PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 12



Pages : 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

adiram
27th November 2013, 05:57 PM
Following is a statement I found in a blog. It is produced here in 'copy & paste' method.

ஜெயலலிதா ஒன்றைச்செய்ய வேண்டுமென்று நினைத்தால் அதைச் செய்தே தீருவார். யாரும் தடுக்க முடியாது. சீனிவாசன் என்பவரைத் தூண்டிவிட்டு வழக்கு போட வைத்தவரும் அவர்தான். இப்போது போக்குவரத்துக்கு சிலை இடையூறாக இருக்கிறது என்று காவல்துறை ஆணையரை சொல்ல வைத்தவரும் அவர்தான். அது போக்குவரத்துக்கு இடையூறோ அல்லது கத்தரிக்காய்க்கு இடையூறோ காரணம் அல்ல. அந்த திறப்புவிழா கல்வெட்டில் கருணாநிதி பெயர் இருக்கிறது. அது ஒன்றே காரணம். உலகத்தமிழ் மாநாட்டின்போது திறக்கப்பட்ட 10 சிலைகளில் கண்ணகி சிலையில் மட்டுமே கருணாநிதி பெயர் இருந்தது. அதனால் இடையூறு என்று நீக்கப்பட்டது. மீண்டும் அதே இடத்தில் கருணாநிதியால் வைக்கப்பட்டது. இப்போது இடையூறு என்று நீக்கினால் குதர்க்க எண்ணம் வெளிப்பட்டுவிடும் என்பதால் கண்ணகி விடப்பட்டாள், இப்போது சிவாஜி மாட்டிக் கொண்டார்.

புதிய தலைமைச் செயலகம் மாற்றப்பட்டதற்கு என்ன காரணமோ, அண்ணா நூற்றாண்டு நூலகம் மாற்றப்பட்டதற்கு என்ன காரணமோ அதுதான் சிவாஜி சிலைக்கும் காரணம். அந்தக் காரணத்தின் பெயர் கருணாநிதி.

சென்னையில் சாலைகளின் நடுவே எத்தனை சிலைகள் உள்ளன. அதையெல்லாம் சீனிவாசன் கவனிக்காதது ஏன்?. அவற்றை எதிர்த்து ஜெயலலிதா வழக்குப்போட சொல்லவில்லை. அதுதான் காரணம். சென்னை அண்ணா சாலையில் ஜெயலலிதா தலைமையில் ராஜீவ்காந்தி திறந்து வைத்த சிலையும் நடுரோட்டில்தான் உள்ளது. அது இடைஞ்சலாக இல்லையா?. வாகன ஓட்டிகளை மறைக்கவில்லையா?.

ஒரு தமிழனின் சிலையை வந்தேறிகள் எல்லாம் எப்படி அவமானப் படுத்துகிறார்கள். இவர்களா மண்டபம் கட்ட அனுமதி தரப்போகிறார்கள்??.

joe
27th November 2013, 06:01 PM
சிலையை எடுத்து விடுவதால் சிவாஜியின் புகழ் ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை.

ஜெயலலிதாவை பொறுத்துக்கொண்டாலும் சில்லுண்டிகளை சமாளிக்க முடியாது போலிருக்கு .ஜெயலலிதா சிலையை எடுத்தால் வழக்கம் போல கலைஞரை திட்டிவிட்டு போலாமே . சிவாஜியை நக்கல் விடுறாங்களாம் .

அதிலும் ஏதாவது ஒரு பதிப்பகத்தில் கெஞ்சி கூத்தாடி ரெண்டு மொக்கை புக் வெளிவந்ததும் தன்னை உலக இலக்கியவாதியா நெனச்சுக்கிற ஜந்துக்கள் சிவாஜிக்கு சிலை வைத்தால் கல்லாபெட்டி சிங்காரத்துக்கும் ஏன் வைக்கக்கூடாது என ஒரு அறிவுபூர்வமான கேள்வியை எழுப்புகிறார்களாம் .

ரெண்டு மொக்கை புத்தகம் எழுதி நீங்களே படிச்சுகிட்டா நீங்களும் ஷேக்ஸ்பியரும் ஒண்ணாகிட முடியுமா ?

.....

Richardsof
27th November 2013, 06:47 PM
நடிகர் திலகத்தின் சிலை விவகாரத்தில் அரசின் நிலை பாடு மிகவும் கண்டிக்க தக்கது .

சிலை அகற்றும் முயற்சிக்கு முற்று புள்ளி வைத்து அமைதியை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் .

ரசிகர்கள் - பொது மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசு உடனடியாக செயல் பட வேண்டும் .

வினோத்

HARISH2619
27th November 2013, 07:03 PM
திரு ராகுல்ராம் சார்,
இப்போது எதையுமே ரசித்து படிக்கும் மனநிலையில் நடிகர்திலகத்தின் ரசிகர்கள் இல்லை ஆகையால் ஒரு மூன்று நான்கு நாட்களுக்கு சிலை தொடர்பான விவாதங்களை மட்டும் இங்கு பதிவிடலாம் என்பது என் சொந்த கருத்து .தவறிருந்தால் மன்னிக்கவும்

joe
27th November 2013, 07:07 PM
ஜெயலலிதாவுக்கு வரவேற்பு கவிதை வாசிக்க மட்டும் வரிந்து கட்டிக்கொண்டு வந்தவர்கள் எல்லாம், கண்டனம் தெரிவிக்க வேண்டிய நேரத்தில் காணமல் போனது ஏனோ?.
இதை வச்சு கருணாநிதியை எப்படி திட்டலாம் என ரூம் போட்டு யோசிச்சிட்டிருப்பாங்க போல .

joe
27th November 2013, 07:23 PM
நண்பர் ஒருவர் சொன்னது ...

விரைவில் முதல்வர் தலையிடுவார்.இது முதல்வரின் கவனத்துக்கு முதலில் வரவில்லை என்று ஒரு அறிக்கை வரும். சிவாஜி சிலை அங்கேயே இருக்கலாம் என தாயுள்ளத்தோடு முதல்வர் அறிக்கை விடுவார். இப்போது பேரமைதி காக்கும் சினிமா உலக ஜீவன்கள் , அதன் பின் பேருவகை கொண்டு முதல்வரை வாழ்த்தி அறிக்கை விடுவார்கள். எத்தனை முறை பார்த்திருக்கிறோம். ( சிவாஜிக்கு இறக்கை (அதாங்க இலை) ஒட்ட வைத்து , சிவாஜி ஒரு தேவதூதன் என்று சொல்லாமல் இருந்தால் சரி

Russelluzy
27th November 2013, 07:23 PM
Did you notice what that AIADMK representative Avadi Kumar was telling?. 'Sivaji statue should be removed from their and should be erected in his ninaivu mandapam'.

What is the inner meaning you know?. They dont want to show the statue to the public for life long, because the ninaivu mandapam will never come.

Dear Sir,

I did notice that ! Forget about that Avadi Kumar sir ! He is another local guy !
You cannot expect any intellectual speech from him !

Russelluzy
27th November 2013, 07:27 PM
நண்பர் ஒருவர் சொன்னது ...

விரைவில் முதல்வர் தலையிடுவார்.இது முதல்வரின் கவனத்துக்கு முதலில் வரவில்லை என்று ஒரு அறிக்கை வரும். சிவாஜி சிலை அங்கேயே இருக்கலாம் என தாயுள்ளத்தோடு முதல்வர் அறிக்கை விடுவார். இப்போது பேரமைதி காக்கும் சினிமா உலக ஜீவன்கள் , அதன் பின் பேருவகை கொண்டு முதல்வரை வாழ்த்தி அறிக்கை விடுவார்கள். எத்தனை முறை பார்த்திருக்கிறோம். ( சிவாஜிக்கு இறக்கை (அதாங்க இலை) ஒட்ட வைத்து , சிவாஜி ஒரு தேவதூதன் என்று சொல்லாமல் இருந்தால் சரி

Dear Sir,

It is highly condemnable to note that Mr.Sarathkumar and Mr.Radharavi and co has not opened their mouth as the office bearers of NAdigar Sangam. They sold the NAdigar Sangam land and building for commission atleast they could have given statements condemning the silly reason quoted on behalf of TN Govt.

Nadigar Sangam guys does not have spine ever since the office bearers belonged and sided a political party !

ScottAlise
27th November 2013, 07:39 PM
Dear Harish Sir,

I know it sir, just for diversion I posted it.

We would not have got Manohara, VKPB, epics Karnan , thillana
We would not have known how :

God looked like if there was no thiruvilayadal , saraswathy sabatham , thirumal perumai
Freesom fighter : VOC

and many gems if NT had not acted

Is this a mistake


It really pains to treat a legend like this, Nadigar sangam and exhibitors must put a united support

Lets pray to almighty for a favourable situation

சிவாஜி சிலையை கண்டு " மனது உறுத்தும்" நபர்கள்தான் சிலைக்கு விரோதமாக செயல்படுகின்றார்கள்

Russelluzy
27th November 2013, 07:40 PM
என்னங்க அநியாயம் இது !

முக நூலில் பகிர்ந்து வந்த யாரோ ஒரு சிவாஜி ரசிகர் தயாரிச்ச போட்டோ தேவர் சில பத்தி. எவ்வளவு கரெக்ட் பாருங்க . இதெல்லாம் உண்மையிலயே பொதுமக்களுக்கு தொல்ல குடுக்குற விஷயம் ! இதுக்கு ஒரு முதல் அமைச்சர் வருசத்துல ரெண்டு தடவ cityae கண்டம் ஆகிற அளவுக்கு டிராபிக் ஜாம் பண்ணி மாலை போடறாங்க. இதெல்லாம் மக்கள் பீலிங்க்ஸ் புரிஞ்ச பண்றாங்க ! இல்லையே

2748

தேவர் சில மாதிரி மவுண்ட் ரோடுல அண்ணா சில கூட இருக்கு. திருவல்லிக்கேணி போக ரைட் திரும்பின இடிக்கற மாதிரி இருக்கு ...அத அந்த இடத்துலேர்ந்து தூக்க வேண்டியது தானே. அதே மாதிரி வீரன் முத்துகொனே சில எக்மூர் ஸ்டேஷன் கிட்ட இருக்கு ஆல்பர்ட் திடேருக்கு திரும்பற இடத்துல இடிக்கற மாதிரி இருக்கு ..அத தூகலாமே !

ரொம்ப மோசம் பா ! என்னமோ தமிழனுக்கு இது வேணும். தமிழன மட்டும் நம்பாம கண்டவங்களையும் நாடாள விட்ட இப்படிதான் ! சிவாஜி சார் ஆன்ம மணிக்கிதோ இல்லையோ உண்மையான அவர் ரசிகருங்க வயிறு எரியுது

Russelluzy
27th November 2013, 07:49 PM
உண்மையிலயே சார் ரொம்ப கஷ்டமா இருக்கு நெனசுபாக்கவே !

ஆமாம் அவங்க வீட்லேர்ந்து இது பத்தி எதுவுமே சொல்லலியே.

ஒரு வேள பிரபு சார் வழக்கம் போல ரஜினி அண்ணன் ...கமல் அண்ணன் சொன்னாங்க ..உங்க பய்யன் படம் 13 டிசம்பர் வருது ...அதனால நீங்க 20 தேதி வரைக்கும் பேசாம இருங்க ...செல எங்க போகபோகுது ...அத யாரும் இடுப்புல தூக்கி வெச்சு ஓடிப்போக முடியாதுன்னு " ரெண்டு அண்ணன்களும் சொன்னாங்கன்னு சொல்லப்போறார ?

அகில இந்திய சிவாஜி ரசிக மன்ற தலைவர் என்ன பண்றாரு ?

யாரு இப்போ மன்ற தலைவரு ?

சுத்தமா சொரணையே இல்லாம இருக்காரே மனுஷன் ?

joe
27th November 2013, 08:03 PM
adiram,
இந்த விவகாரத்தில் சிவாஜி குடும்பத்தினர் கருத்து சொல்லாமல் இருப்பது சரியென்றே எனக்குப் படுகிறது . எங்கப்பா சிலையை விட்டுடுங்க என ஒரு அரசாங்கத்தை கெஞ்ச சொல்லுறீங்களா ?

இது பற்றி தமிழர்கள் கேட்க வேண்டுமேயன்றி சிவாஜி குடும்பத்தினர் அல்ல . எனவே உங்கள் கருத்தில் மாறுபடுகிறேன்.

Russelluzy
27th November 2013, 08:21 PM
I think i am also now agreeing to your statement Joe sir..! for a minute anger and emotion just brings a site screen infront of eyes..!

Actually, I pity chinnathambi and periyathambi !

Russelluzy
27th November 2013, 08:23 PM
adiram,


இது பற்றி தமிழர்கள் கேட்க வேண்டுமேயன்றி சிவாஜி குடும்பத்தினர் அல்ல . எனவே உங்கள் கருத்தில் மாறுபடுகிறேன்.

You mean tamilians ? that too in tamilnadu...? they are used to selling themselves for 50 bucks. don't expect such bravo acts from them.

if given an opportunity, they will say, give me 100 rupees i will also join in a protest to remove sivaji statue..

joe
27th November 2013, 08:32 PM
You mean tamilians ? that too in tamilnadu...? they are used to selling themselves for 50 bucks. don't expect such bravo acts from them. if given an opportunity, they will say, give me 100 rupees i will also join in a protest to remove sivaji statue..
நான் சொன்னது தமிழராக வாழ்பவரை . தமிழராக பிறந்தவரை அல்ல.

Russelluzy
27th November 2013, 08:35 PM
The so called biggies of tamil cinema viz., Rajini / kamal / Vijay / Ajith / Vikram etc., where have all they gone ? none of them have shared their opinions..on this. May be they would have switched of their mobiles atleast till 13th december.

they are fit enough to say punch dialogues only on screen !

Russelluzy
27th November 2013, 08:36 PM
நான் சொன்னது தமிழராக வாழ்பவரை . தமிழராக பிறந்தவரை அல்ல.

Whoever it may be ! Both of them do not exist ! Whoever left could only share their opinion through NET. this includes me too joe sir !

venkkiram
27th November 2013, 08:40 PM
தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம். என் பார்வையில் சிலைகள் சாலைகளுக்கு நடுவிலும் ஓரத்திலும் இருப்பதே தவறான போக்கு. இது சிறு/பெரு திருக்கோயில்களுக்கும் பொருந்தும். சமீபத்தில் சென்னைக்கு எங்கள் ஊரிலிருந்து காரில் செல்லும்போது ட்ரைவர் சிதம்பரம்-கடலூர் சாலையில் சாலையை ஒட்டியே அமைந்த சின்னக் கோயில் முன் நிறுத்தி கும்பிட்டார். வாகன ட்ரைவர்கள் எல்லோருமே அந்த தெய்வத்தை பூஜிக்கிறார்கள் வரும்போதும் போகும்போதும். நல்ல பிரயாணத்தை அமைத்துக் கொடு என. வேடிக்கை என்னவென்றால், விபத்துக்களை சர்வ சாதாரணமாக ஏற்படுத்தக் கூடிய நிகழ்வு அது. சிவாஜி சிலையை நட்டநடு சாலைக்கு நடுவே வைப்பதை விட, மணிமண்டபம் ஒன்றின் முகப்பிலோ, நடுவிலோ வைத்து அழகுப் பார்த்தால், பெருமளவு மக்கள் (அயல்நாடு உட்பட) சிலைக்கு மிக அருகே நின்று புகைப்படமாவது எடுத்துக் கொள்ள முடியும். அதனால் சிவாஜி ரசிகர்கள் அமைப்பு இதைக் கருத்தில் கொண்டு மற்றவர்களுக்கு முன்மாதிரியாக செயல்பட என் வேண்டுகோள்.

Russelluzy
27th November 2013, 08:41 PM
Another statue that deserves to be removed is ANNA statue located in the center of the Road diagonal to Bata ...!

Lot of accidents had happened atleast 3 times more than any location is this place...Why are they not talking about this ?

2749

joe
27th November 2013, 08:49 PM
வெங்கிராம்,
ரொம்ப நல்லா சொன்னீங்க தம்பி .ஆனா தமிழக அரசும் தாயுள்ளம் கொண்ட முதல்வரும் இது போல மக்கள் நலன் கருதியே இதை அகற்றப் பணித்துள்ளார்கள் என நம்பும் உங்கள் வெள்ளை உள்ளத்தை பாராட்டி சரோஜா தேவி சோப்பு டப்பா ஒன்றை பரிசாக அளிக்கிறோம்.

PARAMASHIVAN
27th November 2013, 08:54 PM
வெங்கிராம்,
ரொம்ப நல்லா சொன்னீங்க தம்பி .ஆனா தமிழக அரசும் தாயுள்ளம் கொண்ட முதல்வரும் இது போல மக்கள் நலன் கருதியே இதை அகற்றப் பணித்துள்ளார்கள் என நம்பும் உங்கள் வெள்ளை உள்ளத்தை பாராட்டி சரோஜா தேவி சோப்பு டப்பா ஒன்றை பரிசாக அளிக்கிறோம்.

:rotfl: :rotfl:

Russelluzy
27th November 2013, 09:02 PM
அதனால் சிவாஜி ரசிகர்கள் அமைப்பு இதைக் கருத்தில் கொண்டு மற்றவர்களுக்கு முன்மாதிரியாக செயல்பட என் வேண்டுகோள்.

அட என்னங்க நீங்க...

எல்லாத்துக்கும் சிவாஜி ரசிகர்கள் அமைப்பு முன்மாதிரி...முன்மாதிரின்னு சொல்றீங்க...தமிழ்நாட்ட ஆண்ட முதல்வருங்க சிலைய மொதல்ல நடுரோட்லேர்ந்து தூக்கி அந்த ஆட்சியாளர்கள் முன்மாதிரியா திகழ ஒரு புத்தி சொல்லுங்க தலீவா !

அண்ணாதுரை சிலைக்கு ஒரு ஞாயம் ....தேவர் சிலைக்கு ஒரு ஞ்யாயம் ..

சிவாஜி மட்டும் எப்பவும் போல...இளிச்ச .........அவங்க ரசிகர்களும் அவர்போல இளிச்ச...அப்புடிதானே.....!

போங்க பாஸ்...போங்க...! அறிவுரைய அது இல்லாதவங்களுக்கு சொல்லுங்க !

venkkiram
27th November 2013, 09:03 PM
வெங்கிராம்,
ரொம்ப நல்லா சொன்னீங்க தம்பி .ஆனா தமிழக அரசும் தாயுள்ளம் கொண்ட முதல்வரும் இது போல மக்கள் நலன் கருதியே இதை அகற்றப் பணித்துள்ளார்கள் என நம்பும் உங்கள் வெள்ளை உள்ளத்தை பாராட்டி சரோஜா தேவி சோப்பு டப்பா ஒன்றை பரிசாக அளிக்கிறோம்.
உள்நோக்கம் என்னவென்று எனக்கு மெய்யாலுமே தெரியாது அண்ணா! அதற்கான யூகங்களையும் நீங்கள் பகிரலாம். எனது சிலைகள் பற்றிய கண்ணோட்டம் சிவாஜி சிலைக்கு மட்டுமே அல்ல. சாலைக்கு நடுவே, அருகே வீற்றிருக்கும் எல்லா சிலைகளுக்குமெ! சாலை அகலப் படுத்துதல், சீரமைப்பு என்ற பெயரில் நிறைய சிலைகள் இதுவரை அகற்றப் பட்டிருக்கின்றன.

joe
27th November 2013, 09:05 PM
வெங்கிராம்,
வேணாம் .அழுதுடுவேன் !!!!

Russelluzy
27th November 2013, 09:15 PM
1) 2500 megawatt மின்சாரம் பற்றாக்குறை
2) கட்டுகடங்கா காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருள் விலை வாசி ஏற்றம் தினமும்.
3) கொலை, கொள்ளை, வழிப்பறி இப்படி நாளும் பெருகும் CRIME

இப்படி டெய்லி நடக்கற சமாசாரம் எதையும் உடனடியா முடிக்காம.மக்களுக்கு நல்லது செய்யாம ..அது அந்த கட்சி ஆட்சி பண்ணபோது இருந்துச்சு...நாங்க பொறுப்பு கடயாது..

திமுக ஆட்சில ஒரு நாளிக்கு 19.5 கொலைங்க 12.3 கொள்ளைங்க 13.78 வழிப்பறி நடந்திச்சு. ஆனா எங்க ஆதிமுக ஆட்சில ஒரு நாளிக்கு 19.10 கொலைங்க 11.80 கொள்ளைங்க 13.25 வழிப்பறி நடக்குது..அதனால அவங்க ஆட்சிய விட எங்க ஆட்சி சிறப்பான சாதனை செஞ்சுது அப்புடீன்னு வெளக்கம் குடுக்கறோம் பேர்வழின்னு சொல்ற, நழுவுற கேவலமான அரசு இப்போ இருக்கற அரசு. உடனயே மந்திரிங்க பாதி தூக்கத்துல டம..டம...டம..டம நு டேபிள் தட்டி ஆரவாரத்த வெளிபடுத்துவாங்க...! நாம தான் இந்த கேவலத்த TV ல பாகறோமே.

பல ஆயிரம் கோடி துட்டு போட்டு கூடங்குளம் கொண்டுவந்த... அது CONGRESS கொண்டுவந்தது..அதுல நட்டு சரியில்ல போல்ட்டு சரியில்ல...அதுல ஆபத்து இருக்கு...ஈபத்து இருக்குன்னு புரளி கிளபரவங்கள நாலு சாத்து சாத்தி முழு வீச்சுல உற்பத்தி பண்ண துப்பு இல்ல....!

ஆனா சிவாஜி சில வண்டியோற்றவங்கள மறைக்குதுன்னு அதாதூகரதுக்கு உடன எல்லாம் செய்றாங்க...!

எது முக்கியம்?

சிலையா இல்ல இப்போ மக்களுக்கு இருக்கற விலைவாசி மற்றும் இதர பிரச்சனையா ?

சில எங்க வெக்கனும்னு புத்தி சொல்ற அறிவாளிங்க ..இதுக்கு பதில் சொல்லுங்கப்பா !

Russelldwp
27th November 2013, 10:02 PM
இந்த நாசமாபோன நடிகர் சங்கம் தமிழ் வாழ பிற்ந்த தமிழ் நாட்டை உலக அரங்கில் உயர்த்திக்காட்டிய நடிப்பு தெய்வத்திற்கு மணி மணடபம் கட்ட முயற்ச்சி செய்யவில்லை. இப்போது சிலை பிரச்சினைக்கும் குரல் கொடுக்கவில்லை.

தமிழன் விஜய் நடித்த தலைவா படத்தை காரணமே இல்லாமல் தடை செய்யப்பட்ட போதும் ஒரு ஆக்ஷ்ணும் இல்லை.

தமிழன் கமல் நடித்த விஸ்வருபம் படத்தை தடை செய்யப்பட்ட போதும் ஒரு முயற்சியும் இல்லை

இப்படி நடிகர்களுக்கு பயன் படாத இந்த பாழா போன நடிகர் சங்கம் எதுக்கு.

சினிமாவை வாழவைத்த சிவாஜிக்கு இந்த நிலையா - ரத்தம் கொதிக்கிறது - எங்கள் பாவம் சும்மா விடாது.

தமிழ் மொழி காத்த தங்க தலைவன் தமிழ் சமுதாயத்தின் அடயாளச்சின்னம் சிவாஜி சிலையை பாது காக்க குரல் கொடுத்த டாக்டர் கலைஞ்ர், புரட்ச்த்தமிழன் வைக்கோ,புரட்ச்சிக் க்லைஞ்ர் விஜயகந்த், மறத்தமிழன் சீமான், மருத்துவர் ராமதாஸ் அனைவருக்கும் வேதனையில் இருக்கும் சிவாஜி பக்தர்களின் கோடாணு கோடி நன்றிகள்

எத்தனை சக்திகள் வந்தாலும் சிவாஜி புகழை எவராலும் அழிக்கமுடியாது.

Russelluzy
27th November 2013, 10:29 PM
PUTHIYA THALAIMURAI DEBATES ! - They asked one good question finally - If a public case was put to lift all the TASMAC SHOPS WILL THEY DO ?

GOOD QUESTION !!

http://www.youtube.com/watch?v=6rxnhXt9w4w&feature=share&list=SP-RDFpvLYFEV3hz6O_dwG6Ul3IuEkBWX1&index=4

Part - 2

http://www.youtube.com/watch?v=OZEGQ2cvPL0

Part - 3

http://www.youtube.com/watch?v=fcoLiPxVUwA

Part - 4

http://www.youtube.com/watch?v=EtOCK5YcKcc

Russelldwp
27th November 2013, 10:30 PM
வருகின்ற டிசம்பர் 3 ம் தேதி அன்று திருச்சி மாவட்ட சிவாஜி சமுக நலப்பேரவை சார்பாக சிவாஜி சிலை அகற்றும் நிலை குறித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவாஜி ரசிகர்களும், அனைத்துக் கட்சியை சார்ந்தவர்களும் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

Murali Srinivas
28th November 2013, 01:32 AM
கலைத்தாயின் தலை மகனுக்கு, தமிழக குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு உறுப்பினரை போல் இன்றும் அனைவரது உள்ளங்களிலும் வாழ்ந்துக் கொண்டிருக்கும் கலையுலக சக்ரவர்த்திக்கு தமிழகத்திலே இன்றைய தினம் செய்யப்பட்டிருக்கும் அவமரியாதை சகிக்க முடியாத கொடுஞ்செயல் என்றே சொல்ல வேண்டும். இதை செய்வதற்கு எப்படித்தான் மனம் வருகிறதோ?

7 வருட இடைவெளிக்கு பின் அக்டோபர் 23 அன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அன்றைய தினம் அரசின் சார்பில் ஆஜராகிய advocate general நீதிமன்றத்தில் இந்த சிலையால் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லை என்ற வாதத்தை முன்வைத்தார்.

ஒரே மாத இடைவெளியில் நேற்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மயிலை காவல்துறை போக்குவரத்து ஆணையர் இந்த சிலையால் போக்குவரத்துக்கு இடையூறு என்று சொல்லி இத்தனை விபத்துக்கள் நடந்திருக்கின்றன என்றும் சொல்லியிருக்கிறார். முதலில் சொன்னதற்கும் ஒரு மாதத்திற்கு பின் சொன்னதற்கும் எவ்வளவு வித்தியாசம்?

நல்ல வேளையாக முதல் முறை வழக்கு விசாரணைக்கு வந்து மறு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டபோதே சமூகநல பேரவையின் சார்பில் வழக்கறிஞர் பிரபாகர் ஆஜரானார். அதுவும் தவிர நேற்று நடந்த வாதம் கேட்கும் நிகழ்வின் போது அவர் இதற்கு எதிராக வாதிட்டதோடு அல்லாமல் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டு நீதிபதி வழக்கை மற்றொரு தேதிக்கு ஒத்தி வைக்கும்படியான உத்தரவு பிறப்பிக்கும் சூழலை ஏற்படுத்தினார். ஒருவேளை பேரவையும் தங்களை இணைத்துக் கொள்ளாமல் இருந்திருந்தால் நடிகர் திலகத்திற்காக வாதிடுவதற்கு அங்கே ஆளே இல்லாமல் போயிருக்கும். அப்படி நேர்ந்திருந்தால் இன்றைக்கு கிடைத்திருக்கும் கால அவகாசம் கூட கிடைக்காமல் போயிருக்க வாய்ப்பு இருக்கிறது. அதற்காகவே பிரபாகர் அவர்களுக்கும் சந்திரசேகர் அவர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுளோம்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னவென்றால் அதாவது வாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய குறிப்புகள் என்று பார்த்தோமென்றால் விபத்துக்கள் நடந்ததாக சொல்லப்படுவது எங்கே நடந்தது? சிலையின் அருகாமையிலா அல்லது அந்த சாலையில் வேறு எங்காவதா? அந்த சாலை ராணி மேரி கல்லூரியில் ஆரம்பித்து போர் நினைவு சின்னம் வரை நீண்ட சாலை. காவல்துறை சொல்வது போல் சிலை வாகன ஓட்டிகளின் பார்வையை மறைப்பதால் விபத்துக்கள் ஏற்பட்டன என்றால் காமராஜர் சாலையிலிருந்து ராதாகிருஷ்ணன் சாலைக்கு வலது புறமாக திரும்பும் இடத்தில்தான் அதாவது சிலையின் பின்புறம் உள்ள சாலை பகுதியில்தான் நடந்திருக்க வேண்டும். அப்படி நடந்திருக்கிறதா? அங்கே இல்லாமல் விவேகானந்தர் இல்லத்திற்கு அருகிலோ, மாநில கல்லூரி அருகிலோ திருவல்லிக்கேணி பாரதி சாலைக்கு திரும்பும் இடத்திலோ அல்லது சென்னை பலகலைகழக வளாகத்திற்கு அருகிலோ நடந்த விபத்துக்களுக்கு சிலை எப்படி பொறுப்பாக முடியும்?

விபத்துக்கள் நடந்த தேதிகள், நாட்கள், நேரங்கள் ஆகியவை இங்கே முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த விபத்துக்களைப் பற்றிய மேலதிக தகவல்கள், அதாவது முதல் தகவல் அறிக்கை, விபத்து நடந்த இடத்தில வழக்கு விசாரணைக்காக காவல்துறையால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவையும் முக்கிய ஆவணங்களாகின்றன. போக்குவரத்துக்கு இடையூறு என்றால் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரைதான் கணக்கு. நடுராத்திரியிலும் அகால நேரங்களிலும் நிதானத்தில் இல்லாத மனிதர்கள் அதிக வேகத்தில் வாகனங்களை ஒட்டி வந்து விபத்துக்களை ஏற்படுத்துவது இதில் சேர்த்தி ஆகாது. அப்படி நடந்த நிகழ்வுகளை காரணம் காட்டி சிலையை அகற்ற முயற்சிப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

காவல்துறை தாக்கல் செய்திருக்கும் மனுவிலேயே எதை அடிப்படை வாதமாக சொல்கிறார்களோ அதுவேதான் அவர்கள் செய்திருக்கிற பெரிய blunder. எப்படி என்றால் ஒரு நெடுஞ்சாலையில் நடுவே ஒரு சிலை அமைக்கபப்ட்டிருக்கிறது. சிலை இருக்கும் இடத்தில பக்கவாட்டில் சாலைகள் அமைந்திருக்கின்றன என்று வைத்துக் கொள்ளவோம். அந்த சிலைக்கு முன்புறமும் பின்புறமும் வரும் வாகனங்கள் சிலையை சுற்றிக் கொண்டு பக்கவாட்டு சாலைகளுக்கு செல்ல முயலும் பட்சத்தில்தான் காவல்துறை சொல்லும் இந்த பிரச்னை வரும். காரணம் அங்கே போக்குவரத்து சிக்னல் இல்லை. நமது சிலையை எடுத்துக் கொள்வோம்.

நமது சிலைக்கு பின்புறத்திலேயே போக்குவரத்து சிக்னல் அமைந்திருக்கிறது. காமராஜர் சாலையிலிருந்து ராதாகிருஷ்ணன் சாலைக்கு எந்த வாகனமும் சட்டென்று திரும்பி விட முடியாது. இன்னமும் விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால் அங்கே மூன்று சாலைகள் சந்திக்கின்றன. காமராஜர் சாலையிலிருந்து வருபவர்கள் சிலையை கடந்து கலங்கரை விளக்கம் வழியாக சாந்தோம் நெடுஞ்சாலைக்கு செல்லலாம் அல்லது சிலையை தாண்டி வலது புறம் திரும்பி ராதாகிருஷ்ணன் சாலைக்கு செல்லலாம். அதே போன்று சாந்தோம் நெடுஞ்சாலையிலிருந்து வருபவர்கள் சிலையை கடந்து காமராஜர் சாலையில் செல்லலாம். அலல்து சிலை இருக்கும் இடத்திற்கு வரும் முன்பே இடது புறம் திரும்பி ராதாகிருஷ்ணன் சாலைக்கு செல்லலாம். அது Free Left. மூன்றாவதாக ராதாகிருஷ்ணன் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலை junction-ல் இடது புறம் திரும்பி செல்லலாம். அதுவும் Free Left. இல்லை வலது புறம் திரும்பி கடற்கரைக்கோ அலல்து சாந்தோம் நெடுஞ்சாலைக்கோ பயணப்படலாம்.

காமராஜர் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் சிலையை தாண்டி வலது புறம் திரும்பும்போது சாந்தோம் சாலையிலிருந்து வரும் வாகனங்களோ அல்லது ராதாகிருஷ்ணன் சாலையிலிருந்து வலது புறம் திரும்பி சாந்தோம் சாலைக்கு செல்லும் வாகனங்களோ சிக்னலில் காத்து நிற்க வேண்டும். காரணம் அவர்களுக்கு அந்த நேரம் சிவப்பு விளக்கு எரிந்துக் கொண்டிருக்கும். அதே போன்றே சாந்தோம் சாலையிலிருந்து நேராக செல்லும் வாகனங்கள் சிலையை கடக்கும் போதும் ராதாகிருஷ்ணன் சாலையிலிருந்து வாகனங்கள் வலது புறம் திரும்பும் போதும் மற்ற இரண்டு சாலையில் வரும் வாகனங்கள் குறுக்கிடவே முடியாது. இப்படி ஒரு சிக்னல் காவல்துறையால் அமைக்கப்பட்டிருக்கும் போது அதையும் மீறி அங்கே விபத்துகள் நடந்தன என்று சொன்னால் அது சிக்னல் jumbing என்ற போக்குவரத்து விதியை மீறிய குற்றமாகும். அதற்கு காரணம் வாகன ஓட்டிகளே தவிர சிலை அல்ல.

எதார்த்த நிலைமை இப்படி இருக்க அதை மறைத்து வேறு ஒன்றை சொல்லுவதால் இவர்கள் அடையப்போகும் லாபம் என்ன?

நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கில் ஒரு தனிப்பட்ட மனிதனோ அல்லது ஒரு அமைப்போ தங்களையும் ஒரு கட்சியாக இணைத்துக் கொள்ள மனு செய்துக் கொள்ளலாம். இதற்கு சட்டத்தில் வழி இருக்கிறது. அதை ஆங்கிலத்தில் to implead oneself என்று சொல்வார்கள். மனு செய்பவர்கள் தாங்கள் aggrieved party அதாவது பாதிக்கப்பட்ட நபர் என்று நீதிமன்றதில் வாதாடி அது நீதிமன்றத்தால் ஒப்புக் கொள்ளப்பட்டால் இணைந்து கொண்டு தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்கலாம். அப்படிபட்ட ஒரு சில சட்டபூர்வ நடவடிக்கைகள் ஒரு சில அமைப்புகளால் மேற்கொள்ளப்பட இருக்கின்றன என்று தெரிய வந்திருக்கிறது.

அப்படி நடந்து அதன் மூலம் நீதி கிடைக்குமானால் மகிழ்ச்சியே. நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும்!

அன்புடன்

Subramaniam Ramajayam
28th November 2013, 04:38 AM
murali sir very well written facts and more anlytically and logically explained facts. hope the court will give favorable decision in our favour
sathyame jayathe,
TRUTH WILL ALWAYS WIN FINALLY. WE HOPE.

sankara1970
28th November 2013, 10:49 AM
கலைத்தாயின் தலை மகனுக்கு, தமிழக குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு உறுப்பினரை போல் இன்றும் அனைவரது உள்ளங்களிலும் வாழ்ந்துக் கொண்டிருக்கும் கலையுலக சக்ரவர்த்திக்கு தமிழகத்திலே இன்றைய தினம் செய்யப்பட்டிருக்கும் அவமரியாதை சகிக்க முடியாத கொடுஞ்செயல் என்றே சொல்ல வேண்டும். இதை செய்வதற்கு எப்படித்தான் மனம் வருகிறதோ?



அப்படி நடந்து அதன் மூலம் நீதி கிடைக்குமானால் மகிழ்ச்சியே. நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும்!

அன்புடன்

நீதி கிடைக்கும் !

hamid
28th November 2013, 10:49 AM
உள்நோக்கம் என்னவென்று எனக்கு மெய்யாலுமே தெரியாது அண்ணா!

With all due respect, Venki, if what you said is really true, then you are not fit to discuss anything on TN Politics at least...

sankara1970
28th November 2013, 10:51 AM
[QUOTE=Ravi Chandrasekar;1093022]PUTHIYA THALAIMURAI DEBATES ! - They asked one good question finally - If a public case was put to lift all the TASMAC SHOPS WILL THEY DO ?

Dear Ravi
Nice photos from debate on Puthiya Thalaimurai

Good question. abt Tasmac !

sankara1970
28th November 2013, 10:52 AM
எத்தனை சக்திகள் வந்தாலும் சிவாஜி புகழை எவராலும் அழிக்கமுடியாது.

True. u reflected minds of Sivaji fans.

venkkiram
28th November 2013, 10:59 AM
With all due respect, Venki, if what you said is really true, then you are not fit to discuss anything on TN Politics at least... சரிங்க.

eehaiupehazij
28th November 2013, 02:48 PM
The fans of NT are shaken and stirred but their faith on the legacy of NT is ever increasing exponentially with more and more younger generation is getting attracted by his indelible acting calibre as proved by the stupendous success of all his rereleases of classics starting with the trendsetter Karnan. see the fate of a legend who brought to larger than life the images of patriotic VOC. VPKB..Karnan.... even the representative symbolization of Thangapathakkam Chowdry boosting the image of TN Police as a role model for the then Police Officers! Every Tamilian should feel for this insult to the injury that always happens to our NT for the simple 'sin' of having born as a Tamilian! In no other State one can experience such a strange happening.... The Nadigar Sangam...? better they can close it. Why NT should fall a prey to political vendetta when he is a public property in the minds of millions and millions of Tamils?!

anasiuvawoeh
28th November 2013, 07:39 PM
Dear All,first of all we Sivaji fans value human life than anybody.But we cant accept the fact that ,only our NT "s statue alone hazardous.If the government is not having any inner motive .let them erect in a better place than this.At the same time,few of our friends have dragged our NT "s family.If the government or individual wants our beloved family to fall at their feet,in this statue issue,for us the family of our NT is more important than other issues.So let us not be emotional and realize that ,anything done to defame NT will result in a action similar to an elephant throwing mud over its own body.And finally,this is the time for each of us to have a miniature statue of NT to keep in each and everyone"s home.

Russelldwp
28th November 2013, 09:57 PM
இந்த துயரமான சூழ்நிலையில் இந்த திரியின் ஆய்வுத்திலகங்கள் யாராவது சிம்மக்குரலோன் தமிழ் வேந்தர் சிவாஜியின் மனோகரா காட்சிகள் பற்றியும்
குறிப்பாக வசந்தசேனையின் பாத்திரப்படைப்பு பற்ற்யும் விவரித்தால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்


பகைவனுக்கும் விருந்தோம்பல் காணும் சிவாஜிக்கு ஏற்படும் அவமானம் தமிழ் இனத்துக்கே ஏற்படும் அவமானம்

Gopal.s
29th November 2013, 02:45 AM
முரளி,
தங்கள் வாதங்கள் சரியானவை.தங்களுடன் பேசிய படியே,சரியாக உறங்கவோ,உண்ணவோ முடியாமல் எதன மீதும் கவனம் குவியாமல் எல்லோரையும் எரிந்து விழுகிறேன்.பாவம் வியட்நாம் ஊழியர்கள்,தங்கள் பாஸ் எதனால் இவ்வளவு பாதிக்க பட்டுள்ளார் என்று அறியும் வாய்ப்பும் இல்லை. இறைவனும் ,சமூக பேரவையும்தான் நம்மை காத்தருள வேண்டும்.குரல் கொடுத்த கலைஞர்,ராமதாஸ்,வை.கோ ஆகியோருக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.

IliFiSRurdy
29th November 2013, 07:07 AM
தலைவரே!

நீங்கள் தமிழ் நாட்டில் அவதரித்த குற்றத்திற்காக இருக்கும் போதும் அனுபவித்து விட்டீர்கள்.மறைந்த பிறகும் அனுபவிக்கிறீர்கள்.எங்களை மன்னியுங்கள்.

நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்களை, உங்கள் உன்னத நடிப்பின் மூலம், தமிழர்கள் நெஞ்சில் நீங்கள் சிலைகளாக செதுக்கியுள்ளீர்கள்.உங்கள் ஒரு சிலைக்கு நாங்கள் வெளியே இடம் தேடுகிறோம்.வெட்கம்!!

பிரான்சிலோ ஆஸ்திரியாவிலோ நீங்கள் தோன்றியிருந்தால்,நீங்கள் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்தின் சிலையையும் நிறுவி பெருமிதப்பட்டிருப்பார்கள்...சுயமரியாதை,தேசப்பற்று, கலையுணர்வு இவை அனைத்தும் அறவேயற்ற, "இலவசங்களில்" இன்பம் காணும் சுயநலமிக்க தமிழர்களாகிய எங்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

ஒருவேளை,சிலையின் கீழ் "21-7-2006,அன்று அன்றைய முதல்வரால் திறக்கப்பட்டு(இதுவரை font size 4) ,ஏழு வருடங்களுப்பிறகு இது சாலையில் தடங்கலாக உள்ளது என மயிலை போலீஸ் ஆய்வாளரால் கண்டுபிடிக்கப்பட்டு(இதுவரை font size 8) தற்போதைய முதல்வர் "அம்மா"வின் தலையீட்டாலும்,உத்தரவின் பேரிலும்(இதுவரை font size 40) அதே இடத்தில தொடர்ந்து இருக்க அனுமதிக்கப்பட்டது.” என்று ஒரு கல்வெட்டை பதித்து விட்டால் போதும்,பிரச்சினை தீர்ந்து விடுமோ என்று கூட தோன்றுகிறது.

அறுபது ஆண்டுகளாக ஒவ்வொரு ரசிக,ரசிகையர் மனதிலும் நட்ட நடுவில் அமர்ந்து அவர்கள் வாழ்வையே ஒழுக்கமாக,நேர்மையாக, சீராக நடத்திச்செல்லும் நீங்கள் ,ஏதோ ஓரமாக நிற்பதனால் சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றனவாம்..சொல்கிறார்கள்!!!

நீங்கள் மதன்பூர் மகாராஜாவிடம் பொறுமும் வசனம்தான் ஞாபகம் வருகிறது..

"சிலை என்ன ராணி, பெரிய சிலை!!மனுஷனுக்கு மனசு சுத்தம்தான் வேண்டும்!"

இப்போ கட்டபொம்மன்..
"சிலை, சாலை, தடங்கல் விபத்து!..என் "அண்ணன்" கேட்டிருக்கவேண்டும் இதை!
அவன் புகழால் வாழும் உன்னை இந்நேரம் நீக்கியிருப்பான்!"

அப்புறம் கெளரவம்..இது நம்மிடம்..
"போங்கடா அபிஷ்டு! சிலைய எடுத்துட்டா என் புகழ் மறஞ்சுடுமா?"
the one and only great Sivaji டா நான்!"

vidyasakaran
29th November 2013, 10:49 AM
பல ஆயிரம் கோடி துட்டு போட்டு கூடங்குளம் கொண்டுவந்த... அது CONGRESS கொண்டுவந்தது..அதுல நட்டு சரியில்ல போல்ட்டு சரியில்ல...அதுல ஆபத்து இருக்கு...ஈபத்து இருக்குன்னு புரளி கிளபரவங்கள நாலு சாத்து சாத்தி முழு வீச்சுல உற்பத்தி பண்ண துப்பு இல்ல....!
!
ஏன், அவங்களை சாத்தினாதான் உற்பத்தி பண்ண முடியுமா? ஏன் இப்படி ஒரு அற்ப ஆசை? எதிர்க்கறவங்களை மதிச்சுதான் இன்னும் உற்பத்தி பண்ணாம, உதயகுமார்கிட்ட அப்ரூவலுக்குக் காத்திருக்கிற மாதிரில்ல இருக்கு பேச்சு! ஆடத் தெரியாத மூனா, தெரு கோணைன்னானாம்!

KCSHEKAR
29th November 2013, 11:38 AM
நடிகர்திலகம் சிலை

கடந்த மூன்று நாட்களாக சரியான உறக்கம் இல்லை. வேலையிலும் கவனம் செலுத்தமுடியவில்லை. தமிழகம் முழுவதிலுமிருந்து தொலைபேசி அழைப்புகள். பல ரசிகர்களின் அழுகைக் குரல்கள், பல கோபக்குரல்கள்.

இதில் சில கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நடிகர்திலகத்தின் சிலை 2006 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டபோது தொடரப்பட்ட வழக்கிலேயே நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தன்னை இணைத்துக்கொண்டு, சிலை அமைய உறுதுணையாக இருந்தது.

அதுபோல தற்போதும், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் சிலையை அகற்றவேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டபோது அதனைக் கடுமையாக எதிர்த்தோம்.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, முதலில் நவம்பர் 13 ஆம் நாள் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தபோது, அரசு வழக்கறிஞர், இந்த சிலையினால் போக்குவரத்து இடைஞ்சல் ஏதும் இல்லை என்று கூறியதை, மனுதாரரின் வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்ததால், போக்குவரத்து காவல்துறையிடம் இதுசம்பந்தமாக மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

நவம்பர் 26 ஆம் நாள் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே அரசு வழக்கறிஞர் ஆதரவான கருத்துக்களைக் கூறியிருந்ததால் தற்போதும் அதேமாதிரியான கருத்துக்களே தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தபோது, சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும், இதனால் கடந்த 2 ஆண்டுகளில் 10 க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளதாகவும் தெரிவித்து, இச்சிலையை அகற்றி வேறு இடத்தில் வைக்கலாம் என்று தெரிவித்ததை அரசு வழக்கறிஞரும் ஆமோதித்தார்.

அதிர்ச்சியடைந்த நான், உடனே நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை வழக்கறிஞர் திரு.பிரபாகரன் மூலமாக கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க வைத்தேன்.

பேரவை தரப்பு வழக்கறிஞர் மட்டும் அன்று இல்லையென்றால், திரு.முரளி அவர்கள் குறிப்பிட்டதைப்போல நடிகர்திலகத்தின் சிலைக்காக கேள்வி கேட்கக்கூட ஆள் இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கும் என்பதுதான் உண்மை. அதுமட்டுமல்ல, அன்று இரவே நடிகர்திலகத்தின் சிலையும் அப்புறப்படுத்தப்பட்டு, மியூசியத்தில் வைக்கப்பட்டிருக்கும். ஏற்கனவே மணிமண்டபம் கேட்டுப் போராடிவருவது போதாது என்று, நாம் மீண்டும் சிலை வைக்கவேண்டும் என்று போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்போம்.

இன்று சிலை அப்புறப்படுத்தப்படுவது தடுக்கப்பட்டு, அது விவாதப்பொருளாகவும் ஆக்கப்பட்டிருப்பதில் முதற்கண் நாம் வெற்றியே பெற்றிருக்கிறோம்.

சில விவாதத்திற்குரிய கருத்துக்கள்

1) நடிகர்திலகத்தின் சிலை நடுவிலிருந்து அகற்றப்பட்டு, அவ்வையார், வீரமாமுனிவர், காந்தி என்ற வரிசையில் வைக்கலாம் என்று ஆலோசனை சொல்லப்பட்டிருக்கிறது. இது அரசாங்கத்தின் கருத்தா என்பதை சொல்வதற்கில்லை. சிலையை அகற்றியபிறகு எங்கு வைப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

2) நடிகர்திலகத்தின் சிலை சாலை நடுவில் இருக்கிறது என்று கூறுபவர்கள், ஒன்றை நினைத்துப் பார்க்கவேண்டும். இன்று சென்னையில் மிக அகலமான சாலை கடற்கரை காமராஜர் சாலை. எல்லாப் புறங்களிலும் மேலும் அகலப்படுத்துவதற்கான வாய்ப்பும் உள்ள சாலை. போக்குவரத்து அதிகம் உள்ள, சென்னை அண்ணாசாலை என்று அழைக்கப்படுகிற மவுண்ட் ரோடில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், முத்துராமலிங்க தேவர், ராமசாமி படையாச்சி என்று வரிசையாக சிலைகள் சாலையின் நடுவேதான் உள்ளன. (யாருடைய சிலையையும் அகற்றவேண்டும் என்பது நமது நோக்கம் அல்ல) அவைகள் எல்லாம் போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லை என்கிறபோது, நடிகர்திலகத்தின் சிலை மட்டும் இடைஞ்சல் என்று கூறுவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

3) கத்திபாரா நேரு சிலை, கோயம்பேடு அம்பேத்கார் சிலை ஆகியவை இடம் மாற்றி அமைக்கப்படவில்லையா என்று கேள்வி எழுப்புகிறார்கள். அங்கெல்லாம் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டபோது, சாலை அகலப்படுத்தும் பணிக்கு அத்தியாவசியமானதால் அகற்றி இடம் மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால், நடிகர்திலகம் சிலை அமைந்துள்ள காமராஜர் சாலையைப் பொருத்தவரையில் அப்படி ஏதும் இல்லை.

4) பல தலைவர்களுக்கு சென்னையிலும், பல நகரங்களிலும், பல இடங்களில் சிலைகள் உள்ளன. அதனால், ஒரு இடத்தில் அகற்றப்பட்டாலும்கூட கவலையில்லை. நம் நடிகர்திலகத்திற்கு தலைநகரில் இருப்பதோ ஒரே சிலை. அதற்கும் பங்கம் எனும்போதுதான் இதயம் வலிக்கிறது.

5) நம் நடிகர்திலகத்தின் ரசிகர்கள் நடு ரோட்டில் சிலை அமைந்து, அது பொதுமக்களுக்கும் இடையூறாக அமைவதை விரும்பவில்லைதான். நடிகர்திலகத்தை மட்டும் இந்த அளவுகோலில் கொண்டுவருவதை ஏற்கமுடியாது. வாழும்போதும் விட்டுக்கொடுத்து வாழ்ந்தவர், சிலையாக நிற்கும்போதும் அவர்தான் விட்டுக்கொடுக்கவேண்டும் என்பதை விண்ணுலகிலிருக்கும் நடிகர்திலகம் வேண்டுமானால் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ளலாம். கண்டிப்பாக நம்மைப்போன்ற ரசிகர்களால் அதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

6) ஒரு மறைந்த தலைவருக்கு சிலை அமைக்கப்படுகிறது என்றால் அது அவரை கெளரவப்படுத்துவதற்காக. அதனை அகற்றுவது என்பது அவரை அவமரியாதை செய்யும் செயலாகவே அமையும்.

7) அப்படி நடிகர்திலகத்தின் சிலையை அகற்றித்தான் ஆகவேண்டுமென்றால், முதலில் தமிழகத்தில் உள்ள அனைத்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலுள்ள அனைத்து சிலைகளையும், உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில், iit போன்ற ஒரு பொதுவான நிறுவனத்தின் மூலம் ஆய்வு செய்து, எந்தெந்த சிலைகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறதோ அதனையெல்லாம் அகற்றி வேறு இடத்தில் வைக்கலாம். இதில் ஒருவருக்கே அந்த நகரத்தில் எத்தனை சிலைகள் இருக்கிறது என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேன்டும். அதன் பரிந்துரையின் அடிப்படையில் இச்சிலையும் அகற்றப்பட்டு மாற்று இடத்தில் வைக்கப்பட்டால் ஏற்கலாம். ஏற்கனவே, மாவட்டங்கள், போக்குவரத்துக் கழகங்களில் இருந்த தலைவர்களின் பெயர்கள் அகற்றப்பட்டது நினைவிருக்கும்.

இன்று பல கட்சி தலைவர்களின் கண்டனக் குரல்கள், பல மாவட்டங்களிலுமிருந்தும், ஆர்ப்பாட்டம், கண்டன சுவரொட்டி என்ற தகவல்கள் வருகின்றன. சென்னையிலும் வரும் 4 டிசம்பர், புதன்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

Implead petition க்காக வழக்கறிஞர் கேட்ட சில தகவல்களையும் திரட்டிக்கொண்டிருக்கிறேன். வரும் டிசம்பர் 13 ஆம் நாள் வழக்கு விசாரணைக்கு வரும்போது, சிலை அகற்றலை நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் முழு மூச்சாக எதிர்ப்பதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறேன் - தோழர்களின் ஆதரவோடு.

நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

நன்றி.

joe
29th November 2013, 11:59 AM
சந்திரசேகர்,
உங்கள் களப்பணிக்கும் அயராத உழைப்புக்கும் தலை தாழ்ந்த வணக்கங்கள்

J.Radhakrishnan
29th November 2013, 12:10 PM
"ஒரு மறைந்த தலைவருக்கு சிலை அமைக்கப்படுகிறது என்றால் அது அவரை கெளரவப்படுத்துவதற்காக. அதனை அகற்றுவது என்பது அவரை அவமரியாதை செய்யும் செயலாகவே அமையும்."





இது புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.

J.Radhakrishnan
29th November 2013, 12:19 PM
வரும் டிசம்பர் 13 ஆம் நாள் வழக்கு விசாரணைக்கு வரும்போது, சிலை அகற்றலை நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் முழு மூச்சாக எதிர்ப்பதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறேன் - தோழர்களின் ஆதரவோடு.

நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

Quote]



தங்களின் இந்த போராட்டத்திற்கு எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு.

IliFiSRurdy
29th November 2013, 01:10 PM
நடிகர்திலகம் சிலை

கடந்த மூன்று நாட்களாக சரியான உறக்கம் இல்லை. வேலையிலும் கவனம் செலுத்தமுடியவில்லை. தமிழகம் முழுவதிலுமிருந்து தொலைபேசி அழைப்புகள். பல ரசிகர்களின் அழுகைக் குரல்கள், பல கோபக்குரல்கள்.
Implead petition க்காக வழக்கறிஞர் கேட்ட சில தகவல்களையும் திரட்டிக்கொண்டிருக்கிறேன். வரும் டிசம்பர் 13 ஆம் நாள் வழக்கு விசாரணைக்கு வரும்போது, சிலை அகற்றலை நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் முழு மூச்சாக எதிர்ப்பதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறேன் - தோழர்களின் ஆதரவோடு.

நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

நன்றி.

சந்திரசேகர் சார்..
உங்களின் பல அலுவல்களுக்கிடையே இங்கும் வந்து விளக்கி சொன்னதிற்கு மிக்க நன்றி.உங்கள் மற்றும் பலகோடி தலைவர் ரசிகர்களின் உழைப்பும் தார்மீக கோபமும் வீணாகாது.நம்மை சாதுக்கள் என்றெண்ணி இந்த செயலை செய்தவர்கள்,சாது மிரண்டால் என்ன ஆகும் என்பதையும் உணரத்தான் போகிறார்கள்.
வணக்கம்.

anasiuvawoeh
29th November 2013, 01:39 PM
Dear KCS sir,your post has brought the feelings of lakhs and lakhs of ordinary people who have high regards for NT,in addition to the die hard fans like us.I hope all these will reach the deaf ears of people who enjoy power which is always temporary.

HARISH2619
29th November 2013, 01:42 PM
ஏன், அவங்களை சாத்தினாதான் உற்பத்தி பண்ண முடியுமா? ஏன் இப்படி ஒரு அற்ப ஆசை? எதிர்க்கறவங்களை மதிச்சுதான் இன்னும் உற்பத்தி பண்ணாம, உதயகுமார்கிட்ட அப்ரூவலுக்குக் காத்திருக்கிற மாதிரில்ல இருக்கு பேச்சு! ஆடத் தெரியாத மூனா, தெரு கோணைன்னானாம்!

ஏதோ ஒரு மனவேதனையில் ஆதங்கத்தில் ஒரு உதாரணம் சொன்னால் அதற்குமா உள்அர்த்தம் கர்ப்பிப்பது ?

திரு சந்திரசேகர் சார்,
நடிகர்திலகம் சிலைக்காக அவர் குடும்பத்தினரை விட அதிக அக்கறையோடு போராடி கொண்டிருக்கும் உங்களின் பாதம் தொட்டு வணங்குகிறோம் .விண்ணிலிருக்கும் நம் இறைவனின் ஆசி தங்களுக்கு எப்பொழுதும் உண்டு .வெற்றி நமதே என்று காத்திருக்கிறோம்

anasiuvawoeh
29th November 2013, 01:49 PM
Dear Ramachandran Sir,after you quoted about Nadigar Sangam only,most of the people are reminded about that.Now it is not NADIGAR SANGAM,it has become NADIKKIRAVANGA(SUYANALAM KAAKKA)SANGAM!,long before.

uvausan
29th November 2013, 02:42 PM
நடிகர்திலகம் சிலை


5) நம் நடிகர்திலகத்தின் ரசிகர்கள் நடு ரோட்டில் சிலை அமைந்து, அது பொதுமக்களுக்கும் இடையூறாக அமைவதை விரும்பவில்லைதான். நடிகர்திலகத்தை மட்டும் இந்த அளவுகோலில் கொண்டுவருவதை ஏற்கமுடியாது. வாழும்போதும் விட்டுக்கொடுத்து வாழ்ந்தவர், சிலையாக நிற்கும்போதும் அவர்தான் விட்டுக்கொடுக்கவேண்டும் என்பதை விண்ணுலகிலிருக்கும் நடிகர்திலகம் வேண்டுமானால் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ளலாம். கண்டிப்பாக நம்மைப்போன்ற ரசிகர்களால் அதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது.


நன்றி.

KC sir , உங்கள் பதிவு , உங்கள் முயற்சி மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒன்று -

மிகவும் வருத்தப்படவேண்டிய விஷயம் - யாருமே இந்த சிலை விஷயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தான் தோன்றுகின்றது - "யாருமே" என்பதில் 1. அவரை வைத்து பணம் சம்பாதித்தவர்கள் 2. அவரால் வாழ்கையில் உயர்தவர்கள் 3. அவரால் நடிப்பு என்றால் என்ன என்று கற்றுகொண்டவர்கள் 4. அவரால் political gain அடைந்தவர்கள் - இப்படி பல ரகங்கள் அடக்கம் . தமிழுக்கே நல்ல தமிழை கற்றுகொடுத்தவர்க்கு தமிழ் நாட்டில் கிடைக்கும் மரியாதை மனதை மிகவும் புண் படுத்துகின்றது உங்கள் முயற்சி வெற்றி அடைய எல்லோரும் இறைவனை ப்ராத்தனை செய்கிறோம் - Dec 13 ஒரு நல்ல நாளாக அமைய - எல்லோருக்கும் மன நிம்மதி கிடைக்க !!

அன்புடன் ரவி

Harrietlgy
29th November 2013, 02:49 PM
திரு. சந்திரசேகர் உங்கள் முயற்சி வெற்றி பெறவும் வழக்கின் தீர்ப்பு சாதகமாக வரவும் இறைவனை பிரார்த்திப்போம்.

KCSHEKAR
29th November 2013, 03:36 PM
நடிகர்திலகம் சிலை விவகாரத்தில் ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி.

இந்த விவகாரத்தில் திரு.ஜோ குறிப்பிட்டதைப்போல, நடிகர்திலகத்தின் புதல்வர்கள் தங்களது தந்தையின் சிலைக்காகப் போராடுவது சரியான நிலைப்பாடாக இருக்காது என்பது எனது கருத்து.

இதில் நம்மைத் (நடிகர்திலகம் ரசிகர்கள்) தவிர முழு மூச்சாக, முன்னின்று செயல்படவேண்டியது நடிகர்சங்கமும், தமிழ் நடிகர்களும்தான்.

ஆனால், என்று நடிகர்திலகம் முயற்சியால் கட்டிய கலையரங்குடன் கூடிய அலுவலகத்தை இடித்தார்களோ, அன்றே நடிகர்சங்கமும் கலைக்கப்பட்டுவிட்டதுபோல்தான் தெரிகிறது.

ScottAlise
29th November 2013, 05:40 PM
Dear KC Shekar sir,

தங்களின் இந்த போராட்டத்திற்கு எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு. வழக்கின் தீர்ப்பு சாதகமாக வரவும் இறைவனை பிரார்த்திப்போம். waiting for Dec 13 with fingers crossed

Truth will triumph always

Russelldwp
29th November 2013, 10:52 PM
திரு. சந்திரசேகர் அவர்களே

நடிகர் திலகத்தின் சிலை காக்க தாங்களின் பங்களிப்பும் இடைவிடா முயற்சியும் ஈடு இணையில்லாதது. தாங்கள் இதுவரை ஈடுபட்ட அனைத்து காரியங்களிலும் வெற்றி தான் அடைந்துள்ளிர்கள். இந்த முயற்சியிலும் வெற்றி அடைந்து நல்ல தீர்ப்பு கிடைத்திட எல்லாம் வல்ல இறைவனை
ப்ரார்திப்போம். உங்கள் சேவை என்றெனறும் சிவாஜி ரசிகர்களுக்கு தேவை.

Ramachandran.C

chinnakkannan
29th November 2013, 10:58 PM
நடிகர்திலகம் சிலை

கடந்த மூன்று நாட்களாக சரியான உறக்கம் இல்லை. வேலையிலும் கவனம் செலுத்தமுடியவில்லை. தமிழகம் முழுவதிலுமிருந்து தொலைபேசி அழைப்புகள். பல ரசிகர்களின் அழுகைக் குரல்கள், பல கோபக்குரல்கள்.Implead petition க்காக வழக்கறிஞர் கேட்ட சில தகவல்களையும் திரட்டிக்கொண்டிருக்கிறேன். வரும் டிசம்பர் 13 ஆம் நாள் வழக்கு விசாரணைக்கு வரும்போது, சிலை அகற்றலை நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் முழு மூச்சாக எதிர்ப்பதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறேன் - தோழர்களின் ஆதரவோடு.

நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

நன்றி.

உங்கள் பணிக்கும் அயராத உழைப்புக்கும் தலை தாழ்ந்த வணக்கங்கள்..கண்டிப்பாக நீதி ஜெயிக்கும்.. நாம் வெல்வோம்..என் போல பல ரசிகர்களுடைய பிரார்த்தனைகள் உங்களைத் தொடர்ந்து கொண்டிருக்கும்.

Gopal.s
30th November 2013, 03:11 AM
சந்திர சேகர் சார்,

எனக்கு நன்றி சொல்ல வார்த்தை கிடைக்காமல் தடுமாறுகிறேன். நீங்கள் ஒருவர்தான் எங்களுக்கு கிடைத்த ஒரே கொழுகொம்பு. உங்களை பற்றி கொண்டிருக்கிறோம்.நீங்கள் தனியரல்ல.உங்களுக்கு பின் அத்தனை நல்லிதயங்களும்,அவர்களின் உண்மையான சத்தியமான பிரார்த்தனைகளும். அவை என்றுமே விலை போனதில்லை.வீண் போனதில்லை. அவற்றுக்கு உள்ள சக்தி சொல்லில் வாரா அக்கினி.

Gopal.s
30th November 2013, 03:14 AM
http://www.eegarai.net/t106289-topic#1034579

KCSHEKAR
30th November 2013, 03:28 PM
நம் உணர்வுகளைத் தெரிவிக்க ஒன்றுகூடுவோம் - வாரீர்.
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/Demonstration4Dec2013_zps005a014b.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/Demonstration4Dec2013_zps005a014b.jpg.html)

Georgeqlj
30th November 2013, 10:02 PM
December 5 andru covailium kandana arpattam nadatha muyatchikal metkollapattu varukindrana.cennai porattam vetri pera covai nanbarkalin valthukkal.Thanks to kc sir

Gopal.s
1st December 2013, 05:02 AM
வாழ்த்துக்கள் சந்திரசேகர் சார்.நிறைய பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன். அவர் குடும்பம் என நினைத்து,பிள்ளைகள் என அழைத்தது நம்மைத்தானே?

Gopal.s
1st December 2013, 05:37 AM
அடுத்து 1973 சிறப்பு ஆய்வுகள்.
ராஜபார்ட் ரங்கதுரை.
எங்கள் தங்க ராஜா.
கெளரவம்.

Gopal.s
1st December 2013, 05:40 AM
வாசு நம் நடிகர்திலகம் எழுத்து பணியை தொடருகிறார்.

ஈகரை நெட்

http://www.eegarai.net/


சிவாஜி என்ற மாநடிகர் (தொடர்-1) 'பராசக்தி'

http://www.eegarai.net/t105738-topic


'பராசக்தி' தொடருகிறாள்...(தொடர்-1)

http://www.eegarai.net/t105820-topic


'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2)

http://www.eegarai.net/t105912-2


'பரதேசி' (தெலுங்கு) மற்றும் 'பூங்கோதை' (தமிழ்) (தொடர் 3 மற்றும் 4)

http://www.eegarai.net/t106161-3-4

Gopal.s
1st December 2013, 10:30 AM
பொதுமக்கள்,நடிகர்கள்,அரசியல் கட்சிகள் அனைவரும் பொங்கி எழுவதாக கேள்வி.
தமிழகமே அதிர்ச்சியில் உறைந்திருப்பதாக
வசந்த் டி.வீ யில் 10.00 am முதல் ஒரு நல்ல
நிகழ்ச்சி(இன்று ஞாயிறு 1/12/2013 ).

sankara1970
1st December 2013, 12:10 PM
திரு kcs

சிவாஜி சமூக நல பேரவையின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்

Gopal.s
1st December 2013, 12:54 PM
ராகவேந்தர் சார் முற்றும் கற்று விட்டதால் ,பள்ளிக்கு போக வேண்டிய அவசியமில்லை என முடிவு செய்தது ஞாயமே. ஆனால் மற்றோருக்கு பள்ளிக்கு செல்ல வழிகாட்டியாக செயல் பட்டதையும் நிறுத்தியாயிற்று போல.எனினும்
இவ்வளவு நாள் பள்ளிக்கு வழிகாட்டியதற்கு என் நன்றி ராகவேந்தர் சார்.

sivaa
2nd December 2013, 11:14 AM
சந்திரசேகரன் சார் சிலை விவகாரத்தில் உங்கள் கடுமையான முயற்ச்சிக்கு என் பாராட்டுக்களும் நன்றியும்.

கள உறவுகளே இந்தத்திரி ஏன் இந்தளவு தொய்வு
உங்கள் சண்டைகளை தனிமடலில் வைத்துக்கொள்ளுங்கள் இத்திரியில் வேண்டாமே.

இங்கே வந்து அண்ணனின் புகழை ஒற்றுமையாக பரப்புங்கள் என்று அண்ணனின் பெயரால்
மிகவும் தாழ்மையுடன் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்.

Subramaniam Ramajayam
2nd December 2013, 11:53 AM
நம் உணர்வுகளைத் தெரிவிக்க ஒன்றுகூடுவோம் - வாரீர்.
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/Demonstration4Dec2013_zps005a014b.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/Demonstration4Dec2013_zps005a014b.jpg.html)

4-12-2013 NADIGARTHILAGAM PUGAZL VINNALAVUM PARAVA PONGI EZHUVOM.... VETRI NAMATHE Even thugh my physical presence is not there MINDWISE i will be there. all the verybest kc sir and brothers ans sisters, good luck always,
ramajayam usa,

KCSHEKAR
2nd December 2013, 12:42 PM
Nakkeeran - Nov30 - Dec03

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/NakkeeranPg1_zps21c0f096.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/NakkeeranPg1_zps21c0f096.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/NakkeeranPg2_zps5b5a8a9e.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/NakkeeranPg2_zps5b5a8a9e.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/NakkeeranPg3_zps6e7d1732.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/NakkeeranPg3_zps6e7d1732.jpg.html)

sivaa
2nd December 2013, 08:15 PM
நான் சுவாசிக்கு சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (9)

தமிழ் திரைப்படத்துறையில், 'மேக் - அப்' கலைக்கு முன்னோடியாக கருதப்படுபவர் ஹரிபாபு. பெரிய ஹீரோக்கள், ஹீரோயின்கள் எல்லாம், அவர் வீட்டிற்கு சென்று, அவரிடம், 'மேக்-அப்' போட்டு, பின், படப்பிடிப்பிற்கு செல்வர். இவர், சிவாஜியின் குடும்ப நண்பர். லட்சுமியும், சிவாஜியும் நடித்த மற்றொரு படம், ஆனந்த கண்ணீர் இப்படத்தின் படப்பிடிப்பின் போது, ஹரிபாபுவின் மகன், நன்னு இறந்து விட்டதாக, செய்தி வந்தது. நன்னு, சிவாஜிக்கு ரொம்ப நெருக்கம். பல வெற்றிப்படங்களுக்கு மூலக்கதை அளித்தவர். 'என்னம்மா, எனக்கு நெருக்கமானவங்க ஒவ்வொருத்தரா போயிகிட்டு இருக்காங்க...' என்று லட்சுமியிடம் வருத்தப்பட்டவர், 'சிவாஜி கணேசனுக்கு தான் நண்பன் போயிட்டான்னு துக்கம். இந்தப்படத்தில் இருக்கிற பிராமணனுக்கு இல்லை. (இப்படத்தில் அவருக்கு அந்தணர் வேடம்) டயலாக் கொணடு வாப்பா. அடுத்த ஷாட் எடுக்கலாம்...' என்று கூறி, ஷாட்டுக்கு தயாராகி விட்டார். சொந்த துக்கத்தினால் கூட, படப்பிடிப்பு பாதித்து விடக்கூடாது என்பதில், தெளிவாக இருந்தார் சிவாஜி.
பெண் வேஷம் பற்றிய விஷயத்தில், மற்றொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. போஸ்ட் மார்ட்டம் என்ற சூப்பர் ஹிட் மலையாளப் படத்தை, தமிழில் ரீ-மேக் செய்ய முடிவு செய்திருந்த. தயாரிப்பாளர் பிலிம்கோ காதர் சாதிக், சிவாஜியுடன் மேனா தியேட்டரில் படம் பார்க்க ஏற்பாடு செய்திருந்தார். டைரக்டர் ஏ.ஜெகன்னாதனும் உடன் இருந்தார்.
அப்போது, சிவாஜி, எனக்கு போன் செய்து, 'மேனோ தியேட்டருக்கு வா. ஒரு படம் பார்க்கணும். என் உதவியாளராக உனக்கு கான்ஸ்டபிள் ரோல்...' என்றார். அவருடன் உட்கார்ந்து, மலையாளப் படத்தை பார்த்தேன். சிவாஜி, பாதிரியராகவும், போலீஸ் அதிகாரியாகவும் இரட்டை வேடங்களில் நடித்து, பெரிய ஹிட்டான, வெள்ளை ரோஜா படம் தான் அது. படத்தை பார்த்துக் கொண்டடிருந்த போது, 'அந்த கான்ஸ்டபிள் ரோலை நல்லா கவனி. எங்கே எல்லாம், 'இம்ப்ரூவ்' செய்யலாம் என்று பார்த்துக்கோ. குறிப்பாக பெண் வேடம் போடும் சீனை உன்னிப்பாக கவனி...' என்றார் சிவாஜி.
'நாகூர் பக்கத்தில நம்பளோட பேட்டை...' என்ற பாடல் காட்சி. சிவாஜியும், நானும், மாறு வேடத்தில் துப்பறியும் கட்டம். ஹார்மோனியம் வாசிக்கும், கவாலி பாடகராக சிவாஜியும், நடனமாடும் பெண் வேடத்தில் நான். ராஜேந்திரன் எனக்கு, 'மேக்- அப்' போட்டுக் கொண்டிருந்தார். அவரிடம், சிவாஜி, 'நீ கொஞ்சம் தள்ளிக்கோ. நானே இவனுக்கு, 'மேக் - அப்' போடுறேன்...' என்றார். 'இல்லை சார், பரவாயில்லை....' என்று, நான் சொன்னதை சட்டை செய்யாமல், 'மாறுவேடம் போடும் போது, பக்காவாக, 'மேக்-அப்' போட்டுக்கணும். நீ சோம்பல்பட்டு, அரை குறை, 'மேக்-அப்' போடு போதும்ன்னு வந்துவிடுவே. அதனால, நானே, 'மேக்-அப்' போட்டு விடுறேன்...' என்றார்.
நிறைய பசை ஒட்டி, தலைக்கு, 'விக்' வைப்பதிலிருந்து நகைகள், காஸ்ட்யூம்கள், அணிவதையெல்லாம் சரி பார்த்தார். அவருக்கு திருப்தியாகும் வரை, 'மேக்-அப்' போட்ட பின்தான், படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்தோம்.
கிட்டத்தட்ட, 300 படங்களுக்கு மேலே நடித்திருக்கிறேன். வெள்ளை ரோஜா படத்தில், கான்ஸ்டபிள் பெருமாள் நாயுடுவாக, பெண் வேடம் போட்டு, நடனம் ஆடும் காட்சி தான், அதிகம் பேசப்பட்டது.
இன்றும் பல, 'டிவி' சேனல்களிலே, அந்த பாடல் காட்சி ஒளிபரப்பாகும் போது, பலர் என்னை அழைத்து பாராட்டுவர். அந்த பாராட்டுகள் சிவாஜியையே சேரும்.
லட்சுமியிடம் இது பற்றி நான் பேசிய போது, 'கம்ப்யூட்டரிலே நமக்கு ஏதாவது தகவல் வேண்டும் என்றால், 'கூகுளை' தட்டுகிறோம். நடிப்புக் கலையை பொறுத்தவரை, நமக்கு உள்ள ஒரே, 'கூகுள்' தளம், சிவாஜி தான்...' என்றார்.
பாசமலர் மற்றும் புதியபறவை படங்களில், ஏதோ, 'ட்ரினிட்டி காலேஜ் ஆப் மியூசி'க்கில் படித்து, டிப்ளமோ வாங்கியவர் போல, நேர்த்தியாக பியானோ வாசித்திருப்பார் சிவாஜி.
தில்லானா மோகனம்மாள் படத்தில், சிக்கல் சண்முகசுந்தரம் பாத்திரத்தில், சிவாஜி நாதஸ்வரம் வாசித்த அழகை மறக்க முடியாது. ஆனால், அதற்கு பின், எத்தகைய உழைப்பு இருந்துள்ளது என்பதை, அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
எங்கள் குழுவின் கதாசிரியரும், குடும்ப நண்பருமான, பி.வி.ஒய். ராமன் அன்று பிரபலமாக இருந்த, 'தி மெயில்' பத்திரிகைக்காக, சிவாஜியை பேட்டி காணச் சென்றிருந்தார்.
'ராமா, பேட்டி எல்லாம் அப்புறம் வச்சுக்கலாம். முதலில், ஒரு கச்சேரி கேட்போம், வா...' என்று, தன் வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்றார். அங்கே, சிறுமேடையில், மதுரை என்.பி.என். சேதுராமன், பொன்னுசாமி சகோதரர்கள், நாதஸ்வரம் இசைக்க தயாராக இருந்தனர். அவர்களிடம், 'என் வீட்டில் வாசிக்கிறதாலே அடக்கம், ஒடுக்கமாக வாசிக்கணும்கிற அவசியம் இல்லை, நீங்க தான், இப்போ சிக்கல் சண்முக சுந்தரம் குழுவினர். அதனால், நாதஸ்வரத்தை உறையிலேயிருந்து எடுக்கிறதிலேயிருந்து, சிவாலியை ஊதிப் பார்க்கிறது, ஒருத் தருக்கு ஒருத்தர், 'ரியாக்ட்' செய்யறது எல்லாம், ஒரு பெரிய கச்சேரியில எப்படி செய்வீங்களோ, அதை, நான் பார்க்கணும்...' என்றார் சிவாஜி.
இரண்டு மணி நேரம், அவர்கள் வாசித்ததை, கண் கொட்டாமல் கவனித்திருக்கிறார் சிவாஜி. கச்சேரி முடிந்ததும், அவர்களை சாப்பிடச் சொல்லி, சன்மானம் கொடுத்து, அனுப்பி வைத்தார். பின், இயக்குனர் ஏ.பி.நாகராஜனிடம், 'நாதஸ்வர கச்சேரி காட்சிக்கு நான் தயார்...' என்று சொன்னாராம். இதை, நேரில் பார்த்த ராமன், இன்றும், இது குறித்து பேசும் போது, ஒரு வியப்பு கலந்த மரியாதையோடு தான் பேசுவார்.
இந்தப் படத்தில், 'நலம் தானா...' பாடல் காட்சியைப் பற்றி, சிவாஜி என்னிடம் பேசிய போது, 'நடிப்புக்கு கண் ரொம்ப முக்கியம்டா... இக்காட்சியில், பத்மினி, தன்னுடைய அபிநயம், அங்க அசைவுகள் மூலம் வெளிப்படுத்திவிட முடியும். ஆனால், என் நிலைமையை பார்... கையில், நாதஸ்வரம். அதை வாசிக்கும் போது, பாதி முகம் மறைந்து விடும். அதனால தான், ரியாக்ஷன் பூராவும், கண்களிலே கொடுத்தேன்...' என்றார். 'நலம் தானா...' என்று பத்மினி கேட்கும் போது, இவர் கண்ணை சிமிட்டுவதும், 'புண்பட்டதால் உன் மேனியில்...' என்ற வரிகளுக்கு, சிவாஜியின் கண்கள் சிவந்து, நீர் கொட்டும் காட்சியை மறக்க முடியுமா?
ஏ.ஆர்.எஸ்., நாடக ரசிகர்களுக்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமான பெயர். எங்கள், யு.ஏ.ஏ.,குழுவில் நடிகராக அறிமுகமாகி, பல வெற்றி நாடகங்களில், முக்கிய பாத்திரங்களில் நடித்து, தன் திறமையை நிரூபித்தவர். 1967 முதல் 1975 வரை, எங்கள் யு.ஏ.ஏ., நாடகங்களை திறம்பட டைரக்ட் செய்தவர். திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். எப்போதும், ஸ்டைலாக ஆடை அணிவார்.
என்னைப் போல், அவரும் சிவாஜி ரசிகர்; வெறியர். சிவாஜியின் நடிப்பின் நுணுக்கங்களைப் பற்றி நிறைய பேசுவார். சிவாஜியின், முதல் படமான 'பராசக்தி படத்தை, ஏ.ஆர்.எஸ்., முதல் நாள், முதல் காட்சிக்கு சென்று, பார்த்து ரசித்திருக்கிறார். நானும், அவரும் பேசும் போது, 'பராசக்தி படம் பார்த்த அனுபவத்தை மீண்டும் ஒரு முறை சொல்லுங்க, ப்ளீஸ்...' என்று, கேட்பேன். அவர் சொன்னதை, அவர் வார்த்தையில், இங்கே அப்படியே தருகிறேன்.
ஏ.ஆர்.எஸ்., 'பராசக்தி படம் பார்த்த அனுபவம் குறித்து கூறியது: கடந்த, 1952ல், தீபாவளியை என்னால் மறக்க முடியாத நாள். காரணம், அன்று தான், 'பராசக்தி படம் ரிலீஸ் ஆனது. பாரகன் டாக்கீசில் முதல் நாள், முதல் ஷோ பார்த்த ரசிகர் கூட்டத்தில், நானும் ஒருவன். அந்த நடிகனுக்கு முதல் படமா அது; நம்பவே முடியவில்லை. ரசித்தோம், மகிழ்ந்தோம், பிரமித்தோம்! தமிழ் சினிமாவில், இப்படியெல்லாம் கூட நடிக்க முடியும் என்று, ஒரு பாடமே நடத்தியுள்ளார் பராசக்தி கணேசன்.
தூங்கிக் கொண்டிருக்கும் சிவாஜியை, எஸ்.எஸ்.ராஜேந்திரன் எழுப்புவது தான், அவருக்கு படத்தில் முதல் ஷாட். அப்போது, புரியவில்லை, எழுந்தவர் ஒரு சாதாரண மனிதனல்ல; தன்னுடைய மாபெரும் நடிப்புத் திறமையால், தமிழ்ப்பட சாம்ராஜ்யத்தையே தன் வசமாக்கிக் கொள்ளப் போகிற சக்கரவர்த்தி என்று.
எனக்கு, முன் வரிசையில், பிரபல வீணை விற்பன்னர், நடிகர் மற்றும் டைரக்டர் எஸ்.பாலசந்தர் உட்கார்ந்திருந்திருந்தார். புதுமுகம் கணேசனின் நடிப்பை மிகவும் ரசித்த அவர், 'இந்தப் பையனிடம் (அப்போது, சிவாஜிக்கு 23 வயது இருக்கும்) பிரமாதமான காமெடி சென்ஸ், டைமிங் இருக்கு...' என்றார். சிவாஜியின் வசனத்திலும், குணசித்திர நடிப்பிலும், மனதை பறி கொடுத்திருந்த எனக்கு, அப்போது, அவர் சொன்னது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. ஆனால், பிற்காலத்தில், சிவாஜியின் அனாயசமான ஹாஸ்ய நடிப்பை, கலாட்டா கல்யாணம், சபாஷ் மீனா மற்றும் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி போன்ற படங்களில் பார்த்து, பிரமித்த போது, எஸ். பாலசந்தரின் கண்ணோட்டம் புரிந்தது.
முதல் காதல், முதல் சம்பளம், முதல் பாராட்டு போன்றவைகளுக்கு நிகரானது, நான், முதன் முதலில் அனுபவித்து பார்த்த சிவாஜியின் நடிப்பு.
- இப்படி சிலாகித்து கூறினார் ஏ.ஆர்.எஸ்.,
- தொடரும்.
எஸ்.ரஜத்
dinamalar

gkrishna
3rd December 2013, 12:07 PM
dear kc sir

ungal muyartchi vetri adaya ellam valla andha "ganesa" perumanai vendukiren

regards

gk

Murali Srinivas
4th December 2013, 12:03 AM
நடிகர் திலகத்தின் சிலை அமைந்திருக்கும் இடம் பற்றிய நீதிமன்ற வழக்கும் அதையொட்டி எழுந்துள்ள விவாதங்களும் அனைவரின் மனதையும் மிகவும் புண்படுத்தியிருக்கிறது என்பதோடு இந்த திரியின் வேகத்தையும் மட்டுப்படுத்தி கிட்டத்தட்ட சலனமற்று நிற்கும் ஒரு சூழலையும் உருவாக்கியிருக்கிறது. இப்போதுள்ள மன நிலையில் நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றியோ அல்லது அவை சம்மந்தப்பட்ட விஷயங்களைப் பற்றியோ எழுதுவதற்கு எவருக்கும் விருப்பம் இல்லாமல் இருப்பது புரிந்துக் கொள்ள கூடியதே. இருப்பினும் டிசம்பர் 13-ந் தேதி வரை இப்படி தொடர்வதை தவிர்க்கலாம் என்று தோன்றுகிறது. பெரும் கொண்டாட்டங்களாக இல்லாமல் நடிகர் திலகத்தைப் பற்றிய சேதிகளை பகிர்ந்து கொள்ளலாம். இது ஒரு யோசனையே.

அன்புடன்

J.Radhakrishnan
4th December 2013, 08:38 PM
மாடரேட்டர் அவர்களே,

ரங்கராஜன் நம்பி போன்றவர்களின் பிதற்றல்களை அகற்றியதற்கு மிக்க நன்றி.

J.Radhakrishnan
4th December 2013, 09:20 PM
அன்பு நண்பர்களே,

இன்று மாலை திரு சுப்பு அவர்களுடன் தொலைபேசியில் உரையாடும் போது இரு மகிழ்ச்சியான செய்திகளை கூறினார்.
1)1977ம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வசூலுடன் வெற்றி கண்ட "அண்ணன் ஒரு கோயில்" திரைப்படம் மகாலக்ஷ்மியில் 3 காட்சிகளாக வரும் டிசம்பர் 27 முதல் வெளியாகிறது.

நம் நண்பர்கள் இது தொடர்பான நினைவலைகளை பகிர்த்து கொள்ளலாம். .

2) ஜனவரி தைத்திங்கள் முதல் "தை திரை விழா" என்று நடிகர்திலகத்தின் 7 படங்கள் வெளியாக உள்ளது.

KCSHEKAR
4th December 2013, 09:26 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/Malaimalar_zps2f573b5c.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/Malaimalar_zps2f573b5c.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/16356156_2_zps86169976.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/16356156_2_zps86169976.jpg.html)

venkkiram
4th December 2013, 10:00 PM
With all due respect, Venki, if what you said is really true, then you are not fit to discuss anything on TN Politics at least... Hamid, did you get a chance to read Mr. KCSHEKAR's post "Nakkeeran - Nov30 - Dec03"? Its mentioned there as "இதையடுத்தே அரசின் நிலைப்பாடு மாறியதாக சொல்கிறார்கள் அதிகாரிகள் வட்டத்தில். ". Such matters only I attributed as "உள்நோக்கம்".

KCSHEKAR
5th December 2013, 10:50 AM
ஜூனியர் விகடன் - 08 Dec, 2013

அகலும் சிவாஜி சிலை...?
திரளும் திரையுலகம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிலை வைத்தது சிலருக்குப் பொறுக்கவில்லை. வழக்குப் போட்டார்கள். ''சிவாஜி சிலையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, இருபதுக்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்திருக்கிறது'' என்று அரசாங்கமும் சொல்ல ஆரம்பித்திருப்பது அனைவரையும் கவனிக்க வைக்கிறது. ஊர் உலகப் பிரச்னைக்கு எல்லாம் கருத்துச் சொல்லும் திரையுலகத்தினர் இதில் மௌனம் காத்து வருகிறார்கள். எனவே, நாமே அவர்களிடம் இதுபற்றிக் கேட்டோம்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார்: நடிகர் திலகம் சிவாஜி ஒரு மாபெரும் நடிகர். அவரது சிலை தற்போது இருக்கிற இடத்திலேயே நிலைக்க வேண்டும் என்பது கலைத் துறையில் இருக்கும் பெரும்பாலானவர் கருத்து. அதுவே எனது கருத்து.

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன்: முதலில் அந்த இடத்தில் இருந்து சிவாஜி சார் சிலையை அகற்ற வேண்டாம் என்று சொன்னோம். இப்போது அரசாங்கமே போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது என்று சொல்வதால் நான் தனிப்பட்ட முறையில் எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை.

தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி: சிவாஜி நடிப்பின் இலக்கணம். அவருடைய சிலையை அந்த இடத்தில் இருந்து எடுத்துதான் ஆக வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டால் இன்னொரு மரியாதைக்குரிய இடத்தில் சிலையை நிறுவிச் சிறப்பிக்க வேண்டும்.

ஃபெப்சி அமைப்பின் செயலாளர் 'ஃபெப்சி’ சிவா: நடிகர் திலகம் சிவாஜி தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஏற்கெனவே சிலை நிறுவிய இடத்திலேயே வைத்து அவரது கௌரவத்தை காப்பாற்ற வேண்டும்.

இயக்குநர் ராம நாராயணன்: சிவாஜி சிலை இருக்கும் இடத்தில் விபத்து நடக்கிறது என்பதை நம்ப முடியவில்லை. தமிழ்நாட்டுச் சாலைகளில் விபத்து நடக்கும் இடங்களில் எல்லாம் ஏதாவது சிலை இருக்கிறதா என்ன? அப்படிச் சிலையை எடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்தால் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சிவாஜி சிலையை வைக்கக் கூடாது. மக்கள் திரளாகக் கூடும் இடத்தில் சிவாஜி சிலையை நிறுவி சிறப்பிக்க வேண்டும்.

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்: தமிழ் திரைப்படத் துறையில் வருங்காலத்தில் வருகின்ற சந்ததிகளுக்கு சிவாஜி சிலை அவரது பெருமையை பறைசாற்றும். அப்படிப்பட்ட மகா கலைஞன் சிவாஜி. அவரது சிலையை அந்த இடத்தில் இருந்து நிச்சயம் மாற்றக்கூடாது.

தென்னிந்திய நடிகர் சங்கப் பொருளாளர் நடிகர் வாகை சந்திரசேகர்: தலைவர் கலைஞரைப் பழிவாங்குவதாக நினைத்து அவரது ஆட்சியில் நிறுவிய சிவாஜி சிலையை அகற்ற நினைக்கிறது ஜெயலலிதா அரசு. சிவாஜி சிலை நிறுவுவதற்கு முன்பே அந்த இடத்தின் பக்கத்தில் மணிக்கூண்டு இருந்து வருகிறது. அதனால் இதுவரை ஏதாவது விபத்து நடந்ததா? மணிக்கூண்டால் நடக்காத விபத்து சிவாஜி சிலையால் நடக்கிறது என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

நடிகர் பார்த்திபன்: உண்மையிலேயே அலசி ஆராய்ந்து, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தால் சிவாஜி சிலையை இன்னொரு முக்கியமான இடத்தில் வைப்பது நல்லதுதான். ஆனால், அரசியல் பின்னணி காரணமாக சிலையை அகற்றுவதாக இருந்தால் அது வருத்தத்துக்குரிய விஷயம்

நடிகர் சங்க முன்னாள் செயற்குழு உறுப்பினர் பூச்சி முருகன்: சிவாஜி சிலை விஷயத்தில் நடிகர் சங்கம் அக்கறை இல்லாமல் நடந்துகொள்கிறது. அரசாங்கம் இப்படி முடிவெடுக்கிறது என்றால் முதலில் இவர்கள்தான் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். பல ஆண்டுகளாகியும் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டாமல் புறக்கணித்து வருபவர்கள் இதைப்பற்றி மட்டும் கவலைப்படுவார்களா?

நடிகர் குமரிமுத்து: நாட்டில் பிரச்னைக்குரிய எத்தனையோ சிலைகள் இருக்கின்றன. கடற்கரையில் இருக்கும் எந்தச் சிலையாலும் யாருக்கும் பாதிப்பு இல்லை. தேவை இல்லாமல் சிவாஜி சிலைக்குப் பிரச்னை ஏற்படுத்துகிறார்கள்.

நடிகர் எஸ்.வி.சேகர்: சென்னையில் போக்குவரத்துப் பிரச்னை, பாலம் கட்டும் விஷயம் ஏற்பட்டபோது அண்ணா வளைவை அகற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டது. அப்போது எல்லோரும் அதை எதிர்த்துப் போராடினார்கள். அண்ணாவும், சிவாஜியும் ஒன்றுதான். அதனால் அண்ணா வளைவு விஷயத்தில் அரசு எப்படி முடிவு எடுத்ததோ அதுபோல சிவாஜி சிலை விஷயத்திலும் பரிசீலனை செய்வது நல்லது.

இதே ஆட்சியில்தான் எம்.ஜி.ஆரின் சத்யா ஸ்டுடியோ எதிரில் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு இடத்தை ஜெயலலிதா கொடுத்தார். அப்போது, 'இடத்தை நீங்கள் கொடுத்து விட்டீர்கள். மணி மண்டபத்தை நாங்கள் கட்டுகிறோம்’ என்று நடிகர் சங்கத்தில் சொன்னார்கள். ஆனால், இன்றுவரை அதற்கான முயற்சி எடுக்கவில்லை. மணிமண்டபம் கட்டி, அதன் முகப்பில் இதே சிவாஜி சிலையை வைத்தால் கம்பீரமாக இருக்கும்.

- எம்.குணா

ScottAlise
5th December 2013, 02:43 PM
Happy news: Back to back releases of NT Films


In Kovai NT release in a span of few years started with Raja , pasamalar, gained momentum with Ennai pol Oruvan


Now daily two shows 2.30 & 6.30 PM @ Delite Theatre


Thirumal perumai


To be followed by


Needhi(Apt movie @ this time)

adiram
5th December 2013, 03:00 PM
Happy news: Back to back releases of NT Films

In Kovai NT release in a span of few years started with Raja , pasamalar, gained momentum with Ennai pol Oruvan
Now daily two shows 2.30 & 6.30 PM @ Delite Theatre
Thirumal perumai
To be followed by
Needhi(Apt movie @ this time)

NT fans are not in a happy mood to discuss any other matters except 'Statue Shifting Issue'. So, better avoid such posts here at present.

KCSHEKAR
5th December 2013, 03:49 PM
நடிகர்திலகம் சிலை - ஆர்ப்பாட்டம்.

நடிகர்திலகம் சிலையை அகற்றக்கூடாது என்று வலியுறுத்தி சென்னை மாவட்ட நடிகர்திலகம் சிவாஜி சமுகநலப்பேரவை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது. காவல்துறை அனுமதி 3-ஆம் தேதி இரவுதான் கிடைத்தது. அனுமதி கிடைக்காவிட்டாலும் போராடத் தயாராக இருந்தாலும், காவல்துறை அனுமதி கிடைத்ததன் மூலம் கலந்துகொள்பவர்களுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடைபெற்று முடிந்தது.

சென்னை தவிர தஞ்சாவூர், திருநெல்வேலி, துத்துக்குடி, விருதுநகர், கடலூர், கோவை என பல மாவட்டங்களிலும் இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. அங்கிருந்து பத்திரிக்கை செய்திகள் வந்தவுடன், எல்லாவற்றையும் பதிவிடாமல், ஏதாவது ஒன்றிரண்டை மட்டும் பதிவிடுகிறேன்.

வரும் 7 ஆம் தேதி திருச்சியிலும், 10 ஆம் தேதி மதுரையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன.

IMPLEAD PETITION தயாராகிக் கொண்டிருக்கிறது. 9 அல்லது 10 ஆம் தேதி நீதிமன்றத்தில் SUBMIT செய்துவிடலாம் என்று வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.

நீதி வெல்லும், நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

நன்றி.

Please visit for Chennai Demonstration Video:

http://ulagathamizhmurasu.in/home/

KCSHEKAR
5th December 2013, 04:23 PM
. இருப்பினும் டிசம்பர் 13-ந் தேதி வரை இப்படி தொடர்வதை தவிர்க்கலாம் என்று தோன்றுகிறது. பெரும் கொண்டாட்டங்களாக இல்லாமல் நடிகர் திலகத்தைப் பற்றிய சேதிகளை பகிர்ந்து கொள்ளலாம். இது ஒரு யோசனையே.
அன்புடன்

NT fans are not in a happy mood to discuss any other matters except 'Statue Shifting Issue'. So, better avoid such posts here at present.
திரு. ஆதிராம் சார்,

திரு.முரளி அவர்கள் குறிப்பிட்டிருப்பதைப்போல, திரைப்பட விவாதங்களையும் தொடர்ந்தால் நல்லது என்று கருதுகிறேன். சிலை விவகாரத்தைப் பொறுத்தவரையில் டிசம்பர் 13 என்பது தீர்ப்பு நாள் அல்ல. எனவே அவ்வப்போது சிலை விவகாரம் குறித்தும் செய்திகள் வரும்போது விவாதிக்கலாம் என்பது எனது கருத்து.

திரு. கோபால் சார், 1973 திரை வரிசையைத் தொடங்கி வைத்தால் நலம்.
நன்றி.

Russelldwp
5th December 2013, 08:42 PM
[QUOTE=KCSHEKAR;1094290]நடிகர்திலகம் சிலை - ஆர்ப்பாட்டம்.

நடிகர்திலகம் சிலையை அகற்றக்கூடாது என்று வலியுறுத்தி சென்னை மாவட்ட நடிகர்திலகம் சிவாஜி சமூகணலப் பேரவை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது. காவல்துறை அனுமதி 3-ஆம் தேதி இரவுதான் கிடைத்தது. அனுமதி கிடைக்காவிட்டாலும் போராடத் தயாராக இருந்தாலும், காவல்துறை அனுமதி கிடைத்ததன் மூலம் கலந்துகோல்பவர்களுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடைபெற்று முடிந்தது.

திரு.சந்திரசேகரன் அவர்களே

தங்களுடைய தலைமையில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் சிறப்பாக அமைந்தது குறித்து பேப்பரிலும் T.V யிலும் கண்டேன்.
தங்கள் முயற்சி வெற்றி பெற்று நல்ல நீதி கிடைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

C. Ramachandran.

Gopal.s
5th December 2013, 08:57 PM
சனி கிழமை ஓய்வு கிடைக்க வாய்ப்புள்ளது. தொடங்கி விடுகிறேன்.

Subramaniam Ramajayam
5th December 2013, 10:32 PM
Glad to note Sivaji peravai Demonstration at chennai went off very well and good number of turn outs inspite of short notices. vidieo coverages very good. kindly update more coverages from all centres when done,
all the praises for sivaji peravai and participants.
VASUDEVANS photo coverages and raghavendran;s expert comments follwed by murali-gopal teams expected very much

Gopal.s
6th December 2013, 04:00 PM
but, rasikkum mana nilaiyil rasigargal illai enbadhe unmai.
ரசிகர்கள் ரசிக்கும் மனநிலையில் இல்லையென்றால்,நான் ஒத்தி வைக்கிறேன்.

Russelldwp
6th December 2013, 07:40 PM
https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/p480x480/1497566_1426888114194532_804852328_n.jpg

Russelldwp
6th December 2013, 07:52 PM
https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=4024115803&view=fimg&th=142c8316f0f95591&attid=0.1&disp=inline&realattid=f_hovhxd2c0&safe=1&attbid=ANGjdJ-I_lCM7McyUSeF2DBjeD0hong4K_OrUNdInWzaWRvRR8QmldSEL 50wnRmduSCQo0qp0-FKxfUjOOH7XHnrZwMtWZ_UVZXRWQgKGIT6shHcXIUXWN2Swu36 upY&ats=1386339575914&rm=142c8316f0f95591&zw&sz=w1254-h519

KCSHEKAR
6th December 2013, 08:01 PM
திரு.ராமச்சந்திரன் அவர்கள் நடிகர்திலகத்தின் தீவிரப் பற்றாளர் - திருச்சியில் நடிகர்திலகத்தின் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் இவரைக் காணலாம்.

Gopal.s
7th December 2013, 05:46 AM
thirumbi paar

'thirumbi paar' movie review in eegarai.net.

http://www.eegarai.net/t106442-5#1035817

Gopal.s
7th December 2013, 07:10 AM
காந்தியின் ,ஆப்பிரிக்க இணை நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு,நடிகர்திலகம் திரியின் சார்பாக இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

KCSHEKAR
7th December 2013, 10:26 AM
நடிகர்திலகத்தின் சிலை சம்பந்தமாக திரு.Y .Gee .மகேந்திரா அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி.
இப்போது நம் முன் இருக்கும் கேள்வியே இந்த சிலையை ஏன் அகற்ற வேண்டும் என்பதுதானே தவிர, அகற்றி எங்கு வைக்கலாம் என்பதல்ல.
----------------------------------------------------------------------------------------------------------------------
சிவாஜி சிலை ஒரு யோசனை!
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், சென்னையிலிருந்து, எழுதுகிறார்

சென்னையில் வாழும், ஒரு சிவாஜி பித்தனின் பணிவான மடல். நடிகர் திலகம் சிவாஜி சிலையை, இடமாற்றம் செய்ய சொல்லும் காரணங்கள், ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை. ராதாகிருஷ்ணன் சாலையிலிருந்து, வலப்புறம், கடற்கரை சாலையில் திரும்புவோருக்கு, சிலை ஒரு தடங்கல் இல்லை. கடற்கரை சாலையிலிருந்து, ராதாகிருஷ்ணன் சாலையில், வலப்புறம் திரும்புவோருக்கும், சிலை ஒரு தடங்கல் இல்லை. சிலையை தாண்டி தான், 'டிராபிக் ஐலேண்ட்' உள்ளது. சாந்தோம் சாலையில் இருந்து, இடப்புறம், ராதாகிருஷ்ணன் சாலையில் திரும்புவோருக்கும், சிலை ஒரு தடங்கல் இல்லை. அங்கு, எல்லா திசைகளுக்கும், சிக்னல் உள்ளது. சிக்னலை மீறுவோருக்கும், குடித்து விட்டு ஓட்டுபவர்க்கும் (இவர்கள் சட்டத்தை மதியாதவர்கள்) இடையூறாக இருக்கலாம். சட்டத்தை மதிக்காதவர்களுக்காக, சிலையை இடமாற்றம் செய்ய கூறுவது, விரும்பத்தக்க நிகழ்வு அல்ல. மேலும், சிவாஜி சிலையின் இடமாற்ற செய்திகள், ஏதோ, சட்டத்திற்கு புறம்பான கட்டடத்தை அகற்றுவது போல் வெளிவருவது, மனதை உறுத்துகிறது. சிவாஜி வாழ்ந்த சமயம், முன்னாள் ஐ.ஜி., பரமகுருவின் தயாரிப்பில், போலீசின் பெருமைகளை எடுத்துக் காட்டும் வண்ணம், 'உங்கள் நண்பன்' என்ற ஒரு குறும்படத்தில், நடித்துக் கொடுத்தார். 'போலீஸ் என்பவர், சட்டத்திற்கு புறம்பாக நடக்கும், தன் சொந்த மகனையே தண்டிக்கும் நேர்மை உடையவர்கள்' என்று, போலீசாரின் மதிப்பை, இமயத்துக்கு உயர்த்தும் வண்ணம், தங்கப்பதக்கம் படத்தில் சித்தரித்துக் காட்டியவர். எல்லாவற்றையும் மீறி, சிலையை அகற்றி தான் தீர வேண்டும் என்ற நிலை ஏற்படின், இதோ என் பணிவான வேண்டுகோள்... சிவாஜியின் பெயர், எக்காலத்திற்கும் நிலைக்கும் வண்ணம், அவர் வீடு உள்ள வீதிக்கு, அவர் பெயரை சூட்டினார், முதல்வர் ஜெ., அங்கே இருக்கும் ம.பொ.சி., திருவுருவச் சிலையை, அவர் வாழ்த்திய தமிழறிஞர்களின் சிலைகள் அமைந்த, மெரீனா கடற்கரையில் நிறுவி, அந்த இடத்தில், சிவாஜியின் சிலையை நிறுவலாமே. கம்பனும், பாரதியும், வீரமாமுனிவரும் கம்பீரமாக நிற்கும், அந்த கடற்கரை ஓரம் நிற்பது தான், சிலம்புச் செல்வர் மா.பொசி.,க்கு பெருமை. தன் வாழ்நாளை கம்பீரமாக கழித்த, அந்த சிவாஜி, சாலையின் நுழைவில் நிற்பது தான், நடிகர் திலகத்திற்கு பெருமை. இந்த சிவாஜி பித்தனின் எண்ண ஓட்டங்கள், போக்குவரத்துத் துறை ஆணையரின் ஒப்புதலைப் பெறும் என்று நம்புகிறேன்.

06.12.2013 தேதியிட்ட தினமலர் நாளிதழிலிருந்து...
இணைப்பு
http://www.dinamalar.com/splpart_detail.asp?id=67

Facebook Link
https://www.facebook.com/vee.yaar/posts/641540642563278?comment_id=6080624&notif_t=like
----------------------------------------------------------------------------------------------------------------------

தற்போது சிலை இருக்குமிடத்திலிருந்து மாற்றக்கூடாது. முதலில் உண்மையிலேயே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மற்ற சிலைகளையெல்லாம் அகற்றிவிட்டு அப்புறம் நடிகர்திலகம் சிலையை அகற்றுவது குறித்து பேசினால் நன்றாக இருக்கும்.

தற்போது ம.பொ.சி. சிலை இருக்குமிடம் ஏற்கனவே போக்குவரத்து நெருக்கடி உள்ள இடம் என்பது குறிப்படத்தக்கது.

HARISH2619
7th December 2013, 01:23 PM
Dear mr adiram,
each and every nt fan has a right to have his own opinion.please mind your words

HARISH2619
7th December 2013, 01:47 PM
This is from raghavendra sir website

eweaxagayx
7th December 2013, 08:19 PM
I am an ardent fan of Nadigar Thilagam and have been reading the postings of various NT Fans and am liked to read the postings of M/s.Raghavendra, Neiveli Vasudevan, Murali Srinivas,Gopal and others.

All these I am reading only the postings of others I have tried to use this forum to ink my thoughts in this forum. Just this is only a test message.

Russelldwp
7th December 2013, 09:38 PM
இந்த திரிக்கு புதியதாய் வந்திருக்கும் அன்பு நண்பர் திரு.n.v. Raagavan அவர்களே வருக வருக
தாங்கள் இருக்கும் ப்குதியில் நமது நடிகர் திலகத்தின் செய்திகளை இனிதே தருக

Gopal.s
8th December 2013, 07:05 AM
எனக்கு ஒன்று புரிவதேயில்லை.புரியவும் இல்லை.

நமக்குள் வரும் கருத்து மோதல்களை விடுங்கள்.தெளிவான ரசிகர்களை கொண்டதால் விளையும் முரண்,அது சார்ந்த கர்வங்கள்,மான பிரச்சினைகள்.இது குடும்பத்துள் அண்ணன் தம்பி பிரச்சினை.இது ஒரு ஆரோக்கியமான சுவாரஸ்யம் நிறைந்த செல்ல மோதல்கள்.

ஆனால் இங்கு நம் திரிக்கு மட்டும் சந்தேகமான நபர்கள் வந்து அதை செய்,இதை செய்யாதே என்று குழப்பம் விளைவிப்பது.பல நகைப்புக்கிடமான விஷயங்கள்,மூட தனங்கள் நிறைந்த இடங்களில் யாரும் சென்று எதையும் சொல்லாத போது நமக்கு மட்டும் என் இந்த கட்டுப்பாடுகள்,சட்ட திட்டங்கள்?பதிவர்களை அவமான படுத்தி திட்டமிட்டு விரட்டுவது போன்ற திரிசம வேலைகள்?

என்னை,ராகவேந்தரை,வாசுவை,முரளியை ,கார்த்திக்கை விடுங்கள்.நாங்கள் போட்டு கொள்ளாத சண்டைகள் இல்லை,விவாதங்கள் உண்டு.ஆனாலும் தெளிவாக சில விஷயங்கள் உண்டு.

1)நாங்கள் அனைவருமே பங்களிப்பாளர்கள்.
2)திரிக்கு சுவை கூட்டி,மெருகேற்றி,பார்வையாளர்களை ஈர்த்து,நடிகர்திலகத்தை பற்றி மேலும் புரிந்து கொள்ள உதவும் குழு.
3)எங்கள் நோக்கம் ஒன்றே ஒன்று.-நடிகர்திலகம் மட்டுமே பிரதானம்.
4)எங்கள் அனைவரிடமே,சொல்ல விஷயங்கள் இன்னும் உண்டு.மெருகேற்றி ,சுவையாக,creative ஆக செய்யும் திறம் உண்டு.

இதில் எங்கே வந்தது ஆக்ரமிப்பு? எங்களுக்கு மட்டும் என் ஆயிரம் கட்டளைகள்,நிர்பந்தங்கள்?

அதுவும் ,பங்களிப்பாளர் அல்லாத மற்றவர்களிடம் இருந்து?

வாசு மற்றும் என் போன்றவர்கள் நொந்து வெளியேறுவதால் திரிக்கு நன்மை உண்டா?வேறு யாரேனும் எங்கள் இடத்தை எடுத்து கொண்டு பணியாற்றினால் மகிழ்ச்சியே.ஆனாலும் அதுவும் நேர்வதாக தெரியவில்லை.

சரி.கொஞ்சம் சுவை கூட்டலாம் என்று பார்த்தால் ஒரு முக்கிய நண்பர் வந்து நாங்கள் ரசிக்கும் மனநிலையில் இல்லை என்கிறார். சிவாஜியை பற்றி சொல்வதற்கும் ,சுவைப்பதற்கும் என்னைய்யா மனநிலை?கோவிலுக்கு செல்லும் மனநிலைதானே?சுகம்,துக்கம் இரண்டிலும் ஆசுவாசம் தர கூடியதுதானே?
மன வருத்தத்துடனே பதிவு செய்கிறேன்.

வாசு,ராகவேந்தர்,கார்த்திக்,முரளி,சாரதி போன்றவர்கள் உடனே வருவது,நாம் கட்டி காத்த கோயில் பாழடையாமல்,திருப்பணி செய்வதற்கு ஒப்பானது.வாருங்கள்.என் அன்பு வேண்டுகோள்.

Gopal.s
8th December 2013, 07:08 AM
Dear Mr.N.V.Ragavan,
You are most welcome to participate and pen your views.

Gopal.s
8th December 2013, 07:15 AM
பம்மலார் ,விரைவில் நமது நூலை கொண்டு வர ,நூறு நிச்சய முன் பதிவுகளாவது எதிர்பார்க்கிறார். நம் திரி பார்வையாளர்களில் பத்தில் ஒருவர் ,committed Fan என்று கணக்கிட்டாலும்,அந்த நூறு முற்று பெற்றிருக்க வேண்டுமே?செய்வீர்களா?அந்த தெய்வ தேவர் திருமகனுக்கு,தமிழகமே கடன் பட்டுள்ளதே?நம் ரசிகர்களாவது,அந்த கடனில் சிறு பகுதியை நேர்த்தியாக செலுத்தாலாமே?

KCSHEKAR
8th December 2013, 05:15 PM
திரு.n .v .ராகவன் அவர்களே வருக!

தங்கள் அனுபவப் பதிவுகளைத் தருக.

KCSHEKAR
8th December 2013, 05:31 PM
நமக்குள் வரும் கருத்து மோதல்களை விடுங்கள்.தெளிவான ரசிகர்களை கொண்டதால் விளையும் முரண்,அது சார்ந்த கர்வங்கள்,மான பிரச்சினைகள்.இது குடும்பத்துள் அண்ணன் தம்பி பிரச்சினை.இது ஒரு ஆரோக்கியமான சுவாரஸ்யம் நிறைந்த செல்ல மோதல்கள்..

வாசு,ராகவேந்தர்,கார்த்திக்,முரளி,சாரதி போன்றவர்கள் உடனே வருவது,நாம் கட்டி காத்த கோயில் பாழடையாமல்,திருப்பணி செய்வதற்கு ஒப்பானது.வாருங்கள்.என் அன்பு வேண்டுகோள்.
திரு.கோபால் சாரின் கருத்தில் உடன்படுகிறேன். என்னுடைய வேண்டுகோளையும் இணைத்துக்கொள்கிறேன்.

eweaxagayx
8th December 2013, 08:35 PM
நான் உட்பட எங்கள் நண்பர்கள் குழாம் எல்லோரும் சேர்ந்து 1972/73 ஆம் ஆண்டு வாக்கில் சென்னை சைனாபஜார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலையை ஒட்டியுள்ள தேரடி வீதியில் நடிகர்திலகம் அவர்களின் பெருமையைக் கொண்டாட " ப்ரஸ்டிஜ் சிவாஜி ரசிகர் மன்றம் " என்ற பெயர் கொண்டு பல ஆண்டுகள் சிறப்பாக நடத்திவந்தோம்.

அவ்வமயம் சென்னை ஆர்மினியன் தெருவிலுள்ள கோகலே ஹாலில் நடிகர்கள் மேஜர் சுந்தர்ராஜன், ஸ்ரீகாந்த் மற்றும் நவசக்தி பத்திரிகையின் செய்தியாளர் நவசக்தி ராகவன் அவர்கள் மூலம் ந்டிப்பின் இமயத்தைப் போற்றி ஒரு சிறப்பு மலர் வெளியிட்டோம். மேலும் அப்பொழுது ப்ரபலமாகாத இளையராஜாவின் அண்ணன் பாஸ்கர் அவர்களை அழைத்து ஒரு இசைக் கச்சேரியும் நடத்தினோம். மிகச் சிறப்பாக நடைபெற்ற அந்த விழாவினை இப்பொழுது நினைத்தாலும் மிகவும் இன்பமாக இருக்கும். கோகலே ஹால் முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதி நிரம்பி வழிந்தது.

நிகழ்ச்சி நடந்த மறுநாள் நடிகர்திலகத்திடம் நிகழ்ச்சிபற்றி விவரித்த பொழுது எங்களைப் பாராட்டி ஊக்குவித்தார். அப்பொழுது உடனிருந்த மேஜர் அவர்களும் அந்த நிகழ்ச்சி பற்றி அவரிடம் சொல்லி எங்களையும் பாராட்டினார்.

பிறகு நண்பர்கள் அலுவல் காரணமாக பிரிய நேரிட்டதால் எங்களால் மன்றத்தைத் தொடர முடியாமல் போனது. இருந்தாலும் நாங்கள் எங்கிருந்தாலும் நடிகர் திலகத்தின் படத்தினை வெளியாகும் நாளில் அதுவும் முதல் காட்சியிலேயே பார்த்துவிடுவோம்.

நான் பணிபுரிந்த டிவிஎஸ் நிறுவனத்தில் என்னுடைய மேனேஜர் நான் ஒருநாள் விடுப்பு எடுத்திருந்தால் மறுநாள் என்னிடம் நேற்று ஏன் நீ வேலைக்கு வரவில்லை ? என்ன சிவாஜி படம் ரிலீஸ் ஆகி இருந்தது என்று கேட்பார். அது மட்டுமில்லாது இனிமேல் படம் பார்ப்பதற்கு என்று நீ விடுப்பு எடுத்தால் உனக்கு லீவு கிடையாது. அன்றுடன் நீ வேலையை விட்டு போக வேண்டியதுதான் என்று கூறுவார். இருந்தாலும் அடுத்த படம் ரிலீஸ் ஆகும்போதும் விடுப்பு எடுத்து படம் பார்க்க சென்று விடுவேன். அநத இளவயது நாட்களும் நடிகர் திலகத்தின் ந்டிப்பை அணு அணுவாக ரசித்ததையும் இன்று அவர் இருந்து வருடத்திற்கு ஒருபடமாவது அளித்து மகிச்சிக்கடலில் ஆழ்த்தமாட்டாரா என்று ஏங்குவதையும் வார்த்தையில் விவரிக்க இயலவில்ல்லை.

sivaa
9th December 2013, 01:19 AM
நான் சுவாசிக்கும் சிவாஜி! (10) - ஒய்.ஜி. மகேந்திரா!

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2013,00:00 IST

எங்களது, 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' நாடகத்தின், நூறாவது நாள் விழாவிற்கு, சிவாஜி தலைமை வகித்தார். அந்த நாடகத்தில், சேஷப்பா என்கிற சவடால் பேர்வழியாக, ஏ.ஆர்.எஸ்., நடித்திருப்பார். அதில் வரும் நகைச்சுவை, சிவாஜிக்கு ரொம்ப பிடிக்கும். எங்கள் இருவரையும் பார்க்கும் போதெல்லாம், 'டேய், அந்த ரிகார்டு ஜோக்கை, ஒரு தரம் சொல்லேன்...' என்று கேட்பார்.
அந்த, தமாசு இது தான்:
ஒரு பாகவதர், ஏ.ஆர்.எஸ்.,சிடம் (சேஷப்பா), கோவில் திருவிழாவில் பாடுவதற்கு சான்ஸ் கேட்பார்.
'இல்ல. நாங்க ரிகார்டு வைக்கப் போறோம்...'
'ரிகார்டு வைக்கிற இடத்தில், என்னை வைக்க கூடாதா?' என்று, பாகவதர் கேட்பார்.
'சீ...சீ அந்த இடத்தில உன்னை வைச்சா ஊசி கிழிச்சிடும்...'
சிவாஜிக்கு, ஒரு தனிச் சிறப்பு உண்டு. 'மாஸ்' என அழைக்கப்படும், எளிய ரசிகர்களும் சரி, 'கிளாஸ்' என்று கூறப்படும், மேல்தட்டு ரசிகர்களும் சரி, இந்த இரு வகையினரையும், அவரால், முழுமையாக கவர முடியும்.
சிவாஜி காலமான பின், 'பாரத் கலாச்சார்' அமைப்பு வெளியிட்ட, 2001ம் ஆண்டு மலரில், நான் குறிப்பிட்டது, நினைவுக்கு வருகிறது, 'பார்வதி தேவி, சிவாஜியை, கைலாயத்தில் பார்த்து, சிவபெருமானே வந்து விட்டார் என்று நினைப்பதாகவும், அந்த காட்சியை பரமசிவனே ரசிப்பது போலவும்' குறிப்பிட்டிருந்தேன்.
உண்மை தான். தேச பக்தர்களை, பாரதம் போற்றும் தலைவர்களை, எந்த அளவு அவர் நமக்கு அறிமுகம் செய்திருக்கிறாரோ, அந்த அளவு, புராண பாத்திரங்களில் சிவனாக, பெருமாளாக, நாரதராக இன்னும் எத்தனையோ சிவனடியராக, பெருமாள் பக்தராக நடித்து, நம்மை அசத்தி இருக்கிறார்.
இதே போல், சமுதாயத் தில் உயர் மட்டத்தில் இருக் கும் பல பாத்திரங்களை அவர் செய்திருப்பதால், உயர் மட்டத்தில் இருப் போருக்கும் அவரை பிடிக்கும். மும்பையில் நான் கண்கூடாக பார்த்த, சுவையான அனுபவத்தை, இங்கு குறிப்பிடுகிறேன்.
மும்பையில் உள்ள, ஷண்முகானந்தா சபா, அனைவரும் அறிந்த ஒன்று. நிறைய இருக்கைகள் கொண்ட, பெரிய அரங்கு. நாடகம் போட வரும் கலைஞர்களுக்கு, அங்கேயே தங்கிக் கொள்ளவும் வசதி உண்டு. ஷண்முகானந்தா ஹாலை உருவாக்கி, பம்பாய் நகர மக்களுக்கு அர்ப்பணித்தவர் ஒரு பிரபல தமிழர்.
அந்த அரங்கில், எங்கள், யு.ஏ.ஏ., குழுவின் நாடக விழா நடந்து கொண்டிருந்தது. அங்கு, பொதுவாக நாடகங்கள் இரவு, 8:00 மணிக்கு ஆரம்பமாகும். இந்நிலையில், எங்கள் அறையில், நாங்கள் இருந்த போது, ஒரு வட மாநில சிறுவன் வந்து, 'கோன் ஒய்.ஜி.,?' (யார் ஒய்.ஜி.,) என்று கேட்டான்.
'நான் தான்...' என்றேன்.
'கோயி சிவாஜி கணேசன் புலாதா ஹை...' (யாரோ சிவாஜி கணேசனாம்... டெலிபோனில் அழைக்கிறார்) என்றான்.
சிவாஜியிடமிருந்து போன் என்றதும், ஆடிப் போய் விட்டேன். யாரோ கிண்டல் செய்கின்றனர் என்று தான், முதலில் நினைத்தேன். தயக்கத்துடன் போனை எடுத்தால், கம்பீரமான குரலில், 'என்னடா பண்றே பம்பாயிலே...' என் றார் சிவாஜி.
'சார் நீங்களா...' என்றேன் தயக்கத்துடன்
'நீ, எங்கே போனாலும் மடக்கிட்டேன் பார்த்தாயா... இந்தியன் எக்ஸ்பிரஸ் ரங்க நாதன், இன்னிக்கு, உன் டிராமா இருக்குன்னு சொன்னான்...' என்றவர், கிண்டலாக, 'சென்னையில ஆடியன்சை கெடுத்தது போதாது என்று, பம்பாயிலும் கெடுக்க போயிட்டீயா...சரி டிராமா எட்டு மணிக்கு தானே... நான் லீலா பேலஸ்லிலே இருக்கேன். வந்து பார்த்துட்டு போ.... தனியாக வராதே. சோட்டாவையும் கூட அழைத்து வா...' என்றார். சோட்டா என்று, அவர் குறிப்பிட்டது, எங்கள் குழுவின் காமெடி நடிகர் சுப்புணியை. அவர் கொஞ்சம் குள்ளமாக இருப்பார்.
சிவாஜி கூப்பிட்டு இருக்கிறாரே என்று, அரக்க பரக்க சுப்புணி, நான், மற்றும் எங்க மானேஜர் கண்ணன் போன்றோர் ஆட்டோ பிடித்துக் கிளம்பினோம்.
ஏழு நட்சத்திர ஓட்டலின் பெரிய பிரமாண்டமான அறையில், (அப்போது அதுதான் பெரிய ஸ்டார் ஓட்டல்) சிம்மாசனம் போன்ற சோபாவில், சிவாஜி உட்கார்ந்திருந்தார்; அருகே, மற்றொரு இருக்கையில், கமலாம்மா. சிவாஜி உட்கார்ந்திருந்த சோபாவுக்கு அருகே, தரையில், கார்ப்பெட்டில், நன்றாக உடை அணிந்திருந்த ஒரு நபர் உட்கார்ந்திருந்தார். 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ரங்கநாதனை தெரியுமென்பதால், அவருக்கு வணக்கம் சொன்னேன். அருகே இருந்த சோபாவில், எங்களை உட்கார சொன்னார் சிவாஜி.
தரையில் கார்ப்பெட்டில் அமர்ந்திருப்பவரை காட்டி, 'இவர் யார் தெரியுமா?' என்று, கேட்டார் சிவாஜி.
'தெரியலையே சார். உங்க ரசிகரோ...' என்று, கேட்டேன்.
'ரசிகர் தான். ஆனால், அதை விட, முக்கியமானது, இவர் தான் இந்த லீலா பேலஸ் ஓட்டலுக்கு, சொந்தக்காரர்...' என்றார்.
ஏழு நட்சத்திர ஓட்டல் அதிபர், தரையில் அமர்ந்திருக்க, நாங்கள் சோபாவில் அமர்ந்திருப்பது சங்கடத்தை ஏற்படுத்த, நானும், சுப்புணியும் எழுந்து நின்றோம். நான் ஓட்டல் உரிமையாளரான நாயரைப் பார்த்து, 'சோபாவிலே வந்து உட்காருங்க...' என்றேன்.
மலையாளம் கலந்த தமிழில், 'எனக்கு இந்த இடம் போதும். ஞான் சாரிண்ட பரம ரசிகனானு. கட்டபொம்மன் படம் எத்தர டயம் நோக்கிட்ட உண்டு...' என்றதும், எனக்கு பேச்சே வரவில்லை.
எங்கள் நாடக குழுவில், சிவாஜிக்கு மிகவும் பிடித்த நடிகர் சுப்புணி தான். டிராமா பார்க்க வருவதற்கு முன், 'அவன், இந்த டிராமாவிலே இருக்கானா?' என்று தான், முதலில் கேட்பார்.
என் மகள் மதுவந்தியின் திருமணத்திற்கு, சிவாஜி வந்த போது சுப்புணியும், நானும் அவரை வரவேற்றோம். அப்போது நாங்கள், 'டிவி'யில் செய்து கொண்டிருந்த, 'மிஸ்டர் ட்ரெயின் மிஸ்டர் ப்ரெயின்' தொடரில், சுப்புணி வில்லனாக நடித்திருப்பார். சிவாஜி அந்த, 'டிவி' தொடரை சுட்டிக் காட்டி, 'சுப்புணி... வில்லனாக, வக்கீல் பாத்திரத்தில் நன்றாக செய்திருக்கேடா...' என்றார். சுப்புணிக்கு சந்தோஷப்படுவதா, நெகிழ்வதா தெரியவில்லை. அடுத்து, உடனே, சிவாஜி தனக்கே உரித்தான பாணியில்,
'டேய் சுப்புணி... இப்படி ஒரு வக்கீல் ரோல், நீ பண்ணப் போறேன்னு தெரிந்திருந்தால், கவுரவம் படத்தில், பாரிஸ்டர் ரஜனிகாந்த் ரோலை, நான் பண்ணியிருக்க மாட்டேன்...' என்றார்.
அனைவரும் சிரித்தோம்; சிவாஜியும் சிரித்தார்.
பாராட்டுவதற்கு ஒரு மனம் வேண்டும்; அது சிவாஜியிடம் தாராளமாக இருந்தது.
மிகவும் அதிகமான இசைக்கருவிகள் வைத்து, புதியபறவை படத்திற்காக, எம்.எஸ்.விஸ்வநாதன் ரிகார்டிங் செய்த பாடல், 'எங்கே நிம்மதி...'
அறுபதுக்கும் மேற்பட்ட வயலின்களை, இசைக் கலைஞர்கள் வாசித்தனர். ரிக்கார்டிங் தியேட்டரில் அனைவருக்கும் இடம் இல்லாமல், தியேட்டருக்கு வெளியே பிரத்யேக இடம் அமைத்து, அதில், பல இசைக்கலைஞர்களை உட்கார வைத்து ரிகார்டிங் நடத்தினர்.
அதேபோல, மிகவும் குறைந்த அளவு இசைக்கருவிகள் வைத்து, அதாவது, மொத்தமே மூன்று தான். புல்லாங்குழல், தபலா, எபெக்ட் தரும் கருவி ஆகிய மூன்றை மட்டும் வைத்து, ரிகார்டிங் செய்யப்பட்ட பாடல். 'தாழையாம்பூ முடிச்சு'...' என்ற பாடல். பாகப் பிரிவினை படத்தில் இடம் பெற்ற இப்பாடலை பாடுவதற்கு, ரிகார்டிங் தியேட்டருக்கு வந்த டி.எம்.சவுந்திரராஜன், இசைக்கருவிகள் அதிகம் இல்லாமல் இருந்ததை பார்த்து, 'இன்னிக்கு ரிகார்டிங் இல்லையா?' என்று கேட்டார். மொத்தமே, மூன்று இசைக்ருவிகள் தான் என்று அவருக்கு விளக்கிய போது, ஆச்சரியப்பட்டார். மிகவும் அதிகமான கலைஞர்கள் பங்கெடுத்த, 'எங்கே நிம்மதி' பாடலும், மிகக் குறைந்த இசைக்கருவிகள் உபயோகப்படுத்தப்பட்ட, 'தாழயாம் பூ முடிச்சு' பாடலும், சூப்பர் ஹிட் பாடல்கள்.
சிவாஜியின் சிறந்த நடிப்பால், எம்.எஸ்.வி.,யின் சிறந்த இசையால், டி.எம்.சவுந்திரராஜனின் கம்பீர குரலால், இன்றும் அந்த பாடல்கள் நம் மனதில் நிற்கின்றன.
- தொடரும்.
எஸ்.ரஜத்
dinamalar

Gopal.s
9th December 2013, 09:29 AM
சரி.இப்படியே போனால் முடிவெங்கே? நடிகர்திலகத்திற்காக எதையும் இழக்க தயார் என்று எண்ணும் பக்தனாக ,மற்றவர் போல வசந்தமாளிகை லதா ரேஞ்சில் சுய கெளரவம் பார்த்து கொண்டிராமல், என் பணியை தொடர போகிறேன். ராஜ பார்ட் ரங்கதுரை ,நமது கூத்து நாடக கலை,பாய்ஸ் கம்பெனி தொடர்பானதால்,அவற்றை பற்றி விஸ்தாரமாக எழுதி விட்டு,ராஜபார்ட் ஆய்வுடன் என் 1973 பணி தொடங்கும்.

sankara1970
9th December 2013, 01:24 PM
[QUOTE=sivaa;1094811]நான் சுவாசிக்கும் சிவாஜி! (10) - ஒய்.ஜி. மகேந்திரா!


மலையாளம் கலந்த தமிழில், 'எனக்கு இந்த இடம் போதும். ஞான் சாரிண்ட பரம ரசிகனானு. கட்டபொம்மன் படம் எத்தர டயம் நோக்கிட்ட உண்டு...' என்றதும், எனக்கு பேச்சே வரவில்லை.
எங்கள் நாடக குழுவில், சிவாஜிக்கு மிகவும் பிடித்த நடிகர் சுப்புணி தான். டிராமா பார்க்க வருவதற்கு முன், 'அவன், இந்த டிராமாவிலே இருக்கானா?' என்று தான், முதலில் கேட்பார்.
என் மகள் மதுவந்தியின் திருமணத்திற்கு, சிவாஜி வந்த போது சுப்புணியும், நானும் அவரை வரவேற்றோம். அப்போது நாங்கள், 'டிவி'யில் செய்து கொண்டிருந்த, 'மிஸ்டர் ட்ரெயின் மிஸ்டர் ப்ரெயின்' தொடரில், சுப்புணி வில்லனாக நடித்திருப்பார். சிவாஜி அந்த, 'டிவி' தொடரை சுட்டிக் காட்டி, 'சுப்புணி... வில்லனாக, வக்கீல் பாத்திரத்தில் நன்றாக செய்திருக்கேடா...' என்றார். சுப்புணிக்கு சந்தோஷப்படுவதா, நெகிழ்வதா தெரியவில்லை. அடுத்து, உடனே, சிவாஜி தனக்கே உரித்தான பாணியில்,
'டேய் சுப்புணி... இப்படி ஒரு வக்கீல் ரோல், நீ பண்ணப் போறேன்னு தெரிந்திருந்தால், கவுரவம் படத்தில், பாரிஸ்டர் ரஜனிகாந்த் ரோலை, நான் பண்ணியிருக்க மாட்டேன்...' என்றார்.
அனைவரும் சிரித்தோம்; சிவாஜியும் சிரித்தார்.
பாராட்டுவதற்கு ஒரு மனம் வேண்டும்; அது சிவாஜியிடம் தாராளமாக இருந்தது.

ரசித்தேன்.

சிறிய நடிகர்களையும் பாராட்டும் பெரும் மனது படைத்தவர் நம் சிவாஜி

sankara1970
9th December 2013, 01:27 PM
பம்மலார் ,விரைவில் நமது நூலை கொண்டு வர ,நூறு நிச்சய முன் பதிவுகளாவது எதிர்பார்க்கிறார். நம் திரி பார்வையாளர்களில் பத்தில் ஒருவர் ,committed Fan என்று கணக்கிட்டாலும்,அந்த நூறு முற்று பெற்றிருக்க வேண்டுமே?செய்வீர்களா?அந்த தெய்வ தேவர் திருமகனுக்கு,தமிழகமே கடன் பட்டுள்ளதே?நம் ரசிகர்களாவது,அந்த கடனில் சிறு பகுதியை நேர்த்தியாக செலுத்தாலாமே?[/B][/SIZE]

என்னுடைய ஆதரவும் வாழ்த்துக்களும் உண்டு !

Richardsof
9th December 2013, 01:28 PM
RARE PIC - NT WITH FORMER MINISTER RAJARAM
http://i40.tinypic.com/2u5x2jn.jpg

sankara1970
9th December 2013, 01:28 PM
welcome to thread dear Ragavan

Murali Srinivas
9th December 2013, 03:52 PM
நமது நடிகர் திலகம் திரிக்கு புதிய வரவாக வருகை தந்திருக்கும் திரு ராகவன் அவர்களை

நல்ல இடம் நீங்கள் வந்த இடம்

என்று சொல்லி வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். 1970-களின் முதல் பகுதி என்ற பொற்கால நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளின் சம்பவக் கோர்வையை வைத்து பதிவிட தொடங்கியிருக்கும் உங்களுக்கு வாழ்த்துகள். இது போன்ற பகிர்தல்களையும் மேலும் எதிர்பார்க்கும்

அன்புடன்

Murali Srinivas
9th December 2013, 04:11 PM
உண்மை உணரும் நேரம் - 2

இன்றைய காலக்கட்டத்தில் தமிழகத்தின் அரசியல் வரலாறாக இருந்தாலும் சரி திரையுலக வரலாறாக இருந்தாலும் சரி, அதைப் பற்றிய உண்மை தகவல்கள் யாருமே எழுதுவதில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அந்தக் காலகட்டத்தைப் பற்றிய சரியான தகவல்கள் பெரும்பாலோனோருக்கு தெரியாது எனபது ஒன்று. சரியான தகவல்கள் தெரிந்த மிக குறைவான சிலரும் சில தனிப்பட்ட லாப நோக்கங்களுக்காகாவோ அல்லது சுய விருப்பு வெறுப்பின் அடிப்படையிலோதான் அதை எழுதுகிறார்கள். நமது நடிகர் திலகத்தை பொறுத்தவரை மிக தவறான தகவல்கள்தான் பெரும்பான்மையாக எழுதப்படுகிறது. ஆகவே பழைய விஷயங்களைப் பற்றி பேசும்போது நமக்கு உண்மை நிலவரங்கள் மற்றவர்கள் மூலம் கிடைப்பதில்லை.

சில மாதங்களுக்கு முன் நமது ஹப்பிலேயே நடிகர் திலகம் பற்றிய ஒரு பதிவு வெளியாகியிருந்தது. ஒரு புத்தகத்தில் வெளியாகியிருக்கும் தகவல் என குறிப்பிட்டு எழுதியிருந்தார்கள். விஷயம் என்னவென்றால் நடிகர் திலகம் தன் பிறந்த நாளை திருச்சியில் கொண்டாடப் போவதாக செய்தி வந்ததாம். சிவாஜி படங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் கோபத்துடன் இருந்த எம்.ஆர்.ராதா அவர்கள் இதை படித்தவுடன் மிகுந்த ஆத்திரமுற்று இதற்கு எதிராக அறிக்கை விடப் போவதாக சொல்லிக் கொண்டிருந்தாராம். இதை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் அவர்கள் உடனே ராதாவின் தனிப்பட்ட ஒப்பனையாளர் கஜபதி அவர்களை அழைத்து அப்படியெல்லாம் செய்ய வேண்டாம் என்று தான் சொன்னதாக ராதாவிடம் சொல்ல சொன்னாராம். அப்போது எம்.ஜி.ஆருக்கும் ராதாவிற்கும் நல்லுறவு இருந்த காரணத்தினால் ராதா திருச்சி விழாவை தாக்கி விட இருந்த அறிக்கையை வெளியிடவில்லையாம்.

நான் பல வருடங்களாக பல முறை கவனித்து வந்திருக்கும் நிகழ்வு என்னவென்றால் பழைய வரலாற்றை எழுதும் பலரும் உண்மை நிலவரம் தெரியாமல் எழுதுவதால், எழுதப்படும் விஷயம் சரியா? லாஜிக் இருக்கிறதா? காலப் பிரமாணம் என்று சொல்வார்களே அதன்படி நாம் எழுதும் விஷயம் ஒத்துப் போகிறதா என்றெல்லாம் யோசிக்காமல் எழுதி விடுகிறார்கள். சிலர் தங்கள் அபிமானத்துக்குரியவரை புகழ்ந்து எழுத வேண்டும் என்பதற்காக தவறான தகவல்களை அள்ளி விடுவார்கள்.

நாம் இனி மேற்சொன்ன விஷயத்திற்கு வருவோம். அதில் உள்ள லாஜிக் ஓட்டைகள், கால பிரமாண ஓட்டைகளை பார்ப்போம்.

சிவாஜி படங்களில் ராதாவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை இதை முதலில் எடுத்துக் கொள்வோம்.

எம்.ஆர்.ராதா அவர்கள் 1930-களின் இறுதியில் திரையுலகில் நுழைந்தார். சின்ன சின்ன வேடங்களே கிடைத்தால் மீண்டும் நாடக மேடைக்கே திரும்பி சென்ற அவர் மீண்டும் 1954-ல் ரத்தக்கண்ணீர் திரைப்படம் மூலமாக மீண்டும் திரையுலகிற்கு வந்தார். அதன் பிறகும் சில வருடங்கள் தேக்க நிலை. 1958-ல் வெளியான APN-ன் நல்ல இடத்து சம்பந்தம் படத்தின் மூலமாக ஒரு நிலையான இடத்தை பிடித்தார். 1959-ல் முதன் முறையாக நடிகர் திலகத்துடன் பாகப்பிரிவினை திரைப்படத்தில் இணைந்து நடித்தார். அன்றிலிருந்து அதாவது பாகப்பிரிவினை வெளியான 1959-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதி முதல் 1965-ம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று வெளியான சாந்தி திரைப்படம் வரை ஏராளமான சிவாஜி படங்களில் நடித்தார். சொல்லப்போனால் அவரது திரையுலக வாழ்க்கையிலே மறக்க முடியாத பல கதாபாத்திரங்கள் அவருக்கு நடிகர் திலகத்தின் படங்கள் மூலமாகவே கிடைத்தன. பாகப்பிரிவினை,பாவ மன்னிப்பு, பலே பாண்டியா, இருவர் உள்ளம், புதிய பறவை என்று சொல்லிக் கொண்டே போகலாம். இனி 1965 ஏப்ரல் 22-க்கு பிறகு 1967 ஜனவரி 12-ந் தேதி வரை நடிகர் திலகம் நடித்து வெளி வந்த படங்கள் என்னவென்று பார்ப்போம்.

திருவிளையாடல் - 31-07-1965

நீல வானம் - 10-12-1965

மோட்டார் சுந்தரம் பிள்ளை - 26-01-1966

மகாகவி காளிதாஸ் - 19-08-1966

சரஸ்வதி சபதம் - 03-09-1966

செல்வம் - 11-11-1966

கந்தன் கருணை - 14-01-1967

நான் ஏன் 1967 ஜனவரி 12 வரை குறிப்பிட்டேன் என்பது அனைவருக்கும் புரியும். இந்தப் பட்டியலில் இருக்கும் படங்கள் 7. அவற்றில் மூன்று புராணப் படங்கள். அந்தக் காலத்தில் இந்த திராவிட புலிகள் தங்கள் கொள்கைப்படி புராணப் படங்களில் நடிப்பதில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆகவே திருவிளையாடல், சரஸ்வதி சபதம் மற்றும் கந்தன் கருணை படங்கள ruled out.[ஆனால் இந்த திராவிட புலி பசித்த போது KSG யின் தசாவதாரம் என்ற புராணப்பட புல்லை 1976-ல் தின்றது]. மீதி நான்கில் காளிதாஸ் படமும் mythology வகையில் படும் என்பது மட்டுமல்ல அதில் ராதாவிற்கு ஏற்ற வேடம் இருந்ததா என்பதை பார்த்தவர்களே சொல்லலாம். பாக்கி மூன்று சமூக படங்கள். நீலவானம், மோட்டார் சுந்தரம் பிள்ளை மற்றும் செல்வம். இந்த மூன்றிலும் கூட ராதா அவர்கள் நடிக்கும்படியான வேடம் ஏதும் இல்லை என்பதுதானே உண்மை.

1967 ஜனவரி 12-ந் தேதி நடைபெற்ற அசம்பாவிதத்திற்கு பிறகு ராதா மருதுவமனையிலும் பின்னர் சிறைசாலையிலும் காலத்தை கழித்தார். ஒரு வாததிற்காக எடுத்துக் கொண்டால் கூட அதன் பின் வந்த நெஞ்சிருக்கும் வரை, பேசும் தெய்வம், தங்கை மற்றும் பாலாடை போன்ற படங்களில் இடம் பெற்ற கதாபாத்திரங்களை பரிசீலனை செய்தோம் என்றால் ராதாவிற்கேற்ற ரோல் இல்லை எனபது விளங்கும். உண்மை நிலைமை இப்படி இருக்க ராதாவிற்கு வாய்ப்பு கொடுப்பதை நடிகர் திலகம் தடுத்தார் எனபதே அபத்தமான குற்றசாட்டு எனபது தெளிவாகும். தான் நடித்த கட்டபொம்மன் படத்திற்கு போட்டியாக அதே சரித்திரத்தை வேறு படமாக எடுத்து கட்டபொம்மன் வெளியான திரையரங்குகளில் தான் சார்ந்திருந்த கட்சியினரை விட்டு குழப்பம் விளைவித்து கட்டபொம்மன் படத்தின் வெற்றியை தடுக்க நினைத்து தலை குப்புற விழுந்து தோல்வியை தழுவிய எஸ்.எஸ்.ராஜேந்திரனை கூட மன்னித்து தன படங்களில் வாய்ப்பு கொடுத்த "தெய்வப்பிறவி" சிவாஜியை யாரும் மறந்து விடவில்லை.நடிகர் திலகத்தை கடுமையாக விமர்சித்து எழுதியவரும் சிவகங்கை சீமை படத்தை தயாரித்தவருமான கண்ணதாசனும் சிவாஜியால் மீண்டும் வாய்ப்பு பெற்றார். மாற்று முகாமிலிருந்த போது சிவாஜியை பல முறை திரையிலும் பேட்டிகளிலும் கிண்டலும் கேலியும் செய்த தேங்காய் அவரது கடைசி பத்து வருட வாழ்க்கையில் ராஜ வாழ்க்கை வாழ்ந்தது நடிகர் திலகத்தினால்தான். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இரண்டாவது அபத்தம் சிவாஜியின் பிறந்த நாள் விழா திருச்சியில் நடப்பதாக இருந்தது என்ற தகவல். வரலாறு தெரிந்தவர்களுக்கு தெரியும் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாக்கள் நடைபெற ஆரம்பித்ததே 1970 அக்டோபர் 1-ந் தேதியிலிருந்துதான். அதிலும் திருச்சியில் பிறந்த நாள் விழா நடைபெற்றதேயில்லை. அங்கே நடைபெற்றது நடிகர் திலகத்தின் 150-வது படமான சவாலே சமாளி வெளியான போது 1971 ஜூலை 10,11 தேதிகளில் 150-வது பட விழா கொண்டாடப்பட்டது.

அப்போது எம்.ஆர். ராதா எங்கே இருந்தார்? அந்த வரலாற்று குறிப்புக்கு வருவோம்.

1967 ஜனவரி 12-ந் தேதி நடந்த நிகழ்ச்சிக்காக ராதா மீது வழக்கு தொடரப்பட்டு வழக்கின் இறுதியில் அவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. செஷன்ஸ் கோர்ட்டில் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்தார் ராதா. அங்கும் அது உறுதி செய்யப்படவே உச்சநீதி மன்றத்தை அணுகினார் ராதா. அந்த மேல் முறையீட்டில் அவரது தண்டனை 5 வருட காலமாக குறைக்கப்பட்டது. அதன்படி அவர் 1972-ம் ஆண்டு விடுதலையாக வேண்டும். ஆனால் 1971-ம் ஆண்டு மே மாதத்தில் நன்னடத்தை(?) காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டார் என்று அன்றைய திமுக அரசாங்கம் அறிவித்தது.

கோபாலபுரத்தாரின் இந்த நடவடிக்கை ராமாவரத்தாருக்கு அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. பின்னாளில் 1972-ம் ஆண்டு அக்டோபரில் ஏற்பட்ட பிளவிற்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது இங்கிருந்துதான். அந்த அரசியலுக்குள் நாம் நுழைய வேண்டாம். இதை இங்கே குறிப்பிட காரணமே எம்ஜிஆர் அவர்களுக்கும் எம்ஆர்ராதா அவர்களுக்கும் நல்லுறவு இல்லாமல் இருந்த காலம் என்பதை தெளிவுப்படுத்தவே.

மூன்றாவது அபத்தம் அல்லது உச்சக்கட்ட காமெடி என்னவென்றால் எம்ஜிஆர் அவர்கள் சொன்னதாக எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகள். சிவாஜி வளர்ந்து வரும் நடிகர். அவர் தன்னை மேலும் வளர்த்துக் கொள்ள இது போன்ற விழாக்களை நடத்துக்கிறார்.அதை எதிர்த்தோ விமர்சித்தோ ஒன்றும் சொல்ல வேண்டாம் என்றாராம். தமிழில் முதல் பேசும் படம் வெளியான 1931-ல் தொடங்கி அன்றைய 1971 ஜூலை வரை 40 வருட காலத்தில் எந்த நடிகனாலும் செய்ய முடியாத சாதனையாக முதல் படத்திலிருந்தே 150 படங்கள் வரை நாயகனாக நடித்து வெற்றி வெற்றி மேல் பெற்றுக் கொண்டிருந்த நடிகர் திலகம் வளர்ந்து வரும் நடிகராம். எப்படி இருக்கிறது அளப்பு?

நான் சிவாஜி ரசிகன்தான். ஆனாலும் நடிகர் திலகத்தைப் பற்றி எம்ஜிஆர் அவர்கள் இப்படி சொல்லியிருக்கவே மாட்டார் என்பதுதான் என் கணிப்பு. அந்தளவிற்கு எதார்த்தம் தெரியாதவர் அல்ல அவர். அது மட்டுமல்லாமல் அவர் அப்படி சொல்வதற்கு வாய்ப்பில்லை என்று நான் நினைக்க லாஜிக்கான காரணமும் இருக்கிறது.

எம்.ஆர். ராதா, சிவாஜி விழாவை எதிர்த்து அறிக்கை வெளியிடுக்கிறார் என்றே வைத்துக் கொள்வோம். அதனால் என்ன நடக்கும்? ஆஹா ராதா சொல்லி விட்டார் ஆகவே விழா நடைபெற வேண்டாம் என்று மக்கள் முடிவெடுத்திருப்பார்களா? இல்லை ரசிகர்கள் திருச்சிக்கு போகாமல் இருந்திருப்பார்களா? ஊர்வலம் நடக்காமல் இருந்து விடுமா? மேடையில் நடிகர் திலகம் தோன்றாமல் இருந்து விடுவாரா? இல்லை மாநாட்டில் பங்கெடுத்த அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பட கலைஞர்கள் வராமல் இருந்திருக்கப் போகிறார்களா? இப்படி எதுவுமே நிற்காது என்பதை மற்றவர்களை விட நன்றாக தெரிந்த எம்ஜிஆர் எப்படி இப்படி ஒரு வாதத்தை முன்வைப்பார்?

1965 முதல் 1971 வரை மேற்சொன்ன விஷயங்கள் நடைபெற்றதை கோர்வையாக படிப்பவர்களுக்கு இந்த செய்தி எவ்வளவு பெரிய புருடா என்பது புரியும். விஷயம் இத்துடன் முடியவில்லை. இது ஒரு புத்தகத்தில் வந்திருக்கிறது என்று சொன்னாலும் கூட இதை சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு தினமலர் வாரமலர் இதழில் எழுதியவர் எஸ்.விஜயன். முகாம் மாறி சென்ற விஜயன். இதழ் வெளியான அன்றே இதை படித்துவிட்டு ராதாரவி அவர்கள் விஜயனை தொடர்பு கொண்டு ஏன் இப்படி பொய்யான தகவல்களையெல்லாம் எழுதுகிறீர்கள் என கண்டிக்க, இதை எதிர்பார்க்காத விஜயன் நான் எழுதவில்லை. வாரமலர் ஆசிரியர் குழுதான் இதை இப்படி மாற்றி போட்டு விட்டார்கள் என்று சொல்ல, ராதாரவி உடனே வாரமலரை தொடர்பு கொண்டு கேட்க அவர்கள் நாங்கள் எதுவும் மாற்றவில்லை. விஜயன் எழுதியதைத்தான் பிரசுரித்திருக்கிறோம் என்று உண்மையை உடைத்து சொல்லி விட்டார்கள். ராதாரவி மீண்டும் விஜயனை கூப்பிட்டு சத்தம் போட்டிருக்கிறார். இவர் இப்படி எழுதியதோடு மட்டுமல்லாமல் தங்கள் மீதும் பழி போட்டதை சீரியஸாக எடுத்துக் கொண்ட வார மலர் அதன் பிறகு விஜயனிடமிருந்து கட்டுரைகள் வாங்குவதை நிறுத்தி விட்டது. வருடத்தில் மூன்று நான்கு முறை சிவாஜி பிறந்த நாள், நினைவு நாள், எம்ஜிஆர் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில் தவறாமல் வாரமலரில் வந்துக் கொண்டிருந்த விஜயனின் கட்டுரை கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக வராமல் இருப்பதன் காரணம் இதுதான்.

இப்படி எந்த விதத்தில் பார்த்தாலும் 1965-67 காலகட்டத்திலும் சரி,1971 காலகட்டத்திலும் சரி லாஜிக் மற்றும் வரலாற்றின் chronological order அடிப்படையில் பார்த்தாலும் சரி அபத்தமான இந்த பொய் செய்தியை இது சரியான தகவலா? நடந்தவற்றைதான் இந்த புத்தகத்தில் எழுதியிருகிறார்களா என்பது பற்றியெல்லாம் சற்றும் யோசிக்காமல் ஒருவர் இங்கே பதிவு செய்கிறார் என்றால் அதற்கு காரணம் எனக்கு தெரிந்தவரை ஒன்றே ஒன்றுதான் இருக்க முடியும். நமக்கு பிடித்தவரை பற்றி தூக்கி எழுதப்பட்டிருக்கிறது. நமக்கு பிடிக்காதவரைப் பற்றி தாக்கி எழுதப்பட்டிருக்கிறது. உடனே copy paste பண்ணி பதிவிடு என்ற எண்ணம்தான் அது.

யார் இதைப் பற்றியெல்லாம் கேட்கப் போகிறார்கள்? அப்படியே கேட்டாலும் நானாகவா எழுதினேன், இந்த புத்தகத்தில் வந்திருக்கிறது. அதைத்தான் குறிப்பிட்டேன் என்று சொல்லி எளிதாக தப்பிக்கலாம் என்ற எண்ணம். மிக மிக வேதனையான போக்கு.

ஆனால் உண்மைகளை எப்போதும் எல்லா காலத்திலும் மறைக்க முடியாது அவை ஒரு நாள் வெளிவந்தே தீரும் என்பதுதான் அடிப்படை சித்தாந்தம். அதை புரிந்துக் கொண்டால் இப்படி வரலாற்றுப் பிழையான பதிவுகள் வராது.

அன்புடன்

KCSHEKAR
9th December 2013, 05:26 PM
உண்மை உணரும் நேரம் - 2
ஆனால் உண்மைகளை எப்போதும் எல்லா காலத்திலும் மறைக்க முடியாது அவை ஒரு நாள் வெளிவந்தே தீரும் என்பதுதான் அடிப்படை சித்தாந்தம். அதை புரிந்துக் கொண்டால் இப்படி வரலாற்றுப் பிழையான பதிவுகள் வராது.
அன்புடன்
டியர் முரளி சார்,
தாங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல நடிகர்திலகத்தைப் பற்றி மட்டும்தான் இப்படி வரலாற்று உன்மைகள் மறைக்கப்பட்டு செய்திகள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன என்பது வேதனையான விஷயம்.

தங்களைப்போன்றவர்களின் பதிவுகள் மூலம் வெளிச்சத்து வரும் இத்தகைய உண்மைகளை, காலப்போக்கில் கண்டிப்பாக அனைவருமே உணர்ந்துகொள்ளக்கூடிய நிலை அமையும் என்று நம்புவோம்.

KCSHEKAR
9th December 2013, 05:29 PM
தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/DinamalarThanjai009_zpsbdc48b4e.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/DinamalarThanjai009_zpsbdc48b4e.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/TheHinduThanjai010_zpsc641d96c.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/TheHinduThanjai010_zpsc641d96c.jpg.html)

KCSHEKAR
9th December 2013, 05:30 PM
திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/TrichyDemoNews1_zpsb0cc26c3.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/TrichyDemoNews1_zpsb0cc26c3.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/TrichyDemoNews2_zpsef4fafe1.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/TrichyDemoNews2_zpsef4fafe1.jpg.html)

parthasarathy
9th December 2013, 05:59 PM
உண்மை உணரும் நேரம் - 2

மூன்றாவது அபத்தம் அல்லது உச்சக்கட்ட காமெடி என்னவென்றால் எம்ஜிஆர் அவர்கள் சொன்னதாக எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகள். சிவாஜி வளர்ந்து வரும் நடிகர். அவர் தன்னை மேலும் வளர்த்துக் கொள்ள இது போன்ற விழாக்களை நடத்துக்கிறார்.அதை எதிர்த்தோ விமர்சித்தோ ஒன்றும் சொல்ல வேண்டாம் என்றாராம். தமிழில் முதல் பேசும் படம் வெளியான 1931-ல் தொடங்கி அன்றைய 1971 ஜூலை வரை 40 வருட காலத்தில் எந்த நடிகனாலும் செய்ய முடியாத சாதனையாக முதல் படத்திலிருந்தே 150 படங்கள் வரை நாயகனாக நடித்து வெற்றி வெற்றி மேல் பெற்றுக் கொண்டிருந்த நடிகர் திலகம் வளர்ந்து வரும் நடிகராம். எப்படி இருக்கிறது அளப்பு?

நான் சிவாஜி ரசிகன்தான். ஆனாலும் நடிகர் திலகத்தைப் பற்றி எம்ஜிஆர் அவர்கள் இப்படி சொல்லியிருக்கவே மாட்டார் என்பதுதான் என் கணிப்பு. அந்தளவிற்கு எதார்த்தம் தெரியாதவர் அல்ல அவர். அது மட்டுமல்லாமல் அவர் அப்படி சொல்வதற்கு வாய்ப்பில்லை என்று நான் நினைக்க லாஜிக்கான காரணமும் இருக்கிறது.

யார் இதைப் பற்றியெல்லாம் கேட்கப் போகிறார்கள்? அப்படியே கேட்டாலும் நானாகவா எழுதினேன், இந்த புத்தகத்தில் வந்திருக்கிறது. அதைத்தான் குறிப்பிட்டேன் என்று சொல்லி எளிதாக தப்பிக்கலாம் என்ற எண்ணம். மிக மிக வேதனையான போக்கு.

ஆனால் உண்மைகளை எப்போதும் எல்லா காலத்திலும் மறைக்க முடியாது அவை ஒரு நாள் வெளிவந்தே தீரும் என்பதுதான் அடிப்படை சித்தாந்தம். அதை புரிந்துக் கொண்டால் இப்படி வரலாற்றுப் பிழையான பதிவுகள் வராது.

அன்புடன்

திரு. முரளி அவர்களே,

மிகவும் அற்புதமாக, உண்மையை உரக்கச் சொல்லியுள்ளீர்கள்.

இந்த அபத்தத்தை நானும் நேற்று எங்கோ படித்தேன். வழக்கம் போல கோபமடைந்தேன். முக்கியமாக, திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் நடிகர் திலகத்தை "அவர் வளர்ந்து வரும் நடிகர்" என்று - அதுவும் - அறுபதுகளில்! முதல் படத்திலேயே உச்ச நட்சத்திர அந்தஸ்த்தை அடைந்தவரை!! அடக்க முடியாமல் சிரிப்பும் வந்தது - வரலாறு தெரியாதவர்களை நினைத்து!!! மக்கள் திலகம் "கண் போன போக்கிலே கால் போகலாமா" என்று பாடினார் (வாலி மூலமாக) கூடவே, மனம் போன போக்கிலே மனிதன் பிதற்றலாமா என்றும் பாடியிருக்கலாம்!

இதை எழுதுவதற்கு நேரம் இல்லாத போதும், ஒரு முக்கியமான அலுவல் மீட்டிங்குக்கு இடையே வந்து எழுதுகிறேன். உங்களின் அற்புத எழுத்தாற்றலையும், உடனே இந்த அபத்தத்திற்கு ஒரு மறுப்பு எழுதி விட வேண்டும் என்ற உங்களது அர்ப்பணிப்பையும் கோபத்தையும் பார்த்து!

Hats Off!

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

sankara1970
9th December 2013, 06:06 PM
உண்மை உணரும் நேரம் - 2

இன்றைய காலக்கட்டத்தில் தமிழகத்தின் அரசியல் வரலாறாக
ஆனால் உண்மைகளை எப்போதும் எல்லா காலத்திலும் மறைக்க முடியாது அவை ஒரு நாள் வெளிவந்தே தீரும் என்பதுதான் அடிப்படை சித்தாந்தம். அதை புரிந்துக் கொண்டால் இப்படி வரலாற்றுப் பிழையான பதிவுகள் வராது.

அன்புடன்

இது தான் நெற்றி அடி!

ஆஹா தகவல் திலகம் பதிவை படித்து நாள்கள பல ஆகிவிட்டனவே.

நம்முடைய பதிவுகளை, நம் சிவாஜியின் பெருமையை பறை சற்றும் வகையில் இன்றைய கல கட்டத்துக்கு ஏற்றபடி,

ஒரு டிவி சேனல் அமைய வேண்டும்.

parthasarathy
9th December 2013, 06:49 PM
Dear Mr. Chandra Sekhar,

We do not have words to praise and show our (every NT fan too) gratitude.

I am sure, you will succeed.

Regards,

R. Parthasarathy

uvausan
9th December 2013, 10:46 PM
முரளி - உங்கள் பதிவு மிகவும் தேவையான ஒன்று - பல லட்சம் ரசிகர்கள் பொய்யாக ஒருவரை புகழ்ந்து கொண்டிருப்பதை விட ஒரே ஒரு ரசிகர் ஆணித்தரமாக உண்மையை சொல்லி தன் தலைவரை புகழ்வது பல மடங்கு சிறந்தது . சரக்கு இல்லாததால் தான் சிலர் இப்படி பொய் மூட்டையை சுமந்துகொண்டு பதிவு போடுகின்றோம் என்ற நினைப்பில் திரியை நிரப்புகிறார்கள் - பாவம் , மிகவும் பரிதாபத்துக்கு உரியவர்கள் .

Ravi
:smile2::smokesmile:

uvausan
9th December 2013, 10:49 PM
Kc சார் - உங்கள் முயற்சி அபாரம் - இதற்கு உரிய கூலி நமக்கு கிடைக்காமல் போகாது !

Subramaniam Ramajayam
10th December 2013, 12:02 AM
முரளி - உங்கள் பதிவு மிகவும் தேவையான ஒன்று - பல லட்சம் ரசிகர்கள் பொய்யாக ஒருவரை புகழ்ந்து கொண்டிருப்பதை விட ஒரே ஒரு ரசிகர் ஆணித்தரமாக உண்மையை சொல்லி தன் தலைவரை புகழ்வது பல மடங்கு சிறந்தது . சரக்கு இல்லாததால் தான் சிலர் இப்படி பொய் மூட்டையை சுமந்துகொண்டு பதிவு போடுகின்றோம் என்ற நினைப்பில் திரியை நிரப்புகிறார்கள் - பாவம் , மிகவும் பரிதாபத்துக்கு உரியவர்கள் .

Ravi
:smile2::smokesmile:

murali sir has come out with a very big bang of facts of yesteryears in a chronogical order for any lay man also understand about the great actor NT in a simple way.go ahead sir every and now and then so that we can establish the TRUTH ALWAYS,
had we have a channel we could do better, sankara has given a wise suggestion
at right time.

anasiuvawoeh
10th December 2013, 08:56 AM
Dear Murali Sir,I really appreciate you for the efforts in establishing the truth.There are lot of fans like me,who have high regards for people like you.The hard-work you put to establish things cannot be explained in words.Why these people give wrong information/ For their survival,better they can do some other cheap profession.

IliFiSRurdy
10th December 2013, 09:09 AM
உண்மை உணரும் நேரம் - 2

ஆனால் உண்மைகளை எப்போதும் எல்லா காலத்திலும் மறைக்க முடியாது அவை ஒரு நாள் வெளிவந்தே தீரும் என்பதுதான் அடிப்படை சித்தாந்தம். அதை புரிந்துக் கொண்டால் இப்படி வரலாற்றுப் பிழையான பதிவுகள் வராது.

அன்புடன்

Dear முரளி சார்!
அற்புதமான இந்த ஆவணப்பதிவிற்கு நன்றிகள் கோடி.பிய்த்து உதறிவிட்டீர்கள்.
தலைவர் எங்கு வளர்ந்தார்.?என்ன முட்டாள்தனமான பேச்சு?
உலக கலைஞர்களில் வளராத ஒரே கலைஞர் நம் தலைவர்தான்.
17/10/1952 மதியம் மூன்றுமணிக்கு அவர் ஒரு வாமனர்.
பகல் கட்சி முடிந்தது.
அவர் விஸ்வரூபம் எடுத்து விட்டார், அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து விட்டார்.
அப்புறம் எங்கே அய்யா வளர்வது.?
கம்பர் கூற்றின்படி, ரசிகர்கள்,
எடுத்தது கண்டனர்
இற்றது கேட்டனர்.
அவ்வளவுதான் எல்லாம் ஓவர்!
The Big Bang Event of Film world had taken place.
தமிழர்களாகிய நாம்தான் இன்னும் நிறைய வளர வேண்டும்.

ScottAlise
10th December 2013, 03:58 PM
Murali Sir,

Hats Off -you have stressed precisely the point - Bang on false statements

KC Sekar Sir,

I am at loss for words - in one word your gratitude towards NT will give desired results

KCSHEKAR
11th December 2013, 10:33 AM
இன்று மகாகவி பாரதியார் 132-வது பிறந்த நாள்

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=AKLzxSGhVyw

KCSHEKAR
11th December 2013, 10:56 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/MaduraiPoster_zps8c7b31b2.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/MaduraiPoster_zps8c7b31b2.jpg.html)

gkrishna
11th December 2013, 12:49 PM
http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/திருவனந்தபுரம்-சர்வதேச-திரைப்பட-விழா-சிவாஜி-படங்களுக்கு-வரவேற்பு/article5445434.ece?homepage=true

HARISH2619
11th December 2013, 01:04 PM
திரு முரளி சார்,
பொய்யர்களின் முகமூடியை கிழித்து உண்மையை எல்லோரும் உணரும்படி ஆணித்தரமாக நிரூபித்துவிட்டீர்கள் ,நன்றி

HARISH2619
11th December 2013, 01:08 PM
நடிகர் திலகத்தின் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில சிவாஜி மன்றம் சார்பில் பெங்களூர் டவுன்ஹால் முன்பாக 12-12-13 அன்று காலை 10.00 மணிமுதல் 12.00 மணிவரை மாநில தலைவர் செல்வகுமார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது

KCSHEKAR
11th December 2013, 02:50 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/TuticorinPhoto_zps1d151981.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/TuticorinPhoto_zps1d151981.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/DinakaranTuticorin_zps69ea0582.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/DinakaranTuticorin_zps69ea0582.jpg.html)

KCSHEKAR
11th December 2013, 05:58 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/NoticeCudalore_zps6a845397.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/NoticeCudalore_zps6a845397.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/PressNewsCudalore005_zpsf14d4934.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/PressNewsCudalore005_zpsf14d4934.jpg.html)

Murali Srinivas
11th December 2013, 11:54 PM
எனது உண்மை உணரும் நேரம் பதிவை பாராட்டிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் இதயங்கனிந்த நன்றி! நடிகர் திலகம் பற்றிய தவறான தகவல்களோ, வரலாற்றுப் பிழையான செய்திகள் வரும்போது அதை சரியான ஆதாரங்களோடு இது போல் எதிர்கொள்வோம்.

அன்புடன்

KCSHEKAR
12th December 2013, 10:38 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Others/PokkishamPg1_zpsd53fc7f6.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Others/PokkishamPg1_zpsd53fc7f6.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Others/PokkishamPg2_zps29d2e6c6.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Others/PokkishamPg2_zps29d2e6c6.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Others/PokkishamPg3_zps8891c9a3.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Others/PokkishamPg3_zps8891c9a3.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Others/PokkishamPg4_zpse7480461.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Others/PokkishamPg4_zpse7480461.jpg.html)

KCSHEKAR
12th December 2013, 11:18 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/TirupurPoster_zps8c732613.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/TirupurPoster_zps8c732613.jpg.html)

KCSHEKAR
12th December 2013, 05:14 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/MalaimalarMadurai001_zpsd2aaf01c.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/MalaimalarMadurai001_zpsd2aaf01c.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/NewsMadurai002_zps91b6859d.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/NewsMadurai002_zps91b6859d.jpg.html)

KCSHEKAR
12th December 2013, 05:16 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/DinamalarNellai003_zps9682176d.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/DinamalarNellai003_zps9682176d.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/DinathanthiNellai004_zpsdb82e351.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/DinathanthiNellai004_zpsdb82e351.jpg.html)

eweaxagayx
12th December 2013, 05:37 PM
இன்றைய துக்ளக் இதழில் கேள்வி-பதில் பகுதியில் நடிகர் திலகத்தின் சிலை விவகாரம் பற்றிய சோ அவர்களின் கருத்து :-

சங்கீதா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை

கே: சிவாஜி சிலை விவகாரத்தில் தங்கள் கருத்து என்ன?

ப: இந்த ஒரு சிலைதான் போக்குவரத்துக்கு இடைஞ்சல் போல இதை அகற்ற வேண்டும் என்று சொல்வது ஏற்கத்தக்கதல்ல. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள எல்லா சிலைகளையும் அகற்றுகிறோம் என்று ஒரு பட்டியல் போட்டு, அதில் சிவாஜி சிலையையும் சேர்த்தால் அதில் தவறு இருக்காது. மாறாக இந்த ஒரு சிலைதான் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பது மாதிரி இதை அகற்ற முற்படுவது சரியல்ல.

eweaxagayx
12th December 2013, 05:48 PM
திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு மிக்க நன்றி.

உங்கள் கட்டுரையின் உண்மைத்தன்மை அதனுடன் தாங்கள் அளித்துள்ள விளக்கங்கள் ஆதாரங்கள் போற்றுதலுக்குறியது. இருந்தாலும் இந்தக் கலியுகத்தின் இயல்புப்படி வீணர்களின் வாய்ச்சொல்லும் அவர்களின் தவறான கூற்றை நம்புவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். இந்த யுகத்தின் சாபக்கேடு நல்லவர்களுக்கும் அவர்கள் தம் செயல்களுக்கும் சரியான அங்கிகாரம் கிடைப்பது கிடையாது.

பொய்யானவர்களும் பித்தலாட்டக்காரர்களும்தான் இந்த உலகத்தின் தற்போதைய நாணயஸ்தர்கள்.

Harrietlgy
12th December 2013, 06:08 PM
விகடன் பொக்கிஷத்தில் வந்த தலைவரின் பேட்டிக்கு கமெண்ட்ஸ் ,



COMMENT(S): 7

சிவாஜி ஒரு சகாப்தம். சரித்திரம்
ஒரு கொம்பனும் மறுக்க முடியாது

kattalai

என்ன இருந்தாலும் சிவாஜிக்கு நிகர் சிவாஜிதான்... சிவாஜி படங்களை தேடிப்பிடித்து பார்த்து ரசித்த பரவசமான நாட்கள் அவை... இன்னும் தேடிப்பிடித்து பார்த்து கொண்டிருக்கிறேன்... அழியா புகழ் பெற்றவர்...

அசோகன், சிங்கப்பூர்

ஓம் ஸ்ரீ முருகன் துணை

"நான் ஆசிரியர்களிடம் கற்றுக்கொண்ட பாடத்தை முழுமையாகக் காட்ட இந்த இரு பாத்திரங்களிலும் நான் செவ்வனே நடித்திருந்தால், அதுவே எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.''

இந்த குரு பக்தி வேண்டும் அனைவருக்கும் வாழ்வில் முன்னேறுவதற்கு

நன்றி! வாழ்க வளமுடன்

Manikkavel

அப்படிப்பட்ட பெரும் புகழும் உள்ள மனிதரை இன்று காக்கைகள் எச்சில் படுத்துகின்றன.

சேகர்

'கப்பலோட்டிய தமிழன்’

அன்று வ.உ.சிதம்பரம் பிள்ளையை நடுத்தெருவில் நிறுத்திய தமிழர்களை ஒரு நிமிடம் சிந்தனையில் நிறுத்தியிருந்தால் இயக்குனர் இந்தப்படத்தை எடுத்திருக்க மாட்டார்.

சிதம்பரம் பிள்ளையின் தமிழ், கனிவான பேச்சு, நிதானம் அனைத்தையும் தத்ரூபமாக சிவாஜி வெளிப்படுத்திய படம். இருந்தென்ன புண்ணியம், அவர் பிறந்தது தமிழகத்தில் அல்லவா!

Crap

நிறையா பெரு இவர ரொம்ப ஒவ்வார் ஆக்டிங் பண்றாருன்னு சொல்றாங்க. தேவர் மகன் படத்துல நல்ல பண்ணிருந்தாரு.
dsad

மறைந்த திரு.சிவாஜி கணேசனை பற்றி பலரும் விமரிசித்து இருக்கிறார்கள். ஆனால் அவர் எடுத்துக்கொண்ட பாத்திரங்களின் வித்தியாச அளவு மிகப்பெரியது (Range).

இன்றுவரை உலக அளவில் எந்த நடிகரும் முயற்சிக்க துணியாத வீச்சு அது. சில சோதனைகளில் அவர் வெற்றி பெறாமல் போயிருக்கலாம். ஆனால் அவர் முயற்சி செய்யவில்லை என்று யாரும் கூற இயலாது.

வயது (அப்பர்); இமேஜ் (அந்தநாள், திரும்பிப்பார்); இப்படி எந்த கட்டுப்பாடும் வைத்துக்கொள்ளாமல் அனைத்து பாத்திரங்களையும் செய்த ஒரே நடிகர் சினிமா சரித்திரத்தில் அவர் ஒருவர்தான்.
BALA.

uvausan
12th December 2013, 06:48 PM
நாளை ஒரு இனிய நாளாக இருக்கட்டும் ! காக்கைகள் எச்சிபடுத்தினாலும், அவைகளும் NT யின் ரசிகர்களே - நாளை ஒரு நல்ல உழைப்புக்கும், பல நல்ல உள்ளங்களின் ப்ராத்தனைகளுக்கும் , KC sirன் அயராத முயற்சிக்கும் ஒரு நல்ல தீர்ப்பு கிடைக்கும் நாள் - நல்லதையே நினைப்போம் - நல்லதே நடக்கும்!!

:smile2::smokesmile:

uvausan
12th December 2013, 07:19 PM
இந்ததிரியில் பல புதிய நண்பர்கள் வந்தவிதம் உள்ளனர் - மனதிற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது - கூடவே ஒரு சிறிய இனம் புரியாத பயமும் வருகின்றது - புதிய நண்பர்கள் தொடர்ந்து பங்கு கொள்ளவேண்டும் - திரியை விட்டு விலக கூடாது என்பதே. விலகிசெல்பவர்கலை தங்க வைக்க நாம் இன்னும் பாடு பட வேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து. ஒருவர் மீது தனிப்பட்ட முறையில் கோபமோ , வருத்தமோ இருந்தால் , நாம் ஏன் தனிப்பட்ட முறையில் PM அனுப்பக்கூடாது ? திரியில் ஏன் நம் கோபத்தையோ , வருத்ததையோ பதிவிட வேண்டும் ? ஒருவரின்
பதிவு நன்றாக இருந்தால் அதை கண்டிப்பாக உற்சாக படுத்தவேண்டும் - அதில் உள்ள குறைகளை மட்டும் எடுத்து சொன்னால் , அவர் காணாமல் போக நல்ல வாய்ப்பு உள்ளது . இந்த திரி சமீப காலத்தில் நன்றாக பதிவிடும் பல நல்ல உள்ளங்களை இழந்துள்ளது . இனியும் அப்படி நடக்க விடாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும் - இப்போது நம் கவனம் முழுவதும் சிலை அகற்ற படாமல் இருக்க வேண்டும் என்பதில்தான் உள்ளது - ஒப்புகொள்கிறேன் - அதே சமயம் சிலைக்கு உள்ள அத்தனை சக்தியும் , உயர்வும், பெருமையும் இந்த திரிக்கு உள்ளது என்று ஆணித்தரமாக நம்புவர்களில் நானும் ஒருவன். இந்த திரியையும் சிலைபோல பாதுகாத்து இன்னும் உயரே எடுத்து செல்லவேண்டும் என்ற ஆசையினால் இதை எழுதுகிறேன் .

அன்புடன் ரவி
:):smokesmile:

JamesFague
12th December 2013, 07:49 PM
Mr Muali Sir,

Your article really a nice one. It is very common to write false information
on NT wherever possible. But due to you and other's efforts in giving a
correct picutre on NT will be a eye opener for those people.

Russelldwp
12th December 2013, 08:22 PM
டியர் முரளி சார்

தங்களுடய பதிவு எனக்கு படித்ததிலிருந்து ஒரு வித ப்தட்டத்துடனேயே இருக்கிறேன். இப்படி நடிகர் திலகத்தை பற்றி தவறாக பிரச்சாரம் செய்வதால் அவர்களுக்கு கிடைப்பது என்ன ? தங்களைப் போல ரசிக வல்லுனர்களை நமது நடிகர் திலகம் பெற்றிருப்பதனால் இது போன்றபொய் பித்தலாட்டங்கள் அவ்வப்போது தவிடுபொடியாவது நிஜம். தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி

dear kc sir thanks for your great effort
யாருக்கும் செய்நன்றி மறவாதவ்ரும் கடுகளவும் பிறருக்கு துரோகம் செய்யாதவரும் தன் தொழிலை நேர்மையாக செய்து கலைசேவை செய்த ஒப்பற்ற நம் ந்டிகர் திலகத்தின் சிலை அகற்றாமல் அதே இடத்தில் இடம் பெறச்செய்ய நீதி தேவதை தான் அருள் புரிய வேண்டும்.

இத்தனை நாட்கள் ரசிகர்கள் துணையோடு பல போராட்டங்களை திறம்பட நடத்தி அரசுக்கு அறிவுத்திய செயல் வீரர் திரு.சந்திரசேகர் அவர்களின் அறப்போருக்கு நல்ல நீதி கிடைக்க இறைவனை வேண்டுவோம்

KCSHEKAR
13th December 2013, 05:37 AM
இந்ததிரியில் பல புதிய நண்பர்கள் வந்தவிதம் உள்ளனர் - மனதிற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது - கூடவே ஒரு சிறிய இனம் புரியாத பயமும் வருகின்றது - புதிய நண்பர்கள் தொடர்ந்து பங்கு கொள்ளவேண்டும் - திரியை விட்டு விலக கூடாது என்பதே. விலகிசெல்பவர்கலை தங்க வைக்க நாம் இன்னும் பாடு பட வேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து. ஒருவர் மீது தனிப்பட்ட முறையில் கோபமோ , வருத்தமோ இருந்தால் , நாம் ஏன் தனிப்பட்ட முறையில் pm அனுப்பக்கூடாது ? திரியில் ஏன் நம் கோபத்தையோ , வருத்ததையோ பதிவிட வேண்டும் ? ஒருவரின்
பதிவு நன்றாக இருந்தால் அதை கண்டிப்பாக உற்சாக படுத்தவேண்டும் - அதில் உள்ள குறைகளை மட்டும் எடுத்து சொன்னால் , அவர் காணாமல் போக நல்ல வாய்ப்பு உள்ளது . இந்த திரி சமீப காலத்தில் நன்றாக பதிவிடும் பல நல்ல உள்ளங்களை இழந்துள்ளது . இனியும் அப்படி நடக்க விடாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும் - இப்போது நம் கவனம் முழுவதும் சிலை அகற்ற படாமல் இருக்க வேண்டும் என்பதில்தான் உள்ளது - ஒப்புகொள்கிறேன் - அதே சமயம் சிலைக்கு உள்ள அத்தனை சக்தியும் , உயர்வும், பெருமையும் இந்த திரிக்கு உள்ளது என்று ஆணித்தரமாக நம்புவர்களில் நானும் ஒருவன். இந்த திரியையும் சிலைபோல பாதுகாத்து இன்னும் உயரே எடுத்து செல்லவேண்டும் என்ற ஆசையினால் இதை எழுதுகிறேன் .

அன்புடன் ரவி
:):smokesmile:

exactly.

KCSHEKAR
13th December 2013, 07:03 AM
A RARE PHOTO
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/2011-01-2710018_zps70dad396.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/2011-01-2710018_zps70dad396.jpg.html)

eweaxagayx
13th December 2013, 04:21 PM
அந்தக் கால நினைவுகள் -

சென்னையில் தூர்தர்ஷன் மட்டும் நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டிருந்த காலம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் " ஒளியும் ஒலியும் " என்ற பெயரில் தமிழ் சினிமா பாடல்களை ஒளிபரப்புவார்கள். எல்லோர் வீட்டிலும் டி.வீ.கிடையாது என்பதால் யார் வீட்டில் டீ.வி. உள்ளதோ அவர்கள் வீட்டில் அக்கம் பக்கத்தில் குடியிருக்கும் மக்கள் கூடியிருப்பார்கள். பெரும்பாலும் பழைய பாடல்களையும் சில நேரங்களில் அப்பொழுது வெளியான படங்களின் பாடல்களையும் ஒளிபரப்புவார்கள். ஒரு வெள்ளிக்கிழமயன்று அதிசயமாக இன்னும் வெளிவராத ஒரு படத்தின் பாடலை முதன்முறையாக ஒளிபரப்பினார்கள்.

அந்தப் படம் - பாடல் - பாடலில் நடித்த நடிகர் ?

அந்த சிறப்பு நம் நடிகர்ததிலகம் படத்தைத் தவிர வேறு யாருக்கு இருக்கமுடியும் ? ஆம் அந்தப் படம் - தியாகம் - பாடல் -
நல்லவர்க்கெல்லாம் - பழைய - மூத்த சிவாஜி ரசிகர்களுக்கு இது ஜாபமிருக்கும் என்று நினைக்கிறேன். அன்று படம் வெளிவருவதற்கு முன்பே டீ.வி.யில் பார்த்த எங்கள் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே கிடையாது.

Harrietlgy
13th December 2013, 08:33 PM
செய்திகள் / 13 Dec, 2013 /

சிவாஜி சிலை வழக்கை விசாரிக்க நீதிபதி மறுப்பு;வேறு அமர்வுக்கு மாற்றம்!

சென்னை: சிவாஜி சிலையை அகற்றக்கோரிய வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மறுத்ததால், அவ்வழக்கு வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள சிவாஜியை சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, அச்சிலையை அகற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அகர்வால் விசாரித்து வருகிறார்.

இந்நிலையில், சிவாஜி சிலையை அகற்றக்கூடாது என தஞ்சையைச் சேர்ந்த தமிழ்ப்பித்தன், சிவாஜி பாபு ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு தலைமை நீதிபதி அகர்வால் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.


இந்த மனுவை விசாரித்த அவர், ஏற்கனவே, சிவாஜி சிலை தொடர்பாக 2 பொதுநல வழக்குகளை விசாரிக்க வேண்டி இருக்கிறது. எனவே, இந்த வழக்கை என்னால் விசாரிக்க முடியாது'' என மறுப்பு தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்கை வேறு நீதிபதிகள் அமர்வுக்கு தலைமை நீதிபதி அகர்வால் அனுப்பி வைத்து, வழக்கின் விசாரணையை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Harrietlgy
13th December 2013, 10:08 PM
என் நினைவு சரி என்றால் இந்த போட்டோ தலைவர் கட்சி ஆரம்பிக்கும் முன்னர் ரசிகர்கள் முன்பு பேசிய போது எடுத்தது ,சரியா திரு. Kc சார்.

oowijaez
14th December 2013, 04:38 AM
The news of Sivaji Ganesan’s statue causing accidents, dragged me to post my views here. When I last visited Chennai few years ago, I observed chaos and craziness among drivers who have no respect for highway rules, if there are such things exist. Without the use of side mirrors or indicators, I wondered how one can reach home alive! Honking the horns alone does, I suppose. Almost every main road has a statue of some dead politician erected in the middle and the road users somehow drive around them and Sivaji statue is no exception. Having thought that, it is nothing but sheer politics, which is not a surprise. What disgusts me is the insensitiveness of some bloggers who unnecessarily associating the great actor’s personal life in to the issue. No matter what political views he had, he is an acting legend and there must respect for his talent itself. Why everything should be viewed on politics, is a mystery to me.

KCSHEKAR
14th December 2013, 11:07 AM
என் நினைவு சரி என்றால் இந்த போட்டோ தலைவர் கட்சி ஆரம்பிக்கும் முன்னர் ரசிகர்கள் முன்பு பேசிய போது எடுத்தது ,சரியா திரு. Kc சார்.
இது 1980 துவக்கத்தில் எடுக்கப்பட்டது என நினைக்கிறேன். (வருடம் சரியாகத் தெரியவில்லை) வரும் வாரம் ஆனந்த விகடன் பொக்கிஷம் பகுதியில் இப்புகைப்படம் இடம்பெறலாம்.

KCSHEKAR
14th December 2013, 11:29 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/Dinathanthi14-12-13_zps8f40f225.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/Dinathanthi14-12-13_zps8f40f225.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/Dinamani14-12-13_zpsb4e1f338.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/Dinamani14-12-13_zpsb4e1f338.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/DinaIdhazh14-12-13_zps63f14005.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/DinaIdhazh14-12-13_zps63f14005.jpg.html)

KCSHEKAR
14th December 2013, 11:31 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/TheHindu14-12-13_zps77840446.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/TheHindu14-12-13_zps77840446.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/TimesofIndia14-12-13_zpsd10bf970.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/TimesofIndia14-12-13_zpsd10bf970.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/DeccanChronicle14-12-13_zps4ef7f7bd.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/DeccanChronicle14-12-13_zps4ef7f7bd.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/IndianExpress14-12-13_zps3e6a18bb.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/IndianExpress14-12-13_zps3e6a18bb.jpg.html)

HARISH2619
14th December 2013, 01:32 PM
திரு சந்திரசேகர் சார்,உங்கள் முயற்சி வீண்போகாது ,கண்டிப்பாக வெற்றி நமதே

geno
14th December 2013, 02:29 PM
இந்த ஜெ.வுக்கு சொந்தப் புத்தியும் இல்லை; சொல்புத்தியைக் கேட்பதாகவும் தெரியவில்லை.

1) பி.ஆர் அன்ட் சன்ஸ்-இன் கடிகாரக் கூண்டை அங்கிருந்து அகற்றி விட்டால் இன்னும் கூடுதலாகப் போக்குவரத்துக்குப் பயன்படும்.
2) சிவாஜி சிலையை அகற்றுவது - தமிழ்க் கலைஞர்களின் /கலையின் மீதான எச்சில் துப்பும் மூடத்தனம்.
3) சோபன் பாபுவின் சிலை சாலையை ஆக்கிரமிக்கவில்லையா - மேத்தா நகரில் - இன்னும் கடும் சாலை நெருக்கடி உள்ள இடத்தில்?

சிவாஜி காங்கிரசில் இருந்து - 1988 வாக்கில் - இந்திய அமைதிப்படையின் அக்கிரமங்கள் நடந்து கொண்டிருந்த வேளையில் - ராஜீவை எதிர்த்து "என் தமிழ் என் மக்கள்' என்று கொலைகார காங்கிரசை விட்டு வெளிவந்த பச்சைத் தமிழன். அவர் பெருமை குலையச் செய்வது தமிழருக்கு அழகல்ல.

uvausan
14th December 2013, 06:12 PM
NTயின் சிலையும் இந்த திரியும்

சிலை

1 எவ்வளவோ புகழாரம் பெற்றபின் நிறுவப்பட்ட சிலை - தமிழகம் ஒரு மாபெரும் நடிகனுக்கு, தமிழை புரியவைத்த ஒரு தெய்வமகனுக்கு சிலையை நிறுவி , தன் கறைகளை கழுவிகொண்டது

இந்த திரி

இந்த திரியும் சாதாரணமாக உருவானது அல்ல - பல நல்ல உள்ளங்கள் , திரிக்கு உள்ளேயும் , வெளியேயும் உடம்பை வருத்திக்கொண்டு பாடுபட்டு 12வது இலக்கை அடைய வைத்துள்ளர்கள் - கறைகள் ஏற்படுத்தின பலரை , சாரதா, பம்மலார் , ராகவேந்திரா , கோபால் , முரளி ,வாசு ( 2) , KC சேகர் . கார்த்திக் , NT 360 இன்னும் பல பூஜிக்கப்பட்ட அஸ்திரங்களினால் புறமுதுகை காட்டி ஓட வாய்த்த பெருமை இந்த திரிக்கு என்றுமே உண்டு

சிலை

2 கோடான கோடி மக்களுக்கு , தேச பக்தியை , நக்கீரன் வளர்த்த தமிழை , அண்ணன் - தங்கை எப்படி இருக்கவேண்டும் என்று இது வரையில் யாருமே புரிந்துகொள்ளாத நபர்களை , கண்ணீருடன் புரிய வைத்தவனை என்றுமே மனதில் இருந்து நீங்காதவனை பாராட்டும் வண்ணம் மக்கள் மகிழ்ச்சியுடன் சந்திக்கும் மெரீனா பீச்சின் அருகில் சிலையின் உருவிலே உயிர் கொடுத்தனர்

இந்த திரி

புரிந்துகொள்ள முடியாதவனை , ஒரு ஒப்ற்ற மாமனிதனை , ஒரு கர்ணனாக வாழ்ந்தும் காட்டியவனை இந்த திரி உலகெங்கும் பல நல்ல பதிவுகளால் பறை சாற்றியது , பறை சாற்றும்

சிலை

3 சிலை பல பொறாமையர்களை சந்தித்தது - அரசியலாக அந்த சிலையை எடைபோட்டது - விலை மதிக்க முடியாதவனை , வெறும் சிலையாக பாவித்து இந்த அரசு.

இந்த திரி

இந்த திரியும் ஒரு விலக்கல்ல - பொறாமை கொண்டனர் பலர் , உண்மையை உண்மையாக உரைத்ததனால் - வேகத்தை தடுக்க பார்த்தனர் பலர் - தொய்வு கண்டாலும் , துவண்டு விடவில்லை- மீண்டும் மீண்டும் தக்க ஆதாரத்துடன் திரி தன்முதல் இடத்தை தங்க வைத்துக்கொள்கின்றது

சிலை

4 ஒரு சிலை மக்கள் அன்பினால் , கோடான கோடி ரசிகர்கள் பாசத்தால் உயிர்பெற்றது அங்கே !!

இந்த திரி

ஒரு உயிர் ஓவியமான இந்த திரி இப்பொழுது ஒரு வெறும் சிலையாக மாறிக்கொண்டு வருகின்றதே!!! - பல நல்ல பதிவுகளுக்கு உரியவர்கள் சிலையாக மாறியது / மாறுவது ஏன்???

சிலை

5 சிலைக்கு கண்டிப்பாக வெற்றி கிடக்கும் - அதை அகற்ற ஒரு சக்தி பிறக்கவில்லை இன்னும் - அப்படி ஒரு சக்தி இருந்தாலும் , சமூகநலபேரவை என்ற பராசக்திக்கு முன் அதன் வீர்யம் எடுபடாது

இந்த திரி

பொறாமை , வீண் பிடிவாதம், கடினமான வார்த்தைகள் , மற்ற நல்ல பதிவுகளை உடனே பாராட்டும் தன்மை இல்லாமை - இப்படிப்பட்ட விரோதிகளை அண்ட விடாமல் ஒரு சமூகநலபேரவை இங்கும் உருவாகினால் , இந்த திரியை இனி யார் வெல்ல கூடும் ?

அன்புடன் ரவி
:smile2::smokesmile:

Marionapk
14th December 2013, 06:42 PM
well said ravi sir what you pointed in 100% true

Marionapk
14th December 2013, 06:44 PM
Respected Chandrasekaran your efforts will success by the grace of our gad Nadigarthilagam grace.Goahead we will be with you

Gopal.s
15th December 2013, 08:40 AM
பல உள்ளங்கள் இணைய போகும்,இருவர் உள்ளத்தை வரவேற்கும் ஆவலில் ,மனம் பீ.எஸ்.பள்ளியில்.இன்று மாலை சிந்திப்போம்.

sankara1970
15th December 2013, 02:32 PM
A RARE PHOTO
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/2011-01-2710018_zps70dad396.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/2011-01-2710018_zps70dad396.jpg.html)

மிக அறிய புகைப்படம். 1980 கு முன்பாக irukkum

uvausan
15th December 2013, 05:24 PM
கவிதாஞ்சலி -1

உன்னை வெறும் சிலை என்கின்றனர் சிலர் - நீ சிலையா ? -

இந்த தமிழகத்தை 50 வருடங்களாக நடிப்பு சக்ரவர்த்தியாக அரசாண்டாய் -

உனக்கு முன்னாலும் இப்படி ஒரு தெய்வ பிறவியை இந்த தமிழகம் சந்தித்தது இல்லை

இனியும் சந்திக்க போவதுமில்லை -

நாங்கள் அல்லவோ நடமாடும் சிலைகள -

மணிமண்டபம் கட்ட தெரியாமல் சிலையாக உள்ளோம் - பாரத ரத்னா உனக்கு இன்னும் கிடைக்க விடாமல் தடுக்கின்றோம் -

உன் சிலைமீது பறவைகள் எச்சமிடுகின்றனவாம் - ஒன்னும் செய்யாமல் சிலையாக இருக்கும் இந்த தமிழகத்தின் மீது இந்த உலகமே எச்சமிடுகின்றனவே -

அதுவல்லவோ கேவலம் --

நீ போக்குவரத்திற்கு தடையாக நிற்கின்றாயாம் - கண்ணீரில் பல நாட்கள் வாசம் செய்த சிரிப்பு ஒன்று வெளி வருகின்றது -

உன் படங்களின் Re- releaseகளால் , போக்குவரத்துக்கு தடைபட்டது என்பது உண்மைதான் - ஆனால் மெரினா பீச்சிற்கே நீ வந்த பிறகுதான் ஒரு கலை வந்தது , ஒரு அழகு வந்தது -

மக்கள் ஒழுங்காக செல்ல ஆரம்பித்தனர் - இந்த உண்மையை யாரால் மறுக்க முடியும் ? -

சிலையை அகற்றவேண்டுமானால் , முதலில் எங்களை அகற்ற வேண்டும் - நாங்கள் தானே உண்மையான சிலைகள் - ஒன்று பட்டுருக்கின்றோம்- எங்களை அகற்றுவது

கடினம் - தெரிந்தே ஏன் தோல்வியை தழுவுகிறீர்கள் ????

ரவி

:???::smokesmile:

uvausan
15th December 2013, 05:50 PM
கவிதாஞ்சலி -2


ஒன்றானவன் - உருவில் பலரானவன்

உருவான செந்தமிழில் உயிரானவன்

நன்காய் இருந்த தமிழகத்தில் நாடாண்டவன்

நாற்பதுகோடி மக்களின் மூச்சானவன்

அஞ்சாதவன் எதற்கும் அஞ்சாதவன்

அருமையான நெஞ்சங்களில் என்றும் நிலையானவன்

இன்று சிலையானவன் , பலரை சிலையாக்கினவன் - சிலையான பின்னும் மலையானவன் -

முன்னுக்கும் பின்னுக்கும் உதாரணம் காட்ட முடியாதவன் --

நேற்றாகி , இன்றாகி , என்றைக்கும் நிலையாகி ஊற்றாகி உயிரானவன் - காலத்தால் அழிக்க முடியாதவன் --------


(தொடரும்)

ரவி
:):smokesmile:

uvausan
15th December 2013, 06:34 PM
கவிதாஞ்சலி - 3

எங்கிருந்தோ வந்தாய் - பாரசக்தியின் அருளினால்
என்ன தவம் செய்தோம் உன்னை அடைய - அந்த யசோதா கூட எங்களை பொறுத்த வரையில் , கொஞ்சமாகதான் தவம் செய்திருக்க வேண்டும் !

கர்ணனாக வாழ்ந்து காட்டினாய் - உன் கொடையால் தமிழகம் வளர்த்தது - தன்னை வளர்த்துகொண்டது - இன்று U too Brutus என்று சொல்ல வைத்துள்ளது

ரஹீமாக உருவானாய் - அல்லாவின் கருணையால்
இஸ்லாமிய மதமே பெருமைகொண்டது
அன்பை காட்ட கற்றுகொண்டோம் - இன்றோ அதை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டு இருக்கிறோம்

அந்தோனியாக உரு மாறினாய் - ஏசுவின் அன்பால்
அமைதி கிடைத்தது எங்கள் எல்லோருக்கும் - கிடைத்த அமைதியை அருமையாக தொலைத்துவிட்டோம்

இன்று சிலையாக மாறினாய் - உன்னை அகற்றுவதில் தீவிரமாக உள்ளோம் - ஏன் தெரியுமா? - தமிழகத்திற்கு ஏன் இன்னும் பெருமை வேண்டும் என்றே !

இந்த நாட்டின் தலைவர்களை எங்கே மதிக்கிறோம் - சிலைகளை மதிபதற்க்கு - உன்னை மதிக்கிறோம் - மறக்க முடியவில்லை

உன் சிலை வெறும் பிறந்த நாளுக்கும் , மறைந்த நாளுக்கும் கட்டப்பட்டதில்லை - இந்த தமிழை வாழ வைத்ததற்காக , தேச பக்தியை ஊட்டி எங்களை வளர்ததிற்காக - எங்கள் உள்ளம் எல்லாம் நிறைந்து நிற்பதற்காக !!

எங்கள் உள்ளமல்லாம் நிறைந்த உனக்கு , சிலை தேவை இல்லைதான் - ஆனால் நாங்கள் நிரந்தரம் அல்லவே - எதிர்காலம் உன்னை நினைக்க வேண்டாமா ? நினைத்து போற்றவேன்டமா - இந்த தமிழகம் நாளை திருந்த வாய்ப்பு உள்ளதே !!

Ravi

:):smokesmile:

uvausan
15th December 2013, 07:46 PM
கவிதையில் ஒரு நன்றி

இது முரளிக்காக

இங்கு போதனைகள் சொல்ல பலர் உண்டு - அதை செய் , இதை செய்யாதே என்று சொல்பவர்கள் மத்தியில் நீர் வேற மாதிரி - ஆணித்தரமாக சொல்ல நீர் ஒருவர் தானே இங்கு உண்டு -

எங்களுக்கு நீர் ஒரு பிரம்மாஸ்திரம் - அனால் துரதிஷ்ட வசமாக , பலதடவை உங்களை பிரயோகம் செய்ய வேண்டி உள்ளது - நாகாஸ்திரம் போல எங்களிடமே வந்து சேர்த்து விடுகிறீர்கள் - அதனால் எங்களக்கு கிடைப்பது மன நிம்மதி.

நீர் இருக்க பயம் ஏன் ? நாங்கள் எல்லோரும் நன்றாக உறங்குகையில், உண்மையை உறங்க விடாமல் பார்த்துகொள்ளும் பண்பு யாருக்கு வரும் ??

நீர் வாழ்க எல்லா வளமும் பெற்று !!


அன்புடன் ரவி :
smile2::smokesmile:

uvausan
15th December 2013, 08:00 PM
கவிதையில் ஒரு நன்றி - 2



இது நெய்வேலி வாசுவிர்காக

நக்கீரன் தமிழ் வளர்த்தான் என்று சொல்லுவார்கள் - கேட்டதுண்டு - இன்று பார்க்கிறோம் - உங்கள் நடையில்

கோவிலுக்கு சென்றால் ஆண்டவன் அருள் கிடைக்கும் - சொல்ல கேட்டதுண்டு - நடைமுறையில் உங்கள் பக்தியின் மூலம் உணர்கின்றோம்

உழைத்தால் தான் நிம்மதி கிடைக்கும் - சொல்ல புரிந்துகொண்டுள்ளோம் - உங்கள் பதிவுகள் மூலம் கிடைக்கின்ற நிம்மதியும், சந்தோஷமும் வேறு எங்கு கிடைக்கும் ?

சிலையை சிலையாக பார்க்கும் இந்த தமிழகத்தில் , பாராட்டுகளக்கும் பஞ்சம்தான் - நீங்கள் இந்த திரிக்கு திரும்பி வரும் அந்த நல்ல நாள் தான் - NT சிலையை அகற்ற வேண்டாம் என்று தீர்ப்பு வரும் நாளாக இருக்குமோ ?

எங்களுக்கும் அன்று தான் "Happy new year"

அன்புடன் ரவி :
smile2:

uvausan
15th December 2013, 08:22 PM
கவிதையில் ஒரு நன்றி - 3

இது ராகவேந்திரா சாருக்காக

உங்கள் பதிவுகளில் - பாசமலரை பார்த்தோம் - பரவசபட்டோம்

உங்கள் உழைப்பில் அந்த நடிப்பு உலக இறைவனை பார்த்தோம் - சிலையாக வியர்ந்து நிற்கின்றோம்

இந்த திரி கர்ணனின் தேர் மாதிரி நிலத்தில் சிக்கிக்கொண்டு விட்டது - எப்பவோ செய்த தர்மத்தினால் , உயிர் மட்டும் உடம்பில் ஒட்டி கொண்டுள்ளது - இந்த திரியின் வேகம் ஆமை , நத்தை இவைகளின் வேகத்தை கூட இழந்து விட்டது - நீங்கள் மீண்டும் வந்தால் , மிஞ்சிய உயிரை தானம் கேட்க மாட்டீர்கள் - இந்த திரிக்கு உயிர் ஊட்டுவீர்கள் என்பது நிச்சயம் - வரவேண்டும் என்பதே எங்கள் ப்ராத்தனை

" பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச - பஜதாம் கல்பவிக்க்ஷாய
நமதாம் காமதேனுவாய நம க :"

அன்புடன் ரவி :
smile2

uvausan
15th December 2013, 08:41 PM
கவிதையில் ஒரு நன்றி - 3

இது "கோபால்" க்காக :

கண்ணனின் வேணுகானம் உண்டு உம் பதிவிலே - அந்த நாளும் வந்திடாதோ - Brindavanathil கண்ணன் வளர்த்த அந்த நாளும் வந்திடாதோ என்று எங்களை பாட வைக்கும் !!

அந்தோணியின் அழகும் உண்டு உம் எழுத்தில் - அதிலே அந்தோணியின் கோபம் மட்டுமே தலை உயர்ந்து நிற்கும் --- [ தவிர்க்கத்தான் மன்றாடுகின்றோம்

நம் இறைவனை இது வரை யாரும் அணு அணுவாக அலசியதில்லை - உம்மால் மட்டுமே முடிந்த கலை இது

உம் வழி தனி வழி தான் ( road less traveled) ஆனாலும் அன்பு நிறைந்த , பக்தி நிறைந்த , பாசம் நிறைந்த வழி - " கோபால்" minus "கோபம்" - மிஞ்சுவது "பால் " அதன் நிறத்தை மனமாக கொண்டவர் நீர் - திரியின் வேகம் - உங்கள் விவேகத்தில் மீண்டும் வேகமாக முன்னேறும் என்பதில் எள்ளு அளவும் சந்தேகமில்லை

அன்புடன் ரவி :
smile2

uvausan
15th December 2013, 09:24 PM
கவிதையில் ஒரு நன்றி - 5

இது நம் பம்மளார் க்காக

ஆவண திலகமாக இந்த திரியில் வந்தீர் - எங்களையெல்லாம் ஆட்கொண்டீர்

ஆணியை எப்படி அடிப்பது எண்டு சொல்லைகொடுத்தீர் - அதனால் மாற்றுமுகாம் இருந்த இடம் தெரியாமல் போனது

நம்மை திட்டுபவர்களுக்கும் நல்லது செய்தீர் - பதிவுகள் உங்கள் உயர்வை போற்றின

இப்பொழுது எடுத்துக்கொண்ட முயற்சி ஒரு புனிதமானது - நாங்கள் அணிலாகத்தான் உங்களுக்கு உதவி பண்ண முடியும் - அந்த உழைப்பு இல்லை எங்களிடம்

ஒரு கலங்கரை விளக்கம் இந்த திரியில் ஒளி தராவிட்டால் , விட்டில் பூச்சிகளான எங்களால் என்ன ஒளியை தந்துவிட முடியும் ???

உங்கள் புதிய முயற்சிக்கு என்றும் எங்கள் துணையும் , வாழ்த்தும் என்றும் உண்டு ----

அன்புடன் ரவி :
:smile2::smokesmile:

uvausan
15th December 2013, 10:03 PM
கவிதையில் ஒரு நன்றி - 6

இந்த காணிக்கை KC சேகர் சாருக்கு


ஒரு காலத்தில் தலைவருடன் பணி புரிந்த நன்றிக்காகவே கர்ணன் மாதிரி உழைக்கும் ஒரு நல்ல உள்ளம் உறங்காது என்பது வல்லவன் சொன்ன வார்த்தைகள்

உழைப்புக்கு ஒரு பாடம் எடுத்தால் , உங்கள் பயணம் தான் உதாரனமாக எடுத்துசொல்ல முடியும் - தலை நிமிர்கிறோம் ஆணவத்தால் அல்ல - உங்களை பெற்றதனால் ------ உழைப்புக்கு ஒருவனான உங்கள் சக்தி வெற்றிக்கு ஒருவனான நம் NT யை லக்ஷ்மணன் கிழித்த கோடுபோல் என்றும் வலம் வரும் , உண்மை வெல்லும்.

அந்த பராசக்தியின் அருள் என்றும் உங்களுக்கு உண்டு

அன்புடன் ரவி

:):smokesmile:

uvausan
15th December 2013, 10:06 PM
கவிதையில் ஒரு நன்றி - 7

இது இந்த திரியின் எல்லா நல்ல உள்ளங்களுக்கும் காணிக்கை

ஒரு கை தட்ட ஓசை வருவதில்லை

ஒருவர் இழுக்க தேர் ஓடுவதில்லை

ஒருவர் படைப்பால் காவியம் பிறப்பதில்லை

ஒருவர் உழைப்பினால் வாழ்கை சிறப்பதில்லை

சிலையாக நிற்கின்றோம் - சிலைக்கு வந்த சோதனையால்

சோதனைகள் நமக்கும் , NTக்கும் புதியது அல்லவே - துவண்டு விடாமல் இந்த திரிக்கு முதலில் உயிர் கொடுப்போம் - அந்த சக்தியில் சிலையும் மகிழ்ந்து அங்கேயே நிலைத்துவிடும்

அன்புடன் ரவி

:):smokesmile:

geno
15th December 2013, 11:48 PM
சிவாஜியே கட்டக் கடேசீல "என் தமிழ் என் மக்கள்"-னு வந்து அரசியலை முடித்துக் கொண்டார். இங்கே பழைய காங்கிரசு பெருங்காயங்கள் வந்து தேசம் பக்தி என்று ஒப்பாரி வைப்பது வீண் வேலை. கப்பலோட்டிய தமிழனையே பிச்சைக்காரனாக ஆக்கி சாக விட்டதுதான் காங்கிரசின் தேசியம்.

தமிழ்க் கலையின் தலைமகன் சிவாஜியை தமிழ்த்தேசியம் கைவிடாது.

Murali Srinivas
16th December 2013, 12:09 AM
ரவி,

மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். என்னை பாராட்டியதால் மட்டும் இல்லை. உள்ளத்தின் அடித்தட்டிலிருந்து எழுதியிருக்கிறீர்கள் என்பது படிக்கும் போதே தெரிகிறது. வாழ்த்துகள். தொடருங்கள்.

திரியின் பங்களிப்பாளார்கள் அனைவரும் மீண்டும் வந்து திரிக்கு பெருமை சேர்ப்பார்கள். ஆகவே கவலை விடுத்து நம் பணியில் கவனம் செலுத்துவோம்.

அன்புடன்

Murali Srinivas
16th December 2013, 12:20 AM
பல உள்ளங்கள் இணைய போகும்,இருவர் உள்ளத்தை வரவேற்கும் ஆவலில் ,மனம் பீ.எஸ்.பள்ளியில்.இன்று மாலை சிந்திப்போம்.

ஒரு அற்புதமான மாலை நேரம். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போனதே தெரியாமல் அனைவரும் லயித்து ரசித்து ஆர்ப்பரித்து கைதட்டி ஓசை எழுப்பி மனமகிழ்ந்த காட்சியை பார்க்க முடிந்தது. இன்றைய திரையிடலை தவற விட்டவர்கள் உண்மையிலே வருத்தப்பட வேண்டும். மூன்று மணி நேரம் செல்வம் மற்றும் சாந்தாவோடு வாழ்ந்துவிட்டு வந்த உணர்வு. இப்போதும் அந்த தாக்கம் இருக்கிறது. இதுவரை திரையரங்குகளில் மட்டுமே ரசிகர்கள் once more கேட்பதை பார்த்திருக்கிறோம். இங்கே நமது NT FAnS அமைப்பில் நடத்தப்பட்ட திரையிடலிலும் இன்று இது நடந்து பறவைகள் பலவிதம் பாடல் காட்சி மீண்டும் திரையிடப்பட்டது. இதைப் பற்றிய எண்ண அலைகளை தொடரும்.

அன்புடன்

sivaa
16th December 2013, 12:25 AM
நான் சுவாசிக்கும் சிவாஜி! (11) - ஒய்.ஜி. மகேந்திரன்







































http://s7.addthis.com/static/btn/sm-share-en.gif (http://www.addthis.com/bookmark.php?v=250&username=dinamalarweb)




http://img.dinamalar.com/data/uploads/E_1386924576.jpeg



பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2013,00:00 IST

புகழ் பெற்ற, பரத நாட்டிய கலைஞர் தனஞ்செயன் பற்றி, அவருடைய சிஷ்யர்கள், ஒரு வீடியோ படம் எடுத்திருக்கின்றனர். அதைப் பார்க்கும் வாய்ப்பு, எனக்கு கிடைத்தது. தனக்கு, 'இன்ஸ்பிரேஷ'னாக இருந்த தன் குருமார்கள் குறித்து பேசும் போது, 'பரத நாட்டியத்தில், முக்கியமான அபிநயத்திற்கு, எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தவர் சிவாஜி...' என்று, பெருமையோடு குறிப்பிட்டார் தனஞ்செயன்.
என் மகள் மதுவந்தியின் பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு, சிவாஜியை அழைக்க, என் மகளுடன், அவர் வீட்டிற்கு சென்றிருந் தேன்.
அப்போது, 'எனக்கு பால சரஸ்வதி நடனம் தான் பிடிக்கும்...' என்றார் சிவாஜி.
'அவங்ககிட்ட போய் கத்துக்க முடியாது. (பால சரஸ்வதி முன்பே காலமாகி விட்டார். மதுவந்தி, பத்மா சுப்ரமணியத்திடம் தான், பரதநாட்டியப் பயிற்சி எடுத்திருக்கிறாள்...' என்றேன் கிண்டலாக.
'டேய், சரியாக சொல்ல வேண்டுமானால், பாலாவுக்கு அடுத்து, பத்மா சுப்ரமணியத்தின் நடனம் தான், எனக்கு ரொம்ப பிடிக்கும்; கண்டிப்பாக வரேன்...' என்று கூறியதோடு, பாலம்மாவின் நடன சிறப்பை புகழ்ந்து பேசினார்.
இன்று, இசையில் அசத்திக் கொண்டிருக்கும், அருணா சாய்ராமின் தாயார் ராஜம்மா, சிவாஜியின் ரசிகை. சிவாஜி படத்தை, ரிலீசாகும் முதல் நாள், முதல் காட்சியில் பார்த்து ரசிப்பவர்.
ராஜம்மாவிற்கும், பாலசரஸ்வதிக்கும் நெருங்கிய நட்பு உண்டு. பால சரஸ்வதி, பம்பாய்க்கு போனால், ராஜம்மா வீட்டில் தான் தங்குவார். அவர்களும், சென்னைக்கு வரும் போதெல்லாம், பாலசரஸ்வதியை சந்திப்பர்.
ராஜம்மா, ஒருமுறை சென்னை வந்திருந்த போது, சிவாஜி நடித்த படம் ஒன்று, சன் தியேட்டரில் ரிலீசாகியிருந்தது, ராஜம்மாவுக்கு சிவாஜி படத்தை பார்க்க ஆசை. அதே சமயம், பாலாவையும் பார்க்க போக வேண்டும். என்ன செய்வது என்று யோசித்து, கடைசியில், பாலாவை, தொலைபேசியில் அழைத்து, நிலைமையை விளக்கினார். 'எனக்கும் அதே பிரச்னைதான். நானும், அதை தான் சொல்ல நினைத்தேன். தம்பி சிவாஜியின் படத்தை பார்க்க ஆசை...' என்றிருக்கிறார் பாலா.
பாலா, ராஜம்மா, சிறுமி அருணா சாய்ராம் மூவரும் சன் தியேட்டருக்கு போயுள்ளனர். படத்திற்கு, டிக்கெட் கிடைக்கவில்லை. ஹவுஸ் புல் ஆகிவிட்டது. வந்திருப்பது, பெரிய பரத நாட்டிய கலைஞர் என்று அறிந்த தியேட்டர் மானேஜர், அவர்களை திருப்பி அனுப்ப விரும்பாமல், தியேட்டர் முதலாளிக்கு இருக்கும், பிரத்யேக பாக்சில், அவர்களை உட்கார வைத்து, படம் பார்க்க வைத்தார்.
இச்சம்பவத்தை அருணா சாய்ராம் நினைவு கூர்கிறார்:
படத்தைப் பார்த்தேன். கூடவே, பாலா அம்மாவையும் ரசித்தேன்; படத்தில், சிவாஜி பாடினால், இவங்களும் பாடறாங்க, அவர் சிரித்தால், இவங்களும் சிரிக்கிறாங்க, அவர் அழுதால், அழறாங்க, நடனம் ஆடினால், பாலா அம்மாவும் தன் கால்களை, ஆட்டறாங்க... ஒவ்வொரு பிரேமிலும், சிவாஜியை முழுமையாக ரசித்தார் பாலா அம்மா, என்றார்.
பத்மா சுப்ரமணியத்தின் நாட்டியம், சிவாஜிக்கு ரொம்ப பிடிக்கும். பத்மாவும், சிவாஜி நடிப்பை ரசித்து, நிறைய பேசுவார். ஒருமுறை, பத்மா, என்னிடம் பகிர்ந்து கொண்ட, சுவையான தகவல் இது:
நாட்டிய சாஸ்திரத்தை, உருவாக்கியவர் பரதமுனி. அவர், நாட்டிய கலைஞரின் முகம் குறித்த சாமுத்ரிகா லட்சணங்களை விரிவாக எழுதியிருக்கிறார். ஒரு நாட்டிய கலைஞருக்கு, 'பர்பெக்ட்' முகம் என்றால், அது எப்படி இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்த இலக்கணப்படி, சிவாஜியின் முகத்தை அளந்து பார்த்தால், பரதமுனி சொன்ன அத்தனை லட்சணங்களும், சிவாஜியிடம் இருக்கின்றன, என்றார். பத்மாவிடம் இது குறித்து பேசிக் கொண்டிருந்த போது, நாட்டிய சாஸ்திரமும், நடிகர் திலகமும் என்ற பெயரில், ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய, ஒரு நிகழ்ச்சியை தயாரிக்கும்படி கேட்டேன். பத்மாவும், மகிழ்ச்சியோடு, ஒப்புக் கொண்டு, அதை தயாரித்தார்.
நாட்டிய சாஸ்திரத்தை, சிவாஜி எப்படியெல்லாம் கையாண்டிருக்கிறார் என்பதை, பல திரைப்படங்களின், 'க்ளிப்'பிங்களுடன் விளக்குவதாக, அந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டிருந்தது.
எங்கள், 'பாரத் கலாச்சார்' அமைப்பின் ஆதரவில், அதை திரையிட்ட போது, அமோக வரவேற்பு கிடைத்தது. கமலா அம்மாவும், அவரது குடும்பத்தினரும் மெய் மறந்து ரசித்தனர். என் மகள் மதுவந்தியும், நானும் அதற்கான, 'எடிட்டிங்' பணியை செய்திருந்தோம்.
ஒருமுறையாவது, சிவாஜியை, இந்த நிகழ்ச்சியை பார்க்க வைக்க ஆசை. நீண்ட வற்புறுத்தலுக்கு பின், நிகழ்ச்சிக்கு வர ஒப்புக் கொண்டார். 'பாரத் கலாச்சார்' சார்பில் நடந்த அந்த நிகழ்ச்சிக்கு, நடிகை லட்சுமியை தலைமை வகிக்க செய்தோம். அன்று மாலை, பலத்த மழை பெய்தும் கூட நிகழ்ச்சி, 'ஹவுஸ் புல்!'
பார்வையாளார்கள் அனைவரும் திரையை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்க, நான் மட்டும் சிவாஜியை பார்த்துக் கொண்டிருந்தேன்.
மாபெரும் நடிகன் என்றாலும், தான் பாராட்டப்படும் போது, ஒரு வித கூச்சமும், மகிழ்ச்சியும் அவருடைய முகத்தில் பிரதிபலிப் பதை கண்டேன்..
சிவாஜியின் நடிப்பில் உள்ள எல்லா சிறந்த அம்சங்களைப் பற்றியும் பேசினார் நடிகை லட்சுமி. 'என்னை பேசச் சொல்லாதே...' என்று சிவாஜி, என்னிடம் சொல்லியிருந்தும், அந்த சிறப்பு நிகழ்ச்சியில் அவர் பேசினால், அனைவரும் ரசிப்பர் என்று கருதி, கடைசியில், அவரையும் பேச அழைத்தேன். பொதுவாக, எந்த மேடையிலும், கையில், சிறு குறிப்பு கூட வைத்துக் கொள்ளாமல், நீண்ட நேரம் தங்கு தடையின்றி பேசும் சிவாஜி, அன்று, சற்று தயங்கி தயங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் சொல்லப்பட்டதெல்லாம், சரி என்றால், அது, ஆணவமாக கருதப்படலாம். இல்லை என்றும் சொல்லி விட முடியாது. அது தான், அவரது தயக்கத்திற்கு காரணம்.
'இவங்க எல்லாரும், என் நலம் விரும்பிகள். என்னைப் பற்றி, என்னவோ செய்திருக்காங்க. நவரசம் என்றெல்லாம் சொல்கின்றனர். ஆனால், எனக்கு பிடித்தது மிளகு ரசம் தான். நீங்க எல்லாம் பாராட்டும் போது, நானும் ஏதோ செய்திருக்கிறேன் என்று தோன்றுகிறது...' என்றார். அவர் கண்கள் பனித்ததோ என்னவோ, பார்வையாளர்கள் அனைவரின் கண்களிலும் கண்ணீர்.
மிருதங்க சக்கர வர்த்தி'படத்தில் நடிப்பதற்கு முன், பிரபல மிருதங்க வித்வான், உமையாள்புரம் சிவராமனை, தனக்காக, தனியாக மிருதங்கம் வாசிக்க சொல்லி, அதை கவனித்து, மிருதங்க வாசிப்பின் நுணுக்கங்களை புரிந்து, அதை, படத்தில் செய்தார்.
-- தொடரும்.
தொகுப்பு: எஸ்.ரஜத்
dinamalar

Gopal.s
16th December 2013, 08:11 AM
இருவர் உள்ளம்- 1963

நடிகர்திலகத்தின் நடிப்பின் பாணி stylised method acting ஆக விளங்கிய 60 களில் மீண்டும் அவருடைய தெய்வ பிறவி,இரும்புத்திரை பாணி,இயல்பு நடிப்பில் அடக்கி வாசித்த படம் இருவர் உள்ளம். சிவாஜியின் குரு எல்.வீ.பிரசாத் இயக்கி தயாரித்து, கருணாநிதி மீண்டும் நடிகர்திலகத்துடன் இணைந்தார் குறவஞ்சிக்கு பிறகு மூன்று வருட இடை வெளியில். எழுத்தாளர் லட்சுமியின் புகழ் பெற்ற பெண் மனம் (ஆனந்த விகடனில் வெளியான தொடர்) என்ற நெடுங்கதையை தழுவி ,கருணாநிதி அவர்களால் திரைக்கதை அமைக்க பெற்றது.மூல கதையில் இருந்த பிராமண குடும்ப கதையை(ஜகன்னாதன்-சந்திரா) பிராமணம் அல்லாததாக (செல்வம்-சாந்தா) செய்து, அருமையாய் திரைக்கதை அமைத்திருந்தார்.
சிவாஜி ,எப்பவுமே, கதாநாயகியை மையமாய் கொண்ட கதா பாத்திரங்களிலும் நடிக்க தயங்காதவர்.(ஆனாலும் முதல் பரிசை தட்டி சென்று விடுவார்)
மங்கையர் திலகம்,பெண்ணின் பெருமை ,கை கொடுத்த தெய்வம், நீல வானம்,சிவகாமியின் செல்வன்,வாணி-ராணி உதாரணங்கள். இந்த வரிசையில் நாயகியை மைய படுத்தினாலும்,கதையின் நாயகனுக்கும் நிறைய scope கொடுத்த மிக சிறந்த படம் இருவர் உள்ளம்.

இருவர் உள்ளத்தின் கதை-

மிக பெரிய செல்வந்தர் வீட்டு இளைய மகன் செல்வம் டாக்டருக்கு படிக்கிறேன் என்ற பெயரில் பெண்களுடனும்,தவறான நண்பர்களுடனும் சீரழிந்து கொண்டிருப்பவன். செல்வத்தின் தந்தை பெரிய வக்கீல். மூத்த அண்ணன் ,வக்கீலுக்கு படித்திருந்தாலும்,தொழிலில் திறமையின்றி ,நிறைய பிள்ளை குட்டிகளோடு, கூட்டு குடும்ப நிழலில் வாழ்பவன்.செல்வத்திற்கு ஒரு தங்கை.செல்வத்தின் நடவடிக்கை பிடிக்காமல் ,படிப்பை பாதியில் நிறுத்தி ஊருக்கே வர வழித்து விடுகிறார் தந்தை. செல்வம் ஊரில் வந்தும் திருந்தாமல்,இஷ்டப்படி வாழ்கிறான்.

ஒரு நாள், காரில் தன பெண் நண்பி ஒருத்தியுடன் திமிராக சென்று, சாந்தா என்ற ஏழை டீச்சர் பெண்ணை, இடிப்பது போல் நிறுத்தி tease செய்கிறான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ,அவள் மேல் காதலில் விழுந்து அவளை பின் தொடர்கிறான். சாந்தா காதலுக்கு பச்சை கொடி காட்ட மறுக்கிறாள்.அவளை அடையும் ஆசையில் செல்வம் ஒரு முறை, அவளை யாருமில்லா நேரம் ,தன வீட்டுக்கு தந்திரமாக வர வழைத்து அவள் காதலை வேண்டுகிறான். ஆனால் சாந்தா மறுத்து விட்டு செல்லும் போது,தவறுதலாய் பார்த்தவர்கள் ,ஊரில் தவறாக பேச,ஏழை சாந்தா விருப்பமின்றி ,செல்வத்தை மணமுடிக்கிறாள்.

மணமுடித்த நாளில் இருந்து, செல்வத்தை வெறுக்கும் சாந்தா தாம்பத்ய உறவில் விருப்பமின்றி இனங்குவதால்,செல்வம் , அவள் தன்னை விரும்பி ஏற்கும் வரை,கணவன் என்ற உரிமையை எடுக்க மாட்டேன் என்று சத்யம் செய்கிறான். குடும்பத்தினர் அனைவருமே,செல்வம் திருந்தி வாழ நினைப்பதை அறியாமல், செல்வத்தையே குற்றம் சொல்கின்றனர். ஒரு சமயம் ,நெருங்கி வரும் சந்தர்ப்பத்தில்,செல்வத்தில் பழைய பெண் நண்பியின் குறுக்கீட்டால் திரும்ப பிளவு அதிகமாகிறது. சந்தர்ப்ப சூழ்நிலை சதி செய்ய,செல்வம் ,சாந்தா நெருங்கவே முடியாமல் இருக்கும் தருணம்,சாந்தா செல்வம் திருந்தி விட்டதை உணர்ந்து அவனிடம் தன்னை ஒப்படைக்க முயலும் தருணத்தில், செல்வத்தின் பழைய நண்பியை கொன்ற பழி(செய்தது அவளின் புது நண்பன்) விழ, தந்தை செல்வத்திற்கு எதிராகவும்,அண்ணன் செல்வத்திற்காகவும் வாதாடி, செல்வம் விடுதலையாகி ,சாந்தாவுடன் சேர்கிறான்.


முதல் காட்சியிலேயே களை கட்டி விடும் இருவர் உள்ளம். நடிகர் திலகம் அழகென்றால் அவ்வளவு அழகாக ,ஸ்டைல் ஆக தொப்பியுடன் ,காரில் பறவைகள் பலவிதம் பாட ஆரம்பிப்பார். பல பெண்களுடன் ,நடிகர்திலகத்தின் அத்தனை பாடல்,நடன காட்சிகளும் பிரமாதமாய் வந்திருக்கும்.(யாரடி நீ மோகினி,பறவைகள் பலவிதம்,காதல் மலர் கூட்டம் ஒன்று,ஏன் ஏன் ஏன்,ராஜா யுவ ராஜா,கண்ணா லீலாவிநோதம்,என் ராஜாத்தி வாருங்கடி).கே.வீ.எம்.மாமாவின் பாடலுடன் ,மன்மதனின் ஆடல் (ஜெயந்தி முதல் பத்மினி பிரியதர்ஷினி வரை இந்த பாட்டில்) கேட்க வேண்டுமா குதூகலத்தை?

அடுத்தடுத்த காட்சிகளில் காமெடியில் தூள் பரத்துவார். பல பெண்கள் ஒன்றாக வந்து விட ஒருத்திக்கு தெரியாமல் இன்னொருத்தியை சமாளிக்கும் அழகு. தன்னை நோட்டம் பார்க்க வந்த மாமாவிடம் கையும் களவுமாக மாட்டி கொண்டு முழிப்பது,மாட்டுவது, முதல் காட்சியிலேயே சரோஜா தேவியை டீஸ் பண்ணி விட்டு பிறகு இம்ப்ரெஸ் ஆவது, பிறகு தங்கைக்காக சாந்தா டீச்சரை சிபாரிசு செய்து மாட்ட பார்ப்பது,டீச்சர் தங்கைக்கு டியூஷன் எடுக்கும் போது வழிவது, கீசகன் கதையை சொல்லும் சாக்கில் தன்னை கன்னா பின்னாவென்று திட்டும் சரோஜாதேவியுடன் இனிமே எதுவும் சொல்ல தேவையில்லை அவன் போறான் என்று வாபஸ் வாங்குவது, திருட்டு தனமாக டிரைவர் வேடத்தில் சரோஜா தேவியை வீட்டுக்கு வர வழைத்து விளையாட்டாய் முதலில் பேசி பிறகு தன் காதலை வெளியிட்டு கெஞ்சுவது, தன்னை புரிந்து கொள்ளாத மனைவியிடம் முதலிரவில் விட்டு கொடுப்பது, இதய வீணை பாட்டில் சரோஜா தேவி தன் துயரத்தை அப்படியே வெளியிட,நண்பர்களின் கேலி கண்டு, கூனி குறுகி, நாணி குமுறுவது,குடும்பத்தினரும் தன்னை புரிந்து கொள்ளாதது கண்டு மௌனமாய் உருகுவது , ஒவ்வொரு முறையும் மனைவியுடன் நெருங்கும் சந்தர்ப்பத்திலும் பழைய நண்பர்களாலும்,நண்பிகளாலும் கெடும் போது பதைத்து, பதறுவது, மனைவியிடம் தன் நிலையை சொல்லி வருந்துவது என்று நடிகர்திலகம் ஒவ்வொரு பிரேமிலும் பிரமாத படுத்துவார்.

சரோஜாதேவிக்கு நடிக்கும் வாய்ப்பே நடிகர்திலகத்துடன் இணையும் போதுதான்.(பாக பிரிவினை,பாலும் பழமும்,புதிய பறவை,தேனும் பாலும்)என்னும் போது தோதாக இப்படி ஒரு பாத்திரம். விடுவாரா? ஆரம்ப காட்சியில் தன்னை சீண்டிய பெரிய இடத்து வாலிபனிடம் வெறுப்பை உமிழ்வதில் துவங்கி,அவனின் காதலை சொல்லும் அனைத்து முயற்சிகளையும் முறித்து போடுவது, அவமான படுத்த பட்டு கல்யாணத்திற்கு கட்டாய படுத்த படுவது, கணவனுடன் ஒட்டாத வாழ்க்கை,நெருங்க விரும்பும் நேரத்தில் கணவனின் பழைய வாழ்க்கையின் நிழல் துரத்தி அவமான பட நேரும் தருணங்கள்,பிறகு அவனின் நல்ல மனத்தை அறிந்து சேர வரும் போது,மிக பெரிய பிரச்சினையை எதிர் கொள்ள நேருவது என்ற தருணங்களில் பாத்திரத்தின் தன்மையுணர்ந்து நடிகர் திலகத்துக்கு ஈடு கொடுப்பார்.

ரங்கா ராவ், எம்.ஆர்.ராதா,சந்தியா, ராமா ராவ்,கருணாநிதி,முத்து லட்சுமி,பத்மினி பிரிய தர்சினி,ராமச்சந்திரன் அனைவருமே அவரவர் பங்கை சிறப்பாக செய்திருப்பார்.

சிவாஜி-கருணாநிதி இணைவில் வந்த அத்தனை சமூக படங்களுமே magic தான். பராசக்தி,திரும்பிப்பார்,ராஜாராணி,புதையல்,இருவ ர் உள்ளம் எல்லாமே அருமை. (மனோஹரா ஒரு சரித்திர பட சாதனை அதிசயம்) திரைக்கதை அமைப்பில் மு.க ஒரு மேதை. மூலக்கதை சிதையாமல்,பாத்திர வார்ப்பு கெடாமல், படிக்கும் கதை வேறு பார்க்கும் படம் வேறு என்பதை தெளிந்து திரைக்கதை அமைத்த இரண்டே மேதைகள் மு.கவும்,ஏ.பீ.என். மட்டுமே. மு.க தன திரைக்கதையால் படத்தை மிக மிக சுவாரஸ்யமாக்கி பாத்திரங்களுடன் ஒன்ற வைப்பார்.வசனங்களும் அவ்வளவு அருமையாய்,காலத்தை ஒட்டியதாய் அமைத்து படத்தை மெருகேற்றும். காமெடி, பஞ்ச் வசனங்கள் என்று கலக்கியிருப்பார்.(குடுக்கும் போது வாட்ச் பண்றதாலேதான் வாட்ச்னு பெயர் வச்சாங்களா)

பிரசாத் என்ற அற்புதமான இயக்குனர் ,தயாரிப்பாளராகவும் அமைந்து விட்டால்? கேட்கவா வேண்டும்? எல்லா technical அம்சங்களும் நன்கு கவனிப்பு பெற்றிருக்கும்.(கேமரா,எடிட்டிங்) சிவாஜியும் இவரை தன் குருவாக மதித்ததால் ,இவர் சொன்னதை உள்வாங்கி மிதமாய் நடித்ததை சிவாஜியே குறிப்பிட்டுள்ளார்.அற்புதமான இயக்கம்.

கே.வீ.மகாதேவன் ,சிவாஜியுடன் இணைந்ததில் மறக்க முடியாத சமூக படங்களில் ஒன்று.(மற்றவை- பாவை விளக்கு,குலமகள் ராதை,குங்குமம்,ரத்த திலகம்,அன்னை இல்லம்,செல்வம்,பேசும் தெய்வம்,வியட்நாம் வீடு,வசந்த மாளிகை).பறவைகள் பலவிதம், புத்தி சிகாமணி, கண்ணெதிரே தோன்றினால், இதய வீணை தூங்கும் போது, நதி எங்கே போகிறது, ஏனழுதாய், கண்ணே கண்ணே உறங்காதே, அழகு சிரிக்கிறது போன்ற படத்தோடு ஒட்டிய சூப்பர்-ஹிட் பாடல்கள் கே.வீ.எம்-கண்ணதாசன் இணைப்பில். இந்த படத்தின் மிக மிக சிறப்பான அம்சங்களில் ஒன்று ரி-ரெகார்டிங் எனப்படும் பின்னணி இசை சேர்ப்பு. பின்னாளில் பெரிதாக பேச பட்ட கேரக்டர் based மூட் மியூசிக் ,எனக்கு தெரிந்து இந்த படத்தில்தான் அறிமுகமானது.(சிவாஜி,சரோஜாதேவியை பின் தொடரும் இடங்கள்).இதைதான் இளைய ராஜா தன் பதினாறு வயதினிலே,முள்ளும் மலரும் போன்ற படங்களில் தொடர்ந்து பெயரெடுத்தார்.

பெண்ணின் மனதை விலை கொடுத்து வாங்க முடியாது, அப்படி வாங்கினாலும் உடலன்றி உள்ளம் உன்னை சேராது, மனதை அடையும் ஒரே வழி தூய நல்லிதயத்தின் அன்பு ஒன்றுதான் என்ற கான்செப்ட் ,அனைவரின் கூட்டு முயற்சியால் ,பிரம்மாண்ட வெற்றி படமாகி, இன்றளவும் ரசிகர்களை மட்டற்ற குதூகலத்தில் ஆழ்த்தும் அற்புத படமாகவே,காலத்தை கடந்து ஒளி வீசி கொண்டிருக்கிறது.

Gopal.s
16th December 2013, 10:09 AM
நடிகர்திலகத்தின் மாய வலையில் பக்தர்கள். நான்காம் முறையாக நான் ntf இல். பார்த்தால் பசி தீரும், ஆலயமணி ,பார் மகளே பார்....இருவர் உள்ளம். சில புது முகங்கள். நல்ல அரட்டை. ராகவேந்திரா சாரிடம் செல்லமான ஒரண்டை. பம்மலார்,முரளியிடம் ஜாலி கலாய்ப்பு.

நல்ல மாலை. நன்றி நண்பர்களே.

uvausan
16th December 2013, 10:57 AM
இது வாசுவின் அருமையான கவிதாஞ்சலி - இப்படிப்பட்ட ஒருவர் இந்த திரியில் இல்லாதது சிலைய அகற்ற சொல்வதற்கு ஒப்பான கொடுமை !!!

இதோ! என்னுள்ளும் விழுந்த க(விதை)

விலையில்லா நடிப்பால்
கலையுள்ளங்களில் நிறைந்தவனே!

நீ இல்லாத திரையுலகம்
அலையில்லாக் கடல் போல் களையிழந்து கிடக்கிறது

நிலையில்லாத இவ்வுலகில் நீங்காத புகழ் பெற்றவனே! உன்
சிலையில்லாத மெரினா சிறகில்லாத சிட்டாகிவிடுமே

மனமில்லா மனிதர்களின் மனிதாபிமானமற்ற மனத்தால்
தலையில்லா தருக்கர்களின் தன்னிச்சை செயல்களால்

நிலவில்லா வானமாகி விடக் கூடாது நித்ய சென்னை
அளவில்லா கனவுகளை சுமந்து ஆசையுடன் எழுதுகின்றேன்

களங்கமில்லா கண்ணியச் சிலை கடற்கரையிலேயே இருக்கட்டும்.
மீறினால்
காலமெல்லாம் களங்கம் கண்ணியத் தமிழ் நாட்டிற்கே!

:thumbsup:

KCSHEKAR
16th December 2013, 11:16 AM
டியர் ரவி சார்,

சிலை - திரி comparison மற்றும் தங்கள் கவிதைகள் அருமை. நன்றி.

uvausan
16th December 2013, 11:19 AM
கோபால் - இருவர் உள்ளத்தை இங்கு வெளிபடுதினதர்க்கு மிகவும் நன்றி- இந்த திரியும் அப்படிதான் - எழுதுபவர்கள் எண்ணங்கள் பலவிதம் - ஒவ்வன்றும் ஒருவிதம் - எல்லாமே NTஒருவருக்காகவே - இதில் மட்டம் , தாழ்வு, உயர்வு என்ற பிரிவுகளுக்கு இடமேயில்லை - பாராட்டுவோம் எல்லோரையும் - இதுதான் நான் தனிப்பட்ட முறையில் உங்கள் எல்லோருமிடமிருந்தும் கற்றுகொண்ட பாடம் -

நம்மில் ஒத்துமை ஒன்றுதான் நம் எதிரிகளை வீழ்த்தும் பிரமாஸ்திரம் - உங்கள் நல்ல பதிவுகளுக்காக ஏங்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவன்

அன்புடன் ரவி

:smile2::smokesmile:

adiram
16th December 2013, 01:03 PM
இல்லாத ஒன்றை ஏன் இருப்பதாக பாவித்து பதிவிடுகிறார்கள் என்பது புரியவில்லை. இப்போது ஒருவரை ஒருவர் பாராட்டாமல் இருப்பதாலா அனைவரும் மௌனம் காக்கின்றனர்?. மறைந்த பின்னும் நடிகர்திலகத்துக்கு அதிகார வர்க்கத்தால் இழைக்கப்படும் அவமதிப்பை எண்ணி இப்போதுதான் அனைவரும் ஒன்றுபட்டிருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் இந்த திரி புறக்கணிப்பு.

இலங்கையில் துயரப் படுபவர்களுக்காக இங்கிருப்போர் உண்ணாவிரதம் மேற்கொள்வதில்லையா?. எங்கோ நடக்கும் பிரச்சினைக்காக இங்கிருப்போர் கடையடைப்பு செய்து எதிர்ப்பை வெளிப்படுத்துவதில்லையா?. அப்படிப்பட்ட வெளிப்பாடுகளில் ஒன்றுதான் இந்த திரி அமைதி. "நடிகர்திலகத்தின் சிலை அவமதிப்பு விவகாரத்தில் நாங்கள் சந்தோஷமாக இல்லை. அதனால் அமைதி காக்கிறோம்" என்ற உணர்வின் வெளிப்பாடு.

சகோதரர் சந்திரசேகர் போன்ற களப்பணியாளர்கள் செயல்பாடுகள் மூலம் தங்கள் எதிர்ப்பைக்காட்டும் வேளையில், அப்படி இயலாதவர்கள் இப்படி புறக்கணிப்பின் மூலம் துயரத்தை, மனதின் வலியை வெளிப்படுத்துகிறார்கள். அதற்கு "பதிவுகளைப் பாராட்டவில்லை" என்பது போன்ற வேறு வர்ணம் பூசாதீர்கள்.

ajaybaskar
16th December 2013, 10:13 PM
https://pbs.twimg.com/media/BbnupmCIQAATd9C.jpg:large

KCSHEKAR
17th December 2013, 06:59 AM
இருவர் உள்ளம்- 1963
டியர் கோபார் சார்,

வியட்நாமிலிருந்து சென்னை வந்தும், தங்கள் பணியை சென்னையிலும் தொடர்வதற்கு நன்றி.

இருவர் உள்ளம் - விமர்சனம் நம் அனைவரின் உள்ளதையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

uvausan
17th December 2013, 12:56 PM
டியர் ஆதிராம் சார் - வணக்கம் - உங்களுடன் பேசியதில்லை - உரையாடினது இல்லை - உங்கள் இந்த பதிவு மூலம் - உங்களுடன் ஒரு ஆரோக்கியமான உரையாடல் செய்ய எனக்கு வாய்ப்பு கொடுத்ததிற்கு மிகவும் நன்றி - முதலில் பதிவிட வேண்டாம் , அது அனாவசியமான பிரச்சனைக்கு வித்திடும் என்று நினைத்தேன் - பிறகு உங்களக்கு தெரியாததில்லை - இருப்பினும் சில விளக்கங்களை தரலாமே என்று யோசித்தேன் - அதன் முடிவுதான் இந்த சின்ன பதிவு - உங்களக்கு தமிழ் வரவில்லை என்று பதிவு செய்திருந்தீர்கள் - சில நாட்களுக்குள் மிகவும் அருமையாக எழுதுகிறீர்கள் .

உங்கள் முதல் வினா :

இல்லாத ஒன்றை ஏன் இருப்பதாக பாவித்து பதிவிடுகிறார்கள் என்பது புரியவில்லை.


முதலில் என் பதிவுக்கும் இந்த சிலை விவகாரத்திற்கும் சம்பதம் இல்லை - எவ்வளவு நாட்கள் நாம் திரியை புறங்கனிக்க போகிறோம் ? - ஒரு வாதத்திற்கு என்று வைத்துக்கொள்வோம்- தீர்ப்பு இன்னும் 6 மாதங்கள் இழுத்துசெல்கின்றது என்று வைத்துக்கொள்வோம் - இந்த திரியை மூடி விட போகிறோமா ? இல்லை நம் புறங்கனிப்பை தொடரவேண்டுமா ? இல்லை வேறு இடத்தில , அவர் புகழை பாடாமல் இருக்க போகிறோமா ? இல்லையே !! என் கேள்வி இதுதான் - தீர்ப்பு நல்லபடியாகவே வரும் .நம் எல்லோர் பிராத்தனைகளும் வீண் போகாது . KC சாரின் முயற்சியும் தோல்வி அடையாது . திரியை புறங்கனிப்பது கோர்ட்டில் நம் வாதத்திற்கு உதவியாக இருந்தால் , கண்டிப்பாக நீங்கள் சொல்லவதில் சத்தியம் இருக்கின்றது. தீர்ப்பு வரும் முன் ஏன் இந்த திரி சோர்த்து இருக்கவேண்டும் ? - ஒரு பக்கத்தை நிரப்ப , ஒரு மாதம் ஆகின்றதே !!! -

சற்றே உங்களக்கு நேரம் கிடைத்தால் , பழைய பதிவுகளை பாருங்கள் - ஆரோக்கியமான பதிவுகள் - அருமையான உழைப்புகள் , NT யின் வாரா வாரம் டிவி யில் படங்களின் அறிவிப்பு , பிறந்த நாள் வாழ்த்துக்கள் , NT பற்றிய புதிய நடையில் சிறந்த அலசல்கள் - ஜெட் வேகத்தில் பறந்தோம் - பல புதியவர்கள் வந்து பங்களித்தனர் -அன்றும் பிரச்சன்னைகள் இருந்தன . இன்று , சிலை விவகாரம் என்று சொல்லி , நம்மை நாமே தண்டித்துகொண்டு இருக்கிறோம்

Quote :

இலங்கையில் துயரப் படுபவர்களுக்காக இங்கிருப்போர் உண்ணாவிரதம் மேற்கொள்வதில்லையா?. எங்கோ நடக்கும் பிரச்சினைக்காக இங்கிருப்போர் கடையடைப்பு செய்து எதிர்ப்பை வெளிப்படுத்துவதில்லையா?. அப்படிப்பட்ட வெளிப்பாடுகளில் ஒன்றுதான் இந்த திரி அமைதி. "நடிகர்திலகத்தின் சிலை அவமதிப்பு விவகாரத்தில் நாங்கள் சந்தோஷமாக இல்லை. அதனால் அமைதி காக்கிறோம்" என்ற உணர்வின் வெளிப்பாடு.

Unquote :

இதற்க்கு பதில் சொல்லிவிட்டேன் - எவ்வளவு நாட்கள் இந்த திரி அமைதியாக இருக்க வேண்டும் ? - இப்பொழுது சற்றே மாறுதலாக , கோபால் இருவர் உள்ளம் மீண்டும் பதிவு செய்தார் - திரியின் அமைதி போய்விட்டது என்றே சொல்லலாமா ? திரியின் சோக கானத்தை சற்றே மாற்றியதற்காக அவரை பாராட்டுவதில் தவறரில்லையே

Quote:

சகோதரர் சந்திரசேகர் போன்ற களப்பணியாளர்கள் செயல்பாடுகள் மூலம் தங்கள் எதிர்ப்பைக்காட்டும் வேளையில், அப்படி இயலாதவர்கள் இப்படி புறக்கணிப்பின் மூலம் துயரத்தை, மனதின் வலியை வெளிப்படுத்துகிறார்கள். அதற்கு "பதிவுகளைப் பாராட்டவில்லை" என்பது போன்ற வேறு வர்ணம் பூசாதீர்கள்.

Unquote:

எந்த பதிவை நாம் மனமார பாராட்டுகிறோம்? உண்மையில் இந்த மரபு நம்மிடையே குறைந்துகொண்டே வருகின்றது - இன்று நல்ல பதிவாளர்களை இந்த திரி இழந்துகொண்டிருகின்றது என்பதுதான் உண்மை- எனக்கு வர்ணம் பூசும் கலை உண்மையிலேயே தெரியாது சார் - மயான அமைதி வேண்டாமே என்று தானே சொல்கிறேன் - எதிர்ப்பை கண்டிப்பாக தெரிவிப்போம் - அதே சமயத்தில் , எழுத விரும்புவர்கள் எழுதட்டும் - அது வேறு , இது வேறு - முன்பும் பிரச்சனைகளை சந்தித்து உள்ளோம் , இபோழுதும் சந்தித்து கொண்டு இருக்கிறோம் - நாளையும் சந்திப்போம் - ஆணால் நம் NT பக்தி என்றுமே நிலையானது - அது நமக்கு எல்லா வெற்றியும் தரக்கூடியது

உங்களை மறுக்கவேண்டும் என்று இந்த பதிவை போடவில்லை - உங்கள் வார்த்தைகளில் வெப்பம் அதிகமாக உள்ளது என்றும் சொல்லவில்லை - பதிவுகளை பாராட்டுகிறோம் / வர்ணம் புசுகிரீர்கள் என்று சொல்லிருபதினால் , பதில் சொல்ல கடமை பட்டவணாகுகிறேன்.

உங்களுடன் உரையாட வாய்ப்பு கிடைத்தற்கு , மீண்டும் என்னுடைய மனமார்ந்த நன்றி.

அன்புடன் ரவி
:smile2::smokesmile:

adiram
17th December 2013, 05:52 PM
டியர் ரவி சார்,
தங்களின் மனம் திறந்த பதிவுக்கு முதல் நன்றி.

என் தமிழ்ப் பதிவு பற்றி....... 'தமிழில் டைப் செய்வது எப்படியென்று கற்றுக்கொடுங்கள்' என்று ஒரு நண்பரிடம் வேறொரு தளத்தில் கேட்டபோது மிகச்சுலபமாக டைப் செய்யும் முறையை சொல்லித்தந்தார். என்றாலும் சாதாரணமாக நீங்கள் டைப் செய்யும் நேரத்தைப்போல மூன்று மடங்கு நேரம் ஆகிறது. எழுத்து நடையில் முரளிசார், வாசுசார், கார்த்திக்சார், கோபால்சார் இவர்களையே பின்பற்றுகிறேன்.

அடுத்து முக்கிய பிரச்சினை......, நான் யாரையும் இங்கு பதிவிட வேண்டாம் என்று தடுக்கவில்லை. இங்குள்ள முக்கிய பதிவர்களே அவர்களாக ஒரு முடிவுடன் பதிவிடாமல் மவுனம் காத்து வருகின்றனர். ஒரு தவம் போல அதை தொடர்ந்து வருகின்றனர். அதை வரவேற்கிறேன்.

அடுத்து பதிவுகளுக்கு பாராட்டு......., முந்திய பாகங்களை சென்று பார்க்கும்படி சொல்லியிருந்தீர்கள். நீங்களும் பார்ப்பது நல்லது. ஏனென்றால் அவற்றில் ஒவ்வொருவரின் பதிவுகளையும் மற்ற அனைவரும் எவ்வளவு மனம் விட்டு பாராட்டியிருக்கிறார்கள் என்பதை காணலாம். புதிய பதிவர்களின் மூன்று நான்கு வரி பதிவுகளைக்கூட சீனியர் பதிவர்கள் மனம் விட்டு பாராட்டியிருக்கிறார்கள் என்பது தெரியவரும். எனவே பதிவர்கள் மவுனம் காப்பதற்கு, 'பதிவுகளைப் பாராட்டாததே காரணம்' என்று தவறாக பொருள்கொள்ள தேவை இல்லை என்ற கருத்தில்தான் சொல்லியிருந்தேன்.

இதன் பின்னரும் தங்களுக்கு திருப்திப்படாவிட்டால் சொல்லுங்கள். என்னுடைய இந்தப் பதிவையும் இதற்கு முந்திய பதிவையும் நீக்கி விடுகிறேன்.

Murali Srinivas
17th December 2013, 10:25 PM
சென்ற வருடம் டிசம்பர் மாதம் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றபோது கர்ணன் திரையிடப்பட்டது. சென்ற வருட விழாவைப் பற்றியும் அதில் கர்ணன் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றியும் தி ஹிந்து தமிழ் பதிப்பில் ஒரு இளம் வயது கட்டுரையாளரின் பதிவு

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%A F%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/article5455358.ece

இத்தகவலை தெரிவித்த கிருஷ்ணாஜி அவர்களுக்கு நன்றி!

அன்புடன்

anasiuvawoeh
18th December 2013, 09:07 AM
Dear Gopal sir,I enjoyed your iruvar ullam coverage.You have specially mentioned the dialogues of Kalaignar.One more interesting dialogue is by Iyya theriyaadhaiyaa Ramarao.When someone asks him showing A.Karunanidhi,who is he,he replies that ,"I am husband to his daughter and he is my husband".At anyplace,anyday I laugh myself when I remember this dialogue.
"AVAR PONNUKKU NAAN PURUSAN YENAKKU AVARU PURUSAN"

KCSHEKAR
18th December 2013, 02:09 PM
http://www.youtube.com/watch?v=igO39jnAZRE

நடிகர்திலகம் சிவாஜி சிலை வழக்கில் நேற்று (17-12-2013) வழக்கறிஞர்களின் வாதம் முடிந்தது. ஏற்கனவே நான் இத்திரியில் குறிப்பிட்டிருந்த பல கருத்துக்களோடு, பல் வழக்குகளின் தீர்ப்புகளையும் மேற்கோளிட்டு, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையின் சார்பில் திரு.பிரபாகரன் வாதிட்டார். அவற்றில் சில:

1) சென்னை மாநகரில், கடந்த 10 வருடங்களில் வருடந்தோறும், 5000 முதல் 10 ஆயிரம் வரை சாலை விபத்துக்கள் நடக்கின்றன. (காமராஜர் சாலை உட்பட சாலை வாரியாக நடைபெற்ற புள்ளி விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன) இவை ஓட்டுனரின் கவனக்குறைவு, சிக்னலை மதிக்காமை மற்றும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதாலேயே ஏற்படுகின்றன.

2) சென்னையின் மிக முக்கிய சாலையான அண்ணா சாலை உட்பட தமிழகத்தின் பல்வேறு சாலைகளில் பல்வேறு சிலைகள் இருக்க, நடிகர்திலகத்தின் சிலை மட்டும் இடைஞ்சல் என்ற வாதம் ஏற்கத்தக்கதல்ல. பொதுநலன் வழக்காக இதனைத் தொடர்ந்திருப்பவர் உன்மையிலேயே பொதுநலன் கருதியிருந்தால், எல்லா சிலைகள் குறித்தும் தொடர்ந்திருக்கவேண்டும். சிவாஜி சிலையை மட்டும் எதிர்த்திருப்பது உள்நோக்கம் கொண்டது.

3) கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை வைரவிழாவையோட்டி சென்னை, கடற்கரை காமராஜர் சாலையில் ஒரு நினைவு வளைவு திறக்கப்பட்டது. அதனை எதிர்த்து ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு அதற்காக நீதிபதிகள் குறிப்பிட்ட காரணம்:

அரசாங்கத்தின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடமுடியாது. இந்த சாலையில் வளைவு அமைப்பதற்காக, நெடுஞ்சாலைத் துறை, சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் போக்குவரத்துத் துறையிடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது - என்று குறிப்பிட்டுள்ளார்கள்

நடிகர்திலகம் சிலை வழக்கைப் பொறுத்தவரையில் மேற்குறிப்பிட்ட அனைத்து காரணங்களுமே பொருந்தும். நடிகர்திலகம் சிலை அமைப்பதற்காக நெடுஞ்சாலைத் துறை, சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் போக்குவரத்துத் துறையிடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதனாலேயே அவர்கள் கொடுத்த தடையில்லா சான்றிதழும் மாறிவிடாது.

இதேபோல, உச்சநீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகள் மற்றும், ஆந்திர உயர்நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பு உட்பட பல வழக்குகளின் தீர்ப்புகளை சமர்ப்பித்து, இந்த பொதுநல வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதாடப்பட்டது.

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் வாதிட்ட வழக்கறிஞரின் வாதத்தின் சில முக்கிய பகுதிகளை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்.

தீர்ப்பு ஜனவரி முதல் வாரத்தில் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

பராசக்தியில் கல்யாணிக்காக நீதிமன்றத்தில் வழக்காடிய நடிகர்திலகத்தின் சிலை அதே இடத்தில் அமையும்படி தீர்ப்பு அமையும் என்று நம்புவோம். பராசக்தி வைரவிழா கொண்டாடிய இந்நேரத்தில், பராசக்தி குணசெகரனுக்காக நாம் நீதிமன்றம் சென்றிருக்கிறோம். நீதி வெல்லும்

ஆதரவளித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி.

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/Dinathanthi18Dec2013_zpse2550b7c.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/Dinathanthi18Dec2013_zpse2550b7c.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/DinaIdhazh18Dec2013_zpsac369061.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/DinaIdhazh18Dec2013_zpsac369061.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/HinduTamil18Dec2013_zps158d9796.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/HinduTamil18Dec2013_zps158d9796.jpg.html)

uvausan
18th December 2013, 04:55 PM
Excellent arguments and news as well KC Sir - Predominantly the credit goes to you . Hope some wisdom will prevail over concerned and focus on more productive work of traffic management . I'm sure the new year 2014 will bring us more cheers and rejuvenate this thread as well .

:smile2::smokesmile:

Subramaniam Ramajayam
19th December 2013, 12:15 AM
Thanks mr kc sir for the detailed write up about the NT statue case position.
we can definitely expect positive verdict as we all know NT is a person whoneither
did any thing bad to others nor thought of doing bad things;
TRUTH ALWAYS SURVIVE IN THE END,
YOUR EFFORTS WILL NOT GO WASTE.

KCSHEKAR
19th December 2013, 11:59 AM
ஆனந்த விகடன்- 25-12-2013 - பொக்கிஷம் - அன்று
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/p72_zps40dd0a39.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/p72_zps40dd0a39.jpg.html)

eweaxagayx
19th December 2013, 04:52 PM
தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்"

சினிமா உலகில் சிவாஜி கணேசனுக்கு என்று சிம்மாசனம் என்றைக்கும் உண்டு. ஆனால் அவர் அதை எப்படி அடைந்தார் என்று தெரியுமா?

பேரறிஞர் அண்ணா சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் என்று ஒரு நாடகம் எழுதி இருந்தார். தி.மு.க மாநாட்டில் அது நடக்க வேண்டும். எம்.ஜி.ஆர். அவர்கள் கதாநாயகனாக, மராட்டிய மாமன்னன் சிவாஜியாக நடிக்க வேண்டும். மாநாட்டுக்கு ஒரு வாரம் இருக்கும் போது நடிக்க மறுத்துவிட்டார்.
இனிப் போய் யாரைத் தேடுவது? அறிஞர் அண்ணாவிடம் இதைத் தெரிவித்ததும் மூக்கும் முழியுமா ஒரு பயலைப் பிடிங்கப்பா… என்று சொல்லிவிட்டுத் திரும்பியபோது கணேசன் (பிற்கால சிவாஜிகணேசன்!) கண்ணில் பட்டார். அவருக்கு முழியும் பெரிசு… மூக்கும் பெரிசு “கணேசா நீ நடிக்கிறியா?” என்றார் அண்ணா.

“அண்ணா அது எவ்வளவு பெரிய வேஷம்… அண்ணன் நடிக்கிறதா இருந்தது… நான் எப்படி… நான் ரொம்ப சின்னவன்” என்று பணிவு காட்டியிருக்கிறார் கணேசன். “இனிமேல் போய் யாரைத் தேடறது… இந்தா இதுதான் சிவாஜி பாடம் (வசனம்) நீ படிச்சு வை. நான் சாப்பிட்டிட்டு வந்து கேக்கறேன்” என்று முடிவு சொல்லிவிட்டு நகர்ந்தார் அண்ணா. சாப்பிட்டு விட்டு, சின்ன தூக்கம் போட்டு விட்டு அண்ணா திரும்பியதும் ஆச்சர்யம் காத்திருந்தது. “அண்ணா இப்பிடி நாற்காலில உட்காருங்க” என்று அழுத்தி உட்கார வைத்துவிட்டு கணேசன் சிவாஜியாக வசனம் சொல்ல ஆரம்பித்தார். கொடுத்த பாடத்தை (நஸ்ரீழ்ண்ல்ற்)ப் பார்த்து படிக்கப் போகிறார் என்று எண்ணிய அண்ணா திகைத்துப் போனார்.

மொத்த நாடகத்தில் சிவாஜி வேடத்துக்குரிய வசனம் முழுவதையும் (பலப்பல பக்கங்கள்) கிடுகிடுவென்று மனப் பாடத்துடன் நடித்துக் காட்டினார் கணேசன். முழுவசனமும் மனப்பாடம்…! நம்ப முடிகிறதா? “அப்புறம் படிக்கறேனே! கொஞ்சம் கொஞ்சமா படிக்கிறேனே…!” என்ற சோம்பல் அவரிடம் இல்லை. ஒரே மூச்சில் மனப்பாடம்… கிடைத்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தும் கடின உழைப்பு…
அதனால் தான் நாடகத்தைப் பார்த்துவிட்டு பரபரப்பாக மேடை ஏறி வந்த தந்தை பெரியார். “யாருப்பா அந்தப் பையன்… என்னமா நடிக்கிறான்” என்று புகழ்ந்தபோது “கணேசன்” என்று அறிமுகப்படுத்தினார்கள். “கணேசனா… இல்ல… இல்ல… இவன் சிவாஜிகணேசன்” என்று பட்டாபிஷேகம் செய்தார். திராவிட வசிட்டர் தமிழர் மகரிஷி தந்தை பெரியார்.

எட்டு மணிக்கு ஷூட்டிங் என்றால் எட்டு மணிக்கு வந்து தயாராகும் இக்கால நடிகர்கள் போல அல்லர் அவர். எட்டு மணிக்கே மேக்கப்புடன் தயாராக இருப்பார். அதனால்தான் எட்டாத இடங்களை எட்ட முடிந்தது அவரால்!


ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz

geno
20th December 2013, 11:07 AM
தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்"

சினிமா உலகில் சிவாஜி கணேசனுக்கு என்று சிம்மாசனம் என்றைக்கும் உண்டு. ஆனால் அவர் அதை எப்படி அடைந்தார் என்று தெரியுமா?

பேரறிஞர் அண்ணா சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் என்று ஒரு நாடகம் எழுதி இருந்தார். தி.மு.க மாநாட்டில் அது நடக்க வேண்டும். எம்.ஜி.ஆர். அவர்கள் கதாநாயகனாக, மராட்டிய மாமன்னன் சிவாஜியாக நடிக்க வேண்டும். மாநாட்டுக்கு ஒரு வாரம் இருக்கும் போது நடிக்க மறுத்துவிட்டார்.
இனிப் போய் யாரைத் தேடுவது? அறிஞர் அண்ணாவிடம் இதைத் தெரிவித்ததும் மூக்கும் முழியுமா ஒரு பயலைப் பிடிங்கப்பா… என்று சொல்லிவிட்டுத் திரும்பியபோது கணேசன் (பிற்கால சிவாஜிகணேசன்!) கண்ணில் பட்டார். அவருக்கு முழியும் பெரிசு… மூக்கும் பெரிசு “கணேசா நீ நடிக்கிறியா?” என்றார் அண்ணா.

“அண்ணா அது எவ்வளவு பெரிய வேஷம்… அண்ணன் நடிக்கிறதா இருந்தது… நான் எப்படி… நான் ரொம்ப சின்னவன்” என்று பணிவு காட்டியிருக்கிறார் கணேசன். “இனிமேல் போய் யாரைத் தேடறது… இந்தா இதுதான் சிவாஜி பாடம் (வசனம்) நீ படிச்சு வை. நான் சாப்பிட்டிட்டு வந்து கேக்கறேன்” என்று முடிவு சொல்லிவிட்டு நகர்ந்தார் அண்ணா. சாப்பிட்டு விட்டு, சின்ன தூக்கம் போட்டு விட்டு அண்ணா திரும்பியதும் ஆச்சர்யம் காத்திருந்தது. “அண்ணா இப்பிடி நாற்காலில உட்காருங்க” என்று அழுத்தி உட்கார வைத்துவிட்டு கணேசன் சிவாஜியாக வசனம் சொல்ல ஆரம்பித்தார். கொடுத்த பாடத்தை (நஸ்ரீழ்ண்ல்ற்)ப் பார்த்து படிக்கப் போகிறார் என்று எண்ணிய அண்ணா திகைத்துப் போனார்.

மொத்த நாடகத்தில் சிவாஜி வேடத்துக்குரிய வசனம் முழுவதையும் (பலப்பல பக்கங்கள்) கிடுகிடுவென்று மனப் பாடத்துடன் நடித்துக் காட்டினார் கணேசன். முழுவசனமும் மனப்பாடம்…! நம்ப முடிகிறதா? “அப்புறம் படிக்கறேனே! கொஞ்சம் கொஞ்சமா படிக்கிறேனே…!” என்ற சோம்பல் அவரிடம் இல்லை. ஒரே மூச்சில் மனப்பாடம்… கிடைத்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தும் கடின உழைப்பு…
அதனால் தான் நாடகத்தைப் பார்த்துவிட்டு பரபரப்பாக மேடை ஏறி வந்த தந்தை பெரியார். “யாருப்பா அந்தப் பையன்… என்னமா நடிக்கிறான்” என்று புகழ்ந்தபோது “கணேசன்” என்று அறிமுகப்படுத்தினார்கள். “கணேசனா… இல்ல… இல்ல… இவன் சிவாஜிகணேசன்” என்று பட்டாபிஷேகம் செய்தார். திராவிட வசிட்டர் தமிழர் மகரிஷி தந்தை பெரியார்.

எட்டு மணிக்கு ஷூட்டிங் என்றால் எட்டு மணிக்கு வந்து தயாராகும் இக்கால நடிகர்கள் போல அல்லர் அவர். எட்டு மணிக்கே மேக்கப்புடன் தயாராக இருப்பார். அதனால்தான் எட்டாத இடங்களை எட்ட முடிந்தது அவரால்!


ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz

எனக்குத் தெரிந்து "சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் (அல்லது) சந்திரமோகன் " நாடகம் அண்ணாவால் 1948-இலேயே போடப்பட்டது. அதற்கு எம்ஜியார் முதலில் நடிக்க இருந்தார் என்பது புதிய , இதுவரை கேள்விப்படாத செய்தி. 1948-இல் தி.கதான் இருந்தது!
திமுக செப்டம்பர் 1949-இல் துவக்கப்பட்டது!

திமுக துவக்கிய பிறகு பெரியாரும் அண்னாவும் சுமுகமாகப் பேசிக் கொள்ளவே பல ஆண்டுகள் ஆகின!

தி.க காலத்திலேயே நடந்த நிகழ்வு இது. பெரியார் எனும் மனிதர் இல்லாவிட்டால் தமிழினம் தன் அடையாளத்தைக் கண்டுகொள்ளவே நூற்றாண்டுகள் ஆகியிருக்கும்!

geno
20th December 2013, 11:16 AM
சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம் - சிவாஜி கணேசனை தமிழ் உலகுக்கு அறிமுகம் செய்த மாபெரும் கலைப் பெட்டகம். அதன் இயங்கு தளம் குறித்து தெரிந்து கொள்ள :

மராத்திய சிவாஜியும் மூன்று கோணங்களும் (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=18843:2012-03-05-06-18-24&catid=1450:12012&Itemid=690)



"......மண்ணின் மைந்தனாக சிவாஜி எழுந்து போராடினார் என்பதும் உண்மை. முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப்பை எதிர்த்துக் களம் கண்டார் என்பதும் உண்மை. ஆனால் இரண்டு உண்மை களுக்கும் இடையில் புதைந்து கிடந்த இன்னொரு உண்மையை, அறிஞர் அண்ணா அவர்கள்தான் திராவிட இயக்கப் பார்வையோடு வெளிக் கொண்டுவந்தார். எதிரியோடு போராடி வெற்றி பெற்று தன் சொந்த மண்ணை அவர் மீட்டெடுத்தார் என்றாலும், அம்மண்ணிற்கு அரசனாக அவர் முடிசூடிக்கொள்வதற்கு ஆயிரம் தடைகள் இருந்தன.

அவர் பிறந்த குலம் ஆளப்பிறந்த குலம் அன்று என்று சொல்லி, ஒருநாளும் அவர் மன்னராக முடியாது என்று வைதீகப் பார்ப்பனர்கள் வாதிட்டனர். ஒரு சூத்திரன் எப்படி நாடாளலாம் என்று கேள்வி எழுப்பினர். போரிலே புலியாக இருந்தாலும், வைதீக புரியிலே சிவாஜி எலியாகச் சிக்கிக் கொண்டார். மாவீரன், மராட்டியம் பெற்றெடுத்த வீரன், களத்திலே சூரன் சிவாஜி, காகப்பட்டரிடம் அடைக்கலம் புகுந்த பின்பே அரியாசனம் ஏற முடிந்தது என்னும் உண்மையைத் தன் நாடாகத்தின் மூலம் அனைவரும் அறிய வைத்தார் அண்ணா.

சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் என்னும் நாடகத்தில், வெளிவராத பல வரலாற்று உண்மைகளை விளக்கிக் காட்டினார். அதற்குப் பிறகே சிவாஜியின் மூன்றாவது பக்கத்தை ஊரும் உலகமும் அறிந்து கொண்டது.


மராத்திய மண்டலத்தைக் கமண்டல நீர் தெளித்து அவர்கள் உருவாக்கவில்லை. மராத்தியர்கள் ரத்தம் சிந்திய பிறகே அந்த மண்டலம் உருவாயிற்று. ஆனால் அதுவரை காத்திருந்த பார்ப்பனர்கள், ஆட்சி பீடம் ஏறும்தருவாயில் தங்கள் சூழ்ச்சி வலைகளை விரித்தனர். வேறு வழியின்றி சிவாஜியும் அதற்கு ஆட்பட்டார், அடிமைப்பட்டார். இதுதான் அண்ணா வடித்துத் தந்த சித்திரம்.

இந்தச் சித்திரத்திற்குள்தான் இந்தியா முழுவதும் விரிந்து கிடந்த வருணாசிர தர்மத்தின் வலைப்பின்னல்கள் மக்களுக்கு விளக்கப்பட்டன.
ஜோதிராவ் பூலேக்குப் பார்ப்பனிய ஆதிக்கம் புரியாத புதிர் இல்லை. அய்யா பெரியாருக்கும், அண்ணல் அம்பேத்கருக்கும் அரைநூற்றாண்டிற்கும் முன்பாகவே அதனை உலகிற்கு எடுத்துக்காட்டிய உன்னத மனிதர் ஜோதிராவ் பூலே. எனினும் சிவாஜியின் வீரத்தை எடுத்துக்காட்டி, அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராட வேண்டிய ஆவேசத்தின் குறியீடாய் சிவாஜியை அவர் பார்த்தார்.

அதே பார்வையை அவர் மக்களுக்கும் ஊட்டினார். அந்த ஊக்கமும் உணர்வும் வரப்பெற்றால்தான், அடிமைத்தளையை அறுத்தெறிந்து, விடுதலைக்காக மக்கள் வீறுகொண்டு எழுவார்கள் என்று பூலே கருதினார்.

ஒரு கோணத்தில் பூலேயின் பார்வை சரிதான் என்றாலும், வருணசாதி அமைப்பையே சமூக அமைப்பாகக் கொண்டிருக்கிற இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில், விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினார் அண்ணா. அதற்குக் கலை இலக்கியத் தளமே மிக உகந்தது என்பது அவர் கருத்தாக இருந்தது. அதனால் அண்ணாவும் அவரோடு இணைந்து பணியாற்றிய திராவிட இயக்கத் தலைவர்கள் பலரும் தங்கள் பார்வையைக் கலை இலக்கியங்கள் மூலம் நிலைநாட்டினர்.

திராவிட இயக்கம், 1940 தொடங்கி கலை இலக்கியத் தளங்களை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. முதன் முதலாகப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும், அவரைத் தொடர்ந்து அறிஞர் அண்ணாவும் திரைத்துறைக்குள் நுழைந்தனர். பிறகு கலைஞர், ஜலகண்ட புரம் கண்ணன், கண்ணதாசன் என ஒரு எழுத்துப்பட்டாளமே கலைத்துறையில் காலடி எடுத்து வைத்தது. நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமி, நடிகவேள் எம்.ஆர். இராதா, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகமணி டி.வி. நாராயணசாமி, இலட்சிய நடிகர் எஸ்.எஸ். இராசேந்திரன் எனத் திரைப்பட நடிகர்களின் வரிசையயான்றும் நீண்டது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், தொடக்கத்தில், இப்பட்டியலில் இடம் பெற்றிருந்தார். இவ்வாறு கலை, இலக்கிய அரங்குகளில் கால் பதித்த திராவிட இயக்கம், கொள்கை பரப்புவதைக் குறிக்கோளாய்க் கொண்டது.

அந்த வகையில், அண்ணாவின் நாடகமான சந்திரமோகன், ஆரம்ப காலத்திலேயே அரங்கேற்றப்பட்ட ஒன்று. வேலைக்காரி, சொர்க்கவாசல், பராசக்தி, ரத்தக் கண்ணீர், மனோகரா போன்ற பல திரைப்படங்கள் பிற்காலத்தில் வெளியாகி, திராவிட இயக்கக் கோட்பாடுகளைத் தமிழக மக்களிடம் எளிதாகக் கொண்டுசென்றன. அவற்றுக்கெல்லாம் முன்பாக, 1945ஆம் ஆண்டே மேடையேற்றப்பட்ட நாடகம்தான் சிவாஜி பற்றிய அண்ணாவின் நாடகம்.

சாதாரண மனிதனைத்தான் சதுர்வருணம் பிடித்தாட்டுகிறது என்று எண்ண வேண்டாம். சாம்ராஜ்யத்தையே ஆளவந்தாலும், காகப்பட்டர்களினன் காலடிகளில்தான், சூத்திரர்கள் என அழைக்கப்பட்டவர்கள் சுயமரியாதையற்றுச் சுருண்டு போனார்கள் என்பதை நாடகம், எல்லோர்க்கும் புரியும் வகையில் புலப்படுத்தியது.

தப்பித்தவறி ராஜாக்களாகச் சில சூத்திரர்கள் வந்துவிட்டாலும், ராஜகுருக்கள்களாகப் பார்ப்பனர்கள்தாம் இருப்பார்கள் என்பதுதான் இன்றுவரை நம் அரசியலாக உள்ளது. இதைத்தான், 67 ஆண்டுகளுக்கு முன்பே அண்ணாவின் நாடகம் அழுத்தமாய்ச் சொல்லியது.............."

KCSHEKAR
21st December 2013, 12:27 PM
நடிகர்திலகம் சிலை வழக்கில் நான் எடுத்த முயற்சிகளுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல தீர்ப்பு வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நன்றி.

uvausan
22nd December 2013, 01:07 PM
In Murasu TV

Today at 7.30pm - annada kaneer
Tom at 7.30 pm - Rajapart Rangadurai

:):smokesmile:

Murali Srinivas
23rd December 2013, 12:33 AM
உண்மை உணரும் நேரம் - 3

ஒரு முன்னுரை

இனி நமது ஹப்பில் பதியப்பட்ட மற்றொரு "வரலாற்று" பதிவிற்கு வருகிறேன். அதற்கு முன்பு ஒரு விஷயம் சொல்ல வேண்டும். முதலில் நமது ஹப் அல்லது மய்யம் என்ற இந்த இணையதளத்தைப் பற்றிய செய்தி. இது தொடங்கப்பட்டது தமிழ் சினிமா இசையைப் பற்றிய ஒரு தகவல் பரிமாற்றம் மற்றும் பாடல்களின் சிறப்பை நினைவு கூர்தல் ஆகியவற்றுக்காக. முதலில் அதன் பெயரே TFM DF. Tamil Film Music Discussion Forum. பின்னர் அது படிப்படியாக விரிவாக்கப்பட்டு நாம் இன்று காணும் அமைப்பில் வந்து நிற்கிறது. இங்கே சூரியனுக்கு கிழே உள்ள எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். பல் வேறு துறைகளில் உள்ள ஆளுமைகளைப் பற்றி அது கலைத்துறையாக இருக்கலாம், இசைதுறையாக இருக்கலாம், திரைப்பட துறையாக இருக்கலாம், இன்னும் அரசியல், விளையாட்டு, இலக்கியம், கவிதைகள், படைப்புகள் என்று ஒவ்வொரு துறையிலும் புகழ் பெற்ற ஆளுமைகளைப் பற்றி அவர்தம் படைப்புகளைப் பற்றி பதிவுகள் இடலாம், கருத்து பரிமாற்றம் மற்றும் ஆரோக்கியமான விவாதங்கள் ஆகியவை இடம் பெறலாம். ஆனால் அவை அந்தந்த பிரிவில் கீழே வரும் தலைப்புகளில் இருக்க வேண்டும். அரசியல் பற்றி விவாதிக்க வேண்டுமானால் current topics பகுதிக்கு செல்ல வேண்டும். அவற்றை திரைப்படங்கள் பகுதியில் பதிவிடுவது சரியானது அல்ல. அதே போன்றே திரைப்படங்கள் பகுதியில் ஒரு திரைத்துறை ஆளுமைக்காக உருவாக்கப்பட்ட திரியில் தனிப்பட்ட மனிதர்களின் வீட்டில் நடைபெறும் காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா மற்றும் இன்ப சுற்றுலா போன்றவை இடம் பெறுவது சரியல்ல. அவற்றை பதிவு செய்ய வேண்டுமென்றால் Hubbers Lounge என்ற பகுதிக்கு செல்ல வேண்டும்.

இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் பல்வேறு நேரங்களில் திரைப்படம் சம்பந்தப்பட்ட திரிகளில் அதற்கு தொடர்பே இல்லாமல் வேறு பல பதிவுகள் வருகின்றன. அதை தவிர்க்க சொல்லவே இந்த் முன்னுரை.

உண்மை உணரும் நேரம் - 3 (Part I)

சரி நாம் விட்ட இடத்திற்கு வருவோம். நடிகர் திலகம் திரியில் நாம் அரசியல் பதிவுகள் இடுவதில்லை. எப்போதேனும் சில விவாதங்கள் வரும்போது கூட அதை தவிர்க்க சொல்கிறோம். ஜூலை 15 அன்று மட்டும் நடிகர் திலகம் தன் வாழ்நாள் முழுக்க யாரை தலைவராக ஏற்றுக் கொண்டாரோ, யாரை நாமும் இன்று வரை போற்றுகிறோமோ அவரை அந்த பெருந்தலைவரைப் பற்றிய ஒரு நினைவு கூறல் அதுவும் அது பிறந்த நாளாக இருப்பதனால் செய்கிறோம். அந்த வகையில் இந்த வருடமும் ஜூலை 15 அன்று அவரை பற்றிய பதிவுகள் வந்தன. என்னுடைய பங்காக அவர் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது தொழில்துறை சிறக்க அவர் எடுத்த முயற்சிகள், பங்களிப்புகள் பற்றிய ஒரு தகவல் குறிப்பாக செய்தேன்.

வழக்கம் போல் இதற்கும் பதில் சொல்கிறேன் பேர்வழி என்று ஒரு பதிவு வெளிவந்தது. அவர்களின் அபிமானத்துக்குரியவரை பற்றிய புகழ் பாடல். அதில் நமக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் அதே பதிவில் பெருந்தலைவர் பற்றிய தவறான தகவல்களை சொல்லியிருந்தார்கள். அந்த தவறை சுட்டிக் காட்டவும் வரலாற்று உண்மைகளை எடுத்துக் கூறவுமே இந்த பதிவு.

முதலில் பெருந்தலைவர் பதவியேற்று போது நடந்த ஒரு நிகழ்வு பற்றி சொல்லும்போது எழுதப்பட்ட பிழை.

1954 ஏப்ரல் 13 அன்று தமிழக முதல்வராக பெருந்தலைவர் பதவியேற்கிறார். அப்போது அவர் சட்டமன்ற உறுப்பினராக இல்லை. எனவே குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். இதுவரை சரி.

அடுத்து என்ன சொல்கிறார்கள்? பெருந்தலைவர் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டபோது அவருக்கு எதிராக திமுக சார்பில் வேட்பாளரை நிறுத்தாமல் அண்ணாதுரை பெருந்தன்மையாக நடந்துக் கொண்டார். திமுக போட்டியிடவில்லை என்பது உண்மை. அனால் அதற்கு காரணம் பெருந்தன்மையா? இல்லை. அப்படியென்றால் உண்மைக் காரணம் என்ன? சற்று வரலாற்றை பின்னோக்கி பார்ப்போம்.

திராவிடர் கழகத்தில் ஈ.வே.ரா. தலைமையில் செயல்பட்டு வந்தவர்கள்தான் சி.என்.ஏ., மதியழகன்,சம்பத் மற்றும் நெடுஞ்செழியன் போன்றவர்கள். இவர்கள்தான் 1949-ல் திராவிட கழகத்தை விட்டு வெளியேறினார்கள். கொள்கையில் கருத்து வேறுபாடா என்றால் இல்லை. ஈ.வே.ரா. தன்னை விட வயதில் மிக மிக இளையவரான மணியம்மையாரை திருமணம் செய்துக் கொண்டார். அதை எதிர்த்து வெளியேறிய இவர்களை கண்ணீர் துளிகள் என்று வர்ணித்தார் ஈ.வே.ரா.

பிரிந்து சென்றவர்கள் 1949-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி வட சென்னையில் ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கினார்கள். மறுநாள் கட்சிகென்று சட்டத்திட்டங்கள் வகுக்கப்பட்டன. அதில் முக்கியமான பிரிவு என்ன சொல்லியது என்றால் திராவிடர் கழகம் போல திராவிட முன்னேற்ற கழகமும் சமூக சீர்திருத்த இயக்கமாகவே செயல்படும் என்றும் அதனால் தேர்தல் அரசியலில் பங்கு கொள்ளாது என்றும் சொல்லி அதை கட்சியின் விதிமுறையாக அமல்படுத்தப்பட்டது. அந்த பிரிவில் ஒரு உட்பிரிவாக ஒரு ஷரத்து சேர்க்கப்பட்டது. அது என்னவென்றால் இந்த முடிவை மாற்ற வேண்டுமென்று பின்னாட்களில் கட்சி முடிவெடுத்தால் அதை கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் தீர்மானமாக கொண்டு வந்து அதற்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்தாலே அதை செயல்படுத்த முடியும் என்பதும் கட்சியின் சட்டமாக்கப்பட்டது. கட்சியில் இப்படி ஒரு சட்ட பிரிவு இருந்ததனால்தான் 1952-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. அதே காரணத்தினால்தான் 1954-ம் ஆண்டு குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக போட்டியிடவில்லை.

பதவியைப் பிடித்து ஆட்சிக்கட்டிலில் அமர்வதையே தங்கள் வாழ்நாள் லட்சியமாக கொண்ட திராவிட இயக்கத்தினரால் ஒரு தேர்தலுக்கு மேல் பொறுக்க முடியவில்லை. 1956-ம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற திமுக மாநாட்டில் தேர்தலில் பங்கு கொள்ள வேண்டும் என்பதை தீர்மானமாக கொண்டு வந்து பெரும்பான்மை உறுப்பினர்கள் அதை ஆதரிக்கவே அதை ஏற்று அப்போது நடைபெற இருந்த 1957-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் திமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. [என் நினைவு சரியாக இருக்குமென்றால் இந்த மாநாட்டில்தான் அண்ணாதுரை அவர்கள் நெடுஞ்செழியனைப் பார்த்து தம்பி வா! தலைமையேற்க வா! என்று சொன்னதாக படித்திருக்கிறேன். இதைப் பற்றி உறுதியாக தெரிந்தவர்கள் சொல்லலாம்].

மீண்டும் நம் எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு வருவோம். உண்மை என்ன? திமுக தானே வகுத்துக் கொண்ட சட்டதிட்டத்தின்படிதான் 1952-ம் பொதுதேர்தலிலும் போட்டியிடவில்லை. 1954-ம் ஆண்டு குடியாத்தம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் போட்டியிடவில்லையே தவிர இதற்கு பெருந்தன்மை காரணமில்லை. உண்மையிலே அப்படி பெருந்தலைவர் மீது மதிப்பும் மரியாதையும் இருந்திருக்குமானால் 1957 பொதுத்தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிடாமல் பெருந்தன்மையை காட்டியிருக்கலாமே. 1962 தேர்தலிலும் 1957 தேர்தலிலும் ஏன் 1969-ம் ஆண்டு அவர் நாகர்கோவில் இடைத்தேர்தலில் பாராளுமன்றத்திற்கு போட்டியிட்டபோது அதே பெருந்தன்மையை காட்டியிருக்கலாமே! ஏன் செய்யவில்லை?

இதுவும் தினமலர் வாரமலர் இதழில் தமிழக அரசியல் வரலாறு தெரியாத ஒருவர் அள்ளிவிட்ட கப்சா! இதை உண்மையா என்று கூட சரி பார்க்காமல் இங்கே பதிவு செய்தாகிவிட்டது. இதை யார் கேட்கப் போகிறார்கள்? கேட்டாலும் பதில் இருக்கவே இருக்கிறது அதாவது இந்தப் புத்தகத்தில் வந்தது என சொல்லிக் கொள்ளலாம் என்ற எண்ணம்தான் காரணம்.

நான் குறிப்பிட்டது போல வரலாற்று உண்மைகளை எல்லா காலங்களிலும் மறைக்க முடியாது. அவை வெளிவந்தே தீரும்.

(தொடரும்)

அன்புடன்

KCSHEKAR
23rd December 2013, 10:41 AM
உண்மை உணரும் நேரம் - 3

டியர் முரளி சார்,
தாங்கள் பெருந்தலைவர் காமராஜர் அவர்களைப் பற்றிய உண்மைகளை தெளிவாகக் கூறியிருக்கிறீர்கள்.

நானும், இதுகுறித்து, e .v .k .சம்பத் எழுதிய திராவிட இயக்க வரலாறு நூலிலும், கவியரசு கண்ணதாசனின் வனவாசத்திலும் படித்திருக்கிறேன்.

நம் தலைவர் சிவாஜியைப் போலவே அவர் தலைவராக ஏற்றுக்கொண்ட காமராஜரின் அரசியல் மற்றும் பொதுவாழ்வு மேன்மைகளை அவர் சார்ந்த இயக்கத்தினர் சரியானபடி கொண்டுசெல்லவில்லை என்பதுதான் உண்மை.

J.Radhakrishnan
23rd December 2013, 12:40 PM
நான் சுவாசிக்கும் சிவாஜி - இந்த வாரம்

சமீபத்தில், என் சகோதரர் ஒய்.ஜி.ராஜேந்திரா, என்னை, தொலை பேசியில் அழைத்து, 'அந்த நாள் படம், 'டிவி' யில் போடுகின்றனர். உடனே பாருங்க...' என்றார். பாட்டு இல்லாமல், படங்கள் எடுப்பது பற்றி, இப்போது, பெருமையாக பேசுகின்றனர். ஆனால், கிட்டத்தட்ட, 59 ஆண்டுகளுக்கு முன்பே, வீணை எஸ்.பாலசந்தர் - சிவாஜி இருவரும் இணைந்து, பாடலே இல்லாத, அந்த நாள் என்ற வெற்றிப் படத்தை கொடுத்து, புரட்சி செய்திருக்கின்றனர்.
எஸ்.பாலசந்தரின் மகன் ராமன், என் சகோதரர் ராஜேந்திராவுடன் ஒன்றாக படித்தவர். எஸ்.பாலசந்தர் எங்கள் குடும்ப நண்பர். ஒரு முறை, அவர் வீட்டில், நாங்கள் டின்னர் சாப்பிட்டு கொண்டிருந்த போது, 'சிவாஜி போன்ற, திறமை உள்ள நடிகரால் தான், அந்த நாள் மாதிரியான, படத்தில் நடிக்க முடியும். ஒரு காட்சியில், வீட்டின் சொந்தக்காரரின் மனைவியை, பூங்காவில் சந்தித்து, காதலிப்பது மாதிரி நடித்து, ஏமாற்றுவார். தெரு விளக்கு வெளிச்சத்தில் தெரியும் முகத்தில், ஒரு கண்ணில் காதல், வெளிச்சம் படாத கண்ணில் ஏமாற்றுகிற வஞ்சம்... அவருடைய கேரக்டர் புரிவதற்காக வைக்கப்பட்ட அமர்க்களமான, 'ஷாட்' இது. இன்றைக்கும், அந்த நாள் படம் பாருங்க, நான் சொல்வதை நீங்களும், ரசித்து, உணர முடியும். நல்ல திறமையான இயக்குனர்களால், நன்கு கையாளப் பட்டால், 'சிவாஜி ஹாலிவுட் நடிகர்களுக்கு சவாலாக இருப்பார்...' என்று கூறினார்.
எஸ்.பாலசந்தர் - சிவாஜி இணைந்து மேலும் படங்கள் செய்திருந்தால், தமிழ் திரை உலகிற்கு பெரும் பொக்கிஷங்களாக அவை இருந்திருக்கும்.
அந்த நாள் படத்தில் தேசத்துரோகி, திரும்பிபார் படத்தில் வெறுக்கக்கூடிய காமுகன், ரங்கோன் ராதாவில் தகாத உறவுக்காக, மனைவியை பைத்தியமாக்கும் கெட்டவன், கூண்டுக்கிளி படத்தில், ஸ்டைலிஷ் வில்லன், பெண்ணின் பெருமை படத்தில், கொடூர வில்லனாக நடித்திருப்பார் சிவாஜி.
நடிகனாக, திரை உலகில், முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் ஹீரோ அந்தஸ்து பெற்று, எதிர்மறை பாத்திரங்களில் தொடர்ந்து நடிக்கும், தைரியம், மனப்பக்குவம் எத்தனை நடிகர்களுக்கு வரும்! சிவாஜி முழுமையான நடிகர். தன்னுடைய, 'இமேஜ்' என்ன ஆகுமோ என்று அவர் பார்க்கவில்லை, கொடுக்கப்படும் பாத்திரங்களுக்கு, பொருத்தமாக நடித்தார். தொழில் மேல் விருப்பம் உள்ள நடிகர்கள், இதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். கமல், அடிக்கடி சொல்வது, 'தமிழ் திரை உலக வரலாற்றை, சிவாஜிக்கு முன், சிவாஜிக்கு பின் என்று இரண்டு பாகங்களாக பிரிக்கலாம்....' என்று. உண்மையான பேச்சு.
சிவாஜிக்கு பின் வந்த அத்தனை நடிகர்களுக்கும், சிவாஜி முன்னோடியாக இருந்திருக்கிறார். அத்தனை நடிகர்களிடமும், ஏதோ ஒரு விதத்தில் சிவாஜியின் தாக்கம் கண்டிப்பாக இருக்கும். இல்லையென்று யாராவது சொன்னால், அது மனசாட்சிக்கு விரோதமாக சொல்லப்படும் பொய் என்பது, என் தாழ்மையான கருத்து.
நெகடிவ் ரோல் பற்றி பேசும் போது, சிவாஜி பிலிம்சின் சொந்தப் படமான புதிய பறவை பற்றி சொல்லியே ஆக வேண்டும். தன் சொந்த படத்தில், கொலைகாரனாக, வில்லனாக தயங்காமல் நடித்தார் சிவாஜி.
ஒரு முக்கியமான ரகசியத்தை மனதிற்குள் அடக்கிக் கொண்டு, குற்ற உணர்வோடு கூடிய சோகத்தை யும், கண்களில் மிரட்சியையும், முதல் சீனிலிருந்து காண்பித்து, நடித்திருப் பார். படத்தின் பிரபல இயக்குனர் தாதா மிராசி, (சிவாஜி நடித்த மூன்று தெய்வங்கள் மற்றும் ரத்த திலகம் படங்களை இயக்கியவர்.) 'என்னுடைய ஹீரோ, மிகச் சிறந்த நடிகர்...' என்று சிவாஜியை பெருமையோடு குறிப்பிடுவார். அந்தப்படத்தில், 'ப்ளாஷ்பேக்' காட்சியில், சிவாஜிக்கு அப்பாவாக நடித்திருப்பார் தாதா மிராசி.
அமெரிக்காவில் இருந்து, மார்த்தா கிரஹாமின், 'மாடர்ன் அமெரிக்கா' நடனக்குழு சென்னைக்கு வந்து, நிகழ்ச்சிகள் நடத்தினர். அந்த நிகழ்ச்சியை உன்னிப்பாக கவனித்த சிவாஜி, 'எங்கே நிம்மதி எங்கே நிம்மதி...' பாடல் காட்சியில், மாடர்ன் அமெரிக்கா நடனத்தை, நினைவில் கொண்டு, சில புதுமையான, நளினமான மூவ்மென்ட்ஸ் களை செய்திருப்பார். அந்த பாடல் காட்சிக்கு, தியேட்டர்களில் பலத்த கரகோஷம் எழும்.
இந்தப் பாட்டு எழுதும்போது, எம்.எஸ்.விஸ்வநாதனும், கண்ணதாசனும் சேர்ந்து, உட்கார்ந்து ஆலோசித்தனர். சரியான பல்லவி கிடைக்க வில்லை. அருகில் இருந்த சிவாஜி தான், 'எங்கே நிம்மதி எங்கே நிம்மதி' என்ற பல்லவியை, பாடலின் முதல் வரியாக எடுத்துக் கொடுத்தார்.
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், கண்ணதாசனுக் கும் பொருத்தமான வரிகள் என்று படவே, இதுவே, பாடலின் பல்லவியாக ஆயிற்று; தமிழ் சினிமாவிற்கு புதுமையான பாடல் காட்சி கிடைத்தது.
இன்றைக்கும், இப்படம் இளைஞர்களை கவரக்கூடிய படம்.
ஒரு முறை, எங்கள் நாடகத்திற்கு தலைமை தாங்க வந்த சிவாஜியுடன், ஒரு வடமாநில அழகான இளைஞர் கூடவே வந்திருந்தார். செகரட்டரி போல, சிவாஜியின் சிகரெட் டின்னை கூட, அவர் தான் வைத்திருந்தார். 'அவர் யார்?' என்று, என் தந்தை கேட்டார். 'இந்த பையனை பார்த்துக்கோ. இந்தியில் மிகப் பெரிய நடிகனாக வருவான்...' என்றார் சிவாஜி.
சிவப்பாக, அழகாக பைஜாமா, ஜிப்பா அணிந்து வந்த அந்த இளைஞர் தான், பிற்காலத்தில் இந்தியாவில் சிறந்த நடிகர் என்ற, பாரத் விருது பெற்ற, சஞ்சீவ் குமார். மிகப் பெரிய நடிகராக ஆனபின்னும், சென்னையில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந் தாலும், டிபனோ, சாப்பாடோ சிவாஜியின் வீட்டில் தான், சாப்பிடுவார்.

*சிவாஜி நடித்த படங்களிலேயே மிக அதிகமான வசூல் பெற்று, சாதனை படைத்த படம், சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து, மூன்று வேடங்களில் நடித்த திரிசூலம். திரிசூலம் படத்தின் சாதனையை, எம்.ஜி.ஆர்., மனதார பாராட்டியதோடு, 'இந்தப்படத்தின் அதிக வசூல் மூலம், அரசுக்கு கிடைத்த கேளிக்கை வரி, அரசின், மதிய உணவு திட்டத்திற்கு, பெரும் அளவில் உதவியிருக்கிறது...' என்று, சிவாஜிக்கு நன்றி கூறினார்.

* சிவாஜி, திலீப்குமாரை, அவருடைய சொந்தப் பெயரான, யுசுப் பாய் என்ற பெயரைச் சொல்லியே அழைப்பார். இருவரிடையே நல்ல புரிதலும், நல்ல நட்பும் இருந்தது. சிவாஜியின் நடிப்பு திறனை மிகவும் மதித்து பாராட்டுவார் திலீப்குமார். சிவாஜிக்கும், அவர் மீது நல்ல மரியாதை இருந்தது. சிவாஜி நடித்த, முரடன் முத்து இந்தி ரீ-மேக்கில், தீலிப்குமார் நடித்து, பெரிய ஹிட் ஆனது.
* பல வெற்றிப்படங்கள் இந்தியிலிருந்து, தமிழில் ரீ - மேக் செய்து, அவற்றில், சிவாஜி நடித்து சூப்பர் ஹிட் ஆகியிருக்கின்றன.
* இந்தியில், கிலோனா என்ற திரைப்படம், தமிழில், எங்கிருந்தோ வந்தாள் (சிவாஜி - ஜெயலலிதா) இயக்கம்: ஏ.சி.திருலோக சந்தர்.
* தேவ் ஆனந்த் நடித்த, ஜானி மேரா நாம். தமிழில், ராஜா. (சிவாஜி - ஜெயலலிதா) இயக்கம்: சி.வி.ராஜேந்திரன்.
* ராஜேஷ் கண்ணா நடித்த, துஷ்மன் திரைப்படம், தமிழில், நீதி, (சிவாஜி - ஜெயலலிதா) இயக்கம்: சி.வி.ராஜேந்தர்.
* ஷம்மி கபூர் நடித்த, பிரம்மச்சாரி திரைப்படம், தமிழில், எங்க மாமா. (சிவாஜி - ஜெயலலிதா) இயக்கம்: ஏ.சி.திருலோக சந்தர்.
— தொடரும்.

uvausan
23rd December 2013, 01:35 PM
"கௌரவம் படத்தில் இரண்டு சிவாஜிகளும் எதிரெதிரே அமர்ந்து செஸ் விளையாடுவதைப் பார்த்துதான் என் அப்பாவுக்கு செஸ் விளையாட ஆர்வம் வந்தது. அதைத் தொடர்ந்துதான் எனக்கும் செஸ்ஸில் ஆர்வம் பிறந்தது" என்று விஸ்வநாதன் ஆனந்த் சொன்னதாக நாங்கள் புளுக மாட்டோம். நடிகர்திலகத்தின் புகழைப் பரப்ப நியாயமான வழிகள் எங்களிடம் உள்ளன.

(its time for scatting).

:rotfl::clap:

uvausan
23rd December 2013, 01:38 PM
உண்மை உணரும் நேரம் - 3



இதுவும் தினமலர் வாரமலர் இதழில் தமிழக அரசியல் வரலாறு தெரியாத ஒருவர் அள்ளிவிட்ட கப்சா! இதை உண்மையா என்று கூட சரி பார்க்காமல் இங்கே பதிவு செய்தாகிவிட்டது. இதை யார் கேட்கப் போகிறார்கள்? கேட்டாலும் பதில் இருக்கவே இருக்கிறது அதாவது இந்தப் புத்தகத்தில் வந்தது என சொல்லிக் கொள்ளலாம் என்ற எண்ணம்தான் காரணம்.

நான் குறிப்பிட்டது போல வரலாற்று உண்மைகளை எல்லா காலங்களிலும் மறைக்க முடியாது. அவை வெளிவந்தே தீரும்.

(தொடரும்)

அன்புடன்

Great Murali - lie has life till the truth is revealed - how true it is - your analysis and demonstration of truth will give nightmares to many - hope they will henceforth be careful while posting -

:):smokesmile:

uvausan
23rd December 2013, 09:18 PM
இந்த கீழ்கண்ட பதிவுக்கும் இந்த திரிக்கும் சம்பந்தம் இல்லைதான் - முரளி சொன்னதுபோல இதை வேறு பகுதியில் ( current topics) பதிவிட்டுருக்கலாம் - ஆனால் சில உண்மைகள்/ மன குமறல்கள் இந்த பதிவு மூலம் வெளிவருகின்றன - நமது தலைவரின் சிலை விஷயமாக - இந்த அரசு காட்டும் ஆர்வம் - பல லக்க்ஷ கணக்கான ரசிகர்களின் மன வருத்தத்தை புரிந்து கொள்ளாத ஒரு முதல்வர் , பல கோடி மக்கள் வாழும் இந்த தேசத்தையா புரிந்து கொள்ள போகிறார் - அவர்கள் உணர்வுகளுக்கு என்ன மரியாதை கிடைக்க போகின்றது ? - a revealing write up by ஞாநி
:angry2::angry2:

================================================== ============
ஜெ. பிரதமர் ஆக முடியுமா? ஆக வேண்டுமா?
ஞாநி


நியாயப்படி அப்போது தமிழகத்திலிருந்து மிக அதிக எம்.பி-களை அளித்த தி.மு.க-வுக்கு - கருணாநிதிக்குத்தான் பிரதமர் பதவி வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஜெயலலிதாதான் அடுத்த பிரதமர் என்ற முழக்கம் அ.தி.மு.க-வினரால் சில ஆண்டுகளாகவே தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. கூடவே அ.தி.மு.க-வினர் முன்வைக்கும் இன்னொரு முழக்கம் : நிரந்தர முதல்வர் ஜெயலலிதா என்பது. ஒருவர் எப்படி நிரந்தர முதல்வராகவும் பிரதமராகவும் ஒரே சமயத்தில் இருக்க முடியும் என்ற புதிரைப் புரிந்துகொள்ள முதலில் அ.தி.மு.க-வின் அம்மாயிஸத்தைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கும்.

அ.தி.மு.க-வினரின் ‘ஞ' போல் வளையும் மரியாதைக் கலாச்சாரத்தின் தொடர்ச்சியாக அவர்கள் முடியுமானால் ஜெயலலிதாவுக்குதான் அடுத்த நோபல், ஜெயலலிதாதான் அடுத்த ஐ.நா. சபைப் பொதுச்செயலாளர், அவர்தான் அடுத்த ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் என்றெல்லாம்கூட சொல்ல விரும்பக்கூடும். அதையெல்லாம் தமிழக அரசியல் கலாச்சாரத்தின் வெகுஜனப் பொழுதுபோக்குக் கூறுகள் என்ற அளவில் ஒதுக்கிவைத்துவிட்டு நிஜமாகவே, ஜெயலலிதா இந்தியப் பிரதமராகும் வாய்ப்பு இருக்கிறதா, அல்லது அது அ.தி.மு.க-வினரின் பகல் கனவு மட்டும்தானா என்று ஆராயலாம்.

தமிழ் பிரதமர் தமிழர்கள் பிரதமரைவிட உயர் பதவியான இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு ஏற்கெனவே வந்திருக்கிறார்கள். காரணம் அது ஒருவிதத்தில் நியமனப் பதவி மாதிரிதான். மத்தியில் ஆளும் கட்சி விரும்புகிறவரை அதற்குக் கொண்டுவந்துவிட முடியும். தவிர, எப்போதும் பிரதமர் பதவி வட இந்தியாவிலேயே இருந்துவருவதால், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் பதவிகளைத் தென்னிந்தியருக்கு ஒரு ‘கோட்டா’ போல அளித்து சமன்செய்வதை நேரு காலம் முதல் பின்பற்றிவந்திருக்கிறார்கள்.

காமராஜர் நிராகரித்த வாய்ப்பு

பிரதமராகும் வாய்ப்பு தமிழகத் தலைவர்களுக்கு இதற்கு முன்பு இருந்ததா என்றால், அது ஓரிரு முறை மட்டுமே இருந்திருக்கிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் ஓரளவேனும் அறியப்பட்டிருக்கக்கூடிய தலைவராக இருந்தவர்கள் மிகக் குறைவு. காங்கிரஸுக்குள் மாநிலத் தலைவர்கள் பலம் பொருந்தியவர்களாக இருந்த காலத்தில் இருந்த தமிழகக் காமராஜர் அப்படி அறியப்பட்டிருந்தவர்களில் ஒருவர். அவர் பிரதமராகும் வாய்ப்பு, நேரு- சாஸ்திரி காலத்துக்குப் பின்னர் கனிந்திருந்தது. ஆனால் அவர் அதை விரும்பவில்லை. இந்தியாவின் பிரதமராக வருபவருக்கு, இந்தி, ஆங்கிலம் இரண்டு மொழிகளில் ஒன்றேனும் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் என்றும் தனக்கு அப்படித் தெரியாத நிலையில் தான் பிரதமராகும் வாய்ப்பு இருந்தும்கூட ஆக விரும்பவில்லை என்றும் காமராஜரே தன்னிடம் சொன்னதாகப் பிரபலப் பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியிருக்கிறார்.
தமிழருக்கு வாய்ப்பு வரும் நிலையே இந்திய அரசியலில் அடுத்த சுமார் 30 ஆண்டுகளுக்கு இருக்கவில்லை. ஒற்றைக் கட்சியே வலிமையாக டெல்லியில் ஆட்சி நடத்தும் காலம் முழுக்கவும் அது பெரும்பாலும் காங்கிரஸாகவே இருந்தது. அதில் இந்திரா காலத்திலிருந்து காமராஜர் போன்ற மாநிலத் தலைவர்கள் உருவாகவே முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டது. இதனால் காங்கிரஸே பல மாநிலங்களிலும் பலவீனமாகி, இனி டெல்லியில் மாநிலக் கட்சிகளின் கூட்டணி உதவியுடன்தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலைமை 1996-ல் ஏற்பட்டது.

கூடிவந்த இன்னொரு வாய்ப்பு

அப்போதுதான் இன்னொரு முறை ஒரு தமிழர் பிரதமராகும் வாய்ப்பு இருந்தது என்று சொல்லலாம். அன்றைய நிலை என்ன என்று சற்று விவரமாகக் கவனிப்பது இன்றைய அரசியல் ஆரூடங்களுக்குப் பயன்படும். அப்போது பா.ஜ.க-வின் 15 நாள் அரசு கவிழ்ந்த பின் காங்கிரஸ் அல்லாத ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. அதன் 179 எம்.பி-களில் தமிழகத்திலிருந்து தி.மு.க-வும் தமிழ் மாநில காங்கிரஸுமாக அனுப்பியவர்கள் மட்டும் 39 பேர். மேற்கு வங்க இடதுசாரிக் கூட்டணியிலிருந்து 33 பேர். பிகாரிலிருந்து 25 பேர். உத்தரப் பிரதேசத்திலிருந்து 20 பேர். கர்நாடகத்திலிருந்து 16 பேர். ஆந்திரத்திலிருந்து 16 பேர். மொத்தத்தில் 179 எம்.பி-களில் 83 பேர் தென் மண்டலம். அதில் மிகப் பெரிய பங்களிப்பு தமிழ்நாட்டுடையதுதான். இடதுசாரி ஜோதிபாசுவும் தெலுங்கு தேசமும் பிரதமர் பதவியை விரும்பாத நிலையில் தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்குமே வாய்ப்பு மிஞ்சியது.

தமிழ்நாட்டிலிருந்து யார் என்றபோதுதான் அந்தத் தவறு நிகழ்ந்தது. மூப்பனாரைக் கேட்டார்கள். அவர் மறுத்துவிட்டார். அதன் விளைவாக, கர்நாடக தேவ கௌடா பிரதமரானார். நியாயப்படி அப்போது தமிழகத்திலிருந்து மிக அதிக எம்.பி-களை அளித்த தி.மு.க-வுக்கு - கருணாநிதிக்குத்தான் பிரதமர் பதவி வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். மூப்பனாரைவிட அரசியல் அனுபவமும் நிர்வாக அனுபவமும் அரசுப் பொறுப்பில் இருந்த அனுபவமும் பல மடங்கு பெற்றவர் கருணாநிதி. அவர் பிரதமராகிவிட்டால் தி.மு.க-வில் அடுத்த முதல்வர் யார் என்ற சிக்கலும் கிடையாது. பேராசிரியர் அன்பழகன், ஸ்டாலின் என்று வரிசையாகப் பலர் இருந்தனர். ஆனால், கருணாநிதியைப் பிரதமராக வரவிடக் கூடாது என்பதற்காகவே மூப்பனார் பெயர் சொல்லப்பட்டு, தமிழக வாய்ப்பு தட்டிப்பறிக்கப்பட்டது (இதை அப்போதே நான் எழுதியிருக்கிறேன்).

இன்னொரு வாய்ப்பா 2014?

அப்படி ஒரு வாய்ப்பு 2014-ல் வரும் என்பதுதான் ஜெயலலிதாவைப் பிரதமராக்க விரும்புவோரின் கணக்கு. காங்கிரஸ், பா.ஜ.க. இரு கட்சிகளுக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கப்போவதில்லை என்பதே பெருவாரியான கருத்துக் கணிப்புகளின் முடிவாகும். காங்கிரஸுக்கு சுமார் 130 இடங்களும் பா.ஜ.க-வுக்கு சுமார் 150 இடங்களும் கிட்டலாம் எனப்படுகிறது. எஞ்சியிருக்கக்கூடிய 260 இடங்களை பல்வேறு மாநிலக் கட்சிகள், இடதுசாரிகள் பங்குபோடப்போகின்றன. இடதுசாரிகள் இந்த முறை மேற்கு வங்கத்திலேயே முன்பைவிட அதிகமாக வென்று சுமார் 25 இடங்கள் வரை அடையலாம் என்பது கணிப்பு.

மோடியை முன்னிறுத்தியதால், பா.ஜ.க-வுடன் கூட்டுசேர விரும்பாத பல தேசிய, மாநிலக் கட்சிகள் இடதுசாரிகளுடன் சேர்ந்து மூன்றாவது அணிக்கு முயற்சிப்பார்கள். அப்போது மூன்றாவது அணியில் மிக அதிக எம்.பி-களை வைத்திருக்கக்கூடிய கட்சியின் தலைவருக்கே பிரதமர் வாய்ப்பு என்றாகும்போது, முலாயம், மாயாவதி, நிதீஷ், ஆகியோரைவிட அதிகமாக ஜெயலலிதாவிடம் 35 எம்.பி-கள் வரை இருப்பார்கள்; அப்போது உடன் இருக்கக்கூடிய இடதுசாரிகளும் ஜெயலலிதாவை ஆதரிப்பார்கள் என்பது அவர்கள் வியூகம். ஒருவேளை காங்கிரஸ் ஆதரவுடன் மூன்றாவது அணி ஆட்சி அமைக்க விடாமல் தன் ஆதரவுடன் அமைப்பதையே விரும்பும் பா.ஜ.க. அப்போது வெளியில் இருந்துகொண்டு ஜெயலலிதாவை ஆதரிக்கக்கூடும்; ஜெயலலிதா பிரதமராகிவிடலாம் என்பது இன்னொரு வியூகம். இந்த வியூகங்களின்படி எல்லாம் நடந்தால், ஜெயலலிதாவுக்குப் பிரதமராகும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், எல்லாம் அப்படி நடக்குமா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. எதுவும் நடக்கலாம்.

தகுதியானவரா?

இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். பிரதமர் பதவிக்குத் தகுதியானவர்தானா ஜெயலலிதா? பிரதமராக மோடிக்கோ ராகுலுக்கோ தகுதி உண்டா உண்டா என்று கேள்வி எழுப்புவதுபோல இதையும் அலசத்தான் வேண்டும். ஜெயலலிதாவுக்கு ஆங்கிலம், ஹிந்தி உடபட பல மொழிகள் தெரியும் என்பதால் மட்டுமே காமராஜருக்கு இல்லாத தகுதி அவருக்கு இருப்பதாகக் கருதிவிட முடியாது. மன்மோகன் சிங்கை விட மோசமாகவா இருக்கப்போகிறார் என்ற வாதங்களும் உதவாது.

கூட்டணியின் அடிப்படை ஜனநாயகம்

ஜெயலலிதா ஒரு முதல்வராக எப்படிச் செயல்பட்டிருக்கிறார், ஒரு கட்சித் தலைவராக எப்படிச் செயல்பட்டிருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது, அவர் கட்சியில் துளியும் உள்கட்சி ஜனநாயகம் என்பதே இல்லை என்பது நாம் கவனிக்க வேண்டிய அதிமுக்கியமான அம்சம். காங்கிரஸ், பா.ஜ.க., இடதுசாரிக் கட்சிகள் எல்லாவற்றிலும் எத்தனை கோளாறுகள் இருந்தாலும், அவை எல்லாவற்றிலும் கட்சிக்குள் மாறுபட்ட கருத்துகளை முன்வைக்கவும் விவாதிக்கவும் இடம் இருந்துகொண்டே இருப்பதுதான் அவற்றை உயிரோடு வைத்திருக்கின்றன.

ஜெயலலிதாவின் அ.தி.மு.க அப்படிப்பட்ட கட்சி அல்ல. ஒரு தனியார் முதலாளி நடத்தும் நிறுவனம்போல, முதலாளியைத் தவிர வேறு யாருக்கும் எதையும் சொல்ல உரிமையற்ற இடமாகவே அது இருக்கிறது.

சரியாக ஓராண்டு முன்னால் எழுதிய ஒரு கட்டுரையில் சொன்னேன்: “ஊழல் அராஜகம், குடும்ப சுயநலம், என்று எத்தனையோ கோளாறுகள் நிரம்பிய ஆட்சியை அளித்தவர் என்றாலும், கருணாநிதியை எந்தப் பிரஜை விரும்பினாலும் சந்திக்க முடியும் என்ற நிலை எப்போதும் இருந்திருக்கிறது. சந்திக்க முடியாவிட்டாலும்கூட ஒருவர் தன் குறையை அவர் தீர்க்கிறாரோ இல்லையோ, அவருக்குத் தெரியப்படுத்தவாவது முடியும் என்ற நிலை இருந்திருக்கிறது.

இப்போது முதல்வராக இருக்கும் ஜெயலலிதாவின் காதுக்கும் கண்ணுக்கும் ஒரு விஷயத்தை எடுத்துச்செல்ல என்ன வழி என்று அரசு ஊழியர்கள் மத்தியிலேயே தெரியாத நிலை. முதல்வர் கவனத்துக்குப் பிரச்சினையை எடுத்துச்செல்வது எப்படி என்று ஒவ்வொரு துறையினரும் திணறிக்கொண்டிருக்கிறார்கள். தன் குடிமக்களுடன் எந்தத் தகவல்தொடர்பும் இல்லாமல் இருக்கும் ஒருவர் எப்படி ஆட்சி நடத்த முடியும் ? என்ன நிர்வாகம் செய்ய முடியும் ? அமைச்சர்கள் முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வரை முதல்வரை அணுகி, சங்கடமான செய்திகளைப் பேசத் தயங்கும் சூழலில் தன் மக்களின் நிலைபற்றி, நிர்வாகத்தின் குறைகள்பற்றி அவருக்கு யார் தகவல் சொல்வார்கள் ? உளவுத் துறை மட்டும்தானா? இப்படிப்பட்ட முதல்வர் நமக்கு எதற்கு என்பதுதான் என் கேள்வி.”

இப்படிப்பட்ட அணுகுமுறையில் இருக்கும் ஒருவரால் இந்தியா போன்ற பல தேசிய இனங்கள், பல மொழிகள், பல்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறான சிக்கல்கள் உள்ள ஒரு பெரிய நாட்டை நிர்வகிக்க முடியுமா? காவல் துறை, உளவுத் துறை, அச்சப்படும் நிர்வாக இயந்திரம், அடிமை மனநிலையுடைய கட்சியினரை மட்டும் கொண்டு ஒரு நாட்டை ஒருபோதும் ஆள முடியாது. 2016-க்குள் ஜெயலலிதாவின் இந்தப் போக்கு மாற்றம் அடைந்து ஜனநாயகபூர்வமான, மக்களிடம் செவிகளுடைய ஒரு முதல்வராகச் செயல்பட்டு அவர் தன்னை நிரூபித்துக்கொண்டால் மட்டுமே அவரைப் பிரதமர் பதவிக்கும் தகுதியானவர் என்று ஏற்க முடியும்.

இப்போதைய நிலையிலேயே அவர் பிரதமரானால், இந்தியாவுக்கு நேரும் தொடர் விபத்துகளில் இன்னொன்றாகவே அது இருக்கும். ஒரு தமிழர் முதன்முறையாகப் பிரதமர் ஆகிறார் என்று மட்டும் மகிழ்ச்சி அடைய முடியாது. 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழலில் தமிழர்கள் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்று மகிழ்ச்சி அடைவது போன்றது அது.

ஞாநி, மூத்த பத்திரிகையாளர், சமூக-அரசியல் விமர்சகர், தொடர்புக்கு: gnanisankaran@gmail.com

KCSHEKAR
24th December 2013, 12:22 PM
கிறித்துவ நண்பர்கள் அனைவருக்கும் உளங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=CMfbEd5aggI

NOV
25th December 2013, 08:07 PM
One of the very rare times AM Raja sang for NT


https://www.youtube.com/watch?v=lZJs_fEMW80

uvausan
25th December 2013, 08:46 PM
நாம் எல்லாம் முரசு டிவி க்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம் - இந்த இனிய நாளில் , நம் மனதில் நாட்டாண்மை செய்து கொண்டிருக்கும் ஞான ஒளியை பார்க்க வைப்பதற்க்கு

:smokesmile::)

Murali Srinivas
25th December 2013, 11:42 PM
உண்மை உணரும் நேரம் - 3 (Part II)

சரி இது கூட ஒரு புத்தகத்தில் வந்தது. அதை எடுத்து பதிவிட்டோம் என்று சொல்லலாம். அதே பதிவில் வேறொரு அபத்தமும் (அல்லது காமெடி என்று கூட சொல்லலாம்) எழுதப்பட்டிருகிறது. என்னவென்றால் பெருந்தலைவரின் சாதனைகளை பற்றி நாம் குறிப்பிட்டோம். அது ஒன்றும் பெரிய சாதனை இல்லை என்று நிலைநாட்ட ஒரு விஷயத்தை சொல்கிறார்கள். அதை படித்தவுடன் அழுவதா இல்லை சிரிப்பதா என்று தெரியவில்லை. அப்படி என்ன எழுதியிருந்தார்கள்?

காமராஜ் பிரதமர்களை உருவாக்கும் வல்லமை பெற்று King maker ஆக திகழ்ந்ததால் மத்திய அரசில் செல்வாக்கு பெற்றிருந்த அவர் அதை பயன்படுத்தி தன்னுடைய ஆட்சிக்காலத்தில் தமிழகத்திற்கு வேண்டிய திட்டங்களைப் எளிதாக பெற முடிந்தது என்று எழுதியிருந்தார்கள். எந்தளவுக்கு இவர்களை போன்றவர்களுக்கு தமிழக மற்றும் இந்திய அரசியல் வரலாறு தெரியும் என்பதற்கு இது ஒரு சான்று. நாம் உண்மை வரலாற்றை திரும்பி பார்ப்போம்.

பெருந்தலைவர் தமிழக முதல்வராக பணியாற்றிய காலம் 1954 ஏப்ரல் 13 முதல் 1963 அக்டோபர் 2 வரை. நான் இங்கு ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேன். அதை மீண்டும் சொல்கிறேன். இந்திய சுதந்திரம் பெற்று 66 வருடங்களாகின்றன. இத்தனை வருட காலகட்டத்தில் தமிழகத்தில் 5 வருடங்கள் முழுமையாக ஆட்சி செய்து தேர்தலை சந்தித்து மீண்டும் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த ஒரே மனிதன் பெருந்தலைவர் மட்டுமே. அவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவரை எவராலும் அவரை வெல்ல முடியவில்லை. கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், தானே கொண்டு வந்த K Plan என்ற திட்டத்தின் கீழ் முதல்வர் பதவியை விட்டு விலகி கட்சிப் பணிக்கு சென்றார்.

ஆட்சித் தலைவர் பதவியை விட்டு விலகிய அவருக்கு கட்சித் தலைவர் பதவி தேடி வந்தது. ஆம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக பெருந்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதில் சிறப்புற அவர் செயலாற்றிக் கொண்டிருக்கும் போதுதான் துயர்மிகு 1964 மே மாதம் 27-ந் தேதி வந்தது. எவருமே எதிர்பார்க்காத வகையில் ஆசிய ஜோதி பண்டிட் ஜவஹர்லால் நேரு இயற்கை எய்தினார். அடுத்த பிரதமர் யார் என்பதைப் பற்றிய சிந்தனை கூட இல்லாமல் இருந்த பொது மக்களுக்கும் சரி காங்கிரஸ் கட்சியினருக்கும் சரி இது ஒரு பெரிய சவாலாக தோன்றியது. ஆனால் அந்த படிக்காத மேதை தன் கூர் மதியால் லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக தேர்ந்தெடுத்தார். சாஸ்திரியின் உருவத்தை பார்த்து இவரா என்று கேலி பேசியவர்களை சாஸ்திரி தன் திறமையினால் வாயடைக்க செய்தார். விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து அவர் மேற்கொண்ட முயற்சிகளும் அந்த விவசாயிகளை நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுக்கு இணையாக முன்னிறுத்தி ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்ற அவர் முழக்கமும் நல்ல பலனை தந்தன. வலிமை குறைந்த தலைவன் என தப்புக் கணக்கு போட்டு கராச்சியை தலைநகராக கொண்ட சிந்து மாகாண எல்லையில் அமைந்துள்ளதும் நமது குஜராத் மாநில எல்லையில் அமைந்துள்ளதுமான கட்ச் என்ற சதுப்பு நிலம் வழியாகவும் பஞ்சாப் வாகா எல்லைப்புறம் வழியாகவும் நம்மை 1965 செப்டம்பரில் தாக்கி ஆக்ரமிக்க நினைத்த பாகிஸ்தான் படையெடுப்பையும் வெற்றிகரமாக தடுத்து அந்தப் படைகளை ஓட ஓட விரட்டி வீர சாதனை புரிந்தார்.

இவ்வகையில் சாஸ்திரி திறம்பட ஆட்சி செய்துக் கொண்டிருந்த போது இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மூண்டதனால் ஏற்பட்ட பதற்ற நிலையை அகற்றி இரு நாடுகளுக்கிடையே ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்பட அன்றைய ரஷ்ய அதிபர் கோஸிஜன் முயற்சி எடுத்து ரஷ்ய நாட்டில் அமைந்துள்ள தாஷ்கண்ட் நகரில் இந்திய பிரதமர் சாஸ்திரி அவர்களையும் அன்றைய பாகிஸ்தான் அதிபர் அயுப்கான் அவர்களையும் சந்திக்க வைத்தார். 1966 ஜனவரி 10-ந் தேதி அன்று நடைபெற்ற இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பின் முடிவில் தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்தானது. எதிர்பாராத விதமாக அன்று இரவு (மறுநாள் அதிகாலை) சாஸ்திரி மரணம் அடைந்தார். சந்தேகத்திற்கிடமான முறையில் அவர் இறப்பு இன்றும் பார்க்கப்படுகிறது.

நேருவின் மறைவுக்கு பின் சாஸ்திரியின் மறைவும் இந்திய அரசியலில் ஒரு வெற்றிடத்தை தோற்றுவித்த போது மீண்டும் பிரதமரை தேர்ந்தெடுக்கும் சுமை பெருந்தலைவர் தலையில் விழுந்தது. இம்முறை அவரே பிரதமர் ஆக வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. ஆனால் என்றுமே பதவியை துச்சமாக மதித்த பெருந்தலைவர் அந்த வாய்ப்பை மறுத்தார். அன்றைய சூழலில் நாட்டிற்கு தேவை ஒரு வலிமையான மனஉறுதி படைத்த தலைமை என்பதை உணர்ந்த பெருந்தலைவர் நேருவின் மகளும் சாஸ்திரியின் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒலிப்பரப்பு துறை அமைச்சராக [Minister of Information & Broadcasting] பணியாற்றிக் கொண்டிருந்த இந்திரா காந்தி அம்மையார் அவர்களை பிரதமராக தேர்ந்தெடுத்து பதவி ஏற்க வைத்தார். 1966 ஜனவரி 24 அன்று இந்திரா அம்மையார் பாரதப் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார்.

இப்படி நமது தேசத்தில் இரண்டு முறை தலைமை பொறுப்பில் ஒரு வெற்றிடம் ஏற்பட்ட போது அந்த சூழலை தன மதியூகத்தினால் திறம்பட சமாளித்து நமது நாட்டிற்கு அன்றைய சூழலில் திறமைமிக்க பிரதமர்களை தேர்ந்தெடுத்துக் கொடுத்ததால் பெருந்தலைவர் கிங் மேக்கர் [King Maker] என்று அழைக்கப்பட்டார். இதுதான் வரலாற்று உண்மை. அதாவது அவருக்கு அந்தப் பட்டம் கிடைத்ததே 1966 ஜனவரிக்கு பிறகுதான்.

நாம் குறிப்பிட்டு சொன்ன பதிவில் என்ன எழுதியிருக்கிறார்கள்? பெருந்தலைவர் கிங் மேக்கர் என்று மத்திய அரசில் செல்வாக்கு பெற்று விளங்கியதால் அதன் காரணமாக அவர் தமிழக முதல்வராக இருந்த போது தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை மத்திய அரசு அனுமதித்தது என்று எழுதியிருக்கிறார்கள். பெருந்தலைவர் தமிழக முதல்வராக பதவி வகித்த காலம் 1954 ஏப்ரல் 14 முதல் 1963 அக்டோபர் 2 வரை. அவர் கிங் மேக்கர் என்று புகழ் பெறுவது 1966 ஜனவரியில். அதாவது தமிழக முதல்வர் பதவியிலிருந்து விலகி இரண்டரை வருடங்களுக்கு பிறகு [சுமார் 28 மாதங்களுக்கு பிறகு]. உண்மை இப்படியிருக்க அவர் எப்படி பின்னாட்களில் வந்த இந்த செல்வாக்கை வைத்து அவர் முன்னாட்களில் முதல்வராக இருக்கும்போது மத்திய அரசிடமிருந்து திட்டங்களை வாங்கியிருக்க முடியம்?

நாம் முன்பே சொன்னது போல் அன்று முதல் இன்று வரை தங்களின் நோக்கத்தை நியாயப்படுத்தும் வண்ணம் தவறான தகவல்களை பரப்பி வரும் இந்த செய்கை நிற்காமல் தொடர்கிறது. காமராஜ் ஒரு தமிழக தலைவர், தமிழக முதல்வராக இருந்தார். கிங் மேக்கர் என்று அவருக்கு கிடைத்திருந்த செல்வாக்கை வைத்து அவர் முதல்வராக இருக்கும்போது திட்டங்களை மத்திய அரசிடமிருந்து பெற்று தந்தார் என்று ஒரு மாணவன் கட்டுரை எழுதினால் புரிந்துக் கொள்ளலாம். இதையே முதிர்ந்தவர்கள் எழுதுவது வேதனையானது.

என்ன செய்வது? 1979 செப்டம்பரில் அதிகாரப்பூர்வமாக்கப்பட்ட சீர்திருத்த தமிழ் 1965 பிப்ரவரி 10-ந் தேதி வெளியான தமிழ் நாளேட்டில் 100-வது நாள் திரைப்பட விளம்பரத்திலேயே வரும் அதிசயத்தையும் இப்போதும் நமது மய்யம் இணையதளத்திலேயே பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்? உருவாக்கப்பட்ட விளம்பரங்கள் இனி இடம் பெறாது என்று அருமை நண்பர் வினோத் போன்றவர்களெல்லாம் உறுதி அளித்தும் கூட "சென்னை" பிளாசா என்ற விளம்பரமெல்லாம் இப்போதும் வரத்தானே செய்கிறது!

நாம்தான் ஒவ்வொரு முறையும் உண்மையை உரக்க சொல்ல வேண்டும்!

அன்புடன்

Murali Srinivas
25th December 2013, 11:43 PM
கல் தோன்றி மண் தோன்றா காலத்திலேயே முன் தோன்றிய மூத்த மாநகரம் சங்கத்தமிழ் மணக்கும் எங்கள் மதுரை மாநகரம்! மற்ற ஊர்களிலெல்லாம் மனிதர்கள் நடமாடியபோது தெய்வமே மனித ரூபத்தில் திருவிளையாடலாடிய நகரம் எங்கள் நான்மாடக்கூடல். அந்த திருவிளையாடல் புராணங்களை மீண்டும் நடத்திக் காட்ட கைலாயத்திலிருந்து சிவா(ஜி) பெருமான் மதுரை சென்ட்ரலுக்கு விஜயம். வரும் வெள்ளிக்கிழமை முதல் சென்ட்ரல் திரையரங்கில் திருவிளையாடல் காவியம் திரையிடப்படுகிறது.

அன்புடன்

இப்போது வெளியிடப்படும் பிரிண்ட் APN பரமசிவம் மெருகேற்றிய பிரதி அல்ல. பழைய 35 mm பிரதிதான் திரையிடப்படுகிறது.

KCSHEKAR
26th December 2013, 11:51 AM
உண்மை உணரும் நேரம் - 3 (Part II)
நாம் முன்பே சொன்னது போல் அன்று முதல் இன்று வரை தங்களின் நோக்கத்தை நியாயப்படுத்தும் வண்ணம் தவறான தகவல்களை பரப்பி வரும் இந்த செய்கை நிற்காமல் தொடர்கிறது. காமராஜ் ஒரு தமிழக தலைவர், தமிழக முதல்வராக இருந்தார். கிங் மேக்கர் என்று அவருக்கு கிடைத்திருந்த செல்வாக்கை வைத்து அவர் முதல்வராக இருக்கும்போது திட்டங்களை மத்திய அரசிடமிருந்து பெற்று தந்தார் என்று ஒரு மாணவன் கட்டுரை எழுதினால் புரிந்துக் கொள்ளலாம். இதையே முதிர்ந்தவர்கள் எழுதுவது வேதனையானது.
நாம்தான் ஒவ்வொரு முறையும் உண்மையை உரக்க சொல்ல வேண்டும்!

டியர் முரளி சார்,
மாணவர்கள் என்றால், அவர்கள் வரலாற்றைப் படித்து சரியான தகவலை எழுதுவார்கள். அனுபவம் பெற்றவர்கள் வரலாறு தெரிந்தவர்கள் திரித்து எழுதவேண்டும் என்ற நோக்கத்துடனே எழுதுபவர்களை என்னவென்று சொல்வது. தங்களின் பதிலடி மேலும் பரவலாகி எழுதுபவர்களை எட்டட்டும். இனி எழுத நினைப்பவர்களை யோசிக்கவைக்கட்டும்.

KCSHEKAR
26th December 2013, 11:52 AM
Ananda Vikatan - 01-01-14
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Title010_zps426195b9.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Title010_zps426195b9.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueNewsVikatanTop50News_zps7de0fc0b.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueNewsVikatanTop50News_zps7de0fc0b.jpg.h tml)

oowijaez
26th December 2013, 01:00 PM
உண்மை உணரும் நேரம் - 3 (Part II)

சரி இது கூட ஒரு புத்தகத்தில் வந்தது. அதை எடுத்து பதிவிட்டோம் என்று சொல்லலாம். அதே பதிவில் வேறொரு அபத்தமும் (அல்லது காமெடி என்று கூட சொல்லலாம்) எழுதப்பட்டிருகிறது. என்னவென்றால் பெருந்தலைவரின் சாதனைகளை பற்றி நாம் குறிப்பிட்டோம். அது ஒன்றும் பெரிய சாதனை இல்லை என்று நிலைநாட்ட ஒரு விஷயத்தை சொல்கிறார்கள். அதை படித்தவுடன் அழுவதா இல்லை சிரிப்பதா என்று தெரியவில்லை. அப்படி என்ன எழுதியிருந்தார்கள்?

காமராஜ் பிரதமர்களை உருவாக்கும் வல்லமை பெற்று King maker ஆக திகழ்ந்ததால் மத்திய அரசில் செல்வாக்கு பெற்றிருந்த அவர் அதை பயன்படுத்தி தன்னுடைய ஆட்சிக்காலத்தில் தமிழகத்திற்கு வேண்டிய திட்டங்களைப் எளிதாக பெற முடிந்தது என்று எழுதியிருந்தார்கள். எந்தளவுக்கு இவர்களை போன்றவர்களுக்கு தமிழக மற்றும் இந்திய அரசியல் வரலாறு தெரியும் என்பதற்கு இது ஒரு சான்று. நாம் உண்மை வரலாற்றை திரும்பி பார்ப்போம்.

பெருந்தலைவர் தமிழக முதல்வராக பணியாற்றிய காலம் 1954 ஏப்ரல் 13 முதல் 1963 அக்டோபர் 2 வரை. நான் இங்கு ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேன். அதை மீண்டும் சொல்கிறேன். இந்திய சுதந்திரம் பெற்று 66 வருடங்களாகின்றன. இத்தனை வருட காலகட்டத்தில் தமிழகத்தில் 5 வருடங்கள் முழுமையாக ஆட்சி செய்து தேர்தலை சந்தித்து மீண்டும் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த ஒரே மனிதன் பெருந்தலைவர் மட்டுமே. அவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவரை எவராலும் அவரை வெல்ல முடியவில்லை. கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், தானே கொண்டு வந்த K Plan என்ற திட்டத்தின் கீழ் முதல்வர் பதவியை விட்டு விலகி கட்சிப் பணிக்கு சென்றார்.

ஆட்சித் தலைவர் பதவியை விட்டு விலகிய அவருக்கு கட்சித் தலைவர் பதவி தேடி வந்தது. ஆம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக பெருந்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதில் சிறப்புற அவர் செயலாற்றிக் கொண்டிருக்கும் போதுதான் துயர்மிகு 1964 மே மாதம் 27-ந் தேதி வந்தது. எவருமே எதிர்பார்க்காத வகையில் ஆசிய ஜோதி பண்டிட் ஜவஹர்லால் நேரு இயற்கை எய்தினார். அடுத்த பிரதமர் யார் என்பதைப் பற்றிய சிந்தனை கூட இல்லாமல் இருந்த பொது மக்களுக்கும் சரி காங்கிரஸ் கட்சியினருக்கும் சரி இது ஒரு பெரிய சவாலாக தோன்றியது. ஆனால் அந்த படிக்காத மேதை தன் கூர் மதியால் லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக தேர்ந்தெடுத்தார். சாஸ்திரியின் உருவத்தை பார்த்து இவரா என்று கேலி பேசியவர்களை சாஸ்திரி தன் திறமையினால் வாயடைக்க செய்தார். விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து அவர் மேற்கொண்ட முயற்சிகளும் அந்த விவசாயிகளை நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுக்கு இணையாக முன்னிறுத்தி ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்ற அவர் முழக்கமும் நல்ல பலனை தந்தன. வலிமை குறைந்த தலைவன் என தப்புக் கணக்கு போட்டு கராச்சியை தலைநகராக கொண்ட சிந்து மாகாண எல்லையில் அமைந்துள்ளதும் நமது குஜராத் மாநில எல்லையில் அமைந்துள்ளதுமான கட்ச் என்ற சதுப்பு நிலம் வழியாகவும் பஞ்சாப் வாகா எல்லைப்புறம் வழியாகவும் நம்மை 1965 செப்டம்பரில் தாக்கி ஆக்ரமிக்க நினைத்த பாகிஸ்தான் படையெடுப்பையும் வெற்றிகரமாக தடுத்து அந்தப் படைகளை ஓட ஓட விரட்டி வீர சாதனை புரிந்தார்.

இவ்வகையில் சாஸ்திரி திறம்பட ஆட்சி செய்துக் கொண்டிருந்த போது இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மூண்டதனால் ஏற்பட்ட பதற்ற நிலையை அகற்றி இரு நாடுகளுக்கிடையே ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்பட அன்றைய ரஷ்ய அதிபர் கோஸிஜன் முயற்சி எடுத்து ரஷ்ய நாட்டில் அமைந்துள்ள தாஷ்கண்ட் நகரில் இந்திய பிரதமர் சாஸ்திரி அவர்களையும் அன்றைய பாகிஸ்தான் அதிபர் அயுப்கான் அவர்களையும் சந்திக்க வைத்தார். 1966 ஜனவரி 10-ந் தேதி அன்று நடைபெற்ற இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பின் முடிவில் தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்தானது. எதிர்பாராத விதமாக அன்று இரவு (மறுநாள் அதிகாலை) சாஸ்திரி மரணம் அடைந்தார். சந்தேகத்திற்கிடமான முறையில் அவர் இறப்பு இன்றும் பார்க்கப்படுகிறது.

நேருவின் மறைவுக்கு பின் சாஸ்திரியின் மறைவும் இந்திய அரசியலில் ஒரு வெற்றிடத்தை தோற்றுவித்த போது மீண்டும் பிரதமரை தேர்ந்தெடுக்கும் சுமை பெருந்தலைவர் தலையில் விழுந்தது. இம்முறை அவரே பிரதமர் ஆக வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. ஆனால் என்றுமே பதவியை துச்சமாக மதித்த பெருந்தலைவர் அந்த வாய்ப்பை மறுத்தார். அன்றைய சூழலில் நாட்டிற்கு தேவை ஒரு வலிமையான மனஉறுதி படைத்த தலைமை என்பதை உணர்ந்த பெருந்தலைவர் நேருவின் மகளும் சாஸ்திரியின் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒலிப்பரப்பு துறை அமைச்சராக [Minister of Information & Broadcasting] பணியாற்றிக் கொண்டிருந்த இந்திரா காந்தி அம்மையார் அவர்களை பிரதமராக தேர்ந்தெடுத்து பதவி ஏற்க வைத்தார். 1966 ஜனவரி 24 அன்று இந்திரா அம்மையார் பாரதப் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார்.

இப்படி நமது தேசத்தில் இரண்டு முறை தலைமை பொறுப்பில் ஒரு வெற்றிடம் ஏற்பட்ட போது அந்த சூழலை தன மதியூகத்தினால் திறம்பட சமாளித்து நமது நாட்டிற்கு அன்றைய சூழலில் திறமைமிக்க பிரதமர்களை தேர்ந்தெடுத்துக் கொடுத்ததால் பெருந்தலைவர் கிங் மேக்கர் [King Maker] என்று அழைக்கப்பட்டார். இதுதான் வரலாற்று உண்மை. அதாவது அவருக்கு அந்தப் பட்டம் கிடைத்ததே 1966 ஜனவரிக்கு பிறகுதான்.

நாம் குறிப்பிட்டு சொன்ன பதிவில் என்ன எழுதியிருக்கிறார்கள்? பெருந்தலைவர் கிங் மேக்கர் என்று மத்திய அரசில் செல்வாக்கு பெற்று விளங்கியதால் அதன் காரணமாக அவர் தமிழக முதல்வராக இருந்த போது தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை மத்திய அரசு அனுமதித்தது என்று எழுதியிருக்கிறார்கள். பெருந்தலைவர் தமிழக முதல்வராக பதவி வகித்த காலம் 1954 ஏப்ரல் 14 முதல் 1963 அக்டோபர் 2 வரை. அவர் கிங் மேக்கர் என்று புகழ் பெறுவது 1966 ஜனவரியில். அதாவது தமிழக முதல்வர் பதவியிலிருந்து விலகி இரண்டரை வருடங்களுக்கு பிறகு [சுமார் 28 மாதங்களுக்கு பிறகு]. உண்மை இப்படியிருக்க அவர் எப்படி பின்னாட்களில் வந்த இந்த செல்வாக்கை வைத்து அவர் முன்னாட்களில் முதல்வராக இருக்கும்போது மத்திய அரசிடமிருந்து திட்டங்களை வாங்கியிருக்க முடியம்?

நாம் முன்பே சொன்னது போல் அன்று முதல் இன்று வரை தங்களின் நோக்கத்தை நியாயப்படுத்தும் வண்ணம் தவறான தகவல்களை பரப்பி வரும் இந்த செய்கை நிற்காமல் தொடர்கிறது. காமராஜ் ஒரு தமிழக தலைவர், தமிழக முதல்வராக இருந்தார். கிங் மேக்கர் என்று அவருக்கு கிடைத்திருந்த செல்வாக்கை வைத்து அவர் முதல்வராக இருக்கும்போது திட்டங்களை மத்திய அரசிடமிருந்து பெற்று தந்தார் என்று ஒரு மாணவன் கட்டுரை எழுதினால் புரிந்துக் கொள்ளலாம். இதையே முதிர்ந்தவர்கள் எழுதுவது வேதனையானது.

என்ன செய்வது? 1979 செப்டம்பரில் அதிகாரப்பூர்வமாக்கப்பட்ட சீர்திருத்த தமிழ் 1965 பிப்ரவரி 10-ந் தேதி வெளியான தமிழ் நாளேட்டில் 100-வது நாள் திரைப்பட விளம்பரத்திலேயே வரும் அதிசயத்தையும் இப்போதும் நமது மய்யம் இணையதளத்திலேயே பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்? உருவாக்கப்பட்ட விளம்பரங்கள் இனி இடம் பெறாது என்று அருமை நண்பர் வினோத் போன்றவர்களெல்லாம் உறுதி அளித்தும் கூட "சென்னை" பிளாசா என்ற விளம்பரமெல்லாம் இப்போதும் வரத்தானே செய்கிறது!

நாம்தான் ஒவ்வொரு முறையும் உண்மையை உரக்க சொல்ல வேண்டும்!

அன்புடன்

:???:மன்னிக்கவும், நடிகர் திலகம் திரி என்று நினைத்து நுழைந்து விட்டேன் :confused2:

oowijaez
26th December 2013, 01:27 PM
சிவாஜி கணேசன் பற்றிய தவறான செய்திகளுக்கு இங்கே தான் பதிலடி கொடுக்க வேண்டும். ஆனால் நடிகர் திலகம் பற்றி அறிவதற்காக வருவோர், தேவையில்லாமல் தமிழ் நாட்டு அரசியலை பற்றி அறிந்து கொள்ள வேண்டியுள்ளது மிகவும் வருந்ததக்கது. அதுவும் மற்றவர்களின் எழுத்துக்களை கட்டு படுத்தும் ஒருவர் செய்வது ஏற்றுகொள்ள முடியாதது.

adiram
26th December 2013, 01:52 PM
நான் மற்றவர்களின் கைகளைக் கட்டிப் போட்டிருக்கிறேனா என்ன?. இது அவரவர்களின் சுய கட்டுப்பாடு.

இப்பொழுது நீங்கள் செய்வது தான் முரளி சாரின் எழுத்துக்களை கட்டுப்படுத்தும் செயல்.

oowijaez
26th December 2013, 02:19 PM
எங்களைப் பொறுத்தவரை நடிகர்திலகம் வேறு பெருந்தலைவர் வேறு என்று பிரித்துப்பார்க்க முடியாது.



அப்படியா?? அப்படிஎன்றால் இதை 'காங்கிரஸ்' காரர்களான சிவாஜி ரசிகர்களின் திரி என்று மாற்றுவது நல்லது என நினைக்கிறேன்.

காங்கிரஸ் கட்சியில் இல்லாதவர்களை இத் திரியிலிருந்து அகற்றி விட வேண்டும் - கட்டாயமாக.

KCSHEKAR
26th December 2013, 02:47 PM
அப்படியா?? அப்படிஎன்றால் இதை 'காங்கிரஸ்' காரர்களான சிவாஜி ரசிகர்களின் திரி என்று மாற்றுவது நல்லது என நினைக்கிறேன்.
காங்கிரஸ் கட்சியில் இல்லாதவர்களை இத் திரியிலிருந்து அகற்றி விட வேண்டும் - கட்டாயமாக.
எல்லாவற்றிலும் விலக்கு என்பது உண்டு.

நடிப்புலகின் பிதாமகனாக நடிகர்திலகம் இருந்தாலும், நீண்ட நெடிய அரசியல், பொதுவாழ்வைக் கொண்ட அவரைப்பற்றி விவாதிக்கும்போது சிறிது அரசியல் கலக்கத்தான் செய்யும்.

அதுபோல பெருந்தலைவர் காமராஜர் காங்கிரஸ் கட்சிக்காரராக இருந்தாலும், அவரை ஒரு கட்சிக்குள் அடக்கிவிடக்கூடாது. இன்று அல்ல, நாளை அல்ல எக்காலத்திலும், காமராஜரின் அரசியல் என்பது பொதுவாழ்வில் தூய்மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வது. அதனை, அரசியல் என்றாலே சாக்கடை என்று வெறுதது ஒதுக்கும், ஒதுங்கும் இளைய தலைமுறையினரும், வருங்கால சந்ததியினரும் அறிந்துகொள்வது மிகவும் அவசியம்.

வாழ்நாளெல்லாம் பெருந்தலைவரின் புகழ் பாடி மறைந்த நடிகர்திலகத்தின் திரியில் பெருந்தலைவரைப் பற்றி வந்த அவதூறை மறுப்பது அவசியமான ஒன்றாகும்.

சினிமாவை மட்டுமே விவாதிக்கவேண்டும் என்று விரும்புவது தவறல்ல. விவாதங்களில் அவரவர்களுக்கு விருப்பமானவற்றை மட்டும் படிக்கலாம், விவாதத்தில் பங்கேற்கலாம்.. ஆனால் மேலே குறிப்பிட்டுள்ளவை பற்றி விவாதிக்கக்கூடாது என்பது முறையல்ல.

oowijaez
26th December 2013, 02:49 PM
இத் திரி சிவாஜி கணேசனைப் பற்றிய எல்லாவற்றையும் அலசுவதற்கு இடம் கொடுத்தது :- அவர் பெற்ற வெற்றிகளிலிருந்து கட்டிய வேட்டிகள் வரையில்! இப்போது கருத்து பஞ்சம் ஏற்பட்டு தடம் மாறி அரசியல் வாடை வீசுகிறது. அந்த மாதிரியான கருத்து பரிமாற்றங்களுக்கு miscellaneous என்ற பகுதி இருக்கிறதே. 'அவர்களுக்கு' பதில் சொல்லவேண்டும் என்பதற்காக இந்த திரி கேள்வி குறியாகிறது. பூனையை பார்த்து புலி ஏன் சூடு போட்டு கொள்ளவேண்டும்?

oowijaez
26th December 2013, 02:56 PM
எல்லாவற்றிலும் விலக்கு என்பது உண்டு.

.

எல்லாவற்றிலும் விலக்கா அல்லது சிலருக்கு மட்டும் விதி விலக்கா? என் நினைவுக்கு எட்டிய வரையில் இங்கே மாற்று அரசியல் கருத்துக்களை பதிவிட்டவர்களை கூட்டம் கூடி துரத்தியது இத்திரி. ---ஆம் பதிவுக்காக வாழ்த்து சொல்பவர்கள் பலரிருக்க ,அதற்கும் திரியின் பெயருக்கும் சம்பந்தம் இல்லையென்று சொல்லி சிலருக்கு மட்டும் 'வாய் பூட்டு' போடப்பட்டது. இத் திரியை படிக்கும் சம நிலையாளர்கள் யாராயிருந்தாலும் சொல்லுவார்கள் இது காங்கிரஸ் கட்சியின் பிரசார கூடமென்று.

KCSHEKAR
26th December 2013, 03:05 PM
கடந்த 24-12-2013 அன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஒரு மணிநேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருக்கிறார். இந்த சம்பவமும் இதே காமராஜர் சாலையில்தான் நடைபெற்றிருக்கிறது. நடிகர்திலகம் சிலை அருகில் அல்ல.
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/TimesofIndia25Dec2013_zps91777a37.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/TimesofIndia25Dec2013_zps91777a37.jpg.html)

HARISH2619
26th December 2013, 07:45 PM
சகோதரி வனஜா அவர்களே,
தயவு செய்து திரியை படிப்பதோடு நிறுத்திகொள்ளுங்கள் .நானும் பதிவிடுகிறேன் என்று சொல்லி நல்லவர் மனதை புண்படுத்தாதீர்கள் என தாழ்மையோடு கேட்டுகொள்கிறேன் .நடிகர்திலகம் ரசிகர்களில் 90 சதவீதம் பேர் பெருந்தலைவர் காலத்து காங்கிரஸ் விசுவாசிகள் என்பதையும் அதன்பிறகு நடிகர்திலகம் எடுத்த நிலைபாட்டையே விமர்சித்தவர்கள் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள் .

adiram
26th December 2013, 08:04 PM
சகோதரி வனஜா அவர்களே,
தயவு செய்து திரியை படிப்பதோடு நிறுத்திகொள்ளுங்கள் .நானும் பதிவிடுகிறேன் என்று சொல்லி நல்லவர் மனதை புண்படுத்தாதீர்கள் என தாழ்மையோடு கேட்டுகொள்கிறேன் .நடிகர்திலகம் ரசிகர்களில் 90 சதவீதம் பேர் பெருந்தலைவர் காலத்து காங்கிரஸ் விசுவாசிகள் என்பதையும் அதன்பிறகு நடிகர்திலகம் எடுத்த நிலைபாட்டையே விமர்சித்தவர்கள் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள் .

Well said Senthil sir,

Vanaja mam, we never undergone in counter arguement with our Murali sir and with our Chandrasekhar sir. That much respect we all are giving to these senior fans of NT. Comparing with them we are all (that means I and others, not you) nothing.

Please dont hurt them by these type of posts.

Yes, we are congressmen and we are for NT and Karmaveerar.

oowijaez
26th December 2013, 09:43 PM
திரியின் விதிகள் எல்லாருக்கும் பொதுவானவை தானே? பழைய பதிவர்களுக்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளனவா? என்னை பதிவிட வேண்டாம் என்று சொல்ல எவருக்கும் உரிமையில்லை. நானும் யாரையும் அப்படி சொல்லவில்லை. நான் இங்கே முன் வைத்த வாதங்களில் எதுவும் கீழ் தரமாக இல்லை. அக்குறிப்பிட்ட பதிவுக்கும் நடிகர் திலகத்துக்குக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டேன். ந .தி பெயர் கூட அந்த கட்டுரையில் இல்லை. அத்துடன் சம்பந்தமில்லாதவர்களின் பதிலை எதிர்பார்த்து நான் எனது பதிவை இடவில்லை . நடிகர் திலகத்தின் திரியில் எதற்கு காமராஜரை பற்றிய கட்டுரை என்பதற்கு சம்பந்தப்பட்டவரே பதில் சொல்லட்டுமே.

oowijaez
26th December 2013, 10:08 PM
one simple question; what has the post #703 got to do with Sivaji Ganesan? ok, you hubbers are congress supporters, so what? I couldn't care less about it. I do not have the habbit of mixing politics in everything I do, definitely not with entertainment. This thread was created to glorify NT's movies
(that's what I think anyway) and why not continue that way? For me, its like you have started a political argument with the 'other group' somewhere and come here to finish it off and people like me have to suffer. I can of course skip reading it, but the reason I started this argument is; this time the moderator is breaking his own rule!!!

Murali Srinivas
27th December 2013, 12:32 AM
வனஜா,

வெகு நாட்களுக்கு பின் வந்திருக்கிறீர்கள். வந்தவுடன் என் பதிவுகளை விமர்சனம் செய்திருக்கிறீர்கள். அதற்கு நீங்கள் சொல்லியிருக்கும் காரணம் அரசியல் கலந்திருக்கிறது என்ற ஒரு குற்றசாட்டை முன் வைத்திருக்கிறீர்கள். இது அரசியல் சம்பந்தப்பட்ட பதிவுதான். இல்லையென்று யாரும் மறுக்கவில்லை. இந்த பதிவிற்கு முன் வந்த பதிவை நீங்கள் படித்திருக்க மாட்டீர்கள். அதில் தெளிவாக கீழ்கண்டவாறு சொல்லியிருக்கிறேன்.

நடிகர் திலகம் திரியில் நாம் அரசியல் பதிவுகள் இடுவதில்லை. எப்போதேனும் சில விவாதங்கள் வரும்போது கூட அதை தவிர்க்க சொல்கிறோம். ஜூலை 15 அன்று மட்டும் நடிகர் திலகம் தன் வாழ்நாள் முழுக்க யாரை தலைவராக ஏற்றுக் கொண்டாரோ யாரை நாமும் இன்று வரை போற்றுகிறோமோ அவரை அந்த பெருந்தலைவரைப் பற்றிய ஒரு நினைவு கூறல் அதுவும் அது பிறந்த நாளாக இருப்பதனால் செய்கிறோம்.அந்த வகையில் இந்த வருடமும் ஜூலை 15 அன்று அவரை பற்றிய பதிவுகள் வந்தன. என்னுடைய பங்காக அவர் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது தொழில்துறை சிறக்க அவர் எடுத்த முயற்சிகள், பங்களிப்புகள் பற்றிய ஒரு தகவல் குறிப்பாக செய்தேன்.

வழக்கம் போல் இதற்கும் பதில் சொல்கிறேன் பேர்வழி என்று ஒரு பதிவு வெளிவந்தது. அவர்களின் அபிமானத்துக்குரியவரை பற்றிய புகழ் பாடல். அதில் நமக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் அதே பதிவில் பெருந்தலைவர் பற்றிய தவறான தகவல்களை சொல்லியிருந்தார்கள். அந்த தவறை சுட்டிக் காட்டவும் வரலாற்று உண்மைகளை எடுத்துக் கூறவுமே இந்த பதிவு.

அந்த பதிவிற்கு பதில் என்ற பெயரில் வரலாற்று பிழையான தகவல்கள் இடம் பெறும்போது அந்த பிழைகளை சுட்டிக்காட்டி உண்மைகளை உரக்க சொல்வது எங்களது கடமை. அது ஒரு சில பேருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக பதிவிடாமல் இருக்க முடியாது. அதை பதிவிடக் கூடாது என்று சொல்வது, இன்ன இன்ன விஷயங்களைப் பற்றிதான் எழுத வேண்டும் என்று மற்றவர்களை நிர்பந்திப்பது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு நாங்கள் அடிபணிவதில்லை.

பொதுவாக நான் என் மேல் வைக்கப்படும் அர்த்தமற்ற விமர்சனங்களுக்கு விளக்கவுரை எல்லாம் எழுதுவதில்லை. இன்று இதற்கு பதில் அளிப்பது சில விஷயங்களை தெளிவுப்படுத்தவே. நான் பதிவு செய்ய விரும்பும் முக்கிய விளக்கம் என்னவென்றால் இது காங்கிரஸ் ஆதரவு திரியல்ல. ஆனால் பெருந்தலைவர் ஆதரவு திரி. இங்கே பங்களிக்கும் நண்பர்களும் சரி, வெளியிலிருந்து வந்து படிக்கும் நண்பர்கள் மற்றும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் ஆகிய பெரும்பான்மை மனிதர்கள் ஒரு மனதாக ஏற்றுக் கொண்ட ஒரே தலைவன் பெருந்தலைவர் அவர்கள். அவரின் அரசியல் பயணம் தூய்மையின் அடையாளம். நேர்மையின் குறியீடு. அந்த பொன்னாட்களின் நிகழ்வுகளை நினைவு கூறவும் அடுத்தடுத்த தலைமுறைகள் அவற்றை அறிந்துக் கொள்ளவும் ஒரே ஒரு நாள் ஜூலை 15 அன்று இந்த திரியில் பதிவு செய்கிறோம்.

இவற்றையெல்லாம் குறிப்பிடும் அதே நேரத்தில் மற்றொரு விஷயத்தையும் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை [இது அநேகமாக இந்த திரியின் பங்களிப்பாளர்கள் பெரும்பாலானாவருக்கும் பொருந்தும் என்ற போதிலும்] எனக்கு இப்போது அரசியல் சார்பில்லை. என் அரசியல் சார்பு நான் பள்ளி மாணவனாக இருந்த காலக்கட்டத்திலேயே 1975 அக்டோபர் 2-ந் தேதியோடு முடிந்து விட்டது. இப்படி குறிப்பிட்டால் உங்களுக்கு புரியுமா என்று தெரியவில்லை. அன்றுதான் பெருந்தலைவர் மறைந்தார். அதன் பிறகு வாக்களிக்கும் வயதை நான் அடைந்த பிறகு ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் அந்த நேரத்தில் நான் வாக்களிக்கும் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தராதரம் அறிந்து வாக்களித்து வந்திருக்கிறேன். கிட்டத்தட்ட கடந்த 8 வருடங்களாக என் பதிவுகளை படித்து வந்திருப்பவர்களுக்கு தெரியும். நான் பெருந்தலைவர் தவிர்த்து வேறு காங்கிரஸ் தலைவர்களையோ அவர் காலத்திற்கு பின் உள்ள காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டையோ ஆதரித்து எழுதியதில்லை. இவற்றையெல்லாம் கூட நான் எழுதி விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. ஆனால் யாரேனும் ஒரு சிலர் நீங்கள் நினைப்பது போல் தவறாக எண்ணிக் கொண்டிருந்தால் அவர்களும் புரிந்துக் கொள்ளவே இந்த விளக்கம்.

இறுதியாக ஒன்று. நீங்கள் இங்கே சில முறை குறிப்பிட்டது போல் உங்கள் நாட்டின் அரசியல் சூழலால் நீங்கள் இன்றைய காங்கிரஸ் கட்சியை வெறுக்கலாம். அதற்காக பெருந்தலைவர் பற்றி எழுதக் கூடாது, அவர் காலத்து காங்கிரஸ் கட்சியைப் பற்றி எழுதக் கூடாது என்றெல்லாம் நீங்கள் சொல்வது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. நான் எழுதியவற்றை நன்றாக படித்து புரிந்துக் கொள்வீர்கள் என நம்பிக்கையில்

அன்புடன்

rsubras
27th December 2013, 11:24 AM
to link Kamarajar to the present day Indira Congress or to link him with any caste is a disservice to that great man, those who attempt to do that, requesting to kindly leave him alone just like Bharathiyar or Gandhi who has never been linked to any caste / political party.............

HARISH2619
27th December 2013, 01:19 PM
சகோதரி வனஜா அவர்களே,
எங்கள் முரளி சாரின் பதிவுகளை விமர்சிக்கும் அளவுக்கு தங்களுக்கு அனுபவ முதிர்ச்சி இல்லை என்பது என் கருத்து .தயவு செய்து இதோடு நிறுத்திகொள்ளவும் .தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அந்த பதிவுகளை படிக்காமல் தவிர்த்துவிடுமாறு கேட்டுகொள்கிறேன்

anasiuvawoeh
27th December 2013, 02:02 PM
Dear Ravi sir,thanks for your article of Gnani.There are lot of inputs which will make everyone to ask few questions themselves.

oowijaez
27th December 2013, 03:12 PM
திரு முரளி
ஆரம்பத்திலிருந்தே உங்கள் பதிவுகளில் அரசியல் இருக்கும் ஆனால் அதில் ந .தி பற்றிய செய்திகளும் இருந்தது. அதனால் திரிக்கு சம்பந்தமில்லாதவை என்று அவைகளை நான் சொல்லவில்லை. ஆனால் எனது கேள்வியை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளாமல் மற்றவர்கள் சொன்னதையே சொல்கிறீர்கள். அது மட்டுமன்றி எனது கருத்தையும் அரசியல் கோணத்திலேயே பார்க்கிறீர்கள் . நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, தமிழ்நாட்டு /இந்திய அரசியல் பற்றி எனக்கு எந்த வித கருத்தும் இல்லை. அதை நான் ஒரு பொருட்டாகவும் எடுப்பதில்லை. நான் எந்த தமிழ் நாட்டு கட்சிகளையும் ஆதரிக்கவும் இல்லை. எந்த ஒரு அரசியல் கட்சியையோ இயக்கத்தையோ சார்ந்திருப்பது எனக்கு அவமரியாதை தரும். இதற்காக எனக்கு இது பற்றியெல்லாம் தெரியாது என்றும் நினைக்க வேண்டாம். வயதுக்கும் அனுபவத்துக்கும் சம்பந்தமில்லை. 50, 60+ வயதினர் முதிர்ச்சியற்று தர்க்கம் செய்ததை தான் நான் பார்த்தேனே! நடிகர் திலகம் திரியில் அவரை பற்றிய தவறான செய்திகளை சரிப்படுத்துவது தான் முறை. காமராஜர் பற்றிய செய்திகளை ந. தி திரியில் ஏன் பதிவிட வேண்டும் என்பது மட்டுமே எனது கேள்வி. (மிக குறிப்பாக சொல்லப்போனால் பதிவு 703). வேறு திரியில் இருந்திருந்தால் இந்த கேள்வியே எழுந்திருக்காது. பல கட்சியை சார்ந்தவர்கள் இத்திரிக்கு வந்து தத்தம் அரசியல் அபிப்பிராயங்களை சொல்ல நீங்கள் இடமளிப்பீர்களா? நான் சொன்னவற்றில் தனிப்பட்ட தாக்குதலோ அவமதிப்போ கிடையாது. எந்த விதமான காழ்ப்புணர்ச்சியும் இல்லை. உங்களை இப்படி எழுத கூடாது என்று கூட நான் சொல்லவில்லை. உங்களது பதிவிலிருந்து உங்கள் சட்டாம்பிள்ளைத்தனம் தெரிகிறது; 'குருவானவர் எது சொன்னாலும் குற்றமில்லை' என்று பின்னால் தாளம் போடும் கூட்டமும் இருக்கிறது. அந்த உலக மகா கலைஞனை ஒரு சிறு அரசியல் வட்டத்துக்குள் அடக்கி சேறு பூச காரணமாகிவிட்டீர்கள் என்பதே எனது கருத்து.

Russelldwp
27th December 2013, 08:27 PM
[QUOTE=adiram;1098912]பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் காங்கிரசின் தனிப்பட்ட தலைவரல்ல. ஒட்டுமொத்த தமிழக தலைவர், தன்னலம் கருதாத தியாகி, கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரர், எளிய வாழ்க்கையின் அடையாளம்.

]
இந்த திரியில் நடிகர் திலகத்தின் செய்திகளுக்கு என்ன முக்கியத்துவமோ அதே முக்கியத்துவம் நடிகர் திலகத்தின் இதயத்தில் தெய்வமாய் வாழ்ந்து கொண்டிருந்த அரசியல் புனிதர் படித்த அரசியல் வாதிகள் சாதிக்க முடியாததை சாதித்து காட்டிய படிக்காத மேதை பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் செய்திக்கும் கொடுத்தே ஆக வேண்டும். இது ஒவ்வொரு சிவாஜி ரசிகனின் உள்ளத்தின் வெளிப்பாடு.

oowijaez
27th December 2013, 10:19 PM
என்னை கேள்வி கேட்க தூண்டிய பதிவு:


உண்மை உணரும் நேரம் - 3

ஒரு முன்னுரை

இனி நமது ஹப்பில் பதியப்பட்ட மற்றொரு "வரலாற்று" பதிவிற்கு வருகிறேன். அதற்கு முன்பு ஒரு விஷயம் சொல்ல வேண்டும். முதலில் நமது ஹப் அல்லது மய்யம் என்ற இந்த இணையதளத்தைப் பற்றிய செய்தி. இது தொடங்கப்பட்டது தமிழ் சினிமா இசையைப் பற்றிய ஒரு தகவல் பரிமாற்றம் மற்றும் பாடல்களின் சிறப்பை நினைவு கூர்தல் ஆகியவற்றுக்காக. முதலில் அதன் பெயரே TFM DF. Tamil Film Music Discussion Forum. பின்னர் அது படிப்படியாக விரிவாக்கப்பட்டு நாம் இன்று காணும் அமைப்பில் வந்து நிற்கிறது. இங்கே சூரியனுக்கு கிழே உள்ள எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். பல் வேறு துறைகளில் உள்ள ஆளுமைகளைப் பற்றி அது கலைத்துறையாக இருக்கலாம், இசைதுறையாக இருக்கலாம், திரைப்பட துறையாக இருக்கலாம், இன்னும் அரசியல், விளையாட்டு, இலக்கியம், கவிதைகள், படைப்புகள் என்று ஒவ்வொரு துறையிலும் புகழ் பெற்ற ஆளுமைகளைப் பற்றி அவர்தம் படைப்புகளைப் பற்றி பதிவுகள் இடலாம், கருத்து பரிமாற்றம் மற்றும் ஆரோக்கியமான விவாதங்கள் ஆகியவை இடம் பெறலாம். ஆனால் அவை அந்தந்த பிரிவில் கீழே வரும் தலைப்புகளில் இருக்க வேண்டும். அரசியல் பற்றி விவாதிக்க வேண்டுமானால் current topics பகுதிக்கு செல்ல வேண்டும். அவற்றை திரைப்படங்கள் பகுதியில் பதிவிடுவது சரியானது அல்ல. அதே போன்றே திரைப்படங்கள் பகுதியில் ஒரு திரைத்துறை ஆளுமைக்காக உருவாக்கப்பட்ட திரியில் தனிப்பட்ட மனிதர்களின் வீட்டில் நடைபெறும் காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா மற்றும் இன்ப சுற்றுலா போன்றவை இடம் பெறுவது சரியல்ல. அவற்றை பதிவு செய்ய வேண்டுமென்றால் Hubbers Lounge என்ற பகுதிக்கு செல்ல வேண்டும்.

இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் பல்வேறு நேரங்களில் திரைப்படம் சம்பந்தப்பட்ட திரிகளில் அதற்கு தொடர்பே இல்லாமல் வேறு பல பதிவுகள் வருகின்றன. அதை தவிர்க்க சொல்லவே இந்த் முன்னுரை.
உண்மை உணரும் நேரம் - 3 (Part I)

அன்புடன்

this is what I called 'breaking one's own rule' !!!!!

oowijaez
27th December 2013, 10:30 PM
It's regrettable that you all don't seem to get my point here. few threads before, the moderator announced some hub rules in details, and on post 703 he, himself broke them.

oowijaez
27th December 2013, 10:39 PM
.

தங்கள் வாதத்துக்கு ஒரு ஆதரவு கருத்துகூட வரவில்லை என்பதை வைத்தே தங்கள் தரப்பு வாதம் எவ்வளவு பலவீனமானது என்பதை அவர்கள் உணர வேண்டும்.



what can I do? I do not have any duplicate I.D's!!!

venkkiram
27th December 2013, 11:09 PM
I second Vankv here (Though I am not a regular contributor to this thread) . "Nadigar Thilagam Sivaji Ganesan" thread in my understanding is for sharing news/our views and opinions on Art/Drama/Cinema related to Sivaji's acting. Anything related to politics can be directed to a separate thread. .

Richardsof
28th December 2013, 08:39 AM
1968- october - PESUM PADAM
http://i41.tinypic.com/11l566w.jpg

Richardsof
28th December 2013, 08:40 AM
http://i42.tinypic.com/15wj5mw.jpg

kalnayak
28th December 2013, 08:51 AM
சகோதரி வனஜா, முன்பு நடந்த விவாதப்பிரச்சினைகளிலிருந்தே நடிகர் திலகம் திரி மீண்டு வரவில்லை. சிலைப்பிரச்சினை வேறு சோதனையாக இருந்து கொண்டுள்ளது. நீங்களும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீர்கள். முரளி சார் எழுதியது திரிக்கு தேவையானதே

Subramaniam Ramajayam
28th December 2013, 11:01 AM
VEK.V
murali sir two hundred percent. VERY CORRECT. As an ardent fan of NT since pasamalar days I am of the opinion NT has taken KAMARAJ as his perfect leader till his demise. so any adverse coments about the departed leader to be avoidaded.already we are awaiting for court decisions about the statue case, let us not dig ourselves.

HARISH2619
28th December 2013, 01:49 PM
சகோதரி வனஜா அவர்களே ,
திரு ஆதிராம் அவர்கள் சொன்னதைப்போல முரளி சாரின் பின்னால் தாளம் போடும் கூட்டத்தை சேர்ந்தவன் என்பதில் எனக்கு பெருமையே .மேலும் மாவீரன் பிரபாகரன் வெறும் வட இலங்கை தமிழர்களின் தலைவர் மட்டுமே என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் பெருந்தலைவரை ஒரு இயக்கத்தின் தலைவர் மட்டும்தான் என்று சொல்வது .அவர் பொதுவாழ்வில் நேர்மையின் ,தூய்மையின் அடையாளம் .அவரை பற்றி எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பேசலாம் .நடிகர்திலகமும் பெருந்தலைவரும் ந.தி ரசிகனுக்கு ஒன்றுதான் .அவரைப்பற்றி எழுதுவதற்கு தகுதியான திரி நமது திரி மட்டுமே என்பது 99.9% ரசிகர்களின் கருத்து .உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதுபோன்ற பதிவுகளை தவிர்த்து விடுமாறு கேட்டுகொள்கிறேன்.

eweaxagayx
28th December 2013, 04:52 PM
நான் சில வருடங்களாக இந்தத் திரியில் வரும் பதிவுகளை ஒன்று விடாமல் படித்துக் கொண்டிருக்கிறேன் - திரியில் பங்க்கு கொள்ளாவிட்டாலும். இந்தத் திரியில் பதிவிடுபர்களில் என்னைக் கவர்ந்தவர்கள் திருவாளர்கள். பம்மல் சுவாமிநாதன், நெய்வேலி வாசுதேவன், ராகவேந்திரா, முரளி ஸ்ரீனிவாஸ், கோபால் போன்றவர்கள். நான் வெளிநாட்டில் இருந்தாலும் அங்கு பல இடங்களுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் தவராமல் எல்லா பதிவுகளையும் படித்துவிடுவேன்.

தற்சமயம் முரளி அவர்கள் தவிர்த்து மற்றவர்களின் பதிவுகள் இல்லாதது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இவர்கள் அனைவரும் மீண்டும் பதிவுகள் இட்டு எங்களை மகிழ்சியில் ஆழ்த்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

eweaxagayx
28th December 2013, 06:08 PM
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நான் பதிவிடும் பொழுது அந்த நேரத்தில் நினைவில் வந்த பெயர்களைக் குறிப்பிட்டேன். நான் பொதுவாக எல்லோருடைய பதிவுகளையும் படிப்பவந்தான். தயவுசெய்து எனது வயது 61க்கு மேல் என்பதை குறிப்பிடவிரும்புகிறேன். பொதுவாக நான் எல்லாவற்றையும் நினைவில் வைத்துக்கொள்வேன் என்றாலும் சில நேரங்களில் மறதி வந்துவிடுகிறது.

geno
28th December 2013, 06:40 PM
எல்லாவற்றிலும் விலக்கு என்பது உண்டு.

நடிப்புலகின் பிதாமகனாக நடிகர்திலகம் இருந்தாலும், நீண்ட நெடிய அரசியல், பொதுவாழ்வைக் கொண்ட அவரைப்பற்றி விவாதிக்கும்போது சிறிது அரசியல் கலக்கத்தான் செய்யும்.

அதுபோல பெருந்தலைவர் காமராஜர் காங்கிரஸ் கட்சிக்காரராக இருந்தாலும், அவரை ஒரு கட்சிக்குள் அடக்கிவிடக்கூடாது. இன்று அல்ல, நாளை அல்ல எக்காலத்திலும், காமராஜரின் அரசியல் என்பது பொதுவாழ்வில் தூய்மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வது. அதனை, அரசியல் என்றாலே சாக்கடை என்று வெறுதது ஒதுக்கும், ஒதுங்கும் இளைய தலைமுறையினரும், வருங்கால சந்ததியினரும் அறிந்துகொள்வது மிகவும் அவசியம்.

வாழ்நாளெல்லாம் பெருந்தலைவரின் புகழ் பாடி மறைந்த நடிகர்திலகத்தின் திரியில் பெருந்தலைவரைப் பற்றி வந்த அவதூறை மறுப்பது அவசியமான ஒன்றாகும்.

சினிமாவை மட்டுமே விவாதிக்கவேண்டும் என்று விரும்புவது தவறல்ல. விவாதங்களில் அவரவர்களுக்கு விருப்பமானவற்றை மட்டும் படிக்கலாம், விவாதத்தில் பங்கேற்கலாம்.. ஆனால் மேலே குறிப்பிட்டுள்ளவை பற்றி விவாதிக்கக்கூடாது என்பது முறையல்ல.

சிவாஜிக்கு பெயர் சூட்டியவரும், காமராஜரை முதல்வராக ஆக்கிய சூழ்நிலையை உருவாக்கியவருமான பெரியாரைப் பற்றி காங்கிரஸ் பெருங்காய டப்பாக்கள் ஒன்றும் சொல்வதில்லை என்பதும் தெரிந்ததே!

அது கிடக்கட்டும், கடைசியில் "என் தமிழ் என் மக்கள்" என்று தமிழ்த்தேசியராக தன் அரசியல் வாழ்வை முடித்துக் கொண்டார் சிவாஜி. ஆனால் இங்கே எழுதுவோரெல்லாம் ஆஷாடபூதிகள் போலவும் உருத்திராட்ச பூனைகள் போலவும் "தேசியமும் தெய்வீகமும்" பற்றியே பேசுவது நெருப்புக் கோழித்தனமா இல்லையா?!

சிவாஜி 1974-75-இல் காமராஜரை கைது செய்ய இந்திரா உத்தரவிடுமளவு போனபோது என்ன நிலைப்பாடு எடுத்தார்-எவ்வாறு செயலாற்றினார் எனச் சொல்வதற்கு வரலாற்றுக் குறிப்புகள் உள்ளதா????

எமர்ஜென்சியின் போது சிவாஜியின் நிலைப்பாடு என்ன?

oowijaez
28th December 2013, 10:02 PM
'Any-body can know, the point is to understand'! so far only one hubber understood my point. not bad for someone who do not confuse entertainment with politics!

oowijaez
28th December 2013, 10:12 PM
.
மேலும் மாவீரன் பிரபாகரன் வெறும் வட இலங்கை தமிழர்களின் தலைவர் மட்டுமே என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் பெருந்தலைவரை ஒரு இயக்கத்தின் தலைவர்ட்டும்தான் என்று சொல்வது ..

the most absurd comment I've heard so far!!!:banghead:can only laugh!

rsubras
29th December 2013, 12:40 PM
what next? Bharathiyar was part of congress, Gandhi had been congress leader and so on.... avangala pathi sonnalum athu politics thaana?

Murali Srinivas
29th December 2013, 08:24 PM
பூலோக சொர்க்கத்தில் கடந்த 6 நாட்களாக இன்ப சக்கரம் சுழல அதன் நிரந்தர சக்கரவர்த்தி, இளமை அழகு எழில் ஸ்டைல் இவற்றின் உருவகமான ஒரே நாயகன் அழகாபுரி ஜமீன் சின்னதுரை விஜய் ஆனந்த் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்.

ஆம், ஸ்ரீரங்கத்தில் ரங்கராஜா திரையரங்கில் கடந்த 23-ந் தேதி முதல் தினசரி 3 காட்சிகளாக நடிகர் திலகத்தின் வசந்த மாளிகை வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

தகவல் உதவி திரு ராமஜெயம்.

அன்புடன்

Murali Srinivas
29th December 2013, 08:56 PM
கல் தோன்றி மண் தோன்றா காலத்திலேயே முன் தோன்றிய மூத்த மாநகரம் சங்கத்தமிழ் மணக்கும் எங்கள் மதுரை மாநகரம்! மற்ற ஊர்களிலெல்லாம் மனிதர்கள் நடமாடியபோது தெய்வமே மனித ரூபத்தில் திருவிளையாடலாடிய நகரம் எங்கள் நான்மாடக்கூடல். அந்த திருவிளையாடல் புராணங்களை மீண்டும் நடத்திக் காட்ட கைலாயத்திலிருந்து சிவா(ஜி) பெருமான் மதுரை சென்ட்ரலுக்கு விஜயம். வரும் வெள்ளிக்கிழமை முதல் சென்ட்ரல் திரையரங்கில் திருவிளையாடல் காவியம் திரையிடப்படுகிறது.

அன்புடன்

இப்போது வெளியிடப்படும் பிரிண்ட் APN பரமசிவம் மெருகேற்றிய பிரதி அல்ல. பழைய 35 mm பிரதிதான் திரையிடப்படுகிறது.

கடந்த மூன்று நாட்களாக சிவபெருமானின் திருவிளையாடலை காண பக்த கோடிகள் மதுரை சென்ட்ரல் திரையரங்கிற்கு வந்துக் கொண்டேயிருக்கிறார்களாம். இன்று மாலைக் காட்சிக்கு திரளான கூட்டம். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் கிட்டத்தட்ட 90% audience பொது மக்கள் என்பதுதான்.

சென்ட்ரல் திரையரங்கில் புதுப்பிக்கும் பணிகள் cum மராமத்து பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனவாம். அதனால் தியேட்டரின் full capacity-க்கு டிக்கெட்டுகள் கொடுக்கப்படவில்லையாம். எல்லாக் காட்சிகளுக்கும் அதிகபட்சம் கொடுக்கப்படும் டிக்கெட்கள் என்று ஒரு எண்ணிக்கை வைத்திருந்தார்களாம்.அதையும் மீறி இன்றைய மாலைக்காட்சிக்கு வந்த பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டனவாம். குறிப்பாக பால்கனிக்கு வந்த பொதுமக்கள் கூட்டம் பார்த்து தியேட்டர்காரர்களே வியந்து போனார்களாம். பால்கனியில் ஒரு சீட் கூட காலியில்லாமல் நிறைந்திருந்த காட்சியை பார்த்தபோது நடிகர் திலகத்தின் படங்களுக்கு எப்போதுமே கிடைக்கும் வரவேற்பு அதிலும் பால்கனிக்கு எப்போதும் வரும் high class audience ஆகியவை என்றுமே குறையாது என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது. தீபாவளி பொங்கல் போன்ற விசேஷ நாட்கள் விடுமுறை நாட்கள் இல்லை என்ற போதிலும் முதல் மூன்று நாள் வசூலில் பெரிய உயரத்தை எட்டியிருக்கிறது. திரையரங்கத்திலிருந்து நேரடி தகவல் கொடுத்த நண்பர் மதுரை சந்திரசேகர் அவர்களுக்கு நன்றி.

அன்புடன்

Murali Srinivas
30th December 2013, 11:47 PM
Just wanted to share one more information given by Madurai Chandrasekar. While he was standing and talking to his friends outside Central theatre, two foreigners came there it seems. They introduced themselves as a couple from Holland and pointing at the posters of Thiruvilayadal wanted to know about it. Chandrasekar had told them that it is a thaetre screening movies and this particular movie is a film based on Hindu mythology. The couple showed interest to watch the movie but they were scheduled to leave to Chennai by train that night. Chandrasekar told them that they can watch the movie up to interval or whatever time they felt would be ideal for leaving.

The couple had then bought Balcony tickets and requested our friend to sit along with them. The Dutch couple it seems have heard of the Purana tales and the fact that they had just visited Meenakshi Temple which is very much in the vicinity of the theare helped them to relate with the movie very well. They were also able to identify the பொற்றாமரை குளம் which would come in Dharumi episode.

They were amazed by NT's performance and they could not believe when shown a photo of NT [where he was his normal self) refusing to accept that this man was the one who acted in the role of Lord Shiva in the film. They were taken aback when told that this film came out in 1965. Since their train was at 8.45 pm, they had to leave at 7.45 pm so that they can go to their room, have their dinner, take their luggage and go to the station. They felt very sorry it seems that they could not watch the full movie.

I was not surprised because we all know that once someone steps in to a movie hall screening NT movie, after the movie gets over, he would come out as a fan of NT even if he is watching a NT movie for the first time in his life.

Regards

KCSHEKAR
31st December 2013, 10:51 AM
நான் சுவாசிக்கும் சிவாஜி - ஒய்.ஜி. மகேந்திரன் (13)

கடந்த, 1959ல் வெளி வந்த, பாகப்பிரிவினை ஒரு அற்புதமான படம். தமிழகத்தின் பெரிய ஹீரோவாக, சிவாஜி கொடிக் கட்டி பறந்து கொண்டிருந்த நேரம் அது. ஸ்டைலிஷ் ஹீரோவாக தன்னை நிரூபித்தவர், பாகப்பிரிவினை படத்தில், ஊனமுற்றவர் கதாபாத்திரத்தில், தன்னை விகாரப்படுத்தி, நடித்திருப்பார். எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, எஸ்.வி.சுப்பையா போன்ற ஜாம்பவான்களுக்கு மத்தியில், அவர்களிட மிருந்து தன்னை நடிப்பால் வேறுப்படுத்திக் காட்ட வேண்டிய சவாலான ரோல் அது.

நாற்பது நாட்கள் நடந்த படப்பிடிப்பில், கை ஊனத்தையும், காலை இழுத்து இழுத்து நடந்து, கால் ஊனத்தை காட்டுவதாகட்டும், கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லாமல், ஒரே மாதிரி நடித்திப்பார். அத்துடன், 'தேரோடும் நம்ம சீரான மதுரையிலே...' என்ற பாடலில், கை, கால் ஊனத்துடனே, நடனமாடி, கை தட்டல் வாங்கியிருப்பார் சிவாஜி.
இந்த படத்தை, இந்தியில் ரீ-மேக் செய்தனர். அதுவும், வெற்றிப்படமாக அமைந்தது. சிவாஜி நடித்த ரோலில், இந்தியில் சுனீல் தத் நடித்திருந்தார். 'படப்பிடிப்பின் போது, முந்தின காட்சியில் கையை எப்படி வைத்துக் கொண்டிருந்தோம் என்பது அடிக்கடி மறந்து விடும். ஆனால், சிவாஜி எப்படி தான் ஒரே மாதிரி, கையையும், காலையும் வைத்து, அற்புதமாக நடித்தாரோ...' என்று, வியந்து கூறினார் சுனில் தத்.

இப்படத்தின் வெற்றிக்கு, சிவாஜி - கண்ணதாசன் - எம்.எஸ்.வி., - டைரக்டர் பீம்சிங் இணைந்த கூட்டணியே, காரணம்.
ஹாலிவுட் நடிகர்கள், மார்லன் பிராண்டோ, கிளார்க் கேபிள் ஸ்பென்ஸர் ட்ரேஸி, அலைக் கென்னெஸ், ஜேம்ஸ் காக்னி போன்றவர்களின் நடிப்பை பற்றி, அடிகடி பாராட்டி பேசுவார். ஆதே போல், சக நடிகர்களுக்கு, 'எந்த நடிகரையும், 'இமிடேட்' செய்யாதீங்க, அவங்க நடிப்பிலே, 'இன்ஸ்பயர்' ஆகும் போது, அதை, 'இம்ப்ரூவ்' செய்யுங்க...' என்று அறிவுரை கூறுவார்.

சிவாஜிக்கு எத்தனையோ ரசிகர்கள் இருக்கின்றனர். இப்படி ரசிகையாக இருந்து, குடும்ப நண்பர்களாகி, உடன் பிறவா சகோதரிகளாக ஆனவர்கள், லதா மங்கேஷ்கர் மற்றும் அவரது தங்கைகள். சிவாஜியை அவர்கள், 'அண்ணா' என்று பாசத்துடன் அழைப்பதுடன் மட்டுமல்லாமல், ஆண்டுதோறும், ரக்க்ஷா பந்தன் தினந்தன்று, ராக்கி கயிறு, அனுப்புவர். இவரும் தங்கைகளுக்கு சீர் வரிசை மற்றும் பரிசுப் பொருட்களை அனுப்புவார். சிவாஜி இறந்த பின்னரும், இந்த பழக்கம், இன்னும் தொடர்கிறது.

சிவாஜி வீட்டில், எந்த முக்கியமான நிகழ்ச்சி நடந்தாலும், லதா குடும்பத்திலிருந்து, ஒருவர் கண்டிப்பாக, கலந்து கொள்வர்.

சிவாஜி படங்களை, லதா விரும்பிப் பார்த்து ரசிப்பார். பாவமன்னிப்பு படத்தை பார்க்க விரும்புவதாக, லதா மங்கேஷ்கர் கூறியதும், அப்படத்தின் பிரின்ட்டை, பிரத்யேகமாக அனுப்பி வைத்தார் சிவாஜி. பொதுவாக, ஒருவர் நம்மை, 'இடியட்' என்று சொன்னால், உடனே, நமக்கு கோபம் வரும்; குறைந்தபட்சம் வருத்தமாவது வரும். ஆனால், என்னை ஒருவர், 'இடியட்' என்று குறிப்பிட்ட போது, நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தேன். என்னை, அவ்வாறு குறிப்பிட்டவர், லதா மங்கேஷ்கர் தான்.

ஒரு சமயம், சிவாஜியின் வீட்டுக்கு, லதா மற்றும் அவரது தங்கைகள் உஷா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போன்ஸ்லே என, மூவரும் வந்திருந்தனர். சிவாஜி காலமாகிய பின், நடந்த நிகழ்ச்சி, அது. சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், போனில் என்னிடம், லதா மங்கேஷ்கர் வந்திருப்பதாக கூறினார். என் மனைவி சுதா, என் சித்தி சீதாவுடன் சிவாஜி வீட்டுக்கு சென்றேன்.

ராம்குமார், லதாவிடம் என்னை அறிமுகப்படுத்திய போது, 'அப்பாவுடன் நிறைய படங்களில், ஒய்.ஜி.மகேந்திரன் நடித்திருக்கிறார்...' என்று சொல்லி, பரிட்சைக்கு நேரமாச்சு படத்தை பற்றி குறிப்பிட்டார். 'அந்த முட்டாள் பையன் கதைதானே?' என்று கேட்டார் லதா. 'ஆமாம் லதாஜி. நான் தான், அந்த இடியட்...' என்று, பெருமையோடு சொன்னேன். 'அந்த ரோலில் நன்றாக நடித்திருக்கிறீர்கள்...' என்று பாராட்டினார். இந்த பாராட்டுக்கு முழு காரணம், சிவாஜிதான்.
லதாவின் சகோதரி உஷா மங்கேஷ்கர் பாடகி என்பதோடு, சிறந்த ஓவியரும் கூட. சிவாஜியை, மிக அழகாக, தத்ரூபமாக வண்ண ஓவியமாக தீட்டி, சிவாஜிக்கு அன்பளிப்பாக வழங்கினார். கையில் புகைப்படம் வைத்துக் கொள்ளாமல், தன் மனதில், சிவாஜியின் முகத்தை வைத்து, வரைந்த படம்
அது.

மும்பையிலிருந்து வெளியான பிரபல ஆங்கில வாரப்பத்திரிகை, 'இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி!' அதில், கலைப் பகுதியை எழுதி வந்த ராஜூ பரதன் என்ற பிரபல பத்திரிகையாளர், மும்பை, ஷண்முகானந்தா அரங்கில் நடைபெற்ற, சிவாஜி நாடக விழா பற்றி எழுதியிருந்த கட்டுரையில், 'வியட்நாம் வீடு' தமிழ் நாடகம் நடைபெற்றது. முதல் வரிசையில், பிருத்வி ராஜ்கபூர், ராஜ்கபூர், சசி கபூர் மற்றும் இந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் அமர்திருந்தனர். தமிழ் தெரியாவிட்டாலும், சிவாஜி நாடகங்களை பார்ப்பதற்காகவே அவர்கள் வந்திருந்தனர்.

'விழாவில் பயங்கர கூட்டம். என்ன தான் இருக்கப் போகிறது என்ற மனநிலையில் தான், சிவாஜியின் நாடகத்தை பார்க்கச் சென்றேன். அவரது நடிப்பு என்னை உலுக்கி விட்டது. நாடக அரங்கிலிருந்து வெளியே வரும்போது, சிவாஜியின், பரம ரசிகனாக வந்தேன். நாடகத்தில் பல இடங்களில், என்னையும் அறியாமல், அழுதேன்...' என்று எழுதியிருந்தார் ராஜூ பரதன்.

பிரபல இந்தி நடிகரும், தாதா சாஹேப் பால்கே விருது பெற்ற சாதனையாளரும் ஆன நடிகர் பிரானுக்கு, சிவாஜி மீது அளவு கடந்த மரியாதை உண்டு. ஏக் முட்டி ஆஸ்மான் என்ற இந்தி படத்தில், விஜய் அரோரா, ஹீரோ. எனக்கு கவுரவ வேடம். இந்தியாவின் போர் கப்பலான ஐ.என்.எஸ்., விக்ராந்த்தில், படமாக்கினர். விஜய் அரோராவும், நானும் கப்பற்படை வீரர்கள்; பிரான் எங்கள் தளபதி. படப்பிடிப்பின் போது, பிரானிடம் என்னை அறிமுகம் செய்தனர்.
'உங்களுக்கு சிவாஜியை தெரியுமா?' என்று கேட்டார் பிரான். 'நன்றாகவே தெரியும். அவர், எங்களுடைய குடும்ப நண்பர். அவரோடு நான், சில படங்கள் நடித்திருக்கிறேன்...' என்றேன்.

'நான் சிவாஜி சாரின் தீவிர ரசிகன். சிவாஜி நடித்த எமோஷனலான படத்தை, இந்தியில் ரீ-மேக் செய்ய கேட்டனர். (பிரான் சொன்ன, ஓரிரு காட்சிகளை வைத்து, அவர் குறிப்பிடுவது, ஞான ஒளி படம் என்பது புரிந்தது.) என்னால் அவர் வெளிப்படுத்திய உணர்ச்சிகளை, கண்டிப்பாக செய்ய முடியாது. வேண்டாம் என்று சொல்லி விட்டேன்...' என்று கூறினார் பிரான்.

நடிகர் விஜய் அரோரா, புனே திரைப்படக் கல்லூரியில், நடிப்புக்கான படிப்பில், தங்கப் பதக்கம் பெற்றவர். 'சமீபத்தில், சிவாஜி படம் பார்த்தேன். அப்படத்தில், ரொம்ப கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக வருவார். படத்தின் பெயர் கூட, கோல்டு மெடல். (தங்கப்பதக்கம்) அதில், தன் மனைவி இறந்ததும், சிவாஜி கொடுத்திருக்கும், 'எக்ஸ்பிரஷன்ஸ்' ரொம்ப சிறப்பானவை. என் வயிற்றில் யாரோ குத்துவது போன்ற வலி எனக்குள் ஏற்பட்டது. வீட்டுக்கு சென்றதும். அந்த காட்சியில், சிவாஜி நடித்தது போல, கண்ணாடி முன் நின்று நடித்துப் பார்த்தேன். அவர் செய்ததில், ஒரு சதவீதம் கூட செய்ய என்னால் முடியவில்லை...' என்றார் விஜய் அரோரா.

— தொடரும்.
எஸ்.ரஜத்

geno
31st December 2013, 10:57 AM
சிவாஜிக்கு பெயர் சூட்டியவரும், காமராஜரை முதல்வராக ஆக்கிய சூழ்நிலையை உருவாக்கியவருமான பெரியாரைப் பற்றி காங்கிரஸ் பெருங்காய டப்பாக்கள் ஒன்றும் சொல்வதில்லை என்பதும் தெரிந்ததே!

அது கிடக்கட்டும், கடைசியில் "என் தமிழ் என் மக்கள்" என்று தமிழ்த்தேசியராக தன் அரசியல் வாழ்வை முடித்துக் கொண்டார் சிவாஜி. ஆனால் இங்கே எழுதுவோரெல்லாம் ஆஷாடபூதிகள் போலவும் உருத்திராட்ச பூனைகள் போலவும் "தேசியமும் தெய்வீகமும்" பற்றியே பேசுவது நெருப்புக் கோழித்தனமா இல்லையா?!

சிவாஜி 1974-75-இல் காமராஜரை கைது செய்ய இந்திரா உத்தரவிடுமளவு போனபோது என்ன நிலைப்பாடு எடுத்தார்-எவ்வாறு செயலாற்றினார் எனச் சொல்வதற்கு வரலாற்றுக் குறிப்புகள் உள்ளதா????

எமர்ஜென்சியின் போது சிவாஜியின் நிலைப்பாடு என்ன?


This relevant, in-context, question about Sivaji's political stance would not be answered by Sivaji Fans?!

joe
31st December 2013, 11:36 AM
This relevant, in-context, question about Sivaji's political stance would not be answered by Sivaji Fans?!

Do I need to answer question about Sivaji's political stance to be a Sivaji fan ? Sorry .I don't think so . One can be a sivaji fan for his sheer greatness in his art , nothing more .
Btw , Aren't you a sivaji fan ?

parthasarathy
31st December 2013, 11:47 AM
Dear Friends:

Wishing you all a very Happy New Year!

I hope three from (in) the New Year, as a True Sivaji Fan.

One - to hope and pray that the Statue of NT remains untouched.

Two - not to discuss about politics here (except when required). Of course, Murali is there is take on mudslingers.

Three - all Stalwarts to return to this thread to continue and glorify NT. Towards this endeavour, there should not be bias in choosing films from "Parasakthi" to "Poo Parikka Varugirom" as his stamp of greatness has been indelible in all his films. Let us take a pledge not to mudsling our own idol in this very thread even for a smallest reason.

Regards,

R. Parthasarathy

HARISH2619
31st December 2013, 02:07 PM
இளைய திலகம் பிரபு அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நடிகர்திலகத்தின் அன்புள்ளங்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

2012 ம் ஆண்டு கர்ணன் ஆண்டாக அமைந்ததைபோல 2014ம் ஆண்டு கட்டபொம்மன் ஆண்டாக அமைய வேண்டும் என்பதே அணைத்து சிவாஜி ரசிகர்களின் விருப்பம்

KCSHEKAR
31st December 2013, 02:34 PM
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு-2014 நல்வாழ்த்துக்கள்.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=VvffL2njuCc

adiram
31st December 2013, 07:16 PM
"நடிகர்திலகத்தின் சிலை அகற்றப்பட வேண்டியதில்லை, அங்கேயே நிலையாக இருக்கலாம்" என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைக்கும் நாள்தான் எங்களுக்கு புத்தாண்டு கொண்டாட்ட நாள்.

அதுவரை எங்களுக்கு புத்தாண்டும் இல்லை, கொண்டாட்டமும் இல்லை.

Subramaniam Ramajayam
31st December 2013, 11:04 PM
Dear Friends:

Wishing you all a very Happy New Year!

I hope three from (in) the New Year, as a True Sivaji Fan.

One - to hope and pray that the Statue of NT remains untouched.

Two - not to discuss about politics here (except when required). Of course, Murali is there is take on mudslingers.

Three - all Stalwarts to return to this thread to continue and glorify NT. Towards this endeavour, there should not be bias in choosing films from "Parasakthi" to "Poo Parikka Varugirom" as his stamp of greatness has been indelible in all his films. Let us take a pledge not to mudsling our own idol in this very thread even for a smallest reason.

Regards,

R. Parthasarathy parthasarathy sir Very good piece of notes at this crucial time when all of us are little tired about the NT STATUE case and other things.
LET US HOPE AND PRAY THE NEW YEAR 2014 WILL BRING BACK ALL THE STAMINA LOST.
NEW YEAR GREETINGS TO ALL OUR HUBBERS MODERATORS AND EVERYONE.

venkkiram
1st January 2014, 05:47 AM
நல்லோர்கள் வாழ்வைக் காக்க
நமக்காக நம்மைக் காக்க
Happy New Year 2014!

http://www.youtube.com/watch?v=VvffL2njuCc

joe
1st January 2014, 09:53 AM
நடிகர் திலகத்தின் ரசிகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

tacinema
1st January 2014, 10:39 AM
Wish all NT fans a very happy, safe and prosperous new year.