PDA

View Full Version : மனதை மயக்கும் மதுர கானங்கள்



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 [12] 13 14 15 16

vasudevan31355
1st August 2014, 05:23 AM
ராஜேஷ் சார்,

அருமை. இன்னும் உங்கள் பாடல்களை பார்க்கவில்லை. நிதானமாக அனுபவித்துப் பார்க்க வேண்டும்.

பழைய அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஒரு பாடல். arumai.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ew4yuZR67wA

Gopal.s
1st August 2014, 05:50 AM
பீ.வசந்தா

சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் ஒரு வசனம். "அம்மா , பாதம் ஹல்வா ரொம்ப நல்லா இருக்கு". அம்மா பதில் ."இத பாரு.உருளை கிழங்கை அரைச்சு பண்ணினேன்.துளியூண்டு பாதாம் எஸ்சென்ஸ் விட்டேன்." .அப்படித்தான் .சராசரி பாடல் ஒன்று போடுங்கள். எங்கள் வசந்தாவை கூப்பிட்டு ஒரே ஒரு ஹம்மிங் போதும், பாடல் தூக்கி எங்கோ போய் விடும்.

இவர் நம் இதயத்தில் தேங்குவதற்கு காரணமே ,இவர் தமிழில் ஒரு முந்திரி,திராட்சை போலவே பயன் படுத்த பட்டார்.அந்த குரலின் மாயத்தை எப்படி விளக்குவது?அந்த ஹம்மிங்,ஒற்றை வரி உங்கள் மனதை கிளர்ச்சி அடைய வைத்ததை,வசந்தாவை என் மானசீக இளம் காதலியாக இன்னும் வைத்திருப்பதை எப்படி விவரிப்பது?

இவரின் சில தமிழ் முத்துக்கள் .

ஆசை வந்த பின்னே அருகில் வந்த பெண்ணே

வாடி தோழி கதாநாயகி மனதுக்கு சுகம்தானா

பொட்டு வைத்த முகமோ

திருமகள் தேடி வந்தாள்

இன்று முதல் செல்வமிது என் அழகு தெய்வமிது

பொன்னான உள்ளம் உன்னோடு இருக்க

இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு

திருவாளர் செல்வியோ நான் தேடிய தலைவியோ

ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்

தங்க வெண்ணிலா வா

முத்து சரம் சூடி வரும் வள்ளி பொண்ணுக்கு

தம் தன தம் தன தாளம் வரும்

இவரை பற்றி சிறு செய்தி. மலையாளத்தில் அதிகம் போற்ற பட்டார்.

Singer B Vasantha, hails from Machlipatnam in Andhra Pradesh. She began singing from a very young age and had an uncanny skill of being able to reproduce the style in which other singers sang. Despite the insistence of Kanakadurga, her mother, who was an accomplished vainika, Vasantha did not take up classical music lessons seriously. She made her debut as a playback singer in the Telugu film 'Vagdanam' (1962).

Vasantha went on to sing in a couple of Tamil films for stalwarts like K. V. Mahadevan and M. S. Viswanathan before making her presence felt in Malayalam.

Vasantha's first song in Tamil films was a duet. The song 'Aasai vantha pinne....' ('Konchum Kumari) was with K.J. Yesudas who was also making his debut in Tamil. This pair then went on to sing some of the best duets in Malayalam.

From then on, till 1988, Vasantha breathed life into innumerable songs. She also composed music for a Kannada and Telugu film.

Vasantha has been conferred the Kalaimamani Award and the Ugadi Award instituted by the Tamil Nadu and Andra Pradesh governments respectively. But Kerala has still not given this singer due recognition.

Unforgettable melodies

Duets

'Pandu nammal....' ('Tharavattamma'), 'Kakkakondu kadalmannukondu...' ('Poochakanni'), 'Vaarthinkal kani...' ('Vidyarthi'), 'Pandoru shilpi...' ('Hotel High Range'), 'Bhumidevi pushpiniayi...' ('Thulabharam'), 'Noothana ganathin...' ('Aalmaram'), 'Kudamulla poovinum...' ('Jwala'), 'Swapna sancharini...' ('Kootukudumbam'), 'Yavanasundari...' ('Pearl View'), 'Rasaleelakku...' (Abhijatyam), 'Chanchalitha chanchalitha...' ('Dharmashetre Kurukshetre'), 'Chandranudikkuna dikkil...' ('Othenante Makan'), 'Kannil meenadum...' ('Neelaponman').

Solos
'Parijaatha malare....' ('Sahadarmini'), 'Sugandam ozhukkum...' ('Jeevikkan Anuvadikku'), 'Thekkumkoor adiyathi...' ('Aswamedam'), 'Kanyaka mathave...' ('Madatharuvi'), 'Vadhu varanmaare...' ('Jwala'), 'Kavillilenthe kumkumam...' ('Moodalmanju'), and 'Innathe ratri Sivaratri...' ('Vilakku Vangiya Veena').

Gopal.s
1st August 2014, 05:57 AM
பொய்க்கால் குதிரை - ஆட்டத்துடன் வந்த இந்த பாடல் மிகவும் எனக்கு பிடித்தது .

தாயின் மடியில் இடம் பெற்ற இந்த பாடல்





எஸ்.வீ ,

எனக்கு ஒரே வருத்தம் .

தளக்கு தளக்கு தக்க ஜூம் ஜூம் தா ,சிக்கு நக்கு சிக்கு நக்கு சிக்கு நக்கு

இதை விட்டு விட்டா ராஜாத்தி காத்திருந்தா பாட்டை எழுதுவது?

என்னுடைய பிடித்தம் . நன்றி.

Richardsof
1st August 2014, 06:14 AM
வருத்தப்பட வேண்டாம் கோபாலரே

அந்த வரிகளை நீங்களே நினைத்து கொண்டு பாடி மகிழுங்கள் .

இன்றைய உங்கள் வசந்த - சங்கர - விரிவான இசை ஆராய்ச்சி பதிவு அருமை .

உங்களின் அபிமான ''ஒரு பக்கம் பார்க்கிறா '' பதிவை எதிர்பார்க்கிறேன்

madhu
1st August 2014, 07:02 AM
பீ.வசந்தா

Vasantha's first song in Tamil films was a duet. The song 'Aasai vantha pinne....' ('Konchum Kumari) was with K.J. Yesudas who was also making his debut in Tamil. This pair then went on to sing some of the best duets in Malayalam.


http://youtu.be/_qLLN7Ka7MM

RAGHAVENDRA
1st August 2014, 07:04 AM
வயசுப் பொண்ணு காஞ்சிப் பட்டுடுத்தி பாடல் புகழ் சாவித்திரியும் வசந்தாவும் உடன் பிறந்த சகோதரிகள். இந்த சாவித்திரியின் புதல்வர் தான் பாய்ஸ் படத்தில் நடித்த ஐந்து இளைஞர்களில் ஒருவர்.

சகோரிகள் இருவரும் இணைந்து மெல்லிசை மன்னர் இசையில் ஒரு படத்தில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அது உடனே நினைவுக்கு வரவில்லை.

RAGHAVENDRA
1st August 2014, 07:15 AM
பொங்கும் பூம்புனல்

http://youtu.be/jJtEEZ_g6Tk

எனதுள்ளம் இன்றல்லவோ ... தனியே ... இன்புற்று அலைகின்றதே..
தினமுந்தன் மலர் சோலையில் இதைக் கண்டு சிந்தை சுழல்கின்றதே..

ஆஹா... மொழியின் ஆளுமை பாடலின் இனிமையையும் தாண்டி நம்மைக் கவரும் விந்தை தான் என்னே...

ராதா ஜெயலக்ஷ்மி பாடகர் திலகம் குரல்களினாலா...

மரகதம் திரைப்படத்தில் இடம் பெற்ற புன்னகை தவழும் மதிமுகமோ... ஒரு கோடி முறை கேட்டாலும் அலுக்காத மதுர கானம்...

எஸ்.எம்.எஸ். அவர்களின் இசையில் நாம் மெய் மறந்து போவது நிஜம் தானே..

நடிகர் திலகத்தின் புன்னகை ... வசீகரம்.... பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்...

Richardsof
1st August 2014, 08:36 AM
http://i60.tinypic.com/2yum7oj.jpg

Richardsof
1st August 2014, 08:37 AM
http://i61.tinypic.com/21kkv12.jpg

Gopal.s
1st August 2014, 10:34 AM
மனதுக்கு உற்சாகம் அளிக்கும் செய்திக்கு நன்றி கோபால்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்கள் வாதத்திறமையால், நடிகர்திலகத்தின் பல புதிய பரிமாணங்கள், மறைக்கப்பட்ட சாதனைகள், வஞ்சிக்கப்பட்ட அங்கீகாரங்கள் உலகின் பார்வைக்கு எட்டட்டும்.

நமது ஜாம்பவான்களின் குரல்களோடு கோபியின் குரலிலும் நம் திலகத்தின் பெருமைகளைக் கூறக் கேட்க ஆவலாக இருக்கிறோம்.

இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என்பதையறிந்து நமது திரிகளில் தெரியப்படுத்தினால், அனைவரும் மிஸ் பண்ணாமல் பார்த்து இன்புற ஏதுவாகும்...

வழக்கமான நீயா நானா format என்பதால் ,ரொம்ப விவரம் தெரிந்தவர்களுக்கும்,சராசரி பங்கேற்பாளர்களுக்கும் நேரம் ,ஒரு வரி பதிலாக பகிர படும். இருந்தாலும் இப்படி ஒரு நிகழ்ச்சி,இன்றைய வெகுஜன ஈர்ப்பை பெற்றுள்ள சேனல் களில் வெளியாவது மிக அத்யாவசியமான ஒன்று.



இந்த நிகழ்ச்சி சிறப்பு நீயா நானா அந்தஸ்தில் 15 ஆகஸ்ட் ஒளி பரப்பாகும் சாத்தியகூறுகள் உண்டு. ஆனால் இன்னும் இறுதி செய்ய படவில்லை.

mr_karthik
1st August 2014, 10:52 AM
கோ,

அதிகம் கொண்டாடப்படாத பாடகி பி.வசந்தா பற்றிய சிறப்புப்பதிவு அருமை. ஆனால் தமிழில் அவரை பெரும்பாலும் ஹம்மிங் குரல் கொடுப்பவராகவே வைத்திருந்து வஞ்சித்து விட்டனர்.

நிழலில் இருந்தவரை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த தங்கள் முயற்சி, பலே...

mr_karthik
1st August 2014, 10:56 AM
வினோத் சாரின் 'முத்துமண்டபம்' விளம்பரப் பதிவைப்பார்த்ததும் மனம் காலத்தின் முதுகில் ஏறிப்பயணிக்கிறது. இலட்சிய நடிகரின் ஒரு வித்தியாசமான படம்.

பாடகர்திலகத்தின் கம்பீரக்குரலில் ஒரு தத்துவப்பாடல், விரக்தியின் விளிம்பில் நின்று கதாநாயகன் பாடுவார்....

சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா
வெட்கமில்லாமல் துக்கமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா

பாய்விரித்து படுப்பவரும் வாய்திறந்து தூங்குகிறார்
பஞ்சணையில் நான் படுத்தும் நெஞ்சில் ஓர் அமைதியில்லை
கொஞ்சவரும் கிளிகளெல்லாம் கொடும் பாம்பாய் மாறுதடா
கொத்திவிட்டு, புத்தனைப்போல் சத்தியமாய் வாழுதடா

சொன்னாலும் வெட்கமடா.....

Richardsof
1st August 2014, 02:56 PM
http://i58.tinypic.com/2n1i847.jpg

gkrishna
1st August 2014, 03:14 PM
http://mmimages.maalaimalar.com/Articles/2014/Jul/82f3f079-ab19-4112-9537-46a23663f92f_S_secvpf.gif
எம்.ஜி.ஆரின் புகழ் பெற்ற பாடல்கள் பலவற்றை எழுதியவர்; ஓவியராக இருந்து நாடக ஆசிரியரானவர்; நாடகத்திலிருந்து சினிமா உலகுக்கு வந்தவர் அவர்தான் கவிஞர் வாலி.

அவர் சினிமா உலகில் எளிதாகப் புகழ் பெற்று விடவில்லை. எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றார்.

வாலியின் சொந்த ஊர் ஸ்ரீரங்கம். தந்தை பெயர் சீனிவாச அய்யங்கார். தாயார் பொன்னம்மாள். வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டிருந்தார். பிரபல ஓவியர் `மாலி' போல் புகழ் பெறவேண்டும் என்று ஆசை.

இதனால், பாபு என்ற அவருடைய பள்ளித் தோழர், 'வாலி' என்ற பெயரை சூட்டினார். இதை அறிந்த அவருடைய ஆசிரியர், 'உனக்கு வால் இல்லையேடா! அப்புறம் எப்படி வாலின்னு பெயர் வெச்சுக்கிட்டே?' என்று கேலி செய்தார்.

உடனே ஒரு துண்டு காகிதத்தை எடுத்து, 'வாலில்லை என்பதால் வாலியாகக்கூடாதா? காலில்லை என்பதால் கடிகாரம் ஓடாதா?' என்று ஒரு கவிதையை எழுதி, ஆசிரியரிடமே நீட்டினார்.

அதைப் படித்த ஆசிரியர், 'பரவாயில்லையே! கவிதை கூட நன்றாக எழுதுகிறாயே!' என்று முதுகில் தட்டிக்கொடுத்தார்.

ஓவியம் வரைவதுடன் கதை, கட்டுரை, கவிதை எழுதுவதிலும் `வாலி' ஆர்வம் கொண்டிருந்தார். பத்திரிகைகளில் வரும் கதைகளை எல்லாம் விழுந்து விழுந்து படிப்பார். பிரபல மராத்தி எழுத்தாளர் காண்டேகர் எழுதிய கதைகள் அவருக்கு மனப்பாடம்.

நண்பர்களுடன் சேர்ந்து 'நேதாஜி' என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார். ஸ்ரீரங்கத்துக்கு வந்திருந்த எழுத்தாளர் 'கல்கி', அந்த கையெழுத்துப் பத்திரிகையைப் பார்த்து பாராட்டியதுடன், பத்திரிகைக்கு கதை எழுதும்படி கூறினார்.

இந்தக் காலக்கட்டத்தில், ஸ்ரீரங்கத்தில் ஏ.எஸ்.ராகவன், ஸ்ரீரங்கம் ராமகிருஷ்ணன், ஸ்ரீரங்கம் நரசிம்மன், பிலஹரி, சுஜாதா என்று பல எழுத்தாளர்கள் வசித்தார்கள். இவர்கள் எல்லாம் வாலிக்கு நண்பர்கள் ஆனார்கள்.

ஒரு நாள் ஸ்ரீரங்கம் ஆயிரங்கால் மண்டபத்தில், பிரபல ஓவியர் 'சில்பி' ஓவியங்கள் வரைந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். தான் வரைந்த ஓவியங்களை அவரிடம் கொண்டு போய்க் காண்பித்தார். 'கும்பகோணத்திலும், சென்னையிலும் ஓவியக் கல்லூரிகள் இருக்கின்றன. அங்கு சேர்ந்து ஓவியம் பயின்றால், சிறந்த ஓவியனாக வரலாம்' என்று சில்பி ஆலோசனை கூறினார்.

இந்த சமயத்தில், திருச்சியில் புகழ் பெற்ற கவிஞராக விளங்கிய திரிலோக சீதாராம், மகாகவி பாரதியாரின் மகள் தங்கம்மாள் பாரதியுடன் வாலியின் வீட்டுக்கு வந்தார்.

வாலி வரைந்த பாரதியாரின் படம், சுவரில் மாட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்த தங்கம்மாள் பாரதி, 'அப்பா மாதிரியே இருக்கு. நன்றாக வரைந்திருக்கே' என்று வாலியைப் பாராட்டியதுடன், 'பையனை படம் வரையற துறையிலேயே விடுங்க. நன்றாக முன்னுக்கு வருவான்' என்று வாலியின் பெற்றோரிடம் கூறினார்.

கடன் வாங்கியாவது பையனை சென்னைக்கு அனுப்பி, ஓவியம் வரைய செய்வது என்ற முடிவுக்கு வந்தார், வாலியின் தந்தை. அதன்படி, சென்னைக்கு ரெயில் ஏறினார், வாலி. எழும்பூரில் உள்ள ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார்.

சிந்தாதிரிப்பேட்டையில், ஒரு நண்பனுடன் தங்கிக்கொண்டு ஓவியக் கல்லூரிக்கு போய் வந்தார்.

ஓவியக் கல்லூரியில் ஏற்பட்ட அனுபவம் பற்றி வாலி கூறியிருப்பதாவது:-

'ஓவியக் கல்லூரியில் என்னுடைய வகுப்பில் மாடலிங் என்ற பெயரில், ஆண், பெண்கள் ஆடாது, அசையாது சிலை போல் நிற்பது உண்டு.

`மாடலிங்'காக முதன் முதலில் சந்தித்தது, இருபத்தைந்து வயதிற்குள் இளம் பருவத்தை சற்றே கடந்து நின்ற ஒரு பெண்ணைத்தான். அந்தப் பெண்ணைப் பார்த்து, அப்படியே வண்ண ஓவியமாக வரையவேண்டும்.

அந்தப்பெண் எங்களுக்கு முன்னால் வந்து நிற்க, எந்த கோணத்தில் எப்படி `போஸ்' தரவேண்டும் என்பதை ஆசிரியர் சொல்லிக் கொடுத்தார்.

நான், என் மேஜைக்குக் கீழே குனிந்து, ஓவியம் வரைவதற்காக வைத்திருந்த உபகரணங்களை எடுத்து மேஜை மíது வைத்து விட்டு, `மாடலிங்'காக நின்ற அந்த பெண்ணை நிமிர்ந்து பார்த்தேன்.

ஒரு விநாடி எனக்குத் தலை சுற்றியது. ரத்தமே உறைந்து விடுவது போல், உடலெங்கும் ஒரு சிலிர்ப்பு பரவியது. என் கை கால்கள் வெடவெடத்தன.

காரணம், அந்தப் பெண் முழு நிர்வாணமாக நின்று கொண்டிருந்தாள்! நிர்வாணமாகப் பெண்களை வரைவது ஓவியத்தில் ஒரு பாடமாகும்.

ஓவியக் கல்லூரியில் நான் பயின்றது 'கமர்ஷியல் ஆர்ட்.' ஓராண்டுதான் நான் படித்தேன். பிறகு அந்தப் படிப்புக்கே முற்றுப்புள்ளி வைத்து விட்டு, ஏதோ ஓர் உந்துதலால் ஸ்ரீரங்கம் திரும்பிவிட்டேன்.

ஸ்ரீரங்கத்தில், 'வாலி பப்ளிசிட்டீஸ்' என்று சொந்தமாக ஒரு விளம்பர நிறுவனத்தை நிறுவினேன். அதுவும், வள்ளலார் கதை போல ஆயிற்று. 'கடை விரித்தேன்; கொள்வார் இல்லை.'

எதிலும் நான் உருப்படாமல் போய் விடுவேனோ என்று என் தாயும், தந்தையும் என் எதிர்காலம் பற்றி மலையளவு வருத்தத்தை மனதில் தேக்கி வைத்திருந்தனர்.'

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், வாலி.

gkrishna
1st August 2014, 03:19 PM
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02034/517xNxbale___1__2034410g.jpg.pagespeed.ic.V28GbcRR RX.jpg

From Tamil Hindu -today

பி.ஆர். பந்துலு இயக்கத்தில் வெளியான ‘பலே பாண்டியா’ (1962) படத்தில் பாண்டியன்,மருது, சங்கர் என மூன்று மாறுபட்ட வேடங்களில் முதல்முறையாக சிவாஜி நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் இடம்பெற்ற ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ பாடலில் நீண்ட ஆலாபனையாக சுர வரிசையைப் பாடிக்கொண்டே ‘மாமா… மாப்ளே’ என்று பாடலின் முடிவில் நடக்கும் சங்கீதப் போட்டி, மிகவும் ரசிக்கப்பட்டது.

அப்போது கிண்டியில் அமைந்திருந்த ‘நியூட்டன்’ ஸ்டூடியோவில் பாடலைப் படமாக்கியிருக்கிறார்கள். இந்தப் பாடலில் எம்.ஆர். ராதாவுக்காக எம். ராஜு என்பவரைப் பாட வைத்திருக்கிறார்கள். இவர் விஸ்வநாதன் ராமமூர்த்தி குழுவில் இடம்பெற்றிருந்த கம்பெனிப் பாடகர்.

அச்சு அசலாகத் தனது குரலில் பாடியதைப் போலவே ராஜு பாடியிருப்பதைக் கேட்டு அவரை செட்டுக்கே வரவழைத்து நடிகவேள் பாராட்டினார். பிறகு அவரிடமே அந்தப் பாடலில் இடம்பெற்ற சுர வரிசையையும் கற்றுக்கொண்டார். ஆனால் அவை அத்தனை சீக்கிரம் வாயில் நுழையவில்லை. அவர் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்ததை ரசிக்க செட்டில் இருந்தவர்கள் கூடியதால், “ஏன்டா இங்க என்ன யானை வித்த காட்டவா வந்திருக்கு?” என்று எல்லோரையும் துரத்தினாராம்.

ஓரளவு கற்றுக்கொண்டாலும் சுர வரிசைகளால் பெரிய குழப்பம் ஏற்பட, இயக்குநர் பந்துலுவிடம் “எனக்கு குளோஸ் அப் வைக்காமல் கேமராவை நிறுத்தாமல் ஓடவிடு, முக்கியமாக நாகராவில் பாடலை ஒலிக்கவிட்டு ‘ரிகர்சல்’ பார்க்க வேண்டாம் என்று உத்தரவு போட்டுவிட்டாராம் ராதா.

படப்பிடிப்பில் பாலாஜி கடம் வாசிப்பதுபோல நடிக்க, சிவாஜி தரையில் அமர்ந்து பாட, சோபாவில் அமர்ந்து எம்.ஆர். ராதா ரசித்துக் கொண்டிருப்பதுபோல இரண்டு கேமராகளை வைத்துப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். பாதி பாடல் எடுத்து முடிக்கப்பட்டதும், இரண்டு நிமிடம் இடம்பெறும் சுர ஆலாபனைக்கான படப்பிடிப்பு தொடங்கியது.

பாடகர் ராஜு சொல்லிக்கொடுத்த சுரங்கள் எல்லாம் மறந்துபோனாலும் ரொம்பவே சூப்பராகச் சமாளித்திருக்கிறார் நடிகவேள். சுர ஆலாபனையைச் சரியான உதட்டசைவுடன் சொல்ல முடியாது என்று தெரிந்ததும், தனது அங்க சேஷ்டைகளால் சமாளிக்க ஆரம்பித்தார். முக்கியமாக அவர் அமர்ந்திருந்த சோபா அதிரும்படி உடலையும் கைகளையும் அசைக்க ஆரம்பித்தார். நடிகவேளின் உடல் மொழியைக் கண்டு செட்டில் இருந்த அத்தனை பேரும் சிரித்துக்கொண்டே இருக்க அப்போதே இந்தப் பாடல், படத்துக்குப் பெரிய சர்ப்பிரைஸ் என்பது தெரிந்துவிட்டது.

பாடலின் க்ளைமேக்ஸ் நெருங்கிய நேரத்தில் பெரிய கர்நாடக சங்கீதப் பாடகரைப் போல் இடது கையைத் தனது காதருகே வைத்துக் கொண்டு வலது கையை நீட்டி வாயை அசைத்து நடித்திருக்கிறார் நடிகவேள். இது கொஞ்சம் ஓவராக இருக்கிறதே என்று இயக்குநர் நினைத்தாலும் கடைசி ஷாட் என்பதால் ஓடிக்கொண்டிருக்கும் கேமராவை நிறுத்த இயக்குநர் விரும்பவில்லை.

படப்பிடிப்பு முடிந்ததும்.. “அண்ணே ஆலாபனை பாடுறதுக்கே காதுகிட்ட கையைக் கொண்டு போயிட்டீங்களே!? என்னாலயே சிரிப்பை அடக்க முடியல” என்றார் பந்துலு. அதற்கு எம்.ஆர்.ராதா... “அடப் போய்யா... நான் குதிச்ச குதியில விக் கழன்றுகிட்டு வந்திருச்சு... அது கீழ விழுந்துட்டா.. எல்லார் உழைப்பும் தீர்ந்துருமே… விக் கீழே விழாம பிடிச்சுக்கத்தான்.. அப்புடி காதுக்கிட்ட கை வெச்சேன். என்னோட மானமும் மிச்சம், உன்னோட பிலிம் ரோலும் மிச்சம்” என்றாராம்.

gkrishna
1st August 2014, 03:27 PM
உடன் வரும் மாய நிழல் - From Today Tamil HINDU

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02034/Nx400xmannavane__1__2034412g.jpg.pagespeed.ic.EmvA QsRVea.jpg
பாசத்துடனும் ஆசையுடனும் பழகிவந்த காதலி அல்லது கைப்பிடித்த மனைவி திடீரென்று மறைந்த துக்கத்தில் நம் திரை நாயகர்கள் அவள் நினைவாக அல்லல்படும்போது மறைந்தவள் ஆறுதல் சொல்லிப் பாடுவதாக அமைந்த பாடல் காட்சிகள் எல்லா இந்தியத் திரைப்படங்களிலும் இடம்பெற்றுள்ளன. இப்படிப்பட்ட பாடல்கள் அமரத்துவத்தன்மை அடைவதும் உண்டு.

தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் இந்த உணர்வை வெளிப்படுத்திய இரண்டு திரைப்பாடல்கள், காலத்தைக் கடந்து இன்றும் பெரிதும் கேட்டு ரசிக்கப்படுகின்றன.

வழக்கப்படி முதலில் இந்திப் பாடல்.

லதா மங்கேஷ்கர் பாடிய பல்லாயிரத்துக்கும் அதிகமான பாடல்களில் மிகச் சிறந்த பத்துப் பாடல்களில் ஒன்று என்று தெரிவுசெய்யப்பட்ட இந்தப் பாடலை எழுதியவர் இந்தித் திரை இசைக் கவிஞர்களின் அரசன் என்று புகழப்படும் ராஜா மெஹதி அலி கான். பாடலுக்கு இசை பாரம்பரிய இசை அமைப்பாளர் மதன்மோஹன். பாடல் இடம்பெற்ற வெற்றித் திரைப்படம் 1966-ல் வெளிவந்த மேரே சாயா (என் நிழல்) என்ற சாதனா - சுனில் தத் நடித்த படம்.

பாடல் வரிகள்.

து ஜஹான் ஜஹான் சலேகா

மேரா சாயா சா ஹோகா

மேரா சாயா

கபி முஜ்கோ யா கர்கே

ஜோ பெஹேங்கே தேரி ஆஸு

தோ வஹீ பே ரோ லேகே

உன்ஹே ஆக்கே மேரே ஆஸு

து ஜிதர் கா ருக் கரேகா

மேரா சாயா

... ...

இதன் பொருள்:

நீ எங்கெங்கு செல்கிறாயோ

என் நிழல் (அங்கெல்லாம்) உடன் இருக்கும்

என் நிழல்...

எப்பொழுது என் நினைவில் உன் கண்ணீர் பெருகுகிறதோ அங்கே உடன் வந்து

அது நிற்கும்படி என் கண்ணீர் தடுத்துவிடும்.

என் நிழல் உடன் இருக்கும்

நீ விரக்தி அடைந்தால் நானும் விரக்தியாகிவிடுவேன்

நான் கண்ணுக்குத் தெரிந்தாலும்

தெரியாவிட்டாலும்

உன் உடன்தான் இருப்பேன்

நீ எங்கு சென்றுகொண்டிருந்தாலும்

என் நிழல் உடன் இருக்கும்.

நாயகியை இழந்த பிறகு பாடும் இப்பாடல் வரிகளின் இரண்டாம் பகுதியில் அவள் உயிருடன் இருக்கும்போது பாடிய சில வரிகள் வால்யூம் 2 என்று தனியாக உள்ளன. படத்தில் அவை ஒரே தொகுப்பாகக் காட்சியாக்கப்பட்டிருகின்றன. இந்த உணர்வை அப்படியே பிரதிபலிக்கும் ஜெமினி கணேசன் - கே.ஆர். விஜயா நடித்த ‘கற்பகம்’ படத்தின் பாடல்:

விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் மக்கள் கவிஞர் வாலி எழுதி அவருக்கு மிகவும் புகழ் சேர்த்தது அந்தப் பாடல். பாடியவர் பி. சுசீலா. தான் விட்டுச் சென்ற இடத்திற்கு வந்தவளை நேசிக்கும்படி இறந்த மனைவி பாடும் பாடல் வரிகள் மிகச் சிறப்பாக அமைந்திருப்பதைப் பாருங்கள்.

மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா

உன்னுயிராய் நான் இருக்க என்னுயிராய் நீ இருக்க

மன்னவா மன்னவா மன்னவா

கண்ணை விட்டுப் போனாலும்

கருத்தை விட்டுப் போகவில்லை

மண்ணை விட்டுப் போனாலும்

உன்னை விட்டுப் போகவில்லை

இன்னொருத்தி உடலெடுத்து

இருப்பவளும் நானல்லவா

கண்ணெடுத்தும் பாராமல்

கலங்குவதும் நீயல்லவா

உன் மயக்கம் தீர்க்க வந்த

பெண் மயிலைப் புரியாதா

தன் மயக்கம் தீராமல்

தவிக்கின்றாள் தெரியாதா

என் உடலில் ஆசை என்றால்

என்னை நீ மறந்துவிடு

என் உயிரை மதித்திருந்தால்

வந்தவளை வாழவிடு.

மன்னவா மன்னவா மன்னவா

நாயகியை நினைத்து வாடும் நாயகன் மட்டுமே ஆறுதல் பெற முடியும் என்பதும் நாயகனை நினைத்து வருந்தும் நாயகிக்கு இம்மாதிரிப் பாடல்கள் ஒருபோதும் திரையில் இடம்பெற முடியாது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய காவிய இலக்கணமாகும்.

madhu
1st August 2014, 05:12 PM
கிருஷ்ணா ஜி.. அருமையான பதிவு. மேரா சாயா-தான் தமிழில் இதயக் கமலம் என்ற பெயரில் வெளிவந்தது. தூ ஜஹான் ஜஹான் சலேகாவை தமிழில் "உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல" என்று சுசீலாவின் குரலைக் கொண்டு மயங்க வைத்திருக்கிறார்கள். "மன்னவனே அழலாமா" போல இந்தப் பாடலுக்கும் நடித்தவர் கே.ஆர்.விஜயா என்பது ஹைலைட் !!

gkrishna
1st August 2014, 05:45 PM
கிருஷ்ணா ஜி.. அருமையான பதிவு. மேரா சாயா-தான் தமிழில் இதயக் கமலம் என்ற பெயரில் வெளிவந்தது. தூ ஜஹான் ஜஹான் சலேகாவை தமிழில் "உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல" என்று சுசீலாவின் குரலைக் கொண்டு மயங்க வைத்திருக்கிறார்கள். "மன்னவனே அழலாமா" போல இந்தப் பாடலுக்கும் நடித்தவர் கே.ஆர்.விஜயா என்பது ஹைலைட் !!

நன்றி மது சார்
இந்த பதிவை காலையில் நானும் எனது அத்தை ஒருவரும் (அவர் வயது கிட்டத்தட்ட 65 வயது இருக்கும்) சேர்ந்து படிக்கும் போது நீங்கள் சொன்ன இதே தகவலை சொன்னார் .
இந்த பதிவை எழுதியவர் 'உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல' பாடலை பற்றியும் குறிப்பிட்டு இருக்க வேண்டும்
என்றும் அவர் கூறினார்
மீண்டும் ஒரு முறை நன்றி மது சார்

RAGHAVENDRA
2nd August 2014, 06:17 AM
வினோத் சார்
செந்தாமரை நிழற்படம் மிகவும் அருமை. அதே போல் முத்து மண்டபம் படநிழற்படமும். தொடர்ந்து தங்கள் பங்களிப்பில் பல அபூர்வ நிழற்படங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.

RAGHAVENDRA
2nd August 2014, 06:21 AM
உள்ள(த்)தை அள்ளித்தா

இந்தத் தொடரில் அடுத்து நாம் பகிர்ந்து கொள்ளப் போவது கே.ஆர்.ராமசாமி, ஜெமினி கணேசன் நடித்து மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த நீதிபதி திரைப்படத்திலிருந்து கே.ஜமுனா ராணி குழுவினர் பாடிய பாடல். பாடலைக் கேட்கத் துவங்கிய உடனே நம்மையும் அறியாமல் நம் கால்கள் தாளம் போடும். அருமையான பாடல். நமக்காக சிறப்பான ஒலித்தரத்தில்

வந்ததடி ராஜயோகம் (https://www.mediafire.com/?8raic7tcm2xsbbq)

RAGHAVENDRA
2nd August 2014, 06:33 AM
பொங்கும் பூம்புனல்

பஜனைப் பாடல்களை நகைச்சுவைக்காக அமைக்கும் பாங்கு பல படங்களில் இடம் பெற்றிருக்கிறது. இதில் மக்களின் நினைவில் முதலில் நிற்பது காசேதான் கடவுளடா படத்தில் இடம் பெற்ற ஜம்புலிங்கமே ஜடாதரா.

இந்த வரிசையில் மெல்லிசை மாமணி வி.குமாரின் இசையில் பெண்ணை நம்புங்கள் படத்தில் இடம் பெற்ற ராஜா ராமா ரகுராமா என்கிற இந்தப் பாடலும் அடங்கும். எஸ்.பி.பாலா, கோவை சௌந்தர்ராஜன் இவர்களுடன் எம்.ஆர்.ஆர்.வாசுவும் இணைந்து பங்கேற்றுப் பாடியுள்ள பாடலைக் கேட்டு மகிழுங்கள்.

http://www.inbaminge.com/t/p/Pennai%20Nambungal/

Subramaniam Ramajayam
2nd August 2014, 06:40 AM
இந்த ஆள் எந்தப்பாட்டைத்தான் உருப்படியாகச் செய்தார்.

எத்தனை நல்ல பாடல்கள் இவரிடம் போய் சீரழிவை சந்தித்தன என்று பெரிய பட்டியலே போடலாம்...

VERY VERT TRUE STATEMENT parpatharku erichalai undu pannum acting.
for somepeople mostly our oppenent side rasigargal gave too much of importance to this type of actings.

vasudevan31355
2nd August 2014, 07:50 AM
பீ.வசந்தா

ஆசை வந்த பின்னே அருகில் வந்த பெண்ணே

வாடி தோழி கதாநாயகி மனதுக்கு சுகம்தானா

பொட்டு வைத்த முகமோ

திருமகள் தேடி வந்தாள்

இன்று முதல் செல்வமிது என் அழகு தெய்வமிது

பொன்னான உள்ளம் உன்னோடு இருக்க

இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு

திருவாளர் செல்வியோ நான் தேடிய தலைவியோ

ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்

தங்க வெண்ணிலா வா

முத்து சரம் சூடி வரும் வள்ளி பொண்ணுக்கு

தம் தன தம் தன தாளம் வரும்



ஜேசுதாசுடன் இணைந்து பாடுபவர் வசந்தா. அருகில் ம்யூசிக் டைரக்டர் தேவராஜன்.

http://www.thehindu.com/multimedia/dynamic/00764/26TVFR_JOHNSON1_764379g.jpg

இன்னும் சில அருமையான பாடல்கள்.

பொங்குதே புன்னகை... போதுமா புன்னகை

நேற்று வரை விண்ணில் இருந்தாளோ

எல்லோர்க்கும் வேண்டும் நல்ல மனது

ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி

ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்

மணிவிளக்கே மாந்தளிரே

vasudevan31355
2nd August 2014, 07:58 AM
வினோத் சார்,

அசத்தலான 'செந்தாமரை'க்கு நன்றி!

Gopal.s
2nd August 2014, 08:36 AM
Thanks Vasu.

Richardsof
2nd August 2014, 08:39 AM
இனிய நண்பர்கள் திரு ராகவேந்திரன் / திரு வாசு சார் .

உங்களின் அன்பான பாராட்டுகளுக்கு நன்றி .
1963 சினி டைரியில் வெளிவந்த நடிகர் திலத்தை பற்றிய ஒரு சிறு குறிப்பு.
http://i62.tinypic.com/30ncjdl.jpg

Richardsof
2nd August 2014, 09:04 AM
விழிகளுக்கும் செவிகளுக்கும் விருந்து படைத்த பாடல் .

மெல்லிசை மன்னரின் அட்டகாசமான இசையில் பாடகர் திலகம் குரலில் மக்கள் திலகத்தின்

சிறப்பான நடன பாடல் .
http://youtu.be/IACqSG0qUgg

Gopal.s
2nd August 2014, 09:59 AM
எனதருமை பாடகர் பீ.பீ.ஸ்ரீநிவாஸ் ,நடிகர்திலகத்திற்கு பாடிய ஒரே டூயட்.குறிஞ்சி மலர் போல ,நினைவில் தங்கும். நான் சொல்லும் ரகசியம் படத்தில்.வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அடுத்து வந்ததாலோ என்னவோ,ஜி.ராமநாதனின் இன்பம் பொங்கும் சாயலில் வந்த பாடல் கண்டேனே உன்னை கண்ணாலே.
இந்த படத்தில் ஹீரோ ரிக்ஷாகாரன் கனவு காணுவதாய் வருவதால் fantacy & realism சரிபாதியாய் கலந்த உடைகள்,அரங்க அமைப்பு.

பீ.பீ.ஸ்ரீநிவாஸ் தன்னுடைய வழக்கமான பிட்ச் இல் இருந்து சிவாஜிக்காக ஒரு படி மேலேற ,சிவாஜி ஏ.எம்.ராஜா,எஸ்.பீ.பீ.,ஜேசுதாஸ் இவர்களுக்கு ,இவர்கள் குரலுக்காக மாற்றி அட்ஜஸ்ட் செய்து ,body language ,வாயசைப்பு,முகபாவம் எல்லாவற்றிலும் தத்ரூபமாய் குரலின் பிரதிபலிப்பை கொண்டு வருவார். அஞ்சலி இந்த காட்சியில் அழகு ,சிவாஜியுடன் மிக இசைவாக இருக்கும்.(சிவாஜி ,நடிகைகளுக்கும் அவர்கள் இயல்பு படி விட்டு,தான் வித்யாசபடுத்தி இணைவார்,இசைவார்)

அந்த பாக்கெட் இல் கை விட்டு ,அடக்கி வாசிக்கும் வாயசைப்பு.ஹா ஹா என்று தொப்பி கழட்டும் ஸ்டைல்,நிலவென்று நீயே உனதல்லி நானே என்ற வரிகளில் ஆ ஆ ஆ என்று ஆமோதிக்கும் ஸ்டைல்,எனதாசை மானே என்று துள்ளி அருகில் விழும் துரு துரு ஸ்டைல் ,என் பிரியமான டூயட்.

பீ.பீ.எஸ் இதை பற்றி பத்து நிமிடம் சிலாகித்தார்.

https://www.youtube.com/watch?v=WEHpektZFc0

vasudevan31355
2nd August 2014, 09:59 AM
கோ,

வெறுப்பேத்தி உசுப்பேற்றதீர்கள்.

என் டிவிடியில் இருந்து அந்த ஸ்பெஷல் போஸ்கள். (உங்களுக்காக)

'ஆண்மை அழகன்' காத்தவராயனில்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_01_4VOB_000387749.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_01_4VOB_000387749.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_01_4VOB_000432729.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_01_4VOB_000432729.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_01_4VOB_000481357.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_01_4VOB_000481357.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_01_4VOB_000472399.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_01_4VOB_000472399.jpg.html)

Gopal.s
2nd August 2014, 10:00 AM
அன்னையின் ஆணை -சிவாஜி கோடீஸ்வரன், மணமகன் தேவை படங்களில் கோடி காட்டி இருந்தாலும் ,தன்னுடைய நடிப்பின் பாணியை முற்றிலும் வேறு திசையில் மேற்கு நோக்கி திருப்பிய ஆரம்ப படம் அன்னையின் ஆணை.

அதே போல சிவாஜி-சாவித்திரி இணை ஆரம்ப படங்களான (இறுதி 50 களின்) அமர தீபம்,வணங்காமுடி,அன்னையின் ஆணை ,காத்தவராயன் படங்களில் அவ்வளவு அழகாக வந்திருக்கும். என்ன ஒரு கெமிஸ்ட்ரி இந்த திலகங்களிடையே. அவ்வளவு அழகு ஜோடி.
பாச மலர் வந்து புரட்டி போட்டு விட்டது.

இந்த பாடல் கதாநாயகனின் கனவு. fantasy கலந்த செட்,உடைகள் எனினும் மிக மிக அழகுணர்ச்சியுடன் வடிவமைக்க பட்டிருக்கும். ஆண் -பெண் உடையமைப்பில் ஒத்திசைவு அபாரம். திராவிட மன்மதன் இளமையுடன் ஆணழகின் இலக்கணமாக ,துறு துறு வென்று மனதை அள்ளி விடுவார்.
நடன ஒத்திசைவு (rhythm ),அமைப்பு (choreography ),நளினம் (Grace ),ஸ்டைல் (style )வெளியீடு (execution ) எல்லாவற்றிலும் அப்படி ஒரு முழுமை. நடிகர்திலகம் முற்றிலும் புது பாணி கையாண்ட ஆரம்ப படம்.

கனியே உன்னாசை போலே, மலர்ந்தாடும் இன்ப சோலை மனம் மகிழும் பொன்னான வேளை ,அழகாய் நின்றாடும் மானே ,ஓஹோஹோ அமுதே எந்தன் வாழ்வுதனிலே வரிகளில் தலைவரை கண் கொட்டாமல் கவனியுங்கள்.இந்த இடத்தில் ஒரு ஸ்டெப் எடுப்பது போல நிறுத்தி பிறகு வருவதை பாருங்கள். ஸ்டைல்
ஆனாலும் சரி ,cue மிஸ் பண்ணி சமாளித்தாலும் (படசுருள்
வீணாகாமல்)இரண்டுமே ஒரு சாதனை நாயகனை பிரித்து காட்டும் அதிசயம்.

https://www.youtube.com/watch?v=Mtslsb4wJkY

வாசுவின் ஸ்பெஷல் ஆன காத்தவராயனில் சிவாஜி-சாவித்திரி அழகு இணையின் நிறைவேறுமோ எண்ணம்.ஜி.ராமநாதன் இசையில் டி.எம்.எஸ்-ஜிக்கி இணையில் .

கிளி ,நிலவொளியில் நடிகர்திலகமாகும் அந்த எனதாசை வனிதாமணி
கணத்தை தவற விடாமல், அந்த சைடு போஸில் ஜொலிப்பை ,கண் கொட்டாமல் பாருங்கள். இந்த ஸ்டில் மிகவும் பிரபலம்.சுவை கண்டால் மீறி இங்கே ஓடுவார் வரிகளிலும் அவ்வளவு அழகு. பாருங்க,பாருங்க,பார்த்து கிட்டே இருங்க.


https://www.youtube.com/watch?v=uAPRrWJDHMs

Subramaniam Ramajayam
2nd August 2014, 10:01 AM
RAGHAVENDRAN MURALI SIRS AND PARTICIPANTS.
my heartiest congradulations for the proramme schduled about NADIGARTHILAGAM. My request is try to bring out unknown sadhanaigal and matters not widely discussed about NT by the general public and fans to some extent so that MORE ABOUT NT can be understood by the people. hope all of you will focus on these points. ALL THE VERY BEST.
VALGA VALARGA NT FAME AND GLORY.

vasudevan31355
2nd August 2014, 10:52 AM
இன்றைய ஸ்பெஷல் (44)

இன்று ஒரு அருமையான காமெடிப் பாடலை இன்றைய ஸ்பெஷலாகத் தருகிறேன். அப்போதைய ஹிட். இப்போது மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்வோம்.

http://www.inbaminge.com/t/m/Manam%20Oru%20Kurangu/folder.jpg

'மனம் ஒரு குரங்கு' படத்தில் ராட்சஸி, சீர்காழி கலக்கி எடுக்கும் பாடல்.

http://i.ytimg.com/vi/WB4p7JKH5nU/hqdefault.jpg

சோவுக்கு ஒரு காமெடி டூயட். அப்போதைய சினிமாப் படங்களின் பெயர்களை பயன்படுத்தி காமெடிக் காதலர்கள் பாடும் பாடல். சுத்த தமிழிலும், கர்னாடக சங்கீதத்திலும், பக்திப் பாடல்களிலும் பட்டை கிளப்பும் சீர்காழி ஆங்கிலத்தில் பாடும் போதே தானாக வந்து விடுகிறது சிரிப்பு நமக்கு. ஈஸ்வரியின் ஆங்கில உச்சரிப்பு தமிழையும் விஞ்சுகிறது. டிபி.ராமச்சந்திரன் அவர்கள் இசை (இவர்தானே இசை?) மேலை நாட்டு இசையைத் தழுவி இருந்தாலும் பியூடிபுல். சோ திரைக்கதை வசனம் எழுதிய படம் இது. வி.டி.அரசு தயாரித்து ஏ.டி.கிருஷ்ணமூர்த்தி இயக்கி வெளிவந்த படம்.

Beautiful
marvelous
Excellent

Beautiful marvelous Excellent
very very Excellent
நீ பிறந்திருக்க வேண்டியது england

Beautiful marvelous Excellent
very very Excellent
நாம் பிறந்திருக்க வேண்டியது england

இளமைப் பூங்கா அள்ளித் தந்த
நானும் ஒரு பெண்
நீ தட்டிக் கழித்த பேர்களிலே நான்
ஆயிரத்தில் ஒருவன்.

இளமைப் பூங்கா அள்ளித்
தந்த நானும் ஒரு பெண்
நீ தட்டிக் கழித்த பேர்களிலே
நான் ஆயிரத்தில் ஒருவன்.

இன்பக் கடலில் நீந்திட வந்த
படகோட்டி
இன்பக் கடலில் நீந்திட வந்த
படகோட்டி

இனி என்றும் வாழ்வில் நீயே எனக்கு
வழிகாட்டி

Beautiful

Excellent

கல்யாணம் என்ற ceremony
அது காதலர்க்கு தரும் company
கல்யாணம் என்ற ceremony
அது காதலர்க்கு தரும் company

குழந்தை குட்டிகள் too many
பெறக் கூடாது அம்மணி
குழந்தை குட்டிகள் too many
பெறக் கூடாது அம்மணி
அம்மணி அம்மணி

ஓஹ்ஹஹோஹ்ஹோ (ஈஸ்வரியின் ஒரு வினாடி ஓஹோ)

Beautiful
Beautiful
marvelous
marvelous
Excellent
very very Excellent

நாம் பிறந்திருக்க வேண்டியது england

taxi meter ஐப் போல ஓடுது இருவர் உள்ளம்
அதைத் தடுத்து நிறுத்த கட்டிடுவோம் நம்
நெஞ்சில் ஓர் ஆலயம்
நெஞ்சில் ஓர் ஆலயம்
நெஞ்சில் ஓர் ஆலயம்

வடிகட்டி உன்னை தேர்ந்தெடுத்து
நான் போட்டேன் பூமாலை
வடிகட்டி உன்னை தேர்ந்தெடுத்து
நான் போட்டேன் பூமாலை

இளமங்கை உனக்கு என்னை இதுவரை
காதலிக்க நேரமில்லை
காதலிக்க நேரமில்லை

நீ கைகொடுத்த தெய்வம்
என்னைத் தேடி வந்த செல்வம்
நீ கைகொடுத்த தெய்வம்
என்னைத் தேடி வந்த செல்வம்

லாலலா லலலலாலாலா
லாலலா லலலலாலாலா
ஹோஹஹோ ஹோஹஹோஹோ ஹோ

Beautiful marvelous Excellent
very very Excellent
நாம் பிறந்திருக்க வேண்டியது england


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=wmW_iv0dbH4

Gopal.s
2nd August 2014, 11:14 AM
இன்றைய ஸ்பெஷல் (44)

இன்று ஒரு அருமையான காமெடிப் பாடலை இன்றைய ஸ்பெஷலாகத் தருகிறேன். அப்போதைய ஹிட். இப்போது மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்வோம்.

http://www.inbaminge.com/t/m/Manam%20Oru%20Kurangu/folder.jpg

'மனம் ஒரு குரங்கு' படத்தில் ராட்சஸி, சீர்காழி கலக்கி எடுக்கும் பாடல்.


சோவுக்கு ஒரு காமெடி டூயட். அப்போதைய சினிமாப் படங்களின் பெயர்களை பயன்படுத்தி காமெடிக் காதலர்கள் பாடும் பாடல். சுத்த தமிழிலும், கர்னாடக சங்கீதத்திலும், பக்திப் பாடல்களிலும் பட்டை கிளப்பும் சீர்காழி ஆங்கிலத்தில் பாடும் போதே தானாக வந்து விடுகிறது சிரிப்பு நமக்கு. ஈஸ்வரியின் ஆங்கில உச்சரிப்பு தமிழையும் விஞ்சுகிறது. டிபி.ராமச்சந்திரன் அவர்கள் இசை (இவர்தானே இசை?) மேலை நாட்டு இசையைத் தழுவி இருந்தாலும் பியூடிபுல். சோ திரைக்கதை வசனம் எழுதிய படம் இது. வி.டி.அரசு தயாரித்து ஏ.டி.கிருஷ்ணமூர்த்தி இயக்கி வெளிவந்த படம்.



மனம் ஒரு குரங்கு வித்யாசமான,துணிச்சலான முயற்சி. (ஹாலிவூட் தழுவல்). சி.ராமசந்திரா அத்தனை பாடல்களும் அருமை.

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு -டி.எம்.எஸ்.

போகிறேன் புதிய உலகம் போகிறேன்- டி.எம்.எஸ்-பீ.எஸ்.

தாங்கள் கொடுத்துள்ள beautiful marvellous -சீர்காழி-ராக்ஷஷி .

நன்றி வாசு.

mr_karthik
2nd August 2014, 11:15 AM
டியர் வாசு சார்,

இன்றைய ஸ்பெஷல் சீரீஸில் முந்தாநாள் நீங்கள் தந்த மோகம் முப்பது வருஷம் படத்திலிருந்து 'சங்கீதம் ராகங்கள் இல்லாமலா' பாடலின் விளக்கமும் ஆய்வும் மிகச்சிறப்பு.

ஆனந்த விகடனில் மணியன் இக்கதையை தொடராக எழுதியபோதே படித்திருக்கிறேன். கொஞ்சம் விவகாரமான கதைதான். முள்ளில் விழுந்த சேலைபோல கையாள வேண்டிய கதை. எழுதும்போது எப்படி வேண்டுமானாலும் எழுதிவிட முடியும். ஆனால் படமாக எடுக்கும்போது எப்படி வரப்போகிறது என்பதைக்காண ஆவலுடன் படத்துக்குச் சென்றேன். கொஞ்சம் அங்கே இங்கே மாற்றியிருந்தாலும் கதையை மிகவும் கவனமாகவே கையாண்டிருந்தனர். அதிலும் கமல் அப்போது பிளேபாய் ரோல்களாக பின்னிக்கொண்டிருந்த நேரம் (உணர்ச்சிகள், சொல்லத்தான் நினைக்கிறேன், மேலும் இதே சாயலில் சில மலையாளப்படங்கள்).

மணியன் 70-களில் அணிமாறிச்சென்று நடிகர்திலகத்தின் ரசிகர்களின் அதிருப்தியைச் சம்பாதிக்கும் முன், 60-களின் இறுதியில் அவருடைய கதைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். முதன்முதலாக கண்ணதாசன் எழுதிய இதயவீணை தூங்கும்போது என்ற பாடல் வரியிலிருந்துதான் தன் இதயவீணை கதையின் தலைப்பை தேர்ந்தெடுத்தார். ஒவ்வொரு வாரமும் அக்கதையின் அத்தியாய எண் போடும் இடத்தில் சரோஜாதேவி மடியில் வீணையுடன் அமர்ந்திருக்கும் ஸ்டில் இடம்பெற்றிருக்கும். (ஆனந்த விகடனில் வந்த தொடர்கதையின் பைண்ட் செய்யப்பட வடிவம் இருந்தால் இன்றும் பார்க்கலாம்). ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தலைப்பாக கண்ணதாசனின் பாடல் வரிகளைக் கொடுத்திருப்பார். இவையெல்லாம் மணியனின் கதைகளை விரும்பி படிக்கவைத்த கூடுதல் காரணங்கள்.

நடிகர்திலகத்தின் புதிய பறவையில் இடம்பெற்ற பாடல் வரிகளை தலைப்பாக வைத்தே நான்கு தொடர்நாவல்கள் எழுதினர். அவை...

'உன்னை ஒன்று கேட்பேன்'
'உண்மை சொல்ல வேண்டும்'
'என்னைப்பாடச் சொன்னால்'
'என்ன பாடத்தோன்றும்'

இதில் 'உண்மை சொல்ல வேண்டும்' என்ற தொடர்கதை துவங்கிய அதே விகடன் இதழில்தான் நடிகர்திலகம் எழுதிய 'அந்நிய மண்ணில் சிவந்தமண்' என்ற பயணக்கட்டுரைத் தொடரும் துவங்கியது.

இவர் எழுதிய கதைகளில் இதயவீணை (அதே பெயரில்), இலவுகாத்த கிளியே (சொல்லத்தான் நினைக்கிறேன்), லவ் பேர்ட்ஸ் (வயசுப்பொண்ணு) மோகம் முப்பது வருஷம் (அதே பெயரில்) திரைப்படங்களாக வந்தன. 'காதல் காதல் காதல்' படமும் மணியன் எழுதிய கதைதான்.

எந்த மணியனின் எழுத்துக்களை விரும்பிப் படித்தோமோ, அதே மணியனின் இதயம் பேசுகிறது பத்திரிகை இதழ்களை நாங்களே சென்னையின் பிரதான சாலையில் போட்டுக்கொளுத்தி போராட்டம் நடத்தும் அளவுக்கு மணியனின் பிற்கால நடவடிக்கைகள் நடிகர்திலகத்துக்கு எதிராக மாறிப்போயின.

ஸாரி..., உங்கள் பாடல் பதிவுக்கு பதிலளிக்கத்துவங்கி விஷயம் வேறெங்கோ திரும்பிவிட்டது...

vasudevan31355
2nd August 2014, 11:40 AM
நன்றி கார்த்திக் சார்.

நடிகரில் அசோகன்

பத்திரிக்கையாளர்களில் மணியன் (நல்ல எழுத்தாளராய் இருந்தும் கூட)

நடிகையரில் விஜயகுமாரி

குமட்டும்.

vasudevan31355
2nd August 2014, 11:43 AM
//(ஆனந்த விகடனில் வந்த தொடர்கதையின் பைண்ட் செய்யப்பட வடிவம் இருந்தால் இன்றும் பார்க்கலாம்).//

அம்மா வைத்திருந்தார்கள். நானே பல தடவை பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது எங்கே?!!!!!!

vasudevan31355
2nd August 2014, 11:57 AM
குப்பத்து கே.ஆர்.விஜயா நடிகையானவுடன் ஒரு பாடலை ஷூட்டிங் எடுப்பது போன்ற காட்சி.

அருப்புக் கோட்டை மச்சான்
ஆசை என் மேல் வச்சான்

என்ற ஒரு பாடலும் ராட்சசி குரலில் 'மனம் ஒரு குரங்கி'ல் உண்டு.

எந்தப் பாட்டிலும் இல்லாத விசேஷம் இதில் உண்டு.

புன்னகை அரசி கவர்ச்சி விருந்து படைப்பார் லோ-ஹிப்பில்.

mr_karthik
2nd August 2014, 12:14 PM
டியர் வாசு சார்,

இன்றைய ஸ்பெஷல் சீரீஸில் இன்று நீங்கள் வழங்கியிருக்கும் பாடல் உண்மையிலேயே 'பியூட்டிபுல் மார்வெலஸ்'. எதிர்பாராத நேரங்களில் இப்படி திடீர் திடீரென இன்ப அதிர்ச்சித் தாக்குதல்கள் நடத்துகிறீர்கள். ஏற்கனவே பலமுறை கேட்ட பாடலென்றாலும், ஒரு ஸ்பெஷல் தருணம் நினைவுக்கு வருகிறது.

பத்ரகாளி படம் பார்ப்பதற்காக வண்ணாரப்பேட்டை பாண்டியன் தியேட்டரின் எதிரே ஒரு டீக்கடை அருகில் நின்றுகொண்டிருந்தோம். வானொலியில் ஞாயிற்றுக்கிழமை மாலை உங்கள் விருப்பம் நிகழ்ச்சி, சீர்காழியாரின் சிறப்பு தேன்கிண்ணமாக ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது. அவர், தான் பாடிய சிறந்த பாடல்களாக, விளக்கங்களுடன் கொடுத்துக்கொண்டிருந்தார். 'உள்ளத்தில் நல்ல உள்ளம்', 'உழைப்பதிலா', 'எங்கிருந்தோ வந்தான்' போன்ற பாடல்களை தந்தவர், 'இதுவரை ரொம்ப சோகமான, அல்லது சீரியஸான பாட்டுக்களாக தந்துவிட்டேன். அதிலிருந்து உங்களை மாற்ற நானும் எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடிய ஒரு இங்கிலீஷ் பாட்டைக் கேப்போமா?' என்று சொல்லிவிட்டு இந்த 'பியூட்டிபுல் மார்வெலஸ்' பாடலை ஒலிபரப்பினார். இப்போது (மனம் ஒரு குரங்கு படத்தில் இடம்பெற்ற) இந்தப்பாடலை எங்கே கேட்டாலும் அன்று கேட்ட அந்த அனுபவம் நினைவுக்கு வரும்.

'மனம் ஒரு குரங்கு' சோ எழுதிய நாவல். ஒருமுறை ரயிலில் மதுரை செல்ல எழும்பூர் ரயில்நிலையம் வந்த சோ அவர்கள், பயணத்தின்போது படிக்க எதுவும் எடுத்துவரவில்லையே என்ற நினைப்புடன் அங்கிருந்த புத்தகக் கடைக்கு சென்று சில புத்தகங்களை பார்வையிட்டபோது, கடைக்காரர் ஒரு புத்தகத்தை எடுத்துக்காட்டியிருக்கிறார். அதைப்பார்த்ததும் 'இது நல்லாயிருக்காது' என்று ரிஜெக்ட் செய்திருக்கிறார். சோ அவர்களால் ரிஜெக்ட் செய்யப்பட கதை வேறெதுவுமில்லை. அவரே எழுதிய 'மனம் ஒரு குரங்கு'தான்...

vasudevan31355
2nd August 2014, 12:39 PM
http://www.teamfours.com/library/books/images/32968f.jpg


தூள் கார்த்திக் சார்.

எனக்கு beautiful சாங் அவ்ளோவ் பிடிக்கும்.

சோவின் ரயில்வே ஸ்டேஷன் குரங்குத்தனத்தை நானும் படித்த ஞாபகம் உங்கள் பதிவைக் கண்டதும் வருகிறது.

இதை மாதிரி விஷயங்களை நினைவு படுத்த எங்கள் கார்த்திக் சாரால் மட்டுமே முடியும். ஒரு விஷயத்தை தொடக்கி வைத்தால் அதை பூரணமாக முடித்து வைக்க (அதுவும் சுவையோடு) உங்களால்தான் முடியும்.

gkrishna
2nd August 2014, 12:53 PM
மனம் ஒரு குரங்கு ! எத்தனை பொருத்தமான, சத்தியமான வார்த்தை. குரங்கு என்பது ஏளனத்துக்காக சொல்லப்பட்டதல்ல. அதன் செயலுக்காகவே சொல்லப்பட்டது. இன்றைக்கு ஒன்றை நினைக்கும் மனது அதனையே நாளை மறுக்கிறது. மீண்டும் பிறகு ஏற்கிறது. எனவே மனத்தை வைத்து நான் செயல்களை ஏற்பதில்லை. இன்றைக்கு ஒருவர் பிடிக்காமல் போகலாம். ஆனால் மீண்டும் மனம் எப்போதாவது அவரை நாடி விழையும். இப்போது நாம் அவரை பகைத்து கொண்டால், அப்போது அவருடன் நாம் பேச மனம் இடம் கொடாது. நம்முடைய ( ego) "தான்" என்ற உணர்வு தடுக்கின்றது. ஆனால் அவருடன் பேசி உறவாடுவதன் மூலம் கிடைக்கக் கூடிய நற்பலன்கள் பயனற்று விடுகின்றன. மனம் கிடந்து அடித்துக் கொள்கிறது. தான் முன்பு செய்த அவசர செயலை எண்ணி தன்னை வருத்தி நொந்து கொள்கிறது. இப்போது நாமாக போனால் அவமானப் படுத்தப் படுவோம் என்று அஞ்சுகின்றது. அமைதியில்லாமல் போகின்றது. எல்லாவற்றுக்கும் காரணம் மனம் அலை பாய்வது தான். மனம் எப்போதும் ஒருவருடன் பகைமை உறவாடுவதில்லை. சில சமயம் நண்பரும் எரிச்சலூட்டுவதுண்டு. என்னை எரிச்சளூட்டுவதர்க்குரிய உரிமையையும் நானே அவர்களுக்கு அளித்தேன் என்ற உண்மையையும் அதனால் அவர்களுக்கு கிடைக்கும் சிறிய சந்தோஷத்தையும் உணரக் கூடிய மனப் பக்குவம் எனக்கு இன்னும் வளர வேண்டும்.

அமைதியில் / தனிமையில் மனம் சிந்திக்கின்றது. தனது பழைய செயலை நினைத்து அலசியிருக்கிறது. இது அனைவருக்கும் தேவையான ஒன்று. கடந்ததை எண்ணி வருத்தப் படாதே என்பர். ஆனால் கடந்த பாதையே வாழ்வில் நமக்கு படிப்பினை கற்று தர போகிறது. இனி கடக்கப் போவதற்கு அதுவே வழி காட்டி.

அழகு முகத்தில் நிச்சயமாக இல்லை. மனத்தில் தான் இருக்கிறது. இதனை சிறிய வயதிலேயே அறிந்து கொண்டதினால் தானோ என்னவோ, என்னால் காதல் போன்றவற்றை முகத்தையும் உடலையும் வைத்து தீர்மானிக்க முடியவில்லை. இன்று என்னுடன் பேசும் அழகான பெண் என்னை அவமதித்து வார்த்தைகளால் நோகடிக்கும் போது அவளது அழகான முகம் மறைந்து மனத்தின் குரூரம் வெளிப்படுகிறது. இதனை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன்.

ஆணோ பெண்ணோ அவர்களது அழகு நம்முடைய மனதில் தான் இருக்கிறது. நமது மனதுக்கு அவர்களை பிடித்துப் போனால் அவர்கள் தான் அழகின் இலக்கணம் என்கிறோம். பிடிக்காவிடில் தூக்கி எறிகிறோம். கொஞ்சம் யோசித்துப் பார்க்கும் போது எல்லோருமே அழகாயிருப்பதாகப் படுகிறது. ஆனால் எல்லாருமே எல்லா சமயங்களிலும் அழகாயிருப்பதில்லை. மனமே முன்னின்று ஒரு செயலை செய்யும் போது மனிதர்கள் அழகனவர்களாகத் தெரிகின்றனர். நமது மனதுக்கு இதமளிப்பவர்கள் , நம்முடைய குறைகளை காது குடுத்துக் கேட்பவர்கள், நமக்கு ஆறுதல் கூறுபவர்கள் எல்லோரும் அந்தந்த சமயங்களில் அழகாக தெரிகிறார்கள். இது சுயநலமாகப் படலாம். ஆனால் சற்று யோசித்து பாருங்கள். பெற்ற தாய்க்கு தனக்குப் பிறந்ததெல்லாம் அழகு தான். அவளால் அவைல்களை வேறு படுத்த முடியாது. எல்லாவற்றிலும் தன்னழகு சேர்ந்திருப்பதாக அவள் நினைக்கிறாள். அவள் மனம் அப்படி. பிள்ளைகள் வயதான காலத்திலும் தங்களது தாயின் அழகை கண்டு சந்தோஷமடைகின்றன. அழகுக்கு வயதில்லை. அதற்கு வரம்பில்லை. ஆனால் ஆசைக்கு தான் வரம்பு உண்டு. ஆசையும் மனதில் தான் உண்டாகிறது.

குழந்தை ஒன்று பொம்மை வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது நியாயப்படுத்தப்படுகிறது. இளமையில் பெண்ணையும் திருமணத்தையும் நாடினால் அதுவும் நியாயப் படுத்தப் படுகிறது. ஆனால் 20 வயது இளைஞன் விளையாட பொம்மை கேட்டால் உலகம் அவனை கேலி செய்யும். வயதான மனிதன் பெண்களை நாடி சுற்றினால் உலகம் அவனை பழிக்கும். ஆசையின் வரம்பு வயதுக்கேட்ட்றபடி மாறுபடுகிறது. ஆனால் அழகுக்கு வரம்பில்லை. அது எங்கும் இருக்கிறது. ஆசை, அழகு இரண்டுமே உண்டாவது மனதில் தான் என்றாலும் அவை வேறுபடுகின்றன.

இருந்தாலும், அழகான பொருளை அடைய ஆசையும், ஆசை காரணமாக அது மேலும் அழகாகவும் தெரிகிறது.

உற்றுப் பாருங்கள். சிறு எறும்பு நகர்வது கூட அழகாகத் தான் தெரியும். எல்லாமே அழகாக தெரிபவனுக்கு கவலைகள் குறைகின்றன. மனம் அமைதி அதிகப் படுகின்றது. தனிமை குறைகின்றது. நட்பு வலுக்கின்றது. பிறர் செய்யும் தவறில் அவர்களுக்கு பாடம் உண்டாகட்டும், நாம் உணர்ந்தது போல அவர்களும் அழகை அனுபவித்து அறியட்டும் என்ற எண்ணம் வளர்கிறது.

(நண்பர் ஒருவரின் வலை பூவில் படித்தது .பகிர்ந்து கொள்ள ஆசை )

gkrishna
2nd August 2014, 12:57 PM
https://koottanchoru.files.wordpress.com/2009/01/choramaswamy.jpg?w=150&h=150
சோவை பற்றி எழுதுவதாக முதலில் ஐடியா இல்லை. கொற்கை என்பவர் நான் ராஜாஜியை பற்றி எழுதியதும் அவர் “நீ பிராமணன், பிராமணன் பற்றிதான் எழுதுவாய்” என்ற ரேஞ்சில் ஒரு கமென்ட் விட்டார். அந்த கமென்ட் கிளப்பிய கடுப்பில்தான் – “பிராமணன் பற்றி எழுதுவது கொலைக் குற்றமா?” – இதை எழுதுகிறேன்.
சோவுக்கு பல முகங்கள் உண்டு. வக்கீல் (வெற்றி அடைந்தாரா தெரியாது), நாடக ஆசிரியர், நாடக, திரைப்பட நடிகர், அரசியல் இதழியலாளர் என்று.

வக்கீலாக என்ன செய்தாரோ எனக்கு தெரியாது.

அவர் அவ்வளவு நல்ல நடிகர் அல்லர். அவர் நன்றாக நடித்ததாக எனக்கு ஒரு திரைப்படம் கூட நினைவில்லை. ஆனால் கொஞ்ச நாள் அவர்தான் டாப் காமெடியன் ஆக இருந்தார். அவரது காமெடியும் வெகு சில படங்களிலேயே சோபித்தது. (வா வாத்யாரே ஊட்டாண்டே என்ன படம்? இடம் பெற்ற பொம்மலாட்டம், தேன் மழை) அரசியல் கலந்த காமெடி சில படங்களில் நன்றாக வந்தது (துக்ளக், அன்னபூரணி)

அவரது நாடகங்களை நான் பார்த்ததை விட படித்ததுதான் அதிகம். அவரது நாடகங்களில் நல்ல கதை அமைவது கஷ்டம். உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை, துக்ளக், சாத்திரம் சொன்னதில்லை மாதிரி சில நாடகங்களில்தான் கோர்வையான கதை அமைந்திருக்கும். அவரது நாடகங்களின் ஃபார்முலா ரொம்ப சிம்பிள். ஏதாவது ஒரு பிரச்சினை – ஜாதி, விபசாரம், உண்மை vs. பண பலம், லஞ்சம் என்று ஏதாவது ஒரு விஷயம் – அதை சுற்றி நிறைய அன்றைய அரசியல் பற்றிய அடிவெட்டுகள், கெக்கே பிக்கே ஜோக்குகள் இவற்றை வைத்து ஒரு நாடகம் பின்னி விடுவார். அவரது பாணி ஏறக்குறைய எம்.ஆர். ராதா பாணி. very topical comments. எழுத ரொம்ப அலட்டிக்கொள்வதில்லை. சில சமயம் Pygmalion, Tale of Two Cities போன்ற புகழ் பெற்ற இலக்கியங்களை தழுவியும் மனம் ஒரு குரங்கு, வந்தே மாதரம் போன்ற நாடகங்களை எழுதி இருக்கிறார். சில சமயம் ப்ளாட்டே இல்லாமல் சும்மா அரசியல் கமெண்ட்டுகளை வைத்து வாஷிங்டனில் நல்லதம்பி, கூவம் நதிக் கரையினிலே, சர்க்கார் புகுந்த வீடு, என்று தணியும் இந்த சுதந்திர தாகம் போன்ற நாவல்கள் மற்றும் நாடகங்களை எழுதி இருக்கிறார்.

அவரை கிரேக்க நாடக ஆசிரியரான அரிஸ்டோஃபனசுடன் ஒப்பிடலாம். அரசியல், சமூகம் பற்றிய கமெண்ட்கள்தான் அவருடைய ஸ்பெஷாலிடி. இருவரிடமும் ஒரே ப்ராப்ளம். அந்த கால கட்டத்தில் வாசிக்காதவர்களுக்கு அவர் எதை கிண்டல் செய்கிறார் என்று புரிவது கஷ்டம். அரிஸ்டோஃபனஸ் அன்றைய கிரேக்க அரசியல்வாதியான க்ளியானை கிண்டல் செய்வதை நாம் இன்று எப்படி முழுதாக புரிந்து கொள்ள முடியும்? சோவுக்கு உதாரணமாக ஒன்று – சர்க்கார் புகுந்த வீடு என்ற நாவலில் வரும் முக்கிய பாத்திரங்களான ரகுநாத ஐயர், கந்தசாமி இருவருக்கும் மளிகைக் கடையிலும் பால்காரரிடமும் கடன் தொந்தரவு. அவர்கள் நாராயணசாமி நாயுடுவிடம் ஆலோசனை கேட்கப் போவார்கள். அவர் “பொதுவா வாங்கின கடனை திருப்பி கொடுக்கக் கூடாது என்பதுதான் நம்ம கொள்கை” என்பார். இதற்கு நீங்கள் சிரித்தீர்கள் என்றால் எண்பதுகளில் நாயுடு நடத்திய போராட்டங்கள் உங்களுக்கு நினைவிருக்கிறது என்று அர்த்தம்.

அவர் ஷேக்ஸ்பியரோ, இப்சனோ இல்லை. ஆனால் அவருடைய எழுத்துக்கள் சிரிக்க வைப்பவை. சில சமயங்களில் நாடகம் அருமையாக வந்து விழுவதும் உண்டு. சாத்திரம் சொன்னதில்லை, துக்ளக், உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை, சர்க்கார் புகுந்த வீடு, கூவம் நதிக் கரையினிலே ஆகியவை படிக்க வேண்டியவை.

அவருடைய இதழியல் பணி குறிப்பிடப்பட வேண்டிய்து. துக்ளக் நடத்த முதல் ஐந்து ஆறு வருஷங்களாவது மிகுந்த துணிச்சல் வேண்டும். கலைஞர் அவருக்கு பல நெருக்கடிகளை ஏற்படுத்தினார். நெருக்கடி நிலையின் போது அவர் ஜெயிலுக்கு போய் அடி வாங்காதது ஆச்சரியம்தான். He made Thuglaq an institution! அவருக்கு பிறகு துக்ளக் வரப்போவதில்லை என்பது வருத்தமாக இருக்கிறது.

அவருடைய அபிப்ராயங்கள் சுலபமாக மாறுவதில்லை. காமராஜின் ஆட்சி பொற்காலம், மொரார்ஜி, சந்திரசேகர் போன்றவர்கள் அப்பழுக்கில்லாதவர்கள், வி.பி. சிங் ஒரு துரோகி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆகியோரை செலுத்துவது தேச பக்தியே, பெண் சுதந்திரம் என்பது பம்மாத்து, நரேந்திர மோடிதான் இன்றைய இந்தியாவின் சிறந்த தலைவர், புலிகள் அயோக்கியர்கள் இந்த மாதிரி பல. அவற்றை நல்ல நகைச்சுவையுடன் வெளிப்படுத்துவார். எழுபதுகளிலிருந்து தொண்ணூறுகள் வரை அவர் நடுநிலை தவறியதில்லை. நடுநிலை என்றால் எல்லா அரசியல் நிகழ்வுகளையும் ஒரே value system வைத்து பார்த்தார். அதனால் எம்ஜிஆர், கலைஞர், இந்திரா, ஜனதா கட்சி ஒருவரையும் விட்டதில்லை. மொரார்ஜி, காமராஜ் மீது அவருக்கு பெரும் மரியாதை இருந்தது, ஆனால் அவர்களது குறைகளையும் சொல்லுவார். ஒண்ணரை பக்க நாளேடுகள் சூப்பர்!

என்றைக்கு பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் சாத்தியக்கூறுகள் அதிகரிக்க ஆரம்பித்தனவோ, அன்றையிலிருந்து அவர் தனது நடுநிலையை தவற விட்டுவிட்டார். அவரது கண்ணோட்டத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நல்லது. அதனால் அவர் பா.ஜ.க.வின் முக்கிய குறையான முஸ்லீம் எதிர்ப்பு என்பதற்கு ஏதாவது சப்பைக்கட்டு கட்டுவார். நரேந்திர மோடி குஜராத்தை ஊழல் அற்ற மாநிலமாக மாற்றி இருக்கிறாராம். அங்கே வளர்ச்சி அதிகமாம். அவரை சாதாரண மனிதனும் சுலபமாக பார்க்கலாமாம். இவை எல்லாம் அங்கே நடந்த படுகொலைகளை நியாயபடுத்த முடியாது. அவரே ஒரு முறை சொன்ன மாதிரி, integrity is more important in a politician than efficiency.

அதே போல்தான் ஜெவும். கலைஞர் ஆட்சிக்கு வந்தால் புலிகளுக்கு ஆதரவு மறைமுகமாக தரப்படும், அது இந்தியாவுக்கு ஆபத்து என்று அவர் உறுதியாக நம்புகிறார். கலைஞருக்கு புலிகளை விட, தமிழர்களை விட பதவி முக்கியம் என்பது அவருக்கு புரியவில்லை. அதனால் ஜெ போன்ற ஒரு மோசமான சர்வாதிகாரி மேல் அவருக்கு ஒரு ஸாஃப்ட் கார்னர் இருக்கிறது.

அவர் நல்ல அறிவாளி. அரசியலில் ஒரு தீர்க்கதரிசி என்றே சொல்லலாம். புலிகளை பற்றி எண்பதுகளில் குறை சொன்ன ஒரே பத்திரிகையாளர் அவர்தான். புலிகள் ராஜீவ்-ஜெயவர்த்தனே உடன்பாட்டை நிறைவேற விடமாட்டார்கள் என்று சரியாக கணித்தார். வி.பி. சிங்கை ஆதரிப்பது ஜனதாவுக்கு தற்கொலைக்கு சமமானது என்று அவர் கணித்தது சரியாக அமைந்தது. சரண் சிங், ராஜ் நாராயண் ஆகியோர் மொரரஜியின் முதுகில் குத்தக்கூடும் என்று சந்தேகப்பட்டார். அப்படியே ஆயிற்று.

மொத்தத்தில் அவர் ஒரு நல்ல நாடக ஆசிரியர். தமிழில் நல்ல நாடக ஆசிரியர்கள் அபூர்வம். அதனால் அவரது நாடக பங்களிப்பு மிக பெரியதாக தெரிகிறது. அவரது நகைச்சுவை அற்புதமானது. கிட்டத்தட்ட இருபத்தைந்து வருஷங்கள் அவர் அரசியல், சமூகம் பற்றி பட்டையை கிளப்பும் நடுநிலையான கமெண்ட்களை போட்டு தாக்கி இருக்கிறார். ஆனால் ஒரு பத்து பதினைந்து வருஷங்களாக அவர் பா.ஜ.க. பக்கம் சாய்ந்துவிட்டார், அதனால் எல்லார் தவறுகளையும் போட்டு கிழிக்காமல், பா.ஜ.க.வுக்கு சப்பைக்கட்டு கட்ட ஆரம்பித்துவிட்டார். தான் நினைப்பதுதான் சரி என்று பிடிவாத குணமும், குதர்க்கம் பேசும் புத்தியும் அவருடைய குறைகள்தாம். அவர் நல்ல நடிகர் இல்லை. நகைச்சுவைக்காகவும், ஒரு நாடக ஆசிரியராகவும், தைரியமான, ஆனால் கடைசி நாட்களில் ஒரு பக்கம் சாய்ந்து விட்ட இதழியலாளர்/அரசியல் விமர்சகராகவும், நினைவு கூறப்பட வேண்டியவர்.

gkrishna
2nd August 2014, 01:09 PM
வாசு சார்
இந்த மனம் ஒரு குரங்கு டைரக்டர் ஏ.டி.கிருஷ்ணமூர்த்தி தானே
நமது அறிவாளி டைரக்டர்

mr_karthik
2nd August 2014, 01:21 PM
தமிழ்த்திரையுலகின் பொற்காலம் (1960 - 1969)

தமிழ்த்திரைப்படங்கள் மகத்தான் சாதனைகள் புரிந்த இந்த காலகட்டத்தில் நடிகர்திலகத்தின் சாதனை பொக்கிஷங்கள்.
-------------------------------------------------------------
வெள்ளிவிழா காவியங்கள்

1) பாவ மன்னிப்பு
2) பாசமலர்
3) திருவிளையாடல்

20 வாரங்களைக் கடந்த படங்கள்

1) படிக்காத மேதை
2) பாலும் பழமும்
3) சரஸ்வதி சபதம்
4) தில்லானா மோகனாம்பாள்
5) சிவந்த மண்

100 நாட்களுக்கு மேல் ஓடியவை...

மருத நாட்டு வீரன்
பார்த்தால் பசிதீரும்
ஆலயமணி
இருவர் உள்ளம்
அன்னை இல்லம்
கர்ணன்
பச்சை விளக்கு
கைகொடுத்த தெய்வம்
புதிய பறவை
நவராத்திரி
சாந்தி
மோட்டார் சுந்தரம் பிள்ளை
கந்தன் கருணை
இருமலர்கள்
ஊட்டிவரை உறவு
கலாட்டா கல்யாணம்
உயர்ந்த மனிதன்
தெய்வமகன்

(திருவருசெல்வர், என்தம்பி, திருடன் ஆகிய படங்கள் 100 நாட்கள் ஓடியதாக சொல்லப்பட்ட போதும் தெளிவான ஆதாரங்கள் இல்லாததால் சேர்க்கப்படவில்லை).

சென்னையில் நான்கு அரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள்...

ஆலயமணி
கைகொடுத்த தெய்வம்
நவராத்திரி
சிவந்த மண்
------------------------------------------------------------
விருதுகளும் பரிசுகளும்

1966-ல் மத்திய அரசின் 'பத்மஸ்ரீ' விருது
1961 மத்திய அரசின் சிறந்த பிராந்திய மொழிப்படம் பாவமன்னிப்பு
1961 மத்திய அரசின் சிறப்பு சான்றிதழ் கப்பலோட்டிய தமிழன்
1968 மத்திய அரசின் சிறந்த பிராந்திய மொழிப்படம் தில்லானா மோகனாம்பாள்
1968 மாநில அரசின் சிறந்த படம் உயர்ந்த மனிதன்
1968 மாநில அரசின் இரண்டாவது சிறந்த படம் தில்லானா
1969 மாநில அரசின் சிறந்த நடிகர் விருது தெய்வமகன்
1963 சிறந்த ஒருமைப்பாட்டுப் படம் ரத்தத்திலகம் (துப்பாக்கி பரிசு)
இவைபோக சினிமா ரசிகர்சங்க விருதுகள், பிலிம்பேர் விருதுகள்.

ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் சிவந்த மண்.

இந்த காலகட்டத்தில் (60-69) வெளியான 'லேண்ட்மார்க்' படங்கள்
75-வது படம் பார்த்தால் பசிதீரும்
100-வது படம் நவராத்திரி
125-வது படம் உயர்ந்த மனிதன்
(அனைத்தும் வெற்றி)

1962-ல் இந்திய கலாசார தூதுவராக அமெரிக்க பயணம். நயாகரா நகரின் கௌரவ மேயராக தங்கச்சாவி பரிசு என்பதோடு அன்றைய மேயர் என்ற முறையில் இரண்டு தீர்மானங்களில் நடிகர்திலகத்தின் கையெழுத்து.

பொற்கால தமிழ் சினிமாவின் பொற்கால சிற்பி நடிகர்திலகம்...

gkrishna
2nd August 2014, 01:50 PM
கார்த்திக் சார்

நடிகர் திலகம் வெற்றி படங்கள் 1960-70 மிக அருமையான தொகுப்பு

vasudevan31355
2nd August 2014, 01:52 PM
மிக்க நன்றி கார்த்திக் சார். நல்ல தகவல்கள்.

//சென்னையில் நான்கு அரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள்...//

தங்களுடைய இந்தப் பதிவிற்கு பொருத்தமாக 'பேசும் படம்' இதழிலிருந்து நமது திரிக்கு முதன் முதலாக

நடிப்புக் காவலரின் அழகிய வண்ணப்படம்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/ima4_0004_zps4e1e0444.jpg

gkrishna
2nd August 2014, 01:54 PM
'மனம் ஒரு குரங்கு' (1967) பாடலுக்கும் ஒளி விளக்கு(1968) 'தைரியமாக சொல் நீ மனிதன் தானா'
லக்ஷ்மி கல்யாணம் ''யாரடா மனிதன் அங்கே.. கூட்டி வா அவனை இங்கே...''
ஏதாவது தொடர்பு உண்டா சார் ?
நினைவலைகளில் இருந்து எழும் கேள்வி இது

vasudevan31355
2nd August 2014, 02:11 PM
தமிழ்த் திரைப்பட உலகம் பொற்கால ஆண்டுகள் (1968)

நன்றி. 'பேசும்படம்' (1969) ஜனவரி இதழ் 'நினைவில் நின்றவை' தகவல்கள்.

என்னுடைய நண்பர் ஒருவர் பேசும் படம் பத்திரிக்கையிலிருந்து திரட்டிய தகவல்கள். தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும்.

(நன்றி சின்னசாமி அவர்களே!)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG-9.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG-9.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_0001-7.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG_0001-7.jpg.html)

gkrishna
2nd August 2014, 03:04 PM
http://mmimages.maalaimalar.com/Articles/2014/Aug/6f53ab2f-f31c-46dc-95cb-16193f30e88b_S_secvpf.gif
வாலியின் நாடகம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய எம்.ஜி.ஆர்., "சென்னைக்கு வாருங்கள். உங்கள் தமிழ், திரை உலகுக்குத் தேவை'' என்று அழைப்பு விடுத்தார். ஓவியக் கல்லூரி படிப்பை ஓராண்டுடன் முடித்துக்கொண்ட வாலி, திருச்சியில் நாடகங்கள் எழுதி மேடை ஏற்றுவதில் முழு மூச்சுடன் ஈடுபட்டார்.

ஸ்ரீரங்கம் உயர்நிலைப்பள்ளியில் இவர் நடத்திய "மிஸ்டர் சந்தோஷம்'' என்ற நாடகத்துக்கு, திரைப்பட நடிகரும், டைரக்டருமான ஜாவர் சீதாராமன் தலைமை தாங்கினார். நாடகத்தை அவர் வானளாவப் புகழ்ந்து பேசியதால், வாலி உற்சாகம் அடைந்தார்.

நாடகங்கள் எழுதியதோடு, "கலைமகள்'', "குமுதம்'' முதலான பத்திரிகைகளில் கதைகளும் எழுதினார், வாலி.

அந்தக் காலத்தில், வானொலியில் எழுத்தாளர்களின் சிறுகதைகளை படிக்கும் நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது. வாலி எழுதி அனுப்பிய "வராளி வைகுண்டம்'' என்ற சிறுகதை, வானொலியால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. அந்தக் கதை சிறப்பாக இருந்ததால், தொடர்ந்து கதைகள் எழுதும்படி வானொலி நிலையத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றிய எழுத்தாளரும், கவிஞருமான "துறைவன்'' உற்சாகப்படுத்தினார். அதனால், வாலி நிறைய கதைகளும், நாடகங்களும் வானொலிக்கு எழுதினார்.

வானொலியின் பொங்கல் விழா சிறப்பு நிகழ்ச்சிக்கு பாடல் எழுதினார், வாலி. அந்தப் பாடலை டி.எம்.சவுந்தரராஜன் பாடினார். "நிலவுக்கு முன்னே...'' என்று தொடங்கும் அந்தப் பாடலை டி.எம்.எஸ். வெகுவாக ரசித்தார். "சென்னைக்கு வந்து, திரைப்படத் துறையில் நுழையுங்கள். கவிஞராகப் புகழ் பெறலாம்'' என்று வாலியிடம் கூறினார், டி.எம்.எஸ்.

ரேடியோவில் நாடகங்கள் எழுதி வந்த அதே காலக்கட்டத்தில், மேடை நாடகங்களையும் வாலி தொடர்ந்து எழுதி வந்தார்.

பிற்காலத்தில் எம்.ஜி.ஆரின் மந்திரிசபையில் அமைச்சராக பதவி வகித்த திருச்சி சவுந்தரராஜன், வாலியின் நாடகத்தில் நடித்தவர்.

அம்பிகாபதி -அமராவதி காதலை வைத்து வாலி எழுதிய "கவிஞனின் காதலி'' என்ற நாடகத்தில் திருச்சி சவுந்தரராஜன் அம்பிகாபதியாகவும், புலிïர் சரோஜா அமராவதியாகவும், நடிகை சந்திரகாந்தாவின் சகோதரர் சண்முகசுந்தரம் கம்பராகவும் நடித்தனர்.

வாலி ஸ்ரீரங்கத்தில் இருந்தபோது, இந்த நாடகம் சென்னையில் நடந்தது. திருச்சி சவுந்தரராஜனின் முயற்சியால், இந்த நாடகத்துக்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். மூன்று மணி நேரமும் அமர்ந்து நாடகத்தை பார்த்தார்.

முடிவில், நாடகத்தைப் பாராட்டி எம்.ஜி.ஆர். பேசும்போது, வாலியை வெகுவாக புகழ்ந்தார். "நாடகத்தை எழுதிய வாலி, ஸ்ரீரங்கத்தில் இருக்கிறாராம். அவர் எப்போது சென்னைக்கு வந்தாலும் என்னைப் பார்க்கலாம். அவருடைய தமிழ், சினிமாவுக்குத் தேவை'' என்று குறிப்பிட்டார்.

திருச்சியில் "கோமதிராணி பிக்சர்ஸ்'' என்ற சினிமா கம்பெனியை ராஜ்குமார் என்பவர் தொடங்கி, வாலியின் நாடகம் ஒன்றை படமாக்கும் முயற்சியில் இறங்கினார். அது வெற்றி பெறவில்லை.

ராஜ்குமார் மூலமாக வாலிக்கு எம்.ஏ.ராஜாராம் என்ற திரைப்பட இயக்குனர் அறிமுகமானார். அவர் அவ்வப்போது சென்னையில் இருந்து வாலிக்கு 10 ரூபாய் மணியார்டர் அனுப்புவார். ஸ்ரீரங்கத்தில் வசித்து வந்த வாலி, சென்னைக்கு ரெயிலில் சென்று, ராஜாராம் தயாரிக்கத் திட்டமிட்டிருந்த படத்துக்கு வசனம் எழுதிக் கொடுத்து விட்டு வருவார்.

அப்போது (1956) சில பாடல்களையும் வாலி எழுதினார். அவற்றை சி.என்.பாண்டுரங்கன் இசை அமைப்பில் ஏ.எம்.ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், சூரமங்கலம் ராஜலட்சுமி ஆகியோர் பாட, ரேவதி ஸ்டூடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டன.

(ராஜாராம் படம் எடுக்க இயலாததால், இந்தப்பாடல்கள் அப்போது பயன்படுத்தப்படவில்லை. எனினும், பிற்காலத்தில் அவர் தயாரித்த "புரட்சி வீரன் புலித்தேவன்'' என்ற படத்தில் பயன்படுத்திக்கொண்டார்.)

1956-ம் ஆண்டு தீபாவளிக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான "பாசவலை'' படம் வெளியாயிற்று.

அந்தப் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய "குட்டி ஆடு தப்பி வந்தா குள்ள நரிக்கு சொந்தம்; குள்ள நரி தப்பி வந்தா குறவனுக்கு சொந்தம்; தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்; சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்'' என்ற பாடலில், மனதைப் பறிகொடுத்தார், வாலி.

அதுபற்றி அவர் எழுதியிருப்பதாவது:-

"குணங்குடி மஸ்தானும், சித்தர் பெருமக்களும் யாத்தளித்துள்ள எத்தனையோ தத்துவப் பாடல்களை, அடியேன் அந்த நாளிலேயே அறிவேன். ஆயினும், பாசவலை படப்பாட்டில், பாமரனுக்கும் புரியுமாறு போதிக்கப்பட்டிருந்த தத்துவ வரிகள் இருக்கின்றனவே, அவை ஒரு ஞானக்கோவையை சாறு பிழிந்தெடுத்து, வெள்ளித்திரை மூலம் ஊருக்கெல்லாம் விநியோகித்தது போலிருந்தது.

இந்தப் பாடல்களை எழுதியிருந்தவர் பட்டுக்கோட்டை. அடேயப்பா! சவுக்கெடுத்து சொடுக்கி விட்டது போல என்ன சொல் வீச்சு? அசந்து போனேன். அன்றைய படவுலகுக்குப் புதிய வரவான பட்டுக்கோட்டையின் மேல், என்னையும் அறியாமலே காதலாகி கசிந்துருகிப்போனேன்.

பாசவலை படத்தை, பத்து தடவை பார்த்தேன்; பாடல்களுக்காகத்தான்!

பட்டுக்கோட்டையின் பாடல், என்னுள் பூசிக் கிடந்த சிறுகதை எழுதும் ஆசை, ஓவியம் வரையும் ஆசை, நாடகம் எழுதும் ஆசை அனைத்தையும் ஒருசேர ஒரே நாளில் கழுவி விட்டது.

பாடல்கள் எழுத வேண்டும், அதுவும் படப்பாடல்களை எழுத வேண்டும், இந்த முயற்சியையே ஒரு தவமாகப் பழகி, இதில் காரியசித்தி பெற வேண்டும் என்னும் புதியதோர் வேட்கை வேர்விட்டது.''

இவ்வாறு வாலி எழுதியுள்ளார்.

"பாசவலை'' படத்தில் எம்.கே.ராதா, ஜி.வரலட்சுமி, எம்.என்.ராஜம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தாலும், இளம் கதாநாயகனாக நடித்தவர் வி.கோபாலகிருஷ்ணன்.

அவர் நடிப்பு வாலிக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரை பாராட்டி கடிதம் எழுதினார். அதற்கு கோபாலகிருஷ்ணன் பதில் எழுதினார்.

கடிதப் போக்குவரத்து, அவர்கள் இடையே நட்புறவை வளர்த்தது. இந்த நட்புறவு, வாலியின் திரை உலகப் பிரவேசத்துக்கு வழி வகுத்தது.

gkrishna
2nd August 2014, 04:06 PM
http://i3.ytimg.com/vi/a9e879QTiX0/mqdefault.jpghttps://i.ytimg.com/vi/bR5137Cfm2k/hqdefault.jpghttp://www.thehindu.com/multimedia/dynamic/01517/CP14_Thulasi_Madam_1517050e.jpg

ஹிந்து ரண்டொர் கை யின் விமர்சனம்
http://www.thehindu.com/features/cinema/cinema-columns/thulasimaadam-1963/article4911895.ece

M.A.V.Pictures சம்பூர்ண ராமாயணம் ,முதலாளி போன்ற திரை படங்கள் எடுத்த M .A .வேணு அவர்களின் படம்

துளசி மாடம் 1963

திரை இசை திலகம் மாமா இசை

ஏவிஎம் ராஜன் V .கோபாலகிருஷ்ணன் சந்திரகாந்தா, (இரட்டை வேடம் )
ஒரு சந்திரகாந்தா(ஏவிஎம் ராஜன்) காசநோய் வந்து அவர் மாமியாரால் வீட்டை விட்டு துரத்தபடுவார்.இன்னொரு சந்திரகாந்தா அங்கு வந்து காச நோய் சந்திர காந்தா இங்கு வந்து வளைந்து நெளிந்து செல்லும் கதை

பாடகர் திலகத்தின் தங்க குரல்
1.'ஆடும் மயிலே ஆட்டம் எங்கே பாடும் குயிலே பாட்டு எங்கே
பேசும் கிளியே பேச்சு எங்கே பெண்ணே உனது '

http://www.youtube.com/watch?v=4ps_iwVoWMc

2.'சித்திரை மாத நிலவினிலே
தென்றல் வீசும் இரவினிலே
உத்தமி ஒருத்தி விழித்திருந்தாள்
அவள் உறவுக்கு ஒருவன் காத்திருந்தான் '

http://www.youtube.com/watch?v=bR5137Cfm2k

3.ஜானகியின் குரல் மாமாவின் அருமையான மெலடி
'கல்யாண சாப்பாடு போதும் என் கையாலே சாப்பாடு போடட்டுமா '



4.மீண்டும் ஜானகி 'அம்மாடியோ அத்தானுக்கு'

5.சூலமங்கலம் ஜானகி குரல்களில்
மையை தொட்டு எழுதியவர்
என் மனதை தொட்டு எழுதிவிட்டார் .


http://www.inbaminge.com/t/t/Thulasi%20Maadam/

gkrishna
2nd August 2014, 04:16 PM
அருமையான இசை,பாடல்கள்,நடிப்பு சுடர்,கோபாலகிருஷ்ணன்,சந்திரகாந்தா போன்ற பண்பட்ட நடிகர்கள் இருந்தும் இருந்தும் தோல்வியை தழுவிய படம் துளசி மாடம்

vasudevan31355
2nd August 2014, 06:02 PM
வாசு சார்
இந்த மனம் ஒரு குரங்கு டைரக்டர் ஏ.டி.கிருஷ்ணமூர்த்தி தானே
நமது அறிவாளி டைரக்டர்

I think so krishna sir.

vasudevan31355
2nd August 2014, 06:06 PM
துளசி மாடம் பதிவுகள் நன்று கிருஷ்ணா சார். இப்படத்தின் பாடல்கள் பார்த்திருக்கிறேன் பலமுறை. ஆனால் படம் பார்த்ததில்லை இதுவரை . ஆம்பிள்ளை போல, அவர் அண்ணன் போலவே இருக்கும் சந்திரகாந்தாவைப் பிடிக்காது. (அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து தவிர)

அதே போல் ஆடும் மயிலே ஆட்டமெங்கே பாடல் எனக்கு அறவே பிடிப்பதில்லை. ஏன் என்று தெரியாது. ஆனால் மையைத் தொட்டு எழுதியவர் கிளாஸ். ரொம்பப் பிடிக்கும்..

JamesFague
2nd August 2014, 06:25 PM
Mr Vasudevan Sir,

Thanks a lot for the Pesum Padam pose of Our NT as well as

the photos from Kathavarayan.

Advance congratulation for your 5000 posts and awaiting your memorable
post from you about NT.

Regards

vasudevan31355
2nd August 2014, 07:35 PM
ஜஸ்ட் ரிலாக்ஸ்.

http://3752ph102dgl405f3e3yvdrpili.wpengine.netdna-cdn.com/wp-content/uploads/2012/12/Gustav-Metzger.-Just-Relax..jpg

இயக்குனர் வரிசை சி.வி.ராஜேந்திரன்.

http://www.thehindu.com/multimedia/dynamic/00593/2007062661090201_593941e.jpg

http://i.ytimg.com/vi/8F4SebZj0pk/maxresdefault.jpg

படம்: கலாட்டா கல்யாணம்

இசை: மன்னர்

நடனம்: தங்கப்பன் மாஸ்டர்

ஒளிப்பதிவு டைரெக்டர்: பி.என்.சுந்தரம்

பாடல்: 'உறவினில் 50 50... உதட்டினில் 50 50'

http://i.ytimg.com/vi/23vREAmmbgs/hqdefault.jpg

ரொம்ப அழகான பாடல் ஒன்று சி.வி.ராஜேந்திரன் இயக்கிய 'கலாட்டா கல்யாணம்' திரைப்படத்திலிருந்து.

இந்தப் பாடலை இயக்கிய விதத்திலும் தன்னுடைய முத்திரையை, வித்தியாசத்தை உணர்த்தியிருப்பார் ராஜேந்திரன்.

நடிகர் திலகம் நாயகனாக இருந்தாலும் இப்பாடல் எ.வி.எம். ராஜனுக்கும், துணை நடன நடிகை ராஜேஸ்வரிக்கும் கொடுக்கப்பட்டிருக்கும்.

காதலிக்கும் ஜோதிலஷ்மியை விட்டு விட்டு ராஜேஸ்வரி மோகத்தில் மூழ்கிக் கிடக்கும் ராஜன் அவருடன் இணைந்து பாடும் காட்சி.

இந்த ராஜேஸ்வரி என்ற நடிகை சுமார் ரகம்தான். சற்றே நீண்ட முகம். பார்க்க சுமார்தான். ஆனால் ஆட்டம் படு ஜோர். நல்ல உயரமும் கூட. குட்டைப் பாவாடை கவுனுடன் அருமையான கஷ்டமான ஸ்டெப்களை ஆடியிருப்பார். முகபாவங்களிலும் தேறி விடுவார். ராஜனும் பயபக்தியுடன் நடிகர் திலகத்தை மனதில் நினைத்துக் கொண்டே அவரைப் போலவே டிரெஸ் அணிந்து, அவரைப் போலவே செய்ய முயற்சிப்பார் வழக்கம் போல. இந்தப் பாடலில் 'கியூட்'டாகவே இருப்பார்.

இப்பாடலில் டாப் ஆங்கிளிலிளிருந்து சில ஷாட்களை அற்புதமாகப் படமாக்கியிருப்பார்கள். காமெரா மாடி மேலிருந்தே அழகாக சுழலும்.

மிக அழகான ஷாட்கள். குண்டு பலப் உள்ளே எரிய வெளியில் இருக்கும் லேம்ப் ஷேடோவுக்கு மேல்புறம் ராஜனின் முகம் சைட் குளோஸ்-அப் பிலும், லேம்பிற்கும், ஷேடோவிற்கும் இடைப்பட்ட இடைவெளியில் ராஜேஸ்வரியின் முகமும் தெரிவது போல அசத்தலான காட்சி ஒரு சில வினாடிகளில் நாம் பார்ப்பதற்கு முன்னேயே கடந்து போய் விடும்

அதை இங்கு ஸ்டில்லாக அளித்திருக்கிறேன்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/Galattakalyanamvob_003925615.jpg

'கன்னம் தனி
இவளுடைய கன்னம் கனி
சின்னக் கிளி
இனிய மொழி என்றும் ஹனி'

http://i2.ytimg.com/vi/Zrd3AaQ0mYU/hqdefault.jpg

ராஜன் கையில் வைத்திருக்கும் சிறு சிறு வட்ட வடிவ கண்ணாடித் துண்டுகள் பதித்த அட்டையை நம் பக்கம் திருப்பும் போது ராஜேஸ்வரியின் பல முகங்கள் அதில் பிம்பங்களாய் தெரிவது ராஜேந்திரனின் திறமையான காமிரா கோண ரசனைக்கான அத்தாட்சி காட்சி. குருவை மிஞ்சின சிஷ்யனாகி விடுவார். இந்தக் காட்சியை பதட்டமில்லாமல் சில வினாடிகள் நீட்டித்திருப்பார் ராஜேந்திரன். அதனால் நிதானமாக பார்த்து நாம் என்ஜாய் செய்யலாம். ராஜேஸ்வரியின் கால்கள் வலதும் இடதுமாக (அதுவும் மிக அகலமாக கால்களை விரித்து வைத்து) மாறி மாறி ஆடுவது நடன இயக்குனர் தங்கப்பனின் பெண்டு நிமிர்த்தும் பணி.

இரண்டாவது சரணத்தில் அந்த ஷெனாயின் தேவாமிர்த இன்னிசையின் போது மறுபடியும் காமெரா டாப் ஆங்கிளில் பயணிக்கும். கீழே ராஜேஸ்வரி குட்டைப் பாவாடையை சுழற்றியபடி ஆட, மேலிருந்து காமேரக் கோணத்தின் பார்வையில் ராஜேஸ்வரி ஆடுவது குடை ராட்டினம் சுற்றுவது போல் இருக்கும். அதுவல்லாமல் ஒரே கோணத்தில் இல்லாமல் காமிராவை சாய்த்து வேறு காட்சியை சாய்வாக எடுத்திருப்பார்கள். பி.என்.சுந்தரம் fantastic job.

அடுத்து மோக போதையை உண்டாக்கும் வரிகள்.

'முத்துச்சரம் மடியில் விழும் பத்துத்தரம்
வெள்ளிக்குடம் சுவை அமுதை அள்ளித் தரும்'

பொல்லாத கவிஞனய்யா இந்த 'வாலு' வாலி .

இரண்டாவது வரி ஒலிக்கும்போது ராஜேஸ்வரி 'அதை' ராஜனுக்கு உணர்த்துவது போல நமக்கு உணர்த்தும் உடல் மொழி. 'வெள்ளிக்குடம்' எனும் போது அவர் தோள்பட்டைகளை ராஜன் அருகில் சற்றே குலுக்கி மோக போதை பார்க்கும் பார்வை. கைகளை நெஞ்சுப் பக்கமாய் வேறு கொண்டு போய் காட்டுவார். யப்பா! அநியாயம் போங்க.

பாட்டு உற்சாகமாய் போய் முடியும் தருவாயில்,

'முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வர'

அங்கு ஒரு டிராமா போட வரும் நடிகர் திலகமும், நாகேஷும் வந்த காரியத்தை ஒரு வினாடி மறந்து, அந்த டியூனின் தாளத்திற்கு ஏற்ப கால்களை சற்றே எம்பிக் குதித்தாவாறே ஒருவரையொருவர் மெய்மறந்து வெட்கத்துடன் பார்த்துக் கொள்ளும் அழகை வர்ணிக்கவே முடியாது. (அதுவும் நடிகர் திலகம் சிறு குழந்தை போல நாக்கை வேறே சற்று வெளியே நீட்டி நாணுவார்)

பாடல் முழுக்க பரவி பாடலுடனேயே இழைந்து வரும் அம்சமான இசைக்கருவிகளின் சங்கமம் புரியும் விந்தைகள் அருமையிலும் அருமை.

ராட்சஸியை எத்தனையோ முறை புகழ்ந்தாலும் இப்பாடலை அவர் அளித்திருக்கும் சுகமே அலாதி சார். பின்னிப் பெடல் எடுக்கிறார். ஈஸ்வரி குரலுடனேயே '50 50, பாதி பாதி, ஆஹ் ஆஹ ஹூ' என்று இணைந்து வரும் சி.எஸ்.கணேஷ் (சங்கர் கணேஷ்) அவர்களின் குரலும் காலாகாலத்துக்கும் மறக்க முடியாது.

பார்த்து அனுபவியுங்கள் வினாடி வினாடியாக.

என்னுடய ஈஸ்வரியின் டாப் 5 களில் இது ஒன்று.

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க மாட்டேன்.


http://www.youtube.com/watch?v=23vREAmmbgs&feature=player_detailpage

Gopal.s
2nd August 2014, 07:40 PM
நம் தலைவர் ராகவேந்தர் ஆக்ஞை படி உட்செல்ல ஆசை. ஆனால் நம் மக்களின் தலைக்கு மேல் பயணம் செல்வதாக எனக்கு மிக நல்ல பெயர். இதை மேலும் பறந்து கெடுக்க வேண்டுமா?

ராகங்களுக்கு ,இசையின் ஸ்வரங்களுக்கு ஒரு சின்ன முன்னோட்டம் கொடுக்கிறேன். பிடித்திருந்தால் சற்றே தொடர்வேன்.

ஏழு சுரங்களே சங்கீதத்தின் அடிப்படை. Tonal and Pitch இரண்டுமே அடிப்படை.சுருதி,சுரம் என்று சொல்லலாம்.

ஏழு சுரங்கள் ஸ (ஸட்சமம்),ரி (ரிஷபம்),க (காந்தாரம்),ம(மத்தியமம்),ப (பஞ்சமம்),த (தைவதம்),நி (நிஷாதம்) என்று வழங்க படும்.

இதில் ஸ ,ப ஒன்றே ஒன்று. ம வில் இரண்டு. ரி,க ,த,நி யில் தலா மூன்று 2+2+12 என்று பதினாறு சத்த மாறுபாடுகள்.

இதை ஸட்ஜமம்(S ) ,சுத்த ரிஷபம் (R 1),சதுஸ்ருதி ரிஷபம்(R 2),ஷட்ஸ்ருதி ரிஷபம்(R 3),சுத்த காந்தாரம்(G 1)சாதாரண காந்தாரம் (G 2),அந்தார காந்தாரம்(G 3),சுத்த மத்யமம்(M 1),பிரதி மத்யமம் (M 2),பஞ்சமம் (P )சுத்த தைவதம்(D1),சதுஸ்ருதி தைவதம் (D2),ஷட்ஸ்ருதி தைவதம் (D3),சுத்த நிஷாதம் (N 1),கைசிகி நிஷாதம்(N 2),காகலி நிஷாதம் (N 3) என்று பதினாறு பகுப்பு..(விவாடி எனப்படும் tainted swaras சேர்ந்து)

கொஞ்சம் உள்ளே போனால் G 2=R 3, R 2=G 1,D2=N 1, N 2=D3 என்று இவை சேர்ந்தே வராத பகுப்புகள். ரொம்ப குழப்ப மாட்டேன்.(இவைகளின் சேர்க்கை சாத்யமில்லாததால் 16 சுர சத்தங்கள் 12 என்றே கருத பட வேண்டும்.)

மேற்கத்திய இசையில் ஸ =C . ரி =D . க =E . ம=F .ப=G . த= A .நி =B .(5 வெள்ளை கட்டைகள் முழு pitch ,7 கருப்பு கட்டைகள் -பாதி pitch )

இப்போது 72 மேளகர்த்தா ராகங்கள் எப்படி என்று பார்ப்போம். மேளகர்த்தா ராகங்களுக்கு நிபந்தனை உண்டு. 7 சுரங்கள் கட்டாயம் வர வேண்டும்.(பரி பூர்ணம்).மேலே போவது(ஆரோகணம் ),கீழே வருவது (அவரோகணம்) சீராக (குதிக்காமல்)இருக்க வேண்டும்.ஸ வில் தொடங்கி ஸ வில் முடிய வேண்டும்.

இப்போது 12 சத்த மாறுபாடுகளில் ச,ப இரண்டுடன் மற்ற இணைப்புகள் 2x6x 6=72 வரும்.இதை சத்தங்களின் கணிதம் என்று குறிப்பிடலாம். permutation &Combination (வரிசை பகுப்பும் ,சேர்மானங்களும்)போட்டால் வரும் விடை.

இதில் 12 பகுப்புகளில் ஆறு ,ஆறு ராகங்களாக group செய்ய பட்டுள்ளது.

உதாரணங்கள்-

சுபபந்துவராளி - S R 1 G 2 M 2 P D1 N 2 S ' என்ற சேர்மானம்.

கீரவாணி S R 2 G 2 M 1 P D1 N 3 S ' என்ற சேர்மானம்.

நடபைரவி - S R 2 G 2 M 1 P D1 N 2 S '.என்ற சேர்மானம்.

நீங்களே ஊகிக்கலாம். இப்படி மாற்றி மாற்றி சேர்க்கும் இணைவில் உள்ள சாத்யகூறுகளை. என்ன ஒன்று கணிதம் போல dry ஆக இல்லாமல், கேட்க நன்றாக ,இசைவாக இருக்க வேண்டும்.

ஜன்யம் மற்றும் மற்ற சாத்திய கூறுகளை பிறகு அலசலாம்.

Gopal.s
2nd August 2014, 08:10 PM
வீர திருமகன் பாடல்கள் எல்லாம் அருமை என்றாலும், எனது பிடித்தம் ராட்ஷஷியின் கேட்டது கிடைக்கும்.(இன்னொன்று வெற்றிலை போட்ட ,வாசு போட்டு விட்டார்). interlude கேட்டால் பின்னால் வரும் பட்டத்து ராணிக்கு ஒத்திகை மாதிரி இருக்கும்.

அப்பப்பா என்ன ஒரு பாட்டு!!!

https://www.youtube.com/watch?v=USWPkJs2VB4&feature=player_embedded

Gopal.s
3rd August 2014, 12:30 AM
வண்ணக்கிளி-1959

இந்த படத்தில் கே.வீ.மகாதேவன் இசை விஸ்வரூபம் எடுத்து ஒளிர்ந்தது. இதற்கு முன் எந்த ஒரு படத்திலும் இவ்வளவு சூப்பர் ஹிட் பாடல்கள் ஒரே படத்தில் குவிந்ததில்லை. கிராமிய இசையில் அவ்வளவு மெருகு.ஈர்ப்பு.variety .படம் ஜெயிக்க இசை ஒரு முக்கிய காரணமாய் அமைந்தது.கே.வீ.மகாதேவன் முதலாளி,வண்ணக்கிளி படங்களில் தான் ஒரு trend setter என்று நிரூபித்தார்.

சித்தாடை கட்டிக்கிட்டு (கள்ளபார்ட் நடராஜன் பின்னியெடுத்திருப்பார்)

https://www.youtube.com/watch?v=zAZfkh7H6PI

சீர்காழியின் இரண்டு மந்திர பாடல்கள். ஆத்தில தண்ணி வர,மாட்டுகார வேலா

https://www.youtube.com/watch?v=uECIcf22zXk

https://www.youtube.com/watch?v=EeQJVH18DVg

வண்டி உருண்டோட அச்சாணி தேவை

https://www.youtube.com/watch?v=qiQKlF9iDSQ

அடிக்கிற கைதான் அணைக்கும் (டி.லோகநாதன் பின்னியிருப்பார்)

https://www.youtube.com/watch?v=iH5qj1ADzS8

madhu
3rd August 2014, 05:44 AM
வண்ணக்கிளி பாட்டுக்கள்... வாவ்..

கோபால்ஜி.... விட்டுப்போன சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா ...தனியா அழுதுகிட்டு நின்னுச்சு..

அதையும் சேத்துக்குங்க..

http://youtu.be/2C4rQHhS5dA

இதைத் தவிர "குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே ஐக்கியமாகிவிடும் இது உண்மை ஜகத்திலே" என்று ஒரு பி.எஸ். பாட்டு இருக்கு

http://www.inbaminge.com/t/v/Vannakkili/Kuzhandhaiyum%20Dheivamum%20Kondadum%20Idaththile. vid.html

Gopal.s
3rd August 2014, 06:14 AM
Thanks Madhu. Both are Nice Songs worth mentioning though not in the same league of other ones.

Gopal.s
3rd August 2014, 06:40 AM
புறாவிற்காக இளவரசர் பாடிய வசந்த முல்லை இன்றும் பிரபலம்.
ஆனால் இந்த அழகின் இலக்கணம் ,ஆண்மையின் சிகரம் ,இளமையின் தலைமையாய் , இளவரசர் பாடும் காதல் கீதம்.ராஜ சுலோச்சனாவுடன் அழகிய காதல் பாடல்.

என்னுடைய விருப்ப பாடல்களில் ஒன்று.

https://www.youtube.com/watch?v=5BpZJ8AHFa8

Gopal.s
3rd August 2014, 06:58 AM
காதல் நிலவு பாதி இரவு மயக்கத்தில் ஆடும் உலகம் .70 களின் மெல்லிசை மன்னரின் சாதனை படங்களில் ஒன்று பொன்னூஞ்சல்.படத்தின் திரைக்கதை இன்னும் இறுக்கமாக அமைக்க பட்டிருந்தால் B ,C சென்டர் களிலும் உயரம் தொட்டு சாதனை படங்களில் ஒன்றாகி இருக்கும் கிராமிய காவியமாய் அமரத்துவம் பெற்றிருக்கும்.

இந்த படத்தில் ஜானகியின் பிரமாதமான பாடலொன்று ,பிற ஹிட் பாடல்களின் நடுவே கண்டு கொள்ள படவில்லை.கொஞ்சம் interludes மெனக்கெட்டிருந்தால் ,இன்னும் உயரம் தொட்டிருக்கும். சரணத்தில் ,தர வேண்டிய transition space மிஸ்ஸிங். அவசரத்தில் பதிவு செய்தது போல அமைந்த ,இந்த அபூர்வ பாடலை இன்னும் மெருகேற்றி இருக்கலாம்.(மெல்லிசை மன்னர் இதானாலேயே இழந்தது நிறைய.வைரங்களை தினத்தந்தி பேப்பர் கிழித்து pack பண்ணி கொடுப்பார் 70களில் .)

படத்தில் நான் பார்க்கும் போது ,இரவு பாடலாக வரும்.இப்போது DVD க்களில் மிஸ்ஸிங். U Tube இலும் பட காட்சி இல்லை.என்னுடைய favourite pair களில் ஒன்று சிவாஜி-உஷாநந்தினி இணை.குறிப்பாக இப்படத்தில்.

வருவான் மோகன ரூபன்

https://www.youtube.com/watch?v=rATl1Kh-3A0

Gopal.s
3rd August 2014, 07:32 AM
ஜஸ்ட் ரிலாக்ஸ்.

http://3752ph102dgl405f3e3yvdrpili.wpengine.netdna-cdn.com/wp-content/uploads/2012/12/Gustav-Metzger.-Just-Relax..jpg

இயக்குனர் வரிசை சி.வி.ராஜேந்திரன்.

http://www.thehindu.com/multimedia/dynamic/00593/2007062661090201_593941e.jpg

http://i.ytimg.com/vi/8F4SebZj0pk/maxresdefault.jpg

படம்: கலாட்டா கல்யாணம்

இசை: மன்னர்

நடனம்: தங்கப்பன் மாஸ்டர்

ஒளிப்பதிவு டைரெக்டர்: பி.என்.சுந்தரம்


சி.வீ.ராஜேந்திரன் ,சாதனைகள் போற்ற படுவதே இல்லை.

கனவில் நடந்ததோ படமாக்கம்,உறவினில் fifty fifty பாடலில் அபூர்வ காமிரா கோணங்கள்,under water photography முயற்சி நில் கவனி காதலியில்,
புதிய திரைகதை உத்தி புதிய வாழ்க்கையில், புதிய இளமை காதல் முயற்சி உடைகளில் இளமை,colour psychology ,டைட்டில் உத்தி என்று சுமதி என் சுந்தரி .

பாவம் சில இயக்குனர்கள் பிழைப்பு நடத்தினாலும்,அங்கீகாரம் பெறுவதே இல்லை.

நன்றி வாசு.

vasudevan31355
3rd August 2014, 07:42 AM
நல்ல பாடல்களுக்கு நன்றி கோ.

vasudevan31355
3rd August 2014, 07:43 AM
நன்றி வாசுதேவன் சார். மதுர கானத்தில் அதிகமாகப் பங்கு கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த பாடல்களைப் பற்றி எழுதுங்கள்.

vasudevan31355
3rd August 2014, 07:53 AM
கோ,

http://2.bp.blogspot.com/-Rrpb4PU-iCg/UZR3cmvumkI/AAAAAAAAKBQ/gEKEBpsIidM/s320/images+(2).jpg

'வீரத் திருமகன்' படத்தில் என்னுடைய பிடித்தம்

'நீலப் பட்டாடை கட்டி
நிலவென்னும் பொட்டும் வைத்து
பால் போல சிரிக்கும் பெண்ணே
பருவப் பெண்ணே'

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/n-2.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/n-2.jpg.html)

இப்பாடலைப் படமாக்கியிருக்கும் பிரம்மாண்டமும், பின்னணிகளும் அற்புதம். இப்பாடலுக்காக நதியிலே பிரம்மாண்ட தாமரைப்பூ, மற்றும் அதைச் சுற்றி தாமரை இலைகள் செட்டிங்ஸ் அமைத்துத் தர வேண்டும் என்று ஏ.வி. எம்மிடம் சொல்லி விட்டாராம் கறாராக திருலோகச்சந்தர். முதலில் 'அது ரொம்பக் கஷ்டம்' என்று மறுத்த தயாரிப்பாளர் பின் டைரெக்டரின் விடாப்பிடியின் காரணமாக அவர் விருப்பப்படி செட் போட்டுக் கொடுத்தாராம்.

அமர்க்களமாக இருக்கும். ஆனால் மிகுந்த மெனக்கெடல். ஏ.வி.எம்.ஆயிற்றே.

நடுவில் பெரிய தாமரைப்பூ செட்டில் நாயகி சச்சு ஆட, சுற்றி தாமரை இலைகள் போல அமைக்கப்பட்ட செட்களில் (நடன நடிகைகள் நின்று ஆட) எக்ஸ்ட்ரா நடன நடிகைகள் ஆடுவது பிரம்மாண்டம். (அதுவும் சுற்றிலும் அமைக்கப்பட்ட இலை வடிவ செட்கள் நடுவில் உள்ள தாமரைப்பூவை சுற்றி வேறு வரும்படி பின்னி எடுத்திருப்பார்கள்). இலைகள் வடிவ செட்டின் மேல் நின்று ஆட துணை நடன நடிகைகள் மிகவும் பயந்தனராம். (கிட்டத்தட்ட மொத்தம் 24 துணை நடிகைகள். சச்சுவை சேர்த்து 25) 'தண்ணீரில் விழுந்தால் என்னாவது' என்று வாக்குவாதமே ஏற்பட்டதாம். பின் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இப்பாடல் காட்சி படம் பிடிக்கப்பட்டதாம்.

வழக்கம் போல சிரமமில்லாமல் எடுத்த

'பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்'

சூப்பர் டூப்பர் ஹிட்டாகிப் போய்விட, கடின உழைப்பு தந்து எடுக்கப்பட்ட பாடல் பின்னுக்குப் போனது.

நான் மேலே கூறியுள்ள விஷயங்கள் சச்சு 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் கூறியது என்று நினைவு. ரொம்ப நாளாகி விட்டது. நீங்கள் 'வீரத் திருமகனை' பிடிக்கப் போக இப்போது ஞாபகம் வந்தது. காலையில் பெண்ட் எடுக்கிறீர்கள்.:)

அது போல பாடலும் மிக மிக இனிமை.

அது போல இந்தப் பாடலில் பின்னணி பாடும் கோரஸ் பணியை பாராட்டியே தீர வேண்டும். அற்புதமான கோரஸ்.

சச்சுவும் உடம்பை வில்லாக வளைத்து ஆடுவார்.

கண்ணதாசனின் அருமையான இயற்கை வர்ணிப்பு எளிமை வரிகள். மெல்லிசை மன்னர்களின் வெகு அசத்தலான டியூன் மற்றும் மதுர மயக்கும் இசை.

'சுகக்குரல்' சுசீலாவும், 'ஈடு இணையற்ற' ஈஸ்வரியும் இணைந்து இன்ப ஊற்றை அள்ளி செவிகளில் பாய்ச்சுகிறார்கள்.

ஆனால் பாடலுக்குக் கிடைத்த பலன் ரொம்பக் கம்மி.


https://www.youtube.com/watch?v=bXNUAdbOn7o&feature=player_detailpage

Richardsof
3rd August 2014, 08:20 AM
இனிய நண்பர் வாசு சார்
வீரத்திருமகன் - பாடல் பற்றிய விரிவான பதிவு அருமை . மிகவும் இனிமையான பாடல்கள் . அதே போல் கலாட்டா
கல்யாணம் பாடலும் சூப்பர். நேற்று மன்னவன் வந்தானடி - வெளியான நாள் . இந்த படத்திலிருந்து எனக்கு பிடித்த பாடல் .
http://youtu.be/BlgVP2qkE0Y

Gopal.s
3rd August 2014, 09:15 AM
வீரத்திருமகன் - பாடல் பற்றிய விரிவான பதிவு அருமை . மிகவும் இனிமையான பாடல்கள் . அதே போல் கலாட்டா
கல்யாணம் பாடலும் சூப்பர். நேற்று மன்னவன் வந்தானடி - வெளியான நாள் . இந்த படத்திலிருந்து எனக்கு பிடித்த பாடல் .


நன்றி எஸ்வி.மன்னவன் வந்தானடி வித்யாசமான,கலகலப்பான ,ஜனரஞ்சக படம்.நினைவு படுத்தியதற்கு நன்றி.குறிப்பாக இந்த பாடல்.

Gopal.s
3rd August 2014, 09:51 AM
rhythm arrangement என்பது ஒரு பாடலையே நிறம் மாற்றும் ரசாயனம். பாடலின் meter விட்டு தாண்டி குதிக்கலாம். Harmony ,Contrast ,Absurd &weird combinations என்று விளையாடலாம். ஆனால் பரிசோதனையாய் மட்டும்
முடியாமல் இசையாக ,விரும்பும் படி இருக்க வேண்டும்.

அப்படி தாளத்தால் வேறு படுத்தி காட்ட பட்ட இரண்டு வசீகர பாடல்கள்.
ஒன்று 70இன் மெல்லிசை மன்னர். இன்னொன்று 85களின் இசைஞானி.
இரண்டுமே இசையமைப்பாளர்களை பிழிந்தெடுக்கும் ஆட்கள்.ஒன்று ஏ.வீ.எம். மற்றது சி.வீ.ஸ்ரீதர்.

பம்மலாரின் பிடித்தம் என்று கேள்வி. திராவிட மன்மதனின் ,இளமை,அழகு துள்ளும் அழகாக கோரியோகிராப் செய்ய பட்டு ,அழகான உடையமைப்பு ,ஜோடி ரசாயனம் அமைந்த எங்க மாமாவின்,என்னங்க?
தாள வித்தையை ரசியுங்கள்.


https://www.youtube.com/watch?v=8WNqcmi1rrQ

ஸ்ரீதரின் ,இளைய ராஜா இணைவில் மிக மிக சிறந்த படம் "தென்றலே என்னை தொடு "(நினைவெல்லாம் நித்யா,ஒரு ஓடை நதியாகிறது மற்றவை).பாடல்கள் அப்பப்பா.hats off இளையராஜா.வழக்கம் போல ஸ்ரீதர் சொதப்பியிருப்பார் என்று சொல்லவும் வேண்டுமோ?

ஆனால் அந்த படத்தில் ரொம்ப கவனிக்க படாத இந்த தாள அதிசயம்.
புதிய பூவிது.

https://www.youtube.com/watch?v=Jy_KCJTttfg

mr_karthik
3rd August 2014, 10:41 AM
டியர் வாசு சார்,

வீரத்திருமகன் படத்தில் இடம்பெற்ற 'நீலப்பட்டாடை கட்டி நிலவென்னும் போட்டும் வைத்து' பாடலும் சரி அது படமாக்கப்பட்ட விதமும் சரி மிக மிக அருமை மட்டுமல்ல, புதுமை மட்டுமல்ல சாதனையும் கூட, குறிப்பாக மிகமிகக் குறைவான டெக்னிக்கல் உத்திகள் கொண்ட அன்றைய காலகட்டத்தில். கம்ப்யூடர் கிராபிக்ஸ் என்ற ஒன்று வந்ததால் இன்று நிஜமான உழைப்பின் மகத்துவங்கள் மங்கிப்போய் விட்டன.

அதே திரும்பிப்பார்க்கிறேன் நிகழ்ச்சியில் இப்பாடல் படமாக்கப்பட்ட விதத்தை இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தர் விளக்கினார். அதாவது தாமரைப்பூவும் அதைச்சுற்றி தாமரை இலைகளும் தண்ணீரில் மிதக்க வேண்டும். இதொன்றும் பிரமாதம் இல்லை. மிதவைக்கட்டி மிதக்க விட்டுவிடலாம். ஆனால் பூவின்மேலும் ஒவ்வொரு இலையின்மேலும் நடனமாதர் நின்று ஆட வேண்டும் என்றபோதுதான் பிரச்சினை வந்தது. மிதக்கும் இலையின்மீது நின்று எப்படி ஆடுவது?. எப்படி தாங்கும்?. எப்படி பேலன்ஸ் கிடைக்கும்?. என்று குழம்பியபோது ஆர்ட் டைரக்டரும், ஒளிப்பதிவாளரும் இயக்குனரும் சேர்ந்து உட்கார்ந்து மண்டையை உடைத்துக்கொண்டபோது ஒரு ஐடியா பிறந்தது.

அதாவது தாமரைப்பூவையும் ஒவ்வொரு தாமரை இலையையும் ஒவ்வொரு மர பீப்பாயின்மேல் பொருத்தி அதை மிதக்க விடுவது, பூவும் இலையும் மட்டுமே தண்ணீருக்கு வெளியே தெரியும். மர பீப்பாய் (டிரம்) முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும். அதன்மீது நடன மங்கையர் நின்று ஆடும்போது பேலன்ஸ் கிடைக்கும் என்று முடிவாகி அதன்படியே செய்தனர். ஒவ்வொரு இலையின்கீழும் ஒவ்வொரு மர பீப்பாய் மறைந்திருக்கும். அப்படியும் சில நடன மாதர்கள் பேலன்ஸ் தவறி தண்ணீரில் விழுந்து எழ, அவர்கள் காஸ்ட்யூம் காயும்வரை காத்திருந்து படம் பிடித்தனராம்.

ஆனால் மக்கள் இந்தப்பாடலை அவ்வளவாகக் கொண்டாடவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம். ரோஜா மலரே ராஜகுமாரியும், பாடாத பாட்டெல்லாம் கொண்டாடப்பட்டதில் பாதியளவு கூட இப்பாடலுக்கு கிடைத்ததில்லை.

இப்பாடல் இலங்கை வானொலியின் பயங்கர ஹிட். நீங்கள் கேட்டவை நிகழ்ச்சியில் இரண்டு இஸ்லாமிய சகோதரிகள் இந்த 'நீலப்பட்டாடை கட்டி' பாடலையும் வானபாடியில் இடம்பெற்ற 'கங்கைகரைத் தோட்டம்' பாடலையும் தினமும் விரும்பிக் கேட்பார்கள்...

chinnakkannan
3rd August 2014, 12:10 PM
ம்ம் ஈத் ஹாலிடேஸ் வந்தாலும் வந்தது வெளியூர் எல்லாம் சென்று வீட்டில் வந்து கொஞ்சம் ஜூரம் உடல் நிலை க் குறைவு என அவதிப் பட்டு..இதோ லீவ் முடிஞ்சு..கொலம்பஸ் கொலம்பஸ் வந்துட்டோம் ஆஃபீஸ்..

சைல ஸ்ரீ வரை படித்திருக்கிறேன்..வழக்கம் போல் அவரவர்கள் களத்தில் புகுந்து சிக்ஸ் சிக்ஸ் ஆக அடித்து த் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்..படிக்க சந்தோஷமாக இருக்க்க்கிறது..:)

வீரத்திருமகனில் தான் பாடாத பாட்டெலாம்பாட வந்தாள் இல்லியோ..அந்தப் பெண் எஸ் ..சர் பட்டம் வாங்காத ரோசா எஸ்.சரோஜா என நினைவு..முகத்தில் ரஸ்ட் ஜாஸ்தி இருக்கும்..குறும்பு புன்னகைவேறு..ராமண்ணாவைக் கல்யாணம் செய்து நடிப்பதை நிறுத்தி போன வருடமோ என்னவோ காலமானதாகப் படித்த நினைவு..

ம்ம்..வருகிறேன்..மீண்டும் :)

madhu
3rd August 2014, 01:00 PM
வீரத்திருமகனில் தான் பாடாத பாட்டெலாம்பாட வந்தாள் இல்லியோ..அந்தப் பெண் எஸ் ..சர் பட்டம் வாங்காத ரோசா எஸ்.சரோஜா என நினைவு..

சிக்கா... ராமண்ணா மனைவி.... அது ஈ.வி.சரோஜா... இவங்கதான்

http://thumbnails102.imagebam.com/23931/d13134239304825.jpg

இன்னும் எம்.சரோஜா, பி.எஸ்.சரோஜா... சரோஜா(தேவி) அப்படின்னு எக்கசக்க சர்ர்ர் ரோஜாக்கள் இருந்திருக்காங்களே !

chinnakkannan
3rd August 2014, 01:15 PM
ஓ... தாங்க்ஸ் மதுண்ணா. . டணால் தங்கவேல் ஒஃய்ப் தான் ஈ.வி.சரோஜான்னு நினைச்சுருந்தேன்..அது யார் பி எஸ்.ஸரோஜா..எம்.சரோஜா..

chinnakkannan
3rd August 2014, 01:44 PM
இன்றைய ஸ்பெஷல் என்ன என்று வாசு சார் தன்னைத் தானே கேட்டுக் கொண்டு எழுதியும் முடித்திருப்பார் என நினைக்கிறேன்..இன்னிக்கு என்னவாக்கும் விசேஷம்..

யெஸ்..சின்ன வயதில் நாங்கள் ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டு (எய்ட்டீந்த் மல்டிப்ளிகேஷன்) பெருமைப் பட்ட ஆடிப் பெருக்கு..ம்ம்..அந்தப் படத்தில் உள்ள பாடல்கள்..எல்லாமே அருமை தான்..இருப்பினும் பெங்களூர் பேரட் கன்னடத்துக் கிள்ளை மொழி இன்னொரு கிள்ளை முழி ஆட(வேறுயார் தேவிகா தான்) சேர்ந்து பாடும் சோகப் பாடல்..

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா - உள்ளம்
அலை மோதும் நிலை கூறவா
அந்த கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா

அழியாது காதல் நிலையானதென்று
அழகான கவி பாடுவார் - வாழ்வில்
வளமான மங்கை பொருளோடு வந்தால்
மனம் மாறி உறவாடுவார் - கொஞ்சும்
மொழி பேசி வலை வீசுவார் - நட்பை
எளிதாக விலை பேசுவார்

கதை கொஞ்சம் புகையாகத் தான் நினைவில்..ஆனால் பாடல் முடிவில் சர்ரோஜாவின் அண்ணன் மரிப்பது போல் வரும் என நினைக்கிறேன்.இசையரசியின் அற்புதமான பாடல்களில் ஒன்று இது..

இன்னொரு அழகுப்ப் பாட்டு..

கண்ணிழந்த மனிதன் முன்னே
ஓவியம் வைத்தார்
இரு காதில்லாத மனிதன் முன்னே
பாடல் இசைத்தார்
பாடல் இசைத்தார்


கண்ணிருந்தும் ஓவியத்தைக்
காட்டி மறைத்தார்
இரு காதிருந்தும் பாதியிலே
பாட்டை முடித்தார்
பாட்டை முடித்தார்


ஆட வந்த மேடையிலே
முள்ளை வளர்த்தார்
அணைக்க வந்த கரங்களுக்கு
தடையை விதித்தார்
காய்ந்து விட்ட மரத்தினிலே
கொடியை இணைத்தார்
தாவி வந்த பைங்கிளியின்
சிறகை ஒடித்தார்

பெண் பெருமை பேசிப் பேசிக்
காலம் கழிப்பார்
தன் பெருமை குலையும் என்றால்
பெண்ணை அழிப்பார்


முன்னுமில்லை பின்னுமில்லை
முடிவுமில்லையே
மூடன் செய்த விதிகளுக்கு
தெளிவுமில்லையே

ரொ ம்ப பிடித்த பாட்ல்களில் ஒன்று..சிச்சுவேஷன் தான் நினைவுக்கு வரமாட்டேங்குது..ம்ம்

chinnakkannan
3rd August 2014, 01:56 PM
ஊருக்கே நல்லது செய்யும் பெண் அவள்.. அவள் வாழ்வில் நல்லது நடக்கிறது..எஸ் கல்யாணம்.. ஆனால் வேகமாய் முடிந்த கல்யாண வாழ்க்கையும் அவளுக்கு விரைவில் முடிந்து விடுகிறது..ஆனால் அவளுக்குத் தெரியாது..எஸ்.. அவளது கணவன் விபத்திலோ எதிலோ இறந்து விடுகிறான்..இது ஊருக்குத் தெரிகிறது..ஆனால் அவர்களுக்கு அவளிடம் சொல்லத் துணிவில்லை..அந்தப் பொன் சிரிப்புக் கொண்டப் பூ முகம் வாடுவதை அவர்கள் விரும்பவில்லை..

எனில் ஆடி மாதம் வருகிறது..பதினெட்டாம் பெருக்கும் வருகிறது..ஊர் கூடி விளக்கு விடுகிறார்கள் சீறிப் பாயாமல் சிரித்தபடி செல்லும் காவிரியாற்றில்..அவர்கள் சுமங்கலியாக் இருக்க வேண்டும் என..அவளும் விடுகிறாள்..பார்க்கும் பெண்களுக்குச் சற்றே தயக்கம்..பின் மனதைத் தேற்றி அவர்களும் தொடர்ந்து பாட...

(படம்.. ராதா.. அந்தப் பெண் பிரமீளா..முத்து ராமன் ஹீரோ - இரு வேடங்கள் என நினைவு)

ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி
வாடியம்மா எங்களுக்கு வழித்துணையாக
எமை வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக..

மொய்குழலில் மலர்சூட்டி
மான்விழியில் மை தீட்டி
பொன் முகத்தில் பொட்டு வைத்து
பூவையர்கள் நலம் காக்க
நெய்வழியும் கை விளக்கை
நீரோடு மிதக்க விட்டோம்
நாயகனின் உயிர் காக்க
தாயிடத்தில் போக விட்டோம்..

வள்ளுவரும் வாசுகி போல்
வசிட்டனுக்கு அருந்ததி போல்
தொல்லுலகில் புகழ் விளங்க
தோகையர்க்குத் துணை புரிக
பின்னுறங்கி முன்விழித்து
பிள்ளை நலம் தனைக் காத்து
கொண்டவனின் மனமறிந்து
தொண்டு செய்ய மனம் தருக..

ம்ம் கண்ணதாசன்..என நினைக்கிறேன்..இப்போ காவிரிக்கிட்ட கேட்டா என்ன சொல்லும்.

படம் சுமார் என நினைவு..அந்த இரண்டாவது முத்துராமனின் ஜோடி ஜெயாவா.. அதுவும் நினைவில்லை

vasudevan31355
3rd August 2014, 01:58 PM
http://tamil.way2movies.com/wp-content/uploads/2012/04/m.saroja-passes-away.jpghttp://www.hindu.com/fr/2005/07/08/images/2005070800730301.jpg

சின்னக் கண்ணன் சார்,

இவர் தான் எம்.சரோஜா

'டணால்'தங்கவேலு அவர்களின் மனைவி. அடுத்த வீட்டுப் பெண், கல்யாணப் பரிசு போன்ற முக்கியமான படங்களில் இருவரும் ஜோடி சேர்ந்து சக்கை போடு போட்டனர்.

கணவருடன் சேர்ந்து இவர் கலக்கிய காமெடி சீன் கல்யாணப் பரிசு திரைப்படத்தில்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=i5uh6yQ7gzw

http://w1.nst.com.my/polopoly_fs/1.610808.1401801586!/image/image.jpg_gen/derivatives/landscape_454/image.jpg

இவர் பி.எஸ்.சரோஜா. இவர் தான் ஜெனோவா, வண்ணக்கிளி, கூண்டுக்கிளி, புதுமைப் பித்தன், போன்ற படங்களில் நடித்தார். மலையாளத்தில் நிறைய நடித்தவர்.

இவர் எம்ஜிஆருடன் நடித்த 'ஜெனோவா' படத்திலிருந்து ஒரு பாடல்.


http://www.youtube.com/watch?v=y4b8H7YZkdA&feature=player_detailpage


இது தவிர பின்னாளில் இன்னொரு சரோஜா. 'வடைமாலை' போன்ற படங்களில் நடித்தவர்.

உடம்பு தேவலையா?

chinnakkannan
3rd August 2014, 02:06 PM
வாசு சார்.. இப்போது நலம்..கொஞ்சம் ஒரு டாப்லெட் போட்டுண்டாச்சு..வேலைக்கும் வந்தாச்சு... நன்றி ஃபார் சரோஜா படஙக்ள்+ விளக்கங்கள்..ஈ.வி.சரோஜா மகாதேவியிலும் நடித்திருப்பார் என நினைக்கிறேன்..ஆர்.. மதுரை வீரன்?

vasudevan31355
3rd August 2014, 02:07 PM
'கூண்டுக்கிளி' படத்தில் எம்ஜிஆரின் மனைவியாக நடிகர் திலகம் ஆசைப்படும் பெண்ணாக பி.எஸ்.சரோஜா

http://raretfm.mayyam.com/pow07/images/koondukili01.jpg

vasudevan31355
3rd August 2014, 02:19 PM
http://i.ytimg.com/vi/U4JCYBL171Y/hqdefault.jpg

எம்ஜிஆர் அவர்கள் நடித்த 'என் தங்கை' என்ற படத்தில் எம்ஜிஆரின் குருட்டுத் தங்கையாக நடித்து புகழ் பெற்றவர் ஈ.வி.சரோஜா. ரொம்ப அழுவாச்சியான படம் இது. இதில் ஈ.வி.சரோஜா மிகவும் சின்னப் பெண்.

இதே ஈ.வி.சரோஜா அதே எம்.ஜி.ஆருடன் 'கொடுத்து வைத்தவள்' படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

http://i.ytimg.com/vi/1GndjzLTnWs/hqdefault.jpg

நடிகர் திலகம், மக்கள் திலகம் என்று பெரிய ஹீரோக்களை டீஸ் செய்து பாடும் கதாநாயகியின் தோழியாகவே பல படங்களில் வருவார்.

காத்தவராயனில் 'முனா... அட முக்காலணா ங்கப்பா' பாடி ஆடி அசத்துவார்.

'மதுரை வீரனி'ல் எம்ஜிஆரை வெறுப்பேற்றி 'வாங்க மச்சான் வாங்க' பாடலுக்கு ஆடுவார்.

chinnakkannan
3rd August 2014, 02:57 PM
ஈ.வி.சரோஜா பி.எஸ்.சரோஜா பற்றிய தகவல்கள் புகைப்படங்கள் நன்றி வாசு சார்..

//டணால்'தங்கவேலு அவர்களின் மனைவி. அடுத்த வீட்டுப் பெண், கல்யாணப் பரிசு போன்ற முக்கியமான படங்களில் இருவரும் ஜோடி சேர்ந்து சக்கை போடு போட்டனர்.// இந்த ஜோடியின் இன்னொரு காமடி மறக்க முடியாது..கைதி கண்ணாயிரம் - என்ன எங்கே எப்போ..

ஆமா தொடர்பா இன்னொரு பாட்டும் நினைவுக்கு வருதே..கொஞ்சி க் கொஞ்சி பேசி மதிமயக்கும் வஞ்சகரின் உலகம் வலைவிரிக்கும்..எம்.எஸ். ராஜேஷ்வரியா..

Russellmai
3rd August 2014, 02:57 PM
வாசு சார்,
சரோஜாக்கள் பற்றிய உங்களது பதிவுகள் அருமையாக
உள்ளது.தமிழ்த் திரை உலகம் பற்றிய விபரங்கள் உங்களது
விரல் நுனியில் உள்ளது.நடிகர் திலகம் படிக்காத மேதை
திரைப்படத்தில் -சீவி முடிச்சி சிங்காரித்து-பாடலில் ஈ.வி.சரோஜாவை கிண்டல் செய்து பாடியிருப்பார்.
கோபு

RAGHAVENDRA
3rd August 2014, 03:06 PM
முக்தா சீனிவாசன் அறிமுகப் படுத்திய ஒரு நாயகியின் பெயரும் சரோஜா தான் (படம் ஸ்ரீராம ஜெயம் என நினைக்கிறேன்)

RAGHAVENDRA
3rd August 2014, 03:08 PM
வாசு சார்
ஒவ்வொரு நாளையும் தங்களின் ஸ்பெஷல் பாட்டுக்கள் ஸ்பெஷலாக்கி விடுகின்றன. பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
3rd August 2014, 03:09 PM
கோபால்
தாளக் கட்டுப் பற்றிய தங்கள் பதிவு அபாரம். வித்தியாசமான தாளக்கட்டுக்களமைப்பதில் என்றுமே மெல்லிசை மன்னரின் பாடல்கள் தனித்துவம் பெறும். அதில் என்னங்க பாடலும் குறிப்பிடத் தக்கது.

RAGHAVENDRA
3rd August 2014, 03:11 PM
பொங்கும் பூம்புனல்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆடி வரும் காவிரியை வரவேற்கும் ராதா..

http://www.inbaminge.com/t/r/Radha/

vasudevan31355
3rd August 2014, 03:22 PM
இன்றைய ஸ்பெஷல் (45)

இன்று ஒரு மிக மிக அருமையான பாடல்

http://www.inbaminge.com/t/e/Enna%20Thavam%20Seithen/folder.jpg

அப்போதைய புகழ் பெற்ற பாடல். ஆனால் வானொலியில் கேட்டு, கேட்டு மகிழ்ந்ததுதான். வீடியோவில் பார்த்திருப்பது அபூர்வம். அதனாலேயே இப்பாடல் இன்றைய ஸ்பெஷல் ஆகிறது.

பாலாவும், சுசீலாவும் பாடிய பல பாடல்களில் முதல் வரிசையில் இடம் பெறுவது இப்பாடல்.

https://lh3.googleusercontent.com/proxy/D00gVcy2szzu6NG9ETfob3dSAl10lVeiq5fsmE7qMqYAi9IAXY xFkBEO2AL944uhGqLaQLVS9XY28dHF74GXMg=w426-h320-n

'என்ன தவம் செய்தேன்' படத்தில் விஜயகுமாரும், சுஜாதாவும் பாடும் டூயட்.

சுஜாதா மிக சிம்பிளாக அழகாக தெரிகிறார். விஜயகுமார் வழக்கம் போல. டான்ஸ் மூவ்ஸ் பண்ணத் தெரியாமல் தையா தக்காதான். ('தீபம்' படத்தின் 'பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே' பாடலை இருவரும் ஞாபகப் படுத்துகிறார்கள்)

ஆனால் பாடலில் இனிமை கொட்டிக் கிடக்கிறது. ஒவ்வொரு வரி முடிந்ததும் பாலாவும், சுசீலாம்மாவும் கொடுக்கும் அந்த வைப்ரேஷன்ஸ் மறக்கவே முடியாதது.

ஏதோ ஒரு புண்ணியமில்லாத படத்தில் இப்படி ஒரு அருமையான பாடல். நானும் உங்களோடு சேர்ந்து இப்போதுதான் பார்க்கிறேன் வீடியோவாக. பாடலைக் கெடுக்காமல் எடுத்திருந்தாலும் கூட இன்னும் அருமையாக இப்பாடலைப் படமாக்கியிருக்கலாம்.

மெல்லிசை மன்னரின் மணி மகுடத்தில் பதிக்கப்பட்ட பின்னாளைய வைரம். (இன்னொன்றும் கூட 'அந்தியில் சந்திரன் வருவதேன்?' கேள்விப்பாடல்) இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு.

மிக அருமையான பாலா-சுசீலா இணைவுப் பாடல். வாழ்நாள் முழுக்க என் கனவுப் பாடல்.

பாடலின் வரிகளைப் போலவே ஏதோ ஒரு இன்பம் இப்பாடலைக் கேட்டாலே.

ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே

லால லல்லால லல்லாலா லலலலலா
லால லல்லால லல்லாலா லலலலலா

ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே

சிங்காரச் செம்மாதுளை
உந்தன் செந்தூரம் காட்டும் கலை
சிங்காரச் செம்மாதுளை
உந்தன் செந்தூரம் காட்டும் கலை

பொழுது செல்ல பொழுது செல்ல
கல்யாணப் பந்தலிடும் கலைச்சோலை

ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே

கன்னம் சிறுகுழி விழ சிரிக்கின்ற வண்ணம்
மின்னும் இதழ் பறவைகள் குடிக்கின்ற கிண்ணம்

தாலாட்டு பூச்சூட்டு
நான் உந்தன் சொந்தம்
ஆராத்தி நீ காட்டு ஆனந்த பந்தம்

என் வீட்டுப் பச்சைக்கிளி
இன்று என் தோளில் தோற்றும் கிளி
இடமிருந்து வலமிருந்து என்னோடு
வட்டமிடும் வண்ணக்கிளி
இடமிருந்து வலமிருந்து என்னோடு
வட்டமிடும் வண்ணக்கிளி

ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் லாலாலாலா
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹாஹாஹாஹாஹா

மங்கை தினம் சலசலவென வரும் கங்கை
ஹாஹாஹாஹாஹா

மன்னன் தினம் குழலிசை வடிக்கின்ற கண்ணன்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

தாகங்கள் பாவங்கள் நான் கண்டேன் இங்கே
மேளங்கள் தாளங்கள் ஊர்வலம் அங்கே

கல்யாணப் பெண்ணாயிரு
அங்கே கண்ணாடி முன்னாலிரு
கல்யாணப் பெண்ணாயிரு
அங்கே கண்ணாடி முன்னாலிரு

கடவுளுக்கு நன்றி சொல்லி
எந்நாளும் அன்பு கொண்ட கண்ணாயிரு
கடவுளுக்கு நன்றி சொல்லி
எந்நாளும் அன்பு கொண்ட கண்ணாயிரு

ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே
நீ அருகில்
இருந்தாலே

நீ அருகில்
இருந்தாலே

நீ அருகில்
இருந்தாலே


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=plznRYowKdA

chinnakkannan
3rd August 2014, 03:38 PM
//என்ன தவம் செய்தேன்' படத்தில்// நல்ல பாட்டு தான் நன்றி வாசு சார்.. ஆனால் படம் வெகு போர் என நினைவு..ஏனெனில் ரிலீஸானது தேவி என நினைக்கிறேன்(மதுரை) அங்கு பார்த்தது..

vasudevan31355
3rd August 2014, 03:45 PM
'ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி' பாடலுக்கு மிக்க நன்றி ராகவேந்திரன் சார். எனக்கு மிகவும் பிடித்த பாடல். இப்பாடலை நம் வசந்தாவும் சேர்ந்து பாடி இருப்பார் இல்லையா?

இதே போல ஒரு பாடல் ராமண்ணாவின் 'நீச்சல் குளத்'திலும் உண்டு. 'ஆடி 18 ஆடுது பூஞ்சிட்டு... எல்லோரும் கொண்டாடுங்க'.. ஜானகியின் குரலில்.


https://www.youtube.com/watch?v=gZJswMES8Io&feature=player_detailpage

vasudevan31355
3rd August 2014, 04:42 PM
rare poster.

http://www.dkpattammal.org/ImagesDB/4%20Versatality/4.5.4.-AVM-Files.jpg(1).jpg

thanks to www.dkpattammal.org

RAGHAVENDRA
3rd August 2014, 04:44 PM
வாசு சார்
ஏதோ ஒரு நதியில் நான் இறங்கியதைப் போலே, அதில் மதுர கானம் எனும் அமுத ஊற்றுப் பெருக்கெடுத்து ஓடுவதைப் போலே உணர்கிறேன், தங்களுடைய இன்றைய ஸ்பெஷல் பாடலின் மூலம்.
பாராட்டுக்கள்.
நீச்சல் குளம் பாட்டும் அருமையாக இருக்கும். அதில் எஸ்பிபாலா டூயட் ஒன்று - படத்தில் சுமனுக்கு - உண்டு.
நீச்சல் குளம் சுமனின் அறிமுகப் படம் தானே

vasudevan31355
3rd August 2014, 04:44 PM
http://www.dkpattammal.org/ImagesDB/4%20Versatality/4.5.4.-AVM-Files.jpg

RAGHAVENDRA
3rd August 2014, 04:46 PM
பொங்கும் பூம்புனல்

நண்பர்கள் தினத்தையொட்டி ஸ்பெஷலாக...

http://www.youtube.com/watch?v=GQvBncn1aq4

vasudevan31355
3rd August 2014, 04:50 PM
நன்றி ராகவேந்திரன் சார்.

'நீச்சல் குளம்' ஒரு விறுவிறுப்பான படமே.

நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல் பாலா மற்றும் சுசீலா இணைந்து பாடுவது.
இந்தப் பாடல்தான் என்று நினைக்கிறேன்.

நல்ல பாடல். இப்படத்திற்கு 'தாராபுரம்' சுந்தர்ராஜன் இசை என்று நினைவு.

'கட்டழகைத் தொட்டாலென்ன
கன்னத்திலே இட்டாலென்ன'
கட்டிலறைக் காவியமே
வா பக்கமா'


https://www.youtube.com/watch?v=qhWPFKbHSg8&feature=player_detailpage

vasudevan31355
3rd August 2014, 04:56 PM
Suman started his film career as a police officer in Tamil movie 'Neechal Kulam' (1977) produced by T.R.Rammanna.

http://1.bp.blogspot.com/-ILseTnpAek0/TsZu4_CQq_I/AAAAAAAAANI/EEN2ZP-GYsU/s1600/suman-3.jpg

vasudevan31355
3rd August 2014, 05:13 PM
சுமன் என்றதுமே எனக்கு உடனே நினைவுக்கு வரும் பாடல் 'கடல் மீன்கள்' திரைப்படத்தில் இளையராஜா இசையில் 'மலேஷியா' வாசுதேவன் பாடும் பாடல்தான்.

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2013/KadalMeengal00000006.jpg

என்றென்றும் ஆனந்தமே
எண்ணங்கள் ஆயிரமே
வாலிபத்தின் ரசனை
கண்ணில் துள்ளவே வந்த அழகு

மஞ்சள் நிறப் பூவெடுத்து
மங்கை உடல் சீர் கொடுத்து
கொஞ்சி வரும் பாட்டெடுத்து
வந்த சுகமே

சொல்ல சொல்ல நெஞ்சை அள்ளும்
காவியம் பிறக்கும்
கொள்ளை கொள்ளும் வண்ணம்
இன்ப ராகம் பிறக்கும்

இசை மழை பொழிந்தது குயிலே

அழகே வருவாய் அருகே

தங்கச் சிலை நீ சிரிக்க
தாகம் கொண்டு நான் இருக்க
ஒன்றில் ஒன்று சேர்ந்திருக்க
எண்ணமில்லையோ

தொட்டு தொட்டு மன்மதனின்
லீலை அறிவோம்
மொட்டவிழ்ந்து வாசம் தரும்
பூக்களை ரசிப்போம்
அணைப்பதில் கிடைப்பது பெருமை

வருவாய் தருவாய் சுகமே

என்றென்றும் ஆனந்தமே
எண்ணங்கள் ஆயிரமே
வாலிபத்தின் ரசனை
கண்ணில் துள்ளவே வந்த அழகு

பிரமாதமான பாடல். இளையராஜா ஆரம்ப காலத்தில் போட்ட அற்புதமான பாடல். அம்பிகா சிறு வயதாக இருப்பார் அழகாகவே. மலேஷியாவின் கம்பீரக் குரலுக்குக்காகவே மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்.

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2013/KadalMeengal00000005.jpg



https://www.youtube.com/watch?v=-dUR0nO8aqQ&feature=player_detailpage

chinnakkannan
3rd August 2014, 05:26 PM
நீச்சல் குளம் நான் பார்க்க விட்டுப் போன ஒரு படம்..என்றென்றும் ஆனந்தமேயும் நல்ல பாட்டு..சுமன் டார்லிங் டார்லிங் டார்லிங்கில் தான் கொஞ்சம் அடையாளம் தெரிந்தது..அதற்கு முன் மதுரை நியூசினிமாவில் ஆராதனை என்னும் படம் பார்த்த நினைவு சுமன் - சுமலதா.. நல்ல பாட்டும் ஒன்று இருந்த நினைவு..பாடல் நினைவிலில்லை..ஆனால் படம்..ம்ம் ஒரு பேய் ப் படமாக்கும்..

இமை தொட்ட மணிவிழி இரண்டுக்கும் நடுவினில் தூரம் அதிகமில்லை.. எனக்கு ரொம்ப்பப் பிடித்த பாடல்களில் ஒன்று.. நன்றி ராகவேந்தர் சார்..

ஆடியிலே பெருக்கெடுத்துக்கு நான் தான் லிரிக்ஸ் போட்டேன் :sad:

Gopal.s
3rd August 2014, 05:28 PM
சுமன் என்றதுமே எனக்கு உடனே நினைவுக்கு வரும் பாடல் 'கடல் மீன்கள்' திரைப்படத்தில் இளையராஜா இசையில் 'மலேஷியா' வாசுதேவன் பாடும் பாடல்தான்.



என்றென்றும் ஆனந்தமே, எனக்கு பிடித்த ஒரு இளைய ராஜா composition .இது சரசாங்கி ராகம் அடிப்படை. உள்ளத்தில் நல்ல உள்ளம் பாட்டில் பல்லவி சக்ரவாகம். சரணம் சரசாங்கி.(செஞ்சோற்று கடன் தீர்க்க ,தங்க சிலை நீ சிரிக்க ஒற்றுமை புலப்பட வேண்டுமே?)

Gopal.s
3rd August 2014, 05:38 PM
நண்பர்கள் தினத்தில் ,திரி நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

vasudevan31355
3rd August 2014, 05:49 PM
'சிவாஜி' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த சுமன் அப்போதே கமல் படத்தில் (எல்லாம் இன்ப மயம்) நடித்து விட்டார். இதில் இவருக்கு சுரேகா ஜோடி. அது சரி! சுரேகா யாரென்று கேட்கிறீர்களா?

http://www.metromatinee.com/MetromatineMoviewNews/images/Paris%20Payyans%20movie%20Pratap%20Pothen%20Surekh a%20photos%20news%20.jpghttp://i.ytimg.com/vi/dlm2Xd_WR54/0.jpg

பரதன் எடுத்த 'தகரா' என்ற படத்தில் ஹீரோயினாக கவர்ச்சியுடன் நடித்தவர். அப்போது 'தகரா' ரொம்ப பிரபலம். அப்போதைய இளவட்டங்கள் மிஸ் பண்ணாமல் சுரேகாவின் கவர்ச்சிக்காக தகராவை டிக்கெட் கிடைக்காமல் 'தகரா'று செய்து பார்த்தார்கள். நம்ம பிரதாப் போத்தன் தான் ஹீரோ.

இந்த 'தகரா' தான் பின்னால் வினித், நந்தினி (அருணாவின் தங்கை) நடித்து 'ஆவாரம் பூ'வாக வெளி வந்தது. இளையராஜாவின் இசையில் அருமையான பாடல்களைக் கொண்ட படம் இது.

chinnakkannan
3rd August 2014, 05:53 PM
//தகராவை டிக்கெட் கிடைக்காமல் 'தகரா'று செய்து பார்த்தார்கள்// :) நந்தினி அருணாவின் தங்கை என்பது நான் அறியாத தகவல்..பட் ரொம்ப படங்கள்ள அவங்க நடிக்கலை (ஆவாரம் பூ பதினாறு வயதினிலே ரீமேக் மாதிரி இருக்கும் இல்லியா வாசு சார்)..
நந்தினி தொடர்பா அந்தக் கால கட்ட இன்னொரு நடிகையும் நினைவுக்கு வர்றாங்க..ஆம்னின்னு நினைவு..பிரபு நடையா நடையான்னு பாடற ஒரு பாட்டு உண்டு..பாடல் தான் நினைவுக்கு வரலை

vasudevan31355
3rd August 2014, 05:55 PM
அதற்கு முன் மதுரை நியூசினிமாவில் ஆராதனை என்னும் படம் பார்த்த நினைவு சுமன் - சுமலதா.. நல்ல பாட்டும் ஒன்று இருந்த நினைவு..பாடல் நினைவிலில்லை..ஆனால் படம்..ம்ம் ஒரு பேய் ப் படமாக்கும்..


மிக அற்புதமான பாட்டை மறந்து விட்டீர்களே சி.க.சார்! என்னுடைய 'இன்றைய ஸ்பெஷல்' தொடருக்காகத் தயாராக இருக்கிறது.

'ஒரு குங்குமச் செங்கமலம்
இள மங்கையின் தங்க முகம்'

மீதி தொடரில்.

chinnakkannan
3rd August 2014, 06:04 PM
வாவ்..எழுதுங்க வாசுசார்.. வீ ஆர் வெய்ட்டிங்க்.. :)

vasudevan31355
3rd August 2014, 06:09 PM
ஆம்னி

ஹானஸ்ட் ராஜ், இதுதாண்டா சட்டம், விட்னெஸ், முதல் சீதனம் (இதில் ஒரு அருமையான பாடல் உண்டு சி.க.சார். 'எட்டு மடிப்பு சேல... இடுப்பில் கட்டப்பட்ட ஒரு சோல') படங்களில் நடித்திருக்கிறார்.

http://123tamilforum.com/imgcache2/2011/03/57454496-1.png

http://www.inbaminge.com/t/p/Paasavalai%201995/folder.jpg

கமலுடன் 'சுப சங்கல்பம்' தெலுங்கு படத்தில் ஹீரோயின் இவரே. கே. விஸ்வநாத் படம் இது. தமிழில் 'பாசவலை' என்று வந்து நம் பொறுமையை சோதித்தது.

chinnakkannan
3rd August 2014, 06:25 PM
உங்களுக்குப் பழைய பாடல் சிங்கம் எனப் பட்டம் கொடுக்கலாம் என நினைக்கிறேன்..வாசு சார் :) சூப்பர்..

நான்கைந்து வருடம் முன்னால் 2009 ஆ 2010 ஆ நினைவிலில்லை..ஆனால் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முதல் நாள்.. கோல்டன் பீச்சிற்கு எதிரில் ஒரு கிமீ தள்ளி எதிர்ப்புறம் அமைந்திருக்கும் ஒரு ரிசார்ட்டில் மூன்று குடும்பங்கள் ஹாலிடேக்காகச்சென்றிருந்தோம்..

ரிசார்ட் ஓனரின் தம்பியின் பெயர் ரமணா.. ரிசார்ட் ஓனர் தன் தம்பியை வைத்து தம்பி அர்ஜூனா எனப் படம் எடுப்பதாகவும் சொல்லி பாடல்கள் எல்லாம் போட்டுக் காண்பித்தார்..பின் அதில் ஒரு ரோலுக்காக சுமன் வந்திருக்கிறார்..அவரும் அங்கேயே தங்கியிருக்கிறார் எனச் சொன்னார்..

மறு நாள் காலை சுமனிடம் அறிமுகமும் செய்வித்தார்..பளீரென்ற தோற்றம்..சிவாஜியில் பார்த்ததை விடக் கொஞ்சம் மெலிந்த உடல் வாகு..கை குலுக்கிய போது அவரது தன்னம்பிக்கை தெரிந்தது..சிவாஜியில் நன்றாக குண்டாக இருந்தீர்கள்..இப்போது இளைத்துவிட்டீர்கள் குட் எனச் சொல்ல..ஓ குண்டாக நான் எவ்வளவு கஷ்டப் பட்டேன் தெரியுமா எனப் புன்னகைத்தார்..ம்ம்

(அந்தத் தம்பி ரமணா சில படங்களில் நடித்திருக்கிறார்..சமீபத்தில் கூட பார்த்திபன் விமல் படத்தில் ஒரு ரோல்..அந்தப் படத்தின் பெயர் மறந்து விட்டது)

நான் சந்தித்துப் பேசிய ஒரே நடிகர் சுமன் தான் :)

vasudevan31355
3rd August 2014, 06:27 PM
வாசு சார்,
சரோஜாக்கள் பற்றிய உங்களது பதிவுகள் அருமையாக
உள்ளது.தமிழ்த் திரை உலகம் பற்றிய விபரங்கள் உங்களது
விரல் நுனியில் உள்ளது.நடிகர் திலகம் படிக்காத மேதை
திரைப்படத்தில் -சீவி முடிச்சி சிங்காரித்து-பாடலில் ஈ.வி.சரோஜாவை கிண்டல் செய்து பாடியிருப்பார்.
கோபு

டியர் கோபு சார்,

தங்கள் அன்பிற்கும், பாராட்டிற்கும் நன்றி! தொடர்ந்து உற்சாகப்படுத்தி ஆதரவு அளித்து வருவதற்கும் நன்றி! 'படிக்காத மேதை' பாடலை நினைவு படுத்தியமைக்கு நன்றி!

chinnakkannan
3rd August 2014, 06:29 PM
//திரைப்படத்தில் -சீவி முடிச்சி சிங்காரித்து-பாடலில் ஈ.வி.சரோஜாவை கிண்டல் செய்து பாடியிருப்பார்.// அந்த சீவி முடித்து சிங்காரித்து தான் இசைக்களஞ்சியத்தில் (சிலோன் ரேடியோ) ஆரம்ப ட்யூனாக வரும் ( நேரம் 4 டு 4.30 என நினைவு)

vasudevan31355
3rd August 2014, 06:29 PM
நான் சந்தித்துப் பேசிய ஒரே நடிகர் சுமன் தான் :)

சுவாரஸ்யம் சி.க.சார்.

vasudevan31355
3rd August 2014, 06:42 PM
http://mimg.sulekha.com/tamil/thambi-arjuna/thambi-arjuna_m.jpg

சி.க.சார்,

நீங்கள் கூறிய படம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். சுமனும், ரமணாவும் 'தம்பி அர்ஜுனா' படத்தில் இருக்கும் போஸ் இது.

இன்னொரு விஷயம். இந்த நடிகர் ரமணா யார் என்று கண்டு பிடிக்க முடிகிறதா?

பழைய நடிகர் விஜய்பாபு என்று ஒருவர் இருந்தாரே.. 'படிக்காதவன்' படத்தில் நடிகர் திலகம், ரஜினியின் சகோதரர் ..... 'ஒரு விடுகதை ஒரு தொடர் கதை' எம்.ஏ காஜா படத்தின் இரட்டை நாயகர்களில் ஒருவர். அந்த விஜய்பாபுவின் மகன்தான் இந்த ரமணாவாம்.

vasudevan31355
3rd August 2014, 06:53 PM
'படிக்காதவன்' படத்தில் விஜய்பாபு

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/nm.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/nm.jpg.html)

chinnakkannan
3rd August 2014, 07:00 PM
ஓ.. விஜய்பாபுவின் மகனா இவர்..விஜய்பாபுவின் பாடல் நினைவுக்கு வருகிறதா..மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து மலையின் முடிவில் பொழியும் வழியும் நிலமும் அதனால் குளிராதோ - அம்பிகையின் இரண்டாவது படம்-தரையில் வாழும் மீன்கள்..இன்னொரு படம் கூட உச்சக்கட்டம் அதிலும் இவர் தானே?!

பார்த்திபன் விமல் ரமணா நடித்த படம் நினைவுக்கு வந்து விட்டது..ஜன்னல் ஓரம்..வித்தியாசமான படம்..ஸோ வி.பாவின் மூத்த மகனைத் தான் நான் பார்த்திருக்கிறேன் :)

chinnakkannan
3rd August 2014, 07:01 PM
உச்சக்கட்டம் ல் ஒரு பாட்..இதழில் தென் பாண்டி முத்துக்கள்..வைரங்கள்..எனச் செல்லுமாக்கும்.. :) அதில் ஹீரோயின் சுரேகா இல்லை..ஹி ஹி..சுனிதா..

JamesFague
3rd August 2014, 07:54 PM
I am dedicating this song to Mr Vasu ji the following NT's Melodious Song from PB.



http://youtu.be/w-l5vYDIh8U

vasudevan31355
3rd August 2014, 08:22 PM
சி.க.சார்!

பார்த்தீர்களா? உங்களால் ஒரு மிக நல்ல பாட்டு 'தரையில் வாழும் மீன்கள்' படத்திலிருந்து நினைவு படுத்தப்பட்டிருக்கிறது. அருமையான பாடல். கவிஞரல்லவா! அதான் ரசனையின் உச்சம். மிகப் பிரமாதமான பாடல். நீண்ட நாள் சென்று தங்கள் புண்ணியத்தில் கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறேன் புதையல் கிடைத்தது போல. நன்றி கவிஞரே!


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=cwwQi0mb8yU

vasudevan31355
3rd August 2014, 08:30 PM
சி.க.சார்,

'மழைக்கால மேகம்' பாடலைக் கேட்டால் அமிதாப், சத்ருகன் நடித்த 'ஷான்' படத்தின் 'பியார் கரனே வாலே... பாடல் போலவே சாயல் கொஞ்சம் இல்லை?


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=RbPDSKqKPCQ

vasudevan31355
3rd August 2014, 08:32 PM
I am dedicating this song to Mr Vasu ji the following NT's Melodious Song from PB.




Lot of thanks vasudevan sir.

vasudevan31355
3rd August 2014, 08:47 PM
ஓ.. விஜய்பாபுவின் மகனா இவர்..விஜய்பாபுவின் பாடல் நினைவுக்கு வருகிறதா..மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து மலையின் முடிவில் பொழியும் வழியும் நிலமும் அதனால் குளிராதோ - அம்பிகையின் இரண்டாவது படம்-தரையில் வாழும் மீன்கள்..இன்னொரு படம் கூட உச்சக்கட்டம் அதிலும் இவர் தானே?!



'உச்சகட்டம்' சரத்பாபு, ராஜ்குமார், சுனிதா (wine &women):) புகழ் நடித்தது. இதில் விஜயபாபு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இயக்குனர் ராஜ்பரத். தொட்டால் சுடும், சொல்லாதே யாரும் கேட்டால், இதுதான் ஆரம்பம், ஒரே குறி.... இந்தப் படங்கள் எல்லாம் ராஜ்பரத் இயக்கியவை. என்ன சார்! குழப்புதா?:)

chinnakkannan
3rd August 2014, 10:45 PM
வாசு சார் நன்றி.. மழைக்கால மேகம் பாடல் தேடி இட்டமைக்கு.. நானும் கேட்டு மகிழ்ந்தேன்..

ஊடி வலையில் உளமார வாசுசார்
தேடித்தான் பார்த்ததில் தேன்

அப்புறம் ஸாரி..விஜய்பாபு அண்ட் ராஜ்குமார் கன்ஃப்யூஸ் ஆகிவிட்டேன்..ராஜ் பரத் படம் தானே முதல் உச்சக்கட்டத்துடன் ஓவர்..மற்றவை எல்லாம் ஒரே டைப்..

யெஸ்..ப்யார் கர்னே வாலி பாட்டிற்கும் இதற்கும் ஒற்றுமை தெரிகிறது..ஆனால் தரையில் வாழும் மீன்கள் முன்னாலேயே வந்து விட்டது தானே?

vasudevan31355
3rd August 2014, 11:01 PM
இல்லை சின்னக் கண்ணன் சார். த.வா .மீன்கள் 'ஷான்' படத்துக்குப் பிறகுதான் ரிலீஸ். ஷான் 1980. இது 1981. மீன்களுக்கு இசை சந்திரபோஸ் அண்ணாச்சி. தெரிந்தும்,தெரியாமலும் கொஞ்சம் நிறையவே சுடுவார். அதுவும் இந்தியில் அதிகம் சுடுவார். இதுவும் அப்படித்தான்.

Gopal.s
4th August 2014, 04:43 AM
நீல பட்டாடை கட்டியதற்கு நன்றி வாசு. நண்பர்கள் தினத்தில்தான் ராமு,ராஜா போட்டு மிரட்டி ,தினத்தையே கெடுத்தாய்.ஆண்டவன் படைச்சான்,வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று நிறைய உள்ளதே?

vasudevan31355
4th August 2014, 07:26 AM
நீல பட்டாடை கட்டியதற்கு நன்றி வாசு. நண்பர்கள் தினத்தில்தான் ராமு,ராஜா போட்டு மிரட்டி ,தினத்தையே கெடுத்தாய்.ஆண்டவன் படைச்சான்,வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று நிறைய உள்ளதே?

கண் டாக்டரிடம் சென்று கண்களை நன்கு பரிசோதனை செய்து கொள்ளவும்.:banghead:

RAGHAVENDRA
4th August 2014, 07:42 AM
நட்புக்கு வயதேது, காலமேது,

vasudevan31355
4th August 2014, 07:43 AM
http://skjbollywoodnews.com/wp-content/uploads/2013/08/5-kishore-kumar-wallpaper-1024x768_z.jpg


கூகுள் லோகோ மூலம் இன்று இந்தப் பாடகன் உலகமெங்கும் இசை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகி அவர்தம் நெஞ்சங்களில் நிறைகிறான். ஜாலி ஒன்றையே வாழ்க்கையாகக் கொண்டு கலகலப்பாக வாழ்ந்த மறக்கவொண்ணா பாடகன்.

அவன் பிறந்தநாள் இன்று.

கிஷோர்குமார் என்று அழைக்கப்பட்ட அந்த கில்லாடி நிகழ்த்திய சாதனைகள் எண்ணிலடங்காது. எத்தககைய பாடல்களையும் பாடி ஊதித் தள்ளிய திறமையாளன். இந்திப் பாடல்களுக்கு தனி உருவம் கொடுத்தவன். காமெடி முதல் கஜல் வரை கலக்கி எடுத்தவன்.

அவன் பிறந்தநாளில் அவன் கொடிநாட்டிய பாடல்கள் சிலவற்றின் மூலம் அவனுக்கு இதயபூர்வமான நம் வாழ்த்துக்களைக் கூறுவோம்.

முதலில் ஒரு கலகலப்பான கிஷோர் அவர்களின் அமர்க்களத்தைப் பார்ப்போம்.

தான் நேரிடியாகப் பாடும் கச்சேரி மேடை ஒன்றில் அவ்வளவு பெரிய பாடகன் ரசிகர்களோடு ரசிகர்களாக கலந்து அவர்களை தன்னோடு பாடவைத்து ஆடவைத்து அடிக்கும் கூத்துக்கள் நம்மை விலா நோகச் செய்கின்றன.

அதுவும் 'ஓ... கைகே பான் பனாரஸ்வாலா' டான் படப் பாடலைப் பாடி அமர்க்களம் பண்ணுவதைப் பாருங்கள்.


https://www.youtube.com/watch?v=GVD-r4MU3Wc&feature=player_detailpage

vasudevan31355
4th August 2014, 07:51 AM
http://www.hindustantimes.com/Images/popup/2012/11/kishore-kumar.jpg

கிஷோர் 'முக்கந்தர் கா சிக்கந்தர்' படத்தில் பாடிய மறக்கவே முடியாத, அமிதாப் அவர்களின் அமர்க்களமான பைக் சவாரியில் நம்முடன் என்றும் பயணிக்கும்

'ரோத்தே ஹூவே ஆத்தா ஹே சப்'

பாடல்.

இந்த ஒரு பாடல் போதும் கிஷோர்ஜியின் பெயரை காலம் முழுதும் சொல்ல.


https://www.youtube.com/watch?v=RuQMjuvMugk&feature=player_detailpage

vasudevan31355
4th August 2014, 07:57 AM
http://images.mid-day.com/2013/feb/Kishore-Kumar.jpg

'அனாமிகா' படத்தில் கிஷோர்ஜி சஞ்சீவ் குமார் அவர்களுக்காகப் பாடிய சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்

'மேரி பீகி பீகி சே'

இந்தப் பாடலைக் கேட்டவர்கள் மறுமுறை கேட்காமல் இருக்க மாட்டார்கள்.


https://www.youtube.com/watch?v=K0THyu8oNlw&feature=player_detailpage

vasudevan31355
4th August 2014, 08:03 AM
http://mimg.sulekha.com/events/kishore-kumar-s-family-celebrates-his-birthday/kishore-kumar-s-family-celebrates-his-birthday-pictures030.jpg

'அந்தாஜ்' திரைப்படத்தில் இளமை கொப்பளிக்கும் ராஜேஷ் கண்ணாவுக்காக கிஷோர் பாடும் உற்சாகப் பாடல்.

'ஜிந்தகி ஏக் சபர் ஹே சுஹானா'

'ஓட்லயீ ஓட்லயீ ஊ....ஓட்லயீ ஓட்லயீ ஊ'....

என்ன ஒரு பாடல்!


https://www.youtube.com/watch?v=UBUEXlOsGPY&feature=player_detailpage

Richardsof
4th August 2014, 08:05 AM
kishore kumar - sweet voice.
http://youtu.be/a-9tKVYD4o4

vasudevan31355
4th August 2014, 08:09 AM
https://lh3.googleusercontent.com/-NzBYjN4A6y8/Uk5AK5lxaaI/AAAAAAACd_Q/tltVN-DzFxQ/s1600/Kishore-Kumar-Singer-turned-actor-Kishore.jpg

தேவ்ஜி நடித்த மிகவும் புகழ் பெற்ற 'கைட்' படத்தில் லதாவுடன் இணைந்து கிஷோர் படும் நம்மை மெய்மறக்கச் செய்யும் பாடல்.

'காதாரஹே மேரா தில்
தூ ஹி மேரி மன்ஜில்'

சோறு, தண்ணி, ஊன், உறக்கம் எதுவும் வேண்டாம். இந்தப் பாடல் ஒன்று போதும்.


https://www.youtube.com/watch?v=b543r0E8ciI&feature=player_detailpage

vasudevan31355
4th August 2014, 08:18 AM
http://www.keefarakpainda.com/wp-content/uploads/2012/08/kishore1.jpg

'Door Gagan kee Chhav Mein'

படத்தில் கிஷோர் நடித்து பாடும் அதி அற்புத பாடல்.


https://www.youtube.com/watch?v=7bNULRlWh1k&feature=player_detailpage

madhu
4th August 2014, 08:22 AM
ஹிந்தியில் சொந்தப் படம் எடுத்து நடித்து பாடி... கிஷோர் குமார் அந்தக் காலத்தில் செதுக்கிய சிற்பம் ஒன்று
பல மொழிகளிலும் மெருகேற்றப்பட்டு பளபளத்தது.

வீடு திரும்பும் ராணுவ வீரன் மனைவி தீவிபத்தில் இறந்து போக ஊமை மகனுடன் திரியும்போது ஒரு
பணக்கர்ரப் பெண்ணைக் காப்பாற்றி அவளிடம் வேலைக்கு சேர அவளோ அவனையே நேசிக்க ஆரம்பிக்க
.... அவன் " நிலவே என்னிடம் நெருங்காதே" என்று பாடும் கதை தெரியுமல்லவா ? அட.. நம்ம "ராமு"வேதான்..

அதன் ஒரிஜினல் இதுதான் ..."தூர் ககன் கி சாவொன் மே" எனும் இந்தப் படம்.

இதில் இடம் பெற்ற "கோயி லௌட்டாதே மேரே பீதே ஹுவே தின்" எனும் இந்தப் பாட்ல்...
( அங்கங்கே தென்படும் இசைத் துணுக்குகளில் இது சத்தியம் படத்தின் "காதலிலே பற்று வைத்தாள்"
பாடல் தென்படுகிறதோ ?_

http://youtu.be/OBdZDPrHzg8

vasudevan31355
4th August 2014, 08:23 AM
https://lh3.googleusercontent.com/-vNIpsMF58ao/UZhO2gGc3jI/AAAAAAAA9go/17ppaHioi18/s1600/Kishore-Kumar-born-Abhas-Kumar-Ganguly.jpg

'தண்டி ஹவா ஏ சாந்த்னி சுஹானி'

'ஜும்ரூ' படத்தில் கிஷோர் பாடி தென்றலாய் நம் மனதை மயிலிறகால் வருடுவது போல வருடும் பாடல்.

நாம் மனம் மயங்கி சொக்கிப் போகத்தான் வேண்டும்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=7-AJ7HxlUFU

madhu
4th August 2014, 08:33 AM
இரண்டாவது முத்துராமனின் ஜோடி ஜெயாவா.. அதுவும் நினைவில்லை

டாக்டர் முத்துராமனின் மனைவி ஜெயந்தி..

rajeshkrv
4th August 2014, 08:40 AM
சில நாட்கள் வராவிடில் திரி வளர்ந்து விண்ணை தொடுகிறதே.. அருமை அருமை. நண்பர்கள் அனைவரும் அள்ளி வழங்கிய பதிவுகள் சபாஷ் போடவைக்கும் ரகம்..

வாழ்த்துக்கள்

சி.கா ..ராமண்ணாவிற்கு சரோஜா பெயர் மீது மோகம் முதலில் பி.எஸ்.சரோஜா பின்னர் ஈ.வி.சரோஜா... இருவருமே அவரது மனைவிகள் ..

rajeshkrv
4th August 2014, 08:46 AM
அடிக்கடி நாம் கேட்காத பாடல், இசையரசியும், பாடகர் திலகமும் அசத்தியிருக்கும் பாடல்

https://www.youtube.com/watch?v=hLnbxYcYhXk

vasudevan31355
4th August 2014, 09:05 AM
கன்னட கதம்பம் தொடர்ச்சி
வாசு ஜி உங்களுக்காகவே....

அக்கமாதேவி என்ற பெண் கவி அவரது வரிகளை வீராங்கனை கிட்டூரு சென்னம்மா பாடுவதாக அமைந்த பாடல்
பி.ஆர்.பந்துலு அவர்களின் பத்மினி பிக்சர்ஸ் “கிட்டூரு சென்னம்மா” .. சென்னம்மா வேடத்தில் சரோஜாதேவி என்ன அழகு. பிரமாதமாக நடித்திருப்பார்
டி.ஜி.லிங்கப்பாவின் இசையில் இசையரசியின் குரலில் என்றுமே நம்மை மனம் மகிழ செய்யும் பாடல்
மெய் சிலிர்க்கும்



ராஜேஷ் சார்,

தாங்கள் அளித்த 'கிட்டூரு சின்னம்மா' படப் பாடல் ('தனுகரகதவரல்லி புஷ்பவ') மிக அற்புதம் சார். மிக மிக அழகான பாடல். சுசீலாவின் குரல் தேன் மதுரமாய் காதில் ஒலிக்கிறது. கேட்டு கிறங்கிப் போய்விட்டேன். 'மனதை மயக்கும் மதுர கானங்கள்' என்ற இந்தத் திரியின் பெயருக்கேற்ற அற்புதமான மதுரகானம்தான் என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழில் பெரும்பாலும் கிளாமராகவே நடித்த சரோஜாதேவி பந்துலுவுடன் இணைந்து சாதனை படைத்துள்ளார். வேடப் பொருத்தம் கனகச்சிதம். சுசீலா குரல் அவ்வளவு அழகாக பொருந்துகிறது.

நன்கு கவனித்தோமானால் பெரும்பாலும் சுசீலாம்மா சரோஜாதேவிக்கு பாடும் போது சற்று 'கிறீச்' சென்று பாடுவது போல குரலை சிறிதே மாற்றிப் பாடுவது தெரியும். இது எல்லாப் பாடல்களிலுமே நன்றாகத் தெரியும்.

உதாரணமாக 'பாலும் பழமும்' படத்தில் வரும் 'நான் பேச நினைப்பதெல்லாம்' பாடல்.

இதில்

'சொல்லென்றும் மொழியென்றும் பொருள் என்றும் இல்லை
பொருள் என்றும் இல்லை'

என்ற வரிகளில் 'இல்லை' என்று அவர் உச்சரிக்கும் போது சற்றே மூக்கால் பாடுவது போல இருக்கும் 'கன்னடப் பைங்கிளி'க்குத் தகுந்தாற் போல.

அது போல இந்தப் பாடலை சரோஜா தேவிக்கு ஏற்ற மாதிரி இனிமையாக, வெகு அழகாகப் பாடி அசத்தியிருக்கிறார் சுசீலா.

பாடலின் முடிவில் கண்களை சொக்க வைத்து 'மல்லிகார்ஜுனா' என்று அபிநயசரஸ்வதி பாடுவது அருமை. வீணையின் நாதம் வேறு நாடி நரம்புகளுக்குள் புகுந்து இன்ப சித்ரவதை செய்கிறது. ராஜ்குமாரும், ராஜம்மாவும் மெய்மறந்து ரசிப்பதும் அழகுதான். அதே நிலைமைதான் எனக்கும்.

ஜனாதிபதி அவார்ட் பெற்ற படம் என்றும் இணையத்தில் படித்து தெரிந்து கொண்டேன். படத்தையும் பார்ப்பதற்கு டவுன்லோட் செய்து விட்டேன்.

அமைதியான அற்புதமான பாடலை அளித்து நெஞ்சாங்கூட்டில் ஆழப் பதித்து விட்டீர்கள். இதற்கு தங்களுக்கு என்ன தண்டனை தருவது என்றுதான் புரியவில்லை.

vasudevan31355
4th August 2014, 09:10 AM
ராஜேஷ் சார்,

அதே மாதிரி அதிகம் வெளியில் தெரியாத 'சங்கே முழங்கு' படப் பாடல்.

பாடும் நிலா பாலுவும், நம் 'சுகக்குரல்' சுசீலா அம்மாவும் பாடும் அட்டகாசமான பாடல்.

'இரண்டு கண்கள் பேசும் மொழியில்
எழுத்துக்கள் இல்லை

இதயம் தொடங்கும் புதிய உறவு
முடிவதும் இல்லை
முடிவதும் இல்லை'

இசையரசியில் குரல் வளம் வார்ரே வா ...


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=8sJaPqb0nxw

Richardsof
4th August 2014, 09:10 AM
இன்று போல் என்றும் வாழ்க படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடல் .
நன்றி திரு ராஜேஷ் .

rajeshkrv
4th August 2014, 09:20 AM
வாசு ஜி,
கிட்டூரு சென்னம்மா பாடலை நீங்கள் எவ்வளவு அழகாக ரசித்து எழுதியுள்ளீர்கள். அபாரம். அதற்கு எனக்கு தண்டனையாக இன்னொரு இசையரசி பாடலை பரிசாக தந்துவிட்டீர்கள்.. அதற்கு நெஞ்சார்ந்த நன்றி ..


கிட்டூரு சென்னம்மா படத்தை பார்த்த சர்வபள்ளி ராதகிருஷ்ணன் அவர்கள் சரோஜாதேவியின் நடிப்பை பாராட்டி அந்த ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கினார்.

எஸ்.வி ஜி, ஆம் இப்படி பல முத்துக்கள் நிறைய வெளியே வராமல் அமுங்கியே போய் விடுகிறது.

வாசு ஜி, அந்த மிரஜாலகலடா பாடலையும் கேட்டு தங்கள் கருத்துக்களை தாருங்கள்.

rajeshkrv
4th August 2014, 09:27 AM
அதே போல் இந்த பாடலை கேட்டால் ஒருவித இன்பம்.. என்ன அழகான இசை, வரிகள் வாலி ஐயா, குரல்கள் இசையரசியும் பாடகர் திலகமும்
ஜமாய்க்கும் பாடல். திரையில் ரவியும் பாரதியும்...

https://www.youtube.com/watch?v=qzNioUyHYxc

gkrishna
4th August 2014, 09:40 AM
கிஷோர் குமார் நினைவலைகள் மிகவும் அருமை

யாதோன் கி பாரத் படத்தில் அவர்,ஆஷா பர்மன் கலந்து கட்டும்
மேடை பாடல்

கிட்டத்தட்ட 12 நிமிடங்கள் ஓடும் ஒரு பாடல் . ஆனால ஒரு இடத்தில கூட மனம் சலிக்காது

http://www.youtube.com/watch?v=fmnmiuSboJs

பின்னாட்களில் அவர் பாலிவுட் நடிகை யோகித பாலியையும் திருமணம் செய்து கொண்டார் என்று கேள்விபட்டேன்

Kishore and Yogeeta Bali during their wedding which lasted for only a couple of years. KNOTTY AFFAIR!

http://images.iimg.in/c/50ce7eb3edaffd68e408afbb-4-400-300-1375168676/kishore-kumar-and-yogita-bali.imghttp://images.jagran.com/3-kishore-3-8-2013.jpg

vasudevan31355
4th August 2014, 09:45 AM
கிஷோர் லீனா சந்த்ரவரக்கர் என்ற நடிகையையும் மணந்து கொண்டார்.

http://images.jagran.com/4-kishore-3-8-2013.jpg

rajeshkrv
4th August 2014, 10:24 AM
கிஷோர் லீனா சந்த்ரவரக்கர் என்ற நடிகையையும் மணந்து கொண்டார்.

http://images.jagran.com/4-kishore-3-8-2013.jpg

Leena was so cute & beautiful & did so many movies. Saas bhi khabi bahu thi etc. My fav is honeymoon with anil dhawan

rajeshkrv
4th August 2014, 10:25 AM
Yogeeta married mithun da

chinnakkannan
4th August 2014, 10:38 AM
அனைவருக்கும் வணக்கம்..:)

வாசு சார், ராஜேஷ், மதுண்ணா நன்றி..

கிஷோர் இறந்த போது நான் டெல்லியில் இருந்தேன்.. டிவி தூர்தர்ஷனில் முழுக்க முழுக்க அவர் பாடல்கள், படங்கள்.. சல்திகா நாம்காடி,பர்தி கா நாம் தாடி (சரியான உச்சரிப்பா தெரியவில்லை) ..என..ஜிந்தஹி ஹைசபர்..அவர் தானே..

அவருடைய முதல் மனைவி மதுபாலா என நினைக்கிறேன்..அந்தக் காலக் கறுப்பு வெள்ளைப் படங்களில் வரும் பெளர்ணமி நிலவைப் போல அழகானவர்..சில படங்களில் அவருடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்..ரொம்ப்ப அழகு என யார் கண் வைத்தார்களோ.. சிறு வயதிலேயே புற்று நோயில் மரித்துவிட்டார்..

chinnakkannan
4th August 2014, 10:41 AM
பாட்டுக்குப் பாட்டு இழையில் கண்ணில் பட்டது இந்தப் பாடல்..இதைப்பற்றி அலசல் நடந்திருக்கிறதா..


பொன்னும் மயங்கும்
பூவும் வணங்கும்
கண்ணின் பார்வை தனில்
தெய்வம் விளங்கும்
என் கண்ணில் என் கண்ணில்
பொன் முத்துப் போல் தோன்றும்
அன்பு விளக்கு
உன் நெஞ்சில் உன் நெஞ்சில்
தேன் சிட்டுப் போல்
ஆடும் சொந்தம் எனக்கு...

gkrishna
4th August 2014, 10:45 AM
http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/f/f4/EnakkagaKaathiru.JPG/220px-EnakkagaKaathiru.JPGhttps://i1.ytimg.com/vi/cgpTVbz-q0Y/mqdefault.jpghttps://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQUSvnRgN9gqp6rSQL8WTifYO9flLoEA OuPmc6_YQ6IB4N91oCCMQhttps://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQ5Qwzp-aEGNnSKxFJ51U2uS_2iqs2sx9pcISKIf_jyd2KgQaRo

சுமன் பற்றி வாசு சார்,சிக சார்,கோபால் சார் நினைவு கூர்ந்தீர்கள்

அவரின் எனக்காக காத்திரு நான் மிகவும் எதிர் பார்த்த படம் . ஏன் என்றால் திரு நிவாஸ் (பாரதி ராஜாவின் ஆரம்ப கால கமேரமான்) அவர்கள் இயக்கிய படம். 1980-81 கால கட்டங்களில் நான் நெல்லை ப்ளூ ஸ்டார் என்று ஒரு தங்கும் விடுதியில் சிறிது காலம் வேலை பார்த்தேன் அப்போது திரு நிவாஸ் அவர்கள் இந்த படத்தின் நிதி (finance ) சம்பந்தமாக அடிகடி நெல்லைக்கு விஜயம் செய்வார் .வரும் போது எல்லாம் இந்த விடுதியில் தான் தங்குவார். அப்போது இந்த படத்தை பற்றி அடிகடி கூறுவார் .சென்சர் பிரச்சனையால் ஏக கட் ஆகி படம் கோர்வை இல்லாமல் வந்த படம் . ஆனால் இளையராஜா இசையில் பாடல்கள் எல்லாம் அருமை ஆகா அமைந்து இருக்கும்.


சுமன் - பானு சந்தர் karate fight ஒன்று மிக பரபரப்பாக பேச பட்டது
aides நோய் பாதித்து இறந்த நிஷா அவர்களும் நடித்து இருப்பார்கள் என நினைவு

மாலினி னு ஒரு நடன நடிகை இந்த படத்தில் வருவாங்க மௌன ராகம் படத்தில் 'பனி விழும் நிலவில் ' ஜான் பாபு உடன் நடனம் ஆடுவாங்க
சமீபத்தில் அவங்களை ஒரு தொலைக்காட்சி சீரியல் நிகழ்ச்சியில் சந்தித்தேன் .

தீபன் ஜானகி குரல்களில்
ஒ நெஞ்சமே இது உன் ராகமே

உமா ரமணன் குரலில்
'தாகம் எடுக்கிற நேரம் வாசல் வருகிற நேரம் '

இளையராஜாவின் குரலில்
'ஊட்டி மலை சாரலில் போடு வைத்த ரோடிலே '

தீபன் சைலு குரல்களில்
'பனி மழை விழும் பருவ குயில் எழும் ஜில்லென்ற காற்றாக'

chinnakkannan
4th August 2014, 10:50 AM
சுவையான தகவல்கள் கிருஷ்ணாஜி..எனக்காகக் காத்திரு பார்த்ததில்லை.. ஆனால் அதன் போஸ்டர் அதற்கான செய்திகள் பத்திரிகைகளில் படித்தது நினைவில் புகையாய். ஓ நெஞ்சமே இது உன் ராகமே மட்டும் ஃபெமிலியர் ஆக படுகிறது.. நன்றி..

gkrishna
4th August 2014, 10:51 AM
ராஜேஷ் சார்
அனில் தவன் ஒரு அருமையான பழைய ஹிந்தி நடிகர்
நினவு ஊட்டலுக்கு நன்றி

இப்போது அன்ன ஹசாரே இயக்கத்தில் ஈடுபட்டு உள்ளார் என்று படித்தேன்

என்றும் நட்புடன்
கிருஷ்

http://trialx.com/curetalk/wp-content/blogs.dir/7/files/2011/04/gcelebrities/Anil_Dhawan-3-small.gifhttps://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSZnfTR0IxFBKQ-UBjvgrcixFiScowBwHVwmh42f4C6s9nYFo2N

gkrishna
4th August 2014, 10:53 AM
http://www.youtube.com/watch?v=TZ15-xVsCZQ

சி க சார்
உங்களுக்காக எனகாகக காத்திரு பாடல்
இளையராஜாவின் ஆரம்ப கால பாடல்
http://www.youtube.com/watch?v=cgpTVbz-q0Y

vasudevan31355
4th August 2014, 10:59 AM
பாட்டுக்குப் பாட்டு இழையில் கண்ணில் பட்டது இந்தப் பாடல்..இதைப்பற்றி அலசல் நடந்திருக்கிறதா..


பொன்னும் மயங்கும்
பூவும் வணங்கும்
கண்ணின் பார்வை தனில்
தெய்வம் விளங்கும்
என் கண்ணில் என் கண்ணில்
பொன் முத்துப் போல் தோன்றும்
அன்பு விளக்கு
உன் நெஞ்சில் உன் நெஞ்சில்
தேன் சிட்டுப் போல்
ஆடும் சொந்தம் எனக்கு...

ம்ம்..

gkrishna
4th August 2014, 10:59 AM
சி க சார்
இந்த பாடல் எடுப்பார் கை பிள்ளை படத்தில் உள்ள பாடல்
ஜெய்சங்கர் நிர்மலா கன்னட மஞ்சுளா நடித்த NVR pictures படம்
வானொலி அண்ணா MB ஸ்ரீநிவாஸ் அவர்கள் இசை
இந்த பாடலை பற்றி நமது திரியில் அலசி உள்ளோம்

rajeshkrv
4th August 2014, 11:01 AM
Anil dhawan is David dhawan's brother too, krishnaji anil nalla smarta iruppar paavam couldn't come up

gkrishna
4th August 2014, 11:03 AM
Yogeeta married mithun da
http://drop.ndtv.com/albums/ENTERTAINMENT/infidelity-bollywood-marriages/mithunsridevi-yogita-bali.jpg
எஸ் ராஜேஷ் சார்
கிஷோர் குமார் விவகாரத்திற்கு பிறகு மிதுன் சக்கரவர்த்தி அவர்களை மணந்து கொண்டார்

Mithun Chakraborty and Yogeeta Bali: The Mithun-Yogeeta love story was typically filmy, with the actress divorcing first husband Kishore Kumar to marry her Khwab co-star in 1979. Kishore Kumar then refused to sing for his younger rival, forcing music director Bappi Lahiri to sing for Mithun himself. The Mithun-Yogeeta marriage was shaken to it's foundation when he reportedly fell in love with, and allegedly secretly married, his Jaag Utha Insaan co-star, Sridevi. Amid a reported suicide attempt by Yogeeta Bali, Sridevi ended the relationship after she realized Mithun was still married to his first wife.

Mithun, who currently plays judge on Dance India Dance, is still married to Yogeeta and they have four children, including actor Mahaakshay.

gkrishna
4th August 2014, 11:06 AM
Anil dhawan is David dhawan's brother too, krishnaji anil nalla smarta iruppar paavam couldn't come up

உண்மை ராஜேஷ் சார்
1970 களில் வந்த ஒரு handsome ஹிந்தி ஹீரோ அனில்
துரதிர்ஷ்ட வசமாக முன்னணி நடிகர் ஆகவில்லை

chinnakkannan
4th August 2014, 11:08 AM
பாடல்களுக்கு நன்றி கிருஷ்ணாஜி..மாலை கேட்கிறேன்..

நன்றி வாசு சார், க்ருஷ்ணாஜி ஃபார் எ.கை.பி.. நான் பார்த்தேனா பார்க்கவில்லையா நினைவிலில்லை..

அதுசரி..திடீர்னு வாணி நினைவு..(அவர் தானா இந்தப் பாடலில்)
அடி ஏண்டி அசட்டுப் பெண்ணே..உன் எண்ணத்தில் யாரடி கண்ணே
வானத்துச் சந்திரரும் வடிவத்தில் சுந்தரரும் வந்தாலும் இடமில்லை பொன்னே

vasudevan31355
4th August 2014, 11:10 AM
Leena was so cute & beautiful & did so many movies. Saas bhi khabi bahu thi etc. My fav is honeymoon with anil dhawan

100%

கொள்ளை அழகு அப்போதே பூத்த ரோஜா போல.

சந்திரனைப் போல அழகு கொண்டதனால் லீனா சந்தவர்க்கர் என்று பெயரானதோ!

http://fillum.com/wp-content/uploads/2012/08/Leena-Chandavarkars-Birthday-on-29th-August.jpg

http://www.indya101.com/gallery/Actresses/Leena_Chandavarkar/2012/9/20/Leena_Chandavarkar_7_tbjkf_Indya101(dot)com.jpg

http://37.media.tumblr.com/tumblr_mb2qpr5xsy1qbhqjfo2_500.jpg

http://www.bollywoodceleblist.com/wp-content/uploads/2013/10/Leena-Chandavarkar-pics.jpg

http://s18.postimage.org/v7of2tuex/vlcsnap_2012_06_15_21h31m55s210.jpg

http://www.indya101.com/gallery/Actresses/Leena_Chandavarkar/2012/9/20/Leena_Chandavarkar_8_jsxyt_Indya101(dot)com.jpg

http://1.bp.blogspot.com/-wsjgJzafmK0/UBYEbf73U_I/AAAAAAAAPLY/fByPdIJi8j8/s1600/a_037-704570.jpeg

vasudevan31355
4th August 2014, 11:14 AM
..

அதுசரி..திடீர்னு வாணி நினைவு..(அவர் தானா இந்தப் பாடலில்)
அடி ஏண்டி அசட்டுப் பெண்ணே..உன் எண்ணத்தில் யாரடி கண்ணே
வானத்துச் சந்திரரும் வடிவத்தில் சுந்தரரும் வந்தாலும் இடமில்லை பொன்னே

வாணிஸ்ரீ+ லஷ்மி= 'கன்னிப்பெண்'கள்.

இப்பாடலைப் பற்றியும் விவரமாக அலசியாயிற்று. இன்னும் கூட அலசலாம். அவ்வளவு விஷயம் இருக்கிறது இப்பாடலில்.

chinnakkannan
4th August 2014, 11:19 AM
அச்சோ..லீனா படங்கள் பேஷ் பேஷ் நன்றி வாசு சார்.. (ம்ம் அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடி எடுத்துக் கொடுத்ததோ..)

gkrishna
4th August 2014, 11:20 AM
லீனா photos அருமை வாசு சார்
குடோஸ் டு வாசு

Leena with anil dhawan

http://cineplot.com/wp-content/uploads/2011/07/anil-dhawan-leena.jpg

anil dhawan comments about both leena and yogeetha

Leena Chandavarkar is one of the prettiest women I have come across and she had a wonderful personal*ity too. Another pretty face was Yogeeta Bali. Combined with good height, this made her entire appearance very appealing. There are no such girls in the industry today.

chinnakkannan
4th August 2014, 11:21 AM
வாசு சார்..இந்த உங்கள் இன்றைய ஸ்பெஷல் தொடர் பாடல்களுக்கான லிங்க்கை முதல் பக்கத்தில் கொடுக்கலாமா நீங்கள்..பலருக்கு உபயோகமாக இருக்கும்..

gkrishna
4th August 2014, 11:25 AM
நான் இதை வழி மொழிகிறேன் சி க சார்

vasudevan31355
4th August 2014, 11:27 AM
ராஜேஷ் சார்/கிருஷ்ணா சார்/ சி.க.சார்

அந்த 'மூங்கில் இல்லை மேலே... தூங்கும் பனி நீரே'

மொக்கை 'காட்டுராணி' படத்தில் மதுரமான பாடல்.

அருமையான பின்னணி மற்றும் இசை.

பாடலுக்குத் தோதாக இயற்கையரசி

காடுகளில் வழிந்தோடும் அருவியரசி

பனி மூட்டத்தில் படு க்யூட்டாக புன்னகை அரசி.

அவருக்குத் தோதாக

எல்லாவற்றுக்கும் மேலே

இசையரசி

'காட்டு ராணி'யில் பாடல் ராணியின் தர்பார்.

உள்ளமும், உடலும், உணர்வுகளும் சிலிர்க்க, மெய் மறக்கச் செய்யும் குரலில் அமைந்த பாடல்.

பி.எஸ். திவாகரின் மிரட்டும் காட்டுப் பின்னணி இசை. (பாடலின் ஆரம்ப இசையை கேளுங்கள். பிரம்மாண்டம்) நடுவில் மிகச் சாமர்த்தியமாக வெஸ்டர்ன். கிடார் பின்னணி.

இதுவே வேறு ஒரு நல்ல படத்தில் வந்திருந்தால் இன்னொரு தேசிய விருது கிடைத்திருக்கும்.


https://www.youtube.com/watch?v=ujtBl7RKFEA&feature=player_detailpage

chinnakkannan
4th August 2014, 11:31 AM
நிலவைப் பற்றிய பாடல்கள் என்றுமே அழகு..அதுவும் நிலவு என்றால் டபக்கென்று..

விலகாமல் கிட்டவும் வீழாமல் நிற்கும்
நிலவும் அவளழகும் நேர்

என்று ஆன்றோர்கள் (?!) சொன்னது போல பெண்ணிற்குத் தான் உவமிக்கிறார்கள்..

சரீஈ ஈ இ.ஸ்பெஷலில் வாசு சார் எழுதியிருக்க கூடாதென்று கருப்ப சாமி முதல் கள்ளழகர் வரை க் கும்பிட்டு எழுத ஆரம்பித்தால்...

அதோ அங்கே ஒரு பொன்னிற ரோஜா சிரிக்கிறதே கிட்டச் சென்று அமுதூறும் விழிகளை உற்று நோக்கில்..யாரந்த தேவதை..யெஸ்.. டி.ராஜேந்தர் அறிமுகம் செய்வித்த சொர்ண புஷ்பம் அமலா தான்..கொஞ்சம் வித்யாச அழகு.. கூடவே..மலையாளத் திரையில் கோலோச்சிய, கின்ற நாயகன் மம்முட்டி..

படம் த்ரில்லர் தான்..ஆனால் அதனூடாடி வருகின்ற இந்த அழகான பாடல்..கேட்டாலே - மயக்கத்தைத் தந்தவர் யாரடி எனக் கூற வைக்குமாக்கும்..

என்னவாக்கும் பாட்டு அது..

**

கல்யாணத் தேனிலா காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா


தென்பாண்டிக் கூடலா
தேவாரப் பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா

என் அன்புக் காதலா
என்னாளும் கூடலா
பேரின்பம் நெய்யிலா
நீ தீண்டும் கையிலா

பார்ப்போமே ஆவலாய்
வா வா நிலா


உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதிக் கூண்டிலா

சங்கீதம் பாட்டிலா -
நீ பேசும் பேச்சிலா.

என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா
தேனூறும் ??
உன் சொல்லிலா


தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

**

நல்ல பாட்டு தானே..:)

Gopal.s
4th August 2014, 11:32 AM
Leena has been my sweet heart and dream girl and my poster Girl in my hostel room. I saw stupid movie called Manchali atleast 10 times for Leena. My next one was Komal Mahiwarkar. I saw Meri Adalat 5 times.(when she Re-christened Rupini,she had lost her charm by then). Anil Dhawan ,when introduced,he was rated by most people ahead of Amitabh(Contemporaries).DoRaha(Aval)became a smashing hit to vouch this .

gkrishna
4th August 2014, 11:33 AM
http://cineplot.com/wp-content/uploads/2011/06/sulakshana-sanjeev.jpg

இதே கால கட்டத்தில் சுலக்ஷன பண்டிட்,மௌஷமி சட்டர்ஜி,ஆஷா ப்ரேக் ,சாதனா,வித்யா சின்ஹா

வாசு சார்/ராஜேஷ் சார் /மது சார் /சி க சார்

கச்சேரி எப்ப வைச்சுக்கலாம்

chinnakkannan
4th August 2014, 11:34 AM
Leena has been my sweet heart and dream girl and my poster Girl in my hostel room// வீட்டுக்குத் தெரியுமா ஓய் :)

chinnakkannan
4th August 2014, 11:35 AM
க்ருஷ்ணா ஜி..எனக்கு ஹிந்தி ஹீரோயின்கள் பற்றி டீடெய்ல் அவ்வளவா தெரியாதே.. நீங்கள் ஆரம்பியுங்கள்.. நான் ஆஹா..காரம் போடுகிறேன் :)

vasudevan31355
4th August 2014, 11:38 AM
சி.க.சார்,

நன்றி! கொன்னுபுட்டீங்க. ம்ம் ..ஆன்றோர்களுக்கு கேள்விக்குறியும், ஆச்சரியக் குறியுமா?

'எங்கள் சான்றோர் சின்னக் கண்ணனார் நீரிருக்க
வேறு ஆன்றோரை எங்கு நோக்கினும் காணேனே'

'கல்யாணத் தேனிலா' கலக்ண்டு பால்.

தேனிலவின் இனிய சுகம். நல்ல மெலடி

gkrishna
4th August 2014, 11:39 AM
ராஜேஷ் சார்/கிருஷ்ணா சார்/ சி.க.சார்

அந்த 'மூங்கில் இல்லை மேலே... தூங்கும் பனி நீரே'

மொக்கை 'காட்டுராணி' படத்தில் மதுரமான பாடல்.

அருமையான பின்னணி மற்றும் இசை.

உள்ளமும், உடலும், உணர்வுகளும் சிலிர்க்க, மெய் மறக்கச் செய்யும் குரலில் அமைந்த பாடல்.

பி.எஸ். திவாகரின் மிரட்டும் காட்டுப் பின்னணி இசை. (பாடலின் ஆரம்ப இசையை கேளுங்கள். பிரம்மாண்டம்) நடுவில் மிகச் சாமர்த்தியமாக வெஸ்டர்ன். கிடார் பின்னணி.

இதுவே வேறு ஒரு நல்ல படத்தில் வந்திருந்தால் இன்னொரு தேசிய விருது கிடைத்திருக்கும்.



திவாகர் ஒரு அருமையான இசை அமைப்பாளர் vasu sir
ஜெயின் நேர்வழி,பிராயசித்தம் திவாகர் தானே இசை
மிக சிறந்த பியானோ வாசிப்பாளர்

http://www.youtube.com/watch?v=6cHIvbE5qgY

vasudevan31355
4th August 2014, 11:41 AM
க்ருஷ்ணா ஜி..எனக்கு ஹிந்தி ஹீரோயின்கள் பற்றி டீடெய்ல் அவ்வளவா தெரியாதே.. நீங்கள் ஆரம்பியுங்கள்.. நான் ஆஹா..காரம் போடுகிறேன் :)

சி.க.சார்,

நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம். சொர்ண புஷ்பம் போல பட்டங்கள் கொடுத்துக் கொண்டே வந்தால் போதும். அதுக்கு இங்கே ஆட்களே கிடையாது உங்கள் ஒருத்தரைத் தவிர.:)

Richardsof
4th August 2014, 11:42 AM
kannukku virunthu ..... relax

konjam ivargalai patri padiyungalen .....

http://i61.tinypic.com/1zxmpl0.jpg

Richardsof
4th August 2014, 11:43 AM
http://i58.tinypic.com/2ish7r6.jpg

Richardsof
4th August 2014, 11:44 AM
http://i60.tinypic.com/a40tuv.jpg

Richardsof
4th August 2014, 11:44 AM
http://i58.tinypic.com/2mealmp.jpg

vasudevan31355
4th August 2014, 11:48 AM
வினோத் சார்,

அப்படிப் போடுங்கள் அருவாமனையை. மிக மிக அருமையான பதிவு. உபயோகமானது. அசத்தலோ அசத்தல். ரொம்ப ரொம்ப நன்றி!

gkrishna
4th August 2014, 11:48 AM
சூப்பர் சி க சார்
மௌனம் சம்மதம்
இளையராஜாவின் ஒரு அருமையான மெலடி
அந்த guest ஹவுஸ் location ,மஹமூட் குட்டியன் (மமூட்டி) ஜிப்பா
காற்றில் லேசாக விலகும் திரை சீலை அதனுடன் சேர்ந்து விலகும்
அமலாவின் சேலை

காலையில் moodai கிளப்புகிறீர்கள்

chinnakkannan
4th August 2014, 11:52 AM
நன்றி வாசு சார் க்ருஷ்ணா சார்

//காலையில் moodai கிளப்புகிறீர்கள்// ம்ம் அப்படியே வெற்றிவிழாவில் ஒரு பாட் இருக்குமே கமல் அமலா(இருக்குல்ல) எடுத்து விடுங்களேன்..

இருந்தாலும் வளையோசை கலகலவென.. பாட்டு லதா மங்கேஷ்கர் பாடியிருக்கிறார் என எனக்கு சமீபத்தில் தான் தெரிந்தது..அதுவரை யார்பாடினார் என சிந்திக்காமல் இருந்ததற்குக் காரணம் பாட்டின் விஷீவல்..

gkrishna
4th August 2014, 11:52 AM
vinoth sir

இது எந்த வருடத்திய கட்டிங் சார்
நிறைய புது இசை அமைப்பாளர் பெயர் எல்லாம் தெரிய வருகிறது

Richardsof
4th August 2014, 11:54 AM
vinoth sir

இது எந்த வருடத்திய கட்டிங் சார்
நிறைய புது இசை அமைப்பாளர் பெயர் எல்லாம் தெரிய வருகிறது

1963- january -cinema dairy.

Thanks vasu sir / krishna sir

vasudevan31355
4th August 2014, 11:54 AM
திவாகர் ஒரு அருமையான இசை அமைப்பாளர் vasu sir
ஜெயின் நேர்வழி,பிராயசித்தம் திவாகர் தானே இசை



அவரேதான் கிருஷ்ணா சார். 'தெய்வத் திருமகள்' படமும் திவாகர் தான் இசை என்று நினைக்கிறேன்.

Richardsof
4th August 2014, 11:57 AM
VASU SIR
NOW CONTINUE WITH LEENA - HUMJOLI
http://youtu.be/XBC_PaAdKrw

chinnakkannan
4th August 2014, 11:58 AM
சலபதி ராவ், சுதர்ஸன், எம் எஸ் வி, கேவிஎம் தவிர மற்றவர்களைப் பற்றித் தெரியாது.. நன்றி வினோத் சார்.

vasudevan31355
4th August 2014, 11:59 AM
VASU SIR
NOW CONTINUE WITH LEENA - HUMJOLI
]

நினைத்தேன் இன்னும் போட வில்லையே என்று. உங்களுடைய அபிமானப் பாடலாயிற்றே! எத்தனை முறை செல்லில் இப்பாடலைப் பற்றி பேசி மகிழ்ந்திருப்போம். நன்றி வினோத் சார்.

gkrishna
4th August 2014, 12:00 PM
VASU SIR
NOW CONTINUE WITH LEENA - HUMJOLI


ஏற்கனவே வாசு சார் சொன்ன மாதிரி
அப்படி போடு அருவாளை
மிகவும் ரசிக்கிறேன் வினோத் சார் உங்கள் கொட்டத்தை

vasudevan31355
4th August 2014, 01:03 PM
இன்றைய ஸ்பெஷல் (46)

மிக மிக அருமையான பாடல். இதுவும் மறக்கடிக்கப்பட்ட பாடல்தான். முற்றிலுமாகவே.

'மேஜர் சந்திரகாந்த்' திரைப்படத்தில் சுசீலா அவர்களின் 'கணீர்'க் குரலில் இளநுங்கு தொண்டையில் இலகுவாக இறங்குவதைப் போல மனதிலே இறங்கிக் குடிகொள்ளும் பாட்டு.

http://www.inbaminge.com/t/m/Major%20Chandrakanth/Major%20Chandrakanth.jpg

'கல்யாண சாப்பாடு போடவா'
'ஒரு நாள் யாரோ'
'நேற்று நீ சின்னப் பப்பா'

என்று எல்லாப் பாடல்களும் மெகா ஹிட் அடிக்க, இந்தப் பாடல் அடிபட்டுப் போனது.

கல்லூரியில் படிக்கும் தன் தங்கை ஒரு கலை நிகழ்ச்சியில் நாட்டியமாடுகிறாள் என்று தெரிந்து அந்த நடனத்தைக் கண்டு களிக்கச் செல்கிறான் அவளுடைய தையல்கார அண்ணன். தங்கை நடனமாடி மற்றவர்கள் அவளைப் புகழ்வதைக் கேட்க அவ்வளவு ஆசை அவனுக்கு.

விழா தொடங்கி தங்கை நடனமாடி பாடத் துவங்குகிறாள். அந்த அரங்கத்தையே சுற்றி சுற்றி பெருமை பூரிக்க தன் தங்கையின் ஆட்டத்தை எல்லோரும் எப்படி ரசிக்கிறார்கள் என்று கவனிக்கிறான். ஆனால் அவன் எதிர்பாராதது நடக்கிறது. தங்கை சற்றே அரைகுறை ஆடையுடன் கலை நிகழ்ச்சியில் ஆட, பார்வையாளர்கள் முகம் சுளித்து அவளை மட்டமாக விமர்சனம் செய்கிறார்கள். அண்ணன் அதைக் கண்டு அளவு கடந்த வேதனை அடைகிறான்.

அந்த பருவக் குமரியோ எதைப் பற்றியும் கவலைப்படமால் மகிழ்ச்சியாக உள்ளம் பூரிக்க ஆடிப் பாடுகிறாள்.

டெய்லர் அண்ணன் நாகேஷ். நடனமாடும் அவர் தங்கை அழகுப் பதுமையாக ஜெயலலிதா.

மிக மிக என் உள்ளம் கவர்ந்த பாடல். வானொலியிலோ, அல்லது தொலைக்காட்சியிலோ போடப்படுவதே இல்லை.

ஜப்பான் நங்கை போலவும், சர்க்கஸ் சுந்தரி போலவும் (இதே போல 'குமரிக் கோட்டம்' படத்தில் 'நாம் ஒருவரையொருவர்' பாடலில் வருவார்) ஆடி ஜெயா மேடம் அசத்துகிறார்.

நாகேஷின் முகத்தில்தான் எத்தனை ஆனந்தம் தன் தங்கை ஜெயா ஆடுவதைப் பார்க்கும் போது! அப்படியே அது சோகமாக மாறும் போதும் அற்புதம்.

'மெல்லிசை மாமணி' வி.குமார் அற்புதமாக உழைத்திருப்பார் இப்பாடலில். படம் முழுக்கவும்தான்.

https://i.ytimg.com/vi/jIHt5NO8duQ/hqdefault.jpg

நானே பனி நிலவு
வருவேன் பல இரவு

நானே பனி நிலவு
வருவேன் பல இரவு

காணக் கண் கோடி வேண்டும்
கன்னிக் கனியல்லவோ
பாடக் கவி நூறு தோன்றும்
மாது மதுவல்லவோ

நானே பனி நிலவு
வருவேன் பல இரவு

ஓஹ்ஹஹ்ஹோஹொஹோஹோ
ஓஹ்ஹஹ்ஹோஹோஹோ (கோரஸ் அருமை)

பட்டுப் பூச்சி போல் சிட்டு மேனியாள்
வட்டம் போடுவாள் பார்
சொட்டும் தேனைப் போல் மொட்டு மாங்கனி
தொட்டுப் பேசுவாள் பார்

அழகே ஒரு பாதி நீ
பருவம் மறுபாதி நீ
அழகே ஒரு பாதி நீ
பருவம் மறுபாதி நீ

அழைத்தால் வரவேண்டும் நீ
அடிமை எனக்காக நீ
அழைத்தால் வரவேண்டும் நீ
அடிமை எனக்காக நீ

(ஜெயாவுக்காகவே எழுதப்பட்டது போன்ற வரிகள்)

நானே பனி நிலவு
வருவேன் பல இரவு

என்ன மேடையில் வண்ணக் காவியம்
மின்னல் ஓவியம் பார்.
உள்ள ஓடையில் மெல்ல நீந்திடும்
வெள்ளிக் கெண்டை மீன் பார்

(கலக்கல் இடையிசை)

ஒருநாள் முகம் பார்க்கலாம்
மறுநாள் சுகம் சேர்க்கலாம்
ஒருநாள் முகம் பார்க்கலாம்
மறுநாள் சுகம் சேர்க்கலாம்

இளமை செலவாக்கலாம்
இன்பம் வரவாக்கலாம்
இளமை செலவாக்கலாம்
இன்பம் வரவாக்கலாம்

(ஜெயாவின் கவுன் எதிபாராமல் தோள்பட்டையில் கழன்று விட, அதை ஜெயா சிரித்தபடியே அட்ஜஸ்ட் செய்ய, நாகேஷின் முகத்தில் அதிர்ச்சி ஏற்பட நாகேஷின் அருகில் அமர்ந்து நாடகம் பார்க்கும் ஒருவர் 'குட்டி ரொம்ப ஷோக்கா இருக்கு இல்லே... யாரது?' என்று நாகேஷிடமே கேட்கும்போது நாகேஷ் அமர்க்களப்படுத்துவார் அவமான முகபாவங்களில்)

நானே பனி நிலவு
வருவேன் பல இரவு

காணக் கண் கோடி வேண்டும்
கன்னிக் கனியல்லவோ
பாடக் கவி நூறு தோன்றும்
மாது மதுவல்லவோ

நானே பனி நிலவு
வருவேன் பல இரவு

ஓஹ்ஹஹ்ஹோஹொஹோஹோ
ஓஹ்ஹஹ்ஹோஹோஹோஹோ
ஓஹ்ஹஹ்ஹோஹோஹோஹோ


https://www.youtube.com/watch?v=jIHt5NO8duQ&feature=player_detailpage

gkrishna
4th August 2014, 01:43 PM
http://antrukandamugam.files.wordpress.com/2013/09/mb-sreenivasan-kavya-mela-1973-2.jpg?w=428


திரையிசை என்றால் : எம் பி ஸ்ரீநிவாசன் -(1987ல் மலையாளத்தில் வழங்கிய நேர்காணல்)

திரையிசை என்றால் : எம் பி ஸ்ரீநிவாசன்
(1987ல் மலையாளத்தில் வழங்கிய நேர்காணல்) தமிழில் : ஷாஜி

கேள்வி : சினிமாவுக்கு ம்யூசிக் தேவையா? சினிமாவில் ம்யூசிக் டைரக்டரின் பங்கு எவ்வளவு முக்கியமானது?

எம் பி எஸ் : ம்யூசிக் டைரக்டர் என்கிற சொல்லாடலே தவறு. இந்திய சினிமாவில் அப்படித்தான் சொல்லப்பட்டு வருகிறது என்றாலும். ம்யூசிக் கம்போஸர் என்றுதான் சொல்லவேண்டும். இசையமைப்பாளரை இசை இயக்குநர் என்று சொல்லல் ஆகாது. சினிமாவில் வேறு வேறு முறைகளில் ஓரளவு இசை தேவை என்றே சொல்லுவேன். ஆனால் எந்த அளவுக்கு என்பது தான் கேள்வி. திரைப்படத்தின் கதை, அதன் பண்பாட்டுப் பின்புலம் போன்றவற்றை கணக்கில் கொண்டுதான் அதன் இசை அமைய வேண்டும். நான் இசையமைத்த மலையாளப் படங்களான யவனிகா, உள்க்கடல் போன்றவற்றுக்கு இசை இன்றியமையாதது.

ஆனால் அடூர் கோபாலகிருஷ்ணனின் கொடியேற்றம் போன்ற படத்திற்கு இசையே தேவையில்லை. ’இந்தியாவின் ஏழை எளிய மக்கள் திரைப்படங்களை நாடுவது பாடல்கள், நகைச்சுவை மற்றும் சண்டைக்காட்சிகளுக்காகத் தான்’என்று சத்யஜித் ரே ஒரு முறை சொல்லியிருக்கிறார். அது ஒரளவுக்கு உண்மையும் தானே? ஆனால் திரைப்படத்துக்கு இசை தேவையா என்று கேட்டால் அது அந்த படத்தை பொறுத்தது என்றே சொல்வேன்.

கேள்வி : அறுபது எழுபதுகளின் திரை இசைக்கும் இன்றைய திரை இசைக்கும் இருக்கிற வேற்றுமைகளைப்பற்றி சொல்லுங்கள்.

எம் பி எஸ் : மலையாளத் திரையிசையில் பாபுராஜ், ராகவன், தட்சிணாமூர்த்தி, தேவராஜன் போன்றவர்களின் இசையும் யேசுதாஸின் குரலும் வயலார், பி பாஸ்கரன், ஓ என் வி குருப் போன்றவர்களின் பாடல் வரிகளும் சேர்ந்து உருவாக்கிய ஒரு பொற்காலம் இருந்தது. அவர்களின் அசாத்தியமான திறமைகள் ஒன்றிணைந்தபோது அப்பாடல்கள் தரத்திலும் வெகுஜெனப் புகழிலும் பரவலாக வெற்றியடைந்தது.

நான் அதிகமாக இன்றைய படங்களைப் பார்ப்பதுமில்லை பாடல்களை கேட்பதுமில்லை. இன்று பெரும்பாலும் இயக்குநர்கள் சொல்வதற்கேற்ப எதாவது ஒன்றை உருவாக்கி வழங்குவாத மாறிவிட்டது இசையமைப்பாளர்களின் வேலை. இருந்தும் திறமைவாய்ந்த இசையமைப்பாளர்கள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.

கேள்வி : படத்தின் இசை உருவாக்கத்தில் இயக்குநரின் பங்கு தேவயற்றது என்கிறீர்களா?

எம் பி எஸ் : நான் அப்படி சொல்ல வரவில்லை. இயக்குநரின் பங்கு மிக முக்கியமானது தான். தனது படத்தில் பாடல்கள் வேண்டுமா வேண்டாமா, அப்படத்தின் இசை எந்த மனநிலையில், உள உணர்வில் அமைய வேண்டும் என்பதை தீர்மானிப்பவர் இயக்குநர் தான். ஆனால் அவரது தேவையை, கருத்தை புரிந்துக்கொண்டு இசை அமைப்பது என்பது இசையமைப்பாளரின் வேலை. அதிலும் இயக்குநர் பங்காற்ற வேண்டும் என்றால் அப்படத்தின் இசையை அவரே அமைக்கலாமே! அதற்கு ஒரு இசையமைப்பாளன் தேவை இல்லையே. என்னிடம் இசை கேட்டு வந்த அனைத்து இயக்குநர்களுடனும் எனக்கு சுமுகமான உறவுதான் இருந்திருக்கிறது. அவர்கள் அனைவருமே எனது இசையையும் எனது அலைவரிசையயும் புரிந்துகொண்டவர்கள்.

கேள்வி : இசையமைப்பாளர்களுக்கும் பாடலாசிரியர்களுக்கும் இடையே ஒரு நெருக்கமான தொடர்பு இருக்கவேண்டும் என்று நினைக்கிரீர்களா?

எம் பி எஸ் : மலையாளத்தில் எனது தொடக்கமே பி பாஸ்கரனின் வரிகளுக்கு இசையமைத்து தான். ஸ்வர்க ராஜ்ஜியம் என்கிற படம் வழியாக. தொடர்ந்து வயலார் மற்றும் ஓ என் வீயின் பாடல் வரிகளுக்கு இசையமைத்தேன். அவர்களுடன் எனக்கு எப்போதுமே நேரடித்தொடர்பு இருந்தது. பாடல்வரிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தது தான் மலையாளத்தின் சிறப்பு. வரிகளின் பொருளை புரிந்துகொண்டுதான் இசையமைக்க வேண்டும்.

சிறந்த கவிதைகளாக வரிகளை எழுதும் ஒரு பாடலாசிரியரும் அதைப் புரிந்துகொண்டு இசையமைக்கும் ஒரு இசையமைப்பாளரும் இணையும்போது சிறந்த பாடல்கள் பிறக்கின்றன. தமிழிலும் தெலுங்கிலும் இதே முறைதான் நான் கடைப்பிடித்தேன். சிறந்த பாடல்களை உருவாக்க சிறந்த கவிதை வரிகள் வேண்டும். ஒருமுறை வயாலார் என் விருப்பத்திற்கேற்ப எதாவது ஒன்றை தேர்ந்தெடுக்கட்டும் என்கிற எண்ணத்துடன் ஒரு பாடலின் முதல் வரியை இரண்டு விதமாக எழுதி என்னிடம் கொடுத்தார். ஆனால் நான் அவ்விரண்டுமே ஒன்றுக்கடுத்து ஒன்று என்று தவறாக புரிந்துகொண்டு இசையமைத்து விட்டேன். பாடல் வெகுசிறப்பாக வந்தது! அது தான் சிறந்த வரிகளின் வல்லமை.

கேள்வி : மின் இசைக்கருவிகள் இசைக்கு நல்லதா கெட்டதா?

எம் பி எஸ் : மின் இசைக்கருவிகள் வர ஆரம்பித்து பலகாலம் ஆகிவிட்டது. யூணிவோக்ஸ், க்ளாவயலின் போன்றவை இருபதாண்டுகளாக இருக்கிறது. அவற்றின் தாக்கத்தால் ஷெஹ்னாய், க்ளாரினெட், ஃப்ளூட் போன்ற மரபான இசைக்கருவிகளுக்கு நம் திரையிசையில் வேலை கொஞ்சம் காலம் இல்லாமலாகிவிட்டது. தொடர்ந்து காம்போ ஆர்கன், ஸிந்தஸைசர்கள், அவற்றின் பற்பல இணைப்புகள் போன்றவை வந்தது. ஸ்ட்ரிங்ஸ் என்கிற ஸிந்தஸைசர் வந்தபோது இனிமேல் வயலின், ஸிதார் போன்ற கருவிகளுக்கு வேலையே இருக்காது என்று சொன்னார்கள். ஏன் என்றால் அதில் ஒரே சமையம் நூற்றுக்கணக்கானw வயலின்களின் ஒலியையோ ஸிதார்களின் ஒலியையோ கொண்டுவர முடியும். ஆனால் நம் திரையிசையில் இன்றைக்கும் வயலின், சிதார் போன்ற கருவிகள் பெருவாரியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஸ்ட்ரிங்ஸ் ஸிந்தஸைசரோ இன்று காணக்கிடைப்பதேயில்லை!

மின் இசைக்கருவிகளை செம்மையாக இசைக்கத் தெரிந்தவர்கள் இங்கு மிகக்குறைவே. சில சத்தங்கள் எழுப்புவதற்காகத்தான் இங்கு அவை பயன்படுகிறது. ஆனால் அவற்றை சிறப்பாக வாசிக்கத்தெரிந்த இசைக்கலைஞர்கள் இடம்பொருள் பார்த்து அவற்றை பயன்படுத்துமானால் அது நன்றாக அமையலாம். செலவும் குறைக்கலாம்.

அடூர் கோபாலகிருஷ்ணனின் எலிப்பத்தாயம் என்கிற படத்தில் ஒரு முக்கியமான கதைத்தருணத்திற்கு வெகுநேரம் யோசித்து இரண்டு தன்புரா ஒரு கடம் என சில மரபான கருவிகளை பயன்படுத்தி ஒரு இசையை உருவாக்கினேன். அந்தபடம் பார்த்த ஒரு வெளிநாட்டுக்காரர், அவ்விசை எந்த மின் இசைக்கருவியில் உருவானது என்று அடூரிடம் கேட்டாராம்!

கேள்வி : நமது பழைய நாடக இசையின் கூறுகள் நமது சினிமா இசையில் இன்றளவும் காணக்கிடைக்கிறதா?

எம் பி எஸ் : உலகத் திரை இசையின் அடிப்படை கூறுகளில் ஒன்று தான் ஓபெரா இசை என்பது. எல்லாவற்றையும் விட இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு நாடக வடிவம் தானே ஓபெரா. அதேபோல் நமது நாடக இசையும் நம் சினிமா இசையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.

கேள்வி : வெளிநாடுகளில் இசையை மட்டும் மையமாகக் கொண்ட மை ஃபெயர் லேடி, சௌண்ட் ஆஃப் ம்யூசிக் போன்ற ‘ம்யூசிக்கல்’ என்கிற திரைப்பட வகை மிகப் பிரபலமாக இருக்கிறது அல்லவா? அவ்வைகையறா படங்களுக்கு நம் நாட்டில் ஏன் இடமில்லை?

எம் பி எஸ் : தெரியவில்லை. அவ்வகை திரைப்படங்கள் இந்தியாவில் இனிமேல் பிரவியெடுக்கலாம். வராமலும் போகலாம்!

கேள்வி : பிறமொழிக்காரர்கள் மலையாளத்தில் இசையமைப்பது சரியா? ஒரு மொழியில் இசையமைப்பதற்கு அந்த மண்ணின் பண்பாட்டுப் பின்புலம் தேவையே இல்லையா?

எம் பி எஸ் : நான் ஒரு தமிழன். தமிழை தாய்மொழியாகக் கொண்டவன். ஆனால் இசைக்கும் கலைக்கும் மொழி ஏது? அதே நேரத்தில் பண்பாட்டுப் பின்புலம் தெரிந்து கொண்டுதான் ஒரு உண்மையான கலைஞன் பணியாற்றவேண்டும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். எந்த ஒரு விஷயத்தை கையாளும்பொழுதும் அதன் ஆழத்துக்குப்போய் அதை தெரிந்துகொள்ள முயற்ச்சிப்பவன் நான். ஆரம்பத்தில் மலையாளத்தில் கால்ப்பாடுகள்* படத்திற்கு இசையமைப்பதற்காக பல மாதங்கள் நான் கேரள கிராமங்களில் அலைந்து திரிந்திருக்கிறேன். அங்குள்ள நாட்டுப்புற இசையை நன்றாகப் புரிந்து கொண்டேன். மலையாள மொழி கற்றுக்கொண்டேன்.

மலையாள இலக்கியங்களில் எனக்கு புலமை இல்லையென்றாலும் ஆழ்ந்த பரிச்சயம் உண்டு. அங்குள்ள இலக்கியவாதிகள், கேரளப் பண்பாட்டில் ஆழ்ந்த புரிதல்கொண்ட இயக்குநர்கள் போன்றவர்களுடன் எனக்கு எப்போதுமே தொடர்பிருந்திருக்கிறது. தனக்குத் தெரியாத ஒரு மொழியில் இசையமைக்கும்பொழுது அந்த மொழியையும் பண்பாட்டையும் புரிந்துகொள்ள வேண்டும் என்பது தான் என் கருத்துமே. அதற்கு பாடுபடத்தயங்காத ஒரு இசையமைப்பாளர் எந்த மொழியிலும் சென்று இசை அமைக்கலாம்.

கேள்வி : உங்கள் இசையில் உங்களுக்குப் பிடித்த படங்கள்?

எம் பி எஸ் : நான் அறுபதுக்கும் மேற்பட்ட மலையாளப் படங்களுக்கும் பத்து தமிழ்ப் படங்களுக்கும் எட்டு தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்திருக்கிறேன். ஸ்வர்க்க ராஜ்ஜியம், இனி ஒரு ஜன்மம் தரூ, கடல், அள்த்தாரா, புத்ரி, புதிய ஆகாசம் புதிய பூமி, வேனல், சில்லு, உள்க்கடல், யவனிகா, வளர்த்து மிருகங்கள், பரஸ்பரம் போன்ற படங்களின் பாடல்கள் எனது விருப்பத்துக்குறியவை. ஸ்வயம்வரம், யவனிகா, எலிப்பத்தாயம், முகாமுகம் போன்ற படங்களின் பின்னணி இசையும் திருப்தி அளித்தவை. முகாமுகத்தின் பின்னணி இசையில் கம்யூனிஸ்ட் இண்டெர்நாஷணல் இசையின் சுரபேதங்கள் மட்டும் தான் பயன்படுத்தினேன். பாதை தெரியுது பார் என்கிற எனது முதல் தமிழ் படத்தின் பாடல்களும் நிமஜ்ஜனம் என்கிற தெலுங்கு படத்தின் இசையும் எனக்கு பிடித்தமானவை.

* யேசுதாஸுக்கு அவரது முதல் திரைப்பாடல் வாய்ப்பை எம் பி எஸ் வழங்கியது இப்படத்தில் தான்.

(நன்றி. திரு. பி கெ ஸ்ரீநிவாஸன், ஃபிலிம் மாகசின்)

gkrishna
4th August 2014, 01:46 PM
இன்றைய ஸ்பெஷல் (46)

மிக மிக அருமையான பாடல். இதுவும் மறக்கடிக்கப்பட்ட பாடல்தான். முற்றிலுமாகவே.

'மேஜர் சந்திரகாந்த்' திரைப்படத்தில் சுசீலா அவர்களின் 'கணீர்'க் குரலில் இளநுங்கு தொண்டையில் இலகுவாக இறங்குவதைப் போல மனதிலே இறங்கிக் குடிகொள்ளும் பாட்டு.

'கல்யாண சாப்பாடு போடவா'
'ஒரு நாள் யாரோ'
'நேற்று நீ சின்னப் பப்பா'

என்று எல்லாப் பாடல்களும் மெகா ஹிட் அடிக்க, இந்தப் பாடல் அடிபட்டுப் போனது.[/color][/b][/size]

நாகேஷின் முகத்தில்தான் எத்தனை ஆனந்தம் தன் தங்கை ஜெயா ஆடுவதைப் பார்க்கும் போது! அப்படியே அது சோகமாக மாறும் போதும் அற்புதம்.

'மெல்லிசை மாமணி' வி.குமார் அற்புதமாக உழைத்திருப்பார் இப்பாடலில். படம் முழுக்கவும்தான்.[/color][/b][/size]


நானே பனி நிலவு
வருவேன் பல இரவு



அருமையான பாடல் வாசு சார்
இந்த song முடிந்த உடன் ஜெயா அம்மா அவர்கள் நாகேஷிடம் மன்னிப்பு கேட்கும் இடம் சூப்பர்

gkrishna
4th August 2014, 02:02 PM
http://mmimages.maalaimalar.com/Articles/2014/Aug/49fb391f-c53e-44b8-beef-e84e14961499_S_secvpf.gif
பெரிய போராட்டத்துக்குப் பின், சினிமாவில் பாட்டு எழுதும் வாய்ப்பு வாலிக்கு கிடைத்தது. அந்தப் பாடலை சுசீலா பாடினார்.

மிஸ் மாலினி, ஏழைபடும்பாடு, மகாத்மா உதங்கர் முதலிய படங்களில் நடித்தவர், வி.கோபாலகிருஷ்ணன். படங்களில் நடனம் மட்டும் ஆடிக்கொண்டிருந்த லலிதா -பத்மினி சகோதரிகள், முதன் முதலில் கதாபாத்திரம் ஏற்று நடித்த "ஏழைபடும்பாடு'' படத்தில், இவர்தான் பத்மினிக்கு ஜோடி.

கடிதப் போக்குவரத்து மூலம் கோபியின் நட்பை பெற்ற வாலி, ஒருமுறை ரேடியோ நாடகத்தில் நடிக்க திருச்சிக்கு வந்த கோபியிடம், "நான் சென்னைக்கு வந்து சினிமாவில் பாட்டு எழுத முயற்சிக்கலாம் என்று நினைக்கிறேன்'' என்றார்.

"வாங்க, வாலி! நான் இருக்கிறேன். எதற்கும் கவலைப்பட வேண்டாம்'' என்று ஊக்கம் அளித்தார், கோபி.

1958 டிசம்பர் முதல் வாரத்தில், வாலி சென்னைக்கு வந்தார். திருவல்லிக்கேணியில் இருந்த ஸ்ரீரங்கத்து நண்பர் செல்லப்பாவின் அறையில் தங்கினார்.

அப்போது தியாகராய நகரில், சின்னையாப்பிள்ளை ரோட்டில் உள்ள வீட்டில் வி.கோபாலகிருஷ்ணன் வசித்து வந்தார். தன்னைத்தேடி வருவோருக்கு, முடிந்த உதவிகளை எல்லாம் செய்பவர் அவர்.

தினமும் திருவல்லிக்கேணியில் பஸ் பிடித்து, தி.நகர் வாணி மஹாலில் இறங்கி கோபாலகிருஷ்ணன் வீட்டுக்குப் போவார், வாலி. தன்னைப் பார்க்க வரும் திரை உலகப் பிரமுகர்களிடம் வாலியை கோபி அறிமுகப்படுத்துவார்.

அதுமட்டும் அல்ல. தன்னுடைய ஸ்கூட்டரின் பின்னால் வாலியை உட்கார வைத்துக்கொண்டு தினமும் யாராவது பட அதிபர்கள், டைரக்டர்கள், இசை அமைப்பாளர்களிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துவார். "இவர் நல்ல கவிஞர். சினிமாவுக்கு பாட்டெழுத வாய்ப்பு தந்தால், பிரமாதமாக எழுதுவார்'' என்று கூறி, சான்ஸ் கேட்பார்.

வாலி, தன்னுடைய பாடல்கள் சிலவற்றை ஒரு நோட்டில் எழுதி வைத்திருப்பார். சிலர் அந்த நோட்டுப் புத்தகத்தை வாங்கி படித்துப் பார்த்துவிட்டு, புன்னகை புரிவார்கள். சிலர் படித்துப் பார்க்காமலேயே புன்னகை செய்வார்கள்.

இந்த புன்னகைகளால் வாலிக்கு எந்த பயனும் ஏற்படுவதில்லை.

அந்தக் காலக்கட்டத்தில், "பாதை தெரியுது பார்'' என்ற படத்தை, குமரி பிலிம்சார் எடுத்துக்கொண்டு இருந்தனர். இசை அமைப்பாளர் எம்.பி.சீனிவாசன்,, பொதுவுடமைக் கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம் எழுதிய "சின்னச் சின்ன மூக்குத்தியாம்'' என்ற பாடலை ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தார்.

எம்.பி.சீனிவாசனிடம் வாலியை அறிமுகப்படுத்திய கோபாலகிருஷ்ணன், பாதை தெரியுது பார் படத்தில் ஒரு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

"கோபி! கே.சி.எஸ்.அருணாசலம், ஜெயகாந்தன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகிய மூன்று பேரும்தான் இந்தப் படத்துக்கு பாட்டு எழுதுகிறார்கள். புதிதாக வேறு பாட்டை பயன்படுத்தக்கூடிய கட்டம் எதுவும் படத்தில் இல்லை. ஆனாலும், பொதுவுடமை கருத்தையும், சமூக விழிப்புணர்வையும் எடுத்துக் காட்டக்கூடிய பாட்டு எதுவும் இருந்தால், "டைட்டில் சாங்'' ஆகப் பயன்படுத்த முயற்சி செய்கிறேன்'' என்றார், சீனிவாசன்.

உடனே வாலி, தான் எழுதி வைத்திருந்த பாட்டை, அதற்கான மெட்டுடன் பாடிக்காட்டினார்.

பாட்டை கேட்ட சீனிவாசன், "மிஸ்டர் வாலி! இப்போது நீங்க பாடிக்காண்பித்த பாட்டு நன்றாக இல்லை என்று நான் சொல்லமாட்டேன். ஆனால், என்னை பெரிதாக கவரவில்லை. சாரி!'' என்று கூறிவிட்டு, உள்ளே போய்விட்டார்.

"கவலைப்படாதீங்க, வாலி! வேறு இடத்தில் முயற்சி செய்யலாம்'' என்று ஆறுதலாகக் கூறிவிட்டு, வாலியை வீட்டுக்கு அழைத்துச் சென்றார், கோபி.

(1958-ல் எம்.பி.சீனிவாசனால், நிராகரிக்கப்பட்ட பாடல், 1967-ல் எம்.ஜி.ஆர். படத்தில் இடம் பெற்று, மகத்தான வெற்றி பெற்று பட்டி தொட்டி எல்லாம் எதிரொலித்தது. அதுதான், "கொடுத்ததெல்லாம் கொடுத்தான், அவன் யாருக்காகக் கொடுத்தான்?'' என்ற பாடல். இந்தப் பாடல் இடம் பெற்ற படம் "படகோட்டி.'')

"மெல்லிசை மன்னன்'' எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைப்பில், ஏராளமான பாடல்கள் இயற்றி இருக்கிறார், வாலி.

ஆனால், முதன் முதலாக இவர்கள் சந்தித்துக் கொண்டபோது, வாலியின் பாடல் விஸ்வநாதனைக் கவரவில்லை.

அதுபற்றி, வாலி எழுதியிருப்பதாவது:-

"ஒருநாள், அதிகாலை என்னை ஒரு இசையமைப்பாளர் வீட்டுக்கு கோபி தன் ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றார். எனக்கு அந்த இசையமைப்பாளரிடம் ஏற்கனவே அளவு கடந்த அபிமானமும், மரியாதையும் உண்டு. அவர் மூலம் எனக்கு எப்படியும் படத்துறையில் பாட்டெழுதும் ஒரு வாய்ப்பைப் பெற்று தந்து விடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவர் வீட்டுக்கு என்னைக் கூட்டிப் போனார், கோபி.

அந்த இசையமைப்பாளருக்கு கோபியிடம் மிகுந்த பிரியமுண்டு. கோபியை ஆரத்தழுவி அவர் வரவேற்றார். என்னை அவரிடம் கோபி அறிமுகப்படுத்திவிட்டு, என் ஊர், என் கல்வி இவை பற்றியெல்லாம் ஒரு சிறிய முன்னுரையை வழங்கிவிட்டு, என் பாட்டு நோட்டை என் கையிலிருந்து வாங்கி, அந்த இசையமைப்பாளரிடம் கொடுத்தார்.

அவர் அதை ஆர்வத்தோடு, வாங்கி, சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்து, நின்று நிதானமாகப் படித்தார். பிறகு, என் பாட்டு நோட்டை என்னிடம் திருப்பித் தந்துவிட்டு, காபி வரவழைத்து எங்கள் இருவருக்கும் வழங்கினார்.

பிறகு, கோபியை தனியாக அழைத்து அந்த இசையமைப்பாளர் சன்னமான குரலில் காதோடு காதாக ஏதோ சொன்னார்.

"வாங்க வாலி போகலாம்...'' என்று கோபி என்னை அழைத்து வந்துவிட்டார்.

ஸ்கூட்டரில் போகும்போது என்னைப் பற்றி அந்த இசையமைப்பாளர் என்ன சொன்னார் என்று கோபியைக் கேட்டேன். அவர் சொன்னதை கோபி அப்படியே என்னிடம் சொன்னார்:

"கோபி, இவர் எழுதியிருக்கிற பாட்டெல்லாம் ரொம்ப சுமாரா இருக்கு. சினிமாவில் முன்னுக்கு வர்றதுக்கான வாய்ப்பே இவருக்கு இருக்கிற மாதிரி தெரியவில்லை... பாவம்! மெட்ராசில் இவர் இருந்து கஷ்டப்படறதை விட, படிச்சவரா இருக்கிறதனாலே, சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு ஏதாவது வேலைக்குப் போகச் சொல்லுங்க...''

அந்த இசையமைப்பாளர் சொன்னதை ஒருவரி விடாமல் கோபி என்னிடம் சொல்லிவிட்டு மவுனமாக ஸ்கூட்டரை ஓட்டினார்.

அந்த இசையமைப்பாளர் வேறு யாருமல்ல. பிற்காலத்தில் என் முன்னேற்றத்திற்கு முழு முதற்காரணமாக விளங்கிய மெல்லிசை மன்னர் எமë.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்தான், அன்று என்னை வேறு வேலை தேடிப்போவது உசிதம் என்று தன் மனதில் பட்டதை வெளிப்படையாகக் கோபியிடம் சொன்னவர்.

நான் ஸ்ரீரங்கம் திரும்பிவிடலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டேன். ஓரிரு நாளில் மூட்டை முடிச்சோடு நான் ஊருக்குத் திரும்ப இருந்தபோதுதான், படத்தில் முதன் முதலாகப் பாட்டு எழுதும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது.

இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகத்தைச் சேர்ந்த பட அதிபரும், நடிகருமான கெம்பராஜ், "நளதமயந்தி'', "கற்கோட்டை'', "ராஜவிக்கிரமா'' ஆகிய படங்களைத் தயாரித்துவிட்டு, 1958-ல் "அழகர் மலைக்கள்ளன்'' என்ற படத்தைத் தயாரித்தார்.

ஒருநாள் காலை, கோபாலகிருஷ்ணன் காரில் வாலியை அவரிடம் அழைத்துச் சென்றார். தெலுங்கு இசை அமைப்பாளர் கோபாலம், ஆர்மோனிய பெட்டியுடன் அமர்ந்திருந்தார். வாலி அவருக்கு வணக்கம் செலுத்தினார்.

பாட்டுக்கான மெட்டை ஆர்மோனியத்தில் இசை அமைப்பாளர் வாசித்துக்காட்டினார். "ஒரு தாய் பாடும் தாலாட்டுப்பாட்டு இது'' என்று வாலியிடம், காட்சியை விளக்கினார்கள்.

உடனே வாலி, காகிதத்தை எடுத்தார். "நிலவும், தாரையும் நீயம்மா; உலகம் ஒரு நாள் உனதம்மா'' என்ற பல்லவியை எழுதிக் காட்டினார்.

அதைப் பார்த்துவிட்டு, இசை அமைப்பாளர் அசந்து போனார். இசையுடன் வார்த்தைகள் வெகுவாகப் பொருந்தின.

முக்கால் மணி நேரத்தில் முழுப்பாடலையும் எழுதி முடித்தார், வாலி. பட அதிபர் கெம்பராஜ் வந்து, பாட்டைக்கேட்டார். அவருக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. வாலியைத் தட்டிக்கொடுத்தார்.

"நாளை ரிக்கார்டிங். கார் அனுப்புகிறேன். வந்துவிடுங்கள்'' என்று சொன்னார். மகிழ்ந்து போனார், வாலி.

மறுநாள் கோல்டன் ஸ்டூடியோவில் சுசீலா பாட, வாலியின் முதல் பாடல் ஒலிப்பதிவு ஆகியது.

gkrishna
4th August 2014, 02:11 PM
http://mmimages.maalaimalar.com/Articles/2014/Aug/1c2b1fe5-159a-49ce-a471-91834ee2f619_S_secvpf.gif

வாலியின் முதல் பாடல் வெற்றிகரமாக திரையில் ஒலித்தபோதிலும், இரண்டாவது பாடல் வாய்ப்பு சுலபமாகக் கிடைத்து விடவில்லை.

அப்போது வி.கோபாலகிருஷ்ணன் நாலைந்து படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார். அவரும், சவுகார் ஜானகியும், எம்.ஆர்.ராதாவும் நடித்த "தாமரைக்குளம்'' படத்தின் படப்பிடிப்பு, கோல்டன்ஸ் ஸ்டூடியோவில் நடந்து கொண்டிருந்தது. படத்தின் டைரக்டர் `முக்தா' சீனிவாசன்.

படப்பிடிப்பை பார்க்க வாலி சென்றிருந்தார். அவருக்கு ஒரு புதுமுக நடிகரை கோபாலகிருஷ்ணன் அறிமுகப்படுத்தி வைத்தார்.

அதுபற்றி வாலி கூறுகிறார்:-

"நானும் அந்தப் புதுமுக நடிகரும் மரத்தடியில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். மிகமிக ஒல்லியான உருவம். சினிமாவிற்கே அவசியமான கவர்ச்சி என்பது சிறிதளவும் இல்லாத முகம். ஆயினும் படித்தவராக இருந்ததால், அவர் விழியிலும், வார்த்தையிலும் ஓர் அறிவு தீட்சண்யம் இருந்தது. அவருடைய உருவ அமைப்பை வைத்து, இவர் எதை நம்பி சினிமாவில் தன் எதிர்காலத்தைத் திட்டமிடுகிறார் என்ற எண்ணத்திலேயே அவரிடம் பேச்சைக் கொடுத்தேன். அறிமுகமாகி ஒரு நிமிடமே ஆகியிருந்தும் அவர் என்னிடம் மனம் விட்டுப் பேசினார்.

"மிஸ்டர் வாலி, என் சொந்த ஊர் தாராபுரம். என் பெயர் குண்டுராவ். நான் ரெயில்வே டிபார்ட்மெண்டுல கைநிறைய சம்பளத்தோட ஆனந்தமா இருந்தவன். இருந்தாலும் இந்த நடிப்பு ஒரு பித்தாகவே மாறி, என்னுடைய சிந்தனையை முழு நேரமும் ஆக்கிரமிச்சுடுச்சு. நாடகங்களிலேயும் நடிச்சிக்கிட்டிருக்கிறேன். இந்தத் தாமரைக்குளம் படத்தின் தயாரிப்பாளர் என் நாடக நடிப்பைப் பார்த்து எனக்கு இந்தப் படத்துல ஒரு சின்ன வேஷம் கொடுத்திருக்காரு. நடிச்சு முடிச்சா சம்பளமா தொண்ணூறு ரூபா தர்றேன்னாரு. எனக்குப் பணம் முக்கியமில்லை, என் திறமையை நிரூபிக்க விரும்புகிறேன். இதை நம்பி தைரியமா, ரெயில்வே வேலையை ராஜினாமா செஞ்சுட்டேன்.''

நண்பர் குண்டுராவ் இப்படிச் சொன்னதும் எனக்குப் பொறி கலங்கிப் போய்விட்டது.

"என்ன சார், ரெயில்வே உத்தியோகம் லேசுல கிடைக்குமா? சினிமாவை நம்பி அதை நீங்க விட்டது ரொம்பத் தப்பு'' என்று என் உண்மையான வருத்தத்தை அவரிடம் எடுத்துச் சொன்னேன்.

"வாலி சார், எனக்கு நம்பிக்கையிருக்கு. ஒரு நாள் நான் கண்டிப்பா `ஸ்டார்' ஆவேன்; அப்ப ரெயில் நான் வரவரைக்கும் நிற்கும்'' என்று சொல்லிவிட்டு குண்டுராவ் ஒரு சிகரெட்டைப் புகைத்தார்.

பிற்காலத்தில் குண்டுராவ், பிரபல நட்சத்திரமாகி கோடம்பாக்கத்தையே தன் கைக்குள் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் வைத்திருந்தார். நானும் அவரும் பின்னாளில் `வாடா... போடா...' என்று அழைத்துப் பேசிக்கொள்ளும் அளவிற்கு ஆப்த நண்பர்களானோம்.

அந்த `குண்டுராவ்' வேறு யாருமல்ல. நாகேஷ்தான் அவர்!''

இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது பட வாய்ப்பு உடனே கிடைக்காததாலும், உடல் நலம் சரியில்லாததாலும், மீண்டும் ஸ்ரீரங்கத்துக்குப் போனார், வாலி.

அப்போது, அவர் தந்தை காலமானார்.

வாலியின் அண்ணன் மும்பையில் இருந்தார். "பாட்டு எழுதும் வேலை சரிப்படாது. மும்பை சென்று ஏதாவது வேலை தேடவேண்டியதுதான்'' என்ற முடிவுக்கு வந்தார், வாலி. தாயாருடன் மும்பை சென்றார்.

மும்பையில் சில காலம் இருந்து விட்டு மீண்டும் சென்னை திரும்பினார். தியாகராய நகரில் சிவா- விஷ்ணு கோவில் அருகே இருந்த கிளப்ஹவுசில் தங்கினார். அங்கு 20 அறைகள் இருந்தன. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் அங்கே தங்கியிருந்தனர். ஒருவருக்கு வாடகை 15 ரூபாய்.

அங்கே தங்கியிருந்தவர்களில் பெரும்பாலோர் பிரம்மச்சாரிகள். நாகேசும் அப்போது அங்கு தங்கியிருந்தார். ஏற்கனவே அறிமுகமாகியிருந்த நாகேசும், வாலியும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

அமெரிக்க தூதர் அலுவலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த வெங்கடராமன் என்ற இளைஞரும், அங்கு தங்கியிருந்தார். அவரும் வாலிக்கு நண்பரானார்.

இவர்தான் பிற்காலத்தில் "வெண்ணிற ஆடை''யில் கதாநாயகனாக அறிமுகமாகி, ஏறத்தாழ 20 ஆண்டு காலம் கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்த ஸ்ரீகாந்த்.

கிளப் ஹவுசில் தங்கியிருந்தவர்கள் ஒவ்வொருவராக திரை உலகில் நுழைந்தார்கள். வாலிக்குமë நல்ல காலம் பிறந்தது.

ஒரு நாள் காலை, முன்பின் தெரியாத ஒருவர் வாலியைத் தேடி வந்தார். "நாளை காலை பத்து மணிக்கு நீங்கள் `அரசு பிக்சர்ஸ்' அலுவலகத்துக்கு வாருங்கள். அங்கு டைரக்டர் ப.நீலகண்டனை சந்தியுங்கள். அவர் படத்துக்கு பாட்டு எழுத வேண்டும்'' என்றார், அவர்.

வாலிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. நாகேஷ் வந்ததும், இந்தத் தகவலைச் சொன்னார். "அரசு பிக்சர்ஸ் ஆபீஸ், நுங்கம்பாக்கத்திலே இருக்குடா. எனக்குத் தெரியும். நானும் உன் கூட வர்றேன்'' என்றார், நாகேஷ் மகிழ்ச்சி பொங்க.

மறுநாள் வாலியும், நாகேசும் `அரசு பிக்சர்ஸ்' அலுவலகத்துக்கு சென்றனர். திரை உலகில் நாகேஷ் புகழ் பெறாத காலம் அது.

ப.நீலகண்டன் அறைக்குள் இருவரும் நுழைந்தனர். "உங்கள் இருவரில் யார் வாலி?'' என்று கேட்டார், ப.நீலகண்டன்.

"நான்தான் சார்! இவர் என் நண்பர். நாகேஷ்னு பேரு. படங்களில் எல்லாம் நடித்துக்கொண்டு இருக்கிறார்'' என்று பவ்யமாக பதில் அளித்தார், வாலி.

"பாட்டு நீங்கதானே எழுதப்போறீங்க?''

"ஆமாம் சார்!''

"அப்ப, அவரை வெளியே இருக்கச் சொல்லுங்க!''

ப.நீலகண்டன் இவ்வாறு கூற, நாகேஷ் அந்த அறையை விட்டு வெளியேறினார்.

வாலியைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார், நீலகண்டன். பின்னர் துணை இயக்குனரை அழைத்து, "பாடல் காட்சி பற்றிய விவரங்களை இவருக்கு விளக்குங்கள்'' என்று கூறிவிட்டு, "நீங்கள் நாளை பாடலின் பல்லவிகளை எழுதிக்கொண்டு வாருங்கள்'' என்று வாலியிடம் தெரிவித்தார்.

வாலி, நாகேசுடன் கிளப் ஹவுஸ் திரும்பினார்.

மகிழ்ச்சி மிகுதியால், இரவெல்லாம் வாலிக்கு தூக்கம் இல்லை.

காரணம் அவர் பாடல் எழுதும் அந்த காதல் காட்சியில் நடிக்கப்போகிறவர், எம்.ஜி.ஆர்! படத்தின் பெயர் "நல்லவன் வாழ்வான்.'' எம்.ஜி.ஆருடன் நடிக்கப் போகிறவர் ராஜசுலோசனா.

`எம்.ஜி.ஆர். படத்துக்கு பாட்டெழுதப் போகிறோம்' என்ற மகிழ்ச்சியில் மனம் பூரிக்க, விடிய விடிய விழித்திருந்து 50 பாடல்களுக்கான பல்லவிகளை எழுதிக் குவித்தார், வாலி!

chinnakkannan
4th August 2014, 02:17 PM
நானே பனி நிலவு
வருவேன் பல இரவு // நல்ல பாட்டு வாசு சார்.. நன்றி..

வாலி - நாகேஷ் சுய சரிதைகளில் இதைப் படித்திருக்கிறேன் கிருஷ்ணா ஜி. மறுபடி படிக்கவும் நன்றாக உள்ளது..

chinnakkannan
4th August 2014, 02:34 PM
ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் காதல் கொள்ள, அந்தப் பெண்ணும் அவன் மேல் உயிராகி விட..அப்புறம் என்ன டும் டும் டும் சுபம் தான் எனச் சொல்லி விடலாமா..ம்ம் அதானே முடியாது..

இந்தப் பெண் ஜன்மம் இருக்கிறதே என்றுமே ஆண்களுக்கு ஒரு புரியாத புதிர்..

விதிசெய்த மாயமோ வேறோ அறியேன்
புதிர்தானே என்றென்றும் பெண்

என ஆன்றோர் (?!) வாக்கு தான் நினைவிற்கு வருகிறது..
அதுவும் காதல் வசப்பட்ட பெண்ணுக்கு என்ன தான் ஆகிறது..

நல்லாத் தான்யா இருக்கான்..மனசுல பச்சக்குன்னு போஸ்ட் ஆஃபீஸ் ஸ்டாம்ப் மாதிரி வந்து உட்கார்ந்துட்டான்..நாமும் லவ்விட்டோம்...ஆனா இந்தப் பய புள்ள இருக்கானே லைஃப் லாங்கா நம்மோட சந்தோஷமா இருப்பானா..சரீஈ ஏதோ நாம அக்ரீ பண்ணினதால புதுசா சாம்சங்க் எஸ் 3 நோட்புக் வாங்கிக் கொடுத்திருக்கான்..ஆனாக்க அசடு..கொஞ்சமாவது வர்ணிக்கறானோ..ம்ஹீம்..மரமண்டை..என்னோட ப்ளூ ஜீன்ஸும் பிங்க் ஸ்பாகெட்டி டாப்ஸூம் நல்லா இருக்குதா இல்லியா சொல்லேண்டா இவனே..

அவன் மனசுல என்ன ஓடுது..

ஆஹா நல்லாத் தான் இருக்கா இவளை இப்படியே ஹேய் நீ ரொம்ப அழகா இருக்கேன்னு சொன்னா டபக்குன்னு மிரண்ட கன்னுக்குட்டி மாதிரி ஒரு பார்வை பார்த்துடுவா..ஸோ வாட் ஐ கேன் டூ.. யெஸ்.. இருக்கவே இருக்கு.. மேலே காயற நிலா..அதவச்சு நல்ல தமிழ்ல பாடிக் காட்டலாமா குட்டிப் பெண்ணுக்கு..

அப்படின்னு சொல்லிட்டுப் பாடறமாதிரியான பாட்டு தான் கீழே நீங்க பார்க்கப் போற பாட்டாக்கும்..

*
கேள்வி பதில் என்ற டைப்பில் அமைந்தாலும் கொஞ்சம் சிரி சிரி எனப் போய்க் கொண்டிருக்கும் அந்தப் படத்தில் டபக்கென ஹீரோ ஹீரோயின் இருவரும் ராஜா ராணி உடைகளில் பாடுவது போல் வரும்..

பூத்துச் சிரிக்கும் அழகிய போன்சாய் மலர்களைப் போல சற்றே உயரம கம்மியான ஹீரோயின்.. ரேவதி.. கம்பீரமாகவும் கொஞ்சம் கண்களில் சிரிப்புடனும் தோற்றமளிக்கும் பிரபு..பின் பாடல்..படம்..அரங்கேற்ற வேளை..

*
ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளை தானோ!


மலர்சூடும் கூந்தலே மழைக்கால மேகமாய் கூட
உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட.



தேவார சந்தம் கொண்டு தினம்பாடும் தென்றல் ஒன்று
பூவாரம் சூடிக்கொண்டு தலைவாசல் வந்ததின்று.
தென் பாண்டி மன்னன் என்று திருமேனி வண்ணம் கண்டு
மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று


இளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்.
கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்
கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட
நடு ஜாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட


தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
ஆதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்
வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு கானம் கிளி பேச்சை கேட்கக் கூடும்

அடியாளின் ஜீவன் மேனி அதிகாரம் செய்வதென்ன?
அலங்கார தேவ தேவி அவதாரம் செய்ததென்ன?
இசை வீணை வாடுதோ? இதமான கைகளில் மீட்ட!
ஸ்ருதியோடு சேருமோ? சுகமான ராகமே காட்ட!


*
ஜேசுதாஸ் உமாரமணன் அண்ட் இளைய ராஜா..ஒரு ஆஹா பாட்டு இது..அப்படித் தானே..:)

உமாரமணணின் குரல் எனக்கு ரொம்பப் பிடிக்கும்..பூங்கதவே தாழ் திறவாய் கொஞ்சம் மனதில் ஒலிக்கிறது..

gkrishna
4th August 2014, 03:13 PM
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcSqTONqKjEvQxPqK9nMibS9A3bPR4y7R fkiDQtBv2pUBmCURw57
வாசு சார்
உங்கள் மோஹம் முப்பது வருஷம் படத்தின் 'சங்கீதம் ராகங்கள் இல்லாமலா ' பாடலின் சிறப்பு இன்று படித்தேன் .அந்த படத்தில் ஜேசுதாஸ் குரலில் வரும் பின் பாடல் மிகவும் பிடித்த ஒன்று

'எனது வாழ்கை பாதையில்
எரியும் இரண்டும் தீபங்கள்
என்ன இல்லை ஒன்றிலே
எண்ணெய் இல்லை ஒன்றிலே '

https://www.youtube.com/watch?v=ygSJ0c9oTtA&noredirect=1

chinnakkannan
4th August 2014, 05:02 PM
க்ருஷ்ணா ஜி..எ.வா.பா எனக்கும் பிடித்த ஒன்று..அதே படத்தில் ஸ்ரீப்ரியா அத்திம்பேர் எனக் கத்திய படி நீச்சல் குளத்தில் தொபுக் கென்று விழுந்தபடி பாடுகின்ற ஒரு பாடல் உண்டு..

இருபது வயதெனும் இளமையில் தினம்
அறுபது க்லைகளை அறிவதே சுகம்..
வாழ்வில் என்றும் ஒரே தரம் வரும்..

என்பது போல் வரும்.. ஓ.கே பாட்டு தான்..கேட்டிருக்கிறீர்களா...

chinnakkannan
4th August 2014, 05:14 PM
காதலில் விழுந்த நெஞ்சங்களுக்கு என்ன தோன்றும்..சந்திக்கத் தோன்றும்..பார்த்தபடியே இருக்கவேண்டுமென்றெல்லாம் தோன்றினாலும் முடியாது..(ஆஃபீஸீக்கெல்லாம் போகணுமே).. பேசவும் நிறையத் தோன்றும் (இப்போ தான் வாஸ்ஸப் மெஸேஜ் ட்வீட்டர் என நிறைய ஆப்ஷன்ஸ்..)

அப்போ அந்தக்காலத்தில்..டெலிபோன் எனத்தமிழில் அழைக்கப்பட்ட
தொலைபேசி மட்டுமே..அப்புறம் விரல் நுனியில் அறு நூறு சானல்கள் என இந்தக்காலத்திலுண்டு..அப்போ..பேபெ பேபெ பெய்ங்க்..என வரும் தூர்த்ர்ஷன் மட்டுமே..

பாடல் துவக்கத்தில் காதலனும் காதலியும் டெலிபோனில் பேசிக் கொள்கிறார்கள்..டிவியில் தூர்தர்ஷன் ஓடிக் கொண்டிருக்கிறது..வெளியே சாலைகளில் வாகன நடமாட்டம் கொஞ்சம்கொஞ்சமாய்க் குறைகிறது..

நள்ளிரவில்சாலைகளில் சத்தம் ஓய்ந்து வெறிச்சானாலும், வீட்டினுள்ளே டெலிபோன் சத்தம் கேட்டபடி..ஆம் இருவரும் தூங்கவில்லை..

பின் காலை சிச்சிறிதாக மலர ஆரம்பிக்க..சாலைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாய் வாகன ஆள் நடமாட்டம் கூட- இங்கேயோ காதலர்களின் இனிய ஒன்றுமில்லைகள் (ஸ்வீட் நத்திங்க்ஸ்) ஓய்வதாகத் தெரியவில்லை..

பின் ஒருவழியாய் பேச்சை முடித்து ஃபோனை வைத்துக் கண்ணைக் கசக்கியவாறு இருவரும் ஜன்னலைப் பார்த்தால், ஹாய் என பூவாய் மலர்ந்து குட்மார்னிங்க் சொல்கிறது சூரியன்..
*
அழகிய பாடலாக்கும்..

இந்தப் பாட்டின் ஹீரோயினின் கண்களில் கடல்புறாவே விடலாம்..அவ்வளவு ஆழமான கண்கள்..பானுப் ப்ரியா..
ஹீரோ மம்முட்டி ..படம் அழகன்..அழ்கான விஷூவல்..

*
சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா, என்னவோ மயக்கம்

என் வீட்டில் இரவு, அங்கே இரவா,
இல்லே பகலா, எனக்கும் மயக்கம்
நெஞ்சில் என்னவோ நெனச்சேன்,
நானும் தான் நினைத்தேன்
ஞாபகம் வரல,
யோசிச்சா தெரியும்,
யோசனை வரல
தூங்கினா விளங்கும்,
தூக்கம்தான் வரல
பாடுறேன் மெதுவா உறங்கு.

என்னென்ன இடங்கள்,
தொட்டால் ஸ்வரங்கள் துள்ளும் சுகங்கள்
கொஞ்சம் நீ சொல்லி தா
சொர்க்கத்தில் இருந்து யாரோ எழுதும்
காதல்கடிதம் இன்றுதான் வந்தது
சொர்க்கம் விண்ணிலே திறக்க
நாயகன் ஒருவன், நாயகி ஒருத்தி
தேன்மழை பொழிய, பூவுடல் நனைய
காமனின் சபையில் காதலின் சுவையில்
பாடிடும் கவிதை சுகம்தான்

*
நல்ல பாடல் தானே.. எழுதியவர் புலமைப் பித்தன் என நினைக்கிறேன்..

gkrishna
4th August 2014, 06:05 PM
க்ருஷ்ணா ஜி..எ.வா.பா எனக்கும் பிடித்த ஒன்று..அதே படத்தில் ஸ்ரீப்ரியா அத்திம்பேர் எனக் கத்திய படி நீச்சல் குளத்தில் தொபுக் கென்று விழுந்தபடி பாடுகின்ற ஒரு பாடல் உண்டு..

இருபது வயதெனும் இளமையில் தினம்
அறுபது க்லைகளை அறிவதே சுகம்..
வாழ்வில் என்றும் ஒரே தரம் வரும்..

என்பது போல் வரும்.. ஓ.கே பாட்டு தான்..கேட்டிருக்கிறீர்களா...

சி கே சார்

இந்த படத்தில் ஸ்ரீப்ரிய கேரக்டர் கொஞ்சம் பரபர
கமல் கல்யாணம் செய்து கொள்ள விட்டாலும் பரவாய் இல்லை
அவர் மூலமாக குழந்தை மட்டுமாவது பெற்று கொள்ள வேண்டும் என்று
advanced டெக்னாலஜி formula கேரக்டர்
சூப்பர் பாட்டு நீங்கள் சொன்னது

இந்த பாட்டு விடியோ கிடைக்க வில்லை
வாசு சார் தீரர் சூரர்
நாளைக்கு பார்த்து விடலாம்

rajeshkrv
4th August 2014, 06:08 PM
உண்மை ராஜேஷ் சார்
1970 களில் வந்த ஒரு handsome ஹிந்தி ஹீரோ அனில்
துரதிர்ஷ்ட வசமாக முன்னணி நடிகர் ஆகவில்லை

Adhe pol piya ka ghar with jaya badhuri super comedy movie.

rajeshkrv
4th August 2014, 06:11 PM
http://cineplot.com/wp-content/uploads/2011/06/sulakshana-sanjeev.jpg

இதே கால கட்டத்தில் சுலக்ஷன பண்டிட்,மௌஷமி சட்டர்ஜி,ஆஷா ப்ரேக் ,சாதனா,வித்யா சின்ஹா

வாசு சார்/ராஜேஷ் சார் /மது சார் /சி க சார்

கச்சேரி எப்ப வைச்சுக்கலாம்

Moushmi my fav. Sulakshana pandit did love Sanjeev kumar but he rejected her because he was in a depression due to hema rejecting him . Sulakshana stays with vijetha pandit & aadesh srivasthav

gkrishna
4th August 2014, 06:13 PM
*
நல்ல பாடல் தானே.. எழுதியவர் புலமைப் பித்தன் என நினைக்கிறேன்..

அழகன் மரகதமணியின் சூப்பர் performance
இந்த பாடலில் தூர்தர்ஷன் நிகழ்சிகள் முடிவடைந்து மறு நாள் தூர்தர்ஷன் நிகழ்சிகள் ஆரம்பிக்கும் வரை பேசி கொண்டு இருப்பது போல் காட்சி அமைப்பு

புலமை பித்தனின் மாஸ்டர் பீஸ் 'ஜாதி மல்லி பூச்சரமே சங்க தமிழ் பாச்சரமே '

gkrishna
4th August 2014, 06:18 PM
Moushmi my fav. Sulakshana pandit did love Sanjeev kumar but he rejected her because he was in a depression due to hema rejecting him . Sulakshana stays with vijetha pandit & aadesh srivasthav

மௌஷமி யின் ரோடி கபட ஆர் மக்கான் மறக்க முடியுமா ராஜேஷ் சார்

அப்ப ஹேமா எத்தனை ஹீரோக்களை தண்ணி காட்டினாங்க
கடைசியில் தர்மா காட்டின தண்ணிலே ஹேமா தொபுகடீர்
இந்த ஏக்கதில தானே சஞ்சீவ் காலி

gkrishna
4th August 2014, 06:19 PM
Adhe pol piya ka ghar with jaya badhuri super comedy movie.

yes rajesh sir
அனில் நாகின் 1976 படத்தில் கூட 6 ஹீரோகளில் ஒருவர என்று நினைவு

Richardsof
4th August 2014, 06:53 PM
காரில் காதலர்கள் .....பயணம் ..

காதலன் தன்னுடைய காதலை தன்னுடைய மென்மையான குரலில் வண்டியை ஓட்டி கொண்டும் ஓரக்கண்ணால்
காதலியை வர்ணித்தும் , சிகிரெட்டை லாவகமாக பிடித்து விளையாடியும் இடையே மெல்லிசை வேகமெடுத்து கடற்கறையில் இருவரும் இணைத்து பாடும் இந்த பாடல் காட்சி மனதை நெருடும் பாடல் .
http://youtu.be/Ci2EEsnVHB4

Richardsof
4th August 2014, 07:26 PM
கன்னட பாடல் . மனதை மயக்கும் பாடல் .

இசை - ஜி .கே .வெங்கடேஷ் - இசை வேந்தன் பி.பி. ஸ்ரீனிவாஸ்

படம் - பந்காரத மனுஷ்யா

நடிகர் ராஜ்குமார் . வாத்தியார் ஸ்டைலில் பாடிய காட்சி அருமை .இயற்கையான காட்சிகள் . இசையும் பாடலும்

பல முறை கேட்க சொல்லும் . ஒரு காட்சியில் உழைக்கும் பெண்மணி குழந்தைக்கு பாலூட்டும் காட்சியில் ராஜ்குமார்

அந்த ஏழை பெண்ணுக்கு பணம் தரும் காட்சி கண்ணீர் வர வைக்கும் . அருமையான பாடல் .

http://youtu.be/vywkneeLvYM

rajeshkrv
4th August 2014, 11:53 PM
கன்னட பாடல் . மனதை மயக்கும் பாடல் .

இசை - ஜி .கே .வெங்கடேஷ் - இசை வேந்தன் பி.பி. ஸ்ரீனிவாஸ்

படம் - பந்காரத மனுஷ்யா

நடிகர் ராஜ்குமார் . வாத்தியார் ஸ்டைலில் பாடிய காட்சி அருமை .இயற்கையான காட்சிகள் . இசையும் பாடலும்

பல முறை கேட்க சொல்லும் . ஒரு காட்சியில் உழைக்கும் பெண்மணி குழந்தைக்கு பாலூட்டும் காட்சியில் ராஜ்குமார்

அந்த ஏழை பெண்ணுக்கு பணம் தரும் காட்சி கண்ணீர் வர வைக்கும் . அருமையான பாடல் .



இதே பங்கரத மனுஷ்யாவில் இரண்டு மிகப்பிரபல பாடல்கள்

பாளா பங்கார நீனு இசையரசியின் குரலில் மிகப்பிரபல பாடல்

https://www.youtube.com/watch?v=_vH_3Wpt5UY

ஆஹா மைசூரு மல்லிகே ஜுண்டு மல்லிகே பி.பி.ஸ்ரீனிவாஸும், இசையரசியும் அமர்க்களப்படுத்தும் பாடல் (வாசு ஜி வாங்கோ வாங்கோ வந்து ஆதரவு தாங்கோ தாங்கோ)

https://www.youtube.com/watch?v=GtQjQAowmNE

Gopal.s
5th August 2014, 05:18 AM
சற்றே யோசித்தால் ,சங்கீதம் என்பது சத்தங்களின் ,சுத்தமான,சுகமான, கணித கூட்டு.

மேளகர்த்தா 72 இல் ஆரோகணம்,அவரோகணம் 7 ஸ்வரங்களையும் அடக்கி ,ஏற்ற,இறக்கம் அதே வரிசையில் அமைந்து,ஸ வில் தொடங்கி ஸ வில் முடிய வேண்டும் என்று பார்த்தோம்.

இப்போது உங்களுக்கு ஒரு சுதந்திரம் வழங்குகிறேன்.சுரங்களை எப்படி வேண்டுமானாலும் மாற்றி போடுங்கள். ஸ ரி க ம ப த நி என்று இல்லாமல் ஸ ப க ம த ரி நி என்று போட்டு கொள்ளுங்கள். 12 கூட்டில் எத்தனை சாத்தியம்? அதே போல ஆரோகணம்,அவரோகணம் இவற்றில்
மேளகர்த்தா போல ஸ ரிகமபதநி ஸ ,ஸ நிதபமகரிஸ என்று இல்லாமல்
ஆரோகணம் திருப்பி போடாமல் இஷ்டத்திற்கு போடுங்கள். இப்போது எத்தனை சாத்திய கூறுகள்?

இப்போது 7 சுரங்கள் இல்லாமல் 6 போதும்,5 போதும், அதிலும் ஆரோகணத்தில் 7,6,5,4அவரோகணத்தில் 6 ,5,4,7 என்று சமத்துவ ,ஒழுங்கு எதிலும் சேராமல், இஷ்டம் போல 12 சத்தங்களை வைத்து விளையாடுங்கள் என்றால்?(Sampurna - 7 note scale,Shadava - 6 notes,Audava - 5 notes,Svarantara - 4 notes)


1000 க்கும் மேற்பட்ட ராக சாத்தியங்கள்.ஒவ்வொரு மேளகர்த்தாவிற்கும் ,
ஒன்றிலிருந்து 25 வரை ஜன்ய சாத்தியங்கள்.

உதாரணம்-(For first melakarta )Black-ஆரோகணம்(Ascending).Red-அவரோகணம்(Descending)

1 Kanakāngi S R1 G1 M1 P D1 N1 S S N1 D1 P M1 G1 R1 S

Kanakāmbari S R1 M1 P D1 S S N1 D1 P M1 G1 R1 S

Kanakatodi S R1 G1 M1 P D1 S S N1 D1 P M1 R1 S

Karnātaka Shuddha Sāveri S R1 M1 P D1 S S D1 P M1 R1 S

Latantapriya S R1 G1 M1 P D1 S S D1 P M1 R1 S

Lavangi S R1 M1 D1 S S D1 M1 R1 S

Megha S R1 M1 P D1 N1 D1 P S S N1 D1 P M1 R1 S

Rishabhavilāsa S R1 M1 P D1 S S D1 P M1 R1 M1 R1 S

Sarvashree S M1 P S S P M1 S

Suddha Mukhāri S R1 M1 P D1 S S N1 D1 P M1 G1 R1 S

Tatillatika S R1 M1 P D1 S S D1 P M1 R1 S

Vāgeeshwari S R1 G1 M1 P D1 S S D1 M1 P G1 R1 S


அடுத்து 12 சத்தங்களை சுரங்களை பதிக்கிறேன்.

madhu
5th August 2014, 07:20 AM
Gopalji.. சின்ன வயசுல மேத்ஸ் கிளாஸை கட்டடிச்சதுக்கு இப்போ வருத்தப்படுகிறேன்..

ம்ம்... எல்லா ராகங்களுமே ஸ-வில் ஆரம்பித்து ஸ-வில்தான் முடியுமா ? அதுக்கும் exceptions இருக்கா ?

RAGHAVENDRA
5th August 2014, 07:31 AM
கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையிலிருந்தே துவங்கியிருக்கும் கோபால் சார்... தொடருங்கள்...

இத்தனை நாள் நீங்கள் போட்ட சத்தங்களை இப்போது தாங்கள் போட்டிருக்கும் சத்தங்கள் மிஞ்சி விட்டன. சூப்பர்...

Gopal.s
5th August 2014, 07:38 AM
Gopalji.. சின்ன வயசுல மேத்ஸ் கிளாஸை கட்டடிச்சதுக்கு இப்போ வருத்தப்படுகிறேன்..

ம்ம்... எல்லா ராகங்களுமே ஸ-வில் ஆரம்பித்து ஸ-வில்தான் முடியுமா ? அதுக்கும் exceptions இருக்கா ?

மேளகர்த்தா என்றால் அத்யாவசியம்.பெரும்பாலானவை அப்படித்தான் என்றாலும்,நிறைய விதிவிலக்கு ஜன்யங்கள் உண்டு.



உதாரணங்கள்.



நடனமாகிரியா -

ஆரோகணம்-ஸ ரி 1க 3ம 1ப த 1நி 3

அவரோகணம்-நி 3த 1ப ம 1க 3ரி 1ஸ நி 3



குறிஞ்சி

ஆரோகணம் ஸ நி 3ஸ ரி 2க 3ம 1ப த 2

அவரோகணம்-த 2ப ம 1க 3ரி 2ஸ நி 3ஸ



நவரோஜ்

ஆரோகணம்-ப த 2நி 3ஸ ரி 2க 3ம 1ப

அவரோகணம்-ம 1க 1ரி 3ஸ நி 2த 2ப

RAGHAVENDRA
5th August 2014, 07:40 AM
உள்ள(த்)தை அள்ளித்தா

http://3.bp.blogspot.com/_S40OvO438Qw/TC3XcEyPOLI/AAAAAAAAGRI/a_pnzkSmNCU/s400/T+V+RAJU.JPG

டி.வி. ராஜு ... அந்நாளைய பிரபலமான இசையமைப்பாளர். தெலுங்கில் இவருடைய படங்கள் பல நல்ல வெற்றி பெற்றுள்ளன, அதில் இவருடைய இசைக்கும் பங்குண்டு. நம்முடைய வேதா அவர்களைப் போல் வேற்று மொழி பாடல்களின் மெட்டுக்களையும் அவ்வப்போது எடுத்து தன்னுடைய திறமையால் நன்றாகக் கொண்டு வருவார். தமிழில் கனிமுத்துப் பாப்பா, ராணி யார் குழந்தை போன்ற படங்கள் இவரை நமக்கு அடையாளம் காட்டும்.

இவருடைய இசையமைப்பின் சிறப்பு மெலோடி. இவர் இசையமைத்த பாடல்களைக் கேட்கும் போதே நமக்குள் நம்மையும் அறியாமல் இனம் புரியாத உணர்வு ஏற்பட்டு அந்தப் பாடலுக்குள்ளே நம்மை அழைத்துச் சென்று விடும். சாதாரணமாகத் துவங்கும் மெட்டில் அமைந்தாலும் போகப் போக நம்மை ஆகர்ஷிக்கும் சக்தி இவருடைய இசையில் வந்த பாடல்களுக்கு உண்டு.

அப்படி ஒரு பாடலை இன்று தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தஞ்சை ராமய்யா தாஸ் இயற்றி பி.லீலா பாடிய கண்ணான கண்மணியே என்ற இந்தப் பாடல் நல்ல தரத்தில் கேட்டால் தான் அதனுடைய சிறப்பை நம்மால் உணர முடியும். அதற்கேற்ப சி டி தரத்தில் இப்பாடல் இங்கு வழங்கப் படுகிறது. பாடல் இடம் பெற்ற திரைப்படம் ராஜ சேவை 1959

கேட்கக் கேட்கத் தங்களையும் அறியாமல் தாங்கள் இப்பாடலுக்குள் புகுந்து விடுவீர்கள் என்பது திண்ணம்.

கண்ணான கண்மணியே (https://www.mediafire.com/?2w861380l19viqj)

பாடல் முடியும் போது அந்த கோரஸ் குரல் நம்மை மயக்கி விடும். சிந்து நதியின் மிசை பாடல் ஞாபகத்துக்கு வரும்

Gopal.s
5th August 2014, 07:49 AM
கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையிலிருந்தே துவங்கியிருக்கும் கோபால் சார்... தொடருங்கள்...

இத்தனை நாள் நீங்கள் போட்ட சத்தங்களை இப்போது தாங்கள் போட்டிருக்கும் சத்தங்கள் மிஞ்சி விட்டன. சூப்பர்...

நன்றி தலைவரே. எனக்கு உலக இலக்கியம் ,உலக படங்கள்,அரசியல்,சரித்திரம் இவற்றில் உள்ள தேர்ச்சி சங்கீதத்தில் அறவே கிடையாது. இசையை,இசையாகவே கற்பனை பண்ணும் திறனும் அற்றவன். சிறு வயதில் சங்கீதம் கற்றவர்கள் சுற்றி இருந்தும், சில சமயம் சினிமா பாடல் கேட்கும் நேரம்,பெரியவர்கள் கர்நாடக இசை கச்சேரிகளுக்கு வானொலியை திருப்பும் போது சங்கீதத்தை வெறுத்தவன். ஆனால் இப்போது தவறு உணர்ந்து,எந்த குருவின் துணையும் அற்று ,தன்னிச்சையாய் சுய முனைவில் கற்று ,கற்றதை சிறிதே கற்பிக்கிறேன்.நான் விற்பன்னன் அல்ல.நம்பகமான நண்பன் மட்டுமே.

RAGHAVENDRA
5th August 2014, 08:13 AM
பொங்கும் பூம்புனல்

மீண்ட சொர்க்கம் .... ஸ்ரீதர் சலபதி ராவ் இணையில் வெளிவந்த மற்றுமொரு இசைக் காவியம். பின்னாளில் வெளிவந்த பல இசை மற்றும் நாட்டியக் கலைஞர்கள் பற்றிய திரைப்படங்களுக்கு முன்னோடி எனக் கூட சொல்லலாம். கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்.. ஏ.எம்.ராஜாவின் புகழ்க் கிரீடத்தில் மாணிக்கமாய் ஜொலிக்கும் பாடல்.. இந்தப் படத்தில் இடம் பெற்ற மற்றோர் அருமையான மற்றும் இனிமையான பாடல், ஜிக்கி பாடிய சிங்காரத் தோப்பிலே பாடலாகும். எனக்கு மிகவும் பிடித்த இப்பாடலைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

http://www.youtube.com/watch?v=kZrVCGm51E4

gkrishna
5th August 2014, 09:51 AM
உள்ள(த்)தை அள்ளித்தா

டி.வி. ராஜு ... அந்நாளைய பிரபலமான இசையமைப்பாளர். தெலுங்கில் இவருடைய படங்கள் பல நல்ல வெற்றி பெற்றுள்ளன, அதில் இவருடைய இசைக்கும் பங்குண்டு. நம்முடைய வேதா அவர்களைப் போல் வேற்று மொழி பாடல்களின் மெட்டுக்களையும் அவ்வப்போது எடுத்து தன்னுடைய திறமையால் நன்றாகக் கொண்டு வருவார். தமிழில் கனிமுத்துப் பாப்பா, ராணி யார் குழந்தை போன்ற படங்கள் இவரை நமக்கு அடையாளம் காட்டும்.

இவருடைய இசையமைப்பின் சிறப்பு மெலோடி. இவர் இசையமைத்த பாடல்களைக் கேட்கும் போதே நமக்குள் நம்மையும் அறியாமல் இனம் புரியாத உணர்வு ஏற்பட்டு அந்தப் பாடலுக்குள்ளே நம்மை அழைத்துச் சென்று விடும். சாதாரணமாகத் துவங்கும் மெட்டில் அமைந்தாலும் போகப் போக நம்மை ஆகர்ஷிக்கும் சக்தி இவருடைய இசையில் வந்த பாடல்களுக்கு உண்டு.

அப்படி ஒரு பாடலை இன்று தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தஞ்சை ராமய்யா தாஸ் இயற்றி பி.லீலா பாடிய கண்ணான கண்மணியே என்ற இந்தப் பாடல் நல்ல தரத்தில் கேட்டால் தான் அதனுடைய சிறப்பை நம்மால் உணர முடியும். அதற்கேற்ப சி டி தரத்தில் இப்பாடல் இங்கு வழங்கப் படுகிறது. பாடல் இடம் பெற்ற திரைப்படம் ராஜ சேவை 1959

கேட்கக் கேட்கத் தங்களையும் அறியாமல் தாங்கள் இப்பாடலுக்குள் புகுந்து விடுவீர்கள் என்பது திண்ணம்.

பாடல் முடியும் போது அந்த கோரஸ் குரல் நம்மை மயக்கி விடும். சிந்து நதியின் மிசை பாடல் ஞாபகத்துக்கு வரும்

http://www.aptalkies.com//modules/movies/dataimages/jquery/Sri_Krishnamjaneya_Yudham_19723.jpghttps://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcS0vLyjiPB5nn_xS3ThBPUDuADD_OcDd FucHfwal3b1H7rL4GBIhttp://i1.ytimg.com/vi/VztUF47deFQ/hqdefault.jpg

இவர் இசையில் 1972-73 கால கட்டத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஆஞ்சநேய யுத்தம்
தமிழ் இல் டப்பிங் பார்த்த நினைவு

NTR ,காந்தாராவ்,ரங்கராவ், வாணிஸ்ரீ, தேவிகா ,ராஜநள (இவர்தான் ஹனுமான் ) நடித்து வந்த படம்

சூப்பர் பாடல்கள்

http://www.raaga.com/channels/telugu/moviedetail.asp?mid=a0002383

gkrishna
5th August 2014, 11:33 AM
http://mmimages.maalaimalar.com/Articles/2014/Aug/a5e88127-6d61-41dd-9628-23bc3b9c026a_S_secvpf.gif
அண்ணா வசனம் எழுதி, எம்.ஜி.ஆர். நடித்த "நல்லவன் வாழ்வான்" படத்தில் வாலியின் பாடல் இடம் பெற்றபோதிலும், பல சோதனைகளை வாலி சந்திக்க வேண்டியிருந்தது.

ப.நீலகண்டன் கூறியது போலவே மறுநாள் அவரைப் போய்ப் பார்த்தார், வாலி. சுமார் ஐம்பது பல்லவிகளைக் கொடுத்தார். அவற்றில், "சிரிக்கின்றாள், இன்று சிரிக்கின்றாள்" என்ற பல்லவியை தேர்வு செய்தார், நீலகண்டன்.

அதற்கு இசை அமைப்பாளர் டி.ஆர்.பாப்பா பலவிதமான மெட்டுகளைப் போட்டுக்காட்டினார். அதில் ஒரு மெட்டை தேர்வு செய்தார், நீலகண்டன்.

அதன் பிறகு, முழுப் பாட்டுக்கும் இசை அமைப்பதில் பாப்பா மும்முரமாக ஈடுபட்டார்.

இசை அமைக்கும்போது வந்திருந்த ஒருவரை வாலிக்கு அறிமுகம் செய்து வைத்தார், பாப்பா. அவர்தான் எழுத்தாளரும், வசன கர்த்தாவுமான மா.லட்சுமணன். "இவர்தான் உங்களைப்பற்றி ப.நீலகண்டன் சாருக்கு தெரிவித்து, அதன் மூலம் உங்களுக்கு பாட்டெழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது" என்று பாப்பா கூறினார்.

அதைக்கேட்டு வாலி பிரமித்து நின்றார். கண்கள் பனிக்க மா.லட்சுமணனுக்கு நன்றி தெரிவித்தார்.

"நல்லவன் வாழ்வான்" படத்துக்கு கதை-வசனம் எழுதுபவர் பேரறிஞர் அண்ணா என்பதை அறிந்து இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தார், வாலி.

வாலியின் பாடல், அண்ணாவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. பாடல் நன்றாக இருப்பதாகக் கூறியதோடு, சில வரிகளை அடிக்கோடிட்டு, பாராட்டினார்.

எம்.ஜி.ஆருக்கும் பாடல் பிடித்து விட்டது.

என்றாலும், அந்தப் பாடல் பதிவு செய்யப்படுவதிலும், படத்தில் இடம் பெறுவதிலும் பெரும் சோதனைகள் ஏற்பட்டன.

அதுபற்றி வாலி எழுதியிருப்பதாவது:-

"சாரதா ஸ்டூடியோவில் 'ரிக்கார்டிங்'கிற்கான தேதி முடிவாயிற்று. நான் இஷ்ட தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டு சாரதா ஸ்டூடியோவிற்குச் சென்றேன்.

பகல் 12 மணியளவிற்கு எம்.ஜி.ஆர். வந்தார். பாட்டின் பின்னணி இசை திருப்தியாக இல்லை என்றார். சில மாற்றங்கள் செய்யப் போதுமான நேரம் இல்லாததால் ரிக்கார்டிங் ரத்து செய்யப்பட்டது.

10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் சாரதா ஸ்டூடியோவில் ஒலிப்பதிவிற்கான தேதி குறிக்கப்பட்டது. அன்று பகல் 12 மணியளவில் பி.சுசீலாவிற்கு உடல் நிலை சரியில்லையென்று ஒலிப்பதிவு ரத்து செய்யப்பட்டது.

பிறகு, ஒரு மாதம் கழித்து இன்னொரு நாள் ஒலிப்பதிவிற்கான தேதி குறிக்கப்பட்டது. அன்று சீர்காழி கோவிந்தராசனின் சாரீரம் உதவும்படியாக இல்லையென்று ஒலிப்பதிவு ரத்து செய்யப்பட்டது. அந்தக் காலத்தில் டிராக் எடுத்துவிட்டு பிற்பாடு குரலைப் பதிவு செய்யும் வழக்கமெல்லாம் அமலுக்கு வரவில்லை.

'இந்தப்பாட்டு, ராசியில்லாத பாட்டு... எனவே, மருதகாசியை வைத்து வேறு பாட்டு எழுதி ஒலிப்பதிவு செய்யலாம்' என்று நீலகண்டன் முடிவெடுத்தார்.

மருதகாசியும் பாட்டு எழுதவந்தார். ஏற்கனவே நான் எழுதியிருந்த பாட்டை, ஒரு முறை கையில் வாங்கிப் பார்த்தார்.

"இந்தப் பையன் நல்லா எழுதியிருக்கான். இவனுடைய வாழ்க்கை என்னால் கெட்டுப் போவதை நான் விரும்பவில்லை... இந்தப் பாட்டையே வைத்துக்கொள்ளுங்கள்... பாப்புலராகும்..." என்று சொல்லிவிட்டு, மருதகாசி அண்ணன் தன் பிளைமவுத் காரில் ஏறிப் போய்விட்டார். அண்ணன் மருதகாசிக்கு மனதுக்குள் ஆலயம் எழுப்பி வழிபட்டேன். பிறகு என் பாடலையே பதிவு செய்து படப்பிடிப்புக்குப் போனார்கள்.


நியூடோன் ஸ்டூடியோவில் ஒரு பெரிய செட் போட்டு இந்தப் பாடலைப் படம் பிடிக்க ஏற்பாடாயிற்று.

ஒரு மலை; அதனின்றும் வழியும் அருவி. அருவி வந்து விழும் தடாகம் எனப் பெரிதாக அழகுற அமைக்கப்பட்ட அந்த செட்டில் எம்.ஜி.ஆரும், ராஜசுலோசனாவும் ஆடிப்பாடுவதாக நடன இயக்குனர் அமைத்த வண்ணம் ஒத்திகை பார்க்கப்பட்டது.

முதல் ஷாட் எம்.ஜி.ஆர், 'சிரிக்கின்றாள், இன்று சிரிக்கின்றாள்' என்னும் பாடல் வரிக்கு வாயசைத்தவாறே, கரையிலிருந்த தடாகத்தில் இறங்குகையில் கரை உடைந்து ஸ்டூடியோ "செட்" முழுவதும் வெள்ளக்காடாயிற்று.

படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. நான் அதிர்ந்து போனேன். இந்த ஒரு பாடலுக்கே இத்துணை தடங்கல்களென்றால் என் எதிர்காலம் என்னாவது என்று அஞ்சலானேன்.

நல்லவேளை, செட் சீர் செய்யப்பட்டு பாட்டு நல்ல விதமாகப் படமாக்கப்பட்டு, படத்திலும் இடம் பெற்றது.

இறுதியில் பாடல் வரிகளில் ஆட்சேபணைக்குரியதாகக் கருதப்பட்டு, சரணத்தில் சில வாக்கியங்கள் சென்சாரால் வெட்டப்பட்டன.

இவ்வளவு அமர்க்களங்களுக்கு இடையே, எம்.ஜி.ஆருக்காக நான் எழுதிய முதல் பாடலுடன் "நல்லவன் வாழ்வான்" 1961 ஆகஸ்டு 31-ந்தேதி திரைக்கு வந்தது."

இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

gkrishna
5th August 2014, 11:50 AM
வலைப்பூவில் படித்து பிடித்து பிடிக்கப்பட்ட பதிவு

http://www.tamilcinetalk.com/wp-content/uploads/2014/08/illayaraja-2.jpg

ஈரோட்டில் நடந்த புத்தகக் கண்காட்சியை இசைஞானி இளையராஜா திறந்து வைத்தார். கண்காட்சி நடக்கும் பன்னீர்செல்வம் பூங்காவில் கட்டுக்கடங்காத கூட்டம். இளையராஜாவை பார்க்க அவரது ரசிகர்களும், புத்தகப் பிரியர்களும் ஒன்று சேர வந்திருந்ததால் கூட்டம் அலைமோதியது.

இளையராஜாவின் கார் மைதானத்திற்குள் நுழையக் கூட கஷ்டப்பட வேண்டியதாகிவிட்டது.. கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது சிரமமாக இருந்ததால், இளையராஜா நேரடியாக மேடைக்கு அழைத்து செல்லப்பட்டார். தொடக்க விழா மேடையில் பேசும்போது, நேரடியாக சென்று திறக்க முடியாததால், மானசீகமாக மேடையில் இப்போது இருந்தபடியே திறந்து வைப்பதாகக் கூறி அரங்குகளைத் திறந்து வைத்தார்.

பாட்டு பாடும்படி கோரஸாக மக்கள் மத்தியில் இருந்து குரல்கள் எழ.. இசைஞானியும் சிரித்துக் கொண்டே “பாடலைன்னா விடவா போறீங்க…” என்று சொல்லிவிட்டு ‘இதயம் ஒரு கோயில்’, ‘ஜனனி ஜனனி’ உள்பட நான்கு பாடல்களை மேடையில் பாடினார். ‘இதயம் ஒரு கோயில்’ பாடலைப் பாடும்போது, ‘நீயும் நானும் ஒன்றுதான்.. எங்கே பிரிவது?’ என கூடியிருந்த மக்களைப் பார்த்து கை நீட்டிப் பாட, அர்த்தம் புரிந்து கூட்டம் ஆர்ப்பரித்தது..!

பின்னர், ‘உங்களுக்காகத்தான் நான்… உங்களைப் பார்க்கத்தான் வந்திருக்கிறேன்’ என்று கூறி, தனக்கும் ஈரோட்டுக்கும் உள்ள நெருக்கமான தொடர்பைப் பகிர்ந்து கொண்டார்.

“கடந்த 1960 முதல் 1968-ம் ஆண்டுவரை ஈரோடு நகரில் எனது கால் படாத இடங்களே கிடையாது. இன்று இருக்கும் ஈரோடு நகரை அப்போது நான் கனவில்கூட சிந்தித்து பார்த்தது இல்லை. எனது சகோதர்களுடன் ஈரோடு நகரம் முழுவதும் பாடல் பாடி வந்திருக்கிறேன்.

எனது சகோதரர்களுடன் சென்னைக்கு கிளம்புவதற்கு முன் கடைசியாக கலை நிகழ்ச்சி நடத்திய இடம் கோவை மாவட்டம். வீட்டில் இருந்த ஒரு பழைய ரேடியோவை ரூ.400-க்கு விற்று அந்தப் பணத்தை எங்களுக்குக் கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்தார் எங்க அம்மா.

ஆர்மோனிய பெட்டி, தபேலா, கிதார் இதை மட்டும் எடுத்துக்கிட்டு சென்னைக்கு கிளம்பினோம்.. அங்கே அவைகளை வைத்துதான் இசை அமைத்தோம். தானாக இசை அமைத்து டியூன் போடும் கலைஞர்கள் இனிமேல் இக்காலத்தில் பிறக்கப் போவதில்லை. நான் இசையமைத்த திரைப்படங்களில் பல கவிஞர்களின் பெயரில் வந்த பல பாடல் வரிகள் எனக்குச் சொந்தமானவைதான்.

தன்னை மட்டுமே தம்பட்டம் அடிக்க வேண்டும். மற்றவர்களை திட்ட வேண்டும் என்பதற்காகவே இப்போது பொது நிகழ்ச்சி மேடைகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொது மேடை நிகழ்ச்சிகளை நான் தவிர்த்து வருகிறேன்.

கல்வி என்பது புத்தகத்தில் இருந்து மட்டுமே கிடைப்பதல்ல. பரந்து கிடக்கிறது. எதில் இருந்தும் படிக்கலாம். வாழ்க்கையேகூட படிப்புதான். இதயம் ஒரு கோவில் போன்றது. ஆனால், நாம்தான் அதை சாக்கடையாக மாற்றி வைத்திருக்கிறோம். இதயம் என்னும் கோவிலை நல்ல நூல்கள் மூலம் சுத்தப்படுத்தப்படுத்தலாம்.

நான் பாடிய, இசை அமைத்த பாடல்கள் எல்லாம், நான் பாடுவதற்கு, இசை அமைப்பதற்கு முன்பே இருந்தவை. அதனால்தான் எனக்கு தானாக வருகிறது. சப்தம், நாதம் இல்லாமல் உலகம் இல்லை. உண்மையைச் சொன்னால் நமது நாத மண்டலம் நாசப்படுத்தப்பட்டுக் கிடக்கிறது. சுத்தமான இசை மூலம் நாத மண்டலத்தைச் சரிப்படுத்த முடியும். இப்போது வரும் இசை நமது மூளையை மழுங்கச் செய்யும் வகையில்தான் இருக்கிறது. எனவே, சுத்தமான இசையைக் கேட்க பொதுமக்கள் முன் வர வேண்டும்…” என்றார்.

Richardsof
5th August 2014, 12:04 PM
ராமன் தேடிய சீதை 1972

பாடகர் திலகம் - ஈஸ்வரி இருவரின் அட்டகாசமான குரலில் இடம் பெற்ற பாடல் ''படார் .படார் ''
கலவையான பாடல்கள் - இனிமையான இசை .அதிகம் பிரபலம் ஆகாத பாடல் .என்னுடைய
விருப்பமாக இன்றைய பாடல் .


http://youtu.be/hPeBJNq1NJs

Gopal.s
5th August 2014, 12:15 PM
எஸ்வி ,



நிஜமாகவே இது உங்கள் விருப்பமா?

gkrishna
5th August 2014, 12:19 PM
குமுதம் தீராநதி 2007 இதழ் ஒன்றை வாசிக்க அதில் கிடைத்த செய்தி.அனைவரும் அறிந்த ஒன்றே-இந்த இதழ் படிக்க வாய்ப்பு தந்த நண்பர் சரவணன் அவர்களுக்கும் என் நன்றி

'இ.பி.கோ. 326-வது பிரிவின் கீழும் மதுவிலக்கு சட்டத்தின் கீழும் புதுக்கோட்டையில் பிரபல நடிகர் கைது. மது அருந்தின குற்றத்திற்காகவும் தனது சொந்த வீட்டில் மதுவகை பாட்டில்கள் வைத்திருந்ததாகவும் மது அருந்திவிட்டு பக்கத்து வீட்டுக்காரர்களான செல்லையா, சந்தானம் பிள்ளை ஆகியோரிடம் சண்டைக்குச் சென்று அவர்களுக்குப் பலத்தக் காயத்தை ஏற்படுத்தியதாலும் கைது செய்யப்பட்டார்' என்று அன்றைய ஒரு சினிமா பத்திரிகையில் செய்தி வந்தது.

யார் அந்தப் பிரபலமான நடிகர்? அன்றைக்கு சூப்பர் ஸ்டாராக விளங்கிய பி.யூ.சின்னப்பாதான் அந்த பிரபல நடிகர்.

http://1.bp.blogspot.com/_Dcezi5xfsqA/RwIvHytdLTI/AAAAAAAAAMQ/xdDdYjtB7kI/s320/017188_puchinnappa555.jpg


மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் மாதம் 15 ரூபாய்க்கு வேலைக்குச் சேர்ந்தவர் பி.யூ.சின்னப்பா. பிறகு ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து டைரக்டர் பி.கே.ராஜா சாண்டோ இயக்கிய 'சந்திரகாந்தா' படத்தில் இணை கதாநாயகனாக சினிமா உலகத்திற்குள் வந்தவர் பி.யூ.சின்னப்பா. இந்தப் படத்தில் அவரது சொந்தப் பெயர் புதுக்கோட்டை சின்னச்சாமி.

அடுத்து வந்த 'ராஜமோகன்', 'அனாதைப் பெண்',' ய்யாதி', 'பஞ்சாப் கேசரி', 'மாத்ருபூமி' போன்ற எல்லாப் படங்களும் ஹிட். அதனால் புதுக்கோட்டை சின்னச்சாமி, 'பி.யூ.சின்னச்சாமி' என்று பெயர் மாறுகிறது.

1940-ல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து வெளிவந்த 'உத்தமபுத்திரன்' என்ற படம் சூப்பர் ஹிட். இதனால் சின்னப்பாவும் சூப்பர் ஹிட்டானார். சின்னப்பாவிற்கு சினிமாவிற்குள் வந்த காலத்திலிருந்தே மதுப் பழக்கம் இருந்திருக்கிறது. பிறகு அவரது புகழ் வளர வளர மதுப் பழக்கமும் வளர்ந்துவிட்டது.

முடிவு, புதுக்கோட்டையில் தனது நண்பர்களுடன் 'மணமகள்' படத்தைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிய பி.யூ.சின்னப்பா அன்றிரவே சென்னைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தபோது மயக்கமாக வருகிறது என்று ரத்தம், ரத்தமாக வாந்தியெடுத்து மயக்கமடைந்தார். அடுத்த அரை மணி நேரத்தில் அவரைப் பரிசோதித்த டாக்டர், கையை விரித்து விட்டார். ஆமாம், மிதமிஞ்சிய குடியால் பி.யூ.சின்னப்பா இறந்து போனார்.

இதேபோல், 1948-ல் 'குண்டூசி' என்ற இதழில் ஒரு செய்தி. 'நாதஸ்வர வித்வான் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை திருமலையில் சென்ற பிப்ரவரி மாதம் 15-ம் தேதி மதுவிலக்கு விதிகளை மீறி நடந்து கொண்டதற்காக சித்தூர் அடிஷனல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டால் இம்மாதம் 17-ம் தேதியன்று ரூபாய் 500 அபராதம் விதிக்கப்பட்டார்..'

1947 ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது. இதை நாட்டு மக்களுக்கு பிரகடனப்படுத்த பிரமாண்டமான சுதந்திர விழா டெல்லியில் நடந்தது. அந்த விழா மேடையில் சுமார் 10 நிமிடம் மட்டுமே தனது நாதஸ்வரத்தை வாசித்துக் காட்டினார் ராஜரத்தினம் பிள்ளை. இதைக் கேட்டு இந்திய முதல் பிரதமர் நேரு அசந்து போனார். இவரது நாதஸ்வர இசைக்குப் பிறகுதான் இந்திய சுதந்திரப் பிரகடனத்தை நேரு வாசித்தார்.

'சினிமா ராணி' என்று போற்றப்பட்ட டி.பி.இராஜலட்சுமிதான் முதன் முதலில் இயக்கிய 'மிஸ் கமலா(1936)' படத்தில் கடைசியில் வரும் ஒரு திருமண நிகழ்ச்சியில் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வரம் வாசித்தார். இதுதான் சினிமாவுக்கு அவர் அறிமுகமான விதம்.

பிறகு 1940-ல் அமெரிக்கரான எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய 'காளமேகம்' படத்தில் டி.என்.இராஜரத்தினம் கதாநாயகன் அந்தஸ்து பெற்றார்.

இப்படி புகழ் பெற்றிருந்த டி.என்.இராஜரத்தினம் ஒரு மணி நேரத்தில் ஒரு கேஸ் அதாவது 12 பாட்டில்கள் மதுவை அருந்தும் அளவுக்கு மதுவிற்கு அடிமையாக இருந்தார். 1930-லிருந்து 1950-வரை அவர் சம்பாதித்த தொகை 5 கோடி. முதலில் கார் வாங்கிய நாதஸ்வர வித்வான்.

ஆனால் மிதமிஞ்சிய குடியினால் 1956 டிசம்பர் மாதம் 12-ம் தேதி மாரடைப்பால் இறந்து போனார். தன் வாழ்நாளில் 5 கோடி சம்பாதித்த டி.என்.இராஜரத்தினம் இறந்தபோது அவரது ஈமச்சடங்கு செலவை என்.எஸ்.கிருஷ்ணன்தான் செய்தார்.

http://3.bp.blogspot.com/_Dcezi5xfsqA/RwIvWStdLUI/AAAAAAAAAMY/_lXaqNhvU4g/s320/krishnan.jpg


மதுவிலக்குப் பிரச்சாரத்தைப் பற்றி மக்களுக்கு புத்திமதி சொல்லி படம் எடுத்த என்.எஸ்.கிருஷ்ணன், அதிக மது அருந்தி வந்ததன் காரணமாக ஏற்பட்ட மஞ்சள் காமாலை, குலை வீக்கம் நோயினால் 1957 ஆகஸ்ட் 30-ம் தேதியன்று சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் இறந்து போனார்.

அடுத்து என்.எஸ்.கிருஷ்ணனின் மனைவி டி.ஏ.மதுரம். என்.எஸ்.கிருஷ்ணன் சினிமாப் பிரவேசம் செய்தது 1935-ம் ஆண்டு ன்றால், அதே வருடம் வெளியான 'ரத்னாவளி' படத்தின் மூலம்தான் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த மதுரமும் சினிமா நடிகையானார்.

'வஸந்தசேனா' என்ற படத்தில் நடிக்கும்போதுதான் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும், டி.ஏ.மதுரத்திற்கும் பழக்கம் ஏற்பட்டது. பிறகு, இந்தப் படத்தின் ஷ¥ட்டிங்கிற்காக பீகார் சென்றபோதுதான் அங்கே டி.ஏ.மதுரத்தை என்.எஸ்.கிருஷ்ணன் திருமணம் செய்து கொண்டார். கலைவாணர் இறந்த பிறகு ஒரு சில படங்களில் நடித்த டி.ஏ.மதுரம், அவருக்கும் ஏற்பட்ட குடிப்பழக்கத்தால் உடல் நலிவுற்று இறந்து போனார். அவர் இறந்தது 23.05.1974-ல்.

அடுத்ததாக நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி. அன்றைய காலத்தில் புகழ் பெற்ற நாடக சபாக்களில் ஒன்றான மங்கள கான சபா பெரும் நஷ்டத்தில் யங்கி வந்தது. இதை என்.எஸ்.கிருஷ்ணன் விலைக்கு வாங்கி, என்.எஸ்.கே. நாடகசபா என்று பெயர் மாற்றி கே.ஆர்.ராமசாமியிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்தார். கே.ஆர்.இராமசாமி குடிப்பழக்கத்திற்கு ஆட்பட்டிருந்ததால், கம்பெனி மீண்டும் அதே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தது.

இந்த நாடக சபா மூலமாகத்தான் அண்ணாவின் 'வேலைக்காரி' நாடகம் பிரபலமடைந்தது. இந்த நாடக சபாவிற்காக காஞ்சிபுரத்தில் 'திராவிட நாடு' ஏட்டை நடத்தி வந்த அண்ணாவிடம் ஒரு நாடகம் எழுதித் தருமாறு கே.ஆர்.இராமசாமி வேண்டினார். அண்ணாவைச் சந்திக்கும்போதுகூட கே.ஆர்.இராசாமி போதையிலேயே இருந்திருக்கிறார். இதைப் பார்த்து அண்ணாவே அப்பவே கண்டித்திருக்கிறார்.

பிறகு அண்ணா 'ஓர் இரவு' என்ற நாடகத்தை எழுதிக் கொடுத்தார். கே.ஆர்.இராமசாமி, என்.எஸ்.கிருஷ்ணன் சிபாரிசில் 'சிவசக்தி' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். பிறகு 1969-ல் வெளிவந்த எம்.ஜி.ஆர் நடித்த 'நம் நாடு' படம்வரையிலும் நடித்துப் பெரும் புகழைப் பெற்று வந்தார். அடுத்த இரண்டு வருடத்திலேயே அதாவது 1971 செப்டம்பர் மாதத்தில் தனது அதிகப்பட்ச குடியினால் இறந்து போனார்.

சரி அடுத்த நபர் யார்..? சாவித்திரி..

தமிழில்-85, தெலுங்கில்-92, இந்தியி-3, கன்னடத்தில்-1, மலையாளத்தில்-1. இதெல்லாம் அவர் நடித்தப் படங்கள்.

'·பாரின் ஸ்காட்ச்', 'வாட் 69', 'ஜின்', 'விஸ்கி', 'ரம்', 'பிராந்தி', 'பீர்', 'சர்க்கார் சாராயம்', 'ஜிஞ்சர் பிரிஸ்'.. இதெல்லாம் அவர் குடித்து முடித்த மதுவகைகள்.

இவர் காதல் மன்னன் ஜெமினிகணேசனின் மூன்றாவது மனைவி. 1951-ல் நடிகையான சாவித்திரி தனது சொந்த நிறுவனமான ஸ்ரீசாவித்திரி புரொடெக்ஷன்ஸ் சார்பில் 'குழந்தை உள்ளம்' என்ற படம் எடுத்தார். ஜெமினிகணேசன் கதாநாயகன். சவுகார்ஜானகி, வாணிஸ்ரீ ஆகியோர் கதாநாயகிகள். படம் படு தோல்வி.

இரண்டாவதாக சிவாஜியை வைத்து 'ப்ராப்தம்' (1971) என்ற படத்தைத் தயாரித்தார். இந்தப் படமும் படு தோல்வி. இதனால் தனது சொத்து பெரியளவிற்குத் தொலைந்தன. துக்கம் தாளாமல் எப்போதும் மதுவுடனேயே இருந்தார் நடிகையர் திலகம் சாவித்திரி.

வாழ்வின் ஒட்டு மொத்த நிம்மதியும் இழந்த சாவித்திரி, 1981 டிசம்பர் 26 நள்ளிரவில் இறந்து போனார்.

தனது உழைப்பால் வெற்றி முகத்தில் இருந்த சமயத்தில்தான் சொந்தப் படம் எடுத்து அதில் தனது சொத்துக்களையெல்லாம் இழந்து, கடைசியில் குடியில் மூழ்கி கல்லீரல் வீங்கி இறந்து போனார் சந்திரபாபு.

குடியினால் அழிந்த சினிமா பிரபலங்கள் இவர்கள் மட்டுமல்ல, கவியரசு கண்ணதாசன், கவிஞர் வயலார், ராமவர்மா, கம்பதாசன் இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

- தமிழ் உத்தம்சிங்

gkrishna
5th August 2014, 01:02 PM
திரு கோபால் அவர்கள் கனகாங்கி என்ற ராகத்தை பற்றி குறிப்பிட்டு இருந்தார்கள்

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/3/3e/Sindhu_Bhairavi_dvd.jpg/220px-Sindhu_Bhairavi_dvd.jpg

இந்த ராகத்தில் அமைந்த ஒரு மிக சிறந்த பாடல் சிந்து பைரவி படத்தில் ஜேசுதாஸ் குரலில் இடம் பெற்ற

மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்.
வானம் எங்கும் அந்தப் பிம்பம் வந்து வந்து விலகும்.
மோகம் என்னும் மாயப் பேயை நானும் கொன்று போட வேண்டும்.
இல்லை என்றபோது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும்.
தேகம் எங்கும் மோகம் வந்து யாகம் செய்யும் நேரம் நேரம்.
தாயே இங்கு நீயே வந்து தண்ணீர் ஊற்ற வேண்டும் வேண்டும்.
மனதில் உனது ஆதிக்கம்,
இளமையின் அழகு உயிரை பாதிக்கும்.
விரகம் இரவை சோதிக்கும்,
கனவுகள் விடியும் வரையில் நீடிக்கும்.
ஆசை என்னும் புயல் வீசி விட்டதடி!
ஆணி வேர் வரையில் ஆடிவிட்டதடி...!
காப்பாய் தேவி...! காப்பாய் தேவி...!

தானம்த தானத்தம்தம்தம்...! தானம்த தானத்தம்தம்தம்...!
ஆனந்தம்...!
தானம்த தானத்தம்தம்தம்...! தானம்த தானத்தம்தம்தம்...!
ஆனந்தம்...!
தொம்த தொம்தனன தொம்த தொம்தனன தொம்த தொம்தனன
தொம்தன தனனன....
தொம்த தொம்தனன தொம்த தொம்தனன தொம்..!

தொம் தொம் தொம் தொம் தொம் தொம் தன தொம்...!
தொம்தன தன தொம்...!
தொம்த தொம்தனன தொம்த தொம்தனன தொம்..!
ஆ......!

http://www.youtube.com/watch?v=peaoPaRwiKs

Richardsof
5th August 2014, 03:18 PM
1963- CINE DAIRY

PLAY BACK SINGERS

http://i59.tinypic.com/19pnh2.jpg

Richardsof
5th August 2014, 03:19 PM
http://i57.tinypic.com/2k3pjs.jpg

Richardsof
5th August 2014, 03:23 PM
http://i60.tinypic.com/2luosqg.jpg

Richardsof
5th August 2014, 03:24 PM
http://i61.tinypic.com/15yj82h.jpg

Richardsof
5th August 2014, 03:25 PM
http://i57.tinypic.com/14mylqx.jpg

Richardsof
5th August 2014, 03:26 PM
http://i57.tinypic.com/2nsylab.jpg

vasudevan31355
5th August 2014, 03:59 PM
இன்றைய ஸ்பெஷல் (47)

ம். இன்றைய ஸ்பெஷலில் வரும் இந்தப் பாடலை என்னவென்று சொல்வது?

எந்த ரகத்தில் சேர்ப்பது?

பாடல் வகையில் சேர்ப்பதா?
வசன நடையில் சேர்ப்பதா?
அல்லது இரண்டும் கலந்த புதுமையா?

எப்படியோ தெரியாது. ஆனால் பாடல் முழுக்க முழுக்க வித்தியாசம்.

அதுவும் அந்தக் காலத்திலேயே வேதாவின் புதிய முயற்சி.

பாடலாக இல்லாத ஒரு பாடல். ஆனால் இனிமை இம்மியளவும் குறையாது.

சிறு வயதில் இப்பாடலை வானொலியில் கேட்கும் போதெல்லாம் ஒவ்வொரு முறையும் வியந்து இருக்கிறேன். இப்படியெல்லாம் கூட பாடல்கள் வருமா! இன்று வரை இப்பாடலைப் பற்றி என் மனதில் ஆச்சரியங்கள் எழுந்த வண்ணம்தான் உள்ளன இதோ இப்போது கேட்டுக் கொண்டே எழுதும் போதும் கூட.

ஒன்றுமே இல்லை. ஒரு தந்தை. காவல் அதிகாரி. அவர் மனைவி. அவர்களின் குழந்தை. இவர்கள் இன்பமாக இணைந்து பாடும் ஒரு பாடல். அவ்வளவே. அப்பா மனோகர். அம்மா மணிமாலா. சிறுவன் மாஸ்டர் பிரபாகரன்.

இப்பாடலின் விஷேச சிறப்புகள்.

முதல் விசேஷம் பாடகர் திலகம் டி.எம்.சௌந்தரராஜன் தான்.

மனிதர் என்ன பிறவி என்றே தெரியவில்லை. அப்படி ஒரு திறமை.

நாயகன் மனோகருக்காக இவர் மாற்றித் தரும் குரல். அப்படியே நம்மை அசரச் செய்கிறது. அச்சு அசலாக அப்படியே மனோகர் பாடுவது போலவே. இரு திலகங்களுக்கும் சரி, ரவி, ஜெய்க்கும் சரி... மனோகருக்குமா இப்படி அவர் குரலிலேயே பாடி மனிதர் இப்படி அசத்துவார்!

அதுவும் 'அம்மா முத்தம் தந்தா' என்று மாஸ்டர் பிரபாகரன் பாடியவுடன் 'சபாஷ்டா கண்ணு' என்று 'பாடகர் திலகம்'மனோகருக்காக குரல் கொடுப்பார். அந்த இடத்தை மட்டும் திரும்ப கொஞ்சம் கண்ணை மூடிக் கேளுங்கள். அப்படியே மனோகர் குரலையே கேட்பீர்கள். அதே போல பாடலினூடே' ஹொஹ்ஹஹ்ஹோ...ஹஹ்ஹஹஹா' என்று அவர் சிரிப்பதும் மனோகர் குரலில்தான்.

அந்தந்த நடிகர்களுக்கேற்ப குரலை மாற்றுவதில் உன்னை விட வல்லவன் எவனடா எங்கள் பாடகர் திலகமே!

அடுத்து சுசீலா. மிக அழகாக ஈடு கொடுப்பார். மிக மிக இனிமையாகப் பாடியிருப்பார். மணிமாலாவுக்கு மிக கச்சிதமாக இவர் குரல் பொருந்துவதை கவனிக்கலாம்.

மாஸ்டர் பிரபாகரனுக்கு வசந்தா குரல் கொடுத்திருப்பார். மிக மிக இனிமை. 'அப்பா பக்கம் வந்தா அம்மா முத்தம் தந்தா' என்று அடிக்கடி இப்பாடலின் நடுவே இவ்வரிகள் வரும். ஒவ்வொரு முறையும் நம்மை அறியாமலேயே நாம் வசந்தாவுடன் இணைந்து அந்த வரிகளைப் பாடுவோம் அல்லது பேசுவோம். இது வசந்தாவின் வெற்றியல்லாமல் வேறென்ன? அதுவும் பாடலின் முடிவில் அப்பாவும் அம்மாவும் பாடிக் கொண்டிருக்க பிரபாகர் சிரித்துக் கொண்டே இருக்கும் குரல் பின்னணி சொல்ல வார்த்தைகள் இல்லை. அட்டகாசம்.

மாஸ்டர் பிரபாகரன் பொடியன் ஒரு இடத்தில் ட்விஸ்ட் ஆடுவான். அப்படியே அச்சு அசலாக நாகேஷ் ஆடுவது போலவே இருக்கும்.

மனோகர் சில படங்களில் சில டூயட்கள் பண்ணியிருந்தாலும் இது குடும்ப டூயட். மனைவி, பையனுடன் பாசப் பிணைப்பு. 'விஸ்வம்' வில்லனுக்கு மட்டுமல்ல நமக்கும் இது புதுமைதானே.

அடுத்து வேதா.

வெகு வித்தியாசமான முயற்சி. அதில் மாபெரும் வெற்றி. 'ஒ... மேரி சோனாரே சோனாரே' வை இந்தியிலிருந்து திருடி 'நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்' என்று ஹிட்டடித்தது பெருமையல்ல.

ஒரிஜினலாக இந்த வித்தியாசப் பாடலைத் தந்ததுதான் பெருமை.

இப்படி ஒரு வித்தியாசமான பாடல் இதுவரை தமிழில் வந்ததாக எனக்குப் படவில்லை.

சிறு வயது முதல் இப்பாடலைப் பற்றி என் மனதில் உள்ளவற்றையெல்லாம் உங்களிடம் கொட்டித் தீர்த்து விட்டேன். இப்போதெல்லாம் கேட்கவே முடியாத மிக அபூர்வப் பாடல் இது.
கேட்டவர்கள் மீண்டும் கேளுங்கள். கேட்காதவர்கள் திரும்பத் திரும்ப இரண்டு மூன்று தரம் கேளுங்கள்.

நான் நினைத்ததைத்தான் நீங்களும் நினைப்பீர்கள்.

இந்தப் பாடலுக்கு உங்கள் கருத்துக்களை வழக்கத்தை விட மிக ஆவலாக எதிர்பார்க்கிறேன்.

http://i1.ytimg.com/vi/nzhsLt-Wfb0/sddefault.jpg

படம்: எதிரிகள் ஜாக்கிரதை

தயாரிப்பு: மாடர்ன் தியேட்டர்ஸ்

நடிப்பு" மனோகர், ரவிச்சந்திரன், தேங்காய் ஸ்ரீனிவாசன், எல்.விஜயலஷ்மி, மணிமாலா.

பாடல்கள்: கண்ணதாசன்

இசை: வேதா

இயக்கம்: ஆர்.சுந்தரம்.

இப்போது பாடல் வரிகள்.

http://i2.ytimg.com/vi/sFw8wN6NPPc/mqdefault.jpg

லாலா லல்லல்லல்லா
லாலா லல்லல்லல்லா

லாலா லல்லல்லல்லா
லாலா லல்லல்லல்லா

ஒருநாள் இருந்தேன் தனியாக
ஒரு பெண் நடந்தாள் அருகே
சிரித்தேன் சிரித்தாள் மெதுவாக
சிவக்கும் ரோஜா மலரே

அப்பா பக்கம் வந்தா
அம்மா முத்தம் தந்தா
(சபாஷ்டா கண்ணு)

அப்பா... பக்கம் வந்தா (ம்ஹஹ்ஹஹஹா)
அம்மா... முத்தம் தந்தா

குலுங்கும் வசந்தம் அவளானாள்
குவளை மலராய் மலர்ந்தாள்
தவழும் தென்றல் அவளானாள்
தழுவும் மலரை மலர்ந்தாள்

அப்பா... பக்கம் வந்தா
அம்மா... முத்தம் தந்தா (ஹொஹ்ஹஹ்ஹோ)
அப்பா... பக்கம் வந்தா (ஹஹ்ஹஹஹா)
அம்மா... முத்தம் தந்தா

பழகும் காதல் பரிசாக
பாவை கேட்டாள் உன்னை
கேட்டேன் கொடுத்தார் துணையாக
எடுத்தேன் அணைத்தேன் அன்னை

அப்பா... பக்கம் வந்தா
அம்மா... முத்தம் தந்தா (சிரிப்பு)
அப்பா... பக்கம் வந்தா
அம்மா... முத்தம் தந்தா

லாலா லல்லல்லல்லா
லாலா லல்லல்லல்லா
லாலா லல்லல்லல்லா
லாலா லல்லல்லல்லா


http://www.youtube.com/watch?v=TlTigi4XIic&feature=player_detailpage

Gopal.s
5th August 2014, 04:04 PM
சரியான நேரத்தில் சிந்து பைரவி பாடலை கொடுத்ததற்கு நன்றி கிருஷ்ணா .இந்த பாடலில் வரும் "தொம்"கள் தானம் என்று வழங்க படும். பொதுவாக ராகம்,தானம்,பல்லவி பற்றி கேள்வி பட்டிருந்தாலும் நிறைய பேருக்கு ஒரு தெளிவு இருப்பதில்லை.



ராகம் (Melodic Improvisation )என்பதை ஆலாபனை என்று கொள்ளலாம்.ஒரு ராகத்தை அதன் இசை தனமையோடு கற்பனை கலந்து மேம்படுத்தி இசைக்கும் முதல் அம்சம்.



தானம் (Rhythmic Improvisation )என்பது மற்றொரு கற்பனை கலந்த கச்சேரியை கலை கட்ட வைக்கும் இரண்டாவது அம்சம்.வீணை கச்சேரிகளுக்காக உருவாக்க பட்டது எனினும் ,பாட்டு கச்சேரிகளின் முக்கிய அம்சமாகவும் மாறி விட்டது.ராகத்தை ,தாளத்தை ஒத்த ஒலிகுறிப்புகளுடன் (தா ,னம் ,தொம் ,ஆநொம் ,நானொம் )என்று ஆலாபனை பண்ணும் முறை.(மற்ற தாள ஒலிகளின் துணையின்றி.)



பல்லவி- பாடல் (வார்த்தைகள்),லயம் (தாள லயம்),விந்நியாசம் (வித்யாசமான வேறு படும் விதங்களில் ) எல்லாம் சேர்ந்தது.ஒரு தாள சுழற்சிக்கு எழுத பட்ட ஒரு வரி. முதலில் வேகமாக முன்னேறி(Ascending ),ஒரு இதமான தேக்கம் கொடுத்து,(Pause )தாள நடையை மாற்றி மாற்றி விஸ்தாரமாக பாடும் முறை ரசிகர்களை குதூகல படுத்தும்.ஒரே தாளத்தில் சுரங்களை மட்டும் நடை பேதம் செய்யும் முறை,அல்லது தாளத்தை துல்லிய இடைவெளிகளில் சுழற்சி வேகம் மாற்றி பாடும் முறை என்று பாடகரின் கற்பனைக்கேற்ப விஸ்தார வீடு கட்டி விளையாட்டு.

gkrishna
5th August 2014, 04:12 PM
சரியான நேரத்தில் சிந்து பைரவி பாடலை கொடுத்ததற்கு நன்றி கிருஷ்ணா .இந்த பாடலில் வரும் "தொம்"கள் தானம் என்று வழங்க படும். பொதுவாக ராகம்,தானம்,பல்லவி பற்றி கேள்வி பட்டிருந்தாலும் நிறைய பேருக்கு ஒரு தெளிவு இருப்பதில்லை.



ராகம் (Melodic Improvisation )என்பதை ஆலாபனை என்று கொள்ளலாம்.ஒரு ராகத்தை அதன் இசை தனமையோடு கற்பனை கலந்து மேம்படுத்தி இசைக்கும் முதல் அம்சம்.



தானம் (Rhythmic Improvisation )என்பது மற்றொரு கற்பனை கலந்த கச்சேரியை கலை கட்ட வைக்கும் இரண்டாவது அம்சம்.வீணை கச்சேரிகளுக்காக உருவாக்க பட்டது எனினும் ,பாட்டு கச்சேரிகளின் முக்கிய அம்சமாகவும் மாறி விட்டது.ராகத்தை ,தாளத்தை ஒத்த ஒலிகுறிப்புகளுடன் (தா ,னம் ,தொம் ,ஆநொம் ,நானொம் )என்று ஆலாபனை பண்ணும் முறை.



பல்லவி- பாடல் (வார்த்தைகள்),லயம் (தாள லயம்),விந்நியாசம் (வித்யாசமான வேறு படும் விதங்களில் ) எல்லாம் சேர்ந்தது.ஒரு தாள சுழற்சிக்கு எழுத பட்ட ஒரு வரி. முதலில் வேகமாக முன்னேறி(Ascending ),

ஒரு இதமான தேக்கம் கொடுத்து,(Pause )தாள நடையை மாற்றி மாற்றி விஸ்தாரமாக பாடும் முறை ரசிகர்களை குதூகல படுத்தும்.ஒரே தாளத்தில் சுரங்களை மட்டும் நடை பேதம் செய்யும் முறை,அல்லது தாளத்தை துல்லிய இடைவெளிகளில் சுழற்சி வேகம் மாற்றி பாடும் முறை என்று பாடகரின் கற்பனைக்கேற்ப விஸ்தார வீடு கட்டி விளையாட்டு.

அருமையான எளிமையான விளக்கம் கோபால் சார்
தொடரட்டும் உங்கள் பணி

என்றும் நட்புடன்
கிருஷ்

chinnakkannan
5th August 2014, 04:13 PM
//அதுவும் 'அம்மா முத்தம் தந்தா' என்று மாஸ்டர் பிரபாகரன் பாடியவுடன் 'சபாஷ்டா கண்ணு' என்று 'பாடகர் திலகம்'மனோகருக்காக குரல் கொடுப்பார். அந்த இடத்தை மட்டும் திரும்ப கொஞ்சம் கண்ணை மூடிக் கேளுங்கள். அப்படியே மனோகர் குரலையே கேட்பீர்கள். அதே போல பாடலினூடே' ஹொஹ்ஹஹ்ஹோ...ஹஹ்ஹஹஹா' என்று அவர் சிரிப்பதும் மனோகர் குரலில்தான்// அழகிய பாடலை மிகவும் அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள் வாசு சார்.. எனக்கும் இந்தப் பாடல் பிடிக்கும்..வீட்டிற்குச் சென்று மறுபடி கேட்கிறேன்...

மோகம் என்னும் மாயப் பேயை நானும் கொன்று போட வேண்டும்..
ஆசையென்ற புயல் வீசிவிட்டதடி ஆணி வேர் வரையில் ஆடி விட்டதடி..

ஓ அழகிய வரிகள் அண்ட் பாடல்..அதன் ராகம் பற்றி ச் சொல்லிய க்ருஷ்ணாஜி., கோபால் சார்.. மிக்க நன்றி..

பாடக பாடகிகளின் தகவல்களுக்குமிக்க நன்றி எஸ்வி சார்.

ம்ம் நிறையப் பிரபலங்கள் இனிக்கின்ற விஷத்துக்குள் இறங்கி வாழ்க்கையைத் தொலைத்திருக்கிறார்கள் என்பதைப் படிக்கும் போது கஷ்டமாக இருக்கிறது..(சுருளிராஜன், எம்.ஆர்.ஆர்.வாசு, கிஷ்மூ, எம்.ஆர்.ராஜாமணி இந்த வரிசையில் வருவார்கள் என நினைக்கிறேன்)

gkrishna
5th August 2014, 04:18 PM
எஸ்வி சார்
மிக அருமையான அபூர்வமான தேவையான தகவல்கள்
நிறைய பாடகர்களை அறிமுகம் செய்விப்பதற்கு நன்றி

என்றும் அன்புடன்
கிருஷ்

gkrishna
5th August 2014, 04:31 PM
vasu sir

எதிரிகள் ஜாக்கிரதை
கலக்கல் பாடல்
சிலோன் ரேடியோவில் போட்டு போட்டு தேய்த்த பாடல்
வாசு சார்
உங்கள் ரசிப்பு தன்மை 100 சதவிகிதம் என்றால் அதை வார்த்தையில் வடிப்பது 200 சதவிகிதம்

நீண்ட நாட்களுக்கு நான் இது மனோஹரும் (மனோஹரின் ஒரிஜினல் குரல் சபாஷ் டா கண்ணா என்றே நினைத்து இருந்தேன் ) ஷீலாவும் பாடும் பாடல் என்று நினைத்து ரீ ரிலீஸ் போது பார்க்கும் போது
தான் தெரிந்தது மனோஹரும் மனிமாலவும் பாடுவது என்றும்
இபோது தான் ஆண் குரல் பாடகர் திலகம் என்றதும் அசந்து போனேன்

உண்மை உழைப்பு நேர்மை வாய்மை பெருமை அருமை அர்பணிப்பு இதன் மறுபெயர் வாசுவோ

vasudevan31355
5th August 2014, 06:02 PM
கிருஷ்ணா சார்,

நன்றி!

மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்

பாடலுக்கு நன்றி!

அது போல குமுதம் தீராநதி 2007 இதழ் விவரங்கள் அரிதானவை.

madhu
5th August 2014, 06:03 PM
அப்பா.. பக்கம் வந்தா.. அம்மா முத்தம் தந்தா... எப்போதும் இனிக்கும் பாடல்.

ஆனால் இது ஒரு ஆங்கிலப் பாடலின் தழுவல் என்று கேள்விப்பட்டேன்.

இதுதான் அது

http://youtu.be/J9zUbeM15AU

vasudevan31355
5th August 2014, 06:04 PM
1963- cine dairy play back singers தொடர்ச்சிப் பதிவு அருமை. நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டோம். தேங்க்ஸ் எஸ்வி சார்.

chinnakkannan
5th August 2014, 06:38 PM
வேதாவின் ஹிந்தி ரீமேக் பாடல்கள் எல்லாமே சுவையாகத் தான் இருக்கும்.. கட்டக் கடைசியாக காளிக்கோவில் கபாலி என நினைக்கிறேன்..க்யாஹூவா பாட்டை வெள்ளி நிலா வெள்ளித் தட்டு வானிலே முல்லை மொட்டு என மாற்றியிருந்த நினைவு..அதன் இசை வேதாவா யானறியேன்..:)

மனம் என்னும் மேடை மீது முகம் ஒன்று ஆடுது..

madhu
5th August 2014, 06:40 PM
வேதாவின் ஹிந்தி ரீமேக் பாடல்கள் எல்லாமே சுவையாகத் தான் இருக்கும்..

மனம் என்னும் மேடை மீது முகம் ஒன்று ஆடுது..

சௌ சால் பெஹலே முஜே தும்ஸே ப்யார் தா..

vasudevan31355
5th August 2014, 06:50 PM
வேதாவின் ஹிந்தி ரீமேக் பாடல்கள் எல்லாமே சுவையாகத் தான் இருக்கும்.. கட்டக் கடைசியாக காளிக்கோவில் கபாலி என நினைக்கிறேன்..க்யாஹூவா பாட்டை வெள்ளி நிலா வெள்ளித் தட்டு வானிலே முல்லை மொட்டு என மாற்றியிருந்த நினைவு..அதன் இசை வேதாவா யானறியேன்..:)



இசை தாராபுரம் சுந்தர்ரராஜன் என்று நினைக்கிறேன்.

madhu
5th August 2014, 07:03 PM
Vasu ஜி.. காளி கோயில் கபாலி இசை ராஜேஷ் என்று போட்டிருக்காங்க.. யாருன்னு கண்டு பிடிக்கணும்.

ம்ம்... இன்னும் இன்னொரு லிங்க் கிடைச்சது. இதுதான் ஒரிஜினலாம்.. பப்பா.. ஷி லவ்ஸ் மம்மா

http://singapore60smusic.blogspot.in/2010/11/donald-peers-papa-loves-mama-presented.html

Gopal.s
5th August 2014, 07:19 PM
எதிரிகள் ஜாக்கிரதை படம் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் சற்றே வித்தியாசமான நல்ல படம்.மனோகர் ஏறக்குறைய ஹீரோ போல வருவதால் ரவி ரசிகர்களுக்கு ஏமாற்றம்.அதனால் படம் சுமாராக போனது. ஆனாலும் ரவி-விஜி pair அவ்வளவு அழகு.(ரவி பக்கம் நின்றாலே கதாநாயகிகளுக்கு ஒரு ஒளி வந்து விடும்)

நேருக்கு நேர் நின்று ,எனக்கொரு ஆசை இப்போது,நீயாக என்னை தேடி வருகின்ற நேரம்,அஹ்ஹாஹா இன்று தேன் நிலவு,ஜிலுக்கடி ஜிலுக்கடி,அம்மா பக்கம் வந்தா என்று வேதா கிளப்பியிருப்பார்.

https://www.youtube.com/watch?v=M6DdaEigxjg

https://www.youtube.com/watch?v=cL5DIFvoe-Q

https://www.youtube.com/watch?v=ksxw4Ezr5BQ

https://www.youtube.com/watch?v=MswlLgL2RDc

madhu
5th August 2014, 07:34 PM
ஜிலுக்கடி ஜிலுக்கடி ஜிகினா பாட்டின் வீடியோ இந்தாங்கோ..

http://youtu.be/R6DxEYEaLs0


நீயாக எனைத்தேடி வருகின்ற நேரம்

http://youtu.be/SJB9sZ_WCWI

ஆஹாஹா.. இன்று தேனிலவு

http://youtu.be/V2TaVZ6uOpM

Gopal.s
5th August 2014, 08:18 PM
Thanks a ton Madhu.

vasudevan31355
5th August 2014, 08:30 PM
Vasu ஜி..

ம்ம்... இன்னும் இன்னொரு லிங்க் கிடைச்சது. இதுதான் ஒரிஜினலாம்.. பப்பா.. ஷி லவ்ஸ் மம்மா

http://singapore60smusic.blogspot.in/2010/11/donald-peers-papa-loves-mama-presented.html

Fantastic Madhu sir.

chinnakkannan
5th August 2014, 08:39 PM
வெண்கல மணியின் நாதம் போன்ற ஓசை கொண்ட குரலுக்குச் சொந்தக் காரர் யார்..என்று அன்றும் இன்றும் விரல் சுட்டினால் ஒரே ஒரு நபர்.. சீர்காழி கோவிந்த ராஜன் தான் முதலில் நினைவுக்கு வருவார்..

எவ்வளவோ நல்ல பாடல்கள்

ஓடம் நதியினிலே
நடந்தாய் வாழி காவேரி
உள்ளத்தில் நல்ல உள்ளம்

இன்னும் நிறைய இருந்தாலும் தற்போது மனதில் ஊடாடுவது...

மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான்
இருந்த போது மனிதனுக்கு
ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோய்..

கடைசியில்..மனிதனாக வாழ மட்டும் மனிதனுக்கே தெரியவில்லை ஹோய் என முடியும்..இசைக்களஞ்சியத்தில் கேட்ட இந்தப் பாடல் அப்புறம் அவ்வளவாய்க் கேட்டதில்லை.. என்ன படம் எனத் தெரியாது..சொல்வீர்கள் தானே

vasudevan31355
5th August 2014, 09:07 PM
மது சார்,

'காளி கோயில் கபாலி' படத்திற்கு இசை ராஜேஷாகத்தான் இருக்க வேண்டும். இதே ஆண்டு வெளியான மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'வல்லவன் வருகிறான்' படத்துக்கு இசை ராஜேஷ்தான். அதனால் இந்தப் படத்திற்கும் ராஜேஷ் அவர்களே இசையமைத்திருக்கலாம்.

vasudevan31355
5th August 2014, 09:12 PM
மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான்
இருந்த போது மனிதனுக்கு
ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோய்..

கடைசியில்..மனிதனாக வாழ மட்டும் மனிதனுக்கே தெரியவில்லை ஹோய் என முடியும்..இசைக்களஞ்சியத்தில் கேட்ட இந்தப் பாடல் அப்புறம் அவ்வளவாய்க் கேட்டதில்லை.. என்ன படம் எனத் தெரியாது..சொல்வீர்கள் தானே

சொல்கிறோம் சி.க.சார் . 'அழகுநிலா' படத்தில்தான் 'மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்' பாடல். 'தெய்வமகன்' படத்தில் கிளைமாக்ஸ் தலைவர் கண்ணன் போல முத்துராமன் உடையணிந்து தொப்பி அணிந்து பாடுவார். எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.


http://www.youtube.com/watch?v=3fBruxmUZNk&feature=player_detailpage

vasudevan31355
5th August 2014, 09:19 PM
இதே 'அழகு நிலா' படத்தில் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடும் இன்னொரு அற்புத பாடலும் உண்டு. குட்டி பத்மினிக் குழந்தையுடன் நம் நாகையா அவர்கள் கொஞ்சியபடியே பாடும் ஒரு பாடல்.

'சின்ன சின்ன ரோஜா
சிங்கார ரோஜா
அன்ன நடை நடந்து
அழகாய் ஆடி வரும் ரோஜா'


https://www.youtube.com/watch?v=tOWhlzovgBw&feature=player_detailpage

vasudevan31355
5th August 2014, 09:23 PM
சி.க.சார்,

'அழகு நிலா'வில் இன்னொரு சீர்காழியின் பட்டை கிளப்பும் பாட்டு.

'மூங்கில் மரக் காட்டினிலே
கேட்கும் ஒரு நாதம்
முத்தமிடும் தென்றலினால்
உண்டாகும் சங்கீதம்'

கல்யாண்குமாரும், ஆணழகி:) மாலினியும்! (குறத்தி ரேஞ்சுக்கு) லவ்ஸ் விட்டுக் கொண்டே பாடும் பாடல்.


https://www.youtube.com/watch?v=VAGtycL-Pq0&feature=player_detailpage

chinnakkannan
5th August 2014, 09:43 PM
சொல்வீர்கள் என்பதனால் தான் கேட்டேன்.. ஓ நன்றி வாசு சார்.. நல்ல பாடல்கள்..அழ கு நிலா பார்த்ததில்லை..

rajeshkrv
6th August 2014, 07:27 AM
சின்ன சின்ன ரோஜா சூப்பர் பாட்டு
அதே போல் அவர் மலையாளத்தில் பாடிய அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்தது

https://www.youtube.com/watch?v=MhiivCF80hE

RAGHAVENDRA
6th August 2014, 07:37 AM
பொங்கும் பூம்புனல்

ஜி.கே. வெங்கடேஷ் அவர்களின் இசையில் ஒரு தனித்தன்மை இருக்கும். மெலோடி நெஞ்சை அள்ளிக் கொண்டு செல்லும். இசைக்கருவிகள் மொத்தமாக ஒலிக்காமல் ஒவ்வொன்றும் தனி நேரம் ஒதுக்கப்பட்டு இசைக்குமாறு உருவாக்குவார். இதற்கு ஒரு சிறந்த உதாரணம் தென்னங்கீற்று இடத்தில் இடம் பெற்ற மாணிக்க மாமணி பாடலைச் சொல்லலாம். எஸ்.பி.பாலா வாணி ஜெயராம் குரல் ஒலிக்கும் போது இசைக்கருவிகளின் ஒசை மிகவும் குறைவாக இடம் பெறுவது மட்டுமின்றி, பின்னணி இசையிலும் ஒவ்வொன்றாக தனியாக ஒலிப்பது கேட்பதற்கு ரம்மியமாக இருக்கும்.

http://www.inbaminge.com/t/t/Thennamkeetru/

madhu
6th August 2014, 07:46 AM
வாசுஜி, சிக்கா..

அழகு நிலாவில் இன்னொரு பறவைக் கல்யாணப் பாட்டும் உண்டு..
காட்டுக் குயிலுக்கும் நாட்டுக் குயிலுக்கும் கல்யாணமாம்

http://youtu.be/ZS-aqqZUAQo

madhu
6th August 2014, 07:49 AM
Raghav ji..

I love the song "maanikka mamani maalaiyil"... Though the story of the movie is something ..something... the songs are very nice.. and particularly the interludes of this song.. so soft.. and the way SPB sings .. idhamo.. padhamo.. sugamo...

wow... great song

http://youtu.be/bPrN7LiIrqk

RAGHAVENDRA
6th August 2014, 07:51 AM
பொங்கும் பூம்புனல்

பாட்டு மூலமாக விவாதம் செய்யும் யுக்தி பல தமிழ்ப் படங்களில் இசையமைப்பாளர்களால் பயன்படுத்தப் பட்டுள்ளது. வானம் பாடி, ஆடிப் பெருக்கு, பாக்தாத் பேரழகி போன்று பல படங்களைச் சொல்லலாம். அந்த வரிசையில் மல்லிகை மோகினி திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடலும் அடங்கும். இதில் ஒரு குறிப்பிடத் தக்க அம்சம் இந்த மாதிரி பாடல்களெல்லாம் பெரும்பாலும் கவ்வாலி வகைப் பாடல்களாக அமைக்கப் பட்டிருப்பதாகும்.

காதல் ஒரு கோவில் தெய்வங்கள் பெண்கள் .. இப்பாடலைக் கேளுங்கள், எஸ்.பி.பாலா எஸ்.ஜானகி குரல்கள் அருமையாகப் பயன் படுத்தப் பட்டிருப்பதை.

http://www.inbaminge.com/t/m/Malligai%20Mohini/

Richardsof
6th August 2014, 08:21 AM
இனிய நண்பர் வாசு சார்

இன்று மதுர கானம் திரி 300வது பக்கத்தை தொட்டுள்ளது . 50,000 பார்வையாளர்கள் திரியை
ரசித்து பார்த்து மகிழ்ந்துள்ளார்கள் .எல்லோரின் பங்கும் மிகவும் சிறப்பாக உள்ளது .குறுகிய காலத்தில்
இந்த திரியின் முதல் பாகம் இந்த மாதமே நிறைவு பெற்று பாகம் 2 தொடங்க உள்ளது .அசூர வளர்ச்சி .வாழ்த்துக்கள் .

http://youtu.be/04e3FUSzRxA