PDA

View Full Version : Jeya tv



R.Latha
17th December 2013, 12:20 PM
வித்தியாசமான மூன்று காதலுடன் ‘ரங்க விலாஸ்’

ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ரங்கவிலாஸ் தொடர், எடுத்த எடுப்பிலேயே வேகம் பிடித்து விட்டது.

ரங்க விலாஸ் குடும்பத்தை சேர்ந்த மூன்றாவது மருமகளான நந்தினி, தனது கணவனை இழந்த நிலையில், ஆனந்த் என்ற வழக்கறிஞரின் மகளுக்கு நாட்டியம் கற்றுத்தர போகிறாள். அதனால் ஆனந்த்துடன் நட்பாக பழக நேரிடுகிறது. மனைவியை இழந்த ஆனந்த், தனது மகளுக்காக நந்தினியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான்.

ஆனால் நந்தினி தனது கணவனின் நினைவிலிருந்து விடுபட முடியாதவளாக, அவனது அந்த விருப்பத்திற்கு சம்மதிக்க மறுக்கிறாள். அவன் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறான். இதற்கிடையே, இறந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் நந்தினியின் கணவன் வெங்கட்ராமன், ஒரு மன நல காப்பகத்தில், நந்தினியின் பெயரை உச்சரித்துக் கொண்டே, மன நோயாளியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

அதே குடும்பத்தைச் சேர்ந்த வேதபரான் – பூங்கோதையின் பேரனான சந்தோஷ், ரியல் எஸ்டேட் அதிபர் வீரமுத்துவின் மகள் பூஜாவை காதலித்து வருகிறான். ஆனால் குடும்பத்தாரின் விருப்பத்திற்கிணங்க, தனது காதலை துறந்து, முறைப்பெண்ணான விசாகாவை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறான். பூஜாவும் அவளது வீட்டாரின் விருப்பத்திற்கிணங்க, தனது தந்தையின் நண்பரின் மகனான சிவாவை, திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறாள்.

இரண்டு கல்யாணமும் நடைபெறுகிறது. விசாகாவை கல்யாணம் செய்து கொண்ட சந்தோஷால், அவளுடன் நிம்மதியாக வாழ முடியவில்லை. அதுபோல் சிவாவிற்கு, பூஜாவின் முந்தைய காதல் தெரிய வர, நல்லவன் போல் நடித்து அவளை பழி வாங்கத் துடிக்கிறான். அதனால் வேறொரு பெண்ணுடன் பழக்கம் வைத்துக் கொண்டு அவளை உளவியல் ரீதியாக சித்ரவதை செய்கிறான்.

நந்தினி, சந்தோஷ், விசாகா, பூஜா இவர்களது வாழ்க்கை என்ன ஆனது என்பது அடுத்து வரும் பரபரப்புத் திருப்பங்கள்.

தொடரின் நட்சத்திரங்கள்: ஜெயசித்ரா, ராதாரவி, வடிவுக்கரசி, டெல்லி குமார், பூவிலங்கு மோகன், குமரேசன், அனுராதா கிருஷ்ணமூர்த்தி, சாய்லதா, சதீஷ், ராணி, உதய், மகாலட்சுமி, தேசிகா, ஸ்ரீவித்யா, பாபி ரேகா சுரேஷ்.

கதை: சுந்தர். திரைக்கதை வசனம்: ஆர்.எஸ்.பாலமுருகன்; பாடல் இசை: ‘சாதகப்பறவைகள்’ சங்கர்; ஒளிப்பதிவு: ஆர்.பார்த்திபன்; இயக்கம்: மணிபாரதி.

ஜெயா டிவிக்காக, ஸ்ரீ கந்தன் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து வழங்குபவர் மதன் குமார்.