PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14 15 16

joe
5th September 2013, 01:49 PM
என்ன இது சின்னபுள்ளத்தனமா இருக்கு !!

ஏன் இப்படி சின்ன விஷயத்துக்கெல்லாம் உச்சாணிக் கொப்புக்கு போறீங்கண்ணு புரியல :(

JamesFague
5th September 2013, 02:10 PM
In my view the recognition must come from the Govt. If the family members think the manimandapam for NT it will be
a reality within seconds. But the initiative should come from the Govt for the wonderful and the greatest actor in this earth.

joe
5th September 2013, 02:34 PM
ராதாரவி , சரத்குமார் போன்ற ஒட்டுண்ணிகளும் , சிவாஜி போஸ்டரில் சாணி அடித்தேன் என பெருமைபட்டுக்கொண்ட விஜயகாந்தும் ..இது போன்ற வகையறாக்கள் நடிகர் சங்க தலைவர்களாக இருக்கும் வரை சிவாஜி மணிமண்டபம் நிறைவேறப்போவதில்லை .

சிவாஜி ரசிகர்கள் சேர்ந்து தன்னெழுச்சியாக நிறைவேற்றினால் தான் உண்டு

mr_karthik
5th September 2013, 02:41 PM
அன்புள்ள முரளி சார்,

தங்கள் தலையீடு திரியில் இப்போது மிக மிக அவசியமும் அவசரமும் கூட.

தங்களால் மட்டுமே இப்போது நிலைமையை சீரமைக்க முடியும்....

mr_karthik
5th September 2013, 02:49 PM
அன்புள்ள ஜோ சார்,

கோபால் அவர்கள் மணிமண்டபம் பற்றி பேசவே இல்லை.

நடிகர்திலகத்தின் புகழ் பரப்ப ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடாதவர்கள் எல்லாம் தொடர்ந்து கௌரவப்படுத்த படும்போது, அவர் புகழ்பரப்ப பலன் கருதாமல், தன்னலம் பாராமல் உழைப்பவர்கள் கௌரவப்படுத்தப்பட வேண்டும் என்றுதான் சொல்கிறார்....

joe
5th September 2013, 02:56 PM

கோபால் பதிவுக்கும் என் கருத்துக்கும் சம்பந்தம் இல்லை . அவருடைய பதிவில் மணிமண்டபம் என்ற வார்த்தை இருந்ததால் அந்நேரத்தில் மணிமண்டபம் குறித்து என் மனதில் இருந்ததை பகிர்ந்தேன் .. அவர் சொன்ன மற்ற விடயங்கள் குறித்து எனக்கு கருத்து எதுவும் இல்லை.

mr_karthik
5th September 2013, 04:31 PM
நடிகர்திலகத்தின் ஒவ்வொரு பிறந்த நாள் விழாவிலும், 'பலன் கருதி' அவருடன் நடித்தவர்களை தொடர்ந்து கௌரவப் படுத்துவதைவிட, 'பலன் கருதாமல்' அவர் புகழ் பரப்ப உழைப்பவர்கள் கௌரவப் படுத்தப்பட வேண்டும் என்ற கோபால் அவர்களின் கருத்தில் எந்த தவறும் இல்லை.

பிறந்த நாள், நினைவு நாட்களில் நாட்டின் பல ஊர்களிலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள், மக்கள் நல்வாழ்வு திட்டங்கள், மாணவர் நல உதவிகள், அன்னதான நிகழ்ச்சிகள் இவற்றை பலன் கருதாமல் நடிகர்திலகத்தின் பெயரில் நடத்தி, அவற்றை செய்தித்தாள்களில் இடம்பெறச்செய்வதன் மூலம் நாட்டு மக்கள் மத்தியில் நடிகர்திலகத்துக்கு கௌரவம் ஏற்படுத்தி, அந்தச்செய்திகளை இணையத்தில் பதிப்பதன்மூலம் உலகம் முழுவதும் நடிகர்திலகத்தின் புகழ் பரப்பிவரும் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப் பேரவைத் தலைவர் எங்கள் திரு. சந்திரசேகர் அவர்கள்.......

நடிகர்திலகத்தின் பல்வேறு வெற்றிப்படங்களை, தோல்விப்படங்களாகச் சித்தரித்து சில வலைப்பூ பிரகஸ்பதிகள் நடிகர்திலகத்தின் பெயரையும் புகழையும் இளைய தலைமுறையினர் மத்தியில் டேமேஜ் செய்ய முயன்று அதில் சிறிதுசிறிதாக வெற்றியும் கண்டுவந்த வேளையில் (அதில் எவன் சோற்றில் சிவாஜி மண்ணை அள்ளிப் போட்டார் என்று தெரியவில்லை) , நடிகர்திலகத்தின் முதல் படத்திலிருந்து கடைசிப்படம் வரையில் (எந்த தயாரிப்பாளரிடமும் இல்லாத, எந்த வினியொகஸ்தரிடமும் இல்லாத, சிவாஜி தலைமை மன்றத்தில் கூட இல்லாத, சிவாஜி குடும்பத்தினரிடமும் கூட இல்லாத) சாதனை ஆவணங்களைத் திரட்டி, "பார்.... பார்.... இந்தப்படம் ஓடவில்லையா?, இந்தப்படம் சாதனை நிகழ்த்தவில்லையா?" என்று கேட்டு, பொல்லாங்கு பேசியோரை புறமுதுகிட்டு ஓடவைத்த எங்கள் 'பம்மலார்' திரு சுவாமிநாதன் அவர்கள்....

1970-களில் நடிகர்திலகத்தின் படங்களுக்கு திரையரங்குகளில் சார்ட் வைக்கத்துவங்கி, படிப்படியாக ரசனையை முன்னேற்றி, நடிகர்திலகத்துக்கும், இளைய திலகத்துக்கும் இணைய தளங்கள் துவங்கி, நாள்தோறும் சளைக்காமல் அப்டேட் செய்து வருவதுடன், எங்கெல்லாம் நடிகர்திலகம் பற்றிய அறிய ஆவணங்கள் கிடைக்கின்றனவோ அவற்றை உலகெங்கும் அறியச்செய்ய இணைய தளங்களில் பதித்து, சுருக்கமாக சொன்னால் இழுக்கின்ற மூச்சையும், விடுகின்ற மூச்சையும் 'சிவாஜி, சிவாஜி' என்றே சுவாசிக்கின்ற எங்கள் திரு. ராகவேந்தர் அவர்கள்.....

நடிகர்திலகத்தின் திரைப்பட வரலாறு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்த்திரைப்பட வரலாறு பற்றி தேதி வாரியாக தெரிந்துகொள்ள வேண்டுமா இதோ இவரிடம் சென்றால் கிடைக்கும் என்கிற அளவில் விரல் நுனியில் வைத்திருக்கின்ற எங்கள் 'வரலாற்று விற்பன்னர்' திரு. முரளி சீனிவாஸ் அவர்கள்.....

எண்ணத்தாலும் செயலாலும் எங்கள் நடிகர்திலகத்தின் புகழ் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் சகோதரி எஸ். கிரிஜா அவர்கள்...

நடிகர்திலகத்தின் நடிப்பு என்பது குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது அல்ல. அது உலகளாவியது என்பதை பல்வேறு நடிப்புப்பள்ளிகளின் ஒபீட்டு சான்றுகளோடு ஆணித்தரமாக எடுத்துரைத்த எங்கள் டாக்டர் எஸ். கோபால் அவர்கள்.......

இவர்களையெல்லாம் யார் கௌரவப்படுத்தினால் என்ன, கௌரவப்படுத்தாவிட்டால் என்ன....

உலகெங்கும் பரந்து விரிந்து கிடக்கும் நடிகர்திலகத்தின் லட்சக்கணக்கான ரசிகர்கள் நாங்கள் கௌரவப்படுத்துகிறோம் ஐயா. உங்களுக்கெல்லாம் எங்களையே விருதாகத் தருகிறோம். யாரும் எங்களைவிட்டுப் போக வேண்டாம். இது நீங்கள் எங்கள் மீது கொண்டிருக்கும் அன்பின் மீது ஆணை....

JamesFague
5th September 2013, 05:13 PM
Totally agreed with Mr Karthik Sir.

It is high time we must all united in every aspects to propogate the glory of
one & only actor the world cinema has seen.

IliFiSRurdy
5th September 2013, 05:20 PM
நடிகர்திலகத்தின் ஒவ்வொரு பிறந்த நாள் விழாவிலும், 'பலன் கருதி' அவருடன் நடித்தவர்களை தொடர்ந்து கௌரவப் படுத்துவதைவிட, 'பலன் கருதாமல்' அவர் புகழ் பரப்ப உழைப்பவர்கள் கௌரவப் படுத்தப்பட வேண்டும் என்ற கோபால் அவர்களின் கருத்தில் எந்த தவறும் இல்லை.
.....................................

..........................................
உலகெங்கும் பரந்து விரிந்து கிடக்கும் நடிகர்திலகத்தின் லட்சக்கணக்கான ரசிகர்கள் நாங்கள் கௌரவப்படுத்துகிறோம் ஐயா. உங்களுக்கெல்லாம் எங்களையே விருதாகத் தருகிறோம். யாரும் எங்களைவிட்டுப் போக வேண்டாம். இது நீங்கள் எங்கள் மீது கொண்டிருக்கும் அன்பின் மீது ஆணை....

Simply Brilliant Mr.Karthik.

I (we) second you..

KCSHEKAR
5th September 2013, 05:41 PM
டியர் கார்த்திக் சார்,

தங்களுடைய பாராட்டுக்களுக்கு பதில் சொல்ல வார்த்தைகள் இல்லை.

நன்றி!

KCSHEKAR
5th September 2013, 05:43 PM
டியர் கோபால் சார்,

கார்த்திக் சார் சொன்ன வார்த்தைகளை ஏற்று, மீண்டு(ம்) வருக, பொன்னான பதிவுகளைத் தருக.

Richardsof
5th September 2013, 07:30 PM
http://i39.tinypic.com/2ekmybk.jpg

vasudevan31355
5th September 2013, 07:33 PM
அற்புதம் வினோத் சார். அப்படியே சொக்கிப் போய் நிற்கிறேன். கோடி கோடி தேங்க்ஸ்.

gkrishna
5th September 2013, 07:35 PM
அன்புள்ள ஜோ சார்,

கோபால் அவர்கள் மணிமண்டபம் பற்றி பேசவே இல்லை.

நடிகர்திலகத்தின் புகழ் பரப்ப ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடாதவர்கள் எல்லாம் தொடர்ந்து கௌரவப்படுத்த படும்போது, அவர் புகழ்பரப்ப பலன் கருதாமல், தன்னலம் பாராமல் உழைப்பவர்கள் கௌரவப்படுத்தப்பட வேண்டும் என்றுதான் சொல்கிறார்....

gopal சார் ragavendra சார் மற்றும் ்
நம்முடைய எல்லா சகோதரர்களுக்கும் வேண்டுகோள்
தயவு செய்து யாரும் திரியை விட்டு வெளியை செல்கிறேன் என்று சொல்ல வேண்டாம் நிச்சயமாக திரு கார்த்திக் சார் அவர்கள் கருத்து தான் எல்லாரின் கருத்தாக இருக்க முடியம்
உங்களுடைய ஞானஒளி படித்து நாங்கள் ellam இன்புற்று இருக்கும் நேரத்தில் தயுவு செய்து இப்படி ஒரு குண்டு
வேண்டாம் உங்கள் எல்லோரின் எழுத்துகளுக்கு ஏங்கி கொண்டு இருக்கும் எங்களை போன்றவர்களின் எதிர்பார்புகளை எமாற்றி விடாதீர்கள்

vasudevan31355
5th September 2013, 07:43 PM
'ஞான ஒளி' பதிவுகளைப் பாராட்டிய முரளி சார், அன்பு கார்த்திக் சார், கோபால் சார், ராகவேந்திரன் சார், சந்திரசேகரன் சார், ராதாகிருஷ்ணன் சார், சுப்பிரமணியம் ராமஜெயம் சார், சுப்பு சார், வாசுதேவன் சார், ராமச்சந்திரன் சார், மற்றும் கைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டிய அருமைச் சகோதரர் பம்மலார், கோல்ட் ஸ்டார் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Harrietlgy
5th September 2013, 10:20 PM
கார்த்திக் அவர்கள் கருத்தை வழி மொழிகிறேன். அனைவரும் ஒற்றுமையாய் இருந்து இந்த தேரை (திரி ) இழுத்து செல்ல வேண்டிய தூரம் இன்னும் உள்ளது. ராகவேந்தர் சார் மற்றும் கோபால் சார் இருவரும் உங்கள் பங்களிப்பை தொடர்ந்து தர வேண்டும்.

Russelldwp
5th September 2013, 10:41 PM
ராதாரவி , சரத்குமார் போன்ற ஒட்டுண்ணிகளும் , சிவாஜி போஸ்டரில் சாணி அடித்தேன் என பெருமைபட்டுக்கொண்ட விஜயகாந்தும் ..இது போன்ற வகையறாக்கள் நடிகர் சங்க தலைவர்களாக இருக்கும் வரை சிவாஜி மணிமண்டபம் நிறைவேறப்போவதில்லை .

சிவாஜி ரசிகர்கள் சேர்ந்து தன்னெழுச்சியாக நிறைவேற்றினால் தான் உண்டு

Nadigar Sangam is utter waste. Sarathkumar, Radharavi and vijayakanth have no right to talk about tamil

Russelldwp
5th September 2013, 10:46 PM
திரியின் புதிய அங்கத்தினர் திரு.ராமச்சந்திரன் சார்,

வருக! வருக! நடிகர் திலகத்தின் புகழ் பாட வருக!

வரவேற்று வாழ்த்தும்

நெய்வேலி வாசுதேவன்.

Dear Vasu Sir
Thanks a lot. I saw your articles and all rare stills of thalaivar and these are pokkisham for all fans.
Regards
C.Ramachandran

Russelldwp
5th September 2013, 10:49 PM
அன்புள்ள நண்பரே,
வருக வருக... நடிகர் திலகத்தின் புகழ் பரப்ப தங்கள் பங்களிப்பைத் தருக...

இதோ தங்களுக்காக

http://youtu.be/pGTCW1HmBzU
Dear Ragavendran sir
Thanks with super dance of only actor sivaji sir's video
Regards
C.Ramachandran

Subramaniam Ramajayam
6th September 2013, 08:32 AM
கார்த்திக் அவர்கள் கருத்தை வழி மொழிகிறேன். அனைவரும் ஒற்றுமையாய் இருந்து இந்த தேரை (திரி ) இழுத்து செல்ல வேண்டிய தூரம் இன்னும் உள்ளது. ராகவேந்தர் சார் மற்றும் கோபால் சார் இருவரும் உங்கள் பங்களிப்பை தொடர்ந்து தர வேண்டும்.
HUMBLE REQUEST TO ALL OUR NT FOLLOWERS AND HUBBERS PARTICIPAING IN NT THREAD.

From sivaji's family mr ramkumar ganesan and prahu are definitely giving lot of support physically and morally for all pending issues. no one can deny this andblame them. sivaji peravai kc sekar also doing his BEST ALWAYS WHENEVER AND WHEREVER POSSIBLE. SO LET US WAIT AND SEE FOR GOOD RESULTS'
My personal request is that all of us stand UNITED and cintribute oUR MITE AND LOYALITY TO ONE AND ONLY SUPERSTAR FROM 1952 TILL HIS LIFE OR FILM CARRER.
SPECIAL REQUEST TO GOPAL VASU AND RAGHAVENDER.
As a senior follower of NT iam placing this request.

vasudevan31355
6th September 2013, 11:12 AM
ஆண்டனி, கோபால். (ஒரு ஒப்பீட்டுப் பார்வை).

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2011/GnanaOli00011.jpg http://i1.ytimg.com/vi/CJ0pm7hOJHI/hqdefault.jpg

ஒரு விஷயம் யோசித்துப் பார்த்தேன். 'ஞான ஒளி' ஆண்டனியையும் 'புதிய பறவை' கோபாலையும் கம்பேர் செய்து பார்த்தாலென்ன என்று.

புதிய பறவையின் நாயகன் கோபால் பற்றி நம் சூப்பர் ஸ்டார் கோபால் ஆய்வில் பிய்த்து உதறியிருந்தார். அதை இப்போது மனதில் கொள்க.

கோபால் என்ற அந்த இளைஞன் பெரும் தனவந்தன். ஆனால் நம் ஆண்டனியோ பரம ஏழை. ஆனால் பாருங்கள்... இருவருமே ஒரு வகையில் அனாதைகள்தான்.

குணத்தில் கோபால் ரொம்ப மிருதுவானவன். ஆனால் ஆண்டனியோ முரட்டுப் பயல் என்றே பட்டம் வாங்கியவன்.

கோபால் கொஞ்சம் reserved டைப். ஆண்டனியோ கலகல பேர்வழி. இருவருக்குமே மனைவி உண்டு.

கோபால் சற்று பால் கவர்ச்சியின்பால் மயங்கி மேல்நாட்டு நடன பாடகியை அவனுக்கேற்றவாறு இருப்பாள் என நம்பி, மணந்து கெட்டான். மகிழ்ச்சியை இழந்தான்.

ஆனால் ஆண்டனியோ விளையாட்டுத்தனமாய் காதலித்து தனக்கேற்ற குணம் கொண்ட பெண்ணை தேர்ந்தெடுத்து மனைவியாக்கிக் கொண்டான். மகிழ்ச்சியுடன் அவளுடன் வாழ்ந்தான்.

ஆண்டனி, கோபால் இருவருமே மனைவியை இழக்க நேரிட்டது.

ஆண்டனி மனைவியை அவளுடைய தலைப்பிரசவத்தில் இழந்தான். கோபாலோ தலைவிதியால் தன் மனைவியை அடித்துக் கொல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டான்.

கோபாலோ தனக்கு மீள்துணையாக லதாவை தேர்ந்த்தெடுத்து, அவளுடன் வாழத் துடித்தான். ஆண்டனியோ பாதிரியின் கனவுகளை நிறைவேற்றத் துடித்தான். மகளின் வாழ்வுக்காகவும் துடித்தான்.

இருவருமே சந்தர்ப்ப வசத்தால் குற்றவாளியாகி கொலைகாரர்கள் ஆனவர்கள். இருவருமே கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கமே இல்லாத நல்லவர்கள்.

மனைவியின் நடத்தை மோசமானதால் ஆத்திரம் கொண்டு கணவன் என்ற உரிமையில் கோபால் தன் மனைவியை அடித்தான்.

தன் அன்பு மகளின் வாழ்வுக்காக தந்தை என்ற ஸ்தானத்தில் அவளை உதாசீனம் செய்த அவள் காதலனை ஆத்திரத்தில் ஆண்டனி அடித்தான்.

இருவருமே கண்மூடிக் கண் திறப்பதற்குள் பொறுமை எல்லை மீற ஆத்திரத்தின் உச்சத்தைத் தொட்டவர்கள். இருவருமே உரிமையில் அடித்தவர்கள். மனைவி என்ற உரிமையில் முன்னவனும், பெண்ணின் காதலன் அல்லது மருமகன் என்ற உரிமையில் பின்னவனும். இருவருமே சொந்தங்களைக் காலி செய்தவர்கள்.

முக்கியமான ஒன்று. இருவருமே ஒரே ஒரு அடியில், ஒரே ஒரு நொடியில் உயிர்களைப் பறித்தவர்கள். அதனால் உயிர் போகும் என்று அறியாமல் செய்தவர்கள்.

கோபால் படித்தவன். சமூக மான, அவமானங்களுக்கு பயந்து தான் செய்த கொலையை யாருக்கும் தெரியாமல் புத்திசாலித்தனமாக மறைத்தவன். தான் மாட்டிக் கொள்ளாத வகையில் திட்டம் தீட்டியவன்.

ஆண்டனிக்கு அப்போது அது தேவை இல்லை. தன் மகளின் வாழ்வை ஆத்திரத்தில் தானே கெடுத்தவன். தான் செய்தது கொலை என்று தெரியாமலேயே மற்றவர்கள் சொல்லித்தான் அது கொலை என்று தெரிந்து கொண்டவன். வகையாக மாட்டிக் கொண்டவன். போலீசிடம் மாட்டித் தப்பித்த பின் தான் மாட்டிக் கொள்ளாத வகையில் திட்டம் தீட்டியவன்.

குற்றம் புரிந்தும் போலீசிடம் சிக்காதவன் கோபால். ஆனால் கொலைக் குற்றவாளியாய் சிறைக்கதவுகளுக்குள் பூட்டப்பட்டவன் ஆண்டனி. பின் தப்பித்து போலீசிடம் சிக்கிக் கொள்ளாதவன் ஆண்டனி.

தான் சிக்கிக் கொள்ளாதிருக்க சில கபட நாடகங்கள் நடத்தியவன் கோபால். போலீசிடமிருந்து தப்பிய ஆண்டனி என்ற அருணோ படு புத்திசாலி. அவன் எந்த நாடகமும் நடத்தாமல் தன் சாமர்த்தியத்தால், திறமையால் தன்னையே காப்பாற்றிக் கொண்டு வருபவன்.

கோபாலுக்கு இரண்டாம் காதலில் வெற்றியடைய வேண்டும் என்ற ஒரே வெறி. ஆண்டனிக்கோ பாதிரியாரின் லட்சியங்களை நிறைவற்றிக் காட்ட வேண்டும் என்ற ஒரே வெறி.

தன்னை வட்டமிடும் கழுகாக சுற்றுபவன் தன் போலீஸ் நண்பன் என்பதை நன்கறிந்து அவனுக்கு தண்ணி காட்டியவன் ஆண்டனி.

தன்னைச் சுற்றியிருக்கும் காவல் கழுகுகள் யாரன்று தெரியாமலேயே அவர்கள் விரித்த வலையில் கொஞ்சம் கொஞ்சமாக மாட்டிய அப்பாவி துரதிருஷ்டசாலி கோபால்.

சட்டப் பேய்க்குப் பயந்து பாசத்தை மறைத்துக் கொண்டு உள்ளுக்குள் ஊமையாய் அழுதான் ஆண்டனி.

எந்த சூழ்நிலையையும் மறந்து காதலை பகிரங்கமாகக் காட்டினான் கோபால்.

ஆண்டனியைக் குறி வைத்தது ஒரே ஒரு காவலன்.

கோபாலைக் ஒரு காவல்துறை குழுவே கண்காணித்தது.

கோபால் அவசரக்காரன். காதல் அவன் கண்ணை மறைத்தது. அவன் காதலியிடம் தன்னை நல்லவன் என்று நிரூபிக்க போராட வேண்டியிருந்தது. தன்னிடம் வந்த பழைய பறவையை டூப்ளிகேட் என்று புதிய பறவையிடம் நிரூபிக்க அவன் அளித்த ஆதாரங்கள் ஆணித்தரமாய் இருந்த போதிலும் இறுதியில் அவை ஆட்டம் கண்டன.

ஆண்டனி எமகாதகன். அழுத்தக்காரன். அவன் போலீஸ் நண்பனை இல்லை இல்லை எதிரியைப் பொறுத்தவரை. தான்தான் ஆண்டனி என்ற தடயங்களையே விட்டு வைக்காதவன்.

ஆனால் கோபால், ஆண்டனி இருவருமே காவல் துறையை கசக்கிப் பிழிந்தவர்கள்.

இருவருமே தங்களின் மீது, தங்கள் திறமைகள் மீது அசாத்திய நம்பிக்கை கொண்டவர்கள். இருவருமே உணர்ச்சி வசப்பட்ட கேஸ்கள். கோபால் பப்ளிக்காகவே உணர்ச்சிவசப்படக் கூடியவன். ஆண்டனியிடம் இது கொஞ்சம் வித்தியாசம். போலீஸ் நண்பன் முன்னால் மட்டும் உணர்சிவசப்படவே மாட்டான்.

கோபால் தன்னை மறந்து தன் வாயாலேயே தன்னை குற்றவாளி என்று சொல்ல வைக்கப்படும் நிலைக்கு ஆளாக்கப்பட்டவன்.

ஆண்டனியும் தன்னை மறந்து கோபத்தில் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டவன்.

இருவருமே தங்கள் வாயால் வாக்குமூலம் கொடுத்து, அல்லது கொடுக்க வைக்கப்பட்டு அதன் மூலம் மட்டுமே சிக்கியவர்கள்.

மகள் பாசம் என்ற பிரம்மாஸ்திரத்தில் வீழ்ந்தான் ஆண்டனி.

லதா காதல் என்ற பிரம்மாஸ்திரத்தில் வீழ்ந்தான் கோபால்.

கோபாலுக்கும், ஆண்டனிக்கும் நிறைய அடிப்படை ஒற்றுமைகளும் உண்டு. சில வேற்றுமைகளும் உண்டு.

ஆனால் இருவருமே பாவப்பட்டவர்கள். பரிதாபத்துக்குரியவர்கள்.

அதையெல்லாம் மீறி அன்பு உள்ளங்கள் அனைத்திலும் ஆட்சி செலுத்திக் கொண்டிருப்பவர்கள்.

JamesFague
6th September 2013, 12:51 PM
Mr Neyveliar Sir,

Your analysis of Mr Antony & Mr Gopal is excellent. We can do this analysis with
NT only.

Harrietlgy
6th September 2013, 12:56 PM
ஆண்டனி மற்றும் கோபால், மிக அற்புதமான ஒப்பீடு நன்றி திரு. வாசுதேவன் சார் . நான் முதலில் நம்ம கோபாலை தான் ஒப்பீடு செய்ய போவதாக நினைத்து படிக்க ஆரம்பித்தேன்.

KCSHEKAR
6th September 2013, 01:06 PM
திரு.வாசுதேவன் சார்,

தங்களுடைய ஆண்டனி, கோபால் - ஒப்பீட்டுப் பார்வை அருமை. இப்படியெல்லாம்கூட ஒப்பீடு செய்யமுடியுமா? அற்புதம்.

புதிய பறவை கோபாலையும், ஞான ஒளி ஆண்டனியையும் சேர்த்துவைத்த கலவையாக இருப்பவர் இங்குள்ள நம்ம வியட்நாம் கோபால் சார்???

gkrishna
6th September 2013, 02:28 PM
வாசு சார்
நேர்த்தியான ஒப்பீடு
நடிகர் திலகத்தின் வேடங்களை இப்படி கூட ஒப்பீடு செய்ய முடியுமா எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை

Gk

gkrishna
6th September 2013, 02:43 PM
படிக்காத மேதை ரங்கன்
பராசக்தி குணசேகரன்
படித்தால் மட்டும் போதுமா ராஜு
தெய்வமகன் சங்கர் கண்ணன் மற்றும் விஜய்
கலாட்ட கல்யாணம் மதன்
sumathi என் sundari மது
விஎட்னம் வீடு பத்மநாபா ஐயர்
கெளரவம் பர்ரிச்ட்டர் ரஜினிகாந்த்
தங்க சுரங்கம் ராஜன்
பரத விலாஸ் கோபால்
புதிய பறவை கோபால்
வசந்த மளிகை ஆனந்த்
உத்தமன் கோபி
தங்க பதக்கம் சௌத்ரி
உயர்ந்த மனிதன் ராஜு
ஞான ஒளி அந்தோனி அருண்
மேலை குறிப்பிட்ட
சில வேடங்களை நினவு கூர்ந்து பார்கிறேன் .வேடங்கள் நினைவுக்கு வருகிறதா சிவாஜி நினைவிற்கு வருகிறாரா

mr_karthik
6th September 2013, 05:32 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

புதிய பறவை கோபால், ஞானஒளி ஆண்டனி ஒப்பீடு மிக மிக அருமை. இப்படியெல்லாம் கூட ஆய்வு செய்ய முடியும் என்று எப்படி உங்களுக்குத் தோன்றுகிறது என்பதே முதல் ஆச்சரியம். அதை ஒவ்வொரு படியாக நீங்கள் ஒப்பிட்டுக் கொண்டே செல்லச் செல்ல ஆச்சரியம் பன்மடங்காகிறது.

இருவரும் காவல் துறையால் குறிவைக்கப்பட்ட அப்பாவிகள். (திட்டமிட்டு கொலை செய்யாமல் உணர்ச்சி வசப்பட்டு அடித்த அடியில் எதிராளி உயிர் போக, அதனால் கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட அப்பாவிகள்).

பெரிய வித்தியாசம், இன்ஸ்பெக்டர் லாரான்சைப் பார்த்ததுமே அருணாக இருக்கும் ஆண்டனி உஷாராகிறார். தனது ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறார். சாத்துக்குடி பிழிவதாகட்டும், சிலவர் டம்ப்ளர் வசனத்தைச்சொல்லி கையுறையை கழட்டுவதாகட்டும், தப்பாக கையெழுத்திட்ட செக்கைக் கிழித்து தன பாக்கெட்டிலேயே போட்டுக்கொள்வதாகட்டும், எங்கும் கவனம், எதிலும் கவனம், 'எதிரே இருப்பவன் என்னைப்பிடிக்க அலையும் போலீஸ்' என்ற எச்சரிக்கையுணர்வு.

ஆனால் அப்பாவி கோபால் நிலை அப்படியல்ல. கடைசிக்காட்சி வரை தன்னைச்சுற்றி இருப்பவர்கள் அனைவரும் (தன போலீஸ் நண்பன் குமார் உள்பட) அபிமன்யுவை வீழ்த்த சுற்றி வளைத்த கௌரவர் கூட்டம் என்பது தெரியவே தெரியாது. தன்னைப்பிடிக்க விரித்து வைக்கப்பட்ட வலையினுள்ளேயே இத்தனை நாள் வளைய வந்திருக்கிறோம் என்று அறியும்போது அடையும் அதிர்ச்சி, அது ஆண்டனிக்கு நேராத ஒன்று. அதனால்தான் "என்னை வீழ்த்த வேறு எந்த வேஷத்தையாவது போட்டிருக்க கூடாதா?" என்று அந்த அப்பாவி, அப்பாவித்தனமாகக் கேட்கும்போது நம் மனம் பதை பதைக்கும். அடப்பாவிகளா, எங்க அபிமன்யுவை இப்படி வேஷம் போட்டே வீழ்த்திட்டிங்களடா என்று கதறும்.

இருவரும் இறுதியில் சிறைக்குச்செல்கின்றனர். அதிலும் வித்தியாசம்..

தன மகளின் கற்பின்மீது சுமத்தப்பட்ட களங்கத்தை துடைத்து அவளை புனிதமாக்கிவிட்டோம் என்ற பெருமிதத்தோடு சிறைக்குச்செல்லும் தந்தை ஆண்டனி...

காதலி வேஷம் போட்டவளிடம் ஏமாந்து மாட்டிக்கொண்டோமே என்ற விரக்தியில் நடந்து போகும் காதலன்(?) கோபால்....

Russelldwp
6th September 2013, 06:31 PM
Dear Vasu Sir
The comparison between Puthiya paravai Gopal and Gnana oli Antony is unimaginable. Really you are man of imagination

C.Ramachandran

RAGHAVENDRA
7th September 2013, 12:28 AM
Dear Gopal,
I hope you understand the context and my stance regarding your subject of posting. I do not want my post and never had intention to hurt any body any time any how which includes you too.
Pls continue your in-valuable postings here.
Don't bother about other threads.
Raghavendran.

P.S. தங்கள் ஆய்வுக்கேற்ற தீனி வர உள்ளது. தயாராகுங்கள்.

RAGHAVENDRA
7th September 2013, 12:30 AM
டியர் வாசு சார்
தங்களுடைய உடல் நலம், பல்வேறு அலுவல்களுக்கிடையிலும் சிரமங்களுக்கிடையிலும் மீண்டும் இங்கே அந்தோணி மூலம் வருகை தந்து, மிகச் சிறப்பான ஆய்வை வழங்கியுள்ளீர்கள். தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
7th September 2013, 12:31 AM
கார்த்திக்,
என் மேல் தங்களுக்குள்ள நல்லெண்ணத்திற்கும் உயர்வான கருத்துக்கும் மிக்க நன்றி.

RAGHAVENDRA
7th September 2013, 12:52 AM
வருகிறேன்.... கீழே இறங்கி வருகிறேன் ... என்று துவங்கும் இந்த காட்சி, தமிழ்த் திரையுலக வரலாற்றில் வேறு யாராலும் கற்பனைக் கெட்டாத உயரத்தில் அமர்ந்து கொண்டு நடிகர் திலகத்தின் கொடியைப் பட்டொளி வீசிப் பறக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

உடல் மொழி, இயல் மொழி, இயற்கலை, விழிமொழி என நடிப்பின் பரிமாணங்கள் அத்தனையும் வரிசையில் வரிந்து கட்டிக் கொண்டு நமக்கு இலக்கணம் கூறுகின்றன.

தர்மசங்கடமான சூழலில் சிக்கிக் கொண்ட மனிதன் இப்படித் தான் தவிப்பானோ - இல்லை, இல்லை, இப்படித் தான் தவிப்பான் என ஆணித்தரமாகக் கூறுகிறது இக்காட்சி.

வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் வாழ்க்கையில் விதியின் விளையாட்டை நொந்து கொள்பவர்கள் இப்படித் தான் நடந்து கொள்வார்களோ - இல்லை, இல்லை, இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என ஆணித்தரமாகக் கூறுகிறது இக்காட்சி.

இருக்கும் நண்பன் இறந்ததாக இருக்க வேண்டும், இருக்கும் கணவனை இருப்பதாக மனைவி எண்ண வேண்டும், இருக்கவும் முடியாமல் இறக்கவும் முடியாமல் தவிக்கிறேனே என இப்படித் தான் மனிதன் புலம்புவானோ - இல்லை, இல்லை, இப்படித் தான் புலம்புவான் என ஆணித்தரமாகக் கூறுகிறது இக்காட்சி.

தர்மசங்கடமான சூழல் ஏற்படும் காட்சியில் இப்படித் தான் நடிக்கவேண்டுமோ என நடிகன் நினைப்பானோ - இல்லை, இல்லை, இப்படித்தான் நடிக்க வேண்டும் என நடிகன் நினைப்பான்.

இப்படி எந்த சூழலில் மனிதன் எப்படி நடந்து கொள்வான், உளவியல் ரீதியாக அவன் எப்படி பாதிக்கப் படுவான் இவற்றையெல்லாம் மனோதத்துவ நிபுணர்களிடம் போய்த் தெரிந்து கொள்வதற்கு அவசியமின்றி, அவன் இப்படித் தான் பாதிக்கப் பட்டு நடந்து கொள்வான் என ஆணித்தரமாகக் கூறியுள்ளார் நடிகர் திலகம் இப்பாத்திரத்தின் மூலம்.
http://youtu.be/b6M8kvsCSAc

vasudevan31355
7th September 2013, 07:52 AM
ஆண்டனி, கோபால் ஒப்பீட்டுப் பதிவை மனமுவந்து பாராட்டிய அன்பு நண்பர்கள் வாசுதேவன் சார், பரணி சார், சந்திரசேகரன் சார், கிருஷ்ணா சார், ராமச்சந்திரன் சார் அனைவருக்கும் என் உளம் மகிழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் பாராட்டுதல்கள் என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது. நன்றி!

vasudevan31355
7th September 2013, 08:08 AM
டியர் கிருஷ்ணா சார்,

தாங்கள் தந்துள்ள தலைவர் வாழ்ந்து காட்டிய அத்தனை கேரக்டர்களும் அருமை. மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்தி அனைத்தையும் பார்க்க ஆவல் மீறிடுகிறது. இன்னும் ஒன்றே ஒன்று தங்களுக்காக நான் சேர்த்துக் கொள்கிறேன். 'வீர பாண்டியக் கட்ட பொம்மன்'. ஏனென்றால் (என்னுடைய அன்பு நண்பர் ஒருவர்... தீவிர தலைவரின் அபிமானி) தன்னுடைய பள்ளி நாட்களில் கட்டபொம்மனாக நடித்து சிறப்பான நடிப்பிற்காக முதல் பரிசு வாங்கி அசத்தினாராம். நடிகர் திலகத்தின் ரசிகரா... கொக்கான்னானாம். அந்த இனிய நண்பருக்கு இப்போது என்னுடைய பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த நண்பரும் இங்குதான் மையத்தில் இருக்கிறார். ஓ.கேவா?

தங்கள் இனிய நினைவுகளுக்காக

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=jKI0IJY5jp8

vasudevan31355
7th September 2013, 08:44 AM
டியர் கார்த்திக் சார்.

http://cafeipiti.files.wordpress.com/2011/08/2000-posts.jpg

தாங்கள் வேண்டாம் என்று மறுத்தாலும் நான் வாழ்த்தத்தான் செய்வேன்.

தங்களுடைய ஒப்பிடமுடியாத முத்து முத்தான இரண்டாயிரம் பதிவுகளுக்கு என் மன மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்த்துக்கள். மற்ற நண்பர்களின் பதிவுகளை வித்தியாசம் பாராது மனமுவந்து பாராட்டுவது மட்டுமல்லாது அந்த பதிவு தொடர்பான பல விஷயங்களை வெகு ஜனரஞ்சகமாக தாங்கள் எளிய முறையில் எங்களுக்கு தரும் அழகே தனி. அது போல பார்த்திருக்கிறேன். உங்கள் ஒரு, இரு வரிப் பதிவில் கூட கண்டிப்பாக ஒரு அருமையான மேட்டர் இருக்கும். மிஸ் ஆகவே ஆகாது. பலமுறை இதை எண்ணி நான் வியந்திருக்கிறேன். ஆழ்ந்து ரசித்திருக்கிறேன். தங்களுடைய இரண்டாயிரம் பதிவுகளும் ஒவ்வொன்றும் விஷயமுள்ளவை. வெளி உலகத்திற்குத் தெரியாத பல விஷயங்களை தாங்கள் எங்களுக்கு அளித்துள்ளீர்கள். (அதுவும் சென்னை தியேட்டர் அனுபவங்கள் பற்றி தாங்கள் எழுதும் பதிவுகள் என் போன்ற கடலூர் வாசிகளுக்கு அல்வா மாதிரி). ஆனால் நிறைகுடம் தளும்பாது என்பது போல தங்களின் அடக்கம் பல முறை என்னை ஆச்சரியத்தில் மூழ்கச் செய்துள்ளது. சமயத்தில் நீங்கள் திரிக்கு சில காலங்கள் வராமலிருந்தால் மிகவும் தங்களை மிஸ் செய்வேன்.

நடிகர் திலகத்தின் பெருமையை நமது திரியில் மட்டுமல்ல ...தங்களால் இயன்ற அளவிற்கு மற்ற திரிகளிலும் விட்டுக் கொடுக்காமல் நமது தலைவரின் புகழை நிலைநாட்டி வரும் தாங்கள் மென் மேலும் தங்கள் ஸ்டைல் பதிவுகளைத் தந்து, எனக்கு சீனியரான தாங்கள் எங்கள் நிறை குறைகளை சுட்டிக் காட்டி எங்களை வழி நடத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மீண்டும் ஒரு முறை தங்களுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆண்டனி கோபால் ஒப்பீட்டுப் பதிவுக்காக தாங்கள் அளித்த இனிய பாராட்டிற்கும் என் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய ஆண்டனி கோபால் ஒப்பீட்டு விஷயங்கள் அருமை. அழகான விளக்கங்கள்.

தங்களுக்காக என்னுடைய special அன்புப் பரிசு.

http://karateramesh.com/Images/large/29.jpg

vasudevan31355
7th September 2013, 08:50 AM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி. கீழே இறங்கி வந்து மற்றவர்களை மேலே ஏற்றிவிட்டு அழகு பார்த்த நமது அன்புக் கடவுளின் 'சாந்தி' மனப்போராட்டக் காட்சியின் வீடியோப் பதிவுக்கு நன்றி.

தாங்கள் கேட்டுக் கொண்டதின் பேரிலும், எங்கள் எல்லோருடைய வேண்டுகோளுக்கு செவி சாய்த்தும் கோபால் சார் கண்டிப்பாக விரைவில் வர வேண்டும்.' ராஜா' வாக நின்று 'நீதி' வழங்க வேண்டும்.

vasudevan31355
7th September 2013, 08:54 AM
ஹாய் கோபால்,

இப்ப வர்றியா இல்லையா? நைசா ப்ளான் போட்டு 72 சாக்கில் ஒளியை எழுதி விட்டு என்னை உசுப்பேத்தி விட்டுட்டு நீ நழுவிக்கினியே.... இன்னாபா ஞாயம் இது... சீக்கிரம் வந்து தொலை. நீ வரலைன்னா நானும் வரலை...

JamesFague
7th September 2013, 04:37 PM
Mr Gopal Sir,

Expecting your post on Lorry Driver & CID. Pls come soon.

ScottAlise
7th September 2013, 07:59 PM
சிரஞ்சீவி

நடிகர் திலகம் நடித்த படத்தில் அதிகம் விவாதிக்க படாத படத்தில் எதுவும் ஒன்று 1984 ல் வந்த படம் இது

கதை ஒரு கப்பலில் நடக்குது , அந்த கபளின் topaz ( துப்பரவு தொழிலாளி ) தான் டேவிட் சிரஞ்சீவி (நடிகர் திலகம் ), அவர் 7 வயது முதல் அந்த கப்பலில் வேலை செய்து கொண்டு வருகிறார் , அவர் யை எல்லோரும் அன்புடன் அங்கிள் என்றே அழைகிறார்கள் அவர் திருமணம் ஆகாதவர்

ஒரு நாள் அவர் reitre ஆக போவதை கப்பல் கேப்டன் தெரிவிக்கிறார். இந்த சமயத்தில் அவர் அந்த விஷியத்தை எடுத்து கொள்ளும் விதம் , அந்த முகத்தில் தான் எத்தனனை விதமான உணர்ச்சி , அவர் உடம்பும் நடிக்கிறது , பிறகு தன் மனசாட்சி சொல் படி கேட்டு கடைசியாக சிங்கப்பூர் ல் இருந்து சென்னை வரும் ட்ரிப் ல் தன் கடமையை செய்கிறார்
இந்த ட்ரிப் ல் வருவோர்கள் தான் ஸ்ரீ பிரியா (பைத்தியம் ), சரத்பாபு (கைதி ), சௌகார் (சிஸ்டர் ), தேங்காய் & மனோரமா (ஜோசியர்) சரத் யின் காதலி மற்றும் சத்யராஜ் & கோ
இவர்களின் பிரச்சனை யை எப்படி சிவாஜி தீர்த்து வைக்கிறார் என்பதே கதை. சௌகார் யிடம் இருக்கும் வைரம் , நகைகளை அபகரிக்க சத்யராஜ் & கோ முயற்சிப்பதும் , அது முடியாமல் போவதும் , சிவாஜி அதை தடுப்பதும் , ஒரு கடிதாசி யை வைத்து , யார் சௌகார் யிடம் கொள்ளை அடிக்க முயல்க்கியர்கள் என்பதை கண்டுபிடிப்பது , ஸ்ரீ பிரியா பைத்தியம் இல்லை என்பதை அறிந்து கொண்டு , அவர் தான் சௌகார் யின் மகள் என்பதை அறிந்து கொண்டு , சௌகார் க்கு பாவ மணிப்பு வழங்குவது , அதனால் தர்மசங்கடம் நேரும் பொது அதை தாங்கி கொண்டு நடப்பது , முடிவில் ஒரு பலன் கூட எதிர் பாராமல் உயிர் விடும் பொது மனதில் நிரந்து விடுகிறார்

இந்த படத்தில் சிவாஜி ஒரு அனாதை , அதுவும் ஒரு chirsitian , அதுக்கு தகுந்தாற்போல் அவர் மேக் உப பொருத்தம் , ஒரு அழுக்கு சட்டை அதில் மேல் பட்டன் போடாமல் , பெரிய சிலுவை அணிந்து கொண்டு , கடை நிலை உழியன் என்பதால் நடந்து நடந்து ஒரு பக்கமா நடப்பது , மூஞ்சியில் பெரிய கிருதா அதில் கொஞ்சம் நிரை என்று பாத்திரமாக வாழ்ந்து இருக்கிறார் (சிவாஜி சார் க்கு இது சொல்ல தேவை இல்லை )
கடல் ல் இருப்பதால் குரல் கூட கட்டடி இருக்கும் , இந்த படத்தில் அதுவும் சிவாஜி யின் பாத்திரத்தில் பிரதிபலிகிறது.
படம் முழுவதும் கப்பலில் எடுக்க பட்டு உள்ளது , இயக்குனர் சங்கர் கொஞ்சம் விறுவிறுப்பு , செண்டிமெண்ட் என்று படத்தை தொய்வு இல்லாமல் கொண்டு சென்று உள்ளார்

ScottAlise
7th September 2013, 08:00 PM
Dear Vasu sir,

Superb comparison of both Gopal & Arun , semma thinking hats off

Gopal.s
8th September 2013, 10:41 AM
நண்பர்களே,
நான் சில விஷயங்களால் irritate ஆனது உண்மை. ஆனால் ஆத்ம திருப்தி என்று சொல்லும் நான் ஆத்மார்த்தமாக ஈடு படும் விஷயத்தில் ,பொதுவான ஒரு forum இல் வந்து ஈகோ காட்டி கோபப்படுவது தவறு என்று நண்பர்களும் உணர்த்தி நானும் உணர்ந்து விட்டேன். அதனால் என் மனதுக்கு நெருக்கமான இந்த குழுவை எக்காலத்திலும் விட்டு கொடுக்க மாட்டேன். நான் சொல்லிய படி ,என் பதிவுகளை வரும் வாரம் சென்று ,மறு வாரத்திலிருந்து தொடர்வேன்.என்னுடைய முன்கோபம் என் பலவீனம். சுருக்கவே மீள்வது எனது பெரும் பலம்.

joe
8th September 2013, 12:26 PM

கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் -ன்னு சொல்லுவாங்க ..கோபால் கிட்ட ரெண்டுமே நிறைய இருக்கு .. தொடருங்கள் :)

Russelldwp
8th September 2013, 04:13 PM
நண்பர்களே,
நான் சில விஷயங்களால் irritate ஆனது உண்மை. ஆனால் ஆத்ம திருப்தி என்று சொல்லும் நான் ஆத்மார்த்தமாக ஈடு படும் விஷயத்தில் ,பொதுவான ஒரு forum இல் வந்து ஈகோ காட்டி கோபப்படுவது தவறு என்று நண்பர்களும் உணர்த்தி நானும் உணர்ந்து விட்டேன். அதனால் என் மனதுக்கு நெருக்கமான இந்த குழுவை எக்காலத்திலும் விட்டு கொடுக்க மாட்டேன். நான் சொல்லிய படி ,என் பதிவுகளை வரும் வாரம் சென்று ,மறு வாரத்திலிருந்து தொடர்வேன்.என்னுடைய முன்கோபம் என் பலவீனம். சுருக்கவே மீள்வது எனது பெரும் பலம்.
Gopal Sir

As a new visitor like me coming to this forum only because of your fantastic articles aobout our record creator sivaji. So dont stop to display your valuable information to this thread. Thanks for your message and expecting your early response

C.Ramachandran.

Russelldwp
8th September 2013, 04:37 PM
Dear All

OUR GREAT NADIGARTHILAGAM SIVAJI'S RE-RELEASE FILMS UNBREAKABLE RECORD IN TRICHY DISTRICT

1. IRUVAR ULLAM - KALAI ARANGAM A/C - CAPACITY 1600 SEATS - 21 DAYS - YEAR 1987

2. VEERA PANDIYA KATTA BOMMAM - MARIS ROCK A/C - 19 DAYS - YEAR 1984

3. KARNAN - RAMBA A/C - 28 DAYS AND CONTINUOUS SHIFTING OORVASHI A/C - 14 DAYS - YEAR 2012[/FONT][/B]

NOBODY CAN TOUCH THIS RECORD ---- SIVAJI IS RECOR CREATOR OF 20TH AND 21ST CENTURY -- HIGH CLASS AND TOP CLASS AUDIENCE ALWAYS WITH SIVAJI

RAGHAVENDRA
8th September 2013, 05:23 PM
டியர் ராகுல் ராம்,

சிரஞ்சீவி திரைப்படத்தைப் பற்றிய தங்கள் பதிவு அபூர்வமான படங்களைப் பற்றி எழுத வேண்டும் என்ற தங்களுக்குள்ள ஆர்வத்தைப் புலப்படுத்துகிறது. தொடருங்கள்.

http://www.nadigarthilagam.com/papercutting4/siranjivirunning.jpg

நடிகர் திலகத்தின் சிறந்த நடிப்பினை இப்படத்திலும் காணலாம். குறிப்பாக சௌகார் ஜானகியிடம் ஆறுதல் கூறும் இடம். ஒரு போதகராகத் தோன்றும் காட்சி மிகவும் அருமையாக இருக்கும். படம் முழுதுமே ஒரு soft approach நடிகர் திலகத்தின் கதாபாத்திரத்தில் தென் படும். மிகவும் விரிவாக அலசப் பட வேண்டிய கதா பாத்திரம்.

பாராட்டுக்கள்.

Russelldwp
8th September 2013, 06:40 PM
Dear All

OUR GREAT NADIGAR THILAGAM'S RE-RELEASE FILMS UNBREAKABLE REOCRD IN NON A/C THEATRES IN TRICHY DISTRICT

1. TRICHY RAJA - VIDI VELLI - 21 DAYS - 15 SHOUS HOUSE FULL - YEAR 1982
2. TRICHY WELLINGTON - PATTIKADA PATTANAMA - 28 DAYS -- YEAR 1986
3. TRICHY JUPITER - PARTHAL PASITHEERUM - 17 DAYS - YEAR 1987
4. TRICHY PRABHAT - IRUVAR ULLAM - 23 DAYS - YEAR 1982
5. TRICHY MULLAI (THIS IS NOT A/C THEATRE) - PASAMALAR - 16 DAYS - YEAR 1989
6. TRICHY BALAJI (OUTER) - THANGA PATHUMAI - 19 DAYS -IN THIS THEATRE NO BODYS FILM RUN EVEN 10 DAYS - YEAR 1986

ALWAYS WE THINK BIG SO THAT WE ARE RECORDING OUR SIVAJI'S RE-RELEASE FILMS WHICH RUN MORETHAN 20 DAYS AND PROUDLY SAY THERE MORE NO OF
RE-RELEASE FILMS RUN 2 WEEKS IN TRICHY DISTRICT AND WE DONT HAVE MUCH SPACE FOR RECORDING THE SAME.

Also please note that only sivaji's re-release films run 50 days without any gap in trichy district. Nobody create this record for the past 60 years

1. IRUVAR ULLAM - KALAI ARANGAM (21) -CONTINUOUS SHIFT PRABHAT (21) - CONT SHIFT ROXY (9 DAYS) - 51 DAYS
2. KARNAN - RAMBA (28) -CONT SHIFT OORVASHI (14) - CONT SHIFT TV KOIL VENKATESA (10) ---52 DAYS

RAGHAVENDRA
8th September 2013, 08:36 PM
Amazing Ram .... Keep it up ...

irituja
8th September 2013, 08:56 PM
NT 's recoed in Nellai

Raja re-releasd on 30-Mar-1983 ran for 3 weeks with full houses in Nellai Sivasakthi.How I still remember the date is the 29-mar-1983 was my last exam of X SSLC and me and my friend went to watch Neethipathi in Sivasakthi to refresh ourselves from the exam pressure.Only after going there we came to know that was las day of Nethipathi which ran for 63 days.Raja was still going strong even after completing 3 weeks .however same had to be shifted out due to prior commitment for Raja in other areas

RAGHAVENDRA
8th September 2013, 10:00 PM
நெல்லை என்ன திருச்சி என்ன எந்த ஊராக இருந்தால் என்ன நடிகர் திலகத்தின் ஜீவநாடிகள் அவருடைய புகழைப் பரப்பிக் கொண்டே இருப்பார்கள் என்பதை நிரூபிக்கும் வண்ணம் தங்கள் ஊர் வெற்றி விவரங்களைப் பதிவிடும் சண்முகா, ராம் அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள்.

iufegolarev
9th September 2013, 12:16 AM
http://www.bollywoodlife.com/south-gossip/independence-day-special-hey-ram-kaalapani-and-pazhassi-raja-showcase-patriotism/

iufegolarev
9th September 2013, 12:18 AM
Dear SP

A small request :

kindly consider avoiding words like No other actor, only actor etc., when we talk about releases and re-releases. Because this always triggers the other sensitive people.

thanks

vasudevan31355
9th September 2013, 07:58 AM
நண்பர்களே,
நான் சில விஷயங்களால் irritate ஆனது உண்மை. ஆனால் ஆத்ம திருப்தி என்று சொல்லும் நான் ஆத்மார்த்தமாக ஈடு படும் விஷயத்தில் ,பொதுவான ஒரு forum இல் வந்து ஈகோ காட்டி கோபப்படுவது தவறு என்று நண்பர்களும் உணர்த்தி நானும் உணர்ந்து விட்டேன். அதனால் என் மனதுக்கு நெருக்கமான இந்த குழுவை எக்காலத்திலும் விட்டு கொடுக்க மாட்டேன். நான் சொல்லிய படி ,என் பதிவுகளை வரும் வாரம் சென்று ,மறு வாரத்திலிருந்து தொடர்வேன்.என்னுடைய முன்கோபம் என் பலவீனம். சுருக்கவே மீள்வது எனது பெரும் பலம்.

இப்படி ஒத்துக்கொள்ள மிகப் பெரிய மனதும், துணிச்சலும் வேண்டும். நிஜமாகவே பெருமைப்படுகிறேன். மீண்டும் ராஜாவாகத் தொடருங்கள். அதுதான் நீதி.

ScottAlise
9th September 2013, 08:01 AM
Dear Ragavendran sir,

thanks for Compliments sir, indepth analysis will be done today sir

RAGHAVENDRA
9th September 2013, 08:25 AM
அறிவு ஜீவிகள் என்று கூறிக் கொண்டு நடிகர் திலகத்தின் சில படங்களை மட்டும் அதுவும் பிரபலமான படங்களை மட்டும் பாராட்டி விட்டு நானும் சிவாஜி ரசிகன் என்று சொல்லிக் கொண்டு திரிபவர்கள் மத்தியில், அவருடைய பின்னாளைய படங்களையும் எடுத்துக் கொண்டு அலசும் ராகுல் ராம் அவர்களைப் போன்ற ரசிகர்களை மனதார வரவேற்பதை நான் கடமையாகவும் பெருமையாகவும் கருதுகிறேன். நடிகர் திலகத்தின் அனைத்துப் படங்களிலும் அவருடைய பங்களிப்பைப் பாராட்டும் ரசிகர்களை நான் மனமார வரவேற்கிறேன். தீவிரமான விசுவாசமான பக்தி சிரத்தையுள்ள ரசிகர்களைக் கொண்டுள்ளதால் தான் எம்.ஜி.ஆர் அவர்கள் இன்றும் மக்கள் மனதில் நிலைகொண்டிருக்கிறார் என்பதை நம் நண்பர்கள் உணர வேண்டும். அதைப் போன்ற வேகம், அதைப் போன்ற விசுவாசம் மட்டுமே நடிகர் திலகத்தை நாம் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க உதவும் என்பது தான் என் எண்ணம்.

RAGHAVENDRA
9th September 2013, 08:33 AM
நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றி, அதுவும் குறிப்பிட்ட ஒரு படத்தைப் பற்றிய விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது வேறு படத்தைப் பற்றியோ அல்லது சம்பந்தமில்லாத வேறு பதிவுகளோ வரும் போது சம்பந்தப் பட்ட விவாதம் இடையில் நிறுத்தப் பட நேரிடுகிறது. உதாரணமாக ஞான ஒளி படத்தைப் பற்றிய விவாதம் நடைபெறும் போது நானே ஞானப் பறவை படப் பாடலைக் குறிப்பிட்டேன். இதைத் தவிர்த்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. எதிர்காலத்தில் இது போல் நேராமல் பார்த்துக் கொள்கிறேன். மற்ற நண்பர்களுக்கும் இதையே நான் வேண்டுகோளாய் வைக்கிறேன். முடிந்த வரையில் ஒரு விவாதம் முடிந்த பிறகு மற்றதைத் தொடரலாமே. இதனால் இரு படங்களைப் பற்றிய விவாதங்களுமே பாதிக்கப் படலாம்.

அதே சமயத்தில் புதியவர்களுக்கு இதனால் தொய்வு மனப்பான்மை ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. இது எப்போது முடியுமோ நாம் எப்போது போடுவது என்று எண்ணி அவர்கள் கலந்து கொள்வதையே தவிர்க்கவும் சந்தர்ப்பம் நேரிடலாம்.

இதற்கு சரியான தீர்வை நண்பர்கள் ஆலோசித்து வழங்க வேண்டுகிறேன்.

RAGHAVENDRA
9th September 2013, 08:40 AM
Nadigar Thilagam's films in TV Channels this week

AMARA KAVIYAM RAJ DIGITAL PLUS 10.09.2013 1 PM
DEEPAM MEGA TV 10.09.2013 12 NOON
IMAIGAL RAJ TV 10.09.2013 1.30 PM
AVAN ORU SARITHIRAM RAJ TV 11.09.2013 1.30 PM
ANNAIYIN ANAI RAJ DIGITAL PLUS 12.09.2013 1 PM
NEETHIPATHI RAJ TV 12.09.2013 1.30 PM
RAJA MARIYATHAI RAJ DIGITAL PLUS 12.09.2013 8 PM
THOOKKU THOOKKI MURASU TV 12.09.2013 7.30 PM
EN MAGAN RAJ TV 13.09.2013 1.30 PM
NEELAVANAM JAYA TV 13.09.2013 10 AM
OORUM URAVUM RAJ DIGITAL PLUS 13.09.2013 1 PM
VIDIVELLI MEGA TV 13.09.2013 12 NOON
AVAN THAN MANITHAN J MOVIES 14.09.2013 1 PM
RAJA MARIYATHAI RAJ TV 14.09.2013 1.30 PM

joe
9th September 2013, 08:53 AM
அதே சமயத்தில் புதியவர்களுக்கு இதனால் தொய்வு மனப்பான்மை ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. இது எப்போது முடியுமோ நாம் எப்போது போடுவது என்று எண்ணி அவர்கள் கலந்து கொள்வதையே தவிர்க்கவும் சந்தர்ப்பம் நேரிடலாம்.

இதற்கு சரியான தீர்வை நண்பர்கள் ஆலோசித்து வழங்க வேண்டுகிறேன்.

அதை நெறிப்படுத்தும் பொறுப்பை குறிப்பிட்ட ஒருவர் எடுத்துக்கொள்ளலாம் . என்னைக் கேட்டால் நீங்கள் தான் அதற்கு சரியானவர் .
எனவே ஒரு குறிப்பிட்ட படத்தைப்பற்றிய விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது போதுமான அளவுக்கு அலசியாகிவிட்டது என நீங்கள் நினைக்கும் போது அதை குறிப்பிட்டு அந்த விவாதத்தை முடித்து வைக்கலாம் .

RAGHAVENDRA
9th September 2013, 08:56 AM
ஜோ சார்,
எனக்கு தனிப்பட்ட முறையில் தோன்றும் கருத்து, அந்த கருத்துப் பரிமாற்றத்தை ஆரம்பித்தவரே அதை முடித்து வைப்பதாகக் கூறினால் பொருத்தமாகவும் உசிதமாகவும் இருக்கும். முடிந்தால் ஒரு காலக் கெடுவும் வைத்துக் கொள்ளலாம்.

joe
9th September 2013, 09:03 AM
ஜோ சார்,
எனக்கு தனிப்பட்ட முறையில் தோன்றும் கருத்து, அந்த கருத்துப் பரிமாற்றத்தை ஆரம்பித்தவரே அதை முடித்து வைப்பதாகக் கூறினால் பொருத்தமாகவும் உசிதமாகவும் இருக்கும். முடிந்தால் ஒரு காலக் கெடுவும் வைத்துக் கொள்ளலாம்.

அதில் ஒரு சிக்கல் இருக்கிறது . சிலர் ஆரம்பித்துவிடுவார்கள் ,பின்னர் அதிகமாக இங்கே வரமுடியாமல் போகலாம் . அதனால் தான் எப்போதும் தொடர்ந்து இங்கே வந்து கவனித்துக்கொள்ளும் உங்களைப் போன்ற ஒருவர் பொதுவாக அந்த நெறியாழ்கையை செய்வது நல்லது என்பது என் கருத்து .

மற்றவர்கள் என்ன கருத்தை கொண்டிருக்கிறார்கள் என பார்ப்போம்.

ScottAlise
9th September 2013, 09:22 AM
சிரஞ்சீவி படத்தின் நடிகர் திலகத்தின் கேரக்டர் யை மட்டும் எடுத்து தனியா எழுதணும் என்று ராகவேந்திரன் சார் , போட்ட பதிவு தான் நான் இதை எழுத காரணம் . மேலும் இது வரை நடிகர் திலகத்தின் பாத்திரம் அனாதை என்ற பாரத்துடன் வாழ்ந்த தெய்வ மகன் கண்ணன் , அந்தோனி கூட இந்த டேவிட் சிரஞ்சீவி யை ஒப்பிட்டு எழுத போகிறேன்
வாசு சார் யின் பாணி தான்

ஒரே மாதிரி பாத்திரங்கள் எடுத்து நடிப்பது என்பது ஒரு நடிகரின் வாழ்க்கையில் சகஜம் அதுவும் நடிகர் திலகம் போலே ஏக பட்ட படங்களில் நடித்த நடிகர் க்கு இது ஒரு சாதாரன நிகழ்வு தான் ஆனால் அந்த ஒரே பாத்திரத்தை ஒரு நடிகர் எப்படி வெளி கொண்டு வருகிறார் என்பதே முக்கியம்

தெய்வ மகன் கண்ணன் ஆகட்டும் , கண்ணன் ஆகட்டும் அவர்கள் வாழ்க்கையில் ஒரு சோகம் இருக்கும் , தான் ஒரு அனாதை என்பது, நீதியில் தான் ஒரு அனாதை என்ற வலியை கொஞ்சம் arrogance இருக்கும் ஆனால் இந்த டேவிட் சிரஞ்சீவி படத்தில் அந்த ஒரு angle இருக்கவே இருக்காது.

அதே மாதிரி தான் ஒரு அனாதை என்ற கோபம் , சமுகத்தில் மேல் ஒரு வெறுப்பு , தான் கவனிக்க பட வேண்டும் என்ற ஒரு எண்ணம் , அந்த கோபம் கூட தன்னை ஒரு கருவியாக எடுத்து கொண்டு இந்த சமுகம் advantage அக எடுத்து கொள்ள கூடாது என்பதுக்காக போட்டு கொண்ட ஒரு தற்காப்பு வேலி தான் (கோபம் தான் நல்ல உள்ளகளுக்கு ஒரே தற்காப்பு என்றதை ஒரு புத்தகத்தில் படித்ததாக ஒரு நினைவு )

டேவிட் சிரஞ்சீவி இந்த சூத்திரத்தில் அடங்காத பாத்திரம் , அவருக்கு கோபம் என்பது ரொம்ப provoke செய்தால் மட்டுமே வருகிறது

அதே போலே தெய்வ மகன் கண்ணன் மற்றும் ஒலி அந்தோனி இருவருக்கும் வாழ்க்கையில் ஒரு personal கோஅல் என்பது இருக்கும் .
கண்ணனுக்கு தன் பெற்றோர்களை கண்டுபிடிப்பது , அந்தோனிக்கு தன் மகளின் வாழ்வு மற்றும் father யின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஒரு தாகம். நீதி யின் நாயகனுக்கு தன்னால் பாதிக்க பட்ட குடும்பத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே இலக்கு

டேவிட் சிரஞ்சீவி க்கு இந்த மாதிரி சொந்த அபிலாஷை என்பதே கடையாது , சொந்த விருப்பு , வெறுப்பு என்பது கிடையாது , அவர் வேலை செய்யும் கப்பலில் வரும் பயணிகளின் ஷேமம் மட்டுமே ஒரே குறிக்கோள்
என் பார்வையில் தெய்வ மகன் கண்ணன் , ஒலி அந்தோணி இருவரின் வாழ்க்கையிலும் காதல் என்ற ஒரு அம்சம் கடுகு அளவாக இருக்கும் , சிரஞ்சீவி யில் அதுவும் இருக்காது , ஒரே துறவி போலே வாழ்கை சிரஞ்சீவிக்கு .(நீதி யில் கடைசியில் எல்லாம் சுபம் )
அதானால் தான் சௌகார் பாவ மணிப்பு கேட்கும் பொது அவர் கண்ணில் ஒரு தெய்வீக ஒலி மற்றும் ஒரு தேஜஸ் . அந்த காட்சியில் அவர் குரலும் அதுக்கு ஏற்றரர் போல் ஒரே வித base வாய்ஸ் மற்றும் echo உடன் எதிரொலிக்கும்
கண்ணனுக்கு தான் ஒரு அனாதை தன்னை தன் அப்பா அனாதை அக்கி விட்டார் என்ற ஒரே குறை மற்றும் சுமை
அந்தோனி க்கு தன் பேத்தி யின் கல்யாணத்தை முடிக்க வேண்டும் என்ற சுமை. நீதியில் ஒரு emotional outburst காட்சி உண்டு.

சிரஞ்சீவிக்கு சௌகார் தன் மேல் மதிப்பு வைத்து பாவ மணிப்பு கேட்டு , அந்த உண்மையை வெளியே சொல்ல முடியாமல் , மோசடிநபர்கள் செய்யும் வேலைகள் தன் 30 வருட குட்வில் யை இழக்கும் என்று தெரிந்தும் அதை கர்த்தர் இட்ட கட்டளை என்று தெரிந்தே பழி என்ற சிலுவையை சுமகிறார்
இந்த உலகத்தில் நல்லவர்கள் வந்த வேலை முடிந்த உடன் சென்று விடுவார்கள் என்ற விதிக்கு ஏற்ப , சிரஞ்சீவி கடைசி மூச்சு வரையில் கடமையே கண் என்று உயிர் விடுகிறார் (கடைசி காட்சியில் அவர் பேசும் வசனம் கம்பீரம் + கருணை )

இந்த படங்களில் நடிகர் திலகத்தின் costumes மற்றும் accesories என்று பார்த்தல்
தெய்வ மகன் யில் ஒரு tight full hand டிரஸ் . அந்தோனி 3/4 pant , நீதியில் ஒரே costume (இவர்களின் costume என்பது ஒரே pattern அல்லது ஒரே டிரஸ் தான் )

சிரஞ்சீவி யில் நடிகர் திலகத்தின் டிரஸ் என்பது தன் சீருடை மட்டுமே , அதும் அடர்த்தியான கிர்தா, முன்னாடி பட்டன் போடாமல் அந்த சிலுவை யை பிரகாசமாக காடும் அந்த விரிந்த மார்பு , சற்று தளர்ந்த நடை (அந்தோனி க்கு பணம் கிடைக்க வில்லை என்றல் இப்படி தான் நடந்து இருப்பாரோ )
இப்படி பாத்திரத்தில் ஒற்றுமை இருந்தாலும் அதை present செய்யும் விதத்தில் மாறுதல் இருக்கும்
இந்த பாத்திரத்தில் நடிகர் திலகம் 5 வருடத்துக்கு ஒரு முறை சராசரியாக நடித்தாலும் இந்த பாத்திரம் ஒரு matured performance இருக்கும் , காரணம் டைரக்டர் யின் அணுகுமுறை , காலம் நம் நடிகர் திலகத்தின் வாழ்வில் ஏற்படுத்தும் ஒரு matured outlook யை கொடுக்கும்
இந்த சமூகமும் , பக்குவம்

Gopal.s
9th September 2013, 11:10 AM
இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.

முழு முதற்கடவுள் கணேசனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறும் முழுமுதல் நடிப்பு கடவுள் கணேசன் பக்தர்கள்.

Gopal.s
9th September 2013, 11:15 AM
Rahul Ram,

I do not mean to discourage you but modelling others style and copying is not good for you in the long run. Like Pammalar,Murali, Karthik,Ragavendhar,Vasudevan all have different and distinct style ,you develop your own style instead of aping others.

You Pl.Develop some taste for movies instead of mechanically writing whatever comes to your mind. Atleast ask your mother whether she likes the Film that you are going to write about.

We do not want to dilute others good work in this thread. You can read more and develop a taste. Do not copy others as you demean their writing also.

You are young and I appreciate your enthusiasm.

ScottAlise
9th September 2013, 11:51 AM
Dear Gopal sir,

I got inspired from Vasu saar's writing its true and for comparison I had no other go other than comparing the same roles played by him

Gopal.s
9th September 2013, 12:05 PM
உத்திரகண்ட் மாநிலத்தை சேர்ந்த தருண் விஜய் என்ற எம்.பீ தமிழை பெருமை படுத்தி பேசியுள்ளது நம்மை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.

http://tamil.oneindia.in/news/2013/09/08/tamilnadu-bjp-mp-from-uttarakhand-seeks-official-status-for-tamil-183012.html

நம் தமிழுக்கே பெருமை சேர்த்த தமிழன் நடிகர்திலகத்தை போற்றுவதில்
"உலக தமிழர்களே ஒன்று படுங்கள்."

anasiuvawoeh
9th September 2013, 07:52 PM
Dear Ramachandran Sir,Veerapandiya kattabomman was screened in Oorvashi also during the period u have mentioned.but I am not sure its additional or by mistake u have quoted Marisrock.Please verify Also the number of days were more.thanks/regards
Dear All

OUR GREAT NADIGARTHILAGAM SIVAJI'S RE-RELEASE FILMS UNBREAKABLE RECORD IN TRICHY DISTRICT

1. IRUVAR ULLAM - KALAI ARANGAM A/C - CAPACITY 1600 SEATS - 21 DAYS - YEAR 1987

2. VEERA PANDIYA KATTA BOMMAM - MARIS ROCK A/C - 19 DAYS - YEAR 1984

3. KARNAN - RAMBA A/C - 28 DAYS AND CONTINUOUS SHIFTING OORVASHI A/C - 14 DAYS - YEAR 2012[/FONT][/B]

NOBODY CAN TOUCH THIS RECORD ---- SIVAJI IS RECOR CREATOR OF 20TH AND 21ST CENTURY -- HIGH CLASS AND TOP CLASS AUDIENCE ALWAYS WITH SIVAJI

anasiuvawoeh
9th September 2013, 07:54 PM
Thanks for your information Sir.

anasiuvawoeh
9th September 2013, 07:57 PM
Your view is practical sir.There is every possibility that a person may not comeback and reply .So better Mr.Joe"s view is correct.

அதில் ஒரு சிக்கல் இருக்கிறது . சிலர் ஆரம்பித்துவிடுவார்கள் ,பின்னர் அதிகமாக இங்கே வரமுடியாமல் போகலாம் . அதனால் தான் எப்போதும் தொடர்ந்து இங்கே வந்து கவனித்துக்கொள்ளும் உங்களைப் போன்ற ஒருவர் பொதுவாக அந்த நெறியாழ்கையை செய்வது நல்லது என்பது என் கருத்து .

மற்றவர்கள் என்ன கருத்தை கொண்டிருக்கிறார்கள் என பார்ப்போம்.

RAGHAVENDRA
9th September 2013, 08:00 PM
Ravichandran,
Warm welcome to the world of Nadigar Thilagam Fans. We are very eager to read your views, nostalgia about Nadigar Thilagam. Before that kindly introduce and say about yourself.
Raghavendran

anasiuvawoeh
9th September 2013, 08:01 PM
Its always nice when other-than her own children,some other children also appreciate a MOTHER!
உத்திரகண்ட் மாநிலத்தை சேர்ந்த தருண் விஜய் என்ற எம்.பீ தமிழை பெருமை படுத்தி பேசியுள்ளது நம்மை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.

http://tamil.oneindia.in/news/2013/09/08/tamilnadu-bjp-mp-from-uttarakhand-seeks-official-status-for-tamil-183012.html

நம் தமிழுக்கே பெருமை சேர்த்த தமிழன் நடிகர்திலகத்தை போற்றுவதில்
"உலக தமிழர்களே ஒன்று படுங்கள்."

anasiuvawoeh
9th September 2013, 08:12 PM
Dear Sir,I am happy to be welcomed by one of the great admirers of NT.My native is Musiri.FUpto 5th standard i studied in Musiri.from 6th to 8th ,I studied in SAINIK School,Amaravathinagar.Then upto 12th I studied in E.R school trichy.I did diploma in civil in SIT,Trichy.Joined L&T thro campus in 1987.Upto 2004 I worked there.In that about 10years I worked in NorthIndia.I resigned in 2004 .Now I am taking care of automobile spares shop owned by my Brother in Law.With regard to how I became a fan of NT,since my mother was a teacher I was brought up mostly by my mother's sisters who were Sivaji fans and quiet naturally,they made me as a fan of NT thro the food and milk which in turn became my blood.I think this is enough for now and I am proud to be a simple fan of NT
Ravichandran,
Warm welcome to the world of Nadigar Thilagam Fans. We are very eager to read your views, nostalgia about Nadigar Thilagam. Before that kindly introduce and say about yourself.
Raghavendran

Murali Srinivas
9th September 2013, 09:55 PM
சில நாட்கள் இடைவெளிக்கு பின் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

புதிய பறவை கோபால் ஞான ஒளி ஆண்டனி ஆகிய இருவரையும் ஒப்பிட்டு வாசு அவர்கள் எழுதிய comparative study மிக மிக சுவையாக அந்த இரண்டு பாத்திரங்களையும் மீண்டும் கண் முன் கொண்டு வருவதாக அமைந்திருந்தது. வாழ்த்துகள் வாசு.

நண்பர் கார்த்திக் அடிக்கடி விஷயம் ஒன்றை குறிப்பிடுவார். என்னவென்றால் சென்னை, மதுரை போன்ற நகரங்களில் பழைய நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்வது போல் திருச்சி மாநகரில் நடிகர் திலகத்தின் பொற்கால சாதனை நாட்களை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள யாரேனும் இருந்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று குறிப்பிடுவார். அந்த குறை போக்கும் வண்ணம் அங்கத்தினராக வந்து திருச்சி மாநகரில் மறு வெளியீடுகளில் நடிகர் திலகத்தின் படங்கள் சாதனை புரிந்த வரலாற்றை இங்கே பகிர்ந்துக் கொண்ட நண்பர் ராமச்சந்திரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

புதிய வரவாக வருகை தந்திருக்கும் முசிறியின் மைந்தன் பொன்.ரவிச்சந்திரன் அவர்களுக்கு எப்போதும் புதியவர்களை வாழ்த்துவது போல் நல்ல இடம் நீங்கள் வந்த இடம் என கூறி வரவேற்கிறேன். நடிகர் திலகத்தின் பல்வேறு பரிமாணங்களை நீங்கள் ரசித்த விதம் மற்றும் திருச்சியிலும் சுற்று வட்டாரங்களிலும் நடிகர் திலகத்தின் படங்கள் செய்த சாதனைகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நடிகர் திலகத்தின் முதல் படத்தையே 245 நாள் படமாக்கிய மாநகர் அல்லவா! வாழ்த்துகள்.

அன்புடன்

sivaa
9th September 2013, 10:13 PM
70 வதுகளில் எனக்கு தழிழ்நாட்டை சேர்ந்த
இல .நல்லதம்பி (திண்டுகல்)
எஸ் .செல்வராஜ் (நாகர்கோவில்)
டீ .எத்திராஜூலு (சென்னை)
ஆர் .ராஜ்குமார் (போவி தெரு; பெங்கழூர்)
அனந்தராஜ் (அருப்புகோட்டை)
ஆகிய நண்பர்களுடன் கடிதத்தொடர்பாடல் மூலம் நடிகர்கள்கள்திலகத்தின் பட விபரங்கள் பத்திரிகைகள்
நோட்டீஸ் மலர்கள் முதலியனவற்றை பரிமாறிக்கொண்டேன்.காலப் போக்கில் பல நண்பர்களுடன் தொடர்பு அற்றுப்போய் கடைசியாக
அருப்புக் கோட்டை நண்பர் ஆனந்தராஜ் அவர்களுடன் தொடர்பு இருந்ததுநாட்டப்பிரச்சினையில் அதுவும் அற்றுப்போய்விட்டது.
(மேலே குறிப்பிட்டுள்ள நண்பர்கள் எவரையேனும் திரு செல்வராஜ் தவிர hub நண்பர்களுக்கு தெரியுமாயின் அறியத்தாருங்கள்)
அண்மையில் இந்தியா வந்திருந்த பொழுது திரு செல்வராஜ் அவர்களை கன்னியாகுமரியில் சந்தித்தேன் .
மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவெனில்தொலைபேசி தொடர்பில் இருந்த hub நண்பர்களான திரு ராகவேந்திரா சார் திரு முரளி சார் ஆகியோரை சந்திக்க முடியாமல் போனதுதான்.அதற்காக இருவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன்.இதுவிடயமாக திரு ராகவேச்திரா சாருடன் தொடர்பு கொண்டு விபரம் கூறியிருந்தேன். திரு முரளி அவர்களுக்குகோல் எடுத்திருந்தேன் ஆனால் தொடர்புகொள்ளமுடியவில்லை

vasudevan31355
10th September 2013, 06:26 AM
பொற்கால நாயகரின் புகழை இங்கு பாட வந்த திரு. பொன்.ரவிச்சந்திரன் அவர்களே! தங்களை வரவேற்பதில் மிக்க உவகை அடைகிறேன். வருக! வருக!

Richardsof
10th September 2013, 06:48 AM
இனிய நண்பர் திரு சிவா

பெங்களுர் அலசூர் போவி தெருவில் இருந்தவர் திரு ஜெயகுமார் - நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர் .

[ராஜ்குமார் அல்ல ].எங்களின் நண்பரும் கூட . 1971-2000 வரை நன்கு அறிமுகமானவர் .

1971களில் தமிழ்நாடு - இலங்கை பகுதிகளில் வசித்த முக்கியமான மக்கள் திலகம் - நடிகர் திலகம்

மன்ற நிர்வாகிகள் அடிக்கடி கடித போக்கு வரத்து மூலம் நட்பு வட்டம் பெருகியது .

குறிப்பாக சென்னை - மதுரை - திருச்சி - சேலம் - கோவை - நெல்லை - யாழ்ப்பாணம் - கொழும்பு

நாகர்கோயில் - வேலூர் - போன்ற நகரங்களில் இருந்து வாரத்திற்கு 10 கடிதங்கள் போக்கு வரத்து

இருக்கும் . அதில் முக்கியமான தகவல்கள் என்ன வென்றால்

படம் ஓடும் விபரம்

விளம்பரங்கள்

நோட்டீஸ்

சாதனை தகவல்கள்

ஒப்பீடு நிலவரம்

வர இருக்கும் படங்கள் பற்றிய நிலவரம்

புள்ளி விபரம்

கருத்து பரிமாற்றம்

என்று கடித போக்கு வரத்து இருந்தது . நட்பு ரீதியில் நாங்கள் எங்களுக்கு கிடைத்த தகவல் வைத்து நேருக்கு நேர் சந்தித்து விவாதம் நடத்திய அந்த இனிமையான நாட்கள் மறக்க முடியாத ஒன்றாகும் .

திரு ஜெயகுமார் - நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர் 1973ல் ''நீதி சிவாஜிகணேசன் கலைக்குழு '' என்ற

மன்றத்தினை துவக்கி சிறப்பாக செயலாற்றி வந்தார் . பின்னர் உடல் நலம் பாதிக்கபட்டு 2001ல்

காலமானார் . என்னுடைய நண்பர் என்ற முறையில் [உங்களுக்கும் ] இந்த தகவல் தெரிவிக்கிறேன் .

Subramaniam Ramajayam
10th September 2013, 07:53 AM
70 வதுகளில் எனக்கு தழிழ்நாட்டை சேர்ந்த
இல .நல்லதம்பி (திண்டுகல்)
எஸ் .செல்வராஜ் (நாகர்கோவில்)
டீ .எத்திராஜூலு (சென்னை)
ஆர் .ராஜ்குமார் (போவி தெரு; பெங்கழூர்)
அனந்தராஜ் (அருப்புகோட்டை)
ஆகிய நண்பர்களுடன் கடிதத்தொடர்பாடல் மூலம் நடிகர்கள்கள்திலகத்தின் பட விபரங்கள் பத்திரிகைகள்
நோட்டீஸ் மலர்கள் முதலியனவற்றை பரிமாறிக்கொண்டேன்.காலப் போக்கில் பல நண்பர்களுடன் தொடர்பு அற்றுப்போய் கடைசியாக
அருப்புக் கோட்டை நண்பர் ஆனந்தராஜ் அவர்களுடன் தொடர்பு இருந்ததுநாட்டப்பிரச்சினையில் அதுவும் அற்றுப்போய்விட்டது.
(மேலே குறிப்பிட்டுள்ள நண்பர்கள் எவரையேனும் திரு செல்வராஜ் தவிர hub நண்பர்களுக்கு தெரியுமாயின் அறியத்தாருங்கள்)
அண்மையில் இந்தியா வந்திருந்த பொழுது திரு செல்வராஜ் அவர்களை கன்னியாகுமரியில் சந்தித்தேன் .
மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவெனில்தொலைபேசி தொடர்பில் இருந்த hub நண்பர்களான திரு ராகவேந்திரா சார் திரு முரளி சார் ஆகியோரை சந்திக்க முடியாமல் போனதுதான்.அதற்காக இருவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன்.இதுவிடயமாக திரு ராகவேச்திரா சாருடன் தொடர்பு கொண்டு விபரம் கூறியிருந்தேன். திரு முரளி அவர்களுக்குகோல் எடுத்திருந்தேன் ஆனால் தொடர்புகொள்ளமுடியவில்லை

On looking at this mail, my meories goes back to 68- 76 years, when I was on contact with two of my coimbatore friends namely mr
radhakrshnan and umamaheswaran very strong followers of NT.radhakrishnan native of madurai settled in cbe.
we used to echange papercuttings of NT news materials of coimbatore and madras vice versa.
suddely the links broken and we could not establish contacts.
nanbargal engirundalum valga. they were employed in LMW cbe at that time. very great penfriends of yesteryears.

RAGHAVENDRA
10th September 2013, 07:56 AM
வினோத் சார்
தாங்கள் கூறியது போல் அல்சூர் போவி தெருவில் நீதி சிவாஜி கணேசன் ரசிகர் கலைக்குழு ஜெயக்குமாரை மறக்க முடியாது. மிகவும் இனிய நண்பர். நடிகர் திலகத்தின் அதி தீவிர ரசிகர். எந்த ஒரு படத்தையும் விடமாட்டார். அனைத்திற்கும் மலர் வெளியிடுவார். நாங்கள் தென்னக சிவாஜி கொள்கை பரப்பும் குழு என்று அமைப்பில் இருந்தோம். அதில் பல ஊர்களிலிருந்தும் ரசிகர்கள் பங்கு கொண்டு நடிகர் திலகத்தின் பட வெளியீட்டு விவரங்கள், விளம்பரங்கள், வசூல் விவரங்கள் போன்றவற்றை கடிதங்கள் மூலம் பகிரந்து கொள்வோம். இதை நான் முன்பே கூறியுள்ளேன். அப்போதெல்லாம் தொலைபேசிக்குக் கூட வாயப்ப்பிருக்காது. போஸ்ட் கார்டும் இன்லேண்ட் லெட்டரும் தான். ஜெயகுமார் அவர்களின் கையெழுத்து மிகவும் அழகாக இருக்கும். இருந்தாலும் தகவல்களை டைப் செய்து அனுப்புவார். கும்பகோணம், பொள்ளாச்சி, கோவில்பட்டி, குவைத், கண்டி, மலேசியா, சிங்கப்பூர் என பரந்து விரிந்தது எங்கள் குழு. 1970களின் மத்தியில் ஜெயகுமார் நடிகர் திலகத்திற்கு ஆற்றிய பங்கு 2000 வரை தொடர்ந்தது. மறக்க முடியாத நண்பர். அவர் இப்போது இல்லை என்று நினைப்பதற்கே கஷ்டமாயிருக்கிறது. நடிகர் திலகத்தின் செல்லப் பிள்ளைகளில் ஜெயகுமாரும் ஒருவர். அன்னை இல்லத்தில் சென்று விட்டால் அது அவர் வீடு தான். ஜெயகுமாரை நடிகர் திலகம் செல்லமாய்க் கடிந்து கொள்வதைப் பார்ப்பதே தனி அழகு.

ஜெயகுமாரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

RAGHAVENDRA
10th September 2013, 08:00 AM
சிவா சார்
தங்களுடன் தொலைபேசியில் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது மிகவும் சந்தோஷமாயிருந்தது. இலங்கையிலிருந்து நடிகர் திலகத்தின் புகழ் பாடும் ரசிகர்கள் ஏராளமானவர்கள் அப்போது ஓரளவு எனக்கு பரிச்சயம். உத்தமன் பட வசூல் விவரங்கள் அவ்வபோது எனக்கு கண்டியிலிருந்து கதிர் காமர் என்ற நண்பர் அனுப்புவார். அவரைத் தங்களுக்குத் தெரிந்திருக்குமா எனத் தெரியவில்லை. சில சமயம் அவசரம் என்றால் ஏர் மெயிலில் அனுப்புவார், அதற்குக் கட்டணம் சற்று கூடுதல் என்றாலும் கவலைப் படமாட்டார். அதே போல் எங்கள் குழுவிலிருந்தும் நாங்களும் அனுப்புவோம்.

இப்போதைய வசதிகள் அப்போது கிடைத்திருந்தால் எவ்வளவு பயனுள்ளதாய் இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன்.

Gopal.s
10th September 2013, 08:17 AM
பொன்னை வேண்டாதவர்கள் யார்? எங்களுக்கு ஒரு பொன் கிடைத்தால் போதாது. பல நூறு பொன் கிடைக்க வேண்டும்.வருக.வருக.

சிவா சார், மீள்வருகைக்கு நன்றி. கலக்குங்கள்.

சௌத்ரி சார், தகவல்கள் அருமை.

வாசு, நான் சமீபத்தில் மிக மிக ரசித்த பதிவு கோபால்-அந்தோணி. Very creative .

வினோத், தங்கள் பங்களிப்புக்கு நன்றி. நடுநிலை மனிதர் என்ற வகையில் தாங்கள் இரு திரியிலும் பங்களித்தல் நலம்.

Gopal.s
10th September 2013, 08:37 AM
நான் நன்கு பாடுவேன் என்ற வகையில் சிவாஜி ரசிகர் மன்றத்தினருக்கு அறிமுகம் ஆனவன். என் சகோதரர்கள் படித்து வந்த நெய்வேலி ஜவகர் பள்ளியின் அருகில் ,நெய்வேலி அமராவதி திரையரங்கு செல்லும் சாலையில் இருந்த மன்றத்துக்கு நான் செல்ல பிள்ளை.(வட்டம்-17)

நிறைய மாலைகளில், புது நாடகத்தில்,யாரை நம்பி,இசை கேட்டால் போன்ற பாடல்கள் ஒரு தபேலா,ஒரு மிருதங்கம் வாசிப்போரின் துணையுடன் நடந்தேறும். என் பேச்சுக்கு, பாட்டுக்கு சோழ நாடே அடிமை பட்டு கிடந்த காலம்.(பின்னே பத்து வயது prodigy என்றால் சும்மாவா).

காங்கிரஸ் மேல் ஒரே பிடிப்பு நடிகர்திலகத்தை முன்னிட்டே. (உண்மையில் பிடித்த தலைவர்கள் பெரியார்,அண்ணா,கலைஞர்) அதனால் காங்கிரஸ் மேடைகளில் முழக்கமிடுவேன். பெருந்தலைவர்கள் வந்து சேரும் வரை நேரத்தை ஒப்பேற்றுவோம். ஒரு முறை நிஜமாகவே பாதி பேச்சில் பெருந்தலைவர் வந்து விட்டார். என்னை பிடித்து இழுத்து போதும் என்று சொன்ன நிர்வாகியை கண்டித்து பேசட்டும் சொன்ன பெருந்தலைவரின் பெருந்தன்மை பசுமையாய்.ஒரு முறை கண்ணதாசன் பங்கு பெற்ற மேடையில் காந்தி,நேரு,காமராஜ் பற்றி கவிதையெழுதி படித்த ஞாபகம்.

குறிப்பிட வேண்டியது ,எனக்கு அன்னை மட்டுமின்றி ஆசிரியை ஆகவும் இருந்த என்னை பெற்றவளின் vision .(1970 வாக்கில்). என்னை பற்றி நிறைய நலம் விரும்பிகள் கெட்டு போகிறேன் என்று கோள் சொன்ன போது ,என்னை நாடகம்,public speaking இவற்றில் பங்கு கொள்வதில் தவறில்லை என்று சொல்லி ஊக்குவித்த என் அன்னைக்கு என்றுமே எனது சிரம் தாழ்ந்த நன்றிகள். எங்களை உண்மையிலேயே செதுக்கியவர் அவர்தான்.

இப்போது நான் கேட்க வந்தது என் சென்னை நண்பர் ஒருவர் பற்றி. அவர் பெயர் சிவாஜி .மு.ராமசாமி. அவரை பற்றி 70 களின் சென்னை நண்பர்களுக்கு தெரிந்தால், அவரை இந்த நண்பன் தேடுவதை தெரிய படுத்தவும்.

Gopal.s
10th September 2013, 09:09 AM
நடுநிலை நண்பர் சுகாராம் காண்பதே இல்லையே?

Gopal.s
10th September 2013, 11:14 AM
வரும் ஞாயிற்று கிழமை ntf சார்பில் என் தம்பி திரையிடல் என்று கேள்வி படுகிறேன். உண்மையா?

Gopal.s
10th September 2013, 11:55 AM
அது மட்டுமில்லை Joe . 1970 களில் நிறைய திமுகவினர் நடிப்பு,திரைப்படங்கள் என்றால் நடிகர்திலகமே என்று புகழ்ந்து ,அவர் படங்களை ஆசையோடு பார்த்தவர்கள். உதாரணங்கள்- டி.ஆர்.ஆர்.,ஆளவந்தார் போன்ற என் தமிழ் ஆசிரியர்கள், என் நண்பர்கள் ராஜமகேந்திரன், ரவீந்திரன் போன்றோர். இன்னும் நிறைய.

அண்ணாவும் ,கலைஞருமே மானசீக சிவாஜி ரசிகர்களே. பாலும் பழமும் போன்ற படங்கள் ரிலீஸ் ஆன போது,அண்ணா, முதல் நாளே படம் பார்த்து, அவர் உடல் சற்றே பெருத்ததை குறிப்பிட்ட சகாக்களிடம், கணேசன் நடிப்பை பார் ,அவரை விட உலகில் சிறந்த நடிகர் இல்லை. என்ன தரமான படங்கள். என்று குறிப்பிட்டதாக குறிப்புகள் உண்டு. கலைஞரும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ,நடிகர்திலகம் படம் பார்த்து ,டி.வீ. பெட்டியை வாஞ்சையுடன் தடவி நீதாண்டா ஒரே நடிகன் என்று தழுதழுப்பாராம்.
கனிமொழி மற்றும் அழகிரி சிவாஜி ரசிகர்களே. கனிமொழி ,அரவிந்தனிடம் சிவாஜி படங்களை பற்றி discuss பண்ணியதை ஒரு பேட்டியில் குறித்துள்ளார்.திருச்சி சிவா ,வை.கோ போன்றோர் குறிப்பிட பட வேண்டியவர்கள்.

joe
10th September 2013, 12:07 PM
அது மட்டுமில்லை Joe . 1970 களில் நிறைய திமுகவினர் நடிப்பு,திரைப்படங்கள் என்றால் நடிகர்திலகமே என்று புகழ்ந்து ,அவர் படங்களை ஆசையோடு பார்த்தவர்கள். உதாரணங்கள்- டி.ஆர்.ஆர்.,ஆளவந்தார் போன்ற என் தமிழ் ஆசிரியர்கள், என் நண்பர்கள் ராஜமகேந்திரன், ரவீந்திரன் போன்றோர். இன்னும் நிறைய.

என்ன தல .. மக்கள் திலகம்ம் திரியில் நான் சொன்னது சம்பந்தமாகவா ?

நீங்கள் உதாரணத்துக்கு வேறெங்கும் போக வேண்டாம் . நானே உதாரணம் . எனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து நான் நடிகர் திலகத்தின் ரசிகன் .அதே நேரத்தில் எப்போதும் நான் திமுக அபிமானியாகவே (இடையில் சிறிது காலம் மதிமுக-வை ஆதரித்தது தவிர்த்து) இருந்திருக்கிறேன் .

எங்கள் கிராமத்தை பொறுத்தவரை அண்ணா காலத்தில் திமுக-வின் கோட்டையாக இருந்திருக்கிறது . விரல் விட்டு எண்ணக்கூடிய காங்கிரசு குடும்பங்கள் இருந்திருக்கின்றன .பின்னர் எம்.ஜி.ஆர் அதிமுக ஆரம்பித்த பிறகு பெரும்பகுதி அதிமுக-வுக்கு சென்றது . திமுக-வில் தங்கிவிட்டோர் பலர் எம்.ஜி.ஆர் ரசிகர்களாகவும் தொடர்ந்தார்கள் . ஆனால் நான் சிறுவனாக இருந்த போது எங்கள் ஊரை பொறுத்தவரை அதிமுக-வினர் எம்.ஜி.ஆர் படங்களை திரையிடும் போது அதற்கு இணையாக சிவாஜி படங்களை திரையிட்டது திமுக-வினர் தான் . காங்கிரசார் சீன்லயே கிடையாது . நான் மட்டுமல்ல என் வயதில் சிவாஜி ரசிகர்களாக இருந்த என் நண்பர்கள் பலர் அரசியலில் திமுக அனுதாபிகள் தான் .

Gopal.s
10th September 2013, 12:15 PM
ஒரு ரகசியம் சொல்லட்டுமா? பெரும் தலைவர் மேல் எனக்கு மிக மிக மரியாதை இருந்தாலும், சிவாஜியை பயன் படுத்திய அளவு, அவருக்கு அங்கீகாரம் கொடுக்காத காங்கிரஸ் மேல் எனக்கு கசப்புணர்வே. நான் திமுக கலைஞர் அனுதாபியாகவே தொடர்ந்தேன். எதிர்ப்பலையிலும் திமுகவை கட்டு கோப்பாய் வைத்திருந்த கலைஞரை நான் வியக்காத நாளேயில்லை. ஆனால் வை.கோ வின் மேல் எனக்கிருந்த மரியாதை நிமித்தம் ,சிறிது காலம் (1998 வரை) வைகோ அனுதாபியானேன்.(சிவாஜி மறைந்ததும் அவருக்கு பாரத் ரத்னா வழங்க மேல்சபையில் குரல் எழுப்பியவர். )
இன்றும் தி.மு.க ,கலைஞர் என்றால் சிறிதே மனம் இளகும்.

Gopal.s
10th September 2013, 12:19 PM
சிவாஜியும் ,கலைஞரும் இணைந்த 1980 எனக்கு மகிழ்வு தந்த காலம்.(மற்றோரோடு அவர் மேடையில் தோன்றியது எனக்கு மனது ஒப்பியதே இல்லை) .1988 இல் அவர் தி.மு.க வோடு தேர்தல் உடன்பாடு கண்டிருந்தால், அரசியல் சரித்திரம் திருத்தி எழுத பட்டிருக்கும்.

mr_karthik
10th September 2013, 12:20 PM
எனது கல்லூரிப்பருவத்தில் எனது நெருங்கிய நண்பராகவும், நடிகர்திலகத்தின் தீவிர ரசிகராகவும் விளங்கியவர் நண்பர் ஜபருல்லாஹ். திருச்சி மாவட்டம் லெப்பைக்குடிக்காடு என்ற ஊரைச்சேர்ந்தவர். எங்களை நண்பரகளாக்கியதே நடிகர்திலகத்தின் மீது கொண்ட அபிமானம்தான். சிறுவயதிலிருந்தே நடிகர்திலகத்தின் தீவிர ரசிகராம் அவர். 70-களின் இறுதிப்பகுதிகளில் அவரோடு சேர்ந்து பார்க்காத படமே இல்லையெனலாம். ராயப்பேட்டை புதுக்கல்லூரியிலிருந்து மவுண்ட் ரோடு ஏரியாவிலிருந்த அத்தனை தியேட்டர்களுக்கும் நடந்தே போவோம். பிற்பட்டோருக்கான அரசு விடுதியில் (முதலில் கோடம்பாக்கம் பாலத்தின் கீழே இருந்த ஹாஸ்டலிலும், பின்னர் நந்தனம் எம்.சி.ராஜா ஹாஸ்டலிலும்) தங்கிப்படித்தார். அப்போதே திருச்சி பகுதிகளில் நடிகர்திலகத்தின் படங்கள் ஓடும் விபரங்களை அவருடைய நண்பர்கள் மூலம் கடிதங்கள் வாயிலாகவும், செய்தித்தாள் விளம்பரங்கள் வாயிலாகவும் தருவித்து அவற்றைக் கல்லூரிக்கு கொண்டுவந்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அதுபோல சென்னை விளம்பரங்களையும் அவர்களுக்கு அனுப்புவார். ஆனால் இந்த வேலைகளில் கவனம் செலுத்தினாலும் படிப்பைக் கோட்டை விட்டுவிட மாட்டார். படிப்பில் அசகாய சூரர்.

பி.காம். பட்டப்படிப்பு முடிந்ததும் திருச்சி சென்றவர் அங்கேயே வேலையில் செட்டில் ஆனாலும் திருச்சியில் நமது படங்களின் சாதனைகள் குறித்த கடிதங்களையும், தினத்தந்தி கட்டிங் களையும் தவறாமல் அனுப்பி வந்தார். ஆனால் சிறிது காலம் மட்டுமே. அதன்பின்னர் துபாயில் நல்ல வேலை கிடைத்திருப்பதாகச்சொல்லி புறப்பட்டுச்சென்றார். நானும் வேலை கிடைத்து சென்னையைவிட்டு வெளியேறியதால் கொஞ்சம் கொஞ்சமாக எனக்கும் நண்பர் ஜபருல்லாஹ்வுக்கும் இடையே இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது. இருவருக்கும் திருமணம் ஆகி குடும்பம், குழந்தைகள் என்று ஆனதும் முக்கிய காரணம். (திருமணம் ஆனதும் முதலில் தொலைப்பது இதுபோன்ற சந்தோஷங்களைத்தானே).

நடிகர்திலகத்தின் தீவிர ரசிகரும், எனது நண்பருமான ஜபருல்லாஹ் இப்போது எங்கேயிருக்கிறார், எப்படியிருக்கிறார் என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொன்னால் மகிழ்ச்சி.....

mr_karthik
10th September 2013, 01:28 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

தங்கள் பாராட்டு மழைக்கு மிக்க நன்றி. (பாராட்டு கொஞ்சம் ஓவர் டோஸாக இருந்த போதும்). தங்கள் நம்பிக்கையைத் தக்கவைக்க நிச்சயம் போராடுவேன்.

அன்புள்ள முரளி சார்,

தங்களுடைய ஸ்பெஷாலிட்டியே இதுதான். எப்போதோ ஒருமுறை சொன்னதையெல்லாம் இவ்வளவு நினைவில் வைத்து சமயம் வாய்க்கும்போது மறவாமல் குறிப்பிடுவது, மற்றவர்கள் பதிவுக்கு நீங்கள் தரும் மிகப்பெரிய கௌரவம். (பெரும்பாலோரிடம் இதைக்காண முடிவதில்லை) . சென்னை, மதுரை போல திருச்சியில் நமது நடிகர்திலகத்தின் சாதனைகளை யாரும் எடுத்துரைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நான் சொன்னது உண்மை. அதை நீங்கள் குறிப்பிட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. திருச்சி பிரபாத், ஜுபிடர், ராஜா, பேலஸ், ராக்சி, வெலிங்க்டன் அரங்குகளில் நடிகர்திலகத்தின் சாதனைச்சுவடுகளை பதித்த படங்கள் ஏராளம்.

அன்புள்ள ராமச்சந்திரன் சார் மற்றும் பொன்.ரவிச்சந்திரன் சார்,

நல்வரவு. தங்கள் துவக்கப்பதிவுகளே அருமையாக உள்ளன. நாங்கள் எதிர்பார்ப்பதுபோல திருச்சி நகர சாதனைகளை அள்ளி வீசுங்கள். அதன்மூலம் திருச்சியும் நமது கோட்டையே என்று நிரூபியுங்கள்.

அன்புள்ள ராகுல்ராம் சார்,

தங்களின் 'சிரஞ்சீவி' பட ஆய்வு மிகவும் அருமை. டேவிட் சிரஞ்சீவியின் பாத்திரப்படைப்பை நன்றாக அலசியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். அப்படம் எடுக்கப்பட்ட 'எம்/வி.சிதம்பரம்' சொகுசுக்கப்பல் இப்போது இல்லை. அக்கப்பலின் நினைவுச்சின்னம் சிரஞ்சீவி படம் மட்டுமே. அப்படத்தில் வரும் சில்க் ஸ்மிதாவின் நடனக்காட்சி மட்டும் ஸ்டுடியோவில் படமாக்கப் பட்டது.....

joe
10th September 2013, 01:33 PM
திருச்சி பிரபாத், ஜுபிடர், ராஜா, பேலஸ், ராக்சி, வெலிங்க்டன் அரங்குகளில் நடிகர்திலகத்தின் சாதனைச்சுவடுகளை பதித்த படங்கள் ஏராளம்.
90-களின் ஆரம்பத்தில் நான் திருச்சியில் இருந்த போது இந்த திரையரங்குகள் இரண்டாம் நிலை திரையரங்குகளாக இருந்தன .. கல்லூரி விடுதி நண்பர்கள் சிப்பி , மாரிஸ் என மொய்க்கும் போது என்னுடைய வார விடுமுறை பெரும்பாலும் இங்கே தான் ..ஏனென்றால் இந்த திரையரங்குகள் தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்களை மாற்றி மாற்றி திரையிட்டு வந்தன . குறிப்பாக பிரபாத் , ஜூபிடர் , பேலஸ்.

Gopal.s
10th September 2013, 02:16 PM
திருச்சியில் நான் தங்கிய ஒரு வருடம் மறக்க முடியாதது. பிஷப் ஹீபர் கல்லூரியில் பீ.யு.சி படித்தேன். அந்த வருடம் சத்குருதாஸ் ,சாமிராஜ் என்ற ப்ரின்சி- correspondent மோதலில் பாதிக்கும் மேற்பட்ட நாட்கள் கல்லூரி மூட பட்டே இருந்தது. பிரபாத்தில் தங்க பதக்கம்(வெள்ளி விழா நோக்கி),ராஜாவில் என் மகன்,பாலஸ் அன்பை தேடி, பிரபாத் மனிதனும் தெய்வமாகலாம் என்ற புது படங்கள்.என் நண்பன் ராஜா குணசிங் சென் ஜோசெப் பில் படித்து வந்தான். இருவரும் கிட்டத்தட்ட 28 பழைய சிவாஜி படங்கள் ராக்சி,வெலிங்டன் , ராஜா,ராமகிருஷ்ணா ,வில் சனி,ஞாயிறு நூன் ஷோ பார்த்திருப்போம். பா வரிசை, நிறைய 60,61,62,63,64,65,66,67 ஆம் வருட படங்கள் . தங்கியிருந்தது ஆனைகட்டி மைதான் ,பீம நகர். அக்கம் பக்கம் எல்லாம் சிவாஜி ரசிகர் மயம். ஒரே ஒரு ஆள் முனவர் பாச்சா என்பவனை தவிர. ரவி சந்திரன் தன்னை சீர்திருத்தி விமலாவுடன் இணைந்து கொண்டிருந்த காலகட்டம், போன் பண்ண எங்கள் வீட்டுக்கு வருவார்.அருணாவில் பாபி, வெலிங்டன் யாதோங்கி பாராத்.பாபி ஒரு பத்து முறை.(மும்பை யில் இருந்து கோவை வந்த போது பக்கத்து சீட்டில் டிம்பிள்.கடலைதான்)
என் தம்பிகள் இருவர் சென் ஜோசெப் பில் பீ.காம் படித்தனர். தங்கை சீதா லட்சுமியில் டிகிரி.. எங்கள் குடும்பத்திற்கு(சிவாஜி ரசிகர்கள்) திருச்சியுடன் நெருங்கிய உறவாக்கும்.

Gopal.s
10th September 2013, 05:01 PM
கண்ணனையும், அந்தோணியையும் நாம் எடுத்து வளர்த்தால் போதும். சிரஞ்சீவியை அனாதையாக விடுவதே எல்லோருக்கும் நல்லது.

Gopal.s
10th September 2013, 05:09 PM
தவற விடாதீர்கள் நண்பர்களே. நடிகர்திலகத்தின் கிரீடத்தில் ஒரு விலை மதிக்க முடியாத கல்.

தூக்கு தூக்கி .- முரசு டி.வீ வியாழன் 12/09/2013 அன்று இரவு 07.30 மணிக்கு.

ராகுல் ராம், நீ இதை பற்றி விரிவாக எழுதுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

RAGHAVENDRA
10th September 2013, 05:12 PM
நடிகர் திலகத்தின் சில பாத்திரங்களை மட்டும் - குறிப்பாக கோபால் சாருக்கு பிடித்த பாத்திரங்களை மட்டும் இங்கே எழுதினால் போதும் என்கிற நிலை உருவாகிறது. எத்தனை முறை கூறினாலும் இதைப் போன்ற ஆணவப் பதிவுகள் மீண்டும் மீண்டும் வருவதும் நாமும் நடிகர் திலகத்தின் சிறப்புகளை எழுதுவதற்காக விட்டுக் கொடுத்துப் போவதுமாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலை மிகவும் வேதனை அளிக்கிறது.

நடிகர் திலகத்தின் சில படங்களை மட்டும் விவாதிப்பதற்காக மட்டும் தான் இத்திரி என்ற நிலையிருப்பதானால் இதற்கு மேலும் இங்கே உழைத்து விரையம் செய்வதில் எனக்கு உடன் பாடு இல்லை. என்னைப் பொறுத்த மட்டில் நடிகர் திலகத்தின் அத்தனை படங்களுக்கும் ரசிகன் அவருடைய படம் குப்பையானாலும் கவலையில்லை, அவரை ரசிப்பதில் அவர் குறை வைக்கவில்லை என்பதால் என்னுடைய நிலைப்பாடு இதுதான்.

எந்த வித நிர்ப்பந்தமும் இல்லாமல் நடிகர் திலகத்தின் அனைத்துப் படங்களில் இருந்தும் அவருடைய நடிப்பைப் பற்றி விவாதிப்பதானால், அதுவும் இங்கு உள்ள அனைத்து நண்பர்களும் என் கருத்தை ஆதரிப்பதானால் மட்டுமே இனி இத்திரியில் என் பங்கு தொடரும். அவ்வாறு இல்லையென்றால் திரைப்படப்பட்டியலை சீக்கிரம் முடித்து விட்டு இங்கு நடிகர் திலகத்தைப் பற்றி விவாதிப்பதில் அர்த்தமில்லை என முடிவு செய்து ஒதுங்கிக் கொள்கிறேன்.

இது வெறும் கூற்றல்ல. என் மன வேதனையின் வெளிப்பாடு. மீண்டும் மீண்டும் மனம் புண்பட்டு இங்கே உழைப்பதில் எனக்கு விருப்பமில்லை.

Gopal.s
10th September 2013, 05:30 PM
ராகவேந்தர் சார்,

நான் பதில் போட வேண்டாம் என்று எண்ணி தவிர்த்து வந்தேன். எனது பணிவான எண்ணங்கள்---

1)சிவாஜி ,அவர் காலத்தில் இருந்த நடிக,நடிகைகளை விட பல மடங்கு விஸ்வரூபம் எடுத்து நின்ற நடிப்பு கடவுள்.
2)சராசரிகளை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் உன்னதங்களை உரிய முறையில் தூக்கி பிடிக்க வேண்டும்.
3)அவருடைய படங்களில் தூக்கி பிடிக்க ஒரு 160- 180 வருமே? அவற்றை எழுதலாமே?எனக்கு பிடித்தது ,பிடிக்காததை விடுங்கள். நம் யாவருக்குமே பிடிக்காததை ஏன் நாமே குறிப்பிட்டு எழுத வேண்டும்.
4)நான் இந்த திரிக்கு என்று ஒரு தரம் வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். அதனால் ஒரு வேண்டுகோள்தானே நிர்பந்தம் அல்ல.
5)எல்லாவற்றையும் ஆஹா ஓஹோ என்று எழுதினால் ,நம் எழுத்துக்களுக்கென்று ஒரு நம்பக தன்மை வேண்டாமா? மற்ற திரிகளை பார்த்து கிண்டலாய் முறுவலிப்போமே,அதை போல பதிவுகள் நம் திரியில் வேண்டுமா?
6)வாசு சார், எழுதிய அற்புத பதிவுகளை நீர்க்க வைப்பது போல ஒருவர் எழுதினால் போகட்டும். அதை பாராட்டி அந்த மாதிரி பதிவுகள் அதிகரிக்க வழி செய்ய வேண்டுமா?
7)நான் மீண்டும் சொல்கிறேன். மனசாட்சிக்கு தெரிந்தே வந்து போன குப்பைகளை தவிர்பதுதானே சரி.
8)உலகின் எல்லா நடிகர்களுக்கும் தரமற்ற படங்கள் உண்டு. ஆனால் வெளியுலகுக்கு சொல்ல படுவது சிறந்த படங்களே. இது உலகம் முழுதும் உள்ள ஒரு சாதாரண நடைமுறைதானே?
9)மற்ற ரசிகர்களுக்கும் நமக்கும் வேறுபாடு உண்டு.நாம் நாமாகவே இருப்போம்.யாராகவும் மாற வேண்டாம்.

கவலை படாதீர்கள். திரியை விடவே மாட்டேன்.

Gopal.s
10th September 2013, 05:37 PM
நடிகர் திலகத்தின் சில பாத்திரங்களை மட்டும் - குறிப்பாக கோபால் சாருக்கு பிடித்த பாத்திரங்களை மட்டும் இங்கே எழுதினால் போதும் என்கிற நிலை உருவாகிறது. எத்தனை முறை கூறினாலும் இதைப் போன்ற ஆணவப் பதிவுகள் மீண்டும் மீண்டும் வருவதும் நாமும் நடிகர் திலகத்தின் சிறப்புகளை எழுதுவதற்காக விட்டுக் கொடுத்துப் போவதுமாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலை மிகவும் வேதனை அளிக்கிறது.

ஒரு வேளை ஆவண பதிவுகள் குறைந்து விட்டதால் ஆணவ பதிவுகள் அதிகமாகி விட்டதோ???

sivaa
10th September 2013, 05:46 PM
நன்றி வினோத் சார்
எனது ஞாபகத்தில் இருந்துதான் நண்பர்களின் பெயர்களை குறிப்பிட்டிருந்தேன்
அதில் சிறு தவறு ஏற்பட்டு ராஜ்குமார் என குறிப்பிட்டுவிட்டேன்
நீங்கள் குறிப்பிட்டதுபோல் ஜெயகுமார்தான்
கடந்தவருடம் அவருடைய விலாசம் ஞாபகத்தில் உள்ளவரை
25 போவி வீதி பென்கழுர் 56 என்ற விலாசத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தேன் பதில் வரவில்லை
ஏன் என்பது தங்கள் பதிவை பார்த்தபின்தான் புரிந்தது

அவர் காலமாகிவிட்டார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியையும் கவலையையும் தருகிறது.
முகம் தெரியாத அந்த இனிய நண்பரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

RAGHAVENDRA
10th September 2013, 06:02 PM
ராகவேந்தர் சார்,
நான் பதில் போட வேண்டாம் என்று எண்ணி தவிர்த்து வந்தேன். எனது பணிவான எண்ணங்கள்---
நம் யாவருக்குமே பிடிக்காததை ஏன் நாமே குறிப்பிட்டு எழுத வேண்டும்.

நானும் பதில் போட வேண்டாம் என்று தான் இருந்தேன். யாவருக்குமே பிடிக்காதது என்று நீங்கள் எப்படி தீர்மானிக்க முடியும். தங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் எல்லோருக்கும் பிடிக்க வில்லை என்று அர்த்தமா... How can you decide?

4)நான் இந்த திரிக்கு என்று ஒரு தரம் வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். அதனால் ஒரு வேண்டுகோள்தானே நிர்பந்தம் அல்ல.

இந்தத் திரியின் தரமும் அதன் அளவுகோலும் தங்களால் தான் நிர்ணயிக்கப் படுகிறதா. தரமில்லாமல் தான் இத்தனை பாகங்களும் வந்துள்ளதா...

5)எல்லாவற்றையும் ஆஹா ஓஹோ என்று எழுதினால் ,நம் எழுத்துக்களுக்கென்று ஒரு நம்பக தன்மை வேண்டாமா? மற்ற திரிகளை பார்த்து கிண்டலாய் முறுவலிப்போமே,அதை போல பதிவுகள் நம் திரியில் வேண்டுமா?

நம்பகத் தன்மை என்பது தாங்கள் நிர்ணயிக்கும் அளவு கோலை வைத்ததா. எங்கள் எழுத்தெல்லாம் நம்பகத் தன்மை அற்றதா...

6)வாசு சார், எழுதிய அற்புத பதிவுகளை நீர்க்க வைப்பது போல ஒருவர் எழுதினால் போகட்டும். அதை பாராட்டி அந்த மாதிரி பதிவுகள் அதிகரிக்க வழி செய்ய வேண்டுமா?

இதைப் பற்றிக் கவலைப் பட வேண்டியதும் தீர்மானிப்பதும் வாசு சார். தங்களுடைய கூற்றுக்கு அவரை ஏன் துணைக்கு அழைக்கிறீர்கள். ராகுல் ராம் போன்ற புதியவர்கள் எழுதுவதில் தங்களுக்கு மாறுபட்ட கருத்து இருந்தால் அதை சொல்லுங்கள். அதை விட்டு விட்டு எழுதவே கூடாது என்று வற்புறுத்துவது எந்த ஜனநாயகத்தில் சேர்த்தி.

இதற்காகத் தான் ஒரு வழிமுறையைத் தீர்மானிக்க ஒரு வேண்டுகோள் வைத்துள்ளேன். அதில் தீர்வு கண்டு அதனை நடைமுறைப் படுத்தும் போது இவையெல்லாம் முறைப்படுத்தப் பட்டு விடும் அல்லவா.

7)நான் மீண்டும் சொல்கிறேன். மனசாட்சிக்கு தெரிந்தே வந்து போன குப்பைகளை தவிர்பதுதானே சரி.

சினிமா என்பது பொது ஜனம் சம்பந்தப் பட்ட விஷயம். தங்களுக்கு குப்பையாகத் தெரிவது மற்றவர்களுக்கு நல்லதாக இருக்கலாம். குப்பையிலும் மாணிக்கங்களைத் தேர்வு செய்பவர்களை சிறந்த நிபுணர்கள் என்று தான் கூற வேண்டும்.

8)உலகின் எல்லா நடிகர்களுக்கும் தரமற்ற படங்கள் உண்டு. ஆனால் வெளியுலகுக்கு சொல்ல படுவது சிறந்த படங்களே. இது உலகம் முழுதும் உள்ள ஒரு சாதாரண நடைமுறைதானே?

படம் தரமாக இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன, அதில் நடிகர் திலகத்தின் பங்கைத் தானே நாம் விவாதிக்கப் போகிறோம்.

அனைத்து ரசிக நண்பர்களின் கருத்தையும் கேட்டிருக்கிறேன். இதனைப் பொறுத்தே என்னுடைய பங்களிப்பைத் தொடர்வதைப் பற்றி முடிவு செய்யப் போகிறேன்.

Gopal.s
10th September 2013, 06:05 PM
Asking for opinions in blackmailing tone?????????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! !!!!

RAGHAVENDRA
10th September 2013, 06:08 PM
என்னுடைய கருத்தை நான் கூறுகிறேன். இது நான் தொடர்ந்து பங்களிப்பதைப் பற்றிய விஷயம். எதிர்ப்பு வந்தால் தொடர வேண்டாம் என்பது என் தீர்மானம். இதில் என்ன blackmailing tone கிடக்கிறது

joe
10th September 2013, 06:10 PM
??????????????????

joe
10th September 2013, 06:15 PM
வச்சா குடுமி அடிச்சா மொட்டை என்பதற்கு இந்த திரி தான் உதாரணம்.

ஒண்ணுல மாறி மாறி புகழ் மழை பொழிந்து திரிக்கு வருபவர்கள் ஜலதோஷம் பிடிச்சு வெளியே போற மாதிரி போட்டுத் தாக்குறீங்க
இல்லைண்ணா சின்ன புள்ளைங்க மாதிரி சின்ன விஷயங்களை ஜவ்வு போல இழுத்து பெரிய பிரச்சனை மாதிரி பேசுறீங்க .

சிவாஜி ரசிகர்கள் அல்லாதவர்கள் இங்கே வந்து பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்பதை கொஞ்சமாவது கருத்தில் கொள்ளுங்கள்

JamesFague
10th September 2013, 06:24 PM
It is really disturbing.

JamesFague
10th September 2013, 06:25 PM
In Trichy, I have seen Thyagam at Jupiter and Nallathoru Kudumbam at Raja. It is really a fantastic
experience to watch NT movies atTrichy.

goldstar
10th September 2013, 06:45 PM
Ragavendran sir, all photos for you....

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT1_zps592d8693.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT2_zpsf05a4ad6.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT3_zpsb354029b.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT4_zps802cd50c.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT5_zps6df6b908.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT7_zps219be1d3.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT6_zpsbf30cba9.png

ScottAlise
10th September 2013, 06:47 PM
Dear Gold Star sir,

Photos are good, A different movie from NT especially his voice & tone will be unique combined with BGM

ScottAlise
10th September 2013, 06:48 PM
Dear karthik sir,

Thanks for apppreciation

sivaa
10th September 2013, 07:22 PM
சிவா சார்
தங்களுடன் தொலைபேசியில் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது மிகவும் சந்தோஷமாயிருந்தது. இலங்கையிலிருந்து நடிகர் திலகத்தின் புகழ் பாடும் ரசிகர்கள் ஏராளமானவர்கள் அப்போது ஓரளவு எனக்கு பரிச்சயம். உத்தமன் பட வசூல் விவரங்கள் அவ்வபோது எனக்கு கண்டியிலிருந்து கதிர் காமர் என்ற நண்பர் அனுப்புவார். அவரைத் தங்களுக்குத் தெரிந்திருக்குமா எனத் தெரியவில்லை. சில சமயம் அவசரம் என்றால் ஏர் மெயிலில் அனுப்புவார், அதற்குக் கட்டணம் சற்று கூடுதல் என்றாலும் கவலைப் படமாட்டார். அதே போல் எங்கள் குழுவிலிருந்தும் நாங்களும் அனுப்புவோம்.

இப்போதைய வசதிகள் அப்போது கிடைத்திருந்தால் எவ்வளவு பயனுள்ளதாய் இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன்.

ராகவேந்திரா சார்
கண்டி கதிர்காமரை எனக்கு தெரியாது
எனக்கு யாழ் மாவட்டத்தில் அதிகம் நண்பர்கள் இருந்தார்கள்
மற்றும் மாத்தளை கொழும்பு ஆகிய இடங்களில் நண்பர்கள் இருந்தார்கள்
இப்போது உள்ள வசதிகள் அப்போது இல்லை
அப்பொழுது இருந்த பொற்காலம் இப்பொழுது இல்லை

sivaa
10th September 2013, 07:24 PM
சிவா சார், மீள்வருகைக்கு நன்றி. கலக்குங்கள்.

.
.

கோபால் சார் கலக்க ஆசைதான் ஆனால்
ஆவணங்கள் பதிவிடுவதில் சிக்கல்
பதிவிடும் அளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

Harrietlgy
10th September 2013, 08:27 PM
நல்ல முடிவு திரு. கோபால் சார். நன்றி, உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன்.

sivaa
10th September 2013, 08:36 PM
நான் அறிந்த தெரிந்த வரையில் இலங்கையில் 200 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள்

வசந்த மாளிகை கொழும்பு கெப்பிட்டல் 250 நாட்கள்

யாழ்ப்பாணம் வெலிங்டன் 208 நாட்கள்

குரு கொழும்பு கிங்ஸ்லி 200+ நாட்களுக்கு மேல்
உலகம் சுற்றும் வாலிபன் கொழும்பு கெப்பிட்டல் 203 நாட்கள்

பைலட் பிரேம்நாத் யாழ்ப்பாணம் வின்சர் 222 நாட்கள்
உத்தமன் கொழும்பு சென்ரல் 203 நாட்கள்
பராசக்தி கொழும்பு மைலன் 39 வார விளம்பர ஆவணப்பதிவு
நடிகர்திலகம் சிவாஜி பத்திரிகையில்வெளிவந்திருந்தது
திரிசூலம் 200 நாட்கள் ஓடியதாக தகவல் உண்டு
திரிசூலம் ஓடியபொழுது நான் நாட்டில் இல்லை எனவே அதபற்றிய விபரம் என்னிடம் இல்லை

anasiuvawoeh
10th September 2013, 08:51 PM
Thank u Karthik sir.we will try to fulfill your expectations.
அன்புள்ள வாசுதேவன் சார்,

தங்கள் பாராட்டு மழைக்கு மிக்க நன்றி. (பாராட்டு கொஞ்சம் ஓவர் டோஸாக இருந்த போதும்). தங்கள் நம்பிக்கையைத் தக்கவைக்க நிச்சயம் போராடுவேன்.

அன்புள்ள முரளி சார்,

தங்களுடைய ஸ்பெஷாலிட்டியே இதுதான். எப்போதோ ஒருமுறை சொன்னதையெல்லாம் இவ்வளவு நினைவில் வைத்து சமயம் வாய்க்கும்போது மறவாமல் குறிப்பிடுவது, மற்றவர்கள் பதிவுக்கு நீங்கள் தரும் மிகப்பெரிய கௌரவம். (பெரும்பாலோரிடம் இதைக்காண முடிவதில்லை) . சென்னை, மதுரை போல திருச்சியில் நமது நடிகர்திலகத்தின் சாதனைகளை யாரும் எடுத்துரைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நான் சொன்னது உண்மை. அதை நீங்கள் குறிப்பிட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. திருச்சி பிரபாத், ஜுபிடர், ராஜா, பேலஸ், ராக்சி, வெலிங்க்டன் அரங்குகளில் நடிகர்திலகத்தின் சாதனைச்சுவடுகளை பதித்த படங்கள் ஏராளம்.

அன்புள்ள ராமச்சந்திரன் சார் மற்றும் பொன்.ரவிச்சந்திரன் சார்,

நல்வரவு. தங்கள் துவக்கப்பதிவுகளே அருமையாக உள்ளன. நாங்கள் எதிர்பார்ப்பதுபோல திருச்சி நகர சாதனைகளை அள்ளி வீசுங்கள். அதன்மூலம் திருச்சியும் நமது கோட்டையே என்று நிரூபியுங்கள்.

அன்புள்ள ராகுல்ராம் சார்,

தங்களின் 'சிரஞ்சீவி' பட ஆய்வு மிகவும் அருமை. டேவிட் சிரஞ்சீவியின் பாத்திரப்படைப்பை நன்றாக அலசியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். அப்படம் எடுக்கப்பட்ட 'எம்/வி.சிதம்பரம்' சொகுசுக்கப்பல் இப்போது இல்லை. அக்கப்பலின் நினைவுச்சின்னம் சிரஞ்சீவி படம் மட்டுமே. அப்படத்தில் வரும் சில்க் ஸ்மிதாவின் நடனக்காட்சி மட்டும் ஸ்டுடியோவில் படமாக்கப் பட்டது.....

Russelldwp
10th September 2013, 09:01 PM
Dear Ramachandran Sir,Veerapandiya kattabomman was screened in Oorvashi also during the period u have mentioned.but I am not sure its additional or by mistake u have quoted Marisrock.Please verify Also the number of days were more.thanks/regards
Dear Pon Ravichandran

The theatre mentioned as maris rock a/c is hundred percent correct and it was screened before vamsa vilakku release in same theatre. Also i have issued collection notice in 2nd week at maris rock a/c. No doubt

anasiuvawoeh
10th September 2013, 09:05 PM
Dear Murali Sir,thanks for your reception.I feel I am very late to the thread.I will try to share my happiness slowly.I just feel like a man in front of a ocean and try to drink entire water in a gulp,when i try to write anything about NT.gradually i will come in terms.
சில நாட்கள் இடைவெளிக்கு பின் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

புதிய பறவை கோபால் ஞான ஒளி ஆண்டனி ஆகிய இருவரையும் ஒப்பிட்டு வாசு அவர்கள் எழுதிய comparative study மிக மிக சுவையாக அந்த இரண்டு பாத்திரங்களையும் மீண்டும் கண் முன் கொண்டு வருவதாக அமைந்திருந்தது. வாழ்த்துகள் வாசு.

நண்பர் கார்த்திக் அடிக்கடி விஷயம் ஒன்றை குறிப்பிடுவார். என்னவென்றால் சென்னை, மதுரை போன்ற நகரங்களில் பழைய நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்வது போல் திருச்சி மாநகரில் நடிகர் திலகத்தின் பொற்கால சாதனை நாட்களை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள யாரேனும் இருந்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று குறிப்பிடுவார். அந்த குறை போக்கும் வண்ணம் அங்கத்தினராக வந்து திருச்சி மாநகரில் மறு வெளியீடுகளில் நடிகர் திலகத்தின் படங்கள் சாதனை புரிந்த வரலாற்றை இங்கே பகிர்ந்துக் கொண்ட நண்பர் ராமச்சந்திரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

புதிய வரவாக வருகை தந்திருக்கும் முசிறியின் மைந்தன் பொன்.ரவிச்சந்திரன் அவர்களுக்கு எப்போதும் புதியவர்களை வாழ்த்துவது போல் நல்ல இடம் நீங்கள் வந்த இடம் என கூறி வரவேற்கிறேன். நடிகர் திலகத்தின் பல்வேறு பரிமாணங்களை நீங்கள் ரசித்த விதம் மற்றும் திருச்சியிலும் சுற்று வட்டாரங்களிலும் நடிகர் திலகத்தின் படங்கள் செய்த சாதனைகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நடிகர் திலகத்தின் முதல் படத்தையே 245 நாள் படமாக்கிய மாநகர் அல்லவா! வாழ்த்துகள்.

அன்புடன்

anasiuvawoeh
10th September 2013, 09:15 PM
Dear Ramachandran Sir,but I have seen Veerapandiya kattabomman in Oorvashi.But I dont remember the year. May be 1983 or 84.

Dear Pon Ravichandran

The theatre mentioned as maris rock a/c is hundred percent correct and it was screened before vamsa vilakku release in same theatre. Also i have issued collection notice in 2nd week at maris rock a/c. No doubt

Russelldwp
10th September 2013, 09:15 PM
Dear All

First of all i welcome new visitors Mr.Siva, Mr.Pon Ravichandran to this thread. After seeing all messages i wish to tell you all about my memories
I had a letter correspondense with Chennai Royapettiah Ammaiyapp mudali street S.SIVAJI SANKAR, NELLAI S.BAGAVATHI, MADURAI B.H.KUBENDRAN, KOVAI S. PALANISAMY, SALEM B.RAVI in 1980 s and chennai S.SANKAR used to write about NT's news in his letter head having rojavin raja standing still and Thiruvarutchelvar still. Whenever i visit to chennai enquired about Mr.Sankar but fans replied no idea about him

Madurai B.H.Kubendran is peculiar person and he had beautiful album of our NT's films and he is no more.

Those days are golden period

Russelldwp
10th September 2013, 09:26 PM
Dear Mr.Karthik
Thanks for your wishes. Also always trichy fans are very effective and innovative since lot of unbreakable records done by NT in TT AREA. Till date every other fans are watching our activity in trichy. Here our NT's birthday function will be conducted by peravai on 2nd october and by makkal iyakkam on 6th october

rsubras
10th September 2013, 09:59 PM
வச்சா குடுமி அடிச்சா மொட்டை என்பதற்கு இந்த திரி தான் உதாரணம்.

ஒண்ணுல மாறி மாறி புகழ் மழை பொழிந்து திரிக்கு வருபவர்கள் ஜலதோஷம் பிடிச்சு வெளியே போற மாதிரி போட்டுத் தாக்குறீங்க
இல்லைண்ணா சின்ன புள்ளைங்க மாதிரி சின்ன விஷயங்களை ஜவ்வு போல இழுத்து பெரிய பிரச்சனை மாதிரி பேசுறீங்க .

சிவாஜி ரசிகர்கள் அல்லாதவர்கள் இங்கே வந்து பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்பதை கொஞ்சமாவது கருத்தில் கொள்ளுங்கள்

A very honest assessment imho........ some posts here were really doctorate material..... once upon a time such posts were in abundance, now also gems are coming out, but of late consistency in quality has dipped a bit

J.Radhakrishnan
10th September 2013, 10:45 PM
கண்ணனையும், அந்தோணியையும் நாம் எடுத்து வளர்த்தால் போதும். சிரஞ்சீவியை அனாதையாக விடுவதே எல்லோருக்கும் நல்லது.

டியர் கோபால் சார்,
தாங்கள் இது போன்ற பதிவுகளை தவிர்ப்பது நல்லது, தரமற்ற படங்களிலும் தலைவர் தனது தரமான பங்களிப்பை தந்திருக்கிறார். எனவே இது பற்றி மேற்கொண்டு விவாதிக்காமல் இருப்பதே நலம்.

Brianengab
10th September 2013, 11:38 PM
https://pbs.twimg.com/media/BT0H6-qCcAAzB_L.jpg:large

vasudevan31355
11th September 2013, 05:28 AM
தலரசிகன் சார்,

அற்புதமான நடிகர் திலகத்தின் ஆவணத்திற்கு என் மனமார்ந்த நன்றி. அதை இங்கே பதிவிட வேண்டும் என்று தோன்றிய தங்களுக்கு என் பாராட்டுக்கள்.

Brianengab
11th September 2013, 09:19 AM
vasudevan sir...

enai sir'na kooppida vendaam.. am below 30 only.. thx. for ur compliment... :)

joe
11th September 2013, 09:59 AM
vasudevan sir...

enai sir'na kooppida vendaam.. am below 30 only.. thx. for ur compliment... :)

அவன் தம்பி ..நன்றி தம்பி :)

Brianengab
11th September 2013, 10:41 AM
thx. joe sir..

though my contribution s less in tis thread, am following all the posts in tis thread...
i would lik to tel tat my mother s ardent fan of sivaji sir..
if my mother knws abt surfing nd internet things, she would share all the information..
she has plenty of information abt sivaji sir.. information means nt abt internet articles bt abt Filmography details, behind the scenes, etc.,
of course, u sivaji fans also knw such information.. i jus telling abt my mother :)..

enga amma solluvaanga.. sivaji sir naditcha <300 padathula, ithu varaikkum min 280 padamaavathu paarthiruppen'nu..she has a diary which has the list of seen movies for all the actors..my mom's fav. pair s sivaji nd padmini..

adiram
11th September 2013, 11:36 AM
இப்போது உள்ள வசதிகள் அப்போது இல்லை
அப்பொழுது இருந்த பொற்காலம் இப்பொழுது இல்லை

'Golden Lines' Mr. Sivaa.

That happiness will never come again.

adiram
11th September 2013, 11:43 AM
It is nice to see more news about TRICHY runs in recent pages.

Thanks for all who are sharing.

It will be more appreciable if they are described in detail, especially in Tamil, same like...

Madurai incidents by Murali sir,
Chennai incidents by Raghavendar sir & Karthik sir,
Nagerkoil news by Joe sir,
Cuddalore news by Vasudevan sir etc.

Wish more Trichy acheivement news to come during first release and re-releases.

adiram
11th September 2013, 11:54 AM
Mr. Rahul Ram,

Your detailed writing about 'Chiranjeevi' is good. One of the best charectors NT has done in the later stage of his career.

The respect given by all in the ship, from Captain to all crews, for a cleaning employee is excellent. THis is the only Tamil film completely shoot in a ship in the sea from Singapore to Chennai. A different experiment by NT and K.Shanker.

The roll David Chiranjeevi was well carried out by NT, to full of our heart.

JamesFague
11th September 2013, 11:59 AM
Thanks for the fantastic photograph of NT Mr Thala Rasigan.

adiram
11th September 2013, 01:08 PM
Mr. (Neyveli) Vaudevan sir,

A very wonderful comparison between Puthiya Paravai Gopal and Gnana Oli Antony, point by point.

Fantastic idea developed in your mind.

KCSHEKAR
11th September 2013, 01:09 PM
டியர் சிவா சார்,

இலங்கை எப்போதுமே நடிகர்திலகத்தின் கோட்டையாக, பல்வேறு திரைப்படங்கள் வசூலிலும், ஓடிய நாட்களிலும் சாதனை புரிந்த நாடு. அந்தக் காலத்தில் இலங்கை வானொலியில் k.s.ராஜா மற்றும் அப்துல் ஹமீது ஆகியோரின் வர்ணனையோடு நடிகர்திலகத்தின் திரைப்பட விமர்சனங்கள் மற்றும் ஒலிச்சித்திரங்களைக் கேட்ட நாட்கள் என்றென்றும் பசுமையாக நினைவில் நிற்கக் கூடியது.

anasiuvawoeh
11th September 2013, 01:54 PM
Dear Sirs(Radhakrishnan,Gopal,Raghavendra),I would like to share my views.Even the great Tendulkar has been out in ducks.But his greatness was achieved in the 100 centuries and 11000 runs scored.A person who likes Tendulkar doesn't mind about his zeroes.But that cannot be erased from his records.An actor gives his 100 percent while acting in a movie(our NT gives more than that)That time he doesnt know the outcome of the movie.So we are discussing the role played,Also all our friends have great regard for NT and these are not going to affect our admiration.All our aim are one but we take different routes.So let us have mutual respect and proceed,Thanks/regards Sirs.
டியர் கோபால் சார்,
தாங்கள் இது போன்ற பதிவுகளை தவிர்ப்பது நல்லது, தரமற்ற படங்களிலும் தலைவர் தனது தரமான பங்களிப்பை தந்திருக்கிறார். எனவே இது பற்றி மேற்கொண்டு விவாதிக்காமல் இருப்பதே நலம்.

JamesFague
11th September 2013, 02:09 PM
Golden words Mr Pon Ravichandran Sir.

KCSHEKAR
11th September 2013, 03:06 PM
திரு.பொன்.ரவிச்சந்திரன் அவர்களே,

பெயரில் "பொன்" வைத்துக்கொண்டு, நமது பசும்"பொன்" நடிகர்திலகத்தின் ரசிகராக முசிறியிலிருந்து வருகை புரிந்திருக்கும் தங்களை வரவேற்கிறேன்.

goldstar
11th September 2013, 06:19 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT1_zps760cd80d.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT2_zps4e7ad7cd.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT3_zpsf6f6fcd6.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT6_zpsd3e4024a.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT4_zpsfadc44fa.png

goldstar
11th September 2013, 06:20 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT7_zps528f4e67.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT9_zps2c282f7b.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT10_zps049ca724.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT11_zpscc2c99ae.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT13_zps7f4d2d6a.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT12_zpsaf299e80.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT14_zps7b3f0993.png

Richardsof
11th September 2013, 06:48 PM
Thanks gold star for uploading ''vetrikku oruvan '' sills . Kamala theatre stills superb.

anasiuvawoeh
11th September 2013, 07:49 PM
Thank You Sir,I have been in Neyveli in 1987 to 1991.I joined as a diploma engineer trainee in L&T.L&T was doing civil job in Thermal station II.We were in block 10 i think.I am happy to be the part of this thread.Regards
Golden words Mr Pon Ravichandran Sir.

Gopal.s
11th September 2013, 08:30 PM
Vetrikku oruvan- Sivaji's amasing remorse after hís father's death ís a scene to remember. Adal Padalil dance hás some òf the
graceful and well executed dificult steps.Thanks Gold Star.

Pon- I lived in Neyveli for the first 17 years òf my life in E-41-Kamaraj Road(Main Bazaar Road Re-chritened),Block-18 just opposite to Girls' High School.

iufegolarev
11th September 2013, 09:17 PM
https://www.youtube.com/watch?v=4fL5GLsmtSk

Murali Srinivas
11th September 2013, 11:41 PM
Removed at the request of the author

Gopal.s
12th September 2013, 04:33 AM
Murali,
Short and sweet write-up on Everyone's Favourite -Gopal.
So your conclusion is
1)Gopal is a Good Man.
2)He is always trapped into difficulties by the scheming ones with vested interests!!!!

Subramaniam Ramajayam
12th September 2013, 05:05 AM
Removed at the request of the author
Murali sir.
simply superb worth remembrances on his birth date.
WHAT An elegent and rich STYLES AND MANNERISAMS HE DISPLAYED AND CAPTURED MILLIONS OF PEOPLE.
DIgitalised GOPAL will certainly make a history very soon.
ALWAYS NO 1 SPOT IN MY MINDS.
conculsion= GOPAL CERTAINLY A VERY GOOD MAN only circumstances made him to do all this acts, THUVUM, ORE ORU ADI as gopal says made him like this.

Gopal.s
12th September 2013, 05:23 AM
புதிய பறவை- 1964

தமிழ் நாட்டின் எந்த தமிழறிந்த குடிமகனை கேட்டாலும், அவர்கள் எவர் ரசிகர்களாக இருந்தாலும் ,மறக்க முடியாத படங்களில் ஒன்றாக குறிப்பிடும் படம் புதிய பறவை.புதுமையான கதையமைப்பு, அற்புதமான நடிப்பு, மறக்க முடியாத பாடல்கள்,கேமரா, இயக்கம்,richness ,sophistication in making & great production value கொண்ட ahead of times வகை படம்.என்னிடம் யார் கேட்டாலும் எனக்கு பிடித்ததாக நான் சொல்லும் மூவர் கோபால்,விஜய். (நான்,என் மகன் என்பது ஒரு புறம்)மற்றும் விக்ரமன்.

அந்த படத்தை ரசித்த நிறைய பேர் கோபால் பாத்திரத்தை முழுதும் புரிந்து கொண்டார்களா என்பது சந்தேகமே. chekhov school நடிப்பில் என்னை கவர்ந்த Anthony Hopkins(laurence olivier சிஷ்யன்) ,Jack Nicholson ,Oleg yankovskiy இவர்கள் எல்லோரையும் தாண்டி சென்றவர் நமது நடிகர்திலகம். அவர்கள் எல்லோரையும் காலத்தாலும் முந்தியவர். கோபால் பாத்திரம் முழுக்க முழுக்க மனோதத்துவ பின்னணி கொண்ட மிக சிக்கலான பாத்திரம்.

கோபால் ஒரு வெளிநாட்டில் வாழும், பணக்கார conservative &cozy என்ற சொல்ல படும் ஒரு அம்மா பிள்ளை. அம்மாவின் மீது obsessive fixation கொண்டவன்.அம்மாவை அகாலமாக இழந்து இலக்கின்றி அலையும் போது impulsive ஆக ஒரு தவறான பெண்ணை தன் அம்மாவின் இழப்பிற்கு ஈடு செய்வாள் என்ற நம்பிக்கையில் தேர்ந்தெடுத்து, குடும்பத்தின் அமைதியே குலையும் அளவு கொண்டு சென்று, தன்னை உயிருக்குயிராய் நேசிக்கும் தந்தையையும் இழந்தவன். ஆனாலும் ,தானாக ஓடி போகும் சீர்கெட்ட மனைவியையும் கெஞ்சி திரும்ப அழைக்கும் பூஞ்சை மனம் கொண்ட கோழை.(குடும்ப கெளரவம் என்ற பெயரில்).மனைவி தானடித்த ஓரடியில் இறந்து விட , சட்டத்தில் இருந்து தப்பிக்க rail track இல் உடலை போட்டு, தற் கொலை என்று நம்ப வைத்து, குற்ற உணர்ச்சியுடன், சிறிது விடுபட்ட உணர்வுடன் ஊர் திரும்புபவன்.

தொடரும் தனிமை நிறைந்த boredom என்று சொல்ல படும் வாழ்க்கையில், neurotic -emotional distress என்று சொல்ல படும் வகையில்(தூக்கம் இழந்து தவிப்பவன்),tremor என்ற hysterical conversion மனநோயால் அவதியுருபவன்.இந்த வாழ்க்கையின் தவிப்பில்,லதா என்ற தேவதையால் சிறிது ஆசுவாசம் அடைந்து அவளை மணக்க இருக்கும் தருணம், பழைய மனைவி என்று சொல்லி அவள் உருவத்தில் உள்ள ஒருத்தி வாழ்க்கையில் புயலென நுழைய தொடரும் grief &misfortune அவன் அமைதியை மேலும் குலைத்து, depression நோக்கி தள்ளி விடுகிறது.ஆனாலும் வந்தவளை விரட்டி, லதாவை அடையலாம் என்ற நம்பிக்கை, அது குலையும் தருணம் ஏற்படும் ஏமாற்றம் கலந்த அதிர்ச்சி என்று hope &despair என்று வாழ்வு மாறி மாறி ஊசலாட, spurt of violence ,hallucination தலை தூக்க, இனி தப்பிக்க வழியில்லை என்ற stalemate நிலையில், தன்னை மறந்து உண்மையை back to the wall resolution ஆக ஒப்பு கொண்டு, குற்றத்திற்காக பிடி படுகிறான்.

கொஞ்சம் மனோதத்துவ அடிப்படை கொண்ட பாத்திரமாதலால் medical jargon உபயோகிப்பதை தவிர வேறு வழியில்லை எனக்கு. இதை தயவு செய்து பரிச்சித்து கொண்டு என்னை(இரு கோபாலையும்)தொடர வேண்டுகிறேன்.

எதிர்காலத்தில் யாருமே வெளிச்சமில்லாமல் ,பிறரின் தொடர்ந்த தலையீடு(ஆத்மார்த்தமாக இன்றி அனாவசிய),குறுக்கீடு இல்லாமல்,வாழவே வழியில்லாத நிலை மீடியா மற்றும் பல வகை electronic gadgets இனால் உருவாக்க படுவதை,allegory என்ற முறையில் சொன்ன படம் trumam show என்ற jim carrey யின் படம்.இதில் truman தவிர ஏனையோர் அனைவரும் நடிப்பவர்கள். கிட்டத்தட்ட இது போன்ற நிலைதான் நம் நாயகன் கோபாலிற்கு. அவனை தவிர சுற்றியிருப்போர் அனைவரும் நடிப்பவர்கள். கோபால் வாழ்க்கை, அவன் காணும் பிரச்சினைகள் எல்லாமே மற்றவர்களால் கட்டமைக்க படுபவை. கோபால் படும் அவதி மட்டுமே நிஜம். படத்திலேயே வருவது போல் பரிதாபத்துக்குரிய வாழ்க்கை.

இதில் கோபால் ஒரு தனியன். fixations ,obsessions ,உடைய பணக்கார sophisticated person with ceremonial politeness . Impulsive , breaks down at the first opportunity when confronted with adversity .

இந்த மாதிரி ஒரு பாத்திரத்தை நடிகர்திலகம் மட்டுமே அதன் நிஜமான உள்வாங்கலோடு , தன் அபார திறமையால் உள்வாங்கியதை மிக மிக துல்லியமாக வெளிபடுத்துவார்.இந்த படத்தில் ஒரு இயக்குனரின் அபார பங்களிப்பு அவர் பாத்திரத்தை இமயத்துக்கே உயர்த்தி விடும்.

இந்த படத்திற்காக நடிகர்திலகம் தேர்ந்தெடுத்த உடல் மொழி, ஒரு introverted ceremonial politeness கொண்டது. புகை வண்டியை காணும் போது ஒரு tremor (வலிப்பு அல்ல)என்ற mild hysterical action . பொதுவாக ஒரு சோர்வு ததும்பும் meloncholic look . சந்தோஷத்தை அளவாகவே வெளியிடுவார். Anxiety வரும் போது தடுமாறி உடைந்து போவார். depression என்ற அளவிற்கு தள்ள படும் போது விரக்தி கலந்த frustration .(உலகமே மூழ்கி விட்டது போல் ).நம்பிக்கை குலைவு ஏற்படும் போது அழிக்க நினைக்கும் (bout of nihilism )தன்னை மறந்த வெறி, வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ள படும் போது ஒரு பிரமை கலந்த monologue (தான் மட்டும் உண்மை. சுற்றியிருப்பதெல்லாம் பொருட்டில்லை என்ற பாவம் ), குழந்தை போல் தன் கருத்தை மட்டும் அழுத்தி சொல்லும் தன்முனைவு,சின்ன சின்ன தற்காலிக நம்பிக்கைகளை மலை போல் நம்பி குதூகலிக்கும் ,நம்ப ஆசைபடும் விழைவு என்று flawless character sketch .

இனி அந்த பாத்திரத்துக்குள் ஆழமாக நுழைவோம். ஆனால் நான் கூறியவற்றை தயவு செய்து இன்னொரு முறை படித்து தெளிவு செய்து கொள்ளவும். நாம் பேச போவது சராசரி விஷயம் அல்ல.இந்த தயாரிப்பு நமக்கு அவசியம்.

மற்ற தொழிலாளர்களுடன் சாதாரணமாக நடந்து கொள்ளும் கோபால், ராஜு தாத்தாவிடம் வாஞ்சையுடன் நடந்து கொள்ளும் முறையிலேயே , கோபாலின் fixation tendencies establish ஆக தொடங்கும். பிறகு தோட்டத்தை தனியாக பார்வையிடுவது, தனியாக picnic சூழ்நிலையில் படித்து கொண்டிருப்பது என்று தனிமை ,boredom சொல்ல பட்டு விடும். தூங்காமல் முழித்திருக்கும் இரவில் வரும் லதாவுடன், இதமான உரையாடலில் தன் ஏக்கம் கலந்த தனிமை, தூக்கமில்லா இரவுகளை குறிப்பிடும் அந்த husky ஆன குரல், ஏக்கமும் சோர்வும் சோர்வும் தோய்ந்த விழிகள், லதாவிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து வெளியிட முடியாமல், குறியீடாக பாட்டு என்று ஒற்றை வார்த்தையில், தன் அமைதிக்கு லதாவால் துணை நிற்க முடியும் என்று உணர்த்தும் கண்ணியமான இதம்.அந்த உன்னை ஒன்று கேட்பேன் இரவு காட்சி தமிழ் பட உலகின் அழகுணர்ச்சிக்கு ஒரு மைல் கல் காட்சி.

பார்த்த ஞாபகம் பாடலில், எதோ ஒன்றை தொலைத்து பறி கொடுத்த ஏக்கத்துடன், நிலைத்த சூன்ய பார்வை, அவ்வப்போது பாட்டில் சூழலில் அடையும் பரவசம், இதையெல்லாம் மீறாமல் நம்மை இன்றளவும் கவரும் அந்த sophisticated புகை பிடிக்கும் ஸ்டைல்(நாக்கில் இருந்து சின்ன புகையிலை தூளை விரலால் துடைக்கும் லாவகம்,wine glass ஏந்தும் தோரணை. பாடகி சித்ராவிடம் உடனே காட்டும் impulsive ஈடுபாடு.கல்யாண காட்சி உடனே வரும் போதும் பழகிய உணர்வு தெரியும் அந்த ஒரே பாடல் காட்சியில் .

அந்த ரயில்வே கேட் காத்திருப்பு காட்சியில், tremor என்றவொரு, வலிப்பு -அதிர்ச்சி இடைப்பட்ட நிலையை அவ்வளவு தத்ரூபமாக எந்த நடிகனும் காட்டியதில்லை.

நிச்சய தார்த்தம் அன்று வந்து சேரும் தன் மனைவி போன்ற உருவம் கொண்ட, மனைவியாக சித்தப்பா என்றவொருவனுடன் வந்து நிற்கும் காட்சியில்... முதலில் அதிர்வு என்ற நிலையில் தொடங்கி denial mode க்குள் செல்வார். இருக்காது,இருக்க முடியாது என்று. பிறகு சிறிதே seriousness உணர்ந்து, தன் police நண்பன் துணையுடன் மிரட்ட தலை படுவார். ஆனால் நடக்காது என்றவுடன் புலம்பும் ,குழம்பும் நிலை.(என்ன,என்ன,என்னை கேட்டால் எனக்கு என்ன)death certificate தேடி எடுத்து(அப்படியே போட்டது போட்டபடி விரையும் ஆர்வம் கலந்த வேகம்), அதை ரங்கன் தூளாக்கியதும், போலீஸ் நண்பனுடன் சிறு அதிகார தொனியிலேயே கடைசி பலவீன முயற்சியை அதிகாரமாய் தொடுப்பதும், வழியில்லை என்று அடங்குவதும்-இந்த காட்சி ஒரு roller -coaster ride .

தொடரும் காட்சிகள், இந்திய பட உலகம் இது வர பார்க்க இயலா புதுமை கலந்த marvel ...நடிப்பின் உச்ச பட்ச சாத்தியங்கள்.

அதற்கு பிறகு வரும் பதினோரு காட்சிகள் அதற்கு முன்னும் பின்னும் இந்திய திரையுலகமே கண்டிராத miracle .நான் குறிப்பிட்ட படி emotional roller coaster ride . நடிகர்திலகம் போன்ற நடிகர் ஒருவரால் மட்டுமே முடித்து காட்ட முடிந்த அதிசயம். விறு விறுப்பு,பரபரப்பு, sentiments ,Technical excellence ,புதுமை எதற்கும் பஞ்சம் வைக்கா விட்டாலும் நடிப்பு என்ற விஸ்வரூப தரிசன ஜோதியில் மற்றதெல்லாம் கரைந்து போகும் ,அதியற்புத உன்னதம் தொடும் psychedelic ecstasy பார்வையாளர்களுக்கு.

லதாவையும், அவள் தந்தையையும் ரங்கனின் insult மீறி, வீட்டில் இருக்க வைக்க கெஞ்சி கூத்தாடும் காட்சியில், அவர்களுக்கு நம்பிக்கை விதைக்க பாடு படுகிறார் என்ற அளவில் மட்டுமே (தன் சந்தேக கணங்களை ,அவநம்பிக்கையை மறைத்து. அப்படி மறைப்பதை நொடிக்கு நொடி மாறும் முகபாவங்களில் நமக்குணர்த்தி )நடிப்பார்.அவர்களை convince பண்ண தன் anxiety மறைப்பாரே தவிர, மறையவில்லை என்பதை அந்த இறைஞ்சும் பாணியே உணர்த்தி விடும்.

விரலை சொடுக்கி யோசித்து எனக்கு தெரிஞ்சா உன்னிடம் ஏன் வருகிறேன் என்ற இயலாமை கலந்த ஆயாசம்.dining காட்சியில், சித்ரா அடிக்கும் பால் பேணி sixer இல், முதல் நம்பிக்கை தெறித்தோடும் போது , அடுத்து வேறு வழியின்றி அவர்களை பணம் கொடுத்து விரட்ட முயலும் காட்சி. எல்லா பணத்தையும் நான் எடுத்து கிட்டா நீங்க என்ன பண்ணுவீங்க என்பதற்கு பிச்சை எடுப்பேண்டா ,என்று லதாவுடன் தனக்கிருக்கும் அபார காதலை வெளியிடும் முறை, யாரோட சாவு எனக்கு சந்தோசம் தருதோ அவ இருக்கான்னு சொல்லி ஏண்டா சித்ரவதை செய்யறே என்று கெஞ்சி அதற்கும் இணங்காத போது சீ,போ என்று வீ சும் வெறுப்பில் breaking பாயிண்ட் desperation தெரிய ஆரம்பிக்கும்.

அந்த போலீஸ் ஸ்டேஷன் காட்சியில் அப்படியே எல்லாம் மூழ்கி விட்ட விரக்தியில், எல்லா கேள்விகளுக்கும் indifference ஆக ஆமாம் என்று பதிலில் (கண்ணை அழுத்தி தடவி)என்னவேண்டுமானாலும் நடக்கட்டும் என்ற விரக்தி தெரிய ஆரம்பிக்கும். அவனை போக சொல்லு என்ற அருவருப்பு தெரியும் வெறுப்பின் கொதிப்பில், மனசுக்குள் துப்பாக்கி எடுக்கும் கோபம் புலப்படும்.

அடுத்த கல்லை அவிழ்க்கும் காட்சியில் தனக்கு தெரிந்த லதாவின் காதலையே re -assure செய்து கொள்ளும் விதமாக, பொய் ஆச்சர்யம் காட்டி, தான் breakdown ஆக ஆரம்பித்து விட்டதை மறைத்து லதாவிற்கு நம்பிக்கை ஊட்ட முயலும் பொது, தானே நம்பாததை மற்றவருக்காக சொல்வதை இந்த மேதை உணர்த்தும் குறிப்பு, குரலும்,பாவங்களும், உடல் மொழியும் புரியும் ரசவாதம்.

லதாவின் அவநம்பிக்கை நிறைந்த சோகத்தால் வெறி கொண்டு, ரங்கனையும் சித்ராவையும் சுட வரும் போது ,மற்றவர்கள் தடுத்தவுடன் விரக்தி, கோபம் கொண்டு, தன்னிச்சையாக பார்த்த ஞாபகம் இசைப்பார் பியானோவில்.இந்த காட்சியில் பாடல் முழுதும் meloncholic serenity with puzzled look உடன்,நிலைகுத்திய விழிகளுடன், முடிவில் சித்ரா அந்த பாடல் எப்படி தெரியும் என்பதற்கு பதில் கூறியவுடன் ஏமாற்றத்துடன் திரும்பும் லதாவை பார்த்து திரும்ப violent ஆகி சித்ரா கழுத்தை பிடித்து வெறி பிடித்து கத்தி கொண்டு தோட்டத்திற்கு செல்லும் இடம்......

அங்கு தோட்டத்தில் லதாவுடன் ,நம்பிக்கை இழந்து அவரை போக சொல்லி விட்டு, அப்படியாவது பழைய நாட்களை அசை போட்டு வாழ்ந்து விட நினைக்கும் கோபால்,பதட்டத்துடன் சிகரெட் பற்ற வைப்பதிலேயே depressed hope less state வெளிப்பட்டு விடும்.போலீஸ் நண்பன் வரும் போது detached silent agony யில் கொடுக்கும் indifferent உடல் மொழி மற்றும் கை அசைவுகள் ....(அவசியமில்லை). நண்பன் கைரேகை எடுக்க சொன்னதும் அவன் குற்றவாளிகள் தப்பி விடும் சாத்யகூற்றை சொன்னதும் போய்தான் தொலயுட்டுமே என்ற அங்கலாய்ப்பு.

சித்ராவை வலையில் சிக்க வைக்க கடுகடுவென்ற பாவனையில் இருந்து போலீஸ் நண்பன் voice over க்கு தக்க படி gradual ஆக forced pleasantness கொண்டு வருவது. ரங்கன் வருவதை பார்த்து லதாவிடம் மனமில்லாமல் கடுமையாய் பேசி அனுப்பி விட்டு ரங்கன் ரேகை இருக்கும் பால் கிண்ணத்தை உடைத்தவுடன், அதை பார்த்து கோபம் நிறைத்த help less ness கையை கொண்டே காட்டுவார்.

இந்த படத்தின் முக்கியமான மூன்று சிறப்புகள் - முதல் முதல் sur realistic முறையில் எடுக்க பட்ட எங்கே நிம்மதி பாடல். படம் முழுதும் voice over என்ற முறையில் நடிகர்திலகத்தின் உணர்ச்சி மிகு nerration உடன் perfect ஆக sink ஆகும் அவரின் நடிப்பு.ஆச்சர்ய பட வைக்கும்.கையை பயன் படுத்தி அவர் அதீத மனநிலையை வெளிபடுத்தும் இடங்கள். ஒன்றை ஏற்கெனெவே பார்த்தோம். எங்கே நிம்மதி பாட்டில் எனது கைகள் மீட்டும் போது வரிகளில் புறங் கைகளால் action காட்டி கண்களால் follow thru பண்ணும் போது கைகளே அந்நியமான உணர்வை கொடுப்பார். சித்ரா அவர் அடித்த அடியில் இறந்து விட்டதும் இந்த கைதானே அவளை அடித்தது என்று தண்டிப்பது போல் .....

climax காட்சி இந்திய படங்களில் வந்ததிலேயே சிறந்த காட்சிகளில் ஒன்று.

stylised நடிப்பில், மனோதத்துவ முறையில் உச்சம் தொடுவார். அப்படியே ஒவ்வொரு நொடியும் மனதில் தைக்கும். பிரமை பிடித்த மாதிரி உட்கார்ந்து சொல்லும் எதுவும் காதில் ஏறாத மனநிலையில் ராஜு வந்ததை கேள்வி பட்டதும் அவர் துன்பமெல்லாம் நீங்கி விட்டதான நினைப்பில் காட்டும் அதீத stress relieved happiness ... இந்த காட்சி முழுவதும் hope -despair ஊசலாட் டமே. ராஜூவை கட்டி தேம்பி விட்டு, ஆட்டி வைக்கிராண்டா என்ற ஆத்திரத்தை கொட்டி ரங்கனை சித்ராவை பரபரப்பாய் வெற்றி களிப்பு விடுதலை உணர்வில் அழைக்கும் தோரணை ,சித்ரா வந்ததும் பேயை பார்த்த மாதிரி பின் வாங்கும் அவசரம்.ராஜு அவளை தங்கை என்றும், ரங்கனை சித்தப்பா என்றும் ஒப்பு கொண்டவுடன்,தன்னையே நம்ப முடியாமல் மீண்டும் கெஞ்சி விட்டு, மச்சத்தையும் பார்த்தவுடன் விரக்தியில் வீழும் இடம்... நண்பன் கைரேகையுடன் வந்ததும்,ஒவ்வொருவரிடமும் களிப்புடன் ரேகை...ரேகை என்று பிரச்சினையே முடிவு பெற்றது போல் கொண்டாட்ட மனநிலை சென்று, ரேகையும் ஒரே மாதிரி என்று சொன்னதும்,நம்பலியா,நீயும் நம்பலியா என்று லதாவிடம் புலம்பி கொண்டே confess பண்ணும் காட்சி.... நான் அசைவே இல்லாமல் லயித்து ஒன்றிய அதிசயம்.

confess பண்ணி முடித்ததும், அந்த train உடலை சிதைத்ததை விவரித்து விட்டு அதிர்ச்சி கலந்த பய உணர்வுடன் அலறி, ஒண்ணு மட்டும் உறுதி என்று சொல்லி விட்டு மூக்கை கைகுட்டையால் சிந்தும் improvisation (humanising the celluloid image ).குழந்தை போல் தன் conclusion சொல்லி விட்டு, பந்தாவாக எழுந்து வந்து எல்லோரிடமும் இல்லை என்ற பதிலை கேட்டு பெற்று ,லதா தன்னை கைது செய்ய சொன்னதும்,நம்பவோ,ஜீரணிக்கவோ முடியாமல் உண்மை உணர்ந்து என்ன அழகான நடிப்பு என்று சித்ராவிடம் சொல்லி(அப்போது கூட லதா நடிக்கவில்லை என்ற நம்பிக்கை)
அதை வைச்சா என்னை வீழ்த்திட்டே, அத்தனையும் நடிப்பா என்று குழந்தையின் ஏமாற்றம் நிறைந்த தேம்பலுடன் கேட்டு, லதா தன்னை உண்மையாய் நேசிப்பதை அறிந்து கொள்ளும் நெகிழ்வு..(தாடையை தடவி)

இப்போது சொல்லுங்கள். இந்த மாதிரி ஒரு அதிசயம் உலகத்தில் உண்டா?கண்டதுண்டா?

Artaud acting techniques.

Artaud's thinking placed heavy emphasis on invoking deep routed feelings through acting. He believed the theatre was about action and the element of surprise. His theatre of cruelty approach, of which he is better associated with, takes acting to the subconscious level. Using painful memories and strong feelings to invoke strong emotion. Antonin Artaud thought less of words and more of profound impact. Where as Brecht wanted the audience to go out and change society Artaud wanted them shaken to their soul and to look within and make Changes within themselves.

இந்த முறையில் சராசரியாக நாம் வாழ்க்கையில் காட்டும் முகபாவங்கள், வெளியீட்டு முறைகள் நிராகரிக்க பட்டு , நடிகர்கள் முகத்தை ரப்பர் போல இஷ்டத்துக்கு வளைத்து, கண் மூக்கு வாய் எல்லாவற்றையும் மிக கொடூரமாக உபயோக படுத்தி, வலிதரும் எண்ணங்களை,மிக மிக வலிமையுள்ள நினைவெழுச்சிகள்,மிகை உணர்ச்சிகளை ,நடிப்பை உள்மன போராட்ட நிலைக்கு எடுத்து சென்று , பார்ப்பவரின் ஆத்மாவை உலுக்கி எடுக்க வலியுறுத்தினார். இந்த முறை நடிப்புக்கு இந்தியாவில் ஒரு நடிகரும் தகுதி பெற முடியவே முடியாது ,நம் ஒரே உலக மேதையை தவிர.

நடிகர்திலகம் மட்டுமே மற்றவர்களால் இஷ்டப்படி இயக்கி கொள்ள முடியாத involuntary muscles என்பதையும் அவர் இயக்கி கொள்ளும் திறமை பெற்றிருந்ததால்(ஒரு டாக்டர் குறிப்பிட்டதாய் ஞாபகம்) அவரால் மற்றவர்களை விட அதிகமாக முகபாவங்களை காட்டி (அமெரிக்க நடிப்பு பள்ளி ஒன்றில் இது நிரூபிக்க பட்டது)இந்த வகை நடிப்பிலும் தேர்ந்து விளங்கினார்.

எதற்கு எங்கெங்கோ போவானேன்?புதிய பறவை climax காட்சி ஒன்று போதுமே! அதை chekhov பாணியில் ஆன stylised நடிப்பு என்றுதானே பார்த்தோம்?ஆனால் அதில் முழு காட்சியிலும் Astraud cruelty முறை பயன் படுத்த பட்டு அந்த காட்சி நம் ஆத்மாவில் ஊடுருவி நம் sub -conscious level உணர்விலும் ஊடுருவும் அதிசயத்தை நிகழ்த்தி Focus reach என்ற Acting Miracle நிகழ்ந்தது.

பிரமை பிடித்து உட்கார்ந்திருக்கும் நடிகர்திலகம் சித்ராவின் அண்ணன் pilot ராஜு வந்து விட்டதை படி படியாய் உள்வாங்கி அப்படியே பிரமை நீங்கி ,stress relieve ஆகி, ecstatic உணர்வை நம்பிக்கையின் உச்சத்திற்கே செல்வதை காட்டும் அந்த expression .

அதே மாதிரி confession முடித்து விட்டு train இல் சித்ரா உடல் சிதையும் காட்சியை மனக்கண்ணால் பார்த்து அலறும் போது கொடுக்கும் expression .

ராகவேந்தர் சார்,வாசு சார் காட்சியை தரவேற்றுங்கள். இதை என் எழுத்தால் வடிப்பது இயலாது.

goldstar
12th September 2013, 06:34 AM
ராகவேந்தர் சார்,வாசு சார் காட்சியை தரவேற்றுங்கள். இதை என் எழுத்தால் வடிப்பது இயலாது.

For our Gopal on Gopal request

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/PP5_zps7976ad12.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/PP10_zpsd56fa0a1.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/PP9_zps40a17bd4.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/PP9_zps40a17bd4.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/PP7_zps1c9a9d63.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/PP6_zps16a85f96.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/PP4_zps6509f92c.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/PP3_zps5bd18edc.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/PP2_zpsceee62ea.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/PP1_zps79787ee7.png

goldstar
12th September 2013, 06:42 AM
http://www.youtube.com/watch?v=6jgbr6cjALQ

goldstar
12th September 2013, 06:42 AM
http://www.youtube.com/watch?v=CJ0pm7hOJHI

goldstar
12th September 2013, 06:45 AM
http://www.youtube.com/watch?v=ZzXjH9xTcbo

http://www.youtube.com/watch?v=ZzXjH9xTcbo

http://www.youtube.com/watch?v=xNInBEF8E7M

http://www.youtube.com/watch?v=c3DFEitWaHI

http://www.youtube.com/watch?v=YA50A8TqeRM

http://www.youtube.com/watch?v=gkHGfFDbbXU

http://www.youtube.com/watch?v=G3oWKwrbVlg

joe
12th September 2013, 07:42 AM
Removed at the request of the author

மூன்றாவது பாராவை படிக்கும் வரை நீங்கள் வியட்நாம் கோபாலைத் தான் சொல்லுகிறீர்கள் என நினைத்தேன் :rotfl:

goldstar
12th September 2013, 09:30 AM
Thanks gold star for uploading ''vetrikku oruvan '' sills . Kamala theatre stills superb.

ನೀವು ವಿನೋದ್ ಸರ್ ಧನ್ಯವಾದ

IliFiSRurdy
12th September 2013, 10:02 AM
கோபால்! இவன் நல்லவனா கெட்டவனா?

Happy 50th Birthday Gopal! Wishing You More And More Centuries of Birthdays! Let Your Fame live For Ever!

அன்புடன்

சபாஷ் முரளி சார்..

ஒரு தொடக்கம் என்பது இப்படியல்லவோ இருக்க வேண்டும்.!!

உங்களை தொடர்ந்து வியட்நாம் கோபால் சாரின் விளாசல்..

புதிய பறவை என்று பெயரிட்ட ஒரு மாமேதையை முதலில் வணங்குகிறேன்.

ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்தும் அது புதிதாகவே உள்ளது.

படத்தின் இன்னொரு சாதனை....
It is தலைவர் vs ALL OTHERS in the movie
எனவே இது ஒரு மைல் கல்.

படத்தின் அடிநாதம் excitement

அதை வித விதமாக தலைவர் வெளிகாட்டியிருப்பார்.

சௌகாரை சந்திப்பது ஒரு subdued excitement என்றால்...

சரோவை சந்திப்பது ஓரு visible ஆக தொடங்கி,explicitஆக மாறி,explosive level க்கு சென்று அடங்குமே!!!

இதை செய்ய யாரால் இயலும்?

நடுவே fearful excitement, angry excitement என்ற combinations வேறு!

முக்கியமாக ..

சௌந்தர்யம் என்பது பெண்களுக்கே உரித்தானது.

இந்த படம் முழுவதும் தலைவர் சௌந்தர்யமாக உலாவுவார்.

ஒவ்வொரு frame உம் ரவிவர்மா ஓவியம் போல..

ஒரு நூறு சதவிகித நிறைவான படம்.

என் நாளை இனிதே தொடங்கிய உங்களுக்கும் நண்பர் கோபாலுக்கும் நன்றிகள் கோடி.

அதுவும் 49 ஆண்டுகள் நிரம்பி 50 ஆம் ஆண்டு தொடக்கம் என்பது ஒரு மிக இனிய நிகழ்வு.

அதை நாடு விட்டு நாடு வந்து கொண்டாடும் கோபாலிற்கு
என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

KCSHEKAR
12th September 2013, 10:15 AM
மூன்றாவது பாராவை படிக்கும் வரை நீங்கள் வியட்நாம் கோபாலைத் தான் சொல்லுகிறீர்கள் என நினைத்தேன் :rotfl:

Exactly Joe Sir!

adiram
12th September 2013, 10:17 AM
மூன்றாவது பாராவை படிக்கும் வரை நீங்கள் வியட்நாம் கோபாலைத் தான் சொல்லுகிறீர்கள் என நினைத்தேன் :rotfl:

Me too.....

Because many points coincides.

Third para is same like the climax of Puthiya Paravai (ie unexpected).

Welldone Murali Sir.

KCSHEKAR
12th September 2013, 10:17 AM
டியர் முரளி சார்,

தமிழகம் வந்து நம்மையெல்லாம் ஆட்கொண்ட தாங்கள் சிங்கப்பூர் தமிழன் கோபாலை வர்ணித்த விதம் அருமை. 50 ஆண்டு அல்ல இன்னும் 500 ஆண்டுகள் ஆனாலும் கோபால் நம் நினைவில் நிற்பார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

goldstar
12th September 2013, 10:20 AM
http://www.youtube.com/watch?v=fL8etScwXHM

goldstar
12th September 2013, 10:21 AM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/PP11_zps9b5771fe.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/PP16_zpsaad16c83.jpg

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/PP14_zps52f92548.jpg

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/PP12_zpsafef1ea1.jpg

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/PP15_zps1086bc79.jpg

KCSHEKAR
12th September 2013, 10:21 AM
டியர் கோல்ட் ஸ்டார் சதீஷ் சார்,

புதிய பறவை கோபாலை நம் கண் முன்னே நிறுத்தும் வண்ணம் புகைப்படங்கள் மற்றும் பாடல் காட்சிகளை அளித்ததற்கு நன்றி.

KCSHEKAR
12th September 2013, 10:28 AM
சிங்கப்பூர் தமிழன் கோபாலின் கேரக்டரை அலசி, ஆராய்ந்து அருமையாக நமக்களித்த வியட்நாம் தமிழர் கோபால் அவர்களுக்கு நன்றி.

goldstar
12th September 2013, 10:32 AM
http://www.youtube.com/watch?v=Xn7dcln-Bg0

KCSHEKAR
12th September 2013, 10:32 AM
நடிகர் திலகம் சிவாஜிக்கு கவியரசர் கண்ணதாசனின் பாராட்டுக் கவிதை
இது புதிய பறவை கோபால் கேரக்டர் அலசப்படும் நேரத்தில் பொருத்தமாக இருக்கிறது.
(நன்றி: முகநூல் நண்பர் தாரை கிட்டு)

எதை எழுதுவது
எதை விடுவது?
இமயமலையின் எந்த
மூலையைப் புகழ்ந்தால்
நியாயமாக இருக்கும்?
கடலிலே எந்தப்பகுதி
அழகான பகுதி?
சிவாஜி ஒரு மலை!
ஒரு கடல்;
கண்களின்
கூர்மையைச் சொல்வேனா?
அல்லது
கம்பீரத் தோற்றத்தைச் சொல்வேனா?
ஒன்பது பாவத்தைத்
தொண்ணூறு வகையாகக்
காட்டும்
உன்னத நடிப்பைச்
சொல்வேனா?
அவரைப் போல் இதுவரை
ஒருவர் பிறந்த்தில்லை;
இனிப் பிறப்பார் என்பதற்கும்
உறுதி இல்லை!
இது உண்மை
உலகறிந்ததே!!

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/1240320_203961039780272_583616815_n_zps3b35d31a.jp g (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/1240320_203961039780272_583616815_n_zps3b35d31a.jp g.html)

JamesFague
12th September 2013, 10:32 AM
Mr Gold Star,

Excellent photos of Mr Gopal. What a pose. Thanks.

Mr Murali Sir,

Nice writeup of PP.

goldstar
12th September 2013, 10:32 AM
Thank you Ragavendran sir...

http://www.youtube.com/watch?v=2uJNuEdLWvo

goldstar
12th September 2013, 10:33 AM
http://www.youtube.com/watch?v=OFQ9oqgxo1I

goldstar
12th September 2013, 10:34 AM
Thank you Ragavendran sir...

http://www.youtube.com/watch?v=sNGCaYhob8I

goldstar
12th September 2013, 10:35 AM
Thank you Girija madam...

http://www.youtube.com/watch?v=nfnqLpOjH8Q

goldstar
12th September 2013, 10:35 AM
http://www.youtube.com/watch?v=_biv7nz9Hfc

goldstar
12th September 2013, 10:36 AM
Thank you Gijira madam....

http://www.youtube.com/watch?v=ajgfdLFtKrE

goldstar
12th September 2013, 10:37 AM
Thank you Pammalar sir...

http://www.youtube.com/watch?v=kBwYwkXfOp4

goldstar
12th September 2013, 10:38 AM
Thank you Ragavendran sir....

http://www.youtube.com/watch?v=D4M5gGwo5Fo

goldstar
12th September 2013, 10:39 AM
http://www.youtube.com/watch?v=eVmWMtSYE8g

goldstar
12th September 2013, 10:39 AM
http://www.youtube.com/watch?v=YrA0EXp-bXk

goldstar
12th September 2013, 10:40 AM
http://www.youtube.com/watch?v=Vjcuw7-sw7g

goldstar
12th September 2013, 10:41 AM
http://www.youtube.com/watch?v=TqLzW5gPN6I

goldstar
12th September 2013, 10:41 AM
http://www.youtube.com/watch?v=NkPdFJdkvVI

goldstar
12th September 2013, 10:42 AM
http://www.youtube.com/watch?v=tknZuP_OdBU

goldstar
12th September 2013, 10:43 AM
http://www.youtube.com/watch?v=cmU1TKGmvDo

goldstar
12th September 2013, 10:44 AM
http://www.youtube.com/watch?v=iBVUQoiqbmE

goldstar
12th September 2013, 10:44 AM
http://www.youtube.com/watch?v=MS94wPjbcfQ

goldstar
12th September 2013, 10:45 AM
http://www.youtube.com/watch?v=bhvGWCkUp5k

goldstar
12th September 2013, 10:46 AM
http://www.youtube.com/watch?v=q6vzjtL1LYw

goldstar
12th September 2013, 10:47 AM
http://www.youtube.com/watch?v=HCyicSLN4pQ

goldstar
12th September 2013, 10:48 AM
http://www.youtube.com/watch?v=gy8PccXX_6E

goldstar
12th September 2013, 10:48 AM
http://www.youtube.com/watch?v=D-WTcuIQBVE

goldstar
12th September 2013, 10:49 AM
http://www.youtube.com/watch?v=ZiP6TaWVTF8

goldstar
12th September 2013, 10:49 AM
http://www.youtube.com/watch?v=ub9er0UX1gw

goldstar
12th September 2013, 10:50 AM
http://www.youtube.com/watch?v=EQuH1J5nW0Y

goldstar
12th September 2013, 10:51 AM
http://www.youtube.com/watch?v=X9xdNi95oxs

joe
12th September 2013, 02:15 PM
Removed at the request of the author

what happened Murali sir?

KCSHEKAR
12th September 2013, 03:11 PM
Removed at the request of the author

டியர் முரளி சார்,

தங்களின் பதிவை ஏன் நீக்கினீர்கள் என்று தெரியவில்லை. இதில் ஒன்றும் ஆட்சேபகரமான வார்த்தைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மிக நல்ல பதிவு ஒன்று நீக்கப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது.

Subramaniam Ramajayam
12th September 2013, 04:31 PM
Murali sir.
simply superb worth remembrances on his birth date.
WHAT An elegent and rich STYLES AND MANNERISAMS HE DISPLAYED AND CAPTURED MILLIONS OF PEOPLE.
DIgitalised GOPAL will certainly make a history very soon.
ALWAYS NO 1 SPOT IN MY MINDS.
conculsion= GOPAL CERTAINLY A VERY GOOD MAN only circumstances made him to do all this acts, THUVUM, ORE ORU ADI as gopal says made him like this.

Murali sir,
very very UNFORTUNATE THAT YOU HAVE BEEN DIRECTED TO DELETE A WONDERFUL NOTES. No reasons to guess.

adiram
12th September 2013, 04:45 PM
Excellent introction for Puthiya Paravai by Mr.Murali Srinivas,

Fantastic analysis about that movie by Mr. S.Gopal,

Tremendous insertion of Stills and Videos by Mr. Goldstar,

Now the Million Dollar question araises,

Who were the 'MEN WITH AXE' in their hands in front of theatres Sri Krishna (north Madras), Sayani (central Madras) and in front of theatres at Madhurai, Trichy, Salem, Covai, Nellai and other major cities, NOT allowing the public to watch Pthiya Paravai?.

They allowed public to watch Karnan, Vettaikaaran, Kaikoduththa Dheivam, Kadhalikka Neramillai, Panakkara Kudumbam, Pachai Vilakku, Dheiva Thaai, Navarathiri and other movies in that year 1964, but not allowed public to watch Puthiya Paravai, by threatening "If you enter, we will cut your legs".

In Chennai Paragon PP ran for 135 days, means where were those 'AXE-MEN' to be presented in front of Paragon theatre?.

I am breaking my heads. Any reply please?.

vasudevan31355
12th September 2013, 07:20 PM
நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)

நடிகர் திலகத்தின் நாயகிகள் (15) வைஜயந்திமாலா

(தொடர்-15)

http://images.idiva.com/media/content/2012/Mar/bolly_vayjanti.jpg

'வைஜயந்திமாலா ஸ்பெஷல்

http://celebritiesinfos.com/wp-content/uploads/2013/08/2-Vyjayanthimala-teenage-photo.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/AVSEQ02DAT_002660153.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/AVSEQ02DAT_002660153.jpg.html)

நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த ஜோடிகளில் இவரும் ஒருவர் என்பது எனது கருத்து. எனக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் பிடித்த ஜோடி. என்ன ஒரு பெரிய மனக்குறை! நடிகர் திலகத்துடன் அதிகப் படங்களில் இவர் நாயகியாக ஜோடி சேர வில்லை. மூன்று படங்களே ஜோடி சேர்ந்தாலும் அற்புதமாகப் பரிமளித்த ஜோடி.

1949-இல் ஏவிஎம்மின் 'வாழ்க்கை' திரைப்படத்தின் மூலம் இவரது சினிமா வாழ்க்கை தொடங்கியது. கொள்ளை அழகும், சிறந்த நடனத் திறனும், நல்ல நடிப்பும் கொண்ட இவர் தனது முதல் படத்திலேயே புகழின் உச்சாணிக் கொம்பைத் தொட்டார். வில்லன் நடிகர் ரஞ்சன் நடித்த, புகழ் பெற்ற ஜெமினி நிறுவனத்தாரின் 'மங்கம்மா சபதம்' திரைப்படத்தின் கதாநாயகி வசந்தராதேவியின் மகள்தான் வைஜயந்திமாலா. இரும்புத்திரை திரைக்காவியத்தில் தாயும், மகளுமாகவே இருவரும் நடித்திருப்பார்கள்.

1960-இல் வெளிவந்த தலைவரின் மறக்க முடியாத காவியமான 'இரும்புத்திரை' தலைவரையும், இவரையும் முதன் முதலாக ஜோடி சேர்த்தது. தலைவருக்கும் சீனியர் இவர். கிட்டத்தட்ட பதினோரு ஆண்டுகள் திரையுலக வாழ்க்கைக்குப் பின் முதன் முதலாக தலைவருடன் ஜோடி சேர்கிறார். படமும் காவியப் படம். ஜோடியும் காவிய ஜோடிதான். நன்கு மெருகேறி சற்றே பூசிய அருமையான உடல்வாகும், வனப்பும் கொண்டிருந்த நம் சிங்கத்திற்கு ஏற்ற சிறந்த ஜோடியாக, சிருங்கார மானாக வைஜந்திமாலா ஜொலித்தார். இரும்புத்திரையில் இந்த ஜோடியின் காதல் காட்சிகள் அழியாப் புகழ் பெற்ற காதல் காட்சிகள். இதை அனுபவித்தவர்களுக்குத்தான் நன்கு புரியும்.

'இரும்புத்திரை'யில்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/cavi_000880380.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/cavi_000880380.jpg.html)

குறிப்பாக தலைவரும்,மாலாவும் அந்த காட்டுப் பகுதியில் சந்தித்து உரையாடுமிடம். இருவரும் வழங்கும் அந்த அம்சமான டயலாக் டெலிவிரி. அதுவரை தமிழ்த்திரையுலகம் காணாதது. ஆடு மேய்க்கும் சிறுவனிடம் புல்லாங்குழல் வாங்கி வாசிக்கத் தெரியாதது போல வைஜயந்தியிடம் கலாய்த்து நடித்து பின் தன் திறமையை தலைவர் நிரூபிக்கும் காட்சியில் வைஜயந்திமாலா நன்கு ஈடு கொடுத்திருப்பார். கீழே வரும் உரையாடலைக் கவனியுங்கள்.

வைஜயந்தி: உண்மையிலேயே நீங்க யாரு?

நடிகர் திலகம்: இதென்ன கேள்வி? நான் சாதாரண ஒரு மனுஷன்.

வைஜயந்தி: ம்ஹூம்....(நீ சாதாரண மனிதன் இல்லை என்ற அர்த்தத்தில்)

நடிகர் திலகம்: அப்படின்னா நீ என்னைப் பத்தி என்னதான் நினைக்கிறே?

வைஜயந்தி: ஒரு தெய்வப்பிறவின்னு நினைக்கிறேன்.

இது ஒன்று போதுமே...

அடுத்தது வைஜயந்தி மில்லில் சரோஜோதேவியிடம் பேசிக் கொண்டிருக்கும் திலகத்திடம் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் கொடுக்க செல்ல, சூழ்நிலை காரணமாக நடிகர் திலகம் வைஜயந்தியைக் கடிந்து கொண்டு பின் வருத்தப்பட்டு செல்லும் வைஜயந்தியை சாலையில் சைக்கிளில் சென்று சமாதானப்படுத்தும் போது வைஜயந்தி செல்லமாக நம்மவரிடம் கோபித்து பின் சமாதானமாவார். ("இந்த விளையாட்டெல்லாம் அவகிட்ட(சரோஜாதேவியிடம்) வச்சுக்கோங்க"....) இந்தக் காட்சியிலேயும் வைஜயந்தி மிக நன்றாக ஸ்கோர் பண்ணியிருப்பார். மறுபடியும் அழுத்தமாகச் சொல்லுகிறேன். இருவரின் டயலாக் டெலிவிரியும் அவ்வளவு டெரிபிலாக இருக்கும். ஜோடிப் பொருத்தமும் கண் பட்டுப் போகும் அளவிற்கு இருக்கும்.

"நெஞ்சில் குடியிருக்கும்" பற்றி நான் சொல்ல வேண்டியதே இல்லை. டூயட்களின் வரிசையில் தலையாயது அது. அனைவரது நெஞ்சிலும் நிலைத்து குடியேறிவிட்ட கிளாஸிக்.

அடுத்து அதே போல தோட்டத்து காட்டில் இருவரும் சந்திக்கும் மூன்றாவது இடம். இன்னொரு பெண்ணுடன் தனக்குப் பழக்கம் உருவானது போன்ற ஒரு கதையைத் திரித்து வைஜந்தியை நம்மவர் சீண்டிப்பார்க்க, அதற்கு வைஜயந்திமாலா கொடுக்கும் பொறாமை கலந்த expressions ஐ எப்படிப் பாராட்ட? இந்த இடத்தில் நம் தலைவர் பின்னி எடுப்பது வேறு கதை. (ஐநூறு பக்கங்களுக்கும் அதைப் பற்றி எழுதித் தீர்த்தாலும் அந்த நடிப்பை நம்மால் வர்ணிக்க முடியாது சாமி)

ஆஹா... காதலின் மேன்மையையும், காதலில் ஏற்படும் ஊடலையும், கூடலையும், சிறு சிறு இன்பச் சீண்டல்களையும், காதலின் அன்னியோன்னியத்தையும், நாகரீகத்தையும், மகத்துவத்தையும் இந்த ஜோடி இந்தப் படத்தில் காட்டிய அளவிற்கு வேறு எந்த ஜோடியாவது வேறு எந்தப் படத்திலாவது காட்டியிருக்குமா?

காவியங்களை மிஞ்சும் அற்புத காதல் ரசனை கொண்ட காட்சிகளை இந்த ஜோடி பிரதிபலித்ததே.

என்ன ஒரு பொருத்தமான ஜோடி!

திரைக்குப் பிறகு அதே 1960-இல் 'ராஜபக்தி' யில் உதவி தளபதி விக்ராந்தனின் இரண்டாவது ஜோடியாக மீண்டும் வைஜயந்தி மிருணாளினியாக. (முதல் ஜோடி பண்டரிபாய்) அதிக சந்தர்ப்பம் இல்லை. காதல் ரசம் சொட்டும் காட்சிகளும் மிகக் குறைவே. இளவரசனை காப்பாற்றவே இருவருக்கும் நேரம் போதாதபோது காதலித்து நம்மை மகிழ்விக்க இந்த ஜோடி மறந்து போனது. அதனால் நமக்கும் ஏமாற்றமே. இந்த அற்புதமான ஜோடி சற்று அதிகமாகவே வீணடிக்கப்பட்டது இந்தப் படத்தில். இருந்தாலும் தலைவரும், வைஜயந்தியும் அற்புத அழகில் நம்மை சொக்க வைத்தது உண்மை.

"சித்தூர் ராணி பத்மினி"

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/AVSEQ02DAT_002649640.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/AVSEQ02DAT_002649640.jpg.html)

அடுத்து 1963-இல் "சித்தூர் ராணி பத்மினி" டைட்டில் நாயகியாக வைஜயந்தி. இதிலும் அற்புத காதல் ரசம் சொட்டும் காட்சிகள் உண்டு. ஆனாலும் இரும்புத்திரை அளவிற்கு இருக்காது. இரஜபுத்ர இளவரசன் மகாராணா பீம்சிங் (தலைவர்) சித்தூர் சிப்பாயாக நடித்து உதய்பூர் இளவரசி சித்தூர் ராணி மனதை வீரத்தாலும், அழகாலும் கொள்ளையடித்து பின் உண்மை உணர்த்தி கரம் பிடிக்கும் காட்சிகளில் மனம் லயிக்கலாம். (அதுவும் "சிப்பாய்" என்று வாஞ்சையுடன் தலைவரை வைஜயந்தி விளிக்கும் அழகே அழகு! சிப்பாயை உள்ளூர மனதளவில் காதலித்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடிப்பது இன்னும் அழகு!) இரஜபுத்திரர்களுக்கே உரிய வீரமும், தன்மானமும், காதலும் ஓரளவு நன்றாகச் சொல்லப்பட்டிருந்தும், தலைவரும், வைஜயந்தியும் மகாராணாவாகவும். பத்மினிதேவியாய் உயிரைக் கொடுத்திருந்தும் மனம் ஏனோ இப்படத்தில் அவ்வளவாக ஒட்டவில்லை. தலைவருக்குப் பொருந்தாத சீர்காழியின் குரலில் ஹிட்டடிக்காத பாடல்களால் வேறு இந்த ஜோடி இப்படத்தில் நன்கு சோபிக்க முடியாமல் போனது. இருந்தாலும் 'பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்' பாடலில் வைஜயந்தி நடனமாடும் பரதம் அற்புதம்.

கோபால் சாரும் நானும் ஒரு கட்சி. அதாவது தில்லானா மோகனாம்பாளில் பத்மினிக்குப் பதிலாக வைஜயந்தி நடித்திருக்கலாம் என்பதில் இருவரும் ஒத்துப் போவோம். மிக மிக அற்புதமாக இருந்திருக்கும். (பத்மினி சோடை போகவில்லை என்றாலும் அந்த இளமை மிஸ்ஸிங்) ஒரு இளமையான துறுதுறு மோகனாம்பாள் வைஜயந்தி வாயிலாக நமக்குக் கிடைத்திருக்கக் கூடும். சண்முக சுந்தரத்தின் உடல்வாகுக்கு ஏற்றவாறு.

மூன்று படங்களோடு இந்த அற்புத ஜோடி மூட்டை கட்டி விட்டதால் பெருநஷ்டம் நமக்குத்தான். என்ன துரதிருஷ்டமோ தெரியவில்லை. இந்த ஜோடியின் மகிமையை யாரும் புரிந்து நிறைய படங்களில் சேர்க்கவில்லை. பெரிய இயக்குனர்கள் கூட. பின்னாட்களில் வைஜயந்தி இந்தியிலேயே நிலைத்து நின்று விட்டது வேறு ஒரு காரணம். (இந்தியில் மதுமதி, சங்கம், ஜூவல் தீப், கங்கா ஜமுனா, Naya Daur, லீடர் போன்ற அசுர வெற்றிப் படங்களில் நடித்து வைஜயந்தி அகில இந்தியப் புகழ் பெற்றார் என்றால் அது மிகையில்லை.)

http://img.india-forums.com/images/600x0/21205-vyjayanthimala-bali.jpg

தமிழில் பெண், தேன் நிலவு, வஞ்சிக் கோட்டை வாலிபன், பார்த்திபன் கனவு போன்ற படங்கள் இன்றளவும் இவர் புகழ் பாடும். குச்சிப்புடி, பரதம் போன்ற நாட்டியங்களை முறைப்படிக் கற்று தேர்ந்த நடிகை. இவரை எனக்குப் பிடிக்காது என்று எவருமே சொல்ல முடியாத அளவிற்கு அனைவர்க்கும் மிகவும் பிடித்த நடிகை. அரசியலிலும் ஒரு கலக்கு கலக்கியவர். அம்சமான, அலட்டலில்லாத அழகுப் பெட்டக நடிகை.

எது எப்படியோ அந்த 'இரும்புத்திரை' ஒரு படம் போதும் சார் இந்த ஜோடி நம் நெஞ்சில் வாழ்நாளெல்லாம் குடியிருக்க .

நான் மேலே குறிப்பிட்டிருக்கும் வாழ்நாளில் மறக்க இயலாத 'இரும்புத்திரை' புல்லாங்குழல் காவியக் காட்சி. முதன் முதலாக இணையத்தில் அனைவருக்காகவும் தரவேற்றி.

http://www.youtube.com/watch?v=5_lghtjmgzU&feature=player_detailpage

அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்

Murali Srinivas
12th September 2013, 11:55 PM
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். புதிய பறவை பொன் விழா கொண்டாட்ட தொடக்கத்தின் முதல் நாளான இன்று அதைப் பற்றிய ஒரு பதிவை நேற்று நள்ளிரவு பதிந்திருந்தேன்.

முதன் முதலாக நமது நடிகர் திலகம் எடுத்த சொந்தப் படம். அதுவும் சிவாஜி பிலிம்ஸ் பானரில் வெளிவந்த படம். Ahead of its time என்பார்களே அந்த ஜானரில் வந்த படம். அப்படிப்பட்ட ஒரு காவியம் பொன் விழா நாளில் அடியெடுத்து வைக்கிறது எனும்போது அதை பற்றிய ஒரு பதிவு அதிலும் நடிகர் திலகம், சிவாஜி பிலிம்ஸ், புதிய பறவை என்ற வார்த்தைகள் வராமல் பதிய வேண்டும் என்று ஒரு சிந்தனை. அதன் வெளிப்பாடே அந்த பதிவு.அது முழுக்க முழுக்க புதிய பறவை கோபாலைப் பற்றி மட்டுமே நான் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதையாய் துரதிர்ஷ்டவசமாக நான் கையாண்ட வார்த்தைகள் ஒரு சில நண்பர்களின் மனதை பெரிதும் புண்படுத்தி விட்டதாக இன்று காலைதான் எனக்கு தெரிய வந்தது. எவரையும் கனவிலும் கூட காயப்படுத்தி விடக் கூடாது எனபதை ஒரு கொள்கையாகவே கடைப்பிடிக்கும் நான் இப்படி ஒரு வடுவை நண்பர்கள் மனதில் ஏற்படுத்தி விட்டேனே என்ற குற்ற உணர்வின் காரணமாகவே [என்னால் நமது ஹப்பை அலுவலகத்திலிருந்து access செய்ய முடியாத காரணத்தினால்] மாடரேட்டர் NOV அவர்களை தொடர்பு கொண்டு அந்த பதிவை நீக்கி விட செய்தேன்.

மீண்டும் கூறுகிறேன். நான் எந்த உள்ளர்த்தமும் வைத்து அந்த பதிவை இடவில்லை. இருப்பினும் அது யார் மனதையேனும் புண்படுத்தியிருந்தால் அவர்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன். என் நிலை வெளிப்படுத்தவே இந்த பதிவு.

நண்பர் வாசு அவர்களே, உங்களின் அருமையான நாயகியர் விஷுவல் தொடருக்கு (அதுவும் அழகான வைஜயந்தி பற்றி எழுதும்போது) நடுவில் ஒரு குறுக்கீடாக இந்த பதிவு வந்ததற்கு Sorry.

அன்புடன்

vasudevan31355
13th September 2013, 06:52 AM
'புதிய பறவை' பொன் விழா கொண்டாட்டம்

http://www.gifs.net/Animation11/Animals/Birds/bird.gif

http://ttsnapshot.com/out.php/i59381_2.pnghttp://ttsnapshot.com/out.php/i59383_4.png
http://ttsnapshot.com/out.php/i59382_3.pnghttp://ttsnapshot.com/out.php/i59384_5.png
http://ttsnapshot.com/out.php/i59385_6.pnghttp://ttsnapshot.com/out.php/i59386_7.png
http://ttsnapshot.com/out.php/i59387_8.pnghttp://ttsnapshot.com/out.php/i59388_9.png

vasudevan31355
13th September 2013, 06:56 AM
http://ttsnapshot.com/out.php/i59389_11.pnghttp://ttsnapshot.com/out.php/i59392_13.png
http://ttsnapshot.com/out.php/i59393_14.pnghttp://ttsnapshot.com/out.php/i59394_15.png
http://ttsnapshot.com/out.php/i59395_16.pnghttp://ttsnapshot.com/out.php/i59396_17.png

Subramaniam Ramajayam
13th September 2013, 07:04 AM
'புதிய பறவை' பொன் விழா கொண்டாட்டம்

http://www.gifs.net/Animation11/Animals/Birds/bird.gif

http://ttsnapshot.com/out.php/i59381_2.pnghttp://ttsnapshot.com/out.php/i59383_4.png
http://ttsnapshot.com/out.php/i59382_3.pnghttp://ttsnapshot.com/out.php/i59384_5.png
http://ttsnapshot.com/out.php/i59385_6.pnghttp://ttsnapshot.com/out.php/i59386_7.png
http://ttsnapshot.com/out.php/i59387_8.pnghttp://ttsnapshot.com/out.php/i59388_9.png

VASU SIR PUDIYAPARAVAI MEENDUM SIRAGADIATHU PARAKKA VITHADURKU NANDRI NANDRI.Your photos are always ecellent here also.
SIVAJI-VYJANTHIMALA WRITEUP VERY NICE. ONEthing thillana padmini may be less charming than vyjanthi performance wise former is superior when we met APN at the time of release of TM
he gave us a detailed reply about the characters and cast he chose.

RAGHAVENDRA
13th September 2013, 07:29 AM
முரளி சார்
எவர் மனதையும் கனவிலும் புண்படுத்தக் கூடாது என்கிற தங்கள் நிலைப்பாடு தங்கள் மேல் உள்ள மதிப்பை மேலும் உயரக் கொண்டு செல்கிறது.
பாராட்டிற்குரியது.
அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
13th September 2013, 07:37 AM
வாசு சார்
நாயகியர் தொடரில் வைஜயந்தி மாலா அவர்களின் திரைப்படங்களும் அவருடைய நடிப்பும் பற்றிய தங்கள் பதிவு அட்டகாசம். தேவிகா, வாணிஸ்ரீ இவர்கள் இருவருக்குப் பிறகு நடிகர் திலகத்தின் சிறந்த ஜோடியாக என் பட்டியலில் மூன்றாவதாக இடம் பெறுவது இவர் தான். தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தால் அப்படத்தின் சிறப்பு மேலும் பல மடங்கு உயர்ந்திருக்கும். இது சந்தேகமில்லை. அதே போல் இரும்புத் திரை திரைக்காவியத்தில் அந்த புல்லாங்குழல் காட்சியில் நடிகர் திலகத்தின் வசீகரமான தோற்றம் அந்தக் காலத்தில் பல கல்லூரிப் பெண்களின் கனவு நாயகனாக அவரை உருமாற்றியது எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். இதைப் பற்றி ராமஜெயம் சார் அவர்களால் தான் கூற முடியும். சிட்டுச் சிரித்தது போலே என்ற இனிமையான பாடல் சித்தூர் ராணி பத்மினி படத்தில் நடிகர் திலகம் வைஜயந்தி மாலா நடிப்பில் மறக்க முடியாத பாடலாகும். அப்பாடல் இணையத்தில் காணொளியாக இருப்பதாகத் தெரியவில்லை. அதே போல் பந்தயத்தில் வென்று விட்டு இளவரசியையே தனக்கு பந்தய பரிசாகக் கேட்கும் காட்சியில் நடிகர் திலகத்தின் ஸ்டைல் அட்டகாசமாக இருக்கும். அக்காட்சியை நம் நண்பர்கள் பலர் பார்த்திருக்க மாட்டார்கள் அல்லது நினைவில் இருந்திருக்காது. முடிந்தால் அக்காட்சியையும் அப்பாடலையும் ஒரே காணொளியாக இணைத்து தரவேற்றலாம்.

எப்படி பத்மப்ரியா நடிக்க வேண்டிய படங்கள் மஞ்சுளாவுக்குப் போயிற்றோ அதே போல வைஜயந்திமாலா அவர்கள் நடிக்க வேண்டிய படங்களும் பத்மினி அவர்களக்குப் போயிற்று. அதில் குறிப்பிட வேண்டியது தில்லானா மோகனாம்பாள்.

அந்தக் காலத்தில் பல கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களைக் கவர்ந்த நடிகர் திலகத்தின் வசீகரப் புன்னகையுடன் கூடிய இந்தப் பாடலைச் சொல்லாமல் வைஜயந்தியைப் பற்றிய விவாதம் முழுமை பெறுமா

http://youtu.be/7vB8a-2g7jE

RAGHAVENDRA
13th September 2013, 07:41 AM
வாசு சார்,
புதிய பறவை திரைப்பட நிழற்படங்கள் அருமை. பாராட்டுக்கள். நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும் தெளிவு சிறப்பு.

RAGHAVENDRA
13th September 2013, 07:43 AM
டியர் சதீஷ் சார்
புதிய பறவை திரைப்பட விழாவையே நடத்தி விட்டீர்கள். அதிலும் குறிப்பாக அப்படப் பாடலை மற்ற இசைக் கலைஞர்கள் பாடியது வாசித்தது போன்ற காணொளிகள் தான் சிறந்த ட்ரிப்யூட்டாக திகழ்கின்றன. அது மட்டுமின்றி சென்னை சாந்தி திரையரங்கில் அப்படம் திரையிடப் பட்டபோது ரசிகர்களின் கொண்டாட்டங்களையும் பகிர்ந்து கொண்டு நினைவை பின்னோக்கிச் செல்ல வைத்து விட்டீர்கள்.
பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
13th September 2013, 07:47 AM
நடிகர் திலகம் திரியில் பம்மலார் இல்லையென்றால் உப்பு இல்லாத உணவுக்கு சமம். அவர் வரும் வரை அவருடைய பதிவுகள் மீள் பதிவு செய்து நாம் ஆறுதல் கொள்வோம். புதிய பறவை திரைப்படத்தை அவர் எந்த அளவு ஆவணச் சிறப்புடன் கொண்டாடியிருக்கிறார் என்பதைப் பாருங்கள்.

செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

புதுமைச் சித்தரின் "புதிய பறவை"

[12.9.1964 - 12.9.2011] : 48வது உதயதினம்

பொக்கிஷங்களின் அணிவகுப்பு

காவிய விளம்பரம் : The Hindu : 14.4.1963

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4550a-1.jpg

'செப்டம்பர் வெளியீடு' விளம்பரம் : The Hindu : 15.8.1964

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4554a-1.jpg

முதல் வெளியீட்டு விளம்பரம்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4551a-1.jpg

'பாரகன்' "புதிய பறவை"க்காக புதுப்பிக்கப்படும் விளம்பரம் : The Hindu : 4.9.1964
[நடிகர் திலகமே தம் சொந்த செலவில் 'பாரகன்' திரையரங்கை புதுப்பித்துக் கொடுத்தார்]

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4552a-1.jpg

முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 6.9.1964

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4553a-1.jpg

RAGHAVENDRA
13th September 2013, 07:49 AM
அடியேனின் பதிவுகளின் மீள் பதிவு

பேசும்படம் மே 1964 இதழின் அட்டையில் வெளிவந்த புதிய பறவை விளம்பரத்தின் நிழற் படம். இது வண்ணத்தில் வெளிவந்தது என்பது குறிப்பிடத தக்கது. என்னிடம் நகல் மட்டுமே உள்ளதால் கறுப்பு வெள்ளையில் இங்கே பதிவிடப் பட்டுள்ளது.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/NewBirdPesumPadAdfw.jpg

கல்கி 13.09.1964 தேதியிட்ட இதழில் வெளிவந்த விளம்பரத்தின் நிழற்படம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/newbirdreleasekalkiadfw.jpg

புதிய பறவை திரைக்காவியத்தில் நடிகர் திலகம் அமர்ந்திருந்து நடிக்கும் காட்சி படமாக்கப் பட்ட போது எடுக்கப் பட்ட நிழற் படம், பேசும் படம் பத்திரிகைக்காக பிரத்யேகமாக எடுக்கப் பட்டது. நடிகர் திலகத்திற்கும் நாகேஷுக்கும் நடுவில் நின்று கொண்டிருப்பவர் இயக்குநர் மற்றும் நடிகர் தாதா மிராஸி அவர்கள்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/NewBirdShootSpotfw.jpg

RAGHAVENDRA
13th September 2013, 07:52 AM
புதிய பறவை - ஆவணத் திலகம் பம்மலாரின் நிழற்பட அணிவகுப்பு ... தொடர்ச்சி

'இன்று முதல்' விளம்பரம் : சுதேசமித்ரன்: 12.9.1964

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4558a-1.jpg

'ஈஸ்ட்மென் கலர்' "ஜெமினி"யில் உருவாக்கபட்ட விளம்பரம் : சுதேசமித்ரன் : 13.9.1964

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4555-1.jpg

முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 19.9.1964

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4556a-1.jpg

14வது வார விளம்பரம்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4557a-1.jpg

இக்காவியம் அதிகபட்சமாக சென்னை 'பாரகன்' திரையரங்கில் 19 வாரங்கள் [132 நாட்கள்] ஓடி மாபெரும் வெற்றியைப் பெற்றது. 100வது நாள் விளம்பரம் கிடைக்கப் பெற்றவுடன் கண்டிப்பாகப் பதிவிடுகிறேன்.

RAGHAVENDRA
13th September 2013, 07:54 AM
வாசு சாரின் அட்டகாசமான வடிவமைப்பில் புதிய பறவை ஜொலிக்கும் அழகைப் பாருங்கள்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/puthiyaparavai.jpg

RAGHAVENDRA
13th September 2013, 07:58 AM
ஆவணத் திலகம் பம்மலாரின் நிழற்படத் தொகுப்பு ... தொடர்ச்சி...

பொக்கிஷங்களின் அணிவகுப்பு

அட்டைப்படம் : பேசும் படம் : ஜூலை 1964

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4561a-1.jpg

பின் அட்டை : பேசும் படம் : ஜூலை 1964

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4562a-1.jpg

விமர்சனம் : முத்தாரம் : 1.10.1964

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4559a-1.jpg

அரிய நிழற்படம் : கோபால் கெட்டப்பில் தனது மனைவியுடன்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4560a-1.jpg

RAGHAVENDRA
13th September 2013, 08:02 AM
தகவல் பகிர்வு

செப்டம்பர் 21 முதல் தமிழகத்தில் நடைபெற உள்ள இந்திய சினிமா நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக திரையரங்குகளில் பழைய படங்கள் இலவசமாகத் திரையிடப் பட உள்ளன. இதில் தமிழகத் திரையுலக வரலாற்றில் தனக்கெனத் தனி இடம் பிடித்த நடிகர் திலகத்தின் கீழ்க்காணும் திரைக்காவியங்கள் திரையிடப் பட உள்ளன. ஐந்து படங்களில் மூன்றி பெயர்கள் தெரிய வந்துள்ளன.

கர்ணன்
கௌரவம்
பாசமலர்

மேலும் இரு பெயர்கள் உறுதியான பின் தெரிவிக்கப் படும்.

இடையூறுக்கு மன்னிக்க வேண்டுகிறேன். முக்கியமான தகவலாகப் பட்டதால் பகிர்ந்து கொள்ளப் பட்டது.

vasudevan31355
13th September 2013, 08:02 AM
அன்பு முரளி சார்,

தாங்கள் யாரையும் மனமறிந்து நோக வைத்தது கிடையாது. அது எல்லோருக்குமே தெரியும். தாங்கள் வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை. நாங்கள் அனைவரும் தங்கள் மேல் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறோம். அது மென்மேலும் உயருமே தவிர ஒரு நாளும் குறையாது. எங்களைப் போன்றவர்களுக்கு சிறந்த வழிகாட்டி, துணை, நீங்கள். நீங்கள் எது செய்தாலும் அது நன்மைக்காக மட்டுமே இருக்கும்.

vasudevan31355
13th September 2013, 08:03 AM
டியர் சதீஷ் சார்,

'புதிய பறவை' விருந்துக்கு எனது மனமார்ந்த நன்றி! தூள் பரத்தி விட்டீர்கள்.

RAGHAVENDRA
13th September 2013, 08:07 AM
கோபால் சார்
புதிய பறவை பற்றிய தங்கள் ஆய்வு முனைவர் பட்டத்திற்கு வழங்கப் படும் கட்டுரையின் பகுதியைப் போல் மிளிர்கிறது. இதனைப் பற்றி பின்னொரு பதிவில் விரிவாக எழுத விரும்புகிறேன்.
அன்புடன்

RAGHAVENDRA
13th September 2013, 08:14 AM
இந்த நிழற்படம் முரளி சாருக்கு சமர்ப்பணம்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/urandaiselvam70cal01fw_zps693dfd52.jpg

இந் நிழற்படத்தின் சிறப்பு ...

புதிய பறவை திரைக்காவிய காட்சி.

1970களில் ரசிகர் மன்ற காலெண்டரில் இடம் பெற்றது.

கைகளினால் வரையப் பட்ட தூரிகை ஓவியம்.

எவ்வளவு பெரிதாக உருமாற்றப் பட்டாலும் பொலிவை இழக்காது. பேனர்களில் இடம் பெற சிறப்பானது.

அந்தக் காலத்திலிருந்து இதனைப் பாதுகாத்து நமக்கு அனுப்பி வைத்த அருமை நண்பர் உறந்தை செல்வம் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி.

Subramaniam Ramajayam
13th September 2013, 08:29 AM
முரளி சார்
எவர் மனதையும் கனவிலும் புண்படுத்தக் கூடாது என்கிற தங்கள் நிலைப்பாடு தங்கள் மேல் உள்ள மதிப்பை மேலும் உயரக் கொண்டு செல்கிறது.
பாராட்டிற்குரியது.
அன்புடன்
ராகவேந்திரன்
MURALI sir we understand your mind and thoughts, no one is hurt and you need not feel sorry about this. one more request, i am taking liberty and making.
Another brief from your pen in your style is highly appreciated, upcourse about PUDIYA PARAVAI,

vasudevan31355
13th September 2013, 09:12 AM
டியர் ராகவேந்திரன் சார்,

நன்றி! 'புதிய பறவை' பதிவுகள் குதூகலம். அதிலும் ரவியின் கைவண்ணத்தில் தலைவரின் ஓவியம் அருமை. அபூர்வமான அழகான ஓவியம். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. நண்பர் உறந்தை செல்வம் அவர்களுக்கும் உளமார்ந்த நன்றி.

vasudevan31355
13th September 2013, 09:15 AM
டியர் ஆதிராம் சார்,

தங்கள் மீள்வருகைக்கும், ஆண்டனி, கோபால் பதிவு பற்றிய பாராட்டிற்கும் மிக்க நன்றி!

vasudevan31355
13th September 2013, 10:01 AM
நமது அனைவரின் உழைப்பினாலும் கடந்த மூன்று நாட்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை சுமார் 5700 த்தைத் தாண்டியுள்ளது. (ஒருநாளைக்கு கிட்டத்தட்ட 1900 பேர்) இதற்காக பாடுபட்டுவரும் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி! இது இப்படியே தொடர வேண்டும் என்பதே நமது விருப்பம்.

JamesFague
13th September 2013, 10:02 AM
Mr Vasu Sir,

Excellent Photos of PP and also I am happy that you have continued the
Nayagaiar Thodar and expecting the Stunts of NT at the earliest.

Mr Murali Sir,

As far as I am concerned that there is no offensive or hurting words in your writeup
of PP. Anyhow it shows you are a perfect gentleman.

RAGHAVENDRA
13th September 2013, 10:25 AM
தமிழ் நாட்டின் எந்த தமிழறிந்த குடிமகனை கேட்டாலும், அவர்கள் எவர் ரசிகர்களாக இருந்தாலும் ,மறக்க முடியாத படங்களில் ஒன்றாக குறிப்பிடும் படம் புதிய பறவை.புதுமையான கதையமைப்பு, அற்புதமான நடிப்பு, மறக்க முடியாத பாடல்கள்,கேமரா, இயக்கம்,richness ,sophistication in making & great production value கொண்ட ahead of times வகை படம்

சரியான கூற்று. நூற்றுக்கு நூறு உண்மை.

அந்த படத்தை ரசித்த நிறைய பேர் கோபால் பாத்திரத்தை முழுதும் புரிந்து கொண்டார்களா என்பது சந்தேகமே. chekhov school நடிப்பில் என்னை கவர்ந்த Anthony Hopkins(laurence olivier சிஷ்யன்) ,Jack Nicholson ,Oleg yankovskiy இவர்கள் எல்லோரையும் தாண்டி சென்றவர் நமது நடிகர்திலகம்.

Exactly.

கோபால் பாத்திரம் முழுக்க முழுக்க மனோதத்துவ பின்னணி கொண்ட மிக சிக்கலான பாத்திரம்.

அதைச் சிறப்பாக விளக்க தங்களால் தான் முடியும்.

இதோ அதற்கு சான்று

கொஞ்சம் மனோதத்துவ அடிப்படை கொண்ட பாத்திரமாதலால் medical jargon உபயோகிப்பதை தவிர வேறு வழியில்லை எனக்கு. இதை தயவு செய்து பரிச்சித்து கொண்டு என்னை(இரு கோபாலையும்)தொடர வேண்டுகிறேன்.

எதிர்காலத்தில் யாருமே வெளிச்சமில்லாமல் ,பிறரின் தொடர்ந்த தலையீடு(ஆத்மார்த்தமாக இன்றி அனாவசிய),குறுக்கீடு இல்லாமல்,வாழவே வழியில்லாத நிலை மீடியா மற்றும் பல வகை electronic gadgets இனால் உருவாக்க படுவதை,allegory என்ற முறையில் சொன்ன படம் trumam show என்ற jim carrey யின் படம்.இதில் truman தவிர ஏனையோர் அனைவரும் நடிப்பவர்கள். கிட்டத்தட்ட இது போன்ற நிலைதான் நம் நாயகன் கோபாலிற்கு. அவனை தவிர சுற்றியிருப்போர் அனைவரும் நடிப்பவர்கள். கோபால் வாழ்க்கை, அவன் காணும் பிரச்சினைகள் எல்லாமே மற்றவர்களால் கட்டமைக்க படுபவை. கோபால் படும் அவதி மட்டுமே நிஜம்.

சுருங்கச் சொன்னால் அவன் அன்றாட வாழ்க்கையே மற்றவர்களால் தீர்மானிக்கப் படுகிறது.

இதில் கோபால் ஒரு தனியன். fixations ,obsessions ,உடைய பணக்கார sophisticated person with ceremonial politeness . Impulsive , breaks down at the first opportunity when confronted with adversity .

perfectly narrated about the character

இந்த மாதிரி ஒரு பாத்திரத்தை நடிகர்திலகம் மட்டுமே அதன் நிஜமான உள்வாங்கலோடு , தன் அபார திறமையால் உள்வாங்கியதை மிக மிக துல்லியமாக வெளிபடுத்துவார்.இந்த படத்தில் ஒரு இயக்குனரின் அபார பங்களிப்பு அவர் பாத்திரத்தை இமயத்துக்கே உயர்த்தி விடும்.

உயர்த்தி விட்டது.

இந்த படத்திற்காக நடிகர்திலகம் தேர்ந்தெடுத்த உடல் மொழி, ஒரு introverted ceremonial politeness கொண்டது. புகை வண்டியை காணும் போது ஒரு tremor (வலிப்பு அல்ல)என்ற mild hysterical action . பொதுவாக ஒரு சோர்வு ததும்பும் meloncholic look . சந்தோஷத்தை அளவாகவே வெளியிடுவார். Anxiety வரும் போது தடுமாறி உடைந்து போவார். depression என்ற அளவிற்கு தள்ள படும் போது விரக்தி கலந்த frustration .(உலகமே மூழ்கி விட்டது போல் ).நம்பிக்கை குலைவு ஏற்படும் போது அழிக்க நினைக்கும் (bout of nihilism )தன்னை மறந்த வெறி, வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ள படும் போது ஒரு பிரமை கலந்த monologue (தான் மட்டும் உண்மை. சுற்றியிருப்பதெல்லாம் பொருட்டில்லை என்ற பாவம் ), குழந்தை போல் தன் கருத்தை மட்டும் அழுத்தி சொல்லும் தன்முனைவு,சின்ன சின்ன தற்காலிக நம்பிக்கைகளை மலை போல் நம்பி குதூகலிக்கும் ,நம்ப ஆசைபடும் விழைவு என்று flawless character sketch .

இவையனைத்துமே எங்கே நிம்மதி பாடலில் வெளிப்படும்

இனி அந்த பாத்திரத்துக்குள் ஆழமாக நுழைவோம். ஆனால் நான் கூறியவற்றை தயவு செய்து இன்னொரு முறை படித்து தெளிவு செய்து கொள்ளவும். நாம் பேச போவது சராசரி விஷயம் அல்ல.இந்த தயாரிப்பு நமக்கு அவசியம்.

மற்ற தொழிலாளர்களுடன் சாதாரணமாக நடந்து கொள்ளும் கோபால், ராஜு தாத்தாவிடம் வாஞ்சையுடன் நடந்து கொள்ளும் முறையிலேயே , கோபாலின் fixation tendencies establish ஆக தொடங்கும். பிறகு தோட்டத்தை தனியாக பார்வையிடுவது, தனியாக picnic சூழ்நிலையில் படித்து கொண்டிருப்பது என்று தனிமை ,boredom சொல்ல பட்டு விடும். தூங்காமல் முழித்திருக்கும் இரவில் வரும் லதாவுடன், இதமான உரையாடலில் தன் ஏக்கம் கலந்த தனிமை, தூக்கமில்லா இரவுகளை குறிப்பிடும் அந்த husky ஆன குரல், ஏக்கமும் சோர்வும் சோர்வும் தோய்ந்த விழிகள், லதாவிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து வெளியிட முடியாமல், குறியீடாக பாட்டு என்று ஒற்றை வார்த்தையில், தன் அமைதிக்கு லதாவால் துணை நிற்க முடியும் என்று உணர்த்தும் கண்ணியமான இதம்.அந்த உன்னை ஒன்று கேட்பேன் இரவு காட்சி தமிழ் பட உலகின் அழகுணர்ச்சிக்கு ஒரு மைல் கல் காட்சி.

இன்றைக்கு பேசப் படும் நடிப்பின் அத்தனை இலக்கணங்களையும் அன்றே பாடமாய் நடத்தியவர்.

பார்த்த ஞாபகம் பாடலில், எதோ ஒன்றை தொலைத்து பறி கொடுத்த ஏக்கத்துடன், நிலைத்த சூன்ய பார்வை, அவ்வப்போது பாட்டில் சூழலில் அடையும் பரவசம், இதையெல்லாம் மீறாமல் நம்மை இன்றளவும் கவரும் அந்த sophisticated புகை பிடிக்கும் ஸ்டைல்(நாக்கில் இருந்து சின்ன புகையிலை தூளை விரலால் துடைக்கும் லாவகம்,wine glass ஏந்தும் தோரணை. பாடகி சித்ராவிடம் உடனே காட்டும் impulsive ஈடுபாடு.கல்யாண காட்சி உடனே வரும் போதும் பழகிய உணர்வு தெரியும் அந்த ஒரே பாடல் காட்சியில் .

அந்த ரயில்வே கேட் காத்திருப்பு காட்சியில், tremor என்றவொரு, வலிப்பு -அதிர்ச்சி இடைப்பட்ட நிலையை அவ்வளவு தத்ரூபமாக எந்த நடிகனும் காட்டியதில்லை.

நிச்சய தார்த்தம் அன்று வந்து சேரும் தன் மனைவி போன்ற உருவம் கொண்ட, மனைவியாக சித்தப்பா என்றவொருவனுடன் வந்து நிற்கும் காட்சியில்... முதலில் அதிர்வு என்ற நிலையில் தொடங்கி denial mode க்குள் செல்வார். இருக்காது,இருக்க முடியாது என்று. பிறகு சிறிதே seriousness உணர்ந்து, தன் police நண்பன் துணையுடன் மிரட்ட தலை படுவார். ஆனால் நடக்காது என்றவுடன் புலம்பும் ,குழம்பும் நிலை.(என்ன,என்ன,என்னை கேட்டால் எனக்கு என்ன)death certificate தேடி எடுத்து(அப்படியே போட்டது போட்டபடி விரையும் ஆர்வம் கலந்த வேகம்), அதை ரங்கன் தூளாக்கியதும், போலீஸ் நண்பனுடன் சிறு அதிகார தொனியிலேயே கடைசி பலவீன முயற்சியை அதிகாரமாய் தொடுப்பதும், வழியில்லை என்று அடங்குவதும்-இந்த காட்சி ஒரு roller -coaster ride .

தொடரும் காட்சிகள், இந்திய பட உலகம் இது வர பார்க்க இயலா புதுமை கலந்த marvel ...நடிப்பின் உச்ச பட்ச சாத்தியங்கள்.

இது வரை மட்டுமல்ல, இனிமேலும் பார்க்க இயலாதவை. Ultimate என்பதற்கு சான்று.

அதற்கு பிறகு வரும் பதினோரு காட்சிகள் அதற்கு முன்னும் பின்னும் இந்திய திரையுலகமே கண்டிராத miracle .நான் குறிப்பிட்ட படி emotional roller coaster ride . நடிகர்திலகம் போன்ற நடிகர் ஒருவரால் மட்டுமே முடித்து காட்ட முடிந்த அதிசயம். விறு விறுப்பு,பரபரப்பு, sentiments ,Technical excellence ,புதுமை எதற்கும் பஞ்சம் வைக்கா விட்டாலும் நடிப்பு என்ற விஸ்வரூப தரிசன ஜோதியில் மற்றதெல்லாம் கரைந்து போகும் ,அதியற்புத உன்னதம் தொடும் psychedelic ecstasy பார்வையாளர்களுக்கு.

லதாவையும், அவள் தந்தையையும் ரங்கனின் insult மீறி, வீட்டில் இருக்க வைக்க கெஞ்சி கூத்தாடும் காட்சியில், அவர்களுக்கு நம்பிக்கை விதைக்க பாடு படுகிறார் என்ற அளவில் மட்டுமே (தன் சந்தேக கணங்களை ,அவநம்பிக்கையை மறைத்து. அப்படி மறைப்பதை நொடிக்கு நொடி மாறும் முகபாவங்களில் நமக்குணர்த்தி )நடிப்பார்.அவர்களை convince பண்ண தன் anxiety மறைப்பாரே தவிர, மறையவில்லை என்பதை அந்த இறைஞ்சும் பாணியே உணர்த்தி விடும்.

விரலை சொடுக்கி யோசித்து எனக்கு தெரிஞ்சா உன்னிடம் ஏன் வருகிறேன் என்ற இயலாமை கலந்த ஆயாசம்.dining காட்சியில், சித்ரா அடிக்கும் பால் பேணி sixer இல், முதல் நம்பிக்கை தெறித்தோடும் போது , அடுத்து வேறு வழியின்றி அவர்களை பணம் கொடுத்து விரட்ட முயலும் காட்சி. எல்லா பணத்தையும் நான் எடுத்து கிட்டா நீங்க என்ன பண்ணுவீங்க என்பதற்கு பிச்சை எடுப்பேண்டா ,என்று லதாவுடன் தனக்கிருக்கும் அபார காதலை வெளியிடும் முறை, யாரோட சாவு எனக்கு சந்தோசம் தருதோ அவ இருக்கான்னு சொல்லி ஏண்டா சித்ரவதை செய்யறே என்று கெஞ்சி அதற்கும் இணங்காத போது சீ,போ என்று வீ சும் வெறுப்பில் breaking பாயிண்ட் desperation தெரிய ஆரம்பிக்கும்.

அந்த போலீஸ் ஸ்டேஷன் காட்சியில் அப்படியே எல்லாம் மூழ்கி விட்ட விரக்தியில், எல்லா கேள்விகளுக்கும் indifference ஆக ஆமாம் என்று பதிலில் (கண்ணை அழுத்தி தடவி)என்னவேண்டுமானாலும் நடக்கட்டும் என்ற விரக்தி தெரிய ஆரம்பிக்கும். அவனை போக சொல்லு என்ற அருவருப்பு தெரியும் வெறுப்பின் கொதிப்பில், மனசுக்குள் துப்பாக்கி எடுக்கும் கோபம் புலப்படும்.

அடுத்த கல்லை அவிழ்க்கும் காட்சியில் தனக்கு தெரிந்த லதாவின் காதலையே re -assure செய்து கொள்ளும் விதமாக, பொய் ஆச்சர்யம் காட்டி, தான் breakdown ஆக ஆரம்பித்து விட்டதை மறைத்து லதாவிற்கு நம்பிக்கை ஊட்ட முயலும் பொது, தானே நம்பாததை மற்றவருக்காக சொல்வதை இந்த மேதை உணர்த்தும் குறிப்பு, குரலும்,பாவங்களும், உடல் மொழியும் புரியும் ரசவாதம்.

லதாவின் அவநம்பிக்கை நிறைந்த சோகத்தால் வெறி கொண்டு, ரங்கனையும் சித்ராவையும் சுட வரும் போது ,மற்றவர்கள் தடுத்தவுடன் விரக்தி, கோபம் கொண்டு, தன்னிச்சையாக பார்த்த ஞாபகம் இசைப்பார் பியானோவில்.இந்த காட்சியில் பாடல் முழுதும் meloncholic serenity with puzzled look உடன்,நிலைகுத்திய விழிகளுடன், முடிவில் சித்ரா அந்த பாடல் எப்படி தெரியும் என்பதற்கு பதில் கூறியவுடன் ஏமாற்றத்துடன் திரும்பும் லதாவை பார்த்து திரும்ப violent ஆகி சித்ரா கழுத்தை பிடித்து வெறி பிடித்து கத்தி கொண்டு தோட்டத்திற்கு செல்லும் இடம்......

அங்கு தோட்டத்தில் லதாவுடன் ,நம்பிக்கை இழந்து அவரை போக சொல்லி விட்டு, அப்படியாவது பழைய நாட்களை அசை போட்டு வாழ்ந்து விட நினைக்கும் கோபால்,பதட்டத்துடன் சிகரெட் பற்ற வைப்பதிலேயே depressed hope less state வெளிப்பட்டு விடும்.போலீஸ் நண்பன் வரும் போது detached silent agony யில் கொடுக்கும் indifferent உடல் மொழி மற்றும் கை அசைவுகள் ....(அவசியமில்லை). நண்பன் கைரேகை எடுக்க சொன்னதும் அவன் குற்றவாளிகள் தப்பி விடும் சாத்யகூற்றை சொன்னதும் போய்தான் தொலயுட்டுமே என்ற அங்கலாய்ப்பு.

சித்ராவை வலையில் சிக்க வைக்க கடுகடுவென்ற பாவனையில் இருந்து போலீஸ் நண்பன் voice over க்கு தக்க படி gradual ஆக forced pleasantness கொண்டு வருவது. ரங்கன் வருவதை பார்த்து லதாவிடம் மனமில்லாமல் கடுமையாய் பேசி அனுப்பி விட்டு ரங்கன் ரேகை இருக்கும் பால் கிண்ணத்தை உடைத்தவுடன், அதை பார்த்து கோபம் நிறைத்த help less ness கையை கொண்டே காட்டுவார்.

Perfect Example for extempore and free flow of words from Gopal.

இந்த படத்தின் முக்கியமான மூன்று சிறப்புகள் - முதல் முதல் sur realistic முறையில் எடுக்க பட்ட எங்கே நிம்மதி பாடல். படம் முழுதும் voice over என்ற முறையில் நடிகர்திலகத்தின் உணர்ச்சி மிகு nerration உடன் perfect ஆக sink ஆகும் அவரின் நடிப்பு.ஆச்சர்ய பட வைக்கும்.கையை பயன் படுத்தி அவர் அதீத மனநிலையை வெளிபடுத்தும் இடங்கள். ஒன்றை ஏற்கெனெவே பார்த்தோம். எங்கே நிம்மதி பாட்டில் எனது கைகள் மீட்டும் போது வரிகளில் புறங் கைகளால் action காட்டி கண்களால் follow thru பண்ணும் போது கைகளே அந்நியமான உணர்வை கொடுப்பார். சித்ரா அவர் அடித்த அடியில் இறந்து விட்டதும் இந்த கைதானே அவளை அடித்தது என்று தண்டிப்பது போல் .....

80 ஆண்டு கால தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதல் இடத்தில் இருக்கும் பாடல். மிகச் சிறப்பான ஆய்வு.

climax காட்சி இந்திய படங்களில் வந்ததிலேயே சிறந்த காட்சிகளில் ஒன்று.

stylised நடிப்பில், மனோதத்துவ முறையில் உச்சம் தொடுவார். அப்படியே ஒவ்வொரு நொடியும் மனதில் தைக்கும். பிரமை பிடித்த மாதிரி உட்கார்ந்து சொல்லும் எதுவும் காதில் ஏறாத மனநிலையில் ராஜு வந்ததை கேள்வி பட்டதும் அவர் துன்பமெல்லாம் நீங்கி விட்டதான நினைப்பில் காட்டும் அதீத stress relieved happiness ... இந்த காட்சி முழுவதும் hope -despair ஊசலாட் டமே. ராஜூவை கட்டி தேம்பி விட்டு, ஆட்டி வைக்கிராண்டா என்ற ஆத்திரத்தை கொட்டி ரங்கனை சித்ராவை பரபரப்பாய் வெற்றி களிப்பு விடுதலை உணர்வில் அழைக்கும் தோரணை ,சித்ரா வந்ததும் பேயை பார்த்த மாதிரி பின் வாங்கும் அவசரம்.ராஜு அவளை தங்கை என்றும், ரங்கனை சித்தப்பா என்றும் ஒப்பு கொண்டவுடன்,தன்னையே நம்ப முடியாமல் மீண்டும் கெஞ்சி விட்டு, மச்சத்தையும் பார்த்தவுடன் விரக்தியில் வீழும் இடம்... நண்பன் கைரேகையுடன் வந்ததும்,ஒவ்வொருவரிடமும் களிப்புடன் ரேகை...ரேகை என்று பிரச்சினையே முடிவு பெற்றது போல் கொண்டாட்ட மனநிலை சென்று, ரேகையும் ஒரே மாதிரி என்று சொன்னதும்,நம்பலியா,நீயும் நம்பலியா என்று லதாவிடம் புலம்பி கொண்டே confess பண்ணும் காட்சி.... நான் அசைவே இல்லாமல் லயித்து ஒன்றிய அதிசயம்.

confess பண்ணி முடித்ததும், அந்த train உடலை சிதைத்ததை விவரித்து விட்டு அதிர்ச்சி கலந்த பய உணர்வுடன் அலறி, ஒண்ணு மட்டும் உறுதி என்று சொல்லி விட்டு மூக்கை கைகுட்டையால் சிந்தும் improvisation (humanising the celluloid image ).குழந்தை போல் தன் conclusion சொல்லி விட்டு, பந்தாவாக எழுந்து வந்து எல்லோரிடமும் இல்லை என்ற பதிலை கேட்டு பெற்று ,லதா தன்னை கைது செய்ய சொன்னதும்,நம்பவோ,ஜீரணிக்கவோ முடியாமல் உண்மை உணர்ந்து என்ன அழகான நடிப்பு என்று சித்ராவிடம் சொல்லி(அப்போது கூட லதா நடிக்கவில்லை என்ற நம்பிக்கை)
அதை வைச்சா என்னை வீழ்த்திட்டே, அத்தனையும் நடிப்பா என்று குழந்தையின் ஏமாற்றம் நிறைந்த தேம்பலுடன் கேட்டு, லதா தன்னை உண்மையாய் நேசிப்பதை அறிந்து கொள்ளும் நெகிழ்வு..(தாடையை தடவி

Climax perfectly worked out but not contrived for cinematic effects. It’s so natural.

இப்போது சொல்லுங்கள். இந்த மாதிரி ஒரு அதிசயம் உலகத்தில் உண்டா?கண்டதுண்டா?

நிச்சயமாக இல்லை. இனிமேலும் கிடையாது.

Artaud acting techniques.

Artaud's thinking placed heavy emphasis on invoking deep routed feelings through acting. He believed the theatre was about action and the element of surprise. His theatre of cruelty approach, of which he is better associated with, takes acting to the subconscious level. Using painful memories and strong feelings to invoke strong emotion. Antonin Artaud thought less of words and more of profound impact. Where as Brecht wanted the audience to go out and change society Artaud wanted them shaken to their soul and to look within and make Changes within themselves.

இந்த முறையில் சராசரியாக நாம் வாழ்க்கையில் காட்டும் முகபாவங்கள், வெளியீட்டு முறைகள் நிராகரிக்க பட்டு , நடிகர்கள் முகத்தை ரப்பர் போல இஷ்டத்துக்கு வளைத்து, கண் மூக்கு வாய் எல்லாவற்றையும் மிக கொடூரமாக உபயோக படுத்தி, வலிதரும் எண்ணங்களை,மிக மிக வலிமையுள்ள நினைவெழுச்சிகள்,மிகை உணர்ச்சிகளை ,நடிப்பை உள்மன போராட்ட நிலைக்கு எடுத்து சென்று , பார்ப்பவரின் ஆத்மாவை உலுக்கி எடுக்க வலியுறுத்தினார். இந்த முறை நடிப்புக்கு இந்தியாவில் ஒரு நடிகரும் தகுதி பெற முடியவே முடியாது ,நம் ஒரே உலக மேதையை தவிர.

நடிகர்திலகம் மட்டுமே மற்றவர்களால் இஷ்டப்படி இயக்கி கொள்ள முடியாத involuntary muscles என்பதையும் அவர் இயக்கி கொள்ளும் திறமை பெற்றிருந்ததால்(ஒரு டாக்டர் குறிப்பிட்டதாய் ஞாபகம்) அவரால் மற்றவர்களை விட அதிகமாக முகபாவங்களை காட்டி (அமெரிக்க நடிப்பு பள்ளி ஒன்றில் இது நிரூபிக்க பட்டது)இந்த வகை நடிப்பிலும் தேர்ந்து விளங்கினார்.

எதற்கு எங்கெங்கோ போவானேன்?புதிய பறவை climax காட்சி ஒன்று போதுமே! அதை chekhov பாணியில் ஆன stylised நடிப்பு என்றுதானே பார்த்தோம்?ஆனால் அதில் முழு காட்சியிலும் Astraud cruelty முறை பயன் படுத்த பட்டு அந்த காட்சி நம் ஆத்மாவில் ஊடுருவி நம் sub -conscious level உணர்விலும் ஊடுருவும் அதிசயத்தை நிகழ்த்தி Focus reach என்ற Acting Miracle நிகழ்ந்தது.

பிரமை பிடித்து உட்கார்ந்திருக்கும் நடிகர்திலகம் சித்ராவின் அண்ணன் pilot ராஜு வந்து விட்டதை படி படியாய் உள்வாங்கி அப்படியே பிரமை நீங்கி ,stress relieve ஆகி, ecstatic உணர்வை நம்பிக்கையின் உச்சத்திற்கே செல்வதை காட்டும் அந்த expression .

அதே மாதிரி confession முடித்து விட்டு train இல் சித்ரா உடல் சிதையும் காட்சியை மனக்கண்ணால் பார்த்து அலறும் போது கொடுக்கும் expression .

This is what I had been insisting you Gopal. Pls follow this method of quoting the definition from the School concerned for the particular aspect and narrate it along with your example. This will give complete shape to your analyses and make it a professional thesis.

KCSHEKAR
13th September 2013, 11:20 AM
டியர் வாசுதேவன் சார்,

நாயகியர் தொடரில் வைஜெயந்தி மாலா குறித்த தகவல்கள் படங்கள் மற்றும் புதிய பறவை - புகைப்படத் தொகுப்பு அருமை.

joe
13th September 2013, 11:45 AM
அது முழுக்க முழுக்க புதிய பறவை கோபாலைப் பற்றி மட்டுமே நான் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதையாய் துரதிர்ஷ்டவசமாக நான் கையாண்ட வார்த்தைகள் ஒரு சில நண்பர்களின் மனதை பெரிதும் புண்படுத்தி விட்டதாக இன்று காலைதான் எனக்கு தெரிய வந்தது.

What ? I don't get it :shock:

உங்கள் அந்த பதிவை அடுத்து நான் வேடிக்கையாக சொன்ன அந்த கமெண்ட் தான் காரணமென்றால் .. God Save this thread .

mr_karthik
13th September 2013, 07:11 PM
அன்புள்ள முரளி சார்,

தாங்கள் முதலில் பதித்திருந்த பதிவு என்ன, அதில் சொல்லியிருந்த விவரம் என்ன என்பதெல்லாம் நான் பார்க்கவில்லை. ஏனென்றால் நான் பார்ப்பதற்குள் அது நீக்கப்பட்டு விட்டது. ஆனால் அதில் ஆட்சேபகரமான செய்திகளோ, மற்றவர் மனம் புண்படும்படியான விஷயங்களோ நிச்சயம் இருந்திருக்காது.

ஏனென்றால், அதெல்லாம் உங்களுக்கு தெரியாது என்பதை மட்டும் என்னால் உறுதியாகக்கூற முடியும்.....

iufegolarev
13th September 2013, 07:33 PM
ஒலி - ஒளி தரம் சற்று சுமார்தான் இருந்தாலும் நடிகர் திலகம் திரி நண்பர்கள் மட்டுமல்லாது அனைத்து நல்ல இதயங்களுக்கும் இந்த காட்சி சமர்ப்பணம் !

"காவிரிதந்த தமிழகத்து புதுமணலில் களமமைத்த சேர சோழ பாண்டிமன்னர்" என்று இந்த வயதிலும் அதே கர்ஜனை எவருக்கு முடியும் ? மையத்தில் முதன் முறையாக "சத்தியவாக்கு சித்தர் சிவாஜி" அவர்களின் உள்ளத்தின் அடித்தளதிலிரிந்து உணர்ச்சிபூர்வமான வாழ்த்துதலை கருணாநிதி அவர்களுக்கு வழங்கும் காட்சி.

பொன்னும் பணமும் கொடுத்த வள்ளல்களுக்கு மத்தியில் எப்பேர்பட்ட வள்ளலும் கொடுக்க தயங்கும் தனது ஆயுளில் ஒரு பங்கை உள்ளத்தில் அடித்தளத்திலிருந்து இந்த கலியுகத்தில் எடுத்து கொடுத்த கடஏழு..எட்டு...ஒன்பது..இனி எத்துனை எண்ணிக்கைகள் கொண்ட வள்ளல்கள் வந்தாலும் அத்துணை வள்ளல்களையும், தன்னுடைய ஆயுளையே தானம் செய்ததன் மூலம், தமிழகம் கண்ட இனி காணபோகிற வள்ளல்களிலும் சிறந்தவன், முதன்மையான பெருவள்ளலலே ! வாழ்க உன்குடும்பம் ! வளர்க உன் புகழ் !

வாங்குபவர்கள் அதற்க்கு தகுதி உடயவர்களா என்று பலருக்கு கேள்வி எழலாம் !

அது விவாதத்திற்கு உட்பட்டது..!

எது எப்படியோ ஒரு விஷயம் மட்டும் உண்மை. இதை கொடுக்காமல் இருந்திருந்தால் இன்னும் இரண்டு ஆண்டுகள் நம்முடைய சித்தர் நம்முடன் இருந்திருப்பார் !!

http://www.youtube.com/watch?v=wXKmpQQhTF0

mr_karthik
13th September 2013, 07:58 PM
அன்புள்ள டாக்டர் கோபால் சார்,

புதிய பறவை பற்றி என்ன ஒரு அற்புத ஆய்வு. ஒவ்வொரு அசைவுக்குள்ளும் புகுந்து ஆய்வு செய்திருப்பதன் மூலம் நீங்கள் ஒரு ‘திறனாய்வுப்பெட்டகம்’ என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறீர்கள். உங்கள் ஆய்வைப்பற்றியெல்லாம் கருத்துச்சொல்ல முதலில் எனக்குத் தகுதியிருக்கிறதா என்பதைப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் உங்கள் 'போட்டுத்தாக்கல்' அப்படி அதிர, அசர வைக்கிறது.....

mr_karthik
13th September 2013, 08:10 PM
அன்புள்ள கோல்ட் ஸ்டார் சதீஷ்,

புதிய பறவை பற்றிய பதிவுகள் என்றதும் அள்ளிக்கொணர்ந்து குவித்து விட்டீர்களே. எங்கெங்கெல்லாம், எப்படியெல்லாம் தேடிக்கொண்டு வந்தீர்கள் என்று மலைப்பாக இருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாதது, ஆனால் புதிய பறவையுடன் சம்மந்தப்பட்டது. அதுதான் வியப்பு மற்றும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

(உங்கள் வெற்றிக்கு ஒருவன் ஸ்டில்களால் உந்தப்பட்டு ஒரு பதிவு வந்துகொண்டிருக்கிறது)....

mr_karthik
13th September 2013, 08:11 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

புதிய பறவை மேளாவில் உங்கள் பங்கு இல்லாமல் இருக்குமா?. நிழற்படங்கள் அனைத்தும் அருமை மற்றும் தெளிவு. அசத்துங்கள்.

அன்புள்ள ராகவேந்தர் சார்,

ஆவண பெட்டகம் பம்மலார் அவர்களின் புதிய பறவை விளம்பர ஆவண மீள்பதிவுக்கு மிக்க நன்றி. ஏற்கெனவே பார்த்திருந்தபோதிலும் இப்போது பார்க்கும்போதும் புதியதாகவும் புதுமையாகவும் இருக்கின்றன. அன்றைய கால கட்டத்தில் இவை புதுமையான விளம்பரங்கள். பம்மலார் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றி....

mr_karthik
13th September 2013, 08:13 PM
வெற்றிக்கு ஒருவன் (08.12.1979)

நண்பர் கோல்ட்ஸ்டார் சதீஷ் திடீரென ‘வெற்றிக்கு ஒருவன்’ ஸ்டில்களைப் பதிவிட்டிருப்பதை பார்த்ததும் எனக்கும் நினைவு பின்னோக்கிப் பயணிக்கத் துவங்கியது. ரிலீசன்று முதல்முதல் பார்த்த அனுபவம் மனதில் நிழலாடத் துவங்கியது. (பிறகென்ன, இதுபோன்ற நினைவலைகள் மற்றும் அசைபோடல்கள்தானே நம் சொத்துக்கள்). நடிகர்திலகத்தின் படங்கள் வழக்கம்போல சனிக்கிழமை வெளியாவது போலவே இந்தப்படமும் சனிக்கிழமையன்று ரிலீசானது. முதல் நாள் காலைக்காட்சி மன்றத்துக்கான ஸ்பெஷல் காட்சியாக கீழ்ப்பாக்கம் ஈகா திரையரங்கில் நடைபெற்றது. அன்றைக்கு காலை மிக முக்கியமான வேலை இருந்ததால் ஸ்பெஷல் காட்சிக்குப்போக முடியவில்லை. சாந்தி வளாக நண்பர்களான கோவை சேது, மந்தைவெளி ஸ்ரீதர், திருவான்மியூர் சங்கர், வீரராகவன் அன்புள்ள காலைக்காட்சிக்கு ஈகா சென்றிருந்தனர். படம் எப்படி என்று தெரிந்துகொள்ள மனது அலை மோதியது. காலைக்காட்சி பார்த்துவிட்டு வீடுகளுக்கு சென்றவர்கள் மாலை 3.30 மணிக்கு மீண்டும் சாந்தியில் கூடினர். சாந்தியில் அப்போது பட்டாக்கத்தி பைரவன் 51-வது நாளாக ஓடிக்கொண்டிருந்தது. வெற்றிக்கு ஒருவன் படம் பற்றிய ரிசல்ட் இப்படியும் அப்படியுமாக இருந்தது. (வெற்றிக்கு ஒருவன் படத்தின் முந்தைய பெயர் 'கண்ணே கனியமுதே', இது முன் வந்த 'அன்பே ஆருயிரே' பெயர்போல உள்ளது என்ற அதிருப்தி ரசிகர்கள் மத்தியில் உலவியது. வெற்றிக்கு ஒருவன் என பெயர் மாற்றப்பட்ட பின் ரசிகர்கள் திருப்தி அடைந்தனர்).

அத்துடன் இப்படம் கவரிமான் படக்கூட்டணியால் உருவாக்கப்பட்டு வந்ததால் அதுவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்தது. இதே கூட்டணியால் உருவாக்கப்பட்டு வந்த 'ரிஷிமூலம்' படமும் அப்போது தயாரிப்பில் இருந்து வந்தது.

ரசிகர்கள் அனைவரும் (ஸ்பெஷல் காட்சி பார்த்தவர்கள் உள்பட) மாலைக்காட்சிக்கு திருவல்லிக்கேணி ஸ்டார் தியேட்டரில் ரிசர்வ் செய்திருந்தோம். (படம் ஸ்டார், ஸ்ரீகிருஷ்ணா, ஈகா தியேட்டர்களில் ரிலீசாகியிருந்தது). எனவே நான்கு மணியளவில் சாந்தியில் இருந்து ஜாகையைக் கிளப்பிக்கொண்டு ஸ்டார் நோக்கி நடையைக்கட்டினோம். ஏற்கெனவே படம் பார்த்திருந்தவர்கள் காட்சிகளைப் பற்றி சிலாகித்துப் பேசியவண்ணம் வந்தனர்.

திருவல்லிக்கேணி ஸ்டார் தியேட்டர் எப்போதும் ஹிந்திப்படங்கள் அதிகமாக ஓடக்கூடிய தியேட்டர். திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், ஐஸ் ஹவுஸ் பகுதிகளில் உருது பேசும் முஸ்லிம்கள் அதிகமிருப்பது காரணமாக இருக்கலாம். யாதோன்-கி-பாராத் அங்குதான் ஒரு வருடம் ஓடியது. தமிழ்ப்படங்கள் அபூர்வமாகவே திரையிடப்படும். வருடத்தில் 12 வாரங்கள் அனைத்து அரங்குகளிலும் தமிழ்ப்படங்கள் திரையிடப்பட வேண்டும் என்ற அரசு சட்டமியற்றியபின் அங்கு ஸ்டாரில் தமிழ்ப்படங்கள் திரையிடப்பட்டன. அப்படி திரையிடப்பட்ட சிவகுமாரின் 100-வது படமான ரோசாப்பூ ரவிக்கைக்காரி 100 நாட்களுக்கு மேல் செம ஓட்டம் ஓடியது. அப்படி ஸ்டாரில் திரையிடப்பட்ட படம்தான் வெற்றிக்கு ஒருவன். (நண்பகல் காட்சி பார்ப்பதற்கு மிக அருமையான தியேட்டர் ஸ்டார்).

படம் சுமார் என்ற ரிசல்ட் வந்திருந்த போதிலும் நமது ரசிகர்கள் தியேட்டர் அலங்காரங்களிலும், மாலைகளிலும் குறை வைக்கவில்லை. ஆனால் எப்படித்தான் அலங்காரம் செய்தாலும் சில தியேட்டர்களில் எடுபடாது. அதில் ஸ்டார் தியேட்டரும் ஒன்று. அந்த சமயத்தில் சாந்தி வளாகத்தில் இளையராஜா எதிர்ப்பு கோஷ்டி ஒன்று உருவாகி, இளையராஜா இசையமைத்த படங்களைப் பற்றி குறை சொல்வதும், குதர்க்கம் பேசுவதுமாக இருந்து வந்தது. இந்தக்கூட்டத்துக்கு செல்வராஜ் என்பவர் தலைமையேற்று வீண் விவாதங்கள் செய்து வந்தார். அவர்களும் நடிகர்திலகத்தின் ரசிகர்கள்தான். இருப்பினும் இளையராஜா படங்கள் என்று வரும்போது நடிகர்திலகத்தின் படங்களையும் வைத்துப்பார்க்காமல் பேசுவார்கள். இதனால் சாந்தியில் பலமுறை வீணான சச்சரவுகள் வந்துள்ளன. ஏற்கெனவே இவர்கள் கவரிமான், நல்லதொரு குடும்பம் போன்ற படங்களை கன்னா பின்னாவென்று விமர்சித்துள்ளனர். இப்போது செல்வராஜும் தன கூட்டத்துடன் ஸ்டாரில் ஆஜராகியிருந்தார். அவர்கள் காலை சிறப்புக்காட்சி பார்த்திருந்ததால், படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பற்றியெல்லாம் அவர்கள் மட்டமாக பேசத்துவங்கியதும், ரசிகர்கள் மத்தியில் திடீரென கலவரம் மூண்டது. (அவர்கள் நடிகர்திலகத்தின் நடிப்பைப்பற்றியோ மற்ற விஷயங்களைப்பற்றியோ குறை சொல்ல மாட்டார்கள். இருப்பினும் பொதுமக்கள் மத்தியில் இப்படி மட்டமாக பேசுவது ரசிகர்களுக்கு ஆத்திரமூட்டத்தானே செய்யும்).

அதுவும் கலவரம் நடந்தது போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில். நல்லவேளை போலீஸ் வந்து தலையிடுவதற்குள் மன்றத்தினரே கலவரத்தை அடக்கி விட்டனர். இது முடிந்த கையோடு மாலைக்காட்சிக்கு கதவுகள் திறக்க உள்ளே போய்விட்டோம்.

டைட்டில் அட்டகாசமாகத் துவங்கினாலும், படம் துவக்கம் மந்தமாகவே இருந்தது. தொட்டதற்கெல்லாம் பயப்படும் கோழையாக நடிகர்த்திலகத்தைப்பார்க்க கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது. போகப்போக படம் டல்லடித்தது. எஸ்.பி.முத்துராமன், இளையராஜா. பாபு கூட்டணியிலிருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் தந்தையின் கொலை நடந்ததை நினைத்து நினைத்து நடிகர்திலகத்துக்கு தைரியமும், ஆவேசமும், பழியுணர்ச்சியும் பொங்கத் துவங்கியதிலிருந்து படம் சூடு பிடித்தது.

நடிகர்திலகம் - ஸ்ரீபிரியா ஜோடியின் டூயட் பாடல் 'தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன் நாயகி' பாடல் மிக நன்றாகப் படமாக்கப் பட்டிருந்தது. வில்லனின் கையாள் 'லென்ஸ்-கன்' கொண்டு சுடுவதற்காக, பலமாடிக் கட்டிடத்தில் ஏறும்போது படிக்கட்டில் அவன் காலடியோடு கூடவே கேமரா தொடர்ந்து போய்க்கொண்டிருக்கும் காட்சியில் பாபுவின் ஒளிப்பதிவு கைதட்டல் பெற்றது. இதற்கு சற்று முன் மூடுபனியில் பாலுமகேந்திரா இதை முயற்சித்திருந்தாலும் இந்த அளவுக்கு தொடர்ச்சியாக இல்லை.

தைரிய புருஷனாக ஆனபின் நடிகர்திலகத்தின் நடிப்பு தூள் பரத்தியது. அதர்க்கேற்றாற்போல வில்லன் நம்பியார், அவரது மேனேஜர் ஒய்.ஜி.பார்த்தசாரதி ஆகியோர் சிறப்பாக நடித்திருந்தனர். தியாகம் படத்துக்குப்பின் இந்தப்படத்தில் ஜஸ்டின், நடிகர்திலகத்துடன் சண்டைக்காட்சியில் நடித்திருந்தார். ஸ்ரீபிரியா ஜோடிப்பொருத்தம் இப்படத்தில் நன்றாக இருந்தது. படம் முடிந்து வெளியே வந்தபோது, சிறப்புக்காட்சி பார்த்த ரசிகர்கள் சொன்ன அளவுக்கு மோசமில்லைஎன்று தோன்றியது. அவர்கள் காலையில் ரொம்ப எதிர்பார்த்துப்போய், எதிர்பார்த்தபடி இல்லாததால் ஏமாற்றம் அடைந்திருப்பார்கள் போலும். ஆனால் மாலையில் நாங்கள் மோசமான ரிசல்ட்டோடு பார்க்கச்சென்றதால் பரவாயில்லை என்று தோன்றியதோ என்னவோ.

இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் சமீபத்திய தொலைக்காட்சி பேட்டிகளில் நடிகர்திலகத்துடன் தான் பணியாற்றிய அனுபவங்களைக் கூறும்போது, தான் பணியாற்றிய கவரிமான், வெற்றிக்கு ஒருவன், ரிஷிமூலம் மூன்றும் சரியாகப்போகவில்லை என்ற தவறான தகவலைச் சொல்லி வருகிறார்.. அவரது இயக்கத்தில் வந்த 'ரிஷிமூலம்' மாபெரும் வெற்றி பெற்று 100 நாட்களுக்கு மேல் ஓடியது. புவனேஸ்வரி தியேட்டரில் அப்படத்தின் 100-வது நாள் ஷீல்டைப் பார்த்திருக்கிறேன்.

'ரிஷிமூலம்' என்றதும் இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. 1980 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி 40-க்கு 38 இடங்களில் அமோக வெற்றிபெற. அ.தி.மு.கவுக்கு இரண்டு இடங்களே கிடைத்தன. இதைத்தொடர்ந்து கருணாநிதியின் நச்சரிப்பால் தமிழகத்தில் எம்.ஜி.ஆர். தலையில் நடந்துகொண்டிருந்த அரசு கலைக்கப்பட்டது (இந்திரா செய்த பெரிய தவறு). அமைச்சரவை கலைக்கப்பட்டதை கண்டித்து எம்.ஜி.ஆர். தலைமையில் மவுண்ட் ரோடு அண்ணாசிலையிலிருந்து கவர்னர் மாளிகைக்கு மாபெரும் கண்டன ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் சாந்தி தியேட்டர் அருகே வந்தபோது, சாந்தி தியேட்டர் தாக்கப்பட்டு கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அப்போது அங்கே ஓடிக்கொண்டிருந்த ரிஷிமூலம் படத்தின் பேனர்களும், கட்-அவுட்களும் முற்றிலும் கிழித்தெறியப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. எம்.ஜி.ஆர் இருந்த வாகனம் முன்னே புகாரி ஓட்டல் அருகே சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்துகொண்டிருந்த அ.தி.மு.க.வினரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது....

anasiuvawoeh
13th September 2013, 08:33 PM
Dear Gopal Siri am not able to know in which year you were there and your present age.I am 47now and i was in my 20-23 yrs of age at neyveli.,I have gone through your threads detailing some political background of the fans and you have openly declared the leadres you accept.I am almost in your line of thinking and lot of frequency matching is there .Only problem is that I may not be regular to the thread,but still I am happy to have come in contact of people like you.Thank you.Wishes.
Vetrikku oruvan- Sivaji's amasing remorse after hís father's death ís a scene to remember. Adal Padalil dance hás some òf the
graceful and well executed dificult steps.Thanks Gold Star.

Pon- I lived in Neyveli for the first 17 years òf my life in E-41-Kamaraj Road(Main Bazaar Road Re-chritened),Block-18 just opposite to Girls' High School.

J.Radhakrishnan
13th September 2013, 08:41 PM
டியர் சுப்பு சார்,

அருமையான காட்சியை தரவேற்றியுள்ளீர்கள், இறுதியில் தலைவர் பாசத்தோடு மு க வை தழுவும் போது அந்த நாள் ஞாபகம் பாடலோடு தலைவர் மற்றும் முக வின் அந்நாளைய புகைப்படமும் பின் இருவரின் இந்நாளைய புகைப்படமும் பின் தலைவரது சிலையை மட்டும் காணும் போது மனம் ஏனோ வலித்தது.

RAGHAVENDRA
14th September 2013, 07:05 AM
டியர் கார்த்திக் சார்
வெற்றிக்கு ஒருவன் ரிலீஸ் நாள் நினைவுப் பதிவு நம் எல்லோரையும் அந்நாளுக்கே அழைத்துச் சென்று விட்டது.

அந்நாளைய நினைவுகளை அசை போட மற்றோர் பதிவு

சென்னை சாந்தி திரையரங்கில் அவன் தான் மனிதன் ஓடிக் கொண்டிருந்த போது நடிகர் திலகத்தின் கட் அவுட்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/admcutoutShanti75_zps92bcf351.jpg

அன்பே ஆருயிரே திரைப்படத்தில் நடிகர் திலகம் திரைப்படம் பார்ப்பதாக வரும் காட்சியில் இது இடம் பெற்றது.

Gopal.s
14th September 2013, 08:03 AM
செப்டம்பர்-21

முக்கிய நிகழ்வுகளுக்கு ஒரு வாரம் முன்பாவது கட்டியம் கூறுதல் தமிழ் மரபன்றோ?

அரசே அங்கீகரித்தாயிற்று,உனக்கும் சினிமாவுக்கும் உள்ள பிரிக்க முடியா பந்தத்தை,நூற்றாண்டு விழாவை உன் பிறந்த நாளிலே தொடங்க சொல்லி.

தந்தைக்கு உபதேசம் செய்தான் அந்த சாமிநாதன்.
ஆனால் தெய்வத்தின் திறமையிலே மூழ்கி மெய்மறந்து, அவர் வியாபார பராகிரம சாதனை மறந்திருந்த இந்த தந்தைகளுக்கு ,காலத்தால் பிந்திய பம்மல் சாமினாதனன்றோ ஆவண மந்திரங்களை தந்தருளினான்.

கலிபோர்னிய அனைத்துலக மூளையும் இணைந்தும் வடிவமைக்க முடியா நினைவதிசயமே?என்னுடன் உரிய நேரம் வந்திருந்தால் கங்கையாக ஓட வேண்டியதை ,கமண்டலத்தில் அடைத்து விட்டாயே? ஆனால் ஒரு சினிமா அகத்தியனின் கமண்டலத்தில் அடை பட்டு உனக்கும் பெருமை தேடி,எங்களையும் நிமிர வைத்து விட்டாய்.

தமிழர்களுக்கு அதிசய உன்னத லட்சிய மலர்மாலை கட்ட ,காகித பூக்களால் ஒத்திகை பார்த்து விட்டாய்.

உனக்கு திருமணமாகி, ஒவ்வொரு தமிழனின் லட்சிய கனவாகிய நடிகர்திலகம் போல வீடமைய அனைத்தும் வல்ல இறைவனை துதித்து உன்னை வாழ்த்தும் அன்பு அண்ணன்.

vasudevan31355
14th September 2013, 08:05 AM
டியர் கார்த்திக் சார்,

நன்றி! 'வெற்றிக்கு ஒருவன்' அட்டகாசப் பதிவைத் தந்து என்னுடைய கடலூர் நினைவுகளை கிளர்ந்தெழச் செய்து விட்டீர்கள். உங்கள் அன்புள்ள காலைக்காட்சியை ரொம்ப என்ஜாய் பண்ணினேன். தங்களாலும், ராகவேந்திரன் சாராலும், ராமஜெயம் சாராலும் கடலூர் வாசியான எனக்கு தங்களின் சென்னை அனுபவங்கள் கலக்கலாகக் கிடைக்கின்றன. அருமையான மெமரி பவர். (இது ஓவர் டோஸ் இல்லை. இருந்தாலும் தங்களுக்கு ஜலதோஷம் பிடிக்காது என்று நினைக்கிறேன்) நீங்கள் சொன்னது போல சுமாரான ரிசல்ட்தான் இங்கும் கடலூரில் கிடைத்தது. படத்தின் பின் பகுதி ஜெட் வேகமெடுத்தது. முன்பகுதி வெகுவாக சொதப்பியது. பொதுவாக ரசிகர்களுக்கு ஏமாற்றமே. அப்படியும் மூன்று வாரங்களுக்குக் குறையாமல் கடலூர் பாடலியில் நன்றாகத்தான் போனது. இளையராஜா நன்றாகப் பண்ணியிருந்தார். "யார் ..மாமனோ ஜோடியோ" ஜானகியின் குரலில் வித்தியாசமான ஒரு காபரே நடனப் பாடல். சண்டைக் காட்சிகள் நல்ல விறுவிறுப்பு. சமகால நடிகர்கள் வாயில் விரலை வைக்கும் வண்ணம் "ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ" நீக்ரோ நடனப் பாடலில் நடிகர் திலகத்தின் அநாயாசமான மூவ்மெண்ட்ஸ். நம்பியாரின் வில்லத்தனம் எல்லாம் இருந்தும் முன் கதையால் முக்காடு போட்டுக் கொண்ட திரைப்படமாயிற்று. ஆனால் ஆர்ப்பாட்டத்திற்குக் குறைவில்லை. இப்படத்தைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். விரைவில் முயற்சிக்கிறேன். ஆனால் இந்த சிறிய பதிவுக்கு மூல காரணாமாய் இருந்த கோல்ட் ஸ்டாருக்கும், அட்டகாசமான தங்களுக்கே உரித்தான பாணியில் 'வெற்றிக்கு ஒருவன்' பதிவைத் தந்து கடலூர் நினைவுகளை பின்னோக்கிப் பார்க்க வைத்த உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி! தங்களின் ஜோரான வெற்றிக்கு ஒருவனுக்கு என்னுடைய சிறிய பரிசு.

'வெற்றிக்கு ஒருவன்' படத்துவக்க விழாவில் நடிகர் திலகம். (நன்றி: இந்து)

http://www.thehindu.com/multimedia/dynamic/00030/10MPMEMORIES_3_30683g.jpg

'வெற்றிக்கு ஒருவன்' ஸ்டில்ஸ்

http://i1.ytimg.com/vi/kaSCz8zCGfk/hqdefault.jpghttp://i1.ytimg.com/vi/w0SP2T8tI5s/0.jpghttp://i1.ytimg.com/vi/NwtKcp2zf68/hqdefault.jpg
http://i1.ytimg.com/vi/1qr9WYL6JJU/hqdefault.jpghttp://i1.ytimg.com/vi/-VdNbqSL6TI/hqdefault.jpghttp://i1.ytimg.com/vi/5Uzh-BI90q4/hqdefault.jpg
http://i1.ytimg.com/vi/c_ko3e33xxE/hqdefault.jpghttp://i1.ytimg.com/vi/gCNfvMV10tk/hqdefault.jpghttp://i1.ytimg.com/vi/2K_fnrmN3fo/hqdefault.jpg

vasudevan31355
14th September 2013, 08:07 AM
"ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ" நீக்ரோ நடனப் பாடலில் நடிகர் திலகத்தின் அநாயாசமான மூவ்மெண்ட்ஸ்.

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=NbHaKqW8KpI

vasudevan31355
14th September 2013, 08:13 AM
'தோரணம் ஆடிடும் மேடையில்'

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Rjf4qUUCufU

vasudevan31355
14th September 2013, 08:36 AM
'முத்தமிழ்ச்சரமே இளங்கொடி மலரே' (டி.எம்.எஸ், ஷைலஜா முதன் முதலில் இணைந்த சூப்பர் டூயட்)

http://www.youtube.com/watch?v=duQLkRlpkMY&feature=player_detailpage

vasudevan31355
14th September 2013, 10:32 AM
வெற்றிக்கு ஒருவனில் பிடித்தவை

1. அட்டகாசமான டைட்டில் காட்சி. . ஓடி வந்து கையைத் தூக்கியபடி தரும் சூப்பர் ஸ்டைல் போஸ்.விதவிதமான நெகடிவ் ஷேட்களில் கோபமான முகபாவங்களில் நடிகர் திலகம். அப்படியும் இப்படியும் கைகளால் குத்துவது போன்ற ஷாட்கள். அதற்கேற்ற ராஜாவின் அதிரடி பின்னணி இசை.

2.மேஜருடன் டைனிங் ஹாலில் நடிகர் திலகம் முட்டை சாப்பிடும்போது முட்டை ஓடு வாயில் பட்டுவிட அதை அறியாமல் 'முட்டையிலே முள்ளு' என்று சொல்லும் அப்பாவித்தனம்.

3.மேஜர் நம்பியாரின் வீட்டிற்கு income tax ரெய்ட் போகும் காட்சி. மிகப் பிரமாதமான விறுவிறு காட்சி. (மேஜர் கம்பீரமாகப் பண்ணியிருப்பார்),
நம்பியாரும், ஒய்.ஜி.பியும் கடப்பாரை கொண்டு இடித்து சுவற்றில் பதுக்கியுள்ள தங்கங்களையும் பணத்தையும் வெளியே எடுக்க எத்தனிக்கையில் மேஜர் பொறி வைத்து வில்லன்கள் இருவரையும் பிடிக்கும் கட்டம்.

(மேஜர் ரோலை தலைவரே செய்திருந்தால் இன்னும் படம் நன்றாகப் போய் இருக்கும் என்பது எனது கருத்து. தலைவர் பின்னிப் பெடல் எடுத்திருப்பார்)

4. நடிகர் திலகம், புஷ்பலதாவுடன் கல்யாணப் பத்திரிகை கொடுத்து விட்டு வரும் மேஜரை உயர்ந்த கட்டடத்தின் மொட்டை மாடியிலிருந்து மோகன்பாபு லென்ஸ் துப்பாகியால் சுட்டு வீழ்த்தும் அந்த திக் திக் பரபரப்புக் காட்சி. அதற்கேற்ற ராஜாவின் அற்புத பின்னணி இசை. (தொங்கியிருந்த படத்தை தூக்கி நிறுத்தும் காட்சி)

5. தந்தையின் மரணத்தைத் தாங்க மாட்டாமல் சாப்பிடச் சொல்லும் ஸ்ரீபிரியாவிடம் தந்தை தனக்கு ஊட்டி ஊட்டி வளர்த்ததை எண்ணி எண்ணி சொல்லி சொல்லி சிரிப்பும் அழுகையுமாக உணர்ச்சிகளைக் கொட்டுமிடம்.

6. ஹோட்டலில் ஜக்கு மற்றும் அடியாட்களை நடிகர் திலகம் புரட்டி எடுக்குமிடம்.

7. நம்பியாரிடம் சேட்டாக மாறுவேடத்துடன் தேங்காயுடன் வந்து கலக்குமிடம்.

8. தேங்காய் ஸ்ரீனிவாசனை மோகன்பாபு சுட்டுக் கொலை செய்தவுடன் சிம்மம் போல சீறி கையில் உருட்டுக் கட்டையுடன் எதிரிகளைப் பந்தாடித் துவைக்கும் காட்சி. (நடிகர் திலகத்திடம் அப்படி ஒரு ராட்சஷ வேகம்!)

9. 'ஆடல் பாடல்' பாடல் காட்சியில் பின்னணியில் ஒலிக்கும் ட்ரம்ஸ் இசைக்கு ஏற்றவாறு நடிகர் திலகம் ஸ்ரீபிரியாவுடன் ஆடும் அந்த அற்புத நீக்ரோ நடனம்.. கலக்கி எடுக்கும் டி .எம்.எஸ்ஸின் கம்பீரக் குரல்.

iufegolarev
14th September 2013, 10:44 AM
[QUOTE=vasudevan31355;1073844]வெற்றிக்கு ஒருவனில் பிடித்தவை

VERA ENNA PUTCHUDHUNGO ?

iufegolarev
14th September 2013, 10:45 AM
Neyveliyaar.....phone pannunga

iufegolarev
14th September 2013, 10:51 AM
செப்டம்பர்-21

முக்கிய நிகழ்வுகளுக்கு ஒரு வாரம் முன்பாவது கட்டியம் கூறுதல் தமிழ் மரபன்றோ?

அரசே அங்கீகரித்தாயிற்று,உனக்கும் சினிமாவுக்கும் உள்ள பிரிக்க முடியா பந்தத்தை,நூற்றாண்டு விழாவை உன் பிறந்த நாளிலே தொடங்க சொல்லி.

தந்தைக்கு உபதேசம் செய்தான் அந்த சாமிநாதன்.
ஆனால் தெய்வத்தின் திறமையிலே மூழ்கி மெய்மறந்து, அவர் வியாபார பராகிரம சாதனை மறந்திருந்த இந்த தந்தைகளுக்கு ,காலத்தால் பிந்திய பம்மல் சாமினாதனன்றோ ஆவண மந்திரங்களை தந்தருளினான்.

கலிபோர்னிய அனைத்துலக மூளையும் இணைந்தும் வடிவமைக்க முடியா நினைவதிசயமே?என்னுடன் உரிய நேரம் வந்திருந்தால் கங்கையாக ஓட வேண்டியதை ,கமண்டலத்தில் அடைத்து விட்டாயே? ஆனால் ஒரு சினிமா அகத்தியனின் கமண்டலத்தில் அடை பட்டு உனக்கும் பெருமை தேடி,எங்களையும் நிமிர வைத்து விட்டாய்.

தமிழர்களுக்கு அதிசய உன்னத லட்சிய மலர்மாலை கட்ட ,காகித பூக்களால் ஒத்திகை பார்த்து விட்டாய்.

உனக்கு திருமணமாகி, ஒவ்வொரு தமிழனின் லட்சிய கனவாகிய நடிகர்திலகம் போல வீடமைய அனைத்தும் வல்ல இறைவனை துதித்து உன்னை வாழ்த்தும் அன்பு அண்ணன்.

Puriyumbadiya ezhudhunga sir...

KCSHEKAR
14th September 2013, 11:40 AM
டியர் கார்த்திக் சார்,

தங்களின் வெற்றிக்கு ஒருவன் திரைப்பட ரிலீஸ் அனுபவங்கள் வழக்கம் போல அருமை. வாசுதேவன் சார் குறிப்பிட்டதைப் போல தங்களின் memory power - great.

நான் கிராமப் பகுதியில் இருந்ததால், அருகிலிருக்கும் டூரிங் திரையரங்கில் திரைப்படம் ரிலீசாகி குறைந்தது 6 மாதங்களுக்குப் பிறகுதான் வரும். அதனையே புதிய திரைப்படம் மாதிரி கண்டு மகிழுவோம். புதிய படம் ரிலீஸ் செய்யும் திரையரங்குகள் (பட்டுக்கோட்டை & தஞ்சாவூர்) என் ஊரிலிருந்து தொலைவில் இருந்ததால் சிறுவயதில் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

1980 க்குப் பிறகுதான் ரிலீஸ் ஆன படங்களை ரிலீஸ் ஆன ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பள்ளிப் படிப்பின்போது exam முடிந்தவுடன் எல்லாம் வெளியூர் சென்று திரைப்படங்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டது. அப்போது சில திரைப்படங்களை முதல் நாள் பார்த்திருக்கிறேன்.

அப்போது திரையரங்கு வாயிலில் கற்பூரம் ஏற்றுபவர்களையும், கலாட்டா (அலப்பரை) செய்பவர்களையும் ஆச்சரியத்துடன் பார்த்திருக்கிறேன். பின்னர் அவர்களுடனேயே கலந்துகொண்டிருக்கிறேன்.

முதன் முதலில் ரிலீஸ் அன்றே நான் பார்த்த நடிகர்திலகத்தின் திரைப்படம் கல்தூண். (1981). அதன்பிறகு, சங்கிலி, தீர்ப்பு, வெள்ளை ரோஜா போன்ற சில படங்களை முதல் நாள் திரையரங்கில் கண்டு களித்திருக்கிறேன்.

சென்னை வந்தபிறகு இங்குள்ள ரசிக ஜோதியில் ஐக்கியமாகி பல திரைப்படங்களைக் கண்டிருக்கிறேன். பல ஞாயிற்றுக் கிழமைகளை நடிகர்திலகத்தின் மறுவெளியீடுகளில் பாரகன், பிளாசா, மேகலா என்று கொண்டாட்டங்களில் பங்கேற்றிருக்கிறேன்.

ஆனாலும், நடிகர்திலகம் திரையுலகில் கோலோச்சிய 1960 - 70 களில் திரையரங்க அனுபவங்களை மிஸ் பணிவிட்டோமே என்று நினைப்பதுண்டு. என்னுடைய இந்தக் குறை தங்களுடைய பதிவுகளின் மூலம் நிறைவேறுவதில் மகிழ்ச்சி.

என்னைப் போன்ற பிற்பகுதிகளில் (1980-களின் இறுதியில்) வந்து சென்னையில் செட்டில் ஆனவர்களுக்கு தங்களுடைய சென்னை திரையரங்க அனுபவங்கள், மற்றும் அதனையொட்டி நடைபெற்ற நிகழ்வுகள் சுவாரசியமாகவும், பொக்கிஷமாகவும் இருக்கின்றன.

தங்களைப் போன்றே, திரு.ராகவேந்தர் சாரின் சென்னை திரையரங்க அனுபவங்கள், கோபால் சாரின் பல ஊர் திரையரங்க அனுபவங்கள், வாசுதேவன் சாரின் நெய்வேலி, கடலூர் திரையரங்க அனுபவங்கள், முரளி சாரின் மதுரை திரையரங்க அனுபவங்கள் மற்ற நண்பர்கள் குறிப்பிடும் இதர ஊர் திரையரங்க அனுபவங்கள் உண்மையிலேயே மனதிற்கு ஆனந்தமாகவும், பூரிப்பாகவும் இருக்கிறது. இத்தகைய பதிவுகளை அளிக்கும் அத்துணை உள்ளங்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

KCSHEKAR
14th September 2013, 11:43 AM
டியர் வாசுதேவன் சார்,

தங்களின் வெற்றிக்கு ஒருவன் திரைப்பட அனுபவங்கள் மற்றும் பாடல் காட்சி இணைப்புகள் அருமை.

KCSHEKAR
14th September 2013, 12:07 PM
1959 ஆம் வருடம் வீரபாண்டிய கட்டபொம்மன் ரிலீசின்போது, நடிகர்திலகம் அவர்களால் தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு வழங்கப்பட்டு, பின்னர் தஞ்சைப் பெரிய கோவிலில் வளர்ந்து வந்த வெள்ளையம்மாள் யானை இன்று (14-09-2013) காலை மரணமடைந்ததாக தஞ்சை மாவட்ட சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் திரு.சதா வெங்கட்ராமன் தகவல் தெரிவித்தார். ஏராளமான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.. வெள்ளையம்மாளின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Vellaiyammaal_zpsec8d34c1.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Vellaiyammaal_zpsec8d34c1.jpg.html)

mr_karthik
14th September 2013, 12:14 PM
டியர் வாசுதேவன் சார்,

வெற்றிக்கு ஒருவன் பதிவுக்கான தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. சதீஷ் அவர்களின் ஸ்டில்கள் என்னை பழைய நினைவுகளுக்குள் தள்ளியதுபோல, எனது பதிவும் தங்களை பழைய நினைவுகளை அசைபோட வைத்ததில் மகிழ்ச்சி. எனது பதிவுகள் தங்களுக்கும் தங்கள் கடலூர் நண்பர்களுக்கும் பிடித்திருப்பது கூடுதல் சந்தோஷம். (என்ன செய்வது, ஜாம்பவான்களின் அசுரப்பதிவுகளுக்கு மத்தியில் இதுபோன்ற அனுபவப்பதிவுகள் மூலம்தான் என்னை நிலைப்படுத்திக்கொள்ள முடிகிறது). அடிஷனலாக தாங்கள் அளித்திருக்கும் ஸ்டில்கள் நன்றாக உள்ளன. அன்றைய காலகட்டத்தில் ஸ்ரீபிரியாவை நாங்கள் கொஞ்சம் மோசமான, கொச்சையான அடைமொழி வைத்து குறிப்பிடுவது வழக்கம். அனாடமி சம்மந்தப்பட்டது. அந்தப்பெயர் எவ்வளவு பொருத்தம் என்பதை இப்படமும் நிரூபித்தது. (அன்றைய ‘பொல்லாதவன்’, அன்றைய ‘பில்லா’ படங்களும்).

'வெற்றிக்கு ஒருவன் படத்தின் 'ஹை-லைட்' காட்சிகளை அழகாக வரிசைப்படுத்தி சிறப்பு சேர்த்து விட்டீர்கள். ஒவ்வொரு பாயிண்ட்டும் காட்சிகளை நன்கு நினைவூட்டுகின்றன. மேஜரின் ரோலையும் தலைவர் செய்திருந்தால் படம் துவக்கத்திலிருந்தே எடுப்பாக அமைந்திருக்கும் என்பது உண்மை. சில நல்ல ரோல்களை மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்ச்சியடைபவர் தலைவர் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

அந்த அட்டகாசமான டைட்டில் காட்சிதான் ரொம்ப எதிர்பார்க்க வைத்தது.

‘நடிகர்திலகத்தின் திரை நாயகியர்’ வரிசையில் வைஜயந்திமாலா பற்றிய சிறப்புப் பதிவு மிக அருமை. இணைந்து நடித்தது மூன்றே படங்கள் என்றபோதிலும் தாங்கள் கவரேஜ் சிறப்பாக உள்ளது. தேன்நிலவு படத்தில் வரும் 'காலையும் நீயே மாலையும் நீயே' பாடல் ஒளிபரப்பானால், தலை போகிற வேலையானாலும் ஒத்திவைத்துவிட்டு பார்த்துவிட்டு செல்வது என் வழக்கம். வைஜயந்தியின் நளின நடன அசைவுகளும், ஏ.எம்.ராஜாவின் அமுதக்குரலும், ஜானகியின் ஹம்மிங்கும் அப்படி கட்டிப்போட்டுவிடும். வெற்றிக்காவியமான 'இரும்புத்திரை'யில் நடிகர்திலகம்-வைஜயந்தி ஜோடி மிக மிக அற்புதம்.

தலைவர் அபூர்வமாக ஜோடி சேர்ந்தவர்களுடன்தான் அற்புதமாகப் பொருந்தியிருக்கிறார் என்பதற்கு வைஜயந்தியும் ஒரு உதாரணம் (இந்த வரிசையில் ஜமுனா, விஜயநிர்மலா, பாரதி, பத்மப்ரியா) .

இடைவெளி விட்டாலும் தொடர்களைத் தொடர்வது மகிழ்ச்சியளிக்கிறது. சண்டைக்காட்சிகளும் தொடரும் என எதிர்பார்க்கிறோம்....

Gopal.s
14th September 2013, 12:14 PM
சிவாஜி கணேசன் பரிசளித்த தஞ்சை பெரிய கோவில் யானை மரணம்

தஞ்சாவூர்: நடிகர் சிவாஜிகணேசன் தஞ்சை பெரிய கோயிலுக்கு தானமாக வழங்கிய யானை வெள்ளையம்மாள் உடல் நலமின்றி இன்று காலை உயிரிழந்தது. தஞ்சை பெரிய கோவில் பெண் யானை வெள்ளையம்மாள், 63, வயது. வயதாவிட்டதால் கடந்த 8 ஆண்டுகளாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தது. இதனால் யானைக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது. இதனால் படுத்தப்படுக்கையாக இருந்தது. கால்நடை மருத்துவர்கள், கோயில் யானைக்கு தொடர்ந்து அளித்த சிகிச்சை அளித்து வந்தனர்.

Gopal.s
14th September 2013, 12:29 PM
எனது புதிய பறவை மீள் பதிவை பாராட்டிய கார்த்திக், ராகவேந்தர் சார், சதீஷ், கே.சி.எஸ் , கண்பட் ,வாசு, ஆதிராம் அனைவருக்கும் நன்றி.

வாசு சார்,
உங்களின் நாயகியர் தொடரில் ,வைஜயந்தி மாலாவுடன் ,நடிகர்திலகம் அற்புத பதிவு. அந்த சிறு வயது infatuation சொல்லும் காட்சியையும் சேர்த்திருக்கலாம். வைஜயந்தி நடித்திருக்க வேண்டிய பிற படங்கள்- புதிய பறவை (பாடகி),தில்லானா மோகனாம்பாள்,இரு மலர்கள்,இரு துருவம்.
வெட்டிக்கு ஒருவன் - superb .

கார்த்திக் சார்,
உங்கள் ஸ்டார் தியேட்டர் அனுபவங்கள் என்னை கல்லூரி நாட்களுக்கு இழுத்து செல்கிறது. எனக்கு யாரையும் அறிமுகம் இல்லாவிட்டாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் சாந்தி வந்து அரட்டை கேட்டு சாந்தி பெறுவேன்.(1976-1984)

சதீஷ்,
புதிய பறவை அற்புத புகை படங்களுக்கு மிக மிக நன்றி. தொலைபேசி அழைப்புக்கும்.

Joe சார்,
அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நாங்கள் எல்லோருமே sportive . குடும்பம் போல அடித்து கொள்வோம்.சேர்ந்து கொள்வோம். தலைவர் ஒருவர்தானே?

முரளி,
புதிய பறவை lead கொடுத்ததற்கு நன்றி. கணேசன்(கோபால்) பிடிக்க போய் கிருஷ்ணனாய்(கோபால்) முடிந்ததை சொல்லுங்கள். வைணவர் பிடித்தால் கிருஷ்ணனாய் தானே முடிய வேண்டும்?

கே.சி.எஸ்.- ஓஹோ நீ சின்னஞ்சிறுவன். சுவையான பதிவுக்கு நன்றி.

mr_karthik
14th September 2013, 12:50 PM
டியர் சந்திரசேகர் சார்,

வெற்றிக்கு ஒருவன் பதிவுக்கு பாராட்டுக்கு நன்றி. தங்களின் பள்ளிப்பருவ திரையரங்க அனுபவங்களையும் சுவைபட சொல்லியிருக்கிறீர்கள். தஞ்சாவூர், பட்டுக்கோட்டையை விட திருவாரூர், நாகப்பட்டினம் தங்களுக்கு அருகில் உள்ள நகரம் என்று நினைக்கிறேன். ஆனால் அவற்றில் புதிய படங்கள் அப்போது ரிலீஸ் ஆவது இல்லை, . அன்றைய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், மாயவரம் நகரங்களில் மட்டுமே ரிலீஸ் ஆகும். அவற்றில் ஓடிமுடிந்த பிரின்ட்கள்தான் மன்னார்குடி, திருத்துரைப்பூண்டி, நாகப்பட்டினம், திருவாரூர் நகரங்களுக்குக் கிடைக்கும். ஓகோவென்று ஓடும் படங்கள் இங்கே வர பல மாதங்கள்கூட ஆகும் என்று நினைக்கிறேன். தாங்கள் சுவையான பதிவுக்கு நன்றி.

தாங்கள் அடுத்த பதிவில் மனம் கனக்கவைக்கும் செய்தியைத் தந்துள்ளீர்கள். வெள்ளையம்மாள் என்ற யானை, கோயிலுக்கு தன்னைப் பரிசளித்த நம் தலைவரைத் தரிசிக்க இறுதிப்பயணம் மேற்கொண்ட தகவல் நெஞ்சை நெகிழ வைத்தது. மரணத்தின் கொடிய பிடியில் இருந்து தப்பியவர் யார் என்று தேற்றிக்கொள்வோம். வேறென்ன முடியும்?....

Gopal.s
14th September 2013, 12:56 PM
Ragavendhar Sir,
Thanks for Pudhiyaparavai avanangal and info on screening of NT Films in the 100th centenary. Special thanks to your complete comprehension and appreciation.

mr_karthik
14th September 2013, 01:16 PM
டியர் ராகவேந்தர் சார்,

தங்கள் பாராட்டுக்கு நன்றி.

நம் மனங்களில் நீங்கா இடம்பெற்றிருக்கும் "பழைய சாந்தி" திரையரங்கின் நிழற்படங்களை அவ்வப்போது பதிப்பித்து, பழைய நினைவுகளை புதுப்பித்துக் கொண்டிருக்கும் தங்களுக்கு பாராட்டுக்கள், நன்றிகள்.

அவன்தான் மனிதன் ஓடும் சாந்தி திரையரங்க நிழற்படம் மிகவும் அருமை...

mr_karthik
14th September 2013, 01:24 PM
கார்த்திக் சார்,
உங்கள் ஸ்டார் தியேட்டர் அனுபவங்கள் என்னை கல்லூரி நாட்களுக்கு இழுத்து செல்கிறது. எனக்கு யாரையும் அறிமுகம் இல்லாவிட்டாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் சாந்தி வந்து அரட்டை கேட்டு சாந்தி பெறுவேன்.(1976-1984)

டியர் கோபால் சார்,

நீங்கள் குறிப்பிட்ட அந்த காலகட்டத்தில் நானும் அங்கேதான் வாசம் செய்தேன். ராகவேந்தர் சாரும் இருந்தார், என் பதிவில் குறிப்பட்ட நண்பர்களும் இருந்தனர், 'ஆண்ட்டி-இளையராஜா' கோஷ்டித்தலைவர் செல்வராஜும் அப்போதான் இருந்தார். அடடா, அப்போதே அறிமுகமில்லாமல் போய்விட்டோமே.

(சினிமா/சீரியல் டாக்டர்கள் கேட்பது போல ஒரு கேள்வி: "கொஞ்சம் நல்லா யோசனை பண்ணிப்பாருங்க. அவங்கள்ள யாருடைய பெயராவது உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா?"). ..

KCSHEKAR
14th September 2013, 02:20 PM
தஞ்சாவூர், பட்டுக்கோட்டையை விட திருவாரூர், நாகப்பட்டினம் தங்களுக்கு அருகில் உள்ள நகரம் என்று நினைக்கிறேன். ஆனால் அவற்றில் புதிய படங்கள் அப்போது ரிலீஸ் ஆவது இல்லை, . அன்றைய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், மாயவரம் நகரங்களில் மட்டுமே ரிலீஸ் ஆகும். அவற்றில் ஓடிமுடிந்த பிரின்ட்கள்தான் மன்னார்குடி, திருத்துரைப்பூண்டி, நாகப்பட்டினம், திருவாரூர் நகரங்களுக்குக் கிடைக்கும். ஓகோவென்று ஓடும் படங்கள் இங்கே வர பல மாதங்கள்கூட ஆகும் என்று நினைக்கிறேன்.

டியர் கார்த்திக் சார்,

தாங்கள் குறிப்பிட்டுள்ள தகவல் சரியானதே!

KCSHEKAR
14th September 2013, 03:21 PM
இந்திய விசிலிசைச் சங்கம் (Indian Whistlers Association) என்ற அமைப்பு நடிகர்திலகத்தின் 86-வது பிறந்தநாளையொட்டி, செவாலியர் சிவாஜிக்கு விசிலஞ்சலி என்ற நிகழ்ச்சியை 29-09-2013 அன்று நடத்துகிறது. இந்த இசை நிகழ்ச்சியில் அனைத்து பாடல்களும் விசிலாகவே இடம்பெறுகிறது என்பது புதுமை.
அதன் அழைப்பிதழ்:
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiWhistleAnjali_zpsb3372ed4.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiWhistleAnjali_zpsb3372ed4.jpg.html)

Russellpei
14th September 2013, 03:26 PM
Joe சார்,
அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நாங்கள் எல்லோருமே sportive . குடும்பம் போல அடித்து கொள்வோம்.சேர்ந்து கொள்வோம். தலைவர் ஒருவர்தானே?

When I read recent posts in this thread, I found the following scene suitable (in lighter vein)....

http://www.youtube.com/watch?v=TUOPuWD3tk4

Gopal.s
14th September 2013, 04:29 PM
When I read recent posts in this thread, I found the following scene suitable (in lighter vein)....

அட பாவிகளா,
இன்னொருத்தர் வெவகாரத்திலெ மூக்கு நுழைக்கறதுக்கு ,ரூம் போட்டு யோசிப்பாங்க போல.
welcome . தங்கள் நகைச்சுவை உணர்வு ரசிக்கும் படி உள்ளது.

Gopal.s
14th September 2013, 07:24 PM
பாலாஜி

நடிகர்திலகத்துடன் விடிவெள்ளி படத்தில் துவங்கி கப்பலோட்டிய தமிழன்,படித்தால் மட்டும் போதுமா என்று 1960 இல் துவங்கி, 1986 வரை கூட நடித்தவர்.சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கி 1966இல் ஜெமினி (அறிமுக படுத்திய நன்றி கடன்)நடித்த அண்ணாவின் ஆசை படத்தை எடுத்து வெற்றி காண முடியாமல் ,1967 இல் இளைத்து துரும்பாகி இளமை துடிப்புடன் விளங்கிய திராவிட மன்மதனுடன் , மதன் என்ற பாத்திரம் மூலமே தங்கை என்ற திருப்புமுனை (நடிகர்திலகத்தின் முதல் Action movie )வெற்றி படத்தின் மூலம் நடிகர்திலகம்-திருலோகச்சந்தர் என்ற வெற்றி கூட்டணி உருவாக வழி கண்டார்.
தொடர்ந்து என்தம்பி (1968),திருடன்(1969),எங்கிருந்தோ வந்தாள்(கலர் 1970), ராஜா(1972),நீதி(1972),என்மகன் (1974),உனக்காக நான்(1976),தீபம்(1977),தியாகம்(1978),நல்லதொரு குடும்பம்(1979),தீர்ப்பு(1982),நீதிபதி(1983),பந்தம ்
(1985),மருமகள்(1986),விடுதலை(1986),குடும்பம் ஒரு கோவில் (1987) என இறுதி வரை நம் விசுவாசியாக வெற்றி கண்டு ,மிக சிறந்த நண்பராகவும் இறுதி மூச்சு வரை தொடர்ந்தார்.

அதில் 8 படங்கள் superhit , 7 படங்கள் ஹிட், 2 படங்கள் சுமார் ரக வெற்றிகள். நடிகர்திலகத்தை மட்டுமே தொடர்ந்த பீம்சிங்,பாலாஜி,முக்தா, மாதவன்,திருலோக், போன்றவர்கள் மிக பெரிய பலன் பெற்று மன அமைதியுடன் வாழ்ந்தது குறிப்பிட தக்கது

mr_karthik
14th September 2013, 08:04 PM

பாலாஜி....

70 மற்றும் 80 களில் தான் முழுநேர தயாரிப்பாளராக ஆனபின்னரும், மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் ஈகோ பார்க்காமல் நடிகர்திலகத்துடன் இணைந்து நடித்தார். அவற்றில் சில எங்க மாமா, சொர்க்கம், வசந்தமாளிகை, உத்தமன், தர்மராஜா ஆகியன. சிறந்த நட்புக்கு எடுத்துக்காட்டாக இறுதிவரை வாழ்ந்தவர். நடிகர்திலகத்தின் இறுதி நாட்களில் அன்னை இல்லத்துக்கு வந்து நண்பருடன் பழைய நினைவுகளை அசைபோட்டு மகிழ்ந்தவர். நண்பனின் பிரிவை தாங்காமல் அவரைக் காணச்சென்று விட்டவர்.

'அங்கே' இப்போது இருவரும் என்ன பேசிக்கொண்டிருப்பார்கள்?. அடுத்த படம் பற்றி?...

Subramaniam Ramajayam
14th September 2013, 10:04 PM

my sweet memories of balajee sir.
It was a week or 10 days before ENGRINDO VANDAL RELEASE. As my bank office was next to spencers, we used to roam about in the lunch hours there.. we had the occassion of meeting balajee there, when i have congradulated him for forth coming NT movie, he was telling he had almost invested all his savings to the tune of 30 lacs and requested us to plead for postponement of sorgam release to the top brace.
we informed sivaji films will not interfere in policy decisions.
we have wished him all the BEST and NT has got diwali luck, the two movies will make great records.
it has happened and he became one of the top producers of south till end.