PDA

View Full Version : Makkal tv



R.Latha
25th September 2013, 11:49 AM
காலை வணக்கம்

மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘காலை வணக்கம்’ நிகழ்ச்சியில், ‘இந்நாள் பொன்னாள்’ என்ற தலைப்பில் முதல் நிகழ்ச்சியை தொடங்குகிறார், சொற்பொழிவாளர் துரை நமசிவாயம். எந்நாளும் மகிழ்ச்சித் திருநாளே என்ற கோணத்தில் இந்த சொற்பொழிவு அமைந்திருப்பது சிறப்பு. தொடர்ந்து பூவுலக பொக்கிஷங்களான மூலிகைகளின் சிறப்பியல்புகளை பாடலுடன் விளக்குகிறார், அறிவியல் சித்தர் அன்பு கணபதி.

அடுத்து ‘நலம் தரும் மூலிகை’ பகுதியில் வள்ளலாரின் வைர வரிகளை பாடலாக பாடி அர்த்தங்களையும் அழகுற எடுத்துரைக்கிறார், பாரதி திருமகன்.

Daily Thanthi

bis_mala
5th October 2013, 06:16 PM
carnatic music is also excellent.