PDA

View Full Version : மனதை மயக்கும் மதுர கானங்கள்



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 [16]

gkrishna
12th August 2014, 12:45 PM
வாசு மது chella சார்
என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை,அன்பு,பாசம் எல்லாவற்றிற்கும் நன்றி சார்

ஒரு சின்ன விண்ணப்பம்
இது ஒரு பெரிய பொறுப்பு
நான் 3வது பாகத்தை தொடங்குகிரேனே . கொஞ்சம் பக்குவம் வரணும் னு நினைக்கிறன் . ஒரு சீனியர் யாரவது தொடங்கினால் நன்றாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து . please

ஆனால் தினமும் நான் திரியில் பங்கு கொள்வேன்
இது உறுதி

vasudevan31355
12th August 2014, 12:50 PM
இன்றைய ஸ்பெஷல் (51)

https://i1.ytimg.com/vi/QpkScBknqyg/hqdefault.jpg

இன்றைய ஸ்பெஷலில் மிக அற்புதமான அரிதான ஒரு பாடல். 'கவிக்குயில்' படத்தில் மேஸ்ட்ரோவின் இசையில் 'கண்ணியப் பாடகி' கலக்கிய பாடல். 'சின்னக் கண்ணன்' 'குயிலே கவிக்குயிலே' என்று அழைத்ததால் 'மான்' பார்க்கப் படமால் போய் விட்டது.

அதனாலென்ன?

https://i.ytimg.com/vi/pjQvjrzuRl0/mqdefault.jpg

மான் மான்தானே! எங்கள் மானின் குரல் என்றும் தேன் தேன்தானே!

என்ன ஒரு உச்சரிப்பு! என்ன ஒரு உற்சாகம்! என்ன ஒரு உற்சாகத் துள்ளல்!

சுசீலாம்மாவின் பிற்காலப் பாடல்களில் என்னுடைய முதல் இடம் இப்பாடலுக்கே. ரஜனி கருப்பு வெள்ளையில் அழகாகத் தெரிவார். 'படாபட்' ஜெயலட்சுமி வழக்கம் போல பட் பட். சிம்பிள். புடவையில் அழகு.

இளையராஜா பின்னி இருப்பார். ஆள் பார்த்து கொடுத்தார் பாருங்கள் பாடுவதற்கு. அவருக்கு யார் யாருக்கு எதை எதைக் கொடுக்க வேண்டும் என்று தெரியுமே! அதனால்தான் இசையரசி அவர்களுக்கு இந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்து பாடக் கொடுத்திருக்கிறார்.

இந்தப் பாடல் ஹிட் ஆகாமல் போனதற்கு அப்போது தமிழக மக்களுக்கு சாபமே கொடுத்திருக்கிறேன். நிறைய பேருக்கு இப்பாடல் தெரியாது.

நமது திரி மூலம் இனியாவது தெரிந்து ஹிட்டடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

https://i.ytimg.com/vi/MsdABYXwkBY/hqdefault.jpg

மானோடும் பாதையிலே
வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாராம் கந்தன்
தந்தாராம் சொந்தம்
இன்பம் அங்கே ஓராயிரம்

மானோடும் பாதையிலே
வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாராம் கந்தன்
தந்தாராம் சொந்தம்
இன்பம் அங்கே ஓராயிரம்

கன்னம்கருத்த கட்டழகா
கருநாவல் பழம் போல் கண்ணழகா
கற்கண்டு போலே சொல்லழகா
ஆஹா சொல்லழகா

ஆவாரங் காட்டுக்குள்ளே
ஒரு ஆதாயம் தேடி வந்தேன்
முத்தாடும் பெண்மை கொண்டாடு அங்கே
சொல்வேன் இன்பம் ஓராயிரம்

('முத்தா... டும் பெண்மை' யை சற்றே அவர் இழுத்து உச்சரித்துப் பாடும் போது நாம் அனுபவிக்கும் இன்பத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

மானோடும் பாதையிலே
வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாராம் கந்தன்
தந்தாராம் சொந்தம்
இன்பம் அங்கே ஓராயிரம்

ஆளான பொண்ணு நாளாக ஆக
பாலாடை மேனி தேமல் உண்டாக
ஆளான பொண்ணு நாளாக ஆக
பாலாடை மேனி தேமல் உண்டாக
ஏக்கத்தில் ஓடும் அத்தானைத் தேடும்
நெஞ்சோடு அள்ளிக் கொண்டாலே தீரும்
ம்ஹூஹூஹூம் ம்ஹூஹூஹூம்

மானோடும் பாதையிலே
வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாராம் கந்தன்
தந்தாராம் சொந்தம்
இன்பம் அங்கே ஓராயிரம்

தேனாடும் பூவில் நீ ஆட வேண்டும்
சீராட்டும் போதே பாராட்ட வேண்டும்
தேனாடும் பூவில் நீ ஆட வேண்டும்
சீராட்டும் போதே பாராட்ட வேண்டும்
தாளத்தைப் போடு ராகத்தைப் பாடு
சந்தோஷமாக பொன்னூஞ்சல் ஆடு
ம்ஹூஹூஹூம் பொன்னூஞ்சல் ஆடு

மானோடும் பாதையிலே
வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாராம் கந்தன்
தந்தாராம் சொந்தம்
இன்பம் அங்கே ஓராயிரம்

ம்ஹூம் ம்ஹூம்


https://www.youtube.com/watch?v=Xp20Hs1c2HQ&feature=player_detailpage

chinnakkannan
12th August 2014, 12:59 PM
//சேலாடும் பூவில் நீ ஆட வேண்டும்
சீராட்டும் போதே பாராட்ட வேண்டும்// அழகிய பாடல் வரிகள் வாசு சார்.. நன்றி..நான் கேட்டதில்லை இனி தான் கேட்க வேண்டும்.. இந்த சேல் என்பது மீன் தானே..

ராகவேந்திரர் சார்.. இந்த விஜய் டிவிப் புகைப்படம் இப்போது தான் ந.தி இழையில் பார்த்தேன்..க்ருஷ்ணாஜியை த் தெரிந்தது.. நீங்கள் முரளிசார் எந்தப் படம் எனப் புரியவில்லை..

gkrishna
12th August 2014, 01:04 PM
அருமையான பாடலை நினைவு கூர்ந்து உள்ளீர்கள் வாசு சார்

இசை ஞானியின் ஆரம்ப கால பாடல்

சின்ன கண்ணன் அழைக்கிறான் -பாலமுரளி மற்றும் ஜானகி குரலில் மீண்டும் வரும்
குயிலே கவி குயிலே - ஜானகி
உதயம் வருகின்றதே - ஜானகி
ஆயிரம் கோடி - பாலமுரளி

ஆனால் இந்த பாட்டு மட்டும் சுசீலா ஏன் இளையராஜா கொடுத்தார்
நீங்க சொன்ன பிறகு தான் புரிகிறது

என்ன ஒரு உச்சரிப்பு! என்ன ஒரு உற்சாகம்! என்ன ஒரு உற்சாகத் துள்ளல்!

gkrishna
12th August 2014, 01:06 PM
//சேலாடும் பூவில் நீ ஆட வேண்டும்
சீராட்டும் போதே பாராட்ட வேண்டும்// அழகிய பாடல் வரிகள் வாசு சார்.. நன்றி..நான் கேட்டதில்லை இனி தான் கேட்க வேண்டும்.. இந்த சேல் என்பது மீன் தானே..


கெண்டை மீன் செல்லா சார்
நிறைய பழைய பாடல்களில் இந்த வார்த்தை நிறைய உபயோக படுத்தப்பட்டு இருக்கும்

madhu
12th August 2014, 01:09 PM
vasu ji...

சுப்பர்ப்... சுசீலாவின் குரல் எப்படித் துள்ளி குதிக்குது ?

ம்ம்... அதெல்லாம் சரி.. "கன்னங்கருத்த கட்டழகா" என்றதும் கந்தனை கண்ணன் ஆக்கிட்டீங்களே !
ஒப்புக்கொள்ள மாட்டேன்.

மருகன் இருக்கும் இடத்தில் மகனை வைப்பது not acceptable...

madhu
12th August 2014, 01:12 PM
கெண்டை மீன் செல்லா சார்
நிறைய பழைய பாடல்களில் இந்த வார்த்தை நிறைய உபயோக படுத்தப்பட்டு இருக்கும்

சிக்கா, கிருஷ்ணா ஜி.. அது "தேனாடும் பூவில் நீயாட வேண்டும்" என்று வரும்.

சேல் என்பது மீன்தான்... "பாலாற்றில் சேலாடுது" மற்றும் "சேலாடும் நீரோடை மீது" என்று வருவதை கவனியுங்க.

chinnakkannan
12th August 2014, 01:21 PM
நன்றி க்ருஷ்ணா ஜி.. கெண்டை மீனோன்னு ஒரு டவுட்ட்..பழையபாடல் சங்கப் பாடல்களில்

செவ்வரியோடய கண்களிரண்டினில் சேலொடு வேலாட - துலாபாரம் சங்கம் வளர்த்த தமிழ் பாட்டு

நீல மலையை நிஜதேவ தெய்வமதை,
சேல் விழியில் கண்ட திருக்கட்சியை யான் மறவேன்,
தோராத உச்சிவட்ட தேனாறு பாயுகின்ற பார ரகசியத்தின் பழம் பொருளை யான் மறவேன்,
பழ்ம் பாடல்..

வரும்பு னற்பெருங் கால்களை மறித்திட வாளை
பெருங்கு லைப்பட விலங்குவ பிறங்குநீர்ப் பழனம்
நெருங்கு சேற்குல முயர்த்துவ நீள்கரைப் படுத்துச்
சுருங்கை நீர்வழக் கறுப்பன பருவரால் தொகுதி.

நீர் ஓடி வரும் பெரு வாய்க்கால்களை வாளை மீன்கள் குறுக்கிட்டுத் தடுத்திட, அத்தன்மையால் அவ்விடத்து நீர் தேங்கிக் கரைகள் உடைபடும்படி நீருடைய அவ்வாய்க்கால்கள் நீர் நிறைந்து விலகிப் போகின்றன.

வயல்களில் நெருங்கி வரும் சேல் மீன்கள் பள்ளமாய வயல்களில், தம் தொகையால், கரையை உயர்த்துகின்றன. மதகுகளுட் புகுந்து வரும் நீர் வெளி வாராதபடி பெருத்த வரால் கூட்டங்கள் திரண்டு நின்று தடுக்கின்றன.

//பன்னிரண்டாம் திருமுறை :)//

பொதுவா கெண்டை மீன் அதாவது சேல் மீன் மங்கையரின் கண்களுக்குத் தான் ஒப்புமை கூறப்பட்டிருக்கின்றன..

chinnakkannan
12th August 2014, 01:22 PM
//சிக்கா, கிருஷ்ணா ஜி.. அது "தேனாடும் பூவில் நீயாட வேண்டும்" என்று வரும்.// ஆஹா தாங்க்ஸ் மதுண்ணா.. என்னடா சேலாடும் பூ ந்னா இடிக்குதேன்னு நினைச்சேன்...

madhu
12th August 2014, 01:31 PM
ரஜினியை ஃபடாபட் ஜெயலக்ஷ்மி சுசீலாவின் குரலில் பாடி மயக்கும் காட்சியைக் கண்டதும் காளி படத்தில் விஜயகுமாரை மயக்கும் காட்சி நினைவுக்கு வந்துடிச்சி..

அழகழகா பூத்திருக்கு ஆசை வைக்க தெரியலையே
ஆசை வைக்க தெரியாமே மீசை வச்சு லாபமென்ன

வாசு ஜி, கிருஷ்ணா ஜி.. வந்து விளக்குங்க.. சிக்கா .. வந்து குழப்புங்க

http://youtu.be/iyGMfepFqFw

gkrishna
12th August 2014, 01:42 PM
சிக்கா, கிருஷ்ணா ஜி.. அது "தேனாடும் பூவில் நீயாட வேண்டும்" என்று வரும்.

சேல் என்பது மீன்தான்... "பாலாற்றில் சேலாடுது" மற்றும் "சேலாடும் நீரோடை மீது" என்று வருவதை கவனியுங்க.

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணமா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொன்னம்மா
சேலாடும் கண்ணில் பாலாறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்

இது சரியா ? madhu sir

chinnakkannan
12th August 2014, 01:42 PM
எனக்கும் இந்தப் பாட்டு நினைவுக்கு வந்தது.. ஃபடாபட் ஜெயலட்சுமி.. நிறைய ஆண்டு வாழ்ந்து நிறைய படத்தில் நல்ல நடிப்பைத் தந்திருக்கக் கூடியவர்..காதல் வழியாகக் காலன் வந்தணைத்துக் கொண்டு விட்டான்..

காளி விமர்சனத்தில் விகடன் - வழக்கமாய் இழுத்துப் போர்த்திக் கொண்டுவரும் படாபட்டுக்கு இப்படி ஒரு பாட்டு..சீமாவிற்கு இ.போ தோற்றம் என எழுதியிருந்தது நினைவில்..

அதை விட ரகசியம் - கண்ணதாசன் கதை பார்த்ததில்லை.. பாட்டு கேட்டிருக்கிறேன்..செங்கரும்பு தங்கக்கட்டி படத்திலும் படாஃப்ட் உண்டில்லையோ..

Gopal.s
12th August 2014, 01:43 PM
நெய்யூறும் கானகத்தில் கைகாட்டும் மானே - இதன் அர்த்தம் விளக்க முடியுமா?

chinnakkannan
12th August 2014, 01:45 PM
மோகம் முப்பது வருஷமும் படாஃபட் என நினைவு.. மேனகா ரோல்..

chinnakkannan
12th August 2014, 01:55 PM
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே..

அதெப்படி ஓடிக்கிட்டிருக்க ரிவர்ல ஃபிஷ் நிக்கும்..சம்திங்க் ஃபிஷியோனோ.. ஓ.. நோ..அப்படி இல்லை.. நீரோடிக் கொண்டிருக்கும் வைகை நதியிலே (ஒரு காலத்தில்) எப்போதும் துள்ளித்துள்ளி ஆடியும் ஓடியும் கொண்டிருக்கும் மீனைப் போன்றவளே

நெய்யூறும் கானகத்தில் கைகாட்டும் மானே

கானகத்துல நெய்யா..இல்லை..அவ்வப்போது காத்தோடு பூவுரச கூட மரமுரச மரத்தோட மரமுரச டபக்குனு ஐயோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சுன்னு நெருப்பு பத்திக்கும்..அதை அந்த மான்களுக்குத் தான் தெரியுமாம்..சமத்தா சோம்பேறியா மெஞ்சுகினு இருக்கலாம்னு பாத்தா..என்னப்பா இது..ஏன் இந்த உஷ்ணம் நு சுத்தி முத்திப்பார்த்துட்டு - இளம்பெண்ணுன்னா வீல்னு அலறுவாங்க..இதுங்க இளம் மான்.. கத்தவும் வராது ..ஸோ வேகமா ஓடிவிடும்..அதைப்பார்த்த மற்ற மிருகங்கள்ளாம அவற்றைத் தொடருமாம்..
அது போல எனக்கு ஒருதுன்பம் இருந்தால் அதை ஓட்டிவிட வழிகாட்டும் கானகத்து மானைப் போன்றவளேன்னு அர்த்தம் வருமோ..

தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே

இதுவும் இனிமையான வ்ரிகள் தான்..

கோபால் சார் ரைட்டா..

gkrishna
12th August 2014, 02:42 PM
http://mmimages.maalaimalar.com/Articles/2014/Aug/8d79c66b-fedc-41fa-859d-3e5bd7670c6c_S_secvpf.gif

கவிஞர் கண்ணதாசனும், வாலியும் சம காலத்தில் சிறந்த பாடல்களை எழுதிக் குவித்தனர். அதனால் பிற்காலத்தில், சில பாடல்கள் இது கண்ணதாசன் எழுதியதா, அல்லது வாலி எழுதியதா?' என்ற சந்தேகத்தை ஏற்படுத்தின.

இதுபற்றி வாலி எழுதியிருப்பதாவது:-

ஒரு விழாவில், என் அருமை நண்பரும் தஞ்சைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான அவ்வை நடராஜன் பேசும்போது, "காற்று வாங்கப்போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்! அதை கேட்டு வாங்கிப் போனாள் -அந்த கன்னி என்னவானாள்?'' என்று கவியரசர் கண்ணதாசன் எழுதினார். இப்படி எழுத இன்று யாரேனும் இருக்கிறார்களா?'' என்று கூறினார்.

என்னை பக்கத்தில் வைத்துக்கொண்டே அவ்வை நடராஜன் இவ்வாறு சொன்னபோது, அவை ஆரவாரித்து அதை ஆமோதித்தது.

என் அன்புச் சகோதரி மனோரமா அவர்கள் ஒரு பத்திரிகையில் கீழ்க்கண்டவாறு எழுதினார்:

"கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?''

என்று கவிஞர் கண்ணதாசன் அற்புதமான பாட்டை எழுதினார். இப்ப வர்ற சினிமாவிலே, இது மாதிரி யாரு கருத்தோட பாட்டு எழுதறாங்க?'' என்று ஒரு வினாவையும் எழுப்பியிருந்தார், மனோரமா.

பிரபல பட அதிபர் ஜீவி' அவர்கள் ஒரு பத்திரிகையில், "நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ! நíரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ!'' என்று கண்ணதாசன் பாடல் எழுதினார். இது போல கற்பனை வளத்தோடு எழுத இப்போது யார் இருக்கிறார்கள்?'' என்று எழுதியிருந்தார்.

இது குறித்து நான் விசனப்படவில்லை; பேசியவர்களின் வார்த்தைகளால் எவ்வித மனத்தாங்கலும் ஏற்படவில்லை.

ஏனென்றால், நண்பர் நடராஜன் அவர்களும், மனோரமா அவர்களும், ஜீவி அவர்களும் சிறப்பித்துப் பாராட்டிய மூன்று பாடல்களும் கண்ணதாசன் எழுதியவை அல்ல; அடியேன் எழுதியவை.

நல்ல பாடல் என்றாலே, அதைக் கண்ணதாசன் எழுதியிருக்க வேண்டும் என்று மேற்சொன்ன மூவரும் நினைப்பதில் தப்பில்லை. இருப்பினும், எதை எவர் எழுதினார் என்று தெள்ளத்தெளிய அறிந்து வைத்துக்கொண்டு பேசுதல்தான் நயத்தகு நாகரீகமாகும்.

கண்ணதாசன் பாராட்டு

வாலி பாட்டு எது, என் பாட்டு எது என்று எனக்கே சில சமயங்களில் தெரிவதில்லை' என்று கவியரசர் கண்ணதாசன் பலமுறை பாராட்டியிருப்பதை கவிஞர் நா.காமராசனை கேட்டுப்பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

நான் எழுதுகிற மாதிரியே எழுதக்கூடியவன் வாலி. இப்ப இந்த சிச்சுவேஷனுக்கு நான் எழுதியிருக்கிற மாதிரி அவன் வேறு ஏதாவது படத்திலே எழுதியிருக்கானான்னு சரி பார்த்துக் கொள்ளுங்கள்' என்று இயக்குனர்களிடம் கண்ணதாசன் சொல்வது உண்டு என்பதை, புகழ் வாய்ந்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமனிடம் கேட்டுப் புரிந்து கொள்ளலாம்.

இலங்கை வானொலிக்கு அளித்த பேட்டியில், என் பாடல் வரிகளை கண்ணதாசன் சிலாகித்துப் பேசியுள்ளார்.

"கண்ணதாசனும், வாலியும் எனக்கு இரண்டு கண்கள்'' என்று தன் கருத்தைப் பதிவு செய்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.''

இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

சிதம்பரம் ஜெயராமன்

வாலியின் பாடல் குறித்து, இன்னொரு நகைச்சுவை நிகழ்ச்சியும் நடந்தது.

ஸ்ரீரங்கத்தில், வாலியின் குடும்ப நண்பர் ஒருவர் வீட்டுத் திருமணத்தில் சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமனின் கச்சேரிக்கு ஏற்பாடாகியிருந்தது.

வாலி, திரைப்படத் துறையில் புகழ் பெறத் தொடங்கிய நேரத்தில், சிதம்பரம் ஜெயராமன் அவ்வளவாக பின்னணி பாடவில்லை. எனவே இருவருக்கும் அறிமுகம் இல்லை.

இசை அமைப்பாளர் ராமமூர்த்தி மூலமாக கச்சேரிக்கு வாலி ஏற்பாடு செய்தார். சிதம்பரம் ஜெயராமனை அவரே காரில் அழைத்துச் சென்றார்.

தன்னைப்பற்றி ஜெயராமனிடம் ராமமூர்த்தி கூறியிருப்பார் என்று வாலி நினைத்தார். ஆனால், நம்ம திருச்சிக்காரர், கச்சேரி விஷயமா உங்களைப் பார்ப்பார்!' என்று மட்டுமே ராமமூர்த்தி கூறியிருந்தார். எனவே, தன்னைக் காரில் அழைத்துச் செல்கிறவர் வாலி என்பது ஜெயராமனுக்குத் தெரியாது.

காரின் முன் வரிசையில் சி.எஸ்.ஜெயராமன் அமர்ந்திருந்தார். பின் வரிசையில் வாலி உட்கார்ந்திருந்தார்.

கார், செங்கல்பட்டைத் தாண்டியது. ஜெயராமன் ஒரு கச்சேரிப் பாடலை ஆலாபனம் செய்தார். ஆனந்தமாய் பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்த வாலி, இடையில் "ஆகா! அற்புதம்!'' என்றார்.

உடனே ஜெயராமன் பாட்டை நிறுத்திவிட்டு, "தம்பி! உங்களுக்கு சங்கீதம் தெரியுமா?'' என்று கேட்டார்.

"ஓரளவு ரசிக்கத் தெரியும். சட்ட -திட்டம் எல்லாம் அவ்வளவாகத் தெரியாது'' என்றார், வாலி.

"நான் இப்போது பாடியது என்ன ராகம்?'' என்று ஜெயராமன் கேட்டார்.

"காமவர்த்தினி'' என்று பதில் சொன்னார், வாலி.

"பலே!'' என்று மகிழ்ச்சியுடன் கூவினார், ஜெயராமன்.

பிறகு, அவர் ஒவ்வொரு பாட்டாகப் பாட, "இது ஹரி காம்போதி'', "இது பைரவி'', "இது கல்யாணி'' என்றெல்லாம் ராகங்களின் பெயர்களைக் கூறிக்கொண்டே வந்தார், வாலி.

மனம் மகிழ்ந்து போன ஜெயராமன், "தம்பி! நீங்க காவேரி தண்ணியாச்சே! சங்கீத ஞானத்துக்கும் கேட்கணுமா?'' என்று வாலியை பாராட்டினார்.

பிறகு, "தம்பி! நீங்க என்ன தொழில் பண்றீங்க...'' என்று கேட்டார்.

"பாட்டு எழுதிக்கிட்டு இருக்கிறேன்'' என்று வாலி சொன்னதும், "அப்படியா!'' என்று வியப்புடன் கூறினார், ஜெயராமன்.

பிறகு, "கிராமபோன் ரிக்கார்டுலே யாராது பாடியிருக்காங்களா?'' என்று கேட்டார்.

டி.எம்.சவுந்தர்ராஜன், பி.சுசீலா ஆகியோர் பாடியிருப்பதாக வாலி சொன்னார்.

"சபாஷ்! சபாஷ்! டி.எம்.சவுந்தரராஜன் என்ன பாட்டு பாடியிருக்காரு, கொஞ்சம் பாடிக்காட்டுங்க'' என்றார், சி.எஸ்.ஜெயராமன்.
டி.எம்.எஸ். பாடிய - "கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும்'', "ஓராறு முகம்'' ஆகிய பாடல்களையும், பி.பி.சீனிவாஸ் பாடிய "இசையால் எதுவும் வசியமாகும்'' என்ற பாடலையும், வேறு சில பாடல்களையும் பாடிக்காண்பித்தார், வாலி.

பரவசப்பட்டுப்போன ஜெயராமன், "உங்க பாட்டுகள் எல்லாம் பிரமாதமாக இருக்கு. இந்த பாட்டுகளையெல்லாம் நான் ஏற்கனவே கேட்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் எழுதியது என்று தெரியாது'' என்று கூறிவிட்டு, "தம்பி! உங்களுக்கு பாட்டெழுத நல்லா வருது. அருமையான சொற்கள். கருத்துக்களும் பிரமாதமா இருக்கு. நீங்க சினிமாவில் பாட்டு எழுத முயற்சி பண்ணினால், பிரமாதமாக வருவீங்க'' என்றார்.

"அண்ணே...!'' என்று குறுக்கிட்டார், வாலி. ஆனால் அவரை பேச விடாமல் ஜெயராமன் தொடர்ந்து கூறினார்:

"தம்பி! நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியுது. நம்ம பாட்டையெல்லாம் சினிமாவிலே யாரு எடுத்துப்பாங்கன்னு நீங்க சந்தேகப்படுறீங்க. இந்த சந்தேகம் எல்லாம் வேண்டாம். மகா மோசமா பாட்டு எழுதுகிறவன் எல்லாம் இப்ப சினிமாவுக்கு வந்துவிட்டான்'' என்று சொன்ன சிதம்பரம் ஜெயராமன், வெற்றிலையை மடித்து வாயில் திணித்தவாறே, "அத்தைமடி மெத்தையடி, மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், புன்னகை என்ன விலை... இப்படி எல்லாம் மட்டகரமான பாட்டுக்கள் வர ஆரம்பிச்சுடுச்சு.

எவனோ ஒருத்தன் வாலி'ன்னு இப்ப புதுசா வந்திருக்கிறான். விஸ்வநாதன் -ராமமூர்த்தி கிட்ட அவன்தான் நிறைய எழுதுறான். பாட்டெல்லாம் ஒரே கட்சிப் பாட்டா இருக்கு. நீங்க எவ்வளவோ தேவலை. விவரமா எழுதறீங்க'' என்று சொல்லி முடிப்பதற்கும், கார் திண்டிவனத்தில் ஒரு டீக்கடை எதிரே நிற்பதற்கும் சரியாக இருந்தது.

டிரைவர் டீ குடிக்கப்போனார்.

வாலியும், சிதம்பரம் ஜெயராமனும் மாறுபட்ட மன நிலையில் நாலாபுறத்தையும் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.

திடீரென்று, பத்துப்பதினைந்து பள்ளி மாணவர்கள், "டேய்! கார்ல உட்கார்ந்து இருப்பது கவிஞர் வாலிடா... வாங்கடா ஆட்டோகிராப் வாங்கலாம்'' என்றபடி ஓடிவந்தனர்.

ஆட்டோகிராப் நோட்டை நீட்டிய மாணவர்களுக்கு, "நல்வாழ்த்துக்கள் -வாலி'' என்று கையெழுத்து போட்டுக்கொடுத்தார், வாலி. இதைப்பார்த்த சிதம்பரம் ஜெயராமன் ஷாக்' அடித்தவர் போல சிலையானார்.

மாணவர்கள் போனபின், வாலியின் இரு கைகளையும் பற்றிக்கொண்டு, "தம்பி! நீங்கதான் வாலின்னு தெரியாம பேசிட்டேன். ஆமாம். நீங்களாவது உங்க பெயரை சொல்லியிருக்கக் கூடாதா?'' என்று பாசத்தோடு கேட்டார்.

"என் பெயர் என்னன்னு நீங்க கேட்கவே இல்லையேண்ணே! அதனால்தான் நானும் சொல்லலே'' என்றார் வாலி.

சிதம்பரம் ஜெயராமன் சிரித்துக்கொண்டே, "காவேரித் தண்ணீக்கே கொஞ்சம் குசும்பு ஜாஸ்தி'' என்று, வாலியின் கன்னத்தை செல்லமாகத் தட்டினார்

madhu
12th August 2014, 03:03 PM
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணமா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொன்னம்மா
சேலாடும் கண்ணில் பாலாறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்

இது சரியா ? madhu sir

அய்யகோ ! ரொம்ப டீப்பா அர்த்தம் எல்லாம் கேட்காதீங்க சாரே ! நான் சாதா ரணமானவன். என்னை பயங்கர ரணமாக்கிடாதீங்க...

சேல் என்றால் மீன். அதனால் கண்ணுக்கு உவமையாக சுலபமாக சொல்லிடலாம். அந்தக் கண்ணில் ஊறும் நீரும் அதன் வெணமை நிறத்தால் பால் போலத் தெரியுதுன்னு சொல்றாங்களோ என்னவோ ?

Richardsof
12th August 2014, 03:03 PM
THAILAND ACTRESS - METHA

ONLY ONE FILM -AND ONLY ONE SONG

http://i62.tinypic.com/vyy4j5.jpg

http://youtu.be/fEF22pJ1qPY

madhu
12th August 2014, 03:04 PM
சமீபத்தில் பாங்காக் போயிருந்தபோது அங்கே ஒருவரிடம் மேத்தா பற்றி கேட்டேன். கொஞ்சம் யோசித்துவிட்டு "ஓ.. மீத் ரூங்ராத்.. அவங்க ஒரு காலத்தில் பிரபல நடிகை. இப்போ குடும்பத்தோடு செட்டில் ஆயிட்டாங்க" என்றார். பச்சைக்கிளி கூட்டுக்குள் போயிடிச்சாம்.

madhu
12th August 2014, 03:05 PM
மோகம் முப்பது வருஷமும் படாஃபட் என நினைவு.. மேனகா ரோல்..

யார் மேனகா ?

Richardsof
12th August 2014, 03:05 PM
சமீபத்தில் பாங்காக் போயிருந்தபோது அங்கே ஒருவரிடம் மேத்தா பற்றி கேட்டேன். கொஞ்சம் யோசித்துவிட்டு "ஓ.. மீத் ரூங்ராத்.. அவங்க ஒரு காலத்தில் பிரபல நடிகை. இப்போ குடும்பத்தோடு செட்டில் ஆயிட்டாங்க" என்றார். பச்சைக்கிளி கூட்டுக்குள் போயிடிச்சாம்.

thanks madhu sir

chinnakkannan
12th August 2014, 03:18 PM
மீத்தா ருங்ராத் பற்றி எழுத்தாளர் இரா.முருகன் ஆனந்த் ராகவ்வின் ஒரு புத்தக முன்னுரையில் (க்விங்க் என நினைக்கிறேன்) எழுதியிருந்தார்.. அவர் டி.வி.சீரியல்களில் எல்லாம் நடிக்கிறாராம்..புத்தகத்தை மறுபடி தேடி எடுத்துஇடுகிறேன்.

மேனகா - மோகம் முப்பதுவருஷம் மணியன் கதையில் ஆர்ட்டிஸ்ட் ரவிசங்கரின் மனைவி..

RAGHAVENDRA
12th August 2014, 03:33 PM
இரண்டாம் பாகம் தொடக்கி வைக்க நம் கிருஷ்ணா சாரை முன்மொழிகிறேன். நண்பர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறலாம்.

http://www.youtube.com/watch?v=6R4y-tIle3o

gkrishna
12th August 2014, 03:35 PM
http://www.thehindu.com/thehindu/fr/2003/08/15/images/2003081501440201.jpghttp://2.bp.blogspot.com/-dmlzMGlCr94/TqBVh10k4cI/AAAAAAAABnE/00SnqIpBbyg/s1600/A.V.Meiyappan.jpghttp://www.indiacatalog.com/images/logos/local/th_avm.jpg

AVM என்பதன் விளக்கமான AV மெய்யப்ப செட்டியார் அவர்களின் 35 வது நினைவு நாள் இன்று .(12 ஆகஸ்ட் 1979 இல் அவர் காலமானார் )
அவரது நினைவாக

http://www.youtube.com/watch?v=HiQI7tgwZoo

RAGHAVENDRA
12th August 2014, 03:44 PM
மின்னல் வேகம்... அல்லது என்னவெனச் சொல்வது.. இந்த வேகத்தை..

வினோத் சொன்னது போல் நாளைக்கே அடுத்த பாகம்...

பொறுங்க.... பொறுங்க...அடுத்த பாகம் இன்னும் கொஞ்ச நேரத்திலே ஆரம்பிக்கப் போறாங்களா... அதுக்குள்ளே இந்த போஸ்ட் ஏத்திடணுமா இல்லைண்ணா அடுத்த பாக்ததிலே தானா..

சார் சார்... இந்த ஒரே ஒரு போஸ்டை மட்டும் போட்டுடறேனே...

எஸ்.வரலக்ஷ்மியின் இனிமையான குரலில் வேலைக்காரன் படத்தில் ஆர்.சுதர்ஸனம் இசையில்...

என்னது வேலைக்காரனில் எஸ்.வரலக்ஷ்மியா சுதர்ஸனமா... ன்னு கேட்டுடாதீங்க..

1952ல் வெளிவந்த வேலைக்காரன் படத்திலிருந்து சார் இந்தப் பாட்டு.

நானே ராணி...

http://www.inbaminge.com/t/v/Velaikkaran%201952/

நான் இன்னும் ஐம்பத்திரண்டையே தாண்டலையே...

madhu
12th August 2014, 03:46 PM
மீத்தா ருங்ராத் பற்றி எழுத்தாளர் இரா.முருகன் ஆனந்த் ராகவ்வின் ஒரு புத்தக முன்னுரையில் (க்விங்க் என நினைக்கிறேன்) எழுதியிருந்தார்.. அவர் டி.வி.சீரியல்களில் எல்லாம் நடிக்கிறாராம்..புத்தகத்தை மறுபடி தேடி எடுத்துஇடுகிறேன்.

மேனகா - மோகம் முப்பதுவருஷம் மணியன் கதையில் ஆர்ட்டிஸ்ட் ரவிசங்கரின் மனைவி..

ஓ... ஓவியத்து பெண்மை உயிர்கொள்ளுமோ.. உறவு இல்லாப் பெண்மை துயில் கொள்ளுமோன்னு பாடுவாங்களே.. அவங்களா ? யெஸ்..யெஸ்...

madhu
12th August 2014, 03:49 PM
மின்னல் வேகம்... அல்லது என்னவெனச் சொல்வது.. இந்த வேகத்தை..

நான் இன்னும் ஐம்பத்திரண்டையே தாண்டலையே...

எதைச் சொல்றீங்க ராகவ் ஜி.. நீங்க பாடல் கொடுக்கும் வேகத்தையா ? அது மின்னலை மிஞ்சும் வேகம்.

நாம் யாருமே இன்னும் பதினாலையே தாண்டலையே ! ( ஹி ஹி 2014-ஐச் சொன்னேன் )

RAGHAVENDRA
12th August 2014, 03:50 PM
பொங்கும் பூம்புனல்

http://www.inbaminge.com/t/v/Valaiyapathi/

குளிர் தாமரை மலர் பொய்கை கண்டேன்
ஓடையிலே குளிர் ஓடையைக் கண்டேன்

இந்தப் பாட்டில் உள்ள மொத்த வரிகளை எண்ணி விடலாம்...

உலவும் தென்றல் காற்றை மெட்டில் மட்டுமல்ல கருத்திலும் நினைவூட்டும் பாடல்..

குலுங்கிடும் பூவிதனால் தேனருவி கண்டதனால் என்ற பாட்டால் புகழ் பெற்ற வளையாபதியிலிருந்து தான் இந்தப் பாடலும்.

தக்ஷிணாமூர்த்தி இசையில் இனிமையான பாடல்

gkrishna
12th August 2014, 03:52 PM
chinnakannan sir

சூரியகலா- [வயது-72] பழம்பெரும் நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் வில்லி நடிகை. ஜே.பி.சந்திரபாபுவுடன் குமார ராஜா, ஏ.வீரப்பனுடன் சாது மிரண்டால், இல்லறமே நல்லறம் படத்தில் எஸ்.வி.ராம்தாஸின் காதலியாக இருந்துகொண்டே சித்தூர் வி.நாகையாவை மயக்கி தன் வலையில் வீழ்த்தும் நடனக்காரியாகவும் அன்பு எங்கே, கண் திறந்தது உட்பட பல தமிழ்த் திரைப்படங்களிலும் பெரும் வெற்றி பெற்ற தெலுங்குப் படமான “சொர்ண சுந்தரி”, 1957-இல் வெளிவந்த “பலே அம்மாயிலு” போன்ற தெலுங்குப் படங்களிலும் கன்னட மொழியில் சில படங்களிலுமாக மும்மொழிகளிலும் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சூரியகலா. இவர் கடந்த 30.06.2014 அன்று இரவு 10.00 மணியளவில் சென்னையில் தனது 72-ஆவது வயதில் காலமானார்.

http://antrukandamugam.files.wordpress.com/2014/08/sooriyakala-bhale-ammayilu-1957-3.jpg?w=593&h=348http://antrukandamugam.files.wordpress.com/2014/08/sooriyakala-a-veerappan-sadhu-mirandal-1966-1.jpg?w=593&h=341

இவர் நினைத்தாலே இனிக்கும் படத்திலும் ரஜினி காந்துடன் 'அன்பரே உங்களை ஒருமுறை பார்த்தேன் பாரத்ததும் பரம ரசிகை ஆகி விட்டேன் "
என்ற குரலுக்கு சொந்தகாரர் போல் காமெடி செய்து ஏமாற்றுவார் .
இந்த படத்தில் ரூம் clearner வேடத்தில் வருவார் drums விசு (ராஜப்பா) இவரை 'நம்ம ஊர் குப்பம்மா ' என்று கூறுவார்

gkrishna
12th August 2014, 03:53 PM
எதைச் சொல்றீங்க ராகவ் ஜி.. நீங்க பாடல் கொடுக்கும் வேகத்தையா ? அது மின்னலை மிஞ்சும் வேகம்.

நாம் யாருமே இன்னும் பதினாலையே தாண்டலையே ! ( ஹி ஹி 2014-ஐச் சொன்னேன் )

நான் வயசொன்னு நினைச்சேன்

RAGHAVENDRA
12th August 2014, 03:56 PM
நான் எம்எஸ்வி ரசிகனாக்கும்... எனக்கு 22 இன்னும் முடியலே...

gkrishna
12th August 2014, 04:01 PM
மின்னல் வேகம்... அல்லது என்னவெனச் சொல்வது.. இந்த வேகத்தை..

வினோத் சொன்னது போல் நாளைக்கே அடுத்த பாகம்...

பொறுங்க.... பொறுங்க...அடுத்த பாகம் இன்னும் கொஞ்ச நேரத்திலே ஆரம்பிக்கப் போறாங்களா... அதுக்குள்ளே இந்த போஸ்ட் ஏத்திடணுமா இல்லைண்ணா அடுத்த பாக்ததிலே தானா..

சார் சார்... இந்த ஒரே ஒரு போஸ்டை மட்டும் போட்டுடறேனே...

நான் இன்னும் ஐம்பத்திரண்டையே தாண்டலையே...

வேந்தர் சார்
ஆனாலும் ரொம்ப (குசு)ம்பு .
நீங்க ரொம்ப கொவகாரர் னு கேள்விபட்டேன்
தயவு செய்து இந்த திரியில் பங்கு கொள்பவர்களிடம் மட்டும் கோவிச்சுக்காதீங்க please
மதுரை குசும்பு ராஜேஷ் சின்னகண்ணன்
மது சார் நீங்க எந்த ஊர் குசும்பு :)

gkrishna
12th August 2014, 04:02 PM
நான் எம்எஸ்வி ரசிகனாக்கும்... எனக்கு 22 இன்னும் முடியலே...

super punch

RAGHAVENDRA
12th August 2014, 04:07 PM
http://www.inbaminge.com/t/j/Jaathagam/

சிந்தனை ஏன் செல்வமே....

இன்ப துன்பம் இரண்டும் வாழ்வில்
மாறி மாறி வருமே..

சார் இது என் பஞ்ச் இல்லை... பி.பி.ஸ்ரீநிவாஸின் முதல் படமான ஜாதகம் திரைப்படத்தில் பாடிய பாட்டில் வரும் வரிகள்..

என்னது நான் கோவக்காரனா...
எவன்யா சொன்னது...
இந்த நேரத்திலே கையிலெ எதுவும் மாட்டமாட்டேங்குதே...
எவனாவது கோவக்காரன் சொல்லியிருப்பான்...
இருக்கட்டும் அவனை ஒரு கை பாத்துக்கறேன்..

இன்னொரு கை..
போனால் போகுது விட்டுடலாம்.. இங்கே எழுதணுமே...

chinnakkannan
12th August 2014, 04:10 PM
சூரியகலா பற்றிய தகவல்களுக்கு நன்றி கிருஷ்ணா சார்..ம்ம்

இப்போ மனசுக்குள்ள ஒலிக்கிற பாட்டு டி.ஆர் மகாலிங்கம் சுசீலா பாடிய பாட்டாக்கும்..இசையரசியின் துள்ளல் குரல் அண்ட் டி.ஆர்.எம்மின் கணீர்க் குரல்.. நல்ல கெமிஸ்ட்ரி..அந்தக்காலத்திய..

ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
இவள் ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ

துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை
எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
தள்ளி விட்டுப் போன பின் தேடி வந்தாள்

கிளை தான் இருந்து கனியே சுமந்து
தனியே கிடந்த கொடி தானே

கண்ணாளன் உனைக் கலாந்தனந்தமே பெற
காவினில் வாழும் கிளி நானே

துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை

அந்தி வெய்யில் நிறத்தவளோ
குலுங்கும் அல்லி மலர் இனத்தவளோ
உந்தி உந்தி விழும் நீரலையில்
ஓடி விளையாடி மணம் சிந்தி வரும் தென்றல் தானோ
இன்பம் தந்த மயில் இவள் தானோ

.
அன்பு மனம் கூடுவதில் துன்பமில்லை
அஞ்சி அஞ்சி ஓடுவதில் லாபமில்லை
வீணை மட்டும் இருந்தால் நாதமில்லை
மீட்டும் விரல் பிரிந்தால் கானமில்லை

இதயம் கனிந்து எதையும் மறந்து
இருவர் மகிழ்ந்து உறவாட

நன் நேரமிதே
மனம் மீறிடுதே
நன் நேரமிதே
மனம் மீறிடுதே
மனம் மாளிகை ஓரம் ஆடிடுவோம்

முகில் ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ

chinnakkannan
12th August 2014, 04:11 PM
மதுண்ணா கொஞ்சம் பெரிய இடம் குசும்புன்னுல்லாம் கேக்காதீங்க... என்ன ஊரா.. மன்னார் குடி :)

gkrishna
12th August 2014, 04:12 PM
சிந்தனை ஏன் செல்வமே....

இன்ப துன்பம் இரண்டும் வாழ்வில்
மாறி மாறி வருமே..

சார் இது என் பஞ்ச் இல்லை... பி.பி.ஸ்ரீநிவாஸின் முதல் படமான ஜாதகம் திரைப்படத்தில் பாடிய பாட்டில் வரும் வரிகள்..

என்னது நான் கோவக்காரனா...
எவன்யா சொன்னது...
இந்த நேரத்திலே கையிலெ எதுவும் மாட்டமாட்டேங்குதே...
எவனாவது கோவக்காரன் சொல்லியிருப்பான்...
இருக்கட்டும் அவனை ஒரு கை பாத்துக்கறேன்..

இன்னொரு கை..
போனால் போகுது விட்டுடலாம்.. இங்கே எழுதணுமே...

ரொம்ப நன்றி வேந்தர் சார்
உங்கள் செல்ல கோவத்தை ரசித்தேன்

madhu
12th August 2014, 04:17 PM
மதுண்ணா கொஞ்சம் பெரிய இடம் குசும்புன்னுல்லாம் கேக்காதீங்க... என்ன ஊரா.. மன்னார் குடி :)

அதாவது ராஜ "கோபாலன்"ன்னு சொல்றீங்களா சிக்கா ?

RAGHAVENDRA
12th August 2014, 04:19 PM
பொங்கும் பூம்புனல்

வருங்காலத் தலைவன் நீயே பாப்பா வளர் தமிழ் நாட்டிலே பிறந்ததினாலே...

இது எந்த நேரத்தில் எழுதிய வரியோ... ஏகப் பட்ட அர்த்தமிருக்குது இந்தப் பாட்டிலே...

தலைவரின் கண்கள் திரைப்படத்தில் எம்.எல்.வி. அவர்கள் எஸ்.வி.வெங்கட்ராமனின் இசையில் பாடிய மதுர கானம்...

மீண்டும் மீண்டும் கேட்கலாம்.

http://www.inbaminge.com/t/k/Kangal/

madhu
12th August 2014, 04:20 PM
சார் இது என் பஞ்ச் இல்லை... பி.பி.ஸ்ரீநிவாஸின் முதல் படமான ஜாதகம் திரைப்படத்தில் பாடிய பாட்டில் வரும் வரிகள்..



பி.பி.ஸ்ரீனிவாஸ் பேரைச் சொன்னதும் உட்லாண்ட்ஸ் டிரைவ்-இன் ஹோட்டல் நினைவுக்கு வருது.
அங்கே நடந்த ஒரு சின்ன hub meet-ம் தான்..

ராகவ்-ஜி.. உங்களுக்கு ஏதேனும் ஞாபகம் வருதா ?

RAGHAVENDRA
12th August 2014, 04:21 PM
நிச்சயம் ... மறக்க முடியுமா... அதற்கப் பிறகு நாம் சந்திக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை... முரளி சார் தங்களை எனக்கு அறிமுகப் படுத்தி வைத்தாரே...

gkrishna
12th August 2014, 04:24 PM
அருமையான பாடல் சின்னகண்ணன் சார்

வேந்தர் சூரிய லோகத்தில் இருந்து பிடிக்கிறார் என்றல் நீங்கள் சந்திர லோகத்தில் இருந்து பாடல்களை பிடிக்கிறீர்கள் .நாங்கள் எல்லாம் எங்கே செல்வது ?

madhu
12th August 2014, 04:25 PM
அருமையான பாடல் சின்னகண்ணன் சார்

வேந்தர் சூரிய லோகத்தில் இருந்து பிடிக்கிறார் என்றல் நீங்கள் சந்திர லோகத்தில் இருந்து பாடல்களை பிடிக்கிறீர்கள் .நாங்கள் எல்லாம் எங்கே செல்வது ?

போவோம் புது உலகம்...
காண்போம் மது மயக்கம்

madhu
12th August 2014, 04:26 PM
நிச்சயம் ... மறக்க முடியுமா... அதற்கப் பிறகு நாம் சந்திக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை... முரளி சார் தங்களை எனக்கு அறிமுகப் படுத்தி வைத்தாரே...

அதற்கு பிறகு "ஜோ" அவர்களையும் நான் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை.

RAGHAVENDRA
12th August 2014, 04:35 PM
ஜோ அவர்களை சந்தித்தேன் அதன் பிறகு.. அதுவும் முரளி சாரின் தயவால் தான்...

RAGHAVENDRA
12th August 2014, 04:37 PM
பொங்கும் பூம்புனல்

போவோமே புது உலகம்...சொல்லப் போனால் போய்க்கொண்டிருக்கிறோம்..

மனம் என்னும் வானில் மழை மேகமாகவே ஆசைகள் மேவிடுதே... புதுப்புது சந்தோஷங்களை மனம் தேடிக்கொண்டு தானிருக்கிறது

http://www.youtube.com/watch?v=PTtsuCeODvU

எல்லோரும் இந்நாட்டு மன்னர்.. டி.ஜி.லிங்கப்பா நம்மை அழைத்துச் செல்கிறார், ஏ.எம்.ராஜா பி.சுசீலா குரல்கள் மூலமாக

RAGHAVENDRA
12th August 2014, 04:39 PM
பொங்கும் பூம்புனல்

கையும் கையும் கலந்திடவா ஜாலியாகவே...

பின்னாளில் வந்த தேன்கிண்ணம் ஹலோ பார்ட்னர் படங்களின் கலப்படப் பாட்டு சூழ்நிலைக்கு முன்னோடியான பாட்டு.

கடன் வாங்கி கல்யாணம்..

எஸ். ராஜேஸ்வர ராவின் இசையில் ஒரு சிறப்பம்சம்... மேண்டலின் பிரயோகம்... சூப்பராக இருக்கும்...

http://www.youtube.com/watch?v=dGDz7PcW3Co

RAGHAVENDRA
12th August 2014, 04:56 PM
பொங்கும் பூம்புனல்

சூர்யகலா பற்றி இவ்வளவு பதிவுகள் வந்திருக்கும் போது நாம் ஒன்றாவது போடக் கூடாதா...

மாடர்ண் தியேட்டர்ஸ் வேதா கூட்டணி ஆரம்பித்து வைத்த படம்... அன்பு எங்கே..
வேதா இசையில் ஜிக்கி பாடிய அபூர்வமான பாடல்களில் ஒன்று இடம் பெற்ற படம் அன்பு எங்கே...
சூர்யகலாவின் அற்புத நடனம் இடம் பெற்ற பாடல் இடம் பெற்ற படம் அன்பு எங்கே..

மேலே பறக்கும் ராக்கெட்டு மின்னல் பூச்சி ஜாக்கெட்டு..

அந்த காலத்திலேயே இந்த மாதிரி வரிகளா. என்று கேட்கிறீர்களா..
அதான் இருக்கவே இருக்காரே தஞ்சை ராமய்யாதாஸ் என்று அந்த காலத்தில் கூறுவார்களாம்..
நான் சொல்லவில்லை சாமி.

ராக் அண்ட் ரோல் மெட்டில் தூள் கிளப்பிய பாடல்...
ஹௌரா ப்ரிட்ஜ் படப் பாடலை அப்படியே நினைவூட்டும் மெட்டு..

https://www.youtube.com/watch?v=mHJfDtPa8Pw

இந்தப் பாட்டில் குரல் கொடுத்திருப்பவர்களில் ஒருவர் கே.ஜமுனாராணி. இன்னொருவர் டெஸ்மாண்ட்..இவர் மெல்லிசை மன்னரின் இசையிலும் சிலபாடல்களில் கோரஸ் குரல் தந்திருக்கிறார்...

இப்பாட்டில் இசையமைப்பாளர் வேதாவின் இசைக்குழு இடம் பெற்றிருக்கிறது.. அவரும் இப்பாட்டில் தலையைக் காட்டியிருக்கிறார்.

கண்டு பிடியுங்கள் பார்ப்போம்.. கேட்டிருப்பவர் இப்பாடலை இணையத்தில் தரவேற்றிய நமது மய்ய நண்பர் பேராசிரியர் சேக்கரக்குடி கந்தசாமி அவர்கள்..

gkrishna
12th August 2014, 05:02 PM
http://lh4.ggpht.com/-HFZBXnAAnag/U-l2b_T_FCI/AAAAAAAAML8/tNck4Xsr_yM/w1280/070000.jpghttp://lh5.ggpht.com/-7vHBpI3f5iU/U-l2fXt2NjI/AAAAAAAAMMI/QqVza88e_GE/w1280/070001.jpghttp://lh6.ggpht.com/-mUC-Jw2yHcY/U-l2k5LBd-I/AAAAAAAAMMk/bAduG24RmtA/w1280/070002.jpghttp://lh6.ggpht.com/-odPByCWH78Y/U-l2lQIH4-I/AAAAAAAAMMs/oQFfdDH4uvo/w1280/070003.jpghttp://lh4.ggpht.com/-SgTpLXR_Y68/U-l2jEJ-uDI/AAAAAAAAMMY/rqYlJeqPM18/w1280/070004.jpg

chinnakkannan
12th August 2014, 05:02 PM
ம்ம் நன்றி க்ருஷ்ணா ஜி அண்ட் ராகவேந்தர் சார் ஃபார் இனிய பாடல்களுக்காக..

மன்னார் குடி ராஜகோபாலனுக்காக்த் தான் மதுண்ணா..:)

*

டி.ஆர்.எம் சுசீலா காம்பினேஷன் ஒரு டைப் என்றால்
சீர்காழி எஸ்.ஜி அண்ட் சுசீலாம்மா வேறொரு டைப்..

மதுரையில் தெப்பக்குளம் போகும்வழியில் இருந்தது அந்ததியேட்டர்.. கணேஷ் தியேட்டர் என நினைவு.. அங்கு என் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு பெண்மணி அந்தப் படத்திற்கு என்னை துணைக்கு அழைத்துச் சென்றார்கள்..அப்போது அவருக்கு மணமாகவில்லை ... எனக்கும் தான் (ஏனெனில் நான் எட்டாம் க்ளாஸோ ஒன்பதாவதோ)..மேட்னி ஷோ...

சரித்திரகாலப் படம் தான் ஆனந்தன் சரோஜா தேவி..படப்பெயர் நினைவு வந்திருக்குமே.. யானைப்பாகன்..

இனி பாடல்

செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்
தித்திக்கும் தேன் குடமே செண்பகப் பூச்சரமே..

பொங்கும் எழில் பருவம்
பெண்களின் இளம் உருவம்
சிந்தையில் உறவாடும் இன்ப உருவம்

கன்னியின் ஆவல் தனைகடைக்கண் சொல்லும்கண்ணே

எண்ணத்தைக் கிள்ளும் அந்த இன்பத்தை சொல்லும் முன்னே

அலை மோதும் உணர்வாலே கனலாகவே
உள்ளம் ஆடி வானம் தொடும் ஆசைக் கடலாகவே

நிழலாகி உருவான காதல் தன்னை
நினைந்து நினைந்து இன்பம்
இணைந்து பருகும் முன்னே

செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்..

**

நல்ல பாட்டு தானே..

madhu
12th August 2014, 05:13 PM
நல்ல பாட்டு தானே..

http://youtu.be/85KXz3s1w4c

அது சரி சிக்கா.. அது ஆனந்தனா ? உதயகுமாரா ?

madhu
12th August 2014, 05:17 PM
என் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு பெண்மணி அந்தப் படத்திற்கு என்னை துணைக்கு அழைத்துச் சென்றார்கள்..அப்போது அவருக்கு மணமாகவில்லை ... எனக்கும் தான் (ஏனெனில் நான் எட்டாம் க்ளாஸோ ஒன்பதாவதோ)..

ம்ம்... ம்ம்... அந்தப் பெண்மணி எந்த கிளாஸ் ? ஆறாவதோ ஏழாவதோவா ?

வீ..கா..வுக்கு இந்த விஷயம் தெரியுமா ?

இன்னைக்கு செவ்வாய்... ம்ம்.. சிவப்பு நிறமான வாய்... ஓகே !!

gkrishna
12th August 2014, 05:22 PM
ம்ம் நன்றி க்ருஷ்ணா ஜி அண்ட் ராகவேந்தர் சார் ஃபார் இனிய பாடல்களுக்காக..
மன்னார் குடி ராஜகோபாலனுக்காக்த் தான் மதுண்ணா..:
எனக்கும் தான் (ஏனெனில் நான் எட்டாம் க்ளாஸோ ஒன்பதாவதோ).)


அண்ணா
சீர்காழி சுசீலா அம்மாவின் இணையில் வந்த அருமையான பாடல்

சின்ன கண்ணனிடம் ஒரு சின்ன கேள்வி (கேட்கலாமா ?)
பதிவு ஆரம்பிக்கும் போது 'ம்ம்' அப்படின்னா என்ன அர்த்தம்

எட்டாப்பு படிக்கும் போதே 'கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா '

chinnakkannan
12th August 2014, 05:51 PM
//ம்ம்... ம்ம்... அந்தப் பெண்மணி எந்த கிளாஸ் ? ஆறாவதோ ஏழாவதோவா ?

வீ..கா..வுக்கு இந்த விஷயம் தெரியுமா ?// வீ.காவிடம் இதுவரை சொன்னதில்லை..(சொல்லச்சந்தர்ப்பம் நேரிடவில்லை..) அந்தப் பெண்மணி பி.ஏ லேடி டோக்கில்ஃபர்ஸ்ட் இயர் படித்திருந்தார் என நினைக்கிறேன்..:)

//சின்ன கண்ணனிடம் ஒரு சின்ன கேள்வி (கேட்கலாமா ?)
பதிவு ஆரம்பிக்கும் போது 'ம்ம்' அப்படின்னா என்ன அர்த்தம்

எட்டாப்பு படிக்கும் போதே 'கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா '// க்ருஷ்ணா ஜி.ம்ம்னா ஆரம்பிக்கப் போறேன்ம்ம் நு அர்த்தம்.. அப்புறம் க.ஆ.கா எல்லாம் இல்லை.. ஒன்றும் தெரியாத கண்ணாவாக்கும் நான்.. :)

மக்கள்ஸ்.. என் அம்மாவிடமும் சொல்லிக் கொண்டு தான் போனோம்.. ! :) (டிவிஎஸ் ஸ்டாப் ல ருந்து பெரியார் பஸ்ஸ்டாண்ட் அங்கிட்டு இருந்து 4 சென் ட்ரல் (பிற்காலத்தில் மையப்பேருந்து நிலையம்) டு தெப்பக்குளம் பஸ் ஏறிப் போய் விட்டு..இன் டர்வெல்ல கோன் ஐஸ் சாப்பிட்டு பின் சமர்த்தாய் பஸ் ஏறி வீட்டிற்கு வந்தோமாக்கும்..

chinnakkannan
12th August 2014, 06:09 PM
டி.ஆர். எம்மின் சோலோ..அந்தக் குரல் அதைவிட அந்த லிரிக்ஸ் மனதை அள்ளுமாக்கும்.. படம் மாலையிட்ட மங்கை..படம் பார்த்ததில்லை..பாடல் பார்த்திருக்கிறேன் வெகுகாலம் முன்..யாராக்கும் ஆடுவது..
*
சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றாது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே….ஆ…ஆ..ஆ..ஆ..ஆ..

செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்

காற்றினில் பிறந்தவளோ புதிதாய்
கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ

அவள் செந்தமிழ் தேன் மொழியாள்

கண்களில் நீலம் விளைத்தவளோ
அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ…

*
ப்ளூ ஐஸ் இருந்தாக்க கண்களில் நீலம் விளைத்தவளோ..அப்புறம் அதைப்பயிர் பண்ணி கடல்ல கரைச்சுட்டாளாம் அதான் ஸீ இஸ் ப்ளூவாம்..என்னா இமாஜினேஷன்..

அந்தப் பழரசம் பருக இவன் தானே தலைகுனியணும்.. கன்ஃப்யூஷன் :)


இந்த கண்கள் ப்ளூ, ப்ரெள்னா இருந்தா தனிக் கவர்ச்சி தானே..(காண்டாக்ட்லாம் இல்லாம)

//பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ…// ம்ம் பிற்காலத்தில இத வெச்சுத்தான் உன்னழகைக் கண்டுகொண்டால்
பெண்களுக்கே ஆசை வரும்னு பிபிஎஸ் முத்துராமன் மூலமாப் பாடினாரோ..

Richardsof
12th August 2014, 06:59 PM
காதலர்கள் ஏக்கத்தில் தங்களை மறந்து பாடும் பாடல் .

எத்தனை உவமைகள் - வார்த்தை விளையாட்டுக்கள் - அமுத கானம் .

தென்றலிலாடும் கூந்தலில்ககண்டேன்
மழைக்கொண்ட மேகம் என் தேவதை அமுதம் சிந்திடும் நேரம்
இனி என்ன நாணம்
இனி என்ன நாணம், இனி என்ன நாணம்

மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்
அந்தி மாலையில் அந்த மாறனின் கணையில்
ஏன் இந்த வேகம் ஏன் இந்த வேகம்
பாவை உடல் பார்க்கடலில்
பள்ளி கொள்ள நான் வரவோ
பனி சிந்தும் கனி கொஞ்சும் பூவிதழில் தேன் பெறவோ மாலை வரும் நேரமெல்லாம்
மன்னன் வர காத்திருந்தேன்
வழியெங்கும் விழி வைத்து
பார்த்த விழி பூத்திருந்தேன்


ஆலிலையின் ஓரத்திலே
மேகலையின் நாதத்திலே
இரவென்றும் பகலென்றும்
காதல் மனம் பார்ப்பதுண்டோ
கள்ள விழி மோகத்திலே
துள்ளி வந்த வேகத்திலே
இதழ் சிந்தும் கவி வண்ணம்
காலை வரை கேட்பதுண்டோ
காலை வரை கேட்பதுண்டோ

கற்பகத்து சோலையிலே
பூத்த மலர் நீ அல்லவோ
விழிஎன்னும் கருவண்டு
பாட வந்த பாட்டென்னவோ
காவியத்து நாயகனின் கட்டழகு மார்பினிலே
சுகம் என்ன சுகமென்று
மோஹன பண் பாடியதோ
மோஹன பண் பாடியதோ

Richardsof
12th August 2014, 07:01 PM
என்னை மறந்ததேன் தென்றலே
இன்று நீ என்னிலை சொல்லிவா
காற்றோடு வளரும் சொந்தம்
காற்றோடு போகும் மன்னவா
கண்ணோடு மலரும் அன்பு
கனியாக மாறாதோ

கலையாத காதல் நிலையானதென்று
அறியாமல் சொல்லிவைத்தாயோ -
உன்னைஅறியாத பெண்ணின் மனவாசல் கண்டு
திறவாமல் எங்கே சென்றாயோ

நிழலான தோற்றம் நிஜமானதென்று
நீயாளும் நாளும் வருமோ - இந்த
நிலமாளும் மன்னன் நீயானபோதும்
நானாளும் சொந்தம் இல்லையோ

கண்டாலும் போதும் கண்கள்
என் ஆவல் தீரும் மன்னவா
சொன்னாலும் போதும் நெஞ்சம்
கனியாக மாறாதோ(என்னை)

Richardsof
12th August 2014, 07:04 PM
கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே
என்னை தடுத்து தடுத்து வெட்கம் மறைக்குமே
நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்குமே
உன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே
கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே
என்னை தடுத்து தடுத்து வெட்கம் மறைக்குமே
நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்குமே
உன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே


நினைத்தேன் உடன் பார்த்தேன்
மனம் மகிழ்ந்தேன் உடல் தளர்ந்தேன்
நினைத்தேன் உடன் பார்த்தேன்
மனம் மகிழ்ந்தேன் உடல் தளர்ந்தேன்
களித்தேன் சுகம் குளித்தேன்
கதை படித்தேன்என்னை மறந்தேன்..
என்னை மறந்தேன்..என்னை மறந்தேன்


பாலும் புது தேனும் பனி போல்
என் மேலே படர்ந்தோட இடம் தேட
அமுதாகவே பாய்ந்தாய்
என்னைக் கொடுத்தேன்..
என்னைக் கொடுத்தேன்..என்னைக் கொடுத்தேன்


கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே
என்னை தடுத்து தடுத்து வெட்கம் மறைக்குமே
நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்குமே
உன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே

Murali Srinivas
12th August 2014, 07:21 PM
கண்ணா,

LDC முதல் வருஷம்னா 17-18. நீங்க 9th-ன்னா 13-14. அதுவும் போனது கணேஷா தியேட்டர்னு சொல்லும்போது எங்கோ இடிக்குதே! ஒரு வேளை கூட வந்தவருக்கு ஹெல்ப் பண்ண (அதாவது அவர் யாரையேனும் சந்திக்க) நீங்கள் துணைக்கு போனீர்களா என்று கேட்டேன்.

வாசு என்னை பிய்க்க போகிறார். பாட்டைப் பத்தி பேச வரல்லை. சைட்டை பத்தி பேச வந்துட்டார்-னு ஓகே எஸ்கேப்!

அன்புடன்

rajeshkrv
12th August 2014, 08:30 PM
ஒரு தூக்கம் போட்டுட்டு வரதுக்குள்ள எத்தனை பக்கங்கள் ...

வாசு ஜி, குலமகள் ராதை , மானோடும் பாதையில பாட்டெல்லாம் போட்டு பட்டய கிளப்பிட்டீங்க
கூடவே கிருஷ்ணா ஜி, மது அண்ண இன்னிக்கு புல் ஃபார்ம்ல இருந்தார் போல (என்னவோ என்னவோ ????)
சி.கா கேட்கவே வேண்டாம் ஆயிரம் கேள்விகள் ஆயிரம் பதில்கள்னு தூள் கிளப்பிட்டார்
ராகவ் ஜி கடைசி வரைக்கு ஓடி ஓடி வந்து பஸ் கிளம்பியவுடன் படிக்கெட்டில் ஏறுபவர்கள்போல அடுத்த பாகம் தொடங்குவதற்குள் பாட்டுக்களை பதிவிட்ட விதம் அபாரம்...
அதே போல் எஸ்.வியின் படங்கள் என நான் வருவதற்குள் எத்தனை களேபரம்... பிரம்மாண்டம்.. ராட்சசி பாடி நம்மை அசத்தினால் இந்த ராட்சசர்கள் பதிவில் அசத்துகிறார்கள் ..என்னே நான் செய்த பாக்கியம்

rajeshkrv
12th August 2014, 08:46 PM
//ம்ம்... ம்ம்... அந்தப் பெண்மணி எந்த கிளாஸ் ? ஆறாவதோ ஏழாவதோவா ?

வீ..கா..வுக்கு இந்த விஷயம் தெரியுமா ?// வீ.காவிடம் இதுவரை சொன்னதில்லை..(சொல்லச்சந்தர்ப்பம் நேரிடவில்லை..) அந்தப் பெண்மணி பி.ஏ லேடி டோக்கில்ஃபர்ஸ்ட் இயர் படித்திருந்தார் என நினைக்கிறேன்..:)

//சின்ன கண்ணனிடம் ஒரு சின்ன கேள்வி (கேட்கலாமா ?)
பதிவு ஆரம்பிக்கும் போது 'ம்ம்' அப்படின்னா என்ன அர்த்தம்

எட்டாப்பு படிக்கும் போதே 'கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா '// க்ருஷ்ணா ஜி.ம்ம்னா ஆரம்பிக்கப் போறேன்ம்ம் நு அர்த்தம்.. அப்புறம் க.ஆ.கா எல்லாம் இல்லை.. ஒன்றும் தெரியாத கண்ணாவாக்கும் நான்.. :)

மக்கள்ஸ்.. என் அம்மாவிடமும் சொல்லிக் கொண்டு தான் போனோம்.. ! :) (டிவிஎஸ் ஸ்டாப் ல ருந்து பெரியார் பஸ்ஸ்டாண்ட் அங்கிட்டு இருந்து 4 சென் ட்ரல் (பிற்காலத்தில் மையப்பேருந்து நிலையம்) டு தெப்பக்குளம் பஸ் ஏறிப் போய் விட்டு..இன் டர்வெல்ல கோன் ஐஸ் சாப்பிட்டு பின் சமர்த்தாய் பஸ் ஏறி வீட்டிற்கு வந்தோமாக்கும்..

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே .. என் மதுரைக்காலங்கள் ஞாபகம் வருகிறதே ...

chinnakkannan
12th August 2014, 09:31 PM
முரளி சார்..

உங்களிடமிருந்து இப்படி ஒருகேள்வி வரும் என எதிர் பார்க்கவில்லை :)

..ச்சும்மா ஒரு சுவாரஸ்யத்திற்காக லேடிடோக் ஃபர்ஸ்ட் இயர் என எழுதியிருந்தேன்..இப்படியா வயதுக் கணக்குப் போட்டு என்னை வாருவது :)

அந்தப்பெண்மணி எஸ்.எஸ்.எல்.சியிலேயே படிப்பை நிறுத்தி வீட்டோடு பல வருடம் இருந்தார்..வீட்டில் அவருக்கு பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. என் நண்பனுடைய வீட்டில் தான் அவர்கள் குடியிருந்தார்கள். அவர்கள் வீட்டிலிருந்து பார்த்தால் எங்கள் தெருவை குறுக்கால் வெட்டிய தெரு ஆரம்பிக்கும்..வலதுகைப்பக்கம் ஒரு அரசு பிரசவ ஆஸ்பத்திரி..சற்றுத் தாண்டி சந்தை.. அந்தத்தெருமுனைக்குச் சென்றால் ஆறு முச்சந்தி வந்து விடும்..(லொகேஷன் தெரிகிறதா) (இப்போது எப்படி மாறியிருக்கிறது எனத் தெரியாது)

ஒரு பள்ளி விடுமுறை தினம் தான் என நினைக்கிறேன்.. அவர் அம்மா வராததினால் என்னைத் துணைக்குக் கூப்பிட்டார் அந்த ப் பழைய பட விரும்பி.. நானும் சமர்த்தாய் என் அம்மாவிடம் சொல்லிவிட்டுத் தான் சென்றேன்..

இப்போது எப்படி இருக்கிறாரோ என்னவோ.(ஹைய்யா..கண்டிப்பா வாசு சாரிடம் அவரின் இந் நாளைய புகைப்படம் இருக்காது!):)
அடுத்த வருடமே அவர் அப்பாவிற்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகிப் போய் விட்டார்..-சென்னை என்று தான் நினைக்கிறேன்..அப்புறம் தொடர்பில்லை.. 13 வயசுப் பையன் 25 வயதுப் பெண்ணிற்குத் துணைக்குப் போகலாம் தானே..

அன்புடன்
சி.க.
கூடவே பனியில்லாத மார்கழியா..காதலில்லாத வாலிபமான்னுசம்பந்தமே இல்லாம பாட்டு எனக்குக் கேக்குதே காரணம் என்னவா இருக்கும்..

கண்ணா,

LDC முதல் வருஷம்னா 17-18. நீங்க 9th-ன்னா 13-14. அதுவும் போனது கணேஷா தியேட்டர்னு சொல்லும்போது எங்கோ இடிக்குதே! ஒரு வேளை கூட வந்தவருக்கு ஹெல்ப் பண்ண (அதாவது அவர் யாரையேனும் சந்திக்க) நீங்கள் துணைக்கு போனீர்களா என்று கேட்டேன்.

வாசு என்னை பிய்க்க போகிறார். பாட்டைப் பத்தி பேச வரல்லை. சைட்டை பத்தி பேச வந்துட்டார்-னு ஓகே எஸ்கேப்!

அன்புடன்

sss
13th August 2014, 12:00 AM
நூறாவது நாள் படத்தில் முத்துலிங்கம் பாட்டெழுத வாணி ஜெயராமின் குரலில் வெளிவந்தது ஒரு புதுமையான பேய்ப் பாட்டு. கொலை செய்யப்பட்டு இறந்தவள் அக்காள். தன்னுடைய தங்கைக்கு கொலையைப் பற்றிய செய்தியைச் சொல்ல வருகிறாள். அக்காவே என்றாலும் ஆவி என்றால் நடுக்கம் வரத்தானே செய்யும்.

உருகுதே இதயமே அருகிலே வா வா
நான் பாடும் ராகம் கேட்கும் நேரம்
ஏன் இந்த ஈரம் விழியின் ஓரம்

இளையராஜா இசை

sss சார் உங்க பங்கை காணவில்லை இன்று
எனக்கு கிடைக்கும் நேரத்தில் நூற்றுகணக்கான பதிவை படிக்கவே நேரம் போதவில்லை...
நீங்கள் உருகு உருகுன்னு உருகி கேட்க நூறாவது நாள் பாடல் இதோ :

http://www.mediafire.com/listen/f6nv16f1xb9i5xv/UrugudheyIdhayamey_VJ_Nooravathu_Naal.mp3

நன்றி

vasudevan31355
13th August 2014, 05:22 AM
ஆஹா! மாட்னேன்பா மதுண்ணாகிட்ட. (இனிமே நானும் மதுண்ணா அப்படின்னுதான் கூப்பிடப் போறேன். சார் அந்நியமாப் படுது)

ஷிப்ட்டுக்கு புறப்படும் போது அவசரமா போட்டேனா . எப்பவும் கடைசியா ஒரு தடவ செக் பண்ணுவேன். இன்னைக்கு டைம் இல்லாம மிஸ்ஸிங். கந்தனுக்கு பதிலா கண்ணன் ஆயிடுத்து.

அழகா கண்டு பிடிச்சுட்டேளே! நல்ல வேளை. தெய்வக் குத்தம் ஆகியிருக்கும்.:) திருத்திட்டேன்.

ஆமாம்... மதுண்ணா...அங்கே விளக்கெண்ணை என்ன விலை?:)

vasudevan31355
13th August 2014, 05:31 AM
கண்ணா,

LDC முதல் வருஷம்னா 17-18. நீங்க 9th-ன்னா 13-14. அதுவும் போனது கணேஷா தியேட்டர்னு சொல்லும்போது எங்கோ இடிக்குதே! ஒரு வேளை கூட வந்தவருக்கு ஹெல்ப் பண்ண (அதாவது அவர் யாரையேனும் சந்திக்க) நீங்கள் துணைக்கு போனீர்களா என்று கேட்டேன்.

வாசு என்னை பிய்க்க போகிறார். பாட்டைப் பத்தி பேச வரல்லை. சைட்டை பத்தி பேச வந்துட்டார்-னு ஓகே எஸ்கேப்!

அன்புடன்

முரளி சார்,

நீண்ட இடைவெளிக்குப் பிறகு? வாருங்கள் சார்.

தங்களுக்குக் கீழ்தான் நாங்கள் எல்லோருமே!

நீங்களும் சைட்டை பத்தி பேச வந்தது மிகவும் சந்தோஷம். ஐ மீன் நம்ம 'மதுரகானங்கள்' வெப் சைட் பற்றி.

கிராதகர் வந்தால் மட்டுமே டோஸ்.

முரளி சார்! எப்படி இருக்கிறீர்கள்? ரொம்ப நாட்களாயிற்று. விரைவில் செல்லில் தொடர்பு கொள்கிறேன். தாங்கள் ஒன்றுமே பதிவிடா விட்டாலும் முரளி ஸ்ரீனிவாஸ் என்ற பெயர் பார்த்தாலே கரை புரண்ட வெள்ளம் போல் மகிழ்ச்சி. அது எங்கள் முரளியால் மட்டுமே முடிந்த ஒன்று.

அடுத்த பாகத்திற்கு தங்கள் மனமுவந்த வாழ்த்துக்கள் தேவை.

vasudevan31355
13th August 2014, 05:39 AM
நேற்று இரவு இணைய இணைப்பு கிடைக்காததனால் அனைவருக்கும் நன்றி கூற இயலவில்லை. நேற்று நண்பர்கள் அனைவரும் அமர்க்களப்படுத்தி விட்டீர்கள். குறிப்பாக மதுண்ணா அதிகமாகக் கலந்து பெருமைப்படுத்தியுள்ளார். அவருக்கு நன்றி. சின்னக்கண்ணன் அற்புதமான பல பாடல்களை அளித்துள்ளார். கிருஷ்ணாஜி ஏ .வி.எம்.பற்றி அழகாக ஞாபகப்படுத்தியுள்ளார். ராகவேந்திரன் சாரின் விஸ்வரூபம் விவரிக்க முடியாத ஒன்று. எஸ்.எஸ். சாரின் நூறாவது நாள் பாடலுக்கும் நன்றி! வினோத் சார் அமர்க்களம். கிருஷ்ணாஜி சூர்யகலாவை நினைவுகூர்ந்து கலக்கி விட்டீர்கள். அதிகம் வெளியே தெரியாத கலைஞர்களை திரியில் பெருமைப்படுத்தும் தங்கள் பதிவுகள் பாராட்டுக்குரியவை. மாற்றும் விடுபட்டுப் போன அனைத்துப் பதிவாளர்களுக்கும் நன்றி! படித்து இன்புற்ற பார்வையாளர்களுக்கும் நன்றி! மதியம் சந்திப்போம்.

ராஜேஷ் சார்,

அமர்க்களம். தங்கள் பதிவுகளை இனிமேதான் பார்க்க வேண்டும். இரவு சந்திப்போம். நன்றி!

RAGHAVENDRA
13th August 2014, 06:57 AM
பொங்கும் பூம்புனல்

http://www.inbaminge.com/t/k/Kaidhi/

Be Happy Be Cheerful Be jolly

இப்படி ஒரு ஜாலியான பாடலை ராதா ஜெயலக்ஷ்மி பாடி கேட்டிருக்க மாட்டீர்கள். கைதி படத்தில் எஸ்.பாலச்சந்தர் இசையில் இப்பாடலை நீங்கள் மீண்டும் மீண்டும் கேட்பீர்கள். இது நிச்சயம்.. தங்கள் காலர் அளவு சட்டையின் நீளம் என ஒரு அங்கியின் அளவு, என ஒரு பெண் தையற்கலைஞர் பாடும் பாடலாக்கும் இது

1951ம் ஆண்டிலேயே எப்படிப்பட்ட புதுமையான கருத்துக்கள்...

RAGHAVENDRA
13th August 2014, 07:03 AM
பொங்கும் பூம்புனல்

ஆனந்தம் ஆனந்தமே...

உண்மையின் வெற்றி எப்போதும் தரும் ஆனந்தம் ஆனந்தமே...

1951ம் ஆண்டு வெளியான உண்மையின் வெற்றி திரைப்படத்திலிருந்து டி.ஏ.கல்யாணம் இசையில் நடராஜகவியின் வரிகளில் எப்போதும் ஆனந்தமே...

http://www.inbaminge.com/t/u/Unmayin%20Vetri/

Gopal.s
13th August 2014, 07:15 AM
99% சிவாஜி ரசிகர்களாலேயே ,ஆரம்பிக்க பட்டு,நடத்த பட்டு,பங்களிக்க பட்ட திரி. இதன் வெற்றி ,சிவாஜி ரசிகர்களின் பரந்து விரிந்த அறிவு,தெளிவு,ரசனை மற்றும் விவரங்களின் தெளிவை நிரூபித்துள்ளது.இது எனக்கு சந்தோஷமே ஆனாலும் ,கார்த்திக் ,வாசு,ராகவேந்தர்,சி.க.,ராஜேஷ்,மது, கிருஷ்ணா எல்லோருமே நமது முக்கிய திரியான பாகம்-14 ஐ வந்து கவனிக்க வேண்டுமாய் தாழ்மையுடன் வேண்டுகிறேன்.



சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா ,பாகம்-2 ,மதுர கானத்தை துவக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனையை வழி மொழிகிறேன்.



பாகம்-2 வெற்றி பெற வாழ்த்துக்கள். இவ்வளவு வேகம்,பதிவுகளின் மேல் குவிய வேண்டிய கவனத்தை சிதறடிக்க வாய்ப்புண்டு.

rajeshkrv
13th August 2014, 09:06 AM
காட்டாற்று வெள்ளம் போல் ஓடிக்கொண்டிருப்பதை அணை போட்டு தடுக்கலாமா கோபால் ஜி .. நியாயமா தர்மமா நீதியா அடுக்குமா .. அச்சசோ சினிமா வசனம் போல பொங்கி வருகிறதே ..:)

Richardsof
13th August 2014, 09:45 AM
http://i59.tinypic.com/dxmu5j.jpg

http://youtu.be/GY7NYfcalH8

gkrishna
13th August 2014, 09:49 AM
99% சிவாஜி ரசிகர்களாலேயே ,ஆரம்பிக்க பட்டு,நடத்த பட்டு,பங்களிக்க பட்ட திரி. இதன் வெற்றி ,சிவாஜி ரசிகர்களின் பரந்து விரிந்த அறிவு,தெளிவு,ரசனை மற்றும் விவரங்களின் தெளிவை நிரூபித்துள்ளது.இது எனக்கு சந்தோஷமே ஆனாலும் ,கார்த்திக் ,வாசு,ராகவேந்தர்,சி.க.,ராஜேஷ்,மது, கிருஷ்ணா எல்லோருமே நமது முக்கிய திரியான பாகம்-14 ஐ வந்து கவனிக்க வேண்டுமாய் தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா ,பாகம்-2 ,மதுர கானத்தை துவக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனையை வழி மொழிகிறேன்.

பாகம்-2 வெற்றி பெற வாழ்த்துக்கள். இவ்வளவு வேகம்,பதிவுகளின் மேல் குவிய வேண்டிய கவனத்தை சிதறடிக்க வாய்ப்புண்டு.

காலை வணக்கம்
உண்மை கோபால் சார் . நேற்று இரவு நான் உண்மையில் பயந்து போய் வாசு அவர்களுக்கு போன் செய்து எனது நடுக்கத்தை பகிர்ந்து கொண்டேன்.
இந்த திரியில் நல்ல நல்ல பாடல்கள் மற்றும் சுவையான தகவல்கள் மேலும் வினோத் சார் அவர்களின் கருத்து படங்களுடன் கூடிய பழைய நிகழ்சிகள் என்று கலந்து கட்டி கொண்டு இருந்தாலும் அதையும் மீறி ஒரு நல்ல நட்பு,புரிதல் என்ற வளையம் உருவாகி கொண்டு இருக்கின்றது. அந்த சங்கிலி வளையம் அறுந்து விட கூடாது என்பது தான் அடியேனின் தினசரி பிரார்த்தனை .

எதிலும் சற்று நிதானம் தேவை என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு .அதே சமயம் ராஜேஷ் சார் கூறியது போல் காட்டாறு வெள்ளத்தை அணை போடவும் முடியாது .

எது எப்படி இருந்தாலும் உங்கள் வாழ்த்து ஆலோசனை இரண்டும் இந்த திரியின் வளர்ச்சிக்கு என்பதில் சற்றும் ஐயம் இல்லை


துரை தன திரை வாழ்க்கையை உதவியாளர் ஆக டைரக்டர் யோகானந்த் அவர்களிடம் துவக்கி பின் ஹம்சகீத என்ற கன்னட படத்தின் இயக்குனுர் G .V ஐயர் அவர்களிடம் பணி புரிந்தார் . அவளும் பெண்தானே இவரது இயக்கத்தில் வெளி வந்த முதல் தமிழ் படம் சற்று புதுமையான கருத்துகளுடன் சமுதாய பார்வையை வெளிபடுத்திய படம் இவரது பசி (1979), குடிசை வாழ் மக்களின் வாழ்க்கையை பிரதிபலித்த படம் .இந்திய அரசாங்கத்தால் சிறந்த தமிழ் படம் என்ற பரிசை பெற்ற படம் . நடிகை ஷோபா இந்த திரை படத்தில் குப்பை பொறுக்குபவர் பாத்திரத்தில் வாழ்ந்து இருப்பார் .அதனால் அவருக்கு அந்த ஆண்டின் சிறந்த தேசிய நடிகை விருதும் கிடைத்தது

சில நல்ல படங்கள்

ஒரு குடும்பத்தின் கதை (1975)
பாவத்தின் சம்பளம் (1977)
துணை (1982)
ஒரு மனிதன் ஒரு மனைவி (1985)
ஒரு வீடு , ஒரு உலகம் (1975)
பாலைவனத்தில் பட்டாம்பூச்சி (1988)

இவரது முதல் படமான அவளும் பெண்தானே திரை படத்தில் இடம் பெற்ற ரசித்த பாடல் ஒன்று பன்முக குரல் பாலாவும் கண்ணிய பாடகி சுசீலாவும் இணைந்து பாடியது

http://antrukandamugam.files.wordpress.com/2013/10/sumithra-sangili.jpg?w=317

வார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது
பார்வைகள் என் நன்றி சொன்னது
எண்ணம் எல்லாம் நீ தெய்வம் என்றது

(வார்த்தைகள் )

நன்றியைச் சொல்ல நான் என்ன செய்தேன்
பெண்மையை மதித்தேன் வேறென்ன செய்தேன்

வார்த்தைகள் என்னைச் சொல்லச் சொன்னது
பார்வைகள் நான் சொன்னேன் என்றது
எண்ணம் எல்லாம் உன் உள்ளம் கண்டது

(வார்த்தைகள் )

உறவைத் துறந்து ஊரைப் பிரிந்து
பறவை ஒன்று வந்தது - அதன்
உடலைத் தின்று பசியைத் தீர்க்க
உலகம் சுற்றி நின்றது

பறவையின் மனமோ பால் மனம் என்று
பார்த்தேன் எடுத்தேன் கையோடு
உறவேது பேசும் ஊரென்ன சொல்லும்
இரு மனம் கலந்தால் அன்போடு

(வார்த்தைகள் )

காலம் ஒரு நாள் கனியும் என்று
கனவிலும் நந்தன் நினைத்தேனா
கடவுள் மனிதன் வடிவில் வந்து
கருணையை என் மேல் பொழிந்தன

ஏழையின் உள்ளம் கோவிலை எண்ணி
தேவியை இங்கு ஏற்றினேன்
நெஞ்சிலே பொங்கும் நினைவெலாம்
வண்ண மாலையாய்க் கொண்டு சூட்டினேன்

(வார்த்தைகள் )

v குமார் இசை என நினைவு முத்துராமன் சுமித்ரா நடித்து
நடிகை பண்டரிபாய் தயாரிப்பு


http://www.inbaminge.com/t/a/Avalum%20Penn%20Thaane/Vaarthaigal%20Enn%20Nenjil%20Nindrathu.eng.html

rajeshkrv
13th August 2014, 09:56 AM
எஸ் வி ஜி, கிருஷ்ணா ஜி வாங்க வாங்க காலை வணக்கங்கள்

கல்யாண பந்தல் அலங்காரம் மற்றும் அவளும் பெண் தானே பாடல்கள் அற்புதம்

============================

வாசு ஜி,கிருஷ்ணா ஜி, எஸ்.வி ஜி இதோ உங்களுக்காக அருமையான இரு பாடல்கள்

ஒரே மெட்டு கொஞ்சம் மாற்றத்துடன் இன்னொரு மொழியில்

நமக்கு என்றும் பிடித்த கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் எழுதி ராதா ஜெயலெக்*ஷ்மி பாடிய மனமே முருகனின் மயில் வாகனம்

https://www.youtube.com/watch?v=-uKUXueJYDc

தெலுங்கில் இசையரசியின் குரலில் மாஸ்டர் வேணு சற்றே மாற்றிய மெட்டு

https://www.youtube.com/watch?v=tHzF-HWbFkY

Richardsof
13th August 2014, 10:08 AM
கிருஷ்ணா சார்
http://i58.tinypic.com/vsjgk6.jpg
இன்றைய பொழுது சுமித்ராவின் அறிமுகத்தோடு களை கட்டுகிறது .பரிதாபமான முகம் .அகன்ற விழிகள் -1977-1980 வரை நிறைய படங்களில் நடித்தார் .நிழல் நிஜமாகிறது - சிட்டுக்குருவி
எனக்கு பிடித்த படங்கள் .

chinnakkannan
13th August 2014, 10:10 AM
க்ருஷ்ணாஜி, வாசு சார், ராஜேஷ் ஜி,கோபால் ஜி, எஸ்வி சார், ராகவேந்தர் சார், முரளி சார் குட்மார்னிங்க்..

ஆஹா மங்களமா ஒரு பாட்டு
மனமே முருகனின் மயில் வாகனம் அழ்கு..நன்றி

க்ருஷ்ணாஜி..சுமியோட பாட்டு க் கேட்டதில்லை..

காலங்கார்த்தால ஒலிக்கும்கீதம்

அலைபாயுதே கண்ணா என் மனம்மிக அலைபாயுதே..

உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா

நிலை பெயராது சிலை போலவே நின்று

நேரமாவதறியாமலே
மிக விநோதமான முரளிதரா
என் மனம் அலை பாயுதே
கண்ணா....


தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே
திக்கு நோக்கி என்னிரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே!

தனித்த மனத்தில் உருக்கி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்த வா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா!

கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழல் எனக்களித்தவா!
கதறி மனமுருகி நான் அழைக்கவா
இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ? இது முறையோ?
இது தருமம் தானோ?

குழல் ஊதிடும் பொழுது ஆடிடிடும்
குழைகள் போலவே
மனது வேதனை மிகவோடு

**

மிஸஸ் அஜீத் பாடிய வெர்ஷனை விட புதிய சங்கமம் என்ற படத்தில் ஒரு வெர்ஷன் வரும்..இருவர் பாடிய பாட்டு எஸ்பி..வாணியா தெரியவில்லை..வெகு அழகாய் இருக்கும்..

இந்தப் பாட்டை வைத்தே பாலகுமாரன் தனது’தலையணைப் பூக்கள்” என்னும் நாவலில் க்ளைமாக்ஸில் இந்தப் பாட்டையும் வேதாந்தத்தையும் மிக்ஸ் செய்து எழுதியிருப்பார்..அதுவும் எப்பொழுது கதையின் நாயகன் ஹார்ட் அட்டாக்கில் துடிக்கும் போது.. அதுவும் நன்றாக இருக்கும்..

ம் அப்புறம் வரட்டா..

gkrishna
13th August 2014, 10:12 AM
பொதுவாக ராஜாவின் தாய்-சேய் பாடல்கள் நம்ம மனதைக் கரைக்கும் உணர்ச்சிகர மெலொடிகளா இருக்கும், இந்த பாடல் அப்படியில்லாமல் ஒரு குஷியான விளையாட்டா போற பாட்டு.

ஒரு குழந்தைய பார்த்துக்கிறதுன்னா சும்மாவா, கண்ணே, மணியே முத்தேன்னு கொஞ்சி, மன்னவனே நல்லவேன்னு பாடி, பாலூட்டி சோறூட்டி, முரண்டு செய்ற முரட்டு பாலகனைச் செல்லமா மிரட்டி அதட்டி சொல்லுறத கேக்க வச்சு, கெட்டபழக்கம் எல்லாம் விலக்கி, நல்ல பழக்கம் எல்லாம் சொல்லிக்குடுத்து, கூட குழந்தையா மாறி விளையாடி ஆட்டம் ஆடி, ஆராரோ தாலாட்டு சொல்லி தூங்க வச்சு… அப்பப்பா.. எத்தனை இருக்கு!!. இது அத்தனையும் இருக்கு இந்தப் பாட்டுல :)

குடுத்திருக்கிற துணுக்குல அப்படியே ஒத்தை வயலினோட ஒரு சாஸ்த்திர சங்கீதமா அமைதியா ஆரம்பிச்சு ஒவ்வொரு கருவியா பக்கவாத்தியமா கூட சேர்ந்து அது போற இடம் கவனிங்க.. இந்த ப்யூஷன்னு என்னமோ இருக்காமே ;))

இந்த படத்தில உள்ள மற்ற பாடல்களின் பிரம்மாண்ட வெற்றியால, இந்தப்பாடல் கொஞ்சம் மறைக்கப்பட்டதுன்னே சொல்லலாம். :-)

ரெட்டை வால் குருவி 1987 -பாலு மகேந்திர இயக்கம்
மோகன் ராதிகா அர்ச்சனா நடித்து வெளிவந்த திரைப்படம்

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/7/7c/Rettai_Vaal_Kuruvi_dvd.jpg/220px-Rettai_Vaal_Kuruvi_dvd.jpg

கண்ணிய பாடகி சுசீலா அம்மாவும் சின்ன குயில் சித்ராவும் இணைந்து
மிக அபூர்வமான பாடல்

பெண்1 தத்தெடுத்த முத்துப் பிள்ளை யாரோ
ஆல மரத்தடி தேடி அமர்ந்தவர் தானோ

பெண்2 நான் கண்டெடுத்த கட்டுப் பிள்ளை யாரோ
கண்ணியர் கொஞ்சிடும் கன்ன பிறான் இவர் தானோ

பெண்1 பாலை தான் கொடுக்கவா புட்டிப் பாலை தான்

பெண்2 அள்ளித் தான் கொடுக்கவா சத்துனவைத் தான்

பெண்1 இப்போ தத்தெடுத்த முத்துப் பிள்ளை யாரோ
ஆல மரத்தடி தேடி அமர்ந்தவர் தானோ

பெண்2 நான் கண்டெடுத்த கட்டுப் பிள்ளை யாரோ
கண்ணியர் கொஞ்சிடும் கன்ன பிறான் இவர் தானோ

இசை சரணம் - 1

பெண்1 பாலைக் குடிக்காமே படுத்துவதேனோ
பாலகனே இது போலும் பாவி மனம் அலை மோதும்

பெண்2 சேலை இழித்து இழுத்து சிரிப்பது ஏனோ
செய்வது ஏன் இந்த வம்பு தெரியுது உந்தனின் அன்பு

பெண்1 முரண்டு பிடிக்காதே முரடனைப் போல

பெண்2 நெருண்டு முழிக்காதே திருடனைப் போல

பெண்1 சொல்லுரதைக் கேட்டு கொள்ளு பாப்பாவாப்பா

பெண்2 கைய கைய சப்பாதே இந்தா புட்டிப் பால்

பெண்1 கண்ணைக் கண்ணைக் கொட்டாதே அம்மா கோவிப்பா

பெண்2 இப்போ தத்தெடுத்த முத்துப் பிள்ளை யாரோ

பெண்1 ஆல மரத்தடி தேடி அமர்ந்தவர் தானோ

இசை சரணம் - 2

பெண்2 டிஸ்கோ பாப்பா டிஸ்கோ பாப்பா டிஸ்கோ பாப்பா
டிஸ்கோ பாப்பா டிஸ்கோ ஆடு

பெண்1 பிஸ்கெட் தந்தா டிஸ்கோ பிடிக்கும்
பிஸ்கெட் தந்தா டிஸ்கோ பிடிக்கும் கிஸ் கிஸ் பண்ணு ஹ ஹ ஹ

பெண்2 அரச மரம் தேடி அலையவுமில்லே
அதிசயம் வேரெதுமில்லே அதிரசம் போலொரு பிள்ளை

பெண்1 பன்னீரில் நீராட்டி பாலன்னம் ஊட்டி
பாடட்டும்மா ஒரு பாட்டு பால் வடியும் முகம் காட்டு

பெண்2 உருண்டு தெருவில் வந்து மன்னு திண்ண வேணாம்

பெண்1 மருந்து குடிக்காமே மக்கார் பண்ண வேணாம்

பெண்2 மண்டையிலே ரெண்டு வைப்பேன் ராஜா ராஜா

பெண்1 சுட்டி புள்ளே நீ தூங்கு ஆரோ ஆரோ ஆரிராரோ

பெண்2 சொல்லும் பேச்சை நீ கேள்ளு ஹீரோ ஹீரோ வேராரோ

பெண்1 இப்போ தத்தெடுத்த முத்துப் பிள்ளை யாரோ
ஆல மரத்தடி தேடி அமர்ந்தவர் தானோ

பெண்2 நான் கண்டெடுத்த கட்டுப் பிள்ளை யாரோ
கண்ணியர் கொஞ்சிடும் கன்ன பிறான் இவர் தானோ

பெண்1 பாலை தான் கொடுக்கவா புட்டிப் பாலை தான்

பெண்2 அள்ளித் தான் கொடுக்கவா சத்துனவைத் தான்

பெண்1 ஆஹா ஆரிராரி ராரி ராரோ ஆரோ
ஆரிராரி ராரி ராரி ராரோ

பெண்2 ஆரிராரி ராரி ராரி ராரி ராரோ
ஆரிராரி ராரி ராரி ராரி ராரோ

இந்த பாட்டு லிங்க் யாரவது ஹெல்ப் ப்ளீஸ்

Richardsof
13th August 2014, 10:12 AM
ராஜேஷ் சார்

மிகவும் இனிமையான பாடல்களை வழங்கியுள்ளீர்கள் .இசையும் குரலும் அருமை .நன்றி

rajeshkrv
13th August 2014, 10:13 AM
சி.கா வருக வருக

எஸ்.வி , சுமித்ரா சாந்தமான அழகு ... .. நல்ல நல்ல பாத்திரங்கள் செய்தார்..

madhu
13th August 2014, 10:15 AM
துரை இயக்கத்தில் வந்த படங்களில் ஒன்று ரகுபதி ராகவ(ன்) ராஜாராம்.

ஜெயச்சந்திரன், சுமித்ரா நடிக்க எஸ்.பி.பி., சுசீலா குரல்களில் ஒலித்த "தங்கத் தேரோடும் அழகினிலே" பாடல் மட்டுமே இன்று வரை இந்தப் படத்தை நினைவில் வைத்திருக்க உதவிக் கொண்டு இருக்கிறது.
இதைப் ப்ற்றி வேறு ஏதாச்சும் செய்தி இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்.

http://www.inbaminge.com/t/r/Ragupathi%20Raghava%20Raajaraam/Thanga%20Therodum.vid.html

gkrishna
13th August 2014, 10:19 AM
நடிகை சுமித்ரா வாசுதேவன் நாயர் இன் நிர்மால்யம் 1973 இல் உண்டு இல்லே ராஜேஷ் சார் ?

rajeshkrv
13th August 2014, 10:23 AM
நடிகை சுமித்ரா வாசுதேவன் நாயர் இன் நிர்மால்யம் 1973 இல் உண்டு இல்லே ராஜேஷ் சார் ?

ஆமாம் ஆமாம்

http://2.bp.blogspot.com/-70JKUdNanns/UfNIQNbWvrI/AAAAAAAABfs/E8IsrE4Jq40/s1600/Nirmalyam_3.jpg

rajeshkrv
13th August 2014, 10:24 AM
Sumitra was fluent in all languages like Sujatha..

gkrishna
13th August 2014, 10:27 AM
துரை இயக்கத்தில் வந்த படங்களில் ஒன்று ரகுபதி ராகவ(ன்) ராஜாராம்.

ஜெயச்சந்திரன், சுமித்ரா நடிக்க எஸ்.பி.பி., சுசீலா குரல்களில் ஒலித்த "தங்கத் தேரோடும் அழகினிலே" பாடல் மட்டுமே இன்று வரை இந்தப் படத்தை நினைவில் வைத்திருக்க உதவிக் கொண்டு இருக்கிறது.
இதைப் ப்ற்றி வேறு ஏதாச்சும் செய்தி இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்.


ஆரம்பத்தில் ரகுபதி ராகவ ராஜாராம் என்று படத்தின் தலைப்பு இருந்து பின்னர் மகாத்மா காந்தியின் வார்த்தை இது என்று சொல்லி
ரகுபதி ராகவன் ராஜாராம் என்று மாற்றப்பட்டதாக நினைவு
ரஜினியின் ஆரம்ப கால படம் . சுமித்ராவின் அண்ணன் என்று நினைவு
ரஜினிக்கு ஒரு பாடல் உண்டு .s c கிருஷ்ணன் என்று ஒரு பாடகர் பாடும் 'கத்தாழை காட்டுக்குள்ளே கை அடிச்சா சுகம் இருக்கும் ' என்று வரும்
சங்கர் கணேஷ் இசை .இந்த படத்தில் ராம்குமார் என்று ஒரு நடிகர் நடித்த நினைவு .விஜயகுமார் ராம்குமார் ஜெயச்சந்திரன் மூவரும் அண்ணன் தம்பியாக வருவார்கள் சொல்லத்தான் நினைக்கிறன் படத்திலும் வருவார் . (ஸ்ரீவித்யாவை பெண் பார்க்க வந்து ஜெயசித்ராவை சைட் அடிப்பார் )

gkrishna
13th August 2014, 10:28 AM
ஆமாம் ஆமாம்



அருமை rajesh sir

madhu
13th August 2014, 10:28 AM
(ஸ்ரீவித்யாவை பெண் பார்க்க வந்து ஜெயசித்ராவை சைட் அடிப்பார் )

கிருஷ்ணா ஜி.. ரொம்ப தப்பு.. ஜெயசித்ரா ரொம்ப சின்னப் பொண்ணு.
அவரு சுபாவை பெண் பார்க்க வந்து ஸ்ரீவித்யாவை மடக்கப் பார்ப்பாரு

gkrishna
13th August 2014, 10:31 AM
Sumitra was fluent in all languages like Sujatha..

ஆமாம் ராஜேஷ் சார்
1974-80 கால கட்டத்தில் ஏகப்பட்ட படம் சிவகுமார் ஜெய்கணேஷ் விஜயகுமார் உடன் வருவார்
முகத்தில் முகம் பார்காலம்,நந்தா என் நிலா ,நிழல் நிஜமாகிறது (யாராலும் மறக்க முடியாத இந்து ) ,தேவைகள்,ஒரே முத்தம்,கடவுள் அமைத்து வைத்த மேடை ,முதல் இரவு,அண்ணன் ஒரு கோயில்,இவள் ஒரு சீதை இப்படி சொல்லிகிட்டே போலாம்

rajeshkrv
13th August 2014, 10:31 AM
கிருஷ்ணா ஜி .. தத்தெடுத்த முத்து பிள்ளை யாரோ தூள் பாட்டு , ஞாபகம் செய்ததற்கு நன்றி ...

இதே போல் துள்ளல் பாடல், குழந்தைகளுடன் கேலி செய்யும் விதமாக அமைந்த பாடல்
இசையரசியுடன் யுவன்,கார்த்திக்,பவதாரிணி,வெங்கட் பிரபு பாடிய பாடல்

சொன்ன பேச்ச கேட்க மாட்டோம் ...

https://www.youtube.com/watch?v=P3cI0z8Gq0c

rajeshkrv
13th August 2014, 10:32 AM
கிருஷ்ணா ஜி.. ரொம்ப தப்பு.. ஜெயசித்ரா ரொம்ப சின்னப் பொண்ணு.
அவரு சுபாவை பெண் பார்க்க வந்து ஸ்ரீவித்யாவை மடக்கப் பார்ப்பாரு

சின்ன பொண்ணா .. ஆமாம் ஆமாம் ஆனால் படத்தில் அவர் செய்யும் வேலை பெரிய பெண்ணும் செய்ய யோசிப்பார்கள் பாவம்

gkrishna
13th August 2014, 10:33 AM
கிருஷ்ணா ஜி.. ரொம்ப தப்பு.. ஜெயசித்ரா ரொம்ப சின்னப் பொண்ணு.
அவரு சுபாவை பெண் பார்க்க வந்து ஸ்ரீவித்யாவை மடக்கப் பார்ப்பாரு

மன்னிக்கணும் இங்கே மது அண்ணா னு ஒருத்தர் இருக்கார் .கொஞ்சம் ஜாக்ரதிங்கோ :)
இவர் போட்டோ எங்காவது உண்டா அண்ணா தலை முடி கொஞ்சம் புஸ புஸ னு இருக்கும்

rajeshkrv
13th August 2014, 10:33 AM
ஆமாம் ராஜேஷ் சார்
1974-80 கால கட்டத்தில் ஏகப்பட்ட படம் சிவகுமார் ஜெய்கணேஷ் விஜயகுமார் உடன் வருவார்
முகத்தில் முகம் பார்காலம்,நந்தா என் நிலா ,நிழல் நிஜமாகிறது (யாராலும் மறக்க முடியாத இந்து ) ,தேவைகள்,ஒரே முத்தம்,கடவுள் அமைத்து வைத்த மேடை ,முதல் இரவு,அண்ணன் ஒரு கோயில்,இவள் ஒரு சீதை இப்படி சொல்லிகிட்டே போலாம்

நல்ல திறமைசாலிகளை என்றுமே தமிழ் திரையுலகம் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதற்கு இவரும் ஒரு சான்று.

madhu
13th August 2014, 10:34 AM
சுமித்ரா ரொம்ப versatile. சோறு, வசந்த காலம், கன்னி ராசி என்று படங்களில் டில்லி கணேஷ், சுருளிராஜன், கவுண்டமணி எல்லோருக்கும் ஜோடியாய் நடித்தார். ( சரிதானா ராஜேஷ் )

gkrishna
13th August 2014, 10:35 AM
சின்ன பொண்ணா .. ஆமாம் ஆமாம் ஆனால் படத்தில் அவர் செய்யும் வேலை பெரிய பெண்ணும் செய்ய யோசிப்பார்கள் பாவம்

ராஜேஷ் அண்ணா
இந்த கமல்கிட்டே (சொல்லத்தான் நினைக்கிறன் ) அவர் பேசும் வசனங்கள் ஒன்னு 'அதாவது' னு திருப்பி திருப்பி வரும்

rajeshkrv
13th August 2014, 10:37 AM
சுமித்ரா ரொம்ப versatile. சோறு, வசந்த காலம், கன்னி ராசி என்று படங்களில் டில்லி கணேஷ், சுருளிராஜன், கவுண்டமணி எல்லோருக்கும் ஜோடியாய் நடித்தார். ( சரிதானா ராஜேஷ் )

ரொம்ப சரி .. ஈகோ பார்க்காத நடிகை ..

rajeshkrv
13th August 2014, 10:38 AM
ராஜேஷ் அண்ணா
இந்த கமல்கிட்டே (சொல்லத்தான் நினைக்கிறன் ) அவர் பேசும் வசனங்கள் ஒன்னு 'அதாவது' னு திருப்பி திருப்பி வரும்

சந்தடி சாக்குல அண்ணான்னு சொல்லிட்டீங்களே நேத்து தானே தம்பின்னு சொன்னீங்க

gkrishna
13th August 2014, 10:40 AM
நல்ல திறமைசாலிகளை என்றுமே தமிழ் திரையுலகம் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதற்கு இவரும் ஒரு சான்று.

உண்மை ராஜேஷ் மது சார்

நிறைய மலையாள படங்கள் எனக்கு நினைவில் உண்டு

தமிழ் லலிதாவில் (ஹிந்தி கோரா காகஸ் ) வருவார்
ஒரு நல்ல பாலாவின் 'சொர்கத்திலே முடிவானது சொந்தத்திலே நிலையானது ' உடன் வாணி பாடும் மெல்லிசை மன்னரின் பாடல்

http://www.youtube.com/watch?v=yqRDQxp6a3A

gkrishna
13th August 2014, 10:42 AM
சந்தடி சாக்குல அண்ணான்னு சொல்லிட்டீங்களே நேத்து தானே தம்பின்னு சொன்னீங்க

சோ தங்கபதக்கம் படத்தில் சொல்ற மாதரி 'அண்ணனுக்கு எல்லாம் அண்ணன் ' தமபிகளுகேல்லாம் தம்பி ' சரிதானே

நாம் அனைவரின் மாதிரி ஈகோ பார்க்காதவர் நடிகை சுமித்ரா

madhu
13th August 2014, 10:44 AM
தமிழ் லலிதாவில் (ஹிந்தி கோஷிஷ் ) வருவார்
ஒரு நல்ல பாலாவின் 'சொர்கத்திலே முடிவானது சொந்தத்திலே நிலையானது ' உடன் வாணி பாடும் மெல்லிசை மன்னரின் பாடல்


ஹி ஹி.. மறுபடி சின்ன திருத்தம்.. கோஷிஷ் தமிழில் உயர்ந்தவர்கள் என்ற பெயரில் வந்தது. லலிதாவின் ஒரிஜினல் "கோரா காகஜ்"

chinnakkannan
13th August 2014, 10:45 AM
லலிதா வைப் பற்றி நான் சொல்லணும்னு நினச்சேன் க்ருஷ்ணா ஜி முந்திக்கொண்டு விட்டார்..இன்னொரு பாட்டு கல்யாணமே ஒரு பெண்ணோடு தான் ..கமல் சுமின்னு நினைவு..அப்புறம்

மஞ்ச நிலாவுக்கு இன்று ஒரே சுகம்.. ரயில் காண்பிக்காமல் ரயிலின் ஓசையுடன் கூடிய பாட்டு :) சிவகுமார் சுமி..

gkrishna
13th August 2014, 10:45 AM
http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/b/bb/SwimmingPool1976.jpg/220px-SwimmingPool1976.jpg

swimming pool
கமல் சோமன் சுமித்ரா ராணி சந்திர எல்லோரும் வருவாங்க

madhu
13th August 2014, 10:45 AM
சந்தடி சாக்குல அண்ணான்னு சொல்லிட்டீங்களே நேத்து தானே தம்பின்னு சொன்னீங்க

ராஜேஷ்... நீங்க ஹார்லிக்ஸ் பாய்.. காம்ப்ளான் பாய்... தினந்தோறும் வள்ர்கிறீர்கள்..

// ஜாக்கிரதை.. நாலு நாளில் கொள்ளு தாத்தா ஆகிட்டா நான் பொறுப்பில்லை //

gkrishna
13th August 2014, 10:47 AM
ஹி ஹி.. மறுபடி சின்ன திருத்தம்.. கோஷிஷ் தமிழில் உயர்ந்தவர்கள் என்ற பெயரில் வந்தது. லலிதாவின் ஒரிஜினல் "கோரா காகஜ்"

கரெக்ட் மது அண்ணா
அப்பா இனிமேல் கவலை இல்லை
நாம என்ன தப்பு செய்தாலும் திருத்த proof reader இருக்கார் :)
நீங்கள் சொன்ன மாதிரி தவறையும் திருத்தி விட்டேன்

gkrishna
13th August 2014, 10:48 AM
கொஞ்சம் கடமை அழைக்கிறது
இதோ வந்துடுறேன் ப்ளீஸ்

chinnakkannan
13th August 2014, 10:50 AM
இந்துவின் காரசாரக் கோபம், தாபம் எல்லாம் அந்த மூக்குக் கண்ணாடியின் வழியாக வழிகிறதை சுமித்ரா அழகாய் செய்திருப்பார்.. அதுவும் க்ளைமாக்ஸ்.. கட்டை குட்டையாய் இழுத்துப் போர்த்திக் கொண்டு கமல் வரும் போது நிற்கும் தன்மை அவர் பை என்று சொல்லி விட்டு பாலமேறிச் செல்ல துடித்து நிற்பது..பின் இது என் சைக்கிள் போலாம் என்றுசொல்லும்போது சந்தோஷ முகம் என.. ம்ம் நிழல் நிஜமாகிறது ( இருந்தாலும் ...எஜமானியம்மா பெட் ஒனக்குக்கேக்குதா என கமல் லைட்டரிடம் கேட்பது மறக்காது)

rajeshkrv
13th August 2014, 10:55 AM
கரெக்ட் மது அண்ணா
அப்பா இனிமேல் கவலை இல்லை
நாம என்ன தப்பு செய்தாலும் திருத்த proof reader இருக்கார் :)

கிருஷ்ணா ஜி ரொம்ப சரி. அவர யாருன்னு நெனச்சீங்க பழுத்த பழம் ... அறிவுல சொன்னேன் மதுண்ணா .. நோ கோபம் ஃப்ளீஸ் :)

chinnakkannan
13th August 2014, 10:57 AM
//ஹி ஹி.. மறுபடி சின்ன திருத்தம்.. கோஷிஷ் தமிழில் உயர்ந்தவர்கள் என்ற பெயரில் வந்தது. லலிதாவின் ஒரிஜினல் "கோரா காகஜ்"// கோராகாகஜ்கா மன்மேரா ஆராதனா தான் நினைவுக்கு வருகிறது மதுண்ணா..
அந்தக் கால குமுதத்தில் சில இந்திப் படங்களைப்பார்த்தால் தோன்றும் அர்த்தம் எழுதியிருப்பார்கள்

கோரா காகஜ் - கோரமான காகம்
யாதோன் கி பாராத் - யாரோ அங்கே பார்க்கிறான்
ஜன் ஜீர் - இஞ்சி !

rajeshkrv
13th August 2014, 10:57 AM
அந்த காலத்தின் படத்தின் டைட்டில்கள் எல்லாம் ரொம்ப நல்லவே இருக்கும்.. இப்பொழுதும் டைட்டில் வைக்கிறார்களே சுரா, த்தூ, சீ , என ..

மாலா ஒரு மங்கல விளக்கு ... எவ்வளவு அழகான டைட்டில்

அதில் சூலமங்கலத்தின் அழகான பாடல்

https://www.youtube.com/watch?v=mCcteUlweQA

rajeshkrv
13th August 2014, 10:58 AM
//ஹி ஹி.. மறுபடி சின்ன திருத்தம்.. கோஷிஷ் தமிழில் உயர்ந்தவர்கள் என்ற பெயரில் வந்தது. லலிதாவின் ஒரிஜினல் "கோரா காகஜ்"// கோராகாகஜ்கா மன்மேரா ஆராதனா தான் நினைவுக்கு வருகிறது மதுண்ணா..
அந்தக் கால குமுதத்தில் சில இந்திப் படங்களைப்பார்த்தால் தோன்றும் அர்த்தம் எழுதியிருப்பார்கள்

கோரா காகஜ் - கோரமான காகம்
யாதோன் கி பாராத் - யாரோ அங்கே பார்க்கிறான்
ஜன் ஜீர் - இஞ்சி !

முடியல .. இப்படி ஒரு மொழிபெயர்ப்ப நான் கண்டதுமில்லை கேள்விபட்டதுமில்லை
இது கல்வெட்டாக பதிக்க படவேண்டியது ...

chinnakkannan
13th August 2014, 10:58 AM
லலிதா - ஜெமினி சுஜாதா எதற்காகச் சண்டை போட்டு எதற்காகப் பிரிகிறார்கள் என்று கூடத்தெரியாது.. கமல் சுமி ஜோடி வேறு.. தாத்தாவிற்காக கணவன் மனைவி போல நடிப்பார்கள் என நினைக்கிறேன்..

சுமியின் சிட்டுக் குருவி பாடல் கேட்டிருக்கிறேனே தவிர இதுவரை படம் பார்த்ததில்லை..ஒரே முத்தம் பார்த்ததில்லை என்ன கதை..

madhu
13th August 2014, 10:59 AM
அப்படியே மாலா ஒரு மங்கல விளக்கில் பி.பி.ஸ்ரீனிவாஸின்... நான் பாட நீ ஆடு கண்ணே

http://youtu.be/0gpIWdpdpyo

chinnakkannan
13th August 2014, 11:00 AM
மாலா ஒரு மங்கல விளக்கு - நான் கேள்விப் பட்டதே இல்லையே !

ஒருகாலத்தில் மலையாளப் படங்களுக்கான டைட்டில்கள் ஹிலாரியஸாக இருக்கும்..

madhu
13th August 2014, 11:04 AM
லலிதா - ஜெமினி சுஜாதா எதற்காகச் சண்டை போட்டு எதற்காகப் பிரிகிறார்கள் என்று கூடத்தெரியாது.. கமல் சுமி ஜோடி வேறு.. தாத்தாவிற்காக கணவன் மனைவி போல நடிப்பார்கள் என நினைக்கிறேன்..

சுமியின் சிட்டுக் குருவி பாடல் கேட்டிருக்கிறேனே தவிர இதுவரை படம் பார்த்ததில்லை..ஒரே முத்தம் பார்த்ததில்லை என்ன கதை..

நான் அடிமை இல்லை கதை போலத்தான்.. பணக்கார பெண்ணின் பிறந்த வீட்டில் செய்யும் உதவி ஏழை கணவனின் தன் மானத்தை இடிப்பதால் பிரச்சினை. ஆனா கடைசி வரைக்கும் ஒண்ணு சேர மாட்டாங்கன்னு நினைவு.

ஒரே முத்தம்... விழுப்புரம் சீதாராமில் ரிலீஸ் ஆச்சு.. "ராஜாப்பொண்ணு அடி வாடியம்மா" அப்படின்னு ஜெயச்சந்திரன் பாடும் அருமையான பாட்டு (ரெண்டு வெர்ஷன்) தவிர வேறு எதுவும் நினைவில்லை. ஜெய்கணேஷ் வருவார். சுமித்ரா முதலில் குதிச்சுகிட்டு ஆடுவார். அப்புறம் கைம்பெண் போல வருவார் என்று ஞாபகம்.

madhu
13th August 2014, 11:05 AM
மாலா ஒரு மங்கல விளக்கு - நான் கேள்விப் பட்டதே இல்லையே !

ஒருகாலத்தில் மலையாளப் படங்களுக்கான டைட்டில்கள் ஹிலாரியஸாக இருக்கும்..

இந்திரா என் செல்வம், ராஜி என் கண்மணி என்றெல்லாம் கூடத்தான் டைட்டில் இருக்கு..

"முகுந்தேட்டா.. சுமித்ரா விளிக்குன்னு" அப்படின்னு மலையாளப் படத்துக்கு டைட்டில் போடுவாங்க.

chinnakkannan
13th August 2014, 11:07 AM
ஓ..தாங்க்ஸ் மதுண்ணா..

சுமி பிற்காலத்தில் கமலின் அம்மாவாக சிங்கார வேலனில் வந்த போது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.. மோகம் முப்பதுவருஷத்திலும் ஒன்றும் தெரியாத பெண்ணாக நன்றாக செய்திருப்பார்..

chinnakkannan
13th August 2014, 11:09 AM
அது சரி ஆறு சுந்தரப் பெண்குட்டிகளோ என்னவோ ரீசண்ட்டா ஒரு மலையாளப் பட டைட்டில் கேட்ட நினைவு..22 ஃபிமேல் கோட்டயம், சிபிஐ டைரிக்குறிப்பு என்றெல்லாம் வித்யாச டைட்டில்ஸ்..

chinnakkannan
13th August 2014, 11:10 AM
//ஒரே முத்தம்... விழுப்புரம் சீதாராமில் ரிலீஸ் ஆச்சு.. "ராஜாப்பொண்ணு அடி வாடியம்மா" // அந்தக் காலத்துல வித்யாசமான டைட்டில்லாம் அவ்வளவா ஓடினதிலலை இல்லியோ

gkrishna
13th August 2014, 12:13 PM
மது கண்ணா (அண்ணா இப்ப கண்ணா ஆயுடிச்சு )
மன்மதலீலை குண்டு குழந்தை சுனந்தினி clap clap கமலை கூபிடுகிற மாதிரி இந்த குழந்தை கூபிடுது ):)

ஒரே முத்தம் பற்றி நம்ம வாசு சார்/கார்த்தி சார் ஒரு பதிவு நமது திரியில் உண்டு . ஒரே முத்தம் படத்தில் பாலாவின் குரலில் 'பாவையர்கள் மான் போலே காவிரியின் மீன் போலே ' கொஞ்சம் கவ்வாலி டைப் இறுதியில் சைலு சேர்வார்கள் என்று நினைவு

http://www.inbaminge.com/t/o/Ore%20Muththam/Paavaiyargal%20Maan%20Pole.vid.html

நீங்கள் சொன்ன correction செய்யப்பட்டு விட்டது

gkrishna
13th August 2014, 12:33 PM
http://mmimages.maalaimalar.com/Articles/2014/Aug/34fdb570-b9cc-4fe7-9d18-b1104f923ea5_S_secvpf.gif
வாலி எழுதிய 'அம்மா என்றால் அன்பு' என்ற பாடலை, அடிமைப்பெண் படத்தில் ஜெயலலிதா பாடினார்.

இதுபற்றி வாலி கூறியிருப்பதாவது:-

'அடிமைப்பெண்' படத்துக்காக, 'அம்மா என்றால் அன்பு' என்னும் பாடல் எழுதியிருந்தேன்.

'வாலி! இந்தப்பாட்டை அம்முவை (ஜெயலலிதா) பாட வைக்கலாம் என்றிருக்கிறேன்' என்றார், எம்.ஜி.ஆர்.

'ரொம்ப சந்தோஷம்' என்று நான் சொல்லிவிட்டு, மேற்கொண்டு ஒரு விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் விளக்கினேன்.

'அண்ணே! பிற்காலத்தில் இவங்களை நீங்க படத்திலே பாட வைப்பீங்கன்னுதான், ஏற்கனவே நான் தீர்க்கதரிசனமாக சொல்லி வைத்திருக்கிறேனே... கவிஞன் வாக்கு பொய்க்காது' என்றேன்.

'எப்படி? எப்படி?' என்று எம்.ஜி.ஆர். ஆர்வமாகக் கேட்டார்.

`அரசகட்டளை' திரைப்படத்தில் செல்வி ஜெயலலிதா அவர்களுக்காக நான் எழுதியிருந்த பாடலை அவருக்கு நினைவூட்டினேன்.

அந்தப் பாடலின் வரிகள் இவைதான்:

`என்னைப் பாட வைத்தவன் ஒருவன்; என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்!'

- இதை நான் சொன்னதும் எம்.ஜி.ஆர். மகிழ்ந்து சிரித்து, 'வாழ்க! வாழ்க! உங்கள் வாக்கு எப்போதும் இப்படி பலிக்கட்டும்' என்றார்.

'அம்மா என்றால் அன்பு' என்ற பாட்டை கே.வி.மகாதேவன் இசை அமைப்பில் ஜெயலலிதா பாட, 'அடிமைப்பெண்' படத்தில் அப்பாடல் இடம் பெற்று பெரும் புகழ் பெற்றது.'

இவ்வாறு வாலி கூறினார்.

ஆரம்ப காலத்தில் வாலிக்கு மதுப்பழக்கம் இருந்தது. அதை விட்டுவிடும்படி எம்.ஜி.ஆர். சிலமுறை கூறியும், அந்த பழக்கம் தொடர்ந்தது.

1978-ல் ஒருநாள் எம்.ஜி.ஆரும், வாலியும் ஒரே விமானத்தில் பயணம் செய்தனர். விமானப் பணிப்பெண் ஒரு தட்டில் சாக்லேட் கொண்டு வந்தார். அதில் ஒரு சாக்லெட்டை எடுத்து, வாலியிடம் கொடுத்தார், எம்.ஜி.ஆர்.

'என்னண்ணே விசேஷம்? எதுக்கு சாக்லேட்?' என்று கேட்டார், வாலி.

'நேற்றுதான் ஒரு சந்தோஷ சமாசாரம் கேள்விப்பட்டேன். அந்த சந்தோஷத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளத்தான் உங்களுக்கு இனிப்பு கொடுத்தேன்' என்று கூறினார், எம்.ஜி.ஆர்.

'என்ன சந்தோஷ சமாசாரம்?' என்று வாலி கேட்டார்.

'நீங்க மது அருந்துறதை விட்டுட்டீங்கன்னு நேற்றுதான் கேள்விப்பட்டேன். ஏழெட்டு மாதமா அந்தப்பீடையைக் கையால் தொடறதில்லையாமே நீங்க? இது எனக்கு சந்தோஷ சமாசாரம்தானே!' என்று கூறிய எம்.ஜி.ஆர்., 'உங்க உடம்பு உங்களுக்குத் தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழுக்குத்தேவை' என்றார்.

கண் கலங்கி விட்டார், வாலி.

எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது, அவருடன் வாலி, மதுரை முத்து ஆகியோர் உரையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, 'கவிஞர்கள் வாக்கு பலிக்குமா?' என்ற கேள்வி எழுந்தது.

கவிஞர்களின் வாக்கு பலிக்கும் என்பதற்கு, பல உதாரணங்களை கூறினார், எம்.ஜி.ஆர்.

அப்போது எம்.ஜி.ஆரிடம் மதுரை முத்து கூறினார்:

'உங்களுக்காக வாலி எழுதின பாடல் அத்தனையும் பலிச்சிருக்கு.

'நினைத்தேன் வந்தாய், நூறு வயது!' என்று எழுதினாரு. குண்டடிபட்டுப் படுத்திருந்த நீங்க நல்லபடியாகப் பொழச்சு வந்தீங்க.

'நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்...' என்று 'எங்க வீட்டு பிள்ளை'யிலே வாலி எழுதினாரு. நீங்க இப்போது ஆணையிடுகிற இடத்திலே இருக்கீங்க.

'அன்னமிட்ட கை' என்று உங்கள் கையைப் புகழ்ந்து எழுதினாரு. சத்துணவு திட்டத்தில் இப்போது நீங்கள் குழந்தைகளுக்கு அன்னமிடுகிறீர்கள்.'

- இவ்வாறு முத்து கூறியபோது, வாலி குறுக்கிட்டார்.

'அண்ணே! நான் சொன்னதெல்லாம் பலிச்சுதுன்னா அந்தப் பெருமை எல்லாம் நம் அண்ணனை (எம்.ஜி.ஆர்)தான் சாரும். ஏனென்றால், அவர் பாடியதால்தான், அந்தப் பாட்டுக்கெல்லாம் அவ்வளவு சக்தி வந்து பலிச்சிது' என்றார்.

அப்போது, முத்துவைப் பார்த்து எம்.ஜி.ஆர்., 'என்னைப் பற்றி வாலி எழுதிய எல்லாப் பாட்டும் பலிச்சுது. ஆனால் ஒரு பாட்டுதான் பலிக்கவில்லை' என்றார்.

எந்தப்பாட்டை எம்.ஜி.ஆர். குறிப்பிடுகிறார் என்று, வாலிக்குப் புரியவில்லை.

பிறகு எம்.ஜி.ஆரே சொன்னார்:

'எனக்கொரு மகன் பிறப்பான்! அவன் என்னைப்போலவே இருப்பான். தனக்கொரு பாதை வகுக்காமல் என் தலைவன் வழியிலே நடப்பான்' என்று பாட்டு எழுதினீர்களே! அந்தப் பாட்டைத்தான் சொல்கிறேன்' என்றார், எம்.ஜி.ஆர்.

வாலியின் முகம் வருத்தத்தால் வாடியது. எனினும், தன்னை ஒருவாறு தேற்றிக்கொண்டு, 'அண்ணே! நாட்டில் உள்ள சின்னஞ்சிறார்கள் அனைவருமே, உங்களுடைய செல்வங்களாக இருக்கிறார்கள். அப்படி இருப்பதால், உங்களுக்கு தனியாக ஒரு வாரிசு அமைவதை இறைவனே விரும்பவில்லை. அதனால்தான் இந்தப்பாட்டு பலிக்காமல் போய்விட்டது' என்று கூறினார்.

மதுரை முத்துவும், வாலி சொன்னதை ஆமோதித்தார்.

எம்.ஜி.ஆர். புன்னகை புரிந்தார்.

gkrishna
13th August 2014, 12:55 PM
http://www.thehindu.com/multimedia/dynamic/02048/10CP_NAMBIAR_VILLA_2048950g.jpg

Nambiar ruled Tamil cinema for more than half a century, perhaps the only actor to do so. And as villain, he outdid himself, says the writer

A multi-talented star, Nambiar played many memorable bad guy roles with his powerful eyes, scintillating voice, and excellent delivery of Tamil dialogues despite being from Kerala. He was also the handsome guy who played hero in a couple of movies, although these did not do as well. After making his debut in 1935, Nambiar acted in around 1000 films. (I had the honour of directing him in a Tamil television documentary titled Nadippisai Pulavar K. R. Ramasami. Nambiar’s sequences were shot in his bungalow in Gopalapuram.)

Born in Chirakkal, now in Kerala, on March 5, 1910, Manjeri Narayanan Nambiar lost his father early and moved to Ooty to live with his sister and brother-in-law. Drawn to theatre, he soon joined the famed Boys’ Company Madurai Devibala Vinoda Sangeetha Sabha owned by Tamil stage icon Nawab Rajamanickam Pillai.

Nawab’s famous drama Bhaktha Ramadas, in which Nambiar played more than one role, was made into a film and Nambiar took his bow in movies, for a salary of Rs. 75, a fortune in those days. An interesting feature of the film, directed by Murugadasa (Muthuswami Iyer), was that all the roles were played by men and boys.

Noted playwright, Tamil scholar, and later film producer S. D. Sundaram wrote a play called Kaviyin Kanavu, whose underlying theme was the Indian freedom struggle. Nambiar was cast as the dictatorial despot and the play was a roaring hit. A line in this play uttered by Nambiar, ‘Naatu makkal... semmariyaatu manthaigal! ‘(People of the kingdom! A flock of sheep!) became famous. M. Somasundaram (‘Jupiter’ Somu), the boss of Jupiter Pictures, was impressed and hired Nambiar. And with this, Nambiar’s long career as villain was launched.

http://www.thehindu.com/multimedia/archive/02048/10cp_Engga_Veettu__2048951a.jpg

One of the most successful stars of Tamil cinema and perhaps the only actor who remained at the top for more than half a century, Nambiar’s name soon became synonymous with on-screen villainy. His roles in Digambara Samiyar, Sarvadhikari, Manthirikumari, Enga Veettu Pillai, Velaikkari, Arasilankumari, Nadodi Mannan, and Nenjam Marapathillai are memorable. A versatile actor, he also played hero and comedian, but he played the villain in innumerable MGR films for nearly three decades, a rare feature in cinema.

His first film for Jupiter was Vidyapathi (1946) directed by A.T. Krishnaswami (ATK) where Nambiar played a villainous Brahmin, with his wife played by M.S.S. Bhagyam. In 1947, he was cast as hero in Kanjan, which flopped. In the hit film Rajakumari, Nambiar played the supporting role as the hero’s do-gooder pal. Though his role was small, he attracted attention.

Then came another hit Abhimanyu, followed by the stunning film Velaikkari in 1949, a watershed in the history of Tamil cinema, written by C. N. Annadurai and directed by A.S.A. Sami. Nambiar played two roles in it, as the feudal ‘Shylock-like’ rich man’s son in love with the poor housemaid, and as lecherous guru (shades of Rasputin).

Salem-based movie mogul T.R. Sundaram, who was also a hawk-eyed talent scout, soon grabbed Nambiar for Modern Theatres on an attractive contract, which was another turning point in his life. As the king’s Brahmin preceptor, Rajaguru, in their cult film Manthirikumari, Nambiar displayed his exceptional talent with his portrayal of the ambitious guru who wants to take over the kingdom. He became a star with this film and there was no looking back after this.

Meanwhile, another film was under production at the studio called Digambara Samiyar (1950). Based on the famous novel by Tamil writer Vaduvoor K. Duraiswami Ayyangar, it explored the theme that a man kept awake for three consecutive nights will reveal all his secrets. A greedy lawyer (D. Balasubramaniam) pursues this theory but does not succeed, thanks to the detective played by Nambiar, who exposes him by donning many disguises. The person first cast in the role was character actor Kali N. Ratnam, but studio boss T.R. Sundaram was unhappy with his performance and brought in M.G. Chakrapani. His performance was not up to the boss’s expectations either, and then entered Nambiar, to create Tamil film history.

The film was a hit and Nambiar won laurels. With another Modern Theatres’ hit Sarvadhikari (1951), Nambiar firmly established his stardom. Even though it had stars such as Chittoor V. Nagaiah and MGR, Nambiar dominated the film. Sarvadhikari was a hit and Nambiar’s career graph curved upwards. He was now a major star. With increasing fame, Sundaram cast him as hero in Kalyani with B.S. Saroja as his leading lady. However, the film failed and Nambiar went back to villain and character roles.

Interestingly, Nambiar acted in an English film, The Jungle (1952) in which he played a maharajah. Modern Theatres and Hollywood producer William Berke, who also directed it, jointly produced the film. It had famous Hollywood stars Rod Cameron, Caesar Romero and Marie Windsor in major roles.

A staunch and deeply religious person, he was an ardent devotee of Lord Ayyappa of Sabarimala. He visited the hilltop shrine for 65 continuous years and slowly an Ayyappa cult began to grow with Nambiar hailed as Maha Guruswami. Nambiar was married to Rugmini and had three children. One of them, Sukumar, tried his hand in politics, but did not succeed and he passed away some years ago. Nambiar passed away in 2009 at the age of 89. He is survived by a son and daughter.

He was full of charm, and very different from his on-screen persona, with an inexhaustible fund of anecdotes. Fame and fortune sat lightly on this actor, who left his imprint on cinema.

நம் நண்பர்கள் எல்லாம் இந்த தகவலையும் படிக்க வேண்டுகிறேன்
திருமதி ராதிகா சரத்குமார் அவர்கள் M R ராதா பற்றிய கட்டுரைக்கு ஒரு திருத்தும் கொடுத்து உள்ளார்கள்

CLARIFICATION

In response to the article ‘The ultimate bad guy’ written by Randor Guy on July 27, 2014, Radikaa Sarathkumar says: ‘I would like to bring to your notice that some facts were misquoted and some other important facts did not get any place in the article. An important incident which is probably the turning point of his life was not mentioned, i.e. he had left home at an early age due to a quarrel with his mother because she did not give an extra piece of fish to eat, he then joined Dapi Rangasamy Drama to support himself. In regard to the shooting incident, he had never spoken in public nor written any book as quoted. About his marital life, he had married Mrs. Saraswathi at a temple, whose son is M.R.R Vasu and Radha Ravi is his step-brother, quoting them as brothers is incorrect. He was legally married only to Mrs. Geeta Radha, whose children were not mentioned properly.’

chinnakkannan
13th August 2014, 01:05 PM
பாடலில் வெகு ஆழமான உணர்வுகளைக் காட்டிய பாடல் இது.. கொஞ்சம் சத்தமாக இருப்பது போல் இருந்தாலும்.. நான் முதன்முதலில் கேட்டது சின்னவயதில் சிலோன் இசைக்களஞ்சியத்தில் தான்..பட் இதுவரை பார்த்ததில்லை படத்தையும் அண்ட் பாடலையும்.. எஸ்.எஸ்.ஆர் விஜயகுமாரி என்று கேள்விப்பட்டதில் இருந்து ..கொஞ்சம் பயம் தான்.. :)

படம் அவன்பித்தனா..

இறைவன் இருக்கின்றானா?
இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான் - அவன்
இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான் ? எங்கே வாழ்கிறான்?
நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை

மனிதன் இருக்கின்றானா?
மனிதன் இருக்கின்றானா? இறைவன் கேட்கிறான் - அவன்
இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்? எங்கே வாழ்கிறான்?
நான் அன்பு காட்டினேன் அவன் ஆட்கொள்ளவில்லை
இந்தத் துன்பம் தீர்க்கவும் அவன் துணை வரவில்லை

கண்ணிலே உறுதியில்லை காதலுக்கோர் நீதியில்லை
ஒரு நாள் இருந்த மனம் மறு நாள் இருப்பதில்லை
குடிசையில் ஓர் மனது கோபுரத்தில் ஓர் மனது
கூடாத சேர்க்கை எல்லாம் கூடினால் பல மனது

மனிதன் இருக்கின்றானா?

பார்ப்பவன் குருடனடி படிப்பவன் மூடனடி
உள்ளதை சொல்பவனே உலகத்தில் பித்தனடி
நீரோ கொதிக்குதடி நெருப்போ குளிருதடி
வெண்மையைக் கருமை என்று கண்ணாடி காட்டுதடி

இறைவன் இருக்கின்றானா?

ஒன்றையே நினைத்திருந்தும் ஒன்றாக வாழ்ந்திருந்தும்
பெண்ணாகப் பிறந்தவரை கண்ணாக யார் நினைத்தார்?
இருந்தால் இருந்த இடம் இல்லையேல் மறந்து விடும்
இவர்தான் மனிதர் என்றால் இயற்கையும் நின்றுவிடும்

மனிதன் இருக்கின்றானா?

சந்தேகம் பிறந்து விட்டால் சத்தியமும் பலிப்பதில்லை
சத்தியத்தைக் காப்பவனும் சாட்சி சொல்ல வருவதில்லை
வழக்கும் முடியவில்லை மனிதரின் தீர்ப்பும் இல்லை
மனிதனை மறந்து விட்டு வாழ்பவன் இறைவன் இல்லை

இறைவன் இருக்கின்றானா?
மனிதன் இருக்கின்றானா?
இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான் - அவன்
இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்? எங்கே வாழ்கிறான்?

**

என்ன மாதிரி கதை எனத் தெரியவில்லை.. ஆர்.பார்த்தசாரதி என்பவர் மியூசிக்காம்..எழுதியவர் வேறு யார் நம்மகவியரசர் கண்ணதாசன் தான்.

gkrishna
13th August 2014, 01:50 PM
http://www.thehindu.com/multimedia/dynamic/01984/07KIMP_NELLU_1984816f.jpg
நாம் சமீபத்தில் மலையாள நடிகை ஜெயபாரதி பற்றி விவாதித்தோம்
அவர் நடித்த நெல்லு 1974 பற்றி குறிப்பிட்டு இருந்தேன் .பாலு மகேந்திர முதல் கேமரா இயக்குனர் ஆக பணி ஆற்றிய திரைப்படம் .ஹ்ரிஷிகேஷ் முகர்ஜி editor
அதில் சில நல்ல பாடல்கள் இடம் பெற்று உள்ளன . அதை குறிப்பிட மறந்து விட்டேன் .

திரு மது சார் ராஜேஷ் சார் இதை பற்றி எழுதி விட்டார்களா என்று நினைவில் இல்லை .ஏன் என்றால் நிறைய மலையாள பாடல்கள் திரியில் அவர்களால் குறிப்பிடப்பட்டு உள்ளன

சலீல் சௌத்ரி இசையில்
லதா மங்கேஷ்கர் முதல் பாடிய மலையாள பாடல்
கதலி கண்கதலி (பின்னாட்களில் பாலு மகேந்திராவின் அழியாத கோலங்கள் திரை படத்தில் இதே மெட்டு 'கிடைச்சா உனக்கு சுகம் எனக்கு தினம் கொண்டாட்டம் என்று ஜானகி குரல் நினைவு - மது சார் உறுதி செய்ய வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன் )
சுசீலாவின் 'காடு குளிர்னு '
மன்னாடே ஜெயச்சந்திரன் குழுவினரின் 'செம்பா செம்பா '


http://www.youtube.com/watch?v=rh2djsTR9hI

http://www.youtube.com/watch?v=-VY1WB2Yf74

http://www.youtube.com/watch?v=vKc0l4tGluA

Richardsof
13th August 2014, 01:52 PM
http://i57.tinypic.com/91jxw0.jpg

http://youtu.be/-M3sgry1Qvw

gkrishna
13th August 2014, 01:55 PM
பாடலில் வெகு ஆழமான உணர்வுகளைக் காட்டிய பாடல் இது.. கொஞ்சம் சத்தமாக இருப்பது போல் இருந்தாலும்.. நான் முதன்முதலில் கேட்டது சின்னவயதில் சிலோன் இசைக்களஞ்சியத்தில் தான்..பட் இதுவரை பார்த்ததில்லை படத்தையும் அண்ட் பாடலையும்.. எஸ்.எஸ்.ஆர் விஜயகுமாரி என்று கேள்விப்பட்டதில் இருந்து ..கொஞ்சம் பயம் தான்.. :)

படம் அவன்பித்தனா..

.

என்னுடைய நினைவில் இருந்து எழுதுகிறேன் சின்ன கண்ணன் சார்
கணவன் நாஸ்திகம் பகுத்தறிவுவாதி கடவுள் இல்லை கோஷ்டி மனைவி ஆஸ்திகம் (கிட்டத்தட்ட துணைவன் கணவன் ஆஸ்திகம் மனைவி நாஸ்திகம் ) இறுதி முடிவு என்ன வெள்ளி திரியில் காண்க

http://www.5eli.com/Lyrics/wp-content/uploads/2011/11/Avan-Pithana-300x300.jpg

gkrishna
13th August 2014, 02:05 PM
எஸ்வி சார்
என்ன ஆச்சு சூப்பர் பாட்டை இறக்கி இருக்கீங்க ..நெல்லுக்கு பாயும் தண்ணீர் ஆங்கங்கே புல்லுக்கும் புசியுமாம்
'டப்ல மாமி டப்லா பாட்டி' -லஞ்ச் டைம் பசிக்கு விஜயஸ்ரீ செம புசி:)

Richardsof
13th August 2014, 02:29 PM
நீண்ட நாட்களுக்கு பிறகு பழைய பழ மொழிகள் கேட்கும் வாய்ப்பை நல்கிய கிருஷ்ணா அவர்களுக்கு
நன்றி .1970ல் இந்த பாடல் மிகவும் பிரபலம் . இசையும் பாடல் வரிகளும் அட்டகாசம் .


அவ்வப்போது மனதிற்கு ரம்மியமான காட்சிகள் தேவை - நம்மை போன்ற வாலிபர்களுக்கு :roll:

Richardsof
13th August 2014, 02:37 PM
விஜயஸ்ரீ
விஜயலலிதா
ஜோதிலட்சுமி
ஏ.சகுந்தலா
ஜெயகுமாரி
ஆலம்
காஞ்சனா
ஜெயமாலினி
ஹெலன்
ராதிகா
ராஜஸ்ரீ
இவர்களின் காபரா நடனங்கள் -பல படங்களில் கண்ணுக்கு விருந்து தந்ததை மறக்க முடியுமா ?

gkrishna
13th August 2014, 02:46 PM
அவ்வப்போது மனதிற்கு ரம்மியமான காட்சிகள் தேவை - நம்மை போன்ற வாலிபர்களுக்கு
நிச்சயமாக
இன்னும் சில பத்மா கண்ணா,லீனா தாஸ்,சினேகலதா,ராஜசுலோச்சனா,அபர்ணா

chinnakkannan
13th August 2014, 02:55 PM
//என்னுடைய நினைவில் இருந்து எழுதுகிறேன் சின்ன கண்ணன் சார்
கணவன் நாஸ்திகம் பகுத்தறிவுவாதி கடவுள் இல்லை கோஷ்டி மனைவி ஆஸ்திகம் // ஓ கதை அப்படிப் போகுதா நன்றி க்ருஷ்ணா ஜி.. நல்ல வேளை நான் பார்க்கலை..

நெல்லு பார்த்ததில்லை..கேள்வி மட்டும் பட்டிருக்கிறேன்..

எஸ்வி சார்..காபரே நடனத்தில் காஞ்சனா பெயர் சொன்னதை ஆட்சேபிக்கிறேன்..:) பாவம் நல்ல நடிகை.. விஜய ஸ்ரீ தற்கொலை செய்துகொண்டார் இல்லியோ..

//நிச்சயமாக
இன்னும் சில பத்மா கண்ணா,லீனா தாஸ்,சினேகலதா,ராஜசுலோச்சனா,அபர்ணா// இது வந்துகார்த்திக் சாருக்கு விரிக்கிற வலை தானே :)

madhu
13th August 2014, 02:57 PM
சிக்கா...

இறைவன் இருக்கின்றானா ?

http://youtu.be/ChAMorhfNsw

Richardsof
13th August 2014, 02:59 PM
orchestra song

http://youtu.be/mcTfmULXsCo

madhu
13th August 2014, 03:00 PM
கிருஷ்ணா ஜி..

கதலி செங்கதலி மெட்டேதான் "கெடைச்சா"....

நெல்லு படத்தில் இன்னொரு ஹிட் பாட்டு உண்டாச்சே..

ஜேசுதாஸ், மாதுரியின் குரல்களில்

நீலப் பொன் மானே.. எண்டே நீலப் பொன்மானே

http://youtu.be/g5sN0sI4WAE

chinnakkannan
13th August 2014, 03:01 PM
மதுண்ணா.. இறைவன் இருக்கின்றானாவிற்கு நன்றி.. ம்ம் இன்னொரு பாட்டு படம் ஐந்துலட்சம் ..இறைவன்னு முதல் அடில கடைசில வரும்.. இதப் பத்திப்பேசிட்டோமான்னு தெரியலையே...கேள்வி பதில் பாட்டு..:)

பட்டிக்காட்டு ராஜா நான் பார்க்காத பார்க்க விரும்பிய இன்னும் ஒரு படம்.. உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்..என்னா பாட்டு..தாங்க்ஸ் எஸ்.வி. சார்..

gkrishna
13th August 2014, 03:18 PM
நெல்லு படத்தில் இன்னொரு ஹிட் பாட்டு உண்டாச்சே..
ஜேசுதாஸ், மாதுரியின் குரல்களில்
நீலப் பொன் மானே.. எண்டே நீலப் பொன்மானே


கரெக்ட் மது சார்
அருமையான பாடல்

Richardsof
13th August 2014, 03:21 PM
c.k.sir

what i have mentioned L. kanchana is dancer. heroine kanchana is different .

see this video -L. kanchana

http://youtu.be/2NR1hNGfbEU?list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw

gkrishna
13th August 2014, 03:22 PM
யாருக்கும் வெட்கமில்லை 1975
சோ ராமசாமி இயக்கம்
கலைச்செல்வி,சிவகுமார்,ஸ்ரீகாந்த்,சோ நடித்து வெளி வந்த கருப்பு வெள்ளை படம்

மிகவும் ரசித்த படம்
கலைச்செல்வி அவர்கள் மிகவும் அருமையாக நடித்து இருப்பார்கள்
ஸ்ரீகாந்த் கலைசெல்வியை ஏமாற்றி திருமணம் செய்து கொள்ள மறுப்பார் . சோ ராவுதர் என்ற கதாபாத்திரத்தில் வருவார்
ஸ்ரீகாந்த் தவறை ஒப்பு கொள்ள மறுக்கும் காட்சியில் பெல்ட் ஆல் விளாசி விடுவார் விளாசி

அருமையான தத்துவ பாடல் ஜேசுதாஸ் குரலில்
இசை GK வெங்கடேஷ் or குமார்

ஊருக்கும் வெட்கமில்லை
இந்த உலகுக்கும் வெட்கமில்லை
யாருக்கும் வெட்கமில்லை
இதிலே அவளுக்கு வெட்கமென்ன
ஹெ சமுதாயமே

மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஒவியம்
நீ சொன்னால் காவியம்
ஓவியம் என்றால் என்னவென்று தெரிந்தவர் இல்லையடா
குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால் அதுதான் தொல்லையடா

அத்தன பழமும் சொத்தைகள் தானே ஆண்டவன் படைப்பினிலே
அத்திப் பழத்தை குற்றம் கூற யாருக்கும் வெட்கமில்லை
மூடர்கள் ஏற்றிய குற்றத்தை மறந்து முதுகை பாருங்கள்
முதுகினில் ஆயிரம் அழுக்கு அதனை கழுவுங்கள்

சுட்டும் விரலால் எதிரியை காட்டி குற்றம் கூறுகையில்
மற்றும் மூன்று விரல்கள் உங்கள் மார்ப்பினை காட்டுதடா
எங்கேயாவது மனிதன் ஒருவன் இருந்தால் சொல்லுங்கள்
இருக்கும் அவனும் புனிதன் என்றால் என்னிடம் காட்டுங்கள்

அப்பன் தவறு பிள்ளைக்கு தெரிந்தால் அவனுக்கு வெட்கமில்லை
அத்தனை பேரையும் படைத்தானே அந்த சிவனுக்கும் வெட்கமில்லை
இப்போது இந்த உலகம் முழுவதும் எவனுக்கும் வெட்கமில்லை
எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும் எமனுக்கும் வெட்கமில்லை

இன்னும் ஒரு ஜானகி பாடல்

என் கண்கள் அன்று செய்த பாவம் பார்த்தது
என் கனியிதழ்கள் செய்த பாவம் சிரித்தது
என் இதயம் அன்று செய்த பாவம் நினைத்தது
அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது

gkrishna
13th August 2014, 03:24 PM
ம்ம் இன்னொரு பாட்டு படம் ஐந்துலட்சம் ..இறைவன்னு முதல் அடில கடைசில வரும்.. இதப் பத்திப்பேசிட்டோமான்னு தெரியலையே...கேள்வி பதில் பாட்டு..:)


படைதான் பூமியை இறைவன்
அதில் பொங்கி வழிந்தது அழகு
சுப்பையா நாய்டு இசை
ஜெமினி சரோஜாதேவி இணை
tn பாலு படம் னு நினைவு

Richardsof
13th August 2014, 03:28 PM
helen - dance song - superb music and eswari's voice .
http://youtu.be/5qTRvFeMqdo

Richardsof
13th August 2014, 03:31 PM
AZHAGU ORU RAAGAM

http://youtu.be/maSfRASRcVw

chinnakkannan
13th August 2014, 03:35 PM
ஒ.. தாங்க்ஸ் எஸ்வி சார் எல்.காஞ்சனா வைப்பற்றித் தெரியாது..சாயந்திரம் பார்க்கிறேன் :)

யாருக்கும் வெட்கமில்லை அழகான பாடல்.. அந்த என் கண்கள் அன்று செய்த பாவம் பார்த்தது.. ம்ம் நல்ல பாட்டு தான்..இருந்தாலும் தேவிகையோட எப்பவும் குறும்பு கொஞ்சும் முகத்தில் சோகம் தவழ ப் பாடும் பாட்டு அதுவும் ஜானகியம்மா தான்.. அது எனக்கு ரொம்பப் பிடிக்குமாக்கும்..

ரா.கி ரங்கராஜனின் கதை.. நாவலாக வந்ததை ஸ்ரீதர் வாங்கிப் படமெடுக்க அவர் எடுத்த கல்யாணப் பரிசுக்கும் சுமைதாங்கிக்கும் ஒரே க்ளைமாக்ஸ்..ஸ்ரீதர் கண்ணதாசனிடம் சொல்லி கண்ணதாசன் ரா.கி.ரவிடம் சொல்லி.. அவர் மாற்ற யோசித்துக் கொண்டிருக்கையிலேயே கண்ண தாசனிடம் இருந்து ஃபோன்..ஸ்ரீதர் க்ளைமேக்ஸ் மாற்றிவிட்டார் கவலை வேண்டாம்..

படம் பார்த்தால்.. அதுவரை படத்தில் ஒருகாட்சியில் கூட கிறிஸ்துவ மதத்தில் ஈடுபாடு காட்டாத கதானாயகன் ஃபாதர் ஆவதாகக் க்ளைமாக்ஸ்..ஜனங்களும் ஏற்றுக் கொண்டார்கள் - என ரா.கி.ரங்கராஜன் தனது சுயசரிதை “அவன்” இல் எழுதியிருக்கிறார்..

இனிய படம்.. நாவல் படித்ததில்லை..முத்துராமன் அண்ணனாக பாந்தம்..அந்தக் குடும்பமும் அழகு..தேவிகை ஆரம்ப க் காட்சிகளில் குறும்பு செய்வார்..பின் குறும்பு காணாமல் போய்விடும்.

நல்ல நல்ல பாட்டுக்கள் தான்..பிபிஎஸ்..மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.. பிபிஎஸ் பிஎஸ்.. என் பருவத்தின் கேள்விக்குபதிலென்ன சொல்லடி ராதா.. அப்புறம் ராதைக்கேற்ற கண்ணனோ.. என்.. எனினும் இந்த் க்ளைமாக்ஸிற்கு முன்வரும் பாட்டு..

பார்க்கலாமா..
*

என் அன்னை செய்த பாவம் நான் மண்ணில் வந்தது
என் அழகு செய்த பாவம் நீ என்னை கண்டது

இதில் கடவுள் செய்த பரிகாரம்


பிரிவு என்பது பிரிவு என்பது

இரவெனவும் பகலெனவும் இரண்டு வைத்தானே
அந்த இறைவன் அவன் மனதை மட்டும் ஒன்று வைத்தானே
ஒரு மனதில் ஒரு விளக்கை ஏற்றி வைத்தானே
அதில் ஒளியிருக்க வழியை மட்டும் மூடிவிட்டானே மூடிவிட்டானே

உறவினராம் பறவைகளை நீ வளர்த்தாயே
அதில் ஒரு பறவை நானும் என்றே நினைத்திருந்தேனே
சிறிய கூண்டு எனக்கு மட்டும் திறக்கவில்லையே
அது திறந்த போது என் சிறகு பறக்கவில்லையே

*

போடாபோ.. என்னை நீ ஏன் குடும்பத்துல சேத்துக்கலைன்னு சிம்பிளா கேக்கறத விட்டுட்டு இவ்ளோ நீளமாப் பாடறாப்பா ஹீரோயின்.. அந்தக்காலமோன்னோ :)

chinnakkannan
13th August 2014, 03:36 PM
நன்றி க்ருஷ்ணா ஜி..:) அது நல்ல பாட்டுத்தானே..ஐந்து லட்சம் பார்த்ததில்லை நல்ல படமா..

Richardsof
13th August 2014, 03:40 PM
5 lakhs- average movie . songs ok
http://youtu.be/ArOfMl19Jps

gkrishna
13th August 2014, 03:44 PM
நன்றி க்ருஷ்ணா ஜி..:) அது நல்ல பாட்டுத்தானே..ஐந்து லட்சம் பார்த்ததில்லை நல்ல படமா..

5 லட்சம் எதில் சேர்க்க
TN பாலு கதை எல்லாமே சூப்பர் ஜனரஞ்சகம்
அஞ்சல் பெட்டி 520 ,சங்கர்லால்,சட்டம் என கையில்,உயர்ந்தவர்கள்,
மீண்டும் வாழ்வேன்,நல்லதுக்கு காலமில்லை ,அது போக கொஞ்சம் மாடர்ன் திடேர்ஸ் படங்கள்
எனக்கு தெரிஞ்சு ரொம்ப நல்ல ஓடின வெற்றி படம்னா சட்டம் என கையில் தான் (சூப்பர் டுபர் ஹிட் னு சொல்வாங்களே அது மாதிரி ) kamal dual role

vasudevan31355
13th August 2014, 03:45 PM
இன்றைய ஸ்பெஷல் (52)

'இன்றைய ஸ்பெஷலில்' ஒரு அருமையான காமெடிப் பாடல். சிரிப்புக்கு சிரிப்பு. இனிமைக்கு இனிமை. திகிலுக்கு திகில். எல்லாம் கலந்து சஸ்பென்ஸ் உடன்.

படம்: பொண்ணு மாப்பிளே

http://www.buycinemovies.com/images/detailed/0214-poonu%20mapilai%20vcd%20box.jpg

நடிகர்கள்: ஜெயசங்கர், காஞ்சனா, வி.கே.ராமசாமி, நாகேஷ், கருணாநிதி, வீரப்பன், ராமாராவ், 'டைப்பிஸ்ட்' கோபு, மனோரமா

கதை, வசனம்: உசிலை சோமநாதன்.

பாடல்கள்: கவிஞர் கண்ணதாசன், தஞ்சை வாணன்.

இசை: வேதா

தயாரிப்பு: பி.எஸ்.வீரப்பா

இயக்கம். எஸ்.ராமநாதன்

http://antrukandamugam.files.wordpress.com/2013/08/jaisangar-kanchana-ponnu-mappillai-1966.jpg

அது ஓர் அபார்ட்மெண்ட் குடியிருப்பு. காமெடி நடிகர்கள் அவ்வளவு பேரும் குடியிருக்கிறார்கள். அதில் ஒரு அபார்ட்மெண்டில் இளம் தம்பதிகளான ஜெய்சங்கரும், காஞ்சனாவும் தங்கியிருக்கிறார்கள். அன்றுதான் அவர்களுக்கு திருமணம் ஆகியிருக்கிறது. அதனால் அந்த குடியிருப்பில் உள்ளவர்களுக்கு இளம் தம்பதியர் சந்தோஷமாக அடுத்த நாள் ஒரு டீ பார்ட்டி கொடுக்க முடிவு செய்கின்றனர்.

ஆனால் அன்று இரவு எதிர்பாராவிதமாக ஒரு அசம்பாவிதம் நடந்து விடுகிறது. ஜெய் வெளியே போய் இருக்கும் போது காஞ்சனா அவரது அறையில் தன்னுடைய கிடாரை கேட்டு வரும் ஒரு நபரை (பி.எஸ்.வீரப்பா) கொலை செய்து விட நேரிடுகிறது. பிணத்தை ஒரு அறையில் போட்டு பூட்டி வைத்து விடுகிறார். வெளியில் இருந்து வந்த ஜெய் விஷயத்தைக் கேள்விப்பட்டு பதைபதைத்து காஞ்சனாவை சமாதானப்படுத்தி பார்ட்டி முடிந்ததும் நடு ராத்திரியில் எங்காவது பிணத்தைக் கொண்டு போய் வீசி விடலாம் என்று முடிவெடுக்கிறார்.

இப்போது பார்ட்டி ஆரம்பிக்கிறது. அப்பார்ட்மெண்டில் உள்ள அனைவரும் விருந்தில் கலந்து கொள்கின்றனர். அதில் சதா சர்வகாலமும் கிடாரும், இசையுமாய் இருக்கும் நாகேஷும், ஏ. வீரப்பனும் மணமக்களை வாழ்த்தி ஆடிப் பாடுகின்றனர். கிடாரைக் கேட்டு வந்தவனைக் கொலை செய்த காஞ்சனா நாகேஷும், ஏ.வீரப்பனும் கிடார் இசைப்பதைப் பாரத்ததும் தான் செய்த கொலையை நினைத்து நடுங்குகிறார்.

அவர்கள் பாடும் பாடலின் வரிகளுக்கும், காஞ்சனா பிணத்தை ரூம் உள்ளே வைத்து வெளியே மிரள மிரள விழிப்பதற்கும் சம்பந்தம் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது போல இப்பாடல். நம்மைக் குழப்புவதற்காக.

நாகேஷும், வீரப்பனும் ஆடிப் பாடிக் கலக்குவார்கள். டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் அட்டகாசம். ஏ.எல்.ராகவனும், சதனும் பின்னி இருப்பார்கள். கிடார் இசை நெஞ்சை அள்ளுகிறது. வரிகளும் இன்ட்ரெஸ்ட்.

சதன் குரலில் வீரப்பன் மிமிக்ரிகள் அட்டகாசம். என்ன மாதிரி காமெடியன் இவர்! சில காட்சிகளில் நாகேஷயே தூக்கி சாப்பிடுவார். அந்த முக பாவங்கள் எப்பேர்ப்பட்ட உம்மணாம் மூஞ்சியையும் சிரிக்க வைத்துவிடும். நாகேஷும், இவரும் சேர்ந்தால் அதகளம்தான்.

காஞ்சனாவின் மிரளல். பாடலின் சஸ்பென்ஸ் கலந்த விறுவிறுப்பு அருமை.

பாடல் காமெடிப் பாடலாக இருந்தாலும் ஜோராக இருக்கும். படமே செம காமெடி. இப்படத்தின் சில காமெடிகளை இன்று மாலை சொல்கிறேன். என்ஜாய் செய்து பார்க்க வேண்டிய ஒரு படம். வயிறார சிரித்து விட்டு வரலாம்.

இப்பாடலும் ஒரு அபூர்வப் பாடல்தான். நீங்களே பார்த்து என்ஜாய் செய்யுங்களேன்.

http://i.ytimg.com/vi/-paPP3ArXJs/hqdefault.jpg

மணமகன் அழகனே
மணமகள் அழகியே
திருமணம் ஆனதும் இங்கு
ஜோடி சேர்ந்தனரே

மணமகன் அழகனே
மணமகள் அழகியே
திருமணம் ஆனதும் இங்கு
ஜோடி சேர்ந்தனரே

மனதிலே நினைப்பது ஹிஹி ஹிஹி
கண்ணிலே தெரியுது ஹிஹிஹஹ்ஹா ஹஹ்ஹா
மனதிலே நினைப்பது
கண்ணிலே தெரியுது
இருவரின் முகத்திலும்
அசடுதான் வழியுது

மணமகன் அழகனே
மணமகள் அழகியே
திருமணம் ஆனதும் இங்கு
ஜோடி சேர்ந்தனரே

(இடையிசையாக வரும் அந்த கிடார் பிட் அற்புதம் சார். என்ன ஒரு இனிமை. இன்று பூரா கேட்கலாம்.)

எதையோ மறைக்கிறா
நம்மையே முறைக்கிறா
தெரியுதா புரியுதா
விரும்புறா ஹனிமூன் ஹா

இதயமோ பாடுது
லால்லாலால்லாலா
இமைகளோ ஆடுது
பரம் பரம் பரம் பட பட பட பரம் பட பட பட பரம்
இதயமோ பாடுது
இமைகளோ ஆடுது
கனி இதழ் வாடுது
தனிமையை நாடுது

(மறுபடியும் அதே இனிமையான கிடார் பீஸ். உடன் மிருதங்கத்துடன் இணைத்து)

எதையோ மறைக்கிறா
நம்மையே முறைக்கிறா
எதையோ மறைக்கிறா
நம்மையே முறைக்கிறா

தெரியுதா புரியுதா
விரும்புறா ஹனிமூன்
எதையோ மறைக்கிறா
நம்மையே முறைக்கிறா
எதையோ மறைக்கிறா
நம்மையே முறைக்கிறா
தெரியுதா புரியுதா
விரும்புறா ஹனிமூன்

(கிடார், மிருதங்கப் போட்டி)

('ஆ' என்ற காஞ்சனாவின் அலறல் குரல்)


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-paPP3ArXJs

gkrishna
13th August 2014, 03:46 PM
5 lakhs- average movie . songs ok


yes vinodh sir

my boss is always right

Richardsof
13th August 2014, 03:50 PM
yes vinodh sir

my boss is always right

no ..no ..i am not boss ....

our boss is just arrived with ponnu maappile . proceed to join the procession

gkrishna
13th August 2014, 03:51 PM
இன்றைய ஸ்பெஷல் (52)


அற்புதம்
அந்த ஹனிமூன் ராகவன் சதன் இழுப்பு ரொம்ப பிரமாதமாயிட்டு இருக்குமே எண்ட சேட்டா

chinnakkannan
13th August 2014, 03:56 PM
தாங்க்ஸ் எஸ்வி சார் க்ருஷ்ணாசார் ஃபார் ஐந்து லட்சம் தகவல்களுக்கு :) அண்ட் காணொளிக்கு..

வாங்க வாசு சார்.. இந்த மணமகன் அழகனே ஃபேமஸ் பாட்டு த் தானே.. நல்ல பாட்டு.. படம் ஒரு முறை பார்த்ததாக நினைவு..அந்த அபார்ட் மெண்ட் முழுக்க காமெடி பண்ணுவதாய் நினைவு.. வீரப்பன் நிறைய படத்திற்கு காமடி டிராக் எழுதியிருக்கிறார் என நினைவு.. நன்றி

ஏனோ அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ - சாய்பாபாவின் நினைவு வருகிறது..வேறு எதுவும் பாடல் பாடி உள்ளாரா..

vasudevan31355
13th August 2014, 03:57 PM
no ..no ..i am not boss ....

our boss is just arrived with ponnu maappile . proceed to join the procession

Is it? How is 'ponnu mappile'? Beauty or not? Pl. watch the guitar music bits again and again. U must enjoy it. thank u.

vasudevan31355
13th August 2014, 04:03 PM
//அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ//

'இன்றைய ஸ்பெஷலி'ல் எப்பவோ போட்டாயிற்று சி.க.சார். பார்க்கலயா?

vasudevan31355
13th August 2014, 04:05 PM
கிருஷ்ணா சார்!

ரெடி! ரெடி! ஸ்டெடி. எப்பவும் தயாரா இருங்கோ.

gkrishna
13th August 2014, 04:06 PM
Is it? How is 'ponnu mappile'? Beauty or not? Pl. watch the guitar music bits again and again. U must enjoy it. thank u.

ஒண்ணு கவனிசீன்களா வாசு சார்
ராகவன் பாடும் போது அப்படியே நாகேஷ் பாடற மாதிரியே இருக்கும் .அப்பறம் எது ராகவன் எது சதன் கண்டுபிடிக்க பயங்கர கஷ்டப்படும்
ஆடியோ வில்

vasudevan31355
13th August 2014, 04:42 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG-10.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG-10.jpg.html)

vasudevan31355
13th August 2014, 04:47 PM
99% சிவாஜி ரசிகர்களாலேயே

sorry 100%

Richardsof
13th August 2014, 04:50 PM
http://i59.tinypic.com/msyrty.jpg

THIRUNELVELI - VEERA PANDIYA KATTABOMMAN - BOOMI

THIRUNELVELI- ALWA FAMOUS

THIRUNELVELI- KRISHNAJI LAND

THIRUNELVELI- MATHURA GAANAM -PART 2 OPENING BATS MAN

THIRUNELVELI - LAND OF FAMOUS PROVERBS


ALL THE BEST KRISHNAJI

Richardsof
13th August 2014, 04:52 PM
1%........adiyen.. THANKS GOPAL

chinnakkannan
13th August 2014, 04:53 PM
சுருளி என்றால் நினைவுக்கு வருவது அவர் எஸ். வரலட்சுமியிடம் பேசும் காட்சி தான்..(ஆதிபராசக்தி) அப்புறம் அந்தப் பாட்டு..ஆட்டம்

ஆத்தாடி மாரியம்மா சோறு ஆக்கி வச்சோம் வாடியம்மா
ஆழாக்கு அரிசியப் பாழாக்க வேண்டாம் தின்னுப் புட்டுப் போடியம்மா

பாட்டெடுத்தோம் தாளமிட்டோம் ஓடிவரல்ல
ஓடிப்பாட்டெடுத்த பிள்ளை மனம் தேடி வரல்ல
பத்ரகாளி ருத்ரகாளி பார்வதியம்மா
இந்த பாழும்மனம் கொண்டவனைப் பாரடியம்மா..

நல்ல பாட்டு தானே.

madhu
13th August 2014, 05:12 PM
யாருக்கும் வெட்கமில்லை...

படத்தில் இன்னொரு அருமையான மிருதுவான சுசீலாவின் பாடல்..

அணையாத தீபம்.. மனிதாபிமானம் ..உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ ?

மெழுவர்த்தியுடன் ஜெயலலிதா மின்வெட்டுத் தமிழகத்தைப் போல இருண்டு கிடக்கும் வீட்டுக்குள் உலவிக்கொண்டு பாடும் பாடல்.. நான்கு மதங்களைப் பற்றிய வரிகளுடன் அழுத்தம் திருத்தமாக எழுதிய கவிஞர் யாரோ ., யார் யாரோ ?

vasudevan31355
13th August 2014, 05:13 PM
கிருஷ்ணா சார்,

எனக்கு மிகவும் பிடித்த 'வார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது' பாடலைப் பிடித்து அளித்தீர்களே! சூப்பர்.

'தத்தெடுத்த முத்துப் பிள்ளை யாரோ' ரேர் சாங்கிற்கு நன்றி.

நடிகை சுமித்ரா வாசுதேவன் என்று நீங்கள் பதிவு போட்டதும் பயந்தே விட்டேன். நல்லவேளை. நாயர் பக்கத்தில் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். இருக்கறது எல்லாம் போதாதுன்னு இது வேறயா?

'நெல்லு' ஏகபோக விளைச்சல். என்ன ரெண்டு நாளா வாச் பண்றேன். நெல்லு, ஜெயபாரதின்னு போறேள்.

'யாருக்கும் வெட்கமில்லை' பதிவு டாப். ஜானகி பாடல் அபூர்வம்.

madhu
13th August 2014, 05:15 PM
சுருளி என்றால் நினைவுக்கு வருவது அவர் எஸ். வரலட்சுமியிடம் பேசும் காட்சி தான்..(ஆதிபராசக்தி) அப்புறம் அந்தப் பாட்டு..ஆட்டம்

ஆத்தாடி மாரியம்மா சோறு ஆக்கி வச்சோம் வாடியம்மா
ஆழாக்கு அரிசியப் பாழாக்க வேண்டாம் தின்னுப் புட்டுப் போடியம்மா

பாட்டெடுத்தோம் தாளமிட்டோம் ஓடிவரல்ல
ஓடிப்பாட்டெடுத்த பிள்ளை மனம் தேடி வரல்ல
பத்ரகாளி ருத்ரகாளி பார்வதியம்மா
இந்த பாழும்மனம் கொண்டவனைப் பாரடியம்மா..

நல்ல பாட்டு தானே.

பாட்டெடுத்தேன் தாளமிட்டேன் ஓடி வரல்லே
ஆடிப் பாத்துப்புட்டேன் பிள்ளை முகம் தேடி வரல்லே
பேச்சுப்படி பொங்கல் உண்ண இங்கு வரல்லே
நான் மூச்சடக்கி உன்னிடத்தில் அங்கு வருவேன்

சீக்கிரத்தில் காட்சி தந்த செல்வ நாயகி
புது சேலைக்காரி பூக்காரி தெய்வ நாயகி
பத்ரகாளி ருத்ரகாளி பாரடியம்மா - இந்த
பாவி மகன் வீட்டிலே வை ஓரடியம்மா.

vasudevan31355
13th August 2014, 05:16 PM
சி.க.சார்,

'அலை பாயுதே கண்ணா' சூப்பர் கண்ணா. உங்க பேர் வந்தா பாடல் முழுசும் தந்துடறீங்க. அப்படித்தானே!

'இறைவன் இருக்கின்றானா' சூப்பரப்பு.

vasudevan31355
13th August 2014, 05:16 PM
வினோத் சார்,

அழகான விஜயஸ்ரீ படத்திற்கும், நல்ல வீடியோ பாடல்களுக்கும் நன்றி!

chinnakkannan
13th August 2014, 05:17 PM
//பாட்டெடுத்தேன் தாளமிட்டேன் ஓடி வரல்லே// தாங்க்ஸ் ஃப்ர் த கரெக்*ஷன்ஸ் மதுண்ணா

vasudevan31355
13th August 2014, 05:18 PM
பாட்டெடுத்தேன் தாளமிட்டேன் ஓடி வரல்லே



https://www.youtube.com/watch?v=gRkiCrHRA-A&feature=player_detailpage

gkrishna
13th August 2014, 05:18 PM
ALL THE BEST KRISHNAJI

முதல் பால்லையே அவுட் ஆகி விட கூடாது
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி எஸ்வி சார்

chinnakkannan
13th August 2014, 05:18 PM
நன்றிவாசு ஜி.. அப்படின்னு இல்லை..க்ருஷ்ணா, மதுன்னு வந்தாலும் தருவேனே..கோபாலா தந்தா அதுக்கு ராக்ம்லாம் எழுதணும் கொஞ்சம் கஷ்ட்ம :)

vasudevan31355
13th August 2014, 05:19 PM
மதுண்ணா

'மேஜிக்' தானே சுருளியார் அருகில்?

chinnakkannan
13th August 2014, 05:19 PM
அப்பாடி சம்மதிச்சுட்டீங்களா.க்ருஷ்ணா சார்.. கங்க்ராட்ஸ்..


முதல் பால்லையே அவுட் ஆகி விட கூடாது
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி எஸ்வி சார்

gkrishna
13th August 2014, 05:20 PM
'கொஞ்சம் ஒதுங்கு அப்படியே ஒதுங்கு நான் தனியா பேசணும் உன்னோட '

vasudevan31355
13th August 2014, 05:21 PM
கோபாலா தந்தா அதுக்கு ராக்ம்லாம் எழுதணும் கொஞ்சம் கஷ்ட்ம :)

ந..லு. ம்ம்.

vasudevan31355
13th August 2014, 05:29 PM
'உல்லாசப் பறவைகளி'ல் 'வெண்ணிற ஆடை' மூர்த்தியும், சுருளியும் பாடும் சூப்பர் பாடல்.

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/UllasaParavaigal000004.jpg (http://s1098.photobucket.com/user/albertjraj/media/2012/UllasaParavaigal000004.jpg.html)

எங்கெங்கும் கண்டேனம்மா
பெண்கள் தங்கத்தில் வந்தாரம்மா

நான்தானா மாட்டிக் கொள்ள
ஆச இருந்தா கேளுங்க சாரு

கொடுப்பா அவ கொடுப்பா
அணைப்பா மெல்ல அணைப்பா
ரொம்ப சொகமா

மலேசியா வாசுதேவன், சுருளிராஜனுக்காவும், பாலா 'வெண்ணிற ஆடை' மூர்த்திக்காகவும், குரல் கொடுத்த பாடல்.

செம ரகளை.

Gopal.s
13th August 2014, 05:33 PM
அப்பாடி சம்மதிச்சுட்டீங்களா.க்ருஷ்ணா சார்.. கங்க்ராட்ஸ்..

கிருஷ்ணா கொஞ்சம் ராகவேந்தர் சாயலில் ,அவர் தம்பி மாதிரி இருக்காப்பலே.

எலேய், ஒளுங்கா நல்ல பதிவோட ஓபன் பண்ணு வேய்.நான் கேக்கேன் ,ஒரு சிவாஜி பாட்டோடு .

vasudevan31355
13th August 2014, 05:34 PM
http://www.thehindu.com/multimedia/dynamic/02040/Suruli_rajan_jpg_2040621g.jpg'வண்டிச் சக்கரம்' படத்தில் சுருளி காமெடி ஒன்று.

சி.ஐ.டி. சகுந்தலா: உன்னை வச்சி ஒரு பெரிய கொள்ளை அடிக்கிறதா திட்டம் போட்டிருக்கேன்.

சுருளி: அடிக்கிறத அடிச்சிட்டு சீக்கிரம் விட்ருங்கம்மா.

சிரிப்பு வராமல் என்ன செய்யும்? இரட்டை அர்த்தத்தில் பயணித்தால் கூட.

vasudevan31355
13th August 2014, 05:36 PM
கிருஷ்ணா கொஞ்சம் ராகவேந்தர் சாயலில் ,அவர் தம்பி மாதிரி இருக்காப்பலே.

எலேய், ஒளுங்கா நல்ல பதிவோட ஓபன் பண்ணு வேய்.நான் கேக்கேன் ,ஒரு சிவாஜி பாட்டோடு .

எங்க தங்க ராசா,

வந்துட்டியா? வாழும் சுருளியே:) வா! வா!

gkrishna
13th August 2014, 05:39 PM
'ஒளி பிறந்தது 'அரசாங்க மருத்துவ மனையையும், அங்கு பணி புரிவோர், அதைச் சுற்றி கடை வைத்துள்ளோர், மார்ச்சுவரி, பிண ஊர்தி ஓட்டுனர்கள் ஆகியோரை களமாகக் கொண்டு துரை இயக்கிய படம். மறைந்த நடிகர் உதிரிப்பூக்கள் விஜயன், இதில் பிண ஊர்தி ஓட்டுநராக நடித்திருப்பார். சுருளிராஜனுக்கு குதிரை (ஜட்கா) வண்டி ஓட்டும் வேடம். தொடர்ந்து பிணத்தையே ஏற்றிச் சென்றதால் அந்த குதிரை வெள்ளைத்துணி போர்த்திய பிணத்தை பார்த்தாலே நின்றுவிடும். பயணிகளை ஏற்றிச் செல்லும் சுருளிராஜன் இதனால் பாதிக்கப்படுவார். இதை அறிந்த ஒரு கூட்டம் அவரை, குதிரையின் வீக்னெஸ்ஸை வைத்து பிளாக்மெயில் செய்யும். ஒருவழியாக குதிரையை மாற்றி தப்பிப்பார்

.முரட்டுக்காளை தன் தந்தையைக் கொன்றதற்க்காக பண்னையார் வம்சத்தையே அழிக்க சபதம் எடுக்கும் கண்க்குப்பிள்ளை வேடம். (சகுனி )படத்தை நகர்த்திச் செல்லும் மையப் புள்ளியே கணக்குப்பிள்ளை சுருளிராஜன் தான். ஜெய்சங்கரிடமும், ரஜினியிடமும் நயவஞ்சகமாகப் பேசி இருவரையும் மோதவிட்டு தன் காரியத்தை சாத்தித்துக் கொள்வார். ஒரு காட்சியில் ரஜினியின் தம்பிகளின் மேல் திருட்டுக் குற்றம் சாட்டி கட்டி வைப்பார்கள். இதனால் ரஜினி சண்டைக்கு வருவார். அவர் கைகாலை எடுத்து விட வேண்டும் என பேசிக் கொள்வார்கள். சுருளிராஜன் வெளியே வந்து சொல்வார். உடையப் போவது யாருடையது என்பதை நானல்லவா முடிவு செய்யவேண்டும் என்று. கடைசியில் ஜெய்சங்கரை சிறைக்கு அனுப்பிவிட்டுத் தான் ஓய்வார்.

ஹிட்லர் உமாநாத்தன் சுய உழைப்பால் முன்னேறிய வேடம் சிவாஜி கணேசனுக்கு. அதனால் அலுவலகத்தில் கடுமையாக ஹிட்லர் போல நடந்து கொள்வார். அவரை குளிர்விக்க அவரை புகழ்ந்து சுருளிராஜன் பாடும் வில்லுப் பாட்டு மிக பிரபலமான ஒன்று.பாலாபிஷேகம் ஜெய்ஷங்கர் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் அரவாணி வேடம் சுருளிராஜனுக்கு

அவர் ஏற்று நடித்த வேடங்களுக்கு ஏற்பவே அவரது வசனங்களும் இருக்கும். ஒரு படத்தில் தண்டனையாக அவரை வடைக்கு ஆட்டச் சொல்லும் போது உளுந்த வடைக்கா? மசால் வடைக்கா? என்று கேட்பார். அவருடன் வருபவர் எதற்கா இருந்தா என்ன? என்பார். உடனே இவர் சொல்வார். மசால் வடைக்கின்னா ஒன்னு ரெண்டா ஆட்டினா போதும். உளுந்த வடைன்னா மையா ஆட்டனும்ல என்பார். சமையல் தொழிலாளியாக, மெக்கானிக்காக எந்த வேடத்தில் நடித்தாலும் அதற்கேற்றார்போல தன் வசன்ங்களை அமைத்துக் கொள்ளும் திறமை அவருக்கு இருந்தது.

இதற்க்கு முக்கிய காரணம், அவரின் கூர்ந்த கவனிப்பே. பெரியகுளத்தில் 1938ல் பிறந்த அவர் தன் இளம் வயதில் மதுரைக்கு இடம் பெயர்ந்தார். அங்கே மெக்கானிக் ஷெட்டில் வேலை பார்த்துக் கொண்டே, நாடகங்களிலும் நடித்து வந்தார். பின்னர் தான் சென்னைக்கு வந்தார். அந்த அனுபவமும், அங்கே அவர் சந்தித்த பல்வேறு மனிதர்களும் அவரின் பிற்கால வேடங்களுக்கு கச்சாப் பொருளாய் இருந்தன. தற்போது வடிவேலுவின் முக்கிய பாணியாய் விளங்கும் உதார் விடும் சாமான்யன் வேடம், மதுரையில் அவர் பார்த்த பல உதார் பார்ட்டிகளிடம் இருந்து எடுக்கப்பட்டதே. மதுரையில் தெருவுக்கு நாலு பேர் அப்படி இருப்பார்கள்.

சுருளிராஜனின் குரலும் மிக வித்தியாசமான ஒன்று. அடித் தொண்டையில் உருவாகி கீச்சுக்குரல் போல ஒலிக்கும். எம் ஆர் ராதாவுக்கு பின்னால் வந்த குரல்களில் தனித்தன்மை வாய்ந்த குரல் அது. மிமிக்ரி கலைஞர்களால் அதிகம் உபயோகிக்கப்படும் குரலும் கூட. அவர் ஏற்று நடித்த பாத்திரங்களுக்கு மெருகேற்றியது அவர் குரலே.

1980 ல் அவர் இறந்தார். 82 ஆம் ஆண்டுவரை அவர் நடித்த படங்கள் வெளிவந்தன. 79 மற்றும் 80 ஆண்டுகளில் மட்டும் அவர் 80 படங்களுக்கும் மேல் நடித்திருந்தார். இடைவிடா படப்பிடிப்பும், அவரது குடிப்பழக்கமும் அவர் 42 வயதிலேயே மறையக் காரணமாய் இருந்தன. 10 ஆண்டுகள் போராடி முதல் இடத்துக்கு வந்தார். தன் கேரியரின் உச்சத்தில் இருக்கும் போதே நம்மிடம் இருந்து விடை பெற்றுவிட்டார்.

இவர் ஜெய்சங்கருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்
http://antrukandamugam.files.wordpress.com/2013/07/suruli-manthoppukkiliye-3.jpg?w=593

vasudevan31355
13th August 2014, 05:39 PM
http://antrukandamugam.files.wordpress.com/2013/07/ennathe-kannaiah-suruli-rajan-naan-2.jpg

gkrishna
13th August 2014, 05:40 PM
எங்க தங்க ராசா,

வந்துட்டியா? வாழும் சுருளியே:) வா! வா!

v (வியட்னாம்) சுருளி

gkrishna
13th August 2014, 05:43 PM
கிருஷ்ணா கொஞ்சம் ராகவேந்தர் சாயலில் ,அவர் தம்பி மாதிரி இருக்காப்பலே.

எலேய், ஒளுங்கா நல்ல பதிவோட ஓபன் பண்ணு வேய்.நான் கேக்கேன் ,ஒரு சிவாஜி பாட்டோடு .

உங்களுக்கு பிடிச்ச பாட்டு தான் opening நிச்சயமா ஓய்

chinnakkannan
13th August 2014, 05:44 PM
//மதுரையில் தெருவுக்கு நாலு பேர் அப்படி இருப்பார்கள்.// நாங்கள்ளாம் நல்ல புள்ளைங்க்ளாக்கும் :)

சுருளி ராஜன் அப்படிஒன்றும் பக்கென்று சிரிக்க வைத்ததாய் எனக்கு நினைவில்லை.. காசே தான் கடவுளடாவில் கூட கொஞ்சம் செட்டியாராய் வருவார்..

madhu
13th August 2014, 05:45 PM
மதுண்ணா

'மேஜிக்' தானே சுருளியார் அருகில்?

ராதிகா என்றா கேட்கிறீர்கள்.. அப்படித்தான் தோணுது ..

vasudevan31355
13th August 2014, 05:46 PM
ஹிட்லர் உமாநாத்

புகழ் பெற்ற சுருளிராஜன் வில்லுப்பாட்டு

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/c_zpsd4ef9e19.jpg

காமெடிக்கு சுருளிராஜன். ('மறைந்த கலைஞர்' என்று டைட்டில் போடுவார்கள்). படம் வரும் போது அவர் உயிருடன் இல்லை. படத்தில் இவர் பாடும் வில்லுப்பாட்டு மிக பிரசித்தம். இன்றளவில் கூட அந்த நடிகர் திலகம் புகழ் பாடும் வில்லுப்பாட்டை பலர் ரசிப்பதை நான் பார்த்திருக்கிறேன். (வில்லுப்பாட்டு எழுதி அமைத்தவர் திரு.சுப்பு ஆறுமுகம் அவர்கள்). மேலும் இலங்கை வானொலியில் அந்த நாட்களில் இந்த வில்லுப்பாட்டை ஒருநாள்கூட ஒளிபரப்பாமல் இருக்கவே மாட்டார்கள். கோவில் விசேஷங்களிலும், கல்யாண வைபவங்கள், இதர விசேஷங்களிலும் நான் இந்த வில்லுப் பாட்டை பலமுறை கேட்டதுண்டு.

வில்லுப்பாட்டு பற்றி சில வரிகள்.

தன் முதலாளி உமாநாத்தைக் காக்கா பிடிக்க சுருளிராஜன் உமாநாத்தின் புகழை வில்லடித்துப் பாடுவது போல காட்சி அமைப்பு. ஆனால் உண்மை அர்த்தம் என்ன தெரியுமா? நடிகர் திலகத்தின் புகழ்தான் இந்த வில்லுப் பாட்டில் பாடப்படும் ஹிட்லர் உமாநாத்தின் பெயரை சாக்காக வைத்துக் கொண்டு.

நம் ரசிகர்கள்கொண்டாடி மகிழும் வில்லுப்பாட்டு இது. நடிகர் திலகம் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு உயர்ந்ததை ஹிட்லர் உமாநாத் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு உயர்ந்ததோடு ஒப்பிட்டு இப்பாடலை வடிவமைத்திருப்பார்கள் சுருளியின் இடையிடை காமெடி பஞ்ச்களோடு (அண்ணே! புல்லரிக்குதுண்ணே!... போர்வையிருந்தா போர்த்திக்கோடா... கன்னுக் குட்டி மேஞ்சிடப் போகுது!) சேர்த்து. இதில் சில வரிகளை தருகிறேன். கவனியுங்கள்.

சுருளி கடவுளை வேண்டி துவக்கி வில்லடித்துக் கொண்டே பாடும் ஆரம்ப வரிகள்.


https://www.youtube.com/watch?v=AG0oQSU5M9E&feature=player_detailpage

பூப்பறிச்சு மாலை கட்டி... (ஆமடி தங்கம்)
பூசை பண்ணி வந்திருக்கேன்... (ஆமாஞ் சொல்லு)
காப்பாற்ற வரணுமய்யா... (ஆமடி தங்கம்)
கணேசனே சரணமய்யா... (ஆமாஞ் சொல்லு)

இந்த இடத்தில் கணேசன் யாரென்று தெரிகிறதா?

ஒரு டீயை இரண்டாக்கி
உறிஞ்சி நாங்க குடிச்சதிலே
ஒருத்தன் மட்டும் ஒசந்தானே!
இன்னொருத்தன் அசந்தானே!

(இதில் மூன்றாவது வரியையும் நான்காவது வரியையும் நன்றாகப் படித்து புரியும் சக்தி உடையவர்கள் புரிந்து கொள்ளுங்கள்)

ஹிட்லர் மீசையுடன் பிறந்தார் எங்க ஹீரோ
இங்கிலிஷும் பேசிடுவார் ஆரீராரோ
(நடிகர் திலகம் பைல்களைப் பார்த்தவாறு வில்லுப் பாட்டைக் கேட்டுக் கொண்டிருப்பார்)
வாய் தொறந்தா வசனமல்லோ எங்க ஹீரோ
அந்த வசனமே கவிதையல்லோ ஆரீராரோ

என்னைக்கும் வாடாத பாசமலரு
பெத்த அன்னைக்கு உத்தம புத்திரன் இவரு
இந்த ஊரில் இதுதான் ஒசந்த மாளிகை ஆமா(ம்)
ஹிட்லர் மீசை குடியிருக்கும் வசந்த மாளிகை

பட்டிக்காடா பட்டணமா எங்க நாட்டிலே
ஆமா(ம்) சத்தியமா இவருதானே தர்மராஜா
பத்தே அவதாரம் பகவானுக்கு ஆமா(ம்)
பத்துக்கு மேல் அவதாரம் நம்மாளுக்கு (சபாஷ்!)
வேஷம் நம்மாளுக்கு

(அமர்க்களமாக இல்லை!)

பறப்பதுலே பைலட்டு பிரேம்நாத்து
நீதியை நிறுப்பதில ஜஸ்டிஸ் கோபிநாத்து
மேதையிலே இவரு ஒரு சாக்ரடீசு
ஆமா(ம்) மீசையிலே ஹிட்லரு உமாநாத்து

இப்படியாக இப்பாடல் நடிகர் திலகத்தின் புகழ் பாடியே வளரும். பிரபல ராகங்களின் பெயர்களில் நடிகர் திலகத்தின் நடிப்பு வில்லுப்பாட்டின் மூலம் பெருமைப் படுத்தப்படும்.

அழுதிடுவார் அது ஆரபி ராகம்...
கர்ஜனை செய்வார் இது கல்யாணி ராகம்...
சிரிச்சிடுவார் அது செஞ்சுருட்டி
சிணுங்கிடுவார் இது சிந்து பைரவி...
சீட்டியடிப்பார் அது நாட்டைக்குறிஞ்சி
சத்தமிடுவார் அது சங்கராபரணம்

நடையழகு இது ரூபக தாளம்
நாடித்துடிப்பினிலே ஆதிதாளம்
அப்படியே படம் பிடிக்க கேமரா இல்ல
அம்புட்டையும் சொல்ல நானு கம்பனுமில்ல

மகராசன் கோட்டையிலே கோயில் வாசலு (நடிகர் திலகத்தின் 'அன்னை இல்ல' வாசலின் முன் உள்ள விநாயகர் கோயில்!?)

நமக்குப் பெருமை பிடிபடாது.

(இந்த வில்லுப்பாட்டில் திரு.சுப்பு ஆறுமுகம் அவர்களின் வில்லுப்பாட்டுக் குழுவினரும் சுருளிராஜனுடன் இணைந்து நடித்திருப்பார்கள். மலேஷியா வாசுதேவன் சுருளிராஜனின் குரலில் அருமையாக சுருளிராஜனுக்குப் பின்னணி பாடியிருப்பார்).

ஆனால் ஒரு குறை. இன்னும் முழுமையாக கவனம் செலுத்தி இப்பாடலைத் தந்திருந்தால் அற்புதமான தலைவரைப் பற்றிய முழுமையான சாதனை வில்லுப் பாட்டாக இது அமைந்திருக்கும். இடையில் சில சொதப்பல் வரிகள், காமெடி வசனங்கள் என்று இடையிடையே அடிக்கடி ட்ராக் மாறுவதால் நமக்கு இந்த வில்லுப் பாட்டு முழு திருப்தி இல்லாததால் கொஞ்சம் ஏமாற்றமே!

என்றாலும் மறக்க முடியாத ஜனரஞ்சகமான சூப்பர் ஹிட் வில்லுப்பாட்டு. அனைவராலும் விரும்பப்பட்ட ஒன்று.

madhu
13th August 2014, 05:49 PM
சுருளிராஜனின் மாந்தோப்பு கிளியே கஞ்சன் வேஷமும், பெண்ணுக்கு யார் காவல் படத்தின் திரு நங்கை வேஷமும் அருமையானவை.

ஜெயசித்ராவுக்காக ஜானகி பாடும் "கண்ணே கண்ணான கண்ணா" பாடலில்

"பிள்ளையாய் நானும் பொறக்குறபோது பல பேரு வந்து பாத்தாங்க
பொண்ணா ஆணான்னு கேட்டாங்க
எனக்கு பாவாடை டிராயரு கொடுத்தாங்க"

என்று பாடும்போது சிரிப்பு வந்தாலும் அந்த காலகட்டத்தில் ஒரு மெல்லிய சோகம் இழையோடியபடிதான் இருந்தது.

madhu
13th August 2014, 05:52 PM
முதல் பால்லையே அவுட் ஆகி விட கூடாது
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி எஸ்வி சார்

ஸ்வீட் எடுங்க.. கொண்டாடுங்க..

vasudevan31355
13th August 2014, 05:52 PM
பெண்ணுக்கு யார் காவல்


https://www.youtube.com/watch?v=sUtHQgET70A&feature=player_detailpage

Richardsof
13th August 2014, 05:54 PM
super comedy .
http://youtu.be/Z9shuvvp6bM

madhu
13th August 2014, 05:54 PM
பெண்ணுக்கு யார் காவல்

எஸ்.பி.பி. ஜானகி...

கண்ணே கண்ணான கண்ணா

http://youtu.be/frFnammvOSo

vasudevan31355
13th August 2014, 05:56 PM
ஸ்வீட் எடுங்க.. கொண்டாடுங்க..

http://media.giphy.com/media/ToMjGpIHv26XDs0uUdG/giphy.gifhttp://www.picgifs.com/graphics/f/fireworks/graphics-fireworks-091422.gif

Murali Srinivas
13th August 2014, 06:38 PM
முரளி சார்,

நீண்ட இடைவெளிக்குப் பிறகு? வாருங்கள் சார்.

தங்களுக்குக் கீழ்தான் நாங்கள் எல்லோருமே!

நீங்களும் சைட்டை பத்தி பேச வந்தது மிகவும் சந்தோஷம். ஐ மீன் நம்ம 'மதுரகானங்கள்' வெப் சைட் பற்றி.

கிராதகர் வந்தால் மட்டுமே டோஸ்.

முரளி சார்! எப்படி இருக்கிறீர்கள்? ரொம்ப நாட்களாயிற்று. விரைவில் செல்லில் தொடர்பு கொள்கிறேன். தாங்கள் ஒன்றுமே பதிவிடா விட்டாலும் முரளி ஸ்ரீனிவாஸ் என்ற பெயர் பார்த்தாலே கரை புரண்ட வெள்ளம் போல் மகிழ்ச்சி. அது எங்கள் முரளியால் மட்டுமே முடிந்த ஒன்று.

அடுத்த பாகத்திற்கு தங்கள் மனமுவந்த வாழ்த்துக்கள் தேவை.

வாசு,

எனக்குதான் மகிழ்ச்சி. உணமையிலே இந்த திரி ஒரு அசுர சாதனை. நீங்கள், கிருஷ்ணாஜி, கார்த்திக், கோபால். ராகவேந்தர் சார், சின்ன கண்ணன், ராஜேஷ், மதுஜி, வினோத் சார்,மற்றும் அண்மையில் வந்து இணைந்து கொண்ட sss என்று பலரின் அசுர உழைப்பு உண்மையிலே பிரமிக்கத்தக்கது, அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். பாகம் இரண்டிற்கும் அட்வான்ஸ் வாழ்த்துகள். கிருஷ்ணாஜி மிகப் பொருத்தமானவர். கிருஷ்ணாஜி, தைரியமாக தொடங்குகள். இதற்கு அடுத்து நடிகர் திலகத்தின் திரி ஒன்றையும் நீங்கள் துவங்க வேண்டும்,

வாசு, இந்த திரியின் என்னுடைய தலையாய சந்தோஷம் சென்ற வாரம் நிகழ்ந்தது. ஆனால் நான் பங்கு பெற முடியவில்லை. பிறகுதான் பார்த்தேன். அதான் நமது இசையரசி இசைக் குயிலின் அற்புதமான பாடல்களை ராஜேஷ், கோபால் மற்றும் நீங்களும் பட்டியலிட்டதை படித்த போது அவ்வளவு பூரிப்பு. நான், நண்பர் ராஜேஷ் மற்றும் மதுஜி போன்றவர்கள் ஏற்கனவே PSusheela Fans @ yahoo groups -ல் உறுப்பினராக இருக்கும் காரணத்தினால் ஏராளமான பாடல்களை share செய்திருக்கிறோம். ஆனால் அவை அங்கே இங்கே போல் விவாதிக்கப்படவில்லை.

குறிப்பாக கோபால் பதிவு செய்த மனம் படைத்தேன் பாடல் என் மனதுக்கு மிகவும் நெருங்கிய பாடல். முதல் சரணமான மத்தள மேளம் முரசொலிக்கவையும் மூன்றாவது சரணமான செவ்வேல் என நீ பெயர் கொண்டாய் ஆகியவற்றை மாமா ஒரு விட மெட்டில் தந்திருப்பார். ஆனால் இரண்டாவது சரணத்தை வேறு மாதிரி தந்திருப்பார். அதில்

பள்ளியறையில் நான் தனித்திருந்தேன்

பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய்

துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன்

பாடி விட்டு வார்த்தைகளை நிறுத்தி

தோழி தூக்கத்தில் கனவென்றுதான் உரைத்தாள் என்று சரணத்தை முடித்து மனம் படைத்தேன் பல்லவியை ஆரம்பித்து ஒரு ஆலாபனை செய்வாரே! அதை விட இனிமையானது உலகத்தில் இருக்கிறதா என்ன?

நம்முடைய தலைவன் easy chair-ல் சிந்தனை வயப்பட்டவாறே கண் மூடி கிடக்க சௌகார் அவர் காலை தொட்டு வணங்கும்போது அபிநய சரஸ்வதி வாயசைக்க

பேச மறந்து சிலையாய் நின்றால்

அதுதான் தெய்வத்தின் சன்னதி

அதுதான் காதல் சன்னதி [இங்கே காதல் என்ற வார்த்தை உச்சரிக்கப்படும் விதம் இருக்கிறதே]

என்று சரணத்தை முடித்து ஒரு ஆலாபனை செய்வாரே அப்போது வைரமுத்து சொன்னதுதான் நினைவிற்கு வரும். என் உயிர் கூட்டை விட்டு வெளியே போய் சஞ்சரித்து விட்டு மீண்டும் கூட்டில் வந்து சேரும்.

மூன்றாவதாக ஒன்று

உன் விரல்கள் என் அழகை மீட்டும்

உன் விழிகள் என் உயிரை வாட்டும்(அதிலும் இரண்டாவது வரி இரண்டாவது முறை பாடும்போது ஓஹோ!)

உன் குரலும் என் பெயரை கூட்டும்

அது கோடி கோடி இன்பம் காட்டும்!

உண்மையிலே அது கோடானு கோடி இன்பம்.

ஒரு முறை ஸ்கூட்டர் ஒட்டிக் கொண்டிருக்கும் போது சாரதி ஏதோ விஷயத்திற்கு போன் செய்தார். ஓரமாக நிறுத்தி விட்டு பேசினேன். பேச்சு சுசீலாவின் பாடல்களுக்கு தாவியது. இந்த பாடல் பற்றி இந்த வரிகள் பற்றி பேசினோம், பேசினோம். அப்படி பேசினோம். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக. இரவு 10 மணிக்கு மேல் வேறு. தன்னிலை உணர்ந்து பார்த்த போது தெருவில் ஈ காக்கை இல்லை. அப்படி மனதை இழுத்த பாட்டு.

இது போல் எத்தனையோ பேசலாம். நேரம்தான் கிடைக்கவில்லை. மறுபடியும் வாழ்த்துகள். நன்றி. பாகம் 2-ல் சந்திப்போம்..

அன்புடன்

rajeshkrv
13th August 2014, 08:28 PM
அடேயப்பா ஒரு குட்டி தூக்கம் (8 மணி நேரம்) போட்டு விட்டு வருவதற்குள் எத்தனை எத்தனை பதிவுகள்.. 5 லட்சம், சுருளி ராஜன், நெல்லு என பதிவுகள் விரிந்து கிடக்கின்றன..

ஆஹா சுருளியின் அந்த வில்லு பாடு சிலோன் ரேடியோவிலும் , மதுரை வானொலியிலும் தேய்த்தவை .. “ரூபா ரூபா ... வேட்டையையே என “ பட்டைய கிளப்பிய பாடல் அது ..

கிருஷ்ணா ஜியின் முகம் கண்டேன் .... இப்படி பக்தி ஸ்ரத்தையாக இருக்கும் இந்த முகமா இப்படி பதிவுகளை இடுவது ... ஹ்ம்ம்ம்

முரளி ஜி , வாங்கோ வாங்கோ .. ஆமாம் இசையரசியின் பாடல்களை மற்ற இடத்தில் இவ்வளவு விரிவாக பேசப்படவில்லை . இங்கே பேச வழி வகுத்து கொடுத்த வாசு ஜி, கோபால் ஜி, கிருஷ்ணா ஜி மற்றும் என்றுமே அன்பிற்குறிய மது அண்ணா விற்கும் நன்றி

ஆஹா என்ன பாட்டை அலசியுள்ளீர் முரளி ஜி .. மத்தளம் மேளம் முரசொலிக்க .... அந்த தோழி தூக்கத்தில் ... அடேயப்பா (அவர் பாடிய வரி போலவே இருக்கும் இதயத்தை மெல்ல மெல்ல மீட்டிவிட்டான் .. இவரும் குரலால் மீட்டிவிடுவார்)

vasudevan31355
13th August 2014, 08:31 PM
http://kovaikkavi.files.wordpress.com/2011/07/oli-hand.jpg

ஜூன் 8 ம் ஆம் தேதி.

அந்த நாள்.

ஒரு நம்பிக்கையில் சும்மா கொளுத்தி வைத்த ஒரு விளக்கு இங்கு உள்ள நண்பர்களின் கடும் உழைப்பாலும், ரசனைகளாலும் இன்று அணையா விளக்காய் சுடர் விட்டு பிரகாசித்து எட்டுத் திக்கும் ஒளி வீச ஆரம்பித்து விட்டது.

65 நாட்களில் ஒரு பாகம் முடிவுற்றே விட்டது. பிரம்மிப்பாய் இருக்கிறது.

ஒவ்வொருவரும் தத்தம் உழைப்பை இங்கு வெளிப்படுத்தி அதே சமயம் செம ஜாலியாக, ஜோவியலாக யாரும் யார் மனமும் புண்படாத வகையில் பதிவுகள் இட்டு மதுரகானத்தைப் பிரிய மனமிலாமல் இருக்கும் ஆனந்த நிகழ்வுகள்.

எத்தனை பாடல்கள்... அதுவும் அபூர்வ அபூர்வமாக மலைக்கச் செய்யும் அளவிற்கு.

மது அண்ணா அவர்களின் பங்களிப்பு திரிக்குக் கிடைத்த தலையாய பெருமை.

திரியில் அண்ணா எல்லாம் பங்கு கொள்வார் என்று கொஞ்சமும் எதிர்பார்க்க வில்லை. அற்புத, மிக அரிய பதிவுகள் தந்து, தவறுகள் கண்டால் அழகாகத் திருத்தி அம்சமாக இத்திரியை பரிமளிக்கச் செய்த விதம் மறக்க முடியாது. ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா.

டியர் கார்த்திக் சார்,

ஜனரஞ்சக பதிவுகளின் கிங். தெரியாத விஷயமே இல்லை. ஜாம்பவான். எங்களுக்கெல்லாம் வழிகாட்டி. ரசனைகளின் உச்சம் தொட்டவர். மேலதிக விவரங்களுக்கு இவரை விட்டால் எவர்?
ராமுவுக்கேற்ற ராஜாவாய் இங்கு வந்து அசுரப் பதிவுகள் அளித்து ஆனந்தமடையச் செய்த ஆசான். பாடல்களை ரசிப்பது ஒரு புறம் இருந்தாலும் யார் பதிவையும் பாராட்டி மகிழும் பெரும் குணம். போட்டி பொறமை எதுவுமே நெருங்காத நெருங்கிய நண்பர். அதனால்தான் எப்போதுமே எனக்கு டியர்.

இந்த நல்ல நேரத்தில் நீங்கள் இங்கு இருக்க வேண்டும் கார்த்திக்ஜி.

கோபால். என்ன சொல்வது? ஹப்பிற்கே கிடைத்த பொக்கிஷம். என் உயிர் நண்பர். ராகங்கள் பற்றிய கலக்கல் பதிவுகள். போனில் மனம் திறந்த வாழ்த்துக்கள். அறிவுறுத்தல்கள். அபூர்வ பாடல்களின் தொகுப்புகள். மறந்து போன கலைஞர்களின் பொக்கிஷங்களையும் , அவர்களையும் நினைவு கூர்ந்த நன்றி மறவா வியட்நாம் தமிழன். கொஞ்சம் சண்டை வம்பு , அதிக பயனுள்ள பாடல்கள் என்று அறிவுஜீவித்தனம் அமர்க்களம்.

அன்பு ராகவேந்திரன் சார்.

என்ன ஒரு ஆதரவு! பலத்த வேலைகளுக்கிடையிலும், இணைய இணைப்பு கிடைக்காத சங்கடங்களிலும் அழகான 'பொங்கும் பூம்புனல் தந்து' குளிர்ச்சியடச் செய்த விந்தை. அதுவும் மிக மிக அபூர்வ பழைய பொக்கிஷப் பாடல்கள். தேடித் தேடிக் கொணர்ந்து இன்னிசை விருந்து படைத்த தன்மை

ஆஹா! என்னருமை ராஜேஷ்ஜி!

என்ன சொல்ல. 60 நாட்களில் எனக்குக் கிடைத்த ஆருயிர் நட்பே!

பல இரவுகள் உங்களைக் கண்டு வியந்து தூங்காமல் அதிசயத்திருக்கிறேன். இவ்வளவு திறமைகள் உள்ளடக்கிய ஒரு மாமனிதர். மிகச் சிறந்த நண்பர். பதிவாளர். பண்பாளர். குறுகிய காலமே என்றாலும் சோழன் பிசிராந்தையார் நட்பல்லவோ நமது.

இசையரசியின் மேல் எனக்கிருந்த வெறித் தீயின் மீது பெட்ரோல் ஊற்றி அவர்கள் மேல் எனக்கிருந்த ஆர்வத் தீயைப் பெருக வைத்தவர். மலையாள, கன்னட அறிவைக் கொடுத்தவர். குரு போல.

அனாவசிய வள வள (என்னைப் போல) இருக்கவே இருக்காது. நச் நச் நச் தான். எதுவும் வரம்பு மீறாமல் அளவோடு. குறும்பு கொப்பளிக்கும் ஒரு வார்த்தையிலேயே.

மதுர கானத்தில் கடவுள் எனக்களித்த சிறப்புப் பரிசு என் ராஜேஷ்ஜி.

முக்கயமாக கன்னடப் பட பாடல்களின் பைத்தியமாகி விட்டேன் ராஜேஷ்ஜி.

கோபு சார்.

எத்தனை 'லைக்' கிளிக்குகள். ஒரு பதிவு விடாமல் பார்த்து பாராட்டி அப்பப்பா! அதுவும் சலிக்காமல். எப்படி நன்றி நவில்வது?

வினோத் சார்

விதவிதமான நடிகையர் படங்கள் உற்சாக டானிக்காக. நிறைய வீடியோக்கள். அபூர்வ ஆவணங்கள். உன் ஆள் என் ஆள் என்ற பேதமில்லாமல். தினம் பங்களிப்பு பல்வேறு வேலைகளுக்கு இடையில். தினம் போனில்.

சின்னக் கண்ணன்

எங்கள் செல்லக் கண்ணன். அழகான தமிழில். நிறைய டரில் வாங்கிய மகானுபாவர். நாரதர் கலகம் போல. தெரிந்தாலும் தெரியாதது போல கேட்டு வாங்கும் சாமர்த்தியம். அடுத்தவர்களுக்கும் தெரிய வேண்டுமே என்ற நல்ல எண்ணத்தில். அழகான ரசனை. உடல் நிலை சற்று சிரமம் கொடுப்பினும் மதுர கானங்களை மறக்காத மாமனிதர்.

எஸ்.எஸ். சார்.

இரண்டு மூன்று பதிவுகள்தான். ஆனால் வாழ்நாள் முழுக்க பேசும்.

யுகேஷ்பாபு சார்.

கொஞ்சமே வந்தாலும் இங்கு வந்தவுடன் ரசனையை நன்கு உணர முடிந்தது. நல்ல பாடல்கள் அளித்து பெருமைப் படுத்தினார்.

வெங்கிராம்ஜி

தன்னுடைய கருத்தை இங்கு ஆழமாகப் பதித்து பெருமை அளித்தவர்.

இப்போது

இன்றைய 'கதாநாயகன்' கிருஷ்ணாஜி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ki.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/ki.jpg.html)

வார்த்தைகள் வரவில்லை. என்ன ஒரு நுண்ணறிவு. எவ்வளவு ஞாபக சக்தி. அறிவுத்திறன். கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல். பணிவுக்கு இன்னொரு பெயர். எவர் மனமும் புண்படக் கூடாதே என்றே எப்போதும் சிந்தனை. அதைவிட மதுர கானங்களில் எந்தப் பிரச்னையும் வந்து விடக் கூடாதே என்று வேண்டுதலே உண்டு.
வெளியே வராத மறக்கடிக்கப்பட்ட பல திரைக் கலைஞர்களை திரியில் கொண்டு வந்து நினைவு படுத்திய சாமர்த்தியம். வாலி புகழ் பாடும் ஆவணப் பதிவுகள்.

மிடில் சாங்க்ஸ் கலக்கல்கள். எத்தனை எத்தனை படங்கள். பாடல்கள் இந்த கிருஷ்ணா என்னும் அறிவுச் சுரங்கத்திலிருந்து தங்கப் புதையல்களாய் நமக்குக் கிடைத்தன. எல்லாரையும் ஜாலியாக ஹேண்டில் செய்து கொண்டு. திரி நான் தொடங்கியபோது ஓடோடி வந்து என்னை ஆதரித்து தோளோடு தோளாய் நின்று திரியை சுமந்த சுமைதாங்கி. அதுவும் மகிழ்ச்சியோடு... மனநிறைவோடு
.
முரளி சாரின் ஆசீர்வாதங்கள், ஸ்டெல்லா மேடத்தின் வாழ்த்துக்கள், பார்த்தசாரதி சாரின் பங்களிப்புகள், பாலா சாரின் பங்களிப்புகள், சித்தூர் வாசுதேவனின் உற்சாக டானிக், ரவி சாரின் உற்சாகப்படுத்தல் என்று மேலும் மெருகு.

வெறும் தமிழ்த் திரைப்படப் பாடல்கள் மட்டுமா?

எத்தனை எத்தனை அற்புதமான மலையாளப் பாடல்கள்

கன்னடப் படப் பாடல்கள்

தெலுங்கு சலன சித்திரப் பாடல்கள்

இனிமையான இந்திப் பாடல்கள்...அதைப் பற்றிய விவரங்கள்

அப்பாடல்களில் நடித்த நடிக நடிகையர்கள் பற்றி விவரங்கள்.

இசையமைப்பாளர்கள் பற்றிய அனைத்து அரிய விவரங்கள்.

படங்களைப் பற்றிய ஆய்வுகள்

பத்திரிகை ஆவண செய்திகள்

நகைச்சுவை செய்திகள், சங்கதிகள்.

பல்வேறு மொழி நடிக நடிகையர்கள், டெக்னீஷியன்களின் புகைப்படங்கள்

'இன்றைய ஸ்பெஷல்' தொடர், ஜஸ்ட் ரிலாக்ஸ் பகுதிகள்.

இன்னும் ஏராளமான இதர செய்திகள்

என்று பல்சுவை விருந்து படைத்த 'மனதை மயக்கும் மதுரகானங்கள்' பாகம் 1 இன்றோ நாளையோ முடிந்து பாகம் 2 தொடங்கவுள்ளது.

இதற்கு உறுதுணையாய் நின்ற அனைத்து நல்லுலங்களுக்கும், (வெளிப் பார்வையாளர்களாக மிகக் குறுகிய காலத்தில் அதுவும் 65 நாட்களில் 61733 பார்வையாளர்கள்...Replies: 3,935 என்று அபார 'திரிசூல' வெற்றி) இருந்து பேராதரவு தந்த உலகில் உள்ள அனைத்து திரைப்படப் பாடல்கள் ரசிகர்களுக்கும், சில கிடைக்காத பாடல்களை வேறு தள நண்பர்கள் நமக்காகத் தரவேற்றி தந்ததற்கும்,

குறிப்பாக இந்தத் திரி பொலிவோடு திகழ உதவிய யூ ட்யூப் இணைய தளத்திற்கும், 'இன்பமிங்கே' இணையதளத்திற்கும், 'ராகா' இணையதளத்திற்கும்

கோடானு கோடி நன்றி.

மற்றும் விடுபட்டுப் போன அன்பர்களின் ஆதரவிற்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி!

என்றும் நன்றி மறாவா உங்கள் நண்பன்
நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
13th August 2014, 08:42 PM
http://www.cmclanka.com/thanks%20(1).jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/anthanaal.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/anthanaal.jpg.html)

எல்லாவற்றுக்கும் மேல் 'உன்னை வணங்கித் தொடங்குகிறேன்... வாழ்த்துவாயாக' என்று என்றும் 'நான் வணங்கும் என் இதயதெய்வம்' நடிகர் திலகத்தை மனதில் தியானித்து இத்திரியைத் தொடங்கினேன். அந்த இதய தெய்வம் இவ்வளவு பெரிய வெற்றியையும், ஆசீர்வாதத்தையும் எனக்கு அளித்து எனக்கு பேரருள் புரிந்து விட்டார் மீண்டும்.

அந்த தெய்வத்தின் தெய்வத்திற்கு, அவரின் பொற்பாத கமலங்களுக்கு

என்னுடைய கோடானு கோடி நன்றி! நன்றி! நன்றி!

rajeshkrv
13th August 2014, 09:16 PM
நன்றி என்ற வார்த்தை சிறியது ஆனால் அதை சொல்லும் மனது பெரியது என்பார்கள்.. அதைப்போல ஆஹா உங்கள் நன்றி தோரணம் பலே ஜோர்... ஒவ்வொரு பங்களிப்பாளரையும் நினைவு கூர்ந்து ஒரு வரியில் சொல்லிவிடாமல் அதையும் அழகாக பாங்காக சொல்வது அருமை அருமை. வாசு ஜி தமிழ் உமது கைகளில் விளையாடுவதற்கு என்ன பாக்கியம் பெற்றதோ ..
வாழ்க .. இரண்டாம் பாகத்தை விரைவில் தாரும் ...

chinnakkannan
13th August 2014, 09:42 PM
நன்றி என்ற வார்த்தை சிறியது ஆனால் அதை சொல்லும் மனது பெரியது என்பார்கள்.. அதைப்போல ஆஹா உங்கள் நன்றி தோரணம் பலே ஜோர்... ஒவ்வொரு பங்களிப்பாளரையும் நினைவு கூர்ந்து ஒரு வரியில் சொல்லிவிடாமல் அதையும் அழகாக பாங்காக சொல்வது அருமை அருமை. வாசு ஜி தமிழ் உமது கைகளில் விளையாடுவதற்கு என்ன பாக்கியம் பெற்றதோ ..
வாழ்க .. இரண்டாம் பாகத்தை விரைவில் தாரும் ... // நான் என்ன் சொல்ல .. எல்லாம் ராஜேஷ் சொல்லிய பிறகு.. வழி மொழிகிறேன்..ஆஆ ஆனால் வாழ்த்த வயதில்லை (?!) வாசு சார்..வணங்குகிறேன்..ஆசிர்வதியுங்கள் எனக்கு இன்னும் எழுத வருவதற்கு :)

அன்புடன்

சி.க

rajeshkrv
13th August 2014, 09:48 PM
நன்றி என்ற வார்த்தை சிறியது ஆனால் அதை சொல்லும் மனது பெரியது என்பார்கள்.. அதைப்போல ஆஹா உங்கள் நன்றி தோரணம் பலே ஜோர்... ஒவ்வொரு பங்களிப்பாளரையும் நினைவு கூர்ந்து ஒரு வரியில் சொல்லிவிடாமல் அதையும் அழகாக பாங்காக சொல்வது அருமை அருமை. வாசு ஜி தமிழ் உமது கைகளில் விளையாடுவதற்கு என்ன பாக்கியம் பெற்றதோ ..
வாழ்க .. இரண்டாம் பாகத்தை விரைவில் தாரும் ... // நான் என்ன் சொல்ல .. எல்லாம் ராஜேஷ் சொல்லிய பிறகு.. வழி மொழிகிறேன்..ஆஆ ஆனால் வாழ்த்த வயதில்லை (?!) வாசு சார்..வணங்குகிறேன்..ஆசிர்வதியுங்கள் எனக்கு இன்னும் எழுத வருவதற்கு :)

அன்புடன்

சி.க

சி.க உண்மையிலேயே உமது எழுதும் திறன் மிக அபாரம் ..எல்லோரும் ஒரு சீரிய நடையில் எழுதுவது என்பது இயல்பு ஆனால் உமது எழுத்து பாணி வித்தியாசம் . நிறைய எழுதுங்கள்
படித்து மகிழ நாங்களெல்லாம் இருக்கிறோம்

chinnakkannan
13th August 2014, 10:01 PM
குரு ராஜேஷ்ஜி :) நன்றி..இன்னும் பயம்மா இருக்கு.. வெகுதூரம் போக வேண்டும்..ஆமா..400 பக்கம் போலாமா..அல்லது எப்போ ஆரம்பிக்கப் போறாங்க புது இழை தெரியலையே..
அதுக்காக இன்னிக்கு எழுந்திருச்சு ஒரு சுசீலாம்மா பாட்டும் போடலைன்னா எப்படி..ஒரு கண்டிஷன் நல்ல பாட்டு+அழகு நடிகையாவும் இருக்கணும்..:)

vasudevan31355
13th August 2014, 10:08 PM
ராஜேஷ் சார்

நம் 'தெய்வாம்சக் குரல் நாயகி'யின் ஒரு அருமையான அரிதான பாடலை பார்ப்போம். 'பணத்துக்காக' படத்தில்

மௌனம் இங்கே நிம்மதி
மஞ்சம் ஒரு சந்நிதி
மங்கையின் அங்கங்கள்
பூஜைக்காக

கொள்ளை அழகுப் பாடல். இந்த இசை தேவதை என்ன அழகாகப் பாடுகிறார்! திருஷ்டி சுற்றிப் போட வேண்டும் ராஜேஷ் சார் இந்த அற்புத பாடகிக்கு.


https://www.youtube.com/watch?v=2QlX22rM0Zc&feature=player_detailpage

rajeshkrv
13th August 2014, 10:13 PM
மெளனம் இங்கே நிம்மதி,, நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி பாடல்கள் எல்லாமே நமக்கு நிம்மதி கிடைக்க வைக்கும் பாடல்கள் ..

அருமை அருமை


வேறு பாடகிகள் பாடிய பாடல்களை இசையரசியின் குரலில் கேட்பது எப்பொழுதுமே தனி சுகம் .. ஒரு பூரிப்பு


இதோ

சின்ன தாயவள் தந்த ராசாவே (ஆட ஜென்மகு என்னி சோகாலோ )

http://www.youtube.com/watch?v=EnImUZEGVFc

சின்ன சின்ன பூங்கொடி (தெலுங்கில் இசையரசியுடன் கல்பனா)

http://www.youtube.com/watch?v=OFUUizdJXqk

chinnakkannan
13th August 2014, 10:21 PM
//மௌனம் இங்கே நிம்மதி
மஞ்சம் ஒரு சந்நிதி
மங்கையின் அங்கங்கள்
பூஜைக்காக // நல்ல பாட்டு வாசு சார்.. தாங்க்ஸ்.. தாங்க்ஸ் ராஜேஷ்..

வாசு சார்..ராவேளைல கறுப்பு புட்டா புடவையும் கறுப்பு ப் பொட்டுமா ஜெ.சி..ம்ம் சிவகுமாருக்கும் தூக்கம் போச்சா படத்துல :)

madhu
14th August 2014, 06:24 AM
vasu ji

லேட்டஸ்டாக நம்ம திரியில் பதிந்திருந்த "அவளும் பெண்தானே" பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருது.
" நன்றியைச் சொல்ல நான் என்ன செய்தேன்.
திரியினில் திளைத்தேன் வேறென்ன செய்தேன்"

ஹி ஹி.. கொஞ்சம் உல்டா செஞ்சாச்...

கருத்து வேற்றுமைகள் இருந்தபோதும் யாருக்கும் காயம் படாமல் கத்தி முனையில் நடப்பது போல திரியை நகர்த்தி சென்ற அனைவருக்குமே நன்றிதான்.
ஒவ்வொருவரின் பங்களிப்பும் மலர்கள் என்றால் வாசுஜி ... நீங்கள் அதைத் தாங்கி நிற்கும் வைரம் பதித்த தங்க ஃப்ளவர் வாஸ். ( சிக்கா.. வம்புக்கு வருவீர் என்று தெரியும்.. )

OK... ராத்திரி ராஜேஷின் சுசீலாம்மா பாடலைக் கேட்டு உறங்கியவர்கள் இந்தப் பாடலைக் கேட்டு எழுந்திருங்க

பொழுதும் விடியும் பூவும் மலரும்
பொறுத்திருப்பாய் ( சின்ன ) கண்ணா

http://youtu.be/gnfiSdbuATM

rajeshkrv
14th August 2014, 06:35 AM
மதுண்ணா அருமையான தொடக்கம் சூப்பர் பாட்டு

rajeshkrv
14th August 2014, 07:56 AM
மது அண்ணா அழகாக பொழுதை துவக்கி வைத்து விட்டார்.

இதோ அதை தொடர்ந்து ஒரு அருமையான பாடல்

வாசு ஜி , கன்னட பாடல்களின் பைத்தியமாகி விட்டேன் என்றீரே இதோ ஒரு அருமையான பாடல் இசையரசியின் குரலில் இனிமையான ... தெள்ளத்தெளிவான பாடல்

கப்பு பிளுப்பு (கருப்பு வெள்ளை) என்ற கன்னட படம் . புட்டண்ணாவின் இயக்கம்
கல்பனா பிரதான வேடம்
இது தான் நம்ம ஊர் இருளும் ஒளியும்..

இந்த பாடல் தான் திருமகள் தேடி வந்தாளின் ஒரிஜினல்..

இதோ ஈ செந்ததத மனையல்லி ஸ்ரீ கந்ததத குடி அல்லி

http://www.youtube.com/watch?v=sfIeBWcdRUs

RAGHAVENDRA
14th August 2014, 08:15 AM
வாசு சார்
பொண்ணு மாப்பிளே இன்றைய ஸ்பெஷலை நேற்று படித்து அதற்கு பதில் அளிக்க முயற்சிக்கும் முன் இன்றைய ஸ்பெஷலே வந்து விடும் போலிருக்கிறது.. அவ்வளவு ஸ்லோ நான்... எனிவே ...பெட்டர் லேட் தேன் நெவர்.

பொண்ணு மாப்பிளே பாடல் நிஜமாகவே சூப்பர்.. இதில் இசைக்கருவிகளின் ஆளுமை பற்றி முன்னரே நான் எங்கோ எழுதியிருந்தேன். தாங்கள் எழுதியதைப் படித்த பொழுது அடியேனுடையது ஒன்றுமே இல்லை என உணர்ந்து கொண்டேன். அவ்வளவு அழகாக அந்தப் பாடலைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். ஒரு சினிமா பாடலை அதுவும் நகைச்சுவையான பாடலுக்குள் ஒரு ஜூகல்பந்தியே நடத்தி விட்டார் இசையமைப்பாளர். அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்த பாடல் மணமகன் அழகனே..
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
14th August 2014, 08:21 AM
பொங்கும் பூம்புனல் - ஸ்பெஷல் வாசு சாருக்கு சமர்ப்பணம்

http://www.inbaminge.com/t/a/Aalukkoru%20Veedu/folder.jpg

வாசு சார் தாங்கள் ஒவ்வொரு பங்கேற்பாளரையும் மறக்காமல் பாராட்டி நன்றி தெரிவித்த பதிவிருக்கிறதே.. இதைப் பாராட்டுவதற்கே தனித்திரி தொடங்கலாம்.. நன்றியை எப்படிப் போற்ற வேண்டும், எப்படிப் பாராட்ட வேண்டும் என்பதற்கு இலக்கணமாக அமைந்துள்ள பதிவு அது... தாங்கள் கூறியது போல் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அபாரம்.

இதைப் படிக்கும் போது எனக்கு உடனே நினைவுக்கு வந்த பாடலைத் தங்களுடன் பகிரந்து கொள்ள விரும்புகிறேன். இத்திரியில் உள்ள பங்கேற்பாளர் ஒவ்வொருவருக்கும் இப்பாடல் பொருந்தும். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் வைர வரிகளுடன் இப்பாடலைப் படித்தும் கேட்டும் ரசியுங்கள்.

நன்றி இன்பமிங்கே இணையதளம்

ஆளுக்கொரு வீடு திரைப்படத்திலிருந்து கே.ஜமுனா ராணி மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் மெல்லிசை மன்னர்களின் இசையில்...

இப்பாடலில் மேண்டலின் அக்கார்டின் புல்லாங்குழல் மூன்றும் நம்மை மயக்கும் விதம்... ஆஹா... கேட்டு அனுபவியுங்கள்...

http://www.inbaminge.com/t/a/Aalukkoru%20Veedu/

இப்பாடலில் மெல்லிசை மன்னர் 54 ஆண்டுகளுக்கு முன் புரிந்துள்ள சாகசத்தை இன்று வரை யாராலும் கற்பனை கூட செய்ய முடியாது.. இந்தப் பாடலில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் வரிகளை எழுதும் போது இந்த அளவிற்கு இப்பாடல் பிரமாதமாக உருவெடுக்கும் என நினைத்துக் கூட பார்த்திருப்பாரா எனத் தெரியாது..

இந்தப் பாடலில் இசைக் கருவிகளைப் பற்றி மட்டும் எழுத வேண்டும் என்பதற்காகத் தான் இது எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளது. ஆனால் பாடல் முழுவதுமே இசைக் கருவிகளின் சிறப்பு பரவியுள்ள படியால் தனித்தனியே எழுதுவது சிரமமாயுள்ளது.

கோரஸ் குரலுடன் துவங்குகிறது பாடல்.. தொடர்ந்து மேண்டலின்..மற்றும் கைதட்டல் ஓசைகள்...

தொடர்ந்து பல்லவி அம்பது வருஷம்....

பல்லவி முடிந்த உடனே ஒரு அக்கார்டின் கிளம்புகிறது... அந்த அக்கார்டின் துக்கடாக்களின் இடையில் ஒரு சின்ன கார்டு...அந்த துண்டு இசைக் கருவியின் ஓசையை காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு கேட்க வேண்டும்.
இந்த அக்கார்டின் முடிந்தவுடன் மேண்டலின் நுழைகிறது...மேண்டலின் முடிந்த வுடன் புல்லாங்குழல். புல்லாங்குழல் முடிவில் ஒரு மாத்திரை அளவில் அக்கார்டின்... மீண்டும் மேண்டலின்..

சரணம் துவக்கம்...

சரணத்தின் கூடவே ஒரு லேசான புல்லாங்குழல் கூடவே இணைந்து வருகிறது...

மீண்டும் பல்லவி...

தொடர்ந்து பிஜிஎம் புல்லாங்குழலுடன் துவக்கம்...

இப்போது வயலின்கள்.... சேர்ந்து கொள்கின்றன....

இது முடியும் போது மீண்டும் ஒரு மாத்திரையளவில் ஒரு கார்டு...

இம்முறை தனி கிடார் broken pieces...

தொடர்ந்து கோரஸ்...

தொடர்ந்து அக்கார்டின்...

அதைத் தொடர்ந்து சரணம்...

பின் பல்லவி..

பல்லவி முடிவில் கோரஸ் ஹம்மிங்... லலலாலலலா லலலாலா...

இந்த ஒவ்வொரு லலலாவுக்கும் இடையில் ஒரு கார்டு...

இப்போது அடுத்த சரணத்திற்கு லீடாக அக்கார்டின் அதைத் தொடர்ந்து மேண்டலின்...

இதைத் தொடர்ந்து புல்லாங்குழல்...

அந்த புல்லாங்குழல் இடைவெளியில் ஒரு கார்டு ...

வாழ்க வாழ்க வென்று பாட்டு முடிகிறது..

......

இப்போது நாம் என்ன செய்வோம்...

மீண்டும் இதே பாட்டை ரிபீட் செய்வோம்... ஒவ்வொரு இசைக் கருவியாய் போட்டுப் போட்டுக் கேட்போம்...

இது தான் மெல்லிசை மன்னரின் இசைக்குள்ள சிறப்பு...


பாடல் வரிகள்

வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்கவே

பல்லவி

அன்பும் அறிவும் ஆசையும் நெறஞ்ச
ஐயா வாழ்க வாழ்க..
ஐம்பது வருஷம் இவரைச் சுமந்த
அன்னை பூமி வாழ்கவே..

அன்பும் அறிவும் ஆசையும் நெறஞ்ச
ஐயா வாழ்க வாழ்க..
ஐம்பது வருஷம் இவரைச் சுமந்த
அன்னை பூமி வாழ்கவே..


சரணம் 1

சின்னக் குழந்தையைப் போலே
துள்ளி விளையாடும் குணம் வாழ்க
ஐயா.. குணம் வாழ்க

ஒரு தினையளவு கூட
சுயநலம் இல்லாத மனம் வாழ்க
ஐயா மனம் வாழ்க..
ஒரு தினையளவு கூட
சுயநலம் இல்லாத மனம் வாழ்க
ஐயா மனம் வாழ்க..


....அன்பும் அறிவும்

கோரஸ் ஹம்மிங்...

சரணம் 2

காசு பணங்களை கைவிடலாகிய
கை வாழ்க வாழ்கவே
ஐயா கை வாழ்க வாழ்கவே

காலந் தெரிஞ்சி அதை விடுதலை செய்த
பை வாழ்க வாழ்கவே
ஐயா பை வாழ்க வாழ்கவே
..... அன்பும் அறிவும்

சரணம் 3

அளவுக்கு மீறி நேசம் வைப்பதால்
ஆபத்து வருமென்று
... ஆபத்து வருமென்று
அள்ளி அள்ளியே வழங்குகின்றார் இவர்
வள்ளல் வழியின்று
வள்ளல் வழியின்று
இமயமலையும் இவரும் ஒன்று...

வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்கவே

RAGHAVENDRA
14th August 2014, 08:56 AM
பொங்கும் பூம்புனல்

அடுத்த வீட்டுப் பெண் ....

இசையரசியின் குரலில் ஜாலங்கள் படைத்த படம்...

ஒவ்வொரு பாடலிலும் அவருடைய குரலின் இனிமை பளிச்சிடும் என்றாலும்..

இந்தப் பாட்டில் அவர் தன்னுடைய முழுத்திறமையையும் வெளிப்படுத்தியிருப்பார்..

ஜப்பான் மற்றும தென்னிந்திய இசையின் சங்கமம்...

சுசீலா பி.பி.ஸ்ரீநிவாஸ் இருவருமே குரலில் ஜூகல் பந்தி படைக்க இசையமைப்பாளர் முழுப்பாட்டையுமே இரு வேறு இசைகளின் சங்கமமாக அமைத்திருப்பார்..

இதோ எனக்காக நீயே ராஜா... நமக்காக...

https://www.youtube.com/watch?v=7Pfj4p26ojA

rajeshkrv
14th August 2014, 09:02 AM
ஆமாம் பொன்னு மாப்பிள்ளே மிகச்சிறந்த ஃத்ரில்லர் மற்றும் காமெடி படம்.. படத்தின் கடைசி பகுதி தான் கொஞ்சம் இழுவை அ
ஆனாலும் வி.கே.ஆர், ஜெய், காஞ்சனா, நாகெஷ், ஏ.வீரப்பன் , மனோரமா என எல்லாமே தூள்..

Richardsof
14th August 2014, 09:22 AM
மணி மாலா -இன்றைய சிறப்பு விருந்தனர் . பணக்கார குடும்பத்தில் இடம் பெற்ற இந்த பாடலில்
இசை அரசியின் குரலும் இசை அரக்கியின் குரலும் சூப்பர்.

http://youtu.be/O98bLpYUOl4

rajeshkrv
14th August 2014, 09:33 AM
எஸ்.வி அவர்களே அருமையான பாடல்
இருவரும் வெளுத்து கட்டியிருப்பார்கள். மூச்சு விடாமல் பாடுகிறோம் பேர்வழி என்று இன்று பாடுகிறார்களே .. இது தான்
உண்மையான மூச்சு விடாமல் பாடும் பாடல்...

gkrishna
14th August 2014, 09:44 AM
நூறு முறை பிறந்தாலும் , நூறு முறை இறந்தாலும் ,
உன்னை பிரிந்து வெகுதூரம் நான் ஒரு நாளும் போவதில்லை ...
உலகத்தின் கண்களிலே உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள் ஒருநாளும் மறைவதில்லை ...

ஓராயிரம் பார்வையிலே , உன் பாரவையை நான் அறிவேன் ;
உன் காலடி ஓசையிலே , உன் காதலை நான் அறிவேன் .
ஓராயிரம் பார்வையிலே , உன் பாரவைய நான் அறிவேன் ...

இந்த மானிடர் காதல் எலாம் ,
ஒரு மரணத்தில் மாறிவிடும் ;
அந்த மலர்களின் வாசமெல்லாம் ,
ஒரு மாலைக்குள் வாடிவிடும் .

நம் காதலின் தீபம் மட்டும் , எந்த நாளிலும் கூட வரும் ...

ஓராயிரம் பார்வையிலே , உன் பாரவைய நான் அறிவேன் ...

இந்த காற்றினில் நான் கலந்தேன் ,
உன் கண்களை தழுவுகின்றேன் ;
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன் ,
உன் ஆடையில் ஆடுகின்றேன் .

நான் போகின்ற பாதை எலாம் உன் பூமுகம் காணுகின்றேன் ...


தமிழில் பாடகர் திலகம் ஹிந்தியில் ரபி கலந்து கட்டிய பாடல்

http://www.youtube.com/watch?v=C9muhp0Upuc

Richardsof
14th August 2014, 09:56 AM
தொகையறா

தமிழ் பாடல்களின் சிறப்பு . இனிய நண்பர் திரு கிருஷ்ணா அவர்கள் பதிவிட்டுள்ள '' நூறு முறை பிறந்தாலும் , நூறு முறை இறந்தாலும் ,உன்னை பிரிந்து வெகுதூரம் நான் ஒரு நாளும் போவதில்லை. ...
தொகையறா - வரிகள் அத்தனை புகழ் வாய்ந்த வரிகள் - பாடகர்களின் குரலில பிரமாதமாக
இருக்கும் . எனக்கு தெரிந்த சில பாடல்களின் தொகையறா

வானகமே ..வையகமே ... வளர்ந்து வரும் ....

எங்க வீட்டு பிள்ளையில் இடம் பெற்ற இந்த பாடல் .

http://youtu.be/8rQffVyISYs

தொடரும் ....

Richardsof
14th August 2014, 09:59 AM
http://youtu.be/6UelAb88k_c

gkrishna
14th August 2014, 10:06 AM
[URL=

மிக அருமை எஸ்வி சார்

தொகையறா என்றவுடன்

காவிய தலைவியில்
'நேரான நெடுஞ்சாலை ' விஸ்வநாதன் குரலில்

பாட்டும் பரதமும்
'மழை காலம் வருகின்றது ' பாடலுக்கு முன் வரும் விஸ்வநாதன் குரல்

சொந்தம் படத்தில்
'கார் கால மேகம் -நல்லாத்தான் யோசிக்கிறீங்க நமக்கு என்ன குறைஞ்சு போச்சு '

வண்டிக்காரன் மகன் படத்தில்
'கார்த்திகை மாதம் கார் கால மேகம் ... பள்ளியறை ' பாலா

makkal thilagam

நாலு பக்கம் சுவர் நடுவில் பாரு இவரு
நடந்து போச்சு தவறு நாலு வார்த்தை உளறு

chinnakkannan
14th August 2014, 10:08 AM
ஹாய் ஆல் குட் மார்னிங்க் :)

பொழுதும் விடியும் பூவும் மலரும் பொறுத்த்திருப்பாய் கண்ணா என எழுப்பிய மதுண்ணாவிற்கு நன்றி :)

பொங்கும் பூம்புனல் ராகவேந்தர் ஜி நன்றி..அடுத்த வீட்டுப் பெண்ணில் மாலையில் மலர்ச் சோலையில் பாடல் பி.பி.எஸ் அதிகம் பேர் அறிந்திராத பாடல்.. ஜோராக இருக்கும்..(கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே, கண்களும் கவி பாடுதே எல்லாம் லைனில் வருகின்றன)

முரளி சார் வந்தால் புயலாய் வந்து புயலாய்ப் போவார்..இரண்டாம்பாகத்தில் எப்படி எனப் போகபோகத் தான் தெரியும்

க்ருஷ்ணா சார்..ஓராயிரம் பார்வையிலே வெகு நல்ல பாட்டு ஆ..னா..ல் அசோகன் பாடறா மாதிரி வந்திருக்கும்.. எஸ்.வி. சார்..மலருக்குத்தென்றல் பகையானால் எப்போது கேட்டாலும் இனிமை..

நேற்று ஒரு பாடல் போட்டு டெலீட் பண்ணிட்டேன்..இன்னிக்கு ப் போடலாம் என..அது..வ.நி.சி.யில் ஸ்ரீதேவி பாட்டு சுசீலாம்மா குரல்..

ரங்கா ரங்கையா எங்கே போனாலும் ரகசியம் மனதுக்குச் சுமை தானே..

உம்மென்ற கமல் துள்ளும் ஸ்ரீதேவி..துள்ளும் குரல்..அழகிய பாடல்..

chinnakkannan
14th August 2014, 10:17 AM
இன்னுமொரு பாட்டு வ. நி. சி யில் ..எப்போது கேட்டாலும் கொஞ்சம் மனசை உருக்கும்..

*

தீர்த்தக் கரையினிலே -தெற்கு மூலையில்
செண்பகதோ ட்டத்திலே,
பார்த்திரு ந்தால் வருவேன்-வெண்ணிலாவிலே
பாங்கியோ டெ ன்றுசொன்னாய்.
வார்த்தை தவறிவிட்டாய்-அடி கண்ணம்மா
மார்பு துடிக்குதடீ!

பார்த்த விடத்திலெல்லாம்-உன்னைப் போலவே
பாவை தெரியுதடீ!

மேனி கொதிக்குதடீ-தலை சுற்றியே
வேதனை செய்குதடீ !
வானி லிடத்தையெல்லாம்-இந்த வெண்ணிலா
வந்து தாழுவுது பார்.
மோனத் திருக்குதடீ-இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே.
நானொருவன் மட்டிலும் -பிரிவென்பதோர்
நரகத் துழலுவதோ?

*
மகாகவி மகாகவிதான்..

chinnakkannan
14th August 2014, 10:20 AM
நேரான நெடுஞ்சாலை ஓரிடத்தில் இரு கூறாகப் பிரிவதுண்டு
கூறாகப் பிரிந்தது வேறிடத்தில் மீது நேராக இணைவதுண்டு..

இது மட்டும் தான் நினைவுக்கு வருது..பாட்டு ஹையாங்க்.. நினைவுக்கு வல்லையே..:)

அதே மாதிரி இடமோ சுகமானது.. மட்டும் நினைவில் வருது..

Richardsof
14th August 2014, 10:20 AM
இந்த பாடலில் பாடகர் திலகத்தின் அட்டகாசமான குரல் + மெல்லிசை மன்னரின் சூப்பர் இசை +
அருமையான் கோரஸ் + எம்ஜிஆரின் சிறப்பான டான்ஸ் - மொத்தத்தில் முழுமை பெற்ற
மதுர கானம் .
எங்கள் தங்கம்- 1970

ஒரு நாள் கூத்துக்கு ....

மோகம் பிறந்ததம்மா முந்தா நாள் பார்க்கையிலே
நேசம் பிறந்ததம்மா நேத்து நீ நடக்கையிலே
ஏக்கம் பிறந்ததம்மா இன்று நீ சிரிக்கையிலே
இன்பம் பிறக்குமம்மா நாளை இந்த வேளையிலே


ஒரு நாள் கூத்துக்கு மீசையை வெச்சான் மேடையிலே
மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே
ஒரு நாள் கூத்துக்கு மீசையை வெச்சான் மேடையிலே
மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே
ஆஹா மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே

குண்டு விழி மண்டு மொழி
சிண்டு முடி நண்டு நடை போட்டான் பாரம்மா
கட்டு விழி முத்து மொழி
சித்திரத்தில் உத்தரவை கேட்டான் பாரம்மா

ஒரு நாள் கூத்துக்கு மீசையை வெச்சான் மேடையிலே
மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே

ராணியம்மா ஆசைப்பட்டா ஆடச்சொல்லி ஆணையிட்டா
மறுப்பேச்சென்ன மூச்சென்ன வந்தேனே என்றான்
அவன் யாரென்று பேர் சொல்லி நெஞ்சோடு நின்றான்
அவன் யாரென்று பேர் சொல்லி நெஞ்சோடு நின்றான்
சுற்றத்தாரின் மத்தியிலே
கத்துவெச்ச வித்தைகளை படிச்சான் பாரம்மா
பொம்பளைய தோற்க வெச்சு
பக்கம் வந்து நிக்கவெச்சு சிரிச்சான் பாரம்மா

ஒரு நாள் கூத்துக்கு மீசையை வெச்சான் மேடையிலே
மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே

பாட்டுக்கெல்லாம் தலை அசைச்சான்
பாக்குறவன் அதிசயிச்சான் அவன் ஆட்டத்தில்
மோகத்தை உண்டாக்கி வெச்சான் இந்த கூட்டத்தில்
நோட்டத்தை உன் மேல வெச்சான் இந்த கூட்டத்தில்
நோட்டத்தை உன் மேல வெச்சான்
புன்னகையும் பொன்னகையும் மின்னலொரு
அன்ன மகள் உசுரா நெனச்சானே
சொல்லியதை சொன்னபடி எண்ணியதை எண்ணப்படி
நெனச்சா முடிப்பானே
புலி வேஷம் போட்டவன்தான் பூனையை போல் மாறி வந்தான்
எலி வேட்டைக்கு நாள் வைத்து போராட வந்தான்
வெளி வேஷத்தை மோசத்தை பொய்யாக்க வந்தான்
வெளி வேஷத்தை மோசத்தை பொய்யாக்க வந்தான்
கம்பு சண்டை வம்பு சண்டை
கத்தி சண்டை குத்து சண்டை போட்டான் தனியாக
பத்து பேரு மத்தியிலே ஒருத்தனாக
சுத்திவந்து ஜெயிச்சான் முடிவாக

ஒரு நாள் கூத்துக்கு மீசையை வெச்சான் மேடையிலே
மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே
ஆஹா மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே

http://youtu.be/tJG_zJRdDTg

gkrishna
14th August 2014, 10:35 AM
"தீயே உனக்கென்ன தீராத வினையோ? நீ தின்ற உடல் எத்தனையோ கணக்கிடவில்லையோ"

இத்தனை மாந்தருக்கு ஒரு கோவில் போதாது சத்தியத் திருநாயகா.....

* எதற்கும் ஒரு காலம் உணடு, பொறுத்திரு மகளே! ... இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே ..

* இக்கரைக்கு அக்கரைப்பச்சை .... அது தேடி இது தேடி அலைகின்றாய், வாழ்வில் எது வந்து சேர்ந்தாலும் தவிர்க்கின்றாய் ...

இதை எல்லாம் மறக்க முடியுமா
வினோத் சார் சீ கே சார்

நேரான நெடுஞ்சாலை ... தாயேனும் சுமைதாங்கி அழாதவனும் அழுதுறுவான் sir

http://www.youtube.com/embed/HaAu26mYIJA?

madhu
14th August 2014, 10:39 AM
நேரான நெடுஞ்சாலை ஓரிடத்தில் இரு கூறாகப் பிரிவதுண்டு
கூறாகப் பிரிந்தது வேறிடத்தில் மீது நேராக இணைவதுண்டு..

இது மட்டும் தான் நினைவுக்கு வருது..பாட்டு ஹையாங்க்.. நினைவுக்கு வல்லையே..:)

அதே மாதிரி இடமோ சுகமானது.. மட்டும் நினைவில் வருது..

இந்தாங்கோ சிக்கா

http://youtu.be/HaAu26mYIJA

madhu
14th August 2014, 10:43 AM
ஆமாம் பொன்னு மாப்பிள்ளே மிகச்சிறந்த ஃத்ரில்லர் மற்றும் காமெடி படம்.. படத்தின் கடைசி பகுதி தான் கொஞ்சம் இழுவை அ
ஆனாலும் வி.கே.ஆர், ஜெய், காஞ்சனா, நாகெஷ், ஏ.வீரப்பன் , மனோரமா என எல்லாமே தூள்..

கரீட்டு... கடைசியில் சேலம் ஜில்லா தாம்புக்கயிறு போல நீஈஈஈளமாக இழுபடும் க்தையை ஓடித் தப்பிக்கப் பார்க்கும் நாகேஷ், வீரப்பன் கூட்டணி ( தொடரும் இன்ஸ்பெக்டர் விஜயன் (?) ) ஆகியோரின் நகைச்சுவைதான் கொஞ்சம் காப்பாற்றும்.

gkrishna
14th August 2014, 10:49 AM
அப்படியே கண்ணிய பாடகியின் காந்த குரல்

ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் (வாசுதேவன் ) வந்தாள்
கண்ணா (சி கே,மது ) சுகமா 'கிருஷ்ணா' சுகமா
கண்மணி (ராஜேஷ்) சுகமா சொல் என்றேன்



http://www.youtube.com/watch?v=tGwtoZtTleo

chinnakkannan
14th August 2014, 11:01 AM
wow. ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு..என்னா பாட்டு தாங்க்ஸ் க்ருஷ்ணாஜி..

நேரான நெடுஞ்சாலை தாங்க்ஸ் க்ருஷ்ணா ஜி மதுண்ணா..

க்ருஷ்ணா ஜி ..என்ன பாட்டு நினைவு படுத்திட்டீங்க

இத்தனை மாந்தருக்கு ஒரு கோவில் போதாது சத்தியத் திரு நாயகா
முருகா
எததனை மனமுண்டோ அத்தனை குணமுண்டு ஏனென்று சொல்வேலவா

எம்.எஸ்.வி.. சில பாட்டுக்கு அவர் குரல் தான் பொருத்தமா இருக்கும்..அதுவும் உ.உ.வி.எல அவரோட கேரக்டர் ரொம்ப பவர்ஃபுல் ஏன்னு கேளு..கேப்பியா படவா ..அடிப்பேன்.. உன்பேரு..தாமஸ் தியாகராஜன்..ஓ தாமல் தியாக ராஜனா..என்னப்பன் முருகனோட அப்பன்..வா.. \ படக் கடைசியில் ஃபாதர் என்கிட்ட உண்மையைச் சொல்லியிருக்கலாம் என உருகுவது..வி.கே.ஆரின் சூபர்ப் நடிப்பிற்கு உதாரணப் படம்..

chinnakkannan
14th August 2014, 11:03 AM
//ஒரு நாள் கூத்துக்கு மீசையை வெச்சான் மேடையிலே// ஏற்ற இறக்கங்கள் கொண்ட பா.தி குரல். நன்றி எஸ்விசார்..

gkrishna
14th August 2014, 12:00 PM
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSqQtKQTclsrYx0-AxG8GbWAKrg1R2NvfxvBkLkHqpFXTEfDof_http://thiruttudvd.net/wp-content/uploads/2014/02/EngaMama000001.jpghttps://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRTY3oe2FgpjcQ4chvvFmS1_Q3RfJ806 DsDWEcm7iO5RJin5ai5Uw

ஆரம்ப இசை இப்படி எல்லாம் கூட ஒரு பாட்டை ஆரம்பிக்க முடியுமா என்று நினைக்க வைக்கும் 70 களில் வந்த எங்க மாமா திரை படத்தில் அதிகமாக பேசப்பட்டதா என்று நினைவில் இல்லை ஆனால் மெல்லிசை மன்னரும் கண்ணிய பாடகியும் நேர் கோட்டில் இணைந்து டபுள் பங்கோ triple பங்கோ என்று சொல்வார்களே அந்த வாத்தியத்தை தனியாக அதிகம் உபயோகித்து பாடப்பட்ட பாடல் .

பாங்கோஸை மிக அருமையாக பயன்படுத்தி பாடல்களுக்கு மெருகேற்றியவர் மெல்லிசை மன்ன்ர். அவரது 'பாங்கோஸ் ஸ்பெஷல்' பாடல்களை பட்டியலிடுவது ரொம்பவே சிரமம். ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல.

"பார்த்த ஞாபகம் இல்லையோ" (புதிய பறவை). அதிலும் அந்த மூன்றாவது சரணம் முடிந்து பல்லவி துவங்கும்போது, நிற்காமல் முழங்கும் ஸ்பீட் பீட்ஸ்.

"அழகு ஒரு ராகம்" (படகோட்டி) இதிலும் கூட கடைசியில் வரும் வேக நடை.

இதுபோக ரொம்ப ரொம்ப அபூர்வமான, வானொலியிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்திராத, திரைப்படத்தில் மட்டுமே பார்க்கும் வாய்ப்பு பெற்ற ஒரு அற்புத 'பாங்கோஸ் சூப்பர்'..... 'நிச்சய தாம்பூலம்' படத்தில் வரும்..

"இது வேறுலகம்... தனி உலகம்...
இரவினில் விடியும்... புது உலகம்

மக்கள் திலகத்தின் ' ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன் ' (தெய்வத்தாய்) ஆரம்ப பேங்கோ இசை


ஹிந்தியில் வெளிவந்த பிரம்மச்சாரி படத்தின் தழுவல் என்று நினைவு ஜேயார் மொவீஸ் சங்கரன் ஆறுமுகம் தயாரிப்பில் வெளிவந்த படம் .மேலும் மன்னவன் வந்தானடி திரைப்படத்தையும் தயாரித்தார்கள்.இவர்கள் மக்கள் திலகத்தை வைத்து புதிய பூமி,அண்ணா என் தெய்வம் (பின்னாட்களில் அவசர போலீஸ் என்று பாக்யராஜ் அவர்கள் வெளியிட்டார்கள் என்று நினைவு ) என்ற படங்களையும் தயாரித்தார்கள்

நடிகர் திலகமும் கலைச்செல்வியும் போட்டி போட்டு நடித்த படம் .இருவரும் மிக அழகாக தோன்றிய படங்களில் ஒன்று 70 களில் நடிகர் திலகத்தின் தொடர் வெற்றியினை ஆரம்பிக்க கட்டியம் கூறிய படம் என்று சொன்னால் அது மிகை ஆகாது

கண்ணிய பாடகி சரணம் முடியும் போது ஒரு echo என்பார்களே எதிரொலி ஒலிக்கும் பாருங்க சம்திங் marvellous .அதிலும் ஒரு இடத்தில 'கொஞ்சலாம் கொஞ்சலாம் ' என்று பாடும் போது கொஞ்சும் குரல்

ஆரம்ப இசை

பல்லவி

பாவை பாவை தான் ஆசை ஆசை தான்
பார்த்து பேசினால் ஏக போகம் தான்
தானே வந்தால் வாசம் இல்லையோ

(பேங்கோ தனியாக ஒலிக்கும்) 'ரொடட் ரொடட் '

அணைக்கும் பழக்கம் கொடுக்கும் மயக்கம்
அணைக்கும் பழக்கம் கொடுக்கும் மயக்கம் (எதிரொலி )
ஆண் பெண்ணிடம் தந்ததோ கண்டதோ
எனக்கும் உனக்கும் இருக்கும் நெருக்கம்
எனக்கும் உனக்கும் இருக்கும் நெருக்கம் (எதிரொலி)
யார் யாரிடம் கண்டதோ தந்ததோ

(பேங்கோ தனியாக ஒலிக்கும்) 'ரொடட் ரொடட் '

பாவை பாவை தான் ஆசை ஆசை தான்
பார்த்து பேசினால் ஏக போகம் தான்
தானே வந்தால் வாசம் இல்லையோ

(பேங்கோ தனியாக ஒலிக்கும்) 'ரொடட் ரொடட் '

இடை இசை

முதல் சரணம்

பொன்னை தட்டி போட்டு கொண்டால்
நெஞ்சில் மட்டும் மின்னலாம் ...
என்னை கட்டி போட்டு கொண்டால்
மஞ்சம் தொட்டு கொஞ்சலாம் கொஞ்சலாம் கொஞ்சலாம்
கசப்பும் இனிப்பும் மனதின் நினைப்பு
ஓர் பெண்ணிடம் உள்ளதே நல்லது

(பேங்கோ தனியாக ஒலிக்கும்) 'ரொடட் ரொடட் '

பாவை பாவை தான் ஆசை ஆசை தான்
பார்த்து பேசினால் ஏக போகம் தான்
தானே வந்தால் வாசம் இல்லையோ

(பேங்கோ தனியாக ஒலிக்கும்) 'ரொடட் ரொடட் '

இடை இசை

இரண்டாவது சரணம்

எந்த பெண்ணை சொந்தம் என்று
உந்தன் கண்கள் சொல்லுமோ ...
அந்த பெண்ணை முன்னே வைத்தால்
நெஞ்சம் எங்கே செல்லுமோ செல்லுமோ செல்லுமோ
ஜொலிக்கும் விளக்கில் இருக்கும் நெருப்பு
பாதையும் காட்டலாம் தீயையும் மூட்டலாம்

(மீண்டும் பேங்கோ தனியாக ஒலிக்கும்) 'ரொடட் ரொடட் '

பாவை பாவை தான் ஆசை ஆசை தான்
பார்த்து பேசினால் ஏக போகம் தான்
தானே வந்தால் வாசம் இல்லையோ

( இசை )

பாடலின் முடிவில் மீண்டும் மீண்டும் அந்த பேங்கோ இசை தொடராதா என்ற ஏக்கத்தை ஏற்படுத்தும் 'ரொடட் ரொடட் '

http://www.youtube.com/watch?v=7ZC4cCZY9-I

mr_karthik
14th August 2014, 12:27 PM
டியர் வாசு சார்,

உணமையிலேயே மலைக்க வைக்கும் சாதனைதான் என்பதில் எள்ளளவும் ஐயமேயில்லை. இத்தகைய சாதனையை தலைமையேற்று வெற்றிகரமாக நடத்திய தங்களையும், இச்சாதனைக்கு மிக மிக உறுதுணையாக நின்ற கிருஷ்ணாஜி, ராஜேஷ் சார், ராகவேந்தர் சார், மதுசார், சின்னக்கண்ணன் சார், வினோத் சார், தூக்கத்திலும் என்னை மறக்காத கோபால் சார், முரளி சார் மற்றும் இந்த திரியில் பங்களிப்பு செய்த அனைவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும், அந்த அளவுக்கு அனைவரும் தங்கள் உழைப்பக் கொட்டியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் நன்றிகள்.

வேலைப்பளுவினாலும், உடல்நலக் குறைவினாலும் கடந்த சில நாட்களாக பங்கேற்று பதிவுகள் இட முடியவில்லைஎன்றாலும், அனைத்துப்பதிவுகளையும் படித்து முடித்து விட்டேன். மலைத்துப்போனேன் என்பதே உண்மை. எவ்வளவு விவரமான, விஷயமுள்ள பதிவுகள்..!!!. அவற்றையெல்லாம் நீங்கள் அழகாக பட்டியலிட்டு விட்டீர்கள். தமிழ்ப்பாடல்கள் சம்மந்தமான (ஏன்..., கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி சம்மந்தமாகக்கூட) தேவைப்படும் விவரங்களும் இந்த திரிக்குச்சென்றால் கிடைக்கும் என்ற அளவில் பாடல்கள் அலசப்பட்டிருக்கின்றன.

தங்களின் 'இன்றைய ஸ்பெஷல்' மற்றும் 'ஜஸ்ட் ரிலாக்ஸ்' பாடல் வரிசைகளும், கோபால் அவர்களின் 'ராக ஆலாபனை' பதிவுகளும், ராகவேந்தர் அவர்களின் 'பொங்கும் பூம்புனல்' மற்றும் 'உள்ளத்தை அள்ளித்தா' பதிவுகளும், ராஜேஷ், மது, சின்னக்கண்ணன் ஆகியோரின் அருமையான தமிழ் மற்றும் பன்மொழிப் பாடல் ஆய்வுகளும், வினோத் அவர்களின் பொம்மை இதழ் ஸ்டில்களுடன் கூடிய வீடியோக்களும் (சினி டைரி ஆவணப் பதிவுகளுக்கு ஸ்பெஷல் நன்றி வினோத் சார்) திரியை எங்கோ உயரத்துக்கு இட்டுச்சென்றுள்ளது.

கிட்டத்தட்ட பாதிக்கு மேல்வரை ஆக்டிவ்வாக இருந்த நான், மேற்கூறிய காரணங்களால் பாகத்தின் இறுதியில் சுறுப்பாக பங்கேற்க முடியாமல் போனதற்காக பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். மேலும் நான் துவங்கிய 'நாயகியரின் போதைப்பாடல்கள்' வரிசையையும் தொடர்ந்து தர முடியவில்லை. மன்மதலீலைப் பதிவுகளையும் முழுமையாக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு. இரண்டாம் பாகத்தில் நிச்சயம் சுறுசுறுப்பாக பங்கேற்க முடியும் என்று நம்புகிறேன்.

எந்த வித சலசலப்பும், சண்டைகளும் இன்றி திரி கலகலப்பாக சென்றதற்குக் காரணம், நான் பெரியவனா, நீ பெரியவனா என்ற கர்வம் இல்லாமையும், 'சில' திரிகளில் காணப்படுவதுபோல ஒருவரை ஒருவர் காலைவாரும் செயல்கள் இல்லாமையுமே. பி.சுசீலா - எஸ். ஜானகி சர்ச்சை கூட அருமையாக தவிர்க்கப்பட்டது.

துவக்கத்தில் ராட்சசி புகழை அதிகம் பாடுவதாக அமைந்த திரி இறுதியில் இசையரசியின் புகழ்க்கொடியை உயர்த்திப்பிடித்ததில் முடிந்திருக்கிறது. முத்தாய்ப்பாக முரளி சார் எழுதிய 'மனம் படித்தேன்' பாடலுக்கான மேலதிக ஆய்வு. (முரளி சார்.., நானெல்லாம் மாங்கு மாங்கென்று நூறு பதிவுகள் எழுதுவதும் சரி, நீங்கள் ஒரு பதிவு எழுதுவதும் சரி. அத்தனை முழுமை உங்கள் பதிவில். 'மனம் படைத்தேன்' என்ற இடத்தில் வரும் ஆலாபனை போலவே 'அம்மம்மா ஆ.ஆ.ஆ. அம்மம்மா காற்றுவந்து ஆடைதொட்டுப்பாடும்' என்ற இடத்திலும் இசையரசி அசத்தியிருப்பார்).

வாசு சார், ஒவ்வொன்றையும் எப்படிச்செய்ய வேண்டும் என்பதை தங்களிடம் கற்றுக்கொள்வது போலவே 'நன்றிப்பதிவு' எப்படிப்பதிவிட வேண்டும் என்பதையும் தங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு ஒரு முழுமையான நன்றிப்பதிவு. எல்லோருக்கும் நன்றி சொல்லிவிட்டு, இறுதியில் ஒரு தனிப்பதிவிட்டு நடிகர்திலகத்துக்கு நன்றி தெரிவித்தீர்கள் அல்லவா?. அங்கு நிற்கிறீர்கள் வாசு சார்.

அடுத்த பாகத்தை அருமையாக துவக்கி வைக்க இருக்கும் அன்பு கிருஷ்ணாஜி அவர்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்...

chinnakkannan
14th August 2014, 12:53 PM
வாங்கோ வாங்கோ கார்த்திக் சார்.. உடல் நிலை இப்போ தேவலையா..

என்ன தான் சர்க்கரைப் பொங்கல்ல வெல்லம் (சட்னு இங்க்லீஷ் பெயர் நினைவில் வரலை ஹை நினைவுக்கு வந்துடுச்சு ஜாக்கரி சரி இங்க்லீஷ்லயே jaggery), மில்க், ரைஸ்,நெய் இன்ன பிறன்னு போட்டாலும் குங்குமப் பூ போட்டா தான் ஜம்னு நாவைச் சுண்டி இழுக்கற மணம்+கலர்+சுவை இன்னும் கூடி இருக்கும்.. அதே போலத்தான் இவ்ளோ நாளா குங்கும்ப் பூ போடாமயே கொஞ்சம் அஜிஸ் செய்து கொண்டிருந்தோமாக்கும் :)

குங்குமப் பூவே.. தங்கமே உம்மைக் கண்டதும் இன்பம் பொங்குது தன்னாலே..

//மேலும் நான் துவங்கிய 'நாயகியரின் போதைப்பாடல்கள்' வரிசையையும் தொடர்ந்து தர முடியவில்லை. மன்மதலீலைப் பதிவுகளையும் முழுமையாக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு. // எங்களுக்கும் தான்..:)

வாங்க வந்து இரண்டாம் பாகத்தில் உங்கள் பங்கினைத் தருக தருக.. :)

Richardsof
14th August 2014, 12:55 PM
http://i58.tinypic.com/24b3es1.jpg

1960களில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி மற்றும் கே.வி.மகாதேவன் கோலோச்சிக்கொண்டிருந்த நேரம், இந்த வாத்தியம் தமிழ் திரையிசையில் புகுந்தது. அந்த நாளைய பல படங்களின் பாடல்களுக்கு இந்த இசை பயன்படுத்தப்பட்டிருந்தாலும் குறிப்பாக எம்.ஜி.ஆரின் பாடல்களில் அதிகளவில் இது புகுந்து விளையாடியது. எம்ஜிஆரின் படங்களில் மகிழ்ச்சியானதும், கலகல்ப்பானதும், வேகமானதுமான பாடல்கள் அதிகமாக இருந்ததனால் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் இந்த வாத்தியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கலாம் என்பது எனது எண்ணம்.
இதன் ஆதிக்கம் பல பாடல்களில் இருந்தாலும், தெய்வத்தாய் திரைப்படத்தில் எம்ஜிஆர் சரோஜாதேவியை சுற்றி ஓடியபடி குதூகலித்து வெளிப்படுத்தும் ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் என்ற பாட்டு பொங்கசின் அட்டகாசத்துக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

இந்தக்காலகட்டத்தில் எம்.எஸ்.வி.யின் ஆர்கெஸ்ட்ராவில் பொங்கஸ் கலைஞராக இருந்தவரின் பெயர் கணேஷ். இவர் எப்படி பொங்கசை இசைத்துள்ளார் என்பதைக் கேட்கும் போது, பலவருடங்கள் கடந்தாலும் இன்றும் உற்சாகம் கரைபுரண்டோடும்.

எம்ஜிஆரின் காதலின் போது குறும்புத்தனதுடன் குதூகலமாக ஓடி வருவது இந்தப் பொங்கஸ் தான். இளமை ததும்பும் இசைக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி பொங்கசைப் மிகத் திறம்படப் பயன்படுத்தியிருப்பார்கள்.

இந்தப் பாட்டின் மொத்த நீளம் 4.30 நிமிடங்களாகும். இதில் பாடலின் ஆரம்ப இசையை அட்டகாசமாகத் தொடக்கி வைப்பதே பொங்கஸ் கணேஷ் தான். அழகான எம்ஜிஆர், மிடுக்காகத்தொடங்கும் பொங்கசின் தாளத்துக்கேற்ப, தனது கால்களால் ஆடுவது கண்கொள்ளாக் காட்சி.

பாடல் தொடங்கிய 0.04 செக்கனில் தனது விளையாட்டை ஆரம்பிக்கும் பொங்கஸ் 0.19 செக்கன் வரை அட்டகாசமாகச் சென்று பல்லவிக்கு வழிவிட்டொதுங்கிகிறது..

பின் முதலாவது இடையிசையில் 1.08 நிமிடத்தில் தொடங்கி, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு 1.26 நிமிடத்தில் மெதுவாக ஓய்கிறது. முதலாம் சரணம் முடிந்ததும், 2.19 நிமிடத்தில் பாட்டின் இரண்டாவது இடையிசையில் மீண்டும் குதித்தோடி வரும் பொங்கஸ் எம்ஜிஆருடன் சேர்ந்து சில்மிஷம் பண்ணியபடி 2.57 நிமிஷம் வரை எமையெல்லாம் உற்சாகத்தில் கட்டிப்போடுகிறது. அது முடிவுற்று இரண்டாவது சரணம் தொடங்கும் போது காணாமல் போய் இறுதியாக சரணம் முடிந்தும் முடியாததுமாக பாய்ந்தோடி வந்து 3.46 நிமிடத்தில் காதுகளை அணைத்துக் கொள்கிறது. அப்படியே எம்ஜிஆருடன் மீண்டும் பரிணமித்து 4.09 நிமிடத்தில் மெதுவாக வேகமெடுக்கும் பொங்கஸ், தொடர்ந்து மிக வேகமாக ஓடிப்போய் 4.30 நிமிடத்தில் பாடலின் முடிவுடனும் எம்ஜிஆருடன் மலர்ந்த முகத்துடனும் முடிந்து போகிறது.. ஆஹா அற்புதமான இசை கேட்டுப்பாருங்கள் நண்பர்களே தொலைந்து போவீர்கள்.
http://youtu.be/ufwwcCxpz8E
அதேபோல் நாளை நமதேயில் எம்ஜிஆர் லதாவுடன் ரொமாண்டிக் பண்ணும் என்னை விட்டால் யாருமில்லையிலும் பொங்கசைத்தான் முன்நிலைப் படுத்தியுள்ளார் எம்.எஸ்.வி. தனது ஆசானின் எதிர்பார்ப்பை உணர்ந்த பொங்கஸ் கலைஞர் கணேஷும் அவரின் எதிர்பார்ப்புக்கு எந்தக் குறையும் வைக்காமல் அற்புதமாக இசைத்துள்ளார்.

Courtesy- ilavenirkaalam

gkrishna
14th August 2014, 01:02 PM
அருமை எஸ்வி சார்
மன்னிக்க வேண்டுகிறேன் .இந்த பாடலை நான் குறிப்பிட மறந்து விட்டேன் நிச்சயம் பதிவை எடிட் செய்ய முடியுமானால் இந்த பாடலையும் சேர்த்து விடுகிறேன்

chinnakkannan
14th August 2014, 01:02 PM
//பாவை பாவை தான் ஆசை ஆசை தான் //
//ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் என்ற பாட்டு //

க்ருஷ்ணா சார் எஸ்வி சார்..சூப்பர் பாடல்கள்.. அழகிய ரைட் அப்ஸ்.. நன்றி

chinnakkannan
14th August 2014, 01:06 PM
பாங்கோஸ் இசையில் வேறு பாடல்கள்.. எங்கே சொல்லுங்கள்.. இன்னும் :)

sss
14th August 2014, 02:41 PM
புதிய வரிசையைத் தொடங்கும் கிருஷ்ணாஜி அவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

வாணி ஜெயராம் பாடிய ஒரு ஆங்கில பாடல் , :HAPPIEST MOMENT" என ஆரம்பிக்கும் வெள்ளை மனைவி (BiLi Hendthi ) படத்தின் பாடல் உங்களுக்கு பரிசு.
பெங்களுரு மேல் நாட்டு மருமகளா ?? தெரியவில்லை..

https://www.youtube.com/watch?v=tYK_rBsoA6U

பார்த்து மகிழுங்கள். வாணி அவர்களின் பல மொழி புலமைக்கு இது அச்சாரம்.

நன்றி
SSS என்கிற ச.சுந்தரபாண்டியன்

vasudevan31355
14th August 2014, 02:53 PM
vasu ji

லேட்டஸ்டாக நம்ம திரியில் பதிந்திருந்த "அவளும் பெண்தானே" பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருது.
" நன்றியைச் சொல்ல நான் என்ன செய்தேன்.

'நன்றியைச் சொல்ல நான் என்ன செய்தேன்'- இது மதுண்ணா.

'உண்மையை மதித்தேன்
வேறென்ன செய்தேன்?

இது வாசு.

vasudevan31355
14th August 2014, 02:55 PM
பொழுதும் விடியும் பூவும் மலரும்
பொறுத்திருப்பாய் கண்ணா

ஆகா! அருமையான பாடல். 'நெஞ்சுக்கு நிம்மதி' தரும் ஆறுதல் பாடல். தேங்க்ஸ் மதுண்ணா.

vasudevan31355
14th August 2014, 03:07 PM
ராகவேந்திரன் சார்,

மிக்க நன்றி! 'பொண்ணு மாப்பிள்ளை'யை ரசித்ததற்கு இன்னும் நன்றி!

//ஒரு சினிமா பாடலை அதுவும் நகைச்சுவையான பாடலுக்குள் ஒரு ஜூகல்பந்தியே நடத்தி விட்டார் இசையமைப்பாளர்//

சத்தியமான வார்த்தை! இனிமை என்றால் அப்படி ஒரு இசைக்கருவிகளின் இனிமை. இடையில் ஒலிக்கும் டீங்டிடிடிடிங் டிடிடிடிங் கிடாரின் ஓசை சுகமோ சுகம்.

ஆளுக்கொரு வீடு படப் பாடலை அன்புப் பரிசாக அளித்து ஆனந்தப் படுத்தியதற்கு நன்றிகள் சார். ஷிபிட்டில் இருக்கும் போதே டவுன்லோட் செய்து கேட்டு விட்டேன். உங்கள் பதிவை இரண்டு முறை படித்துவிட்டு பின் இப்பாடலைக் கேட்கும் போதுதான் புரிகிறது நீங்கள் சொல்லியிருந்தபடி இந்தப் பாடலில் இசைக்கருவிகளின் ஆதிக்கம் எந்த அளவிற்கு பங்கு வகித்து இருக்கிறது என்று. அருமை.

பாடலின் முழு வரிகளுக்கும் தேங்க்ஸ். எல்லோரையும் பாடல் மூலம் வாழ்த்தும் நீங்களும் வளமோடு வாழ அனைவருடனும் சேர்ந்து வாழ்த்துகிறேன். அடுத்த வீட்டுப் பெண்ணும் அமர்க்களமாக இருக்கிறாள்.

Richardsof
14th August 2014, 03:07 PM
http://i62.tinypic.com/2ntcsk4.jpg
http://youtu.be/ImTd3hFQ_-Y

Richardsof
14th August 2014, 03:11 PM
http://i61.tinypic.com/29vxmrb.jpg

http://i61.tinypic.com/2s9ugl5.jpg

http://youtu.be/WR9LejeNzaY

madhu
14th August 2014, 03:12 PM
அண்ணன் ஒரு கோயில்... வாணி ஜெயராம்..

குங்குமக் கோலங்கள் கோவில் கொண்டாட கோதை நாயகன் வருவானடி

http://youtu.be/cvEtTiOAgls

vasudevan31355
14th August 2014, 03:14 PM
வினோத் சார்.

எப்போதுமே.அனுபவித்து கேட்கும் பாடல் தோ தோ தோ தோ தோ தோ தோ தோ....

முரசு அல்லது வேறு சேனல்களில் போட்டால் நானும், வீட்டம்மாவும் போட்டது போட்டபடி ஓடிவந்து பார்த்து விட்டுத் தான் போவோம். நடித்தவர்களும் பிரமாதம். இசையரசியும், ராட்சஸியும் என்னா ஒரு ரகளை!

மோகம் பிறந்ததம்மாவைப் பற்றி உங்களிடம் பலமுறை பேசியிருக்கிறேன். அப்பாடலுக்கும் நன்றி!

vasudevan31355
14th August 2014, 03:21 PM
சி.க.சார்,

தீர்த்தக் கரையினிலே -தெற்கு மூலையில்
செண்பகதோ ட்டத்திலே,

பிடிக்காதவரும் உண்டோ!

ம்ம். நேரானா நெடுஞ்சாலை.என்னோடு பாட்டு. நான் வேலைக்குப் போனது தெரிந்து எல்லாரும் எடுத்துட்டீங்க.:cry2::cry2: நானும் கோபால் சாரும் போனில் உரையாடினால் இப்பாடளிப் பற்றிப் பேசாமல் இருக்க மாட்டோம்.

கிளிசரின் இல்லாமல் நம் கண்ணில் தானே கண்ணீர் வழிநோடச் செய்யும் வல்லமை இப்பாடலுக்கு உண்டு.

இந்த ஆய்வெல்லாம் இப்பாடலுக்கு போதாது. இரண்டாம் பாகத்தில் இதை அக்கு வேறாய் ஆணி வேறாய் பிரித்து மேயணும். இந்தப் பாடலுக்கென்று என் மனதில் 10% தனியிடமே உண்டு.

Richardsof
14th August 2014, 03:36 PM
http://i61.tinypic.com/21boftg.jpg

vasudevan31355
14th August 2014, 03:45 PM
நாயகரே!

என்ன புகுந்து விளையாடுகிறீர்கள்.

பாவை பாவைதான் அட்டகாசம். இந்தப் பாடலைப் பற்றி நடிகர் திலகம் திரியில் ஒருமுறை விவரமாக எழுதியிருந்தேன். எந்தப் பாகம் என்று தெரியவில்லை. அதைவிட சிறப்பாக நீங்கள் எழுதி ஜமாய்த்து விட்டீர்கள்.
இதெல்லாம் காலையில் நாம் அறியாமல் நாமே பல் துலக்குவோமே அது போல. காலையில் எழுந்தவுடன் என்னையுமறியாமல் இந்தப் பாடலை என் கைகள் கிளிக் செய்யும்.

ஆனால் ரசனை இப்படியெல்லாம் ஒத்துப் போகக் கூடாது சாமி. கிருஷ்ணா குழந்தே! அம்மாவாச்சே! இதெல்லாம் ஓவராத் தெரியலே?

தொகையாறாப் பாடல்கள் அட்டகாசம். அனைவரும் புகுந்து விளையாடி விட்டீர்கள்.

gkrishna
14th August 2014, 03:45 PM
சி.க.சார்,


ம்ம். நேரானா நெடுஞ்சாலை.என்னோடு பாட்டு. நான் வேலைக்குப் போனது தெரிந்து எல்லாரும் எடுத்துட்டீங்க.:cry2::cry2: நானும் கோபால் சாரும் போனில் உரையாடினால் இப்பாடளிப் பற்றிப் பேசாமல் இருக்க மாட்டோம்.

கிளிசரின் இல்லாமல் நம் கண்ணில் தானே கண்ணீர் வழிநோடச் செய்யும் வல்லமை இப்பாடலுக்கு உண்டு.

இந்த ஆய்வெல்லாம் இப்பாடலுக்கு போதாது. இரண்டாம் பாகத்தில் இதை அக்கு வேறாய் ஆணி வேறாய் பிரித்து மேயணும். இந்தப் பாடலுக்கென்று என் மனதில் 10% தனியிடமே உண்டு.

உண்மை வாசு சார்
உங்கள் வரவு இல்லாத போது தொகையறா பாடல்கள் வரிசையில் சில பாடல்கள் இடம் பெற்றது .அந்த வரிசையில் இதுவும் இடம் பெற்று விட்டது . நிச்சயம் அடுத்த பாகத்தில் இது குறித்து உங்கள் எழுத்துக்கு எழுத்து இடம் பெற வேண்டும் .நாங்கள் அனுபவிக்க வேண்டும்

vasudevan31355
14th August 2014, 04:03 PM
இன்றைய ஸ்பெஷல் (53)

http://www.induna.com/uploaded_images/dvd_vcd_master/medium/02_00_37_vcd%20mahal.jpg

எனக்கு பிடித்த தொகையாறா பாடல்.

எனக்கு தொகையாறா என்றதும் ஒரு பழைய இந்திப் பாடல் ஒன்று ஞாபகம் வந்து விட்டது.

அது பாடல் அல்ல. வசியம். போதை. கிக். பயம். மிரட்சி. புதுமை. கந்தர்வம். காந்தம். தேவ கானம். இன்னும் என்னென்ன உண்டோ அத்தனையும்.

அப்படியே என் மனதில் இரண்டு அடி ஆழ்குழி தோண்டி அதில் விதைத்த பாடல் இது. அதிலும் குறிப்பாக தொகையாறா. பத்தாயிரம் முறையாவது இத் தொகையறாவை மட்டுமே கேட்டிருப்பேன்.

லதாஜியின் குருத்துக் குரலில் 1949-இல் வெளிவந்த 'மஹல்' திரைப்படத்தில் 'ஆயேகா ஆயேகா'

http://4.bp.blogspot.com/-OqOPfUhK_fg/T5JDzKPl6ZI/AAAAAAAAHxE/Dpu54j2TzBU/s1600/68970_444284867739_269626977739_5476293_4099558_n. jpg

தொகையறா நீளமானது.('காமோஷ் ஹேய் ஜமானா சுப் சாப் ஹேய் சிதாரே') மிரட்டும் மணியோசையுடன் ஆரம்பித்து பாடலுடன் இணைந்து வரும் அந்த பிரம்மாண்ட பின்னணி இசையைக் கேளுங்கள்.
அந்த மயக்கும் மதுக் குரலைக் கேளுங்கள். ஒவ்வொரு வரிக்குமான இடையிசையைக் கேளுங்கள். இதைவிட வேறு இன்பமே இல்லை.

அதுவும்

'யா தில்... தடக் ரஹாஹே'....முடிவில் லதாவின் குரலும், இசையும் படிப்படியாக சேர்ந்தாற் போன்று உயர்ந்து செலவதைக் கேளுங்கள்.

தொகையறா முடிந்து காதில் தேனாக விழும்

அந்த

'ஆயேகா ஆயேகா' வைக் கேளுங்கள்.

இந்த திகில் படத்தில் 'தில்' லில் நுழைந்த பாடல்.

என் நாடி நரம்பெல்லாம் ஊர்ந்து செல்லும் பாடல்.

பாடலை ரசிக்க நீங்களும் ஆயேகா. பாடலும் இசையும் கூட நீளமானவை.

மதுண்ணா, ராஜேஷ்ஜி வாங்க. இப்பாடலைக் கேட்டாலே ஒரு half அடிச்ச எபெக்ட்.

தொகையாறா

khaamosh hai zamaanaa, chup-chaap hain sitaare
aaraam se hai duniyaa, bekal hain dil ke maare
aise mein koyi aahat, is tarah aa rahi hai
jaise ki chal rahaa hai, man mein koyi hamaare
yaa dil dhadak rahaa hai, ik aas ke sahaare

பாடல்

aayegaa, aayegaa, aayegaa, aayegaa aayegaa aanewaalaa
aayegaa, aayegaa, aanewaalaa,

aayegaa, aayegaa, aayegaa, aayegaa aanewaalaa
aayegaa, aayegaa, aayegaa

deepak bagair kaise, parwaane jal rahe hain
deepak bagair kaise, parwaane jal rahe hain
koyi nahin chalaataa, aur teer chal rahe hain
koyi nahin chalaataa, aur teer chal rahe hain
tadpegaa koyi kab tak, be-aas be-sahaare
tadpegaa koyi kab tak, be-aas be-sahaare
lekin ye kah rahe hain, dil ke mere ishaare
aayegaa, aayegaa, aayegaa, aayegaa aanewaalaa,
aayegaa aayegaa, aayegaa

bhatki huyi jawaani, manzil ko dhoondhti hai
bhatki huyi jawaani, manzil ko dhoondhti hai
maajhi bagair nayyaa, saahil ko dhoondhti hai
maajhi bagair nayyaa, saahil ko dhoondhti hai
kyaa jaane dil ki kashti, kab tak lage kinaare
kyaa jaane dil ki kashti, kab tak lage kinaare
lekin ye kah rahe hain, dil ke mere ishaare

aayegaa, aayegaa, aayegaa, aayegaa aanewaalaa,
aayegaa aayegaa, aayegaa, aayegaa


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=PceIRa17vwI

Richardsof
14th August 2014, 04:05 PM
MATHURA GAANAM PART 1 STARTED WITH MANJULA'S SONG .

TO DAY END OF THIS PART 1 LET US ENJOY WITH MANJULA 'S SONG.

http://youtu.be/vegJp28B2LU

gkrishna
14th August 2014, 04:14 PM
இன்றைய ஸ்பெஷல் (53)

[size=2][b][color="red"]எனக்கு பிடித்த தொகையாறா பாடல்.

ஆனால் எனக்கு ஒரு பழைய இந்திப் பாடல் ஒன்று தொகையாறா என்றதும் ஞாபகம் வந்து விட்டது.

அது பாடல் அல்ல. வசியம். போதை. கிக். பயம். மிரட்சி. புதுமை. கந்தர்வம். காந்தம். தேவ கானம். இன்னும் என்னென்ன உண்டோ அத்தனையும்.

அப்படியே என் மனதில் இரண்டு அடி ஆழ்குழி தோண்டி அதில் விதைத்த பாடல் இது. அதிலும் குறிப்பாக தொகையாறா. பத்தாயிரம் முறையாவது இத் தொகையறாவை மட்டுமே கேட்டிருப்பேன்.

லதாஜியின் குருத்துக் குரலில் 1949-இல் வெளிவந்த 'மஹல்' திரைப்படத்தில் 'ஆயேகா ஆயேகா'



அடுத்த பாகத்தில் தான் தொகையறா வரும் என்று நினைத்தேன்
முதல் பாகம் ஆரம்பமும் முடிவையும் பேச வைக்கின்ற கில்லாடி கிட்டு
(இன்ஸ்பெக்டர் ரஜினி)
இளம் குரல் கள்ள குரல் வசிய குரல் சங்கீத குரல் இப்படி எத்தனையோ குரல்கள் கேள்விப்பட்டு உள்ளேன் . முதன் முறையில் தமிழ் இல் ஒரு வார்த்தை 'குருத்து குரல் ' - அடுத்த ஜன்மத்தில் தமிழ் வாத்தியார் ஆகா

Richardsof
14th August 2014, 04:18 PM
மனதை மயக்கும் மதுர கானங்கள்- நிறுவன தலைவர் முதல்வர்
மாண்பு மிகு - வாசுதேவன் .அவர்களுக்கும் ,இரண்டாம் பாகம் -அதிபர்
கிருஷ்ணா ஜி அவர்களுக்கும் ,மற்றும் இசை மன்றத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் , பார்வையாளர்களுக்கும் நன்றியும்
வரவேற்பும் உரித்தாகுக .

ம.ம.ம.கா இயக்கம் விரைவில் பல பாகங்கள் கடந்து வெற்றி பெற
வாழ்த்துக்கள் .
அன்புடன்
வினோத்

vasudevan31355
14th August 2014, 04:29 PM
அருமை ராஜேஷ்ஜி தன்னுடைய 2000 ஆவது பதிவை இங்குதான் முடித்தார்

கிருஷ்ணாஜி அவர்களும் தன்னுடைய 1000 ஆவது பதிவை இங்குதான் முடித்தார்

அடியேனும் என்னுடைய 5000 ஆவது பதிவை இங்குதான் முடித்தேன்

என்னே ஒற்றுமை!

vasudevan31355
14th August 2014, 04:30 PM
வாணியுடன் நடிகர் திலகம் இருக்கும் புகைப்படத்தை நாங்கள் மகிழ்ச்சியோடு இருக்க அளித்திட்ட எங்கள் எஸ்வி சாரே!
கிரேட். வாழ்த்துக்களுக்கும் நன்றி!

தங்கள் பங்களிப்புகள் எங்கள் பெருமை.

தொடரட்டும் பாகம் இரண்டிலும்

madhu
14th August 2014, 04:48 PM
आया हू आया हू आया हू

அந்த திகில் பாடலில் அசோக் குமார் பார்க்கும் இடமெல்லாம் நம்மையும் பார்க்க வைத்து பின்னணியில் ஒலிக்கும் லதாவின் குரல் சிலிர்க்க வைக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம்.
அந்தக் காலத்தில் தனியே ஆடும் ஊஞ்சல், படகு, அந்த கர்ர்ருப்பு பூனை எல்லாமே பயமுறுத்தினாலும் பாடலின் இனிமையில் கரைந்து போனால் எதுவுமே கண்ணில் படாமல் போய்விடும்.

அடுத்த பாகத்துக்குக்கான பல அடிக்கற்கள் ( தொகையறா இங்கே.. பல்லவி அங்கே எதிர்பார்க்கிறேன் ) இங்கே ஊன்றப் பட்டு விட்டன.

வாழ்த்துகள்.

gkrishna
14th August 2014, 04:52 PM
இத்துடன் எல்லாம் வல்ல இறை ஆற்றல் கருணையினால் பாகம் ஒன்று நிறைவு பெற்று விட்டது .. பாகம் இரண்டு செல்ல

http://www.mayyam.com/talk/showthread.php?11121-%26%232990%3B%26%232985%3B%26%232980%3B%26%233016% 3B-%26%232965%3B%26%232997%3B%26%232992%3B%26%233009% 3B%26%232990%3B%26%233021%3B-%26%232990%3B%26%232980%3B%26%233009%3B%26%232992% 3B-%26%232965%3B%26%233006%3B%26%232985%3B%26%232969% 3B%26%233021%3B%26%232965%3B%26%232995%3B%26%23302 1%3B-%26%232951%3B%26%232992%3B%26%232979%3B%26%233021% 3B%26%232975%3B%26%233006%3B%26%232997%3B%26%23298 0%3B%26%233009%3B-%26%232986%3B%26%233006%3B%26%232965%3B%26%232990% 3B

mr_karthik
14th August 2014, 05:33 PM
முதல் பாகத்தை சிறப்பாக நடத்திச் சென்ற அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்...
பாராட்டுக்கள்....
வாழ்த்துக்கள்....
எண்ணிலடங்கா நன்றிகள்.....