View Full Version : மனதை மயக்கும் மதுர கானங்கள்
Pages :
1
2
3
[
4]
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
gkrishna
23rd June 2014, 12:54 PM
கோபால் சார்
மோகனம் பற்றிய உங்கள் வர்ணனை ரசிக்க வைத்தது
மேலும் சில பாடல்கள் என்னை கவர்ந்தவை
1.மலர்கள் நனைத்தன பனியாலே (ரவியின் இளமையுடன் சேர்ந்து ரசிக்கும் போது கூடுதல் இன்பம் )
2.வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே (சலங்கை ஒலி)
(கமல் இன் குறும்பு மற்றும் கீதாவின் )
3.கண்மணியே காதல் என்பது கற்பனையோ (ரஜினியின் இளமை மற்றும் சங்கீதாவின் )
4.மீன்கொடி தேரில் (கரும்புவில் )
இளையராஜாவின் ஸ்டார்டிங் பீட் ஜேசுதாஸ் வாய்ஸ் chorus
(மைனஸ் மொக்கை சுதாகர் சுபாஷினி )
gkrishna
23rd June 2014, 01:01 PM
இந்த மோகன ராகத்தை பற்றி படித்த ஒரு குறிப்பு
tremendous relief to patients of high blood pressure.
Mohana is present where beauty and love coexist.
It filters out the ill-effects of kama (desire for sex) , krodha (anger) and moha (lust), bestowing immense benefits on the listener.
Also said to cures indigestion, and depression.
vasudevan31355
23rd June 2014, 01:06 PM
நடிப்பில் எப்போதும் தேர்ச்சிதான்.
https://i1.ytimg.com/vi/pMpXm2Hsa7k/mqdefault.jpg
உண்மைதான் கார்த்திக் சார்!
நன்றாக நடிக்கக் கூடிய பையன். தங்கதுரை, அநாதை ஆனந்தன், எங்க மாமா, அகத்தியர், ஓ..மஞ்சு, ஜானகி சபதம், பயணம், நல்லதொரு குடும்பம், கவரிமான் என்று நிறையப் படங்கள். சிறுவயதிலேயே காலமாகி விட்டார். இவரிடம் பிடித்தது இயல்பாக நடிப்பது. இவருக்கு முன்னால் மாஸ்டர் ஸ்ரீதர் இருந்தாரே! அவர் ரொம்ப ஓவர்.
gkrishna
23rd June 2014, 01:09 PM
வாசு சார்
மாஸ்டர் ஸ்ரீதரும் காலமாகி விட்டார் என்று கேள்விபட்டேன்
பேபி இந்திராவின் கணவர் தானே மாஸ்டர் ஸ்ரீதர்
vasudevan31355
23rd June 2014, 01:09 PM
இந்த மோகன ராகத்தை பற்றி படித்த ஒரு குறிப்பு
tremendous relief to patients of high blood pressure.
It filters out the ill-effects of kama (desire for sex) , krodha (anger) and moha (lust), bestowing immense benefits on the listener.
அப்போ கோபால் கண்டிப்பா மோகன ராகம் கேக்கணும்.:)(பார்ட்டி ஊர்ல இல்ல. இதான் சாக்கு. இதான் சரியான டைம். ஆள் வர்றதுக்குள்ள பக்கம் பறந்துடும்)
vasudevan31355
23rd June 2014, 01:19 PM
வாசு சார்
பேபி இந்திராவின் கணவர் தானே மாஸ்டர் ஸ்ரீதர்
Is it? karthik sir pl.
vasudevan31355
23rd June 2014, 01:21 PM
அதே போல் மாஸ்டர் பிரபாகரனின் தங்கை பேபி சுமதி என்று நினைவு. கரெக்ட்டா?
http://i.ytimg.com/vi/Gd62BWoGg5k/0.jpghttp://i.ytimg.com/vi/Qik4IhlDpzI/0.jpg
vasudevan31355
23rd June 2014, 01:26 PM
எப்படி இருந்த பிரபா
இப்படி ஆயிட்டாரே!
http://www.telugucinema.com/c/uploads/1/prabha3.JPG
mr_karthik
23rd June 2014, 01:43 PM
உண்மைதான் கார்த்திக் சார்!
நன்றாக நடிக்கக் கூடிய பையன். தங்கதுரை, அநாதை ஆனந்தன், எங்க மாமா, அகத்தியர், ஓ..மஞ்சு, ஜானகி சபதம், பயணம், நல்லதொரு குடும்பம், கவரிமான் என்று நிறையப் படங்கள். சிறுவயதிலேயே காலமாகி விட்டார். இவரிடம் பிடித்தது இயல்பாக நடிப்பது. இவருக்கு முன்னால் மாஸ்டர் ஸ்ரீதர் இருந்தாரே! அவர் ரொம்ப ஓவர்.
மணிப்பயல், அன்னை வேளாங்கண்ணி, வாணிராணி உள்பட ஏராளமான படங்களில் நடித்திருந்தார் சேகர்.
தவிர ராஜா, குடியிருந்த கோயில், இதய வீணை படங்களில் கதாநாயகர்களின் சின்ன வயது வடிவமாகவும். பிற்காலத்தில் டி.வி.சீரியல்களிலும் நடித்து வந்தார்.
புதிய வீடு கட்டிவந்த இவர் (வேளச்சேரியா வளசரவாக்கமா நினைவில்லை) காலை நேரத்தில் புதிய வீட்டு சன்ஷேடில் நின்றவாறு சுவர்களுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தபோது காலில் தண்ணீர் ஹோஸ் மாட்டிக்கொள்ள தவறி விழுந்தபோது காம்பவுண்ட் சுவரில் பின்மண்டை பலமாக அடிபட்டது. மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்.
நடிகர்திலகத்தைப் பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம் 'சிவாஜி அங்கிள்' என்றே குறிப்பிடுவார்.
gkrishna
23rd June 2014, 01:46 PM
கரெக்ட் வாசு சார்
பேபி சுமதி நடித்த அழகு னு படம்
இந்த படம் வந்ததானு தெரியலை சார்
சிலோன் ரேடியோவில் கேட்ட பாடல்
"தேவி வந்தாள் தரிசனம் " ஜானகி அண்ட் மலேசியனு நினவு
உங்களுக்கு நினவு உண்ட
இந்த பிரபாகர் எங்க இருக்கிறார்
chinnakkannan
23rd June 2014, 01:50 PM
நன்றாக மோகனமாக இருக்கிறதுஎல்லா அலசல்களும்.. சேகர் பற்றிய விவரங்கள் ப்ரபாகரனின் புகைப்படம் (ஹீம்..காலம் செய்யும் கோலமடி) சுமதி தான் தங்கையா என்ற கேள்வி(உண்மையாவா..) இன்ஃபர் மேடிவ்வாக இருக்கிறது..
மஞ்சள் முகமே வருக படம் போஸ்டர் கூடப் பார்த்த்தாக நினைவில்லை..எப்படி விட்டேன் :) அதே டைப் பெண்ணைச் சொல்லிக் குற்றமில்லை என்று ஒரு படம் சென் ட்ரலில் பார்த்த நினைவு..சிவகுமார் ஸ்ரீகாந்த் ஒய் விஜயா என..
//(மைனஸ் மொக்கை சுதாகர் சுபாஷினி )// நல்ல கமெண்ட் ஹி ஹி க்ருஷ்ணா சார்..
gkrishna
23rd June 2014, 01:57 PM
வாசு சார்
மாஸ்டர் பிரபாகர் இப்ப ஏதோ xerox போடோகாபி கடை ஒன்று வைத்து உள்ளதாக எபோதோ படித்த நினவு
பேபி இந்திராவின் தங்கை தான் ராசி (நடிகை )
சத்யா படத்தில் கமல் தங்கை ஆகா வருவர்
அறுவடை நாள் படத்தில் பிரபு ஜோடினு நினவு
chinnakkannan
23rd June 2014, 01:58 PM
மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்கும் சில பாடல்கள்..
கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்..லலிதா - சுமி கமல் என நினைவு.. மஞ்சள் கலைந்தால் திலகம் கலைந்தால் வாழ்வை இழந்தாரென்பார் பள்ளியறையில் இரண்டும் கலைந்தால் பாவை வாழ்ந்தாரென்பார்..பள்ளிக் கூடம் தானாக முடியும் பள்ளி முடியாதன்றோ..ம்ம் ம்ம்ம்.. வாணி? நல்லபாட்டு
கல்யாணக்கோவிலில் தெய்வீகக் கலசம் - கமல் ஜெய்சித்ரா(?) அழகுப் பாடடு..ம்ம்
chinnakkannan
23rd June 2014, 01:59 PM
அறுவடை நாள் பிரபு பல்லவியோன்னோ..(புதுமுகம் அறிமுகம்)
chinnakkannan
23rd June 2014, 02:00 PM
இன்னொன்னு ஸ்வீட்டான பாட்டு லிரிக்ஸ் தேடினேன் கிடைக்கலை.. வாசு சார் அலசலாம்..அம்மானை அழகு மிகும் கண்மானை ஆடி வரும் பெண்மானை தேடி வரும் பெருமானே..
gkrishna
23rd June 2014, 02:05 PM
பல்லவியும் உண்டு
பல்லவி தான் ஜோடி
இந்த ராசியும் உண்டு
பிரபு இந்த ராசி வயசுக்கு வந்த போது பூக்குள் வைத்து தாலியை கட்டி விட்டதாக பிரபுவின் அப்பா விஸ்வம் செய்யும் setup நினவு உண்டு
chinnakkannan
23rd June 2014, 02:13 PM
மீண்ட சொர்க்கம் ..என்.எஸ்.கே மறைவிற்குப் பிறகு டி.ஏ.மதுரம் தயாரித்தபடம் என நினைக்கிறேன்..படம் பார்த்து வெகு நாள் ஆனதால் கதை புகையாய்த் தான் நினைவில்..ஒரு பெண்ணை பரத நாட்டியம் ஆட வைத்து உச்சத்திற்குக் கொண்டு போகும் ஹீரோ எனப் போகும் கதை..பிற்காலத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்த தாள் கூட இதே கதை அமைப்பு என நினைக்கிறேன்..
ஆனால் பாடல்கள்.. மிக அழகு..அருமை
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நான் இல்லையே ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆஆ
மாலையிலும் அதிகாலையிலும் ஆஆஆஆஆஆஆஆஆஆ
மலர் மேலும் சிலை மேனியிலும் ஆடிடும் அழகே
ஆடிடும் அழகே அற்புத உலகில்
நீ இல்லையேல் நான் இல்லையே
கோவில் கண்டேன் அங்கு தெய்வமில்லை
ஓடி வந்தேன் இங்கே நீ இருந்தாய்
பாவமும் ராகமும் தாளமும் நீயே
சலபதி ராவ் இசை கண்ணதாசன் ஏம்ராஜா சுசீலாம்மா.. மிக இனிமையான பாட்டு..
ஆடும் அருள் ஜோதி (பத்மினியின் நாட்டியப் பாட்டு)
ஏ.எம் ராஜா பிசுசீலா இன்னொரு டூயட்..மறக்க முடியுமா..ஜெமினி.. கண்களால் கனவு நெய்யும் பப்பி..
துயிலாத பெண்ணொன்று கண்டேன் எங்கே? இங்கே - எந்நாளும்
துயிலாத பெண்ணொன்று கண்டேன்
அழகான பழம் போலும் கன்னம் - அதில்
தர வேண்டும் அடையாளச் சின்னம்
பொன் போன்ற உடல் மீது மோதும் - இந்த
கண் தந்த அடையாளம் போதும் - இந்த
கண் தந்த அடையாளம் போதும்
மாலைக்கு நோயாகிப் போனேன் - காலை
மலருக்குப் பகையாக ஆனேன்
உறவோடு விளையாட எண்ணும் - கண்கள்
உறங்காது உறங்காது கண்ணே
மணமேடை தனில் மாலை சூடும் - உங்கள்
மன மேடை தனிலாட வேண்டும் - நெஞ்சம்
பிறர் காண முடியாத மேடை - அதில்
நடமாடிப் பயனேதும் இல்லை - அதில்
நடமாடிப் பயனேதும் இல்லை
ம்ம் கண்ண தாசன்..
**
ஸோலோ சுசிலா தானே
மன நாட்டிய மேடையில் ஆடினேன்
கலை காட்டிய பாதையில் வாடுகிறேன்..
இந்த வாழ்க்கையின் முடிவெங்கே என்னும் சோகப் பாடல்..
*
படம் தோல்விப் படம் என்று கேள்வி..பார்த்தது அந்தக் கால மதுரை சாந்தி தியேட்டரில்..அதன் பின்னர் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை..நகைச்சுவையும் எதுவும் இல்லை என நினைவு..
*
chinnakkannan
23rd June 2014, 02:17 PM
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் உறவினிலாட..என்ன படமாக்கும் ..பாட்டு நன்னாயிட்டு இருக்கும் டிக் டிக் டிக்னு சத்தம்.. சிலோன் ரேடியாவில் கேட்ட நினைவு..
gkrishna
23rd June 2014, 02:47 PM
some of the songs that have made an emotional impact on us
ஓர் தாலாட்டு பாடலில் ஒரு திரைபடத்தின் கதையை கூறமுடியுமா
இந்த பாடல் ஒரு இரவின் மடியில்
அவர்கள் படத்தில் கவர்ந்த இரண்டாவது பாடல்
கதாநாயகி அனு தன குழந்தையை தூங்க வைக்கவும் அதே நேரத்தில் தன கதையை தன முன்னாள் காதலனிடம் தெரிவிக்கவும் டைரக்டர் KB இந்த பாடலை மிக அழகாக கையாண்டு இருப்பார்
இது ஒரு இசை தாலாட்டு
மன்னரின் அருமையான புல்லாங்குழல் இசை தான் பாட்டில் ஊடே மிக அதிகமாக வரும் .சில இடங்களில் வயலின் இசை சற்று மெல்லிசாக
வரும்
இப்படி ஓர் தாலாட்டு பாடவா
அதில் அப்படியே ஏன் கதையை கூறவா
அதில் அப்படியே ஏன் கதையை கூறவா
கைபிடித்த நாயகனும் காவியத்து நாயகனும்
எப்படியோ வேறுபட்டார் என மடியில் நீ விழுந்தாய்
தனக்கும் தன முன்னாள் கணவன் ராமநாதனுக்கும் இடையில் இருந்த இருக்கும் உறவின் நிலையை கதாநாயகி வாயிலாக வெளிபடுத்துகிறார் கவிஞர்
நீல வானம் கோவம் கொண்டு நிலவு தெரிந்தது
கண்ணா நேரம் பார்த்து மறுபடியும் ஏன் வளர்ந்தது
இடைனிலே இன்னிலவு எங்கிருந்தது
அது இருண்டிருந்த வீட்டினிலே தங்கிருந்தது
தன காதல் தோற்றதை
அன்றொரு நாள் மீராவும் கண்ணனை நினைத்தாள்
ஏனோ அவளுடைய தலைஎழுத்து மன்னனை மணந்தாள்
அது வரை தான் அவள் கதையை என்னிடம் சொன்னாள்
நான் அதில் இருக்கும் என் கதையை உன்னிடம் சொன்னேன்
தான் ஏன் முன்னாள் காதலனின் அன்பு பிடியில் மீண்டும் சிக்கினேன்
என்பதை பாடல் வரிகளாலே கவிஞர்
கண்ணனவன் கையினிலே குழல் இருந்தது
அந்த கானம் தானே மீராவை கவர்ந்து வந்தது
இன்று வரை அந்த குழல் பாடுகின்றது
அந்த இன்னிசையில் என் குழந்தை தூங்குகின்றது
பின்னாட்களில் இது போன்ற ஒரு பாடல்
பூமணி படத்தில் இளையராஜா இசையில் அவரே பாடும் ஒரு பாடல்
கிட்டத்தட்ட இந்த பாடலை நினைவுபடுத்தும்
(இசையில் அல்ல )
"என் பாட்டு பாட்டு நெஞ்சில் நிற்கும் பூங்காத்து
தாலாட்டு தாலாட்டு தாவிவரும் தேன் ஊத்து
உன் பொழுது போகணும் எனக்கோ பொழப்பை பார்க்கணும்
உன்னை பழுது பாக்கணும்
அடி மானே என் நெஞ்சை துவைக்கிற ராகம் இது "
gkrishna
23rd June 2014, 02:49 PM
chinna kannan sir
adhu "uravadum nenjam "
sivakumar chandrakala
devaraj mohan
ilaya raja
rajavin 3vadhu padam
chinnakkannan
23rd June 2014, 02:56 PM
ஓ தாங்க்ஸ் க்ருஷ்ணா சார்..
அவர்கள் சுஜாதா, கமல் விட ரஜினியே என்னைக் கவர்ந்தார்..க்ளைமாக்ஸ் ஏதோ பொயட்டிக் ஜஸ்டிஸ் கொடுப்பதாக நினைத்து கில்லி கண்ணாடியில் படுவது..என்னவோ என் மனதில் ஒட்டவில்லை..கொஞ்சம் செயற்கையாய்ப் பட்டது அன்றும் இன்றும்..
gkrishna
23rd June 2014, 03:07 PM
கரெக்ட் சின்ன கண்ணன் சார்
அவர்கள் படம் end சரி இல்லை தான்
படம் ஆரம்பமே பிளாஷ் back
kb யோட problem படத்தை எப்படி முடிப்பது என்பது தான்
அதை "அங்கும் இங்கும் பாதை கண்டு " பாடலிலே கவிஞர் மூலமாக
சொல்லுவர்
"கதை எழுதி விட்டாள் முடிக்க மட்டும் தெரியவில்லை "
gkrishna
23rd June 2014, 03:24 PM
காதலின் ஜாதியெல்லாம் கன்னழகிலே
கோவிலின் தேரழகோ முன்னழகிலே
கனியே மனம் .. மயங்க மயங்க
தருவாய் சுவை பெருக பெருக
இளமையின் கடிதமே
இனிமையின் உருவம் மலர மலர
வா பொன்மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை
கண்மணி
வா பொன்மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
பூந்தளிர் (வண்ணகுழந்தை)
சிவகுமார் சுஜாதா ஜோடி
தேவராஜ் மோகன் direction
இளையராஜா இசை
ஒரு அருமையான பாட்டு
ஓவர் lighting
படம் பப்படம்
chinnakkannan
23rd June 2014, 03:39 PM
அழகான பாட்டு க்ருஷ்ணா சார்.. அண்ட் ஷார்ட் அண்ட் க்யூட் விமர்சனம் :)
மயிலே மயிலே உன் தோகை எங்கே.. ஜென்சி கீச்சுக் குரல்..(?) பாட்டும் நினைவுக்கு வருகிறது
chinnakkannan
23rd June 2014, 03:40 PM
பாலச்சந்தரின் கல்யாண அகதிகள் படத்தில் ஒரு பாட்டு..
மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்.. (இவர் மனசுக்குள்ள உட்கார்ந்து மணியடிச்சா எவ்ளோ பெரிய மனசு அவருக்கு என ஜோக்கும் வரும்)
gkrishna
23rd June 2014, 03:55 PM
அழகான பாட்டு க்ருஷ்ணா சார்.. அண்ட் ஷார்ட் அண்ட் க்யூட் விமர்சனம் :)
மயிலே மயிலே உன் தோகை எங்கே.. ஜென்சி கீச்சுக் குரல்..(?) பாட்டும் நினைவுக்கு வருகிறது
ck சார்
மயிலே மயிலே உன் தொகை எங்கே
ஒயிலே ஒயிலே ஒன ஊஞ்சல் எங்கே
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ
மயிலே மயிலே
தென்றல் தாலாட்ட தென்னை இருக்க
அது தன்னை மறக்க
நீ அணைக்க நான் இருக்க
நாள் முழுக்க தேன் மணக்க
பனி வாய் மலரே பல நாள் நிலவே
வரவா தரவா பெறவா நான் தொடவா
மயிலே மயிலே
பாலா ஜென்சி குரல்
மிக அழகான பாடல் .
நயம் அக்மார்க் ஹம்சத்வனி என்ற ராகத்தின் அடிப்படையில் அமைந்த பாடல் .
கடவுள் அமைத்து வைத்த மேடை
சிவகுமார் உழக்கு சுமி ஜோடி 3 இன்ச் பாதரக்ஷகலு
இளையராஜா தபேல பின்னி எடுத்து இருப்பார்
இடையில் கிடார் violin என்று கலந்து கட்டி இருப்பார்
படம் ஊஊ sangu
chinnakkannan
23rd June 2014, 04:06 PM
//நயம் அக்மார்க் ஹம்சத்வனி என்ற ராகத்தின் அடிப்படையில் அமைந்த பாடல் . // அது என்னவாக்கும் நயம்..அக்மார்க்க்னு பேர் :)
சிவகுமார் உழக்கு சுமியோட இன்னொரு பாட்டு.. நினைவுக்கு வருதா..
தமன்னா நிலாவுக்கு இன்று ஒரே சுகம் இது முதல் இரவு முதல் கனவு..திரு நாள் தொடரும் தொடரும்..ம்ம்ம் ஊ ஊ ஊஊஉ...
(தமன்னா கலர் மஞ்சளோன்னோ ஹி ஹி :) )
gkrishna
23rd June 2014, 04:19 PM
//நயம் அக்மார்க் ஹம்சத்வனி என்ற ராகத்தின் அடிப்படையில் அமைந்த பாடல் . // அது என்னவாக்கும் நயம்..அக்மார்க்க்னு பேர் :)
சிவகுமார் உழக்கு சுமியோட இன்னொரு பாட்டு.. நினைவுக்கு வருதா..
தமன்னா நிலாவுக்கு இன்று ஒரே சுகம் இது முதல் இரவு முதல் கனவு..திரு நாள் தொடரும் தொடரும்..ம்ம்ம் ஊ ஊ ஊஊஉ...
(தமன்னா கலர் மஞ்சளோன்னோ ஹி ஹி :) )
ck சார்
அது நயம் அக்மார்க் ஹம்சத்வனி னா
வேறு எந்த ராகமோ அல்லது வெரி எந்த ஸ்வரங்களோ சேராமல் ஹம்ச்ட்வனியை ராகத்தை அப்படியே நகல் எடுத்த பாடல்
இந்த மாதரி ராகத்தை நேரிடையா use செய்த பாடல்கள் கம்மி
வெரி rare composition
தேடி எடுக்கிறேன்களே சார் முதல் இரவு பாடலை
கே சீ films (கோவை செழியன் தயாரிப்பு நம்ம உவஉ,குமரி கோட்டம்,உழைக்கும் கரங்கள் போன்ற படங்களை தயாரித்தவர் தான்
இந்த படத்தையும் தயாரித்தார்
அதே சிவகுமார் சுமி ஜோடி
bgm ட்ரைன் சவுண்ட் கொஞ்சம் different ஆக இருக்கும்
தமன்ன கோபுரம் மஞ்சளனா
நக்மா என்ன மஞ்சள் சார் (மஞ்ச பை யா)
chinnakkannan
23rd June 2014, 04:26 PM
//நக்மா என்ன மஞ்சள் சார் (மஞ்ச பை யா)// ம்ஹீம் இவங்க கிட்ட நான்கலர் லாம் பார்த்ததில்லை ...
பிஜிஎம் ட்ரைன் சத்தம் தான்..ஆனா பாட்டுல ட்ரைனோட சுவடே தெரியாதுன்னு நினைவு..
ஓ..அப்படியா...
இந்தப் படத்த ப் பத்தி இருவரிக் கமெண்ட் இல்லியே...
ஆமா ஆங்கிலம் கலந்த அந்தக்காலப் பாட்டுன்னு பார்த்தா எனக்கு ஊஞ்சல் தான் நினைவுக்கு வருது..அப்புறம் ப்ளாக் அண்ட் ஒயிட் ப்ரெட்டி ஸ்ரீதேவி..வணக்கத்துக்குரிய காதலியே
ஸ்விங்க் ஸ்விங்க் உனது ஊஞ்சல் நான்
ஸ்விங்க் ஸ்விங்க் உனது பாடல் நான்..
ஸ்வீட் ஸ்வீட் ஸ்வீட் உனது அழகுதான்..
அப்புறம் ..பாட்டுல ஜோடி நன்னா இருக்கும்..
Gopal.s
23rd June 2014, 04:34 PM
மன்மத லீலை (4)
படத்தில் சுனந்தினி நன்றாகப் பாடக்கூடிய பாடகி. ஆனால் பாராட்டுவோர், சீராட்டுவோர் இல்லாமல் தவிப்பவள். அதனால் யாராவது ஒருத்தர் தன் பாடலைக்கேட்டு கைதட்டினால்கூட அதை பெரிதாக மதிப்பவள். இயல்புதானே. மன திருப்திக்காக பதிவுகள் இட்டாலும் அதை நாலுபேர் பாராட்டும்போது மனம் மகிழ்கிறது அல்லவா. ('ரசிகன் இல்லாத அழகும் கலையும் பெருமை கொள்ளாதம்மா' - நன்றி வாலி, டி.எம்.எஸ்.).
என்ன இது நன்றி?m.s.v ஐ விட்டு விட்டு?
gkrishna
23rd June 2014, 04:42 PM
முதல் இரவு
இதுவும் பெரிய சங்கு தான்
அடுத்த சங்கு
வணக்கத்துக்குரிய காதலியே
ராஜேந்திர குமார் னு ஒரு கதாசரியர் 70-80 கால கட்டங்களில் தொப்பி போட்டு கொண்டு கதை எழுதுவார் . அவர் கதை எழுதி தினமணி கதிர்ல் (நினவு ) வெளிவந்த வணக்கத்துக்குரிய காதலியே
விஜயகுமார் ரஜினி ஸ்ரீதேவி 2 நடித்து மன்னரின் இசையில் வந்த படம்
1978 ரிலீஸ் black அண்ட் வைட்
நம்ம A சி திருலோக் டைரக்ட் செய்த படம்
பாட்டு நல்ல இருக்கும்
நீங்கள் சொன்ன பாடல் ரஜினி ஸ்ரீதேவி டூயட்
வாணி குரல் ஒரு குழந்தைதந்துடன் இருக்கும்
மி டார்லிங் இந்த மயக்கம் குட் மோர்னிங் சொல்லும் வரைக்கும்
நாம் காணும் இந்த நெருக்கம் நாள் தோறும் இருக்கும்
theatre இல் இந்த வரிக்கு விசில் பறக்கும்
இது போக ஜாலி சசி காம்போவில்
"அடி ஏனை பாரம்மா பிடிவாதம் ஏனம்மா
வணக்கத்துக்குரிய காதலியே "
விஜய்குமார் இரட்டை இலை வைத்து கொண்டு பாடி வருவார்
(சின்னத்தை மக்கள் கிட்ட சேர்க்கிறார்மா இல்லன இரட்டை இலை யாருக்கும் தெரியாது )
Gopal.s
23rd June 2014, 04:42 PM
அப்போ கோபால் கண்டிப்பா மோகன ராகம் கேக்கணும்.:)(பார்ட்டி ஊர்ல இல்ல. இதான் சாக்கு. இதான் சரியான டைம். ஆள் வர்றதுக்குள்ள பக்கம் பறந்துடும்)
காமமும்,கோபமும், குரோதமும் இல்லாத வாழ்க்கை வாழ்ந்தென்ன பயன்? நான் இந்த விதத்தில் ராஜரிஷி விச்வாமித்ரந்தான்.அப்புறம் எதை வைச்சு சினிமா எடுத்து பாட்டுக்கு திரி ஆரம்பிப்பயாம்?
மவனே,நான் இல்லைன்னு எதையாவது எழுதினே.....
chinnakkannan
23rd June 2014, 04:51 PM
//அவர் கதை எழுதி தினமணி கதிர்ல் (நினவு ) வெளிவந்த வணக்கத்துக்குரிய காதலியே // அப்ஜெக்*ஷன் யுவர் ஹானர்.. இது மாலைமதியில் வந்த கதை.. மாலை மதி மாத நாவலாக வந்த போது இது, புவனா ஒரு கேள்விக்குறி(மகரிஷி),இன்னொரு ரா.கி.ர கதை என நினைவு மூன்றும் சினிமாவாக எடுக்கப் பட்டன..
வ.கா.. படத்தில் ரஜினி விஜியையும் ஸ்ரீயையும் சேர்த்து வைத்திருப்பார்..கதைப்படி அப்படி இருக்காது..கொஞ்சம் இயற்கையான விஷயங்களாக கதையோட ஹீரோயின் ப்ரடிக்ட் பண்ணுவாங்க..ஜெ.சியப் பத்தி சொல்லவேயில்லையே..
அப்புறம் புவனா ஒரு கேள்விக்குறி..அது எனன் சிவகுமார் பாட்டு..மறந்து போச்சு..ராஜா என்பார் மட்டும் நினைவில்..
gkrishna
23rd June 2014, 04:54 PM
கோபால் சார்
வாஸ்தவமான பேச்சு
காம குரோத லோப மோஹா மத மாச்சரியம் இல்லை என்றால் அவன் மனிதனே இல்லை
gkrishna
23rd June 2014, 05:05 PM
ck சார்
உங்கள் நினவு திறன் வியக்க வைக்கிறது
மாலைமதி குமுதம் பத்திரிகையின் மாத நாவல் வெளியுடு
ராணிக்கு ராணி முத்து போல (சரியா )
ர கி ரங்கராஜனின் "கை இல்லாத பொம்மை " பிரபு ராதா நடித்து வெளி வந்தது நினைவில் உள்ளது .
புவனா ஒரு கேள்விக்குறியில்
ஜெயச்சந்திரன் வாணி "பூந்தென்றலே நல்ல நேரம் பார்த்து வா "
பாலாவின் "விழிஎலே மலர்ந்தது உயிரலே கலந்தது "
சுபெர்ப் songs
chinnakkannan
23rd June 2014, 05:08 PM
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது.. ரஜினி ஆறிலிருந்து அறுபது வரை இல்லையோ.. கன்ஃப்யூஷன்.
பூந்தென்றலே நல்ல நேரம் பார்த்து வா.. நன்ன நனன ஹம்மிங்க் வருமோ..
vasudevan31355
23rd June 2014, 05:25 PM
கிருஷ்ணா சார்!
கொஞ்ச நேரம் படுத்துட்டு வர்றதுக்குள கண்ணனும், நீங்களும் களேபரம் பண்ணிட்டீங்களே! நடுவுல இன்னொருத்தர் வார்னிங் வேற. பார்ட்டி பிளைட் ஏறிடுச்சான்னு பார்த்துட்டுதான் பதிவு போடணும் போல் இருக்கு.
gkrishna
23rd June 2014, 05:28 PM
பஞ்சு அருணாசலம் பாடல் என்று நினவு
பாட்டை நினவு படுத்தி விட்டீர்கள்
எச்செள்ளன்ட் BGM
சரணம் முடியும் போது புல்லாங்குழல் மறக்க முடியாது
s P முத்துராமனின் எமற்றுதனத்தை புரிந்து கொண்டு
அதற்கு பிறகு வில்லன் கேரக்டர் ஏற்றுகொள்ளாமல் தப்பித்தவர்
இல்லை என்றால் ஜெய் மாதிரி ஆகி இருப்பார்
விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே
அடடா எங்கெங்கும் உன் அழகே
உன் நினைவே போதுமடி
மனம் மயங்கும் மெய் மறக்கும்
புது உலகின் வழி தெரியும்
பொன் விளக்கே தீபமே
ஓவியஅனும வரைந்ததில்லையே உன்னை போல்
ஓரழகை கண்டதில்லையே
காவியத்தில் நாயகி
கற்பனையில் ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி
vasudevan31355
23rd June 2014, 05:28 PM
'அறுவடைநாள்' ராசி
http://i1.ytimg.com/vi/v4ZQFdssn-g/hqdefault.jpg
chinnakkannan
23rd June 2014, 05:34 PM
ராசி.. ரயில் பயணங்களில் சீரியலில் நன்கு நடித்திருப்பார்..ஏனாக்கும் அழறார்..:)
இன்னொரு அழகு முகம் பல்லவி.. நடிப்பு மட்டும் வரவே வராது..
gkrishna
23rd June 2014, 05:36 PM
டியர் வாசு சார்
ஒரு நல்ல அரட்டை வித் கச்சேரி சார்
பார்தீங்கள
இது தான் வாசு சார்
ராசி எப்படி இருப்பாங்கனு படம் வரைந்து ......
chinnakkannan
23rd June 2014, 05:37 PM
//s P முத்துராமனின் ஏமாற்றுதனத்தை புரிந்து கொண்டு
அதற்கு பிறகு வில்லன் கேரக்டர் ஏற்றுகொள்ளாமல் தப்பித்தவர்
இல்லை என்றால் ஜெய் மாதிரி ஆகி இருப்பார் // கதைப் பிரகாரம் பார்த்தீர்களானால் சிவகுமார் அந்தக் காரெக்டருக்குப் பொருத்தமாகத் தான் எனக்கு ப் படுகிறது..சம்பத் காரெக்டருக்கு அவரைப் போட்டிருந்தார்கள் எனில் நானும் நீங்களும் இதைப் பற்றி ப்பேசியே இருக்க மாட்டோம்..மகரிஷி.. மார்கழிப் பனியில் ஊடுருவும் தென்றலை ப் போல சிலீரென்ற எழுத்துக்குச் சொந்தக் காரர்..கதையாய் வந்த போது முழுமூச்சாய்ப் படித்த் நினைவு..படமும் (பலகாலங்கள் பிறகு பார்த்தது) நாட் பேட்..நாவலை மாற்றம் செய்யாமல் நாவலாய் எடுத்து வெற்றி (?) பெற்ற படம் இது..அந்தக் கடைசிக் கேள்விக்குறியோடு படம் முடிவது பலருக்குப் புரிந்திருக்காது என நினைக்கிறேன்
gkrishna
23rd June 2014, 05:38 PM
ck சார்
"மனதிற்குள் உட்கார்ந்து மணி அடித்தாய் "
இது நரசிம்ஹன் அவர்கள் இசையில் உருவான ஒரு பாடல்
இளையராஜா குழுவில் violinist ஆக இருந்தார்.
"இவருக்கு யாரவது சான்ஸ் கொடுத்தால் நான் மிகவும் சந்தோசபடுவேன் " என்று ராஜா ஓபன் டாக் இவரை பற்றி கொடுத்தார்
KB சான்ஸ் கொடுத்தார்
திடீர்னு காணமல் போய் விட்டார்
chinnakkannan
23rd June 2014, 05:42 PM
வி.எல் நரசிம்மன் தானே..ஏழாவது மனிதன்..வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு..
அதுவும் அழகான பாரதிபாட்டுக்கள் உள்ள படம்
காக்கைச் சிறகினிலே
அச்சமில்லை அச்சமில்லை
gkrishna
23rd June 2014, 05:42 PM
ஆனால் ck சார்
சிவா அது வரை அந்த மாதிரி நடித்தது இல்லை
நம்ம NT சர்வ சாதரணமாக ப்ளேபாய் கேரக்டர் செய்வார். அதே நேரத்தில் நல்ல பிள்ளை மாதிரி முகத்தை மாற்றிக்கொண்டு கேரக்டர் களும் செய்வார்
ஆரம்பத்தில் இருந்தே சிவா soft கேரக்டர் தான்
chinnakkannan
23rd June 2014, 05:43 PM
அச்சமில்லை அச்சமில்லைபடத்துக்கும் வி.எல் நரசிம்மன் என்ற நினைவு..சரிதானா
chinnakkannan
23rd June 2014, 05:44 PM
//சிவா அது வரை அந்த மாதிரி நடித்தது இல்லை // ஆமாம்.க்ருஷ்ணாசார்.. ஒரு படம் தான் நினைவுக்கு வருகிறது ராமன் பரசு ராமன்..டபுள் ரோல் கெட்ட பரசுராமனாக முகத்தை அஷ்ட கோணலாக்குவதை நினைத்தால்ல்...இப்போதும் சிரிப்பு வரும்..
gkrishna
23rd June 2014, 05:44 PM
ஏழாவது மனிதன்
l வைத்யநாதன் மியூசிக் டைரக்டர்
அச்சமில்லை அச்சமில்லை கரெக்ட்
gkrishna
23rd June 2014, 05:46 PM
சாரி ck சார்
ஒரு சின்ன வேலை முடிச்சுட்டு வந்துவிடுகிறேன் ப்ளீஸ்
chinnakkannan
23rd June 2014, 06:20 PM
sure krishna sir..
vasudevan31355
23rd June 2014, 06:32 PM
சின்னக் கண்ணன் சார்!,
ஹோம் வொர்க் கொடுத்துட்டீங்க. ஆனா சந்தோஷமான ஹோம் வொர்க். கடலை மிட்டாய் சாப்பிட கசக்குமா?
அதுவும் நடிப்பின் தெய்வம் நடித்த பாடல் வேறு. போதாக் குறைக்கு என் அழகு மஞ்சுளா மைனா வேறு.
தலைவர் என்னா ஒரு பியூட்டி! வெரி ஸ்மார்ட். வெறி பிடிக்க வைக்கும் ஸ்மார்ட். மஞ்சுளா கண்ணுக்கு நிறைவாக கவர்ச்சிக் கன்னி. பாவாடை தாவணி இந்தப் பச்சைக் கிளிக்கென்றே பிறந்ததோ.
நடிப்புச் சரித்திரம் காதல் சரசம் புரிந்த அவன் ஒரு சரித்திரம்.
http://i1.ytimg.com/vi/Dcjg3f6aEhA/maxresdefault.jpg
இணையத்திலும் சரி, வெளி இடங்களிலும் சரி, மிகச் சிறந்த நடிகர் திலகத்தின் முதல் 10 காதல் பாடல்களில் இப்பாடல் இடம் பிடித்துள்ளது.
இப்பாடலைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. படத்தைக் கேட்டால் மறந்திருப்பார்கள். ஆனால் பாடலின் முதல் வரியைக் கேட்டதும் பச்சக்'கென்று பிடித்துக் கொள்வார்கள்.
ரொம்ப நாகரீகமான பாடல். தமிழின் அருமை பெருமையை உணர்த்தும் பாடல். முழுவதும் தூய தமிழிலேயே! வாணி, பாடகர் திலகம் அருமையான காம்பினேஷன். மெல்லிசை மன்னர் தன் பட்டப் பெயரை மீண்டும் தக்க வைத்துக் கொள்வார்.
அதிலும் பெண்மணிகளுக்கு மிகவும் பிடித்த பாட்டு. வாசலில் கூட்டிக் கொண்டிருந்த எங்காத்து அம்மா இப்பாடலைக் கேட்டதும் அப்படியே ஓடி வந்து கேட்டுவிட்டுதான் போனார்கள்.
இந்தாங்க புல் மீல்ஸ்.
அம்மானை
அழகுமிகும் கண்மானை
ஆடிவரும் பெண்மானை
தேடிவரும் பெருமானை
தேடிவரும் பெருமானை
(அப்பாடி! எத்தனை 'னை')
(அழகான கண்களைக் கொண்ட பெண்மான் அவளுடைய பெருமானைத் தேடி வருகிறாளாம். நட்சத்திரம் நம்பியிருப்பது வானைத்தானே! மண்ணும் விண்ணும் மாறிவிடலாம். உன்னை நேசிக்கும் இந்தப் பெண்ணின் மனம் மாறிவிடக் கூடுமோ!)
நம்பிய பெண் ஒரு தாரகை
அவள் நாடிய நீ ஒரு வானகம்
நம்பிய பெண் ஒரு தாரகை
அவள் நாடிய நீ ஒரு வானகம்
விண்ணகம் மாறிய போதிலும்
இந்தப் பெண்ணகம் மாறுவதில்லையே
விண்ணகம் மாறிய போதிலும்
இந்தப் பெண்ணகம் மாறுவதில்லையே
அம்மானை
அழகுமிகும் கண்மானை
ஆடிவரும் பெண்மானை
தேடிவரும் பெருமானை
தேடிவரும் பெருமானை
காதலன் சிலாகிக்கிறான் .
(பாலில் சுவை மறைந்துள்ளது கண்ணே! அதே மாதிரி என் விழியில் நீ ம(நி)றைந்திருக்கிறாய். ஆழியில் மணி மறைந்திருக்கிறது. அதுபோல நீ என்மேல் கொண்ட ஆசையில் என் மனம் மறைந்திருக்கிறது. )
பாலினுள் மறைந்துள்ள சுவையென
விழி பளிங்கினுள் மறைந்தது உன் முகம்
பாலினுள் மறைந்துள்ள சுவையென
விழி பளிங்கினுள் மறைந்தது உன் முகம்
ஆழியில் மறைந்துள்ள மணியென
உன் ஆசையில்
மறைந்துளதென் மனம்
ஆழியில் மறைந்துள்ள மணியென
உன் ஆசையில்
மறைந்துளதென் மனம்
(இந்தக் கன்னிக்கு அச்சம், மேடம், நாணம், பயிர்ப்பு குணங்கள் உண்டு. நான் பா(ப)த்திரமாக உன் வசம் இருக்கிறேன். அதில் தேன் மழையாய் உன் முகம் மட்டுமே இருக்கிறது.)
கன்னியின் நால்வகை சாத்திரம்
தன் காதலன் கண்களில் மாத்திரம்
உன்னிடம் நான் ஒரு பாத்திரம்
அதில் ஊற்றிய தேன்மழை உன் முகம்
உன்னிடம் நான் ஒரு பாத்திரம்
அதில் ஊற்றிய தேன்மழை உன் முகம்
(தலைவர் பேண்ட்டை மடித்து விட்டு தண்ணீரை கால்களால் உதைத்தபடி நடக்கும் அழகும் தனிதான்)
அம்மானை
அழகுமிகும் கண்மானை
ஆடிவரும் பெண்மானை
தேடிவரும் பெருமானை
தேடிவரும் பெருமானை
பொன்னிற வண்டுகள் பாடின
அவை பூவெனும் மெத்தையில் கூடின
என்னிரு கண்களும் தேடின
அவை ஏக்கத்தில் உன்னிடம் ஓடின
மங்கலச் சங்குகள் அழைத்தன
இரு மந்திர முல்லைகள் இழுத்தன
உன்னுடன் உடல் உயிர் கலந்தன
(நடிகர் திலகத்துடன் எங்கள் உயிர் கலந்தது போல)
இங்கு ஒன்றுமில்லை இனி எனக்கென
(எல்லாம் நீயே! பிறகென்ன கவலை?!)
அம்மானை
அழகுமிகும் கண்மானை
ஆடிவரும் பெண்மானை
தேடிவரும் பெருமானை
தேடிவரும் பெருமானை
https://www.youtube.com/watch?v=ZEQk5NmR4ZE&feature=player_detailpage
mr_karthik
23rd June 2014, 06:35 PM
அழகான ஜெய்கணேஷ் அதைவிட அழகான சுமித்ரா. ஏரியில் குளிக்கச்செல்லும் சுமியைப் பார்த்து ரசித்தபடி ஜெய்கணேஷ் பாடும் பாட்டு "ஒரே முத்தம்" படத்தில். இளையராஜாவின் இசை.
ஜாக்கெட்டோடு குளிக்கும் அதிசயப்பெண். (அதான் குளிக்கும் காட்சிகளில் மார்பளவு சேலை அல்லது பாவாடை கட்டியபடி குளிக்கலாம் என்று எப்பவோ சென்சார் போர்டு அனுமதித்து விட்டதே அப்புறம் என்ன?. ஒருவேளை சுமி மறுத்தாரோ. சரி, டீப்பா இறங்க வேண்டாம்.
ராஜா பொண்ணு அடி வாடியம்மா
புது ஆனந்த நாட்டியம் ஆடடி - நதியினில் ஆடடி
குலுங்க குலுங்க ஆடடியோ
ஜெயச்சந்திரனின் இனிய குரலில் அழகான பாடல். ஏனோ இந்தப்பாடல் என மனதைக்கவர்ந்த அளவுக்கு இதே ஜெயச்சந்திரன் பாடி, இளையராஜாவின் இசையில் வந்த 'ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு' ,மனதைக்கவரவில்லை.
இந்தப்பாடல் படத்தில் இரண்டாவது முறையும் வரும். அப்போது நைட் எபெக்ட். இரண்டாவது முறை ஜெய்கணேஷ் இந்தப்பாடல் பாடும்போது விதவையாக இருக்கும் சுமித்ரா காதல் வேகத்தால் உந்தப்பட்டு வீட்டை விட்டு ஓடிப்போய் ஜெய்கணேஷிடம் பெண்மையை இழந்து விடுவார்...
chinnakkannan
23rd June 2014, 06:55 PM
//(இந்தக் கன்னிக்கு அச்சம், மேடம், நாணம், பயிர்ப்பு குணங்கள் உண்டு. நான் பா(ப)த்திரமாக உன் வசம் இருக்கிறேன். அதில் தேன் மழையாய் உன் முகம் மட்டுமே இருக்கிறது.)//// கலக்கல் வாசு சார்... நிஜம்மாவே ரொம்ப தாங்க்ஸ்.. எனக்கு மிகப் பிடித்த பாடல் அண்ட் பிக்சரைசேஷன் உள்ள படம்.. வயசான வணக்கம் பலமுறை சொன்னேன் காஞ்சனா முன்னால மஞ்ச்சு ஒரு ரிலீஃப் ந.திக்கும் நமக்கும் :)
chinnakkannan
23rd June 2014, 06:58 PM
பாட்டுக் கேட்டதில்லை கார்த்திக் சார்..ம்ம் கேட்டுப் பார்க்கறேன் :)
gkrishna
23rd June 2014, 07:05 PM
ராஜா பொண்ணு அடி வாடியம்மா
புது ஆனந்த நாட்டியம் ஆடடி - நதியினில் ஆடடி
குலுங்க குலுங்க ஆடடியோ
ஜெயச்சந்திரனின் இனிய குரலில் அழகான பாடல்
கார்த்திக் சார்
இந்த பாடல் 80கலில் சிலோன் ரேடியோ ஹிட் சார்
இந்த படத்தில் இன்னொரு பாடல் வரும் சார்
பாலாவின் கவ்வாலி டைப்
ஸ்டார்டிங் beautiful ஹர்மொனிஉம் அக்கார்டியன் தபேல
"பாவையர்கள் மான் போலே காவிரியின் மீன் போலே "
வாழும் வகை வாழ்ந்தாலே "
அதிலும் "povai சூடுங்கள் " என்று ஒரு வரி வரும்
பாலாவின் ஆலாபனை
இரண்டாவது சரணத்தில் தீபம் படத்தில் NT நடந்து வரும் போது உள்ள
சாக்ஸ் இசை மற்றும் என்னடி மீனாட்சி கிடார் இசை கலந்து வரும்
பின்னர் ஜானகி வந்து சேர்ந்து கொள்வார்
gkrishna
23rd June 2014, 07:12 PM
அம்மானை
அழகுமிகும் கண்மானை
ஆடிவரும் பெண்மானை
தேடிவரும் பெருமானை
தேடிவரும் பெருமானை
வாசு சார்
நான் 20 போஸ்ட் எழுதினாலும் வராத ஒரு நடை உங்கள் ஒரு போஸ்ட் மனதை கொள்ளை கொண்டு விடுகிறது
இந்த பாடல் பாடகர் திலகம் ஒருவித பேஸ் வாய்ஸ் இல் பாடி இருப்பார்
வாணியின் மென்மையான அழகான தமிழ்
half சாரீ மஞ்சுளா பக்கத்தில் கார்த்திக்கின் ஓமர் ஷெரிப் ஸ்ரீகாந்த்
நெஞ்சை பிசையுதே சார்
mr_karthik
23rd June 2014, 07:13 PM
டியர் வாசு சார்,
அவன் ஒரு சரித்திரமாக வாழ்ந்த படத்தில் இடம்பெற்ற 'அம்மானை அழகு மிகும் கண்மானை' பாடலைப்பற்றிய விவரிப்பு அருமையோ அருமை. எனக்கு மிகவும் பிடித்த பாட்டு.
வரிகள், சொற்கள், மெட்டமைப்பு, பாடியவிதம், பாடகர்கள், நடித்தவர்கள், வெளிப்புறப் படப்பிடிப்பு, உடையலங்காரம் என எல்லா விதத்திலும் ஒரு முழுமை பெற்ற பாடல். ('உன் மனது ஒன்றுதான்' பாடல் இருந்திருந்தால் இந்த அளவு சிறப்பாக அமைந்திருக்குமா என்பது சந்தேகமே)
சின்னக்கண்ணன் கேட்டதுமே, உங்கள் அடுத்த அஸைன்மென்ட் இந்தப்பாடலாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். அதுபோலவே தந்து அசத்திட்டீங்க. நமக்குள் இருக்கும் வைப்ரேஷனே காரணம்.
ஒரு முழுமையான காதல் டூயட்.
vasudevan31355
23rd June 2014, 08:15 PM
கார்த்திக் சார்,
'ராஜாப் பொண்ணு... அடி வாடியம்மா' வை ஞாபகப்படுத்தி ரிவர்ஸ் கியரில் என்னை பின்னோக்கி தள்ளி விட்டு விட்டீர்கள். ஆனந்தமாக விழுந்துவிட்டேன்.
நாங்கள் அப்போது செம்மங்குப்பம் என்ற ஊரில் (கடலூரில் இருந்து சிதம்பரம் போகும் வழி... சரியாக பன்னிரண்டு கிலோமீட்டர்கள் இருக்கும்) இருந்தோம்.
திடீரென்று ஊர் ஜனங்கள் கூட்டம் கூட்டமாக அருகில் இருந்த பூண்டியாங்குப்பம் என்ற ஊருக்கு ஓடினார்கள். என்னவென்று விசாரித்தால் 'சினிமா ஷூட்டிங் எடுக்குறாங்களாம்' என்றார்கள்.
பின் விடுவோமா! நாங்களும் அவதியோ புவதியோ என்று கிடைத்ததை மென்றுவிட்டு ஓட்டம் பிடித்தோம். நல்ல அழகான ஆற்றுப் பகுதி. பச்சைப் பசேலென்ற செழிப்பான வளம் மிக்க இடம்.
(இந்தப் பகுதியில்தான் நடிகர் திலகத்தின் 'பாதுகாப்பு' ஷூட்டிங்கும் 'தர்மம் எங்கே?' ஷூட்டிங்கும் நடந்தது)
ஆற்றோரமாக ஒரு சேரில் சுமித்ராவும், இன்னொரு சேரில் ஜெய்கணேஷும் அமர்ந்திருக்க நடன மாஸ்டர் (தெரியவில்லை) நடனம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
'ஆத்தங்கரையில் ஒரு ரோஜா
சின்ன ரோஜா'
என்று தொடங்கும் பாடலுக்கான நடன ஒத்திகை நடந்து, பின் படம் பிடித்தார்கள். சுமித்ராவும், ஜெய்கணேஷும் கவனமாக ஸ்டெப்ஸ்களை கவனித்துக் கொண்டிருந்தனர்.
துணை நடன நடிகைகளை சுற்றி ஒரே இளைஞர்கள் கூட்டம்.
எங்கள் கவனம் அங்கிருந்த சுருளிராஜன், ஆச்சி மனோரமா மீது திரும்பியது. மனோரமாவிடம் நைஸாக பேச்சு தந்தேன். அவரும் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்தார். பின் 'டிராக்டர் பொன்னம்மா' பற்றி கூற அவர் மிகவும் மகிழ்ந்து போய் 'இதையெல்லாம் ஞாபகம் வச்சுறிக்கியே' என்று இன்னும் சகஜமாக பேச ஆரம்பித்தார். ஆச்சி ஆற்றங்கரையில் நடந்துவர, நானும் என் நண்பன் வேல்முருகனும் அவருடன் நடிகர் திலகத்துடன் ஆச்சி நடித்த படங்களை ஒன்று விடாமல் பேசிக்கொண்டே வந்தோம். ஆச்சி நடிகர் திலகத்தைப் பற்றி மிகப் பெருமையாக பேசிக் கொண்டு வந்தார். நாங்கள் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் என்று சொன்னவுடன் ஆச்சியின் முகத்தில் அத்தனை உண்மையான சந்தோஷம்.
'ஆத்தங்கரையில் ஒரு ரோஜா'
என் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்து விட்டது. (அதிக ஹிட் இல்லாவிட்டாலும்)
அதுமட்டுமல்ல. ஷூட்டிங் முடிந்து ஒருசில நாட்களிலேயே நான் திரும்பவும் ஆச்சியை சந்திக்க நேரிட்டது. நான் ரோட்டில் நடந்து செல்கையில் ஒரு கார் தனியாக ஒதுங்கி நிற்க, பார்த்தால் அங்கே ஆச்சி நின்று கொண்டிருந்தார். அக்கம் பக்கம் யாரும் இல்லை. நான் அருகில் சென்று பார்த்தால் நம் ஆச்சி. ஆச்சர்யமான ஆச்சர்யம் எனக்கு.
நான் 'மேடம்' என்று கூப்பிட்டதும் ஆச்சி என்னை உடனே அடையாளம் கண்டு 'அட நீயா!'என்று நலம் விசாரித்தார். எனக்கு இன்னும் வியப்பாகி விட்டது.
பின் 'ஏன் இங்கு நிற்கிறீர்கள்?' என்று நான் வினவ,
'என் சொந்தக் காரர்களின் வீட்டுக்கு மாயவரம் வரை போய்விட்டு வருகிறேன். வழியில் தலைவலி வந்துவிட்டது அதுதான் டீ குடிக்கலாமே என்று வண்டியை நிறுத்தச் சொன்னேன். அனால் இங்கு டீக்கடையே இல்லையே தம்பி' என்றார்கள். நான் உடனே 'ஆச்சி! இங்கே டீக்கடைஎல்லாம் கிடையாது .ஊருக்குள் சென்றால்தான் டீ கிடைக்கும்' என்றேன். பின் ஆச்சி கார் டிரைவரை என் கூட அனுப்பி வைத்தார்கள். பின் டீ வாங்கி வந்து ஆச்சியிடம் தந்தோம். ரசித்து குடித்தார்கள். பின் நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.
எனவே 'ஒரே முத்தம்' படத்தை என்னால் மறக்க முடியாது.
உங்களுக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும் அருமையான நினைவலைகளை மீண்டும் எழுப்பி பேருவகை கொள்ளச் செய்ததற்கு.
vasudevan31355
23rd June 2014, 08:40 PM
கார்த்திக் சார்,
பாட்டை விஷுவலாக பார்க்க இயலாவிட்டாலும் கேட்டு மகிழலாம்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=S7g_IRaccpM
RAGHAVENDRA
23rd June 2014, 08:50 PM
வணக்கத்துக்குரிய காதலியே...
Extra Sensory Perception ... ESP ... வருவதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வைக்கும் ஒரு விசேஷ சக்தி... இந்த சக்தியின் மகிமையால் ஒரு மனிதனுக்கு ஏற்படக் கூடிய பல்வேறு பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்ட EYES என்கிற ஜான் கார்பெண்டரின் கதை,
EYES OF LARA MARS
http://interiorator.com/wp-content/uploads/2014/01/Eyes-of-Laura-Mars-02.jpg
என்கிற பெயரில் வெளியானது. இந்த கதை புத்தகமாக வெளிவந்த போதே உலகெங்கும் பரபரப்பாகப் பேசப் பட்டது. அதே நேரத்தில் இந்த அபூர்வ சக்தி நம் தமிழ்நாட்டிலும் பரவலாக அறியப் பட்டது. அப்போது இந்த சக்தி இருப்பதாக அறியப்பட்ட திரு நாராயணன் அவர்கள் தாய் வார இதழில் ஜோதிடம் எழுதத் துவங்கினார். இதன் மூலம் அவர் நம்புங்கள் நாராயணன் என பிரபலமானார்.
அப்படிப்பட்ட ஒரு சக்தியினை அடிப்படையாக வைத்து 'ஙே' ராஜேந்திர குமார் எழுதிய நாவல் தான் வணக்கத்துக்குரிய காதலியே திரைப்படம்
RAGHAVENDRA
23rd June 2014, 08:58 PM
வாசு சார்
மெல்லிசை மன்னரின் வெறித்தனமான ரசிகனாக என்னை ஆக்கிய பாடல்களில் ஒன்று ஓ மஞ்சு படத்தில் இடம் பெற்ற சபலம் சலனம் மயக்கம் குழப்பம் .... பாடல்... மிக வித்தியாசமான மெட்டில் தாளக் கட்டில் வாணியின் குரலில் உள்ள அத்தனை நுணுக்கங்களையும் ஒருங்கிணைத்து ஈடு இணையற்ற பாடலாக இதை உருவாக்கிவிட்டார் மெல்லிசை மன்னர். பல்லவி முடிந்தவுடன் ஒரு ட்ராம்போன் அதைத் தொடர்ந்து வயலின்கள் கிடார் என தொடரும் அதோடு சரணம் 1 துவங்கும். இந்த வயதில் என வாணி பாடும் போது கூடவே ட்ரம்ஸ் கலக்கல் ....
இதை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.. இன்று முழுதும் ... ஏன் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு ...
சபலம் சலனம் மயக்கம் குழப்பம்....
நான் பாட்டை சொன்னேன்..
நீங்களும் கேளுங்கள்...
http://www.raaga.com/player5/?id=204941&mode=100&rand=0.4116194546222687
பி.கு.
இந்த ஓ மஞ்சு திரைப்படத்தில் நடிக்க ஸ்ரீதர் முதலில் அணுகியது ..
இளையதிலகம் பிரபு அவர்களை...
RAGHAVENDRA
23rd June 2014, 11:36 PM
இறைவனை நாம் வேண்டுவோம்.. காலச் சக்கரம் பின் நோக்கி நம்மை அழைத்துச் செல்லக் கூடாதா ... அந்தக் கால இனிமையான பாடல்களைக் கேட்டு மகிழ மாட்டோமா என்று... இந்தக் காலத்தில் அதே போல பாடல் வந்து நம்மை அழைத்துச் சென்றால் ... அது ஏன் காலச் சக்கரமாக இருக்கக் கூடாது... மனதை மயக்கும் மதுர கானங்களுக்கு காலமேது நேரமேது .. தலைமுறை தான் ஏது...
http://www.kalakendra.com/shopping/images/rameshvinayagam.jpg
அந்தக் காலச்சக்கரத்தை நமக்குத் தந்தவர் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம் ...
ராமானுஜம் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள துளித்துளியாய் பாடல் முதல் முறை கேட்கும் போதே நமது நாடி நரம்பெல்லாம் புல்லரிக்கச் செய்யும் அளவிற்கு உள்ளே புகுந்து விடுகிறது.. கேளுங்கள்.. நிச்சயம் இதை உண்மை எனத் தாங்கள் உணர்வீர்கள்...
http://youtu.be/LcD96Mg1F0s
Gopal.s
24th June 2014, 04:14 AM
ரமேஷ் விநாயகம்.
என்னை கவர்ந்த இசையமைப்பாளர். நல்ல பாடகர்.ஏ.எம்.ராஜா மாதிரியே சமரசம் செய்ய விரும்பாமல் வாய்ப்புகளை இழந்து கொண்டிருப்பவர் .திறமைசாலிகள்,மேதைகள் எல்லோரிடமே இந்த eccentricity நிறைந்த சமரசமற்ற போக்கு இருக்கும் போலும். உலகம் அவர்களை புரிந்து கொள்ள முயல்வதில்லை. இவருடைய விழிகளின் அருகினில் வானம் 2000 இலிருந்து 2010 வரை வந்த பாடல்களிலேயே best composition என்பேன். என்ன இது என்ன இது என்னை கொல்வது மற்றொன்று.
இதே மாதிரி மற்றொரு திறமையாளர் கார்த்திக் ராஜா. (ஆனால் யுவன் மாதிரி சராசரிகளுக்கு தான் காலம்)
நானே நேற்று ராமானுஜர் கேட்டு திரியில் சிலாகிக்க நினைத்த போது ,அதை செய்த ரசிக வேந்தர் ராகவேந்தருக்கு நன்றிகள்.படு வித்யாசமான நல்ல இசை.
திரும்ப எழ ரமேஷ்,உங்களுக்கு என் வாழ்த்துகள்.
sivaa
24th June 2014, 07:43 AM
யூன் 8 ல் ஆரம்பிக்கப்பட்ட இத்திரி
இன்றுடன் 82 பக்கங்களை எட்டியுள்ளது
நாளொன்றுக்கு சராசரி 5+ பக்கங்கள்
வாழ்த்துக்கள்
இத்திரியில் பெரும்பாலும் எழுதுவது
சிவாஜி ரசிகர்கள்
அங்கே நடிகர்திலகத்தின் திரி
1 பக்கத்தை தாண்ட 2 நாட்களுக்குமேல் எடுக்கிறது
நல்லாயிருங்க நன்றி நன்றி நன்றி
வேற என்னத்த சொல்ல
vasudevan31355
24th June 2014, 08:26 AM
அன்பு நண்பர் சிவா சார்,
தங்களது நாகரீகமான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!
vasudevan31355
24th June 2014, 08:31 AM
டியர் ராகவேந்திரன் சார்,
இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம் அவர்களை நீங்களும், கோபால் சாரும் நினைவுகூர்ந்து அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளீர்கள். இந்த இசை அமைப்பாளரை அதிகம் பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இனி நிச்சயமாக நாங்கள் அவரது பாடல்களை ரசிக்க ஆரம்பிப்போம். நன்றி!
Richardsof
24th June 2014, 08:51 AM
மனதை மயக்கும் மதுர கானங்கள் - திரி சிறப்பாக செல்லும் இந்த நேரத்தில் இன்று பிறந்த நாள் காணும் கவியரசர் கண்ணதாசன் - மெல்லிசை மன்னர் இருவரையும் நினைவு கொள்வதில்
பெருமையாக உள்ளது . இவர்கள் உருவாக்கிய பாடல்கள் , காலத்தால் அழியாத கீதங்கள் .
என் உள்ளம் உந்த ஆராதனை ....
முத்துக்களோ கண்கள் .... தித்திப்பதோ ..கன்னம் .
பூ மாலையில் ஓர் மல்லிகை ....
இயற்கை என்னும் இளைய கன்னி ...
முத்தமோ .. மோகமோ ... தத்தி வந்த ....
விழியே கதை எழுது .....
சொல்லி கொண்டே போகலாம் . முடிவே இல்லாத காவிய மதுர கீத மன்னர்கள் .
vasudevan31355
24th June 2014, 10:02 AM
இன்றைய ஸ்பெஷல் (13)
'கவியரசர்' கண்ணதாசன் அவர்களின் பிறந்தநாள் சிறப்புப் பதிவு.
http://www.pkp.in/gallery/var/albums/Kannadasan%20vaarthai.jpg?m=1349121709
1974-ல் காசிராம் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த 'பாதபூஜை' திரைப்படத்திலிருந்து மிக மிக அற்புதமான, அவ்வளவாக கேட்கக் கிடைக்காத பாடல்.
http://cdnvod3.bigflix.com/images/vod/movies/200X280/Paadha-Poojai_(tam).jpg
சிவக்குமார், ஜெயசித்ரா, ஜெயா, வி.எஸ்.ராகவன், வி.கே.ராமசாமி, மனோரமா ஆகியோர் நடித்த இத்திரைப்படத்திற்கு கதை கலைஞானம். வசனம் பனசை மணியன். பாடல்கள் 'கவியரசர்' கண்ணதாசன்.
இசையமைப்பு ஜெயவிஜயா.
திரைக்கதை, இயக்கம் பீம்சிங் அவர்கள்.
உயிருக்குயிரான இரு சகோதரிகள் (அக்காவாக ஜெயா, தங்கையாக ஜெயசித்ரா. ஆனால் நிஜ சகோதரிகள் கிடையாது படத்தின் கதைப்படி) தங்களைப் படிக்க வைக்க தன் தந்தை (வி.எஸ்.ராகவன்) படும் கஷ்டங்களுக்காக வேலைக்குப் போக முடிவெடுக்கிறார்கள். (அக்கா வேலை பார்த்து முந்திக் கொள்வாள்) அக்கா தான் வேலைக்கு முதலிலேயே போய்விட்டதாகவும், தன் தங்கை தொடர்ந்து படிக்க வேண்டும் என்று அன்பு ஆணையிடுகிறாள். தன் தந்தையின் கடன்களை அடைக்கிறாள்.
அப்போது சகோதரிகள் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட மானசீகமான அன்பை வெளிப்படுத்திப் பாடும் மறக்க இயலாத பாடல். உண்மையாகவே நம் மனதை என்னவோ செய்யும் பாடல்.
பாடலின் முதல் பகுதியில் ஜெயாவும், ஜெயசித்ராவும் சேலையில் ஆடி பாடுவது அழகு. ஜெயா படுபாந்தம். ஜெயசித்ராவோ துறுதுறு.
இரண்டாவது பகுதியில் சற்றே கிளாமரான கவுன் அணிந்து இருவரும் கலக்கல்.
மூன்றாவது பகுதியில் தந்தை, தாயுடன் பாச இணைவு.
தங்கை அக்காளிடம் 'உன் மனக் கண்ணாடியைப் பார்த்தால் அதில் என் முகமே தெரிகிறது' என்ற அர்த்தம் தொனிக்க பாடுவதாக கவிஞர் வரிகளை அமைத்திருக்கிறார்.
'மழைத்துளி மண்ணில் விழும் வரை அதனுடைய இயல்பு நிறத்திலேயே இருக்கும்....மண்ணில் பட்டதும் மண்ணின் நிறத்திற்கே மாறிவிடும்.( செம்புலப் பெயல் நீர் போல) அப்படி நாம் இருவரும் அன்பால் இரண்டறக் கலந்து விட்டோம்' என்ற பொருள்பட இவர்கள் அன்பைச் சித்தரிக்கிறார் கவியரசர்.
மிக அருமையாகப் போடப்பட்ட டியூன். Fast beat என்பார்களே! அப்படி வேகமாகச் செல்லும் பாடல். (பாச உணர்வு பாடல்கள் எல்லாம் வழக்கமாக ஸ்லோவாகத்தானே இருக்கும். இது வித்தியாசம்)
இந்தப் படத்தின் மியூசிக் டைரக்டரும் தமிழுக்கு அதிகம் பரிச்சயமில்லாதவர். மலையாளத்தை சார்ந்தவர்.
இந்த இசையமைப்பாளரைப் பற்றித் தெரிந்து கொள்ள கீழே சொடுக்கவும்.
http://www.jayavijaya.com/biography.html
ஜெயாவுக்கு வாணி ஜெயராம் அவர்களும், ஜெயசித்ராவுக்கு சுசீலா அவர்களும் அவ்வளவு அழகாக பின்னணி தந்து இந்தப் பாடலை பாடி நம்மை மகிழ்விப்பார்கள்.
http://galleries.celebs.movies.3.pluz.in/albums/pugalarasi/uploads/Tollywood/2013/Dec/10/vani2/vani2-SIV_56870262_JPG-c8ab30ba876cb8977e3077f420980342.jpg
இனிப் பாடலின் வரிகள். (கேட்க கேட்கத் திகட்டாத பாடல்)
http://image1.frequency.com/uri/w234_h132_ctrim_ll/_/item/7/3/5/4/Kannadi_Amma_Un_Idhayam_73548083_thumbnail.jpg
கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே!
நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்
தெய்வீக பந்தம் நம் உறவு
எந்நாளும் தேயாத நிலவு
கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே!
நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்
தெய்வீக பந்தம் நம் உறவு
எந்நாளும் தேயாத நிலவு
சிவந்த நிலத்தின் நிறம்
வான் பொழிந்த மழைக்கும் வரும்
ஒ.. ஒ.. ஒ
இரண்டும் கலந்த நிலை
நாம் பிறந்து வளர்ந்த கலை
தங்கம் போல் ஒரு உள்ளம்
வைரம் போல் அது நீ என் கண்ணே
ஓஹோ... ஒ.. ஒ..ஒ...
கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே!
நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்
தெய்வீக பந்தம் நம் உறவு
எந்நாளும் தேயாத நிலவு
ம்ம்ஹூம் ம்ம்ஹூம் ம்ம்ஹூம்
இருந்து படைக்கும் விருந்து உனக்குத் தேன் அல்லவா
அறிந்து இனிக்கும் விருந்து எனக்கு நீயல்லவா
நெஞ்சம் கிண்ணமல்லவா
பாசம் அன்னமல்லவா
பாலும் தேனும் அல்லவா
எந்தன் கண்ணே ஓஹோ..
கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே!
நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்
தெய்வீக பந்தம் நம் உறவு
எந்நாளும் தேயாத நிலவு
நமக்கு இறைவன் கொடுத்த நலங்கள் தாயல்லவா
அனைத்து வளர்த்த தகப்பன் குணத்தில் சேயல்லவா
இல்லம் கோயில் அல்லவா
தெய்வம் காவலல்லவா
அன்பு தீபமல்லவா
எந்தன் கண்ணே ஓஹோ...ஒ
கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே!
நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்
தெய்வீக பந்தம் நம் உறவு
எந்நாளும் தேயாத நிலவு
ம்ம்ஹூம் ம்ம்ஹூம் ம்ம்ஹூம்.
http://www.youtube.com/watch?v=tWiSFzpnq18&feature=player_detailpage
gkrishna
24th June 2014, 10:08 AM
திரு வேந்தர் சார் /கோபால் சார்
ரமேஷ் விநாயக் அவர்களையும் ,கார்த்திக் ராஜா அவர்களையும் நினைவு கூர்ந்துள்ளீர்கள் . மிக்க நன்றி
ரமேஷ் விநாயக் அவர்களின்
நள தமயந்தி ,அழகிய தீயே,ஹே ரொம்ப அழகா இருக்கே ,ஜெர்ரி
போன்ற படங்களில் இவரது பங்கு நன்றாக இருக்கும்
வழக்கம் போல் கோபால் சார் நமக்கு பிடித்த அவருக்கும் பிடித்த
"என்ன இது என்ன இது "
ஒரு அழகான மெலடி பாடலை நினவு படுத்திவிட்டார்
ராமானுஜன் லேட்டஸ்ட் ஹிட் எல்லோரும் மிக ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டு இருக்கும் படம் பாரதி, மோகமுள்,பெரியார்,முகம்
போன்ற சில பரீட்சார்த்த படங்களை கொடுத்தவர் கொடுத்து கொண்டு இருப்பவர் (ghana sekaran )
karthik ராஜா உண்மையில் நல்ல திறமை சாலி அவருடைய மாணிக்கம்
காதலா காதலா டும் டும் டும் எல்லாம் பாடல்களை ரசித்து கேட்ட படங்கள்
நம் உடைய திரியில் இது நிச்சயம் சிலாகிகபடும் என்று நினைக்கிறன்
gkrishna
24th June 2014, 10:19 AM
வாசு சார்
கோலார் தங்க வயலில் வெட்டி எடுக்கப்பட்ட ஒரு நல்ல உறவு முறை
பாடல் ஒன்றை கண்ணதாசன் பிறந்த நாள் அன்று நினவு படுத்தி உள்ளீர்கள் .இந்த பாடலை பற்றி சொல்வது என்றால்
நமக்கு இறைவன் கொடுத்த நலங்கள் தாயல்லவா
அனைத்து வளர்த்த தகப்பன் குணத்தில் சேயல்லவா
இல்லம் கோயில் அல்லவா
தெய்வம் காவலல்லவா
அன்பு தீபமல்லவா
இதை விட வேறு எந்த வார்த்தைகளால் நம் உறவு முறையை
சிறப்பிக்க முடியும்
3 தினகளுக்கு முன் பம்மல் கண்ணதாசன் தமிழ் சங்கம் வாணி மஹால்
கலை அரங்கில் முனைவர் சரஸ்வதி ராமநாதன் அவர்கள் தலைமையில்
பாரதி ராஜா அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்று நடை பெற்றது . மேலும் காதலிக்க நேரமில்லை 50 வது ஆண்டு பொன்விழா
கொண்டாட்டமாக திரு c.v கோபு அவர்க ளும் பாராட்ட பட்டார்கள்
நானும் சென்று இருந்தேன் .
அங்கு சாஸ்த தாசன் என்பவர் ஒரு மெல்லிசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர்
மிக நல்ல அரிய கண்ணதாசனின் பாடல்களை எல்லாம் பாடினர்
எடுத்துகாட்டாக
"வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள் "
"கோயில் மணி ஓசை தன்னை "
"நாளாம் நாளாம் திருநாளாம் "
"அனுபவம் புதுமை "
"விஸ்வநாதன் வேலை வேண்டும் "
vasudevan31355
24th June 2014, 10:28 AM
கோலார் தங்க வயலில் வெட்டி எடுக்கப்பட்ட ஒரு நல்ல உறவு முறை
பாடல் ஒன்றை கண்ணதாசன் பிறந்த நாள் அன்று நினவு படுத்தி உள்ளீர்கள்
வணக்கம் கிருஷ்ணா சார். அருமையான வரிகள்.
abkhlabhi
24th June 2014, 10:33 AM
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
காவியத் தாயின் இளைய மகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன் - நான்
காவியத் தாயின் இளைய மகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
பாமர ஜாதியில் தனி மனிதன் - நான்
படைப்பதனால் என் பேர் இறைவன்
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழ்கின் சிரிப்பு
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர்
மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான்
மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர்
மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசைப் பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு
https://www.youtube.com/watch?v=Vgvetq_roms
abkhlabhi
24th June 2014, 10:35 AM
One of my favourite
http://www.youtube.com/watch?v=BAWmheI4YhU
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா?
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா?
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா?
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா?
அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா?
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா?
அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா?
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா?
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா?
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா?
மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ?
மனைவி என்று ஆகும் முன்னே நெருங்கிடலாமோ?
மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ?
மனைவி என்று ஆகும் முன்னே நெருங்கிடலாமோ?
உறவானது மனதில் மணமானது நினைவில் - இதை
மாற்றுவதார் மானே வையக மீதில்
உறவானது மனதில் மணமானது நினைவில் - இதை
மாற்றுவதார் மானே வையக மீதில்
அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா?
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா?
ஆ.. ஆ…
காதலுக்கே உலகம் என்று கனவில் கண்டேனே - நான்
கனவில் கண்ட காட்சி எல்லாம் கண்ணில் கண்டேனே
காதலுக்கே உலகம் என்று கனவில் கண்டேனே - நான்
கனவில் கண்ட காட்சி எல்லாம் கண்ணில் கண்டேனே - இது
காவியக் கனவு இல்லை காரியக் கனவு - புது
வாழ்வினிலே தோன்றும் மங்கலக் கனவு - இது
காவியக் கனவு இல்லை காரியக் கனவு - புது
வாழ்வினிலே தோன்றும் மங்கலக் கனவு
அன்பு மனம் துணிந்து விட்டால் அச்சம் தோணுமா?
ஆவலை வெளியிட வெகுநேரம் வேணுமா?
இருகுரல் கலந்து விட்டால் இன்ப கீதமே
இன்னமுத வீணையும் அறியாத நாதமே
vasudevan31355
24th June 2014, 10:36 AM
வாருங்கள் பாலா சார். கவிஞருக்கு நல்ல பிறந்தநாள் அஞ்சலி. தங்கள் அன்பு மனதிற்கும் மிக்க நன்றி!
abkhlabhi
24th June 2014, 10:38 AM
மனதை மயக்கும் பாடல்
film : திர்கசுமங்கலி
https://www.youtube.com/watch?v=Qoom1a3YzNo
chinnakkannan
24th June 2014, 10:40 AM
பிறப்பினில் வருவது யாதெனக் கேட்டேன்
..பிறந்து பாரென இறைவ்ன பணித்தான்
இறப்பினில் வருவது யாதெனக் கேட்டேன்
..இறந்து பாரென இறைவன் பணித்தான்
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
..மணந்து பாரென இறைவன் பணீத்தான்
அனுபவத்தால் தான் அமைவது வாழ்வெனில்
..ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்..
ஆண்டவன் எந்தன் அருகினில் வந்து
..அனுபவமேதான் நான் எனச் சொன்னான்..
மேற்கண்ட கவிதையை எழுதியது கவியரசர் கண்ணதாசன்..வாழ்க்கையில் பலவித அனுபவப் பட்டவர் ..எனினும்.. சாகாவரம் கொண்ட கவிஞர்..அவரது பாடல்கள் அவரது நினைவு தினத்தில் தான் நினைவு கூறப் படுகின்றது என்பதில்லை..எப்பொழுதும்.. என்றும்..
வாழ்க்கையின் நீரோட்டத்திற்குக் கவிஞர் எழுதிய பாடல்கள் ஏராளம்..சோகம், துன்பம்,இன்பம்,காதல் என எல்லாவிதங்களிலும் இந்தக்காலத் தமிழில் சொல்லப் போனால் பிரித்து மேய்ந்திருப்பார்..
சரி அவ்வப்ப்போது இன்று வரப் பார்க்கிறேன்..கவிஞரின் பாடல்களில் என்னைக்கவர்ந்த பலவில் சில சொல்கிறேன்..
இயற்கை என்றாலே கவிஞர்களுக்கு குஷி தான்..
கவிஞர்களோட மனம் எப்படிப் பட்டது..இந்தக் காலச்சிறுகவிஞன்(?!) (அடியேன் :) ) என்ன சொல்றான்..
உதிக்கும்வரை உழைக்கும்மனம் உழன்றேகனன் றிடும்பின்
துதித்தேயிறை செயலேவென தெளிவாய்மலர் திடும்பின்
பதித்தேயிழை இழையாய்க்கவி புனைந்தாலது அழகாய்
மதித்தேபலர் நினைவில்கொளும் மணத்தைப்பரப் பிடுமே..
யெஸ் பொய்யில்லை.. கவியரசர்க்கோ பாட்ல்கள் எல்லாம் படக்கென மலர்கள் மொட்டவிழ்த்துச் சிரிப்பது போல ப் பொங்கிப் பெருக்கெடுத்து வரும்..
அப்படிப் பிரவாகமாய் வந்த ஒரு பாடல் எனச் சொல்வதற்கு முன்:
குமுதத்தில் கவியரசருக்கு முதலடி கொடுத்து எழுத ச் சொல்லியிருந்தார்கள்..அப்படி வந்த கடைசி முதலடி..
கருவறை தொடங்கிக் கல்லறை வரைக்கும்.. இதற்கும் கவிஞர் ஒரு கவிதை எழுதியிருந்தார்..அது எனக்கு
நினைவிலில்லை..
அதே போல ஏன் இந்த வீண்வாழ்க்கை என எனைப்பார்த்து இளமொட்டு கேட்கின்றது என்று இன்னொருவரியும் கொடுத்து எழுதச் சொல்ல அதற்கும் எழுதியிருந்தார்..
ம்ம்..
இனி என்னுள் கலந்த பாடல்களில் ஒன்று..
**
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்
வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ?
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ?
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளைத் தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப் போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்?
மலையின் காட்சி இறைவன் ஆட்சி
இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடைக் காற்று வான் உலகைக் காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி
**
பின்ன பார்க்கலாம் :)
gkrishna
24th June 2014, 10:58 AM
1979 இல் கே.ஸ்.மாதங்கன் இயக்கத்தில் ஷங்கர் கணேஷ் இசைஅமைப்பில் சிவகுமார்,ஸ்ரீப்ரிய,சிவச்சந்திரன் நடித்து
வெளிவந்த ஒரு படம் "என்னடி மீனாட்சி "
இளமை ஊஞ்சலாடுகிறது "என்னடி மீனாட்சி" பாடலையே தலைப்பாக வைத்து வெளி வந்தது . தலைப்புக்கும் கதைக்கும் சம்பந்தமே கிடையாது
சிவச்சந்திரன் அப்போது எல்லாம் 79-80 கால கட்டத்தில் ஸ்ரீப்ரியா ஊடு காதல் என்று கிசுகிசுக்கபட்ட நேரம்
அவள் அப்படிதான், பொல்லாதவன் போன்ற படங்களில் எல்லாம் ஸ்ரீப்ரியா சிபாரிசுவினால் தான் சான்ஸ் கிடைத்தது என்று எல்லாம் அந்த நாளில் வல்லபனின் பிலிமலாயா சொன்னதாக நினைவு
சாவி விமர்சனம் இந்த பாடலை விமர்சித்து எழுதி இருந்தது நல்ல நினைவில் உள்ளது
இந்த பாட்டு ஸ்ரீப்ரியாவும் சிவச்சந்திரனும் பாத் டாப்பில் குளித்து கொண்டு இருக்கும்போது எடுதிருப்பர்கள்
பாலாவும் வாணியும் ரொம்பவும் இழைந்து பாடி இருப்பார்கள்
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
இன்னும் தீராத
இன்னும் தீராத ஆசைகள் என்ன
இங்கு நீராடும் வேளையில் சொல்ல
நீரிலே ஆடையாய் நானும் மாறவோ
நேரிழை மார்பிலே மேடை போடவோ
நீரிலே ஆடையாய் நானும் மாறவோ
நேரிழை மார்பிலே மேடை போடவோ
சின்னப்பிள்ளை செய்யும் தொல்லை
சின்னப்பிள்ளை செய்யும் தொல்லை
இன்னும் என்னவோ...நீயும் கண்ணனோ
வாணியின் மூச்சு மேற்கண்ட சரணத்தில் என்னவோ என்று பாடிவிட்டு
ஒரு முச்சு விட்டு பிறகு பாடுவார்
தாமரைப்பூவிதழ் அங்கம் அல்லவோ
தாவிடும் வண்டுபோல் மச்சம் என்னவோ
மஞ்சம் அமைத்து மன்னன் அணைத்து
மஞ்சம் அமைத்து மன்னன் அணைத்து
கன்றிவிட்டதோ கண்ணில் பட்டதோ
இந்த படத்தில் இன்னும் ஒரு நல்ல பாடல் உண்டு
மலேசிய ஜானகி குரல்களில்
"ஆடையில் என்னடி ஆடுது மீனாக்ஷி
ஆசையில் நான் வந்து தேடிய நாளாச்சு
நீரும் நீரும் சேர்ந்தால் ஒன்றாகும்
நீயும் நானும் சேர்ந்தால் என்னாகும் "
gkrishna
24th June 2014, 11:04 AM
கவிஞன் யானோர் கால கணிதம்
கருபடு பொருளை ஒருபட (உருப்பட) வைப்பன்
இவை சரியென்றால் இயம்புவது என் தொழில்
இவை தவறாயின் எதிர்பதென் வேலை
இகழ்ந்தால் என்னுடல் இறந்து விடாது
புகழ்ந்தால் என் மனம் புல்லரிக்காது
வளமார் கவிகள் வாக்குமுலங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு
மாற்றம் எனது மானிட தத்துவம்
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்
கண்ணனுக்கு தாசனை நினவு கூர்கிறேன்
vasudevan31355
24th June 2014, 11:10 AM
கிருஷ்ணா சார்,
ரொம்ப நாளாகவே நாம் எல்லோரும் ரசிக்கும் பாடல்
இன்னொன்றும் செம டாப்.
ஓ....மஞ்சள் வண்ண ரோஜா
தனி மஞ்சம் போடு ராஜா
நான் வஞ்சி என்ற எண்ணம் இல்லையோ
வாணி கொன்று விடுவார்.
அப்புறம்
பலே பல் பல் பல் பல்
வான்கோழி மயிலைப் போல் ஆடுது பாரம்மா
மலேஷியா கூட (அது யாரு ஷைலஜாவா இல்ல ஜென்சியா )
abkhlabhi
24th June 2014, 11:10 AM
One of my favourite ever
Handsome Ravi and Beauty Kanchana , Kaviyarasu Beautiful Lyrics, MSV wonderful music, PS as usual great, MLS humming and Great Sridhar's visual presentation makes this song one of my favoruite
https://www.youtube.com/watch?v=JUPY6LaUQCc
சென்ற மாதம் பிரதோஷம் தினத்தன்று yelahankaவில் உள்ள காயத்ரி , கணேஷா கோவிலிக்கு காஞ்சனா வந்திருந்தார் . அவரை ஒருவர் கையை பிடித்து கொண்டு அழைத்து வந்தார். ஒரு காலத்தில் ஆயிரம் ஆயிரமகா (அந்த காலத்தில்) சம்பாதித்தவர் , கோவிலில் பிரசாதம் வாங்கி கொண்டு சென்றார். பார்க்கவே பரிதாபமாக இருந்தது. கோவிலில் பிரசாதம் வாங்குவது தவறாக சொல்லவில்லை. தவறும் கிடையாது . ஒரு காலத்தில் பெரும் புகழுடன் வாழ்தவரை இந்த நிலையில் பார்க்கும் பொது நெஞ்சில் எதோ அடைத்து கொண்டது போல் இருந்தது.
mr_karthik
24th June 2014, 11:12 AM
டியர் வாசுதேவன் சார்,
கவியரசர் கண்ணதாசனின் பிறந்தநாள் சிறப்புப்பதிவாக தாங்கள் அளித்துள்ள பாத பூஜை படத்தில் இடம்பெற்ற மிக அருமையான பாடலான 'கண்ணாடி அம்மா உன் இதயம்' பாடலை சிறப்பாக அளித்ததற்கு மிக்க நன்றி. ஏ.(அணிதாவாத) பீம்சிங் அவர்களின் கடைசிப்படம். பாச உணர்வுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்த பாடல். சமீபகாலமாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புகின்றனர். இருகுரலிசை பாடல்களில் இதுவும். "இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே ராகம்" பாடலும் அடிக்கடி காணக்கிடைக்கின்றன.
ஜெயா - ஜெயசித்ரா - ஜெயவிஜயா என ஒரே ஜெயம்தான் போங்க.
gkrishna
24th June 2014, 11:13 AM
பாடகர் திலகம் குரலில் மெல்லிசை மன்னரின் இசை கோர்வையில்
கண்ணனுக்கு தாசனின்
"வாசுதேவனின் புகழ் பாடும்
கிருஷ்ணா (வின்) கானம் "
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
(புல்லாங்குழல்)
பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
(புல்லாங்குழல்)
பாடகர் திலகம் குரலில் வீணையின் ஒலியை கேட்கலாம்
மிக எளிமையாக அதே நேரத்தில் மிக நேர்த்தியாக இருக்கும் ஒரு பாடல் இந்தப் பாடல். பொருட்செறிவானது.
எழுதியவரும் பாடியவரும் இசை அமைத்தவரும் முழு அர்பணிப்பு என்று சொல்வார்களே அதை உணர்ந்து செய்திருக்கிறார்கள்.
chinnakkannan
24th June 2014, 11:15 AM
அப்கபி சார்..காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ பாடல் என்க்கும் பிடிக்கும்.. காஞ்சனா..ம்ம் காலம் செய்கின்ற கோலம்.. நீங்கள் சொன்ன இடம் பெங்களூரா..
gkrishna
24th June 2014, 11:16 AM
நான் கோடு போட்ட நீங்க ரோடு போடறீங்க வாசு சார்
abkhlabhi
24th June 2014, 11:18 AM
yes.
abkhlabhi is id. Name is A.Balakrishnan. settled in B'lore near yelahanka.
gkrishna
24th June 2014, 11:19 AM
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் (படம்) கொடுத்தான்
chinnakkannan
24th June 2014, 11:21 AM
என்னுள் கலந்த கானங்கள் - 2 (ஹை டைட்டில் வச்சாச்சு :) )
அந்தாதி பாணியில் வரும் பாடல்கள் என்றாலே சுவை கண்ணதாசனுக்குக் கேட்கவா வேண்டும் அவர் எழுதிய இந்தப் பாடலின் இலக்கணத்தை மட்டும் வைத்துக் கொண்டு நான் எழுதிப்பார்த்த பாடல்..
வேடமிட்டு உள்ளமதை மூடிநிற்கும் மாது
...வேண்டுமென்றா செய்திடுவாள் காதலனின் மீது
பாடமெனச் சொல்லியது தந்தையவர் குணமே
...பாவையிவள் மயங்குகிறாள் பாவமவள் மனமே
தாடகமாய் சிற்றலைகள் எழும்பாத குளந்தான்
...தடக்கென்றே சிறுகல்லால் சுழல்வதுவும் நிஜந்தான்
ஊடலென நினைத்தவனும் போய்விட்டான் இன்று..
...உணர்ந்துவிட்டு மறுபடியும் வந்திடுவான் சென்று..
**
ம்ம்கும்..அப்ப அவர் எழுதின பாட்டு என்னவாக்கும் என நினைப்பது புரிகிறது..இந்தப் படத்தில் மூன்று பாடல்களில் இரண்டு பாடல்கள் இந்த டைப் தான்..இளமை மின்னும் கமல்ஹாசன்..அப்போது மலர்ந்த மலராய் ஸ்ரீதேவி.. பாடல் தான் தெரிந்திருக்குமே..
இந்தப்பாடல் ஆரம்பிப்பது சிவச்சந்திரன் என நினைக்கிறேன்..அந்தக் கவிதை வரிகள் எனக்கு நினைவிலில்லை..தெரிந்தால் சொல்லுங்களேன்..
*
ஆண்:
ஆடி வெள்ளி தேடி உன்னை
நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன்
காவிரியின் ஓரம்
பெண்:
ஓரக் கண்ணில் ஊறவைத்த
தேன் கவிதைச் சாரம்
ஓசையின்றிப் பேசுவது
ஆசை என்னும் வேதம்
ஆண்:
வேதம் சொல்லி மேளமிட்டு
மேடை கண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று
வித்தைபல நாடும்
பெண்:
நாடும் உள்ளம் கூடும் எண்ணம்
பேசும் மொழி மெளனம்
ராகம் தன்னை மூடி வைத்த
வீணை அவள் சின்னம்
ஆண்:
சின்னம் மிக்க அன்னக்கிளி
வண்ணச் சிலைக் கோலம்
என்னை அவள் பின்னிக் கொள்ள
என்று வரும் காலம்!
பெண்:
காலம் இது காலம் என்று
காதல் தெய்வம் பாடும்
கங்கை நதி பொங்கும் - கடல்
சங்கமத்தில் கூடும்
சங்கமத்தில் கூடும்
**
பின்ன வாரேன் :)
chinnakkannan
24th June 2014, 11:56 AM
//கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே!
நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும் // இந்தப் பாடல் கேட்டதில்லை வாசு சார்..வீட்டில் சென்று கேட்கிறேன்..குறிப்பும் பாடல் வரிகளும் அழகு..
gkrishna
24th June 2014, 12:12 PM
அப்பாவும் பொண்ணும் போட்டி போட்டு பாடும் கண்ணன் பாட்டு
பெரியாழ்வார் நம்ம NT
ஆண்டாள் - குட்டி - பத்மினி
பெரிய - விஜயா
வரிகள் போட்டி போட்டுக் கொண்டு வந்து விழுகின்றன = கண்ணனின் தாசனான கண்ணதாசன் தூரிகையில்!
TMS ஒரு பாய்ச்சல் பாய்ஞ்சா, சுசீலாம்மா எட்டு பாய்ச்சல் பாயறாங்க!
சிறுமி கோதைக்கு குரல் கொடுப்பது: மாஸ்டர் டி.எல்.மகாராஜன்
(ஆண் குரல் தான்
ஒரு வேளை ஆண்டாளின் பிடிவாதம் மாமாவிற்கு நினிவிற்கு வந்து இருக்கும் )
பெரியவள் கோதைக்கோ குரல் கொடுப்பது: பி.சுசீலா
இந்தப் பாட்டைக் கேட்டு, சுசீலாம்மாவிடம், நீங்க தான் அந்தக் கடவுள்-ன்னு யாரோ சொல்ல, அவர்கள் புன்னகையுடன் மறுத்தார்களாம்! :)
அரி அரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா!
அரி அரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா!
பாரத தேவா பாண்டவர் நேசா
பதமலர் பணிந்தோமே - உன்
பதமலர் பணிந்தோமே!
(அரி அரி கோகுல ரமணா)
ஞான மலர்க் கண்ணா, ஆயர்க் குல விளக்கே
வானமும் கடலும் வார்த்து எடுத்த பொன் உருவே
கானத்தில் உயிர் இனத்தைக் கட்டுவிக்கும் கண்ணா!
happy birthday kanna dasa
chinnakkannan
24th June 2014, 12:36 PM
//ஞான மலர்க் கண்ணா, ஆயர்க் குல விளக்கே
வானமும் கடலும் வார்த்து எடுத்த பொன் உருவே// super krishnaji.. en pangukku aduththa post il :) periya vijaya konjam VIJAYA vaa gundaa iruppaanga :) NT kannil therigindra Saantham..mm
vasudevan31355
24th June 2014, 12:37 PM
சின்னக் கண்ணன் சார்,
தங்களின் (என்னுள் கலந்த கானங்கள் - 2) கவிதைகளில் தமிழ் கொஞ்சுகிறது.
ராகம் தன்னை மூடி வைத்த
வீணை அவள் சின்னம்
அச்சோ! மீன்,வில்,புலி போன்று வீணை அவள் சின்னமாம். கொன்னுபுட்டார் போங்கள்.
mr_karthik
24th June 2014, 12:39 PM
பாலா சார், சின்னக்கண்ணன் சார், மற்றும் கிருஷ்ணாஜி
பாடல் ஆய்வுகள் அனைத்தும் அருமை
அசத்துங்கள்
mr_karthik
24th June 2014, 12:42 PM
1972-ல் ஜாம்பவான்களின் வெற்றிப்படங்களுக்கு நடுவே சாமான்யர்களின் வெற்றிப்படங்களும் கம்பீரமாக உலா வந்தன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை புகுந்த வீடு, காசேதான் கடவுளடா, குறத்திமகன் (இது ஜாம்பவான்கள் லிஸ்டில் சேருமோ) ஆகியன.
இவற்றில் முழுநீள நகைச்சுவைப்படமாக அருமையான பாடல்களுடன் அமைந்த படம் காசேதான் கடவுளடா. அதுவரை ஸ்ரீதரின் உதவியாளாராக இருந்த சித்ராலயா கோபு இப்படத்தின் மூலம் இயக்குனரானார். முத்துராமன், லட்சுமி, மனோரமா, தேங்காய் சீனிவாசன், ஸ்ரீகாந்த், சசிகுமார், மூர்த்தி, வாசு என பெரிய நட்சத்திரப் பட்டாளம். தேங்காய் சீனிவாசனின் படங்களில் சிறப்பான இடத்தைப்பிடித்த படம். மெல்லிசை மன்னரின் இசையில் பாடல்கள் அனைத்தும் தித்திக்கும் தேவாமிர்தமாக காதுகளில் பாய்ந்தன.
'அவள் என்ன நினைத்தாள் அடிக்கடி சிரித்தாள்'
'மெல்லப்பேசுங்கள் பிறர் கேட்கக்கூடாது' (இது பற்றி தனிப்பதிவு வருகிறது)
இப்படத்தின் பெயர் சொன்னதுமே நினைவுக்கு வரும் பாடல் 'ஜம்புலிங்கமே ஜடாதரா'. இப்படி அனைத்துப்பாடல்களுமே அருமை.
அன்றிருந்த கவர்ச்சி நடன நடிகைகளில் எனக்கு மிகவும் பிடித்தவர் ஜெய்குமாரி. கள்ளங்கபடமில்லாத அழகிய முகம், கவர்ச்சியான உடலமைப்பு, நளினமான நடன அசைவுகள் என மனத்தைக் கொள்ளை கொண்டவர். அவரோடு தேசிய நடிகர் சசிகுமார் இணைந்து நடித்த பாடல். சசிக்கு பாடல் கிடையாது. ஜெய்குமாரி பாடுவதை ரசிப்பதோடு சரி.
பாடல் செட்டில் எடுக்கப்பட்டதல்ல, வெளிப்புறத்திலும் எடுக்கப்பட்டதல்ல. ஒரு பூங்காவில் எடுக்கப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட நீச்சல் உடை என்று சொல்லக்கூடிய ஷார்ட்ஸ் அணிந்திருப்பார் ஜெய்குமாரி. சசியின் உடையும் அதுபோலவே.
கவர்ச்சி நடிகைக்கான இப்பாடலை அதிசயமாக பி.சுசீலா பாடியிருந்தார். (இதற்கு மாறாக கதாநாயகிக்கான டூயட் பாடலை ஈஸ்வரி பாடியிருந்தார்).
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டுபோகுதம்மா
பட்டுமேனி பந்துபோல துள்ள - நீ
பக்கம் வந்து அள்ளவேண்டும் மெல்ல
பட்டுமேனி பந்துபோல து...ள்.....ள - நீ
பக்கம் வந்து அள்ளவேண்டும் மெ...ல்...ல...
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டுபோகுதம்மா
(மெல்லிசை மன்னரின் அருமையான இடையிசை... கிடார், ட்ரம்பெட், ப்ளூட் என்று அசத்தியிருப்பார்).
எங்கெங்கு தொட்டால் என்னென்ன இன்பம்
அங்கங்கு தொட வேண்டும் கை பதமாக
அங்கங்கள் முழுதும் தங்கங்கள் எழுதும்
ஆனந்தம் பெற வேண்டும் உன் பரிசாக
(படத்தில் முதலிரண்டு வரிகள் மாற்றப்பட்டிருக்கும், சென்சார் பிரச்சினையால்)
கையோடு பூவாட்டம் எடுத்து - உன்
மெய்யோடு மெய்யாக அனைத்து
அஞ்சாறு சின்னங்கள் கொடுத்து - அந்த
ஆரம்ப பாடத்தை நடத்து
ஆரம்ப பாடத்தை நடத்து
(சென்சாரில் 'ஆனந்த கீதத்தை எழுது' என்று மாற்றப்பட்டிருக்கும்)
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டுபோகுதம்மா
(மீண்டும் ட்ரம்ஸ் மற்றும் வயலினில் வேகமான இடையிசை துவங்கி பின்னர், ப்ளூட்டில் வேகம் குறைந்து ஒலிக்கும்).
தட்டாமல் திறக்கும் கேளாமல் கிடைக்கும்
எந்நாளும் உனதல்லவோ என் இளநெஞ்சம்
சொல்லாமல் துடிக்கும் துணைதேடி தவிக்கும்
பெண்பாவை மனமல்லவோ உன் மலர் மஞ்சம்
சொல்லாமல் கொள்ளாமல் பெறலாம் - இந்த
சொர்க்கத்தை நீ தேடி வரலாம்
முன்னூறு முத்தாரம் இடலாம் - அதில்
என் பங்கு சரிபாதி எனலாம்
என் பங்கு சரிபாதி எனலாம்
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டுபோகுதம்மா
பட்டுமேனி பந்துபோல துள்ள - நீ
பக்கம் வந்து அள்ளவேண்டும் மெல்ல
பட்டுமேனி பந்துபோல து...ள்.....ள - நீ
பக்கம் வந்து அள்ளவேண்டும் மெ...ல்...ல...
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டுபோகுதம்மா
மெல்லிசை மன்னரின் முத்திரை இசையுடன் பாடல் முடிவு பெறும்.
இசைக்குயில் சுசீலா மிகப்பிரமாதமாகப் பாடி அசத்திய பாடல் இது. அன்றைய ஹோட்டல் ஜுக்-பாக்ஸ்களில் ஏராளமான காசை இளைஞர்களிடமிருந்து பறித்துக் கொடுத்த பாடல். படத்திலோ ஜெய்குமாரி கவர்ச்சி வழிய வழிய ஆடி அசத்திய பாடல். என்னுடைய 'சுசீலா விருப்பம்' பட்டியலில் முதல் இருபதுக்குள் வரும் பாடல்.
நண்பர்களே.... வீடியோ ப்ளீஸ்......
vasudevan31355
24th June 2014, 12:44 PM
நடிகர் திலகத்திடம் என்னவொரு பவ்யம்!
தானே உலகாகி (சுலீலாம்மா இந்த வார்த்தையை எடுக்கும் அழகு) தனக்குள்ளே தான் அடங்கி
மானக் குலமாதர் மஞ்சள் முகம் காத்து
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=HfN12EqikDg
Richardsof
24th June 2014, 12:47 PM
Karthik Sir
namkkaga
http://youtu.be/1CAT8gIV9W8
http://youtu.be/bMBYmo6tw2o
'
chinnakkannan
24th June 2014, 12:49 PM
என்னுள் கலந்த கானங்கள்..3
மரபுப் பாடல்களில் கவிஞர் கண்ணதாசன் எப்போதுமே அசத்தல் தான்..
எளிமைச் சொல்லாட்சி ஏற்றமிகு பொருளாட்சி
..எண்ணம் விளைத்திட்ட கற்பனையின் கண்காட்சி
வலிமைத் தமிழாட்சி வண்ணமிகு வார்த்தைகளை
..வாகாய்த் தொடுத்திட்ட தோரணத்தின் எழிலாட்சி
களிக்கும் மன்மதுவும் கண்டுவந்து போற்றுவதும்
..கவிஞர் தாம்நமக்கு வழங்கியசொல் தேனாட்சி
பிழிந்தே சாறெடுத்து நம்மொழியில் சுவைகொடுத்து
...பேணிப் போற்றிவைத்த கண்ணதாசன் அரசாட்சி..
(சரியா வந்திருககா தெரிலை..ஜஸ்ட் எழுதிப் பார்த்தேன் :) )
ஸோ கவிஞரின் சொல்லாட்சி மிக்க இந்தப் பாடலில் படத்தில் தோற்றம் தரும் பத்மினியின் நடிப்பாட்சி..
**
நானாட்சி செய்து வரும் நான்மாடக் கூடலிலே
மீனாட்சிஎன்ற பெயர் எனக்கு- கங்கை
நீராட்சி செய்து வரும் வடகாசி தன்னில்
விசாலாட்சி என்ற பெயர் வழக்கு
கோனாட்சி பல்லவர்தம் குளிர்சோலைக் காஞ்சிதன்னில்
காமாட்சி என்ற பெயர் எனக்கு- கொடும்
கோலாட்சி தனை எதிர்க்கும் மாரியம்மன் என்ற பெயர்
கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு
ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும்
அது நீரோடும் பாதை தன்னைக் குறிக்கும் - நிற்கும்
ஊர் மாறிப்பேர் மாறி கரு மாறி உரு மாறி
ஒன்றே ஓம் சக்தி என உரைக்கும்..
**
ஆதிபராசக்தியில் பல அழகிய பாடல்கள்..நிறையச் சொல்லலாம்..
பின்ன வாரேன் :)
chinnakkannan
24th June 2014, 01:01 PM
//கையோடு பூவாட்டம் எடுத்து - உன்
மெய்யோடு மெய்யாக அணைத்து // சமீபத்தில் (போனவாரம்) இந்தப் படத்தைப் பார்த்தேன்..அப்போதே உஙக்ள் நினைவு வந்தது கார்த்திக் சார்..:)
தி.பெ. வீடியோவுக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ் வாசு சார்..ம்ம் எனக்கு விப்ர நாராயணரைத் தான் பிடிக்க்கும் :)
gkrishna
24th June 2014, 01:11 PM
கார்த்திக் சார்
கண்ணிய பாடகி சுசீலாவின் குரல் இனிமை
உங்கள் போஸ்ட்
என்னை எங்கெங்கோ கொண்டுபோகுதம்மா
vasudevan31355
24th June 2014, 01:16 PM
கார்த்திக் சார்,
'இன்று வந்த இந்த மயக்க'த்தை எழுதி இன்ப அதிர்ச்சி அளித்து விட்டீர்கள். என்னா ஒரு அலசல் அதுவும் இளமை கொப்பளிக்க கொப்பளிக்க! புகுந்து விளையாடி விட்டீர்கள். ஜெயகுமாரி என்னுடைய மனம் கவர்ந்த டான்சர். வழக்கம் போல உங்களுக்கு பிடித்த மாதிரியே. அப்புறம்தான் எல்லாம். (இனிமேல் ஆச்சரியமே படக்கூடாது போல!)
(ஜெயகுமாரி பற்றி அப்புறம் விவரமாக வருகிறேன்)
இனி தணிக்கைக் குழு இப்பாடலில் ஆட்சேபித்த வரிகளையும், பின் அவை மாற்றப்பட்டபின் வந்த வரிகளையும் இப்போது முழுதாகப் பார்க்கலாம்.
'எங்கெங்கு தொட்டால் என்னென்ன இன்பம்'
என்ற வரிகள்
'எங்கெங்கு வந்தால் என்னென்ன இன்பம்'
என்றும்
'அங்கங்கு தொட வேண்டும் கை பதமாக'
வரிகள்
'அங்கங்கு வர வேண்டும் என் நிழலாக'
என்றும்
'அங்கங்கள் முழுதும் தங்கங்கள் எழுதும்'
வரிகள்
'அங்கங்கள் முழுதும் சந்தங்கள் எழுதும்'
என்றும்
'கையோடு பூவாட்டம் எடுத்து - என்னை
நெஞ்சோடு நெஞ்சாக அணைத்து'
வரிகள்
'கையோடு பூவாட்டம் எடுத்து - என்னை
மெய்யோடு மெய்யாக அணைத்து' (அதாவது உடம்போடு உடம்பாகவாம்)
என்றும்
'அஞ்சாறு கிண்ணங்கள் கொடுத்து
அந்த ஆரம்பப் பாடத்தை நடத்து'
வரிகள்
'அஞ்சாறு கிண்ணங்கள் கொடுத்து
நெஞ்சில் ஆனந்த கீதத்தை எழுது'
என்றும் மாற்றப்பட்டது.
அடுத்த பகுதி
தட்டாமல் திறக்கும்
கேளாமல் கொடுக்கும்
எந்நாளும் உனதல்லவோ
என் இளநெஞ்சம்
துயிலாமல் இருக்கும்
துணை தேடித் தவிக்கும்
பெண்பாவை மனமல்லவோ
உன் மலர் மஞ்சம்
சொல்லாமல் கொள்ளாமல் பெறலாம் - இந்த
சொர்க்கத்தை நீ தேடி வரலாம்
முன்னூறு முத்தாரம் இடலாம் - அதில்
என் பங்கு சரிபாதி எனலாம் - அதில்
என் பங்கு சரிபாதி எனலாம்
என்று வரும்.
எனக்குத் தெரிந்தவற்றை இங்கு எழுதியுள்ளேன்.
இன்னும் மாற்றங்கள் நிகழ்ந்ததா என்று தெரியவில்லை. (இருந்தால் கிருஷ்ணாஜி விடவா போகிறார்)
chinnakkannan
24th June 2014, 01:38 PM
வாசு சார்..மாற்றாத வரிகளைத் தான் நான் கேட்டதாக நினைவு..ஆனால் விஸ்தாரமாக எழுதியிருப்பதைப் படிக்கும்போது..இங்கு வந்த இ ம என்னை எங்கெங்கோ கொண்டு செல்லுதய்யா :)
vasudevan31355
24th June 2014, 01:39 PM
எனக்கு விப்ர நாராயணரைத் தான் பிடிக்க்கும் :)
சின்னக் கண்ணன் சார்
http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/VTS_03_2VOB_001800354_zps887f87ea.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/VTS_03_2VOB_001800354_zps887f87ea.jpg.html)
எங்களுக்கெல்லாம் கள்வனைத்தான் பிடிக்கும். எங்களை களவாடிய "திருடன்" அல்லவா! (ஆப்பிளைத் தூக்கிப் போட்டு அதில் சிம்மமாய் சிரித்தபடியே கத்தி சொருகும் ஸ்டைல் அற்புதத்துக்காகவே தவம் கிடப்போம் சார்! தவம் கிடப்போம்)
vasudevan31355
24th June 2014, 01:42 PM
வாசு சார்..மாற்றாத வரிகளைத் தான் நான் கேட்டதாக நினைவு..ஆனால் விஸ்தாரமாக எழுதியிருப்பதைப் படிக்கும்போது..இங்கு வந்த இ ம என்னை எங்கெங்கோ கொண்டு செல்லுதய்யா :)
சார்! லீவெல்லாம் இருக்கா?:)
gkrishna
24th June 2014, 01:43 PM
ஆதிபராசக்தியில் பல அழகிய பாடல்கள்..நிறையச் சொல்லலாம்..
பின்ன வாரேன் :)[/QUOTE]
ck சார்
ஆதி பராசக்தி பாடல் அருமை
இந்த படத்தில் உள்ள எல்லா பாடல்களையும் அலச வேண்டும் சார்
especially
"அழகாக கண்ணுக்கு அழகாக கற்பக சோலை கன்னி வந்தாள்
கண்ணுக்கு அழகாக "
கருப்பழகி வாணிஸ்ரீ யின் இடை
கவிஞரின் நடை
oak தேவர் எ.கருணாநிதியின் எடை
மாமாவின் தடையில்லா இசை
vasudevan31355
24th June 2014, 01:44 PM
ஆதிபராசக்தியில் பல அழகிய பாடல்கள்..நிறையச் சொல்லலாம்..
[QUOTE]கருப்பழகி வாணிஸ்ரீ யின் இடை
எல்லாம் கார்த்திக் சார் பண்ணின வேலை :)
vasudevan31355
24th June 2014, 01:46 PM
'ஆதிபராசக்தி' எடுத்தால் பத்து பக்கமாவது ஆயிடும் சார். அற்புதங்கள் குவிந்து கிடக்கும் பாடல்கள். அவ்வளவு சுளுவா என்ன!
chinnakkannan
24th June 2014, 01:46 PM
வாசுசார்..கள்வனைப் பத்தித் தான் ஏற்கெனவே எழுதியிருக்கேனே.. உள்ளம் கவர் கள்வராச்சே.. விப்ர நாராயணர் படத்தில் காட்டிய ரொமான்ஸீக்காகச் சொன்னேன் :)
கண்டிப்பா கிருஷ்ணா சார்..பட்..லீவுல போறேன் நாளன்றைக்கு..எனில்..இன்றே செய்துடலாம்.. அழகாக..ரொம்பப் பிடித்த மெலடி+வாணி..
gkrishna
24th June 2014, 01:46 PM
வாசு சார்
கார்த்திக்கின் இளமை கொப்பளிக்க
உங்களின் வளமை (சொல்) கொட்டமடிக்க
எங்கெங்கோ கொண்டு போகுதம்மே
chinnakkannan
24th June 2014, 01:48 PM
//'ஆதிபராசக்தி' எடுத்தால் பத்து பக்கமாவது ஆயிடும் சார். அற்புதங்கள் குவிந்து கிடக்கும் பாடல்கள். அவ்வளவு சுளுவா என்ன!// உண்மை..தாய்ப்பால் கொடுத்தாள் பராசக்தின்னு ஆரம்பிச்சா...எங்கோ போய்டும்..ஆத்தாடி மாரியம்மா.. எளிமை பொங்கும் பக்திபாட்டென்றால் அபிராமி அந்தாதியைப் புகுத்திய சொல்லடி அபிராமி என்ன. ஆயிமகமாயி...ம்ம்
vasudevan31355
24th June 2014, 01:48 PM
oak தேவர் எ.கருணாநிதியின் எடை
கிருஷ்ணா சார்!
வயிற்று வலி மாத்திரை ப்ளீஸ். முடியல்ல சார்.
gkrishna
24th June 2014, 01:49 PM
உண்மை வாசு சார்
ஆதிபராசக்தி யை பற்றி எழுத அந்த சக்திதான் வரம் அருள வேண்டும்
இயக்குனர் திலகத்தின் உன்னத தெய்வீக சித்ரம்
vasudevan31355
24th June 2014, 01:51 PM
சின்னக் கண்ணன் சார்!
சுசீலா அரசாட்சி செய்யும் 'நானாட்சி செய்து வரும்' ஒன்று போதும் சார் ஜென்மம் சாபல்யம் அடைய.
chinnakkannan
24th June 2014, 01:51 PM
என்னுள் கலந்த கானங்கள் - 4
**
சில நாட்கள் முன்பு சுசீலாம்மா பாடல் புதிருக்காக எழுதிப் பார்த்த புதிர்
இது..
*
கண்ணதாசன் எழுதிய ஸ்வீட் பாட்டு இது.. சுசீலாம்மா இன்னொருத்தரோட பாடிய டூயட் தான்..புராண காலப்படந்தேன்..ஆனா ஹீரோயின் ஓ.கே ஹீரோக்குத் தான் அப்பப்ப தொண்டை அடைச்சுக்கும்..கறுப்பு வெள்ளை படத்தோட வீடியோவ விட ஆடியோ எப்பொழுதும் காதுக்கு இனிமை..அந்த ஸ்வீட்டான பொருள் பாட்டு முழுக்கவும் வரும் என்பது இன்னொரு க்ளூ!
*
விடை சுலபம் தான்..
ஏனென்று கேள்வி எழாமல் சொல்லிடுவர்
தேன்குழைத்த பாட்டிது தான்..
*
ஹீரோ ப்ளாக் அண்ட் ஒய்ட்.கால ஏவி.எம் ராஜன்.. ஹீரோயினி..ம்ம்(பாலா சார் மறுபடி கலங்கப் போறார்) அகெய்ன் காஞ்சனா
தீஞ்சுவை கொண்டிருக்கும் தேனைப்போல் தித்திக்கும்
காஞ்சனையைக் கண்டுவந்தார் கண்..
எத்தனை அழகு என்றால்
..என்னதான் நானும் சொல்ல
வித்தைகள் புரியும் கண்கள்
..விளக்கிடும் கள்ளப் பார்வை
நித்தமும் மலர்ந்த பூவாய்
..நெகிழ்ந்துதான் சிரிக்கும் தோற்றம்
சித்தமும் என்றும் உன்னைத்
..தேடியே திகைக்கும் பெண்ணே
அப்படின்னு அந்தக்காலத்திலேயே என் தாத்தா பாடியிருக்காராக்கும்..
(ம்ம் அழகிகளை எல்லாம் ப்ளாக் அண்ட் வொய்ட்ல தான் காட்டணும்னு ஏன் தான் நெனச்சாங்களோ) படம் வீர அபிமன்யு..
*
பி.பி,எஸ்ஸின் மென்மைக் குரல், சுசீலாம்மாவின் தேன் குரலில் ஒரு ஜீகல் பந்தியே படைத்திடும் பாடல் என்றால் மிகையல்ல..ஆனால் அதற்கான அழகிய வரிகள் தந்த கவிஞரை என்னென்று சொல்வது
*
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்
கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என
ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்
துளித் தேன் சிந்தாமல் களித்தேன் ஒரு
துளித் தேன் சிந்தாமல் களித்தேன் கைகளில்
அணைத்தேன் அழகினை ரசித்தேன்
மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென
வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன் இனி தேன்
இல்லாதபடி கதை முடித்தேன்
நிலவுக்கு நிலவு சுகம் பெற நினைத்தேன்
உலகத்தை நான் இன்று மறந்தேன்
உலகத்தை மறந்தேன் உறக்கத்தை மறந்தேன்
உன்னுடன் நான் ஒன்று கலந்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
**
அந்த இதுவெனன்னு ஏவி.எம் ராஜன் சொல்றப்ப எனக்கு எப்பப் பார்த்தாலும் கோபம் பொங்கும்..ம்ம் கொடுத்து வச்ச ராஜா :)
பின்ன வாரேன் :)
gkrishna
24th June 2014, 01:52 PM
வாசு சார்
சும்பன் oak
நிசும்பன் கருணாநிதி
நான் வம்பன்
vasudevan31355
24th June 2014, 01:53 PM
எங்கெங்கோ கொண்டு போகுதம்மே
எண்டே! மலையாள பகவதி!
vasudevan31355
24th June 2014, 01:54 PM
வாசு சார்
சும்பன் oak
நிசும்பன் கருணாநிதி
நான் வம்பன்
அப்போ 'விசும்பன்' நான்தானா?:)
vasudevan31355
24th June 2014, 01:55 PM
'கொம்பன்' இன்னும் வரலையே! ஒரு வாரம் லீவா?
vasudevan31355
24th June 2014, 01:56 PM
நல்லா இருங்க!:)
நல்லா இருங்க!:)
gkrishna
24th June 2014, 01:59 PM
வாசு சார்
splendid reply
vasudevan31355
24th June 2014, 01:59 PM
சின்னக் கண்ணன் சார்,
like ஆ கிளிக் பண்ணிகிட்டே இருக்கீங்க போல! notification 4 தாண்டிடுச்சே!:)
mr_karthik
24th June 2014, 02:07 PM
என்னுள் கலந்த கானங்கள்..3
மரபுப் பாடல்களில் கவிஞர் கண்ணதாசன் எப்போதுமே அசத்தல் தான்..
எளிமைச் சொல்லாட்சி ஏற்றமிகு பொருளாட்சி
..எண்ணம் விளைத்திட்ட கற்பனையின் கண்காட்சி
வலிமைத் தமிழாட்சி வண்ணமிகு வார்த்தைகளை
..வாகாய்த் தொடுத்திட்ட தோரணத்தின் எழிலாட்சி
களிக்கும் மன்மதுவும் கண்டுவந்து போற்றுவதும்
..கவிஞர் தாம்நமக்கு வழங்கியசொல் தேனாட்சி
பிழிந்தே சாறெடுத்து நம்மொழியில் சுவைகொடுத்து
...பேணிப் போற்றிவைத்த கண்ணதாசன் அரசாட்சி..
(சரியா வந்திருககா தெரிலை..ஜஸ்ட் எழுதிப் பார்த்தேன் :)
மிக அற்புதமாக வந்திருக்கிறது, புலவர் சின்னக்கண்ணனாரே.
இந்த திரியின் கண்ணதாசன் நீங்கள்தான்.
vasudevan31355
24th June 2014, 02:09 PM
சின்னக் கண்ணன் சார்,
உங்கள் 'பார்த்தேன் சிரித்தேன்'
பதிவைப் பார்க்க
பார்வையை விரித்தேன்.
பின் அதிலேயே நிலைத்தேன்
என்னையே தொலைத்தேன்
http://www.youtube.com/watch?v=Jbs1FpaXfM0&feature=player_detailpage
அத்தனையும் தங்களது கலைத்'தேன்'.
chinnakkannan
24th June 2014, 02:13 PM
கார்த்திக் சார்..மிக்க நன்றி.. இன்னும் வெகுதூரம் போகவேண்டும்..
மிக அற்புதமாக வந்திருக்கிறது, புலவர் சின்னக்கண்ணனாரே.
இந்த திரியின் கண்ணதாசன் நீங்கள்தான்.
chinnakkannan
24th June 2014, 02:14 PM
//பின் அதிலேயே நிலைத்தேன்
என்னையே தொலைத்தேன்// வாசு சார்.. மிக்க நன்றி..ம்ம் பாடல் வீட்டிற்கு ப்போய்த்தான் பார்க்கணும்...
gkrishna
24th June 2014, 02:15 PM
சுப்ரபாதம் னு ஒரு படம் சார் 1979 னு நினவு
இறை அருட் செல்வர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம்
மெல்லிசை மன்னரின் இசையில் கவிஞர் கண்ணதாசனின் பாடல்
ஜெய்கணேஷ் , முத்துராமன் , ஸ்ரீப்ரிய , K R விஜயா, லதா,நம்பியார் னு ஒரு பெருங்கூட்டம் நடித்திருக்கும் சார்
நம்பியார் பெருமாள் பக்தர் கோயில் கட்ட நினைப்பார்
ஆனால் வேண்டிய பணம் கிடைக்காது
மனம் வெறுத்து பாடுவார் இந்த பாடலை
சீர்காழி வாணி காம்போவில் (வெரி rare combination )
சீர்காழி பொதுவா பிள்ளையார் முருகர் பாடல்கள் நிறைய பாடி இருக்கார் . பெருமாள் பாட்டு கொஞ்சம் தான்
(கீதை சொன்ன கண்ணன் வண்ண தேரில் வருகிறான் !!
கேட்டவர்க்கு கேட்டபடி வாழ்வு தருகிறான் -மிலிடரி சாங் மாதிரி ஆக இருக்கும் )
இப்ப நம்ம சுப்ரபாதம் பாடல்
திருக்கோயில் கட்ட எண்ணி
பொறுப்போடு வந்த என்னை
வெறுப்போடு பார்த்தாயே பெருமாளே! - பலர்
சிரித்தாலும் விடமாட்டேன் திருமாலே!
திருப்பணி செய்வதற்கு உடந்தை - நீ திருக்கோயில் கொண்டிருக்கும் குடந்தை!
தினம்தோறும் சேவை செய்ய வரவா? - அந்த ஸ்ரீ வில்லி புத்தூரின் தலைவா!
தொண்டு செய்யும் அடியார் தமக்கு உன் சோதனை போதுமடா!
சோதனை தீர்த்து உன் பாத மலர்களில் எங்களைச் சேர்த்திடடா!
கொண்டது கொள்கை என்றது ஈன்றவர் கூறுதல் கேளுமடா!
கோயில் திறந்திட வில்லை எனில் வைகுண்டத்தில் சேர்த்திடடா! வைகுண்டத்தில் சேர்த்திடடா! வைகுண்டத்தில் சேர்த்திடடா!
gkrishna
24th June 2014, 02:23 PM
அந்த சுப்ரபாதம் படத்தில் இன்னொரு பாடல் சார்
கண்ணனை பற்றி எழுத சொன்னால் நம்ம கவிஞர் தான்
பின்னிருவாரெ
வாணி ஜேசுதாஸ் combination
படத்தில் ஜெய்கணேஷ் லதா ஜோடி
(ஒன்னு கவனிச்சங்கனா MT க்கு பிறகு லதா நடிச்ச நிறைய படங்களில்
ஜெய் கணேஷ் ஜோடி )
கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
பொன்மணி வண்ணன் சொன்னது கீதை
பூமகன் மார்பினில் தவழ்ந்தவள் ராதை
நல்லவர் செல்வது அவனது பாதை
நாடிய மனிதன் உலகத்தில் மேதை
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
(கண்ணனை நினைத்தால்)
ஆற்றினில் பெண்கள் சேலையை எடுத்தான்
அதையே திரெளபதி கேட்டதும் கொடுத்தான்
காற்றிலும் இசையிலும் கண்ணனின் குரலே
பாட்டினில் வருவது புல்லாங் குழலே
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கோபியர் நடுவே கண்ணனின் நாதம்
குருவாயூரில் குழந்தையின் கீதம்
குருவாயூரில் குழந்தையின் கீதம்
தேவர்கள் சபையில் ஸ்ரீகிருஷ்ண வேதம்
திருமலை தனிலே தவ சுப்ரபாதம்
தவ சுப்ரபாதம் தவ சுப்ரபாதம்
எல்லாம் சிலோன் ரேடியோ உபயம் சார்
chinnakkannan
24th June 2014, 02:31 PM
//திருக்கோயில் கட்ட எண்ணி
பொறுப்போடு வந்த என்னை
வெறுப்போடு பார்த்தாயே பெருமாளே! - பலர்
சிரித்தாலும் விடமாட்டேன் திருமாலே!// ஹையோ.க்ருஷ்ண க்ருஷ்ணா சார்.. எனக்குப் பிடித்த பாடல் இது..கேட்டு ரொம்ப நாளாச்சுது..ஆனாக்க....
கொழுக் மொழுக் லத்துவும் ஜெய்கணேஷூம் பாடும்
கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும் என்னும் இனிமையான பாட்டு எனக்கு ரொம்ப உசுர்
அப்புறம்
டேய் பார்த்த சாரதின்னு நம்பியார் கூப்பிட தொங்குமீசையுடன் கன கம்பீரமாய் பார்த்தசாரதிப் பெருமாளாய் வரும் முத்து ராமன்.. நன்றாக இருக்கும்..
(இதை டைப்படிக்கும் போது வேலை வந்து அப்படியே நிறுத்தி இப்போ இடுகிறேன்..நிறைய ரிப்ளை வந்திருக்கும்)
chinnakkannan
24th June 2014, 02:31 PM
சொன்னாப்பல நீங்க முந்திக்கிட்டீங்க கிருஷ்ணாசார்..
vasudevan31355
24th June 2014, 02:41 PM
கிருஷ்ணா சார்,
http://i1.ytimg.com/vi/s6mVYY9WOwY/movieposter.jpg?v=4e8b0377
மனதுக்கு இதமான பாடலை ஞாபகப்படுத்தி (கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்) மனசாந்தி கொள்ள வைத்ததற்கு நன்றி! என்ன ஒரு அருமையான பாடல்!
தங்கள் மூலம் இத்திரியில் வந்த அபூர்வ பாடல்கள்தான் எத்தனை! உண்மையாய் பெருமையாய் இருக்கிறது சார்.
ஆனால் போட்டீர்களே ஒரு போடு மிலிடரி சாங். ரெண்டு வேளைக்கா மாத்திரை அனுப்பி வைங்க சார். இன்னைக்கு நைட் தூங்கினாப் போலதான். எழுந்திரிச்சி எழுந்திரிச்சி சிரிக்கப் போறேனோன்னு பயமா இருக்கு.
gkrishna
24th June 2014, 03:19 PM
வாசு ck சார்
நானும் சிரித்து கொண்டு தான் இருக்கிறேன்
கொழுக் மொழுக் லத்து
என்ன வார்த்தை சார் அது
லதா னு சொல்லும்போது சுகம் இல்லை சார்
லத்து னு கூப்பிடும்போது தான் என்ன சுகம்
உரிமைக்குரல் படத்தில் நாகேஷ் சச்சுவிடம் சொல்வது போல்
(சரளா னு கூப்பிடும் போது அழுத்தம் இல்லை
சச்சு ன்னு கூப்பிடும் போது தான் அழுத்தம் )
"இதே அழுத்தம் அழுத்தம் வாழ்வின் எல்லை வரை வேண்டும் "
வாசு சார்
திரியை ஆரம்பித்த உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்லனு தெரியலை
abkhlabhi
24th June 2014, 04:24 PM
http://tamil.oneindia.in/movies/news/today-kannadasan-msv-s-birthday-204288.html
abkhlabhi
24th June 2014, 04:27 PM
http://tamil.oneindia.in/movies/specials/2013/06/kannadasan-remebered-on-his-birthday-177769.html
50% are NT Songs
gkrishna
24th June 2014, 05:21 PM
புட்டண்ணா கனகல் டைரக்ட் செய்த படம் .இவர் நிறைய கன்னட படம் டைரக்ட் செய்து உள்ளார்
பாரதி ராஜா இவர்ட்ட அச்சிச்டன்ட் டைரக்டர் ஆக வேலை செய்தார் என்பார்கள் .
ஈஸ்ட்மேன் கலர் படம்
(கார்த்திக் சார் பாஷையில் சொல்வது என்றால் 5000 சிவாஜி )
ஏவிஎம் ராஜன்,முத்துராமன்,வாணிஸ்ரீ (டபுள் ரோல்),நாகேஷ்,
ரங்கராவ்,நாகையா நடித்து வெளி வந்தது
ஒரு வாணிஸ்ரீ கொஞ்சம் மாடர்ன் டைப் .எல்லா ஆண்களையும் தன வலையில் விழ வைக்கிற டைப். முத்துராமன் இவரை நம்பி வீணா போய் தற்கொலை செய்து கொள்வார் .இதனால் ஏவிஎம் ராஜன் இந்த வாணிஸ்ரீ மீது வெறுப்பு கொள்வார். இதே நேரத்தில் அவருக்கு பெண் பார்க்க ஏற்பாடு செய்வார்கள். அந்த பெண் இன்னொரு வாணிஸ்ரீ
ரொம்பவும் அடக்கம் ஏவிஎம் ராஜனுக்கு குழப்பம்.
இறுதியில் வழக்கம் போல் மாடர்ன் டைப் வாணிஸ்ரீ செத்து போவர் என்று நினைக்கிறன் .
மாமா இசை musical ஹிட் வீணை எல்லா பாடல்களிலும் கொஞ்சி விளையாடும்
பாட்டு எல்லாம் ரொம்ப ச்வீட் ஆக இருக்கும்
1. ஹே ஹே mr ப்ரம்ஹச்சரி ஹே ஹே ஒரிஜினல் பிரமஹச்சரி
நான் கட்டிக்கொண்டு பாடினால் உன்னை ஒட்டிக்கொண்டு பாடினால்
நாளை முதல் சம்சாரி ஹோ i am வெரி சாரி
(எங்கள் தங்க ராஜா - சாமியிலும் சாமி இது ஊமை சாமி பாட்டை நினவு படுத்தும் )
2. வானிலே மண்ணிலே வளியிலே ஒளியிலே
எல்லாம் நீ தானம்மா செல்வம் நீ தனம்மா
உன் மார்பிலே என்னை சீரட்டம்மா
உன் மடியிலே என்னை தலாட்டம்மா .. அம்மா
(சுசீலா excellant ஹம்மிங் உடன் )
இந்த பாட்டின் முதல் வரியை கண்ணதாசன் மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் இருந்து சுட்டது என்று நா காமராசன் ஒரு அரங்கத்தில் கூறியது
நாவுக்கரசரின் தேவாரம்
"வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமும் ஆய் இன்மையும் ஆய்
கோனாகி யான் எனது என்று அவர் அவர்ஐ
கூதாட்டுவானக்கி நின்றே என் சொல்லி வாழ்த்துவனே "
3. திருமகள் தேடி வந்தாள் - சுசீலா ஒரு தடவையும்
மற்றும் பாலா ஒரு தடவையும் (அருமையான மெலடி )
இந்த பாடலின் இணை இசை ரொம்ப அருமையாக
பாடல் வரிகளை சாப்பிடாமல் அடங்கியே வரும்
இது பாலாவின் மெலடி வித் excellant ஹம்மிங்
திருமகள் தேடி வந்தாள் ஆ.ஆஆஆ
என்தன் இதயத்தில் குடி புகுந்தாள் ஆஆ ஆஆஆ
குலமகள் கோலத்திலே தேவி மருமகளாக வந்தாள் ஆஆஆஆஆஆஆ
திருமகள் தேடி வந்தாள் என்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே தேவி மருமகளாக வந்தாள் ஆஆஆஆஆஆஆ.
திருமகள் தேடி வந்தாள்
ஆஆ..... ஆஆஆ
மஞ்சள் தந்தவள் விசாலாட்சி நல்ல மலர்களைத் தந்தவள் மீனாட்சி
குங்குமம் தந்தவள் காமாட்சி எங்கள் குடும்பத்தில் தேவியுன் அரசாட்சி
திருமகள் தேடி வந்தாள் என்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே தேவி மருமகளாக வந்தாள் ஆஆஆஆஆஆஆ
திருமகள் தேடி வந்தாள்
ஆஹாஹா அ ஆஹாஹா ஆஹஹஹா ஹ ஹாஆஆஆ (ஹம்மிங் by ப.வசந்தா or சுசீலா )
இந்த சரணத்தில்
பாலாவின் "கனிவாய் " என்று நிறுத்தி பாடும் அழகு
திருமலை திருப்பதிப் பால் பழங்கள் - உயர்
தென் திருப்பழனியின் தேன் குடங்கள்
கனிவாய் மொழிதரும் வாசகங்கள் - என்
காதல் தெய்வத்தின் உயர் குணங்கள்
காதல் தெய்வத்தின் உயர் குணங்கள்
திருமகள் தேடி வந்தாள் என்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே தேவி மருமகளாக வந்தாள் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
திருமகள் தேடி வந்தாள்
சுசீலா மெலடி - புதுமனை புகு விழாவின் போது
(வாணிஸ்ரீயின் பாந்தமான நடிப்பு )
(சுற்றிவர குமரி ருக்மணி தெலுகு நிர்மலம்மா என்று கும்மி அடித்து
இருப்பார்கள் அதிலும் ஒரு சரணத்திற்கு முன் குமரி ருக்மணியிடம்
நிர்மலம்மா வாணிஸ்ரீ யை காண்பித்து அவர் அழகை வர்ணிக்கும்
முக குறிப்பு உடனே குமரி ருக்மணியின் பூரிப்பு - நல்ல காட்சியமைப்பு
திருமகள் தேடி வந்தாள்
இன்று புது மனை குடி புகுந்தாள்
குலமகள் குங்குமத்தில்
தேவி கோயில் கொண்டாட வந்தாள்
தேவி கோயில் கொண்டாட வந்தாள்
வடதிசை காவல் விசாலாட்சி
இங்கு தென் திசை காவல் மீனாட்சி
மேல் திசை காவல் காமாட்சி
எங்கள் கீழ் திசை காவலில் அரசாட்சி
திருமலை திருப்பதிப் பால் பழங்கள் - உயர்
தென் திருப்பழனியின் தேன் குடங்கள்
இல்லத்தில் என்றும் நிறைந்து இருக்க
எங்கள் உள்ளத்தில் புன்னகை மலர்ந்து இருக்க
மங்கல மங்கையர் குங்குமமும்
அவர் மஞ்சளும் தாலியும் மனையறமும்
பொங்கி நலம் பெற அருள் புரிவார்
எங்கள் புது மனை வாழ்வில் வளம் தருவாள்
abkhlabhi
24th June 2014, 05:22 PM
நெஞ்சம் மறப்பதில்லை..
பாடலில் சுசிலாவின் குரல், ஒரு பெண்ணின் ஏக்கத்தை, அன்பின் தவிப்பை நுட்பமாக வெளிப்படுத்தும். பெண் நூறு சதவீதம் உணர்வுகளால் நிரம்பியவள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.
குறிப்பாக, பாடலின் துவக்கதிலும், ‘நெஞ்சம் மறப்பதில்லை…’ என்ற வரியை தொடர்ந்தும் வருகிற அந்த ஹம்மிங், அய்யோ… வாய்ப்பே இல்ல.. No chance.
http://www.youtube.com/watch?v=NdnCxcEderU
chinnakkannan
24th June 2014, 05:32 PM
இருளும் ஒளியும் சில மாதம் முன்பு தான் பார்த்தேன்..அவ்வளவாய் வாணி சுவாரஸ்யமாய் இல்லை..மிக்க ஏமாற்றம்..கடைசியில் கெட்ட வாணி பொசுக்கென்று செத் போவதும்.. பாடல்கள் குட்.. நினைவு படுத்தியமைக்கு நன்றி கிருஷ்ணா சார்..
பாலா சார்.. நெஞ்சம் மறப்பதில்லை என்று தேவிகாவெல்லாம் நினைவு படுத்தக் கூடாது..பாப்பா பாவம் (அடியேன் தான்) :)
chinnakkannan
24th June 2014, 05:39 PM
என்னுள் கலந்த கானங்கள் 5
அருளும் அணியாய் முறுவல் முகத்தில்
..அணையாச் சுடராய் மிளிர்ந்தே ஒளிரும்
புருவம் வளைந்தே அழகாய் விரிந்தே
..புவனம் த்னையே சிரித்தே மயக்கும்
சிறுவன் எனவே நினைத்தால் மிகவும்
..சிறப்பாய்த் தகப்பன் குறையை அகற்றும்
குருவே முருகா உனையே பணிந்தேன்
..கொடுப்பாய் பணிவும் அறிவும் அறமும்..
ஹை..எஸ்.. முருகன் பாட்டுத் தான்..ஆனால் பாடுவது சுசீலா என்ற இசைக் குயில் ப்ளஸ் கண்ண தாசன்..
ம்ம் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் பாடல்..பட்த்தில் கே.ஆர்.வி என நினைவு பஞ்சவர்ணக் கிளி இன் ப்ளாக் அண்ட் ஒயிட்..
முருகன் மேல் ஆசைப் பட்ட் அந்தப் பொண் என்ன்ன்னு பாடறா.. பன்னிரண்டு கண்ணழகைப் பார்த்திருந்த பெண்ணழகை...
*
சத்தியம் சிவம் சுந்தரம் ஆ....
சரவணன் திருப்புகழ் மந்திரம்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
அவன், அருளைப்பெறுவதற்கே உயிர் வளர்த்தேன் ஆ...
பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே
கனி கொய்யும் வேளையிலே கன்னி மனம் கொய்து விட்டான்
பன்னிரண்டு கண்ணழகை பார்த்திருந்த பெண்ணழகை
வள்ளல்தான் ஆள வந்தான் பெண்மையை வாழ வைத்தான்
மலை மேல் இருப்பவனோ மயில் மேல் வருபவனோ
மெய்யுருகிப் பாட வந்தால் தன்னைத் தான் தருபவனோ
அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
ஐயன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்
அழகுக்கு அழகானேன் ஆ...
**
முருகா டச் பண்ணினவுடன் இன்னும் அழகாய்டறாளாம்.. நைஸ் இல்லியோ..
பின்ன வாரேன் :)
abkhlabhi
24th June 2014, 05:52 PM
வாணிஸ்ரீ , தேவிகாவையும் நினைவு படுத்தாமல் ஒரு சாகவரம் பெற்ற பாடல் . அன்றும் , இன்றும் , என்றும்
Can any one upload Video of this song.
படம்: ஒரு குடும்பத்தின் கதை - 1975;
இசை: ஷங்கர் கணேஷ்;
பாடல் வரிகள்:- வாலி;
பாடகர்கள்: K.J.யேசுதாஸ், B.S.சசிரேகா;
மலை சாரலில் இளம் பூங்குயில்
அதன் மார்பினில் ஒரு ஆண்குயில்
அது நானல்லவா.. துணை நீயல்லவா
அன்பு கீதம் நாம் பாடும் நாள் அல்லவா
ஈரேழு ஜன்மதின் பந்தம் இது - ஒரு
இழை கூட பிரியாத சொந்தம் இது
தெய்வீகம் பெண்ணாக நேர் வந்தது -எந்தன்
திருவீதி வழி தேடி தேர் வந்தது
தொடும் உறவானது தொடர் கதையானது
இந்த நாதம் கலையாத இசையானது (மலை)
பனி தூங்கும் மலரே உன் மடி என்பது - இரு
கனி தூங்கும் தேன் திராக்ஷை கொடி என்பது
நினைத்தாலும் அணைத்தாலும் கொதிக்கின்றது - அதில்
நான் தேடும் இன்பங்கள் உதிக்கின்றது
விழி சிரிக்கின்றது.. கவி படிக்கின்றது
திருமேனி தாளாமல் நடிக்கின்றது
vasudevan31355
24th June 2014, 05:55 PM
சின்னக் கண்ணன் சார்,
உங்க 'லத்து' கிருஷ்ணா சாரை ரொம்பவே பாதிச்சுடுத்து போல. சிலாகிக்கிறார்.
இன்னும் நீங்க வச்சி இருக்குற பட்டப் பெயரையெல்லாம் கேட்டா என்ன ஆவாரோ!
ஆமாம்! வாணிஸ்ரீக்கு என்ன 'வானு'வா?
vasudevan31355
24th June 2014, 06:00 PM
சின்னக்கண்ணன் சார்
ரசிச்சேன் ரொம்ப.
அழகன் முருகனிடம் ஆசை வச்சவங்க கூட கம்மி
ஆனா அந்தப் பாட்டு மேல ஆசை வச்சவங்க அதிகம்.
ரொம்ப அழகா துவனி அழகா முடிச்சிறிக்கீங்க.
'பின்ன வாரேன்' (நன்னாயிட்டு)
வழி பார்த்திருப்பேன்.
vasudevan31355
24th June 2014, 06:15 PM
கிருஷ்ணா சார்,
http://www.inbaminge.com/t/i/Irulum%20Oliyum/folder.jpg
நாலே வரியில் இவ்வளவு ஸ்வீட்டா ஷார்ப்பா இருளும் ஒளியும் பற்றி எழுதி விமர்சனம் பண்ணிட்டீங்களே! (அதுக்கு மேல அதுல ஒன்னும் இல்ல)
ஆனா பாடல்களை ஒத்துக்கணும்.
மாமா நல்லா ஒத்துழைச்சி இருப்பார்.
'ஹே ஹே மிஸ்டர் பிரம்மச்சாரி' முடிந்தவுடன் டடடங் டடங் பேஸ் கிடார் இன்னும் கொஞ்சம் வராதான்னு இருக்கும். எனக்கு ரொம்ப பிடித்த இடம் அது.
ஆனால் வாணிஸ்ரீ 'you know ... you know' ன்னு ரொம்ப ஓவர். தாங்க முடியாது. அந்த குருவிக் கூட்டுத் தலையை விடவே மாட்டார்.
பூசணிக்காய் வெடிச்சு விடும் பாருங்க முற்றிப் போய். அது மாதிரி நம் நடிப்புச் சுடர் முகம் எப்ப சைடில கிருதாவுக்குப் பக்கத்துல அகலமாகி வெடிச்ச்சுடுமோன்னு பயமா இருக்கும். (புதுக்கோட்டைகாரங்களுக்கு அப்படித்தான் கன்னம் உப்பி இருக்குமாம். காதல் மன்னன், ராஜன் என்று)
அவர் எல்லாப் படத்திலேயும் ஒன்னு இழுப்பார்.. எ...ன்..ன... சொ...ல்..ற...? யப்பா!
எல்லாமே இருள் ஒளி மாமா.
chinnakkannan
24th June 2014, 06:21 PM
//ஆனால் வாணிஸ்ரீ 'you know ... you know' ன்னு ரொம்ப ஓவர். தாங்க முடியாது. அந்த குருவிக் கூட்டுத் தலையை விடவே மாட்டார்.// அட ஆமாம் வாசு சார்.. அந்தத் தலை ரொம்பவ்வே இரிடேட் பண்ணும்..வாணுன்னு சொல்லலாம் தான்..:)
நன்றி தங்கள் பாராட்டுக்கு.. நிறைய எழுதணும்..பார்க்கறேன்
chinnakkannan
24th June 2014, 06:23 PM
//பாடகர்கள்: K.j.யேசுதாஸ், b.s.சசிரேகா;// நல்ல பாட்டு பாலா சார்.. ரேடியோவில் கேட்டு க் கேட்டு மனனம் ஆன பாட்டு..ஆமா படத்துல யாராக்கும் பாடியிருப்பாங்க..
vasudevan31355
24th June 2014, 06:45 PM
பாலா சார்,
அருமையான எல்லோருக்கும் பிடித்த படலை மீண்டும் நினைவு படுத்தி உள்ளீர்கள். அப்போது இந்தப் பாடல் செம ஹிட்.
இதே படத்தில் சுசீலாவின் கண்ணீர் சிந்த வைக்கும் அருமையான பாடல் ஒன்று உண்டு
சந்தோஷமாக வாழ்ந்த தன் அக்காள் இறந்து போகிறாள். அந்தக் குடும்பத்தை சுமக்க வேண்டிய பாரம் அவள் தங்கை மேல் விழுகிறது. அவளுக்கும் சின்னவள் பருவ வயது காரணமாக காதல் கனவு கண்டு தூக்கத்தில் சிரிக்கிறாள். தூக்கமே வராமல் தவிக்கும் பாரத்தை சுமக்கும் தங்கை தன் செல்லத் தங்கையை மடியில் கிடத்தி மனம் வெதும்பி தவிக்கையில் இந்தப் பாடல்.
10 மாதத்தில் தாய் சுமக்கும் பாரத்திலிருந்து விடுபட்டாள். தந்தை தான் இருக்கும் வரை குடும்ப பாரத்தை சுமந்தான். அக்காளின் கணவன் நல்லவன். ஆனால் அக்காள் இறந்தபின் அவனுக்கு எது வேலை? இனி குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்பு தங்கையுடையதுதானே!
சோகத்தை சுசீலாவின் குரல் என்னமாய் பிரதிபலிக்கிறது?
தங்கையாக சுமித்ரா குடும்ப பாரத்தை சுமப்பார் என்று நினைவு. சின்ன வயதில் பார்த்தது. முத்துராமன், நந்திதா போஸ் இருப்பார்கள் என்றும் நினைக்கிறேன்.
சோகம் பிழியும் படம்.
பாடலைப் பார்ப்போம்.
கற்பனையில் மிதந்தபடி
கனவுகள் வளர்ந்தபடி
கண்ணுறங்கும் பருவக்கொடி
சிரிக்கிறாள்
இவள் காவலுக்கு நின்ற கொடி
கண்ணுறக்கம் மறந்தபடி
கண்ணீரில் நனைந்தபடி துடிக்கிறாள்
கண்ணீரில் நனைந்தபடி துடிக்கிறாள்
தாயாரின் சுமை எல்லாம்
ஐயிரண்டு மாதம் வரை
தந்தையின் சுமை எல்லாம்
தான் இருந்த காலம் வரை
மன்னவன் சுமையெல்லாம்
மூத்தவள் வாழ்ந்தவரை
சின்னவள் சுமைகளெல்லாம்
எத்தனை காலம் வரை
தொட்டு தொட்டு எத்தனையோ
தொல்லைகள் வந்ததம்மா
கட்டுப்பட்டு அத்தனைக்கும்
கன்னிமனம் நின்றதம்மா
பட்டவரை போதுமென்று படைத்தவன் விடுவானோ
இல்லை இல்லை என்றவன் நினைப்பானோ
கற்பனையில் மிதந்தபடி
கனவுகள் வளர்ந்தபடி
கண்ணுறங்கும் பருவக்கொடி
சிரிக்கிறாள்
இவள் காவலுக்கு நின்ற கொடி
கண்ணுறக்கம் மறந்தபடி
கண்ணீரில் நனைந்தபடி துடிக்கிறாள்
கண்ணீரில் நனைந்தபடி துடிக்கிறாள்
mr_karthik
24th June 2014, 07:13 PM
(கார்த்திக் சார் பாஷையில் சொல்வது என்றால் 5000 சிவாஜி )
ஏவிஎம் ராஜன்,
ரொம்ப அநியாயம். இந்த வார்த்தையை நான் சொல்லவேயில்லை. இதே திரியில் வேறு யாரோ சொன்னதை நானும் படித்தேன்.
mr_karthik
24th June 2014, 07:22 PM
டியர் வாசு சார், & பாலா சார்,
ஒரு குடும்பத்தின் கதை படத்தில் இடம்பெற்ற அருமையான இரண்டு பாடல்களை ஆளுக்கொன்றாக அலசித் தள்ளிவிட்டீர்கள். இவைகளைக் கேட்டு / பார்த்து பல ஆண்டுகளாகி விட்டன. நம்ம சேனல்கள் தான் கடிவாளம் கட்டிய குதிரைகளாக இருக்கின்றனரே.
அபூர்வ பாடல்களை அலசிய இருவருக்கும் நன்றி.
டியர் சின்னக்கண்ணன்,
அழகன் முருகனிடம் பாடல் விவரிப்பு நன்றாக உள்ளது. தேவிகாவை நினைவுபடுத்தக் கூடாது என்று சொல்லிவிட்டு, விஜயாவை மட்டும் நினைவுபடுத்தலாமாக்கும். அதுசரி, அந்தப்பாடலில் விஜயாவை யார் பார்த்தது. கண்கள் முழுக்க விஜயலட்சுமி மீதுதான் மொய்த்திருந்தன.
gkrishna
24th June 2014, 07:34 PM
ரொம்ப அநியாயம். இந்த வார்த்தையை நான் சொல்லவேயில்லை. இதே திரியில் வேறு யாரோ சொன்னதை நானும் படித்தேன்.
sorry karthik sir
நமது இந்த திரியில் நீங்கள் சொன்னது போல் நானும் படித்த நினவு
தயவு செய்து உங்களை hurt செய்ததாக நினைத்து விடாதீர்கள்
ஒரு குடும்பத்தின் கதை
இந்த படத்தில் இன்னொரு பாட்டும் ஒன்னு நினவு உண்டு சார்
பாலாவின் குரலில் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் பாடல்
ஒரு குடும்பத்தின் கதை இது
அன்பு கரங்களால் வரைந்தது
பாட்டுக்கு நடுவில் பாலாவின் ச்வீட் குரலில் ஒரு விடுகதை வரும்
மனிதனுக்கு எத்தனை கண்கள்
இரண்டு
இல்லை 23
என்ற பாடலும் மிக நன்றாக இருக்கும்
gkrishna
24th June 2014, 07:47 PM
5000 சிவாஜி என்பது பார்த்தசாரதி சார் சொன்னது
49வது பக்கத்தில் இருக்கிறது
மன்னிக்கவும் கார்த்திக் சார்
Richardsof
24th June 2014, 07:49 PM
அழகன் முருகனிடம் பாடல் விவரிப்பு நன்றாக உள்ளது. தேவிகாவை நினைவுபடுத்தக் கூடாது என்று சொல்லிவிட்டு, விஜயாவை மட்டும் நினைவுபடுத்தலாமாக்கும். அதுசரி, அந்தப்பாடலில் விஜயாவை யார் பார்த்தது. கண்கள் முழுக்க விஜயலட்சுமி மீதுதான் மொய்த்திருந்தன
100% -you are correct karthik sir
http://youtu.be/7qpeuaM39RM
mr_karthik
24th June 2014, 07:59 PM
டியர் கிருஷ்ணாஜி,
இருளும் ஒளியும் படத்தைப்பற்றிய நியாயமான விமர்சனம். சுமார் படமானாலும் பாடல்களால் பிடித்திருந்தது. இருவேடங்களையும் வித்தியாசப்படுத்திக் காட்ட வாணிஸ்ரீ (செல்லப்பெயர் என்ன வாணுவா, இப்படி பெயர் வைப்பதைவிட வாணிஸ்ரீ என்றே சொல்லிவிட்டுப்போகலாம்) ரொம்ப மெனக்கெட்டிருப்பார். அந்த வருடம் சிறந்த நடிப்புக்காக பரிசெல்லாம் வாங்கினார், இந்தப்படத்துக்காக.
mr_karthik
24th June 2014, 08:06 PM
டியர் வினோத் சார்,
காசேதான் கடவுளடா படத்தின் இரண்டு பாடல்களின் வீடியோவை உடனே அளித்து சிறப்பு சேர்த்ததற்கு மிக்க நன்றி.
vasudevan31355
24th June 2014, 08:20 PM
கிருஷ்ணா சார்,
மகராஜா வந்தான்
என் வாசல் தேடி
மழை மேகம் போலே
மலர் என்னை நாடி
சொந்தம் பந்தம் இன்பம் துன்பம்
எல்லாமே உன்னால்தானய்யா
சுசீலா பின்னும் இந்தப் பாடலும் 'ஒரு குடும்பத்தின் கதை' படத்தில்தானே சார்?
அருமையான மெலடி.
chinnakkannan
24th June 2014, 08:29 PM
நன்றி கார்த்திக் சார்.. நன்றி வினோத் சார் வீடியோவிற்காகவும்.. :)
வாணிஸ்ரீ ந்னா ரொம்ப நீளமா இருக்குங்களே கார்த்திக் சார்..;)
Murali Srinivas
24th June 2014, 11:55 PM
என் மீது கொண்டுள்ள அதீத அன்பின் காரணமாக என்னை பெரிதும் பாராட்டிய கார்த்திக், வாசு, கண்ணன் மற்றும் கிருஷ்ணாஜி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.
கிருஷ்ணாஜி, சுப்ரபாதம் படத்தின் கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும் பாடலுக்கு கோடி நன்றி. எனக்கு மிக மிக பிடித்த பாடல். 1979 ஏப்ரல்-ல் மதுரை தங்கம் திரையரங்கில் இந்த படத்தை பார்த்த அந்த நாள் மறக்க முடியாத ஒன்று.
அது போல பாலா சார், எப்போது கேட்டாலும் ஒரே நேரத்தில் மனதில் சொல்ல முடியாத சந்தோஷத்தையும் சொல்ல முடியாத சோகத்தையும் ஒரு போல கொண்டு வரும் மலைசாரலில் ஒரு இளம் பூங்குயில் பாடலுக்கு கோடி கோடி நன்றி. பல பல நினைவுகள்.
கண்ணா,
மனதுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய் பாடலை நினைவுப்படுத்தியதற்கு நன்றி. அன்றைய தூரதர்சனினில் இடம் பெற்ற நிகழ்ச்சிகளின் பெயர்களையே வைரமுத்து பயன்படுத்தியிருப்பார். ஆனால் பல்லவியின் கடைசி இரண்டு வரிகள் பின்னியிருப்பார்.
இளகாத என் நெஞ்சில் இடம் பிடித்தாய்.
இன்று என் காதல் தேருக்கு வடம் பிடித்தாய்.
மீண்டும் சந்திக்கிறேன்.
அன்புடன்
Murali Srinivas
25th June 2014, 12:11 AM
சில வருடங்களுக்கு முன்பு நமது ஹப்பில் நான் எழுதிய பதிவு. காலத்தை வென்ற கவிஞன் கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாளான இன்று அவர் நினைவாக இந்த மீள் பதிவு.
கண்ணதாசனும் காதலும்
கண்ணதாசனைப் போல் காதலை கொண்டாடியவர்கள் வெகு சிலரே. காதல், காதல் சார்ந்த ஏக்கம், ஏக்கத்தில் தொனிக்கும் விரகம்,தாபம் எல்லாவற்றையும் இலக்கிய நயத்தோடு சொன்னவர் கண்ணதாசன்.
காதல் என்ற உணர்வு மட்டும் ஒரு மனதுக்குள் வெகு விரைவில் நுழைந்து விடுகிறது. எப்படி?
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
கண்ணதாசன் காதலை பற்றி கேள்வி கேட்டு பதில் சொல்கிறார்,
காதல் என்பது எதுவரை?
கல்யாண காலம் வரும் வரை.
இளமையிலே காதல் வரும்; எது வரையில் கூட வரும்?
முழுமை பெற்ற காதலெல்லாம் முதுமை வரை ஓடி வரும்.
காதலர்கள் எப்படி இருக்க வேண்டும்? கண்ணதாசனின் பதில்
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்
மௌனமே காதலாய் ஒரு பாட்டு பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்.
காதல் ஏற்படுத்தும் தவிப்பை அதிலும் குறிப்பாக பெண்ணிடம் ஏற்படுத்தும் உணர்வுகளை எப்படி சொல்கிறார்?
கட்டவிழ்ந்த கண்ணிரெண்டும் உங்களை தேடும்; பாதி
கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும்.
பட்டு நிலா வான்வெளியில் காவியம் பாடும்; கொண்ட
பள்ளியறை பெண் மனதில் போர்களமாகும்.
காதலர்களுக்கிடையே நிலவும் உறவு எப்படி இருக்கும்?
ஆடச் சொல்வது தேன் மலர் நூறு
அருந்தச் சொல்வது மாங்கனி சாறு
கூடச் சொல்வது காவிரி ஆறு
கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு
பிரிந்த காதலர்கள் ஒன்று சேரும் போது உணர்வுகள் எப்படி வெளிப்படும்?
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் நின்றால்
அதுதான் தெய்வத்தின் சன்னதி
அதுதான் காதல் சன்னதி.
காதலை பற்றி சொல்லும் கவிஞர் அந்த காதல் கனிந்து கல்யாணத்தில் முடிவதை சொல்கிறார்.
மாலை சூடும் மணநாள்; இள
மங்கையின் வாழ்வில் திருநாள்
சுகம் மேவிடும் காதலின் எல்லை
வேறொரு திருநாள் இனி இல்லை
மணமகன் இன்ப ஊஞ்சலில்
மணமகள் மன்னன் மார்பினில்
அங்கு ஆடும் நாடகம் ஆயிரம்
அதில் நாமும் இன்றொரு காவியம்
இதில் ஒருவர் தாளமாம்
ஒருவர் ராகமாம்
இருவர் ஊடலே பாடலாம்
காதல் கனிந்து திருமணத்தில் முடிந்ததும் அடுத்த கட்டத்திற்கு செல்கிறார்.
மலராத பெண்மை மலரும்
முன்பு தெரியாத உண்மை தெரியும்
மயங்காத கண்கள் மயங்கும்
முன்பு விளங்காத கேள்வி விளங்கும்
இரவோடு நெஞ்சம் உருகாதோ
இரண்டோடு மூன்றும் வளராதோ
முதலிரவை பற்றி நாயகன் நாயகியிடையே ஒரு கேள்வி பதில்
முதலிரவு என்று ஒன்று ஏனடி வந்தது ராதா
அது உரிமையில் இருவர் அறிமுகமாவது ராஜா.
முதலிரவில் நாயகியின் வெட்கத்தை கவிஞர் சொல்லும் அழகே அழகு.
பார்வையில் ஆயிரம் கதை சொல்லுவார்
படித்தவள்தான் அதை மறந்து விட்டாள்
காதலை நாணத்தில் மறைத்து விட்டாள்.
தோழியர் கதை சொல்லித் தரவில்லையா
துணிவில்லையா பயம் விடவில்லையா
அந்த உறவின் நிலையை எப்படி சொல்கிறார்?
வாயின் சிவப்பு விழியிலே
மலர் கண் வெளுப்பு இதழிலே
காயும் நிலவின் மழையிலே
காலம் நடத்தும் உறவிலே.
மறுநாள். அந்த இன்ப நினைவுகள் மனதில் வந்து மோத நாயகி இலக்கியம் பேசுகிறாள்.
கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்; இரு
கன்னம் குழி விழ நகை செய்தான்.
என்னை நிலாவில் துயர் செய்தான்; அதில்
எத்தனை எத்தனை சுகம் வைத்தான்
சேர்ந்தே மகிழ்ந்தே போராடி; தலை
சீவி முடித்தேன் நீராடி
கன்னத்தை பார்த்தேன் முன்னாடி; பட்ட
காயத்தை சொன்னது கண்ணாடி.
இதே இலக்கியம் வேறொரு பாணியில் வேறொரு பெண்ணால் எப்படி சொல்லப்படுகிறது?
காதல் கோவில் நடுவினிலே
கருணை தேவன் மடியினிலே
யாருமறியாப் பொழுதினிலே
அடைக்கலமானேன் முடிவினிலே.
கூடிக் கலந்து மகிழ்ந்த உயிர்கள் பிறிதொரு உயிரை உருவாக்கும் போது அங்கே ஆண் சொல்கிறான்.
நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே.
பெண் என்ன சளைத்தவளா? அவள் உடனே பதிலளிக்கிறாள்
அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே.
மற்றொரு ஆண் இதையே வேறு விதமாக பாடுகிறான். எப்படி?
கட்டில் கொண்டாள் அங்கு நான் பிள்ளையே
தொட்டில் கண்டாள் அங்கு என் பிள்ளையே.
இந்த உணர்வுகளையெல்லாம் ஒரு மூன்றாம் மனிதனின் கண்ணோட்டத்தில் சொன்னால்?
ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா.
எதை சொல்வது? எதை விடுவது?
கண்ணதாசனின் கவிதைகளைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
அன்புடன்.
sivaa
25th June 2014, 06:40 AM
நேற்று மட்டும் இந்தத்திரி 9 பக்கங்களை எட்டியுள்ளது
மனசெல்லாம் ஜில்லெண்டிருக்கு
ரொம்ப சந்தோஷம்
RAGHAVENDRA
25th June 2014, 09:13 AM
கோவர்த்தனம்
மெல்லிசை மன்னரின் உதவியாளர் என பல படங்களில் இவர் பெயர் இடம் பெற்றிருக்கும்...
அதற்கும் மேல் இசையமைப்பு கோவர்த்தனம் என்று இன்னும் சில படங்களில் இவர் பெயர் இடம் பெற்றிருக்கும்...
முதலாவது இரண்டாவதற்கு மிகவும் பெரிய உதவியாக இருந்தது என்பது இரண்டாவதில் இவருடைய பணி பறை சாற்றும்...
பட்டணத்தில் பூதம், வரப்ரசாதம், பூவும் பொட்டும், கைராசி படங்கள் இவருடைய பெயரை காலத்திற்கும் கூறிக் கொண்டிருக்கும்..
இவருடைய இசையமைப்பில் மெல்லிசை மன்னரின் சாயல் இடம் பெறுவது தவிர்க்க இயலாதது.
அப்படி ஒரு பாடல், பூவும் பொட்டும் திரைப்படத்திலிருந்து..
பூவும் பொட்டும் படம் என்றாலே நாதஸ்வர ஓசையிலே பாடலும் எண்ணம் போல கண்ணன் வந்தான் பாடலும் தான் சட்டென்று நினைவுக்கு வரும்..
சற்றே வித்தியாசமாக ஈஸ்வரியின் குரலில் உள்ள சிறப்பை அருமையாக வெளிப்படுத்திய பாடல் தான் பொன் வண்டு தீண்டாத மல்லிகை..
ரிதம்... மிகவும் அட்டகாசமாக... அதுவும் இப்பாடலில் இடம் பெறும் பாங்கோஸ் .... கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
http://youtu.be/r2SOQ3lufsk
vasudevan31355
25th June 2014, 09:19 AM
இன்றைய ஸ்பெஷல் (13)
1966-ல் ஆர். ஆர். பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த 'பறக்கும் பாவை' வண்ணப்படத்தில் ஒரு அட்டகாசமான ஜாலியான பாடலைப் பார்க்கப் போகிறோம்.
http://i1.ytimg.com/vi/i_1mu9ToOmk/maxresdefault.jpg
'பறக்கும் பாவை' படத்தில் 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர், சரோஜாதேவி, காஞ்சனா, நம்பியார், அசோகன், மனோகர், சந்திரபாபு, தங்கவேலு, ஒ.ஏ.கே தேவர், ஜி.சகுந்தலா என்று பெரும் நட்சத்திரக் கூட்டம்.
இசை 'மெல்லிசை மன்னன்' விஸ்வநாதன் என்று டைட்டிலில் போடுவார்கள். உதவி கோவர்த்தனும், ஹென்றி டேனியலும். வசனம் சக்தி கிருஷ்ணசாமி.
எம்.ஏ.ரஹ்மானின் கண்களை, மனதை குளிர்ச்சியாகும் அம்சமான ஒளிப்பதிவு
முழுக்க முழுக்க சர்க்கஸை பின்னணியாக வைத்து நல்லதொரு பொழுதுபோக்கு சித்திரமாக வழங்கியிருந்தார் இயக்குனர் ராமண்ணா.
சர்க்கஸில் இணைந்து வேலைபார்க்கும் எம்.ஜி.ஆரின் காதலியான சரோஜாதேவியைக் கொலை செய்ய பல முயற்சிகள் நடக்கின்றன. கதாநாயகன் எம்.ஜி.ஆர் சரோஜாதேவியை இந்த ஆபத்துக்களிலிருந்து பாதுகாத்து மீட்கிறார். யார் சரோஜாதேவியை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் என்று பல பேர் மேல் நமக்கும், படத்தில் உள்ளவர்களுக்கும் சந்தேகம் வருகிறது. இறுதியில் கொலைகா(ரி)ரன் யார் என்று தெரியும் போது நமக்கு அதிர்ச்சி.
இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் எதிர்பாராத வகையில் அமைந்திருந்தது.
இப்படத்தின் அனைத்து பாடல்களும் முத்து முத்தானவை. சர்க்கஸ் காட்சிகளும் (சர்க்கஸ் காட்சிகள் உதவிகளை 'நேஷனல் சர்க்கஸ்" கம்பெனி செய்து கொடுத்தது)
அழகாகப் படம் பிடிக்கப்பட்டு இருந்தன. தேவர் பிலிம்ஸ் போல இல்லாமல் மிருகங்களுக்கு உரிய சர்க்கஸ் குணங்கள் இயல்பாகக் கையாளப்பட்டிருந்தன. அரங்க அமைப்புகளும் பிரம்மாண்டமாக இருந்தன. பாடல் காட்சிகள் முற்றிலும் வித்தியாசமாகப் படமாக்கப் பட்டிருந்தன.
வழக்கமான ராமண்ணாவுக்கே உரித்தான பிரம்மாண்டங்கள், கமர்ஷியல் அயிட்டங்கள் இப்படத்தில் இடம் பெற்று இருந்தன. (முக்கியமாக 'முத்தமோ... மோகமோ' பாடல் காட்சி அருமையாக பொழுதுபோக்கு அம்சங்களுடன் வித்தியாசமாகப் படமாக்கப்பட்டிருந்தது. இப்பாடலைப் பற்றி தனியாக பிறகு அலசலாம்.)
இப்படத்தின் டைட்டில் காட்சிகள் அப்போதே அசத்தலான கார்ட்டூன் கைவரிசைகளில் உள்ளத்தை உற்சாகம் கொள்ள வைக்கும்.
இந்தப் படத்தின் வண்ணமயமாக்கலையும் மறக்க முடியாது. மனத்தைக் கவரும் வண்ண ரம்மியம். (ஒரு புதிய பறவை, அன்பே வா போல)
வழக்கமான எம்ஜியார் அவர்களின் படங்களிலிருந்து சற்று மாறுபட்ட ஒரு படம். சரி! பாடலுக்கு வருவோம்.
இப்படத்தில் ஹோட்டல் ஒன்றில் கொலையாளி யார் என்று கண்டுபிடிக்க எம்ஜிஆர், சரோஜாதேவி,சந்திரபாபு மூவரும் புதுமையான உடையில் ஆடும் புதுமையான நடனம்.
இப்பாடலை இன்றைய ஸ்பெஷலாக நான் தேர்ந்தெடுத்ததற்கு காரணங்கள் உண்டு.
அதில் முக்கியமான காரணம் வித்தியாசம். வித்தியாசம். வித்தியாசம்.
வித்தியாசம் 1
பொதுவாக மக்கள் திலகம் அவர்களின் நடனக் காட்சிகளில் இருக்கும் வழக்கமான மேனரிசம் முழுமையாக இப்பாடல் முழுவதும் அவரிடத்தில் இருக்கவே இருக்காது. நடன அசைவுகள் மிக வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டிருக்கும். எம்.ஜி.ஆர் அவர்களின் பாடலைப் பார்ப்பது போலவே தோன்றாது. வேறு யாரோ வித்தியாசமான நடிகரை பார்ப்பது போல் தோன்றும்.
அலட்டிகொள்ளாத லூஸான கைகால்கள் அசைவுகளில் மூவருமே நன்றாகச் செய்திருப்பார்கள். எம்.ஜி.ஆர் அவர்களும் ஹீராலால், தங்கப்பன் மாஸ்டர் ஆட்டுவித்தபடி நன்றாகவே ஆடியிருப்பார். சந்திரபாபு, சரோஜாதேவி கேட்கவே வேண்டாம். அம்மணி பொம்மை போல கைகால்களை ஆட்டி படுஅலட்சியமாக ஆடி தூள் கிளப்புவார்.
வித்தியாசம் 2
இன்னொரு வித்தியாசம். பெரும்பாலும் தனக்கு வரும் பாடல்களை தன் சொந்தக் குரலிலேயே பாடும் சந்திரபாபுவுக்கு இப்பாடலில் தாஸேட்டன் (நன்றி முரளி சார்) அதாங்க... நம்ம ஜேசுதாஸ் சார் குரல் கொடுத்து பாடியிருப்பார். மிக மிருதுவான மயக்கும் மதுரக் குரல். ஆனால் பாபுவுக்கு பொருந்தவில்லை. (அது செம வாலாயிற்றே!)
வித்தியாசம் 3
மூவரும் மிக அழகாக பேலன்ஸ் செய்து ஆடுவார்கள். கிட்டத்தட்ட சர்க்கஸ் நாகரீகக் கோமாளிகள் போன்ற தோற்றம் கொண்டு. தலையில் கவிழ்த்து வைக்கப்பட்ட வித்தியாச விக். பாபு முன்னாலும் அவருக்குப் பின்னால் அபிநய நங்கையும், அவருக்குப் பின்னால் எம்ஜிஆர் அவர்களும் ஆடும் போது சந்திரபாபு நன்றாக உடலை வளைத்து பின்னல் இருப்பவர்களின் அசைவுகளை அழகாக அட்ஜஸ்ட் செய்து காட்டுவார். இரண்டாவது சரணத்தில் ஒருவரையொருவர் பார்த்தும் பார்க்காமலும் ஆடும் ஸ்டெப்கள் ரொம்ப சந்தோஷத்தைக் கொடுக்கும்.
வித்தியாசங்களை மீறிய இன்னொரு விஷயம்
ராட்சஸி. அடேயப்பா! குரலை உயர்த்தாமல், உச்சஸ்தாயிக்கு செல்லாமல், மெல்லினத்தை வல்லினமாக உச்சரிக்காமல் ஒரே ஸ்டைலில் சீராக தெளிந்த நீரோட்டம் போல எதைப் பற்றியும் கவலைப்படாமல் இவர் பாடும் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை போங்கள். அதுவும் 'நெஞ்சம் மயங்கும் இன்பம்' வார்த்தைகளை அவர் ஆரம்பிக்கும்போது நெ..ஞ்சம் என்று 'நெ' வை சற்றே இழுத்து உச்சரிப்பாரே! இன்பமோ இன்பம். யாரங்கே! எங்கள் ராட்சஸிக்கு திருஷ்ட்டி சுற்றி போடுங்கள்.
https://i1.ytimg.com/vi/AVafGJkn0lE/mqdefault.jpg
இப்போது கூட நான் என்னைக் கிள்ளிப் பார்த்துக் கொள்வதுண்டு இது மக்கள் திலகம் நடித்த பாடல்தானா என்று. பாடலின் இடையிடையே வரும் சதன் கோஷ்டியினரின் கோரஸ் இனிமையோ இனிமை. 'சுகம் எதிலே' என்று வரும் போதெல்லாம் 'ஹ ஹ ஹா' என்று எங்கேயோ கேட்பது போல குரல்கள் ஒலிப்பது படு இனிமை. பாடலின் ஆரம்பத்தில் ஒலிக்கும் கோரஸ் ஜாலியான மூடுக்கு நம்மைக் கொண்டு வரும். பாடலின் பின்னணியில் ஹோட்டல் அரங்கில் 'கோகோ-கோலா' குளிர்பான விளம்பரத்தைப் பார்க்கலாம்.
இந்தப் பாட்டுக்கு முழு கிரெடிட்டும் நடன இயக்குனர் ஹீராலாலையும், அவர் உதவியாளர் தங்கப்பன் மாஸ்டரையும் சாரும். அவர்களுக்கு நம் மனமார்ந்த பாராட்டுக்கள்.
'மெல்லிசை மன்னர்' துள்ளிசை மன்னராக சும்மா புகுந்து விளையாடி விட்டார் இந்தப் பாட்டில். அதுவும் காதுகளுக்குள்ளே இன்பத்தேனைப் பாய்ச்சும் கிடார் இசையை அவர் தரும் சுகமே அலாதிதான்.
நடனம், இசை,பாடல், நடிகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒத்துழைத்தால் எப்பேற்பட்ட பாடல் கிடைக்கும் என்பதற்கு இப்பாடல் ஒரு சாட்சி
இதில் வருத்தப்படவேண்டிய இன்னொரு கேள்வியும் எழுகிறது. அருமையான இந்தப் பாடல் முழுமையாக எல்லோராலும் ரசிக்கப் பட்டிருக்கிறதா என்ற கேள்விதான் அது. ஆனால் பதில்....
இன்னொன்று இது 'மனதை மயக்கும் மதுரகானங்கள்' என்ற ஒரு பொதுத் திரி. இதில் அனைத்து நடிகர்களின் படங்களின் பாடல்கள் அலசப்படுகின்றன. இதில் இவர் ஒஸ்தி அவர் கம்மி என்ற பேச்சுக்கே இடமில்லை. சிலர் நினைப்பது போல் ஒருவர் சார்புடைய திரியும் அல்ல இது.
அதற்கு உதாரணமாகவே இந்தப் பாடல் அலசல்.
எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த பாடல் காட்சி ஒன்றை முதல் முதலாக அலசியுள்ளேன். அவர் வித்தியாசமாக நடித்த பாடல் காட்சிகளை நாம் தொடர்ந்து அலசலாம்.
மக்கள் திலகம் கொஞ்சம் அதிகமாகவே வேலை வாங்கி விட்டார்.:)
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=CQYfRS6U1nQ
தொடர்ந்து எல்லோருடைய ஆதரவை நாடும்
உங்களின் வாசுதேவன்.
நன்றி!
Richardsof
25th June 2014, 09:43 AM
VASU SIR
இனிய நண்பர் வாசு சார்
மலைக்க வைத்தது உங்களின் உழைப்பு . என்ன ஒரு விரிவான அலசல் . 48 ஆண்டுகள் முன் வந்த மக்கள் திலகத்தின் பறக்கும் பாவை படத்தில் இடம் பெற்ற ''சுகம் எதிலே'' பாடலின் முழு தாக்கத்தைஉங்கள் பதிவு மூலம் படித்ததில் மிக்க ஆனந்தம் .தொடருங்கள் ....
.
http://i59.tinypic.com/if649s.jpg
gkrishna
25th June 2014, 10:11 AM
25/06/2014 - காலை வணக்கம்
வாசு சார்
ஒரு குடும்பத்தின் கதையில் உள்ள இன்னொரு பாடலையும் நினவு கூர்ந்து விட்டீர்கள் .
உண்மையில் நேற்று இரவு இரண்டு நினைவுகள் ஊசலாடின .
ஒன்று நம் திரியில் மக்கள் திலகத்தின் பாடல்கள் அலசப்படவில்லை .
இரண்டாவது முத்துராமன் ஜோதி லக்ஷ்மி
ஜோடியின் ஸ்ரீநிவாஸ் குரலில் வரும்
"உன் அழகை கண்டு கொண்டால் பெண்களுக்கே ஆசை வரும்
பெண்களுக்கே ஆசை வந்தால் என் நிலைமை என்ன செய்வேன் "
பாடலை நினைத்து கொண்டு தூங்கினேன் .
இங்கு வந்து பார்த்தல்
நீங்கள் பறக்கும் பாவையை மிக அழகாக மக்கள் திலகத்தின் ரசிகர்களை விட ஒரு படி மேலாக திறனாய்வு செய்து உள்ளீர்கள்
அதே போல் வேந்தர் சார் அவர்களும் பூவும் போட்டும் திரைபடத்தில் உள்ள நல்லதொரு அரிய் பாடலை பற்றி கூறி உள்ளார்
gkrishna
25th June 2014, 10:15 AM
"நின்றால் கோயில் சிலை அழகு
நிமிர்ந்தால் ஆயிரம் நடை அழகு
நடந்தால் அன்னத்தின் நடை அழகு
நாடகமாடும் இடை அழகு
அழகில் இது புதுவிதமே
இறைவனின் ரகசியமே
இறைவனின் ரகசியமே
கண்ணதாசனின் என்ன ஒரு அழகு வரிகள்
vasudevan31355
25th June 2014, 10:22 AM
காலை வணக்கம் கிருஷ்ணா சார்!
உங்களை காணாமல் இப்போதெல்லாம் பொழுது விடிவதில்லை.
gkrishna
25th June 2014, 10:23 AM
முரளி சார்
கண்ணதாசனின் பல்வேறு பாடல்களை நினைவு கூர்ந்து உள்ளீர்கள்
அதுவும் இரவு 12 மணி அளவில்
நேற்று இரவு எல்லா சேனல்களுமே கண்ணதாசனின் புகழ் பாடி கொண்டு இருந்தன. (நான் பார்த்த -வசந்த்,மெகா,ஜெயா மக்ஸ்,லைப், முரசு )
"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை "
chinnakkannan
25th June 2014, 10:25 AM
//இதில் ஒருவர் தாளமாம்
ஒருவர் ராகமாம்
இருவர் ஊடலே பாடலாம் // முரளி சார் அழகிய மீள் பதிவு..கண்ணதாசனை ப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்..இன்றும் சொல்லுவேன்..
ராகவேந்தர் சார்.. பூவும் பொட்டும் இந்தப் பாடல் நான் கேட்டிராத ஒன்று நன்றி..
வாசு சார்..பறக்கும் பாவை..சுகம் எதிலே நினைவிலில்லை.. நினைவு படுத்தியமைக்கு நன்றி..
gkrishna
25th June 2014, 10:26 AM
வாசு சார்
எனக்கும் அப்படி தான்
கிழக்கு வெளுத்ததம்மா
கீழ்வானம் சிவந்தம்மா
வாசுவின் இடுகை கண்டு
கிருஷ்ணா மனம் மலர்ந்ததம்மா
vasudevan31355
25th June 2014, 10:28 AM
கிருஷ்ணா சார்,
வசந்தம் வந்தால் கொடிகளிலே
மலரும் மலர்கள் ஆயிரமே
மலரும் மலர்கள் ஆயி(ழ:))ரமும்
மங்கையின் மலர் போல் ஆவதில்லை
மலர் பறிக்கும் நேரமிதே
பொழுது சென்றால் வாடிவிடும்
பொழுது சென்றால் வாடிவிடும்
வரிகள் கொல்லுகின்றன.
http://i1.ytimg.com/vi/QJY4qKmH5xw/hqdefault.jpg
பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரியில் சாரி பூவும் பொட்டும் படத்தில் ஜோதிலஷ்மி என்ன ஒரு ஸ்லிம். சாமுத்ரிகா லட்சணம் முழுதும் நிறைந்தவராமே இவர்!
chinnakkannan
25th June 2014, 10:34 AM
//நின்றால் கோயில் சிலை அழகு
நிமிர்ந்தால் ஆயிரம் நடை அழகு
நடந்தால் அன்னத்தின் நடை அழகு
நாடகமாடும் இடை அழகு // நல்ல வரி தான்...ஆனா ப்ளாக் அண்ட் ஒயிட்ல ஒல்லி முருங்கைக்காய் ஜோதிலட்சுமிக்கு முத்துராமன் பாடற பாட்டுன்னு நினைவு..ம்ம் அப்புறம் என்ன ஆகும் இடி மழை இளமை தனிமை..:) ஆள விடுங்க சாமி..கொஞ்சம் வேலை பார்க்கறேன்..
chinnakkannan
25th June 2014, 10:35 AM
//சாமுத்ரிகா லட்சணம் முழுதும் நிறைந்தவராமே இவர்!/ அப்படியா..ம்ம் எனக்குத் தெரியாதே..
vasudevan31355
25th June 2014, 10:40 AM
கொஞ்சம் வேலை பார்க்கறேன்னுட்டு இப்பதானே சொன்னீங்க...:)
vasudevan31355
25th June 2014, 10:42 AM
கிருஷ்ணா சார், சின்னக் கண்ணன் சார்
ஒரு வேண்டுகோள். 'எண்ணம் போலக் கண்ணன் வந்தானை' எனக்குத் தந்து விடுங்கள். இன்றைய ஸ்பெஷல் தொடருக்காக சேர்த்து விட்டேன்.
vasudevan31355
25th June 2014, 10:47 AM
நாகேஷ் பாடும் சோகம் (கிடாரை வைத்தபடியே)
முதல் என்பது தொடக்கம்
முடிவென்பது அடக்கம்
விடை என்பது விளக்கம்
விதி என்பது என்ன
நாகேஷ் கொஞ்சம் ஓவரா செய்யராறோன்னு நினைக்கத் தோணும்.
ஆனால் அருமையான தத்துவம்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=5Ckf4DXoSEM
gkrishna
25th June 2014, 10:48 AM
வாசு சார்
ரொம்ப குறும்பு ஆனால் கரும்பு எல்லோரும் விரும்பு(ம்)
( பூவும் பொட்டும் ஆயிரம் )
நீங்கள் நடிப்பு சுடர் பற்றிய நினவு கூறல் ஒரு அருமையான நகைச்சுவை
ரெம்ப ரப்பர்
இவரோட இன்னொரு பாட்டு நினைவிற்கு வருகிறது சார்
தரிசனம் 1969
பாடகர் திலகம் கண்ணிய நாயகி குரல்களில்
"கல்யாணமாம் கல்யாணம் 60ஆம் கல்யாணம் "
ஈஸ்வரி பாடகர் திலகம் குரல்களில்
இது மாலை நேரத்து மயக்கம்
புது மாலை போல் உடல் மணக்கும்
இதழ் மேலே இதழ் மூடி
அந்த இன்பம் தேடுது உனக்கும்
பாடகர் திலகத்தின் சிரிப்பு
நடிப்பு சுடரின் நடிப்பு
இது கால தேவனின் கலக்கம்
இதை காதல் என்பது வழக்கம்
ஒரு ஆணும் ஒரு பெண்ணும்
பெற போகும் துன்பத்தின் துவக்கம்
ஈஸ்வரி குரலில் ஒரு விரக தாபம் நல்ல நோட் பண்ணலாம் சார்
பனியும் நிலவும் பொழியும் நேரம்
மடியில் சாய்ந்தால் என்ன
பசும்பாலை போலே மேனி எங்கும்
பழகி பார்த்தல் என்ன
gkrishna
25th June 2014, 10:55 AM
லேட்டஸ்ட் உட்டலங்காடி
chinnakkannan
25th June 2014, 11:00 AM
//பனியும் நிலவும் பொழியும் நேரம்
மடியில் சாய்ந்தால் என்ன// இங்க வெளியில் 42 டிகிரி.. பனி பெய்யுதாக்கும்..ஆமா அந்தப் பாட்டுல நடிச்சது யாரு ?
mr_karthik
25th June 2014, 11:03 AM
டியர் வாசு சார்,
மதுர கானங்கள் திரியில் அதிகமாக நடிகர்திலகத்தின் ரசிகர்களே பங்கு கொண்டாலும், இது இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரியே தவிர, யாருடைய சார்பும் இல்லாதது என்பதை விளக்கும் வண்ணம், மக்கள்திலகத்தின் வண்ணக்காவியமான 'பறக்கும் பாவை' படத்தின் அருமையான பாடலை அலசியதன் மூலம் உரக்க சொல்லியிருக்கிறீர்கள்.
நடிகர்திலகத்தின் ரசிகர்கள் பங்கேற்றாலும், இதுவரை கிட்டத்தட்ட 1.000 பதிவுகளை நெருங்கியபோதும், இன்னும் நடிகர்திலகத்தின் பாடல் ஒன்று கூட அலசப்படவில்லைஎன்று நினைக்கிறேன். அனைத்தும் சாமான்யர்களின் பாடல்களே அலசப்பட்டிருக்கின்றன. அதற்குக் காரணம், நிழலுக்குள் தள்ளப்பட்ட பல அருமையான பாடல்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதே இத்திரியின் நோக்கம் என்பதால், இரு ஜாம்பவான்களின் பாடல்கள் முடிந்தவரை தவிர்க்கப்பட்டிருக்கின்றன. இல்லாவிட்டால் இதுவும் இன்னொரு நடிகர்திலகம் திரியாக, அல்லது இன்னொரு மக்கள்திலகம் திரியாக மாறிவிடக்கூடிய சாத்தியங்கள் இருப்பதால்.
இப்போதுதான் மக்கள்திலகத்தின் பாடலொன்று, அதுவும் இதுவரை எந்தப்பாடலுக்கும் இல்லாத அளவுக்கு உங்களால் சிரத்தை எடுத்துக்கொண்டு சிறப்பாக அலசப்பட்டிருப்பது நிச்சயம். பெருமையாகவே இருக்கிறது.
நீங்கள் எடுத்துக்கொண்ட பாடல் எனக்கும் பிடித்ததுதான் என்ற போதிலும், அப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது 'கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா' பாடல்தான். அது எழுத்தாளர் பாலகுமாரன் வாழ்க்கையில் மட்டுமல்ல, என் சொந்த வாழ்க்கையிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய பாடல். அதுபற்றி பின்னர் சொல்கிறேன்.
அருமையான அலசலுக்கு பாராட்டுக்கள் வாசு சார்.
gkrishna
25th June 2014, 11:08 AM
சி க சார்
நடிகர் நம்ம நடிப்பு சுடர் ஏவிஎம் ராஜன்
நடிகை -
சாயலை பார்த்தால்
சந்திர காந்தா மாதிரி தெரியுது
கலாட்டா கல்யாணம் படத்தில்
"உறவினில் பிப்டி உதட்டினில் பிப்டி தருவது சுகம் தங்க கட்டி "
அவங்களா இவங்க
வாசு சார் /கார்த்திக் சார் /வேந்தர் சார் யாரவது
chinnakkannan
25th June 2014, 11:08 AM
என்னுள் கலந்த கான்ங்கள் -6
*
பாக்குறான் கொட்டக் கொட்ட
..பூவிழி சிமிட்டா மல்தான்
காக்கவும் நீதான் அம்மா
..கொஞ்சவும் நீதான் என்றே
நோக்கிடும் அவனைத் தரையில்
.. நீஞ்சுடா என்றே விட்டால்
பேக்குபோல் கோணி கண்ணில்
..பேய்மழை கொண்டு விட்டான்..
எந்தக் காலத்திலும் எந்த வயதிலும் மனதை விகசிக்க வைக்கும் விஷயம் எது.. சின்னக் குழந்தையின் விஷம்ம், புன்னகை, மழலை..
கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்ற்றியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள எனப் பெண்ணைப் பற்றிப் பாடிய வள்ளுஸ் குழந்தையைப் பற்றி என்ன சொல்கிறார்..
குழலினிது யாழினிது என்பார் அவர்தம்
மழலைச் சொல் கேளாதவர்..
எந்தக் குழந்தையானாலும் மழலைச் சொல் அழ்குதான்..
//எதிர் ஃப்ளாட்ல ஒரு யுவதி ஒரு கைக்குழந்தையை வச்சுக்கிட்டு நின்னுருந்தாங்க.. ரொம்ப ச் சின்னப் பொண்ணா இருக்க், என்னம்மா இது யாரோட்து.. எனக் கேட்டேன்.. என்னுடைய அக்காவோட்து அங்க்கிள் என அவள் மழலையில் சொல்ல குழந்தையும் மழலை மொழியில்ங்கா எனச் சொல்லி என்னிடம் தாவியது.. //இரண்டு குரலுமே நன்னாயிட்டு இருந்த்தாக்கும்..
இந்தப் பாடலில் டிஎம் எஸ் சுசீலா..(வாயசைப்பு கன்னக்குழி எஸ் எஸ் ஆர்.. அந்தக்கால அழுகை இளவரசி விஜயகுமாரி) பாட நம் மனமும் கொள்ளை போகும் தானே
**
பூப்போல பூப்போல பிறக்கும்
பால் போல பால் போல சிரிக்கும்
மான் போல மான் போல துள்ளும்
தேன் போல இதயத்தை அள்ளும்
மலர் போல சிரிக்கின்ற பிள்ளை
கண்டு மகிழாத உயிரொன்றும் இல்லை
மடி மீது தவழ்கின்ற முல்லை
மழலை சொல் இன்பத்தின் எல்லை
உள்ளாடும் உயிரொன்று கண்டேன்
அவன் உருவத்தை நானென்று காண்பேன்
தள்ளாடி தள்ளாடி வருவான்
தனியாக இன்பத்தை தருவான்.
-
வளர்ந்த்துக்கப்புறம் தான் இருக்கு..டாட் சாம்ஸங்க் எஸ் 5 வாங்கிக் கொடுக்கறயா , இல்லையான்னு இமெய்ல் வர்றச்சே..ம்ம் பாவம் அப்பாக்கள்.. :)
பின்ன வாரேன் :)
vasudevan31355
25th June 2014, 11:15 AM
உடலும் உடலும் சேரும் வாழ்வை உலகம் மறந்தால் என்ன
தினம் ஓடி ஆடி ஓயும் முன்பே உண்மை அறிந்தாலென்ன
உறவுக்கு மேலே சுகம் கிடையாது அணைக்கவே தயாக்கமென்ன
இது ஓட்டைவீடு ஒன்பது வாசல் இதற்குள்ளே ஆசை என்ன
முனிவன் மனமும் மயங்கும் பூமி
மோக வாசல்தானே (சென்சார் என்ன செய்து கொண்டிருந்தார்கள்)
மனம் மூடி மூடி பார்க்கும் போதும் தேடும் பாதைதானே
பாயில் படுத்து நோயில் வீழ்ந்தால் காதல் கானல் நீரே
இது மேடுபள்ளம் தேடும் உள்ளம்
போகும் ஞானத்தேரே
இல்லறம் கேட்டால் துறவறம் பேசும் இதயமே மாறிவிடு
நான் வாழ்ந்து பார்த்து சாய்ந்த தென்னை உன்னை நீ மாற்றிவிடு
விரகதாபம் கொண்ட பெண்ணுக்கும், வாழ்வில் விரக்தி கொண்ட ஒருவனுக்கும் நடக்கும் உணர்ச்சி உரையாடல்கள் கருத்தாழம் மிக்க பாடலாக.
chinnakkannan
25th June 2014, 11:19 AM
இது மாலை நேரத்து மயக்கம் பாட்டு தனியாகக் கேட்டால் வெகு நன்னாயிட்டு இருக்கும்.. வீடியோவில் பார்த்தால் கொஞ்சம் ஆன்மீகத்தில் நாட்டம் வரும் ( வாழ்க்கை வெறுத்து விடும்..) அந்தப் பெண் தனக்குத் தெரிந்த நடிப்பை எல்லாம் கொட்டி ஏவிஎம் ராஜனை செட்யூஸ் பண்ணப் பார்க்க.. இவர் துறவி நிலையில் பாடுவதாக நினைத்து கொஞ்சம் வெறித்த பார்வை வெறித்த நடை என செய்வதாக நினைத்துக் கஷ்டப் பட..பார்க்கும் நமக்கு வரும் உணர்ச்சியை என்னென்று சொல்ல!
abkhlabhi
25th June 2014, 11:26 AM
முன்பே யாராவது பதிவு செய்தார்களா என்று தெரியவில்லை அப்படி பதிவு வந்திருந்தால் மன்னிகவும்.
மீண்டும் ஒரு முறை
வானம்பாடி படத்தில் பல பாடல்கள் இருந்தாலும், இவையெல்லாவற்றையும் தூக்கி சாப்பிடுவது போல...
'கங்கைக்கரை தோட்டம்.. கன்னிப்பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே'
அறுபதுகளில் இலங்கை வானொலியில் கலக்கிய பாடல், 'மாமா'வின் அற்புதமான கைவண்ணம்; கவியரசரின் காலத்தை வென்ற வரிகள்; சுஷீலம்மாவின் இனிய குரல்; தேவிகாவின் முகக்குறிப்பு...........
ஒரு பெண்ணின் காதலை, ஒரு ஆண் பரிபூர்ணமாக, முழு மனதுடன் புரிந்து கொள்ள முடியுமா?
கவியரசர் கண்ணதாசனின் சொற்களைக் கொஞ்சம் கடன் வாங்கினால், முடியும்!
"கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை
கண்ணன் வரும் நாளில், கன்னி இருப்பேனோ" என்ற ஏக்கம், அப்போது நன்றாகவே புரியும்
"கண்ணன் முகத்தோற்றம் கண்டேன்
கண்டவுடன் நாட்டம் கொண்டேன்......
ஆகாகா...இசையரசியின் இனிய குரல் கண்ணனை உருக்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை.
நிஜமாவே சில சமயம் கண்ணிலே நீர் வரும் இந்தப் பாட்டைக் கேட்கும்போது
அதிலும் "கண்ணன் வரும் நாளில், கன்னி இருப்பேனோ.......என்ற கட்டம் மிகவும் உணர்ச்சிகரமானது
இந்தப் பாடலில் ஒவ்வொரு வரியும் அமுதம். இந்தப் பாடலைக் கேட்கும் போது உள்ளம் ஒரு முனைப்பாகி கண்கள் தானே மூடி கண்ணில் நீர் நிறைந்து உருக வைக்கிறது.
"கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை" தொடங்கி எத்தனை எத்தனை அமுத வரிகள். அப்பப்பா.....
கவியரசே கண்ணதாசா நீ வாழ்க, வாழ்க உங்கள் புகழ்.
அருமையான பாடலோடு இசையும் அருமையாகச் சேர்ந்து வந்ததால் காலத்தை வென்ற பாடல்னு சொல்லலாம்
http://www.youtube.com/watch?v=UlocUamrLqQ
abkhlabhi
25th June 2014, 11:34 AM
இந்தப் பதிவை எழுதும் போது கண்கள் தானே மூடி கண்ணில் நீர் நிறைந்து உருக வைக்கிறது. இது நிஜம்
mr_karthik
25th June 2014, 11:41 AM
'இதயக்கமலம்' பாடல்களுக்கொரு படம் என்று சொல்லலாம். கே.வி.மகாதேவன் மாமா அட்டகாசமாகப் பின்னியிருப்பார் (அதனால் இந்த பதிவு கோபால் அவர்களுக்கு சமர்ப்பணம்). இப்படத்தில் இசைக்குயில் பி.சுசீலாவுக்கு மூன்று தனிப்பாடல்கள். இந்தப்பாடல் மற்றும் 'உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல', 'மலர்கள் நனைந்தன பனியாலே' முரசு சேனலின் ஒருபடப்பாடல் தயவால் இப்படத்தின் பாடல்கள் அடிக்கடி காணக்கிடைக்கின்றன. அதில் சுசீலாவின் தேன்சொட்டும் குரலில் ஒரு பாடல். பாடல் காட்சியில் அழகான ஷீலாவும், சுமாரான கே.ஆர்.விஜயாவும் மாறி மாறி தோன்றுவார்கள்.
என்னதான் ரகசியமோ இதயத்திலே - நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே
முதல் இரவு வந்ததும் இன்ப உறவு வந்ததும்
நீ அருகில் வந்ததும் நான் உருகி நின்றதும்
என் கன்னத்தின் மேல் கோலம் போட்டு துடிக்க வைத்ததும்
துடிக்க வைத்ததும் நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
விழி பார்க்கச்சொன்னாலும் மனம் பார்க்க விடாது
மனம் பேசச்சொன்னாலும் வாய்வார்த்தை வராது
அச்சம் பாதி ஆசை பாதி பெண்படும் பாடு நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே...
குளிர் பஞ்சணை மேலே உடல் பள்ளிகொள்ளாது
அது பள்ளிகொண்டாலும் துயில் கொள்ளவிடாது
ஒரு நேரம் கூட ஆசை நெஞ்சம் அமைதி கொள்ளாது
அமைதி கொள்ளாது - நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே...
பேரழகிருந்தென்ன ஒரு ரசிகன் இல்லாமல்
தேன் நிறைந்திருந்தென்ன பொன் வண்டு வராமல்
என்ன பெண்மை என்ன மென்மை இன்பமில்லாமல் - நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே...
எப்போது கேட்டாலும் மனதை அள்ளிக்கொண்டு செல்லும் பாடல். கவியரசர் - திரை இசைத்திலகம் - கானக்குயில் கூட்டணியில் எஸ்.ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அருமையான, அழகான, மென்மையான, மனதை வருடும் இசைத்தென்றல்.
vasudevan31355
25th June 2014, 11:42 AM
லேட்டஸ்ட் உட்டலங்காடி
ஐம்பதிலும் ஆசை வரும் (எனக்கில்லை... ஜோதிலஷ்மிக்கு ஆட):)
abkhlabhi
25th June 2014, 11:43 AM
நடிகர் மற்றும் மக்கள் திலகலுக்கு தனி திரியே இருக்கிறது. எனவே அவர்களுடைய படங்களின் பாடல்களை அவர்களுடைய திரியிலே பதிவு செய்வதால், அங்கே பதிவு செய்யாத / விமர்சிகதா பாடல்களை இங்கே பதிவு செய்யலாமே
chinnakkannan
25th June 2014, 11:46 AM
கங்கைக் கரைத் தோட்டம் பாலாசார், என்னதான் ரகசியமோ இதயத்திலே - கார்த்திக் சார்.. ரெண்டுமே என் மனதைக் கொள்ளை அடித்த பாட்டுக்கள்.. (லிரிக்ஸ், மியூசிக் அண்ட் பிக்சரைசேஷன்) நன்றி..
இப்ப என்ன மனசுல ஓடிக்கிட்டிருக்குதெரியுமா
அம்பலத்து நடராஜா உன் பலத்தை காட்டுதற்கு
என் குலத்தை தேர்ந்தெடுத்ததேனைய்யா
உன் பதமே கதியென்று நம்பியவர் வீட்டிலே
கண் மறைக்கும் விளையாட்டு ஏனைய்யா..!'
பாமாலை அவர் படிக்கப் பூமாலை நான் தொடுக்க
வாழ் நாள் முடிந்ததையா நடராஜா..
அதுக்கப்புறம் வரிகள் கிடைக்கலை.. நான் அந்தப் படமும் பார்த்ததில்லை..நண்பர்கள் அலசலாமே (இந்தாங்க சூப்ப்ர் ரின் பாக்கெட் :) )
gkrishna
25th June 2014, 11:48 AM
பின்வரும் கடிதம் இன்று காலையில் நண்பர் திரு s b காந்தன் (ஜெர்ரி பட டைரக்டர் மற்றும் நடிகர் மௌலியின் சகோதரர் )
அவர்களிடம் இருந்து ஜிமெயில் மூலமாக வந்த ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன்
கண்ணதாசன் ஒரு சகாப்தம்
திரைப்பாடல்களில் ஒருவரியிலேயே திரைக்கதையைச் சுருக்கித் தரும் திறமையும், வளமான சொல்லாட்சியும், வற்றாத கற்பனை ஊற்றும்.. கண்ணதாசன் ஒரு சகாப்தமாக வாழ்ந்தார்.
“ரஸமான தத்துவம், ரஸமானதத்துவம்
ராட்சஸச் சிந்தனைகள்…..”
“சுட்டெரித்தாலிந்த மேனியும் சாம்பலாய்ச்
சுடுகாட்டு மண்ணிலுருளும்
சுவையான பாவலன் போயினான் எனச் சொல்லி
சொந்தமும் வீடுசெல்லும்…”
என்ற மரபு வரிகளிலும்,
“நாயகனைச் சிலை வடிவில் நாட்டி வைத்த சைவர்திருக்
கோயிலுக்குள் நான் போனேன் தோழீ-நிலை
கொள்ளவிலை வநதுவிட்டேன் தோழீ!”
“………………………………………………- இந்தக்
கொக்குக்குத் தேவைதன் கூரிய மூக்கினில்
சிக்கிடும் மீன் மட்டுமே-அதன்
தேவைகள் வாழட்டுமே”
“தோட்டத்திலே தென்னை இரண்டு
முற்றித் திரண்டு
பக்கம் உருண்டு”
போன்ற சிந்து நடையிலும்
“மெத்தைச் சுகத்துக்கும் மேலெழுமோர் வேட்கைக்கும்
தத்தைச் சுகத்துக்கும் தத்தளிக்கும் ஆசைக்கும்..
எத்தைத் தான் நம்புவதோ எதனைத் தான் நாடுவதோ
அங்கொருகால் இங்கொருகால் ஆடும் சிறுமனமே”
போன்ற சுயதரிசனக் கவிதைகளிலும்,
பழுத்த ஆன்மிகவாதியாகத் தன் அர்த்தமுள்ள இந்துமதம் கட்டுரைகளிலும் பலபரிமாணங்களில் மின்னிய கவியரசரை மரியாதையுடன் நினைவு கூர்கிறேன்.
” படகோடு கங்கை குகனாக வேண்டும்
பணிவான ஆசை ரகுராமா”
என்கிற அவர்தம் வைரவரிகளுக்குக் காணிக்கை யாக இந்த ஓவியத்தை சமர்ப்பிக்கிறேன்!
நன்றி
காந்தன்
www.sbkanthan.com
www.sbkanthanblogspot.com
vasudevan31355
25th June 2014, 11:50 AM
நன்றி கார்த்திக் சார்,
நாம் நியாயமாகவே நடக்கிறோம். நடப்போம்.
அருமையான, எனக்கு மிகவும் பிடித்த, என்னுடனேயே (cellil) இருக்கும் 'என்னதான் ரகசியமோ' இதயத்திலே பாடலைப் பற்றி பதித்து மகிழ்ச்சியடைய வைத்துள்ளீர்கள்.
இப்பாடலில் வீடியோ மிக்ஸிங் அவ்வளவு அழகு.
நினைத்தால்
எனக்கே (ஆனந்த) மயக்கம் வரும் சமயத்திலே
சூப்பர் பாடலை அளித்ததற்கு நன்றி!
vasudevan31355
25th June 2014, 11:51 AM
தரிசனம் (1969) (குறு ஆய்வு)
http://www.inbaminge.com/t/d/Dharisanam/folder.jpg
கதையின் நாயகன் ஓவராக செலவு செய்து மனைவி, மக்கள், உற்றார், உறவினர், தாய், சுற்றம் என்று வெறுத்து காசில்லாமல் கடனாளியாகி, வீட்டை விட்டே ஓடி விடுகிறான். வழியில் அவன் சந்திக்கும் பெண் அவனிடத்தில் ஆசை கொண்டு விரகதாபத்தில் பாடுகிறாள். அவன் தான் வாழ்ந்து பார்த்து சாய்ந்த தென்னை என்று அவள் உறவுக்கு மறுத்து சாமியார் ரேஞ்சில் பதில் அளிக்கிறான். இறுதியில் கதாநாயகனைப் போல் தோற்றம் கொண்ட இன்னொருவன் கதாநாயகன் இடத்திற்கு வந்து அவன் கடனையெல்லாம் அடைத்து வாழ்க்கை வாழ்வதற்கே என்று கதாநாயகனுக்குப் புரிய வைக்கிறான் கண்ணியமாக.
இரு வேடங்களிலும் ராஜன். ராஜனின் நாடகக் குழுவால் நாடகமாக நடத்தப்பட்டு திரைப்படமானது.
'கல்யாணமாம் கல்யாணம்' என்ற சென்சாரின் வயற்றில் புளி கரைத்த பாடல் ஒன்று உண்டு
இந்தப் பாடலில்
'காலம் பார்த்து கர்ப்பத்துக்கு தடை விதிச்சாங்க' (சிவப்பு முக்கோணம் சுவர்களில் வரைந்த சமயம்) வரிகள் 'உற்பத்திக்கு தடை விதிச்சாங்க' என்று மாற்றப்பட்டது.
மனோரமா துக்ளக் ஜோடி. மனோரமா சினிமா பாட்டு பிரியை. தொட்டதற்கெல்லாம் சினிமாப் பாடல்கள் பாடி சோவை சித்ரவதை செய்வார். நம்மை அல்ல.
புஷ்பலதா எ.வி.எம்.ராஜனுக்கு ஜோடி. ஸ்ரீகாந்த், சேஷாத்திரி இருப்பார்கள். வி.டி.அரசு இயக்கம்.
சைலஸ்ரீ என்ற அழகான கன்னட நடிகை ஒருவர் இருந்தார். அவர்தான் 'மாலை நேரத்து மயக்கம்' தந்தவர். அழகாக இருப்பார். அப்போது அவருக்கு ஆஷா என்று பெயர். 'பேசும்படம்' புத்தகத்தில் பார்த்திருக்கிறேன்.('வெண்ணிற ஆடை' படத்தில் மூர்த்தியுடன் 'அல்லிப் பந்தல் கால்கள் எடுத்து ஆட்டம் ஆடிட வா' என்று ராட்சஸி குரலில் அட்டகாசமாக ஆடுவாரே அவரேதான்)
ராஜன் வழக்கம் போல. ஆனால் இரு வேடங்கள்.
'அவனவன்' தலையெழுத்து என்ற பாடல் ஒன்றும் உண்டு. ராஜனுக்கு பாடகர் திலகம் பாடுவார். (பைத்தியக்கார தொனிப் பாடல்)
'மாட்டிகிட்டான் மாட்டிகிட்டான்'
'மக்கு மாப்பிள்ளே!
என்று.
அப்புறம் மனோரமா பாடும் 'போகாதே அய்யா போகாதே' சங்கீதப் பாடல் கேட்டு சோ அழுவார். பதிலுக்கு வேறு பாடுவார். புதுக் கோட்டை ரங்கராஜன் என்பவர் சோவுக்கு பின்னணி கொடுத்ததாகப் படித்திருக்கிறேன்.
'உன்னை என்னால் திருத்த முடியாதம்மா'
கண்ணதாசனைப் பற்றி சொல்லவா வேணும்!
சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இசை. 'இது மாலை நேரத்து மயக்கம்' தந்து அந்த ஒரு பாடலில் எங்கேயோ போய் விட்டார்.
எப்படியோ 'தரிசனம்' பற்றி தெரிந்ததை சொல்லியாயிற்று.
gkrishna
25th June 2014, 12:21 PM
கார்த்திக் சார் இன் இதய கமலம் பல நினைவுகளை தூண்டி விட்டது
சுசீலாம்மாவின் ஒரு "மோகனமான" பாட்டு
இது ஒரு வசீகரமான காதல் பாட்டா அல்லது தெய்வீக பாட்டா
எதில் சேர்ப்பது
நடுநடு-ல கண்ணன், முருகன்-ன்னு வருவதால், இது ஏதோ சாமிப் பாட்டு மாதிரி இருக்கும் . ஆனால் இனிய மோகன மெலடி
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி-
பாடலின் துவக்கத்தில் வரும் புல்லாங்குழல் இசை
பாடலின் நடுவில் வரும் மிருதங்க பீட்
மாமா கண்ணதாசன் சுசீலா கூட்டணி
மலர்கள் நனைந்தன பனியாலே!
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே!
பொழுதும் விடிந்தது கதிராலே!
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே!
(மலர்கள் நனைந்தன)
கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்!
இரு கன்னம் குழி விழ நகை செய்தான்!
என்னை நிலாவினில் துயர் செய்தான்!
அதில் எத்தனை எத்தனை சுகம் வைத்தான்!
சேர்ந்து மகிழ்ந்து போராடி!
தலை சீவி முடித்தே நீராடி!
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி!
பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி!
(மலர்கள் நனைந்தன)
இறைவன் முருகன் திருவீட்டில்,
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி,
உயிரெனும் காதல் நெய்யூற்றி,
உன்னோடிருப்பேன் மலரடி போற்றி!
(மலர்கள் நனைந்தன)
ரவியின் இளமை துள்ளல் வளைந்த நடையை இரண்டாவது சரணத்தில் அருமையாக படம் பிடித்து இருப்பார்கள்
gkrishna
25th June 2014, 12:23 PM
வாசு சார்
தரிசனம் குறு ஆய்வு அருமை
chinnakkannan
25th June 2014, 12:36 PM
தோள் கண்டேன் தோளே கண்டேன்..விட்டுட்டீங்களே..
தேடிவந்த திங்கள் திங்களில் செவ்வாய்
செவ்வாயில் வெள்ளி சேர்த்தணைப்பேன் கையில் அள்ளி
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல..
ம்ம்
ஏதோ வங்க/ஒரிய மொழிப் படத்திலிருந்து தழுவி எடுத்த படம் என நாகிரெட்டியாரோ யாரோ எழுதியதைப் படித்த நினைவு..
ஒரு கோர்ட்
ஒரு ஃப்ளாஷ்பேக்
ஒரு அழுகை
ஒரு கோர்ட் சீன்
என ஏதோ ஒரு விமர்சனத்திலும் படித்த நினைவு.. கே.ஆர்.வி யின் இரண்டாவது படம்..ஏதோ ஒரு சிலை போல வைத்து அது தான் கே.ஆர்.வி என்று பூஜையெல்லாம் செய்வார்கள்..
சமீபத்தில் கலைஞர் டிவியில் - மேபி ஆறுமாதத்திற்குள் பார்த்த படம்..என்ன தான் ரகசியமோ இதயத்திலே..ஷீலுவோன்னோ..
chinnakkannan
25th June 2014, 12:37 PM
தரிசனம் பற்றிய தகவல்களுக்கு நன்றி வாசு சார்..பாட்ட மட்டும் பார்த்துட்டு ஒதுங்கிக்கறது பெஸ்ட் நு நினைக்கறேன்..
vasudevan31355
25th June 2014, 12:47 PM
சின்னக் கண்ணன் சார்!
ரின் பாக்கெட்டா தர்றீங்க! ரின் பாக்கெட்!:)
மீதி இந்தாங்க 'கண்மலர்' படத்திலிருந்து.
http://www.inbaminge.com/t/k/Kanmalar/folder.jpg
அம்பலத்து நடராஜா உன் பலத்தை காட்டுதற்கு
என் குலத்தை தேர்ந்தெடுத்ததேனைய்யா
உன் பதமே கதியென்று நம்பியவர் வீட்டிலே
கண் மறைக்கும் விளையாட்டு ஏனைய்யா
பாமாலை அவர் படிக்கப் பூமாலை நான் தொடுக்க
வாழ் நாள் நடந்ததையா நடராஜா..
இன்று பூமாலையோடு ஒரு பாமாலையும் படிக்க
நானாக நிற்பதென்ன நடராஜா
பாலோடு சங்கெடுத்து தாயூட்ட வரும் போது
பாலும் முறிந்ததென்ன நடராஜா
பார்வை தெரிந்ததென்று பாவை வரும் போது
தீபம் அணைந்ததென்ன நடராஜா
உன் சேவை செய்ததற்கு தன் சேவை தான் மறந்த
உயிரைப் பறிப்பதென்ன நடராஜா
தந்தை பன்னீர் கொடுத்ததற்கு பதிலாக
நீ எனக்கு கண்ணீர் கொடுத்ததென்ன நடராஜா
பாமாலை அவர் படிக்கப் பூமாலை நான் தொடுக்க
வாழ் நாள் நடந்ததையா நடராஜா
ரகளை பாட்டு. பாலமுரளியும், ஜானகியும் மனசப் பிழிஞ்சுடுவாங்க.
நடித்தது உங்க சரோஜாதேவியும்:),சாமியாருக்குன்னே பிறந்த நாகைய்யாவும்:).
ஓகேயா!
சரி! நான் ஆபிசுக்கு கிளம்புற நேரம் வந்தாச்சு!:) பார்த்துக்கோங்க.:)
எப்படியோ நல்லா இருங்க :):)
abkhlabhi
25th June 2014, 12:49 PM
Chinna Kannan sir,
http://moganaraagam.blogspot.com/2011/01/blog-post_06.html
gkrishna
25th June 2014, 01:23 PM
கார்த்திக் சார்
நம்ம NT பாட்டு ஒண்னு சார் இளையராஜாவின் மோகன மெலடி
நான் வாழ வைப்பேன்
அசோகா brothers
யோகானந்த் direction
இந்த படத்தை பற்றி விகடன் விமர்சனம் நல்ல நினைவு
சிவாஜி படம் ஆரம்பித்து அரை மணி நேரம் ஆகியும் .. ரஜினி வந்தாரோ பொழைததோ
(எனுடைய வோர்டிங்க்ஸ் மாறி இருக்கலாம் விகடன் சொல்ல வந்த கருத்து இதுனு நினைவு )
சமீபத்தில் தந்தியில் ஆரூர் தாஸ் அவர்களும் சற்று கோடிட்டு இருந்தார்கள் இந்த படத்தை பற்றி
ஆனால் பாட்டு ஒவ்வொன்னும் மணி மணியாக இருக்கும்
அதிலும் இந்த டூயட் கண்ணை மூடிட்டு கேட்டிங்கனா
பாலா சிவாஜி சாருக்கும் சுசீலா விஜயா அம்மாவுக்கும் அப்படியே பொருந்தும் .
ராஜாவின் ஸ்டார்டிங் பீட் prelude கிடார் violin தபேல
பௌர்ணமி இரவில் சாரை பாம்பு பின்னியது போல் பிணைந்து
//தாலாட்டு கேட்கின்ற மழலை இது..
தண்டோடு தாமரை ஆடுது..
சம்பங்கி பூக்களின் வாசம் இது..
சங்கீத பொன் மழை தூவுது..
ராகங்களின் மோஹனம்..
மேஹங்களின் நாடகம்..
உன் கண்கள் எழுதிய காவியம்..
என் இதய மேடைதனில் அறங்கேற்றம்.//
என்ன இந்த பாட்டு எல்லாம் நம் தலைவர் கொஞ்சம் ஸ்லிம் ஆக இருந்த போது வந்து இருந்தா செம ரகளை தான்
தலைவராவது பரவாயில்லை விஜயாம்மா தான் பெல்லஸ் மிடி maxi னு தன்னுடைய ஆசை எல்லாம் நிறைவேற்றி (கொல்லுவார்கள்)
மற்ற பாடல்களையும் அலசுவோம்
chinnakkannan
25th June 2014, 02:34 PM
கிருஷ்ணா சார்.. அதுசரி திருத்தேரில் வரும் சிலையோன்னு ஆரம்ப வரி எழுதலைன்னா கண்டுபிடிக்க மாட்டோமா என்ன நல்ல பாட்டு தான்..ஆனா கே.ஆர்.வி தான் ஏதோ ஊர்பேர் தெரியாத காய்ச்சல்ல விழுந்து எழுந்த மாதிரி ஒல்லியா இளைச்சமாதிரி இருப்பாங்க..சொன்னாற்போல காஸ்ட்யூம் தான் கண்ணுக்கு க் கஷ்டம்..
வாசுசார்.. நன்றி ஃபர்த லிரிக்ஸ்..ரொம்ப்ப்ப பிடிச்ச ப்பாட்டு இது.. அது என்ன உங்க சரோஜாதேவி..ம்ம்(நி நி மெளலி மாதிரி.. ஏதோ ஆசைப்படறீங்க :) )
பாலா சார்.. நன்றி இணைப்பிற்கு..வீட்டிற்குப்போய்த்தான் பார்க்கணும் :)
abkhlabhi
25th June 2014, 03:18 PM
ஒரு அழகான பாடல்.
பாடலின் விசேஷமே பாடல் என்று எந்த வரிகளுமில்லாததுதான்!. ஸ்வரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு "நிவேதா" என்ற ஒற்றை வார்த்தையைக் கொண்டு ஒரு பாடல் என்று சொன்னால் நம்புவதற்கு வேண்டுமானால் கஷ்டமாக இருக்கலாம். கேட்பதற்கு - சான்ஸே இல்லை :
இம்மாதிரிப் பாடல்களைக் கேட்கவைக்க வேண்டுமென்றால் குரலில் தேனொழுக வேண்டும். இருக்கவே இருக்கிறார் பாலு. வெளுத்து வாங்கிவிட்டுப் போயிருக்கிறார். மரகதமணியும் (மணிஷர்மா-தெலுகிங்கில்) பாலுவும் சேர்ந்து கொண்டு நமக்கு விளையாட்டு காட்டியிருக்கிறார்கள். ஆ... இன்னொரு முக்கிய ஆளும் விளையாட்டுக் காட்டியிருக்கிறார் - அவர் ஒளிப்பதிவாளர். ஒரே ஒரு பாடலுக்கு இவ்வளவு அதிகமான காட்சிகள் அமைக்கப்பட்ட பாடல் இதுவாகத்தானிருக்கும். சில நொடிகளே நீடிக்கும் ஏகப்பட்ட "கட் ஷாட்"கள். அழகான விளம்பரப் படம் போல வர்ணமயமாக பலவித உடைகளில் ரகுமானும் கெளதமியும் வருவார்கள் - இயல்பான செய்கைகளுடன்.
ஸ்வரங்களை அழகாகப் பாடியது போதாதென்று "நிவேதா"வைக் குழைத்துக் குழைத்து பாலு பாடியிருக்கிறார் பாருங்கள்.
இந்த பாடலின் வீடியோ இணைப்பு
http://www.youtube.com/watch?v=4cyZq1uvm7Y
gkrishna
25th June 2014, 03:24 PM
bala sir
மிக நல்ல பாடல்களை நினவு கொண்டு வந்து உள்ளீர்கள்
கேளடி கண்மணி வெற்றிக்கு பிறகு வசந்த் கொடுத்த படம்
நீ பாதி நான் பாதி
படம் பாதி தான்
gkrishna
25th June 2014, 03:25 PM
1982 இல் வெளிவந்த தணியாத தாகம்
ஒரு தலை ராகம் எ ம் இப்ராகிம் direction
மன்சூர் creations
மியூசிக் டைரக்டர் எ எ ராஜ்
ஒரு தலை ராகம் படம் வந்த போது ராஜேந்தருக்கும் இப்ராஹிம்கும்
ஒரு தலை ராகம் வெற்றிக்கு யார் காரணம்னு சண்டை வந்து
ராஜேந்தர் அவர் வழியில் வசந்த அழைப்புகள்,ரயில் பயணங்களில் ,
ராகம் தேடும் பல்லவி,நெஞ்சில் ஒரு ராகம் னு படமா எடுத்துட்டு இருந்தார்.
அப்ப இந்த எ ம் இப்ராகிம் தயாரித்து இயக்கி வெளிவந்த படம்
டெல்லி கணேஷ் சுபத்ரானு ஒரு புது முகம்
ஒரு தலை ராகம் படத்தில் ரூபாவின் பெயர் சுபத்ரா
மலேசியா ஜானகி
ஜானகியின் சிரிப்பு சிலிர்ப்பு
பூவே …நீ ...
யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் .. புது மலர்
பூவே …நீ ...
யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் .. புது மலர்
(பூவே)
நீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ
நான் ...
என் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ
(நீ கோவில் )
என் தேவன் தேர் ஏறி வருகின்றான்
என் தேவன் தேர் ஏறி வருகின்றான்
புன்னகையில் உன்னை அள்ளி தருகின்றான்
(பூவே )
கோவில் கலசம் போல் என் தேவி
ஆஹ (ஜானகி யின் சிலிர்ப்பு )
இவள் கூந்தலில் ஆடிடும் உன் மேனி
(கோவில்)
பூவிலும் பூ அவள் பொன் மேனி
(ஜானகியின் சிரிப்பு)
பூவிலும் பூ அவள் பொன் மேனி
இவள் புது உடல் தழுவிடும் என் மேனி
(பூவே)
மாங்கனி இளந்தென்றல் தாலாட்டு
என் மைவிழி மயங்கிட சீராட்டு
(மலேசியவின் சிரிப்பு)
பூப்போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு
(ஜானகியின் சிரிப்பு)
பூப்போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு
இவள் பொன்னுடல் சிவக்கட்டும்
என் கரம் பட்டு
அஹ (மீண்டும் ஜானகியின் சிலிர்ப்பு )
(பூவே)
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் ..
புது மலர் புது மலர் ..
“””
gkrishna
25th June 2014, 03:27 PM
indha paatukku link
http://www.inbaminge.com/t/hits/Pengalukku%20Piditha%20Paadalgalo/Poove%20Nee%20Yaar%20Solli.eng.html
abkhlabhi
25th June 2014, 03:45 PM
பாலுவின் ஆரம்ப கால பாடல்
http://www.youtube.com/watch?v=BaIoBpgkb4Q
chinnakkannan
25th June 2014, 03:47 PM
//பாடலின் விசேஷமே பாடல் என்று எந்த வரிகளுமில்லாததுதான்!. ஸ்வரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு "நிவேதா" என்ற ஒற்றை வார்த்தையைக் கொண்டு ஒரு பாடல் என்று சொன்னால் நம்புவதற்கு வேண்டுமானால் கஷ்டமாக இருக்கலாம். கேட்பதற்கு - சான்ஸே இல்லை :// என் நண்பர் ஒருவர் பல வருடங்களுக்குமுன் கல்யாணமான புதிதில் பார்த்தபடம் இந்தப் படமாம்..பின் பிறந்த குழந்தைக்கு வைத்த பெயர் நிவேதா
நல்ல பாட்டு..வீட்டிற்குப் போய் பார்க்கிறேன்..
abkhlabhi
25th June 2014, 06:06 PM
இன்று இரவு தூக்கம் கிடையாது........
எத்தனைமுறை கேட்டாலும் சலிப்பதில்லை
பெண் ஒன்று கண்டேன் படத்தில் நாயகியை நாயகன் ராகமாலிகையாய் கற்பனை செய்யும் பாடல்
"நீ ஒரு ராகமாலிகை என் நெஞ்சம் ஒரு காதல் மாளிகை............
எல்லா வரிகளிலும் ஒரு ராகத்தின் பெயரை சொல்லும் கவிதை
ராகத்தின் பெயர்களை பிரித்து பொருள் கொண்டு நாயகன் நாயகியை பாடும் வரிகள் செய்யும் வித்தை நயம்.
எழுதியவர் கண்னதாசனா ? வாலியா ?
"உன் மைவிழி ஆனந்த பைரவி பாடும்
உன் தேகத்தில் மோஹன ராகத்தின் பாவம்
உன் இளநடை மலயமாருதம் ஆகும்
உன் மலர் முகம் சாரமதியென கூறும்
நீ ஒரு ராகமாலிகை
உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
நீ ஒரு ராகமாலிகை
நீ உறவுக்கு உதவிடும் சரசாங்கி
இன்ப கலைகளை விளக்கிடும் சரஸ்வதி
நீ உறவுக்கு உதவிடும் சரசாங்கி
இன்ப கலைகளை விளக்கிடும் சரஸ்வதி
குரல்வழி பிறந்தது அம்சத்வனி
உன் குரல்வழி பிறந்தது அம்சத்வனி
உன் தாலாட்டில் விளைந்தது நீலாம்பரி
நீ ஒரு ராகமாலிகை
உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
நீ ஒரு ராகமாலிகை
நான் வாவனெ அழைக்கையில்
விரைந்தோடி வந்து தழுவிடும் தேவமனோஹரி
ஆரபிமானமும் தேவையில்லை
இந்த அகிலத்தில் உன்போல் பாவையில்லை
நீ ஒரு ராகமாலிகை
உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
நீ ஒரு ராகமாலிகை
நீ எனக்கே தாரம் என்றிருக்க
உனை என் வசம் தாவென நான் கேட்டேன்
நீ எனக்கே தாரம் என்றிருக்க
உனை என் வசம் தாவென நான் கேட்டேன்
என் நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்சனியே
நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்சனியே
இந்த நாயகன் தேடிடும் நாயகியே
நீ ஒரு ராகமாலிகை
உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
நீ ஒரு ராகமாலிகை"
chinnakkannan
25th June 2014, 06:24 PM
//http://4varinote.wordpress.com/category/ulunthurppettai-shanmugam/ // பாலா சார்..இந்த இடத்தில் இந்தப் பாட்டு கண்ணதாசன்னு எழுதியிருக்கு.. ஆனா அழகான பாடல் .. ரிமைண்ட் பண்ணினதுக்கு நன்றி..
mr_karthik
25th June 2014, 06:29 PM
டியர் கிருஷ்ணாஜி,
'தணியாத தாகம்' படம் பிரபாத்தில் மேட்னி பார்த்தது. தலைவலி வந்துவிட்டது. இப்படத்துக்கு குமுதம் எழுதிய விமர்சனத்தில் 'ஒருதலைராகம் வெற்றியடைந்தது டி.ராஜேந்தரால்தான்' என்று இப்ராகிம் வாயால் சொன்னால் நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோமா?. அதற்கு இப்படி ஒரு படத்தை எடுத்துத்தான் நிரூபிக்கனுமா?' என்று எழுதி இருந்தனர்.
mr_karthik
25th June 2014, 06:36 PM
டியர் பாலா சார்,
'தொடுவதென்ன தென்றலோ மலர்களோ' பாடல் வீடியோவுக்கு நன்றி.
சபதம் படத்தில் ஜி.கே.வெங்கடேஷ் இசையில் மனதைக்கொள்ளை கொள்ளும் பாடல். 1971-ல் விவித் பாரதியில் கலக்கியெடுத்த பாடல்களில் ஒன்று.
mr_karthik
25th June 2014, 06:49 PM
மயங்குகிறாள் ஒரு மாது
எஸ்.பி.முத்துராமன் இயக்கிய உருப்படியான படங்களில் ஒன்று. (என்றைக்கு ஏ.வி.எம்.ம்முக்குள் நுழைந்தாரோ அப்பவே மசாலா இயக்குனராகிவிட்டார்).
மணிமணியான பாடல்கள்...... (இசை விஜயபாஸ்கர்...??)
பாலாவின் கொஞ்சும் குரலில்..
'சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை'
ஜெயச்சந்திரனின் மயக்கும் குரலில்...
'வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம் - அது
தரவேண்டும் அடையாளச்சின்னம்'
வாணியம்மாவின் தேன் குரலில்....
'ஒருபுறம் வேடன் மறுபுறம் நாகம்
இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான்'
சுஜாதா, முத்துராமன், விஜயகுமார், தேங்காய், படாபட் ஆகியோருக்கிடையே நடிப்புப்போட்டி. தேங்காயின் வில்லத்தனம், விஜயகுமார் மற்றும் சுஜாதாவின் தவிப்பு, முத்துராமனின் அடக்கம் + கண்ணியம்.
மொத்தத்தில் ஒரு கருப்பு வெள்ளை ஓவியம்.
gkrishna
25th June 2014, 07:12 PM
மயங்குகிறாள் ஒரு மாது
எஸ்.பி.முத்துராமன் இயக்கிய உருப்படியான படங்களில் ஒன்று. (என்றைக்கு ஏ.வி.எம்.ம்முக்குள் நுழைந்தாரோ அப்பவே மசாலா இயக்குனராகிவிட்டார்).
மணிமணியான பாடல்கள்...... (இசை விஜயபாஸ்கர்...??)
ஜெயச்சந்திரனின் மயக்கும் குரலில்...
'வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம் - அது
தரவேண்டும் அடையாளச்சின்னம்'
வாணியம்மாவின் தேன் குரலில்....
'ஒருபுறம் வேடன் மறுபுறம் நாகம்
இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான்'
சுஜாதா, முத்துராமன், விஜயகுமார், தேங்காய், படாபட் ஆகியோருக்கிடையே நடிப்புப்போட்டி. தேங்காயின் வில்லத்தனம், விஜயகுமார் மற்றும் சுஜாதாவின் தவிப்பு, முத்துராமனின் அடக்கம் + கண்ணியம்.
மொத்தத்தில் ஒரு கருப்பு வெள்ளை ஓவியம்.
வர வேண்டும் வாழ்கையில் வசந்தம்
பாடல் ஜேசுதாஸ் பாடியதாக நினவு கார்த்திக் சார்
இந்த பாட்டு அடிகடி சன் மியூசிக் இல் முன்னர் இரவு நேர பாடல்களஆக வைத்து கொண்டு இருந்தனர்
திடீர் என்று ஜேசுதாஸ் இன் குரல் சுருதி விலகி மாறி படும்
விடியோ problem ஆ அல்லது படத்திலேயே அப்படியா
தெரியவில்லை
இது ஒரு புதுமை புரட்சி படைப்பு
திருமணத்திற்கு முன் கதாநாயகி சோரம் போவது போல்
பிறகு அவளுக்கு கதாநாயகன் வாழ்கை கொடுப்பது போலவும்
அவளின் முன்னாள் காதலன் அவர்கள் வீட்டிலேயே டிரைவர் ஆக வேலைக்கு சேர்வதும் இது தெரிந்து தேங்காய் blackmail செய்வது போலவும்
மிக நல்ல படைப்பு
நீங்கள் சொன்னது போல் spm 80 களுக்கு பின் தான் மசாலா இயக்குனர் ஆகி விட்டார்
gkrishna
25th June 2014, 07:13 PM
தணியாத தாகம் படம் வெறும் குப்பை சார்
இந்த பாடல் மட்டும் நல்ல பாடல் என்று சொன்னேன்
gkrishna
25th June 2014, 07:54 PM
ஒரு ஊதா பூ கண் சிமிட்டுகிறது 1976
புஷ்பா தங்கதுரை கதை
கமல் விஜயகுமார் சுஜாதா நடித்து sp முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த நினவு
சுஜாதா கமலை காதலித்து ஆனால் காதல் கை கூடாமல் விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டு கமலை மறக்க முடியாமல் தவிப்பார்
கமலும் அதே நிலை தான். திருமணதிருக்கு பிறகு ஒரு நாள் கமலும் சுஜாதாவும் ஒரு நாள் சேர்ந்து வாழ விஜயகுமார் அனுமதிப்பது போல் எல்லாம் காட்சி வரும். இதெல்லாம் அந்த 1976 காலகட்டத்தில் பயங்கர புதுமை
சாமி தக்ஷினமுர்த்தி (இளையராஜா குரு ) இசை
டி கே கலா குரலில்
"முறுக்கு கை முறுக்கு ஏழை எளியவர் வாழ வழி செய்யும் முறுக்கு "
marina பீச் இல் பாடும் பாடல்
பாடகர் திலகம் வாணி குரல்களில்
"ஆண்டவன் இல்லா உலகம் எது
ஆசைகள் இல்லா உலகம் எது
நதி இருந்தால் நீர் இருக்கும் "
அருமையான பாடல் .மீனவர்கள் கட்டுமரம் அலுப்பு தெரியாமல்
இருப்பதற்காக பாடும் காட்சி அமைப்பு
ஜேசுதாஸ் குரலில்
"நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க
தேன் கனி போல்
வான் மழை போல்
சிறந்து என்றும் வாழ்க "
மணவாழ்க்கை அமைவதற்கோ மனைவி வாயக்க வேண்டும்
குலமகளாய் பிறப்பதற்கோ கொடுத்து வைக்க வேண்டும்
அருமைகளும் பெருமைகளும் நிறைந்தது தான் இன்பம்
நீ அதனையும் பெற்று விட்டாய் ஆனந்தமாய் வாழ்க
அருமையான வாழ்த்து பாடல்
RAGHAVENDRA
26th June 2014, 08:58 AM
அன்னக்கிளி மூலம் தமிழ்த்திரையுலகை இளையராஜா ஒரு கலக்குக் கலக்கிய அதே 1976ம் ஆண்டு சங்கர் கணேஷ் தங்கள் பாடல்கள் மூலம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தார்கள். குறிப்பாக தமிழ் ரசிகர்களுக்கு அவர்களின் பல பாடல்களை கொண்டு சேர்த்த பெருமை சிலோன் ரேடியோவைத் தான் சேரும். அந்த ஆண்டு வந்த இன்ஸ்பெக்டர் மனைவி படத்தில் இடம் பெற்ற மீனாட்சி கோவில் கொண்ட மணி ஓசை பாடல் கிட்டத்த்ட்ட அன்றாடம் ஒலிபரப்பப் படும். அதே படத்தில் இடம் பெற்ற இந்த பாடலும் அதே போல ஹிட்டான பாடல்.
இளமையின் உறவிலே என்ன சுகம்... ஜெயச்சந்திரன் பி.சுசீலா பாடிய இப்பாடல் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது. கேளுங்கள்
http://www.inbaminge.com/t/i/Inspector%20Manaivi/
RAGHAVENDRA
26th June 2014, 09:01 AM
ஏ.எம். ராஜா பாடிய இந்தப் பாடலும் சிலோன் ரேடியோவின் புண்ணியத்தால் சூப்பர் ஹிட்டான பாடல். இது இவர்களின் கதை திரைப்படப் பாடல்கள் குறிப்பாக இந்த ஆனந்த இல்லம் பாடல் நம் எல்லோர் மனதையும் கொள்ளை கொள்ளும் பாடல்
http://www.inbaminge.com/t/i/Ithu%20Ivargalin%20Kathai/
RAGHAVENDRA
26th June 2014, 09:05 AM
இன்றைய பொழுதை இனிமையாகக் கழிக்க உதவுகிறார் மெல்லிசை மாமணி வி.குமார். கணவன் மனைவி திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடலும் அவருடைய சிறந்த இனிமையான படைப்புகளுக்கு ஒரு அத்தாட்சி.
பாடகர் திலகம் டி.எம்.எஸ். கண்ணிய பாடகி சுசீலா இணையான குரலில் முத்துரமானும் ஜெயலலிதாவும் நடித்த இப்படத்தை இயக்கியவர் ஏ.பீம்சிங் அவர்கள்.
http://youtu.be/32yDjjhjHec
RAGHAVENDRA
26th June 2014, 09:08 AM
http://youtu.be/O3C1dMXxPjg
யோகேஷ் இயற்றி ஜெய்தேவ் இசையமைத்து லதா மங்கேஷ்கர் பாடி பிரேம் பர்பத் ஹிந்திப் படத்தில் இடம் பெற்ற பிரபலமான பாடலை நினைவூட்டும் ரிதம் அமைப்பில் மெல்லிசை மாமணி வி.குமார் இசையமைத்த இப்பாடல் தமிழ்த் திரையுலகில் என்றும் சிரஞ்சீவியாய் நிலைத்து நிற்கும். மிட்டாய் மம்மி என்ற பெயரில் தயாராகி பின்னர் தெய்வம் தந்த வீடு என்ற பெயரில் வெளிவந்த இப்படம், தமிழகத்தில் முதல் வெளியீட்டில் ஒரு திரையரங்கில் ஒரே நாளில் திரையரங்கிலிருந்து தூக்கப் பட்டது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் இப்பாடலை நம் மனதில் இருந்து எந்நாளும் தூக்க முடியாது.
mr_karthik
26th June 2014, 10:28 AM
'ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது' படத்தப் பற்றி சொல்லும்போது கூடவே நினைவுக்கு வரும் படம் 'நந்தா என் நிலா'.
இதுவும் புஷ்பா தங்கதுரை கதைதான். பாடல்கள் அனைத்தும் இனிமை.
அதிலும் டாப்கிளாஸ் பாடல் எஸ்.பி.பாலாவின் கொஞ்சும் குரலில்...
நந்தா நீ என் நிலா.. நிலா...
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ வா...ஆ....ஆ..
பாடல் போட்டிகளில் கலந்துகொள்வோர் பெரும்பாலும் தேர்ந்தெடுத்து பாடும் பாடல் இது.
parthasarathy
26th June 2014, 10:32 AM
நண்பர்களே,
நடிப்புச் சுடர் - ஏவிஎம் ராஜனை 5000 சிவாஜி என்று நான் தான் கிண்டலடித்தேன். நினைப்பு தான் பிழைப்பைக் கெடுக்கும் என்பார்கள். நினைப்பு இருந்து என்ன செய்வது? இவர் பரவாயில்லை. இந்த விஜய குமாரின் அலம்பல் இருக்கிறதே - குறிப்பாக - "ஆஹா" படத்தில்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
gkrishna
26th June 2014, 10:38 AM
'ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது' படத்தப் பற்றி சொல்லும்போது கூடவே நினைவுக்கு வரும் படம் 'நந்தா என் நிலா'.
நன்றி கார்த்திக் சார்
நந்தா நீ என் நிலா பாடலும் அருமையான பாடல்
இந்த பாடலை பற்றி நிறைய எழுத வேண்டும் என்று ஆசை
இந்த படத்தில் ஜெயச்சந்திரன் குரலில்
"ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாலும் "
என்று ஒரு பாடல் உண்டு
சிலோன் ரேடியோ ஹிட் சாங்
இந்த திரைப்படம் எ.ஜெகநாதன் direction என்று நினைக்கிறன்
ஒரு ஊதபூ அளவுக்கு ஹிட் இல்லை என்று நினவு
parthasarathy
26th June 2014, 10:42 AM
நன்றி கார்த்திக் சார்,
நாம் நியாயமாகவே நடக்கிறோம். நடப்போம்.
அருமையான, எனக்கு மிகவும் பிடித்த, என்னுடனேயே (cellil) இருக்கும் 'என்னதான் ரகசியமோ' இதயத்திலே பாடலைப் பற்றி பதித்து மகிழ்ச்சியடைய வைத்துள்ளீர்கள்.
இப்பாடலில் வீடியோ மிக்ஸிங் அவ்வளவு அழகு.
நினைத்தால்
எனக்கே (ஆனந்த) மயக்கம் வரும் சமயத்திலே
சூப்பர் பாடலை அளித்ததற்கு நன்றி!
அற்புதம்,
அதிலும், அந்த இரண்டாது (சரியா?) சரணத்தில், "முதல் இரவு வந்ததும், அந்த உறவு வந்ததும், நீ அருகில் வந்ததும் (இங்கு ஒரு குழைவு சுசீலாஆஆஆ!) நான் உருகி நின்றதும்" இந்த இடங்கள்.
தமிழில், பல படங்கள், - மற்ற மொழிகளில் இருந்து, ரீமேக் செய்யப்பட்டபோது, அசலை விட, பெரிதாக சாதித்திருக்கின்றன.
நடிப்பில், படைப்பில், இசையமைப்பில். எங்க மாமா (ஹிந்தி பிரம்மச்சாரி), ராஜா (ஹிந்தி ஜானி மேரா நாம்), வசந்த மாளிகை (தெலுங்கு ப்ரேம நகர்), அவன் தான் மனிதன் (கன்னடம் கஸ்தூரி நிவாசா), எங்க வீட்டுப் பிள்ளை (தெலுங்கு ராமுடு பீமுடு), இதயக்கமலம் (ஹிந்தி மேரா சாயா) போன்றவை சில உதாரணங்கள்.
ஹிந்தி மேரா சாயாவை விட, தமிழ் இதயக் கமலம் எல்லா வகையிலும் மேம்பட்டது. குறிப்பாக, இசை - அசல், மதன் மோகன் பெரிய இசையமைப்பாளர் என்ற போதிலும், அந்த சாயல் கொஞ்சம் கூட வராமல், ஒவ்வொரு பாடலிலும், திரை இசைத் திலகம் முந்தியது, ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
parthasarathy
26th June 2014, 10:43 AM
http://youtu.be/O3C1dMXxPjg
யோகேஷ் இயற்றி ஜெய்தேவ் இசையமைத்து லதா மங்கேஷ்கர் பாடி பிரேம் பர்பத் ஹிந்திப் படத்தில் இடம் பெற்ற பிரபலமான பாடலை நினைவூட்டும் ரிதம் அமைப்பில் மெல்லிசை மாமணி வி.குமார் இசையமைத்த இப்பாடல் தமிழ்த் திரையுலகில் என்றும் சிரஞ்சீவியாய் நிலைத்து நிற்கும். மிட்டாய் மம்மி என்ற பெயரில் தயாராகி பின்னர் தெய்வம் தந்த வீடு என்ற பெயரில் வெளிவந்த இப்படம், தமிழகத்தில் முதல் வெளியீட்டில் ஒரு திரையரங்கில் ஒரே நாளில் திரையரங்கிலிருந்து தூக்கப் பட்டது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் இப்பாடலை நம் மனதில் இருந்து எந்நாளும் தூக்க முடியாது.
Yes, Raghavendar Sir. It was "Wellington".
Regards,
R. Parthasarathy
gkrishna
26th June 2014, 10:48 AM
வேந்தர் சார்
மிட்டாய் மம்மி பற்றி நினவு படுத்தி விட்டீர்கள்
அவினாசி மணி direction என்று நினவு
ஜெய்ஷங்கர் கே ஆர் விஜயா நடித்து வெளி வந்தது
இதே நேரத்தில் "கியாஸ் லைட் மங்கம்மா " என்று ஒரு படம் 1977
ஜெய்ஷங்கர் கே ஆர் விஜயா நடித்து வெளி வந்தது
இதற்கு இசை மெல்லிசை மன்னர் என்று நினவு
ஜேசுதாஸ் வாணி ஜெயராம் குரலில்
"காதல் தெய்வம் கண்டேன் நான் சரணம் சரணம்
என் காதல் தெய்வம் கண்டேன் பக்கம் வரணும் "
ஒரு அருமையான பாடல்
parthasarathy
26th June 2014, 11:04 AM
தோள் கண்டேன் தோளே கண்டேன்..விட்டுட்டீங்களே..
தேடிவந்த திங்கள் திங்களில் செவ்வாய்
செவ்வாயில் வெள்ளி சேர்த்தணைப்பேன் கையில் அள்ளி
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல..
ம்ம்
ஏதோ வங்க/ஒரிய மொழிப் படத்திலிருந்து தழுவி எடுத்த படம் என நாகிரெட்டியாரோ யாரோ எழுதியதைப் படித்த நினைவு..
ஒரு கோர்ட்
ஒரு ஃப்ளாஷ்பேக்
ஒரு அழுகை
ஒரு கோர்ட் சீன்
என ஏதோ ஒரு விமர்சனத்திலும் படித்த நினைவு.. கே.ஆர்.வி யின் இரண்டாவது படம்..ஏதோ ஒரு சிலை போல வைத்து அது தான் கே.ஆர்.வி என்று பூஜையெல்லாம் செய்வார்கள்..
சமீபத்தில் கலைஞர் டிவியில் - மேபி ஆறுமாதத்திற்குள் பார்த்த படம்..என்ன தான் ரகசியமோ இதயத்திலே..ஷீலுவோன்னோ..
ck,
உங்களின் அதியற்புதத் தமிழுக்கு, அந்த நடைக்கு, நகைச்சுவைக்கு நான் ரசிகன்.
கண்ணதாசன். என்றென்றும், நடிகர் திலகத்திற்குப் பின், குடி கொண்டிருக்கும் கவிஞன்/கலைஞன்.
1980-83, ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருக்கும் போது, அவர் மேல் மோகம் அதிகமாகியது - நிழலின் அருமை வெய்யிலில் தெரிந்ததால்.
தமிழ் மொழியின், ஆதி, வளர்ச்சி இவைகளை - ஒரே வரியில் சொல்லிய மாமேதை - "வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே" என்று.
ஒரே நேரத்தில், நடிகர் திலகத்தையும், கவியரசரையும் (ஒரே கவியரசு தான்!) பற்றி பெரிய ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி, முடியும் தருவாயில், ஒரு சிறு தீ விபத்தில், மொத்தமும் அழிந்து போயின. ஆனால், என்றும் என் நினைவில் இருக்கும் - நேரம் கிடைக்கும் போது, வந்து விழுகின்றன - இப்படி எல்லாம்.
நிற்க.
இதயக் கமலம் கேயார்வியின் இரண்டாவது படம் அல்ல. கற்பகம் முதல் படம் எல்லோரும் அறிந்தது - 1963-இல் வந்தது. இதயக் கமலம் - 1965-இல் வந்தது. மூலம் - "பாத்லாக்" என்னும் மராத்தி படம் - தமிழில் 1965-இல் எல்.வி. பிரசாத் தயாரிப்பில் (இயக்கம் அவர் அல்ல - ஸ்ரீகாந்த் என்பவர் - பிறகு அவர் எந்தப் படத்தையாவது இயக்கினாரா எனத் தெரியவில்லை) - பிறகு ஹிந்தியில் ராஜ் கோஸ்லா என்னும் வெற்றிப் பட இயக்குனரால் - மேரா சாயா என்ற பெயருடன் 1966-இல் வந்தது. சுனில் தத், சாதனா நடித்தது.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
gkrishna
26th June 2014, 11:36 AM
டியர் ஆல்
நேற்று நான் வாழ வைப்பேன் படத்தை பற்றி சொல்லும் போது
நமது தலைவரின் படத்தை குறை கூறியது போல் இருந்தது
என்று மீண்டும் படிக்கும் போது தோன்றியது
நிச்சயமாக குறை கூறுவது என் நோக்கம் இல்லை
சில படங்கள் இன்னும் நன்றாக வந்து இருக்கலாம் என்று நமக்கு தோன்றுமல்லவா அந்த எண்ணத்தின் வெளிப்பாடே அது
மேலும் பிறமொழியில் இருந்து ரீமேக் செய்யும் போது அதை விட நன்றாக இருக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் வரும்
எடுத்து காட்டு சாரதி சார் சொன்னது போல் ஜானி மேரா நாம் விட - ராஜா நிச்சயம் பல படி மேல் இசையிலும் சரி மற்ற எல்லா விசயங்களிலும் சரி .
அது போல் சில படங்கள் எதிர்பார்த்து ஏமாற்றி விடும்
அந்த வகையில் சக்தி சமந்தாவின் அனுராக் படத்தை தழுவி நீல மலர்கள் என்று ஒரு படம் 1979-80 கால கட்டத்தில் வந்தது
கமல் ஸ்ரீதேவி கே ஆர் விஜயா மேஜர் ஸ்ரீகாந்த் போன்றோர் நடித்து
மெல்லிசை மன்னர் கண்ணதாசன் கூட்டணியில் வந்தது
பாடல்கள் மிக அருமையாக இருந்தும் டெம்போ இல்லாததால் அடைய வேண்டிய வெற்றியை அடைய வில்லை
கமல் டாக்டர் ஆக வருவர். ஸ்ரீதேவி கண் தெரியாத அவரின் காதலி
ஒரு சிறு பையன் கேன்சர் நோயாளி ஆக வருவான் ஆனால் எல்லோரும் அவன் மீது அன்பு செலுத்துவார்கள் .இறுதியில் அந்த பையன் இறந்து விடுவான் அவனது கண்கள் ஸ்ரீதேவிக்கு பொருத்தப்பட்டு ஸ்ரீதேவிக்கு பார்வை கிடைக்கும்
பாலாவின் குரலில் மிக அருமையான குழந்தைகள் chorus உடன்
"பேசும் மணி முத்து ரோஜாக்கள்
பிள்ளைகள் எல்லோரும் ராஜாக்கள்
சம் சம் சம் சம் சம் சம் "
சுசீலா குரலில்
"மாதம் ஒரு பூ மலரும் அல்லி பூ
வருஷம் ஒரு பூ மலரும் மகிழம் பூ "
என்ன ஒரு வாய்ஸ் இந்த பாடலில்
அதே போல் ஜேசுதாஸ் வாணி ஜெயராம் குரலில்
பயணம் படத்தில் வரும் "ஆரம்ப காலம் ஒரு பக்க தாளம் " பாடலை போல்
கண் தெரியாத ஸ்ரீதேவி கேள்வி கேட்பது போலவும் அதற்கு பதிலும் எதிர்கேள்வி ஆகவே ஒரு அருமையான கற்பனை
இனிமையான் saxophone பாங்கோ கூட்டணியில் இதமான ஹம்மிங் உடன் ஆரம்ப இசை
பல்லவி
வாணி : ம்கும் ம்குகா ம்கும்
ஆஹா ஒஹோஹோ ஒஹோஹோ
இது இரவா பகலா
jesudas : நீ நிலவா கதிரா
இது இரவா பகலா
நீ நிலவா கதிரா
இது வனமா மாளிகையா
நீ மலரா ஓவியமா
இது வனமா மாளிகையா
நீ மலரா ஓவியமா ..ஒ ஓ
இது இரவா பகலா
நீ நிலவா கதிரா
வயலின் வீணை சேர்ந்து இசை இண்டெர்லுட்
சரணம் - 1
மேகம் என்பதும் மின்னல் என்பதும் அருகில் இல்லையா
உன் கூந்தல் என்பதில் பூச்சரம் வைப்பது அறிவா இல்லையா
மேகம் என்பதும் மின்னல் என்பதும் அருகில் இல்லையா
(இந்த இடத்தில பின்னணியில் ஜேசு குரல் ஹா ஹா )
உன் கூந்தல் என்பதில் பூச்சரம் வைப்பது அறிவா இல்லையா
இது கனியா காயா
அதை கடித்தால் தெரியும்
இது பனியா மழையா
எனை அணைத்தால் தெரியும்
இது இரவா பகலா
நீ நிலவா கதிரா
மீண்டும் இண்டெர்லுட் இசை
சரணம் - 2
தென்றல் வந்ததும் வண்ணப்பூங்கொடி எதனால் அசைந்தது
(ப ப ப பும் saxophone குழையும் சார் (வெண்கல பானையில் சாதம் வெந்தது போல்)
தன்னை மறந்து காதல் கனிந்து ஒன்றாய் இணைந்தது
தென்றல் வந்ததும் வண்ணப்பூங்கொடி எதனால் அசைந்தது
(இந்த இடத்தில பின்னணியில் ஜேசு குரல் மீண்டும் ஹா ஹா )
தன்னை மறந்து காதல் கனிந்து ஒன்றாய் இணைந்தது
இது குயிலா குழலா
உன் குரலின் சுகமே
இது மயிலா மானா
அவை உந்தன் இனமே
இது இரவா பகலா
நீ நிலவா கதிரா
மீண்டும் இண்டெர்லுட் (இசை)
சரணம் - 3
பூவின் நிறமும் தேனின் நிறமும் ஒன்றாய் காணுமா
பூவை கன்னமும் கோவை இதழும் ஒன்றாய் ஆகுமா
இங்கு கிளிதான் அழகா
உன் அழகே அழகு
இந்த உலகம் பெரிதா
(இந்த கேள்வி கேட்கும் போது ஸ்ரீதேவி யின் கண்கள் இரண்டும் விரிந்து
ஒரு இன்னொசென்ட் லுக்குடன் கேள்வி சார் சான்ஸ் இல்லை )
நம் உறவே பெரிது
பின் இருவரும் இணைந்து
நனனனனனனா நனன்னனனா
நன்னனனன நனன்னனனா
நனனனனனனா நனன்னனனா
உடனே ஒரு சாக்ஸ் இசையில் மட்டும் இந்த பாடலின் பல்லவி ஒலிக்கும்
(ப ப ப ப பாபா )
(ப ப ப ப பாபா )
என்ன ஒரு அருமையான ஆரம்பம் மற்றும் முடிவு
இசையும் கவியும் வருடி எடுக்கும் சார்
gkrishna
26th June 2014, 02:40 PM
1978 இல் துரை இயக்கத்தில் ரஜினிகாந்த்,ஸ்ரீகாந்த்,ஜெயசித்ரா,பிரமீள,பண்டர ிபாய் நடித்து
வெளிவந்த கருப்பு வெள்ளை படம்
மெல்லிசை மாமணி குமார் அவர்கள் இசையில்
விசு கதை என்று நினவு
ரஜினிகாந்த்,ஸ்ரீகாந்த் இருவரும் அண்ணன் தம்பிகள்
இதில் ரஜினிகாந்த் குடும்பத்திற்கு பயந்தவர் நன்றாக படித்து
அரசாங்க வேலைக்கு செல்லுவர் .ஸ்ரீகாந்த் படிக்காமல் குடும்பத்துக்கு அடங்காமல் ஊதாரியாக இருப்பார். பிரமீள ஏழை வீடு பெண்
ரஜினியை திருமணம் செய்து கொண்டு ஆனால் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ரஜினியை லஞ்சம் வாங்க வைத்து அவரை ஜெயிலுக்கு அனுப்பி நல்லதொரு இல்லற வாழ்க்கையை தொலைத்து விடுவார்
அதே நேரத்தில் ஜெயசித்ரா பணகார வீட்டு பெண் ஸ்ரீகாந்தை கல்யாணம் செய்து கொண்டு அவரை திருத்தி நல்லதொரு குடும்ப தலைவியாக விளங்குவார் . ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே
இந்த படத்தின் டைட்டில் இன்னும் நினைவில் இருக்கிறது
முதலில் ஸ்ரீகாந்த் படம் போட்டு ரஜினிகாந்த் என்று எழுத்தில் போடுவார்கள் பிறகு ரஜினிகாந்த் படம் போட்டு ஸ்ரீகாந்த் என்று எழுத்தில் போடுவார்கள்
இதற்கு விகடனின் விமர்சனம் "ஆரம்பமே குழப்பம் .."
விசு இதே கதையை 10 ஆண்டுகள் கழித்து கொஞ்சம் கதையை மாற்றி
கல்பனாவை அக்காவாகவும் நிழல்கள் ரவியை அவரது கணவராகவும்
எஸ் வீ சேகர்,பாண்டியன் இருவரையும் அண்ணன் தம்பி கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து அவர்களுக்கு ஜோடியாக முறையே கோகிலா மற்றும் ஜெயஸ்ரீயை நடிக்க வைத்து அவர் பாணியில் திருமதி ஒரு வெகுமதி என்ற பெயரில் இயககி வெளியிட்டார்
சதுரங்கம் படத்தில் பாலா வாணி குரல்களில் ஒரு அருமையான மெலடி டூயட்
இந்த பாட்டின் காட்சி அமைப்பு பார்தீங்கன்ன
ரஜினிக்கு திருமண பந்தம், உடல் உறவு அப்படின்னா என்னனே தெரியாது . வெகுளி . அவருக்கு எல்லாவற்றையும் விளக்குவதற்கு
ஒரு மலையாள சினிமாவுக்கு டிக்கெட் எடுக்க சொல்வதும்
அங்கே இருக்கிற போஸ்டர் பார்த்து இந்த பாட்டு வருவது போலவும்
கனவு பாடல்
"வாத்சாயன "
பாலா ஆரம்பிக்கும் போதே ஒரு வித உற்சாக குரலிலும்
முதல் அடியை பாட தொடர்ந்து வாணி தன்னுடைய உற்சவ குரலில்
அடுத்த அடியை தொடர ஒரே மதனோற்சவம் தான்
"மதனோற்சவம் ரதியோடு தான் ரதி தேவியோ பதியோடு தான்
உயிரோவியம் உனக்காக தான் உடல் வண்ணமே அதற்காக தான்
மீனாடும் கண்ணில் விழுந்து நானாடவோ
தேனாடும் செவ்விதழ்தன்னில் நீராடவோ
மீனாடும் கண்ணில் விழுந்து நானாடவோ
தேனாடும் செவ்விதழ்தன்னில் நீராடவோ ஹோ
புரியாத பெண்மை இது பூப்போன்ற மென்மை இது
பொன்னந்தி மாலை என்னென்ன லீலை
மதனோற்சவம் ரதியோடு தான் ரதி தேவியோ பதியோடு தான்
கார்கால மேகம் திறண்டு புயலானது
கண்ணா கைகள் இரண்டு சதிராடுது
கார்கால மேகம் திறண்டு புயலானது
கண்ணா கைகள் இரண்டு சதிராடுது
ஓஓஓஒ அலங்கார தேவி முகம்
அடங்காத ஆசை தரும்
ஒன்றான நேரம் ஒரு கோடி இன்பம்
மதனோற்சவம் ...ரதியோடு தான் ...ரதி தேவியோ ...பதியோடு தான்....
மெலிதான கிடார் இசை பாடல் முழுவதும் பரவி இருப்பதை காணலாம்
மற்றுஒரு பாடல் சுசீலாவின் குரலில் மகேந்திராவை கிண்டல் செய்வது போல் "அட அபிஷ்டு நோக்கும் நேக்குமா கல்யாணம் நீ ஒரு அம்மாஞ்சி " வரும் .அவ்வளுவு இம்ப்ரெஸ் செய்யவில்லை
vasudevan31355
26th June 2014, 04:04 PM
இன்றைய ஸ்பெஷல் (14)
இந்தப் பாடல் அன்பு கார்த்திக் சாருக்காக.
கார்த்திக் சாருக்குப் பிடித்தமான அவருடைய 'ஓமர் ஷெரிப்' கலக்கும் டூயட்.
1974-இல் வெளிவந்த 'கை நிறைய காசு' திரைப்படம் ஓரளவிற்கு எல்லோருக்கும் தெரிந்த படம்.
http://i1.ytimg.com/vi/lVEG-4vPTdM/hqdefault.jpg
நாகேஷ் இரட்டை வேடம் ஏற்றிருந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், சி.ஐ.டி.சகுந்தலா, பிரமிளா, தேங்காய், எல்.காஞ்சனா முதலானோர் நடித்திருந்தனர்.
சற்றே வித்தியாசமான திரைக்கதை. அப்பாவி நாகேஷ் ஒருத்தர். அவர் மனைவி பிரமிளா. கஷ்ட ஜீவனம். குழந்தையையும், மனைவியையும் தவிக்க விட்டு விட்டு தற்கொலைக்கு முயற்சி செய்யும் போது சி.ஐ.டி.சகுந்தலா வந்து காப்பாற்றுகிறார். தன் தந்தையிடமிருந்து கணிசமான தொகையும் வாங்கி தந்து நாகேஷுக்கு உதவுகிறார். நாகேஷ் மறுபடி சந்தோஷமாக வாழ நினைக்கிறார். சகுந்தலாவையும் காதலிக்கிறார்.
ஆனால் சகுந்தலா அவருக்கு உதவி செய்யக் காரணம் என்ன?
இதன் பின்னணியில் நடக்கும் சகுந்தலா கும்பலின் சதி வேலை என்ன?
நாகேஷைப் போலவே தோற்றம் கொண்ட இன்னொரு வில்லன் நாகேஷ் தன் மேல் ரூபாய் ஐந்து லட்சத்திற்கு இன்ஷூர் செய்து, அப்பாவி நாகேஷைக் கொன்றுவிட்டு, பின் தான் செத்துவிட்டதாக தன் பார்ட்னர்களான சகுந்தலா, லியோபிரபு மூலம் போலீசையும், சட்டத்தையும் நம்ப வைத்துவிட்டு, பின் தலைமறைவாகி இன்ஷூரன்ஸ் பணம் கைக்குக் கிடைத்தவுடன் தன் பார்ட்னர்களுடன் வெளிநாட்டுக்கு ஓடிவிட பிளான் செய்கிறார்.
அவரது பிளான் சக்சஸ் ஆனதா?... அப்பாவி நாகேஷ் கொலை செய்யப்பட்டாரா? இல்லையா என்பதுதான் மீதி கதை.
சங்கர் கணேஷ் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்கள். ஏ.பி.ராஜ் இயக்கம். பாடல்கள் கவிஞர் கண்ணதாசன்.
ஓரளவிற்கு விறுவிறுப்பாகவே நகர்ந்த படம் இது. இன்ஸ்பெக்டராக துப்பு துலக்கும் 'தேங்காய்' படத்திற்கு பக்க பலம். அப்பாவி நாகேஷின் தங்கையாக எல்.காஞ்சனா அவரைக் காதலிக்கும் ஸ்ரீகாந்த்.
கண்ணாடி அணிந்த குடும்பப் பெண் பிரமிளா.
'அருணோதயா' தயாரித்த இப்படத்திற்கு மவுலி கதை வசனம் எழுதியிருந்தார்.
இப்படம் டைட்டில் தொடங்கும் போது கணேஷ் (சங்கர்) பாடிய 'கைநிறையக் காசு... பை நிறைய நோட்டு' பாடல் அப்போது பிரசித்தம். வித்தியாசமான பாடலும் கூட
இனி 'இன்றைய ஸ்பெஷல்' பாடல் காட்சி பற்றி.
ஸ்ரீகாந்துக்கும், எல்,காஞ்சனாவிற்கும் ஓர் அருமையான வேகமான டூயட். ஸ்ரீகாந்த் மிக அழகாக தோற்றமளிக்கிறார். எல்.காஞ்சனாவும் சேலையில் அழகாகவே காட்சி தருகிறார்.('வீரபாண்டியக் கட்ட பொம்மனி'ன் உள்ளம் கவர்ந்த குழந்தைச் செல்வம் 'மீனா'', 'சொர்க்கமிருப்பது உண்மை என்றால்' என்று நம் ஆனந்தை மயக்கப் பார்க்கும் கவர்ச்சிப் பெண்.) ஜோடிப் பொருத்தம் சூப்பர்.
எஸ்.பி.பாலசுப்ரமணியமும், சுசீலாவும் பாடும் பாஸ்ட் பீட் பாடல் இது. பாலாவின் கொஞ்சும் குழைவும், செல்லச் சிரிப்பும் அமர்க்களம். இரட்டையர்கள் உற்சாகமாகப் போட்ட டியூன். எழுந்து ஆட்டம் போட வைக்கும் பாடல். அதிகம் கேட்க முடியாத, பார்க்க முடியாத பாடல்.
இப்போது பார்க்கலாம்.. கேட்கலாம்.... மகிழலாம்.
https://i1.ytimg.com/vi/6CK6X7jzCpA/mqdefault.jpg
டேய் வாடா ராஜா வாடா கண்ணு கண்கள் உன் பக்கம்
வண்ணப் பூவனம் முத்து மாணிக்கம் உன்முகம் உன்முகம்
உன்முகம் உன்முகம்
ஏய் வாடி கண்ணு வாடி இங்கே கைகள் உன் பக்கம்
இந்த மாங்கனி உந்தன் மார்பினில் ஆட வேண்டும்
கூட வேண்டும்
கூடும் போது பாட வேண்டும்
கொடிவிட்ட பூவினில் மோதுது காத்து
காரணம் கேட்டுவிடு
மணி மின்னும் கைகளை தோள்களில் கோர்த்து
மயக்கத்தைத் தீர்த்து விடு
மயக்கத்தைத் தீர்த்து விடு
பொன் மலர்ச் செண்டுகள்
கண்களில் கண்டதும்
பொய்கையின் வண்டுகள் ஆடாதோ
பொய்கையின் வண்டுகள் ஆடாதோ
டேய் வாடா ராஜா வாடா கண்ணு கண்கள் உன் பக்கம்
வண்ணப் பூவனம் முத்து மாணிக்கம் உன்முகம் உன்முகம்
உன்முகம் உன்முகம்
நாட்டியப் பாவையின் பூட்டிய மேனி தீட்டிய ஓவியமோ
அது காட்டிய நாடகம் மாப்பிள்ளை கண்களில் பூட்டிய காவியமோ
பூட்டிய காவியமோ
ஊட்டிய பாலிடை
ஊறிய தேனென
நாளைய இன்பங்கள் ஆயிரமோ
ஊட்டிய பாலிடை
ஊறிய தேனென
நாளைய இன்பங்கள் ஆயிரமோ
நாளைய இன்பங்கள் ஆயிரமோ
டேய் வாடா ராஜா வாடா கண்ணு கண்கள் உன் பக்கம்
வண்ணப் பூவனம் முத்து மாணிக்கம் உன்முகம் உன்முகம்
உன்முகம் உன்முகம்
ஏய் வாடி கண்ணு வாடி இங்கே கைகள் உன் பக்கம்
இந்த மாங்கனி உந்தன் மார்பினில் ஆட வேண்டும்
கூட வேண்டும்
கூடும் போது பாட வேண்டும்
லாலலஹோ லாலலஹோ லாலலஹோ லாலலா
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=6CK6X7jzCpA
gkrishna
26th June 2014, 04:26 PM
1978 இல் வெளிவந்த இன்னொரு கருப்பு வெள்ளை படம்
ஆனந்த பைரவி
ரவிச்சந்திரன் கே ஆர் விஜய ஜெயதேவி
(இந்த ஜெயதேவி நிறைய தமிழ் படம் எடுத்தாங்க கமல் கூட இதயமலர் படத்திலும் வருவாங்க )
இந்த படத்தோட டைரக்டர் மோகன் காந்தி ராமன்
சக்கரவர்த்தி திருமகள் னு MT நடித்த படத்திற்கு அச்சிச்டன்ட் டைரக்டர் ஆ வொர்க் பண்ணினதா ராண்டார் கை ஹிந்துவில் எழுதி இருக்கார்
படத்தை பற்றி சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை
ராமானுஜம் னு ஒருத்தர் மியூசிக் டைரக்டர்
இவர் மியூசிக் டைரக்டர் பார்த்தசாரதி சார் தம்பி .
இந்த ராமானுஜம் பையன் பரத் னு பெயர் சின்ன பையன் ஆ இருந்த போது கொஞ்ச நாள் திருநெல்வேலியில் அவங்க பாட்டி வீட்டில் தங்கி படித்து கொண்டு இருந்தான் . இந்த பரத்தை ஒரு நாள் காலேஜ் முடித்து விட்டு சென்னையில் சந்தித்தேன். அப்போதுதான் அவங்க அப்பா மியூசிக் டைரக்டர் ராமானுஜம் அன்ன பறவை,ஆனந்த பைரவி போன்ற படங்களுக்கு எல்லாம் இசை அமைப்பாளர் என்று சொன்னான்
இந்த ராமானுஜம் இசை அமைத்து அவள் ஒரு கவரிமான் னு ஒரு படம் விளம்பரம் பார்த்த நினவு. MGR அண்ணன் பையன் MGC சுகுமார் நடிபதாக . ஆனால் படம் வெளி வந்ததா என்று தெரியவில்லை
இந்த ஆனந்த பைரவியில் நல்ல நல்ல சாங் எல்லாம் உண்டு
எல்லாம் சிலோன் ரேடியோ ஹிட்
1. பாலா சுசீலா குரலில் - ரவி கே ஆர் விஜய
"சிரித்தால் அந்த சிரிப்பில் ஒரு மோஹம்
அழைத்தாய் அந்த அழைப்பில் ஒரு ராகம்
கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம்
கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும்"
2.TMS சுசீலா குரலில் - ரவி ஜெயதேவி
"கோடி கோடி இன்பம் அது கொண்டு வந்த சொந்தம்
ஆடி மாத வெள்ளம் நீ ஆனந்த பைரவி "
3. வாணியின் குரலில் - இந்த பாடல் வெறும் ஆடியோவில் மட்டும் கேட்டால் பரத நாட்டியம் பாடல் போல் இருக்கும் . ஆனால் உண்மையில் பரதநாட்டியம் பாடல் அல்ல
"தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம்
என் தலைவனின் திருமேனி தங்கம்
பகைவர்கள் முன்பு அவன் சிங்கம்
என்னை பார்த்து விட்டால் காதல் பொங்கும்
அம்மம்மா "
ரவி கொஞ்சம் தொப்பை வைத்து பெல்ஸ் (பாட்டம் 40 இருக்கும்) எல்லாம் போட்டு கொண்டு வருவார்
www.youtube.com/watch?v=Htt8veSRgI0
gkrishna
26th June 2014, 04:32 PM
வாசு சார்
வெரி rare சாங்
இந்த படம் கொஞ்ச நாள் முன்னால் முரசுவிலோ அல்லது லைப் சேனல் இலோ பார்த்தேன் படம் தொடர்ச்சி இல்லாமல் விட்டு விட்டு வந்தது
பிரமீள அடக்கம் ஒடுக்கமாய் நடித்த ஒரு படம்
gkrishna
26th June 2014, 05:20 PM
1978 புது செருப்பு கடிக்கும்
mb ஸ்ரீனிவாசனின் இசையில் ஜெயகாந்தன் எழுதிய
பாலாவின் குரல்
கிட்டத்தட்ட ரெஹ்மானின் "தங்க தாமரை மகளே வா அருகே தத்தி தாவுது மனமே " பாடலை நினவு படுத்தும் . ரெஹ்மான் ஏகப்பட்ட வாத்திய கருவிகளை உபயோகித்து இருப்பார் . ஆனால் இந்த பாடலில்
மிக குறைந்த கருவிகளே
சிததிர பூ சேலை சிவந்த முகம்
முத்து சுடர் மேனி மூடி வைத்த முழு நிலவோ
இந்த பாட்டு விடியோ கிடைக்குமா சார்
இந்த படம் வெளியவே வரவில்லை என்று கேள்விபட்டேன்
உண்மையா சார்
Richardsof
26th June 2014, 05:25 PM
Krishna sir
only audio song is available.
http://youtu.be/oijasCnOmNg
gkrishna
26th June 2014, 05:38 PM
தேங்க்ஸ் வினோத் சார்
நானும் கேட்டேன்
மிக்க நன்றி
சித்திரப்பூ சேலை
சிவந்த முகம் சிரிப்பரும்பு
முத்துச்சுடர் மேனி எழில்
மூடிவரும் முழு நிலவோ
மூடிவரும் முழு நிலவோ
சித்திரப்பூ சேலை
மீன் கடிக்கும் மெல்லிதழை
நான் கடித்தால் ஆகாதா
தேனின் ருசி தெரிந்தவன் நான்
தேனீயாய் மாறேனோ
சித்திரப்பூ சேலை
மஞ்சள் பூசும் இடமெல்லாம் என்
மனம் பூசல் ஆகாதா
கொஞ்சம் என்னை குங்குமமாய்
குழைதெடுத்தால் வாறேனோ
சித்திரப்பூ சேலை
படிக்கட்டில் ஏறி வரும்
பாததேழில் பார்பதற்கு
படிக்கட்டின் இடையிலே ஒரே
பலகையை மாறேனோ
சித்திரப்பூ சேலை
முக்காலும் துணி மறைத்து நீ
மூலையிலே போய் நின்று
உன் சொக்காயை இடுகையில்
நான் சொக்காகி மூலை சுவராகி
முன்னின்று பாரேனா
சித்திரப்பூ சேலை
சிவந்த முகம் சிரிப்பரும்பு
முத்துச்சுடர் மேனி எழில்
மூடிவரும் முழு நிலவோ
மூடிவரும் முழு நிலவோ
சித்திரப்பூ சேலை
பாலா பாடலை முடிக்கும் போது
vasudevan31355
26th June 2014, 05:43 PM
மாலை வணக்கம் கிருஷ்ணா சார்,
தூள் கிளப்பிக் கொண்டு இருக்கிறீர்கள். வேலை முடிந்து மதியம் வந்து 'இன்றைய ஸ்பெஷல் போட்டு' கொஞ்சமா ரெஸ்ட்.
vasudevan31355
26th June 2014, 05:45 PM
கிருஷ்ணா சார்,
ஸ்ரீதேவியை 'சாய்ந்தாடம்மா' சாய்ந்தாடு என்று மடியில் கிடத்தி 'கண்ணன் என்ன சொன்னான் சிறு பிள்ளையே... கண்ணீர் வரக் காரணம் ஏன் கொடி முல்லையே' என்று பாடுபவர் தானே ஜெயதேவி.
vasudevan31355
26th June 2014, 05:48 PM
கிருஷ்ணா சார்,
'சதுரங்கம்' பாடல் ஆய்வு கலக்கல். செம ஹிட்டான ஒரு பாட்டு.
vasudevan31355
26th June 2014, 05:52 PM
கிருஷ்ணா சார்,
இது இரவா பகலா பாடலைப் பற்றி எழுதி பொறாமைப்பட வைத்து விட்டீர்கள்.
அந்தியில் சந்திரன் வருவதேன் போல கேள்வி கேட்டு பதில் சொல்லும் பாட்டு.
எனக்கு ரொம்ப........ரொம்ப....... ரொம்ப பிடித்த பாட்டு.
தேங்க்ஸ் சார்.
vasudevan31355
26th June 2014, 05:54 PM
வேந்தர் சார்
மிட்டாய் மம்மி பற்றி நினவு படுத்தி விட்டீர்கள்
அவினாசி மணி direction என்று நினவு
ஜெய்ஷங்கர் கே ஆர் விஜயா நடித்து வெளி வந்தது
இதே நேரத்தில் "கியாஸ் லைட் மங்கம்மா " என்று ஒரு படம் 1977
ஜெய்ஷங்கர் கே ஆர் விஜயா நடித்து வெளி வந்தது
இதற்கு இசை மெல்லிசை மன்னர் என்று நினவு
ஜேசுதாஸ் வாணி ஜெயராம் குரலில்
"காதல் தெய்வம் கண்டேன் நான் சரணம் சரணம்
என் காதல் தெய்வம் கண்டேன் பக்கம் வரணும் "
ஒரு அருமையான பாடல்
அரிய அற்புதப் பாடலை நினைவு படுத்தியமைக்கு நன்றி கிருஷ்ணா சார்.
gkrishna
26th June 2014, 05:54 PM
வாசு சார்
மாலை வணக்கம்
இந்த ஜெயதேவி போட்டோ கிடைக்கலை
இதய மலர் படத்தில் அறிமுகம் (நல்ல ஜேசுதாஸ் வாணி பாட்டு
ஒன்னு நினைவு செண்டு மல்லி பூ போல் அழகிய பந்து லவ் ஆல் ஹீம் லவ் ஒன் ) காதல் மன்னன் direction
வாழ நினைத்தால் வாழலாம் படத்தில் வருவாங்க னு நினைவு
நீங்கள் சொன்ன படத்திலும் உண்டு னு நினைவு
கொஞ்ச நாள் நம்ம natcharam பிரசாத் பையன் கூட குடும்பம் நடித்தி விட்டு
பிறகு வேலு பிரபாகரன் (கடவுள் இல்லை கோஷ்டி) உடன் சேர்ந்து சில படங்களை தயாரித்தார் என்று கேள்வி
gkrishna
26th June 2014, 05:57 PM
இந்த மிட்டாய் மம்மி பாட்டு கூட
தமிழக ஓமர்ஷேரிப் மற்றும் சுபா நடித்தது னு நினைவு
vasudevan31355
26th June 2014, 06:02 PM
ck,
இதயக் கமலம் - 1965-இல் வந்தது. மூலம் - "பாத்லாக்" என்னும் மராத்தி படம் - தமிழில் 1965-இல் எல்.வி. பிரசாத் தயாரிப்பில் (இயக்கம் அவர் அல்ல - ஸ்ரீகாந்த் என்பவர் - பிறகு அவர் எந்தப் படத்தையாவது இயக்கினாரா எனத் தெரியவில்லை) - பிறகு ஹிந்தியில் ராஜ் கோஸ்லா என்னும் வெற்றிப் பட இயக்குனரால் - மேரா சாயா என்ற பெயருடன் 1966-இல் வந்தது. சுனில் தத், சாதனா நடித்தது.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
பார்த்தசாரதி சார்,
உங்களிடம் எனக்கு மிகப் பிடித்த விஷயம் இதுதான். ஒரு தமிழ்படத்தை எடுத்துக் கொண்டால் அந்தப் படத்தின் இந்தி மூலம், தெலுங்கு மூலம், மராட்டி மூலம் என்று அறிவார்ந்த ரிஷிமூலம், நதிமூலம் பார்த்து எங்களிடம் பகிர்ந்து கொள்வது எனக்கு ரொம்பப் பிடிக்கும். (ஏனென்றால் எனக்கும் இம்மாதிரி விஷயங்களில் ஆர்வம் கொஞ்சம் ஜாஸ்தி)
இன்னும் நிறைய எழுதுங்க சார்.
நீங்க சின்னக் கண்ணனுக்கு ரசிகன் என்று சொன்னது போலவே நான் உங்களுக்கு ரசிகன்.
vasudevan31355
26th June 2014, 06:07 PM
கிருஷ்ணா சார்,
இந்தாங்க! ஜெயதேவி படம். (உட்கார்ந்திருப்பவர்)
http://i1.ytimg.com/vi/GoTRl2t-MDU/maxresdefault.jpg
gkrishna
26th June 2014, 06:10 PM
புண்ணியம் செய்தவள் 1977
முத்துராமன் விஜயகுமார் ஸ்ரீப்ரிய படபட் நடித்து வெளிவந்த படம்
மெல்லிசை மன்னர் னு நினவு
முத்துராமன் பணக்காரர் ஸ்ரீப்ரிய ஏழை
விஜயகுமார் ஏழை படபட் பணக்காரி
அவ்வளுவு தான் கதையை நாமளே கண்டு பிடிக்கலாம்
அருமையான பாடல் பாலா வாணி குரல்
இந்த பாட்டு கொடைக்கானல் honey மூன் பாடல்
செந்தமிழில் ஒரு பாட்டெழுதி
அதில் நான் உன்னை அழைத்தேன்
சிந்தனையில் வந்த தேனருவி
சிந்தனையில் வந்த தேனருவி
அது நீ என்றே நினைத்தேன்
தென் பொதிகை வரும் தென்றல் இது
அது நீ என்றே நினைத்தேன்
கண் கவரும் செங்கமலம்
கண் கவரும் செங்கமலம்
என நான் உன்னை நினைத்தேன்
அருமையான saxophone விளையாடும் சார்
இருவரின் செம ஹம்மிங் மேலும் விசில் பிளந்து கட்டும்
எல்லாம் சிலோன் ரேடியோ உபயம்
vasudevan31355
26th June 2014, 06:12 PM
கிருஷ்ணா சார்,
'சாய்ந்தாடமா சாய்ந்தாடு' படத்தில் சுசீலா ஸ்ரீதேவிக்கு பாடும் ஒரு டப்பாங்குத்துப் பாடலைப் பாருங்கள். அதில் தேவக ஜெயதேவியை காணலாம்.
நம்ம மொட்டை கலக்கல்.
http://www.youtube.com/watch?v=GoTRl2t-MDU&feature=player_detailpage
gkrishna
26th June 2014, 06:13 PM
அதே அதே சபாபதே (கோவக்கார ...)
vasudevan31355
26th June 2014, 06:14 PM
கிருஷ்ணா சார்
உங்க signature ஐ எடுத்துட்டு பேசாம 'எல்லாம் சிலோன் ரேடியோ' உபயம் அப்படின்னு போட்டுடுங்க:). அவ்வளவு பாடல்களை அலசறீங்க. சபாஷ். நங்கள் புண்ணியம் செய்தவர்கள்.
gkrishna
26th June 2014, 06:16 PM
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடம்மா ஸ்டில் சூப்பர் வாசு சார்
ஒன்னு ஸ்ரீதேவி ஒன்னு ஜெயதேவி இன்னொன்னு யாரு சார்
vasudevan31355
26th June 2014, 06:16 PM
கோ(வாலு) தம்பி கோ(வாலு)
கிருஷ்ணா சார்!
ஏன் பயப்படறீங்க. fill பண்ணிடுங்க. நம்மைக் காப்பாத்த கொல்கொத்தா ஆசிரியர் இருக்கார்:).
vasudevan31355
26th June 2014, 06:17 PM
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடம்மா ஸ்டில் சூப்பர் வாசு சார்
ஒன்னு ஸ்ரீதேவி ஒன்னு ஜெயதேவி இன்னொன்னு யாரு சார்
சார்! என்ன இது! (நன்றி கர்ணன்)
vasudevan31355
26th June 2014, 06:18 PM
சார்!
நூறாவது பக்கம் உங்க எல்லோர் புண்ணியத்திலும் வரப் போகுது.
என்ன பண்ணலாம்?
gkrishna
26th June 2014, 06:21 PM
ஒரு சூப்பர் பாட்டு ஒன்னு அவுத்து விடுங்க உடன் கலக்கல் ஸ்டில்களுடன்
உங்கள் கிட்ட இல்லாததா வாசு சார்
vasudevan31355
26th June 2014, 06:23 PM
கிருஷ்ணா சார்!
ரொம்ப நாள் சென்று நேத்து ஒரு பாட்டை தேடிக் கண்டு பிடிச்சு கேட்டு மயங்கி போயிட்டேன் சார்.
இப்ப பாருங்க. நீங்களே ஆச்சரியப்படுவீங்க. இல்லையா! உங்களுக்குத் தெரியாத பாடலா?
'வேடனைத் தேடிய மான்' அப்படின்னு ஒரு படம் வந்துச்சே!
அதுல நம் பாலா ரம்பா ஊர்வசி மேனகா ன்னு ஒரு பாட்டு பாடுவார் பாருங்க. அட்டகாசம் சார். ஆடிப் போயிட்டேன்.
gkrishna
26th June 2014, 06:32 PM
சார்
உண்மையில் இந்த பாட்டு இரண்டு நாள் முன்னாடி நினைவில் வந்தது
இது ஜெய் கணேஷ் நடித்து வெளி வந்தது
தெலுகு ரீமேக் சார்
ரம்பா ஊர்வசி மேனகா னு படத்திற்கு பெயர்
இந்த படத்தோட விளம்பரம் இன்னும் நினைவில் உண்டு
16 வயது ரோஜாரமணி
17 வயது ஜெயமாலினி
18 வயது தீப
19 வயது நரசிம்ஹராஜு (ஷோக்கு பேர்வழி )
கண்டு மகிழுங்கள் உங்கள் நெல்லை பூர்ணகலவில்
gkrishna
26th June 2014, 06:39 PM
அதில் நான் தவறாக 18வயது தீப என்று சொல்லி விட்டேன்
அது 18 வயது ஹலம்
vasudevan31355
26th June 2014, 06:44 PM
http://img519.imageshack.us/img519/9434/6d60fc28894b4cc983bee4eav4.png
கிருஷ்ணா சார்!
நூறாவது பக்கத்துக்கு நூறு நாளுக்கும் மேல் ஓடிய படத்திலிருந்து அதுவும் கலர் படத்திலிருந்து ஒரு பாட்டை போட்டு விடலாம் சார்.
'மூன்றெழுத்து' படத்தில் மேடமும், ரவிச்சந்திரனும் பாடும் 'காதலன் வந்தான்...கண் வழி சென்றான்...கண்களை மூடு.... பைங்கிளியே...
பாட்டு என்றால் எனக்கு உயிர் சார். ரொம்ப வித்தியாசமா இருக்கும். அதுவும் அந்த பொன்னுசாமி கொடுக்கும் 'ம்ம்ஹூம் ம்ம்ஹூம்' ஹம்மிங் வேற செம கலக்கலாக இருக்கும். கலர் அற்புதமாக இருக்கும்.
மேடம் செம கியூட்.
ரவி ஜம்முன்னு இருப்பார்.
என்னவோ இனம் புரியா இன்பம் இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு ஏற்படும் சார்.
என் கேசட்டில் இன்னும் அலையாமல் அப்படியே இருக்கிறது சார்.
கண்ணதாசன், ராமமூர்த்தி, கூட்டணி சார்.
பட்டை கிளப்பிடும் சார்.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Z9ObJpV-Fmc
காதலன் வந்தான்...
கண் வழி சென்றான்..
கண்களை மூடு....
பைங்கிளியே...
பைங்கிளியே...
குளிர்ந்த பாலை பருகி விடு
அவன் குளிக்கட்டுமே
அதில் குளிக்கட்டுமே
குளித்த பின்னாலே
இதழோரம் நடக்கட்டுமே
கொஞ்சம் கொடுக்கட்டுமே
'காதலன் வந்தான்' என்று கண்ணியப் பாடகி கொஞ்சும் போது சொர்க்கம் தெரியும் சார்.
தூங்குகின்றானா பார்த்து விடு
நீ தாலாட்டு மெல்ல தாலாட்டு
ஏங்குகின்றானா கேட்டு விடு
நீ தேனூற்று இன்பத் தேனூற்று
வாழ்க்கையிலே மறக்க முடியாத ஒரு பாடல் சார்,
vasudevan31355
26th June 2014, 06:47 PM
சார்
உண்மையில் இந்த பாட்டு இரண்டு நாள் முன்னாடி நினைவில் வந்தது
இது ஜெய் கணேஷ் நடித்து வெளி வந்தது
தெலுகு ரீமேக் சார்
ரம்பா ஊர்வசி மேனகா னு படத்திற்கு பெயர்
இந்த படத்தோட விளம்பரம் இன்னும் நினைவில் உண்டு
16 வயது ரோஜாரமணி
17 வயது ஜெயமாலினி
18 வயது தீப
19 வயது நரசிம்ஹராஜு (ஷோக்கு பேர்வழி )
கண்டு மகிழுங்கள் உங்கள் நெல்லை பூர்ணகலவில்
கிருஷ்ணா சார்!
அடிபட்டு உதைபட்டு பார்த்தேன் சார் கடலூரில். தெலுங்குப் படத்தைதான் சொல்கிறேன். இன்னொரு மன்மத லீலை
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.