PDA

View Full Version : Background Music, Title Music, Preludes and Interludes of Tamil Films Prior to 1980



RAGHAVENDRA
8th June 2013, 06:17 PM
Research on Tamil Film Music can not ignore background music, which includes Title Music, Interludes, Preludes to songs, etc. I went in search in TFM Section but could not find any except the one started by me exclusively for MSV. So here we can share all the musics of other composers, and occasionally that of MSV too if requested by fellow hubbers. Of course, the period is restricted up to the year 1980 where manual orchestra began to fade out giving way for electronic gadgets.

Hope this thread gets a good reception and friends would like it and come forward to share their views and impressions.

To start with, a very rare background music of an Egyptian Dance from the Old Tamil Film Ellorum Vaazha Venndum. The speciality of this song, is the danseur here was none other than the veteran Egyptian actor Laila (of 50s and not the later one). Music composed by Rajan Nagendra.

https://soundcloud.com/veeyaar/ellorum-vazha-vendum-egyptian

RAGHAVENDRA
8th June 2013, 06:20 PM
காத்தவராயன் திரைப்படத்தில் ஓர் அற்புதக் காட்சி. நடிகர் திலகம் ஊர் சுற்றிப் பார்ப்பது போல சூழல். திரையில் பல ஊர்கள் காண்பிக்கப் பட்டுக் கொண்டே வர, அந்தந்த ஊரில் காணும் காட்சிக் கேற்ப நடிகர் திலகம் தன் நடிப்பாலேயே அருமையான முகபாவங்களை வெளிப்படுத்த அதே போல இசை மேதை ஜி.ராமநாதன் அவர்கள் தன் பின்னணி இசையிலும் அமர்க்களப் படுத்தியிருப்பார். திரையில் ஓடும் இடத்திற்கேற்ப இசையை அமைத்திருப்பார். அந்த இசைக் கோப்பு இப்போது நமக்காக.

இந்தக் காட்சியின் சிறப்பை வாசுதேவன் அவர்கள் நடிகர் திலகம் திரைப்படப் பட்டியல் திரியில் மிக அழகாக விவரித்துள்ளார்.

https://soundcloud.com/veeyaar/kaaththavarayan-sivaji-tour

RAGHAVENDRA
8th June 2013, 06:21 PM
மிக மிக அபூர்வமான பின்னணி இசை.

தபால்காரன் தங்கை திரைப்படத்தில் ஷைலஸ்ரீ மற்றும் மலேசியா மகாலிங்கம் கிளப் டேன்ஸ் ஆடும் காட்சியில் ஒலிக்கும் பின்னணி இசை. திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் இசையமைப்பில் மிகவும் அருமையான இசைக் கோர்வை.

https://soundcloud.com/veeyaar/thapal-karan-thangai-club

chinnakkannan
8th June 2013, 07:48 PM
சிவந்த மண்ணில் கப்பலில் வெடிகுண்டு வைக்க் என்.டி யும் மற்றவரும் செல்லும் போது உள்ளே ஒரு நடனம் நடக்கும்..அதுவும் நன்றாக இருக்கும்..
அதே போல் தங்கச் சுரங்கத்திலும் பாடலில்லாமல் இசையுடன் நடனம் வரும் என நினைவு..

RAGHAVENDRA
8th June 2013, 07:54 PM
சின்னக் கண்ணன் சார்
அபாரமான விருப்பம். சற்று முன்னர் தான் இந்த இசையை எம்.எஸ்.வி. பின்னணி இசைத் திரியில் பதிவிட்டுள்ளேன். தாங்கள் அதனை இங்கு விரும்பியிருக்கிறீர்கள். அந்தப் பதிவிற்கான இணைப்பு இதோ

http://www.mayyam.com/talk/showthread.php?8877-BACKGROUND-SCORE-OF-M-S-Viswanathan&p=1050921&viewfull=1#post1050921

chinnakkannan
8th June 2013, 08:07 PM
நைஸ் ராகவேந்திரா சார்..நன்றி.. படத்தில் அது நிஜமாகவே ரொம்ப வித்தியாசமாக இருக்கும்..சிவந்த மண்ணில்..

RAGHAVENDRA
19th June 2013, 12:45 AM
நான் சொல்லும் ரகசியம் திரைப்படத்தின் முகப்பிசை

http://www.mediafire.com/?s035pkpco926x5d

இசை மேதை ஜி.ராமனாதன் அவர்களின் மிகச் சிறந்த இசைக்கு மற்றோர் படம் நான் சொல்லும் ரகசியம்.

RAGHAVENDRA
8th July 2013, 04:27 PM
எஸ்.பாலச்சந்தர் அவர்களின் திரைப்படம் என்றாலே என்றைக்குமே தனி ஆர்வமும் எதிர்பார்ப்பும் இருக்கும். அவருடைய படங்கள் அந்தக் காலத்திலேயே தனி பாணியில் ஆங்கிலப் படங்களுக்கு நிகரான விறுவிறுப்பும் தரமும் நிறைந்து அதற்கென தனி ரசிகர்களை உருவாக்கி வைத்திருந்தன. இது நிஜமா, அவனா இவன், பொம்மை, நடு இரவில் போன்ற படங்கள் எந்தக் காலத்திலும் ரசிக்கக் கூடியவை. குறிப்பாக அவனா இவன் மிகவும் பரபரப்பாக பேசப் பட்ட படம்.

அந்த அவனா இவன் திரைப்படத்தில் நாயகன் தன் காதலியை கொலையை செய்து விட்டு ஒன்றுமே தெரியாதது போல் உலா வருவார், அடுத்த திருமணத்திற்கும் தயாராவார். . ஆனால் இரு குழந்தைகள் அதனைப் பார்த்து விடும். அந்த கொலை நிரூபிக்கப் பட்டதா, அவர் மறுமணம் புரிந்தாரா இல்லை காவலில் சிக்கினாரா என்பதை திரையில் காணுங்கள். ஆனால் அந்தக் கொலைக் காட்சியில் எஸ்.பாலச்சந்தரின் பின்னணி இசை... அட்டகாசமாக இருக்கும். குழந்தைகள் வேடிக்கை பார்ப்பதில் தொடங்கி காதலியுடன் சரசமாக பேசிக் கொண்டே அவளைக் கொலை செய்து அவள் உடலை அப்புறப் படுத்தி விட்டு, காரில் செல்வது, பின்னர் குழந்தைகள் ஓரிடத்தில் நின்று இவரைப் பற்றி வியந்தும் பயந்தும் பேசுவது.. இது தான் காட்சி.

இந்தக் காட்சியின் பின்னணி இசையைத் தான் இப்போது கேட்க உள்ளீர்கள். மிகவும் சில கருவிகள் தான். வயலின், புல்லாங்குழல், பேங்கோஸ் இவற்றுடன் பியானோ மேதை ஹாண்டல் மேனுவல் அவர்களின் பியானோ இசை ...

நம்முடைய இசை அமைப்பாளர்கள் எந்த அளவிற்கு உலகத் தரத்தை அளிக்க வல்லவர்கள் என்பதை அன்றே நி்ரூபித்து விட்டார் எஸ்.பி. அவர்கள். குறிப்பாக வீணையில் இப்படிப் பட்ட புதுமையான நாதமும் ஒலியும் உண்டாக்க முடியும் என்பது குறிப்பிடத் தக்கது.

அவனா இவன் கொலைக்காட்சியின் பின்னணி இசை

http://www.mediafire.com/?ssx2cnh6ks26knk

கொலையின் சிறு சாயல் கூட தெரியாத அளவிற்கு அதை மறைத்து விட்டு அடுத்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்வார் கதாநாயகன். அந்த திருமணப் பத்திரிகையை தங்களுக்கு மிகவும் வேண்டியவரிடம் கொடுக்க குழந்தைகள் ஆவலுடன் வருவார்கள். அந்த வீட்டில் பார்த்தால் அவர்கள் பார்த்த அந்த கொலைகாரன் இருப்பான். பயந்து ஓடி வரும் குழந்தைகள் தாங்கள் வழக்கமாக அமரும் இடத்தில் அமர்ந்து கொண்டு அவனா இவன் என வியந்தும் பயந்தும் பேசுவார்கள். இந்தக் காட்சியில் தான் இயக்குநரின் சாமர்த்தியம் வெளிப் படுகிறது. படம் தொடங்கி கிட்டத் தட்ட 50 நிமிடங்கள் கழித்து குழந்தைகள் இந்த வசனம் பேசும் போது அதனைத் தொடர்ந்து படத்தின் டைட்டில் காட்சி இடம் பெறுகிறது. இதுவும் அந்தக் காலத்தில் பரபரப்பாக பேசப் பட்டது.

அந்த டைட்டில் காட்சியின் பின்னணி இசை... மீண்டும் மீண்டும் தாங்கள் அதனைக் கேட்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை... கேளுங்கள் கேளுங்கள் ... கேட்டுக் கொண்டே இருங்கள்..

அவனா இவன் டைட்டில் இசை

http://www.mediafire.com/?7w4w02bzuzhh3zk

gkrishna
14th September 2013, 02:57 PM
dear ragavender sir
kindly help in getting our favourite Raja title music if possible
How to praise your services .