View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 11
Pages :
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
[
16]
sankara1970
6th November 2013, 01:12 PM
Dear Ragavendra
Thirisoolam photos super.
abkhlabhi
6th November 2013, 01:42 PM
http://www.pichaikaaran.com/2013/11/blog-post.html
HARISH2619
6th November 2013, 02:44 PM
Dear gopal sir,
many many happy returns of the day
uvausan
6th November 2013, 02:49 PM
கோபால் சார் - பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாயிரம் ஆண்டுகள் நீங்கள் ஆரோக்கியமாக வாழ ப்ராத்தனை செய்கிறேன்
:):smokesmile:
RAGHAVENDRA
6th November 2013, 03:17 PM
Yesterday, 05.11.2013, every one was literally in tears and could not control when Ashaji was so emotional. It was really a memorable evening and will stay throughout the life. Our sincere gratitude to the Mangeshkar family.
The Super Singer Episode concerned is available in youtube
http://youtu.be/qblQr3Y-IHw
Georgeqlj
6th November 2013, 03:40 PM
VANAKAM.....my first entry
kalnayak
6th November 2013, 03:52 PM
Dear Gopal,
Wish you many more happy birthdays!!! A very happy birthday to you!!!
vasudevan31355
6th November 2013, 04:06 PM
'ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர்' தொடரை பாராட்டிய அனைவருக்கும் நன்றி!
vasudevan31355
6th November 2013, 04:07 PM
இயக்குனர் வரிசையில் விஜயன் பதிவுகளை ரசித்த வாசுதேவன் சார், ராமச்சந்திரன் சார், ரவி சார், சந்திரசேகரன் சார் அனைவருக்கும் நன்றி!
vasudevan31355
6th November 2013, 04:07 PM
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களது முத்தாய்ப்பான 5000ஆவது பதிவாக நடிகர் திலகம் திரை நட்சத்திரங்களின் கேள்விகளுக்கு பதில் சொன்னதை படங்களுடன் பதிவிட்டது வெகு பொருத்தம். சிறப்பு. மீண்டும் தங்களுடைய அருமையான பதிவுகளுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்.
கோவை ஷண்முகா திரையரங்கில் திரிசூலத்தின் கொண்டாட்டப் பதிவுகளைப் பதித்து சந்தோஷப் படுத்தியுள்ளீர்கள். மிக்க நன்றி!கோவை செந்தில் சாருக்கும் எனது நன்றி!
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சுட்டிக்கும் மனமார்ந்த நன்றி!
KCSHEKAR
6th November 2013, 04:22 PM
Yesterday, 05.11.2013, every one was literally in tears and could not control when Ashaji was so emotional.
Dear Ragavendran Sir,
Thanks for your post with youtube link. Good one.
KCSHEKAR
6th November 2013, 04:25 PM
Welcome Mr.Senthilvel Sivaraj Sir to this thread
RAGHAVENDRA
6th November 2013, 05:06 PM
டியர் கோவை செந்தில்
தங்களுடைய வரவு இங்கே நடிகர் திலகத்தின் புகழ் மாலையில் மற்றுமோர் சரமாக ஜொலிக்கட்டும். தங்களுடைய உள்ளத்தில் நடிகர் திலகம் எந்த அளவிற்கு குடி கொண்டிருக்கிறார் என்பதை முகநூல் மூலம் நன்கு அறிந்துள்ளேன். இங்கும் தங்கள் பங்கினை அளித்து உலக மகா கலைஞனின் சிறப்பை உங்கள் பார்வையில் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
குறிப்பு. இங்கு மற்றோர் செந்தில் இருக்கிறார். பெங்களூர் செந்தில். ஹரீஷ் என்கிற ஐடியில் எழுதுவார். எனவே தங்களை கோவை செந்தில் எனக் குறிப்பிடுகிறேன்.
Georgeqlj
6th November 2013, 05:32 PM
Thankyou Mr Raghavendra sir.. Mr Chandraseker sir.. Mr Vasudevan sir and all NT fans
vasudevan31355
6th November 2013, 06:28 PM
கைகொடுத்த தெய்வத்தின் புகழ் பாட வரும் புதிய வரவு செந்தில்வேல் சிவராஜ் சகோதரரே! வருக! வருக!
http://i1.ytimg.com/vi/Wt6A8uxdZD0/maxresdefault.jpg?feature=og
ScottAlise
6th November 2013, 06:43 PM
Happy birthday to one of the prolific writers in this thread
GOPAL SIR
anm
6th November 2013, 07:10 PM
Dear Gopal Sir,
Wishing you a day that is as special in every way as you are. Happy Birthday.
Anand
anm
6th November 2013, 07:16 PM
Dear Raghavendra Sir,
Congrats!!!!!!! On the Acheivement of 5000 postings!!!!!!
Anand
vasudevan31355
6th November 2013, 08:04 PM
நாளை (7-11-2013) பிறந்தநாள் காணவிருக்கும் திரு. கமலஹாசன் அவர்களுக்கு நடிகர் திலகம் திரியின் சார்பாக மனப்பூர்வமான இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
உலகப் பெரு நடிகருடன் பிறந்தநாள் 'நாயகன்'
http://moviesdrop.com/wp-content/uploads/2013/01/ThevarMagan.jpg
vasudevan31355
6th November 2013, 08:27 PM
http://s.myniceprofile.com/myspacepic/68/6801.gifhttp://s.myniceprofile.com/myspacepic/162/16299.gif
http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/109619c6-9161-425d-8152-1bd64a24804b_zps43f745c2.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/109619c6-9161-425d-8152-1bd64a24804b_zps43f745c2.jpg.html)
Russelldwp
6th November 2013, 09:31 PM
டியர் ராகவேந்திரன் சார்
கோவையில் நடிகர் திலகத்தின் திரிசூலம் நிகழ்வுகளை மிக அருமையாக பதிவு செய்தமைக்கு நன்றி
c. Ramachandran
Russellfcv
6th November 2013, 09:31 PM
திரி நண்பர்களுக்கு ஒரு நற்செய்தி
கோவை மாநகரை இந்த தீபாவளியில் ஒரு கலக்கு கலக்கிய திரைப்படம் என்றால் அது திரிசூலம் என்றால் அது மிகையில்லை. நமது நண்பர் Dr ரமேஷ் அவர்களின் இன்றைய தகவலின் படி, திரிசூலம் கடந்த 5 நாட்களில் ருபாய் ஒரு லட்சத்திற்கும் ( 5 days collection is over Rs.1,00,000) மேல் வசூல் செய்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட ஒரு நாள் வசூல் ருபாய் 20,000திர்கும் மேல்.
திரிசூலம் எப்பொழுது திரையிட்டாலும் ரிலீஸ் சமயத்தில் எவ்வளவு வசூல் சரித்திரம் செய்ததோ, அதே அளவு வசூல் சரித்திரம் இன்றும் செய்துகொண்டிருக்கிறது. ரிலீஸ் சமயத்தில் 6 வாரத்தில் 50 லட்சத்திற்கும் மேலும் 12 வாரத்தில் ருபாய் ஒரு கோடிக்கு மேலும் 200 நாட்களில் ருபாய் இரண்டு கோடிக்கும் மேல் வசூல் செய்ததிலிருந்தே நாம் புரிந்துகொள்ளலாம் - வசூல் சக்கரவர்த்தி என்பதற்கு இன்னொரு பெயர் "நடிகர் திலகம் சிவாஜி கணேசன்" என்று. ! இதை நாம் எப்போதும் வாய்க்கு வாய் கூறதேவயில்லை. கல்வெட்டுகளில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒன்றாகும்.
அன்றும் சரி, இன்றும் சரி நம் நடிகர் திலகத்தின் திரைபடங்களுக்கென்று தனி சிறப்பு உண்டு. அது யாதெனில், எப்போதுமே ஒரே சீரான மக்கள் திரைப்படத்தை கண்டு களிப்பர். முதல் காட்சி 400 பேர் என்று உதாரணமாக வைத்துகொண்டால். கடைசி காட்சிவரை அந்த எண்ணிக்கை இருந்துகொண்டே இருக்கும். ஒரு ஞாயிறு மாலை காட்சியை மட்டுமே நம்பி நம் நடிகர் திலகம் திரைப்படம் கிடையாது !
ரசிகர்களையும் விட பொதுமக்கள் அதிக அளவில் பார்த்ததினால்தான், 5 நாட்களில் லட்ச ரூபாய்க்கும் மேல் வசூல் பிரளயம் செய்துள்ளது "திரிசூலம்". Dr ரமேஷ் இடம் தகவலை பகிர்ந்த திரையரங்கு மேலாளருக்கு நம் நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.
Russelldwp
6th November 2013, 09:37 PM
பிறந்தநாள் காணும் ஆய்வுத்திலகம் திரு. கோபால் அவர்கள் எல்லா வளமும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறேன்
c. Ramachandran
Russelldwp
6th November 2013, 09:46 PM
சமிபத்தில் திரைக்கு வந்துள்ள விஷால் நடித்த பாண்டிய நாடு படத்தில் நமது நடிகர் திலகத்தின் வசந்த மாளிகை பட போஸ்டர் காண்பிக்க படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்
c. Ramachandran
J.Radhakrishnan
6th November 2013, 10:07 PM
Happy birthday Wishes to Mr.Gopal sir
RAGHAVENDRA
6th November 2013, 11:18 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/kamalbirthdaygrtgs_zps41eeb076.jpg
Murali Srinivas
6th November 2013, 11:30 PM
நவம்பர் - 7
பிறக்க எண்ணியதோ விஜய்யாக விக்ரமனாக
பிறந்தது என்னவோ காத்தவராயனாக
வாழ நினைத்ததோ "சிவகாமியின் செல்வனாக"
வாழ்ந்ததென்னவொ "கோபிகாகிருஷ்ணனாக"
ஆனால் அனைவரின் மனதிலும் நீ வாழ்வது வியட்நாம் கோபலா(னா)க
மிக இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கோபால்!
இது போன்று பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!
அன்புடன்
Murali Srinivas
6th November 2013, 11:38 PM
மையம் இணையதளத்தின் Thread of the Hub என்று அறியப்படும் நடிகர் திலகத்தின் திரிக்கு வருகை தந்திருக்கும் செந்தில்வேல் சிவராஜ் அவர்களே
நல்ல இடம் நீங்கள் வந்த இடம்
சிவா,
தமிழகத்தில் மட்டுமல்ல இலங்கையிலும் சாதனை சக்கரவர்த்தி என்றால் நடிகர் திலகம் ஒருவர்தான் என்பதை உலகறிய சொன்ன உங்கள் பதிவு மற்றும் ஒரே நாளில் இலங்கையில் வெளியான தீபம் மற்றும் அந்தமான் காதலி படங்களின் வெற்றி தகவல்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு கோடானு கோடி நன்றி.
அன்புடன்
Subramaniam Ramajayam
7th November 2013, 11:09 AM
1969- sivandamann-namnadu songs competition-vivadh bharathi every friday 9-10pm
FOM DAY ONE ORU RAJA RANIYIDAM STOOD FIRST among the songs selected by MAKKAL till last but one or two occassons NAMNADU STOOD second always it never surpassed sivandamann votes. to avenge the defeat once they made namnadu first and sivandamann second. lot of money spent for the purpose. this was the REAL FACT.
vasudevan31355
7th November 2013, 03:28 PM
'பத்மஸ்ரீ' கமலஹாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நமது இதயதெய்வம் நடிகர் திலகத்தைப் பற்றி 12-9-2001 தேதியிட்ட 'தேவி' வார இதழில் கமல் அவர்கள் எழுதிய மனம் நெகிழ வைக்கும் கட்டுரை.
சிறப்புப் பதிவு.
http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/1_zps59a1334b.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/1_zps59a1334b.jpg.html)
http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/2_zps01ba1ee0.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/2_zps01ba1ee0.jpg.html)
http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/3_zps5db9954a.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/3_zps5db9954a.jpg.html)
அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்
anasiuvawoeh
7th November 2013, 03:49 PM
Dear Raghavendar Sir,congrats for ur 5000th posting.
Dear Gopal sir,Happy birthday.
Dear vasu sir,nice article on vijayan.
If any one ask me to list out the people I love,i will answer in a simple way.I LOVE EACH AND EVERYONE WHO LOVES OUR NT.So ASHA BHONSLE comes in the list.What an emotional moments,the full 15minutes,tears rolled down my cheek.It was uncontrollable..
Russellfcv
7th November 2013, 05:04 PM
1969- sivandamann-namnadu songs competition-vivadh bharathi every friday 9-10pm
fom day one oru raja raniyidam stood first among the songs selected by makkal till last but one or two occassons namnadu stood second always it never surpassed sivandamann votes. To avenge the defeat once they made namnadu first and sivandamann second. Lot of money spent for the purpose. This was the real fact.
திரு. Rs அவர்களுக்கு
தாங்கள் சிவந்தமண் பற்றி கூறிய தகவல் முற்றிலும் உண்மை என்பது தமிழகத்துக்கே தெரியும் !
நம் நடிகர் திலகத்தின் மூலம் புகழ்பெற்று நடிகர் திலகத்திடமே தமது வறட்டு கௌரவத்தினால் கோபித்துகொண்டு அவர்களாக வெளியே சென்ற தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர் தயாரிப்பாளர்களும் வேறு படங்கள் எடுத்து...அதில் ஒரு சில வேளைகளில் நொந்து....வீம்புகேன்று பின்னிவிட்டேன்....கலக்கிவிட்டேன்...என்று பெருமைக்காக எருமை மேய்ப்பவர்களை போல கூற நாம் கேள்விபட்டிருக்கிறோம். உண்மையில் அவர்கள் நிலை என்ன என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. !
பரவாயில்லை விட்டுவிடுங்கள்...! ஒருவர் கூறுவதால் ஒரு விஷயம் இல்லையென்று ஆகிவிடாது. உண்மையின் தன்மையை பற்றி அறியாதவர்கள், மாயையை தொடர்ந்து உண்டாக்க முனைவார்கள், தொடர்கிறார்கள். விட்டுத்தள்ளுங்கள். !
RAGHAVENDRA
7th November 2013, 07:15 PM
நடிகர் திலகத்தின் பால் அளவற்ற பாசமும் அன்பும் வைத்துள்ள ரசிகர்கள், உணர்ச்சி வசப் படுவது இயற்கையே. ஆனால் அந்த உணர்ச்சி வசத்தால் அவர்கள் உந்தப் பட்டு எடுக்கும் முடிவுகள் மிகவும் மன வருத்தத்தினை அளிக்கின்றன. நடிகர் திலகத்தின் சிலை தொடர்பாக பேசிக் கொண்டிருந்த ஒரு ரசிகர் உணர்ச்சி மேலீட்டால் விபரீத முடிவிற்கு சென்றதாகவும் சுற்றியிருந்த நமது மற்ற நண்பர்கள் நல்ல வேளையாக அதனை தொடக்கத்திலேயே தடுத்து அவரைக் காப்பாற்றி விட்டதாகவும் செய்தி வந்துள்ளது.
நடிகர் திலகத்தின் சிலை தொடர்பாக எந்த வித விபரீத முடிவிற்கும் ரசிகர்கள் செல்ல வேண்டாம் என தனிப்பட்ட முறையில் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இதில் இப்போது இருக்கும் நிலையே தொடரவும் சிலை அங்கேயே தொடர்ந்து இருக்கவும் தேவையான சட்டபூர்வமான நடவடிக்கைகள் வழக்கறிஞர்கள் மூலமாக சம்பந்தப் பட்டவர்களால் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தெரிகிறது. இது வழ்க்காடு நிலையில் உள்ளதால் தயவு செய்து ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும். நல்லதே நடக்கும் என நம்புவோம்.
Gopal.s
7th November 2013, 07:44 PM
நான் எதிர்பார்த்து கிடைத்து மகிழ்ச்சியடைவது இந்த திரியின் சகோதரர்களின் மனமார்ந்த வாழ்த்துக்களே.
என்னை சந்தோஷ கடலில் ஆழ்த்திய எஸ்வி சார்,ராகவேந்தர் ஐயா,கே.சி.எஸ்.,சின்ன கண்ணனார்,ஆதிராம் சார்,சங்கரா சார்,ஹரிஷ்,ரவி,கல்நாயக்,ராமச்சந்திரன்,ராகுல் ராம்,ஆனந்த்,ஜே.ஆர்,பொன், வாசு, முரளி ஆகியோரை மனமுவந்து நினைக்கிறேன்.
என்னை நினைக்க மனமில்லாத பம்மலார்,கார்த்திக்,ஜோ போன்ற சகோதரர்களையும் நினைக்கிறேன்.
எனக்கு சின்ன பிறந்த நாள் பரிசாக பம்மலாரின் வரவிருக்கும் பொக்கிஷத்திற்கு முன்பதிவு செய்யுமாறு திரி நண்பர்களை வேண்டுகிறேன்.
இன்று பிறந்த நாள் காணும் என் உடன் பிறந்த சகோதரர், நடிகர்திலக மதம் சார்ந்த சகா,இந்திய திரையுலகின் பெருமை மிகு கலைஞன் கமலுக்கு என் வாழ்த்துக்கள்.
இந்த பிறந்த நாள் விருந்து ராகவேந்தரின் நடிகர்திலகம் பதில்கள்,வாசுவின் விஜயன்(ம்),கமல் சொன்ன வாசுவின் பதிவு,எல்.எஸ் இன் திரிசூலம் .ஆசை தீர சுவைத்தேன்.
adiram
7th November 2013, 08:10 PM
என்னை நினைக்க மனமில்லாத பம்மலார்,கார்த்திக்,ஜோ போன்ற சகோதரர்களையும் நினைக்கிறேன்.
Mr, S.Gopalji,
I think Mr.Karthik is absent from the thread before Deepavali itself. After his Item Post about 'Vijayashree' (in Babu), he did not come here. So, he may not know about your birthday.
Our Pammalar is permenant absent nowadys, due to pre-occupation of his 'Malar Works'.
Russellfcv
7th November 2013, 08:16 PM
கோபால் சார் அவர்களுக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ! Better late than never !
Ls
Russelldwp
7th November 2013, 08:35 PM
நடிகர் திலகத்தின் பால் அளவற்ற பாசமும் அன்பும் வைத்துள்ள ரசிகர்கள், உணர்ச்சி வசப் படுவது இயற்கையே. ஆனால் அந்த உணர்ச்சி வசத்தால் அவர்கள் உந்தப் பட்டு எடுக்கும் முடிவுகள் மிகவும் மன வருத்தத்தினை அளிக்கின்றன. நடிகர் திலகத்தின் சிலை தொடர்பாக பேசிக் கொண்டிருந்த ஒரு ரசிகர் உணர்ச்சி மேலீட்டால் விபரீத முடிவிற்கு சென்றதாகவும் சுற்றியிருந்த நமது மற்ற நண்பர்கள் நல்ல வேளையாக அதனை தொடக்கத்திலேயே தடுத்து அவரைக் காப்பாற்றி விட்டதாகவும் செய்தி வந்துள்ளது.
நடிகர் திலகத்தின் சிலை தொடர்பாக எந்த வித விபரீத முடிவிற்கும் ரசிகர்கள் செல்ல வேண்டாம் என தனிப்பட்ட முறையில் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இதில் இப்போது இருக்கும் நிலையே தொடரவும் சிலை அங்கேயே தொடர்ந்து இருக்கவும் தேவையான சட்டபூர்வமான நடவடிக்கைகள் வழக்கறிஞர்கள் மூலமாக சம்பந்தப் பட்டவர்களால் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தெரிகிறது. இது வழ்க்காடு நிலையில் உள்ளதால் தயவு செய்து ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும். நல்லதே நடக்கும் என நம்புவோம்.
நடிகர் திலகத்தின் சிலையை பாதுகாக்க கும்பகோணத்தை சார்ந்த சிவாஜி பக்தர் ஒருவர் விபரீத செயலில் ஈடுபட்டு மருத்துவ மனையில் இருக்கிறார்.
அவர் பூரண் குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். தி ஹிந்து நாளிதழ் செய்தி உங்கள் பார்வைக்கு
2689
omeuforivo
7th November 2013, 09:26 PM
Happy Birthday Gopal Sir..(on the birthday of Kamal Haasan)
RAGHAVENDRA
7th November 2013, 11:08 PM
இது வரை பார்க்காதவர்களுக்காக, டிவிடி முகப்பு நிழற்படம்
https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash4/q71/s720x720/1424291_603171073076718_711479100_n.jpg
நன்றி முகநூல் நண்பர் பாபு கோவிந்த்
Murali Srinivas
7th November 2013, 11:44 PM
வாசு சார்,
இயக்குனர்கள் வரிசையில் கே.விஜயனைப் பற்றி எழுதியிருந்தது அவரின் அனைத்துப் படங்களைப் பற்றியும் cover செய்திருந்தது எல்லாமே சுவாரஸ்யமாக இருந்தது.ஒரு காலத்தில் off beat films அல்லது parallel cinema என்ற வகையை சார்ந்த படங்களை இயக்குவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்த விஜயன் [அது பாதை தெரியுது பார் நிமாய் கோஷ் ஏற்படுத்திய தாக்கம்] பின்னாட்களில் முழு நேர commercial இயக்குனர் ஆக மாறிப் போனார்.ஆனால் ஆரம்ப நாட்களில் காவல் தெய்வம் போன்ற படங்களை இயக்குவதில்தான் அவருக்கு ஆர்வம் இருந்தது.
1976 அக்டோபரில் தீபம் படத்தை தயாரிக்க பாலாஜி முடிவெடுத்தபோது அவரின் ஆஸ்தான இயக்குனர்களான ACT மற்றும் CVR ஆகியோரை அவர் consider செய்யவில்லை. நடிகர் திலகத்தை வைத்து இயக்கிய வேறு இயக்குனர்களையும் அவர் தேடவில்லை. அன்று புதுமையான small பட்ஜெட் படங்களை இயக்கி அதன் மூலம் புகழேணியில் ஏறிக் கொண்டிருந்த Sp.முத்துராமன் அவர்களையும் அதே போன்று மாதவனின் associate இயக்குனர்களாக தொழில் கற்று தனியாக வந்து உறவு சொல்ல ஒருவன் மற்றும் அன்னக்கிளி ஆகிய படங்களின் மூலமாக தங்களை நிலை நிறுத்திக் கொண்ட இரட்டையர்கள் தேவராஜ் மோகன் ஆகியோரைத்தான் பாலாஜி கேட்டார். மோகம் முப்பது வருஷம் சொந்தமடி நீ எனக்கு போன்ற படங்களை இயக்குவதில் பிஸியாக இருந்த Sp.M அதே போல உறவாடும் நெஞ்சம் மற்றும் கவிக்குயில் ஆகிய படங்களை இயக்கிக் கொண்டிருந்த தேவராஜ் மோகன் ஆகியோருக்கு பாலாஜி கேட்ட ஏக் தம் கால்ஷீட்டில் படத்தை முடிக்கும் தேதிகள் சரிப்பட்டு வரவில்லை. அந்த நேரத்தில்தான் ரீலீசிற்கு தயாராகிக் கொண்டிருந்த ரோஜாவின் ராஜா படம் பற்றியும் அதன் இயக்குனர் விஜயன் பற்றியும் கேள்விப்பட்ட பாலாஜி விஜயனை ஒப்பந்தம் செய்து தீபம் படத்தை துவக்கினார். அதிலிருந்து கமர்ஷியல் ரூட்டிற்கு மாறினார் விஜயன்.
இருந்த போதினும் commercial பாதையிலிருந்து சற்றே விலகி தூரத்து இடி முழக்கம் போன்ற படங்களை எடுத்தார். [1979-ல் இனிக்கும் இளமை மூலம் அறிமுகமான விஜயகாந்த் தொடர்ந்து அகல் விளக்கு, தூரத்து இடி முழக்கம் போன்ற படங்களில் நடித்தார். ஆனால் அவை வெற்றி பெறவில்லை. பின்னர் SAC வந்து 1981-ல் அவருக்கு சட்டம் ஒரு இருட்டறையை கொடுத்தார்]. ரத்த பாசத்தில் பிரிந்து மீண்டும் பந்தம் ஏற்பட்டாலும் விஜயனால் பழைய புகழை பெற முடியவில்லை.
அவரை அருமையாக நினைவு கூர்ந்ததற்கு நன்றி.
ஆடைகளுக்கேற்ற ஆணழகன் தொடரைப் பற்றி புதிதாய் என்ன சொல்லி விடப் போகிறேன்? வழக்கம் போல் கலக்கல்!
தொடருங்கள்!
அன்புடன்
rajeshkrv
8th November 2013, 02:38 AM
http://www.youtube.com/watch?v=MmYciykHXMM
ScottAlise
8th November 2013, 07:43 AM
Full movie
http://www.youtube.com/watch?v=UUzTJGNsPJo
RAGHAVENDRA
8th November 2013, 07:58 AM
டியர் ராஜேஷ்
சன் லைப் தொலைக்காட்சியில் நடிகர் திலகத்தின் பிறந்த நாளையொட்டி திரு மோகன் ராம் அவர்கள் நடிகர் திலகத்தின் திரைப்படங்களின் வெற்றி மற்றும் சாதனை விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். அதற்கு பின்னணியில் நமது முரளி சாரின் உழைப்பு இருக்கிறது. பல தகவல்களை முரளி சார் தந்துள்ளார். அன்று முழுதும் வீட்டில் இருக்க முடியவில்லை என்பதால் இந் நிகழ்ச்சியைப் பார்க்க முடிய வில்லை. தற்போது அதனை இங்கு பகிர்ந்து கொண்டு அந்தக் குறையைப் போக்கி விட்டீர்கள். மிக்க நன்றி.
RAGHAVENDRA
8th November 2013, 08:02 AM
ராகுல்
தாம்பத்யம் திரைப்படம் நல்ல கதை அம்சம், நல்ல ஒளிப்பதிவு, நல்ல இயக்கம். நடிகர் திலகத்தின் நல்ல நடிப்பு, என்றாலும் அவருடைய உடல் நலம் குன்றியிருந்த காலத்தில் எடுக்கப் பட்டதால் பொலிவை இழந்ததாகும். நடிகர் திலகத்தின் ஒப்பனை, காஸ்ட்யூம் போன்றவை இப்படத்தின் மிகப் பெரிய பலவீனம். பொருந்தாத உடை அமைப்புகள் சில காட்சிகளில் நம்மை சலிப்பூட்டும். அவருடைய உழைப்பு இப்படத்தில் வீணடிக்கப் பட்டிருக்கும்.
இப்படி பல குறைகளை மீறி ராதா இறக்கும் காட்சியில் அவருடைய மிதமான நடிப்பு கவனிக்கத் தக்கது. தன்னால் எந்த விதமான நடிப்பையும், எந்த தலைமுறை விரும்பும் நடிப்பையும் தர முடியும், அதே சமயத்தில் அந்தக்கதாபாத்திரத்தின் தன்மையையும் முழுமைப் படுத்த முடியும் என்று நிரூபித்துள்ளது அந்தக் காட்சி.
தாம்பத்யம் திரைப்படத்தைப் பற்றி நமது வாசு சாரின் பதிவினைப் பார்க்கவும். மிகச் சிறப்பாக அதன் நிறை குறைகளைச் சொல்லியிருப்பார்.
RAGHAVENDRA
8th November 2013, 08:04 AM
நடிகர் திலகத்தின் திரைப்படங்களைத் திரையரங்குகளில் பார்க்க வேண்டும். அதற்குள் நுழைந்து விட்டால் நம்முடைய உலகமே வேறு.
ஆம், இது வேறுலகம், தனியுலகம்...
அடுத்து நம் திரைப்படப் பட்டியல் திரியில்...
Harrietlgy
8th November 2013, 09:35 AM
சிவாஜி சிலையை அகற்ற எதிர்ப்பு : குடந்தையில் ரசிகர் தீக்குளிப்பு என்ற செய்தி படித்து வருத்தம் அடைந்தேன். சிவாஜி ஜெயக்குமார் என்ற அவர் குணமடைய வேண்டும் என இறைவனை வேண்டுவோம்.
செய்திக்கான லிங்க் :
http://www.dinamalar.com/news_detail.asp?id=844639
Gopal.s
8th November 2013, 09:42 AM
அவருடைய உடல் நலம் குன்றியிருந்த காலத்தில் எடுக்கப் பட்டதால் பொலிவை இழந்ததாகும். நடிகர் திலகத்தின் ஒப்பனை, காஸ்ட்யூம் போன்றவை இப்படத்தின் மிகப் பெரிய பலவீனம். பொருந்தாத உடை அமைப்புகள் சில காட்சிகளில் நம்மை சலிப்பூட்டும். அவருடைய உழைப்பு இப்படத்தில் வீணடிக்கப் பட்டிருக்கும்.
ஓஹோஹோ, 305 முத்துக்களில் ஒன்று சொத்தையாமோ.. வாந்தி எடுப்பது போன்ற சிரஞ்சீவி காட்சி ,(ஒரு திரியை களங்க படுத்த.அது இலக்கணமாம்.இது போன்ற ஆட்களுக்கு....)சிரஞ்சீவி என்ற கேவலத்தை பார்த்தால் ,உலகத்தில் அனைத்து படங்களும் சிறப்பே. தாம்பத்யம் உட்பட. சிரஞ்சீவியை போட்டு திரியை அசுத்த படுத்திய உம்மை..... நற.....நற.....
vasudevan31355
8th November 2013, 10:48 AM
டியர் முரளி சார்,
தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி! பாலாஜி தீபத்திற்காக தேடிய இயக்குனர்களின் விவரங்கள் சுவை. இது போன்ற பல பேருக்குத் தெரியாத மேலதிக விவரங்களை அருமையாக அளிக்கும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
parthasarathy
8th November 2013, 11:07 AM
Dear Mr. Gopal,
Belated happy returns of the day.
Regards,
R. Parthasarathy
KCSHEKAR
8th November 2013, 12:14 PM
சிவாஜி சிலையை அகற்ற எதிர்ப்பு : குடந்தையில் ரசிகர் தீக்குளிப்பு என்ற செய்தி படித்து வருத்தம் அடைந்தேன். சிவாஜி ஜெயக்குமார் என்ற அவர் குணமடைய வேண்டும் என இறைவனை வேண்டுவோம்.
செய்திக்கான லிங்க் :
http://www.dinamalar.com/news_detail.asp?id=844639
தீக்குளித்த திரு.ஜெயக்குமாரிடம் தொடர்புகொண்டு பேசினேன். சிறு காயங்களுடன் அவர் தப்பியது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
ஆனாலும், தீக்குளிப்பது போன்ற செயல்கள் நம் நடிகர்திலகமே விரும்பாத ஒன்றாகும்.
நான் சமீபத்தில் திருப்பூர் சென்றிருந்தபோது ஒரு நண்பர் என்னிடம் அளித்த விசிட்டிங் கார்டில் இருந்த வாசகம் என்னை ஈர்த்தது. (உங்களை ஒருநாள் மறந்திருந்தால் அந்நாள் நான் இறந்திருப்பேன் - எழுத்துப் பிழை உள்ளது)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Tirupur/TirupurVisitingCard_zpsf6faac40.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Tirupur/TirupurVisitingCard_zpsf6faac40.jpg.html)
நடிகர்திலகம் அவர்கள் இருக்கும்போதும், மறைந்து 12 ஆண்டுகள் ஆன பிறகும், எந்தப் பலனையும் எதிர்பாராத இத்தகைய தீவிர பற்றுகொண்ட ரசிகர்களைப் பெற்றிருப்பது அவருடைய கலைத் தொண்டிற்குக் கிடைத்த மரியாதை / கெளரவம் / பெருமை எனலாம்.
Gopal.s
8th November 2013, 01:37 PM
டியர் முரளி சார்,
தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி! பாலாஜி தீபத்திற்காக தேடிய இயக்குனர்களின் விவரங்கள் சுவை. இது போன்ற பல பேருக்குத் தெரியாத மேலதிக விவரங்களை அருமையாக அளிக்கும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
உண்மையான விவரம். பாலாஜி முதலில் அணுகியது தேவராஜ் மோகனை. அவர்கள் எதனாலோ மறுத்து விட அடுத்து அணுகியது சி.வீ.ஆர் ஐத்தான் .அவர் ஈகோ hurt ஆனதால், subject பிடிக்கவில்லை என மறுத்து விட பிறகு விஜயன் வந்தார். இது அத்தனையும் உண்மையான உண்மை.
Gopal.s
8th November 2013, 01:41 PM
Thanks Ganse, Parthasarathy,S.L.
RAGHAVENDRA
8th November 2013, 02:57 PM
ஓஹோஹோ, 305 முத்துக்களில் ஒன்று சொத்தையாமோ.. வாந்தி எடுப்பது போன்ற சிரஞ்சீவி காட்சி ,(ஒரு திரியை களங்க படுத்த.அது இலக்கணமாம்.இது போன்ற ஆட்களுக்கு....)சிரஞ்சீவி என்ற கேவலத்தை பார்த்தால் ,உலகத்தில் அனைத்து படங்களும் சிறப்பே. தாம்பத்யம் உட்பட. சிரஞ்சீவியை போட்டு திரியை அசுத்த படுத்திய உம்மை..... நற.....நற.....
நண்பர்களே,
பொறுமை கடலினும் பெரிது என்பர். அந்தக் கடலையும் வற்ற வைக்கும் அளவிற்கு நெருப்பை உமிழும் எழுத்துக்களால் நடிகர் திலகம் என்னும் உன்னதக் கலைஞனை களங்கப் படுத்துவதை நான் இனிமேல் ஏற்க முடியாது.
மய்யம் என்பது பொதுவான விவாத மேடை. ஒருவருக்கு பிடித்தது இன்னொருவருக்கு பிடிக்காமல் போகலாம். அது நியாயமே. அதற்காக அளவிற்கு மீறி தன் கருத்தில் வன்மத்தைத் திணித்தால் அது ஏற்க முடியாது. இது ஒருவருடைய தனி உடமைச் சொத்து அல்ல. இங்கு எனக்குப் பிடித்ததை நான் எழுத எனக்கு உரிமை உண்டு. தன் மனதில் தோன்றுவதை எழுத அவரவர் தனியாக புத்தகத்தை எழுதட்டும். அல்லது தனியாக இணைய தளத்தை உருவாக்கி எழுதிக் கொள்ளட்டும். அங்கு தனக்கு வேண்டியவர்களுக்கு அழைப்பு விடுத்து கருத்துக்களைப் பகிரந்து கொள்ளட்டும். இதை விட்டு இங்கு வந்து சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்வது நியாயமில்லை.
என்னைப் பொறுத்த வரையில் நடிகர் திலகத்தின் அத்தனை படங்களிலும் அவர் நடிப்பை நான் ரசிக்கிறவன், தாம்பத்யம் உள்பட. அதனை முன்னர் ஒரு காட்சியைக் குறிப்பிட்டு எழுதியுள்ளேன்.
திரும்பத் திரும்ப இதே போல எழுதிக் கொண்டிருக்கிறார். அவர் வேண்டுமென்றே எழுதுவதைப் பார்த்தால் நான் இங்கு எழுதக் கூடாது என அவர் சபதம் எடுத்திருப்பதைப் போலத் தெரிகிறது. அதற்கு அவருக்குத் துணையாய் சிலர் இருப்பதாகவும் எனக்கு மனதில் படுகிறது.
கோபாலின் அணுகுமுறையை ஏற்றுக் கொள்கிறவர்கள் இருக்கும் வரை நான் இங்கு எழுதுவதில் அர்த்தமில்லை.
anasiuvawoeh
8th November 2013, 03:44 PM
KCS sir,you have rightly pointed it out that immolation attempts were never supported by NT,but let us salute Mr.Jayakumar, let our people fight the issue in other methods.I prey for his speedy recovery.
Marionapk
8th November 2013, 07:22 PM
Ragavender sir please don' t take seriously our gopal sir comments/comedy you are the crown of fans of acting god nadigarthilagam gopal sir always jovial person with vide knowledge making others to bring this thread with energetic
mood to nadigarthilagam fans
Gopal.s
8th November 2013, 08:23 PM
நண்பர்களே,
மய்யம் என்பது பொதுவான விவாத மேடை. ஒருவருக்கு பிடித்தது இன்னொருவருக்கு பிடிக்காமல் போகலாம். அது நியாயமே. அதற்காக அளவிற்கு மீறி தன் கருத்தில் வன்மத்தைத் திணித்தால் அது ஏற்க முடியாது. இது ஒருவருடைய தனி உடமைச் சொத்து அல்ல. இங்கு எனக்குப் பிடித்ததை நான் எழுத எனக்கு உரிமை உண்டு. தன் மனதில் தோன்றுவதை எழுத அவரவர் தனியாக புத்தகத்தை எழுதட்டும். அல்லது தனியாக இணைய தளத்தை உருவாக்கி எழுதிக் கொள்ளட்டும். அங்கு தனக்கு வேண்டியவர்களுக்கு அழைப்பு விடுத்து கருத்துக்களைப் பகிரந்து கொள்ளட்டும். இதை விட்டு இங்கு வந்து சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்வது நியாயமில்லை.
ஆஹா ,அருமையான யோசனை. அதைத்தான் செய்ய போகிறேன் வேந்தரே. பொது மேடை என்பது இப்போதுதான் புரிகிறதோ?அதை எழுதாதே இதை எழுதாதே என்று என்னை,கார்த்திக் சாரை,ஜோ சாரை,முரளியை மிரட்டிய போது புரியவில்லையா?
நாங்கள் கஷ்ட பட்டு உழைத்து அவரை பற்றி புரிய வைக்க முயலும் போது, அவரின் தோற்றம், கதையமைப்பு, நடிப்பு ,படமாக்கம் எதிலும் உதவாத படங்களை போட்டு ,தேவையில்லாமல் பிடிவாதம் பிடிக்கும் உங்களுடன் இன்னுமா உறவாட போகிறேன்?
இதில் வேறு நான் ஆள் வைத்து கொண்டிருக்கிறேனாம். நான் எதில் irritate ஆவேன் என்று தெரிந்தே ஸ்கூல் of acting திரியில் நீங்கள் பண்ணிய திரிசம வேலையெல்லாம்....
வேண்டாம் விடுங்கள். உங்கள் மேல் கொண்ட மரியாதையினால் கேவலமான கெட்ட வார்த்தையை சொல்லாமல் தவிர்க்கிறேன்.
chinnakkannan
8th November 2013, 08:30 PM
கிட்டத் தட்ட பதினான்கு ஆண்டுகள் ஆகி விட்டன என நினைக்கிறேன்.. இந்த மன்ற மையம் ஃபாரம் ஹப் என்று வந்து கொண்டிருந்த வேளை..
எனக்குப் பிடித்த திரிகளான மிஸ்ஸ்லேனியஸ் போயம்ஸ் என்ற திரிகளைப் படித்துக் கொண்டிருந்த காலம்..உதயா குழ்ந்தைவேலு என்ற கவிஞர் ஆங்கிலக் கவிதை எழுதிக் கொண்டிருந்தார்.. மற்றவர்களும்.. நான் மெளன ரசிகனாய் இருந்தேன்.. இருந்தும் என்னையும் பேச வைத்து எழுதவும் வைத்தவர் ஒரு நபர்..
அவர் பெயர் சிவக்குமார்..அதற்கு முன் உதயா எழுதிய கவிதையின் தமிழாக்கம்..
அந்தப் பெண் என்
பதினாலாவது மாடி ஃப்ளாட்டிற்கு எதிர்
பில்டிங்கில் அதே மாடியில்
உள்ள அலுவலகத்தில் இருக்கிறாள்..
தினமும் காலை என் அலுவலகத்திற்கு
வந்தேனென்றால் ஜன்னலில் இருந்து பார்க்கையில்
அவள் தெரிவாள்..
அன்றும் அப்படித் தான்
என் ப்ரேக்பாஸ்டிற்கான சாண்ட்விச்சைக்
கையில் வைத்தபடி ஜன்ன்லில் பார்த்த போது
அவள் தெரிந்தாள்..
பார்வையில் கலவரம்
ஒரு வித அமைதியின்மை..
ஒவ்வொரு முறை டெலிஃபோன் ஒலிக்கும் போதும்
தாவிச் சென்று எடுப்பதும்
பின் ஏமாந்து அமர்வதும் என..
நானும் பார்த்துக் கொண்டிருந்தேன்.
என்னாயிற்று அவளுக்கென..
பத்தாவது தடவை போன் ஒலிக்க
அவள் எடுக்க
அவள் முகம் மலர்ந்தது.
நாற்காலியில் அமர்ந்து
ஒரு கண் மூடி
செவ்வாயில் முத்துப் பூக்கள் மலர்ந்திட
சிரித்துச் சிரித்துப் பேசும்
அவளைப் பார்க்கையில் எனக்குப்
புலப்பட்டது ஒன்றே ஒன்று
தெய்வீகம்...
*
இதை உதயா எழுதிப் போட்டிருக்க சிவக்குமார் என்ன எழுதியிருந்தார்.. யோவ் உதயா
உன்னால் என்ன பிரயோசனம்..உன் கவிதையால் உலகத்திற்கு என்ன உபயோகம்..ஒய் டிட் யூ ரைட்..
என்றெல்லாம்..
படித்த எனக்கே பிபி எகிறியதென்றால் எழுதிய கவிஞருக்கு எப்படி இருந்திருக்கும்.
நான் என்ன செய்தேன்.ம்ம் அதை அடுத்த போஸ்டில் சொல்கிறேனே..
chinnakkannan
8th November 2013, 08:37 PM
நான் என்ன செய்தேன்..ம்ம் மக்களின், மன்றமைய வாசகர்களின் போறாத காலம் எனச் சொல்லலாம் ;) எனது எழுதும் ஆசையை அவிழ்த்து விட்டேன்..
என் கற்பனைக் கன்றுக்குட்டி கோபத்தில் கட்டவிழ்த்து நகராட்சித் தண்ணீர் லாரிகள் போலத் தாறுமாறாய் ஓடியது..விழுந்தது ஒரு பதிவு..
எனக்கு ரோஜா பிடிக்கும்
என் மனைவிக்கு முல்லை
என் நண்பனுக்கு மரிக்கொழுந்து..
அவரவர் ரசனைக்கேற்ப பூக்களைப் பிடிப்பது
தப்பில்லை..
அதற்காக மரத்தையே பூக்காதே என்றால்
எப்படி..
அர்ச்சிக்கப் படும் பூக்களில்
சிலசமயம்
முட்களும் கலந்திருக்கும்
அதற்காக ஆண்டவன் கவலைப் படுவதில்லை..
உதயா கீப் இட் அப் என எழுதிப் போஸ்ட் செய்யப் போகையில் ஒரு குழப்பம்..என் பெயர் கண்ணன் ரா.. அப்ப்படியே நிறைய பேர் இருக்கிறார்கள்
புனைபெயரில் அழகான பெண்கள் பெயர்களை பல எழுத்தாளர்கள் வைத்துக் கொண்டு விட்டார்கள்..எனில் டிஃபரன்ஷியேட்ட் செய்வதற்காக கே.ஆர்.ஐயங்கார்
என எழுதிப் போஸ்ட் செய்து விட்டேன்..(சின்னக் கண்ணன் என்பது பிற்பாடு வைத்துக் கொண்டது).. சில நிமிடங்களிலேயே எனது மெய்லிற்கு
உதயாவிடமிருந்து பதில். நன்றி நவின்று..
ஆமாம் இதை நான் எதற்கு இங்கு சொல்கிறேன்..
chinnakkannan
8th November 2013, 08:48 PM
//அவரவர் ரசனைக்கேற்ப பூக்களைப் பிடிப்பது
தப்பில்லை..
அதற்காக மரத்தையே பூக்காதே என்றால்
எப்படி..// இந்த வார்த்தைகளுக்காக.. இங்கோ மரமோ பூக்க மாட்டென் என்கிறது.. அஃப்கோர்ஸ் ராகவேந்தர் சார் சற்றே குண்டாக இருக்கலாம்..இருந்தால் ஆலமரம் எனலாம்..;) ராகவேந்தர் சாரைப் பொறுத்தவரை அவருடைய எண்ணங்கள் சிவாஜியின் எல்லா நடிப்பும் பிடிக்கும்..கோபால், சின்னக் கண்ணன் போன்றோருக்கு செலக்டிவ்வாகப் பிடிக்கும் அவ்வளவே..
ராகவேந்தர் சார்.. நீங்கள் எழுதவேண்டியதை எழுதுங்கள்.. அது உங்கள் கருத்து. மாற்றுக் கருத்தாக கோபால் அவர் கருத்தை சொல்லி வருகிறார்.. எங்களுக்கெல்லாம் மாற்றுக் கருத்துச் சொல்ல வராது.. எனில் நாங்கள் எல்லாம் சின்ன வெள்ளைப் புறாக் குட்டிகள் :)
நடிகர் திலகம் ஒரு இமயமான உயர்ந்த நடிகர். அவர் சில வேளைகளில் சில படங்களில் சில விதங்களில் சில சந்தர்ப்பங்களில் நடித்திருந்தது அவருக்கே பிடிக்காமல் இருந்திருக்கும்..இருந்திருக்கலாம். எனில் நான் சொல்ல வருவது என்னவென்றால் (ஹாஆஆவ்வ்வ் :) )
(கடைசியில் ரவி சார் பாணியில் nt பற்றி ஒரு வரி எழுதிவிட்டேன் :) )
rajeshkrv
9th November 2013, 03:58 AM
//அவரவர் ரசனைக்கேற்ப பூக்களைப் பிடிப்பது
தப்பில்லை..
அதற்காக மரத்தையே பூக்காதே என்றால்
எப்படி..// இந்த வார்த்தைகளுக்காக.. இங்கோ மரமோ பூக்க மாட்டென் என்கிறது.. அஃப்கோர்ஸ் ராகவேந்தர் சார் சற்றே குண்டாக இருக்கலாம்..இருந்தால் ஆலமரம் எனலாம்..;) ராகவேந்தர் சாரைப் பொறுத்தவரை அவருடைய எண்ணங்கள் சிவாஜியின் எல்லா நடிப்பும் பிடிக்கும்..கோபால், சின்னக் கண்ணன் போன்றோருக்கு செலக்டிவ்வாகப் பிடிக்கும் அவ்வளவே..
ராகவேந்தர் சார்.. நீங்கள் எழுதவேண்டியதை எழுதுங்கள்.. அது உங்கள் கருத்து. மாற்றுக் கருத்தாக கோபால் அவர் கருத்தை சொல்லி வருகிறார்.. எங்களுக்கெல்லாம் மாற்றுக் கருத்துச் சொல்ல வராது.. எனில் நாங்கள் எல்லாம் சின்ன வெள்ளைப் புறாக் குட்டிகள் :)
நடிகர் திலகம் ஒரு இமயமான உயர்ந்த நடிகர். அவர் சில வேளைகளில் சில படங்களில் சில விதங்களில் சில சந்தர்ப்பங்களில் நடித்திருந்தது அவருக்கே பிடிக்காமல் இருந்திருக்கும்..இருந்திருக்கலாம். எனில் நான் சொல்ல வருவது என்னவென்றால் (ஹாஆஆவ்வ்வ் :) )
(கடைசியில் ரவி சார் பாணியில் nt பற்றி ஒரு வரி எழுதிவிட்டேன் :) )
சி.க சொன்னது போல நீங்கள் எழுதுவதை எழுதுங்கள், அவர் எழுதுவதை எழுதட்டும். மய்யத்தில் பல திரிகள் "monopoly" ஆகிவிட்டன. இப்படித்தான் எழுதவேண்டும் என்று நிர்பந்திப்பவர்கள் தான் அதிகம்.. இந்த திரியும் அப்படி ஆகிவிட வேண்டாம். இப்படி சண்டைகள் வந்ததால் தான் பல திரிகள் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கின்றன..
Gopal.s
9th November 2013, 06:43 AM
என் உற்ற நண்பன் வாசு கூட இந்த விஷயத்தில் சிறிதே சறுக்கி விட்டார். ராகவேந்தர் மனம் கோண கூடாதே என்று நானும் ,முரளியும் பதிவுகளை நீக்கினோம்.(இன்று பொது,யார் வேணும்னாலும் எது வேணும்னாலும் எழுதலாம் என்று பேசும் வாய் அன்று எங்களை பிரஷர் கொடுத்தது என்ன ஜனநாயகம்?)
வாசுவிடம், நடிப்பிலக்கணம் திரியில் தரமற்ற பதிவுகள் வந்தால் எங்கள் உழைப்பே நகைப்புக்குரியதாகும் என மரியாதையுடன் வேண்டி கேட்டும் ,எந்த மதிப்பும் கொடுக்கவில்லை என்றால் ,ராகவேந்தர் என்ன வேண்டுமானாலும் கோஷ்டி சேர்த்து ஆடலாம், நான்,முரளி,கார்த்திக், ஜோ போன்றார் அவருக்கடங்கி எங்கள் கருத்துக்களை வெளியிட வேண்டும்.என்ன அநியாயம்?
(நல்ல துவைத்து அயர்ன் பண்ணி போட்ட என் favourite சட்டையில்,காக்கை எச்சமிட்டது போல வந்த சிரஞ்சீவி பதிவு???அதிலும் கண்ட்றாவி visual வேறு????????????????????)
Gopal.s
9th November 2013, 07:06 AM
நடிகர்திலகத்தை தெய்வமாக தொழுபவன் நான். அவருக்கு மீறி ஒரு நடிகன் பிறந்ததும் இல்லை,பிறக்கவும் இல்லை,பிறக்க போவதும் இல்லை. ஆனால் எல்லா படங்களிலும் அவர் பங்களிப்பு சூப்பர் என்பதை, அவர் பக்தர்களே ஒப்ப மாட்டார்கள். தர்மராஜா படத்தில் நடிக்க ,அவர் என்ன கராத்தே கற்று பாத்திரத்தை justify பண்ணினாரா?அமர காவியம் போன்ற படங்களில் ஏனோதானோ என்று வந்து போகவில்லையா?சிரஞ்சீவி போன்ற படங்களை பார்த்து நொந்து போனது எத்தனை ரசிகர்கள்? ஓங்கி சொல்கிறேன். 81 க்கு பிறகு வந்த 90% படங்கள் தரமற்ற குப்பைகளே. அவற்றில் நடித்ததற்கு ,நடிகர்திலகத்தை மன்னிக்கவே முடியாது. அவர் நடிப்பும் பெரிய imaginative ஆக,அவர் திறமைக்கேற்ப அமையவில்லை. அதை பற்றி ராகவேந்தர் எங்கு,எப்போது எழுதினாலும் என் எதிர் கருத்து வரத்தான் வரும்.
Gopal.s
9th November 2013, 08:52 AM
சிவந்த மண்- 1969 -சில நினைவுகள்.(9th Nov )
ஆயிரம் படங்கள் வரலாம்,போகலாம், ஆனால் ,சில படங்கள் குறிஞ்சி மலர் போல மனதில் தங்கி, நினைக்கும் தோறும் இனிக்கும்.
தமிழ் திரை பட உலக சரித்திரத்திலேயே இவ்வளவு hype உடன் வெளியான இரண்டே படங்கள் சந்திரலேகா, சிவந்த மண் .இரண்டும் பெரும் பொருட்செலவில் தயாரிக்க பட்ட பிரம்மாண்டங்கள். முதல் முறை வெளிநாட்டில் தமிழ் படம். ஹேமமாலினி நடிப்பதாக இருந்த படம்.(கஸ்டடி battle கோர்ட் கேஸ் இருந்ததால் ஹேமா மாலினி நடிக்க முடியவில்லை. பெரிதும் வருந்தி தமிழில் ஒரே படம்தான் நடிப்பேன்.அது சிவாஜி கணேசனுடன்தான் என்று பேட்டி கொடுத்தார்). 1967 என்று நினைவு. சிவாஜி,ஸ்ரீதர் கலந்து கொண்ட கூட்டத்தில் ,ஸ்ரீதர் இந்த படத்தை அறிவித்து ,தமிழிலேயே முத்த காட்சி இடம் பெற போகும் முதல் படமாக இருக்கும் என்றார். பின்னால் பேசிய சிவாஜி, அதெல்லாம் சரிதான்,என் மனைவி இருக்கும் போதா இதை சொல்வது என்று ஜோக் அடித்தார். தமிழ் நாடே திரு விழா கோலம் பூண்டு இந்த படத்தை வரவேற்றது. சிவாஜி வேறு ஆனந்த விகடனில் "அந்நிய மண்ணில் சிவந்த மண்" என்ற தொடர் எழுதி இருந்தார்.
சிவந்த மண் போல் பிரம்மாண்டம் கொண்ட படம் ,இந்திய திரையுலகம் இது வரை கண்டதில்லை. வெளி நாடுகள்(அதுவும் ஐரோப்பிய) படபிடிப்பு, கப்பல்,ஹெலிகாப்ட்டர், காட்டாறு,சுழல் மேடை என்று ஏக தட புடல். படமும் மிக மிக பிரம்மாண்ட வெற்றி படமாய் பத்து திரையரங்குகளில் நூறு நாள் கண்டது. பெரும்பான்மையான திரையரங்குகளில் ஐம்பது நாட்களும், repeat ரன்களில் பிரமாதமாய் ஓடி(பைலட் தியேட்டரில் 80 களில் 75 நாட்கள்)
எனக்கு தெரிந்த எந்த சிவாஜி படத்திலும்,heroine அறிமுகம் ஆகும் முதல் காட்சி இவ்வளவு அமர்க்களமாய் வரவேற்பு பெற்றதில்லை.(காஞ்சனா போன் பேசும் காட்சி). சிவந்த மண்ணின் சிறப்பே அதுவரை வந்த action படங்களில் இருந்து மாறு பட்டு ,கதாநாயகன் திட்டமிடுவார். வில்லன் ரியாக்ட் செய்வார். திட்டங்கள் படு சுவாரஸ்யமாய் ,படம் விறு விறுப்பாய் செல்ல உதவும். மூன்று மணி நேர இன்ப பயணம்.helocopter fight , கப்பல் வெடிகுண்டு காட்சி,தொடரும் சேஸிங், பட்டத்து ராணி, ரயில் பால வெடிகுண்டு காட்சி, அமர்க்களமாய் மாறி மாறி ஊசலாடும் உச்ச காட்சி என்று தமிழில் வெளி வந்த மிக மிக சிறந்த action ,adventure படமாய் இன்றளவும் பேச படுகிறது.
எம்.எஸ்.விஸ்வநாதனின் பங்களிப்பு இந்த படத்தின் பிரம்மாண்டத்தை தூக்கி நிறுத்தியது.(கார்த்திக் சார் சொன்னது போல் அவரின் மிக சிறந்த படம்)ஒரு ராஜா ராணியிடம், முத்தமிடும் நேரமெப்போ, ஒரு நாளிலே உறவானதே,பட்டத்து ராணி, பாவை யுவராணி கண்ணோவியம்,சொல்லவோ சுகமான என்று ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வகை பாணி,ஒவ்வொரு நாட்டு இசை கோர்ப்பு, பின்னணி இசை(முக்கியமாய் கப்பலில் ராதிகா டான்ஸ்,மாறும் காட்சிகளுகேற்ப மாறும் இசை,) ஹாட்ஸ் ஆப் எம்.எஸ்.வீ சார். உங்களுக்கு கடன் பட்டுள்ளோம்.
சிவாஜி இந்த படத்தில் மிதமான make -up ,natural hair style , rugged ,manly , subtle உடையலங்காரங்களில் படு படு படு இளமையாய், handsome ஆக இருப்பார்.காஞ்சனா பொருத்தமான ஜோடி. என் தூக்கத்தை பல இரவுகள் கெடுத்த romance சீன் ஒரு நாளிலே உறவானதே. ஒரு ஷாட்டில் கட்டி அணைத்து, சிவாஜி சொக்கி போவார்.எந்த வேடத்திலும் ,எப்படிபொருந்துகிறார் சிவாஜி?? அராபிய உடையிலும் !!! action ,ரொமான்சில் கூட சிவாஜியிடம் யாரும் நெருங்க முடிந்ததில்லை.
ஹெலிகாப்ட்டர் காட்சி ,கப்பல் காட்சி, ஜெயில் சண்டை காட்சிகள் மிக மிக சிறப்பாக வந்திருக்கும். தேங்காயுடன் விமான சண்டை,செஞ்சி கிருஷ்ணனுடன் ஆற்றில் சண்டை, உச்ச கட்ட பலூன் சண்டைகள் சொதப்பல். (ஷ்யாம் சுந்தர் down down ) .வெளி நாட்டு காட்சிகள் சிறப்பாக படமாக்க பட்டிருக்கும்.(ஓடம் பொன்னோடம் படமாக்கம் படு மோசம் . பனி சறுக்கு காட்சியில் இசை உச்ச வேகம் பிடிக்கையில் skate செய்து கொண்டிருப்பவர் நின்று விடுவார்!!)
ஸ்ரீதரின் திரைக்கதையமைப்பு புத்திசாலிதனமாய்,விறு விறுப்புடன் இருக்கும். இயக்கம் கேட்கவே வேண்டாம். சிவாஜி-ஸ்ரீதர் இணைவில் மிக சிறந்த படைப்பு இதுதான்.அடிமை பெண்ணிற்கு போட்டியாக வந்திருக்க வேண்டியது ,தீபாவளிக்கு தள்ளி போனது. அதனால் என்ன,நமக்குதான் தீபாவளி ராசியாயிற்றே.!!! இந்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து சிவாஜி பிலிம்ஸ் ஒரு படத்தை கீழை நாடுகளில் (ஜப்பான் உள்ளிட்ட) படமாக்க திட்டமிட்டு ,திட்டம் கசிந்து விட்டதால்,மாற்று முகாம் அள்ளிதரித்த அவசர கோலத்தில் முந்தி கொண்டது.(மணியன் என்ற ........)
vasudevan31355
9th November 2013, 08:53 AM
உற்ற நண்பர் கோபாலுக்கு,
தங்களுக்கு மீண்டும் என்னுடைய இதயபூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
நிச்சயமாக நீங்கள் நினைப்பது போல் அல்ல. எனக்கு ராகவேந்திரன் சாரும், நீங்களும் வெவ்வேறல்ல. இருவருமே சம நிலையில் மனதில் கோலோச்சுபவர்கள்தாம். இதில் அவர் ஒஸ்தி இவர் மட்டம் என்று என்றுமே நான் பார்த்ததில்லை. உங்களுக்குள் வாக்குவாதங்கள், பிரச்சனைகள் வந்த போது ஒரு நடுநிலையாளனாகத்தான் அதைத் தீர்க்க பாடுபட்டு வந்துள்ளேன். இதில் நான் சறுக்க வேண்டிய அவசியமே இல்லை. உங்களுக்குள் உள்ள பிரச்னை தீர்க்கப்படவேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் எனக்கு.
தாங்கள் நிச்சயமாக என் வேண்டுகோளின் படி அல்லது என் அன்புக் கட்டளையின்படி சில பிரச்சனைக்குரிய பதிவுகளை நீக்கியுள்ளீர்கள். அதற்கு மிகவும் நன்றி சொல்லக் கடமைப் பட்டவன் ஆகிறேன். திரியில் உங்கள் மனநிலைமையை ராகவேந்திரன் சாருக்கும், அவருடைய எண்ணங்களை உங்களுக்கும் பலமுறை ஒரு தூதுவனாக எடுத்துச் சொல்லியும் இருக்கிறேன்.
ஆனால் பிரச்னை என்பது ஏதாவது ஒரு வடிவில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சில பதிவுகள் வேண்டாம் என்பது தங்கள் கருத்து. ஏன் வேண்டாம் என்பது ரசிக வேந்தரின் கருத்து. இதில் சமாதான முயற்சியை ஓரளவிற்கு ஏன் அதற்கு மேலும் என்னால் ஆனதை நான் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செய்தும் இருக்கிறேன்.
என்னை விடுங்கள். இதில் நான் நியாயவாதி என்று சொல்வதற்காக இந்தப் பதிவல்ல.
இனி ஆக வேண்டியது என்ன என்று பார்ப்போம். நீங்கள் தரமான படங்களின் பதிவுகள் மட்டுமே வேண்டும் என்று நினைப்பவர். ராகவேந்திரன் சார் சுமாரான படங்களிலும் நடிகர் திலகம் கொடி நாட்டியுள்ளார் என்று வாதிடுபவர்.
இப்போது நீங்களே சொல்லுங்கள். இதில் எது நியாயம், எது அநியாயம் என்று நானோ அல்லது திரி நண்பர்களோ எப்படி முடிவெடுப்பது?
என்னுடைய மன நிலைமையில்தான் திரி நண்பர்களும் இருக்கக் கூடும் என்று நம்புகிறேன். அதனால்தான் ஒரு சிலர் தவிர பல நண்பர்கள் மௌனம் காத்தோ அல்லது பட்டும் படாமலுமோ ஒதுங்கிக் கொள்கிறார்கள்.
இப்படியே போனால் இதற்கு தீர்வுதான் என்ன? எதுவாய் இருந்தாலும் ஒரு முடிவு வேண்டுமல்லவா? அது ஒரு சுமூகமான தீர்வாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் ஆகும்.
ராகவேந்திரன் சாரும், நீங்களும் என்ன ஜென்ம பகையாளிகளா? இல்லையே! எதனால் உங்களுக்குள் கருத்து வேறுபாடு வருகிறது? இது என்ன சொத்துப் பிரச்னையா? அனைவருமே நம் இதயதெய்வத்தைப் மட்டுமே போற்றிப் புகழ்ந்து வருகிறோம். அதில்தானே சில கருத்துக்கள் மாறுபடுகின்றன?
அந்தக் கருத்துக்கள் வன்மமாகவோ அல்லது சொந்தப் பகை போலவோ மாறவேண்டாம் என்பதுதான் என் வேண்டுகோள். உங்கள் இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் ஆத்மார்த்தமான அன்பும், நட்பும் உள்ளது என்பதை உங்களால் மறுக்க முடியுமா? பின் ஏன் இந்த முரண்பாடுகள்?
ராகவேந்திரன் சார் பல விஷயங்களில் தன்னை டிஸ்டர்ப் செய்வதாக கோபால் நிஜமாகவே வருத்தப்படுவதாக தெரிகிறது. அதே போல வயதில் மூத்தவரான பழுத்த அனுபவசாலியான ரசிகவேந்தரும் கோபாலின் சில பதிவுகளால் வருத்தப்படுகிறார் என்பதும் புரிகிறது.
இனி நாம் தான் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் தினத்தந்தி கன்னித்தீவு கதையாக இது தொடரும்.
இப்போது என்னுடைய நிலைமையை நான் சொல்லி விடுகிறேன். இதில் மழுப்பல்களோ ஒளிவு மறைவோ இல்லை.
சின்னக் கண்ணன் சாரும், ராஜேஷ் சாரும் அழகாக தங்கள் பதிலைத் தந்து விட்டார்கள். கோபால் அவருடைய எண்ணப்படி விமர்சனங்களை எழுதட்டும். அவர் தகுதியான படங்களை மட்டுமே எடுத்துக் கொள்பவர். ஆதலால் அதில் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. மாறாக அது போற்றி வைத்துக் கொண்டாடத்தக்க வகையில் இருக்கும் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ராகவேந்திரன் சார் நடிகர் திலகத்தின் பிந்தைய நாட்களின் படங்களைப் பற்றி எழுதினால் கோபாலுக்கு அவமானம் பிடுங்கித் தின்கிறது. இப்போது அதுதான் பிரச்னை.
இனி ராகவேந்திரன் சார் எழுதுவதை கோபால் தடுக்க வேண்டாம். அதே போல் கோபால் எழுதுவதற்கு ராகவேந்திரன் சாரும் ஆட்சேபம் தெரிவிக்க வேண்டாம்.
கோபால் சாருக்கு ஒரு அன்பு வேண்டுகோள். நீங்கள் உங்கள் கருத்தை தெரிவிக்க உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. உங்கள் எதிர்ப்பை பிரதிபலிக்கவும் உரிமை உண்டு.
ஆனால் நீங்கள் உங்கள் கருத்தை தெரிவிக்கும் முறைதான் முரண்படுகிறது. வாந்தி, பூச்சாண்டி போன்ற வார்த்தைகள் நாமே மால்லாந்து படுத்து நம் மேல் எச்சில் துப்பிக் கொள்வது போல. என்றும் இளமையாக இருக்க நடிகர் திலகம் மார்கண்டேயன் அல்லவே! நீங்களே உலகில் நான் வணங்கும் ஒரே நடிப்புக் கடவுள் சிவாஜிதான் என்று உள்ளார்ந்த, ஆத்மார்த்தமான, உலகம் போற்றும் நடிப்பிலக்கணத்தை படைத்து விட்டு நீங்களே நடிகர் திலகத்தை ஒரு பொதுத் திரியில் அதுவும் பார்வையாளர்கள் அதிகம் உள்ள திரியில் பூச்சாண்டி, வாந்தி வருகிறது என்று எழுதி புண்படுத்தலாமா? மற்றவர்கள் நம்மாளை எள்ளி நகையாட நீங்கள் காரணாமாய் இருக்கலாமா? நீங்களே வழிவகுத்துக் கொடுக்கலாமா?
உங்கள் எண்ணங்களையும், கருத்துக்களையும் நிரம்பவும் மதிப்பவன் நான் என்பது தங்களுக்கே நன்கு தெரியும். உங்கள் கருத்துக்களை உங்கள் எதிர்ப்புகளை இங்கே நாசூக்காகவும் நயமாகவும் பதியலாமே!
இனி திரி நண்பர்களுக்கு,
கண்டிப்பாக இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க உங்களால்தான் முடியும் என்பது என் ஆழமான நம்பிக்கை.
இப்போது எதையும் சுற்றி வளைக்க வேண்டாம். ஒரு ஓட்டெடுப்பு போல இதை ஒவ்வொருவரும் கண்டிப்பாக செய்வோம் என்பதை என் சிரம் தாழ்ந்த வேண்டுகோளாக இங்கு வைக்கிறேன்.
1. சிரஞ்சீவி, தாம்பத்யம் போன்ற நடிகர் திலகத்தின் பின்னாளைய படங்கள் இங்கு விவாதிக்கப் படலாமா? வேண்டாமா?
2. தரமுள்ள படங்களில் இருந்துதான் நடிகர் திலகத்தின் நடிப்பு அலசப்பட வேண்டும் என்ற கோபாலின் எதிர்பார்ப்பு சரியா? அல்லது தவறா?
3. எல்லாப் படங்களிலுமே நடிகர் திலகம் முத்திரை பதித்திருக்கிறார்... அதைப் பற்றி எழுதுவதில் என்ன தவறு என்ற ராகவேந்திரன் சாரின் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதா? இல்லையா?
4. அல்லது கோபாலுக்காக தொடங்கப் பட்ட தனி ஸ்கூல் ஆப் ஆக்டிங் திரியில் தரமுள்ள படங்களின் அலசல் என்று மட்டுமே வைத்து விட்டு
இங்கே நமது மெயின் திரியில் எல்லாப் படங்களையும் அலசலாமா?
மேற்கண்ட நான்கு கேள்விகளுக்கும் இந்தத் திரியின் அங்கத்தினர்கள் அவசியம் பதில் தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். வாழ்க்கைப் பிரச்னை என்பார்களே அது போல இது திரியின் பிரச்னை. திரியின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது. திரியின் மேன்மை சம்பந்தப்பட்டது. திரியின் கௌரவம் சம்பந்தப்பட்டது.
ஆகவே ஒவ்வொருவரும் கண்டிப்பாக நேரம் இல்லாவிடினும் ஒரு ஐந்து நிமிடங்கள் இதற்காக ஒதுக்கி தங்கள் கருத்துக்களை ஆணித்தரமாக பதியுங்கள். அனைவர் கருத்துக்களும் வந்தவுடன் ஒரு நல்ல முடிவாக எடுக்கலாம்.
இப்போது என்னுடைய கருத்தை சொல்லி விடுகிறேன்.
நமது மெயின் திரியில் நடிகர் திலகத்தின் எந்தப் படங்களையும் அலசலாம். அதில் கோபால் அவருடைய கருத்துக்களைக் கூறலாம், விமர்சனங்கள் அளிக்கலாம். ஆனால் அது தலைவரோ அல்லது பதிவாளர்களையோ hurt பண்ணும்படி நிச்சயம் இருக்கக் கூடாது. கவனிக்கவும். நிச்சயம் இருக்கக் கூடாது. அல்லது பிடிக்காமல் போனால் பேசாமல் இருந்து விடலாம்
(கோபால் சார், இது என்னுடைய வேண்டுகோள்).
கோபால் சாருக்காக பிரத்யோகமாக உருவாக்கப்பட்ட school of acting திரியில் மிகத் தரமான நடிகர் திலகத்தின் படங்கள், நடிப்பு மட்டும் அலசப்படட்டும். அங்கு கோபால் பின்னடைவாக நினைக்கும் படங்களைப் பற்றி யாரும் பதிவுகள் போட வேண்டாம்.
(ராகவேந்திரன் சார், நீங்களும் அது போன்ற படங்களின் விமர்சனங்களையோ, நடிப்பைப் பற்றியோ அங்கு எழுத வேண்டாம். மெயின் திரியிலேயே எழுதுங்கள்.
இது என்னுடைய வேண்டுகோள்.).
நடக்க இருப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்.
இந்தி திரி நண்பர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கருத்தைக் கூறவும்.
Gopal.s
9th November 2013, 09:08 AM
என் கருத்தை பிரதிபலித்த தங்களுக்கு 100% நன்றி வாசு.எனக்கு ராகவேந்தர் சார் மீது தனி பட்ட எந்த வருத்தமும் இல்லை. அவர் சேவைக்கு நான் அவருக்கு என்றுமே கடன் பட்டவன்.நம் கருத்துக்கள் மதிக்க பட வேண்டுமென்றால் ,நாம் தூக்கி பிடிப்பது ,மற்றவர்களுக்கு புதிய கோணத்தை உணர்த்தி,அவர்களுக்கு நடிகர்திலகத்தின் முழு பரிமாணத்தையும் உணர்த்த வேண்டும். ராகவேந்தர் தன் தனி பட்ட பிடிவாதத்தை எல்லார் மீதும் திணித்து, பொது கருத்தை உதாசீனம் செய்வதுடன்,நம்
எழுத்துக்களின் மாண்பையே குலைக்கிறார்.அது மட்டுமே என் குறை.
நான் மிக மிக விரும்பும் துணை,வாழ்க்கை,முதல் மரியாதை,தேவர் மகன் போன்ற படங்களில் அவர் இளைஞர் அல்லவே!!!!!!!!!நான் வெறுத்தது அவர் முதுமையை அல்ல. பட தேர்வுகளில் அவர் சறுக்கல்களையே.
ScottAlise
9th November 2013, 09:26 AM
Hello vasu sir,
1. We can & must discuss about all NT movies, as I have watched/watching many movies of NT based on our discussion (movies after 1980s pre dominantly)
2. NO none must post provocative / statements to hurt NT or his fans writings
3. Gopal sir can post in main thread also analyse in NT school of acting
நமது மெயின் திரியில் நடிகர் திலகத்தின் எந்தப் படங்களையும் அலசலாம்
Gopal.s
9th November 2013, 09:34 AM
Hello vasu sir,
1. We can & must discuss about all NT movies, as I have watched/watching many movies of NT based on our discussion (movies after 1980s pre dominantly)
2. NO none must post provocative / statements to hurt NT or his fans writings
நமது மெயின் திரியில் நடிகர் திலகத்தின் எந்தப் படங்களையும் அலசலாம்
பிரபுராம் போன்றவர்கள் ஒளி கொடுத்த திரியில் இப்படியும் ஒரு இளைஞர்?? காலத்தின் கோலம்.
KCSHEKAR
9th November 2013, 10:53 AM
எனக்கு ரோஜா பிடிக்கும்
என் மனைவிக்கு முல்லை
என் நண்பனுக்கு மரிக்கொழுந்து..
அவரவர் ரசனைக்கேற்ப பூக்களைப் பிடிப்பது
தப்பில்லை..
அதற்காக மரத்தையே பூக்காதே என்றால்
எப்படி..
அர்ச்சிக்கப் படும் பூக்களில்
சிலசமயம்
முட்களும் கலந்திருக்கும்
அதற்காக ஆண்டவன் கவலைப் படுவதில்லை..
..
கோபால் சாருக்கு ஒரு அன்பு வேண்டுகோள். நீங்கள் உங்கள் கருத்தை தெரிவிக்க உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. உங்கள் எதிர்ப்பை பிரதிபலிக்கவும் உரிமை உண்டு.
ஆனால் நீங்கள் உங்கள் கருத்தை தெரிவிக்கும் முறைதான் முரண்படுகிறது. வாந்தி, பூச்சாண்டி போன்ற வார்த்தைகள் நாமே மால்லாந்து படுத்து நம் மேல் எச்சில் துப்பிக் கொள்வது போல. என்றும் இளமையாக இருக்க நடிகர் திலகம் மார்கண்டேயன் அல்லவே! நீங்களே உலகில் நான் வணங்கும் ஒரே நடிப்புக் கடவுள் சிவாஜிதான் என்று உள்ளார்ந்த, ஆத்மார்த்தமான, உலகம் போற்றும் நடிப்பிலக்கணத்தை படைத்து விட்டு நீங்களே நடிகர் திலகத்தை ஒரு பொதுத் திரியில் அதுவும் பார்வையாளர்கள் அதிகம் உள்ள திரியில் பூச்சாண்டி, வாந்தி வருகிறது என்று எழுதி புண்படுத்தலாமா? மற்றவர்கள் நம்மாளை எள்ளி நகையாட நீங்கள் காரணாமாய் இருக்கலாமா? நீங்களே வழிவகுத்துக் கொடுக்கலாமா? உங்கள் கருத்துக்களை உங்கள் எதிர்ப்புகளை இங்கே நாசூக்காகவும் நயமாகவும் பதியலாமே!
நமது மெயின் திரியில் நடிகர் திலகத்தின் எந்தப் படங்களையும் அலசலாம். அதில் கோபால் அவருடைய கருத்துக்களைக் கூறலாம், விமர்சனங்கள் அளிக்கலாம். ஆனால் அது தலைவரோ அல்லது பதிவாளர்களையோ hurt பண்ணும்படி நிச்சயம் இருக்கக் கூடாது. கவனிக்கவும். நிச்சயம் இருக்கக் கூடாது. அல்லது பிடிக்காமல் போனால் பேசாமல் இருந்து விடலாம்
(கோபால் சார், இது என்னுடைய வேண்டுகோள்).
நான் இதில் கருத்து கூறவேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால் வாசு சார் கூறியதுமாதிரி, பிரச்சினைகளின்போது அதனைத் தீர்க்க முயல்வதுதான் பண்பாடு என்ற அடிப்படையில் எனது கருத்துக்களைத் தெரிவிக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரையில் திரு.சின்னக்கண்ணன் மற்றும் திரு.வாசுதேவன் ஆகியோருடைய கருத்துக்களில் உடன்படுகிறேன்.
நான் நடிகர்திலகம் திரியில் இணைந்த பிறகு வேறு எந்தத் திரியையும் பார்த்ததில்லை. நடிகர்திலகம் சம்பந்தப்பட்ட மற்ற திரிகளையேகூட பார்ப்பது மிகவும் அரிதே. இந்நிலையில் ராகவேந்திரன் சாரின் பதிவுகளும், கோபால் சாரின் ஆய்வுப் பதிவுகளும் இதே திரியில் இடம்பெற்றால் இந்த ஒரு திரியை மட்டுமே வாசிக்கும், பங்கேற்கும் என்னைப்போன்றவர்களுக்கு, எல்லாவற்றையும் ஒரே திரியில் பார்க்கும் வாய்ப்பு கிட்டும் என்பதே என்னுடைய வென்டுகோள்.
நதிகள் உற்பத்தியாகுமிடம் வெவ்வேறாக இருந்தாலும், பாயுமிடம் வெவ்வேறாக இருந்தாலும், இறுதியில் கலக்குமிடம் கடலாக இருப்பதுபோல், திரு.ராகவேந்திரன் மற்றும் திரு.கோபால் ஆகியோரின் பதிவுகள், பார்வைகள் வெவ்வேறாக இருந்தாலும், புகழ் சேர்ப்பது என்னவோ நம் நடிகர்திலகத்துக்குத்தான்.
இனி திரி சிறப்பான முறையில் பயணிக்க என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
KCSHEKAR
9th November 2013, 11:33 AM
சிவந்த மண்- 1969 -சில நினைவுகள்.(9th nov )
ஆயிரம் படங்கள் வரலாம்,போகலாம், ஆனால் ,சில படங்கள் குறிஞ்சி மலர் போல மனதில் தங்கி, நினைக்கும் தோறும் இனிக்கும்.
டியர் கோபால் சார்,
தங்களது சிவந்த மண் நினைவுகள் அருமை. நான் ஏற்கனவே இத்திரியில் வந்த சிவந்த மண் நினைவுகள் பற்றிய ஒரு பதிவை சேமித்து வைத்திருந்தேன். Over to சாரதா மேடத்தின் பதிவு
அந்தப் பதிவினை தங்களுடைய பதிவிற்கு சப்போர்ட்டாக தற்போது அளிக்கிறேன்.
'சிவந்த மண்' நினைவுகள்
வெளிநாட்டில் படப்பிடிப்பு மேற்கொண்ட நாள் முதலே, மக்கள் மத்தியில், குறிப்பாக ரசிகர்கள் மத்தியில் 'சிவந்த மண்' பற்றிய எதிர்பார்ப்பு வளர்ந்து வந்தது. போதாக் குறைக்கு, ஆனந்த விகடன் பத்திரிகையில் நடிகர்திலகம், தான் பங்கேற்ற வெளிநாட்டு படப்பிடிப்பு பற்றி 'அந்நிய மண்ணில் சிவந்த மண்' என்ற தலைப்பில் எழுதிவந்த தொடர் கட்டுரையும் ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்தது. தன்னுடைய ஒரு சாதாரண படத்தையே அனுபவித்துப் படமாக்கும் இயல்பு கொண்ட இயக்குனரும் தயாரிப்பாளருமான ஸ்ரீதர், சிவந்தமண்ணை அணு, அணுவாக செதுக்கிக் கொண்டிருந்தார்.
ஒளிப்பதிவாளர் என். பாலகிருஷ்ணனின் கைவண்னத்தில் "சிவந்த மண்" படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி அமைந்திருக்கும். அதற்கு அருமையான ஒளிப்பதிவாளர் என். பாலகிருஷ்ணனின் கைவண்னத்தில் camera angles செட் செய்த இயக்குனர் sreedhar க்கு பாராட்டுக்கள். சிவந்த மண் என்றதும் பெரும்பாலோர் வெளிநாட்டில் படமாக்கப்பட்ட காட்சிகளையே சொல்வார்கள்
சொல்லப்போனால் வெளிநாட்டுக்காட்சிகளை விட உள்நாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளே நம்மை பிரமிக்க வைக்கும். லைட் எஃபெக்டுகள் எல்லாம் அற்புதமாக அமைந்திருக்கும்.
உதாரணத்துக்கு சில:
1) நாகேஷ் - சச்சு நடத்தும் மதுபானக்கடையின் (பார்) அரங்க அமைப்பும், லைட்டிங்கும் ஆங்கிலப்படங்களுக்கு நிகராக அமைந்திருக்கும்.
2) கிளிமாக்ஸ் காட்சியில் ராணுவ ஜீப்கள் அனிவகுத்து வேகமாகப் பறந்து செல்லும் காட்சியமைப்பில் ஒளிப்பதிவு சூப்பர்.
3) எலிகாப்டர் காட்சியிலும், ஒளிப்பதிவாளரின் பங்கு அருமை. இயக்குனரும் கூட. குறிப்பாக, புரட்சிக்காரர்கள் ஓடி வந்து திடீரென்று தரையில் படுத்துக்கொள்ள அவர்களை ஒட்டியே குண்டுகள் வந்து விழும்போது, நம் ரத்தம் உறைந்து போகும். அதுபோல சிவாஜி ஓடிவந்து பள்ளத்தில் குதிக்க, அவர் தலையை உரசுவது செல்லும் எலிகாப்டர். இவற்றில் டைமிங் அருமையாக கையாளப்பட்டிருக்கும்.
4) கப்பலில் வெடிகுண்டு வைக்க புரட்சிக்காரர்கள் செல்லும்போது, கையாளப்பட்டிருக்கும் நைட் எஃபெக்ட் லைட்டிங்கும், கயிறு வழியாக சிவாஜி ஏறுவதை, கப்பலின் மேலிருந்து காட்டும் சூப்பர் ஆங்கிளும். அதே நேரம், கப்பலின் உள்ளே நடக்கும் ராதிகாவின் நடனமும், அதற்கு மெல்லிசை மாமன்னரின் இசை வெள்ளமும்.
5) ரயில் பாலத்துக்கு வெடிகுண்டு வைக்க சிவாஜி போவதை, கீழேயிருந்து படம் பிடித்திருக்கும் அற்புதக்கோணம், அப்போது சிவாஜியின் கால் சற்று சறுக்கும்போது நம் இதயமே சிலிர்க்கும்.
6) ஒளிந்து வாழும் சிவாஜி, தன் அம்மாவைப்பார்க்க இரவில் வரும்போது, மாளிகையைச்சுற்றி அமைக்கப்பட்டிகும் நைட் எஃபெக்ட் லைட்டிங்.
7) நம்பியாரால் கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்ட சிவாஜி, ஜெயில் அதிகாரியை பிணையாக வைத்துக்கொண்டு, அத்தனை துப்பாக்கிகளையும் தன் வசப்படுத்தியதோடு, தன் கைவிலங்கை துப்பாக்கி குண்டால் உடைத்துக்கொண்டு தப்பிக்கும் காட்சி.
8) வாகினி ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட, சுழன்று சுழன்று தண்ணீர் ஓடும் ஆறு. அதை இரவு வேளையில் காண்பிக்கும் அழகு.
9) அரண்மனை முன்னால் போராட்டம் நடத்த வந்த கூட்டத்தினரை, துப்பாக்கி ஏந்திய குதிரை வீரர்கள் விரட்டியடிக்க மக்கள் சிதறி ஓடும் காட்சி.
10) எகிப்திய நாட்டிய நாடகம நடத்தும் முன், தாங்கள் பதுங்கியிருக்கும் இடத்தில், அந்த நாட்டியத்துக்கான மேடை அமைப்பை ஒத்திகை பார்ப்பார் பாருங்க... என்ன ஒரு யதார்த்தம். (நம்ம வி.ஐ.பி.ங்க, டி.வி.ஷோவுல இதெல்லாம் சொல்ல மாட்டாங்க. அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் 'வானம் பொழிகிறது... பூமி விளைகிறது...')
11) ஜூரிச் விமான நிலையத்தில், காஞ்சனாதான் இளவரசி என்று தெரிந்துகொள்ளும்போது காட்டும் அதிர்ச்சி.
12) விமான விபத்தில் தப்பிப்பிழைத்து, தன் வீட்டுக்குக்கூட நேராகப்போகாமல் நண்பனைச்சந்திக்கும்போது அடையும் ஆனந்தத்தின் உணர்ச்சி வெளிப்பாடு. (இப்படம் முத்துராமனின் கிரீடத்தில் ஒரு வைரம்).
13) செத்துப்போய்விட்டதாக நினைத்து மகனுக்கு பூஜை செய்து கொண்டிருக்கும்போது, திடீரென தாய் தந்தை முன் தோன்றி, அவர்களை அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தும் தருணம். அந்த இடத்தில் நடிகர்திலகம் நடிக்கிறார் என்று யாராவது சொல்ல முடியுமா?. நிஜமாகவே உயிர் தப்பிவந்த ஒருவரைப்போல எத்தனை உணர்வுகள் கலந்த வெளிப்பாடு. அதற்கு முற்றிலும் ஈடு கொடுத்து சாந்தகுமாரி, மற்றும் ரங்காராவிடம் இருந்து வெளிப்படும் அபார நடிப்புத்திறன்.
14) போராட்டத்தில் பலியான நண்பனையும், அந்த அதிர்ச்சியில் இறந்த அவன் தாயையும் மயானத்தில் எரித்து விட்டு, ரத்தக்கறையுடன் ஆக்ரோஷமாக தன் மாளிகையில் நுழைந்து, தன் தாயுடனும் அந்நேரம் அங்கு வரும் சமஸ்தானத்தின் தலைமை போலீஸ் அதிகாரியான தந்தையுடனும் பேசும்போது காட்டும் ஆக்ரோஷம், இறுதியில் அடிக்கும் அந்த அட்டகாசமான சல்யூட் (இந்தக்காட்சிக்கு பெரிய பெருமை.... மக்கள்திலகம் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள்கூட பலமாகக் கைதட்டிவிட்டு சொன்ன வார்த்தை 'இதுக்கெல்லாம் கணேசன்தான்யா'). வீராவேசத்திடன் செல்லும் மகனைப்பார்த்து, புன்னகைத்துக்கொண்டே ரங்காராவ் சொல்லும் பதில் "உன் மகன் முட்டாள் இல்லை, புத்திசாலி".
இக்காட்சிக்குத்தேவையான அவரது பாடி லாங்குவேஜ். குறிப்பாக கீழ்க்கண்ட வசனங்களின்போது....
"....... அதற்கு உங்கள் ஆட்சி கொடுத்த பரிசு உயிர்ப்பலி, ரத்தம்" இந்த இடத்தில் அவரது கையசைவு.
"......... திவானைக் கைது செய்து மக்கள் முன் நிறுத்த வேண்டும். அல்லது அந்தப்பதவியையும் அதற்கான உடைகளையும் தூக்கி எறிந்துவிட்டு" (இந்த இடத்தில் அவர் கையசைவு) "திவானுக்கு எதிராக புரட்சிக்குரல் எழுப்ப வேண்டும்".
"பாராட்டு... வெறும் வார்த்தையில் இருந்தால் போதாது. செயலிலே காட்ட வேண்டும்" (இந்த இடத்தில் அவரது அந்த நாட்டிய முத்திரை).
"ஒரு தேச விரோதிக்கு உங்கள் சட்டம் பாதுகாப்பு தருகிறதென்றால், அந்தச்சட்டத்தை உடைத்தெறியவும் தயங்க மாட்டோம்" (இந்த இடத்தில் கையை உயர்த்தி இரண்டு சொடக்குப்போடுவார்)
"இல்லையம்மா... நான் இந்த சமஸ்தானத்தின் தலைமை போலீஸ் அதிகாரியிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்" (இந்தக் கட்டத்தில் அவர் கண்களில் தெரியும் தீர்க்கம்)
இறுதியாக தியேட்டரையே அதிர வைக்கும் அந்த சல்யூட்.
இன்றைக்கு நடிகர்திலகத்தின் ரசிகர்கள் இருக்கும் உணர்ச்சிமயமான சூழ்நிலையில், சிவந்த மண் திரையங்குகளில் திரையிடப்பட்டால், ரசிகர்களின் அலப்பறையில் மேற்சொன்ன காட்சியில் ஒரு வசனம் கூட கேட்க முடியாது என்பது திண்ணம். (அதற்கென்று தனியாக இன்னொரு நாள் பார்க்க வேண்டியிருக்கும்). அந்த அளவுக்கு இந்தக்காட்சியில் வார்த்தைக்கு வார்த்தை கைதட்டலும் விசிலும் பறக்கும்.
15) எலிகாப்டரை சுட்டு வீழ்த்திவிட்டு, அந்த மலையுச்சியில் நின்று நண்பர்களுக்கு எழுச்சிமிக்க 'அன்று சிந்திய ரத்தம்' பேருரை ஆற்றும்போது, முகத்தில் தோன்றும் ரௌத்ரம். (இதெல்லாம் வேறு யாராவது செய்யமுடியும் என்று நினைக்கிறீர்களா?).
16) தான் வீட்டுக்கு வந்திருப்பது திவான் நம்பியாருக்குத் தெரிந்துபோய், தன்னைக்கைது செய்யும் இக்கட்டான நிலையில் தந்தையைத் தள்ள, கணவரின் பெருமைகாக்க தன் தாயைக்கொண்டே தன்னைக்கைது செய்ய வைக்கும்போது காட்டும் கண்டிப்பு கலந்த பெருமிதம்.
17) ரயிலுக்கு குண்டுவைக்கும் முயற்சியை தன் மனைவியே செயலிக்கச் செய்துவிட்டாள் என்று தெரியும்போது முகத்தில் எழும் ஆதங்கம், அதை தன் சக புரட்சிக்காரர்களுக்குச் சொல்லும்போது முகத்தில் தோன்றும் ஏமாற்றம் கலந்த இயலாமை. (சில வினாடிகளுக்குள் எத்தனை உணர்ச்சிகள்தான் அந்த முகத்தில் தோன்றி மறையும்..!!!!).
'பாரத்'துக்கும் வசந்தி (என்கிற சித்திரலேகா) வுக்கும். எதிர்பாராவண்னம் திருமணம் நடந்துவிடும் அந்தச்சூழல் மிகவும் சுவையானது. ராணுவத்தின் துரத்தலுக்குத் தப்பி, ஒரு திருமண வீட்டில் தஞ்சம் புக, தேசப்பற்று மிக்க அம்மக்களால் நடிகர்திலகமும் காஞ்சனாவுமே திருமண தம்பதிகளாய் மாற்றப்பட,
மந்திரம் தெரியாமல் தடுமாறும் ஐயர் நாகேஷ்,
கண்ணடித்தவாறே டிரம்ப்பட் வாசிக்கும் (இயக்குனர்) விஜயன்,
ஸ்டைலாக தலையாட்டிக்கொண்டே பேண்ட் டிரம் வாசிக்கும் மாலி,
என அந்த சூழலே களை கட்டுகிறது.
('ஜெனரல் பிரதாப்' ஆக வருபவர், எம்.எஸ்.வி.யின் உதவியாளர் ஹென்றி டேனியலா...?)
இன்றைக்கு ஐந்து இயக்குனர்களை ஒரு படத்தில் நடிக்க வைத்திருப்பதாக பெருமைப்படும் முன், அன்றைக்கே மூன்று இயக்குனர்களை (ஜாவர் சீதாராமன், விஜயன், தாதாமிராஸி) தனது சிவந்த மண்ணில் நடிக்க வைத்த பெருமை ஸ்ரீதருக்கே. (இயக்குனர்கள் எல்லாம் படங்களில் தலைகாட்டாத காலம் அது).
எடுத்தவரை யில் அவ்வப்போது போட்டுப் பார்க்கும்போதெல்லாம் படம் அவருக்கு திருப்தி யளிக்கவே, படம் தயாராகும்போதே ஒரு முடிவு செய்தார். தன்னுடைய படத்தை தமிழ்நாடு முழுதும், அந்தந்த ஊர்களில் சிறந்த தியேட்டர்களில் திரையிட வேண்டும் என்பது அவரது ஆவலாக இருந்தது. இது விஷயமாக அவ்வப்போது விநியோகஸ்தர்களிடம் கலந்து பேச, அவர்களும் அந்தந்த ஏரியாக்களில் நல்ல தியேட்டர்களாக புக் செய்து வைக்க, படம் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, ஏற்கெனவே புக் பண்ணி வைத்திருந்த தியேட்டர்கள் கைமாறிப் போய்க்கொண்டிருந்தன.
1969 மே மாதத்திலேயே வெளியிடுவதாக ஏற்பாடு செய்திருந்த படம், நினைத்த வேகத்தில் முடியாததால், பின்னர் ஆகஸ்ட் 15 சுதந்திர தின வெளியீடு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படியும் முடியவில்லை. முரளி அவர்கள் சொன்னது போல, வாகினி ஸ்டுடியோவில் போடப்பட்டிருந்த ஆற்று வெள்ளம் செட் உடைந்து, வடபழனி கடைகளுக்கெல்லாம் தண்ணீர் புகுந்த சம்பவமும் ஒரு காரணம். (முதலில் ஏன் மே மாதத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பதற்கு காரணம் அன்றைய ரசிகர்களுக்கு தெரியும். 'அவரது' சொந்தப்படத்தை தன் படத்தால் எதிர்கொள்ள வேண்டும் என்பது ஸ்ரீதரின் எண்ணம். 'அன்று சிந்திய ரத்தம்' என்ற படத்தலைப்பைச்சொன்னால் போதும். அது ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும். புரியாதவர்கள் விட்டுவிடுங்கள்). இறுதியாக 1969 தீபாவளி வெளியீடு என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார். அதற்கேறாற்போல தியேட்டர்கள் புக் செய்யப்பட்டன.
சென்னை மவுண்ட் ரோடு ஏரியாவில் 'குளோப்' தியேட்டர் என்பது கடைசி நேரத்தில் முடிவானதுதான். இப்போது இருக்கும் அதிநவீன தியேட்டர்கள் எல்லாம் அப்போது கிடையாது. தேவி காம்ப்ளக்ஸ், சத்யம் காம்ப்ளெக்ஸ் எல்லாம் கூட அப்போது இல்லை. இருந்தவற்றில் சிறந்தவைகளாக (சித்ராலயாவின் கோட்டையான) காஸினோ, சாந்தி, ஆனந்த், சஃபையர் காம்ப்ளெக்ஸ் இவைகள்தான். இதில் சாந்தியில் தெய்வமகன், மிடலண்ட்டில் நிறைகுடம் ஓடிக்கொண்டிருந்தன. காஸினோவில் வேறு படம் புக் ஆகிவிட்டது. ஆகவே ஸ்ரீதர் குறி வைத்தது ஆனந்த் தியேட்டரைத்தான். கடைசி நேரத்தில் அது மிஸ்ஸாகிப்போக, வேறு வழியின்றி குளோப் அரங்கை புக் செய்தனர்.
அதே சமயம், வட சென்னையில் அப்போதைக்கு மிகச்சிறந்த தியேட்டராக விளங்கிய 'அகஸ்தியா'வையும், மூன்றாவது ஏரியாவான புரசைவாக்கம் பகுதியில் அப்போதைக்கு சிறந்த தியேட்டராக இருந்த 'மேகலா'வையும் சைதாப்பேட்டையில் 'நூர்ஜகான்' தியேட்டரையும் புக் செய்தனர்.
குறிப்பாக மேகலா தியேட்டரில் படம் வெளியாகப்போகிறது என்றதும் ரசிகர்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சி. காரணம், அந்த ஏரியாவில் 'புவனேஸ்வரி' நடிகர்திலகத்தின் கோட்டையாகத்திகழ்ந்ததுபோல, மேகலா, திரு எம்.ஜி.ஆரின் கோட்டையாகத்திகழ்ந்தது. ஏற்கெனவே நான் குறிப்பிட்டதுபோல, அந்த தியேட்டரில் 100 நாட்களைக்கடந்த படங்களின் பட்டியலை ஒரு ப்ளாஸ்டிக் போர்டில் அழகுறப் பதித்து வைத்திருந்தனர். அதில் சிவந்தமண் வெளியாவதற்கு முன் வரை (1964 - 1969) எட்டு படங்கள் 100 நாட்களைக்கடந்து ஓடியதில், 'எதிர்நீச்சல்' படம் தவிர மற்ற ஏழு படங்கள் (வேட்டைக்காரன், பணக்கார குடும்பம், எங்கவீட்டுப்பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, காவல்காரன், அடிமைப்பெண்) என எம்.ஜி.ஆர். படங்கள்தான். நடிகர்திலகத்தின் நல்ல படங்களெல்லாம் சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி காம்பினேஷனில் வரும்போது, புவனேஸ்வரிக்குப் போய்விட்டதால் (அல்லது அதைவிட்டால் ராக்ஸி) 'சிவந்த மண்' மூலம் எப்படியும் எதிரியின் கோட்டையில் கொடியேற்றி அந்த போர்டில் இடம் பெற்றுவிட வேண்டும் என்பது ரசிகர்களின் தணியாத தாகமாக இருந்தது.
அதிலும் நடிகர்திலகத்தின் கோட்டையான புவனேஸ்வரியில் 'குடியிருந்த கோயில்' 100 நாட்கள் ஓடியதிலிருந்து, அண்ணனுக்கு ஒரு படமாவது மேகலாவில் 100 நாட்களைக் கடந்து ஓடியாக வேண்டும் என்ற ரசிகர்களின் ஆவலைப்பூர்த்தி செய்து, சென்னையில் 100 நாட்களைக்கடந்த நான்கு அரங்குகளில் ஒன்றாக மேகலாவில் 'சிவந்த மண்' 100 நாட்களைக்கடந்து ஓடி, வெற்றிகரமாக அந்த போர்டில் இடம்பெற்றது. மேகலாவில் அந்த போர்டையும், ஷீல்டு காலரியில் 'சிவந்த மண்' 100வது நாள் ஷீல்டையும் பார்க்கும்போது நமக்கு ஒரு பெருமிதம் தோன்றும்
chinnakkannan
9th November 2013, 11:52 AM
//ஆயிரம் படங்கள் வரலாம்,போகலாம், ஆனால் ,சில படங்கள் குறிஞ்சி மலர் போல மனதில் தங்கி, நினைக்கும் தோறும் இனிக்கும்.
தமிழ் திரை பட உலக சரித்திரத்திலேயே இவ்வளவு hype உடன் வெளியான இரண்டே படங்கள் சந்திரலேகா, சிவந்தமண் //மேகலாவில் அந்த போர்டையும், ஷீல்டு காலரியில் 'சிவந்த மண்' 100வது நாள் ஷீல்டையும் பார்க்கும்போது நமக்கு ஒரு பெருமிதம் தோன்றும் //
வாவ்..கோபால் சார், சந்திர சேகர் சார்..சிவந்தமண்ணைப் பற்றி எழுதி என் என்..(அவசரத்திற்கு உவமை வரலையே..சரி இதுஓகேயா இருக்குமா) நினைவுக்கடலில் பட்டர்ஃப்ளை ஸ்ட்ரோக் அடித்து பின்னால் போக வைத்து விட்டீர்கள்.. சில பல விஷயங்கள் புதிது..ம்ம் நன்றி..
தாதா மிராஸி யாராக வருவார்..
adiram
9th November 2013, 12:58 PM
// டியர் கோபால் சார்,
தங்களது சிவந்த மண் நினைவுகள் அருமை. நான் ஏற்கனவே இத்திரியில் வந்த சிவந்த மண் நினைவுகள் பற்றிய ஒரு பதிவை சேமித்து வைத்திருந்தேன். சாரதா மேடத்தின் பதிவு என்று நினைக்கிறேன். (மன்னிக்கவும்) //
No doubt Chandrasekar sir, that is Saradha mam's post. I read it several times.
// தாதா மிராஸி யாராக வருவார்?//
Mr. Chinnakannan,
Dadamirasi is the one who come as Portugese representative in two occations, who is talking with Nambiar with the help of a translator.
IliFiSRurdy
9th November 2013, 02:59 PM
வருடமிருமுறை இத்திரியில் நடந்தேறும் நண்பர்கள் 'ராகோ' நடத்தும் 'நீயா நானா' நிகழ்ச்சியை நான் தவிர்த்துவிடுவது வழக்கம்,இதற்கு முக்கிய காரணம் நான் "கோ"வின் குழாமை சேர்த்தவன் என இங்கு சிலரால் கருதப்படுவதால்.(இதில் எனக்கு சந்தோஷமே)ஆனால் கிட்டதட்ட உச்ச கட்டம் வந்துவிட்ட நிலையில் என் கருத்தையும் ஒரு ஓரமாக வைக்க விரும்புகிறேன்.
கடவுளில் வேறுபாடு இல்லை எல்லாகடவுளும் ஒன்றுதான் ..அதேபோல அவரை உபாசிக்கும் கோவில்களிலும் எந்த வித்தியாசமும் கிடையாது என்பதை நாம் கருத்தளவில் ஒப்புக்கொண்டாலும் திருப்பதி,மதுரை,பழனி,குருவாயூர் சிதம்பரம் சமயபுரம் சபரிமலை போன்ற கோவில்களுக்கு விசேஷ புகழ் இருப்பதையும் மறுப்பதில்லை.அதே போல நடிப்பின் கடவுளாகிய தலைவர் நடித்தபடங்கள் அனைத்தும் அவரை நாம் உபாசிக்கும் கோவில்களே என்றாலும் அவற்றிலும் சில கோவில்கள் விசேஷமானவை என்பதை மறுக்கமுடியாது.
இப்படியும் சொல்லலாம்..
தலைவர் ....
உலக நடிகர்களுக்கு சவால் விட்டு நடித்தவை ஒரு அறுபது படங்கள்
மற்ற இந்திய நடிகர்களுக்கு சவால் விட்டு நடித்தவை ஒரு இருநூறு படங்கள்
மற்ற தமிழ் நடிகர்கள் போல நடித்தவை மீதி படங்கள்.
மேற்கண்ட ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு திரி தேவைப்படும்
ஒன்றோடு ஒன்றினைக்கலப்பது... குங்குமப்பூவை, குருமாவில் போடுவதற்கொப்பாகும்
எனக்கு இரண்டும் பிடிக்கும்; ஆனால் கலந்தால் பிடிக்காது.
அம்புட்டுத்தேன்!!
Russellrco
9th November 2013, 03:30 PM
உலக நடிகர்களுக்கு சவால் விட்டு நடித்தவை ஒரு அறுபது படங்கள்
மற்ற இந்திய நடிகர்களுக்கு சவால் விட்டு நடித்தவை ஒரு இருநூறு படங்கள்
மற்ற தமிழ் நடிகர்கள் போல நடித்தவை மீதி படங்கள்.
??? :idontgetit:
Gopal.s
9th November 2013, 07:53 PM
//
// தாதா மிராஸி யாராக வருவார்?//
Mr. Chinnakannan,
Dadamirasi is the one who come as Portugese representative in two occations, who is talking with Nambiar with the help of a translator.
தவறு தலைவரே. புரட்சிக்காரர் நால்வரில் ஒருவர் தாதாமிராசி. (விஜயன்,தாதாமிராசி,செஞ்சி கிருஷ்ணன்,மாலி).
Georgeqlj
9th November 2013, 08:45 PM
Naan varaindha oviam....
vasudevan31355
9th November 2013, 10:48 PM
தவறு தலைவரே. புரட்சிக்காரர் நால்வரில் ஒருவர் தாதாமிராசி. (விஜயன்,தாதாமிராசி,செஞ்சி கிருஷ்ணன்,மாலி).
நீங்கள் தான் சறுக்கி விட்டீர்கள் தலைவரே!
ஆதிராம் சார் சொன்னதுதான் சரி. போர்த்துக்கீசிய அரசாங்கத்தின் தூதுவராக நம்பியாரிடம் மொழிபெயர்ப்பாளர் மூலம் சம்பாஷணை செய்பவர்தான் தாதாமிராசி. யா.அ.ச
vasudevan31355
10th November 2013, 09:57 AM
'புதிய பறவை' உருவாக்கம் பற்றி ஆரூர்தாஸ் அவர்கள் 'தினத்தந்தி' (8-11-13) நாளிதழில் எழுதியுள்ள கட்டுரை.
http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/1_zps32d0a834.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/1_zps32d0a834.jpg.html)
http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/2_zpsaf705bd6.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/2_zpsaf705bd6.jpg.html)
Russellfcv
10th November 2013, 10:09 AM
நடிகர்திலகத்தை தெய்வமாக தொழுபவன் நான். அவருக்கு மீறி ஒரு நடிகன் பிறந்ததும் இல்லை,பிறக்கவும் இல்லை,பிறக்க போவதும் இல்லை. ஆனால் எல்லா படங்களிலும் அவர் பங்களிப்பு சூப்பர் என்பதை, அவர் பக்தர்களே ஒப்ப மாட்டார்கள். தர்மராஜா படத்தில் நடிக்க ,அவர் என்ன கராத்தே கற்று பாத்திரத்தை justify பண்ணினாரா?அமர காவியம் போன்ற படங்களில் ஏனோதானோ என்று வந்து போகவில்லையா?சிரஞ்சீவி போன்ற படங்களை பார்த்து நொந்து போனது எத்தனை ரசிகர்கள்? ஓங்கி சொல்கிறேன். 81 க்கு பிறகு வந்த 90% படங்கள் தரமற்ற குப்பைகளே. அவற்றில் நடித்ததற்கு ,நடிகர்திலகத்தை மன்னிக்கவே முடியாது. அவர் நடிப்பும் பெரிய imaginative ஆக,அவர் திறமைக்கேற்ப அமையவில்லை. அதை பற்றி ராகவேந்தர் எங்கு,எப்போது எழுதினாலும் என் எதிர் கருத்து வரத்தான் வரும்.
கோபால் சார்
குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்.
தர்மராஜா திரைப்படத்தை பற்றி மற்றும் 80கலிர்க்கு அப்புறம் வந்த திரைப்படங்களை பற்றிய தங்கள் கருத்து, தங்களுடைய வாதம் சரியல்ல, ஏற்க்கமுடியாதது என்வரையில் ! !
கராத்தே முறையாக கற்றுக்கொண்டு நடிக்க அது ஒன்றும் ஒரு கராத்தே வீரரை பற்றிய கதையல்ல ! ஆகவே நீங்கள் அதில் நடிகர் திலகம் முறையாக கராத்தே கற்றுக்கொண்டு நடித்திருந்தால் அதை ஒத்துகொண்டிருப்பீர்கள் என்ற ரீதியில் உள்ள பதில் ஏற்புடையதாக இல்லை !
மேலும் காலங்கள் மாறும்போது கதைகளம் மாறும்போது அதற்கேற்றார்போல மாறும் தன்மை கொண்டவன்தான் நடிகன் !
நடிகர் திலகம் திரைப்படத்தில் நடித்திருக்க கூடாது என்பது விதண்டாவாதம்.
காரணம் அதை கூற உங்களுக்கும் சரி, எனக்கும் சரி மற்றவர்களுக்கும் சரி எந்த உரிமையும் கிடையாது.
நடிப்பு நீங்கள் கூறியது போல imaginativaaga இருபதற்கு அவரிடம் கூறப்பட்ட கதைகள் ஒத்துழைத்ததா என்பதை நீங்கள் நினைத்துபாருங்கள் ? அப்படி அமைந்த சில கதைகளில் 80உக்கு பிறகும் கூட அவர் கொலோச்சியிருப்பர் என்பதும் தாங்கள் உணரவேண்டிய ஒன்று உதாரணம் : மிருதங்க சக்ரவர்த்தி, துணை, வா கண்ணா வா, மருமகள் மற்று பல !
ரசிகர்களின் ரசிப்புத்தன்மை மாறும்போது அதற்கேற்றார்போல கதைகள் உருவாக்கபடுகின்றன ! அப்படி உருவாக்கப்பட்ட கதைகளுக்கும் நடிகர் திலகத்தின் appearance ஒரு பலமாக இருந்ததால்தான் தயாரிப்பாளர்கள் அப்போதும் இனிப்பை மொய்க்கும் ஈக்களைபோல மொய்த்தார்கள் !
அவர் என்றுமே கதையை இப்படி மாத்து...அப்படி மாத்து...என் கதாபாத்திரம் இப்படி இருக்கவேண்டும்...அப்படி இருக்கவேண்டும்...என்று தேவையில்லாத தொந்தரவை கதாசிரியர்களுக்கு, வசனகர்த்தாக்களுக்கு, இயக்குனர்களுக்கு ஒருபோதும் கொடுத்ததில்லை என்பதையும் நீங்கள் நினைவில்கொள்ளவேண்டும் ! HE IS A 100% PROFESSIONAL !
புது நடிகர்கள் பலர் வந்தும் இந்த நிலை என்றால் நடிகர் திலகத்தின் MARKET VALUE ஒரு EVER GREEN MARKET VALUE என்பதை நீங்கள் உணரவேண்டும்.
அப்படியிருந்தும் மிருதங்க சக்ரவர்த்தி, துணை, வா கண்ணா வா மற்றும் பல தரம் வாய்ந்த படங்களையும் நடித்து கொடுத்தவர் நடிகர் திலகம்.
மேலும் நடிகர் திலகம் RIGHT FROM DAY ONE ஒரு தயாரிப்பாளரின், விநியோகஸ்தர்களின், இயக்குனரின் நடிகராக மட்டுமே இருந்துள்ளார் என்பது உலகறிந்த விஷயம்.
பிடிக்கவில்லைஎன்றால் நீங்களோ நானோ மற்றவர்களோ பார்க்காமல் போகவேண்டியதுதானே ! அதை விடுத்து உங்கள் கருத்தை மற்றவர்களுக்குள் இப்படி திணிப்பது ஞாயமே இல்லை.
Richardsof
10th November 2013, 10:21 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/53293934-9fba-4174-b3d8-4cf2e2e19080_zpsf31c634c.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/53293934-9fba-4174-b3d8-4cf2e2e19080_zpsf31c634c.jpg.html)
Russellfcv
10th November 2013, 10:23 AM
'புதிய பறவை' உருவாக்கம் பற்றி ஆரூர்தாஸ் அவர்கள் 'தினத்தந்தி' (8-11-13) நாளிதழில் எழுதியுள்ள கட்டுரை.
http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/1_zps32d0a834.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/1_zps32d0a834.jpg.html)
http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/2_zpsaf705bd6.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/2_zpsaf705bd6.jpg.html)
வர வர இந்த அரூர்தாஸ் எழுதுவது படிக்கவே கடுப்பாக இருக்கிறது !
சரியான ஜால்ரா பேர்வழியாக இருந்திருப்பார் போல !
என்ன ஒரு தலைகனம் !
தனக்கு தானே மானியம் விட்டுகொள்வது போல ஒரு எழுத்து ! தேவையில்லாத வாக்கியங்கள் ..!
அவர் தொலைபேசி இருந்தால் கொடுங்களேன் யாராவது ! Noziating megalomania ! Just wanted to give a piece of my mind !
Gopal.s
10th November 2013, 10:38 AM
ராகவேந்தர் 5000 முடித்த கையோடு வாசுவின் 4000. இவர்கள் உழைப்பை நினைத்தால் மலைப்பு. இத்தனைக்கும் ஏனோதானோ ஒரு வரி போட்டு ஒப்பேத்திய பதிவுகள் கிடையாது. எல்லாமே மிக உழைப்பை கோரும் மெனக்கிட்ட பதிவுகள். எழுந்து நின்று உங்கள் இருவருக்கும் standing ovation கொடுத்து,தொப்பியை எடுத்து தலை வணங்குகிறேன்.நாமெல்லாம் 2000 கே திணறி அலையும் கேஸ் .வாசு, நீங்கள் பம்மலாரோடு திரி 9 ஐ நகர்த்திய அழகு.(மிக பெரிய ஹிட்ஸ் வாங்கிய ஒன்று) துரதிர்ஷ்ட வசமாக நீங்கள் ஆரம்பித்த 10 ஐ தொடரும் சுமை என்மேல். அதனால் நான் ஆரம்பித்த 11 ஐ தொடரும் சுமையை உங்கள் மேல் ஏற்றி சுவையாக பழி தீர்த்து, எல்லாருக்கும் சுவாரஸ்யம் ஆக செய்து விட்டேன். தொடருங்கள் .ரசிக்க ஒரு பொது கூட்டமே உங்கள் பின்னால்.
Gopal.s
10th November 2013, 10:57 AM
கேள்வி ; இணய தளத்தில் கூட மறைமுகமாக எம்ஜியாரின் சாதனைகளை பற்றி பிரபல
அறிவாளிகள் - உயர் பதவியில் இருப்பவர்கள் -அந்நிய மண்ணில் இருப்பவர்கள்
புனை பெயரில் வருபவர்கள் கூட விமர்சனம் செய்கிறார்களே ?
பதில் என்ன சார் செய்வது ? அவர்களின் மன நிலை நன்கு புரிகிறது . எதோ ஒரு ஏமாற்றம்
அவர்கள் உள்ளத்தில் புகைந்து கொண்டே இருக்கிறது . மேலும் எம்ஜிஆரின் புகழ்
உலகமெங்கும் பரவி உள்ளதும் , ரசிகர்கள் அவர் மீது வைத்துள்ள பற்றும் ஒற்றுமையும் கண்டு கலங்கி இருப்பார்கள் .
வினோத் சார்,
உங்களின் கேள்வியும் நானே,பதிலும் நானே செம காமெடி. இந்த மாதிரி "ரசிகர்களை" நினைத்து உலகமே "கலங்கி போகாமல்" என்னதான் செய்வது?
KCSHEKAR
10th November 2013, 10:59 AM
டியர் வாசுதேவன் சார்,
4000 முத்தான பதிவு என்ற மைல்கல்லை எட்டும் தங்களுக்கு வாழ்த்துக்கள். எப்போதும்போல் திரு.வினோத் சார் முந்திக்கொண்டு முதல் வாழ்த்தை தெரிவித்துவிட்டார். திரு.கோபால் சார் தெரிவித்தமாதிரி தங்களுடைய ஒவ்வொரு பதிவும் ஏனோ தானோவென்ற பதிவுகள் இல்லை. ஒவ்வொரு பதிவும் சிறப்பாக அமைய தாங்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிக்கு, உழைப்புக்கு salute .
adiram
10th November 2013, 11:24 AM
Congrats to you Mr. (Neyveli) Vasudevan, for your wonderful 4,000 posts.
Each and every post is a valuable one, I never find any wastage posts or filling the thread posts, from you. That means your 4,000 is equal to 40,000 by their value of informations and collections.
Your effort behind every post is un-imaginable.
In Bharathi's words... "ingivanai yaam peravey enna thavam seydhu vittom".
Hats off.
RAGHAVENDRA
10th November 2013, 11:35 AM
Vasu Sir
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/Vasu4000fw_zps856acc2c.jpg
Congrats to you Mr. (Neyveli) Vasudevan, for your wonderful 4,000 posts.
Each and every post is a valuable one, I never find any wastage posts or filling the thread posts, from you. That means your 4,000 is equal to 40,000 by their value of informations and collections.
Your effort behind every post is un-imaginable.
In Bharathi's words... "ingivanai yaam peravey enna thavam seydhu vittom".
Hats off.
Golden words....
Russelldwp
10th November 2013, 12:01 PM
ஆய்வுப்பெட்டகம் வாசுதேவன் சார்
இந்த திரியில் தாங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு பதிவும் நடிகர் திலகத்தின் புகழை உலகரியச் செய்யும் உன்னதமான உயர்ந்த நல் முத்து.
அந்த வகையில் 4000 வது பதிவை கண்டுள்ள தங்களூடைய உழைப்பிற்கும் தொடர்ந்து நீங்கள் தலைவரின் படங்க்ளூக்காக செய்யும் ஆய்வும் மேன் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்
இப்போது தான் நடிகர் திலகத்தின் சிலைக்காக நாகர் கோவிலில் இருந்து மோட்டர் சைக்கிளில் 15 ரசிகர்கள் இன்பா தலைமையில் திருச்சி வழியாக சென்னை செல்கிறார்கள். அவர்களை ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் வரவேற்பு அளித்து வழியனுப்பினோம். அவர்கள் பயணமும் சிலை முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்
c. Ramachandran
Russellfcv
10th November 2013, 03:20 PM
ஒரு சில நடுநிலயாளரிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் .
--------------------------------------------------------------------------------------
கேள்வி ; உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
பதில் ; அன்றும் இன்றும் என்றும் சிவாஜி கணேசன் மற்றும் எம்ஜிஆர் தான் .
கேள்வி ; இருவரின் படங்களையும் பார்த்ததுண்டா ?
பதில் ; இருவரின் படங்களையும் பல முறை பார்த்துள்ளேன் .
கேள்வி ; உங்களுக்கு பிடித்த சிவாஜி கணேசன் படம் எது ? உங்களுக்கு பிடித்த எம்ஜிஆர் படம் எது
பதில் ; மன்னிக்கவும் . எனக்கு அவர்கள் நடித்த பெரும்பான்மையான படங்களும் பிடிக்கும்
கேள்வி ; ஏன் சிவாஜி கணேசன் உங்களுக்கு பிடிக்கும் ? ஏன் எம்ஜிஆரை உங்களுக்கு பிடிக்கும் ?
பதில் , சிவாஜி கணேசன்- குடும்பத்தின் மீது எந்தளவிற்கு பற்று இருக்கவேண்டும், குடும்பத்தில் பிரச்சனை வந்தால் எப்படி தீர்க்கவேண்டும், அதை அணுக வேண்டும் என்ற அறிவுரை, தாய் தந்தை, அண்ணன், தங்கை சுற்றாருடன் எப்படி பழகவேண்டும் என்ற அணுகுமுறை, எப்படி தேசபக்தியுடன் இருக்க வேண்டும் இப்படி பல சமுதாயத்தை உண்மையிலயே நல வழி நடத்தி செல்லும் அறிவுரைகளை கதாபாத்திரத்தின் வாயிலாக அவர் கூறிய விதம் வன்முறையற்ற அவரது அணுகுமுறை, சிறு குழந்தைகள் கூட கண்டுகளிக்கும் வண்ணம் கவர்ச்சியே இல்லாத அவருடைய பெருவாரியான படங்கள். இப்படி பல நாட்டிற்க்கும் வீட்டிற்க்கும் தேவையான உண்மையான விஷயங்கள் அவர் படங்களில் இருப்பதால் பிடிக்கும். !
mgr - அவருடைய பாணியில் நடிப்பு - அறிவுரைகள், சண்டை காட்சிகள் - கொள்கைகள் - பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் .
கேள்வி ; ஒரு சிலர் சிவாஜியின் நடிப்பை மிகை நடிப்பு என்று நடிப்பை குறை கூறுகிறார்களே ?
பதில் ; சிவாஜியை விரும்பாதவர்கள் அவருடைய நடிப்பை மட்டுமா குறை கூறுகிறார்கள் .
அவருடைய திரை உலக வெற்றிகளை ஜீரணிக்க முடியாதவர்கள்
அவருடைய சாதனைகளை ஏற்று கொள்ளாதவர்கள் -
நடிப்புக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் கூட, நடிப்பே என்னவென்று தெரியாதவர்கள் கூட பல்வேறு விமர்சனங்களை கூறி வருவது அவர்களுடைய கருத்து சுதந்திரம் .இதை ஜனநாயகம் என்றும் கூறலாம் !
கேள்வி ; இணய தளத்தில் கூட மறைமுகமாக சிவாஜியின் சாதனைகளை பற்றி பிரபல அறிவாளிகள் - உயர் பதவியில் இருப்பவர்கள் -அந்நிய மண்ணில் இருப்பவர்கள்
புனை பெயரில் வருபவர்கள் கூட உண்மையாக நடந்த சம்பவங்களை கூட ஆவணங்கள் பதிவு செய்த பிறகும் இருட்டடிப்பு, பொய் தகவல்கள் மூலம் மறைக்க, மறுக்க பார்கிறார்களே ?
பதில் என்ன சார் செய்வது ? அவர்களின் மன நிலை நன்கு புரிகிறது . எதோ ஒரு ஏமாற்றம் அவர்கள் உள்ளத்தில் புகைந்து கொண்டே இருக்கிறது . மேலும் சிவாஜியின் புகழ்
உலகமெங்கும் பரவி உள்ளதும் , ரசிகர்கள் அவர் மீது வைத்துள்ள பற்றும் ஒற்றுமையும் கண்டு கலங்கி இருப்பார்கள் .இன்னும் சொல்லபோனால், மற்றவர்கள் தொட முடியாத சிகரங்களையும், நினைத்துப்பார்க்க முடியாத சரித்திரங்களையும், சஹாப்தங்களையும் படைத்தவர் சிவாஜி கணேசன். பல வெளிநாட்டு விருதுகளை வாங்கிய முதல் இந்திய நாட்டின் நடிகன் அல்லவா ! ஆகையால் மற்றவர்களுக்கு அந்த வயிற்ரேரிச்சலும் காழ்புணர்ச்சியும் இருக்கத்தானே செய்யும் ?
உலக சினிமா அரங்கில் ஆசியா, ஐரோப், அமெரிக்க மற்றும் ஆப்ரிக்க கண்டங்களின் சினிமா வர்த்தக குழுக்களால், அந்தந்த கண்டங்களின் அரசாங்கத்தால் விருதும், கௌரவமும் வழங்கப்பட்ட ஒரே இந்திய நடிகர் இன்று வரை சிவாஜி கணேசன் மட்டும் தன்.
கேள்வி ; பலரும் எம்ஜிஆரை புகழ்கிறார்களே ?
பதில் . நல்ல குணங்கள் இருந்தால் அதை புகழ்வதில் ஆச்சர்யமும் அதிசயமும் இல்லையே !
கேள்வி ; ரசிகனாக நீங்கள் சிவாஜி கணேசன், எம்ஜிஆரின் சாதனைகள பற்றி கூறுங்களேன் ?
பதில் ; சார் தென்னிந்திய பட வரலாற்றில் சந்திரலேகா படம் வசூலில் பிரளயம் செய்து இருந்தது .அதை முறியடித்து வெற்றி கண்ட படம் நாடோடிமன்னன் . பின்னர் 1977 வரை அவருடைய சாதனைகள் பற்றி நாடே அறியும் .
அதே போல சிவாஜி கணேசன் - முதல் படமான பராசக்தியே தமிழ் திரையுலகம் அதுவரை என்றுமே கண்டிராத சகாப்தம் படைத்தது ! புரட்சி என்ற வார்த்தையை முதல் முதலாக புரட்சிகரமான படம் என்று திரையுலகமே பேசதுடங்கியது என்றால் பாருங்களேன்.
நடிக்கவந்த 1952 முதல் 1983 வரை அதிக நூறு நாள் படங்கள், வெள்ளிவிழா படங்கள், அதிக வசூல் சாதனை படங்கள் கொடுத்தவர் இவர்தான். உதாரணமாக கருப்பு வெள்ளை படங்களில் அதிக வசூல், கலர் திரைப்படங்களில் பல முறை அதிக வசூல் சாதனை போன்றவை.
2) எந்த நடிகருக்கும் உலகில் உள்ள எந்த நாட்டிலும் மாநிலத்திலும் நிகழ்த்தாத சாதனை - இவரது இரு படங்கள் ஒரே நாளில் வெளிவந்து இரண்டு படங்களும் 100 நாட்களை கடந்து பிரமாண்ட வெற்றியும் வசூலும் பெற்றதுந்து - பல முறை இந்த சாதனையை நிகழ்த்தியவர் சிவாஜி ஒருவர் தான்.
3) அதுமட்டுமா நடிக்க வந்த 7 வருடதிலயே ஆசிய ஆப்ரிக்க நாட்டில் நடந்த உலக திரைப்பட விழாவில், ஆசியா ஆபிரிக்காவின் சிறந்த நடிகர் என்று முதன் முதலில் ஒரு இந்தியா நடிகர் பெற்றது சிவாஜி தான்.
4) 1960ஆம் ஆண்டு, அமெரிக்க அதிபர் john f kennedy அழைப்பின் பெயரில் இந்திய அமெரிக்க கலாசார விருந்தினராக அழைக்கப்பட்டது இன்றுவரை இவர் மட்டுமே.
5) பிறகு, அமெரிக்க நாட்டின் நயாக்ரா நகரின் ஒரு நாள் மேயர் பதவியும் கொடுத்து அந்த நகரின் மாதிரி "தங்க சாவி " கொடுத்து கௌரவிக்கபட்டார். இன்று வரை அதாவது 2013வரை அந்த பெருமையை பெற்றவர் அன்றைய பாரத பிரதமர் பண்டித ஜவர்ஹர்லால் நேஹ்ருவே தவிர வேறு ஒரு நடிகரும் இல்லை.
6) பின்பு, 1995ஆம் ஆண்டு இதே போல அமெரிக்க நாட்டில் உள்ள columbus நகரின் ஒரு நாள் கௌரவ மேயர் பதவி கொடுத்து அமெரிக்க தமிழ் சங்கத்தின் ப்ரெசிடென்ட் ஆகவும் கௌரவிக்கபட்டார்.
7) இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல washington post இவரை இந்தியாவின் clark gable என்று உலகிற்கு பறைசாற்றியது !
8) ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இவருடைய மூன்று வேதா நடிப்பில் வெளிவந்த "தெய்வ மகன்"
9) ஒரு நடிகனால் ஒன்பது வெவேறு கதைக்கு தேவையான கதாபாத்திரத்தை ஒன்பது விதமாக எல்லாவிதத்திலும் செய்யமுடியும் என்றும் நிரூபித்து காட்டிய ஒரே நடிகர் சிவாஜி கணேசன் தான். திரைப்படம் உங்களுக்கே தெரியும் நவராத்திரி.
7) இதுமட்டுமா...ஐரோப்பாவின் france நாட்டின் மிக உயர்ந்த விருதான மாவீரன் napolean அவர்கள் அறிமுகபடுத்திய செவாலியே விருதும் இவருடைய திறமைக்காக கொடுக்கப்பட்டது கௌரவிக்கப்பட்டது.
8) ஒரு நடிகனுக்கு பொற்சிலை தமிழகத்தில் சென்னை, மதுரை, பாண்டிச்சேரி ஆகிய நகரங்களில் முதல்வர்களாலும், மத்திய மந்திரிகளாலும் திறக்கப்பட்டது. இந்த பெருமை உலகில் வேறு எந்த நடிகனுக்கும் இல்லை.
9)திரை துறையில் தமிழகம், அண்டை மாநிலமான கேரளம், ஆந்திரம், கர்நாடகம், பிறகு மும்பை என்று அனைத்து மாநில தயாரிப்பாளர், நடிக நடிகைகளால் மிகவும் விரும்பப்பட்ட, மரியாதை கொடுக்கப்பட்ட ஒரே நடிகர் சிவாஜி கணேசன் தான். தயாரிபாலர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் மிகுந்த லாபம் கொடுப்பது இவர் படங்கள். இன்னும் எவ்வளவோ பட்டியலிடலாம் இவரின் ஒவொரு விஷயமும் சாதனை மட்டும் அல்ல, சரித்திரம், சகாப்தம்.
(கேள்வி கேட்பவர் அதிசயித்து வாயடைத்து ஆச்சர்யத்தில் மூழ்கி போகிறார் )
கேள்வி மக்கள் திலகம் பற்றி ?
பதில் ; நடிகனும் நாடாளமுடியும் என்பதை ரோனல்ட் ரேகனை விட ஒரு படி மேலே சென்று நிரூபித்தவர். ஏழைகளுக்கு மக்களுக்கு நல்ல மனிதராகவும், முதலமைச்சராகவும் இருந்து சாதனை படைத்தவர். மேலும் உலகளவில் என்றும் விரும்பப்படும், மதிக்கப்படும் ஒரு சில மனிதர்களில் இவரும் முக்கியமான ஒருவர்.
கேள்வி கேட்பவர் நன்றி .அருமையான பதில்கள்
பதில் மீண்டும் சந்திப்போம் . வணக்கம் .
vasudevan31355
10th November 2013, 03:36 PM
தினமலர் வாரமலர் 10-11-2013
நான் சுவாசிக்கும் சிவாஜி (6) - ஒய்.ஜி. மகேந்திரா
http://img.dinamalar.com/data/uploads/E_1383904822.jpeg
http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/d2_zpsa082cd80.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/d2_zpsa082cd80.jpg.html)
http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/d1_zpsc7a99560.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/d1_zpsc7a99560.jpg.html)
(கீழே தெளிவாக)
இசை அமைப்பாளர் எம்.எஸ்.வி.,யும், கண்ணதாசனும் பெரிய ஜீனியஸ்கள். சிவாஜி படங்களுக்கு பணிபுரியும் போது, இருவரும் சேர்ந்து தங்கள் திறமைகளை கொட்டி, பாட்டு அமைத்து, இதில், சிவாஜி எப்படி நடிக்கிறார், பிரத்யேகமாக என்னவெல்லாம் செய்கிறார் என்று பார்க்க, சவால் மாதிரி, சில பாட்டுக்களைக் கொடுப்பர்.
'சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக் கொண்டே அழுகிறேன்...' என்ற பாடலில், ஒரே பிரேமில், சிரிப்பது, அழுவது, அழுது கொண்டே சிரிப்பது, பாடிக் கொண்டே நடந்து வருவது என, நான்கு வித உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பார் சிவாஜி. இந்தக் காட்சியின் சிறப்பு குறித்து, இயக்குனர் பீம்சிங்கை பாராட்டுவதா, எம்.எஸ்.வி.,யை பாராட்டுவதா, டி.எம். சவுந்திரராஜனை பாராட்டுவதா, பொருள் நிறைந்த வார்த்தைகளை கொடுத்த கண்ணதாசனை பாராட்டுவதா என்று யோசிக்கும் போது, எனக்கு தோன்றுவது ஒரே பதில் தான். இந்த நால்வருக்கும், சிவாஜியின் நடிப்பின் மீது உள்ள நம்பிக்கையின் வெளிப்பாடே இக்காட்சி.
நீதி அரசர் இஸ்மாயில், கம்பராமாயணம் குறித்து, ஆற்றிய சொற்பொழிவுகள் அனைவருக்கும் தெரியும். பாவ மன்னிப்பு படத்தில், முஸ்லிம் இளைஞராக நடித்த போது, சிவாஜிக்கு ஒரு சந்தேகம் வந்தது. அது, சுத்தமான தமிழில் பேச வேண்டுமா அல்லது முஸ்லிம் என்பதால், 'ஸ்லாங்' பேச வேண்டுமா என்பது. (எதற்கு என்பதை, என்னாத்துக்கு என்பது போல) இது குறித்து, நீதி அரசர் இஸ்மாயிலிடம் கேட்டார்.
அதற்கு அவர்,'முஸ்லிம் பாத்திரங்களில் நடிக்கும் போது, நல்ல தமிழிலேயே பேசலாம். 'ஸ்லாங்'க்கு மாற வேண்டாம். நீங்கள், நல்ல தமிழில் பேசுவது தான், எங்கள் சமுதாயத்திற்கு, நீங்கள் செய்கிற பெருமை...' என்று பதில் கூறியிருக்கிறார்.
சத்தியமாக சொல்கிறேன், பாவ மன்னிப்பு படத்தை பார்த்து விட்டு, தியேட்டரை விட்டு வெளியே வரும் போது, நம் முஸ்லிம் சகோதரர்கள் ஒவ்வொருவர் மீதும், நமக்கு மதிப்பும், பாசமும் கண்டிப்பாக வரும். மூன்று பெரிய சமயங்களை சேர்ந்தவர்களிடையே, நல்ல ஒரு பிணைப்பு வரும்.
நான் படங்களில் நடித்துக் கொண்டு மிகவும் பிசியாக இருந்த காலத்திலும் சரி, இன்றும் சரி, எனக்கு அதிகமான கடிதங்கள், இ-மெயில்கள் மின்னஞ்சல்கள் வருவது இஸ்லாமிய நண்பர்களிடமிருந்து தான். என் மனைவி சுதா, கீழக்கரையில், ஒரு திருமணத்திற்கு சென்றிருந்த போது, முஸ்லிம் அன்பர்கள், 'எங்க வீட்டு மாப்பிள்ளை வரவில்லையா?' என்று உரிமையாக கேட்டுள்ளனர். எங்கள் நாடக குழு, யு.ஏ.ஏ.,விற்கு, முதல் தலைவர், சங்கு மார்க் லுங்கி அதிபர் அப்துல் காதர் தான்.
தேசிய ஒருமைப்பாட்டின் மேல், மிகுந்த அக்கறை கொண்டவர் சிவாஜி. தேசப்பற்றை வெளிப்படுத்தும் பாத்திரம் என்றால், 'மாட்டேன்...' என்று சொல்ல மாட்டார். என் நெருங்கிய நண்பரும், பிரபல நடிகர் மற்றும் இயக்குனருமான சேரனின் அனுபவத்தை, இங்கே நான் குறிப்பிட வேண்டும்.
சேரனின், தேசிய கீதம் படத்தில், இளைஞர்களுக்கு வழிகாட்டியாக உள்ள பெரியவர் பாத்திரத்தில், சிவாஜியை நடிக்க வைக்க, அவர் விரும்பினார். கதை கேட்பதற்கு, காலை, 7:00 மணிக்கு வீட்டிற்கு வர சொல்லியிருந்தார் சிவாஜி. சேரன் 6:45க்கு அங்கு சென்ற போது, சிவாஜி, 6:30 மணிக்கே தயாராகி, சேரனுக்காக காத்துக் கொண்டிருந்தார். கதை கேட்கும் போதும், அவருடைய பாத்திரத்தை விவரிக்கும் போதும், முகத்திலே அதற்கு தேவையான உணர்ச்சிகளை கொண்டு வந்ததைப் பார்த்த சேரன், வியந்து போனார். சேரனும், சிவாஜியும் பேசிக் கொண்டிருந்த போது, சிவாஜியின் மகளும், அவரது கணவரும் உள்ளே வந்தனர். 'நான் கதை கேட்டுக் கொண்டு இருக்கும் போது ஏன் தொந்தரவு செய்றீங்க...' என்று, அவர்களை அனுப்பி விட்டார் சிவாஜி. தன் தொழில் மீது, எவ்வளவு பக்தி இருந்தால், தன் மகள், மாப்பிள்ளையிடம் இப்படி சொல்ல முடியும்!
கிளைமாக்ஸ் பற்றி, சேரன் சொல்லிக் கொண்டிருந்த போது, 'இப்படி செய்தால் எப்படி இருக்கும்...' என்று கேட்டு, சிவாஜி நடித்தே காண்பித்தாராம். படத்தின் கதையும், அவர் பாத்திரமும் மிகவும் பிடித்துப் போய், சிவாஜி, 'ஓ.கே.,' சொல்லி விட்டார். ஆனால், 'படப்பிடிப்பு எல்லாம் அவுட்டோரில் தான்...' என்று சேரன் கூறினார். உடல்நிலை காரணமாக, டாக்டர்கள் ஆலோசனைப்படி, அவரால், இந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை. சிவாஜியை இயக்கும் வாய்ப்பு, தனக்கு அமையவில்லையே என்று, இன்றும் வருந்துகிறார் சேரன்.
எத்தனையோ தேசிய தலைவர்கள், சரித்திர நாயகர்களை தன் நடிப்பின் மூலம் நமக்கு அறிமுகப்படுத்தி யிருக்கிறார் சிவாஜி. பாட்டி மடியில் உட்கார்ந்து கேட்ட புராண, இதிகாச பாத்திரங்களை, என் போன்றோர், கண்கூடாக பார்த்தது, சிவாஜி மூலமாக தான். எனக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியம், வீர பாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தை பார்த்திருப்பதுடன், மேடை நாடகத்தையும் மிக அருகே இருந்து ரசித்திருப்பது தான். சிவாஜி, மேடையில் பேசிய, தீக்கனல் தெறிக்கும் வசனத்தின் சூட்டை, நான் உணர்ந்திருக்கிறேன். நாடகத்தோடு அவர் நிறுத்தியிருக்கலாம். ஆனால், உலகமெங்கும் உள்ள தமிழர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் எனும் வீரனை பற்றி, தெரிந்து கொள்ள வேண்டும் என்ற, உயர்ந்த எண்ணத்தோடு படத்திலும் நடித்தார். நாடகத்திலும், திரைப்படத்திலும் வரும் ஒரு அற்புதமான காட்சியை பற்றி சொல்ல விரும்புகிறேன். கட்டபொம்மனிடம், ஒற்றன் வந்து, கும்பினிக்காரர்கள் சொன்ன விஷயங்களை சொல்வான். இவர், ஒரே வார்த்தையில், 'அதாவது' என்று மட்டும் சொல்வார். அந்த ஒரே சொல்லை, அடுத்தடுத்து, ஏழு முறை பயன்படுத்தும்போது, ஒவ்வொரு முறையும், மாறுபட்ட உணர்வுகளை வெளிப்படுத்துவார். தியேட்டரில் கை தட்டல், விண்ணை முட்டும்.
தர்ம காரியத்திற்காக நிதி திரட்ட, என் தந்தை ஓய்.ஜி.பி., ஒரு நட்சத்திர கலை விழா நடத்தினார். அந்த நிகழ்ச்சியின் கடைசி நிகழ்ச்சியாக, கட்டபொம்மன் நாடகத்தின், கிளைமாக்ஸ் காட்சியை, நடிப்பதற்கு ஒப்புக் கொண்டார் சிவாஜி. இசை, நடன நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. வீரபாண்டிய கட்டபொம்மன் வேடத்திலிருந்த சிவாஜி, என் தந்தை, ஒய்.ஜி.பி.,யின், தோள் மீது கை போட்டு, ரிலாக்சாக சிகரெட் பிடித்தபடி இருந்தார். வீர பாண்டிய கட்டபொம்மன் சிகரெட் பிடித்துக் கொண்டு, காஷுவலாக இருப்பதை பார்க்க, சுவாரசியமாக இருந்தது. மணி 9:15 இருக்கும். அப்பாவை ஒதுக்கி விட்டு, மேக்-அப் அறைக்கு வெளியே, சுவர் அருகே, தயாராக நின்று கொண்டார். நான்கு சேவகர்கள், அவரை சங்கிலியால் பிணைத்து இழுத்துக் கொண்டிருந்தனர். மணி 9:30. கட்ட பொம்மனாகவே மாறிய சிவாஜி. உடல் முழுவதையும் முறுக்கி, நான்கு சேவகர்களையும் தடுமாறச் செய்து, அண்ணாமலை மன்றத்தின் மேடைக்குள், சுவற்றை காலால் உதைத்து, புயலென நுழைந்தார். அவர் மேடைக்கு வந்ததும், பயங்கர கைத்தட்டல், ஆரவாரம். கடைசி கோர்ட் சீனில், தூள் கிளப்பினார். அந்தக் காட்சி முடிந்ததும், 'ரொம்ப சிரமப்பட்டு நடிச்சிருக்கீங் களே... இவ்வளவு, 'ஸ்ட்ரெயின்' செய்து நடிக்க வேண்டுமா...' என்று, சிவாஜியிடம் கேட்டார் என் தந்தை.
'உனக்கு தெரியாதது இல்ல ஒய்.ஜி.பி., முழு நாடகத்தை, இரண்டரை மணி நேரம் போடும் போது, ஆடியன்ஸ், ஆரம்பத்திலிருந்து, நம்ம கூட இருப்பாங்க. அவங்களுக்கும் மெதுவாக, அந்த உணர்வு வந்து விடும். இங்கே அப்படி இல்லை. பாட்டு, டான்ஸ் என்று பல நிகழ்ச்சிகள் பார்க்கிறாங்க. வேற, 'மூட்ல' இருப்பாங்க. கட்டபொம்மன் துாக்கில் இடப்படும் சூழ்நிலைக்கு, அவங்களை கொண்டு வர வேண்டும். அதற்காக, அதிகமாக வீராவேசம் காட்டணும், சத்தமா வசனம் பேசணும். அப்போ தான், ஓரிரு நிமிடங்களில், இந்த காட்சியோடு ஒன்றிப் போவாங்க; அதனால் தான் இந்த, 'எக்ஸ்ட்ரா ஸ்ட்ரெயின்'. முப்பது நிமிடத்துக்குள் மொத்த டிராமாவின், 'எபெக்ட்'டையும் தரணும்...' என்று விளக்கினார். நடிப்புக்காக தன்னை அர்ப்பணித்தவர்களால் மட்டுமே, இப்படி எல்லாம் சிந்திக்க முடியும்.
மும்பை நகரில் உள்ள சத்ரபதி சிவாஜியின் சிலை, சிவாஜியின் முக சாயலில் தான் அமைக்கப்பட்டது என்பது, நாம் அனைவரும் பெருமைப்படக் கூடிய விஷயம். பிரபல பாடகி, லதா மங்கேஷ்கர் சிவாஜியின் நெருங்கிய தோழி; உடன்பிறவா சகோதரி. சிவாஜியிடமிருந்து அவரது புகைப் படத்தை பெற்று, அதை மும்பை நகர நிர்வாகிகளிடம் தந்தார் லதா. அந்த புகைப்படத்தின் அடிப்படையில், சிவாஜியின் முகத்தையும், உருவத்தையும் கொண்டதாக, அந்த சிலை உருவாக்கப்பட்டது.
- தொடரும்.
எஸ்.ரஜத்
Russellfcv
10th November 2013, 04:03 PM
வாசுதேவன் சார்
நான் சுவாசிக்கும் சிவாஜி பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.
தங்களுடைய ஒவ்வொரு பதிவும் விலைமதிக்கமுடியாதவை. காரணம், ஒவ்வொரு விஷயத்தையும், தாங்கள் எந்தளவிற்கு ரசித்திருந்தால், அனுபவித்திருந்தால் இப்படி ஒரு எழுத்தோட்டம் வரும் !
பிரமாதம் போங்கள்! தங்களுடைய தமிழ் நடை ஒரு தனி ராஜ நடை !
ஒவ்வொரு பதிவிற்கும் குறைந்தது சுமார் 6 மணிநேரமாவது எடுத்திருக்கும் அல்லவா ?
நடிகர் திலகத்தின் ஆசிகள் உங்களுக்கு எப்போதும் உண்டு சார் ! ஆத்மார்த்தமாக அந்த தெய்வத்தை கண்ணை மூடி ஒரு நிமிடம் நினைத்தால் போதும் ...தங்களுக்கு பிரித்யக்ஷம் அவர் !
அருமையான பதிவுகள் சார் ! ஆடைகளுகேன்றே பிறந்த ஆணழகர் - எக்காலத்தினரும் தெரிந்துகொண்டு உணர்ந்துகொள்ளவேண்டிய, புரிந்துகொள்ளவேண்டிய ஒரு தொடர்.
4000 வது போஸ்ட் காணும் எங்கள் திரியின் "விளயாட்டுபிள்ளைக்கு" வாழ்த்துக்கள். உங்கள் பதிவுகளுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் சார் !
Russellfcv
10th November 2013, 04:46 PM
எத்தனை சத்தியமான வார்த்தைகள் காட்சியின் முடிவில்...நடிகர் திலகத்தின் வாயிலாக !
https://www.youtube.com/watch?v=hYynckRbsl8
uvausan
10th November 2013, 05:31 PM
டியர் வாசு சார் - இமாலய சாதனை - ராகவேந்திரா சாரை தொடர்து ! படிக்க படிக்க அலுக்காத பதிவுகளில் உங்களதும் ஒன்று .
Ravi
:):smokesmile:
uvausan
10th November 2013, 05:52 PM
ஒரு சின்ன rewinding - kind attention to Mr Ragavendra and Mr Gopal
Dear Raghavendra and Gopal Sirs ------ an appeal to you both !!
Dear Ragavendra /Gopal sirs
உங்கள் பதிவுகள் அருமை , உங்கள் குணம் - அடுத்தவர்களை , அவர்களின் திறமையை உடனே பாராட்டும் எண்ணம் மிகவும் பெருமைப்பட வைக்கின்றது - இந்த திரியில் என்னை பங்கேற்க தூண்டிவிட்டது , உங்களின் தீவிர NT பக்தி , வாசுவின் அருமையான தமிழ் நடை , முரளியின் அசராத உழைப்பு , கோபாலின் deep rooted passionate R&D on NT , கார்த்திக்கின் எழுத்துக்கள் , கண்படின் பதிவுகள் , நட் 360 யின் உழைப்பு, கக் சிரின் அயராத உழைப்பு , சின்ன கண்ணனின் நகைச்சுவை கலந்த மென்மையான பதிவுகள், நம் அன்பின் மொத படைப்பு Pammalar அண்ட் சாரதா மேடம் ( இன்னும் சில மேதைகளை விட்டிருந்தால் மன்னிக்கவும்) -NT திரி யின் புகழ் ,உண்மையான , நிரூபிக்கப்பட்ட ஆவணங்கள் வேறு எந்த திரியுலும் இல்லை , வரபோவதும் இல்லை - என்ன பக்தி அண்ட் என்ன உழைப்பு !!
இப்படி வேகமாக போகும் திரியில் வேண்டாமே சார் Speed Breakers , உள் பூசல் – எல்லோருடிய எண்ணமும் NT யை பற்றி இருக்கும் போது ஏன் இந்த war of words ?
ஒரு இரண்டு பதிவுக்குள் இப்படி ஒரு அட்வைஸ் ஆ ???
தயுவு செய்து என்னை தவறாக எண்ணவேண்டாம் - இந்த திரி வேகமாக போகவேண்டும் & எல்லோருடிய உழைப்பும் அவசியம் - யாரும் விரோதிகள் இல்லை NT யை தப்பாக சொல்பவர்களை தவிர, இந்த பேராசையில் தான் எழுதிகிறேன் - இன்னும் பலர் இந்த திரிக்கு வந்து பெருமை சேர்ப்பார்கள் , அந்த நாள் வெகுதூரம் இல்லை - அருமையாக எழுதுவோம் for அடுத்த generation , அன்புடன் பழகுவோம் , எதிரிகளை ஓட வைப்போம் , சர்ச்சை தூண்டும் வார்த்தைகளுக்கு விடை கொடுப்போம் -
Shall be grateful if anyone compiles the list of contact nos , e mails of all the Veterans of this hub ( I can do this if I get the details from each one of you) , சில முரண்பாடான பதிவுகளை discuss செய்துவிட்டு போஸ்ட் பண்ணலாம் - எனது சிறிய வேண்டுகோளுக்கு செவி கொடுத்ததிற்கு மிகவும் நன்றி.
எதாவது அனுபவத்துக்கு மீறி எழுதிருந்தால் மன்னிக்கவும்- இந்த திரிக்கு மிக பெரிய பெருமை சேர்க்கும் நீங்கள் இருவரும் ஒன்றுபட்டால் அந்த நாள் ஒரு இனிய நாள் அதுவே நாங்கள் எல்லோரும் வேண்டும் நாள்.
ஏன் அந்த இனிய நாள் இன்றாக இருக்ககூடாது ?
நன்றி - அன்புடன் ரவி
------------
Response from Mr Gopal
Mr.Ravi,
உங்கள் யோசனைக்கு மிக மிக நன்றி சார். மிக சிறந்த பதிவு உங்களுடையது. நான் சொல்வது என்னவென்றால்,தமிழ் நாடே நடிகர்திலகத்தின் ரசிகர்களை கொண்டது. இதில் மற்ற கட்சிகளை சார்ந்தவர்கள்,மற்ற நடிகர்களை ரசிப்பவர்களும் அடங்குவர். நாம் எல்லோரையும் அணைத்து போய் அவர் புகழை பரப்பலாமே? அனாவசிய விமர்சனங்களை தவிர்க்கலாமே? அவருடைய உன்னத காவியங்களை இன்னும் பெருமை படுத்தி,அதன் அருமையை எல்லோரும் உணர செய்யலாமே?இதுவே எனது கட்சி.நடிகர்திலகத்தை போலவே அவர் பக்தனான எனக்கும் வாழ்க்கையில் நடிக்கவோ,தமிழ் நாட்டு பாணியில் அரசியல் பண்ணவோ தெரியாது.
நானும்,ராகவேந்தர் சாரும் நண்பர்களே. முரண்பாடு ,எங்கள் நெருக்கத்தை அதிகமாக்கியே உள்ளது.இது திரியை எந்த விதத்திலும் பாதிக்காது.கவலை கொள்ளாதீர்கள்.
-----
Response from Mr.Ragavendra
Dear Ravi,
தங்களுக்கும் சரி, மற்ற நண்பர்களுக்கும் சரி என் பணிவான நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கோபாலும் நானும் கொள்கையைப் பொறுத்த வரையில் இரு துருவங்களாகத் தான் இருப்பதாகத் தெரிகிறது. என்றாலும் அதற்காக சண்டையெல்லாம் கிடையாது.
என்னைப் பொறுத்த வரையில் நடிகர் திலகத்தின் ரசிகர்களில் நான் தீவிரமாக இருப்பவன். அவரை நடிகர் என்கிற வட்டத்திற்குள் அடக்காமல் ஒரு சிறந்த தேசியவாதியாக, தமிழகத்தின் சிறந்த தலைவராக எண்ணிப் போற்றுகிறவன். அவருடைய கஷ்டங்களை அவருடைய உழைப்பை சிறு வயதிலேயே பார்த்தவன், காங்கிரஸை விட்டு வெளியே வந்த போது உடன் இரவு பகலாக தொகுதியில் சுற்றிச் சுற்றி உழைத்தவன், அதனைப் பெருமையுடன் எண்ணி மகிழ்பவன். மற்ற எந்தத் தலைவரை விட பல மடங்கு அதிக தகுதி வாய்ந்த தலைவராக அவரைத் தான் நான் கருதுகிறேன். நேர்மையின் சின்னமாக உண்மையாக வாழ்ந்து காட்டியவர், வெறும் வாய் ஜாலத்திற்காக அல்ல. தேர்தலில் தோல்வியடைந்து விட்டார் என்பதற்காக அவரை அரசியலில் இருந்து ஒதுக்கிப் பார்க்க முடியாது. ஒரு தலைமுறையையே தேசியவாதியாக, தேச பக்தனாக வளர்த்து விட்டவர் அவர். வாழ்க்கையிலும் அதை செயல் படுத்தினார். அவருக்காக இன்றும் ஏராளமான ரசிகர்கள் எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் உழைத்து வருகின்றனர். நம்முடைய சக்தியினை அதுவும் செயல் வடிவம் தந்தால் பல திருப்புமுனைகளை வரலாற்றில் ஏற்படுத்தக் கூடிய வலிமை வாய்ந்த சக்தியினை எதிர்காலத் தலைமுறைக்கும் அரசியல் தூய்மைக்கும் பலனளிக்கும் வகையில் பயன் படுத்த வேண்டும் என்பதே என் ஆவல்.
அரசியல் வேண்டாம் என்று சொல்பவர்கள் இருப்பார்கள். அதற்காக வேண்டும் என்று சொல்பவர்களை தவறாக சித்தரிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. இன்றைய நிலைமையில் அரசியலில் நேர்மையாளர்களும் நல்லவர்களும் வராமல் இருப்பதற்கு காரணமே இந்த மேம்போக்கான வாதங்கள். அரசியலுக்கு லாயக்கில்லை என்கிற ஒரு சொற்றொடர், ஒரு தேசத்திற்கே நன்மை ஏற்படுவதற்கு தடைக்கல்லாக இருப்பதை மக்கள் உணர வேண்டும். இந்த தடைக்கல்லை உடைத்தெறிந்து நல்லவர்களையும் நேர்மையாளர்களையும் இரு கரம் கூப்பி வரவேற்று உற்சாகப் படுத்தி ஆதரவளித்தால் தான் அரசியலில் தூய்மையையும் நேர்மையையும் நாம் எதிர்பார்க்க முடியும்.
அதற்காக நான் தற்போது எந்த இயக்கத்தையும் ஆதரிக்கச் சொல்ல வில்லையே. யாரையாவது குறிப்பிட்டுச் சொன்னால் அப்போது என்னை யாரும் சுட்டிக் காட்டலாம். கண்ணுக்கெட்டிய தூரத்தில் யாராவது தென்பட்டால், அதுவும் நடிகர் திலகத்தை தலைவராக ஏற்று அவர் வழி நடப்பதாக உறுதி கொண்டு அதனை நடைமுறையும் படுத்தினால் அப்போது இந்த சக்தி அதற்கு பயன் படட்டுமே. காரணம் நடிகர் திலகத்தைத் தலைவராக ஏற்றுக் கொள்பவர் நிச்சயம் அவருடைய கொள்கைகளையும் தத்துவங்களையும் ஏற்று செயல் படுத்துவார் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை.
இது தான் என் நிலைப்பாடு.
இதில் எனக்கு யாருமே ஆதரவு தரவில்லையென்றாலும் நான் அதைப் பற்றிக் கவலைப் பட மாட்டேன். தனியாக என்றாலும் கூட என்னுடைய எண்ணம் நிச்சயம் இங்கே கருத்தாக பிரதி பலித்துக் கொண்டிருக்கும்.
இவர்களின் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் இந்த திரியின் வேகத்தையும் , NT யின் மேல் இவர்கள் வைத்துள்ள பக்தியையும் என்றுமே குறைக்காது என்பதே மேல்கொண்ட பதிவுகளின் சாரம்
Ravi
:smile2::smokesmile:
Gopal.s
10th November 2013, 08:17 PM
எஸ்.எல்.,
நீங்கள் இருவருக்கும் நல்லவராக காட்டி கொள்ள முயன்று,இரு பக்கமும் ,ரசிக்க முடியாத கோமாளி போல ஆகி கொண்டிருக்கிறீர்கள்.கொஞ்சம் திருத்தி கொண்டு,உங்கள் மனதிற்கு பிடித்ததை மட்டுமே சொல்லுங்கள் ,செய்யுங்கள்.போதும்.
Gopal.s
10th November 2013, 08:36 PM
ரவி சார்,
தங்கள் கருத்துடன் எனக்கு உடன்பாடே. என்னால் இந்த திரியில் எந்த குழப்பமும் வராது. நான் யாரையும் எதிரியாக கருத மாட்டேன்.கோபம் வந்தால் திட்டி விட்டு போய் கொண்டே இருப்பேனே தவிர,விரோதம் கொள்ளும் மனப்பாங்கு என்றுமே இருந்ததில்லை.இருக்காது.
Russellfcv
10th November 2013, 09:15 PM
எஸ்.எல்.,
நீங்கள் இருவருக்கும் நல்லவராக காட்டி கொள்ள முயன்று,இரு பக்கமும் ,ரசிக்க முடியாத கோமாளி போல ஆகி கொண்டிருக்கிறீர்கள்.கொஞ்சம் திருத்தி கொண்டு,உங்கள் மனதிற்கு பிடித்ததை மட்டுமே சொல்லுங்கள் ,செய்யுங்கள்.போதும்.
திரு.கோபால் அவர்களே !
ஒரு கோமாளிதான் மற்றவர்கள் துன்பநிலையில் இருக்கும்போது அவர்களை சாந்தபடுத்த மகிழ்விக்க முடியும். அந்த வகையில் நான் கோமாளிதான் & அதில் நான் பெருமை கொள்வேன் !
என்னமோ நீங்கள் ஒருவர் தான் நடிகர் திலகத்தின் உண்மையான பக்தன் என்பதுபோல காட்டிகொண்டு அதே நடிகர் திலகத்தை சிலேடையாக தாக்கி எழுதுவது, நேரிடையாக தாக்கி எழுதுவது என்னமோ பெரிய சத்திய கீர்த்தி போல உங்களை நீங்கள் project செய்து கொள்கிறீர்கள் காலம் காலமாக !
இதில் அடுத்தவர்களை தேவையில்லாமல் திட்டுவது இதெல்லாம் நல்ல செயல் என்று எண்ணி பதிவு வேறு செய்கிறீர்கள். உங்களை மற்றவர்களால் நோகடிக்க எவ்வளவு நேரம் தேவைப்படும் ? எண்ணி பார்கிறீர்கள அதை ?
சாதாரண மனிதனான உங்களிடம் ஒரு கோடி குறைகள் உள்ளன ! முதலில் அதைஎல்லாம் போக்கிக்கொண்டு நடிகர் திலகம் எப்படி இருந்திருக்கவேண்டும், என்ன செய்திருக்கவேண்டும் என்று LIST போடுங்கள் ! அவர் இருந்தபோது இதை சொல்லும் துணிவு உங்களுக்கு இருந்திருக்க வேண்டியது தானே ? DO NOT DRIVE IN BACKSEAT !
http://www.youtube.com/watch?v=luJPiOyqqLo
உங்கள் எழுத்துக்களிலும் பல தவறுகளை சுட்டிகாட்டமுடியும் மற்றவர்களால் என்பதை மறந்து விடாதீர்கள். School of acting என்ற ஒரு விஷயத்தை எழுதியவுடன் அஹந்தை தலைகேருகிறதோ, நடிகர் திலகத்தையே உரிமை என்ற பெயரில் திட்டுவதற்கு ?
இப்பொழுது கூறுகிறேன்...கேளுங்கள் ! அனைவருக்கும் புரியும் வண்ணம் எழுத பழகிகொள்ளுங்கள் ! உங்களுடைய school of acting எழுத்தை எல்லோராலும் ரசிக்கமுடியும் என்று எண்ணி இறுமாப்பு கொண்டீர்களேயானால் மிக பெரிய தவறான எண்ணம் !
உங்களுக்கு என்னவெல்லாம் தெரியுமோ அதையெல்லாம் இங்கே விவரணம் என்ற பெயரில் பக்கங்களை நிரப்பாதீர்கள் ! Don t try to establish as if you are more knowledgeable .
பாமரனும் படித்து அறிந்து மகிழும் வண்ணம் எழுத முதலில் கற்றுக்கொள்ளுங்கள்.
Subramaniam Ramajayam
10th November 2013, 10:02 PM
dear vasu sur,
my solid answer for you NO 3 AS OUR DISCUSSIONS ARE FOCUSED AROUND THE THE PERFORMANCES OF THE LRGEND ONLY AND NOT THEIR COMMERCIAL SUCCESS AND OTHER FACTORS, THAT WAY RAGHAVENDER IS ABSOLUTELY RIGHT,
Russellfcv
10th November 2013, 10:26 PM
Dear Vasu Sir
இரண்டு கண்களில் எந்த கண் சிறந்தது என்பதைப்போல உள்ளது இந்த நிலைமை. நடிகர் திலகம் - நடிப்பிற்கு திலகமானவர் என்பது பொருள். ஆகையால் கப்பல் ஒட்டிய தமிழன் மட்டும் நடிப்பு அல்ல ! மிருதங்க சக்ரவர்த்தி மட்டும் நடிப்பு அல்ல ! ஒரு கருடா சௌக்யமா கூட நடிப்புதான் ! ஒரு சிரஞ்சீவி கூட நடிப்புதான் ! ஒரு சந்திப்பு கூட நடிப்புதான் ! இவ்வளவு ஏன் ? ஒரு LORRY DRIVER RAJAKANNU கூட நடிப்புதான் !
இலை முழுவதும் நெய்கலந்த சோறும் ஒரு அப்பளமும் வைத்திருந்தால் யாரும் உண்பதற்கு சிறிது தயங்குவர்.
சிலருக்கு பொரியல் தேவைப்படும், சிலருக்கு கூட்டு, சிலருக்கு பருப்பு, சிலருக்கு பச்சடி, சிலருக்கு ரசம், சிலருக்கு சாம்பார், சிலருக்கு தயிர், சிலருக்கு மோர் ...!
ஆக ! வெறும் சோற்றைமட்டுமே நெய்விட்டு அப்பளத்துடன் பிசைந்து யாராலும் எப்போதும் சாபிட்டுகொண்டிருக்க முடியாது !
சில நேரங்களில் இது ஒன்றுமே கிடைக்காதபட்சத்தில் சப்பாத்தி மட்டுமே கிடைக்கும்..! இருந்தாலும் அதுவும் ஒரு உணவு தான் !
ஒன்றுமே கிடைக்காதபட்சத்தில் சப்பாத்தியாவது கிடைத்ததே என்று சந்தோஷப்படும் கூடமும் நம் நாட்டில் உண்டு என்பதுவே எனது கருத்து !
omeuforivo
11th November 2013, 01:10 AM
Vasudevan Sir,
Congrats on your 4000th post.
Gopal.s
11th November 2013, 04:06 AM
திரு.கோபால் அவர்களே !
என்னமோ நீங்கள் ஒருவர் தான் நடிகர் திலகத்தின் உண்மையான பக்தன் என்பதுபோல காட்டிகொண்டு அதே நடிகர் திலகத்தை சிலேடையாக தாக்கி எழுதுவது, நேரிடையாக தாக்கி எழுதுவது என்னமோ பெரிய சத்திய கீர்த்தி போல உங்களை நீங்கள் project செய்து கொள்கிறீர்கள் காலம் காலமாக !
இதில் அடுத்தவர்களை தேவையில்லாமல் திட்டுவது இதெல்லாம் நல்ல செயல் என்று எண்ணி பதிவு வேறு செய்கிறீர்கள். உங்களை மற்றவர்களால் நோகடிக்க எவ்வளவு நேரம் தேவைப்படும் ? எண்ணி பார்கிறீர்கள அதை ?
சாதாரண மனிதனான உங்களிடம் ஒரு கோடி குறைகள் உள்ளன ! முதலில் அதைஎல்லாம் போக்கிக்கொண்டு நடிகர் திலகம் எப்படி இருந்திருக்கவேண்டும், என்ன செய்திருக்கவேண்டும் என்று LIST போடுங்கள் ! அவர் இருந்தபோது இதை சொல்லும் துணிவு உங்களுக்கு இருந்திருக்க வேண்டியது தானே ?உங்கள் எழுத்துக்களிலும் பல தவறுகளை சுட்டிகாட்டமுடியும் மற்றவர்களால் என்பதை மறந்து விடாதீர்கள். School of acting என்ற ஒரு விஷயத்தை எழுதியவுடன் அஹந்தை தலைகேருகிறதோ, நடிகர் திலகத்தையே உரிமை என்ற பெயரில் திட்டுவதற்கு ?
இப்பொழுது கூறுகிறேன்...கேளுங்கள் ! அனைவருக்கும் புரியும் வண்ணம் எழுத பழகிகொள்ளுங்கள் ! உங்களுடைய school of acting எழுத்தை எல்லோராலும் ரசிக்கமுடியும் என்று எண்ணி இறுமாப்பு கொண்டீர்களேயானால் மிக பெரிய தவறான எண்ணம் !
உங்களுக்கு என்னவெல்லாம் தெரியுமோ அதையெல்லாம் இங்கே விவரணம் என்ற பெயரில் பக்கங்களை நிரப்பாதீர்கள் ! Don t try to establish as if you are more knowledgeable .
பாமரனும் படித்து அறிந்து மகிழும் வண்ணம் எழுத முதலில் கற்றுக்கொள்ளுங்கள்.
எஸ்.எல்,
இந்த வகை படங்களால்,நடிகர்திலகம், அப்போதைய வளரும் தலைமுறையிடமிருந்து அந்நிய பட்டார். அவருடைய 1981-1987 வரை படங்கள் போர் என்றே ஒதுக்க பட்டன.(ஒரு சில மிக நல்ல படங்களை தவிர)
அவரும் ,ஒரு நடிகரின் முக்கிய கடமையான, உடலையும் மனதையும் பராமரித்து, ஒரு சீனியர் நடிகருக்கு வேண்டிய சீரான, குறைந்த ,இடை வெளி விட்ட தரமான தேர்ந்தெடுத்த படங்களை மட்டுமே செய்யவில்லை.அப்படி ,ஒரு தேர்ந்த பக்தனான நானே வெறுத்த படங்களை தூக்கி பிடித்து எழுதுவது எந்த விதத்திலும்,இங்கு வரும் பொதுவான பார்வையாளர்களுக்கு சுவைக்காது.
என்னை பொறுத்த அளவில்,அவரின் மிக மிக நல்ல படங்கள் (நடிப்பிலும்) ஒரு 50 என்றால், மிக நல்ல படங்கள் இன்னொரு 60-70 ,நல்ல படங்கள் இன்னொரு 50 என்று கணக்கு வைத்தாலே 160-170 தேறுமே? நான் commercial அளவுகோலை மட்டும் பார்க்கவில்லை. தேனும் பாலும்,பாலாடை போன்ற படங்கள் கூட நல்ல படங்களே என் பார்வையில். ஆனால் தர்மராஜா,சிரஞ்சீவி,சுமங்கலி,ஊருக்கு ஒரு பிள்ளை,தராசு போன்றவைகளை பற்றி நாம் விஸ்தாரமாக எழுதினால்.... சாரி.....
ஏனைய்யா ,எனக்கு ஆயிரம் வேலைகள்,கடமைகள் எல்லாம் விட்டு விட்டு,ஓய்வு நேரத்தில் வேறு ஏதாவது செய்து,ரிலாக்ஸ் செய்வதை விட்டு,உங்களுடன் ஆசையாய் பழகுவதும் ,உரிமைஎடுப்பதும்,போராடுவதும், அந்த தெய்வத்தின் புகழை மேலும் உயர்த்தி,உரக்க சொல்லத்தானே?
உங்களுக்கு என் எழுத்து புரிந்ததா இல்லையா என்று சொல்லுங்கள் போதும்.அடுத்தவருக்கு புரிந்ததா என்பதை அடுத்தவர்கள் சொல்லட்டும்.நான் எப்படி எழுத நினைக்கிறேனோ,அப்படித்தான் எழுதுவேன். குற்றமிருந்தால் தாராளமாக விமர்சியுங்கள்.
கடைசியாய் ஒன்று.....
வேண்டாம்.வருத்த படுவீர்கள்.விட்டு விடலாம்.
Gopal.s
11th November 2013, 07:36 AM
வாசுவின் 4000 ஆவது பதிவுக்கு ஆவலாக இருக்கும் நேரத்தில், விவாதங்கள் தொடர வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். ராகவேந்தர் சாரின் தேவையற்ற provocation இவ்வளவையும் செய்து ,என்னை பொங்க வைத்தது. மற்ற படி, என் வழிக்கு வராத வரை ,நான் யாரையும் எதுவும் சொல்லவோ,விமர்சிக்கவோ போவதில்லை.அவரவருக்கு பிடித்ததை எழுதி கொள்ளுங்கள். சங்கிலி,தராசு என்று போட்டு என்னுடைய உலக அதிசயத்தை ,ஸ்கூல் திரியில் இழிவு படுத்தினால், சும்மா இருக்க மாட்டேன்.
RAGHAVENDRA
11th November 2013, 07:47 AM
வாசு சார் ஒரு ஆலோசனை கூறியுள்ளார். அதற்கு இன்னும் அனைவரிடமிருந்தும் பதில் வரவில்லை. அதற்குள் மீண்டும் மற்றவர்களைப் பற்றியும் தன்னைப் பற்றியும் கூறிக் கருத்துக்களைத் திணிப்பது எந்த விதத்தில் ஜனநாயகம். வாசு சார் அனைவரின் கருத்துக்களையும் அறிந்து ஒரு தீர்வு செய்யும் வரையில் பொறுக்க வேண்டியது தானே நியாயம். அதற்குள் என்னைப் பற்றி தேவையற்ற பதிவு ப்ரொவொகேஷன் என்று எழுதினால் நான் அமைதியாக இருக்க வேண்டுமா..
வாசு சார் நீங்களே சொல்லுங்கள்...
RAGHAVENDRA
11th November 2013, 07:47 AM
Nadigar Thilagam Films in TV Channels – 11.11..2013 – 17.11.2013
Lakshmi Vanthachu – 11.11.2013 – Zee Tamizh – 2.30 pm
Paalaadai – J Movies – 13.11.2013 – 1 pm
Padikkadha Medhai – J Movies – 16.11.2013 – 1 pm
Enga Mama – Mega 24 – 13.11.2013 – 8.30 am
Vazhkkai – Mega 24 – 17.11.2013 – 8.30 am
Gnana Oli – Mega 24 – 16.11.2013 – 2.30 pm
Punniya Bhoomi – Mega 24 – 12.11.2013 – 6 pm
Nermai – 13.11.2013 – Mega 24 – 6 pm
Bhaktha Thukaram – 16.11.2013 – Mega TV – 9.30 am
Santhippu – 16.11.2013 – Mega TV – 12.00 noon
Vaa Kannaa Vaa – 13.11.2013 – Mega Tv – 1.30 pm
Bandham – 12.11.2013 – Murasu TV – 7.30 pm
Uthama Puthiran – 16.11.2013 – Murasu TV – 7.30 pm
Bandham – 15.11.2013 – Polimer TV – 2.00 pm
Bandha Pasam – 12.11.2013 – Raj Digital – 10.00 am
Vaazhkkai – 17.11.2013 – Zee Tamizh – 2.30 pm
RAGHAVENDRA
11th November 2013, 07:59 AM
நண்பர்களே,
குறிப்பாக வாசு சார்
தங்களுடைய தீர்ப்பு அல்லது தீர்வு வருவதற்கு முன்னரே கோபால் சாரின் பதிவுகள் மீண்டும் மீண்டும் மற்றவர்களைப் புண்படுத்தும் வகையில் வந்து கொண்டிருக்கின்றன.
நடிப்புப் பள்ளித் திரியில் நடிகர் திலகத்தின் நடிப்பிலக்கணம் மக்களுக்கு எப்படி பயன் படுகிறது, குறிப்பாக ஒரு குறிப்பிட்ட வகை காட்சியமைப்பு இரண்டு படங்களில் வரும் போது அதை எவ்வாறு அவர் வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார் என்பது ஒரு இலக்கணமாக, பாடமாக அமைந்துள்ளது. அதற்கு உதாரணம் பணி ஓய்வுக் காட்சி. ஒரே பணி ஓய்வுக் காட்சி, இரண்டு வெவ்வேறு தொழிலில் இருப்பவர்கள் அதனை எப்படி அணுகுகிறார்கள் என்பது தான் இதனுடைய context. வியட்நாம் வீடு மற்றும் சிரஞ்சீவி இரு படங்களிலும் பதவி ஓய்வு பெறும் போது அந்தந்த பாத்திரம் எப்படி அணுகும் என்பதைத் தான் ஒப்பீடாக அங்கு பதிந்திருக்கிறேன். அந்த இரு பதிவுகளையும் தங்கள் பார்வைக்குக் கீழே தருகிறேன்.
நடிகர் திலகமும் நடிப்பிலக்கணமும்
சிரஞ்சீவி பணி ஒய்வுக் காட்சி
நடிகர் திலகத்தின் படங்களில் ஒரே மாதிரியான சூழலில் வெவ்வேறு படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களின் உணர்ச்சிகள், பாத்திரப் படைப்பு இவற்றைப் பொறுத்து அவருடைய நடிப்பில் வேறுபாடுகள் காணப் படும்., அப்படியான ஒரு சூழல் தான் பணி ஓய்வு. நடிகர் திலகம் திரைப்படங்களில், வியட்நாம் வீடு திரைப்பட பணி ஓய்வு காட்சி உலகப் பிரசித்தம். அதைப் பற்றி பலவாறு விவாதிக்கப் பட்டுள்ளது. அதே பணி ஓய்வுக் காட்சியில் உலகப் பெரு நடிகரின் நடிப்பில் மற்றோர் பரிமாணத்தை இப்போது காண உள்ளோம்.
டேவிட் சிரஞ்சீவி .. TOPAZ எனப்படும் கப்பல் துப்புரவுத் தொழிலாளி. தன் தொழிலை உயிருக்கும் மேலாக மதிப்பவன். தான் உயிருடன் இருக்கும் வரையில் அத்தொழிலைச் செய்ய வேண்டும் என விரும்புபவன். ஆங்கிலோ இந்தியன். தன்னுடைய பணியில் மூழ்கி விட்டால் காலம் நேரம், நாள் தேதி எதையும் பார்க்காமல் பணியாற்றுவான். தன்னுடைய வயதையே மறந்து விடுவான். உடல் முதுமையடைந்தாலும் மனம் முதுமையடையாது.
அப்படி ஒரு நாள் பணியாற்றும் போது கப்பல் கேப்டனிடமிருந்து அழைப்பு. அவருடைய உழைப்பில் தங்கள் மனதைப் பறி கொடுத்தாலும் கடமை நிமித்தம் அவரை அழைத்து அவருடைய ஓய்வு அறிவிப்பை சொல்ல வேண்டும். காரணம் முதல் நாள் அவர் ஓய்வு பெற்று விட்டதை அறியாமல் அவர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
அப்படி அழைக்கப் பட்ட பின் அந்த கேப்டன் அவரிடம் ஓய்வைப் பற்றி சொல்வதாக்க் காட்சி யமைப்பு.. கேப்டனுடன் சக மாலுமிகளும் கப்பல் டாக்டரும் இருக்கிறார்கள்.
டாக்டர் மெல்ல மெல்ல உரையாடலைத் துவக்கி அவருடைய சேவையைப் பாராட்டி பின்னர் ஒரு வழியாக அவருடைய ஓய்வு அறிவிப்பினைக் கூறுகிறார். அதைக் கேட்டதும் சிரஞ்சீவி எப்படி பாதிக்கப் படுகிறான் அதற்கு அவனுடைய Reaction என்ன இது தான் இந்த காட்சியின் Concept.
இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நடிப்பு வித்தியாசமாக இருக்கும். தன் உணர்ச்சிகளை அதிகம் வெளிக் காட்டமாட்டார். அப்படி வெளிப்படுத்தினாலும் அதில் ஒரு பக்குவம் இருக்கும். ஒவ்வொரு பிரேமிலும் மெய் சிலிர்க்க வைக்கும் நடிப்பினைத் தந்துள்ளார். இதை காட்சி வாரியாக இங்கே காணலாம்.
டாக்டராக வி.கோபால கிருஷ்ணனும், கேப்டனாக ஜெய்கணேஷும் மிகச் சிறப்பாக நடித்துள்ளது பாராட்டத் தக்கதாகும். அதுவும் ஓய்வைப் பற்றிய விஷயத்தை ஜெய் கணேஷ் தயங்கித் தயங்கி சொல்வது அவருடைய கேரக்டரின் மேல் இருக்கும் மதிப்பினை பல படி உயர்த்துகிறது.
இப்போது காட்சியைப் பார்ப்போம்.
http://youtu.be/J5kQWsRaMsA
எடுத்த வுடனேயே அறைக்குள் சிரஞ்சீவி நுழையும் போது அவருடைய நடையைக் கவனியுங்கள். எப்போதும் போல் பணியில் இருக்கும் போது சகஜமாக பழகும் தோரணையில் உரிமையோடு காலை வணக்கம் சொல்வதைப் பாருங்கள்.
Good Morning all of you என்று சொல்லும் போதே அந்த உரிமையைத் தன் குரலில் வெளிப்படுத்தி விடுவார்.
கேப்டனும் மற்றவர்களும் பதில் வணக்கம் சொல்கிறார்கள்.
சிரஞ்சீவி.. “கூப்பிடனுப்பினீர்களாமே.”
கேப்டன்.. “நாங்கள் கூப்பிட்டது டோபாஸ் சிரஞ்சீவியை அல்ல, அங்கிள் சிரஞ்சீவியை”
சிரஞ்சீவி... புரியாமல் விழிக்கும் பார்வை...
கேப்டன்.. “இன்னுமா புரியலே.. ஐ வாண்ட் டு சீ அங்கிள் டேவிட் சிரஞ்சீவி”
... இந்த இடத்தில் கேப்டன் மறைமுகமாக தன் கருத்தை சொல்ல ஆரம்பித்து விடுகிறார்.
சிரஞ்சீவி.. கேப்டனின் உள் மனதில் இருப்பது தெரியாமல், அவர் உடை மாற்றிக் கொண்டு வரச் சொல்கிறார் என்பதாகப் புரிந்து கொண்டு Now I got it எனச் சொல்லி புன் முறுவல் பூக்கிறார் Just a minute please என்று கூறி விட்டு வெளியேறுகிறார். இந்த இடத்தில் நடிகர் திலகத்தின் முகத்தில் கவனியுங்கள். கேப்டன் உள் மனதில் என்ன உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முயற்சிக்காமல் யதார்த்தமான அர்த்தம் புரிந்து கொண்டு சிரிப்பதை.
கவனியுங்கள், உடை மாற்றிக் கொண்டு சாதாரண உடையில் அறைக்குள் வரும் போதே அவருடைய நடை உடை பாவனையில் ஒரு முதியவரின் ஆளுமை வெளிப்படுவதை..
இந்த இடத்தில் சிரஞ்சீவியை ஒரு பயணியைப் போல், வயதில் மூத்த ஒருவருக்கு தரும் மரியாதையைத் தரும் வகையில் எழுந்து நிற்கிறார்கள். Good Morning Uncle என காலை வணக்கம் செய்கிறார்கள். சிரஞ்சீவி அமருங்கள் எனச் சொல்லும் போது, நீங்கள் உட்கார்ந்தால் தான் நாங்கள் உட்காருவோம் எனச் சொல்கிறார்கள்.
இப்போது நடிகர் திலகம் அமரும் தோரணையைப் பாருங்கள். அதில் தன்னுடைய டோபாஸ் உத்தியோகத்தை மறக்காமல் அவர்களைத் தன் உயரதிகாரிகளாகவே தொடர்ந்து பாவித்து கை கட்டிக் கொண்டு அமர்வதை.
கேப்டன்... “நீங்கள் இந்த கப்பலுக்கு செஞ்ச சேவைகளெல்லாம் எண்ணிப் பார்க்கிறோம். அது, ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு செய்கிற பாசம் மிகுந்த காரியங்கள் மாதிரி எங்க கண்ணு முன்னாடியே தெரியுது.”
சிரஞ்சீவி... அடக்கமான புன்னகையுடன் ஏற்றுக் கொள்கிறார்..
இந்த புன்னகையைப் பாருங்கள்...
கேப்டன்.. “ஒரு முறை புயலில் இந்த கப்பல் சிக்கிக் கிட்டப்போ உங்க புத்தி கூர்மையாலே அதைக் காப்பாத்தினீங்களே. அந்த இன்சிடெண்ட் இன்னும் ரிகார்ட்ஸ்லே எவர்கிரீனா இருக்கு...”
இந்த இடத்தில் கேப்டனின் முக பாவத்தில் தான் சொல்ல வந்த்தை சொல்லப் போகிறோம் என்கிற முஸ்தீபு ஆரம்பிக்கிறது.
ஜெய்கணேஷின் சிறப்பான நடிப்பு இக்காட்சிக்கு சிறப்பு.
சிரஞ்சீவி.. ஏதும் பேசாமல், ஏதோ என்னால் ஆனதை செய்ய முடிந்த்தே என்கிற சந்தோஷம் என்பதைத் தன் முகத்தின் புன்னகையால் உணர்த்துகிறார்.
இந்த இடத்தில் நடிகர் திலகத்தின் முகத்தைப் பாருங்கள்..
கேப்டன்.. “அங்கிள்,, இந்த கப்பல்லே எந்த இடத்திலே என்ன கோளாறு வந்தாலும் உடனே நீங்கள் வந்து சரி பண்ணிடுவீங்க. டோடலி, யூ ஆர் ஏன் ஆல்ரவுண்டர். “
சிரஞ்சீவி.. இதற்கும் அடக்கமான புன்னகை. பதில் ஏதுமில்லை.
இங்கும் நடிகர் திலகத்தின் புன்னகையில் சற்றே வித்தியாசத்தைப் பாருங்கள்.
கேப்டன்.. சற்றே உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு ஒரு கேப்டன் என்கிற தொனியைத் துவக்குகிறார். “அங்கிள் இந்த கப்பலுக்கு நீங்க செய்திருக்கிற காரியங்களெல்லாம் வெறும் காரியங்களல்ல.. காவியங்கள்... இருந்தாலும் யூ ஆர் வெரி வெரி சிம்பிள் அண்ட் ஹம்பிள்..”
சிரஞ்சீவி... கேப்டன் வெட்கமும் கூச்சமும் மேலிட ஏதோ சொல்ல வருகிறார்.
டாக்டர் மறித்து... “இன்னும் உங்களைப் பத்தி சொல்ல வேண்டியது நெறைய இருக்கு...”
சிரஞ்சீவி... சிரிக்கிறார்..
கேப்டன்..... “அங்கிள்... நீங்க விரும்பியிருந்தா இதை விட பெரிய நிலைக்கே போயிருக்கலாம்.. ஆனா துப்புரவுத் தொழிலையே தொடர்ந்து செய்து அதற்கு ஒரு தெய்வீகத் தன்மையே கொடுத்துட்டீங்க..”
சிரஞ்சீவி.. ஏதோ விஷயம் இருப்பதை இப்போது தான் உணர்கிறார். தன் மனதில் ஏற்படும் சந்தேகத்தைக் கேட்க விழைகிறார். “கேப்டன்... நீங்க பேசிட்டீங்க.. கொஞ்சம் நான் பேசலாமா...”
இதைச் சொல்லும் போது நடிகர் திலகத்தின் முகத்தைப் பாருங்கள். இந்த வார்த்தைகளை அப்படியே உணர்வாய் பிரதிபலிப்பதை..
கேப்டன் ... “Of course...”
சிரஞ்சீவி ... சிரிக்கிறார்... “நீங்க என்னைப் பத்தி நெறைய சொல்லிட்டீங்க.. நெறையைத் தான் சொன்னீங்களே தவிர குறையை சொல்ல்லே. அதையும் சொல்லியிருந்தீங்கன்னா என்னை நான் திருத்திக்கிறதுக்கு கொஞ்சம் வசதியா இருந்திருக்கும். அவ்வளவு தான்... வெல்.. இப்போ எதுக்காக இதெல்லாம் என்கிட்டே சொல்றீங்க..”
ஓய்வு அறிவிப்பினைக் கேட்ட வுடன் தன்னுடைய மனத் துடிப்பினையும் ரீ.யேக்ஷனையும் அங்கே வெளிக் காட்ட விருப்பமில்லாமல் வெளியில் வந்து விடுகிறார். பார்ப்பவர்கள் எல்லோரும் ஏதோ விழுந்து புரண்டு காட்சியை டிராமா ஆக்கி விடுவார் என்று நினைக்கும் போது அதைப் பொய்யாக்கி அமைதியாக ஆனால் உடல் மற்றும் மன வலியை மட்டும் வெளிக்காட்டுகிறார். மன சாட்சி அவருக்குள் புகுந்து அவருடைய சேவை மனப்பான்மையை எடுத்துச் சொல்லி சகஜ நிலைமைக்கு மாற்றுகிறது. இப்போது அறைக்குத் திரும்ப எத்தனிக்கும் போது அவருடைய தோரணையைப் பாருங்கள்.
அவருடைய மனசாட்சி சொல்லும் ஒரு வரி... நினைத்தாலே புல்லரிக்க வைக்கிறது..
“கண்ணீரால் கரைந்து போகும் சாதாரண சிரஞ்சீவியில்லை நீ.. காலத்தை வென்று நிற்கும் மாபெரும் சிரஞ்சீவி... கேரி ஆன் மேன். கேரி ஆன் பெல்லோ.. கேரி ஆன்...”
சிரஞ்சீவி.. யூ ஆர் கரெக்ட்.. என்று ஒரு விரலை உயர்த்தி சொல்லி சமாதான மடைந்து சிரிக்கிறார்.. ஓ வாட் ஏ foold ஐ எம்...
யாருக்காவும் காத்திருக்காமல் அலைகள் தங்கள் பணியைத் தொடர்ந்து செய்வது போல் சிரஞ்சீவியும் தொடர்ந்து தன் சேவையாற்ற செல்வதை சிம்பாலிக்காக காட்டுவது பாராட்டுக்குரியது. இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் இங்கே பாராட்டைப் பெறுகிறார்கள்.
அறைக்குள் நுழைகிறார் சிரஞ்சீவி. தன்னுடைய லட்சியம் தான் வளர்ந்த இந்த கப்பலிலேயே கடைநிலை ஊழியனாகவே சாக வேண்டும் என்பதாக கூறி சென்னை சென்றடையும் வரை இக்கப்பலில் துப்புரவுத் தொழிலாளியாகவே பணி புரிய அனுமதி கோருகிறார். கேப்டன் அனுமதித்து அவருக்கு கப்பலில் வி.ஐ.பி. அந்தஸ்துடன் மரியாதை தரச் சொல்லி மேலிட உத்தரவையும் கூறுவதுடன் காட்சி முடிகிறது.
……..
இந்தக் காட்சியில் என்ன இருக்கிறது என்று சிலர் நினைக்கலாம். உன்னிப்பாக்க் கவனித்தால் புரியும். குறிப்பாக புதியதாக நடிக்க வருபவர்களுக்கு இந்த காட்சியும் விளக்கமும் மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். முதன் முதலில் காமிரா முன் நடிக்க வருபவர்களுக்கு இப்படி ஒரு காட்சியை விவரிக்கும் போது எந்த விதமான ரியாக்ஷன் தர வேண்டும் என புரியாமல் விழிப்பார்கள். அல்லது ஹாலிவுட் சினிமாக்களைப் போல் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் ஸ்டட்டில் நடிப்பு என்ற சாக்கில் முகத்தை கான்க்ரீட் சுவரைப் போல் வைத்திருப்பார்கள்.
அப்படி நடிக்க வரும் புதியவர்களுக்கு நடிகர் திலகத்தின் படங்கள் ஒரு இலக்கணப் புத்தகமாக விளங்குவது சிறப்பு. இது வெறும் பேச்சு வழக்கில் கூறப் படுவதல்ல. உண்மையான கூற்றாகும். ஒவ்வொரு காட்சிக்கும் அவருடைய நடிப்பு எப்படி இலக்கணமாக விளங்குகிறது என்பதை நாம் இங்கே கோபால் சாரின் பதிவுகளின் மூலம் தெளிவாக ஏற்கெனவே அறிந்து வருகிறோம். அதனுடைய தொடர்ச்சியாக துணைப் பதிவுகளாக என்னுடைய பதிவுகளைத் தர விரும்புகிறேன். அதில் ஒன்றே இந்த சிரஞ்சீவித்துவமான காட்சி.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு நடிப்பிலக்கணம், நடிப்பு அகராதி என்பதை இந்தத் திரியின் மூலம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளலாம்.
சிரஞ்சீவி
தயாரிப்பு குருராம் மூவீஸ்
இசை – எம்.எஸ்.விஸ்வநாதன்
ஒளிப்பதிவு – எம்.சி.சேகர்
கதை வசனம் – எஸ்.ஜெகதீசன்
படத்தொகுப்பு, இயக்கம் – கே.ஷங்கர்
வெளியான நாள் 17.02.1984
இதன் தொடர் பதிவு
வியட்நாம் வீடு-சிரஞ்சீவி ... பணி ஓய்வுக் காட்சி ... ஒப்பீடு
வியட்நாம் வீடு திரைப்படத்தின் நாயகன் பத்மநாபன் ஒரு ஆச்சாரமான பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவன். தொழிலை தெய்வமாக நினைப்பவன்.
டேவிட் சிரஞ்சீவி ஒரு ஆங்கிலோ இந்தியன். இவனும் தொழிலை தெய்வமாக நினைப்பவன்.
பத்மநாபன் இந்திய கலாச்சாரத்தில் வளர்ந்தவன். சற்று உணர்ச்சி வசப் படுபவன். சிரஞ்சீவியும் இந்தியக் கலாச்சாரத்தில் வளர்ந்தாலும் எதையும் ஆழ்ந்து உணர்ச்சி வசப் படாமல் அணுகக் கூடிய திறமை பெற்றவன்.
இருவருமே பணியாற்றும் தொழிலில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து வாழ்பவர்கள்.
இருவருக்குமே தங்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் கட்டத்தை முற்றிலும் மறந்து பணியாற்றி, மேலதிகாரிகள் சொன்ன பிறகே அதனை உணருகிறார்கள்.
ஆனால் அந்த பணி ஓய்வினை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள், அதற்கு அவர்களுடைய Reaction என்பது தான் இங்கு வேறு பாட்டைக் காண்பிக்கிறது.
ஒரு நடிகன் தன் பாத்திரம் வாழ்நாள் முழுதும் பேசப் பட வேண்டும் என்றால் அதனை நன்கு உணர்ந்து அதனுடைய contextஐ நன்றாகப் புரிந்து கொண்டு தன்னுடைய சொந்தத் திறமை, சிந்தனை அனைத்தையும் பிரயோகித்து அதனுள் புகுந்து, அப்பாத்திரத்தை நிலை நிறுத்த வேண்டும். இதனை வலியுறுத்துவது நடிகர் திலகத்தின் படங்களே.
இப்படி ஒரு காட்சி வரும் போது ஒரு புது நடிகனுக்கு சிந்தனை சட்டென்று தோன்றாது. இயக்குநர் விளக்கினாலும் கூட எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் அவரே எடுத்துக் கூற வேண்டும் என்கிற நிலைமை தான் பொதுவாக நிலவி வருகிறது. இந்த மாதிரி சூழ்நிலையில் ஒரு நடிகனுக்குக் கை கொடுப்பவை நடிகர் திலகத்தின் படங்களே.
இந்த பணி ஓய்வுக் காட்சியில் பத்மநாபன், மிகவும் உணர்ச்சி வசப் பட்டுத் தன்னுடைய நிலையை எண்ணிப் பெரிதும் வருந்துகிறார். காரணம் அவருக்கு அதை நம்பித் தான் வாழ்க்கை, அது மட்டுமல்ல அவர் ஆற்றக் கூடிய கடமைகள் காத்திருக்கின்றன. நிர்ப்பந்தங்கள் அவருடைய ஓய்வின் வலியை அதிகப் படுத்துகின்றன. இதனால் அவருடைய Reaction உணர்ச்சி வசப்ப்ட்ட தாய் இருக்கும்.
சிரஞ்சீவி அதற்கு நேர் மாறான பாத்திரம். ஒரு விநாடி ஓய்வுச் செய்தி வருத்தம் அளித்தாலும் அதனை சுதாரித்துக் கொள்ளக் கூடிய வலிமை அவனுக்கு உண்டு. இதே போல் அந்தக் காட்சியில் மேலதிகாரிகளிடம் தன்னுடைய Reactionஐக் காட்டாமல் வெளியில் வந்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு அதற்கேற்பத் தன்னை நிதானப் படுத்திக் கொள்கிறான்.
திரைப்படங்களில் ஒவ்வொரு சூழ்நிலையும் வெவ்வேறு படங்களில் மீண்டும் இடம் பெறும். அதுவும் நடிகர் திலகத்தின் படங்களில் இது பல முறை நிகழ்ந்துள்ளது. அவற்றை அவர் எப்படிக் கையாண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டால் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு அது மிகச் சிறந்த இலக்கணப் புத்தகமாகவும் Reference bookஆகவும் திகழும்.
இந்த இரு பதிவுகளையும் நான் தயார் செய்வதற்கு எனக்குப் பிடித்த நேரம் கிட்டத் தட்ட ஐந்து மணி நேரங்கள். இரவு முழுதும் உறங்காமல் கண் விழித்து ஒவ்வொரு காட்சியின் வசனத்தையும் தனித்தனியே டைப் செய்து காணொளி தயார் செய்து அளித்திருக்கிறேன். சாதாரணமாக இந்த மாதிரி பதிவுகளுக்கு குறைந்தது 10 மணி நேரங்களாவது பிடிக்கும்.
இந்த உழைப்பையும் இந்த நேரத்தையும் வீணடிக்கச் சொல்கிறார் கோபால்.
இந்தப் பதிவில் யாரைப் புண்படுத்தும் படியான கருத்துக்கள் உள்ளன. தனிப்பட்ட முறையில் யாரையாவது மனம் புண்படும் படி எழுதியிருந்தால் பதிவினை எடுத்து விடலாம்.
ஆனால் இவர் இந்த பதிவை எடுக்கச் சொல்வது ஏன். அதுவும் நடிகர் திலகத்தின் நடிப்பைில் உள்ள இலக்கணத்தையும் நடிப்பில் இரு வேறு நிலைகளைப் பற்றிய ஓர் ஒப்பீட்டினையும் எடுக்கச் சொல்வது நியாயமா ... இதை நீங்கள் அனைவரும் மனசாட்சிக்கு உட்பட்டுச்சொல்லுங்கள்..
நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றிய பதிவை எடுக்க வேண்டுமா
Gopal.s
11th November 2013, 08:03 AM
ராகவேந்தர் சார்,
மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்.தாங்கள் சிரஞ்சீவியை பதித்ததில் விஷம நோக்கம் இல்லையென்று?
எங்கே ஒரு நடிகன் முன்னிலை படுகிறானோ, அங்கு சினிமா கலை செத்து விடுகிறது. நல்ல திரைகதை,பாங்கான வசனங்கள், சினிமா மொழியறிந்த இயக்குனர்,கேமரா மேன்,எடிட்டர் உள்ள போதுதான் ,ஒரு நடிகன் தன்னை பாத்திரத்தின் வாயிலாக வெளிபடுத்தி கொள்ள முடியும்.அந்த பாத்திரத்துடன் மக்கள் ஐக்கியமாகவேண்டும்.
இது பள்ளி கூட தனி நடிப்பு போட்டியல்ல. ஒரு சீனில் பிரமாத படுத்தி விட்டார் என்று சொல்ல. முழு படத்தில்,ஒரு சீனில் கூட , நன்றாக நடிக்கவில்லைஎன்றால் அவரை கொண்டாடவா செய்வோம்?அதல்ல பிரச்சினை. இங்கு நமக்குள் பேசி,பிரத்யேக ரசனையை பதிவு செய்யவில்லை. வருங்காலத்திற்கு ஆவணகளை விட்டு செல்கிறோம்.பொறுப்புணர்ச்சியுடன் செயல் படுவது அவசியம்.
RAGHAVENDRA
11th November 2013, 08:08 AM
விஷமத்தனமான பதிவுகளைப் போடுவதற்கு ஓரிரு வரிகள் போதும். இதற்காக யாரும் நாள் கணக்கில் மணிக் கணக்கில் உழைப்பையும் நேரத்தையும் செலவிட மாட்டார்கள். தங்களுடைய எண்ணம் தாங்கள் ஒருவர் மட்டுமே இங்கு புத்திசாலி, மற்றவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்கிற அணுகுமுறையில் அமைதந்துள்ளதால் தங்களுக்கு அப்படித் தோன்றுகிறது.
தங்கள் பதிவுகளுக்கு என்னால் விளக்கம் அளிக்க முடியும். தங்களுடைய ஒவ்வொரு கருத்தினையும் ஆணித்தரமாக என்னால் மறுக்க முடியும். இதற்கு மேல் வளர்க்க வேண்டாம் என விரும்புகிறேன்.
வாசு சாரின் 4000வது பதிவை வரவேற்க ஆவலாய் இருக்கிறேன்.
Gopal.s
11th November 2013, 08:12 AM
பத்மநாபன் ஓய்வு பெறும் போது துடித்தோம். அவருடன் நாமும் கவலை பட்டோம்.
இந்த சிரஞ்சீவி ஓய்வு பெறும் போது அப்படி நடந்ததா?
IliFiSRurdy
11th November 2013, 09:42 AM
தலைவரின் "இனியவை நாற்பது" (என அடியேன் கருதுவது)
Parasakthi,Manohara,Andha Naal,Edhir Paradhathu,Rangoon Radha,Uthama Puthiran
Veerapandiya Kattabomman,Bhaaga Pirivinai,Dheivapiravi,Padikkadha Medhai,Pava Mannippu
Pasamalar,Palum Pazhamum,Kappal Ottiya Thamizhan,Padithaal Mattum Podhuma,Bale Pandiya
Aalayamani,Paar Magale Paar,Aandavan Kattalai,Pudhiya Paravai,Thiruvilaiyadal,Thillana Mohanambal
Uyarndha Manidhan,Deiva Magan,Vietnam Veedu,Sumathi En Sundhari,Gnana Oli,Gauravam,Thangapathakkam
Mudhal Mariyathai,Thevar Magan,Thiruvarutselvar,Thirumal Perumai,Thirumbi Paar,Sivandha Mann,Raja,Aval Yaar
Neelavanam,Enga Mama,Ethiroli
அப்படியே "இன்னா நாற்பது" எடுக்கப்போனால் எண்பது கூட தேறுகிறது..
ஆனால் அந்த பட்டியல் பிறகு...
Subramaniam Ramajayam
11th November 2013, 10:48 AM
பத்மநாபன் ஓய்வு பெறும் போது துடித்தோம். அவருடன் நாமும் கவலை பட்டோம்.
இந்த சிரஞ்சீவி ஓய்வு பெறும் போது அப்படி நடந்ததா?நடிகர்திலகத்தின் சராசரிக்கும் கீழான cliche expression . அந்த பாத்திரத்தோடு நாம் ஒன்றாததால் ,எதோ போதிய பயிற்சியற்ற புது நாடக நடிகர் பயிற்சி கொடுக்க பட்டு ,மற்றவர் பேசும் போது வரிக்கு வரி reaction கொடுக்க சொல்லி ,கொனஷ்டை செய்வது போல படு கேவலமாக உள்ளது. இதற்கு போய்,5 மணி நேர உழைப்பென்றால், இந்த மூளையை exhibition இல் தான் வைக்க வேண்டும்.
sorry gopal sir
the above post is not upto the standards of the thtread my humble opinion something like insulting our GOD..
Gopal.s
11th November 2013, 11:11 AM
sorry gopal sir
the above post is not upto the standards of the thtread my humble opinion something like insulting our GOD..
I own up my words. Hindu Mythology allows even Gods to Err and Slip. My God also slipped. This will not demean our God. But some persons with stupid notions try to highlight and Glorify the slips as the achievement ,make a mockery of the God and himself. Let him correct himself first.When I requested something,how dare he denied to do it on our request ?(Whenever he was hurt,we obliged him)
Russelluvd
11th November 2013, 11:26 AM
போயி மத்த திரிகள பாருங்கோய்யா எப்பிடி அவுங்களுக்குப் புடிச்ச ஆக்ட்டருங்கள தூக்கி வச்சி கொண்டாட்ராங்கன்னு பத்து பைசாக்கு தேராத படத்தத் கூட எப்பிடி ஒசத்தி எழுதறாங்க அதனால் அவுங்க ஆளுங்க மவுசு தேஞ்சிடுதா போயி கதுக்கங்கயா காதல்வாஹனம் தெர்திருவிழா படத்தக் கூட எம்ஜியார் திரிய்லே பெர்மையா எழுதுறாங்க இத்த எழுதலான்னு எழுதக்கொடாதுன்னு சொல்றதக்கு நீங்கயாரு ஓய் இவுங்கதேன் சிவாஜி பேர கெடாமா பாதுக்கப் போராங்களாம் இங்க இஷ்டப்பட்த எழுத அல்லாருக்கும் ரைட்ஸ் இருக்கு என்னாமோ வந்துட்டாங்க பெரிய தொரைங்க எழதறது ஒரு எழவும் புரியல மண்ணும் புரியல இங்க அல்லாரும் சிவாஜி நடிச்ச அத்தன படங்களப் பத்தி படிக்கனும்னு ஆசப்பட்ரமாதிரி தெரியது சும்மா ரெண்டு மூணு ஜென்மங்க வந்து குட்டய கொழப்பதீங்க அல்லத்திலேயும் சிவாஜி சூப்பரத்தேன் ஆக்ட்டு குடுதுக்கிராறு சொம்மா பழய படத்த போட்டு அருக்காம புதுசப் பத்தி தைறியமா எழுதுங்கப்பா என்னாமோ இந்தப் பூச்சண்டிகெல்லாம் பயந்த்கினு கோவாலு சாரு உன் திரிய்லேயே உன்ன கவனிக்க்னுமு நெனச்சேன் நான் ராகவேந்திரனுக்கு எழுத சொன்னா நீ அங்க மரியாதயே இல்லாம என்னப்பத்தி எழுத்திற்க நீ என்னா பெரிய கொம்பா மரியாத குடுத்து மரியாத வாங்கு புதுசா வரவனுக்கு எப்பிடிமரியாத தரதுன்னு முதல்ல கத்துகினுவா கோவாலு கம்னு கெட தவக்கள மாறிகத்தாத அப்புறம் உன்னைய மாறி சொல்றேன் வேறமாறி ஆயிடும் மூடிகினு போ திரிய கெடுக்காத
Gopal.s
11th November 2013, 11:52 AM
ஆஹா, அற்புதம் ராகவேந்தர் சார். நீங்கள் பண்ணாமல் விட்ட அமர்க்களம் இது ஒன்றுதான்.இப்போது அதுவும் ஆரம்பித்து விட்டது.
Russelluvd
11th November 2013, 01:15 PM
அட்து நாம் இருவர்பத்தி Sivaji Ganesan School of Acting திரியல எழுதப் போரேன் யார் இன்னாசெஞ்சிடரான்னு பாத்துடலாம்.
Gopal.s
11th November 2013, 01:36 PM
அட்து நாம் இருவர்பத்தி Sivaji Ganesan School of Acting திரியல எழுதப் போரேன் யார் இன்னாசெஞ்சிடரான்னு பாத்துடலாம்.
ராகவேந்தர் சார்,
நினைத்ததை சாதித்து விட்டீர்கள். இப்போது திருப்திதானே? எதை நான் தவிர்க்க நினைத்தேனோ,அவற்றுக்கு பிள்ளையார் சுழி போட்டு ,என்னையும் நடிகர்திலகத்தையும் ஒரு சேரவே அவமானத்தில் தள்ளி விட்டீர்கள். நீங்களும் ஒரு சாதனையாளர்தான்!!!!!!!!!!!!!!!!
JamesFague
11th November 2013, 02:13 PM
After 80's NT has given memorable performance in Bandham, Vellai Roja,
Oorum Uravum, En Asa Rassave etc., Mr Gopal has used very unfortunate
words and made derogatory comments on NT which crores of NT's fans
will not tolerate. It is better for him not to write/use such words on NT.
For Crores of NT's fans all the movies of him are gems and only in this
thread it is possible to comment on NT because of the tolerance and
maturity level of NT's fans & Hubbers. Whatever work done by Gopal has
become nothing because of his utterances on NT.
Gopal.s
11th November 2013, 02:23 PM
After 80's NT has given memorable performance in Bandham, Vellai Roja,
Oorum Uravum, En Asa Rassave etc., Mr Gopal has used very unfortunate
words and made derogatory comments on NT which crores of NT's fans
will not tolerate. It is better for him not to write/use such words on NT.
For Crores of NT's fans all the movies of him are gems and only in this
thread it is possible to comment on NT because of the tolerance and
maturity level of NT's fans & Hubbers. Whatever work done by Gopal has
become nothing because of his utterances on NT.
If you are such a big fan, crores of people behind you why couldnt you make chiranjeevi,oorum uravum,nam iruvar,nermai,tharasu ,sumangali,iru medhaigal Etc Etc a thumping success? Dont even dare to lift your finger at me. You people are out here to bring shame to him and not to sing his glory. Anyway,I dont need your Dumb Accolades.
JamesFague
11th November 2013, 02:25 PM
Mind your words Gopal You are the curse of this thread.
It is better stop your writing on NT.
Gopal.s
11th November 2013, 02:28 PM
Mind your words Gopal You are the curse of this thread.
It is better stop your writing on NT.
Thanks for your advise. I know your capability . Just stop that crap. Let you and your partners be the pride. I just dont care. Anyway,this is my last posting on your response.
Russelluvd
11th November 2013, 02:34 PM
திரி ஒருத்தர்வூட்டு நெலமா அவருமட்டும் நாத்து உட்ரதுக்கு. பொது நிலம்யா யாருவேண்ணா எழுதலாம் ஆனாக்கா சிவாஜி திரியலசிவாஜிய யாரும் வய்யகூடாது சொரனயுல்லவன் சோத்துல உப்புபோட்டு துன்றவன்யாரும் அத பொருத்துக்கமாட்டான் இந்த திரியில இருக்குரவங்க சூடுசொரன உள்ளவங்கன்னு நம்புறன்
Gopal.s
11th November 2013, 04:03 PM
சிவாஜி என்ற மாமனிதர்.
ஒரு விஷயத்தில் மட்டும் எனது ஏழு வயதில் இருந்து உறுதியாக இருந்துள்ளேன்.அதை ஈடுபாடு,வழிபாடு,அதீத திறமையால் கட்டுண்டல் எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள். அது நடிகர்திலகத்தின் மீது நான் கொண்ட நாளும் வளரும் பக்தி.எனக்கு அவர் உலகத்திலேயே சிறந்த நடிகர் என்பதே போதுமானதாய் இருந்தது.(இந்த விஷயத்தில் Joe கட்சிதான்).
அந்த கலைஞன் பிறக்கும் போதே ஒளி வட்டத்துடன்,நடிப்பு என்ற கவச குண்டலம் கொண்டு பிறந்ததால் எவராலும் எக்காலத்திலும் வெல்ல முடியாதவராகவே திகழ்ந்தார்,திகழ்கிறார்,திகழ்வார்.அவருடைய கவச குண்டலத்தை ,அனுபவத்தால் பெற்ற ப்ரம்மாஸ்திரங்களை கவர, பல அரசியல் இந்திரர்கள் மாறி மாறி வேடமிட்டு பார்த்தனர்.ஆறு பேர் சேர்ந்து அந்த கர்ணனை அழிக்க முடிந்தது.இந்த நடிப்பு கர்ணனோ ,ஆறு கோடி பேர் மனதில் சிரஞ்சீவியாய் வாழ்வதை கர்ணனே வந்து உலகத்துக்கு நிரூபித்து நிலை நாட்டியாயிற்று.
ஆனாலும் நான் கற்றதும்,பெற்றதும்,உணர்ந்ததும் எனக்கு ஒன்றை ஓங்கி உரைப்பது அவர் ஓர் மாமனிதரும் ஆவார் என்று.
நடிப்பை பற்றித்தான் மாய்ந்து மாய்ந்து எழுதி கொண்டிருக்கிறோமே ? நான் வியக்கும் அவரின் மற்ற குணங்களை ,அம்சங்களை வைத்து பாகம் 11 ஐ தொடங்குவதில் பெருமை கொள்கிறேன்.
இது சத்திய சோதனைக்கு நிகரான உண்மை பதிவுகள் .
செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல் என்ற சொல்லுக்கேற்ப இந்திய கூட்டு குடும்ப மதிப்பு சார் மாண்பின் உயர் பிரதிநிதி.
அசைக்க முடியா தேசிய உணர்வு,இறை பற்று,மனதுக்கு உண்மையான வாழ்க்கை .
வெகுளித்தனம் கொண்டு இவர் பெரியோர்,இவர் சிறியோர் என்று பாராமல் எல்லோரிடமும் உண்மையாய் பழகி உரிமை எடுத்து மனம் திறப்பார்.
எல்லாவற்றிலும் ஒரு முழுமையான அர்ப்பணிப்பு(Perfection ) காட்டுவதுடன்,பிறரிடமும் எதிர்பார்ப்பார் .
கற்றோரை மிக மதிப்பார்.ஆலோசனை கேட்பார். ஆசிரியர்களை போற்றி மதிப்பார்.
சக கலைஞர்களிடம் மிக மிக பெருந்தன்மை காட்டுவார்.வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடோ, பழியுணர்வோ ,கெடுக்கும் எண்ணமோ அவர் மனதில் துளிர்த்ததே இல்லை.
பொது காரியங்களுக்கு நிறைய நன்கொடைகள் விளம்பரம் இல்லாமல் வழங்கியுள்ளார்.
சினிமா,அரசியல்,பொது நிகழ்ச்சி எல்லாவற்றிலும் நேரம் தவறாமையை கடை பிடித்து,மற்றவர் நேரத்தையும் மதித்தவர்.
நடிப்பை பற்றியே சிந்தனை,காரிய கவனம் கொண்ட தனிமை விரும்பி என்றாலும் ,நகைச்சுவை உணர்வுடன் பிறருடன் எளிமையாக மனம் திறப்பார்.
மனம், உடல் இரண்டையுமே மிக மிக சுத்தமாக பராமரித்தவர்.
கடைசி வரை உலக புகழ் பெற்றும் தன் அடிப்படையை மறக்காத குணம் மாறாதவர்.
தன் படங்களே தனக்கு விளம்பரம் தேடி கொள்ளும் என்ற நம்பிக்கையில் product ,Quality இரண்டையும் மட்டுமே நம்பியவர். collection சாதனை செய்த தன் படத்தை பற்றியே பிறர் சொல்லி தெரிந்து கொண்டவர். தன் தொழில் தவிர பிற விஷயங்களில் ஆலோசனை கூறுவாரே தவிர தலையிட மாட்டார்.
பல தயாரிப்பாளர்களை ,இயக்குனர்களை உருவாக்கி உள்ளார்.இவரை மட்டுமே நம்பிய முக்தா,பாலாஜி போன்றோர் சிறப்பாக வாழ்ந்தனர்.
ஜாதி ஒழிப்பு என்றெல்லாம் பாவ்லா காட்டாமல்,அதை ஒரு நிதர்சன உண்மையாகவே கொண்டு ,வேறுபாடு பாராமல் எல்லா சாதியினரிடமும் சம அன்பு காட்டி ,சமமாகவே உணர்த்துவார்.
இளைய தலைமுறை வளரும் நடிகர்களுக்கு இவரளவு வாய்ப்பளித்து உயர உதவியவர்கள் யாருமில்லை.
தன் சம்பத்த பட்ட படங்களாக இருந்தாலும் மனதில் உள்ளதை உள்ள படி விமர்சிப்பார்.
அறவே ego இன்றி யாராவது ஏதாவது தன் மனம் கோணும் படி உளறினாலும் மன்னிப்பார்.
நண்பர்களை மிக நம்புவார். வாக்கு கொடுத்தால் மாற மாட்டார்.
படங்களின் Quality க்காக அவர் தன்னை வருத்தி கொண்ட அளவு யாரும் செய்ததில்லை.
பிற மாநில, பிற நாட்டு கலைஞர்களிடம் மிக இணக்கம் காட்டி ,அவர்கள் மதிப்பை பெற்றார்.
யாராவது ஏதாவது சிறப்பாக செய்து விட்டால் ,யாரென்று பாராது மிக மனம் திறந்து பாராட்டுவார்.
தன் சுய image building பற்றி கவலையே பட்டதில்லை.
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியதே இல்லை.
பொது வாழ்வில் தூய்மை கொண்டவர். தன் நன்மைக்காக ரசிகர்களை பயன் படுத்தவே விரும்ப மாட்டார்.அவரவர் படிப்பை,தொழிலை,குடும்பத்தை கவனிக்கவே சொல்வார்.
நல்ல விஷயங்கள் எந்த மொழியில்,திசையில் இருப்பினும் தேடி கொண்டு வருவார்.
தன் திறமை ஒன்றையே நம்பி,வெளிப்படையாய் வாழ்ந்தவர்.
தன் கடைசி படத்திலும், உடல் நிலையை கூட பொருட்படுத்தாமல் ,அதே அர்பணிப்புடன் வேலை செய்தவர்.
Gopal.s
11th November 2013, 04:05 PM
OM, Shanthi Shanthi Shanthi....
Gopal.s
11th November 2013, 04:12 PM
Deleted.
ajaybaskar
11th November 2013, 04:22 PM
http://www.youtube.com/watch?feature=player_profilepage&v=UCW0qmIrA8E
Watch it from 23:20
eehaiupehazij
11th November 2013, 04:25 PM
It is really painful to observe that ego problems pop up and we detract from our main objective of taking the name and fame of NT to the generations to come. No actor in this world is an exception that few of his movies may fail or even not upto the expected standards. NT has also been put into this annoying situation of some of his movies not really utilizing his acting calibre purely due to the director's misconceptions. The glory of NT has always been growing with the successive rereleases of his classics.Let us concentrate on bringing more and more cult classics of our NT back to their form instead of wasting our time and energy on such trivial issues. As NT's fans are showing maturity let us accept the fact that some of his movies need not be brought on a focus in this thread but we keep them by heart as his fans.
Russelluvd
11th November 2013, 05:36 PM
hello everybody,
my name is kiruba.due to some of the unwanted postings i am not properly introduce myself. sorry.i am not a hardcore sivaji fan.but i like and admire the legend.i saw his earlier films like vetrikku oruvan, oorum uravum vasandhathil oru nal raja mariyadhai keezh vanam sivakkum rishimulam en asa rasave nethibathi marumagal lashmi vanthachu lorry driver rajakannu kalthoon sadhanai rjarishi etc.in rajarishi he acted as viswamithra muni.wonderful job done by sivaji.i saw that movie four times.pl.anyone can write about that movie
rajeshkrv
11th November 2013, 09:24 PM
dear vasu sir
இரண்டு கண்களில் எந்த கண் சிறந்தது என்பதைப்போல உள்ளது இந்த நிலைமை. நடிகர் திலகம் - நடிப்பிற்கு திலகமானவர் என்பது பொருள். ஆகையால் கப்பல் ஒட்டிய தமிழன் மட்டும் நடிப்பு அல்ல ! மிருதங்க சக்ரவர்த்தி மட்டும் நடிப்பு அல்ல ! ஒரு கருடா சௌக்யமா கூட நடிப்புதான் ! ஒரு சிரஞ்சீவி கூட நடிப்புதான் ! ஒரு சந்திப்பு கூட நடிப்புதான் ! இவ்வளவு ஏன் ? ஒரு lorry driver rajakannu கூட நடிப்புதான் !
இலை முழுவதும் நெய்கலந்த சோறும் ஒரு அப்பளமும் வைத்திருந்தால் யாரும் உண்பதற்கு சிறிது தயங்குவர்.
சிலருக்கு பொரியல் தேவைப்படும், சிலருக்கு கூட்டு, சிலருக்கு பருப்பு, சிலருக்கு பச்சடி, சிலருக்கு ரசம், சிலருக்கு சாம்பார், சிலருக்கு தயிர், சிலருக்கு மோர் ...!
ஆக ! வெறும் சோற்றைமட்டுமே நெய்விட்டு அப்பளத்துடன் பிசைந்து யாராலும் எப்போதும் சாபிட்டுகொண்டிருக்க முடியாது !
சில நேரங்களில் இது ஒன்றுமே கிடைக்காதபட்சத்தில் சப்பாத்தி மட்டுமே கிடைக்கும்..! இருந்தாலும் அதுவும் ஒரு உணவு தான் !
ஒன்றுமே கிடைக்காதபட்சத்தில் சப்பாத்தியாவது கிடைத்ததே என்று சந்தோஷப்படும் கூடமும் நம் நாட்டில் உண்டு என்பதுவே எனது கருத்து !
sl .. நீங்கள் சொல்வது கொஞ்சம் ஏற்ற்குக்கொள்ளக்கூடியதாக இல்லை. ஒன்றுமே கிடைக்காத பட்சத்தில் சப்பாத்தி கிடைக்கும் என்ற கருத்து .. அப்படி பட்ட நிலை நடிகர்திலகத்திற்கு வரவேண்டியதில்லை ஒருபடமும் இல்லை ஒரு லாரி டிரைவர் ராஜாக்கண்ணு இருக்கட்டும் என்ற நிலை நடிகர் திலகத்திற்கு தேவையில்லாதது . நாங்கள் மீண்டும் மீண்டும் பாசமலரயோ கப்பலோட்டிய தமிழனையோ பார்த்து மகிழ்ந்து கொள்வோம் .. ஒரு ஜயமாலினியுடன் குத்தாட்டம் என்றெல்லாம் தேவையில்லாதது . அது ஒரு புறமிருக்க இங்கே கோபால் சிரஞ்சீவி, தாம்பத்யம் போன்ற படங்கள் தனக்கு பிடிக்காத ஒன்று என்று சொன்னதில் தவறொன்றுமில்லையே . நான் நடிகர்திலகத்திடம் பேசும் வாய்ப்பு கிடைத்திருந்தால் இந்த படங்கள் எல்லாம் நீங்கள் செய்திருக்க கூடாது என்று சொல்வேன் .. அது என் அபிப்ராயமே . அதே போல் கோபால் சொன்னதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. இதற்காக வரிந்து கட்டிக்கொண்டு அவரை இந்த திரியை விட்டே ஓட்டும் விதமாக உள்ளது உங்கள் பதிவு. நடிப்பின் இலக்கணம் நடிகர் திலகம் அவர் நடித்த எல்லா படங்களும் பிடிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.
Subramaniam Ramajayam
11th November 2013, 09:38 PM
dear rajeshkvr
sivaji sila padangal may be not good BUT NOT HIS ACTING TALENTS THAT IS OUR TARAGA MANDRAM which has been very well proved by nt. BLAMING NT FOR THAT IS NOT WISE,My repeated request that not to write oe speak on these lines,
rajeshkrv
11th November 2013, 10:41 PM
dear rajeshkvr
sivaji sila padangal may be not good BUT NOT HIS ACTING TALENTS THAT IS OUR TARAGA MANDRAM which has been very well proved by nt. BLAMING NT FOR THAT IS NOT WISE,My repeated request that not to write oe speak on these lines,
No body questions his Acting talent.. but see his romance in Thamabathyam Vs his romance in iru malargal etc.. Thambtathyam was kind of kiddish. As a fan we are saying such films definitely did not add any value to NT . May be some stupid producers and directors used NT's name for making business.. that's all
I'm not here to say all movies in 80's & 90's were bad NO. There were good movies where in NT's potential was exploited .Vaazhkai was one, Anbulla appa etc
for me lorry driver raja kannu was a movie where in the whole team made fool out of themselves..
Subramaniam Ramajayam
11th November 2013, 11:24 PM
No body questions his Acting talent.. but see his romance in Thamabathyam Vs his romance in iru malargal etc.. Thambtathyam was kind of kiddish. As a fan we are saying such films definitely did not add any value to NT . May be some stupid producers and directors used NT's name for making business.. that's all
I'm not here to say all movies in 80's & 90's were bad NO. There were good movies where in NT's potential was exploited .Vaazhkai was one, Anbulla appa etc
for me lorry driver raja kannu was a movie where in the whole team made fool out of themselves..
As the trends changed in late eighties say 84 onwards he could not get good movies and the dircters also make his name for business purpose for which NT could not do any thing, i fully agree theselines. but my point is that still he did justice to that roles it is all business of the dirctors producers who exploiited. we can not interfere here.
rajeshkrv
12th November 2013, 01:38 AM
As the trends changed in late eighties say 84 onwards he could not get good movies and the dircters also make his name for business purpose for which NT could not do any thing, i fully agree theselines. but my point is that still he did justice to that roles it is all business of the dirctors producers who exploiited. we can not interfere here.
This is a very generic reply sir(We cant interfere .. who want to interfere . all we r saying is films like lorry driver etc are not of NT's calibre )
Anyways all i'm saying is Gopal sir has all right to say about a film. People should not pounce on him ..
i'm at peace now ..
sivaa
12th November 2013, 05:43 AM
சிவாஜி என்ற மாமனிதர்.
.
கோபால் சார் நீங்கள் முன்னர் எழுதிய சில பதிவுகள்
விடயத்தில் எனக்கு மிகவும் மனக்கவலை உள்ளது
ஆனால் சிவாஜி என்ற மாமனிதர் பற்றி
எழுதியிருந்தீர்களே அவ்வளவும் உண்மை
என் மனதில் உள்ளதை அப்படியே வரிக்கு வரி
எழுதியுள்ளீர்கள் மிகவும் மகிழ்ச்சி சார்
நீங்கள் அவரைபற்றி எழுதியவை
அவ்வளவும் உண்மை உண்மை உண்மை
உங்களுக்கு கோடான கோடி நன்றி கோபால் சார்
Gopal.s
12th November 2013, 06:58 AM
Deleted.
Gopal.s
12th November 2013, 07:34 AM
sl .. நான் நடிகர்திலகத்திடம் பேசும் வாய்ப்பு கிடைத்திருந்தால் இந்த படங்கள் எல்லாம் நீங்கள் செய்திருக்க கூடாது என்று சொல்வேன் .. அது என் அபிப்ராயமே . அதே போல் கோபால் சொன்னதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. இதற்காக வரிந்து கட்டிக்கொண்டு அவரை இந்த திரியை விட்டே ஓட்டும் விதமாக உள்ளது உங்கள் பதிவு. நடிப்பின் இலக்கணம் நடிகர் திலகம் அவர் நடித்த எல்லா படங்களும் பிடிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.
நான் எங்கும் ஓடவில்லை.
நான் வந்த புதிதில் போட்ட பதிவு. இன்றைய சூழ்நிலைக்கு பொருத்தமே.
My possting in April- 2012.
Raghavendran Sir,
Please do not mistake me for my intervention.It calls for some explanation.As an ardent ,a born devotee of Acting God,I supported his later movies and felt happy about their successes and wished for his longevity as an actor.But here,we are talking about an acting God not a mortal.We are happy with his successes and proud to talk about it loudly to the world.(thats why I started my myth series)I feel that this thread is not to talk among ourselves but should serve as a future Documentary evidence and a kind of reference point for the youngsters to know about him.
NT remained a good actor till his Pooparikka varugirom ,no doubt,but he remained the best in the world from 1952 to 1974.(Thanga Padakkam as last).Barring Avanthan Manithan,Rojavin Roja,Deepam,Annan oru Koil,Naan Vazha Vaipen,Thunai,Mudhal Mariadhai and Thevar Magan where we could rejoice the glimpse of his adaption to the neo- cinema so called realistic.If someone wants to glorify mediocrity as a showpiece of his talence,sorry guys,I am not your associate.
I request all of you not to be over-enthusiastic to market the sub-mediocre Films of his(He did plenty in later part of his career)and unimaginative but good performances,you are not doing justice to present him as the best in the world.Let us talk about his Natural , controlled,versatile performances from 1952-1958,Stylised method acting from 1958-1965, and his free flowing &improvised , unique style of acting from 1966-1974&His extrodinary acting merging with young talence in Thunai,Mudhal Mariadhai and Thevar Magan at later years.
Despite my reservations,I chose some of his later movies for appreciation in my guidelines for movie selections.Dont think that a junior is trying to dictate terms but we should not lose track of our prime objective of introducing NT in proper perspective to the young minds.
Every creative genius has a shelf life for his creativity and beyond the creative life span they bask in the good will and past glory to cash on the past hard work during their productive Span. It happened to many great Novelists,Artists,Cricketers(Tendulkar) and let us accept this as a fact of life and go on.But our Acting God had the verve and Fire till his last breath and proved time and again to the young generation in later year movies also.
I only request you to abstain from certain Movies with better bench marks set by others(Same genre or theme) and obvious lack of congruence in Energy,Physique,agility,cheer in some of his later movies.We dont criticise but avoid glorifying it.
But Success or failure is not a criteria for our selection here but a class and watcheable presentation is the main objective.
Gopal.s
12th November 2013, 08:36 AM
வாசு சார்,முரளி சார்,
நீங்கள் என்னை நன்கு புரிந்து கொள்வீர்கள்,எனக்கு நடிகர்திலகம் மீது உள்ள மாறா பக்தியை புரிந்து, என் சொல்லில் செயலில் உள்ள நேர்மையை உணர்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
வாசு ,இனி தொந்தரவு தர மாட்டேன். உனது 4000 ஆவது முத்தை எதிர்நோக்கி ,அனைவரையும் போல ஆவலுடன் காத்திருக்கிறேன்.
Russellpei
12th November 2013, 12:49 PM
what happened to 'Saraswathi Lakshmi'?
now Saruswathi Luxmi..
same or different?
rsubras
12th November 2013, 09:18 PM
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
There is always a better (private message or sending an email) option......... instead of using red color font and the largest possible font size and challenging like annamalai rajini :)
Russelluvd
12th November 2013, 10:11 PM
இன்னாய்யா இந்த திரிய்க்குவந்த சோதன நல்லா பதிவுபோட்டவுங்கள ஒரே ஆளு வைஞ்சி திட்டி ஊட்டுக்குஅனுப்சுட்டாரு ராகவேந்தறு முரலி வாசு இன்னோரு வாசு கண்னன் ரவி கார்த்திக்குன்னு அம்க்கலம்மா போய்கிட்டு இருந்த திரிய்யஊத்தி மூட்டாரு ஒருத்தர் எப்பிடி போய்கினு இருந்ததிரி ஒரே ஆளால ஊத்திமூடிகிச்சே புன்னியவான்நல்லா இருக்கட்டும் இந்தஆள உசுபிவிட்டுட்டு இதுக்கு ரெண்டுபேரு சைன்சப் வேற போடுராங்க நல்லவங்க பாவத்த கொட்டிகிட்டா இப்பிடித்தேன் ஆவும் திரிய்யக் காப்பாத்துங்கய்யோ
KCSHEKAR
13th November 2013, 06:41 AM
Ullaththil Nalla Ullam
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=3k8ZqQ7Wmr0
KCSHEKAR
13th November 2013, 06:43 AM
இன்று பிறந்த நாள் காணும் திரு.சுப்பிரமணியம் ராமஜெயம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Gopal.s
13th November 2013, 06:49 AM
My Hearty wishes to mr.Subramaniam Ramajayam.Many Many Happy Returns of the Day Sir.
Russelluvd
13th November 2013, 06:51 AM
happy birthday subramaniyam ramajayam sir
Richardsof
13th November 2013, 06:54 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/bf69f401-e04d-4e23-b049-c13b2a2ac97e_zps63c30063.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/bf69f401-e04d-4e23-b049-c13b2a2ac97e_zps63c30063.jpg.html)
KCSHEKAR
13th November 2013, 06:54 AM
இன்று (13-11-2013) நடிகர்திலகம் சிலை சம்பந்தமான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வருகிறது. நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பிலும் ரசிகர்களின் குரலை ஒலிக்க மூத்த வழக்கறிஞர் திரு.பிரபாகரன் ஆஜராகிறார்.
சிலை அதே இடத்தில் தொடரும் அளவிற்கு தீர்ப்பு அமையும் என்று நம்புவோம். நன்றி.
http://www.youtube.com/watch?v=QIzx7LW5EoY
Gopal.s
13th November 2013, 07:03 AM
My Hearty Welcome to Mr.Kiruba as I read his introduction.Looking for your valuable contributions.
Gopal.s
13th November 2013, 07:24 AM
Deleted.
Gopal.s
13th November 2013, 07:41 AM
நாமெல்லாம் இறைவனுக்கு நடமாடும் கோவில்கள்.நம் நடிப்பு தெய்வத்தின் நடமாடும் நினைவு சின்னங்கள். அவருடைய சிலைக்கு எந்த குந்தகமும் நேராது. தமிழர்கள் அந்த அளவு நன்றி மறப்பார்களா என்ன?
parthasarathy
13th November 2013, 10:03 AM
Dear Subramanyam Ramajayam Sir,
Wishing you many more happy returns of the day.
Regards,
R. Parthasarathy
ScottAlise
13th November 2013, 10:22 AM
Happy birthday Subramaniyam Ramajayam sir
Wishing & praying for success in Court case for NT's statue
ScottAlise
13th November 2013, 10:23 AM
Welcome Kiruba sir looking forward to your participation
chinnakkannan
13th November 2013, 10:24 AM
Happy Birth day to Mr. Subramaniyam Ramajeyam Sir.. Happiness always
Gopal.s
13th November 2013, 01:28 PM
உங்களுக்கெல்லாம் நான் எப்படித்தான் புரிய வைப்பது? என் நெஞ்சை பிளந்து காட்டினால் அதில் நடிகர்திலகம் மட்டுமே தெரிவார். அந்த அளவுக்கு அவர் மேல் அதீத பக்தி கொண்டவன் நான். இன்றைக்கு கோர்ட் தீர்ப்பு வருகிறது என்று நேற்று பூரா தூக்கமில்லாமல் தவித்தவன். அவர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள இயலாததால்,தனியாக இந்தியா ஒரு முறை வந்து சிலையை வணங்கி போனவன் நான். அவரை ஒரு குறிப்பிட்ட உலக தரத்தில் நிலை நிறுத்த விரும்பும் போது, சில தரமற்ற பதிவுகள் அவர் பெருமையை குலைப்பதாக உணரும் போது, கலங்கி துடிக்கிறேன். அதுவும் அந்த தெய்வத்தின் புகழுக்கு களங்கம் வர கூடாதே என்றுதான்.
என்னை இன்னும் இந்த திரி நண்பர்கள் புரிந்து கொள்ள மறுத்தால், நான் செலவழித்த நேரம் ,பட்ட பாடுகள் விரயமே.
இன்னும் என்னதான் செய்வது?சொல்வது?விரக்தியும்,வேதனையுமே மிஞ்சுகிறது.
IliFiSRurdy
13th November 2013, 02:01 PM
உங்களுக்கெல்லாம் நான் எப்படித்தான் புரிய வைப்பது? என் நெஞ்சை பிளந்து காட்டினால் அதில் நடிகர்திலகம் மட்டுமே தெரிவார். அந்த அளவுக்கு அவர் மேல் அதீத பக்தி கொண்டவன் நான்.
என்னை இன்னும் இந்த திரி நண்பர்கள் புரிந்து கொள்ள மறுத்தால், நான் செலவழித்த நேரம் ,பட்ட பாடுகள் விரயமே.
இன்னும் என்னதான் செய்வது?சொல்வது?விரக்தியும்,வேதனையுமே மிஞ்சுகிறது.
நீங்கள் பக்தன் என்று தெய்வத்திற்கு தெரிந்தால் போதாதா கோபால் சார்? மற்ற பக்தர்களுக்கு என் தெரியவேண்டும்.?
மேலும் தெரியாததை தெரிந்தது போலவும், தெரிந்ததை தெரியாதது போலவும் காட்டிக்கொள்வது மனிதஇயல்பல்லவா?
"புரிந்தது புரியாதது;தெரிந்தது தெரியாதது அனைத்தும் அறிவோம் யாம்!" என்பது தெய்வத்தின் வாக்கல்லவா?
கவலையை விடுத்து, கடமையை தொடருங்கள்.
.
KCSHEKAR
13th November 2013, 02:23 PM
நாமெல்லாம் இறைவனுக்கு நடமாடும் கோவில்கள்.நம் நடிப்பு தெய்வத்தின் நடமாடும் நினைவு சின்னங்கள். அவருடைய சிலைக்கு எந்த குந்தகமும் நேராது. தமிழர்கள் அந்த அளவு நன்றி மறப்பார்களா என்ன?
சென்னை போக்குவரத்து காவல்துறையின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டதால், வழக்கு, நவம்பர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
JamesFague
13th November 2013, 02:30 PM
Mr Vasu Sir,
Awaiting your golden post. Come soon and give a fitting
reply those who are tarnishing the fame of NT.
uvausan
13th November 2013, 03:06 PM
Dear Gopal சார் - நீங்கள் நல்லவரா அல்லது கெட்டவரா என்ற கேள்வி ஏன் அடிக்கடி எழும்புகிறது ?? உங்கள் நடை , எளிமை , அலசல் எல்லாமே நீங்கள் NT யின் பால் தாங்கள் கொண்டுள்ள பக்தியை உலகுக்கு கண்டிப்பாக பறை சாற்றும் . நீங்கள் செலக்ட் பண்ணும் வார்த்தைகள் தான் மற்றவர்கள் மனதை மிகவும் புண் படுத்துபவைகளாக உள்ளன - நீங்கள் தான் 11th part யை அருமையாக ஆரம்பித்தீர்கள் - ஆனால் முடிவில் எழுதும் ஆர்வம் எல்லோர்க்குமே குறைந்துவிட்டது –
நானும் இன்னும் பலரும் இந்த திரியில் பங்கு கொள்ள செய்ய வைத்தவை
1. அருமையான தமிழ் நடை
2. எல்லோரும் ஒரு குடும்பத்தை சேர்த்தவர்கள் என்ற உணர்வு
3. யாரையும் யாருக்கும் மட்டம் செய்ய தெரியாது என்ற நம்பிக்கை
4. மற்றவகளின் மனதை புண்படுத்த தெரியாத நண்பர்கள்
5. NT யின் நல்ல குணங்களை தன் உரிமை யாக்கிகொண்ட பல நல்ல உள்ளங்கள் கொண்ட திரி
6. நல்ல ஆவணகள் கொண்ட திரி
7. புதியதாக வருபவர்களை எல்லோரும் சேர்ந்து வரவேற்கும் பண்பு
8. மற்ற திரிகள் அண்ணாந்து பார்த்து கொண்டு வியந்துகொண்டிருக்கும் திரி
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ---- ஆணால் இப்பொழுது மற்ற திரிகளுக்கு வடை பாயசம் சாப்பாடு கிடைத்ததுபோல் சில பதிவுகள் அமைந்துவிட்டன
நான் எது சரி எது தவறு என்று சொல்ல வரவில்லை - ஆனால் நம்முடைய வேகதிருக்கு கண்டிப்பாக தடை விழுந்துவிட்டது - இந்த அழகிய திரி , உங்களால் துவங்கப்பட திரி ஏன் இப்படி சோகமான ஒரு முடிவை தேடிகொண்டது என்று எண்ணும் போதுதான் மிகவும் வருத்தமாக உள்ளது . ராகவேந்திர சாரின் 5000 பதிவை எல்லோரும் ஒரு மனதாக பாராட்டினோம் - வாசு சாரின் 4000 பதிவுக்காக ஏங்கி கொண்டிருக்கிறோம் - உங்கள் பிறந்த தினத்தையும் பிராத்தனைகள் மூலம் ஆண்டவனிடம் சந்தோஷமாக வேண்டிகொண்டோம் - ஆனால் ஏன் சார் திரி இப்படி உடையவேண்டும் ? - நீங்கள் தான் உடைக்கிறீர்கள் என்று சொல்லவில்லை - உடை படுவதற்கு மறந்தும் நாம் ஒரு காரணமாக இருந்து விட கூடாதே என்ற ஒரு நல்ல எண்ணத்தில் தான் இதை எழுதிகிறேன்.
உங்களை இதுவரை நான் பார்த்ததில்லை - பேசினதும் இல்லை - ஆனால் உங்கள் மீது ஒரு தனிப்பட்ட அன்பும் , மரியாதையும் , நீங்கள் துவக்கின இந்த திரி என்னிடம் உண்டாக்கிவிட்டது சேர்த்த கொஞ்ச நாட்களிலே .... அந்த உரிமையில் தான் இந்த பதிவை எழுதிகிறேன் - எல்லோரும் உங்களை போல எண்ண முடியாது - அவரவர் கருத்துக்கள் அவரவர்களுக்கு முக்கியம் - என்னை கூட நீங்கள் கேட்டிர்கள் - " உன் கருத்துக்கும் நட் க்கும் என்ன சம்பந்தம் என்று " நீங்கள் கலாயத்ததாகவே வைத்துகொண்டாலும் , எனக்கு நான் எழுதியது சரியாகத்தான் படுகிறது - சில பதிவுகளை பதிக்கும் முன் ஏன் நாம் பேசிக்கொள்ள கூடாது ? நாம் எல்லோரும் ஒரே தெய்வத்தின் பக்தர்கள் தானே - ஏது நமக்கு ஈகோ? - ஏது நமக்கு விரோதம் ?
சில படங்கள் நமக்கு பிடிக்கா விட்டாலும் மட்டவர்களுக்கு பிடித்திருந்தால் , நாம் அந்த பதிவுகளை படிக்காமல் சென்று விடலாமே ! நம் எண்ணங்களை பதித்து ஏன் மற்றவர்களை புண்படுத்த வேண்டும் - அழகாக ஓடிகொண்டிருக்கும் திரியின் வேகத்தை ஏன் குறைக்க வேண்டும் ? நாம் NT இடம் இருந்து கற்றுக்கொண்ட பல பாடங்களில் - மற்றவர்களை புண்படுத்த கூடாது என்பது தானே தலையான ஒன்று -உங்களுக்கு கோபம் வரும் போதல்லாம் - ஒரு பேப்பரில் கண்ணா பின்னா என்று எழுதி பிறகு அந்த பேப்பரை கிழித்துவிடுங்கள் - அதை பதிவு மட்டம் செய்யாதீர்கள் - நீங்களே பிறகு உணர்வீர்கள் - அந்த கோபம் தேவை இல்லாத ஒன்று என்று ----
There is a saying -" If you kick your pet in front of others , others may stone at it "- Our NT is always great !! and no one could match with him in the past - no one can in present and definitely no one in future - let us forget the indifference and take this thread forward with glory and pride .
அன்புடன்
Ravi
:smile2::smokesmile:
Gopal.s
13th November 2013, 03:26 PM
ரவி,
தங்கள் கருத்து எனக்கு புரிகிறது. இங்கு உள்ள முக்கால்வாசி பதிவர்களுடன் எனக்கு உயரிய நட்பு உண்டு. தற்போது வந்த பிரச்சினை என் ஈகோ சம்பந்த பட்டதில்லை. நான் இதில் தீவிரமாக இருந்து எல்லோரிடம் வாங்கி கட்டி கொள்ளும் போது,எப்படி என் ஈகோ உயரும்? நடிகர்திலகத்தை நான் மிக மிக மிக உயரிய பீடத்தில் ,எல்லா கடவுள்களையும் விட இன்னும் உயரமாக வைத்துள்ளேன். அவர் புகழுக்கு தகுதியில்லாத பதிவுகள் வரும் போது வெகுண்டு விடுகிறேன். (நான் அந்த பதிவு வேண்டாம் என்று நண்பர்கள் மூலம் வேண்டுகோள் விடுத்து இருந்தேன்.)சுடும் வார்த்தைகளை தவிர்க்கவே எண்ணுகிறேன். ஞான ஒளி அண்டனி போல கோபத்தில் என்னை மறக்கிறேன். உங்கள் பதிவு இதமாக உள்ளது.நன்றி.
Gopal.s
13th November 2013, 03:51 PM
http://tamil.oneindia.in/movies/news/it-s-p-susheela-day-today-187304.html
என்னுடைய விருப்ப பாடகிகள் வரிசையில் என்றுமே முதலாக இருக்கும் சுசிலா அம்மாவின் பிறந்த நாள் இன்று. (78 வது)
கடந்த முறை எம்.எஸ்.வீ ஐயா அவர்களின் பேரன் திருமண வரவேற்பில்,தங்கள் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றது எனது மோட்ச வாயில்.
அம்மாவின் சிறந்த இருபது(Solo) என் பார்வையில்.....
1)சொன்னது நீதானா
2)எங்கே நீயோ நானும் அங்கே
3)ஒரு நாளிரவு பகல் போல் நிலவு
4) காதல் சிறகை காற்றினில் விரித்து
5)நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
6)மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம்
7)அழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம்
8)என்னை எடுத்து தன்னை கொடுத்து
9)அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
10)சொல்லவோ சுகமான கதை சொல்லவோ
11)இதய வீணை தூங்கும் போது
12)பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு கண்ணீரும் தெரியவில்லை
13)கண்கள் இரண்டும் என்று உம்மை கண்டு பேசுமோ
14)மனம் படித்தேன் உன்னை நினைப்பதற்கு
15)நீராடும் கண்கள் இங்கே
16)என்ன என்ன வார்த்தைகளோ
17)மாலை பொழுதின் மயக்கத்திலே
18)காதல் எனும் வடிவம் கண்டேன்
19)உன்னை நான் சந்தித்தேன்
20)பார்த்த ஞாபகம் இல்லையோ
chinnakkannan
13th November 2013, 04:26 PM
32 ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே
33 நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
34 ஓராயிரம் மேடையில் ஆடினாள் (சுசீலாம்மா தானே)
35 அன்னை செய்த பாவம் நான் மண்ணில் வீழ்ந்தது..
(யோசிச்சுப் பாத்தா எல்லாம் தேவிகானாஸ்!! - ஒன்றைத் தவிர ம்ம் கண்ணா என்னவோ போடா :) )
uvausan
13th November 2013, 04:45 PM
தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்.
• எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.
• கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.
• புத்தகங்களை சுமக்கும் பொதிமாடுகளாக இருந்ததிலலை.
• சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.
• பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.
• நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.
• தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.
• ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.
• அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.
• காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.
• சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.
• உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள் நாங்கள்.
• எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்
• எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல
• அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.
• உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை
• எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.
• எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்.
• வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.
• எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர், நடிப்புக்கு நடிப்பு சொல்லிகொடுக்ககொடிய, தமிழை வாழ வைக்க கூடிய நடிகர் திலகம் நம்முடன் இருந்தார் அவரால் தமிழ் வளர்ந்தது , அவர் வளர்த்த தமிழால் , தமிழ் நாடு தன் மதிப்பில் உயர்ந்தது - இன்று பேசும் த்மில் கொலை வெறியாக தமிழ் நாட்டை சுட்டு எரித்து கொண்டிருக்கின்றது .
• உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை
• நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.
• இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.
இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்.
:):smokesmile:
uvausan
13th November 2013, 04:50 PM
The tile of my above posting was cut short - it should be read as " அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ? ஒரு நண்பனின் எண்ண ஓட்டங்கள் "
Ravi
:):smokesmile:
chinnakkannan
13th November 2013, 04:53 PM
//இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்.// நன்னாவே எழுதியிருக்கேள் ரவி..அதே சமயம் அதை எந்த ஊடகத்துல எழுதியிருக்கேள்னு பார்க்கறச்சே (வலை) - சுசீலாம்மா நினைப்பு வருது - நினைத்தால் சிரிப்பு வரும்...:)
Gopal.s
13th November 2013, 04:55 PM
கலாய்க்காமல் ,துணை பதிவு போட்டு விடுகிறேன்.(இருக்கும் ஒரே நண்பரையும் பகைத்தால்.....)
...இரண்டு வாரம் கழித்து ரிலீஸ் ஆக போகும் நடிகர்திலகம் படத்துக்கு, குடும்பத்தோடு பிளான் போட்டு திருவிழா போல் தியேட்டர் செல்லும் மஜா.
chinnakkannan
13th November 2013, 05:43 PM
ஆதிராம் சார்..ஹி ஹி.. :) ஆனா மண் ஒட்டலை
uvausan
13th November 2013, 05:44 PM
ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.
அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.
கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்....
சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."
புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்...!".
பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."
சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா..? "
சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".
இப்படித்தான் NT யின் சில படங்கள் - தனிப்பட்ட முறையில் நல்ல படங்களாக இருப்பினும் சிலர் கண்ணோட்டத்தில் அவைகள் தாழ்ந்து விடுகின்றன -
பார்வைகள் பல விதம் ஆனால் பக்தி ஒன்றுதான் என்று தெரிய படுத்தவது அவசியமாக போய் விடுகின்றது. Even the intention is good , others look at the actions only . Actions also need to be equally good . Let this thread gain the glory that got hidden in some postings
:):smokesmile: .
chinnakkannan
13th November 2013, 06:13 PM
ஹோ வென்று பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது வெள்ளம் அந்த ஆற்றில்.. கரையில் இருந்தவர்கள் மூவர்..குரு, அவரது சீடன், பின் பார்க்கப் பார்க்க மீண்டும் பார்க்கத் தூண்டுகின்ற அழகுடன் -கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒந்தொடி கண்ணே உள - என திருவள்ளுவர் இந்தப் பெணணைத் தான் பார்த்து எழுதியிருப்பாரோ என்பது போன்ற - ஜகஜ்ஜோதியான மிகப் பேரழ்கான இளம்பருவம் பூத்துக் குலுங்கும் இளம் பெண்..ம்ம்
*
அந்த இளம்பெண் குருவினை வணங்கி : ஐயன் மீர்.. இந்த ஆற்றை நான் கடக்க உதவுவீர்களா..” எனக் கேட்க கருணை கொண்ட அந்த குரு அதற்கென்ன பெண்ணே என் முதுகில் ஏறிக் கொள்.. நான் நீச்சலடித்து அக்கரையில் உன்னை விடுகிறேன் என்றார்..
*
குரு ஆற்றில் பாய பெண் அவர் முதுகில் அமர அவர் நீச்சலடித்தார்..பின்னால் சீடனும் கஷ்டப் பட்டவண்ணம் நீந்தி அக்கரையை அடைய, அந்த ப் பெண் குருவிடம் நன்றி சொல்லிச் சென்று விட்டாள்..
*
குருவும் சீடனும் தங்கள் ஆஸ்ரமத்திற்குச் சென்றனர்..வழி முழுவதும் சீடன் பேசவில்லை.. இருவரும் மாற்றுடை அணிந்து வகுப்பறைக்கு வந்த பின்பும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான் சீடன்..
*
குரு கேட்டார்..”வாட் ஹேப்பண்ட் மை சைல்ட்” சிஷ்யன்,”ஓ..லார்ட்.. நீங்கள் வயதில் பெரியவர்கள், அறிவிலும்..அதுவும் துறவு வேறு கொண்டிருக்கிறீர்கள். ஆனால் ஆனால்..” ஏவி.எம். ராஜனுக்கு அடைப்பது போல் சீடனுக்கும் நெஞ்சை அடைத்த்து..”எப்படி அந்த பியூட்டிஃபுல் யங்க் லேடியை உங்கள் முதுகில் ஏற்றிக் கொண்டு வந்தீர்கள்..தவறல்லவா.. இது முறையோ இது தகுமோ இது தரும்ம் தானோ..” எனக் கேட்டான்..
*
குரு மென் சிரித்து.”ஓஹ்..மை பாய்.. இதானா உன் டவுட்..ஆக்சுவல்லி ஸ்பீக்கிங்..அந்தப் பெண்ணை ஆற்றின் அக்கரையிலேயே நான் இறக்கி வைத்து விட்டேன்.. நீ தான் இன்னும் சுமந்து கொண்டிருக்கிறாய்” என்றாராம்..
**
அதுபோலவே ரவி சார் – என்.டியைப் பற்றியும் இந்த இழையைப் பற்றியும் குட்டிக் கதைகள் வாயிலாக நீங்கள் எழுதும் விளக்கங்களை குருவைப் போல எங்களால் இறக்கி வைக்க முடியவில்லை..மனதில் சுமந்து கொண்டே இருக்கிறோம்.. ! :)
Russelldwp
13th November 2013, 07:14 PM
மதிப்பிற்கும் மரியாதைக்குரிய பெரியவர் திரு.சுப்ரமணியம் ராமஜெயம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
C. Ramachandran.
anm
13th November 2013, 09:07 PM
Dear Subramaniam Ramajayam Sir,
Wishing you tons of happiness and joy on your special day. Happy Birthday !!!!!!
Anand
uvausan
13th November 2013, 09:19 PM
Dear Subramaniam Ramajayam Sir,
Many more happy returns and may god bless you with good health and peace .
Ravi
:smile2::smokesmile:
uvausan
13th November 2013, 09:40 PM
Dear Chinna Kannan Sir
பலத்த மழை பெய்து ஓய்ந்தால் போல உள்ளது நமது திரி - கோபால் சாரின் அலசல் நடை எங்கே? ராகவேந்திர சாரின் அற்புத படைப்புகள் எங்கே? 5000 பதிவுகள் 5 கோடியாக வேண்டும் என்று எல்லோரும் வாழ்த்திணோமே - அந்த மை இன்னும் உணரவில்லையே - கார்த்திக் சாரின் Item Girls களின் Personal life போல திரியும் வெரிசிண்டு உள்ளதே - முரளி சாரின் தமிழ் நடையும் , வாசு சாரின் உழைப்பும் இந்த, KC சாரின் பாராட்டுக்களும் திரியில் மீண்டும் கிடைக்க வேண்டும் - இந்த உள் அர்த்தத்தில்தான் " அந்த நாட்கள் மீண்டும் வந்திடாதோ " என்று என் ஆதங்கத்தை பதித்தேன் - உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி - இந்த திரியில் மீண்டும் பல கைகள் தட்டும் சத்தம் கேட்கவேண்டும் - மீண்டும் கூடுவோம் , கூட்டு பிராத்தனையில் நிச்சயம் பலன் கிடைக்கும் .
Ravi
:smile2::smokesmile:
Russelluvd
13th November 2013, 09:52 PM
சங்கிலி
சங்கிலி எனக்கு ரொம்பபுடிச்ச ஆக்சன் படம்.சிவாஜிக்கு ரெண்டு வேஷம்.போலிஸ் சங்கிலி மொரட்டு சங்கிலி அப்படின்னு அறுமையாநடிப்பாரு.வில்லன் நம்பியாறு போலீஸ் சரவணன கொன்னுடுவாரு.போலிஸ் சரவணன் மாதிரி இருக்கற கைதி சங்கிலிய சரவணன் மாதிரி மாத்தி சுந்தரராசன் வில்லன் கூட்டத்த ஒழிப்பாரு.போலிஸ் சரவணன் கம்பீரம் காட்டுவாரு,அவரு வில்லன் நம்பியாரை கண்டு புடிச்சதும் லாரி ஏத்தி முதல்லே அவுர கொன்டுவாங்க.பாவமா இருக்கும்.அப்புறம் ஜெயில்ல இருக்கிற மொரடன் சங்கிலி சரவணனா மாருவாறு.ரொம்ப ஜோரா மொரடனா நடிப்பாரு.ஜெயில்ல சங்கிலி கட்டி அவரு இழுத்துவரும் போது ஜோரான உறுமுற நடிப்பு அப்புறம் போலிஸ்ஸ்டேஷன்ல சரவணன் மாறி மாத்தி நடிக்கறது ஜம்முன்னு இருக்கு.சின்னப் பையன் மாறி ஜோரா சண்டை போடுவாறு சரவணன் குழந்தகிட்ட சங்கிலி பாசம் காட்றது ரொம்ப நல்லாஇருக்கும்.சிரிபிரியா கூட கூல்கிளாஸ் போட்டுகிட்டு சிவாஜி அழகா இருப்பாரு.ஒரு டூயட்பாட்டு ஸ்டையிலா இருக்கும்.பிரபு முதல் படம் அப்பாவும்புள்ளையும் செமத்தியா ஒரு சண்ட போடுவாங்க.இங்கிலீஷ் படம் மாறி செட்டுல்லாம் பெருசா போட்டு இருப்பாங்க.போலிஸ்,முரடன்,அந்த முரடனே மறுபிடி போலிஸ்னு நிறய சிவாஜிக்கு நடிக்க சான்சு.அவரு நடிப்புக்கு கேக்கவா வேணும்.போலிஸ் டிரஸ்ல நல்லா இருப்பாரு இந்தி வில்லன் கூட பேருதெரியல மண்டபத்துல போடுற பைட்டு ஆத்தாடி அருமை படம் சுருசுருன்னு வேகமா ஓடும்.இந்தபடம் நல்லாதானே ஓடுச்சு.மொததரம் எழுதி இருக்கேன்.பக்கவீட்டு பொண்ணு ஹெல்ப் பண்ணுச்சி.தப்பு இருந்தா பொருத்துக்குங்க.கொஞ்சகொஞ்சம்மா திருத்திக்குறேன்.ரொம்ப புடிச்சபடம்.இன்னொன்னு எல்லாம் நெறையகதையா எழுதிரீங்க.சிவாஜியப் பத்தி ஒன்னையும் காணமே நெறையா வெட்டியாயில்ல இருக்கு.சிறுவர் மலர் படிக்கிரமாறி இருக்கு.சொந்தப்பெருமையும் சைன்சப் பதிவுமாத்தான் இருக்கு ஒரே போர்ர் அடிக்குதுப்பா.யாராச்சும்நல்லதா ஒருபதிவு போடுன்க.எனக்கும் வரல்ல
Gopal.s
14th November 2013, 07:30 AM
கிருபா சார்,
உங்கள் பதிவு அசத்தல். நடையை மிகவும் ரசித்தேன்.தொடருங்கள்.வாழ்த்துக்கள்.
ScottAlise
14th November 2013, 09:15 AM
பார்த்ததில் பிடித்தது
நாம் நடிகர் திலகத்தின் அனேக படங்களை பல தடவை பார்த்து இருப்போம் , இங்கே உள்ள நிறைய நண்பர்கள் திரைஅரங்கலிதும், என்னை போல் இளையதலைமுறை அன்பர்கள் , dvd , டிவி வாயிலாக பார்த்து இருப்பார்கள் . ஒரு படத்தை ஒரு முறை பார்த்தல் , குறை , நடிப்பின் உச்சம் , மத்த அம்சங்கள் எதுவுமே தெரியாது .
நடிகர் திலகத்தின் பல படங்களை பல முறை பார்த்து உள்ளேன் ,
ஒவ்வொரு முறையும் அவர் படங்களை பார்க்கும் பொது பல விஷயங்கள் பிடி படுகிறது
இதை எல்லாம் உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே என்னோட பதிவுகளின் நோக்கம்
அது தான்
பார்த்ததில் பிடித்தது
இந்த பதிவில் என் தமிழ் யை திருதிய நெய்வேலி வாசு சார்க்கு நன்றி
அதில் முதல் படம்
கவரிமான்
ScottAlise
14th November 2013, 09:20 AM
கவரிமான்
இந்த திரியில் அதிகம் விவாதிக்க படாத படங்களில் இதுவும் ஒன்று.
திரிசூலம் என்று ஒரு மிக பெரிய ஹிட் படம். அதுவும் முழு நீள commercial படம் கொடுத்த உடன் இந்த மாதிரி ஒரு கிளாஸ் படம் கொடுக்க நம்ம நடிகர் திலகத்துக்கு மட்டுமே சாத்தியம். variety க்கு மறு பெயர் அல்லவா அவர்.
அதுவும் புது generation டீம் என்று பெயர் எடுத்த SPM அவர்களின் direction ல் வந்த புது வகை படம் இது.
கேமராவுக்கு பாபு , கதை , வசனம் , பாடல்கள் : பஞ்சு அருணாசலம் , இசை : இளையராஜா
கதை :
தியாகு (NT ) ஒரு பெரிய குடும்பத்தின் ஒரு அங்கம். அவர் மத்திய அரசில் finance dept .ல் வேலை பார்க்கிறார். அவரின் மனைவி கல்பனா (பிரமிளா) ஒரு எழுத்தாளர், நவ நாகரிக பைத்தியம் பிடித்த முற்போக்கான சிந்தனை கொண்ட எதையும் செய்யத் துணியும் டேஞ்சரான பேர்வழி. இவர்களுக்கு ஒரு மகள் உமா (பிற்காலத்தில் ஸ்ரீ தேவி ).
சிவாஜியின் தந்தை கல்கத்தா விஸ்வநாதன் ex மினிஸ்டர், கவர்னர். அம்மா (வரலக்ஷ்மி )ஒரு கர்நாடக சங்கீத மேதை , சிவாஜியின் அண்ணன் மேஜர் ஒரு lawyer , அவர் மனைவி மணிமாலா ஒரு டாக்டர்.
சிவாஜயின் மனைவி ரவிச்சந்திரன் உடன் பழக்கம் வைத்து இருப்பதை பார்க்கும் சிவாஜி ஆத்திரப்பட்டு அவரை கொன்று விடுகிறார். அதை மகள் உமா நேரிடையாகப் பார்த்து விட்டு அதிர்ச்சியாகிறாள்.
இன்ன காரணத்திற்காக சிவாஜி கொலை செய்தார் என்று யாருக்கும் தெரியாது. குடும்ப மானத்தைக் காக்க சிவாஜி ஒன்றும் சொல்லாமல் ஜெயிலுக்குப் போகிறார். குடும்பமே அவரை வெறுக்கிறது.இதனால் சிவாஜி சந்திக்கும் அவமானகள் ஏராளம்.
மகள் வளர்ந்து பெரியவளாகிறாள்.
ஜெயிலில் இருந்து திரும்பி வரும் சிவாஜி குடும்பத்தாரால் வெறுத்து ஒதுக்கப்படுகிறார் தாயைத் தவிர. ஒரு ஹோட்டலில் இசைப் பாடகராக வேலை செய்கிறார் சிவாஜி. ஸ்ரீதேவிக்கு தன் தாயைக் கொன்றதால் சிவாஜி மேல் வெறுப்பு. தந்தை என்றே அவரை ஏற்க மறுக்கிறார்.
ஸ்ரீதேவி ஒரு வாலிபரை காதலிக்கிறார் , அவன் ஒரு பெண் பித்தன். ஒரு கட்டத்தில் அந்த வாலிபன் ஸ்ரீதேவியின் கற்பை சூறையாட முயற்சிக்கையில் ஸ்ரீதேவி அவனை எதிர்பாராவிதமாக கொலை செய்து விட அங்கு தன் மகளின் நிலைமையை பார்த்த சிவாஜி மகள் செய்த கொலைக்கு தான் பொறுப்பு ஏற்கிறார். தந்தை மேல் ஏற்பட்ட வெறுப்பு மகளுக்கு போக மீண்டும் மகளுக்காக ஜெயிலுக்குப் போகிறார் சிவாஜி. சிவாஜியின் தந்தை மட்டும் தன் மகன் நியாயத்துக்காகத்தான் கொலை செய்தான் என்று டைரியில் எழுதி வைத்து மகனைப் புரிந்து மருமகளின் நடத்தையையும் கணித்து வைத்து,மகனின் நடத்தையில் நேர்மையைக் காண்கிறார். மகள் தன்னை புரிந்து கொண்ட நேரத்தில் அவளுடன் இருக்கக் கொடுத்து வைக்காமல் சிவாஜி ஜெயிலுக்கு செல்ல படம் கனத்த இதயத்துடன் முடிகிறது .
முதல் 30 நிமிடம் எல்லா கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்த இயக்குனர் எடுத்து கொள்ளும் நேரம், பார்வையாளர்களுக்கு இந்த பாத்திரங்களை அறிந்து கொள்ள ஒரு சந்தர்பம். ஏனென்றால் இந்த கதை நன்றாக tight செய்யப்பட்ட திரைக்கதை அமைந்த ஒரு படம்.
இந்த படத்தில் நாம் அனைவரும் travel செய்யலாம். இந்த கதை நாம் தினசரி படிக்கும் செய்தியில் ஒன்று , this may happen to anyone but it must not happen to anyone .
இந்த படத்தில் சிவாஜியின் பாத்திரத்தில் வேறு எவரையும் நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.
முதல் காட்சியில் அவர் காரை விட்டு இறங்கி , கம்பீரமாக படி ஏறும் அழகே அழகு. அடுத்த காட்சியில் தேங்காய் ஸ்ரீனிவாசன் வந்து ஒரு காரியம் செய்து தர சொல்ல, அதுக்கு சிவாஜி கொடுக்கும் ஒரு பார்வை expression அவரின் நேர்மையை விளக்கும் வண்ணம் உள்ளது
விஜயகுமார் ஒரு முஸ்லிம் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு வந்த உடன் , சிவாஜி குடும்ப மானம் நினைத்து கோபப்படுவது, அவர் தன் குடும்பத்தின் மேல் வைத்த பாசத்தைக் காட்டுகிறது. இந்த காட்சியும் படத்தில் வரும் முக்கியமான காட்சியான அந்த படுக்கை அறை காட்சியில் அவர் படும் ஆத்திரத்துக்கு ஒரு justification .
கல்கத்தா விஸ்வநாதன் சொல்வது போலே சுத்தமா ரத்தம் உள்ளவன், துளி கூட தப்பு எது என்று அறியாதவன் என்பதுக்கு அடித்தளம். மதம் மாறி கல்யாணம் செய்து கொள்ளும் தம்பியை திட்டும் காட்சி ஒரு கல்யாணத்தை ஒத்து கொள்வதே கடினமாக இருக்கும் தியாகுவுக்கு தன் மனைவி இப்படி வேறு ஒரு நபர் உடன் இருப்பது எப்படி எடுத்து கொள்ள முடியும் என்பதற்கு ஒரு உதாரணம். குடும்பம் ஒன்றாக அமர்ந்து இருக்கும் போது அவர் பாடும் கர்நாடக பாடல், கல்பனா தன் மகளுக்கு western music கற்று தர வேண்டும் என்று விரும்புவதும், தியாகு கர்நாடக சங்கீதம் என்று சொல்வதும், இவர்களுக்கு இடையில் உள்ள taste & preferences, differences யை அழகாக காட்டுகிறது .
தன் மனைவியின் சிரிப்பு சத்தம் கேட்ட உடன், அது வரையில் அமைதி தென்றலை போன்ற அவர் முகம் கடுகடுப்பதும், அதை காட்டும் விதமாக பாபுவின் கேமரா தியாகு உடன் மேலே பயணிப்பதும் சூப்பர். கூடவே இளையராஜாவின் பின்னணி இசையும் (மிரட்டல் இசை ), அந்த கதவை உடைத்து கொண்டு அவர் காணும் அலங்கோலம். அந்த காட்சியில் அவர் கண் சிவப்பதும், கால் இரண்டையும் உதைத்துக் கொண்டு ஆத்திரத்தை அடக்க முயல்வதும் , நடிகர் திலகத்தின் சின்ன கண் சிவந்து பெரிதாவதையும் நாம் உணர முடியும் ,
ஆத்திரம் அடங்காமல் அவர் அடிக்கும் ஒரு அடிக்கு கண்டிப்பாக ஒரு உயிரை பலி வாங்கும் சக்தி உண்டு.
ஒரு மனிதன் அதிகமாக உணர்ச்சிவசப்படும் போது, அவன் மூக்கில் இருந்து சளி வரும். அதையும் பிரதிபலிக்கிறார் நம்மவர் (எல்லாம் அறிந்தவர் நடிப்பில். எப்படி முடிகிறது இவரால்)
ஜெயிலில் அவர் மனசில் ஒரு ஊசலாட்டம் தன் மனசாட்சி உடன். உண்மையை சொல்வதனால் ஏற்படும் விளைவை எண்ணி ஒரு திகைப்பு.. அதை symbolic ஆக விளக்கும் காட்சியில் நிழல் போலே ஆடும் லாக் up கம்பிகள் என்று கேமரா பாபுவின் டச்.
தண்டனை முடிந்து தளர்ந்து வீட்டுக்கு வரும் வரும் தியாகு தன் குடும்பத்தினர் உடன்உட்கார்ந்து உணவு அருந்த முடியவில்லையே என்று அவர் கண் கலங்கும் காட்சி. அப்பப்பா என்ன ஒரு நடிப்பு , தன் தாய் குடுக்கும் சாப்பாட்டை வேண்டா வெறுப்பாக தட்டில் போட்டு அழும் காட்சி உணர்ச்சி பிழம்பு. அதை அதிகபடுத்தும் விதத்தில் இளையராஜாவின் பின்னணி இசை.
தன் மகளை பல வருடங்கள் கழித்து பார்த்த உடன் உருகுவதும், உமா தன்னை அவமானபடுத்துவதும், கண்டிப்பாக பார்வையாளர்களை கொந்தளிக்க வைக்கும் .
சிவாஜி தன் குடும்பத்தினர் தன்னால் கஷ்டபடுவதை விரும்பாமல் தனியாக ஒரு வீடு எடுத்து தங்குகிறார். அந்த வீட்டில் சேகர் அடிக்கும் லூட்டிகள் தாங்க முடியாமல் தவிக்கும் தியாகு , தன் மகள் அவரை காதலிப்பதை எப்படி ஒத்துகொள்ள முடியும் , தன் சொல்லை அலட்சியம் செய்யும் உமாவை ஒன்றும் செய்யாமல் , இயலாமை உடன் பார்ப்பதை தவிர ஒன்றும் செய்ய முடியவில்லை. தியாகுவினால் (அந்த காட்சியில் ஸ்ரீதேவி திட்டுவதையும், சிவாஜி அதை வாங்கி கொள்வதையும் ஒரே frame ல். அதுவும் சிவாஜி சாருக்கு வெறும் முகம் மட்டும் தெரியும் படி close up shot. நடிகர் திலகத்திற்கு மட்டுமே இது சாத்தியம்) கடைசியில் தன் மகள் உடன் அவர் பேசும் கிளைமாக்ஸ் காட்சி , அவர் மகளுக்கு சொல்லும் உபதேசம் நாம் அனைவரும் பின் பற்ற வேண்டிய ஒன்று .
செய்யாத தப்புக்கு கஷ்டப்பட வேண்டிய ஒரு பாத்திரம்
சிவாஜிக்கு அப்புறம் எனக்கு பிடித்த பாத்திரம் கல்கத்தா விஸ்வநாதன் :
இவர் தான் இந்த பெரிய குடும்பத்தின் ஆலமரம். கொஞ்சம் பழமை கலந்த மனிதர் ரொம்ப நேர்மை. தன் மகன் கலப்பு மனம் புரிந்து கொண்ட உடன் அதை அங்கீகரிக்கிறார் , ஆசிர்வதிக்கவில்லை.
தன் மகனின் குற்ற பின்னணி பற்றி அழகாக நடுநிலைமை உடன் யூகிக்கிறார்.கடைசியில் அவர் பேசும் வசனம் முத்து.
பிரமிளா :
தான் glamour நடிகை என்பதை தாண்டி நடிக்கவும் தெரியும் என்பதை நிருபித்து உள்ளார் . கல்பனா ஒரு நவநாகரிக பெண் , மாடர்ன் thoughts உள்ள பெண் , புது புது அனுபவங்களுக்கு ஏங்குபவள் , எந்த ஒரு அனுபவமும் அவளை திருப்தி படுத்த முடியாது , குடி போதையில் அவர் செய்யும் ஒரு காரியம் , அவரையும் அழித்து , ஒரு நல்ல
மனிதர் வாழ்க்கையையும் காவு வாங்குகிறது .
ஸ்ரீதேவி :
ஸ்ரீதேவிக்கு இது ஒரு லைப் டைம் ரோல் , சிவாஜி மாதிரி ஒரு உச்ச நடிகர் உடன் , தன் திரையுலக வாழ்க்கையில் சீக்கிரமாக நடிகர் திலகத்துடன் நடிக்க வாய்ப்பு. அதுவும் சரிக்கு சமமாக நன்றாக செய்து இருக்கிறார் .
பாடல்கள் :
பூ போலே பாடல் பாடல் இரண்டு முறை வருகிறது , என் favourite பாடல் இரண்டாவதாக வரும் பாடல் இன்னும் மனதுக்கு பிடித்த பாடல்
சொல்ல வல்லையோ கிளியே : வரலக்ஷ்மி யின் குரலில் ஒரு அமிர்தம்
புரோமா என்ற கர்நாடக படாலில் நடிகர் திலகத்தின் வாய் அசைவு கச்சிதம் . இந்த பாடல் பற்றி SPM கூறியது :
அந்த பாடலில் நிறைய ஆலாபனைகள் இடம் பெற்று இருந்தது. ஷூட்டிங் முன்பாக அந்த பாட்டை ஒரு முறை சிவாஜி கேட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அவர் வீட்டுக்குஅந்த படத்தின் பாடல் கேசட்டை எடுத்து கொண்டு சென்றேன்
நடிகர் திலகம் என்னடா நான் சரியாக லிப் movements குடுக்க மாட்டேன் என்று நினைக்கிறாயா... நான் தப்பு பண்ண மாட்டேன் , அப்படியே செஞ்சாலும் கட் செஞ்சு எடுத்தக்கலாம் என்றார்.
ஷூட்டிங்கில் ஏதோ யேசுதாஸ் நேரில் வந்து பாடியது போல் அவர் வாய் அசைத்தது எங்களை வியப்பு அடைய வைத்தது .
அதே மாதிரி சிவாஜி, பிரமிளா இருவரும் சேந்து படும் பாடல் பிரமிளா சிவாஜி உடன் நடிக்க வில்லை , அவர் அன்று வேறு ஒரு படபிடிப்பில் இருந்தார் , பிறகு இருவரும் சேர்ந்து இருப்பது போலே எடிட் செய்ய பட்ட பாடல் பூ போலே பாடல்.
நடிகர் ரவிச்சந்திரன்
ரவி ஏற்றிருந்தது கொஞ்சம் வில்லங்கமான பாத்திரம். சுமார் 20 நிமிடம் வரும் ஆனந்த் என்ற ஒரு நவ நாகரிக ஆண், அவர் தான் பிரச்சனைக்கு சூத்திரதாரி.
இந்த படத்தை பார்த்து சிவாஜி சொன்னது :
படம் கவிதையாக இருக்கு. இதை என் ரசிகர்கள் பாத்திரமாக பார்த்தால் படம் தப்பிக்கும். என்னை சிவாஜி என்ற கோணத்தில் பார்த்தால் படம் கொஞ்சம் கஷ்டம் தான் .
ஒரு காட்சியில் ஸ்ரீதேவி சிவாஜி கொடுக்கும் புடவையை தூக்கி குப்பை தொட்டியில் வீசுவார், தியேட்டரில் அந்த காட்சியில் ரசிகர்கள் ஸ்ரீ தேவி யை வசை பாடினார்கள். கத்தினார்கள்
இந்த படம் அனைவரும் பார்க்கலாம். 80 க்கு அப்புறம் வந்த நடிகர் திலகத்தின் முத்துக்களில் இதுவும் ஒன்று.
ScottAlise
14th November 2013, 09:25 AM
இந்த படம் பற்றி ஒரு ஆரோக்கியமான விவாதத்தை எதிர்பார்க்கிறேன், இதில் அவரின் நடிப்பு பற்றி தனி ஆவர்த்தனம் அடுத்த பதிவில்
ScottAlise
14th November 2013, 09:26 AM
கிருபா சார்,
Sangili is one of my favourite movie , Good writing keep it up sir
KCSHEKAR
14th November 2013, 10:42 AM
அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ?:
டியர் ரவி சார்,
தங்களுடைய ஞானி - சீடர் கதையின்மூலம் சொல்லவந்தது நிச்சயம் நடக்கும். அந்த நாளும் மீண்டும் வரும். ஆனந்தமழையில் நாமும் நனையும் காலம்
விரைவில் வரும்.
KCSHEKAR
14th November 2013, 10:52 AM
என்.டியைப் பற்றியும் இந்த இழையைப் பற்றியும் குட்டிக் கதைகள் வாயிலாக நீங்கள் எழுதும் விளக்கங்களை குருவைப் போல எங்களால் இறக்கி வைக்க முடியவில்லை..மனதில் சுமந்து கொண்டே இருக்கிறோம்.. ! :)
டியர் சின்னக்கண்ணன் சார்,
ரவி சாருக்குப் பதிலாக தாங்களும் ஒரு குரு - சீடர் கதையைச் சொல்லி அசத்தியுள்ளீர்கள். தங்களின் கருத்து உண்மையிலேயே ஆழமானது.
KCSHEKAR
14th November 2013, 10:55 AM
சங்கிலி - எனக்கு ரொம்பபுடிச்ச ஆக்சன் படம்.
டியர் கிருபா சார்,
தங்களின் பதிவு அருமை. தொடருங்கள்.
யாராச்சும்நல்லதா ஒருபதிவு போடுன்க.எனக்கும் வரல்ல
புரிந்துகொண்டோம்.
KCSHEKAR
14th November 2013, 11:10 AM
பார்த்ததில் பிடித்தது - கவரிமான்
டியர் ராகுல் சார்,
தங்களின் கவரிமான் பதிவு அருமை. தாங்கள் குறிப்பிட்டமாதிரி திரிசூலம் மாதிரியான ஒரு சூப்பர் ஹிட் படத்திற்கு அடுத்தது இந்த மாதிரி ரிஸ்க் எடுக்க எந்த நடிகரும் தயாராக இருக்கமாட்டார்கள்.
இந்த படத்தில் நாம் அனைவரும் travel செய்யலாம். இந்த கதை நாம் தினசரி படிக்கும் செய்தியில் ஒன்று , this may happen to anyone but it must not happen to anyone
முதன்முதலில் "A" Certificate பெற்ற நடிகர்திலகத்தின் படமாக இது அமைந்திருந்தாலும், இப்போது "U" Certificate பெற்று வரும் படங்களை விட இது பல மடங்கு மேல் என்றுதான் கூறவேண்டும்.
எனக்குப் பிடித்த ஒரு அருமையான பாடல் - இளையராஜாவின் இசையில்
http://www.youtube.com/watch?v=Rp5xwl9pU9Y
chinnakkannan
14th November 2013, 11:31 AM
சந்திர சேகர் சார்.. நன்றி.. ந.தியைப் பற்றி நிறைய எழுதவேண்டும் என்ற ஆவல் மனதில் இருக்கிறது..ம்ம் ஏனோ ஏதோ ஒரு காரணம் தடுக்கிறது..மிகப் பெரிய காரணம் எல்லாம் இல்லை..வெகுசின்னது..ஆமாங்க என்னோட சோம்பல் :)
ராகுல் சார்.. கவரிமான் பதிவு நன்று.. சின்ன வயதில் மதுரை தேவி தியேட்டரில் பார்த்த நினைவு..அதன் பிறகு பார்க்கவில்லை..ம்ம் மறுபடி பார்க்க வேண்டும்.. இன்னும் எழுதுங்கள்..
rsubras
14th November 2013, 11:42 AM
இந்த படம் பற்றி ஒரு ஆரோக்கியமான விவாதத்தை எதிர்பார்க்கிறேன், இதில் அவரின் நடிப்பு பற்றி தனி ஆவர்த்தனம் அடுத்த பதிவில்
Havent seen this film, only had seen the song "Poo pole" (2nd version)..... song opening la when Sivaji sees Sridevi in the table, Sivaji's face konja neram maarum with ekkam, agony etc., in that one shot he displays the painful phase that he had gone through his life on the face and sets the tone for the remaining song... wonderful........ IR might have tuned this melody, but it is thanks to Sivaji that i find this song a heart melting one :)
KCSHEKAR
14th November 2013, 12:08 PM
Pattum Naane
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=txQ5T0CMXSc
raagadevan
14th November 2013, 01:15 PM
கவரிமான்
புரோமா என்ற கர்நாடக படாலில் நடிகர் திலகத்தின் வாய் அசைவு கச்சிதம் . இந்த பாடல் பற்றி SPM கூறியது :
அந்த பாடலில் நிறைய ஆலாபனைகள் இடம் பெற்று இருந்தது. ஷூட்டிங் முன்பாக அந்த பாட்டை ஒரு முறை சிவாஜி கேட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அவர் வீட்டுக்குஅந்த படத்தின் பாடல் கேசட்டை எடுத்து கொண்டு சென்றேன்
நடிகர் திலகம் என்னடா நான் சரியாக லிப் movements குடுக்க மாட்டேன் என்று நினைக்கிறாயா... நான் தப்பு பண்ண மாட்டேன் , அப்படியே செஞ்சாலும் கட் செஞ்சு எடுத்தக்கலாம் என்றார்.
ஷூட்டிங்கில் ஏதோ யேசுதாஸ் நேரில் வந்து பாடியது போல் அவர் வாய் அசைத்தது எங்களை வியப்பு அடைய வைத்தது .
http://www.youtube.com/watch?v=cnIH0k44hRI
HARISH2619
14th November 2013, 01:16 PM
Dear vasu sir,
congratulations 0n reaching 4000 posts,expecting a special post from you.
Dear ramajeyam sir,
wishing you many many happy returns of the day
dear gopal sir,
we are all still loving you and your posts,please continue
uvausan
14th November 2013, 01:24 PM
Dear Mr Ragulram
உங்கள் அயராத உழைப்பும் , வாசு சாரின் அருமையான touch up ம் சேர்ந்து - கவரிமான் பதிப்பை மிகவும் அழகாக மெருகு ஏற்றி உள்ளது - பல நல்ல படங்கள் ஏன் சரியான இல்லக்கை அடையவில்லை என்ற நமது பட்டி மண்டபத்தில் இந்த படத்தையும் சேர்க்க வேண்டும் . அருமையான படம் , சிறந்த நடிப்பு , ரசிக்க வைக்கும் பாடல்கள் இருந்தும் என்ஜின் கோளாறு பண்ணிய படம் . சில ஓட்டைகள் என்னை பொறுத்த வரையும் :
1. இரண்டாவது பகுதியில் சோகத்தை அளவுக்கு மீறி தினித்து இருப்பார்கள் - NT யையும் நமள்ளுடன் அழைத்துகொண்டு வெளியில் ஓடிவந்துவிடலாம் என்று நினைக்க தோணும் .
2. புரிந்துகொள்ளவே முடியாத family members - ஒரு சங்கடத்தில் மாட்டிகொண்ட சகோதரனை /மகனை எல்லோரும் வில்லனாக பாவிப்பது மிகவும் எரிச்சலை உண்டாக்க கூடிய விஷயம்
3. அவரவர்கள் படம் முழுவுதும் தங்கள் தங்கள் பங்குக்கு எரிச்சலை உண்டுபண்ணிக்கொண்டே இருப்பார்கள் - NT யை எப்படியாவது இவர்களிடம் இருந்து தப்ப வைக்க மாட்டோமா எண்டு நினைத்துகொண்டிருக்கும் போது படமும் முடிந்துவிடும்.
NT's performance is outstanding and that alone saved this movie from a free fall .
Ravi
:smile2::smokesmile:
Gopal.s
14th November 2013, 02:36 PM
கவரி மான் பதிவுக்கு நன்றி ராகுல். இன்னும் பெறு வெற்றி பெற்றிருக்க வேண்டிய படம். NT பாடும் தியாகராஜா கீர்த்தனையில் இளையராஜாவும்,இயேசு தாஸ் அவர்களும் அசந்து நின்றார்களாம். என்னா ஒரு timing sense &perfect நடிப்பு!!!!அசர வைப்பார்.மனைவி பிடிபடும் காட்சியில் அவர் நடிப்பு என்னை அவ்வளவாக இம்ப்ரெஸ் செய்யவில்லை.
ரொம்ப நாள் கழித்து வந்த கார்த்திக் ,இதை பதிவிட்டதாக ஞாபகம். அதை யாராவது மீள் பதிவிட முடியுமா?
ScottAlise
14th November 2013, 03:24 PM
கவரிமான்
நடிகர் திலகத்தின் அற்புத நடிப்பில் சில துளிகள்
முதல் காட்சியில் நம் நடிகர் திலகத்தின் அறிமுகம் சாதரணமாக இருக்கும் , காரிலிருந்து இறங்கியதும் , கோட் யை கொஞ்சம் இழுத்து விட்டு , மெதுவாக படி ஏறுவார் , ஒரு calm & composed அதிகாரி எப்படி நடந்து போவரோ அப்படி . ஆபீசை நெருங்கும் பொது அவர் நடை வேகம் எடுக்கும் , கை தானாக கோட் பட்டன் யை போடும் (எதிலும் நேர்த்தி , பல நண்பர்கள் , ஆபீசில் இருந்து வெளியே வந்த உடன் இன் பண்ண சட்டையை வெளியே எடுத்து விடுவார்கள் அது போன்று தான் )
அடுத்த காட்சியில் தேங்காய் ஸ்ரீநிவாசன் (நடிகர் திலகத்தின் பாலிய நண்பன் ) சிவாஜியிடம் பேரம் பேசுவார் , அது NTக்கு பிடிக்க வில்லை என்பதை அவர் பார்வை, பார்வையாளர்களுக்கு தெரிவித்துவிடும் , தேங்காய் ஸ்ரீநிவாசன் தராசை அசைக்கும் பொது , நடிகர் திலகத்தின் பார்வை ஒரு அலட்சியம் கலந்த கிண்டல் கலந்து இருக்கும் , நான் அவ்வளவு துரம் காசுக்கு அலையவில்லை என்பதை சொல்லும் ஒரு பார்வை
அதே தியாகு வீட்டில் , தன் தாய் , தந்தை , மற்றும் அண்ணன் , தம்பியுடன் சிரிச்சு பேசும் காட்சி , அவரின் வேறு முகத்தை காடும் ,
கர்நாடக பாடலில் அவர் வாய் அசைவு கச்சிதம் .
தன் தம்பி கலப்பு கல்யாணம் செய்து கொண்டது தெரிந்ததும் , அவர் தன் அண்ணனிடம் முறைடுவதும் , ன் தன் தந்தை இதற்கு நேர்மறை எண்ணம் வெளிபடும் பொது , சாப்டும் முருங்கைக்காயை அப்படியே வைத்து கொண்டு விழிப்பதும் , நல்ல தமாஷ்
படத்தின் உச்ச காட்சி , தன் மனைவி வேறு ஒரு நபர் உடன் இருபது அறிந்ததும் , அவர் பார்வை போகும் விதம் பார்த்தவர்களுக்கு தான் புரியும் ஒரு எரிமலை வேடிக போகும் என்பதுக்கு ஒரு அறிகுறி , இதற்கு பொருத்தமான பின்னணி இசை , இதயத்தில் இடி விஜின்தது போலே
மிகவும் கோபம் வரும் சமயம் கண் தெரியாது (என்னக்கு நேற்று தான் அது தெரியும் ) அந்த நொடியில் அவர் காட்டும் உணர்ச்சி வேறு யாரும் நினைச்சு கூட paarka முடியாது , ஒரே நொடியில் அவர் மனைவியை அடித்தது முடித்ததும் , அவர் முகத்தில் அக்கிரமத்தை அடித்த ஒரு திருப்தி, அடுத்த நொடி அவர் மகள் அதை கண்டு அலற தன் சுயநினைவுக்கு வருகிறார் தியாகு
ஜெயில் ல் தியாகுவின் மனம் அலைபாய்வதை லைட் மூலம் அழகாக காட்சிபடுத்தி இருப்பார் ஒளிபதிவாளர் பாபு ,
அந்த காட்சியில் அவர் உடம்பை கூனி குறுகி , ஒரு குட்ட்ரவாளியை போல் காட்சியளிப்பார்
இந்த காட்சியில் இரண்டு stalwarts நடிப்பில் அடுத்த கட்டத்திற்கு அந்த காட்சியை கொண்டு போய் சிறப்பாக செய்து இருப்பார்கள் (மேஜர் தன் தம்பியை காப்பாற்ற துடிப்பார், தம்பியோ குடும்ப மானம் தான் முக்கியம் என்று தண்டனை க்கு தயாராக இருப்பார்
குடும்ப மானத்தை கூர் போட தியாகு விரும்பாமல், மேஜர் யை சுத்தி சுத்தி வந்து அந்த பொய் (அது தான் உண்மை ) குடும்பத்தை எப்படி எல்லாம் பாதிக்கும் என்பதை விவரிப்பார்
அந்த தண்டனையை அனுபவிக்கும் பொது தன் நண்பர் தேங்காய் ஸ்ரீனிவாசனை சந்திக்கிறார் , அப்போது அவர் தான் தண்டனை அனுபவிக்கும் காரணத்தை அவர் விவரிக்கும் பாங்கு , எல்லாம் கண்டனத ஒரு ஞானி யை போன்ற பாவனை கொடுப்பார் பாருங்கள் , காண கண் கோடி வேண்டும்
சிறை தண்டனை mudinthu வீட்டுக்கு வந்த உடன் தன் குடும்ப அங்கத்தினர் அனைவரும் மூஞ்சியை தூக்கி வைத்து கொண்டு இருப்பதாய் கண்டு ஒரு neglected , dejected feel யை அழகாக கொண்டு வந்து இருப்பார் , அதே சமயம் , தன் குடும்பத்தினர் உடன் வெகு நாட்களுக்கு பிறகு உணவு அருந்த செல்ல முற்படும் சமயம் அதற்கு தடை விழும் பொது , தாயாரின் அரவணைப்பில் உணவு சாப்பிடும் பொது , ஒரு குழந்தை போலே காட்சி அளிப்பார் , அதே சமயம் உடைந்து போய் அழும் பொது , நம்மளையும் சேர்த்து கரைதுவிடுவார் மனுஷன்
நல்லா வாழ்ந்த மனிதர்கள் , ராஜாக்கள் , கடைசிவரை ராஜா போலே இருப்பார்கள் , மனதளவில் , அதனால் தான் தியாகு அங்கே இருந்து அவமான பட பிடிக்காமல் , தன் நண்பர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் வீட்டுக்கு வந்து விடுகிறார் ,
இந்த மாதிரி பெரிய மனிதர்கள் தவறாக எது நடந்தாலும் போருக்க மாட்டார்கள் , அதுவும் தியாகு ஏற்கனவே இதே போன்ற விஷியத்தில் உணர்ச்சிகளை அடக்க மறந்து தண்டனை அனுபவிதவனே , அந்த மாதிரி குணம் கொண்ட தியாகு , ஒரு பெண் பித்தர் இருக்கும் இடத்தில , எப்படி இருக்க முடியும் , தன் வெறுப்பை நாசுக்காக முதல்லில் தன் நண்பன் தேங்காய் ஸ்ரீநிவாசன்யிடம் தெரிவிக்கிறார் , அதற்க்கு பலன் இல்லாமல் போகவே கொஞ்சம் aggressive டோன் ல் சொல்கிறார்
ஒவ்வொரு முறையும் தன் மகளால் அவமானத்தை மட்டும் சந்திக்கும் அப்பாவாக நடிகர் திலகம் , சாரி தியாகு நம் கண்ணில் கண்ணீரை வரவைக்கிறார் , அதுவும் அவர் வாங்கி கொடுத்த புடவையை ஸ்ரீதேவி தூக்கி எரியும் பொது , அவர் முகம் தொங்கி போய் பாவமாக காட்சியாளிகிறது , தன் மகளை காப்பாற்ற குற்றத்தை தான் செய்ததாக சொல்லி , அதுக்கு ஸ்ரீதேவியை convince செய்யும் பொது , அதற்கு அவர் சொல்லும் காரணம் , நிச்சயம் கரைப்பர் நெஞ்சையும் கரைக்கும்
ScottAlise
14th November 2013, 03:28 PM
My thanks for all people who acknowledged the write up
thanks
g94127302 Sir , Raagadevan Sir , Rsubras Sir, KCSHEKAR sir
Gopal sir,
don't use thanks, I am a ardent fan of your writing though I could not understand your high IQ (references about stalwarts in acting )
kalnayak
14th November 2013, 06:59 PM
நண்பர்களிவர்க லென்றும் தங்கள்கருத்து வேற்றுமைகளை தாமேகளைவரென்றும்
அன்பர்கள்சிலருக்கு எடுத்தோதியதுண்டு. நடிகர்திலகபக்த ராகவேந்தர் இத்திரியில்
நடிகர்திலக திரைப்படம் குறையோடுண்டு எனக்கூறுவாரை வாரு வாருவென வாரவைத்தது.
கோபங்கொள் கோபாலரோ நடிகர்திலக திரிபாரதி - "யாமறிந்த நடிகர்களிலே நடிகர்திலகம்போல்
மிகச்சிறந்த நடிகரினை யாங்கணுமே கண்டதில்லை. உண்மையிது வெறும்புகழ்ச்சியிலை" யெனக்கூறி
அவர்தம் நடிப்புக்கலையெடுத்துரைத்தார். ஆயினுமவர் நடிகர்திலக பிற்காலப்படங்களிலே குறைகண்டார், மோதுகிறார் பக்தருடனே.
குறைகண்ட படங்களை விவாதித்தால் கீறுகிறார். நானுமிவரை யிதற்காக கடிந்ததுண்டு.
(தொடரும்)
anasiuvawoeh
14th November 2013, 07:30 PM
1.Dear Vasu Sir,when we discuss about acting,the success of the film is irrelevant.
2.If we discuss quality movies on;ly,then the quality is based on performance or success.?
3.The best performance is sometimes wasted by a worst movie,shall we not discuss the performance?When ACTING is discussed every movie can be discussed.
4.If only selected movies to be discussed it can be done in SCHOOL OF ACTING
SORRY for the late reply.
Subramaniam Ramajayam
14th November 2013, 10:59 PM
MY DEAR HUBBERS AND NT FANS,
MY sincere thanks to all who sent greetings for my birthday and i am glad to share the good news of my becoming GRANDFATHER of a son born to my daugher here.
my blessings to all younsters and good wishes and namaskarams to elders.
LET US ALWAYS UNITED AND MAKE OUR NT FLAG VERY HIGH FORGET AND FORGIVE SHORTCOMINGS AND OTHER UNPLEASANT SMALL HAPPENINGS
WHICH ARE NOTHING BUT PASSING CLOUDS IN THE MIDWAY,
Gopal.s
15th November 2013, 06:52 AM
MY DEAR HUBBERS AND NT FANS,
i am glad to share the good news of my becoming GRANDFATHER of a son born to my daugher here.
my blessings to all younsters and good wishes and namaskarams to elders.
My wishes for the boy and the proud Grad Pa. He is a scorpian like me.
Gopal.s
15th November 2013, 07:18 AM
கிரிக்கெட்டின் சிவாஜி என நான் மதிக்கும் சச்சினின் கடைசி மேட்ச் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இருக்கும் நிலையில் ,கடைசி இன்னிங்க்ஸ் ஆகவும் அமைய வாய்ப்புகள் உள்ளது. அவர் நூறோடு ஓய்வு பெற்று ,பல்லாயிரம் ஆண்டுகள் அசைக்க முடியாத புகழோடு வாழ ஆண்டவனை தொழுகிறேன்.
சிவாஜி,சச்சின் இருவருமே genius cum prodigies . இருவருமே மிக இள வயது முதல் தங்கள் சாதனைகளை செய்து அவர்களே அதனை முறியடித்தும் வந்துள்ளனர்.
இருவருமே தங்கள் கடைசி காலங்களில் விமர்சனங்களின் சூட்டினை தாங்கினர்.
சச்சின் அரசியல் பிரவேசம் அவசியமில்லை என்று கருதுகிறேன்.
என் நண்பர்கள் என்னை மூட் அவுட் பண்ண உபயோகிப்பது இரண்டே தந்திரங்கள். ஒன்று சிவாஜியை தேவையில்லாமல் விமரிசிப்பது. அல்லது சச்சினை. இந்த இருவரின் இறுதி நாட்களிலும் அவர்கள் performance சம்மந்த பட்ட விஷயங்களில் நான் ஊர் பழி சுமந்தே வாழ்ந்தேன்.
இவர்கள் இருவருமே பாரத ரத்னா பெரும் தகுதியுள்ள இரண்டே இந்தியர்கள் என உறுதியாக நம்புகிறேன்.
Gopal.s
15th November 2013, 07:41 AM
அந்த நாட்களின் சிவாஜி-பீம்சிங் படங்களை நினைவு படுத்தும் உண்மை சம்பவம். நெஞ்சை தொடுகிறது. அன்னாரின் ஆன்மா இறைவனுக்கு அருகில்(எந்த மதத்தின் இறைவனாக இருந்தாலும்) வைக்க பட வேண்டும் என வேண்டுகிறேன்.
இனி செய்தி.
நீ எதை விதைக்கிறாயோ அதுதான் முளைக்கும் என்று சொல்லி கேள்விப் பட்டிருக்கிறேன். நல்லது செய்தால் நல்லது நடக்கும், கெட்டது செய்தால் கெட்டது என்பதுதான் விதி என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால் இது கலிகாலம் நல்லதுக்கு காலமில்லை போல..
சிவகுமார் என்பவர் இரண்டு நாட்களுக்கு முன்னால் இரவு அண்ணாசாலை புகாரி ஓட்டலுக்கு முன் வண்டியிலிருந்து கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு சுயநினைவு இழந்து காணப்பட்டிருக்கிறார். பொது மக்கள் இவரை கண்டெடுத்து அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். ரெண்டு நாட்கள் சுயநினைவின்றி மருத்துவ சிகிச்சை பலன் அளிக்காமல் யாருமற்ற அநாதையாய் இறந்து போனார். சரி இதிலென்ன கலிகாலப் புலம்பல் இருக்கிறது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சிவகுமார் எனும் இவரை பற்றிய பின்புலம் தான் இப்படி புலம்ப வைத்திருக்கிறது. சவக்கிடங்குகளில் கேட்பாரற்று கிடக்கும் உடல்களை கோர்ட்டில் அவர்களுக்கு இறுதி சடங்குகள் செய்து வழியனுப்பி வைக்கும் உன்னத கடமையை தொடர்ந்து செய்து கொண்டிருந்தவர் இவர். விபத்துகளில் ஆள் அடையாளம் தெரியாமல் மரணத்தருவாயில் இருப்பவர்களின் பின் புலத்தை தேடி பிடித்து அவர்களின் குடும்பங்களுக்கு தெரிவித்து இறந்தவரின் கடைசிக் கால காரியங்களை அவர்கள் குடும்பத்துடன் செய்தவர். இந்த சேவைக்காக அரசு மருத்துவமனை டாக்டர்களால் பாராட்டுப் பெற்றவர். யாருமற்ற அநாதையாய் தெருவில் வீழ்ந்து, கேட்பாரற்று மரணித்து, அவர் உடலை யாரும் கோராமல் அநாதை பிணமாய் அடக்கமானார். கலிகாலம் என்று புலம்புவதை தவிர வேறென்ன செய்வது. ஒரு வேளை அவர் விதைத்தது தவறாய் முளைத்துவிட்டதோ..?
IliFiSRurdy
15th November 2013, 08:35 AM
MY DEAR HUBBERS AND NT FANS,
MY sincere thanks to all who sent greetings for my birthday and i am glad to share the good news of my becoming GRANDFATHER of a son born to my daugher here.
my blessings to all younsters and good wishes and namaskarams to elders.
LET US ALWAYS UNITED AND MAKE OUR NT FLAG VERY HIGH FORGET AND FORGIVE SHORTCOMINGS AND OTHER UNPLEASANT SMALL HAPPENINGS
WHICH ARE NOTHING BUT PASSING CLOUDS IN THE MIDWAY,
Good Morning Sir and Hearty Congrats on yourself being gifted with குபேரன் on your birthday by the Almighty.
I pray for the best of both தாத்தா and பேரன்.
Best wishes,
Ganpat
IliFiSRurdy
15th November 2013, 08:48 AM
கலிகாலத்தின் விதி முறைகள்..
நீ நல்லது செய்தால் உனக்கு நல்லதே நடக்கும்!
நீ தீமை செய்தால் உனக்கு தீமையே நிகழும்.!
நீ நல்லது செய்து உனக்கு தீமை நிகழ்ந்தாலோ
அல்லது
தீமை செய்து நல்லது நிகழ்ந்தாலோ,
அது,உன் முற்பிறவி பயன்.
Gopal.s
15th November 2013, 12:18 PM
இஸ்லாமிய சகோதரர்களுக்கு ,நடிகர்திலகத்தின் சார்பாக எங்களது மொஹரம் வாழ்த்துக்கள்.
uvausan
15th November 2013, 12:32 PM
MY DEAR HUBBERS AND NT FANS,
MY sincere thanks to all who sent greetings for my birthday and i am glad to share the good news of my becoming GRANDFATHER of a son born to my daugher here.
my blessings to all younsters and good wishes and namaskarams to elders.
LET US ALWAYS UNITED AND MAKE OUR NT FLAG VERY HIGH FORGET AND FORGIVE SHORTCOMINGS AND OTHER UNPLEASANT SMALL HAPPENINGS
WHICH ARE NOTHING BUT PASSING CLOUDS IN THE MIDWAY,
Dear Sir - its great news and heart congratulations to you for your elevation to "Grand Father" status . Your advice is apt and timely .
Ravi
:smile2::smokesmile:
uvausan
15th November 2013, 12:49 PM
இந்த சேவைக்காக அரசு மருத்துவமனை டாக்டர்களால் பாராட்டுப் பெற்றவர். யாருமற்ற அநாதையாய் தெருவில் வீழ்ந்து, கேட்பாரற்று மரணித்து, அவர் உடலை யாரும் கோராமல் அநாதை பிணமாய் அடக்கமானார். கலிகாலம் என்று புலம்புவதை தவிர வேறென்ன செய்வது. ஒரு வேளை அவர் விதைத்தது தவறாய் முளைத்துவிட்டதோ..?[/QUOTE]
கோபால் சார் - படிக்கவே மனதிற்கு கஷ்டமாக உள்ளது - நீங்கள் இந்த புத்தகத்தை படித்திருப்பீர்கள் - " why bad things are happening to good people" " கஷ்டங்கள் நல்லவர்களைதான் தேடி வருகிறது ஆனால் அவர்களை உலகுக்கு அடையாளம் காட்டி முன் நிலைக்கு எடுத்து கொண்டு செல்வதும் இந்த கஷ்டங்கள் தான் - சிவகுமாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லோரும் ப்ராத்திபோம் .
:cry2::cry:
parthasarathy
15th November 2013, 02:24 PM
MY DEAR HUBBERS AND NT FANS,
MY sincere thanks to all who sent greetings for my birthday and i am glad to share the good news of my becoming GRANDFATHER of a son born to my daugher here.
my blessings to all younsters and good wishes and namaskarams to elders.
LET US ALWAYS UNITED AND MAKE OUR NT FLAG VERY HIGH FORGET AND FORGIVE SHORTCOMINGS AND OTHER UNPLEASANT SMALL HAPPENINGS
WHICH ARE NOTHING BUT PASSING CLOUDS IN THE MIDWAY,
Dear Sir,
Hearty congratulations on your becoming a Grandfather.
Trust mother and child are doing well.
Regards,
R. Parthasarathy
Russelluvd
15th November 2013, 03:16 PM
இஸ்லாமிய சகோதரர்களுக்கு ,நடிகர்திலகத்தின் சார்பாக எங்களது மொஹரம் வாழ்த்துக்கள்.
மொஹரம் முசுலீம்களுக்கு துக்கதினமாச்சே வாழ்த்து சொல்லுவாங்களா தெரியமத்தேன் கேக்குறேன்.யாராச்சும் கூருங்கப்பா
Russelluvd
15th November 2013, 03:17 PM
என்னோட சங்கிலி கிருக்களுக்குக் பாராட்டா.தேங்க்ஸ்பா அல்லாருக்கும்.அதுவும் கோவக்காரருக்கே புடிச்சிப்போச்சே
Russelluvd
15th November 2013, 03:19 PM
கலிகாலத்தின் விதிய மீறின முறைகள்
நீ நல்லது பண்ணா ஒனக்குகெட்டதே நடக்கும்
நீ தீமைசெஞ்சா ஒனக்கு நன்மையே நிகழும்
நீ அடுத்தவன மாட்டிவு ட்டுட்டா நீ மாட்டிக்க மாட்டே
நீ ஒருத்தனுக்கு ஜால்ரா போட்டா மத்த எல்லாருக்கும் கால்ரா
நீ அட்த்தவன நக்கல் உட்டா நீ நன்றி உள்ளவன்
நீ மேதையா இருந்தா மத்தவன்லாம் முட்டாளு
நீ நல்லது செய்து உனக்கு தீமை நிகழ்ந்தாலோ
(copy paste பண்ணுறது நொம்ப ஈசி)
அல்லது
தீமை செய்து நல்லது நிகழ்ந்தாலோ,
அது உன் நண்பன் செய்யிற கூத்து மத்தவன்லாம் ஒனக்கு வெத்துவேட்டு
இதுதால் ஒலகமா இதுதான் வாழ்க்கயா
ஆகா கவித கவித
Russelluvd
15th November 2013, 03:38 PM
ரகுல்ராம்
கவரிமான் போட்டு கலக்கிட்டியே.யப்பா புரியிரமாறி நீயாச்சும் எலுதினியே ஒனக்குஇன்னா வயசு கண்ணு அம்மாள சுத்தி போட சொல்லு.நல்லாருக்கு ராசா.
ScottAlise
15th November 2013, 03:40 PM
Dear சுப்ரமணியம் ராமஜயம் sir,
Hearty congratulations on becoming a Grandfather
Dear Gopal sir,
Felt very sorry on reading your article, definitely we could not figure out GOd's judgement may he find peace in heaven , surely he deserved a glory
Gopal.s
15th November 2013, 03:42 PM
ரகுல்ராம்
கவரிமான் போட்டு கலக்கிட்டியே.யப்பா புரியிரமாறி நீயாச்சும் எலுதினியே ஒனக்குஇன்னா வயசு கண்ணு அம்மாள சுத்தி போட சொல்லு.நல்லாருக்கு ராசா.
எனக்கு எல்லாமே நல்ல புரிஞ்சிருச்சு சார்.
Gopal.s
15th November 2013, 03:43 PM
very sorry on reading your article, definitely we could not figure out GOd's judgement may he find peace in heaven , surely he deserved a glory
Yes.It is indeed complicated.If you look for direct cause and effect,everything appears bleak. Karma theory is the only one helps to keep the equilibrium on.
IliFiSRurdy
15th November 2013, 04:22 PM
[QUOTE= படிக்கவே மனதிற்கு கஷ்டமாக உள்ளது - நீங்கள் இந்த புத்தகத்தை படித்திருப்பீர்கள் - " why bad things are happening to good people" " கஷ்டங்கள் நல்லவர்களைதான் தேடி வருகிறது ஆனால் அவர்களை உலகுக்கு அடையாளம் காட்டி முன் நிலைக்கு எடுத்து கொண்டு செல்வதும் இந்த கஷ்டங்கள் தான் - சிவகுமாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லோரும் ப்ராத்திபோம் .
:cry2::cry:[/QUOTE]
Dear g94127302 saar, " why bad things are happening to good people" ஒரு அருமையான புத்தகம்.அதில் இந்த கேள்விக்கான பதிலை அதன் ஆசிரியர் வேறு விதமாக சொல்லியிருப்பார்.இவ்வாறு.. " why bad things are happening to good people?" this question has no answer.But if the same is changed a bit as "what happens to good people when bad things happen to them?"then the answer is "they become better people!"
Russelluvd
15th November 2013, 04:43 PM
when i saw filmography thread today is annai illam relase date. really a fantastic one.i watch madi meethu thalai vaithu beautiful duet song in youtube. what a songyaa.one of the top most duet song in tamil and devika a beautiful queen alwyas spoiled our moods.sivaji's stylish walk in the song nadayaa ithu nadayaa.another song sikappu vilakku eriyuthamma is slightly bore one.i think annai illam is a hit one.is this sivaji's own production?
ScottAlise
15th November 2013, 08:02 PM
Thanks Kiruba sir,
My standard that much only sir , so you cannot expect high profile wriitngs
Gopal sir is one among specialist in that
If you feel my standard has been raised it is due to reading of write ups of Ragavendran, Vasu sir, Gopal sir, Joe, Murali sir and many more writers
I am 27 years kiruba sir
uvausan
15th November 2013, 08:56 PM
[QUOTE=ragulram11;1090159]Dear Parthasarathy sir,
Hearty congratulations on becoming a Grandfather
Dear Ragulram
தாத்தாவானது Mr.பார்த்தசாரதி அல்ல -Mr சுப்ரமணியம் ராமஜயம்
Ravi
:smile2::smokesmile:
Gopal.s
15th November 2013, 09:07 PM
மிக்க நன்றி ராகவேந்தர் சார். என்னால் தங்கள் மனம் புண் பட்டிருந்தால் மன்னிப்பை கோருகிறேன்.இனி இணைந்து தெய்வத்தின் புகழை பாடுவோம்.
Gopal.s
15th November 2013, 09:10 PM
kiruba,
annai illam is by kamala movies santhanam.he produced annai illam,paladai,anbalippu under this banner.annai illam is a hit movie ran for 100 days. extraordinary songs,good lead pair chemistry.
ScottAlise
15th November 2013, 09:15 PM
Thanks Ravi Sir for pointing out the mistake
ScottAlise
15th November 2013, 09:15 PM
பார்த்ததில் பிடித்தது
அத்தியாயம் -2
கவரிமான் என்ற சீரியஸ் பதிவை அடுத்து கொஞ்சம் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படத்தை பற்றி எழுதலாம் என்ற பொது நிறைய படங்கள் மனதில் வந்தது , அதில் ஒரு படம் தான் 1969 ல் வந்து உள்ளதை கொள்ளை கொண்ட தங்கசுரங்கம்
இந்த படத்தை பற்றி ஏற்கனவே எழுதி உள்ளேன் , அதில் இருந்து முற்றிலும் புதிய கோணத்தில் இந்த முறை எழுதி இருக்கிறேன்
RAGHAVENDRA
15th November 2013, 09:16 PM
டியர் கோபால்
என் மனம் புண் பட்டது நிஜம். அது இப்போதைக்கு ஆறாது. நடிகர் திலகத்தின் சிறப்பைக் கூறும் பதிவினை எடுத்து விட்டு இங்கே முழு மனதோடு தொடர முடியாது. அதனால் ஒரு பார்வையாளனாக தங்கள் பதிவையெல்லாம் படித்து இன்புறுவதே போதும் என்கிற முடிவில் தான் நான் இருக்கிறேன்.
தாங்கள் மன்னிப்பெல்லாம் கோர வேண்டாம். அந்த அளவிற்கு நான் பெரியவனோ அருகதை உள்ளவனோ அல்ல.
என் பதிவின் தரம் உயர்ந்த பிறகு நான் இங்கு பதிவிடுவதைப் பற்றி யோசிக்கிறேன்.
தங்கள் அன்புள்ள
ராகவேந்திரன்
ScottAlise
15th November 2013, 09:17 PM
தங்கசுரங்கம்
1969 இந்த படம் வந்த வருடம் , இந்த வருடத்தில் நடிகர் திலகத்தின் 9 படங்கள் வெளி வந்தன ,12 மாதத்தில் 9 படங்கள் , சராசரியாக 45 நாட்களுக்கு 1 படம் என்ற விதம் ரிலீஸ் செய்யப்பட்டது . பிற நடிகர்களின் நல்ல படங்கள் போக , நடிகர் திலகத்துக்கு , அவர் படங்களே போட்டி . (பல தடவை இப்படி தான் )
ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு genre , கிராமிய கதை , நகைச்சுவை , குடும்ப பின்னணியில் ஒரு படம் , ரீமேக் படம் , நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படம் என்று ரசிகர்களுக்கு விருந்து வைத்தார் நடிகர் திலகம் , 1972 வந்த படங்கள் உடன் இதை ஒப்பிட முடியாது என்றாலும் இந்த வருடமும் நடிகர்திலகத்துக்கு நல்ல படங்கள் வந்தன
James Bond என்ற சொல் ஹாலிவுட் யை கலக்கி கொண்டு இருந்தது , எங்கே பார்த்தாலும் Sean Corney , Roger Moore என்ற பெயர் தான் ,
இங்கே நம் தென்னிந்திய James Bond ஜெய்ஷங்கர் கலக்கி கொண்டு இருந்தார் , ஆந்திரா வில் கிருஷ்ணா James Bond பாத்திரத்தில் பிச்சு உதறினார் .
அதே போன்ற துப்பறியும் கதையில் இரு திலகங்களும் நடித்து கொண்டு இருந்தார்கள்
ஒரு ஒற்றுமை இரண்டுக்கும் ஒரே நபர் தான் கதை , வசனம் -
G . பாலசுப்ரமணியம் B .A .
இப்படி ஏக பட்ட எதிர்பார்ப்புகள் உடன் வந்த படம் தான் தங்கசுரங்கம்
படம் ஆரம்பித்த உடன்
பர்மா யுத்தத்தினால் மக்கள் நாட்டை விட்டு வெளி ஏறுகிறார்கள் , கப்பலில் இடம் இல்லாத காரணத்தினால், G . வரலக்ஷ்மி தன் குழந்தையை ஒரு கிறிஸ்துவ பாதிரியார்யிடம் கொடுத்து வளர்க சொல்லுகிறார் , அந்த குழந்தையின் பெயர் ராஜன் என்று சொல்லுகிறார் .
வருடங்கள் உருண்டு ஓடி காமாட்சி (G . வரலக்ஷ்மி) கிறிஸ்துவ பாதிரியார் யை ( சீதாராமன்) தற்சையலாக சந்திக்கிறார் , அவர் மூலம் தன் மகன் படித்து , போலீஸ் அதிகாரியாக இருப்பதை அறிகிறார்
ராஜன் (சிவாஜி) ஸ்காட்லாந்தில் பயிற்சி முடிந்து திரும்புகிறார் , அறிமுக காட்சியே அமர்க்களம் தான் விமானத்தில் இருந்து அழகாக (ப்ளூ& கிரே கலர் கலந்த கோட் , சூட் , ரெட் ஷர்ட் & tie )
இறங்குவார் , கை கொடுப்பதில் ஒரு மிடுக்கு இருக்கும் இரும்பு கரம் , சிபிஐ officer என்றல் சும்மாவா
அடுத்த காட்சி சிபிஐ அலுவலகம் , அங்கே அனைவரும் அவரை பார்த்து விஷ் செய்ய நம்மவர் ராஜகம்பீரமாக (வெள்ளை சட்டை & கருப்பு பண்ட ) நடந்து , சிபிஐ டைரக்டர் மேஜர் யை சந்திப்பார் ,மேஜர் ராஜனிடம் அடுத்த வழக்கை பற்றி விவரிக்க,பார்வையாளர்களுக்கு அது ஈர்க்கும் விதத்தில் இருக்கும் ஏனென்றால் அது நாம் அன்றாடம் அணியும் போலி தங்கத்தை பற்றி ஒரு வழக்கு
ஆம் நாட்டில் உள்ள போலி தங்கத்தின் மூலத்தை கண்டு பிடிக்கும் பொறுப்பு ராஜன்க்கு , சில ஆதாரங்கள் சேகரிக்க 10 நாட்கள் ஆகும் என்பதால் ராஜன் தன் கிராமத்துக்கு செல்கிறார்
அப்போ அவர் படும் பாடல்
http://www.youtube.com/watch?v=LiK_4pdcvv4
அதில் அவர் உடை வெள்ளை pant , சந்தன கலர் t ஷர்ட் , வெள்ளை தொப்பி , வெள்ளை brief case , மற்றும் stick , வெள்ளை ஷு
ஒரு அதிகாரி எப்போதும் formals தான் உடுத்துவார் இது போன்ற holiday சமயத்தில் தான் இந்த மாதிரி casuals போடுவார் இந்த மாதிரி commercial படங்களில் கூட ஒரு ரியலிசம் கொண்டு வந்து விடுவார் நடிகர் திலகம் & ராமண்ணா கூட்டணி ,
அடுத்த காட்சியில் ராஜன் தன் தாயாரை காணும் காட்சி ,
தன்னை வளர்த்த பாதிரியார் இது தான் உன் தாய் என்று சொல்லும் பொது அவரின் கையை பிடித்து அதை உள்வாங்குவதும் கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து ஒரு மகன் தன் தாயாய் காணும் பொது இப்படி ரியாக்ட் செய்வார் ஒரு அதிர்ச்சி கலந்த ஆனந்தத்தை வெளி படுதுவானோ அப்படி வெளி படுத்துவார் , அந்த கண்ணீர் விடுவதும் , பால் அருந்துவதும் (black சூட் & white ஷர்ட்) இரவில் தன் தாயிடம் பேசி கொண்டே உறங்க மறுப்பதும் இந்த காட்சி பாசத்துக்கு ஒரு எடுத்துகாட்டு
இந்த காட்சி இப்படி முடிந்தது என்றால் அடுத்த காட்சியில் வில்லனின் கூடாரத்தில் விரிகிறது
அங்கே விஞ்ஞானி சுப்பையாவை வில்லன் Pai போலி தங்கம் செய்ய வற்புறுத்துகிறார்(குரல் மட்டுமே கேட்கிறது ) விஞ்ஞானி தங்கம் செய்ய மறுக்கிறார் , வில்லனின் கையாள் வேலையுததம் (மனோகர் ) தங்கம் செய்யும் சூத்திரத்தை கேட்கிறார் , அதற்கும் மறுக்கிறார் விஞ்ஞானி
வில்லனின் கூடாரம் அரங்கம் டாப் கிளாஸ் அமைப்பு , வில்லனின் ஆட்களுக்கு சீருடை கூட நல்ல கலர் combination , மனோகர் உடை மட்டும் என்னவாம் , கிரீம் கலர் கோட் , பிரெஞ்சு தாடி , கருப்பு கண்ணாடி என்று ஜோராக இருக்கிறார்
அடுத்த காட்சியில் ராஜன் குளிக்க செல்லும் பொது அங்கே மல்லிகா (நிர்மலா) என்ற பெண்ணை சந்திக்கிறார்
நடிகர் திலகம் அந்த வெள்ளை பைஜாமா , குர்தாவில் மன்மதன் தான்
தன் மகன் கிடைத்த மகிழ்ச்சியான தருணத்தில் காமாட்சி தெய்வத்துக்கு பொங்கல் வைக்கிறார் , அந்த தருணத்தில் ராஜனை கொள்ள முயற்சி நடக்கிறது , மல்லிக அவர் உயிரை காப்பாற்ற காமட்சி தன் மகனுக்கு மல்லிகைவை பெண் கேட்கிறார் (நாகேஷிடம்)
ScottAlise
15th November 2013, 09:17 PM
அடுத்த காட்சி சிபிஐ ஆபீசில்
போலி தங்கம் செய்யும் கூட்டத்தின் ஆட்கள் பற்றி ராஜனுக்கு தெரிவிக்கிறார் சிபிஐ டைரக்டர் மேஜர்
அவர்களில் அரசாங்க டாக்டரிடம் இருந்து முதலில் விசாரணையை தொடங்குகிறார் ராஜன்
டாக்டர் ஒத்துழைக்க மறுக்கிறார்
ராஜன் தன் பாணியில் எச்சரிக்கை செய்கிறார்
அந்த காட்சியில் அவர் அணிந்து உள்ள இறுக்கமான உடையும் (blue& blue ) அவர் ராஜன் சிபிஐ என்று சொல்லும் விதமும் , அவர் எச்சரிக்கை செய்யும் தோரணையும் ஸ்டைல் ,ஒரு பஞ்ச் டயலாக் இல்லை , கோபம் இல்லை ஆனாலும் message conveyed
விஞ்ஞானி சிகிச்சை எடுத்து கொள்ள மறுக்கவே , டாக்டர் மனம் திருந்தி ராஜனிடம் உண்மையை சொல்ல நினைக்கிறார்
உண்மையை சொல்ல முற்படும் பொது ராஜன் கண் முன்னே race course ல் இறந்து விடுகிறார் , சரியாக சொன்னால் கொலை செய்ய படுகிறார்
அங்கே வேலாயுதம் ஒரு பெண்ண உடன் பேசி கொண்டு இருப்பதை பார்க்கும் ராஜன் அந்த பெண்ணை பின் தொடர்கிறார்
ஹோட்டல் அறையில் அந்த பெண்ணை விசாரிக்கிறார் , அடடா அதில் தான் என்ன வார்த்தை ஜாலங்கள் ,அதில் பாரத்தின் உடை கொஞ்சம் glamour தான் இருந்தாலும் அதில் ஒரு decency , நம்மவர்க்கு , கொஞ்சம் காக்கி கலர் ஷர்ட் ,உள்ளே ரெட் கலர் ரவுண்டு நெக் த ஷர்ட் அதில் சலக் அவரின் வயதை நன்றாக குறைத்து காட்டுகிறது ,
விசாரணையில் போதிய ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கும் பொது ரொம்ப கூலாக பேசிக்கொண்டே gloves அணிந்து கொண்டு , பாரதியை manhandle (கையை முறிப்பர்) செய்வார். வேறு ஒரு நடிகராக இருந்தால் இதை செய்வாரா என்பது சந்தேகமே , நம்மவர்தான் இமேஜ் என்ற வட்டத்தில் சிக்காதவர் ஆயிற்றே .
பின் பாரதியுடன் பேசி கொண்டே பின் பக்கமாக நண்டந்து சண்டை போடுவார் பாருங்கள் , மின்னல் அடி தான்
இதோ வீடியோ இணைப்பு
http://www.youtube.com/watch?v=Ti7xJd4q18c
(Video Courtesy : Vasudevan Sir)
முடிவில் தலைவர் ரஜினி ஸ்டைல் வேறு , பிச்சு உதறி இருப்பார்
ScottAlise
15th November 2013, 09:19 PM
அடுத்த காட்சியில் ராஜன் அமுதாவை (பாரதி) சிபிஐ அலுவகத்தில் ஒப்படைப்பார் , அங்கே அடுத்த கட்ட விசாரணைக்காக அமுதாவை பெங்களூர் அழைத்து செல்ல முடிவு எடுக்க படுகிறது .
ராஜன் மீது அமுதா கோபத்தை காடும் பொது , ராஜன் அமைதியாக கையை பின்னாடி கட்டி கொண்டு இருபது , அவர் சென்ற உடன் தன் உயரதிகாரியுடன் பேசுவதுக்கும் நல்ல வித்யாசம் தெரியும் .
பெங்களூர் செல்லும் வழியில் ஆபத்து வருகிறது , அதில் இருந்து தப்பிக்க ராஜன் கையாளும் தந்திரம் (மூச்சை பிடித்து கொள்வது , காரை வேகமாக ஓட்டும் லாவகம் என்று என்னை போன்ற action ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கிறார் ) அதில் அவர் அணியும் வெள்ளை T - ஷர்ட் இன்னும் என் கண் முன்னே இருக்கிறது
அன்று இரவை அமுத தப்பிக்க நினைத்து சேற்றில் விழிந்து விடுகிறார்
அவரை டீஸ் செய்யும் பாடல்
http://www.youtube.com/watch?v=MXryA5pYAF0
பெங்களூர் ஹோட்டலுக்கு போகும் வழியில் ராஜன் மல்லிகாவை சந்திக்கிறார் , அமுதாவும் மல்லிகாவும் ஹோட்டல் அறையில் சண்டை இடுகிறார்கள் , ராஜன் அமுதாவை மல்லிகாவின் பாதுகாப்பில் வைத்து விட்டு வெளியே சென்று விட்டு பார்க்கும் பொது , மல்லிகாவை கட்டிவைத்து விட்டு அமுதா தப்பித்து சென்ற விஷயம் தெரிந்து , அந்த கடிதத்தில் இருக்கும் விலாசத்துக்கு செல்லுகிறார்
ராஜன் இன்ப நிலையத்துக்கு negro வேடத்தில் செல்லுகிறார் , அங்கே அவர் Pai யை சந்திக்கிறார் (அந்த காட்சியில் நடிகர் திலகத்தின் உடை , ஒப்பனை , நல்ல பொருத்தம் ), அங்கே எல்லா நாட்டில் இருந்தும் வந்த smugglers யை சந்திக்கிறார் (அந்த காட்சியில் மனோகர் அவர்களை அறிமுகம் படுத்தும் விதம் , nadigar திலகம் 360 டிகிரியில் தலையை அசைப்பதும் டாப் )
ராஜன் அங்கே மணி (நாகேஷ் ) மற்றும் மல்லிகாவை காணுகிறார்
அங்கே தான் தெரியவருகிறது மல்லிகாவின் பெயர் லைலா என்று , மணி அவர் அண்ணன் இல்லை என்பதும் (முதல் ட்விஸ்ட் )
அதற்கு அப்புறம் வரும் musical பிட் நல்ல தரம் (TK ராமமூர்த்தி என்றால் சும்மாவா)
ராஜன் Pai யின் பேரத்துக்கு உடன் படாதால் Pai ராஜனின் கையை எலெக்ட்ரிக் shocker மூலம் பொசிகி விடுகிறார்
அங்கே ராஜன் அந்த விஞ்ஞானி மற்றும் அவர் மகள் அமுதாவை காணுகிறார் ,
மணியின் உதவியால் ராஜன் அந்த விஞ்ஞானி மற்றும் அவர் மகள் இருவரையும் மீட்டு விடுகிறார்
மீண்டும் ஒரு நல்ல சண்டை
ScottAlise
15th November 2013, 09:20 PM
விஞ்ஞானி ஆஸ்பத்திரியில் சேர்க்க படுகிறார் , அமுதாவை வீட்டுக்கு அழைத்து வருகிறார் ராஜன் ,
ராஜன் தன் அம்மாவிடம் நடந்ததை விவரிக்கிறார் (நாகேஷிடம் அவர் விசாரிக்கும் காட்சி நல்ல சிரிப்பு , அதுவும் கட்டபொம்மன் பற்றி நாகேஷ் சொன்ன உடன் நடிகர் திலகத்தின் பதில் )
இந்த இடத்தில மீண்டும் ஒரு பாடல்
http://www.youtube.com/watch?v=I9MlyteWg08
ஆஸ்பத்திரில் இருக்கும் விஞ்ஞானி Pai ஆட்களால் கடத்த படுகிறார்
ராஜனின் வீட்டுக்கு Pai வந்து ராஜனின் தாயாரை அதிர்ச்சி அடைய வைக்கிறார் , ஆம் ராஜனின் தந்தை தான் கனகசபை (எ) PAI (பொதுவாக ராமண்ணா வின் படங்களில் வில்லனின் பெயர்கள் வட இந்திய பெயராக தான் இருக்கும்)
விஞ்ஞானி ஒரு சீனா மருத்துவர் மூலம் ஒரு மூளையை மயக்கும் ஊசியை செலுத்தி , தங்கம் செய்ய வைக்கிறார் PAI
ராஜன் PAI யின் கூட்டத்தில் இருக்கும் ஒரு பெண்ணை ஏமாத்தி PAI வெளியே வரும் தேதி , இடம் , வாகனம் அனைத்தையும் தெரிந்துகொண்டு, அவரை பிடிக்க செல்லும் விஷியத்தை தன் தாயிடம் சொல்லிவிடுகிறார்
அவர் அதை தன் கணவரிடம் சொல்லி விடுகிறார்
ராஜன் PAI யை பிடிக்க சென்று ஏமாறுகிறார் (அந்த காட்சியில் அவர் உபயோக படுத்தும் துப்பாக்கி என்னை கவர்ந்தது , அவர் துப்பாக்கி உபயோகபடுத்தும் காட்சியை மட்டும் close up ல் காட்டி இருப்பார்கள் , அந்த காட்சி மட்டும் தனியாக தெரியும் , ரிமோட் control ஜீப் புது யுக்தி )
PAI யை பிடிக்கும் திட்டம் தோல்வி அடைந்ததால் மேஜர் , சிவாஜி இருவரும் யார் மூலம் இந்த விஷயம் தெரிந்து இருக்கும் என்பதை ஆராய்கிறார்கள் , ராஜன் தன் தாயை தான் அது என்று யூகித்து காட்டும் முகபாவனை , மெல்லவும் முடியாமல் , முழுங்கவும் முடியாமல் செல்லுவதும்
வீட்டுக்கு வந்த உடன் தன் தாய்யை முறைத்து பார்ப்பதும் , ராஜனின் தாய் அவர் பார்வையை பார்க்க முடியாமல் தவிப்பதும் , அவர் தன் உண்மையை சொன்னார் அன்று சொல்லி விடுகிறார்
(அந்த காட்சியில் இரண்டு stalwarts பிச்சு உதறிருப்பர்கள் )
மீண்டும் ஆபீஸ் செல்லும் ராஜன் தன் தாயாரை கைது செய்ய உத்தரவு கேட்கிறார் , அந்த காட்சியில் அவர் உடைந்து அழ வருவதும் , பின் தன்னை கம்போஸ் செய்து கொண்டு , பின் மீண்டும் ஆத்திர படும் பொது கை நடுங்கும் பாங்கு , PAI தன் அம்மாவின் கணவர் என்று சொல்லுவதும் கடமை மிக்க அதிகாரியாக காட்சியளிக்கிறார்
ராஜன் மீண்டும் மணியின் உதவி உடன் அந்த கூட்டத்தை பற்றி அறிந்து கொண்டு , ஒரு ஹோட்டலுக்கு செல்லுகிறார்கள் .
அங்கே அனைவரும் முகமூடி அணிந்து கொண்டு இருக்கிறார்கள் , அங்கே மீண்டும் ஒரு மியூசிக் பிட் அது முடிந்த உடன் சண்டை (நம்மவர் வெள்ளை சூட்டில்அதில் blue border உடன் கம்பீரமாக சண்டை போடுகிறார் )
அமுதாவுக்கும் மூளைசலவை ஊசியை செலுத்தி ராஜனை ஒரு இடத்துக்கு வர சொல்லுகிறார்கள்
அங்கே ஒரு பாடல்
http://www.youtube.com/watch?v=li35DJa8iK4
ராஜன் இதை முறியடித்து , தந்திரமாக எதிரி இருக்கும் இடத்தை போலீஸ் control ரூமுக்கு தெரிவிக்கிறார்
PAI வெளிநாட்டுக்கு தப்பிக்க முயற்சி செய்கிறார் , ராஜன் , அமுதாவை கொலை செய்ய பாம் வைத்து விட்டு சென்று விடுகிறார்
ராஜன் அதில் இருந்து தப்பி , துறைமுகத்தில் கடத்தல் பொருட்களை மீட்டெடுக்க , PAI ,சர்ச்சில் பதுங்கிருபது அறிந்து ராஜன் நிரயுதபானியாக செல்லுகிறார்
PAI முதலில் ராஜனை சுடுகிறார் , பின் மனம் திருந்தி சரண் அடைகிறார்
(என்னை பொறுத்த வரை climax was a total let down )
முடிவில் ராஜன் அரசாங்கத்தினால் கௌரவிக்க படுகிறார் (அந்த நேரு டிரஸ் black & white ஒரு மிடுக்கு தான் நடிகர் திலகத்துக்கு )
இந்த படத்தில் நடிகர் திலகத்தின் உடை அலங்கார நிபுணரின் பெயர் ராமகிருஷ்ணன் .
மொத்தத்தில் இந்த தங்கசுரசுரனத்தை இன்றும் பார்க்கலாம்
uvausan
15th November 2013, 09:37 PM
கோபால் சார் - இப்பொழுதுதான் உங்கள் 'தேவர் மகன்" பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது - எவ்வளவு அருமையாக அலசி உள்ளீர்கள் - எவ்வளவு உழைப்பு இந்த பதிவில் சென்றிருக்கும் என்று நினைக்கும் போது மலைப்பாக உள்ளது - உங்களை டாக்டர் என்று சொன்னால் அது மிகை ஆகாது . நீங்கள் மட்டும் உங்கள் கோபத்தை விட்டு விட்டால், சுடும் வார்த்தைகளை தவிர்த்து விட்டால் NT க்கு ஆஸ்கார் கிடைத்தால் எப்படி சந்தோஷ படுவோமோ அப்படி எல்லோரும் சந்தோஷ படுவோம் - அல்லாவின் பெயரை சொல்லி , நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும் கொண்டாடுவோம்!
Ravi
:):smokesmile:
uvausan
15th November 2013, 09:53 PM
Dear Ragulram -
இந்த 27 வயதில் இவள்ளவு NT யின் மீது பக்தியா என்று நினைக்கும் பொழுது உடம்பெலாம் சிலிர்கின்றது . எவ்வளவோ உங்கள் வயது நடிகர்கள் இருந்தும் ,NT யை பற்றி பக்கம் பக்கமாக நீங்கள் எழுதுவதை அதுவும் நன்றாக வர வேண்டுமே என்று நக்கீரர் வாசு விடம் , உங்கள் தமிழ் தன் உடையை திருத்தம் செய்து கொண்டு எங்கள் எல்லோருக்காகவும் மீண்டும் மீண்டும் பதிவு செய்து வந்து கொண்டிருப்பது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது - தொடருங்கள் - உங்கள் வயதை ஒத்த பல நண்பர்களக்கும் NT யின் மகிமையை எடுத்து சொல்லுங்கள் - இந்த திரியின் மதிப்பை நீங்களும் பல மடங்கு உயர்த்துங்கள் . Good Luck
Ravi
:):smokesmile:
Murali Srinivas
15th November 2013, 11:54 PM
அனைவருக்கும் வணக்கம். ஒவ்வொரு முறையும் இது போன்ற பதிவுகள் இடும்போது இத்தகைய பதீவுகளை இடுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும் என நினைப்பேன். ஆனால் ஒவ்வொரு முறையும் ஏமாற்றமே மிஞ்சும். இம்முறை அப்படி நிகழாது என நம்புகிறேன்.
இங்கே சில நாட்களாக இருந்த கசப்புணர்வு, தேக்க நிலை இவற்றை நீக்கி மீண்டும் இந்த திரி தன் ஒளி வீசும் பெருமையை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் எடுக்கப்பட்ட முயற்சிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து நல் இதயங்களுக்கும் மனமார்ந்த நன்றி.
குறிப்பாக ராகவேந்தர் சார். நான் கேட்டுக் கொண்டேன் என்ற காரணத்திற்காகவே இறங்கி வந்து விட்டுக் கொடுத்த உங்கள் பெருந்தன்மைக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.
கோபால் அவர்களும் என் வேண்டுகோளை ஏற்று main திரியில் பலரும் மனம் புண்பட காரணமாயிருந்த சில பதிவுகளை நீக்கியதற்கு என் இதயங்கனிந்த நன்றிகள்.
வாசு ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். என்னை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒரு ருசி இருக்கும், ஒரு wish list இருக்கும். அதன்படிதான் அவர்களின் பதிவுகள் அமையும். நாம் யாரையும் இதை செய்யுங்கள் அதை செய்யுங்கள் என்று கூற வேண்டாம்.
கோபால் அவர்களுக்கு,
உங்கள் அறிவு, ஆற்றல், பல்வேறு துறைகளைப் பற்றிய ஞானம் உலக சினிமாக்களின் பரிச்சியம் இவை அனைத்தும் இங்கே உள்ள அனைத்து நண்பர்களாலும் பாராட்டப்படும் விஷயங்களாகும். உங்களுக்கு பிடித்ததை நீங்கள் எழுதுவது போல் அவரவருக்கு பிடித்ததை அவரவர்கள் எழுதுகிறார்கள். அதில் நமக்கு உடன்பாடு இருந்தால் பாராட்டலாம், பங்களிப்பு செய்யலாம். பிடிக்கவில்லையென்றால் ஏதும் கூறாமல் விலகி சென்று விடலாம். இது நான் சொல்லி நீங்கள் புரிந்து கொள்ளும் நிலைமையில் இல்லை. உங்களுக்கே தெரிந்ததுதான். ஆகவே நான் உங்களிடம் உரிமையோடு விரும்பி கேட்டுக் கொள்வதெல்லாம் தயவு செய்து யார் மனமும் புண்படாமல் நடந்துக் கொள்ளுங்கள் என்பதுதான்.
நமது ஹப் மாடரேட்டர்கள் மற்ற திரிகளைப் போல் அல்லாமல் நமது திரியின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறார்கள். நம்மை கலக்காமல் அவர்கள் எந்த முடிவையும் எடுப்பதில்லை. ஆனால் இனிமேலும் அவர்கள் அந்தளவிற்கு பொறுமை காப்பார்களா என்பது சந்தேகமே. எனவே அனைத்து நண்பர்களும் திரியின் மாண்பு காத்து இந்த திரிதான் "The Thread Of the Hub" என்ற பெருமையை என்றும் தக்க வைப்போம். உங்கள் அனைவரின் ஒத்துழைப்பை என்றும் நாடும்
அன்புடன்
Murali Srinivas
15th November 2013, 11:54 PM
ராமஜெயம் சார்,
பிறந்தநாள் வாழ்த்துகள் (Belated) சார்! உங்களை வாழ்த்த வயதில்லை. அதே போன்றே உங்கள் குடும்பத்தில் புதிய வரவாக வந்திருக்கும் உங்கள் பேரனுக்கும் எங்களது வாழ்த்துக்களும் ஆசிகளும்!
வாசு,
உங்கள் முத்தாய்ப்பான பதிவை பதிவு செய்யுங்கள்.
வினோத் சார்,
உங்கள் அயராத உழைப்பிற்கு தலை வணங்குகிறேன். என்னைப் பற்றியும ஒரு வரி எழுதி நன்றி தெரிவித்த உங்களுக்கு என் மனங்கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!
ராகுல்,
கவரிமான் பற்றிய பதிவை ரசித்தேன். என் மனதுக்கு மிகவும் பிடித்தமான படம். வாசுவின் தமிழ் திருத்தலில் பதிவு மெருகேறி இருக்கிறது. வாழ்த்துகள்.
அன்புடன்
Murali Srinivas
15th November 2013, 11:56 PM
நமது திரி 11-ம் பாகத்தை நிறைவு செய்து 12-ம் பாகத்தில் அடியெடுத்து வைக்கப் போகிறது, இந்த நேரத்தில் பாட்டுடை தலைவன் நடிகர் திலகத்தின் Part 12-ஐ துவக்கி வைக்க, பாடல் ஆராய்ச்சி திலகமான பார்த்தசாரதி அவர்களை முன்மொழிகிறேன். அனைவரும் வழி மொழிய வேண்டுகிறேன்!
அன்புடன்
Subramaniam Ramajayam
16th November 2013, 01:54 AM
நமது திரி 11-ம் பாகத்தை நிறைவு செய்து 12-ம் பாகத்தில் அடியெடுத்து வைக்கப் போகிறது, இந்த நேரத்தில் பாட்டுடை தலைவன் நடிகர் திலகத்தின் Part 12-ஐ துவக்கி வைக்க, பாடல் ஆராய்ச்சி திலகமான பார்த்தசாரதி அவர்களை முன்மொழிகிறேன். அனைவரும் வழி மொழிய வேண்டுகிறேன்!
அன்புடன்
SRIRAMAJAYAM engira nann murali sir statement second seithu vazhi moigiren. our friend parthasarathy sir kindly inaugrate part 12 and make it a grand success with the coordination and cooperation of all members and make NADIGARTHILAGAM FLAG VERY HIGH AS USUAL AND MUCH MORE GREATER HEIGHTS.
thank you all.
rajeshkrv
16th November 2013, 02:30 AM
ராமஜெயம் சார்,
பிறந்தநாள் வாழ்த்துகள் (Belated) சார்! உங்களை வாழ்த்த வயதில்லை. அதே போன்றே உங்கள் குடும்பத்தில் புதிய வரவாக வந்திருக்கும் உங்கள் பேரனுக்கும் எங்களது வாழ்த்துக்களும் ஆசிகளும்!
வாசு,
உங்கள் முத்தாய்ப்பான பதிவை பதிவு செய்யுங்கள்.
வினோத் சார்,
உங்கள் அயராத உழைப்பிற்கு தலை வணங்குகிறேன். என்னைப் பற்றியும ஒரு வரி எழுதி நன்றி தெரிவித்த உங்களுக்கு என் மனங்கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!
ராகுல்,
கவரிமான் பற்றிய பதிவை ரசித்தேன். என் மனதுக்கு மிகவும் பிடித்தமான படம். வாசுவின் தமிழ் திருத்தலில் பதிவு மெருகேறி இருக்கிறது. வாழ்த்துகள்.
அன்புடன்
Murali sir,
Welcome back.
neengal vandha udanaye thiri kalai katti vittadhu. Hope the thread gets back it's glory..
thanks everyone..
Gopal.s
16th November 2013, 04:07 AM
பார்த்தசாரதி சாரை மனபூர்வமாக வழி மொழிகிறேன்.ஆனால் ஒரு கண்டிஷன்.இந்த மாதிரி ஆடிகொன்று அம்மாவாசைக்கொன்று என்று பதிவுகள் இட்டு ஓடும் வேலையை அவர் தவிர்க்க வேண்டும்.(முன் மொழிந்தவருக்கும் அதே கண்டிஷன் தான்)
Gopal.s
16th November 2013, 04:10 AM
rahul ram- Amazing thanga churangam postings. sivaji is very very Handsome and Vibrant.
Russelluvd
16th November 2013, 07:00 AM
thanks gopal sir.murali sir enna kandukave illa. ellarayum welcome pandravar enna pannave illai.enakku ulla onnu velya onnu vachu pesa theriyathu.athan ketten.
Russelluvd
16th November 2013, 07:08 AM
பார்த்தசாரதி சாரை மனபூர்வமாக வழி மொழிகிறேன்.ஆனால் ஒரு கண்டிஷன்.இந்த மாதிரி ஆடிகொன்று அம்மாவாசைக்கொன்று என்று பதிவுகள் இட்டு ஓடும் வேலையை அவர் தவிர்க்க வேண்டும்.(முன் மொழிந்தவருக்கும் அதே கண்டிஷன் தான்)
gopal,
sometimes u r like a lion
Russelluvd
16th November 2013, 07:34 AM
என்டி ராமாராவை திரிய்லநான் பாத்ததே இல்லியே.அவுரா ஒப்பன் பண்றாரு :idontgetit:
Russelluvd
16th November 2013, 07:41 AM
ஐஸாலாக்டி16 போஸ்ட் போட்டேன் i will open the part 13.ippave advanced pannikuren
how i attach photos and videos in this thread someone pl.help me
rsubras
16th November 2013, 09:35 AM
நமது ஹப் மாடரேட்டர்கள் மற்ற திரிகளைப் போல் அல்லாமல் நமது திரியின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறார்கள். நம்மை கலக்காமல் அவர்கள் எந்த முடிவையும் எடுப்பதில்லை. ஆனால் இனிமேலும் அவர்கள் அந்தளவிற்கு பொறுமை காப்பார்களா என்பது சந்தேகமே. எனவே அனைத்து நண்பர்களும் திரியின் மாண்பு காத்து இந்த திரிதான் "The Thread Of the Hub" என்ற பெருமையை என்றும் தக்க வைப்போம். உங்கள் அனைவரின் ஒத்துழைப்பை என்றும் நாடும்
அன்புடன்
still this thread stands apart from other thread for the simple reason that the premise for the mis-understanding and the subsequent tussle was based on a healthy argument (only thing was it did not proceed in that way :))....... As an ARR fan, some of us might feel awkward if some one brings in and glorify Parasuram, Super police etc even though that might also have some of our master's touch..... so it is understandable.........
as Lord Shiva(ji) says in response to pandiya king when he tells pulamaikku sarchai thevai than aanal athu sandaiyagi vida koodathu, these are unavoidable
http://www.youtube.com/watch?v=NLQhKMtG3ik
my wish for the new thread is the number of personal messages such as posts that only contain personal wishes, welcoming some one into the thread, etc should be kept to a minimum and more and more healthy argument related to NT and his timeless works finds place
KCSHEKAR
16th November 2013, 10:36 AM
தங்கசுரங்கம்
டியர் ராகுல்ராம்
தங்களுடைய தங்கச்சுரங்கம் விமர்சனப் பதிவு பிரமாதம். பாடல் காட்சி, சண்டைக் காட்சி என்று இணைப்புகளுடன் அருமையான, முழுமையான விமர்சனப் பதிவாக அளித்திருக்கிறீர்கள்.
திரு.வாசுதேவன், திரு.முரளி சீனிவாஸ், திரு.கோபால், திரு.ராகவேந்திரன், திரு.கார்த்திக் இன்னுமுள்ள திரி ஜாம்பவான்களின் பதிவுகளைப் படித்தாலே தமிழ் தானாக மெருகேறிவிடுகிறது என்பதற்கு தங்களுடைய பதிவே சான்று. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றி.
KCSHEKAR
16th November 2013, 10:38 AM
டியர் பார்த்தசாரதி சார்,
வருக! 12-ஆம் திரியை துவக்கிவைத்து, தங்களுடைய விருவிருப்பான பதிவுகளைத் தருக என்று அழைக்கிறேன்
NOV
26th November 2013, 06:48 AM
continued here: http://www.mayyam.com/talk/showthread.php?10567-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-12
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.