View Full Version : மனதை மயக்கும் மதுர கானங்கள்
Pages :
1
2
3
4
5
[
6]
7
8
9
10
11
12
13
14
15
16
RAGHAVENDRA
2nd July 2014, 06:52 AM
டியர் வாசு, கிருஷ்ணா, கார்த்திக், கோபால், வினோத் மற்றும் நண்பர்கள்
ஒவ்வொருவரின் பங்களிப்பிலும் இத்திரியில் பல புதிய தகவல்கள் தமிழ்த் திரையுலக இசையைப் பொறுத்த வரையில் கிடைக்கின்றன. குறிப்பாக கிருஷ்ணாவிடம் இருக்கும் flow of information is simply amazing. கலக்குங்கள் கிருஷ்ணா.
வாசு சார்
Memories of Yester Years என்ற தலைப்பில் TFM Threadல் 1950 முதல் 60 வரை, 1970s, 1980s என்று decades வாரியாக தமிழ்த்திரைப்படப் பாடல்களைப் பற்றிய திரிகள் உள்ளன. நாம் இங்கே கால வரையறை எதுவுமின்றி விவாதிப்போம். 1970களின் கால கட்டம் தமிழ்த்திரையுலகின் பல புதிய இசையமைப்பாளர்களை சந்தித்ததாகும். இதை இங்கே நீங்களெல்லோரும் மிக அருமையாக சிறப்பித்து வருகிறீர்கள். அப்படியே தொடருங்கள். நடுநடுவே மற்ற கால கட்டத்தின் பாடல்களும் தாமாகவே விவாதத்தில் பங்கேற்று விடும்.
RAGHAVENDRA
2nd July 2014, 06:59 AM
ஜி. தேவராஜன் இசையில் 1969ல் வெளிவந்த மலையாள திரைப்படம் குமார சம்பவம். முருகனின் பெருமையைக் கூறும் பக்திப் படம். இது தமிழில் 1970லும் வெளிவந்தது. இதில் டி.எம்.எஸ். அவர்களின் அருமையான பாடல் இருக்கும். இந்த பக்திப் பாடல் கூட நம் வானொலியில் அதிகம் ஒலிபரப்பப் படவில்லை என்பது கொடுமை. இதனுடைய மொழி மாற்ற வடிவம் இணையத்தில் யூட்யூபில் உள்ளது. கேளுங்கள்
http://www.youtube.com/watch?v=IfOSwzu9J2M
ஒருவேளை இதுதான் முருகனடிமை என்று வெளிவந்ததோ தெரியவில்லை.
RAGHAVENDRA
2nd July 2014, 07:05 AM
இந்திய சினிமா இருக்கும் வரை இருக்கும் பாட்டு, The Guide ஹிந்திப் படத்தில் இடம் பெற்ற இப்பாடல்.
http://youtu.be/ItCHlI_qC44
இப்பாடலின் மெட்டில் பானுமதி ராமகிருஷ்ணா இசையில் இப்படியும் ஒரு பெண் படத்தில் இடம்ப பெற்றது பொங்குதே புன்னகை. பாலாவின் மயக்கும் குரல் மீண்டும் மீண்டும் நம்மைக் கேட்க வைக்கும். கேளுங்கள்
http://youtu.be/vSl37yZHYYk
venkkiram
2nd July 2014, 08:47 AM
"மனதை மயக்கும் மதுர கானங்கள்" என்ற தலைப்புடைய இத்திரியில் இடம்பெறும் கானங்களுக்கும் மதுரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே! விளக்குங்களேன்.
vasudevan31355
2nd July 2014, 08:53 AM
ஒப்பீட்டுக்கு நன்றி ராகவேந்திரன் சார்.
இப்போது 'பொங்குதே புன்னகை' பாடல் வீடியோவாக.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=23NnyOiLyxQ
vasudevan31355
2nd July 2014, 08:55 AM
மதுரை மட்டுமல்ல::) திருச்சி, திருநெல்வேலி, கோயமுத்தூர் மற்றும் எல்லா இடங்களுக்கும் மதுர கானத்துக்கும் நிறைய சம்பந்தம் உண்டு.
Gopal.s
2nd July 2014, 08:58 AM
"மனதை மயக்கும் மதுர கானங்கள்" என்ற தலைப்புடைய இத்திரியில் இடம்பெறும் கானங்களுக்கும் மதுரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே! விளக்குங்களேன்.
:-D:-D:-D
ஹம்சத்வனி.
காதல் வயப்பட்டு விட்டீர்கள். காதலி ஒப்பு கொண்டு விட்டாள் .ஆனாலும் ஊருக்கு தெரியாமல்,உலகுக்கு தெரியாமல் ரகசியம் காத்து, உங்களுக்குள்ளேயே மருகி, சுகம் காக்கும் விகசிப்பை, உணர வேண்டுமா?ரகசியமாக அடையும் சுகத்தை ,திருட்டு சுகத்தை ஊரறியாமல் உணரும் சந்தோசம். இந்த பிரத்யேக உணர்வு தரும் ராகம் ஹம்சத்வனி.
அந்த பிரபலத்தின் (மதுரைதான்)இரண்டாவது படைப்பு.நடிகர்திலகம் வெள்ளிவிழா கேடயம் வழங்கிய தமிழின் சிறந்த படைப்புகளில் ஒன்று. இளைய ராஜா கிராமத்து பின்னணியில் கலப்பிசையில் பெடலெடுத்த கிழக்கே போகும் ரயில்.ஆனாலும் இந்த பாடல் படத்திலில்லை."மலர்களே நாதஸ்வரங்கள்". அருமையான பாடல்.வெட்ட பட்டது நீளம் கருதி.ஆனால் அதே இயக்குனரின் இன்னொரு அரை வேக்காட்டு ரொமாண்டிக் த்ரில்லெர் .இசை புயலின் விஸ்வரூபம்.எடு படாத படத்தில் ஒரு composition marvel . "தீகுருவியாய் தீங்கனியென தீபொழுதினில் தீண்டுகிறாய்." கண்களால் கைது செய்யா விட்டாலும் ,காதுகளால் என்னை கைது செய்த இணைப்பு-படைப்பிசை அபூர்வம்.
vasudevan31355
2nd July 2014, 09:07 AM
வெங்கிராம் சார்,
வருக! தங்கள் வருகை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.
நல்ல அனுபவசாலியான நீங்கள் இந்தத் திரியில் தங்கள் பங்களிப்பை நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
gkrishna
2nd July 2014, 11:32 AM
02/07/14
அனைவருக்கும் காலை வணக்கம்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
இன்று தேவமாதா காட்சி அருளிய நாள்
முத்துராமன் நடித்த புனித அந்தோனியார் நினைவுக்கு வருகிறது
வாணியின் அருமையான குரல்
"மண் உலகில் இன்று தேவன் இறங்கி வருகிறான்
நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறான்
எண்ணில்லாத அதிசயம் செய்து காட்டவே
ஒரு புண்ணியரின் மடியினிலே புதல்வனாகிறான்"
ஜேசுதாஸ் குரலில்
"ஆனந்தமானது அற்புதமானது நான் அந்த மருந்தை கண்டு கொண்டேன் "
ஹம்சத்வனி அமைத்த மன்னவன் கோபால் சார்
கீழே வரும் தகவல்கள் எனது சொந்த சரக்கு அல்ல .ஒரு வலைபதிவில்
படித்து பகிர்ந்து கொள்ளுகிறேன் .
எந்த ஒரு காரியத்திற்கும் நல்லதொரு தொடக்கம் அவசியம். தொடக்கம் சரியாக இருந்துவிட்டால் காரியம் பாதி முடிந்தாற் போலத்தான். கர்நாடக இசைக் கச்சேரிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
ஒரு கச்சேரியைத் தொடங்கும் ராகம், ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்தில் கச்சேரியைக் களை கட்ட வைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அப்படி இருக்க வேண்டுமெனில், அந்த ராகம் அதிக கனமில்லாததாகவும் அதே சமயத்தில், அதிகம் 'scope' இலலாத துக்கடா ராகமாக இல்லாமலும், விறுவிறுப்பான காலப்ரமாணத்தில் பாடுவதற்குத் தோதாகவும் இருத்தல் நலம். மேற்கூறிய குணாதிசயங்கள் பல ராகங்களுக்கு இருப்பினும், ஒரு கச்சேரியைச் சிறப்பாக தொடங்க என்ன பாடலாம் என்றதும், முதலில் மனதில் தோன்றும் ராகம் 'ஹம்சத்வனி'..
இதை minimum guarantee ராகம் என்று கூறுவார்கள்
ஹம்சத்வனி சங்கராபரண ராகத்தின் ஜன்யம். பெரும்பாலான கச்சேரிகளின் முதல் பாடல் விநாயகப் பெருமானின் மீதே இருக்கும். இதனாலேயே, கச்சேரியைத் தொடங்கத் தோதான ராகமான ஹம்சத்வனியில் எண்ணற்ற 'விநாயகர் கீர்த்தனைகள்' இருக்கின்றது. முத்துஸ்வாமி தீக்ஷதரின் 'வாதாபி கணபதிம்' என்ற பாடல் மிகப் பிரபலமான ஒன்று.
கேட்பவர் மனதில் உற்சாகத்தை எழுப்பக் கூடிய ராகமான ஹம்சத்வனி, திரையிசையிலும் பிரபலமான ஒன்று. இசைஞானி இளையராஜாவின் இசையில் பல ஹம்சத்வனி ராகப் பாடல்கள் திரையில் மலர்ந்துள்ளன. 'கடவுள் அமைத்த மேடை' படத்தில் வரும்
'மயிலே மயிலே உன் தோகை எங்கே'
இதை பற்றி ஏற்கனவே சின்னக்கண்ணன் சார் உடன் பகிர்ந்து கொண்ட பதிவு உண்டு.
இருந்த போதிலும் சற்று கூடுதல் விவரங்கள்
இந்த பாடலின் முன்னோட்ட இசையை (prelude), கிதாரின் chords-உம், குழலின் கிராமிய மணமும், பல வயலின்களின் கூட்டணியில் அமைந்த 'strings'-உம் அழகாக நிரப்புகிறது. பாடல் திஸ்ர நடையில் (நிறைய டப்பாங்குத்து பாடல்கள் திஸ்ர நடை எனப்படும் தாளகதியில் அமைந்திருக்கும்) துள்ளலாக அமைந்துள்ளது. பாடலில் வரும் 'percussion'-ஐக் கூர்ந்து கவனித்தால், ஆங்காங்கே மிருதங்கத்தில் எழுப்பப்படும் 'சாப்பு' எனப்படும் ஒருவித 'metallic sound' பொன்ற ஒரு ஒலி ஒலிப்பது கேட்கும். பாடல் கர்நாடக ராகத்தை அமைந்திருப்பினும், மேற்கத்திய வாத்தியங்களும் கிராமிய பிரயோகங்களும் நிரம்பிய பாடலில், 'carnatic feel' ஒலிக்க அது மட்டுமே காரணம் ஆகிவிடாது. நுணுக்கமாக சேர்க்கப்பட்டுள்ள 'percussion'-உம் இதற்கு முக்கிய காரணமாகும்.
எஸ்.பி.பாலசுப்ரமணியமும், ஜென்சியும் அளவான, அழகான கமகங்களால் இழைத்து இழைத்து காதல் வயப்பட்ட இருவரின் மனநிலையை தங்கள் சர்க்கரைக் கரைச்சல் குரலால் அற்புதமாய்ப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்கள்.
ஹம்சத்வனி ராகத்தை புதிதாகக் கேட்பவர்கள், 'என் புருஷந்தான் எனக்கு மட்டுந்தான்' படத்தில் ஜெயச்சந்திரனும் சுனந்தாவும் பாடியுள்ள 'பூ முடிச்சு பொட்டு வைத்த வட்ட நிலா',
'சிவா' படத்தில் வரும் 'இரு விழியின் வழியே' , ஹம்சத்வனி ராகத்தில் அமைந்த இம்மூன்று பாடல்களை அடுத்தடுத்து கேட்டால், இப்பாடல்களுக்குள்ள ஒற்றுமை நன்றாக விளங்கி ராகம் சற்று புரிபடும்.
இப்பாடல்கள் அனைத்தும் 100% அக்மார்க் ஹம்சத்வனி ராகத்தில் அமைந்தவை என்று சொல்வதற்கில்லை. ஆங்காங்கே அழகிற்காக பாடல் ராகத்தின் வரம்புகளை மீறியிருக்கிறது. இருப்பினும், பாடலின் பெரும்பாலான பகுதி ராகத்தின் கட்டமைப்புள் இருப்பதால், ஹம்சத்வனியில் அமைந்தது என்று கொள்வதிலும் ஒன்றும் பாதகமில்லை.
கர்நாடக கீர்த்த்னையை ஒத்து அமைந்த ஹம்சத்வனி என்று 'மகாநதி' படத்தில் வரும் 'ஸ்ர்ரங்க ரங்கநாதரின் பாதம்' பாடலைச் சொல்லலாம். 'கங்கையின் மேலான காவிரி தீர்த்தம்' என்ற வரியில் 'தீர்த்தம்' என்ற வார்த்தையில் எஸ்.பி.பி கொடுக்கும் கமகத்தை கவனித்துப் பாருங்கள். அது ஹம்சத்வனி ராகத்திற்கே உரிய typical கமகமாகும். இப்பாடலின் இடையிசையையும் (interlude) குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
ஹம்சத்வனி பொதுவாக மகிழ்ச்சியை, உற்சாகத்தைக் குறிக்கும் ராகம். பாடலின் இடையிசைப் படமாக்கப்பட்ட விதத்தை கவனித்தால், கதாநாயகனுக்கு தன் மகளைப் பார்த்ததும், மறைந்த மனைவியின் நினைவு தோன்றி துக்கம் எழும். மகிழ்ச்சியான தருணத்தில் திடீர் என சோகம் நுழைந்ததை, ஷெனாய் என்ற வாத்தியத்தை உபயோகித்ததன் மூலம் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் ராஜா.
மேற்கூறிய பிரபலமான ஹம்சத்வனி ராகப் பாடல்களைத் தவிர 'சிறையில் பூத்த சின்ன மலர்' என்ற படத்தில்
யேசுதாச், சித்ரா பாடிய 'அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ' போன்ற அபூர்வமான பாடல்களிலும் அற்புதமான ஹம்சத்வனி பொதிந்திருக்கிறது.
எஸ்.பி.பி-யும் சித்ராவும் பாடியிருக்கும் 'ராகம் தாளம் -- இருவரின் தேகம் ஆகும் -- இது ஒரு காமன் கீதம் இன்பமயம்' என்றொரு அசர வைக்கும் ஹம்சத்வனி ராகப் பாடல் உள்ளது.
பாடல் எந்த படம் என்று தெரியவில்லை
ஹம்சத்வனி பற்றிய ஒரு மருத்துவ குறிப்பு
Raga eases tension and provides relaxation.Celebration & Happiness,evoke a very pleasing effect on the nerves.Energy giving. Provides good thinking, chaitanya. Sarvarogaharini (panacea)
பொதுவாக லேட் evening இல் பாட கூடிய ராகம்
"காலையில் அரும்பி பகலெல்லாம் போதாகி மாலையில் மலர்வது அன்றோ காதல் நோய் "
vasudevan31355
2nd July 2014, 01:03 PM
இன்றைய ஸ்பெஷல் (19)
மிக மிக ஸ்பெஷலான பதிவு
ஒரு பாடலால் ஜீவன் முழுதையும் கட்டிபோட முடியுமா!
நாள் முழுக்க சாப்பாடே இல்லாமல் ஒரு பாடலை மட்டும் கேட்டு கேட்டு மெய் சிலிர்க்க முடியுமா!
ஒரு தரம் கேட்டு விட்டால் குறைந்தது இரண்டு நாட்களாவது காதுகளிலேயே அமர்ந்து ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் பாடல் உண்டா!
நம் வாய் வழியே மெதுவாக யாருக்கும் தெரியாமல் ஒரு பாடலை திரும்பத் திரும்ப உச்சரித்தபடியே இருக்க முடியுமா!
மீண்டும் மீண்டும் மீண்டும் இப்படி எத்தனை எத்தனை முறை வேண்டுமானாலும் ஒரு பாடலை சலிக்காமல் கேட்க முடியுமா!
முடியும்...முடியும்...முடியும்...
'இன்றைய ஸ்பெஷலி' ல் வரும் இந்தப் பாடலால் அனைத்து மாயாஜாலங்களையும் செய்ய முடியும்.
http://www.inbaminge.com/t/k/Kanne%20Pappa/folder.jpg
'கண்ணே பாப்பா' திரைப்படத்தில் வரும் கண்ணான பாடல். பி. மாதவன் இயக்கம். பாடல்கள் கவிஞர் கண்ணதாசன். இசை எம்.எஸ்.விஸ்வநாதன்.
ஒரு அந்தி வேளையில் குற்றாலத்தில் தன்னந்தனியாக (!) குளித்துக் கொண்டிருக்கும் ஒரு இளம் பெண் (!) தன் மனநிலையையும், தன்னையொத்த இளைஞன் ஒருவன் மீது மையல் கொண்டு அவன் மேல் காதல் வசப்படுவதையும் கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு விவரிக்கும் அழகு!
குளிக்கும் போது தென்றல் வருடாமல் சற்றே முரட்டுத்தனம் செய்ய அந்தத் தென்றலில் அவள் ஆடை பின்னுகிறதாம். அருவி நீரில் ஆசையாய்க் குளிப்பதனால் ஐந்தருவிகளில் ஒன்றான தேனருவி போல அவள் மேனி மின்னுகிறதாம். அவள் அங்கங்கள் அருவியில் நனைந்து தங்கங்களாக காட்சி தருகின்றதாம்.
மேலாடையை கையில் எடுத்து தண்ணீரை உதறியபடி குளிக்கையில் பாலாடை போல அவள் நெஞ்சங்கள் பளபளக்கிறதாம். அப்போது பாருங்கள். அவள் மனதை திருட இருக்கும் கள்வன் ஒருவன் மறைந்திருந்து (நிஜத்திலும் கள்வன்தான்) யாருக்கும் தெரியாமல் தன் விழிகள் இரண்டையும் அவள் கு(த)ளிர் மேனியில் செலுத்துகின்றதை இவள் கவனித்து விட்டாளாம்.
பார்த்த அதிர்ச்சி ஆனால் இன்ப அதிர்ச்சியில் ஒரு கணம் உறைந்து விட்டாளாம். அதனால் தான் நீராடும் கோலத்தில் இருப்பதை மறந்து விட்டாளாம். உடனே சுதாகரித்து வெட்கம் பிடுங்கித் தின்ன தலை சாய்த்துக் கொண்டாளாம்
சரி! பிறகென்ன நடந்தது.
குளித்தாயிற்று. உடலும் மனதும் இப்போது சுத்தம். அருகில் உள்ள ஆனைமுகன் கோயிலைப் போய் இந்தக் கன்னி வலம் வருகிறாள் பக்தியுடன். ஆனால் குளிக்கும் போது பார்த்த ஆணின் அதே இரண்டு கண்கள் தன்னை தொடர்வதைப் பார்த்துவிட்டாள் அந்தப் பாவை. தவிர்க்க இயலாத பார்வை. அவனை நானும் பார்க்க வேண்டுமே! தேடு! தேடு! அதோ நிற்கிறான்... என்னையே பார்த்துக் கொண்டு நிற்கிறான்... அவனேதான்... அழகனாய் தெரிகின்றானே! அடடா! நேரம் போவதே தெரியவில்லையே! பார்க்கிறான்... என்னையே பார்க்கிறான்... வெட்கத்தில் தலை கவிழ்கிறாள் மறுபடி.
சரி விடு! ஆயிரம் பேர் வருவார்கள்... போவார்கள். நாம் நம் வேலையைப் பார்ப்போம். கடைக்குச் சென்று வளையல்கள் வாங்குவோம் என்று அவள் கண்ணடி வளையல்கள் விற்கும் கடை சென்று தனக்கு விருப்பமான வளையல்களை எடுக்கிறாள். திடீரென்று வேறு இரு கைகள் அதுவும் ஒரு ஆணின் கைகள் தன் கைகளுடன் இணைவதைக் கண்டு திடுக்கிடுகிறாள். 'யாரடா அது'? என்று ஏறிட்டுப் பார்க்கிறாள். அதே கள்வன் கைபிடித்து மந்தகாசப் புன்னகை புரிகிறான். அருகில் காணுகிறாள் அந்த அழகனை. மனமெல்லாம் நிறைகிறான். முதன்முதலாக ஒரு ஆணின் ஸ்பரிசம். சுகமான ஸ்பரிசம். உடல் சிலிர்க்கிறாள் அவள். ஆனால் இதுவரை நாணத்தால் மட்டுமே தலை குனிந்தவள் இப்போது யாராவது கண்டுவிடப் போகிறார்கள் என்று அச்சத்தால் தலை குனிகிறாள். விருப்பமில்லாமல் நடையைக் கட்டுகிறாள். மூன்றாவது முத்தான சந்திப்பு.
http://i1.ytimg.com/vi/vTISngemfD0/sddefault.jpg
இப்போது மலைக்கோயிலுக்குச் சென்று வழிபட்டு படிக்கட்டுகளில் கை நிறையப் பூக்களை இந்தப் பூவை சுமந்து வருகிறாள். எப்படி நடந்து வருகிறாள்? காற்று போலவாம். தென்றல் தவழ்ந்து வருவதைப்
போலவாம்.
இப்போது பூக்கள் அவள் கையிலிருந்து நழுவி விடுகின்றன. அடடா! பூக்கள் கை நழுவி விட்டதே என்று பதைபதைத்தால் அந்தப் பூக்கள் வேறு யாருடைய கால்களைப் போய் சேர்ந்து பூஜை செய்கின்றனவே!
சரி! யார் என்று பார்ப்போம் என்று கால்களைப் பார்த்து, பின் தலை நிமிர்ந்து பார்த்தால் அங்கே அந்தப் பூவுக்கும், இந்தப் பூவைக்கும் சொந்தமாகப் போகும் கள்வன் நிற்கிறான் நான்காவது முறையாக. கால் பார்த்து தலை நிமிர்ந்தவள் அவன் கண் பார்த்துத் தலை குனிந்து விட்டாள் மீண்டும் நாணத்தில்.
அந்தியில் குளிக்கத் தொடங்கியதில் இருந்து நான்கு சந்திப்புகள் அவனுடன் நடந்தேறி விட்டது. பொழுது சாய்ந்து நிலாவும் முளைத்து விட்டது. குற்றாலமாயிற்றே! மேகங்கள் திரண்டு அவ்வப்போது அந்த நிலாவை மறைக்கின்றன. அங்கே ஒரு சிறு பாழடைந்த மண்டபம். விளக்கொளி எதுவும் இல்லை. ஆனால் அவனும் அவளும் மட்டும் தனியாக.
தன்னுடைய சிகரெட் லைட்டரை 'ஆன்' செய்து வெளிச்சம் உண்டாக்கி அதைவிட வெளிச்சமான அவளின் முகத்தை நோக்குகிறான் சற்றே காமக்கண் கொண்டு அந்த ஆணழகன். மாலை மயக்கம் கொடுக்க, ஆசைக்காதலன் அரவணைக்க, மன்னவனின் முகத்தோடு தன்னையறியாமல் தன்முகம் புதைக்கிறாள் அவள். தன் தேகம் தன்னுடையது என்பதை அறவே மறந்தாள். அவனுடன் கூடலில் இணைகிறாள். இப்போது அவன் அந்நிய ஆண் இல்லை. காதலனும் இல்லை. வேறென்னவாம்? தெய்வம் என்கிறாள் அவனை. தெய்வத்துடன் நான் இணைந்தேன் என்கிறாள்.
அதன் பிறகு?
நாளை சொல்கிறேன் தொடர்ச்சியாக.
ஒரு பெண் ஒரு ஆடவனின் பார்வையில் மயங்கி எப்படி கொஞ்சம் கொஞ்சமாக அவனிடம் தன்னை இழக்கிறாள் என்பதை இந்தப் பாடலில் வரும் வரிகளிலேயே கவிஞர் என்னமாய் விளக்கி வெற்றிநடை போடுகிறார்!
மயங்கும் மங்கையாக 'புன்னகை அரசி'யும், மயக்கும் காதலனாக நவரசத் திலகமும் அழகான நடிப்பைச் சிந்தியிருக்கும் அமைதியான அற்புதமான, ஆழமான, ஒரு பாடல் இது.
'மெல்லிசை மன்னர்' இப்பாடலில் பின்னியெடுத்திருக்கும் அற்புதங்கள் அளவிட முடியாதவை. புல்லாங்குழலும், ஷெனாயும் புரியும் விந்தைகள் விவரிக்கும் அளவிற்கு வார்த்தையில் அடங்காதவை.
பாடல் வரிகளைப் படிப்பதற்கு முன்னால் அப்பாடலுக்கான விளக்கத்தைப் படித்துவிட்டு பாடல் வரிகளைப் படிக்கவும்
தென்றலில் ஆடை பின்ன
தேனருவி மேனி மின்ன
அன்று நான் குற்றாலத்தில்
ஆசையாய் குளித்திருந்தேன்
அங்கங்கள் நனைத்திருந்தேன்
பாலாடை பளபளக்க
மேலாடை சாய்த்தெடுத்தேன்
பாராத விழி இரண்டு
பார்ப்பதை நான் அறிந்தேன்
வேஷத்தை நான் மறந்தேன்
வெட்கத்தில் தலை குனிந்தேன்
வேஷத்தை நான் மறந்தேன்
வெட்கத்தில் தலை குனிந்தேன்
தென்றலில் ஆடை பின்ன
தேனருவி மேனி மின்ன
அன்று நான் குற்றாலத்தில்
ஆசையாய் குளித்திருந்தேன்
அங்கங்கள் நனைத்திருந்தேன்
ஆனைமுகன் கோவிலிலே
அந்திப்படும் வேளையிலே
ஆனைமுகன் கோவிலிலே
அந்திப்படும் வேளையிலே
கன்னி வலம் சுற்றி வந்தேன்
கண்ணிரெண்டை அங்கும் கண்டேன்
நேரத்தை நான் மறந்தேன்
நாணத்தில் தலைகுனிந்தேன்.
நேரத்தை நான் மறந்தேன்
நாணத்தில் தலைகுனிந்தேன்.
(ஷெனாய் கலக்கும் அற்புதம் ஜென்மத்திற்கும் மறக்க இயலாது)
கண்ணாடி வளையல்களை
கையோடு நான் எடுத்தேன்
கண்ணாடி வளையல்களை
கையோடு நான் எடுத்தேன்
என்னோடு கையிரண்டு
இணைவதை நான் அறிந்தேன்
அம்மம்மா! மெய் சிலிர்த்தேன்
அச்சத்தால் தலை குனிந்தேன்
அம்மம்மா! மெய் சிலிர்த்தேன்
அச்சத்தால் தலை குனிந்தேன்
கை நிறையப் பூவெடுத்து
காற்று போல் நடந்து வந்தேன்
கை நழுவிப் பூ விழுந்து
கால் தேடிப் போகக் கண்டேன்
கால் பார்த்து தலை நிமிர்ந்தேன்
கண் பார்த்துத் தலை குனிந்தேன்.
கால் பார்த்து தலை நிமிர்ந்தேன்
கண் பார்த்துத் தலை குனிந்தேன்.
(இடையில் வரும் புல்லாங்குழலின் இனிமையை மறக்காமல் அனுபவியுங்கள்)
மேகம் மறைத்த நிலா ஆஆ........ஆஆ (சுசீலா அவர்களின் அந்த 'மேகம் மறைத்த நிலா' முடிவு இழுப்பு உணர்ச்சி பிழம்பாய் நம் நாடி நரம்புகளைப் பின்னிப் பதம் பார்ப்பதை நம்மால் இலகுவாக உணர முடியும்)
விளக்கொளி ஏதுமில்லை
மோதும் சிறு ஒளியில்
முகத்தில் முகம் இணைத்தேன்
தேகம் மறந்து விட்டேன்
தெய்வத்தில் நான் இணைந்தேன்.
சுசீலாவின் டாப் 10-ல் என்னுடைய இரண்டாவது பாடல்.
முதல் பாடல்? கண்டிப்பாகத் தருகிறேன் விரைவில். நீங்கள் விரும்பும் பட்சத்தில்.
இப்பதிவை நான் இடும்போது ஏதோ லாட்டரி சீட்டில் கோடி கிடைத்தது போல் மனமெல்லாம் ஒரு சந்தோஷம். இனம் புரியா இன்ப உணர்வு.
இப்போது அற்புதமான இப்பாடலையும், அது படமாக்கப் பட்டிருக்கும் விதத்தையும் கண்டு மகிழுங்கள்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=bfYrYPTGkkg
parthasarathy
2nd July 2014, 01:53 PM
Great presentation Vasu Sir.
One of the rare compositions. If you listen deep, you can get some resemblance of "Devan vandhaan Devan vandhaan (Kuzhandhaikkaga)" whenever you listen to shenoy.
Incidentally, both are from the same combo.
There are some songs which will take you to the past and you will start remembering / recalling certain places. Whenever I listen to this song, my memory will go to Kanniyappa theatre (Thirukkazhukkundram) and my Aunt's house (mutram, thinnai, etc. - can we get these in Chennai) where I first saw this movie in childhood.
Regards,
R. Parthasarathy
gkrishna
2nd July 2014, 02:05 PM
வாசு சார்
அருமையான ஒரு பாடலை இணைத்துள்ளீர்கள் .
அந்த பாடல் வரிகளும் அதன் விளக்கமும் அருமை .
எந்த அளவுக்கு நீங்கள் இசையை ஊன்றி கவனித்து உள்ளீர்கள் என்பது நன்கு புலனாகிறது.
கண்ணே பாப்பா படமும் ஒரு நல்ல படம்
இந்த பாடலை கேட்டவுடன் என் மனதில் தோன்றிய இன்னொரு பாடல்
இதோ எந்தன் தெய்வம் இதே முத்துராமன் கே ஆர் விஜயா ஜோடியில்
வெளி வந்த "அம்பிகை நேரில் வந்தாள் அன்பினை அள்ளி தந்தாள்
கோபுரம் கண்ணில் கண்டேன் கொஞ்சிடும் கலசம் கண்டேன் "
திருலோக் அண்ணாவின் இயக்கம் அமுதம் pictures தயாரிப்பு
பாலா சுசீலா இணை குரல்களில்
http://www.youtube.com/watch?v=டிவ்ட்ஜிமிப்ப்ங்
gkrishna
2nd July 2014, 02:34 PM
மகனே நீ வாழ்க 1969
ம.கிருஷ்ணன் நாயர் இயக்கத்தில்
ஜெய், லக்ஷ்மி. விஜயகுமாரி நடித்து
t.r .பாப்பா இசையில் வெளிவந்த திரைப்படம்
ஒரு அருமையான நாட்டுபுற பாடல்
துணை நடிகை முகத்தை பார்த்தல் கொஞ்சம் படாபட் மாதிரி இருக்கிறது
நெஞ்சம் படபடனு அடிக்கிறது
ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
நான் முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
முத்தமிடக் கூடாத திருமணமா
மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா
இந்த* மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா
கள்ளோடு பூவிரண்டைக் கிள்ளி எடுத்து
திருக்கல்யாணக் கதைகளை சொல்லிக் கொடுத்து
உள்ளூர* உள்ளூர* எண்ணிக் க*ளித்து
உள்ளூர* உள்ளூர* எண்ணிக் க*ளித்து
நான் உற*க்க*த்தில் விழிப்பேன் உன்னை நினைத்து
நான் உற*க்க*த்தில் விழிப்பேன் உன்னை நினைத்து
வொத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி நான்
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
வெள்ளரிப் பழம் பிளந்த பிள்ளைச் சிரிப்பு
இன்று வேறோடு பூப்பறிக்க வந்த நினைப்பு
வெள்ளரிப் பழம் பிளந்த பிள்ளைச் சிரிப்பு
இன்று வேறோடு பூப்பறிக்க வந்த நினைப்பு
முள்ளிருக்கும் பூவுமுண்டு பெண்களிடத்தில்
முள்ளிருக்கும் பூவுமுண்டு பெண்களிடத்தில்
அதை முன்னாலே சொல்லிவிட்டேன் கண்களிடத்தில்
அதை முன்னாலே சொல்லிவிட்டேன் கண்களிடத்தில்
வொத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி நான்
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
முத்தமிடக் கூடாத திருமணமா
மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா
இந்த* மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா ?
http://www.youtube.com/watch?v=t5-Ew96izaQ
Gopal.s
2nd July 2014, 03:21 PM
நீயும் நானும் என்றொரு படம். ரவி-ராஜஸ்ரீ ஜோடி.யாரடி வந்தார் உன் நெஞ்சத்தை கொள்ள
gkrishna
2nd July 2014, 04:17 PM
பொன் மகள் வந்தாள் 1973
ஒரு நல்ல suspense thriller
ஜெய்,லக்ஷ்மி,முத்துராமன்,ஸ்ரீகாந்த்,முத்துராம ன் அப்பாவா ஒருத்தர் வருவர் .
நிறைய murders நடக்கும். யார் அதை செய்றது
முத்துராமன் வில்லன் மாதிரி வருவார் ஆனால் அவரும் கொலை செய்ய படுவார் . ஸ்ரீகாந்த் படம் பூராவும் கொலை நடக்கும் இடத்திற்கு வந்து ஒரு சுருட்டு கிடக்கும் . அதை தேடி எடுத்துட்டு போவார். இறுதியில் அவர் cid .
கருப்பு வெள்ளை .
பழய படங்களில் இந்த banner வரும்
கார்த்திக் சார் கூட ஒரு பதிவில் இது சாந்தி கிரௌன் புவனேஸ்வரி
திரைஅரங்க காம்போவில் வெளி வந்த படம் என்று எழுதி இருந்தார்
ஷங்கர் கணேஷ் இசையில் ஒரு அருமையான மெலடி டூயட்
ஆரம்ப ஹம்மிங்
"ல ல ல ல ல லா லா ல ல ல ல ல லா லா "
"சு சு சு சு சு சு சு சுச் சு சு " பாலாவின் இந்த ஹம்மிங் ரொம்ப நல்ல இருக்கும்
எந்தன் தேவனின் பாடல் என்ன
அதில் ஏங்கும் ஏக்கம் என்ன
நெஞ்சம் பூபந்தாய் துள்ளாதோ
மஞ்சம் வாவென்ற் சொல்லாதோ
அள்ளவோஒ . உண்ணவோ
எந்தன் தேவியின் ஆடல் என்ன
அதில் காணும் பாவம் என்ன
(எந்தன் தேவியின் )
தண்ணீரில் துள்ளாத செம்மீன்கள்
வஞ்சிபெண் கண்ணுக்குள் நீராட கண்டேனே
நீலவானில் நீந்துகின்ற மேகங்களே
எங்கள் காதல் என்றும் வாழ்கவென்று பாடுங்களே
(எந்தன் தேவியின் )
பன்னீரும் மை வண்ண ஜவ்வாதும்
கண்ணொடு கொண்டாடும் என் மேனி உன் சொந்தம்
வெள்ளி வண்ண தீபம் உந்தன் கண்ணல்லவோ
அதில் பள்ளி கொண்ட காதல் தெய்வம் நானன்ல்லவோ
(எந்தன் தேவனின்)
ஆடியோ லிங்க் தான் கிடைத்தது . விடியோ லிங்க் கிடைக்கவில்லை
முரசு sunlife சேனல் களில் இது போன்ற படம் வரவில்லை
திருப்பி திருப்பி நூற்றுக்கு நூறு,பூவா தலைய ,பெண் ஜன்மம்,மாணவன்,
சூரிய காந்தி,பூவும் பொட்டும் இது தான் வருகிறது
கார்த்திக் சார் /வினோத் சார்
இதன் பேப்பர் கட்டிங் எதாவது இருந்தால் ஏற்றி விடுங்கள்
http://www.mediafire.com/?37c48un6ptcgc2h
mr_karthik
2nd July 2014, 05:21 PM
டியர் வாசு சார்,
இன்றைய ஸ்பெஷலாக மலர்ந்த 'தென்றலில் ஆடை பின்ன' (கண்ணே பாப்பா) படப்பாடல் மிகவும் அருமை. ரொம்பவே அனுபவித்துஒவ்வொரு வார்த்தையையும் பதித்துள்ளீர்கள். ஒவ்வொரு வரிக்குமான விளக்கங்கள் சூப்பர்.
கண்ணே பாப்பா இயக்குனர் பி.மாதவன் சற்றே வித்தியாசமாக தந்த படம். மெல்லிசை மன்னரின் இசையில் பாடல்கள் அனைத்தும் மிக இனிமை. இப்படத்தில் ஆண்குரல் பாடலே இல்லையென்று நினைக்கிறேன். அனைத்துப்பாடல்களுமே பி. சுசீலா மட்டுமே என்றும் நினைக்கிறேன். உறுதி செய்யவும்.
படத்தில் திரும்பத்திரும்ப வரும் 'கண்ணே பாப்பா என் கனிமுத்து பாப்பா' பாடலும் மிகவும் இனிமை. அப்பா, அம்மாவைத்தேடி சென்னை வரும் குழந்தை ஒரு வீட்டின் திண்ணையில் தூங்கும்போது, குழந்தையின் கனவில் விஜயா வந்து பாடும் முழுப்பாடலும் அதற்கான காட்சியும் கூட நன்றாய் அமைந்திருக்கும்...
கண்ணே பாப்பா என் கனிமுத்து பாப்பா
அன்னையும் இங்கே சிந்தும் புன்னகை எங்கே
சித்திரத்தில் ஒரு தத்துவம் உண்டு, எழுதியவன் எங்கே
சத்தியத்தில் பெரும் நம்பிக்கை கொண்டு தழுவியவள் இங்கே
சங்கம நதியும் கடலும் என்றும் பிரிவதில்லை கண்ணே
(ஏமாந்தவளுக்குத்தான் எவ்வளவு ஒரு நம்பிக்கை...!!).
அன்னையிடத்தில் தந்தை இருந்தால் பிள்ளைக்கு பாராட்டு
அள்ளியெடுத்து பாடி முடிப்பாள் ஆயிரம் தாலாட்டு
சந்தன நிலவே நீயும் நானும் தலைவன் விளையாட்டு
சாலை வழியே செல்லும் குழந்தைக்கு இறைவா வழிகாட்டு
ஆயிரம் இரவு அவசர உறவு
இறைவனின் முடிவு இங்கு நீ வந்த வரவு
கண்ணே பாப்பா என் கனிமுத்து பாப்பா
பாடல் முடிந்து கடைசியில் குழந்தையின் கனவு கலையும்போது இனம்புரியாத சோகம் வந்து நம் இதயத்தை தாக்கும்.
இன்னொரு சுசீலா பாடல் விஜயகுமாரிக்கு (ஜோடி சி.ஐ.டி.நம்பியார்)
சத்திய முத்திரை கட்டளையிட்டது
நாயகன் ஏசுவின் வேதம்
கட்டிலில் கேட்டவர் தொட்டிலில் கேட்பது
பாலகன் ஏசுவின் கீதம்
அந்த நாயகன் பாடிய முதல் பாடல்
அந்த தூதுவன் ஆடிய விளையாடல்
மேய்ப்பன் அவனே ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில்
மன்னன் அவனே மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்
மேரி மாதா ராஜசபையை காத்தது எப்படியோ
தேவ தூதன் நம்மையெல்லாம் காப்பது அப்படியே
அந்த நாயகன் பாடிய முதல் பாடல்
அந்த தூதுவன் ஆடிய விளையாடல்
ஒவ்வொரு கிருஸ்துமஸ் தினத்தன்றும் வானொலிகளில் தொலைக்காட்சிகளில் தவறாமல் ஒலிக்கும் பாடல்...
vasudevan31355
2nd July 2014, 05:40 PM
நன்றி பார்த்தசாரதி சார்.
நீங்கள் குறிப்பிட்டிருந்த 'குழந்தைக்காக ''தேவன் வந்தான் தேவன் வந்தான் குழந்தை வடிவிலே' பாடலை விவரித்து எழுத ஆசை.
அற்புதமான பாடல் சார் அது!
அந்தப் படத்திலேயே இன்னொரு பிரபலமாகாத ஆனால் என் மனம் கவர்ந்த பாடல் ஒன்று உண்டு.
அது பத்மினி பேபி ராணியைக் காப்பற்ற திருடர்களான மேஜர், ராமதாஸ், மனோகர் ஆகியோரின் கட்டளைப்படி கவர்ச்சியாக ஆடும் போது ஒலிக்கும் பாடல் (அப்படித்தான் நினைவு).
நம் பாடகியர் திலகம் பாடியிருப்பார் அவ்வளவு இனிமையாக. நிச்சயம் உங்களுக்கும் தெரிந்திருக்கும்.
தொட்டுப் பாருங்கள்
ஜோடிப் பூவைப் போலக் கன்னங்கள்
தட்டிப் பாருங்கள் தாளம் போடும்
ஆசைக் கிண்ணங்கள்.
இப்பாடலின் இடையே வரும் இடையிசையும் மறக்க முடியாதது.
பாருங்கள் இப்போது. மிகவும் அபூர்வமான பாடல்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=QHb_FO4jhQs
gkrishna
2nd July 2014, 05:42 PM
நல்லதுக்கு காலமில்லை 1977
தொழிலாளர் films
TN பாலு இயக்கம்
ஜெய்ஷங்கர்,ஸ்ரீப்ரிய,ஸ்ரீகாந்த்,சுகுமாரி,லக்ஷ்மிஸ் ரீ (ஒரு தங்க ரத்தத்தில் என் மஞ்சள் நிலவு பாட்டில் வருவார் பின்னாட்களில் தற்கொலை செய்து கொண்டார் ஏன் என்று தெரியவில்லை )அஞ்சல்பெட்டி முத்தையா (ஒரு கால் கொஞ்சம் ஊனமாக இருக்கும். ஹிந்தி நடிகர் டேனி யை நினவு படுத்தும் முகம் ) நடித்து வெளி வந்தது
நிறைய திரைப்பட தொழிலாளர்கள் ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு
14 நாட்களில் எடுக்கப்பட படம் என்று பிலிமலாயா பத்திரிகை எழுதிய நினவு .
ஸ்ரீகாந்த் அண்ணன், ஜெய் தம்பி, சுகுமாரி அம்மா,லக்ஷ்மிஸ்ரீ தங்கை
இதில் ஸ்ரீகாந்த் நல்லதுக்கு காலமில்லை என்று கூறி திருட்டு,கள்ளகடத்தல் செய்து குடும்பத்தை காப்பாற்றுவார் . ஜெய் அதற்கு நேர் எதிர் நல்லதுக்கு காலமுண்டு என்ற கட்சி அவர் காதலி ஸ்ரீப்ரிய . ஜெய் சுகுமரியிடம் எப்படியாவது ஸ்ரீகாந்தை திருத்தி நல்வழிக்கு கொண்டு வருவேன் என்று வாக்கு கொடுப்பார் .ஆனால் ஸ்ரீகாந்தை அஞ்சல்பெட்டி முத்தையா கூட்டம் போட்டு தள்ளிரும் . ஜெய் அதற்கு பழி வாங்குவார் .
இந்த படத்தில் நான் ரசித்த TN பாலுவின் ஒரு வசனம்
ஸ்ரீகாந்த் தங்கை லக்ஷ்மிஸ்ரீயை தோளில் அணைத்து கொண்டு
- "இந்த பூவோடு சேர்ந்து நாரும் மணம் பெறும் " என்று கூறுவார்
உடனே ஜெய் தங்கை லக்ஷ்மிஸ்ரீயை தன் பக்கம் இழுத்து -
"இந்த நாரோடு சேர்ந்தால் பூவும் நாறும" -
ஒரு ரசிகரின் கைத்தட்டு விண்ணை பிளக்கும் - வேறு யாரு
ஷங்கர் கணேஷ் இன்னிசை வேந்தர்கள் இசை
சுசீலா குரலில் ஸ்ரீப்ரிய ஜெய் ஐ டீஸ் செய்து ஒரு பாடல் உண்டு
"அச்சச்சோ பரிதாபம் அய்யாவுக்கு அனுதாபம்
பள்ளத்தில் விழுந்தாரே அய்யோ பாவம் "
சௌந்தரராஜன் மீண்டும் இதே பாடலை ஸ்ரீப்ரியவை பள்ளத்தில்
தள்ளி விட்டு இந்த பாட்டை பாடுவார்
ஜெய் ஸ்ரீப்ரிய மாறுவேடம் போட்டு கொண்டு (வழக்கம் போல் )
துபாய் ஷேக் ஜெய் அவர் அடிமை பெண் ஸ்ரீப்ரிய
சௌந்தரராஜன் வாணி குரல்களில்
"ஹாப்பி returns ஒ மை பிரதர் வழங்கினேன் வாழ்த்துகள்
ஷப திப ஷப திப (கணேஷ் இன் chorus )"
இந்த பாட்டில் ஒரு வரி வரும் "இது பெரிய இடத்து விஷயம் "
என்று கூறிவிட்டு ஸ்ரீப்ரியாவின் எதோ ஒன்றை காட்டுவார்
உடனே கைதட்டல் கிளம்பும் (ஒரு)
விடியோ லிங்க் இல்லை
http://www.inbaminge.com/t/n/Nallathukku%20Kalamillai/
vasudevan31355
2nd July 2014, 05:48 PM
கிருஷ்ணா சார்!
'தென்றலில் ஆடை' க்கு பாராட்டு பின்னிய தங்களுக்கு என் நன்றி!
மகனே நீ வாழ்க பாடல் தந்த பெருமகனே! நீவிர் வாழ்க.
நல்ல குத்துப் பாடல் போன்ற ஒரு பாடல்.
ஆனால் பாடலுக்கும் காட்சிக்கும் பொருத்தம் இல்லை என்பது போல் தோன்றுகிறது.
வேட்டி சட்டை, புடவை என்று மனதில் கற்பனைக் கோட்டை கட்டினால் நாகரீக உடையில் ஜெய்யும், மட்டமான சிகை அலங்காரத்தில் லஷ்மியும் ஆடுகிறார்கள்.
gkrishna
2nd July 2014, 05:55 PM
உண்மை வாசு சார்
இந்த பாடல் ஆடியோவில் மட்டும் கேட்க வேண்டிய பாடல்
முதல் காட்சியில் வரும் அந்த துணை நடிகை படாபட் ஜெயலக்ஷ்மி யா
mr_karthik
2nd July 2014, 05:57 PM
டியர் கிருஷ்ணாஜி,
எந்தன் தேவியின் பாடல் என்ன
அதில் காணும் பாவம் என்ன
(பொன்மகள் வந்தாள்) படப்பாடல் விளக்கம் நன்றாக உள்ளது.
படமும் நல்ல அருமையான படம்.
சாந்தியில் இப்படத்தின் பேனர் பட்டிக்காடா பட்டணமா படத்தில் இடம்பெறும். ('ஏண்டா, சாந்தி தியேட்டரை எனக்கே காட்டறியா?' - அப்பாடா தலைவர் தரிசனமும் பண்ணியாச்சு).
vasudevan31355
2nd July 2014, 05:59 PM
கிருஷ்ணா சார்,
மகனே நீ வாழ்க ஒரு குடும்பச் சித்திரம்.
இன்றைய ஸ்பெஷலுக்காக இதில் ஒரு பாடலை அலச முடிவு செய்திருந்தேன். நீங்களும் இப்போது டாண் என்று ஒரு பாடலைக் களமிறக்கி விட்டீர்கள்.
அந்தப் பாடல் இப்போது வேண்டாம்.
ஆரம்பம் சுகமானது
ஆனந்தமானது யார் யாரோ
எங்கேயோ ஏததோ விதமானது
என்று சுசீலா பாடல் ஒன்று நன்றாகவே இருக்கும்.
அதே சுசீலாவின் இன்னொரு பாடல் அருமை
எத்தனை முகமோ உனக்கு
தினம் எத்தனை குணமோ எனக்கு
அத்தனையும் பழம் கணக்கு
இன்று சமரசமானது வழக்கு.
லஷ்மி ஜெய்சங்கரிடம் அறிவுரை சொல்வது போலப் பாடுவார்.
இதுவும் ஒரு அபூர்வப் பாடல்தான்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=nwGAbWEcCG0
gkrishna
2nd July 2014, 06:06 PM
வாசு சார்
1969-70 கால கட்டத்தில் இந்த மாதிரி ஒரே டைட்டில்
மகனே நீ வாழ்க
பெண்ணே நீ வாழ்க
பெண்ணை வாழ விடுங்கள்
vasudevan31355
2nd July 2014, 06:11 PM
மிக்க நன்றி கார்த்திக் சார்.
நான் 'கண்ணே பாப்பா' வில் ஒரு பாடலைத் தர நீங்கள் 'கண்ணே பாப்பா' பாடலை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.
இன்றைய ஸ்பெஷலில் நாளை அந்தப் பாடலை எடுக்கலாம் என்றுதான் அதனுடைய தொடர்ச்சி நாளை என்று எழுதி இருந்தேன்.
இப்போது நீங்கள் அந்தப் பாடலை அழகாக நினைவு கூர்ந்து விட்டீர்கள். நன்றி!
இப்பாடலில் முதலாவது சரணத்திற்கு முன்னாள் பல்லவியுடன் சேர்ந்து சில வரிகள் வரும்
பனித்துளி ஒன்று
சிப்பியில் விழுந்து
வந்தது முத்து
அது மன்னவன் சொத்து
கண்ணதாசன் மனிதனின் பிறப்பையே இந்த நான்கு வரிகளில் விளக்கி விட்டார்.
இந்த வரிகளை ஆழமாக யோசித்துக் கிண்டினால் விஷயம் புதையல் புதையலாக வரும்.:)
ஆனால் கண்ணதாசனின் அசாத்திய திறமையை மட்டுமே நாம் கருத்தில் கொள்வோம்.
'சங்கம நதியும் கடலும் என்றும் பிரிவதில்லை கண்ணே'
என்று சொல்லி அடுத்த வரியைப் பாடுவார் பாருங்கள்
'சந்தித்த கண்கள் நன்றி சொல்லாமல் நடந்தன ஏன் கண்ணே?'
(குற்றாலத்தில் கண்களாலேயே கைது செய்து ஒரு குழந்தையை கொடுத்தவன் நன்றியில்லாமல் ஓடி விட்டானே!)
என்னவோ நம் உறவுக்காரப் பெண் வாழ்க்கையைப் பறி கொடுத்தது போன்று நம் கண்கள் குளமாகும் சார்.
vasudevan31355
2nd July 2014, 06:12 PM
வாசு சார்
1969-70 கால கட்டத்தில் இந்த மாதிரி ஒரே டைட்டில்
மகனே நீ வாழ்க
பெண்ணே நீ வாழ்க
பெண்ணை வாழ விடுங்கள்
அப்புறமாக மகராசி நீ வாழ்க
ராஜா நீ வாழ்க
இன்னும் இருக்கா?
gkrishna
2nd July 2014, 06:19 PM
1976-77 கால கட்டத்தில்
முன்னூறு நாள் னு ஒரு படம் நினைவு சார் . போஸ்டரில ஒரு பெரிய A போட்டு இருக்கும் .
தேவிகா husband தேவதாஸ் இயக்கம் னு நினவு
இப்ப கூட தொலை காட்சியில் தேவிகா பொண்ணு கனகவுக்கும்
இவருக்கும் சண்டை வந்து அதை ஒரு எபிசொட் ஓட்டினார்கள்
தேங்காய் ,ஸ்ரீகாந்த் நடித்து வந்த படம்
ஒரு நல்ல tms பாட்டு ஒன்று உண்டு
தேங்காய் பாடி கொண்டு வருவார்
"உங்கள் முதுகை பாருங்கள் " என்று வரும்
எதாவது நினவு உண்டா
gkrishna
2nd July 2014, 06:21 PM
வாசு சார்
கண்ணதாசன் ஒரு ஆய்வு எழுதணும் சார் நீங்க
நாங்க எல்லாம் அதை படிக்கணும்
என்னமா பாடலை துவைச்சு தொங்க விடுறீங்க
vasudevan31355
2nd July 2014, 06:24 PM
கார்த்திக் சார்,
நீங்கள் குறிப்பிட்டது போல கண்ணே பாப்பா படத்தில் ஆண்குரல் பாடல் எதுவும் இல்லைதான். கரெக்டா கண்டுபிடிச்சுட்டீங்க.
ஆனால் எல்.ஆர்.ஈஸ்வரி (அப்பா! இன்று மட்டுமாவது ஒருதடவை பெயரை எழுதுவோம்) பாடும் பாடல் ஒன்று
கிளப் டான்சராக வரும் மனோரமா ஆச்சி கிளப்பில் ஆலம், சகுந்தலா, ஜெயகுமாரி ரேஞ்சிற்கு ஒரு ஆட்டம் பாடிக் கொண்டே போடுவார். ஆச்சிக்கு குரல் கொடுத்தது ராட்சஸி. (தில்லானா மோகனாம்பாள் போல்)
காலத்தில் இது நல்ல காலம்
நேரத்தில் அடிக்கடி யோகம்
என் பாடு கொண்டாட்டம்
என் கையில் ஒரு லட்சம்
நான் இப்போது ராணியல்லவோ
வழக்கமான ராட்சஸியின் அலம்பல்கள் தவறாமல் உண்டு.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=dz7F1sKmyT8
இது போல மனோரமா இன்னொரு படத்தில் கிளப்பில் தங்கவேலுவுடன் டான்சராக ஆடியிருப்பார். (மாடர்ன் தியேட்டர்ஸ் 'வல்லவனுக்கு வல்லவன்' படத்தில் 'கண்டாலும் கண்டேனே உன் போலே' என்ற சீர்காழி, ராட்சஸியின் செம கலக்கல் பாடலுக்கு)
http://www.youtube.com/watch?v=VaaWFQGhRes&feature=player_detailpage
gkrishna
2nd July 2014, 06:27 PM
பனித்துளி ஒன்று
சிப்பியில் விழுந்து
வந்தது முத்து
அது மன்னவன் சொத்து
இதை மாதிரி புலமை பித்தன் கூட தீபம் படத்தில் நினவு சார்
"முத்து சிப்பி திறந்தது விண்ணை பார்த்து
மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து "
vasudevan31355
2nd July 2014, 06:27 PM
1976-77 கால கட்டத்தில்
முன்னூறு நாள் னு ஒரு படம் நினைவு சார் . போஸ்டரில ஒரு பெரிய A போட்டு இருக்கும் .
தேவிகா husband தேவதாஸ் இயக்கம் னு நினவு
இப்ப கூட தொலை காட்சியில் தேவிகா பொண்ணு கனகவுக்கும்
இவருக்கும் சண்டை வந்து அதை ஒரு எபிசொட் ஓட்டினார்கள்
தேங்காய் ,ஸ்ரீகாந்த் நடித்து வந்த படம்
ஒரு நல்ல tms பாட்டு ஒன்று உண்டு
தேங்காய் பாடி கொண்டு வருவார்
"உங்கள் முதுகை பாருங்கள் " என்று வரும்
எதாவது நினவு உண்டா
யோசிக்கறேன் சார்!
கஷ்டமான வாத்தியார் சார் நீங்கள்!:)
vasudevan31355
2nd July 2014, 06:30 PM
பனித்துளி ஒன்று
சிப்பியில் விழுந்து
வந்தது முத்து
அது மன்னவன் சொத்து
இதை மாதிரி புலமை பித்தன் கூட தீபம் படத்தில் நினவு சார்
"முத்து சிப்பி திறந்தது விண்ணை பார்த்து
மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து "
கிருஷ்ணா சார்,
பதிலுக்கு பதிலா?
இந்தாங்க என் பங்குக்கு இன்னொன்னு
சிப்பியின் உள்ளே முத்தாடும் சேதி
சொல்லாமல் என்னிடமே மறைத்தாளோ தேவி
அப்பாடா! தப்பிச்சேன்டா சாமியோவ்.:)
vasudevan31355
2nd July 2014, 06:31 PM
வாசு சார்
கண்ணதாசன் ஒரு ஆய்வு எழுதணும் சார் நீங்க
நாங்க எல்லாம் அதை படிக்கணும்
என்னமா பாடலை துவைச்சு தொங்க விடுறீங்க
கிருஷ்ணா சார்!
எப்படி சார் இப்படியெல்லாம்!...:)
vasudevan31355
2nd July 2014, 06:32 PM
முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூவண்டு
குடி கொண்டதே இன்பத் தேனுண்டு
gkrishna
2nd July 2014, 06:34 PM
வாசு சார்
சிப்பியின் உள்ளே முத்தாடும் சேதி
சொல்லாமல் என்னிடமே மறைத்தாளோ தேவி
யாருக்கு யார் காவல்
ஸ்ரீகாந்த் ஸ்ரீப்ரிய சரத்பாபு நடித்த படம்
ஜாய் னு ஒரு மலையாள மியூசிக் டைரக்டர் இசை
மல்லியம் இயக்கம்
சுஜாதாவின் ஜன்னல் மலர் கதையை கந்தர்வ கோலம்
vasudevan31355
2nd July 2014, 06:34 PM
கிருஷ்ணா சார்
உங்கள் ஷப திப ஷப திப அருமை சார். ரொம்ப ரசிக்கிறேன்.
mr_karthik
2nd July 2014, 06:35 PM
பொம்மலாட்டம்
ஜெய்சங்கர் - 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள்' ஜோடியாக நடிக்க முக்தா சீனிவாசன் இயக்கிய அருமையான பொழுபோக்கு சித்திரம். வி.குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் அட்டகாசம்.
ஜெய் - 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள்' ஜோடிக்கு இரண்டு அருமையான டூயட் பாடல்கள்.
நல்லநாள் பார்க்கவோ
நேரம் பார்த்தே பூமாலை சூட
சம்மதம் கேட்கவோ
கைகள் மேலே பொன்மேனியாட
ஜெய்சங்கர் படத்தில் வந்த முதல் 'நல்ல நாள்' பாடல் இது. பின்னர்தான் 'இந்த நாள் நல்லநாள்' (ஆசீர்வாதம்), 'நாள் நல்லநாள்' (பணக்காரப்பெண்) ஆகிய பாடல்கள் வந்தன.
இன்னொரு டூயட்...
நீ ஆட ஆட அழகு நான் பாட பாட பழகு
செண்டாடு வந்தாடு என்னோடு நீயும் வா வா
சுசீலாவுக்கு தனிப்பாடல் 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள்' தங்கை சச்சுவை டீஸ் செய்து பாடும் பாடல்...
மயக்கத்தை தந்தவன் யாரடி
மணமகன் பேரென்ன கூறடி
மறைவினில் நடந்தது என்னடி
நீ சொல்லடி - கதை மாறாமலே
அருமையான பாடல்களுக்கு நடுவே ஒரு திருஷ்டி போட்டு 'வா வாத்யாரே ஊட்டாண்டே' எனக்கு அறவே பிடிக்காத, அதே சமயம் படத்தின் ஓட்டத்துக்கு பெரிதும் துணை புரிந்த பாடல்.
Russellmai
2nd July 2014, 06:36 PM
வாசுதேவன் சார்,
கண்ணே பாப்பா பாடலில் நான் விரும்பும் வரிகளை
நான் பதிவிட முயற்சிக்கு முன் என்னை முந்தி விட்டீர்கள்.
தங்கள் பதிவுக்கு நன்றி
அன்பு கோபு
gkrishna
2nd July 2014, 06:43 PM
வாழ்கை அலைகள் னு ஒரு படம்
தெலுகு டப்பிங் சார்
நம்ம தலைவர் NT ,க்ரிஷ்ணமராஜு வாணிஸ்ரீ ,தேங்காய் எல்லாம் நடித்து இருப்பார்கள்
பாலா சுசீலா குரல்களில்
"உன் கண்களிலோ கனிகள் என் கைகளிலோ துளிகள்
உருகி போனேன் உருகி போனேன் "
"உன் சிரிபினிலோ மணிகள் "
TMS
NT க்கு ஒரு பாட்டு ,தேங்காய்க்கு கூட ஒரு பாட்டு
http://www.inbaminge.com/t/v/Vazhkai%20Alaigal/
gkrishna
2nd July 2014, 06:49 PM
"நந்தன் வந்தான் கோயில்லிலே நந்தி மறைத்தது வாசலிலே "
இந்த பாட்டு எந்த படம் சார் நாகேஷ் சச்சு பாடறது
vasudevan31355
2nd July 2014, 06:50 PM
கார்த்திக் சார்!
மறக்காமல்....:)
vasudevan31355
2nd July 2014, 06:53 PM
வாசுதேவன் சார்,
கண்ணே பாப்பா பாடலில் நான் விரும்பும் வரிகளை
நான் பதிவிட முயற்சிக்கு முன் என்னை முந்தி விட்டீர்கள்.
தங்கள் பதிவுக்கு நன்றி
அன்பு கோபு
நன்றி கோபு சார்!
Gopal.s
2nd July 2014, 07:04 PM
கண்ணே பாப்பாக்களா, லூட்டி தாங்கலை. இந்த குழந்தைக்காக ,நீயும் நானும் விரும்பும் ரவியின் யாரடி வந்தார்.
parthasarathy
2nd July 2014, 07:04 PM
"நந்தன் வந்தான் கோயில்லிலே நந்தி மறைத்தது வாசலிலே "
இந்த பாட்டு எந்த படம் சார் நாகேஷ் சச்சு பாடறது
Should be "Ninaivil Nindraval". Major acts as a blind and Nagesh/Sachu will sing with act a bit too close pretending they are doing in front of a blind. Major will feel embarrassed! One of those movies where Sachu used to go overboard.
Regards,
R. Parthasarathy
vasudevan31355
2nd July 2014, 07:06 PM
"நந்தன் வந்தான் கோயில்லிலே நந்தி மறைத்தது வாசலிலே "
இந்த பாட்டு எந்த படம் சார் நாகேஷ் சச்சு பாடறது
Nandhan Vanthaan – Ninaivil Nindraval (1967)
http://www.dailymotion.com/video/x16hb2b_nandhan-vanthaan-ninaivil-nindraval-1967_shortfilms
Gopal.s
2nd July 2014, 07:07 PM
ஒரு மல்லிகை மொட்டு மழைத்துளி பட்டு சில்லென பூத்தது இதழ் விட்டு (ரங்க ராட்டினம்)சௌகார் சொந்த தயாரிப்பில் டப்பா ஆனது.
vasudevan31355
2nd July 2014, 08:28 PM
கண்ணே பாப்பாக்களா, லூட்டி தாங்கலை. இந்த குழந்தைக்காக ,நீயும் நானும் விரும்பும் ரவியின் யாரடி வந்தார்.
பாப்பா குழந்தே உன் 'திருவிளையாடலு'க்கு எல்லையே இலையோ!
vasudevan31355
2nd July 2014, 08:39 PM
Should be "Ninaivil Nindraval". Major acts as a blind and Nagesh/Sachu will sing with act a bit too close pretending they are doing in front of a blind. Major will feel embarrassed! One of those movies where Sachu used to go overboard.
Regards,
R. Parthasarathy
பார்த்த சாரதி சார்,
மனோரமா தான் 'நினைவில் நின்றவளி'ல் நந்தி.
நீங்கள் குறிப்பிட்டது 'பொம்மலாட்டம்' படத்தில் அதே சச்சுவும்,நாகேஷும் வில்லன் மேஜர் சுந்தரராஜனை டபாய்த்துப் பாடும் பாடல். இதில் கண் தெரியாத மேஜர் பூனை. முக்தாவுக்கென்று ஒரு பாணி
https://www.youtube.com/watch?v=RCCcDinXSVQ&feature=player_detailpage
vasudevan31355
2nd July 2014, 08:40 PM
ஒரு மல்லிகை மொட்டு மழைத்துளி பட்டு சில்லென பூத்தது இதழ் விட்டு (ரங்க ராட்டினம்)சௌகார் சொந்த தயாரிப்பில் டப்பா ஆனது.
https://www.youtube.com/watch?v=U8I3XtAgWkU&feature=player_detailpage
vasudevan31355
2nd July 2014, 08:42 PM
மல்லிகை மொட்டை மனதார ஆடியோவில் கேட்க.
http://www.inbaminge.com/t/r/Rangarattinam/Oru%20Mallikai%20Mottu.eng.html
vasudevan31355
2nd July 2014, 08:48 PM
கண்ணே பாப்பாக்களா, லூட்டி தாங்கலை. இந்த குழந்தைக்காக ,நீயும் நானும் விரும்பும் ரவியின் யாரடி வந்தார்.
அண்ணே லூட்டி இல்லைன்னே! எல்லாவற்றிலேயும் பாட்டுதான். சந்தையில் அதிகம் வெளியே தெரியாத பாட்டுங்க நூற்றுக் கணக்கிலே வருதே! தெரியலையா!
vasudevan31355
2nd July 2014, 08:58 PM
கார்த்திக் சார்
எனக்கு மிகவும் பிடித்த மெல்லிசை மாமணி குமார் அவர்கள் இசை அமைத்த பொம்மலாட்டம் படப் பாடல்களை நினைவு படுத்தியதற்கு நன்றி!
தங்களால் நந்தனும் வந்தான்.
'மயக்கத்தைத் தந்தவன் யாரடி' என்னுடைய பேவரைட்.
அழகென்று நினைத்து பழகிடும் போது
அசடாயிருந்தால் என்னாவது
சொத்து சுகக்காரன் மெத்தப் படித்தாலும்
பித்துக்குளியானால் சுகமேதடி
அருமையான வரிகள். காதலை காய்ச்சி எடுக்கும் பாடல்.
https://www.youtube.com/watch?v=fPnEgr_7luQ&feature=player_detailpage
vasudevan31355
2nd July 2014, 09:09 PM
கார்த்திக் சார்
எனக்கு மிகவும் பிடித்த மெல்லிசை மாமணி குமார் அவர்கள் இசை அமைத்த பொம்மலாட்டம் படப் பாடல்களை நினைவு படுத்தியதற்கு நன்றி!
தங்களால் நந்தனும் வந்தான்.
'மயக்கத்தைத் தந்தவன் யாரடி' என்னுடைய பேவரைட்.
அழகென்று நினைத்து பழகிடும் போது
அசடாயிருந்தால் என்னாவது
சொத்து சுகக்காரன் மெத்தப் படித்தாலும்
பித்துக்குளியானால் சுகமேதடி
அருமையான வரிகள். காதலை காய்ச்சி எடுக்கும் பாடல்.
'பொம்மலாட்டம்' படத்தில் கார்த்திக் சார் குறிப்பிட்ட பாடல்.
நீ ஆட ஆட அழகு
நான் பாடப் பாட பழகு
வந்தாடு தந்தாடு
என்னோடு நீயும் வா வா
விரியாத மொட்டே நீ விரிந்தாடவா
விளைவாகும் நிலவே நீ விரைவாக வா
வீணைக்கு நானுண்டு
பாட்டே நீ வா
விடிந்தாலும் மஞ்சம் கொஞ்சத் தாலாட்ட வா
நீ ஆட ஆட அழகு
நான் பாடப் பாட பழகு
வந்தாடு தந்தாடு
என்னோடு நீயும் வா வா
பாடலின் ஆரம்பத்தில் வரும் கிடார் இசை அதன் பின்னே வரும் சிதார் இசை அற்புதம்.
https://www.youtube.com/watch?v=pWG-AFHV3jg&feature=player_detailpage
vasudevan31355
2nd July 2014, 09:33 PM
கோ,
உன்னுடைய விருப்பத்தைக் கேட்டுக் கொள்.
http://www.saavn.com/s/song/tamil/Neeyum-Naanum/Yaaradi-Vanthar/IicyaEJ2Rgs
Gopal.s
3rd July 2014, 05:33 AM
யாரடி வந்தார் பாட்டில் விஸ்வநாதன் விளையாட்டில் ராட்ஷஷி.அமர்க்களம். போனஸ் ஆக ஊஞ்சல் கட்டி ஆட்டட்டுமா வேறு.
ரங்க ராட்டினம் படத்திலேயே தங்க தொட்டில் பட்டு மெத்தை தாய் வீட்டிலே.
Richardsof
3rd July 2014, 10:12 AM
http://i62.tinypic.com/2wei16h.jpg
gkrishna
3rd July 2014, 10:15 AM
மங்கள வாத்யம் 1979 சரிகமபதநீ
கே.ஷங்கர் இயக்கம்
இசை மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்
தயாரிப்பு கோபிக்ரிஷ்ணன் (மெல்லிசை மன்னரின் புதல்வர் )
பாடல்கள் கண்ணதாசன்
திரை கதை வசனம் கலைமணி
எடிட்டிங் கிருஷ்ணன்
கேமரா ராஜாராம்
கலை பாபு
வெளியான நாள் 21/9/1979
நடிகர் நடிகைகள் - கமல்ஹாசன்,ஸ்ரீப்ரியா,ஸ்ரீகாந்த்,நம்பியார்,நாகேஷ்,க ாந்திமதி,
மகேந்திரன்
மாமியார் மருமகள் உறவு முறை பற்றிய கதை .கமல் திக்கு வாய் கதாபாத்திரம்
சாவி வார பத்திரிகையில் இந்த படத்தை பற்றி மிகவும்
'சிலாகித்து' எழுதிய ஒரு வரி விமர்சனம்
"ஒரு பொண்ணோட இதை அதை கொண்டவன் தான் தொடணும்
எதை
அவள் கொண்டையை "
இப்படி தொடை இடுக்கில் கையை வைத்து கொண்டு சிரிக்க வைக்கும்
சில வசனங்கள் - மொத்தத்தில் அபஸ்வரம்
மிகவும் எதிர்பார்கபட்டு தோல்வியை தழுவிய படம்
பாலா வாணியின் குரல்களில் கனவு பாடல்
"ராஜாத்தி குங்குமம் சிங்காரம்
ராஜாவின் பக்கத்தில் ஸ்ரிங்காரம்
ஆரம்ப ராகம் அதிசய மேளம்
ஆனந்தம் பாடும் மங்கள வாத்யம் "
அமர்களமான ஆரம்ப இசை ,நாதஸ்வர இசையுடன் கூடிய இணை இசை படத்தின் தலைப்புக்கு பொருத்தமாக
http://www.youtube.com/watch?v=xcmz03SywTo
பாடகர் திலகம் குரலில்
"வெள்ளை காக்கா மல்லாக்க பறக்க " தத்துவ பாடல்
விஸ்வநாதன் ஜானகி குரல்களில்
"துள்ளி வரும் காளை " -
ஜானகி குரலில் "சொர்க்கம் தெரிகிறது "
இது போக பாலாவிற்கு ஒரு சோலோ நினைவில் உண்டு
"வண்டினா வண்டிதான் "
விஸ்வநாதனின் சொந்த படத்தில் ஈஸ்வரிக்கு பாடல் இல்லை
என்ன கொடுமை இது சரவணன்
வாசு சார் இதுக்கு ஆடியோ வீடியோ லிங்க் எதாவது கிடைச்சா அவுத்து விடுங்க
gkrishna
3rd July 2014, 10:18 AM
எஸ்வி சார்
மிக அருமையான பழைய பத்திரிகையின் இணைப்பு
உடன் இது வரை காண கிடைக்காத தகவல்கள்
மிக்க நன்றி
தொடரட்டும் உங்கள் பணி
vasudevan31355
3rd July 2014, 10:29 AM
இன்றைய ஸ்பெஷல் (20)
இன்று ஒரு பழைய பாடல். அற்புதமான பாடல்.
http://2.bp.blogspot.com/-Ua8YRLEArlM/UsnqpdIm5YI/AAAAAAAAAHg/SUP0oUC8RDA/s1600/Idhu+Sathiyam.jpg
படம் ; இது சத்தியம்
இயக்குனர் : கே. சங்கர்
நடிப்பு :அசோகன், சந்திரகாந்தா
இசையமைப்பு : விஸ்வநாதன் ராமமூர்த்தி
தயாரிப்பாளர் : 'சரவணா பிக்சர்ஸ்' ஜி. என். வேலுமணி
படம் வெளியான வருடம் :1963
ஆனால் பாடல் போய்ச் சேர்ந்த நடிகர்கள்தான்?
http://i1.ytimg.com/vi/R-ZPq5omV_E/hqdefault.jpg
அசோகனுக்கும், சந்திரகாந்தாவுக்கும் இப்பாடல் ஒத்துப் போவதாகத் தெரியவில்லை. (சந்திரகாந்தா நம்ம நம்ம அலட்டல் நடிகர் 'அக்கா' சண்முகசுந்தரம் அவர்களின் தங்கை. அப்படியே சண்முகசுந்தரத்திற்கு பெண் வேடம் போட்ட மாதிரியே தெரிகிறார்)
அருமையான டூயட் கேட்க மட்டுமே! அவ்வ்வளவு இனிமை. பார்க்க அவ்வளவு சுவாரஸ்யமில்லை.
பாடக திலகங்கள் இருவரின் வளமான குரலில் வஜ்ரம் போல் நம் மனதில் ஒட்டிக்கொண்ட பாடல்.
மெல்லிசை மாமன்னர்களின் அசாத்திய திறமை பாடல் முழுதும் எதிரொலிக்கிறது. குறிப்பாக ஷெனாயின் பங்களிப்பு இதிலும்.
இனி பாடல்.
மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால்
கல்லும் கனியாகும்
ஹாஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹாஹா ஹாஹஹா
மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால்
கல்லும் கனியாகும்
முதன்முதலாக அவள் கைகள் விழுந்தால்
முள்ளும் மலராகும்
ஆஹா முள்ளும் மலராகும்
ஆஹா கல்லும் கனியாகும்
பாதிக் கண்ணை மூடித் திறந்து
பார்க்கும் பார்வை காதல் விருந்து
ம்...ம்..ம்...ம்...ம்ம்
பாதிக் கண்ணை மூடித் திறந்து
பார்க்கும் பார்வை காதல் விருந்து
ஜாதிக் கொடியில் பூத்த அரும்பு
சாறு கொண்ட காதல் கரும்பு
அன்னம் என்ற நடையினைக் கண்டு
மன்னர் தம்மை மறந்ததுமுண்டு
அன்னம் என்ற நடையினைக் கண்டு
மன்னர் தம்மை மறந்ததுமுண்டு
மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால்
கல்லும் கனியாகும்
முதன்முதலாக அவள் கைகள் விழுந்தால்
ஆஹா முள்ளும் மலராகும்
ஆஹா கல்லும் கனியாகும்
ஹாஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹாஹா..
வாழைத் தோட்டம் போல இருந்தாள்
வண்டு போலப் பாடித் திரிந்தாள்
ஆ ..ஆ ..ஆ ..ஆ ..ஆ..
வாழைத் தோட்டம் போல இருந்தாள்
வண்டு போலப் பாடித் திரிந்தாள்
தென்னம்பாளை போலச் சிரித்தாள்
சின்னக் கண்ணில் என்னை அடைத்தாள்
கன்னம் என்ற கனிகளின் மீது
இன்னும் நாணம் மோதுவதேனோ
அவள் இவள்தானா
இவள் அவள்தானா
அதைத் தெளிவாய்ச் சொல்லலாமா
அவள் வரலாமா நலம் பெறலாமா
அவர் சம்மதம் தரலாமா
அவர் சம்மதம் தரலாமா
அதைத் தெளிவாய்ச் சொல்லலாமா
வானம்பாடி போலப் பறந்தாள்
வாழ்வு தேடித் தேடி அலைந்தாள்
காதல் தந்த கள்வனைக் கண்டாள்
தன்னை தந்த கையில் விழுந்தாள்
தஞ்சம் தஞ்சம் என்று மலர்ந்தாள்
நெஞ்சம் யாவும் அவனிடம் தந்தாள்
தஞ்சம் தஞ்சம் என்று மலர்ந்தாள்
நெஞ்சம் யாவும் அவனிடம் தந்தாள்
அவள் இவள்தானா
இவள் அவள்தானா
அதைத் தெளிவாய்ச் சொல்லலாமா
அவள் வரலாமா நலம் பெறலாமா
அவர் சம்மதம் தரலாமா
அவர் சம்மதம் தரலாமா
அவர் சம்மதம் தரலாமா
ஹாஹஹஹா ஹாஹஹஹா ஹாஹஹஹா....
https://www.youtube.com/watch?v=0Lm7i6Dp9yY&feature=player_detailpage
vasudevan31355
3rd July 2014, 10:34 AM
எஸ்வி சார்
அருமையான பழைய ஆவணத்திற்கு நன்றி! இன்னும் தொடரவும்.
Gopal.s
3rd July 2014, 10:37 AM
Brilliant Vinod.Thanks.
vasudevan31355
3rd July 2014, 10:38 AM
வணக்கம் கிருஷ்ணா சார்.
காலையில் மங்களமாக மங்கள வாத்தியமா? அருமையான நினைவூட்டல். நானும் பார்த்திருக்கிறேன். செம போர். தோற்காமல் என்ன பண்ணும்?
எதிர்பார்த்தபடி பாடல்கள் இல்லை. ஆனால் பரவாயில்லை.
பாலாவும்,வாணியும் ஒப்பேற்றும் ராஜாத்தி குங்குமம் கேட்டுப் பெற்று விட்டீர்கள்.:)
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=xcmz03SywTo
vasudevan31355
3rd July 2014, 10:39 AM
Brilliant Vinod.Thanks.
வினோத் சார்!
ஜாக்ரதோ ஜாக்ரதோ
gkrishna
3rd July 2014, 10:49 AM
வாசு சார்
இது சத்தியம் சத்தியமாக அருமை
கோபால் சார் கூட இந்த பாடலை பற்றி மிக உயர்வாக குறிப்பிட்ட திரி ஒன்று நினவு உண்டு
நீங்கள் வினோத் சார் எப்படி பதிவுக்கு நடுவில் விளம்பரம் அல்லது
பத்திரிகைகளின் தகவல்களை இணைக்கிறீர்கள் ?
உண்மையில் எனக்கு தெரியாது
கற்பிக்க முடியுமா . கற்று கொள்ள ஆசை
உதாரணமாக "இது சத்தியம் " விளம்பரம்
Richardsof
3rd July 2014, 11:12 AM
என்னை பாராட்டிய அன்பு உள்ளங்களுக்கு நன்றி .
இது சத்தியம் படத்தில் இடம் பெற்ற ''சரவண பொய்கையில் நீராடி '' பாடல் எனக்கு மிகவும் பிடித்தது சுசீலாவின் இனிய குரல் மனதை நெருடும் பாடல்களில் இந்த பாடல் மறக்க முடியாதது .
http://youtu.be/IZB52e07qEo
கிருஷ்ணா சார்
tiny picture மூலம் படத்தை இணைக்கலாம் .
vasudevan31355
3rd July 2014, 11:32 AM
ஜஸ்ட் ரிலாக்ஸ் (இயக்குனர்கள் வரிசை)
https://lh5.googleusercontent.com/-Ds8AqyeTTF0/UwrJpwH7a1I/AAAAAAADws4/GCH8VyZ_9T4/s1600/CV-Rajendran-Kreshna-Kaivalyas-wedding-reception.jpg
இயக்குனர்கள் வரிசையில் ஒரு பழ மாதுளைக்கு ஒரு முத்தே உதாரணம் என்பது போல கார்த்திக் சார் அழகாக இயக்குனர் சி.வி.ராஜேந்திரனை 'இரண்டில் ஒன்று' பார்த்து விட்டார்.
இளமையை பிழிந்த இயக்குனர்.
இவரது முதல் இயக்குனர் அனுபவம் புதுமை.
http://archives.deccanchronicle.com/sites/default/files/mediaimages/gallery/2013/Feb/1-(2).jpg
இப்பாடல் காட்சியை இவர் படமாக்கி இருந்த விதத்தைப் பார்த்துதான் நடிகர் திலகம் சி.வி.ஆருக்கு 'கலாட்டா கல்யாணம்' இயக்கம் வாய்ப்பை எவ்வித கலாட்டாவும் பண்ணாமல் கொடுத்தார். இயக்குனரும் வெற்றி தந்து பெயரைக் காப்பாற்றி என்றும் மறக்க முடியாத நகைச்சுவை பொக்கிஷத்தைத் தந்தார்.
குருவுக்கே குருவாகி ('மலர் எது....என் கண்கள்தான் என்று சொல்வேனடி' பாரதியின் இரண்டாவது நீச்சலுக்கு முன்னாலேயே!
கோபால்! 'மாயமோதிரத்'தை இங்கே அணிவிக்க வேண்டாம்.)
http://www.thehindu.com/multimedia/dynamic/01828/06cp_Nil_Kaavani_K_1828603e.jpg
படத்தில் ''நீச்சல் குளத்''தில் இவர் தந்த 'ஜில்லென்று காற்று வந்ததோ' பாடலை அப்பாடல் விதமான காட்சியை யார்தான் மறக்க முடியும். நீச்சல் குளத்தில் இப்பாடலைப் பார்க்கையில் மனம் உற்சாக நீச்சல் அடித்ததே. குருவும், சிஷ்யரும் பாரதியை நிரம்பப் பிடித்தவர்கள் ஆயிற்றே.
நடிகர் திலகம், கமல், ரஜினி, ஜெய் என்று எல்லோரையும் ஒருகை பார்த்தவர். இளமை பொங்கிய ஸ்ரீதரிடம் பணியாற்றி இன்னும் இளமையான படங்களை பாடல்களைத் தந்தார்.
இவர் பாடல்களில் அதிக உழைப்பைப் பார்க்கலாம். குரூப் பாடல் வைப்பதில் விருப்பம் உள்ளவர். இந்தி பிரம்மண்டங்களுக்கே சவால் விட்டவர்.
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்...ஒருதரம் ஒரே தரம் பொட்டு வைத்து ஏ புள்ளே சச்சாயி என்று மன்மதனை காட்டி ஆலயமாகும் மங்கைக்கு கல்யாணச் சந்தையில் மயக்கம் வரவழைத்த இளமை வித்தகர்.
இளைஞர்களை இன்றும் குதூகலிக்கச் செய்யும் ஜெர்மனியின் செந்தேன் மலரே, ஒரு ஊரில் ஒருமகராணி அவள் உல்லாசக் கலையில் கலைவாணி என்று குளுமைப் படம் பிடித்துக் காட்டியவர்.
http://storage19.tunefiles.com/files/thumbs/2014/05/16/1400200656b58a6-original-1.jpg
ராஜஸ்ரீயையும், முத்துராமனையும் வைத்து இவர் காமேராமேனுடன் கைகோர்த்து புரிந்த மந்திரஜாலப் பாட்டு. மினியேச்சர் வித்தைகள் கலக்கல்கள். ஸ்லோமோஷன் ஸ்வீட்கள். (பாலச்சந்தரின் 'எதிர் நீச்ச' லில் தாமரைக் கன்னங்களுக்கு முன்னோடி) எம்.எஸ்.வி.என்ற அந்த மாமேதை பலவித இசைக்கருவிகளுடன் இணைந்து நமக்களித்த மறக்கவொண்ணாத பாட்டு.
சி.வி.ஆரை இந்தப் பாடலின் மூலம் பெருமைப்படுதுவதே பொருத்தம்.
https://www.youtube.com/watch?v=ag2ot4qsshE&feature=player_detailpage
gkrishna
3rd July 2014, 01:04 PM
ஒரு மரத்து பறவைகள் 1980
ஜெயவேல் productions தயாரிப்பில்
ரா சங்கரன் இயக்கத்தில்
(இந்த ரா சங்கரன் மௌன ராகம் படத்தில் ரேவதியின் தந்தையாக
mr சந்திரமௌலி ஆக நடித்தது எல்லோருக்கும் நினைவில் இருக்கும் )
ஸ்ரீகாந்த்,ஜெய்கணேஷ்,ஸ்ரீப்ரியா (இரட்டை வேடம்),அசோகன்,சுருளி
போன்றோர் நடித்து வெளி வந்த படம் .
இசை இன்னிசை வேந்தர்கள் சங்கர் கணேஷ்
கருப்பு வெள்ளை
எல்லா படங்களிலும் பெண்கள் என்றால் பொங்கல் மாதிரி நினைக்கும் ஸ்ரீகாந்துக்கு இந்த படத்தில் பெண்களை கண்டால் கூச்சப்படும் கேரக்டர்
ஜெய்கணேஷ் ஸ்ரீப்ரியவை காதலித்து ஏமாற்றி விட்டு பிறகு சேர்வார்
அசோகனின் ஜெய்கணேஷ் இடம் "வாடா அம்பி " வசனம் அந்த கால கட்டத்தில் மிகவும் பிரசித்தம்
பாடல்கள் எல்லாம் அந்த கால கட்டத்தில் ஹிட் (வீட்டுக்கு வீடு வானொலி பெட்டி அருகில் )
ஜானகி சோலோ "ராத்திரி நான் தூங்கமா தான் முழிச்சு இருந்தேனே
அது யாராலே ஒரு ஆளாலே"
இன்னொரு ஜானகி பாடல் கொஞ்சம் பாஸ்ட் பீட்
"கரும்பு முறிக்க போன பொண்ணை எறும்பு கடிச்சுதாம்
எறும்பு கடிச்சு பக்கத்திலே உன் மனசு இருந்துச்சாம்
பேக்கு ராமு பேக்கு பேக்கு ராமு (இந்த ராமு தான் ஸ்ரீகாந்த் )
சுருளி காமெடியில் பாலாவின் குரலில்
"கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கரக்கோ " ஒரு பாடல் உண்டு
திரு நங்கைகள் உடன் "எல்லாம் ஒண்ணா சேர்ந்து வாசிங்கடி " famous
மேலும் மனோரமா tk கலா குரல்களில் மகுடி
"மொட்டு மொட்டு மல்லி மொட்டு காஞ்சிவரம்
கட்டு குலையாதது பூ உடம்பு தொட்டு தழுவாதது
ஜின்சுனுக்க தள தள டண்டன்கா பள பள "
இதே படம் மலையாளத்தில் டப் செய்யப்பட்டு
"ஒரு விருக்ஷதண்டே பக்ஷிகள்" என்று வெளியானது .அதையும் காணும்
பாக்கியம் அடியேனுக்கு கம்பம் குமுளியில் இருந்து எருமேலி செல்லும் வழியில் முண்டகாயம் என்ற ஊரில் கிடைத்தது
http://www.inbaminge.com/t/o/Oru%20Marathu%20Paravaigal/
இந்த படத்திற்கு விடியோ லிங்க் எதாவது உண்டா சார்
mr_karthik
3rd July 2014, 01:14 PM
அன்பு வாசு சார்,
இன்றைய ஸ்பெஷல் பகுதியில் பதிவிட்ட 'மனம் கனிவான' (இது சத்தியம்) பாடலிலும் சரி, ஜஸ்ட் ரிலாக்ஸ் பகுதியில் பதிவிட்ட சி.வி.ஆர். பற்றிய குறிப்பும் பாடலும் சரி அருமையோ அருமை.
இது சத்தியம் படம் நின்றதே மெல்லிசை இரட்டையர்களின் பாடல்களால்தான் என்றால் மிகையில்லை. பாடல்கள் அத்தனையும் தேன் துளிகள்.
'சிங்கார தேருக்கு சேலைகட்டி' பாடலாகட்டும்
'சத்தியம் இது சத்தியம்' பாடலாகட்டும்
நீங்கள் எழுதிய 'மனம் கனிவான' பாடலாகட்டும்
வினோத் அவர்கள் தந்த 'சரவண பொய்கையில்' பாடலாகட்டும்
சுசீலாவின் 'காதலிலே பற்று வைத்தாள்' பாடலாகட்டும்
எல்லாமே இனிமையோ இனிமை.
இதுபோலவே தான் அசோகனுக்குக் கிடைத்த 'கார்த்திகை தீபம்' பாடல்களும்.
மனம் கனிவான பாடலுக்கு நீங்கள் தந்துள்ள விரிவான ஆய்வு மிகச்சிறப்பு.
mr_karthik
3rd July 2014, 01:51 PM
டியர் வாசு சார்,
சி.வி.ஆரின் முதல் படைப்பான அனுபவம் புதுமை படத்தில் இடம்பெற்ற 'கனவில் நடந்ததோர் கல்யாண ஊர்வலம்' பாடலை பார்க்கும்போதெல்லாம் / கேட்கும்போதெல்லாம் மனம் உற்சாகத்துள்ளல் போடும். மனதில் இனம்புரியாத இன்பச்சலனம் உண்டாகும். அந்த அளவுக்கு மெல்லிசை மன்னர் மிக அற்புதமாக, மிக அட்வான்ஸாக இப்பாடலை உருவாக்கியிருப்பார். அதை மிக அற்புதமாக சி.வி.ஆர் படமாக்கியிருப்பார்.
வழக்கம்போல, நல்லவற்றை புறந்தள்ளுவதையும், குப்பைகளை தலையில் தூக்கிவைத்து ஆடுவதையும் வழக்கமாக கொண்ட தமிழ் ரசிகர்கள் இப்படத்தையும் புறந்தள்ளினார்கள்.
மெல்லிசை மன்னரின் இதுபோன்ற வைரங்களை வானொலிக்காரன்களும், தொலைக்காட்சிக்காரன்களும் இருட்டுக்குள் ஒளித்து வைத்து சதி பண்ணியதால்தானே தாரை, தப்பட்டைக்காரன்கலெல்லாம் பெரிய இசைக்கொம்பன்கள் என்று பேர் வாங்க முடிந்தது.
என்ன ஒரு கற்பனை நயம் மிக்க கம்போஸிங், நினைத்துக்கூட பார்க்க முடியாத அந்த வித்தியாசமான ஹம்மிங். இசையின் தரம் கொஞ்சமும் குறையாத நேர்த்தியான படப்பிடிப்பு. அப்பப்பா...
மெல்லிசை மன்னர் ஆள் பார்த்து இசையமைக்கிறார் என்று சொல்லும் என் அருமை நண்பர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய பாடல் இது. (பார்த்திருப்பார்கள். இருந்தாலும் செல்வமகளுக்கு சொன்னதுபோல, இதுவும் ராமமூர்த்தியுடன் சேர்ந்திருந்தபோது கம்போஸ் செய்து வைக்கப்பட்ட பாடல் என்று சொல்லலாமா என்று யோசிப்பார்கள்).
கனவில் நடந்ததோர் கல்யாண ஊர்வலம்
கனிந்து வந்ததோ கள்ளூறும் காவியம்
என்ன.. என்ன... இன்றானந்தம்
இன்பம் இன்பம் இன்றாரம்பம்
இப்பாடலைப்பற்றி விரிவாக யாரும் எழுத மாட்டார்களா என்று ஆவலுடன் இருந்தேன். நீங்கள் எழுதி விட்டீர்கள். நமக்குள் இருக்கும் வைப்ரேஷன் அப்படி.
gkrishna
3rd July 2014, 02:17 PM
அப்போதே சொன்னேனே கேட்டியா 1979
சஷ்டி films
v .t அரசு இயக்கம்
சூலமங்கலம் சகோதரிகள் இசை இவங்க இயக்குனர் v .t அரசு வின்
சிஸ்டர் இன் லா என்று நினவு
ஜெய் கணேஷ்,சத்யப்ரிய நடித்தது
நாம் ஏற்கனவே இவருடைய தரிசனம் படம் பற்றி ஆய்வு செய்தோம்
அருமையான வீணை இசை interlude
யேசுதாஸ் வாணி குரல்களில் கண்ணதாசனின் மிக எளிதான வரிகள்
பா
பாப்பா
பாப்பா
எல்லாம் அவன் செய்தது
பசும் சோலை
இள மலர்கள்
இங்கு அவனாலே உருவானது
அந்த தெய்வம் நம் உறவானது
எல்லாம் அவன் செய்தது
பசும் சோலை
இள மலர்கள்
இங்கு அவனாலே உருவானது
அந்த தெய்வம் நம் உறவானது
பாப்பா
கண்ணே பாப்பா
தந்தையின் மனம் ஒன்று
அன்னையின் மனம் ஒன்று
இரண்டிலும் அவன் இன்று விளையாடுவான்
மழலைகள் சில தந்து
இரண்டுக்கும் துணை என்று
யாவையும் அவன்தானே உருவாக்குவான்
பூ வந்த கதையும்
நீ வந்த கதையும்
அவன் தந்த செல்வம் பாப்பா
அன்போடு காதல்
பண்பாடு பாசம்
அவன் போட்ட பின்னல் பாப்பா
உலகங்கள்
இறைவனின் பிருந்தாவனம்
நம் உள்ளங்கள் அன்பான பூங்காவனம்
பாப்பா
கண்ணே பாப்பா
பூமியின் நீர் உண்டு
நதி தரும் நீர் உண்டு
பூஞ்செடி வளர் காட்சி கண்டாய் முன்னே
தாய் தரும் பால் உண்டு
தமிழ் எனும் தேன் உண்டு
உலகத்தில் உயர்வென்று வளர்வாய் கண்ணே
ரோஜாக்கள் மலரும் ஆனந்த பவனம்
நமதில்லம் தானே பாப்பா
ராஜாவை போல மஹா ராணி போல
வருவீர்கள் நீங்கள் பாப்பா
சிரிப்புக்கு இதழ் தந்த தெய்வங்களே
சிறப்புடன் வரவேண்டும் செல்வங்களே
எல்லாம் அவன் செய்தது
பசும் சோலை
இள மலர்கள்
இங்கு அவனாலே உருவானது
அந்த தெய்வம் நம் உறவானது
பாப்பா
கண்ணே பாப்பா
கொஞ்சம் கர்ணனின் "இரவும் நிலவும் வளரட்டுமே " பாடல் நினைவிற்கு வரும்
ஆல் இஸ் well
http://www.inbaminge.com/t/a/Appothe%20Sonnene%20Kettiya/Ellaam%20Avan.eng.html
gkrishna
3rd July 2014, 02:37 PM
வாசு சார்
ஜஸ்ட் ரிலாக்ஸ் உண்மையில் பெரிதும் ரிலாக்ஸ்
ஸ்ரீதர்க்கு பிறகு இளமை இயக்குனர்களில் முதலானவர் CVR என்றால் அது மிகை ஆகாது
இந்த அனுபவம் புதுமை படமே ஒரு புதுமையான அனுபவத்தை கொடுத்த படம் .நான் இதை rerelease இல் 1978 கால கட்டத்தில் CVR பற்றி நன்கு அறிந்த பிறகு பார்த்த படம் . நெல்லை பர்வதியில் rerelease இல் 2 வாரம் ஓடிய படம்
இந்த படத்தில் பாடகர் திலகம் கண்ணிய பாடகி குரல்களில் இன்னொரு பாடம் என் மனம் கவர்ந்த பாடல் slow மெலடி அருமையான காட்சி அமைப்பு
http://www.youtube.com/watch?v=VMNMJns2cYw
Gopal.s
3rd July 2014, 06:42 PM
தலைவரே,
இப்போது சென்னை வந்தாலும் ,மெல்லிசை மன்னர் வீட்டுக்கு கூட்டி செல்வேன்.குடும்ப நண்பர். எங்கள் குடியிருப்பில் அவர், அவரது பெண்ணுடன் 6 மாதம் தங்கியிருந்த போது (இதய சிகிச்சை முடிந்து),தினமும் மொட்டை மாடியில் அரட்டை அடிப்பேன். ராமமூர்த்தி உடனும் பழக்கம் உண்டு.
எனக்கு யாரும் உயர்வு தாழ்வு இல்லை பாஸ். வெட்டு ஒண்ணு துண்டு இரண்டு.எம்.எஸ்.வீ இடமே சொல்லியுள்ளேன். டி.கே.ஆருடன் பிரிந்து இசையுலகுக்கே துரோகம் இழைத்து விட்டீர்கள் என்று.
தாரை,தம்பட்டை நம் ஆதிதமிழர்களின் பெருமை.அவைகளை வைத்து ஒருவர் சிறந்த பாடல்களை கொடுத்து வெற்றி பெற்றது பெரும் குற்றமா என்ன?அது சரி ,இரண்டே வாத்தியங்களை வைத்து இனிய கானத்தை பற்றி சிலாகித்து இரு நாட்களும் தாண்டாத நிலையில் .......ஹூம்... ட்ரம்ஸ்,கிடார் வந்தால்தான் பாட்டா?ஹென்றி டானியல் ,ஜோசப் கிருஷ்ணாவிற்கு இப்படி ஒரு ரசிகர்.
பக்கம் 6 இல் பதிவு 53 இல் கனவில் நடந்ததோ குறித்துள்ளேன்.
குயிலாக,வெண்ணிலா- என் கூற்றை மெய்ப்பிப்பது போல, எஸ்.வீ (Vinodh),வாலியின் பழைய பதிவை(#1305) போட்டுமா சந்தேகம்?நான் ஆதாரமில்லாமல் எழுதுவதே இல்லை .
Gopal.s
3rd July 2014, 09:08 PM
தர்மாவதி/மதுவந்தி.
அப்படியே கண்ணை மூடி கொள்ளுங்கள்.தனிமை. இனிமை. இப்போது சிம்ரனை லோ -ஹிப் ஜீனில் மேலே அரை முடிச்சு டாப்புடன் கற்பனை செய்து சல்லாபியுங்கள்.அதுதான் தர்மாவதியும் ,மதுவந்தியும் தரும் சிருங்காரத்துடன் கூடிய இத உணர்வுடன் தியான நிலையை உணர செய்யும் மதுர மந்திரம்.
தர்மாவதி ஒரு மேளகர்த்தா சம்பூர்ணம். மதுவந்தி அதன் ஜன்ய ராக அத்தை மகள்.தர்மாவதி notes கிரக பேதம் செய்யப் பட்டால் சக்ரவாகம்,சரசாங்கி(உள்ளத்தில்) கிடைக்கும்.,
அந்த படம் காதலிக்க நேரமில்லைக்கு இணையான நகைச் சுவை படம். அதே கண்கள் ஜோடி.வழக்கம் போல ஸ்ரீதர் படமென்றாலே ஸ்பெஷல் கவனிப்பு தரும் மெல்லிசை மன்னர் ,அவரின் உதவியாளர்(சக்ரவர்த்தி) படத்திலும் விளையாடி இருந்தார்.அதில் special pick of special lot என்று தேர்ந்தெடுப்பது" காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ "(ரவி-காஞ்சனா என் இரண்டாவது பிரிய ரவி ஜோடி ரவி-பாரதிக்கு அடுத்து.
சிவந்த மண்ணுக்கு போட்டியாக வர வேண்டிய படம் சற்று முந்தி கொண்டது. பிரம்மாண்டமாக ,technical ஆக rich என்ற வகையில் நன்கு உருவானதாக இருந்தாலும் ,திரைக் கதையமைப்பில் சறுக்கி சற்றே போர் அடிக்கும் மறுபாதி. மூன்று கிளைமாக்ஸ் இழுவை வேறு.பாவம் அந்த பாடகர் சற்றே சுயமரியாதை கொண்ட ஆண் .(யாரை நம்பி நான் பிறந்தேன் ரகம்) .நடிகர்திலகம் மற்றவர் சுயத்தை மதிப்பதால் அவரிடம் செல்லும். ஆனால் பிறரிடம்? பொண்ணு கல்யாணம் முடிந்து வந்து பாடுறேன் என்றவரிடம் தேவையில்லை என்று வளர்ந்து வரும் இளம் பாடகருக்கு வாய்ப்பு.ஆனால் சோதனை .அந்த இளைஞருக்கு டைபாய்டு ஜுரம். முது பாடகருக்கு ஒரு வாரம் காத்திருக்க முடியாதவர்கள்,இளம் பாடகருக்கு ஒரு மாதம் காத்திருந்து ரெகார்ட் செய்த புலமை பித்த-மகாதேவ - பால -சுசிலா இணைவு இனிமை. "ஆயிரம் நிலவே வா"(பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்.தென்றலெனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள் -ஆஹா) நல்ல படமாக்கம். lead pair chemistry நன்கு அமைந்த பாடல்.
பாலச்சந்தரின் மிக சிறந்த படமாக முதல் தேர்வு என்னுடையது இதுதான். தமிழில் வந்த மிக சிறந்த நகைசுவை சித்திரம்.situational ,dialogue ,slapstick அத்தனை வகை காமெடி,technical perfection ,editing marvel ,தேர்ந்த நடிப்பு இவைகளுடன் மிக சிறந்த இசையமைப்பு. டெலிபோனில் தற்செயலான இணைப்பு,ரசமான கிளு-கிளுப்பு சமாசாரமானவுடன் வரும் பாடல்." ஹலோ my dear wrong number ".எம்.எஸ்.வீ க்கு ஜே .
தர்மாவதி/மதுவந்தி பிற பாடல்கள்.
நந்தா என் நிலா- நந்தா என் நிலா.
என்னுள்ளில் ஏதோ ஏங்கும் ஏக்கம் -ரோசாப்பூ ரவிக்கைகாரி.
மீண்டும் மீண்டும் வா- விக்ரம்.
தத்தித்தோம் -அழகன்.
ஒட்டகத்தை கட்டிக்கோ- ஜென்டில் மேன் .
உசிலம் பட்டி பெண் குட்டி- ஜென்டில் மேன் .
கொஞ்சி கொஞ்சி அலைகளாட-வீரா.
கனா காணும் காலங்கள்- 7 G ,rainbow colony .
Gopal.s
4th July 2014, 05:59 AM
வகுளாபரணம்.
ஒரு நண்பர் வீட்டுக்கு செல்கிறீர்கள். உற்சாகமான நண்பர்.(என்னை போல என்று வைத்து கொள்ளுங்கள்)போன உடனே வாசலில் வந்து அமர்க்களமான வரவேற்பு கொடுத்து ,கடகடவென உற்சாகமாக விஷயங்களை சரளமாக நினைவு கூர்ந்து பேச ஆரபித்தால் உங்கள் மனதில் ஒரு இனம் புரியா உற்சாக எழுச்சி வருமே?உங்கள் மூட் அடுத்த சில நாட்களுக்கு உச்சத்தில் இருக்கும் சந்திப்பாக அமையும். அப்படி ஒரு இன்பத்தை அளிக்க வல்ல ராகம் வகுளாபரணம்.
இதுவும் சம்பூர்ண மேளகர்த்தா (14 வது)."நி" மாறுபட்டால் மாயா மாளவ கௌளை யாகவும்,"க" மாறுபட்டால் தோடியாகவும் தோற்றம் தரும் ராகம். இதற்க்கு ஜன்ய ராக உறவினர்கள் ரொம்ப அபூர்வம். ஒரே நெருங்கிய உறவு வசந்த பைரவி.
ஒரு தேர்தல் விதியை ,ஹிந்தி எதிர்ப்புக்கு ஈடாக மாற்றி எழுதிய ,நாட்டு பிரச்சினையாக மாற்ற பட்ட, நண்பர்களின் மோதல்.பாதிக்க பட்ட நடிகர்,தன் மனத் திடத்தால் சோதனை வென்று ,புத்துணர்ச்சியோடு மீண்டு ,ரசிகர்களை குதூகல படுத்திய படம்.மற்றும் பாடல்.வாலி வழக்கம் போல பல்லவியிலேயே கலக்கி விடுவார். எம்.எஸ்.வீ கேட்க வேண்டுமா... டி.எம்.எஸ்-பீ.எஸ்- அந்த கலக்கும் ஹம்மிங்.அந்த அரபியன் சாயல் கொண்ட interludes .கேட்ட உடனே பக்கென பிடித்து விடும் பாடல். "நினைத்தேன் வந்தாய் நூறு வயது".
கேட்ட உடனே ஸ்தம்பித்து நிற்க வைத்த ஒரு நாட்டு புற குதிக்கும் பாடல்.பிறகுதான் இதன் இசையமைப்பு ஒரு புதுமுகம் என்று அறிமுகம். ராசா , ஏற்கெனெவே ஏ.எம்.ராஜா என்ற சீனியர் இருந்ததால் ஜூனியர் ஆக பொருள் பட இளைய ராஜாவாக அறிமுக படுத்திய பஞ்சு அருணாசலத்தால் நாமகரணம் செய்ய பட்டார்.மச்சானை பார்த்தீங்களா என்றாலும் ஒரு ஏங்கும் நெஞ்சின் ஓலத்தை மனதை கீறி சொன்ன "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை ".எனக்கு ஒரு ஆச்சர்யம்.முதிய ராஜா போலவே,இளைய ராஜாவும் டி.எம்.எஸ்,சுசிலா அவர்களுக்கு முன்னணி தராமல் சிறிய இடமே தந்து இருந்தார். சிறு சிறு உரசல்களை மனதில் கொண்டு ,முதிர்ச்சியற்ற அணுகுமுறையால் ,டி.ம்.எஸ்,பீ.சுசிலா,கண்ணதாசன் (பாலாஜி பட தீபத்திலேயே தவிர்க்க பட்டார் ),வைரமுத்து போன்றோர் படாத பாடு படுத்த பட்டனர் ராசாவால்.(புல்லடியில் ஒளிந்துள்ள பாம்பு போன்ற குணம்).ஆனால் சேர்த்து வைத்து ஆப்பு வைத்தனர் மணிரத்னமும்,பாலசந்தரும்.(ரோஜாவில் ரகுமானுடன் கரம் கோர்த்து)
கொஞ்சம் பெரிய இடத்து பெண்,பட்டிக்காடா பட்டணமா சாயல் கொண்ட படம் காதல் இளவரசரின் உற்சாகத்தாலும்(வேட பொருத்தம் பூஜ்யம்) ,பஞ்சு-முத்து இணைவின் ரசாயனத்தாலும் ,உச்சத்தில் இருந்த ராஜாவின் மந்திரத்தாலும் 1982 இன் blockbuster ஆகி ,அதுவரை ஆரோக்யமாக மகேந்திரன்,ருத்ரைய்யா,பாரதிராஜா,பாலுமகேந்திரா தயவால் நடை போட ஆரம்பித்திருந்த தமிழ் பட உலகை, சீரழித்தது.ஆனாலும் இந்த பாடல் என்னை என்று கேட்டாலும் துள்ள வைக்கும் ."நேத்து ராத்திரி யம்மா ,தூக்கம் போச்சுது யம்மா"
வகுளா பரணத்தில் மற்ற பாடல்கள்.
கிண்ணத்தில் தேன் வடித்து - இளமை ஊஞ்சலாடுகிறது.
ஓம் ஒரு தென்றல் புயலாகி- புதுமை பெண் .
ஆறு அது ஆழம் இல்லை - முதல் வசந்தம்.
நிற்கட்டுமா போகட்டுமா -பெரிய வீட்டு பண்ணகாரன்.
Gopal.s
4th July 2014, 08:21 AM
இசை ரசிகர்களுக்கு பிரியமான ஜோடியான இவர்கள் பிரிந்ததை பற்றி ,இவர்களுடன் பணி புரிந்த எம்.ஆர்.கே .ராஜு,பீ.பீ.எஸ். டி.எம்.எஸ்.,டி.கே.ராமமூர்த்தி,வாமனன் முதலோரிடம் சேர்த்த விவரங்கள்.
1)ஜெனோவாவில் தனி இசை அமைத்த அந்த சிறுவனை பற்றி சுப்பராமன் சொன்னது. அந்த பயலுக்கு இசை பற்றி ஒண்ணுமே தெரியல்லே. ஆனா உன் கூச்ச குணத்தை ஈடு செய்யும் திறமை அவனுக்கு ஆள் பிடிக்கும் திறமை அதிகம்.நீ அவனை சேர்த்து கொள் என்று டி.கே.ஆரிடம் சொல்ல, என்.எஸ்.கே புண்ணியம் தேடினார் பணத்திலிருந்து இவர்களை இணைத்து.டி.கே.ஆர் படு கூச்ச சுபாவம் உள்ள திறமைசாலி.எம்.எஸ்.வீ கூச்ச நாச்சமே அற்ற காரியவாதி.பீ.ஆர்.ஒ .
2)இந்த ஜோடியின் ராகம் சார்ந்த அத்தனை பாடல் இசைக்கும் டி.கே.ஆர் வயலின் மட்டுமே பொறுப்பு(99%) . தயாரிப்பாளர்களை வச படுத்துவது,அவர்களிடம் ராமமூர்த்தி தந்த ராகத்தை ஹார்மோனியம் கொண்டு வாசித்து அங்கீகாரம் பெறுவது இவையே எம்.எஸ்.வீ பொறுப்பு.பின்னணி இசை கோர்ப்பு எம்.எஸ்.வீ கையில்.
3)நான் அவர்கள் இசையமைத்த பாடல்களின் நுட்பங்களை ராமமூர்த்தியிடம் விவாதிக்கும் போது ஒரு த்யாகராஜரை (இசை மும்மூர்த்திகளில் ஒருவர்)சந்திக்கும் உணர்வு ஏற்படும். விஸ்வநாதனிடம் விவாதிக்கும் போது நிழல்கள் படத்தில் சந்திர சேகரிடம் பீச்சில் பேசும் ஆள் நினைவே வரும்.
4)ஆயிரம் காரணங்கள் சொல்ல பட்டாலும் ,உண்மை காரணம் கண்ணதாசன்.தன் படங்களில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய ,கருப்பு பணம் படங்களுக்கு finance செய்யும் படி இரட்டையர்களை நிர்பந்திக்க ராமமூர்த்தி மறுத்துள்ளார்.இதன் காரணமாய் கோபம் கொண்ட கண்ணதாசன் விஸ்வநாதனுக்கு துர் போதனை செய்து இந்த ஜோடியை பிரிக்கும் புண்ணியத்தை செய்ததுடன் நிற்காமல், முடிவு பெறாமல் இருந்த சுமார் 26 படங்களை தன் தனிப்பட்ட அரசியல் செல்வாக்கு மற்றும் தயாரிப்பாளர்களிடம் இருந்த பிடிப்பினால் விஸ்வநாதன் பெயருக்கு மாற்ற செய்தார்.(ராமமூர்த்திக்கு உழைக்க தெரியும்.இசை தெரியும்,படங்களின் பெயரோ,கணக்கோ,தயாரிப்பாளரையோ தெரியாது)இன்று வரை தான் இழந்தது என்ன என்று புரியாமல் ,கண்ணதாச துதி செய்கிறார் விஸ்வநாதன்.காற்று வீசும் திசையில் எல்லா திறமையாளர்களும் (ட்ரூப் ) இணைந்து ராமமூர்த்தியை தனிமை படுத்தினர்.
5)ஆத்திரமடைந்த, கண்ணதாசனுக்கு எதிரான ஒரு பிரபலம் (பின்னாள் முதல்வர்), ராமமூர்த்தியை கூப்பிட்டனுப்பி ,சரி செய்ய முயல, ராமமூர்த்தி மறுத்து விட்டார்.(விஸ்வநாதனிடம் முப்பதாண்டு பேச்சு வார்த்தையே வைத்து கொள்ளவில்லை)உண்மை தமிழர்களுக்கு திறமை இருந்தாலும் பொழைக்க தெரியாத இளிச்சவாயர்கலாயிற்றே. முதல்வரான போது அழைப்பில் தன்னை சந்தித்த ராமமூர்த்தியிடம் சொன்னது பதினைந்து வருட முன் வந்திருந்தால் உங்கள் தலைவிதியும் ,தமிழ் பட இசையின் தலை விதியும் மாறி இருக்கும்.
6)பீ.பீ.எஸ் க்கு ராமமூர்த்தியின் கண்டிப்பில் காட்டமுண்டு.(ஆனாலும் இசை ஞானத்தின் மேல் ஈர்ப்பு).சௌந்தர ராஜனோ டி.கே.ஆர் பக்தர். விஸ்வநாதன் 70களில் நெருங்கிய நண்பர்களிடம் மனம் திறந்தது ,பெரிய தவறு செய்து விட்டேன். நானும் கெட்டு ,என் குருநாதரையும் கெடுத்து விட்டேன்.
7)நண்பரிடம்,குருநாதரிடம் பெருந்தன்மை காட்டாத எம்.எஸ்.வீ ,ஜூனியர் ஒருவருக்கு இசை சேவகம் செய்து ,பெயரில்லாமல் சிறு பொருள் ஈட்டி தன்னை சிறுமை படுத்தி கொண்டார்.
8)இறுதியில் ஒன்று. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை.
9)எம்.எஸ்.வீ யின் இசையில் எனக்கும் ஈர்ப்புண்டு. மேற்கூறியவை ,என் மனமறிந்த ,உண்மை சரித்திரமேயன்றி,எந்த காழ்ப்புணர்வும் ,யார் மீதும் எனக்கில்லை.
Gopal.s
4th July 2014, 10:39 AM
First hand information. Proof from the people worked with them like mangal moorthy,M.R.K .Raju.
• From: N.Chandrasekar (@ 141.209.34.125) on: Sat Dec 7 15:02:02 EST 2002
i AM FOLLOWING FROM MY VERY EARLY YEARS TKR-MSV.MY COUSIN WAS 2ND ACCORDIAN TO SG.MANGALAMURTHY WHO WAS IN VR TROOP.
I also know PL.Sriramulu &Diwakar and many others in VR troops.They are all praise for Ramu(TKR)&he so sole brain behind the entire Music in VR films.
TKR composition continued even in films around 27
in nos which was relesed after August 1965 but came in the name of MSV.This will be evident if you hear the BGmusic after these songs,starting from NEE to CHANDROODAYAM.But MSV with help of
Kannadasan(who was in Congress at 1965) did played dirty trick and put his name in all 27 films.Unforunately TKR who is master musician is not good in presentation &didn't use his good relations with MGR.It is bad state affair of Tamil
Film which did not use the great musician TKR
(grand son of Malkotai Govindaswami Pillai,a
Great Violnist in ealy 20th century &son of KrishnaPillai,violnist in Govinraju Pillai's Troop)
Chandrasekar.N
MountPleasant,Michigan
• From: MRK Raju (@ 66.188.44.58) on: Tue Apr 15 15:22:42 EDT 2003
I was a reccording assistant with CRS and then withTKR in VR troupe between 1947 to 1953.In mid 1949 MSV came to CRS to join his troup but CRS refused & it was TKR who took pity and forced CRS to take him.
During those days CRS & TKR were very close &both had regards on each other.Genarally TKR will play the tunes in violin and CRS will approve and BGM swaras were mainly done by TKR.Though TKR was not named as asst.MD in titles he was next to CRS.When CRS died in 1951 TKR was shocked and before he could react MSV went in hurry to Banumathi &told he will compelete unfinished portion left by CRS,( it is different story that TKR had redo all MSV's tunes during BGM recording ,and ungrateful MSV did not include TKR name In title)
CRS was totally unhappy about MSV signing for film GENNOVA since as per CRS ,MSV has no knowledce on musical composing and if CRS was alive for another month he would have sent him out.
This is the reason why TKR was not keen to join wih MSV but NSK,ALS.GN Velumani &BS Ranga persuaded him to become a CO-MD.
MSV knowing his shortcomings was very loyal to TKR.
TKR will play tunes in violin and MSV will play the tunes to Producer/Directors and play back singers.All BGM swaras ,selection of instrument mix were by TKR and PRwork/showbusiness were by MSV.This was trend from1951 to August 1965.TKR was very poor in communication and in selling himself though his best MD in INDIA.
Splilt came because of MSV's greedy/Kannadasan&CVSridhar"s enemity with TKR and not because of TKR's Alcholisim as mentioned by your Mr. Manisekaran.
TKR , after 1960, started giving 1or2 tunes for selection to director because he is better judge of tunes and he will not give tunes for badly written lyrics(eg. Atamanathan's lyrics in film "Marakka MUdiyuma" which was latter written by "MK" ).TKR refused to change his tunes for film "Kadalikka Neramillai" as demanded by Sridhar.So Sridhar was unhappy with him .TKR refused to Finance for Kannadasan for his film "Karruppanam" and so he instigated MSV to spilit with TKR and promising to help him.He really helped him by applying his political pressure on all producers of 27 films for which tunes were compeleted and were under production to delete TKR"s name.This films were released between September 1965to1968,eg. "Chandrodayam".It is great loss to TKR from which he could not come out.
MSV composed his first tune on his own,after "Gennova" in film "ANBEVAA",the last song and one for film Nadodi, His first full fledged music was in Balaji"s film Thangai in March 1967. This is the rason people thought he is the origanal in VR but which is totally wrong.This was evident from tunes composed after 1967.
TKR is the MD and MSV is good PRO.
Gopal.s
4th July 2014, 10:59 AM
தமிழகத்தின் மிக கேவலமான அரசியல் சூழ்நிலை,பொய் பிரச்சாரங்கள்,உண்மையான திறமை கொண்ட ,தன் தொழிலில் மட்டுமே கவனம் செலுத்திய திறமைசாலிகளை புறம் தள்ளி அவமதித்தது.
இது வங்காளத்திலோ,மகாரஷ்டிராவிலோ,கர்நாடகாவிலோ,கேரளாவிலோ ,ஆந்திராவிலோ கற்பனையே செய்ய முடியாத ஒன்று.
நம் திறமைசாலிகளை நாம் அற்ப அரசியலுக்கு ,பலி கொடுத்ததால் ,உலகமும் அவர்களை புறக்கணித்தது.
பலியானவர்கள் நிறைய. அவர்கள் அனைவருக்கும் சேர்த்து நான் வடித்திருக்கும் கண்ணீர் துளிகள்.மற்ற படி நான் யாருக்கும் சொந்த காரனோ,இவர்கள் உப்பினால் வளர்ந்தவனோ அல்ல. என்னுடைய மனத்திற்கு சரியென்று படுவதை சொல்பவன்.செய்பவன்.
உள்ளதை சொல்வேன்.சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது.உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது.
Richardsof
4th July 2014, 11:37 AM
COOL ...COOL GOPAL
http://youtu.be/S7Ca6bPQc_E
venkkiram
4th July 2014, 11:49 AM
மெல்லிசை மன்னரின் இதுபோன்ற வைரங்களை வானொலிக்காரன்களும், தொலைக்காட்சிக்காரன்களும் இருட்டுக்குள் ஒளித்து வைத்து சதி பண்ணியதால்தானே தாரை, தப்பட்டைக்காரன்கலெல்லாம் பெரிய இசைக்கொம்பன்கள் என்று பேர் வாங்க முடிந்தது.
ஐயா! யாரைக் குறிப்பிடுகிறீர்கள் எனத் தெரியல. யூகித்து அதையொட்டிய எனது அபிப்ராயங்களைச் சொல்வதற்கு முன், நீங்களாகவே யாரை இப்படிக் குறிப்பிடிருக்கிறீர்கள் என சொல்லிவிடவும். நன்றி.
Gopal.s
4th July 2014, 12:01 PM
இணைந்து இசையமைத்து வெவ்வேறு நிலைகளில் இருந்த படங்களில் திரு ராமமூர்த்தியின் முக்கிய பங்கு இருந்து தனி பெயரில் வெளியானவை.(இதில் இருந்த பாடல்களின் நுட்பங்களை ராமமூர்த்தியுடன் அலசி உறுதி செய்தது. )அசல் உண்மையான லிஸ்ட்.(என் கற்பனை சுத்தமாக இல்லை.ஆராய்ந்த பிறகே.)
எங்க வீட்டு பெண்,பஞ்ச வர்ண கிளி, நீ, பூஜைக்கு வந்த மலர்,சரசா,,நீலவானம்,கலங்கரை விளக்கம்,குழந்தையும் தெய்வமும்,அன்பே வா,சந்திரோதயம்,சித்தி,கௌரி கல்யாணம்,கொடி மலர்,மோட்டார் சுந்தரம் பிள்ளை,நான் ஆணையிட்டால்,நாடோடி,நம்ம வீட்டு லட்சுமி,பறக்கும் பாவை,பவானி,பெற்றால்தான் பிள்ளையா,ராமு,. இன்னும் சில. இதில் முடிவு நிலை,நடு நிலை என்று இருந்த படங்களில் ஒன்றிரண்டு விஸ்வநாதனுடையாக இருக்க வாய்ப்புள்ளது .கேட்போர் அந்த தகரத்தை தரம் பிரிக்கலாம்.(வெட்கமில்லை -அன்பே வா,கடைசி-அன்பே வா கோரஸ் இதுதான் விஸ்வநாதன் பங்கு, நாடோடி- பாடும் குரலிங்கே இப்படி)
என் கடைசி கூற்று.
அவர்கள் சேர்ந்து இசையமைத்த படங்கள் மற்றும் சேர்ந்து அமைத்து விஸ்வநாதன் பெயரில் வந்த படங்கள் 127 என்று குறித்தால், அதில் 100 படங்கள் மிக மிக உன்னதம். 15 படங்கள் நல்ல இசை. 12 சுமார்.
ராமமூர்த்தி தனியாக அமைத்தவை 16 படங்கள். அதில் எட்டு படங்கள் நல்ல படங்கள். 8 சுமார். (பாதிக்கு பாதி)
விஸ்வநாதன் தனியே போட்டது ஒரு 800 இருக்கலாம். அதில் தங்கை முதல்,சிவந்த மண் வரை ஒரு 28 நல்ல வரிசை தேறுகிறது. சிவந்த மண் முதல் இன்று வரை ஒரு 20 நல்ல வரிசை தேறுகிறது.மீதி சுமார் முதல் படு குப்பை ரகங்கள்.
முடிவு உங்கள் கையில்.
Murali Srinivas
4th July 2014, 01:41 PM
கோபால்,
ராமமூர்த்தி நல்ல pro ஆக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் அவருக்கு நல்ல pro. என்ன ஒன்று அவர் காலம் சென்ற பின் இதை செய்கிறீர்கள் . இரண்டு மூன்று விஷயங்கள் இடிக்கின்றன. நீங்கள் குறிப்பிட்ட லிஸ்டில் சில படங்களுக்கு பாடல்கள் எழுதியது வாலி. அன்பே வா, சந்திரோத்யம், குழந்தையும் தெய்வமும் முதலியன. அது போல அரசியல் ப்ரெஷர் என்று சொல்லுவது பெருந்தலைவரையும் பெரியவர் பக்தவத்சலத்தையும் அவமதிப்பதாகும். 1965 ல் பிரிவிற்கு பிறகு தொடங்கப்பட்ட பெற்றால்தான் பிள்ளையா நெஞ்சிருக்கும் வரை எப்படி tkr செய்திருக்க முடியும்?
அன்புடன்
Gopal.s
4th July 2014, 02:25 PM
Murali,
Thanks for your intervention. It is always a pleasure to be countered by knowledgeable ......... like you. Of all the people Bakthavatsalam? Do you the deterioration of Governance and initiation of corruption started with him causing fall of Congress? He is known as Mr.10%?
Apart from that I never stated it is 100% Kannadhasan's effort alone and M.S.V would have had some clout with AVM,Velumani(Ex-partner) and I rated him as a good PR. It is the combination worked against TKR. Nenjirukkum varai is not in my list. petralthaan pillaiyaa -I am not sure.I can tell you that I am 90% accurate and contents are based on facts and first hand informations.
vasudevan31355
4th July 2014, 03:52 PM
இன்றைய ஸ்பெஷல் (21)
இன்றைய ஸ்பெஷலாக நான் எடுத்திருப்பது ஒரு வித்தியாசமான பாடல்.
நம் கார்த்திக் சார் எழுதுவது போல நல்ல பாடலாக இருந்தும் புறம் தள்ளப்பட்ட பாடல்.
http://www.5eli.com/Lyrics/wp-content/uploads/2011/11/Athey-kaNgal.bmp
'அதே கண்கள்' படத்தில் இருந்து நம் சுசீலாம்மாவின் குரலில் மனத்தைக் கிறங்கச் செய்யும் இன்ப கானம். இதிலேயே துன்பமும் சேர்ந்து கொள்கிறது.
ஒரு பெரிய மனிதரின் ஆசைநாயகியாக இருக்கும் இளம்பெண்ணின் ஆதங்கம் இப்பாட்டின் வாயிலாக வெளிப்படுகிறது. அந்தப் பெரிய மனிதர் நல்லவராக இருந்தும் சமூகத்தில் தன் பெயருக்கு இழுக்கு வராமல் காத்துக் கொள்ளவும், தன் அந்தஸ்து, பெயர், கௌரவம், புகழை தக்க வைத்துக் கொள்ளவும் அவளை பகிரங்கமாக தன் துணைவியாக அறிவிக்க முடியாத சூழல்.
அவளும் அந்த அங்கீகாரத்துக்காக ஏங்குகிறாள். அவ்வப்போது விருந்துக்கு மட்டும் வந்து போகும் அந்த சீமானுக்கு இன்பத்தை அன்புடன் வாரி வழங்குகிறாள். அதே சமயம் 'என்னை எப்போது முறையாக அங்கீகரித்துக் கொள்ளப் போகிறாய்' என்று இப்பாட்டின் வாயிலாகக் கேட்கிறாள்.
அழகிய கடற்கரை. அந்த மனிதர் சாய்வு நாற்காலியில் நிழற்குடையின் கீழ் அமர்ந்து தன் இளம் காதலியின் அழகை பைனாகுலரில் ரசித்தபடி பார்த்திருக்க அந்த பருவ மங்கை சிகப்பு வண்ண நீச்சலுடை அணிந்து, ஒரு குழந்தையைப் போல் கடற்கரைப் பாறைகளின் மேல் பந்து விளையாடியபடி, ஆர்ப்பரிக்கும் அலைகளின் நடுவில் ஆனந்தக் குளியல் போடுகிறாள். அவளுடன் அந்த மனிதரும் சேர்ந்து கொள்ள 'உனக்கு என் தோளும், எனக்கு உன் மார்பும் போதும். இதைவிட இன்பம் வேறு என்ன இருக்க முடியும்? என்று மெய்மறந்து பாடுகிறாள்.
'மாதங்கள் உருண்டோடி வருடங்களும் ஒன்றன்பின் ஒன்றாக ஓடிவிடும். நாம் இப்படியே இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இருப்பது? நீயோ வயதானவன். நம் வாழ்க்கை என்னும் மலர் வாடிப் போகுமுன் இன்பம் என்ற மதுவை நாம் உண்ண வேண்டாமா? என்று நாசூக்காக சற்றே வேதனையுடன் அவரிடம் கேட்கிறாள்.
http://tamilplex.com/images/videos/video_comedies/62.jpg
இளம் காதலியாக நடிகை கீதாஞ்சலி. வயதான காதலராக எஸ்.ஏ.அசோகன்.
அழகான இளமை துள்ளும் கீதாஞ்சலி. அதுவும் சிகப்பு வண்ண பிகினியில் உறுத்தாத கவர்ச்சியுடன். பாத்திரமறிந்த அளவான அழகான நடிப்பு. (தெலுங்கில் கொடி நாட்டியவர்)
சின்ன சின்ன அழகான கடற்கரை ஓட்டங்களுடன் ஜமாய்க்கிறார் கீதாஞ்சலி.
கீதாஞ்சலியின் முதிர்வயது காதலராக அசோகன் நடித்திருக்கிறார் வழக்கமான கோணங்கித்தனங்கள் எதுவும் இல்லாமல்.
அசோகன் உலகப் புகழ் பெற்ற ஒரு தமிழ் நடிகரை மனதில் வைத்துக் கொண்டு கடற்கரையில் நடப்பது ஸாரி நடப்பது நமக்குத் தெரியாமலில்லை.
அருமையான கடற்கரைப் படப்பிடிப்பு (எஸ். மாருதிராவ்). அழகான உடை தேர்வு. அம்சமான வண்ணப்பதிவு. கடற்கரயில் நாமே இருப்பது போன்ற ஒரு பிரமை. அலைகள் நம்மைத் தாலாட்டுவது போன்ற உணர்வு.
இப்படத்திற்கு இசை வேதா அவர்கள். பல இந்திப்பட சூப்பர் ஹிட் மெட்டுக்களை யாருக்கும் தெரியாமல் (என்று நினைத்துக் கொண்டு) தமிழில் தந்து 'மாடர்ன் தியேட்டர்ஸ்' கம்பெனியின் கல்லாவை நிரம்ப வைத்தவர்.
ஆனால் இதே வேதா தன் சொந்தமான டியூன்களில் சில நல்ல, இனிமையான பாடல்களையும் தமிழில் தந்த திறமைசாலியும் கூட.
அப்படிப்பட்ட பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடல். சுசீலா அவர்களைப் பற்றி நிறைய சொல்லியாயிற்று. அதிலும் இந்தப் பாடலில் அந்தப் பெண்ணின் மகிழ்வையும், மன துயரத்தையும் நன்கு உள்வாங்கி தன் தேனமுதக் குரலால் வாழ்நாள் விருந்து படைத்திருக்கிறார் என்று மட்டும் ஆணித்தரமாகச் சொல்வேன்.
'அதே கண்களி'ல் இருந்த சூப்பர் ஹிட் ஜனரஞ்சகப் பாடல்களால் இந்த வித்தியாசமான பாடல் கண்டுகொள்ளப் படாமல் போய்விட்டதில் எனக்கு மிக வருத்தமே!
இனியாவது கண்டு கொள்ளப்பட வேண்டும் என்பதில்தான் இன்றைய ஸ்பெஷலாக இந்த இனிமை நிறைந்த பாடல்.
இனி பாடல்.
என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன்
சொல்ல வார்த்தை இல்லையே
எப்படியோ நான் கொடுத்தேன் கொடுத்தேன்
வெட்கம் தடுக்க வில்லையே
லாலாலா லால லால லலல்ல லாலா
லாலாலா லால லால லலல்ல லாலா
நீலக்கடல் மேலே
நீந்தாத காற்று
பேரின்ப வீணை
மீட்டாத பாட்டு
நீலக்கடல் மேலே
நீந்தாத காற்று
பேரின்ப வீணை
மீட்டாத பாட்டு
தோள் மீது நீயும்,
மார் மீது நானும்
சாய்ந்தாலே போதும்
தேனாறு பாயும்
என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன்
சொல்ல வார்த்தை இல்லையே
எப்படியோ நான் கொடுத்தேன் கொடுத்தேன்
வெட்கம் தடுக்க வில்லையே
லாலால்லா லால லால லலல்ல லாலா
லாலால்லா லால லால லலல்ல லாலா
மாதங்கள் மாறும்
ஆண்டொன்று போகும்
நாம் வாழும் வீட்டில்
நாள்தோறும் ஆட்டம்
மாதங்கள் மாறும்
ஆண்டொன்று போகும்
நாம் வாழும் வீட்டில்
நாள்தோறும் ஆட்டம்
இது போலக் காலம்
விரைந்தோடிப் போகும்
மலர் வாடுமுன்னே
மது உன்ன வேண்டும்
என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன்
சொல்ல வார்த்தை இல்லையே
எப்படியோ நான் கொடுத்தேன் கொடுத்தேன்
வெட்கம் தடுக்க வில்லையே
என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன்
லலலாலலல்லாலா
எப்படியோ நான் கொடுத்தேன் கொடுத்தேன்
லலலாலலல்லாலா
https://www.youtube.com/watch?v=AVYjeBe-LEw&feature=player_detailpage
Gopal.s
4th July 2014, 04:12 PM
எனக்கு மிக மிக பிடித்த பாடல் மற்றும் நடிகை என்னென்னவோ.. (நினைத்தால் போதும் ).
இந்த படுபாவி,உதவாக்கரை அசோகனுக்கு போய் மனம் கனிவான,எண்ண பறவை,என்னென்னவோ,ஊராயிரம் பார்வையிலே... என்னத்தை சொல்ல?நேரம்.
mr_karthik
4th July 2014, 04:36 PM
தலைவரே,
நீங்கள் சொன்னவற்றை பொய் என்று சொல்லவில்லை. ஆனால் மிகை என்பது உண்மை. ராமமூர்த்தியுடன் பல ஆண்டுகள் பல நூறு பாடல்களுக்கு இசையமைத்ததால், பிரிவுக்குப்பின்னும் அவரது சாயல் சில எம்.எஸ்.வி.பாடல்களில் இருந்திருக்கலாம். அதை வைத்து அவையெல்லாம் டி.கே.ஆருடன் இருந்தபோது போட்டு வைத்த ட்யூன்கள் என்று வரையறுக்க இயலாது. மெல்லிசை மன்னரை விட்டு பிரிந்து வெகு காலம் வரை சங்கர் - கணேஷ் இசையில் எம்.எஸ்.வி.யின் பாதிப்பு இருந்ததே.
அப்படிப்பார்த்தால் ராமமூர்த்தியின் பாடல்களில் எம்.எஸ்.வி.யின் சாயல் இருக்கவே செய்தது. உதாரணமாக 'காதலன் வந்தான்' (மூன்றெழுத்து), 'திருத்தணி முருகா' (நீலகிரி எக்ஸ்பிரஸ்), 'தன்னந்தனியாக நான் வந்தபோது' (சங்கமம்) போன்ற பாடல்கள் பக்கா எம்.எஸ்.வி. டைப். அதை சேர்ந்திருந்தபோது ஏற்பட்ட பாதிப்பு என்று சொல்வோமே தவிர, இவர் அப்பவே போட்டு வைத்த ட்யூன் என்று சொல்ல மாட்டோம். அது மனசாட்சிக்கு மாறானது.
நீங்கள் கொடுத்திருக்கும் பட்டியல் 1966 டிசம்பர் வரை நீள்கிறது. இவர்கள் பிரிந்ததோ 1965 மத்தியில். அந்தப்பட்டியலில் பல படங்கள் இவர்கள் பிரிவுக்குப்பின்னர்தான் துவங்கப்பட்டவை. உதாரணமாக, இவர்கள் இருவரும் இணைந்து கடைசியாக பணியாற்றியது ஆயிரத்தில் ஒருவன் பைனல் ரீரிக்கார்டிங்கின்போதுதான். அப்போது இருவரும் கட்டித்தழுவி விடைபெற்றபோது உடனிருந்த பந்துலு, சித்ரா கிருஷ்ணசாமி மற்றும் இசைக்குழுவில் இருந்தவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். அதன்பின்னர் இவர்கள் பல ஆண்டுகள் சந்திக்கவே இல்லை. ஆயிரத்தில் ஒருவன் வெளியாகி 75 நாட்கள் கடந்தபின்னர்தான் பந்துலு 'நாடோடி' படத்தை ஆரம்பித்தார். அப்புறம் எப்படி அதில் ராமமூர்த்தியின் பங்களிப்பு?.
இப்படி நீங்கள் சொன்ன ஒவ்வொரு படத்துக்கும் ஒரு வரலாறு சொல்ல முடியும். 'பறக்கும் பாவையும்' அப்படித்தான். 1965 மத்தியில் வெளியான ‘பணம் படைத்தவன்’ வெளியாகி பல மாதங்கள் கழித்து ராமண்ணா அந்தப்படத்தை துவக்கினார். (அப்போது 'நீ' படத்தில் பிசியாக இருந்ததால்). அப்புறம் எப்படி பறக்கும் பாவையில் டி.கே.ஆர். பங்களிப்பு?.
"சர்வர் சுந்தரம் பட ரிக்கார்டிங் காட்சியில் (அவளுக்கென்ன அழகிய முகம்) தன்னைக் காண்பிக்கவில்லை, இது விஸ்வநாதனின் சதிதான்" என்பதும் ராமமூர்த்தியின் குற்றச்சாட்டு. அந்தக்காட்சியில் பல குளறுபடிகள். பாடலை எழுதிய வாலியைக்கூட அந்தக்காட்சியில் உட்கார வைத்தவர்கள், டி.எம்.எஸ்.ஸுடன் உடன் பாடிய எல்.ஆர்.ஈஸ்வரியைக்கூட அக்காட்சியில் காண்பிக்கவில்லை. இதிலிருந்தே தெரிந்திருக்கும் இதில் எம்.எஸ்.வி.யின் பங்கு இல்லையென்பது.
ராமமூர்த்தி பெரிய இடத்துப்பெண்ணில் இருந்தே முரண்டு பிடிக்கத்துவங்கியவர்தான். ராமண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் சமரசத்தினாலேயே மீண்டும் எம்.எஸ்.வி.யுடன் இணைந்து பணியாற்றினார்.
நான் திரும்பத்திரும்ப கேட்பது ஒன்றுதான். ஒரு திறமையாளரும் (?) ஒரு பி.ஆர்.ஓ.வும் (!) இணைந்து பணியாற்றி, பின்னர் பிரிந்து விட்டால் திறமையாளர் (?) அல்லவா முன்னேறியிருக்க வேண்டும். பி.ஆர்.ஓ. எப்படி முன்னேறினார்?. திறமையாளர்(?) எப்படி சோடை போனார்?.
பிரிந்த பின் ராமமூர்த்தி இசையமைத்த மொத்தப்படங்களே 26 தான். ஆனால் எம்.எஸ்.வி. ஒரு ஆண்டுக்கே 26 படங்களுக்கு இசையமைத்தார். இத்தனைக்கும் இன்னொருபக்கம் கே.வி.மகாதேவனும் ஒரு அச்சுறுத்தலாக இருந்தும் எப்படி அவரால் சாதிக்க முடிந்தது?. திறமையில்லாத ஒரு வெறும் பி.ஆர்.ஓ.வால் சாதிக்க முடியுமா?.
பட்டியலை ஏன் அத்துடன் நிறுத்திக்கொண்டீர்கள்?. ஊட்டிவரை உறவு, குடியிருந்த கோயில், ஒளிவிளக்கு, உயர்ந்த மனிதன், சிவந்த மண், உலகம் சுற்றும் வாலிபன், நினைத்தாலே இனிக்கும் படங்கள் வரைகூட இடம்பெற்ற பாடல்களுக்கான ட்யூன்களை போட்டுக்கொடுத்து விட்டுத்தான் ராமமூர்த்தி பிரிந்தார் என்று சொல்லுங்களேன். யார் எதிர்க்கேள்வி கேட்கப்போகிறார்கள்?...
mr_karthik
4th July 2014, 05:12 PM
டியர் வாசு சார்,
ஐயோ ஐயோ..., நான் நினைத்துக்கொண்டிருந்த மிக அருமையான ஒரு பாடலை (என்னென்னவோ நான் நினைத்தேன்) இன்றைய ஸ்பெஷலாக தந்து அசத்தோ அசத்து என்று அசத்தி விட்டீர்கள். உங்களைப்போலவே எனக்கும் இப்பாடலைப்பற்றி ரொமபவே வருத்தமும் ஆதங்கமும் உண்டு.
இதை விட பல மடங்கு தரம் குறைந்த 'பொம்பளை ஒருத்தி இருந்தாளாம்' பாடலெல்லாம் சூபர் ஹிட். ஆனால் மிக அருமையான பாடலான இப்பாடலுக்கு போதிய வரவேற்பில்லாமல் போனது.
பெயர்களை தப்பும் தவறுமாக காட்டினாலும் 'முரசு' சேனலுக்கு நன்றி. இப்போது ஒருபடப்பாடல் நிகழ்ச்சியில் அதே கண்கள் படப்பாடல்கள் ஒளிபரப்பாகும்போது, இப்பாடலையும் ஒளிபரப்பி புண்ணியம் தேடிக்கொள்கிறது. (நேற்றைய தமாஷ்: இமயம் படத்தின் "கங்கை யமுனை இங்குதான் சங்கமம்" பாடலின் கீழே படம்: இமயம், இசை : இளையராஜா என்று காண்பித்தார்கள். கொடுமைகள் தொடர்கின்றன).
இப்பாடலைப்பொருத்தவரை, வேதாவின் ட்யூன், பாடல் வரிகள், பாடியவர், நடித்தவர், ஒளிப்பதிவு என்று அனைத்து அம்சங்களும் பூரணமாக நிறைந்த பாடல். தமிழ்த்திரைப்படங்களில் இடம்பெற்ற மிகச்சிறந்த பத்து கடற்கரைப்பாடல்களில் ஒன்று என்பேன். (லிஸ்டில் 'செந்தமிழ் பாடும் சந்தன காற்றும்' உள்ளது). மீண்டும் வாழ்வேனில் சொதப்பியிருப்பார்கள். இப்பாடலின் திருஷ்டிப்பொட்டு அசோகன்.
போதுமான அளவு வெளிச்சம் படாததற்கு, இப்பாடலில் கதாநாயகனும் கதாநாயகியும் இடம் பெறாததால் இருக்குமோ. ஆனால் அதைவிட அழகான கீதாஞ்சலி இருக்கிறாரே, ஸ்லீவ்ஸ் போடாத வெற்றுக் கால்களுடன்.
மண்ணுக்குள் புதைந்த வைரங்களை வெளிக்கொணர்வதில் வாசுவை மிஞ்ச யார் என்று மீண்டும் கேட்க வைத்திருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள், அதைவிட அதிகமான நன்றிகள்...
mr_karthik
4th July 2014, 05:38 PM
தலைவரே,
குயிலாக,வெண்ணிலா- என் கூற்றை மெய்ப்பிப்பது போல, எஸ்.வீ (Vinodh),வாலியின் பழைய பதிவை(#1305) போட்டுமா சந்தேகம்?நான் ஆதாரமில்லாமல் எழுதுவதே இல்லை .
டியர் கோபால் சார்,
இப்போதும் இடிக்கிறது. வினோத் அவர்கள் தந்த வாலியின் ஆவணத்தை நானும் பார்த்தேன். அது ஒரு விதத்தில் (விஸ்வநாதன் - ராமமூர்த்தி) உங்களுக்கு சாதகமாக இருந்தாலும் இன்னொரு விதத்தில் உங்களுக்கு பாதகமாக உள்ளது.
நீங்கள் சொன்னது அவ்விரண்டு பாடல்களும் பாலும் பழமும் படத்துக்காக ரெக்கார்ட் செய்யப்பட்டு அப்படத்தில் இடம்பெறாததால் ஜெய்சங்கர் படமான 'செல்வமகளில்' இடம்பெற்றதாக. (அதாவது நடிகர்திலகத்துக்காக உருவான பாடல் (உங்களுக்கு அறவே பிடிக்காத) ஜெய் படத்தில் இடம்பெற்றதாக)
ஆனால் வாலியின் கூற்று: 'பஞ்சவர்ணக்கிளிக்காக' உருவான அவ்விரண்டு பாடல்களும் ப.கிளியில் இடம்பெறவில்லை. அதாவது ஏற்கெனவே ஒரு ஜெய்சங்கர் படத்துக்காக உருவாக்கப்பட்ட பாடல்தான் இன்னொரு ஜெய்சங்கர் படத்தில் இடம்பெற்றுள்ளது. ஒரே தயாரிப்பாளர் (வேலுமணி) மற்றும் ஒரே இயக்குனர் (சங்கர்) என்பதால்.
ஆக, ஆதார ரீதியாக அவை ஒரிஜினல் ஜெய்சங்கர் படப்பாடல்கள்தான் என்பதை நீங்கள் மறுக்க முடியாது.
Gopal.s
4th July 2014, 05:50 PM
என்னவோ போங்க கார்த்திக், பட கம்பெனிகள் மற்றும் திரையுலகம் ஒரு அருமையான,சுறு சுறுப்பான , ஆபீஸ் பாயை இழந்தது.1952 இல் நேர்ந்த இந்த இழப்பு இன்று வரை நம்மை பாதிக்கிறது.
Gopal.s
4th July 2014, 05:58 PM
கார்த்திக்,
எனக்கு ரொம்ப முன்னாடி படித்த நினைவு.1971 யிலோ என்னவோ,பாலும் பழமும் படத்திற்காக போட்ட அசல் இடம் பெறாமல் தாயுள்ளம் படத்திற்காக(ஞாபகம்) எழுத பட்ட தாய் பேச நினைப்பதெல்லாம் பாட்டை ,நான் பேச நினைப்பதெல்லாம் என்று மாற்றினார்களாம்.பின்னால் இந்த இரண்டு பாடல்கள்,மற்றும் இசை உபயோக படுத்த பட்டது என்று சொன்ன நினைவு. பஞ்ச வர்ண கிளியில் வில்லனுக்கும்,அக்காள் புருஷனுக்காகவும் இருக்க முடியாது.பாடகியை நேசிக்கும் எனக்கு சுமாராக பிடிக்காத முத்துராமனுக்குத்தான் இருந்திருக்க வேண்டும்.
Gopal.s
4th July 2014, 06:16 PM
கார்த்திக்,
செல்வ மகள் வசனம் சுப்பு ஆறுமுகம்.இயக்கம் கே.வீ..ஸ்ரீனிவாஸ் b.a. என்று நினைவு.
vasudevan31355
4th July 2014, 06:37 PM
டியர் கார்த்திக் சார்,
குதிரைகளை அடக்கும் வித்தைகளை எங்கே கற்றீர்கள்?
அடக்கல் அருமை. :shoot: (கு.வி.மீ.ம.ஒட்டல)
பாவம். விட்ருங்க ப்ளீஸ். எனக்காக.
குதிரை குப்புற விழுந்து விட்டது.:)டிஷ் (என்ன ஒரு சிறு வலி! விழுந்தது என் பிரியக் குதிரை)
எனக்கு இன்று
நான் போட்டால் தெரியும் போடு டிஷ்...
தமிழ்ப் பாட்டால் அடிப்பேன் ஓடு டிஷ்.. டிஷ்
'எங்க பாப்பா' படத்தின் பாட்டை ஞாபகப் படுத்தி விட்டர்கள்.:)
vasudevan31355
4th July 2014, 06:39 PM
முதலில் பதிலடி தந்தது 'வல்லவன் ஒருவன்'
அடுத்து பதிலடி தந்தது 'வல்லவனுக்கு வல்லவன்'
சபாஷ். (இந்த நேரத்தில் 'கொல்கத்தா வாத்தியார்" வந்தால் எப்படி இருக்கும்?):)
vasudevan31355
4th July 2014, 06:48 PM
கார்த்திக்,
செல்வ மகள் வசனம் சுப்பு ஆறுமுகம்.இயக்கம் கே.வீ..ஸ்ரீனிவாஸ் b.a. என்று நினைவு.
'அவன் நினைத்தானா' பாடல் அலசலிலியே சொல்லி விட்டாயிற்றே! படிக்கணும்.
vasudevan31355
4th July 2014, 06:55 PM
டியர் கார்த்திக் சார்,
தங்கள் மனம் திறந்த பாராட்டிற்கு மிக்க நன்றி!
இருவருக்கும் ஒரே டேஸ்ட் தலைவரிலிருந்து தர்ம அடி கொடுப்பது வரை:) என்று இன்னொரு முறை நிரூபணம் ஆயிற்று.
உங்களுக்கு பிடிக்கும் என்று நிச்சயம் தெரியும். ஆனால் இந்த அளவிற்கா என்பதை தங்கள் மனம் மகிழ்ந்த பதிவைக் கண்டபோது புரிந்தது.
Gopal.s
4th July 2014, 06:56 PM
'அவன் நினைத்தானா' பாடல் அலசலிலியே சொல்லி விட்டாயிற்றே! படிக்கணும்.
யாரப்பா படிக்கணும்னு சொல்றே?வல்லவனுக்கு வல்லவனா?
Richardsof
4th July 2014, 07:23 PM
இனிய நண்பர் வாசு சார்
வல்லவன் ஒருவன் - வல்லவனுக்கு வல்லவன் - இரண்டுமே நம் பேரழகன் ஜெய் நடித்த படமல்லவா ?
சபாஷ் தம்பி [ அந்நிய மண்ணில் இருப்பவர் ]
என் தம்பிக்கு துரியோதனன் ஒரு உதாவக்கரை என்று சொல்லும் அளவிற்கு தைரியம் தந்தது யார் ?
இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான் -
அதை இருப்பவனும் எண்ணி பார்க்க மறந்து விட்டான்
இந்த பாடலை கேட்கவில்லை போலும் .
vasudevan31355
4th July 2014, 08:48 PM
ஒரே படத்தில் அனைத்துப் பாடல்களும் ஹிட்டான படங்கள் பல உள்ளன.
அந்த வகைப் படங்களில் 'வெண்ணிற ஆடை'யை என்னால் மறக்க முடியாது.
1.நீ என்பதென்ன
http://i1.ytimg.com/vi/x9qdm0LktQs/hqdefault.jpg
2. ஒருவன் காதலன்
http://img.youtube.com/vi/nJzpqgUn668/mqdefault.jpg
3. சித்திரமே நில்லடி
http://i1.ytimg.com/vi/yPVW6uOeyD0/hqdefault.jpg
4. அல்லிப் பந்தல் கால்கள் எடுத்து
http://i1.ytimg.com/vi/MS8FdUA2aME/default.jpg
5. நீராடும் கண்கள் இங்கே (இந்த பாடல் படத்தில் இல்லாமல் போன கொடுமையை என்னவென்று சொல்ல!)
6. என்ன என்ன வார்த்தைகளோ
https://lh5.googleusercontent.com/proxy/gX6Zu8FcE3wkn9Wf1cYqNuCun2SIbPCi1mEAppgPUbquINUW34 BCJ3FtGx3UJm4Go_8yQSo5VmdSGLyWi6td4w=w426-h320-n
7. அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்.
http://i1.ytimg.com/vi/nMr9uh5NyzA/hqdefault.jpg
8. கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்ல சொல்ல
http://i1.ytimg.com/vi/Nymih9WGhYY/hqdefault.jpg
அத்தனையும் முத்துக்கள். எட்டும் எட்டமுடியா உயரம் தொட்டவை.
vasudevan31355
4th July 2014, 09:14 PM
'வெண்ணிற ஆடை' திரைப்படத்தில் ("காதலிக்க நேரமில்லை" படத்தின் 'மலரென்ற முகமின்று சிரிக்கட்டும்' ஹிட் போல...அதற்கு கொஞ்சமும் குறைவில்லாத) ஜாலிப் பாடல் ஒன்று.
'வெண்ணிற ஆடை' மூர்த்தியும், சைலஸ்ரீயும் (படத்தின் டைட்டிலில் இவர் பெயர் ஆஷா. பின்னாளில் 'சைலஸ்ரீ' என்று பெயரை மாற்றி வைத்துக் கொண்டார்) இயற்கைசூழ் பகுதிகளில் ஆடிப்பாடும் 'அல்லிப் பந்தல் கால்கள் எடுத்து' பாடல் அட்டகாசமான ஒரு பாடல்.
ராட்சஸி பிச்சி உதறி இருப்பார். 'வெண்ணிற ஆடை' மூர்த்திக்கு ராஜு என்பவர் குரல் தந்திருப்பார். விஸ்வநாதன் ராமாமூர்த்தியின் மந்திர இசை.
சைலஸ்ரீயின் ஒவ்வொரு டான்ஸ் மூவ்ஸும் அட்டகாசம் போங்கள். இவரும் என்ன ஒரு அழகு! வட்ட முகம். கன்னட முகம். (பின்னாளின் 'இங்கேயும் ஒரு கங்கை' தாரா அப்படியே சைலஸ்ரீயின் முகத்தை ஒத்திருப்பார். இவரும் கன்னடக் கிளியே).
'வெண்ணிற ஆடை' மூர்த்தி அவர் ஸ்டைலில் காமெடி டான்ஸ் பண்ணியிருப்பார் கலக்கலாக.
உற்சாகமான பாட்டு. முக்கியமாக நடன அசைவுகள் மறக்க இயலாதவை நகைச்சுவைப் பாடல் என்றாலும்.
http://www.tamilmp3songslyrics.com/lyricsimage/2008/Vennira%20Aadai/AllipPandhal.GIF
https://www.youtube.com/watch?v=MS8FdUA2aME&feature=player_detailpage&list=LLJiNXg4ZQMe24Xe_a1QtA4Q
Gopal.s
5th July 2014, 05:56 AM
கார்த்திக்,
இனிமேலும் நான் விவாதம் தொடர விரும்பவில்லை.மறக்க பட்ட மேதைகளுக்கு உரிய மரியாதை தந்த திருப்தி போதும் எனக்கு. அந்த நாட்களில் ,சில நடிகர்களின் படங்கள் இழு இழு என இழுக்கும். நீங்கள் சொல்லும் படி 66 மத்தியில் தொடங்கி தொடங்கி, 2 ,3 மாதங்களில் முடித்து வெளியிடுவது நடக்காது. அதே போல ஒரு படம் ரிலீஸ் ஆகி முடியும் வரை அடுத்த பட ஆரம்பத்தை தள்ளியும் வைக்க மாட்டார்கள்.இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள், நடிகர்கள் multi -projects சகஜம். 26 படங்கள் made -over ஆனதை விஸ்வநாதன் ஒப்பு கொண்டுள்ளார்.(நிறைய படங்கள்.எண்ணிக்கை ஞாபகமில்லை ,என்று),ஒன்றிறேண்டில் பிசகி இருக்கலாம். நான் இது நடந்த போது ஆறு வயது சிறுவன். ஒரு முக்கிய சம்பத்த பட்ட ஆறு ஏழு பேரிடம் நான் investigate செய்தது .
திரும்பி திரும்பி ,நிறைய படங்கள் போட்டார் என்ற பல்லவி. மனதை தொட்டு சொல்லுங்கள்.ஜல்லியடித்து குமாருடனும்,விஜய பாஸ் கருடனும்,சங்கர்-கணேஷுடனும் போட்டியிட்டும் அந்த தரத்தை கூட 70 இல் எட்ட முடியவில்லை.இளையராஜா கூட ,பழைய படங்கள் என்ற சகாப்தம் உயர்ந்த மனிதன்-சிவந்த மண்ணோடு முடிவு பெற்றது என்றார். ராமமூர்த்தியோடு நான் பேசி கொண்டிருந்த போது ,அவர் விஸ்வநாதனுக்கு 65 வரை கொடுத்த டியுன்கள் மூன்று மடங்கு( வந்த படங்களில் வந்த பாடல்களை விட ).விஸ்வநாதன் memory sharp .கற்பனை திறனும் உடையவர்.அதை வைத்து (கட்டி கொடுத்த சோறு)மூன்று வருடங்களாவது ஜல்லியடித்திருக்க முடியாதா?
அவருடைய உழைப்பு,அறிவு ,பணம் எல்லாம் உறிஞ்ச பட்டு சக்கையாய் துப்ப பட்டார். தயாரிப்பாளர்களுக்கோ இவரை தெரியாது.(வாசித்து காட்டுவது வேறொருவர்)இவரை நம்பி படம் கொடுத்தவர்களும் பட்ஜெட் விஷயத்தில் முறுக்க ,இவருடைய சகாக்கள் காற்று வீசும் (பண காற்று,இசை காற்றல்ல)திசையில் பறக்க,இசை கலைஞர்களை கூட வேலைக்கு வைக்க வசதியில்லாமல் ,ராமண்ணா ஒருவர் புண்ணியத்தில் எவ்வளவு நாள் ஓட்டுவது?
இவர் கொடுத்த லைப்ரரி tunes வேறொரு வசதியுள்ள முன்னாள் சகாவால் மூன்று நான்கு வருடங்கள் வசதியாக கோவர்தன்-வெங்கடேஷ்-ஹென்றி -ஜோசெப்-நோயல் -சங்கர்-கணேஷ் துணையோடு அரங்கேறி கொண்டிருக்க......
என்னதான் திறமை இருந்தாலும்,செல்வாக்கு,அரசியல்,பண பலம்,படை பலம் இதற்கு முன்பு தனியாளாக இருந்து தோற்றாலும் ,இன்றும் விஸ்வநாதனின் 1000 படங்களுக்கு அவரை தனியாக கவுரவிப்பதில்லையே,100 படங்களுக்கு பழைய சகாவோடு சேர்த்துதானே கவுரவிக்க படுகிறார்?(சத்யபாமா டாக்டர் பட்டம் உட்பட)
திட்டமிட்டு ,அத்தனை ட்ரூப் ஆட்களையும் வளைத்து போட்டு ,செல்வாக்கை காட்டி, பத்திரிகைகளில் திட்டமிட்டு தான்தான் இரட்டையரில் முதன்மை போல பிரச்சாரம் செய்து,ராமமூர்த்தி குடிகாரன் என்று புளுகி கொண்டு ச்சீ....(எந்த பூமி?)வேண்டாம் ,அசிங்கத்தை கிளற நான் விரும்பவில்லை. கூட்டுக்குள் வளர்த்த பறவை போல ,விஸ்வநாதனுடன் இருந்த போது ,தன் இசையில் மட்டுமே தோய்ந்திருந்த மேதை,வெற்றிக்கு இசையை தவிரவும் முன்னூறு காரணங்கள் இருந்ததை அறியாமல் காலத்தின் கோலத்தில் ,தேய்ந்து மறைந்ததை கொண்டாடவா சொல்கிறீர்கள்?வருத்தமேனும் வேண்டாமா?நாம் யாரை மதித்து போற்றினோம்?பாரதியின் மரணத்தில் 14 பேர் மட்டுமே.புதுமை பித்தன் சோத்துக்கு லாட்டரி ..
ராமமூர்த்தி ஜீவனத்திற்கே போராட விட்டு விட்டோம்.
நான் இருவருடனும் interract செய்துள்ளதால் ,இருவர் பலமும்,பலவீனமும் நன்கு அறிந்தவன்.
கடைசியாக டி.கே.ஆர் என்ற அந்த மறக்க பட்ட மேதையை காலில் விழுந்து வணங்கும் பாக்கியம் எனக்கு விஸ்வநாதன் பேரனின் கல்யாண வரவேற்பில் கிடைத்தது.சுசிலா தெய்வ பாடகியின் காலிலும் வணங்கினேன்.இசை என்பது எனக்கு உதிரம்.
Gopal.s
5th July 2014, 06:08 AM
வெண்ணிற ஆடையில் என் வரிசை.
என்ன என்ன வார்த்தைகளோ
ஒருவன் காதலன் ஒருத்தி காதலி
அம்மமா காற்று வந்து
நீ என்பதென்ன
நீராடும் கண்கள் இங்கே
அள்ளி பந்தல் கால்கள்
சித்திரமே சொல்லடி
கண்ணன் என்னும் மன்னன்
ஒருவன் காதலன் படத்தில் கட் அல்லவா?(நீராடும் இடம் பெற்றதா).நான் எழுபதுகளில் பார்த்த போது இரண்டும் துண்டிப்பு. முடிந்தால் இந்த இரண்டின் வீடியோ.
Gopal.s
5th July 2014, 06:13 AM
டியர் கார்த்திக் சார்,
இருவருக்கும் ஒரே டேஸ்ட்
கார்த்திக் ,
உங்களுடன் நான் வாக்குவாதம்தான் புரிந்தேனே தவிர ,இந்த மாதிரி insult செய்ததில்லை.:):smile2::-D:)
Gopal.s
5th July 2014, 06:52 AM
ஷண்முக ப்ரியா .
சில ராகங்களை கேட்கும் போது ,பிரமிப்பில் ஆழ்ந்து விடுவோம். அவை புரிந்து உணரவே சில வருடங்கள் ஆகும்.பாடி முயலவோ பல பிறவிகள்.ஆனால் ஒரு ராகம் மட்டும் கேட்டதும் ,அட இது நம்ம தோஸ்த் ,நாமும் பாடலாம் என்ற உணர்வை லகுவாக ஏற்படுத்தும் இதமான ராகம் ஷன்முகபிரியா. தமிழ் கடவுளின் பெயரில் அமைந்த ,லேசான ,அன்றாட உணர்வுகளுக்கு தோதான ராகம். எப்போ கேட்டாலும் மனசுக்கு பிடிக்கும்.எல்லோருக்கும் பிடிக்கும்.
இதுவும் ஒரு சம்பூர்ண மேளகர்த்தா.அவன்தான் மனிதன் ரவிகுமார் போல நிறைய உறவுகள் (ஜன்யம்)இல்லாத ராகம்.
நிறைய பாடல்கள் இந்த ராகத்தில் ஜனங்களின் ஜனரஞ்சகம் அல்லவா?
காதல் காட்சிகளில் முதன்மை என்று யார் என்னை கேட்டாலும் நான் இந்த படத்தில் கதாநாயகன் தன் கன்று காதலை விவரிப்பதும் ,அதில் நாயகி பொறாமையுடன் react செய்யும் சிவாஜி-வைஜயந்தி சம்பத்த பட்ட இரும்புத்திரை காட்சிதான் என்று சொல்வேன்..(hats off கொத்தமங்கலம் சுப்பு-வாசன்).அது முடிந்து வரும் இந்த தொடர்ச்சி பாடல் தொடாமலே ,இந்த ஜோடியை எண்ணி சிலிர்க்க வைக்கும்.(இயற்கையின் வளர்ச்சி முறை வரிகளில் நடிகர்திலகத்தின் புதிர் நிறைந்த பாவம் மற்றும் action அடடா).எஸ்.வீ.வெங்கட்ராமன் அவர்களின் "நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நான் இருக்கும்".
அந்த படமே ஒரு surprise package .அந்த மாதிரி ஒரு புராண படத்தையோ,நடிப்பையோ,சுவாரஸ்யத்தையோ அதுவரை உலகம் கண்டதில்லை.ஆனால் அந்த படத்தில் படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் நம்மை துள்ளி உட்கார வைத்த surprise package ஒவ்வையார் பாடல்.(சுந்தராம்பாள் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் கழித்து திரையில் தோன்றி பாடினார்).திரை இசை திலகத்தின் "பழம் நீயப்பா ,ஞான பழம் நீயப்பா".
அந்த பாடகர் ,திலகங்களின் சாம்ராஜ்யத்தில் நிரந்தர சிற்றரசர்.பாடக சக்ரவர்த்தி.திடீரென நடிக்கும் ஆசை. திலகங்களையே இணைத்த பெரும் இயக்குனர் இந்த ஆசையை நிறைவேற்றுவதில் தயங்கவில்லை.அந்த பாடகரும் ,நடிகர்திலகத்தின் அங்கம் என்பதாலோ என்னவோ,அதே பாணியில் நடித்து,பேசி
ஒப்பேற்றியிருந்தார்.(ஒரு இடம் கிளாஸ் .தொழு நோய் கண்டு எங்கும் போக முடியாத நிலையில் மனைவியிடம் வேட்கையை வெளியிடும் காட்சி).அந்த படத்தின் இந்த பாடல் இப்படியும் ஒரு கடும் தமிழை இசையுடன் பாட ஒருவரா என்று இவரை எண்ணி வியக்க வைக்கும்.அருணகிரி நாதரின் திருப்புகழ் "முத்தை தரு பத்தி திருநகை".
சண்முக பிரியாவின் எனக்கு பிடித்த சில sample .
காலத்தில் அழியாத- மகாகவி காளிதாஸ்.
மறைந்திருந்து பார்க்கும் - தில்லானா மோகனாம்பாள்.
தகிட ததிமி தகிட ததிமி- சலங்கை ஒலி
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா-வேதம் புதிது.
Gopal.s
5th July 2014, 08:06 AM
சிறு வயதில் எனக்கு சினிமா பார்க்கும் ஒரே தியேட்டர் அமராவதி(நெய்வேலி). சொன்னால் வெட்க கேடு. சென்னை சென்று சாந்தி,தேவி,மிட்லண்ட் என்று குளு குளு ஏ.சி தியேட்டர்களில் பார்த்த படத்தை கூட விடுமுறைக்கு வரும் போது அமராவதி திரையரங்கில் பார்த்தால்தான் நிறைவாகும்.ரொம்ப நாள் சுலேகா என்ற அடாசு தையல் காரனை ஆஸ்தான டெய்லர் ஆக பாவித்து சென்னையில் பெரிய பெரிய கடைகளை புறக்கணித்து,இவரிடமே லீவிற்கு வரும் போது அனைத்தையும் தைத்து போவேன்.அப்போது பாக்கெட் மணி சினிமாவிற்கே செலவாகி விடும். நைஸ் ஆக ஜெயா மெடிக்கல் கடையில் சோப்பு ,சீப்பு,கண்ணாடிகளை account இல் வாங்கி சென்று விடுவேன்.அம்மா அப்பா அவ்வப்போது செல்லமாக கண்டித்து மன்னித்தும் விடுவார்கள். நான் இவ்வளவு பற்று வைத்திருந்த tailor என்னை படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமில்லை.தீபாவளிக்கு முதல் நாள் அம்மா பதறுவார்கள். டேய் ...சுலேகா இன்னும் உங்கள் யார் டிரஸ்உம் தரவில்லை.எதை கட்டி கொள்ள போகிறீர்கள் என்று?அப்போ இப்போ என்று காஜா மட்டும் எடுக்கணும் என்று ஒரு வாரமாக தட்டி கழித்து வரும் சுலேகாவிடம் இரவு 10 மணிக்கு சென்றால் ,தம்பி அந்த துணிகளை எடு என்பார்..புது மெருகு அழியாமல் நாங்கள் கொடுத்த கடை label உடன் எங்கள் துணிகள்.நீங்க போங்க தம்பி.ஒரே மணிநேரம் ,முடிச்சு கொடுத்துறேன் என்ற சத்தியத்தை நம்பாமல் அங்கேயே உட்கார்ந்து ,கண்ணுறங்காமல் ,வேலை முடித்து ,சரியாக 4.32 க்கு காவல் தெய்வம் சிவகுமார் போல் வீடு வந்து சேருவேன்.(ஒரு தீபாவளிக்காவது முதல் நாள் உறங்கும் சுகத்தை எனக்கு சுலேகா தந்ததில்லை).இந்த முறை வாசுதேவனுடன் மெயின் பஜார் சுற்றிய போது சுலேகா அங்கு இல்லாதது ஒரு வெறுமையை தந்தது.இத்தனைக்கும் எங்கள் தங்க ராஜா பாணியில் பெல்ஸ் தைத்து ,நண்பர்களிடம் என்னை நாண செய்யும் tailor .
அப்போது டவுன் கிளப் என்ற பொழுது போக்கு கிளப்பில் ஒவ்வொரு வாரம் புதன் ஒரு ஆங்கில படமோ,தமிழ் படமோ போடுவார்கள்.35mm with projector . ஆஜராகி விடுவோம். அதில் என்னை கவர்ந்த இரு படங்கள் வரிசையாக இரு வாரங்கள் .தேன் மழை (காமெடி,பாடல்கள் பிடிக்கும் ),நினைவில் நின்றவள் (முழுபடமும் பிடிக்கும்)அதிலும் குறிப்பாக குமாரின் இசையில் ,ஈஸ்வரி குரலில்,ஆனந்தன்-தேவகி இணைவில் இந்த பாடல்.(எனக்கு மனோகர்-ஷீலா இணைவில் அம்மாம்மாவும் உயிர்)
பார்த்து மகிழுங்கள்.
https://www.youtube.com/watch?v=VSsqzU1JCoU&feature=player_embedded
Gopal.s
5th July 2014, 08:14 AM
படமாக்கம் ,ஸ்டைல் எல்லாவற்றிலும் உச்சம் தொட்ட ராட்சஷி ,வேதாசலத்தின் (வேதா) மந்திர வல்லவன் ஒருவன் அம்மம்மா.
மனோகர் வண்ண கிளியில் ரௌடி வேஷத்தில்,பட்டணத்தில் பூதத்தில் காமெடி கலந்த நம்பர் 3 ஆக ,மீண்டும் வாழ்வேன் படத்தில் டீச்சர் சுட குறி வைத்து சொல்லும் பிழைத்து போ action ,சிவகாமியின் செல்வனின் நானேதான் தலையசைப்பு,ராஜாவின் விஸ்வம் என்று என்னை கவர்ந்த தமிழ் படத்தில் under -utilise செய்ய பட்டவர்.(கருமாந்திர நம்பியாரையே எத்தனை படத்தில் சகித்தோம்)இந்த படத்தில் style personfied என்று சொல்லும் பாடல்.பார்த்தும் கேட்டும் மகிழவும்.
https://www.youtube.com/watch?v=I3J5K6ieAqA
Gopal.s
5th July 2014, 09:35 AM
சிவந்த மண் படத்தின் பல தங்க புதையல்களின் நடுவே தொலைந்து விட்ட பிளாட்டின புதையலை பற்றி இந்த பதிவு.பிளாட்டினத்தின் மதிப்பு மக்களுக்கு புரியாததாலோ என்னவோ.
ஒரு நாளிலே உறவானதே
கனவாயிரம் நினைவானதே
வா வெண்ணிலா இசையோடு வா
மழை மேகமே அழகோடு வா
மகராணியே மடி மீது வா
நாளை வரும் "நாளை" என நானும் எதிர்பார்த்தேன்.
காலம் இது காலம் என காதல் மொழி கேட்டேன்
போதை தரும் பார்வை எனை மோதும் அலை மோதும்
போதும் என கூறும் வரை பூவே விளையாடு
வரும் நாளெல்லாம் இது போதுமே
மஞ்சம் இது மஞ்சம் என மார்பில் விழி மூடு
கொஞ்சும் இதழ் சிந்தும் என் நெஞ்சில் ஒரு கோடு .
தஞ்சம் இது தஞ்சம் என தழுவும் சுவையோடு.
மிஞ்சும் சுகம் யாவும் பெற வேண்டும் துணையோடு
வரும் நாளெல்லாம்.இது போதுமே
ஒரு நிர்ப்பந்தமாய் நடந்த காதல் ஜோடியின் நாலு பக்கம் வேடர் சூழ்ந்த நிலையில் (நண்பர் செஞ்சியும்)மானிரெண்டின் காதல்.(மகாராணியின் முதலிரவு கட்டாந்தரையில்).இரவு ஊருறங்கிய பின் குளிக்கும் மனைவியிடம் தாபத்தை கண்ணியமாய் வெளியிடும் புரட்சியாளன்.
காஞ்சனாவின் தாபம் நிறைந்த விழிகளும்,நடிகர்திலகத்தின் காதல் வயப்பட்ட மோவாய் முத்தங்களும்.போதும் என கூறும் வரை அணைத்து,வினாடி கண் சொக்குவாரே !!!!!வரும் நாளெல்லாம் என்று வீணை மாதிரி மடி கிடத்துவாறே (50 ஆவது நாள் போஸ்டர் என நினைவு),மிஞ்சும் சுகம் யாவும் வரிகளில் காஞ்சனாவின் கண்களை பாருங்கள் .வரும் நாளெல்லாம் என மடியில் இரு கால்களை வெவ்வேறு நிலை மடித்து மயக்குவாறே....
புரட்சியாளனின் இயல்பான முடியழகும் ,ஆண்மை நிறைந்த கட்டம் போட்ட சட்டையும்,make -up மிதமாக திராவிட மன்மதனின் இளமை பொங்கும் handsome என படும் ஆணழகும்(அந்த மூக்கு ...அடடா) ,காஞ்சனாவின் நாணம்,தாபம் நிறை பெண்மையும், ஆபாசமில்லாத உறுத்தாத ஈர உடையும் உங்களை வேறு உலகத்துக்கே அனுப்பும்.
நடிகர்திலகத்தின் முதல் ஐந்து காதல்களுக்குள் வரும். நல்ல வேளை ...அசல் திட்ட படி பாலமுரளி இதை பாடவில்லை. டி.எம்.எஸ் -சுசிலாவின் மயக்கும் குரலும் (ரெண்டு பெரும் சௌகரியமான pitch இல் ),எம்.எஸ்.வியின் சாதனை பாடல்களில் ஒன்று.
பார்த்து பார்த்து பார்த்து பார்த்து ,கேட்டு,கேட்டு,கேட்டு,கேட்டு மகிழவும்.
https://www.youtube.com/watch?v=ZNQSCPPTFzc&feature=endscreen
Gopal.s
5th July 2014, 12:47 PM
வாலி-விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைவில் வந்த பாட்டுக்கொரு படகோட்டியில் ,அத்தனை பாடல்களும் உச்சம் ஆனாலும் துருவ நட்சத்திரமாய் அதிகம் பேச படாத ஒரு டி.கே.ராமமூர்த்தி stamp போட்ட பாடல். சுசிலாவின் மெல்லிய erotic voice ராட்சஷியை விழுங்கும்.
வில்லன் நம்பியார் ஜெயந்தியை ,சரோஜா தேவியை வரித்து ரசிக்கும் காட்சி.ஆரம்பத்தை கேளுங்கள் .சுசிலாவின் குரல் ஜாலத்தை கேளுங்கள் .இந்த பாடல் சிறு வயது முதல் என்னோடு வாழும் அதிசயம். சுசிலா பாடலை பதியும் போதெல்லாம் இந்த பாடலை என் கைகள் சொன்னது நீதானா,மாலை பொழுதின்,.என்ன என்ன வார்த்தைகளோ,பெண் பார்த்த இவற்றிற்கு ஈடாக எழுத வைத்து விடும் ஈர்ப்பு.
கேளுங்கள்.பார்க்க ரொம்ப ஒன்றும் இல்லை.
https://www.youtube.com/watch?v=gOr8DE7aAeM
Gopal.s
5th July 2014, 12:57 PM
டி.ஆர்.பாப்பா நல்லவன் வாழ்வான்,வைரம்,மறுபிறவி ,இரவும் பகலும் போன்ற படங்களில் படு வித்யாசமான இசையமைப்பில் அசத்தியிருப்பார். இவர் ஒரு நிலைய வித்வான் என கேள்வி .(அந்த கால வானொலி நேயர்களுக்கு புரிந்திருக்கும்)
பல புதிய வரவுகள் நிறைந்த 64-65 ஆம் வருடங்களில் ,பல சோக நிகழ்வுகளும் உண்டு.முக்கியமாக இசை துறைக்கு.ஆனால் பல land mark படங்கள் வெளியான வருடங்கள் இவை. ஒரு புதியவருக்கு வாசல் திறந்து விட்டு ,மக்களின் ஒவ்வொரு வெள்ளிகிழமையும் வாசல் மூட வைத்த ஆரம்ப படம்.
ஆனாலும் இசையமைப்பு அருமை .முக்கியமாக இந்த வித்தியாச குத்து பாடல்.
http://www.yourepeat.com/watch/?v=DQfI55JvFuE
mr_karthik
5th July 2014, 01:21 PM
டியர் கோபால் சார்,
விவாதத்தை வளர்க்க விரும்பவில்லைஎன்று சொல்லிவிட்டு, புதிய விவாதத்துக்கான மேட்டர்களைக் கொண்டு வந்துள்ளீர்கள். ஆனால் நிஜமாகவே நான் வளர்க்க விரும்பாததால் அவற்றுக்கு பதில் சொல்லி, திரியின் போக்கை மாற்ற விரும்பவில்லை.
// இவருடைய சகாக்கள் காற்று வீசும் (பண காற்று,இசை காற்றல்ல)திசையில் பறக்க,இசை கலைஞர்களை கூட வேலைக்கு வைக்க வசதியில்லாமல் ,ராமண்ணா ஒருவர் புண்ணியத்தில் எவ்வளவு நாள் ஓட்டுவது?
இவர் கொடுத்த லைப்ரரி tunes வேறொரு வசதியுள்ள முன்னாள் சகாவால் மூன்று நான்கு வருடங்கள் வசதியாக கோவர்தன்-வெங்கடேஷ்-ஹென்றி -ஜோசெப்-நோயல் -சங்கர்-கணேஷ் துணையோடு அரங்கேறி கொண்டிருக்க.....//
நல்ல சமாளிப்பு. ஏன் அதே ட்யூன்களை வைத்து இவரும் சில வருடங்கள் ஓட்டியிருக்க வேண்டியதுதானே. .
விஸ்வநாதனின் மெமரி பவர் பற்றி சொன்னீர்கள். அவருக்கு ரொம்ப ரொம்ப 'புவர் மெமரிபவர்' என்பது அவர் பங்குகொள்ளும் நிகழ்ச்சிகளை பார்ப்பவர்களுக்கு தெரியும். கேள்வி கேட்பவர் எவ்வளவு முயன்று நினைவுபடுத்தினாலும் அவருக்கு பழைய சம்பவங்கள் அவ்வளவாக நினைவுக்கு வராது. எதையாவது பொத்தாம் பொதுவாக சொல்லி சமாளிப்பார்.
சமீபத்தில் கூட அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ஒரு பெண், ராமன் எத்தனை ராமனடி படத்திலிருந்து 'சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்' பாடலை பாட, 'இது எந்தப்படத்தில்?' என்று கேட்டு தெரிந்துகொண்டார். அவர் இசையமைத்ததே அவருக்கு நினைவில்லை. அப்படியிருக்க அவர் சகா சொன்ன ட்யூன்களையெல்லாம் எங்கே நினைவில் வைத்திருக்க?.
உதவியாளர்கள் சிலரது பெயர்களை மட்டும் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் அவரிடம் நூறுக்கு மேற்பட்ட உதவியாளர்கள் இருந்தார்கள். சிரமம் பாராமல் அனைவரையும் குறிப்பிட்டிருக்கலாம். இவர் ஒரு இசையமைப்பாளர் மட்டும்தான் உதவியாளர் வைத்திருந்தார். மற்றவர்களெல்லாம் எல்லா வாத்தியங்களையும் அவர்களேதான் வாசித்தார்கள். நீங்கள் சொன்ன அந்த உதவியாளர்களின் பெயர்கள் வெளியே தெரிந்ததே இவரால்தான். தன பெயருக்கு கீழே 'உதவி : ஹென்றி டேனியல் (அல்லது) கோவர்த்தனம் (அல்லது) ஜி.கே. வெங்கடேஷ் (அல்லது) ஜோசப் கிருஷ்ணா என்று போட்டு அவர்களுக்கு கௌரவம் தந்தவர் எம்.எஸ்.வி. (மாமா பெயருக்கு கீழே 'உதவி: புகழேந்தி' என்பது பெர்மெனன்ட்)
யாரும் தவறாக நினைக்க வேண்டாம். திரு இளையராஜா இதுவரை தன் உதவியாளர்கள் யாருடைய பெயரையும் தன் பெயரோடு போட்டுக் கொண்டதில்லை. அறிமுகமான காலத்தில் அவரது வலது கையாக விளங்கிய தம்பி கங்கைஅமரன் பெயர் உள்பட. அவர் மட்டுமல்ல அவர் துவங்கி இன்றைய இமான் வரையில் எல்லோருமே அப்படித்தான். (தேவா தம்பிகள் பெயரை தனியே போடச்செய்தார்).
திரு ராமமூர்த்தி மீது எனக்கும் மிகுந்த மரியாதை உண்டு. அவரது படைப்புகளான நான், மூன்றெழுத்து, மறக்க முடியுமா (2 பாடல்கள்), தேன்மழை போன்ற படங்களின் பாடல்கள் மிகவும் பிடித்தவை. ஆனால் இவரை உயர்த்துவதற்காக 'எம்.எஸ்.வி. ஒரு டோட்டல் ஜீரோ' என்கிற ரீதியில் பதிவுகள் இட்டால் என்னை என்னாலேயே கட்டுப்படுத்த முடியாது.
என்னைப்பொருத்தவரை எம்.எஸ்.வி. செய்த உலகமகா தவறு என்பது மீண்டும் அவர் ராமமூர்த்தியோடு இணைந்ததுதான்.
மற்றபடி தனிப்பட்ட முறையில் இவர்களோடு உங்கள் நெருக்கங்கள் கண்டு மகிழ்ச்சியே. நான் இவர்களை தூரத்தில் வைத்து பார்த்ததோடு சரி.
gkrishna
5th July 2014, 01:41 PM
முத்துசிப்பி 1968
கிருஷ்ணன் நாயர் இயக்கம்
ஜெய் ஜெயலலிதா நடிப்பு
s m சுப்பையா நாய்டு இசை
சுசீலாவின் அருமையான மற்றும் எதிர்பார்ப்பான குரல்
மாலையிட்ட கணவன் நாளை வருவான்
இந்த முத்து வண்ண சித்திரத்தின் முகம் பார்க்க
மாலையிட்ட கணவன் நாளை வருவான்
இந்த முத்து வண்ண சித்திரத்தின் முகம் பார்க்க
பக்கம் வந்து மெல்ல பாடல் ஒன்று சொல்ல
வெட்கம் வந்து செல்ல சொர்க்கம் கண்டு கொள்ள
பக்கம் வந்து மெல்ல பாடல் ஒன்று சொல்ல
வெட்கம் வந்து செல்ல சொர்க்கம் கண்டு கொள்ள
மாலையிட்ட கணவன் நாளை வருவான்
இந்த முத்து வண்ண சித்திரத்தின் முகம் பார்க்க
தூங்காத கண்ணெ துடித்தது போதும்
துடியிடையே நீ துவண்டது போதும்
தூங்காத கண்ணெ துடித்தது போதும்
துடியிடையே நீ துவண்டது போதும்
நீங்காத நினைவே அலைந்தது போதும்
நீ எதிர் பார்த்தது நடக்கும் எப்போதும்
நீங்காத நினைவே அலைந்தது போதும்
நீ எதிர் பார்த்தது நடக்கும் எப்போதும்
மாலையிட்ட கணவன் நாளை வருவான்
இந்த முத்து வண்ண சித்திரத்தின் முகம் பார்க்க
இடையில் கலைச்செல்வியின் குரல் என்னண்ணா ?
சுசீலா : ஆனந்தக் கண்ணீர் அருவி என்றோட
ஆசை கொண்டேன் அதில் நான் விளையாட
ஆனந்தக் கண்ணீர் அருவி என்றோட
ஆசை கொண்டேன் அதில் நான் விளையாட
நால் விழி சேர்ந்தே நாடகமாட
நாயகன் வருவான் நான் உறவாட
நால் விழி சேர்ந்தே நாடகமாட
நாயகன் வருவான் நான் உறவாட
மாலையிட்ட கணவன் நாளை வருவான்
இந்த முத்து வண்ண சித்திரத்தின் முகம் பார்க்க
http://www.youtube.com/watch?v=sJeXO6QWk64
mr_karthik
5th July 2014, 01:44 PM
டியர் கோபால் சார்,
மூன்று அருமையான பாடல்களை காணொளியுடன் தந்து அசத்தியுள்ளீர்கள்.
'பறவைகள் சிறகினால்'
'அம்ம்மம்மா கன்னத்தில் கன்னம் வைத்துக்கொள்ளு' (துவக்கம் கம்செப்டம்பரை நினைவு படுத்தும்)
'ஒரு நாளிலே உறவானதே' (தலைவரின் மிகச்சிறந்த டூயட்களில் ஒன்று). நீங்கள் சொன்னதுபோல மறக்கப்பட்ட பாடல் அல்ல. நல்ல ஹிட் தான். ஆனால் 'ஒரு ராஜா ராணியிடம்' பாடலும் 'பட்டத்து ராணி' பாடலும் டாமினேட் செய்ததால் கொஞ்சம் அழுந்திவிட்டது. மிக ரம்மியமான மேலோடி, குறிப்பாக ப்ளூட் மற்றும் சிதார் விளையாட்டு. இதைத்தொடர்ந்து வரும் சண்டைக்காட்சி சொதப்பல். தரையில் சண்டையிடுவதாக மட்டும் காட்டாமல் தண்ணீருக்குள்ளும் குதித்தது மேலும் சொதப்பல்.
இதுபோல அழுந்திய இன்னொரு பாடல் 'சொல்லவோ சுகமான கதை சொல்லவோ'.
பாட்டுக்கொரு படம் 'சிவந்த மண்' என்பதே சரியான பதம்.
Gopal.s
5th July 2014, 01:49 PM
முத்துசிப்பி 1968
கிருஷ்ணன் நாயர் இயக்கம்
ஜெய் ஜெயலலிதா நடிப்பு
s m சுப்பையா நாய்டு இசை
நாயர்,நாயுடு என்று ஜாதி மயம்.(ஐயர் ,ஐயங்கார் விடு பட்டு விட்டது.)
mr_karthik
5th July 2014, 01:56 PM
டியர் கிருஷ்ணாஜி,
முத்துச்சிப்பியில் இடம்பெற்ற 'மாலையிட்ட கணவன் நாளை வருவான்' என்ற அருமையான பாடலுடன் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளீர்கள். உங்கள் பதிவுகள் இல்லாததால் திரியின் வேகம் சற்று குறைந்திருந்தது உண்மை. இனி வேகம் எடுத்துவிடும்.
பாடலின் வரிகள் அனைத்தையும் மிக நேர்த்தியாக அளித்துள்ளீர்கள். இப்பாடலில் 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின்' நடிப்பு மிகச்சிறப்பாக இருக்கும்.
gkrishna
5th July 2014, 02:09 PM
மாடர்ன் தியேட்டர்ஸ்
சுந்தரம் இயக்கம்
ஷ்யாம் பிலிப்ஸ் இசை (இவர் என்ன ஆனார் )
நெல்லையில் கொக்கிரகுளம் என்ற சிறிய ஊரில் லோகாம்பாள் சுப்ரமணிய அயர் புத்திரனாக பிறந்த சுப்ரமணியம் ஷங்கர் அலைஸ் ஜெய்ஷங்கர் ,
குமாரி ருக்மணியின் புத்திரியும், சாந்த மீனா என்ற ஐஸ்வர்யாவின் தாயாரும் ஆன லக்ஷ்மி இணை
லக்ஷ்மியோட தோப்பனார் பெயர் தெரியவில்லை
பாலாவின் இளைய இனிய குரல் வசந்தாவின் துணை ஹம்மிங் குரல்
"நேற்று வரை விண்ணில் இருந்தாளோ
இன்று எந்தன் கண்ணில் விழுநதா ளோ
அவள் முகம் "
பாட்டு நடுவில் வரும் பாலாவின் பேச்சு குரல் ஐயோ சம்திங் marvellous
பாலா மனோரமா குரல்களில்
"பூந்தமல்லியெலெ ஒரு பொண்ணு பின்னாலே நான் போய் வந்தேண்டி
அவ புடவை நல்ல இல்லை "
http://www.youtube.com/watch?v=NF_MNHdk82Y
gkrishna
5th July 2014, 02:11 PM
நாயர்,நாயுடு என்று ஜாதி மயம்.(ஐயர் ,ஐயங்கார் விடு பட்டு விட்டது.)
அடுத்த தடவை சேர்த்து விடுவோம் தலைவரே
தலைவரே னு சொல்லலாம் இல்லே
mr_karthik
5th July 2014, 02:21 PM
//குமாரி ருக்மணியின் புத்திரியும், சாந்த மீனா என்ற ஐஸ்வர்யாவின் தாயாரும் ஆன லக்ஷ்மி இணை
லக்ஷ்மியோட தோப்பனார் பெயர் தெரியவில்லை //
கிருஷ்ணாஜி,
லட்சுமியின் தந்தை பழைய இயக்குனர் ஒய்.வி.ராவ்
அதுசரி, கல்யாணம் ஆகி குழந்தை லட்சுமியும் பிறந்த பின்னும் அதென்ன குமாரி(?) ருக்மணி.
இன்னொன்றையும் சேர்த்திருக்கலாம்...
பாஸ்கர், மோகன், சிவச்சந்திரன் ஆகியோரின் மனைவியுமான... லட்சுமி.
gkrishna
5th July 2014, 02:23 PM
டியர் கார்த்திக் சார் /வாசு சார்/கோபால் சார்
இரண்டு நாள்கள் இன்டர்நெட் connection டௌன் மேலும்
சில வேலை பளுவினால் திரியின் பக்கமே வரமுடியாமல் போய் விட்டது
மன்னிக்கவும்
என் வருகைக்கு வாழ்த்து வழங்கிய கார்த்திக் sir /கோபால் sir அவர்களுக்கு நன்றி
gkrishna
5th July 2014, 02:25 PM
//குமாரி ருக்மணியின் புத்திரியும், சாந்த மீனா என்ற ஐஸ்வர்யாவின் தாயாரும் ஆன லக்ஷ்மி இணை
லக்ஷ்மியோட தோப்பனார் பெயர் தெரியவில்லை //
கிருஷ்ணாஜி,
லட்சுமியின் தந்தை பழைய இயக்குனர் ஒய்.வி.ராவ்
அதுசரி, கல்யாணம் ஆகி குழந்தை லட்சுமியும் பிறந்த பின்னும் அதென்ன குமாரி(?) ருக்மணி.
இன்னொன்றையும் சேர்த்திருக்கலாம்...
பாஸ்கர், மோகன், சிவச்சந்திரன் ஆகியோரின் மனைவியுமான... லட்சுமி.
குமாரி ஒரு கேள்விகுறி .
gkrishna
5th July 2014, 02:53 PM
விளகேற்றியவள் 1965
ஆதித்தன் (இவரை பற்றி குமுதம் வார இதழில் படித்த நினவு) ,(இரவும் பகலும் )வசந்தா
ஜோசப் தளியத் படம்
T R பாப்பா இசை
பாடகர் திலகம்,கண்ணிய நாயகி குரல்களில் என்ன ஒரு டூயட்
"முத்தமா ஆசை முத்தமா "
"ஆமாம் முத்தம்மா வேணும் மொத்தமா "
இந்த பாட்டைசிலோன் ரேடியோவில் ரொம்ப நாள் கேட்கும் போது ssr ,விஜயகுமாரி ஜோடி பாடும் பாடல் என்றே நினைத்து கொண்டு இருந்தேன். ஏன் என்றால் "ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக " பாடலை போன்றே இந்த முத்தமா பாடலும் அமைந்திருக்கும் .
இந்த விளகேற்றியவள் படத்தில் எல்லா பாடல்களுமே இனிமை
"கத்தியே தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு "
இந்த பாட்டை எழுதியது கண்ணதாசன் என்று நினைத்தேன் ஆனால்
என் நண்பர் ஒருவர் ஆலங்குடி சோமு என்று கூறினார்
http://www.inbaminge.com/t/v/Vilakketriyaval/
vasudevan31355
5th July 2014, 02:54 PM
இருதினங்கள் கழித்து வந்திருக்கும் கிருஷ்ணா சார்!
வருக! வருக!
அன்புடன் வரவேற்கும்
அன்பன்
வாசு
vasudevan31355
5th July 2014, 03:00 PM
கார்த்திக் சார் ஒரு அபூர்வ தகவலைத் தந்துள்ளார். நடிகை லஷ்மியின் தந்தை பழம்பெரும் இயக்குனர் ஒய்.வி.ராவ் அவர்கள் இவர்தான்.
http://www.frontline.in/static/html/fl2914/images/20120727291408106.jpg
vasudevan31355
5th July 2014, 03:04 PM
நான் இன்று காலை ஷிப்ட் சென்ற வேளையில் எனக்கு மிகவும் பிடித்த என்னுடைய அழகான ராகத்தை எனக்கு முன்னால் நான் வீடு வருவதற்குள் பதிவாகப் போட்டு விட்ட வியட்நாம் வீட்டாரை வன்மையாகக் கண்டிக்கிறேன்.:)
vasudevan31355
5th July 2014, 03:06 PM
கிருஷ்ணா சார்
you tube error காண்பிக்கிறதே . உங்களுக்கு?
vasudevan31355
5th July 2014, 03:08 PM
கிருஷ்ணா சார்,
முத்தான முத்துசிப்பி பாடலை ரசித்தேன். பிடித்த பாடல்.
vasudevan31355
5th July 2014, 03:20 PM
'முத்துச்சிப்பி' படத்தில் பாடல்கள் ஏ.ஒன் ராகம்.
http://images.boxtv.com/clips/179/14179/player_crop_1000x563_89665_14179.jpg
ஒருநாள் பழகிய பழக்கமல்ல
மறுநாள் மறப்பதேன் வழக்கமல்ல
நீயென்றும் நானென்றும் இருவரல்ல
நிழல்தான் உயிரை சுடுவதில்லை
சுசீலா, டி.எம்.எஸ்ஸின் குரலில் கணீரென்று ஒலிக்கும் பாடல்.
பாடகியர் திலகத்தின் இன்னொரு பாடல்
ஜெயலலிதா அவர்கள் ஆடிப்பாடும்
அழகுத் திருமேனி தெரிகின்றதா
ஆடை அலங்காரம் மறைக்கின்றதா
('எங்கிருந்தோ வந்தாள்' 'படத்தின் வந்தவர்கள் வாழ்க மற்றவர்கள் வருக' பாணியில்)
அப்புறம் கேட்கவே வேண்டாம்
http://i1.ytimg.com/vi/pW80Zu10vOY/hqdefault.jpg
ஜெயா டிவியின் தேசிய கீதம்
'தொட்ட இடம் துலங்க வரும்'
அம்மா! போரடித்து விட்டது. வி.ஐ.பிக்கள் சிறப்புத் தேன் கிண்ணத்தில் வேறு விருப்பமாகச் சொல்லி உயிர் குடிப்பார்கள்.
எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை. என்னுடைய முதல் தேர்வு ஒருநாள் பழகிய பழக்கமல்ல.
gkrishna
5th July 2014, 03:23 PM
பொன்வண்டு 1973
ஜெய் ஜெயசித்ரா உஷா நந்தினி சுபா பாரதி மனோரமா நடித்த
மணியம் pictures NS மணியம் இயக்கம்
மெல்லிசை மாமணி குமார் இசையில்
ஜெய் யை நான்கு பெண்கள் விரும்புவார்கள். நடுவில் நடுத்தர வயது மனோரமாவும் விரும்புவார் . ஜெய் யாரை திருமணம் செய்து கொள்கிறார் என்பது தான் கதை . கொஞ்சம் காமெடி நல்ல இருந்தததாக நினைவு
சூரிய காந்தி படத்தில் கூட "தெரியாதோ நோக்கு தெரியாதோ " பாடலில் இந்த கட் அவுட் வரும்
பாடகர் திலகம் சுசீலா ஈஸ்வரி குரல்களில் "பொன்வண்டு பொன்வண்டு வாடியம்மா பொன்வண்டு "
பாடகர் திலகம் ஸ்வர்ணா குரல்களில்
"பனி மலரோ குளிர் நிலவோ உன் பார்வை என்ன பொருளோ "
ஸ்வர்ணாவின் அருமையான ஹம்மிங்
மனோரமா அவர் சொந்த குரலில் நம்ம NT நினைப்பில் "யாருக்காக இது யாருக்காக "
https://www.youtube.com/watch?v=FFA1AqyGILM
https://www.youtube.com/watch?v=MRUniZrlHK0
Gopal.s
5th July 2014, 03:24 PM
டியர் கோபால் சார்,
என்னைப்பொருத்தவரை எம்.எஸ்.வி. செய்த உலகமகா தவறு என்பது மீண்டும் அவர் ராமமூர்த்தியோடு இணைந்ததுதான்.
இந்த விஷயத்தில் நமக்குள் படு ஒற்றுமை. என் கருத்து படி ராமமூர்த்தி செய்த மாபெரும் தவறு முதல் முறை விஸ்வநாதனோடு
இணைந்ததுதான்.
Gopal.s
5th July 2014, 03:26 PM
pani malaro is a good tune by kumar. Ofcourse ,nothing for visual. Thanks Vasu.
Gopal.s
5th July 2014, 03:28 PM
Muthu sippi is a good Film. Mohan productions have made some good Films like Mannippu,Muthu Sippi. Extraordinary work by S.M.S in Mannippu. Interesting movie too. AVM Rajan gave a scintilating performance.
gkrishna
5th July 2014, 03:53 PM
வாசு சார்
நன்றி சார் முத்துசிப்பியின் பிற பாடல்களுக்கு
அப்போதே சொன்னேனே கேட்டியா படத்தில் இருந்து
ஜேசு வாணி குரல்களில் ஒரு பாடல் பதிந்து இருந்தேன்.
கண்ணதாசன் எழுதிய எளிய தமிழ் வரிகளில் ரொம்ப positive சாங் சார்
நீங்களும் கேட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறன்
எனக்கு அந்த வரிகள் ரொம்ப பிடித்து இருந்தது.
"பூமியின் நீர் உண்டு
நதி தரும் நீர் உண்டு
பூஞ்செடி வளர் காட்சி கண்டாய் முன்னே
தாய் தரும் பால் உண்டு
தமிழ் எனும் தேன் உண்டு
உலகத்தில் உயர்வென்று வளர்வாய் கண்ணே
ரோஜாக்கள் மலரும் ஆனந்த பவனம்
நமதில்லம் தானே பாப்பா
ராஜாவை போல மஹா ராணி போல
வருவீர்கள் நீங்கள் பாப்பா
சிரிப்புக்கு இதழ் தந்த தெய்வங்களே
சிறப்புடன் வரவேண்டும் செல்வங்களே "
இளைய தலைமுறை இனிய தலைமுறையாக
பதிவின் நடுவிலே படங்களை இணைப்பது எப்படி என்று கேட்டு இருந்தேன்
எஸ்வி சார் கூட சொல்லி இருந்தார் tiny picture மூலமாக .
முயற்சி செய்தேன் .
கொஞ்சம் செய்முறை விளக்கம் தர முடியுமா
mr_karthik
5th July 2014, 03:55 PM
பட்டணத்தில் பூதம் படத்தின் பாடல்கள் அனைத்தும் மிக மிக அருமையாக, வித்தியாசமாக படமாக்கப்பட்டிருக்கும். ஆர்.கோவர்த்தனம் இசையில் கண்ணதாசனின் பாடல்கள் அனைத்தும் மிக இனிமை.
பூதம் ஜீபூம்பா வினால் ஏற்பாடு செய்த வரவேற்பில் கதாநாயகன் பாஸ்கரோடு (மக்கள் கலைஞர் ஜெய்) அழகிகளை ஆடவைக்க, அதை அங்கே வந்த லதா (கே.ஆர்.விஜயா) பார்த்துவிட வந்தது வினை. நாயகனோடு நாயகி முறுக்கிக்கொண்டு மலையேறி விடுகிறாள். அவளை சமாதானம் செய்யும் வண்ணம் கதாநாயகன் பாடுவதுதான் 'கண்ணே கண்டதெல்லாம் காட்சியா' என்ற பாடல்.
வழக்கமாக இதுபோன்ற பாடல்களில் பாடல் முடியும் தருவாயில் இருவரும் சமாதானம் ஆகி விடுவார்கள். ஆனால் இந்தப்பாடலில் நாயகன் என்ன சமாதானம் செய்தும் எடுபடவில்லை. கதாநாயகி போயே போய் விடுகிறார்.
நைட் எபெக்டில் படமாக்கப்பட்ட பாடல். சென்னை மெரீனா கடற்கரையில் இருந்த (இப்போது இல்லை) மாநகராட்சி நீச்சல்குளத்தில் படமாக்கப்பட்டது. நீச்சல் உடையில் கே.ஆர்.விஜயா நடித்த ஒரே படம், ஒரே பாடல். பேண்ட், டி ஷர்ட்டில் மக்கள் கலைஞர். அழகான வண்ணத்தில் காட்சி.
கண்ணே கண்டதெல்லாம் காட்சியா
உன் கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா
பெண் தேகமே வெறும் சந்தேகமா
கோபம் வானவில்லின் வர்ணஜாலமா
மூடிவைத்த கைகளிலே முத்தும் இருக்கும்
ஒரு முள்ளும் இருக்கும்
தேடி வந்த கண்களிலே தேவை இருக்கும்
நூறு பாவை இருக்கும்
தெய்வம் வந்து சாட்சி சொன்னால் கோபம் தீருமா
தெய்வம் பொய்யும் கூறுமா
படம் வந்த காலத்தில் விஜயாவின் நீச்சல் உடை போஸ் அனைத்து போஸ்ட்டர்களிலும், அனைத்து விளம்பரங்களிலும் இடம்பெற்றிருந்தது...
gkrishna
5th July 2014, 04:15 PM
சூப்பர் பாட்டு கார்த்திக் சார்
கதாநாயகி போயி போய் விடுகிறார்
http://www.youtube.com/watch?v=CR6Cc2Cge74
நேற்று இதயக்கனி படத்தில் ராதா சலுஜாவின் நீச்சல் உடை உடன் கூடிய
பாடகர் திலகம் குரலில்
"புன்னைகையில் கோடி
பூங்கவிதை பாடி
கண்ணிரண்டில் மேவி
காட்சி தரும் தேவி
பெண் ஒருத்தி உன் போலே
இன்னொருத்தி ஏது
விண்ணளவு இரண்டு உலகில் கிடையாது
ஓன்றும் அறியாத பொண்ணோ உண்மை மறைதாளோ கண்ணோ
மாற்று குறையாத பொண்ணோ மயுங்குது நெஞ்சம் தயுங்குது கொஞ்சம் "
http://www.youtube.com/watch?v=R7KCXb5V2u4
mr_karthik
5th July 2014, 04:17 PM
இந்த விஷயத்தில் நமக்குள் படு ஒற்றுமை. என் கருத்து படி ராமமூர்த்தி செய்த மாபெரும் தவறு முதல் முறை விஸ்வநாதனோடு
இணைந்ததுதான்.
நீங்கள் சொல்வது உண்மைதான்.
1952-லிருந்தே இருவரும் தனித்து இயங்கியிருந்தால், ராமமூர்த்தி அப்பவே காணாமல் போயிருப்பார். காரணம் நீங்களே சொல்லியிருக்கிறீர்களே. அவருக்கு ஆள் பிடிக்கத் தெரியாது என்று. வெறும் திறமையை வைத்துக்கொண்டு வீட்டுக்குள் இருந்து என்ன பயன்?. இருக்கும் சரக்கை கடைவிரிக்கத் தெரிந்த விஸ்வநாதன் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்திருப்பார். ஜி.இராமநாதன் கர்னாடக இசையில்தான் புலி. மெல்லிசையில் அவர் ஒரு பூனையே. எனவே அவரை சமாளிப்பது எம்.எஸ்.வி.க்கு பெரிய சவாலாக இருந்திருக்காது.
vasudevan31355
5th July 2014, 04:20 PM
இன்றைய ஸ்பெஷல் (22)
இன்று ஒரு அரிதான பாடல்.
'சூதாட்டம்' 1971-ல் வந்த படம்..
ஜெய்சங்கர், முத்துராமன், கே.ஆர்.விஜயா, சிவக்குமார், நிர்மலா நடித்திருந்தனர்.
மதுரை திருமாறன் இயக்கிய படம் இது என்று நினைவு.
https://i1.ytimg.com/vi/SkP5y65ZEJw/mqdefault.jpg
சுசீலா சூதாட்டத்தில் பாடிய 'விளக்கேற்றி வைக்கிறேன்' பாடல் வீட்டுக்கு வீடு ஒலித்தது. சாதரண ஹிட்டல்ல. பேய் ஹிட்.
இந்தப் படத்தில் அருமையான இளமை பொங்கும் ஒரு டூயட். சிவக்குமாரும், நிர்மலாவும் அவ்வளவு கியூட்டாக இருப்பார்கள் made for each other போலே. செமை ஜோடிப் பொருத்தம். இருவரும் கண்பட்டுவிடும் அழகு. ஒளிப்பதிவும் பளிச்.
பாலாவும், ராட்சஸியும் பாடிய இன்னொரு உற்சாகத் துள்ளல் பாடல்.
அந்தக் கொஞ்சல்களும், கெஞ்சல்களும் காதுகளை விட்டு அகலாதவை.
இந்த இருவரும் இணைந்த இன்னொரு அதகள நிகழ்வு.
இன்றுமுதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்
ஒன்று முதல் நூறு வரை
நல்ல கதை நான் படிப்பேன்
இன்றுமுதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்
ஒன்று முதல் நூறு வரை
நல்ல கதை நான் படிப்பேன்
தொட்டுத் துடிக்க
நான் கட்டிப் பிடிக்க
உன் நெஞ்சில் விழுந்தேன்
கொட்டிக் குவிக்க
கொட்டிக் குவிக்க
தட்டிப் பறிக்க
இன்றுமுதல்
நாளை வரை
என் மடியில்
நீ இருந்தால்
ஒன்று முதல்
நூறுவரை
நல்ல கதை
நான் படிப்பேன்
(ஷெனாய் குதூகலம். அடடா! என் செல்போனின் ரிங்க் டோனாக இருந்தது.)
தேனோட்டம் இதழ்களிலே மின்ன
பூவாட்டம் கைகளிலே பின்ன
தென்னை வண்ண மேனி தாலாட்ட
தேனோட்டம் இதழ்களிலே மின்ன
பூவாட்டம் கைகளிலே பின்ன
தென்னை வண்ண மேனி தாலாட்ட
சுவை தோன்றுமா பசி தீருமா
அந்த சொர்க்கம் எங்கே கொண்டு செல்லம்மா (பாலா கொஞ்சல் கெஞ்சல்)
தேரோட்டம் கால்களிலே கண்டு
நூலாட்டம் இடையினிலே நின்று
கன்னம் கொஞ்சம் நேரம் கனியானால்
சுவை தோன்றலாம் பசி தீரலாம் (ராட்சஸி 'லா' க்களில் பட்டை உரிப்பார் )
அந்த சொர்க்கம் என்னவென்று சொல்லலாம்
இன்றுமுதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்
ஒன்று முதல் நூறுவரை
நல்ல கதை நான் படிப்பேன்
லாஹஹாஹா லாஹஹாஹா லாஹஹாஹா லாஹஹாஹாஹா
பூச்சூடும் கூந்தலினால் மஞ்சம்
போடாதோ காதலியின் நெஞ்சம்
தொட்டில் என்று எண்ணி எண்ணி நீயாட
பூச்சூடும் கூந்தலினால் மஞ்சம்
போடாதோ காதலியின் நெஞ்சம்
தொட்டில் என்று எண்ணி எண்ணி நீயாட
மலர் வாடையோ
சிறு போதையோ (போதை சொல்லும் போது நிஜமாகவே ஒபோதை ஏறும்)
இந்த மங்கை சொல்லும்
இன்பம் ஒன்றல்ல
நீரோடும் நதியினிலே வெள்ளம்
ஏதேதோ எண்ணுதடி உள்ளம்
மஞ்சள் வெயில் மாலை மணக்கோலம்
நான் உன்னிடம் நீ என்னிடம்
நீ சொல்லச் சொல்லக் கேட்பேன் சொல்லலாம்.
தொட்டுத் துடிக்க
நான் கட்டிப் பிடிக்க
உன் நெஞ்சில் விழுந்தேன்
கொட்டிக் குவிக்க
கொட்டிக் குவிக்க
தட்டிப் பறிக்க
இன்றுமுதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்
ஒன்று முதல் நூறுவரை
நல்ல கதை நான் படிப்பேன்
லாஹஹாஹா லாஹஹாஹா லாஹஹாஹா லாஹஹாஹாஹா
http://www.youtube.com/watch?v=VY6x5hK4iro&feature=player_detailpage
mr_karthik
5th July 2014, 04:52 PM
டியர் வாசு சார்,
சூதாட்டம் மதுரை திருமாறன் இயக்கிய படம்தான். எம்.எஸ்.காசியின் தயாரிப்பு. 1971-ல் சக்கைபோடு போட்ட படங்களில் ஒன்று. வெலிங்டனில் 100 நாட்களுக்கு மேல் ஓடியதாக நினைவு. பேனர்களெல்லாம் வெளுத்துப்போய் நார் நாராக கிழிந்து தொங்கியபோதும் அந்த தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தது நினைவிருக்கிறது.
சூதாட்டத்தை தொடர்ந்து திருமாறன் வாயாடி, திருடி, மேயர் மீனாட்சி, சொந்தங்கள் வாழ்க என்று பல படங்கள் இயக்கினார்.
'விளக்கேற்றி வைக்கிறேன்' பாடல் அந்த ஆண்டின் (1971) விவிதபாரதியின் சூப்பர் டூப்பர் ஹிட்களில் ஒன்று.
மற்ற ஹிட்கள்....
நீயில்லாத இடமே இல்லை அல்லா அல்லா
ஆலயமாகும் மங்கை மனது
பொட்டுவைத்த முகமோ
அழகிய தமிழ்மகள் இவள்
நான் உன்னை வாழ்த்திப்பாடுகிறேன்
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என
தேரு பார்க்க வந்திருக்கும் சித்திர பெண்ணே
வசந்தத்தில் ஓர் நாள்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
உத்தரவின்றி உள்ளே வா
தேனாற்றங்கரையினிலே
எங்கே அவள் என்றே மனம்
உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
கடலோரம் வாங்கிய காற்று
எதையும் தாங்குவேன் அன்புக்காக
Gopal.s
5th July 2014, 05:03 PM
டியர் கோபால் சார்,
'ஒரு நாளிலே உறவானதே' (தலைவரின் மிகச்சிறந்த டூயட்களில் ஒன்று)
மிக ரம்மியமான மேலோடி, குறிப்பாக ப்ளூட் மற்றும் சிதார் விளையாட்டு. இதைத்தொடர்ந்து வரும் சண்டைக்காட்சி சொதப்பல். தரையில் சண்டையிடுவதாக மட்டும் காட்டாமல் தண்ணீருக்குள்ளும் குதித்தது மேலும் சொதப்பல்.
.
'ஒரு நாளிலே உறவானதே' (தலைவரின் மிகச்சிறந்த டூயட்களில் ஒன்று):goodidea:
இதற்கு(சண்டைக்காட்சி ) பதிலாக இன்னொரு சரணம் சேர்த்து சிவாஜி-காஞ்சனாவை தண்ணீருக்குள் கொண்டு போயிருக்கலாம் ஸ்ரீதர்.
Gopal.s
5th July 2014, 05:17 PM
நீங்கள் சொல்வது உண்மைதான்.
1952-லிருந்தே இருவரும் தனித்து இயங்கியிருந்தால், ராமமூர்த்தி அப்பவே காணாமல் போயிருப்பார். காரணம் நீங்களே சொல்லியிருக்கிறீர்களே. அவருக்கு ஆள் பிடிக்கத் தெரியாது என்று. வெறும் திறமையை வைத்துக்கொண்டு வீட்டுக்குள் இருந்து என்ன பயன்?. இருக்கும் சரக்கை கடைவிரிக்கத் தெரிந்த விஸ்வநாதன் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்திருப்பார். ஜி.இராமநாதன் கர்னாடக இசையில்தான் புலி. மெல்லிசையில் அவர் ஒரு பூனையே. எனவே அவரை சமாளிப்பது எம்.எஸ்.வி.க்கு பெரிய சவாலாக இருந்திருக்காது.
தலைவரே,
உங்களிடம் என்னை மிக மிக கவர்ந்ததே இந்த naive innocence .
ராமமூர்த்தியிடம் சேராதிருந்தால் இசையாவது மண்ணாவது.M.S.V திறமையான ஆப்பிஸ் பணியாளராக இருந்திருப்பார்.என்னுடன் அறிமுகம் ஏற்பட்டிருந்தால்,அவருக்கு சினிமா கம்பனிகள் ஒழுங்காக பணம் தருவதில்லை என்று வேலைக்கு விண்ணப்பித்திருப்பார்.(நான் வேலைக்கு எடுத்திருப்பேனா என்பது வேறு விஷயம்).
நான் அவரை 0 என்று சொல்லவே இல்லை.(நீங்கள் எழுதிய படி)
அவரிடம்(M.S.V) கீழ்கண்ட சிறப்புகள் உண்டு.
நிர்வாக திறமை. P .R .Skills .
தனக்கு தெரிந்ததோ இல்லையோ ,சிறந்த நிர்வாகியாய் மற்றோரிடம் வேலை வாங்கும் திறமை.
என்ன tune violin இல் வாசித்தாலும் அப்படியே ஆர்மோனியம் வைத்து திருப்பி வாசித்து காட்டி எல்லோரையும் அசத்துவார்.
அவரின் நடிப்பு என்னை மிக மிக கவரும்.ஒரு அடக்கமான ஒன்னும் தெரியாத அப்பாவி போல மெகா டி.வீயில் தொடரும் நடிப்பு.(படிக்காத மேதையை விட சிறப்பு)
சர்வர் சுந்தரம் படத்தில் ஒரு mozard range இல் கை காலை ஆட்டி ஒரு இசை நடத்துனர் போல நடிக்கும் நடிப்பு superb .
gkrishna
5th July 2014, 05:24 PM
காலங்களில் அவள் வசந்தம் 1976
விஜயபாஸ்கர் films
பஞ்சு அருணாசலம் கதை வசனம்
sp முத்துராமன் இயக்கம்
விஜயபாஸ்கர் இசை
முத்துராமன் ஸ்ரீவித்யா மற்றும் சந்திரகலா நடித்து வெளிவந்த
கருப்பு வெள்ளை
ஸ்ரீவித்யா சந்திரகலா அக்கா தங்கை .தங்கைகாக அக்கா தன கணவனை தியாகம் செய்வது . ஸ்ரீவித்யா ஒரு ஹிஸ்டீரியா நோயாளி ஆக வருவார்.
இதே கதை 1986 கண்மணியே பேசு னு சிவகுமார் லக்ஷ்மி அம்பிகா நடித்து வெளி வந்த நினவு
(எல்லாத்துக்கும் மூலம் சசி கபூர் , ராக்கி, ரேகா நடித்து வெளிவந்த ஹிந்தி படம் basera )
விஜய பாஸ்கர்க்கு வாணி குரலில் சில நல்ல பாடல்களை கொடுத்து உள்ளார்
பாலா வாணி குரல்களில் மிக மென்மையான டூயட்
திருமணத்திற்கு முன்னேயே எல்லாம் செய்யனும்னு ஹீரோ
ஹீரோயின் அதல்லாம் கிடையாது எல்லாம் கல்யாணத்திற்கு பின் தான்
பாலா : முதல் முதல் வரும் சுகம் எதுவென இளமை கேட்கிறது
வாணி: முதல் இரவினில் வரும் சுகமென இதழ்கள் சொல்கிறது
பாலா : உன்னை நானும் என்னை நீயும் உணர்ந்த பின்னாலே
உன்னை தொட்டு ஆடி மகிழ தடைகள் சொல்லாதே
வாணி :மனதில் மனது சேர்ந்த போதும் மாலை வேண்டாமா
மாலை ஒன்று போட்ட பின்னால் மடியில் விழலாமே
பாலா :பருவகாலத்தின் புதிய கனவுகள் காத்து கிடப்பதில்
என்ன லா பம்
வாணி : இந்த அழகும் பருவ சுகமும் நிலைத்து நிற்காது
நெஞ்சில் வளரும் உண்மை அன்பு என்றும் மாறாது
பாலா: அந்த உண்மை அறியும் உள்ளம் எனக்கு கிடையாதா ?
அதுவும் வேண்டும் , இதுவும் வேண்டும் , உனக்கு தெரியாத ?
வாணி: அதுவும் புரியுது இதுவும் தெரியிது
காலம் கனியட்டும் அள்ளி தருவேன் !
அது இது எது சார்
http://www.youtube.com/watch?v=Qw4hXgKS2Z0
இன்னொரு பாட்டு வாணிக்கு
"மனமகளே உன் மணவறை கோலம்
நாளை வருகின்றது
மாலை விழுகின்றது
கன்னி கழிகின்றது "
ஷெனாய் நாதஸ்வரம் இரண்டும் சேர்ந்து வாணியின் ஸ்வரங்களுடன் இணைந்து வரும்
http://www.youtube.com/watch?v=tl0b4gS9t8U
இதே மாதிரி இன்னொரு பாட்டு வாணி குரலில்
"அன்பெனும் சுடரால் எரிகின்ற விளக்கு
அதனால் எரிந்தது இன்னொரு விளக்கு "
prelude flute,இணை இசை flute ,வீணை ரொம்ப இனிமை
https://www.youtube.com/watch?v=gnYemG-rDqA
மீண்டும் வாணி "பாடு வண்டே பார்த்ததுண்டா "
http://www.youtube.com/watch?v=PJ5EpyO8daQ
எல்லா பாடல்களும் இனிமை
Gopal.s
5th July 2014, 05:49 PM
ஹமீர் கல்யாணி.
ஒரு நல்ல பாதாம் அல்வாவை காலை டிபனில் ஒரு பிடி பிடித்து, வீட்டிற்கு வந்தது ,மனைவி பலா சுளையை சுத்த கொம்புதேனில் முக்கி (சபதம் பகவதி ஞாபகம் வருகிறதா)கொடுத்ததை திரும்ப ஒரு வெட்டு வெட்டினால் நாக்கில் எத்தனை இனிமை?அதை போல பாடும் போதே நாக்கில் இனிமை ஊற வைக்கும் ராகம்,மனதிலும் அதே இனிமையை கொடுக்கும்.
இது கல்யாணியின் ஜன்ய ராகம்,இந்துஸ்தானியில் கல்யாண் என்ற வகையில் வைக்க படும்.பெரும் பாலும் சுத்த ஸ்வரங்கள்.மேற்கத்திய இசையில் இது பிரபலம்.(lydia mode )என்று.
மன்னனோ ,தம்பிகளுடன் போராடி மண்ணை கவர்வதிலும்,மாமாவுடன் சதி வேலையில் ஈடு படுவதிலும் பிசி ஆக உள்ளவன்.என்னை போல ஒரு நல்ல உள்ளம் கொண்ட பராக்ரமசாலியை நண்பனாக்கி ,சிற்றரசனாக்கி ,அந்தபுரத்திற்கும் அழைத்து வருகிறான்.ராணி தோழியரிடம் ஆள் சரியில்லை என்று ஆண்மையை குறை சொல்லி புலம்பி கொண்டிருக்கிறாள்.(அசோகன் ). இன்றும் சுசிலா குரலில் தேனாக இனிக்கும் ராமமுர்த்தி(விஸ்வநாதன்) இசையில் வந்த அந்த பாடல்."என்னுயிர் தோழி கேளடி சேதி".
இரட்டையர் பிரிந்ததும் ,இரட்டையர் இசை ஒற்றை பெயரில் வந்த நல்ல பாடல்களை (அது மட்டுமே)கொண்ட படம். தினத்தந்தி ஆதித்தனாரை இந்த நாயகனுக்கு எதிர் நிலை எடுக்க வைத்தது.அருமையான இரண்டு டூயட்,ஒரு நகைசுவை பாடல் கொண்ட படம்."சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ "
மிக மிக எதிர்பார்ப்புள்ளான ஒரு படம். ஒரு வெற்றி பட நடன நாயகன் ,ஒரு சின்னத்தம்பி இயக்குனர் சேர்ந்து லண்டன் நகரத்தில் உருவான love Birds .படு ஊத்தல். ஆனாலும் இந்த பாடலின் சுகமும்,படமாக்கமும் அருமை. 90 இறுதிகளின் என்னை மிக மிக ஆட்கொண்ட பாடல்களில் ஒன்று. "மலர்களே மலர்களே இது என்ன கனவா"
என்னை கவர்ந்த மற்றவை.
வெள்ளை கமலத்திலே- கௌரி கல்யாணம்.
உன் பார்வையில் ஓராயிரம்-அம்மன் கோவில் கிழக்காலே.
காதல் ஓவியம் கண்டேன் கனவோ -கவிக்குயில்.
Gopal.s
5th July 2014, 05:53 PM
manamagale is an unique composition.
vasudevan31355
5th July 2014, 06:12 PM
டியர் கார்த்திக் சார்,
சூதாட்டம் தகவல்களுக்கு நன்றி! இன்ட்ரெஸ்ட் ஆக இருந்தது.
மற்ற ஹிட்கள் லிஸ்டும் ஜோராக இருந்தது. எவ்வளவு அருமையான பாடல்கள்!
Gopal.s
5th July 2014, 06:16 PM
Superb list karthik sir. My top five (1971)pottu vaiththa ,thoduvathenna,naam oruvaraiyiruvar,naan unnai vaazhththi,malar ethu.
vasudevan31355
5th July 2014, 06:37 PM
கிருஷ்ணா சார்,
விஜயபாஸ்கரின் காலங்களில் அவள் வசந்தம் பாடல்களைத் தந்ததற்கு மிக்க நன்றி!
vasudevan31355
5th July 2014, 06:56 PM
ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு
அந்தக் காலத்தில் கண்ணனும்
ராத்திரி நடந்தத நெனச்சாக்க
இது நீரோடு செல்கின்ற ஓடம்
முள்ளில்லா ரோஜா
ஒ மைனா
நித்தம் நித்தம் ஒரு
கண்ணன் எந்தன் காதலன்
ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்
பாடினாள் ஒரு பாட்டு
நேத்துப் பறிச்ச ரோஜா
தேன் சொட்ட சொட்ட துடிக்கும்
பேசு மனமே பேசு
ஒரு மல்லிகை மொட்டு
தங்கத் தொட்டில் பட்டு மெத்தை
ஆடுகின்ற கைகளுக்கு ராசி என்ன ராசியோ
ஓராயிரம் நாடகம் ஆடினாள்
அன்பு வந்தது என்னை ஆள வந்தது
சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு
வானிலே மண்ணிலே
அனங்கன் அங்கஜன் அன்பன்
தாலாட்டுப் பாடி
ஆட்டத்தை ஆடு
ஆனிப்பொன் தேர்கொண்டு
நாளை நாம் ஒரு ராஜாங்கம்
mr_karthik
5th July 2014, 07:01 PM
இன்றும் சுசிலா குரலில் தேனாக இனிக்கும் ராமமுர்த்தி(விஸ்வநாதன்) இசையில் வந்த அந்த பாடல்[SIZE=4][B]."என்னுயிர் தோழி கேளடி சேதி".
டியர் கோபால் சார், பிராக்கெட் எல்லாம் போட்டு சிரமப்பட வேண்டாம். சும்மா ராமமூர்த்தி என்று மட்டுமே போடுங்கள். உலகத்துக்கு உண்மை தெரியும்.
இரட்டையர் பிரிந்ததும் ,இரட்டையர் இசை ஒற்றை பெயரில் வந்த நல்ல பாடல்களை (அது மட்டுமே)கொண்ட படம். தினத்தந்தி ஆதித்தனாரை இந்த நாயகனுக்கு எதிர் நிலை எடுக்க வைத்தது.அருமையான இரண்டு டூயட்,ஒரு நகைசுவை பாடல் கொண்ட படம் "சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ"
நடிகர் ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்கலாம். டைரக்டர் ஒரே நேரத்தில் பல படங்களை டைரக்ட் செய்யலாம். ஆனால் தயாரிப்பாளர் ஒன்று முடித்து விட்டுத்தான் அடுத்ததை தொடங்குவார். (ஏ.வி.எம். போன்ற வெகு சிலரைத்தவிர). ஆக வேலுமணியின் முந்தைய படம் 'கலங்கரை விளக்கமே' எம்.எஸ்.வி. பெயரில்தான் வந்தது. சரி அதுவாவது இருவரும் சேர்ந்திருக்கும்போது, விஸ்வநாதன் சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, ராமமூர்த்தி மட்டும் ட்யூன் போட்டது என்று ஒப்புக்கொள்ளலாம்.
ஆனால் 'கலங்கரை விளக்கம்' ரிலீசாகி பல நாட்கள் கழித்து துவங்கப்பட்ட 'சந்திரோதயம்' படத்திலுமா ராமமூர்த்தி கைங்கர்யம்?. என்னவோ கேப்பையில் நெய் வடிகிறது என்கிறீர்கள். நம்பணுமா??.
mr_karthik
5th July 2014, 07:15 PM
Superb list karthik sir. My top five (1971)pottu vaiththa ,thoduvathenna,naam oruvaraiyiruvar,naan unnai vaazhththi,malar ethu.
இது என்னுடைய பேவரைட் லிஸ்ட் அல்ல.
அந்த வருடத்தில் 'விவித்பாரதி' யில் அதிகம் ஒலிபரப்பான பாடல்கள்.
umaramesh
5th July 2014, 11:04 PM
posting removed.
rajeshkrv
6th July 2014, 12:05 AM
நீங்கள் சொல்வது உண்மைதான்.
1952-லிருந்தே இருவரும் தனித்து இயங்கியிருந்தால், ராமமூர்த்தி அப்பவே காணாமல் போயிருப்பார். காரணம் நீங்களே சொல்லியிருக்கிறீர்களே. அவருக்கு ஆள் பிடிக்கத் தெரியாது என்று. வெறும் திறமையை வைத்துக்கொண்டு வீட்டுக்குள் இருந்து என்ன பயன்?. இருக்கும் சரக்கை கடைவிரிக்கத் தெரிந்த விஸ்வநாதன் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்திருப்பார். ஜி.இராமநாதன் கர்னாடக இசையில்தான் புலி. மெல்லிசையில் அவர் ஒரு பூனையே. எனவே அவரை சமாளிப்பது எம்.எஸ்.வி.க்கு பெரிய சவாலாக இருந்திருக்காது.
it would be best not to talk ill about the deceased .. TKR was a great musician and MSV himself has said this several times..
rajeshkrv
6th July 2014, 12:08 AM
மாடர்ன் தியேட்டர்ஸ்
சுந்தரம் இயக்கம்
ஷ்யாம் பிலிப்ஸ் இசை (இவர் என்ன ஆனார் )
நெல்லையில் கொக்கிரகுளம் என்ற சிறிய ஊரில் லோகாம்பாள் சுப்ரமணிய அயர் புத்திரனாக பிறந்த சுப்ரமணியம் ஷங்கர் அலைஸ் ஜெய்ஷங்கர் ,
குமாரி ருக்மணியின் புத்திரியும், சாந்த மீனா என்ற ஐஸ்வர்யாவின் தாயாரும் ஆன லக்ஷ்மி இணை
லக்ஷ்மியோட தோப்பனார் பெயர் தெரியவில்லை
பாலாவின் இளைய இனிய குரல் வசந்தாவின் துணை ஹம்மிங் குரல்
"நேற்று வரை விண்ணில் இருந்தாளோ
இன்று எந்தன் கண்ணில் விழுநதா ளோ
அவள் முகம் "
பாட்டு நடுவில் வரும் பாலாவின் பேச்சு குரல் ஐயோ சம்திங் marvellous
பாலா மனோரமா குரல்களில்
"பூந்தமல்லியெலெ ஒரு பொண்ணு பின்னாலே நான் போய் வந்தேண்டி
அவ புடவை நல்ல இல்லை "
http://www.youtube.com/watch?v=NF_MNHdk82Y
shyam philis is a duo (shyam & philips)
shyam being a music director himslef while philips was a great musician under MSV
Gopal.s
6th July 2014, 05:06 AM
Thanks Ramesh(UmaRamesh)/Rajesh for visiting our thread. As decided by us(Karthik & I )I am not pondering on it anymore and stopping here so that we can continue with our normal discussions.
Gopal.s
6th July 2014, 05:08 AM
shyam philis is a duo (shyam & philips)
shyam being a music director himslef while philips was a great musician under MSV
Yes.They were assistants. After this Shyam has done some Films alone.
Gopal.s
6th July 2014, 05:11 AM
Birth name Samuel Joseph
Also known as Shyam
Origin Mylapore, Tamil Nadu, India
Genres Film score
Occupations Music Director
Instruments Harmonium, Violin
Years active 1963–1992
Samuel Joseph alias Shyam is a popular Malayalam music composer from Tamil Nadu, India. He has scored music for over 300 films including Telugu, Kannada, Tamil and Hindi languages. He also composed many Christian devotional songs. He is best known for the background scores for Malayalam thriller films of eighties and early nineties.
Apart from his music scores in movies, his theme musics are still considered as the finest example of scores ever composed in Malayalam cinema. His theme music of Oru CBI Diary Kurippu, August 1, Moonamura, Irupatham Noottandu are popular even today. He is famous for creating fast number along with slow melodies. He won the Kerala State award for the best music composer for the years 1983 (Film: Aroodam) and 1984 (Film: Kanamarayathu).
Gopal.s
6th July 2014, 06:22 AM
ஷ்யாமின் மிக சிறந்த பாடல்கள் நேற்று வரை ,பூந்தமல்லி யிலே (கருந்தேள் கண்ணாயிரம்),உள்ளத்தில் போராடும் எண்ணங்கள்
(உணர்ச்சிகள்),பூவே வா வா நிலவு நனையும் நேரம் (வா இந்த பக்கம்),ஆனந்த ராகம்(வா இந்த பக்கம்),பாஞ்சாலி இவளா (புல்லாங்குழல் அடுப்பூதுகிறது), பட்டு பொண்ணு இவ தொட்டுபுட்டா கட்டு மரங்களும் பூ பூக்கும் (என்ன படம்?),மழை தருமோ என் மேகம்,பொன்னே பூமியடி ஆ சரி சரி சரி சரி (மனிதரில் இத்தனை நிறங்களா).
vasudevan31355
6th July 2014, 08:19 AM
ஷ்யாமின் மிக சிறந்த பாடல்கள் உள்ளத்தில் போராடும் எண்ணங்கள்
(உணர்ச்சிகள்).
அது உள்ளத்தில் அல்ல. 'நெஞ்சத்தில்'
vasudevan31355
6th July 2014, 08:28 AM
இன்றைய ஸ்பெஷல் (23)
http://www.inbaminge.com/t/t/Thirumagal/folder.jpg
'திருமகள்' படத்தில் ஒரு அழகான பாடல். ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் 'திரை இசைத் திலகம்' கே.வி.மகாதேவன் இசையில் மலர்ந்த மொ(மெ)ட்டு.
ஜெமினி, ஏ.வி.எம்.ராஜன். சிவக்குமார், பத்மினி, லஷ்மி நடித்த இத்திரைப்படம் தனக்கு நிச்சயமான காதலன் (உறவுமுறைதான்) தற்செயலாக விபத்தில் இறந்துவிட, அவன் தயவில் படித்து வரும் இளைஞன் ஒருவனிடம் தன்வசப்பட்டு கற்பைப் பறி கொடுப்பதால் ஏற்படும் சிக்கல்களைப் படம் பிடித்தது.
லஷ்மி அவர் காதலன் ஏ.வி.எம்.ராஜன் இருவரும் ராஜனின் தயவில் படிக்கும் இளைஞனான சிவக்குமாருடன் பிக்னிக் போவது போன்ற காட்சி.
அப்போது மூவரும் பாடும் பாடல் காட்சி.
http://i1.ytimg.com/vi/E85hQ10aDGU/hqdefault.jpg
உள்ளங்களையும், உள்ளங்களால் ஏற்படும் உறவுகளையும் அழகாகச் சித்தரிக்கும் பாடல்.
படத்தில் ராஜன் இறந்துவிட சிவக்குமாரிடம் லஷ்மி தன்னை இழப்பது போன்ற காட்சி உண்டு. இதைக் கவிஞர் படத்தின் முன்பாதியில் வரும் இந்தப் பாட்டிலேயே நாசூக்காக எடுத்துரைத்து விடுவார்.
கிழக்கே ஓடும்நதி
தெற்கேயும் பாயலாம்
கிளி உண்ணக் கனிந்த கனி
அணிலுக்கும் போகலாம்
என்ற வரிகளின் மூலமாக.
அருமையான கிடார் இசையுடன் தொடங்கும் இப்பாடலை சுசீலா தன் இனிய குயில் குரலால் தொடங்க, 'பாடகர் திலகம்' பின்னாலேயே வர,
இவர்கள் இவருக்குப் பின்னால் வந்து நம் 'பச்சிளம் பாலகன்' பாலா மழலையை விட அழகான குரல் தந்து அசத்த,
நமக்குக் கிடைத்ததோ என்றும் திகட்டாத விருந்து.
பாடல்கள் பலவிதம். இந்தப் பாடல் ஒரு தனிரகம்.
உள்ளங்கள் பலவிதம்
எண்ணங்கள் ஆயிரம்
உறவுகள் வளர்வதற்கு
மனம்தானே காரணம்
உள்ளங்கள் பலவிதம்
மலையில் பிறந்த நதி
கடலுக்குப் போவதேன்
மண்ணில் பிறந்த மலர்
கூந்தலில் வாழ்வதேன்
மலையில் பிறந்த நதி
கடலுக்குப் போவதேன்
மண்ணில் பிறந்த மலர்
கூந்தலில் வாழ்வதேன்
எங்கோ பிறந்தவர்கள்
இங்கே இணைவதேன்
என்னவோ சொந்தமெல்லாம்
கண்ணிலே தெரிவதேன்
எங்கோ பிறந்தவர்கள்
இங்கே இணைவதேன்
என்னவோ சொந்தமெல்லாம்
கண்ணிலே தெரிவதேன்
உள்ளங்கள் பலவிதம்
எண்ணங்கள் ஆயிரம்
உறவுகள் வளர்வதற்கு
மனம்தானே காரணம்
உள்ளங்கள் பலவிதம்
கிழக்கே ஓடும்நதி
தெற்கேயும் பாயலாம்
கிளி உண்ணக் கனிந்த கனி
அணிலுக்கும் போகலாம்
நதிவழி போவது போல்
மனவழி போகலாம்
நடக்கும் வழிகளெல்லாம்
நல்வழி ஆகலாம்
நதிவழி போவது போல்
மனவழி போகலாம்
நடக்கும் வழிகளெல்லாம்
நல்வழி ஆகலாம்
உள்ளங்கள் பலவிதம்
எண்ணங்கள் ஆயிரம்
உறவுகள் வளர்வதற்கு
மனம்தானே காரணம்
மறைத்தால் மறைவதில்லை
மங்கையின் கனவுகளே
பிரித்தால் பிரிவதில்லை
வளர்ந்திடும் உறவுகளே
மறைத்தால் மறைவதில்லை
மங்கையின் கனவுகளே
பிரித்தால் பிரிவதில்லை
வளர்ந்திடும் உறவுகளே
அடித்தால் அழுவதில்லை
ஆனந்த நினைவுகளே
அன்பில் இணைந்தவர்கள்
வார்த்தையில் ஊமைகளே
அடித்தால் அழுவதில்லை
ஆனந்த நினைவுகளே
அன்பில் இணைந்தவர்கள்
வார்த்தையில் ஊமைகளே
உள்ளங்கள் பலவிதம்
எண்ணங்கள் ஆயிரம்
உறவுகள் வளர்வதற்கு
மனம்தானே காரணம்
உள்ளங்கள் பலவிதம்
அஹ்ஹோஹோஹோஹோஹஹோ
அஹ்ஹோஹோஹோஹோஹஹோ
https://www.youtube.com/watch?v=jwXcIeRFWDs
Gopal.s
6th July 2014, 08:32 AM
நினைத்தால் போதும் பாடுவேன்.
மெல்லிசை மன்னரின் சாதனை துளிகளில் முக்கியமானது நெஞ்சிருக்கும் வரை.இறுதி காட்சிக்கு முன்போ அல்லது இறுதி காட்சியிலேயோ பாடல் வைக்கும் தைரியம் ஸ்ரீதருக்குத்தான் உண்டு.அதுவும் சற்று சறுக்கினாலும் ,நகைப்புள்ளாக்கி விடும்.காதலிக்க நேரமில்லை நெஞ்சத்தை அள்ளி போல லகுவான படமல்ல. intense emotion with compelling climax scene .முதல் மேதைமை ஹம்சாநந்தி ராகத் தேர்ந்தெடுப்பு.டெம்போ கூட்ட கூடியது.அடுத்தது arrangement of multi -layered archestration with sharp transition counter -points .
அடுத்தது எனக்கு பிடித்த கீதாஞ்சலி. அருமையான நாட்டிய கவர்ச்சி பாவை.இந்த பாடலில் அவர் கொடுத்திருக்கும் fast movements ,துப்பாக்கியை மனதில் கொடுத்து விடும்.அவர் தன் Grace சற்று துறந்து பாடலின் டெம்போ வுடன் இணைவார்.(choreographer யார்?)சிவாஜி ஓடி வருவதில் ,இசையின் வேகத்திற்கேற்ப கட் பண்ணி ஸ்ரீதர் கொஞ்சம் fast motion கொடுத்திருக்கலாமோ என்று தோன்றும்.(அந்த கோப உக்கிரம் அந்த ஓட்டத்தில் register ஆகவில்லை ,விஸ்வநாதனின் இசை உக்கிரத்திற்கு தக்க).கண்ணதாசனை கேட்க வேண்டுமா?
பாலின் நிறம் போல உருவான பெண்மை
பனியில் விளையாடும் கனிவான மென்மை
எங்கும் பறந்தோடும் இளம் தென்றல் அல்ல
ஏக்கம் வரும் போது எல்லோர்க்கும் சொல்ல
இறுதியாக பாடகி.ஜானகியை விட்டு வேறு பாடகியை இந்த பாடலுக்கு நினைத்தே பார்க்க முடியாது.(இத்தனைக்கும் கிளாஸ் என்று பார்த்தால் சுசிலாவின் கண்ணன் வரும் தான்)இந்த situation க்கு ஏற்ற பரபரப்பு ,ஆரம்பமே உச்சம் தொடும்,பாவமுள்ள ஜீவனுள்ள பாடும் முறை.
எனக்கு இன்றும் கூச்செறிய செய்யும் பாடல்.ஸ்ரீதர் மட்டும் இன்னும் கொஞ்சம் திரைகதையை செதுக்கி இருந்தால் ,மெல்லிசை மன்னர் பட்ட பாட்டிற்கு நெஞ்சிருக்கும் வரை எங்கோ சென்றிருக்க
வேண்டிய படம். என்னவோ ...ஏதோ....ஒரு பீம்சிங்,பந்துலு,நாகராஜன் சிவாஜியுடன் கூட்டணி கண்டது போல ஸ்ரீதர்,பாலசந்தரால் காண முடியாதது அவர்களுக்கும் நமக்கும் துரதிர்ஷ்டமே.
https://www.youtube.com/watch?v=VL7cY_3Lj4g
Gopal.s
6th July 2014, 08:48 AM
ஒரு பாடல். அப்போது இரவு சென்னை வானொலியின் புதன் இரவு நேயர் விருப்பம்.(10.00 முதல் 11.00 என்று நினைவு).பெயரெல்லாம் சொல்லி பாடல் போடுவார்கள். அப்படி ஒரு ஜாலி பாடல் என்னை படம் பார்க்கவே தூண்டியது. படம் எனக்கு பிடித்தே இருந்தது. நாடோடியில் நல்ல பாடல்களை சொதப்பி இருந்த பந்துலு,இந்த படத்தில் ஜாலியாக கையாண்டிருந்தார்.ஒரு un -inhibited enthusiasm&energy என்பார்களே அப்படி ஒரு துள்ளல் சம்பத்த பட்டவர்களின் நடிப்பில். சரி விகித humour ,harmony with appropriate coordination ,grace எல்லா பாடல்களிலும் துள்ளும்.(இடமோ சுகமானது,வெற்றி மீது,சொர்க்கத்தை,தொட்டு காட்டவா )எனக்கு பிடித்த படம் என்பதாலோ என்னவோ தோல்வி கண்டு பந்துலுவை துவள வைத்து விட்டது.
இந்த பாடல் situation ,சம்பத்த பட்டவர்களின் நடிப்பு(ஜோதி லட்சுமி உட்பட) படு ஜாலியாய் வந்த மெல்லிசை மன்னரின்,டி.எம்.எஸ். -சுசிலா இணைவின் குறும்பு பாடல்.
https://www.youtube.com/watch?v=DD5m5EbyJQg
vasudevan31355
6th July 2014, 11:11 AM
ஒரு பாடல். அப்போது இரவு சென்னை வானொலியின் புதன் இரவு நேயர் விருப்பம்.(10.00 முதல் 11.00 என்று நினைவு).பெயரெல்லாம் சொல்லி பாடல் போடுவார்கள். அப்படி ஒரு ஜாலி பாடல் என்னை படம் பார்க்கவே தூண்டியது. படம் எனக்கு பிடித்தே இருந்தது. நாடோடியில் நல்ல பாடல்களை சொதப்பி இருந்த பந்துலு,இந்த படத்தில் ஜாலியாக கையாண்டிருந்தார்.ஒரு un -inhibited enthusiasm என்பார்களே அப்படி ஒரு துள்ளல் சம்பத்த பட்டவர்களின் நடிப்பில். சரி விகித humour ,harmony with appropriate coordination ,grace எல்லா பாடல்களிலும் துள்ளும்.(இடமோ சுகமானது,வெற்றி மீது,சொர்க்கத்தை,தொட்டு காட்டவா )எனக்கு பிடித்த படம் என்பதாலோ என்னவோ தோல்வி கண்டு பந்துலுவை துவள வைத்து விட்டது.
இந்த பாடல் situation ,சம்பத்த பட்டவர்களின் நடிப்பு(ஜோதி லட்சுமி உட்பட) படு ஜாலியாய் வந்த மெல்லிசை மன்னரின்,டி.எம்.எஸ். -சுசிலா இணைவின் குறும்பு பாடல்.
https://www.youtube.com/watch?v=DD5m5EbyJQg
http://www.eotazky.sk/files/pic/muz-obavy.jpg
RAGHAVENDRA
6th July 2014, 12:20 PM
மெல்லிசை மாமணி வி.குமார் இசையில் நவக்கிரகம் திரைப்படத்தில் ஏ.எல்.ராகவன் பாடி இடம் பெற்ற எல்லாமே வயத்துக்குத்தாண்டா பாடல் அர்த்தமுள்ளதாகவும் அதே சமயம் இனிமையானதாகவும் இருக்கும். இப்பாடலின் இடையில் சென்னை நகரின் தெருக்களில் நாகேஷ் பாடி ஆடும் காட்சிகளில் சென்னை அண்ணாசாலையில் பிளாசா தியேட்டர் முகப்பில் மாட்டுக்காரவேலன் திரைப்படத்தின் கட்அவுட்களும் அருகிலேயே நம் நாடு மற்றும் எதிர்காலம் பேனர்களும் இடம் பெற்றிருக்கும். இவை தெளிவாகத் தெரிவதைப் பாருங்கள்
http://youtu.be/BwxMXnuYprw
Gopal.s
6th July 2014, 01:11 PM
ரமேஷ்,
யாரிடம் விளயாடுகிறோம் என்று தெரியாமல் வார்த்தைகளை வீசியுள்ளீர்கள் .உங்கள் பதிவில் விஷயமும் இல்லை என்பதால் ,நான் பொருட்டாக பதில் சொல்லவில்லை.நானும் கார்த்திக் சாரும் உரையாடுவது பட்டி மன்றம் போன்றது. சார்பு எடுத்து பேசினாலும் ,இருவரும் எல்லை மீற மாட்டோம்.இருவருக்கும் நாங்கள் எழுதுவது எது நகைசுவை,எது மிகை,என்ன காரணம்,என்ன purpose என்று புரிந்தே தொடர்வோம். முதல் முறையாக ஒரு public figure பற்றி எந்த குடிமகன் போலவும் ,உரிமை எடுத்து எழுதியதற்கு,உரிய பதில் தராமல்,முன் பின் அறியாத ஒருவரை தர குறைவாக விமர்சித்துள்ளீர்கள்.
இலக்கியம்,இசை,சினிமா,காதல் மட்டுமல்ல .உலகில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளும் மிக மிக நன்றாக தெரியும். அவற்றை நான் உபயோக படுத்தினால்,உங்கள் குடும்பமே தாங்காது. அதனால்,அத்து மீறிய தனி நபர் தாக்குதல் கொண்ட வார்த்தைகளை ,நீங்களாக எடுத்து விடுவது உத்தமம்.இல்லையென்றால் கூடிய விரைவில் புரிய வைப்பேன். ராஜேஷ்,நீங்களும்,அவருடைய quote நீக்கி ,அவருக்கு உதவுங்கள்.
mr_karthik
6th July 2014, 01:28 PM
டியர் கோபால் சார்,
'நினைத்தால் போதும் பாடுவேன்' பாடலை நான் எழுதலாம் என்று எண்ணியிருக்கும்போது நீங்கள் எழுதி அசத்தி விட்டீர்கள். நல்லதுக்குத்தான். நான் எழுதியிருந்தால் நிச்சயம் உங்கள் அளவுக்கு எழுதியிருக்க முடியாது.
நெஞ்சிருக்கும்வரை பாடல்கள் அனைத்துமே அருமை. (ஸ்ரீதர் ஒரு பாட்டு ராசிக்காரர், அது ஏ.எம்.ராஜாவிலிருந்து இளையராஜா வரை நிரூபணம் ஆயிற்று. மன்னர்கள் அமைத்தபோதும், மன்னர் அமைத்தபோதும் இந்த ராசி தொடர்ந்தது. குப்பை நினைவெல்லாம் நித்யாவுக்கெல்லாம் என்ன மாதிரி பாடல்கள் அமைந்தன).
எல்லோரும் 'முத்துக்களோ கண்கள்', 'பூமுடிப்பாள்' பாடல்களை எதிர்நோக்கியிருக்க, நான் எப்போதும் ஆவலுடன் எதிர்பார்ப்பது 'கண்ணன் வரும் நேரமிது' மற்றும் 'நினைத்தால் போதும் பாடுவேன்' இரண்டையுமே. காரணம் இருளுக்குள் தள்ளப்பட்ட வைரங்கள் மீது எப்போதும் ஒரு அபிமானம், கரிசனம், ஈர்ப்பு. முதலிரண்டும் சோடையென்று சொல்லவில்லை. தேவைக்கதிகமாகவே புகழடைந்து விட்டன என்பதும் ஒரு காரணம். 'ஒரு ராஜா ராணியிடம்' பாடலைவிட 'ஒருநாளிலே' மீது நீங்களும் நானும் வைத்திருக்கும் பற்று போலவே.
நம்மைப்போலவே சாரதாவும் கூட. இருமலர்களின் மற்றெல்லா பாடல்களையும் விட 'அன்னமிட்ட கைகளுக்கு' பாடலின்மேல் பைத்தியமாக இருப்பார். இது அவரே திரிகளில் பலமுறை சொன்னது.
பாடலின் ஒவ்வொன்றையும் மிக துல்லியமாக கணித்துள்ளீர்கள் என்பதற்கு உதாரணம், நடிகர்திலகத்தின் ஓட்டத்தில் வேகமின்மையை சுட்டிக்காட்டியிருப்பது.
நடிகர்திலகத்தின் ரசிகர்கள் யாரிடம் திறமையிருந்தாலும் வஞ்சனையின்றி ரசிப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு, இப்படத்தில் நடிகர்திலகத்துக்கு மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் தியேட்டரில் விழுந்த கைதட்டல்கள். வி.கோபாலகிருஷ்ணனுக்கு அவர் இறக்கும்போது காட்டிய நடிப்புக்கு, மற்றும் கீதாஞ்சலிக்கு இந்தப்பாடலுக்காக. கைதட்டிய ஏராளமானோரில் அடியேனும் அடக்கம்.
கீதாஞ்சலிக்கு சரியான வாய்ப்புக்களை தமிழ்த்திரையுலகம் தரவில்லையென்பதில் உங்களைப்போலவே எனக்கும் ஆதங்கம் உண்டு. அதற்கு மருந்திடுவது போல அமைந்த பதிவுகள்தான் நண்பர் வாசு அவர்களின் 'என்னென்னவோ நான் நினைத்தேன்' பதிவும், இன்று தங்களின் 'நினைத்தால் போதும் பாடுவேன்' பதிவும். இப்பாடலைப் பார்க்கும்போது, இதை கலரில் எடுத்து கீது மஞ்சள் புடவையணிந்து ஆடியிருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்வதுண்டு.
இன்னும் இதுபோன்ற வைரங்களைக் கொண்டுவந்து கொட்டி எங்களை திக்குமுக்காட செய்யுங்கள்..... நன்றி...
mr_karthik
6th July 2014, 01:49 PM
டியர் வாசு சார்,
இன்றைய ஸ்பெஷலாக அதிகம் பேருக்குத் தெரியாத 'திருமகள்' பாடலைத் தந்து ஜமாய்த்துள்ளீர்கள். நானும் இப்படத்தை பாரகன் தியேட்டரில் பார்த்திருக்கிறேன். அதன்பின் இந்தப்பாடலைக் காணும் வாய்ப்பு கிட்டவில்லை. பாக்யராஜ் பாணியில் சொன்னால் கொஞ்சம் 'கசமுசா'வான கதைதான். ஆனால் விரசம் தெரியாமல் எடுத்திருந்தனர். வழக்கம்போல பத்மினியின் அலட்டல் கொஞ்சம் அதிகம். நீங்கள் எடுத்துக்கொண்ட பாடல் வழக்கம்போல ஒரு அபூர்வம்.
பாராட்டுக்கள்.
Gopal.s
6th July 2014, 02:33 PM
ஹரி காம்போதி.
"முல்லை நிலப் பெரும்பண்ணான, முல்லையாழ் - செம்பாலை, தற்காலம் அரிகாம்போதி என்று பெயர் பெற்றுள்ளது. தலைமைப் பாலையாக விளங்கும் சிறப்பைக் கொண்டுள்ளதால் இதற்கு "பாலை யாழ்” என்ற சிறப்புப் பெயரும் உண்டு.".
தொல்காப்பியம் ,மதுரை காஞ்சி,சிலப்பதிகாரம் என பழங்கால தமிழ் நூல்களில் ,நமது தமிழர்களின் நில பகுப்பு முறையில் பகுக்க பட்ட சங்கீதம்,பண் மற்றும் யாழ் என்று வழங்க படுகிறது. சுலபமாக சொன்னால் ,முல்லை பண் 5 ஸ்வரங்கள் கொண்ட மோகன ராகத்தை ஒத்தது.செம்பாலை பண் 7 ஸ்வரங்களுடன் ஹரி காம்போதி ஒத்தது.
ஹரி காம்போதி ஒரு மேளகர்த்தா சம்பூர்ண ராகமே.இது ஹிந்துஸ்தானி,மேற்கத்திய,மற்றும் நம் பாரம்பரிய இசையில் அங்கம் வகிப்பது.
நிறைய ஜன்ய உறவினர்கள்.மோகனம்,பஹுதாரி,கமாஸ்,காம்போதி,சஹான ா ,யதுகுல காம்போதி என்று.ஸ்வரங்களை சற்றே கிரக பேதம் செய்தால், கல்யாணி,சங்கராபரணம்,நட பைரவி,கரகரப்ரியா என்று மற்ற ராகங்களாய் விரியும்.
கிசு கிசு குரலில் உங்கள் அத்தை மகள் உங்களை விளித்து (நிறைய பேரின் நடுவே),ரகசிய காதல் சமிக்ஞை செய்தால் உங்கள் உள்ளம் கிடந்து ஆனந்தத்தால் துடித்து தள்ளாடுமே ,அந்த உணர்வு தரும் ராகம். நம் ஆதி சிந்தனையின் தேக்க விரிவாக,நம் மனதிற்கு உகந்தே நிற்கும் ராகம்.
ஐம்பதுகளில், மதராசி பிலிம்களை உதாசீனம் செய்த வடக்கிந்தியர்களை,நம்மை நோக்கி திரும்பி பார்க்க வைத்தவர்கள்,வாசனும்(சந்திரலேகா),சிவாஜியும் (நடிப்பில், வீரபாண்டிய கட்டபொம்மன் உலக விருது)ஆவர்.சிறிதே பத்மினியும்,வைஜயந்தியும் புண்ணியம் கட்டினர்.ஆனாலும் மெல்லிசைக்கு பெயராத நமது இசை அவர்களுக்கு பொருட்டாகவே இல்லை. ஒரே ஒரு படம் 1961 இல்,குறிப்பாக ஒரே ஒரு பாடல் ,அந்த பாடகி,இரட்டை இசை மேதைகளை நோக்கி நவுஷாத்,ரோஷன் முதல் லதா,ரபி வரை திரும்பி பார்த்து அதிசயிக்க வைத்தது.ஒரு தமிழ் இலக்கிய பாடலின் (கல்லைத்தான்,மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா)உந்துதலில் ,கண்ணதாசன் எழுதிய,வடக்கை நம் பக்கம் ஈர்த்து ,விஸ்வநாதன்-ராமமூர்த்தி இரட்டையர்களை இந்தியாவின் Best composers என்று எல்லோரையும் வியக்க வைத்து,இப்படி ஒரு பாடகியா என்று லதாவை அதிசயிக்க வைத்த உன்னதம் "அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்".
ஒரு உலக நடிகனின் உலக பட கனவு ,அவர் தயாரிப்பிலேயே நனவானது. தமிழில் அவர் தயாரித்த முதல் படம்.(வடக்கில் கொடி ஐம்பதுகளிலேயே பறக்க விட்டாயிற்று. amardeep மூலம்).பிரம்மாண்டம் நடிப்பில்,இயக்கத்தில்,படப் பிடிப்பில்,கதையமைப்பில்,தயாரிப்பில்.பிரமாண்டம ் என்பதால் ,முதல் காட்சியே பிரம்மாண்ட கப்பலில்,பிரம்மாண்ட மாலை பார்ட்டி.தான் கண்டு மையல் கொண்ட மங்கையை ,அந்த கனவான் பாட அழைக்கும் அந்த கண்ணியமிக்க ரசிக்கத்தக்க மீறல்,மங்கையின் கூச்ச மிகு ஆவல் எல்லாம் அப்படியே மிளிர்ந்த இரட்டையர்களின் சாதனை படங்களில் ஒன்றான
"உன்னை ஒன்று கேட்பேன்".(நடிகர்திலகம் பியானோ,trumpet வாசிக்கும் நேர்த்தி!!!)
அந்த பாடலாசிரியர் -இசையமைப்பாளர் பிரிவு ,இரட்டையர் பிரிவு அளவு அல்லோல கல்லோல பட்டது.நல்ல இணை.உன்னதம் தொட்ட பாடல்கள்.பாடலாசிரியர் மிக பாதிக்க பட்டு டப்பிங் படங்கள் எழுதினார் .அப்போது டி.வீயில் அவரெழுதி உடனே மெல்லிசை மன்னர் tune போட்ட ஒரு நிகழ்ச்சியில் இரு பாடல்கள் என்னை பளிச்சென்று கவர்ந்தது.(இசை பாடாவதி ரகம்தான்)ஒன்று சின்ன சின்ன ஆசைகள்.(இசையமைப்பாளர் அவர் குரலில் ஆசைஹள் என்று நீட்டுவார்).இன்னொற்று அழகு அழகு அழகு. 1992. தமிழ் நூற்றாண்டில்
நிம்மதியாக பகல் தூக்கம் போட்டு கொண்டிருந்த என்னை (வடை,பாயச சாப்பாடு),உலுக்கி எழுப்பிய என் சகோதரி(தற்போது சிங்கப்பூர் எழுத்தாளர்)இந்த பாட்டை கேளுடா ,யாரோ ரகுமான்னு புது பையன் போட்டதாம் என்று டி.வியின் புது பாடல் நிகழ்ச்சியில் கேட்க செய்ய உறைந்து போனேன். அந்த அழகான கவிதை,அந்த அபார இசையால் அதற்குரிய உன்னத இடத்தை அடைந்திருந்தது.அடுத்த கவிதை. அந்த பையனின் அடுத்த வருட படம் புதிய முகம் படத்தில் "அழகு அழகு அழகு கண்ணுக்கு மை அழகு" என்று அதற்குரிய அழகை பெற்றது.வைரமுத்து-ரகுமான் என்ற புது கவிதை கூட்டணி ,பழைய மரபுகளை உடைத்து ,இசைக்கு புது தங்க நாற்கர சாலை அமைத்தது.
ஹரி காம்போதியின் மற்ற பாடல்கள்.
ஒரே பாடல் உன்னை அழைக்கும்- எங்கிருந்தோ வந்தாள் .
அவள் ஒரு நவரச நாடகம்-உலகம் சுற்றும் வாலிபன்.
மாமன் ஒரு நாள் மல்லிகைபூ- ரோசாப் பூ ரவிக்கைகாரி
பழமுதிர் சோலை -வருடம்-16.
ஜன்ய ராகம் யதுகுல காம்போதி பாடல்கள்.
மலர்களை போல் தங்கை-பாச மலர்.
காசிக்கு போகும் சந்நியாசி-சந்திரோதயம்.
ஜன்ய ராகம் காம்போதி பாடல்கள்.
ஞான பழத்தை பிழிந்து- திருவிளையாடல்.
கல்வியா செல்வமா வீரமா-சரஸ்வதி சபதம்.
அறுபடை வீடு கொண்ட -கந்தன் கருணை.(ராக மாலிகை)
விழியே கதை எழுது- உரிமை குரல்.
Gopal.s
6th July 2014, 07:07 PM
அப்போது பாலன் பிக்சர்ஸ் பட நிறுவனம் பெரும்பாலும் (பெரிய நடிகரின் தாய் படத்தில் கையை சுட்டு கொண்டதாலோ என்னவோ)ஜெமினி,ஏ.வீ.எம்.ராஜன்,ரவிச்சந்திரன் ,இன்னும் சில வளரும் நடிகர்களை வைத்தே படங்கள் எடுத்து வந்தனர்.பெரும்பாலும் நாம் இருவர் முதல் எனது பிரிய நண்பர் மகேந்திரன் கதை. எஸ்.எம்.எஸ். இசையமைப்பு. அப்போது மோகன் பிக்சர்ஸ் ,சரவணா,பீ.எஸ்.வீ முதலியோர் இதே பார்முலா கையாண்டு கொண்டிருந்தனர்.
ரவி சந்திரன் முதன் முதலில் இரட்டை வேடமேற்று நடித்த பணக்கார பிள்ளை ,பெரும் வெற்றி கண்டு (நாம் இருவர்,பந்தயம்,சக்கரம் வரிசையில்)பணம் வாரி கொடுத்தது.இதில்தான் ரவி தி.மு.க வாக காட்டி கொண்டார்.(சிக்கினார்)இந்த படத்தில் பெரும்பாலும் நடிகர்திலகத்தின் sobre style நடிப்பை கையாண்டிருப்பார்.
ஒரு ஜோடி கலை செல்வி.மற்றொரு ஜோடி கவர்ச்சி புயல் ஜோதி.
ஜோதியை பெரிய இடத்து பெண் காலத்திலிருந்து தொடர்ந்து வருகிறேன். பூவும் போட்டும் படத்தில் ,எண்ணம் போல பாட்டில் பின்னழகில் சொக்கி ரேகையை அழித்து கொண்டிருக்கிறேன்.
அவரை நம் முகாமுக்குள் விட்டு,விஜயலலிதாவை தியாகம் பண்ணியிருக்கலாமோ என்று தோன்றும்.
இந்த படத்தின் இரண்டு பாடல்களும் சூப்பர் ஹிட் ராகம்.(மாணிக்க,பட்டம்) .அதில் இந்த ராட்சஷி -டி.எம்.எஸ் பாடும் இந்த பாடல் துள்ளல் குறும்பு. ஜோதியை துள்ள விட்டு ,ரவி நடிகர்திலகம் பாணியில் நடித்திருப்பார். (profile பார்க்க நிறைய சிவாஜி சாயல் )
பாடல் பார்த்து கேட்டு மகிழ (மச மச என்று இருக்கும்)
http://www.youtube.com/watch?v=Wk9Rzk5p3qU&feature=kp
Gopal.s
6th July 2014, 07:20 PM
Song: kikikiki kiLiyakkO
Film: Dharmaraja
Music: M.S.Viswanathan
Singers: S.P.Balasubramanyam, Vani Jairam
Lyrics: ?
Year: 1980
Dharmaraja starred Sivaji Ganesan and K.R.Vijaya. The film or parts of it may have been shot in Singapore. Today's pick is one of many beautiful songs in MSV-SPB-VJ combination, with a touch of fun added to it, and it was quite popular when it released.
This song substitutes a nEyar(bobgalee) viruppam.
http://raretfm.mayyam.com/stream/pow07/kikikiki.rm
mr_karthik
6th July 2014, 07:50 PM
// மற்றொரு ஜோடி கவர்ச்சி புயல் ஜோதி.
ஜோதியை பெரிய இடத்து பெண் காலத்திலிருந்து தொடர்ந்து வருகிறேன். பூவும் போட்டும் படத்தில் ,எண்ணம் போல பாட்டில் பின்னழகில் சொக்கி ரேகையை அழித்து கொண்டிருக்கிறேன்.
அவரை நம் முகாமுக்குள் விட்டு,விஜயலலிதாவை தியாகம் பண்ணியிருக்கலாமோ என்று தோன்றும்.//
கோபால் சார், என்னது?. விஜயலலிதாவை தியாகம் செய்வதாவது. 'கோட்டை மதில்மேலே', 'நினைத்தபடி கிடைத்ததடி', 'பொன்மகள் வந்தாள்' பாடல்களில் ஜோதிலட்சுமியை நினைத்துப்பார்க்கவே குமட்டுகிறது.
விஜி நம்ம படங்களில் இன்னும் அதிகமாக வரலையேன்னு நாங்களே வருத்தத்துடன் இருக்கிறோம். இதுல, இருக்கும் ஒன்றிரண்டையும் தியாகம் செய்யச்சொல்வது கொடுமை சார்.
ஜோதியும்தான் நம் படங்களான எதிரொலி, கலாட்டா கல்யாணம் படங்களில் வந்தாரே. ஒண்ணும் சொல்லிக்கொள்கிறாற்போல இல்லையே.
ரிக்ஷாக்காரனில் 'பம்பை உடுக்கை கொட்டி' பாடலில் பார்த்து பயந்து விட்டேன். ஆர்.எம்.வீரப்பன் 70 எம்.எம்.படமெடுக்கும்போது இதுகளை போட்டிருக்கலாமே என்று நினைத்தேன்.
நேற்றிரவு சாந்திநிலையத்தில் 'பெண்ணைப்பார்த்தும் ஏன் பேச்சு வரவில்லை' பாடலில், ஸ்லீவ்ஸ் அணியாத வெற்றுக்கால்களுடன் விஜயலலிதா... ஆகா... ஓஹோ....
Gopal.s
6th July 2014, 08:05 PM
யார் கண் பட்டதோ தெரியவில்லை. இப்போதான் எம்.எஸ்.வீ-டி.கே.ஆர் சூடு அடங்கி கைகுலுக்கினோம். இப்போ வீ.எல்-ஜோதி மோதலா?ம்ம்ம்...ஒரு கை பார்க்கலாம்.::-d:-d
Gopal.s
6th July 2014, 08:12 PM
சாந்தி நிலையத்தில் பெண்ணை பார்த்தும் ஏன் பேச்சு வரவில்லை,கண்கள் தேடுவது உள்ளம் நாடுவது இரண்டுமே அமர்க்களம் சார்.
umaramesh
6th July 2014, 08:42 PM
Gopal
Sorry if my comments hurt you. I have no intention of hurting you personally, but Pl understand you are writing about musician who contributed and survived decade and he has many followers. pl go through your posting and you can feel how bad you wrote about MSV. Anyway again I am sorry and you have every right to scold me if I hurt you but you have exceeded your limit saying you will scold families also. Otherwise I throughly enjoyed your righting which has more information on music and deep knowledge on happenings. I will not write again in this thread. Bye.
Regards
ramesh
umaramesh
6th July 2014, 09:24 PM
Dear moderator
Pl remove my posting which I replied to Gopal as he felt that my comments are hurting him.
Thanks
Regards
ramesh
Gopal.s
7th July 2014, 04:12 AM
Gopal
Sorry if my comments hurt you. I have no intention of hurting you personally, but Pl understand you are writing about musician who contributed and survived decade and he has many followers. pl go through your posting and you can feel how bad you wrote about MSV. Anyway again I am sorry and you have every right to scold me if I hurt you but you have exceeded your limit saying you will scold families also. Otherwise I throughly enjoyed your righting which has more information on music and deep knowledge on happenings. I will not write again in this thread. Bye.
Regards
ramesh
Ramesh,
I Appreciate your concern and participation. But I was objecting to your usage "I am not a fool like you", "Childish" ETC. I gave evidence of two co-workers to prove my point with sustantial evidence.. if you really observe my writings, There will be issue based aggression but there wont be personal abuses on unknown.(except known team ,we pull eachother in a friendly way).Many of my friends(more than 6) also expressed that what I wrote about T.K.Ramamoorthy is 100% correct but I should have done it without hurting M.S.V. I realised later that more I tried to establish T.K.R as the outstanding composer who met with great injustice by his friends (Trust me .I have musical knowledge.He is not just another Narasimhan.Otherwise he wouldnt have been the duo for 13 years.)it is turning against M.S.V whom I thought was scheming and political agaist this musical genius.
I have greater respect for M.S.V more than any of you. Though he didnt have formal music learning,cant discuss music fluently, he is a suyambu and has extraordinary sense of music and a Good composer. But the duo were the best composers in India from 1961-1965 in comparison with Greats like Naushad,SDB,RDB,Sankar-Jaikishan,O.P.nayyar,Madhan-Mohan,Roshan,Kalyanji-Anandji Etc.
Anycase, it was an unfortunate split and the greatest loss that music world ever met with.
Dont feel offended by my reprimand. Pl.Participate and voice your thoughts without usage of strong words against a stranger.
Gopal.s
7th July 2014, 04:47 AM
டியர் கோபால் சார்,
'
நம்மைப்போலவே சாரதாவும் கூட. இருமலர்களின் மற்றெல்லா பாடல்களையும் விட 'அன்னமிட்ட கைகளுக்கு' பாடலின்மேல் பைத்தியமாக இருப்பார். இது அவரே திரிகளில் பலமுறை சொன்னது.
என்னையும் இந்த பாடல் பைத்திய லிஸ்டில் சேருங்கள். சொன்னது நீதானா,மாலை பொழுதின்,ஒரு நாள் இரவு ,பாடல்களுக்கு ஈடாக ,அன்ன மிட்ட கைகளுக்கு பாட்டை கேட்கும் போதெல்லாம் , அறியாமல் கண்ணீர் வந்து விடும்.இரு மலர்களில் என் favourite இந்த platinum தான்.என் உயிரோடு கலந்து சிந்து பைரவி ராகம் கூட.(எழுதியிருக்கிறேனே?)
https://www.youtube.com/watch?v=K4KDQsYUYAA&feature=kp
Gopal.s
7th July 2014, 07:08 AM
//
அவரை நம் முகாமுக்குள் விட்டு,விஜயலலிதாவை தியாகம் பண்ணியிருக்கலாமோ என்று தோன்றும்.//
கோபால் சார், என்னது?. விஜயலலிதாவை தியாகம் செய்வதாவது. 'கோட்டை மதில்மேலே', 'நினைத்தபடி கிடைத்ததடி', 'பொன்மகள் வந்தாள்' பாடல்களில் ஜோதிலட்சுமியை நினைத்துப்பார்க்கவே குமட்டுகிறது.
விஜி நம்ம படங்களில் இன்னும் அதிகமாக வரலையேன்னு நாங்களே வருத்தத்துடன் இருக்கிறோம். இதுல, இருக்கும் ஒன்றிரண்டையும் தியாகம் செய்யச்சொல்வது கொடுமை சார்.
காத்திக் சார்,
ஜோதி லக்ஷ்மி-விஜயலலிதா இரு மாபெரும் "சக்திகளின் "பின்னால் அணிவகுத்து ,கொண்ட கொள்கைகளில் முரண் பட்டு நின்றாலும், உங்கள் தார்மீக கோபம்,கொள்கை பற்று என்னை புல்லரிக்க வைத்து, "எங்கள் இனமடா இவர்" என்று பெருமிதத்தோடு நெ(?)ஞ்சு நிமிர செய்கிறது. அந்த வலிகளை நிறைய சுமந்தவன் என்ற வகையில் உங்கள் உணர்வுகளை புரிந்து கொண்டாலும்,கொண்ட கொள்கை என் கைகளை கட்டி போட்டு விட்டது.
நானும் இப்படித்தான். பிரிட்டிஷ் காரர்களுக்கு இந்தியாவை திரும்ப கொடுப்பேனே தவிர ,டி.ஆர்.ராஜகுமாரி,ஹெலன்,பத்மினி பிரியதர்சினி,ஜோதிலட்சுமி,ஜெயகுமாரி,ஆலம் ,விஜயஸ்ரீ,சில்க்,ரீமா சென் இவர்களை அந்நிய சக்திகளிடம் விட்டு கொடுக்கவே மாட்டேன்.
gkrishna
7th July 2014, 09:30 AM
அனைவருக்கும் காலை வணக்கம் உரித்தாகுக
கோபால் சார் கார்த்திக் சார் கலந்து கட்டி திரியை
"ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல "
என்று பிளந்து கொண்டு இருக்கிறார்கள்
புராண கதையின் ஒரு அம்சமாக ராவணன் சிவபெருமானை
காம்போதி raagathirku அடிமை ஆக்கினார் என்று சொல்வார்கள் .படித்த நினவு . என்ன ஞானம் கோபால் சார் இன் அறிவு கூர்மை
ஒரு புறம் காம்போதி ராகத்தின் விளக்கம்
மறு புறம் காந்த கணஅழகி,செக்ஸ் queen விஜயலலித மறுபுறம் இடையின diamond queen ஜோதி ஆக்கபூர்வமான விவாதம்
'என்னவென்று சொல்வதம்மா'
ஒரு புறம் அறிவு மறுபுறம் ஆக்கம் எங்களுக்கெல்லாம் ஊக்கம்
revolver ரீட்ட என்று ஒரு படம் புரட்சி தாசன் வசனம் பாடல்கள்
சரஸ்வதி குமார் இயக்கம். டைட்டில் சரஸ்வதிகுமார் என்று தான் காண்பிகபடுகிறது. ஆனால் விளம்பரம் கே எஸ் ராமதாஸ் என்று
போடப்பட்டுள்ளது .
அந்த படத்தில் தான் மேற்கண்ட இரண்டு பட்டங்கள் அடைமொழியாக விஜயலலிதவுக்கும் ஜோதி லக்ஷ்மிக்கும் வழங்கப்பட்டது .
ஷ்யாம் பிலிப்ஸ் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி
வாசு சார் இன் திருமகள் சிறப்பு இன்பம்
சமீபத்தில் இந்த திரை படம் முரசு தொலை காட்சியில் காண்பிக்கபட்டதுமே வாசு சார் இந்த பாடலை பற்றி விவரிப்பார் என்று நினைத்தேன் . கணிப்பு தவறு இல்லை
https://www.google.co.in/search?q=revolver+reeta+tamil+movie&start=10&sa=N&espv=2&tbm=isch&imgil=YmHqUU2CIlnm6M%253A%253Bhttps%253A%252F%252F encrypted-tbn2.gstatic.com%252Fimages%253Fq%253Dtbn%253AANd9 GcS58TL8TTBJvBguY4qQm5XnNaXEkOyMztyR2K2rwkgs-z2Wl4Ee3g%253B279%253B402%253BqT3ZMa39lD1IzM%253Bh ttp%25253A%25252F%25252Fwww.youtube.com%25252Fwatc h%25253Fv%2525253DzOMqVzSqLBY&source=iu&usg=__hD1D3j77-jvW1E3VwNYmpLLz5ic%3D&ei=zhm6U5SFIpChugTH64DYCA&ved=0CCcQ9QEwATgK&biw=1280&bih=709#facrc=_&imgdii=_&imgrc=YmHqUU2CIlnm6M%253A%3BqT3ZMa39lD1IzM%3Bhttp% 253A%252F%252Fi1.ytimg.com%252Fvi%252FzOMqVzSqLBY% 252Fmovieposter.jpg%253Fv%253D52820c1c%3Bhttp%253A %252F%252Fwww.youtube.com%252Fwatch%253Fv%253DzOMq VzSqLBY%3B279%3B402
vasudevan31355
7th July 2014, 09:47 AM
இன்றைய ஸ்பெஷல் (23)
படம்: நிலவே நீ சாட்சி (எஸ்.பி.பிக்சர்ஸ் தயாரிப்பு)
http://www.inbaminge.com/t/n/Nilave%20Nee%20Satchi/folder.jpg
பாடல்: நீ நினைத்தால்
இசை: 'மெல்லிசை மன்னர்'
பாடல் இயற்றியது: கண்ணதாசன்
நடிகர்கள்: ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா
இயக்கம்: பி.மாதவன்
இன்று முழுக்க முழுக்க வித்தியாசமான ஒரு பாடல். நிச்சயமாக ஆணித்தரமாகக் கூறுகிறேன். என்னுடைய டாப் 10 பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அதிசயப் பாடல்
எப்போது கேட்டாலும் நான் மூக்கின் மேல் விரல் வைத்து வாழ்க்கையின் மொத்த சுகங்களையும் மூன்றே நிமிடங்களில் அனுபவித்த, அனுபவித்துக் கொண்டிருக்கும், அனுபவிக்கப் போகிற பாடல்.
என்னடா பீடிகை அதிகமாய் இருக்கிறது என்கிறீர்களா?
நீங்கள் கேட்டால் உண்மையிலே அசந்து போய் விடுவீர்கள்.
எப்போதோ கேட்ட ஞாபகம் இப்போது கேட்டவுடன் ஒரு சிலருக்கு வரலாம். இப்பாடலை நான் கேட்டிருக்கிறேனே என்றும் அலட்சியமாகச் சொல்லி விடலாம்.
அதையெல்லாம் மறந்து இப்போது கேளுங்கள். இந்தப் பாடல்களில் உள்ள சங்கதிகளை கவனியுங்கள். பாம்பாக இழையும் ஷெனாயின் இனிமையை அணு அணுவாக ரசியுங்கள். சில வினாடிகளே தூள் பரத்தும் டிரம்ஸ்களின் இடியோசையில் இணையுங்கள்.
வித்தியாச சிறப்புகளைப் பெற்ற தனித்துவம் நிறைந்த பாடல் இது.
முதல் வித்தியாசம். ஏன் அதுபற்றி ஒரு கேள்வியையே உங்கள் முன் வைக்கிறேனே!
கண்களை மூடிக் கொண்டு இப்பாடலைக் கேளுங்கள். இப்பாடலில் ஒலிக்கும் ஆண்குரல் யாரென்று கண்டு பிடியுங்கள். நான் இப்பாடலின் அலசலின் முடிவில் அந்த பின்னணிப் பாடகர் யார் என்று கூறுகிறேன்.
ஆனால் ஒரு கண்டிஷன். எந்த தேடலும் செய்யாமல் உடனே கண்டுபிடிக்க வேண்டும். ஆராயக் கூடாது. தெரிந்தவர்கள் விட்டு விடுங்கள்.அவர்களுக்கும் கூட இப்பாடலின் ஆண்குரல் யார் என்று கண்டு கொள்வது கடினமே.
இப்பாடலை என் நண்பர்களிடம் போட்டுக் காட்டி இக்கேள்வியை நான் அவர்களிடம் வைக்கும் போது அவர்கள் கண்டு பிடிக்க முடியாமல் தோல்வியைத்தான் தழுவினார்கள். இறுதியில் புதிர் விடுவிக்கப் பட்டவுடன் அவரா இவர் என்று அசந்து போனார்கள்.
சரி! பெண் பாடகி? இரண்டாவது வித்தியாசம் இல்லை இல்லை உலக அதிசயம்
அந்த மாயக்காரி, ஜாலக்காரி, மாய்மாலக்காரி, மந்திரக்காரி, வசியக்காரி, நம் உள்ளம் கொள்ளை கொண்ட என் ராட்சஸி தன் குரலின் அத்துணை தனித் தன்மைகளையும் காட்டிய ஒரு பாடல்.
குரலை சற்றே உள்ளடக்கி வாய்வழி மூச்சில் இந்தக் கிராதகி பாடும் போது நாடி நரம்பெல்லாம் நம்மையறியாமல் சிலிர்த்துப் போகிறது. ('காதோடுதான்' பாணியில்)
இப்படியெல்லாம் பாட இந்த உலகத்தில் இந்த க(பெ)ண்மணியைத் தவிர வேறு எவரும் உண்டா?
பாடலின் சிச்சுவேஷன் இதுதான். மாணவர் ஜெய்சங்கரிடம் டியூஷன் படிக்கும் கல்லூரி மாணவி (!) புன்னகை அரசி. டியூஷன் எடுக்கும் போது விஜயா மேல் ஜெய் காதலாகிவிட, விஜயாவிற்கும் அதே நிலைமை ஏற்பட இருவருமே சொல்லிக்கொள்ள முடியாத தவிப்பில் மௌனம் சாதிக்கிறார்கள்
ஒருசமயம் கல்லூரி முடிந்து இருவரும் லிப்ட்டில் வரும் போது லிப்ட் ரிப்பேராகி பாதியில் நின்று விடுகிறது. இந்த இருவர் மட்டுமே லிப்ட்டில்.
இரண்டு உள்ளங்களும் தவிக்கும் தவிப்பு பின்னணிப் பாடலாக நம் காதுகளைக் குளிரச் செய்கிறது.
(கார்திக் சார்!
சாரதா மேடம் தொடங்கிய மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் திரியில் நாளை 'நிலவே நீ சாட்சி' படத்தைப் பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன்).
சரி! இன்பத்திற்கு வருவோம்.
ஹாஹா லா ஹா ஹா ஹா
ஹாஹா லா ஹா ஹா ஹா
நீ நினைத்தால் இந்நேரத்திலே ஏதோதோ நடக்கும்
நானறிவேன் உன் ஆசையெல்லாம்
நீ கேட்டால்தான் கிடைக்கும்
ஓஹோஹோஹோ
(ஷெனாய் + பியானோ)
நீ நினைத்தால் இந்நேரத்திலே
ஏதோதோ நடக்கும்
நானறிவேன் உன் ஆசையெல்லாம்
நீ கேட்டால்தான் கிடைக்கும்
ஓஹோஹோஹோ
எண்ணங்கள் வெளியில் வந்தால்
என்னென்ன தருவாயோ
என் கண்கள் சொல்லும் தூது
என்னென்று அறிவாயோ
எண்ணங்கள் வெளியில் வந்தால்
என்னென்ன தருவாயோ
என் கண்கள் சொல்லும் தூது
என்னென்று அறிவாயோ
தேடிய தனிமையில்
ஆயிரம் புதுமையை
இங்கே பெறுவோமா
மூடிய கதவிது திறந்திடும் முன்னே
முழுதும் அறிவோமா
நீ நினைத்தால் இந்நேரத்திலே
ஏதோதோ நடக்கும்
நானறிவேன் உன் ஆசையெல்லாம்
நீ கேட்டால்தான் கிடைக்கும்
ஓஹோஹோஹோ
(இடையிசை பின்னல். இசை சற்றே நிறுத்தப்பட்டு அதம் பறக்கும் டிரம்ஸ் களேபரங்களை அனுபவியுங்கள்.)
கன்னங்கள் கனிகள் என்று
கை கொஞ்சம் தழுவாதோ
கை தொட்ட தேகம் கண்டு (எம்.எஸ்.வி.அமர்க்களம்)
பெண் வண்ணம் மலராதோ
கன்னங்கள் கனிகள் என்று
கை கொஞ்சம் தழுவாதோ
கை தொட்ட தேகம் கண்டு
பெண் வண்ணம் மலராதோ
ஆகட்டும் இதுவரை
போனது போகட்டும்
அடுத்ததை சொல்லுங்கள் (என்ன அழுத்தம் அந்த ள்'லில்)
ஆயிரம் சுகங்களை யாரிடம் கேட்பது
அருகினில் நில்லுங்கள்
நீ நினைத்தால் இந்நேரத்திலே ஏதோதோ நடக்கும்
நானறிவேன் உன் ஆசையெல்லாம்
நீ கேட்டால்தான் கிடைக்கும்
ஓஹோஹோஹோ
https://www.youtube.com/watch?v=IucAtl4RCL8
இப்போது சொல்கிறேன். அந்தப் பாடகர் வேறு யாருமல்ல. நம் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்தான். மனிதர் என்னமாய் குரலை மாற்றி ஈஸ்வரிக்கு இணையாக துவம்சம் செய்து விட்டார் பார்த்தீர்களா?
தேவையான ஏற்ற இறக்கங்களை அற்புதமாக அளித்து, குரலையும் வித்தியாசமாய்த் தந்து, அத்துடன் இசைக்கருவிகளின் குதூகலத்தையும் சேர்த்து தந்து, வரிகளில் ஈஸ்.... வரியை விளையாடவிட்டு இந்த மனிதர் எங்கேயோ போய் விட்டார்.
மன்னர் மன்னர்தான்.
இப்பாடலைப் பற்றி என் மனதில் உள்ளதை அப்படியே கொட்டித் தீர்த்து விட்டேன்.
மெகா ஹிட் அடைந்திருக்க வேண்டிய பாடல். வழக்கம் போல நம் ரசிகக் கண்மணிகளால் அந்த நிலையை அடையாமல் போய்விட்டது. அதற்காக வருத்தப்பட்ட காலமெல்லாம் மலையேறி விட்டது. கார்த்திக் சார், முரளி சார், கோபால் சார், கிருஷ்ணா சார், வினோத் சார், ராகவேந்திரன் சார் போன்ற ரசனை மிக்க உள்ளங்கள் அந்தக் குறையை அறவே போக்கி விட்டன.
அந்த ஒன்றே போதும்.
வாழ்க ராட்சஸி புகழ்.
gkrishna
7th July 2014, 09:48 AM
கோபால் சார்
ஜெயமாலினியை விட்டு விட்டேர்களே இது அடுக்குமா தர்மமா நியாயமா
நீதியா நேர்மையா
http://www.youtube.com/watch?v=SVn8mP9twHU
gkrishna
7th July 2014, 09:51 AM
வாசு சார்
இன்றைய சிறப்பு மெல்லிசை மன்னரின் மகுடத்தில் ஒரு வைர கல்
நிச்சயமாக உங்களை போலவே நானும் நிறைய நண்பர்களிடம் இந்த பாடல் பற்றி விவரித்து உள்ளேன்
மெல்லிசை மன்னரின் குரல் மாறுபட்ட குரல்
gkrishna
7th July 2014, 09:55 AM
மெல்லிசை மன்னர் என்று யாராலும் கண்டு பிடிக்க முடியாத குரல்
இந்த படமே ஒரு புதுமை தான் .முத்துராம் டாக்டர் ஆகா வருவார்
அவர் உடைய மனைவி கே ஆர் விஜய தான் ஜெய் சங்கர் இன் காதலி
ஜெய் சங்கரின் பைத்தியத்திற்கு வைத்தியம் செய்யும் டாக்டர் முத்துராமன்
வித்தியாசமான திரைகதை
gkrishna
7th July 2014, 10:09 AM
என்னோட mp 3 collection இல் 2 தடவை கேட்டாச்சு
நடுவில் லிப்ட் சவுண்ட் கேட்டிங்களா
gkrishna
7th July 2014, 10:13 AM
Tamil Nadu State Film Award for Best Director
1970 P. Madhavan Nilave Nee Satchi
vasudevan31355
7th July 2014, 10:15 AM
என்னோட mp 3 collection இல் 2 தடவை கேட்டாச்சு
நடுவில் லிப்ட் சவுண்ட் கேட்டிங்களா
குட் மார்னிங் கிருஷ்ணா சார்!
அப்பாடி! எவ்வளவோ நாள் கழிச்சி பாக்குற மாதிரி இருக்கே!
லிப்டை பாத்துகிட்டே கேட்டேன். என்னா சாங் சார்! அலுப்பேனா ங்குது. காலையில இருந்து பத்து தடவைக்கு மேல கேட்டாச்சு. பார்த்தாச்சு
vasudevan31355
7th July 2014, 10:16 AM
ரியல்லாவே நல்ல படம் சார். ஜெய் திரியில நாளைக்கு இது பத்தி முழுசா எழுதப் போறேன்.
vasudevan31355
7th July 2014, 10:18 AM
கிருஷ்ணா சார்,
கோழி இன்னும் கூவல. அதுக்குள்ளே ஜகன் மோகினி ஜெயமாலினியா! கலக்குறீங்க சார். என்னுடைய ஆட்ட நாயகி யார் தெரியுமா? சஸ்பென்ஸ். மூச்.
vasudevan31355
7th July 2014, 10:28 AM
புகுந்த வீடு படத்தில் ரவிச்சந்திரனும், லஷ்மியும் கலக்கும் ஒரு பாடலைப் பாருங்கள்.
'நீயே சொல்லு... எங்கே என்று... அங்கே நான் வரவோ'
டிபிகல் ரவியின் ஸ்டைலில். இதுவும் ஒரு அபூர்வ பாடல்தான். இரட்டையர்கள் சங்கர் கணேஷ் தானே இசை?
அப்பா! பேலன்ஸ் பண்ண என்னவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு?
https://www.youtube.com/watch?v=Jzd82-X3vFU
vasudevan31355
7th July 2014, 10:35 AM
தமிழ் திரையுலகியே ஒரு உலுக்கு உலுக்கின பாடல்.
ஏ .எம்.ராஜா செந்தாமரையே...செந்தேன் இதழே என்று கொஞ்சிக் குலவ, ஜிக்கி 'முல்லைக்குத் தேர் கொடுத்த மன்னவன் நீயோ' என்று புகழாரம் சூட்ட,
புதுக்கோட்டையாரும், சந்திரகலாவும் இணை.
அப்போதைய குழந்தைகள் கூட முணுமுணுத்த பாடல். பேய் ஹிட் என்று சொல்வார்களே அது போல.
இன்றைக்கும் என்ன! அமர்க்களம்தானே!
https://www.youtube.com/watch?v=gBWbC2X6EWI
Gopal.s
7th July 2014, 10:38 AM
நீ ஒன்னும் பாலன்ஸ் எல்லாம் பண்ண வேண்டாம். அதை நாங்க பாத்துக்கிறோம்.ஒரே நேரம் ஒரே மாதிரி பல படங்கள்.புற்றீசல் போல.மாலதி,சினேகிதி,காவியத்தலைவி,ராமன் எத்தனை ராமனடி,நிலவே நீ சாட்சி இப்படி. பழைய காதலன்-காதலி-கணவன் என்று.
ராமன் எத்தனை ராமனடி நடிப்பினாலும்,காவிய தலைவி ஒரிஜினல் படத்தின் கனத்தாலும்,மெல்லிசை மன்னர் பலத்தாலும்,ஜெமினியின் அபார நடிப்பாலும்,ரவியின் அடக்கமான துடிப்பாலும் ஜெயித்தது.மீதி காலி.
நிலவே நீ சாட்சி படு படு போர்.உட்காரவே முடியாது.பொன்னென்றும் பூவென்றும் பாட்டும்,நிலவே நீ சாட்சி பாட்டும்,வாசு சொன்ன இந்த பாட்டும் ஓகே ரகம்.தேறும்.
இதை போயி வேலையை விட்டு காவியம் மாதிரி ஒருத்தன் எழுதினான் என்றால்.....
நான் யாரையும் திட்டுவதில்லை என்ற சபதம் பாகம்-14 க்கு மட்டும்தான். கபர்தார்,உஷார்.
vasudevan31355
7th July 2014, 10:42 AM
பொன்னென்றும் பூவென்றும் பாட்டும்,வாசு சொன்ன இந்த பாட்டும் ஓகே ராகம்.தேறும்.
.
உன் தலையில் இடி விழ!:)
vasudevan31355
7th July 2014, 10:51 AM
பொன்னென்றும் பூவென்றும் பாட்டும்,வாசு சொன்ன இந்த பாட்டும் ஓகே ராகம்.தேறும்.
.
நீ தேறவே மாட்டே!:)
vasudevan31355
7th July 2014, 10:59 AM
கிருஷ்ணா சார்,
நம்ம திரிக்கு 5***** சாக்லேட் கிடைச்சிருக்கு போல இருக்கே! பார்த்தீங்களா.
gkrishna
7th July 2014, 11:02 AM
வாசு சார்
pv தொளசிராமன் தயாரிப்பு (இவர் தானே நம்ம ஹிட்லர் உமாநாத் தயாரிப்பு )
sp முத்துராமன் இயக்கம்
துணிவே துணை யில் (கல்கண்டு பத்திரிகை தமிழ்வாணனின் லோகோ )
ஜெய் படமா வருது ஒருத்தர் கோவிச்சுக்க போறார்
'அச்சம் என்னை நெருங்காது ஆளை கண்டு மயங்காது '
இன்ஸ்பெக்டர் சங்கரும் டயாnum நேருக்கு நேர் நின்று பாடும் பாடல்
பாடகர் திலகம் பாலாவின் combination
இது சூப்பர் பாட்டுனு சொல்லுங்க ப்ளீஸ்
அதே போல் நம்ம ராட்சசி குரல் சார்
"அரங்க நாயகி இறங்கி வா விரைந்து "
இதுவும் துணிவே துணை தானே
அப்படினா இதுவும் சூப்பர் பாட்டு தான்
அசோகன் "தம்பிய அள அள அளலோய் '
உடனே கவர்ச்சி வில்லன் கே.கண்ணன் இன்ஸ்பெக்டர் சங்கர்ஐ அளக்கும் போது "5 அடி 5 அங்குலம்"
டயானை அளக்கும் போது "5 அடி 6 அங்குலம்"
இரண்டும் ஒரே ஜெய் தான் . எப்படி
திரை அரங்கில் கேட்ட கமெண்ட் "டயான் ஹை ஹீல்ஸ் சூ ஒரு அங்குலம் சேர்த்து "
gkrishna
7th July 2014, 11:03 AM
எங்கே சார் எப்படி சார் யாரு கொடுத்தாங்க
vasudevan31355
7th July 2014, 11:10 AM
எங்கே சார் எப்படி சார் யாரு கொடுத்தாங்க
நம்ம திரி பக்கத்துக்கு மேல Tamil films classic ஐ கிளிக் பண்ணினா forum ஒப்பன் ஆகும் கிருஷ்ணா சார். அதுல பாருங்க. தெரியும்.
vasudevan31355
7th July 2014, 11:11 AM
வாசு சார்
pv தொளசிராமன் தயாரிப்பு (இவர் தானே நம்ம ஹிட்லர் உமாநாத் தயாரிப்பு )
அவரே!
gkrishna
7th July 2014, 11:17 AM
இதே pv தொளசி ராமன் தயாரிப்பில்
1977 சக்கரவர்த்தி னு ஒரு படம்
கிருஷ்ணன் பஞ்சு இயக்கம்
ஜெய் ஸ்ரீகாந்த் தேங்காய் 3 பேரும் நடித்து வெளி வந்தது
ஜெய் ஜோடி சாரதா வா அல்லது ஸ்ரீப்ரியா
தேங்காய் வக்கீல்,ஸ்ரீகாந்த் இன்ஸ்பெக்டர்
ஸ்ரீகாந்த் ஜெய்யை பிடிச்சு உள்ளே போடுவார்
தேங்காய் அவரை காப்பாற்றுவார்
பாட்டு நினைவு இல்லை
vasudevan31355
7th July 2014, 11:17 AM
கிருஷ்ணா சார்,
கவர்ச்சி வில்லன் அப்படின்னு நீங்க எழுதுனதும் எனக்கு ஒன்னு ஞாபகம் வந்துடுச்சி.
'கவர்ச்சி வில்லன்' கண்ணன் இருவேடங்களில் நடித்து 'கங்கா' கர்ணன் படம் ரேஞ்சுக்கு 'திருடனுக்குத் திருடன்' அப்படின்னு ஒரு படம் வந்துச்சே. நாங்கல்லாம் மார்னிங் ஷோ போய் பார்த்தோம் சார். பாட்டெல்லாம் ஞாபகம் வெச்சுருப்பீங்களே! திருப்தியா வெளியே வந்தோம். அது நேரிடை தமிழ்ப் படம்தானே! கண்ணன் கூட மம்தா ஜோடியா நடிச்சிருக்கும்.
அப்புறம் இதே கண்ணன் ஹீரோவா நடித்து இதே மாதிரி இன்னொரு படம் வந்துச்சே! பெயர் நினைவிலில்லை.
gkrishna
7th July 2014, 11:20 AM
நம்ம திரி பக்கத்துக்கு மேல Tamil films classic ஐ கிளிக் பண்ணினா forum ஒப்பன் ஆகும் கிருஷ்ணா சார். அதுல பாருங்க. தெரியும்.
பார்த்தேன் ரொம்ப சந்தோசம் 5 ஸ்டார்ஸ் க்கு ஏதாவது விளக்கம் உண்டா
gkrishna
7th July 2014, 11:26 AM
கிருஷ்ணா சார்,
கவர்ச்சி வில்லன் அப்படின்னு நீங்க எழுதுனதும் எனக்கு ஒன்னு ஞாபகம் வந்துடுச்சி.
'கவர்ச்சி வில்லன்' கண்ணன் இருவேடங்களில் நடித்து 'கங்கா' கர்ணன் படம் ரேஞ்சுக்கு 'திருடனுக்குத் திருடன்' அப்படின்னு ஒரு படம் வந்துச்சே. நாங்கல்லாம் மார்னிங் ஷோ போய் பார்த்தோம் சார். பாட்டெல்லாம் ஞாபகம் வெச்சுருப்பீங்களே! திருப்தியா வெளியே வந்தோம். அது நேரிடை தமிழ்ப் படம்தானே! கண்ணன் கூட மம்தா ஜோடியா நடிச்சிருக்கும்.
அப்புறம் இதே கண்ணன் ஹீரோவா நடித்து இதே மாதிரி இன்னொரு படம் வந்துச்சே! பெயர் நினைவிலில்லை.
நீங்கள் சொல்ல வந்தது 'சொல்லு கண்ணா சொல்லு' னு நினைக்கிறன்
,திருடனுக்கு திருடன் ,'சொல்லு கண்ணா சொல்லு'
இரண்டும் tm திருமலைசாமி நாடார் தயாரிப்பு
இந்த 'சொல்லு கண்ணா சொல்லு' வில் ஜஸ்டின் (நடன தாரகை பபிதாவின் தந்தை , மக்கள் திலகத்தின் ...) உண்டுன்னு நினவு
vasudevan31355
7th July 2014, 11:28 AM
பார்த்தேன் ரொம்ப சந்தோசம் 5 ஸ்டார்ஸ் க்கு ஏதாவது விளக்கம் உண்டா
கிருஷ்ணா சார்,
பார்வையாளர்களின் தினசரி எண்ணிக்கை உயர்வு, திரிக்குக் கிடைக்கும் வரவேற்பு, திரியின் replies இவைகளைக் கணக்கில் கொண்டு.
vasudevan31355
7th July 2014, 11:29 AM
அப்படி 'சொல்லு கண்ணா (கிருஷ்ணாஜி) சொல்லு':)
gkrishna
7th July 2014, 11:35 AM
கண்ணே கனிமொழியே னு ஒரு படம் லக்ஷ்மிஸ்ரீ பேய் மாதிரி வருவாங்க
அதுவும் இந்த திருமலை சாமி நாடார் படம் தான்
சுசிலவின் பாடல் ஒன்று உண்டு "பாடல்களை பாடுகிறேன் " அப்படின்னு வரும்
gkrishna
7th July 2014, 11:37 AM
கிருஷ்ணா சார்,
பார்வையாளர்களின் தினசரி எண்ணிக்கை உயர்வு, திரிக்குக் கிடைக்கும் வரவேற்பு, திரியின் replies இவைகளைக் கணக்கில் கொண்டு.
எல்லா புகழும் போகட்டும் அந்த வாசுதேவ கோபால கார்த்திக ராகவேந்திர முரளி சாரதி ச்வாமிகளுக்கே
vasudevan31355
7th July 2014, 11:48 AM
எல்லா புகழும் போகட்டும் அந்த வாசுதேவ கோபால கார்த்திக ராகவேந்திர முரளி சாரதி ச்வாமிகளுக்கே
அப்போ கிருஷ்ண பரமாத்மாவிற்கு?
vasudevan31355
7th July 2014, 11:50 AM
கண்ணே கனிமொழியே னு ஒரு படம் லக்ஷ்மிஸ்ரீ பேய் மாதிரி வருவாங்க
அதுவும் இந்த திருமலை சாமி நாடார் படம் தான்
சுசிலவின் பாடல் ஒன்று உண்டு "பாடல்களை பாடுகிறேன் " அப்படின்னு வரும்
மியூசிக் ஞானமுத்துவா?
gkrishna
7th July 2014, 12:05 PM
பகடை பன்னிரண்டு 1982
ச்வர்ணம்பிகா production
தாமோதரன் இயக்கம்
தெலுகு இசை அமைப்பாளர் சக்ரவர்த்தி இசை
கமல் ஸ்ரீப்ரியா சுதர்சன் சத்யப்ரிய சத்யராஜ் நடித்து வெளிவந்தது
சத்யராஜ் ஒன்று இரண்டு காட்சிகளில் சுதர்சனின் அல்லக்கை ஆக வருவார். இந்த படம் அடிக்கடி மெகா டிவி யில் ஒளிபரப்பாகிறது
ஒரு நல்ல பாடல் "வர வேண்டும் மகாராஜன் "
http://www.youtube.com/watch?v=cl3ToU7HZfU
vasudevan31355
7th July 2014, 12:52 PM
ஜஸ்ட் ரிலாக்ஸ்
http://3752ph102dgl405f3e3yvdrpili.wpengine.netdna-cdn.com/wp-content/uploads/2012/12/Gustav-Metzger.-Just-Relax..jpg
இயக்குனர்கள் வரிசை
http://www.nadigarthilagam.com/image10/CVRspeaks.jpg
இயக்குனர் சி.வி.ராஜேந்திரன்
தொடர்கிறது.......
'வீட்டுக்கு வீடு' (1970) மறக்க முடியாத ஒரு காமெடி. வீட்டுக்கு வீடு அனைவரும் பார்த்து ரசித்த ஒரு படம். வசூலில் பின்னலும் கூட.
ஒரு சீரியஸ் கதைக்கருவை இலவம் பஞ்சு ரேஞ்சுக்குக் கையாண்டு அதில் தலையணை தைத்து. நம்மை சுகமாய்த் தூங்க வைத்த சி.வி.ஆர்.
கரணம் தப்பினால் மரணம் நேரக்கூடிய புயல் சமாச்சாரம். ஆனால் கண நேரமும் குறையாத நகைச்சுவைத் தென்றலானது.
ப்ப்பூ... என்று ஊத்தி தள்ளும் தைரிய 'லஷ்மி'.
'தென்னக ஜேம்ஸ்பாண்ட்' அப்பாவி ஹஸ்பண்ட் ஆகி ரசித்து சிரிக்க வைத்த கதை.
துப்பாக்கியை மட்டுமே கையில் பிடித்தவருக்கு கரண்டியைக் கொடுத்து நம்மை ர(ரு)சிக்க வைத்த ருசிகரம்.
போ..போ..போ..போ.. என்று ஜெய்யை (பொண்டாட்டி தாசனாம்) எரிச்சலுடன் போடு போடென்று போட்ட முத்தான ராமன் சத்தாக வலம் வந்த அதிசயம்
'ம்ம்ம்... மாட்டிகிட்டான்' என்று கிடாரும் கையுமாக கள்ளத் தம்பதிகள் என்று நினைத்து நிஜத் தம்பதிகளை அப்பா வி.கே.ராமசாமியிடம் மாட்டி வைக்கத் துடிக்கும் நாகரீக ஜிப்பா கண்ணாடி நாகேஷ்.
சிண்டுமுடியும் நாகேஷை சிண்டை வைத்துக் கொண்டு கேஷுவலாக சமாளிக்கும் வி.கே.ஆர்.
பக்கத்து வீட்டுப் பெண் போல தன் மேல் நம்மை கரிசனம் காட்ட வைக்கும் 'வெண்ணிற ஆடை' நளின அழகி
இவர்கள் அத்தனை பேரையும் தூக்கி தம் பாக்கெட்டுக்குள் போட்டு
நான்தான் டாப் என்று நச் பாடல்கள் கொடுத்த எம்.எஸ்.வி.
'அங்கம் புதுவிதம்' எழுதி 'அந்தப் பக்கம் வாழ்ந்த ரோமியோ'வை மைக்குள் அடக்கி நம்மை ஓடிவரச் செய்த கண்ணதாசன்
விலா எலும்பை நொறுக்கும் கோபுவின் (அன்றைய கிரேஸி) கோலாகல கோல்மால் வசனங்கள்.(கதையும் அவரே) அப்படி இப்படி திரும்பி விட்டால் நல்ல காமெடி வசனங்களை இழந்து விடுவோம்.
அப்படி இப்படி குழப்பாமல் மக்(கு)களுக்கும் புரியும்படியான சி.வி.ஆரின் கட்டிப் போடும் இயக்கம்.
என்று இந்த வீட்டில் பல 'ஜம்'மென்ற சங்கதிகள் நிறைய உண்டு.
இதிலிருந்து செம ரிலாக்ஸான ஒரு பாடல்.
லஷ்மிக்கு திருமணம் ஆகவில்லை என்று நினைத்து ஏமாந்து தன் காதலை கிடார் பாடல் மூலம் ரூமில் கதவடைத்திருக்கும் லஷ்மிக்கு சொல்லத் துடிக்கும் நாகேஷின் மெய்மறந்த காதல் மயக்க நிலை.
அசத்தும் நாகேஷுக்கு ஈடாக, ஏ.எல்.ராகவனுக்கு மாற்றாக அட்டகாச பின்னணி கொடுத்து அசத்தும் சாய்பாபா. (நடிகர் டி.எஸ்.பாலைய்யாவின் மகன்) கண்டசாலா, பாலமுரளிகிருஷ்ணா,பாலா மூன்று குரல்களையும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றினால் எப்படி ஒரு குரல் கிடைக்குமோ அப்படி ஒரு காந்தர்வக் குரல். அதிகமாக நமக்குக் கிடைக்காமல் போனது வழக்கம் போல. ஏமாறவே பிறந்தவன்தானே தமிழன். ஏமாற்றப் பட்டவனும் அவன்தானே!
http://img.youtube.com/vi/VybvUzOAnRw/0.jpg
பாடலின் துவக்கமே படுஜோர்.
மலர்களில் படுத்தவள் சகுந்தலை அந்நாளில்
என் நிலைதனைக் கெடுத்தவள் மாலதி இந்நாளில்
சலோமி சலோமி சலோமி
ஐ.லவ் யூ
அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ
இந்தப் பக்கம் நான் என்ன சாமியோ
ஓ மை ஸ்வீட்டி
ஓ மை ஸ்வீட்டி
ஓடிவா
ஓஓஓஓ.......ஓ
(இடையில் கிடாருடன் சேர்ந்த விசில் விளையாட்டு மெல்லிசை மன்னரிடம்)
(கிடாரும் சாய்பாபா தானாமே)
ஜூலையில் பிறந்தது ஜாதகம்
காதலில் அது ரொம்ப சாதகம்
தந்தை வழியில் கொஞ்சம் பாதகம் (வி.கே.ஆர் தொல்லையாம்)
எங்கு செல்லுமோ இந்த நாடகம்
தந்தை வழியில் கொஞ்சம் பாதகம்
எங்கு செல்லுமோ இந்த நாடகம்
ஓ மை ஸ்வீட்டி
ஓ மை ஸ்வீட்டி
ஓடிவா
ஓஓஓஓ.......ஓ
(வெளியே இந்த லூஸ் அடிக்கும் லூட்டிகளைத் தாங்க மாட்டாமல் ரூமின் உள்ளே இருக்கும் லஷ்மி, ஜெய் தலையில் அடித்துக் கொள்வார்கள்)
இனி உன்னை யாரும் நெருங் (கிடார்)
உன் நிலைமையைப் பார்த்தவர் உறங் (கிடார்)
(சும்மா கிடார் புகுந்து புறப்படும். நாகேஷோ உயிரைக் கொடுத்து கிடாரைக் கிண்ட( கிடார் தந்திகளை கடுமையாக முடுக்கி திருகி வேறு விட்டு வாசிப்பார் படித்தால் மட்டும் போதுமா 'படிக்காத மேதை' போல.) நம் வயிறு வலியால் கிண்டப்படும்)
ஊர்வசி வந்தாலும் மயங் (கிடார்)
உன்மேல் ஆணை மை கிடார்
மை கிடார்
(சூபரப்பு! கிடாரை வைத்தே கிளுகிளுக்க வைத்த கவிஞனே! உன் வார்த்தை விளையாட்டுக்கு அளவேது!)
ஓடிவா
ஓஓஓஓ.......ஓ
அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ
இந்தப் பக்கம் நான் என்ன சாமியோ
ஓ மை ஸ்வீட்டி
ஓ மை ஸ்வீட்டி
ஓடிவா
ஓஓஓஓ.......ஓ
என்னமாய் ஒரு ஜாலி பாடல்! ரிலாக்ஸுக்கு பொருத்தம்தானே! என்ஜாய்.
https://www.youtube.com/watch?v=otMjPibfioI
gkrishna
7th July 2014, 12:54 PM
ஸ்ரீதேவி னு ஒரு படம் சார்
சரிதா நடித்து வெளி வந்த படம் ஜோடி விஜய்பபுவா அல்லது ராஜகுமாரா (லதாவின் தம்பி ) நினவு இல்லை
ஷ்யாம் இசை
சிலோன் ரேடியோ ஹிட் இந்த பாடல்
பாலா சுசீலாவின் குரல்களில்
சுசீலா : ம்ஹுஹும் ம்ஹுஹும் ம்ஹுஹும் ம்ஹும்ஹும்
பாலா : மை வச்ச கண்ணம்மா
வெட்கத்தைத் தள்ளம்மா
சுசீலா : ம்ஹுஹும் ம்ஹுஹும் ம்ஹுஹும் ம்ஹும்ஹும்
பாலா :மார்கழிக் குளிரம்மா
மணி மஞ்சம் போடம்மா
வயசோ இருபது இளசா இருக்குது
மனசோ மயங்குது
துடியா துடிக்குது
சுசீலா : வாசமுள்ள சந்தனமே
வச்சிருக்கேன் குங்குமமே
மனசை வச்ச உன் மேலெ தான் மயங்கி நின்னேனே
வாசமுள்ள சந்தனமே
வச்சிருக்கேன் குங்குமமே
மனசை வச்ச உன் மேலெ தான் மயங்கி நின்னேனே
மஞ்சை குளிச்சு அள்ளி முடிச்சு
உன்னை நினைச்சே நானும் இருந்தேன்
வாசமுள்ள சந்தனமே
வச்சிருக்கேன் குங்குமமே
மனசை வச்ச உன் மேலெ தான் மயங்கி நின்னேனே
பாலா : என்னம்மா சின்னப் பொண்ணு
நாணமென்ன நீயூம் சொல்லு
தேனே உன்னை பூவா அள்ளிக் கவிதை சொல்லவா
என்னம்மா சின்னப் பொண்ணு
நாணமென்ன நீயும் சொல்லு
தேனே உன்னை பூவா அள்ளிக் கவிதை சொல்லவா
தென்ன மரத் தோப்போரம் கன்னி இள மானே வா
தென்ன மரத் தோப்போரம் கன்னி இள மானே வா
நெஞ்சக அணையில் அள்ளி வச்சி தாலாட்டவா
வண்ணப் பூவே கன்னித் தேனே
நெஞ்சைத் தானே அள்ளித் தாயேன்
சுசீலா : வாசமுள்ள சந்தனமே
வச்சிருக்கேன் குங்குமமே
மனசை வைக்க உன் மேலெ தான் மயங்கி நின்னேனே
சுசீலா : நீராடும் நேரத்திலே நீ வந்து பார்க்கையிலே
மச்சான் உன்னைக் கண்ணில் கண்டு தயங்கி நின்னேனே
நீராடும் நேரத்திலே நீ வந்து பார்க்கையிலே
மச்சான் உன்னைக் கண்ணில் கண்டு தயங்கி நின்னேனே
தாலி கட்டும் முன்னாலே தாண்டி வரலாமோ நான்
தாலி கட்டும் முன்னாலே தாண்டி வரலாமோ நான்
நாளும் வச்சு மேளம் கொட்டி நாமும் சேர்வோம்
மஞ்சை குளிச்சு அள்ளி முடிச்சு
உன்னை நினைச்சே நானும் இருந்தேன்
வாசமுள்ள சந்தனமே
வச்சிருக்கேன் குங்குமமே
மனசை வச்ச உன் மேலெ தான் மயங்கி நின்னேனே
மஞ்ச்சைக் குளிச்சு அள்ளி முடிச்சு
உன்னை நினைச்சே நானும் இருந்தேன்
வாசமுள்ள சந்தனமே
வச்சிருக்கேன் குங்குமமே
மனசை வைக்க உன் மேலெ தான் மயங்கி நின்னேனே
சுசீலா : ம்ஹுஹும் ம்ஹுஹும் ம்ஹுஹும் ம்ஹும்ஹும்
பாலா : மை வச்ச கண்ணம்மா
வெட்கத்தைத் தள்ளம்மா
சுசீலா : ம்ஹுஹும் ம்ஹுஹும் ம்ஹுஹும் ம்ஹும்ஹும்
மார்கழிக் குளிரம்மா
மணி மஞ்சம் போடம்மா
வயசோ இருபது இளசா இருக்குது
மனசோ மயங்குது
துடியா துடிக்குது
இந்த பாட்டுடோட விடியோ லிங்க் எதுவும் கிடைக்கலை
ஆனால் நல்ல பாட்டு சார்
அதுவும் சுசீலா திருப்பி திருப்பி 'வாசமுள்ள சந்தனமே ' சொல்லும் போது ஒரு சுகம் இருக்கும்
http://www.mediafire.com/?06rxc8m3fasxki2
gkrishna
7th July 2014, 01:03 PM
வாசு சார்
மன்னிக்கவும் . உங்கள் போஸ்டை கவனிக்காமல் ஸ்ரீதேவி பாடல் போஸ்ட் செய்து விட்டேன்
உங்கள் அருமையான வீட்டுக்கு வீடு பாடல் மனம் கவர்ந்த பாடல்
ஜலகண்டேஸ்வர vkr
ஜமதக்னி நாகேஷ்
ம்ம்ம் மாட்டிகிட்டான்
இதே கதையை கோல்மால் செய்து விஸ்வநாதன் ராமமூர்த்தி னு ஒரு படம் ராம்கி ரோஜா விவேக் விந்திய கோவை சரளா வெண்ணிறாடை ராமமூர்த்தி combination ராமநாராயணன் படம்
நாகேஷ் ரோல் அப்படியே கோவை சரளா
அந்த ரூம் மாத்தறது ஒரிஜினல் கலக்கல்
ஜெய் லக்ஷ்மி முத்துராமன் வெண்ணிற ஆடை நால்வரும் இணைந்து கலக்கும் காட்சி
நாகேஷ் இசை புயல் பாட்டு பாகவதர் பட்டு
ஒரு ஹிந்தி பாடல் சொல்லி கொடுப்பார்
"க்யா கரோ சஜனி"
vasudevan31355
7th July 2014, 01:14 PM
வாசு சார்
ஜமதக்னி நாகேஷ்
ம்ம்ம் மாட்டிகிட்டான்
கிருஷ்ணா சார்!
வயிறு நொந்து விடும் சார் சிரித்து சிரித்து நாகேஷ், ராமசாமி கூத்துகளைப் பார்த்து.
gkrishna
7th July 2014, 01:18 PM
வீட்டுக்கு வீடு
ராம்குமார் films தானே சார்
கலாட்ட கல்யாணம்,வீட்டுக்கு வீடு,சுமதி என் சுந்தரி ,திக்கு தெரியதா காட்டில்
எல்லாமே காமெடி கலாட்ட
இந்த வரிசையில் வேறு ஏதாவது உண்டா சார்
vasudevan31355
7th July 2014, 01:26 PM
கிருஷ்ணா சார்!
நெஞ்சை அப்படியே அள்ளிட்டீங்க வாசமுள்ள சந்தானம் தடவி.
கண்ணியப் பாடகியின் கண்ணியப் பாடலை அதுவும் மிக அபூர்வ பாடலைத் தந்ததற்கு நன்றி.
பாடல் வரிகள் முழுதும் சிரமப்பட்டு டைப் செய்திருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்.
gkrishna
7th July 2014, 01:28 PM
அப்போ கிருஷ்ண பரமாத்மாவிற்கு?
இந்த லிஸ்ட்லே சில ஜாம்பவான்களை மிஸ் பண்ணிட்டேன்
மன்னிக்கணும்
வினோத் சார்,ராஜேஷ் சார்,ரமேஷ் சார்,பாலா சார் இன்னும் யார் எல்லாம் இந்த திரியை கலக்கறாங்களோ அவங்களுக்கும் சேர்த்து தான்
Gopal.s
7th July 2014, 01:35 PM
வீ.வீ ,பாபு மூவிஸ் .பின்னாடி கமலை வைத்து சி.வீ.ஆர் இயக்கத்தில் மாலை சூடவா எடுத்தார்களே?(யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா. கன்னட மஞ்சுளா)
gkrishna
7th July 2014, 01:58 PM
பிடிச்சாரு பாரு கோபால் சார்
வாணி குரலில் ஒரு பாட்டு ஒன்னு உண்டு சார்
"பட்டு பூச்சிகள் வட்டம் அடித்தால் கட்டி அணைக்கும் பூச்செண்டு "
நம்ம nt இன் தாய் கூட பாபு மொவீஸ் தான நினைவு
Richardsof
7th July 2014, 01:58 PM
இன்றைய பொழுது பல பாடல்களுடன் களை கட்டியுள்ளது .இது வரை கேட்காத புதிய பாடல்கள்
பற்றிய பதிவுகள் அருமை . ம.ம.ம.கானங்கள் 5 நட்சத்திரம் கிடைத்துள்ளது அறிந்து மிக்க
மகிழ்ச்சி . இத்திரியில் பதிவிடும் எல்லோருக்கும் பெருமையே.
mr_karthik
7th July 2014, 02:09 PM
ஒரே நேரம் ஒரே மாதிரி பல படங்கள்.புற்றீசல் போல.மாலதி,சினேகிதி,காவியத்தலைவி,ராமன் எத்தனை ராமனடி,நிலவே நீ சாட்சி இப்படி. பழைய காதலன்-காதலி-கணவன் என்று.
இவையெல்லாவற்றுக்கும் மூலம், புதுமை இயக்குனரின் 'நெஞ்சில் ஓர் ஆலயம்'.
ராமன் எத்தனை ராமனடி நடிப்பினாலும்,காவிய தலைவி ஒரிஜினல் படத்தின் கனத்தாலும்,மெல்லிசை மன்னர் பலத்தாலும்,ஜெமினியின் அபார நடிப்பாலும்,ரவியின் அடக்கமான துடிப்பாலும் ஜெயித்தது.மீதி காலி.
இது இன்னொரு அநியாய ரிப்போர்ட். பணத்தையும் நடிப்பையும் கொட்டிய சௌகாரை குறிப்பிடவில்லை. அருமையாக இயக்கிய கே.பி.யை குறிப்பிடவில்லை. படத்தின் வெற்றியில் இரண்டு சதவீதம் மட்டுமே காரணமான ரவிக்கு மகுடம். பிடித்தவர் என்பதற்காக இப்படிப்பட்ட ஸ்டேட்மென்ட் எல்லாம் ஓவர். ரவிச்சந்திரன் எனக்கும் பிடித்தவர்தான். இருந்தாலும் இப்படியா கண்மூடித்தனமாக....?
நிலவே நீ சாட்சி படு படு போர்.உட்காரவே முடியாது.பொன்னென்றும் பூவென்றும் பாட்டும்,நிலவே நீ சாட்சி பாட்டும்,வாசு சொன்ன இந்த பாட்டும் ஓகே ரகம்.தேறும்.
இது ஆச்சரியமில்லை. உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்று சொன்னால்தான் அதிர்ச்சியடைய வேண்டும்.
நான் யாரையும் திட்டுவதில்லை என்ற சபதம் பாகம்-14 க்கு மட்டும்தான். கபர்தார்,உஷார்.
இந்த சபதம் நிச்சயம் உடைந்து சிதறும். ""அங்கே"" எப்படியும் உங்களை திட்டவைத்து விடுவார்கள்.
Gopal.s
7th July 2014, 02:33 PM
பாலசந்தர் ஈயடிச்சான் காபி இந்த படம். ஒன்றும் பெரிதாக சொல்வதற்கில்லை.சௌகார் ,மூலத்தின் 30% கூட தொடவில்லை.பணம் போட்டதினால்தான்,ரவி அருகே அம்மாவாக நிற்க கூட தகுதியில்லாத இவர் ,அவருடன் டூயட் பாடினார்.அந்த பெருமை ஒன்று போதாதா இவருக்கு?
gkrishna
7th July 2014, 02:36 PM
விஜயம்பிகா பிளம்ஸ்
அன்னபூரணி 1978
கிருஷ்ணன் பஞ்சு இயக்கம்
முத்துராமன் கே ஆர் விஜயா ஸ்ரீகாந்த் சோ நடித்து வெளி வந்த
கருப்பு வெள்ளை
குமார் இசை னு நினவு
இந்த படத்தில் ஸ்ரீகாந்த் ஹேர் ஸ்டைல் கொஞ்சம் different நிறைய முடி வைத்து கொண்டு நாட் ஹிப்பி ஸ்டைல் பட் some திங் different
ஒரு சீன் சோ ஸ்ரீகாந்த் கிட்ட ரகசியம் சொல்ல காதை தேடுவார் .அப்பறும் தலை முடியை விலக்கி காதை தேடி கண்டு பிடுச்சுட்டு "அப்பாடி கண்டு பிடுசுட்டேன் " என்று சொல்லி விட்டு சொல்ல வந்த ரகசியத்தை மறந்து விடுவார்
நல்ல பாடல்கள் உண்டு
ஜேசுதாஸ் குரலில் கொஞ்சம் மலையாள ஸ்லாங்ல பாடுவார்
"உன்னை பார்க்க வேண்டும் பழக வேண்டும் எத்தனையோ ஆசை உண்டு மனசிலே அது என்ன வென்று எடுத்து சொல்ல தெரியலே
I don 't know I லவ் யு '
சுசீலா குரலில்
"ஐயிரண்டு திங்களிலே கை இரண்டில் வந்தவனே "
சுசீலா ஜேசுதாஸ் குரல்களில்
"கண்ணனுக்கு கோபமென்ன கண்ணில் ஓர் தாபமென்ன "
இதோ போக சோவோட ஒரு கதாகாலட்சேபம் ரொம்ப பேச பட்டது
படம் உட்கார முடியாது
http://tamilsongs-mp3.blogspot.in/2009/10/v-kumar-songs-annapoorani-song-list.html
Gopal.s
7th July 2014, 02:50 PM
சிரித்தாள் அந்த சிரிப்பில் ஒரு மோகம். என்று ஒரு பாடல்-ராமானுஜம் போட்டது.
உன்னை பார்க்க வேண்டும்- peppy nice song
gkrishna
7th July 2014, 03:38 PM
அம்மா 1982
ராஜசேகர் இயக்கம்
சங்கர் கணேஷ் இசை
பிரதாப் சரிதா இணை
வைரமுத்துவின் வைர வரிகளில்
பாலா ஜானகி குரல்களில்
மழை காலத்து இரவு வேளையில் இளமையின் இளமயில்கள்
இளமை பசியினை வெளிபடுத்தும் தாபம்
மழையே மழையே இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம்
தேவ மயக்கம்
கூந்தல் மலரில் தேனை எடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க
மழையே மழையே இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம்
தேவ மயக்கம்
கூந்தல் மலரில் தேனை கொடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க
விரக வேதனையில் பருவமான ஒரு தாமரை
மன்மத தேசத்து மாதுளை
விரக வேதனையில் பருவமான ஒரு தாமரை
மன்மத தேசத்து மாதுளை
நாம் போகும் பாதை எங்கெங்கும்
பயிராகும் காதல் தங்கம்
நாம் போகும் பாதை எங்கெங்கும்
பயிராகும் காதல் தங்கம்
உயிருக்குள் எரிகின்ற நெருப்பு
வந்து அணைப்பது இனி உந்தன் பொறுப்பு
மழையே மழையே இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம்
தேவ மயக்கம்
கூந்தல் மலரில் தேனை கொடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க
நனைந்த பூவில் வண்டு ஒதுங்கும் போது
ஒரு சோதனை
பா ப பா ப்ப ப்ப ……………………..
மார்கழி மாதத்து வேதனை
நனைந்த பூவில் வண்டு ஒதுங்கும் போது
ஒரு சோதனை
பா ப பா ப்ப ப்ப……………………..
மார்கழி மாதத்து வேதனை
மடி மீது சாயும் இன்னேரம்
மழைக்கால ஆசை தோன்றும்
மடி மீது சாயும் இன்னேரம்
மழைக்கால ஆசை தோன்றும்
இடைவெளி குறைகின்ற நெருக்கம்
இந்த இரவினில் இளமைக்கு பசிக்கும்
மழையே மழையே இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம்
தேவ மயக்கம்
கூந்தல் மலரில் தேனை எடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க
லாலாலாலா (அஹ அஹ அஹ …) ………………
http://www.youtube.com/watch?v=nYWcpYtCJlQ
mr_karthik
7th July 2014, 04:06 PM
டியர் வாசு சார்,
இன்றைய ஸ்பெஷலாக 'நிலவே நீ சாட்சி'யிலிருந்து ஒரு அதி அற்புதமான பாடல். அதை பேலன்ஸ் செய்ய (யாருக்காக) புகுந்த வீட்டிலிருந்து ரவியின் பாடல் ஒன்று. கூடவே ஒரு இணைப்பாக 72-ன் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்றான 'செந்தாமரையே செந்தேனிதழே' பாடல். அத்துடன் நிற்காமல் ஜஸ்ட் ரிலாக்ஸ் பாடலாக 'அந்தப்பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ'
அப்பப்பா ஒரே கலக்கல் விருந்துதான் போங்க. அயராத உழைப்பு.
எங்கள் ஏரியாவிலிருந்த ஓட்டலில் ஜுக்-பாக்ஸில் எப்போதும் ஒலித்துக்கொண்டிருந்த பாடல் 'செந்தாமரையே'. அதிகம் வசூலித்துக்கொடுத்த பாடல். (ஒருமுறை கேட்பதற்கு 25 பைசா). 'முத்தாரமே' மூலம் ரீஎன்ட்ரி கொடுத்த ஏ.எம்.ராஜா இன்னொரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்த்தோம். அதற்கேற்றாற்போல 'சின்ன கண்ணனே', 'ராசி நல்ல ராசி' என்று நல்ல பாடல்கள் கிடைத்தன. இருந்தாலும் எஸ்.பி.பி., ஜேசுதாஸ் மத்தியில் மீண்டும் நிலைநிறுத்திக்கொள்ள முடியவில்லை.
நிலவே நீ சாட்சி படப்பாடலில் பாடகரைக் கண்டுபிடிக்க முடியாமல் நானும் ஏமாந்திருக்கிறேன். (அப்போது எம்.எஸ்.வி பாடுவது அபூர்வம் வேறு)
ரிலாக்ஸ் பாடல் நிஜமாகவே நல்ல ரிலாக்ஸ் தந்தது. சாய்பாபா இசையமைப்பாளர்களோடு ஒத்துப்போகாததும் அவர் நிற்க முடியாததற்கு ஒரு காரணம். அக்கார்டியன் பிளேயர் ராஜாமணியுடன் ஓயாத சச்சரவு. சங்கர் கணேஷுடன் ஏற்பட்ட மோதலில் ஒரு நல்ல பாடல் கோவை சௌந்தர்ராஜனுக்கு போனது. சண்டைக்காரர் என்று பெயரெடுத்து ஒதுக்கப்பட்டார்.
mr_karthik
7th July 2014, 04:14 PM
டியர் கிருஷ்ணாஜி,
ஒரு பாடலின் வரிகள் அனைத்தையும் பதிவிடும் உங்கள் திறமை அபாரம். ரொம்ப பொறுமை வேண்டும். அதுவும் ஹம்மிங் எல்லாம் சேர்த்து.
அட்டகாசம்..., கலக்குங்கள்....
gkrishna
7th July 2014, 04:31 PM
உயர்ந்தவர்கள் 1977 பொங்கல் ரிலீஸ்
நெல்லை நியூ ராயல்
TN பாலுவின் இயக்கம்
ஷங்கர் கணேஷ் இசை
கமல் சுஜாதா தேங்காய் ஸ்ரீகாந்த் நடித்து வெளிவந்த கருப்பு வெள்ளை
சஞ்சீவ் குமார் ஜெயபாதுரி நடித்து ஹிந்தியில் வெளிவந்த கோஷிஷ் திரை படத்தின் தமிழ் ஆக்கம் .யதார்த்தமான நடிப்பு,குல்சாரின் கதை
இரண்டும் இருந்தும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியை தழுவிய படம்
கமல் சுஜாதா இருவருமே காது கேளாதவர்கள் மற்றும் வாய் பேச முடியாதவர்கள். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி திருமணம் செய்து கொள்கிறார்கள் .அவர்களுக்கு பிறக்கும் முதல் குழந்தை ஸ்ரீகாந்த் செய்யும் தவறால் விபத்தில் இறக்க நேருடுகிறது.
அவர்களுக்கு பிறக்கும் இரண்டாவது குழந்தை (இந்த குழந்தையின்
பாதுகாவலர் கண் தெரியாத தேங்காய்) எந்த குறையும் இல்லாமல் பிறந்து நன்றாக படித்து இறுதியில் தன பெற்றோரின் முதலாளியின் காது கேளாத வாய் பேசாத பெண்ணை திருமணம் செய்து கொள்ள நிர்பந்திக்கபடுகிறான். முடிவு என்ன
கௌரவ வேடத்தில் சஞ்சீவ்குமார்,ஜெய்ஷங்கர்,பிரேம் நசிர்,மனோரமா
ஜேசுதாஸ் வாணி குரல்களில் மிக அருமையான பாடல்
flute வீணை தபேலா மூன்றும் இணைந்து பாடல் வரிகளோடு
அணைத்து வெளிப்படும்
"இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்துஒரு பொம்மையை செய்தன தான் விளையாட அதன் வாய் மொழி முல்லை எனில் தாய மொழி இல்லை
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட
வெய்யில் என்ன மின்னல் என்ன வெண்மை என்ன மஞ்சள் என்ன
காணாத கண்கள் ரெண்டில் எல்லாமும் ஒன்றடா
வெய்யில் என்ன மின்னல் என்ன வெண்மை என்ன மஞ்சள் என்ன
காணாத கண்கள் ரெண்டில் எல்லாமும் ஒன்றடா
தென்றல் காற்றும் ஊமைக்காற்று
தேவன் பாட்டும் ஊமைப்பாட்டு
அவன் தானே நம்மை செய்தான் துன்பங்கள் ஏனடா
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட
உங்களுக்காக நானே சொல்வேன் உங்களுக்காக நானே கேட்பேன்
தெய்வங்கள் கல்லாய்ப்போனால் பூசாரி இல்லையா
உங்களுக்காக நானே சொல்வேன் உங்களுக்காக நானே கேட்பேன்
தெய்வங்கள் கல்லாய்ப்போனால் பூசாரி இல்லையா
தந்தைப் பேச்சு தாய்க்கு புரியும் தாத்தா நெஞ்சில் உலகம் தெரியும்
தந்தைப் பேச்சு தாய்க்கு புரியும் தாத்தா நெஞ்சில் உலகம் தெரியும்
உள்ளத்தில் நல்லோர்தானே உயர்ந்தவர் இல்லையா
என் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட
மலரும்போதே வாசம் தெரியுது வளரும்போதே பாசம் புரியுது
தாய் தந்தை செய்த பூஜை வீணாகவில்லையே
மலரும்போதே வாசம் தெரியுது வளரும்போதே பாசம் புரியுது
தாய் தந்தை செய்த பூஜை வீணாகவில்லையே
மலரும்போதே வாசம் தெரியுது வளரும்போதே பாசம் புரியுது
தாய் தந்தை செய்த பூஜை வீணாகவில்லையே
கந்தன் அன்று மந்திரம் சொன்னான் கண்ணன் அன்று கீதை சொன்னான்
மகன் சொன்ன வேதம் கேட்டு மறைந்தது தொல்லையே
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
http://www.youtube.com/watch?v=jVorjjMaLPA
gkrishna
7th July 2014, 04:35 PM
நன்றி கார்த்திக் சார்
சாயபாபா பற்றி நீங்கள் சொன்னது ஒரு நல்ல தகவல்
நீண்ட இடைவெளிக்கு பின் இளையராஜா இசையில்
1987 காலகட்டத்தில் வேலைக்காரன் படத்தில் "தோட்டத்திலே பாத்தி கட்டி " பாடலின் ஆரம்பம் இவரின் மீள் ஆரம்பம் என பேசப்பட்டது .
ஆனால் அதற்கு பிறகும் இவர் பாடல்கள் எதுவும் பெரிதாக வரவில்லை
Gopal.s
7th July 2014, 06:58 PM
Rajesh,
I thank you for your views on T.K.R.I request you to remove the post no 1396 in page 140 as it contains the quote of Ramesh which was removed by him .Thanks.
mr_karthik
7th July 2014, 07:30 PM
டியர் கிருஷ்ணாஜி,
'உயர்ந்தவர்கள்' படத்தைப்பற்றி பதிவிட்டு என் எண்ணங்களை கடந்த காலத்தை நோக்கி திருப்பி விட்டீர்கள்.
உயர்ந்தவர்கள் நான் நடித்த படம்..... அதிர்ச்சி வேண்டாம்.
அந்தப்படத்தில் கமலின் குழந்தை ஒரு கடையின் முன்னாள் காணாமல் போகும் அல்லவா?. அந்தக்காட்சி சென்னை எட்வர்ட் எலியட்ஸ் ரோட்டிலுள்ள 'டாய் செண்டர்' என்ற கடையில் படமாக்கப்பட்டது. கடையின் வாசலில் தள்ளுவண்டியில் உட்கார வைக்கப்பட்டிருந்த குழந்தையைக் காணோம் என்று அந்தப்பெண் கடையின் உள்ளே வந்து கடையின் உரிமையாளர் அபுல்கலாம் என்பவரிடம் விசாரிக்கும்போது, கடையிலிருந்து ஒரு பையன் (கொஞ்சம் இளைஞன் என்றும் சொல்லலாம்) கடையில் பொம்மை வாங்கிக்கொண்டு வெளியே செல்வதுபோல ஒரு காட்சி வரும். அந்த இளைஞன் பக்கத்தில் நிற்கும் இன்னொரு பையன் நான்தான்.
கடையில் நின்றுகொண்டிருக்கும்போது யதார்த்தமாக வந்து படமெடுத்தார்கள் (உரிமையாளரிடம் முன்கூட்டியே சொல்லியிருப்பார்கள் போலும்). இயக்குனர் டி.என்.பாலு வரவில்லை. சிறிய காட்சியென்பதால் அவரது உதவியாளர்தான் வந்து எடுத்தார். இனி அந்த படம் பார்க்க வாய்ப்புக்கிடைத்தால் அந்தக்காட்சியில் உற்றுப்பாருங்கள். அதில் நான் ஒரு செகண்ட் ஹீரோ. அதாவது ஒரே ஒரு செகண்ட் மட்டுமே வருவேன்.
RAGHAVENDRA
7th July 2014, 07:47 PM
வாசு சார்
சூப்பர்... 5 நட்சத்திர அந்தஸ்து பெற்ற திரியின் நாயகருக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். மற்றும் பங்கு கொண்டு இச்சிறப்பிற்கு வழிவகுத்த ஒவ்வொரு நண்பருக்கும் பாராட்டுக்கள்.
தொடருங்கள்
RAGHAVENDRA
7th July 2014, 07:48 PM
கார்த்திக் சார்
உயர்ந்தவர்கள் படம் காணக் கிடைக்கும் போது கண்டிப்பாக உங்கள் நினைவோடு தான் பார்ப்பேன். சும்மாவா செகண்ட் ஹீரோவாச்சே...
RAGHAVENDRA
7th July 2014, 07:51 PM
வாசு சார்
எந்தப் பதிவைப் பாராட்டுவதெனத் தெரியவில்லை... நிலவே நீ சாட்சி... அந்தக் காலத்தில் அந்த லிஃப்ட் ஒலி பரபரப்பாக பேசப்பட்டது. வானொலியில் முதன் முறை ஒலிபரப்ப முயன்ற போது இந்த ஒலியைக் கேட்டு விட்டு ரிகார்டு சரியில்லை எனத் திருப்பி அனுப்பியதாக சில நண்பர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களையே ஏமாற்றிய அந்த சிறப்பொலி இன்றைக்கும் நம்முள் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்போது சொல்லும் ஹஸ்கி வாய்ஸையெல்லாம் அப்போதே அவர் பாடிக் காண்பித்து விட்டார்.
புகுந்த வீடு பாடலைப் பற்றி ஒரு அந்தக் காலத்தில் காற்று வாக்கில் பரவிய தகவல் ஒன்று உண்டு. அது வேறொருவருக்காக வேறொரு படத்திற்காகப் பதியப் பட்டதாகவும் என்ன காரணத்தாலோ அந்தப் படத்திற்குப் பயன்படுத்தப் படாமல் இந்தப் படத்தில் பயன்படுத்தப் பட்டதாகவும் கேள்விப் பட்டிருக்கிறேன்.
Gopal.s
7th July 2014, 07:57 PM
தங்க நிலவே நீயில்லாமல்....
இசை என்பது சுத்தமான முழுமை மட்டும் அல்ல ,சிறிதே பிசிறும் கலக்க வேண்டிய, செம்பு கலந்த தங்கமாகவும் வேண்டும் என்று
எனக்கு உணர்த்தியவர் என் சிறு வயது வகுப்பாசிரியர் ஆர்.பீ மாஸ்டர்.(என்னை விட சிவாஜி பக்தர்)டி.எம்.எஸ் பாடும் போது கவனிச்சிருக்கியா ,கொஞ்சம் பிசிரடிக்கும்.அதுவே பாட்டை தூக்கும். என்பார்.(பின்னால் இதே கருத்து வாமனன் புத்தகத்திலும் வந்தது). நான் சிறு வயதில் டி.எம்.எஸ்.ரசிகனாக எல்லா மேடையிலும் அவர் பாணியில் ,அதே குரலில் பாடுவேன்.(இன்றும்)ஆனால் பாடும் போது அவர் போலவே கன்னியை கல்னி என்றும் ,கன்னலை கல்னல் என்றுமே பாடுவேன்.மற்றோர் சுட்டி காட்டிய போது ,என் சார்பில் நின்றவர் ஆர்.பீ. அவர் கருத்து எனக்கு போக போக இன்னும் புரிந்தது.
ஜனனி ஜனனி பாட்டில் இளைய ராஜாவிற்கு சுருதியே நிற்காது. அதே மெட்டில் அம்மா என்றழைக்காத பாடலை அவ்வளவு சுத்தமாக ஜேசுதாஸ்.ஆனால் எனக்கென்னவோ ஜனனி ஜனனியின் திருப்தி அம்மாவில் கிடைக்கவில்லை.
என்னுடைய கனவு நாயகி நடித்தாலே குதூகலம்.பாட வேறு பாடினால்?(பழம் நழுவி பாலில்)எஸ்.எம்.எஸ் இசையில் சிநேகிதி படத்தில்.ஏற்கெனெவே தினத்தந்தி வெள்ளி திரையில் படித்ததனால் ,ரேடியோ கேட்கும் போது வியக்கவில்லை.என் பெற்றோர் இவளெல்லாம் ஏன் பாடணும் .ஒத்தையும் ரெட்டை குரலுமாய் அபஸ்வரம் என்றதை,நான் மிக மிக ரசித்தேன்.சிறிதே hoarse ஆனாலும் ஓபன் வாய்ஸ் இல் மிக மிக innocense தெரியும்.முடியுமா என்று இழுக்கும் போது ,முடியுமடி செல்லம் என கட்டி கொள்ள தோன்றும்.
ஒரு imperfection என்னை இந்தளவு ஆட்கொள்ள முடியுமா?எத்தனை முறை கேட்டு ரசித்திருப்பேன்?
பாட்டின் ஆரம்பத்திலேயே பாரதியின் பின்னழகை காட்டுவதால்,இந்த படத்தை 1971 வாக்கில் கீத்து கொட்டகை ஒன்றில் repeat audience ஆக பார்த்தேன்.முதலில் மெல்லிய டிசைன் போட்ட ஷிபான் புடவை ,கொண்டை போல நிமிர்ந்து ஒற்றை கூந்தலாகும் ஹேர் ஸ்டைல்.இரண்டாவது சரணத்தில் பூப்போட்ட புடவை ,கொண்டை .மூன்றாவது முடிவில்,கருப்பு பூ போட்ட புடவை,முக்கால் கை ஜாக்கெட்.முதல் ஹேர் ஸ்டைல்.அப்படியே 8 எண்ணை எழுதினார் போல உடல்.
கூட இருக்கும் ஆள்தான் கொஞ்சம் ஒரு மாதிரி.பொருந்தா கிராப்.கையை உபயோகமே படுத்த தெரியாமல் ஒரு வினோத ஸ்டைல்.ரவியை கற்பனை செய்து ரசிக்க வேண்டியதுதான்.(எங்கே எங்கே என் மனது)
டி.எம்.எஸ் ,பாரதிக்கு இணைவாக adjust செய்து சமாளிப்பார்.பாரதியை கண்டு கேட்டு மகிழுங்கள்.அவர் என் கனவில் (reserved)வர போவதால்,உங்கள் கனவை தவிர்க்கவும்.
https://www.youtube.com/watch?v=mvbHE-yuhR0
RAGHAVENDRA
7th July 2014, 08:03 PM
வீட்டுக்கு வீடு, முத்துராமன் நாகேஷ் நடித்த திக்குத் தெரியாத வீட்டில் என்ற மேடை நாடகத்தின் திரைப்படமாக்கம்.
gkrishna
7th July 2014, 08:04 PM
டியர் கிருஷ்ணாஜி,
'உயர்ந்தவர்கள்' படத்தைப்பற்றி பதிவிட்டு என் எண்ணங்களை கடந்த காலத்தை நோக்கி திருப்பி விட்டீர்கள்.
உயர்ந்தவர்கள் நான் நடித்த படம்..... அதிர்ச்சி வேண்டாம்.
அந்தப்படத்தில் கமலின் குழந்தை ஒரு கடையின் முன்னாள் காணாமல் போகும் அல்லவா?. அந்தக்காட்சி சென்னை எட்வர்ட் எலியட்ஸ் ரோட்டிலுள்ள 'டாய் செண்டர்' என்ற கடையில் படமாக்கப்பட்டது. கடையின் வாசலில் தள்ளுவண்டியில் உட்கார வைக்கப்பட்டிருந்த குழந்தையைக் காணோம் என்று அந்தப்பெண் கடையின் உள்ளே வந்து கடையின் உரிமையாளர் அபுல்கலாம் என்பவரிடம் விசாரிக்கும்போது, கடையிலிருந்து ஒரு பையன் (கொஞ்சம் இளைஞன் என்றும் சொல்லலாம்) கடையில் பொம்மை வாங்கிக்கொண்டு வெளியே செல்வதுபோல ஒரு காட்சி வரும். அந்த இளைஞன் பக்கத்தில் நிற்கும் இன்னொரு பையன் நான்தான்.
கடையில் நின்றுகொண்டிருக்கும்போது யதார்த்தமாக வந்து படமெடுத்தார்கள் (உரிமையாளரிடம் முன்கூட்டியே சொல்லியிருப்பார்கள் போலும்). இயக்குனர் டி.என்.பாலு வரவில்லை. சிறிய காட்சியென்பதால் அவரது உதவியாளர்தான் வந்து எடுத்தார். இனி அந்த படம் பார்க்க வாய்ப்புக்கிடைத்தால் அந்தக்காட்சியில் உற்றுப்பாருங்கள். அதில் நான் ஒரு செகண்ட் ஹீரோ. அதாவது ஒரே ஒரு செகண்ட் மட்டுமே வருவேன்.
கார்த்திக் சார்
நிச்சயமாக இந்த cd எப்படியாவது வாங்கி பார்த்து விடுவேன்
முகம் தெரியாத நமது நட்பு இன்னும் ஆழம் ஆகும் அல்லவா
எங்கள் கார்த்திக் சார் ஒரு ஹீரோ என்று எல்லோரிடமும் பெருமை
அடித்து கொள்வேன்
Gopal.s
7th July 2014, 08:10 PM
Krishnnaji,
I will do the computer Graphic of that face and publish the Photograph of todays Karthik.(38 varuda koottal)
rajeshkrv
7th July 2014, 10:16 PM
// மற்றொரு ஜோடி கவர்ச்சி புயல் ஜோதி.
ஜோதியை பெரிய இடத்து பெண் காலத்திலிருந்து தொடர்ந்து வருகிறேன். பூவும் போட்டும் படத்தில் ,எண்ணம் போல பாட்டில் பின்னழகில் சொக்கி ரேகையை அழித்து கொண்டிருக்கிறேன்.
அவரை நம் முகாமுக்குள் விட்டு,விஜயலலிதாவை தியாகம் பண்ணியிருக்கலாமோ என்று தோன்றும்.//
கோபால் சார், என்னது?. விஜயலலிதாவை தியாகம் செய்வதாவது. 'கோட்டை மதில்மேலே', 'நினைத்தபடி கிடைத்ததடி', 'பொன்மகள் வந்தாள்' பாடல்களில் ஜோதிலட்சுமியை நினைத்துப்பார்க்கவே குமட்டுகிறது.
விஜி நம்ம படங்களில் இன்னும் அதிகமாக வரலையேன்னு நாங்களே வருத்தத்துடன் இருக்கிறோம். இதுல, இருக்கும் ஒன்றிரண்டையும் தியாகம் செய்யச்சொல்வது கொடுமை சார்.
ஜோதியும்தான் நம் படங்களான எதிரொலி, கலாட்டா கல்யாணம் படங்களில் வந்தாரே. ஒண்ணும் சொல்லிக்கொள்கிறாற்போல இல்லையே.
ரிக்ஷாக்காரனில் 'பம்பை உடுக்கை கொட்டி' பாடலில் பார்த்து பயந்து விட்டேன். ஆர்.எம்.வீரப்பன் 70 எம்.எம்.படமெடுக்கும்போது இதுகளை போட்டிருக்கலாமே என்று நினைத்தேன்.
நேற்றிரவு சாந்திநிலையத்தில் 'பெண்ணைப்பார்த்தும் ஏன் பேச்சு வரவில்லை' பாடலில், ஸ்லீவ்ஸ் அணியாத வெற்றுக்கால்களுடன் விஜயலலிதா... ஆகா... ஓஹோ....
Karthik, glad to see someone praising Vijayalalitha... adeyappa sokkavaikkum parvai, arpudhamana nadana thiran, thevaiyana idangalil/padangalil nalla nadippu ena veluthu vaangiyavar. Telungil pala padangalil heroine vedam kooda seidhar... thanks for sharing your thought .. i too felt she should have been used more in Tamil cinema .. Palinginaal oru maaligai .. Wah re Wah
rajeshkrv
7th July 2014, 10:23 PM
வாசு சார்
மன்னிக்கவும் . உங்கள் போஸ்டை கவனிக்காமல் ஸ்ரீதேவி பாடல் போஸ்ட் செய்து விட்டேன்
உங்கள் அருமையான வீட்டுக்கு வீடு பாடல் மனம் கவர்ந்த பாடல்
ஜலகண்டேஸ்வர vkr
ஜமதக்னி நாகேஷ்
ம்ம்ம் மாட்டிகிட்டான்
இதே கதையை கோல்மால் செய்து விஸ்வநாதன் ராமமூர்த்தி னு ஒரு படம் ராம்கி ரோஜா விவேக் விந்திய கோவை சரளா வெண்ணிறாடை ராமமூர்த்தி combination ராமநாராயணன் படம்
நாகேஷ் ரோல் அப்படியே கோவை சரளா
அந்த ரூம் மாத்தறது ஒரிஜினல் கலக்கல்
ஜெய் லக்ஷ்மி முத்துராமன் வெண்ணிற ஆடை நால்வரும் இணைந்து கலக்கும் காட்சி
நாகேஷ் இசை புயல் பாட்டு பாகவதர் பட்டு
ஒரு ஹிந்தி பாடல் சொல்லி கொடுப்பார்
"க்யா கரோ சஜனி"
Veetukku veedu . all time classic... VKR my god enna timing .. Thottu thottu paarthal .. What a song ... Ellame super . indha padam ippa paarthaalum super ..
you can enjoy every bit
vasudevan31355
7th July 2014, 10:52 PM
திரியின் தீவிர விஜயலலிதா ரசிகர்களுக்காக
http://merryfrolics.files.wordpress.com/2013/06/rani28.jpg?w=312&h=250
http://t1.someimage.com/FmqIWrr.jpg
http://img.youtube.com/vi/Ypri1gs9U_k/mqdefault.jpg
http://antrukandamugam.files.wordpress.com/2013/08/vijayalalitha-hello-partner-1.jpg
http://img.youtube.com/vi/nHqtmyyq8q4/0.jpg
http://123tamilforum.com/imgcache/39/137269.jpg
http://antrukandamugam.files.wordpress.com/2013/08/vijayalalitha-anjal-petti-520-2.jpg
http://antrukandamugam.files.wordpress.com/2013/08/vijayalalitha-anjal-petti-520.jpg
http://4.bp.blogspot.com/-tXeZFRTVwo0/UWKYIUYT03I/AAAAAAAAMB0/HLo0EdLd4lQ/s1600/RevolverRita020.jpg
http://i1.ytimg.com/vi/L8vDtSh0KvM/maxresdefault.jpg
vasudevan31355
7th July 2014, 11:13 PM
http://i.ytimg.com/vi/XYgszPQrY1U/0.jpg
http://img404.imageshack.us/img404/7971/dhiroli85.jpg
http://2.bp.blogspot.com/-N_Z1ZMq0nzI/UyEda5Gv23I/AAAAAAAAJXE/CWwnChCYwKE/s1600/RR01.jpghttp://2.bp.blogspot.com/-hELAbpZhJAk/UyEgTelFkUI/AAAAAAAAJYc/897WWyxpOnY/s1600/RR12.jpg
http://1.bp.blogspot.com/-3m1ntCzDs2c/UyEfIunkibI/AAAAAAAAJX8/8SfqxL2SADQ/s1600/RR08.jpghttp://1.bp.blogspot.com/-pzhxf9mJZLw/UyEeBKfmGuI/AAAAAAAAJXc/CcerfaHAiGc/s1600/RR04.jpg
\http://i1.ytimg.com/vi/954dKGhx3iU/maxresdefault.jpg
http://www.aptalkies.com/modules/gallery/galleries/Movies/Revolver%20Rani%20(1971)/posters/Revolver%20Rani%20(1971).jpg
http://i1.ytimg.com/vi/4qN0oJZHs84/maxresdefault.jpg
rajeshkrv
7th July 2014, 11:26 PM
here is another beautiful song by Bala & PS
vijayalalitha with jai... viji is beautiful in this
https://www.youtube.com/watch?v=yGeREb_Wrfo
RAGHAVENDRA
8th July 2014, 07:11 AM
நண்பர்கள் இளமை துள்ளும் படங்களைப் பற்றியும் பாடல்களைப் பற்றியும் காட்சிகளைப் பற்றியும் விவாதிக்கும் போது என் மனதில் தோன்றிய பாடல். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாகியும் கூட இன்னும் பசுமையாக நினைவில் வட்டமிடும் பாடல்
மர்ம வீரன் திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடலை நீங்களும் கேளுங்களேன்
http://www.inbaminge.com/t/m/Marmaveeran/
RAGHAVENDRA
8th July 2014, 07:14 AM
மர்ம வீரன் திரைப்படத்தில் இன்னொரு இனிமையான துள்ளல் பாடல்
பவள நாட்டு எல்லையிலே
http://www.inbaminge.com/t/m/Marmaveeran/
RAGHAVENDRA
8th July 2014, 07:23 AM
ஜோதி சித்ராவின் அன்னை சொன்ன சொல் திரைப்படத்திலிருந்து டி.எம்.எஸ். பி.சுசீலா டூயட்
காதலுக்கு நாலு பக்கம்
http://psusheela.org/audio/ra/tamil/all/kadhalukku.ram
vasudevan31355
8th July 2014, 09:09 AM
http://sim05.in.com/62/cc33f38125af883dc242373cef890624_pt_xl.jpg
இன்று ஒரு பழைய பாடல். ஆனால் பட்டை தீட்டப்பட்ட வைரம் போன்ற பாடல்.
இன்றும் அதிகம் பேர் கேட்டிராத, நெஞ்சத்தை ஊடுருவும் ஒரு பாடல்
கமால் பிரதர்ஸ் 'வாழ்க்கை வாழ்வதற்கே' (1962) படத்தில் ('தெய்வப்பிறவி' யை வைத்து 'தெய்வப்பிறவி' எடுத்தவர்கள்) பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களும் சுசீலாம்மா அவர்களும் இணைந்து தந்த ரொம்ப ரொம்ப அரிதான ஒரு டூயட். இசை மெல்லிசை மன்னர்கள். வசனம் முரசொலி மாறன். இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு
ஜெமினி கணேஷ் மன்னன் வேடத்தில் வர (காட்சிகளில் வெள்ளயத்தேவனை ஞாபகப்படுத்துகிறார்) அவர் காதலியாக அபிநய சரஸ்வதி. படத்தில் வரும் ஒரு நாடகக் காட்சி பாடல்.
என் உள்ளம் கொள்ளை கொண்ட பாடல். ஆனால் பாடலின் நீளம் மிகக் குறைவு. ஏண்டா பாடல் முடிவடைந்தது என்று இருக்கும். இன்னொரு சரணம் தந்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும்.
வித்தியாசமான டியூன். பாடல் முழுதும் ஒரே டியூனாக இருந்தும் கொஞ்சமும் சலிப்பை ஏற்படுத்தாது மெல்லிசை மாமன்னர்களின் கைங்கரியம்.
இப்பாடலைக் கேட்டு மன்னவன் படை எடுக்கிறானோ இல்லையே நம் மனம் படையெடுப்பது நிஜம்.
http://i1.ytimg.com/vi/qC_IXGS9SFY/hqdefault.jpg
இனி பாடலின் வரிகள்.
ஆஅஅஅஆ ஆஅஅஅஆ அஆஆஆஆ...ஆ
ஹஹஹா ஹஹஹா ஹஹஹா
ஹஹஹா ஹஹஹா ஹாஹாஹா
நான் பாடிய பாடல் மன்னவன் கேட்டு படையுடனே வந்தான்
நான் பாடிய பாடல் மன்னவன் கேட்டு படையுடனே வந்தான்
என் வாடிய நெஞ்சை மன்னன் அறிந்தான் மலருடனே வந்தான் ஹோய்
என் வாடிய நெஞ்சை மன்னன் அறிந்தான் மலருடனே வந்தான்
காதல் திருமகள் கண்ணீர் வடித்தாள் கனவினிலே கண்டான்
இரு கைவேல் கொண்டான் கண்வேல் கண்டான் காலத்திலேயே வந்தான்
கைவேல் கொண்டான் கண்வேல் கண்டான் காலத்திலேயே
வந்தான் என்றதும் மங்கை முகத்தில் செந்தேன் பாய்ந்ததம்மா
அவன் தருவான் ஒருநாள் பெறுவான் திருநாள் தாமரை மலர்ந்ததம்மா ஹோய்
தருவான் ஒருநாள் பெறுவான் திருநாள் தாமரை மலர்ந்ததம்மா
ஆஅஅஅஆ ஆஅஅஅஆ அஅஆஆஆஆ...ஆ
ஆஅஅஅஆ ஆஅஅஅஆ அஅஆஆஆஆ...ஆ
காவிரி கடலில் பாய்வது போல கலந்துவிட்டான் அம்மா
இனி காவிரி என்றும் கடலெதுவென்றும் பேதம் இல்லையம்மா
காவிரி என்றும் கடலெது என்றும் பேதம் இல்லையம்மா
ஆஅஅஅஆ ஆஅஅஅஆ அஅஆஆஆஆ...ஆ
ஆஅஅஅஆ ஆஅஅஅஆ அஅஆஆஆஆ...ஆ
இந்தப் படத்தில்
ஆத்தோரம் மணலெடுத்து,
நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன,
ஆடக் காண்பது காவிரி வெள்ளம்,
அழகு ரசிப்பதற்கே,
அவன் போருக்குப் போனான்,
போன்ற பாடல்கள் இருந்தாலும் மேற்சொன்ன பாடல்தான் டாப்.
https://www.youtube.com/watch?v=qC_IXGS9SFY
Richardsof
8th July 2014, 09:23 AM
அருமையான அலசல் வாசு சார் . நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பாடலை காணும் வாய்ப்பு கிடைத்தது . மிக்க மகிழ்ச்சி . உங்களுக்காக காதல் மன்னன் நிழற் படம் .
http://i57.tinypic.com/20qnp6t.jpg
gkrishna
8th July 2014, 10:01 AM
Karthik, glad to see someone praising Vijayalalitha... adeyappa sokkavaikkum parvai, arpudhamana nadana thiran, thevaiyana idangalil/padangalil nalla nadippu ena veluthu vaangiyavar. Telungil pala padangalil heroine vedam kooda seidhar... thanks for sharing your thought .. i too felt she should have been used more in Tamil cinema .. Palinginaal oru maaligai .. Wah re Wah
அருமையான காலை பொழுது
ஒரு பக்கம் கோபால் சார் இப்ப உள்ள நமது நண்பர் கார்த்திக் படத்தை வரைய போகிறேன் என்று சொல்லி அடிக்கிறார் . ராஜேஷ் சார் வாசு சார்
விஜயலலிதவின் படங்களாக போட்டு கலக்கல் கும்மி
revolver ரீடா,gunfight காஞ்சனா,fighter பகவன்,லேடி fighter ரேகா ,மோசகரனுக்கு மோசக்காரன்,விடாகண்டன் கொடகண்டன் ,சாட்டைராணி
இது போன்ற படங்களை நினவு படுத்தி விட்டீர்கள்
இந்த நேரத்தில் நினைவுக்கு வந்த பாடல் விட்டல் ஆச்சர்யாவின் விடாகண்டன் கொடகண்டன் படத்தில் வடநாட்டு MGR காந்த ராவ் ,
தென்னாட்டு MGR NTR ,ஆந்தர கவர்ச்சி வில்லன் ராஜ நளா (இவர் தான் ஜகன் மோகினியில் நரசிம்ஹராஜு அப்பாவாக வருவார் )
கலை செல்வி,ராஜஸ்ரீ இவர்களுடன் கலந்து கட்டி காந்த கண் அழகி
விஜயலலித வின் சூப்பர் நடனம் . . தமிழ் பாடல் கிடைக்கவில்லை .பாடல் ஆரம்ப வரிகள் நினைவுக்கு வருகிறது
"என்ன ஓய் கருப்பசாமி இது நல்ல சிவப்பு சாமி "
ஈஸ்வரி பாடியது .தெலுங்கில் 'இதிகோ நேனுன்னான்னு ' என்று வரும்
ரசிகர்கள் ஆரவாரம் செய்யாமல் அமைதியாக இருந்து கண்டு களிக்க வேண்டுகிறேன் . விஜயலலிதாவுக்கு ஈடு கொடுக்கும் ஆந்த்ராவின் முன்னாள் முதல்வர்
https://www.youtube.com/watch?v=LUXZ20CQTr4&index=7&list=PL900BB81357CBE684
gkrishna
8th July 2014, 10:07 AM
dear esvee sir
gemini still super
உங்களிடம் இது போன்று அபூர்வ புகைப்படங்கள் நிறைய இருக்கின்றன என்று
நினைக்கின்றேன்
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
vasudevan31355
8th July 2014, 10:28 AM
இங்கேயும் அங்கேயும் எங்கேயும் ஈஸ்வரி கிருஷ்ணா சார். வணக்கம்.
gkrishna
8th July 2014, 10:32 AM
வாசு சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
மெதுவா எட்டி பார்கிறீர்கள்
செம லூட்டி சார்
உங்கள் கொட்டம் தாங்கலையே
ஜாலியாக தான் சொல்லுகிறேன்
gkrishna
8th July 2014, 10:39 AM
வாசு சார்
மிக அபூர்வமான வாழ்கை வாழ்வதற்கே பாடலை பதிவு செய்து உள்ளீர்கள் .
இந்த பாடலை எல்லாம் இப்படி நமது திரி மூலமாக தெரிந்தால் தான் உண்டு
மிக்க நன்றி
vasudevan31355
8th July 2014, 10:56 AM
வாசு சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
உங்கள் கொட்டம் தாங்கலையே
ஜாலியாக தான் சொல்லுகிறேன்
கிருஷ்ணா சார்!
15 lakhs .... பதினஞ்சு லட்ச ரூபா பெறுமானமுள்ள வைரத்த....
'மேஜர்' மாதிரி விளக்கறீங்க சார்.:)
vasudevan31355
8th July 2014, 10:57 AM
https://i1.ytimg.com/vi/7gLXOgXfMrg/mqdefault.jpghttps://i1.ytimg.com/vi/X7cX-v2cP8A/mqdefault.jpghttp://img.youtube.com/vi/G7N-H7SNWmA/mqdefault.jpg
பட்டுச் சிறகு கொண்ட
சிட்டுக் குருவி ஒன்று
பக்கத்தில் வந்தது இப்போது
பாடத்தை மெல்ல மெல்ல
கேளடி என்று சொல்லி
அய்யய்யோ சொல்லச்
சொல்லி கொல்லுதே
'கறுப்புப் பணம்' படத்தில் நம் பாலாஜியும் ,கே.ஆர். .விஜயாவும் இணைந்த வித்தியாசமான டூயட்.
ஏ .எல்.ராகவனுடன் நம் பாடகி கிளிக்குரலில் கலக்கும் பாடல். அதுவும் ராட்சஸி குரல் மிக இளமையாக இனிமையாக டென்டர் வாய்ஸில் ஒலிக்கும்.
பாடல் அவுட்டோரில் (சாத்தனூரோ!) படமாக்கப்பட்ட விதம் அருமை. அட! நம்ம பாலாஜி கூட ஸ்டெப்ஸ் நல்லா அழகா போடுறாரே! காமெரா ஆங்கிள்கள் அமர்க்களம். விஜயா படு ஒல்லி.
என்றுமே ரசிக்க வைக்கும் ஒரு பாடல்.
https://www.youtube.com/watch?v=F3zDZrCfGTk
gkrishna
8th July 2014, 11:37 AM
ஜெயசாரதி production பண்ணை புரத்து பாண்டவர்கள் 1982
இதன் தயாரிப்பாளர் ஹேமமாலினியின் தாயார் ஜெயா சக்கரவர்த்தி
இயக்கம் லெனின் (பீம்சிங் மகன் )
சரிதா ஸ்ரீகாந்த் சிவச்சந்திரன் நடித்து வெளிவந்தது
கங்கை அமரன் இசை
நெல்லை பூர்ணகலவில் கண்டு களித்தது
ஸ்ரீகாந்த் கிராமத்து சண்டியர் மற்றும் பணக்காரர்
அவரை எதிர்த்து சரிதா தலைமையில் ஊர்மக்கள் போராடி ஸ்ரீகாந்த் கொட்டத்தை அடுக்குவார்கள்
சிலோன் ரேடியோவில் ஹிட் ஆன் மலேசிய வாசுதேவன் வாணி குரல்களில் நாட்டுபுற வரிகள் நிறைந்த பாடல்
(பாடல் கண்னதாசன அல்லது கங்கை அமரனா )
"பட்டுலெ சேலை கழுத்தல ரத்னமாலை
நான் கட்டிக்கபோறேன்
மாப்பிள்ளையை தொட்டுக்க போறேன்
கெட்டி மேளதுலே தட்டுற நேரத்திலே
தாலி கட்டிக்க வாரேன்
பட்டுலெ சேலை கழுத்தல ரத்னமாலை
நான் கட்டிக்கபோறேன்
மாப்பிள்ளையை தொட்டுக்க போறேன்
கெட்டி மேளதுலே தட்டுற நேரத்திலே
தாலி கட்டிக்க வாரேன்
நம்மூர் டூரிங்குல நல்ல படம் வந்த்துருக்கு
நாம ரண்டு பேரும் போவோம் ராத்திரிக்கு
முடிஞ்சு வர நேரத்திலே முட்ட தோசை வாங்கி தாரேன்
வாடியம்மா நீயும் அந்த கொட்டைகைக்கு
நா வரமாட்டேன்
நா வரமாட்டேன் வந்தா நீ விடமாட்டே
அணைச்சு பிடுச்சு நடிக்கும் படத்தை
ரசிச்சு முறைச்சு பார்க்கும் போது
உனக்கும் அந்த நினைப்பு வந்தா என்னத்தை செய்வேன்
பட்டுலெ சேலை கழுத்தல ரத்னமாலை
நான் கட்டிக்க தாரேன்
உன்னை இப்ப தொட்டுக்க போறேன்
இந்த வெத்தில வாயிலே
கிட்டத்துல வந்து முத்தத்தை தாயேன்
பொள்ளாச்சி ஊருக்குள்ளே பொருட்காட்சி நடக்குதையா
போயிட்டு வந்தா என்ன ரயில்லே
அந்த ஊரு சந்தைலே அல்வாவும் விக்குமையா
எல்லாமும் வாங்கி கொடு கையிலே
துட்டுக்கு நானு
துட்டுக்கு நானு கண்ணு எங்கிட்டு போவேன்
இரும்பு போல உடம்பு இருக்கு
கரும்பு போல மனசு இருக்கு
கால நேரம் சேரும் போது வாங்கி தாரேன்
பட்டுலெ சேலை கழுத்தல ரத்னமாலை
நான் கட்டிக்கபோறேன்
மாப்பிள்ளையை தொட்டுக்க போறேன்
கெட்டி மேளதுலே தட்டுற நேரத்திலே
தாலி கட்டிக்க வாரேன்
பட்டுலெ சேலை கழுத்தல ரத்னமாலை
நான் கட்டிக்க தாரேன்
உன்னை இப்ப தொட்டுக்க போறேன்
இந்த வெத்தில வாயிலே
கிட்டத்துல வந்து முத்தத்தை தாயேன்
ஏய் ஏய் தங்கம் (மலேசியாவின் குரல் )
ஆங் ஆங் ஹ ஹ ஹ ஹ (வாணியின் சிரிப்பு)
ஹே ஹே ஹே ஹே (மலேசிய வாசுவின் சிரிப்பு )
இன்னும் சில பாடல்கள் உண்டு இந்த படத்தில்
http://www.inbaminge.com/t/p/Pannaipurathu%20Pandavargal/
vasudevan31355
8th July 2014, 12:34 PM
அரிய 'பண்ணைபுரத்து பாண்டவர்கள்' பாடலைத் தேடி கண்டு பிடித்துக் கொடுத்த கிருஷ்ணா சார் பிடியுங்கள் ஒரு ஷொட்டு.
vasudevan31355
8th July 2014, 01:17 PM
http://i1.ytimg.com/vi/VxuQTvaHH9Y/maxresdefault.jpg
ஒரே படத்தில் உள்ள அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்த படங்களில் 'வெண்ணிற ஆடை'க்கு அடுத்து வருவது
'அனுபவி ராஜா அனுபவி'
http://i1.ytimg.com/vi/k7evSRLIlGM/maxresdefault.jpg
அனுபவித்துக் கேட்க வேண்டிய அனுபவம். ஒவ்வொரு பாடலும் ரம்மியம்.
முத்துராமனையும், நாகேஷையும் படாத பாடுபடுத்தும் ராஜஸ்ரீ, ஜெயபாரதி
இவர்களுக்கு சுசீலாவும், ஈஸ்வரியும் குரல் தந்து அசத்தும்
http://img.youtube.com/vi/PkYADe9D1QY/mqdefault.jpg
'அனுபவி ராஜா அனுபவி'
அழகுக் கிளிகளின் கையாலே
அடிவிழுந்தாலும் சந்தோஷம்'
அப்படியே எதிர்மறையாக நாகேஷும், முத்துராமனும் ராஜஸ்ரீயையும், ஜெயபாரதியையும் படுத்தி எடுக்கும் (சௌந்தரராஜனும், சீர்காழியும்)
https://i1.ytimg.com/vi/l2KZMgmLdHw/mqdefault.jpg
'அழகிருக்குது உலகிலே
ஆசை இருக்குது மனசிலே'
மெட்ராஸ் நாகரீகத்தை நார்நாராகக் கிழிக்கும் பாடகர் திலகத்தின்
http://i1.ytimg.com/vi/vQuK4A7tZIc/hqdefault.jpg
'மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்' (அடி ஷக்க!)
(வைக்கோலாலே கன்னுக்குட்டி மாடு எப்போ போட்டுது?
கக்கத்திலே தூக்கி வச்ச கத்தலையே என்னது)
தூத்துக்குடி பாஷையில் சௌந்தரராஜனும், ஈஸ்வரியும் அமர்க்களம் செய்யும்
'முத்துக் குளிக்க வாரியளா...
மூச்சை அடக்க வாரியளா...'
பட்டம் விட்டபடி பச்சைகிளிகள் பாடும்
'மானென்று பெண்ணுக்கொரு பட்டம் கொடுத்தான்' (சுசீலாவும், ஈஸ்வரியும்)
http://i1.ytimg.com/vi/UqCC0-B1vYU/hqdefault.jpg
என்று ஏகத்துக்குக் கலக்கல்.
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.