View Full Version : மனதை மயக்கும் மதுர கானங்கள்
Pages :
1
2
3
4
[
5]
6
7
8
9
10
11
12
13
14
15
16
gkrishna
26th June 2014, 06:53 PM
வாசு சார்
அருமையான பாடல் கோபால் சார் இன் மனம் குளிரும் பாடல்
தப்பா நினைத்து கொள்ளாதீர்கள்
அந்த ஹம்மிங் பொன்னுசாமி சூப்பர் சார்
முன்னாடி இந்த பாட்டை கேட்கும் போது விஸ்வநாதன் ஹம்மிங் என்றே நினைத்து கொண்டு இருந்தேன் .ஆனால் இசை ராமமூர்த்தி என்று தெரியும் . எப்படி இது சாத்தியமாக இருக்க முடியும் என்று எல்லாம் யோசனை .பிறகு பாட்டு புத்தகத்தை பார்த்து தெரிந்து கொண்டேன்
குடுமி அசோகனை கவனிசீங்கள கண்ணை சிம்மிட்டி கொண்டு
gkrishna
26th June 2014, 06:59 PM
ஜனரஞ்சக படம் என்பதற்கு மிக சிறந்த எடுத்துகாட்டு
மூன்று எழுத்து,
நான், பாக்தாத் பேரழகி (mumtaz என்ன அழகு கொஞ்சம் வெயிட் போட்டு இருந்தால் கூட அந்த வாள் சண்டை மறக்க முடியாது )
குமரி பெண்,பணகார பிள்ளை,கௌரி கல்யாணம்
மறக்க முடியுமா
vasudevan31355
26th June 2014, 07:11 PM
கிருஷ்ணா சார்!
மும்தாஜ் மட்டுமா?! சுபா ராணியும் சுளுக்கு எடுப்பாரே!
vasudevan31355
26th June 2014, 07:16 PM
கிருஷ்ணா சார்!
பாக்தாத் பேரழகியில் நாகேஷ் கழைக் கூத்தாடியா ஒரு பொண்ண வச்சிக்கிட்டு வித்தை காட்டுவார். மனோகர் குதிரையிலே வந்து அந்த பொண்ணிடம் வம்பு பண்ணுவார். அதுக்கு முன்னால அருமையான ஹம்மிங்கோட நாகேஷும், அந்த கூத்தாடிப் பொண்ணும் பாடும் ஒரு பாட்டு.
படி படி வாழ்க்கையிலே எத்தனைப் படி
படிப்படியா முன்னேற வழிகள் எப்படி
அய்யாயேங் ...அயாலலோ ஆயலலோ
அய்யாயேங் ...அயாலலோ ஆயலலோ
இனிமே நீங்கதான் சொல்லணும்.:)
vasudevan31355
26th June 2014, 07:17 PM
சுபா ராணி
http://i1.ytimg.com/vi/b1r8fXYTiQc/hqdefault.jpg
vasudevan31355
26th June 2014, 07:18 PM
http://digitalkies.com/admin/poster/bhagdad.jpg
vasudevan31355
26th June 2014, 07:18 PM
http://icdn.indiaglitz.com/tamil/gallery/Movies/bhagdatperazhagi/main.jpg
http://i1.ytimg.com/vi/MPt_2M93vI8/hqdefault.jpg
vasudevan31355
26th June 2014, 07:23 PM
'பாக்தாத் பேரழகியில்' ரவி தாத்தா வேடத்தில் சுபாவைக் கலாய்ப்பதைப் பாருங்கள். காத்தவராயன் குலேபகாவலி, பாணியில் அதாவது ராமண்ணா பாணியில்
http://www.youtube.com/watch?v=-9BscXUnWdo&feature=player_detailpage
mr_karthik
26th June 2014, 08:01 PM
டியர் வாசு சார்,
கை நிறைய காசு படத்தில் 'தென்னாட்டு ஓமர் ஷெரீப்' ஸ்ரீகாந்த் மற்றும் 'சிங்காரக்கண்ணே' எல்.காஞ்சனா நடித்த பாடலை எனக்கு டெடிகேட் செய்ததற்கு மிக்க நன்றி. 'ஷெரீப்' எனக்கு மட்டும் பிடித்தவரல்ல, எல்லோருக்கும் பிடித்தவர். ஒரு காலத்தில் தென்னாட்டு 'சத்ருகன்' என்றும் அழைக்கப்பட்டவர்.
நானும் அந்தப்படம் பார்த்திருக்கிறேன். இம்மாதிரிப் படங்கள் வெளியாகும்போது பார்த்தால்தான் உண்டு. மறு வெளியீடுகளுக்கெல்லாம் வேலையே இல்லை. ஏதோ இப்போது சேனல்களுக்கு படம் கிடைக்காத புண்ணியம் மீண்டும் இவை தலைகாட்டுகின்றன.
தவிர, 1000-மாவது பதிவு ஒரு அருமையான நடிகர்திலகம் பாடலாக (அம்மானை போன்ற) இருக்குமென்று நினைத்தேன். ரவியும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களும் இணைந்த ஒரு அருமையான பாடலைத் தந்துவிட்டீர்கள். மூன்றெழுத்து எல்லோருக்குமே பிடித்த ஜனரஞ்சகப் படம். 68-ல் அது புதுமைப்படம். தொடர்ந்து பேரழகியையும் ஒரு பிடி பிடித்ததற்கு நன்றி. அந்தப்படத்தில் பேரழகியை விட பேரழகனே அதிகம் கவர்வார்.
நல்ல பாடல்களை தேடித்தேடி பதிவதற்கு ஸ்பெஷல் நன்றிகள்...
mr_karthik
26th June 2014, 08:15 PM
டியர் வாசு சார்,
நம்முடைய ஸ்ரீகாந்தும், நம்முடைய மஞ்சுளாவும் இணைந்து நடித்த "ராஜ நாகம்" வண்ணப்படத்தில் ஸ்ரீகாந்துக்கும் சுபாராணிக்கும் ஒரு அருமையான பாடல்
தேவன் வேதமும் கண்ணன் கீதையும்
ஒரு பாதையில் இங்கு சங்கமம்
அருமையான வண்ணத்தில் அமைந்த இப்பாடலை பதிவிட்டால் மகிழ்வுடன் பார்ப்போம். வி.குமார் இசையில் வாலியின் பாடல்.
Gopal.s
26th June 2014, 08:23 PM
பேஹாக்.
தாயின் கையை பிடித்து புல்தரையில் நடக்கும் சுகத்தை அனுபவித்ததுண்டா?காதலியின் கரம் கோர்த்து கடற்கரையில் நடந்த த்ரில் எத்தனை பேருக்கு வைத்திருக்கும்? அப்படியே ஒரு மெல்லிய உருளு தளத்தில் சுகமாய் உருண்டு எழுந்த செல்ல அனுபவ நுகர்ச்சி வேண்டுமா?நல்லாவே அனுபவிக்க வேண்டிய மென்னடை சுக ராகம்.
தமிழில் அத்தனை பாடகர்களும் தொண்டை புடைக்க கத்தி ,சங்கீதத்தை MKT பாணியில் ஓலமாக்கி குதறி கொண்டிருந்த போது (பாவம் bass ,barritone பாடகர் TMS ஐயே உச்ச ஸ்தாயி ஓலத்தில் படுத்தி எடுத்தனர் இசையமைப்பாளர்கள்)அப்போது மென்மை இசையை இசையாக்கி நமக்கு ஆறுதல் கொடுத்தது ஏ.எம்.ராஜா வும்,ஏ.எல்.ராகவனும். ஆனால் ராஜா பல் கடித்து உதடு பிரிக்காமலும்,ராகவன் ஏனோ கொஞ்சம் இனிமை குறைவாகவும் இருந்ததால் கிஷோர் ,ரபி என்று தஞ்சமடைந்த இசை வெறியர்களை தமிழை நோக்கி படையெடுக்க வைத்த வசந்த பாடல்.பிறந்த நாள் விழா கண்ட கண்ணதாசன்-எம்.எஸ்.வீ, டி.கே.ஆர் இணைவில் ,ஒரு velvet குரல் ,மென்மையான ஆண்மை குறையாத ஒரு அதிசய பாடகரின் வாழ்விலும் வசந்தம் தந்த அந்த அதிசய பாடல் "காலங்களில் அவள் வசந்தம்."
அந்த படத்தின் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் ரகம் . திரைக்கதை,நடிப்பு அத்தனையிலும் விந்தை புரிந்த அந்த படத்தில் சத்தமில்லாமல் முதலிடத்தை ஒரே பாடலில் கவர்ந்தார் ஒரு அதிசய பாடலாசிரியர்.(கண்ணதாசனை இந்த படத்தில் ஓரம் கட்டிய அவர்,சித்திர பூவிழி வாசலில் வாலியை ஓரம் கட்டினார்.) மாயவநாதன்.தெய்வ பாடகி அம்மா சுசிலாவின் மெலடி,பாடலின் அழகு, சாவித்திரியின் பாந்தம் எல்லாம் சேர்ந்து இன்றும் நம்மை சொக்க வைக்கும் ராகம்" தண்ணிலவு தேனிறைக்க".
erotic என்ற ஒரு ரக ரசனையே தமிழில் கொண்டு வந்த புண்ணியம் செய்தவர் நடிகர்திலகம். தன மனம் கவர்ந்த எழில் நாயகி தேவிகாவுடன் நம் மனதை துடிக்க வைத்த (அமைதியின் நிசப்தமும்,சர வெடியின் படபடப்பும் இணைய முடியுமா?முடியுமே)என்று காட்டிய திரை இசை திலகத்தின் பாடலில் உச்ச பட்ச chemistry காட்டிய டி.எம்.எஸ் -சுசிலா இணைவில், பிறந்த நாள் நாயகன் கண்ணதாசனின் சிரஞ்சீவி பாடல் "மடி மீது தலை வைத்து".
தான் நேசித்த பெண்ணை அடைய நினைத்த பெண் பித்தன் ,தன் அனைத்து தீ வழிகளையும் நேசத்திற்கு ஈடாக அடகு வைத்து, வழி தவறேயாயினும் அடைந்த பெண்ணை ,இனிய கற்பனையால் இணைய விழையும் குதூகல கற்பனை முதலிரவு கானம். வேட்டி சட்டையில் ஒரு ஆண் மகன் எவ்வளவு அழகாக திகழ முடியும் என்பதை திராவிட மன்மதன் உலகுக்கு உணர்த்திய தேவ கானம்.திரை இசை திலகத்தின் "கண்ணெதிரே தோன்றினாள் "
இந்த ராகத்தின் மற்ற தேர்வுகள்.
பாவாடை தாவணியில் - நிச்சய தாம்பூலம்.
ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன்- தெய்வத் தாய்.
அவள் ஒரு நவரச நாடகம்- உலகம் சுற்றும் வாலிபன்.
ஆடி வெள்ளி தேடி உன்னை - மூன்று முடிச்சு.
vasudevan31355
26th June 2014, 09:03 PM
டியர் வாசு சார்,
நம்முடைய ஸ்ரீகாந்தும், நம்முடைய மஞ்சுளாவும்
ஆஹா! தேன் வந்து பாயுதே காதினிலே! சொல்லும்போதே எவ்வளவு இனிமையா இருக்கு.
கார்த்திக் சார்,
நிச்சயமாக உங்கள் ஆசை விரைவில் நிறைவேறும்.
vasudevan31355
26th June 2014, 09:07 PM
கோ,
எனக்கு அறவே தெரியாத பேஹாக் ராகம் பற்றிய அருமையை உணர்த்தி அருமையான பாடல்களுடன் எங்கள் நெஞ்சை ஹைஜாக் செய்து விட்டீர்கள்.
கோபால் என்றால் தரம் நிரந்தரம்.
தங்கள் சீரிய ராகங்களைப் பற்றிய பதிவு திரிக்கு நிஜமாகவே ஒரு மணிமகுடம்.
உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை.
தொடரவும்.
RAGHAVENDRA
27th June 2014, 08:14 AM
வாசு சார், கிருஷ்ணா சார், சி.க. சார் மற்றும் நண்பர்கள்...
ஜெட் வேகம் என்றால் என்ன என்பதற்கு இந்தத் திரியின் வேகத்தை உதாரணமாகச் சொல்லலாம். இன்வால்வ்மெண்ட், ஆக்டிவ் பார்டிசிபேஷன் என்கிற வார்த்தைகளெல்லாம் அர்த்தம் இங்கு தான் பெறுகின்றன. கார்த்திக் சார் உள்பட பேர் சொன்ன, பேர் விட்டுப் போன ஒவ்வொரு நண்பருக்கும் பாராட்டுக்கள்.
RAGHAVENDRA
27th June 2014, 08:15 AM
100வது பக்கத்தில் மூன்றெழுத்து திரைப்படத்தில் மெல்லிசை மன்னரின் பாடலை பதிவிட்டு அசத்தி விட்டீர்கள் வாசு சார். போகிற போக்கைப் பார்த்தால் இது பல பாகங்களை சந்திக்கும் போல் உள்ளது.
தொடருங்கள். வாழ்த்துக்கள் அனைவருக்கும் 100 பக்கங்களைப் புயல் வேகத்தில் கடந்து விட்டதற்கு.
RAGHAVENDRA
27th June 2014, 08:16 AM
கோபால்
பெஹாக் போன்ற அபூர்வமான ராகங்களைத் தேடிப் பிடித்து அலசி இங்கே பதிவிடுவதற்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
தொடர்ந்து பைரவி, வசந்தா போன்ற ராகங்களையும் அலசுங்கள்.
RAGHAVENDRA
27th June 2014, 08:19 AM
ரீதி கௌளை, இது மிகவும் அபூர்வமாக திரைப்படங்களில் இடம் பெறுகிறது. எனக்குத் தெரிந்து இந்த ராகத்தை மெல்லிசை மன்னர் தெனாலி ராமன் திரைப்படத்தில் பயன் படுத்தினார். பி.லீலா பாடிய அந்தப் பாடல் படத்தில் இடம் பெறவில்லை. தென்னவன் தாய்நாட்டு என்று தொடங்கும். அதற்குப் பிறகு இந்த ராகம் நீண்ட நாட்களுக்குப் பிறகு இளையராஜாவின் இசையில் ஒரு ஓடை நதியாகிறது படத்தில் இடம் பெற்ற தலையைக் குனியும் தாமரையே பாடலில் பளிச்சென்று தெரியும் வண்ணம் அருமையாக அமைக்கப் பட்டிருந்தது. சமீப காலங்களில் உன்னி கிருஷ்ணன் பாடிய ஒரு பாடலில் ரீதி கௌளை ராகத்தைக் கேட்கலாம்.
இதைப் பற்றியும் விரிவாக அலசும்படி கோபாலைக் கேட்டுக் கொள்கிறேன்.
RAGHAVENDRA
27th June 2014, 08:20 AM
ஜூன் 27 .. இன்றைக்கு சரியாக 45 ஆண்டுகளுக்கு முன் வெளியான நடிகர் திலகத்தின் திரைக்காவியம் அஞ்சல் பெட்டி 520. ஒரு முழு நீள நகைச்சுவை நிறைந்த பொழுது போக்கு சித்திரம். தவறுதலாக அஞ்சல் பெட்டியில் போடப்பட்ட ஒரு கடிதத்தை மீட்க கதாநாயகன் முயற்சிக்க, அதில் அவன் சந்திக்கும் பிரச்சினைகளே படத்தின் கதை. நடிகர் திலகம், நாகேஷ், தேங்காய் சீனிவாசன் மூவரும் இணைந்து நகைச்சுவையில் கலக்கும் திரைப்படம். கோவர்த்தனம் நடிகர் திலகத்திற்கு இசையமைத்த ஒரே படம். பாடல்கள் அனைத்தும் அருமை. இனிமை. சந்தன சிலையே கோபமா எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல். அதுவும் நடிகர் திலகத்தின் துள்ளல் அதுவரையிலும் அதற்குப் பிறகும் அந்த அளவிற்கு எனர்ஜெடிக்காக வேறு படங்களில் பார்த்திருப்போமா என்பதை ஐயமே. ஒரு நொடி கூட கண்ணை அசைக்காமல் நடிகர் திலகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டிய பாடல்.
https://www.youtube.com/watch?v=rW5kZLN5aJ4
gkrishna
27th June 2014, 10:14 AM
தாயின் கையை பிடித்து புல்தரையில் நடக்கும் சுகத்தை அனுபவித்ததுண்டா?காதலியின் கரம் கோர்த்து கடற்கரையில் நடந்த த்ரில் எத்தனை பேருக்கு வைத்திருக்கும்? அப்படியே ஒரு மெல்லிய உருளு தளத்தில் சுகமாய் உருண்டு எழுந்த செல்ல அனுபவ நுகர்ச்சி வேண்டுமா?நல்லாவே அனுபவிக்க வேண்டிய மென்னடை சுக ராகம்.
அனைவருக்கும் காலை வணக்கம் 27/06/14
கோபால் சார் இன் இனிய பேஹாக் ராகம் பற்றிய அலசல் வெகு அருமை
ஆரம்பமே அருமை
இந்த ராகம் பற்றிய ஒரு மருத்துவ குறிப்பு
For patients suffering from insomnia and need எ peaceful sonorous sleep.
லேட் midnight இல் பாடுவதற்கு ஏற்ற ராகம்
ஆடும் சிதம்பரமோ அய்யன் கூத்தாடும் சிதம்பரோ
என்று ஒரு பாடல் நினைவிற்கு வருகிறது
பஞ்ச சபைகளில் ஒன்றான பொன் சபையின் சிற்றம்பலது ஈசனை
புகழ்ந்து பாடும் பாடல் - கோபாலக்ருஷ்ண பாரதி பாடல்
உன் பார்வையில் ஓராயிரம் கவிதைகள் - அம்மன் கோயில் கிழகாலெ
விஜயகாந்த் ராத நடித்து ஜெயச்சந்திரன் ஜானகி குரல் என்று நினவு
அதே போல் மீண்டும் கோகிலா படத்தில்
"ஹே ஹே ஓராயிரம் கவிதைகள் " பாலாவின் குரலில்
இந்த இரண்டு பாடல்களும் பேஹாக் ராகத்தின் அடிப்படையில் அமைந்தது . திரு கோபால் அவர்களும் இதை உறுதி செய்வார் என்று நம்புகிறேன்
http://www.youtube.com/watch?v=பிக்ஸ்6ஜ்ல்க்பழ்க்க்க்
gkrishna
27th June 2014, 10:30 AM
வேந்தர் சார்
உங்களின் அஞ்சல் பெட்டி 520 ஆய்வு மிக அருமை
அந்த படத்தை பற்றி சமீபத்தில் திரு முரளி அவர்களிடம் உரையாடி கொண்டு இருந்தேன் . நான் மிக ரசித்த படம் . பொதுவாகவே சில ஜனரஞ்சக திரைப்படங்கள் நம் நெஞ்சை விட்டு அகலாது .அப்படிப்பட்ட சில படங்களில் இதுவும் ஒன்று .
நீங்கள் சொன்னது போல் நடிகர் திலகம்
"இளமை எனும் பூங்காற்று தான் "
இந்த திரை படத்தில்
ரீதிகௌளை ராகம் மிக அருமையான ஒரு ராகம் .
ராஜ வந்த பிறகு தான் நிறைய சினிமா ரசிகர்களுக்கு (என்னையும் சேர்த்து தான் ) கர்நாடக இசை கலந்த பாடல்களை ரசிக்கும்
சினிமா ரசிகர்களுக்கு இப்படி ஒரு ராகம் இருப்பதாக தெரிய வந்தது
என்று சுப்புடு எழுதியது நினவு
கவிக்குயில் பாலமுரளியின் "சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை " என்ற பாடலும் இந்த ராகத்தில் அமைந்தது என்று நினவு . அதே போல் சமீபத்தில் வெளிவந்த சுப்ரமணியபுரம் படத்தில் james வசந்தன் இசையில் இடம் பெற்ற "கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் " பாடலும் இந்த ராகத்தின் அடிப்படையில் அமைந்தது என்று நினவு
abkhlabhi
27th June 2014, 11:06 AM
மெல்லிசை மன்னரும், எஸ்.பி.பி. அவர்களும் சேர்ந்து பாடிய ஒரு அருமையான பாடல் இது.
படம்: முத்தான முத்தல்லவோ
""எனக்கொரு காதலி இருக்கின்றாள், அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்""
மெல்லிசை மன்னருக்கு இசையின் மேல் உள்ள காதலை, வாலி அவர்கள் கவிதையாக எழுதி அவரிடமே இசை அமைக்க கொடுத்த பாடல் இது. இசையை காதலியாக கற்பனை செய்து அவளை வர்ணனை செய்யும் இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும் சுகமானவை.
'ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்' என்ற வரிகளை பாடியவுடன், இந்த வரிகளுக்கு விளக்கம் கொடுப்பது போல 'க,ம,ப,த,நி........என்று ஸ்வரங்களை பாடி சிரிப்பது மிகவும் அழகு
"பஞ்சமம் பேசும் பார்வையில் என்றும் பஞ்சணை போடும் எனக்காக
தெய்வதம் என்னும் திருமகள் மேனி கைகளை அணைக்கும் இனிதாக"
"என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன் மெல்லிசையாகும் எந்நாளும்
வையகம் யாவும் என் புகழ் பேச கைவசமாகும் எதிர்காலம்"
எவ்வளவு அர்த்தம் நிறைந்த வரிகள் இவை. இசை என்பவள் அதை ரசிக்கும் எல்லோருடனும் ஒரு ஜீவனாகவே வாழ்கிறாள். நம் மனதில் தோன்றும் பல வித உணர்ச்சிகளுக்கு ஏற்ப இந்த இசையானது எத்தனை வடிவங்களில் வந்து நம்முடன் நம் உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறது. ஆறுதல் அளிக்கிறது. இந்த இசையை சுவாசிக்கும் அனைவருமே இதை உணர்திருப்பார்கள்.
"மோகனம் என்னும் வாகனம் மீது தேவதை போல அவள் வந்தாள்"
வாலி அவர்களின் அழகான கற்பனையில் வந்து ஒரு தேவதையை கண்ட பரவசத்தை உண்டாக்கும் வரிகள் இவை
.
மனதில் உள்ளதையே வார்த்தையில் கொண்டு வருவது கடினமாக உள்ளபோது, மெல்லிசை மன்னரின் மனதில் இசையாக உள்ள அவர் காதலியை பற்றி வாலி கவிதையாக்கி இருப்பதை எப்படி பாராட்டுவது? வார்த்தையே வரவில்லை.
இந்தப் பாடல் பியானோவிலே ஆரம்பித்து அதிலேயே முடியும். ஒவ்வொரு சரணங்களின் இடையிலும் வரும் வயலினின் இசையும், பியானோவின் இசையும், பாடலின் இறுதியில் வரும் அந்த பியானோ மீட்டும் ராகத்தையே மறுபடி வயலினில் கேட்பதும் மனதை உருக வைக்கும்.
இந்த பாடலின் இன்னொரு அழகு என்னவென்றால் மெல்லிசை மன்னர் அவர்கள் முதல் சரணத்தை எப்படி பாடி இருக்கிறாரோ, அதே பாணியில் இரண்டாவது சரணத்தை எஸ்.பி.பி. அவர்கள் பாடி இருக்கிறார்கள். கடைசியில் இருவரும் சேர்ந்து பாடும்போது காதில் தேன் வந்து பாய்கிறது.
"கீதம் அவளது வளையோசை நாதம் அவளது தமிழோசை "
ஒரு பெண் அசைந்தால் எப்படி வளையோசை ஒலிக்குமோ, அது போல் இவரது ஒவ்வொரு அசைவும் ஒரு இசைதான். தமிழ்ச் சொற்களுக்கு உயிரும் உணர்வும் கொடுத்து, அவை ஒழுங்காக உச்சரிக்கப்பட வேண்டும் என்பதிலும் ஒரு தமிழாசிரியரைப் போலக் கவனம் செலுத்துபவர் நம் தமிழிசை வேந்தரைத் தவிர வேறு யார்?
கவிஞர் வாலி அவர்கள் எந்தப் பொருளில் இந்தப் பாடலை எழுதியிருப்பாரோ தெரியாது. பலரும் இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் என்று மயங்கியதில் வியப்பில்லை!
பாடலை கேட்டு ரசியுங்கள். எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத ஒரு விருந்துதான்.
குறிப்பு : இந்த பாடலின் வீடியோவை பார்க்கவேண்டும் என்றால் , வாழ்கையே வெறுத்துவிடும் . அவரவர் விருப்பம் . ஏவிஎம் ராஜனையும் , விஜயகுமாரையும் கிண்டலதிவர்கள் , ஜெய் கணேஷை பார்த்தால் என்ன சொல்வார்கள் ?
abkhlabhi
27th June 2014, 11:17 AM
இளையராஜா கவிஞர் கண்ணதாசனை முதல் முறை சந்தித்த அனுபவம் .....
"நான் ஜி.கே வெங்கடேஷிடம் பணியாற்றி கொண்டிருந்த போது முதன் முதலாக கவிஞரை சந்திதேன்.ஜி.கே.வி கன்னடத்தில் இசை அமைத்த ஒரு மெட்டை தமிழில் இசை அமைக்க தீர்மானித்து,பாடலை எழுத கண்ணதாசனை அழைத்தார். கன்னடத்தில் அந்த பாடல் எழுதிய் பாடலாசிரியருக்கு ஒரு வாரம் பிடித்தது,ஓரளவு கடினமான மெட்டுதான்.
கண்ணதாசன் வந்தார், நான் கிடார் வைத்து கொண்டு உட்கார்ந்த...ு இருக்கிறேன்.டைரக்டர் சுழலை சொல்ல சொல்ல கவிஞர் கவனிக்கவே இல்லை..புகை பிடிக்கிறார், பிடிக்கிறார் பிடித்து கொண்டே இருக்கார் .. எனக்கோ எரிச்சல் வந்தது..டைரக்டர் சொல்லி முடிச்சதும், ஜி.கே.வெங்கடேஷை பார்த்து, சரி டியுன் என்ன என்றார்..
ஜி.கே.வி: தானானனே நா நா.. டியுன் கேப் விடாம போய்டே இருந்தது..இன்னோரு வாட்டி கேட்டு கொண்டார்
தானானனே நா நா
தேன் சிந்துதே வானம்
அப்புறம் என்ன ?
தனா தனா தானானனா
உனை எனை தாலாட்டுதே
இப்படியே தொடர்ச்சி இல்லாமல்..
மேகங்களே
தரும் ராகங்களே
என்று கூறி கொண்டே இருந்தார்.. கடைசியா எல்லா வரிகளையும் ஒன்று சேர்த்து பாடி பார்த்தால்..அந்த மெட்டுக்கு அந்த பாடல் அவ்வளவு அற்புதமாக பொருந்தியது.. மெய் சிலிர்த்து போனேன் . "
http://www.youtube.com/watch?v=iN0ix2luTtA
gkrishna
27th June 2014, 11:23 AM
பாலா ஜானகி குரலில்
நவாப்க்கு ஒரு கேள்வி நல்ல ஜவாப் சொல்லையா
சவால் விட்டு சலாம் போட்டு போக வந்தாரா
கேள்வி பதில் பாணியில்
'அக்காளை ஒருவனும் அப்பாவை ஒருத்தியும் மனந்ததெப்படி?'
'அக் 'காளை ' ஒருவனும் அப் 'பாவை ' ஒருத்தியும் மணப்பதென்பது உலக வழக்கம்தானே
இறுதியில் தான் மும்தாஜின் சூப்பர் கேள்வி
"சூரிய சந்திரன் வானில் வருவது எதனாலே "
உடனே chorus
"எதனாலே எதனாலே எதனாலே "
எங்கும் நிசப்தம் கேமரா ரவியை நோக்கி இருக்கும்
சற்று நிறுத்தி
"நிரந்தரமானது பூமியில் வராது அதனாலே ஆ ஆ ஆ ஆ " எக்ஸ்செல்லன்ட் பாலாவின் பருகா
வாவ வாவ வாவ - பாதுஷாவின் இதர அல்லகைகள்
Superb கவாலி
http://www.youtube.com/embed/g2peaYaBFi0?
gkrishna
27th June 2014, 12:01 PM
பாலா சார்
முத்தான முத்தல்லவோ படத்தை நினவு படுத்தி விட்டீர்கள்
முத்துராமன் சுஜாதா ஜெய் கணேஷ் தேங்காய் மனோரமா நடித்து 1976 ரிலீஸ்
genius பாலா மெல்லிசை மன்னர் இசையில் இந்த படத்தின் இன்னொரு பாடல்
மார்கழி பனியில் மயங்கிய நிலவில்
ஊர்வசி வந்தாள் என்னை தேடி
கார்குழல் தடவி கனி இதழ் பருகி
காதலை வளர்தனே இசை பாடி
ஆ இசை பாடி ஆ இசை பாடி
வானத்தில் ஆயிரம் தாரகை பூக்கள்
வேடிக்கை பார்க்கையிலே
கானத்தில் நாங்கள் கலந்திரிந்தோமே
இனி வேறென்ன வாழ்கையிலே
இனி வேறென்ன வாழ்கையிலே
மார்கழி பனியில் மயங்கிய நிலவில்
ஊர்வசி வந்தாள் என்னை தேடி
நான் ஒரு கண்ணில் நீ ஒரு கண்ணில் நீந்திவர
மாங்கனி தன்னை பூங்கொடி என்று ஏந்திவர
ஆசை நாடகம் ஆடி பார்க்கவும்
ஓசை கேட்குமோ பேச கூடுமோ
மார்கழி பனியில் மயங்கிய நிலவில்
ஊர்வசி வந்தாள் என்னை தேடி
கோமகள் என்னும் பூமகள் நெஞ்சில் சாய்ந்துவர
தாமரை பொய்கை போலொரு வைகை பாய்ந்துவர
தேவலோகமும் தெய்வகீதமும்
ராஜயோகமும் சேர்ந்து வந்ததோ
கார்குழல் தடவி, கனி இதழ் பருகி
காதலை வளர்த்தேன் இசை பாடி
ஒரு வித மயக்கத்தை ஏற்படுத்தும். பாடல்
பாடலின் இசையை சொல்லவா
பாடல் வரிகளை சொல்லவா
எஸ்.பி.பி. அவர்களின் குரலை சொல்லவா
கவிஞ்சரின் கற்பனையை சொல்லவா
சற்று யோசித்து பாருங்கள்
நாம் தனிமையில் இருக்கும் போது
மார்கழி பனியும், மயங்கிய நிலவும் சேர்ந்து இருந்தாலே ஒரு இனிமை. கூட 'ஊர்வசி வந்தாள் எனைத்தேடி' என்ன ஒரு கற்பனை சார் !!!!
வேறு என்ன வாழ்கையிலே வேண்டும்
நிஜ வாழ்கையிலே காதல் கொண்ட பல பேருக்கு காதலை வெளிப்படுத்தவும், வளர்க்கவும் திரை இசை பாடல்கள் உதவுவதை சொல்வது போல இந்தப்பாடலில் கவிஞரின் அவர்கள்
'காதலை வளர்த்தேன் இசைபாடி' என்று எழுதி இருப்பது மிகவும் பொருத்தம்.
தேவலோகத்து ஊர்வசியுடன் இவர் காதலை வளர்ப்பது போல் வரிகள் இருப்பதால், மெல்லிசை மன்னரும் இந்த பாடலின் வரிகளை தேவகானமாகவே இசைத்துள்ளார்.
"தேவலோகமும், தெய்வகீதமும், ராஜயோகமும் சேர்ந்து வந்ததோ"
தேவலோகத்து ஊர்வசி இவரை தேடி வந்தது இவருக்கு எப்படி இருந்தது என்பதையும் கவிஞர் இந்த வரிகளில் எழுதி இருப்பது மிகவும் ரசிக்கும்படி உள்ளது.
இந்தப்பாடலில் இரண்டாவது சரணத்துக்கு முன், இந்த பாடலின் பல்லவியை trumpet-l இசைதிருப்பதும், மேலும் சரணங்களுக்கு முன் வரும் அந்த வயலின் ஒலியும் மனதை தாலாட்டும்.
இந்த பாடல் முடியும் அழகு மிகவும் ரசனைக்குரியது
பொதுவாக பல பாடல்கள் முடியும்போது, அந்த பாடலின் பல்லவியிலோ அல்லது அந்த பாடலின் மெட்டையே ராகமாக இசைத்தோ முடிப்பார்கள். ஆனால் இந்த பாடல் முடிக்கப்படிருக்கும் விதமே வேறு. பாடல் முடியும் போது பல்லவியின் முதல் இரண்டு வரிகளை பாடாமல், அடுத்த இரண்டு வரிகளை பாடி முடிப்பது போல மெல்லிசை மன்னர் அமைத்திருப்பது, இந்த பாடலுக்கு ஒரு தனி அழகை தருகிறது. அதை எஸ்.பி.பி. அவர்கள் பாடி இருப்பது, குறிப்பாக 'இசை பாடி .....ஹா .......இசை பாடி' (மூச்சு விட்டு) என்று முடித்து, நம்மை இந்த பாடலை கேட்பதை முடிக்க விடாமல் மீண்டும் கேட்க தூண்டுகிறார்.
இந்த பாடலை இசைக்காகவும், பாடலின் வரிகளுக்காகவும் ஒருமுறை கேட்ட பின், எஸ்.பி.பி. அவர்கள் இந்தப் பாடலில் வரும் ஒவ்வொரு வார்த்தையையும் மயக்கத்துடன் கூடிய கொஞ்சும் குரலில் பாடி இருப்பதற்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்
படத்தில் ஜெய்கணேஷ் பாடுவது போலவும் டிவி ஸ்டேஷன் இல்
அதை மனோரமா சுஜாதா பார்த்து ரசிப்பது போலவும் .
கேட்க திகட்டாத கானம்
இன்னும் சில பாடல்கள் உண்டு இந்த படத்தில்
கோவை சௌந்தர் ராஜனின் குரலில் "புன்னை மரம் ஒன்று தென்னை மரம் ஒன்று கிட்ட கிட்ட நின்னு கொஞ்சுதம்மா கண்ணு "
jc சுசீலா குரல்களில் "பாலபிஷேகம் செய்யவோ உனக்கு " இதையும் அலசலாம் சார்
http://www.inbaminge.com/t/m/Muthana%20Muthallavo/
gkrishna
27th June 2014, 01:55 PM
ஒரு கொடியில் இரு மலர்கள்
ஜெய் கீதா புரொடக்ஷன்
sp முத்துராமன் டைரக்க்ஷன்
ஜெய் ஷங்கர்,சுஜாதா,ஸ்ரீகாந்த் நடித்து 1976 இல் வெளிவந்த படம்
கருப்பு வெள்ளை
இந்த படத்தில் சுஜாதா ஜெயக்கு ஜோடி கிடையாது. சுஜாதா ஜெயக்கு தங்கை .ஸ்ரீகாந்த் இன்ஸ்பெக்டர் ஆக வருவார் .அவர் மனைவிதான் சுஜாதா . ஜெய் ஒரு திருடன் என்று நினைத்து ஸ்ரீகாந்த் அவரை அர்ரெஸ்ட் செய்து ஜெயிலில் அடைத்து விடுவார். சுஜாதாவையும் தள்ளி வைத்து விடுவார் .பிறகு உண்மை வெளி வந்து இறுதியில் எல்லாம் சுபமாக முடியும்
சுஜாதாவின் கல்யாணம் முடிந்த பிறகு ஜெய் பாடும் ஒரு பாடல் .
சுஜாதா ஸ்ரீகாந்த் இருவரும் முதல் இரவு அறையில் இருப்பார்கள்
வெளியில் இருந்து ஜேசுதாஸ் குரலில் ஜெய் பாடும் ஒரு அருமையான பாடல்
(தொகையறா)
"அலங்கார ஓவியம் அன்பு எனும் காவியம்
அண்ணனின் தங்கை அங்கே
நலம் பாடும் நெஞ்சமே நாளெல்லாம்
கொண்டவன் தங்கையின் அண்ணன் இங்கே "
பல்லவி
கண்ணனின் சன்னதியில்
எந்தன் கண்மணி புன்னகையில்
இனிமேல் காலங்கள் உள்ளவரை
எந்தன் பொன்மனிக்கென்ன குறை
அன்பு சொன்ன வேதம் நான் அன்று கொண்ட பாசம்
எங்கு நின்ற போதும் என் எண்ணம் உன்னை வாழ்த்தும்
அன்னமிட்ட கைகள் நான் அன்னை என்று சொல்லும்
கங்கை போல பொங்கும் என் தங்கை கொண்ட உள்ளம்
கற்பனை ஒரு கோடி
எந்தன் கண் வழி உருவாகி
இன்று சொப்பனம் காணுதம்மா
எங்கோ சிந்தனை ஓடுதம்மா
மாலை சூடி கொண்டு என் மஞ்சள் வாழை கன்று
நாணம் பொங்க நின்று நான் காண வேண்டும் என்று
அண்ணன் செய்த யாவும் நீ அறிந்ததில்லை இன்று
காலம் சொல்ல கூடும் என் உள்ளம் என்னவென்று
கட்டிலில் ஓர் உறவு
பின்னால் தொட்டிலில் ஓர் உறவு
இது போல் ஆயிரம் உறவு வரும்
எங்கே அண்ணனின் நினைவு வரும்
இந்த பாட்டை நன்றாக கவனித்தீர்கள் என்றால் ஜேசுதாஸ் தமிழ் உச்சரிப்பு மிக அருமையாக இருக்கும்
இந்த பாடல் வாலி எழுதியதா அல்லது கண்ணதாசன் எழுதியதா என்று ஒரு debate ஒன்று உண்டு.
இந்த படத்திற்கு கதை வசனம் பாடல்கள் வாலி என்று நினவு
இந்த பாட்டு சுசீலா ஜெயச்சந்திரன் குரலிலும் ஒரு தடவை உண்டு
அந்த பாடல் வரிகள்
உன்னை போல பிள்ளை
நான் பெற்றெடுக்கவில்லை
ஏழை என்றும் என்னை
நீ ஏற்றுகொண்ட முல்லை
மாலையிட்ட மன்னன்
என் மனதை பார்க்கவில்லை
ஏழை சொன்ன சொல்லை
என் தெய்வம் ஏற்கவில்லை
நாயகன் ஓரிடமும்
அன்பின் நாயகி ஓரிடமும்
காணும் காவியம் இதுவம்மா
எல்லாம் காரணம் விதியம்மா
(கண்ணனின் சந்நிதியில் )
மாலைசூடிகொண்டு என் மஞ்சள் வாழை தண்டு
வாழவேண்டுமென்று நான் வாடிநின்றதுண்டு
அண்ணன் செய்த யாவும் என் நன்மைக்க்காகவென்று
அன்று சொன்ன பின்பு நான் அமைதிகொண்டதுண்டு
கொண்டவன் துணையோடு நெற்றி குங்குமமலரோடு
தங்கை மங்களம் பெறவேண்டும் அந்நாள கண்களில் வரவேண்டும்
இரண்டாவது சரணம் ஜேசுதாஸ் பாடலுக்கும் சுசீலா ஜெயச்சந்திரன் பாடலுக்கும் உள்ள வேறுபாடு மிக அழகாக வெளிப்படும்
ஒன்று கல்யாணம் முடிந்தவுடன்
மற்றொன்று கணவனை விட்டு பிரிந்தவுடன்
இந்த இரண்டு பாட்டுமே flute தபேல இடை இசையுடன் மிக ஒரு அருமையான அண்ணன் தங்கை பாசமலர்
மெல்லிசை மன்னரின் குரலில் "உப்பை தின்னவன் தண்ணி குடிப்பான்
தப்பை செய்தவன் தண்டனை கொள்வான் " பின் கோவை சௌந்தரராஜன் சேர்ந்து கொள்வார்
ஜெய் ஜெயிலில் இருக்கும் போது இந்த பாடல் வரும்
இந்த பாடல்களின் விடியோ லிங்க் எனக்கு கிடைக்கவில்லை
யாரவது உதவி செய்தால்
abkhlabhi
27th June 2014, 02:14 PM
கொக்கரக்கோ படம் - இசைஞானி இசையில் உயிர் கொடுக்க, பாலு குரலால் உயர் கொடுத்த பாடல்.
பாலு பின்னியெடுத்திருப்பார். "நீதானே என் காதல்" என்று சொல்லிவிட்டு ஒரு சிரிப்பு சிரித்திருக்கிறார் பாருங்கள்! அழகாக இருக்கிறது கேட்க.
கீதம் கீதம் சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
நீதானே என் காதல்...ஹஹ்ஹாஹ்ஹா
..................................உன் கண்ணில் நீலங்கள் நான் கண்டு நின்றேன்
ஆகாயம் ரெண்டாக மண் மீது கண்டேன்
காணாத கோலங்கள் என்றேன் ஆஆஆஆஆஆஆஆஆஆஆ................
................................உன்னை நான் கண்டாலே உண்டாகும் வெப்பம்
நீதானே ஆனந்தத் தெப்பம் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ...................
இந்த பல "ஆ' வுகாக பாலுவிற்கு கோடி கோடி நமஸ்காரங்கள். இந்த மாதிரியான பாடல்களை பாலுவை அடித்துக்கொள்ள யாருமில்லை.
படத்தை பற்றி ...... யார் பார்த்தார்கள்.
vasudevan31355
27th June 2014, 02:43 PM
கிருஷ்ணா சார், பாலா சார்,
மதிய வணக்கம்.
இருவரும் சேர்ந்து பொறாமைப் பட வைத்து விட்டீர்கள். நான் என்னென்ன பாட்டு எழுத வேண்டுமென்று நினைத்தேனோ (அதாவது எனக்கொரு காதலி இருக்கின்றாள்) அதை பாலா சார் பிளந்து கட்டி விட்டார். என்ன ஒரு ரசனை மற்றும் எழுத்தாற்றல். பாலா சார், இவ்வளவு அழகாக எழுதுவீர்கள் என்று எனக்கு இப்போதுதான் தெரிகிறது. அருமை.
கிருஷ்ணா சார்,
'பாக்தாத் பேரழகி' போட்டிப் பாட்டை இன்றைக்கு எடுக்கலாம் என்றிருந்தேன். அதற்குள் நீங்கள்...
நான் ரொம்ப ரசித்த பாடல் அது.
ஆயிரம் காலமும் நீரினில் வாழ்ந்திடும் மான்
எந்த மான்?
எந்த மான்?
அம்பு விடாதவன் துன்புறுத்தாத வில் அது என்ன?
அருமையாய் இருக்கும் சார்.
அப்புறம் என் உயிர்ப் பாடலான மார்கழிப் பனி பாடலை நான் எந்த அளவிற்கு ரசித்தேனோ அதைவிட அருமையாக ரசித்து எழுதி விட்டீர்கள்.
பாலா சார்,
உங்கள் ஜெயகணேஷ் நகைச்சுவையை ரொம்ப ரசித்தேன்.
vasudevan31355
27th June 2014, 03:51 PM
இன்றைய ஸ்பெஷல் (14)
http://i1.ytimg.com/vi/3FMxPvEBW6o/hqdefault.jpg
1975-இல் வெளிவந்த 'உறவு சொல்ல ஒருவன்' கருப்பு வெள்ளைத் திரைப்படம். விஜயபாஸ்கரின் அற்புத இசையமைப்பில் நமதருமை சுசீலா அவர்களின் கோடிகோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத முழுமையான இனிமையான குரலில் நம்மை அணுஅணுவாக இன்ப சாகரத்தில் மூழ்க வைக்கும் ஒரு பாடல்.
இப்படி ஒரு குரலின் மூலம், இப்படி ஒரு டியூன் மூலம் நம்மை அப்படியே கட்டிபோட்டு விட முடியுமா...
முடியும் என்கிறார்கள் இப்பாடலைப் பாடிய பாடகியர் திலகமும், இசையமைத்த இசையமைப்பாளர் விஜயபாஸ்கரும்.
அப்படி நம் ரத்த நாளங்களில் புகுந்து இன்ப அதிர்வுகளை நமக்குள்ளே அதிரச் செய்யும் பாடல்.
முத்துராமன், பத்மபிரியா முக்கியப் பாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
தனக்கு வரப்போகும் வாழ்க்கை எப்படியெல்லாம் இருக்க வேண்டும்...தனக்கு வாய்க்கும் கணவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும்... என்று கற்பனை செய்து செய்து வைத்திருக்கிறாள் இந்த இளம் நங்கை.
அவள் நினைத்தது போலவே எல்லாம் நடக்க ஆரம்பிக்கிறது. வசதியான வாழ்வு அவளுக்குக் கிட்டவிருக்கிறது.
மனமெல்லாம் மகிழ்ச்சி பொங்க, தன் தோழியர் கூட்டத்திடம் தான் நினைத்திருந்த வாழ்வு கிட்டப் போவதை எண்ணி அவள் ஆனந்தமாய்ப் பாடுவதைக் கவனியுங்கள்.
அந்தக் குரலில் என்ன ஒரு மகிழ்ச்சி கலந்த ஆணவம்!
என்னை மாதிரி இந்த உலகிலே யார் அதிர்ஷ்டசாலி இருக்க முடியும் என்ற களிப்பான கர்வம்.
மகராணி போல மகராசியாய் வாழப் போகிறேன் என்று கொக்கரிக்கிறாள்.
அளவு கடந்த ஆனந்தத்தால் அவள் எதைக் கண்டாலும் அது அவளுக்கு சுகமாகவே தெரிகிறது.
எல்லோருக்கும் நினைத்த வாழ்வு எதிர்பார்த்தபடி கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அதை அவர்கள் ரசித்து அனுபவிப்பதில்லை. அப்படியே ரசித்தாலும் அந்த வாழ்வு அவர்களுக்கு நிலைப்பதில்லை.
ஆனால் என்னைப் பாருங்கள்.
நிலையான, என்றென்றும் நான் ரசித்து மகிழும் வாழ்வு எனக்குக் கிடைத்து விட்டது. நான் மகராணியல்லாமல் வேறு என்ன?
அந்த சந்தோஷத் தாரகை அழகுப் பதுமை பத்மப்ரியாதான். கொலு பொம்மை போல் நம் எல்லோரையும் தன் அளவான உடலமைப்பால் கவர்ந்தவர். கலர்ப்பட கதாநாயகி. அழகுமுகம். எடுத்த எடுப்பிலேயே நடிக இமயத்தின் ஜோடியாகி நம் 'வைர நெஞ்சங்'களில் ஊடுருவியவர்.
அவர் தோழிகளுடன் ஆடிப்பாடும் இந்த உற்சாகப் பாடலைப் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. ஆனால் பத்மப்ரியா இன்னும் நன்றகப் பண்ணியிருக்கலாம். ஆனால் அவர் அழகுத் தோற்றமும், ஸ்லிம்மான உடலும் எல்லாவற்றையும் மறக்கடித்து விடுகின்றது.
முழுக்க முழுக்க சுசீலாம்மா ஆக்கிரமிப்பு செய்த என் நெஞ்சமெல்லாம் நிறைந்துவிட்ட ஒரு பாடல்.
தெள்ளத் தெளிவான ஆணித்தரமான தமிழ் உச்சரிப்பு, குரலில் தெரியும் கர்வம், குரல் பாவம், 'நச்'நச்சென்று வாயிலிருந்து விழும் வார்த்தைகள்
இந்த 'தென்னகத்துக் குயில்' இப்பாடலில் செய்துகாட்டும் மாயாஜாலங்கள் தான் என்ன! உலகத்தில் வேறெந்தப் பாடகிக்காவது இவ்வளவு இனிமையான, முழுமையடைந்த குரல் இருக்கிறதா என்ன!
(இந்த மாதிரி தற்பெருமை பொங்கும் இன்னொரு பாடலை 'புது வெள்ளம்' படத்தில் சுசீலா 'நான் ராஜாவீட்டுக் கன்னுக்குட்டி...கன்னுக்குட்டி' என்று பாடி அசத்தியிருப்பார். கன்னட மஞ்சுளா படுதிமிர் கொண்ட ஜமீந்தார் வீட்டுப் பெண்ணாக அருமையாக நடித்திருப்பார்)
பஞ்சு அருணாச்சலம் இயற்றிய இப்பாடல் படத்தின் கதாநாயகியின் பாத்திரத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது. இயக்கம் தேவராஜ் மோகன்.
இனி பாடலின் வரிகளைப் பார்க்கலாம். பின் பாடலைப் பார்க்கலாம்.
பனிமலர் நீரில் ஆடும் அழகை
ரசிக்க மனதில் சுகமே
நினைவுகள் கோலம் போடும்
இளமை குலுங்கும் தங்க ரதமே
பனிமலர் நீரில் ஆடும் அழகை
ரசிக்க மனதில் சுகமே
(முத்துராமன் பத்மப்ரியா கேட்ட நகை, புடவையெல்லாம் வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறாரே! பின் ஏன் பத்மாவுக்கு சந்தோஷம் பொங்காது?)
எண்ணங்கள் இனிக்கட்டுமே
வண்ணங்கள் மலரட்டுமே
வாலிபம் சிரிக்கட்டுமே
வாழ்க்கையில் தொடரட்டுமே
மகராணி நான் மகராசி நான்
மகராணி நான் மகராசி நான்
மனது போலவே வாழ்வு கிடைத்தது
பார்க்கும் யாவையும் சுகம் சுகமே
பனிமலர் நீரில் ஆடும்
அழகை ரசிக்க மனதில் சுகமே
கண்ணான கண்ணன் வந்தான்
கண்ணோடு கண்ணை வைத்தான்
பொன்னான புன்னகையில்
பெண் என்னைத் தழுவிக் கொண்டான்
மகராணி நான் மகராசி நான்
மகராணி நான் மகராசி நான்
இரவு போனது பொழுது விடிந்தது
எனது நெஞ்சிலே சுகம் சுகமே
பனிமலர் நீரில் ஆடும்
அழகை ரசிக்க மனதில் சுகமே
எல்லோரும் நினைப்பதில்லை
நினைத்தாலும் கிடைப்பதில்லை
கிடைத்தாலும் ரசிப்பதில்லை
ரசித்தாலும் நிலைப்பதில்லை
மகராணி நான் மகராசி நான்
மகராணி நான் மகராசி நான்
நினைத்த யாவையும் உண்மையானது
இறைவன் கருணையால் சுகம் சுகமே
பனிமலர் நீரில் ஆடும் அழகை
ரசிக்க மனதில் சுகமே
http://www.youtube.com/watch?v=3FMxPvEBW6o&feature=player_detailpage
abkhlabhi
27th June 2014, 03:55 PM
நன்றிகள் பல வாசு சார்
இந்த பாடல் கொஞ்சம் கிட்ட தட்ட வாழ்க்கைக்கு சம்பதபட்டது. அதனால் மிகவும் பிடித்தமான பாடல்
பலமுறை மனதிற்குள்ளே பாடல். (நான்) பாத்ரூம் பாடகர் கூட கிடையாது.
திரைப்படம் : இரவும் பகலும்
பாடியவர் : டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: ஆலங்குடி சோமு
இசை: டி.ஆர் . பாப்பா
ஜெய் நடித்த முதல் படம்
"உள்ளத்தின் கதவுகள் கண்களடா - இங்கே
உறவுக்குக் காரணம் பெண்களடா
உள்ளத்தை ஒருத்திக்குக் கொடுத்துவிடு - அந்த
ஒருத்தியை உயிராய் மதித்து விடு"
பாடல் எழுத்துபவர்கள் கற்பனை உலகிலேயே மிதப்பார்கள் போல் இருக்கிறது. கற்பனை வேறு நிஜம் வேறு. பாடல் எழுதுபவர்கள் மட்டும் அல்ல , காதல் வய பட்டவர்களும், கற்பனை உலகத்திலே இருக்கிறார்கள்.
"காதல் என்பது தேன்கூடு - அதை
கட்டுவதென்றால் பெரும்பாடு"
அனுபவமான வரிகள். நிஜ வாழ்கையில் உண்மையே.
"காலம் நினைத்தால் கைகூடும் - அது
கனவாய்ப் போனால் மனம் வாடும்"
நிஜ வாழ்க்கையில் கனவாய் போய், மனம் வாடி, பிறகு கை கூடியது.
இப்பொழுதெல்லாம் காதல் எங்கே இருக்கிறது.
அவள் இல்லை என்றால் , இன்னொருத்தி, அவன் இல்லை என்றால் இன்னொருவன்.
உயிருக்கு உருவம் கிடையாது - அந்த
உயிரின்றி எதுவும் நடவாது
உயிருக்கு உருவம் கிடையாது - அந்த
உயிரின்றி எதுவும் நடவாது
உருவத்தில் உண்மை தெரியாது - என்றும்
உலகத்தில் நேர்மை அழியாது
............... நேர்மை எங்கே இருக்கிறது ?
http://www.youtube.com/watch?v=nMSJyKZd_HE
vasudevan31355
27th June 2014, 04:10 PM
அருமை பாலா சார்!
பாடல் எழுத்துபவர்கள் கற்பனை உலகிலேயே மிதப்பார்கள் போல் இருக்கிறது. கற்பனை வேறு நிஜம் வேறு.
அப்பட்டமான உண்மை.
நல்ல பாடல். அனைவருக்கும் பிடித்த பாடல்.
(நான்) பாத்ரூம் பாடகர் கூட கிடையாது.
சார்,
உங்கள் நச்' நகைச்சுவை அதிரடி கலந்த சுவை.
இப்பொழுதெல்லாம் காதல் எங்கே இருக்கிறது.
அவள் இல்லை என்றால் , இன்னொருத்தி, அவன் இல்லை என்றால் இன்னொருவன்.
இதுவும் முழுமையான உண்மை
............... நேர்மை எங்கே இருக்கிறது ?
'ஆயிரத்தில் ஒருவரி'டம்.:)
gkrishna
27th June 2014, 04:22 PM
வாசு சார்
வருக வருக இன்றைய உங்களின் சிறப்பு மதுர கானம் மறக்க முடியாத ஒரு பாடல் .
மகராணி நான் மகராசி நான்
மகராணி நான் மகராசி நான்
இந்த வரிகளை பாடும் போது சுசீலாவின் குரல் அலைகளை கவனித்தீர்கள் என்றால் தான் ஒரு மகாராணி என்று ஒரு தோரணை வெளிப்படும்
இந்த படத்தின் தயாரிப்பு பிலிமலாயா என்ற பத்திரிகை ஒன்று 1970-80 கால கட்டங்களில் வந்து கொண்டு இருந்ததது .அதன் நிறுவனர் ராமசந்தரன் என்று நினவு. பத்திரிகை ஆசிரியர் வல்லபன் இவர் தை பொங்கல் படத்தின் டைரக்டர் . யாரவது உறுதி செய்தால் நன்று
இந்த படத்தை பற்றி 75 கால கட்டத்தில் ஒரு விரிவான கட்டுரை ஒன்று
பிலிமலாயா பத்திரிகையில் படித்த நினவு
இந்த படத்தில் சுஜாதாவும் உண்டு என்று நினவு இவருக்கு அந்த ஆண்டின் சிறந்த நடிகை விருது இந்த படத்தில் நடிதததர்கக பிலிம் fare பத்திரிகை வழங்கி கௌரவித்தது என்றும் நினவு உண்டு
இதன் இயக்குனர் தேவராஜ் மோகன் பற்றி
http://www.cinemaexpress.com/cinemaexpress/story.aspx?Title=%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE %AF%E0%AE%B2%E0%AE%B2...+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE% 9C%E0%AE%AE!&artid=109527&SectionID=128&MainSectionID=128&SectionName=News&SEO=
இந்த டைரக்டர் மோகன் நடிகர் கார்த்திக்கின் மாமா (முத்துராமன் மனைவி தம்பி )
mr_karthik
27th June 2014, 04:44 PM
டியர் கோபால்,
தங்களின் ராகங்களைப் பற்றிய விளக்கபதிவுகள் மிக மிக அருமையான, பயனுள்ள பதிவுகளாக உள்ளன. ஒவ்வொரு ராகத்தையும் நீங்கள் விளக்கும் விதமும் அவற்றை ஆதாரமாகக் கொண்டு அமைந்த பாடல்கள் பற்றிய விவரங்களும், அதே ராகத்தில் அமைந்த மற்ற பாடல்களின் பட்டியலும் என ஒரு முழுமையான ராக ஆலாபனையாக அமைந்து உவகையூட்டுகின்றன. ராகங்களைப்பற்றி அறிந்திராத என்னைப்போன்ற மண்டூகங்களுக்கும் ஏதோ புரியத்தொடங்குகிறது.
அதுமட்டுமல்லாது, பாடல்களைப்பற்றிய இந்த திரிக்கு தேவையான மகுடமாகவும் தங்களின் இந்தப்பதிவுகள் விளங்குகின்றன. .
தாங்கள் குறிப்பிட்ட கவிஞர் மாயவநாதனின் 'தண்ணிலவு தேனிறைக்க' பாடலைப்பற்றி ஒன்றைச்சொல்லியாக வேண்டும். நம் ஆட்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. கடிவாளம் கட்டிய குதிரையாக, யாராவது ஒன்றைசசொன்னால் அதையே டிட்டோவாக காலாகாலத்துக்கும் சொல்லிக்கொண்டிருப்பது. 'தாழையாம் பூ முடிச்சு' பாடலில் நான்கே வாத்தியங்களை மட்டுமே மெல்லிசை மன்னர்கள் பயன்படுத்தியிருந்தனர் என்பதை ஒருவர் சொல்லப்போக அதையே பல்வேறு கட்டுரைகளிலும், மேடைகளிலும் எழுதி / முழங்கி 'இவ்வளவு குறைவான வாத்தியங்கள் யாரேனும் பயன்படுத்தியுள்ளனரா?' என்று சவாலெல்லாம் விடுவார்களே தவிர அதைவிடவும் குறைந்த வாத்தியங்களை அதே மெல்லிசை சக்ரவர்த்திகள் பயன்படுத்தியிருப்பதை தேட மாட்டார்கள்.
இப்போது சொல்கிறேன், 'தண்ணிலவு தேனிறைக்க தாழை மரம் நீர்தெளிக்க' பாடலில் சுசீலாவின் குரலைத்தவிர இரண்டே இரண்டு... ஆமாங்க... இரண்டே இரண்டு வாத்தியங்கள் மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். . ஒரு தபேலா ஒரு புல்லாங்குழல். இவ்விரண்டைத் தவிர வேறு எந்த இசைக்கருவியையும் பயன்படுத்தவில்லை. இப்பாடலுக்கு.
பல கீபோர்டுகளைப் பயன்படுத்தி, போன மாதம் போடப்பட்ட பாடல்கள் நம் சிந்தையில் தாங்காமல் போக, 52 ஆண்டுகளுக்கு முன் இரண்டே இசைக்கருவிகளுடன் இசைக்கப்பட்ட பாடலை (இத்தனைக்கும் கண்ணதாசனின் பங்கும் இப்பாடலில் இல்லை) இன்னும் புதுப்பொலிவோடு கேட்டு மகிழ்கிறோமே, அதுதான் மெல்லிசை மன்னர்களின் சாதனை.
abkhlabhi
27th June 2014, 04:50 PM
"மாற்றான் தொட்டது மல்லிகையும் மணக்கும்"
திரைப்பட பாடல்களை கேட்டு மகிழ்கிறோம். ஒரு சில பாடல்கள் , சில பேருக்கு வாழ்க்கைக்கு சம்பத்தபட்ததாக அமையும். அப்படி ஒரு பாடல் இதோ :
திரைபடத்தை தயாரித்தவர் : ராம அரங்கண்ணல்
இயக்கியவர் : கே பி (நம் கே பி தான்)
நடிகர் : கமல், சரிதா
இசை : நம் எம். ஸ். வி
பாடியவர் : சுசீலா
இப்படி எல்லாமே நமக்கு தெரிந்த முகங்களே. படம் என்னோவே தெலுங்கு.
பாடல் இடையில் தமிழ் வார்த்தைகளும் வரும்.
இந்த படமும், பாடலும் , கதையும், சில காட்சிகளும் (என்) வாழ்க்கைக்கு சம்பதபட்ட்தே. பல ஒற்றுமை.
அதில் சில :
1) நாயகனின் பெயரும் என் பெயரும் ஒன்றே.
2) நாயகனும், நாயகியும் வேறு வேறு மொழி பேசுபவர்கள்.
3) நாயகனும் நாயகியும் ஒரு வருடம் ஒருவரை ஒருவர் பார்க்காமல் , பேசாமல் பிரித்து இருப்பார்கள்.
இப்படி பல .
படம் சோகத்தில் முடியும். நிஜ வாழ்க்கையில் சுபம் (பல தடங்கலுக்கு பிறகு).
மிகவும் பிடித்த பாடல். படம் : மரோ சரித்திரா.
அருமையான இசை, இனிமையான சுசிலாவின் குரல், இளமை கமல், கே பி யின் visual படைப்பு. வேறு என்ன சொல்ல. அற்புதம்
http://www.youtube.com/watch?v=KhAFn8oCYNU
(குறிப்பு : If iam correct இந்த பாடலின் இசையை MSV, VKR தயாரித்த ருத்ர தாண்டவம் படத்தில் உபயயோக படுத்திருப்பார்).
mr_karthik
27th June 2014, 05:00 PM
டியர் பாலா சார், டியர் கிருஷ்ணா சார்,
பாடல் பதிவுகளை மழையாகப் பொழிந்து தள்ளி விட்டதால் எதைக்குறிப்பிட்டு பாராட்டுவதென்றே தெரியவில்லை.
முத்தான முத்தல்லவோ
நீ ஒரு மகாராணி
ஒரு கோடியில் இருமலர்கள்
பாக்தாத் பேரழகி
இரவும் பகலும்
பொண்ணுக்கு தங்க மனசு (கவிஞருடன் ராஜாவின் முதல் அனுபவம்)
அனைத்தும் சுவையோ சுவை.
தொய்வில்லாமல் தொடர்வதற்கு பாராட்டுக்கள்.
mr_karthik
27th June 2014, 05:20 PM
டியர் வாசு சார்,
இன்றைய ஸ்பெஷலாக நீங்கள் தந்த உறவு சொல்ல ஒருவன் படத்தில் இடம்பெற்ற 'பனிமலர் நீரில் ஆடும் அழகை' பாடல் ஆய்வு ஏ.ஒன. கருப்பு வெள்ளையில் ஒரு அழகுப்பாடல்.
பத்மப்ரியா நடித்த படங்கள் கொஞ்சமே என்றாலும் ஒன்றிரண்டு தவிர அனைத்துப் படங்களையும் பார்த்திருக்கிறேன். அழகான நடிகைகளை விட்டு விட்டு ஸ்ரீபிரியா போன்ற மொக்கைகளை நாயகியராகக் கொண்டாடும் திரையுலகில் இவரெல்லாம் அதிகப் படங்களில் தோன்ற முடியாமல் போனதில் விந்தையில்லை.
ஒரு அழகுப்பதுமையின் அழகான பாடலை எடுத்து அலசி (சி.க.கொடுத்த ரின் பாகெட்டைக்கொண்டா?) காணொளியாகவும் தந்து மகிழ்வித்ததற்கு மிக்க நன்றி.
இன்றைய ஸ்பெஷல் சிறப்பாக அமைய சிரத்தையெடுத்து வண்ணமயமாக அழகு படுத்துவது நன்றாக உள்ளது. அதற்காக மண்டை சைஸ் எழுத்துக்களில் போட்டுவிடாதீர்கள். அதை 'வேறு' திரியாளர்களுக்கு விட்டு விடுங்கள். இங்கு நம்மில் யாருக்கும் வெள்ளெழுத்து இல்லை.
gkrishna
27th June 2014, 05:51 PM
பாலா சார்
நீங்கள் சொல்வது 100 சதவிகிதம் உண்மை
ருத்ரதாண்டவம் திரை படத்தில்
"புது மஞ்சள் மேனி சிட்டு புடவைக்குள் ஊஞ்சல் இட்டு "
என்ற பாடல் விஜயகுமார் சுமித்ரா ஜோடி இதே மியூசிக் இதே துன்
http://music.cooltoad.com/music/song.php?id=519093&PHPSESSID=64ee05458d2bbadfa25fd4d31e5a084f
gkrishna
27th June 2014, 05:55 PM
அன்பு கார்த்திக் சார்
உங்கள் வாழ்த்துகள் மிகவும் ஊக்கத்தை தருகிறது
மிக்க நன்றி
மேலும் நீங்கள் சொன்னது போல் நம் தமிழ் சினிமா நிறைய மொக்கை நடிகைகளை மட்டும் அல்ல மொக்கை நடிகர்களையும் கொண்டாடி கொண்டுள்ளது இன்னும் கொண்டாடி கொண்டு இருக்கின்றது
"வாங்கி விட்டீர்களா இந்த வாரம் குமுதம் பக்கத்திற்கு பக்கம் வித்தியாசம் "
vasudevan31355
27th June 2014, 06:37 PM
கிருஷ்ணா சார்,
கண்ணனின் சன்னதியில்
எந்தன் கண்மணி புன்னகையில்
இனிமேல் காலங்கள் உள்ளவரை
எந்தன் பொன்மனிக்கென்ன குறை
பாடலைப் பற்றி எழுதி உள்ளீர்கள். இப்படத்தின் டிவிடிக்கள் இன்னும் வரவில்லை என்று நினைக்கிறேன்.
இப்பாடலைக் கேட்கும் போது ஒரு கொடியில் இரு மலர்கள் (காஞ்சித்தலைவன்) பாடலும் நம் கூடவே நினைவுக்கு வரும்.
vasudevan31355
27th June 2014, 06:49 PM
பதுமை பத்மப்ரியாவை கொஞ்சம் நினைவு கூர்வோம்.
http://padamhosting.com/out.php/i132216_vlcsnap-2011-12-14-22h48m48s133.png
http://www.mafiatamil.com/wp-content/uploads/2014/02/kannan-mugam-kaana.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/KuppathuRaja0000008.jpg
http://i1.ytimg.com/vi/cpa_216qijY/hqdefault.jpg
http://i1.ytimg.com/vi/AoDywRyfZ0s/hqdefault.jpg
vasudevan31355
27th June 2014, 06:53 PM
http://i1.ytimg.com/vi/gDxnvP9XJho/maxresdefault.jpg
vasudevan31355
27th June 2014, 06:58 PM
கன்னடத்தில் விஷ்ணுவர்த்தன் மற்றும் ராஜ்குமார் இவர்களுடன் பத்மப்ரியா
http://www.vishnuvardhan.com/images/ladies/padmapriya.jpg
http://img.youtube.com/vi/mZyaCoS9rPU/0.jpg
http://i1.ytimg.com/vi/IjsyWfZvGR0/hqdefault.jpg
http://i1.ytimg.com/vi/ogU0Au_Oudk/hqdefault.jpg
gkrishna
27th June 2014, 07:14 PM
வாசு சார்
"கொஞ்சம் (கொஞ்சும்) உரிமையுடன்" நமது திரி தொயுவு அடையாமால் செல்வதற்கு (அப்பாப்பா ) அப்ப அப்ப நீங்கள் போடும் சில stills மற்றும் உங்கள் சிறப்பு ஆய்வு . உங்கள் பணி என்றும் தொடர
என்றும் அன்புடன் மற்றும் நட்புடன்
jai padmapriya still
அன்று சிந்திய ரத்தம் தானே
"இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆனந்த பழக்கம்
இனிமேல் எனக்கேது உறக்கம்
எண்ணம் பதினாயிரம் "
பாலா வித் சுசீலா
vasudevan31355
27th June 2014, 07:33 PM
கிருஷ்ணா சார்,
http://images.boxtv.com/clips/520/14520/player_crop_1000x563_76278_14520.jpg
ஹய்யோ! அமர்க்களமான பாட்டு. பத்மா செம கிளாமர். அப்படியே பார்பி கேர்ள் மாதிரியே இருப்பார். தலையில் அந்த ரிப்பன் கட்டு அப்படியே நம்மைத் தூக்கிக் கொண்டு போய் விடும்.
வசந்தகாலம் தன்னில்
வைகை மீது வெள்ளம் ஓடும்
மதுரை தன்னில் உன்னை
கரையில் ஏறி எங்கும் தேடும்
வைகை காட்டிய வெள்ளம்
வைகை எனச் சொல்லும் உள்ளம்
கைவை வைகை காதல் பொய்கை
எண்ணம் பதினாயிரம்.
அழகான ரசமிகு கற்பனை. வைகை வெள்ளம் இந்த அம்மணியின் காதலனை கரை ஏறித் தேடுமாம். இதுவரை யாரும் செய்யத கற்பனை.
அப்புறம்
வை கை எனச் சொல்லும் உள்ளமாம்
என்ன துணிச்சல்?
'கைவை' 'வைகை' சொல் ஜாலம்
ம்.. இப்போதும் எழுதுறாங்களே பாட்டு. நாம் பாட்டு விட்டு என்ன ஆகப் போவுது.
பாடலைப் பார்த்தால் பத்தும் மறந்து போம்.
http://www.youtube.com/watch?v=Kcc9ZwACfh4&feature=player_detailpage
gkrishna
27th June 2014, 07:51 PM
காஷ்மீர் காதலி 1980
மதி ஒளி சண்முகம் டைரக்டர்
ராஜ்குமார் (லத்து பிரதர் ஸ்ரீப்ரிய கணவர்),ரஜினி ஷர்ம,புஷ்பலதா,வீ கே ராமசாமி போன்றோர் நடித்து வெளி வந்தது
இந்த ரஜினி ஷர்ம நடித்து psv pictures தயாரிப்பில் வெளி வந்த
மேகத்துக்கும் தாகமுண்டு படத்திலும் நடித்தார்கள் .இந்த படத்தில் இரண்டு நல்ல பாடல்கள் உண்டு அதையும் அலசனும்
மேலும் நம் NT இன் மாடி வீட்டு ஏழை படத்தில் முதல் பாடலுக்கும்
நடன நடிகையாக வருவார்கள்
gk வெங்கடேஷ் இசை
படம் பூராவும் காஷ்மீரில் பிடிகபட்டதாக எழுதி இருந்தார்கள்
கண்ணுக்கு குளிர்ச்சி
ஹீரோ மாவு லிங்கம் கதாநாயகி மக்கு சக்தி
படம் ரிலீஸ் ஆன உடனேயே பெட்டிக்குள் சுருண்டு கொண்டது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்
ஆனால் பாடல்கள் மணி சார்
ஜெயச்சந்திரன் சுசீலா குரல்களில்
அருமையான சுசீலாவின் ஹம்மிங் உடன்
கிடார் வயலின் பங்கோ இசையுடன்
முதலாவது சரணத்தில் நாதஸ்வர இசை
"சங்கீதமே என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே என் ராஜாங்கமே வானோறும் காணாத பேரின்பமே "
"சங்கீதமே என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே என் ராஜாங்கமே வானோறும் காணாத பேரின்பமே "
கல்யாண பெண்ணாக உன்னை பார்த்தது
கார்மேகம் மாணிக்க பந்தல் போட்டது
காஷ்மீரின் சாரல் பன்னீரின் தூறல்
காஷ்மீரின் சாரல் பன்னீரின் தூறல்
பூங்காற்று வாழ்த்து சொல்லி போகின்றதோ
(சங்கீதமே )
நான் கொண்ட செந்தூரம் உந்தன் நெஞ்சினிலே
நாள் தோறும் சேரட்டும் உந்தன் அன்பினிலே
நாணத்தில் நானும் மோஹதில் நீயும்
போராடும் காட்சி தனை என் என்பதோ
(சங்கீதமே )
அம்மாவுக்கு நாணமும் வரலே ஐயாவுக்கு மோஹமும் வரலே
http://www.youtube.com/watch?v=oR_-P_tB4FA
gkrishna
27th June 2014, 07:59 PM
இது நான் ரொம்ப ரசிச்ச பாட்டு சார் 1976 அல்லது 77 பொங்கல் ரிலீஸ்
நெல்லை ரதனவில்
அசோகன் வில்லன் அவர் கதாபாத்திரத்தின் பெயர் உடையப்பன்
பேபி சுமதி அவர் அண்ணன் மாஸ்டர் பிரபாகர் அவர் தம்பி குமார் எல்லோரும் சேர்ந்து ஒரு பாட்டு பாடுவாங்க சுசீலா குரலில் lovely சாங்
"பிருந்தாவனம் யமுனா நதி விளையாடினாலே " குழந்தை அழற சத்தம் எல்லாம் கேட்கும் பாட்டு இறுதியில் உடயப்பனை பழி வாங்கணும்
எல்லாம் சபதம் எடுக்கும் . திரை அரங்கமே அவர்களின் வீராதி கண்டு அல்லோகலப்படும்
அபபறும் பாடகர் திலகம் குரலில் "எந்த காட்டிலும் பெரியது வேங்கை டிசும் டிசும் "
துப்பாக்கியே வைத்து கொண்டு சுட்டு கொண்டு வருவர் ஜெய்
direction மாடர்ன் தியேட்டர் சுந்தரம் நு நினவு
கீதா சித்ரா production
vasudevan31355
27th June 2014, 08:24 PM
அம்மாவுக்கு நாணமும் வரலே ஐயாவுக்கு மோஹமும் வரலே
எனக்கு சிரிப்பா வருது கிருஷ்ணா சார்.
ஆனா ரொம்ப அபூர்வ பாடலைப் பிடிச்சிருக்கீங்க. கிருஷ்ணா சாரா கொக்கான்னானாம்.
ஜெயச்சந்திரன் நல்ல பாடகர்தான். ஆனால் ஏற்ற இறக்கங்கள், பாவங்கள் அவ்வளவா இருக்காது அப்படிங்கிறது எனது தாழ்மையான கருத்து. ஒரே மாதிரி இருக்கும். யாரும் கோவிச்சிக்க வேண்டாம். என்னுடைய சொந்தக் கருத்து மட்டுமே!
இந்த ராஜ்குமார் குழந்தை அம்பிகாவுடன் 'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்துல 'தேன் பூவே பூவே வா' (மொட்டை ராஜாவின் கலக்கல்) பாட்டுக்கும், அப்புறம் கமல், அம்பிகா கூட 'காதல் பரிசு' படத்தில் கூ கூ என்று குயில் கூவாதோ பாட்டுக்கு ஆடுமே!
vasudevan31355
27th June 2014, 08:34 PM
'பிருந்தாவனம் யமுனா நதி' நல்ல சாங்.
நம்ம பேபி சுமதி பாடும் பாட்டு
ஆனா கொடுத்திருக்கிற வீடியோவில ஆடியோவும்,வீடியோவும் மேட்ச் ஆகல.
'மெல்லிசை மாமணி' குமார் எப்போதுமே தனித்து தெரிவார். சின்ன வயசில் குமார் என்றால் எனக்கு அவ்வளவாக தெரியாது.
எல்லா பாட்டுக்கும் எம்.எஸ்.வி.இசை.... பாடுபவர்கள் எல்லாம் சௌந்தரராஜன், சுசீலா என்றே நினைத்துக் கொண்டிருந்த காலம் இது. இன்னும் கேட்டா ரேடியோவில் பாடியவர்கள் டி .எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா என்று சொன்னாலே இருவரும் கணவன் மனைவி போல் இருக்கிறது என்று வெள்ளேந்தியாக நினைத்துக் கொள்வேன்.:banghead: எல்லோரும் அப்படித்தானா அல்லது நான் மட்டுமா என்று தெரியவில்லை.
அப்போது தெரியுமா இப்ப கார்த்திக் சார் , கிருஷ்ணா சார், பாலா சார், மற்ற நண்பர்களுடன் இசை அரட்டை அடிப்போம் என்று?
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=shXMCZCB0Ug
Gopal.s
27th June 2014, 08:43 PM
ரீதி கவுளை.
கர கர பிரியாவின் ஜன்ய ராகம். எக்கச் சக்க வக்கிர பிரயோகங்களுடன் பாடகரின் கற்பனையை தூண்டி சுடர் விட செய்து ,கேட்போரை சொக்க செய்யும்.
தாளத்தையும், நீளத்தையும் (metre ) பொறுத்து புது அவதாரம் எடுக்கும் சாத்தியமுள்ள ராகம் ,இது உங்கள் ஆசையை தூண்டி மானசீக காதலில் திளைக்க செய்யும். உங்கள் வயதை குறைக்கவல்ல மார்கண்டேய மாத்திரை போன்ற ராகம்.
கர்நாடக ராகங்களிலேயே மிக பெருமை மிக்கதான இந்த ராகத்தில் எந்த பாடலும் ரொம்ப பிரபலாகவில்லை 70 வரை. (ராகவேந்தர் சொன்ன தெனாலிராமன் பாடல் நான் கேட்டதில்லை).
எனக்கு தெரிந்து இந்த ராகத்தில் வந்த முதல் பாடல் சுபதினம்(1969) படத்தில் கே.வீ.மகாதேவன் பெயரில் வெளி வந்த "புத்தம் புது மேனி இசை தேனி தூங்கும் மலர் வண்ணமோ " என்ற பாலமுரளியின் பாடல்.(அசலாக டி.ஜி.லிங்கப்பா போட்ட பாடல். டி.ஜி.லிங்கப்பாவின் மற்றொரு பாடலான குங்கும பூவே சந்திர பாபுவால் கடத்த பட்டு மரகதத்தில் எஸ்.எம்.எஸ் பெயரில் வந்தது.)அற்புதமான பாடல்.
இதையடுத்து சின்ன கண்ணன் அழைக்கிறான் ,கவி குயிலில். அடுத்து
தலையை குனியும் தாமரையே ஒரு ஓடை நதியாகிறது படத்தில்.
வசீகரமான பாடல் அழகான ராட்சசியே ,முதல்வனில். சமீபத்தில் james vasanthan போட்ட கண்கள் இரண்டால் படு பிரபலமாகி படத்தையே தூக்கி நிறுத்தியது.
RAGHAVENDRA
27th June 2014, 09:34 PM
கோபால்,
ரீதி கௌளை ராகம் பற்றிய விளக்கம் அருமை.
தெனாலி ராமன் படத்தில் தென்னவன் தாய் நாட்டு சிங்காரமே என்கிற இப்பாடல் இடம் பெற்றிருந்தால் படத்தின் சிறப்பு இன்னும் அதிகமாகி யிருக்கும். பின்னர் பி.எஸ். ரங்கா இப்பாடலை குடும்ப கௌரவம் படத்திற்காக பயன் படுத்திக் கொண்டார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.
இது வரை இப்பாடலைக் கேட்காதவர்களுக்காக இதோ இணைப்பு
http://psusheela.org/audio/ra/tamil/all/thennavan_thaainattu_singarama.ra
இப்பாடலை ரியல் மீடியா ப்ளேயரில் மட்டுமே கேட்க முடியும்.
Gopal.s
27th June 2014, 09:53 PM
Thanks Ragavendhar Sir. First time ,I am listening to this song. Nice number by Viswanathan-ramamoorthy in Reethigowlai. Probably first attempt in this raga most probably by T.K.Ramamoorthy.
Gopal.s
28th June 2014, 03:24 AM
ஒரே ராகத்தில் உருவானதாக சொல்ல பட்டாலும்,இவ்வளவு வேறுபாடுகள் எங்கிருந்து வருகின்றன?
இங்குதான் இசையமைப்பாளர்களின் மேதமை நிற்கிறது.(கீழ்கண்டவற்றை இசையின் தன்மை கெடாமல் மக்களின் ரசனையை அடிநாதமாய் பிடித்து அவர்களை கேட்ட உடனே அல்லது கேட்க கேட்க (acquired )அடிமை கொள்ள வேண்டும்)
1)ராகத்தின் tempo எனப்படும் metre மாற்றுவது.
2)சுருதி (Tonic )மாற்றி பாடலின் tone மாற்றுவது.
3)ஸ்வரங்களின் அணிவகுப்பில் விளையாடி,கமகம் (ornamentation ),கற்பனை (kalpana ) என்று ஒரு பிடி பிடிப்பது.
4)பல கலப்பு ராகங்கள் உருவாக்கி விளையாடுவது.
5)Musical arrangements மற்றும் interludes விளையாட்டுக்கள்.
6)தாளங்களில் மாற்றங்கள் மற்றும் புத்திசாலி கலப்படங்கள்.(rhythm Arrangement )
தாளங்களை(Clap ) பற்றி சுளுவாக சொல்லலாம்.
1)ஒரு தட்டு தொடையில் தட்டினால் அனுத்ருதம்(U ) ஒரு அக்ஷரம்..
2)ஒரு தட்டு தொடையில் தட்டி ,ஒரு வீச்சு காற்றில் வீசினால் த்ருதம் .(0) 2 அக்ஷரங்கள்.
3)ஒரு தட்டு தொடையில் தட்டி சுண்டு விரல்,மோதிர விரல்,நடு விரல் என்று கணக்காக்கி விளையாடுவது லகு(1) .(ஒரு தட்டு இரு விரல் என்றால் 3 அக்ஷர திச்ர ஜதி.ஒரு தட்டு மூன்று விரல் என்றால் சதுச்ர ஜதி 4 அக்ஷரம்.ஒரு தட்டு நான்கு விரல்கள் என்றால் கண்ட ஜதி 5 அக்ஷரங்கள்.ஒரு தட்டு 6 விரல்கள் என்றால் மிஸ்ர ஜதி 7 அக்ஷரங்கள். ஒரு தட்டு 8 விரல்கள் என்றால் சங்கீர்ண ஜதி 9 அக்ஷரங்கள் )
4)சதுஸ்ர ஜதி அடிப்படையில் 4 அக்ஷரங்கள் கொண்ட லகு என்று எடுத்து தாளங்களை அலசினால் சுலபம்..
ஆதி தாளம் என்பது 100(ஒரு தட்டு மூணு விரல் எண்ணி ஒரு தட்டு ஒரு வீச்சு ஒரு தட்டு ஒரு வீச்சு)- 8 அக்ஷரங்கள்.
ரூபக தாளம் என்பது U 0 (ஒரு தட்டு ஒரு வீச்சு ஒரு தட்டு)-3 அக்ஷரங்கள்.
மிஸ்ர சாப்பு என்பது ஒரு தட்டு இரண்டு விரல் ,ஒரு தட்டு ஒரு வீச்சு,ஒரு தட்டு ஒரு வீச்சு .7 அக்ஷரங்கள்.
இது மாதிரி நிறைய.
தாளத்தில் விளையாடி ஒவ்வொரு பாட்டுக்கும் புது மெருகு கொடுக்கலாம்.
இசை மிக சுலபம். கற்பனை வார்த்தைகளாக திரிந்து கெட்டு போகாமல் சுருதி சுரமாகவே பிறவியில் அமையுமென்றால்.
Gopal.s
28th June 2014, 04:22 AM
காப்பி ராகம் /பிலு ராகம்.
மேற்குறிப்பிட்ட இரண்டு ராகங்களுமே அண்ணன் தம்பி போன்றவை
காப்பி ராகத்தை பொறுத்த வரை light classical என்ற வகைக்கே ஏற்படுத்த பட்ட ராகம். அமைப்பிலேயே பலவித கற்பனைகளுக்கு இடமளித்து ,இசையமைப்பாளர்களை மகிழ்விக்கும் மாலை தென்றல்.
மாலையில் காப்பி குடித்து கொண்டே கேட்டு மகிழலாம்.பக்தி,நெகிழ்ச்சி,காதல்,உருக்கம்,உல்ல ாசம் எல்லாமே இந்த ராகம் தன் note களில் உள்ளடக்கியது.நிறைய இசையமைப்பாளர்களின் ,நிறைய தமிழ் பாடல்களில் புகுந்து புறப்பட்ட ராகம்.
எனக்கு சிறு வயதில் டி.எம்.எஸ் ரசிகனாக இருந்ததனால்தானோ என்னவோ உரத்த ஓங்கார இசை பிடித்தே இருந்தது.அப்போது இலக்கிய மொழி ஈடுபாட்டினால் பாடல்களில் சங்கம் தேடும் இயல்பினால் ஒரு பாடல் என்னை ஸ்தம்பிக்க வைத்தது."சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே". கண்ணதாசன் முதல் முதலில் தான் வசனகர்த்தா அல்ல கவிஞனே என்று ஸ்தாபிக்க தன் நண்பர்களை துணை கொண்டு (விஸ்வநாதன்-ராமமூர்த்தி)மாலையிட்ட மங்கை எடுத்தார்.(நன்றி சிவகங்கை சீமை,முழு கவிஞன் நமக்கு கிடைத்தான்).ஒரு ஆணின் சிருங்காரமும் ஒரு பெண்ணின் உரத்த குரலும் இணைந்த வினோத குரலான் டி.ஆர்.மகாலிங்கத்தின் "செந்தமிழ் தென் மொழியாள் ".
அந்த காதல் செவிலி மங்கையோ ,ஒரு மருத்துவனை மணந்து இனிய இல்வாழ்க்கை கண்டு மகிழுங்கால் ,அய்யகோ க்ஷயம் வந்து நொந்து கணவன் கடமை துறந்து அவளே கதியென கிடக்க (உயிர் போச்சா இருக்கா,ஐ அம கமிங் ,ஐயம் கமிங்),கணவனை கடமைக்கு இழுக்க தன்னை துறந்து சென்று வெளிநாட்டில் நோய் குணம் கண்டு கணவனை எண்ணி பாடும் தெய்வ திருப்பாடகி அம்மா சுசிலாவின் "காதல் சிறகை காற்றினில் விரித்து".
கல்லூரி மூன்றாம் வருட படிப்பின் போது ,ஒரு தீபாவளியை முன்னிட்டு ஹாஸ்டல் சிறைவாசம் துறந்து ,நெய்வேலி ஊர் சென்றேன். வழக்கம் போல நண்பர்களுடன் மெயின் பஜார் என்று சொல்ல படும் ஊரின் ஒரே ஷாப்பிங் மால் அருகேயான ஒரு டீக்கடையில் (பட்டாசுடன்)ஒரு பாடல்.(அப்போது ரிலீஸ் ஆகாத)அப்படியே உலுக்கி போட்டது அந்த தாள கட்டும் பாடலின் அமைப்பும் கருவிகளின் துல்லியமும். உடனே அந்த இசை தட்டில் பட பெயர் பார்த்தேன் .பிரியா-ஸ்டீரியோ போனிக் என போட பட்டிருந்தது. இன்று வரை என்னை அடிமை கொண்ட அந்த பாடல் "ஏ பாடல் ஒன்று ராகம் ஒன்று ".
காப்பியில் என்னை கவர்ந்த மற்ற காப்பி கானங்கள்.
அன்னையும் தந்தையும் தானே- ஹரிதாஸ்.
மதுரா நகரில் தமிழ் சங்கம்- பார் மகளே பார்.
அந்த சிவகாமி மகனிடம்-பட்டணத்தில் பூதம்.
கண்ணே கலை மானே- மூன்றாம் பிறை.
காதல் ரோஜாவே- ரோஜா .
என் மேல் விழுந்த மழைத்துளியே-மே மாதம்.
அன்ப அன்பே கொல்லாதே-ஜீன்ஸ்.
உருகுதே உருகுதே ஒரே பார்வையாலே-வெய்யில்.
பிலு ராக அதிசயங்கள்-
உனது மலர் கொடியிலே -பாத காணிக்கை.
மலர்களிலே பல நிறம் -திருமால் பெருமை.
கேட்டதும் கொடுப்பவனே- தெய்வ மகன்.
அண்ணன் ஒரு கோவில் என்றால்-அண்ணன் ஒரு கோவில்.
RAGHAVENDRA
28th June 2014, 06:26 AM
காபி ராகத்தில்
சமையல்காரன் திரைப்படத்தில் நான் பாடிடும் கவிதையின் சந்தம்
http://youtu.be/mUXxMUwtR2Y
Gopal.s
28th June 2014, 09:17 AM
ஒரு வித்தியாசமான முதலிரவு பாடல். இந்த திரி அதிகம் அறியாத,அறிய படாத வித்தியாச பாடல்களை அலச நான் ஆசை படுகிறேன்.அந்த வகையில் மெல்லிசை மன்னரின் அற்புத composition .இந்த வெற்றி படத்தின் வெற்றி பாடல்களின் நடுவே கவனிக்க படாமல் போயிற்று.
இந்த பாட்டு அளவிற்கு அழகழகான துணை நடிகைகளை (நல்ல உடை)எந்த பாட்டிலும் பார்த்ததில்லை. கதாநாயகி (வேண்டாம். எல்லோரையும் மூட் அவுட் பண்ண விரும்பவில்லை.)பேசாமல் விட்டு விடுகிறேன்.
அந்த பாடல் அழகு முகம் பழகு சுகம் அறியாத சொர்க்கம் ஆயிரம்.
படத்தின் பெயர் பாட்டிலேயே.
Gopal.s
28th June 2014, 09:26 AM
https://www.youtube.com/watch?v=1u9C_ZLG5AU
Song has been loaded.Suddenly it is not appearing. cant make out.Sorry.
vasudevan31355
28th June 2014, 09:27 AM
இன்றைய ஸ்பெஷல் (15)
http://www.thehindu.com/multimedia/dynamic/00621/03mp_Iru_Kodugal_jp_621228g.jpg
இன்றைய ஸ்பெஷலில் நாம் பார்க்கப் போகும் பாடல் எல்லோருக்கும் மிகவும் தெரிந்த பாடல்தான். அபூர்வம் இல்லை. இப்பாடலைத் தெரியாவிடில்தான் அது அபூர்வமான விஷயம்.
'பின் தெரிந்த பாடலை ஏன் எடுத்தாய்?' என்கிறீர்களா... சொல்கிறேன். எல்லோருக்கும் இப்பாடலின் அர்த்தம் புரியும்தான். இருந்தாலும் ஒரு பாடலிலேயே படத்தின் முழுக் கதையையும் நமக்கு உணர்த்திவிடும் கவிஞரின் வரிகள், இயக்குனர் சிகரத்தின் இயக்கம், வி.குமார் அவர்களின் பிரத்தியோக தனி ஸ்டைல், சௌகார், ஜெயந்தியின் உள்வாங்கல், என்று இப்பாடல் என்னையறியாமல் என்னை எழுதத் தூண்டிற்று.
பொதுவாகவே பாலச்சந்தர் படங்களில் இரு பாடகிகள் பாடுவதாக (அதில் சாமர்த்தியம் பாருங்கள்... இருவருமே கதையின் நாயகிகளாகவே இருப்பார்கள், படம் பார்ப்பவர்களுக்கு இரு பெண்மணிகள் மீதும் பச்சாதாபமும், பரிவும் ஏற்படும். 'இவள் சொல்வது சரிதானே....இல்லை இல்லை.... அவள் செய்வதும் சரிதானே'! என்று நம் மனம் யார் பக்கம் சாய்வது என்று திண்டாடும். அதுதான்பா பாலச்சந்தர்) வரும் பாடல்கள் அருமையோ அருமை. பாடலின் வரிகளும், பாடலின் படமாக்கலும் அந்தப் படத்தின் கதையையே நமக்கு வெகு இலகுவாக உணர்த்தி விடும்.
உதாரணத்திற்கு
'வெள்ளிவிழா'வில் 'கை நிறைய சோழி... கொண்டு வந்தேன் மாமி... காயை வெட்டலாமா கண் விழிக்கும் நாழி' பாடல்.
ஜெயந்தி vs வாணிஸ்ரீ
'அடிப் போடி பைத்தியக்காரி' அன்புச்சண்டை நடப்பது 'தாமரை நெஞ்ச'த்தில்.
வாணிஸ்ரீ vs சரோஜாதேவி
இப்போது நாம் பார்க்கப் போவது
இதுவும் பரிதாபமான சக்களத்தி சண்டைதான்.
'புன்னகை மன்னன்... பூவிழிக் கண்ணன்... பாடல் 'இரு கோடுகளி'ல்
இரட்டை நாயகிகள் (ஜெயந்தி, சௌகார்)
கலெக்டரான சௌகார் ஜானகி தன்னிடம் பணிபுரியும் ஜெமினி கணேசன் வீட்டின் கொலு விழாவிற்கு செல்லுகிறார். (கதை வேண்டாம். அனைவரும் அறிந்ததே!)
நவராத்திரியில் கொலுமண்டபத்தில் நாயகன் ஜெமினியின் இரு நாயகிகள்.
முதல் மனைவி சௌகார்
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/IruKodugal0006.jpg
இரண்டாவது மனைவி ஜெயந்தி.
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/IruKodugal0001.jpg
இருவருமே ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் புரிந்தவர்கள் அடுத்தவர்களுக்கு அதிகம் தெரியாத வகையில்.
கொலுப் பண்டிகையில் இரண்டாவது மனைவி பாட ஆரம்பிக்கிறாள் இல்லை இல்லை கேள்விக்கணைகள் தொடுக்க ஆரம்பிக்கிறாள் தன் கணவனைப் பங்கு கேட்க வந்திருக்கும் முதலாமவளைப் பார்த்து.
indirect ஆக.
நவராத்திரியில் கொலு மண்டபத்தில்
இவள் பாடலிலே ஒரு கேள்வி பிறக்கும்
என்று அவள் (ஜெயந்தி) நைஸாக ஆரம்பிக்கிறாள்.
அதற்கு முதலாமவள் (சௌகார்)
நவராத்திரியில் கொலு மண்டபத்தில்
இவள் பாடலிலே ஒரு பதில் மறைந்திருக்கும்.
(நீ கேட்க வேண்டியதைக் கேள்...என்ன கேட்கப் போகிறாய் என்றும் எனக்குத் தெரியும். நான் அதற்கு நியாயமான பதிலைத் தருகிறேன். ஆனால் அந்த பதிலை ஏற்றுக் கொள்வாயா)
இனி நடிகைகளின் பெயரிலேயே வாக்குவாதங்கள் தொடரும்
'புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்
ருக்மணிக்காக
அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும்
கண்மணிக்காக'
என்று கணவன் ஜெமினி 'இந்த ஜெயந்தி ருக்மணிக்கே' என்று எடுத்த எடுப்பிலேயே ஒரு போடு (சூடு) போடுகிறார்.
சௌகார் என்ன சளைத்தவரா?!
'புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் இருவருக்காக
இந்த பாமாருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக'
என்று பதில் சூடு போடுகிறார். ஆனால் முதலாமவளைப் போல அல்ல. விட்டுக் கொடுத்து. 'நாம் இருவருமே அவர் ஒருவருக்குத் தானே!' 'என்னையும் சேர்த்துக்கோயேன்' பரிதாபக் கெஞ்சல்.
ஜெயந்தி
தேவன் முருகன் கோவில் கொண்டது வள்ளியின் நெஞ்சத்திலே
சௌகார்
அவன் தேவானை என்றொரு பூவையை மணந்தது திருப்பரங்குன்றத்திலே!
கதைக்கும், இப்பாடல் வரிக்கும் அப்படி ஒரு சம்பந்தம். (வட இந்தியா சென்றிருக்கையில் சௌகாரை காதல் மன்னன் சொக்க வைத்து திருமணம் செய்து கொண்டதை முருகன் குன்றத்திலே தேவானையை மணந்ததற்கு சமாக ஒப்பிட்ட இந்தக் கவிஞனின் திறமை!)
ஜெயந்தியின் ஆதங்கம்
மாலையிட்டால் அது ஓர் முறைதான் என நினைப்பது பெண்மையன்றோ!
சௌகாரின் சூசகம்
ஒரு மாலையை இரு தோளுக்கு சூடுதல் இறைவன் தன்மையன்றோ!
ஜெயந்தி பஞ்ச்
'அது ஏட்டில் உள்ள கதை'
(புராண இதிகாச கதைகள் பொய்க் கதைகள் தானே! அந்தக் கதையெல்லாம் இங்கு விடாதே அம்மாயி)
இதற்கு சௌகாரின் பரிதாப பதில்
'இது இன்றும் தொடரும் கதை'.
(ஏன் நீயும், நானும் இப்போது இல்லையா? இதெல்லாம் கதையா?)
ஜெயந்தி
'அது பொம்மைக் கல்யாணம்'
(சாமியாவது மண்ணாவது..... ச்சும்மா கதை விட்ருக்காங்க... பொம்மை விளையாட்டுதானே! விளையாட்டோடு மறந்துடணும்...)
(கணவனை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்ற உறுதியில் ஒரு கணம் சாமி கல்யாணத்தைக் கூட பொம்மைக் கல்யாணம்தானே என்று அலட்சியப் படுத்தும் (பக்தியாய் இருந்தாலும் கூட) அற்புதமான சராசரி மனைவியின் மனோபாவம் இரண்டாமவளுக்கு)
சௌகார்
'இது உண்மைக் கல்யாணம்'
(பாவி! உனக்கு முன்னாலேயே உன் புருஷன் எனக்குப் புருஷனாயிட்டாருடி, புரிஞ்சுக்கோடி! படுத்தாதே! உண்மையிலேயே எங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சி)
ஜெயந்தி
கொஞ்சும் கணவன் குங்குமம் வைப்பது ஒருத்தியின் நெற்றியிலே
சௌகார்
அந்த குங்குமம் வைத்தவன் சங்கமமாவது இருவரின் நெஞ்சினிலே!
ஜெயந்தி
ஈருடல் என்றும் ஓருடல் தன்னில் இருந்திட வழியுண்டோ
சௌகார்
ஒரு முகத்துக்கு இரண்டு விழிகளை வைத்த இயற்கையில் தவறுண்டோ
(ஒரு முகத்துக்கு இரண்டு கண்கள் இருக்கும் போது அந்த மனுஷனுக்கு நாம ரெண்டு பேருமே மனைவியாய் இருந்தா என்னம்மா! தப்பே இல்லைதானே!)
ஜெயந்தி
இந்தக் கேள்விக்கு பதிலேது?
(இப்படியே வளர்த்திகிட்டே போனா வேலைக்கு ஆகாது. இதுக்கு ஆண்டவன்தான் பதில் சொல்லணும்.)
சௌகார் (வெறுத்துப் போய்)
சிலர் வாழ்வுக்குப் பொருளேது?
(அர்த்தமில்லாமல் வாழ்ந்து என்ன பிரயோஜனம்?)
ஜெயந்தி (கோபமாகவே)
அது உறவின் மாறாட்டம்
(நீ cheat பண்ற! என் புருஷனைப் பறிச்சிகிட்டு என்னை நட்டாத்துல தவிக்க விடப் போறதுக்கு பிளான் பண்ற! உறவை மாத்தப் பாக்குறியே! இதெல்லாம் நல்லாவா இருக்கு!)
சௌகார்
இது உரிமைப் போராட்டம்.
(இல்லம்மா! நான் கேட்பது உரிமைதான். உன் கணவர் என் கணவர் இல்லையா? அதுவும் உனக்கு முன்னாலேயே! என் கணவர்ன்னு அவரை சொல்ற உரிமையையாவது எனக்குக் கொடு. போராடிகிட்டு இருக்கேன். இனி நீதான் முடிவு செய்யணும்)
ஒரு பாடலிலேயே எத்தனை வார்த்தை ஜாலங்கள்! உரிமையை விட்டுக் கொடுக்காத ஒரு பெண். உரிமைக்காக போராடும் ஒரு பெண். அவள் சூழ்நிலையை அவள் சொல்லிவிட்டாள். இவள் நிலைமையை இவள் சொல்லி விட்டாள்.
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/IruKodugal0005.jpg (http://s1098.photobucket.com/user/albertjraj/media/IruKodugal0005.jpg.html)
(ஆனா எல்லாத்துக்கும் காரணம் அந்த காதல் மன்னன் தான். எங்க போனாலும் இந்த ஆளு சும்மா இருக்க மாட்டாரா? அங்க ஒன்ன பிக்-அப் பண்ணிக்கிட்டு அப்புறம் இங்க ஒன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு தானும் அவதிப்பட்டு, அந்த இரண்டையும் அழவைத்து. இதே வேலையா இந்த ஜெமினிக்கு. 'பார்த்தால் பசிதீரும்'ல சாவித்திரியை காதலிச்சிட்டு சௌகாரை கல்யாணம் பண்ணிப்பார். வழக்கம் போல மூவரும் அவஸ்தைப் படுவார்கள். அதுல சௌகார் ரெண்டாந்தாரம்.)
நாம யார் பக்கம் பேசறது. சொல்லுங்கோ! தெரியாமத்தான் கேக்குறேன்.
இந்தக் கேள்விக்கு பதிலேது?
வள்ளியும், தேவானையும் மோதுவதைப் பாருங்க. (பாடியவர்களைப் பற்றி பேசுவது தேவையே இல்லாதது)
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=hCR7rD4-K7c
Gopal.s
28th June 2014, 09:36 AM
Nil Gavani Kathali (1969) Movie Details
Nil Gavani Kathali
Name: Nil Gavani Kathali
Tamil Name: நில் கவனி காதலி
Director: C.V.Rajendran
Music Director: MS Viswanathan
Producer: Reenaa Films
Released year: 1969
Nil Gavani Kathali Film Songs
Song Name Duration Singers Lyricist
Jillendra Kaatru 04:21 P.Susheela , TM.Soundararajan Kannadasan
Engeyo Paarthamugam 02:56 LR.Eswari , PB.Srinivas Vaali
Kangalukkenna LR.Eswari Vaali
Nil Gavani Kathali a nice movie of my schooldays .Rajakutti naan yeppadi is another song from this movie.Can anybody uploadthat song? (I wish as per original plan C.V.R made this movie with Ravichandran. )
Gopal.s
28th June 2014, 09:39 AM
https://www.youtube.com/watch?v=VT2liapg6FE
Gopal.s
28th June 2014, 09:48 AM
Well tuned and rendered by ilayaraja(different) in an unreleased film pudhiya swarangal??
https://www.youtube.com/watch?v=h352qL6CxFM
Gopal.s
28th June 2014, 10:09 AM
https://www.youtube.com/watch?v=FIyNMADSFxo
இந்த ராகத்தை பற்றி பின்னால் எழுத போகிறேன். ஆனால் இந்த ஆபோகியில் வந்த தமிழின் மிக சிறந்த composition marvel என்ற இந்த அதிசயத்தை பாருங்கள். டி.கே.ராமமூர்த்தி அவர்களை ஏன் தலையில் வைத்து கூத்தாடுகிறேன் என்பது விளங்கும்.எவ்வளவு படங்கள் இசையமைத்தோம் என்பதை விட,எப்படி என்பது முக்கியம். இதைத்தான் ஏ.எம்.ராஜா,டி.கே.ராம மூர்த்தி (தனியாக) செய்து காட்டி நெஞ்சில் நிலைத்தார்கள். 70 களில் சரக்கு தீர்ந்து போய் ,திறமைசாலிகளை தனியாக்கி, டா டா டா என்று கத்தி கொண்டிருந்த ஒரு ஆளை வைத்து, டப்பா தட்டி, எல்லாரையும் ஹிந்தி பக்கம் ஒருவர் விரட்டினார்.நிறைய எண்ணிக்கை பாடல்களும் ,ஓடிய ஆட்களும்!!! சிவந்த மண்ணுடன் சரக்கு காலி.அப்புறம் அங்கங்கே ஒரு முத்து. சுமதி என் சுந்தரி,அவளுக்கென்று ஓர் மனம்,அவன்தான் மனிதன்.அபூர்வ ராகங்கள்,மன்மத லீலை,நிழல் நிஜமாகிறது.
vasudevan31355
28th June 2014, 10:13 AM
கோ,
அமர்க்களம். ஆனால் பாடலைப் பற்றி கொஞ்சம் உங்கள் ஸ்டைலில் நச்சென்று எழுதி போடுங்கள். இன்னும் அமர்க்களமாய் இருக்கும்.
gkrishna
28th June 2014, 10:16 AM
அனைவருக்கும் காலை வணக்கம் 28/6/14
திரு கோபால் சார் இன் சங்கீத வகுப்பு பதிவு மிக அருமை எளிமை இனிமை
அனைவருக்கும் புரியும் வண்ணம் எழுதி உள்ள மிக உபயோகமான பதிவு
காபி ராகத்தின் மருத்தவ குணங்கள்
Sick patients get ove their depression, anxiety. Reduces absent mindednes
எல்லா நேரங்களிலும் பாடபட கூடிய ராகம்
மேலும் சில பாடல்கள் நான் ரசித்தது
செம்பருத்தி படத்தில் வரும் பானுமதி நீண்ட நாள் கழித்து பாடிய பாடல்
மனோ ஜானகி உடன்
"செம்பருத்தி பூவு சித்திரத்தை போலே "
பிரியா படத்தில் "என்னுயிர் நீ தானே " பிலு ராகத்தின் ஜாடையில்
ஆட்டோ ராஜா படத்தில் வரும் இளையராஜா ஜானகி குரல்களில்
"சந்தத்தில் பாடாத கவிதை "
தளபதி படத்தில் வரும் "சின்ன தாயவள் "
துணை இருப்பாள் மீனாட்சி படத்தில் வரும் சுசீலாவின் குரலில்
"சுகமோ ஆயிரம் " (திரு வாசு சார் இந்த பாடலையும் ஒரு நாள் நீங்கள்
சிறப்பு ஆய்வு செய்ய வேண்டுகிறான் )
gkrishna
28th June 2014, 10:19 AM
வாசு சார்
உங்கள் இரு கோடுகள் பதிவு அருமை
எதாவது ஒரு பதிவாவது உங்களை போல் எழுத ஆசை
நேரமும் எண்ணங்களும் கற்பனையும் சோம்பல்தனம் இல்லாமையும் கூடி வரவேண்டும்
mr_karthik
28th June 2014, 11:00 AM
(ஆனா எல்லாத்துக்கும் காரணம் அந்த காதல் மன்னன் தான். எங்க போனாலும் இந்த ஆளு சும்மா இருக்க மாட்டாரா? அங்க ஒன்ன பிக்-அப் பண்ணிக்கிட்டு அப்புறம் இங்க ஒன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு தானும் அவதிப்பட்டு, அந்த இரண்டையும் அழவைத்து. இதே வேலையா இந்த ஜெமினிக்கு. 'பார்த்தால் பசிதீரும்'ல சாவித்திரியை காதலிச்சிட்டு சௌகாரை கல்யாணம் பண்ணிப்பார். வழக்கம் போல மூவரும் அவஸ்தைப் படுவார்கள். அதுல சௌகார் ரெண்டாந்தாரம்.)
யுவர் ஆனர்,
காதல் மன்னன் ஜெமினியின் வக்கீலாக என் வாதங்களை வைக்க அனுமதிக்க வேண்டுகிறேன். அவர் காதல் மன்னன் பட்டம் பெற்றுவிட்டார் என்பதற்காக அவரையே குற்றம் சொல்வதை நான் ஆட்சேபிக்கிறேன். இங்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டு வழக்குகளிலும், அவர் மீது எந்த குற்றமும் இல்லை. வழக்கு எண் 1. இரு கோடுகளாகட்டும், வழக்கு எண் 2. பார்த்தால் பசிதீருமாகட்டும் இரண்டிலுமே அவர், தன் முதல் மனைவி முறையே சௌகார் மற்றும் சாவித்திரி இறந்த பின்தான் (அதாவது இறந்ததாக மற்றவர்களால் சொல்லப்பட்ட பிறகுதான்) இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார்.
ஆக, இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும்போது, இரண்டு கேஸ்களிலுமே அவர் மனைவியற்றவர். தனி ஆள். வாழ வேண்டிய வாலிபம் இன்னும் அவரிடம் மிச்சமிருக்கிறது. முதல்மனைவிகள் இப்படி திடீரென்று உயிரோடு வந்து நிற்பார்கள் என்று அவர் கண்டாரா?.
இதே போல முதல் மனைவி இறந்த பின் இன்னொரு பெண் மீது காதல் கொண்டதாக கொலாலம்பூர் கோர்ட்டில் நடந்த 'புதியபறவை' கேஸையும், முதல் மனைவி இறந்த பின் மற்றவர்களின் வற்புறுத்தலால் நடந்த இரண்டாவது திருமணம் பற்றி சென்னை கோர்ட்டில் நடந்த 'பாலும் பழமும்' கேஸையும் முன்மாதிரியாக கொண்டு, அவற்றுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் என் கட்சிக்காரர் ஜெமினி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை தள்ளுபடி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தட்ஸ் ஆல் யுவர் ஆனர்.
mr_karthik
28th June 2014, 11:15 AM
டியர் வாசு சார்,
இன்றைய சிறப்புப் பதிவாக நீங்கள் பதிவிட்ட 'இரு கோடுகள்' படத்தில் இடம்பெற்ற படத்தின் உயிர்நாடிப்பாடலான 'புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்' பாடல் பற்றிய உங்கள் விவரமான ஆய்வுக்கட்டுரையும், ஒவ்வொரு வரிக்கும் நீங்கள் தந்துள்ள விளக்கங்களும் அருமையோ அருமை.
அந்தப்பாடல் வரிகளைப்பற்றி, அதனுள் பொதிந்துள்ள அர்த்தங்கள் பற்றி சும்மா புட்டு, புட்டு வைத்துள்ளீர்கள். யாருக்கும் தெரியாத பாடலாக இருந்தாலும் சரி, எல்லோருக்கும் தெரிந்த பாடலாக இருந்தாலும் சரி, உங்கள் கைபட்டால் அது அடையும் பிரகாசமே வேறுதான்.
அற்புதம், அட்டகாசம்.
mr_karthik
28th June 2014, 11:24 AM
சில சமயங்களில் நமக்குத் தெரியாமலே சில விஷயங்களில் நமக்கு பற்றில்லாமல் போவதுண்டு. மெல்லிசை மன்னரின் தீவிர, அதிதீவிர ரசிகனான எனக்கு, அவர் இசையமைத்து அவரும் சேர்ந்து பாடிய, பெரும்பாலான ரசிகர்களுக்கு பிடித்த, (முத்தான முத்தல்லவோ படத்தில் வரும்) "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" பாடல் வந்த நாள் முதல் இந்த நாள் வரை எனக்குப்பிடிக்கவேயில்லை. என்ன காரணம் என்பது தெரியவில்லை.
Richardsof
28th June 2014, 11:27 AM
THANK YOU MY LAWYER
http://i59.tinypic.com/2ykmbrb.jpg
gkrishna
28th June 2014, 11:32 AM
மெல்லிசை மன்னரின் நம் எல்லோர்யம் திகைத்து போக வைக்கும் ஒரு பாடல்
not a conventional song
மீனவ நண்பன் திரைபடத்தில் வாணி ஜெயராம் மோகன குரலில்
வலஜி என்ற ராகத்தின் அடிப்படையில் இது சக்ரவகத்தின் ஜன்யம் என்று சொல்வார்கள்
(சினிமா பாடல்களில் அதிகம் உபயோகிகபடாத ஒரு ராகம் )
இந்த பாட்டை வர்ணிக்க முடியாது .அனுபவிக்க வேண்டும்
ஆரம்பத்தில் ஒரு வாணியின் ஹம்மிங் அதுக்கே செத்தது காசு
மற்றது எல்லாம் போனஸ் தான் .
இது வாணியின் "பொங்கும் அல்ல கொஞ்சும்" கடலோசை
பாடல் முழுவதும் ஜலதரங்கம் (xylophone) பின்னி பிணைந்து ஒரு பிரளயமே உண்டாகும்
பாடல் எழுதிய வாலி (V)
இசை அமைத்த விசு (V)
பாடிய வாணி (V)
ராகம் வலஜி (V)
பல்லவி interlude சரணம் ரிதம் என்ன இல்லை இந்த பாடலில்
வாணியின் ஹம்மிங் உடன்
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை
தாலாட்டவே கொஞ்சும் தமிழோசை
பச்சைக்கிளி ஒரு தோணியில் , பக்கம் வரும் அதிகாலையில்
மன்னவன் ஓடம் பார்த்ததோ , மயக்கம் கொண்டு ஆடுதோ
சாதனை செய்கையில் சோதனை தோன்றினால்
மயங்குவதேனோ ?
வெள்ளி அலை வந்து மோதலாம் , செல்லும் வழி திசை மாறலாம்
போனலை காற்று வீசினால் படகு தாளம் போடலாம்
நீரலை மேடையில் மீனவன் நாடகம் நடிப்பதுமேனோ
சொல்லித்தர ஒரு வாதயார் , என்னைவிட இங்கு வேறு யார் ?
பட்டது போதும் என்று நீ பாவை ஓடம் தேடி வா
சோர்ந்தது போதும் வா
சேர்ந்து நாம் போகலாம்
ஊர்வலமாக
3வது சரணம் படத்தில் மட்டும்தான் என்று நினவு . நான் டவுன்லோட் செய்த mp 3 இல் இல்லை
http://www.youtube.com/watch?v=WR9LejeNzaY
vasudevan31355
28th June 2014, 11:54 AM
ஆர்டர்... ஆர்டர்... ஆர்டர்...
கார்த்திக் சார் தரப்பு வாதங்களை வைத்துப் பார்க்கும் போது அந்த கணேசன் போன வழியைப் பின்பற்றித்தான் இந்த கணேசனும் போய் இருக்கிறார் என்று புலனாகிறது.
மேலும் இந்த ராமுவின் அப்பா புஷ்பலதாவை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாமல் 'நிலவே என்னிடம் நெருங்காதே' என்று தன்னையே சுற்றிய கே.ஆர்.விஜயாவை நெருங்கவிடாமல் செய்ததாலும், 'கற்பகத்'தை உண்மையாய் மறக்க முடியாமல் தவித்து, பின் பல யோசனைகளுக்குப் பிறகு அமுதாவைத் திருமணம் செய்ய முடிவெடுத்ததை கருத்தில் கொண்டும் அந்த 'கணேச மூர்த்தி' எது செய்தாலும் அது தப்பே இல்லை என்பதால் அதை மனதிற்கொண்டு இந்த புதுக்கோட்டை கணேசனுக்கு மன்னிப்பு வழங்கி இனி 'நான் அவனில்லை' என்று அவர் சொல்லவே கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அவரை மன்னித்து விடுதலை செய்கிறேன்.
நாட்டாமை தீர்ப்பு நல்ல தீர்ப்பா?
Gopal.s
28th June 2014, 12:05 PM
என்னப்பா இது, ஒருத்தர் பாவம் ஆயுசு முழுக்க திரி பஞ்சாயத்து நாட்டாமையாகவே தொடர ,ஆளாளுக்கு கெளரவம் ரஜினிகாந்த் ரேஞ்சில் ,lawyer ,judge என்று கிளம்பினால் ,அந்த பிஞ்சு மனம் என்ன பாடு படும்?
Gopal.s
28th June 2014, 12:10 PM
மெல்லிசை மன்னரின் நம் எல்லோர்யம் திகைத்து போக வைக்கும் ஒரு பாடல்
தலைவரே,
பொங்கும் கடலோசை ஒரு marvellous composition .ஆனால் வலஜியில் அவர் கொடி நாட்டியது பொட்டு வைத்த முகமோ தான்(சுமதி என் சுந்தரி).
மெல்லிசை மன்னர் இசையில் பளீர் பாடல்கள் (குறிப்பிட்ட படங்களை தவிர) நீராட நேரம் நல்ல நேரம், பொங்கும் கடலோசை.
mr_karthik
28th June 2014, 12:25 PM
டியர் வாசு சார்,
அன்று சிந்திய ரத்தம் படத்தில் ஜெய் - பத்மப்ரியா பாடல் காட்சியைப் பதிவிட்டதற்கு. பின்னாளைய படங்களில் இவருக்கு கொஞ்சம் ஹேமாமாலினி சாயலும் கொஞ்சம் ஜெயமாலினி சாயலும் இருந்தது (பத்மமாலினி..?)
'அன்று சிந்திய ரத்தம்' படத்தின் பெயரைச் சொல்லும்போதே நினைவுக்கு வரும் இன்னொரு ஜெய் படம் 'துணிவே துணை'. மெல்லிசை மன்னரின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுவை.
தயான் ஆக வேடமிட்டு ராஜசுலோச்சனாவின் கோட்டைக்குள் நுழையும் இன்ஸ்பெக்டர் ஜெய், அங்கிருக்கும் ஒரு அழகியைத் திருமணம் செய்துள்ள விரும்ப, அவள் வேறு யாருமல்ல, இன்ஸ்பெக்டர் ஜெய்யின் காதலி ஜெயப்ரபா. தன் காதலன் என்று தெரியாமலே தயானை திருமணம் செய்துகொள்கிறாள். (தவறு, பலவந்தமாக ராஜசுலோச்சனாவால் செய்விக்கப்படுகிறாள்).
திருமண ரிஸப்ஷனில் தோழிகளால் பாடப்படும் பாடல். ராட்சசி ஈஸ்வரியின் குரலில் (இதற்கெல்லாம் அவரை விட்டால் வேறு யார்)
கல்லில் பூவெடுப்பொம்
காற்றில் நாறெடுப்போம்
இங்கு சட்டம் உண்டு திட்டம் உண்டு
எங்களுக்குள் மட்டும் உண்டு பாடு
இந்த வெட்கத்தை விட்டோடி
அந்த சொர்க்கத்தைக் கொண்டாடி.
Gopal.s
28th June 2014, 12:30 PM
"படித்தால் மட்டும் போதுமா புகழ்" ராஜி ,,அப்பாடா தள்ளாத வயசில் ஸ்ப்ரிங் பெட்டில் என்னா வெளாட்டு வெளாடும் .யப்பா ....
Gopal.s
28th June 2014, 12:30 PM
ராகத்தை வைத்து ஒருவர் எவ்வளவு கட்டுடைத்து அதிசயம் நிகழ்த்தலாம் என்ற fusion வகை பாடல் . படம் தோல்வியடைந்தால் என்ன?இந்த பாடல் என்றுமே வென்று அதிசயம் கொடுக்கும்.
ஹம்சத்வனி என்ற ராக அடிப்படை.
vasudevan31355
28th June 2014, 12:34 PM
டியர் வாசு சார்,
திருமண ரிஸப்ஷனில் தோழிகளால் பாடப்படும் பாடல். ராட்சசி ஈஸ்வரியின் குரலில் (இதற்கெல்லாம் அவரை விட்டால் வேறு யார்)
கல்லில் பூவெடுப்பொம்
காற்றில் நாறெடுப்போம்
இங்கு சட்டம் உண்டு திட்டம் உண்டு
எங்களுக்குள் மட்டும் உண்டு பாடு
இந்த வெட்கத்தை விட்டோடி
அந்த சொர்க்கத்தைக் கொண்டாடி.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=5C4KgYWwyjI
gkrishna
28th June 2014, 12:35 PM
தலைவரே,
கோபால் சார்
'தலைவரே ' புளகாங்கிதம் அடைந்தேன்
நீங்கள் சொன்ன பாடல் அத்தனயும் அருமை
Gopal.s
28th June 2014, 12:35 PM
ராகத்தை வைத்து ஒருவர் எவ்வளவு கட்டுடைத்து அதிசயம் நிகழ்த்தலாம் என்ற fusion வகை பாடல் . படம் தோல்வியடைந்தால் என்ன?இந்த பாடல் என்றுமே வென்று அதிசயம் கொடுக்கும்.
ஹம்சத்வனி என்ற ராக அடிப்படை.
http://www.youtube.com/watch?v=dz7Fpckc0ek
gkrishna
28th June 2014, 12:38 PM
ஏழைக்கும் காலம் வரும் 1975
சாரதா combines
ராஜேந்தர் பாபு என்பவர் டைரக்டர்
இவர் வேறு எதாவது படம் இயக்கினார என்று தெரியவில்லை
மெல்லிசை மாமணி குமார் இரண்டு பாட்டு ரொம்ப அருமை
முத்துராமன்,ஸ்ரீலட்சுமி, சுபா, நம்ம ஸ்ரீகாந்த் (இது வரைக்கும் இவருக்கு 3 பட்டம் இந்த திரியில் வழங்கப்பட்டு உள்ளது தென்னாட்டு ஒமேர்ஷேரிப்,
தென்னாட்டு சத்ருகன்,அந்நாளைய முரட்டு ஆனழகன் வேறு எதாவது விடுபட்டு உள்ளதா கார்த்திக் சார் )
இந்த கதை கொஞ்சம் நினைவில் உண்டு
ஸ்ரீகாந்த் வெகுளி அவரை எல்லாரும் ஏமாத்துவாங்க
நம்ம முத்துராமன்,சுபா எல்லோரும் சேர்ந்து தான் அவரை கடைசியில்
வந்து உதவி செய்து எல்லா சொத்துகளையும் காப்பாத்துவாங்க
முத்துராமனை விட நம்ம ஸ்ரீகாந்த் செம அழகு
பாலாவின் குரலில்
"ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை ராகமே பாவமே தாளமே
ஓடி வா ஓடி வா "
மீண்டும் சுசீலாவின் குரலில்
"ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை ராகமே பாவமே தாளமே
ஓடி வா ஓடி வா "
ஜேசுதாஸ் சுசீலாவின் குரலில்
மோகம் என்னும் ராகம் பாடும்முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும்அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு
தித்திக்கின்ற தேனில் செய்த சின்னப்பெண்ணுக்கு
தெய்வம் தந்த சொந்தம் உண்டு எந்தன் நெஞ்சுக்கு
இந்த பாடலில் முத்துராமன் ஜோடி ஸ்ரீலட்சுமி னு ஒரு நடிகை
ஸ்ரீகாந்த் ஜோடி சுபா
https://www.youtube.com/watch?v=ddcUDbK-8ய்க்
https://www.youtube.com/watch?v=ச்வழ்க்75சஜ்5கே
vasudevan31355
28th June 2014, 12:39 PM
கார்த்திக் சார்,
நம்ம ரெண்டு பேருக்கும் இன்னைக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன். வரும் முன் காக்க. கையில் கல்லெடுத்து ஒருவர் ரெடி.
vasudevan31355
28th June 2014, 12:40 PM
நன்றி கிருஷ்ணா சார்!
நீங்கள் ஏற்கனவே முன் ஜாக்கிரதையாய் இருக்கிற மாதிரி தெரியுதே! தலைவரேன்னு போட்டுட்டீங்களே!:)
gkrishna
28th June 2014, 12:49 PM
https://www.youtube.com/watch?v=cVWuW67Xo_Y
லிங்க் தவறாக இணைத்து விட்டேன்
handsome srikanth
Gopal.s
28th June 2014, 12:51 PM
ஸ - ஸட்சமம், ரி- ரிஷபம்,க- காந்தாரம்,ம-மத்யமா, ப-பஞ்சமா,த-தைவதா,நி-நிஷாடா ,என்று ஓரளவு சங்கீதம் தெரிந்த எனக்கு சவுக்கடி கொடுத்தது கொடுங்குரல் கொடியோன், வல்லிசை வேந்தர் சேர்ந்து அளித்த ட ட டா என்ற புதிய ஸ்வரம். உலகத்தின் எந்த சங்கீதத்திலும் காண முடியாத அதிசய கண்டு பிடிப்பு. ட என்ற டகரம் எட்டாவது சுரம்.(ஜுரம்????) இதில் சுத்த டகரம் வேறு. ஹூம்... ருபுதேரா பாட போனேன் ,ஹிந்தி எதிர்ப்பை கை விட்டு.
gkrishna
28th June 2014, 12:52 PM
முன் ஜாக்கறதை முத்தண்ணா
vasudevan31355
28th June 2014, 01:12 PM
கிருஷ்ணா சார்,
மிஸ்டர் x படிச்சிருப்பீங்க. ஒருநாள் பஸ்ல போனாராம். மழை வந்து டிரைவர் வைபர் போட்டாராம். ஆனால் வைபர் லூஸாகி அடிக்கடி கீழே விழுந்துதாம். டிரைவர் ஒவ்வொரு முறையும் என்ஜினை நிறுத்திவிட்டு பஸ்ஸை விட்டு கீழே இறங்கி வெளிப்பக்கம் போய் வைபரை முடுக்கிவிட்டு வந்தாராம். இதைப் பார்த்து எரிச்சலடைந்த மிஸ்டர் x டிரைவரை கேட்டாராம்.
"யோவ்! உனக்கு அறிவிருக்கா இல்லையா? வெளியே போய் அடிக்கடி வைபரை முடிக்கிட்டு வர்றியே! அதையே உள்பக்கம் கண்ணாடியிலே வச்சு முடுக்கியிருந்தா கீழே விழுந்தாலும் உக்கார்ந்த இடத்திலேயே அப்படியே எடுத்துக்கலாமில்லே!"
புரியுதா சார்?
gkrishna
28th June 2014, 01:13 PM
http://www.youtube.com/watch?v=xWAzQ75Sj5k
லிங்க் தவறாக இணைத்து விட்டேன் sorry
handsome srikanth[/QUOTE]
http://www.youtube.com/watch?v=ddcUDbK-8Yg
gkrishna
28th June 2014, 01:23 PM
கிருஷ்ணா சார்,
மிஸ்டர் x படிச்சிருப்பீங்க. ஒருநாள் பஸ்ல போனாராம். மழை வந்து டிரைவர் வைபர் போட்டாராம். ஆனால் வைபர் லூஸாகி அடிக்கடி கீழே விழுந்துதாம். டிரைவர் ஒவ்வொரு முறையும் என்ஜினை நிறுத்திவிட்டு பஸ்ஸை விட்டு கீழே இறங்கி வெளிப்பக்கம் போய் வைபரை முடுக்கிவிட்டு வந்தாராம். இதைப் பார்த்து எரிச்சலடைந்த மிஸ்டர் x டிரைவரை கேட்டாராம்.
"யோவ்! உனக்கு அறிவிருக்கா இல்லையா? வெளியே போய் அடிக்கடி வைபரை முடிக்கிட்டு வர்றியே! அதையே உள்பக்கம் கண்ணாடியிலே வச்சு முடுக்கியிருந்தா கீழே விழுந்தாலும் உக்கார்ந்த இடத்திலேயே அப்படியே எடுத்துக்கலாமில்லே!"
புரியுதா சார்?
வாசு சார்
இப்பவே கண்ண கட்டுதே இன்னும் நிறைய இருக்கே
abkhlabhi
28th June 2014, 02:24 PM
"இதழில் கதை எழுதும் நேரமிது "
இசை : இசைஞானி
பாடியவர் : பாலு, சித்ரா
எழுதியவர் : முத்துலிங்கம்
இதே பாடல் தெலுங்கில் ருத்ர வீணா படத்தில் கே.ஜே , சித்ரா "லலிதா பிரியா கமலம்" என்று பாட, அதே மெட்டில் தமிழில் பாலுவும், சித்ராவும் பாடியிருக்கிறார்கள். ருத்ரவீணா என்ற படம் கே.பி இயக்கிய படம். இப்படம் இளையராஜாவுக்கு 1988 இற்கான சிறந்த இசையமைப்பாளர் விருதையும் கொடுத்த படம்.
மிக மிக அழகான வரிகள் கொண்ட பாடல்!! கூடவே எஸ்.பி.பி யின் துல்லியமான உச்சரிப்போடு கூடிய இனிமையான குரல்,சின்னக்குயில் சித்ராவின் தேன்குரலோடு சேர்ந்து தெவிட்டாத விருந்து படைத்து விடும்!!
தமிழ் திரையிசை என்பது அள்ள அள்ள குறையாத பொக்கிஷம்.
அந்த பொக்கிஷ மலையில் கடைந்தெடுத்த முத்துச்சரம் இந்தப்பாடலின் இசை என்று சொல்லலாம்.
இரண்டு பாடல்களும் இங்கே .......
http://www.youtube.com/watch?v=KkSOUrTMet8
http://www.youtube.com/watch?v=-s3cdlJFhes
யார் நன்றாக பாடியிருக்கிறார்கள் ? எது நல்ல ஜோடி - SPB/KJ - CHITRA ?
gkrishna
28th June 2014, 03:19 PM
பயணம் 1976
நம்ம V .வீடு சுந்தரம் direction
மீண்டும் handsome ஸ்ரீகாந்த்
பாலாவின் இனிய குரல்
தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ
செவ்வானத்தின் வண்ண நிலவும் சின்னவள் தான் அன்றோ
தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ
செவ்வானத்தின் வண்ண நிலவும் சின்னவள் தான் அன்றோ
வெள்ளி தேரில் உள்ள சிலைக்கு எந்நாள திருநாளோ
மின்னல் மேனி மேக குழலாள் தன்னை அறிவாளோ
பால் வண்ண பூ முல்லை பார்த்தால் போதாதோ
பாலை வனத்தில் காவிரி ஆறு பைரவி பாடாதோ
தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ
செவ்வானத்தின் வண்ண நிலவும் சின்னவள் தான் அன்றோ
கம்பன் வந்தால் காவியம் பாட கற்பனை ஒரு கோடி
கண்ணன் கண்ட ராதை கூட ஈடில்லடி
தத்தி தாவும் சித்திர முத்து சிப்பியில் விளையாடி
தழுவ போகும் தலைவன் யாரோ காதல் உறவாடி
http://www.youtube.com/watch?v=nINe0IgR0c8
gkrishna
28th June 2014, 03:26 PM
http://asokarajanandaraj.blogspot.com/2013/11/blog-post_5.html
காலம் எனக்கொரு பாட்டு எழுதும்
காற்று வந்தே இசை அமைக்கும்
தாளம் போடும் நீரலைகள்
தாவி பாயும் நினைவலைகள்
மேல உள்ள லிங்க் இல் ஒரு நல்ல அருமையான பாடல்
பாலாவின் 1970 குரல் போல் உள்ளது
படம் பௌர்னமி என்று இந்த லிங்க் இல் உள்ளது
இசை சங்கர் கணேஷ் போல் உள்ளது
ஜெய்/ரவி க்கு பாடுவது போல் உள்ளது
இந்த பாட்டை நிறய தடவை கேட்டு இருக்கிறேன்
ஆனால் படம் பெயர் தெரியவில்லை
நெட் இல் எங்கு தேடியும் கிடைக்கவில்லை
வேந்தர் சார்/முரளி சார்/கார்த்திக் சார்/கோபால் சார் ப்ளீஸ் ஹெல்ப்
Gopal.s
28th June 2014, 03:41 PM
எனக்கு பிடித்த பல பாடல்கள் படத்தில் நீக்க பட்டவை இந்த பாடலை கேட்டு மகிழுங்கள். பாலும் பழமும் படத்தில் இடம் பெற வேண்டியது.
https://www.youtube.com/watch?v=ptyn9VWa_MA
Gopal.s
28th June 2014, 03:45 PM
வெளிவராத ஞாயிறும் திங்களும் படத்தில் (சிவாஜி-தேவிகா இணை)
https://www.youtube.com/watch?v=ZjiRKDmIDjk
Gopal.s
28th June 2014, 03:53 PM
நடிகர்களை நான் வெறுத்தாலும் இரட்டையர்களின் இசை என் மனதை துள்ள வைக்கிறதே. என்னுடைய டி.எம்.எஸ் -பீ.எஸ் இணைவில் முதல் பத்தில் என்றும் இருக்கும்.
https://www.youtube.com/watch?v=0Lm7i6Dp9yY
gkrishna
28th June 2014, 04:30 PM
டியர் வாசு சார்,
நம்முடைய ஸ்ரீகாந்தும், நம்முடைய மஞ்சுளாவும் இணைந்து நடித்த "ராஜ நாகம்" வண்ணப்படத்தில் ஸ்ரீகாந்துக்கும் சுபாராணிக்கும் ஒரு அருமையான பாடல்
தேவன் வேதமும் கண்ணன் கீதையும்
ஒரு பாதையில் இங்கு சங்கமம்
அருமையான வண்ணத்தில் அமைந்த இப்பாடலை பதிவிட்டால் மகிழ்வுடன் பார்ப்போம். வி.குமார் இசையில் வாலியின் பாடல்.
https://www.youtube.com/watch?v=8np1QwEnpoQ
Gopal.s
28th June 2014, 04:33 PM
இளைய தலைமுறை படத்தில் நான் ஆவலோடு எதிர்பார்த்து இடம் பெறாத பாடல். சிவாஜி-வாணிஸ்ரீ விளையாட்டு எப்படி இருந்திருக்கும்?ஆடியோ மட்டுமே கேட்டு மகிழவும். கேட்டாயே ஒரு கேள்வி.(Go to sight and right hand side you get song list numbered and click kettaye oru kelvi)
http://www.thatstamilsongs.com/songs.php?movie=Ilaya%20Thalaimurai
Gopal.s
28th June 2014, 04:50 PM
காலம் எனக்கொரு பாட்டெழுதும்.S .P .B பாடி பூவை செங்குட்டுவன் எழுதி, R .குலசேகர்(நம்ம திலிப் cum ரகுமான் அப்பாதான்) இசையமைத்த படம் பௌர்ணமி. படம் வெளியாகவில்லை. ஆனால் பாடல் படு popular சிலோன் புண்ணியம்.தமிழ் சேவை.
R .K .சேகர் மலையாளத்தில் பல அபூர்வ பாடல்களை தந்த திறமைசாலி.(ஏ.எம்.ராஜா வும் மலையாளத்தில் ஒதுங்கினார்)
மாப்பிள்ளா இசை என்ற பாணியில் பின்னியுள்ளார்.சுமார் 50 நல்ல பாடல்கள்.
வீ.குமாருக்கு associate ஆக பல படங்கள்.இவர் இசை கோர்ப்பு கவனித்தார். என்னதான் பாடுவது ,நாணலில் முழுக்க இவர் பணி என்று கேள்வி.அதிர்ஷ்டமில்லாமல் சிறு வயதில் அடைய வேண்டிய உயரம் தொடாமல்,முழு பலனையும் மகனுக்கு தந்து ,அகால மரணம் தழுவினார்.
mr_karthik
28th June 2014, 04:54 PM
என்னுடைய வேண்டுகோளையேற்று
'கல்லில் பூவெடுப்போம்' (துணிவே துணை) பாடலை காணொளியாக தந்த அன்பு வாசு சார் அவர்களுக்கும்,
'தேவன் வேதமும் கண்ணன் கீதையும்' (ராஜநாகம்) பாடலை காணொளியாக தந்த அன்பு கிருஷ்ணா சார் அவர்களுக்கும்,
பல்வேறு பாடல்களை தொடர்ந்து தந்துகொண்டிருக்கும் அன்பு பாலா சார் அவர்களுக்கும்,
படங்களில் இடம்பெறாத பாடல்களைத் தேடிக்கொண்டுவந்து பதிப்பிக்கும் அன்பு கோபால் சார் அவர்களுக்கும்,
நன்றி... நன்றி... நன்றி....
mr_karthik
28th June 2014, 05:16 PM
இளைய தலைமுறை படத்தில் நான் ஆவலோடு எதிர்பார்த்து இடம் பெறாத பாடல். சிவாஜி-வாணிஸ்ரீ விளையாட்டு எப்படி இருந்திருக்கும்?ஆடியோ மட்டுமே கேட்டு மகிழவும். கேட்டாயே ஒரு கேள்வி.(Go to sight and right hand side you get song list numbered and click kettaye oru kelvi)
http://www.thatstamilsongs.com/songs.php?movie=Ilaya%20Thalaimurai
'கேட்டாயே ஒரு கேள்வி' என்ற இந்தப் பாடலுக்கு பதிலாகத்தான் 'ஒரு அறை கொடுத்தால் தெரியும்' என்ற பாடல் படத்தில் இடம்பெற்றது.
இதுபோல 'பொம்பளையா லட்சணமா பொடவைய கட்டு' பாட்டுக்குப் பதிலாக 'சிங்காரத் தேர்கூட திரைமூடிப் போகும்' பாடல் இடம்பெற்றது.
இவையெல்லாம் நீக்கப்பட்டது கூட வருத்தமில்லை. ஆனால் அவன் ஒரு சரித்திரத்துக்காக இயற்றி இசையமைத்து பாடி ரெக்கார்ட் செய்த 'என் மனது ஒன்றுதான் உன் மீது ஞாபகம்' பாடலை நடிகர்திலகத்தின் வேறு ஒரு படத்தில் உபயோகப்படுத்தியிருக்கலாம்.
அந்தப்பாடலை 'பெருமைக்குரியவள்' படத்தில் சிவகுமாரும், பத்மப்ரியாவும் நடிக்கும்போது, டி.எம். எஸ். நடிகர்த்திலகத்துக்காகப்பாடும் வாய்ஸிலேயே பாடியிருப்பது நன்றாகத் தெரியும்.
Gopal.s
28th June 2014, 05:24 PM
ராஜகோபால் குலசேகர் என்கிற ஆர் .கே.சேகர் ,ஹிந்து வெள்ளாளர் .(1933-1976). இசை தொகுப்பாளர், உதவி இசை அமைப்பாளர்,இசை அமைப்பாளர் என பல பணிகள்.தக்ஷினாமூர்த்தி, குமார் என்று பலருக்கும் உதவியாளர். மலையாளத்தில் 53 படங்களுக்கு இசை 1964 தொடங்கி 1976 வரை.முதல் படம் பழசி ராஜா (1964)
மகன் திலீப் குமார் 1966 இல் பிறந்த prodigy .மகன் 10 வயதை கடக்குமுன்பே அமரராகி விட்டார்.
அவர் இசையமைத்த ,முதல் பாடல். கே.ஜே .யேசுதாசின் பொம்மை கால இளமை குரலில்.
http://www.youtube.com/watch?v=asnNjcTbDaQ
Gopal.s
28th June 2014, 05:30 PM
மாமா, காதல் கிளிகள் என்று ஒரு படம் 1979 இல் செய்ததாக ஞாபகம்.
நல்ல பாடல்கள்.(கொஞ்சம் பழைய வாடை. ஏணி படிகள் போல)
vasudevan31355
28th June 2014, 10:52 PM
http://icdn.raaga.com/Catalog/CD/T/T0000980.jpg
1. செவ்வானமே சீர் கொண்டு வா
வெண்மேகமே தேர் கொண்டு வா
2. காதல் கிளியே... நீ ஏன் பேச மறந்தாய்
3. நதிக்கரையோரத்து நாணல்களே
என் நாயகன் புகழைக் கேளுங்களேன்
சுசீலா பின்னி எடுக்கும்
4. கரும்பிலும் இனியது இனியது
உயர் கவிதையில் புதியது புதியது
இதுதான் நான்கிலும் டாப்.
சிவக்குமார், கமல், ரதி அக்னிஹோத்ரி நடித்திருப்பார்கள். டிராஜடி அதிகம். படம் போகவில்லை. ஆனால் கோபால் சார் சொன்னது போல் மாமாவின் மந்திர டியூன்கள் எப்போதும் போல இனிக்கும்.
காதல் கிளியே மாமாதான்.
JamesFague
28th June 2014, 10:59 PM
Thanimayile from Sattam oru Irruttarai - Vijayakanth movie - Nice song.
Mr Neyveliar can upload the song.
Regards
vasudevan31355
28th June 2014, 11:00 PM
நடிகர்களை நான் வெறுத்தாலும் இரட்டையர்களின் இசை என் மனதை துள்ள வைக்கிறதே. என்னுடைய டி.எம்.எஸ் -பீ.எஸ் இணைவில் முதல் பத்தில் என்றும் இருக்கும்.
சாரி கோ!
ஒத்துக் கொள்ள மாட்டேன்.
முதல் ஐந்தில்.
vasudevan31355
28th June 2014, 11:13 PM
கிருஷ்ணா சார்,
கண்களில் ஆனந்த்தத்தால் கண்ணீரே வந்து விட்டது சார்.
தங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே புரியவில்லை.
எப்போதோ கேட்டு கேட்டு ரசித்த 'காலம் எனக்கொரு பாட்டெழுதும்' பாடலை நினைவூட்டி பாடலுக்கான லிங்க் கொடுத்து அப்படியே நெஞ்சில் நிறைந்து விட்டீர்கள். கேட்கிறேன் கேட்கிறேன் மாலை முதல் கேட்கிறேன் சலிக்கவே இல்லை சார்.
RAGHAVENDRA
28th June 2014, 11:17 PM
http://www.youtube.com/watch?v=baKLFc_BSXg
ஜனகராஜ் - நகைச்சுவை நடிகராக இருந்தாலும் குணசித்திர பாத்திரங்களிலும் சிறந்து நடித்தவர். நான் புடிச்ச மாப்பிளே திரைப்படம் இவருக்கு மிகப் பெரிய அளவில் பேர் பெற்றுத் தந்தது. இவர் ஓரிரு படங்களில் கதாநாயகன் பாத்திரத்தில் நடித்துள்ளார். அதில் ஒன்று பாய்மரக்கப்பல். இப்படத்திலும் அவருடைய நடிப்பு நம் நெஞ்சைத் தொடும்.
பாய்மரக் கப்பல் கே.வி.எம். அவர்களின் அருமையான பாடல்களைக் கொண்ட திரைப்படம். குறிப்பாக எஸ்.பி.பாலாவின் குரல் நம்மைக் கிறங்கடிக்கும். அதற்கு சான்று ஈரத்தாமரைப் பூவே பாடல்.
கேளுங்கள் பாருங்கள்
vasudevan31355
28th June 2014, 11:20 PM
டியர் கார்த்திக் சார்,
தங்களது அன்புப் பாராட்டுதல்களுக்கு என் சந்தோஷமான நன்றிகள்.
தங்களுக்கு நாளை ஒரு அதிசயம் காத்திருக்கிறது.
vasudevan31355
28th June 2014, 11:25 PM
வருக அன்பு நண்பர் வாசுதேவன் அவர்களே!
தங்கள் ஆசை நிறைவேறும் இப்போது.
சுரேந்தர், ஜானகி பாடும் இந்தப் பாடல் என் விருப்பப் பாடலும் கூட.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=n73Hio6QCHM
vasudevan31355
28th June 2014, 11:29 PM
ராகவேந்திரன் சார்
'ஈரத்தாமரைப் பூவே உன் இதழில் எத்தனை' பாடல் நான் முற்றிலும் எதிர்பாராத அசத்தல்.
RAGHAVENDRA
28th June 2014, 11:38 PM
பல சந்தர்ப்பங்களில் திரைப்படங்களில் இடம் பெறாத, அல்லது வெளிவராத திரைப்படப் பாடல்கள் நம்மை மிகவும் பாதிக்கும். அப்படிப்பட்ட ஒரு படம் தான் பாலு மகேந்திராவின் பஞ்சமி. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் மாலை முரசு நாளிதழில் விரிவாக ஒரு பக்கம் முழுதும் எழுதியிருந்தார்கள். படிக்கும் போது படம் எப்போது வரும் என்கிற ஆவலைத் தூண்டியது. அதற்கேற்றார்போல் இளையராஜாவின் இசையில் பாடல்கள் முன்கூட்டியே பிரபலமாகி விட்டன. இறுதி வரை திரையைக் காணாத பஞ்சமி திரைப்படத்தின் பாடல்கள் எப்போது கேட்டாலும் நம் நெஞ்சில் நிலைத்து நிற்கும். அதில் மிகப் பிரபலமானது உதயகாலமே பாடல் நம்மில் பெரும்பாலானோர் கேட்டிருப்பர். அதைத் தவிர்த்து இன்னொரு பாடல் மலேசியா வாசுதேவன் பாடிய மாலை வெயில் சிந்து என்கிற இந்தப் பாடல். இனிமையான, நெஞ்சைத் தாலாட்டும் இப்பாடலை நீங்களும் கேளுங்கள்
http://download.tamiltunes.com/songs/__P_T_By_Movies/Panjami/Malai%20Veyil%20Sindhu%20-%20TamilWire.com.mp3
RAGHAVENDRA
28th June 2014, 11:40 PM
இதே போல பஞ்சமி திரைப்படத்தில் என்னை மிக மிக ஈர்த்த பாடல் தங்களையும் தான்... கேளுங்களேன்...
இளையராஜாவை மக்கள் ஏன் இந்த அளவிற்கு ரசிக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் இப்பாடல்.
பனிக்காற்றின் குளுமை... ஜானகியின் குரல் தங்கள் மேல் கட்டி மேல் கட்டியாய் பனிக்கட்டியை வைப்பது போல் அவ்வளவு குளுமையாக இருக்கும்.
http://download.tamiltunes.com/songs/__P_T_By_Movies/Panjami/Panik%20Kaatrin%20-%20TamilWire.com.mp3
RAGHAVENDRA
28th June 2014, 11:43 PM
அங்கிங்கெனாதபடி எங்கும் இளையராஜாவின் புகழ் பரப்பிய பாடல்களில் இதுவும் ஒன்று...
உதயகாலமே நனைந்த மேகமே...
http://download.tamiltunes.com/songs/__P_T_By_Movies/Panjami/Uthaya%20Kaalame%20-%20TamilWire.com.mp3
கூடவே வரும் கிடார் தங்கள் நாடி நரம்பை மீட்டுவது போல் உணர்வீர்கள்
Gopal.s
29th June 2014, 09:32 AM
நாம் ஜாலியான திரியில் கரடியாய் புகுந்து ராகம் பாடுகிறோமோ என்று சந்தேகம் கொண்டிருந்த போது ,இந்த திரிக்கு பதிவாளனாய் என்னை ஓடி வர செய்த கார்த்திக்,முரளியின் உற்சாக வார்த்தைகள் எனக்கு உரம். நன்றி வாசு.(எனக்கு நானே போல ).ராகவேந்தர் சார், நீங்கள் ரசித்தால் எனக்கு அது ரிப்போர்ட் கார்ட் போல .நன்றி. திரியின் டெண்டுல்கர் கிருஷ்ணாஜியின் ஊக்கத்துக்கு நன்றி.
Gopal.s
29th June 2014, 10:07 AM
இசையும் ,நம் சினிமாக்களும் பின்னி பிணைந்தவை. நடிகர்களுக்கும்,கதை,இயக்குனர் அடுத்து முக்கிய பங்கு இசையமைப்பாளர்களுக்கே. அந்நாட்களில் இருந்து ,இந்நாட்கள் வரை ஒரு மூன்று பாடல்களாவது popular ஆகி விட்டால் ,அந்த படங்களின் வீச்சே தனி. இசை பற்றிய திரி என்பதால்,61 முதல் 72 வரையான ,தமிழின் பொற்காலம் என்று நான் கருதும் காலத்தின் ,வசூலில் வருட வாரியாக முதலிடம் பெற்ற படங்களையும் அவற்றின் இசையமைப்பாளர்களையும் ,மற்றும் முக்கிய பாடல்களையும் பார்ப்போம்.
1961- பாவ மன்னிப்பு- விஸ்வநாதன் -ராமமூர்த்தி.- காலங்களில்,அத்தான் என்னத்தான்,பாலிருக்கும்,எல்லோரும் கொண்டாடுவோம்,வந்த நாள் முதல்,சிலர் சிரிப்பார்.
1962- ஆலயமணி-விஸ்வநாதன்-ராமமூர்த்தி.-கல்லெல்லாம்,சட்டி சுட்டதடா,தூக்கம் உன் கண்களை ,பொன்னை விரும்பும்,கண்ணான கண்ணனுக்கு,மானாட்டம்.
1963- கற்பகம்- விஸ்வநாதன் -ராமமூர்த்தி- மன்னவனே, ஆயிரம் இரவுகள்,அத்தை மடி,பக்கத்து வீட்டு.
1964- காதலிக்க நேரமில்லை-விஸ்வநாதன் -ராமமூர்த்தி-நாளாம் நாளாம்,நெஞ்சத்தை அள்ளி ,மலரென்ற முகமின்று, அனுபவம் புதுமை,உங்க பொன்னான, விஸ்வநாதன் வேலை வேண்டும்,
என்ன பார்வை.
1965- எங்க வீட்டு பிள்ளை-விஸ்வநாதன் -ராமமூர்த்தி-நான் ஆணையிட்டால் ,குமரி பெண்ணின்,நான் மாந்தோப்பில்,பெண் போனால்,மலருக்கு தென்றல்.
1966-சரஸ்வதி சபதம்- கே.வீ.மகாதேவன்-கோமாதா, தெய்வம் இருப்பது,அகர முதல எழுத்தெல்லாம்,தாய் தந்த,கல்வியா செல்வமா,ராணி மகாராணி,உருவத்தை காட்டிடும்.
1967- நான்- டி.கே.ராமமூர்த்தி- போதுமோ இந்த இடம்,அட பாதங்களே,அம்மனோ சாமியோ,வந்தால் என்னோடு,க்வாக் க்வாக்.
1968- பணமா பாசமா-கே.வீ.மகாதேவன்-எலந்த பயம்,அலேக் வாழைத்தண்டு போல,மெல்ல மெல்ல,மாறியது நெஞ்சம்,சின்னஞ்சிறு வீடு.
1969-அடிமை பெண்- கே.வீ.மகாதேவன்-ஆயிரம் நிலவே,தாயில்லாமல்,அம்மா என்றால்,ஏமாற்றாதே,உன்னை பார்த்து.
1970- மாட்டுக்கார வேலன்-கே.வீ.மகாதேவன்-ஒரு பக்கம் பாக்கிறா,பட்டிக்காடா பட்டணமா,பூ வைத்த, சத்தியம் நீயே,தொட்டு கொள்ளவா.
1971- ஆதி பராசக்தி-கே.வீ.மகாதேவன்- மாயீ மகமாயி, சொல்லடி அபிராமி,ஆத்தாடி மாரியம்மா,நானாட்சி செய்து வரும்,வருகவே வருவே.
1972- வசந்த மாளிகை-கே.வீ.மகாதேவன்-மயக்கம் என்ன,குடிமகனே,ஏன் ஏன் ஏன்,இரண்டு மனம்,யாருக்காக,கலைமகள்,ஒ மானிட ஜாதியே.
Gopal.s
29th June 2014, 10:55 AM
கீரவாணி.
ஒரு ராகம் ,உங்கள் அறியாத உள்மன அடுக்குகளில் புகுந்து, நீங்கள் அறியாத உணர்வுகளை கிண்டி ,இன்ப விகசிப்பை தந்து ,இன்னும் தேடு தேடு என்று உங்கள் கண்களை சொக்க வைக்கிறதா?
இந்த ராகத்தை நினைக்கும் போது ,இளையராஜாவை எண்ணாமல் இருக்க முடியாது.இந்த ராகத்துக்கே புது பரிமாணம் கொடுத்தவர்.அவருக்கு பட்டமே கொடுக்கலாம் கீரவாணி ராஜா என்று.
இது ஒரு அசல் கர்நாடக மேளகர்த்தா ராகம். இதற்கு மிக நெருங்கிய இன்னொரு மேளகர்த்தா சிம்மேந்திர மத்யமம்.இதன் ஜன்ய ராகம் கல்யாண வசந்தம் ஒரு அபூர்வ ராகமாகும்.இது ஹிந்துஸ்தானிக்கும் இங்கிருந்து சென்றது.(நம் மேளகர்த்தாவை அவர்கள் thaat என்பார்கள்)மேற்கத்திய இசையில் மிக பிரபல ராகம் இது (harmonic Minor Scale ).மேளகர்த்தா ராகம் 12 சக்கரமாக ஆறு ஆறாக பிரிக்க பட்டுள்ளது.இது நாலாவது சக்கரம் 4 வேதத்தையும் குறிக்கும் பகுப்பில் வரும்.
என்னுடைய மிக மிக நெருங்கிய குடும்ப நண்பரும் ,பிரபல இயக்குனருமான மகேந்திரன் அவர்களின் land mark commercial படமாக வந்த ஜானி.(எனக்கு அவ்வளவு பிடிக்காவிட்டாலும் ,அற்புதமான சில அழகுணர்ச்சி காட்சிகள் கொண்டது)காதலனை ,காதலை காற்றில் தேடும் அந்த பாடக காதலியின் மழையில் ,ரசிகரின்றி பாடும் மேடை பாடலின் ,ஜானகியின் தேடும் குரலில் ,ராஜாவின் அபூர்வ உன்னத இசையமைப்பு. "காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே ".இது வரை இந்த மாதிரி பாடல் எங்கே தேடினாலும் காணவில்லை.
அந்த அபூர்வ இரட்டையர் தமிழின் இசை பொற்காலத்தை நிர்ணயித்த ,தமிழின் மிக சிறந்த பாடல்களை தந்த இணை.அவர்களையே ஒரு பாடல் composition படுத்தி எடுத்ததாம்.முற்பிறவி சூழ்ந்த ,இப்பிறவி ஜோடி பாட வேண்டிய இதயத்தை பல பிறவிகளுக்கு அலைய விட வேண்டிய haunting melody .பல மாதங்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இவர்களை சோதித்து குதித்தோடி வந்த அதிசயம் "நெஞ்சம் மறப்பதில்லை".
தமிழுக்கு புதிதான ஹிந்துஸ்தானி-கர்நாடக-மேற்கத்திய பாணிகளில் புகுந்து புறப்பட்டு trend -setter ஆக சாதித்த அந்த பாடக-இசையமைப்பாளரின் , இசைக்காகவே இன்றும் பேச படும் அபூர்வ தேனிலவின் ,இன்றும் உங்கள் மனதை குதிரையேற்றி ,வானுக்கு அனுப்பும் "பாட்டு பாடவா".(boogey boogey rhythm என்ற மேற்கத்திய இணைப்பில்)
கீரவாணியில் என்னை கவர்ந்த மற்ற பாடல்கள்.
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்-நெஞ்சில் ஓர் ஆலயம்.
எனை காணவில்லையே நேற்றோடு-காதல் தேசம்.
பூங்காற்றிலே - உயிரே.
என்னை தாலாட்ட வருவாளோ- காதலுக்கு மரியாதை.
பாடி பறந்த கிளி- கிழக்கு வாசல்.
போவோமா ஊர் கோலம்- சின்ன தம்பி.
இன்பமே உந்தன் பேர் - இதய கனி.
மன்றம் வந்த தென்றலுக்கு- மௌன ராகம்.
மண்ணில் இந்த காதலன்றி - கேளடி கண்மணி.
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு -பொன்னு மணி.
மனிதா மனிதா இனி உன் விழிகள்-கண் சிவந்தால் மண் சிவக்கும்.
gkrishna
29th June 2014, 12:52 PM
கோபால் சார்
இன்னா சாத்து சாத்துறீங்க. டெண்டுல்கரை ஒப்பு நோக்கி உள்ளீர்கள் மிக்க நன்றி உங்கள் வாழ்த்து மிக சிறந்த உரம் .நடிகர் திலகத்தால் இணைந்தோம். இசையில் கலந்தோம் . இசைபட வாழ்வோம்
மெல்லிசை இர ட்டயர்கள்,திரை இசை திலகம் ,மெல்லிசை மாமன்னர் ராமமூர்த்தி paadalgalil சிறந்த வற்றை தேர்ந்துடுத்து லிஸ்ட் கொடுத்து
உள்ளீர்கள் .எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்
கீரவாணி ராகம் அருமை அலசல் .
வேந்தர் சார்
பஞ்சமி பாடல்கள் அனைத்தும் அருமை . வெளி வராத படங்களில் இது போன்று நல்ல நல்ல பாடல்கள் எல்லாம் உள்ளன கேட்டு மகிழ்வோம்
வாசு சார்
மிக்க நன்றி . காதல் கிளிகள் பாடல்கள்
செவ்வானமே சீர்கொண்டு வா ,நதி கரை ஓரத்து நாணல்களே இரண்டும்
ஜேசுதாஸ் - சைலஜா என்று நினவு
நம்ம திருலோக் அண்ணா direction என்றும் நினவு
சுஜாதாவின் கல்கி இதழில் இதை ஒத்த கதை ஒன்று வெளி வந்தது
p c ஸ்ரீராம் இயக்கிய வானம் வசப்படும் திரைப்படமும் இதே கதை என்று . நினவு . 3 அல்லது 4 ரௌடிகள் சிவகுமாரை அடித்து விட்டு ரதியை பலாத்காரம் செய்து விடுவார்கள் . கணவன் மனைவி இருவரும் இந்த அதிர்ச்சியில் இருந்து விடுபட முடியாமல் தவிப்பார்கள்
ரதி அன்றே மாவு அரைத்து அன்றே வார்த்த தோசை போன்ற வெழுமுன வெள்ளிகட்டி தோசை போன்று இருப்பார்
vasudevan31355
29th June 2014, 01:02 PM
வணக்கம் கிருஷ்ணா சார்,
காலையிலிருந்து இணைய இணைப்பு படு ஸ்லோ. அதுதான் வரமுடிய வில்லை.
vasudevan31355
29th June 2014, 01:17 PM
இன்றைய ஸ்பெஷல் (16)
இன்றைய ஸ்பெஷலாக அழகான, அரிதான ஒரு தத்துவப் பாடல்.
http://i1.ytimg.com/vi/H9WAspPKKeU/maxresdefault.jpg
'டெல்லி மாப்பிள்ளை' என்றொரு படம்.
அனைவருக்கும் அதிகம் பரிச்சயமில்லாத படம். 1968-ல் வெளிவந்த இப்படத்தில் ஹீரோ ரவிச்சந்திரன், ஹீரோயின் ராஜஸ்ரீ. இசை 'திரை இசைத் திலகம்' கே.வி.மகாதேவன். அற்புதமான கருத்துக்கள் நிறைந்த ஒரு பாடல் இப்படத்திலுண்டு. 'ஆண்டவன் ஒரு நாள் கடை விரித்தான்' என்று தொடங்கும் இப்பாடலைப் பாடியவர் திரு. டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள். மிகச் சிறந்த கற்பனை வளம் கொண்ட இப்பாடலை இயற்றிய கவிஞருக்கு இப்படிப்பட்ட சிந்தனை எப்படித் தோன்றியது என்பதை இன்றளவும் நினைக்கும் போது எனக்கு ஆச்சர்யம் குறைந்தபாடில்லை.
அன்பை பிரதானமாக விளக்கும் இப்பாடலின் வரிகளைப் பாருங்கள்.
ஆண்டவன் ஒருநாள் கடை வைத்து பல பொருள்களை வைத்து வியாபாரம் செய்வதாகவும், பல்வேறு மக்கள் அவரவர்களுக்கு விருப்பப்பட்ட, சுயநலம் கொண்ட, பல்வேறு பொருள்களை வாங்கிச் செல்வதாகவும், ஆனால் யாருமே அன்பை மட்டும் வாங்க மறந்து விட்டதாகவும் கவிஞர் அருமையான சங்கதிகள் கூறுகிறார். என்ன ஒரு கற்பனை!
http://i1.ytimg.com/vi/BGJ3GfNgZqQ/hqdefault.jpg
ஆண்டவன் ஒருநாள் கடை விரித்தான்
அதில் ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
அவரவர் நிலைமைக்கு விலையைச் சொன்னான்
அவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான்
ஆண்டவன் ஒருநாள் கடை விரித்தான்
அதில் ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
அவரவர் நிலைமைக்கு விலையைச் சொன்னான்
அவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான்
பெண்களோ அழகை வாங்க வந்தார்
ஆண்களோ ஆசையை வாங்க வந்தார்
தலைவர்கள் புகழை வாங்கிக் கொண்டார்
புலவர்கள் பொய்களை வாங்கிக் கொண்டார்
ஆண்டவன் ஒருநாள் கடை விரித்தான்
அதில் ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
அவரவர் நிலைமைக்கு விலையைச் சொன்னான்
அவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான்
குருடர்கள் பார்த்திட விழி கேட்டார்
ஊமைகள் பேசிட மொழி கேட்டார்
உறவினர் மாண்டவர் உயிர் கேட்டார்
ஒருசிலர் மேலுக்கு விலை கேட்டார்
எதையும் வாங்கிட மனிதர் வந்தார்
விலை என்னவென்றாலும் அவர் தந்தார்
இதயம் என்பதை விலையாய்த் தந்து
அன்பை வாங்கிட எவரும் இல்லை
அன்பை வாங்கிட எவரும் இல்லை
படித்தீர்களா? எப்படி? ஆண்டவன் விரித்து வைத்த கடையில்
பெண்கள் அழகை மட்டுமே வாங்கி,
ஆண்கள் ஆசையை மட்டுமே வாங்கி,
தலைவர்கள் புகழை மட்டுமே வாங்கி,
புலவர்கள் பொய்களை மட்டுமே வாங்கி,
குருடர்கள் விழிகளை கேட்டு,
ஊமைகள் மொழியை கேட்டு,
உறவினர் இறந்தவரின் உயிரைக் கேட்டு,
வேறு சிலர் சும்மா ஒப்புக்கு மேலுக்கு விலை கேட்டார்கள்.
ஆனால் 'இதயம்' என்ற செல்வத்தைத் தந்து 'அன்பு' என்னும் அரிய பொருளை வாங்கத்தான் எவரும் மறந்து விட்டார்கள்.
என்ன ஒரு படிப்பினையை உணர்த்தும் பாடல்! உண்மைதானே! அன்பு அரை கிலோ விலை என்னவென்று கேட்கும் காலமல்லவோ இது!
அருமையான மனதை மயக்கும் அமைதியான இசை. தென்றலாய் நம் மனதை வருடும் பாடல். நடுவில் கவர்ச்சிப் பாவையாய் ராஜஸ்ரீ. அழகான ரவிச்சந்திரன்.
அருமையான விசில் சப்தத்துடன் தொடங்கும் இப்பாடல் என் மனதில் மட்டுமல்ல. உங்கள் அனைவர் மனதிலும் இனி நீங்கா இடம் பெறட்டும். பெறத்தான் வேண்டும்.
இப்போது பாடலைப் பார்க்கலாமா?
http://www.youtube.com/watch?v=BGJ3GfNgZqQ&feature=player_detailpage
Gopal.s
29th June 2014, 01:19 PM
சிம்மேந்திர மத்யமம்.
சிறு வயதில், ஒரு படம் வெளியாகும் செய்தி தெரிந்து, அந்த படம் போகும் நாளை எண்ணியே 20 நாள் கழித்த அனுபவம் உண்டா?(மாசம் முதல் பத்தில் ரிலீஸ் ஆவது ,அப்பாவிடம் டிக்கெட் சில்லறை வாங்குவதை சுளு வாக்கும்)
ஒரு பெண்ணிடம் காதல் கடிதம் கொடுத்து ,அவள் வாங்கி சென்றும் ,ஒரு பத்து நாட்கள் reaction இல்லாத,இன்ப எதிர்பார்ப்பில் மிதந்திருக்கிறீர்களா?
கல்யாணத்திற்கு இன்னும் பத்தே நாட்கள். கல்யாண நாளை எண்ணி எண்ணி காலம் கடத்தியதுண்டா?கல்யாணம் முடிந்த பிறகு ,குல தெய்வம் காவடி எடுத்த பின்பே முதலிரவு.காவடிக்கு இன்னும் ஐந்து நாட்கள் . துடித்திருக்கீர்களா வர போகும் இன்பத்தை எதிர்பார்த்து?
இந்த ராகம் ஒரு anxiety (positive ) என்ற ஒரு உணர்வை கொடுக்கும்.
காத்திருப்பு,எதிர்பார்ப்பு ஒரு இன்ப காரியத்துக்காக என்று இந்த ராகம் எல்லாம் இன்பமயம் என்ற உணர்வை கொடுக்கும்.
ஐயோ, இந்த ஜோடி வாழ்க்கையில் இணைந்திருக்க கூடாதா என்ற எதிர்பார்ப்பு எல்லா ரசிகர்களுக்கு அளித்த ஒரு all time pair சிவாஜி-பத்மினி.(நடிகர்திலகமும் ,நண்பர் சிதம்பரத்திடம் வெளியிட்டுள்ளார். பத்மினி ,இலங்கை எழுத்தாளர் முத்து லிங்கத்திடம் ) பின்னால் வர போகும் இந்த ஜோடியின் சீனியர் அறிமுகம் பப்பிம்மாவிற்கு.என்.எஸ்.கே தயவில் மணமகள் படத்தில்.பின்னால் பணத்தில் (1952) இந்த ஜோடி இணைந்தது. பப்பி வேடிக்கையாக எனக்கு தாலி கட்டிய(ஷூட்டிங் ) பின்பே மனைவிக்கு(நிஜத்தில்) என்பார்.அந்த அறிமுக படத்தில் பிரபல நடன பாடல் "எல்லாம் இன்ப மயம்."
தான் காதலித்த பெண்,தன் நண்பனை விரும்புவது அறிந்து ,தன் ஆசை துறந்து ,நண்பனுக்கே அவளை மணமுடிக்கிறான்.(மிரட்டி)ஒரு சகோதர ஸ்தானத்தில் நின்று. அவள் பூமுடிக்கும் நாளை கற்பனை கண்டு ,ரகு ராமன் வரவேற்க சிவராமன்-ராஜேஸ்வரி திருமணம் இனிதே நிறைவுற்று விடை பெறுகிறான்.(எங்கே விடை பெற விட்டார் நண்பர்?ஒரேயடியாகவல்லவா விடை கொடுத்து விடுவார்?) அந்த Epic Song "பூ முடிப்பாள் இந்த பூங்குழலி".
டீன் ஏஜில் இருக்கும் போது நான் நினைப்பதுண்டு. இயக்குனர் ஆனால் இந்த வாழ்கையை பற்றி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று. அப்போது வாழ்க்கையில் இரண்டே பருவம். குழந்தை(கல்யாணம் வரை)-வாலிபன்(கல்யாணம் ஆனதும்).இரண்டுங்கெட்டான் பருவத்திற்கு மதிப்பே இல்லை. நண்பன் ஒரு நாள் என்னிடம் சொன்னது.... தேவிகலா சென்று பார்.உன் கனவை கோகிலா இயக்குனர் திருடி விட்டார் என்று.அழியாத கோலங்களாய் அப்படம். இதை தொடர்ந்து இன்னொரு ஸ்ரீதர் உதவியாளர்களின் (ஸ்ரீதர் ஒ மஞ்சு அரை வேக்காடு) தொடர்ந்த முயற்சி பன்னீர் புஷ்பங்கள். எனது பிரிய பாடகி உமா ரமணன் (நல்ல வேலை ராஜா புண்ணியம் வைத்து ஜானகி தவிர்த்தார்) அருமையான குரலில் "ஆனந்த ராகம் கேட்கும் காலம்".
சிம்மேந்திர மத்யமம் மற்ற பாடல்கள்.
தூது செல்வதாரடி- சிங்கார வேலன்.
தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா-கோபுர வாசலிலே.
தாஜ் மகால் தேவையில்லை அன்னமே-அமராவதி
நீ பௌர்ணமி என்றும் என் வாழ்விலே-ஒருவர் வாழும் ஆலயம்.
Gopal.s
29th June 2014, 01:22 PM
ராகவேந்திரா சார்,
தேடி தேடி ,தமிழுக்கு ஓலை சுவடி கொணர்ந்த தமிழ் தாத்தா உ .வே.சா போல ,இசை திரிக்கு அபூர்வ பாடல்களை கொணரும் நீங்கள் இசை தாத்தா. (பஞ்சமி அமர்க்களம்.நன்றிகள்)
வாசு,
கடவுள் கடை விரித்தால் ,அன்பை விலைக்காவது வாங்கி முழுக்க உன்னிடம் தந்து விடுவேன். (இல்லாதவர்களுக்கு கொடுப்பது என் பிறவி குணம்)
vasudevan31355
29th June 2014, 02:31 PM
தமிழ்த் திரைப்படப் பாடல்களில் இயக்குனர்களின் பாணி.
'ஜஸ்ட் ரிலாக்ஸ்' குறுந்தொடர் (1)
http://3752ph102dgl405f3e3yvdrpili.wpengine.netdna-cdn.com/wp-content/uploads/2012/12/Gustav-Metzger.-Just-Relax..jpg
இயக்குனர் 'ராமண்ணா'
இவர் பாடல் காட்சிகளைப் படமாக்குவதில் ரொம்ப ஆடம்பரம் தெரியும்.
கதாநாயகன் கதாநாயகியையும், கதாநாயகி கதாநாயகனையும் கிண்டல் செய்து பாடும் பாட்டு ஒன்றை பெரும்பாலும் தவறாமல் வைத்து விடுவார்.
கதாநாயகியரை கடல், நீச்சல் குளம், பாத் டப் இவற்றில் கண்டிப்பாக குளிக்க விடுவார். கதாநாயகனும் உடன் இருப்பார்.
கதாநாயகியர் மீது சேற்றையோ, பெயின்ட்டையோ வாரி இறைப்பதில் இவருக்கு அலாதி சுகம். பெயின்ட்டை நாயகி உடலில் முழுதுமாகப் பீச்சியடிப்பார்.
அதே போல நாயகனையும், நாயகியையும் ஒரு சிறிய இடத்தில் அடைத்து வைத்து பெட்டிக்குள்ளேயோ அல்லது காருக்குள்ளேயோ சுற்றி சுற்றி வந்து பாட விடுவார்.
நாயகியரை எப்படியாவது ஸ்விம்மிங் டிரெஸ்சில் காண்பித்து விடுவார்.
குத்துப்பாட்டு நிச்சயம் உண்டு. போட்டிப் பாடல்களும் வைத்து விடுவார்.
கதாநாயகனுக்கு கிழ வேஷம் போட்டு இளசுகளை கிண்டலடித்துப் பாட வைத்துப் படமாக்குவார்.
நாயகியரை குட்டைப் பாவையுடன் சர்க்கஸ் பொம்மை போல் காட்டுவதில் இவருக்கு அலாதி பிரியம்.
பாடல் காட்சிகளை கொஞ்சம் அதிகமாக வைப்பார். நாயகன் உடை விஷயத்தில் மிக்க கவனம் செலுத்துவார்.
நாயகி உடை விஷயத்தில் கொஞ்சம்தான்:) கவனம் செலுத்துவார்.
மீதியை நம் கோபால் எழுதுவார்.
சேம்பிளுக்கு ஒரு அருமையான பாடல். 'நான்' படத்தில் ரவிச்சந்திரனும், மேடமும் நீச்சல் குளத்தில் பாடும் 'குவாக் குவாக்' பாடல்.
http://i1.ytimg.com/vi/t7KRiLQd2_c/movieposter.jpg?v=534f7945
அதே முகம்
அதே குணம்
அதே மனம் என்னிடம்
ரவியின் அம்சமான டான்ஸ்.... நீச்சல் குளம்....கலைச்செல்வியின் கொள்ளை அழகு பிளஸ் கிளாமர்.
ராமண்ணா கமர்ஷியலாக படமெடுப்பதில் வல்லவர். பாடல்களையும் தான்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Ow5kj3u0kq4
vasudevan31355
29th June 2014, 02:35 PM
ராகவேந்திரா சார்,
தேடி தேடி ,தமிழுக்கு ஓலை சுவடி கொணர்ந்த தமிழ் தாத்தா உ .வே.சா போல ,இசை திரிக்கு அபூர்வ பாடல்களை கொணரும் நீங்கள் இசை தாத்தா. (பஞ்சமி அமர்க்களம்.நன்றிகள்)
வாசு,
கடவுள் கடை விரித்தால் ,அன்பை விலைக்காவது வாங்கி முழுக்க உன்னிடம் தந்து விடுவேன். (இல்லாதவர்களுக்கு கொடுப்பது என் பிறவி குணம்)
அடப் பாவி மனுஷா! அன்பே இல்லாமல் பேசி இப்படி வம்புக்கு அலையிறியே!
அந்தப் பாட்டை உனக்காகத்தானே போட்டேன்.
vasudevan31355
29th June 2014, 02:54 PM
'ஆசீர்வாதம்' (1972) என்று படம் வந்தது. ஜெயசங்கர், எஸ்.வி.சுப்பையா,எம்.ஆர்.ஆர். வாசு நடித்தது .
ஜெயசங்கர் தன் பிறந்தநாள் விழ்ஹ்வில் ஒரு பாடல் பாருவார். நம்ம கோவை சௌந்தரராஜன் பாடியிருப்பார். கோஷ்டி, கோரஸ் அருமை. இசை மெல்லிசை மன்னரா? அமர்க்களம்.
இந்த நாள் நல்ல நாள்
என்னை நான் கண்ட நாள்
உண்மையை எண்ணினால்
ஊமையாய் நின்ற நாள்
நிம்மதி கொண்ட நாள்.
அப்புறம் இன்னொரு சோக பாடல். பாடகர் திலகம் பாடுவார்
நெஞ்சம் நிறைய வரவேற்றான் நீ யாரென்று
அந்த நேரம் முதலே நினைக்கின்றேன் நீ யாரென்று
இன்னொரு அபூர்வப் பாடல்
சுசீலா சௌந்தரராஜன் இணைந்து பாடும்
புன்னகை மின்னிடும் அரசி
நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி
அன்பிலும் பண்பிலும் தங்கம்
பிறர் இன்பத்தை எண்ணிடும் நெஞ்சம்
அருமையான ஒரு பாடல்.
எஸ்.வி.சுப்பையா வாத்தியார். ஜெய் விஸ்வாசமான மாணவன். சொந்த மகன் சுப்பையாவுக்கு வாசு. வாசு உருப்படாமல் போவார். ஜெய் நன்கு படித்து பட்டம் வாங்குவார். இப்படிப் போகும் கதை. எம்.ஆர்.ஆர்.வாசு நன்றாக ஸ்கோர் பண்ணுவார்.
mr_karthik
29th June 2014, 04:40 PM
டியர் வாசு சார்,
'ஆண்டவன் ஒரு நாள் கடைவிரித்தான்' தத்துவப்பாடல் அட்டகாசம். ஆனால் வெளியுலகத்துக்கு அதிகம் தெரியாமல் போனதுதான் சோகம். ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் படப்பாடல்கள் திலகங்களின் பாடல்களுக்கு இணையாக பிரபலமாகிய போதிலும் ஏனோ இந்தப்பாடல் அதிகம் கண்டுகொள்ளப்படாமல் போய்விட்டது.
இந்தப்படம் நான் பார்த்திருக்கிறேன். நல்ல படம்தான். இருந்தும் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இப்பாடலை கவியரசர் ஒவ்வொரு வரியையும் அனுபவித்து எழுதியிருப்பார்.
நல்ல பாடலை நினைவூட்டியதற்கு நன்றி.
கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் வந்த ஜெய்யின் 'அவன் நினைத்தானா இது நடக்குமென்று' (செல்வமகள்) செம ஹிட். (ஒவ்வொருமுறையும் ரேடியோ சிலோன் உபயம் என்று சொல்ல வேண்டியதில்லைஎன்று நினைக்கிறேன். ஏனென்றால் அன்றைய திரைப்பாடல்களை பிரபலப்படுத்தியதில் சென்னை / திருச்சி வானொலிகளின் பங்கு இரண்டு சதவீதம் மட்டுமே).
mr_karthik
29th June 2014, 05:02 PM
டியர் வாசு சார்,
'ஜஸ்ட் ரிலாக்ஸ்' தொடர் துவக்கமே நன்றாக உள்ளது. ரிலாக்ஸ் பாடல்களுக்கேற்ப ஒரு நல்ல 'ரிலாக்ஸ்' இயக்குனரை தேர்ந்தெடுத்திருப்பது நல்ல ஐடியா.
காதல் டூயட் என்றாலே கேமராவை தூக்கிக்கொண்டு ஊட்டி, கொடைகானல், சாத்தனூர் டேம் என்று போய் அங்குள்ள மரம், மட்டைகளையே சுற்றி சுற்றி எடுத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் ரயில் பெட்டியில் பாட்டு (குமரிப்பெண்) , காருக்குள் டூயட் (நான்), சிறிய மரப்பெட்டிக்குள் டூயட் (மூன்றெழுத்து), பாத்ரூமில் டூயட் (பறக்கும் பாவை), கிணற்றுக்குள் டூயட் (தங்கச்சுரங்கம்) என்று வித்தியாசமாக சிந்தித்த இயக்குனர்.
வில்லன் மாளிகைஎன்றாலே வித விதமான் செட் போடஆரம்பித்ததும் இவர்தான். எல்லாவற்றுக்கும் சிகரம் சொர்க்கம் 'பொன்மகள் வந்தாள்' பாடலுக்கு போட்ட அதி அற்புதமான செட்.
முதல் பாடலாக ராமண்ணா பாடலில் ரவியும், "மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா" அவர்களும் தோன்றும் பாடலை பதித்துள்ளீர்கள்.
'ரிலாக்ஸ் இயக்குனர்' வரிசையில் கண்டிப்பாக நம்ம சி.வி.ஆர் வருவார் என்று நம்புகிறேன்.
vasudevan31355
29th June 2014, 05:40 PM
அன்பு கார்த்திக் சார்,
மிக்க நன்றி! நீங்களும் ஒரு நல்ல பாடலை ஞாபகப்படுத்தியுள்ளீர்கள். செல்வமகள். நன்கு ஓடிய படமும் கூட.
ஜெய், ஸ்ரீகாந்த், ராஜஸ்ரீ, மேஜர் எல்லாம் நடித்திருப்பார்கள். பாடல்கள் அத்தனையும் சூப்பர் டூப்பர் ஹிட். இயக்கம் கே.வி.ஸ்ரீனிவாஸ்.
'குயிலாக நானிருந்தென்ன' (சுசீலா குயில் தரும் இனிமை)
'வெண்ணிலா முகம் குங்குமம் பெறும்' (ராட்சஸிக்காவே இன்னும் விருப்பமாக நம் கேட்கும் பாடல்)
இரண்டு பாடல்களிலும் சௌந்தரராஜன் அவர்களின் ஒத்துழைப்பு அபாரம்.
அப்புறம்
'ஏய்...பறந்து செல்லும் சிட்டுக் குருவி
பார்வையைத் திருப்பு'
டீஸிங் பாடல். எனக்கு ரொம்பப் பிடித்த பாடல். ('ஏ...................ஏய்' என்று சுசீலா இழுத்து இசைக்கும் அழகு இருக்கிறதே)
இந்தப் பாடலில் ஒரு வரி வரும்.
ஜெய்சங்கரின் ஓட்டை கார் பெட்ரோல் இல்லாமல் நின்றுவிட, ஜெய் கயிற்றால் ராஜஸ்ரீயின் காரில் தன் காரைக் கட்டி இணைத்து கலாய்த்துப் பாட ஆரம்பிப்பார். ஜெய் ரோட்டில் குட்டிக் கரணமெல்லாம் அடிப்பார்.
'27 -இல் (1927) வாங்கின காரு
இதில் என்ன ஆட்டம் சொல்லுங்க சாரு'
என்று ராஜஸ்ரீ ஜெய் காரை நக்கல் அடிப்பார். ('காதல் வாகனம்' அப்படி)
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=rONeYthlbRg
மெல்லிசை மன்னர் கோலோச்சிய இன்னொரு படம் இது. இலங்கை வானொலி மட்டுமல்லாது சென்னை, திருச்சி, பாண்டிச்சேரி வானொலி நிலையங்களிலும் சக்கை போடு போட்ட பாடல்கள்.
(இணையத்தில் தகவல்களில் ஏகப்பட்ட தவறுகள். இப்படத்திற்கு இசை கோவர்த்தனம் என்று சில தளங்களில் போட்டிருக்கிறார்கள். ஆசை அறுபது நாள் என்று முழுப்படமும் யூடியூபில் கொடுத்துள்ளார்கள். ஆசை ஆசையாய்ப் போய் பார்த்தால் அந்தப் படம் கடைசியில் நந்தா என் நிலா. வீட்டுக்கு ஒரு பிள்ளை முழுப் படத்தையும் 'நீதி தேவன்' என்று கொடுத்திருக்கிறார்கள். என்னத்தச் சொல்ல)
இப்போது நீங்கள் நினைவு படுத்திய அழகான பாடல் இதோ! (பியானோ பாடல் முழுதும் அற்புதமாய் விளையாடும்)
அவன் நினைத்தானா இது நடக்குமென்று
அவன் நினைத்தானா இது நடக்குமென்று
அவன் நினைத்தானா இது நடக்குமென்று
அவன் நினைத்தானா இது நடக்குமென்று
அவன் நினைக்கு முன்னே பழம் பழுக்குமென்று
அவன் நினைக்கு முன்னே பழம் பழுக்குமென்று
அவன் நினைத்தானா இது நடக்குமென்று
அவன் நினைத்தானா இது நடக்குமென்று
நல்ல ஆற்றங்கரைதனில் காற்று வரும்
அது யாரிடம் என்றா பார்த்து வரும்
நெஞ்சின் ஆசையிலே தேன் ஊறி வரும்
அது ஊர்வலம் சென்றா தேடி வரும்
அவன் நினைத்தானா இது நடக்குமென்று
அவன் நினைத்தானா இது நடக்குமென்று
அன்று எங்கிருந்தோ ஒரு ஏழை வந்தான்
அந்த ஏழை உன் கோவிலை நாடி வந்தான்
நல்ல காவல் கொண்டாய் நீ கைகொடுத்தாய்
அவன் காத்திருந்தான் இன்னும் கனியும் என்று
அவன் நினைத்தானா இது நடக்குமென்று
அவன் நினைத்தானா இது நடக்குமென்று
உன்னைப் பார்த்தவன் மனதில் பசி இருக்க
அவன் பார்வையில் ஆயிரம் இசை இருக்க
பார்த்தவன் மனதில் பசி இருக்க
அவன் பார்வையில் ஆயிரம் இசை இருக்க
நல்ல நேரம் வரும் என்று நினைத்திருக்க
ஏன் நேற்று வந்தான் உன்னை கலங்க வைக்க
அவன் நினைத்தானா இது நடக்குமென்று
அவன் நினைத்தானா இது நடக்குமென்று
அவன் நினைக்கு முன்னே பழம் பழுக்குமென்று
நினைக்குமுன்னே பழம் பழுக்குமென்று
அவன் நினைத்தானா இது நடக்குமென்று
அவன் நினைத்தானா இது நடக்குமென்று
http://www.youtube.com/watch?v=wBD9aKaUj0s&feature=player_detailpage
RAGHAVENDRA
29th June 2014, 05:53 PM
சில சமயம் பிரபல இசையமைப்பாளர்களின் பாணியில் இன்னொருவரின் பாணி தென்படுவதுண்டு. மெல்லிசை மன்னராகட்டும், திரை இசைத்திலகமாகட்டும் இதில் யாருமே விதி விலக்கல்ல.
அப்படி ஒரு பாடல் இடம் பெற்ற படம்
http://www.inbaminge.com/t/t/Thaliya%20Salangaiya/folder.jpg
இப்படத்திற்கு இசை தாலியா சலங்கையா. கஜ்ஜெ பூஜே என்ற கன்னடப் படத்தின் தமிழ் வடிவம் என்று ஞாபகம். வாணிஸ்ரீ கதாநாயகியாக நடிக்க ராமண்ணா இயக்கிய படம். இப்பாடல் மிகவும் வித்தியாசமாக இருக்கும். கே.வி.எம். இசையமைத்திருந்தாலும் மெல்லிசை மன்னரின் பாணி தென்படுவது வியப்பாக உள்ளது. கேட்டுப் பாருங்கள். அலமேலு மங்கை அருகே திருமாலே என்ற இப்பாடல் துவங்கும் போது கே.வி.எம். பாணியில் துவங்கி முடியும் போது மெல்லிசை மன்னரின் பாணியில் முடியும்.
http://www.inbaminge.com/t/t/Thaliya%20Salangaiya/
RAGHAVENDRA
29th June 2014, 05:54 PM
வாசு சார்
ஜஸ்ட் ரிலாக்ஸ் துவக்கமே தூள்... கார்த்திக்கைப் போல் நானும் ஆவலாய் உள்ளேன். என்னென்ன பாடல் வரப்போகிறது என.
vasudevan31355
29th June 2014, 05:57 PM
கார்த்திக் சார்,
சார் நான் சும்மா ஜாலிக்காக ராமண்ணாவைப் பற்றிக் கிறுக்க ஆரம்பித்தால் அற்புதமாக ரத்தினச் சுருக்கமாக நீங்கள் இன்னும் மேலாக சுவைபட விவரங்கள் தந்து அந்தத் தொடரை அழகாக்கி முழுமைப்படுத்தி இருக்கிறீர்கள். நன்றி!
இனி நன்கு மெருகேற்றியே நாம் இதைத் தொடரலாம். உங்களிடம் ஒரு அன்பு வேண்டுகோள். நான்தான் எழுத வேண்டும் என்பதில்லை. நீங்கள் என்னைவிட நிறைய விஷயங்களைத் தருவீர்கள் இன்னும் ஜாலியாக. எனவே நீங்கள் எழத, அதைப் படிக்க நாங்கள் வெகு ஆவலாய் உள்ளோம்.
கோபாலும் சேர்ந்து கொள்வார் நாம் சொல்லாமலேயே.
RAGHAVENDRA
29th June 2014, 05:57 PM
இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் நெஞ்சிலிருந்து நீங்காத பாடல், பெண்ணைச் சொல்லிக் குற்றமில்லை படத்தில் இடம் பெற்ற வெண்ணிலவில் குடை பிடிக்கும் ஷாஜஹானின் தாஜ்மஹல். எஸ்.பி.பாலாவும் வாணியும் பாடிய இப்பாடல் கேட்போரின் நெஞ்சில் உடனடியாக ஆட்கொண்டு விடும் தன்மை பெற்றதாகும்.
http://www.inbaminge.com/t/p/Pennai%20solli%20kutramillai/
vasudevan31355
29th June 2014, 06:04 PM
டியர் ராகவேந்திரன் சார்,
'தாலியா சலங்கையா' படத்தில் 'அலமேலு மங்கை அருகே திருமாலே' பாடலை உங்களுக்கே உரித்தான ஸ்டைலில் தந்துள்ளீர்கள். பாடலை நன்கு உற்றுக் கேட்கும்போது நீங்கள் சொல்வதும் உண்மைதான். (ம்ம்..நம் ராகதேவன் என்னென ரகளை செய்யப் போறாரோ!)
Gopal.s
29th June 2014, 07:17 PM
அடிங்......., எங்கேந்திரா மவனே ஐடியா பிடிப்பே? ஜாலி ரிலாக்ஸ் இயக்குனர் ,அதுவும் என் பிரிய ராமண்ணா? படு பிரமாத ஆரம்பம். ஆடை அழகர் ,கதாநாயகி வரிசை மாதிரி கோபித்து,தொங்கலில் விட்டு விடாதே. தொடரு.
செல்வ மகள் பாடல்கள், சிவாஜி-வேலுமணி இணைவதாக இருந்த ,பாலும் பழமும் படத்திற்கு போட்ட மீதி பாடல்களை,அடுத்ததாக இருந்த படத்தில்(முக்கியமாக குயிலாக. நான் பேச நினைப்பதெல்லாம் வேறு படத்திற்காக போட்டதை apt என்பதால் பாலும் பழமும் படத்தில் வைத்தனர்.) , உபயோக படுத்த இருந்தனராம். வேலுமணி ,செல்வமகள் படத்தில் உபயோக படுத்தி கொண்டார் தன் தயாரிப்பாக இருந்ததால். இல்லேன்னா ,இந்த மாதிரி லோ லோ பட்ஜெட் படங்களில் இந்த மாதிரி பாட்டெல்லாம் வருமா. ஏதோ ஒன்றுக்கு பட்டு குஞ்சலம் என்பார்கள்.
mr_karthik
29th June 2014, 07:41 PM
'ஜஸ்ட் ரிலாக்ஸ்' பாடல்
ரொம்ப சுறுசுறுப்பாக விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் படத்தில் இடையே ஒரு ரிலாக்ஸ் பாடல் வந்தால் எப்படியிருக்கும்? சில படங்களில் ஸ்பீட் பிரேக்கர்கள் போல கதையோட்டத்தை இடைஞ்சல் செய்யும். சில படங்களில் மனதுக்கு கூடுதல் உற்சாகம் கொடுக்கும். அப்படி நம் மனதுக்கு உற்சாகம் கொடுத்த பாடல்தான் இது. சி.வி.ஆர். - நடிகர்திலகம் கூட்டணியில் முதலிடம் பெறும் "ராஜா" படத்தில் இடம்பெற்ற 'இரண்டில் ஒன்று' பாடல் மனதுக்கு சொல்லமுடியாத கிளுகிளுப்பைத் தரும்.
நடிகர்திலகத்துக்கு மதுரக்குரலோன் எஸ்.பி.பி. பாடிய இரண்டாவது பாடல் இது. பாடல் நடிகர்திலகத்துக்கு மட்டும்தான். "மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா" அவர்களுக்கு வெறும் ஹம்மிங் மட்டுமே (இதற்காகவே இருந்த வசந்தாவின் குரலில்). காதலர்கள் இருவருக்கும் அருமையான உடைகள். நடிகர்திலகத்துக்கு கருநீல நிற பேண்ட், மற்றும் அதே நிறத்தில் (உள்ளே பனியன் அணிந்திராமல்) சட்டை, "மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா" அவர்களுக்கு கரும்பச்சை நிறத்தில் அழகான வெள்ளைக்காலருடன் கூடிய கவுன்.
பாடலுக்கு மேலும் சுவை சேர்த்தது அதன் காட்சியமைப்பு. நடிகர்திலகம் தனது ஜோடியை கிட்டத்தட்ட டீஸ் செய்து பாடுவதுபோல் பாட, அவரை அறையைவிட்டு வெளியே தள்ளி கதவைத்தாளிட, ஒவ்வொரு கதவையும் இவர் மூட மூட அவர் வேறு வழியே வந்து வந்து எட்டிப்பார்த்து பாட, இவரை மடக்குவதற்காக அவர் வெளியே போக, அவர் வெளியே போன சாக்கைப்பயன்படுத்திக்கொண்டு அவர் அறையின் உள்ளே நுழைந்து கொள்ள, செம கலக்கல்.
இரண்டில் ஒன்று, நீ என்னிடம் சொல்லு
என்னைவிட்டு வேறு யாரு உன்னைத்தொடுவார்
(முதல் சரணம் நினைவில் இல்லை, எனவே இரண்டாவது சரணம்)
காலைப்போட்டு மூடிக்கொண்டால் தாகம் தீராது
முந்தானைபோட்டு மூடிக்கொண்டால் மோகம் தீராது
என் அல்லிராணி என் அருகில் வா நீ
நான் முள்ளில்லாத ரோஜாப்பூவை
கிள்ளிப்பார்கின்றேன்
என்னை விட்டு வேறு யாரு உன்னைத்தொடுவார்
தத்தை போலும் தேவன் என்று என்னைச்சொல்லம்மா உன்
அத்தை பெற்ற பிள்ளையென்று எண்ணிக்கொள்ளம்மா
வித்தை ஒன்றை கற்றுக்கொள்ளு வாத்தியாரம்மா
நீ கற்றுக்கொள்ள என்னைவிட்டால் வேறு யாரம்மா
இணைந்து நில்லு இன்னும் அணைந்து கொள்ளு
நான் எங்கோ போவேன் அங்கேயெல்லாம் உன்னையெடுத்து
என்னை விட்டு வேறு யாரு உன்னைத்தொடுவார்
இரண்டில் ஒன்று, நீ என்னிடம் சொல்லு
என்னைவிட்டு வேறு யாரு உன்னைத்தொடுவார்
இளமையும் கிளுகிளுப்பும் ஒருசேர கண்ணதாசன், மெல்லிசை மன்னர், எஸ்.பி.பி., சி.வி.ஆர்., நடிகர்திலகம், "மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள்" அனைவரும் இணைந்து கலக்கிய அருமையான இன்டோர் பாடல்...
Gopal.s
29th June 2014, 07:51 PM
கார்த்திக்,
அமர்க்களம். என்னுடைய படு favourite காட்சி மற்றும் பாடல்.S P B -வசந்தா இணைவே சுகம்தான். தலைவர் இதில் அவ்வளோ அழகு,handsome ,இளமை,குறும்பு,துருதுருப்பு .Grape கலர் ஷர்ட். மேடம், பச்சை கலர். தலைவர் செல்லமாய் முதுகு நிமிண்டும் அழகு.புல் fight போல அறையில் நுழையும் ஸ்டைல்.
vasudevan31355
29th June 2014, 08:06 PM
கலக்கல் கார்த்திக் சார்!
செம ரிலாக்ஸ். நிம்மதியா ஜாலியா இருக்கு உங்க எழுத்தைப் படித்தவுடன். 'ராஜா' மாதிரி எழுதுறீங்க.
பாட்டில் லயிக்கிறதுக்கு முன்னாலேயே அந்த மன்மதனின் அழகு முகத்தை கவனிக்கத்தானே நேரம் சரியா இருக்கு. சும்மா துறுதுறுதுறுன்னு. எங்கேயாவது ஒரு இடத்துல நிப்பாரா?...
அதுவும்
'அந்த மெத்தை போடும் தேவன் என்று என்னை சொல்லம்மா'
வரிகளின் போது
இரண்டு கால்முட்டிகளின் மீதும் இரண்டு கைகளை வைத்து, வலது காலை பின் பக்கம் சற்றே உயர்த்தி, ஒரு எந்து எந்தியபடி ஒரு வினாடி வருவாரே!
வேண்டாம் கார்த்திக் சார்.
வெறி ஏறுது. அதுவும் கன்னாபின்னான்னு
ம்..
இது மதுர கானங்கள் திரியாய்ப் போயிடுச்சு.:sad:
http://www.youtube.com/watch?v=Ddujh97dfqw&feature=player_detailpage
vasudevan31355
29th June 2014, 08:13 PM
கார்த்திக் சார்!
ஒரு இடத்துல கூட மறக்காம மா.பு அ அ போடுகிறீர்களே! சூப்பர்.:)
gkrishna
29th June 2014, 09:00 PM
[கார்த்திக் சார்/வேந்தர் சார்/வாசு சார்/கோபால் சார்
மதியம் முழுவதும் பவர் படுத்தி எடுத்து விட்டது .10 நிமஷங்களுக்கு ஒரு தடவை லோட் ஷெட்டிங் . evening ஒரு reception போய் விட்டு வந்து பார்த்தால் திரி செம ரகளை .
வாசு சார் எங்கிருந்து தான் இந்த டைட்டில் பிடிகிரரோ ஜஸ்ட் ரிலாக்ஸ்
செம கலக்கல்
நீங்கள் ஜனரஞ்சக ராமண்ணா என்றல் கார்த்திக் சார் இன் இளைமை CVR
"நான் நினைத்தேனோ இது எல்லாம் நடக்கும் என்று "
கார்த்திக் திரியை "இரண்டில் ஒன்று " பார்ப்பேன் என்கிறார்
கோபால் சார் இன் சிமேந்திர மத்யமம் ஒரு அபூர்வ ராக பட்டியல்
கீரவாணி மற்றும் சிமேந்திர மத்யமம் பற்றி எல்லாம் நிறைய ஆய்வு
இறுதியாக
",மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு மடி மேல் விளையாடி நாம் மனம் போல் உறவாடி '
பாலா மற்றும் வாசுவின் செல்ல ராட்சசி
"மறந்தா போகும் "
http://www.ovguide.com/athaiya-mamiya-9202எ8க04000641ப800000000ஆ2க225
இந்த லிங்க் இல் முத்துராமனும் பாரதியும் ஆடி படுகிறார்கள்
அத்தைய மாமியா 1974
ஜெய் உஷா நந்தினி என்று நினவு .கோபு direction
இதில் முத்து மற்றும் பாரதி எங்கு வந்தார்கள் என்று தெரியவில்லை
vasudevan31355
30th June 2014, 11:35 AM
இன்றைய ஸ்பெஷல் (17)
படம்: உனக்கும் வாழ்வு வரும் (1978)
இசை: சங்கர்-கணேஷ்
பாடல் :நான் மெதுவாகத் தொடுகின்றபோது
http://www.inbaminge.com/t/u/Unakkum%20Vazhvu%20Varum/folder.jpg
அப்போது மிகவும் பிரபலமான பாடல். ஆனால் இப்போது மறக்கடிக்கப் பட்டு விட்டது. மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்வோம்.
http://image1.frequency.com/uri/w354_h200_ctrim_ll/_/item/1/5/9/1/Unakkum_Vazhvu_Varum_Tamil_Movie_Song_Na_159194177 _thumbnail.jpg
இப்படி ஒரு படம் வந்ததா? வந்ததே. முத்துராமன்,ஸ்ரீப்ரியா ஜோடி. இந்தப் பாடல் மிக மெதுவாக, ஆனால் அழகாக நம் காதுகளுக்குள்ளும், இதயத்துக்குள்ளும் நுழையும். ரொம்ப ஸாப்ட்டான ஒரு பாடல்.
ஜெயச்சந்திரன் மற்றும் சுசீலா கொஞ்சம் கூட அலட்டலில்லாமல் அமைதியாகப் பாடியிருப்பார்கள். ஸ்ரீப்ரியா வாலை சுருட்டிக் கொண்டு அடக்கமாக நடித்திருப்பார்.
இந்தப் படத்தில் நம் ஆச்சி மனோரமா பாடிய ஒரு பிரபலமான பாடல் ஒன்று உண்டு. கல்யாண வைபவங்களில் இப்பாடலைப் போடாமல் இருக்க மாட்டார்கள்.
மஞ்சக் கயிறு
தாலி மஞ்சக் கயிறு
இது மஹாலஷ்மி ராசி
மஞ்சக் கயிறு
என்று தள்ளுவண்டியில் மஞ்சள் தாலிக்கயிறு விற்றுக் கொண்டு ஆச்சி அருமையாகப் பாடியிருந்தார்.
படத்தின் கதை முழுவதுமாக மறந்துவிட்டது. ஆனால் நான் 'மெதுவாகத் தொடுகின்றபோது' பாடல் என்றும் நினைவில் நின்றுவிட்டது.
நான் மெதுவாகத் தொடுகின்றபோது
கண் மயங்காமல் இருப்பாளோ மாது
திருமேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்
துயிலாது கண்கள் துயிலாது
நீ மெதுவாகத் தொடுகின்றபோது
கண் மயங்காமல் இருப்பாளோ மாது
திருமேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்
துயிலாது கண்கள் துயிலாது
அழகான கன்னங்கள் அரவிந்தக் கிண்ணங்கள்
அடையாளச் சின்னங்கள் கேட்க
சிறு காயங்கள் வரும் மாயங்கள் அதிகாலைதான்
சிறு காயங்கள் வரும் மாயங்கள் அதிகாலைதான்
ஆறுமோ ஆறுமோ
பொன்னாகும் கன்னம் என்னாகும்
நீ மெதுவாகத் தொடுகின்றபோது
கண் மயங்காமல் இருப்பாளோ மாது
திருமேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்
துயிலாது கண்கள் துயிலாது
துயிலாது கண்கள் துயிலாது
பூமாலை மாங்கல்யம் பொன்னூஞ்சல் ஊர்கோலம்
கல்யாண வைபோகம் என்று
பூமாலை மாங்கல்யம் பொன்னூஞ்சல் ஊர்கோலம்
கல்யாண வைபோகம் என்று
ஒருநாள் பார்த்து இரு தோள் பார்த்து
நாம் பெற வேண்டும் பூச்சரம்
ஒருநாள் பார்த்து இரு தோள் பார்த்து
நாம் பெற வேண்டும் பூச்சரம்
தைமாதம் அந்த வைபோகம்
நான் மெதுவாகத் தொடுகின்றபோது
கண் மயங்காமல் இருப்பாளோ மாது
திருமேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்
துயிலாது கண்கள் துயிலாது
https://www.youtube.com/watch?v=M0uYr8we5rA&feature=player_detailpage
vasudevan31355
30th June 2014, 11:46 AM
கார்த்திக் சார்,
இரண்டில் ஒன்று பாடலின் முதல் சரணம்
பாலுக்குள்ளே வெண்ணை உண்டு நான் அறிவேன்
பாவைக்குள்ளே எண்ணம் உண்டு நீ அறிவாய்
நாளுக்குள்ளே ரெண்டும் உண்டு மூன்றும் உண்டு
உன் நாடகத்தில் காதல் உண்டு நானும் உண்டு
திறந்த கண்ணில் பெண் மறைந்து கொண்டாள்
கண் உள்ளே போன எண்ணம் எங்கும் பறந்து போகாது
gkrishna
30th June 2014, 12:18 PM
இனிய காலை வணக்கம் சார் எல்லோருக்கும் 30/6/14
இது எப்படி இருக்கு 1978
காயத்ரி யின் ஓரளவு வெற்றிக்கு பிறகு
சுஜாதாவின் நிறைய கதைகள் புற்றீசல் போல் கிளம்பின
அப்ப சுஜாதா கூட இதை பற்றி எழுதி இருந்தார். " ஒரு கோஷ்டியே என் கதைகளை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று அலைந்து கொண்டு இருக்கிறது "
அந்த வகையில் வந்த இரண்டாவது படம்
அனிதா இளம் மனைவி புதினம் திரைப்படத்திற்கு கொடுத்த தலைப்பு
அப்போது ரஜினியால் பிரபலமான "இதெப்படி இருக்கு " வாசகம்
ஒரு அருமையான suspense thriller ஸ்டோரியை எப்படி திரைப்படம் ஆக்க கூடாது என்பதற்கு மிக சிறந்த எடுத்துகாட்டு இந்த திரை படம்
தலைப்பே இந்த குழப்பதின் ஆரம்பம்
மேஜர் சுந்தர்ராஜனின் இளம் இரண்டாம் மனைவி y விஜயா மனைவி மீது எப்போதும் சந்தேகம் . முதல் மனைவியின் மகள் ஸ்ரீதேவி .மேஜர் சுந்தர்ராஜனின் செச்றேடரி சரத்பாபு .ஸ்ரீதேவி சொத்துகள் விஷயமாக
வக்கீல் கணேஷ்இன் (ஜெய் ஷங்கர் ) உதவியை நாடுவார் .
இதற்கு இடையில் மேஜர் சுந்தர்ராஜனே இறந்தது விட்டது போல் கதை செல்லும் .ஆனால் இறந்தது மேஜர் சுந்தர்ராஜன் அல்ல .அவருடைய அல்லக்கை ராமதாஸ் . இறுதியில் ஜெய் ஷங்கர் உண்மையை கண்டு பிடிப்பார்
ஒரு அருமையான பாடல் ஜேசுதாஸ் ஜானகி குரல்களில்
லலலலாஆஆ ...லாலாலலாஆஆ
எங்கும் நிறைந்த ...இயற்கையில் என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ ...
எண்ணங்களில் என்ன சுவையோ ...(எங்கும்)
பார்வை ஜாடை சொல்ல
இளம் பாவை நாணம் கொள்ள ...(பார்வை )
அங்கு காதல் கோலமிடும்
மனம் தாகம் பாடி வரும் (எங்கும் )
வெண்பனி போலவள் தேஹம் ...
அள்ளும் செங்கனி போலிதழ் மோகம் ...(வெண்பனி )
தேனாக ...லாலாலாலாலா ... லால ... லால
ஆசை தேனாக ...
ஆசை அது ஆறாக ...
வாழ்வில் இன்பம் நூறாக ...
வா ...ம்ம்ம்ம்ம் ...வா ...ம்ம்ம்ம் ...வாஆ ...ம்ம்ம்ம் ...(எங்கும் )
தங்கமும் வைரமும் போலெ ...
தொட்டு தழுவிடும் ஆசைகள் மேலெ ...(தங்கமும் )
சேராத்ஒ ...லாலாலாலாலா ... லால ... லால ...
மோகம் சேராதோ ...
மோகம் அது தீராதோ
தேஹம் கொஞ்சம் வாடாதோ
வா ...ம்ம்ம்ம்ம் ...வா ...ம்ம்ம்ம்ம் ...வாஆ ...ம்ம்ம்ம் ...
எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு எண்ணங்களில் என்ன கனவோ
இந்த பாடலின் சிறப்பு ஒரு இனிமையான ஹம்மிங் மற்றும் ஜேசுதாசின் மனதை கவரும் குரல் இளையராஜாவின் ஆரம்ப கால மெலடி
http://www.youtube.com/embed/dtv165n4KlI
gkrishna
30th June 2014, 12:32 PM
வாசு சார்
unakkum valvu varum
சூப்பர் பாட்டு
வழக்கம் போல சிலோன் ரேடியோ ஹிட்
இந்த பட டைரக்டர் நடன இயக்குனுர் புலியூர் சரோஜாவின் கணவர் g ஸ்ரீனிவாசன் என்று நினவு .
vasudevan31355
30th June 2014, 12:34 PM
வணக்கம் கிருஷ்ணா சார்,
எங்கும் நிறைந்த கிருஷ்ணாவின்
பதிவுகளில் என்ன சுகமோ
நீங்கள் சொன்னது வாஸ்தவம். இப்படத்தைக் கெடுத்து பாழ் பண்ணி விட்டார்கள். கிடைத்தது அருமையான பாடல் மட்டுமே.
https://lh5.ggpht.com/CC2jOTq6yJaeolMoRhKb2QNfe2QZ_9oUv5ea5sGiDBKbwlFlAB U1v1zEK9F3Y7MZME07LIka4A
vasudevan31355
30th June 2014, 12:44 PM
கிருஷ்ணா சார்
தினம் தினம் ஒரு நாடகம்
தினம் தினம் ஒரு காட்சியா
என்ற பாடலும் 'இது எப்படி இருக்கு' படத்தில் உண்டு. காயத்ரியில் வருமே 'வாழ்வே மாயமா' அது போல ஸ்டைலில்.
இன்னொரு பாடல்
கைரேகை பார்த்து ஜோசியம் சொசொல்வேன் கேளுங்க
சொன்னது நடக்கும் பாருங்க
கோவையாரின் குரலில்.
vasudevan31355
30th June 2014, 12:50 PM
கிருஷ்ணா சார்,
முத்துராமன் நடித்து 'வாழ்த்துங்கள்' என்று ஒரு படம் வந்ததே!
அருமையான பாடல் ஒன்று இப்படத்தில்.
அருள்வடிவே
பரம்பொருள் வடிவே
ஆனந்தமே பொருளே புகழே
சிலோனில் அதிகாலையில் இப்பாடலை பக்திகரமாக ஒலிபரப்புவார்கள்.
gkrishna
30th June 2014, 12:58 PM
கிராமத்து அத்தியாயம் 1980
சிலோன் ரேடியோவில் போட்டு போட்டு தேய்ந்த பாடல்கள்
ருத்ரையா இயக்கத்தில் மிகவும் எதிர் பார்க்கப்பட்டு தோல்வியை தழுவிய படம்
சுந்தர்,சொர்ணலதா போன்ற புதுமுகங்கள் நடித்த படம்
இளையராஜாவின் கிராமத்து மெட்டுகள்
1. ஜெயச்சந்திரன் ஜானகி குரல்களில் "ஊத காத்து வீசயிலே குயிலு கூவையிலே "
2. பாலாவின் "வாடாத ரோசபூவே நான் உன்னை பார்த்தேன் "
3. மலேசியா ஜானகி குரல்களில் "ஆத்து மேட்டிலே "
4. சசிரேகாவின் குரலில் " பூவே இது பூஜை காலமே "
எல்லாமே நல்ல மணியான பாடல்கள்
திரைப்படம் வெளிவருவதற்கு முன்னே பாடல்கள் வெளியாகி வெற்றி பெற்றன .
gkrishna
30th June 2014, 12:59 PM
தினம் தினம் ஒரு நாடகம்
தினம் தினம் ஒரு காட்சியா
club dance paadal endru ninaivu
gkrishna
30th June 2014, 01:03 PM
வாசு சார்
வாழ்த்துங்கள் 1976 நம்ம cvr இயக்குனுர் என்று நினவு
முத்துராமன் நடித்து தெள்ளூர் தர்மராஜன் ஒரு ஸ்தாபன காங்கிரஸ் பிரமுகர் தயாரித்து வெளி வந்த படம் என்று நினவு
முத்துராமன் ஹிப்பி ஸ்டைல் இல் ஒரு பாட்டு நினவு உண்டு
ல்.வைத்யநாதன் மியூசிக் என்றும் நினவு
vasudevan31355
30th June 2014, 01:16 PM
வாசு சார்
முத்துராமன் ஹிப்பி ஸ்டைல் இல் ஒரு பாட்டு நினவு உண்டு
கிருஷ்ணா சார்
அரிய தகவல்களைத் தந்துள்ளீர்கள். நன்றி!
அது என்ன பாடல்? நினைவில் உள்ளது. வருவேனா என்கிறது.
vasudevan31355
30th June 2014, 01:21 PM
http://www.inbaminge.com/t/u/Uravugal%20Endrum%20Vazhga/folder.jpg
மேலே உள்ள படத்திலும் முத்துராமன் ஹிப்பி ஸ்டைலில் இருப்பார்.
இப்படத்தில் மிக மிக பாப்புலரான பாடல்
நானூறு பூக்கள்
மெருகேற்றும் மங்கை
ரதிதேவி தங்கை
வரவேண்டும் இங்கே
கலக்கு கலக்கு என்று கலக்கிய பாடல்.
பாலாவின் ரசிகர்கள் பொக்கிஷமாக நினைக்கும் பாடல். இசை சங்கர் கணேஷ் தானே!
அம்மாடி! என்ன ஒரு போடு! என்ன வேகம்!
https://www.youtube.com/watch?v=CTmUd3mfq0A&feature=player_detailpage
gkrishna
30th June 2014, 01:39 PM
வாழ்த்துங்கள் படமே ஒரு த்ரில்லர் கதை என்று நினவு
சந்திர கலாவின் பிறந்த நாள் அன்று ஒரு மிரட்டல் போன் வரும்
3 பேர் மிரட்டுவார்கள் . ஒருவர் பணம் கேட்டு இன்னொருவர் சந்திரகலாவின் தந்தை வாங்கிய கடனை கேட்டு மூன்றாமவர்
சந்திர கலாவை திருமணம் செய்து கொள்ள . அதை நம்ம நவரசத்திலகம் கண்டு பிடிப்பார்
வாணியின் குரலில் ஒரு பாட்டு
பாடட்டுமா ஆடட்டுமா மோகத்தின் வேகத்தில்
பாலாவின் குரலில்
பூந்தேரே சின்ன சின்ன காலெடுத்து வா
youtube லிங்க் கிடைக்கவில்லை
gkrishna
30th June 2014, 01:44 PM
உறவுகள் என்றும் வாழ்க 1978 படம் தானே சார் அந்த நானூறு பூக்கள் பாட்டு
gkrishna
30th June 2014, 02:14 PM
இவள் ஒரு சீதை 1978
எ.ஜகந்நாதன் இயக்கம்
விஜயகுமார் சுமித்ரா ஜோடி
மெல்லிசை மாமணி குமார் இசையில்
பாலாவின் குரலில் வழக்கமான சேட்டை எதுவும் இல்லாமல் கேட்க இனிமை
"பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் பதினெட்டு
பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் பதினெட்டு
அவள் பழமுதிர்சோலையில் தாமரை போலே மலர்ந்தது ஒரு மொட்டு
மலர்ந்தது ஒரு மொட்டு
பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் பதினெட்டு
எட்டி உதைக்கும் காலுக்கு சலங்கை
சட்டையை இழுக்கும் கைகளில் வளையல்
கண்ணன் வருகிறான் என் மன்னன் வருகிறான்
புல்லாங்குழலின் ஓசையடி
பூமெத்தை தென்றலின் வாசமடி
அம்மா என்கிறான் கையை அசைக்கிறான்
அம்மா என்கிறான் கையை அசைக்கிறான்
பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் பதினெட்டு
அவள் பழமுதிர்சோலையில் தாமரை போலே மலர்ந்தது ஒரு மொட்டு
மலர்ந்தது ஒரு மொட்டு
பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் பதினெட்டு
ஒன்பது மாசம் போனது கண்ணே
ஒரு மாசத்தில் வருவான் கண்ணன்
கனவே பலித்தது என் நினைவே ஜெயித்தது
அங்கே எனது வெள்ளிநிலா
ஆண்மையைச் சொல்லும் பிள்ளை நிலா
சீதை தருகிறாள் ராமன் பெறுகிறான்
சீதை தருகிறாள் ராமன் பெறுகிறான்
பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் பதினெட்டு
http://www.youtube.com/watch?v=ஹ3எ0ஏடிப்ஜ்க்
விடியோ லிங்க் கிடைக்கவில்லை
vasudevan31355
30th June 2014, 02:23 PM
கிருஷ்ணா சார்
அருமை.
பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு மகுடம் சூட்டிய பதிவு.
vasudevan31355
30th June 2014, 02:25 PM
உறவுகள் என்றும் வாழ்க 1978 படம் தானே சார் அந்த நானூறு பூக்கள் பாட்டு
அதுவேதான் சார்.
vasudevan31355
30th June 2014, 02:32 PM
வாழ்த்துங்கள் கதை நீங்கள் சொல்ல சொல்ல ஞாபகம் வருதே ஞாபம் வருதே.
'அண்ணன் ஒரு கோயில்' (10.11.1977) வந்த தீபாவளிக்கு வந்த படமா இந்த வாழ்த்துங்கள்?
வாணியின் குரலில் ஒரு பாட்டு
பாடட்டுமா ஆடட்டுமா மோகத்தின் வேகத்தில்
பாலாவின் குரலில்
பூந்தேரே சின்ன சின்ன காலெடுத்து வா
பாடல்களின் ஆடியோ இணைப்பு கிடைக்குமா கிருஷ்ணா சார்?
gkrishna
30th June 2014, 03:04 PM
தீராத விளையாட்டு பிள்ளை
மோகன் பூர்ணிமா ஜெயராம் நடித்து
இன்னிசை வேந்தர்கள் இசையில் வெளி வந்த ஒரு படம்
பாலா சைலஜா குரல்களில் ஒரு அருமையான டூயட்
ஆரம்பத்தில் சைலஜாவின் ஹம்மிங்
பாலா சரணத்தில் தான் வருகிறார்
லலலல லா லா லா
மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி
பூவோ பொன்னோ முத்தோ மணியோ
பொங்கும் காதல் கங்கை நதியோ
மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி
பூவோ பொன்னோ முத்தோ மணியோ
பொங்கும் காதல் கங்கை நதியோ
மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி
செவ்வானிலே பன்னீரிலே
வென்மேகம் மாகோலம் போடும்
செவ்வானிலே பன்னீரிலே
வென்மேகம் மாக்கோலம் போடும்
நாம் ஒன்று சேர்ந்து போகின்ற போது
அன்போடு வரவேற்கவே
அர்த்த ஜாமங்களில் அந்த காமன் குயில்
சங்கீதம் தாலாட்டுமோஓஓ
மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி
பூவோ பொன்னோ முத்தோ மணியோ
பொங்கும் காதல் கங்கை நதியோ
மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி
மூங்கில்கள் புல்லாங்குழல்
அவள் மோகத்தில் பாடும் தமிழ்
ஆஆமூங்கில்கள் புல்லாங்குழல்
அவள் மோகத்தில் பாடும் தமிழ்
இளமாலையில் மலர்மேடையில்
பொண்வண்டின் நாதஸ்வரம்
எங்கள் கல்யாண நாள்
இன்று வேதங்களும் தேர் கூட்டி போகின்றன
மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி
பூவோ பொன்னோ முத்தோ மணியோ
பொங்கும் காதல் கங்கை நதியோ
மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி
லலலல ஹ லலலல லா லா லா
http://www.mediafire.com/?rm3vtasz9e3lao2
gkrishna
30th June 2014, 04:12 PM
கராதே கமலா 1978
அலங்கார் ஆர்ட்ஸ்
தெலுகு டப்பிங் பட டைரக்டர் கே எஸ் கிரி இயக்கத்தில் வெளி வந்த படம்
இன்னிசை வேந்தர்கள் இசை
ஸ்ரீகாந்த் ஜெயமாலினி எ.சகுந்தலா,அபர்ணா நடித்தது
ஸ்ரீகாந்தை ஆரம்பத்திலே போட்டு தள்ளிருவாங்க. அவங்களை எல்லாம் revenge எடுத்து ஜெயமாலினி போட்டு தள்ளும் கதை
பழைய கன் fight காஞ்சனா,லேடி fighter ரேகா டைப் படம்
சிலோனே ரேடியோ உபயத்தினால் பாட்டு பூரவும் ஹிட்
ஜெயச்சந்திரன் வாணி குரல்களில் என்ன ஒரு இளைமையான வாணி குரல்
"கதை சொல்லும் கிளிகள் மன்மதன் விடும் கணைகள்
மொத்தம் அருபத்தினாங்கு வகைகள்
அவை ஆண் பெண் பழுகும் ஆனந்த கலைகள்"
சுசில சோலோ அபர்ண டான்ஸ் மறக்கமுடியாத டான்ஸ்
"தேனருவி அதில் ஒரு பூங்குருவி " ஷங்கர் கணேஷ் இன் வழக்கமான
drum அண்ட் பங்கோ ஷெனாய் எல்லாம் கலந்து கட்டும்
http://www.inbaminge.com/t/k/Karathe%20Kamala/Kathai%20Sollum.eng.html
ஈஸ்வரிக்கும் ஒரு பாடல் உண்டு "l a i l a லைலா l o v e " என்று வரும்
அதே போல் வாணிக்கு ஒரு சோலோ
"நானே ஒரு வேட்டையாட வந்தேன்
ஒரு வேங்கை தேடி வந்தேன்
விடிவாளை தாங்கி வந்தேன் "
பங்கோ இசை நினைவில் உண்டு
இந்த இரண்டு பாட்டும் கிடைக்க வில்லை
இதோடு சேர்ந்து ஜெயா நீ ஜெயிச்சுட்டே னு ஒரு படம் ஜகந்நாதன்
இயக்கத்தில் ஷங்கர் கணேஷ் இசையில் வெளி வந்தது . போஸ்டர் நினவு உண்டு . கிருஷ்ணமுர்த்தினு (இவர் பாலபிஷேகம் படத்தில் மச்சானே அச்சாரம் போடு பாடலில் வணியோடு சேர்ந்து பாடுவார்) ஒரு பாடகர் பாடிய பாடல் ஒன்று நினவு
உண்டு "சொர்கத்திற்கு இன்று விடுமுறை நாள் " என்று வரும்
gkrishna
30th June 2014, 04:27 PM
வாழ்த்துங்கள் கதை நீங்கள் சொல்ல சொல்ல ஞாபகம் வருதே ஞாபம் வருதே.
'அண்ணன் ஒரு கோயில்' (10.11.1977) வந்த தீபாவளிக்கு வந்த படமா இந்த வாழ்த்துங்கள்?
வாணியின் குரலில் ஒரு பாட்டு
பாடட்டுமா ஆடட்டுமா மோகத்தின் வேகத்தில்
பாலாவின் குரலில்
பூந்தேரே சின்ன சின்ன காலெடுத்து வா
பாடல்களின் ஆடியோ இணைப்பு கிடைக்குமா கிருஷ்ணா சார்?
வாசு சார்
வாழதுங்கள் பொங்கல் ரிலீஸ்/தீபாவளி ரிலீஸ் என்று என்னால் சரியாக சொல்ல முடியவில்லை
ஆனால் திரை அரங்கு - நெல்லை சிவசக்தி நல்ல நினவு
அருள் வடிவே பெரும் பொருள் வடிவே ஆனந்தமே பொருளே புகழே
ஜேசுதாஸ் பாட்டு
முத்துராமன் காமராஜர் படம் போட்டு சுவற்றில் மாட்டி இருக்கும்
அதை பார்த்து பாடுவார் .
இந்த படத்திற்கு கதை பாடல்கள் எல்லாமே தெள்ளூர் தர்மராஜன் தான்
not able to get the link of these songs
gkrishna
30th June 2014, 05:01 PM
ஜெயா நீ ஜயுசிட்டே
கிருஷ்ணமுர்த்தியின் பாடல் இந்த லிங்க் இல் உள்ளது ஆடியோ மட்டும்
அந்த பாடல்
பாடல்: சொர்கத்திலே ஒரு வெள்ளோட்டம்
பின்னணி: கிருஷ்ணமூர்த்தி & மஞ்சுளா(ஹம்மிங்)
http://www.mediafire.com/?4yqmtt03osokkgy
ஒரே தந்தை 1976
வழக்கமா கேமரா மேதை கர்ணன் இந்திராணி films அப்படிங்கற banner இல் தான்படம் எடுப்பார் இந்த படம் முருகு films என்ற banner இல் வெளி வந்தது தயாரிப்பாளர் கர்ணன் ரசிகர் னு நினேகிறேன்
இது ஒரு "உன்னத காவியம் ".
முதலில் இருந்து முடிவு வரை ஏகப்பட்ட சென்சர் கட் அசோகன் காதில் இரண்டு பெரிய குண்டலத்தை தொங்க விட்டு கொண்டு வருவார்
ஜெய் ராஜ்கோகிலா சுருளி மேஜர் எல்லாம் வருவார்கள்
ஆனால் நம்ம ராட்சசியின் பாட்டு மட்டும் கட் இல்லை .
இந்த படத்தில் 3 பாடல்கள் உண்டு மூணும் ஈஸ்வரி தான்
ஹோ ஹோ பூச்செண்டு கைகளில் -
பங்கோ இசை கிட்டத்தட்ட "கண்களுக்கென்ன காவல் இல்லையோ" நில் கவனி காதலியின் நினவு வரும்
http://www.inbaminge.com/t/o/Ore%20Thanthai/Oh%20Oh%20Poocendu%20Kaigal.vid.html
vasudevan31355
30th June 2014, 05:51 PM
திரெட்டின் டெண்டுல்கர் கிருஷ்ணா சார்,
களேபரம் பண்ணுகிறீர்கள்.
நீங்கள் நினைவூட்டும் ஒவ்வொரு படங்களும் பிரமிப்பைத்தான் உண்டுபண்ணுகின்றன.
அதுவும் அந்த கிரேட் நக்கல் ஒரே தந்தை
அபாரமோ அபாரம்.
vasudevan31355
30th June 2014, 05:57 PM
"கதை சொல்லும் கிளிகள் மன்மதன் விடும் கணைகள்
மொத்தம் அறுபத்து நான்கு வகைகள்
அவை ஆண் பெண் பழகும் ஆனந்த கலைகள்"
எனக்கு 'கராத்தே கமலா'வில் மிகவும் பிடித்த பாட்டு.
ஜூடோ போஸில் ஜெயமாலினி பெல்பாட்டம் அணிந்த போஸ்டர்கள் நன்றாக நினைவிருக்கிறது.
உங்கள் தெலுங்கு போஸ்டருக்கும் நன்றி!
vasudevan31355
30th June 2014, 06:04 PM
"கதை சொல்லும் கிளிகள் மன்மதன் விடும் கணைகள்"
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=j_nj-Q0kgEc
vasudevan31355
30th June 2014, 06:07 PM
முத்துராமன் காமராஜர் படம் போட்டு சுவற்றில் மாட்டி இருக்கும்
ரொம்ப கரெக்ட் சார்.
vasudevan31355
30th June 2014, 06:09 PM
http://4.bp.blogspot.com/_oPGdKyreMp8/RicViZXFxmI/AAAAAAAAAD0/N3i2PLl5cq4/s1600/Thina%2BThanthi-31.jpg
vasudevan31355
30th June 2014, 06:15 PM
ஒரே தந்தை'
ஒரே திருவிழாக் கூட்டம். கடலூர் முத்தையாவில்.
குதிரையில் அசோகன்
கீழே அலங்கோல உடையில் ஓடிவரும் கர்ணனின் அன்றைய ஆஸ்தான நாயகி ராஜ்கோகிலா.
அப்புறம் ஏன் கூட்டம் இருக்காது?
vasudevan31355
30th June 2014, 06:32 PM
http://4.bp.blogspot.com/-oV1O9B0iVvw/UK238aRLY_I/AAAAAAAAAIs/EDNQFuvbHhk/s1600/Thambathigal.jpg
முக்தா டிரஸ்ட் தயாரித்த 'தம்பதிகள்' படத்தில் மெல்லிசை மன்னர் இசை அமைத்திருந்தார். என்.எஸ். ராஜேந்திரன் இயக்கி இருந்தார்.
அதில் சில்க் ஸ்மிதா பாடுவது போல ஒரு பாட்டு.
'நெஞ்சைக் கிளப்பி கிளப்பி விடும் ஆச'
'அத்திமரப் பூவிது' ஸ்டைலில் இருக்கும்.
http://www.youtube.com/watch?v=odF7KVDsezk&feature=player_detailpage
vasudevan31355
30th June 2014, 06:47 PM
http://i1.ytimg.com/vi/Llnb9yxUzJk/maxresdefault.jpg
நடிகர் திலகம் நடித்த 'அருணோதயம்' (1971) படத்தில் அவர் சம்பந்தப்படாத ஒரு காதல் பாடல்.
ஆனால் செம ஹிட்டடித்த பாடல்.
இசை நம் 'திரை இசைத் திலகம்' மாமாதான்.
'ஆராதனா' புகழ் பெற்ற இந்திப் படத்தில் ஒலிக்குமே "Gunguna Rahe Hain Bhavre" ஒரு பாட்டு அதைத் தழுவி.
பாலாவும், சுசீலாவும் மனதில் கில்லி அடிப்பார்கள். முத்துராமனுக்கும், லஷ்மிக்கும் டூயட்டாக வரும் இந்தப் பாடல்.
எல்லோருக்கும் தெரிந்த பாடல். எப்போதும் விரும்பும் பாடல்.
http://i1.ytimg.com/vi/d2Xr-H61qmk/hqdefault.jpg
SPB: எங்கள் வீட்டு தங்கதேரில் எந்த மாதம் திருவிழா
PS: திருவிழா
SPB: திருவிழா
PS: இன்று நாளை எந்த நாளும் இன்பதேவன் திருவிழா
SPB: திருவிழா
PS: திருவிழா
SPB: சிரிப்பு வந்தது அது சிரிப்பதல்ல உன்னை மெல்ல அழைப்பதென்பது
PS:அழைப்பு வந்தது அது அழைப்பதல்ல பெண்ணை மெல்ல அணைப்பதென்பது
SPB: கோபம் வந்தது அது கோபமல்ல காலம் பார்க்கும் ஊடல் என்பது
கோபம் வந்தது அது கோபமல்ல காலம் பார்க்கும் ஊடல் என்பது
PS: கொஞ்ச வந்தது வெட்கம் கொஞ்சம் வந்தது அஹஹ ஹா
SPB: ஒஹொஹொ ஹோ
SPB: எங்கள் வீட்டு தங்கதேரில் எந்த மாதம் திருவிழா
PS: திருவிழா
SPB: திருவிழா
SPB: போக சொன்னது கால் போகும்போது கண்ணும் நெஞ்சும் பார்க்க சொன்னது
PS: பேச சொன்னது வாய் பேசும்போது நாணம் வந்து மூட சொன்னது
SPB: தழுவ சொன்னது கை தழுவும்போது என்ன வந்து நழுவ சொன்னது
தழுவ சொன்னது கை தழுவும்போது என்ன வந்து நழுவ சொன்னது
PS: தயக்கம் வந்தது பெண்ணின் பழக்கம் வந்தது
SPB: அஹஹ ஹா
PS: ஒஹொஹொ ஹோ
PS: இன்று நாளை எந்த நாளும் இன்பதேவன் திருவிழா
SPB: திருவிழா
PS: திருவிழா
SPB: அன்னவாகனம் போல ஆடி ஆடி வருவதுதான் பெண்ணின் சீதனம்
PS: தர்மதரிசனம் அதை தலைவன் மட்டும் பார்ப்பதுதான் தெய்வ தரிசனம்
SPB: கன்னிமோகனம் என்னை கட்டி கட்டி இழுப்பதற்கு என்ன காரணம்
கன்னிமோகனம் என்னை கட்டி கட்டி இழுப்பதற்கு என்ன காரணம்
PS: என்ன காரணம் நெஞ்சின் எண்ணம் காரணம் அஹஹ ஹா
SPB: ஒஹொஹொ ஹோ
SPB: எங்கள் வீட்டு தங்கதேரில் எந்த மாதம் திருவிழா
PS: திருவிழா
SPB: திருவிழா
PS: இன்று நாளை எந்த நாளும் இன்பதேவன் திருவிழா
SPB: திருவிழா
PS: திருவிழா
SPB, PS: அஹஹ ஹா, ஒஹொஹொ ஹோ, ம்ஹுஹுஹும்
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=oWh7jGp4AmM
Gopal.s
1st July 2014, 05:34 AM
ஆபோகி.
உலகத்தில் எங்குமே துன்பமில்லை, ஆனந்தம் மட்டுமே எஞ்சியுள்ளது என்று நம்ப ஆசை படுகிறீர்களா?கண்களின் வார்த்தைகள் புரிந்து,காலை நேர பூங்குயிலை தரிசித்து,ரதத்தில் வந்த விருந்தாளிக்கு ,வணக்கம் பல முறை சொல்லி , வசந்த காலம் வந்ததை எண்ணுங்கள் புரியும்.
அந்த அபூர்வ இரட்டையர்கள் பிரிந்ததாய் வந்த செய்தி இசை வெறியர்களை குலுக்கி போட்டது.விஸ்வநாதனோ கற்பனை சுரங்கம்.(விஸ்வ நாதம் என்று பிரியத்தோடு குறிப்பார் என் நண்பர் விஸ்வேஸ்வரன்).public relation விஷயத்தில் கரை கண்டவர். ராமமூர்த்தி ஞான கடல். அத்தனை மேளகர்த்தாவும் அத்துபடி. விஸ்வநாதனின் குரு. balancing of archestra ,இணைப்பு ராகங்கள் என்று கரை கண்டவர்.இந்த மேதைகளின் இணைப்பு தமிழ் திரை இசையுலகின் பொற்காலம். அங்கங்கே பாக பிரிவினை போன்று தந்திருந்தாலும் ,விஸ்வரூபம் எடுத்தது 1960 இல் மன்னாதி மன்னனில் இருந்து,பாவ மன்னிப்பில் உச்சம் தொட்டு ஆயிரத்தில் ஒருவன்(1965) வரை தொடர்ந்தது.முதலில் இணைந்தது பணம் படத்தில்(1952).பிரிவிற்கு பல காரணங்கள். விஸ்வநாதன் ,தன் குருநாதரின் குடி பழக்கமே என்றார்.கலை கோவில் தோல்வி எதிரொலிப்பு என்று ஒரு புறம்.ராமமூர்த்தி திட்டமிட்டு ஒதுக்க படுகிறார் என்று ஒரு சாரார்.(சர்வர் சுந்தரம் அவளுக்கென்ன ஒரு sample ).இன்னொரு சாரார் ராக்ஷசியை காரணம் காட்டினர்.எது எப்படி இருந்த போதும் பிரிய கூடாத ஜோடியின் பிரிவு.நான் இருவரின் இணைப்பும் மீண்டும் நேராதா என்று ஏங்கிய கோஷ்டி.(சத்யராஜ் படமொன்றில் தள்ளாத வயதில் இணைந்த போது வருந்திய கோஷ்டியும்)இருவருமே பாதிக்க பட்டார்கள். ராமமூர்த்தி ரொம்பவே .ஆனாலும், நான்,காதல் ஜோதி,மறக்க முடியுமா,மூன்றெழுத்து,தங்க சுரங்கம்,சாது மிரண்டால் ,தேன்மழை போன்ற படங்களில் மேதைமை பளிச்சிட்டது.(தனி பெயரில் வெளியானாலும் இணைப்பிசை கொண்ட நீ,கலங்கரை விளக்கம்,நீலவானம் போன்றவற்றிலும்). ஒரு பாடல் போதும் ராமமூர்த்தி யார் என்று உலகிற்கு புரிய வைக்க. ஷெனாய் ஓலத்தோடு "வசந்த காலம் வருமோ நிலை மாறுமோ" என்று ஏங்க வைத்த பாடல். இசை ரசிகர்களின் எண்ணத்தின் பிரதிபலிப்பு.
இந்நூற்றாண்டின் இணையற்ற நகைச்சுவை எழுத்து மன்னன் கோபுவிற்கு சங்கீதம் என்றால் உயிர். ஸ்ரீதரை இழுத்து விட்டார். இரட்டையர்கள் தயாரிப்பில்,இசையில் கலைக்கோவில். ஸ்ரீதரிடம் ஒரு பிரச்சினை .எடுத்தால் ஓஹோ என்று.இல்லை தரை மட்டம்.(பாலச்சந்தர் போல consistency இருக்காது).கலைக்கோவில் படு போர். ஆனால் பாடல்கள்? இந்த படத்தின் "தங்க ரதம் வந்தது வீதியிலே".
ஜனநாயக நாட்டில் ,சர்வாதிகார தர்பார். அன்னையும் மைந்தனும்.ஏதேதோ அம்ச திட்டங்கள். தன்னை காத்து கொள்ள.(மக்களிடம் காத்து கொள்ள இயலாதது வேறு விஷயம்) இதற்கு ஜால்ரா போட்டு ஒரு boring பிரச்சார படம்.(சூட்டோடு சூடாக வரி விலக்கு வேறு).ஆனால் இந்த படம் வரும் முன்னே ,எல்லா மேடையிலும் ஆரம்ப வரவேற்பு பாடலாக அலங்கரிக்க தொடங்கி பட்டி தொட்டியெங்கும் popular . படத்திற்கு பலரை ஈர்க்க காரணமானது.
"வணக்கம் பல முறை சொன்னேன் சபையினர் முன்னே".
இந்த ராகத்தின் மற்ற பாடல்கள்.
கண்களின் வார்த்தைகள் பு ரியாதோ- களத்தூர் கண்ணம்மா.
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே- வைதேகி காத்திருந்தாள் .
காலை நேர பூங்குயில் - அம்மன் கோவில் கிழக்காலே.
vasudevan31355
1st July 2014, 07:45 AM
இன்னொரு சாரார் ராக்ஷசியை காரணம் காட்டினர்.
படையுடன் திரும்ப வரும் சர்வாதிகாரி இழந்த நாட்டைப் பிடிக்க வேண்டியதுதானே! அப்படியே வரும் வழியில் ஒரு பாவமும் அறியாத 'மதுரா' சிற்றரசை சின்னபின்னப் படுத்தணுமா!:)
அதுவும் ஆட்டக் கடிச்சி மாட்டக் கடிச்சி கடைசியில் அதையே பாடின என் ராட்சஸியைக் குறி வைத்து தாக்கிய கொடூரம்.
இன்று முழுதும் பட்டினிதான்.
இப்படியே போனால் சர்வாதிகாரி மீது மறைந்திருந்து கொரில்லா தாக்குதல்தான். சிவாஜி பாணியில் ஐ மீன் 'சத்ரபதி' சிவாஜி பாணியில்.:)
ம்..என்ன செய்ய! இங்கு ஒரு 'பக்த ராமதாஸ்' இல்லையே!:)
vasudevan31355
1st July 2014, 07:52 AM
கோ,
ஆபோகி ஆனந்தம்.
"வசந்த காலம் வருமோ நிலை மாறுமோ"
"தங்க ரதம் வந்தது வீதியிலே".
இரண்டும் எனக்கு இரண்டு நுரையீரல்கள்.
vasudevan31355
1st July 2014, 07:54 AM
காலை களிப்போடு இனம் புரியா இனிமையுடன் தொடங்குகிறது இந்த அதிசய ஆபோகியால். (நன்றி கோ)
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=hZy4UgL7mi8
vasudevan31355
1st July 2014, 08:01 AM
ஆபோகி என்பதனால் தங்க ரதத்தோடு நிறுத்தி விட்டீர்கள். புரிகிறது.
இதையெல்லாம் மீறிய அற்புதங்கள் 'வரவேண்டும் ஒரு பொழுதி'ல் நடந்ததே! (என் ராட்சஸி யின் டாப் 10-இல் ஒன்று)
இன்றைய ரகுமான்கள் கேட்டு தெரிந்து கொள்ளக் கூடிய சங்கதிகளை அன்றே கொடுத்துவிட்டார்களே மன்னர்களும், மகாராணியும்.
நண்பர்களே!
நீங்கள் இப்போது கேட்டுக் கொண்டிருக்கும் 'கலைக்கோயில்' பாடலில் நம் எல்லோருடைய ஈஸ்வரி அவர்கள் பாடும் அழகையும், ஸ்டைலையும் பாருங்கள். அநேகம் பேர் இந்தப் பாடலைக் கேட்டிருக்க முடியாது.
பாட்டில் பின்னியெடுக்கும் பியோனோ, கூடவே சாக்ஸும் இழையும் சுகம், (அதுவும் பாடலின் அந்த இடையிசை) இந்த மாதிரி சாக்ஸ் அற்புதங்கள் வேறு பாடலில் உண்டா?
இந்த அரக்கி அந்த உபகரணங்களுடன் இணைந்து, இழைத்து ஏற்ற இறக்கங்களை மிக அற்புதமாக அளவோடு தந்து
இப்படி ஒரு காக்டெயில் விருந்து அளித்துள்ளதை
எவரால் மறக்க முடியும்?
என் சதைகளில் ரத்தமாய்க் கலந்த பாடல்.
இப்படி வேறொரு பாடலை இப்படி ஒரு பாடகியை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.
பார்த்து, கேட்டு அனுபவித்து விட்டு எழுதுங்கள்.
http://www.youtube.com/watch?v=am3b--fXZUw&feature=player_detailpage
Gopal.s
1st July 2014, 08:23 AM
வசந்த காலம் வருமோ பாடல் ,வகதீஸ்வரி என்ற மேளகர்த்தா ராகத்தின் சாயலும் இருக்கும்.உள்ளத்தின் நல்ல உள்ளத்தில் சக்ரவாகம்,சரசாங்கி கலப்பது போல.அதுதான் ராமமூர்த்தி ஸ்பெஷல்.ராகத்தின் ரகத்தை இனம் காணுவது கஷ்டம்.
vasudevan31355
1st July 2014, 09:51 AM
இன்றைய ஸ்பெஷல் (18)
இன்றைய ஸ்பெஷலாக மிக மிக ஸ்பெஷலான ஒரு பாடல்
http://www.inbaminge.com/t/t/Thani%20Kudithanam/folder.jpg
1977-ல் வெளியான 'தனிக்குடித்தனம்' படத்தில் இருந்து.
சோ, கே.ஆர்.விஜயா இணைந்து நடித்த இப்படத்திற்கு இசை 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன்.
நம் பாலாவும், இசை அரக்கியும் போட்டுத் தாக்கும் ஒரு உற்சாக இளமைத் துள்ளல் பாடல். இரண்டு பேரும் நீயா நானா என்று போட்டியிட்டு பாடுவது நன்றாகத் தெரியும். அவர் குரல் காந்தம் என்றால் அரக்கியின் அலட்சியம் அட்டகாசம்.
இருவருக்குமே இப்பாடலில் தோல்வியே இல்லை.
ஆனால் அற்புதமான பாடல் ஒய்.ஜி. மகேந்திரனுக்கும், ஆண்பிள்ளை சங்கீதாவுக்கும் போய் சேர்ந்துவிட்ட கொடுமையைத்தான் தாங்க முடியவில்லை.
என்ன மாதிரி பாடல்! எப்படிப்பட்ட நடிகர்களுக்கு போய் இருக்க வேண்டும்?
அதுவும் ஒய்.ஜி. உள்ளாடைகளுடன் வேறு. சங்கீதா சுத்த வேஸ்ட்.
(கோபால், உங்க நண்பர்கிட்ட இதையெல்லாம் சொல்லப் படாதோ!)
அருமையாக எழுதப்பட்ட பாடல்.
புஷ்பராகம்
சக்ரபாகம்
ரத்னஹாரம்
திவ்யரூபம்
சந்த்ரலோகம்
சப்தகீதம்
புஷ்பராகம்
சக்ரபாகம்
ரத்னஹாரம்
திவ்யரூபம்
சந்த்ரலோகம்
சப்தகீதம்
இன்னும் என்ன சொல்ல
உன்மேனி கொண்ட வண்ணம்
செந்தாழம் பந்தாட்டம் நீ ஆடும் கோலங்கள்
இன்னும் என்ன சொல்ல
உன்மேனி கொண்ட வண்ணம்
செந்தாழம் பந்தாட்டம் நீ ஆடும் கோலங்கள்
காமரூபன்
பத்மநாபன்
தேவதேவன்
ராஜராஜன்
காளிதாசன்
இன்பநேசன்
இன்னும் என்ன சொல்ல
உன்மேனி கொண்ட வண்ணம்
உல்லாசம் கொண்டாடும்
என் ஊஞ்சல் எண்ணங்கள்
இன்னும் என்ன சொல்ல
உன்மேனி கொண்ட வண்ணம்
உல்லாசம் கொண்டாடும்
என் ஊஞ்சல் எண்ணங்கள்
நம் கல்யாணம் முடிந்தது ஆவணியில்
என் கைகூடப் படவில்லை தாவணியில்
நம் கல்யாணம் முடிந்தது ஆவணியில்
என் கைகூடப் படவில்லை தாவணியில்
கட்டுப்பாடோ
சுகம் தட்டுப்பாடோ
நாம் ஒட்டிக்கொள்ள
அம்மம்மாடி இந்தப் பாடோ
புஷ்பராகம்
சக்ரபாகம்
ரத்னஹாரம்
திவ்யரூபம்
சந்த்ரலோகம்
சப்தகீதம்
இன்னும் என்ன சொல்ல
உன்மேனி கொண்ட வண்ணம்
செந்தாழம் பந்தாட்டம் நீ ஆடும் கோலங்கள்
உன் சிங்கார ஸ்வரங்களை நீ படிக்க
அந்த சங்கீத ரசனையில் நான் துடிக்க
உன் சிங்கார ஸ்வரங்களை நீ படிக்க
அந்த சங்கீத ரசனையில் நான் துடிக்க
பட்டுப்பாடல் இதழ் முத்துப் போலே
நான் சொல்ல சொல்ல
இன்னும் வரும் இந்த நாளே
காமரூபன்
பத்மநாபன்
தேவதூதன்
ராஜராஜன்
காளிதாசன்
இன்பநேசன்
இன்னும் என்ன சொல்ல
உன்மேனி கொண்ட வண்ணம்
உல்லாசம் கொண்டாடும்
என் ஊஞ்சல் எண்ணங்கள்
புஷ்பராகம்
சக்ரபாகம்
ரத்னஹாரம்
திவ்யரூபம்
சந்த்ரலோகம்
சப்தகீதம்
http://www.youtube.com/watch?v=OMwdvIzMuT8&feature=player_detailpage
gkrishna
1st July 2014, 10:57 AM
கோபால் சார்
ஆபோகியின் கலைக்கோயில் ,
வசந்த காலம் வருமோ நிலை மாறுமோ - மறக்கமுடியுமா
அருமையான காலை பொழுது
செல்லமா கௌரவத்தில் "கோபாலா கோபாலா " என்று நாகேஷ்ஐ
நீலு கூப்பிடுவது நினைவிற்கு வருகிறது
ராமமூர்த்தி பற்றிய உங்கள் ஆதங்கம் புரிகிறது
வாசு சார்
தனி குடித்தனம் பாடல் அருமை மரினாவின் நாடகத்தை தழுவி எடுக்கப்பட திரைப்படம். நம்ம S .A .கண்ணன் இயக்கம் என்று நினவு
இன்னும் என்ன சொல்ல
உன்மேனி கொண்ட வண்ணம்
உல்லாசம் கொண்டாடும்
என் ஊஞ்சல் எண்ணங்கள்
ஈஸ்வரியின் குரலில் உள்ள எக்காளத்தை கவனிக்கணும் சார்
இந்த பாட்டை கேட்கும் போது "எங்கள் வாத்யார் " னு ஒரு படம் நினைவிற்கு வந்தது .துரை இயக்கம் விஸ்வநாதன் இசை
நாகேஷ் elementary ஸ்கூல் டீச்சர் வேஷம் குடை எல்லாம் வைத்து கொண்டு வருவார் . அவருக்கு கூட விஸ்வநாதன் குரலில்
"நாராய் நாராய் செங்கால் நாராய் " பாடல் ஒன்று உண்டு
பாலா வாணி குரல்களில்
"சமுத்திர ராஜா குமரி சுக போக சுக வாணி நமோ நமோ நமஹ "
விஜய் பாபு ஜோடி மறந்து விட்டது (கவிதாவா )
gkrishna
1st July 2014, 11:02 AM
எங்கள் வீட்டு தங்கதேரில் எந்த மாதம் திருவிழா
பாலாவின் குரலில் உள்ள மெலிதான "திருவிழா"
அருணோதயம் ஸ்டில் சூப்பர்
"கரும்பில் இனிப்பது அடிப்பக்கம் என்றால் காதலில் எந்த பக்கமோ
அம்மம்மா அம்மம்மா "
vasudevan31355
1st July 2014, 11:06 AM
வாங்க கிருஷ்ணா சார்!
காலை வணக்கங்கள். ரொம்ப நாளா ஆனா மாதிரி இருக்கு உங்களைப்பார்த்து.
vasudevan31355
1st July 2014, 11:11 AM
எங்கள் வாத்தியார்' 1980 இல் வந்தது என்று நினைவு. விஜய்பாபுக்கு கவிதாதான் ஜோடி.
'
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Fu3xfmKFUSE
gkrishna
1st July 2014, 11:16 AM
கலை கோயில்
சுசீலா ஸ்ரீநிவாஸ் குரல்களில்
"நான் உன்னை சேர்ந்த செல்வம்
நீ என்னை ஆளும் தெய்வம்
இனி என்ன சொல்ல வேண்டும்
நம் இளமை வாழ வேண்டும் "
உன் விரல்கள் என் அழகை மீட்டும்
உன் விழிகள் என் உயிரை வாட்டும்
உன் குரலும் என் பெயரை கூட்டும்
அதில் கோடி கோடி இன்பம் காட்டும்
அதில் கோடி கோடி இன்பம் காட்டும்
உன் அச்சம் நாணம் என்ற நாளும்
என் அருகில் வந்தவுடன் அஞ்சும்
இதழ் பருகும்போது நெஞ்சம் ஆறும்
அது பாடும் இன்ப ஸ்வரம் ஏழும்
அது பாடும் இன்ப ஸ்வரம் ஏழும்
மேலே சொன்ன இரண்டு ஸ்டான்சா என்ன அருமை சார்
அதே போல் சுசீலாவின் அமுத குரலில்
"தேவியர் இருவர் முருகனுக்கு திருமால் மருகன் அழகனுக்கு ஏனடி தோழி அறிவாயோ
எனக்கோர் இடம் நீ தருவாயோ
எனக்கோர் இடம் நீ தருவாயோ"
இந்த படம் தோல்வி அடைந்ததற்கு என்ன காரணம் சார்
vasudevan31355
1st July 2014, 11:16 AM
கிருஷ்ணா சார்,
எம்.எஸ்.வியின் 'நாராய் நாராய்'
'என்றோர் புலவன் பாடியதை நான் இன்றே பாடுகிறேன்' நாகேஷ் பரிதாபம்.
கட்டழகுக் கன்னி காத்திருக்கேனே ரோஜாபூப் போலே ஜானகி குரலில் எங்கள் வாத்தியாரில்.
gkrishna
1st July 2014, 11:19 AM
கடலூர் முத்தையாவை அதுக்குள்ளே மறந்துடிங்களா
vasudevan31355
1st July 2014, 11:20 AM
சவ சவ இழுவை காட்சிகள், நடிகர் தேர்வில் அதலபாதாள சரிவு. சந்திரகாந்தா, ராஜஸ்ரீ கொடூரங்கள், சாமியார் ஒருவரின் பொறுமை சோதிப்பு, கதை என்ற ஒன்றே சரியாக இல்லாதது, முத்துராமனின் மந்தம்.
கடற்கரையில் காற்று வாங்க ஆசைப்பட்டுப் போய் அனல் பட்டு திரும்பியதைப் போன்று எரிச்சலும் கோபமும்தான் வந்தது கலைக் கோவிலைப் பார்க்கும் போது. பாடல்கள் மட்டுமே தென்றல்.
கொலைக்கோவில்.
vasudevan31355
1st July 2014, 11:26 AM
கடலூர் முத்தையாவை அதுக்குள்ளே மறந்துடிங்களா
கிருஷ்ணா சார்.
மறக்க முடியுமா?
ஜக்கம்மா, ஆண்டவன் சொத்து, மறு வெளியீட்டில் எங்க பாட்டன் சொத்து, ஜம்பு, சட்டத்துக்கு ஒரு சவால். சுமன் நடித்த அவனுக்கு நிகர் அவனே, இரட்டைக்குழல் துப்பாக்கி, இது எங்க பூமி, ஜான்சிராணி, இன்னொன்னு என்ன வேட்டைப்புலியா அது, அப்புறம் கமர் டாக்கீஸிலே கங்கா, பாடலி தியேட்டரிலே காலம் வெல்லும், இன்னும் நிறைய....
அப்படியெல்லாம் விட்டுடுவோமா கிருஷ்ணா சார்.
ஆமாம்! நெல்லை கதை என்ன?
gkrishna
1st July 2014, 11:34 AM
சரிகமப ஒரு படம் சார்
சுசில ஜெயச்சந்திரன் குரல்களில்
"ஓடும் நதிகளில் ஆடும் கலைகளில் உனது முகம் "
இந்த படம் பற்றி எதாவது தகவல் கிடைக்குமா சார்
vasudevan31355
1st July 2014, 11:44 AM
சார்,
நினைவிலே மனைவி என்று அழைக்கிறேன் அவளை இன்று என்று ஒரு அற்புதமான பாடல் பாலா பாடியிருப்பாரே!
அது சரிகமப படமா சார்? படத்தைப் பற்றி அவ்வளவாகத் தெரியவில்லை. 1983-ம் ஆண்டு வந்தது என்று நினைக்கிறேன்.
http://www.youtube.com/watch?v=Z3ki6iBZYKs&feature=player_detailpage
gkrishna
1st July 2014, 11:46 AM
காலம் வெல்லும் நெல்லை பார்வதி
கங்கா நெல்லை ரத்னா
ஜக்கம்மா நெல்லை சென்ட்ரல்
ஜம்பு நெல்லை பூர்ணகல
எங்க பாட்டன் சொத்து நெல்லை ரத்னா
எதற்கும் துணிந்தவன் - நெல்லை ராயல்
சிவகுமார் ஹீரோ ஜோடி கே.எஸ் ஜெயலக்ஷ்மி
(பின்னாட்களில் பாலச்சந்தரின் எல்லா திரைப்படங்களிலும் இவருக்கு ஒரு ரோல் உண்டு - நடிகை மோகனப்ரியாவின் அக்கா )
ஒரே தந்தை - நெல்லை லக்ஷ்மி
புதிய தோரணங்கள் - நெல்லை சென்ட்ரல் மாதவி தமிழில் அறிமுகம்
இரட்டை குழல் துப்பாக்கி - நெல்லை சிவசக்தி
இது எங்க பூமி - நெல்லை சிவசக்தி
கருப்பு சட்டை காரன் - நெல்லை சென்ட்ரல் (தியாகராஜன் அம்பிகா ஜோடி - குமுதம் விமர்சனம் - அனுராதா டான்ஸ் ஒன்று சூப்பர்
பாட்டு வாணி குரல் - "பச்சை மிளகாய் அது காரம் இல்லை "
ஆண்டவன் சொத்து - நெல்லை ரத்னா
vasudevan31355
1st July 2014, 12:00 PM
அடேங்கப்பா!:)
Richardsof
1st July 2014, 12:02 PM
ithu eppadi irukku ?
http://i58.tinypic.com/efp93c.jpg
vasudevan31355
1st July 2014, 12:03 PM
நீரோடை கண்டு நீராட வந்தான்
ஜெயச்சந்திரன் ஷைலஜா பாடும் பாடல் கறுப்புச் சட்டைக்காரன் படத்திலா சார்?
vasudevan31355
1st July 2014, 12:06 PM
ithu eppadi irukku ?
யம்மாடி! நான் இந்த ஆட்டத்துக்கு வரல.:lol:
gkrishna
1st July 2014, 12:07 PM
exactly வாசு சார் பிடிச்சீங்க பாருங்க
ஆனால் அது ஜெயச்சந்திரன் வாணி னு நினவு
ராஜஸ்ரீ பொம்மை பத்திரிகை ஸ்டில் ஆ சூப்பர்
vasudevan31355
1st July 2014, 12:10 PM
கிருஷ்ணா சார்,
அழைத்தால் வருவேன்
http://www.inbaminge.com/t/a/Azhaithal%20Varuven/folder.jpg
மன்மதனின் வீணையிலே மயக்கம் எனும் ராகம் ஒன்று
மாலை என்னும் நேரத்திலே மந்திரங்கள் கோடி உண்டு
இந்திரனின் மோகம் உண்டு
இருவருக்கும் தாகம் உண்டு
ஜெயச்சந்திரன், வாணியின் குரல்களில் அழகான பாடல்.
Gopal.s
1st July 2014, 12:16 PM
ithu eppadi irukku ?
[/IMG]
ஆஹா எஸ்வி சார்,
இவ்வளவு சுவாரஸ்ய matter கை வசம் (வாய்வசம்?) இருக்க எதையதையோ பேசி சண்டை போட்டோமே?
கைக்கும் அடங்காமே,வாய்க்கும் அடங்காமே இருந்தாலும் ஊரையெல்லாம் இசு இசுன்னு இசுக்குது.
என்னுடைய கல்லூரி ராக்கிங் போது எஞ்சினீரிங் ஆடிடோரியம் தியேட்டர் இல் காதலிக்க நேரமில்லை போட்ட பொது,அனுபவம் புதுமை பாட்டில் அளந்து கொண்டு வாடா என்று இன்ச் tape கொடுத்து அனுப்பினார்கள் seniors .இப்படி ஒரு நண்பர் இருந்திருந்தால் ,இருந்த இடத்திலேயே அளந்திருப்பேனே????
vasudevan31355
1st July 2014, 12:25 PM
ஆஹா எஸ்வி சார்,
இவ்வளவு சுவாரஸ்ய matter கை வசம் (வாய்வசம்?) இருக்க எதையதையோ பேசி சண்டை போட்டோமே?
அவுங்கவுங்களும் ரெண்டு மணி நேரம் மூணுமணி நேரம் டைப்படிச்சி வெளிச்சத்துக்கு வராத பாட்டுங்களப் போட்டா அதுக்கு எந்த பதிலும் இல்ல.
ஆனா இதுக்கு மட்டும் எப்பிடி ஓடியாந்து?!:banghead:
அதுவும் எதிரணி நண்பர்னுகூட பாக்காம ஆகாய அளவிற்கு பாராட்டா!
என்னமோ போடா மாதவா!
ஒரே ஒரு பதிவைப் போட்டு ஜம்பர் அடிச்சுட்டாரே வினோத் சார்!:)
Gopal.s
1st July 2014, 12:37 PM
ஒரே ஒரு பதிவைப் போட்டு ஜம்பர் அடிச்சுட்டாரே வினோத் சார்!:)
ஜம்பர் ஒதுக்குவது எப்படி என்று அறிந்த வித்தகர்கள் மட்டுமே ஜம்பர் அடிக்க முடியும்.
vasudevan31355
1st July 2014, 12:39 PM
ராஜஸ்ரீ பாடல்களில் எனக்கு ரொமபப் பிடித்தது நீலவானம் படத்தில் நடிகர் திலகம் அவருடன் சேர்ந்து ஆடிப் பாடும்
ஒ லிட்டில் பிளவர்
ஸீ யுவர் லவர்
பாடல்தான். மேலை நாட்டு நடன அசைவுகளை நடிகர் திலகம் ஊதித் தள்ள அவருக்கு அழகான கம்பெனி கொடுப்பார் ராஜஸ்ரீ.
http://www.youtube.com/watch?v=PMz2BQRTrvY&feature=player_detailpage
gkrishna
1st July 2014, 12:40 PM
வாசு சார்
எஸ்வி யின் ஆக்கர் (பம்பரம் எதுன்னு தெரியலை )
சரி நம்ம கதையை தொடர்வோம்
சுசில பாலா ஜோடி குரல்களில்
மேகத்துக்கும் தாகம் உண்டு - psv pictures
சரத் பாபு ரஜினி சர்மா
மரகத மேகம் சிந்தும் மழை விழும் நேரம் இது
திருமகள் வேதம் இங்கே திருமால் படிததாரே
இன்னொரு பாட்டு ஒன்னு உண்டு
பாலா வாணி குரல்களில் cute மெலடி சார் . இதுக்கு விடியோ கிடைக்கவில்லை
"யாரது மன்மதன் ஏன் இது மந்திரம் "
http://www.youtube.com/watch?v=nTJxAq_ஏஂண்ச்
vasudevan31355
1st July 2014, 12:41 PM
ஜம்பர் ஒதுக்குவது எப்படி என்று அறிந்த வித்தகர்கள் மட்டுமே ஜம்பர் அடிக்க முடியும்.
காமக் கம்பர் கடைக்கண் எனக்கு வேண்டாம்.:)
gkrishna
1st July 2014, 12:45 PM
திசை மாறிய பறவைகளுக்கு பின் திசை மாறிய psv
vasudevan31355
1st July 2014, 12:46 PM
மரகத மேகம் சிந்தும் மழை விழும் நேரம் இது
திருமகள் வேதம் இங்கே திருமால் படிததாரே
கிருஷ்ணா சார்,
சுசீலா கலக்கல்.
இளமை ரதங்கள் ஓட (பாலா இந்த இடத்தில் அமர்க்களம் செய்வார்.)
இரண்டும் மெதுவாய்ப் பாட
இரவும் பகலும் உறவும் கனவும்
சுகமல்லவோ
vasudevan31355
1st July 2014, 12:50 PM
"யாரது மன்மதன் ஏன் இது மந்திரம் "
பாடலில்
அர்த்த ராத்திரியில் சரசமோ
ஆசை கொள்வதென்ன விரசமோ
வரிகளை
பாலா, வாணி பாடும் அழகு ரொம்பப் பிடிக்கும் கிருஷ்ணா சார்.
gkrishna
1st July 2014, 01:07 PM
திசை மாறிய பறவைகளில்
ஜானகி ஜெயச்சந்திரன் குரல்களில்
"ராஜா வாட சிங்க குட்டி ராணி வாடி தங்கக்குட்டி "
பாடகர் திலகம் குரலில் ஒரு பாட்டு கூட உண்டு
"கிழக்கு பறவை மேற்கில் பறக்குது அது கிழக்கு வானை மறக்க பார்க்குது
காரிருள் தேடிடும் நிலவை அது திசை மாறிய பறவை "
படம் கொஞ்சம் வித்தியாசமான ட்ரீட்மென்ட்
எப்படி வாசு சார்
gkrishna
1st July 2014, 01:19 PM
புதிய மனிதன் 1974
ஜெய் ஜெயசுத ஜோடி (இந்த ஜோடி வேறு எதாவது படம் உண்டானு நினவு இல்லை )
ஜெய் புஷ்குல்ல வைத்து கொண்டு கூலிங் கிளாஸ் எல்லாம் போட்டு கொண்டு பார்த்த போஸ்டர் ஒன்று நினைவு
திருமலை மகாலிங்கம் (beemsingh assistant ) இயக்கம்
பாலா வாணி குரல்களில்
நான் சொல்ல வந்தேன் , நலமான செய்தி
வைகாசி மாதம் கல்யாண தேதி
பாலா குரல் ஜானகி ஸ்ரீ ராமனின் காதல் நாயகி அல்லவோ
நான் கேட்டுக்கொண்டேன் நலமான செய்தி
நான் கண்டுகொண்டேன் நீ எந்தன் பாதி
பாலா ஜானகி என்று ஒரு அழுத்து அழுத்துவார்
http://www.inbaminge.com/t/p/Puthiya%20Manithan/
vasudevan31355
1st July 2014, 01:44 PM
சார், திசை மாறிய பறவை கொஞ்சம் வித்தியாசம்தான். ஆனால் பறவை சுருண்டு விட்டது. சுமலதா கன்னிகாஸ்திரி.
http://images.boxtv.com/clips/663/14663/player_crop_1000x563_87713_14663.jpg
அருள்ஜோதி தெய்வம்
என்னை ஆண்டு கொண்ட தெய்வம்
ஜி.சீனிவாசனுக்கு பாலமுரளி கிருஷ்ணா (கொஞ்சமும் மாறாத பாலமுரளி கிருஷ்ணா பாணியில்)
'அட்ரா மேளத்தை ராஜா'
ஒரு குத்துப் பாடல் அதே திசை மாறியப் பறவைகள் படத்தில் . கோவை சௌந்தரராஜன், ஈஸ்வரியின் குரலில் கலக்கல்.
'அட நிறுத்தோங்கண்ணா' ஈஸ்வரி அமர்க்களம்.
vasudevan31355
1st July 2014, 01:47 PM
http://i1.ytimg.com/vi/K_39lYHMi20/hqdefault.jpg
சுமலதா பற்றி
http://antrukandamugam.files.wordpress.com/2013/12/sumalatha-thisai-maariya-paravaigal-1979-7.jpg
http://antrukandamugam.wordpress.com/2013/12/26/sumalatha/
vasudevan31355
1st July 2014, 01:59 PM
கிருஷ்ணா சார்,
'புதிய மனிதன்' படத்தில் ஜெயசங்கர். ஜோடி ஜெயசுதா.
'நான் சொல்ல வந்தேன்' பாடலை நீங்கள் ஞாபகப் படுத்தியவுடன் எனக்கு 'பாலூட்டி வளர்த்த கிளி' படத்தில் வரும் 'நான் பேச வந்தேன்... சொல்லத்தான் ஓர் வார்த்தையில்லை' பாடல் நினைவுக்கு வந்து விட்டது.
இரண்டுமே டாப்.
vasudevan31355
1st July 2014, 01:59 PM
யூ டியூப் வீடியோவில் 'புதிய மனிதன்' படத்தில் ரவிச்சந்திரன், விஜயநிர்மலா என்று தகவல் தந்துள்ளார்கள். ஸ்லைட் ஷோவில் ரவி, விஜய நிர்மலா படமாக ஓடுகிறது 'நான் சொல்ல வந்தேன்' பாடல் ஒலிக்கும் போது.
தவறான நியூஸ்தானே கிருஷ்ணா சார்?
vasudevan31355
1st July 2014, 02:04 PM
அதே போல 'புதிய வாழ்க்கை' என்றொரு படம் ஜெயசங்கர் நடித்து வெளிவந்தது.
சூப்பர் ஹிட் பாடலான பாலா பாடும்
'பேசு மனமே பேசு
பேதை மனமே பேசு'
ஜானகி பாடும்
பாடத் தெரிந்தவர் பாடுங்கள்
ஆடத் தெரிந்தவர் ஆடுங்கள்.
இது தங்கப் பாப்பா பிறந்த நாள்
இரண்டும் அருமை.
http://www.youtube.com/watch?v=sSvETsqKIwk&feature=player_detailpage
gkrishna
1st July 2014, 02:28 PM
தவறான நியூஸ்தானே கிருஷ்ணா சார்?
வாசு சார் சொன்னா தப்பா இருக்குமா
gkrishna
1st July 2014, 03:00 PM
புதிய வாழ்கை நம்ம cvr இயக்கம்
பேசு மனமே பேசு எச்செள்ளன்ட் சாங்
நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு
என்ன முதலாளி சௌக்கியமா 1972
காதல் மன்னன்,கே ஆர் விஜய சுந்தர்ராஜன் நடித்து வெளிவந்த ஈஸ்ட்மேன் கலர் இயக்கம் மல்லியம் . கே ஆர் விஜய டீச்சர் . ஜெமினியை லவ் பண்ணிட்டு மேஜர் சுந்தர்ராஜனை திருமணம் செய்யற மாதிரி கதை வரும்
இது கண்ணதாசன் கதைன்னு போஸ்டர் பார்த்த நினவு
பாலா சுசீலா குரல்களில் குழந்தைகளுடன் ஒரு நல்ல பாடல் ஒன்னு உண்டு சார்
1.அன்பை குறிப்பது அனா ஆசையின் விளக்கமும் ஆவன்ன
பாலாவின் குரல் ஜாலத்தை கேட்கலாம்
2. ஈஸ்வரி குரலில் "என்ன முதலாளி சௌக்கியமா " னு ஒரு பாட்டு ஒன்று உண்டு
பாடல் லிங்க் கிடைக்க வில்லை
Richardsof
1st July 2014, 03:05 PM
http://youtu.be/mbunYcotflk
gkrishna
1st July 2014, 03:37 PM
தேன்கிண்ணம் 1971
சித்ரமஹால் கிருஷ்ணமுர்த்தி இயக்கம்
நாகேஷ் விஜயலலித vkr mrr வாசு சுருளி s .n லக்ஷ்மி எல்லோரும் நடித்து வெளிவந்த ஒரு காமெடி படம். நன்றாக ஓடியது . ஆனால் இதே மாதிரி இதே டீம் எடுத்த ஹல்லோ partner சோலியை பெருக்கிடிச்சு
நாகேஷ் இன் நண்பர்களாக சுருளி,சதன்,ISR எல்லோரும் வருவார்கள்
மோகன் (யோககார நாகேஷ்) லலிதா (விஜயலலித) இருவரும் காதல்ர்கள் லலிதாவின் அத்தை மகன் தான் மோகன் .ஆனால்
vKR இதற்கு சம்மதிக்க மாட்டார் . அவருடைய அல்லக்கை வாசு
இருவரும் சேர்ந்து காதல் ஜோடியை பிரிக்க முயற்ச்சி செய்வார்கள் .
முயற்ச்சி வெற்றி அடைந்ததா அல்லது காதலர்கள் எதிர்ப்பை மீறி ஒன்று சேர்ந்தார்களா ? முடிவை வெள்ளித்திரையில் காண்க
இசை ஷங்கர் கணேஷா அல்லது குமரா என்று ஒரு சிறு சந்தேகம் உண்டு
ஆனால் பாட்டு எல்லாம் அப்ப ஹிட்
சுசீலாவின் இனிமையான் குரலில்
"தேன் கிண்ணம் தேன் கிண்ணம் பருவத்தில் பெண் ஒரு தேன் கிண்ணம் பால் அன்னம் பால் அன்னம் பழுகும் விதத்தில் பால் அன்னம் "
http://www.youtube.com/watch?v=9yun_LFvuD4
பாடகர் திலகம் குரலில் குழுவினருடன்
"போடனும் நல்ல 'போடணும்' ஜோரா 'போடணும்' சோப்பு 'போடணும்'
நினச்சது நடக்கனும்ன நேரம் காலம் பார்த்து நல்ல "
ஒரு நல்ல டூயட் tms சுசீலா
"காதலோ காதல் காதலோ காதல் "
மீண்டும் tms
"அக்கம் பக்கம் யாருமில்லே வெட்கமா வெட்கமா "
tms ஈஸ்வரி குரல்களில்
"சின்ன குட்டி பொண்ணு "
படத்தோட highlight எதுனா எல்லா நல்ல பாடல்களின் கலவையாக
tms ஈஸ்வரி குரல்களில் ஒரு பாத் ரூம் பாட்டு சூப்பர்
வாசு vKR இருவரும் ஒருவருக்கு தெரியாமல் நாகேஷையும் விஜய லலிதாவையும் ஒரே அறையில் அடைத்து விடுவார்கள் .
விஜய லலிதா பாத்ரூம் டப் இல் குளித்து கொண்டு இருக்கும் போது நாகேஷ் தெரியாமல் பாத் ரூம் கதவை திறந்து விடுவார் .
உடனே நம்ம ராட்சசி
"உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம் காதல் கொண்டேன் வா " என்பார்
உடனே TMS
"மெதுவா மெதுவா தொடலாமா" னு தலையை துவட்டி விடுவார்
பின்
"பொன் மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் "
"இப்படி கேட்டால் எப்படி சொல்வேன் "
இதுக்கு நடுவில் VKR வாசுவிடம் "என்ன ஒரே சினிமா பாட்டு சப்தமாக இருக்கே அறையில் " என்று கேட்பார். அதற்கு பதிலாக வாசு "இப்ப ரேடியோவில் தேன் கிண்ணம் நேரம்ங்க " என்று கூறுவார் .
உடனே ராமசாமி "என்னதான் சினிமா பாட்டா இருந்தாலும் இப்படி துண்டு துண்டா வருதே " என்பார்
இந்த மாதிரி எல்லா சினிமா பாடல்களையும் அந்த படத்தில் இருந்தே இணைத்து வந்த காமெடி க்கு இது ஆரம்பம் என்று நினவு
http://www.youtube.com/watch?v=WD6pLzBmJ6s
http://www.inbaminge.com/t/t/Then%20Kinnam/
gkrishna
1st July 2014, 03:47 PM
நன்றி எஸ்வி சார்
என்ன முதலாளி சௌக்கியமா திரைபடத்தில் உள்ள
எகிபுது நாட்டின் இளவரசி பாடலை நினவு கூர்ந்ததற்கு நன்றி
mr_karthik
1st July 2014, 03:48 PM
டியர் கிருஷ்ணாஜி,
ஒரு சின்ன யோசனை. சொல்லலாமா? (சற்று பயத்துடனும் கவனத்துடனும் சொல்ல வேண்டியிருக்கு. இருந்தாலும் நீங்கள் ஏற்கெனவே பர்மிஷன் தந்திருக்கும் தைரியத்தில் சொல்கிறேன்).
நிறைய அள்ளி அள்ளித் தருகிறீர்கள். அதை ஒரு கோர்வையாக்கித் தரலாமே. நிறைய பாடல்களைத் தெரிந்து வைத்துக்கொண்டு சரமாரியாக அள்ளி வீசுகிறீர்கள். மலைத்துபபோகிறோம், உங்கள் அபார நினைவாற்றல் கண்டு. அதே சமயம் அவற்றை இன்னும் கொஞ்சம் கோர்வையாக்கித் தந்தால் இன்னும் பல மடங்கு சிறப்பாக அமையும் என்பது என் தாழ்மையான எண்ணம்.
(யோசனை எல்லாம் சொல்றானே என்று கோபப்பட வேண்டாம். "அங்கே" எழுத்துப்பிழை திருத்தியவருக்கே சரமாரித் தாக்குதல்கள். சிவன் ரேஞ்சுக்கு 'என் பதிவிலே குற்றம் கண்டுபிடித்தவன் எவன்?' என்ற எக்காளம். அநேகமாக 'இலங்கை ஆவண பதிப்பாளரின்' விக்கெட்டும் அவுட் என நினைக்கிறேன். நிறைய மன்னிப்பெல்லாம் கேட்டு, நிறைய நன்றியெல்லாம் சொல்லி விட்டார்.
ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து கடைசியில் 'எங்கள் உயிருக்குயிரான முரளி சார்' மீதும் கைவைக்கிறாற்போல் தெரிகிறது. நாங்கள் யாவரும் ஒதுங்கித்தான் இருக்கிறோம். செத்துவிடவில்லை).
gkrishna
1st July 2014, 03:59 PM
அன்பை குறிப்பது அனா ஆசையின் விளக்கமும் ஆவன்ன
பாடலின் லிங்க்
அன்பை குறிப்பது அ'' ன
ஆசையின் விளக்கம் ஆவன்னா
ஆவன்னா
அன்பை குறிப்பது ''அ'' னா
''அ'' ன
ஆசையின் விளக்கம் ஆவன்னா
ஆவன்னா
இளமையில் இன்பம் 'இ' னா
'இ' னா
ஈடில்லா சுகம் 'ஈ'யன்னா
'ஈ'யன்னா
இளமையில் இன்பம் 'இ' னா
'இ' னா
ஈடில்லா சுகம் 'ஈ'யன்னா
'ஈ'யன்னா
அன்பை குறிப்பது ''அ'' ந்னா
ஆசையின் விளக்கம் ஆவன்னா
உயிர்க்குயிர் என்பது 'உ' னா
'உ' னா
ஊடலில் கூடல் ஊவன்னா
ஊவன்னா
உயிர்க்குயிர் என்பது 'உ' னா
ஊடலில் கூடல் ஊவன்னா
என்னையே தருவது 'ஏ' னா
'ஏ' னா
ஏக்கமோ ஏக்கம் 'ஏ'யன்னா
'ஏ'யன்னா
லா லலலல் லா லா
லா லலலலல்ல லா லா
ஐக்கியப்படுவது 'ஐ' யன்னா
'ஐ' யன்னா
ஒழுக்கத்தை உணர்த்தும் 'ஒ' னா
'ஒ' னா
ஐக்கியப்படுவது 'ஐ' யன்னா
ஒழுக்கத்தை உணர்த்தும் 'ஒ' னா
ஓர் முடிவெடுப்பது 'ஓ' வன்னா
'ஓ' வன்னா
ஔடதம் நோய்கென 'ஔ' வன்னா
'ஔ' வன்னா
ஃதே காதலா 'ஃ' னா
'ஃ' னா
ஹும் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஆனா ஆவன்னா இனா
ஆனா ஆவன்னா இனா
லலல லலல் லலலல் லலல லா
உள்ளத்தில் லாபத்தை கூட்டிவிடின்
உண்மை காதல் கைகூடிவிடும்
கள்ளத்தை எண்ணத்தில் கழித்துவிடின்
கற்பு நெறி ஒன்றே மிச்சப்படும்
இல்லற வாழ்க்கையை வகுத்திவிடின்
இருவரின் பங்கென்ன புரிந்துவிடும்
வெள்ளம் போல் ஆசையை பெருக்கிவிடின்
வேலியிட்டு முக்கோணம் தடுத்துவிடும்
அன்பை குறிப்பது ''அ'' ந்னா
ஆசையின் விளக்கம் ஆவன்னா
அன்பை குறிப்பது ''அ'' ன
ஆசையின் விளக்கம் ஆவன்னா
https://www.youtube.com/embed/Fa0SHu8GZtA
vasudevan31355
1st July 2014, 04:00 PM
கிருஷ்ணா சார்,
அழகான 'தேன் கிண்ணத்'துல இனிமையான பாடல்களை இட்டு விருந்தளித்தமைக்கு நன்றி!
எனக்கென்னவோ 'தேன் கிண்ணம்' படம் ஒரு 'கிச்சு கிச்சு'தான். டக்கென்று சிரிப்பு வராது.
தேங்காய் கொஞ்சம் கலகலக்க வைப்பார்.
சுருளிக்கு ஜோடியாக விஜயசந்திரிகா டைட் பேண்ட்டெல்லாம் போட்டுகிட்டு கொடுமைப்படுத்துவார்.
'போடணும்... நல்லா போடணும்'.... கொஞ்சம் தத்துவத்தையும் சொல்லும்.
இது போன்ற படக் கலவைப் பாடல் 'நவராத்திரி' திரைப்படத்தில் பைத்தியக்கார ஹாஸ்பிடல் காட்சியில் வரும். சாவித்திரி, முத்துலஷ்மி, மனோரமா இன்னும் பலர் பங்கு கொள்வார்கள்.
அதே போல 'அன்னை' திரைப்படத்தில் லைலா என்று ஒரு பாட்டு. நாகேஷும், சந்திரபாபுவும் விதவிதமான பாட்டுக்கள் பாடி கூத்தடிப்பார்கள்.
'கல்யாணமாம் கல்யாணம்' படத்திலும் சோ, தேங்காய், ஜெய், ஜெயசித்ரா கலந்து கொள்ளும் கதம்பப் பாடல் ஒன்று உண்டு.
vasudevan31355
1st July 2014, 04:04 PM
'தேன் கிண்ணம்' படத்தின் 'உத்தரவின்றி உள்ளே வா' நகைச்சுவைக் கதம்பப் பாடல்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=WD6pLzBmJ6s
gkrishna
1st July 2014, 04:05 PM
கார்த்திக் சார்
பிட் பிட் ஆ நினைவில் வருகிறது சார் என்ன பண்றதுன்னு தெரியலை
நடுவில் வேறு வேலையும் வந்து விடுகிறது .disturb ஆகி விடுகிறேன்
ப்ளீஸ் சார் . எப்படியும் ஒரு கோர்வையாக கொண்டு வர முயற்ச்சி செய்கிறேன் . நீங்கள் தாரளமாக சொல்லலாம் சார் .
நிச்சயமாக நான் தவறாக எடுத்து கொள்ள (கொல்ல) மாட்டேன்
vasudevan31355
1st July 2014, 04:07 PM
'அன்னை' திரைப்படத்தில் வரும் கதம்பப் பாடல்' ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு லைலா'
http://www.youtube.com/watch?v=Rt-6pWA02QE&feature=player_detailpage
gkrishna
1st July 2014, 04:08 PM
vasu sir
காமெடியை விட விஜயலலித செம 'தமாஷ்'
vasudevan31355
1st July 2014, 04:11 PM
vasu sir
காமெடியை விட விஜயலலித செம 'தமாஷ்'
:):):):):):):):):)
gkrishna
1st July 2014, 04:12 PM
வாசு சார்
நீங்கள் சொல்றது 100 சதவிகிதம் கரெக்ட் .
நவராதிரியிலும் அன்னை திரைப்படத்திலும் கொஞ்சம் பாடல் வரிகளை மாற்றி இருப்பார்கள் என்று நினவு
தேன் கிண்ணம் திரை படத்தில் அந்த பாடல்களை அப்படியே உபயோகபடுத்தி இருப்பதாக நினவு . அதனால் தான் இது ஆரம்பம் என்று எழுதினேன்
gkrishna
1st July 2014, 04:16 PM
கார்த்திக் சார்
உங்கள் "விக்கெட் அவுட் " நகைச்சுவையை மிகவும் ரசித்தேன்
vasudevan31355
1st July 2014, 04:21 PM
வாசு சார்
நீங்கள் சொல்றது 100 சதவிகிதம் கரெக்ட் .
நவராதிரியிலும் அன்னை திரைப்படத்திலும் கொஞ்சம் பாடல் வரிகளை மாற்றி இருப்பார்கள் என்று நினவு
தேன் கிண்ணம் திரை படத்தில் அந்த பாடல்களை அப்படியே உபயோகபடுத்தி இருப்பதாக நினவு . அதனால் தான் இது ஆரம்பம் என்று எழுதினேன்
ஆமாம் கிருஷ்ணா சார். நீங்கள் கூறியிருப்பது சரிதான் என்று படுகிறது. இதற்கு முன் அப்படியே பாடல்கள் கதம்பப் பாடலில் வந்ததில்லைதான்.
vasudevan31355
1st July 2014, 04:24 PM
கிருஷ்ணா சார்,
மதியம் மூணு மணியிலிருந்து நான்கரை மணி வரை நொடிக்கொருதரம் Log in செய்யச் சொல்லி hub இல் உயிர் எடுக்கிறது. உங்களுக்கும் அப்படித்தானா? பதிவு போடவே முடியவில்லையே.
gkrishna
1st July 2014, 04:42 PM
கிருஷ்ணா சார்,
மதியம் மூணு மணியிலிருந்து நான்கரை மணி வரை நொடிக்கொருதரம் Log in செய்யச் சொல்லி hub இல் உயிர் எடுக்கிறது. உங்களுக்கும் அப்படித்தானா? பதிவு போடவே முடியவில்லையே.
வாசு சார்
ரொம்ப நன்றி சார்
இதே பிரச்சனயில் மாட்டி கொண்டு இதோடு 100000 தடவை login செய்து விட்டேன் . எனக்கு மட்டும் தான் இந்த பிரச்சனை என்று நினைத்தேன்
உங்களுக்கும் அதே கதை தானா .
vasudevan31355
1st July 2014, 04:43 PM
அன்பு கார்த்திக் சார்!
வணக்கம்.
தாங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கும்.
தங்கள் யோசனையைப் படித்தேன். ஒழுங்குப் படுத்திப் பதிவுகள் போடலாம் என்ற தங்கள் யோசனையை நானும் வரவேற்கிறேன்.
ஒன்று செய்யலாமா?
இந்தத் திரி மிடில் சாங்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் 1970- இல் இருந்து வருடவாரியாக வந்த படங்களை எடுத்து தினம் ஐந்து அல்லது 10 படங்கள் என்று விலாவாரியாக அலசலாமா?
அல்லது வேறுமுறை இருந்தாலும் தாங்கள் யோசனை கூறலாம்.
திரியின் ஏனைய அன்பு நண்பர்களும் இதுபற்றி கருத்துக்கள் தெரிவிக்கவும்.
வரவேற்கக் காத்திருக்கிறோம்.
mr_karthik
1st July 2014, 04:47 PM
டியர் கிருஷ்ணாஜி, டியர் வாசு சார்,
நான் படத்திலும் ஒரு கதம்பப் பாட்டு உண்டு.
குழந்தையைக் கடத்திக்கொண்டு போகும் அசோகனின் ஆட்களிடம் இருந்து மீட்க நாகேஷும் மனோரமாவும் பாடும் கதம்பப் பாடல்கள்.
ஒகேனக்கல் அருவியில் படமாக்கப் பட்டிருக்கும்.
vasudevan31355
1st July 2014, 04:48 PM
வாசு சார்
ரொம்ப நன்றி சார்
இதே பிரச்சனயில் மாட்டி கொண்டு இதோடு 100000 தடவை login செய்து விட்டேன் . எனக்கு மட்டும் தான் இந்த பிரச்சனை என்று நினைத்தேன்
உங்களுக்கும் அதே கதை தானா .
ஐயோ சார்! அதைப் பற்றி ஏன் கேக்குறீங்க?
நடிகர் திலகம் திரியில் பதிவிடும் போதெல்லாம் இதே சித்திரவதைதான். காலை ஷிப்ட் முடித்துவிட்டு மதியம் ஹப்பில் உட்கார்ந்தால் இரண்டுமணி நேரம் ரண வேதனைதான். போடுவதற்குள் போதும் போதும் என்று ஆகி விடும். இரண்டு மூன்று முறை இதுபற்றி திரியில் எழுதி விட்டேன். மாடரேட்டர்களுக்கு தனி மடலும் அனுப்பி விட்டேன். என்ன காரணம் என்று தெரியவில்லை.
தொழில் நுட்பக் கோளாறாக இருக்கலாம் என்று படுகிறது.
vasudevan31355
1st July 2014, 04:49 PM
டியர் கிருஷ்ணாஜி, டியர் வாசு சார்,
நான் படத்திலும் ஒரு கதம்பப் பாட்டு உண்டு.
குழந்தையைக் கடத்திக்கொண்டு போகும் அசோகனின் ஆட்களிடம் இருந்து மீட்க நாகேஷும் மனோரமாவும் பாடும் கதம்பப் பாடல்கள்.
ஒகேனக்கல் அருவியில் படமாக்கப் பட்டிருக்கும்.
ஆமாம் கார்த்திக் சார். ஞாபகப்படுத்தினீர்கள். நன்றி சார். வேறு ஏதாகிலும் அப்படி படங்கள் இருக்கின்றனவா?
vasudevan31355
1st July 2014, 04:51 PM
கார்த்திக் சார்
மதிய நேர Login விஷயத்தில் தங்களுக்கு அனுபவம் எப்படி?
mr_karthik
1st July 2014, 04:54 PM
டியர் வாசு சார்,
அந்தமாதிரி பெரிய யோசனையெல்லாம் சொல்லவில்லை. (அவை ராகவேந்தர் சார் டைப் யோசனைகள்)
நான் சொல்லவந்தது, கிருஷ்ணாஜி சகட்டுமேனிக்கு அள்ளி வீசுகிறாரே அவற்றை தங்களைப்போல ஒரு முழு பதிவாக்கித் தரலாமே என்பது மட்டுமே.
வருட வாரியாக என்பதெல்லாம் சரிப்படும்னு தோன்றவில்லை.
vasudevan31355
1st July 2014, 04:55 PM
கார்த்திக் சார்,
நீங்கள் 'நான்' படத்தில் சொன்ன கதம்ப பாடல்.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ynwMAK_d340
gkrishna
1st July 2014, 04:57 PM
வாசு சார் /கார்த்திக் சார்
உங்கள் கருத்துகள் அனைத்தும் எனக்கும் உடன்பாடே
கார்த்திக் சார் சொல்வது போல் ஒரு கோர்வை வேண்டும் .
இல்லை என்றால் தவறான செய்திகள் பதிவாகி விட கூடாது
நான் சமீபத்தில் ஒரு வலைபூ ஒன்றில் பார்த்த ஒரு சிறு செய்தி
ராமன் பரசுராமன் என்று ஒரு திரைப்படம் இந்த படத்திற்கு
சத்யம் இசை அமைப்பாளர் என்று ஒரு பாடலில் "கல்யாண மாலை
கொண்டாடும் வேளை " பதிவிட்டிருக்கிரர்கள் . அதே நேரத்தில் இன்னொரு பாடல் அதே வலைப்பூவில் அதே திரைப்படத்திற்கு ஷங்கர் கணேஷ் இசை அமைப்பாளர் என்று (பாரம்மா பாரு டோக்யோ )
வரலாறு நமக்கு முக்கியம் அல்லவா
vasudevan31355
1st July 2014, 04:58 PM
டியர் வாசு சார்,
அந்தமாதிரி பெரிய யோசனையெல்லாம் சொல்லவில்லை. (அவை ராகவேந்தர் சார் டைப் யோசனைகள்)
நான் சொல்லவந்தது, கிருஷ்ணாஜி சகட்டுமேனிக்கு அள்ளி வீசுகிறாரே அவற்றை தங்களைப்போல ஒரு முழு பதிவாக்கித் தரலாமே என்பது மட்டுமே.
வருட வாரியாக என்பதெல்லாம் சரிப்படும்னு தோன்றவில்லை.
ஓ.கே கார்த்திக் சார்.
பார்த்துக் கொள்ளலாம்.
வருட வாரியாக என்பதை பிறகு பார்த்துக் கொள்ளலாம். எனக்கும் அது சரிப்பட்டு வராது என்றே தோன்றுகிறது. ஒரு யோசனை தோன்றிற்று. அதனால்தான் கேட்டேன்.
vasudevan31355
1st July 2014, 05:01 PM
கிருஷ்ணா சார்!
இணையத்தில் ஏகப்பட்ட தவறுகள்.
நான் இதை நம் திரியிலேயே சுட்டிக் காட்டி இருக்கிறேன். தவறாய் இருந்தால் நமக்கு சங்கடமாய் இருக்கிறது. தெரியாமல் தவறு ஏற்பட்டால் பரவாயில்லை. எல்லாம் தெரிந்தவர்கள் போல விஷயங்களைக் கொடுக்கும் நபர்கள் இணையங்கள் முழுதும் உலா வருகிறார்கள்.
என்ன செய்ய!
mr_karthik
1st July 2014, 05:04 PM
கார்த்திக் சார்
மதிய நேர Login விஷயத்தில் தங்களுக்கு அனுபவம் எப்படி?
Vasu sir,
Same problem here also.
I became fed-up by waiting.... waiting.... waiting.... waiting....
vasudevan31355
1st July 2014, 05:08 PM
'ராமன் பரசுராமன்'படத்தின் இசை சத்யம் அவர்கள்தான். பிரபல் தெலுங்குப் பட இசையமைப்பாளர். 1980-ஆம் ஆண்டு வெளிவந்த படம் என்று நினைவு.
'கல்யாண மாலை' பாடல் மிக அற்புதமாய் இருக்கும்.
'கல்யாண மாலை' என்று பாலா முடிப்பதற்குள் சுசீலா அதே வரிகளை எடுக்கும் அழகே அழகு.
என்ன ஒரு அழகான பாடல்! அவசியம் அனைவரும் கேட்டு மகிழ வேண்டிய ஒரு பாடல்.
http://tamilthiraipaadal.com/index.php?action=song&id=15207
vasudevan31355
1st July 2014, 05:10 PM
Vasu sir,
Same problem here also.
I became fed-up by waiting.... waiting.... waiting.... waiting....
சிங்கிள் டபுளாச்சு... டபுள் மூணாச்சு:)... கிருஷ்ணா, கார்த்திக் சார்.
ஏன் இதுவரை இதைப் பற்றி யாரும் ரிப்போர்ட்டே பண்ணல?
அப்போ தப்பு செய்யமலேயே தண்டனை அனுபவிக்கிறோமோ?
vasudevan31355
1st July 2014, 05:13 PM
'கல்யாண மாலை' தந்த சத்யம் இசையமைப்பாளர் இவர்தான்.
http://4.bp.blogspot.com/-M3uf--yhGLM/Tx5RSvUJn1I/AAAAAAAACoc/IrKqqoGFRmc/s1600/satyam.jpg
gkrishna
1st July 2014, 05:14 PM
கார்த்திக் சார்
உங்கள் நினவு திறன் அபாரம்
தயுவு செய்து கேலி செய்வதாக நினைத்து விடாதீர்கள்
வசந்த மாளிகை வசனம் போல் " அடி மனதின் ஆழத்தில் இருந்து வெளி வரும் வார்த்தைகள் "
vasudevan31355
1st July 2014, 05:18 PM
கிருஷ்ணா சார்
இன்னொரு தளத்துல 'ராமன் பரசுராம'னின் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் அப்படின்னு போட்டிருக்காங்க. நமக்கே இப்ப குழம்புது.
இதப் பாருங்க. இசைத்தட்டு கவர்ல. இது பொய் சொல்லாதுதானே!
http://tamilthiraipaadal.com/files/1980/Raman_Parasuraman/Raman%20Parasuraman.jpg
gkrishna
1st July 2014, 05:22 PM
சத்யம் இசையில்
"முடி சூட மன்னன் " என்று ஒரு படம்
இதை பற்றி கார்த்திக் சார் ஏற்கனவே ஜெய் திரியில் குறிப்பிட்ட நினைவு
"தொடங்கும் தொடரும் புது உறவு மயங்கும் மலரும் பல நினவு "
பாலா சுசீலா உடன் ஒரு அருமையான மெலடி
ஜெய்,தேசிய நடிகை தீபா ,ஸ்ரீதேவி நடித்து வெளிவந்த திரைப்படம்
(1978 )
எடிட்டர் R .Vittal இயக்கம் னு நினைவு
http://www.youtube.com/watch?v=Fe6b3d-h-bg
mr_karthik
1st July 2014, 05:23 PM
டியர் வாசு சார்,
இணையத்தில் மட்டுமல்ல. டி.வி.சேனல்களிலும் தப்பும் தவறுமாக தகவல் தருகின்றனர்.
முரசு தொலைக்காட்சியில் 'கடலோரம் வாங்கிய காற்று' பாடல் ஒளிபரப்பாகும்போது கீழே 'படம்: ரிக்ஷாக்காரன் இசை: ஜி. ராமநாதன்' என்று காண்பிக்கின்றனர்.
பொதிகை சேனலில் ஒரு பெண் நடிகை லட்சுமியைப்பற்றி சொல்லும்போது "இவர் கே.பாலச்சந்தர் (??) இயக்கிய ஜீவனாம்சம் படம் மூலம் அறிமுகமானார்" என்று சொன்னார், ஜீவனாம்சம் இயக்குனர் மல்லியம் ராஜகோபால் என்பது every one knows, except the compier.
vasudevan31355
1st July 2014, 05:35 PM
டியர் வாசு சார்,
இணையத்தில் மட்டுமல்ல. டி.வி.சேனல்களிலும் தப்பும் தவறுமாக தகவல் தருகின்றனர்.
முரசு தொலைக்காட்சியில் 'கடலோரம் வாங்கிய காற்று' பாடல் ஒளிபரப்பாகும்போது கீழே 'படம்: ரிக்ஷாக்காரன் இசை: ஜி. ராமநாதன்' என்று காண்பிக்கின்றனர்.
பொதிகை சேனலில் ஒரு பெண் நடிகை லட்சுமியைப்பற்றி சொல்லும்போது "இவர் கே.பாலச்சந்தர் (??) இயக்கிய ஜீவனாம்சம் படம் மூலம் அறிமுகமானார்" என்று சொன்னார், ஜீவனாம்சம் இயக்குனர் மல்லியம் ராஜகோபால் என்பது every one knows, except the compier.
உண்மை! உண்மை! உண்மை கார்த்திக் சார்.
நான் காலை டிபனோ அல்லது மதியம் லஞ்ச்சோ எடுத்துக் கொள்ளும் போது மட்டும் முரசு வைப்பதுண்டு. அப்போது நீங்கள் சொன்ன கேலிக் கூத்துக்கள் எல்லாம் நடக்கும். நமக்கா பொறுக்க முடியாது. கோபம் வந்து ரத்தம் கொதிக்கும். நாம் எல்லாம் தெரிந்தவர்கள் இல்லைதான். ஆனால் அவர்களை விட நமக்குத் தெரியம் போல இருக்கிறது.
ஒரு ஒப்பன் சேனல் நடத்துபவர்கள் இதிலெல்லாம் கவனம் செலுத்தாமல் இருப்பது வேதனைக்குரியது. உலகம் முழுதும் மக்கள் பழைய பாடல்களை விரும்பிப் பார்க்கிறார்கள்.
நான் தப்பைக் கண்டு கொதித்து வீட்டம்மாவை அழைத்துக் காண்பித்தால் அங்கிருந்து ஒரு முனகல் வரும் பாருங்க.
'ஆமா! இதான் ரொம்ப முக்கியம். இங்கேயே ஏகப்பட்ட பாத்திரம் கழுவாம கிடக்கு. இதுல தப்பு கண்டு புடிச்சி காண்பிக்கிறாராமாம்."
'என்ன அங்க முனகல்'? நான்.
'ஒன்னுமில்லீங்க. அது அப்படித்தான்'
என்று பொத்தம்பொதுவான 'ஆமாம்' அவுங்க போடுவாங்க. சும்மா பேருக்கு. நாம தலையில் அடிச்சுக்க வேண்டியதுதான் ரெண்டையும் பார்த்து.
எனக்கு வேற கார்த்திக் சார் என்ன பதில் பதிவு தரப் போறாரோன்னு 'திக் திக்'ன்னு இருக்கு.
அய்யய்யோ! உணர்ச்சி வேகத்துல என்னென்னவோ சொல்லிபுட்டேனே! அப்படியே அழிச்சிடுங்கோ! மறந்திடுங்கோ!
gkrishna
1st July 2014, 05:58 PM
1975 இல் வெளி வந்த
தெய்வநாயகி films கஸ்துரி விஜயம்
மாதவன் இயக்கம்
கே ஆர் விஜய படம் பூராவும் வியாபித்து இருப்பார்கள்
இது T V .சேஷாத்ரி யின் சேவா stage troupe இல் போடப்பட்ட நாடகம்
பிறகு திரைப்படம் ஆனது
மெல்லிசை மாமணி குமார் இசை
எல்லாமே சிலோன் ரேடியோ ஹிட் பாடல்கள்
சுசிலாவின் குரலில் "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு தம்பதியிர் வாழியவே "
இந்த பாட்டில் சுசில ஒரு சிறு பிழை செய்ததாக ஒரு sanskrit பண்டிட் ஒருவர் கல்கி பத்திர்கையில்
"இந்த தம்பதி என்பது சமஸ்க்ர்த வார்த்தை சமஸ்கரததில் முதல் த வை உபயோகிப்பதற்கு பதிலாக 3 வது அல்லது 4வது த வை உபயோகித்து இருப்பார்கள் " எழுதி இருந்தது நினைவிற்கு வருகிறது
வாணியின் குரலில்
மழைகால மேகம் மகாராஜன் வாழ்க
வற்றாத தீபம் சிந்தும் ஒளி போல வாழ்க
னு ஒரு பாடல்
mr_karthik
1st July 2014, 06:02 PM
அருமையான பல பாடல்களின் வீடியோ (காணொளி) தந்து அசத்திய வாசு சார், கிருஷ்ணா சார், வினோத் சார் அனைவருக்கும் (அந்த பாடல் காட்சிகளைப்பார்த்து ரசித்த) அனைவர் சார்பாகவும் நன்றி.
தேன்கிண்ணம் பாடல்கள்
தேன்கிண்ணம், அன்னை, நான் கதம்ப பாடல்கள்
எகிப்து நாட்டின் இளவரசி (என்ன முதலாளி சௌக்கியமா)
தொடங்கும் தொடரும் புது உறவு (முடிசூடா மன்னன்)
அனைத்தும் கலக்கல்...
gkrishna
1st July 2014, 06:02 PM
வாசு சார் /கார்த்திக் சார்
நீங்கள் சொனன மாதிரி முரசு தொலைகாட்சியில்
நடிகர் திலகம் நடித்த பாடல்ஐ "ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா "
போட்டு விட்டு கீழே படம் "படித்த மனைவி " என்று போடுகிறார்கள்
vasudevan31355
1st July 2014, 06:35 PM
http://www.inbaminge.com/t/k/Kasthuri%20Vijayam/folder.jpg
கிருஷ்ணா சார்,
'கஸ்தூரி விஜயம்' படத்தில் இன்னொரு விசேஷம்.
இப்படத்தில் ஆண் குரலில் பாடல்களே இல்லை என்பதுதான்.
குமாரின் இசையில் சுசீலாவின் 'பல்லாண்டு பல்லாண்டு' பாடல் சூப்பர்.
இப்பாடலில் திருமணன் சடங்குகள் அனைத்தையும் ஓரளவிற்குக் காட்டி விடுவார்கள்.
முத்துராமன், நாகேஷ், ஸ்ரீகாந்த் எல்லாம் நடித்திருப்பார்கள்.
'மழைக்கால மேகம்' பாடல் காமராஜர் புகழ் பாடும் பாடல்
சுப்பையாவை வாழ்த்தி கே..ஆர்.விஜயா பாடும் சாக்கில் பெருந்தலைவரை பெருமைப்படுத்தும் பாடல்.
இந்த வரிகளைப் பாருங்கள்
இப்போது எழுபத்தைந்து
இன்னும் நூறாண்டு
இளமை நீ என் வீட்டை ஆண்டு
ராஜா உன் உள்ளம்தானே பொய்யைச் சொல்லாது
தலைமை நீ ஏற்றுக் கொண்டால் பஞ்சம் வராது.
mr_karthik
1st July 2014, 06:53 PM
திருட்டுப்பதிவு போட்டுவிட்டுத்தான் இத்தனை ஆர்ப்பாட்டமா?. நான் கூட ஒரிஜினலோன்னு நினைச்சுட்டேன். சம்மந்தப்பட்டவர்கள் (அதாவது ஒரிஜினல் பதிவை சிரமம் எடுத்து பதித்தவர்கள்) சொன்ன பிறகுதான் விஷயம் தெரியுது. இதனிடையே 'பாராட்டுங்கள்', 'பாராட்டுங்கள்' என்ற கெஞ்சல் வேறு. இவர்கள் சொல்வதற்கெல்லாம் 'எஸ்' 'எஸ்' போட சிலர்.
(குழம்ப வேண்டாம், இந்தப்பதிவு இந்த திரிக்கு சம்மந்தம் இல்லாதது)
Gopal.s
2nd July 2014, 04:55 AM
ஹம்சத்வனி.
காதல் வயப்பட்டு விட்டீர்கள். காதலி ஒப்பு கொண்டு விட்டாள் .ஆனாலும் ஊருக்கு தெரியாமல்,உலகுக்கு தெரியாமல் ரகசியம் காத்து, உங்களுக்குள்ளேயே மருகி, சுகம் காக்கும் விகசிப்பை, உணர வேண்டுமா?ரகசியமாக அடையும் சுகத்தை ,திருட்டு சுகத்தை ஊரறியாமல் உணரும் சந்தோசம். இந்த பிரத்யேக உணர்வு தரும் ராகம் ஹம்சத்வனி.
அந்த பாடலையும் ,ஜோடியையும் நிறைய பேர் குறை சொன்னார்கள்.அதனாலேயோ என்னவோ ,அந்த பொன்னூஞ்சல் ஆடிய ஜோடியின் இந்த வித்தியாச கானத்தில் எனக்கு ஒரு ஈர்ப்பு. சாதாரண கனவு பாடல் மார்கழி மாதத்து பனியும் அந்த மங்கையை கண்டதும் பணியும் என்ற அபூர்வ வரி கொண்டது.highlight ஆணின் விருப்பமும்,பெண்ணின் செல்லமான மறுப்பும் ஸ்வரத்தின் வழியாக சொல்ல பட்டது. டி.எம்.எஸ்.-சுசிலா பின்னியிருப்பார்கள்.சிவாஜி-உஷாநந்தினி ஜோடி எனக்கு பிடித்தம். குன்னக்குடி கொடி நாட்டிய வித்தியாச பாடல். "பால் பொங்கும் பருவம் "(படமும் பாடலும் நிறைய பேருக்கு பிடிக்காது)
வாழ்வில் இணைந்த அந்த ஜோடியின் முதல் படம்.வழக்கம் போல தெரு ரௌடியிடம் காதலில் விழும் இன்ஸ்பெக்டர் மகள். ஆனால் பாடலும் ,படமாக்கமும் வித்யாசம்.(படமும்தான்-அமர்க்களம்)பரத்வாஜின் "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு".
எல்லாம் அம்சமாய் நிறைந்த 100% திருப்தி என்பார்களே, அதை அளித்த 2000களின் பாடல். அன்றலர்ந்த தாமரையாய்,அன்று பறித்த வெள்ளரியாய் ,சரியாய் பழுத்த ஸ்ட்ராபெரியாய் சிம்ரன். சந்திரபாபு-விஜய் சரிவிகித கலப்பாய் பிரபுதேவா. அற்புத நடன அமைப்பு.சரியான படமாக்கம். ரகுமானோ என்று திகைக்க வைத்த புதிய ஒருவரின் அற்புத composition -interludes -B G M .(ரஞ்சித் பாலொட் ) "மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே "
அந்த பிரபலத்தின் (மதுரைதான்)இரண்டாவது படைப்பு.நடிகர்திலகம் வெள்ளிவிழா கேடயம் வழங்கிய தமிழின் சிறந்த படைப்புகளில் ஒன்று. இளைய ராஜா கிராமத்து பின்னணியில் கலப்பிசையில் பெடலெடுத்த கிழக்கே போகும் ரயில்.ஆனாலும் இந்த பாடல் படத்திலில்லை."மலர்களே நாதஸ்வரங்கள்". அருமையான பாடல்.வெட்ட பட்டது நீளம் கருதி.ஆனால் அதே இயக்குனரின் இன்னொரு அரை வேக்காட்டு ரொமாண்டிக் த்ரில்லெர் .இசை புயலின் விஸ்வரூபம்.எடு படாத படத்தில் ஒரு composition marvel . "தீகுருவியாய் தீங்கனியென தீபொழுதினில் தீண்டுகிறாய்." கண்களால் கைது செய்யா விட்டாலும் ,காதுகளால் என்னை கைது செய்த இணைப்பு-படைப்பிசை அபூர்வம்.
இந்த ராகத்தில் மற்ற பாடல்கள்.
வனிதா மணியே - அடுத்த வீட்டு பெண்.
ஸ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம்-மகாநதி.
RAGHAVENDRA
2nd July 2014, 06:47 AM
நண்பர்களே,
தினமும் இந்திய நேரப்படி மாலை 3.30 முதல் 4.30 மணி வரை லாகின் பிரச்னை வருவது கிட்டத்தட்ட நம் அனைவருக்கும் ஏற்படுகிறது. இது கடந்த சில ஆண்டுகளாகவே நிகழ்ந்து வருகிறது. இதைப் பற்றி 2012லேயே நிரவாகத்திற்கு தெரியப் படுத்தி உள்ளேன்.
தாங்கள் லாகின் செய்து மீண்டும் கடவுச்சொல் கேட்கும் போது திரும்பவும் டைப் அடிக்க வேண்டாம். தங்களுடைய லாகின் ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும். மீண்டும் லாகின் விவரம் கேட்கும் விண்டோ வரும் போது மய்யம் திரியின் முகவரியை மேலே டைப் அடித்தால் தங்களுடைய லாகின் அப்படியே இருப்பதைப் பார்க்கலாம். முயன்று பாருங்கள்.
This login problem occurs between 3.30 and 4.30 pm IST daily. The first time you enter your login details it would have accepted but the login window appears again. At this stage you need not enter them again instead go to home page of mayyam, where you can find you are logged in.
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.