடல்..உங்கள் மொழிபெயர்ப்பால் முழுதும் புரிந்துகொண்டு இன்னும் ரசித்தேன் நன்றி. அதே போல – நண்பரும்பகை போல் தெரியும் அது நாட் பட நாட்பட ப் புரியும்..- ஒருகாலத்தில் உணர்ச்சி வசப்பட்ட்டுக் கேட்ட பாடல் உள்ளம் என்பது ஆமை.. இரண்டு நடைப்பாடல்களையும் நினைவூட்டியதற்கு நன்றி
மதுண்ணா.. உண்மை.. வீடியோவிற்கு நன்றி..//ஆப் கி கசம், பார்த்தால் பசி தீரும் இரு பாடல்களுமே கொஞ்சம் மனசைக் கலங்கடிக்கும் வகை. நடந்து கொண்டே நம்மையும் நடக்க வைக்கும் பாடல்கள்//.
rajraj
19th September 2014, 10:30 PM
chinnakkaNNan: Here is a 'mayakkum malayala paadal':
tharuni jnaan enthu cheivoo...
http://www.youtube.com/watch?v=9Zm1kK2oSAE
It is Dwijawanti, one of my favorite ragas!
:)
vasudevan31355
19th September 2014, 10:50 PM
கோபால் ஜி நான் நிறைய பாடல்களை பதிவிட்டுவிட்டேன் என்று சொன்னதால் இனி மற்றவர்கள் பதிவுகளை ரசித்து கருத்துக்கள் சொல்லலாம் என நினைக்கிறேன்.. கொஞ்ச நாட்களுக்கு நோ பாடல் பதிவுகள் :)
ராஜேஷ்ஜி,
ம்ஹூம்...நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். பதிவுகளை ரசித்து பதிவிடுங்கள். ஆனால் நீங்கள் அம்சமாக வழங்கும் பாடல்களுக்குப் பிறகு.
மன்னிக்க மாட்டாயா (மாட்டீர்களா)
உன் (உங்கள்) மனமிரங்கி
எனக்காக கோபாலரை.:)
rajeshkrv
20th September 2014, 12:27 AM
ராஜேஷ்ஜி,
ம்ஹூம்...நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். பதிவுகளை ரசித்து பதிவிடுங்கள். ஆனால் நீங்கள் அம்சமாக வழங்கும் பாடல்களுக்குப் பிறகு.
மன்னிக்க மாட்டாயா (மாட்டீர்களா)
உன் (உங்கள்) மனமிரங்கி
எனக்காக கோபாலரை.:)
கோபம் இருந்தால் தானே மன்னிப்பதற்கு.. நிறைய பாடல்கள் வழங்கிவிட்டேனோ என்ற கேள்வியே வேறெதுவும் இல்லை.
சரி சரி பாடல்கள் பதிவும் செய்கிறேன்.. வாசுஜியும் சிகாவும் கேட்டால் மாட்டேன் என்று சொல்லவும் முடியுமோ :)
madhu
20th September 2014, 03:48 AM
சரி சரி பாடல்கள் பதிவும் செய்கிறேன்.. வாசுஜியும் சிகாவும் கேட்டால் மாட்டேன் என்று சொல்லவும் முடியுமோ :)
நானும் கேட்கிறேன் :p
madhu
20th September 2014, 04:08 AM
http://www.tirumala-tirupati.com/wp-content/themes/tirumala/images/ph_19.jpg
புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அறிவாளி படத்தில் பானுமதி பாடிய இனிய பாடல்
http://youtu.be/4xT3P9Bjb4c
வெங்கடரமணா பங்கஜ சரணா
விண்ணுயர் எழுமலை சூழும் பாவனா
( வெங்கட )
மங்களம் தரும் கருணாகரா - அலர்மேல்
மங்கை மணாளா தயாளா - திருப்பதி
( வெங்கட )
பதம் பணியும் அன்பர்க்கு சகல
சௌபாக்கியமும் பரிந்தருள் பக்தவத்சலா
தினம் உனை நினைந்து துதிக்கும் வரம் தா
நீரஜ நேத்ரா எம் குலதெய்வமாகிய
( வெங்கட )
rajraj
20th September 2014, 05:25 AM
madhu: I did not forget your 'green tea' comment. Next time I will bring you a can (tin) of green tea bags instead of Godiva chocolates! :lol:
rajeshkrv
20th September 2014, 07:48 AM
madhu: I did not forget your 'green tea' comment. Next time I will bring you a can (tin) of green tea bags instead of Godiva chocolates! :lol:
மதுண்ணா தேன் சொட்ட சொட்ட பேசுவதற்கு எங்க ஊரு கொடைவா தான் காரணமா ?? ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இப்பத்தானே ரகசியம் வெளியே வருது :)
venkkiram
20th September 2014, 08:01 AM
ராஜா இசையமைக்காத பாரதிராஜா படங்களில் எந்தப் படப் பாடல்கள் இன்றைய வரைக்கும் மனதிற்கு மிக நெருக்கமாக இருக்கிறதென்றால் என் அனுபவத்தில் வேதம் புதிதுதான். ரஹ்மான் நான்கு படங்களில் பாரதிராஜாவோடு இணைந்திருக்கிறார். கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா, தாஜ்மகால், கண்களால் கைது செய் .. பாடல்களை தனித்தனியே கேட்டு ரசிப்பதில் சுவையிருந்தாலும் வேதம் புதிது பாடல்கள் ஐந்து .. கண்ணுக்குள் நூறு நிலவோ, மந்திரன் சொன்னேன், புத்தம்புது ஓலை, மாட்டு வண்டி சாலையிலே, சந்திக்கத் துடித்தேன் - இவை தரும் நெருக்கம் எதிலுமே இல்லை. ராஜா இல்லாமல் பாரதிராஜாவா என்ற மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஓரளவிற்கு நன்றாகவே ஈடுகொடுத்தார் தேவேந்திரன் என நினைக்கிறென். கண்ணுக்குள் நூறு நிலவா பாடலை மெட்டமைத்து இசைகோர்ப்பு முடித்து பாரதிராஜாவும் பிரமாதமாக இருக்கிறது எனச் சொல்லியாயிற்று. ஆக்கத்தை இன்னும் கொஞ்சம் மேம்படுத்தலாம் என புல்லாங்குழல் இசையில் பல்லவியின் ஒவ்வொரு அடிக்கும் பதில் கொடுப்பது போல அமைத்துவிட்டு பாரதிராஜாவிற்கு ஒலிக்கச் செய்து காட்டியதில் ரெட்டிப்பு மகிழ்ச்சியாம் இயக்குனருக்கு. இது ஒரு ரேடியோ பண்பலையில் பல வருடங்களுக்கு முன்பு தேவேந்திரன் பகிர்ந்து கொண்டது. இன்றும் கார் பிரயாணங்களில் கேட்டு மகிழ்வதுண்டு.
https://www.youtube.com/watch?v=rFn9xzCTXY4
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.