chinnakkannan
26th August 2013, 02:07 PM
(ரொம்ப நாளைக்கு முன் எழுதியது..)
நிழல் (ஒரு நாடகம்)
சின்னக் கண்ணன்
(மேடை அமைப்பு: அரங்கில் மூன்று வீடுகளின் கதவுகள்; நடு வீடு கொஞ்சம் உயரமாக வைத்துக் கொள்ளலாம். வலது மூலை வீட்டுக்கும் நடு வீட்டுக்கும் கொஞ்சம் காம்பெளண்ட் போல அமைத்துக் கொள்ள வேண்டும்.)
காட்சி 1
(ஒளி வரும் போது இடது மூலை வீட்டின் கதவை மட்டும் காட்டுகிறது. ஒரு பெண் கைக்குழந்தையுடன் வருகிறாள்..வலது கையில் சாதக் கிண்ணம்.)
பெண்: சமர்த்தோல்லியோ.. வாய் காமிம்மா... ஆ.. அம்..
குழந்தை: தோ..தோ..
பெண்: தோ.. தோ.. தானே.. அதோ எதிர் வீட்டு வாசல்ல நின்னுக்கிட்டிருக்கே... ஏய்..ச்சூ.. வா..இங்கே.. சே.. இதான், சமயத்தில கால வாரி விட்டுடறது. எப்பவும் இங்க தானே நிக்கும்.. இன்னிக்கு என்ன எதிர் வீட்டில... ஆமா.. வாலை ஆட்டறதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை..பா..பா.. நீ வாயத் தொற கண்ணம்மா.. த்தோ..த்தோ..இதோ வந்துடும்
குழந்தை: ம்மா... த்தோத்தோ..
பெண்: உயிரை வாங்காதடா..உங்க அப்பா மாதிரியே நீயும் இருக்கியே..பாரு..மணி எட்டாகப் போறது.. ஆளைக் காணோம்.. எங்க போனாரோ..மறுபடியும் பார்ட்டியா என்னன்னு தெரியலை..வாயைத் திற..ஆ...
(வள் என்று குலைக்கும் சப்தம்..)
பெண்: பாரு பாரு.. த்தோதோ குலைக்கறது.. கடிச்சுடும்..
குழந்தை: த்தோத்தோ..பா..பா..
பெண்: அது வராதுடா...யாரோ ரோட்டில போறவாளைப் பார்த்துக் குலைக்கறது.. இடியட்.. குழந்தை சாப்பிடறதே.. பக்கத்தில வந்து நிக்க வேணாம்னு தெரிலை பாரேன் அதுக்கு..ஆ.
குழந்தை:ம்மா..ம்மா..கக்கா...
பெண்: தலையெழுத்து.. பிரார்த்த கர்மம்.. நாலு வாய் உள்ள போலை.. அதுக்குள்ள வெளிய போணுமா..வா..
(குழந்தையை இழுத்துக் கொண்டு அவள் உள்ளே செல்ல ஒளி மங்குகிறது..நடுவீட்டின் கதவைத் திறந்து கொண்டு சுந்தர்ராஜன் வருகிறான். ஒளி இல்லை.. சிகரெட் பற்ற வைக்கிறான்.. கதவைத் திறந்து கொண்டு சுகந்தி வர..ஒளி கூடுகிறது...)
சுகந்தி: இந்த எழவை சாப்பிட்ட உடனே குடிக்கணுமா என்ன ?
சுந்தர்ராஜன்: ஏன் ? எப்பவும் நான் செய்யறது தானே... ஆமா..மாடசாமிக்குத் தயார் பண்ணிட்டயா.. பாரேன் என்னைப் பார்த்து வாலாட்டறதை..
சுகந்தி: எல்லாம் சாதம் இருக்கு..இன்னும் பால் விடணும் அவ்வளவு தான்.. பேச்சை மாத்தாதீங்க.. எப்போ சிகரெட் ட விடப் போறீங்க..
சுந்தர்ராஜன்: என்ன இன்னிக்கு திடீர்னு..
சுகந்தி: ஹிந்துல்ல ஒரு ஆர்டிகிள் படிச்சேன்.. அதான் எனக்கு ரொம்ப கவலையா இருக்குன்னா..
சுந்தர்ராஜன்: அசடே.. பேஜ் ஃபில்லிங்க் காக ஏதாவது எழுதியிருப்பான்.. ஒனக்கு ஒண்ணு தெரியுமோ.. அதை எழுதறவனே சிகரெட் குடிச்சுக்கிட்டே எழுதியிருப்பான்..
சுகந்தி: (அவன் கையிலிருக்கும் பாக்கெட்டைப் பிடுங்கி) சிகரெட் ஸ்மோக்கிங் இஸ் இன்ஜிரியஸ் டூ ஹெல்த்.. இதைப் படிச்சுக்கிட்டே நீங்கள்ளாம் இப்படி செய்யறது கொஞ்சம் கூட நல்லால்லை..
சுந்தர்ராஜன்:(சற்றே கோபத்துடன்) உங்க அப்பா நம்ம கல்யாண இன்விடேஷன்ல ஒரு தப்புப் பண்ணிட்டார் உனக்குத் தெரியுமா ?
சுகந்தி: அது ஆகி ஆறு வருஷம் ஆச்சே..அதுக்கென்ன இப்போ..
சுந்தர்ராஜன்: இன்விடேஷன் பின்னால ஒண்ணு ப்ரிண்ட் பண்ணியிருக்கணும் 'Getting married is injurious to mind ' (கொஞ்சம் யோசித்துவிட்டு) some times to health also..
சுகந்தி: யோவ் (கிள்ளுகிறாள்)
குரல்: என்ன இன் ஜீரியஸ் டு ஹெல்த்லாம் பேசிக்கிட்டிருக்கீங்க...
(வலது பக்க மூலையில் ஒளி வர, காம்பெளண்டின் அந்தப் பக்கம் சுவாமிநாதன் நின்று கொண்டிருக்கிறார்)
சுகந்தி: வந்துடுச்சு பக்கத்து வீட்டுக் கிழம்..உடம்பு அங்க இருந்தாலும் காதெல்லாம் இங்க தான் இருக்கும் இதுல ஒரே ஜொள் வேற..
சுவாமி: உனக்குத் தெரியுமா தெரியாதான்னு தெரியலை சுகந்தி.. விஷயம் தெரியுமோ..
சுகந்தி:(எரிச்சலுடன்) என்ன விஷயம் மாமா.. விசு மாதிரி படுத்தறேள்..
சுவாமி: எனக்கு வயசு 59தான் ஆறது.. இப்பல்லாம் எண்பது வயசு வரைக்கும் மனுஷாள்ளாம் உயிரோட இருக்கா.. அப்பத் தான் கிழம்னு நீ சொல்லணும் அதுவும் இன்னும் இருபது வருஷத்துக்கப்புறம் தான் ஜொள் வரும்..உடம்பு கழண்டு போறச்சே...
சுகந்தி: (தனக்குள்) கிழத்துக்கு காது மட்டும் கூர்மை..(வெளியே) ரொம்ப ஸாரி மாமா.. நான் சும்மா..
சுவாமி: சரி சரி..சொன்னது சொல்லியாச்சு..இனி என்ன பண்ண முடியும்.. சும்மாவா சொன்னான் கண்ணதாசன்..சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை.. அப்புறம் இன்னொண்ணும் சொன்னே..ஜொள்.. உனக்கு என்னோட டாட்டர் இன் லா வயசும்மா..அப்படின்னா என்ன அர்த்தம்.. நீ நான் சைட் அடிக்க வேண்டிய பொண் இல்லை ..என் டாக்டர் பையன் சைட்டடிக்கவேண்டிய பொண்..
சுகந்தி: (தனக்குள்) குடும்பமே ஜொள்ளுக் குடும்பம் போல இருக்கு (வெளியில்)- டாக்டரப் பத்தி அப்படிஎல்லாம் சொல்லாதீங்க மாமா...
(வள்ள்.. என்று பின்னணியில் சத்தம் இடைவிடாது கேட்கிறது..)
குரல்: என்ன சார் இந்த நாய் ரோட்டில நடக்க விடமாட்டேங்குது...
சுந்தர்ராஜன்: நீ பாட்டுக்குப் போப்பா..அது ஒண்ணும் பண்ணாது.. சுகந்தி..மாடசாமி ரெஸ்ட்லஸ் ஆகிட்டான். போய் சாதம் எடுத்துக்கிட்டு வா..போட்டுடலாம்..
(சுகந்தி உள் சென்று ஒரு பொட்டலம் போல ஒன்றை எடுத்து வர, சுந்தர்ராஜன் அதை வாங்கிக் கொண்டு இடது மூலையில் மறைகிறான்.. சுகந்தி வீட்டினுள் செல்கிறாள்..சுவாமிநாதன் நின்றுகொண்டிருக்கிறார். சுந்தர்ராஜன் திரும்பி வருகிறான்)
சுவாமி: என்ன சார்.. நாய்க்கு டின்னர் வெச்சுட்டாங்களா..ஏதோ உங்களை மாதிரி ஆட்கள் இப்படி நல்ல காரியம் பண்றதுனால தான் நாட்டில மழை அப்பப்ப பெய்யறது..
சுந்தர்ராஜன்: நா என்ன சார் நல்லது செஞ்சுட்டேன்.. ஏதோ நம்மால ஆனது..கொஞ்சூண்டு சாதம்.. பாவம்..வாயில்லா ஜீவன்..
சுவாமி: வாயில்லா ஜீவன்லாம் சொல்லாதீங்க.. சமயத்தில நாலு பேரை ரோட்டில போக விடமாட்டேங்குது...ஒரே வள்ளுன்ன்னு கொலைக்கறது..very irritating..
சுந்தர்ராஜன்: பாவம் சார் அது.. அது என்ன பண்ணும்..வெளிமனுஷான்னா பயந்துக்குதோ என்னவோ..
சுவாமி: நீங்க அப்படிச் சொல்றீங்க.. இந்த மாதிரி நாய்களுக்கெல்லாம் ஜெனரலாவே டிரெய்னிங் கொடுக்கணும் சார்.. நான் யு.எஸ் ல இருந்தப்ப காக்கர் ஸ்பானியல்னு ஒரு கருப்பு நாய் வெச்சுருந்தேன்..வெரி பிரில்லியண்ட் தெரியுமா.. நான் வீட்டுக்கு வெளில நின்னுக்கிட்டிருந்தேன்னா..உள்ள ஃபோன் சத்தம் கேக்கறதுன்னு வெச்சுக்கோங்கோ.என்ன செய்யும் தெரியுமா..
சுந்தர்ராஜன்: ஃபோனை எடுத்து கேன் ஐ டேக் த மெஸேஜ் னு சொல்லுமாக்கும்..
சுவாமி: கிண்டல் பண்ணாதப்பா..வந்து என்னைப் பிடிச்சு இழுக்கும்..அப்புறம் என்னன்னா..
சுந்தர்ராஜன்: (கொஞ்சம் அவசரமாக) சார்.. கொஞ்சம் வேலை இருக்கு.. வரட்டா..குட் நைட்..
(உள்ளே செல்கிறான்.. நடு வீட்டின் ஒளி மங்கி இருள்..)
சுவாமி: இவனும் என் பையன் மாதிரி தான்.. நான் சொல்றதை இவனும் காதுல வாங்கிக்க மாட்டேங்கறான்..ம்ம்.. காலம்..
(அவரும் உள் செல்ல அவர் வீட்டிலும் இருள்.. இடது பக்க மூலை வீட்டில் ஒளி வர.. அந்தப் பெண்ணும் குழந்தையும் வருகிறார்கள்)
பெண்: கடங்காரி...பாத்ரூம்ல என்ன பாபா படமா காட்டறா.. ஒக்காந்துக்கிட்டு ஒரே அழிச்சாட்டியம் பண்றயே..வா.. வாயைத் திற.. திறம்மா.. ஒரே வாய் தாண்டா..
குழந்தை: ம்மா.. த்தோத்தோ...
பெண்: ஆமா..தோத்தோ தான்.. யார் இல்லேன்னா..பாரு..அது எவ்ளோ சமத்தா சாப்பிட்டுட்டு படுத்துண்டிருக்கு.. வாயைத் திற..ம்ம்..(குழந்தை துப்ப) இடியட்..பேசாம அதையே பெத்துருக்கலாம்..(சோகமாக) ஏய்.. நீயும் ஏண்டா என்னப் படுத்தறே..பாரு உன் அப்பாவை வேற இன்னும் காணோம்..
(பைக்கின் சப்தம் கொஞ்சம் சத்தமாகக் கேட்டு அடங்குகிறது..கூடவே கொஞ்சம் வள் என்று சத்தம்..அரங்கினுள் அந்தப் பெண்ணின் கணவன் நாராயணன் நுழைகிறான்)
நாரா: என்ன சாவித்திரி.. ஏன் இவ்ளோ லேட்டா குழந்தைக்கு ஊட்டறே..
சாவித்திரி: ஆமா..உங்க அருமந்தப் பொண்ணு சாதம்ன வுடனே வாயத் தொறந்துடுவா பாருங்கோ..ஏன் இவ்வளவு லேட்.. மறுபடியும் பார்ட்டியா..
நாரா: (பேச்சை மாற்றி) மொதல்ல இந்த நாயை எங்கயாவது கொடுத்துடணும். பைக்கை நிறுத்தி இறங்கவே முடியலை..ஒரே கொஞ்சல், வள்..க்கீ..ல்லாம் கத்துது..இறங்கின உடனே தாவுது வேற..என்ன பண்ணலாங்கறே..
சாவி: நாய்க்கெல்லாம் மனுஷா எப்போ மிருகமா இருக்கான்னு தெரிஞ்சுடுமாக்கும்..அதான் கண்ணைப் பார்த்தாலே தெரியறதே..
நாரா: வாசல்லயே எல்லாத்தயும் வெச்சுக்கணுமா என்ன..ஆபீஸ்ல ஒரு பார்ட்டி.. ஒருத்தனுக்கு ப்ரமோஷன்.. ஆக்சுவலா எனக்குத் தான் வந்துருக்கணும் அது.. நானே ஏற்கெனவே நொந்து வந்துருக்கேன்.. எதுவும் பேசாத.. உள்ள வா...
சாவி: ஆமா.. ஏதாவது ஒரு சாக்கு..உங்களுக்கெல்லாம்.. சந்தோஷத்திலயும் செய்வீங்க..வருத்தமா இருக்குதுன்னு செஞ்சேன்னும் சொல்வீங்க... போங்கப்பா..
நாரா:(கெஞ்சலுடன்) உள்ள வா சாவித்திரி..
(உள்ளே செல்கிறான்.. சாவித்திரியும் குழந்தையுடன் செல்ல ஒளிமங்கி இருள்)
*************
தொடரும்