View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 12
Pages :
1
2
3
4
5
6
7
8
9
10
11
[
12]
13
14
15
16
17
sivaa
10th May 2014, 05:18 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image42_zps9c85e4bd.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image42_zps9c85e4bd.jpg.html)
சாதனை! சாதனை!! சாதனை!!!
பாபு.............கொழும்பு..........ஸெயின்ஸ்தான்... ........112...நாட்கள்
பாபு.............யாழ்நகர்............ராஜா......... ....................105...நாட்கள்
................................
நீரும் நெருப்பும்.............கொழும்பு..........ஸெயின்ஸ்த ான்...........82...நாட்கள்
நீரும் நெருப்பும்ட.............யாழ்நகர்............ராஜா.. ...........................63...நாட்கள்
இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் பாபு தான் டாப்பு
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image41_zps2a388104.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image41_zps2a388104.jpg.html)
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image43_zpse6af351b.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image43_zpse6af351b.jpg.html)
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image44_zps37a2db0c.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image44_zps37a2db0c.jpg.html)
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image45_zpsdf2ba2c0.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image45_zpsdf2ba2c0.jpg.html)
sivaa
10th May 2014, 05:58 AM
தேவி பாரடைஸ் திரையரங்கில் 1971இல் வெளிவந்த திரைபடத்தின் 51 நாள் வசூலை நம் நடிக பேரரசின் ராஜா திரைப்படம் 50 நாளில் சுமார் 21,000 அதிகம் பெற்று ராஜ நடை போட்டது ! ஆவணங்களை எடுத்து சொன்ன தகவல் சரியாய் இருக்கிறதா என்று பார்த்துகொள்ளலாம் சந்தேகம் இருந்தால் !
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Raja-Dinathanthi190372-Collection50days_zps49b22d3b.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Raja-Dinathanthi190372-Collection50days_zps49b22d3b.jpg.html)
இப்படியான வசூலுடன்கூடிய வேறு படங்களின்
விளம்பர கட்டிங்குகள் இருந்தால் அனைவரும்
இங்கே பதிவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்
sivaa
10th May 2014, 06:57 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image48_zpscd264a6a.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image48_zpscd264a6a.jpg.html)
sivaa
10th May 2014, 06:58 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image54_zpse91b13a6.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image54_zpse91b13a6.jpg.html)
sivaa
10th May 2014, 06:59 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image49_zps702e91f9.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image49_zps702e91f9.jpg.html)
sivaa
10th May 2014, 06:59 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image47_zps2c216396.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image47_zps2c216396.jpg.html)
sivaa
10th May 2014, 07:00 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image50_zpsbfaf9abe.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image50_zpsbfaf9abe.jpg.html)
sivaa
10th May 2014, 07:01 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image52_zps8fd0ce7a.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image52_zps8fd0ce7a.jpg.html)
sivaa
10th May 2014, 07:02 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image51_zps472bbfd1.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image51_zps472bbfd1.jpg.html)
sivaa
10th May 2014, 07:03 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image46_zps399241e1.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image46_zps399241e1.jpg.html)
adiram
10th May 2014, 10:25 AM
Sivaa sir,
Excellent, wonderful evidences. many many thanks.
This is the first time I see 'Thiyagam' silver jubilee advertisement at Madurai Chintamani.
More and more please.
Gopal.s
10th May 2014, 10:38 AM
16/05/2014 அன்று 55 வயது பூர்த்தி செய்யும் தமிழர்களின் பெருமை .உலக அளவில் தமிழர்களை கொண்டு சேர்த்த பெரும் பெருமை. மிக அதிக திரையரங்களில் 100 நாட்கள் (13 இல் 97 நாட்கள் மரகதம் பட வெளியீட்டால்)கண்டது.(30 க்கும் அதிகமான )
வீர பாண்டிய கட்ட பொம்மன் -1959
என்னதான் நடிகர்திலகம் Strasberg/Stanislavsky method Acting செய்தாலும்,Meisner பாணியில் நடித்தாலும் ,நிறைய நல்ல படங்கள் கொடுத்து பெரும் பாராட்டுதல்களை பெற்றாலும் , என் கருத்தில் நடிகர்திலகம் நடித்த Chekhov பாணி படங்கள்,Oscar Wilde /Stella Adler /Shakespere school படங்களே அவரை உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று நம்மை ஓங்கி சொல்ல வைக்கிறது. ஏனென்றால் பிற இந்திய நடிகர்கள் method Acting பாணியில் நடித்து அவருடைய நடிப்பில் ஒரு 60% தொட முடிந்துள்ளது. ஆனால் அவருடைய மற்ற பாணி நடிப்பில் 5% கூட தொட யாருக்கும் தகுதியில்லை என்று தைரியமாக கூற முடியும். அவரால் மட்டுமே முடியும் என்று சொல்ல கூடியவை. ஒரு சோகம் என்னவென்றால்,இந்த வேறு பட்ட பள்ளிகள் சார்ந்த நடிப்பை ரசிக்க ரசிகன் நன்கு தயார் படுத்த பட வேண்டும் ரசனையில். இந்த காலமே ,நடிப்பின் எல்லைகளை சுருக்கி ,ரசிகனின் ரசனை எல்லையை சுருக்கி ,அவர்களுக்கு பல விஷயங்களில் பரிச்சயம் இல்லாமல் செய்து ,நேரமும் இல்லாத நிலையில் மற்றவற்றை உதாசீன படுத்த வைக்கிறது.(what ever I dont know doesn't have right to exist ) என்ற மோசமான நடத்தைக்கு பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,நட்பு வட்டம் எல்லாமே காரணியாகி விடுகிறது. ஆனால் உன்னதமான ஒன்றை சரியான படி marketing செய்தால் விழுந்து விழுந்து ரசிப்பார்கள் என்பதற்கு கர்ணன் படத்தின் ஒப்பில்லா இமாலய வெற்றி ஒரு சான்று.
Larger than life என்பது சராசரி மனிதனை விட மேற் தரத்தில் உள்ள (பணம்,பதவி,நோக்கம்,புகழ்,தலைமை,போராட்ட குணம் ,இறை நிலை ) மக்களை பேசும் வலுவான நோக்கம் கொண்ட ,அதீத உணர்ச்சிகள்,போராட்ட நிலை உள்ளதாகவே அமையும். மேற்தர மனிதர்களின் பிரச்சினையும் அதற்குரிய பிரம்மாண்டம் கொண்டே அமைவது தவிர்க்க இயலாதது. இன்றைய காலத்தில் ஒரு NRI குழந்தை,ஒரு அரசாங்க மேற்பணியானர்,தலைவர்,அமைச்சர், புகழ் பெற்ற மருத்துவர் இவர்களை பார்த்தாலே இவர்களின் பொது நடத்தை விந்தையாகவே தெரியும். முற்காலங்களில் அரசர், பிரபுக்கள் ,மதகுருமார்கள் இவர்கள் சராசரி மனிதர்களிலிருந்து வேறு பட்ட உடை, தலை அலங்காரம் (கொம்பா முளைச்சிருக்கு.இல்லை கிரீடம் )நடை,பேச்சு தோரணை, பெரிய பொறுப்பு அதற்குரிய பெரும் பிரச்சினைகள் என்று வேறு பட்டே வாழ்ந்தவர்களை ,நிறைய இக்கால மேதாவிகள் சொல்வது போல் soft contemporary முறையில் நடிப்பது அபத்தத்திலும் அபத்தம்.
உதாரணத்திற்கு வீர பாண்டிய கட்டபொம்மன் படம் ஒரு Epic தன்மை கொண்ட folklore .மக்களுக்கு அதை பற்றி ஒரு பிரம்மாண்ட image இருக்கும். இங்கு சரித்திரம் புறம் தள்ள பட்டே ஆக வேண்டும். (சரித்திர கட்டமைப்பில் எவ்வளவு சதவிகிதம் உண்மை என்பதே கேள்வி குறி. எல்லோரை பற்றியும் தேவையான சரித்திர குறிப்புகளும் இல்லை.)இந்த நிலையில் Costume Drama என்ற வகை பட்ட பிரம்மாண்ட படத்திற்கு ஒரு உன்னத நடிகரின் கற்பனை சார்ந்த , உயிரிலும் உணர்விலும் அந்த நடிகன் கனவு கண்ட ஒரு பாத்திரத்தை ,கட்டபொம்மன் எப்படி இருந்திருக்க வேண்டும் என்ற எல்லோருடைய fantasy ஐயும் பூர்த்தி செய்வதாகத் தானே அமைய வேண்டும்? அப்படித்தான் அமைந்தது. அதை மொழிக்கு அவசியம் இன்றி உலகமே வியந்தது. எந்த காலத்திலும் எந்த கலைஞனும் அதில் ஒரு நுனியை கூட தீண்ட முடியாது
கட்டபொம்மன் ஒவ்வொரு தமிழனின் பூஜா பலன். உச்ச அதிர்ஷ்டம். மேற்கு மக்களுக்கு ஒரு ten commandments ,ஒரு lawrence of Arabia போல கீழை மக்களின் சுதந்திர போராட்ட சரிதம். நிகழ்வுகள் ஓரளவு சரித்திரத்தை ஒட்டியவை ஆனாலும் நம் மக்களின் ரசனையை ஒட்டி அழகு படுத்த பட்ட பிரம்மாண்ட சரித்திரம். கட்டபொம்மனின் சரித்திரம் ,அவன் சுதந்திர காற்றுக்காக ஏங்கி , சிறுமையும் மடமையும் கொண்ட அடிமை கூட்டத்தில் தனித்தியங்கி வீரம் காட்டிய முன்னோடி. இந்த ஒரு அம்சம் போதும் அவனை நடையில்,உடையில்,அந்தஸ்தில்,பேச்சில் மக்களின் எதிர்பார்ப்புகேற்ப தமிழ் புலவர்களின் சங்க கால கவிதை தொடர்ச்சியாக காட்சியமைப்பில், வசனத்தில்,உயரிய நடிப்பில், தமிழகத்துக்கே பிரம்மன் வடித்த தந்த உன்னத நடமாடும் சிற்பத்தால் உரிய உன்னதம் கொடுக்க பட்டு, சிற்றரசன் என்று கீழ் நிலை விமர்சகர்கள் இகழ்ந்தாலும் பெரிய நோக்கம் கொண்ட உயரிய மனிதன், மகாராஜாவாக ஆக்க பட்டான். நிலத்தின் அளவை பொருத்தல்ல ,மனத்தின் திண்மையின் அளவு.கொண்ட நோக்கத்தின் அளவு.
கட்டபொம்மனின் 1791 முதல் 1799 வரை ஆன கால கட்டமே இந்த படத்தின் காலகட்டம்.ஆற்காடு நவாப் வாங்கிய கடனுக்கு கும்பனியிடம் தனக்குட்பட்ட பாளய சிற்றரசர்களிடம் இருந்து வரி வசூல் உரிமையை கொடுப்பதில் இருந்து கட்டபொம்மன் அதை மறுத்து எதிர் வினை புரிந்தது, வெள்ளையர்கள் மற்றோரை தன் வசப்படுத்தி அடிமையாக்கி கட்டபொம்மனை தனிமை படுத்தி ,அவனுடன் போர் செய்து ,தப்பியோடிய அவனை பிடித்து தூக்கிலிடுவது படத்தின் காலகட்டம். கட்டபொம்மனின் வயதுதான் நடிகர்திலகத்தின் அன்றைய வயது. ஏறக்குறைய முப்பது. கட்டபொம்மனின் நிறம்தான் நடிகர்திலகத்தின் நிறம். அப்பப்பா இந்த படத்தில் அவர் இயல்பான நிறம் காட்ட பட்டதில்,ஒப்பனையாளர் பாதி சாதனை புரிந்து விட்டார்.
கட்டபொம்மனின் உயரம்? அவன் உயரம் அத்தனை சமகால பாளய சிற்றரசர்களின் உயரம்,ஆற்காடு நவாப் உயரம், அனைத்துக்கும் மேலல்லவா? அந்த உயரமும் கிடைத்து விட்டது ஒரு நடிக மேதை தன் நடிப்பால் மட்டுமே தன் உயரத்தை மேலும் ஓரடி கூட்டி கொண்ட அதிசயம் .அதை நாம் மட்டுமே வியக்கவில்லை ,உலகமும் நாசரும் (எகிப்து அதிபர்)கூடவியந்தனர். தானே தேடி வந்து நடிகர்திலகத்தை பார்த்த நாசர் ,இவரா(?) ,படத்தில் ஆறடிக்கு மேல் தெரிந்தாரே ,என்று மூக்கில் விரலை வைத்தார்.
இப்போது சொல்லுங்கள் கட்டபொம்மன் அதிர்ஷ்டம் செய்தவரா இல்லை ஒவ்வொரு தமிழனுமா என்று?actors should never feel small என்று சொன்ன Stella Adler கூட இப்படி ஒரு ஏகலைவனை அடைய கொடுத்த வைத்தவர்தானே?
தமிழனுக்கு தமிழை எழுத கற்று கொடுத்தவர்கள் வள்ளுவர் முதல் பாரதி வரை ஏராளம். ஆனால் தமிழை அதன் அழகுடன், அர்த்தத்துடன் பேச தமிழனுக்கு கற்று கொடுத்த ஒரே மேதை நடிகர்திலகம் அல்லவா?அதுதானே பலரை கவர்ந்து தமிழை பாமரர் முதல் பண்டிதர் வரை பள்ளி மாணவரில் இருந்து பல் போன முதியவர் வரை தமிழ் மீது ஆர்வத்தை தூண்டி புலவர் எழுத்துக்கும் பாமரர் மனதுக்கும் தொடர்பு கண்ணியானது? எனக்கு முதல் பரிச்சயம் கட்டபொம்மனுடன் ஒலிச்சித்திரம் (soundtrack ) மூலமே ஏற்பட்டது.பிறகு வசன புத்தகத்தை வாங்கி வசனங்களை மனனம் செய்தேன். அவரை போல் பேச முயன்றேன்.
listen only to soundtrack and you will realise the timbre ,modulation ,tonal clarity ,subtle and quick flow of variation in octave levels that plucks every known &buried emotional suggestions from the dialogue with its rhythm and beauty(He lived in his voice) .அவருடைய ஆண்மையான குரலில் வசனத்தின் ஒவ்வொரூ எழுத்தும் சொல்லும் அவரின் பாவம், ஏற்ற இறக்கம், தெளிவு, கவிதையின் அழகு,முக பாவத்திற்கேற்ற கை கால் உடல் அசைவுகளுக்கேற்ப மெல்லிய துல்லிய குரல் மாற்றங்கள், நம்மில் அந்த பாத்திரத்தை அதன் உணர்வை மனகண்ணில் காட்டி விடும் வலிமை கொண்டது.
நான் இந்த குரலுக்கு அடிமையாகி ஐந்து வருடங்கள் கழித்தே படத்தை வெள்ளித்திரையில் கண்டேன்.ஆனால் சமீபத்தில் எனக்கொரு சந்தேகம். நாம் முதலில் வசனம்,பிறகு படத்தோடு வசனம் மகிழ்ந்து அதில் திளைக்கிறோம். ஆனால் உலக அங்கீகாரம் பெற்ற இந்த படத்தில், அந்நிய நாட்டை,மொழியை சார்ந்தவர்களை ,இந்த வசனங்களின் முழு பொருளும் அருமையும் தெரியாமலே அடிமை ஆக்கி ஆசிய ஆப்பிரிக்காவின் சிறந்த நடிகராக அங்கீகரிக்க வைத்ததே? எப்படி?
எனக்கு முதல் அதிசயமே அந்த நடையும், கைகளை,விரல்களை அவர் பயன் படுத்தும் விதமும். நான் ஏற்கெனவே கூறிய படி நிறைய hollywood மற்றும் உலக நடிகர்கள் ,அந்த பாத்திர குணங்களை establish செய்ய ,விலங்குகளின் நடை, குணங்கள் இவற்றிலிருந்து inspiration எடுத்து, சமயங்களில் imitate கூட செய்வார்கள். வால்மீகி ராமாயணத்தில் ,வால்மீகியும் ராமனின் நாலு வித நடைகளை குறிப்பிடுவார். சிங்க நடை தலைமை குணத்தை குறிப்பது. புலி நடை சீற்றத்தையும் கோபத்தையும் குறிப்பது.யானை நடை பெருமிதத்தை குறிப்பது.எருது நடை அகந்தை,அலட்சியம் இவற்றை குறிப்பது.
இந்த படத்தை நான் பார்த்த போது ,அதிசயித்த விஷயம் வால்மீகியை படிக்காமல் நடிகர்திலகம் இவற்றை உணர்ந்த விதம்.
அவையிலும், நகர்வலம் செல்லும் போதும், மந்திரி மற்றும் நண்பர்களுடன் இருக்கும் நடை ஒரு சிம்மத்தின் தலைமை குணத்தை குறிக்கும் நடை.ஜாக்சன் தன்னை அவமதித்து கோபப் படுத்தும் போது ஒரு புலியின் சீற்றம் நடையில் தெரியும்.ஜக்கம்மாவிடம் போருக்கு விடை பெரும் போது ஒரு யானையின் பெருமிதம் தொனிக்கும்.கடைசியில் பானர்மன் தூக்கு தண்டனை விதித்ததும் தூக்கு மேடையை நோக்கி நடக்கும் கால்களில் ஒரு எருதின் அலட்சியம் தெறிக்கும்.
ஒரு சராசரி நடிகனுக்கும், ஒரு மகா நடிகனுக்கும் உள்ள வேறுபாடு காலுக்கும், உடல் மொழிக்கும் ஏற்றவாறு கைகளை பயன் படுத்தும் முறை. ஜாக்சனுடன் ஆரம்ப பேச்சில் கைகளை சிறிது ஒடுக்கி கட்டுபடுத்துவார். எண்ணிக்கை தெரியாத குற்றம் என்னும் போது விரல்கள் எண்ணிக்கையோடு அசையும். போர் விடை பெரும் காட்சியில் வலது கை புறம் காட்டி இடது புற உரையில் கத்தியை சடாரென்று மணிக்கட்டை மட்டும் பயன் படுத்தி தள்ளும் தன்னம்பிக்கை நிறைந்த style .
வீரபாண்டிய கட்டபொம்மனில் இன்னொரு அம்சத்தை நீங்கள் கவனித்தே ஆக வேண்டும். நான் குறிப்பிட்ட ten commandments ,Benhur ,Lawrence of Arabia போன்று multi -agenda கொண்ட வலுவான கதையம்சம்,உணர்ச்சி குவியல்கள்,பல்வேறு வலுவான பாத்திரங்கள் கொண்டதல்ல கட்டபொம்மன். 1791-1799 வரையான வெள்ளையர்களுடன் கருத்து வேறுபாடு,மோதல்,சக சிற்றரசர்களின் துரோகம் ,ஒன்றிரண்டு confrontation ,சமமற்ற போர் ,பிடிபட்ட பிறகு தூக்கு என்று ஒரே பாத்திரத்தை மட்டுமே நம்பிய ஒற்றை agenda கொண்ட படம். நான்கே முக்கிய காட்சிகள். ஜாக்சன் துரை யுடன் வாக்குவாதம்,தானாபதி பிள்ளை சம்பத்த பட்ட காட்சி,தப்பி சென்ற கால காட்சிகள், இறுதி தூக்கு மேடை காட்சி இவ்வளவுதான் முக்கியம். மற்றதெல்லாம் நிரவல். Hyper Rhetoric என்று ஒற்றை அம்ச படம்.
ஒரு Artist Portfolio Repertoire என்ற ஒரே விஷயத்துக்கு மட்டுமே இவ்வகை படங்கள் தகுதி கொண்டது.
மேற்கூறிய அம்சத்தை கட்டபொம்மனில் நீங்கள் கவனிக்க கூட முடியாமல் ஒரு cult படமாக,தமிழின் பிரம்மாண்ட படமாக உங்களை இன்று வரை அசை போட வைத்தது இரண்டே அம்சங்கள். நடிகர்திலகம், மற்றும் தயாரிப்பில் பிரம்மாண்டம்.
இப்படத்தின் வெற்றி ஏற்கெனவே தீர்மானிக்க பட்டது என்று பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். நடிகர்திலகம் இந்த பாத்திரத்தில் நடிக்க படம் தயாரிக்க படுகிறது என்றதுமே ,எல்லாமே முன்முடிவு செய்ய பட்ட ஒன்றாகி விட்டது.
Gopal.s
10th May 2014, 10:54 AM
வீர பாண்டிய கட்ட பொம்மன் -1959
நடிப்பு மற்றும் complexity in character என்று பார்த்தால் ,மிக ஆராய்ந்தால் VPKB நிச்சயமாக அவருடைய Top 10 இல் வர முடியாது. ஆனால் நீங்கள் என்னிடமோ ,அல்லது யாரிடம் கேட்டாலும் இந்த படம் ஒரு பரவச அனுபவம், mesmerism முறையில் கட்டுண்டது போல ஒரு மயக்க ட்ரான்ஸ் நிலை. மற்ற படங்களை பற்றி வேறாக சொல்வோர் சிலர் இருக்க முடியும். ஆனால் VPKB பற்றி கேட்டால் ,அது எந்த தமிழனாக இருந்தாலும் சொல்லுவது ஒரே பதில். நான் சொன்ன மாதிரி single agenda நேர்கோட்டில், hyper ஒரு முகப்பட்ட உணர்ச்சி நிலை, ஒரே நோக்கம், ஒரே மையம் என்று போகும் இந்த படம் எப்படி இதனை சாதிக்க இயலும்?நான் பார்க்கும் போது என் முன்னோர்களுக்கு இருந்த folklore epic image கிடையாதே?அடுத்த தலைமுறையும் இந்த படத்தை சிலாகிக்கிறதே ,எப்படி சாத்தியமானது?எந்த மந்திரம் அதனை சாதித்தது?
நடிகர்திலகம் Focusreach முறையில் நம் ஆத்மாவுக்குள் நுழைந்து சாதித்த அதிசயம்.
தன் ஆத்மாவுக்குள் அந்த வீரனை நுழைத்து அவர் சாமியாடியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.Hysteric delirium which mesmerises the audience with psychedelic trip .
இந்த படம் நடிகர்திலகத்தின் focusreach கொண்டே cult status அடைந்து ,எந்த கலைஞனை கேட்டாலும் இந்த பட காட்சியை நடித்ததே தன் முதல் audition என்று சொல்ல வைத்த அதிசயம்.இதை விரிவாக பார்ப்போம்.
1)Focusreach முறையின் முக்கியம் அதீத energy level . சக்தியின் உக்கிர வெளிப்பாடு.உடலின் சோர்வு,பசி,துன்பத்தை கருதாது நோக்கத்தை நோக்கி செல்லும் அதீத வெளியீடு.இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும், இதுதான் உச்ச சக்தி என்று நாம் கருதும் போது அடுத்தது அதனை மிஞ்சி உச்ச காட்சியில் இமயத்துக்கு மேலும் செல்லும்.
2)அதுவரை நிகழ்ந்த அனைத்தையும் விட மேல் தளத்தில் விரிந்து நாயகனை superhero ஆக உணர்த்தும் விந்தை. இதை செயல்களின் துணையின்றி உணர்ச்சி வெளிப்பாட்டு சக்தியிலேயே சாதித்து ,நமக்கு மேலே அவர் என்று உணர வைத்த விந்தை. நாசரே இவர் உயரம் பல அடிகள் மேலே என்று நினைக்க வைத்த சாதனை.அனைத்து தரப்பினரையும்,வயதினரையும் ,தன் கீழ் பட்டவர்களாக படம் பார்க்கும் போது உணர வைத்த சாதனை.
3)focus focus focus reach a peak ,move to other peaks என்ற முறையில் நடிப்பின் உணர்ச்சி வரைபடத்தில்(Emotional intensity mapping) சிகரம் தொட்டு தொட்டு மேற்செல்லும் முறை.
4)மெய் வருத்தம் பாராத,தன்னை வருத்திய ஒரு முக சிந்தனை வெளிப்பாடு.
(ரத்தமெல்லாம் கக்கி துடைத்து கொண்டு தொடர்வாராம்)
5)வித விதமான வேறு பட்ட முயற்சி,சிந்தனை அதன் வழி செயல் பாடுகள்.
6)சரி- தவறு என்ற ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டு ,தான் செய்வதே மிக சரி என்று அனைவரையும் உணர வைக்கும் சக்தி. எடுத்த நோக்கமும் உன்னதமானதாக இருந்ததால் double impact .
7) Adrenalin Rushes with High Stress levels . இந்த படம் எடுத்து கொண்ட காலகட்டமே stress level கட்டபொம்மனுக்கும் மேலாக இருந்தது. சிவாஜியின் Type A personality கொண்ட வெளியீட்டு முறை ,பார்க்கும் நமக்கும் வாளெடுத்து போர் புரிய வைக்கும் அளவு நரம்புகளை முறுக்கேற்றும்.வசனங்களும் அற்புதமாக இதற்கு இசையும்.
8)அவர் மட்டுமே அந்த கணத்தில் முக்கியமானவர் என்று அந்த இருட்டின் கணங்களில் கட்டி வைக்கும் ஈர்ப்பு.
எனக்கு தெரிந்த அளவில் இந்த focusreach அதிசயம் ,இந்த படத்தில் நடிப்பினால் அமைந்த அதிசயம் எந்த இந்திய படத்துக்கும் அதற்கு முன்போ பின்போ நடந்ததே இல்லை.
வீரபாண்டிய கட்டபொம்மனில் என்னை மிக மிக கவர்ந்தது அவர் வீரத்தை மட்டுமே காட்டாமல் எதிரி தன்னை மீறியவன் என்றுணர்ந்து விவேகம் காட்டுவார். மானத்தை துறக்காமல் சமாதான வாசல்களை திறந்தே வைப்பார். ஜாக்சன் துரை தன்னை அவமதித்து அலைக்கழித்த போதும் ,பொங்கி வரும் கோபம் அடக்கி முடிந்த அளவு பொறுமை காப்பார் .நட்பு நாடி வந்ததை குறிப்பார். பிறகு தானாபதி பிள்ளை தப்பி வந்து இன்னொரு சமாதான முயற்சி குறித்து பேச,பொங்கியெழும் ஆலோசனை குழுவை அணைத்து பேசி, சமாதானத்தை யோசிப்பதில் தவறில்லை என்று மெல்லிய தொனியில் வலிக்காமல் சொல்லுவார். தானாபதி பிள்ளை நெற்களஞ்சியத்தை கொள்ளையிட்டு பாண்டி தேவரையும் கொலை செய்து விட்டது சமாதான கதவுகளை நிரந்தரமாக மூடி விட்டதறிந்து கொதிப்பார். பிறகு வேறு வழியின்றி வருவது வரட்டும் என்று தன் மந்திரியை காத்து ,போருக்கு மனதளவில் தயாராவார். இதில் அவர் மேலுக்கு இலகுவாக இருப்பதாய் வரும் சில காட்சிகளில் கூட சிங்கார கண்ணே, மனைவி, வெள்ளையத்தேவன் கல்யாணம்,குழந்தையுடன் பேசுவது எல்லா சந்தர்ப்பங்களிலும் ,ஒரு கவலை கலந்த சிந்தனை ரேகை (stress )அவர் முக குறிப்பில் தோன்றிய படியே இருக்கும்.போருக்கு தயாராகும் காட்சியில் கூட ஒரு வீரனாக தயாரானால் கூட எதிரி தன்னை மீறிய சக்தி படைத்தவன் , வாய்ப்பு குறைவுதான் என்ற அவநம்பிக்கை கலப்பு நன்றாக அவர் குறிப்பில் தொனிக்கும்.
மிக சிறந்த காட்சிகள் எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஜாக்சன் சந்திப்பு, தானாபதி பிள்ளை தவறிழைக்கும் காட்சி,பிடி படும் காட்சி,இறுதி பானர்மென் விசாரணை தூக்கு காட்சி ஆகியவை .
ஜாக்சன் பேட்டிக்கு உள்ளே வரும் போதே எச்சரிக்கையுடன் அக்கம் பக்கம் பார்த்து நுழைவது, நாற்காலி இல்லாததால் சுற்று முற்றும் பார்த்து பேட்டியில்லை, அவமதிப்பே என்றுணர்ந்தாலும், நாற்காலி பறிப்பதுடன் தன் தாழா நிலையை குறிப்புணர்த்தி , பிறகு சற்றே ஆசுவாசம் கொள்வார் ,கை கால்களில் படபடப்பு கோபம் தெரிய ,சிறிதே தணிவார் .ஆனால் பேச்சு குற்றம் சாட்டும் தொனியில் ஆரம்பிக்க பொறுமை மீறி ,படபடப்புடன் எதிர்ப்பை அதிக படுத்தி கொண்டே போவார்.
என்னுடைய ஆதர்ஷ காட்சி ,தானாபதி பிள்ளை நெல்லை கொள்ளையிட்டதால் ,அவரை ஒப்படைக்க சொல்லி தூதன் ஓலையுடன் வரும் காட்சி. முகபாவம்,உடல் மொழி, அசைவுகள்,வசன முறை எல்லாவற்றிலும் உச்சம் தொடும் அதிசய காட்சி.குற்றச்சாட்டின் வலிமை அறிந்து ,அதன் தன்மையை மந்திரி உணர்கிறாரா என்று ஆழம் பார்ப்பதும், தன் பதவிக்குரிய விவேகமில்லாமல் பேசும் மந்திரியின் பேச்சினால் நிலை குலைந்து, தன் சுற்றி இருப்பவரிடம் தான்தான் அரசன் என்று குறிக்கும் ஒரு அர்த்த புஷ்டியான ஒரு எச்சரிக்கை குறிப்பை காட்டி ,மந்திரியிடம் நீறு பூத்த நெருப்பாக வஞ்ச புகழ்ச்சியில் ஆரம்பித்து ,படி படியாய் நிலைமையின் தீவிரத்தை குற்றச்சாட்டை உணர்த்தும் பாங்கு இந்த காட்சியை உயரத்தில் வைக்கும்.பிறகு குழுவின் நலன் கருதி மந்திரியை காத்து விட்டாலும் வருவதை தடுக்க இயலாது என்ற விரக்தி கலந்த இயலாமையுடன் தூதரின் மேல் தேவை இல்லாமல் பாய்வார்.
தன்னை பிடிக்க ஆள் அனுப்பிய புது கோட்டை மன்னருக்கு இவர் சொல்லும் ராஜாதி ராஜ கட்டியம் ஒவ்வொரு செருப்படி போல தொனிக்கும். தன்னை காண விரும்பவில்லை என்றதும் கேலி,ஏமாற்றம் கலந்த எள்ளலுடன் சொல்லும் வாழ்க ,தூக்கு தண்டனைக்கு ஈடானது.
கடைசி காட்சி "Back to the wall resolution " என்ற catharsis ,venting out anger ரக காட்சி.இதிலே நான் கண்ட சக்தி எந்த படத்திலும் ,எந்த நடிகனிடமும் கண்டதில்லை. இழக்க ஒன்றுமில்லை என்ற நிலையில் , நிலையற்ற அந்நியனிடம் பணிந்த தன் சகாக்களிடம் ஈனமாக வெடிக்கும் கோபம் ,அந்நியனிடம் மூர்க்கம் கலந்த வன்மையான இயலாமை கலந்த வருவது வரட்டும் என்ற கோபம் என்று இவர் வெடிக்கும் காட்சி ஒரு dynamite நம் நாற்காலிக்கு கீழேயே வெடித்த உணர்வில் நாம் பிரமையுடன் வெளியேறுவோம்.
KCSHEKAR
10th May 2014, 11:58 AM
திரு. ஆரூர் தாஸ் அவர்கள் மிகவும் சிறந்த வசனகர்த்தா என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால தினத்தந்தியில் வரும் இந்தத் தொடரில் பல இடங்களில் தன்னுடைய பெருமையை நிலைநாட்டும் வகையிலேயே எழுதியிருக்கிறார். தினத்தந்தியின் இன்றைய பகுதியில் கூட, தெய்வமகனைப்பற்றிக் குறிப்பிடும்போது, ஒரு வசனக் காட்சியை நீளமாக இருக்கிறது என்று கூறி நடிகர்திலகம் பேச மறுத்ததாகவும், தான்தான் வற்புறுத்தி பேசவைத்ததாகவும் கூறியிருக்கிறார். 40 பக்க வசனமானாலும் நச்சென்று பேசும் நம் நடிகர்திலகம், நான்கு அடி வசனத்தைப் பேச மறுத்தார் என்பது நம்பக்கூடியதாக இல்லை. இதுபோல, பல தடவை அவர் சொல்லியிருப்பதால்தான் இதனைக் குறிப்பிடுகிறேன். பல கதாநாயகர்களுக்கு அவர் வசனம் எழுதியிருந்தாலும், குறிப்பாக, நடிகர்திலகம் அவர்களுடைய திரைப்படங்களால்தான் ஆரூர் தாஸ் என்பவரே வெளியுலகுக்குத் தெரியும் என்பதை அவரே மறுக்கமுடியாது. நடிகர்திலகம் வந்து மறுக்கப்போவதில்லை என்பதற்காக அவரைவிட தான் பெரியவன் என்ற போக்கில் ஆரூர் தாஸ் எழுதி வருவதை சுட்டிக்காட்டவேண்டும் என்று தோன்றியதால் இதனைப் பதிவிடுகிறேன்.
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/viewer_zps27906980.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/viewer_zps27906980.jpg.html)
adiram
10th May 2014, 12:01 PM
வீர பாண்டிய கட்ட பொம்மன் -1959
என்னுடைய ஆதர்ஷ காட்சி ,தானாபதி பிள்ளை நெல்லை கொள்ளையிட்டதால் ,அவரை ஒப்படைக்க சொல்லி தூதன் ஓலையுடன் வரும் காட்சி. முகபாவம்,உடல் மொழி, அசைவுகள்,வசன முறை எல்லாவற்றிலும் உச்சம் தொடும் அதிசய காட்சி.குற்றச்சாட்டின் வலிமை அறிந்து ,அதன் தன்மையை மந்திரி உணர்கிறாரா என்று ஆழம் பார்ப்பதும், தன் பதவிக்குரிய விவேகமில்லாமல் பேசும் மந்திரியின் பேச்சினால் நிலை குலைந்து, தன் சுற்றி இருப்பவரிடம் தான்தான் அரசன் என்று குறிக்கும் ஒரு அர்த்த புஷ்டியான ஒரு எச்சரிக்கை குறிப்பை காட்டி ,மந்திரியிடம் நீறு பூத்த நெருப்பாக வஞ்ச புகழ்ச்சியில் ஆரம்பித்து ,படி படியாய் நிலைமையின் தீவிரத்தை குற்றச்சாட்டை உணர்த்தும் பாங்கு இந்த காட்சியை உயரத்தில் வைக்கும்.பிறகு குழுவின் நலன் கருதி மந்திரியை காத்து விட்டாலும் வருவதை தடுக்க இயலாது என்ற விரக்தி கலந்த இயலாமையுடன் தூதரின் மேல் தேவை இல்லாமல் பாய்வார்.
Exactly,
This is the scene I too like much more than the scenes of 'vaanam pozhigiradhu' and 'uyirukku bayandhavrgale utkaarungal'.
Thanks Gopal sir for describing this scene with your wonderful nerration.
KCSHEKAR
10th May 2014, 12:14 PM
16/05/2014 அன்று 55 வயது பூர்த்தி செய்யும் தமிழர்களின் பெருமை .உலக அளவில் தமிழர்களை கொண்டு சேர்த்த பெரும் பெருமை. மிக அதிக திரையரங்களில் 100 நாட்கள் (13 இல் 97 நாட்கள் மரகதம் பட வெளியீட்டால்)கண்டது.(30 க்கும் அதிகமான )வீர பாண்டிய கட்ட பொம்மன் -1959
கட்டபொம்மன் - சிறப்பான பதிவு.
இப்படத்தின் வெற்றி ஏற்கெனவே தீர்மானிக்க பட்டது என்று பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். நடிகர்திலகம் இந்த பாத்திரத்தில் நடிக்க படம் தயாரிக்க படுகிறது என்றதுமே ,எல்லாமே முன்முடிவு செய்ய பட்ட ஒன்றாகி விட்டது.
டியர் கோபால் சார்,
கட்டபொம்மன் - ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வெற்றி என்று 1959 வெற்றியைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவ்வப்போது மறுவெளிவீடு செய்தபோதெல்லாம் வெற்றி பெற்றிருக்கிறது. இப்போது 2014 அல்லது 2015-ல் டிஜிட்டலில் மறு வெளியீடு செய்தாலும் அப்போதும் மாபெரும் வெற்றி பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
Gopal.s
10th May 2014, 12:58 PM
திரு. ஆரூர் தாஸ் அவர்கள் மிகவும் சிறந்த வசனகர்த்தா என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால தினத்தந்தியில் வரும் இந்தத் தொடரில் பல இடங்களில் தன்னுடைய பெருமையை நிலைநாட்டும் வகையிலேயே எழுதியிருக்கிறார். தினத்தந்தியின் இன்றைய பகுதியில் கூட, தெய்வமகனைப்பற்றிக் குறிப்பிடும்போது, ஒரு வசனக் காட்சியை நீளமாக இருக்கிறது என்று கூறி நடிகர்திலகம் பேச மறுத்ததாகவும், தான்தான் வற்புறுத்தி பேசவைத்ததாகவும் கூறியிருக்கிறார். 40 பக்க வசனமானாலும் நச்சென்று பேசும் நம் நடிகர்திலகம், நான்கு அடி வசனத்தைப் பேச மறுத்தார் என்பது நம்பக்கூடியதாக இல்லை. இதுபோல, பல தடவை அவர் சொல்லியிருப்பதால்தான் இதனைக் குறிப்பிடுகிறேன். பல கதாநாயகர்களுக்கு அவர் வசனம் எழுதியிருந்தாலும், குறிப்பாக, நடிகர்திலகம் அவர்களுடைய திரைப்படங்களால்தான் ஆரூர் தாஸ் என்பவரே வெளியுலகுக்குத் தெரியும் என்பதை அவரே மறுக்கமுடியாது. நடிகர்திலகம் வந்து மறுக்கப்போவதில்லை என்பதற்காக அவரைவிட தான் பெரியவன் என்ற போக்கில் ஆரூர் தாஸ் எழுதி வருவதை சுட்டிக்காட்டவேண்டும் என்று தோன்றியதால் இதனைப் பதிவிடுகிறேன்.
அவருடைய ஆற்றலுக்கு ஈடு கொடுக்கும் இயக்குனர்களோ,கதாசிரியர்களோ நம்மிடையே இல்லை.(தில்லானா தவிர) அவருடைய மிக சிறந்தவை பெங்காலி,கேரளா ,hollywood இலிருந்து வந்தவையே.
தெய்வ மகனை எடுத்தால் அவர் அந்த(kannan) பாத்திரத்தை execute செய்ததற்கும்,ஆரூர்தாஸ் வசனம் எழுதிய விதத்துக்கும் mis match இருக்கும். அதனாலேயே பாகம் இரண்டில் ,எல்லாவற்றையும் ஒதுக்கி அவர் நடிப்பு மட்டுமே ஆராய படும் என்று என்று மற்றவற்றை உறைநிலையில் வைத்தேன்.
eehaiupehazij
10th May 2014, 01:44 PM
தமிழனுக்கு தமிழை எழுத கற்று கொடுத்தவர்கள் வள்ளுவர் முதல் பாரதி வரை ஏராளம். ஆனால் தமிழை அதன் அழகுடன், அர்த்தத்துடன் பேச தமிழனுக்கு கற்று கொடுத்த ஒரே மேதை நடிகர்திலகம் அல்லவா?அதுதானே பலரை கவர்ந்து தமிழை பாமரர் முதல் பண்டிதர் வரை பள்ளி மாணவரில் இருந்து பல் போன முதியவர் வரை தமிழ் மீது ஆர்வத்தை தூண்டி புலவர் எழுத்துக்கும் பாமரர் மனதுக்கும் தொடர்பு ......
Gopal Sir. The greatest contributor to modulated tamizh pronunciation, is our NT. Paechchuth thamizh enbathu uchcham adaindhathu NT varugaikkup pinnare enbathai ullankai nellikkaniyaga eduththuraiththadharkku nandri. Enthralled with your schematic presentation on VPKB. Hats off sir.
Gopal.s
10th May 2014, 02:09 PM
என்னை கவர்ந்த நடிகர்திலகத்தின் நடன காட்சிகள்-
1952- 1960
தேசம் ஞானம் கல்வி(பராசக்தி), ஆணும் பெண்ணும்,சுந்தரி சௌந்தரி,குரங்கிலிருந்து,அபாய அறிவிப்பு,ஏறாத மலைதனிலே,(தூக்கு தூக்கி), விண்ணோடும் முகிலோடும்(புதையல்), சிவதாண்டவம்(ராணி லலிதாங்கி),யாரடி நீ மோகினி(உத்தம புத்திரன்), கனவின் மாயா லோகத்திலே(அன்னையின் ஆணை),காணா இன்பம்(சபாஷ் மீனா), கண்டேனே உன்னை கண்ணாலே(நான் சொல்லும் ரகசியம்),தேரோடும் எங்க சீரான மதுரையிலே(பாக பிரிவினை), கொடுத்து பார் பார் பார்(விடிவெள்ளி).
1961-1970
பறவைகள் பலவிதம்(இருவர் உள்ளம்),வந்தேனே (நவராத்திரி), பார்த்தா பசு மரம்(திருவிளையாடல்),ஓஹோஹோ little flower (நீலவானம்)டே க்கா கொடுக்கதப்பா,பத்து மாதம்(பேசும் தெய்வம்),அய்யய்யா, நான் பொறந்தது தஞ்சாவூரு(என் தம்பி), ஹாப்பி இன்று முதல் (ஊட்டி வரை உறவு),தங்க தேரோடும், போட்டாளே (லட்சுமி கல்யாணம்),ஏழு கடல்(எங்க ஊர் ராஜா), டான்ஸ் நிர்மலாவுடன் (தங்க சுரங்கம்),கோயில் டான்ஸ்(குரு தக்ஷிணை),அன்புள்ள நண்பரே,காதலிக்க கற்று கொள்ளுங்கள்(தெய்வ மகன்),ஆடல் காணலாம்(நிறை குடம்),என்னங்க (எங்க மாமா),சிரிப்பில்(எங்கிருந்தோ வந்தாள் ),பொன்மகள்(சொர்க்கம்).
1971-1980
தேரு பார்க்க(இரு துருவம்),பொட்டு வைத்த, ஒரு தரம் (சுமதி என் சுந்தரி),வரதப்பா(பாபு),கல்யாண பொண்ணு(ராஜா),அம்பிகையே,அடி என்னடி,கேட்டுகோடி (பட்டிக்காடா பட்டணமா), love is fine (தவ புதல்வன்), ஏன் ஏன் ஏன் ,குடிமகனே, ஆதி வாசி மழை டான்ஸ்(வசந்த மாளிகை),மாப்பிள்ளையே(நீதி), சிவதாண்டவம்(பொன் ஊஞ்சல்),மும் மும் மும் முத்தங்கள் (எங்கள் தங்க ராஜா), I will sing for you (மனிதரில் மாணிக்கம்), இனியவளே ,ஆடிக்கு பின்னே (சிவகாமியின் செல்வன்), நான் பார்த்தாலும் பார்த்தேனடி(தாய்),நல்லதொரு குடும்பம்(தங்க பதக்கம்),சோன் பப்பிடி(என் மகன்)கன்னங்கருத்த(Dr .சிவா),சிவகாமி ஆட,உலகம் நாம் ஆடும்,my song is for you (பாட்டும் பரதமும்),ராஜா யுவ ராஜா(தீபம்),கோவில் டான்ஸ்(தியாகம்), வேலாலே, ஆணாட்டம்,மௌனம் கலைகிறது(என்னை போல் ஒருவன்),என் ராஜாத்தி,காதல் ராணி(திரிசூலம்),பூ மொட்டு(யமனுக்கு யமன்),ஆடல் பாடலில்(வெற்றிக்கு ஒருவன்).
1981-1990
குற்றால அருவி(லாரி டிரைவர் ராஜா கண்ணு),ராத்திரி நிலாவில்(சந்திப்பு)
1991-2000
சின்ன சின்ன காதல் (once more ), தேவராட்டம்(என் ஆசை ராசாவே)
chinnakkannan
10th May 2014, 02:17 PM
சிரிப்பு பாதி அழுகை பாதி…
*
அத்தியாயம் ஏழு
*
“சரி.. ஹீரோயினுக்கு டயலாக்ஸ் இருக்கு..இதான் காட்சி..இப்படிப் பேசுவாங்கன்னு சொல்றீங்க.எல்லாம் ஓகே.. அப்ப நான் இந்தக் காட்சியில என்ன பண்ணனும்”
*
கேட்டவர் நடிகர் திலகம்..
*
“நீங்க ஒண்ணுமே பண்ணக்கூடாது அடக்கி வாசிக்கணும்..அப்பத் தான் அந்தம்மாவோட பாத்திரம், அப்புறம் இந்தக் காட்சி எடுபடும்..” சொன்னவர் டைரக்டர்..
*
ந.தி. மறுத்து எதுவும் பேசவில்லை.. நீங்கள் சொன்னால் சரி..அப்படியே செய்கிறேன்..
*
அப்படியே நடித்ததில் அந்தக் காட்சியும் பேசப்பட்டது.. வித்யாசமாய் ந.தியும் நடித்திருந்தார் எனவும் சொல்லப் பட்டது..(ஒய்.ஜி மகேந்திரனின் நான் சுவாசிக்கும் சிவாஜி கட்டுரையிலிருந்து)
*
அந்த டைரக்டர்.. எல்.வி பிரசாத்.. ராஜபார்வையில் தாத்தாவாக நடித்தவர்.. முன் சில படங்களில் நடித்திருந்தாலும் ரா.பா வில் தான் எனக்கு இவரைத்தெரியும்..
*
படம்.. இருவர் உள்ளம்..
*
சில மாதங்களுக்கு முன்னால் ஒரு நண்பர் என்னிடம் தொலைபேசிய போது- இருவர் உள்ளம் பற்றி எழுதலாம் என ஆசை என்ற போது –அவர் உணர்ச்சி வசப்பட்டார்..ஓ.. அந்தப் படம் எனக்கு ரொம்பப் பிடிக்குமே..என.அப்படிப் பலரைக் கவர்ந்த படம் அது
*
படத்தின் மற்ற டீடெய்ல்ஸ் பற்றி வேண்டுமென்றால் பக்கத்து வீட்டிற்குச் சென்று ராகவேந்திரா சாரின் கட்டுரை படிக்கலாம் ( நற நற..) ( நான் எழுதறதுக்கு முந்தி எழுதிட்டார்..)
*
ஹாஸ்யம், நடிப்பு, இனிமை நிறைந்த பாடல்கள், பரபரப்பான வசனம்(.கலைஞர் மு.க) , தொய்வில்லாத திரைக்கதை என்று இருக்கும் படத்தில் ந.தியின் சகோதரராக எம்.ஆர்.ராதா… கடைசியில் அவரது பழைய தோழியைக் கொல்பவராக டி.ஆர். ராமச்சந்திரன்..
*
அழகு சிரிக்கின்றது, நதி எங்கே போகிறது, பறவைகள் பலவிதம் என என்றும் பசுமையான கானங்களின் மத்தியில் ஒரு அழுகை பாடல் – அதுவும் ஸோ ஸ்வீட் தான்..
*
ஆசைப்பட்டுக் காதலித்து சந்தர்ப்ப சூழ் நிலையால் திருமணமும் புரிந்த அழகிய நங்கை வெறு வெறு என வெறுக்க என்ன செய்வது என்ற இயலாமைத்தவிப்பைத் தன்னுள் அடக்கி, அவளுக்குப் பிரியமானவனாக மாறுவதற்காகப்பாடு பட்டுக்கொண்டிருந்தால்…
*
என்ன ஆகிறது..ஒவ்வொரு முறையும் ஒரு தடங்கல்.. ந.தியால் என்ன செய்வது என்று புரியவில்லை..அப்படியும் ஒரு சந்தர்ப்பத்தில் தான் விரும்பிய மங்கை (சர்ரோஜாதேவி) தன்னைப் புரிந்து கொண்டு விட்டாள் என்பது தெரியாமல் மனம் நொந்து பாடும் பாடல் தான் அது..
*
கண்களில் உறைந்த கண்ணீர், உணர்வுகளில் துடிக்கும் சோகம், நன்றாகப் பாடிய பின்னணி டி.எம்.எஸ்ஸிற்கு ஏற்ப வாயசைப்பு என அசத்தியிருப்பார் ந.தி.. பாடல் ஏன் அழுதாய் ஏன் அழுதாய் என்னுயிரே ஏன் அழுதாய் நான் அழுதுஓய்ந்ததற்கு நன்றி சொல்லவோ..
*
அந்தப் பாடலில் உடல் நிலை சரியில்லாமல் அவரன்பை உணர்ந்துவிட்டதைச் சொல்லத் துடிக்கும் கன்னடத்துப் பைங்கிளியாக சரோஜாதேவியும் நன்கு செய்திருப்பார்..
*
எல்லாப் பாடல்களுமே அருமை.எம்.ஆர்.ராதா வித்யாசமான நகைச்சுவை.. ஆறு பிறந்தது போதுமென்று நான் ஆறு குளமெல்லாம்மூழ்கி வந்தேன் காசி ராமேஸ்வரம் சென்று வந்தேன் என அவர் பாட டி.பி. முத்து லட்சுமி – போதாது அய்யா போதாது உயிர்போனாலும் ஆசை போகாது எனப் பாட – பக்கென சிரிப்பு வரும்..
*
படம் பார்த்தது ரீ.ரன்னின் போது தான்.. பரமேஸ்வரி தியேட்டர்..
*
லஷ்மி என்ற பெயரில் டாக்டர் திரிபுர சுந்தரி என்பவர் எழுதிய பெண் மனம் நாவல் தான்.. படித்ததில்லை.. ஆனால் அவர் எழுதிய வேறு சில நாவல்கள் படித்திருக்கிறேன். மிதிலா விலாஸ், அத்தை, நல்லதோர் வீணை…கதவு திறந்தால்…. பெண்களைக் கவரும் வண்ணம் எழுதுவதில் வல்ல எழுத்தாளர் அவர்..அதில் இந்த அத்தை என்ற நாவல் –எழுதுவதற்கு முன்னால் 22 வருடங்கள் தென்னாப்பிரிக்காவில் வேலை பார்த்தார்..பின்பு தான் அவ்வளவு இடைவெளி எழுத்தில் விட்டதற்கப்புறம் எழுத வந்து வெற்றி கரமாய்த் தொடர்ந்தவர் அவர்..
*
இருவர் உள்ளம் – ந.தியைப் பற்றிச் சொல்லவேண்டுமானால் – தோற்றம், கண்கள், நடை, நடிப்பு (எந்தவித) – என எல்லாவிதத்திலும் துள்ளிடும் இளமை ஒவ்வொரு ஃப்ரேமிலும்..
*
இன்னும் எழுதலாம்..ஆனால் கோபால் ராகவேந்திரர் முரளி போன்றோரை விட நான் என்ன எழுதிவிட முடியும் எனில் விட்டு விடுகிறேன்..
*
அடுத்த சிரிப்புக்கான இந்தப் படம் பார்த்தால் படத்தினுள் சோகம் பொதிந்து இருக்கும்.. இருப்பினும் ந.தியின் சிரிப்பு ஒரு இடத்தில் ரொம்பப் பிடிக்கும்..
*
ஹீரோயின் சப்ஜெக்ட் தான்.. ந.தியின் அற்புத நடிப்பு உண்டு படத்தில்.. துணைக்கு வேறு நடிக நடிகையரும் உண்டு.. ந.தி, ஹீரோயின், மற்ற ஆர்ட்டிஸ்ட் எல்லாரும் நன்கு நடித்திருப்பார்கள்.. குறை எதுவும் வைக்கக் கூடாதென்று டைரக்டர் படத்தில் ஜடப்பொருளான ஒரு டார்ச்சையும் நன்கு வேலை வாங்கியிருப்பார்..அதுவும் நன்கு நடித்திருக்கும்..!
*
இனி அடுத்த போஸ்டில் சந்திக்கிறேனே என்று சொல்வதற்குமுன்..
*
முரளி ராகவேந்திரர் ரவி, ராகுல் கோபால் எல்லாருக்கும் என் மேல் ஒரு வருத்தம் உண்டு..அதுவும் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்கவே கேட்காதவன் நான் என்று.. எனில் அவர்களின் வருத்தத்தைப் போக்க நானும் கேட்டு
விடுகிறேன்..
*
(கல்நாயக்- யார் சார் நீங்க?! ( எஸ்ஸ்ஸ்கேப்..)
*
தொடரும்..
Gopal.s
10th May 2014, 03:16 PM
அழுகை
இனி அடுத்த போஸ்டில் சந்திக்கிறேனே என்று சொல்வதற்குமுன்..
*
முரளிசார், ராகவேந்திரர் சார், ரவி, ராகுல் கோபால் எல்லாருக்கும் என் மேல் ஒரு வருத்தம் உண்டு..அதுவும் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்கவே கேட்காதவன் நான் என்று.. எனில் அவர்களின் வருத்தத்தைப் போக்க நானும் கேட்டு
விடுகிறேன்..
*
(கல்நாயக்- யார் சார் நீங்க?! ( எஸ்ஸ்ஸ்கேப்..)
இந்த சார் போடும் வழக்கத்தை விட்டொழித்து தொலைக்கவும் .கருமம் .outdated . அல்லது எல்லோருக்கும் சேர்த்து தொலைக்கவும்.முரளி ,ராகவேந்தர் கிழட்டு --------- என்று அர்த்தம் தொனிக்கவில்லையா ?
அதுசரி நான் எப்போது கல்நாயக் பற்றி விசாரிக்க சொன்னேன்? யார் என்ன பெயரில் வந்தாலென்ன ?பதிவுகள் சுவாரஸ்யமா என்று பார்க்கும் ரகம் நான் . (கவுண்டமணி பாணியில் கோழி குருடா இருந்தா என்னடா ,குழம்பு ருசியா இருந்தா சரிதான் )
chinnakkannan
10th May 2014, 03:40 PM
கோ..பா...ல்..(சரோஜாதேவி குரலில் படிக்கவும்) நீங்கள் மற்றும் நான் சொல்லிய எந்த நண்பர்களுமே எதுவும் சொல்லவில்லை..அது ஒரு நகைச்சுவைக்காக சும்மா நான் எழுதியது.. அம்புட்டு தேன்.. :) வழக்கமா எழுதற முத்தாய்ப்பு இதில் எழுதவில்லை..அதான் காரணமோ..
*
ஏதேனும் தவறிருப்பின் மன்னிக்க :)
kalnayak
10th May 2014, 03:41 PM
சின்னக்கண்ணன், உங்களுடைய இருவர் உள்ளம் ஆய்வுக்கட்டுரை வழக்கமான துள்ளலுடன், நகைச்சுவையுடன் எழுதப்பட்டிருக்கிறது.
நான் டீன்-ஏஜில் நுழைகின்ற சிறுவனாய் முதன்முதலாக சென்னை வந்தபோது 1982-ல் ஜெயராஜ் என்ற திரையரங்கில் அதன் ரீ-ரிலீஸில் பார்த்தேன். பின்னர் எனது ஊரிலும் இரண்டு முறை பார்த்திருக்கிறேன். எனக்கும் படமும் பாடல்களும் மிகப்பிடித்திருந்தன.
நடிகர் திலகம் சற்றே பெரிய உடல் வாகுடன், நடிப்பில் எப்போதும் போல் பின்னி பெடல் எடுத்திருப்பார்.
கதாசிரியைப் பற்றி எழுதியவர், திரைக்கதை, வசனம் எழுதியவர் யாரோ மு. க. வாம், அவரைப் பற்றியும் எழுதியிருக்கலாம். பரவாயில்லை.
அடுத்த படம் என்ன 'துணை'யா?
அப்புறம் கேட்டீங்களே ஒரு கேள்வி. நிச்சயமாக எல்லோருக்கும் வருத்தம் போயிருக்கும். எனக்கும் இப்பதான் நிம்மதியா இருக்கு.
அடடே கோபால் கோச்சுண்டாரே!!!
chinnakkannan
10th May 2014, 03:44 PM
//இந்த சார் போடும் வழக்கத்தை விட்டொழித்து தொலைக்கவும் .கருமம் .outdated . அல்லது எல்லோருக்கும் சேர்த்து தொலைக்கவும்.முரளி ,ராகவேந்தர் கிழட்டு --------- என்று அர்த்தம் தொனிக்கவில்லையா ?// இல்லை அது டைப்படிக்கும் போது விட்டது..கோபால் சார் என்றும் எழுதியிருக்க வேண்டும்.. ராகுல் ரவி இளைஞர்கள்.. மற்றவர்கள் என் வயது/ என்னைவிடப் பெரியவர்கள் என்பது தான்..(அறிவில் எழுத்தில்,அனுபவத்தில் ) சரி இனிமேல் நான் யாருக்குமே சார் போடுவதில்லை..சரியா சார்..:) (ஆமா ஆண்களுக்கு சார் போடாமல் மேடமா சொல்ல முடியும் என்னமோ போங்க கோபாலா.:).)
chinnakkannan
10th May 2014, 03:48 PM
கல் நாயக் தோழா..
திரைக்கதை எழுதிய மு.க பற்றி எழுத நினைத்திருந்தேன்..அது விடுபட்டு ப் போயிற்று.. அப்புறம் போஸ்ட் பண்ணிவிட்டேன்..என்னவென்று தெரியவில்லை. இண்ட்..எக்ஸ்ப்ளோரரில் எடிட்டிங் ஆப்ஷன் வொர்க் ஆகவில்லை..அதான் இட முடியவில்லை..
*
இல்லை துணை இல்லை :)
chinnakkannan
10th May 2014, 04:09 PM
கோபால், கல் நாயக் - எடிட் செய்து விட்டேன்..படம் வெகு நாட்களுக்கு முன் பார்த்ததாகையால் வசனங்கள் குறிப்பிட்டுச் சொல்ல இயலவில்லை..
Gopal.s
10th May 2014, 04:32 PM
சின்னக்கண்ணன், உங்களுடைய இருவர் உள்ளம் ஆய்வுக்கட்டுரை அடடே கோபால் கோச்சுண்டாரே!!!
ஆய்வு கட்டுரை என்ற வார்த்தையை எல்லாவற்றுக்கும் போட்டு ஏன் அதன் அர்த்தத்தையே சிதைக்கிறீர்கள்?
நான்,பிரபு,முரளி,சாரதா,கார்த்திக்,சாரதி எழுதுவது மட்டுமே இந்த ரகம்.
வாசு சாருடையது விவரண ஆவணங்கள் வகை சுவாரஸ்யம்.
மற்றதை விமரிசனம்,நீண்ட பதிவு,துணுக்கு என்று வகை படுத்தலாம்.
சிலவற்றை ஆர்வ கோளாறு வகையில் சேர்க்கலாம்.
ராகவேந்தர் எல்லா ரகத்திலும் கொஞ்சம் தொடுவார்.
கணேஷ்,சி.க அங்கத பதிவுகள்.நகை பதிவுகள்.
பம்மல்(இலங்கை பம்மல் சேர்த்து ) முழுக்க உண்மை ஆவண பதிவுகள்.
என்னுடைய சில ஆணவ பதிவுகள்.நாட்டாமை முரளி அதிகார ஆணவ பதிவுகள்.
ஆயிர கணக்கில் குறுகிய காலத்தில் ஒரே பெயரில் கொடகொடவென்று கொட்டுவதை சீத (பே )ப(தி)வுகள் என்று வகை படுத்தலாம்.
kalnayak
10th May 2014, 05:47 PM
ஆய்வு கட்டுரை என்ற வார்த்தையை எல்லாவற்றுக்கும் போட்டு ஏன் அதன் அர்த்தத்தையே சிதைக்கிறீர்கள்?
நான்,பிரபு,முரளி,சாரதா,கார்த்திக்,சாரதி எழுதுவது மட்டுமே இந்த ரகம்.
வாசு சாருடையது விவரண ஆவணங்கள் வகை சுவாரஸ்யம்.
மற்றதை விமரிசனம்,நீண்ட பதிவு,துணுக்கு என்று வகை படுத்தலாம்.
சிலவற்றை ஆர்வ கோளாறு வகையில் சேர்க்கலாம்.
ராகவேந்தர் எல்லா ரகத்திலும் கொஞ்சம் தொடுவார்.
கணேஷ்,சி.க அங்கத பதிவுகள்.நகை பதிவுகள்.
பம்மல் முழுக்க உண்மை ஆவண பதிவுகள்.
என்னுடைய சில ஆணவ பதிவுகள்.நாட்டாமை முரளி அதிகார ஆணவ பதிவுகள்.
ஆயிர கணக்கில் குறுகிய காலத்தில் ஒரே பெயரில் கொடகொடவென்று கொட்டுவதை சீத பதிவுகள் என்று வகை படுத்தலாம்.
கோபால். நன்றி. இதற்கு ஒரு லிங்க் கொடுத்துவிட்டால் நல்லது - அடுத்தமுறை யார் பதிவை எப்படி அழைப்பது என பார்த்துவிட்டு ஃபீட்பேக் கொடுக்க வசதியாக இருக்கும்.
Gopal.s
10th May 2014, 08:11 PM
மேலும் சில பதிவுகள்.
சந்திரசேகர்- என்ன புரிகிறதோ ,எல்லாத்துக்கும் தலையாட்டு பதிவுகள்.
எஸ்.வாசுதேவன்- ஹையா ,கம்ப்யூட்டர் கிடைச்சாச்சு ஒரு வினாடி பதிவுகள்.
கல்நாயக்- குசும்பு உள்குத்து சுவை பதிவுகள்.
ஆதிராம்- உள்ளேன் ஐயா பதிவுகள்.
சிவாஜி செந்தில்- achchachcho ennaachcho padhivugal .
ராகுல்ராம் -அபூர்வ மறந்த பட எழுத்து சித்தர்.(ஊருக்கு ஒரு பிள்ளை.வாழ்க சிரஞ்சீவியாய்)இக்கால முனுசாமி.
ரவி- மாணிக்க இரட்டை நாயன பதிவுகள்.
ரவிகிரன்-ராமன் எத்தனை ராமனடி பதிவுகள்.
Gopal.s
10th May 2014, 08:29 PM
பம்மலார் ,
அவர் வராவிட்டாலும் அவர் நினைவு நம்மை விட்டு விலக மாட்டேன் என்கிறது. தனக்கு பிடித்த பாடலாக அவர் குறிப்பிட்டது.....(பேசும் போது )
மயக்கம் எனது தாயகம்.
மவுனம் எனது தாய்மொழி.
தயக்கம் எனது காரியம்.
நான் தண்ணீர் வரைந்த ஓவியம்.
நானே எனக்கு பகையானேன்
என் நாடகத்தில் நான் சிறையானேன்
(நடிப்பு )தெய்வம் வந்தாலும் விளங்காது!!!!
நல்ல கருத்துள்ள அற்புத பாடல்.பலர் உள்ள நிலையை விளக்குவது.
(அவர் புத்தகத்துக்கு முன்பணம் அனுப்பி விட்டீர்களா நண்பர்களே?)
uvausan
10th May 2014, 10:41 PM
கோபால் - தெரியாத்தனமாக சந்திரபாபு , sorry Yukesh Babu உங்களை அதிமேதாவி என்று குறுப்பிட்டார் - கொஞ்சம் கூட யோசிக்காமல் கல்நாயக் அது உண்மைதான் என்று certificate வேறு கொடுத்து விட்டார் - நாங்கள் எல்லோரும் யோசித்து எங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்குள் கல்நாயக் அவர்களுக்கு என்ன அவசரம் என்று புரியவில்லை தன் தனிப்பட்ட கருத்தை தெரிவிப்பதில் --- நீங்கள் அதிமேதவியாகவே இருங்கள் - ஆனால் அதற்காக அதிகமாக மே மாதத்தில் தாவி தாவி எல்லோரோரையும் இப்படி கலாய்க்கக வேண்டுமா நண்பரே ? ஏதோ எங்களுக்கு தெரிந்ததை எழுதுகிறோம் , தவறிருக்கலாம் - method of writing எங்களுக்கு தெரியாத ஒன்று - CK மாதிரி பாதி சிரித்துக்கொண்டும் பாதி அழுது கொண்டும் எழுதுகிறோம் , முரளியைபோல் புத்தரின் கோட்பாடுகளை கடைப்பிடித்து வார்த்தைகளில் உஷ்ணம் வராமல் பார்த்துகொள்கிறோம் - CS மாதிரி பதிவிடும் எல்லோரையும் மனம் உவந்து பாராட்ட கற்று கொண்டுருக்கிறோம் - கல் நாயக் மாதிரி நகைச்சுவைகளை அடுத்த திரியிலிருந்து வாங்கியாவது இங்கே தெளிக்க முயற்சி செய்கின்றோம் - ராகுலை போல எங்களுக்கு பிடித்தவைகளை சுனாமி யின் வேகத்தில் போட்டு கொண்டுருக்கிறோம் - சிவாஜி செந்தில் போல உணர்சிகளை கொட்டுகிறோம் -ஆதிராம் போல இந்த திரியை காவல் காக்கிறோம் - வாசு அவர்களைப்போல புதிய செய்திகளையும் , உடனே பாராட்டுக்களையும் கொடுப்பதில் தவறுவதில்லை - RKS மாதிரி நல்லவர் வணங்கும் எங்கள் ராமனைத்தான் இந்த திரியில் புகழ்ந்து பாராட்டுகிறோம் - யாருடைய நடையையும் பின் பற்றுவதில்லை - யாரையும் போல எழுதுவதும் இல்லை - இதில் எங்கள் நடை தனி நடை - சிங்கமாக single ஆகத்தான் முன்னேறுகிறோம் -
சேர்ந்தே முன்னேறுவோமே ! ( எங்களுக்கும் கலாய்க்க தெரியும் ):smokesmile::-D
Gopal.s
11th May 2014, 05:26 AM
( எங்களுக்கும் கலாய்க்க தெரியும் ):smokesmile::-D
(பாஸ் என்கிற சந்தானம் பாணியில் படிக்கவும்)
கலாய்ச்சிடாராமாம்!!!!!
eehaiupehazij
11th May 2014, 08:28 AM
dear Gopal Sir. You may be the Vashistar of this channel but who will be the Brahma Rishi? We take your one liners optimistically inasmuch as your contributions to this thread remain indelible and incomparable. Everyone has his individuality and originality in expressing their views in this thread. But all of us are propagating the name and fame of NT under one umbrella. As far as I am concerned, I become emotional when my icon NT is mud slung or his movies and his acting are criticized unscrupulously by filthy persons. I rise up to the occasion to retaliate even as I receive abusive slang from immature literates. Your way of writings I always take as an inspiration and I continue to contribute in my way without any illusions or castles in air within my mind-set. I fall in line with g94..ravi sir. Person like KCS ought to be bit diplomatic because of his position in NT peravai.
Gopal.s
11th May 2014, 09:44 AM
dear Gopal Sir. You may be the Vashistar of this channel but who will be the Brahma Rishi? We take your one liners optimistically inasmuch as your contributions to this thread remain indelible and incomparable. Everyone has his individuality and originality in expressing their views in this thread. But all of us are propagating the name and fame of NT under one umbrella. As far as I am concerned, I become emotional when my icon NT is mud slung or his movies and his acting are criticized unscrupulously by filthy persons. I rise up to the occasion to retaliate even as I receive abusive slang from immature literates. Your way of writings I always take as an inspiration and I continue to contribute in my way without any illusions or castles in air within my mind-set. I fall in line with g94..ravi sir. Person like KCS ought to be bit diplomatic because of his position in NT peravai.
தலைவரே,
சும்மா ஜாலி பதிவு. யாரையும் குறைத்து மதிப்பிடவோ,தரம் தாழ்த்தவோ அல்ல. ஒரு நகைச்சுவை முன்னிட்டு,நண்பர்களுக்குள் சின்ன கலாய்ப்பு .
நட்பு குறையாமல்.
என்னை பொறுத்த வரை தில்லை வாழ் அன்பர்தம் அடியார்க்கும் அடியேன் என்பது போல் நடிகர்திலகம் ரசிகர்களின் அடியவர்க்கும் அடியேனுக்கும் அடியேனாகவே என்னை எண்ணி கொள்கிறேன்.எண்ணி கொள்வேன்.என்னை தெரிந்தவர்களுக்கு இது புரியும்.
விலை போகாத நடிகர்திலகம் ரசிகர்களுக்கு மட்டுமே இந்த உரிமை,சலுகை.பந்துலுக்களுக்கு அல்ல.
eehaiupehazij
11th May 2014, 10:05 AM
Dear Gopal Sir. It is just reply that's all. I know the depth and extent of your writing skill that is the backbone to support our NT threads. At times I use to envy upon you and many of our fellow hubbers of NT thread that my contributions by way of data and information is nothing. But, due to my real time commitments. However, I enjoy the dash and verve exhibited by our NT hard core fans like you in presenting NTs accomplishments in a meticulous way. Kindly ignore any hurting piece of my writings.
uvausan
11th May 2014, 12:25 PM
கோபால் - உங்கள் விளக்கத்திற்கு நன்றி - இந்த திரி எல்லோருக்கும் ஒரு பொதுவான ஒன்று - நிறைய புது முகங்கள் வரும் திரி இது - இந்த திரியிலே உங்களை நன்றாக புரிந்துகொண்டவர்கள் நிறைய பேர் இருக்கலாம் , புரிந்துகொள்ள முயற்சி செய்பவர்களும் இருக்கலாம் - முயற்சி செய்து என்னை போல தோல்வி அடைந்தவர்களும் இருக்கலாம் - முயற்சி செய்வது வீண் வேலை என்று நினைப்பவர்களும் இருக்கலாம் - நகைச்சுவை என்பது தானாக வர வேண்டும் - அதற்க்கு விளக்கம் கொடுக்க ஆரம்பித்தால் அந்த நகைச்சுவைக்கு அர்த்தமே இல்லை - அந்த திரியின் விளக்கம் போல ஆகிவிடும் - நீங்கள் செய்தது நகைச்சுவை என்று நீங்கள் விளக்கம் சொன்ன பிறகுதான் மற்றவர்களுக்கு புரிகின்றது -- அருமையாக எழுதுகிண்டீர்கள் , நடுவில் ஏன் இந்த விஷமத்தனம் ?? யாரயாவது தாக்கியே ஆக வேண்டும் என்று தோன்றினால் அவர்களுக்கு PM அனுப்புங்கள் - ஏன் சுற்றி வளைத்து method of confusion இல் இங்கு எழுத வேண்டும் ?? 2065க்குள் உங்களை சரியாக புரிந்து கொண்டு விடுவேன் என்று நம்புகிறேன் . நான் ஏற்கனவே பதிவிட்டது போல் , நகைச்சுவைக்கும் நம் திரிக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை - அவர்கள் திரியில் intensive training எடுத்துகொள்ள வேண்டும் நாம் எல்லோரும் நகைச்சுவையுடன் எழுத - அதுவரை நீங்கள் உங்கள் ஒவ்வொரு பதிவுக்கும் தில்லை வாழ் அன்பர்தம் அடியார்க்கும் அடியேன் என்று சொல்லிகொண்டிருக்க வேண்டியதுதான்
அன்புடன்
ரவி
ScottAlise
11th May 2014, 01:58 PM
பார்த்ததில் பிடித்தது - 33
1969 ல் வந்த சுஜாதா சினி ஆர்ட்ஸ் வழங்கிய திருடன் படத்தை பற்றி தான் இந்த பதிவு
முதலில் கதை :
திருடன் ராஜு (சிவாஜி ) ஜெயிலில் இருந்து விடுதலை ஆகி வெளியே வந்தாலும் கைது செய்த இன்ஸ்பெக்டர் (மேஜர் ) பார்வையில் இருந்து தப்பப்வில்லை , காரணம் எந்த குற்றவாளியும் திருந்த மாட்டான் என்பது இன்ஸ்பெக்டரின் எண்ணம் .வெளியே வரும் ராஜுவை , அந்த கூடத்தின் தலைவர் ஜகன்னாத் (பாலாஜி ) மீண்டும் ராஜுவை போன்ற திறமையுள்ள திருடனை தன் கூடத்தில் சேர்க்க துடிக்கிறார் ,
ராஜு எப்படி சிறைக்கு சென்றார் , எப்படி திருடனானர்
சின்ன வயதில் பசியால் துடிக்கும் ராஜுவை விரட்ட படும் பொது ஒரு கோர உருவம் அவன் பசியை தீர்த்து , அவனுக்கு திருட கற்று கொடுகிறது . பிறகு வளர்ந்து ஜகன்னாத் கூடத்தில் சேர்ந்து விடுகிறார் ராஜு , ஒரு நாள் ராஜுவை குழந்தையை கடத்தி வர ஜகன்னாத் சொல்ல , விருப்பம் இல்லாமல் செல்லுகிறார் ராஜு குழந்தையை கடத்தும் போது தாய் பார்த்து விட்டு சத்தம் போட ராஜு குழந்தையை மீண்டும் தாயிடம் கொண்டு சேர்க்கும் போது அந்த தாய் இறந்து போகிறாள். அதற்குள் வேலைக்காரர்கள் போன் செய்ய போலீஸ் வந்து விடுகிறது. ராஜு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான்.
ராஜு மறுத்து , லாரி டிரைவராக வேலைக்கு செல்லுகிறார் .
ஒரு நாள் ட்ரிப் அடிக்கும் பொது , ராஜுவின் லாரியில் ஒளிந்து இருக்கும் ஒரு பையனை பார்க்கிறார் , பார்த்துடன் தெரிந்து விடுகிறது , அது ஆன் அல்ல பெண் என்று அந்த பெண்ணை காணவில்லை என பத்திரிக்கையில் விளம்பரத்தை பார்க்கும் ராஜு அவளை அவள் வீட்டிற்கு கூட்டி செல்ல அங்கே தன் பழைய கூட்டத்தின் ஆள்தான் இந்த பெண்ணின் மாமன் என தெரிந்துக் கொள்ளும் ராஜு அவளை ஒப்படைக்காமல் தன்னுடனே அழைத்து வருகிறான். அந்த பெண் ராதா அவனை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்க, ராஜு மறுக்கிறான். அதற்கு அவன் சொல்லும் காரணம் , அவன் ஒரு திருடன் என்பது . ராதா (kr விஜயா) விடாபிடியாக இருக்கவே கல்யாணம் நடக்கிறது சில வருடங்களில் ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது . தன் மகளை ஒரு ராணி போல் வளர்கிறார் , அவள் சாப்பிட வெளி தட்டு வாங்கி கொடுக்கிறார் , தன் மகள் பிறந்த உடன் , ஒரு சொந்த லாரி வாங்க வேண்டும் என்று எண்ணம் தோன்ற , அதற்கு கடனாக பணம் வாங்குகிறார் , ஒழுங்காக மாத தவணை காட்டுகிறார் , ஒரு பக்கம் இன்ஸ்பெக்டர் ராஜுவை சந்தேகத்துடன் சுற்றி வர , மறுபக்கம் ஜகன்னாத் ராஜுவை தன்கூட மீண்டும் சேர வேண்டும் என்று திருட்டு பழி போடுகிறார் , அதில் ராஜு தப்பிக , ராஜு கடன் வாங்கிய நபரை தூண்டி பணத்தை ராஜு உடனே தர வேண்டும் என்று நிர்பந்திக்கிறார் .
ScottAlise
11th May 2014, 01:59 PM
வாக்குவாதத்தில் ராஜுவின் பழைய வாழ்க்கையைப் பற்றி குத்திக் காட்ட ராஜு அவர் கழுத்தை பிடிக்க அங்கே வரும் இன்ஸ்பெக்டர் பேசி கால அவகாசம் வாங்குகிறார் .இதை மறைந்திருந்துப் பார்க்கும் ஜெகநாத் தன் ஆளை விட்டு லாரியில் மாட்டியிருக்கும் ராஜுவின் கோட்டை எடுத்து வரச் செய்கிறான். அந்த கோட்டை தன் அடியாளுக்கு அணிவித்து முதலாளி வீட்டிற்கு செல்ல சொல்கிறான்.
இந்த சம்பவம் நடக்கும் போது வெளியூர் சென்றிருக்கும் ராஜுவை சந்தேகத்தின் பேரில் போலீஸ் அழைத்து விசாரிக்கிறது. கொலையாளியை நேரில் கண்ட வேலைக்காரனை வைத்து அடையாள அணிவகுப்பு நடத்தும் போலீஸ் இன்ஸ்பெக்டர் அதில் ராஜுவையும் நிறுத்துகிறார். ஆனால் வேலைக்காரன் கொலையாளி ராஜு அல்ல என்று சொல்லிவிட ராஜு விடுவிக்கப்படுகிறான். ஆத்திரம் அடையும் ஜெகநாத், ராஜுவின் லாரியை தீ வைத்துக் கொளுத்தி விடுகிறான். என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கும் ராஜு வேலை தேடுகிறார் , வேலை கிடைக்காமல் அலாடுகிறார் , திருட போகலாம் என்று நினைக்கும் பொது , ராதா வேலைக்கு செல்லுகிறார் , கிளப்பில் டான்ஸ் ஆடுகிறார் , இது தெரிந்து வெறுப்பின் உச்சிக்கு போகுகிறார் ராஜு , குழந்தை வேறு வறுமையில் வாட , அதை நினைத்து ஒரு வித ஜுரத்தில் படுத்து விடுகிறார் .
வேறு வழி இல்லாமல் உடம்பு குணமானதும் தன் பழைய வாழ்கைக்கே செல்லுகிறார் ராஜு . முதல் assignment வங்கி கொள்ளை. அதை இன்ஸ்பெக்டர்யிடம் சொல்லி விடுகிறார் ராஜு
ராஜு எப்போது இன்ஸ்பெக்டருடன் சேர்ந்தார் ?
தான் எப்படி நல்லவனாக மாறி வாழ நினைத்ததையும் , அதற்கு வந்த சோதனைகளையும் சொல்லுகிறார் , ஜகன்னாத் மற்றும் இன்ஸ்பெக்டர் இருவர் தான் தன்னுடைய இந்த நிலைமைக்கு காரணம் என்று குற்றம் சாட்டுகிறார்.இன்ஸ்பெக்டர் கடமைக்காக தன் சொந்த மகனை பறிக்கொடுத்த தன்னுடைய பழைய கதையைக் கூறி பழைய கூட்டாளிகளை பிடிப்பதற்கு ராஜு உதவ வேண்டும் என சொல்கிறார்.
ராஜு தொலைபேசியில் பேசியதை கேட்டு திட்டதை மாற்றி ராணுவ ரகசியத்தை திருட ராஜுவை பணிகிறார் ஜகன்னாத் , இந்நிலையில் ராஜுவின் குழந்தையை ஜெகநாத் கடத்தி வைத்துக் கொண்டு ராஜுவின் கையில் இருக்கும் ஆவணத்தை கொண்டு வரச் சொல்கிறான் . ராஜுவின் குழந்தையை கடத்தி விடுகிறார் ஜகன்னாத் . தன்னை ஏமாற்றி விட்டதாக நினைத்து இன்ஸ்பெக்டர் ஒரு புறம் . முடிவில் இந்த பிரச்சனைகளை சமாளித்து காவல் துறையில் informer ஆக சேர்ந்து விடுகிறார் ராஜு
நல்ல எண்ணம் வென்றது
சுபம்
ScottAlise
11th May 2014, 01:59 PM
படத்தை பற்றி :
பாலாஜி படம் என்றால் ரீமேக் தான் , இந்த படம் அதிஷ்ட வந்தாலு என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் . வருடத்துக்கு ஒரு படம் நடிகர் திலகத்தை வைத்து ஒரு படம் கொடுத்து அதை ஹிட் , மெகா ஹிட் , இல்லை என்றால் MG என்று இந்த மூன்று category ல் கொண்டு வந்து சேர்த்து விடுவார் பாலாஜி . தங்கை , என் தம்பி படத்தை தொடர்ந்து வந்த 3 வது படம் இது , குறிகிய காலத்தில் நடிகர் திலகத்தை வைத்து குறிப்பிட்ட நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்து விடுவார் பாலாஜி , இது பிசினஸ் ல் நல்ல விஷயம் , ஒரு பெரிய ஸ்டாரை வைத்து படம் எடுக்கும் பொது ஒரு வித command இருந்தால் தான் இந்த மாதிரி செய்ய முடியும் என்றாலும் , சில சமயம் ஒரு நல்ல படம் , தரமான படம் அதின் நயமாயன வெற்றி அடைய முடியாமல் போவதற்கும் இது காரணமாகி விடும் , அதற்கு சிறந்த உதரணம் இந்த படம் , 1969 வருடம் நடிகர் திலகத்தின் வருடம் , எங்கே திரும்பினாலும் அவர் படம் ஓடி கொண்டு இருந்தது , பின் குறிப்பு : எல்லாம் முதல் வெளியிடு , re ரிலீஸ் கணக்கு இல்லை , அதையும் எடுத்தால் சர்வமும் நடிகர் திலகத்தின் மயம். தெய்வமகன் என்ற ever green classic , நடிப்பில் முத்திரை பதித்த படம் வந்து 50 நாட்கள் ஆகாத நிலையில் , சிவந்த மண் என்ற படம் வரவிருக்கும் நிலையில் இந்த படம் வந்தது .சில நடிகர்கள் தங்கள் படங்கள் வரும் பொது தங்களின் அடுத்த படம் வர நல்ல காலதாமதம் செய்து , தங்களை பார்க்க வேண்டும் என்றால் தங்களின் சமிபத்திய படத்தை தான் மீண்டும் மீண்டும் பார்த்தாக வேண்டும் என்று ஒரு வித artifical demand யை create செய்து விடுவார்கள் .
நம்மவர் பெரும்பாலும் இது போன்ற விஷியத்தில் தலையிடுவது இல்லை , அது அவர் குணம் , நல்ல குணம் , ஆனால் சில சமயங்களில் இது போன்ற சில விஷியங்களில் அவர் கவனம் செலுத்தி இருந்தால் RECORD பல நம்வசம் ஆகி இருக்கும் . இது போன்ற அம்சம்கள் எல்லாம் படம் பார்க்கும் வரை தான் , படம் பார்க்கும் பொது , அவரின் முகம் , நடிப்பில் எல்லாம் மறந்து போய் விடும் .
காலத்தை கடந்து நிற்கும் பொது பெருமை நம்மளுக்கு தான் .
ScottAlise
11th May 2014, 02:00 PM
இந்த படத்தில் பிற நடிகர்களின் பங்களிப்பு சற்று குறைவு தான் , அதுவும் KR விஜயா கிளப் டான்ஸ் ஆடுவது ,ஆன் வேடம் போட்டு கொண்டு சிவாஜியை ஏமாற்ற நினைக்கும் காட்சிகள் சிரிப்பு .
மேஜர் : A CONSTANT FACE IN NADIGAR THILAGAM MOVIES . இந்த படத்தில் அவர் நடிப்பில் முத்திரை பதித்த காட்சிகள் பல . பல காட்சிகளில் இவர் வசனம் பேசி கை தட்டல் வாங்குவதை விட , தன் reactions மூலமே நடிப்பு ராஜாங்கம் நடத்தி உள்ளார் , நடிகர் திலகம் அறிமுகமாகும் காட்சியில் அவரை முறைத்து பார்ப்பதும் , சிவாஜியை கடன்காரன் பணம் கேட்டு harass செய்யும் பொது சிவாஜிக்கு ஆதரவாக பேசுவதும் , சிவாஜி தான் கொலைகாரன் என்று நினைத்து identification parade நடத்தி தோல்வி அடைவதும் , தன் தரப்பு வாதங்களை சொல்லுவதும் என்று இவருக்கு scope அதிகம் . சிவாஜி , மேஜர் இடையில் நடக்கும் CAT and MOUSE கேம் தான் படத்தின் உயிர் நாடி
பாலாஜி :
கொஞ்சம் cliched வில்லன் தான் , இவர் கூடாரம் அக்மார்க் வில்லன் குகை , இது அத்தனைக்கும் மேல் இவர் நடிப்பு பலே , நீ மீண்டும் இங்கு வருவாய் என்று சவால் விடும் காட்சியில் அவர் அல்டல் இல்லாத அலட்சிய பார்வை உடன் பேசும் வசனமும் , மீண்டும் சிவாஜி கூடத்தில் சேர்ந்த உடன் சந்தேகத்தை உள்ளே வைத்து , அதை கண்டுபிடித்து திட்டதை மாத்தும் காட்சி நல்ல வில்லத்தனம்
ScottAlise
11th May 2014, 02:00 PM
சிவாஜி :
படத்தின் ஆணிவேர் . என் தம்பியில் aristocrat ஸ்டைல் என்றால் இதில் வேறு விதமான ஸ்டைல் , ஒரு நடிகர் , அதுவும் மாஸ் நடிகர் அறிமுகம் ஆகும் காட்சி நான் முதலில் கால்களை காட்டும் காட்சி நான் முதலில் பார்த்தது தலைவர் ரஜினி நடித்த மனிதன் படம் , இதுவும் ஜெயில் காட்சி தான் , காமெராவை கிழே இருந்து வெறும் கால்களை மட்டும் காட்டும் பொது ஒரு வித கம்பீரமாக இருக்கும் , அதை அப்படியே திருப்பி காட்டும் பொது மேஜர் தன் தீர்க்க பார்வையை சிவாஜி மேல் பதிப்பார் , நீ எங்கே போனாலும் என் பார்வைளிர்ந்து தப்ப முடியாது என்பது போல் இருக்கும் அவர் பார்வை , அதே சமயம் நடிகர் திலகத்தின் பார்வை , நீங்க நினைக்கும் ஆள் நான் இல்லை என்பது போல் அலட்சியம் காட்டும் திமிரான பார்வை (அறிமுக காட்சியிலே ரணகளம் தான் )
அதே திமிருடன் தன் பழிய கூட்டாளிகளிடம் வர முடியாது என்று சொல்லுவது . லாரி டிரைவராக இருக்கும் பொது KR விஜயா உடன் பல பாஷைகளை பேசுவது (ஜெனரல் சக்ரவர்த்தி படத்திலும் இது போல் ஒரு காட்சி ), பழனியப்பன் பழனியம்மாவா பாடலில் KR விஜயாவை கிண்டல் செய்யும் காட்சியும் இளமை துள்ளல் , தன்னுடைய சிறு வயது அனுபவத்தை நடிகர் திலகம் அவர் குரலில் , அதுவும் ஒரு வித base வாய்ஸ் + கணீர் குரலில் சொல்லும்போதும் , இந்த காட்சிகளில் நடிகர் திலகம் இல்லை என்றாலும் , அவர் இருக்கும் பாதிப்பை கொடுகிறது . அதை தொடர்ந்து வேலை பைஜாமா போன்ற உடை அணிந்து அதில் embroidery வேறு அற்புதமாக இருக்கும் அவர் ஸ்டைல் ஆக சுடும் பொது நம் மனது நம் இடத்தில இல்லை . மவுண்ட் ரோடு ல் டைரக்டர் வேஷம் போட்டு திருடும் காட்சி , (திருடன் என்ற படத்தை இயக்குவதை போல் நடிப்பார் ) சூப்பர் , கடைசியில் சண்டை காட்சியும் அதில் அவர் ஆக்ரோஷமும் டாப்
ScottAlise
11th May 2014, 02:01 PM
கல்யாணம் ஆகி முதல் இரவுக்கு முன்பு நாகேஷ் தான் பார்த்த தில்லான மோகனாம்பாள் படத்தை பற்றி பேசும் பொது சிவாஜி முகத்தில் தெரியும் ஒரு uneasiness அபார நடிப்பு
திருட போன இடத்தில குழந்தையை கடத்தி அதன் தாயின் மரணத்திற்கு காரணமாகி விட்டோமே என்ற குற்ற உணர்வில் தவிப்பை வெளிப்படுத்தும் காட்சியும் , தன் மகள் மேல் பாசத்தை பொழியும் காட்சியும் தான் திருடன் என்பது தன் மகளுக்கு தெரிய கூடாது என்று பயபடுவதும் , தன் குழந்தை பசியால் வாடும் பொது துடிப்பதும் , திருடனும் , போலிசும் இவரை துரத்தும் பொது இவர் சமாளிப்தும் , அதிலும் முதலில் ஈஸியாக tackle செய்வதும் , கொஞ்சம் கொஞ்சமாக அவர் நம்பிக்கை பொய்க்கும் பொது துடிப்பதும் , கடைசியில் தன் நிலைமையை நினைத்து புலம்பும் பொது நம் மனதிலும் கண்ணீர்
போலீஸ் இன்ஸ்பெக்டர்யிடம் சென்று தான் திருடனாக போவதாக சொல்லும் இடம் ரௌத்திரம் .
மொத்தத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பு , கதை எல்லாம் சேர்ந்த பொழுது போக்கு படம்
குறை : காமெடி கொஞ்சம் கம்மி , என் தம்பி போல் பாடல் கவரவில்லை
படம் எப்படி
திருடன் தானே , மக்கள் வந்தால் ஓடுவான் , மக்கள் வந்தார்கள் திருடன் ஓடினான்
Russellbpw
11th May 2014, 02:13 PM
பட்டையை கிளப்பிய 1972 இன் தொடர்ச்சி 1973 களிலும்
1972, திரை உலகில் இப்படி ஒரு வெற்றி இனி எந்த நடிகனாவது நிகழ்த்த முடியுமா என்று திரை உலகமே எண்ணி வியந்த ஆண்டு நடிகர் திலகத்தின் 7 திரைப்படங்கள் அதில் 6 100 நாட்கள் அதற்க்கு மேலும் ஓடியபடங்கள் ..அந்த 6இல் 2 வெள்ளிவிழா ....
இதன் தொடர்ச்சி 1973இலும் தக்க வைத்துக்கொண்டார் நம் நடிகர் திலகம்
திரைப்படத்தின் முன்பும் பின்பும் பல மாத GAP இல்லாமல் மீண்டும் திரை உலகில் ..இன்னும் சொல்லபோனால் அவரால் மட்டுமே நிகழ்த்தப்பட முடிந்த ஒரு சாதனை.
பாரத விலாஸ் - 24-03-73
ராஜ ராஜ சோழன் 31-03-73
பொன்நூஞ்சல் 15-06-73
எங்கள் தங்கராஜா 15-07-73
கெளரவம் 25-10-73
மனிதரில் மாணிக்கம் 07-12-73
ராஜபார்ட் ரங்கதுரை 22-12-73
7 திரைப்படங்கள் மீண்டும் ரிலீஸ் ஒன்றன் பின் ஒன்றாக . அதில் 5 திரைப்படங்கள் 100 நாட்கள் அதற்க்கு மேலும் ஓடிய படங்கள். மீதம் இரண்டு 50 நாட்கள் ஓடிய படங்கள்.
வெற்றிப்படங்கள் என்றுபார்த்தால் அனைத்தும் வெற்றிபடங்களே !
மற்ற நடிகர்கள் அவர் காலத்தில் பலத்த GAP உடன் திரையிட GAP என்ற ஒரு விஷயம் பற்றி கவலைபடாமல் தயாரிப்பாளர் எந்த பாதிப்பும் அடையக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில் குறித்த நேரத்தில் நடித்து கொடுத்து திரைப்படம் வெளியாக பேரு உதவி எப்போதும் செய்பவர் நம் நடிகர் திலகம்.
GAP இல்லாமல் திரையிட்டாலும் நடிகர் திலகம் படங்கள் மிக பலத்த வசூல் சாதனையை ஒவ்வொரு முறையும் சர்வ சாதாரணமாக நிகழ்த்தியது !
திரு பம்மலர் அவர்கள் பதிவு செய்து அதை பதிவிறக்கம் செய்ததால் அவர் என்ன பதிவு செய்தாரோ அது மட்டுமே இங்கு உள்ளது. மீதம் உள்ள ஆவணங்கள் பம்மலர் பெரிய மனது வைத்தால் இங்கு பதிவாகும் என்று நம்புவோம்.
ஆவணங்கள் பொதுமக்கள் பார்வைக்கு !
பாரத விலாஸ் - எம்மதமும் சம்மதம் என்பதையும் தேசியத்தையும் வலியுறுத்தும் காவியம்.
203 CONTINOUS HOUSEFULL SHOWS :
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/203HousefullShows_zps5b0271dd.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/203HousefullShows_zps5b0271dd.jpg.html)
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/bv55_zpsbf70261b.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/bv55_zpsbf70261b.jpg.html)
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/BV100_zps1264f0ed.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/BV100_zps1264f0ed.jpg.html)
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/BVPRESSREVIEWS2_zps7d4c8172.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/BVPRESSREVIEWS2_zps7d4c8172.jpg.html)
Russellbpw
11th May 2014, 02:24 PM
ராஜ ராஜ சோழன் - கோபால் சார் போன்ற அதி தீவிர ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை என்றாலும் மக்களை நன்றாக திருப்தி செய்த படம், வசூலில் மிகபெரிய பிரளயத்தை ஏற்படுத்திய படம் !
பாரத விலாஸ் வெளிவந்த ஒரு வாரத்தில் வெளிவந்த வரலாற்று காவியம். வேறு எந்த நடிகருக்கும் இப்படி ஒரு துணிவு இருக்குமா என்று தெரியவில்லை !
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/rrcprerelease_zpsdc71b19a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/rrcprerelease_zpsdc71b19a.jpg.html)
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5580-1_zps52fc5dc5.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5580-1_zps52fc5dc5.jpg.html)
eehaiupehazij
11th May 2014, 02:42 PM
enjoying NTs evergreen ace movie PUDHIYA PARAVAI in Jaya TV now. Frame by Frame ... enjoy the genius!
eweaxagayx
11th May 2014, 04:29 PM
My posting to-day in my Face Book account which I am copied and re-posting here.
தமிழகத்தின் உண்மையான சூப்பர் ஸ்டார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டுமே.
தமிழகத்தில் எப்பொழுதும் ஒரு உண்மையற்ற எண்ணம் பல தமிழர்களிடம் உண்டு. அதாவது
நடிகர்களில் யார் வசூல் சக்ரவர்த்தி என்பது பற்றி. பலர் தமிழ் சினிமாவின் சாதனைகள் பற்றி அறியாதவர்கள் பலர் - ஏன் மக்கள் மட்டுமல்ல - பல பத்திரிகைகளும் இன்றும் எம்.ஜி.ராமச்சந்திரன் தான் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் - வசூல் சக்கரவர்த்தி என்று எழுதுகின்றன. இவை நிச்சயமாக உண்மை அல்ல.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் தமிழ் சினிமாவின் அன்றும் இன்றும் என்றுமே வசூல் சக்கரவர்த்தி. அன்றைய கால கட்டங்களில் எம்ஜிஆர் நடித்த படங்கள் பெரும்பாலும் வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று படங்களுக்கு மேல் வந்தது கிடையாது. - அதுவும் அவரே அவர்தம் ஒவ்வொரு படத்திற்கும் நீண்ட இடைவெளி இருக்கும்படி பார்த்துக் கொள்வார்.
ஆனால் நடிகர் திலகத்தின் படங்களோ ஒரே நாளில் அவரின் இரண்டு படங்கள் -அதுவும் ஒருமுறை, இருமுறையல்ல - பலமுறை வெளியிடப்பட்டிருக்கும். அவ்வாறு ஒரே நாளில் வெளியான அவர் படங்கள் இரண்டுமே நூறு நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒடியிருக்கும். இதற்கு சிறந்த உதாரணமாக - சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள் மற்றும் ஊட்டி வரை உறவு, இரு மலர்கள் படங்களை சொல்லலாம்.
அதுமட்டுமல்லாது அன்றைய பல நடிகர்கள் தங்கள் ஒவ்வொரு பட வெளியீட்டிற்கும் இடைவெளி இருக்கும்படி பார்த்துக் கொண்டிருந்த வேளையில் சிவாஜியின் படங்கள் ஒரே வருடத்தில் பத்து படங்களுக்கு மேல் பலமுறை வெளியிடப் பட்டிருக்கின்றன. அப்படி அவர் படங்களே அவர் படங்களுக்கு போட்டியாக இருந்தாலும் பல படங்கள் வெள்ளி விழா மற்றும் நூறு நாடகளைக் கடந்து ஓடியிருக்கின்றன.
மேலும் பல நடிகர்கள் பல படங்களில் கதாநாயகனாக அல்லாது சிறுசிறு வேடங்களில் நடித்த படங்களையும் தங்கள் மொத்த பட வரிசையில் சேர்த்து இருப்பார்கள்.
இவர்களின் இப்படங்களையும் சேர்த்தே மொத்தம் 125 படங்களை தாண்டியிருக்காது. ஆனால் நடிகர் திலகம் கதாநாயகனாக நடித்த முதல் படமான " பராசக்தி " தொடங்கி 280 படங்கள் வரை திரைப் படத்தின் நாயகனாகவே நடித்துள்ளார். நண்பர்களின் வற்புறுத்தல் காரணமாக சுமார் 20 படங்களில் கௌரவத் தோற்றத்தில் நடித்துக் கொடுத்துள்ளார்.
எம்ஜிஆர் போன்று சில நடிகர்கள் தங்கள் இமேஜ் பாதிக்காத வகையில் - அதாவது நல்லவராகவோ, எழைகளுக்கு உதவுபவர்களாகவோ மட்டுமே நடிப்பார்கள். ஆனால் சிவாஜியவர்கள் சில படங்களில் தன்னுடைய இமேஜ் டேமேஜ் ஆகிவிடுமோ என்று கவலைப் படாமல் சினிமாவை சினிவாக மட்டுமே பார்த்து வில்லன் போன்ற கெட்ட பாத்திரங்களிலும் நடித்து அதிலும் பெயர் வாங்கி இருப்பார்.
மேலும் சிவாஜி தான் நிஜமான சுப்பர் ஸ்டார் என்பதற்கு ஒரு அலசல் - நடிகர்களுக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் எப்பொழுதும் இருக்கும். அவர்கள் தங்கள் அபிமான நடிகர் நடிக்கும் படத்தை பல முறை பார்க்கும் வழக்கம் உள்ளவர்கள். அப்படி பார்க்கும் பொழுது எம்ஜிஆர் படங்கள் வருடத்திற்கு மூன்று படங்கள் என்று வைத்துக் கொண்டால் அவரின் ரசிகர்கள் அந்த மூன்று படங்களையே திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஒரு ரசிகர் குறைந்த பட்சம் 10 முறை பார்க்கிறார் என்றால் இதன் மூலம் அப்படங்களுக்கு வசூல் கூடும் வாய்ப்பு உள்ளது. நடிகர் திலகம் படங்கள் வருடத்திற்கு குறைந்தது ஏழு படங்கள் என்று வைத்துக் கொண்டால் அவரின் ரசிகர்கள் அந்த ஏழு படங்களை திரும்பத் திரும்ப பார்க்கும் வாய்ப்பு குறைகிறது - அவரின் பல படங்கள் வெளியீடு காரணமாக. மற்ற நடிகரின் ரசிகன் அவன் விரும்பும் நடிகரின் படத்தை 10 முறை பார்க்கும் பொழுது சிவாஜி ரசிகன் சிவாஜியின் படத்தை நான்கு முறை மட்டும் தான் பார்க்கமுடியும். இதனால் அவர் படங்களுக்கு வசூல் குறையும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அப்படி இல்லாமல் பல படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருப்பதின் காரணம் ரசிகர்கள் அல்லாத பெருவாரியான பொதுமக்கள் பார்த்ததினால் மட்டுமே என்பது இதன் மூலம் வெளிப்படை.
இன்றும் சிவாஜி கணேசன் அவர்களின் பல படங்கள் தமிழ் நாட்டின் பல திரைஅரங்குகளில் வெற்றிகரமாக மறு வெளியீட்டில் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு இன்றைய நடிகர்களுக்கும் கிலியை ஏற்படுத்தி பெரும் வெற்றி பெற்ற படம் " கர்ணன் ".
அதுமட்டுமல்லாமல் பல தமிழ் தொலைக்காட்சி உடங்களில் தினசரி சிவாஜியின் ஒருபடமாவது ஓடிக் கொண்டிருக்கும்
இப்பொழுது சொல்லுங்கள் உண்மையான ஸ்டார் சிவாஜி தவிர வேறு எவருமில்லை என்பது உண்மைதானே ?
adiram
11th May 2014, 04:47 PM
Raghavan,
Comparison konjam avoid pannalaame.
Otherwise, unnecessary arguements may arise.
eehaiupehazij
11th May 2014, 06:27 PM
dear Raghavan. A movie becomes an evergreen classic only when it proves its crowd pulling capacity even during its rerun after years. Karnan belongs to this category due to the charisma and the magnetic appeal of NT's acting.However, it also requires a meticulous planning and execution, due to the lack of which our own NTs old classics also suffered, considering the cases of the classics like Thiruvilayadal and Paasamalar. Presently also we have witnessed the fate of a much tomtommed old movie that was released in more theatres than Karnan with an expectation to surpass the collections of Karnan. But it was lifted from almost all theatres within a week of its release except only in two theaters, that too in Chennai, with single show it has been pushed to cross 50 days! (Karnan ran for more than 50 days in nearly 20 theatres all over Tamil nadu). Is this not a proof of the crowd pulling capacity and box office stand of NT till date?
uvausan
11th May 2014, 10:55 PM
திருடன் தானே , மக்கள் வந்தால் ஓடுவான் , மக்கள் வந்தார்கள் திருடன் ஓடினான்
ராகுல் - அருமை
சிறிய திருத்தம் -
திருடன் ஓடியது theater யை விட்டு என்று சில விஷமிகள் அர்த்தம் எடுத்துகொள்வார்கள் - நம் திருடன் களவாடியது பொருளை அல்ல , நம் மனங்களை - ஓடியது அதிக நாட்கள் theater களில் மட்டும் அல்ல , மக்களின் மனதிலும் தான்
eehaiupehazij
12th May 2014, 07:12 AM
dear ragul. a neat compendium on Thirudan. It was a remake of a Hindi movie Himmat starring Jeetendra, if my nostalgia is correct. Balaji-NT combo was consistent and together they gave us many more hits after switching over to color films. NT appeared very slim and handsome in his costumes but KRVijaya was bit bulky at that time. Again NT vs NT situations affected the run of Thirudan. Ragul, you have chosen to bring into limelight all the good NT movies that had mediocre runs?
Richardsof
12th May 2014, 08:25 AM
http://i57.tinypic.com/2kiqt0.jpghttp://i61.tinypic.com/1zqd4w3.jpg
http://i62.tinypic.com/2nld4cj.jpg
uvausan
12th May 2014, 02:06 PM
dear ragul. a neat compendium on Thirudan. It was a remake of a Hindi movie Himmat starring Jeetendra, if my nostalgia is correct. Balaji-NT combo was consistent and together they gave us many more hits after switching over to color films. NT appeared very slim and handsome in his costumes but KRVijaya was bit bulky at that time. Again NT vs NT situations affected the run of Thirudan. Ragul, you have chosen to bring into limelight all the good NT movies that had mediocre runs?
சிவாஜி செந்தில் : மீண்டும் ஒரு தவறான கண்ணோட்டம் - திருடன் , 100 நாட்களையும் கடந்து ஓடியபடம் - தங்க பதுமை , தூக்கு தூக்கிக்கு கிடைத்த அதே ஆர்வமும் , வசூலும் , வெற்றியும் இந்த படத்திற்கும் கிடைத்து - நாமே நம் படங்களை ஓடவில்லை என்ற கண்ணோட்டத்தில் பதிவுகள் போட்டால் , இதற்காகவே காத்து இருக்கும் சிலருக்கு அல்வா சாப்பிடுவது போல இருக்கும்
வருடம் - 1969
1. இந்த வருடம் வெளியான படங்கள் - 9
100 நாட்களை கடந்த படங்கள் - 3
தெய்வ மகன்
திருடன்
சிவந்த மண்
திருடன் Colombu விலும் அதிகமாக ஓடிய படம் - சிவாவிடம் ஆவணம் இருக்கும் என்று நம்புகிறேன்
uvausan
12th May 2014, 02:14 PM
வினோத் - அருமையான பதிவு , ஆவணம் - பதிவிட்டதிர்க்கு மிகவும் நன்றி - எவ்வளவு எளிமை , வில்லனாக நடிக்க இருந்தும் ஒரு உண்மையான ஹீரோ வைபோல் நடந்து கொண்டார் - தொழில் மீது அவருக்கு இருந்த பக்தியும் , தயாரிப்பாளர்களுக்கு உதவும் எண்ணமும் அவருக்கு இருந்ததால்தான் , போட்டிகளை கண்டு துவளாமல் மிகவும் எளிதில் வெற்றி கொடியை அவர் எட்டி பிடித்தார் - இவர்கள் இருவரும் இன்னும் பல படங்களில் நடித்திருந்தால் இன்று நம் இரண்டு திரிகளுக்கும் வேலை இருந்திருக்காது
KCSHEKAR
12th May 2014, 02:22 PM
வினோத் - அருமையான பதிவு , ஆவணம் - பதிவிட்டதிர்க்கு மிகவும் நன்றி - எவ்வளவு எளிமை , வில்லனாக நடிக்க இருந்தும் ஒரு உண்மையான ஹீரோ வைபோல் நடந்து கொண்டார் - தொழில் மீது அவருக்கு இருந்த பக்தியும் , தயாரிப்பாளர்களுக்கு உதவும் எண்ணமும் அவருக்கு இருந்ததால்தான் , போட்டிகளை கண்டு துவளாமல் மிகவும் எளிதில் வெற்றி கொடியை அவர் எட்டி பிடித்தார்
Dear Vinod Sir
Very Nice Post. Thanks
eehaiupehazij
12th May 2014, 02:44 PM
dear ravi. In koondukkili, NT was the hero as well as the anti-hero and the story revolves around him. Enjoy his close-up expressions and the inimitable style in the song (TMS) sequence 'Konjum Kiliyana pennai...". MG Ramachandran just filled the bill but his scenes are very less like Muthuraman or SSR in NT movies. Before interval he goes to prison and after interval after a long time only he appears in the climax! As a senior to NT he was given the first in the title! When we come out of the movie hall only NT dominates our minds! Since the movie was not well received, this combo could not work again. Another thing is in MGRamachandran movies, other actors will not be given equal weightage and he was careful to see that his character alone gets boosted and others should be just supporting or praising him.Will this formula work out for our NT,who on the other hand boosts others characters too without minding for reduction in his scenes?!
kalnayak
12th May 2014, 03:56 PM
ராகுல்ராம். திருடன் பற்றிய பதிவு அபாரமானது. இன்னும் நல்ல முன்னேற்றத்தை காணமுடிகிறது. நடிகர் பாலாஜி நடிகர் திலகத்தை வைத்து திரைப்படங்கள் எடுத்ததையும், அவைகள் எவ்வாறு வசூல் செய்தன என்பதையும், அப்போது நடிகர் திலகத்தின் படங்கள் எப்படி போய்கொண்டிருந்தன என்பதையும் சுருக்கமாக அலசியிருந்தீர்கள். நீங்களும் பஞ்ச் வைத்து முடிக்க எழுதிய "திருடன் தானே , மக்கள் வந்தால் ஓடுவான் , மக்கள் வந்தார்கள் திருடன் ஓடினான்" - நன்றாகவே இருக்கிறது. ரவியின் கமெண்ட்டும் அதையே எடுத்துக்காட்டியது.
கோபால், இந்த அபூர்வ மறந்த பட எழுத்து சித்தர், இக்கால முனுசாமி பதிவை எப்படி சொல்லவேண்டும் என்று சொல்லவேயில்லையே. பின்னால எதுக்குங்க பிரச்சினை?
uvausan
12th May 2014, 06:46 PM
MTயே முகம் சுளித்துகொண்ட தன் படங்களைகூட:banghead: வினோத் சார் எவ்வளவு பெருந்தன்மையோடும் , நகைச்சுவையோடும் ஒரே வரியில் விமர்சிக்கிறார் பாருங்கள்
நவரத்தினம் - எங்கள் பொக்கிஷம் .
இன்று போல் என்றும் வாழ்க - வாழ்த்துவோம் .
மீனவநண்பன் - மக்களுக்காகவே வாழ்ந்தவர் .
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் - உலக மகா பேரழகன் .
நாம் நம் திரியில் இவ்வளவு கற்பனைதிறனுடனும் , உயர்வாகவும் எழுத வேண்டாம் , நன்றாக ஓடின படங்களை சரியாக ஆராயாமல் இவைகள் ஓடாத படம் என்று நாமே ஏன் முத்திரை குத்தவேண்டும் ? NT யின் படங்களில் பெரும்பான்மை தரமான , குடும்பத்துடன் பார்க்கும் படங்கள் - தமிழின் எழிலும் , அர்த்தமுள்ள பாடல்களும் நிறைந்துள்ள படங்கள் - இவைகள் அனைத்தும் கேவலம் 100 நாட்கள் என்ற ஒரு சின்ன இலக்கினில் கட்டு படுத்த முடியாது - காலங்கள் மாறலாம் , காட்சிகள் மாறலாம் , என்றும் மாறாமல் தமிழனைதலை நிமிர்த்தி நிக்க வைக்கும் படங்கள் - அவரின் படங்கள் ஓட்ட பட்டவைகள் அல்ல , இயற்கையாக ஓடினவைகள் - மக்கள் மனங்களில் இன்றும் ஓடி கொண்டிருக்கும் படங்கள் ! Tickets யை மொத்தமாக விலை பேசி வாங்கப்பட்ட படங்கள் அல்ல - black இல் விற்க பட்டு ஓடிய படங்கள் - கொஞ்சம் அதிக கவனம் எடுத்துக்கொண்டு , சற்றே ஆராயிந்து , இந்த திரியின் stalwarts இடம் விசாரித்துக்கொண்டு அல்லது பழைய பதிவுகளை பார்த்துவிட்டு வெற்றி தோல்விகளை குறுப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து - இங்கே திரியை எப்படியாவது ரொப்புவது என்பது நமது குறிக்கோள் இல்லை - ஒரு நாளில் ஒரே ஒரு பதிவை போட்டாலும் சற்றே homework செய்துவிட்டு பதிவுகளை போட்டால் , நாளை நம் ஒவ்வொரு பதிவும் சிறந்த ஆவணமாக மாறும் - நாம் எல்லோருமே பிறகு பம்மலார் தான் -----
eehaiupehazij
12th May 2014, 09:35 PM
dear ravi. I agree but sometimes we run out of memory. What I was told was that thirudan approached 100 days but due to NT vs NT inflow of movies, it could not touch that bench mark but it ran more than 100 days in Ceylone. I also browsed but could not get the correct hub indicator. It is between us within our thread only ravi. By the same token, in Koondukkili NT was the hero turned anti-hero and not a villain to anyone! He was a villain to himself in Uththamaputhiran, but an anti-hero in Andha Naal and Thirumbippaar. When he is the hub of the story why we should brand him as a villain to another actor whose screen presence was not at all felt!!
chinnakkannan
12th May 2014, 10:37 PM
சிரிப்பு பாதி அழுகை பாதி…
*
அத்தியாயம் எட்டு
*
அது ஒரு காலம்ங்க.. என்ன காலம்னாக்க….
*
அள்ளும் அழகுகள் ஆர்வத்தைத் தூண்டிடும்
துள்ளும் இளமையில் நான்..
*
ஆமாங்க ஃப்ளாஷ் பேக் தான்..
*
இடம்: துபாய்
*
வருடம் : பல வருடங்களுக்கு முன்..(ஹை சொல்ல மாட்டோம்ல)
*
வெங்க்கி கையைக் காலை ஆட்டி உரத்துப் பேசிக் கொண்டிருந்தான்.. இடம் எனது சகோதரியின் வீடு..அங்கு தான் நான் தங்கியிருந்தேன்..
*’
வெங்க்கி என் அலுவலக நண்பன். அவன் என்ன விஷயத்தை உரக்க ப் பேசிக்கொண்டிருந்தான் என்பதற்கு முன்..
*
துபாயில் வேலைக்குச் சேர்ந்த பொழுது..அங்கு ஒரு குணாதிசயம் கண்டேன்.. மலையாளம் பேசுபவர்கள் கூட மலையாளம் பேசுபவர்களைப் பார்த்தாலே முகத்தில் மலர்ச்சியுடன் பேசுவார்கள்..ஹிந்தி-ஹிந்தி, தெலுகு-தெலுகு, கன்னடா-கன்னடா எல்லாம் அப்படியே..ஆனால் தமிழ்..? நாம் தமிழன் என்று தெரியும் (அது தான் முகத்திலேயே இருக்குமே) அவரும் தமிழன் என்றால் கூட தமிழில் பேச மாட்டார்கள்..இது தான் பர்துபாயில் உள்ள கடைக்குப் போகும் வழியா.. என ஆங்கிலத்தில் கேட்டு நம்மிடம் பதில் வாங்கி சிரிக்காமல் போவார்கள்..(இது நிறைய தடவை – நிறைய நாடுகளில் எனக்கு ஏற்பட்டிருக்கிறது)
*
வெங்க்கியும் தமிழ் பேசுபவன் தான்..ஆனால் அவன் வேறு தமிழ்க்காரன்… நான் வேறு தமிழ்க்காரனாம்..அவனே சொல்வான்..
*
ஏனெனில் அவன் மும்பையில் பிறந்து வளர்ந்த தமிழ்ப்பையன் ( நார்த் இண்டியன் தமிழ்) நான் மதுரைக்காரன்..
*
இன்னொன்றும் உண்டு வார்த்தைக்கு வார்த்தை அந்தப் படங்கள் போல வராது…என்று அவனிடம் இருந்து பேச்சு வரும்..
*
அன்றும் அப்படித் தான்.. ஒரு படத்தைப் பற்றிப் பேச்சு வந்த போது- இதோட ஹிந்தி வெர்ஷன் ரொம்ப நல்லாருக்கும் தெரியுமா..சான்ஸே இல்லை..”
*
எனக்குள் மெளனமான கோபம் கொஞ்சம் பற்றிப் புகைய.. அவனைப் பேச விட்டேன்..
*
அவன் பேசி முடித்த பிறகு வாங்கி வைத்திருந்த பட கேசட் வீடியோவில் போட்டு செலக்டிவ்வாக சில காட்சிகள் காண்பித்தேன்..
*
பதில் வரவில்லை.. முகத்தில் கொஞ்சம் தோல்விக் களை..
*
லுக் இதோட ஹிந்தி வெர்ஷன் ஏப்ரல்ல அந்த வருஷத்துல வந்துச்சு..ஆறே மாசத்துல அக்டோபர்ல தமிழ் வெர்ஷன்..தீபாவளி ரிலீஸ்..பாட்டு, நடிப்பு எத வேணும்னாலும் சொல்லு..இது தான் பெஸ்ட்.. நீ தான் பார்த்தியே..
*
எதுக்கும் நான் முழுக்கப் பார்த்துட்டு தான் சொல்லுவேன்..
*’ஒழி” என கேஸட் எடுத்துக் கொடுக்க எடுத்துச் சென்று மறு நாள் மாலை திரும்பக் கொண்டுவந்தான்..
*
“நல்லாத் தான் இருக்கு.. ஹிந்திய விட..” எனத் திருப்பிக் கொடுத்தான்.. ஆனா எல்லாப் படத்தையும் இந்த மாதிரி சொல்ல முடியாது தெரியுமா..
*
காப்பி சாப்பிடறயாடா என்றேன் வாஞ்சையாய்.. சரி எனச் சொல்ல கிச்சனில் காப்பி சுடச்சுட கலந்து கொடுத்தேன்.. வாங்கிக் கொண்டு பருகியவன் முகம் சுளித்தான்..என்னடா இது..சர்க்கரை போடலையா..
*
பின்ன நேத்து நீ பேசின பேச்சுக்கு உப்புப் போட்டிருக்கணும்..என்று முறைத்துக் கலாய்த்தேன்..
*
அந்தப் படம் ந.தியின் சிறந்த படங்களில் ஒன்றான எங்கிருந்தோ வந்தாள்.. ஏ.சி.தி இயக்கம்.. ந.தி, ஜெயலலிதா, நாகேஷ், முத்துராமன், தேவிகா என்ற நடிப்புத் திறமைகளோடு அழகிய காலத்தால் மறக்கமுடியாத கண்ணதாசன் வரிகள் கொண்ட சிறந்த இசைகொண்ட பாடல்கள் கொண்ட படம்..ஹிந்தியில் கிலோனா என்ற பெயரில் எல்.விபிரசாத் தயாரிப்பில் சஞ்சீவ்குமார் மும்தாஜ் நடித்திருந்தார்கள்..
*
ந.தியின் காதலி மறைவினால் பைத்தியமாய் உருகும் நடிப்பை விட -காதல் கிளிகள் பறந்த காலம் கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும் என்ற வரிகளின் சோகம் திரையில் அழகாக மின்னியிருப்பதை விட
*
எனக்குப் பிடித்தது பைத்தியம் தெளிந்த பின் ஜெயலலிதாவிடம் பேசும் காட்சி
*
இந்தப் பணத்தைக் கொடுத்துட்டு வாங்கன்னு சொன்னாங்க” சொல்கையில் கண்கள் உதடு முகம் என மலர்ந்து சிரிப்பது மிக நன்றாக இருக்கும்..பதிலுக்கு ஜெயலலிதாவும் முகம் கண்கள் துடிக்க நடித்திருப்பார்..
*
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே யில் வரும் சிரிப்பை மறக்கமுடியுமா என்ன
*
நான் உன்னை அழைக்கவில்லை, காளிதாச மகாகவி காவியம் பாடல்களும் பிடிக்கும்..
*
தோழிகள் என்னும் மான்கள் நடுவிலே தூயமானெனப் பள்ளிகொண்டனள்..
அந்த மானை மறந்து போனவன் இந்த மான்மகள் அழகில் ஆழ்ந்தனன்.. ந.தியின் கம்பீரம்
*
துடிக்கின்ற சினமே துணையாய்க் கொண்ட துர்வாச முனிவன் தவமுடித்து கொடிக்கன்று நிற்கும் குடில் வந்தான்
குரல் தந்தான் யாரங்கே அங்கே யாரங்கே யாரங்கே
எந்த எண்ணம் உன்னைக் கொண்டதோ அதனை இன்று தீர்த்துவிடுகின்றேன்
அந்த ஞாபகம்மறந்து போவென இன்று சாபமிடுகின்றேன்..மறந்து போ துஷ்யந்தா இவளை மறந்து போ –
*
என கண்ணதாசனின் வரிகளில் சீர்காழி கோவிந்தராஜனின் கணீர்க் குரலில் அந்தப் பாடல்காட்சி மறக்குமா என்ன..அதைத் தொடர்ந்து ந.திக்கு சுய நினைவு வரும் காட்சி மிக நன்றாக இருக்கும்..
*
அச்சோ..கதையைப் பத்திச் சொல்லவே இல்லையே..எல்லாரும் சொல்லியிருப்பாங்க..ஆனா என் பங்குக்கு
*
நடனம் ஆடும் நங்கை அவள்..அவளிடம் பெரிய மனிதர் ஒருவர் தன் மகனின் பைத்தியத்தைக் குணப்படுத்த உதவச் சொல்கிறார்.. அங்கே பைத்தியமாக இருக்கும் மனிதர் – காதலி மறைவினால் பைத்தியமானவர்..கவிஞர் எனத் தெரிய வருகிறது..கொஞ்சம் கொஞ்சமாய் குணப்படுத்த முயலுகையில்…
*
இடி மழை இளமை தனிமை என இருந்த ஒரு நாளில் – என்ன தான் மன நிலை பாதிக்கப் பட்டவராய் இருந்தாலும் ஆண்மகன் தானே.. அந்த நங்கையிடம் பலத்தைக் காண்பிக்க- அடித்துத் தப்பிக்கலாம் என்றால் ஆயுதம் எதுவும் இல்லை..ஒரே ஒரு டார்ச் மட்டும் தான்..அதுவும் இசகுபிசகாக ஒரு நாற்காலியில் மாட்டிக்கொண்டுவிட..
*
பெண்மை களங்கப் பட்டு விடுகிறது..சொல்லிக் கொள்ளாமல் செல்லலாம் என்றால் குணசேகரனுக்கு உறுத்தல் அழுகை பாடல் எல்லாம் வர, மனம் மாறி திரும்ப வந்து கொஞ்சம் கொஞ்சமாய்த் தெளிவாக்க வைத்தால்..
*
யெஸ்.. சூரியன் மேற்கே உதித்தால் தான் சாத்தியம், அவனுக்கு சுயநினைவு வராது என்று சொன்னவர்கள் மத்தியில் சுயநினைவு வந்து விடுகிறது..பிறகென்ன..இருப்பது பெரிய அந்தஸ்தான குடும்பம்..அந்தப் பெரியவருக்கு கேவலம் நடன மங்கை தானே காசு கொடுத்து அனுப்பு என்று குண சேகரனிடமே சொல்ல- அவர் வந்து அந்த நங்கையிடம் சொல்ல அவளுக்குள் தவிப்பு..
*
நானா..இங்கிருந்தது இந்தப் பணத்திற்கா..இல்லை இல்லை..இந்தக் கவிஞனைத்தான் கண்ணுக்குள் வைக்க ஆசைப்பட்டேன்.. நெஞ்சுக்குள் வைத்துப் பூட்டி வைத்திருக்கிறேன்..இன்னும் என்ன.உடலையே தந்தும் விட்டேனே..என்னையா போகச் சொல்கிறீர்கள்..
*
குமுறிக் குமுறி க் கொந்தளித்து அவள் சொன்ன வார்த்தைகளை, பெண்மையின் தவிப்பை, புலம்பல்களை யாரும் புரிந்து கொள்ளவில்லை..கடைசியில் எல்லோருக்கும் புரிய வைக்கிறார் குணசேகரனின் தம்பி முத்துராமன்..பிறகென்ன.. ந.தியும் அவரை மணமுடிக்கிறார்..
*
நல்ல கதை..தீபாவளி முடிந்து சில நாட்களில் அன்னையுடன் விவரமறியா வயதில் ஸ்ரீதேவி தியேட்டரில் பின் சில பல தடவைகள் பார்த்திருக்கிறேன்.. ந.தியின் நடிப்புக்காக, பாடல்களுக்காக..
*
அழுகை எனப்படுவது ஏதென்றால் நெஞ்சம்
பழுதான போதில் வரும்
*
நெஞ்சம் எப்போது பழுது வரும்… துன்பத்தில்.. மீளாத் துயரில்…அப்போது என்னாகும்..கண்ணில் ஒரு காலத்தில் வைகையில் வந்த வெள்ளம் போல பெருக்கெடுத்து நீர் வரும்…
*
ஆனால் அப்படி வெள்ளமாகப் பெருக்காமல் ஆச்சர்யத்தில், அன்பை உணர்ந்த தவிப்பில் வரும் கண்ணீர் எப்படி இருக்கும்..
*
மெல்லச் சிரிப்பு வரும் – பின்னே
மேவி விழிகளினிடை
துள்ளித் துளிர்த்திடுமே ஒரு
சின்னத் துளியாக
*
அப்படி ஒரு துளி சொட்டுகண்ணீர் விடும் ந.தியின் இந்தக் காட்சி எனக்கு வெகுவாகப் பிடிக்கும்..படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் மின்னினாலும் ந.தி பாதிச் சந்திர வேஷம் ஏற்றிருப்பார்..(கண்டுபிடிச்சுட்டீங்களா)
**
ம்ம்.. ஆஃபீஸ் முடித்து வந்து இதை டைப்படிக்கிறேன்.. கொஞ்சம் காஃபி சாப்பிடலாம் போல இருக்கு..வர்றீங்களா :)
*
(தொடரும்)
Russellawz
13th May 2014, 07:43 AM
சின்னக்கண்ணன் அய்யா!
சிரத்தை எடுத்து 'எங்கிருந்தோ வந்தாள்' பதிவை அளித்துள்ளீர்கள். ரசித்'தேன்'.
இப்படத்தில் நடிகர் திலகம் நடிப்பை ஒரு பக்கம் விட்டுவிடுவோம். 'சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே' பாடலைப் பாருங்கள். அவர் குழந்தை போல அப்பாவியாய் மைசூர் பிருந்தாவனத்தில் ஜெயாவுடன் துள்ளி ஓடி ஆடும் காட்சி மகா ரம்மியம். அதுவும் கண்களில் ஒளி மின்ன அவர், கைகால்களை வெடுக்வெடுக்கென்று அசைத்து நடந்து வருவது கண்கொள்ளாக் காட்சி.
அதுமட்டுமல்ல.... உயர்கலைஞர் கமலஹாசன் அவர்கள் நடித்த 'சிப்பிக்குள் முத்து' படத்தில் துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா....என்றொரு பிரபலமான பாடல் உண்டு. கமல் அவர்கள் சிறு குழந்தை போல அப்பாவியாயான ரோலில் ஆடிவருவார்.
என்னவொரு ஆச்சர்யம்! கமல் இப்பாடலில் செய்யும் ஒவ்வொரு அசைவும் அப்படியே எங்கிருந்தோ வந்தாளில் நடிகர் திலகம் செய்யும் அசைவுகளை அச்சு அசலாக ஒத்திருக்கும். நான் தங்கள் பதிவைப் படித்து மேற்குறிப்பிட்ட இரண்டு பாடல்களையும் ஒளிக்காட்சிகளாகப் பார்த்தபோது என் ஆச்சர்யம் பலமடங்கு விரிந்தது.
இந்த யுகக்கலைஞர் செய்து காண்பிக்காத நடிப்பு என்று ஒன்று உலகத்தில் ஏதேனும் இருக்கிறதா? அவரை காப்பி அடிக்காத நடிகர்கள் எவரேனும் இருக்கத்தான் செய்கிறார்களா?
அப்பேற்பட்ட கலைஞரின் ஈடுசெய்யமுடியாத புகழ் என்ற வெண்கொடியின் மேல் வசூல், படம் ஓடிய நாட்கள் என்ற தேவையில்லாத சேற்றை நாம் யாரோ ஒருசிலருக்கு பதில் தருகிறோம் என்ற பெயரில்
வாரி இறைத்து வருவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இதையெல்லாம் தாண்டிய அற்புத புருஷர் அவர். கேவலம் வசூலும், ஓடிய நாட்களுமா அவருக்கு புகழை அளித்தது? அவர் திறமைகளைப் பற்றி எழுத எத்தனை யுகங்கள் ஆனாலும் போதாது. அதை விடுத்து சந்தனமான நாம் ஏன் சகதியோடு சேர வேண்டும்?
அவர் புகழைப் பாடுங்கள். அவர்தம் நடிப்பை போற்றி எழுதுங்கள். அவரது மனித நேயம் பற்றி எடுத்துரையுங்கள். இப்போது இரண்டு ஒளிக்காட்சிகளையும் பார்த்து நடிகர் திலகம் அனைத்திலும் முன்னோடி என்று அனைவருக்கும் உணர்த்துங்கள்.
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே...
http://www.youtube.com/watch?v=NSN1vlRGy6k&feature=player_detailpage
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா....
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=teVe7sqF8xk
eehaiupehazij
13th May 2014, 07:58 AM
அப்பேற்பட்ட கலைஞரின் ஈடுசெய்யமுடியாத புகழ் என்ற வெண்கொடியின் மேல் வசூல், படம் ஓடிய நாட்கள் என்ற தேவையில்லாத சேற்றை நாம் யாரோ ஒருசிலருக்கு பதில் தருகிறோம் என்ற பெயரில்
வாரி இறைத்து வருவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இதையெல்லாம் தாண்டிய அற்புத புருஷர் அவர். கேவலம் வசூலும், ஓடிய நாட்களுமா அவருக்கு புகழை அளித்தது? அவர் திறமைகளைப் பற்றி எழுத எத்தனை யுகங்கள் ஆனாலும் போதாது. அதை விடுத்து சந்தனமான நாம் ஏன் சகதியோடு சேர வேண்டும்?
well said ram doss aiyya! We just want to analyse the reasons for some of the classic NT movies as to why they could not make a mark of 100days within our thread. thats all. which one is sandal and which one is mud is not our problem. In my opinion, one who rises up to the occasion to retaliate false propaganda against NT will be a sandal and the silent spectator not to object will be a mud. we all do the service of propagating the name and fame of NT. This thread is a forum in which we discuss every bit of NT's achievements. the run of his films and collection status are merely for our own satisfaction
Thiru. Murali Sreenivas avargalin Sivajiyin Saadhanai sigarangalil 100 naatkalukku mel odiya padangal details tharappattulladhu. I only missed by oversight on thirudan's run.
chinnakkannan
13th May 2014, 10:24 AM
நன்றி ராம்தாஸ் ஐயா ..
*
adiram
13th May 2014, 10:32 AM
அப்பேற்பட்ட கலைஞரின் ஈடுசெய்யமுடியாத புகழ் என்ற வெண்கொடியின் மேல் வசூல், படம் ஓடிய நாட்கள் என்ற தேவையில்லாத சேற்றை நாம் யாரோ ஒருசிலருக்கு பதில் தருகிறோம் என்ற பெயரில்
வாரி இறைத்து வருவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இதையெல்லாம் தாண்டிய அற்புத புருஷர் அவர். கேவலம் வசூலும், ஓடிய நாட்களுமா அவருக்கு புகழை அளித்தது? அவர் திறமைகளைப் பற்றி எழுத எத்தனை யுகங்கள் ஆனாலும் போதாது. அதை விடுத்து சந்தனமான நாம் ஏன் சகதியோடு சேர வேண்டும்?
Sorry Ramadoss sir, I differ with you here.
Every one accepts that NT is the Greatest Actor, but they are PURPOSELY spreading a false propoganda that, NT did not achieved in Box-Office.
NT"S PERFORMANCE CANNOT BE HIDE BY ANYONE, BUT HIS BOX-OFFICE SUCCESS CAN BE HIDE BY THEM BY THIS KIND OF FALSE NEWS SPREADING, AND "THEY" ACHIEVED IN IT FOR LONG TIME AGO TILL NOW.
So it is our duty to prove NT's Box-Office also and we are proving with solid evidences. (not 'verum kaiyaal muzham poduvadhu').
eehaiupehazij
13th May 2014, 11:19 AM
Dear Adiram. I am in line with you. We know that we have a very sound and authentic data base on NTs achievements and box office records and we never try to exaggerate. A completely updated version of NTs film runs and box office collections, if I remember correct, were provided by Pammalar sir, Prabhuram sir and other eminent NT hubbers when I entered NT thread. Now I am unable to locate it correctly. As you feel, we now need Pammalar and Prabhuram and the likes. Pammalar and Prabhuram sirs. Kindly make a come back.
Russellbpw
13th May 2014, 10:50 PM
Sorry Ramadoss sir, I differ with you here.
Every one accepts that NT is the Greatest Actor, but they are PURPOSELY spreading a false propoganda that, NT did not achieved in Box-Office.
NT"S PERFORMANCE CANNOT BE HIDE BY ANYONE, BUT HIS BOX-OFFICE SUCCESS CAN BE HIDE BY THEM BY THIS KIND OF FALSE NEWS SPREADING, AND "THEY" ACHIEVED IN IT FOR LONG TIME AGO TILL NOW.
So it is our duty to prove NT's Box-Office also and we are proving with solid evidences. (not 'verum kaiyaal muzham poduvadhu').
புளுகு மூட்டயிலிரிந்து அவிழ்த்துவிடப்பட்ட ஒரு ஓலக்குரல்
அவர்கள் பாஷையில் தூசு தட்டி நவீனபடுதி வெளியிட்டு மாபெரும் இமாலய வெற்றி பெற்ற கர்ணன் காவியம். முதல் வெளியீட்டில் 12 திரை அரங்கில்தான் 50 நாள் ஓடியதாம். மற்றும் சாந்தி, மதுரை தங்கம் மட்டும் 100 நாள் ஓடியதாம். எப்படி இருக்கிறது ஒலகுரலில் ஊளையிட்ட கப்சா செய்தி ?
இவர்களுக்கு பத்திரிகை விற்பனை மிக அதிக விளம்பரமே நம் நடிகர் திலகத்தை வசைபாடுவதால் தான் .
இந்த திரியை படிக்கும் பொதுமக்கள் அறிவது !
கர்ணன் காவியம் (14-1-64)முதல் வெளியீட்டில் 21 திரை அரங்கில் 79 நாட்களை கடந்தபோது ஏற்கனவே AVM மெய்யப்பன் அவர்கள் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடிகர் திலகம் நடிப்பில் பீம்சிங் இயக்கத்தில் (3-04-64) மற்றும் ஒரு மெகா வெற்றி சித்திரம் பச்சை விளக்கு திரைப்படம் அந்த 21 திரை அரங்கில் 17 திரை அரங்கில் வெளியிடப்பட்டது.
மீதம் உள்ளம் 4 திரை அரங்குதான் சாந்தி, பிரபாத், சயானி மற்றும் 2538 இருக்கைகள் கொண்ட மதுரை தங்கம்.
ஆக, கர்ணன் திரைப்படம் 17 திரை அரங்குகளில் more than 11 வாரம் (80 days )
4 திரை அரங்குகளில் முறையே ( 100,100,100,108) நாட்கள் ஓடி மாபெரும் வெற்றிபெற்றது. திரையிட்ட அனைத்து திரை அரங்கிலும் 50 நாட்கள் ஓடியது நமது கர்ணன் மட்டுமே !
ஆனால் இவர்கள் மாயை ஏற்படுத்தியிருக்கும் படமோ பெரிய வெள்ளிவிழா ஓடியதை போல மாயபிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.
அந்த திரைப்படமும் நான்கு திரை அரங்கில் ( 100,100,100, 104) நாட்கள் தான் ஓடியுள்ளது. இன்னும் சொல்லப்போனால் COMPARED TO KARNAN, 4 நாட்கள் குறைவாகதான் ஓடியுள்ளது.
ஆனால் எத்துனை திரை அரங்கில் 12 வாரம் ஓடியது என்பதை பார்த்தால் நம்மில் கால் வாசி கூட இல்லை என்பது தான் உண்மை. !
கர்ணன் திரைக்காவியம் ஒரு பைசா நஷ்டம் கூட பந்துலுவுக்கு ஏற்படுத்தாமல் நல்ல முறையில் காப்பாற்றிய செய்தி அப்போதைய நாளிதழலில் கேள்வி பதிலாக வந்துள்ளது. மேலும் கர்ணனின் வெற்றி விழா அனைவராலும் கொண்டாடபட்டதும் நாளிதழில் வந்துள்ளது.
அந்த ORIGINAL ஆதாரம், ஆவணம் பொதுமக்கள் பார்வைக்கு. காரணம் இனியும் ஊளையிடும் அந்த ஓலக்குரல் பதிவுகளை, புத்தகத்தை பார்க்கும் சந்தர்ப்பம் நேரும் அப்போது நீங்கள் அனைவரும் நடிகர் திலகத்தை தூற்றும் அந்த செய்தி துளிகூட உண்மை இல்லாதது மேலும் ஒரு கேவலமான தாழ்புணர்ச்சி கொண்ட செயல் என்று உன்ர்வதர்க்க்காகவே இந்த பதிவு. ....எத்துனை முறை ஒலகுரலால் ஊளையிட்டாலும் பொய் உண்மை ஆகிவிடாது என்பதை இனியாவது உணர்ந்துகொள்ளட்டும் !
கர்ணன் பந்துலுவை காப்பாற்றிவிட்டான் ! - திரை உலகில் அனைவரும் பேச்சு !
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5834-1_zpsd4396e9e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5834-1_zpsd4396e9e.jpg.html)
கர்ணன் காவியம் 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது மட்டும் அல்லாமல் ஜானதிபதி பரிசும் பெற்றது. அதற்காக வெற்றி விழாவும் நடத்தப்பட்டு உள்ளது.
பந்துலுவுக்கு கர்ணன் மூலம் இவர்கள் பொய் உரைப்பதை போல நஷ்டம் வந்திருந்தால், உண்மையாக ஏற்பட்டிருந்தால், நிச்சயமாக விழா நடத்தி இருக்க மாட்டார். !
இதிலிரிந்தே இந்த கனவான் பொய் செய்தி வயிதெரிசலால் வெளியிட்டு உள்ளார் என்பது பொதுமக்களுக்கு விளங்கும் !
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5836-1_zps2a004e49.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5836-1_zps2a004e49.jpg.html)
இந்த ரிலீஸ் புள்ளி விவரம் நாம் சொன்னால் உடனயே ஒரு நாலு பக்கத்திற்கு மறு வெளியீடு என்று ஒரு மளிகை லிஸ்ட் போடுவார்கள், நாம் மறுவெளியீடு பற்றி துளி கூட அக்கறை காட்டாதவர்கள் என்பதை நன்கு தெரிந்தும் !
அடுத்தது இரண்டு படங்களின் வசூல் :
அதாவது இவர்கள் படம் முதல் சுற்றில் 20 லட்சம் வசூலாம் !
நமது படம் 15 லட்சம் வசூலாம்.
என்னமோ இவர்தான் அந்த பட கம்பனியின் ஆடிடர். இவர்தான் அந்த ப்ராஜெக்ட் Balancesheet தயாரித்தவர் போல !
கர்ணன் தயாரிப்பு செலவு compared with இவர்களுடைய film வசூல். இப்படி ஒரு கேவலமான முட்டாள்தனமான ஒரு ஒப்பீடு..! Is there any Logic in this comparison ?
If this is the case, we can also say, Karnan has collected phenomenal revenue when compared to the Total cost of production of their film.
ஒரு செட்டுக்குள் மட்டுமே படத்தை எடுத்தால் என்ன பெரிய செலவு ஆகிவிடும் ? They don't even understand the way costing is arrived. Had they understood, such lousy comparison would never occur.
அதே சமயத்தில் இந்திய ராணுவம் காலாட்படை, CAVALRY பயன்படுத்தி, குருக்ஷேத்ரம் முதலிய இடங்களில் படபிடிப்பு நடத்தினால் என்ன செலவாகும் ?
இதை கூட யோசிக்கயில்லை ...ஆனால் வீம்புகேன்று எழுதுவது !
இன்னொன்று கர்ணன் மற்றும் பல படங்களில் பந்துலு அடைந்த நஷ்டத்தை their ONE SINGLE MOVIE released in 1965 மீட்டுகொடுத்து பந்துலுவை மீண்டும் கோடீஸ்வரனாக்கியது போல ஒரு புளுகு செய்தி வேறு !!! Come on ! Guys ! Please be wise enough to make decent comparison. Not all the people are fools to accept your PEELA !
யாரிடம் உங்கள் புளுகள் ?
First of all, the 1965 Bandhulu film WAS NEVER DECLARED A BLOCK BUSTER. Its another 100 days movie that ran in 3 or 4 theaters that's all !
அந்த சமயத்தில் வெளிவந்த நடிகர் திலகத்தின் திருவிளையாடல் வசூலில் அப்படி ஒரு வசூல் புரட்சி செய்ததை உலகறியும் !
Let the gentleman learn to publish unbiased statistics first keeping aside his personal like and dislikes !
நம் முதுகை தேவையில்லாமல் சொரிந்துகொண்டிருக்கும் இவர் லட்சணத்தை பாருங்கள் ! இவர்கள் பதிவிட்டிருக்கும் அந்த போஸ்டர் பாருங்கள். அதில் அந்த திரைப்படத்தின் 100 நாட்கள் விளம்பரம் 100வது நாள் என்று இவர்களால் திருத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆவணம் ! அதை பதித்து இருப்பார்கள்.
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps90c17bc3.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps90c17bc3.jpg.html)
தியேட்டர் பெயர் கூட குறிபிடாமல் பந்துலு அவர்கள் வெளியிட்ட ORIGINAL 100 நாட்கள் உண்மையான விளம்பரம் நாம் அனைவரும் பார்திரிகிறோம். இவ்வளவு ஏன் மதிப்பிற்குரிய மக்கள் திலகம் அவர்களின் நடுநிலையான உண்மையான பக்தர்கள் நிச்சயம் நாம் பார்த்த அதே விளம்பரத்தை பார்த்திருப்பார்கள் !
இப்படி பொய் ஆவணம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும் இந்த கனவான் , நடிகர் திலகம் பற்றி எழுதும் அனைத்து தகவல்களும் இது போல போலியானவையாக தான் எக்காலத்திலும் இருக்கும் என்று இதை படிக்கும் மக்கள் உணரவேண்டும், புரிந்துகொள்ளவேண்டும். !
eehaiupehazij
14th May 2014, 12:01 AM
Comparison of the other movie with Karnan itself is a parody! While Karnan remains an immortal epic time tested and evergreen in the minds of people, the other movie a loose adaptation of Errol Flynn's Captain Blood is an ordinary movie with its concept and contents having become outdated and obsolete! Karnan and VPKB are movies that had brought many laurels to Pandhulu family while the other movie was just a seasonal entertainer that could not stand with time and has succumbed to natural mortality. Everyone now knows that the other movie's fate is just as proved by its disappearance from almost all theatres all over tamilnadu where it got released ( in more theatres than Karnan in a greedy way to 'mint' money but miserably failed to pull crowd to theatres! ). Now it has been destined to make an Artificial Ottam even to cross 2 weeks with regular shows and to somehow manage with a single show upto 50 days only in two theaters! What collection it could have made, compared to the thunderous reception to Karnan in its rerun? Avargal Baashaiyil solvadhendral 'Unmai Unarum Neramidhu'! In their own description the other movie is a 'titanic' that sinks and stinks!!
Pandhulu changed camp for the sheer reason of not announcing his movie as NTs 100th movie. Naturally that situation was properly en-cashed by the rivals. If he has suffered losses immediately after Karnan he should have done that?! Why he again teamed up with NT for Muradan Muthu? And the other movie as tomtommed was not a big hit since it could not surpass Karnan by run or collections even at that time of its maiden release. If it had poured money to Pandhulu it should have been a silver jubilee hit! 'Pulivaal pidiththa' Pandhulu's further sufferings are also known to this world. His laughable adaptation 007Bond flicks as 115 upto MMSPandian!! Pandhulu's reputation has been upheld by NT movies VPKB, Karnan and Kappalottiya thamizhan and not by the other actor's movies. Once again Karnan in its graceful rerun saved Pandhulu's name but the other movie.....sorry....NT avargalai degrade seivadendral varindhu kattikkondu kalaththil irangum nermaiyatra intha paththirikkai yen indha tholviyai padhivu seiyyavillai?
Russellbpw
14th May 2014, 12:13 AM
FOR ANY TRUE TAMILIAN -
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps6aa8c745.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps6aa8c745.jpg.html)
Subramaniam Ramajayam
14th May 2014, 07:47 AM
AO DEFINITELY NOT A VERY BIG HIT AT THE TIME OF RELEASE just a 1oodays movie in madras in three theatres only distributed by sri gajalami pictures /owners of prabhath-saraswathi theatres madras. upcourse it was epected somuch like EV PILLAI but not succeeded very well as epected because THIRUVILAIYADAL whicch was not epected to be a big hit turned the tables and went for silver jubliee most successfully, a well known fact known to everyone.
uvausan
14th May 2014, 01:35 PM
பழைய நினைவலைகளுக்குள் சற்றே உலாவி வரும் வேளையில் கிடைத்த சில சுவடுகளை இங்கே பதிவிடுவதில் பெருமை படுகிறேன் --
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Image0002_zps1de6179c.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Image0002_zps1de6179c.jpg.html)
uvausan
14th May 2014, 01:36 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Image0005_zpsfed36283.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Image0005_zpsfed36283.jpg.html)
uvausan
14th May 2014, 01:37 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Image0001_zps743e32ac.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Image0001_zps743e32ac.jpg.html)
uvausan
14th May 2014, 01:39 PM
உண்மையாகவே கழுத்தை நெரிதிருக்க வேண்டிய நபருடன் NT
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Image0004_zpse16c9823.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Image0004_zpse16c9823.jpg.html)
uvausan
14th May 2014, 03:00 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Image0003_zps2b7257d9.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Image0003_zps2b7257d9.jpg.html)
KCSHEKAR
14th May 2014, 03:20 PM
எழுத்தாளர், பத்திரிகையாளர் திரு.சுதாங்கன் அவர்கள் நெல்லை தினமலரில் நடிகர்த்திலகத்தைப் பற்றி செல்லுலாய்டு சோழன் என்ற தலைப்பில் எழுதிய தொடரில் சில பகுதிகள்.
செலுலாய்ட் சோழன் – 4
சுதாங்கன்
தமிழரசுக் கட்சியின் தலைவர் மறைந்த ம.பொ.சி.
`வீரபாண்டிய கட்டபொம்மன்’, கப்பலோட்டிய தமிழன்’ படங்களை த்யாரித்து, இயக்கிய பி.ஆர்.பந்துலு.
வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்திற்கு வசனம் எழதிய `சக்தி’ கிருஷ்ணசாமி.
`கப்பலோட்டிய தமிழன்’ படத்திற்கு வசனம் எழதிய கவிஞர் எஸ்.டி.சுந்தரம்
செலுலாய்ட் சோழனான சிவாஜி கணேசன்
இவர்களுக்கு நெல்லைக்காரர்களாகிய நாம் நன்றி கடன் பட்டிருக்கிறோம்.
ஒரு சோழனைப் பற்றி சொல்லும்போது, அந்த மன்னனைப் பற்றி மட்டும் சொல்லிக்கொண்டு போனால் அது ஒரு தனிநபரின மீதான துதியாகிவிடும்.
அந்த சோழன் ஆண்ட காலத்தில் அந்த நாட்டின் நிர்வாகம், மக்கள் நல்வாழ்வு, செல்வச் செழிப்பு, விவசாயம், நீர் நிர்வாகம், கலை, சமயம், இலக்கியம், மொழி வளர்ச்சி போன்ற பல விஷயங்களைச் சொன்னால்தான், அந்த சோழ மன்னனின் பெருமை மக்களுக்குப் புரியும்.
அதே போல்தான் சிவாஜி கணேசன் என்கிற செலுலாய்ட் சோழனைப் பர்றி சொல்லும்போது, அவர் காலத்திய திரைப்படம், அது எடுக்கப்பட்ட சூழல், அவருடன் ஒத்துழைத்தவர்கள், ஒரு குறிப்பிட்ட படம் வந்த காலம் எல்லாவற்றையும் சேர்ந்து பதிவு செய்தால்தான் செலுலாய்ட் சோழனின் பெருமையை முழவதுமாகப் புரியும்.
கொஞ்சம் வரலாற்றின் பக்கமும் போவோம். காரணம் கட்டபொம்மனும், கப்பலோட்டிய தமிழனும் வரலாற்று நாயகர்கள்தானே.
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது, திமுகவினர் ` வடக்கு வாழ்க்றது; தெற்கு தேய்கிறது’ என்பார்கள்.
`தெற்கு இந்தியாவில் எப்போது தேயத் துவங்கியது.? இந்திய சுதந்திரமடைந்தவுடனேயே தெற்கு தேயத் துவங்கிவிட்டது.
இதற்கு என்ன ஆதாரம் ?
பிரிட்டிஷாருக்கு எதிரான இந்திய விடுதலைப் போராட்டம் எப்போது ஆரம்பமானது ? இது குறித்து வரலாற்று ஆசிரியர்களுக்குள் ஏக போராட்டம்.
எல்லோருமே 1857ல் வடக்கே நடந்த சிப்பாய் புரட்சிதான் இந்திய சுதந்திரத்திற்கான முதல் போராட்டம் என்று வீரசவர்க்கார் தனது `1857’ என்கிற நூலில் அழத்தந்திருத்தமாகச் சொல்கிறார்.
மற்றொரு தேசியத் தலைவரான அசோக் மேத்தாவும், இதையே உறுதிபடுத்துகிரார்.
இவர்கள் சொன்னதையே அன்றைக்கு ஆட்சியிலிருந்தவர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.
அப்போது மத்திய அரசால், டாக்டர் எச்.ராதாகிருஷ்ணன் தலைமையில் விடுதலைப் போராட்ட வரலாற்றுக் குழ ஒன்று அமைக்கப்பட்டது.இந்தக் குழுவும் ` 1857ல் நடந்த சிப்பாய் புரட்சியிலிருந்து விடுதலைப் போர் வரலாறு எழதப்படும்’ என்று அறிவித்தது.
இந்தச் செய்தி வெளியானதும், தமிழரசுக் கட்சியின் தலைவர் ம.பொ.சி ஒரு வேண்டுகோள் விடுத்தார் `வீரபாண்டிய கட்டபொம்மன் நடத்திய பாஞ்சைப் புரட்சியிலிருந்து எழதப்பட வேண்டுமென்றார்’
`கட்டபொம்மன் பற்றிய குறிப்பும் இடம் பெறும்’ என்று பதில் வந்தது.
`சிப்பாய் புரட்சி’தான் இந்திய விடுதலைப் போரின் துவக்கம் என்ற மத்திய அரசின் முடிவை கேரள, கர்நாடக மாநில அரசுகளும் ஏற்க மறுத்துள்ளன.
கர்நாடக அரசு `விடுதலைப் போரில் கர்நாடகம்’ என்ற நூலில்
`1857க்கு முன்பே இந்திய விடுதலைப் போர் தொடங்கிவிட்டதென்ற உண்மையை இந்த நூல் எடுத்துக் காட்டும்.1857க்கு முன்னர் ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்திலேயே ஐதர் அலி தொடங்கி திப்பு சுல்தான், கிட்டூர் சென்னம்மாள் பொன்ற வீரர்கள் செய்த புரட்சிப் போராட்டங்கள்தான் 1857ல் நடந்த புரட்சிக்கு வித்திட்டது’’
1824ல் கிட்டூர் சென்னம்மாள் நடத்திய போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஜான்சி ராணிக்கு ஒரு தலைமுறைக்கு முன்பாகக் கிட்டூர் ராணி சென்னம்மா ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடி இந்தியாவிலேயே முதல் புரட்சியாளராக விளங்கினார்.
வரலாற்றாசிரியர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கர்நாடகத்தின் பங்கை சரியாகச் சொல்லவில்லை.
கிட்டூர் சென்னம்மாள் 1824ல் பிரிட்டிஷாருக்கெதிராக தோற்றுவித்த புரட்சிக்குக் கால் நூற்றாண்டுகளுக்கு முன்பே தென் தமிழ்நாட்டுப் பாஞ்சாலங்குறிச்சியில் நடந்த வீரப் புரட்சியையும் ` விடுதலைப் போரில் கர்நாடகம்’ என்னும் நூல் எடுத்துக் காட்டுகிறது.
`ராயண்ணா பிடிபட்டதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்னதாக தமிழகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றொரு சிற்றரசனின் துரோகத்தால் சிறைபிடிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டான் அவன், ` பிச்சையெடுத்தாலும் எடுப்பேனேயன்றி,ஆங்கிலேயருக்கு அடிபணிய மாட்டேன் என்று முழங்கி இந்த மாவீரன் மிகக் கேவலமான முறையில் காட்டிக் கொடுக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டான்.
``தூக்கு மேடைக்கு கொண்டு போகப்பட்ட பிறகும் கூட, தன் வீரத்தையும், சுதந்திர உணர்ச்சியையும் விட்டானில்லை. தூக்குக் கயிற்றை தானே வாங்கி தன் கழத்தில் மாட்டிக் கொண்டு இறந்தான். இந்த வீரத்திற்கு இணை கிடையாது’ என்கிறது இந்த நூல்.
இந்த நூலை வெளியானது 1962ம் வருடம். வெளியிட்டது கர்நாடக அரசு. அப்போது அங்கு ஆட்சியில் இருந்தது காங்கிரஸ்.
1962ல் ` விடுதலை போரில் கேரளம்’ என்கிற நூலை கேரள காங்கிரஸ் அரசு வெளியிட்டது அந்த நூலிலும் சிப்பாய் புரட்சிதான் விடுதலைப் போருக்கு ஆரம்பம் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அந்த நூலில்
` இந்தியாவில் வேறு பகுதிகளை விடவும் கேரளாவில்தான் முதல் முதலில் தேசிய எழச்சியும், முற்போக்குக் கருத்துக்களும், சமுதாய உணர்வுகளும் ஏற்பட்டன. பிரிட்டிஷாரை எதிர்த்தவர்களில் முக்கியமானவர்கள் திருவதாங்கூரைச் சேர்ந்த வேலுத்தம்பி, கொச்சியைச் சேர்ந்த பலியத் அச்சன், மலபாரை சேர்ந்த பழாசி ராஜா ஆகியோர் முக்கியமானவர்கள்.
இப்படி எதிர்ப்பாளர்களில் முதலிடம் பெற்றஃ வேலுத்தம்பியின் போராட்டம் 1806ல் திருவதாங்கூர் சமஸ்தானத்தில் நடந்தது. அதற்கும் முற்பட்டது , தமிழ்நாட்டில் வீரபாண்டிய கட்டபொம்மன் நடத்திய விடுதலைப் போர் !
ஆனால், கர்நாடக, கேரள அர்சுகள் அதிகாரபூர்வமாக அரசு சார்பாக தங்கள் நாட்டு விடுதலை புரட்சியாளர்களை நூல வாயிலாக அங்கீகரித்தது.
ஆனால் அப்போது இங்கே ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு கட்டபொம்மனையோ, அதற்குப் பிறகு வந்த கப்பலோட்டிய தமிழரின் தியாகத்தையோ பதிவு செய்யவில்லை.
அதை முதலில் செய்தவர் தமிழரசுக் கட்சித்தலைவர் ம.பொ.சிதான்.
இந்த தகவல்களையெல்லாம் அவர் தன்னுடைய இரண்டு பகுதி நூலான `விடுதலைப் போரில் தமிழகம்’ புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த நூல் வெளியானது, 1980ம் ஆண்டு.
ஆனால், 1792ல் தொடங்கி, ஒன்பது ஆண்டுகள் பாஞ்சாலப் போர்தான் இந்திய சுதந்திர போரில் முதல் நிகழ்ச்சி என்று ம.பொ.சி பல ஆண்டுகளாக பிரகடனப்படுத்தி வந்தார். தமிழகத்தின் தென்பகுதிகளில் கம்பளத்தூர் கூத்து நடைபெரு. கம்பளத்தார் கூத்து என்பது கட்டபொம்மனின் கதைதான். காரணம் கட்டபொம்மன் கம்பளத்து நாய்க்கர்.
`அந்நியரின் ஆதிக்கத்தால் அடிமைப்பட்டுக்கிடந்த பாரதத்தில் சுதந்திர போரை முதன் முதலில் துவக்கிய பெருமை தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தையே சாரும்’ என்கிறார் `நெல்லை மாவட்ட சுதந்திர போராட்ட வரலாறு’ நுல் ஆசிரியர் ந. சோமயாஜூலு.
(தொடரும்)
KCSHEKAR
14th May 2014, 03:21 PM
செலுலாய்ட் சோழன் 7
சுதாங்கன்
வெள்ளைக்கார போலீஸ்காரன் அடித்ததால், சிவாஜியின் தந்தையாருக்கு காதே சரியாக கேட்க முடியாத நிலை ஏற்பட்டது.
ஆனால் அவரது மகன் சிவாஜி கணேசனின் மனதில் தேசப்பற்று ஊறிப்போனதற்கு அதுவே காரணமாக இருந்தது.சமூகப்படங்களின் அவர் நடிக்கும்போதை விட, அவர் இதிகாச, புராண, சரித்திர, தேசபக்தி படங்களில் நடிக்கும்போது, அவருக்குள் அந்தப் பாத்திரமே கூடுவிட்டு கூடு பாய்ந்து அமர்ந்ததை போல் ஆகிவிடுவார்.
அதனால்தான் கப்பலோட்டிய தமிழம் படம் பார்க்கும்போது, அவரை நாம் வ.உ.சி.யாகவே கண்டோம்.
அந்தப் படத்தை பொறுத்தவரையில், அது வெளியான காலத்தில் அந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் எங்களைப் போன்ற அன்றைய சிறுவர்களின் மனதில் அந்த கதாபாத்திரம் நிரந்தரமாக அமர்ந்து கொண்டது.
இந்தியா சுதந்திரம் அடைந்து பதினைந்து ஆண்டுகளுக்குள் வந்த படம் கப்பலோட்டிய தமிழன். ஆனால் துரதிருஷ்டம் என்னவென்றால், அதற்குள்ளாகவே நமக்கு சுதந்திர சந்தோஷம் மறந்துவிட்டது.
தமிழகத்தின் தென்கோடி தூத்துக்குடியிலிருந்து ஒருவர் சுதேசி கப்பல் விட்டிருக்கிறாரே என்கிற சந்தோஷத்தில் கூட அந்த படத்தை பலர் பார்க்கவில்லை.
சிவாஜியே தன் சுயசரிதையில் இதைப் பற்றி வருத்தப்பட்டிருக்கிறார்.
நான் ஒரு தேசியவாதியின் மகன். சிறு வயது முதலே எனக்குள் தேச பக்தியும், தேசியமும் இருந்தது.அதனால் வ.உ.சி. யின் பாத்திரத்தில் `கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் வேடத்தை நன்றாகவே செய்ய முடிந்தது.
நமது தமிழ்நாட்டில் தேசியப் படங்கள் நிறைய எடுத்துள்ளார்கள். அதில் ஏறக்குறைய பல படங்களில் நான் நடித்திருக்கிறேன்.இந்தப் படங்களை குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற தேசியத் திருநாள் வரும்போதெல்லாம் திரையிலும், டி.வியிலும் போடுவார்கள்.
என்னைப் பிடிக்கிறதோ இல்லையோ, என் படங்களைத்தான் போடுவார்கள். இப்போது கப்பலோட்டிய தமிழன் நம்மிடையே இல்லை. ஆனால் அவர்களுடைய வாரிசுகள் இருக்கிறார்கள். கப்பலோட்டிய தமிழனின் பெரிய மகனுக்காக நான் தேர்தல் கூட்டங்களுக்குச் சென்று பேசியிருக்கிறேன்.
மேடையில் அழதிருக்கிறேன். `கப்பலோட்டிய தமிழனின் மகனுக்காக சிபாரிசு செய்ய வேண்டிய நிலை உள்ளதே ! அவருக்கு யார் சிபாரிசும் இல்லாமல் நீங்களாக அல்லவா ஒட்டுப் போட வேண்டும்’ என்று பேசியிருக்கிறேன்.
வ.உ.சி. அவர்களின் மகன், சுப்ரமணியன கப்பலோட்டிய தமிழன் படத்தைப் பார்த்துவிட்டு, `` ஆஹா ! எனது தகப்பனார் மாதிரி அப்படியே இருக்கீறீர்களே’ என்றார்.
எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும். ஆனால், கப்பலோட்டிய தமிழன் படம் ஒடவில்லை. ஏனென்றால், வ.உ.சி. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். ஆகவே, அந்தப் படத்தை பார்த்து உண்மையான தேசபக்தி வந்துவிடக் கூடாதே என்று சில பேர் நினைத்தனர். அப்போது திமுக கட்சி வளர்ந்து கொண்டிருந்தது.
எனவே எதிர்க் கட்சிக்காரர்கள், வ.உ.சி காங்கிரச்காரர். ஆகவே இது காங்கிரச் படம் என்று மக்களிடையே எண்ணங்களை வளர்த்துவிட்டார்கள். அப்போது, திமுகவை நோக்கி பலர் படையெடுத்துக் கொண்டிருந்த நேரம். அதே திமுக கட்சியைச் சேர்ந்த பிள்ளைகள் கொஞ்சம் வயதானவுடன் `கப்பலோட்டிய தமிழன்’ படத்தைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். காரணம் ஒரு நல்ல படத்தைப் பார்க்க தவறிவிட்டோமே என்று அப்போது நினைத்தார்கள். கப்பலோட்டிய தமிழன் படத்தை வெளியிட்ட போது ஏழு லட்ச ரூபாய் நஷ்டம்.
திமுகவிற்கும் காங்கிரஸிற்கும் உள்ள ஒரு வித்யாசத்தை கூறுகிறேன். கலையைப் பற்றி காங்கிரஸ்காரர்களுக்கு கவலையில்லை. சிவாஜி நல்ல கலைஞர், பல படங்களில் நடித்திருக்கிறார். தேசியம் பேசியிருக்கிறார் என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள்.
ஆனால், திமுக காரர்கள் அப்படியல்ல. அவர்கள் கலையை வைத்தே கட்சியை பெரிதாக்கிக் கொண்டார்கள். காங்கிரஸ்காரர்கள் கலையைப் பொருட்படுத்தவில்லை. ஆகையால், அவர்களால் அவர்களுக்காகவே எடுக்கப்பட்ட கப்பலோட்டிய தமிழன் என்ற படம் தோல்வியடைந்துவிட்டது.
`தேச பகதர்களை பற்றி படம் எடுத்ததால் நஷ்டப்பட்டு விட்டோமே’ என்று சம்மந்தப்பட்டவர்கள் கவலைப்படவில்லை. அந்த தேச பகதர்களை மக்கள் நினைவுக்கு கொண்டு வந்தோமே. என்று மகிழ்ந்தார்கள். அவர்களை நினைவு கூறும்போது என்னையும் மறக்காமல் இருக்கிறார்கள். ‘ என்கிறார் சிவாஜி கணேசன்.
அது சரி, திமுக கலையால் தன்னை வளர்த்துக்கொண்டது. ஆனால் சிவாஜியும் அவர்களோடு சேர்ந்திருந்திருக்க வேண்டியது தானே ? என்ற படிக்கிற இன்றைய தலைமுறைக்கு வரலாம்.
சிவாஜிக்கு நடிப்பை தவிர, வேறு எதுவும் தெரியாது. அவருக்கு தான் நடிக்கும் பாத்திரம் மட்டுமே முக்கியம். கட்சி என்பது அவருக்கு இரண்டாம் பட்சம்தான்.
கட்சிக்கு அவர் போனது தற்செயல். அதையும் கொஞ்சம் தெரிந்து கொண்டால் தான் சிவாஜி என்கிற செலுலாய்ட் சோழன் எப்படி கலைக்காகவே வாழ்ந்தார் என்பது புரியும்.
வரப் போகும் விஷயங்களும் சிவாஜியே தனிப்பட்ட முறையில் என்னிடமும், சில பேட்டிகளிலும், அவருடைய சுயசரிதையிலும் சொன்னதுதான்
திராவிடக் கழகத்திலோ, முன்னேற்றக் கழகத்திலோ எந்தக் காலத்திலும் சந்தா கட்டி, அவர் உறுப்பினராக இருந்ததில்லை. பெரியார், அண்ணா கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர். ஆகையால் அதற்காக பிரசாரம் செய்தார். அந்தக் கட்சியின் கொள்கைகளை ஒப்புக்கொண்டாரே தவிர, கட்சியில் உறுப்பினராக இருந்ததில்லை. அவரது குடும்பம் தேச பக்தி உள்ள குடும்பம். அதோடு அந்த குடும்பம் இந்து தர்மத்தை கடைப் பிடித்த வந்த குடும்பம். அவர் குடும்பத்தில் எல்லோருமே பக்தி மிகுந்தவர்கள். இதை சிவாஜி என்றைக்கும் உதறித் தள்ளிவிடவில்லை. சில பகுத்தறிவுக் கொள்கைகளில் அவருக்கு உடன்பாடிருந்தது.அந்தக் கருத்துக்களை படங்களின் மூலமாக சொன்னார்.
இதற்கு உதாரணமாக ஒரு முக்கிய உதாரணத்தை சொல்ல வேண்டு. என் தாத்தா பி.ஸ்ரீ. 1930 களிலேயே ஆனந்த விகடனில் கம்ப சித்திரம் எழதியவர். அதைத் தொடர்ந்து சிவனடியார்களைப் பற்றி சிவநேசச் செல்வர்கள் என்ற தொடரையும் எழதிய, ஒரு ஆன்மீக எழத்தாளர். வைண, சைவ இலக்கியங்களில் ஆழ்ந்த பற்றும் அக்கறையும் கொண்டு எழதியவர்.
அவர் தன்னுடைய ஒரு நூலில், `இராஜாஜியின் சமயத் தொண்டும், அரசியல், சமுதாயத் தொண்டும் நாட்டுக்கு இன்றியமையாதவை என்பது வெளிப்படை.அப்படியே சுய மரியாதைப் பெரியாரின் தன்மானத் தனி வீரமும், சமயத் தொண்டும், சமய மறுப்புத் தொண்டும் கூட எண்ணிறைந்த மூட நம்பிக்கைகளிலிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்கு அவசியமானவை என்றே நான் நம்புகிறேன்.
பக்தி நெறியில்,பகுத்தறிவையும் பயன்படுத்திக் கொள்ள இடம் கொடாதவர்களை தண்டிக்கவே இறைவன் மூட நம்பிக்கை என்கிற கொடிய ப்ளேக் நோயை அனுப்பியுள்ளான் என்றார் ஒரு ஆங்கில அறிஞர். இந்தக் கருத்திலே பெரியாரின் கருத்துக்கு ஆதாரம் இருப்பதாகவே நான் கருதுகிறேன்.அந்த ஆங்கில மகாவாக்கியத்திற்கு விரிவுரை, விளக்கம்தான் பெரியார்’
ஆன்மிக பி.ஸ்ரீக்கே பெரியாரிடம் ஈடுபாடு இருந்தது. ஒரு கலைஞன் சிவாஜிக்கு இருந்ததில் என்ன தவறு ? (தொடரும்).
KCSHEKAR
14th May 2014, 03:21 PM
செலுலாய்ட் சோழன் – 8
சுதாங்கன்
1970 களில்தான் எனக்குக் கொஞ்சம் பத்திரிகைகள் படிக்கும் ஆர்வம் வந்தது. தாத்தா பத்திரிகைக்க்காரர் என்பதால் வீட்டிற்கு பல பத்திரிகைகள் வரும். அப்போதெல்லாம் வீட்டில் ஆனந்த விகடனுக்கு ஏகப்போட்டி இருக்கும். குமுதம் பத்திரிகையை மறைந்திருந்துதான் படிக்க வேண்டும். காரணம் அப்போது, அதில் சில கவர்ச்சி படங்களும், சினிமா கிசுகிசுக்களும் வந்து கொண்டிருந்தது. இன்றைய பத்திரிகை படங்களைப் பார்க்கும்போது, அன்றைய குமுதம் படங்களை பூஜையறையிலேயே வைக்கலாம்.
ஆனாலும் அன்றைய சூழலில் அது பிஞ்சுகள் மனதை கெடுத்துவிடும் என்பது பெரியவர்களின் கண்டிப்பான நினைப்பு.அப்போது வீட்டிற்கு பொம்மை சினிமா பத்திரிகை வரும். அப்போதெல்லாம் அது மாதம் ஒரு முறை பத்திரிகை. சினிமா பத்திரிகைகளில் பேசும் படமும், பொம்மை’ இரண்டுமே பெரிதும் மதிக்கப்பட்ட சினிமா பத்திரிகைகள். பொம்மை பத்திரிகையில் வண்ணப் படங்கள் அருமையாக இருக்கும். கே.ஆர்.வி பக்தா சினிமா உலகின் அருமை புகைப்படக்காரர். அவர் எடுக்கும் படங்களை கண்களில் ஒற்றிக்கொள்ளலாம்.
சிவாஜியின் பேட்டிகள், படங்கள் வரும். ஏற்கெனவே சிவாஜி படங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் என்னை மெதுவாக படிக்கும் பழக்கத்திற்கு கொண்டு சென்றது. வருடம் 1970 என்றாலும், 1959 களில் வந்த வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் வசனங்கள் பட்டித் தொட்டியெங்கும் பிரபலம். அப்போதெல்லாம் கல்யாண வீடுகளில், கோவில் விழாக்களில் மைக் செட் போட்டு, குழாய் ஒலிபெருக்கியின் மூலமாக பழைய படங்களின் பாடல்கள், வசனங்கள் நிச்சயம் இருக்கும். அப்போது மிகப்பிரபலமானது, வீரபாண்டிய கட்டபொம்மன் பட வசனங்கள். சிவாஜி என்று சொன்னாலே பள்ளிக் குழந்தைகள் கூட `வானம் பொழிகிறது, பூமி விளைகிறது’ உனக்கேன் கொடுப்பது கிஸ்தி’ என்று உடனே சொல்வார்கள். மழலை உச்சரிப்புகளில் கூட இந்த வசனங்கள், ஒரு வீரத்தை கொண்டு வரும்..
சிவாஜி கணேசனின் 35வது படம் வீரபாண்டிய கட்டபொம்மன். ஏற்கெனவே பல முறை மேடையில் நடிக்கப்பட்ட நாடகம்தான் வீரபாண்டிய கட்டபொம்மன். சென்னையில் சில தியேட்டர்களில் அப்போது பழைய படங்கள் மட்டுமே வரும். இந்த தலைமுறைக்கு தெரியாது. இன்றைய ஜெமினி மேம்பாலம் வழியாக பனகல் பூங்காவிற்கு செல்லும்போது, ஜி.என். செட்டி சாலை முகப்பில் இன்றைக்கு இருக்கும் சன் காம்ப்ளெக்ஸ் வர்த்தக வளாகம் அன்றைக்கு சன் தியேட்டார், பழைய மாம்பலத்தில் இன்றைக்கும் இருக்கும் ஸ்ரீனிவாசா தியேட்டர், இப்போது இல்லாமல் இருக்கும் மேற்கு மாம்பலம் நேஷனல், இன்றைக்கு ராஜ் தியேட்டர் என்றழைக்கப்படும் அன்றைய நூர்ஜஹான், மேற்கு சைதாப்பேட்டையின் ஜெயராஜ், மந்தைவெளி பஸ் நிலையம் எதிரில் இன்றைக்கு ஒரு பாழடைந்த கட்டடமாக இருக்கும் இடம் கபாலி தியேட்ட்ர், வாலாஜா சாலையில் இன்று வானளாவிய குடியிருப்பு பாரகன் காம்ப்ளெக்ஸ் என்றிருக்கும் அது பாரகன் தியேட்டர், அதே போல் புரசைபகுதியில் அபிராமி தியேட்டர் அடுத்த தெருவில் இருக்கும் மேகலா தியேட்ட்ர் இங்கெல்லாம் பழைய படங்களை போடுவார்கள். அப்படி ஒரு முறை சன் தியேட்டரில் வீரபாண்டிய கட்டபொம்மன் பார்க்க நேர்ந்தது. அந்தப் பருவத்தில், ஆங்கிலத்தில் சொல்லப்படும் fairy tale கதைகள் கிளுகிளுப்பூட்டும், தமிழில் விக்ரமாதித்யன், வேதாளம் முருங்கை மரக் கதைகளைப் போல.
கட்டபொம்மன், என்றைக்கு மறக்க முடியாத விக்ரமாதித்ய, வேதாளமாக மனதில் போய் உட்கார்ந்து கொண்டார். உடல் சிலிர்த்தது, கட்டபொம்மன் என்கிற பாளையக்கார மன்னன், மாறுவேடத்தில், தன் நாட்டில் கொள்ளையடிக்கும் கூட்டத்தைப் பிடிக்க மாறுவேடத்தில் மாட்டு வண்டியில் போவார். `மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு, மாப்பிள்ளையை கூட்டிக்கிட்டு, காட்டு வழி போறவளே கன்னியம்மா, உன் காசு மாலை பத்திரமா பாத்துக்கம்மா’ என்றொரு நாடோடி பாடல், அப்படிய பள்ளியின் நர்சரி ரைம்மைப் போல பதிந்தது. அதே போல், கட்டபொம்மன் தன் படையோடு, ஜாக்ஸன் துரையை பார்க்க போவான், கட்டபொம்மனை அவமானப்படுத்த வேண்டுமென்று அவன் ஊர் ஊராக மாறி கட்டபொம்மனை அலைக் கழித்துக்கொண்டிருப்பான்.
அப்போது, படை வீரர்கள் ` கறந்த பாலையும் காகம் குடியாது, கட்டபொம்மன் துரை பேரச் சொன்னா’ என்பார்கள். அந்த அளவுக்கு கட்டபொம்மனைக் கண்டால் சிம்ம சொப்பனம் என்பதற்காக படத்தில் பாடப்பட்ட பாடல்.அந்த பாடலை வெகு நாட்கள் பாடிக்கொண்டேயிருந்தேன்.
படம் முடிந்தது, கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டான். அவன் நினைவு என்பது மட்டும் என் கழத்தில் சுருக்காகத் தொங்கிக்கொண்டிருந்தது. அந்த சின்ன வயதிலேயே, கட்டபொம்மனை பற்றி திரையில் சொன்னது கொஞ்சம் என்கிற வருத்தம் மனதிற்குள் இருந்தது. திரையில் சுருக்கமாகத்தான் சொல்ல முடியும் என்பதை புரிந்து கொள்ள முடியாத வயது.
கட்டபொம்மனை இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற வெறி வந்தது. நாங்கள் இருந்த ஜாம்பஜார் பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி நடந்தால், ஐஸ் அவுஸ், அங்கிருக்கும் காவல் நிலையத்தியத்திற்கு பின்னால் இருக்கும் தெரு, இருசப்ப கிராமணி தெரு. இங்குதான் தமிழரசு கட்சியின் தலைவர் ம.பொ.சிவஞான கிராமணியார் வீடு. இவரை ம.பொ.சி என்றழைப்பார்கள். இவருடைய பருத்த மீசை கூட அந்தக் காலத்தில் பிரபலம். மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ம.பொ.சி. ஒரு அச்சகத்தில் அச்சுக் கோர்ப்பாளராக சேர்ந்தார். புத்தகங்களை அச்சுக் கோர்க்கும்போதே, அதை படித்து மேதையானவர். இந்தியாவிற்கு சுதந்திரம் வருவதற்கு ஒராண்டுக்கு முன்பே, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் என்று இரண்டு புத்தகங்களை எழதினார்.
இந்த நூல்களை அடிப்படையாக வைத்துதான், இரண்டு திரைப்படங்களுமே உருவானது. வீரபாண்டிய கட்டபொம்மன் டைட்டிலில் முதலில் ` கதை – வரலாற்று ஆராய்ச்சிக் குழத் தலைவர். ம.பொ.சிவஞான கிராமணியார் ‘ என்று வரும். கப்பலோட்டிய தமிழன் படத்தில் கதை – ம.பொ.சி என்றிருக்கும்.
அவர் எழதிய புத்தகத்தை அவரை என்னை அழைத்துக்கொண்டு போய் வாங்கிக் கொடுத்தார் தாத்தா.இன்றைக்கு அந்த புத்தகங்களை பத்திரமாக வைத்திருக்கிறேன்.
தமிழகத்தின் மாபெரும் வீரன் கட்டபொம்மன்.இந்திய சுதந்திரப் போரை முதலில் துவக்கி சிறப்பாக தமிழ்நாட்டினர்தான். அதுவும் திருநெல்வேலி ஜில்லாவில் பாஞ்சாலங்குறிச்சி எனும் சின்னஞ் சிறிய பாளையபட்டர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக கடுமையாக போர் புரிந்தனர்.
1797ம் ஆண்டிலிருந்து 1801 வரை அதாவது நான்கு ஆண்டுகள் பாஞ்சாலங்குறிச்சியாருக்கும், கிழக்கிந்தியக் கம்பெனி வெள்ளையருக்கும் கடுமையான போர் நடைபெற்றது. வீரபாண்டியக் கட்டபொம்மன் நடத்திய அப்போர், சிம்மாசனத்தைக் காப்பாற்றிக்கொள்ள அல்ல, செந்தமிழ் நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்கவேயாகும்.
வீரபாண்டிய கட்டபொம்மனை, சிவாஜி வடிவத்தில் திரையில் காட்டாதிருந்தால், கட்டபொம்மன் பெயர் தமிழ்நாட்டில் தமிழகத்தில் பதிந்தே இருக்காது.
uvausan
14th May 2014, 05:32 PM
`தேச பக்தர்களை பற்றி படம் எடுத்ததால் நஷ்டப்பட்டு விட்டோமே’ என்று சம்மந்தப்பட்டவர்கள் கவலைப்படவில்லை. அந்த தேச பகதர்களை மக்கள் நினைவுக்கு கொண்டு வந்தோமே. என்று மகிழ்ந்தார்கள். அவர்களை நினைவு கூறும்போது என்னையும் மறக்காமல் இருக்கிறார்கள். ‘ என்கிறார் சிவாஜி கணேசன்.
அருமையான வரிகள் - கப்பலோட்டிய தமிழன் ஸ்ரீலங்காவில் 100 நாட்களுக்கும் மேல் ஓடிய படம் - இங்கு இல்லாத தேச பக்தி அங்கே இருந்தது --- இந்த படம் ஓடாமல் இங்கு போனதிற்கு காரணம் - அரசியல் , தேச பக்தி இல்லாமை , போதிய ரசனை இல்லாமை - வ.வு.சியின் கப்பலையே அவர் சிறையில் இருந்தபோது அவருக்கு தெரியாமல் வித்தவர்கள் தானே அன்றைய தமிழர்கள் - இந்த படத்தை மற்றும் வெற்றி அடையவைக்க ஏது அவர்களுக்கு துணிவு , தன்மானம் எல்லாம் ??
குமுதம் பத்திரிகையை மறைந்திருந்துதான் படிக்க வேண்டும். காரணம் அப்போது, அதில் சில கவர்ச்சி படங்களும், சினிமா கிசுகிசுக்களும் வந்து கொண்டிருந்தது. இன்றைய பத்திரிகை படங்களைப் பார்க்கும்போது, அன்றைய குமுதம் படங்களை பூஜையறையிலேயே வைக்கலாம்.
ரசிக்க கூடிய வரிகள் - எவ்வளவு உண்மை அடங்கிய வார்த்தைகள் !!
நன்றி kcs சார்
Murali Srinivas
14th May 2014, 11:26 PM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது தொடர் நினைவலைகளில் கடந்த பதிவின் இறுதி பகுதி.
1972 மே 6 - பட்டிக்காடா பட்டணமாவின் ஓபனிங் ஷோ.
இடைவேளை. வெளியே வரும் ரசிகன் துள்ளிக் குதிக்கிறான். இது எதிர்பாராமல் கிடைத்த ஜாக்பாட். அதே சமயம் செகண்ட் ஹாப் இதே போல் சுவாரஸ்யமாக இருக்க வேண்டுமே என்ற சின்ன பயமும் இருந்தது.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
இடைவேளைக்கு பிறகு படம் ஆரம்பித்தது. தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியை நினைத்து வருந்தும் மூக்கையாவிடம் அப்பாத்தா எஸ்.என்.லட்சுமி சொல்லும் "ஆடிக் கறக்கிற மாட்டை ஆடி கறக்கணும்! பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்கணும்!" என்ற வசனத்துடன் படம் பட்டிக்காட்டிலிருந்து பட்டணத்திற்கு மாறும். தோழிகளுடன் ஹோட்டலில் அமர்ந்திருக்கும் கல்பனாவிடம் ஹிப்பி ஸ்டைல் தலை முடியுடன் முகேஷ் என்ற பெயரில் நடிகர் திலகம் அறிமுகமாக, அடுத்த ஆட்டம் தியேட்டரில் ஆரம்பமானது. நல்வாழ்த்து நான் சொல்லுவேன் பாடல் உடனே. இடைவேளைக்கு முன் கிராமத்து குத்து என்றால் இப்போது வெஸ்டர்ன் பீட்ஸ். எதுவாக இருந்தால் என்ன, நம்ம ரசிகர்கள் சளைத்தவர்களா என்ன? அதற்கும் தியேட்டரை உண்டு இல்லை என்று பண்ணி விட்டார்கள்.
அடுத்து நடிகர் திலகம் ஜெஜெ-வை சீண்டும் காட்சிகள். அந்த கிண்டல் வசனங்கள், கர்ப்பமாக இருக்கிறார் என்று சொன்னவுடன் சொல்லும் கேலி பேச்சுகள் இதற்கெல்லாம் செம ரெஸ்பான்ஸ். ஆளை விட்டு கடத்தி கொண்டு போய் நடிகர் திலகத்தை சென்னையை சுற்றி காண்பிப்பார்கள். ஊருக்கு வெளியே போன பிறகு அவர் அவர்களை புரட்டி அடிப்பார். "சாந்தி தியேட்டரை எனக்கே காட்றியா?" டயலாகிற்கு தியேட்டர் குலுங்கியது.
ஆனால் அவர் மீண்டும் சோழவந்தான் வந்தவுடன் அது வரை இல்லாத சீரியஸ் நடிப்பு வெளிப்பட, நடிப்பை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு சந்தோஷம். பஞ்சாயத்து கூட்டத்திற்கு போய் விட்டு வந்த நடிகர் திலகம் எஸ்.என்.லட்சுமியிடம் பேசும் காட்சி
"பஞ்சாயத்துல எனக்கு கிடச்ச வரவேற்பை நீ பார்த்திருக்கணும்.அப்படியே பூரிச்சு போயிருப்பே.
அப்படியா? நான் வராமே போயிட்டனே
நான் வந்திருக்கனே உயிரோடு
நாக்கு மேல பல்லைப் போட்டு உன்னை எவன்யா பேசினான்?"
மற்றும் நடிகர் திலகம் சொல்லும் "கை கழுவிட்டேன்" போன்ற வசனங்களுக்கு பெரிய வரவேற்பு [கதை வசனம்: பாலமுருகன்]. என்னடி ராக்கமாவின் pathos version -கும் நல்ல வரவேற்பு இருந்தது. அந்த கிராமத்து வீட்டின் மாடிப்படியில் அமர்ந்தவாறே அவருக்கே உரித்தான கன்னத்தில் வழியாமல் கண்களில் நீர் கரை கட்டி நிற்க
எல்லோர்க்கும் ஊர்கோலம் இரண்டு தரம்! அதில் ஒரு கட்டம் முடிந்ததடி!
தாயாருக்கும் பின்னாலே சம்சாரம் அது தடம் கொஞ்சம் புரண்டதடி
என்ற வரிகளின் போதெல்லாம் செம அப்ளாஸ்.கிளைமாக்ஸ் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று யூகிக்க முடிந்தாலும் அந்த சஸ்பென்சை அழகாக கையாண்டிருந்தார் இயக்குனர் மாதவன்.
படம் முடிந்தது. ஹாலை விட்டு வெளியே வந்தவுடன் தியேட்டர் காம்பவுண்ட்குள்ளேயே ஒரு வெங்காய வெடி சத்தம் காதை அடைத்தது.
தொடர்ந்து படபடவென்று தௌசன் வாலா சர வெடி வெடிக்க, ராஜா திரைப்படத்திற்கு நடந்தது போல ரசிகர்கள் கூட்டம் மேல மாசி வீதியில் ஊர்வலம் வந்து தியேட்டர் வாசலில் குழுமி ஒரு ஆட்டம் போட்டு விட்டு போனார்கள். தொடர்ந்து நான்காவது படம் வெற்றி. 1972 -ம் வருடத்தை பொறுத்த வரை ஹாட்ரிக் வெற்றி.
ஆனால் ஓபனிங் ஷோ பார்த்து விட்டு வரும் போது என்னால் அந்த படத்தின் வெற்றியின் வீச்சை அளவிடமுடியவில்லை என்பதை இங்கே ஒத்துக் கொள்ள வேண்டும். நிச்சயமாக நூறு நாட்கள் ஓடும் என்று நினைத்தேன். ஆனால் அதையும் தாண்டி வெள்ளி விழா கொண்டாடி தமிழ் சினிமாவின் மொத்த கருப்பு வெள்ளை படங்களிலேயே அதிகமான வசூலை பெற்று சாதனை புரியும் என்று எதிர்பார்க்கவில்லை. எங்கள் மதுரையில் அன்று வரை மிகப் பெரிய வெற்றிப்படங்கள் வெள்ளி விழா கொண்டாடி (175 நாட்களில்) பெற்ற வசூலையெல்லாம் வெறும் நூறு நாட்களில் முறியடித்தது பட்டிக்காடா பட்டணமா.
(தொடரும்)
அன்புடன்
Murali Srinivas
15th May 2014, 12:44 AM
கோபால்,
கட்டபொம்மன் 55 -வது வெளியீட்டு நாளை முன்னிட்டு கட்டபொம்மன் பற்றிய உங்களின் ஆய்வை அல்லது நடிகர் திலகம் எப்படி கூடு விட்டு கூடு மாறினார் என்பதை ரசித்து ரசித்து எழுதியிருக்கிறீர்கள். ஏற்கனவே படித்ததுதான் என்ற போதினும், மீள் பதிவு என்ற போதினும் இன்றும் ரசிக்க முடிகிறது. என்றும் ஈசிக்க முடியும் என்பதில் சந்தேகமேயில்லை. இதுதான் உச்சம் என்று நாம் நினைக்கும் போது அதையும் தாண்டி மற்றொரு உச்சம் அவர் தொடுவதை உணர்ச்சிபூர்வமாக சொல்லியிருக்கிறீர்கள். குறிப்பான படத்தின் உச்சங்கள் என்று நான்கு காட்சிகளை சொல்லியிருக்கிறீர்கள்.
இங்கே ஒன்றை குறிப்பிட வேண்டும். என்னுடைய தனிப்பட்ட விருப்பம் என்னவென்றால் இது போன்ற நடிகர் திலகத்தின் மிகப் பெரிய புகழ் பெற்ற படங்களில் பலரும் புகழும் காட்சிகளை விட ஒரு சில சாதாரண காட்சிகளில் வெகு அலட்சியமாக அவர் உடல் மொழியும் நடிப்பும் வெளிப்படுவதை பெரிதும் ரசிப்பவன் நான்.
மகாராஜாவின் அந்தப்புரத்தில் இருக்கும் தன பெண்ணை இரவு நேரமாகி விட்டது தூங்க வா என்று அழைக்க வரும் தம்பி மனைவியிடம் "அவள் இன்றிரவு தன பெரியமாவிடம் இருந்து உறங்கி கொள்வாள்" என்று சொல்லியவாறு அந்த கை அசைவிலேயே ராகினியை திருப்பி அனுப்பும் கம்பீரம் என்ன! மகாராஜாவாக இருந்தாலும் தானும் ஒரு சராசரி ஆணுக்கு உடைய உணர்வுகளை கொண்டவன்தான் என்பதை அந்தப்புரத்தில் பெண்கள் மட்டும் ஆடிப்பாடும் "டக் டக்கு" பாடலின்போது மறைந்திருந்து பார்ப்பது, அதை தம்பியும் மற்றவர்களும் பார்த்து விடுவதை கண்டவுடன் முகத்தில் தர்மசங்கடம் தெரிந்தாலும் அதை மறைத்தபடி அந்த இடத்திலிருந்து விலகுவது, மாறு வேடத்தில் நகர் சோதனைக்கு செல்லும்போது தங்களை மறந்த நிலையில் ஜெமினியும் பத்மினியும் ஆடி பாடிக் கொண்டிருக்க அவர்களின் தலைக்கு மேல் நாகம் ஒன்று தொங்குவதைப் பார்த்து விட்டு அதை தூக்கி வீசி விட்டு இருவரிடம் தன்னை யாரென்று காட்டிக் கொள்ளாமல் கடுமையாக பேசுவது போல் மிரட்டுவது, அதே நகர் சோதனையில் தன படை வீரன் தன நாட்டிற்கு துரோகம் செய்கின்றானோ என்ற சந்தேகத்தில் அவனோடு சண்டையிட அவன் எதிரி நாட்டு ஒற்றனை பிடிப்பதற்க்காகதான் அப்படி செய்தான் என்பதை புரிந்துக் கொண்டதும் தன அவசர செயலுக்கு வருந்துவது அதற்கு தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற மனசாட்சியின் குரலுக்கு ஏற்ப மீண்டும் அதே மாறு வேடத்தில் வந்து அரசவையில் அதே படை வீரனிடம் சவுக்கடியை பெற்றுக் கொள்வது, இரவு சவுக்கடி ஏற்படுத்திய காயங்களின் வேதனை பொறுக்க முடியாமல் மனைவி பாட தம்பி மகளை நடனம் ஆட சொல்லி வேதனையை மறைப்பது அந்த சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பத்தை தீர்ப்பாயடி என்ற மனதிற்கு இதம் தரும் பாடலை கேட்டு அப்படியே கண் அசர்வது என்று சின்ன சின்ன காட்சிகளிளெல்லாம் கூட தூள் பரத்துவார்.
மிக பிரபல ஜாக்ஸன் துரையின் காட்சியும் கிளைமாக்ஸ் பானர்மான் காட்சியும் தமிழ் நாட்டிற்கே தமிழ் மொழிக்கே பெருமை தேடி தந்த காட்சிகள். நடிகர் திலகதிற்கு நாற்காலி தர மறுத்த ஜாக்ஸன் துரையின் நாற்காலியை சாமர்த்தியமாக கட்டபொம்மன் எடுத்துக் கொள்ளும் காட்சியால் பெரிதும் கவரப்பட்ட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கட்டபொம்மன் வெளியாகி 40 வருடங்களுக்கு பிறகு அவர் எடுத்த படையப்பா படத்தில் அது போன்ற காட்சியை சற்றே மாற்றி எடுத்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
வசனம் பேசும் காட்சிகளில் கூட மேற்சொன்ன இரண்டு காட்சிகளை விட போருக்கு புறப்படும் நேரத்தில் ரத்த திலகம் இடும் மனைவியிடம் "செக்கர் வானத்திலே செந்நிற பந்து போல் -------" என்று ஆரம்பித்து "அது போன்றதுதான் நீ என் நெற்றியிலே இட்டிருக்கும் ரத்த நிற வட்ட நிறை பொட்டு" என்று சங்கீத சந்தங்கள் போல் அவர் வசனம் பேசும் அழகை வெகுவாக ரசிப்பேன். அதே நேரத்தில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மந்திரியிடம் பேசும் காட்சி அதிலும் "போருக்கு பயந்தவன் பேசும் பேச்சா இது" என்ற இடமெல்லாம் அற்புதமாக இருக்கும்.
அது போல் எதிரியின் பலம் தெரிந்து தங்கள் வலிமையையும் உணர்ந்து அந்த இயலாமையை வெளிப்படுத்தும் ஜக்கம்மா வேறில்லை திக்கம்மா பாடலில் போது அந்த சூழலை நாம் நேரிடையாக உணர செய்யும் அவரின் முகபாவம்.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நேரம்தான் இல்லை. இந்த படத்தின் டிஜிட்டல் வெர்ஷன் வரும்போது இன்றைய தலைமுறையினரும் அதை சிறப்பாக புரிந்துக் கொள்வார்கள். இதை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தப் படத்தின் டிஜிட்டல் மயமாக்குதல் வேலை முடிந்து விட்டதாகவும் அடுத்த மாதம் விநியோகஸ்தர்களை வணிகம் பேச அழைத்திருக்கிறார்கள் என்ற நல்ல செய்தியும் வந்திருக்கிறது. விரைவில் அந்த நல்ல நாள் வரட்டும்.
அன்புடன்
eehaiupehazij
15th May 2014, 07:55 AM
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நேரம்தான் இல்லை. இந்த படத்தின் டிஜிட்டல் வெர்ஷன் வரும்போது இன்றைய தலைமுறையினரும் அதை சிறப்பாக புரிந்துக் கொள்வார்கள். இதை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தப் படத்தின் டிஜிட்டல் மயமாக்குதல் வேலை முடிந்து விட்டதாகவும் அடுத்த மாதம் விநியோகஸ்தர்களை வணிகம் பேச அழைத்திருக்கிறார்கள் என்ற நல்ல செய்தியும் வந்திருக்கிறது. விரைவில் அந்த நல்ல நாள் வரட்டும்.
Dear Murali Srinivas. You have poured happiness in our minds and hearts with this news. VPKB is the movie that has withstood the test of time and still remains the model for dialogue modulations with the younger generation aspiring for acting career. However, I feel that the movie for its rerun needs to be edited and trimmed as some of the lengthy scenes may not suit the present times. The comedy and song scenes with karunanithi and co., and the pathos song 'Pogathey Pogathey en kanavaa.." in my personal opinion need to be cut. We need to invite views from our fans and the producers may kindly heed to the views, as we have learnt some lessons in the past with some rerun movies of our own NT(like the raw comedy track in VM and the fisherman episode in TV)
Russellbpw
15th May 2014, 08:21 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/nt_zpsda35c38a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/nt_zpsda35c38a.jpg.html)
Subramaniam Ramajayam
15th May 2014, 10:05 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/nt_zpsda35c38a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/nt_zpsda35c38a.jpg.html)
very true statement kodiyil oruvan.
Russelldwp
15th May 2014, 11:06 AM
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நேரம்தான் இல்லை. இந்த படத்தின் டிஜிட்டல் வெர்ஷன் வரும்போது இன்றைய தலைமுறையினரும் அதை சிறப்பாக புரிந்துக் கொள்வார்கள். இதை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தப் படத்தின் டிஜிட்டல் மயமாக்குதல் வேலை முடிந்து விட்டதாகவும் அடுத்த மாதம் விநியோகஸ்தர்களை வணிகம் பேச அழைத்திருக்கிறார்கள் என்ற நல்ல செய்தியும் வந்திருக்கிறது. விரைவில் அந்த நல்ல நாள் வரட்டும்.
அன்புடன்[/QUOTE]
Dear Murali Sir
Thanks for you information that DIGITALIZATION of V P K B is completed. Also here my Freind THILLAI NAGAR R. BASKAR (NT FAN) wants to Buy and Distribute for TT AREA and give your support for that.
C. Ramachandran
chinnakkannan
15th May 2014, 03:16 PM
அரபு நாடுகளில் டிஜிட்டலைஸ்ட் வெர்ஷன் வெளியிட வாய்ப்பிருக்கா..முரளி சார்? என்போன்றவர்கள் இப்படி டிஜிட்டல் ஆனப்டத்தை பார்க்க முடியாததுபெரும் சோகம் தான்..
adiram
15th May 2014, 04:39 PM
அரபு நாடுகளில் டிஜிட்டலைஸ்ட் வெர்ஷன் வெளியிட வாய்ப்பிருக்கா..முரளி சார்? என்போன்றவர்கள் இப்படி டிஜிட்டல் ஆனப்டத்தை பார்க்க முடியாததுபெரும் சோகம் தான்..
I am too, sailing in the same boat. Another unlucky.
adiram
15th May 2014, 04:42 PM
However, I feel that the movie (VPKB) for its rerun needs to be edited and trimmed as some of the lengthy scenes may not suit the present times. The comedy and song scenes with karunanithi and co., and the pathos song 'Pogathey Pogathey en kanavaa.." in my personal opinion need to be cut. We need to invite views from our fans and the producers may kindly heed to the views, as we have learnt some lessons in the past with some rerun movies of our own NT(like the raw comedy track in VM and the fisherman episode in TV)
+ 1000000000000000000000.
JamesFague
15th May 2014, 10:29 PM
Mr Murali Sir,
Could u pls share more info on VPKB i.e who is doing the project and other
details.
Regards
Murali Srinivas
15th May 2014, 11:13 PM
Sivaji Season - Song No 7 posted in Paadalgal Palavitham thread. Reproduced here for people who had not seen the other thread.
SIVAJI SEASON SONG 7
SIVAJI SEASON - ENDHAN PON VANNAME
எந்தன் பொன் வண்ணமே - Part I
NAAN VAAZHA VAIPPEN
ACKNOWLEDGEMENTS
1. Oru Kuyilin Vaazhkai Sangeetham – a book by Kavitha Albert
2. Various Magazines of yesteryears
3. Our own tfm pages with special thanks to Mr.Manisegaran
4. Mr.Mohanram
DEDICATION
To a great NT fan – Raakesh @groucho.
INTRODUCTION
A song that showed that in spite of advancing age TMS had not lost his touch to strike chords. A song, which takes the top place in the combination of TMS –Ilaiyaraja. A song that again proved that age cannot wither nor custom stale NT the performer. For a change we are going to discuss a song of late 70s and about a combination, that if it had lasted, would have given more such songs. Let us dwell into that.
PRE ILAIYARAJA PERIOD
There was a period when Tamil cinema was passing through critical stage. The Films that got released turned out to be way below the averages and it directly affected the BO performance of the films. With the films failing to ring in the cash counters, the production houses were very much hesitant to produce films. This trend started in late 74 and by the end of 75, it had snowballed into bigger crisis and by 1976, it had become acute. Production had become costlier and efforts were on to bring down the costs. Even the Big stars NT and MGR at that point of time were not giving hits. Added to it were the conditions imposed by the Censor Board about song and stunt scenes and they insisted that violence and sex should not be shown. This had affected the collections in a big way especially in B & C centers. At that point of time Karnataka Government had announced a scheme by which a subsidy of Rs 50,000/- would be given to the producer, if shooting takes place in Karnataka. This was irrespective of the language of the film. So this prompted many producers to shoot their film in Karnataka.
Though the small and medium producers were doing business, many big production houses stayed away from production. AVM had stopped its production in 1972 after Kaasethaan Kaduvuladaa. Vijaya Vahini except for Vani Rani (1974) did not produce anything else. Gemini barring Ellorum Nallavare was hibernating. With big stars and big production houses failing to strike it rich, a lull was prevailing in the industry. Things were in such a sorry state that films that crossed 50 days were declared hits and a function arranged for the same. I remember the 50th day celebrations of “Oru Oothaapoo Kan Simittugirathu”. K.Balachander who presided over the function and Sp.Muthuraman the director of the movie spoke about this alarming trend. This decline gave rise to another trend. Unlike today, there were so many theatres and all these needed software. In other words, films for their survival. So English movies and Hindi movies started to rule the roost even in smaller towns. When many of the cities and towns started following this trend, Chennai (Madras at that point of time) was totally swept off by English and Hindi. Starting from Aradhana in 1969, Hindi films and songs were making inroads into the Tamilnadu market and by 1976, it had overtaken Tamil.
ANNAKILI RELEASE
Come 1976 May, there was a film directed by Devaraj Mohan, the director duo who had apprenticeship under veteran director P.Madhavan, which got released. Starring Sivakumar and Sujatha, this Black and white movie had few takers in the initial weeks. There was no hype or hoopla surrounding this film and the story happening in a village milieu did not set the pulses racing. A new person had debuted as a music director. But after a week or two, word began to spread that the movie was good and the songs catchy. The folkish tunes started playing in the Radio and local mike sets began to play the songs in every nook and corner of Tamilnadu. The fast number Machhanai Partheengala was slowly but surely capturing the imagination of all the sections and suddenly the movie “Annakili” picked up and House Full boards were staring at people in almost all theatres all over TN. It heralded the arrival of Ilaiyaraja.
Panchu Arunachalam’s brother Kn. Subbu produced this film. Earlier in 1975 he had produced Avandhan Manidhan. Now he produced this movie. As I said earlier, to make use of the subsidy, this film was shot in Thengamaratta, a village nestled in the Karnataka Tamilnadu border. This success was way beyond their imaginations. But, of course, the same combination failed to strike it rich when they came up with Kavikuyil in the following year (July 1977).
ILAIYARAJA BEFORE ANNAKILI
Ilaiyaraja had finally tasted success but his path to success was not an easy one. Most of the readers must be aware of Ilaiyaraja’s early life and his struggles and so I am not elaborating on that. He was born in a tiny hamlet called Pannaipuram, near Theni and was the younger brother of Paavalar Varadharajan, who was a party member of the Communist movement. IR and his brothers [R.D.Baskar & Gangai Amaran] moved to Chennai for want of greener pastures. After a lot of struggle he joined as an assistant to G.K.Venkatesh, the music director. He had learnt the basics of music and after coming to Chennai tutored western music under Dhanraj Pillai and wrote the music exam on guitar conducted by the Trinity College, London. This helped him to cement his place in the GKV troupe and he became an integral part of the troupe. It is said that IR contributed to the music of GKV. As it happened in the case of MSV, when his compositions came in the name of SM Subbiah Naidu, the chances of IR’s tunes having coming out under GKV baton cannot be ruled out.
As luck would have it, IR as early as in 1971 got a chance to work as a MD. Dada Mirasi, who had directed movies like Raktha Thilagam, Puthiya Paravai and Moondru Deivangal, launched a movie but this time, unlike the previous three occasions when NT was the hero, this was planned as a double hero subject based on a story by writer B.S.Ramaiah. Gemini Ganesan and Jai Shankar were the heroes with Padmini as the heroine. The movie was even named. The title was Deepam. After the Pooja of the movie, song recording took place. During that time TMS was the uncrowned King of Tamil Film Music and it was no surprise that IR recorded the first song with TMS. The song had its Pallavi starting with Chithham thelivura Sivanai Naadu. Destiny it may be, it probably gave an indication of the route that IR would take in future. Unfortunate it is to say, for reasons best known to the producer-director, the film got shelved and the recorded song never saw the light of the day. IR, probably upset by this still continued to work under GKV.
After 3 years, IR again got a chance to score music for a film and this time it was Prasad Productions who were behind the movie. Again a song recording was done and again it was TMS who did the singing. The song, which had Pallavi of “Jinjaru Jinjaru”, did face some problems during recording. It seems that TMS and IR had some difference of opinion over the tune and composition. Fate again played a part and this also got shelved. So IR was getting a sort of unlucky tag around his neck but he could do little about that since cinema field is steeped in superstitious beliefs. So when Annakili came his way, IR was nervous and he was hoping that at least this should not get struck. But Panchu Arunachalam was determined and he decided to proceed come what may.
When the recording was about to start, the power supply went off. People started whispering. Power supply resumed and again when IR recorded the first song for Annakili the same was played to check whether the recording has been done perfectly and they found to their dismay that the song recording was not there. Due to some technical issue, the song never got recorded. Imagine the plight of IR. But Panchu and Devaraj Mohan asked him to do it again and it came out well. IR worked real hard. Here again TMS was booked for one song. There were two versions of this song Annakili Unnai Theduthe. It was the first song of the movie and S.Janaki sang it. In the second half, the hero forced to marry another girl because of family circumstances would repeat the song but in pathos mode. TMS it seems, during recording was not very comfortable with the tune and it is rumoured that he felt that it is more folkish than required and also it was very slow. IR had a grouse that the song recording could not be done to his satisfaction but he kept quiet. As I said earlier, the movie got released and IR was catapulted to fame. But in spite of tasting huge success on debut, IR found the going tough.
ILAIYARAJA AFTER ANNAKILI
His second film was Palooti Valartha Kili directed by P.Madhavan. Madhavan had known IR right from his early days when he was an assistant to GKV and it was GKV who had composed music for Madhavan’s earlier film Ponnukku Thanga Manasu way back in 1973[This movie was the debut vehicle for actor Vijayakumar]. So with Annakili’s release, IR got a chance to work for Madhavan. PVK had Vijayakumar and Sripriya in the lead. It was released in August 1976. It had two good songs Naan Pesa Vandhen [SPB & SJ] and another SJ and chorus of kola Kolayaam Mundhirikkaa. But unlike Annakili this did not set the radio on fire. [Kumudam’s comment மலை வாழைத்தோப்பு மச்சானுக்கு பக்கத்து ஊர்காராக கூட யாரும் இல்லை]. The director duo of Devaraj-Mohan along with Sivakumar was engaged in a film called Uravaadum Nenjam. This was the third movie of IR that came out in Nov 1976. IR had given an excellent composition Oru Naal Unnodu Oru Naal but like PVK, this film also was a disaster in BO and so the place of IR started to shake. Within 15 days of release of Uravaadum Nenjam, ACT’s Bhadrakaali came out. ACT had attempted a different path when he chose to direct a film based on writer Maharishi’s novel by the same name. Rani Chandra an upcoming artist in Malayalam was roped in as heroine and Sivakumar was the hero. ACT rechristened the name of Rani as Gayathiri (which incidentally was the character’s name) but fate struck. On Oct 23rd of 1976, the flight in which Rani was traveling crashed and she died. The film was almost complete and only climax and some patch work remained. ACT adjusted it with a dupe. This served as a huge booster for the movie and it became a runaway hit. IR, on his part, had done a very good job and Kannan Oru Kaikuzhandai is one of his all time great compositions, IMO. He had also attempted a novel song, a club dance like number but in completely different lyrical style in the sense it was written in Brahminical Tamizh. Written by Vaalee, Susheela did an amazing job of Kettelae Ange. In spite of IR’s sincere work, the success was credited to Rani Chandra’s untimely death. This was the time when Balajee gave a great lift to IR. Balajee for more than 10 years had been using MSV as the music director for all his movies and why suddenly he should change and go for IR? For that we need to go back in time and as well to check the political changes that happened during that period.
BALAJEE AS A PRODUCER
During the discussions on earlier songs, we did talk about Balajee. When his acting assignments started drying up, he ventured into production and started his own company Sujatha Cine Arts. His first film was Annavin Aasai but that didn’t do well. He came to NT and ACT was booked as the director of the movie named Thangai. Balajee wanted a sure fire success and so he brought the remake rights of a Telugu Film. Thangai helped Balajee financially. He continued to produce films and his association with NT became so thick that his Sujatha Cine Arts ended up with the honour of producing the most no. of films starring NT. To be precise, it produced 17 films.
As for as possible, Balajee had the habit of repeating the same team for his films. Thus it was NT- ACT – MSV team for his first 4 films. While Thangai, En Thambi and Thirudan were remakes of Telugu movies, Engirundho Vandhaal was a remake of Hindi Khilona. Out of this EV became a super hit. After this Balajee felt that Hindi movies were a better proposition and for his next film he started looking out for a hit film. Balajee was the person/producer who gave a change of face to NT’s image. Till Thangai, NT’s image was something of a great actor who would be good in emotional and serious stories. An impression was gaining ground that action oriented entertainers were not his cup of Tea. While Thangai proved that he could carry any role on his shoulders, the stylish En Thambi and Thirudan made him dearer to youngsters. After Engirundho Vandhaal, Balajee decided again to go for an action film and moreover he was getting many requests from this younger audience. So he went to Bombay, searched and zeroed in on Johnny Mera Naam. It had Dev Anand and Hema Malini in the lead. He bought the rights of the film. Now at this point of time (this was mid 1971) Balajee had a feeling that an upcoming youngster who had made some sleek entertainers would be the best bet for this action mood film. Thus CV. Rajendran became the director of Raja and this film released on 26th January of 1972 went on to became a smash hit. So as his wont, Balajee repeated this combination for the next three films. Needhi (Dec 1972) and En Magan (Aug 1974) both celebrated 100 days. For his next film, he could not find a Hindi film that had a story suitable for NT. During that period a change was taking place in Hindi Cinema and Bollywood till that time known more for romantic musicals was witnessing a new phenomenon. A new type of hero character, which could loosely fit into the genre called “angry young man,” was storming the screens. It started with Zanjeer, followed by Majboor and when Deewar hit the screens, the hero attained cult status. Salim- Javed, the writer duo and creators of this genre, found themselves in much demand almost in the same level enjoyed by Amithab, the hero who changed the face of Hindi cinema.
Balajee saw Deewar and was very much impressed by it. But when he approached the writer duo, he had a shock. They were demanding 5 Lakhs for the remake rights. It was a huge sum for a remake right during those days and Balajee’s negotiating skill could not secure the rights for him. The writer duo refused to part for a lower amount. Balajee was upset. He had come to Bombay with the aim of buying the rights, but now this development upset him [Irony is the same Balajee purchased the rights of the same Deewar after 5 years and remade it as Thee in 1981]. But having come to Bombay, he didn’t want to go back empty handed. Somebody told him about another movie that had been released a year earlier. Balajee saw the movie and bought its rights. That was Namak Haraam, which itself was inspired from Hollywood flick Becket. It was a two-hero subject with Rajesh Khanna and Amithab playing the lead. After coming to Chennai, Balajee and CVR discussed the film with NT. The story revolved around two thick friends belonging to two different economic strata. The rich factory owner plants his friend in the labour union in his factory to make it dance to the tune of the management. But his move backfires and it leads to various twists and turns that result in an emotional climax.
Normally any Hero would want to do the poor friend’s role because it would help them to garner all sympathy while the rich man’s character had negative shades. But for NT, it never mattered and he chose to do the role done by Amithab. There was a discussion about the other hero and who should be chosen for the same. Many names came up but due to one reason or another, nobody could be finalized. Muthuraman, the actor who had done so many second hero roles in NT films, had now become full-fledged hero and he was not available. AVM. Rajan had lost his market value. Jai as usual was busy with so many films. So the mantle fell on Gemini Ganesan. The movie named “Unakkaaga Naan” was completed and was slated for release in 1976 Jan–Feb. It was a much awaited movie. But things that happened outside the film world simply upset all plans.
BALAJEE TASTING DEFEAT
1975 June saw two important events unfold that created a political tsunami in India. On June 12th, Allahabad High Court came out with a judgement that set aside the 1971 election victory of Indira Gandhi from the Rae Bareli seat in Uttar Pradesh. This made all opposition parties come under one roof and they demanded the resignation of Indira Gandhi. Indira, in order to tide over the crisis proclaimed Emergency on the night of June 25th of 1975 and in a midnight swoop, all opposition leaders were arrested. The only person who was not arrested was our own Perunthalaivar Kamaraj. He was recuperating after an illness but this development that saw all his party leaders behind the bars upset him like anything which made his health deteriorate further and ultimately led to his demise on Oct 2nd of 1975. His passing away created problems for all Congressmen in Tamil Nadu, more so for NT.
Till Perunthalaivar was alive NT was not unduly bothered about being in the opposition in both central and state levels. But his demise put him in a quandary. Majority of his fans wanted him to remain with the Congress (O) that was led by P. Ramachandran better known as PaaRaa and it was widely believed that he would remain so, though he didn’t spell it out in the open. Come December, there was an emissary from Delhi and she stayed put in Madras and took NT along with her to Delhi. Maragatham Chandrasekar completed her assignment successfully and NT met Indira on 1st of Januray, 1976. The meeting was kept under wraps till it took place and when it came out, it was a bolt from the blue for the fans. The fans association split with one group supporting his decision and the other opposing it. By Jan 30th the DMK Government led by MuKa was dismissed and Tamilnadu came under President’s rule for the first time. During those troubled times, Unakkaaga Naan was released on Feb 12th of 1976.
There was a section of fans that still believed that NT would not go to the ruling Congress. They had flocked to the movie as usual on the opening day. But 4 days later (i.e.) on 15th Feb of 1976, the liaison meeting between the Congress (O) and Congress (I) took place at the Marina that was presided over by Indira. The section that still believed that NT would remain with Con (O) was totally upset when they saw NT in the forefront at the merger function. This adversely affected the prospects of Unakkaaga Naan and it did not do well at the BO. Balajee after 10 years tasted failure for the first time. Not only Balajee but even for NT, the later half of 1975 was a period when his films continuously failed to strike it big at the BO. Anbe Aruiyre, Dr.Siva, Vaira Nenjam and Paatum Bharathamum that came in the latter half of 1975 not recording great hits and when Unakkaaga Naan also fell in the same category there were alarm bells ringing all over. Subsequent films in 1976 after UN like Sathyam and Chitra Pournami also did not do well and only Graha Pravesam and Uthhaman made profits.
BALAJEE – NT- IR - DEEPAM
Balajee now decided that his next step should be safe and secure. NT was also veering round to the view that he needed to concentrate more on his strength (i.e.) strong story. Balajee turned his attention towards Malayalam movies and selected a movie by name Theekkanal. It had Madhu and Jayan in lead roles. NT saw the movie and gave the go ahead. Balajee took a decision to change the technical team. CVR was changed and Balajee spoke to Devaraj- Mohan who were riding the crest of Annakili success wave. NT had known them from the good old days when they had worked as assistants to P.Madhavan. But they politely refused saying that were not interested in remakes. Another upcoming director was Sp.Muthuraman but he was already committed on the same dates for another movie. NT remembered one person who used to double as an actor and director. The person was K.Vijayan and he had directed Kaaval Deivam way back in 1969 in which NT played a cameo. Vijayan also acted in movies and most of the readers would remember his role in Sivandha Man(n), in which he played one of the revolutionaries along with NT. He was put in charge of direction. Balajee also decided to bring in a change in the music department and he went and booked Ilaiyaraja. It was a surprise for many in the cine field. There were reasons for it.
For more than twenty years NT and MGR had dominated the Tamil film world and it was almost like two separate camps. As mentioned earlier in this series, the only common players were MSV, KVM, TMS, PS and LRE. For a new comer, it was very difficult to break into these camps. In that period of 10 years, the only two music directors namely MSV and KVM did music for NT films and the rare exceptions were T.K.Ramamurthi for Thangachurangam, G.Devarajan for Kaaval Deivam, Pughazendhi for Guru Dhakshinai, Govardhan for Anjal Petti 520 and V.Kumar for Niraikudam (irony is all the 5 films were released in 1969). At this juncture (1976), even Shankar-Ganesh having spent almost 8-9 years as MDs could not get a chance to do a single NT film though they did 2 MGR films. They finally managed to get the chance only in Thunai and that came in 1982. So when Ilaiyaraja managed that in his very first year, the cine field began to look at Ilaiyaraja with interest. The Film was named as Deepam.
IR who knew the importance of such a chance simply grabbed it. For the Paavalar brothers, it was a dream come true. Like every cinema aspirant, IR too had the same skepticism whether he would be able to meet NT at least once and when he got an opportunity to work for an NT film, his joy knew no bounds. He tuned 4 songs for the movie and 3 were sung by TMS. Here there was no second thinking. TMS sang Andhapurathil oru Maharani, Pesathe Vayulla Oomai Nee and Raja Yuva Raja. KJY sang the other song Poovizhi Vaasalil, which was for Vijayakumar in the movie. Andhapurathil and Poovizhi Vaasalil became Super Duper hits. Deepam released on Jan 26th of 1977 went on to become super hit and Balajee immediately planned for another movie with the same combination.
THYAGAM
Again, he went to Malayalam and bought the rights of “Ithaa Oru Manushyan” which had Madhu in the lead. The movie was named as Thyagam in Tamil. This was village based and it was more of a Kerala type of story in the sense it was nativity based one. But still Balajee and Vijayan took a risk. Again the IR – Kannadasan combo turned out beautiful songs. Even at this point of time when the songs were recorded (i.e.) Sep – Oct 1977, there was absolutely no rift between TMS and IR or if at all it was there, it had not come out in open. If the two solos Vasantha Kaala Kolangal by Janaki and Nallavarkkellaam by TMS were chart busters, then the duet Then Malli Poove by TMS and Janaki simply captivated the audience. Thyagam, which came out on March 4th of 1978, was a super-duper hit and went on to celebrate 175 days and became the highest grosser for 1978. With two hits in a row for NT, IR had climbed steps and even producers of NT films other than Balajee started booking IR for their movies.
NT’s CAREER DURING 1978.
As we had seen earlier, right from 1952, NT never had to look back and he was very busy throughout his career. But the continuous failure of films in 1975-76 due to combination of factors (lack of good story, political decisions etc) had slowed down his assignments but when Deepam became a hit, his career was back on track. The end of 1977 (Deepavali) saw the release of movie “Annan Oru Koyil” followed by Andhaman Kaadhali (Jan 26th, 1978) and Thyagam (March 4th, 1978) and when all the three crossed 100 days, NT’s market was booming like good old days. Added to it when (a film that was in the making for long) Ennai Pol Oruvan that got released within 14 days from the date of Thyagam’s release (18th March, 1978) also became a hit, many producers were queuing up and suddenly NT found himself flooded with offers. There were three companies that got the call sheet of NT and they had booked IR for music. One was Rajanna Pictures from Bangalore that produced Kavari Ma(a)N, Amutham Pictures Kanne Kaniamudhe (which later changed to Vetrikku Oruvan) and one Asoka Brothers production Naan Vaazha Vaippen. In the month of March 1978, there was a full-page last page advertisement in Dina Thanthi that had a still photograph of NT and KRVijaya and it was mentioned as May veliyeedu (May release). Fans were really surprised because just 2 months time for making a full fledged movie seemed to be far from true but some were saying that KRV had got all things right and so it would come out. KRV? Yes, she was the producer and Asoka Brothers was her company.
KRV AS THE PRODUCER
KRV was one heroine who had an extended stay at the top. Having made her debut in 1963 with Karpagam, KRV was literally active as heroine till the middle 80s. She had brushed shoulders with greats like Savithiri and Padmini and was there till Revathy and Nadiya came. Two things helped her. One was her homely appearance (though she cannot be said to be beautiful in the classical sense), which fetched her a huge ladies audience, and this group was determined to see all her movies. The second reason was she was married to a big business man and she used the money and business power to her advantage. Her home in T.Nagar with a swimming pool and she buying an aircraft were hot news those days. Then she changed her attention towards cinema. Having realized that she has a dedicated audience, she created a team in cinema that would cater to her requirements and image building. She got married when nobody expected it but contrary to the general trend, she was one person who had a successful career even after marriage. Even when acting with NT and MGR, she had films on floor that had Jai, Muthuraman and Ravichandran in lead and most of them were written and directed by Madurai Thirumaran. The films that can be classified in this genre are Soothaattam, Vaayadi, Thirudi and Amman Arul, Aayirathil Oruthi. Meanwhile she completed 100 films with Nathayil Muthu in 1973, which incidentally was directed by KS Goplakrishnan who directed her first movie Karpagam. But she had developed one drawback. When she became pregnant, she started putting on weight and at one stage she became very fat. But she continued to act with NT in Bharatha Vilas (1973) and Thanga Pathakkam (1974). Later she realized that she cannot continue to ignore her physical appearance and she carried out some corrective steps and became slim again. Having attained a slim body she began to choose stories. Her husband Velayudhan Nair who was running Sudharsan Chit funds launched Asoka Brothers. KRV also used other names for the production companies and it was widely known that she used to finance films where she acted as heroine. There were films like Mittai Mummy (remember Thirukovil thedi Rathidevi Vandhaal) Mayor Meenakshi etc. She had produced/financed films like Annapoorani, Natakame Ulagam during those periods. She always chose stories that gave importance to her and so when the announcement came for Naan Vaazha Vaippen, there was a surprise because for the first time she had booked a star who was bigger than her. Later it transpired that it was a remake of Hindi Majboor.
Majboor, as mentioned earlier, was one of the films of Amithab that got released in 1975. It was an emotion cum action movie that added to the lustre of Amithab. It had a cameo appearance by Pran and this character was written in such a manner that it navigated the story in the climax. When it was decided to remake the film, initially only NT and KRV were confirmed. D.Yoganand would direct the movie and it would have music by IR. Then came the news that Rajini an upcoming star (1978 April) would be playing the role of Pran. Before this could be confirmed another incident occurred.
(தொடரும்)
Regards
Murali Srinivas
15th May 2014, 11:17 PM
SIVAJI SEASON SONG 7
SIVAJI SEASON - ENDHAN PON VANNAME
எந்தன் பொன் வண்ணமே - Part II
NT & ACCIDENT
NT at that time (April 1978) was acting in multiple films and they were at various stages of production. Punniya Bhoomi – a remake of Mother India was complete and ready for release. Chinna Annamalai’s Vijayavel films was producing General Chakravarthi and it was also complete except for some patchwork. Pilot Premnath, a joint Indo– Srilankan production was almost over except for one final schedule in Sri Lanka. Justice Gopinath was more than half way through. In addition to these, Sivaji Productions’ own venture that would turn out to be the 200th Film of NT (It was not named at that point in time) was also fast progressing. Kavarimaan was also on the floors. Naan Vazha Vaippen was also started and a portion of the film was completed. As if all these were not enough, NT had agreed to do one more film and that was in Malayalam.
Navodaya Films is one of the famous banners of Malayalam cinema. It is owned by Appachan, who also runs a studio by the same name. Tamil audience would recogonise him on two accounts. He was the producer of My Dear Kutti Chatthan, the first 3D Film in India. The second is he owns and runs Kishkintha, the theme park in the outskirts of Chennai. He was also the pioneer in producing 70 MM movie in South India, when he produced Padayottam (Malayalam – 1982) in 70 MM. In 1978, he was producing a big budget movie (by Malayalam industry standards) and it was a historical. Like we do have Karna Parambara Kadhagal, Keralites do enjoy hearsay stories that come under the genre Vadakkan Pattu Kadhaigal. These are stories that talk about the exploits of rulers of Malabar area called North Kerala (Vadakkan Keralam). The much talked about Vadakkan Veera Kadha written by M.T.Vasudevan Nair and which brought the first National award for Mammootty (he has three) also falls under the same genre.
Now coming to the movie, it was named as Thacholi Ambu that had Prem Nazir playing the hero and Jaya Bharathy, the heroine. It also had Nambiar, KR Vijaya, Balan. K. Nair and Thikkurisi Sukumaran Nair. Jayan, the first Super Star of Modern Malayalam cinema, who lost his life in a helicopter accident while enacting a stunt scene for the film Kolilakkam in November 1980, at Cholavaram near Chennai, was an upcoming star at that time and he played a second hero role in this movie. There was a small but powerful role of a King who happens to be the father of the hero. For this they approached NT. We have discussed earlier that NT enjoyed a warm friendship with all other language film industries and he had a very strong relationship with Malayalam industry. Added to it, Appachan was a family friend and when NT’s best friends Nazir and Thikkurisi put pressure, NT accepted to do the role.
NT was a tireless worker and he used to work for hours together. Malayalam industry normally works very fast and people must have heard stories that they can finish off a film in 15-20 days. So for Thacholi Ambu, NT had gone to Kerala in the last week of April 1978 and he was there for a week. His work was almost finished. On May 5th of 1978, they were shooting a sword fight between NT and Nambiar. While doing a shot where he defended with the shield in one hand and flexing the right arm with the sword, he lost balance and fell down and he landed on the floor with his left hand taking the entire weight. He suffered a fracture in his left forehand. Shooting was stopped (it was almost over) and he came back to Chennai. On arrival here, doctors diagnosed that the fracture was more acute than what was earlier thought of. He underwent a surgery wherein fishplates were fitted in his hand to set right the fracture. Doctors also announced that it would take a minimum 45 – 60 days for him to return back to shooting. This unexpected happening threw his entire shooting schedules out of gear and NVV was one of the films that suffered due to this. It was tough on NT also because he had to sit idle and he felt sorry for the producers who were affected. A small digression here is, in Punniya Bhoomi that was released exactly a week later (May 12th of 1978), the father character played by NT would lose his hand in an accident and there would be a dialogue நல்லவங்களுக்குத்தான் கையெல்லாம் ஒடியுது, a normal dialogue (written much earlier) but that was apt for the occasion, provoking claps and sympathy at that point in time.
ACCIDENT AND AFTERMATH
Now VCS, brother of NT had to do a trouble shooting exercise and he did it in right earnest. He had two films that were complete. Punniya Bhoomi was released on 12th of May 1978 and General Chakravarthi made it to the screens on 16th of June 1978. The films that had to be completed based on priority were Pilot Premnath, Justice Gopinath and Thirisoolam. So call sheets would have to be given in that order. But unfortunately the injury took longer time to heal and the 45 – 60 days got extended. Again there were problems on the call sheet front. By this time NT had to fulfill another duty, that of a politician. Though we are not into politics, we will do a slight peep into what happened. After the Congress lost the 1977 general elections, Indira Gandhi was keeping quiet for some time. When the Janata Government started taking action against her, she started protesting and she began to tour. During the tour of Tamilnadu on Oct 29th and 30th of 1977, the black flag demonstration staged by DMK against her at Madurai and Chennai turned violent and she escaped miraculously. After that she had parted ways with the old guard in her party and her faction which broke loose on Jan 1st of 1978 came to be known as Congress (I). The entire Tamilnadu unit of Congress had stayed behind her. After this came the assembly elections for Karnataka and Andhra in Feb 1978 and Congress (I) captured power in both the states with Devaraj Urs and Chenna Reddy becoming the respective Chief Ministers. It increased her political stake.
In July 1978, MGR had announced elections for Madurai Corporation alone in Tamilnadu and there was a 4-cornered contest (Janata being the fourth contestant). Congressmen brought Indira on some other pretext to Madurai and she canvassed in certain places by showing the hand symbol. Since she had come down, it now became imperative for NT to campaign. He also came to Madurai along with then TNCC (I) President Moopanar and this further delayed the start up of the shooting. . Finally NT started shooting on August 10th of 1978 and he did it for Naan Vaazha Vaippen. But since he had to complete other pressing assignments, this schedule was planned as a very short one.
NT went on to finish Pilot Premnath that got released on Oct 30th of 1978 for Deepavali, and then completed Justice Gopinath that hit the screens on Dec 16th of 1978. Meanwhile Thacholi Ambu had been released in Kerala. Thirisoolam after completion was released on Jan 27th of 1979 and as everybody knows it was NT’s 200th movie. Kavari Ma(a)n was the next release on April 6th of 1979. But Naan Vaazha Vaippen that was started almost at the same time got struck. There were reasons for that. The story of Majboor was one reason that put the brakes on the shooting. Let us take a look at the story.
[B]STORY BACKGROUND
Ravi works in an international ticketing counter at a travel agency. He has a widowed mother, handicapped sister and a school going brother. He is in love with a lawyer called Neela and her brother Ramesh happens to be the Public Prosecutor. Ravi is the sole breadwinner of the family. The Police get a man missing complaint and since this industrialist Jayaraj was last seen with Ravi (as he had come to collect his air ticket) the police question him. Ravi gets a severe headache on and off but he postpones the visit to the doctor.
The police stumble upon the body of Jayaraj in the underground drainage and again Ravi is questioned. Neela asks him not to get tensed up. Jayaraj’s brother announces a reward of Rs 5 Lakhs to any person who is ready to give a clue for identifying the killer. Ravi’s headache becomes severe and he consults a doctor and Ravi’s head is x-rayed. Doctor has some shocking news for Ravi. He is suffering from a brain tumor and that needs surgery. The bad news does not end there. The doctor is unable to guarantee that he would be normal after the surgery. Ravi is totally upset. He thinks about his mother, sister and brother and he is worried about their future. Ravi, remembering the offer of Rs 5 Lakhs announced by the brother of Jayaraj, hatches a plan.
Ravi calls up the police and informs that he would spell out the killer’s name provided the amount of 5 Lakhs is deposited as per his instructions. He gives the name of the lawyer to whom the money needs to be handed over and he writes to the lawyer that he has written a name of a person who would be the beneficiary of this amount and the same is put in a sealed cover and he puts up a condition that it has to be opened only after the accused is punished. Ravi then goes on to create some evidences that would show as if Ravi is the man behind the killing of Jayaraj. When Jayaraj’s brother deposits the money as instructed, Ravi gives himself up to police. In the court, Ravi simply confesses to the crime thus making Neela’s efforts go waste. Ravi is awarded death sentence. His family is totally shattered. He doesn’t heed the appeal of his mother and Neela to appeal against the verdict.
While he is counting his days in prison, again he experiences severe pain in his head and is hospitalized. He is operated upon and the tumour is removed. The court orders the execution to be delayed till he recoups. Ravi now completely cured of the disease realizes the folly of having falsely implicated himself in the murder and wants to come out. But everything is against him. Even the time for appealing against the verdict has expired. Now he is left with no other go except to jump prison and find out the truth about the murder himself. His journey takes him to a person called Michael D’Souza, a small time thief and he promises to help Ravi. How they along with Neela go about reaching their goal forms the rest of the story.
After completing a portion of the movie, somebody in the unit started doubting about the acceptability of the story by the audience and the fans. There were some people who said that the cameo role of Michael might pose a threat to the heroism of the NT character.
The character was wrongly understood by a section of people and they put pressure on the producer to change the story. But NT was firm in his stand that having inked the agreement, it is not correct to ask the producer to change the story and that too after almost half way through the shooting. Another factor was the role of Pran. Rajini had been booked but that was in 1978 April and in April 1979, much water had flown under the bridge. Rajini had grown in stature and at the same time trouble was brewing for him.
RAJINI – 1975 TO 1979
Sivaji Rao Gaekwad, his early life, he joining the Adayar Film Institute and grabbing the attention of K.Balachander, all these have been well documented already to merit a mention again. Rechristened as Rajinikanth (after the character names of the play cum movie Major Chandrakanth), this man made his debut in Aboorva Raagangal on August 15th of 1975. Of course that role didn’t set the screen on fire. His second film Moondru Mudichhu (also by KB) came out in 1976 October during Deepavali. The friend turned foe caught the attention of the moviegoers. His third film was also with KB and Avargal released on 25th Feb of 1977, showcased a sadistic husband Ramanathan and he was loathed by the Thaikulangal. Devaraj–Mohan and Panchu Arunachalam team basking under the success of Annakili were busy with their next venture Kavikuyil and the only major changes from the previous film were Sridevi for Sujatha and Rajini for Srikanth. This came out on July 29th of 1977, followed by Raghupathy Raghavan Rajaram on Aug 15th of 1977, where he played the murai maman of heroine Sumithira. [The film titled as R. Raghava. R, because of censor problems was changed to R. Raghavan. R].
Seeing the potential of the artist, Sp. Muthuraman who was filming the novel Bhuvana Oru Kelvikuri by Maharishi took a path breaking decision of booking him for a positive role and Rajini came out with flying colours [Sivakumar should be congratulated in equal measures for accepting to portray a negative character]. If BOK released on Sep 2nd of 1977 made a big headway for Rajini, the debut film of Bharathiraaja, 16 Vayadhinile that hit the screen on 15th of September put him on a high pedestal. Parattai had garnered equal fame attained by Sappani. The subsequent releases like Aadu Puli Aatam on Sep 30th, Gayathiri on Oct 7th and Aaru Pushpangal on Nov 10th (Deepavali) made 1977 a special year for Rajini.1978 dawned and when his first release Shankar Salim Simon came out on Feb 10th, he had become a star of reckoning. One month later on March 10th, Aayiram Jenmangal [remake of Sheela directed Malayalam movie Yaksha Gaanam] came out and it saw audience rooting more for second hero than the hero. This was when Rajini was booked for not one but two films of NT. They were Justice Gopinath and Naan Vaazha Vaippen, the film in discussion. Incidentally D. Yoganand directed both the films.
NVV – CASTING AND DELAY
But the accident that happened to NT made Rajini wait for a longer period to start shooting. The adopted son’s character in Justice Gopinath (again to use the same phrase) did not set the screen on fire. But the period that intervened between his booking that happened in March 1978 and subsequent release of Justice Gopinath on Dec 16th of 1978 had seen Rajini grow in stature. In between he acted in Maangudi Minor, Bhairavi, Ilamai Oonjalaadugirathu, Sathurangam, Vanakkathukkuriya Kaadhaliye, Mullum Malarum, Iraivan Kodutha Varam, Thappu Thalangal, Thai Meethu Sathyam and Aval Appadithan. There was one more film Paavathin Sambalam in which Rajini had played a guest role and it also got released one week prior to Justice. Readers can very well imagine what would have been his impact on the audience. But poor screenplay was the reason for Justice Gopinath not getting the required attention of the public.
After this and before the commencement of Naan Vaazha Vaippen shoot, Rajini had done En Kelvikkenna Badhil, Priya and Kuppathu Raja. He had almost finished Ninaithale Inikkum. NVV, Dharma Yudham, 6 to 60 were half way through and Annai Oru Aalayam was about to start. During this period, on March 10 and 11 of 1979, there was a conference held in Madurai to celebrate the 200th film of NT (i.e.) Thirisoolam and the second day was for cine field. The first day was dedicated for political leaders and their speeches. Rajini had attended the meeting on the second day (In fact yours truly had attended the meeting and till date happens to be the only time I have seen him in person) and he spoke and told that he was a great fan of NT.
After the conference was over certain incidents happened that put a question mark over Rajini’s future. Vested interests wanted to use this development and urged the producer and NT to drop Rajini. But NT put his foot down and he as the President of Nadigar Sangam deputed Major the then Secretary of the Sangam to do all the required help for Rajini. He told the director and producer that Rajini’s portions could be shot after some time. Rajini after fulfilling his pressing commitments then joined the shooting and completed NVV. [Rajini was always a great fan of NT right from his younger days. He had the highest respect for NT. That aside, the reason NT stood by his side and helped him to come out of the troubled phase made him determined to pay back his gratitude to NT and his family. We can classify Mannan, Padayappa and Chandramuki as a token of gratitude].
Now with all the problems getting solved, shooting commenced on a full swing. Now coming to the songs part, this being a remake made the job of fixing the song sequences easier. There was one duet, one song for comforting the sister, one birthday song, one song for Michael character and the repeat of the song sung by the brother. IR decided to use all the top three male singers and PS for female voice. While SPB – PS sang Thirutheril Varum Silaiyo, KJY rendered Aagayam Mela song. TMS sung the two solos Endhan Pon Vanname and Ennodu Paatu Paadungal.
SONG SEQUENCES & DISCUSSION SONG
Ennodu Paatu Paadungal comes in at the birthday party of Neela. Ravi is asked to sing. But he had just got back from the doctor, who had told him for all his efforts, Ravi might not live longer. While others are oblivious of this happening, Ravi tries to be cheerful outwards but in his heart of hearts, he is crest fallen. TMS had sung the song along with a chorus. The song in discussion happens when the handicapped sister speaking of a prize in lottery and the ways she would spend it only to be brought crashing down to harsh reality by an innocuous remark from her younger brother. Seeing the hurt in her eyes, the elder brother Ravi sings Endhan Pon Vanname.
TMS - DISCUSSION SONG
The tune was simple and catchy. Kannadasan as usual flowed. When the recording took place, TMS understood the mood of the situation and he caressed the words and made them soothing to the ears of not only the sister character but also to the listeners’ ears. Hear the following lines
கோவில் இல்லை என்றால் தெய்வம் இல்லை
இங்கு நீ இல்லையேல் கண்ணே நானும் இல்லை
வானம் இல்லை என்றால் மதியும் இல்லை ; உந்தன்
வார்த்தை இல்லையென்றால் ஒரு கீதம் இல்லை
having said that he compares his sister with the flower and when you hear it you feel the soft touch of the flower on your face
நீ வந்ததால் தானே பூ வந்தது
நீ வாடினால் வண்ண பூ வாடுமே
and then the caressing words
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு
In the second charanam, he compares gold and rays of sun with his sister and how he does it with a soft voice that touches you
பொன்னை கண்டேன் அதில் உன்னை கண்டேன்
காலை பொழுதை கண்டேன் இந்த கதிரை கண்டேன்
என்னை கண்டேன் நெஞ்சில் உறவை கண்டேன்
நீயும் இல்லையென்றால் நானும் எங்கே செல்வேன்
Then he highlights his mother’s role and see the softness in TMS voice
தாய் செய்ததே தவம் நாம் வாழ்வது
தாய் கொண்டதே வரம் நாம் வாழ்வது
In the third and final charanam, he instills confidence in her by saying since they are honest, they don’t need to fear anything. TMS brings gambeeram into his voice and says
கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை; நீ
கண்ணீர் சிந்த ஒரு நியாயம் இல்லை
காலம் வரும்; அந்த தெய்வம் வரும்
அந்த நாளும் வரும் நல்ல வாழ்வும் வரும்
When the charanam comes to an end, the brother makes a promise. He assures that he will take care of her future.
காலம் தனை நான் மாற வைப்பேன்
கண்ணே உன்னை நான் வாழ வைப்பேன்
TMS always brought out the emotions very clearly and even in a light song like this, he expresses clearly the emotions. The song with a simple tune rendered emotively by TMS with a soft voice lingers in our mind long even after a long time.
SPB – KJY SINGING FOR NT
During the earlier discussions we have seen that though many singers have done playback singing for NT, it was TMS who had the lion’s share of the songs. Especially after 1960, it was out and out TMS not only for NT but also for MGR, Jai, Ravi, and Sivakumar etc. After the advent of SPB in 1969, things began to change and SPB began to slowly climb up the ladder. Director CVR when compared to other directors, who were doing NT films, always made it a point to give a youthful look to NT films. As a part of that exercise, he was responsible for bringing SPB to sing for NT in Sumathi En Sundari. After Pottu Vaitho Mugamo became such a roaring hit in 1971, CVR used SPB in Raja (1972) for Irandil Ondru song. This prompted VV Sundaram to use SPB for Gowravam (1973) for Yamuna Nadhi Inge song. Again it was CVR who brought SPB again with Ethhanai Azhagu Kotti Kidakkuthu in his Sivakamiyin Selvan in 1974. In the same year CVR this time used Kovai Soundararajan along with TMS in En Magan for Sonpapdi Sonapapdi song. If the following year (1975) beginning saw Manidhanum Deivamaagalam which had Seerkazhi singing for one of the dual roles, the year end saw a sweet voice debuting for NT. Yes, K.J. Yesudas sang Malare Kurinji Malare in Dr.Siva. The last NT movie of 1975, Paattum Bharathamum had a SPB song. CVR again made SPB sing Kaadhal Kadhai Solveno in his Unakkaaga Naan in 1976 beginning. The same year saw, SPB sing Padagu Padagu in Uthhaman. 1977 totally belonged to TMS except for Naalu Pakkam Vedarundu in Annan Oru Koyil but of course it was a background song. 1978 started with Andhaman Kaadhali and we heard KJY sing Andhmaanai Paarungal Azhagu and Ninavaale silai seithhu songs. Thirisoolam in 1979 again brought TMS, SPB and KJY together as they sang for the three different roles. But one thing if we have noticed is, all these films mentioned above had TMS singing the major songs. NT and his director/producer were particular that TMS should be there. First time this was broken in 1979 when Kavarimaan, the film after Thirisoolam came out without TMS. While KJY rendered the classical Brova Baaramma, SPB sang Poo Pole Un Punnagaiyil. Fans were shocked. The reasons were not hard to find.
TMS – IR – THE RELATIONSHIP
At the beginning of this discussion, we saw that TMS did not sing as per the wishes of IR during Annakili. But IR had high respects for TMS. He used to say that any musician who grew up listening to the cinema songs of 50s and 60s could not but love TMS. So he used him in not only NT films but also for others. IR made TMS sing Kanakku Paarthu Kaadhal Vandhadhu for Muthuraman in Alukkoru Aasai in 1977. TMS again sang Nandooruthu Nariyooruthu for Rajini in Bhairavi in 1978. So what made IR turn away?
In 1978, TMS had gone to Srilanka and the he gave an interview to the daily newspaper Veera Kesari. Ponnu Oorukku Pudhusu directed by Selvaraj (the story writer of BR camp) and the song Oram po had become a huge hit. The paper had asked for TMS’ comment on the song. TMS would not have imagined that his reply is going to permanently ruin a relationship. Veera Kesari gave a sensational heading to the interview and the words mentioned (as if spoken by TMS) deeply hurt IR. The reactions were swift.
IR's REACTION TOWARDS TMS
The first to get the axe was the song IR had recorded on April 14th of 1978. Old timers would be aware that even after MGR became the CM of Tamilnadu, he expressed his desire to act in movies. There were different opinions about this and political observers were expressing their doubts about the constitutional validity of such a move but there was no explanation given in the constitution regarding such a scenario. When questioned about this, the then PM Morarji Desai said that Central Government would not stand in the way. This emboldened MGR and he announced the film Unnai vida Maatten. This was to be produced by G.K.Dharmaraj of Yoga Chitra films, who had earlier produced Ilaiya Thalaimurai with NT. IR was booked as the music director. On April 14th of 1978, the pooja of the film was held and a song written by Vaalee, tuned by IR and sung by TMS was recorded. When this controversy broke out, IR made Malaysia Vasudevan sing the same song. Since the film didn’t proceed further, the song also never came out.
Then IR turned his attention to Ennodu Paatu Paadungal song and the same was again recorded with SPB singing this time. When TMS came to know of this development, he went and asked the director about this. He was told that the earlier song had a chorus along with the song. Since NT felt that chorus could be avoided so that it reflected the mood of the situation, they had done the recording again. Since TMS had gone out of the country and since they had to complete the shooting, they did it with SPB. Though TMS was not satisfied, he couldn’t do anything. NT never interfered in these matters. Moreover he had taken a liking for IR’s music. He was answering a regular Q & A session in Bommai magazine in 1978-79 periods and for a question asking about his favourite song of 1977, he had replied that it is Sendoora poove. This reply had put the lyrist Gangai Amaran and IR on cloud nine. Moreover NT was the chief guest for the jubilee celebrations of Kizhakke Pogum Rail held in Kamala theatre in 1978 and from thereon BR and IR had become close with him. NT rarely ever interfered in music and this also played a part in the subsequent happenings.
From thereon IR rarely used TMS. He avoided TMS wherever he could, like in Kavarimaan (being SpM- Panchu combo) and Pattakathhi Bhairavan (producer director VB Rajendra Prasad, the maker of Engal Thanga Raaja and Uthhaman, was a Telugu and he couldn’t object). When the producer was strong like Balajee and SS Karuppaswamy he used TMS like he did in Nallathoru Kudumbam (the classic Sindhu Nadhi Karaiyoram) and Rishi Moolam respectively. We can also add Vetrikku Oruvan in this category. IR had to face this problem only in NT films. For others he managed with SPB and KJY. But when Devar Films who booked IR for the first time for Annai Oru Aalayam (1979 Deepavali) wanted a TMS song as a matter of sentiment, IR gave the song Amma, Nee Sumandha Pillai to TMS.
The last film to come out of NT-IR-TMS combo was Rishi Moolam in Jan 1980. People still remember Neramidhu Neramidhu and 50-lum Aasai Varum from the same. After this there was a long gap of almost 3 ˝ years before IR did another NT movie. Gangai Amaran who did music for Balajee’s Neethipathi in 1983 used TMS (remember Paasamalare song?) but in the very next NT film Imaigal for which again GA was the MD, he used Malaysia Vasudevan (Maadapuravo illai Manjal Nilavo?). This prompted IR to plumb for MV in subsequent movies that started with Vellai Roja (1983 Deepavali). The only exception was Thaaikku Oru Thaalaattu, where bowing to pressure from producer KRG, IR used TMS –PS for Pazhya Paadal Pola Puthiya Paadal Illai, which had the same tune as Unnai Ondru Ketpen from Puthiya Paravai. But for reasons best known to the director, the song was not there in the movie except for a brief part.
PICTURISATION
The picturisation was easier as it was an indoor song. There are a section of the readers who feel that any NT film after Thirisoolam is trash. They should see this song. NT even after completing 27 years in the industry was able to bring out the life of the character. He does it casually. The face and the lip movement convey the emotions. You should also check the scene when he talks to the doctor (Poornam Viswanathan), the way he expresses his shortcomings regarding his family is worth a watch and more.
TMS ON IR & IR ON TMS
What does TMS say about this? In the book (Oru Kuyilin Vaazhkai Sangeetham) he talks about this. He says that he told that songs like Oram Po and Machhani Paatheengala may bring fame for the MD temporarily but in the long run, people would identify the MD with only such songs and if he tries to give a classical song, he may be rejected. So there is a danger of being side lined with a dappankutthu muthirai. TMS says that the sentence Oramaaga Poi vida vendiyadhu varum was twisted and reported as some other word. He feels that IR could have contacted him and checked the veracity of the report. Another incident that further distanced the two was a musical night at Coimbatore. Out of 35–40 songs, TMS was given only 5 songs and this was filmed for a movie called Ilaiyarajavin Rasigai (of course it never came out). On coming back to Chennai TMS called IR and asked him not to call him (TMS) for light music concert anymore and hung up.
IR on his part never came out with his side. But once when questioned about not using TMs, he had to say the following
"TMS அவர்கள் மிகவும் பெரிய கலைஞன் என்பதில் சந்தேகமில்லை. எல்லா விதமான உணர்ச்சிகளையும் பாவங்களையும் தன்னுடைய குரலில் கொண்டுவரக்கூடிய ஒரே பின்னணி பாடகர் TMS மட்டும்தான். அந்த பெரிய கலைஞன் என்னுடைய இசையில் பாட முடியாமல் போனது அவருடைய துரதிர்ஷ்டம். அவரை என்னுடைய இசையில் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போனது என்னுடைய துரதிர்ஷ்டம்."
But all said and done it was the fans, who were unlucky to have missed out this combo.
RELEASE & SUCCESS STORY
Coming to the film, the same was released on August 10th of 1979. There were slight skirmishes here and there in theatres and of course a section that always wanted to run down NT said that it was Rajini who saved the film. Neither NT nor Rajini answered and on the 100th day celebrations. Rajini confessed that whatever he had done in the movie was taught by NT and he simply did what he was told to do. NT - Kannadasan combo this time joined with IR and proved that performers would score irrespective of the period and situation.
Before signing off, my personal experience. I had seen the movie on the opening show that was the matinee of August 10th, 1979 at Madurai – Sridevi. We thoroughly enjoyed the movie.
Here is the lyric
எந்தன் பொன் வண்ணமே அன்பு
பூ வண்ணமே
நெஞ்சில் போராட்டமா
கண்ணில் நீரோட்டமா
அதை நான் பார்க்கவா
மனம் தான் தாங்குமா
(எந்தன்)
கோவில் இல்லை என்றால் தெய்வம் இல்லை
இங்கு நீ இல்லையேல் கண்ணே நானும் இல்லை
வானம் இல்லை என்றால் மதியும் இல்லை உந்தன்
வார்த்தை இல்லையென்றால் ஒரு கீதம் இல்லை
நீ வந்ததால் தானே பூ வந்தது
நீ வாடினால் வண்ண பூ வாடுமே
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு.
(எந்தன்)
பொன்னை கண்டேன் அதில் உன்னை கண்டேன்
காலை பொழுதை கண்டேன் இந்த கதிரை கண்டேன்
என்னை கண்டேன் நெஞ்சில் உறவை கண்டேன்
நீயும் இல்லையென்றால் நானும் எங்கே செல்வேன்
தாய் செய்ததே தவம் நாம் வந்தது
தாய் கொண்டதே வரம் நாம் வாழ்வது
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு
(எந்தன்)
கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை; நீ
கண்ணீர் சிந்த ஒரு நியாயம் இல்லை
காலம் வரும்; அந்த தெய்வம் வரும்
அந்த நாளும் வரும் நல்ல வாழ்வும் வரும்
காலம் தனை நான் மாற வைப்பேன்
கண்ணே உன்னை நான் வாழ வைப்பேன்
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு
(எந்தன்)
Regards
Russellbpw
16th May 2014, 10:46 AM
பாராளுமன்ற தேர்தல். - இந்திய நாடு தமிழகத்திடம் இருந்து காப்பாற்றப்பட்டது !
நாம் எந்த கட்சியையும் ஆதரிக்கவில்லை என்றாலும் மத்தியில் பாஜாகா மிக பெரிய வெற்றி பெரும் நிலை தற்போது நிலவுகிறது.
இது நிச்சயம் வரவேற்க தகுந்த ஒரு முடிவு.
சுமார் 317 இடங்களில் முன்னணியில் உள்ளது.
நம்மை பொருத்தவரை தகுதியே இல்லை என்றாலும் பிரதம மந்திரி கனவு கண்டவர், கண்ட கனவு கனவாகவே போனது இந்தியாவே காப்பாற்றப்பட்ட ஒரு நல்ல விஷயமாகும்.
தமிழகத்தில் வேண்டுமானால் தகுதி அடிபடையில் ஆட்சிகள் மக்கள் அமைக்காமல் காசுக்கு தம்மை விற்று தமிழ்நாடயே தவறான ஆட்சியாளர்கள் கையில் ஒப்படைத்து போகலாம்.
மற்ற மாநில மக்கள் அதுபோல அல்லாமல் தக்க தருணத்தில் மூளையை உபயோகித்து ஒன்று சேர்ந்து தமிழகத்திடம் பிரதம மந்திரி கனவு கண்டவரிடமிருந்து இருந்து இந்தியாவை காப்பாற்றியதற்கு நன்றிகள் கோடி.
ஜெய் ஹிந்த் !
Russelldwp
16th May 2014, 12:11 PM
[QUOTE=RavikiranSurya;1133247]பாராளுமன்ற தேர்தல். - இந்திய நாடு தமிழகத்திடம் இருந்து காப்பாற்றப்பட்டது !
Ravikiran Sir you are 100% TRUE.
Clear Majority Given by People of All over India to ONE AND ONLY HERO OF INDIAN POLITICS THIRU. MODI
NO MONEY - NO FREE GIFTS - BUT BJP GOT INDIVIDUAL MAJORITY - ONLY BECAUSE OF MODI'S GREAT EFFORT
WE SALUTE OUR PRIME MINISTER MODI
Gopal.s
17th May 2014, 09:28 AM
இங்கு வரும் நண்பர்கள் filmography திரியை தொடருங்கள்.ராகவேந்தர் மிகவும் பிரயத்தனம் எடுத்து அழகாக மாலை போல் தொடுக்கிறார்.
இன்று என்னை மிக கவர்ந்த irene hastings பார் மகளே பார் பதிவு(பாகம்-5)போட பட்டுள்ளது.படித்தே ஆக வேண்டிய முன்னோடி பதிவுகளில் ஒன்று.
Gopal.s
17th May 2014, 04:42 PM
ஒரு குளிர்சாதன(ஏ.சி.)டீலக்ஸ் திரையரங்கில்(சாந்தி) வெள்ளி விழாக் கண்ட முதல் திரைப்படம் பாவமன்னிப்பு. 1961-ம் ஆண்டின் ஈடு, இணையற்ற வசூல் சாதனைப் படமான பாவமன்னிப்பு, சாந்தியில் 177 நாட்கள் ஓடி இமாலய வெற்றி கண்டது. பாவமன்னிப்பு தொடங்கி சாந்தியில் வெளியான அனைத்து நடிகர் திலகத்தின் திரைக்காவியங்களும் நிகழ்த்திய சாதனைகளை தொடர்ந்து வரும் பட்டியலில் காணலாம்.
(திரைக்காவியம் - வெளியான தேதி - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்)
1. பாவமன்னிப்பு - 16.3.1961 - 177 நாட்கள்
2. பாலும் பழமும் - 9.9.1961 - 127 நாட்கள்
3. பார்த்தால் பசி தீரும் - 14.1.1962 - 75 நாட்கள்
4. வளர்பிறை - 30.3.1962 - 35 நாட்கள்
5. பலே பாண்டியா - 26.5.1962 - 49 நாட்கள்
6. செந்தாமரை - 14.9.1962 - 43 நாட்கள்
7. பந்தபாசம் - 27.10.1962 - 55 நாட்கள்
8. சித்தூர் ராணி பத்மினி - 9.2.1963 - 20 நாட்கள்
9. அறிவாளி - 1.3.1963 - 28 நாட்கள்
10. இருவர் உள்ளம் - 29.3.1963 - 105 நாட்கள்
11. பார் மகளே பார் - 12.7.1963 - 64 நாட்கள்
12. இரத்தத்திலகம் - 14.9.1963 - 81 நாட்கள்
13. கர்ணன் - 14.1.1964 - 100 நாட்கள்
14. பழநி - 14.1.1965 - 42 நாட்கள்
15. சாந்தி - 22.4.1965 - 100 நாட்கள்
16. திருவிளையாடல் - 31.7.1965 - 179 நாட்கள்
17. மோட்டார் சுந்தரம் பிள்ளை - 26.1.1966 - 78 நாட்கள்
18. சரஸ்வதி சபதம் - 3.9.1966 - 133 நாட்கள்
19. நெஞ்சிருக்கும் வரை - 2.3.1967 - 71 நாட்கள்
20. திருவருட்செல்வர் - 28.7.1967 - 63 நாட்கள்
21. ஊட்டி வரை உறவு - 1.11.1967 - 107 நாட்கள்
22. திருமால் பெருமை - 16.2.1968 - 56 நாட்கள்
23. கலாட்டா கல்யாணம் - 12.4.1968 - 106 நாட்கள்
24. தில்லானா மோகனாம்பாள் - 27.7.1968 - 132 நாட்கள்
25. அன்பளிப்பு - 1.1.1969 - 30 நாட்கள்
26. தங்கச்சுரங்கம் - 28.3.1969 - 78 நாட்கள்
27. குரு தட்சணை - 14.6.1969 - 41 நாட்கள்
28. தெய்வமகன் - 5.9.1969 - 100 நாட்கள்
29. வியட்நாம் வீடு - 11.4.1970 - 110 நாட்கள்
30. ராமன் எத்தனை ராமனடி - 15.8.1970 - 75 நாட்கள்
31. எங்கிருந்தோ வந்தாள் - 29.10.1970 - 100 நாட்கள்
32. தங்கைக்காக - 6.2.1971 - 83 நாட்கள்
33. சவாலே சமாளி - 3.7.1971 - 107 நாட்கள்
34. பாபு - 18.10.1971 - 102 நாட்கள்
35. பட்டிக்காடா பட்டணமா - 6.5.1972 - 146 நாட்கள்
36. வசந்த மாளிகை - 29.9.1972 - 176 நாட்கள்
37. பாரத விலாஸ் - 24.3.1973 - 100 நாட்கள்
38. எங்கள் தங்க ராஜா - 15.7.1973 - 102 நாட்கள்
39. கௌரவம் - 25.10.1973 - 102 நாட்கள்
40. தங்கப்பதக்கம் - 1.6.1974 - 176 நாட்கள்
41. அவன் தான் மனிதன் - 11.4.1975 - 113 நாட்கள்
42. மன்னவன் வந்தானடி - 2.8.1975 - 114 நாட்கள்
43. பாட்டும் பரதமும் - 6.12.1975 - 69 நாட்கள்
44. உத்தமன் - 26.6.1976 - 70 நாட்கள்
45. தீபம் - 26.1.1977 - 135 நாட்கள்
46. அண்ணன் ஒரு கோயில் - 10.11.1977 - 114 நாட்கள்
47. தியாகம் - 4.3.1978 - 104 நாட்கள்
48. ஜெனரல் சக்கரவர்த்தி - 25.6.1978 - 105 நாட்கள்
49. திரிசூலம் - 27.1.1979 - 175 நாட்கள்
50. இமயம் - 21.7.1979 - 48 நாட்கள்
51. பட்டாக்கத்தி பைரவன் - 19.10.1979 - 56 நாட்கள்
Gopal.s
17th May 2014, 04:53 PM
சாந்தியில் வெளியான அனைத்து நடிகர் திலகத்தின் திரைக்காவியங்களும் நிகழ்த்திய சாதனை
52. ரிஷிமூலம் - 26.1.1980 - 104 நாட்கள்
53. ரத்தபாசம் - 14.6.1980 - 83 நாட்கள்
54. விஸ்வரூபம் - 6.11.1980 - 102 நாட்கள்
55. சத்திய சுந்தரம் - 21.2.1981 - 105 நாட்கள்
56. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு - 3.7.1981 - 49 நாட்கள்
57. கீழ்வானம் சிவக்கும் - 26.10.1981 - 103 நாட்கள்
58. வா கண்ணா வா - 6.2.1982 - 104 நாட்கள்
59. தீர்ப்பு - 21.5.1982 - 105 நாட்கள்
60. தியாகி - 3.9.1982 - 72 நாட்கள்
61. பரீட்சைக்கு நேரமாச்சு - 14.11.1982 - 73 நாட்கள்
62. நீதிபதி - 26.1.1983 - 141 நாட்கள்
63. சந்திப்பு - 16.6.1983 - 100 நாட்கள்
64. மிருதங்க சக்கரவர்த்தி - 24.9.1983 - 100 நாட்கள்
65. திருப்பம் - 14.1.1984 - 105 நாட்கள்
66. சரித்திர நாயகன் - 26.5.1984 - 35 நாட்கள்
67. சிம்ம சொப்பனம் - 30.6.1984 - 46 நாட்கள்
68. எழுதாத சட்டங்கள் - 15.8.1984 - 30 நாட்கள்
69. வம்ச விளக்கு - 23.10.1984 - 46 நாட்கள்
70. பந்தம் - 26.1.1985 - 105 நாட்கள்
71. நீதியின் நிழல் - 13.4.1985 - 69 நாட்கள்
72. முதல் மரியாதை - 15.8.1985 - 177 நாட்கள்
73. ஆனந்தக்கண்ணீர் - 7.3.1986 - 63 நாட்கள்
74. வீரபாண்டியன் - 14.4.1987 - 32 நாட்கள்
75. அன்புள்ள அப்பா - 16.5.1987 - 34 நாட்கள்
76. ஜல்லிக்கட்டு - 28.8.1987 - 70 நாட்கள்
77. கிருஷ்ணன் வந்தான் - 28.8.1987 - 49 நாட்கள் (பகல் காட்சியில்)
78. என் தமிழ் என் மக்கள் - 2.9.1988 - 35 நாட்கள்
79. புதிய வானம் - 10.12.1988 - 100 நாட்கள்
80. ஞான பறவை - 11.1.1991 - 21 நாட்கள்
81. பசும்பொன் - 14.4.1995 - 56 நாட்கள்
குறிப்பு:
ஒரு நடிகரின், இரு புதிய திரைப்படங்கள், ஒரே நாளில் ஒரே திரையரங்கில் (அதுவும் மிகப் பெரிய திரையரங்கமான சாந்தி திரையரங்கில்) பகல் காட்சியாகவும், ரெகுலர் காட்சிகளாகவும் வெளியானது எமக்குத் தெரிந்த வரை நமது நடிகர் திலகம் ஒருவருக்கே.
(தேதி : 28.8.1987, திரைப்படங்கள் : கிருஷ்ணன் வந்தான்(பகல் காட்சி), ஜல்லிக்கட்டு(3 காட்சிகள்))
சிங்கத்தமிழனின் சாந்தி சாதனைகளின் புள்ளி விவரங்கள்:
பாவமன்னிப்பு முதல் பசும்பொன் வரை வெளியான புதிய தமிழ்த் திரைக்காவியங்கள் : 81
இதில் வெள்ளி விழா கண்டவை : 6
20 வாரங்கள் முதல் 24 வாரங்கள் வரை ஓடியவை : 2
100 நாட்கள் முதல் 139 நாட்கள் வரை ஓடியவை : 33
10 வாரங்கள் முதல் 14 வாரங்கள் வரை ஓடியவை : 12
50 நாட்கள் முதல் 69 நாட்கள் வரை ஓடியவை : 9
43 நாட்கள் முதல் 49 நாட்கள் வரை : 7
6 வாரங்கள் வரை : 12
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு, நிரந்தர சக்கரவர்த்தி, சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !
சாந்தி சாதனைகள் நிறைவு.
சிங்கத்தமிழனின் சாந்தி சாதனை விளக்கங்கள் விரைவில் ...
அன்புடன்,
பம்மலார்.
mr_karthik
17th May 2014, 05:13 PM
37. பாரத விலாஸ் - 24.3.1973 - 100 நாட்கள்
38. எங்கள் தங்க ராஜா - 15.7.1973 - 102 நாட்கள்
Bharatha Vilas - 114 Days
(No movies screened at Shanti in between BV and ETR)
There is a Shield in Shanti for Bharatha Vilas 114 days, given by the distributer A.P.Films.
mr_karthik
17th May 2014, 06:08 PM
Dear Muarli sir,
Wonderful cover-up about ‘Endhan pon vaNNamE’ from Naan Vaazha VaipEn’.
Your detailed writing has took me to the past, and I am still there, even after finished reading of your article / analysis / history.
Because, for the previous songs you have covered earlier, all the incidents which you have described are heard (from various sources) and read (from various books and magazines).
But for these incidents what you have described in this song analysis, I am the living witness for all those happenings. Yes from Thangai film to 100th Day function of Naan Vaazha VaippEn, I am the witness, and was watching all those happenings in those period, especially initial period of NT – IR relationship. Wow, what a golden memory they are. I already told here and there in out NT thread about the happenings at Chennai during Thiyaagam, Kavariman, Andhaman Kaadhali releases.
I have attended the 100th day function of ‘Naan Vaazha VaippEn’ which was held on 102nd day at Chennai Chitra Theatre, during the interval of its evening show. It was not arranged in any star hotel, but celebrated in the theatre itself. (I strongly hope, Mr. Raghavendhar might be there. He already told he was in 100th days function of Viswaroopam at Shanthi).
NT, K.R.Vijaya, Rajinikanth, D.Yoganand, Jaiganesh, Thengai Srinivasan, and other artists and technical crews were participated and awarded 100th day shields. When the show was started, all of us waiting for the interval (we already saw the movie in several number of times, but this time mainly for the function). After interval, the function started and nearly one and half hour the speeches and award function took place. They were the happiest moments in life, watching our idols in real.
Let me live for some more moments there. Even though there were many films for Deepavali 1978, the main competition was between Pilot Premnath (Alankar) and Sigappu RojaakkaL (Devi Paradise). Other movies are Thaai Meedhu Sathiyam (Wellington) , Vandikaran Magan (Gaiety), Thanga Rangan (Plaza), Kannamoochi (Midland) and Thappu ThaalangaL (Pilot)… wow what a golden period it was.
Thanks a lot Murali sir.
Your service always Priceless.
Gopal.s
18th May 2014, 08:16 AM
Thanks Sarathy Sir.(Your old posting)
நடிகர் திலகமும் ரீமேக் படங்களும்
இதுவரையில் பலரும் நடிகர் திலகத்தின் ரீமேக் படங்களைப்பற்றி அலசி வந்துள்ளதால், என்னால் உங்கள் அளவிற்குப் பெரிதாக அலச முடியுமா என்று தெரியவில்லை.
இருந்தாலும், எனது எண்ணங்களை இங்கு பதிகிறேன்.
பொதுவாக, 1967-இல் இருந்துதான், நடிகர் திலகம் சில ரீமேக் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. 1952-இல் துவங்கி, 1967-வரை, அநேகமாக, எல்லா கதாசிரியர்களும் / இயக்குனர்களும், அவரை கிட்டத்தட்ட எழுபது சதவிகிதம் முழுவதுமாக அவருடைய நடிப்பாற்றலுக்கு தீனி போடும் வேடங்களைக் கொடுத்து, இனி மேல் அவர் நடிப்பதற்கு ஒன்றுமில்லை என்னும் நிலை மெதுவாக வந்திருக்கலாம். மெதுவாக, சிறந்த கதாபாத்திரங்களில் அவர் நடித்தது போக அவருக்கென்று கதை எழுத ஆரம்பித்து, கற்பனைப் பஞ்சம் மெதுவாக தலை காட்டவும் ஆரம்பிதிருந்ததும் ஒரு காரணமாயிருக்கலாம். இன்னொன்று, எப்போதும் அவரது ரசிகர்கள் ஏங்குவது, அவர் வயுதுக்கேற்றார்ப் போல் (அப்போதைய வயது! 38 தானே!) அல்லாமல், எப்போதும் முதிர்ந்த அல்லது, கனமான கதாபாத்திரங்களையே ஏற்று நடிக்கிறாரே என்று. அதற்கேற்றார்ப் போல், 1966-இல் typhoid காய்ச்சல் வந்து அவர் ரொம்ப மேளிந்துவிடவும், மறுபடியும் (உத்தமபுத்திரனுக்குப் பிறகு), அவர் இளமையாக, முன்னைவிடவும், வசீகரமாக மறுபடியும் தோற்றமளிக்க ஆரம்பித்து விட்டார். உன்னிப்பாகப் பார்த்தோமேயானால், செல்வம் படத்தில் இருந்துதான் அவரது மேலும் இளமையான மற்றும் பொலிவான தோற்றம் ஆரம்பித்திருக்கும்.
I. நடிகர் திலகம் நடித்த ரீமேக் படங்கள்
நான் இங்கு எல்லா படங்களையும் தொடப் போவதில்லை. ஒரு பத்து படங்கள் மட்டும். எல்லோரும் பத்து பத்து என்கிறோமே. இதுவே பத்து என்றால், இது போல், இன்னும் எத்தனை பத்து? சொல்லப் போனால், அவரது அதனை படங்களையும் நாம் இனம் பிரிதி ஆய்வு செய்திட முடியும்.
தங்கை:- இது தேவ் ஆனந்த் நடித்து 1951-இல் வந்து வெற்றி பெற்ற Baazi-என்ற படத்தின் தழுவல். எல்லோரும் அறிந்தார்ப் போல், நடிகர் திலகம் இன்னொரு புதிய பாட்டை / பாதையில் (ஒரிஜினல் பாதையை அவர் விடவே இல்லை அது வேறு விஷயம்) பயணம் செல்ல வித்திட்ட படம். Dev Aanand-ஐ விடவும், style-ஆக, ஆனால், ஒரு இடத்தில கூட, அவரைப் போல் அல்லாமல், முற்றிலும் வேறுவிதமாக நடித்தார். அதிலும், குறிப்பாக, அந்த முதல் சண்டை (ஒரு மாதிரி இரண்டு கைகளையும் தட்டுவது போல் சேர்த்து பின் ஸ்டைல்-ஆக தாக்க ஆரம்பிக்கும் அந்த தெனாவட்டான ஸ்டைல்), கேட்டவரெல்லாம் பாடலாம் பாடலில் காட்டும் அந்த முக பாவங்கள் மற்றும் ஸ்டைல் அதை விடவும் இனியது இனியது பாடல் (ஒவ்வொரு முறை இந்த பாடலை திரை அரங்கத்தில் பார்க்கும் பொழுதும் முதல் சரணத்தில் வரும் ஒரு வரி "ரசிகன் என்னும் நினைவோடு...." உடனே, நாங்கள் எல்லோரும் கோரசாக "நாங்க என்னிக்கும் சிவாஜி ரசிகர்கள்டா! என்று அலறுவோம்). ஒரு டிபிகல் மசாலா மற்றும் gangster படத்தை நடிகர் திலகம் முற்றிலும் வேறு விதமாக ஆனால், பொழுதுபோக்கு அம்சம் கொஞ்சமும் குறையாத வண்ணம் அணுகிய விதம், அன்று முளைக்க ஆரம்பித்த இளம் action நடிகர்களான ஜெய் ஷங்கர் மற்றும் ரவிச்சந்திரன் போன்றோரையே திகைக்க வைத்தது எனலாம்.
என் தம்பி:- இது, A. நாகேஸ்வர ராவும் (ANR), ஜக்கையா-வும் நடித்து VB ராஜேந்திர பிரசாத் இயக்கத்தில் 1967-இல் வெளி வந்து வெற்றி பெற்ற “ஆஸ்தி பருவுலு” என்ற தெலுங்கு படம். (ஒன்று தெரியுமா, இந்த ஜக்கைய்யா தான், நடிகர் திலகம் நடித்து தெலுங்கில் மொழி மாற்றம் seyyap பட்ட பெரும்பான்மையான படங்களுக்கு, டப்பிங் குரல் தெலுங்கில் கொடுத்தவர் – ஏனென்றால், அவரது குரலும் கெட்டியாக, நம் நடிகர் திலகம் அளவுக்கு இல்லை என்றாலும், ஓரளவிற்கு, சிம்ம கர்ஜனை போலிருக்கும். அவர் All India Radio-விலும் அறிவிப்பாளராக வேறு பணியாற்றி வந்தவர்). இந்தப் படத்தின் original-ஐயும் நான் பார்த்தேன். ANR-உம் முதல் பாதியில், அந்த அமைதியான பாத்திரத்தில் நன்றாகத் தான் செய்திருந்தார். இண்டர்வலுக்கு அப்புறம்தான், அவரை, பல லட்சம் படிகள் பெட்டராக நடிகர் திலகம் புகுந்து விளையாடியிருப்பார். அதிலும், “தட்டட்டும் … கை தழுவட்டும்” பாடலில் ஆரம்பித்து, கத்தி சண்டை முடியும் வரை (அதிலும், சண்டை தொடங்குவதற்கு முன் அந்தக் கதியை ஸ்டைல்-ஆக வளைத்து நிற்கும் விதம் ... ஆஹா!”), அரங்கம் திருவிழாக் கோலத்தில் இருக்கும். நூல் முனை கிடைத்தால் நூல் கண்டே பண்ணி விடுபவர் ஆயிற்றே!
திருடன் – ஒரிஜினல் படத்தை நான் பார்க்கவில்லை. அதனால் பெரிதாக எழுதவில்லை. இருந்தாலும், இதிலும், எப்படியும், நூறு சதவிகிதம் வேறு மாதிரி தான் செய்திருப்பார். இந்தப் படத்தில், எங்கள் குழுவிற்கு மிகவும் பிடித்தது, ஓபனிங் ஷாட் கருப்பு சட்டையும் கருப்பு பான்ட்-உம் போட்டுக்கொண்டு ஜெயில்-இல் கம்பிகளுக்கு மேல் நடந்து வரும் காட்சி, அவர் train-இல் முதலில் போடும் சண்டை, அப்புறம், ஒவ்வொரு முறை பாலாஜி-யை சந்திக்கும் போதும், சிகரெட்டை அவர் வாயில் இருந்து எடுத்து, பாலாஜி ஏதோ கேட்டவுடன் “டன்” என்று சிகரெட்டை வாயில் வைத்துக் கொண்டே சொல்லும் அந்த அழகு மற்றும் ஸ்டைல். அதிலும், அந்த, வெள்ளை கலர் சட்டை, முழங்கை வரைதான் இருக்கும். அது ஒரு வகையான ஸ்டைல். அவருக்கு மட்டும் அவ்வளவு அழகாக செட்டாகும். அந்த கெட்டப்புடன் ரிவால்வரை கையில் வைத்து ஒவ்வொரு இலக்கையும் சுடும் அந்த ஸ்டைல். இதுவும் அந்தக் கால இளம் நடிகர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது எனலாம். இந்தப் படத்துக்கு நடிகர் திலகத்தின் விமர்சனம் "இந்த திருடன் ஏராளமான பணத்தைத் திருடி திரு பாலாஜி அவர்களுக்குக் கொடுத்து விட்டான்." அந்த அளவிற்கு வசூல் செய்த படம். என் தந்தை சொன்னார் - இந்த படம் வந்தவுடன் அன்றிருந்த அத்தனை action நடிகர்கள் பயப்பட ஆரம்பித்தனர் என்று.
எங்க மாமா:- இது எல்லோரும் அறிந்தது தான். ஷம்மி கபூரும் ராஜஸ்ரீ (ஹிந்தி நடிகை) மற்றும் ப்ரானும் நடித்து 1967-இல் வெளிவந்து வெற்றி அடைந்த பிரம்மச்சாரி படம். என்னவென்று சொல்வது, எனக்குத் தெரிந்து, இந்தப் படத்தில் தான், அவர் ரொம்ப ரொம்ப அழகாகவும், ஸ்டைல்-ஆகவும், இளமையாகவும் இருப்பார். அதாவது, ரொம்ப. அவருடைய உடை அலங்காரமும் இந்தப் படத்தில் பிரமாதமாக இருக்கும் (கலர் படம் வேறு!). ஒரிஜினல்-இல் இரண்டு மிகப் பெரிய பாப்புலர் பாடல்கள் “Aaj kal their meri pyaari …..” தமிழில், “சொர்க்கம் பக்கத்தில்” மற்றும் “Dhil ke jaroke mein…” தமிழில், “எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்”. முதல் பாடலின் போது, அவரது தோற்றம், டான்ஸ் மூவ்மெண்டுகள் மற்றும் ஸ்டைல் அரங்கை அதிர வைத்தது (இப்போதும் தான்) என்றால், இரண்டாவது பாடல், அரங்கத்தில் இருந்த ஒவ்வொருவரையும், மௌனமான ஒரு நிலைக்கு இட்டுச் செல்லும் – அதாவது – பின் டிராப் சைலன்ஸ் என்பார்களே. அரங்கில் உள்ள அனைவரையும் வழக்கம்போல் கட்டிப்போட்டு விடுவார். மறுபடியும், முற்றிலும் வேறு விதமான நடிப்பு.
எங்கிருந்தோ வந்தாள்:- சஞ்சீவ் குமார் நடித்து வெற்றி பெற்ற “கிலோனா”. இதுவும் 1970-இல் தான் வந்தது. சூட்டோடு சூடாக, பாலாஜி அவர்கள் ரீமேக் செய்தார். இந்தப் படத்திலும், ஒரிஜினலை விட அற்புதமாக வித்தியாசமாக செய்திருப்பார். "ஏற்றி வாய்த்த தீபம் ஒன்று என்னிடத்தில் வந்ததென்று பார்த்து மகிழ்ந்ததென்னவோ பின் பாராமல் போனதென்னவோ") நிறைய பேர் இந்தப் படத்தைப் பற்றி அலசியதால், நான் சொல்வது “ஒரே பாடல்” பாடலைப் பற்றி. இந்தப் பாடலை அவர் சோகமாக இருக்கும்பொழுது (ஆம் அவரது காதலியின் மணவிழாப் பாடல் (காதலி மற்றொருவருக்கு மனைவியானால், பின் எப்படி சோகம் இல்லாமல்?) பாடச் சொல்லி வற்புறுத்துவார்கள். முதலில் முடியாது என்பவர், கடைசியில், வேறு வழியில்லாமல் ஆரம்பிப்பார். எப்படி?, ... ஆ ஆ. . என்று ஆலாபனை செய்து கொண்டே – சரி சரி பாடுகிறேன் என்று – அந்த ஆலாபனையும் அவர் சரி சரி என்பதும் அவ்வளவு அழகாக இழைந்து வரும். அதுவும் அந்த இரண்டாவது சரணம் தான் ரொம்பவே எல்லோரையும் உருக்கி விடும். இந்தப் பாடலைப் பாடித் தான் நான் 1992-இல் எனது அலுவலகத்தில் முதல் பரிசைத் தட்டிச் சென்றேன் என்பதை பெருமையோடு நினைவு கூர்கிறேன்.
வசந்த மாளிகை:- A. நாகேஸ்வர ராவ் (ANR) நடித்து தெலுங்கில் 1971-இல் வந்து பெரும் வெற்றி பெற்ற “பிரேம நகர்” ஆம் தெலுங்கில் ப்ரேம என்றுதான் உச்சரிக்க வேண்டும். நம் அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்டு முழுமையாக ஆக்கிரமித்த படம். இதன் ஒரிஜினலையும் நான் பார்த்தேன். ஒன்று, நடிகர் திலகம் ஒவ்வொரு காட்சியையும் வேறு விதமாக செய்தது. மற்றொன்று அவர் காட்டிய அந்த grace மற்றும் ஸ்டைல். படம் முழுவதும் ஒரு விதமாக சன்னமான தொனியில்தான் பேசியிருப்பார் (பெண்களின் மனது எப்போதும் ஆண்களின் பலத்தை எடை போட்டபடிதான் இருக்குமா அதன் பெயர்தான் பெண்மையா? போன்ற பல வசனங்களை அவர் உச்சரிக்கும் விதம்! – வசந்த மாளிகைக்கு அழைத்துச் சென்று அவர் பேசும் அந்த மெய் சிலிர்க்க வாய்த்த வசனங்களையும் சேர்த்து. ஒரிஜினலில் ஒரு மாதிரியான டப்பாங்குத்துப் பாட்டு வரும். தமிழில், பாடலை பதிந்து மட்டும் விட்டிருந்தனர் “அடியம்மா ராசாத்தி சங்கதி என்ன?” என்று துவங்கும். தெலுங்கில், கதாநாயகன் அவரது பண்ணைக்குப் போயிருக்கும் போது, அங்குள்ள, பெண்கள் நாற்று நட்டுக்கொண்டும் தலையில் சுமையை சுமந்துகொண்டும் போவதைப் பார்த்து, கதாநாயகனுக்கு கனவில் இந்தப் பாடல் வருவதாக வரும். தெலுங்கில், ANR நடித்தால், ஒரு பாட்டாவது, அவரது பிரத்யேக டான்ஸ் மூவ்மெண்டுகளுடன் கண்டிப்பாக இருந்தாக வேண்டுமாம். அங்கு அவரது செல்லப் பெயர் “நட சாம்ராட்” அங்கு நட என்றால் நடனம், நடை அல்ல. தமிழில், நடிகர் திலகம் இந்தப் பாடலை வேண்டாம் என்று சொல்லி இருக்க வேண்டும். ஏனென்றால், இந்த கதாபாத்திரம், முதலில் இருந்தே ஒரு விதமான graceful நடை, உடை, பாவனையுடன் விளங்கும். (ஏன் ஏன் பாடல் உட்பட..). இது கிராமத்து மெட்டில் அமைந்த … ஒரு மாதிரியான டப்பாங்குத்துப் பாடல் வேறு… இந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை சிதைத்து விடும் என்பதால்தான் இந்தப் பாடல் படத்தில் இடம் பெறாது போயிருக்கும். அதற்கு பதிலாகத்தான், அந்த நாடோடிக் கூட்டத்தினருடன் அவரும் வாணிஸ்ரீ -யும் சேர்ந்து ஆடுவதுடன் வரும் அந்த கட்டம் வரும் (இதற்கு ஹிந்தியில் பாடலும், இதற்குப் பின் வரும் அந்த குடிசையில் வரும் காட்சி தெலுங்கில் பாடலாகவும் வரும். இதிலும், தமிழில் வித்தியாசமாகதான் செய்திருப்பார் நம் நடிகர் திலகம். இதில், ஒரு நடை piece ஒன்று – NT- ரசிகர்களுக்காகவே இருக்கும். அதிலும், அந்த grace-ஐ maintain பண்ணியிருப்பார். இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியையும், குறிப்பாக, அவரது டிரெஸ்ஸிங் சென்ஸ்-ஐ பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம்.
நீதி:- இது ராஜேஷ் கன்னா நடித்து வெற்றியடைந்த துஷ்மன் என்ற இந்தி படம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. முதலில் இருந்து கடைசி வரையிலும் (ஒரு சில காட்சிகளைத் தவிர) ஒரே உடையை (ஒரு மாதிரியான மிலிடரி கிரீன் கலர்) அணிந்து கொண்டு ஒரு நிஜ லாரி டிரைவராய் வாழ்ந்து காட்டிய படம். இந்தப் படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும்பொழுதும், ஒவ்வொரு முறையும், அவரை மற்றவர்கள் (சௌகார் வீட்டில் இருப்பவர்கள்) ஒதுக்கும்போதும், எப்போது தான் அவரை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களோ என்று மனம் கிடந்து எங்கும். குறிப்பாக, சௌகார் அவரை கடைசி காட்சிக்கு முன் வரை, அவரை அந்த அளவிற்கு வெறுப்பார் (என்ன இருந்தாலும், அவரது கணவரையல்லவா நடிகர் திலகம் தவறுதலாக லாரியால் கொன்றிருப்பார்). கடைசியில், மனோகரை அடித்து நொறுக்கியவுடன், சௌகார் அவரை தம்பி! என்று அழைத்தவுடன், நடிகர் திலத்தின் reaction அனைவரையும் அழ வைத்து விடும். மேலும், "எங்களது பூமி காக்க வந்த சாமி" பாடலில், கடைசியில், கோவை சௌந்தரராஜன் குரலில், " பல்லாண்டு பாடுகின்ற ..." என்று ஆரம்பித்து பாடும் போது அவர் காட்டுகின்ற subtle முக பாவங்கள், ஜெய கௌசல்யா திருமணம் முடிந்து அவரை வழியனுப்பும்போது கூடவே குழந்தை போல் ஓடிக்கொண்டே பாசத்துடன் அவரிடம் பேசும் பேச்சுக்கள்.... இந்தப் படத்திற்கும், நீலவானம் மற்றும் பாபு படங்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இந்த மூன்று படங்களிலும், அவரது கதாபாத்திரம் இடையில் ஒரு சந்தர்ப்பத்தில் தான் வந்து இணைந்து கொள்ளும். ஆனால், போகப்போக, அந்த கதாபாத்திரம் அந்த வீட்டின் சூழலோடு இணைந்து / இழைந்து கொண்டு கடைசியில், அந்த கதாபாத்திரம், அந்த வீட்டிலே ஒருவராக தன்னை ஐக்கியப்படுதிக்கொள்வதோடு மட்டுமல்லாமல், அந்த வீட்டில் உள்ள இன்றியமையாத உறுப்பினராகவே மாறிவிடும். ஆம். இந்த மூன்று படங்களிலும் (இவைகளில் மட்டும் தானா?), அவர் அந்த கதாபாத்திரமாகவே மிக மிக இயல்பாக மாறி விட்டிருப்பார். இவைதானே இயல்பான நடிப்பு!
எங்கள் தங்க ராஜா:- இது VB ராஜேந்திர பிரசாத் இயக்கத்தில் தெலுங்கில் சோபன் பாபு இரட்டை வேடத்தில் நடித்து வெற்றி அடைந்த “மானவுடு தானவுடு" என்ற படம். சோபன் பாபு பெரும்பாலும், அமைதியான கதாபாத்திரங்களில்தான் நடித்து வந்தார். இந்தப் படமும் சோக்காடு என்ற மற்றொரு படமும் அவரை வித்தியாசமான நிறைய வேடங்களை ஏற்க வழி வகுத்தது என்று என் கசின் (பெரியம்மா மகன் - அவர்களது குடும்பம் நெல்லூரில் இருக்கிறது) சொல்லுவான். இந்தப் படத்திலும், நடிகர் திலகம் வித்தியாசமான இரண்டு கெட்-அப் மற்றும் கதாபாத்திரங்களில் கலக்கினார். அநேகமாக அனைவரும் இந்தப் படத்தைப் பற்றி அலசோ அலசு என்று அலசிவிட்டதால், என்னால் முடிந்த சிறு துளிகள். "இரவுக்கும் பகலுக்கும்" பாடலில், நடிகர் திலகத்தின் graceful டான்ஸ் மூவ்மெண்டுகளும் சின்ன சின்ன நடை piece -களும், அரங்கை அதிரவைத்தது. இந்த டாக்டர் கதாபாத்திரத்தில், அவருக்கு பெரிதாக ஸ்டைலாக நடிப்பதற்கு சந்தர்ப்பம் இல்லாது போனாலும், இந்தப் பாடலை முழுவதுமாக பயன்படுத்தி, கதாபாத்திரத்தின் தன்மையை சிதைக்காமல், மெலிதான ஒரு ஸ்டைலையும் graceful டான்ஸ் மூவ்மெண்டுகளும் கொடுத்திருப்பார்.
அவன் தான் மனிதன்:- இது Dr. ராஜ்குமார் நடித்து கன்னடத்தில் பெரும் வெற்றி பெற்ற கஸ்தூரி நிவாசா என்ற படம் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ராஜ்குமார் ஒரு மிகச் சிறந்த நடிகர் மற்றும் பாடகரும் கூட. எனக்குத் தெரிந்து, 1975/76-க்கு பிறகு, அவரது படங்களில் வரும் பாடல்களுக்கு, அவரே குரல் கொடுக்க ஆரம்பித்தார். அதற்கு முன்பு வரை, திரு P B ஸ்ரீனிவாஸ் அவர்கள்தான் அவருக்கு பாடி வந்தார். எனது இன்னொரு கசின், ராஜ்குமார் அவர்களின் சொந்த production கம்பெனி-இல் அப்போது வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அந்த பட நிறுவனம், ஏவிஎம் ஸ்டூடியோவில் ஒரு ரூமை வாடகைக்கு எடுத்து ராஜ்குமார் படங்களை மட்டும் எடுத்துக் கொண்டிருந்தது. என்னுடைய இந்தக் கசினும் நடிகர் திலகம் ரசிகன்தான். இந்தப் படத்தின் ஒரிஜினல்-இல் ராஜ்குமார் மிக அற்புதமாக செய்திருந்தார். மேலும், இந்தப் படம் கன்னடத்தில் பெரும் வெற்றியடைந்த படம் என்பதால், (எனது நண்பர் (எதிர் வீடு வேறு) கன்னடத்தை தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும், சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவரும், இவரது இரு அண்ணன்களும் - மூவரும் நடிகர் திலகம் ரசிகர்கள். இவருக்கு ராஜ்குமாரையும் மிகவும் பிடிக்கும். அவர் கூறிய தகவலையும் வைத்து இந்த கன்னடப் பட தகவலை சொல்கிறேன்). இந்த கன்னட படத்தையும் நான் பார்த்திருக்கிறேன். நடிகர் திலகத்திற்கு இந்த படம் ஒரு சவாலாகவே அமைந்தது. (உயர்ந்த மனிதன் மற்றும் தெய்வ மகன் ஆகிய படங்களும் ரீமேக் செய்யப்பட படங்கள் மற்றும் அந்த படங்களும் நடிகர் திலகத்துக்கு சவாலாக அமைந்தவைதான் எனினும் அந்தப் படங்களின் ஒரிஜினல் அந்த அளவிற்கு நாடு முழுவதும் புகழ் அடைந்தவை என்று கூற இயலாது. அதனால் இந்த படங்களை இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, இந்த பத்து படங்களும் ஓரளவிற்கு எல்லா விதமான மக்களும் பார்த்து விட்ட படங்கள் ஆதலால், ரீமேக் செய்யப்படும்போது ஒரிஜினலை நிறைய பேர் compare செய்து பார்ப்பார்கள் அதனால், நடிகர் திலகம் எப்படியும் ஒரிஜினலை விட நன்றாக செய்ய வேண்டும் என்று முனைவார். எல்லா படங்களுக்கும் அவருடைய முனைப்பு இருக்கும் என்றாலும், இந்த மாதிரி ஆரோக்கியமான போட்டி அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று.) இருந்தாலும், இந்த சவாலையும் ஏற்று, நடிகர் திலகம் தன் தனித்தன்மையை நிரூபித்தார் - அதுவும், அந்த சோக உணர்வை விழிகளாலேயே காண்பித்து அனைவரையும் நெக்குருக வைத்தார். சோகத்தை எந்த விதமான அதிகபட்ச சிரத்தையும் எடுத்துக் கொள்ளாமல், இரு விழிகளாலேயே வெளிப்படுத்தும் கலை அவருக்கு மட்டுமே சாத்தியம். (மேஜர் ஒரு பேட்டியில், நடிகர் திலகத்தைப் பற்றி கூறும் போது "சிவாஜி ஒருவர்தான் கண்களில் பெருகும் கண்ணீரை கண்களுக்குள்ளேயே, தேக்கி வைத்து கேமராவை நோக்கி பார்த்து, கண்ணீர் கீழே சிந்தி விடாமல், அந்த கண்ணீரை மக்களுக்கு காண்பித்து நடிப்பவர்" என்றார்). உடலை பெரிதாக வருத்திக் கொள்வாரே தவிர பட்டினி கிடந்து தோற்றத்தை மாற்றிக் கொள்ள மாட்டார். நடிப்பினாலேயே அத்தனை உணர்வுகளையும் காட்டத்தான் தலைப்படுவார். (அப்பர் ஒரு சிறந்த உதாரணம்). இந்தப் படத்தின் flashback காட்சிகள்தான், நம் அனைவரையும் நிறைய கவர்ந்தது. குறிப்பாக, ஊஞ்சலுக்குப் பூச்சூட்டி பாடல் (முரளி சார் கூறிய அந்த கடைசி சரணத்தில் நடிகர் திலகம் அந்த புல்மேட்டின் மேலிருந்து கீழே இருக்கும் மஞ்சுளாவைப் பார்த்து, ஒரு மாதிரி நடை நடந்து பின் மறுபடியும் பாடும் அந்த ஸ்டைல் அரங்கத்தை எப்போதும் அதிர வைக்கும்). அன்பு நடமாடும் பாடலும், மிகச் சிறப்பாக இருக்கும். மெல்லிசை மன்னரின் மெட்டுக்கு கேட்கவே வேண்டாம். இந்தப் படத்தில் நடிகர் திலகம் வைத்திருந்த ஹேர் ஸ்டைலைதான் நான் சிறிது காலம் வரை வைத்திருந்தேன். இப்போது இல்லை. முடி சிறிது கொட்டி விட்டது. அந்த அளவிற்கு என்னை முழுமையாக ஆக்கிரமித்த படம். Grouch-070 இந்தப் படத்தை விரிவாக மிக அற்புதமாக அலசி இருந்தார்.
பாபு:- ஆஹா! இந்தப் படத்தைப் பற்றி பேச, பகிர்ந்து கொள்ள இந்த ஒரு ஜென்மம் போதுமா - தெரியவில்லை. ஓடையில் நின்னு - சத்யன் என்கிற அற்புதமான நடிகர் நடித்த மிகச் சிறந்த மலையாளத் திரைப்படம் ஆயிற்றே இது. இந்தப் படத்தில் நடித்ததற்காக சத்யனும், இதே படத்தின் ஹிந்திப் பதிப்பான “Aashirvaad” படத்திற்கு அசோக் குமாரும் அடுத்தடுத்த வருடங்களில் பாரத் அவார்ட் வாங்கினர். தமிழிலும், நடிகர் திலகத்திற்கு கிடைத்திருக்க வேண்டியது - கை நழுவிப் போன கதை ஏற்கனவே அலசப் பட்டு விட்டது. இந்தப் படத்தில், எப்போதும் எல்லோர் மனதிலும் நிழலாடும் காட்சி - அவர் பாலாஜி வீட்டில் உணவு உண்ணும் காட்சி. பாலாஜியும், அவரது மனைவி சௌகாரும், குழந்தை ஸ்ரீதேவியும் அவர்களது கார் வழியில் நின்றுவிடுவதால், சாலையில் நின்று கொண்டிருக்கும்போது, வழியில் போகும் நடிகர் திலகம் அவர்களை தனது கை ரிக்க்ஷா மூலம் அவர்களது வீட்டிற்குக் கொண்டு விடுவார். பாலாஜி, நடிகர் திலகத்திற்கு பணம் கொடுப்பதோடு நின்று விடாமல், மழையில் நனைந்து விட்ட அவருக்கு, துண்டைக் கொடுத்து மேலும், ஒரு சட்டையும் கொடுப்பார். இது போதாதென்று, அவரை வீட்டிற்குள் அழைத்து, சாப்பாடும் போடுவார். பாலாஜியும், சௌகாரும் ஸ்ரீதேவியும் அவரை பந்தா இல்லாமல் கனிவோடும், அன்போடும் நடத்தும் விதம் மெய் சிலிர்க்க வைக்கும். நடிகர் திலகம் கீழே உட்கார்ந்து இருப்பார். அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென்று ஸ்ரீதேவி கீழே போய் அவர் அருகே உட்கார்வதோடு மட்டுமின்றி, அவரது இலையில் இருந்து ஒரு கத்தரிக்காய் துண்டையும் எடுத்து வாயில் போட்டுக் கொள்ளப் போவார். நடிகர் திலகம் பதறிப் போய், ஸ்ரீதேவி கையைப் பிடித்து, சௌகாரையும் பாலாஜியையும் பார்த்து, "குழந்தையை ஒன்றும் சொல்லாதீர்கள். தெரியாமல், என் இலையில் இருந்து எடுத்து விடடாள்" என சொல்வார். ஆனால், அதற்கு மாறாக, பாலாஜியோ சௌகாரை பார்த்து "பரவாயில்லையே. இவள் கத்தரிக்காய் சாப்பிடுகிறாள். குட்" என்று சொல்லவும், சௌகார் அதையே ஆமோதிப்பார். உடனே, நடிகர் திலகம் காட்டும் மின்னலென வெட்டிச் செல்லும் அந்த உணர்வுகள் - ஆம் - ஒன்றல்ல - ஆச்சரியம், ஆனந்தம், மகிழ்ச்சி கலந்த அந்த கண்ணீர் மற்றும் நன்றிப்பெருக்கு - அப்பப்பா - எத்தனை முறை பார்த்தாலும் பார்க்கும் அனைவரையும் ஒருசேர கலங்கவைத்து விடும். Of course, பாலாஜி, சௌகார் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோரின் ஒத்துழைப்புடன் இந்தக் காட்சி அற்புதமாக அமைந்திருக்கும். இதுபோல், இன்னும் எத்தனையோ காட்சிகள். இந்தப் படத்தின் ஒரிஜினலில், சத்யன் அவர்கள் கதாபாத்திரம் ஒரு மாதிரியான முரட்டுத்தன்மை உடையதாக சித்தரிக்கப்பட்டிருக்கும். தமிழில், அதனை இலேசாக, மாற்றி, படம் முழுவதும், கனிவு, நன்றிப் பெருக்கு மற்றும் எளிமை மூலம் மிக மிக வேறுமாதிரியான கதாபாத்திரமாக மாற்றி இருந்தார் நமது நடிகர் திலகம்.
அது எப்படி, நடிகர் திலகம் மட்டும், எப்போதும் ஒரிஜினலை விட நன்றாக செய்கிறார். அதே சமயம், அவரது படங்கள் பிற மொழிகளில் ரீமேக் செய்யப் படும் போது இவர் நடித்த அளவுக்கு மற்றவர்களால் நடிக்க முடிவதில்லை - அந்த கதாபாதிரங்களுக்கு உயிர் ஊட்ட முடிவதில்லை? (இந்த ஆய்வு - அதாவது நடிகர் திலகத்தின் படங்கள் மற்ற மொழியில் - இந்த ஆய்வு முடிந்த பிறகு துவங்குகிறது). ஏற்கனவே கூறியது போல் - அதாவது – நடிகர் திலகம் மேஜர் அவர்களிடம் கூறியது போல் - ஒவ்வொரு ஒரிஜினலையும், குறைந்தது பத்து தடவையாவது பார்த்து ஆழமாக study செய்து முழுக்க முழுக்க வேறு மாதிரி - சிறிதளவு சாயல் கூட ஒரிஜினலில் இருந்து வந்து விடக் கூடாது - என்று நடிகர் திலகம் எடுக்கும் அந்த கர்ம சிரத்தை - மற்றும் அந்த தணியாத தாகம் மற்றும் வெறி.
நான் மேற்கூறிய படங்கள் அல்லாமல், இன்னும் பல நல்ல பத்து படங்கள் ரீமேக் வரிசையில் உண்டு. மோட்டார் சுந்தரம் பிள்ளை, உயர்ந்த மனிதன், தெய்வ மகன், (ஏன் இதில் சேர்க்க வில்லை என மேலே கூறியிருக்கிறேன்), தியாகம், அண்ணன் ஒரு கோவில் உள்பட
Gopal.s
18th May 2014, 08:21 AM
Thanks Abhkhlabhi Sir.Your Old posting.
உங்களுடைய நடிகர் திலகத்தின் ரீமேக் படங்களை பற்றி ஆய்வு அருமை. பிறமொழிகளில் வந்த படங்களை நடிகர் திலகம் தமிழில் நடித்த படங்கள் ஏராளம். ஒரு சில படங்களை தவிர , எல்லாமே வெற்றி படங்களே. உதாரணம் பாலாஜி தயாரித்த படங்கள். உனக்காக நான் தவிர மற்ற படங்கள் வெற்றியே. பாலாஜியை தவிர மற்ற தயாரிப்பாளர்கள் எடுத்த படங்களில் நடிகர் திலகம் நடித்த படங்கள் எல்லாமே வெற்றி தான். உதாரணம் , வசந்த மளிகை, திரிசூலம், அவன்தான் மனிதன், அண்ணன் ஒரு கோவில்.
பிற மொழிகளில் வெளி வந்து தோல்வி அடைந்த படங்களை யாரும் முன் வந்து தயாரிப்பதில்லை. ஆனால் நம் நடிகர் திலகம் மட்டுமே பிற மொழி தோல்வி படத்தையும் தமிழில் வெற்றி அடைய செய்தார். உதாரணம், அண்ணன் ஒரு கோவில், அவன் தான் மனிதன். கன்னடத்தில் சுமாராக ஓடிய கஸ்தூரி நிவஸா என்ற படத்தை , தமிழில் அவன் தான் மனிதனாக வந்து வெற்றி பெற்றது . ( ATM நடிகர் திலகத்தின் 175 படம் , அதனால் ஓடியது என்று சிலர் சொல்லல்லாம்).
ஆனால் கன்னடத்தில் பெரிய தோல்வி அடைந்த படமான தேவர கண்ணு என்ற படத்தை தமிழில், அண்ணன் ஒரு கோவில் படத்தை தன் சொந்த தயாரிப்பு கம்பெனி முலம் தயாரித்து வெற்றி அடைந்தார். ஆனால் 250 படமும் கன்னடம் முலம். தோல்வி அடைந்தது. காரணம், நடிகர் திலகத்தின் 250 படம், பெரிய எதிர்பார்ப்பு (200 படத்தை போல - இதுவும் கன்னடம் முலம்) பிரபுவிற்கு முக்கியத்தும் , வலுவான கதை இல்லை.
நடிகர் திலகம் நடித்து தமிழில் வெளி வந்த படங்கள், பிற மொழிகளில் தயாரித்து வெளியான படங்கள் தமிழை போல் வெற்றி பெறவில்லை. (பல படங்கள் தோல்வி அடைந்தன).
தமிழில் - பிற மொழிகளில் வந்து தோல்வி
vietnam veedu , கெளரவம், - கன்னடம்
சவாலே சமாளி - கன்னடம், தெலுங்கு, ஹிந்தி
தெய்வ மகன் - (முலம் ஹிந்தி ?) - கன்னடம், தெலுங்கு
பட்டிகாட பட்டணமா - தெலுங்கு ( கன்னடத்தில் வெற்றி)
நவராத்திரி - தெலுங்கு, ஹிந்தி
பாசமலர் (முலம் மலையாளம் ?) - தெலுங்கு, ஹிந்தி
ராஜா (முலம் ஹிந்தி) - கன்னடம் (கல்லடி படும் என்று பயந்து 100 நாள் ஒட்டினார்கள்)
தியாகம் - தமிழில் சில்வர் ஜூப்ளி (தெலுகில் சுமார் வெற்றி)
எங்க ஊர் ராஜா - தெலுங்கு
Gopal.s
18th May 2014, 08:24 AM
Thanks. Who else? Saratha Madam.
உள்ள உணர்வுகளின் பகிர்வுகளுக்கு மிக்க நன்றி. எப்போது யார் 'ராஜா'வைப்பற்றிப் பேசினாலும் அதில் உடனே நானும் கலந்துகொள்ள வேண்டும் என்ற வேட்கை எழும். அந்த அளவுக்கு என் மனதுக்கு மிக நெருங்கிய படங்களில் ஒன்று. (பார்த்தசாரதி சார், நான் சொன்னேனே 'கேட்டகரி நம்பர்: 3' படங்கள் எனக்கு நெருக்கமானவை என்று. அவற்றில் ராஜா, தங்கச்சுரங்கம், என்னைப்போல் ஒருவன், சுமதி என் சுந்தரி... இப்படி நிறைய).
முரளி, சுமார் ஆறு மாதங்களுக்கு முன் உங்களைப்போலவே ரிமோட்டால் சேனல்களை கிண்டிக்கொண்டிருந்தபோது ஒரு இந்தி சேனலில், பள்ளியில் சிறுவர்களின் பாக்ஸிங் போட்டி நடந்துகொண்டிருந்தது. அடடே இது ஜானி மேராநாம் படத்துவக்கம்போலிருக்கிறதே என்று கூர்ந்து பார்க்க, அடுத்த காட்சியிலேயே அது உறுதியானது. தாய் பூஜை செய்துகொண்டிருக்க, பையன்கள் பள்ளியில் வாங்கிய 'கப்'புக்காக சண்டையிட்டுக்கொள்ள, காட்சி மாறி இரண்டு போலீஸ் அதிகாரிகளும் பேசிக்கொண்டே மாடிப்படியில் இறங்கி வரும் காட்சி. ரிமோட்டை எடுத்து சோபாவின் கீழே வைத்துவிட்டேன். (எதிர்பார்த்தபடியே சிறிது நேரத்தில் என் பையன் வந்து, 'ரிமோட்டைக் கொடும்மா, இன்னைக்கு முக்கியமான கிரிக்கெட் மேட்ச் பார்க்கனும்' என்று கேட்க, 'போய் அப்பா ரூம்ல சின்ன டிவில பாரு' என்று அனுப்பிவிட்டேன்).
படம் ஓட ஓடத்தான், தமிழில் 'ராஜா'வை சி.வி.ஆர். எவ்வளவு சுவாரஸ்யப் படுத்தியிருந்தார் என்பது தெரிந்தது. தேவ் ஆனந்தின் அறிமுகக்காட்சி, ஆரஞ்சுகலர் முடி வைத்த கடத்தல் கையாளுடன் அவர் போனில் பேசும் காட்சி எல்லாம் சப்பென்றிருந்தது. டென்னிஸ் ராக்கெட் டீப்பாயின் மீது கிடக்க ஜஸ்ட் ஒரு சோபாவில் உட்கார்ந்துகொண்டு, டீப்பாயின் மேல் கால்களைநீட்டி வைத்துக்கொண்டு 'மேராநாம் ஜானி' என்று பேசும்போது நம் நினைவுக்கு வருவது, கையில் டென்னிஸ் ராக்கெட்டுட்ன் சுழல்நாற்காலியில் அமர்ந்து 'என் பெயர ராஜா' என்று ஆரம்பித்து, ஒவ்வொரு பதிலுக்கும் ஒவ்வொரு மாதிரி சுழன்று சுழன்று ஸ்டைல் காட்டும் நடிகர்திலகமும், அவ்வாறு செய்ய வைத்த சி.வி.ஆரும்.
அதே போலத்தான் 'ஓ..மேரி ராஜா' பாடல் காட்சியும். மலைப்பிரதேசத்தில் படமாக்கப்பட்டதால் நீங்கள் சொன்னதுபோல தேவ்ஜியும் Hema-வும் ரோப்காரில் போக, போலீஸ் ஆபீஸர் இன்னொரு ரோப்காரில் துரத்தும் காட்சி. 'ராஜா'வில் இப்பாடல் கேரளாவில் எடுக்கப்பட்டதால், கடலோர பாறைப்பகுதிகளில் போலீஸாரால் பின்தொடரப்பட, நடிகர்திலகத்தின் சேட்டைகளால் எரிச்சலுறும் ஜெயலலிதா, அவர் கையைத்தட்டிவிட, 'சுற்றிலும் போலீஸ் பார்த்துக்கொண்டிருக்கிறது' என்று இவர் ஜாடை காட்ட, உடனே அவர் தட்டிவிட்ட கையைக் கன்னத்தில் தேய்த்துக்கொள்ள, இவர் அந்தக்கைக்கு முத்தம் கொடுக்க, அதைப்பார்த்துக்கொண்டிருக்கும் இன்ஸ்பெக்டர் 'சாந்திகுமார்' பொறாமையில் உதட்டைக்கடிக்க.... எவ்வளவு ரம்மியமான காட்சி. அத்ற்கேற்றாற்போல காஸ்ட்யூம். மெரூன்கலர் சாரி, மெரூன்கலர் புல்ஸ்லீவ் ஜாக்கெட்டில் கலைச்செல்வி கொள்ளை அழகென்றால், அத்ற்கு ஈடு கொடுத்து, வெள்ளை பேண்ட், கிரீம்கலர் ஷர்ட், ஒருமாதியான மஞ்சளும் பிரௌனும் கலந்த கோட், வெளிர் நீல நிற ஸ்கார்ப் என்று நடிகர்திலகமும் அசத்துவார். கொச்சின் ஏர்போர்ட்டில், 'வைரங்கள் எங்கே' என்று கேட்கும் செல்விடம் 'கோட்டில் இருக்கு' என்று கோட்டைக்கழற்றி அவருக்குப் போர்த்திவிடும் இடத்தில் பேண்ட், 'டக்-இன்' செய்யப்பட்ட ஷட்டில் படு ஸ்மார்ட் எங்க அண்ணன்.
அதுபோலவே, தன்னை ஏமாற்றி விட்டு பணத்துடன் தப்பியோடப்பார்க்கும் ரந்தாவாவைப்பிடிக்க காரில் தேவ்ஜியும், பிரானும் போகும் கட்டமும் ரொம்பவே படுசுமார். அதையே தமிழில் கற்பனை செய்து பாருங்கள்.
'பாபு, நான் கொண்டுவந்த பெட்டியை இன்னைக்கு ஒருத்தர் கையில பார்த்தேன்'
'யெஸ், குமார் எடுத்திட்டுப்போயிருக்கான். உரிய இடத்துல சேர்த்துடுவான்'
'உங்களுக்கு நம்பிக்கை அதிகம்'
'அவன்கிட்டே நாணயம் அதிகம்'
'அந்த நாணயத்துக்கு குறுக்கே ஒரு பொண்ணு வந்தா...?'
'ராஜா, என்ன சொல்றே? குமாருக்கு...'
'காதலிக்க வேண்டிய வயசுதானே..?'
'யெஸ், அவன் அடிக்கடி ஒரு டான்ஸ் பொண்ணைப்பார்க்கப்போவான்'.
'மை டியர் சார், எனக்குத்தெரிஞ்சவரைக்கும் அள்ளிக்கொடுக்கும் முதலாளியைவிட அள்ளி அணைக்கும் காதலியின் பேச்சுக்குத்தான் மதிப்பு அதிகம்'
'ராஜா, உனக்கு கார் ஓட்டத்தெரியுமா?'
'எக்ஸ்பர்ட்'
பாலாஜி கார் சாவியைத்தூக்கிப்போட (அதுக்கும் ஒரு சவுண்ட் கொடுப்பார் MSV), சாவி நடிகர்திலகம் கையில் கிடைத்த அடுத்த வினாடி, நீலநிறக்கார் போய்க்கொண்டிருக்கும் (அதுதான் சி.வி.ஆர்). மஸ்தானின் அற்புத ஒளிப்பதிவில், கார் குறுகலான சந்தில் போகும் காட்சி டாப் ஆங்கிளில் காட்டப்பட, மெல்லிசை மன்னர் சும்மாயிருப்பாரா?. தனது அதிரடி சவுண்டோடு Vocal Humming ஐயும் கலந்து அசத்துவார்.............
(சுஜாதா சினி ஆர்ட்ஸ் எம்ப்ளத்தில் துவங்கி, கிருஷ்ணன் தலையில் கிரீடம் சூட்டப்படும் கடைசிக்காட்சி வரை, அணு அணுவாக இப்படத்தை பிரிச்சு மேயணும்போல இருக்கு. என்ன செய்வது? பத்து பக்கம் ஆகுமே)
Gopal.s
18th May 2014, 08:25 AM
Thanks Pammalar(Old Postings)
சகோதரி சாரதாவுக்கு "ராஜா"வைப் பற்றி எழுத 10 பக்கம் வேண்டும் என்றால், அடியேனுக்கு "வசந்த மாளிகை" குறித்து எழுத ஒரு தனித்திரியே தேவை. அடியேன் பூமிக்கு வந்த எட்டாவது நாளில்(29.9.1972) வெளிவந்த காவியம். அடியேன் நடத்திய (நடத்தப் போகிற) - முழுக்க முழுக்க வாழ்வியல் திலகத்தின் புகழ் பாடுகின்ற - பத்திரிகைக்கும் (வசந்த மாளிகை) பெயராக அமைந்தது. 'Hai Handsome!' என்று யாரைக் கூப்பிட முடியும் "வசந்த மாளிகை" ஆனந்தைத் தவிர. படம் முழுமையுமே - இன்பத்தில் மிதந்தாலும் சரி, துன்பத்தில் திளைத்தாலும் சரி - the most handsome heroவாகக் காட்சியளிப்பார். படத்தின் நடுவில் வரும் ஒரு காட்சியில், அவரது அறையில் நாற்காலியில் அமர்ந்தபடியே எதிரில் இருக்கும் மேஜையின் மேல் இருக்கும் வசந்த மாளிகையின் வரைபடத்தை வனப்புடன் பார்த்து, பின் நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே சற்று அண்ணாந்து "வசந்த மாளிகை" என்பாரே, கோடி கொடுக்கலாம் அந்த ஒரு சீனுக்கு. மழை சோவென்று ஜோராகக் கொட்டிக் கொண்டிருக்க, ஒரு குடிசையில் சொட்ட சொட்ட ஜோடியாக நுழைவர் ஆனந்தும், லதாவும். நனைந்த முந்தானையை லதா ஒட்டப் பிழிய, ஆனந்தின் பற்கள் plumsஐ சாறு பிழியும். காதலி லதாவின் இளமையை, அழகை ஆனந்தின் காந்தக்கண்கள் சுவைத்து ரசிக்க, கண்களுக்கு போட்டியாக அவரது வாய் plumsஐ சுவைத்து மகிழும். பின்னர் அங்கு 'எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்லக் கொள்ளி?!' (Sorry Joe) என எடுத்து அந்தக் கொள்ளிக்கட்டையால் சிகரெட்டைப் பற்ற வைக்கும் ஸ்டைல் இருக்கிறதே, அப்பப்பா... கொள்ளிக்கட்டையால் சிகரெட்டை ஸடைலாக பற்ற வைத்தவர் உலகிலேயே நமது ஸ்டைல் சக்கரவர்த்தி ஒருவராகத்தான் இருக்க முடியும்.
தெலுங்கில் "பிரேம நகர்(1971)" இமாலய வெற்றி என்றால், தமிழில் "வசந்த மாளிகை(1972)" விண்ணைத் தொடும் வெற்றி! இந்தியாவில் 200 நாட்களும், வெளிநாடான இலங்கையில் 287 நாட்களும் ஓடி மெகாமகாஹிட். இப்படி நம் நாட்டிலும், அயல் நாட்டிலும் 200 நாட்களைக் கடந்த இரண்டாவது படம் "வசந்த மாளிகை". முதல் படம், நடிகர் திலகத்தின் முதல் படம் "பராசக்தி(1952)". இந்தியாவில் 245 நாட்களும், இலங்கையில் 294 நாட்களும் ஓடியது. "வசந்த மாளிகை"யின் விண்ணை வீழ்த்திய வெற்றி, தெலுங்கு படத் தயாரிப்பாளர்களையெல்லாம் தமிழ்ப்படவுலகின் பக்கம் திருப்பியது. அவர்கள் நடிகர் திலகத்தை வைத்து படம் தயாரிக்கலானார்கள். 1931- ம் ஆண்டு தொடங்கிய தமிழ் சினிமாவிற்கு தற்பொழுது முத்துவிழா ஆண்டு [80வது ஆண்டு]. இந்த 80 ஆண்டுகளில், மறுவெளியீடுகளில், தென்னகமெங்கும் பட்டிதொட்டியெல்லாம் "வசந்த மாளிகை" ஓடியிருப்பதைப் போல் வேறு எந்தப்படமும் ஓடியதில்லை என அடித்துக் கூற முடியும். வெள்ளித்திரையில் மட்டுமா, சின்னத்திரையிலும் சரி, VCD-DVD விற்பனையிலும் சரி, மாளிகைக்கு நிகர் மாளிகையே. சிவாஜி அவர்களை நேரில் பார்க்காத கண்கள் இருக்கலாம். ஆனால் "வசந்த மாளிகை" திரைக்காவியத்தை திரையில் காணாத கண்கள் இருக்க முடியாது, இருக்கவே முடியாது.
ஆடல்-பாடல் இல்லாத படத்தில் நடிப்பார், காலில் செருப்பு அணியாமல் படம் முழுமையும் நடிப்பார், ஜோடியை நாடுவோரிடையே ஜோடியில்லாமல் நடிப்பார், படத்தில் பாட்டிருக்க தான் மட்டும் பாடாமல் நடிப்பார், வெறும் வேட்டி-சட்டையில் மட்டுமே மைல்கல்லை(150)த் தாண்டுவார்,
ஓரே பேண்ட்-ஷர்டிலும் படம் முழுவதும் வலம் வருவார், "நீதி(1972)"யை வாழ வைப்பதற்காக. நீதியைப் பொறுத்தவரை அதில் பங்கு கொண்ட எல்லோருமே நன்றாகச் செய்திருப்பார்கள். நடிகர் திலகத்தைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ! சிறந்த கலைஞரான சந்திரபாபு போன்றோரெல்லாம் சிதிலமடைந்துவிடக்கூடாது என்கின்ற நல்லெண்ணத்தில் அவருக்கு தொடர்ந்து நல்ல ரோல் கொடுக்கச் செய்திருப்பார். "நீதி" - 100 நாள் பெருவெற்றிப்படம்.
அமைதியையும், அதிரடியையும் ஓரே படத்தில் காண வேண்டுமா?! பாருங்கள் "எங்கள் தங்க ராஜா(1973)". பட்டாக்கத்தி பைரவன் அதிரடியின் உச்சம்! டாக்டர் ராஜா அமைதியின் உச்சம்! ஒரே நபர் இரு வேடங்களில் உச்சங்களைத் தொடும் போது மற்றவர்க்கு ஏது மிச்சம்?! "எங்கள் தங்க ராஜா" - 100 நாள் இமாலய வெற்றிப்படம். பாரிஸ்டர் மட்டும் சற்று தாமதித்திருந்தால், பைரவன் தனது பட்டாக்கத்தியை வெள்ளிவிழா வரை வீசியிருப்பார். ("பாரிஸ்டர் தாமதமாக வரணுமா, சொல்வது யார் பம்மலாரா, யோவ் பம்மலாரே, உடம்பு எப்படி இருக்கு?!" என பாரிஸ்டரின் மெய்க்காப்பளர் மோகனரங்கன் முணுமுணுப்பது காதில் விழுகிறது).
அகம் அழும், புறம் சிரிக்கும் : "அவன் தான் மனிதன்(1975)" ரவிகுமார். படம் முழுமையும் அவரது முகத்தில் கம்பீரமும், மிடுக்கும் சிலிர்த்தோடும். அதனூடே ஒரு மெல்லிய சோகமும் இழைந்தோடும். நூலின் மேல் நடப்பது போன்ற கடினமான கதாபாத்திரம். 'ஃப்பூ' என அதை ஊதித் தள்ளியிருப்பார் நடிகர் திலகம். இப்படம் தங்களின் மூன்றாவது பிரிவில் தான் சேர வேண்டும். ஏனெனில், இன்றளவும் பற்பல ரசிகர்கள் அவரது 288 திரைப்படங்களில் மிகவும் பிடித்த படமாக மட்டுமல்ல, தங்களுக்கு பித்து பிடித்த படமாகவும் கூறுவது இந்தப்படத்தைத்தான். 100 நாள் சூப்பர்ஹிட் காவியம் என்பதில் மாற்றுக் கருத்தும் உண்டோ!
'நன்றி' என்ற மூன்றெழுத்தின் உதாரண புருஷன் இரண்டெழுத்து "பாபு(1971)". இறைத்தன்மை கொண்ட ஒரு மனிதனின் பாத்திரத்தை, அந்த இரு தன்மைகளையும் ஒருங்கே கொண்ட அண்ணலைத் தவிர வேறு யாரால் தத்ரூபமாக சித்தரித்து காட்ட முடியும். BABU is purely a ONE-MAN SHOW. உடன் வந்த வண்ணங்களையெல்லாம் தவிடுபொடியாக்கிய 100 நாள் சுப்ரீம்ஹிட்.
"எங்கிருந்தோ வந்தாள்" குறித்து இன்னொரு அபூர்வ தகவலையும் இங்கே பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டுள்ளேன். கடந்த வருடம்(2010) ஜனவரி மாத இறுதியில் ஒரு இனிய மாலை வேளையில் சென்னை சாந்தி திரையரங்கிற்கு சென்றிருந்த போது, எதேச்சையாக சாந்தி திரையரங்க நிர்வாகி-மேலாளர் மாப்பிள்ளை திரு.வேணுகோபால் அவர்களை சந்திக்க நேர்ந்தது. எப்பொழுதும் நன்றாகப் பேசும் அவர், அன்றும் அதே போல் நன்றாக உரையாடி சில அரிய தகவல்களைக் கூறினார். அதில் ஒன்று "எங்கிருந்தோ வந்தாள்" படம் பற்றியது. அதை அவர் கூறியவாறே தருகிறேன்:
"இங்கே 'சாந்தி'யில் "எங்கிருந்தோ வந்தாள்" ஓடிக் கொண்டிருந்த சமயம், ஹிந்தி நடிகர் சஞ்சீவ் குமார் சென்னை வந்திருந்தார். சஞ்சீவ் குமார் சிவாஜியின் மிகப் பெரிய ரசிகர். அது மட்டுமல்ல, சிவாஜியை தனது குருநாதராக வரித்துக் கொண்டவர். ஹிந்தி ஒரிஜினலான "கிலோனா(1970)"வின் ஹீரோ. அவர் சென்னை வந்த அன்று, 'சாந்தி'யில் "கிலோனா"வின் தமிழ்ப்பதிப்பான "எங்கிருந்தோ வந்தாள்" வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதை அறிந்து, மாலைக் காட்சி இங்கே படம் பார்க்க வந்தார். அவருடன் இன்னும் சிலரும் வந்திருந்தனர். அவரையும், அவருடன் வந்தவர்களையும் வரவேற்று அதன் பின்னர் இருக்கைகளுக்கு அழைத்து சென்று அமர வைத்தேன். நானும் அவர்களுடன் அமர்ந்து இன்னொரு முறை படம் பார்த்தேன். படம் ஆரம்பிக்கும் வரை நன்றாகப் பேசிக் கொண்டிருந்த சஞ்சீவ் குமார், படம் தொடங்கியதும் யாருடனும் எதுவும் பேசாமல், மிகுந்த ஆர்வத்துடன் கவனமாக படத்தைப் பார்த்து அதனூடே ஐக்கியமாகிக் கொண்டிருந்தார். இடைவேளை வந்தது. சஞ்சீவ் குமார் யாருடனும் எதுவும் பேசவில்லை. இறுக்கமாகக் காணப்பட்டார். இருக்கையை விட்டு வெளியே எழுந்து செல்லவும் இல்லை. இடைவேளை முடிந்து படம் தொடர்ந்தது. சில மணித்துளிகள் தான் ஆகியிருக்கும். சஞ்சீவ் குமார் இருக்கையை விட்டு எழுந்து என்னையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தார். அவருடன் வந்தவர்கள் மட்டும் இன்னும் படம் பார்த்துக் கொண்டிருந்தனர். என் கையைப் பற்றிக் கொண்ட சஞ்சீவ் குமார் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தார். படம் தொடங்கியதிலிருந்து அது வரை எதுவும் பேசாமலிருந்த அவர், என்னிடம் தனது மௌனத்தைக் கலைத்து ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். 'Saab, I feel very much guilty. Whatever Shivaji saab has done in this film, in that, I have not done even 10 percent. I did the original & I am the hero in it. But after watching this film, I certainly feel Shivaji saab is the real hero and this film is the original. Once again I feel really guilty & Sorry Sir, I am leaving' எனக் கூறி திரையரங்கை விட்டு புறப்பட்டுச் சென்று விட்டார்."
Gopal.s
18th May 2014, 08:44 AM
என்னடா இவன்,
தன்னை பெரிய எழுத்தாள புலி என்று கூறி கொண்டு,மற்றவர் பதிவுகளை போட்டு திரிகிறானே என்று நானே நினைக்காமல் இருக்க....
1)இந்த திரியில் முதலில் நான் ஒரு அடிப்படை ரசிகன்.பிறகுதான் எழுத்தெல்லாம்.
2)வாசகர்கள் மாறுவதால்,பழைய பதிவுகளை பலர் புரட்ட நேரமிருக்காது.என்னை கவர்ந்த சில முக்கிய பதிவுகளை புரட்டி திருப்புகிறேன்.
3)சில பதிவுகள் வந்த நேரம் தொடர்ச்சியின்மையால் பொலிவிழக்க வாய்ப்புள்ளது.(122 பக்கம் ஒன்று,128 இல் ஒன்று என்று இப்படியாக)அதை கோர்வையாய், நேரமிருக்கும் போது ஒரு சிறிய பணியாய் செய்கிறேன்.
இன்னும் சிலவற்றை நேரம் அனுமதிக்கும் போது தொடர்வேன்.
JamesFague
18th May 2014, 05:29 PM
Now Parthal Pasi Therrum in DD Podhigai and at 7.00 pm Kizhvanam Sivakkum in
Sun Life. Non stop entertainment for NT fans.
Harrietlgy
18th May 2014, 08:21 PM
திரு. கோபால், பாபு படத்திற்கு தலைவருக்கு பாரத் கிடைக்காமல் செய்த சதி பற்றி மறு பதிவு செய்யவும். நான் படிக்க வில்லை. அது பற்றி அறிய வேண்டும்.
chinnakkannan
18th May 2014, 08:46 PM
//இன்னும் சிலவற்றை நேரம் அனுமதிக்கும் போது தொடர்வேன். // கண்டிப்பாகத் தொடருங்கள் கோபால்..மிக சுவையாக இருக்கிறது..என்போன்றோருக்கு பயனுள்ளதாக இருக்கிறது..//சிரிப்புபாதி அழுகை பாதி 9 மட்டும் எழுதிவிட்டு முடிக்கப் போகிறேன்..அப்புறம் சைலண்ட் மோட் மட்டும் தான்..(ஹை ஜாலி என்று நீங்கள் சொல்வது எனக்குக் கேட்கிறது :) ) எனக்கு மற்றவர்கள் அளவுக்கு ந.தி பற்றி எழுத வரவில்லையென வெட்கமாக இருக்கிறது..//
ஆனால் கோபால் ந.தி பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரைத் தொடர் எழுத ஆவலைக் கிளப்பி விட்டீர்கள் நீங்கள்.. (உங்களை ,வாசு,ராகவேந்திரர்,முரளி,பம்மலார் கார்த்திக் ராகுல் ரவி அளவுக்கு எழுத வராது)அதற்கு நிறைய வீட்டு வேலை (ஹோம் வொர்க்) மற்றும் புத்தகங்கள் படிக்க் வேண்டும் என நினைத்திருக்கிறேன். ஊருக்குப் போய்த் தான் புத்தகங்கள் வாங்கிப் படிக்க வேண்டும்..பின் எழுத வேண்டும் இறைவன் அருளால்...
Harrietlgy
18th May 2014, 09:26 PM
அவமானங்களை எப்படித் தாங்குவது?
http://www.vikatan.com/jv/2014/05/ztrlmz/images/p8.jpg
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சொன்னது நினைவுக்கு வருகிறது. தமிழகத்தில் அவரது சினிமா போஸ்டர் மீதுதான் அதிக அளவில் சாணி அடிக்கப்பட்டது. நடிப்புக்குள் அரசியலும் புகுந்த காலகட்டம் அது. அந்த நேரத்தில் ஒரு உர நிறுவனத்தின் திறப்பு விழாவுக்கு சிவாஜியை அழைத்தார்கள். மைக் பிடித்த சிவாஜி, 'இந்த கம்பெனியை திறந்து வைக்கும் தகுதி தமிழகத்தில் என்னைத் தவிர யாருக்குமே கிடையாது. அதிகப்படியான அளவு சாணியை போஸ்டரில் தாங்கித்தாங்கி உரம் பெற்ற உடல் இது. அந்த அவமானங்கள்தான் என்னை மாபெரும் நடிகனாக மாற்றியது. அதற்குமுன் ஒரு சில நாட்களாவது ஓய்வு எடுப்பேன். சோம்பேறியாய் வீட்டில் இருப்பேன். ஆனால், இந்த அவமானங்கள் வரவர வீட்டிலேயே இருக்காமல் தொடர்ச்சியாக நடித்துக்கொண்டே இருந்தேன்’ என்று சொன்னார். அப்படி அவமானங்களை உங்களை உற்சாகப்படுத்தும் தூண்டுகோல்களாகக் கொள்ளுங்கள்.
'புகழை மறந்தாலும் நீ பட்ட அவமானங்களை மறக்காதே! அது இன்னொருமுறை நீ அவமானப்படாமல் காப்பாற்றும்’ என்றார் ஹிட்லர். சொன்னவரை பார்க்காதீர்கள். சொன்னதைப் பாருங்கள்.
sivaa
18th May 2014, 09:56 PM
திரு. கோபால், பாபு படத்திற்கு தலைவருக்கு பாரத் கிடைக்காமல் செய்த சதி பற்றி மறு பதிவு செய்யவும். நான் படிக்க வில்லை. அது பற்றி அறிய வேண்டும்.
பாபு அல்ல சவாலே சமாளி படத்திற்கு என நினைக்கின்றேன்
sivaa
18th May 2014, 10:09 PM
1971ஆம் வருடம் கொடுக்கப்பட்ட பாரத் அவாட்
சொல்லப்பட்டதென்னவோ சிறந்த நடிகரக்கானதென்று
ஆனால் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டவருக்காக
அங்கே வாக்கு சேகரித்தவர்கள்
வாக்கு சேகரிக்க கூறிய காரணங்கள்
அவர் நல்லவர் வல்லவர் என்று.
அந்த நேரம் பத்திரிகைகளில் வாசித்த ஞாபகம்
Jeev
19th May 2014, 08:04 AM
A song from Madiveetu Ezhai (1981)
TMS & Vani
http://www.youtube.com/watch?v=mSC62Ttngxs
Jeev
19th May 2014, 08:08 AM
A song from film Thiyagi (1982)
http://www.youtube.com/watch?v=olPrFjZ8MTA
Jeev
19th May 2014, 08:12 AM
One more song from Thiyagi
Thottil Kattum Neram
TMS & P.Susheela
http://www.youtube.com/watch?v=Vtakq202lSo
Jeev
19th May 2014, 08:16 AM
Anbu Enum Nalla - Movie: Madi Veetu Ezhai
http://www.youtube.com/watch?v=_4ndKLlnMa4
Russellbpw
19th May 2014, 09:31 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsbbe0b37a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsbbe0b37a.jpg.html)
Gopal.s
19th May 2014, 11:08 AM
Deleted.
Gopal.s
19th May 2014, 11:08 AM
நிறைய பேருக்கு தெரியாத விஷயங்கள்-
1)1968 முதல்தான் சிறந்த நடிகர் பட்டம் , கொடுக்க பட ஆரம்பித்தது.
2)மொழி மாற்று படங்கள் தகுதி பெற முடியாது. (பாபு) .சவாலே சமாளிதான் தகுதி பெற்றது..
3)துக்ளக் இதழ் மூன்று வாரங்கள் இதை பற்றி விவரமாக எழுதியது. ஒரு வடக்கிந்தியர் ,சிவாஜி பெயரை முன்மொழிந்தார்.சௌந்தரா கைலாசம் எல்லோரிடமும் ,இந்த முறை சிவாஜிக்குதான் என்று சொல்லி கொண்டிருந்தாராம்.துக்ளக்கிற்கு பேட்டி கொடுத்த அத்தனை award committee அங்கத்தினர்களும் மென்று முழுங்கினார்கள்.
4)வேறு யார் பெயரையோ முன்மொழிந்த பின் ,சௌந்தரா கைலாசத்திடம் இதை பற்றி கேட்ட போது ,கூல் ஆக, ஐயய்யோ ,நான் சிவாஜி பெயரை முன்மொழிய பேச ஆரம்பித்த போது ,பதட்டத்தில் இன்னொரு பெயரை மாற்றி சொல்லி விட்டேன் .(இது பிலிம் நியூஸ் ஆனந்தன் சொன்னது)
Russellbpw
19th May 2014, 12:15 PM
3)துக்ளக் இதழ் மூன்று வாரங்கள் இதை பற்றி விவரமாக எழுதியது. ஒரு வடக்கிந்தியர் ,சிவாஜி பெயரை முன்மொழிந்தார்.
சௌந்தரா கைலாசம் எல்லோரிடமும் ,இந்த முறை சிவாஜிக்குதான் என்று சொல்லி கொண்டிருந்தாராம். -
துக்ளக்கிற்கு பேட்டி கொடுத்த அத்தனை award committee அங்கத்தினர்களும் மென்று முழுங்கினார்கள்.
4)வேறு யார் பெயரையோ முன்மொழிந்த பின் ,சௌந்தரா கைலாசத்திடம் இதை பற்றி கேட்ட போது ,கூல் ஆக, ஐயய்யோ ,நான் சிவாஜி பெயரை முன்மொழிய பேச ஆரம்பித்த போது ,பதட்டத்தில் இன்னொரு பெயரை மாற்றி சொல்லி விட்டேன் .(இது பிலிம் நியூஸ் ஆனந்தன் சொன்னது)
Gopal Sir,
சௌந்தரா கைலாசம் - இவங்களுக்கு நல்ல சாவு வந்ததா ?
அறிய ஆவல் !
uvausan
19th May 2014, 02:38 PM
9, 3 , 2 என்று நடிப்புலக இறைவனை வரிசை படுத்தும் ஒரு பதிவு இது - சற்றே மாறுதலாக தர எண்ணிய ஒரு முயற்சி இது . அடியும் , முடியும் காண முடியாத அளவிற்கு நடித்த மனிதனை எப்படியெல்லாம் பார்க்கலாம் , எப்படியெல்லாம் அலசலாம் என்று எண்ணும் போது இந்த ஒரு ஜென்மம் நமக்கு போறவே போறாது என்று தான் தோன்றுகிறது- இவரை பற்றி யார் அலசினாலும் , எழுதினாலும் ஒரு திருப்தி என்பது அவர்களுக்கு இன்னும் பூரணமாக கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே!! இன்னும் அவரை பற்றி 100 திரிகள் வந்தாலும் , அவரை பற்றிய சாதனைகளின் வருணனைகள் ஒரு பெரிய சமுத்தரத்தில் இருந்து ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்து போலத்தான் இருக்கும் - முழுமை பெற்றிருக்க வாயிப்பே இல்லை - இறைவனை நான் முழுதும் புகழ்ந்து விட்டேன் என்று சொல்வது போல இருக்கும் - கிளாஸ் தண்ணீரை எடுத்தவர்களின் நடுவே ஒரு உத்திரினியில் தண்ணீரை எடுத்துக்கொண்டு இந்த பதிவை இடுகிறேன் ----
தொடரும்
uvausan
19th May 2014, 02:43 PM
9 வேடங்கள்*
நவராத்திரி *: இந்த படம் NT இடமிருந்து 100வது என்ற பெருமையை வாங்கி கொண்டது - ஒருவர் இருவராக நடிக்கலாம் - ஆனால் ஒரே படத்தில் 9 different வேடம் போட்டு 9 பேர்கள் நடித்தார்கள் என்ற உணர்வை உண்டாக்க முடியுமா ? 9 இல் ஒருவர் இறந்து விடுவாரே - பார்த்து கண்ணீர் விட்டவர்கள் கணக்கில் அடங்குவார்களா ? அவர் கடைசியில் வந்து விட மாட்டாரா என்று ஏங்கி படத்தை விடாமல் தினமும் பார்த்தவர்கள் எவ்வளவு பேர்கள் ? ஒரு குஷ்ட்டரோகி யை கண்டு மனம் பதைத்தவ்ர்கள் எவ்வளவு பேர் ? - "இரவினில் ஆட்டம் , பகலினில் தூக்கம் - இதுதான் எங்கள் உலகம் " இந்த உலகத்தை பார்க்க துடித்தவர்கள் எவ்வளவு பேர் ? எந்த வேடத்தை சொல்வது எதை விடுவது என்று புரியாமல் தவித்த படங்களில் இதுவும் ஒன்று - மிக பெரிய வெற்றி வாகை சூடிக்கொண்ட படம்*
3 வேடங்களில் :
---- தெய்வ மகன்
----- திரி சூலம்
---- பலே பாண்டியா
தெய்வ மகன் - இந்த படத்தை அலசுவதும் ஒன்றுதான் , வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை எண்ணுவதும் ஒன்றுதான் - ஆஸ்கார் போட்டிக்கு தேர்ந்து எடுத்த படம் - இன்னும் இந்த படத்தின் தாக்கத்தை மீற ஒரு படமும் வந்ததில்லை , வரப்போவதும் இல்லை - கண்ணனை மறுப்பார் இல்லை , கண்டு வெறுப்பார் இல்லை என்று பாடினாள் ஒருத்தி - ஆனால் இங்கோ அவனை வெறுத்தவர் பலர் - அவன் தந்தை உள்பட ---- நாய்களை ஏவி விட்டனர் அவனை கடிக்க - அவன் நடத்திய பாரத போரில் அவனுக்கு ஒரு அர்ஜுனன் இல்லை - உபதேசம் கேட்க்க யாருமே இல்லை - கேலி பேச்சுக்கள் அவனை அம்பாக தைத்தன - தாய் தந்தையின் பாசமின்மை அவனை முள்ளாக குத்தின - பிறருக்காக வாழ்ந்தான் - அதில் தான் எவ்வளவு இன்பம் - தனக்கு என்று ஒரு வாழ்வு இல்லை - ஆனால் ஓசியில் கிடைத்த வாழ்வுக்குத்தான் எவ்வளவு பெருமை சேர்த்தான் ... வசூலிலும் , ஓட்டத்திலும் ஒரு சாதனையை அன்றும் இன்றும் நாளையும் ஏற்படுத்திய , ஏற்படுத்திகொண்டிருக்கும் , ஏற்படுத்தும் படம் ஒன்று உண்டு என்றால் அது இதுதான் !
திரிசூலம் : சூலத்தால் தோல்விகளை குழி தோண்டி புதைத்த படம் - வசூலில் தனக்கு மிஞ்சியவர்கள் யாருமே என்றும் இல்லை என்று உலகத்திற்கு பறை சாற்றும் படம் - இரன்று கைகள் நாலானால் என்னவாகும் என்பதை உலகிற்கு உரைத்த படம்
பலே பாண்டியா : குறைந்த பண செலவில் , நிறைந்த நடிப்பில் , கவர்ந்த நகைச்சுவையில் , ஒரு படம் வருமா என்று அன்று ஏங்கியவர் பலர் - அது வரை சிரிக்க தெரியாதவர்கள் சிரிக்க கற்று கொண்டனர் - சிரிப்பை தொலைத்தவர்கள் , தான் இழந்த நகைச்சுவை உணர்வை திரும்ப பெற்று கொண்டனர் - படத்தை பார்த்தவர்கள் உடனே பாடிய பாடல் " நீயே உனக்கு நிகரானவன் " - வாழ வழியில்லாமல் தன் நம்பிக்கையை இழந்தவர்கள் அன்று பலர் - இந்த படத்தை பார்த்தவுடன் வாழ பல நல்ல வழிகளை கண்டு பிடித்தனர் - இந்த படம் ஏற்படுத்திய தாக்கம் இன்றும் குறைய வில்லை - யாரை எங்கே வைப்பது என்று தெரியாமல் NT பந்தலுவிற்கு பணம் வாங்காமல் குறைந்த நாட்களில் நடித்து கொடுத்த படம் - இந்த படத்தை பார்த்தபின் சிரிக்க கற்று கொண்டவர்கள் முதலில் சிரித்தது பந்துலுவை பார்த்துதான் !!
தொடரும்
uvausan
19th May 2014, 02:53 PM
இரண்டு வேடங்களில்
1. உத்தம புத்திரன்
முதல் இரட்டை வேடம் - சும்மா ஊதி தள்ளியிருப்பார் - படத்தை யார் அலசினாலும் , எவ்வளவு தடவை அலசினாலும் சுவை குறையவே குறையாது - ஸ்ரீதருக்கு வெற்றியின் தத்துவத்தை உணர்த்தின படம் - வசூலிலும் புரட்ச்சியை உண்டாக்கின படம் - இந்த படத்தின் தாக்கத்தை தாள மாட்டாமல் நாடோடியாக திரிந்த படங்கள் ஏராளம் .
2. அன்னையின் ஆணை
இதில் தந்தை - மகன் இரண்டு வேடங்கள் - இருவரும் படத்தில் சந்திக்க மாட்டார்கள் - சிவனாகவும் நக்கீரனாகவும் ஒருவரே ஒரு படத்தில் வரும் ஒரு சிறிய நாடகத்துள் வரும் காட்சி மெய் சிலிர்க்க வைக்கும் - அன்னையின் பெருமையை இந்த படம் சொன்னதுபோல் வேறு எந்த படமும் இது வரை வந்ததில்லை .
3. சரஸ்வதி சபதம்
இரண்டு தனிப்பட்ட வேடங்கள் - இருவருக்கும் ஜோடி இல்லை - நாரதராக வும் , வித்யாபதியாகவும் - அருமையான படம் , நடைக்காகவும் , நடிப்புக்காகவும் பல நாட்கள் ஓடியபடம் .
4. எங்க ஊர் ராஜா
மகனாகவும் , தந்தையாகவும் - யாரை நம்பி நான் பொறந்தேன் என்று ஒவ்வாருவரையும் கேள்வி கேட்க்க வைத்து பொருள் உணர்த்திய படம் - பிறருக்கும் உதவிசெய்வதில் கிடைப்பதுதான் உண்மையான சந்தோஷம் என்று உணர வைத்த படம் .
5. என் மகன்
வளர்ப்பு மகனாகவும் தந்தையாகவும் இரண்டு வேடங்கள் - அருமையான கருத்துக்கள் , பாடல்கள் - அடைந்த வெற்றியை கேட்கவும் வேண்டுமோ !?
6. எமனுக்கு எமன்
தெலுங்கு தேசத்தில் , படத்தில் நடிப்பவர்களிடம் ஒரு நம்பிக்கை உள்ளது - எமனாக நடிப்பவருக்கு ஆயுள் கூடவாம் -- பாவை விளக்கில் ஒரு வசனம் வரும் - NT யை பார்த்து ஒருவர் சொல்லுவார் - உங்களுக்கு 100 வயது என்று - உடனே NT - "இருக்கலாம் எமன் இளிச்சவாயனாக இருந்தால் " - அவரே எமனாக நடித்த படம் - தான் எமனாக நடித்ததினால் கிடைத்த கூடுதல் ஆயுளையும் அவர்தான் மூ .க விற்கு தானமாக கொடுத்து விட்டாரே !! -- படம் ஒரு மாறுதலை உருவாக்கியது - வசூலிலும் புரட்ச்சியை ஏற்படுத்தியது .
7. ரத்த பாசம்
அண்ணன் -தம்பியாக நடித்த படம் - வெளிநாடுகளில் எடுத்தபடம் - விஜயன் படத்தை முழுவதும் direct பன்னாவிட்டாலும் , படம் வெற்றியை தவற விட வில்லை.
8. புண்ணிய பூமி
கணவராகவும் , தன் பிள்ளையாகவும் நடித்த படம் - இருவரும் சந்திக்க மாட்டார்கள் - Mother India வை தமிழில் அதிகமாக ரசிக்க முடியாமல் போய் விட்டது நம் துரதிஷ்ட்டமே !
9. மனிதனும் தெய்வமாகலாம்
நாத்திகனாகவும் , ஆஷ்திகனாகவும் நடித்து தூள் கிளப்பிய படம் - ஒரு தெய்வ மகன் சாதாரண மக்களும் தெய்வமாகலாம் என்று உணர்த்திய படம் .
10. என்னை போல் ஒருவன் .
" தங்கங்களே " என்று நம்மை எல்லோரையும் அழைத்து விருந்து படைத்த படம் - மன்மதன் சிவாஜியாக நடித்த படம் .
11.கெளரவம்
பெரியப்பா , வளர்ப்பு மகன் என்று இருவர் நடித்த படம் - எங்குமே ஒருவர் என்று சொல்ல முடியாத படம் - மூன்றடி மண் கேட்டான் வாமணன் உலகிலே - முன்றன வைத்ததோ , மன்னவன் தலையிலே --- அறுபதை இருபது வெல்ல முடியாது என்பதை நிரூபித்த படம் - பாரிஸ்டர் தானே எப்பவும் நினைவில் இருக்கிறார் !!!
12.பாட்டும் பரதமும்
தந்தை , மகனாக - ஓட வேண்டிய படம் - ஓட்டாமல் ஒதுங்கி விட்டது அரசியல் என்னும் சாக்கடையில் இருந்து எழுந்த தூசி காற்றினால் - அருமையான கதை , அற்புதமான பாடல்கள் - இத்தனையும் இருந்தும் "no peace of mind "
13. விஸ்வரூபம்
தந்தையாகவும் , மகனாகவும் - original ஆக விஸ்வரூபம் எடுத்த படம் .
14.. சந்திப்பு
தந்தையாகவும் , மகனாகவும் - சந்திப்பு இனிதாக நடந்தது - அருமையாக ஓடியது .
தொடரும்
uvausan
19th May 2014, 02:56 PM
பாடல்களில் பல வேடங்கள் :
1. திருவிளையாடல்
இந்த ஒரு படம் போதும் , பாட்டும் நானே - ஒரு பாடல் போதும் - நடிப்பு திறமை என்றால் என்னவென்று உலகத்திற்கு எடுத்து சொல்ல - ஒரு நாள் போதுமா வர்ணிக்க ? போதவே போதாது -----
2. ராஜரிஷி
ஒரு பாடல் -பல வேடங்கள்
3. இல்லற ஜோதி
"கேட்பதெல்லாம் காதல் கீதங்களே" - ஒருவர் இருவராகி , இருவர் ஒருவராகி வசிப்பதை கேளுங்கள்
http://youtu.be/CBVnFCSY_qo
4. தீபம்
பேசாதே - வாயுள்ள ஊமை நீ ---- மனசாட்சி பாடும் பாடல் இது
5. பாவ மன்னிப்பு
"சிலர் சிரிப்பார் - சிலர் அழுவார் " -- இது CK வின் பதிவுகள் அல்ல - ஆனால் அவருடைய பதிவுகள் போல் சிரஞ்சீவியாக இருக்கும் பாடல் இது
சில படங்கள் என் list இல் இருந்து விடு பட்டு போய் இருக்கலாம் - அவைகளை சுட்டி காட்டுபவர்களுக்கு என் நன்றி in advance !
முற்றும்
sss
19th May 2014, 03:03 PM
நண்பர்களே
போன வாரம் சன் லைப் -இல் தெய்வ மகன் பார்த்த போது கவனித்த ஒன்று... அப்பா வேட சங்கரின் இடது புருவம் மிகவும் அடர்த்தியாகவும் வலது புருவம் சற்று அளவில் சிறிதாகவும் காணப் பட்டது... இது முகம் விகாரமானதாலா ? அல்லது எனக்கு அப்படி தெரிந்தா ? நிறைய முறை திரையில் பாரத்த நண்பர்கள் சொல்லவும்.
நன்றி
uvausan
19th May 2014, 03:07 PM
//இன்னும் சிலவற்றை நேரம் அனுமதிக்கும் போது தொடர்வேன். // கண்டிப்பாகத் தொடருங்கள் கோபால்..மிக சுவையாக இருக்கிறது..என்போன்றோருக்கு பயனுள்ளதாக இருக்கிறது..//சிரிப்புபாதி அழுகை பாதி 9 மட்டும் எழுதிவிட்டு முடிக்கப் போகிறேன்..அப்புறம் சைலண்ட் மோட் மட்டும் தான்..(ஹை ஜாலி என்று நீங்கள் சொல்வது எனக்குக் கேட்கிறது :) ) எனக்கு மற்றவர்கள் அளவுக்கு ந.தி பற்றி எழுத வரவில்லையென வெட்கமாக இருக்கிறது..//
ck - கோபால் போடும் மறு பதிவுகளால் உங்கள் பதிவுகளை நிறுத்த வேண்டாம் - எல்லா சுவைகளும் இருந்தால்தான் உணவு நன்றாக இருக்கும் - ஒரு பதார்த்தம் தித்திப்பாக இருந்தாலும் அதைமட்டுமே தினமும் திங்க முடியாதே ! கோபாலின் நோக்கமும் அவ்வாறு அல்ல - சிறப்பான பதிவுகளை நமக்கு எல்லாம் சற்றே நினைவு படுத்துகிறார் - அவைகளை விட சிறப்பான பதிவுகள் இந்த திரியில் வந்தால் முதலில் பெருமை பட கூடியவரும் அவர்தான் - தொடருங்கள் உங்கள் பதிவுகளை
mr_karthik
19th May 2014, 03:39 PM
//3. சரஸ்வதி சபதம்
இரண்டு தனிப்பட்ட வேடங்கள் - இருவருக்கும் ஜோடி இல்லை - நாரதராக வும் , வித்யாபதியாகவும் - அருமையான படம் , நடைக்காகவும் , நடிப்புக்காகவும் பல நாட்கள் ஓடியபடம்//
Ravi,
When you mention this film, how you forget FIVE role action in Thiruvarutchelvar..??.
Villavan
Sekkizhaar
Thirukkurippu Thondar
Sundharamoorthy Naayanar
Thirunaavukkarasar (Appar).
uvausan
19th May 2014, 03:57 PM
//3. சரஸ்வதி சபதம்
இரண்டு தனிப்பட்ட வேடங்கள் - இருவருக்கும் ஜோடி இல்லை - நாரதராக வும் , வித்யாபதியாகவும் - அருமையான படம் , நடைக்காகவும் , நடிப்புக்காகவும் பல நாட்கள் ஓடியபடம்//
Ravi,
When you mention this film, how you forget FIVE role action in Thiruvarutchelvar..??.
Villavan
Sekkizhaar
Thirukkurippu Thondar
Sundharamoorthy Naayanar
Thirunaavukkarasar (Appar).
கார்த்திக் - தவறினை முதல் நபராக சுட்டி காண்பித்ததற்கு நன்றி - நீங்கள் சொன்னைவைகள் வேறு ரகம் - அப்படி இன்னும் சில படங்களை உதாரணம் காட்டலாம்
1. திருமால் பெருமை
2. திருவிளையாடல்
3. ராஜா பார்ட் ரங்கதுரை
இவைகளில் தனி தனி பகுதிகளாக ஒவ்வொரு வேடத்தில் நடித்துள்ளார் - அவைகளை இரண்டு வேடங்கள் அல்லது மூன்று வேடங்களின் வரிசையில் கொண்டுவர முடியாது என்று கருதியே திருவருட்செல்வரை பற்றி எழுத வில்லை - ஆனால் கண்டிப்பாக மறக்க வில்லை
kalnayak
19th May 2014, 04:22 PM
ரவி, சக்கப்போடு போட்டவரையும் பாடல்களில் சேத்துக்கோங்க!!!
parthasarathy
19th May 2014, 04:35 PM
கார்த்திக் - தவறினை முதல் நபராக சுட்டி காண்பித்ததற்கு நன்றி - நீங்கள் சொன்னைவைகள் வேறு ரகம் - அப்படி இன்னும் சில படங்களை உதாரணம் காட்டலாம்
1. திருமால் பெருமை
2. திருவிளையாடல்
3. ராஜா பார்ட் ரங்கதுரை
இவைகளில் தனி தனி பகுதிகளாக ஒவ்வொரு வேடத்தில் நடித்துள்ளார் - அவைகளை இரண்டு வேடங்கள் அல்லது மூன்று வேடங்களின் வரிசையில் கொண்டுவர முடியாது என்று கருதியே திருவருட்செல்வரை பற்றி எழுத வில்லை - ஆனால் கண்டிப்பாக மறக்க வில்லை
Ravi Sir:
Thiruvarutchelvar & Thirumal Perumai had various roles for NT while Thiruvilaiyadal and Rajapart are different - Thiruvilaiyadal had episodes of the Hero which necessitated different get-ups.
Regards,
R. Parthasarathy
uvausan
19th May 2014, 04:43 PM
கல்நாயக் : படத்தில் வெறும் குரல் தான் வரும் - இதை எப்படி நம் லிஸ்டில் சேர்த்துக்கொள்ள முடியும் ?
parthasarathy
19th May 2014, 04:47 PM
First of all, I thank Mr. Murali for helping me to post my previous postings.
Secondly, I thank Mr. Gopal for posting my early postings on "The 10 remake films NT acted", (he didn't even tell me - for that also I thank him for the affection). Sir - In fact, this article was rather brief. I followed this with another 10 films on a larger scale - The 10 Films of NT which were remade in other languages - starting from Bhagappirivinai upto Thevar Magan. These were my initial postings. I just told that while NT excelled in remade films other Artistes didn't even come near his shadow when those were remade in other languages - so, who is the MASTER?
With the above, now let me re-start my Song analysis as follows:-
வணக்கம்!
கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன்னர் நான் எழுதத் துவங்கிய இரு கட்டுரைத் தொடர்களுள் ஒன்றான நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த வித்தியாசமான நடிப்பில் உருவான பாடல்கள் கட்டுரைத் தொடரைத் திரும்பவும் துவங்குவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். முதலில், இத் தொடரில் நான் ஏற்கனவே எழுதிய 8 பாடல்களை முதலில் மீள் பதிவு செய்து விட்டு பின்னர் மற்ற பாடல்களை பதிகிறேன்.
நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள்
மீண்டும் ஒரு புதிய கட்டுரைத் தொடர் மூலம் உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
நடிகர் திலகத்தின் அற்புத நடிப்பை வேறு வேறு பரிமாணங்களில் இப்பூவுலகம் உள்ளவரை ரசித்துக் கொண்டே இருக்கலாம். இன்னும் சொல்லப் போனால், அவரது ஒவ்வொரு படத்தையும், திரும்பத் திரும்பப் பார்க்கும் போதும், ஒவ்வொரு முறையும், ரசிப்புத் தன்மையுள்ள ஒவ்வொருவருக்கும், வேறு வேறு கோணங்களில், அவரது அற்புதத் திறமையை புதிது புதிதாக ரசிக்கும் பாக்கியம் கிடைக்கும்.
நான் இங்கு எழுதப் போவது, நிச்சயம் அனைத்து நடிகர் திலக ரசிகர்களும் ஏற்கனவே ரசித்தது தான் (திரு. முரளி ஸ்ரீனிவாஸ் அடிக்கடி குறிப்பிடுவது போல், அனைத்து நடிகர் திலக ரசிகர்களும் ஒரே கோணத்தில்தான் அவரை ரசிக்கிறார்கள்.) இருப்பினும், அந்த அற்புதத் தருணங்களை மறுபடியும் எழுத்து வடிவில் இங்கு கொணர என்னால் இயன்றவரை முயல்கிறேன்.
நடிகர் திலகம் பெரிய/அகன்ற திரைக்கு அறிமுகம் ஆன கால கட்டத்தில், பெரும்பாலும், அனைத்து நடிகர்களும் நாடகத்திலிருந்துதான் அறிமுகம் ஆனார்கள். நாடகம் என்கின்ற ஊடகம் எதையும் உரத்துச் சொல்லுவதிலும், சொல்ல வந்த விஷயத்தைப் பாடல்களின் மூலமும் சொல்லிக் கொண்டிருந்தது. காரணம் எல்லோரும் அறிந்ததுதான் - கடைசி இருக்கையில் இருப்பவருக்கும் கேட்க வேண்டும் என்பதால். இந்தக் காரணத்தால், நாடகத்திலிருந்து வந்த நடிகர்களின் நடிப்பில் ஒரு வித செயற்கைத் தன்மை இருப்பதாக சொல்வதுண்டு. இது சரியான கூற்று அல்ல. நாடகத்திலிருந்து வந்தவர்களிடம் இருந்த சரளமான நடிப்பு நேரே வெள்ளித்திரைக்கு வந்தவர்களுக்கு ஒரு போதும் இருக்காது. இதற்குக் காரணம், நாடகம் அளிக்கும் அனுபவம் மற்றும் தைரியம் - நேரே லைவாக ஆடியன்சை எதிர்கொள்ளவிருப்பதால். அங்கு தான் ரீடேக் எல்லாம் கிடையாதே.
அதே சமயம், நாடகத்திலிருந்து நடிக்க வந்த நடிகர்கள் பாடல் காட்சியில் நடிக்கும் போது, அவர்களுடைய உடல் மொழி இயல்பாக இல்லாமல், கைகளை மனம் போன போக்கில் ஆட்டி, அசைத்து நடித்துக் கொண்டிருந்தார்கள் - இல்லை ஒரேயடியாக எந்த வித அசைவும் இன்றி நின்ற இடத்தில் அப்படியே சிலையாக நின்று நடித்துக் கொண்டிருந்தார்கள் - அதாவது ஒரு உயிரோட்டமான நடிப்பு அந்தக் காலத்தில் பாடல்களில் இல்லாமல் இருந்தது. அப்படிப் பார்த்தால், இந்த நிமிடம் வரை, பெரும்பாலான நடிகர்களுக்குப் பாடல் காட்சியில் அந்த அளவிற்கு நடிப்பதற்குத் தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதே நாடக உலகில் இருந்து வந்த நடிகர் திலகமோ, தன் முதல் படத்தில் இருந்தே, பாடல் காட்சியில் நடிக்கும் போது, அளவோடு கை கால்களை அசைத்து, அந்தப் பாடல் வரிகளுக்கேற்றார் போல் முகம் மட்டுமல்லாமல், மற்ற உடல் மொழிகளின் மூலமாகவும், சரியான பாவங்களைக் காட்டி நடிக்கலானார். அதாவது, அந்த முதிர்ச்சி, அவரது முதல் படத்திலேயே இருந்தது. நடிப்பில் எல்லையை முதல் படத்திலேயே தொட்டவரல்லவா அவர்! பாடல் முழுவதுமே, ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே பின்னர் நடித்து விட்டவராயிற்றே! (பொன்னை விரும்பும் பூமியிலே - ஆலய மணி).
திரைப்படங்களில், பாடல்கள் மூலம் கதையையும், காட்சியின் வீரியத்தையும் காட்டி அதன் மூலம், மக்களை ஒரு சேர சென்று சேர ஆரம்பித்தது, நடிகர் திலகம் - பீம்சிங் - கண்ணதாசன் - மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் / ராமமூர்த்தி - டி.எம்.சௌந்தரராஜன் - பி. சுசீலா கூட்டணி தான் என்றால், இதற்கு மாற்றுக்கருத்துக்கு இடமேது? இதே போல், பாடல்களின் மூலம், காட்சியின் வீரியத்தை மட்டுமல்லாது, அந்தப் பாடல்கள் இடம் பெற்ற காட்சிகளின் சூழலை சுவையும் சுவாரஸ்யமும் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொண்டதும், நடிகர் திலகம் தான்.
அப்படிப்பட்ட பாடல்களின் மூலம், ஒரு இயக்குனர் (அவர் தானே அந்தக் கப்பலின் கேப்டன்) சொல்ல வந்த விஷயத்தை, மிகச் சரியாகப் புரிந்து கொண்டு, வெறுமனே நடித்து விட்டுப் போகாமல், அந்தப் பாடலில், எவ்வளவு முடியுமோ அவ்வளவு கலைத் தன்மையை, கிரியேடிவிடியைக் காண்பிக்க நினைத்து, அதில் நூறு சதம் வெற்றி பெற்ற பாடல்களை இந்தக் கட்டுரையில் பதிவிட முயல்கிறேன்.
1. "சக்கப் போடு போடு ராஜா"; படம்:- பாரத விலாஸ் (1973); இயக்கம்:- ஏ.சி.திருலோகசந்தர்
புதிதாகத் திருமணம் ஆன ஒருவன், முதன் முதலாகத் தன் காதல் மனைவியைப் பார்க்கும் முன், அவன் மனதில் எழுகின்ற உணர்வுகளைக் காட்டுவதாக அமைந்த பாடல். இந்தப் பாடலைப் புதிய கோணத்தில் சிந்தித்து எடுத்திருப்பார் இயக்குனர் ஏ.சி.டி. - அதாவது, அவனும் அவனது மனசாட்சியும் பாடி, பேசுவதாக அமைந்த பாடல்.
இந்தப் பாடலின் தனிச் சிறப்பு - பொதுவாக, அனைத்து படங்களிலும், சம்பந்தப்பட்ட மனிதனும் மனசாட்சியும் நேருக்கு நேர் வருவதாகக் காண்பிப்பார்கள். அதனால், அந்த இரண்டு பாத்திரங்களும் அதாவது நடிகர்களும், கொஞ்சம் சுலபமாக யோசித்து, நடித்து விட முடியும். ஆனால், இந்தப் பாடலிலோ, மனசாட்சி அசரீரியாகக் குரல் மட்டுமே கொடுக்கும். அதை அவர் கவனித்து, ரியேக்ட் மட்டும் செய்ய வேண்டும். இங்கு தான், நடிகர் திலகத்தின் அபார கற்பனை வளம் அவருக்குக் கை கொடுக்கிறது.
பல்லவியில், சக்கப் போடு போடு ராஜா என்று நிஜ மனிதனாக நடிகர் திலகம் பாடத் துவங்கியவுடன், "டேய் டேய் என்னடா பாட்டுல பேச ஆரம்பிச்சிட்ட" என்று மனசாட்சியின் குரல் வரும். அப்பொழுது அவருடைய ரியேக்ஷனை கவனியுங்கள். அபாரம்!
சரணத்தில், "நல்ல சமயம் இதை விட்டு விடாதே நாளும் தெரிந்த நீ நழுவ விடாதே" என்றவுடன் "என்னடா என்னடா நல்ல சமயம்" என்று மனசாட்சி கேட்டவுடன், அவர் இரண்டு கைகளையும் பின்னி "வெள்ளி நிலாக் காயுது வாடைக் காற்று வீசுது" என்று நடிக்கும் நடிப்பு, அது வரை அவர் காட்டாத - நடிக்க வந்து 21 வருடங்களுக்குப் பின்னர், 150 படங்களுக்கு மேல் நடித்த பின்னும், காட்டிய ஒரு புதிய பாணி நடிப்பு!
அடுத்த சரணத்திற்கு முன் வரும் தருணத்தில், அந்த மனசாட்சி இவரது கழுத்தில் இருக்கும் துண்டைப் பிடித்து இழுப்பதாக நினைத்துக் கொண்டே அந்தத் துண்டைப் பிடித்து இழுத்து தன்னை விடுவித்துக் கொள்வதாக கற்பனை கலந்து நடித்திருக்கும் விதம் - நடிகர் திலகத்தின் அபார கற்பனை வளத்திற்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு.
கடைசியில், கட்டிலைச் சுற்றி ஒரு மாதிரி கைகளை இழுத்து இழுத்து காட்டிக் கொண்டே பாடலை முடிக்கும் விதம் மிகவும் நகைச்சுவையோடு இருக்கும்.
மொத்தத்தில், ஒரே நேரத்தில், அபாரமான கற்பனை வளத்தோடும், அற்புதமான நகைச்சுவையோடும், ஒரு முதல் இரவுப் பாடலாக இருந்தாலும், தரம் கொஞ்சமும் குறையா வண்ணம், நடித்த பாடல். அதுவும், எந்த வித அதீத முயற்சியும் இல்லாமல் (effortless) நடித்த பாடல்.
எதையும் வித்தியாசமாக சிந்தித்து, மக்களுக்கு அறுசுவை விருந்து படைப்பவர் நடிகர் திலகம் என்பதற்குக் கட்டியம் கூறும் பாடல்.
தொடரும்,
இரா. பார்த்தசாரதி
kalnayak
19th May 2014, 05:44 PM
ரவி, நீங்க சொல்றது சரிதான். இருந்தாலும் உருவம் காட்டாம, குரலை மட்டும் இரண்டாவதற்கு காட்டியதை, நீங்க எந்த கணக்குலயும் எடுத்துக்க மாட்டீங்களா?
இப்ப பாருங்க பார்த்தசாரதியார் எழுதினதுகூட எனக்கு பரிந்து எழுதினது போல இல்ல? கொஞ்சம் பார்த்து பண்ணுங்க!!!
uvausan
19th May 2014, 09:49 PM
திரு இரா. பார்த்தசாரதி - கோபாலுக்த்தான் நன்றி சொல்லவேண்டும் - உங்கள் பழைய பதிவுகளை இங்கு மீண்டும் பதிவிட்டது மட்டும் அல்லாமல் உங்களையும் இங்கு மீண்டும் வரவழைத்தற்க்கு - இவ்வளுவு எழுதும் திறமையை வைத்துகொண்டு இந்த திரியில் இதுவரை நீங்கள் அதிகமாக பங்கு எடுத்துக்கொள்ளாமல் இருந்தது எங்களுடைய துரதிஷ்ட்டம் என்றுதான் சொல்ல வேண்டும் - இப்படியே கோபால் நெய்வேலி வாசுவையும், பம்மலார் அவர்களையும் இங்கு மீண்டும் அழைத்து வந்துவிடுவார் என்ற புதிய நம்பிக்கையுடன் உங்களையும் வரவேற்பதில் பெருமை அடைகிறோம் - தொடருங்கள் ( இடைவிடாமல்)
அன்புடன்
ரவி
uvausan
19th May 2014, 10:47 PM
ஜோடிகள் இல்லையடி பாப்பா ! *
இந்த பதிவும் ஒரு புதிய அணுகுமுறையில் ! *இந்த வரிசையில் எந்த படமாவது விட்டிருந்தால் மன்னிக்கவும் - ( கல்நாயக் , கார்த்திக் , முன்பாகவே உங்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டேன் திட்டு விழாமல் இருப்பதற்காக ----)*
எவருக்கு வரும்*இந்த துணிச்சல் ? *எவருக்கு வரும் இந்த மனப்பான்மை ? எவருக்கு வரும் இத்தகைய தன்னம்பிக்கை - *ஒருவருக்கு ஒன்பது கதாநாயகிகள்*தேவைப்படும் காலம் அது ! *அண்ணனுக்கும் காதலனுக்கும் வித்தியாசம் தெரியாமல் வெளிவந்த படங்கள் எவ்வளவு அந்த காலத்தில் - *கதை படி , பல கதாநாயகிகள் hero விற்கு கிடைக்க வாய்ப்பில்லை என்றால் , உடனே அந்த ஹீரோவிற்கு இரட்டை வேடம் - இரண்டு கதாநாயகிகள் கிடைப்பார்களே !! *கண்ணை மூடிக்கொள்ளும் காதல் காட்சிகள் , முகத்தை சுளிக்கவைக்கும் ரசனைகள் - இவைகளின் நடுவே கதாநாயகிகளே தேவை இல்லை என்று நடித்த இந்த மாணிக்கம் எங்கே - வயதான காலத்தில் வரவில்லை இந்த வைராக்கியம் - இளமை பூத்து குலுங்கும் வயதில் ஜோடி இல்லாமல் நடித்தவர் இவர் - அப்படி நடித்தும் வெற்றியை கைபற்ற தவறவில்லை - இதுவல்லவோ**சாதனை - அப்படி சாதனை புரிந்த படங்கள் சிலவற்றை பார்க்கலாமா ?*
தொடரும்*
uvausan
19th May 2014, 10:51 PM
1. மனிதனும் மிருகமாகலாம் -1953
2..உலகம் பலவிதம் -1955
3. சம்பூர்ண ராமாயணம் - 1958
4. பழனி -1965
5. சரஸ்வதி சபதம்- 1966
6. கந்தன் கருணை -1967
7.நெஞ்சிருக்கும் வரை -1967
8.திருவருட்செல்வர் -1967 ( சுந்தர் வேடத்தை தவிர )
9.திருமால் பெருமை 1968 ( பெரியாழ்வார் வேடத்திற்கு மட்டும்)
10.லக்ஷ்மி கல்யாணம் -1968
11. காவல் தெய்வம் -1969
12..பிராப்தம் -1971 ( முன் ஜென்ம பதிவுகளில்)
13..பாபு -1971 ( ஒரு சில காட்சிகளை தவிர )
14. ஞான ஒளி -1972 (ஒரு சில காட்சிகளை தவிர )
15. மனிதரில் மாணிக்கம் -1973
16. தீபம் -1977
17. ரத்தபாசம் -1980 ( ஒரு வேடத்திற்கு மட்டும்)
18.எழுதாத சட்டங்கள் -1984
19..தாவணி கனவுகள் -1984
20.படிக்காத பண்ணையார் -1985
21.மருமகள் -1986
22.விடுதலை -1986
23. ராஜ மரியாதை -1987
24. அன்புள்ள அப்பா -1987
25. ஜல்லிக்கட்டு -1987
24.புதிய வானம் -1988
26 பசும்பொன் -1995
27. பூப்பறிக்க வருகிறோம் -1999
சில காட்சிகள் மட்டுமே ஜோடி யில் கீழ்கண்ட படத்தை யும் சேர்த்துகொள்ளலாம்
1. ராஜ ரிஷி
இந்த படங்களில் ஜோடி உண்டா என்று தெரியவில்லை
1. முத்துக்கள் மூன்று -1987
2.வீரபாண்டியன் -1987
3.கிருஷ்ணன் வந்தான் -1987
4.நாங்கள் -1992
5.மன்னவரு சின்னவரு
முற்றும்
uvausan
20th May 2014, 07:55 AM
மன்னிக்கவும் - பிறர் கண்டுபிடிக்கும் முன் -----
தேவர் மகன் -1992 - இந்த படத்திலும் ஜோடி இல்லை - சில காட்சிகளே வந்தாலும் , மனதில் என்றும் நிலைத்து நிற்கும் பாத்திரம்
uvausan
20th May 2014, 07:59 AM
கல்நாயக் - மீண்டும் பாரத விலாசை மறந்துவிட்டேன் - நற நற வென்று :banghead:நீங்கள் பல்லை கடிப்பது தெரிகின்றது ------- இதில் வரும் NT யின் மன சாட்சி க்கும் ஜோடி இல்லை - அப்பாடா - நீங்கள் திட்டுவதற்கு முன்பே தவறை திருத்தி கொண்டுவிட்டேன் -----:)
uvausan
20th May 2014, 08:24 AM
ஜோடி இங்கு உண்டு - டூயட் எங்கே ?
அடுத்த புதிய அணுகுமுறை /கண்ணோட்டம் ---
"பருப்பு இல்லாமல் கல்யாணமா " , "உப்பு இல்லாத சாப்பாடா " என்பார்கள் - ஜோடி இல்லாமல் படமா ? , பாடல் இல்லாத படம் என்ன படம் ?? - ஜோடி இருந்தும் டூயட் இல்லாமல் படம் எடுக்க முடியுமா ?? அப்படியே ஒரு படம் அமைந்தாலும் நடிக்க யாருக்கு விருப்பம் வரும்? - படத்தில் கனவு காட்சிகள் அவசியம் வேண்டும் - கதாநாயகி தான் கனவு காண வேண்டும் - ஒரே காட்சியில் வந்தாலும் முன்னணி நடிகை ஜோடியாக நடிக்க வேண்டும் - இப்படி இருந்த திரை உலகத்தை திருப்பி போட்ட பெருமை நம் தலைவருக்குத்தான் உண்டு -
ஜோடி வேண்டாம் - வெற்றி உண்டு ; பாடல் வேண்டாம் - நல்ல வசூல் உண்டு ; டூயட் வேண்டாம் - நல்ல நடிப்பு உண்டு ; இப்படி மூலதனம் எதுவும் போடாமல் நடிப்பையும் , தன்நம்பிக்கை யை மட்டும் நம்பி வெற்றியை கண்டவர் NT ஒருவரே - மற்ற நடிகர்களுக்கு சம பங்கு - அவர்களுக்கு மட்டும் நல்ல heroins ( உம் : பழனி ) , அவர்களுக்கு மட்டும் காதல் டூயட் பாடல்கள் - கதைக்கு தேவை பட்டாலே அன்றி இரட்டை வேடங்களை எடுக்கவில்லை - ஏன் என்றால் கூட நடிக்கும் நடிகர்களும் முன்னேறவேண்டும் , அவர்களுக்கும் தன் படங்களில் சம பங்கு தர வேண்டும் என்று நினைத்தவர் அவர் - பல கதாநாயகிகளை தன்னுடன் உலகம் சுற்ற கூட்டி செல்லவில்லை , மாறாக , தன்னையே உலகம் சுற்றும் படி நடிப்பில் , புகழில் செய்து கட்டினார் --- அவரின் டூயட் இல்லாத , ஆனால் வெற்றியை சந்தித்த படங்களில் சிலவற்றை இங்கு பார்ப்போமா ?
தொடரும்
Russellbpw
20th May 2014, 08:46 AM
சற்றே தாமதம் என்றாலும் ஏப்ரல் 11 1970 - வியட்நாம் வீடு நினைவலைகள்
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Vietnam_zpsf0d9cce3.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Vietnam_zpsf0d9cce3.jpg.html)
100th day Advertisement
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Vietnam2_zps203f46ce.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Vietnam2_zps203f46ce.jpg.html)
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Vietnam3_zps1915af89.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Vietnam3_zps1915af89.jpg.html)
uvausan
20th May 2014, 08:52 AM
வெள்ளை ரோஜா -1983
இந்த படத்தை தவறி விட்டேன் - இதிலும் இரண்டு முற்றிலும் மாறுபட்ட வேடங்கள் - இதுவரை நடிக்காத ஒன்று - வசூலில் புரட்சியை ஏற்படுத்தின படம் - ஜோடிகளும் இல்லை - இப்படி ஒரு நடிகர் உண்டா என்று உலகமே பாராட்டி வியந்த படம்
eehaiupehazij
20th May 2014, 10:11 AM
Vietnam Veedu : In Kovai Central, very rarely movies cross the 100 days mark as the seating capacity is the highest of all coimbatore theatres. This theatre known for mostly screening english movies of grandeur like McKenna's Gold, Guns of Navarone, The Good, The Bad and the Ugly...... screened a black-white family movie Vietnam Veedu starring NT that went on to make the record of crossing this 100 days mark with regular daily 4 shows to the surprise and astonishment of everyone at that time.
uvausan
20th May 2014, 10:16 AM
ராமன் எத்தனை ராமனடி - இதிலும் உண்மையாக ஜோடி இல்லை - முத்துராமனக்கு சம பங்கு
துணை : ஜோடி இல்லாமல் , ஒரு துணையும் இல்லாமல் தன் நடிப்பை மட்டும் துணையாக வைத்துகொண்டு நடித்து வெற்றி கண்ட படம்
kalnayak
20th May 2014, 10:54 AM
ரவி, பாரதவிலாஸுக்கு ஆதரவு கேட்டதற்கு இப்படி என்னை கலாய்க்கணுமா?
நீங்க என்ன காட்சிக்கு காட்சி ஜோடி இல்லாத பாத்திரங்களையா வரிசைப்படுத்தினீங்க - இப்படி மனசாட்சிக்கு ஜோடி இல்லைன்னு அதையும் வரிசைப்படுத்த?
அது சரி மற்ற எத்தனை படங்களில் மனசாட்சிக்கு ஜோடி இருக்கு? (அப்பாடி, வகையா மாட்டினீங்களா?)
uvausan
20th May 2014, 11:43 AM
தில்லான மோகனம்பாள் - ஒரு கனவு காட்சி மருந்தும் கூட கிடையாது - வடிவாது ஒரு கனவு கண்டிருக்கலாம் - அல்லது வைத்தி - வெறும் நாதத்தால் எல்லோரையும் கட்டி போட்ட படம் - டூயட் மூலமாகத்தான் காதலை வெளிபடுத்த முடியும் என்ற மாயை தகர்த்து எறிந்த படம்
அந்த நாள் - பாட்டே இல்லை இந்த படத்தில் , டூயட் மட்டும் எப்படி முடியும் - ஹீரோ ஆவியாக ஆனபின்னும் வந்து ஒரு நாலு பாடலையாவது பாடும் அந்த கால கட்டத்தில் வந்து ஒரு வீர முழக்கம் செய்த படம் - அந்த ராஜனை முடியுமா ?
கூண்டுக்கிளி : பெயருக்கு ஒரு ஜோடி அதுவும் கதை முடியும் தருவாயில் - டூயட் க்கு இடமே இல்லை
தென்னாலி ராமன் - சிரிக்க வைக்கலாம் ஆனால் அருமையான மனைவியுடன் ( ஜமுனா )சேர்ந்து பாட இவருக்கு கொடுத்து வைக்கவில்லை
சம்பூர்ண ராமாயணம் - கதை படி பரதன் நடக்க வேண்டுமே - அண்ணனுடன் சேர்ந்தாவது பாடுவது போல ஒரு பாடலை வைத்திருக்கலாம் --
பாச மலர் - தங்கை பாடுவதை மட்டுமே கேட்டு ரசித்த அண்ணன்
கப்போலோட்டிய தமிழன் - கதைப்படி ஜோடி யாக இருந்தாலும் தேசத்தை பற்றியும் , விடுதலை பற்றி மட்டுமே பாடியிருக்க முடியும்
படித்தால் மட்டும் போதுமா ? : ஜோடி முறைத்து கொண்டு நிற்கும் போது எப்படி சேர்ந்து பாடுவது ?
பச்சை விளக்கு - தங்கைக்காகவே வாழும் அண்ணனுக்கு தாரம் ஒரு பாரமே !
கைகொடுத்த தெய்வம் - ஜோடி ஒன்று உள்ளது என்று அறிந்த பின்னும் சேர்ந்து பாடும் ஒரு பாடல் இல்லாத படம்
நவராத்திரி - ஒன்பது வேடங்கள் - உண்மையில் இருபது கதாநாயகிகள் இருந்திருக்க வேண்டும் - ஒரே ஒரு heroin - அதுவும் டூயட் பாடதெரியாத ஜோடிகள்
அன்பு கரங்கள் - ஜோடியை அணைக்காத கரங்கள்
மோட்டார் சுந்தரம் பிள்ளை - தந்தை வேடம் - டூயட் பாடும் நேரத்தில் குழந்தை செல்வத்தை வளர்த்துக்கொண்ட படம்
ஹரிச்சந்திரா - டூயட் பண்ணுவது உண்மைக்கு ஒரு முரண்பாடு என்று நினைத்திருக்கலாம் .
எதிரொலி : ஒரு வானொலியில் கூட இந்த ஜோடிகள் சேர்ந்து பாடவில்லை
ராஜ ராஜ சோழன் - அந்த ஜோடியே வேஸ்ட் - அதில் டூயட் ஒன்றை மட்டும் வைத்திருந்தால் -------------
நாம் பிறந்த மண் - பிறந்த மண்ணில் ஜோடிகளின் டூயட் தேவை இல்லை என்று நினைத்திருக்கலாம்
கவரிமான் - வாழ்க்கை துணை ஜோடியாக பாடுவதற்கு முன்பே நின்று விடும்
லக்ஷ்மி வந்தாச்சு - பாடும் வயதை தாண்டிவிட்ட ஒரு நடிப்பு
Once More : பழகிய நடிகை - சேர்ந்தபின் ஒரு duet யை வைத்திருக்கலாம்
படையப்பா : ஜோடிகள் சோர்ந்தபின் எடுத்த படம்
uvausan
20th May 2014, 11:57 AM
ஜோடி இல்லாத இன்னும் சில படங்கள் ( விட்டுப்போனவைகள் )
1. பந்தம்
2. கை கொடுத்த தெய்வம்
3. மூன்று தெய்வங்கள்
4. கீழ் வானம் சிவக்கும்
5. சிரஞ்சீவி
6. ஒரு யாத்ரா மொழி - ( ஜோடி இருந்தும் இல்லாத படம் )
7. சினிமா பைத்தியம்
8 நட்சத்திரம்
9.உருவங்கள் மாறலாம்
10. குழந்தைகள் கண்ட குடியரசு
mr_karthik
20th May 2014, 01:50 PM
ஜோடி இங்கு உண்டு - டூயட் எங்கே ?
Savaale Samaali also.
KCSHEKAR
20th May 2014, 02:03 PM
ஜோடி இங்கு உண்டு - டூயட் எங்கே ?
டியர் ரவி சார்,
தங்களின் பங்களிப்புகள் அருமை. நன்றி.
uvausan
20th May 2014, 02:28 PM
Savaale Samaali also.
கார்த்திக் - உங்கள் சவாலை சமாளிக்க முடியவில்லை - படங்கள் நினைவில் இருந்தும் ,பதிவிடும் போது , நம்மை அறியாமல் சில படங்கள் பதுங்கி விடுகின்றன - என் பதிவுகளையும் படிப்பதிற்கு மிகவும் நன்றி
uvausan
20th May 2014, 02:28 PM
டியர் ரவி சார்,
தங்களின் பங்களிப்புகள் அருமை. நன்றி.
மிகவும் நன்றி kcs
chinnakkannan
20th May 2014, 04:09 PM
//நவராத்திரி - ஒன்பது வேடங்கள் - உண்மையில் இருபது கதாநாயகிகள் இருந்திருக்க வேண்டும் - ஒரே ஒரு heroin - அதுவும் டூயட் பாடதெரியாத ஜோடிகள் // ரவி.. ஏனோ எனை எழுப்பலானாய் மடமானே... அது டூயட் இல்லையாங்காட்டியும்..:) மன்னா என்னாசை நீர் மறந்திடாதீர்..சகி ஒரு நாளும் நானுன்னை மறப்பதில்லை..ம்ம் மறக்க முடியுமா அந்த ஆட்டத்தை..
uvausan
20th May 2014, 06:21 PM
Ck - டூயட் என்பது ஒரு மனதாகிய இருவரின் துடிப்புக்கள் பாடலாக வருவது - நீங்கள் குறுப்பிட்ட "ஏனோ எனை எழுப்பலானாய் மடமானே..." என்பது சம்பந்த படாத இரண்டு நபர்கள் ஒரு நாடக காட்சிக்காக சேர்ந்து பாடியது - அவர்கள் கதைப்படி காதலர்கள் அல்ல - அந்த படத்தில் ஒன்பது வேடங்களில் ஒருவர் தான் சாவித்திரிக்கு ஜோடி - அந்த ஜோடிகள் சேர்ந்து டூயட் பண்ணவில்லை என்பது தான் என் தாழ்மையான கருத்து - விளக்கம் திருப்தியாக இருக்கும் என நினைக்கிறேன் -என் பதிவுகளை படிப்பதற்கு நன்றி
chinnakkannan
20th May 2014, 06:51 PM
//டூயட் என்பது ஒரு மனதாகிய இருவரின் துடிப்புக்கள்// நன்னாவே எழுதறீங்க..அப்ப ஜோடி இங்கு உண்டுன்னும் சொல்லப் படாது..ஒரு சில படங்கள்ள ஜோடி உண்டு ரெண்டுபேரும் சேர்ந்து பாடற பாட்டு கிடையாது இல்லியோ.. அகெய்ன் நல்லா எழுதறீங்க..கீப் இட் அப்..:)
Russellbpw
20th May 2014, 08:59 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/vveedurunningpesumpadam_zps64524e41.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/vveedurunningpesumpadam_zps64524e41.jpg.html)
Russellbpw
20th May 2014, 09:01 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5673-1_zps6142246f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5673-1_zps6142246f.jpg.html)
Russellbpw
20th May 2014, 09:26 PM
திரைப்பட நடிகர் மற்றும் நடிகர் திலகத்தை மட்டுமே வைத்து பல பிரம்மாண்ட வெற்றி படங்கள் கொடுத்த தயாரிப்பாளர் திரு பாலாஜி அவர்களின் முதல் திரைப்படம் தங்கை வெளிவந்து 19-05-67 இன்றோடு 47 ஆண்டுகள் நிருவைபுபெற்று 48வது வருட தொடக்கம்.
தங்கை சில நினைவலைகள்.
1) நடிகர் திலகம் அவர்களை ஒரு சமூக படத்தில் அதிரடி ACTION HERO வாக மக்களுக்கு அறிமுகபடுத்திய படம்.
2) சுஜாதா சினி ஆர்ட்ஸ் பாலாஜியின் முதல் தயாரிப்பு.
3) மிக சிறந்த ஒரு வெற்றி படம். வசூலை வாரிகுவித்த படம்.
4) நடிகர் திலகம் புதுவிதமான ஸ்டைல் மற்றும் ஒருமுறை அறிமுகபடுத்திய படம்.
5) சிறந்த பாடல், கதை, சண்டைகாட்சி, நடிப்பு மற்றும் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட படம் தங்கை.
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Thangai_zpsd2b2142a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Thangai_zpsd2b2142a.jpg.html)
Russellbpw
20th May 2014, 09:27 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Thangai50_zps44cf8922.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Thangai50_zps44cf8922.jpg.html)
Russellbpw
20th May 2014, 09:31 PM
https://www.youtube.com/watch?v=XbRUcqDobU8
https://www.youtube.com/watch?v=A9wjOex0ie4
Russellbpw
20th May 2014, 09:45 PM
21 - 05- 1982 - நடிகர் திலகத்தின் 225வது படம் " தீர்ப்பு " - சில நினைவலைகள்
நடிகர் திலகத்தின் 225வது திரைப்படம் மீண்டும் சுஜாதா பிலிம்ஸ் தயாரிப்பில் " தீர்ப்பு " - வெளியாகி இன்றோடு 42 வருடங்கள்.
ஒரு நடிகரின் 75வது, 100வது, 125வது, 150வது, 175வது, 200வது, 225வது திரைக்காவியங்கள் மிக பிரம்மாண்ட வெற்றி பெற்றதென்றால் அது நம்முடைய நடிகர் திலகம் அவர்களின் திரைப்படமாக மட்டுமே இருக்க முடியும், இருக்கிறது !
இதில் நடிகர் திலகத்திற்கு மீண்டும் காவல் துறை அதிகாரி வேடம்.
தங்கபதக்கத்தில் இருந்த அதே சுறுசுறுப்பு இந்த படத்தில் மீண்டும் காணலாம்.
காவல் துறை அதிகாரி வேடம் என்றால் அது பொருந்துவது இவர் ஒருவருக்கு மட்டுமே என்று கூறும் அளவிற்கு அளவெடுத்து தைத்தது போல ஒரு வேடம்.
நல்ல குடும்பக்கதை என்றாலும் இந்த படத்தில் SUSPENSE , த்ரில், ஜனரஞ்சகம் என்று அனைத்து ரசங்களும் உள்ளன !
இவை அனைத்தும் உள்ளபோது இந்த திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெறாமல் போகுமா என்ன ?
1982இல் மிக சிறந்த ஒரு சூப்பர் ஹிட் காவியம் தீர்ப்பு
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Theerpu_zpsb934409d.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Theerpu_zpsb934409d.jpg.html)
Russellbpw
20th May 2014, 09:46 PM
50th Day - THEERPPU
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/theerppu_zps5557f205.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/theerppu_zps5557f205.jpg.html)
Russellbpw
20th May 2014, 09:48 PM
225th FILM THEERPPU CELEBRATES - 100th DAY IN ALL MAJOR CENTERS OF RELEASE !
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Theerpu100_zpsb2945a83.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Theerpu100_zpsb2945a83.jpg.html)
Russellbpw
20th May 2014, 09:50 PM
SALEM EXPERIENCED NEW RECORD & THEREFORE, THE DISTRIBUTOR PUT UP SEPARATE ADVERTISEMENT ON THEERPPU 100days
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/theerppusalem100_zps8564646b.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/theerppusalem100_zps8564646b.jpg.html)
sivaa
20th May 2014, 10:54 PM
திரைப்பட நடிகர் மற்றும் நடிகர் திலகத்தை மட்டுமே வைத்து பல பிரம்மாண்ட வெற்றி படங்கள் கொடுத்த தயாரிப்பாளர் திரு பாலாஜி அவர்களின் முதல் திரைப்படம் தங்கை வெளிவந்து 19-05-67 இன்றோடு 47 ஆண்டுகள் நிருவைபுபெற்று 48வது வருட தொடக்கம்.
தங்கை சில நினைவலைகள்.
1) நடிகர் திலகம் அவர்களை ஒரு சமூக படத்தில் அதிரடி ACTION HERO வாக மக்களுக்கு அறிமுகபடுத்திய படம்.
2) சுஜாதா சினி ஆர்ட்ஸ் பாலாஜியின் முதல் தயாரிப்பு.
3) மிக சிறந்த ஒரு வெற்றி படம். வசூலை வாரிகுவித்த படம்.
4) நடிகர் திலகம் புதுவிதமான ஸ்டைல் மற்றும் ஒருமுறை அறிமுகபடுத்திய படம்.
5) சிறந்த பாடல், கதை, சண்டைகாட்சி, நடிப்பு மற்றும் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட படம் தங்கை.
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Thangai_zpsd2b2142a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Thangai_zpsd2b2142a.jpg.html)
சிறு திருத்தம்
பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்சின்
முதல் தயாரிப்பு ஜெமினி சாவித்திரி
நடிப்பில் வெளிவந்த அண்ணாவின் ஆசை
இது 4. .3.1966ல் வெளிவந்தது
பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்சின்
முதல் நடிகர்திலகத்தின் படம் தங்கை
தங்கை 19. 5. 1967 ல் வெளிவந்தது
sivaa
20th May 2014, 11:23 PM
தங்கை
9 .10 .1967 ல் இலங்கையில் திரையிடப்பட்டது
கொழும்பு.............ஜெஸிமா.........51...நாட் கள்
கொழும்பு.............ஓடியன்...........28....நாட்கள ்
கொழும்பு.............நவா................21....நாட் கள்
யாழ்நகர்..............ராஜா...............51....நாட ்கள்
முழுப்பக்க விளம்பரம் கொடுக்கப்பட்ட முதல்படம்
கொழும்பில் முதல் 30 நாட்களில் பார்த்தவர்கள் 1.11.384 பேர்
RAGHAVENDRA
21st May 2014, 08:51 AM
http://2.bp.blogspot.com/-aYiMMun8B9k/UAfVUKP86-I/AAAAAAAAFcM/6C2xTRENWR4/s1600/10.jpg
இன்று பிறந்த நாள் காணும் நண்பர் கோவை செந்தில் அவர்களுக்கு நமது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். உலகத்திலே ஒருவனென உயர்ந்து நிற்கும் திலகத்தின் உயிருக்குயிரான பக்தனுக்கு அவருடைய வாழ்த்துக்கள் என்றைக்கும் உண்டு.
வாழ்க செந்தில் பல்லாண்டு
chinnakkannan
21st May 2014, 10:03 AM
அன்பின் கோவை செந்தில் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
parthasarathy
21st May 2014, 11:04 AM
Dear Mr. Senthil (Kovai),
Wish you many more happy returns of the day!
Regards,
R. Parthasarathy
Russelldwp
21st May 2014, 11:49 AM
Dear Mr.Senthil
HAPPY BIRTHDAY WISHES TO YOU
C.Ramachandran.
kalnayak
21st May 2014, 12:05 PM
Dear Senthil,
Wish You Many More Happy Returns Of Your Birthday!!!!
Subramaniam Ramajayam
21st May 2014, 12:59 PM
http://2.bp.blogspot.com/-aYiMMun8B9k/UAfVUKP86-I/AAAAAAAAFcM/6C2xTRENWR4/s1600/10.jpg
இன்று பிறந்த நாள் காணும் நண்பர் கோவை செந்தில் அவர்களுக்கு நமது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். உலகத்திலே ஒருவனென உயர்ந்து நிற்கும் திலகத்தின் உயிருக்குயிரான பக்தனுக்கு அவருடைய வாழ்த்துக்கள் என்றைக்கும் உண்டு.
வாழ்க செந்தில் பல்லாண்டு
dear senthil sir.
kovai my one of my favourite centres during 67 to 77 when I had lot of friends with LMW whom we have echanged lot of NT releases and collection datas earlier days.
kindly give latest updates every now and then.
MANY MANY HAPPY RETURNS ON THE EVE OF YOUR BITHDAY. BLESSINGS.
HARISH2619
21st May 2014, 01:47 PM
Kovai senthil sir,
many many happy returns of the day
eehaiupehazij
21st May 2014, 02:59 PM
Many more returns of the day Mr. Senthil. We are in Coimbatore but never met once!. Hope to see you
eehaiupehazij
21st May 2014, 03:04 PM
NT remains the role model for many police officers since Thangapathakkam and it was reestablished in Theerppu. Many other actors slipped in to the shoes of a police officer role but none could become a role model to follow as done by NT. Such is the impact of his acting prowess that is unparalleled.
uvausan
21st May 2014, 03:57 PM
Kovai Senthil - many more happy returns of the day
uvausan
21st May 2014, 05:15 PM
21 - 05- 1982 - நடிகர் திலகத்தின் 225வது படம் " தீர்ப்பு " - சில நினைவலைகள்
நடிகர் திலகத்தின் 225வது திரைப்படம் மீண்டும் சுஜாதா பிலிம்ஸ் தயாரிப்பில் " தீர்ப்பு " - வெளியாகி இன்றோடு 42 வருடங்கள்.
ஒரு நடிகரின் 75வது, 100வது, 125வது, 150வது, 175வது, 200வது, 225வது திரைக்காவியங்கள் மிக பிரம்மாண்ட வெற்றி பெற்றதென்றால் அது நம்முடைய நடிகர் திலகம் அவர்களின் திரைப்படமாக மட்டுமே இருக்க முடியும், இருக்கிறது !
இதில் நடிகர் திலகத்திற்கு மீண்டும் காவல் துறை அதிகாரி வேடம்.
தங்கபதக்கத்தில் இருந்த அதே சுறுசுறுப்பு இந்த படத்தில் மீண்டும் காணலாம்.
காவல் துறை அதிகாரி வேடம் என்றால் அது பொருந்துவது இவர் ஒருவருக்கு மட்டுமே என்று கூறும் அளவிற்கு அளவெடுத்து தைத்தது போல ஒரு வேடம்.
நல்ல குடும்பக்கதை என்றாலும் இந்த படத்தில் SUSPENSE , த்ரில், ஜனரஞ்சகம் என்று அனைத்து ரசங்களும் உள்ளன !
இவை அனைத்தும் உள்ளபோது இந்த திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெறாமல் போகுமா என்ன ?
1982இல் மிக சிறந்த ஒரு சூப்பர் ஹிட் காவியம் தீர்ப்பு
[/URL]
உபயம் - முரளி
தீர்ப்பு 100 நாட்களை கடந்த அரங்குகள்
சென்னை
சாந்தி
கிரவுன்
புவனேஸ்வரி
மதுரை - சினிப்ரியா
சேலம் - சாந்தி
திருச்சி - பிரபாத்
கோவை
[மற்றுமொரு நகரம்]
தீர்ப்பு வெள்ளி விழா கொண்டாடிய அரங்கு
மதுரை - சினிப்ரியா - 177 நாட்கள்.
சினிப்ரியா வளாகத்தில் நடிகர் திலகத்தின் முதல் வெள்ளி விழா படம் - தீர்ப்பு.
mr_karthik
21st May 2014, 06:02 PM
உபயம் - முரளி
தீர்ப்பு 100 நாட்களை கடந்த அரங்குகள்
சென்னை
சாந்தி
கிரவுன்
புவனேஸ்வரி
மதுரை - சினிப்ரியா
சேலம் - சாந்தி
திருச்சி - பிரபாத்
கோவை
[மற்றுமொரு நகரம்]
As per Newspaper ad, published by Pammalar, re-published by Ravikiran Surya in this page...
Theerpu ran 100 days in
Chennai - Shanti, Crown, Bhuvaneswari,
Madurai - Minipriya
Trichy - Maris Fort
Salem - Shanti
Kovai - Geethalaya
Nellai - Sivashakthi
Harrietlgy
21st May 2014, 06:05 PM
Rks தீர்ப்பு வந்து 32 வருடம் ஆகிறது.
ScottAlise
21st May 2014, 09:59 PM
Dear Senthil,
Wish You Many More Happy Returns
uvausan
21st May 2014, 10:11 PM
9, 3, 2 என்று வரிசை படுத்தி அலசினதில் nt யின் வீச்சு எவ்வளவு அழுத்தமாகவும் , ஆழமாகவும் இருந்தது என்பது தெரிய வந்திருக்கும் - அந்த படங்களின் வசூலையும் , வெற்றியின் ஓட்டத்தையும் தடுக்க முடியமால் அன்று துவண்டவர்கள் எண்ணிக்கையில் அடங்காது -- பிறகு ஒரு படி முன்னே சென்று யாருமே செய்ய , விரும்பாத ஜோடி இல்லாத படங்களை அலசினோம் - அதிலேயும் NT யின் தனித்தன்மை , தன்னம்பிக்கை துல்லியமாக தெரிந்தது .துணிவே துணை என்று நடித்து வெற்றியை குவித்த படங்கள் ஏராளம் - அவருடைய துணிவைகண்டு உலகம் வியத்தது . இன்னும் ஒரு படி முன்னே சென்று , ஜோடி இருந்தும் டூயட் பண்ணாத படங்களை அலசினோம் - இலக்கிய காதலின் அருமை புரிந்தது - காதல் என்பது வெறும் கட்டி பிடிப்பது அல்ல , இரண்டு ஒருமித்த மனங்களை ஒரு எல்லைக்குள் கட்டி போடுவது என்பதை உணர்த்திய படங்கள் ஏராளம் - இருவரின் துடிப்பினிலே பிறக்கும் மழலையின் ஆனந்தத்தை விட ஒருவரின் துடிப்பினிலே கிடைக்கும் நடிப்பின் ஆனந்தத்தை நமக்கு எல்லாம் அள்ளி அள்ளி வழங்கினார் - ஜோடி இல்லாமலும் அவருடைய படங்களை ரசித்தோம்/ரசிக்கின்றோம் /ரசிப்போம் , டூயட் இல்லாமலும் அவரின் நடிப்பை அனுபவித்தோம் /அனுபவிக்கின்றோம் /அனுபவிப்போம் - இவர் படங்களில் கர்சீப் க்கும் குறைவான துணியை அணியும் பெண்கள் கதாநாயகிகளாக வருவதில்லை - மாறாக கர்சீபினால் கண்களை வருடும் உருக்கமான காட்சிகள் இருக்கும் - கனவில் தேவதைகள் ஹீரோ வை கட்டி பிடிக்கும் கட்சிகள் வராது - அந்த தேவதைகள் வானில் இருந்து இறங்கி அவர் படங்களை பார்க்கும் நிலைமை இருக்கும் - 100 பேர்களை சுண்டி விரலால் ஹீரோ அடித்து விரட்டும் காட்சிகள் இருக்காது - ஆனால் ஒரு சுண்டி விரல் மட்டுமே பேசி நடிக்கும் இயல்பான , கலப்படம் இல்லாத நடிப்பு இருக்கும் -
யாருமே செய்ய துணியாத , புழனின் உச்சியில் இருக்கும் போது செய்ய விரும்பாத , நெகடிவ் ரோல் க்கும் நல்ல பெயரை வாங்கி கொடுத்தவர் ஒருவர் உண்டு என்றால் அதுவும் நம் செவாலியர் தான் - அதைத்தான் இங்கே அலச இருக்கிறேன் - ஒரு புதிய கண்ணோட்டத்தில்
தொடரும்
Murali Srinivas
21st May 2014, 10:44 PM
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் செந்தில் சிவராஜ் அவர்களே!
இது போன்ற பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!
பின்னலாடை தொழில் நகரமாம் திருப்பூரில் சென்ற 16.05.2014 வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகளாக டைமண்ட் திரையரங்கில் வெற்றி நடை போடுகிறது காலத்தால் அழியாத காதல் காவியம் வசந்த மாளிகை!
தகவலுக்கு நன்றி ராமஜெயம் அவர்களே!
அன்புடன்
ScottAlise
21st May 2014, 11:09 PM
பார்த்ததில் பிடித்தது -34
1977 ல் வெளிவந்த இளைய தலைமுறை படத்தை பற்றி தான் இந்த பதிவு .
கதை :
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு பட்டப் படிப்பு படித்த சம்பத் (நடிகர் திலகம்) வேலை தேடி அலைகிறார் , வறுமை குடும்பம் , வேலை கிடைக்காததால் சொந்த வீட்டில் கூட அவமானம் , சம்பத்தின் தாய் மட்டும் கனிவாக இருக்கிறார் . வேலை இல்லாமல் அலையும் பொது சகுந்தலாவை (வாணி ஸ்ரீ ) சந்திக்கிறார் , மோதலில் ஆரம்பிக்கும் சந்திப்பு காதலில் முடிகிறது , சகுந்தலாவின் தாய்மாமன் அரசியல்வாதி
(MRR வாசு) சகுந்தலாவை கல்யாணம் செய்ய அசைபடுகிறார் . சகுந்தலாவின் வீட்டில் மீனாக்ஷி ஆட்சி . கணவர் (VKR ) மனைவின் பேச்சுக்கு கட்டுபடுகிறார் (மனைவி MN ராஜம் )
இந்த வீட்டில் தான் சம்பத்தின் தந்தை வேலை பார்க்கிறார் . சிபார்சு கடிதம் தரும் வாசு தன் முறை பெண்ணை தான் சம்பத் காதலிக்கிறார் என்பதை அறிந்து ஆத்திரம் அடைந்து கடிதத்தை கிழித்து போடுகிறார்
dunken கம்பனில் வேலைக்கு அழைப்பு வர , சென்னைக்கு செல்லும் சம்பத் கோட் சூட் இல்லை என்ற காரணத்தினால் வேலை கிடைக்காமல் போக நண்பரின் (KS விஜயன் ) உதவியால் தான் படிச்ச காலேஜ் ல் வார்டனாக சேருகிறார் .
அங்கே வார்டனாக சேர 3 கட்டளைகள்
1. லீவ் போட கூடாது
2. 3 வருடம் வேலை பார்க்க வேண்டும்
3. வேளையில் இருக்கும் பொது திருமணம் செய்து கொள்ள கூடாது
அந்த காலேஜ் ல் பிரச்சனை செய்யும் கூடத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் , அவர் கூட்டாளி YGM , ஜூனியர் பாலையா , விஜயகுமார் , பிரேம் ஆனந்த் மற்றும் சிலர்
ScottAlise
21st May 2014, 11:10 PM
இதில்
YGM - தினமும் நைட் ஷோ பார்ப்பவர்
ஜூனியர் பாலையா - காதல்வயப்பட்டு படிப்பில் நாட்டம் இல்லாமல் இருப்பவர்
பிரேம் ஆனந்த் - kleptomania என்ற திருட்டு எண்ணம் கொண்டவர்
விஜயகுமார் - சண்டியர்
மற்றும் ஒரு நபர் - chain smoker
ஸ்ரீகாந்த் - அணைத்து கேட்ட பழக்கத்தின் மொத்த உருவம்
இவர்களின் பிரச்சனையை சம்பத் தீர்த்து வைக்கிறார் ஸ்ரீகாந்த் மட்டும் திருந்த மறுக்கிறார்
இந்த கூடத்துக்கு இடையில் அப்பு என்ற மாணவன் மட்டும் நன்றாக படிக்கிறார் , ஏழை , தாய் , தந்தை கிடையாது . ஸ்ரீகாந்த் ராக்கிங் செய்வதால் இறந்து விடுகிறார் .
சம்பத்தின் காதலி சகுந்தலாவின் முறைமாமன் (எம்.ஆர்.ஆர்.வாசு) அவரை திருமணம் செய்துகொள்ள தீவிரமாக இருக்க, வாணியின் அம்மா எம்.என்.ராஜம், தன் தம்பிக்கே அவளை மணமுடிக்க வேண்டும் என்றும் துடிக்க, அப்பா (வி.கே.ஆர்) தன் மகளின் காதலுக்கு சப்போர்ட் ஆக இருக்கிறார். வீட்டை விட்டு சென்னைக்கு வருகிறார் சகுந்தலா
தன் தங்கையின் காதலை ஏற்க மறுத்ததுக்கு பழி வாங்க காத்து கொண்டு இருக்கிறார் விஜயன் , விஜயன் , ஸ்ரீகாந்த் இருவரும் சேர்ந்து சம்பத்தை கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார்கள்.
முடிவில் விஜயன் சம்பத்துக்கு உதவ ஸ்ரீகாந்த் மேல் தரவகம் விழுந்து விடுகிறது
'திருமணம் செய்தவர்கள் வாரடன் வேலையில் நீடிக்க முடியாது' என்ற கல்லூரியின் சட்ட விதிகளின்படி, சம்பத் வேலையை விட்டு விலக முடிவு செய்ய, சம்பத்தின் முயற்சியால் மாணவர்கள் திருந்தி இருப்பதை அறிந்து சம்பத் வேளையில் தொடர கல்யாணம் செய்து கொண்டு பணியில் தொடரலாம் என்று சலுகை கொடுக்க தன் சேவையை மாணவர்களுக்கு செய்கிறார் சம்பத்
சுபம்
ScottAlise
21st May 2014, 11:10 PM
படத்தை பற்றி :
இந்த படத்தை தான் அடுத்து பார்த்து விட்டு எழுத போகிறேன் என்று வீட்டில் என் அம்மாவிடம் தெரிவத உடன் அவர் அந்த படமா என்று கேட்ட போதே இந்த படத்தின் impact எப்படி என்று மனதுக்குள் நினைத்து கொண்டே தான் அதாவது ஒரு வித நெகடிவ் attitude உடன் பார்த்தேன் . படம் மோசமா ?
கிடையாது , படம் bore அடித்ததா இல்லை , படம் slow டாகுமெண்டரி பீல் உள்ள படமா கதை தான் அப்படி ஆனால் way of presentation was very good .
படத்தின் minus என்று நான் கருதுவது :
விடுதியில் மெஸ் நடத்தும் 'சர்மா' வாக வரும் நாகேஷ் மலையாளம் நன்றாக பேசுகிறார் ஆனால் சிரிப்பு ?
நடிகர் திலகமும் , விஜயகுமாரும் boxing போடும் காட்சி
இந்த இரண்டும் தான் minus
ScottAlise
21st May 2014, 11:11 PM
இந்த படத்தின் நடிகர்களின் பங்களிப்பை பற்றி எழுத போவது இல்லை , காரணம்
படத்தின் உண்மையான கதாநாயகன் கதை , திரைக்கதை , வசனம் எழுதிய மல்லியம் ராஜகோபால் , (சவாலே சமாளி ) மற்றும் compromise செய்யாமல் இயக்கிய கிருஷ்ணன் பஞ்சு
இந்த கதையை ,எப்படி தான் தான் இருக்கும் என்ற திரைகதையை ஒரு வித heroism கூட இல்லாமல் நடித்து கொடுத்து உள்ளார் நடிகர் திலகம் . அட மற்றவர்களை திருத்துவது கூட heroism தான் ரியல் ஹீரோ அதுவும் தான் கொண்ட கொள்கைகளில் உறுதியாக இருந்து அவர் பேசும் வசனங்கள் நச் , அதுவும் அவர் அன்று ஆளும் கட்சியை அதன் சில நடவடிக்கைகளை குறிப்பாக காலேஜ் ல் வந்து வாசு பேசும் வசனத்துக்கு ஸ்ரீனிவாசன் அரசியல்வாதி எப்போதும் வேலை பார்க்க விட மாட்டாங்க ? strike பத்தி பேசும் வசனமும் , தன் தந்தை இறந்து கூட தெரியாமல் இருந்து தன் தாய் சொல்லி தான் அந்த விஷயம் தெரிய வரும் போதும் , நடிகர் திலகம் உருகும் இடம், ராக்கிங் செய்ய படும் மாணவர் இறந்து போகும் காட்சியிலும் , அதுவும் அவர் கடிதத்தில் இருக்கும் வரிகளும் நம் கண்களில் கண்ணீர் குளம்
chain ஸ்மோகர் யை 50 பக்கங்கள் படித்து விட்டு 1 cigarette பிடி என்று சொல்லும் இடமும்
பாலைய்யாவின் காதலை சேர்த்து வைப்பதும்
- kleptomania உள்ள sabastain யை எல்லா பொருள்களிலும் சிலுவை உள்ளதாக நினைத்து கொள் திருடும் எண்ணம் வராது என்று சொல்லும் போதும்
விஜய்குமர்க்கு பீஸ் கட்டுவதும்
என்று மாணவர்களின் வளர்ச்சிக்கு என்று பல காட்சிகள்
பாடல்களில் :
யார் என்ன சொன்னார்.. ஏனிந்த கோபம்', மற்றும் வாணிஷ்ரீ கிளப்பில் பாடும் 'ஒரு நாள் இரவு தனிமையில் இருந்தேன்' மூன்றும் நல்ல பாடல்கள் என்றாலும்
இளைய தலைமுறை... இனிய தலைமுறை' என்ற டைட்டில் பாடல் , கருத்து அதிகம்
ஒரே வரியில் :
கருத்து அதிகம் , கதை என்ற பாதையில் விலகாமல் செல்லும் படம் என்றும் அனைவரும் பார்க்க வேண்டிய நல்ல படம் என்று உறுதியாக சொல்லலாம்.
uvausan
22nd May 2014, 12:22 AM
நடிப்பினால் பாசிடிவ் ஆன நெகடிவ் ரோல்(ஸ் ) - தொடருகின்றது
1. திரும்பிப்பார் -1953 ( 5வது படம்)
எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்த படம் - ஒரு காமுகனை இவ்வளவு அழுத்தமாக , அழகாக காட்ட முடியுமா ? - அவனை திட்டுவதற்கு பதிலாக , சீக்கிரமே திருந்த கூடாதா என்று ஏங்க வைத்த படம் - தோல்விகளை அவர் திரும்பி பார்க்காமல் உயர்வின் உச்சிக்கு எடுத்து சென்ற படம்
2. இல்லற ஜோதி -1954 ( 11வது படம்)
கட்டிய மனைவியின் அன்பை வெறுத்து வேறு ஒரு பெண்ணின் நட்பை நாடிய படம் - பெண்களின் வெறுப்பை பெறக்கூடிய படம் - கலங்கினாரா - நடிக்க அஞ்சினாரா ?? பார்த்தவர்களை கலங்க வைத்தார் தன் நடிப்பினால்
3. அந்த நாள் -1954 ( 12வது படம்)
தேச துரோகி - பணத்திற்காக பிறந்த நாட்டை விலை பேசும் வேடம் - தன திறமையை உலகம் புரிந்துகொள்ளவில்லையே என்ற கோபம் - அவருடன் சேர்ந்து நம்மையும் கோபப்பட வைத்தபடம் - பாடல் இல்லை - டூயட் இல்லை - ஏன் உயிரே இல்லை முதல் காட்சியில் இருந்து - முழுவதும் ப்ளாஷ் பாக்கில் - யாருமே நடிக்க முடியாத படம் - "அந்த நாள்" வாழ்வில் மறக்க முடியாததாகி விட்டது .
4. துளி விஷம் -1954 (16வது படம் ) - ஒரு துளி விஷத்தை தன் எழுத்தின் திறமையினால் அமுத கலசமாக்கிய வாசுவின் பதிவுகளுக்கு பிறகு மீண்டும் இந்த படத்தை பற்றி எழுத எனக்கு திறமையும் இல்லை ,மனதில் துணிவும் இல்லை .
5. கூண்டுக்கிளி -1954 (17வது படம் )
தனக்கு பார்த்த பெண் தன் நண்பனின் மனைவியாகி விடுகிறாள் - அவளை அடைய விரும்புகிறான் - ஹீரோ வான ஒரு வில்லன்
6. கள்வனின் காதலி -1955 ( 25வது படம்) பெயருக்கு ஏத்தார் போல வேடம் - வெளிசிறையில் இருந்து தப்பித்து நம் மன சிறையில்- தங்கிவிட்ட படம்
7.நானே ராஜா -1956 ( 28வது படம்) : அருமையான நெகடிவ் வேடம் -ஆனால் அன்றே எல்லோர் மனதிலும் ராஜாங்கம் செய்ய ஆரம்பித்த படம்
8. பெண்ணின் பெருமை - 1956 (30வது படம்)
தம்பி கெட்டவன் - அண்ணன் வெகுளி - அண்ணி அவனை படிபடி யாக உலகத்தை புரிய வைக்கின்றாள் - தம்பியையும் திருத்துகின்றாள் - NT யும் GGம் முதல் முறையாக சேர்ந்து நடித்த படம் - NT யின் நடிப்பினால் பெருமையும் , வெற்றியும் பெற்றது .
9.ரங்கூன் ராதா -1956 (34வது படம் )
கட்டிய மனைவியை பைத்தியம் என்ற பட்டத்தை சுமத்தி , அவளின் சகோதரியையே மணந்து கொண்டு அட்டகாசம் புரிந்த படம் - SSR , NT க்கு மகனாக நடித்த படம் - யாருமே ஏற்று கொள்ள முடியாத வில்லன் வேடம் - மனதில் நின்றது நடிப்பினால் .
10. பாக்கியவதி -1957 ( 43வது படம் )
அழகிய மனைவி , இருந்தும் அடுத்த வீட்டு மல்லிகையின் வாசம் அவனை தப்பான வழிக்கு இழுத்து சென்றது - தப்பானவன் - இருந்தாலும் அவனின் நடிப்பு எல்லோரையும் கட்டி போட்டது - அவன் பனியனை போல வந்த பனியன்களை போட்டு திரிந்த பாக்கியசாலிகள் அன்று எவ்வளவு பேர் ?!
11. உத்தம புத்திரன் -1958 ( 45வது படம்)
பார்த்திபனை கூட மறந்து விடலாம் - விக்கிரமனை எப்படி மறுக்க , மறக்க முடியும் ? "ஹ " என்று அலட்சியமாக சொல்லி 100 நாட்களுக்கும் மேல் ஓடிய படம் - அன்று ஸ்ரீதரின் வாழ்விலே ஒரு பொன்னாள் !
12. அன்னையின் ஆணை -1958 ( 49வது படம்)
நல்லவன் - தாயிடம் தகாத முறையில் நடந்தவனிடம் வில்லனாக மாறும் வேடம் - காதலியின் தந்தைதான் விரோதி அப்படி இருந்தும் தந்தை இருக்கும் இடம் சொல்லாமல் காதலியை மென்மையாக கையாண்ட படம்
13. தெய்வ பிறவி -1961 ( 61வது படம் ) - மனைவியின் நடத்தையில் சந்தேகித்து அவளை தகாத வார்த்தையினால் புண் படுத்தும் வேடம் - அருமையாக , பார்பவர்களுக்கு அதிருப்தி வராமல் நடித்திருப்பார் - NT ஒரு தெய்வ பிறவி என்று உலகத்திற்கு பறை சாற்றிய படம்
14. புனர் ஜென்மம் -1961 ( 68வது படம் )
ஹீரோ ஒரு குடிகாரன் சந்தர்ப்ப வசத்தினால் - குடியின் கொடுமையை விளக்கும் அருமையான படம்
15. நிச்சிய தாம்பூலம் - 1962 (76வது படம்)
காதலித்த பெண் , மனைவியாக வந்தபின் , சந்தேகமும் கூட வே வந்தால் ' படைத்தானே " என்றுதானே பாட வேண்டியிருக்கும்
16.ஆலய மணி - 1962 (83வது படம் )
நல்லவன் - கர்ணனை போல் அள்ளித்தரும் குணம் உடையவன் - இருந்தாலும் தோல்விகளை வெறுப்பவன் -பொது நலத்திலும் , சுயநலத்திற்கு அடிமையானவன் - சிறு வயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மீண்டும் விஸ்வ ரூபம் எடுக்கும்போது அதன் வீச்சில் மாட்டிகொண்டவன் - split personality யை எவ்வளவு அழகாக இதுவரை எடுத்து சொன்னதில்லை , நடித்து காட்டியதும் இல்லை
17. இருவர் உள்ளம் - 1963 ( 86வது படம்)
பறவைகள் பலவிதம் என்று வாழ்ந்தவன் - நடத்தையினால் கெட்டவன் என்ற பழியை சுமந்தவன் - திருந்தும் போது - சட்டம் அவனை சிறைக்கு அழைக்கின்றது - கெட்டவன் திருந்த முடியாதா என்று உருக்கமாக அவன் கேட்க்கும் போது கலங்காத கண்கள் இல்லை
18. பார் மகளே பார் - 1963 ( 89வது படம்) - கண்டிப்பான தந்தை - அந்த கண்டிப்பு எல்லையை மீறும் போது வில்லனாக தென்படும் நடிப்பு
19. கல்யாணியின் கணவன் -1963 ( 92வது படம் )- காதலியை சந்தேகிக்கும் வில்லத்தனமான வேடம் - அருமையான காதலை ஆரபோடுகின்றது
20. நவராத்திரி -1964 (100வது படம்) - ஒன்பதில் இரண்டு வேடங்கள் - கொலை செய்தவன் ஒருவன் , காமுகன் ஒருவன்
21. திருடன் -1969 ( 133வது படம்) - வெறும் பெயரில் தான் திருடன் - திருடியதோ நம் எல்லோர் மனத்தையும்
22. இரு துருவம் -1971 ( 144வது படம்) - சந்தர்ப்ப வசத்தால் கொள்ளை கூட்டத்திற்கு தலைவனாகுகி றான் - தம்பியினால் மரணத்தை தழுவுகிறான் - தேறு பார்க்க வந்திருக்கும் சித்திர பெண்ணை திருடிகொண்டும் போகும் அவரின் நடிப்பு -NT வானில் மின்னும் ஒரு துருவ நட்ச்சத்திரம் என்பதை என்றும் பறை சாற்றி கொண்டிருக்கும் .
23.வசந்த மாளிகை - 1972 ( 159வது படம்) - குடிக்கும் , கூத்துக்கும் அடிமையானவன் - திருத்த ஒருவரும் இல்லை - தாய் உண்டு - பாசம் இல்லை - அண்ணன் உண்டு - அறவனைக்கும் கரங்கள் இல்லை அங்கே - அண்ணி உண்டு - ஆதரிக்கும் வார்த்தைகள் இல்லை அங்கே - காதலி உண்டு - அதனால் போகும் உயிரை திரும்பவும் பெறுகிறான் - காதலை ஒரு கவிதையாக்கிய ஒரே படம் - அன்றும் , இன்றும் , என்றும் .
24. உனக்காக நான் - 1976 ( 181வது படம் ) - பணக்காரன் - கூடவே வரும் திமிர் - தன் நண்பன் ஏழை தொழிலாளர்களுடன் சேர்ந்து வேலை செய்வதை வெறுக்கிறான் - தெரிந்தே நெகடிவ் ரோல் யை எடுத்துகொண்டு சோபித்த படங்களில் இதுவும் ஒன்று
25 தீபம் -1977 ( 188வது படம்) - தன் காதலி தனக்கு கீழ் வேலை செய்யும் ஒருவனை காதலிக்கிறாள் என்று புரிந்துகொண்டு அவனை கொன்று விட நினைக்கும் வேடம் - அவன் தனது தம்பி என்று உணர்ந்துகொண்டபின் அவனுக்காக வாழும் பாத்திரம்
26. என்னைப்போல் ஒருவன் (1978) - 194வது படம் - இரு வேடம் - ஒருவன் மிகவும் நல்லவன் - அடுத்தவன் மதுக்கும் , மாதுவிற்கும் அடிமையானவன் - NT யை போல நடிக்க யார் இருக்கிறார்கள் உலகில் ??
27. கருடா சௌக்கியமா ? (1982) - 222வது படம் - சாதாரணமாக இருந்த ஒருவனை சந்தர்ப்பம் ஒரு DON க மாற்றி அமைத்தது
முற்றும்
uvausan
22nd May 2014, 12:27 AM
ராகுல், கொஞ்சம் தாகத்தை அடக்கலாம் என்று சற்றே வெளியே செல்வதற்குள் - மழையாக பொழிந்து விட்டீர்கள் - என்ன வேகம் , !என்ன அலசல் ! நீங்கள் இளைய தலைமுறையை சேர்த்தவர் தான் என்பது எவ்வளவு உண்மை !!
தொடுருங்கள்
uvausan
22nd May 2014, 08:23 AM
[SIZE=5]
யாருமே செய்ய துணியாத , புழனின் உச்சியில் இருக்கும் போது செய்ய விரும்பாத , நெகடிவ் ரோல் க்கும் நல்ல பெயரை வாங்கி கொடுத்தவர் ஒருவர் உண்டு என்றால் அதுவும் நம் செவாலியர் தான் - அதைத்தான் இங்கே அலச இருக்கிறேன் - ஒரு புதிய கண்ணோட்டத்தில்
"புகழின் " என்று எழுதுவதற்கு பதில் "புழனின் " என்று புகழை குறைத்து எழுதிவிட்டேன் - மன்னிக்கவும்
Gopal.s
22nd May 2014, 10:25 AM
ராகுல், கொஞ்சம் தாகத்தை அடக்கலாம் என்று சற்றே வெளியே செல்வதற்குள் - மழையாக பொழிந்து விட்டீர்கள் - என்ன வேகம் , !என்ன அலசல் ! நீங்கள் இளைய தலைமுறையை சேர்த்தவர் தான் என்பது எவ்வளவு உண்மை !!
தொடுருங்கள்
ஆஹா,திரிக்கே மிக மிக பெருமை சேர்த்து, அழகாக கொண்டு போகிறீர்கள்.நன்றி ராகுல்/ரவி.இப்போது திரி நிஜமாகவே இளைஞர்கள் கையில்.திரியின் எதிர்காலம்,கண்ணில் தெரிகிறது.
KCSHEKAR
22nd May 2014, 10:41 AM
ஆஹா,திரிக்கே மிக மிக பெருமை சேர்த்து, அழகாக கொண்டு போகிறீர்கள்.நன்றி ராகுல்/ரவி.இப்போது திரி நிஜமாகவே இளைஞர்கள் கையில்.திரியின் எதிர்காலம்,கண்ணில் தெரிகிறது.
இளைஞர் என்பதன் வயது வரம்பு என்ன? (நானும் அந்த அணியா என்பதைத் தெரிந்துகொள்ள ஆசை - அவ்வளவுதான்)
KCSHEKAR
22nd May 2014, 10:44 AM
திரு.செந்தில் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
KCSHEKAR
22nd May 2014, 10:50 AM
sivaji season song 7
எந்தன் பொன் வண்ணமே - part ii
டியர் முரளி சார்,
நடிகர்திலகத்தின் பின்வரிசைப் படங்களில் tms - கண்ணதாசன் combination -ல் சிறப்பான ஒரு பாடல் இது. அருமையான தங்களின் ஆய்வில் மிளிர்கிறது. நன்றி.
KCSHEKAR
22nd May 2014, 10:52 AM
நடிப்பினால் பாசிடிவ் ஆன நெகடிவ் ரோல்(ஸ் ) 9, 3, 2 - என்று வரிசை படுத்தி அலசினதில் nt யின் வீச்சு எவ்வளவு அழுத்தமாகவும் , ஆழமாகவும் இருந்தது என்பது தெரிய வந்திருக்கும்
Dear Mr.Ravi,
Good going. Keep it up.
KCSHEKAR
22nd May 2014, 10:55 AM
பார்த்ததில் பிடித்தது -34
1977 ல் வெளிவந்த இளைய தலைமுறை படத்தை பற்றி தான் இந்த பதிவு .
டியர் ராகுல்ராம்,
தங்களின் நடிகர்திலகத்தின் திரைப்பட வரிசை அலசல் அருமையாக உள்ளது. தொடருங்கள். பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்,
ஒரே வரியில் :
கருத்து அதிகம் , கதை என்ற பாதையில் விலகாமல் செல்லும் படம் என்றும் அனைவரும் பார்க்க வேண்டிய நல்ல படம் என்று உறுதியாக சொல்லலாம்..
மிகவும் நச்சென்ற தங்களின் கமெண்ட்டுக்கு ஒரு சபாஷ்.
gkrishna
22nd May 2014, 02:39 PM
இந்த படத்தின் நடிகர்களின் பங்களிப்பை பற்றி எழுத போவது இல்லை , காரணம்
படத்தின் உண்மையான கதாநாயகன் கதை , திரைக்கதை , வசனம் எழுதிய மல்லியம் ராஜகோபால் , (சவாலே சமாளி ) மற்றும் compromise செய்யாமல் இயக்கிய கிருஷ்ணன் பஞ்சு
இந்த கதையை ,எப்படி தான் தான் இருக்கும் என்ற திரைகதையை ஒரு வித heroism கூட இல்லாமல் நடித்து கொடுத்து உள்ளார் நடிகர் திலகம் . அட மற்றவர்களை திருத்துவது கூட heroism தான் ரியல் ஹீரோ அதுவும் தான் கொண்ட கொள்கைகளில் உறுதியாக இருந்து அவர் பேசும் வசனங்கள் நச் , அதுவும் அவர் அன்று ஆளும் கட்சியை அதன் சில நடவடிக்கைகளை குறிப்பாக காலேஜ் ல் வந்து வாசு பேசும் வசனத்துக்கு ஸ்ரீனிவாசன் அரசியல்வாதி எப்போதும் வேலை பார்க்க விட மாட்டாங்க ? strike பத்தி பேசும் வசனமும் , தன் தந்தை இறந்து கூட தெரியாமல் இருந்து தன் தாய் சொல்லி தான் அந்த விஷயம் தெரிய வரும் போதும் , நடிகர் திலகம் உருகும் இடம், ராக்கிங் செய்ய படும் மாணவர் இறந்து போகும் காட்சியிலும் , அதுவும் அவர் கடிதத்தில் இருக்கும் வரிகளும் நம் கண்களில் கண்ணீர் குளம்
chain ஸ்மோகர் யை 50 பக்கங்கள் படித்து விட்டு 1 cigarette பிடி என்று சொல்லும் இடமும்
பாலைய்யாவின் காதலை சேர்த்து வைப்பதும்
- kleptomania உள்ள sabastain யை எல்லா பொருள்களிலும் சிலுவை உள்ளதாக நினைத்து கொள் திருடும் எண்ணம் வராது என்று சொல்லும் போதும்
விஜய்குமர்க்கு பீஸ் கட்டுவதும்
என்று மாணவர்களின் வளர்ச்சிக்கு என்று பல காட்சிகள்
பாடல்களில் :
யார் என்ன சொன்னார்.. ஏனிந்த கோபம்', மற்றும் வாணிஷ்ரீ கிளப்பில் பாடும் 'ஒரு நாள் இரவு தனிமையில் இருந்தேன்' மூன்றும் நல்ல பாடல்கள் என்றாலும்
இளைய தலைமுறை... இனிய தலைமுறை' என்ற டைட்டில் பாடல் , கருத்து அதிகம்
ஒரே வரியில் :
கருத்து அதிகம் , கதை என்ற பாதையில் விலகாமல் செல்லும் படம் என்றும் அனைவரும் பார்க்க வேண்டிய நல்ல படம் என்று உறுதியாக சொல்லலாம்.
dear rahul,
ilaya thalaimurai reallly a good movie.
very good chemistry pair of NT and vanishree
unfortunately failed in the box office.
Between 1977 to 1982 why NT has not chosen CVR/some new directors
After unakkaga naan(1976) CVR came into picture only in sangili/santhippu
if this ilaya thalaimurai handled by CVR, result could have been different
just for discussion sharing some thoughts
gk
chinnakkannan
22nd May 2014, 04:16 PM
ராகுல் ரவி வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி ப்பட்டம் பெற்றுவிட்டீர்கள்..எனக்குப் பொறாமையாக உள்ளது..:) இளைய தலைமுறை நான் பார்த்திராத படம்.. நன்றி ராகுல்
ஆஹா,திரிக்கே மிக மிக பெருமை சேர்த்து, அழகாக கொண்டு போகிறீர்கள்.நன்றி ராகுல்/ரவி.இப்போது திரி நிஜமாகவே இளைஞர்கள் கையில்.திரியின் எதிர்காலம்,கண்ணில் தெரிகிறது.
//இளைஞர் என்பதன் வயது வரம்பு என்ன? (நானும் அந்த அணியா என்பதைத் தெரிந்துகொள்ள ஆசை - அவ்வளவுதான்)// நானும் தெ கொ ஆ..
அப்புறம் கோபால் இந்த பாராட்டிக், வெட்டி ஒட்டிக், தவிர ஒரு கட்டுரை கொடுங்களேன் புச்சா..(சி.க வின் சி ஆசை)
JamesFague
22nd May 2014, 08:11 PM
We have to salute the efforts of Mr Ravi and Mr Rahul in taking this
prestigious thread to the new level. Please keep up the tempo.
Regards
ScottAlise
22nd May 2014, 10:46 PM
மிக்க நன்றி
ரவி சார் ,கோபால் சார் , kc சேகர் சார் ,சின்ன கண்ணன் சார் , வாசுதேவன் சார்
Murali Srinivas
22nd May 2014, 11:45 PM
நெல்லை சீமையில் ஓரிரு வாரங்களுக்கு முன் குணசேகரன் திரையரங்கில் காட்சி தந்து மக்கள் மனதில் ராஜாவாக முடி சூடினார் என்றால் நாளை 23.05.2014 வெள்ளி முதல் அந்த ராஜாவே வந்து ஆளப் போகிறார். நெல்லை சென்ட்ரல் திரையரங்கில் நாளை முதல் தினசரி 4 காட்சிகளாக ஸ்டைல் சக்கரவர்த்தி ராஜா விஜயம்.
நன்றி திரு ராமஜெயம் அவர்களே!
அன்புடன்
chinnakkannan
23rd May 2014, 11:35 AM
சின்னதாய் நடிகர் திலகத்துக்கு ஒரு அந்தாதி (பத்து வெண்பாக்கள்) எழுதிப் பார்த்தேன்..
***
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அந்தாதி..
*
என்றென்றும் எண்ணவும் ஏட்டில் எழுதவும்
தண்ணொளி பெற்றுவிட்ட தங்கமாய் – மின்னி
துடிப்பாய் இருந்திடும் தூய்மையாய்த் தோன்றும்
நடிகர் திலகம் நடிப்பு
*
நடிப்பென்று சொன்னாலும் இல்லையவர் நெஞ்சம்
வடிக்கின்ற ஆற்றல் அறிவீர் – விடியாத
வெண் திரைக்கு நன்றாக வித்தியாசம் கொண்டுவந்த
மின்னலாம் ஆவார் அவர்..
*
அவர்தான் நடிப்பென்று ஆய்ந்தவர்கள் சொல்ல
கவர்ந்திடும் கண்களால் பேசி – தவறென்று
தக்கபடி சொல்லியே சிரிக்கும் அடக்கத்தைப்
பக்குவமாய்ப் பெற்றவர் பார்..
*
பாரில் இவர்க்குநிகர் பார்த்தாலும் எந்தவொரு
ஊரில் இவர்போலே யாருமிலை – நேரிலோ
மென்சிரிப்பு நல்லாற்றல் மேன்மைக் குணமென்று
தன்னிறைவு பெற்றவர் தான்..
*
தானாட விட்டாலும் தாமாய்த் தசையாடக்
காணாத பேருக்குக் காட்டியவர் – வீணாய்ப்
புறம்பேசிப் பின்பக்கம் துற்றியவர் தம்மை
புறந்தள்ளி விட்டவர் தாம்..
*
தாம்தூமாய்த் தம்நடிப்பே மேலென்று தாவியவர்
ஆமென்று சொல்வார் இவர்நடிப்பை மேம்பட்டு
பண்பட்டு மின்னிடும் பட்டென மக்களின்
கண்ணைக் கவர்ந்தவர் காண்..
*
காண்பதைக் கைப்படுத்தி காட்சியிலே நன்றாக்கித்
தூண்டி நடிப்பினைத் துல்லியமாய் -வேண்டுதற்போல்
மீண்டும் விழிபார்க்க மேலும் மெருகேற்றித்
தீண்டினார் நம்நெஞ்சில் தேன்..
*
தேனென்றும் பாலென்றும் தேவதையாய்ப் பாவையர்முன்
தூணென்றே காதலினைத் தூக்கியவர் – மீண்டுமே
கண்டிப்பாய்க் காதல் கவித்துவம் மேலேற்றித்
திண்ணமாய்ச் செய்தவர் தான்..
*
தான்தான் குழம்பெனில் தக்க ர்சமாக்க
வீண் எண்ணம் என்றுமே விட்டவர் – மேன்மேலும்
தீட்டி நடிப்பைத் தெளிவாக வெண் திரையில்
காட்டியவர் நம்மிடம் ஆம்..
*
ஆமென்று சொல்லி அழகாய் மறுதலித்துப்
போமென்கும் பொய்கொண்ட வெண் திரையில் - நாமென்றும்
விந்தையாய்ப் பார்க்கும் வியப்பாம் நடிப்பினால்
சிந்தை நிறைந்தவர் தான்
*
KCSHEKAR
23rd May 2014, 11:59 AM
சமீபத்தில் குடும்பத்துடன் ஏற்காடு சென்றிருந்தேன். அங்கு அன்னலெட்சுமி என்ற ஒரு ஹோட்டலில் காலை உணவு அருந்தச் சென்றேன். அப்போது அந்த ஹோட்டல் ஹாலில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட அனைத்து திரைக் கலைஞர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. பிரதானமாக நம் நடிகர்திலகத்தின் கர்ணன் திரைப்பட புகைப்படம் இடம்பெற்றிருந்தது மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. அதன் முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அதன் பின் அங்கு வந்திருந்த பலரும் வரிசையாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். எனக்கு ஏற்பட்ட அந்த மகிழ்ச்சியை உங்களுடனும் பகிர்ந்துகொள்கிறேன்.
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/IMG_0391_zps1d8879df.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/IMG_0391_zps1d8879df.jpg.html)
uvausan
23rd May 2014, 12:48 PM
Ck - கண்ணதாசன் , வாலி , கல்யாண சுந்தரம் , வைரமுத்து இவர்கள் வரிசையில் நீங்கள் வருவீர்கள் என்பது அறிந்ததே - இவ்வளவு சீக்கிரம் வருவீர்கள் என்பது சற்றும் எதிர்பார்க்காத ஒன்று -
முதலில் எல்லோரும் புரிந்து கொள்ளும் விதத்திதில் ஒரு பதிவு - இதற்கே ஒரு தனி சபாஷ் கொடுக்கலாம் :)
வெண்பாக்களில் தமிழை அதனின் விருப்பத்தில் விளையாட விட்டுருக்கிண்டீர்கள் - இவ்வளவு சுதந்திரம் தமிழுக்கு கொடுத்து வேலை வாங்கினவர்களை நான் சமீபத்தில் சந்தித்ததில்லை - தமிழை தமிழாக படிக்க வைத்ததற்கு இன்னும் ஒரு சபாஷ் .. :-D:)
அழுகை பாதி , சிரிப்பு பாதியாக இருந்தவர் , கவிகுயிலாக மாறிய காரணம் தான் புரியவில்லை ! :(
uvausan
23rd May 2014, 12:57 PM
Kcs - மகிழ்ச்சிக்கு ஒரு தனிப்பட்ட குணம் உண்டு - பிறருடன் பகிர்ந்து கொள்ளும் போது , அதன் அளவு பல மடங்கு அதிகரிக்கின்றது - பல தடவை வெளிநாட்டுக்கு செல்லும் போது , ஒரு நல்லா தமிழ் பேசுபவரை பார்க்க மாட்டோமா என்று ஏங்குவேன் - கிடைத்தவுடன் என்னவோ அந்த நாடே நமக்கு அடிமை என்ற எண்ணம் வந்துவிடும் - இப்படித்தான் நம் கர்ணனை எங்கு சந்தித்தாலும் நமக்கு ஏற்படும் உண்மையான உணர்வு - நன்றி உங்கள் மகிழ்ச்சியை இந்த திரியில் எல்லோருடனும் பகிர்ந்து கொண்டதற்கு
chinnakkannan
23rd May 2014, 01:00 PM
நன்றி ரவி :) ஆமா புரியாம நானெங்கே எழுதினேன்.. :)
//அழுகை பாதி , சிரிப்பு பாதியாக இருந்தவர் , கவிகுயிலாக மாறிய காரணம் தான் புரியவில்லை !// ஆமா நீங்களும் ராகுலும் கேப் பே கொடுக்காம விளையாடிக்கிட்டிருக்கீங்க.. நானெந்து செய்யு :) அதான் எனக்கு (கொஞ்சம்) தெரிந்த படி எழுதிப் பார்த்தேன்..அதிலயும் கொஞ்சம் தப்பிருந்ததா (இலக்கணம்) நைஸா கரெக்டும் பண்ணிட்டேன் :)
Murali Srinivas
23rd May 2014, 01:41 PM
கண்ணா! உங்கள் தமிழார்வத்தையும் கவிதை எழுதும் திறன் பற்றியும் மற்றவர்கள் புகழ்வதை படித்திருக்கிறேன். ஆனால் நேரிடையான வாசிப்பு அனுபவம் இல்லை. உங்கள் நடிகர் திலகம் அந்தாதி படிக்கும் போதுதான் தெரிகிறது. அந்த பாராட்டுகளுக்கெல்லாம் நீங்கள் தகுதியானவர்தான் என்று. முச்சங்கம் கணடு தமிழ் வளர்த்த நமது ஊரின் வித்தல்லவா? அது எப்படி சோடை போகும்? வாழ்த்துகள்!
நிறைய எழுதுங்கள்!
அன்புடன்
Murali Srinivas
23rd May 2014, 01:42 PM
சேகர் சார்,
ஏற்காடு போஃட்டோ ஒரு சுவையான செய்தியை வெளிப்படுத்துகிறது. அதாவது நமது கண்ணுக்கு தென்படாமல் எத்தனையோ சிகர ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதைதான் சொல்கிறேன். நன்றி!
ரவி,
நீங்கள் ஒரு விஷயத்தை பற்றி எழுதும்போது அதற்கு பிடிக்கும் டைட்டில் இருக்கிறதே அதுதான் கூடுதல் சுவாரஸ்யம். லேட்டஸ்ட் உதாரணம் ஜோடிகள் இல்லையடி பாப்பா! வாழ்த்துகள்!
அன்புடன்
Murali Srinivas
23rd May 2014, 01:47 PM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது தொடர் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இதுவரை பதிவு செய்தது நான் சில ஆண்டுகளுக்கு முன் இங்கே எழுதியதின் மீள் பதிவுகள். இப்போது முதல் எழுதப் போவது இதுவரை எழுதாத புதிய பதிவுகள். ஆனால் ஒரு எச்சரிக்கை. நடுநடுவே நாம் அலசப் போகும் காலகட்டத்திற்கேற்ப மீள் பதிவுகள் வரலாம். கடந்த பதிவின் இறுதி பகுதி. 1972 -மே 6 பட்டிக்காடா பட்டணமாவின் ஓபனிங் ஷோ முடிந்த பிறகு தோன்றிய எண்ணங்கள்.
ஆனால் ஓபனிங் ஷோ பார்த்து விட்டு வரும் போது என்னால் அந்த படத்தின் வெற்றியின் வீச்சை அளவிடமுடியவில்லை என்பதை இங்கே ஒத்துக் கொள்ள வேண்டும். நிச்சயமாக நூறு நாட்கள் ஓடும் என்று நினைத்தேன். ஆனால் அதையும் தாண்டி வெள்ளி விழா கொண்டாடி தமிழ் சினிமாவின் மொத்த கருப்பு வெள்ளை படங்களிலேயே அதிகமான வசூலை பெற்று சாதனை புரியும் என்று எதிர்பார்க்கவில்லை. எங்கள் மதுரையில் அன்று வரை மிகப் பெரிய வெற்றிப்படங்கள் வெள்ளி விழா கொண்டாடி (175 நாட்களில்) பெற்ற வசூலையெல்லாம் வெறும் நூறு நாட்களில் முறியடித்தது பட்டிக்காடா பட்டணமா.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
பட்டிக்காடா பட்டணமாவின் வெற்றி வீச்சை முதல் நாள் அளவிட முடியவில்லை என்று சொன்னேன். உண்மைதான். ஆனால் படம் பெரிய லெவலுக்கு போகப் போகிறது என்பது முதல் பத்து நாட்களிலேயே தெரிய ஆரம்பித்து விட்டது. ஒரு படம் நன்றாக போகிறது என்றால் காட்சி தொடங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு Q இருக்கும். காட்சி நேரத்திற்கு சற்று முன்போ அல்லது அந்த நேரத்திலோ Full ஆகும். ஆனால் ஒவ்வொரு காட்சிக்கும் அது மதியமோ மாலையோ இல்லை இரவுக் காட்சியோ படம் தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்பே ஹவுஸ் புல் போர்டு விழுகிறது, ஒவ்வொரு ஷோவிற்கும் heavy returns என்றல் படம் பிரமாதமாக போகிறது என்று அர்த்தம். அதுதான் சென்ட்ரலில் நடந்துக் கொண்டிருந்தது. சர்வ சாதாரணமாக 15 நாட்களில் நடைபெற்ற 50 காட்சிகளும் Full.
இதே நேரத்தில் நியூசினிமாவில் ஞான ஒளி 10 வாரங்களை கடந்து 71 நாட்களை நிறைவு செய்கிறது. மே 5 அன்று 101 நாட்களை சென்ட்ரலில் நிறைவு செய்து பட்டிக்காடா பட்டணமாவிற்காக மாறிக் கொடுத்த ராஜா ஷிப்டிங்கிலும் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தது. நடிகர் திலகத்தின் பழைய படங்களும் பல்வேறு அரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருந்த நேரம். அந்த நேரத்தில்தான் கணேஷா திரையரங்கில் பாவ மன்னிப்பு படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.
எத்தனையோ படங்கள் வரலாம், எத்தனையோ பேர் நடிக்கலாம். ஆனால் காலத்தை வென்ற இதிகாச காவியங்கள் என்று ஒரு சிலவற்றைத்தான் வரலாறு குறித்து வைக்கும். அப்படிப்பட்ட இதிகாச காவியம் என்று வரலாறு கூறும் கர்ணன் அந்த காலகட்டத்தில்தான் மதுரை தினமணி திரையரங்கில் மீண்டும் திரையிடப்பட்டது. அந்தப் படத்தின் மதுரை ராமநாதபுரம் விநியோக உரிமையை அந்நேரம் வாங்கியிருந்தவர் ஒரு சின்ன விநியோகஸ்தர். மதுரை டவுன் ஹால் ரோட்டில் தானப்ப முதலி தெரு வந்து சேரும் இடத்தை ஒட்டி அமைந்திருந்த டெல்லி வாலா ஸ்வீட்ஸ் கடைக்கு சற்றே diagonal -ஆக எதிர்புறத்தில் ஒரு சின்ன சந்து இருக்கும். அந்த சந்தின் dead end என்று சொல்லக்கூடிய இடத்தில்தான் அந்த விநியோகஸ்தர் அலுவலகம் அமைந்திருந்தது. படத்தை வெளியிட்ட அவரும் [அவர் பெயர் அவர் கம்பெனி பெயர் இப்போது நினைவில் இல்லை) தினமணி திரையரங்க உரிமையாளரும் மலைத்து போகும் வண்ணம் கர்ணன் சக்கை போடு போட்டது. நான்கு வாரங்கள் ஓடி ஒரு புதிய சரித்திரம் படைத்தது. அங்கிருந்து ஆரம்பித்து MR ஏரியா முழுக்க சாதனை படைத்தது. வாங்கின விலையை விட பல மடங்கு லாபம் அந்த விநியோகஸ்தருக்கு. அப்போது மட்டுமா 1978-ல் நவம்பர் மாதம் மீனாட்சியில் திரையிட்ட போதும் தொடர்ந்து 50 காட்சிகள் Full ஆகி அங்கிருந்து ஒரு பெர்ய ரவுண்டு வந்தது. அப்போது வெளியிட்டவர் வேறொருவர் .இது போல் எத்தனையோ முறை கர்ணன் சாதனை புரிந்திருக்கிறது. யார் வெளியிட்டாலும் வெற்றி பெறும் காவியம் கர்ணன். அந்த பெருமையெல்லாம் நடிகர் திலகத்தையே சாரும்.
இப்படி புதிய பழைய படங்களின் ஓட்டம் கொடுத்த சந்தோஷம் ஒரு பக்கம் என்றால் நான் முன்பே குறிப்பட்டது போல் தயாரிப்பில் இருந்த படங்கள் மற்றொரு பக்கம் பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. அடுத்து வெளிவரப் போகும் தர்மம் எங்கே, 1972 ஜனவரியில் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு துவங்கிய வசந்த மாளிகை, பிப்ரவரி 2-ல் துவங்கிய ராஜ ராஜ சோழன், ரோஜாவின் ராஜா, என்னைப் போல் ஒருவன், ஹீரோ 72, ராஜாவின் 100-வது நாளன்று விளம்பரம் வந்த பாலாஜியின் அடுத்த படமான நீதி, மன்னவன் வந்தானடி, கெளரவம், ராஜபார்ட் ரங்கதுரை, சித்ரா பௌர்ணமி போன்ற படங்களின் அணிவகுப்பு நடிகர் திலகத்தின் ரசிகர்ளை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திக் கொண்டிருந்தது. இதை தவிர சினி பாரத்தின் பாரத விலாஸ் [அப்போது பெயரிடப்படவில்லை என நினைக்கிறேன்], முக்தாவின் தவப்புதல்வன், கோமதி சங்கர் பிலிம்ஸின் பொன்னுஞ்சல் மற்றும் தாய் ஆகியவையும் படப்பிடிப்பில் இருந்தன. கருப்பு வெள்ளை என்பதால் சற்று எதிர்பார்ப்பு குறைவு என்ற போதிலும் தவப்புதல்வனின் ஸ்டில்கள் ஆர்வத்தை மூட்டியிருந்தன. அதிலும் நடிகர் திலகம் ஜிப்பா அணிந்து மிக அழகாய் தோன்றிய ஸ்டில்ஸ், தான்சேன் மேக்கப் மற்றும் கையில் மைக்கை வைத்து நிற்கும் ஸ்டில் பெரிதும் ரசிக்கப்பட்டது. பொன்னுஞ்சல் படத்திற்கு ஆகாயப் பந்தலிலே பெரிய attraction-ஆக இருந்தது. சுருக்கமாக் சொன்னால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விருந்தோ விருந்து என்று சொல்ல வேண்டும்.
(தொடரும்)
அன்புடன்
chinnakkannan
23rd May 2014, 02:17 PM
முரளி சார்..மிக்க நன்றி..
KCSHEKAR
23rd May 2014, 04:51 PM
கண்ணா! உங்கள் தமிழார்வத்தையும் கவிதை எழுதும் திறன் பற்றியும் மற்றவர்கள் புகழ்வதை படித்திருக்கிறேன். ஆனால் நேரிடையான வாசிப்பு அனுபவம் இல்லை. உங்கள் நடிகர் திலகம் அந்தாதி படிக்கும் போதுதான் தெரிகிறது. அந்த பாராட்டுகளுக்கெல்லாம் நீங்கள் தகுதியானவர்தான் என்று. முச்சங்கம் கணடு தமிழ் வளர்த்த நமது ஊரின் வித்தல்லவா? அது எப்படி சோடை போகும்? வாழ்த்துகள்!
நிறைய எழுதுங்கள்! அன்புடன்
Well Said Murali Sir
Gopal.s
24th May 2014, 05:29 AM
கண்ணா! முச்சங்கம் கணடு தமிழ் வளர்த்த நமது ஊரின் வித்தல்லவா? அது எப்படி சோடை போகும்? வாழ்த்துகள்!
ஒண்ணு கூடிட்டாய்ங்கைய்யா ஒண்ணு கூடிட்டாய்ங்க .
ஏதேது ,மண் வெறி முற்றி,என்னை கூட, திருவள்ளுவர் பஸ்ஸில் போகும்போது மதுரை பஸ் ஸ்டாண்டு வழியாக போனவர் என்பதை நிரூபித்து விட்டீர்கள் என்பாய் கர்கள் போல. அவிங்களை ......
chinnakkannan
24th May 2014, 10:13 AM
Well Said Murali Sir
அன்பின் சந்திர சேகர் சார் நன்றி
//ஒண்ணு கூடிட்டாய்ங்கைய்யா ஒண்ணு கூடிட்டாய்ங்க // கோ..பா..ல்.. என்னப்பூ இப்படிச் சொல்றீங்க.. நாங்க எங்கிட்டு இருந்தாலும் ஒத்துமையாத் தான் இருப்போம்ல..:)//திருவள்ளுவர் பஸ்ஸில் போகும்போது மதுரை பஸ் ஸ்டாண்டு வழியாக போனவர் என்பதை நிரூபித்து விட்டீர்கள்// அட ஆமாம்..இப்பத் தான் புரியுது நீங்க எப்படி நல்லா எழுதறீங்கன்னு.. :)
ScottAlise
24th May 2014, 02:48 PM
சின்னகண்ணன் சார் ,
தமிழில் நன்றாக கவிநயத்துடன் எழுதி உள்ளீர்கள் , இப்படியும் எழுதலாமோ ? நான் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம்
ScottAlise
24th May 2014, 02:49 PM
டியர் kc சேகர் சார்,
கர்ணன் படத்துடன் உங்களை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி
ScottAlise
24th May 2014, 02:49 PM
முரளி சார்
எங்களையும் மதுரைக்கு அழைத்து சென்று விடுகிரிர்கள் உங்கள் எழுத்தின் மூலமாக
நீங்கள் திரையில் பார்த்த அத்தனை படங்களை பற்றியும் எழுத வேண்டும் , குறிப்பாக நடிகர் திலகத்தின் படங்களில் மிகவும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய படங்களை பற்றி நீங்கள் எழுத வேண்டும் என்பது என் கோரிக்கை (உதரணமாக திரிசூலம் , தில்லானா , சிவந்த மண் இன்னும் பல )
ScottAlise
24th May 2014, 02:50 PM
பார்த்ததில் பிடித்தது -35
சென்ற பதிவில் கருத்து அதிகம் உள்ள படத்தை பற்றி எழுதியாதை தொடர்ந்து இந்த பதிவில் 1975 ல் வெளி வந்த action adventure படமான வைர நெஞ்சம் படத்தை பற்றி தான் இந்த தடவை அலசி உள்ளேன்
கதை :
ஒரு வங்கியின் உரிமையாளர் வங்கியில் ஊழல் செய்து விட்டு , அதை சரி கட்ட முடியமால் தற்கொலை செய்து கொள்ளுகிறார் , அவர் இறந்த பிறகு அவர் மகன் முத்துராமன் அவர் தந்தையின் பதவியில் அமர , அவருக்கு அவர் தந்தை எழுதிய கடைசி கடிதம் கிடைகிறது , அதில் தான் செய்த ஊழல் பற்றி அவர் எழுதி குறிபிடுகிறார் , இன்னும் சில நாட்களில் ஆடிட்டிங் செய்ய இருப்பதால் , முத்துராமன் பயத்தில் உறைந்து போய் இருக்கிறார் , அந்த நேரத்தில் முத்துராமனை அணுகிறது ஒரு கொள்ளை கும்பல் . அதாவது கொள்ளை நடந்தால் தவறு மறைந்து விடும் என்பது அந்த கொள்ளை கும்பலின் தலைவரின் ஆசை வார்த்தை , அதற்க்கு உடன் படுகிறார் முத்துராமன்
கொள்ளை நடந்து விடுகிறது , ஆனால் அதை பார்த்து விடுகிறார் முத்துராமனின் தங்கை பத்மப்ரியா .
அடுத்த காட்சியில் நடிகர் திலகம் கடத்தல்காரனாக அறிமுகம் ஆகிறார் , பிறகு தான் தெரிய வருகிறது , அவர்
கடத்தல்காரன் இல்லை , நடந்த பேங்க் கொள்ளையை கண்டு பிடிக்க வந்து இருக்கும் துப்பறியும் அதிகாரி என்று , முத்துராமன் அதிர்ச்சி அடைகிறார் , தன்னை இயக்கம் , ஆட்டி படைக்கும் கொள்ளை கும்பல் தலைவனிடம் இந்த விஷயத்தை சொல்ல , நடிகர் திலகத்தை கொள்ள முத்துராமனை பணிகிறார் , முத்துராமன் நடிகர் திலகத்தை கொன்றாரா? அந்த கொள்ளை கும்பலின் தலைவன் யார் ?
இந்த கேள்விகளுக்கு பரபரப்பாக விடை சொல்லும் படம் தான் இந்த
வைர நெஞ்சம்.
ScottAlise
24th May 2014, 02:51 PM
பாத்திரங்களின் பங்களிப்பு :
நடிகர் திலகம் :
திருடானாக அறிமுகம் ஆகி பின்பு துப்பறியும் அதிகாரி என்று தெரிய வரும் பொது இப்போது பார்த்தாலும் விறுவிறுப்பு , இவர் பாத்திரம் travel பண்ணும் விதத்தில் தான் இந்த படத்தின் மர்ம முடிச்சு அவிழ்க்க படுகிறது
படம் ஆரம்பித்து அரை மணி நேரம் பிறகு தான் நாயகனின் அறிமுகம் , புதுமை இயக்குனர் ஸ்ரீதரின் கைவனம் , வேலை கோட் போட்டு கொண்டு அவர் நடந்து வரும் பொது மிக அழகான, மிக இளைமையான நாயகனாக தெரிகிறார் , அதற்க்கு அப்புறம் வழியில் நடக்கும் சண்டை , பெட்டிக்கு டபுள் டோர் என்று james bond முத்திரை அதிகம்
தன்னை தான் தன் நண்பரின் தங்கை சந்தேகிறார் என்பதை அறிந்து கொண்டும் அதற்கு அதிகமாக அலட்டி கொள்ளாமல் அவர் வேலையை பார்ப்பது கூல் attitude .
தன்னை அதிகமாக சந்தேகித்து டைரக்ட் ஆக கேள்விகளை கேட்கும் பொது அவர் உண்மையை கொட்டும் இடம் படத்தின் ட்விஸ்ட் , நடிகர் திலகத்தின் ஸ்டாம்ப்
பல james bond படத்தில் ஒரு emotional bonding என்பது இருக்காது , ஆனால் நடிகர் திலகம் காதல் காட்சிகளில் கலக்கி இருப்பார் , அதற்க்கு அவர் தோற்றமும் ஈடு கொடுக்கும்
முத்துராமன் :
செகண்ட் ஹீரோ - நடிகர் திலகத்தின் பல படங்களில் இந்த படத்தில் இவர் பாத்திரம் சந்தர்ப்ப சூழ்நிலையால் தன் அப்பாவின் தவறுக்காக இவர் தப்பு செய்ய போக , இவர் மாட்டி கொள்ளுகிறார் . தன் நண்பர் துப்பறியும் அதிகாரி என்பதை அறிந்து அவர் முகத்தில் பல reactions , தன் நண்பரை கொலை செய்ய அவர் நிர்பந்திக்க படும் பொது , அவர் அதை செய்வதும் ,பிறகு குற்ற உணர்ச்சியால் துடிப்பதும் நன்றாக செய்து இருப்பார்
பத்மப்ரியா :
ஒரு James Bond படத்தில் நாயகிக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்குமோ இந்த படத்திலும் அதே அளவு தான் , காதல் காட்சிகளில் நன்றாக நடித்து இருக்கிறார் , நடிகர் திலகத்தை அவர் சந்தேக்கும் காட்சிகள் , முதலில் மோதல் , பிறகு காதல் என்று வழக்கம் போலே காட்சிகள் . இவர் நாயகனுக்கு உதவும் காட்சிகளில் கதையின் நாயகியாகவும் செயல் படுகிறார்
வில்லனாக பாலாஜி :
இவர் பாத்திரத்துக்கு அதிகம் வலு சேர்த்து இருக்கலாம் படத்தின் வெற்றி விச்சு அதிகம் ஆகி இருக்கும்
ScottAlise
24th May 2014, 02:51 PM
பாடல்கள் :
மை ஸ்வீட்டி... typical 70's சாங்
செந்தமிழ் பாடும் சந்தனக்காற்று பாடலும் , காட்சிகளும் கண்ணுக்கும் , காதுக்கும் குளிர்ச்சி
கார்த்திகை மாசமடி கல்யாண சீஸனடி- கிளப் சாங் , பாடலில் ஒரு பரபரப்பு இருக்கும் , காரணம் படத்தின் விறுவிறுப்பு , ஒரு ட்விஸ்ட் இந்த பாடலில் இருக்கும் , typical treat from MSV
ஏன் இந்த படத்தை பற்றி எழுதினேன் ?
திரு சிவாஜி செந்தில் சார் உடன் பேசிய பொது கிடைத்த அரை மணி நேரத்தில் பல விஷியங்களை பற்றி பேசினோம் , அலசினோம் , பேசிய விஷியத்தில் அதிக weightage கொடுத்த விஷியங்கள் நடிகர் திலகத்தின் action படங்கள், காட்சிகள் குறிப்பாக தங்கசுரங்கம் , சரி தங்கசுரன்கத்தை பற்றி எழுதலாம் என்றால் அதை ஏற்கனனவே எழுதி விட்டேன் , பார்த்ததில் பிடித்தது என்ற series யின் ஆரம்பமே அந்த படம் தான் , இருந்தாலும் அந்த படத்தை பற்றி நான் எழுதியது மீண்டும் படிக்கும் பொது நான் எழுதியது எனக்கே திருப்தி இல்லை . மீண்டும் அந்த படத்தை எழுதலாமா , improvement எழுதுவது போல என்று என்னை நானே கேட்டு கொண்டது உண்டு , எழுதி விட்டேன் , இந்த ஒரு வார இடைவெளி அதற்க்கு தான் , இருந்தாலும் ஏற்கனவே எழுதியதை மீண்டும் பதிவு செய்ய ஒரு தயக்கம் , அதனால் வேறு ஒரு துப்பறியும் படம் தேடிய பொது சிக்கிய படம் தான் இந்த வைரநெஞ்சம்
So leaving aside all these lets discuss about the movie
படத்தின் மிக பெரிய பலம் + points என்றால் சிவாஜி சார் , இசை குறிப்பாக பின்னனி இசை , ஒளிபதிவு திரைகதையின் வேகம் , சில திருப்பங்கள்
படத்தின் negative points :
காலதாமதம் , நடிகர் திலகத்தின் வரலாறு காணாத சரித்ரம் படைத்த 1972 வருடத்தை பற்றி நான் சொல்ல வேண்டியது இல்லை , திரு கோபால் அவர்கள் அந்த வருடம் வந்த படங்களை பற்றி எழுதியே உள்ளார்
ஹீரோ 72 என்று வர வேண்டிய படம் 1975 ல் தான் வந்தது , இந்த 3 வருட காலதாமதத்தில் ஏக பட்ட மாற்றங்கள் EXTERNAL FACTORS .
இந்த விஷயம் எதுவுமே தெரியாமல் இந்த படத்தை பார்த்தல் , இந்த external issues யை தள்ளி வைத்து பார்த்தல் படத்தை தாரளமாக ரசிக்கலாம் .
சரி external factors தான் காரணமா என்றால் இல்லை
இந்த மாதிரி துப்பறியும் கதையை ஒரு huge canvas மீது காட்டினால் தான் எடுபடும் . முக்கிய காட்சிகள் கொஞ்சம் பிரமாண்டமாக எடுத்து இருக்கலாம் . படம் மிக சிறிய படம் , இன்னும் 2 ரீல் அதிகம் இருந்து , கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டி இருந்தால் , (நடிகர் திலகத்தின் அறிமுகம் கொஞ்சம் 1/2 மணி நேரம் கழித்து தான் , இது என் பொறுமையை சோதித்து விட்டது )
ஒரே வரியில் :
சில குறைகள் இருந்தாலும் விறுவிறுப்பு அதிகம் , அதனால் கண்டிப்பாக பார்க்கலாம்
gkrishna
24th May 2014, 03:20 PM
dear all
today daily thanthi write up by arurdas about thenum paalum.
"SJ" kku alave illai
rgds
gk
mr_karthik
24th May 2014, 04:16 PM
Dear Raghul Ram,
Nice write-up about 'Vaira Nenjam', a movie close to my nenjam. I feel I can re-produce my previous write-up abput plus and minus of this film. Here is the 'meel padhivu'....
‘வைர நெஞ்சம்’ படத்தின் ப்ளஸ் பாயிண்ட்டுகள்:
1) ஸ்மார்ட்டான நாயகன், நாயகி மற்றும் வில்லி. ஸ்ரீதரின் படங்களிலேயே நடிகர்திலகத்துக்கு மிக அருமையான மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைல். (ஸ்ரீதரின் படங்களிலேயே நடிகர்திலகம் விக் வைத்து நடித்த ஒரே படம் இது. விடிவெள்ளி, நெஞ்சிருக்கும்வரை, ஊட்டி வரை உறவு, சிவந்தமண் அனைத்திலும் ஒரிஜினல் முடி).
2) அருமையான பாடல்கள் மற்றும் இசை. மெல்லிசை மன்னரின் அற்புத உழைப்பில் 'ஏஹே மைஸ்வீட்டி', 'செந்தமிழ் பாடும் சந்தன காற்று', 'நீராட நேரம் நல்லநேரம்', 'கார்த்திகை மாசமடி', 'அம்மான் மகன் எங்கே அவன் என்னோடு சேர்ந்தாட' என அனைத்துப் பாடல்களும் இனிமையோ இனிமை.
3) உடையலங்காரம் (Costumes): நட்சத்திரங்கள் அனைவருக்கும் அளிக்கப்பட்ட உடையலங்காரம் வெகு நேர்த்தி. நடிகர்திலகம், பத்மப்ரியா, முத்துராமன், பாலாஜி, சகுந்தலா மற்றும் வில்லனின் கையாள் என அனைவருக்கும் அழகான உடைகள். நடிகர்திலகம் அணிந்து வரும் உடைகளனைத்தும் கண்களுக்கு விருந்தோ விருந்து. எல்லா வித உடைகளும் SUPER MATCH.
4) கிளுகிளுப்பு: நடிகர்திலகமும் பத்மப்ரியாவும் கொஞ்சலும், சிணுங்கலுமாக காதல் செய்யுமிடங்கள் நல்ல இளமை விருந்து. பத்மப்ரியா இந்தப்படத்தில் இருந்த இளமையும், அழகும், கவர்ச்சியும் அவர் நடித்த வேறெந்தப் படத்திலும் இல்லை. அதுபோலவே வில்லன்கூட்டத்தின் கையாளாக வரும் சி.ஐ.டி.சகுந்தலாவும் சரியான செக்ஸ் பாம். பாலாஜியின் பிறந்தநாளில் சேலையழகில் ஷோபா ராமநாதன் என்ற பொய்ப்பெயருடன் அறிமுகமாகும் இடமும், தொடர்ந்து பார்ட்டியில் நடனமாடிக்கொண்டே நடிகர்திலகத்துடன் வைர வியாபார பிஸினஸ் பேசும் காட்சியும் செம க்யூட். 'நீராட' பாடல் காட்சியின்போது சரியான இளமை விருந்து. ஒருகாட்சியில் பாலாஜி, சகுந்தலாவை வெறுமனே ஒரு டவலில் சுற்றி அள்ளிக்கொண்டு போகும் காட்சி பலரை கனவில் வந்து தொல்லைப்படுத்தியிருக்கும். அவ்வளவு அட்டகாசம். மற்றும் கிளுகிளுப்பு.
5) ஒளிப்பதிவு: படம் முழுவதும் யு.ராஜகோபால், பெஞ்சமின் இருவரின் ஒளிப்பதிவு சூப்பரோ சூப்பர். கண்ணைக்கவரும் வண்ணக்கோலம். 'செந்தமிழ் பாடும் சந்தனக்காற்று' பாடலில் கடற்கரை ஓய்வுக்குடில்களை படம்பிடித்த அழகு. இரவுக்காட்சிகளைப்படம் பிடித்த அழகும் அப்படியே. நைட்ஷோ சினிமாவுக்குப் போய்த்திரும்பும் பத்மப்ரியா பேங்கில் கொள்ளை அடிக்கவந்த கும்பலால் வாட்ச்மேன் கொல்லப்படும் காட்சியைக்கண்டு அலற, துரத்திவரும் கொள்ளைக்கும்பல் ஆளிடம் இருந்து தப்பி ஓடும் காட்சிகளில் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் மிக அருமை. ஸ்டுடியோ செட்களும் 'ஹோ'வென்று பெரிதாக இல்லாமல் கனகச்சிதம். பத்மப்ரியா வீடு செட் மிக அழகு என்றால், சகுந்தலா வீடு கலைநயம். (வேடிக்கை என்னவென்றால், கதாநாயகன் நடிகர்திலகத்துக்கு படத்தில் வீடு கிடையாது).
6) சண்டை காட்சிகள்: நடிகர்திலகத்தின் அறிமுகக்காட்சியைத் தொடர்ந்து ஏர்ப்போர்ட்டிலிருந்து வரும் வழியில் முதல் சண்டைக் காட்சி. வைரங்களடங்கிய பெட்டியைப் பறித்துக் கொண்டு ஓடும் வில்லனின் ஆட்களோடு நடிகர்திலகமும் முத்துராமனும் சூட்கேசை தூக்கி தூக்கிப் போட்டு பிடித்தபடி மோதும் சண்டை அபாரம் எனினும் அதில் மெல்லிசை மன்னர் 'ராஜா' பாணியில் வோகல் எஃபெக்ட் கொடுக்க நினைத்து சற்று சொதப்பி விட்டார். இரண்டாவது சண்டைதான் டூப்ளிகேட் போலீஸுடன் ஜீப்பில் போடும் அபார சண்டைக்காட்சி. முன்னால் சென்று கொண்டிருக்கும் லாரியிலிருந்து ரெயில்கள் இறங்க அதன் வழியே ஜீப் லாரிக்குள் ஏற்றப்பட்டு நடக்கும் சண்டை மிக அற்புதம். மூன்றாவது சண்டை, நல்லவராக நடிக்கும் சகுந்தலாவினால் வைரவியாபாரத்துக்காக அழைத்து செல்லப்படும் பாழடைந்த கட்டிடத்தில் நடக்கும் சண்டை. இதனிடையே ஓடும் காரில் நடக்கும் மினி சண்டை, அத்துடன் பாலாஜியுடன் ஒரு துப்பாக்கி சண்டை. முடிவாக கிளைமாக்ஸ் சண்டை. அனைத்து சண்டைக்காட்சிகளிலும் நடிகர்திலகம் தூள் கிளப்புவார். தன்னை நூற்றுக்கு நூறு பொருத்தமானவர் என்று நிரூபித்திருப்பார். ஒரு ஜேம்ஸ்பாண்ட் படத்துக்கான அட்டகாசமான சண்டைக்காட்சிகள்.
7) பாத்திரப்படைப்பு :
பத்மப்ரியா: அவருடைய முதல்படம். அதிகம் நடிக்க வாய்பில்லை எனினும் அழகாக வளைய வருகிறார். நடிகர்திலகத்தை காதலித்தபோதிலும், அவர் அண்ணன் மீது காதலன் கொலைப்பழி சுமத்தும்போது, அண்ணனின் பக்கம் நின்று வாதிடுவது அவர் பாத்திரத்தை உயர்த்துகிறது அவர் உடல்வாகைப் பார்க்கும்போது (அவரது மட்டுமல்ல நடிகர்திலகம் உள்பட அனைவரின் உடல்வாகை நோக்கும்போது) இப்படம் அதிகநாட்கள் தயாரிப்பில் இருந்ததாக நம்ப முடியாது.
முத்துராமன்: சூழ்நிலையின் காரணமாக கொள்ளைக்கு உடந்தையாக இருந்துவிட்டு, அதைவிட்டு விலகமுடியாமல் தவிக்கும் தவிப்பை நன்றாக பிரதிபலிக்கிறார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாக நம்பிய தன நண்பன், ஒரு வைரகடத்தல் வியாபாரி என அறிய வரும்போது காட்டும் அலட்சியம், அதே நண்பன் ஒரு துப்பறியும் அதிகாரி, அதிலும் தன வங்கிக்கொள்ளையைக் கண்டுபிடிக்க ஸ்பெஷலாக நியமிக்கப்பட்டவர் என அறியும்போது காட்டும் அதிர்ச்சி, பேங்க் கொள்ளைக்கு தான் உடைந்தையாக இருந்ததை சாதகமாக்கி தன்னை பிளாக்மெயில் செய்யும் வில்லனின் போதனைப்படி தன் நண்பனையே கொல்ல பாத்ரூம் பைப்பில் கரண்ட் கனெக்ஷன் செய்துவிட்டு, பின்னர் (நட்பின் உந்துதலால்) நண்பனுக்கு எலெக்ட்ரிக் ஷாக் அடித்த அதே வினாடியில் மெயின் ஆப்செய்து காப்பாற்றுவது என, தன் ரோலை திறம்பட செய்துள்ளார். முதல் சண்டையிலும் கிளைமாக்ஸ் சண்டையிலும் ஹீரோவுக்கு சமமான வாய்ப்பு. நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார். 'பைனல் ஆடிட்டிங்' என்ற வார்த்தையைக் கேட்கும்போதே அப்பாவும் பின்னர் மகனும் கதிகலங்குவது நன்கு எடுக்கப்பட்டுள்ளது.
8) சுவாரஸ்யமான காட்சிகள் என்றால் பலவற்றைச் சொல்லலாம். வங்கி அதிகாரியாக இருந்த அப்பாவின் கையாடலைச் சொல்லி மிரட்டியே கொள்ளைக்கும்பல், வங்கியின் பிரதான சாவிகளை மெழுகில் பிரதியெடுத்து அதன்மூலம் கொள்ளையை சுலபமாக்குவது. பாலாஜியின் பிறந்தநாள் விருந்துக்காட்சி. நடிகர்திலகத்திடம் பத்மப்ரியாவின் செல்லமான கோபங்கள், சிணுங்கல்கள் என நிறைய அங்கங்கே தூவப்பட்டுள்ளன. .
9) இது போன்ற ‘கிரைம்’ படங்களுக்கு. வேகத்தடைகளாக அமையக்கூடிய அம்மா செண்டிமெண்ட்கள் இப்படத்தில் இல்லாதது மிகப்பெரிய ஆறுதல். யாருக்குமே அம்மா இல்லாததால் சீனியர் நடிகைகளுக்கு வேலையே இல்லை. (தங்கசுரங்கத்திலும், ராஜாவிலும் நாயகனின் அம்மாக்கள் தேவையான பாத்திரங்கள். ஜெயலலிதாவின் அம்மா காந்திமதி ஒரே சீன் என்பதால் மன்னிக்கலாம்)
மைனஸ் பாயிண்ட்ஸ்:
1) இம்மாதிரி க்ரைம் மற்றும் துப்பறியும் படங்களுக்கு தேவையான ஸ்டார் வால்யூ மிகவும் குறைவு. வெறும் ஐந்து பேர் மட்டுமே படத்தில். நடிகர்திலகம், பத்மப்ரியா, முத்துராமன், பாலாஜி, சகுந்தலா அவ்வளவுதான். ராஜா, என்மகன் போன்ற படங்களில் இருந்த நட்சத்திரகூட்டம் வைர நெஞ்சத்தில் இல்லை.
2) மந்தமான ஆரம்பம், வலுவான கதை இருந்தும் அதைத் தூக்கி நிறுத்தும் அளவு வலுவில்லாத மெதுவான திரைக்கதை. ஆனால் நடிகர்திலகத்தின் அறிமுகத்துக்குப்பின் படம் வேகம் பிடிக்கிறது. லவ்ஸ்டோரி கதைகளை மட்டுமே படமாக்கி வந்த ஸ்ரீதருக்கு கிரைம் சப்ஜக்டில் அனுபவமின்மை. (அவர் சிஷ்யரான சி.வி.ஆர். இதில் கில்லாடி).
3) சண்டைக்காட்சிகளில் யாரோ முன்பின் தெரியாத ஆட்களுடன் சண்டையிடுவதற்கு மாறாக ராமதாஸ், கே.கண்ணன், ஜஸ்டின் போன்றவர்களுடன் சண்டையிடுவதாக அமைத்திருக்கலாம். முத்துராமனின் அப்பா ரோலில் செந்தாமரை, முத்துராமனை மிரட்டும் வில்லனாக மனோகர் என்றெல்லாம் போட்டு, திரைக் கதையையும் ஸ்பீட் அப் பண்ணியிருந்தால் படம் எங்கேயோ போயிருக்கும் (முத்துராமனின் தந்தை இறந்தபின், அவரை வந்து மிரட்டுவதில் துவங்கி படம் முழுதும் வில்லில் பிரதான கையாளாக வரும் அந்த நடிகர் யார்?. அதுபோல படத்தின் துவக்கத்தில் முத்துராமன், பத்மப்ரியா இவர்களின் தந்தையாக வந்து தற்கொலை செய்துகொள்ளும் நடிகர் யார்?)
4) ஏர்போர்ட்டில் நடிகர்திலகத்தின் அறிமுகக்காட்சி, தியேட்டரில் படம் முடிந்து மக்கள் வெளியேறும் காட்சிகளில் எல்லாம் ரிச்னஸ் மிகக்குறைவு. பிரதான வில்லனின் இருப்பிடமாக காண்பிக்கப்படும் இடமும் மிகச்சிறியது. ஒரு சிறிய ஹால். அதில் ஒரு மேஜையும் சுழல் நாற்காலியும் மட்டுமே. போதாக்குறைக்கு அந்த இடமும் ஒரே இருட்டு வேறு. இதன் காரணமாகவே அட்டகாசமான கிளைமாக்ஸ் சண்டை கொஞ்சம் சுவைக்குறைவாக தெரிகிறது. (ஓ.ஏ.கே.தேவரின் இன்ப நிலையம் போலவோ அல்லது ரங்காராவின் மாளிகை போலவோ பிரமாண்டாமோ வெளிச்சமோ இல்லை). வில்லனின் இரண்டு பக்கமும் ரேகா, ரீட்டா என்ற பெயர்களில் தொடை காட்டும் அழகிகள் இருந்தும் சரிவர பயன்படுத்திக்கொள்ளவில்லை.
5) காமெடி ட்ராக் அறவே இல்லை. இது கிரைம் படத்துக்கு மைனஸா அல்லது பிளஸ்ஸா தெரியவில்லை. ரங்கூனில் கட்டபொம்மன் தெருவில் குடியிருந்த நாகேஷும், 'ட்ரிபிள் ராம்' சகோதரர்கள் சந்திரபாபுவும் அப்படங்களின் ஓட்டத்துக்கு எவ்வகையில் துணையிருந்தார்கள் என்பது தெரியவில்லை. ஸ்ரீதர் படம் என்பதால் சச்சு மட்டும் ஒரேஒரு காட்சியில் வந்து போகிறார்.
6) இம்மாதிரி ஜாலியான படங்களிலாவது நடிகர்திலகம் அதிக சீன்களில் ‘கூலிங்கிளாஸ்’ அணிந்து நடித்திருக்கலாம். அவுட்டோர் காட்சிகளிலாவது முடிந்தவரை அணிந்து ரசிகர்கள் ஆவலை பூர்த்தி செய்திருக்கலாம். அதேபோல துப்பறியும் அதிகாரி ரோல் அமைந்த இப்படத்தில் அதிக காட்சிகளில் ரிவால்வருடன் தோன்றியிருக்கலாம். (மக்கள் கலைஞர் ஜெய், ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஒப்பந்தமானதுமே கையில் ரிவால்வரை பெவிகால் போட்டு ஒட்டிக்கொள்வதை நடிகர்திலகமோ ஸ்ரீதரோ பார்த்ததில்லையா).
ஆனால் இத்தனை மைனஸ்களையும் தாண்டி படம் விரும்பக் கூடியதாக அமைந்துள்ளதுதான் ‘வைர நெஞ்ச’த்தின் சிறப்பு.
Subramaniam Ramajayam
24th May 2014, 04:43 PM
dear all
today daily thanthi write up by arurdas about thenum paalum.
"SJ" kku alave illai
rgds
gk
You are very right Arur doss writings about NT films is too too much, can he write like this about other hero/ heros movies which WERE toal failures.
ELLAM SABAKEDU FOR NT AND HIS FANS.
ScottAlise
24th May 2014, 06:48 PM
Dear கார்த்திக் சார் ,
உங்கள் பதிவு , உங்கள் அலசல் நன்றாக இன்னும் சொல்ல போனால் மிகவும் நன்றாக இருந்தது
NOV
24th May 2014, 06:49 PM
https://pbs.twimg.com/media/BoZUM4HIAAACFWh.jpg:large
Taken during 1962 US visit - invited by president JFK as the cultural ambassador of India
ScottAlise
24th May 2014, 06:49 PM
Dear GK sir,
Could you share about Arror Dass sir's article
ScottAlise
24th May 2014, 06:50 PM
Dear NOV sir,
Rare Pic thank you
JamesFague
24th May 2014, 07:23 PM
Rare Photo of NT in US. Thanks for the same Mr Nov Sir.
Regards
Harrietlgy
24th May 2014, 07:40 PM
தினத்தந்தியில் இன்று வந்த பதிவு .
1971 ஏப்ரல் 14 அன்று தமிழ்ப்புத்தாண்டு நாள்! காலையில் தொலைபேசி மணி ஒலித்தது. எடுத்தேன்.
குரல்:– தம்பி! கஸ்தூரி பிலிம்ஸ் சுப்பராமன் பேசுகிறேன். புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நான்:– அண்ணே! உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
சுப்பராமன்:– இன்னிக்கு புது வருஷமும் அதுவுமா உங்களைச் சந்திக்க விரும்புகிறேன். பத்து மணியைப்போல நம்ம ஆபீசுக்கு வரமுடியுமா?
நான்:– கண்டிப்பாக வர்றேண்ணே.
அலுவலகத்தில் தன் தனி அறையில் எனக்காகக் காத்திருந்த அண்ணன் வி.சி.எஸ். என்னைக் கண்டதும் எழுந்து மலர்ந்த முகத்துடன், ‘‘வாங்க தம்பி’’ என்று வரவேற்று, சுவாமி படங்களின் அடியிலிருந்த ஒரு நீண்ட உறையை எடுத்து என் கரங்களில் வைத்து
வி.சி.எஸ்:– அடுத்தபடியாக சிவாஜியை வச்சு நான் எடுக்கப்போற புதுப்படத்துக்கு சென்டிமென்டலா – புது வருஷமும் அதுவுமா உங்களுக்குத்தான் முதல் முதலா அட்வான்ஸ் கொடுக்கிறேன். வாங்கிக்குங்க.
நான்:– நன்றிண்ணே. புது வருஷமும் அதுவுமா, புதுப்படத்துக்கு உங்க கையால் அட்வான்ஸ் வாங்குறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் என்று கவரை வாங்கி சட்டைப்பையில் வைத்துக்கொண்டு அவர் பாதம் பணிந்தேன்.
வி.சி.எஸ்:– ‘‘பார் மகளே பார்’’ படத்துக்கப்புறம் சிவாஜி – பீம்சிங் கால்ஷீட்டுக்காகக் காத்திருந்ததுல எனக்கு நிறைய டயம் வேஸ்டாயிடுச்சு. சிவாஜி கால்ஷீட் கிடைச்சா பீம்சிங் கால்ஷீட் கிடைக்கலே. இவர் கால்ஷீட்டுக்குத் தகுந்தாப்போல அவரால கால்ஷீட் கொடுக்க முடியலே. காத்திருந்து பார்த்துப் பார்த்து முடியாமல் கடைசியில் பி.மாதவனை இந்தப் படத்துக்கு டைரக்டராக பிக்ஸ் பண்ணிட்டு சிவாஜிகிட்டே சொல்லிட்டேன். கதை – வசனம் யாரு? ஆரூர்தாஸ்தானேன்னு அவரே கேட்டாரு. டைரக்டர் – ஹீரோயின் யார் மாறினாலும், சிவாஜியும் நீங்களும் இல்லாமல் நான் படம் எடுக்கமாட்டேன்னு ஏற்கனவே அவருக்குத் தெரியும்.
அதனால்தான் அப்படிக் கேட்டாரு. ‘‘ஆமா. ஆரூர்தாஸ்தான் எழுதுறாருன்னு சொன்னேன். மத்தபடி கதை – ஆர்ட்டிஸ்டுங்க விஷயமெல்லாம் ஆரூரான்கிட்டே பேசிக்குங்கன்னு சிவாஜி சொல்லிட்டாரு. அவருக்கே இனிமேத்தான் நான் அட்வான்ஸ் கொடுக்கணும் என்று கூறி மேஜை மீதிருந்த ஒரு அறுபது பக்க நோட்டுப் புத்தகத்தை எடுத்து என்னிடம் கொடுத்து
வி.சி.எஸ்:– எங்க குடும்பத்துக்கு ரொம்ப வேண்டிய ‘ஸ்ரீமதி’ங்குற ஒரு பொண்ணு இந்தக் கதையை எழுதி எங்கிட்டே கொடுத்துது. படிச்சுப் பார்த்தேன். இது ரெண்டு மனைவிங்களைப் பத்தின கதை. ‘பேமிலி சென்டிமென்ட்ஸ்’ இருக்கு. ஒருத்தி ஹீரோவுக்கு முறையா வாழ்க்கைப்பட்ட மனைவி. இன்னொருத்தி விதிவசமா அவனுக்கு ரெண்டாவது மனைவியா வந்து சேருறா. குடும்பத்துல குழப்பம். இதுதான் கதையோட கரு!
சிவாஜி – மாதவன் சஜ்ஜஸ்ட் பண்றதுக்கு முந்தி, முதல் மனைவியாகவும், ரெண்டாவது மனைவியாகவும் யார் யாரை நடிக்க வைக்கலாம்னு நம்ம ரெண்டு பேருக்குள்ளே பேசி முடிவு பண்ணிக்கிட்டோம்னா நல்லது. இல்லேன்னா சிவாஜி ரெண்டு ஹீரோயினை சொல்லி, மாதவன் ரெண்டு பேரைச் சொல்லி எனக்குக் குழப்பமாயிடும்.
போன ‘‘பார் மகளே பார்’’ படத்துல சிவாஜிக்கு மனைவியாகவும், அதே சமயம் விஜயகுமாரி – புஷ்பலதா ரெண்டு பெண்களுக்கும் தாயாகவும் நடிக்கணும்னா அதுக்கு சவுகார் ஜானகிதான் பொருத்தமாக இருக்கும்னு நீங்க சொல்லித்தான் நானும், சிவாஜியும், பீம்சிங்கும் ஒத்துக்கிட்டோம். அதுக்கு முந்தி ஆளுக்கு ஆள் ஒவ்வொருத்தரைச் சொல்லி போட்டுக் குழப்பிக்கிட்டிருந்தோம்.
நீங்க சொன்னது மாதிரி சவுகார்ஜானகிதான் நல்லா ஒர்க் – அவுட்டாச்சு. அந்த மாதிரி இதுக்கும் அமைஞ்சாத்தான், ரெண்டு கேரக்டர்சுக்கும் நல்ல ‘ஜஸ்டிபிகேஷன்’ கிடைக்கும். இது ரொம்ப சிக்கலான கதை. அதனால நீங்க சொன்னா சரியா இருக்கும். அந்த ரெண்டு மனைவிங்களுக்கு யார் யாரை ‘பிக்ஸ்’ பண்ணலாம்?
நான்:– நீங்க எந்த ஆர்ட்டிஸ்டுங்களையாவது மனசுல நினைச்சிருந்தா சொல்லுங்க. அவுங்களைப்பத்தின அபிப்பிராயத்தை அப்புறம் நான் சொல்றேன்.
வி.சி.எஸ்:– இல்லை. யாரையும் நினைக்கலே. ஒரு ஹீரோயினா இருந்தா பரவாயில்லே. ஒரு முடிவுக்கு வரலாம். ரெண்டு பேருங்குறதுனால யார் யாரையோ நினைச்சு அது எனக்கு சரியா வரலே. வந்திருந்தா நானே சிவாஜிகிட்டே சொல்லிட்டு அப்பவே பிக்ஸ் பண்ணியிருப்பேனே. எனக்கு ஒரே குழப்பமாக இருக்கு. அதனால்தான் உங்களைக் கேட்கிறேன்.
நான்:– அண்ணே! நீங்க சொன்ன மாதிரி இது ஒரு ‘காம்ப்ளிகேட்டட் ஸ்டோரி!’ இதுக்கு தெளிவான ‘ஸ்கிரீன் பிளே’ பண்ணி, அதுக்கு நல்ல வசனங்கள் எழுதி, அந்த ரெண்டு மனைவிங்களோட பாத்திரங்களையும் நியாயப்படுத்தணும். இதுக்கு முந்தி இந்த டைப் ஸ்டோரியோட ரெண்டு படங்களுக்கு நான் வசனம் எழுதின அனுபவம் எனக்கு இருக்கு.
வி.சி.எஸ்:– இந்தக் கதையை ஒரு ‘அவுட்லைன்’ உங்களுக்கு சொல்லிட்டேன். இதுக்கு அந்த ரெண்டு மனைவிங்க கேரக்டர்சுக்கு யார் யாரைப் போட்டால் நல்லாயிருக்கும் என்று சொல்லுங்க. ‘நோ காம்ப்ரொமைஸ்’ – யாரை வேணுன்னாலும் சொல்லுங்க. நான் பார்த்துக்கிறேன். ஏன்னா நீங்க எழுதுற நிறைய படங்களில் எல்லா ஹீரோயின்களும் நடிக்கிறாங்க. என்னைவிட உங்களுக்கு ‘பெட்டர் எக்ஸ்பீரியன்ஸ்’ இருக்கு. அதை வச்சித்தான் கேட்கிறேன். சொல்லுங்க.
நான்:– சொல்றேன். அண்ணே! இரண்டு மனைவிங்களோட கேரக்டர்சுக்கு மட்டுமில்லே. சிவாஜிக்கும் மேட்சா இருக்கணும். அதோட நாம பிக்ஸ் பண்ற இரண்டு ஹீரோயின்களுக்கு மத்தியில், எந்தவிதமான சுப்பீரியாரிட்டி – இன்பீரியாரிட்டி – அதாவது உயர்வு தாழ்வு மனப்பான்மை இல்லாமல் இருக்கணும்.
வி.சி.எஸ்:– (இடைமறித்து) ஆ! கரைக்ட். அது ரொம்ப முக்கியம்.
நான்:– ‘‘இரு மலர்கள்’’ படத்தில் சிவாஜியைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்க முடியாமல் போன பத்மினியை முதல் மனைவியாக நடிக்க வைக்கலாம்.
வி.சி.எஸ்:– (மகிழ்ச்சியுடன்) வெரிகுட்! அப்புறம் இரண்டாவது மனைவிக்கு...
நான்:– இந்த இரண்டாவது மனைவி வேஷத்துக்கு சரோஜாதேவி பொருத்தமா இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்க கேட்டதுனால நான் சொன்னேன். அப்புறம் முடிவு பண்ண வேண்டியது நீங்களும், சிவாஜியும், மாதவனும்தான்.
இதைக்கேட்டவுடன் வி.சி.எஸ். அதிக மகிழ்ச்சியுடன்...
வி.சி.எஸ்:– கரைக்ட் சஜ்ஜஷன். மாதவனைப்பற்றின கவலை இல்லை. நாம சொல்றதுதான். சிவாஜியைத்தான் ‘கன்வின்ஸ்’ பண்ணணும். தம்பி! நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்...
நான்:– சொல்லுங்கண்ணே.
வி.சி.எஸ்:– இன்னிக்கு தமிழ் வருஷப்பிறப்புங்கிறதுனால, சிவாஜியை நான் பார்த்தாகணும். இப்போ என்னோட நீங்க வந்தீங்கன்னா இரண்டு பேரும் போய் அவரைப் பார்த்து ‘விஷ்’ பண்ணிட்டு அப்படியே இந்த ஆர்ட்டிஸ்ட் விஷயத்தையும், என்னைவிட நீங்க அவர்கிட்டே சொன்னால் ‘ஓகே’ ஆயிடும்.
நான்:– சரிண்ணே. நானும் எப்படியும் இன்னிக்கு சிவாஜியைப் பார்த்து வாழ்த்துச் சொல்லணும்... வர்றேன்.
வி.சி.எஸ்:– அப்புறம் ஒண்ணு சொல்ல மறந்துவிட்டேன். நம்ம போன படம் ‘‘பார் மகளே பார்’’ எனக்கு ‘பிஸ்னஸ்’ ரீதியாகவும் நல்ல ‘பெனிபிட்டா’ ஒர்க் அவுட்டாச்சு. அதனால் இந்தப்படத்துக்கு இரண்டு மனைவிங்களை வச்சு, ‘‘பாலும் தேனும்’’ என்று டைட்டில் வைக்கலாம் என்று இருக்கிறேன்.
நான்:– அண்ணே! ஒரு விஷயம். இந்த ‘பா’ எழுத்து சென்டிமென்ட் பீம்சிங்குக்கு மட்டும்தான் நல்லா ஒர்க் அவுட் ஆகும். அது மட்டுமில்லே. ஏற்கனவே அவர் டைரக்ஷன்ல சிவாஜி நடிச்சு ‘‘பாலும் பழமும்’’ படம் வந்திருக்கு. இப்போ மறுபடியும் ‘பாலும் தேனும்’ என்கிறதைவிட அதை அப்படியே ‘உல்ட்டா’ பண்ணி ‘‘தேனும் பாலும்’’ என்று வச்சிக்கலான்னு எனக்குத்தோணுது. அதாவது பத்மினி தேன்! சரோஜாதேவி பால்!
வி.சி.எஸ்:– ஆகா! பிரமாதம். ஓகே! நாளைக்கே இந்த டைட்டிலை ரிஜிஸ்ட்டர் பண்ணிடுறேன். புறப்படுங்க. சிவாஜியை பார்த்திடலாம்.
சிவாஜியின் ‘அன்னை இல்லம்.’
சிவாஜி:– என்னைக் கண்டதுமே... வா ஆரூரான். தோத்திரம்பா. புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நான்:– நீடூழி வாழ்க என்று கூறிக்குனிந்து அவர் பாதந்தொட்டு வணங்கி, என் சட்டைப் பையிலிருந்த கவரை எடுத்து அவர் கையில் வைத்து...
நான்:– (வி.சி.எஸ்.சைக் காட்டி) புது வருஷமும் அதுவுமாக புதுப்படத்துக்கு அண்ணன் கொடுத்த அட்வான்ஸ். இதை உங்க கையால் எங்கிட்டே கொடுங்க.
சிவாஜி:– (மகிழ்ச்சியுடன்) போணி ஆயிடுச்சா? முதல் போணி உனக்குத்தான். இந்த வருஷம் பிச்சி உதறப்போறே. ‘ஆல் த பெஸ்ட்’ என்று கவரைத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டு என்னிடம் கொடுத்தார்.
சிவாஜி:– அண்ணன் கதையைச் சொன்னாரா?
நான்:– சொன்னாரு. இரண்டு மனைவிங்களைப் பற்றிய குழப்பமான குடும்பக்கதை... கவனமாகக் கையாளணும்...
சிவாஜி:– ஆமா. அதெல்லாம் நீ பார்த்துக்க. அந்த இரண்டு மனைவிகளுக்கு யாரைப்போடலாம். சொன்னியா?
நான்:– சொன்னேன்.
சிவாஜி:– யாராரு?
நான்:– முதல் மனைவி பப்பிம்மா!
சிவாஜி:– நானும் அதைத்தான் நினைச்சிருந்தேன். நல்லாருக்கும். இரண்டாவது... யாரு?
நான்:– சரோஜாதேவி!
சிவாஜி:– சரோஜாவா? சரியாருக்குமா?
நான்:– ஏன்? நீங்க வேற யாரையாவது நினைச்சிருக்கீங்களா?
சிவாஜி:– நான் தேவிகாவை நினைச்சேன். சரோஜாதேவி என் நினைவுக்கு வரவில்லை.
நான்:– தேவிகாவும் நல்லாருக்கும். நான் இல்லேன்னு சொல்லலே. பப்பிம்மாவும், தேவிகாவும் கிட்டத்தட்ட ஒண்ணாயிருக்கும். ஆனால் சரோஜாவுக்கும், பப்பிம்மாவுக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும். அதோட சரோஜா ‘ரொமான்டிக் ஹீரோயின்.’ அதனால்தான் ‘‘புதிய பறவை’’ படத்தில் உங்களுக்கு அவ்வளவு நல்லா மேட்ச் ஆச்சு. அந்தப் படத்தோட கிளைமாக்ஸ் சீன்ல சரோஜாவோட நடிப்பு வித்தியாசமாக இருந்தது இல்லியா? சரோஜாவோட ‘நளினபாவங்கள்’ பப்பிம்மாவுக்கு ‘கான்ட்ரஸ்ட்டா’ வேற மாதிரியாக இருக்கும் அண்ணே! எக்ஸ்பிரஷனை வச்சு முகம் இல்லை. முகத்தை வச்சுத்தான் எக்ஸ்பிரஷன் வரும்!
சிவாஜி:– நீ சொன்னா சரியா இருக்கும் ஆரூரான்! நான் தினமும் கமலாம்மா கையால ஒரு வீட்டு சாப்பாட்டை மட்டும் ஒழுங்கா திங்குறவன். நீ பல வீட்டுச் சோற்றைத் திங்குற பரதேசி! எம்.ஜி.ஆரோடயும், என்னோடயும் மட்டும் இல்லை. கண்ணாம்பாம்மா, பானுமதி, சவுகார்ஜானகி, சாவித்திரி என்று ஒரு நாளைக்கு ஒவ்வொருத்தரோட சாப்பிடுவே. உனக்குத்தான் யாராரு எப்படி நடிப்பாங்கன்னு தெரியும்.
இதைக்கேட்டு வி.சி.எஸ். சிரித்தார். சிவாஜி தொடர்ந்தார்:–
சிவாஜி:– (என்னிடம்) ஏம்பா? பப்பிம்மா, சரோஜா சேர்ந்து நடிச்சி இதுக்கு முந்தி வேற ஏதாவது படம் வந்திருக்குதா?
நான்:– இல்லேன்னு நினைக்கிறேன்.
சிவாஜி:– அப்படின்னா நல்லாருக்கும்.
நான்:– நல்லாருக்கிறது மட்டுமில்லே. உங்க கேரக்டருக்கு கரைக்ட்டா ‘மேட்ச்’ ஆகும்.
சிவாஜி:– ஓகே! அண்ணே! நீங்க ‘புரசீட்’ பண்ணுங்க. ஷண்முகத்தைப் பார்த்துப்பேசி என் கால்ஷீட் – அதுக்குத் தகுந்தாற்போல பப்பிம்மா, சரோஜா கால்ஷீட்டெல்லாம் வாங்கிடுங்க...
வி.சி.எஸ்:– சரி தம்பி. நான் பார்த்துக்கிறேன்.
பானுமதி அம்மாவுக்குச் சொந்தமான பரணி ஸ்டூடியோவில் ‘‘தேனும் பாலும்’’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
‘‘மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
மங்கல மங்கை மீனாட்சி – நெஞ்சம் ஒருவன்
சொந்தம் என்றாள் தேவி எங்கள் மீனாட்சி’’
என்ற கவியரசர் கண்ணதாசனின் பொருள் பொதிந்த சென்டிமென்டல் செந்தமிழ்க் கவிதைக்கு என் அன்பிற்கினிய அண்ணன் ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.வி. இனிமையாக இசை அமைத்திருந்த அந்தப்பாடலை பத்மினியும், சரோஜாதேவியும் பாடி, மதுரை வைகை நதிக்கரையில் விளக்கு பூஜை செய்யும் அந்த அழகிய காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றது. இடைநேரத்தில் பத்மினி என்னிடம் கேட்டார்:–
பத்மினி:– மத்தியானம் நீங்க சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போவீங்களா?
நான்:– அம்மா! நான் வீட்டுலே சாப்பிட்டுப் பல வருஷங்கள் ஆயிடுச்சு. அன்னன்னிக்கு எழுதப்போற கம்பெனியில இல்லேன்னா ஷூட்டிங் நடக்கிற ஸ்டூடியோக்கள்ளே எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, சாவித்திரியோட சாப்பிட்டுத்தான் எனக்குப் பழக்கம்.
பத்மினி:– அப்போ மத்தியானம் என்னோட சாப்பிடுங்களேன். பஸ்ட் டே!
நான்:– சரிம்மா. சாப்பிடுறேன்.
பத்மினி:– பெரும்பாலும் எங்கம்மா சைவ சாப்பாடுதான் அனுப்புவாங்க. மட்டன்லாம் சாப்பிட்டா உடம்பு ஊதிடும் என்று சொல்லி ‘டயட் கண்ட்ரோல்!’
நான்:– அவுங்களுக்குத் தெரியாது. ‘கான்ஸ்டிடியூஷன் ஈஸ் டிபரண்ட் பிரம் ஒன் அனதர்!’ அப்படின்னு இங்கிலீஷ்ல சொல்றது உண்டு. அப்படின்னா, உடல்வாகு என்கிறது ஒவ்வொருத்தருக்குத் தகுந்தபடிதான் அமையும். எல்லா உடம்பும் ஒரே மாதிரியாக இருக்காது. நான் சினிமாவுக்கு வராத அந்தக் காலத்திலேயே நீங்க நடிச்ச என்.எஸ்.கே.யின் ‘‘மணமகள்’’ நீங்களும், லலிதாம்மாவும் ஆண் – பெண் வேடத்துல பாம்பாட்டி நாடக நாடகம் ஆடுன ஏவி.எம். ‘‘வேதாள உலகம்’’ ஜூபிடர் ‘‘வேலைக்காரி’’ இப்படி பல படங்களில் உங்க சிஸ்டரோட நீங்க சேர்ந்து ஆடின டான்ஸ் எல்லாம் இன்னும் எனக்கு நல்லா நினைவிருக்கு. அந்தக் காலத்தில் நான் உங்க ‘விசிறியா’ இருந்திருக்கிறேன். நான் சினிமாவுக்கு வந்தப்புறம்கூட எனக்குத் தெரிஞ்சு நீங்க அப்படியேதான் இருக்கீங்க. உங்க உடம்பு ஊதவும் இல்லை, உப்பவும் இல்லை, வெடிக்கவும் இல்லை.
இதைக்கேட்டதும் ஏற்கனவே மஞ்சள் அரளிப் பூப்போல இருந்த பப்பிம்மாவின் முகம் இன்னும் சிவந்து செவ்வரளி மலராக மாறியது. அவர் அதிக வியப்புடன் என்னைக் கேட்டார்.
பத்மினி:– அட! எவ்வளவு நல்லா ஞாபகம் வச்சிருக்கீங்க? நீங்க சொல்றதைப்பார்த்தால் நான் உங்களைவிட வயசுல மூத்தவளா இருப்பேன்னு நினைக்கிறேன். நீங்க எந்த வருஷம் பொறந்தீங்க?
நான்:– செப்டம்பர் பத்து 1931 என்று நான் சொன்னதும் அவர் ஒரு சிறு முத்துச்சிரிப்பை உதிர்த்தார்.
நான்:– ஏம்மா சிரிக்கிறீங்க? நான் உங்களைவிட ரொம்பச் சின்னவனா?
பத்மினி:– இல்லை. இல்லை. நீங்க எழுத்துலேயும் பெரியவரு – என்னைவிடவும் பெரியவரு.
நான்:– (ஆச்சரியத்துடன்) அப்படியா!
பத்மினி:– ஆமா. நான் ஜூன் பன்னெண்டு 1932. அப்படின்னா எனக்கும் உங்களுக்கும் என்ன வயசு வித்தியாசம்?
(நான் மனக்கணக்குப் போட்டுப் பார்த்து...)
நான்:– ரொம்ப இல்லை – கொஞ்சம்தான்.
பத்மினி:– எவ்வளவு?
நான்:– ஏழு மாசம் ரெண்டு நாள் நான் பெரியவன்! தப்பு – மூத்தவன்.
பத்மினி:– (சிரித்து) பாவாடை சட்டை போட்ட அந்தச் சின்ன வயசுலேயே நானும் லலிதாக்காவும் வழுவூர் ராமையா பிள்ளை கிட்டே பரதநாட்டியம் கத்துக்கிட்டு, அதன் மூலமாக முதல் முதல்லே டான்ஸ் ஆடுறதுக்காகத்தான் சினிமாவுல எங்கம்மா சேத்தாங்க. அப்போல்லாம் எம்.ஜி.ஆரோடயும், சிவாஜியோடயும் நான் ஹீரோயினா நடிக்கப்போறேன்னு கனவுகூட காணலே. எப்படியோ மள மளன்னு மேல வந்திட்டேன்.
நல்ல ‘பீக்’குல இருக்கும்போது நீ நடிச்சது போதும், இனிமே நடிக்க வேண்டாம். கல்யாணம் பண்ணிக்கன்னு சொல்லி,
எங்கம்மா டாக்டருக்குக் கட்டி வச்சு அமெரிக்காவுக்கு அனுப்
பிட்டாங்க. அங்கேபோய் டான்ஸ் ஸ்கூல் நடத்தி பல இந்தியப் பெண்களுக்கும் அமெரிக்க கேர்ள்சுக்கும் பரத நாட்டியம் கற்றுக்கொடுத்தேன். அதோட ஒரு பிள்ளையும் பெத்துக்கிட்டேன். என் தலை எழுத்து! ஹஸ்பெண்டோட மிஸ் அண்டர் ஸ்டேண்டிங்! மெட்ராசுக்குத் திரும்பி வந்தேன்.
ஆடுன காலும், பாடுன வாயும் சும்மா இருக்காதுன்னு என் குருநாதர் வழுவூரார் சொல்வாரு. நான் சும்மாதான் இருந்தேன். என் விதி என்னை சும்மா இருக்க விடலே. மறுபடியும் சினிமா என்னைக் காந்தம்போல இழுத்திடுச்சு. பழையபடி வந்து விழுந்திட்டேன் என்று சொல்லி முடிக்கும் முன்பே அவரது முகத்தில் ஒரு சோக ரேகை படர்ந்ததை நான் கவனித்தேன்.
நான்:– அம்மா, நீங்க தப்பா நினைக்கலேன்னா ஒண்ணு சொல்றேன்.
பத்மினி:– சொல்லுங்க தப்பா நினைக்கமாட்டேன்.
நான்: பல படங்களில் பலவிதமான கதைகளில் நாயகியாக நடிக்கிற ஒவ்வொரு நடிகையோட சொந்த வாழ்க்கையிலும் சுகமும், சோகமுமான ஒரு கதை இருக்கு. அது இன்பக் கதையாகவும் இருக்கும், துன்பக்கதையாகவும் இருக்கும். சிலர் சொல்லுவாங்க. சிலர் சொல்லமாட்டாங்க.
பத்மினி:– (குறுக்கிட்டு) முழுக்க முழுக்க உண்மை.
நான்:– ஹீரோக்களைவிட, ஹீரோயின்ககிட்டேதான் விதம் விதமான கதைங்க இருக்கு. எனக்குக் கதை வசனம் எழுதுறதுல மட்டும் இல்லை. மத்தவுங்களோட வாழ்க்கையின் உண்மைக் கதைகளைத் தெரிஞ்சிக்கிறதுலயும் ஆர்வம் அதிகம். அதனால் எல்லா ஆர்ட்டிஸ்டுங்களோட கதைங்களும் எனக்குத் தெரியும். இப்போ நீங்க சொன்னீங்களே, உங்க சொந்தக்கதை. இது முன்னாலயே எனக்குத் தெரியும். உங்க வாயால் கேட்டுக்கிட்டேன். அவ்வளவுதான், பப்பிம்மா.
கல்யாணத்துக்கு முந்தி நீங்க நடிச்சதைவிட, இப்போதான் அதிகப்படங்களில் நடிச்சு புகழும், பொருளும் சம்பாதிக்கிறீங்க. நீங்க எத்தனை படங்கள் நடிச்சாலும் கூட ஒரே ஒரு ‘‘தில்லானா மோகனாம்பாள்’’ படத்துக்கு எதுவுமே ஈடாகாது. அந்த ஒரு படத்தில் ஆடுறதுக்காகவும், நடிக்கிறதுக்காகவும்தான் நீங்க மறுபடியும் சினிமாவுக்கு வந்தீங்கன்னு சொல்லுவேன்.
22.7.1971–ல் வெளியான ‘‘தேனும் பாலும்’’ நன்றாக ஓடியது. ஆனால் மிக நன்றாக ஓடுவதற்கான வாய்ப்புகள் இருந்தும் அதை இழந்து விட்டது. அதற்குக் காரணம் திரைக்கதை அமைப்பு.
விருந்தாளியாக ஒரு வக்கீலின் வீட்டில் தங்கிய சிவாஜி, அங்கு சர்வசாதாரணமாக மேஜை மீதிருந்த ‘ஜின்’ மதுபானத்தை தண்ணீர் என்று நினைத்து கடகடவென்று குடித்து விட்டு அந்த போதையில் வக்கீலின் மகளைக் (சரோஜாதேவி) கெடுத்துவிட்டு, அவளுடைய தாய் சொன்னதன் பேரில் தன்னுடன் அழைத்துச் செல்லும் அந்தப் பகுதியில் எனக்கு உடன்பாடு இல்லை.
சிவாஜி – சரோஜாதேவி இருவருடைய பாத்திரப் படைப்பே கெட்டுவிடும் என்று நான் எவ்வளவோ வாதாடி எடுத்துக் கூறியும் இயக்குனர் கேட்கவில்லை. அந்த ‘எபிசோட்’ பெண்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை படம் ரிலீசான பிறகுதான் தெரிந்து கொண்டார்.
வாதம் வெல்லும்! ஆனால், பிடிவாதம் வாழ்க்கையில் வெல்வதில்லை என்பதை அனுபவத்தில் அவர் அறிந்து கொள்ள காரணமான ‘‘தேனும் பாலும்’’ எதிர்பார்த்த அளவிற்கு இனிக்கவில்லை. அத்துடன் கஸ்தூரி பிலிம்சின் கதவுகள் மூடப்பட்டு விட்டன.
பத்மினியை கிண்டல் செய்த சிவாஜி
‘‘தேனும் பாலும்’’ படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதில் ஒரு முக்கியமான காட்சி. தன் கணவனுக்கு இன்னொரு மனைவி (அது தன் தோழி சரோஜாதேவிதான் என்பது பத்மினிக்குத் தெரியாது) இருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்ட பத்மினி அதிர்ச்சியுற்று, சிவாஜியின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்து பூஜை அறையில் நிறுத்தி வைத்துப் பேசிக்குமுறுவதாக – பத்மினிக்காகவே நான் எழுதிய வசனம் இது. ராமர், சீதை உருவங்களைக்காட்டி...
பத்மினி:– (கண்கலங்க) என்னங்க! இது யார் தெரியுதா? நல்லா பாருங்க – சீதாராமன்! தன் ஒரே ஒரு மனைவியோட இருக்கிறான். ஒரு சொல் – ஒரு வில் – ஒரு பத்தினியோட வாழ்ந்த அந்த அயோத்திராமன் மாதிரிதான் என் கணவரும் என்கிறதற்காகத்தான் நான் ராமனை என் தெய்வமாக நினைச்சிக் கும்பிடுகிறேன். ஆனா, நீங்க கண்ணனா மாறுவீங்கன்னு நான் கனவுகூட காணலிங்க. (அழுது குமுறி)
என் குடும்ப வாழ்க்கையில குறுக்கிட்டு, எனக்கு மட்டுமே சொந்தமான உங்களைப் பங்கு போட்டுக்கிட்ட அவ யாருங்க. (சிவாஜியின் முகத்தை தன் இரு கைகளினாலும் தடவியபடி) என் இதயத்தின் அடியிலே நான் பத்திரமாகப் போட்டுப் பாதுகாத்து வச்சிருக்குற இந்த மாணிக்கம் இன்னொருத்தி கண்ணுக்கு எப்படிங்க தெரிஞ்சிது? அவ யாருங்க? என்னைவிட அழகா இருப்பாளா?
என்னைவிட ஒரு அழகி உலகத்துலேயே இல்லேன்னு அப்போ – நம்ம முதல் இரவுல சொன்னீங்களே – அது பொய்தானே? உங்க மனசைக் கவர்ந்து, எங்கிட்டே இருந்து உங்களைத் திருட நினைக்கிற அவளை நான் பார்க்கணுங்க. நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யலியே. அவ ஏங்க எனக்குக் கெடுதல் செய்யுறா? அவளை நான் பார்த்து நாலு வார்த்தை கேக்கணுங்க. கேக்கணுங்க – கேக்கணும்...
சிவாஜி, பத்மினி இருவரையும் நிறுத்தி வைத்துக்கொண்டு, இந்த வசனங்களை உணர்ச்சிபூர்வமாக – ஏற்ற இறக்கத்துடன் நான் படித்துக்கொண்டு வரும்போதே சிவாஜியின் கண்கள் கலங்கின. பத்மினியின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட அவர் அதீத உணர்ச்சிவசப்பட்டு, என் கைகள் இரண்டையும் இறுகப்பற்றிக்கொண்டு...
பத்மினி:– (சிவாஜியிடம்) கணேஷ்! (சினிமாவில் சிவாஜியை ‘கணேஷ்’ என்று பெயர் சொல்லி அழைத்த ஒரே நடிகை பத்மினி மட்டும்தான் என்பதை இங்கு குறிப்பிடுகிறேன். நான்கு வயது குறைவானாலும், சினிமாவைப் பொறுத்தவரையில் பத்மினி சிவாஜிக்கு சீனியர்!) ‘‘நான் திருவனந்தபுரத்துக்குப் போயிருந்தப்போ, அங்கே ‘‘பாசமலர்’’ படத்தைப் பார்த்துவிட்டு எமோஷனாகி, மெட்ராசுக்குப் போன் பண்ணி சாவித்திரியோட பேசினேன். அப்போ சொன்னேன். உன்னையும், சிவாஜியையும் தவிர இந்தப்படத்தில் வேற யாராலேயும் இப்படி நடிக்க முடியாது. உங்க இரண்டு பேரோட நடிப்புக்கும் ‘டயலாக்’ ரொம்பஹெல்ப்பா இருக்கு. அந்த எமோஷனல் டயலாக்தான் உங்களை அவ்வளவு நல்லா நடிக்க வச்சிருக்குன்னு சொன்னேன்.
சிவாஜி:– உண்மைதான். பாசமலர்தான் எனக்கு இவன் எழுதின முதல் படம். ஆரூரான்! இது என்னோட உனக்கு எத்தனையாவது படம்?
நான்:– பத்தாவது படம்.
சிவாஜி:– பாத்தியா? இவன்தான் எனக்கு ஆஸ்தானம். இடையில டைரக்ட் பண்ணப்போயிட்டான். இல்லேன்னா இன்னும் பத்துப்படம் எழுதியிருப்பான். என்னையும் என் நடிப்பையும் முழுசா தெரிஞ்சிக்கிட்டவன் இவன்.
பத்மினி:– குடும்பக் கதைகளுக்கு டயலாக் எழுதுறதுல மாஸ்டரா இருக்காரு. இதுக்கு முந்தி தேவர் பிலிம்ஸ்ல நான் நடிச்ச பெண் தெய்வம் படத்துலேயும் டயலாக் ரொம்ப நல்லா இருந்தது.
அதுசரி கணேஷ், இந்த சீன் பூராவும் நானே டயலாக் பேசுறேனே. உங்களுக்கு ஒருவரிகூட இவர் எழுதலியே...
சிவாஜி:– தேவை இல்லை. எந்த சீனுக்கு எப்படி எழுதணும்னு அவனுக்குத் தெரியும். பப்பிம்மா! நீ எவ்வளவு வேணுன்னாலும் பேசு. நான் நடிச்சிக்காட்டுறேன். அது தெரிஞ்சுத்தான் இவன் என்னை... (என்பதற்குள் நான் இடைமறித்து)
நான்:– அம்மா! இந்த சீன்ல நீங்கதான் ‘டாமினேட்’ பண்ணனும். இது ஒரு குடும்பப் பெண்ணுடைய குமுறல்! நீங்க பேசணும். அவர் பேசாமல் இருக்கணும். அவர் பேசுனா உங்க ‘எமோஷன்’ ‘பிரேக்’ ஆயிடும். நீங்க ‘டிராப்’ ஆயிடுவீங்க.
பத்மினி:– உங்களை ஒண்ணு கேக்குறேன். தப்பா நினைக்கமாட்டீங்களே?
நான்:– நோ நோ – நெவர்! கேளுங்க.
பத்மினி:– (தயங்கியபடி) உங்களுக்கு இரண்டு ‘மனைவி’ங்கதானே?
இதைக்கேட்டு சிவாஜியும் நானும் சிரித்தோம்.
சிவாஜி:– (பத்மினியிடம்) எப்படி கண்டுபிடிச்சே?
பத்மினி:– இந்த டயலாக்கே சொல்லுதே. ‘எக்ஸ்பீரியன்ஸ்’ இல்லேன்னா இப்படி எழுத வராது. அதை வச்சித்தான் கண்டு பிடிச்சேன். ‘கரைக்ட்’தானே?
சிவாஜி:– ஆரூரான்! இவளை என்ன பண்ணலாம் சொல்லு.
பத்மினி:– (புரியாமல்) ஏன் அப்படி சொல்றீங்க?
சிவாஜி:– (பத்மினியிடம்) மண்டு! இவன், இந்த சீன்ல எழுதி இருக்கானே சீதாராமன்னு – அது இவன்தான்! சின்ன வயசுலேயே சொந்த அத்தை பொண்ணைக் கட்டுனவன். நான் அக்கா பொண்ணைக் கட்டுனவன். பின்னிடுவாளுங்க. அது இதுன்னு ஏதாவது கேள்விப்பட்டா அவ்வளவுதான். சோறு போடமாட்டாளுங்க. வெரட்டிடுவாளுங்க.
பத்மினி:– (சிரித்தபடி) பின்னே எப்படி இவ்வளவு ‘பிராக்டிக்கலா’ எழுதுறாரு?
சிவாஜி:– நல்லா கற்பனை பண்ணுவான். மிகைப்படுத்துவான். அதுல ‘கேரக்டர்ஸ்’ நின்னுடும்.
Russellawz
24th May 2014, 09:01 PM
கார்த்திக்,
பிரமாதமான வைர நெஞ்ச அலசல்கள். உங்களால் மட்டுமே முடிந்த ஒன்று. மனநிறை பாராட்டுக்கள்.
ஸ்ரீதரின் படங்களிலேயே நடிகர்திலகம் விக் வைத்து நடித்த ஒரே படம் இது.
வை.நெஞ்சத்திற்குப் பிறகு வந்த ஸ்ரீதரின் மோகனப் புன்னகை படத்தில் நடிகர் திலகத்திற்கு விக் உண்டு.
ஸ்ரீதருக்கு கிரைம் சப்ஜக்டில் அனுபவமின்மை. (அவர் சிஷ்யரான சி.வி.ஆர். இதில் கில்லாடி).
கிரைம் படங்களில் சி.வி.ராஜேந்திரன் கில்லாடிதான். ஆனால் அவர் நடிகர் திலகத்தை வைத்து இயக்கிய கிரைம் படங்கள் இந்தியிலிருந்து இறக்குமதியானவை. (ராஜா, நீதி, என்மகன், உனக்காக நான், சங்கிலி, தியாகி ) எனவே அவர் அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. அதுவும் பாலாஜியின் ஈயடித்தான் காப்பி விருப்பத்திற்கு ஏற்ற நபர் சிவிஆர்.
பிற்போக்கான இன்னும் ஒரு சில விஷயங்கள்
சிவாஜி அவர்களுக்கு சில இடங்களில் அவர் சொந்தக் குரல் இல்லை. டப்பிங் எனப்படும் பின்னணிக் குரல் கொடுத்து சொதப்பியிருந்தார்கள்.
அப்படியே இருந்தாலும் பின்னணி கொடுத்தவரின் குரலும், நடிகர் திலகத்தின் உதட்டசைவும் கொஞ்சமும் பொருந்தவில்லை. தெலுங்கு மாற்று மொழி படம் போல சில காட்சிகள் அமைந்திருந்தது வேதனை.
சண்டைக்காட்சிகளில் பங்கு பெற்ற நபர்கள் பெரும்பாலும் இந்தி ஸ்டன்ட் நடிகர்கள். எனவே சில இடங்களில் இந்திப் படத்திற்கு வந்து விட்டோமோ என்ற எண்ணம் ஏற்படும்.
ஸ்ரீதர் சிவந்த மண்ணிலேயே சண்டைகாட்சிகளில் நடிகர் திலகத்தை கேவலம் தேங்காய் சீனிவாசன், ஹரி கிருஷ்ணன் போன்ற துண்டு துக்கடாக்களோடு மோத விட்டு வயிற்றெரிச்சலைக் கிளப்பினார்.
chinnakkannan
24th May 2014, 09:27 PM
//அதுபோல படத்தின் துவக்கத்தில் முத்துராமன், பத்மப்ரியா இவர்களின் தந்தையாக வந்து தற்கொலை செய்துகொள்ளும் நடிகர் யார்?) // அது டி.கே பகவதி என நினைக்கிறேன்..
வைர நெஞ்சம் முதலில் ஹீரோ 72 என எடுக்க ஆரம்பிக்கப் பட்டது என நினைக்கிறேன்.. வெகு சின்ன வயதில் மதுரை ஸ்ரீதேவியில் அம்மாவுடன் மேட்னி ஷோ பார்த்த படம்..அந்த சின்ன வயதில் பார்த்த போது த்ரில்லாகத் தான் இருந்தது..
மறுபடி சில பல வருடங்கள் கழித்து வீடியோவிலோ டிவியிலோ பார்த்த போது அவ்வளவாக க் கவரவில்லை..காரணம் வில்லன் பாலாஜி என வெகு ஆரம்பத்திலேயே தெரிந்து விடுவது. ஆனால் பத்மப் ப்ரியா சிவாஜியின் இளமை மிக நன்றாக இருக்கும்.. செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று - பார்க்கவும் கேட்கவும் நன்றாக இருக்கும். நீராட நேரம் நல்ல நேரம் - எல் ஆர் ஈஸ்வரி ஹை பிட்ச் குரல் ரேடியோவில் கேட்க நன்றாக இருந்தது.
சொன்னாற் போலவே கொஞ்சம் விறு விறுப்பு சஸ்பென்ஸ் இன்னும் கொஞ்சம் ரிச்னெஸ் கொடுத்து படத்தை எடுத்திருக்கலாம்..
chinnakkannan
24th May 2014, 09:34 PM
//இந்த மாதிரி துப்பறியும் கதையை ஒரு huge canvas மீது காட்டினால் தான் எடுபடும் . முக்கிய காட்சிகள் கொஞ்சம் பிரமாண்டமாக எடுத்து இருக்கலாம் . படம் மிக சிறிய படம் , இன்னும் 2 ரீல் அதிகம் இருந்து , கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டி இருந்தால் , (நடிகர் திலகத்தின் அறிமுகம் கொஞ்சம் 1/2 மணி நேரம் கழித்து தான் , இது என் பொறுமையை சோதித்து விட்டது )// வெரி ட்ரூ.. எனக்கு சின்ன வயதில் பார்த்த போதே எப்ப சிவாஜி வருவார்மா என க் கேட்டிருக்கிறேன்..ராகுல் குட்..
Gopal.s
25th May 2014, 07:26 AM
Thank you Abhkhlabhi (Bala?) sir for interesting Dec'2010 Posting.
Nadigr Thilagam Sivaji Ganesan was born on 1st October 1928. Date of Birth 1 represent the Planet Sun. Sun provides the dominant power. His Basic Number 01 (0+1) added together gives Number 1. The Month October , the month of born is the period number of 3 in Numerology represents the planet Jupiter.
NT was influenced by Number 1 and 3 and
if total 1 and 3 it comes to 4 and
last Number 9
In numerology number 1 stands for the planet Sun. Number 1 represents all that is creative, individual and positive. A person born under the birth number 1 is creative in his or her work, inventive, strongly individual, definite in his views. Number 1 people are ambitious, they dislike restraint, they always rise in whatever their profession or occupation may be. They desire to become the heads of whatever their businesses are. NADIGAR THILAGAM WAS NO EXCEPTION TO ALL THESE QUALITITES.
The period Number 3
The period number of NT is 3 (October). In numerology the number 3 stands For the planet Jupiter. Number 3 people, like the number 1 individuals, are decidedly ambitious; they are never satisfied by being in their subordinate positions; their aim is to rise in the world, to have control and authority over others. They are excellent in execution of the commands; they love order and discipline in all things; they readily obey orders themselves, but they also insist on having their order obeyed.
Number 3 people often rise to the very highest positions in any business, profession or any sphere in which they may be found. They often excel in positions of authority, in government and in life generally; and especially in all posts of trust and responsibility, as they are extremely conscientious in carrying out their duties.
Their faults are that they are inclined to be dictatorial, to ' lay down the law ' and to insist on carrying out their own ideas. For these reasons, although they are not quarrelsome, they succeed in making many enemies.
These Basic and Period Numbers 1 and 3 influenced the important incidents and events in NT's personal, Film career. Thorough numerological analysis of the incidents and events in his personal life and career, bear testimony to this influence of number 3 in her life.
1) Year in which turning Point in Drama - 1945 =( 1+9+4+5 = 19) when reduced to single digit gives number 1
2) Name of the Drama - Sivaji Kanda Hindu Rajyam = Total comes to 57 when reduced to single digit gives number is 3
3) First Film Name -Parasakthi = Total comes to 28 when reduced to single digit number gives 1
4) 50th Film released on -15/08/1958 = Total comes to 37 when reduced to single number gives 1
5) 125th Film released on 29/11/1968 = Total comes to 37 when reduced to single number gives 1
6) 150th Film released on 03/07/1971 = Total comes to 28 when reduced to single number gives 1
7) 175th Film released on 11/4/1975 = Total comes to 28 when reduced to single number gives 1
8) 225th Film released on 21/05/1982 = Total comes to 28 when reduced to single number gives 1
9) NT last Film, Pooparika Varigirom = Total comes to 64 when reduced to single number gives 1
HIS FIRST AND LAST FILM - NUMBER COMES TO 1
10) Year in which he got SIVAJI PATTAM = 1945 - when total 1945, reduced to single digit gives 1
11) Silver Jubliee Films are = 19 - when reduced to single digit gives 1
12) Year of Mother’s death = 1971 when reduced to single digit gives 1
13) Year of Father’s Death = 1981 when reduced to single digit gives 1
12) Age at the time of Death = 73 , when reduced to single digiti gives 1
13) 275th Film released on 10/12/1988 = total comes to 30 when reduced to single digit gives 3
14) Shanti Theatre opened on 12/01/1961 = total comes to 21 when reduced to single digit gives 3
15) Year of NT Stamp released = 2001 = when reduced single digit gives 3
16) TOTAL OF NADIGAR THILAGAM COMES TO 39, when reduced to single digit gives 3
His Life Path Number is 4,ie (1+10+1+9+2+8) = 4. Number 4 considered to be releated to Sun, Planet for Number 1 written as 4-1 so influence of number 4 is also seen his life.
1) His Original Name is V.C.Ganesa Murthy , when total it comes to 49 , when reduced to single digit gives 4
2) His Date of birth , Month and Year = 01/10/1928 = when total it comes to 22, when reduced to single digit gives 4
3) Place of Birth = Villupuram, when total this comes to 40 reduced to single digit gives 4
4) His birth Star and Rasi , Ashwini and Mesha total 22 each and reduced to single digit gives 4
5) Drama Experience 40 years , when reduced to single digit gives 4
6) Year of Padma Shree Award 1966 - when reduced to single digit it comes to 4
7) Year of Padma Bhushan Award 1984 – when reduced to single digit it comes to 4
8) Films runs 100 days and more - 85 films , when total reduced to single digit is comes to 4
Film Name :
1) Sivaji Ganesan , total comes to 36, when reduced to single digit comes to 9
2) Father’s Name Chinnaiay Mandrayar total comes to 45 when reduced to single digit comes to 9
3) Year of Drama entry - 1935 when reduced to single digit comes to 9
4) First appearance as Sita – when total Sita comes to 9
5) Total Film acted 288 – when reduced to single digit comes to 9
6) His 200th Film released on 27/1/1979 ,when reduced to single digit comes to 9
7) Last film released on 17/9/1999 , when reduced to single digit comes to 9
8) Time of Death was 8.10 (p.m.) when reduced to single digit comes to 9
9) His own theatre Shanti , when total reduced to single digit comes to 9
sss
25th May 2014, 10:27 AM
//நீராட நேரம் நல்ல நேரம் - எல் ஆர் ஈஸ்வரி ஹை பிட்ச் குரல் ரேடியோவில் கேட்க நன்றாக இருந்தது.
.
அன்புள்ள திரு சின்ன கண்ணன் அவர்களே
இந்த பாடல் திருமதி வாணி ஜெயராம் அவர்களின் புகழ் பெற்ற பாடல் என்பதை தெரிய படுத்த விரும்புகிறேன்.
நன்றி
எஸ் எஸ் எஸ்
chinnakkannan
25th May 2014, 11:00 AM
Sorry எஸ்.எஸ்.எஸ்..தவறுதலாக எழுதிவிட்டேன்..
Gopal.s
25th May 2014, 12:54 PM
ராகவேந்தர் அவர்களே,
தொலைபேசியில் வாழ்த்த அழைத்தேன். ஆனால் எண் கிட்டவில்லை.
60 வது மணிவிழா காணும் தங்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
தங்கள் இளவல் ஆக கருதி,பாதம் பணியும் எனக்கு நல்லாசி கூறவும்.
mr_karthik
25th May 2014, 01:10 PM
Dear ராகவேந்தர் Sir,
60 வது மணிவிழா காணும் தங்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
mr_karthik
25th May 2014, 01:40 PM
அன்புள்ள திரு சின்ன கண்ணன் அவர்களே
இந்த பாடல் திருமதி வாணி ஜெயராம் அவர்களின் புகழ் பெற்ற பாடல் என்பதை தெரிய படுத்த விரும்புகிறேன்.
நன்றி
எஸ் எஸ் எஸ்
This is the portion of Vaira Nenjam review by Saradha mam, about this song 'neeraada neram nalla neram'....
வாங்கிய காசுக்கு வஞ்சகமில்லாமல் உழைத்திருக்கும் இன்னொருவர் 'மெல்லிசை மாமன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள். பாடல்கள் அத்தனையும் அருமை.
4) சூப்பர் டாப் பாடல், CID சகுந்தலாவுக்காக வாணி ஜெயராம் பாடிய..
'நீராட நேரம் நல்ல நேரம்
போராட பூவை நல்ல பூவை
மேனியொரு பாலாடை
மின்னுவது நூலாடை'
அதிலும் சரணத்தில்...
‘காலம் பார்த்து வந்தாயோ
கமலம் மலரக் கண்டாயோ..ஓ.... ஓ..... ஓ... ஓ....
கோலம் காணத்துடித்தாயோ
கூடல் வேதம் படித்தாயோ
நீயும் கண்டாய் என்னை
நானும் கண்டேன் உன்னை
போதும் இது நாம் கூட
போதையுடன் ஊடாட’
மெல்லிசை மன்னர் மிக அற்புதமாக மெட்டமைத்த பாடல். மக்களை அதிகம் சென்றடையாத பாடல். தொலைக்காட்சிகளுக்கு இப்படியொரு பாடல் தமிழில் வந்திருக்கிறது என்றே தெரியாத பாடல்.
(வி.ஐ.பி.தேன்கிண்னமெல்லாம் நான் இப்போது பார்ப்பது கிடையாது. அவர்கள் என்னென்ன பாட்டு போடப்போகிறார்கள் என்று என் பையனே லிஸ்ட் போட்டுவிடுவான். படகோட்டியில் ஒரு பாடல் (தரை மேல்), ஆயிரத்தில் ஒருவனிலிருந்து ஒரு பாடல் (ஓடும் மேகங்களே), எங்க வீட்டுப் பிள்ளையிலிருந்து ஒரு பாடல் (நான் ஆணையிட்டால்), பாசமலரிலிருந்து (மலர்ந்தும் மலராத), ஞான ஒளியிலிருந்து (தேவனே என்னைப்பாருங்கள்), திருவிளையாடலில் இருந்து ஒரு பாடல் (பாட்டும் நானே), புதிய பறவையிலிருந்து ஒரு பாடல் (எங்கே நிம்மதி)... டைம் முடிந்தது. 'எனக்கு இந்த நல்ல வாய்ப்பினை வழங்கிய '......' டிவிக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டு'.... (அட போங்கப்பா.)
சரி, பாடகி திருமதி வாணி ஜெயராம் கலந்துகொள்ளும் டி.வி. நிகழ்ச்சிகளிலாவது இம்மாதியான பாடல்களைப் பாடுவாரா என்று ஆவலோடு காத்திருந்தால், அவர் மைக்கைப்பிடித்துக்கொண்டு ஆரம்பிப்பார் 'மல்லிகை என் மன்னன் மயங்கும்'... (அவர் 'மல்லிகை' என்று ஆரம்பித்ததும் 'ஆமா. இந்தம்மாவுக்கு இதைவிட்டால் வேறு பாட்டு தெரியாது' என்று ரிமோட்டைத்தேடுவோர் பலர். நல்ல பாட்டுத்தான், இல்லேன்னு சொல்லவில்லை. நாலாம் வகுப்பில் மீனாட்சி டீச்சர் திருக்குறள் நடத்தினார்.. 'பசங்களா, சொல்லுங்க 'பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்....'). திருப்பி திருப்பி வாணியம்மா அதையே பாடும்போது, இவர் முப்பதாயிரம் பாடல் பாடினார்.. நாற்பதாயிரம் பாடல் பாடினார் என்பதெல்லாம் பொய்யோ என்று எண்ணத்தோன்றும்.
சரி, மெல்லிசை மன்னராவது என்றைக்காவது இதுபோன்ற 'தான் பெற்ற' அற்புதமான குழந்தைகளைப்பற்றி சொல்வாரா என்றால்.... ஊகும். அவரும் திரும்ப திரும்ப ஜெனோவா, சி.ஆர்.சுப்பராமன், நௌஷாத், எனக்கொரு காதலி இருக்கின்றாள், அறிஞனாய் இரு என்று, அந்தக்கால கீறல் விழுந்த கொலம்பியா ரிக்கார்ட் போலவே பேசிக்கொண்டு இருக்கின்றார்.
சரி, படத்தைப்பேச ஆரம்பித்து டாப்பிக் எங்கோ போகிறது (இருந்தாலும் நான் சொன்னதெல்லாம் உண்மைதானே)
(Thanks Saradha mam).
Russellmai
25th May 2014, 01:44 PM
60வது மணிவிழா காணும் இராகவேந்திரா அவர்களுக்கு
உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்
அன்பு
கோபு
chinnakkannan
25th May 2014, 04:17 PM
அன்பின் ராகவேந்தர் சார்..
60வது மணிவிழா காணும் உங்க்ளுக்கு சின்னக் கண்ணனின் வாழ்த்துக்கள்..என்னை ஆசீர்வதிப்பீர்களாக
JamesFague
25th May 2014, 04:28 PM
Wish u a Happy & Wonderful 60th Birthday Mr Raghavendra Sir.
Regards
S Vasudevan
uvausan
25th May 2014, 05:54 PM
ராகவேந்திரா சார்
உங்களிடம் இருக்கும் "இல்லைகள் "
நீங்கள் டெலிபோனில் கிடைப்பது இல்லை
Whatsapp இல் வருவதும் இல்லை
SMS யை தொடுவதும் இல்லை
facebook , twitter இவைகளை பற்றி எண்ணுவதும் இல்லை
இந்த திரியுலும் உலா வருவதும் இல்லை
எங்களிடம் இருக்கும் "உண்டுகள் "
NT யை மறந்தால் உங்களையும் மறக்க வாய்ப்பு உண்டு
நல்ல தமிழை மறுத்தால் உங்களையும் மறுக்க வாய்ப்பு உண்டு
மற்ற பதிவுகளையும் மனம் உவந்து பாராட்டும் குணம் எங்களிடையே மடிந்து விட்டால் , உங்களை பற்றிய எங்கள் சிந்தனைகளும் மடிந்து விடும் வாய்ப்பு உண்டு
உழைப்பை உதாசீனம் செய்யும் மனம் வந்து விட்டால் , உங்களையும் நாங்கள் இழக்கும் வாய்ப்பு உண்டு
சமீபத்தில் உங்கள் உடம்பு முடியவில்லை என்றவுடன் இந்த திரி ஒரு ஆலயமாகியது - எங்கும் விளக்குகள் எரிந்தன - எல்லோருக்கும் ஒரே நினைவு - எல்லா திரிகளிலும் அண்ணாமலை தீபத்தைதான் கண்டோம் - நீங்கள் மீண்டும் எங்களுக்கு கிடைத்தவுடன் இறைவன் ஒருவன் இருப்பது உறுதியானது
இன்று ஒருவர் ஆரம்பித்தார் உங்களை வாழ்த்த - நங்கள் அவரை தொடர்ந்தோம் - எங்களை தொடர்வது எங்கள் ப்ராத்தனைகளும் , வாழ்த்துக்களும் - 60 - 75 ஆகி - 75 - 100 ஆகி அதற்கும் மேல் நீங்கள் என்றும் எங்களுடன் பவனி வர விழைகிறோம் - ஆண்டவன் செவி சாய்ப்பானாக !!
ScottAlise
25th May 2014, 06:58 PM
ராகவேந்திரன் சார்
இந்த திரிக்கு நான் வர காரணமானவர்களில் நீங்களும் ஒருவர் , உங்களை வாழ்த்த வயது இல்லை
வணங்குகிறேன் .
ஆசிர்வதியிங்கள்
sivaa
25th May 2014, 07:21 PM
ராகவேந்திரன் சார்
60 வது மணிவிழா காணும் தங்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
Harrietlgy
25th May 2014, 10:19 PM
ராகவேந்திரா சார் உங்களுக்கு என் மணி விழா வாழ்த்துக்கள். அன்புடன் பரணி .
Subramaniam Ramajayam
26th May 2014, 05:49 AM
MANY many happy returns my dear raghavender we pray for all good happenings and peaceful retirement life, have a GREAT DAY.
MY BLESSINGS AND PRAYERS.
tacinema
26th May 2014, 09:12 AM
திரு ராகவேந்திரா அவர்களுக்கு, தங்களுக்கு மணி விழா பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். தாங்கள் எல்லா வளமும் பெற எல்லாம் வல்ல ஆண்டவனை பிராத்திக்கிறேன்.
eehaiupehazij
26th May 2014, 09:41 AM
Dear Raghavendar Sir. Greetings. wish you a long and prosperous life
gkrishna
26th May 2014, 10:45 AM
dear ragavendra sir
ennduya namaskarangal.
ungal aseervanthangal vendum
regards
gk
RAGHAVENDRA
26th May 2014, 10:50 AM
நண்பர்களே,
60 ஆண்டுகள் நிறைவு பெற்றது என் உடலுக்கு, ஆனால் நடிகர் திலகம் வாழும் என் இதயம் என்றும் இளமையானது. அது சிரஞ்சீவியாய் ஒரே பிராயத்தில் நிலைத்திருக்கும். தேதி பிரகாரம் 28ம் தேதி தான் 60 ஆண்டுகள் நிறைவடைகின்றது. ஆனால் பஞ்சாங்கம் பிரகாரம் நேற்று அமைந்ததால் அபிராமியின் சந்நதியில் நாங்கள் எளிமையாக இறைவனைக் கும்பிட்டு வந்தோம். ஏராளமானோர் இதே போல் வந்திருந்ததால் அங்கே நிலவிய இரைச்சலினாலும் ஹோமம் போன்று சடங்குகளில் ஈடுபட்டிருந்ததினாலும் கைப்பேசியை மௌன நிலையில் இருத்தியதால் அழைப்புகளைக் கவனிக்கவோ அல்லது பதிலளிக்கவோ இயலவில்லை. எனவே கோபாலின் அழைப்பினை இரவில் தான் கவனிக்க முடிந்தது. முதலில் அதற்காக அவரிடம் என் மன்னிப்பைக் கோருகிறேன்.
கோபால், கார்த்திக், கோபு, சின்னக்கண்ணன், சித்தூர் வாசுதேவன், ஹைதராபாத் ரவி, ராகுல்ராம், சிவா, பரணி, ராமஜெயம், சிவாஜி செந்தில், tacinema, மற்றும் தொலைபேசியில் வாழ்த்துச் சொன்ன பெங்களூர் நண்பர்கள் வினோத், குமார், கோல்ட்ஸ்டார் சதீஷ், கே.சந்திரசேகரன், நேரில் வாழ்த்துச் சொன்ன முரளி சார் உள்பட ஒவ்வொருவருக்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பிற்கினிய நெய்வேலி வாசு சார் எனக்களித்த இந்த கண்கொள்ளா நிழற்படத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் என் உள்ளம் கனிந்த நன்றி.
http://i1.ytimg.com/vi/HVly9jHBF0o/maxresdefault.jpg
என்னைவிட இங்கே உள்ள அனைவருமே இளையவர்கள் என நான் யூகிக்கிறேன், பெரியவர் சுப்ரமணியம் ராமஜெயம் அவர்களைத் தவிர. எனவே ஒவ்வொருவருக்கும் என் மனப்பூர்வமான ஆசிகள். பெரியவர் ராமஜெயம் அவர்களுக்கு என் பணிவான நமஸ்காரங்கள்.
KCSHEKAR
26th May 2014, 11:01 AM
மணிவிழா காணும் திரு.ராகவேந்திரன் அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
RAGHAVENDRA
26th May 2014, 11:02 AM
உங்களிடம் இருக்கும் "இல்லைகள் "
நீங்கள் டெலிபோனில் கிடைப்பது இல்லை
Whatsapp இல் வருவதும் இல்லை
SMS யை தொடுவதும் இல்லை
facebook , twitter இவைகளை பற்றி எண்ணுவதும் இல்லை
இந்த திரியுலும் உலா வருவதும் இல்லை
எங்களிடம் இருக்கும் "உண்டுகள் "
NT யை மறந்தால் உங்களையும் மறக்க வாய்ப்பு உண்டு
நல்ல தமிழை மறுத்தால் உங்களையும் மறுக்க வாய்ப்பு உண்டு
மற்ற பதிவுகளையும் மனம் உவந்து பாராட்டும் குணம் எங்களிடையே மடிந்து விட்டால் , உங்களை பற்றிய எங்கள் சிந்தனைகளும் மடிந்து விடும் வாய்ப்பு உண்டு
உழைப்பை உதாசீனம் செய்யும் மனம் வந்து விட்டால் , உங்களையும் நாங்கள் இழக்கும் வாய்ப்பு உண்டு
சமீபத்தில் உங்கள் உடம்பு முடியவில்லை என்றவுடன் இந்த திரி ஒரு ஆலயமாகியது - எங்கும் விளக்குகள் எரிந்தன - எல்லோருக்கும் ஒரே நினைவு - எல்லா திரிகளிலும் அண்ணாமலை தீபத்தைதான் கண்டோம் - நீங்கள் மீண்டும் எங்களுக்கு கிடைத்தவுடன் இறைவன் ஒருவன் இருப்பது உறுதியானது
இன்று ஒருவர் ஆரம்பித்தார் உங்களை வாழ்த்த - நங்கள் அவரை தொடர்ந்தோம் - எங்களை தொடர்வது எங்கள் ப்ராத்தனைகளும் , வாழ்த்துக்களும் - 60 - 75 ஆகி - 75 - 100 ஆகி அதற்கும் மேல் நீங்கள் என்றும் எங்களுடன் பவனி வர விழைகிறோம் - ஆண்டவன் செவி சாய்ப்பானாக !!
டியர் ரவி,
என் இணைய இணைப்பு அடிக்கடி துண்டிக்கப் பட்டு பதிவுகள் இடும் போது பாதிக்கப் படுகின்றது. எனவே மிகுந்த சிரமத்திற்கிடையே படப்பட்டியல் திரியினில் முழு கவனம் செலுத்தி அதனை மட்டும் பதிவிட்டு வருகிறேன். வேறு இணைய இணைப்புக்கு ஏற்பாடு செய்ய உள்ளேன். அது கிடைத்தவுடன் நிலைமை சீராகி விடும் என நம்புகிறேன்.
தங்களைப் போன்ற புதிய தலைமுறை ரசிகர்களின் எழுத்துக்களைப் படிப்பதில் உள்ள ஆனந்தம் ஈடு இணையற்றது. தாங்களும் ராகுல்ராமும் புதிய அணுகுமுறையில் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி ஆய்ந்து எழுதும் போது அதனை இடையில் மறித்து என்னுடைய பதிவுகளை இடுவதை நான் விரும்பவில்லை. தொடர்ந்து எழுதுங்கள். நிச்சயம் அவ்வப்போது நான் இங்கு பங்கு கொள்கிறேன்.
அன்புடன்
KCSHEKAR
26th May 2014, 11:11 AM
Dear Raghul Ram, Nice write-up about 'Vaira Nenjam', a movie close to my nenjam. I feel I can re-produce my previous write-up abput plus and minus of this film. Here is the 'meel padhivu'....
‘வைர நெஞ்சம்’ படத்தின் ப்ளஸ் பாயிண்ட்டுகள்:
ஆனால் இத்தனை மைனஸ்களையும் தாண்டி படம் விரும்பக் கூடியதாக அமைந்துள்ளதுதான் ‘வைர நெஞ்ச’த்தின் சிறப்பு.
டியர் கார்த்திக் சார்,
ராகுல் ராமின் வைர நெஞ்சம் பதிவிற்கு, தங்களுடைய பிளஸ் - மைனஸ் அலசல் மிகவும் பொருத்தம். மீள் பதிவாக இருந்தாலும், நீண்ட இடைவேளைக்குப் ிறகு தங்களுடைய பதிவைக் கண்டதால் தனிச்சிறப்பைப் பெற்றதாக அமைந்துள்ளது.
parthasarathy
26th May 2014, 11:17 AM
அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்களுக்கு,
இனிய மணி விழா வாழ்த்துக்கள்.
வேணும் ஆசீர்வாதம்,
இரா. பார்த்தசாரதி
sss
26th May 2014, 12:21 PM
திரு ராகவேந்திரா @ வீயார் அவர்களுக்கு,
தங்களுக்கு மணி விழா பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.எல்லா வளமும் நலமும் பெற இறைவனை வேண்டுகிறேன்.
eweaxagayx
26th May 2014, 12:46 PM
உயர் திரு ராகவேந்திரன் அவர்களுக்கு
என் ஆசிர்வாதங்கள். அடியேன் வணங்கும் எம்பெருமான்களான திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி, ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி நல்லருளால் தீர்க்காயுசுடன், நோய் நொடி இல்லா வாழ்க்கை வாழ அவ்வெம்பெருமான்களை ப்ரார்த்திக்கிறேன்.
HARISH2619
26th May 2014, 01:12 PM
மணிவிழா காணும் திரு ராகவேந்தர் சாருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
uvausan
26th May 2014, 02:00 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/GEDC4996-2_zpsf121fdd4.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/GEDC4996-2_zpsf121fdd4.jpg.html)
என்னவோ தெரியவில்லை - கப்பலோட்டிய தமிழன் ஒரு தோல்வி படமாக இருக்காது என்பதுதான் என் கருத்து - அதுவும் பந்துலுக்கு நஷ்ட்டத்தை கொடுத்தது என்பதை ஒரு காலும் ஏற்று கொள்ள முடியாது - NT யே சொல்லியிருந்தாலும் அவரின் கருத்தை கூட நம்ப முடியவில்லை - தனது வெற்றி என்ன என்பதையும் , வசூலில் எப்படிப்பட்ட பிரளயத்தை அவைகள் உண்டு பண்ணின என்பதையும் பிறர் சொல்லித்தான் அவருக்கே புரிய வந்தது - உதாரணம் - திரிசூலம் - MGR சொல்லித்தான் NT கே தெரியுமாம் அவர் படங்கள் தான் அன்றும் இன்றும் என்றும் வசூலில் ஒரு சகாப்த்தத்தை உண்டு பண்ண கூடியவைகள் என்று - "உங்கள் ரெகார்ட்ஸ்யை உடைத்துமின்றி என்னுடைய எல்லா ரெகார்ட்ஸ் களையும் உடைத்து தகர்த்து எரிந்து விட்டீர்களே தம்பி என்று உரிமையுடன் MGR , NT யிடம் சொன்னாராம் ---
பம்மலாரின் அலசல்களில் இருந்து எடுக்க பட்ட சில உண்மைகள்
" "கப்பலோட்டிய தமிழன்", இலங்கையின் கொழும்பு 'கிங்ஸ்லி' திரையரங்கில் 100 நாட்கள் ஓடி வெற்றிவாகை சூடியுள்ளது."
சிவா சார் - இதன் ஆவணம் கிடைக்குமா ?
adiram
26th May 2014, 02:00 PM
Anbulla Raghavendhar sir,
Many many happy returns on your wonderful 60-th Birthday.
Long live Raghavendhar sir.
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.