PDA

View Full Version : Thanthi Tv



R.Latha
28th August 2013, 12:13 PM
தந்தி டி.வி.யில் குருமூர்த்தியுடன் நேர்காணல்

தந்தி தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு விறுவிறுப்பான நேர்காணல் நிகழ்ச்சியான ‘‘கேள்விக்கென்ன பதில்’’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நேர்காணலில் ‘ஆடிட்டர்’ குருமூர்த்தி கலந்து கொள்கிறார்.

இதில் மன்மோகன்சிங் அரசின் பொருளாதார கொள்கையின் குழப்பங்கள், இந்திய ரூபாய் மதிப்பின் பலத்த சரிவு ஏன்?, அன்னிய செலாவணி, தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வுக்கு காரணம், வரும் பாராளுமன்ற தேர்தலில் மோடியின் தலைமை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து சரமாரியான கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பதை காணலாம்

R.Latha
28th August 2013, 12:15 PM
தந்தி டிவியில் இதுவும் சென்னைதான் ஆவணப்படம் ஒளிபரப்பு

தந்தி தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகும் ‘‘சுவடுகள்’’ நிகழ்ச்சியில் நாளை இரவு 7 மணிக்கு ‘‘ஜிப்ஸி காலனி: இதுவும் சென்னைதான்’’ என்ற ஆவணப் படம் ஒளிபரப்பாகிறது. இருபதாண்டுகளுக்கு மேலாக பழங்குடி மக்கள் பலர் சென்னை மாநகரின் மையப் பகுதியில் வாழ்ந்தபோதும் அவர்கள், வளர்ச்சியடையாதவர்களாக உள்ளதை பற்றி விளக்கும் படம் இது.

கல்வியும், வேலைவாய்ப்பும் அருகில் இருந்தும் இவர்களுக்கு அது எட்டாக்கனியானது ஏன்? இது அரசுகளின் தவறா? அக்கறை கொள்ளாத மக்களின் தவறா? பாரம்பரியத் தொழில்களை இழந்த இவர்கள் வாழ்க்கை முறை என்ன? நலிந்து போன இவர்களை மீட்க என்ன வழி?

இது குறித்த முக்கிய தொகுப்பை அலசி படம் பிடித்துள்ளதை காணலாம்.

R.Latha
28th August 2013, 12:17 PM
தந்தி டிவி.யில் ‘கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் கர்னல் ஹரிகரன்

தந்தி டி.வி.யில் வாரந்தோறும் ஞாயிறன்று மாலை 6.30 மணிக்கு பிரபலங்கள் பங்குபெறும் ‘‘கேள்விக்கென்ன பதில்’’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த வார நேர்காணல் நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ‘கர்னல் ஹரிகரன்’ கலந்து கொள்கிறார்.

அண்மைக்காலமாக எல்லைப்பகுதியில் நிலவி வரும் பதற்றம், பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நம் வீரர்களை சுட்டு வீழ்த்துவது, வெளியுறவு கொள்கையில் உள்ள தெளிவற்ற தன்மை, மும்பை கடற்படை நீர்மூழ்கி கப்பல் விபத்து, என்பது குறித்த, பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்து பேசுவதை காணலாம்.

R.Latha
28th August 2013, 12:18 PM
சுவடுகள் நிகழ்ச்சியில் ‘‘காதலும் நீதியும்’’ ஆவணப்படம்

உங்கள் தந்தி டி.வி.யில் நாளை இரவு 9 மணிக்கு இடம்பெறும் சுவடுகள் பகுதியில் ‘‘காதலும் நீதியும்’’ என்ற ஆவணப்படம் ஒளிபரப்பாகிறது. இதில் தர்மபுரியின் திவ்யா–இளவரசன் காதல் வழக்கு; அதைத் தொடர்ந்து சேரன் மகள் தாமினி–சந்துரு காதல் வழக்கு; ஆகியவைகள் குறித்தும்

காதலர்களுக்கு தமிழ்ச்சமூகம் நியாயம் செய்கிறதா? சங்க காலத்திலேயே காதலுக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்ததா? காதல் திருமணங்கள் ஆதரிக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் எவ்வளவு மதிக்கப்படுகின்றன? என்பது குறித்த பதில்களை சுவடுகள் நிகழ்ச்சியில் காணலாம்.

R.Latha
2nd September 2013, 01:47 PM
தந்தி டி.வி.யில் பாக்ஸ் ஆபீஸ் 1, 2, 3....

தந்தி டி.வி.யில் ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, ‘பாக்ஸ் ஆபீஸ் 1,2,3..’ வாரம் ஐந்து புதுப் படங் களின் தரவரிசை குறித்து பேசப்படும் இந்த நிகழ்ச்சியில், தமிழ்ப் படங்கள் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹாலிவுட் படங்களின் தரவரிசையும் இடம் பெறும். கூடுதல் தகவலாக படத்திற்கான பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் குறித்தும் துல்லியமாக தெரிவிக்கப்படும்.

நிகழ்ச்சித் தொகுப்பாளர்: இயக்குநர் ஷரவணன் சுப்பையா. நிகழ்ச்சி இயக்குநர்: டேனியல்.

R.Latha
2nd September 2013, 01:49 PM
நடிகை ராதிகா சரத்குமாருடன் நேர்காணல்

தந்தி டி.வி.யில் ஞாயிறுதோறும் காலை 11 மணிக்கு அரசியல் பிரபலங்கள் பங்குபெறும் ‘கேள்விக்கென்ன பதில்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இன்றைய நிகழ்ச்சியில் நடிகை ராதிகா சரத்குமார் கலந்து கொள்கிறார்.

இதில் திரைப்பட வாழ்க்கையில் கற்றதும் பெற்றதும், சின்னத்திரையில் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி, இன்றைய இளைஞர்களின் மனநிலை, அறிமுகப்படுத்திய பாரதிராஜாவின் அன்பு, அமெரிக்காவில் இந்திய சுதந்திர தின விழாவில் கணவர் சரத்குமாருடன் பங்கேற்றபோது ஏற்பட்ட சிலிர்ப்பான அனுபவங்கள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பதில் அளிப்பதை காணலாம்.

Nandri.Daily Thanthi

R.Latha
25th September 2013, 11:55 AM
தந்தி டி.வி.யில் புதிய நிகழ்ச்சி-வழக்கு

தமிழகத்தின் எந்த மூலையில் ஒரு குற்றம் நடந்தாலும் அதை தந்தி டி.வி. பதிவு செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளது. இந்த குற்ற நிகழ்வுகளை ஆவணப்படுத்தி ‘‘வழக்கு’’ என்ற பெயரில் புத்தம் புதிய நிகழ்ச்சியாக பார்வையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

பக்கத்து வீட்டில் நடந்த ஒரு கொலையாக இருந்தாலும், தொலைதூரம் செல்லும் பஸ்சில் நடந்த பலாத்காரமாக இருந்தாலும், 10 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டு, 8 கோடி என கணக்கு காட்டப்பட்டாலும் அதை அப்படியே மக்களுக்கு சொல்வதுதான் ‘‘வழக்கு’’ நிகழ்ச்சி.

அது மட்டுமின்றி 50 வருடங்களுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்ட நிகழ்வுகளும் வழக்கு நிகழ்ச்சியில் எடுத்துக் கொள்ளப்படுகிறது, அதாவது செக்ஸ் டாக்டர் பிரகாஷ் மீதான வழக்கு தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது உள்பட பிரபலமான வழக்குகளை பதிவேடு பகுதியில் காணலாம்.

மேலும் நமது சட்டங்களை பற்றி மக்களுக்கு எவ்வளவு தூரம் தெரியும்? காவல் நிலையம் செல்வது சமீப காலமாக அன்றாடம் வேலைக்கு போவது போன்று மாறி விட்டது. உங்கள் மீது பெட்டி கேஸ் போடப்பட்டால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன? குண்டாஸ் வழக்கை எதிர்கொள்வது எப்படி? இது போன்ற சந்தேகங்களுக்கும் விடையளிக்கும் ஒரு முழுமையான தொகுப்பாக வந்திருக்கிறது ‘வழக்கு’ நிகழ்ச்சி.

தந்தி டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது, இந்த நிகழ்ச்சி.

R.Latha
7th October 2013, 12:13 PM
தந்தி டி.வி.யில் நட்புடன் அப்சரா

சனிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு தந்தி டி.வியில் ஒளிபரப்பாகும் ‘‘நட்புடன் அப்சரா’’ நிகழ்ச்சியில், திரை பிரபலங்கள் தங்கள் வாழ்வில் நடந்தவற்றை மறைக்காமல் சொல்லுகிறார்கள். அதுவே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணம். சுவாரஸ்யங்களோடு சூடு பறக்கும் கேள்விகளுக்கும் ஜில்லென்று பதில் கிடைக்கும் மாறுபட்ட நிகழ்ச்சியாகவே இருக்கிறது, ‘நட்புடன் அப்சரா.’

ஒவ்வொரு வாரமும் ஆரவாரத்துடன் நகரும் இந்த நிகழ்ச்சியில் திரை நட்சத்திரங்கள் திரைக்கு பின்னால் நடப்பவற்றையும் விரும்பி சொல்ல முன்வருகிறார்கள். நட்சத்திரங்களுக்கே தெரியாமல் அவர்களைப் பற்றிய சுவாரஸ்யங்களை அவர்களுடைய நெருங்கிய பிரபலங்கள் தொலைபேசி வாயிலாக பகிர்ந்து கொள்வதால் நிகழ்ச்சி கூடுதல் வரவேற்பை பெற்றுள்ளது.

இன்றைய நிகழ்ச்சியில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். வழக்கமான பேட்டிகள் போல் இல்லாமல் எல்லோரையும் ரசிக்க வைக்கும் வசியத்தை கொண்டுள்ளது ‘நட்புடன் அப்சரா’ நிகழ்ச்சி.

R.Latha
7th October 2013, 12:14 PM
தந்தி டி.வி.யில் வெற்றிப்படிக்கட்டு

உங்கள் தந்தி டி.வியில் திங்கள் முதல் வெள்ளிவரை நாள்தோறும் மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, ‘வெற்றிப்படிக்கட்டு’. இந்த நிகழ்ச்சியில் கல்வி சம்பந்தமான அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.

வேலைவாய்ப்பின்றி தவிப்பவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியாகவும் இருக்கிறது. தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள் குறித்த சந்தேகங்களுக்கும், இந்த நிகழ்ச்சியில் தெளிவு கிடைக்கும். அனுபவம் வாய்ந்த கல்வியாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் ஐயங்களை போக்குகிறார்கள்.

என்ன படிக்கலாம்? எந்த துறையில் தற்போது வேலை வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது? எந்த படிப்பை தேர்ந்தெடுத்தால் எதிர்காலத்தில் வேலை கிடைக்கும் என்பதில் இருந்து, வாழ்க்கை கல்விக்கு தேவையான அனைத்து விஷயங்களும் அலசப்படுகின்றன. எதிர்கால சந்ததிகளின் அறிவு வேட்டைக்கு இந்த நிகழ்ச்சி உணவாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

R.Latha
9th October 2013, 12:23 PM
தந்தி டி.வி.யில் வெற்றிப்படிக்கட்டு

உங்கள் தந்தி டி.வியில் திங்கள் முதல் வெள்ளிவரை நாள்தோறும் மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, ‘வெற்றிப்படிக்கட்டு’. இந்த நிகழ்ச்சியில் கல்வி சம்பந்தமான அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.

வேலைவாய்ப்பின்றி தவிப்பவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியாகவும் இருக்கிறது. தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள் குறித்த சந்தேகங்களுக்கும், இந்த நிகழ்ச்சியில் தெளிவு கிடைக்கும். அனுபவம் வாய்ந்த கல்வியாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் ஐயங்களை போக்குகிறார்கள்.

என்ன படிக்கலாம்? எந்த துறையில் தற்போது வேலை வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது? எந்த படிப்பை தேர்ந்தெடுத்தால் எதிர்காலத்தில் வேலை கிடைக்கும் என்பதில் இருந்து, வாழ்க்கை கல்விக்கு தேவையான அனைத்து விஷயங்களும் அலசப்படுகின்றன. எதிர்கால சந்ததிகளின் அறிவு வேட்டைக்கு இந்த நிகழ்ச்சி உணவாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Thanks. Daily Thanthi.

R.Latha
13th November 2013, 01:11 PM
தந்தி டி.வி.யில் சந்தை

வணிகம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்பது உணர்த்தும் வகையில், தந்தி டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘‘சந்தை.’’

உள்ளூர் சந்தை முதல், உலகச்சந்தை வரையிலான நுட்பங்கள் விரிவாக ஆராயப்படுகின்றன. நிகழ்ச்சியில் வணிகத்தின் ரகசியங்களும் பரிமாறப்படுகின்றன. தானியங்கள் முதல் தங்கம் வரையிலான முதலீடுகள் மற்றும் அதற்கான வழி
முறைகளையும் அலசுகிறது.

சந்தை செய்திகள், பங்குச்சந்தை, தங்கம் விலை உள்ளிட்டவை குறித்தும் நிபுணர்கள் நேரடியாக பதில் தருகிறார்கள்.

பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் புதிய செய்திகள், ஏற்றம் தரும் முதலீடுகள் முதல் மாற்றம் தரும் தொழில் யுக்திகளை பற்றிய செய்திகளை நேயர்களுக்கு வழங்குகிறது, சந்தை செய்திகள். முதலீட்டாளர்களுக்கு மட்டுமின்றி எல்லோருக்குமே பயன் தரக்கூடியது இந்த சந்தை.

R.Latha
13th November 2013, 01:13 PM
தந்தி டி.வி.யில் செய்தித்தளம்

உங்கள் தந்தி டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ‘‘செய்தித்தளம்’’ ஒளிபரப்பாகிறது. அன்றைய செய்திகளை அன்றே விவாதிக்கும் செய்தித்தளம் பகுதியில், ஒரு முக்கிய நிகழ்வு அலசி ஆராயப்
படுகிறது. ஒட்டு மொத்த செய்திகளை உள்ளடக்கிய செய்தித்தளம் எல்லோரும் காணவேண்டிய களமாகும்.

செய்திகளின் முக்கியத்துவம் அறிந்து, அந்த செய்திகளை அன்றைய தினமே விரிவாகவும், ஆழமாகவும் விவாதிக்கும் செய்தித்தளத்தின் வரவு, இரவு நேரத்தின் தவிர்க்க முடியாத உறவாகவே மாறியிருக்கிறது. சுவாரஸ்ய நிகழ்வுகளை ஊர்க்குருவி, நாட்டு நடப்பு, உலக உலா என வெவ்வேறு வடிவங்களில் சுருக்கமாகவும், சுவையாகவும் செய்தித்தளம் தருகிறது. மொத்தத்தில் நம் சிந்தனையில் புகுத்திக்கொள்ள ஏராளமான செய்திகள் செய்தித்தளத்தில் இருக்கின்றன.

R.Latha
13th November 2013, 01:15 PM
சமையல் குருகுலம்

உங்கள் தந்தி டி.வி.யில் ஞாயிறுதோறும் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘சமையல் குருகுலம்’ நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களுக்கான களமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக கேட்டரிங் கல்லூரி மாணவர்களை திரட்டி அவர்களில் சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுக்கும் வேலையும் இப்போது நடந்து வருகிறது.

நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 40 கேட்டரிங் கல்லூரி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களில் இருந்து 8 மாணவர்கள் பிரித்தெடுக்கப்பட இருக்கிறார்கள். அவர்களுக்கு வைக்கப்படும் போட்டிகளின்அடிப்படையில் வெற்றியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர்.

வெற்றி பெறும் சமையற்கலை வல்லுனர்களுக்கு ஆச்சரியமூட்டும் விருதுகளும் பரிசுகளும் காத்திருக்கின்றன. தலை சிறந்த ‘செப்’களை உருவாக்கும் இந்த முயற்சியில், ஏற்கனவே சமையற்கலையில் தேர்ச்சி பெற்ற இருவர் உறுதுணையாக இருப்பர். எல்லோரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது, இந்த ‘சமையல் குருகுலம்’ நிகழ்ச்சி.

nandri.dinamani.

R.Latha
12th December 2013, 12:22 PM
பதிவு செய்த நாள் : Dec 06 | 04:03 pm

தந்தி டி.வி.யில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிக்கு ‘‘தெனாலி தர்பார்’’ ஒளிபரப்பாகிறது. இரவு நேரத்தை காமெடி கலாட்டாக்களால் வசீகரிக்கும் தெனாலி தர்பார், ஐம்பது எபிசோடுகளை தாண்டி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறது. கலகலப்பாகவும், கண்ணியம் குறையாமலும் நகைச்சுவைகளை அள்ளி தெளிக்கும் இந்த நிகழ்ச்சி, நேயர்களின் சிரிப்புகளுக்கு சொந்தமாகியுள்ளது.

ராண்டி மற்றும் குட்டிச்சுவர் பாய்ஸ்பேண்ட் இசை விருந்தில் நாளுக்கு நாள் புதுப்பொலிவுடன் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை நகைச்சுவையோடு கொண்டாடுகிறார்கள். சிரிக்கவும், சிந்திக்கவும் சொல்லித்தரும் தெனாலி தர்பார், சில நேரங்களில் சிறகடித்து பறக்கவும் செய்து விடுகிறது.

R.Latha
17th December 2013, 12:14 PM
வெற்றிப்படிக்கட்டு

உங்கள் தந்தி டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 2.30 மணிக்கு வெற்றிப்படிக்கட்டு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. கல்வி சம்பந்தமான அனைத்து கேள்விகளுக்கும் வெற்றிப்படிக்கட்டு விடை சொல்கிறது. நாளுக்கு நாள் அறிமுகமாகும் புதிய படிப்புகள் குறித்தும், அவை தொடர்பான சந்தேகங்கள் பற்றியும் தேர்ந்த நிபுணர்கள் விளக்கம் அளிக்கிறார்கள். 10–ம் வகுப்பு மற்றும் 12–ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு, மாணவர்களின் சந்தேகங்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

வேலை வாய்ப்பின்றி தவிப்பவர்களுக்கும் தகுந்த ஆலோசனைகள் பெற்றுத் தருகிறது இந்த வெற்றிப்படிக்கட்டு. அனுபவம் வாய்ந்த கல்வியாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் ஐயங்களை போக்குகிறார்கள். தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள் குறித்த சந்தேகங்களுக்கும், இந்த நிகழ்ச்சியில் தெளிவு கிடைக்கும்.

என்ன படிக்கலாம்? எந்த படிப்பை தேர்ந்தெடுத்தால் எதிர்காலத்தில் வேலை கிடைக்கும் என்பதையும் வெற்றிப்படிக்கட்டு உயிர்ப்புடன் விதைக்கிறது. வாழ்க்கை கல்விக்கு தேவையான அனைத்து விஷயங்களும் அலசப்படுகின்றன. எதிர்கால சந்ததிகளின் அறிவு வேட்டைக்கு இந்த நிகழ்ச்சி நிச்சயம் உணவாக அமையும்.
Nandri.DailyThanthi.

R.Latha
17th December 2013, 12:15 PM
உங்கள் தந்தி டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, மைதானம். விளையாட்டுப் போட்டிகளை விறுவிறுப்புடன் தரும் இந்த நிகழ்ச்சியில், உள்ளூர்போட்டிகள் முதல் சர்வதேச போட்டிகள் வரை அனைத்தையும் அலசுகிறார்கள்.விளையாட்டு உலகின்அத்தனை நிகழ்வுகளையும் அப்படியே செய்திகளாக்கித் தருவதில் தனக்கென தனியிடம் பிடித்திருக்கிறது, இந்த மைதானம். விரர்களின்உற்சாகத்தையும் உத்வேகத்தையும் குறைவில்லாமல் பிரதிபலிக்கம் இநத நிகழ்ச்சி, எல்லோரது வரவேற்பையும் பெற்றுள்ளது.

விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவர்கள் மட்டுமல்லாது அனைவரையுமே கவர்ந்ந்துள்ள மைதானம்பல சாதனையாளர்களை உருவாக்கும் களம் என்பதில் சந்தேகமில்லை. வீரத்தை பறை சாற்றும் விளையாட்டுக்களும் உண்டு. விவேகத்தால் வெற்றி காணும் விளையாட்டுக்களும் உண்டு. இவை எல்லாவற்றையுமே கண்டுணர்ந்து சொல்கிறது, மைதானம்.

சாதிக்கத் துடிப்பவர்களை உந்தித் தள்ளும் இந்த மைதானம், தந்தி டிவி தரும் வெற்றிக்கான களம்.