PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 11



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 [13] 14 15 16

IliFiSRurdy
9th October 2013, 06:07 AM
சிவாஜியின் காதல்கள்- 1

பராசக்தி- முதற்காதல்.

படு ஜாலியாக ஆரம்பித்துள்ளது உங்கள் 1/100 episode Gopalji..வாழ்த்துக்கள்

1967 களில் பராசக்தி பதினைந்து ஆண்டுகளுக்குப்பிறகு அமர்க்களமாக re-release
செய்யப்பட்டபோது,ஒரு செட்டில் நாகேஷ் நுழைந்து அங்கு இருந்த புதுமுகம் கணேசனிடம் சொன்னாராம்..
"Mr.Ganesan உங்கள் பராசக்தி படம் நேற்று பார்த்தேன்.முதல் படமானாலும்,நன்றாக நடித்துள்ளீர்கள்,
உங்களுக்கு திரையுலகில் ஒரு வளமான எதிர்காலம் காத்திருக்கிறது!"

திரையுலக ஜாம்பவான்களை (வாசன்,ஏவிமெய்யப்பன்) கர்வபங்கம் செய்ய அனுப்பப்பட்ட இறைத்தூதர் அன்றோ அந்த புதுமுகம் கணேசன்.

உலகத்தின் எந்த ஒரு நடிகருக்காவது தங்கள் முதல் படத்தில் புதுமுகம் கணேசன் fluency அளவில் பாதியாவது இருந்ததாக யாராவது நிரூபியுங்கள் பார்க்கலாம்!

இன்னொன்று..

1952 இல் பராசக்தியில் கலக்கிய அந்த புதுமுகம் 2001 இல் அந்த பராசக்தியுடன் சென்று கலக்கும்வரை புதுமுகமாகவே இருந்தார்.

புதுமுகங்களுக்கே உரிய

அடக்கம்,
நேரந்தவறாமை,
தொழிற்பக்தி/சிரத்தை
இயக்குனர்களிடம் மரியாதை
அவர்கள் சொற்படி நடத்தல்
படத்தின் பிற விஷயங்களில் தலையிடாமை..

அனைத்து குணங்களும்,கடைசி வரை அவரை விட்டு பிரியவே இல்லை.

நன்றி.வணக்கம்.

Gopal.s
9th October 2013, 08:07 AM
நன்கு சொன்னீர்கள் கண்பட். அவரை தொடரும் நானும் ,எங்கு சென்றாலும் புதுமுகத்தின் குணங்களோடு நடக்க முயல்வதால் , வெற்றி காண முடிந்தது. அது எந்த நிறுவனமானாலும்,நாடானாலும் !!!???

KCSHEKAR
9th October 2013, 10:08 AM
சிவாஜியின் காதல்கள்- 1
பராசக்தி- முதற்காதல்.


டியர் கோபால் சார்,

நல்ல துவக்கம். சபாஷ்.


யாரோ கணேசன் என்ற புதுமுகமாம்!!!!

நாங்களும் கடந்த பிப்ரவரி 2012 ல் புதிதாக ஒருவர் திரியில் நுழைந்து எழுத ஆரம்பித்தபோது, யாரோ கோபாலாம், வியட்னாமிலிருக்கிறாராம் என்றுதான் படிக்க ஆரம்பித்தோம். இப்போது திரியையே கலக்கிகொண்டிருக்கிறாராம் என்று ஊரெல்லாம் பேச்சு.

IliFiSRurdy
9th October 2013, 10:46 AM
அவரை தொடரும் நானும் ,எங்கு சென்றாலும் புதுமுகத்தின் குணங்களோடு நடக்க முயல்வதால் , !!!???

மாயம் செய்யும் மகன் வந்தது,
ஆயர்பாடி பயம் கொண்டது,
இந்தப்பிள்ளை,செய்யும் லீலை
நானறிவேன்.
:smokesmirk:

mr_karthik
9th October 2013, 10:57 AM
டியர் கோபால் சார்,

நடிகர்திலகத்தின் காதல் பாடல்களின் தொகுப்பில் முதல் பதிவாக இடம்பெற்ற பராசக்தி துவக்கமே அருமை. தொடர் அசத்தலுக்கு அச்சாரம் இட்டிருக்கிறது. பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்....

HARISH2619
9th October 2013, 01:41 PM
Dear radhakrishnan sir,
many more happy returns of the day.

Dear gopal sir,
a very grand opening of the song series,excellent,waiting for more.

Gopal.s
9th October 2013, 02:53 PM
26152615





From this Friday onwards....Naan Vaazha Vaippen is being screened in Pondicherry Newtone Daily 4 shows...

Gopal.s
9th October 2013, 05:09 PM
கார்த்திக் சாரின் வேண்டுகோளை ஏற்று கஜுரஹோ factor குறைத்து என் காதல் தொடர் தொடரும்.

கீழ்கண்ட படங்கள் முக்கியமாக பரிசீலனையில்....

1)பராசக்தி
2)புதையல்
3)ராஜா ராணி
4)தெய்வ பிறவி
5)இரும்பு திரை
6)பாவை விளக்கு
7)கல்யாணியின் கணவன்
8)ஆண்டவன் கட்டளை
9)புதிய பறவை
10)சாந்தி
11)நீலவானம்.
12)கலாட்டா கல்யாணம்.
13)தங்க சுரங்கம்.
14)தெய்வ மகன்.
15)நிறை குடம்.
16)சிவந்த மண்.
17)சுமதி என் சுந்தரி.
18)வசந்த மாளிகை.
19)உத்தமன்
20)ரோஜாவின் ராஜா
21)திரிசூலம்.
22)முதல் மரியாதை

ஏதாவது ஆலோசனை இருந்தாலோ ,விட்டு போயிருந்தாலோ இணைக்கலாம்.
நான் சேர்த்த படங்கள்....(ஏற்கெனெவே இருப்பவை தவிர)
அந்த நாள், சபாஷ் மீனா,இருவர் உள்ளம், கர்ணன்,ஊட்டி வரை உறவு,உயர்ந்த மனிதன்,அஞ்சல் பெட்டி 520, அவன்தான் மனிதன்,இளைய தலைமுறை..

chinnakkannan
9th October 2013, 05:21 PM
//நான் சேர்த்த படங்கள்....(ஏற்கெனெவே இருப்பவை தவிர)
அந்த நாள், // அந்த நாள்ல என்ன காதல் காட்சி இருக்கு ..

நைஸா பண்டரிபாயோட அழகைப்பத்தி எதுவுமே சொல்லாம விட்டுட்டீங்க (என் தாத்தா (மேலோகத்திலருந்து) பார்த்தா ரொம்ப வருத்தப் படுவார்!))

கோபால் சார் நீங்க இருப்பது நிசம்மாவே வியட் நாமா.. பதினைந்து வருஷத்துக்கு முன் அஃபீஷியல் ட்ரிப்பா ஹனாய் வந்திருக்கேன்..

Gopal.s
9th October 2013, 05:31 PM
//

கோபால் சார் நீங்க இருப்பது நிசம்மாவே வியட் நாமா.. பதினைந்து வருஷத்துக்கு முன் அஃபீஷியல் ட்ரிப்பா ஹனாய் வந்திருக்கேன்..
அப்ஜெக்சன் யுவர் ஆனர்,
அது என்ன நிஜமாகவே வியட்நாமா? நாங்க என்னிக்காவது கேட்டிருக்கோமா,நிஜமாகவே மஸ்கட் தானா என்று?

Gopal.s
9th October 2013, 05:40 PM
//

நைஸா பண்டரிபாயோட அழகைப்பத்தி எதுவுமே சொல்லாம விட்டுட்டீங்க (என் தாத்தா (மேலோகத்திலருந்து) பார்த்தா ரொம்ப வருத்தப் படுவார்!))


சென்சர் போர்டு ஒன்னு கத்திரியும் கையுமா அலையும் போது, அழகை வர்ணிப்பதாவது ஒண்ணாவது? கஷ்ட பட்டு ஒப்பேத்துகிறேன். எனக்கு நிஜமான சோதனை உயர்ந்த மனிதனில் இருந்து இளைய தலைமுறை வரையே. பார்க்கலாம் அவர்களா,நானா என்று!!!

vasudevan31355
9th October 2013, 06:34 PM
பார்க்கலாம் அவர்களா,நானா என்று!!!

தப்பு. பன்மை எப்படி வரும்?. அவனா நானா என்றிருக்க வேண்டும்.

vasudevan31355
9th October 2013, 06:44 PM
2-10-2013 'குமுதம்' இதழில் வெளிவந்த மேஜர் தாசன் அவர்களின் 'பேசும்படம்' கட்டுரை.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/k1_zps20c3dea2.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/k1_zps20c3dea2.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/k2_zps422b332f.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/k2_zps422b332f.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/k3_zps8f9d2806.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/k3_zps8f9d2806.jpg.html)

Harrietlgy
9th October 2013, 08:06 PM
நன்றி திரு. வாசுதேவன் நான் படிக்க முடியாத புத்தகங்களில் இருந்து நியூஸ் தந்தமைக்கு.

mr_karthik
9th October 2013, 08:15 PM
திரியில் புதிய பதிவுகள் இல்லாதபோது, பழைய பதிவுகளை மீண்டும் முதல் பக்கத்திலிருந்து பார்த்து வருவது என் வழக்கம். அப்படிப் புரட்டிக்கொண்டு வரும்போது ஏற்கெனவே பார்த்த பல்வேறு புதையல்களை மீண்டும் பார்த்து அசந்து போகிறேன். அதில் குறிப்பாக இந்த 11-வது பாகத்தில் 1051-வது பதிப்பாக, "என்.டி.360 டிகிரி" அவர்களின் பதிப்பு ரொம்பவே அசர வைத்தது / வைக்கிறது.

நடிகர்திலகத்தின் சண்டைக்காட்சிகள் என்ற தலைப்பில் நெய்வேலி வாசுதேவன் அவர்கள் அளித்திருந்த என் தம்பி, திருடன், ராஜா, சொர்க்கம், தர்மம் எங்கே, காத்தவராயன், தங்க சுரங்கம் ஆகிய படங்களின் வீடியோக்களை ஒரே பதிவில் தந்து அசத்தியிருக்கிறார். என்ன ஒரு அட்டகாசமான பெர்பாமென்ஸ்.

அதிலும் தர்மம் எங்கே படத்தின் சண்டைக்காட்சியைப் பார்த்து கண்ணில் நீர் வந்துவிட்டது. தடி தடியான நான்கு பயில்வான்களுடன் அடி வாங்குவதும் அடி கொடுப்பதுமாக, என்ன சுறுசுறுப்பு. என்ன விறுவிறுப்பு. அதிலும் அவர் முகத்தை தீயில் கருக்கும்போது நம் மனம் பதறும். (இந்தக்காட்சிகளை பார்க்கும்போது இங்கே பதிவிட்ட ஒருவரை நினைத்துக் கொண்டே பார்த்தேன்).

1972-ல் அவர் மிக சிரத்தையும் சிரமமும் எடுத்து நடித்த படம் தர்மம் எங்கேதான்.

நீங்கள் அனைவரும் மீண்டும் காண வேண்டும் என்பதற்காகவே எழுதியுள்ளேன். மறவாமல் பாருங்கள். பதிவு எண் 1051....

RAGHAVENDRA
9th October 2013, 08:44 PM
கார்த்திக் குறிப்பிட்ட பதிவு எண் 1051க்கான இணைப்பு

http://www.mayyam.com/talk/showthread.php?10385-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-11&p=1058757&viewfull=1#post1058757

Russelldwp
9th October 2013, 09:57 PM
http://galleries.celebs.movies.2.pluz.in/albums/abirami/uploads/Kollywood/2012/Nov/24/Vasantha_Maligai_Re-Releasing_Movie_Stills_/Vasantha_Maligai_Re-Releasing_Movie_Stills_1099c7c4d403f55f0f4869a0e6b ad141.jpg

இன்று 8.10.2013 முதல் தினசரி 3 காட்சிகளாக திருநாகேஸ்வரம் லட்சுமி திரையரங்கில் ஆனந்தின் திக் விஜயம்.

தகவலளித்த பம்மலார் அவர்களுக்கு மிக்க நன்றி.

Dear Ragavendran Sir

From today 09-10-2013 onwards Daily 3 Shows Jamindar Ananth Visit at PERALAM - VISWALAKSHMI

From 18-10-2013 onwards at Trichy Ponnagar - VVV Theatre

Thalaivar's Vasantha maligai (35mm) continuously Screening almost all theatres in TT Area with great support of fans and public

C.Ramachandran.

Russelldwp
9th October 2013, 10:01 PM
Dear Vasudevan Sir

Thank you for Kumudham Article about NT. Nice Memories. Super

C.Ramachandran

J.Radhakrishnan
9th October 2013, 10:41 PM
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பர் ராதாகிருஷ்ணன் அவர்களே!

இது போன்ற பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு என்றென்றும் அமையட்டும்!

அன்புடன்


Thanks Mr.Murali sir & Mr.Senthil (Harish) sir

RAGHAVENDRA
9th October 2013, 10:46 PM
திரைப்படப் பட்டியல் திரியில் தற்போது ..... எல்லாம் உனக்காக -

அசைந்து குலுங்கும்


இப்பாடலைப் பற்றிய ஆங்கில விளக்கவுரை யூட்யூப் இணைய தளத்திலிருந்து...


This is a classic example of subtle acting. Sivaji and Savithri simply steal your hearts in the scene. This should be completely watched to understand the situation and hence the song is preceded and followed by the related narration. Anand (Sivaji) happens to marry Sarala (Savithri), physically handicapped. This is the first night scene. See how to the understanding between husband and wife is explored in this situation. She plays the visuals of her dance performance and both husband and wife look each other on seeing the visual. There is so much of mind expressed in their looks. At one stage Sarala sings along the song which moves Anand.

An outstanding performance in a intricate relationship sequence stands testimony to the genius in Sivaji and Savithri.

Film: ELLAM UNAKKAGA
Direction: Athurthi Subba Rao
Cast: Sivaji Ganesan, Savithri, Ranga Rao, T.S. Balaiah, C.K. Saraswathi and others.
Music: K.V. Mahadevan


தற்போது திரைப்படப் பட்டியல் திரியில் நடிகர் திலகத்தின் உன்னதமான நெஞ்சை உருக வைக்கும் மென்மையான நடிப்பில் எல்லாம் உனக்காக திரைப்படம் இடம் பெற்றுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள இப்பாடல் காட்சி என் வாழ்நாளில் எப்போதுமே நான் மிகவும் விரும்பிப் பார்க்கும் பாடல் காட்சியாகும். உலகத்திலிருக்கும் அத்தனை விதமான நடிப்புப் பள்ளிகளிலும் பாடமாக வைக்கப் பட வேண்டிய காட்சி. இந்தப் பாடலைத் தனியாகப் பார்ப்பதை விட அதன் முன்னும் பின்னும் தொடர்புடைய காட்சிகளோடு பார்த்தால் தான் இதன் மகத்துவம் விளங்கும் என்பதற்காக காட்சிகளுடன் தரவேற்றப் பட்டுள்ளது. குறிப்பாக திரையில் தன்னுடைய நாட்டியத்தைப் பார்த்தவாறே சாவித்திரி கலங்குவதும் சாவித்திரியை திரையிலும் அருகிலுமாக மாற்றி மாற்றிப் பார்த்து தன் மன ஓட்டத்தை முகத்தில் பிரதிபலிப்பதும், உலகத்தில் இவர்களை மிஞ்சிய நடிக நடிகையர் இருப்பார்களா என்ற கேள்வியைக் கட்டாயம் ஒவ்வொருவர் நெஞ்சிலும் எழுப்பும். தவறு செய்யும் சுபாவம் மனிதனுக்குத் தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன், இப்போது தான் புரிகிறது, அது இறைவனுக்கும் உண்டு என்று நடிகர் திலகம் சொல்லும் போது நெஞ்சில் ஊடுருவிச் சென்று இதயத்தைப் பிழிந்து விடும். ஒரு வினாடி கடவுளையே நம்மை மறந்து திட்டுவோம், அந்த அளவிற்கு அவருடைய குரலில் இரக்கமும் ஏக்கமும் சோகமும் இழையோடும். மீண்டும் மீண்டும் இக்காட்சியை நீங்கள் பார்க்கப் போவது நிச்சயம். சாவித்திரியின் குரலில் அந்த வேதனையை மீறியும் ஒரு சந்தோஷத்தை வெளிப்படுத்துவார். மிக மிகச் சிறந்த காட்சியாக இதனையும், மிகச் சிறந்த நடிகர் திலகத்தின் படங்களில் ஒன்றாக இப்படத்தையும் நான் கருதுவதற்கு இக்காட்சியும் ஒரு முக்கியமான காரணம்.

http://youtu.be/aDMB2fTqLaQ



இப்படத்தில், குறிப்பாக இக் காட்சியில் திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் பங்கு பிரமிக்கத் தக்கது. அவருக்கு சிறப்பாக நம் பாராட்டுக்கள்.

நடிகர் திலகத்தின் காதல் பாடல்கள் தொடரைத் துவக்கியிருக்கும் கோபால் சாருக்கு இக்காட்சி சமர்ப்பணம்

idahihal
9th October 2013, 11:39 PM
http://www.youtube.com/watch?v=zNP4FRQpNsE

Gopal.s
10th October 2013, 07:24 AM
கார்த்திக் சார்,
உங்களுக்கு மட்டுமல்ல ,நம்மில் முக்கால்வாசி பேருக்கு பொழுது போக்கு,ஓய்வு நேரத்தில் பழைய திரிகள்,பதிவுகளை தோண்டி பார்ப்பதே.

வாசு,
படம் அழகாக பேசிவிட்டது.பாசம்,கண்டிப்பு,நேரம் தவறாமை,நகைச்சுவை,அன்னியோன்யம்,கடமை,அத்தனையும் நிறைந்த ஒரு படம் பார்த்த உணர்வு அந்த சரித்திர புருஷன் சம்பந்த பட்ட ஒரே இரண்டு பக்க பதிவில்.எப்படி பட்ட ஒரு மனிதர் நம்மோடு வாழ்ந்து மறைந்து ,மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்!!

ஜெய்சங்கர்,
மிக்க நன்றி. அடிக்கடி வருகை தாருங்கள்.

ராகவேந்தர் சார்,
என்னுடைய முதல் பத்தில் இல்லாவிட்டாலும் ,குறிப்பிடத்தக்க நடிகர்திலகத்தின் படங்களில் ஒன்று எல்லாம் உனக்காக.வித்யாசமான கதை களம்,அருமையான வசனங்கள்,பிரமாதமான நடிப்பு,மலரும் கொடியும் பாட்டு. தப்பான நேரத்தில் மாட்டி விட்டது.போதிய கவனத்தை அடையவில்லை.

RAGHAVENDRA
10th October 2013, 07:47 AM
வாசு சார்
குமுதம் இதழிலிருந்து ஒய்.ஜி.மகேந்திரன் நினைவலைகளை சுட்டித் தந்ததற்கும் நிழற்படத்திற்கும் மிக்க நன்றி. நடிகர் திலகம் ஊட்டி விடும் பேறு பெற்ற மகேந்திரன் உண்மையிலேயே வாழ்க்கையில் புண்ணியம் செய்திருக்கிறார்.

RAGHAVENDRA
10th October 2013, 07:48 AM
ஜெய்சங்கர் சார்
நடிகர் திலகம் பற்றிய அனிமேஷன் குறும்படத்தைப் பகிரந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

RAGHAVENDRA
10th October 2013, 07:49 AM
ராமச்சந்திரன் சார்
வசந்த மாளிகை மறு வெளியீடு செய்திகளுக்கு மிக்க நன்றி. இது போன்று தங்கள் பகுதியில் வெளியீடு காணும் நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து அவ்வப்போது பகிர்ந்து கொள்ளுங்கள்.

RAGHAVENDRA
10th October 2013, 07:51 AM
கோபால்
தப்பான நேரத்தில் மாட்டிய பல நல்ல படங்கள் நடிகர் திலகத்தின் திரையுலக வாழ்வில் சகஜமாகிப் போய் விட்டது, என்று சொல்லுவதும் நமக்கும் சகஜமாகிப் போய் விட்டது. 300க்கும் மேற் பட்ட படங்களில் கிட்டத் தட்ட 250 படங்கள் 100 நாட்களும் வெள்ளி விழாக்களும் காண முழுத்தகுதி இருந்தும் வாயப்ப்பினைத் தவற விட்ட்வை.

Subramaniam Ramajayam
10th October 2013, 08:00 AM
Jisankar sir,
your animation picture about NADIGARTHILGAM VERY NICE AND CUTE. Any animayion pictures of MGR that may also be shared.
your trial has paid rich rewards. keep it up.

Gopal.s
10th October 2013, 08:20 AM
கோபால்
தப்பான நேரத்தில் மாட்டிய பல நல்ல படங்கள் நடிகர் திலகத்தின் திரையுலக வாழ்வில் சகஜமாகிப் போய் விட்டது, என்று சொல்லுவதும் நமக்கும் சகஜமாகிப் போய் விட்டது. 300க்கும் மேற் பட்ட படங்களில் கிட்டத் தட்ட 250 படங்கள் 100 நாட்களும் வெள்ளி விழாக்களும் காண முழுத்தகுதி இருந்தும் வாயப்ப்பினைத் தவற விட்ட்வை.

இருக்கட்டுமே. இடைவிடாமல் படங்கள் ரிலீஸ் ஆகி ,அவருடைய படங்களே ஒன்றுக்கொன்று போட்டியிட்ட போதும் (அவருக்கு வேறு ஏது போட்டி?தனி காட்டு ராஜாதானே) ,அவர் success rate உலகத்தில் வேறு எந்த நடிகனும் கனவு கூட காண முடியாத ஒன்று.

100 Days Films List

Film Name /

Place Name(s)

(1952-1960)

Parasakthi Chennai(2), Madurai, Trichy, Selam, Kovai, Bangaluru, Colombu, Yazh Nagar
Thirimbipar Selam
Manohara Madurai, Trichy, Selam, Kovai, Bangaluru, Kolombu
Kalyanam Panniyum Brahmachari Chennai, Trichy, Selam
Ethir Parathathu Chennai, Trichy
Kaveri Vellor
Mangaiyar Thilagam Chennai(3), Trichy, Selam
Pennin Perumai Chennai(3), Trichy, Selam
Amaradeepam Chennai, Trichy
Vanangamudi Chennai(2), Trichy
Uthamaputhiran Chennai(2), Madurai, Mysore
Pathibakthi Chennai, Madurai, Trichy, Kovai
Sampoorna Ramayanam Madurai, Trichy, Selam
Sabash Meena Chennai, Selam
Veerapandiya Kattabomman Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Tanjore, Dindukal, Nagarkovil, Vellor, Tirunelveli, Kerala, Colombu,Yazh Nagar
Maragadham Chennai
Bagapirivinai Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Dindukal, Tirunelveli, Colombu
Irumbuthirai Kovai
Deivapiravi Chennai(3), Trichy, Selam, Kovai
Padikkatha Methai Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Colombu
Vidi Velli Chennai(2), Madurai

(1961-1970)

Pava Mannippu Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Nagarkovil, Tirunelveli,kanchipuram,Ramanadhapuram, Bangalore, Kerala, Colombu
Pasamalar Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Nagarkovil, Tirunelveli, Erode, Bangaluru, Mysore, Colombu
Sri Valli Colombu
Marutha Naatu Veeran Kerala
Palum Pazhamum Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Dindukal, Bangalore, Colombu
Paarthal Pasi Theerum Madurai, Selam
Padithal Mattum Pothuma Chennai, Madurai, Trichy, Selam
Alayamani Chennai(4), Madurai, Trichy, Selam, Kovai, Colombu
Iruvar Ullam Chennai, Madurai, Colombu
Annai Illam Chennai
Karnan Chennai(3), Madurai
Patchai Vilakku Chennai(4), Madurai, Trichy, Kovai,
Kaikodutha Deivam Chennai(4), Madurai, Trichy, Kovai
Pudhiya Paravai Chennai
Navarathri Chennai(4), Madurai, Trichy
Santhi Chennai
Thiruvilaiyadal Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Tanjore, Tirunelveli, Nagarkovil, Kumbakonam, Karur
Motar Sundaram Pillai Madurai, Trichy
Saraswathi Sabadham Chennai(3), Madurai, Trichy, Selam
Kanthan Karunai Chennai(2), Madurai, Trichy
Iru Malargal Chennai, Trichy, Selam
Ooty Varai Uravu Chennai, Madurai, Trichy, Kovai
Galatta Kalyanam Chennai(2)
Thillana Mohanambal Chennai(3), Madurai, Trichy, Kovai, Colombu
Uyarntha Manithan Chennai
Deivamagan Chennai(3), Madurai, Trichy
Thirudan Colombu
Sivantha Mann Chennai(4), Madurai, Trichy, Selam, Kovai, Thuthukudi
Dharti(Hindi) Delhi(4), Bombay(3), Kolkatta
Viyetnam Veedu Chennai(3), Trichy, Selam, Kovai
Raman Ethanai Ramanadi Madurai, Colombu
Engirundho Vandhal Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai
Sorkkam Chennai, Madurai, Trichy, Selam, Tirunelveli

(1971-1980)

Kulama Gunama Chennai, Madurai, Trichy, Selam
Savale Samali Chennai(3), Madurai, Trichy, Selam, Kumbakonam, Colombu, Yazh Nagar
Babu Chennai(3), Trichy, Colombu, Yazh Nagar
Raja Chennai(2), Madurai, Trichy, Colombu
Gnana Oli Chennai
Pattikkada Pattanama Chennai(3), Madurai, Trichy, Selam, Tirunelveli, Colombu, Yazh Nagar
Thavapudhalvan Chennai
Vasantha Maligai Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Tanjore, Kumbakonam, Erode,Mayavaram, Colombu, Yazh Nagar
Needhi Chennai
Bharadha Vilas Chennai(3), Madurai, Trichy, Selam
Engal Thanga Raja Chennai(3), Madurai, Trichy, Selam, Nagarkovil, Thirunelveli, Colombu, Yazh Nagar
Kouravam Chennai(3), Madurai, Selam
Vani Rani Madurai
Thangapadakkam Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Tanjore, Kumbakonam, Tirunelveli, Erode, Bangaluru(2), Colombu, Yazh Nagar
En Magan Madurai
Avanthan Manithan Chennai(3), Madurai, Trichy, Selam, Yazh Nagar
Mannavan Vanthanadi Chennai(3)
Uthaman Madurai, Colombu, Yazh Nagar, Mattu Nagar
Deepam Chennai(3), Madurai, Colombu, Yazh Nagar
Annan Oru Koyil Chennai(3), Madurai, Trichy, Selam,kovai,Thanjavore,Kumbakonam.
Andhaman Kathali Chennai(3), Madurai, Selam, Kovai, Colombu, Yazh Nagar
Thiyagam Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Tirunelvelli
General Chakaravarthi Chennai, Yazh Nagar
Thatcholi Ambu(Malayalam) Kerala
Pilot Premnath Chennai, Colombu(2), Yazh Nagar
Thirisoolam Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Tanjore, Kumbakonam, Tirunelveli, Erode, Mayavaram, Thirupur, Pollachi, Nagarkovil, Thiruvannamalai, Pondy, Colombu, Yazh Nagar
Naan Vazhzvaippen Chennai
Pattakkatthi Bairavan Colombu, Yazh Nagar
Rishimoolam Chennai(3)
Viswaroopam Chennai

(1981-1990)

Satthiya Sundaram Chennai, Selam
Kalthoon Chennai(2), Madurai, Selam, Kovai
Keezhvanam Sivakkum Chennai(2), Madurai
Va Kanna Va Chennai(3)
Theerppu Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Tirunelveli
Neevuru Kappina Neppu(Telugu) Andhra
Bejavaada Boppuli(Telugu) Andhra
Needhipadhi Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai
Sandhippu Chennai(3), Madurai, Trichy
Miruthanga Chakravarthy Chennai
Vellai Roja Chennai(6), Madurai, Trichy, Selam, Kovai, Pondy, Thiruvottriur
Thiruppam Chennai
Vazhkkai Chennai(3)
Dhavanik kanavugal Chennai
Bandham Chennai
Mudhal Mariyadhai Chennai, Madurai, Trichy, Selam, Kovai, Tanjore, Erode, Pondy, Tirunelveli
Padikkadhavan Chennai(5), Madurai, Kovai
Sadhanai Chennai(2)
Marumagal Chennai(2)
Viswanatha Nayakudu (Telugu) Andhra
Agni Puthrudu (Telugu) Andhra
Jallkikattu Chennai(2)
Pudhiya Vanam Chennai

(1991-1999)

Devar Magan Chennai(5), Madurai(2), Trichy, Selam, Kovai, Tanjore, Erode, Vellor, Tirunelveli, Nagarkovil, Bombay
Oru Yathramozhi(Malayalam) Kerala
Once More Chennai(2)
Padaiyappa

Gopal.s
10th October 2013, 11:02 AM
ராகவேந்தர் சார்,
எங்கேயோ படித்த நினைவு. எல்லாம் உனக்காக அடைந்திருக்க வேண்டிய வெற்றி அளவை அடையாமல் போனதற்கு, பாச மலரின் அண்ணன்-தங்கை பிரம்மாண்ட அளவில்,ரசிகர்களின் மனதில் விஸ்வரூபம் எடுத்திருந்ததால், கணவன்-மனைவியாகவோ,காதலன்-காதலியாகவோ சிவாஜி -சாவித்திரியை ரசிகர்கள் உடனே பார்க்க விரும்பவில்லை என்பதாக இருக்கலாம். 64-65 இல் கை கொடுத்த தெய்வம்,நவராத்திரி, திருவிளையாடல் வெற்றிகள் ,ரசிகர்கள் பின்னாட்களில் சிறிதே வளைந்ததை காட்டும்.

mr_karthik
10th October 2013, 11:25 AM
// Annan Oru Koyil Chennai(3), Madurai, Trichy, Selam//

..........மற்றும் கோவை (கீதாலயா) , தஞ்சை (அருள்), கும்பகோணம் (செல்வம் - முந்தைய நூர்மஹால்)..

Gopal.s
10th October 2013, 12:02 PM
// Annan Oru Koyil Chennai(3), Madurai, Trichy, Selam//

..........மற்றும் கோவை (கீதாலயா) , தஞ்சை (அருள்), கும்பகோணம் (செல்வம் - முந்தைய நூர்மஹால்)..

Corrected Sir.

chinnakkannan
10th October 2013, 01:01 PM
//அப்ஜெக்சன் யுவர் ஆனர்,
அது என்ன நிஜமாகவே வியட்நாமா? நாங்க என்னிக்காவது கேட்டிருக்கோமா,நிஜமாகவே மஸ்கட் தானா என்று?// கோப்பால் (சார்) கறந்த ஆரோக்யா மில்க்கை விட தூய்மையான, உண்மையான, மிக நல்ல சி.க (ம்க்கும்) வை சந்தேகம் கொள்ளலாகுமா.. ஞான் தற்சமயம் இருப்பது மஸ்கட் தான் ம.தான் ம.தான்..ஐயா. :)

//கணவன்-மனைவியாகவோ,காதலன்-காதலியாகவோ சிவாஜி -சாவித்திரியை ரசிகர்கள் உடனே பார்க்க விரும்பவில்லை என்பதாக இருக்கலாம்.// இன்னொரு படம் ப்ராப்தம் என நினைக்கிறேன் - இதே காரணத்திற்காக என்று எங்கோ படித்த நினைவு

Gopal.s
10th October 2013, 01:34 PM
//

//கணவன்-மனைவியாகவோ,காதலன்-காதலியாகவோ சிவாஜி -சாவித்திரியை ரசிகர்கள் உடனே பார்க்க விரும்பவில்லை என்பதாக இருக்கலாம்.// இன்னொரு படம் ப்ராப்தம் என நினைக்கிறேன் - இதே காரணத்திற்காக என்று எங்கோ படித்த நினைவு
பாசமலர்-1961.
ப்ராப்தம்-1971.
இந்த காரணம் பொருந்தாது. இடையில் நிறைய படங்கள் 1964 ,1965 இல் பெரும் வெற்றி பெற்றன.

1971 இல் சாவித்திரியை யாருமே பார்க்கவே விரும்பாததால்தான் படத்திற்கு அந்த ப்ராப்தம்.

Subramaniam Ramajayam
10th October 2013, 02:12 PM
பாசமலர்-1961.
ப்ராப்தம்-1971.
இந்த காரணம் பொருந்தாது. இடையில் நிறைய படங்கள் 1964 ,1965 இல் பெரும் வெற்றி பெற்றன.

1971 இல் சாவித்திரியை யாருமே பார்க்கவே விரும்பாததால்தான் படத்திற்கு அந்த ப்ராப்தம்.

Your second point is very much correct. further NT himself personaly not in favour of making PRAPTAM as most of the so called poorva jenma themes were not successful in tamil. still she made the picutre
and suffered loss, for that sivaji also compensated by not taking full salary , took only some intial payment.
ellam unakaga no mistake of the pair, people does not relish the subject/ no reason to blame sivaji=savitri pair.

chinnakkannan
10th October 2013, 02:37 PM
எல்லாம் உனக்காக நான் பார்த்ததில்லை..அடுத்த தடவை போகும் போது வாங்கிப் பார்க்க வேண்டும்..

vasudevan31355
10th October 2013, 02:49 PM
'சத்ரபதி சிவாஜி' (1974) (தமிழில் முதல் டெலி-பிலிம்) ஒரு பார்வை

மிக மிக அரிய பதிவு.

நடிகர் திலகம் இதிலும் முதல்வர்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/4_zpsb6b23513.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/4_zpsb6b23513.jpg.html)

1974-இல் பம்பாய் வானொலி நிலையத்துடன் பம்பாய்த் தொலைக்காட்சி நிலையம் இணைந்து முதன் முதலில் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் டெலிவிஷனுக்காக முதன் முதலாக தமிழில் ஒரு நாடகம் தயாரிக்கப்பட முடிவெடுக்கப்பட்டது. அப்போது பம்பாய் டெலிவிஷன் நிலையத்திற்கு முதலில் ஞாபகத்திற்கு வந்தது நடிகர் திலகம்தான்.

நடிகர் திலகத்தை நடிக்க வைத்து 'சத்ரபதி சிவாஜி' என்ற நாடகம் தயாரிக்க பம்பாய் டெலிவிஷன் நிலையம் முடிவு செய்து நடிகர் திலகத்தை ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்தது. நடிகர் திலகத்திடம் விஷயம் தெரிவிக்கப்பட சந்தோஷத்துடன் அதில் நடிக்க சம்மதமளித்தார் நடிகர் திலகம். தஞ்சை வாணன் அவர்களின் அனல் கக்கும் தமிழ் வசனங்கள். பம்பாய் டெலிவிஷன் குழுவை சேர்ந்த நாராயணசாமியின் மேற்பார்வையில் சிவாஜி நாடக மன்ற இயக்குனர் திரு எஸ்.ஏ. கண்ணன் அவர்கள் இந்த தொலைக்காட்சிக்கான படத்தை இயக்கினார்.

ஆனால் மிகவும் குறுகிய காலத்திற்குள் எடுக்க வேண்டிய சூழ்நிலை. டெலிவிஷன் நிலையத்தாருடன் நடிகர் திலகம் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு ஒப்பந்தத்ததில் கையொப்பமிட்டார். ஒரு வார காலத்துக்குள் படத்தை எடுக்க வேண்டிய அவசர சூழ்நிலையில் அற்புதமாக ஒத்துழைத்து 'சத்ரபதி சிவாஜி' டெலிவிஷன் படத்தை முடித்துத் தந்தார் நடிகர் திலகம்.

சத்ரபதி சிவாஜியாக நடிகர் திலகம் கர்ஜிக்கும் காட்சிகள் ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டன. சத்ரபதியைக் காண இயக்குனர்கள் ஸ்ரீதர், திருலோகச்சந்தர், பி. மாதவன் மற்றும் வி.சி.குகநாதன் போன்ற திரையுலகப் பிரபலங்கள் ஏ.வி.எம்.க்கு வருகை புரிந்தனர். (நன்றி: பொம்மை சினிமா இதழ்)

படப்பிடிப்பைக் காண வந்திருந்த பத்திரிகை நிருபர்கள் அனைவருக்கும் தன் சார்பில் விருந்து வைத்து கௌரவித்தார் நடிகர் திலகம் அவர்கள்.

மணிமகுடம் தரிக்க தனக்கேற்பட்ட ஒவ்வொரு தடையையும், அதைத் தான் உடைத்தெறிந்த ராஜ தந்திரத்தையும், வீரத்தையும் ஒவ்வொரு படிக்கட்டாக நின்று வீறுகொண்டு மராட்டிய குல திலகம் சிவாஜி பேசுவதாக இந்த டெலி-பிலிம் எடுக்கப்பட்டுள்ளது. 'ராமன் எத்தனை ராமனடி'யில் ஒவ்வொரு கோட்டை மாடல்கள் அருகே நின்று தன் சாதனைகளை முழங்குவாறே அது போல.

1974-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று பம்பாய் டெலிவிஷனில் மராட்டிய மன்னர் சிவாஜியாய் நம் நடிகர் திலகம் சிவாஜி சின்னத் திரையில் கர்ஜித்ததை பலர் கண்டு களித்தனர். ஆனால் அடித்தட்டு மக்களிடம் டெலிவிஷன் பார்க்கும் வசதி அப்போது வெகுவாக இல்லாததால் வசதியுள்ளோர் மட்டுமே பார்க்கும் வாய்ப்பு. அதன் பின் ஒரிருமுரைதான் இந்த நாடகத்தை பம்பாய் டெலிவிஷன் நிலையம் ஒளிபரப்பு செய்தது. (நான் கூட அதைப் பார்த்ததில்லை. ஆனால் ரசிகவேந்தரும், கோபால் சாரும் பார்த்ததாக சொன்னார்கள்.)

நம் போதாத காலம் இந்த டெலிவிஷன் படத்தின் ஒலி ஒளி வடிவம் காணமல் போய் விட்டதாகத் தகவலகள் வருகின்றன. பொக்கிஷமாக பாதுகாத்து போற்றப்பட வேண்டிய இந்த 'சத்ரபதி சிவாஜி' டெலிவிஷன் படம் தூர்தர்ஷனின் அலட்சியத்தால் நாம் அனைவரும் இழக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனை தூர்தர்ஷனே ஒத்துக் கொண்டும் உள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக 'சத்ரபதி சிவாஜி' டெலி-பிலிமின் போது எடுக்கப்பட்ட சில நிழற்படங்கள் மட்டும் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டும் சந்தோஷமே. அப்படி தூர்தர்ஷன் ஒளிபரப்பிய அந்த அபூர்வ புகைப்படங்களைத் தான் இங்கு காணப் போகிறீர்கள்.

கீழ்க்காணும் பத்திரிகையில் நீங்கள் பார்க்கும் செய்தி.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000316460_zpsb7e6ca5b.jpg

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்துள்ள 'சத்ரபதி சிவாஜி' திரைப்படத்தை தலைவர் காமராஜர் மிகவும் பாராட்டினார். மராட்டிய வீரன் சிவாஜியின் வாழ்க்கை வரலாறு 'சத்ரபதி சிவாஜி' என்ற தலைப்பில் படமாக்கப் பட்டிருப்பதும், கலையுலகச் சக்கரவர்த்தி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மாவீரன் சிவாஜியாக நடித்திருப்பதும் தெரிந்ததே.

பம்பாய் வானொலி நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள பம்பாய் டெலிவிஷன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

முதலில் தமிழில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வேறு மொழிகளிலும் 'டப்' செய்யப்படவிருக்கிறது. (கிட்டத்தட்ட 4 மொழிகளில்)

டெலிவிஷனில் காட்டப்படுவதற்காக தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் படம் இதுதான்.

"மக்களிடையே தேசபக்தியையும், நாட்டின் ஒருமைப்பாட்டையும் உணர்த்தும் வகையில் இப்படம் தயாரிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. குறிப்பாக தமிழில் முதன் முதலாக டெலிவிஷனுக்காக இப்படிப்பட்ட ஒரு படம் தயாரிக்கப்பட்டிருப்பது பெருமைப் படத்தக்கதாகும். மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்ல இது போன்ற படங்கள் நல்ல சாதனமாக இருக்கும்" என்று தலைவர் காமராஜர் கூறினார்.

அந்தப் பத்திரிக்கையில் தஞ்சை வாணனுக்குப் பாராட்டு மற்றும் சிவாஜிக்கு ஏவிஎம் பாராட்டு என்ற தலைப்பில் செய்திகள் வந்துள்ளதை நீங்கள் கவனிக்கலாம்.

சமீபத்தில் தூர்தர்ஷன் ஒளிபரப்பிய தஞ்சை வாணன் அவர்கள் வழங்கிய இந்த அபூர்வ நிகழ்ச்சியை என்னால் பதிவு செய்ய இயலவில்லை. அதனால் என்னுடைய வீடியோ காமிராவினால் அந்த அபூர்வ ஸ்டில்களை முடிந்த மட்டும் டிவியிலேயே கிளிக் செய்து இங்கே பதித்து வழங்கியுள்ளேன்.

அதன் பின்னணியில் திரு.தஞ்சை வாணன் அவர்கள் தந்த ஒரு சில தகவல்களையும் இங்கு தருகிறேன்.

தஞ்சை வாணன் கூறியவை.

"நடிகர் திலகத்திடம் இப்படத்தைப் பற்றிய கதையை கூறும் போது மிக உன்னிப்பாகக் கேட்டார். வீர சிவாஜியின் உருவ அமைப்பும், அவருடைய மானரிசங்களும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று நடிகர் திலகத்திற்கு டெலிவிஷன் நிலையத்தார் படங்களுடன் விளக்கிக் காட்டியபோது அதை நடிகர் திலகம் உன்னிப்பாக கவனித்து உள்வாங்கிக் கொண்டார்.

பின் ஒரு நடிகன் எப்படி உருவாகிறான்? ஒரு நடிகனுக்கு நடிப்பில் மட்டுமே ஆர்வம் இருந்து பயனில்லை... அந்தப் பாத்திரத்தின் உடையமைப்பு, அந்தப் பாத்திரத்தை பார்ப்பவர் மனதில் பதிய வைக்க போடப்படும் ஒப்பனை என்று அவன் எல்லாவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். அந்த ஆற்றல் நடிகர் திலகத்திற்கு உண்டு. சாதாரணமாக எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்த சிவாஜி கணேசன் இந்த ஒப்பனை முடிந்தவுடன் 'சிவாஜி' யாகவே ஆகி விட்டார். மீசையின் வலது பக்கம், இடது பக்கம், காதோர முடி அமைப்பு, கண்களுக்கும், புருவங்களுக்கும் எவ்வளவு மை தீட்ட வேண்டும் என்றெல்லாம் தன்னுடைய நாடக அனுபவத்தை நிலைநாட்டி வரலாற்று சிறப்பு மிக்க ஒரு கலைப் பொக்கிஷத்தை வழங்கினார். ஒப்பனையிலோ அல்லது வடிவமைப்பிலோ ஒரு சிறு தவறு ஏற்பட்டாலும் தானே கண்ணாடி முன் நின்று சரி செய்து கொள்வார். காமெராவில் வருவதற்கு முன்பு அதற்கு உகந்ததாக தன்னை தயார் செய்து கொள்வதில் நடிகர் திலகத்திற்கு இணை நடிகர் திலகமே! அவருக்கு இந்த தொலைக்காட்சி நாடகம் மூலம் மிகப் பெரிய புகழ் கிடைத்தது. அவரால் எனக்கும் பெரும் புகழ் கிடைத்தது"

ஒளி ஒலிக்காட்சியாக இந்த அற்புத டெலி பிலிமை ஒளிபரப்ப முடியா விட்டாலும் புகைப்படக் காட்சியாகவாவது நம் சத்ரபதியைக் காண முடிந்ததே.

இப்படியாக பொதிகை தஞ்சை வாணன் மூலம் தன் கலை மைந்தனைப் பாராட்டி மகிழ்ந்தது. நமக்கு சில அபூர்வ படங்களையும் தந்தது. நன்றி பொதிகை தொலைக்காட்சிக்கு.

vasudevan31355
10th October 2013, 02:50 PM
இனி மிக அபூர்வமான புகைப்படங்கள்.

டெலிவிஷன் நிலைய அதிகாரிகளுடன் இதய தெய்வம்

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000225180_zpsadcb595f.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/RECORD167mp4_000225180_zpsadcb595f.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000229180_zpscd964373.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/RECORD167mp4_000229180_zpscd964373.jpg.html)

தொலைக்காட்சி நிலைய ஒப்பந்தத்தில் நடிகர் திலகம் கையெழுத்திடும் மிக மிக அபூர்வமான ஸ்டில்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000362460_zps8ccf1735.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/RECORD167mp4_000362460_zps8ccf1735.jpg.html)

'சத்ரபதி சிவாஜி'யைப் பற்றி ஸ்க்ரீன் வாயிலாக விளக்குவதை உன்னிப்பாக கவனிக்கிறார் நடிகர் திலகம்

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000270700_zps33431332.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/RECORD167mp4_000270700_zps33431332.jpg.html)

பத்திரிகையில் செய்தி.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000241420_zps1976b3f5.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/RECORD167mp4_000241420_zps1976b3f5.jpg.html)

நடிகர் திலகம் சிவாஜி 'சத்ரபதி சிவாஜி' யாக ஒப்பனை செய்ய ஆரம்பிக்கும் அபூர்வமான காட்சி.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000379500_zps89e93492.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/RECORD167mp4_000379500_zps89e93492.jpg.html)

'சத்ரபதி சிவாஜி' யாக படிப்படியாக மாறும் காட்சிகள்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000414700_zpsbf136cea.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/RECORD167mp4_000414700_zpsbf136cea.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000438380_zpsfdf2401d.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/RECORD167mp4_000438380_zpsfdf2401d.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000449660_zps4d6b3883.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/RECORD167mp4_000449660_zps4d6b3883.jpg.html)

வசன, மற்றும் காட்சி ஒத்திகையில் நடிகர் திலகம்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000290540_zpse15c8295.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/RECORD167mp4_000290540_zpse15c8295.jpg.html)

vasudevan31355
10th October 2013, 02:50 PM
அன்னை பவானியிடம் அருள் வேண்டல்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000713500_zpscb00e38f.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/RECORD167mp4_000713500_zpscb00e38f.jpg.html)

வெற்றிப்படிக்கட்டுகளின் அருகே மராட்டிய மன்னனின் சிம்ம கர்ஜனை.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000561180_zps22f002b5.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/RECORD167mp4_000561180_zps22f002b5.jpg.html)

சிம்மாசனம் சென்று அமர முதல் படிக்கட்டைத் தொட்டு வழிபாடு முழக்கம்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000573180_zpsb8cc0c56.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/RECORD167mp4_000573180_zpsb8cc0c56.jpg.html)

மராட்டிய மன்னனுக்கு மண்டியிட்டுக் காத்து நிற்கும் சிம்மாசனம்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000553980_zpsad1c7a62.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/RECORD167mp4_000553980_zpsad1c7a62.jpg.html)

வீர முழக்கம் தொடர்கிறது....

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000503660_zpsd8ed6ddc.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/RECORD167mp4_000503660_zpsd8ed6ddc.jpg.html)

வாளெடுத்து சூளுரைக்கும் சூரக்காட்டை சிவாஜி சிங்கம்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000759500_zpsf6e157ca.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/RECORD167mp4_000759500_zpsf6e157ca.jpg.html)


வெண்கொற்றக்குடையின் கீழ் ஒத்திகை பார்க்கப்படுகிறது.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000869820_zpsd853e48a.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/RECORD167mp4_000869820_zpsd853e48a.jpg.html)

வெற்றிப்படிக்கட்டுகளைத் தாண்டி சிம்மாசனத்தில் அமர்ந்த அழகு கம்பீரம்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000829900_zps3a7853d1.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/RECORD167mp4_000829900_zps3a7853d1.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000861500_zps057ec750.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/RECORD167mp4_000861500_zps057ec750.jpg.html)

அழகும், வீரமும், கம்பீரச் சிரிப்பும் ஒருங்கே அமையப் பெற்ற 'வீர சிவாஜி'

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000883980_zps75e13cab.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/RECORD167mp4_000883980_zps75e13cab.jpg.html)

vasudevan31355
10th October 2013, 02:51 PM
இனி தயாரிக்கப்பட்ட காவிய டெலி-பிலிம் தொலைக்காட்சி வடிவத்தில்

இரத்தத் திலகமிட்டு சிம்ம கர்ஜனை முழங்கும் சிம்மக் குரலோன்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000771020_zps23014db5.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/RECORD167mp4_000771020_zps23014db5.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000751260_zpsdc728625.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/RECORD167mp4_000751260_zpsdc728625.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000743820_zps874eea45.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/RECORD167mp4_000743820_zps874eea45.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000737980_zps6fd1cea3.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/RECORD167mp4_000737980_zps6fd1cea3.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000731020_zps39f6a03d.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/RECORD167mp4_000731020_zps39f6a03d.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000728300_zpsc60b1c2d.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/RECORD167mp4_000728300_zpsc60b1c2d.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000723740_zps0fb3fd7c.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/RECORD167mp4_000723740_zps0fb3fd7c.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000680540_zpsd07cd32d.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/RECORD167mp4_000680540_zpsd07cd32d.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000675100_zps7796a0bc.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/RECORD167mp4_000675100_zps7796a0bc.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000665900_zps108740db.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/RECORD167mp4_000665900_zps108740db.jpg.html)

vasudevan31355
10th October 2013, 02:52 PM
நிழற்படங்கள் தொடர்கின்றன.....

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000484620_zps7aec52bf.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/RECORD167mp4_000484620_zps7aec52bf.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000333020_zps02e367ef.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/RECORD167mp4_000333020_zps02e367ef.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000349420_zps2459127b.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/RECORD167mp4_000349420_zps2459127b.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000296700_zps7dfe93d6.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/RECORD167mp4_000296700_zps7dfe93d6.jpg.html)

தலைவர் காமராஜர் புகழாரம்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000316460_zpsb7e6ca5b.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/RECORD167mp4_000316460_zpsb7e6ca5b.jpg.html)

தஞ்சை வாணன் அவர்களுடன்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000290540_zpse15c8295.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/RECORD167mp4_000290540_zpse15c8295.jpg.html)

'பொம்மை' இதழில் 'சத்ரபதி சிவாஜி' பற்றி வெளியான நிழற்படங்கள்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/5_zpsab563357.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/5_zpsab563357.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/3_zpsc1b4d3dc.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/3_zpsc1b4d3dc.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/2_zpsbee0f5db.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/2_zpsbee0f5db.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/1_zpsdc4c33ae.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/1_zpsdc4c33ae.jpg.html)

நிறைவுற்றது.

அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்

vasudevan31355
10th October 2013, 03:10 PM
தூர்தர்ஷன் நடிகர் திலகத்தை அவதார புருஷராக சித்தரித்திருந்த அற்புத நிழற்படம்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/RECORD167mp4_000916220_zpsc39d57e5.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/RECORD167mp4_000916220_zpsc39d57e5.jpg.html)

chinnakkannan
10th October 2013, 03:27 PM
Nice photoes and info, vasudevan sir. சில மாதங்களுக்கு முன் என நினைக்கிறேன்..ஆனால் சென்ற வருடமா என நினைவிலில்லை.. பக்த துகாராம் என்ற திரைப்படம் தெலுங்கு டப்பிங் ஸீ தமிழ் டிவியில் சேனல் மாற்றும் போது பார்த்தேன்..அதில் ஸர்ப்ரைஸாக சிவாஜியாக வந்தவர் நடிகர் திலகம்..டப்பிங்க் அவர் குரலில்லை என நினைவு.. பின் அவருக்காகவே அந்தப் படத்தை முழுதாக (வெள்ளி மதியம்..நன்றாகக் கண் செருகும் நேரம்) ப் பார்த்தேன்..

vasudevan31355
10th October 2013, 04:15 PM
On the sets of Chatrapati Sivaji. (Thanks 'The Hindu')

http://www.thehindu.com/multimedia/dynamic/00807/vbk-14fr_Kannan2_807305g.jpg

On the sets of Chatrapati Sivaji. Second on Sivaji Ganesan's left is S.A. Kannan, the first being DD producer Narayanaswamy. Others are director Thanjaivanan, DD director Andiyappan and cinematographer Durai Rajendran. Photo: Special Arrangement

KCSHEKAR
10th October 2013, 05:05 PM
டியர் வாசுதேவன் சார்,

'சத்ரபதி சிவாஜி' டெலி-பிலிம் பற்றிய தங்களுடைய புகைப்படங்களுடன் கூடிய அரிய தகவல்கள் மிகவும் சிறப்பு. மிகவும் சிரமப்பட்டு எல்லாவற்றையும் அளித்துள்ள தங்களுக்கு பாராட்டுக்கள்.

நான் மும்பை சென்றிருந்தபோது மராட்டிய மன்னன் சிவாஜி சிலையைப் பார்த்தேன். ஏறக்குறைய அது நம் நடிகர்திலகத்தின் வீரசிவாஜி வேடத்தோடு தாடி முதல் தாடை வரை கன கச்சிதமாக பொருந்தியிருப்பதாகவே தோன்றியது. அதுதான் - நடிக்கும் பாத்திரத்தில் மட்டுமல்ல, வடிக்கும் சிலையிலும் தன்னைப் பொருத்திக்கொள்ளும் நம் நடிகர்திலகத்தின் மகிமை.

JamesFague
10th October 2013, 05:29 PM
Mr Vasu Sir,

Thanks for the rare information of Sivaji Teleserial. It shows your painstaking efforts
in sharing the details with all the hubbers. But we are all not fortunate enough to
watch that serial. Atleaset the photos you have shared must be preserved.

IliFiSRurdy
10th October 2013, 06:25 PM
. பின் அவருக்காகவே அந்தப் படத்தை முழுதாக (வெள்ளி மதியம்..நன்றாகக் கண் செருகும் நேரம்) ப் பார்த்தேன்..

ஏதேது, "நான் விழித்துக்கொண்டு பார்த்த படங்கள்" என்ற தலைப்பில் நீங்கள் ஒரு தொடர் எழுதலாம் போலிருக்கே, சின்னக்கண்ணன்!!
எனக்கு கூட, "நான் முழித்துக்கொண்டு பார்த்த படங்கள்" என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுத ஆசைதான்! ஆனால் t ராஜேந்தர், ராமராஜன் ஆகியோருக்கு தனி திரி இல்லையே!

uvausan
10th October 2013, 07:32 PM
Vasu Sir - excellent - it was not only rare collection but your unique efforts of posting the same for all of us ::):smokesmile:

uvausan
10th October 2013, 09:48 PM
நெஞ்சிருக்கும் வரை

இந்த பதிவு அருமையாகவும் வேகமாகவும் சென்றுகொண்டிருக்கும் நமது திரியின் வேகத்தை தடை போடுவதற்காக அல்ல . நானும் எழுதலாமே “என் கண்ணோட்டத்தில் “ என்ற ஒரு பேராசை தான்.

இந்த படத்தை பற்றி பல மேதைகள் இந்த திரியில் விலாவரியாக எழுதயுள்ளனர் - என்ன புதியதாக எழுதிவிட முடியும் ? இந்த படம் அட்டகாசமான வெற்றியை அடைத்திருக்க வேண்டிய படம் . எல்லா விதத்திலும் பண்பாடான முறையில் எடுத்த படம் . பாடல்கள் தேனில் ஊறிய பலா சுளைகள் - வசனங்கள் நெய்யில் வறுத்து எடுத்த முந்தரிபருப்புகள் . நடிப்பு இனிமேல் யாருமே நடிக்கமுடியாத நடிப்பு

நட்பை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா - பாருங்கள் இந்த படத்தை ;
தியாகத்தின் அளவுகோலை தெரிந்து கொள்ள வேண்டுமா - பாருங்கள் இந்த படத்தை ;
ஒரு பக்க காதலை தெய்வீக மாக்க வேண்டுமா பாருங்கள் இந்த படத்தை ;
தவறு செய்தவர்களை மன்னிக்க தெரிய வேண்டுமா பாருங்கள் இந்த படத்தை ;
ஒரு ஏழையின் பசியை புரிந்துகொள்ள வேண்டுமா பாருங்கள் இந்த படத்தை ;
ஒரு நல்ல இதயம் எப்படி வேலை செய்யும் என்பதை புரிந்து கொள்ள வேண்டுமா - ரகுராமனை சந்தியுங்கள் - தசரத ராமனை சந்தித்தவர்கள் ரகு ராமனை யும் சந்திப்பது அவசியம்

தான் காதலித்தவளை பழிவாங்கும் ஹீரோக்களை பார்த்து இருக்கிறோம் ஆனால் அவளை அவள் விரும்பியவனையே மணக்க வைத்து அவர்கள் சந்தோஷத்தில் தன் இளமையை , வாழ்கையை கர்ணனாக தானம் செய்தவனை நாம் பார்த்ததுண்டா? - ரகுவை பாருங்கள்

பாசிடிவ் vibrations , தன்னம்பிக்கை ரகு விடம் தான் கத்துகொள்ளமுடியும்
நெஞ்சிருக்கும் வரை ரகுவை மறக்க முடியுமா இல்லை மறுக்க முடியுமா - எத்தனை படங்கள் வந்தாலும் இந்த ஒரு படம் வசீகரித்த அளவு பண்ண முடியுமா - ஒரு கர்ணன் தான் மஹா பாரதத்தில் - ஒரு ரகு தான் நெஞ்சிருக்கும் வரை
ஒரு கல்யாணத்தை ஒரே பாட்டில் ரகு பாட இன்னும் அந்த பாடல் தேனை பொழிகிறதே!!
“மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க
மாப்பிள்ளை முன்வந்து மனவரயில் காத்திருக்க
காதலால் மெல்ல கால் பார்த்து நடந்து வர
காலை திருக்கரத்தில் கனகமணி சரம் எடுக்க
ஆனந்தம் பாடு என்று ஆங்கோர்
குரல் பிறக்க கொட்டியது மேளம்
குவிந்தது கோடி மலர்
கட்டினான் மாங்கல்யம்”

ஒரு மனைவி எப்படி அன்பை தன் கணவரிடம் கட்டவேண்டும் என்று ராஜி யின் பாடல் நெஞ்சிருக்கும் வரை மறக்க முடியுமா ?
காலம் வரும்.. என் கனவுகள் எல்லாம் கனிந்து வரும்...
காத்திருப்பேன்.. என் பாதையில் தெய்வம் இணைந்து விடும்.
கருணை என்றால் தாயாவேன்.. கண்ணா உந்தன் நிழலாவேன்
உனக்கென நான் வாழ்வேன்
:smokesmile::)

uvausan
10th October 2013, 09:51 PM
http://youtu.be/ZMUfKlNYulM

http://youtu.be/0wBsn4F__A4

http://youtu.be/UBhTpkAQFdY

:smokesmile:

uvausan
10th October 2013, 09:54 PM
Full movie - Vouch for acting , dialogues , songs and this is a testimony for how a good movie should be ! :smokesmile::-D

http://youtu.be/BWRv6d47Yl8

Ravi
:smokesmile::)

Russelldwp
10th October 2013, 10:59 PM
[QUOTE=Gopal,S.;1081034]இருக்கட்டுமே. இடைவிடாமல் படங்கள் ரிலீஸ் ஆகி ,அவருடைய படங்களே ஒன்றுக்கொன்று போட்டியிட்ட போதும் (அவருக்கு வேறு ஏது போட்டி?தனி காட்டு ராஜாதானே) ,அவர் success rate உலகத்தில் வேறு எந்த நடிகனும் கனவு கூட காண முடியாத ஒன்று.

100 Days Films List

[SIZE=3][B]Film Name /

Place Name(s)


Needhipadhi Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai
Sandhippu Chennai(3), Madurai, Trichy

Dear Gopal Sir

Needhibathi - Trichy Cauvery A/C -77 days shifting wellington - 28 days

Sandhippu - Trichy Cauvery A/C -70 days shifting Roxy - 21 days

C.Ramachandran

Russelldwp
10th October 2013, 11:13 PM
[QUOTE=vasudevan31355;1081096]'சத்ரபதி சிவாஜி' (1974) (தமிழில் முதல் டெலி-பிலிம்) ஒரு பார்வை

Dear Vasudevan Sir
First of all Great Salute to you for this Valuable information about "Chatrapathi Sivaji" Telefilm which is new to not only me but also lot of sivaji fans
This is great POKKISHAM for all fans. Thanks and superb.

What a great achiever our sivaji is


C.Ramachandran

chinnakkannan
10th October 2013, 11:15 PM
கணபத் சார் :) வேண்டாம் இங்கேயே இருப்போம்.. ஆரம்பித்தால் நமக்கு வாழ்க்கை வெறுத்து சன்யாசி ஆகி..அப்புறம் அரசியல் அது இது என வம்பு வரும் :)
ந.தி நடையை எழுதுவதற்குச் சோம்பல்.. நீங்கள் ஒரு நடை நடங்களேன்


ஏதேது, "நான் விழித்துக்கொண்டு பார்த்த படங்கள்" என்ற தலைப்பில் நீங்கள் ஒரு தொடர் எழுதலாம் போலிருக்கே, சின்னக்கண்ணன்!!
எனக்கு கூட, "நான் முழித்துக்கொண்டு பார்த்த படங்கள்" என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுத ஆசைதான்! ஆனால் t ராஜேந்தர், ராமராஜன் ஆகியோருக்கு தனி திரி இல்லையே!

Russelldwp
10th October 2013, 11:20 PM
[QUOTE=g94127302;1081160]நெஞ்சிருக்கும் வரை

இந்த பதிவு அருமையாகவும் வேகமாகவும் சென்றுகொண்டிருக்கும் நமது திரியின் வேகத்தை தடை போடுவதற்காக அல்ல . நானும் எழுதலாமே “என் கண்ணோட்டத்தில் “ என்ற ஒரு பேராசை தான்.

இந்த படத்தை பற்றி பல மேதைகள் இந்த திரியில் விலாவரியாக எழுதயுள்ளனர் - என்ன புதியதாக எழுதிவிட முடியும் ? இந்த படம் அட்டகாசமான வெற்றியை அடைத்திருக்க வேண்டிய படம் . எல்லா விதத்திலும் பண்பாடான முறையில் எடுத்த படம் . பாடல்கள் தேனில் ஊறிய பலா சுளைகள் - வசனங்கள் நெய்யில் வறுத்து எடுத்த முந்தரிபருப்புகள் . நடிப்பு இனிமேல் யாருமே நடிக்கமுடியாத நடிப்பு

Dear

What you are saying is correct. Two months back i have attended one marriage at mumbai, mattunga. On that day evening in NALANGU function around 15 persons sang this
POOMUDIPPAL SONG and everybody clapped for the song. Our great nadigar thilagam still lives in hearts of every body

C.Ramachandran.

Murali Srinivas
11th October 2013, 12:22 AM
வாசு சார்,

மிக அருமை. நடிகர் திலகம் சத்ரபதி சிவாஜியாக தோன்றி நடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் அபூர்வமானவை. அதை உலகத்தின் பார்வைக்கு கொண்டு வந்ததற்கு நன்றி!

நமது நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை சத்ரபதி சிவாஜி கதையை அல்லது அந்த பாத்திரத்தை மொத்தம் நான்கு முறை நடித்திருக்கிறார். நான்கு முறை என்று நான் குறிப்பிடுவது நான்கு வெவ்வேறான திரைக்கதை அமைப்புகள் மற்றும் வசனகர்த்தாகளின் படைப்புகளில் அவர் பரிமளிதிருக்கிறார்.

முதலில் அண்ணா அவர்கள் எழுதிய சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம் நாடகத்தில் ஏற்று நடித்த சத்ரபதி சிவாஜி வேடம். 1946-ல் 18 வயதில் ஏற்று நடித்த அந்த வேடம்தான் பெரியாரால் சிவாஜி என்ற பட்டம் கொடுப்பதற்கே காரணமாக இருந்தது எனபது நம் அனைவருக்கும் தெரியும்.

இரண்டாம் முறை 1970 ஆகஸ்ட் 15 அன்று வெளியான ராமன் எத்தனை ராமனடி திரைபடத்தில் தோன்றி நடித்தது. இது சற்றென்று முடிவு செய்யப்பட்டு நடந்த விஷயம். அதற்கு ஒரு மாதம் முன்பு அதாவது 1970 ஜூலை 16-ந் தேதி அன்று கயத்தாறில் நடிகர் திலகத்தின் சொந்த செலவில் அமைக்கப்பட்ட கட்டபொம்மன் சிலையை சஞ்சீவ ரெட்டி தலைமையில் பெருந்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார். அந்த விழாவில் ஆட்சியாளர்களை விமர்சித்து பேசினார் நடிகர் திலகம். அதை பொறுக்க மாட்டாமல் சிவாஜிக்கு அரசியல் தெரியாது என்று அன்றைய முதல்வர் சொல்ல, அதன் காரணமாகவே கண்ணதாசன் முன்னாட்களில் எழுதியிருந்த சத்ரபதி சிவாஜி நாடகத்தை சிற் சில மாறுதல்களோடு படமாக்கி ராமன் எத்தனை ராமனடி படத்தில் சேர்த்தார்கள். இதை பற்றி முன்பு விரிவாக நானே நமது திரியில் எழுதியிருக்கிறேன்.

மூன்றாம் முறை நடிகர் திலாக்ம் சத்ரபதி சிவாஜியாக வேடம் பூண்ட போது சுந்தர தெலுங்கில் செப்பினார். ஆம், 1973-ம் ஆண்டு வெளியான பக்த துக்காராம் படத்திற்காக மராட்டிய மன்னனாக வேடம் தரித்தார். அந்த காட்சிகளை நீங்களும் இங்கே தரவேற்றியிருந்தீர்கள்.

நான்காம் முறைதான் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மும்பை தொலைக்காட்சி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி எதற்காக தயாரிக்கப்பட்டது என்றால் சத்ரபதி சிவாஜி மன்னனாக முடி சூட்டிக் கொண்ட 300-வது ஆண்டு விழா மாராட்டிய மாநிலத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. [சத்ரபதி முடி சூட்டிக் கொண்டது 1674-ம் வருடம் ஜூன் மாதம்]. ஆகவேதான் இந்த நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பபட்டது. எனக்கு தெரிந்தவரை அன்றைய பம்பாயில் 1972 முதலே டிவி வந்துவிட்டது.

அது போல் நான் கேள்விப்பட்ட வரையில் இந்த நிகழ்ச்சி 1974 ஜூலை 21-ந் தேதிதான்[ஞாயிற்றுக்கிழமை] ஒளிபரப்பபட்டது என்று நினைக்கிறேன். சென்னையில் தொலைக்காட்சி நிலையம் தொடங்கப்பட்ட 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று இதே நிகழ்ச்சி சென்னை தொலைக்காட்சியிலும் காண்பிக்கப்பட்டது. இன்னொரு பெருமைக்குரிய விஷயம் என்னவென்றால் இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க தமிழிலேயே அமைந்திருந்தும் அன்று தென்னிந்தியகளுக்கு எதிராக போராட்டம் நடத்திக் கொண்டிருந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் நிகழ்ச்சியை வரவேற்றார் என்பதுதான்.

பழைய நிகழ்வுகளை நினைவு கூற வாய்ப்பளித்ததற்கு நன்றி வாசு!

அன்புடன்

IliFiSRurdy
11th October 2013, 06:35 AM
கணபத் சார் :) வேண்டாம் இங்கேயே இருப்போம்.. ஆரம்பித்தால் நமக்கு வாழ்க்கை வெறுத்து சன்யாசி ஆகி..அப்புறம் அரசியல் அது இது என வம்பு வரும் :)
ந.தி நடையை எழுதுவதற்குச் சோம்பல்.. நீங்கள் ஒரு நடை நடங்களேன்

நண்பரே!
ஏதோ நீங்கள் கேட்கிறர்களே என மனதை திடப்படுத்திக்கொண்டு ஒரு சின்ன நடையை ஆரம்பித்தால் இரண்டு பதிவு தள்ளி நண்பர் முரளியின் பதிவு..
அம்புட்டுதேன்..இங்கே Walmart,Carrefour,7 eleven,Metro ,SPAR போன்ற giant chain storesகள் கடை விரித்து ஜாம் ஜாம் என வியாபாரம் நடத்திகொண்டிருக்க, இந்த அண்ணாச்சியின் பொட்டி கடை நடக்க முடியுமா??ஒரே ஓட்டம்தான்!

RAGHAVENDRA
11th October 2013, 07:51 AM
Nadigar Thilagam at the Agasthiyar Ashram, Nochur, Kerala.

http://nochuragasthyaashram.org/images/gallery/20.jpg

Russellfcv
11th October 2013, 08:25 AM
https://www.youtube.com/watch?v=RABmwdzsOYw

Gopal.s
11th October 2013, 08:49 AM
கவனியுங்கள், சச்சினை பற்றிய article .அதிலும் நமது நடிகர்திலகம்.
http://tamil.oneindia.in/news/sports/sachin-tendulkar-announces-retirement-185165.html

vasudevan31355
11th October 2013, 09:27 AM
டியர் ரவி சார்,

தங்கள் பாராட்டிற்கு நன்றி! ரகுவைப் பற்றிய தங்கள் பதிவு நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும். எனக்கும் மிகவும் பிடித்த படம். அதுவும் தன் காதல் தோற்றுப் போனதை எண்ணி வருத்தமுற்றிருக்கும் நேரத்தில் அதை எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறாய் என்று நண்பன் கோபாலகிருஷ்ணன் கேட்க அதற்கு நடிகர் திலகம் வேதனையுடன் பதிலளிக்கும் காட்சி என்னை சிலிர்க்க வைத்த ஒன்று. அருமை. தொடருங்கள்.

chinnakkannan
11th October 2013, 10:00 AM
நடிகர் திலகத்தின் நடை
*
3. மன்னனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி
*
ஆதெள கீர்த்தனாரம்பத்திலே..
*
எல்லாரும் செளக்கியமா இருக்கேளோன்னோ.( என்னடா அம்பி..என்ன சொல்றே..இனிமே தான் மாறப் போறதுன்னா…படவா..சமர்த்தா ஒக்காரு..என்ன!)
*.
அதுல பாருங்கோ மொதல்ல ஒரு பாட்டுப் பாடலாமா..
*
மோகம் பெருமாள் மேலே கொண்ட மன்னனவன்
பாகப் பணத்தில் பக்தி வளர்த்த மன்னனவன்
வேகங் கொண்டே விரைவாய் நடந்த மன்னனவன்
தேகம் பதறித் தாளில் விழுந்த மன்னனவன்
*
தெரியுது.. யாராக்கும் இதுன்னு நீங்க யோசிக்கறேள்.. நானே சொல்றேன்..
*
ஒரு தளபதி..பேர் மறந்து போச்சு.. படக் படக்குன்னு வாளெடுத்து வெற்றிகரமாப் போர் பண்ணி சோழ மகாராஜா குலோத்துங்கனுக்குப் பல நாடுகள் ஜெயிச்சுத் தர்றான்.. சோழச் சக்கரவர்த்திக்கோ ஒரே குஷி..
*
ஓ மை பாய்.. நீ தான் என்னோட ஃபேவரிட்னு சொல்லி ஒரு குட்டி அரசை அவனுக்குக் கொடுத்துடறார்.. வேணாம் ராஜான்னு இந்தத் தளபதி மறுக்கறான். நோ நோ நோ..யூ ஷீட் நாட் டெல் லைக் தட்..அப்படின்னு ராஜா கம்பெல் பண்ணி சிற்றரசுக்கு மன்னனாக்கறார்..
*
பாருங்கோ.. ராஜ்யம் கிடச்சுடுத்து அந்தத் தளபதிக்கு..அது இன்பம்.. ஆனா வாழ்க்கைல இன்பத்தைத் தொடரும் துன்பம்னு பெரியவாள்ளாம் சொல்லியிருக்காளோல்லியோ..யெஸ்.. மகாராஜா அந்தத் தளபதி பேர் நீலன்னு நினைக்கறேன் அவனுக்கு ஒரு அழகான(?!) பொண்ணாப் பார்த்து கல்யாணமும் பண்ணி வச்சுடறார்..
*
ம்ம் கல்யாணம் ஆனாலே ஆண்களுக்கெல்லாம் கொஞ்சம் தடுமாற்றமாத் தான் இருக்கும்.. என்ன சொல்றீங்க.. அதுவும் புதுசா கிளி கொஞ்சறா மாதிரி ஆத்துக்காரி.. அவளைப் புரிஞ்சுக்கணும்.. அதுக்காக எந்த விதமான மெளண்டெய்னையும் எடுத்துத் தா ந்னு அவ கேட்டா அவன் முடிஞ்சா எடுத்துத் தந்துருவான்.. ஏன்..அவளோட குட் புக்ஸ்ல இடம் பிடிக்கணுமேன்னு..
*
ஸோ நீலன் கேட்டான்..ஸ்வீட் ஹார்ட்.. ஐயாம் வெரி ஹாப்பி..ஆனா இன்னும் என்னல்லாம் நான் செய்யலாம்..இது வெள்ளித் திரை.. நிறைய பேர் பாக்கறா.. அதனால சொல்ல முடிஞ்சத மட்டும் சொல்லுன்னான்.. சம்சாரம் கொஞ்சம் வெக்கத்தோட கக்னு சிரிச்சுட்டு
நீங்க என்ன பண்றேள்.. பெருமாளுக்கு உண்டானதப் பண்றேள்..அழகா ஒரு கோவில் கட்டினீங்கன்னா அந்தப் பெருமாள் ஒங்களுக்கு ஆல் குட்திங்க்ஸ் தருவாராக்கும்னா..
*
நீலன் யோசிச்சான்..சரின்னு பட்டதுனால பெருமாள் கோவில் திருப்பணிக்கு நிறைய செலவு பண்ண ஆரம்பிச்சான்..பணம் கொஞ்சம் கொஞ்சமாக் கரைய ஆரம்பிச்சது.. எதுவரைக்கும்.. மகாராஜாவுக்கு கப்பம் கட்டக் கூட முடியாமப் போய்டுத்து
*
மகாராஜா பார்த்தார்.. ஆர்டினரி மெய்ல், ரிஜிஸ்ட்ர் போஸ்ட், ஈமெய்ல்னு வசதி எதுவும் அந்தக்காலத்துல இல்லாததுனால ஆளனுப்பியும் கேட்டுப் பார்த்தார்..பதில் சரியா வரலைன்னவுடனே கொஞ்சூண்டு கண் சிவந்துச்சு.. ம்ம்.. சரி படையெடுப்போம்னு போய் அவனோட கோட்டையைச் சூழ்ந்துக்கிட்டார்..
*
நீலனுக்கா கோபம்.. ம்ம் நான் எதற்காகச் செலவு செய்கிறேன்..பெருமாள் திருப்பணிக்குத் தானே.. என கர்ஜித்துட்டுப் கம்பீரமா போருக்குப் போறான்..கோட்டை வாயில் கதவு திறக்குது..பட் அங்க அவனுக்கு ஸர்ப்ரைஸ் காத்துக்கிட்டிருக்கு
*
மகாராஜா மட்டும் புன்சிரித்து கொஞ்சம் டிஸ்டன்ஸ்ல நிக்கறார்.. வா.. நீலா..உன்னை வளர்த்து போர்த்தொழில் புரிய வைத்து ராஜ்யமும் கொடுத்த பெருந்தன்மையான என் நெஞ்சில் வந்து வாள் பாய்ச்சு.. என வாளை விட வார்த்தையால அவனைக் கொல்றார்..
*
அந்தக் கொஞ்ச தூரத்துலருந்து நீலன் நடக்கறார் பாருங்க ஒரு நடை..வாவ்…அப்படியே நடந்து மகாராஜா கிட்டக்க ப் போய்…டபக்குன்னு கம்பீரம் குலையாம மண்டியிட்டு வேந்தே ஸாரின்னு உருகறது இருக்கே.. ம்ம் ரொம்ப நல்லா இருக்குமாக்கும்..
*
ஸோ.. என்ன மொதல்ல இருந்த பாட்டு பொருத்தமா இருக்கா இல்லியா.. இது என்ன படம்னு தெரிஞ்சுருக்கும்.. திருமால் பெருமை..மன்னன் நீலனா நடிகர் திலகம் மகாராஜாவா எம்.என் நம்பியார்.. நீலன் வைஃபா… வேறுயார்.. செளகார் ஜானகிதான்..ம்ம்ம்.
*
முடிக்கறதுக்கு முன்னாடி ஒண்ணு சொல்லணும்.. ஹோன்னு சத்தம் போட்டுக்கிட்டு அலைகள் ஓயாம இருக்கற கடல் மாதிரி ந.தியின் நடிப்பு..அதை எத்தனை பேர் எத்தன விதமா ரசிச்சுப் பேசினாலும் எழுதினாலும் ந்ல்லாத் தான் இருக்கும்.. என்ன சொல்றேள்..
*
உருவாய் அருள்வாய் உளதா இலதா..

அருள்வாய் குகனே..

• டைட்டில் இந்தக் காலத்த நினைவு படுத்தினா என்னை ஷமிக்கணும் 

**(வாசக தோஷ சந்தவ்யஹ) 

chinnakkannan
11th October 2013, 10:36 AM
இந்த போங்காட்டம் தானே வேணாங்கறது.. பெட்டிக் கடைல தான் சில சமாச்சாரங்கள்ளாம் கெடைக்குமாக்கும் (வேற எதையும் நினைச்சுக்காதீங்க).. தவிர பெட்டிக் கடைக் காரர்களுக்கெல்லாம் நல்ல ஞாபக சக்தி உண்டாக்கும்.. வால் மார்ட் கேரிஃபோர் லாம் ஸேல், கலக்*ஷன்ஸுன்னு பேசிக்கிட்டிருப்பாங்க. நமக்கு என்ன அண்ணாச்சி..நாம எஞ்சாய் பண்றோமா..மத்தவங்களைக் கொஞ்சம் புன்சிரிக்க வைக்கறோமா..அது போதும்..


நண்பரே!
ஏதோ நீங்கள் கேட்கிறர்களே என மனதை திடப்படுத்திக்கொண்டு ஒரு சின்ன நடையை ஆரம்பித்தால் இரண்டு பதிவு தள்ளி நண்பர் முரளியின் பதிவு..
அம்புட்டுதேன்..இங்கே Walmart,Carrefour,7 eleven,Metro ,SPAR போன்ற giant chain storesகள் கடை விரித்து ஜாம் ஜாம் என வியாபாரம் நடத்திகொண்டிருக்க, இந்த அண்ணாச்சியின் பொட்டி கடை நடக்க முடியுமா??ஒரே ஓட்டம்தான்!

vasudevan31355
11th October 2013, 11:05 AM
சின்னக் கண்ணன் சார்,

தங்கள் பாராட்டிற்கு நன்றி!

நடந்து நடந்து நீலனின் நடை எழுதினீர்களோ! நடை சுவையோடு நகைச்சுவை சேர்ந்ததே. நன்று.

திருமங்கையாழ்வாருக்கு நீலன், பரகாலன், நாற்கவிச் சிங்கம் என்று நிறைய பெயர்கள் உண்டாம்.

vasudevan31355
11th October 2013, 11:29 AM
சந்திர சேகரன் சார்,வாசுதேவன் சார், ராமச்சந்திரன் சார்,முரளி சார்,

'சத்ரபதி' பற்றிய தங்கள் பாராட்டிற்கு நன்றி!

கைபேசியில் பாராட்டிய வினோத் சார், ராகவேந்திரன் சார் ஆகியோருக்கும் நன்றி!

Richardsof
11th October 2013, 11:30 AM
http://i43.tinypic.com/2nrfy8m.jpg

vasudevan31355
11th October 2013, 11:31 AM
டியர் முரளி சார்,

'சத்ரபதி சிவாஜி' பற்றிய மேலதிக விவரங்கள் மிக சுவாரஸ்யம். இதற்குதான் எங்கள் முரளி சார் வேண்டுமென்பது. நன்றி சார்.

vasudevan31355
11th October 2013, 11:34 AM
கோபால் சார்,

புது பெண்ணின் மனதை தொட்டு போனவரின் எண்ண ஓட்டத்தையும், உடல் மொழிகளையும் கூறு போட்டமைக்கு பாராட்டுக்கள். இதே பாணியில் தொடருங்கள்.

vasudevan31355
11th October 2013, 11:35 AM
வினோத் சார்,

வெற்றி தீபத்தை இங்கே பிரகாசிக்கச் செய்தமைக்கு நன்றி!

vasudevan31355
11th October 2013, 11:43 AM
ஜெய்ஷங்கர் சார்,

நடிகர் திலகம் பற்றிய அனிமேஷன் படத்தை இங்கே பதிவிட்டு அசத்தியதற்கு நன்றி!

vasudevan31355
11th October 2013, 11:50 AM
டியர் ராகவேந்திரன் சார்,

எல்லாம் உனக்காக பற்றி பல தடவை எல்லாம் நாம் கைபேசியில் உரையாடி மகிழ்ந்திருக்கிறோம். உங்களுக்கு மிக மிக மிக பிடித்த காவியம் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதுவும் நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த காட்சியை உங்கள் பதிவைப் படித்த பின் பார்க்கையில் அப்போதும் சரி இப்போதும் சரி இன்னும் மெருகேறிய காட்சியாக அது கண்களுக்கும், கருத்துக்கும் விருந்தளிக்கிறது. அருமையான வீடியோவிற்கு நன்றி!

vasudevan31355
11th October 2013, 11:58 AM
'யாரடா மனிதன் இங்கே என்று கேட்டவரைக் கூட்டி வந்து இங்கே காண்பித்த சகோதரி சரஸ்வதி லக்ஷ்மிக்கு நன்றி!

Gopal.s
11th October 2013, 02:24 PM
தூர் தர்ஷன் தொலைத்து விட்ட சிவாஜியை நீ தேடி துருவி தந்ததற்கு மனமார்ந்த நன்றிகள் வாசு.

முரளி,எங்கள் தகவல் சுரங்கமே, அருமை.

சின்ன கண்ணா, என் வழி தனி வழி என்று தூள் கிளப்புகிறாய்.

டியர் ரவி சார்,நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் படி செய்து விட்டீர்கள்.

kalnayak
11th October 2013, 03:07 PM
கோபால் ஸார்,
சிவாஜியின் காதல் தொடர் அருமையான துவக்கம். அதுவும் அவரின் துவக்கமான பராசக்தியிலிருந்தே என்பது (வாசுதேவன் சாரும் அவ்வாறே ஆடைகள் தொடரை துவங்கினார். சிறப்பாக சென்று கொண்டு உள்ளது.) உங்கள் தொடரும் சிறப்பாக உள்ளது.
பாராட்டுக்கள். உங்களின் அடுத்த் பதிவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இரு மலர்கள் ஸேர்த்து கொள்ளவும். அந்த நாள் படத்தின் பதிவை மிக ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

kalnayak
11th October 2013, 03:18 PM
வாசுதேவன் ஸார்,
ஸத்ரபதி சிவாஜி - டெலி-பிலிம் கட்டுரை எல்லோரும் சொல்வது போல் அரிது ஆனதுதான். அபூர்வமான புகைப்படங்களும் தங்கள் கடின உழைப்பை பறை சாற்றுகின்றன. ஏற்கனவே இதைப்பற்றி சிறிது விவாதிததிருந்தாலும் சுவாரசியம் கூட்டி விரிவாக எழுதி நினைவில் நிறுத்திவிட்டீர்கள். வாழ்த்துகள்.

kalnayak
11th October 2013, 03:27 PM
ரவி ஸார்,

நெஞ்சிருக்கும் வரை - என் நெஞ்சில் எந்நாளும் நிலைத்திருக்கும் திரைப்படம். இயக்குநர் ஸ்ரீதர், நடிகர் திலகம் கூட்டணியில் வந்த அருமையான படம். நன்றாகவே எழுதி உள்ளீர்கள். பாடற் காட்சிகளும் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இப்படி சிறந்த படங்களை எடுத்து எழுதுங்கள். வாழ்த்துகள்.

kalnayak
11th October 2013, 03:34 PM
நடை அழகைப்பற்றி எழுதி கலக்கி கொண்டிருக்கும் சின்னக்கண்ணன் ஸார்,
நீங்க இங்க மட்டுந்தான் இப்பிடி எழுதறீங்களா. இல்லை எல்லா இடங்களிலும் இப்படித்தானா? வித்தியாசமா ஒவ்வொரு நடை அழகையும் எழுதறது பேஷ் பேஷ். ரொம்ப நன்னா இருக்கு. நெறைய இப்பிடி வித்தியாசமா எழுதுங்க வோய்!!!

chinnakkannan
11th October 2013, 04:25 PM
வாசுதேவன் சார்,கோபால் சார், கல் நாயக் ஸார் நன்றி :)

கல் நாயக் ஸார்..எழுதினாப் போச்சு ஓய்.. என்ன கொஞ்சம் மூட் வரணும் ;)

Gopal.s
11th October 2013, 04:51 PM
சிவாஜியின் காதல்கள்- 2

அந்த நாளும் வந்திடாதா.......

பராசக்தியிலும்,அந்த நாளிலும் படித்த சிந்திக்கும் பெண்ணை காதலித்து மணந்து நொந்து அந்த நாளில் அவர் பேசும் வசனம் "படித்த பெண்ணை கல்யாணம் செய்தது தவறு என்று புரிந்து கொண்டேன்".(நாம் எல்லோரும் நடைமுறை வாழ்க்கையில் நொந்து கொள்ளும் விஷயம்தான்)

இந்த படத்திலும் sidetrack முதலில் பார்த்து விட்டு, maintrack ற்கு வருவோம்.படத்தில் சிவாஜி ராஜன் என்கிற புதுமை லட்சிய வெறி கொண்ட unethical careerist ஆகவும்,சந்தர்ப்பம் வாய்க்கும் போது அப்படியே மற்ற பெண்ணையும் பதம் பார்க்கும் ஆளாகவும்(காதலித்து கடிமணம் புரிந்தும்)வருவார். அம்புஜம்(சூர்ய லட்சுமியா ,மேனகாவா?),சின்னையா என்கிற (சிவாஜியின் குள்ள குரு சம்பந்தம்) பணக்கார கிழவனின் உறவில் பணத்துக்காக திளைக்கும் நாட்டிய நங்கை. பிக்னிக் வந்துள்ள இடத்தில் ராஜனின் கண்ணில் பட்டு தொலைக்க வேண்டுமா? இட்லியை நன்றாக முக்கி கொண்டிருக்கும் குள்ள கிழவனுக்கு தண்ணி கொண்டு வர செல்லும் அம்புஜத்தை ஹாட் அணிந்து ராஜன் குறும்பு வில்ல சிரிப்புடன் நோட்டமிட்டு ,சின்னையாவிடம் வந்து அமர்ந்து வம்பு வளர்க்கும் ஜாலி வில்லத்தனம் கலந்த குறும்பு அமர்களமாய் இருக்கும்.அம்புஜம் வருவதற்கு முன் அப்புற படுத்த பார்க்கும் சின்னையாவை உட்கார்ந்தே டபாய்ப்பார் . அம்புஜம் வந்ததும் நோட்டமிட்டு கள்ளபார்வையுடன், அம்புஜத்தின் சம்மதமும் கலக்க ,மறைமுகமாக அம்புஜம் தன பூர்விகம்,வாழும் இடம் எல்லாவற்றையும் குறிப்பிட சின்னையா டென்ஷன் ஆவதும், ராஜன் குறும்போடு கணக்கு பண்ணுவதும் படு ஜாலியான யதார்த்தம். பிறகு சின்னையா சின்ன வீட்டிலேயே அம்புஜத்தோடு romance பண்ணும் அழகு.அம்புஜம் கற்பமானதும் சால்ஜாப்பு சொல்லி நாள் கடத்தி உத்தர என்னும் நேர்த்தி.காதல் கடிதங்களை காட்டி மிரட்டும் அம்புஜத்தை துப்பாக்கி முனையில் கடிதங்களை திரும்ப வாங்கி ,அடிக்கும் கமெண்ட்.

உஷாவின் சந்திப்போ பராசக்தி type ,intellectual conflict . அறிவுக்கும்,கல்விக்கும் வந்தனை செய்து,இதில் அரசியல் வேண்டாம் என்று வாதித்து சபையை மயக்கும் உபகார சம்பள அநாதை ராஜனை , சத்யாக்ரக இயக்க சுதந்திர எழுச்சி தலைவர்களின் தியாகத்தை நினைவுறுத்தி ,உறவினர் துன்ப நிலையில் உள்ள போது சிந்தனையா செய்வோம் என்று கேட்டு சபை வளையல் அணிவிக்கும் அளவு பங்க படுத்துவார் உஷா.

ஆனால் அந்த ராஜன் மனதில் புகுந்து விட்டதும்,சில நாட்கள் கழிந்து தொழில் ரீதியாக தந்தையிடம் பேசும் ராஜனை கண்டு ,இருவரும் பழைய பிரச்சினையை கருதாமல் மனமொப்புவதும், முழுக்க முழுக்க அறிவு சார்ந்த காதல்.

கடைசியில் மனைவியிடம் பிடிபட்டு கட்டி வைத்து confront பண்ணும் காட்சி சிவாஜியின் அற்புத நடிப்பை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. சொந்த நாடு அறிவாளிகளுக்கு பாரா முகம் காட்டினால் ,அவர்கள் தங்களுக்கு வசதியான பாதையை தேர்ந்தெடுத்து நியாய படுத்துவது இந்த பட காட்சியில்,வசனத்தில்,நடிப்பில் விகசித்து தெறிக்கும்.சிவாஜி குரூரம்,ஏமாற்றம்,மகிழ்ச்சி,அவசரம்,கடுப்பு,எதிர்பார ்ப்பு எல்லா உணர்வுகளையும் கொடுக்கும் அழகே அழகு.இவ்வளவுதானா உஷா உன் தேச பக்தி என்று மனைவியை கலாய்ப்பது,வெறுக்க வேண்டியது தோல்வி என்னும் போது ஒரு தீவிர வெறி,அம்புஜம் விஷயத்தை கேட்டு ஏன் அவளையும் ஏமாற்றுகிறாய் என்று மன்றாடும் மனைவியிடம் பிடி கொடுக்காமல்,கூட வந்தால் லேடி அம்பாசடர் ஆகா திரும்பலாம் என்ற கொக்கி,துப்பாக்கி நீட்டும் மனைவியிடம் அன்று கடற்கரையில் சொன்னது நினைவிருக்கிறதா இன்பத்தின் எல்லை என்று,புரண்டு படுக்கும் போதும் முழிப்பாயே என்று மனைவியின் உணர்வை தூண்டி divert பண்ண பார்க்கும் போது சிறிதே உணர்ச்சி காதல் தலை தூக்கும்.

மற்ற படி அறிவு காதல்,ஏமாற்று காதல்,துரோக காதல்,காரிய காதல்தான் இந்த படத்தில்.

அடுத்து,இதையெல்லாம் சரி பண்ணும் இரண்டு உணர்வு காதல்கள்.

chinnakkannan
11th October 2013, 05:02 PM
நடிகர் திலகத்தின் நடை
*
4. மிடுக்கும் துடுக்கும்
*
24.07.72
ஷேமம்…
*
அன்புள்ள நீலாவிற்கு.,
நலம் நலமறிய ஆவல்.. எப்படி இருக்கிறாய்.. நேத்துத் தான் ஒண்ணா சினிமா பாத்தோம்..இன்னிக்கு என்ன இன்லேண்ட் லெட்டர் என நீ திகைப்பது தெரிகிறது..உனக்கு ஃபோன் செய்ய வேண்டுமென்றால் பக்கத்து மளிகைக் கடைக்குப் பண்ண வேண்டியதாய் இருக்கிறது..அவன் ம்ம் இருங்கன்னு சொல்லிட்டு யாரிடமோ க.ப 2 கிலோ உ.ப ரெண்டு கிலோ என கடைக் கணக்கைச் சொல்ல ஆரம்பித்து விடுகிறான்..
*
அப்புறம் நீ ஆடி அசைந்து வந்து ஃபோன் எடுத்து குரலெழும்பாமல் வேறு பேசுகிறாய்..நாமென்ன லவ்வர்ஸா.. ஹஸ்பெண்ட் வைஃப் தானே..கொஞ்சம் சத்தமா ஃப்ரீயா பேசவேண்டியது தானே..ம்ம்.
*
ஒண்ணும் கேக்காம இருந்ததா.. அதான்.. ரொமான்ஸே மறந்து போகப் போகுதுன்னு வரச்சொன்னேன்..உங்கப்பாவை யாரு அண்ணா நகர்லாம் தாண்டி வீடு கட்டிவைக்கச் சொன்னார்.. நானிருக்கறது மதுரை டவுன்..உன்னை வந்து என்னோட பஜாஜ் சேட்டக்கில் கூட்டிச் செல்லலாம் என்றால் அதுக்கும் உன் கிட்ட ஆயிரத்தெட்டு வெக்கம். பஸ்ஸிலேயே வருகிறேன் என்று சொல்கிறாய்...அடி போடி இவளே..ம்ம் ஒரு மாசம் அதுவுமிந்த ஆடி மாசம் எப்படிப் போகப் போறதோ தெரியலை..
*
நேத்துப் பார்த்த படம் ஆண்டவன் கட்டளை எப்படி இருந்துச்சு..ஒருவார்த்தை சொல்லவே இல்லை..பழைய படம் கூட்டமே இருக்காதுன்னு பார்த்தா நல்ல கூட்டம்.. அப்பப்ப உன்னைப்பார்த்தாக் கூட சீரியஸா ஸ்க்ரீனையே பாத்துக்கிட்டு இருந்தாய்.. நல்ல படம் தான் இல்லையா..
*
அதுவும் சிவாஜி முதல் காட்சியில் வெகு மிடுக்காய் கோட் சூட் போட்டுக் கொண்டு விசுக் விசுக்கென நடக்கற நடை இருக்கே..அதுவும் ட்ராஃபிக் எல்லாம் ஸ்தம்பித்து குறுக்கே ஒரே விதமாய் நடந்து செல்வாரே வாவ்
*
இந்த தேவிகாப் பொண்ணு கூட கொஞ்சம் நல்லாருக்குல்ல.. ந\ன்னா ஜீரால ஊறின கொழு கொழு குலோப் ஜாமூன் மாதிரி ( நீ சாப்பிட்டிருக்கியோ..இல்லைன்னா ஆரியபவன் – இந்த மாசம் முடிஞ்சு வந்ததும் கூட்டிக்கிட்டுப் போறேன்)
*
அந்த தேவிகாப் பொண்ணு கிட்ட காதல் வலைல்ல விழுந்துட்டு ஆளே மாறிப்போக – முதல்ல காலேஜீக்கு வருவார் சிவாஜி..அந்த சீன் சூப்பர் இல்லை..ரொம்ப அழகிய யூத் நடை..
*
கலக்கலா டிரஸ் பண்ணிக்கிட்டு குட்மார்னிங்க் பாய்ஸ் குட்மார்னிங்க் கேர்ள்ஸ்னு வருவாரே வாவ் நன்னா இருக்குமில்லை..
*
அம்பிகாபதி மாண்டான் – என சந்திரபாபு சொல்ல சிவாஜி அது காதலின் தத்துவம்னு சொல்றச்சே உன்னோட கண்ணு கொஞ்சம் வெளிய வந்து அழகா இருந்துச்சு..கொஞ்ச வெளிச்சத்துல பார்த்தேன்..
*
குட்டியா டச்சிங் டச்சிங்க் கூட பண்ண விடமாட்டேங்கற..ம்ம் நேர்ல வா பார்த்துக்கறேன்
*
மொத்தத்துல படம் ஓகேதான்..ஆனா வீட்டுக்கு பஸ்ஸிலேயே போய்க்கிறேன்ன பாரு அதான் எனக்குப் பிடிக்கலை..பத்திரமாப் போய்ச் சேர்ந்தியா..முடிஞ்சா மளிகைக் கடைக் காரர் ஃபோன்ல எனக்கு பேங்க்குக்கு ஃபோன் பண்ணு..
*
சீக்கிரம் வீட்டுக்கு வந்துடு..ஓ.கே..ஐ மிஸ் யூ டா..
*
உன் அன்புள்ள
மாதவன்..

25.07.72
அன்புள்ள இவருக்கு.,

யோவ்.. என்ன ஒரு துணிச்சல் இருந்துச்சுன்னா தேவிகாவை குலோப் ஜாமூன்லாம் சொல்லுவ.. அதுவும் என் கிட்டயே....இன்னும் இருபது நாள் தான்..நேர்ல ஒங்களை வெச்சுக்கறேன்..அடுத்த வாரம் படத்துக்குக் கூப்பிட்டீங்கன்னா வரமாட்டேன்..

அன்புடன் – நற நற – I didn’t miss you..daa..
நீலா மாதவன்..
*

chinnakkannan
11th October 2013, 05:09 PM
//அந்த நாளும் வந்திடாதா.......// நல்ல ரைட் அப்.. நன்றாக இருக்கிறது.கோபால் சார்... நடத்துங்க நடத்துங்க.. அந்த நாள் நான் அந்த நாளில் பார்த்தது.. மறுபடி பார்த்து ரெஃப்ரஷ் செய்து கொள்ள் வேண்டும்..

RAGHAVENDRA
11th October 2013, 05:27 PM
அங்கே வியட்நாம்லே யாரோ நற நறன்னு பல்லைக் கடிக்கிறாப்பலே இருக்கே...

"கஷ்டப் பட்டு இங்கே நான் எனக்குன்னு ஒரு கூட்டத்தையே செட் பண்ணி வெச்சிருக்கேன்.. யாரோ சின்னக் கண்ணன்னு பேரை வெச்சிக்கிட்டு பெரிய பெரிய விஷயத்தையெல்லாம் சர்வ சாதாரணமா சூப்பரா செஞ்சி என்னோட ரசிகர் பட்டாளத்தை ஹைஜாக் பண்றாப்பலே இருக்கே.. முடியாது... இந்த காதல் சமாச்சாரம் நம்ம கிட்ட இருக்கிற பிரம்மாஸ்திரம் ... இது இருக்கர வரைக்கும் எந்தக் கண்ணனாலும் என்னோட இடத்துக்கு வர முடியாது.....பாப்போம் கோபாலனா ... கண்ணனா ..."

சார்... சார்... சபாஷ் சரியான போட்டின்னு நாங்கள்ளாம் சந்தோஷமா ரசிச்சிக்கிட்டிருக்கோம் .... நீங்க கோபப் படாதீங்க... கோபாலனா இருந்தா என்ன கண்ணனா இருந்தா என்ன .... செய்யப் போறது [எழுத்து] லீலை தானே....

RAGHAVENDRA
11th October 2013, 05:30 PM
வாசு சார்
சத்ரபதி சிவாஜி டெலி பிலிம் பற்றிய தங்கள் பதிவு இத்திரியின் மகுடத்தில் மற்றோர் வைரக்கல். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கடின உழைப்பின் பிரதிபலிப்பு தங்கள் பதிவு. உளமார்ந்த பாராட்டுக்கள்

RAGHAVENDRA
11th October 2013, 05:31 PM
ரவி
நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றி எப்போது யார் பாராட்டிக் கேட்டாலும் இன்பமே...
தொடருங்கள்...

RAGHAVENDRA
11th October 2013, 05:34 PM
தீப ஒளி வீசும் தீபம் திரைப்பட விளம்பரத்தின் நிழற்படத்தைப் பதிவிட்ட வினோத் சார்,
தங்களுக்கு உளமார்ந்த நன்றி.

RAGHAVENDRA
11th October 2013, 06:02 PM
Nadigar Thilagam Birth Day Tribute video by Athavan SVGA, courtesy Facebook

https://www.facebook.com/video/embed?video_id=224233561069306

IliFiSRurdy
11th October 2013, 06:15 PM
நடிகர் திலகத்தின் நடை
*
4. மிடுக்கும் துடுக்கும்
*

*

நடையா இது நடையா...
ஒரு நாடகம் அன்றோ நடக்குது!..
கதையா இது கதையா..
அது இல்லாதது போல் இருக்குது!!
சின்னக்கண்ணு பேனா
மய்யம் வழிப் போனா
தய்யத் தக்க தய்யத் தக்க
உய்ய்யய்ய்ய்யா

uvausan
11th October 2013, 08:27 PM
Ganpat sir - you have excellent sense of humour

இந்த மாதிரியும் வைத்து கொள்ளலாமே :

சின்ன கண்ணன் எழுதுகிறான் ! சின்ன கண்ணன் எழுதுகிறான் !
NT யை அவன் நடையின் அழகினை , அவன் மனம் போன போக்கினில்
சின்ன கண்ணன் எழுதுகிறான்! சின்ன கண்ணன் எழுதுகிறான்!

அவன் சொல்லும் கவிதை இள வயதில் எத்தனை கோடி !
ஒரு காவியமோ அல்ல ஓவியமோ , படிப்பவர்க்கு புரிகிறதோ -
அவன் வார்த்தையின் அழகில் மையம் மயங்குவது உண்மை

சின்ன கண்ணன் எழுதுகிறான் ! சின்ன கண்ணன் எழுதுகிறான் !

:smokesmile::)

uvausan
11th October 2013, 08:33 PM
Gopal Sir - what a synchronization - andha naal is being shown right now in Murasu :):smokesmile:

Subramaniam Ramajayam
11th October 2013, 08:36 PM
VASU SIR your CHATRAPAHI SIVAJI truly a kalaipokkisam for the thread as well for us.
murali your follow-up of the kalaipokkisam simple and meaningful. kudos.

chinnakkannan
11th October 2013, 08:52 PM
ராகவேந்திரா அவர்கள், கண்பத் அவர்கள் ரவி (ஜி ஃபோன் நம்பர்) அவர்களுக்கு நன்றி.. :)

ராகவேந்திரா. சார்.. கோபாலெல்லாம் பெரியவர்.. நன்றாக ரெண்டு மூன்று டன் துணிகளை ஒரே லாட்டில் போட்டுத் துவைக்கும் வாஷிங் மெஷினைப் போன்றவர்.
அனைத்தையும் நன்கு அலசி ஆராயக் கூடியவர்.. நான் குளத்தங்கரையில் இருக்கும் சிறு கல் போல வெகு சின்னவன் (உவமை தப்போ :) ).. அவருடைய ஸ்டைல் டிஃபரண்ட் அண்ட் டீடெய்ல்ட் வெர்ஷன்.. நான் சும்மா ஜல்லி... :)

RAGHAVENDRA
11th October 2013, 09:08 PM
சிவாஜியின் காதல்கள்- 2

அந்த நாளும் வந்திடாதா.......

நடைமுறை வாழ்க்கையில் நொந்து கொள்ளும் விஷயம்தான்)

இதை சொல்றதுக்கும் ஒரு தைரியம் வேணுமப்பு... அதுலே கோபால் டாப்பு...



இந்த படத்திலும் sidetrack முதலில் பார்த்து விட்டு, maintrack ற்கு வருவோம்.


சரியான அணுகுமுறை... இந்தப் படத்திற்கு அது தான் ஆணிவேர்.



அம்புஜம்(சூர்ய லட்சுமியா ,மேனகாவா?),


அது தாம்பரம் லலிதா என்று நினைத்திருந்தேன்... வாசு சார் ... ஹெல்ப் ப்ளீஸ்...



சின்னையா என்கிற (சிவாஜியின் குள்ள குரு சம்பந்தம்) பணக்கார கிழவனின் உறவில் பணத்துக்காக திளைக்கும் நாட்டிய நங்கை. பிக்னிக் வந்துள்ள இடத்தில் ராஜனின் கண்ணில் பட்டு தொலைக்க வேண்டுமா? இட்லியை நன்றாக முக்கி கொண்டிருக்கும் குள்ள கிழவனுக்கு தண்ணி கொண்டு வர செல்லும் அம்புஜத்தை ஹாட் அணிந்து ராஜன் குறும்பு வில்ல சிரிப்புடன் நோட்டமிட்டு ,சின்னையாவிடம் வந்து அமர்ந்து வம்பு வளர்க்கும் ஜாலி வில்லத்தனம் கலந்த குறும்பு அமர்களமாய் இருக்கும்.அம்புஜம் வருவதற்கு முன் அப்புற படுத்த பார்க்கும் சின்னையாவை உட்கார்ந்தே டபாய்ப்பார் . அம்புஜம் வந்ததும் நோட்டமிட்டு கள்ளபார்வையுடன், அம்புஜத்தின் சம்மதமும் கலக்க ,மறைமுகமாக அம்புஜம் தன பூர்விகம்,வாழும் இடம் எல்லாவற்றையும் குறிப்பிட சின்னையா டென்ஷன் ஆவதும், ராஜன் குறும்போடு கணக்கு பண்ணுவதும்
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/ntstylelook_zpsb4413e8c.jpg

படு ஜாலியான யதார்த்தம். பிறகு சின்னையா சின்ன வீட்டிலேயே அம்புஜத்தோடு romance பண்ணும் அழகு.அம்புஜம் கற்பமானதும் சால்ஜாப்பு சொல்லி நாள் கடத்தி உத்தர என்னும் நேர்த்தி.காதல் கடிதங்களை காட்டி மிரட்டும் அம்புஜத்தை துப்பாக்கி முனையில் கடிதங்களை திரும்ப வாங்கி ,அடிக்கும் கமெண்ட்.


One of the best scenes of Andha Naal



உஷாவின் சந்திப்போ பராசக்தி type ,intellectual conflict . அறிவுக்கும்,கல்விக்கும் வந்தனை செய்து,இதில் அரசியல் வேண்டாம் என்று வாதித்து சபையை மயக்கும் உபகார சம்பள அநாதை ராஜனை , சத்யாக்ரக இயக்க சுதந்திர எழுச்சி தலைவர்களின் தியாகத்தை நினைவுறுத்தி ,உறவினர் துன்ப நிலையில் உள்ள போது சிந்தனையா செய்வோம் என்று கேட்டு சபை வளையல் அணிவிக்கும் அளவு பங்க படுத்துவார் உஷா.

ஆனால் அந்த ராஜன் மனதில் புகுந்து விட்டதும்,சில நாட்கள் கழிந்து தொழில் ரீதியாக தந்தையிடம் பேசும் ராஜனை கண்டு ,இருவரும் பழைய பிரச்சினையை கருதாமல் மனமொப்புவதும், முழுக்க முழுக்க அறிவு சார்ந்த காதல்.

கடைசியில் மனைவியிடம் பிடிபட்டு கட்டி வைத்து confront பண்ணும் காட்சி சிவாஜியின் அற்புத நடிப்பை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. சொந்த நாடு அறிவாளிகளுக்கு பாரா முகம் காட்டினால் ,அவர்கள் தங்களுக்கு வசதியான பாதையை தேர்ந்தெடுத்து நியாய படுத்துவது இந்த பட காட்சியில்,வசனத்தில்,நடிப்பில் விகசித்து தெறிக்கும்.சிவாஜி குரூரம்,ஏமாற்றம்,மகிழ்ச்சி,அவசரம்,கடுப்பு,எதிர்பார ்ப்பு எல்லா உணர்வுகளையும் கொடுக்கும் அழகே அழகு.இவ்வளவுதானா உஷா உன் தேச பக்தி என்று மனைவியை கலாய்ப்பது,வெறுக்க வேண்டியது தோல்வி என்னும் போது ஒரு தீவிர வெறி,அம்புஜம் விஷயத்தை கேட்டு ஏன் அவளையும் ஏமாற்றுகிறாய் என்று மன்றாடும் மனைவியிடம் பிடி கொடுக்காமல்,கூட வந்தால் லேடி அம்பாசடர் ஆகா திரும்பலாம் என்ற கொக்கி,துப்பாக்கி நீட்டும் மனைவியிடம் அன்று கடற்கரையில் சொன்னது நினைவிருக்கிறதா இன்பத்தின் எல்லை என்று,புரண்டு படுக்கும் போதும் முழிப்பாயே என்று மனைவியின் உணர்வை தூண்டி divert பண்ண பார்க்கும் போது சிறிதே உணர்ச்சி காதல் தலை தூக்கும்.

மற்ற படி அறிவு காதல்,ஏமாற்று காதல்,துரோக காதல்,காரிய காதல்தான் இந்த படத்தில்.


Fantastic analysis in the perfect dimension. Only Gopal can do this.

IliFiSRurdy
11th October 2013, 09:31 PM
Ganpat sir - you have excellent sense of humour

இந்த மாதிரியும் வைத்து கொள்ளலாமே :

சின்ன கண்ணன் எழுதுகிறான் ! சின்ன கண்ணன் எழுதுகிறான் !

:smokesmile::)

மிக்க நன்றி நண்பரே.

உங்கள் பாடல் அருமை..ஒரு சின்ன யோசனை.சந்தம் வருவதற்கு..


சின்ன கண்ணன் எழுதறார்! சின்ன கண்ணன் எழுதறார்!

என்று மாற்றுங்களேன்..

vasudevan31355
11th October 2013, 09:33 PM
அது தாம்பரம் லலிதா என்று நினைத்திருந்தேன்... வாசு சார் ... ஹெல்ப் ப்ளீஸ்....

அது சூரிய கலா ராகவேந்திரன் சார்

http://ttsnapshot.net/out.php/t2110_vlcsnap-2012-05-01-13h48m42s176.pnghttp://www.hindu.com/cp/2008/12/12/images/2008121250381601.jpg
http://104.imagebam.com/download/Zoc8h-W7NoMLOi5lged9NA/23930/239292061/46.png
http://104.imagebam.com/download/yg0lQRg_naEh2LJQfv4pfw/23930/239298918/39.png

Bonus still (Thalaivar)

http://i1.ytimg.com/vi/FOWNFKDZlZ4/hqdefault.jpg?feature=og

http://i.ytimg.com/vi/oo-A6DLaD2A/0.jpg

RAGHAVENDRA
11th October 2013, 09:39 PM
கோபால் சார் குறிப்பிட்ட அந்த மிகப் பிரபலமான, அந்த நாள் படத்திற்கு சிறப்பு சேர்த்த, நடிகர் திலகத்தின் ஓரக்கண் பார்வை நிழற்படம். இந்தப் படத்தின் ஹைலைட்டே இந்தப் பார்வை தான். அந்தக் கிழவரின் மனைவியை ஓரக்கண்ணால் பார்த்து வளைத்துப் போடும் வசீகரம் .... இந்த மாதிரி இமேஜ் பார்க்காமல் நடிக்கக் கூடிய ஒரே நடிகர் நடிகர் திலகம் மட்டும் தான் என்பதை 1954லேயே நிரூபித்த படம் அந்த நாள்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/ntstylelook_zpsb4413e8c.jpg

RAGHAVENDRA
11th October 2013, 09:40 PM
மிக்க நன்றி வாசு சார்.

uvausan
11th October 2013, 09:49 PM
உங்கள் பாடல் அருமை..ஒரு சின்ன யோசனை.சந்தம் வருவதற்கு..


சின்ன கண்ணன் எழுதறார்! சின்ன கண்ணன் எழுதறார்!

என்று மாற்றுங்களேன்..[/QUOTE]

தவறுக்கு மன்னிக்கவும் - பாலமுரளியும் ஒருமையில் தான் சின்ன கண்ணனை அழைக்கிறார் - அவரின் நடையில் இருந்த வேகத்தை சிரிதே பாட்டிலும் காண்பித்துவிட்டேன்
:smokesmile::smile2:

vasudevan31355
11th October 2013, 09:49 PM
'அந்த நாள்' சில ஸ்டில்ஸ்

http://104.imagebam.com/download/x6R9kWhWRWoJ3tHfbzljkA/23930/239298925/26.png

http://103.imagebam.com/download/6E4ehCOlZZTmrYuXeoCckg/23930/239298934/42.png

http://106.imagebam.com/download/bwbb87MYy1X2EMhEM7Wq5g/23930/239298920/05.png

http://108.imagebam.com/download/0AG2Y_g7RTv8_53VrQHyFw/23930/239298895/02.png

Murali Srinivas
12th October 2013, 12:38 AM
கோபால்,

காதல் தொடரை அமர்க்களமாக தொடங்கியிருக்கிறீர்கள்! பராசக்தியை காதலித்து விட்டு அந்த நாளுக்கு போய் விட்டீர்கள். பராசக்தி பற்றி சொல்லும்போது அதிலும் குறிப்பாக காதல் காட்சிகளைப் பற்றி குறிப்பிடும் போது எப்போதும் நண்பர்களிடம் சொல்லி சிலாகிக்கும் ஒரு ஸீன் உண்டு. அதுதான் புது பெண்ணின் மனதை தொட்டு போறவரே பாடல் காட்சி.

பொதுவாகவே காதல் வயப்படும் போது தான் விரும்பும் ஆளை அடிக்கடி பார்க்க வேண்டும், பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்று மனம் துடிப்பார்கள்.அதிலும் தனிமை கிடைக்கும் இடங்களாக யாரும் குறுக்கீடு செய்யாத இடங்களாக, அப்படிப்பட்ட பொழுதுகளாக அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பார். காரணம் sweet nothings பேசுவதற்கு disturbance இல்லாமல் இருந்தால் நல்லது என்ற எண்ணம் ஒன்று மற்றொரு காரணம், ஆண் எப்போதும் தனிமையும் வாய்ப்பும் கிடைக்கும் போது சிற் சில குறும்புகளில் ஈடுபடுவது வழக்கம்.

நமது கதையில் நாயகனும் இந்த உணர்விற்கு விலக்கல்ல. படத்தில் நாயகனும் நாயகியும் சந்திக்கும் நேரத்திலே வரும் காதல் பாடல் புது பெண்ணின் மனதை தொட்டு போறவரே. நான் ஏற்கனவே சொன்னது போல் எப்போதும் ஆண்தான் தனிமையையும் இருட்டையும் விரும்புவான். இங்கே ஆண் அமைதியாக நிற்க பெண் மட்டும் பாடுகிறாள்.

முதல் சரணத்தில் நாயகி பாடிக்கொண்டே வரும்போது இரண்டு வரிகள் பாடுவாள்.

இருட்டு வேளையிலே

யாரும் காணாமலே

அந்த புதுமுக நடிகன் கணேசன் ஒரு மரத்தின் அருகில் நிற்பார். நாயகி அபிநயம் பிடித்துக் கொண்டே இந்த வரிகளை பாடும் போது அந்த புதுமுகம் காட்டும் reaction. ஒரு ஆண் நினைப்பதை ஆசைப்படுவதை ஒரு பெண் இப்படி வெளிப்படையாக பேசுகிறாளே, அவளுக்கே அந்த ஆசை இருக்கிறதோ, அழைப்பு விடுகிறாளோ என்று ஆணுக்கேயுரிய அந்த ஆசையை ஒரு விஷமத்தனமான புன்னகையுடன் வெளிப்படுத்தும் பாங்கு இருக்கிறதே, அதில் beauty என்னவென்றால் இந்த உணர்வையெல்லாம் முகத்தின் ஒரு பாகத்தை காட்டியே வெளிப்படுத்துவார். ஆம் படம் பார்ப்பவர்களுக்கு அந்த புதுமுக நடிகனின் profile போஸ் மட்டும்தான் தெரியும்.வலது பக்க கண், கன்னம் மற்றும் உதட்டின் ஒரு பகுதியை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு மனிதன் இப்படியெல்லாம் செய்ய முடியுமா? அதுவும் முதல் படத்திலேயே?

இந்தப் படம் வெளிவந்து வரும் அக்டோபர் 17-ந் தேதியோடு 61 வருடங்கள் நிறைவு பெறுகிறது. இது வெளியான் போது நீங்களோ நானோ ஏன் இந்த திரியை படிக்கும் 99.9% ஆட்களும் பிறக்கவில்லை. நாம் பிறப்பதற்கு முன்னரே இப்படி ஒரு ஆற்றலை வெளிப்படுத்தி நம்மையெல்லாம் ஜென்மஜென்மாந்தரங்களுக்கு கட்டி போடுவான் இந்த புதுமுக நடிகன் என்று தெரிந்ததானலோ என்னவோ இந்த பாடலை எழுதிய கவிஞர் இரண்டாவது சரணத்தில் இரண்டு வரிகள தீர்க்க தரிசனமாக எழுதி வைத்துவிட்டு போயிருக்கிறார்.

அன்புக் கயிறுடுவாய்
அறுக்க ஆராலும் ஆகாதையா!

நம்மையும் அந்த புதுமுக நடிகன் கணேசனையும் பிணைத்திருக்கும் அந்த அன்பு கயிறை யார் அகற்ற முடியும்? நம் வாழ்நாள் முழுக்க இணைந்திருக்க கூடியதன்றோ அது!

அன்புடன்

Murali Srinivas
12th October 2013, 12:50 AM
சத்ரபதி சிவாஜி பதிவை பாராட்டிய அனைவருக்கும் நன்றி.

கணேஷ் சார், உங்கள் காவேரி குசும்பிற்கு எப்போதும் நான் ரசிகன். இப்பவும் லீலாவதி அம்மையாரையும், மோகனாம்பளையும் இணைத்து நீங்கள் எழுதிய பதிவை நினைத்து நினைத்து ரசிக்கிறேன்.

சின்ன கண்ணன், பேஷ் பேஷ் சூப்பர்!

ரவி,

நெஞ்சிருக்கும் வரை சிவாஜி ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் பலருக்கும் மனதுக்கு நெருக்கமான படம். விநியோகஸ்தர்கள் பேச்சை கேட்டு ஸ்ரீதர் மட்டும் இடைவேளைக்கு பிறகு திரைகதையில் மாற்றம் செய்யாமல் இருந்திருந்தால் படத்தின் range எங்கேயோ போயிருந்திருக்கும். மற்றொன்று, தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றிப் போட்ட 1967 பொது தேர்தல் நேரத்தில் படம் வெளியானது படத்திற்கு ஒரு பெரிய பின்னடைவாக் அமைந்தது. எப்படி இருபபினும் படம் A கிளாஸ்.

அன்புடன்

Gopal.s
12th October 2013, 04:11 AM
தன் ஆரம்பகால படம் ஒன்றில் புகை மலிந்த நிழலுருவிலேயே (silhoutte) பாவனைகள் தெரியும்படி நடித்தவரல்லவா !

மேற்கண்ட விஷயம் P _R தனது தேவர் மகன் விமர்சனத்தில் குறிப்பிட்டது. அந்த நாள் படத்தில் வரும் காட்சியே.

அந்த நாள் படத்தில் பதிவிட்ட ஒரு நிழற்படத்தில் பார்க்கலாம்(#3104 ,first picture by Vasudevan) இது அம்புஜம் (சூர்யகலா) கர்ப்பம் என்று ராஜனை(சிவாஜி)வேண்டும் காட்சி.

chinnakkannan
12th October 2013, 07:32 AM
முரளி சார்.. நன்றி..

நாட்டு மக்களுக்கோர்.அறிவிப்பு..ஒருவாரம் வெளியூர் செல்வதால் எதுவும் இடமாட்டேன்..ஹை ஜாலி சந்தோஷமாக இருங்கள் எனச் சொல்லி வி.பெறும்..
சி.க :) அப்பப்ப எட்டிப் பார்ப்பேன் சான்ஸ் கிடைத்தால்

IliFiSRurdy
12th October 2013, 07:37 AM
கோபால்,

காதல் தொடரை அமர்க்களமாக தொடங்கியிருக்கிறீர்கள்! பராசக்தியை காதலித்து விட்டு அந்த நாளுக்கு போய் விட்டீர்கள். பராசக்தி பற்றி சொல்லும்போது அதிலும் குறிப்பாக காதல் காட்சிகளைப் பற்றி குறிப்பிடும் போது எப்போதும் நண்பர்களிடம் சொல்லி சிலாகிக்கும் ஒரு ஸீன் உண்டு. அதுதான் புது பெண்ணின் மனதை தொட்டு போறவரே பாடல் காட்சி.

அன்புக் கயிறுடுவாய்
அறுக்க ஆராலும் ஆகாதையா!

நம்மையும் அந்த புதுமுக நடிகன் கணேசனையும் பிணைத்திருக்கும் அந்த அன்பு கயிறை யார் அகற்ற முடியும்? நம் வாழ்நாள் முழுக்க இணைந்திருக்க கூடியதன்றோ அது!

அன்புடன்

Dear Shri.Murali,
Thank you so much for making our day!
எந்த விருந்து பரிமாற ஆரம்பிக்கும்போதும் இலையின் கீழ் வலது கோடியில் சிறிது பாயசத்துடன் ஆரம்பிப்பார்கள்.
அந்த பாயசத்தை தொட்டு சுவைத்து ரசிக்கவே பல ஆண்டுகள் தேவைபட்டால்?
இன்னும் அந்த மகானின் முதல் படத்தையே தாண்ட நம்மால் முடியவில்லையெனில்....
A thing of beauty is joy forever என்ற John Keats இன் கூற்றுதான் எவ்வளவு உண்மை!
நன்றி.
பி.கு: இது வெளியான போது நீங்களோ நானோ ஏன் இந்த திரியை படிக்கும் 99.9% ஆட்களும் பிறக்கவில்லை.
இல்லையே..பலர் தங்கள் 40/50 வயதுகளில் இருந்து பார்த்து மகிழ்திருப்பார்கள்..தற்பொழுது அவர்களுக்கு அடுத்த ஜன்மத்தில்
30 / 40 வயதிருக்கும் :)

vasudevan31355
12th October 2013, 07:38 AM
மனைவியிடம் அன்று கடற்கரையில் சொன்னது நினைவிருக்கிறதா இன்பத்தின் எல்லை என்று,புரண்டு படுக்கும் போதும் முழிப்பாயே என்று மனைவியின் உணர்வை தூண்டி divert பண்ண பார்க்கும் போது சிறிதே உணர்ச்சி காதல் தலை தூக்கும்.

தன்னை கொலை செய்யவும் மனைவி தயங்க மாட்டாள் என்று மனதில் பட ஆரம்பித்தவுடன் அவளை வழிக்குக் கொண்டு வர அவள் கையில் இருக்கும் ஆயுதத்தைப் பறிக்க காதலில் தன்னிடம் உஷா மூழ்கிய அந்த நாளை ஆயுதமாகப் பயன்படுத்த ஆரம்பித்து, தன் நரித்தனப் பேச்சால் பெண்களின் பலவீனமான மனதை புரிந்த சாமார்த்தியசாலியாய் உஷாவின் மனத்தைக் குழப்பி, அவளுடைய சிந்தனையை டைவர்ட் செய்ய தேனொழுகப் பேசியபடியே அவளை நெருங்கும் தந்திரத்தின் குள்ள நரி.

நீங்களே வீடியோவாகப் பாருங்கள். நான்கே முக்கால் நிமிடக் காட்சிக்குள் நான்கு லட்ச முக, உடல் பாவனைகள். அதனால்தானய்யா 'நடிகர் திலகமே தெய்வம்' என்று போட்டேன்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=dvrE4ZeI-vI

Gopal.s
12th October 2013, 07:42 AM
ஒருவாரம் வெளியூர் செல்வதால் எதுவும் இடமாட்டேன்..சி.க :) அப்பப்ப எட்டிப் பார்ப்பேன் சான்ஸ் கிடைத்தால்
என்னய்யா விளையாடறே? ஊருக்கு lap top ஐ எடுத்து கொண்டுதானே போவே? வழக்கம் போல பதிவுகளை தொடரு. இது என் ஆணை.

vasudevan31355
12th October 2013, 08:21 AM
எங்கே ஆதிராம் சாரையே காணோம்? ஆதிராம் சார்! உடனே வாருங்கள். திரியில் எல்லோரும் தூள் கிளப்பிக்கொண்டு இருக்கையில் நீங்களும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! உங்களுடைய அருமையான டிப்ஸ் இல்லாமல் என்னவோ போல் உள்ளது.

ScottAlise
12th October 2013, 08:28 AM
Dear Vasu sir,

HAts off for your efforts

One small request pl share info & pics like this on Meendum Gowravam

KCSHEKAR
12th October 2013, 10:12 AM
சிவாஜியின் காதல்கள்- 2

அந்த நாளும் வந்திடாதா.......
அறிவு காதல்,ஏமாற்று காதல்,துரோக காதல்,காரிய காதல்தான் இந்த படத்தில்.
.

டியர் கோபால் சார்,

அந்த நாள் - காதலை அருமையாக விவரித்ததற்கு நன்றி.

KCSHEKAR
12th October 2013, 10:15 AM
டியர் வாசுதேவன் சார்

அந்த நாள் புகைப்படங்கள் மற்றும் தங்கள் வீடியோ இணைப்பு அருமை.



நான்கே முக்கால் நிமிடக் காட்சிக்குள் நான்கு லட்ச முக, உடல் பாவனைகள். அதனால்தானய்யா 'நடிகர் திலகமே தெய்வம்' என்று போட்டேன்.


தாங்கள் குறிப்பிட்டுள்ள ஒரு வரியிலேயே ஓராயிரம் அர்த்தங்கள் உள்ளனவே?

KCSHEKAR
12th October 2013, 10:18 AM
நடிகர் திலகத்தின் ஓரக்கண் பார்வை. இந்தப் படத்தின் ஹைலைட்டே இந்தப் பார்வை தான்.

டியர் ராகவேந்திரன் சார்

தங்களின் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை.

mr_karthik
12th October 2013, 10:40 AM
டியர் வாசுதேவன் சார்,

சத்ரபதி சிவாஜி டெலிபிலிம் பற்றிய அறிய தகவல்களும், அறிய நிழற்படங்களும் மிக மிக அற்புதம். தங்கள் உழைப்பில் மலர்ந்த மற்றொரு நல்முத்து. அதை நீங்கள் தொகுத்தளித்த விதம்தான் எத்தனை அழகு.

** சத்ரபதி சிவாஜி பற்றிய முன் வரலாறு.
** அதை டெலிபிலிமாக்க மும்பை தொலைக்காட்சி எடுத்த முயற்சிகள்.
** அதை செவ்வனே நிறைவேற்ற நடிகர்திலகத்தை தெரிவு செய்த விதம்.
** அதற்க்கான ஒப்பந்தமும் அதைத்தொடர்ந்த செயலாக்கங்களும்
** நடிகர்த்திலகமாக இருந்தவர் ஒப்பனையின்மூலம் படிப்படியாக சிவாஜியாக உருவெடுத்த விதம்.
** அந்த குறும்படம் பற்றி தஞ்சைவாணன் அவர்களின் விளக்கம்
** அந்த குறும்படத்தைப் பார்த்து பெருந்தலைவரும் மற்ற பிரபலங்களும் பாராட்டிய தகவல்
** இவையனைத்துக்கும் பக்கபலமாக பல்வேறு மிக அரிய நிழற்பட இணைப்புகள்
** முத்தாய்ப்பாக இந்த டெலிபிலிம் பற்றி 'பொம்மை' இதழில் வெளியான நிழற்ப்படங்கள்

.....என திகட்டத்திகட்ட தந்து அசத்தி விட்டீர்கள். இந்த டெலிபிலிம் பற்றி முன்பு முரளி அவர்கள் பதித்திருந்த முத்தான பதிவும் நினைவில் உள்ளது.

இத்தகைய அருமையான ஒரு ஆவணம் தற்போது காணவில்லைஎன்பது அதிர்ச்சி தரும் செய்தியாக இருந்தபோதிலும் அதன் பின்னணி பற்றி ஆராய வேண்டியுள்ளது. தொலைக்காட்சி துவங்குவதற்கு பல ஆண்டுகள் முன்னாள் திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் ஐம்பதுகளில், அறுபதுகளில் பாடிய பல நிகழ்ச்சிகள் எல்லாம் தற்போதும் தொலைக்காட்சி நிலையத்தில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டு, ஒளிபரப்பப் படுகின்றன என்னும்போது, தொலைக்காட்சிக்க்காகவே அதுவும் 1974-ல் எடுக்கப்பட்ட ஒரு ஆவணம் தொலைக்காட்சி நிலையத்திலேயே இல்லைஎன்றால் இதன் பின்னே ஏதோ ஒரு சதித்திட்டம் இருக்கிறது. முந்தைய, பிந்தைய ஆட்சியாளர்களின் கைவரிசையாக இருக்க அதிகம் வாய்ப்புள்ளது.

ஒரு பெரிய வரலாற்றை தோண்டியெடுத்து அகிலத்துக்கும் பறைசாற்றிய தங்களுக்கு இதயம் நிறைந்த நன்றி....

mr_karthik
12th October 2013, 11:32 AM
நெஞ்சிருக்கும் வரை சிவாஜி ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் பலருக்கும் மனதுக்கு நெருக்கமான படம். விநியோகஸ்தர்கள் பேச்சை கேட்டு ஸ்ரீதர் மட்டும் இடைவேளைக்கு பிறகு திரைகதையில் மாற்றம் செய்யாமல் இருந்திருந்தால் படத்தின் range எங்கேயோ போயிருந்திருக்கும்.

டியர் முரளி சார்,

நெஞ்சிருக்கும்வரை படத்தின் பெரும்பாலான காட்சிகளில் ஸ்ரீதர் மணிரத்னத்தின் அண்ணனாக மாறியதும் அன்றைய (பளிச்சென்று படம் பார்த்து பழகிப்போன) ரசிகர்களுக்கு கொஞ்சம் பிடிக்காமல் போனது. 'முத்துக்களோ கண்கள்' பாடல் ஷூட் பண்ணியபோது பவர்-கட் ஆகியிருந்தால் என்ன?. கரண்ட் வந்தபின் ஷூட் பண்ணியிருக்கலாம் அல்லவா?. சிம்னி விளக்கு வெளிச்சத்தில் எடுத்திருக்க வேண்டிய அவசியம் / அவசரம் என்ன வந்தது?. ஏற்கெனவே இருவருக்கும் மேக்கப் வேறு கிடையாது....

mr_karthik
12th October 2013, 11:38 AM
டியர் கோபால் சார்,

தாங்கள் 'அந்த நாள்' காதலைப் பதித்த சிறிது நேரத்தில் முரசு சேனலில் 'அந்த நாள்' திரைப்படம் ஒளிபரப்பாகியது. தங்கள் பதிவைப்படித்த அன்பர்களுக்கு ஒரு ரெடி ரெபரென்ஸாக உதவியிருக்கும். மிகத்தெளிவான அருமையான பிரிண்ட்.

அந்த நாள் படத்தின் வித்தியாசமான காதலை வித்தியாசமான கோணத்தில் அலசிய தங்களுக்குப் பாராட்டுக்கள்....

KCSHEKAR
12th October 2013, 11:50 AM
டியர் முரளி சார்,

நெஞ்சிருக்கும்வரை படத்தின் பெரும்பாலான காட்சிகளில் ஸ்ரீதர் மணிரத்னத்தின் அண்ணனாக மாறியதும் அன்றைய (பளிச்சென்று படம் பார்த்து பழகிப்போன) ரசிகர்களுக்கு கொஞ்சம் பிடிக்காமல் போனது. 'முத்துக்களோ கண்கள்' பாடல் ஷூட் பண்ணியபோது பவர்-கட் ஆகியிருந்தால் என்ன?. கரண்ட் வந்தபின் ஷூட் பண்ணியிருக்கலாம் அல்லவா?. சிம்னி விளக்கு வெளிச்சத்தில் எடுத்திருக்க வேண்டிய அவசியம் / அவசரம் என்ன வந்தது?. ஏற்கெனவே இருவருக்கும் மேக்கப் வேறு கிடையாது....

டியர் கார்த்திக் சார்,

சரியாகக் கூறினீர்கள். ஆனாலும், நெஞ்சிருக்கும் வரை நம் ரசிகர்களின் நினைவில் நிற்கும் வகையில் அமைந்த படங்களுள் இதுவும் ஒன்று.

Russellfcv
12th October 2013, 12:18 PM
Yet another festival where most of the streets play the sound track of our Nadigar Thilagam starrer " Saraswathi Sabadham " .

This itself is one proof of pudding that None of the festival, function, govt holiday gets completed without screening, playing the audio / video of Nadigar Thilagam. er He is a repository of Festival & Function. Whichever Chief Minister would have / may have / may rule Tamilnadu for how many ever years....BUT as long as the functions / festivals are celebrated and the tamil culture remains, one cannot think of a completion without Nadigar Thilagam's presence !

That's the power of Nadigar Thilagam ! A song dedicated on this Pooja Day !

https://www.youtube.com/watch?v=UTBqjfjR7OM

vasudevan31355
12th October 2013, 12:29 PM
டியர் கார்த்திக் சார்,

தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி! நீங்கள் கூறியது போல நெஞ்சிருக்கும் வரை சில இடங்களில் இருட்டறை. இடைவேளைக்கு மேல் சொதப்பல் கொஞ்சம் ஜாஸ்தி. இருந்தாலும் நடிகர் திலகம் என்ற மாய மந்திரம் எல்லா குறைகளையும் மறைக்கச் செய்து விடும். ஆனால் கண்ணன் வரும் நேரமிதுவும், எங்கே நீயோவும், டாப் கியர் சாங்ஸ். சுசீலாம்மா சுசீலாம்மாதான்.

gkrishna
12th October 2013, 04:08 PM
http://cinema.maalaimalar.com/2013/10/11225537/thaanu-cinema-history.html

maalaimalar நேற்று வெளி வந்த கட்டுரை

கார்த்திக் சார் நெஞ்சிருக்குஅம் வரையில் உள்ள sivaji முத்துராமன் கோபாலகிருஷ்ணன் பாடும் பாடல் அடிப்படையில் உருவானது தானே பாலசந்தர் இன் வறுமை இன் நிறம் சிகப்பு "பாட்டு ஒன்னு பாடு தம்பி பசியை கொஞ்சம் மறந்து இருப்போம் "
டெல்ஹியில் கமல் சேகர் மற்றும் தீபக் பாடும் பாடல்

சாரதா மேடம் சொன்னது போல் ஜானகி அவர்கள் 1976 க்கு பிறகு தான் இளையராஜா அவர்களால் அறிமுகபடுதபட்டார் என்று ஒரு திரியில் படித்த நினவு வரலாறு எப்படி எல்லாம் மாற்றபடுகிறது
பொனுஞ்சல் திரைபடத்தில் விச்சு இசையில் அவர் பாடும் "வருவான் மோகன ராகம் என காத்திருந்த கண்களுக்கு " என்ற பாடலில் உள்ள மெலடி மறக்க முடியுமா
கோபால் சார் இது என்ன ராகம்

கிருஷ்ணா

gkrishna
12th October 2013, 04:23 PM
dear all
நேற்று வணக்கம் சென்னை என்று ஒரு புது படத்தில் சில aaramba kaatchigal பார்த்தேன் ஹீரோ (சிவா) மற்றும் ஹீரோயின் (பிரியா ஆனந்த்) இருவரையும் காமெடியன் (சந்தானம்) ஏமாற்றி ஒரே வீட்டை வாடைகுக்கு கொடுக்கும் காட்சி அப்படியே நமது பாரத விலாஸ் (கோபால் மற்றும் கௌரி) க்கு வாடகைக்கு காமெடியன் வாசு (நாய்டு) கொடுக்கும் காட்சி அதில் இருந்தே அவர்களுக்கு லவ் ஸ்டார்ட் ஆகி கல்யாணம் வரைக்கும் கொண்டு போய் படத்தை முடித்து விட்டார்கள்

krishna

anasiuvawoeh
12th October 2013, 08:25 PM
Dear Vasudevan Sir and Murali Sir,your article on CHATRAPATHI SIVAJI is marvellous.All these make the love for N.T shown by fans to grow each day by day.,

anasiuvawoeh
12th October 2013, 08:27 PM
Dear Saraswathi Madam,your statement regarding festival days is TRUTH BEYOND DOUBT.

vasudevan31355
13th October 2013, 05:41 AM
அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.

http://i1.ytimg.com/vi/8b_wgZ4JxQE/movieposter.jpg?v=506ac11d

vasudevan31355
13th October 2013, 05:57 AM
நமக்கு இதுதான் நவராத்திரி.

First Night

http://104.imagebam.com/download/Pir0pAPY4rom2_THwBVcfQ/24586/245857080/18.png

Second Night

http://103.imagebam.com/download/60hAsbSiYPK17-4FE0BFwQ/24586/245857081/55.png

Third night

http://103.imagebam.com/download/t3geo_uamMD4zw0WQFhnIw/24586/245857082/29.png

Fourth Night

http://102.imagebam.com/download/mz3vjRfOLLzhtZOYqNIfRA/24586/245857083/31.png

Fifth night

http://107.imagebam.com/download/NvklgJgBEllriZTDZbt50A/24586/245857084/33.png

Sixth Night

http://102.imagebam.com/download/Q3a7p7wLRn5r1ny-vEizNw/24586/245857085/37.png

Seventh Night

http://102.imagebam.com/download/XeKmIz8LLLx-jgSlSrgKrQ/24586/245857086/40.png

Eight Night

http://107.imagebam.com/download/QODuySlIFu9JXmqjwKA0eQ/24586/245857088/46.png

Ninth Day

http://105.imagebam.com/download/IgyINX6lyxHHp4SIBRzOXg/24586/245857079/53.png

IliFiSRurdy
13th October 2013, 06:56 AM
நவராத்திரி திரைப்படம் பற்றிய விக்கிபீடியா வில் முதல் பாராவை படித்து நொந்து நூலானேன்!

Navarathri ("Nine Nights") is a 1964 Tamil Drama film by A.P. Nagarajan. The film is well known for starring Sivaji Ganesan in nine distinct roles getting connected in nine nights within the film, thus the title. The record of playing most number of roles in one Tamil film was long held by Sivaji Ganesan until 2008 when it was broken by Kamal Hassan in Dasavathaaram.

இதையும் பிரேக் செய்ய,கேப்டனோ,சூர்யாவோ "அலிபாபாவும் நாற்பது திருடர்களும்" ரீமேக் try செய்யலாமே!
அதற்கு பிறகு யாராவது "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி" ரீமேக் எடுக்கும் வரை அதுதான் ரிகார்டாக இருக்கும்.

அனைவர்க்கும் தலைவர் பூஜை வாழ்த்துக்கள்!

RAGHAVENDRA
13th October 2013, 07:47 AM
வாசு சார்
நவராத்திரி வாழ்த்தினை இவ்வளவு சிறப்பாக வேறு யாராவது கூற முடியுமா என்பது தெரியவில்லை. மிகவும் அற்புதம். மிக்க நன்றி

RAGHAVENDRA
13th October 2013, 07:47 AM
விஜய தசமி நற்செய்தி.

நீண்ட நாட்களாக காத்திருந்த இளைய தலைமுறை திரைப்படம் தற்போது நெடுந்தகடாக வெளிவந்துள்ளது.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvdcovers/IlaiyaF_zps2e60730b.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvdcovers/IlaiyaR_zps2f13d865.jpg

mr_karthik
13th October 2013, 10:40 AM
டியர் வாசுதேவன் சார்,

எதையும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் செய்யும் தங்கள் கைவண்ணத்தில் நவராத்திரி தொகுப்பு மிக அருமை. ஒன்பது ராத்திரி ஸ்டில்களையும் ஒரே சைஸில் வரிசைக்கிரமமாக பதித்து அழகூட்டியிருக்கிறீர்கள்.

எல்லா நிழற்படத்திலும் சாவித்திரி இருக்கிறார், சரி. ஆனால் ஒவ்வொரு நிழற்படத்திலும் அவரோடு இருக்கும் ஒன்பது வெவ்வேறு நடிகர்கள் யார் யார்?. ரொம்ப உற்றுப்பார்க்கும்போது நடிகர்திலகத்தின் சாயல் தெரிகிறது....

mr_karthik
13th October 2013, 11:32 AM
நடிகர்திலகத்தின் படங்களில் ஐட்டம் நடிகையர் (5)

சி.ஐ.டி.சகுந்தலா (என்கிற) ஏ.சகுந்தலா

(எச்சரிக்கை : இது பராட்டுப்பதிவு அல்ல, கண்டனப்பதிவு)

1960- களில் குரூப் டான்சர்களில் ஒருவராக ஆடிக்கொண்டிருந்த ஏ.சகுந்தலாவுக்கு தனது திருமலை தென்குமரி, கண்காட்சி படங்களில் கொஞ்சம் சொல்லிக் கொள்கிறார்ற்போல ரோல்களைக் கொடுத்து வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் ஏ.பி.நாகராஜன். பின்னர் கே.பி.யின் புன்னகையில் வில்லியாக சின்ன வேடம் ஏற்றார்.

நடிகர்திலகத்தின் படங்களில் ஒரு ஐட்டம் நடிகை அதிகமாகவும் தொடர்ச்சியாகவும் வாய்ப்புப் பெற்றிருக்கிறார் என்றால் அது ஏ.சகுந்தலாதான். (ஜி.சகுந்தலா என்ற பெயரில் ஒரு குணசித்திர நடிகை இருக்கிறார். அவர் வேறு). ஏ.சகுந்தலா ஐட்டம் கேர்ள் கம் வில்லியாக பல படங்களில் நடித்துள்ளார். நடிகர்திலகத்தின் பொற்கால ஆண்டுகளில் ஒன்றான 1972-ல் தவப்புதல்வன், வசந்த மாளிகை, நீதி, 1973-ல் பாரதவிலாஸ், ராஜராஜசோழன், பொன்னூஞ்சல், எங்கள்தங்கராஜா என தொடர்ந்து அன்பைத்தேடி, ஜஸ்டிஸ் கோபிநாத், இமயம் உள்பட பல்வேறு படங்களில் வாய்ப்புப் பெற்றவர். 'அந்தப்பக்கம்' மணியான பத்திரிகையாளர் தயாரித்த காஷ்மீர் படம் தவிர வேறெதிலும் நடித்ததாக எனக்குத் தெரியவில்லை. (மீண்டும் சொல்கிறேன், எனக்குத்தெரியவில்லை அவ்வளவுதான்).

ஆணுக்குப் பெண் வேஷம் போட்டதுபோன்ற முகம், கனிவாகச்சிரிக்க நினைத்தாலும் கள்ளத்தனமான சிரிப்பே எட்டிப்பார்க்கும் முக அமைப்பு. எந்த வகையிலும் சேர்க்க முடியாத உடலமைப்பு, நளினமே தென்படாத செயற்கையான நடன அசைவுகள், பேச்சிலும் செயற்கைத்தனம் இப்படி எந்த வித வசீகரமும் இல்லாத ஒரு செயற்கை நடிகை.

பொதுவாக திரையுலகம் என்பது நன்றியோடு இருப்பவர்கள் மைனாரிட்டியாகவும், நன்றி மறந்தவர்கள் மெஜாரிட்டியாகவும் இடம் பெறக்கூடிய ஒரு உலகம். அதில் ஏ.சகுந்தலா மெஜாரிட்டி கூட்டத்தில் இடம் பெற்றிருப்பதுதான் துரதிஷ்டம். நடிகர்திலகத்தின் படங்களில் எந்த ஐட்டம் நடிகைக்கும் கிடைக்காத தொடர் வாய்ப்புக்கள் கிடைத்தும் அவரை முற்றிலும் மறந்து போனார். எந்த நிகழ்ச்சியிலும் அவரை நினைவு கூர்வதே கிடையாது, என்பது மட்டுமல்ல தனக்கு திரைப்படங்களில் வாய்ப்பே தராதவர்களைப் பற்றி 'ஆஹா.. ஊஹூ..' என்று புகழ்வதும், அவர்கள் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளில்மட்டும் கலந்துகொள்வதுமாக, தன் நன்றி மறந்த நிலையை அப்பட்டமாக வெளிப்படுத்திக்கொள்கிறார்.

தான் பங்கேற்ற 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் கூட வசந்தமாளிகை படம் பற்றிக் குறிப்பிட்டபோது நடிகர்த்திலகத்தைப் பற்றி எதுவும் சொல்லாமல், 'வசந்தமாளிகையே நான்தான் என்று எல்லோரும் சொல்வார்கள். அந்த அளவுக்கு நான் இல்லையேல் வசந்தமாளிகை இல்லை எனலாம்' என்கிற ரீதியில் பிதற்றியிருந்தார். இத்தனைக்கும் அந்தப்படத்தில் இவர் வந்தது ஒரே ஒரே பாடலுக்கு மட்டுமே. ஈஸ்வரியின் குரலுக்கு வாயசைத்தது தவிர சொந்தக்குரலால் ஒரு வசனம் கூட பேசவில்லை. 'குடிமகனே' என்ற அந்தப்பாடலை வெட்டியெடுத்து விட்டால்கூட படத்துக்கு எந்தப்பாதிப்பும் வந்திருக்கப் போவதில்லை.

தவிர நடிகர்திலகத்தின் எந்த நிகழ்ச்சியிலும் இவர் கலந்துகொள்வதில்லை. மாறாக மாற்றுமுகாம் நிகழ்ச்சிகள் அனைத்திலும் இவரது அட்டெண்டன்ஸ் உண்டு. நடிகர்திலகத்தின்மீது நன்றி மறந்தவர்கள் பலர் உள்ளனர். அவர்களில் ஏ.சகுந்தலாவுக்கும் இடம் உண்டு....

rangan_08
13th October 2013, 11:52 AM
The other day my daughter was doing her home work and she asked me a doubt. " Appa, portrait' na enna ? " .
Without hesitating for a second, I immediately replied, " Pasa Malar padathula Sivaji kannathula kai vecha madhiri or padam varumla, adhudhan portrait ". Instinct !!!
Raghavendra sir's present avtar reminded me of this incident.

RAGHAVENDRA
13th October 2013, 12:16 PM
கார்த்திக் சார்
நடிகர் திலகத்தின் படங்களில் ஏ.சகுந்தலாவும் இடம் பெற்றிருந்தார் என்ற ஒற்றை வரியோடு நீங்கள் நிறுத்தியிருந்தால் கூட போதும். தங்களுடைய பொன்னான நேரம், உழைப்பு, ஆற்றல் அனைத்தையும் இவருக்காக செலவழி்த்திருக்க வேண்டாம்.

RAGHAVENDRA
13th October 2013, 12:23 PM
பயணம் திரைப்படத்தில் ஓரிரு காட்சியில் ஒரு இடத்தில் நடிகர் திலகத்தின் வெற்றிக் காவியமான கௌரவம் திரைப்படத்தின் போஸ்டர் இடம் பெற்றுள்ளது. அதன் நிழற்படம் நம் பார்வைக்கு


http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OldTamilFilmStills5/PayanamOld01_zps14e810c1.jpg



http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OldTamilFilmStills5/PayanamOld02_zpsf132cfae.jpg



http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OldTamilFilmStills5/PayanamOld03_zpsa479995a.jpg

KCSHEKAR
13th October 2013, 01:04 PM
டியர் வாசுதேவன் சார்,

கார்த்திக் சார் குறிப்பிட்டமாதிரி நவராத்திரியை வித்தியாசமாக புகைப்படங்களை வரிசைப்படுத்தியிருந்தது அருமை. நன்றி.

KCSHEKAR
13th October 2013, 01:07 PM
நடிகர்திலகத்தின் படங்களில் ஐட்டம் நடிகையர் (5)

சி.ஐ.டி.சகுந்தலா (என்கிற) ஏ.சகுந்தலா

(எச்சரிக்கை : இது பராட்டுப்பதிவு அல்ல, கண்டனப்பதிவு)

நடிகர்திலகத்தின்மீது நன்றி மறந்தவர்கள் பலர் உள்ளனர். அவர்களில் ஏ.சகுந்தலாவுக்கும் இடம் உண்டு....

டியர் கார்த்திக் சார்,

நடிக, நடிகையரில் இதுமாதிரி நன்றி மறந்தவர்களையும் தோலுரித்துக் காட்டவேண்டியது நமது கடமை என்ற வகையில் தங்கள் பதிவு அருமை.

KCSHEKAR
13th October 2013, 01:12 PM
செய்தி சானலாக இருக்கும் தந்தி தொலைக்காட்சியில் முதல் முறையாக, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று (ஞாயிறு) பிற்பகல் 12.30 மணிக்கு "சரஸ்வதி சபதம்" நாளை (திங்கள்) பிற்பகல் 12.30 மணிக்கு "திருவிளையாடல்" இடம்பெறுகிறது.

JamesFague
13th October 2013, 01:30 PM
Mr K C Sir,

Thnaks for the info.

rsubras
13th October 2013, 01:59 PM
நவராத்திரி திரைப்படம் பற்றிய விக்கிபீடியா வில் முதல் பாராவை படித்து நொந்து நூலானேன்!

Navarathri ("Nine Nights") is a 1964 Tamil Drama film by A.P. Nagarajan. The film is well known for starring Sivaji Ganesan in nine distinct roles getting connected in nine nights within the film, thus the title. The record of playing most number of roles in one Tamil film was long held by Sivaji Ganesan until 2008 when it was broken by Kamal Hassan in Dasavathaaram.



actually Sivaji played 10 roles in navarathiri right..... including the role he played as king in that stage play.... it is different and unique from other characters he played in that film and so deserves to be counted as +1

eehaiupehazij
13th October 2013, 02:28 PM
actually Sivaji played 10 roles in navarathiri right..... including the role he played as king in that stage play.... it is different and unique from other characters he played in that film and so deserves to be counted as +1
enacting 9 roles with difference in characterization is different from acting in any number of get-ups without any impact on the viewer's mind!Nobody is anywhere nearer to NT in depicting multiple roles with distinction. That is why Navarathiri is construed as a classic even today. No comments about other actor's portrayals.

IliFiSRurdy
13th October 2013, 03:14 PM
நடிகர்திலகத்தின் படங்களில் ஐட்டம் நடிகையர் (5)

சி.ஐ.டி.சகுந்தலா (என்கிற) ஏ.சகுந்தலா

(எச்சரிக்கை : இது பராட்டுப்பதிவு அல்ல, கண்டனப்பதிவு)

ஆணுக்குப் பெண் வேஷம் போட்டதுபோன்ற முகம், கனிவாகச்சிரிக்க நினைத்தாலும் கள்ளத்தனமான சிரிப்பே எட்டிப்பார்க்கும் முக அமைப்பு. எந்த வகையிலும் சேர்க்க முடியாத உடலமைப்பு, நளினமே தென்படாத செயற்கையான நடன அசைவுகள், பேச்சிலும் செயற்கைத்தனம் இப்படி எந்த வித வசீகரமும் இல்லாத ஒரு செயற்கை நடிகை.
தான் பங்கேற்ற 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் கூட வசந்தமாளிகை படம் பற்றிக் குறிப்பிட்டபோது நடிகர்த்திலகத்தைப் பற்றி எதுவும் சொல்லாமல், 'வசந்தமாளிகையே நான்தான் என்று எல்லோரும் சொல்வார்கள். அந்த அளவுக்கு நான் இல்லையேல் வசந்தமாளிகை இல்லை எனலாம்' என்கிற ரீதியில் பிதற்றியிருந்தார். ....

சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது கார்த்திக் சார்.!
Gentleman ஆக இருக்கலாம்..ஆனால் தலைவர் அளவிற்கு? அதுவும் cine-field இல்??கொஞ்சம் அதிகமோ என தோன்றுகிறது!
பகிர்தலுக்கு நன்றி!

IliFiSRurdy
13th October 2013, 03:22 PM
actually sivaji played 10 roles in navarathiri right..... Including the role he played as king in that stage play.... It is different and unique from other characters he played in that film and so deserves to be counted as +1
என்ன சார் நீங்க? நான் போட்டிருப்பது தலைவர் பற்றியல்ல! ஒரே நடிகர் பத்து வேடங்களுக்கு மேல் நடிக்கும் வழி முறைகளை பற்றியது.:-d

uvausan
13th October 2013, 05:32 PM
எல்லோர்க்கும் இனிய விஜயதசமி நல் வாழ்த்துக்கள் -


எவள்ளவு முறை பார்த்தாலும் அலுக்காத NT யின் படங்களில் "சரஸ்வதி சபதமும்" ஒன்று - வித்யாபதி யை மறந்தவர்களுக்கு அரிச்சுவடி , ஆனா , ஆவன்னா தெரியும்மா என்றால் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை -

Full movie hosted below :):-D

http://www.youtube.com/watch?v=1_xxm8OuD-o&feature=share&list=PLvmklxvON-2UcINYvHuwR4fxaPdG5tT1H


Ravi

:-D:):roll:

uvausan
13th October 2013, 05:34 PM
saraswathi Sabatham - 2 of 12

http://youtu.be/3l9VpfUQGZs

uvausan
13th October 2013, 05:35 PM
Saraswathi Sabatham - part 3 of 12

http://youtu.be/BxnJAnaihfs

uvausan
13th October 2013, 05:36 PM
Saraswathi sabatham - part 4 of 12

http://youtu.be/ljy48frB7wg

uvausan
13th October 2013, 05:37 PM
Sarswathi Sabatham - part 5 of 12

http://youtu.be/aqyHnzx5qgo

uvausan
13th October 2013, 05:39 PM
Saraswathi Sabatham - part 6 of 12

http://youtu.be/IPdpeKDWA6E

uvausan
13th October 2013, 05:40 PM
Saraswathi sabatham - part 7 of 12

http://youtu.be/gYFwAhJYsyQ

uvausan
13th October 2013, 05:41 PM
Saraswathi Sabatham - part 8 of 12

http://youtu.be/PxRDXD9981s

uvausan
13th October 2013, 05:42 PM
Saraswathi Sabatham - part 9 of 12

http://youtu.be/zpxeXzmITyU

uvausan
13th October 2013, 05:43 PM
Saraswathi Sabatham - part 10 of 12

http://youtu.be/dGvYZ0qe1B8

uvausan
13th October 2013, 05:44 PM
Saraswathi sabatham - part 11 of 12

http://youtu.be/T09i0tv21zE

uvausan
13th October 2013, 05:45 PM
Saraswathi sabatham -part 12 of 12

http://youtu.be/hgSKAkmq2FQ

uvausan
13th October 2013, 05:51 PM
Chinna Kannan sir -

உங்கள் எழுத்து அழகில் Part 12 of 12 - சரஸ்வதி சபதத்தில் NT யின் நடை அழகை வர்ணிக்க கேட்டுகொள்கிறேன் - many thanks

:smokesmile::)

JamesFague
13th October 2013, 09:44 PM
திரு வாசு சார்,

உங்கள் தனிப்பட்ட எழுத்து பாணியில் திரு கண்ணன் பற்றி எழுதவும். நான் குறிப்பிடும் எந்த கண்ணன் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

KCSHEKAR
14th October 2013, 08:39 AM
எவள்ளவு முறை பார்த்தாலும் அலுக்காத NT யின் படங்களில் "சரஸ்வதி சபதமும்" ஒன்று
Full movie hosted below :):-

Ravi


டியர் ரவி சார்,

சரஸ்வதி பூஜை சிறப்பு திரைப்படம் "சரஸ்வதி சபதம்" -ஐ திரியிலேயே வழங்கியமைக்கு நன்றி.

KCSHEKAR
14th October 2013, 08:47 AM
தினமலர் - வாரமலர்
நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரன் (3)

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=17529&ncat=2

gkrishna
14th October 2013, 11:47 AM
dear ragavender sir

ilaya thalaimurai directed by krishnan panju or maruthirao

in the vcd front cover it is mentioned as maruthirao

regards

gk

vasudevan31355
14th October 2013, 04:40 PM
ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர் (தொடர் 8)

சிறப்புப் பதிவு

'எதிர்பாராதது' படத்தில் விமானப் பயணத்திற்கு முன் அணிந்துள்ள சூட் கோட்

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/4_zpsbc531efc.png (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/4_zpsbc531efc.png.html)

'காவேரி' படத்தில் நடிகர் திலகம் தரித்திருக்கும் ராஜ உடைகள்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/3_zps64edda3a.png (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/3_zps64edda3a.png.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/2_zps2a03fa6e.png (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/2_zps2a03fa6e.png.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/1_zpsf0042f6f.png (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/1_zpsf0042f6f.png.html)

'மங்கையர் திலகம் படத்தில் மங்களகரமான உடைகள்

சாதாரண வேட்டி பனியன் கூட இவருக்கு எவ்வளவு அழகு!

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/dfghj_zps1fa6ed24.png (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/dfghj_zps1fa6ed24.png.html)

அற்புதமான கோட் சூட்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/vgbhnjmk_zps2d584e87.png (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/vgbhnjmk_zps2d584e87.png.html)

கோட் இவருக்குப் பிறந்ததா?
இவர் கோட்டுக்காகப் பிறந்தாரா?

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/rftgyhujikolp_zpsb922310b.png (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/rftgyhujikolp_zpsb922310b.png.html)

அருமையான வேட்டி ஷர்ட்டில். தொள தொளவென சட்டை அணியாமல் அப்போதே கன கச்சித புல்-ஹேன்ட் ஷர்ட் அணிந்துள்ளார்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/y7uiop_zps5db14f34.png (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/y7uiop_zps5db14f34.png.html)

பளபளக்கும் பட்டு ஷர்ட்டில் திலகம்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/uhujiokpl_zps0263259b.png (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/uhujiokpl_zps0263259b.png.html)

vasudevan31355
14th October 2013, 04:51 PM
ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர் தொடர்கிறது....(தொடர் 8)

'எதிர்பாராதது'

ஒயிட் பைஜாமா ஜிப்பாவில்

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/5_zps86dcd63c.png (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/5_zps86dcd63c.png.html)

கனவுக் காட்சி ஆடை

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/7_zps022e773e.png (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/7_zps022e773e.png.html)

ஒயிட் அண்ட் ஒயிட்டில் கையில் கோட்டுடன்

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/8_zps31fc908b.png (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/8_zps31fc908b.png.html)

ஜமீன்தார் பாணி உடை

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/6_zpsb860a200.png (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/6_zpsb860a200.png.html)

vasudevan31355
14th October 2013, 05:16 PM
காவேரி படத்தின் போஸ்டர் டிசைனில் நடிகர் திலகத்தின் ஆடை வடிவமைப்பு.

http://www.vinmag.com/online/media/gbu0/prodxl/AP845-kaveri-indian-movie-poster-1955.jpg

KCSHEKAR
14th October 2013, 05:39 PM
டியர் வாசுதேவன் சார்,

நடிகர்திலகத்தின் ஆடையழகை அற்புதமாக தொகுத்து அளித்துள்ளீர்கள். வேட்டி சட்டையானாலும், கோட் சூட் ஆனாலும், நம் நடிகர்திலகத்திற்குப் பொருந்தியது மாதிரி வேறு எவருக்கும் அவ்வளவு கச்சிதமாகப் பொருந்தியதில்லை என்பதை தங்களின் புகைப்படப் பதிவுகளே நிருபிக்கின்றன.

uvausan
14th October 2013, 05:41 PM
Vasu sir - excellent - great efforts in collection and posting them here

:smile2::-D

JamesFague
14th October 2013, 05:43 PM
Mr Vasu Sir,

Fantastic Photo's of NT. Awaiting for many more. Well done Sir.

mr_karthik
14th October 2013, 06:22 PM
பாராட்டுக்கள் வாசுதேவன் சார், 'ஆடைக்கேற்ற ஆணழகன்' தொடரில் அட்டகாசமாக அசத்தி வருவதற்கு.

பெரிய ஆச்சரியம், எங்கிருந்து உங்களுக்கு இப்படிப்பட்ட அரிய, அபூர்வ ஸ்டில்கள் எல்லாம் கிடைக்கின்றன என்பதுதான். இதற்கான தங்கள் உழைப்பு எத்தகையது என்பதை அறிய முடிகிறது.

இன்னொரு ஆச்சரியம் அன்றைய நாளிலேயே, 'மற்றவர்களுக்கு' பல ஆண்டுகள் முன்பே நம் தலைவர் இப்படிப்பட்ட ஸ்டைலான உடைகளை அணிந்து அசத்தி, 'ஸ்டைலுக்கென்றே பிறந்தவன் நான்தான்' என்பதை நிரூபித்திருப்பது. இதன் மூலம் சில பொய்ப்பிரச்சாரங்களை முறியடித்திருப்பது.

இவையனைத்தும் சாத்தியமானது தங்கள் ஆர்வம், சிரத்தை, உழைப்பு இவைகளால் மட்டுமே. அதற்காக நடிகர்திலகத்தின் அனைத்து ரசிகர்கள் சார்பிலும் நன்றிகள்....

Subramaniam Ramajayam
14th October 2013, 07:46 PM
Vasudevan your collections of ADAIKERTA ANAZGAN NT superb. awaiting for many more in different mixtures.
all the best your efforts never fail.

vasudevan31355
14th October 2013, 07:55 PM
டியர் கார்த்திக் சார்,

தங்களுடைய அயிட்டம் நாயகியர் தொடரில் நடிகை சகுந்தலா பற்றிய உங்கள் கண்டனப் பதிவை (தொடரிலேயே கண்டனப் பதிவு. அது தங்களால் மட்டுமே முடிந்த ஒன்று)
இப்போதுதான் முழுமையாகப் படித்து முடித்தேன். மிகத் துணிச்சலான பதிவு. எனக்குக் கூட தலைவரால் பெரும் புகழ் பெற்ற இந்த நடிகை எப்போதும் தலைவரைப் பற்றி வாய் திறப்பதில்லையே என்ற குறை லேசாக இருந்ததுண்டு. ஆனால் தங்கள் பதிவைப் படித்ததும்தான் முழு விவரமும் தெரிய வருகிறது. நீங்கள் சொல்வது சரிதான். ஏறி வந்த ஏணியை திரும்பிப் பார்க்காத பல ஜென்மன்களுள் இந்த நடிகையும் ஒருவர்.

இந்த நடிகையைப் பற்றி மனதில் பட்டதை பளிச்சென்று சொன்ன உங்களின் துணிவுக்கும், தைரியத்துக்கும் ஒரு சபாஷ்! தலைவர் எத்தனை படங்களில் இவருக்கு வாய்ப்பளித்தார்! கொஞ்சமாவது நன்றி உணர்வு வேண்டாம்! படிக்காத மேதையிலேயே டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு ஜோடியாக சான்ஸ். அப்புறம் நிறைய படங்களில் துணை நடன மாது சான்ஸ். பிறகு முக்கியமான ரோல்கள். வில்லி, கதாநாயகி ரேஞ்சுக்கு சான்ஸ், காமெடி என்று நிறைய வாய்ப்புகள் கிடைத்தும் தலைவரைப் பற்றி பேச மட்டும் வாய்ப்பூட்டு போட்டுக் கொண்டது ஏன் என்று தெரியவில்லை.

ஒளிவு மறைவு இல்லாத உங்கள் உன்னத பதிவிற்கு பாராட்டுக்கள்.

சத்ரபதி சிவாஜி பதிவு, நவராத்திரி பதிவு, ஆடைகள் தொடருக்கான தங்கள் அன்புப் பாராட்டிற்கும் நன்றி!

vasudevan31355
14th October 2013, 08:08 PM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்கள் பாராட்டிற்கு நன்றி! மிக அபூர்வமான 'பயணம்' படத்தில் இடம் பெற்ற தலைவரின் கௌரவம் நிழற்படங்களை பதிவிட்டு தூள் கிளப்பி விட்டீர்கள். நிஜமாகவே அரிய பதிவுதான்.

(இந்தப் படத்தின் இயக்குனரும் 'வியட்நாம் வீடு' சுந்தரம் தானே! "ஆரம்ப காலம் ஒரு பக்க தாளம்", "பயணம்... பயணம்... பத்து மாதச் சித்திரம் ஒன்று ஜனனம், 'தென்றலுக்கு என்றும் வயது பதினாறேயன்றோ'!போன்ற அருமையான பாடல்கள் கொண்ட படம். முழு படமும் ரயிலிலேயே நடப்பது போன்ற புதுமை கதையமைப்பைக் கொண்ட படம்)

vasudevan31355
14th October 2013, 08:14 PM
டியர் சந்திரசேகரன் சார்,

தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி!

vasudevan31355
14th October 2013, 08:15 PM
டியர் வாசுதேவன் சார்,

உங்கள் ஆசையை நிறைவேற்ற முயற்சி செய்கிறேன். கண்ணனை நினைக்காத நாளில்லையே! கண்ணன் அருமையான அண்ணன் அல்லவா! கெட்ட தம்பிக்கு ஒரு நல்ல அண்ணன். வாளெடுத்தால் வையம் கலங்க வைக்கும் மன்னன். நடையழகு மன்னன். வருவான் தங்கள் மனம் குளிர. முத்து நகையே உன்னை நானறிவேன். நம்மை யாரறிவார்? தங்கள் மனமுவந்த பாராட்டிற்கு என் மனப் பூர்வமான நன்றிகள்.

vasudevan31355
14th October 2013, 08:18 PM
அன்பு ரவி சார்,

12 பாக சரஸ்வதி சபதம் பட வீடியோக்களுக்கு மிக்க நன்றி!அடேயப்பா!
அருமை! தங்கள் பாராட்டுதல்களுக்கும் நன்றி! தங்களின் அடுத்த அருமையான எழுத்து நடையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

sivaa
14th October 2013, 08:25 PM
டியர் வாசுதேவன் சார்,

எதையும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் செய்யும் தங்கள் கைவண்ணத்தில் நவராத்திரி தொகுப்பு மிக அருமை. ஒன்பது ராத்திரி ஸ்டில்களையும் ஒரே சைஸில் வரிசைக்கிரமமாக பதித்து அழகூட்டியிருக்கிறீர்கள்.

எல்லா நிழற்படத்திலும் சாவித்திரி இருக்கிறார், சரி. ஆனால் ஒவ்வொரு நிழற்படத்திலும் அவரோடு இருக்கும் ஒன்பது வெவ்வேறு நடிகர்கள் யார் யார்?. ரொம்ப உற்றுப்பார்க்கும்போது நடிகர்திலகத்தின் சாயல் தெரிகிறது....
பிரான்ஸ் நாட்டின் உயர் விருதான செவேலியர் விருது
நடிகர்திலகம் அவாகளுக்கு கிடைப்பதற்கு காரணமாக
இருந்தது நவராத்திரி படம்தான்

அப்படத்தில் 9 வேறுவேறு மாறுபட்ட வேடங்களில்
அண்ணன் அசத்திய நடிப்பும் மேக்கப்பும்தான்
காரணம் என பத்திரிகை செய்தி படித்த ஞாபகம்

அதனை யாராவது எழுதுவீர்கள் என எதிர்பார்த்தேன்
ஆனால் ஒருவரும் எழுதவில்லை
கார்த்திக் சார் சறிது தொட்டுச் சென்றீர்கள்
நவராத்திரி படத்தில் ஒன்பது வேடங்களிலும்
வேறுவேறு நடிகர்கள்தான் நடித்தார்கள் என
செவேலியர் விருது வழங்கும் குழுவினர் நினைத்தார்களாம்

அந்தளவிற்கு நடிகர்திலகத்தின் வேறுபட்ட நடிப்பும்
மேக்கப்பும் அப்படத்தில் அமைந்திருந்தது

vasudevan31355
14th October 2013, 08:30 PM
கிருஷ்ணா சார்

'இளைய தலைமுறை' 'யோகசித்ரா' வின் தயாரிப்பு. இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்கள். டிவிடி கவரில் தவறுதலாக மாருதிராவ் என்று போட்டு விட்டார்கள். இது பரவாயில்லை. முரசு டிவியில் பல பாடல்களின் படங்கள் பெயர்களை தப்பும் தவறுமாகப் போட்டு இம்சை செய்கிறார்கள். தாங்க முடியவில்லை.

Russelldwp
14th October 2013, 10:04 PM
[QUOTE=g94127302;1081809]Saraswathi sabatham -part 12 of 12

Dear

Thanks for your video and nice

Only Nadigarthilagam Films says about our Religious functions and Festivals. Sivaji is God of indian Cinema

C.Ramachandran

Russelldwp
14th October 2013, 10:09 PM
[QUOTE=vasudevan31355;1082110]காவேரி படத்தின் போஸ்டர் டிசைனில் நடிகர் திலகத்தின் ஆடை வடிவமைப்பு.

Dear Vasudevan Sir

Thanks for Varieties of poses of Great Nadigar thilagam.

Each and every still really looks Wonderful. Sivaji is the man of Handsome

C.Ramachandran

RAGHAVENDRA
15th October 2013, 08:02 AM
கோபால் சாரின் காதல் தொடர் தொடரும் வரை...

ஒரு அறை கொடுத்தால் தெரியும்...

சம்பத் வேலையில்லா பட்டதாரி. இருந்தாலும் நற்குணங்கள் நிறைந்தவன். அவனிடம் காதல் கொள்கிறாள். நாயகி. அவனோ தன் பொருளாதார நிலைமை சீரடைய வேண்டும் தன் குடும்பத்தைப் பராமரிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு சூழல்களிலும் கவலைகளிலும் உழல்பவன். அவனுக்கும் அவளிடம் உள்ளுக்குள் காதல் இருந்தாலும் தன்னுடைய நிலைமையை அவளிடம் சொல்கிறான். நாயகியோ அதனைப் பொருட்படுத்தாமல், அவனுக்காகக் காத்திருந்தாலும் பரவாயில்லை, அவனைக் காதலிக்க வேண்டும், மணம் புரிய வேண்டும் என்கிற குறிக்கோளுடன் அவனைச் சுற்றிச் சுற்றி வருகிறாள். ஒரு சந்தர்ப்பத்தில் நேருக்கு நேராய் அவனிடம் கேட்பதோடு அவனுடைய உணர்வுகளையும் சீண்டி கோபத்தை வரவழைக்கிறாள். அவனுக்குள் இருக்கும் நல்ல மனம் அந்தக் கோபத்தை மறைத்து அவளிடம் காதலைத் தூண்டி விட்டு விடும் என்று அவள் சரியாக கணித்து அதற்கேற்ப அவனை கோபத்தின் எல்லைக்கே கொண்டு செல்கிறாள். அவனுடைய ஆண்மையின் மீதே ஐயம் எழுப்பி அவனை உசுப்பேத்தி விடுவதால் அவனும் கோபத்துடன் அவளை அறைந்து விடுகிறான். இதற்காகத் தானே ஆசைப் பட்டாய் பால குமாரா என்பது போல் அவளும் இதற்காகவே காத்திருந்தது போல் தன் காதலை வெளிப்படுத்தி மெல்ல மெல்ல அவன் மனதை கரைத்து விடுகிறாள்.

இது தான் சூழ்நிலை. காதல் பாடல்களிலும் சக்கரவர்த்தியான கண்ணதாசனுக்கு இப்படி ஒரு situation கிடைத்தால் விடுவாரா. புகுந்து விளையாடி விட்டார். ஒவ்வொரு வரியும் இரு கதா பாத்திரங்களையும் சரியான அளவில் அலசி ஆராய்ந்து எழுதப் பட்ட வரிகள். மெல்லிசை மன்னர் மட்டும் என்ன லேசுப்பட்டவரா. பாடகர்களை சக்கையாகப் பிழிந்து முழுமையான உணர்வுகளை பாடலில் கொண்டு வந்து விட்டார். அதுவும் "அந்த அறை பள்ளியறையாக இருந்தால்" என்ற வரிகளை நாயகி பாடும் போது ஒரு பொருளாகவும், "அந்த அறை பள்ளியறை ஆக இருந்தால் " என்று நாயகன் பாடும் போது வேறு ஒரு பொருளாகவும் இலக்கிய நயத்தோடு காதலைப் பிழிந்து தந்திருப்பார்கள்.

இவ்வளவு அருமையான பாடலை படம் பிடிப்பதை ஒரு சவாலாகவே ஏற்றுக் கொண்டு விட்டார் போலும் ஒளிப்பதிவாளர் எஸ்.மாருதி ராவ் [இப்படத்தை முதலில் இயக்கியது கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்கள். ஆனால் பல்வேறு காரணங்களால் இடையில் அவர்கள் தொடராமல் மாருதி ராவ் அவர்களே இயக்கி முடித்து விட்டதாகவும் ஒரு செய்தி அக்காலத்தில் உண்டு. அதற்கேற்றார் போல் நெடுந்தகட்டில் படத்தின் டைட்டில் கார்டில் ஒளிப்பதிவு & இயக்கம் மாருதி ராவ் என்று தான் காட்டப் படுகிறது ]. இப்பாடல் காட்சியில் இரண்டாவது சரணத்தின் போது ஒரு ஊடல் உண்டு என்ற வரிகளின் போது காமிரா பாடலின் தாளத்திற்கேற்ப ஜூம் இன் அவுட் என மாறி மாறி வருவது பாடலுக்கு உயிர் தருகிறது.

இது அத்தனையும் ஒரு சேர உயிர் பெற வைக்கிறது நடிகர் திலகம்-வாணிஸ்ரீ இணை. இந்த ஜோடி ரசிகர்களின் கனவு ஜோடியாக ஏன் விளங்குகிறது என்பதற்கு இப்பாடல் காட்சி ஓர் உதாரணம். கோபால் மட்டுமல்ல பெரும்பாலான சிவாஜி ரசிகர்கள், தேவிகாவிற்குப் பிறகு வாணிஸ்ரீ யைத்தான் நடிகர் திலகத்தின் சிறந்த ஜோடி நடிகையாக கருதுவதில் முழு நியாயமும் உள்ளது. அது ஏதோ கெமிஸ்ட்ரி, என்பார்களே, அதையெல்லாம் இந்தப் பாடலில் பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள்.

இந்தக் காட்சியை முழுமையாகப் பார்த்தால் தான் இப்பாடலின் பொருள் விளங்கும் என்கிற எண்ணத்தில் பாடலுக்கு முன் வரும் காட்சியும் பின் வரும் காட்சியும் சேர்த்தே தொகுக்கப் பட்டுள்ளன.

அதெல்லாம் சரி... அதென்ன பாட்டு எனச் சொல்லவே யில்லையே ... என்கிறீர்களா...

படம் - இளைய தலைமுறை
பாடல் - ஒரு அறை கொடுத்தால் தெரியும்
குரல்கள் - டி.எம்.சௌந்தர்ராஜன், வாணி ஜெயராம்
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள் - கண்ணதாசன்


http://www.youtube.com/watch?v=Qd87bRGzsn0&feature=share&list=UUHZ9TIXjklcLpnIKC2q3h3A

RAGHAVENDRA
15th October 2013, 08:19 AM
இந்தப் பாடல் காட்சியை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் நிச்சயம் எல்லோருக்கும் வரும்.

அதுவும் நான் சொல்லவோ என்கிற வார்த்தையை நடிகர் திலகம் சூப்பர் ஸ்டைலாக பாடிக் கொண்டே நடந்து வந்து கண் சிமிட்டும் போது..

ஆஹா... Flat ... நமக்கு ஜென்ம சாபல்யம் கிடைத்து விடுகிறது.. இதற்கு மேல் என்ன வேண்டும் என்பது போல் ஸ்டைல் சக்கரவர்த்தியாக திகழ்வதற்கு இதுவும் ஒரு சான்றாகி விடுகிறது.

நானே எழுதிக் கொண்டிருந்தால் எப்படி ...

இது வரை இணையத்தில் இக்காட்சி விரிவாக வந்திருக்காது என எண்ணுகிறேன்... இது பற்றி ஒவ்வொருவரும் தங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன் ... ஏனென்றால் சிலர் இப்படத்தையே பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு இப்படமே ஒரு Pleasant Surprise

vasudevan31355
15th October 2013, 09:14 AM
ராகவேந்திரன் சார்,

அத்தனை பேரையும் பிளாட் ஆக்கி, கிளீன் போல்ட் ஆக்கி விட்டீர்கள். காதல் ரசம் சொட்ட சொட்ட அமர்க்களமான ஜில் பதிவு. அதுவும் வீடியோவுடன். அடேயப்பா! என்ன ஒரு வர்ணனை!

எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

தன்னை ஆண்மகனா என்று நாயகி வெறுப்பேற்றியவுடன் கோபம் வந்து 'பளார்' என ஒரு அறை விட்டு அவள் எதிர்பார்க்கும் மோகத்தைக் காண்பிக்கும் வேகம்.

'இளமையில் சந்திரன்
வலிமையில் அர்ச்சுனன்'

என்று 'நான் ஒன்னும் போக்கத்தப் பயல் இல்லை' என்பதை 'வாலிபம் என்பது கேள்வியில் மாத்திரம் புரியாதம்மா' என்று அறிவுறுத்தும் நாசூக்கு.

'நான் அல்லி மகள் போல் இருக்க ஆசைகள் கொண்டேன்
அதனாலே அர்ச்சுனருக்கு கோபம் கொடுத்தேன்'

என்று நாயகி சிங்கத்தை சீண்டிய உண்மையை ஒப்புக் கொள்ள

'இதுவரை போதுமா?
மணவறை வேண்டுமா?
இன்னொரு அறைக்கு என்னது என்பதை நான் சொல்லவா!'

என்று நாயகி எதிர்பார்த்ததற்கும் மேல் அவளே மிரண்டு போகும் அளவிற்கு பள்ளியறை பற்றி விளக்கம் கொடுக்கும் வீறு கொண்ட ஆண்சிங்கம். ('நான் சொல்லவா?' என்று தலைவர் மூன்று முறை கேட்டவுடன் மூன்றாவது முறைக்கு வாணி குரலில் வாணிஸ்ரீ 'ம்' என்று சம்மதம் தரும் அழகு அருமையோ அருமை!)

"அந்த அறை பள்ளியறை ஆக இருந்தால் "

என்று பதிலுக்கு எசப்பாட்டுப் பாடி

'வந்தவரை இன்பம் என்று வாங்கிக் கொள்ளுவேன்'

என்று அணைத்துக் கொள்ளும் விவேகம்.

'ஒரு ஊடல் உண்டு காவியத்தில் நீ அதைக் கொண்டாய்
இது கூடலுக்கு வாசல் என்று நான் அதைக் கண்டேன்'

என்று நாயகியின் ஊடலை காவியத்துக்கு இணையான காவியமாக்கி, 'அது நியாயம்தானே' என்று இப்போது அவளைப் பாராட்டி, அன்பு உறவாடலுக்கு வாசல்படி அமைத்துக் கொடுத்தவள் என்று தான் அதை எடுத்துக் கொண்டதாக அவளை பெருமை கொள்ள வைக்கும் பெருந்தன்மை.

கலக்கலோ கலக்கல். கோபதாப உணர்ச்சிகளில் ஆரம்பிக்கத் தொடங்கும் பாடல் கொஞ்சம் கொஞ்சமாக விரக தாபத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்து காதலர்களின் ஒருமித்த சங்கமத்தில் முடியும் வித்தியாசமான சூப்பர் டூப்பர் பாடல்.

தரவேற்றி வெறுப்பேற்றிய தங்களுக்கு தங்கமான பாராட்டுக்கள்.

('சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது இப்பாடலில் நடிகர் திலகத்தைக் காணும் போதும், தங்கள் ரகளையான பதிவைக் காணும் போதும்)

KCSHEKAR
15th October 2013, 10:42 AM
ஒரு அறை கொடுத்தால் தெரியும்...

டியர் ராகவேந்திரன் சார்,

இளைய தலைமுறை பாடல் காட்சி வர்ணணை பிரமாதம்.


இந்தக் காட்சியை முழுமையாகப் பார்த்தால் தான் இப்பாடலின் பொருள் விளங்கும் என்கிற எண்ணத்தில் பாடலுக்கு முன் வரும் காட்சியும் பின் வரும் காட்சியும் சேர்த்தே தொகுக்கப் பட்டுள்ளன.


பாடலுக்கு முன்னும் பின்னும் உள்ள காட்சிகளையும் இணைத்து, ஒரு முழுமையான தொகுப்பாக அளித்துள்ளீர்கள்.

வழக்கம்போல நடிகர்திலகம் - வாணிஸ்ரீ இணை, டி.எம்.எஸ்-ன் குரல், கண்ணதாசனின் வரிகள், மெல்லிசை மன்னரின் இசை, மாருதி ராவின் ஒளிப்பதிவு இவற்றைத் தாண்டி, வாணி ஜெயராமின் மயக்கும் குரலும் இப்பாடலுக்கு வலுவூட்டுகிறது என்றால் மிகையில்லை.

நன்றி.

KCSHEKAR
15th October 2013, 10:49 AM
டியர் வாசுதேவன் சார்,

தங்களுடைய பதிவு இப்பாடல் காட்சிக்கு மேலும் வலிமை சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது.



'இளமையில் சந்திரன்
வலிமையில் அர்ச்சுனன்'
'நான் அல்லி மகள் போல் இருக்க ஆசைகள் கொண்டேன்
அதனாலே அர்ச்சுனருக்கு கோபம் கொடுத்தேன்'
"அந்த அறை பள்ளியறை ஆக இருந்தால் "


ஒவ்வொரு பாடல் வரிக்கும் காதல் ரசத்தை இனிமையாக எடுத்தியம்பும் விதத்தில் அர்த்தங்களை அருமையாக அளித்திருக்கும் தங்களுக்கு பாராட்டுக்கள்

RAGHAVENDRA
15th October 2013, 10:57 AM
சந்திரசேகர் சார்,
தங்கள் பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றி.

RAGHAVENDRA
15th October 2013, 10:58 AM
வாசு சார்
தங்கள் பதிவின் மூலம் தங்களுடைய எழுத்தாளுமையை அற்புதமாக நிரூபித்து விட்டீர்கள். தங்கள் பதிவைப் படித்த பிறகு பாடலைப் பார்த்தால் இன்னும் அருமையாக இருக்கிறது. தொடருங்கள் தங்கள் எழுத்துப் புலமையை.

நாணமுண்டு வெட்கமுண்டு பாவை எனக்கு
நாணமின்றிக் கேட்பதொரு காதல் கிறுக்கு ...
நான் அல்லி மகள் போலிருக்க ஆசைகள் கொண்டேன்
அதனாலே அர்ச்சுனர்க்குக் கோபம் கொடுத்தேன் ..

இந்த வரிகளில் வாணிஸ்ரீயின் அபிநயம் ... ஆஹா... வேறு யாரையும் இந்த இடத்தில் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது ...
ரீவைண்ட் செய்து மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் ....

நான் சொல்லவா என்று மூன்று முறை நடிகர் திலகம் சொல்வதும்...

ஹா...ஹா...ஹா.. என்று வாணிஸ்ரீ சிணுங்குவதும் ... பார்க்கப் பார்க்கத் திகட்டாத தெள்ளமுது...

அதுவும் நடிகர் திலகம் அந்த அறை பள்ளி அறை ஆக இருந்தால் எனச் சொல்லும் போது அந்த உணர்வை மெல்லிசை மன்னர் மெல்லிய கிடாரில் அப்படியே வரவழைத்து விடுவார்.

இப்பாடலில் அவருடைய இசை சாம்ராஜ்யம் கொடி கட்டிப் பறக்கிறது.

நடிகர் திலகத்திற்கென்று தனியாக, வாணிஸ்ரீக்கென்று தனியாக, கண்ணதாசன் வரிகளுக்கென்று தனியாக, மாருதி ராவின் ஒளிப்பதிவிற்கென்று தனியாக, டி.எம்.எஸ். குரலுக்கென்று தனியாக, வாணி ஜெயராம் குரலுக்கென்று தனியாக, மெல்லிசை மன்னரின் இசையில் ஒலிக்கும் ஒவ்வொரு இசைக் கருவிக்கும் தனித் தனியாக, லொகேஷனுக்கென்று தனியாக,

இப்படி ஒவ்வொரு அம்சத்தையும் தனித்தனியாக பார்த்துப் பார்த்து ரசிக்க வேண்டிய காலத்தால் அழியாத அற்புத கானம் இது.

gkrishna
15th October 2013, 01:22 PM
ragavender sir

excellant write up about ilaya thalaimurai

ராகவேந்தர் சார்
கோப பட மாட்டீர்கள் என்றால் ஒன்று சொல்லலாமா
வயது ஆனலும் வாலிப நடை மிளர்கிறது
"ஒரு அறை கொடுத்தல் தெரியும்" பாட்டிற்கு நடிகர் திலகத்தின் பிரவுன் கலர் புல் ஹண்ட் ஷர்ட் முக்கால் கை மடித்து விட்டு பாடும் அழகு சூப்பர்
இளைய தலைமுறைக்கு இரண்டு சூப்பர் பாடல் "பொம்பளையா லட்சணமா புடைவையை கட்டு " மற்றும் "கேட்டாளே ஒரு கேள்வி நான் வார்த்தையில் பதில் சொல்ல முடியாமல் "
ரெகார்டிங் செய்து அதற்கு பதில் ஆகத்தான் "சிங்கார தேர் கூட திரை போட்டு செல்லும் அது கூட உனக்கு இல்லையே "
மற்றும் "ஒரு அறை கொடுத்தால் தெரியும்" பாடல் சூட் ஆனது என்று ஒரு செய்தி படித்த நினவு
அது பற்றி உங்களுக்கு தெரிந்தால் பகிர்ந்து கொள்ளலாம்
நன்றி
கிருஷ்ணா

mr_karthik
15th October 2013, 01:34 PM
டியர் ராகவேந்தர் சார் & டியர் வாசுதேவன் சார்,

இளையதலைமுறையில் இடம்பெற்ற 'ஒரு அறை கொடுத்தால் தெரியும்' பாடலைப்பற்றிய காணொளியும் அதற்கான விளக்கப்பதிவுகளும் மிக அருமை. மிகப்பெரும்பாலோருக்குத் தெரியாத இப்படம் மற்றும் பாடல் பற்றி எழுதியிருப்பதன்மூலம் நிழலில் மறைந்திருப்பவற்றை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் தங்கள் தொடர் முயற்சியில் இன்னுமொரு வெற்றி.

இளைய தலைமுறை மிக அருமையானதோர் படம். மாணவர் சமுதாயத்துக்கு தேவையான நல்ல பல கருத்துக்களைச்சொன்ன படம். அதற்காக டாக்குமெண்டரி படம் போலில்லாமல் மிகவும் சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டிருந்த படம். ஏனோ தெரியவில்லை, இந்தப்படமும் சரி அதில் இடம்பெற்றிருந்த அருமையான பாடல்களும் சரி, மக்கள் மனதில் சென்றடையவில்லை. அத்தனையும் முத்து முத்தான நல்ல பாடல்கள்.......
'இளைய தலைமுறை இனிய தலைமுறை'
'சிங்காரத்தேர் கூட திரைமூடிப் போகும்' (முந்தைய வெர்ஷன்: 'பொம்பளையா லட்சணமா'. இந்த வரிகளின்போது நமது சக ஹப்பர் ஒருவர் நினைவுக்கு வருகிறார்).
'யார் என்னசொன்னார், ஏனிந்த கோபம்'
'ஒரு அறை கொடுத்தால் தெரியும்'
'ஒருநாள் இரவு தனிமையில் இருந்தேன்'.

இப்படம் மூன்று முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு நான்காவது அறிவிப்பில்தான் வெளியானது. இத்தனைக்கும் தீபம் வெளியாகி போதிய இடைவெளி விட்டுத்தான் இப்படம் வந்தது. இளைய தலைமுறைக்கும் போதுமான இடைவெளி விட்டுத்தான் நாம் பிறந்த மண் ரிலீசானது. படமும் நல்ல தரமான படமாக இருந்தது. இருந்தும் ரசிகர்களைத்தவிர பொதுமக்கள் அவ்வளவாகக் கொண்டாடவில்லை என்பது மிகவும் வருத்தமான விஷயம். அப்போது வேறெதுவும் புதிய படங்கள் இல்லாததால் ஒவ்வொரு ஞாயிறன்றும் மாலைக்காட்சிக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தேன். அப்படி ஆறு முறை பார்த்ததில் படம் எனக்கு அத்துப்படியாயிற்று. நடிகர்திலகம் வார்டனாக இருக்கும் ஹாஸ்டல் காட்சிகள் ரொம்பவே சுவாரஸ்யம். அதிலும் மெஸ் இன்சார்ஜ் நாயராக வரும் நாகேஷும் அவரது அசிஸ்டன்ட் பையனும் அடிக்கும் தமாஷ் ஒரு புதிய வகை. எமர்ஜென்ஸி காலத்தில் சென்சார் செய்யப்பட்டதால் சண்டைக்காட்சிகள் கொஞ்சம் அடிபட்டிருக்கும். ஒரு பக்கம் வாசுவின் வில்லத்தனம் , இன்னொருபக்கம் ஸ்ரீகாந்தின் வில்லத்தனம் நன்றாக இருக்கும்.

படத்தின் டைட்டிலில் இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு என்றுதான் போடுவார்கள். கதை வசனம் மல்லியம் ராஜகோபால். இதுவரை பார்க்காதவர்கள் இளைய தலைமுறையை கண்டிப்பாக பார்க்க வேண்டும்....

gkrishna
15th October 2013, 01:50 PM
கோபால் சார் சொன்னது போல் நடிகர் திலகத்தின் இளமைக்கு ஏற்ற ஜோடி வாணி தான்

gkrishna
15th October 2013, 01:59 PM
கார்த்திக் சார்
நாகேஷும் அவரது அச்சிடன்ட் அடிக்கும் மெஸ் கூத்து மிக பெரிய காமெடி அதுவும் "ராஜாமணி" என்று நாகேஷ் கூப்பிடும் போது அவரது அச்சிச்டன்ட் "இதோ வந்துட்டேன் அண்ணா "
என்று சொல்வதும் இவர் அவரை அடிப்பதும் "சாம்பாரில் இன்னைக்கு என்ன தான் " என்று கேட்டவுடன் அச்சிச்டன்ட் "கரப்பான் பூட்சி தான் " என்று சொல்வதும் சூப்பர்
அந்த கால கட்டத்தில் இரண்டு சங்கீதா இருந்து ஒருவர் அண்ணா என் தெய்வம் படத்தில் அறிமுகம் அவர் எம்ஜீயார் சங்கீதா என்றும் இவர் சிவாஜி சங்கீதா என்றும் அழைகபட்டனர் எம்ஜீயார் சங்கீதா ரஜினி கமல் ஜெய் ராஜேந்தர் என்று ஒரு ரவுண்டு வந்தார் நம்ம சங்கீதா என்ன ஆனார் என்றே தெரியவில்லை

gkrishna
15th October 2013, 02:16 PM
பெட்வீன் 1975 டு 1980 சிவாஜி வாஸ் மர்வேல்லூஸ்.
தீபம் அண்ணன் ஒரு கோயில்,தியாகம் திரிசூலம்,நல்லோதோர் குடும்பம் சங்கிலி இளைய தலைமுறை என்னை போல் ஒருவன் அந்தமான் காதலி பாட்டும் பரதமும்,உத்தமன் (பாழா போன அரசியல் படுத்திய பாடு 175 நாள் படங்கள் எல்லாம் 100 நாள் படங்கள் 100 நாள் படங்கள் எல்லாம் 50 நாள் படங்கள் ஆக மாறியது

mr_karthik
15th October 2013, 02:24 PM
அந்த கால கட்டத்தில் இரண்டு சங்கீதா இருந்து ஒருவர் அண்ணா என் தெய்வம் படத்தில் அறிமுகம் அவர் எம்ஜீயார் சங்கீதா என்றும் இவர் சிவாஜி சங்கீதா என்றும் அழைகபட்டனர் எம்ஜீயார் சங்கீதா ரஜினி கமல் ஜெய் ராஜேந்தர் என்று ஒரு ரவுண்டு வந்தார் நம்ம சங்கீதா என்ன ஆனார் என்றே தெரியவில்லை

கிருஷ்ணாஜி,

அண்ணா என் தெய்வம் சங்கீதாதான் நடிகர்திலகத்தின் தங்கையாக 'தீபம்' படத்தில் நடித்தவர். முதலில் சொன்ன படம் வெளியாகாததால் பின்னர் 'தீபம் சங்கீதா என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்டார்'. பின்னர் ஜெய்யுடன் 'நெஞ்சுக்கு நீதியிலும்' ரஜினியோடு '6லிருந்து 60வரை'யிலும் நடித்தவர் இவரே. பின்னர் இவரது முதல் படத்தை பாக்யராஜ் என்னென்னமோ பண்ணி 'அவசர போலீசாக' வெளியிட்டார்....

gkrishna
15th October 2013, 02:42 PM
yes karthik sir
ilaya thalaimurai,uthaman,pattum bharathamum,thiyagam,mannavan vandhanadi are my favourite movies why because during that time we were on college days.
MGR was busy in politics
kamal rajini were upcoming stars
gemini,ravi were over
jai,sivakumar,muthuraman movies are female dominated
NT was the ultimate during that time.
Unfortunately not utilised properly by the directors

thanks

Russellfcv
15th October 2013, 03:22 PM
Dear Friends,
Am in the process of coming out with One Single Website that will showcase the repositories of the Legends of Indian Cinema with the focus on South Indian Cinema, more specifically Tamizh Cinema. Am trying something new : Hope to have your support :

This site will focus on the legends releases, re-releases, celebrations and more..!

www.eyesofcinema.com

Please give me your valuable feedback and comments towards how to make it better.

Thanks in advance.

uvausan
15th October 2013, 07:38 PM
ராகவேந்திரா சார் , கோபால் பாணியில் கலக்கும் இந்த சமயத்தில் அவருக்காகவும் , கோபால் சாருக்கும் மற்றும் அனைத்து NT -வாணிஸ்ரீ ஜோடியை மனமார பாராட்டும் பல நல்ல உள்ளங்களுக்காகவும் இரண்டு தலைவர் பாடல்கள் வாணிஸ்ரீ யுடன் - ஏற்கனவே கேட்டதுதான் - ஆனால் என்ன - தேனை பருக ஏது limit ??

http://youtu.be/s-g2SiOaT18

http://youtu.be/T3EOwEZrwPA

:smokesmile::)

Russellfcv
15th October 2013, 08:35 PM
NADIGAR THILAGAM - THE FIRST INDIAN ACTOR TO WIN THE FIRST INTERNATIONAL AWARD IN THE ASIA - AFRO FILM FESTIVAL WITHIN JUST 7 YEARS OF HIS COMING TO THE FILM WORLD. HE WON THIS INTERNATIONAL AWARD AS EARLY AS IN THE YEAR 1960.

dated March 17, 2010: Afro-Asian film festival - THE HINDU

A Russian feature film “Prince of Samarkand” and an Indian short film “Taj Mahal” have been awarded Golden Eagle top prizes by a jury of the second Afro-Asian Film Festival, according to official results released in Cairo on March 15.

Silver Eagles were awarded to the Indian actor Sivaji Ganesan for his performance in the film “Veerapandiya Kattabomman” and to Ramanathan for the best music in the same film. This film also received a special prize from the jury.

Silver Eagles also went jointly to the Egyptian actress Magda for her performance in the film Kaiss and Laila and China's Yan Li Tchun for her part in “Five Golden Flowers”. Wang Chia Ni, Director of the Chinese film also received a Silver Eagle.

The jury also awarded 12 certificates of merit for performances in full-length features, including one to the Indian actress Padmini, heroine of “Veerapandiya Kattabomman.” Ramanathan was absent from the festival, and Padmini received his Silver Eagle on his behalf.

Russellfcv
15th October 2013, 09:08 PM
NADIGAR THILAGAM THE ONLY INDIAN ACTOR TO HAVE BEEN RECOGNIZED AS AN ACTOR & THEREFORE, REWARDED & AWARDED BY THE FILM WORLD OF THE FOUR CONTINENTS - ASIA, AFRICA, EUROPE & THE UNITED STATES OF AMERICA - TRULY A ULAGA NAYAGAN BY RECOGNITION FROM THE WORLD !!

When President Gamal Abdel Nasser of Egypt visited India, Sivaji Ganesan was the only individual, granted permission by the Indian Prime-minister Jawaharlal Nehru, to host a party for Nasser. Nasser was given a number of valuable mementos depicting the civilization and culture of South India.

Sivaji Ganesan was the first artist from India to visit the United States, in the cultural exchange programme of the US government, in 1962, invited by the then President John F Kennedy, where he took the role of India's cultural ambassador. During his visit there, he was honored by being made the honorary mayor of Niagara Falls, New York for one day and was presented the key to the city. The only other Indian till date who has had this honour before Ganesan was Jawaharlal Nehru.

On 22 March 1976, he went over to Mauritius on an invitation from Prime Minister Ramagoolam and took part in their independence day celebrations and stayed as their government guest for four days.

During his visit to the United States in June 1995, he visited Columbus, Ohio. Participating in the dinner hosted to honour Ganesan, the Mayor of the city, Greg Lashutka, honoured him by announcing him as an honorary citizen of Columbus. On the same occasion the Mayor of Mount Vernon read out and gave him a special welcome citation. The Columbus Tamil Sangam was formulated on that day and Ganesan was made the honorary President of that association.

Ganesan has won the President's Award for more than 12 times for his performance in various films. He was also honoured with civilian awards such as Padma Shri, Padma Bhushan and Dada Saheb Palke Award, the highest award in India for people involved in film industry.

Civilian honours – National & International
1966 – Padma Shri from the Government of India
1984 – Padma Bhushan from the Government of India
1995 – Chevalier awarded by the National Order of the Legion of Honour of France.
On 22 April 1995 at a ceremony held at the MAC Stadium in Chennai, Ganesan was presented with the Chevalier title and medallion by the French ambassador to India, Philip Petit.

International awards
He is first indian actor to get the best actor award from a foreign film festival 1960 – Best Actor in Asia – Africa Continent Award at the Afro-Asian Film Festival for Veerapandiya Kattabomman

Other International honours
1960 – One Day Mayor for the city of Niagara Falls and was presented with the Golden Key of Cairo. Pandit Jawaharlal is the only person besides Mr.Ganesan getting this honour
1964 – Cultural Ambassador of India invited by the president John F. Kennedy under the Cultural Exchange Programme
1991 – Citizenship in the Columbia, USA by the Government of United States

National Film Awards
1993 – National Film Award – Special Jury Award for Thevar Magan
1997 – Dadasaheb Phalke Award

Filmfare Awards South
1973 – Best Actor Award for Gnana Oli
1974 – Best Actor Award for Gauravam
1986 – Best Actor Award for Muthal Mariyathai

Other honors
1986 – Honorary doctorate from the Annamalai University in association with the University of Brazil
1997 – Kalaimamani from the Government of Tamil Nadu
1998 – NTR National Award from the Government of Andhra Pradesh

Posthumous honours
A statue of Ganesan was erected on Kamarajar Road in Chennai, Tamil Nadu to honour the actor and was unveiled by the then Tamil Nadu Chief Minister M. Karunanidhi on 2006.

The South Indian Film Artistes' Association as a tribute to Ganesan, declared that 1 October, the birth day of Ganesan, would be observed as Actors' Day by the association Chennai film industry.

The Government of Maharashtra has instituted a state award, in the name of Ganesan, which is given under the Best Actor category every year entitled "Sivaji Ganesan Award".

JamesFague
15th October 2013, 09:24 PM
Mr Vasu Sir,

Take your own time but do not forget to post about Mr Kannan.

vasudevan31355
15th October 2013, 10:40 PM
'பொம்பளையா லட்சணமா'. இந்த வரிகளின்போது நமது சக ஹப்பர் ஒருவர் நினைவுக்கு வருகிறார்).

karthik sir,

who is the hubber?:confused2:

rajeshkrv
16th October 2013, 12:50 AM
கோபால் சாரின் காதல் தொடர் தொடரும் வரை...

ஒரு அறை கொடுத்தால் தெரியும்...

சம்பத் வேலையில்லா பட்டதாரி. இருந்தாலும் நற்குணங்கள் நிறைந்தவன். அவனிடம் காதல் கொள்கிறாள். நாயகி. அவனோ தன் பொருளாதார நிலைமை சீரடைய வேண்டும் தன் குடும்பத்தைப் பராமரிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு சூழல்களிலும் கவலைகளிலும் உழல்பவன். அவனுக்கும் அவளிடம் உள்ளுக்குள் காதல் இருந்தாலும் தன்னுடைய நிலைமையை அவளிடம் சொல்கிறான். நாயகியோ அதனைப் பொருட்படுத்தாமல், அவனுக்காகக் காத்திருந்தாலும் பரவாயில்லை, அவனைக் காதலிக்க வேண்டும், மணம் புரிய வேண்டும் என்கிற குறிக்கோளுடன் அவனைச் சுற்றிச் சுற்றி வருகிறாள். ஒரு சந்தர்ப்பத்தில் நேருக்கு நேராய் அவனிடம் கேட்பதோடு அவனுடைய உணர்வுகளையும் சீண்டி கோபத்தை வரவழைக்கிறாள். அவனுக்குள் இருக்கும் நல்ல மனம் அந்தக் கோபத்தை மறைத்து அவளிடம் காதலைத் தூண்டி விட்டு விடும் என்று அவள் சரியாக கணித்து அதற்கேற்ப அவனை கோபத்தின் எல்லைக்கே கொண்டு செல்கிறாள். அவனுடைய ஆண்மையின் மீதே ஐயம் எழுப்பி அவனை உசுப்பேத்தி விடுவதால் அவனும் கோபத்துடன் அவளை அறைந்து விடுகிறான். இதற்காகத் தானே ஆசைப் பட்டாய் பால குமாரா என்பது போல் அவளும் இதற்காகவே காத்திருந்தது போல் தன் காதலை வெளிப்படுத்தி மெல்ல மெல்ல அவன் மனதை கரைத்து விடுகிறாள்.

இது தான் சூழ்நிலை. காதல் பாடல்களிலும் சக்கரவர்த்தியான கண்ணதாசனுக்கு இப்படி ஒரு situation கிடைத்தால் விடுவாரா. புகுந்து விளையாடி விட்டார். ஒவ்வொரு வரியும் இரு கதா பாத்திரங்களையும் சரியான அளவில் அலசி ஆராய்ந்து எழுதப் பட்ட வரிகள். மெல்லிசை மன்னர் மட்டும் என்ன லேசுப்பட்டவரா. பாடகர்களை சக்கையாகப் பிழிந்து முழுமையான உணர்வுகளை பாடலில் கொண்டு வந்து விட்டார். அதுவும் "அந்த அறை பள்ளியறையாக இருந்தால்" என்ற வரிகளை நாயகி பாடும் போது ஒரு பொருளாகவும், "அந்த அறை பள்ளியறை ஆக இருந்தால் " என்று நாயகன் பாடும் போது வேறு ஒரு பொருளாகவும் இலக்கிய நயத்தோடு காதலைப் பிழிந்து தந்திருப்பார்கள்.

இவ்வளவு அருமையான பாடலை படம் பிடிப்பதை ஒரு சவாலாகவே ஏற்றுக் கொண்டு விட்டார் போலும் ஒளிப்பதிவாளர் எஸ்.மாருதி ராவ் [இப்படத்தை முதலில் இயக்கியது கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்கள். ஆனால் பல்வேறு காரணங்களால் இடையில் அவர்கள் தொடராமல் மாருதி ராவ் அவர்களே இயக்கி முடித்து விட்டதாகவும் ஒரு செய்தி அக்காலத்தில் உண்டு. அதற்கேற்றார் போல் நெடுந்தகட்டில் படத்தின் டைட்டில் கார்டில் ஒளிப்பதிவு & இயக்கம் மாருதி ராவ் என்று தான் காட்டப் படுகிறது ]. இப்பாடல் காட்சியில் இரண்டாவது சரணத்தின் போது ஒரு ஊடல் உண்டு என்ற வரிகளின் போது காமிரா பாடலின் தாளத்திற்கேற்ப ஜூம் இன் அவுட் என மாறி மாறி வருவது பாடலுக்கு உயிர் தருகிறது.

இது அத்தனையும் ஒரு சேர உயிர் பெற வைக்கிறது நடிகர் திலகம்-வாணிஸ்ரீ இணை. இந்த ஜோடி ரசிகர்களின் கனவு ஜோடியாக ஏன் விளங்குகிறது என்பதற்கு இப்பாடல் காட்சி ஓர் உதாரணம். கோபால் மட்டுமல்ல பெரும்பாலான சிவாஜி ரசிகர்கள், தேவிகாவிற்குப் பிறகு வாணிஸ்ரீ யைத்தான் நடிகர் திலகத்தின் சிறந்த ஜோடி நடிகையாக கருதுவதில் முழு நியாயமும் உள்ளது. அது ஏதோ கெமிஸ்ட்ரி, என்பார்களே, அதையெல்லாம் இந்தப் பாடலில் பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள்.

இந்தக் காட்சியை முழுமையாகப் பார்த்தால் தான் இப்பாடலின் பொருள் விளங்கும் என்கிற எண்ணத்தில் பாடலுக்கு முன் வரும் காட்சியும் பின் வரும் காட்சியும் சேர்த்தே தொகுக்கப் பட்டுள்ளன.

அதெல்லாம் சரி... அதென்ன பாட்டு எனச் சொல்லவே யில்லையே ... என்கிறீர்களா...

படம் - இளைய தலைமுறை
பாடல் - ஒரு அறை கொடுத்தால் தெரியும்
குரல்கள் - டி.எம்.சௌந்தர்ராஜன், வாணி ஜெயராம்
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள் - கண்ணதாசன்


http://www.youtube.com/watch?v=Qd87bRGzsn0&feature=share&list=UUHZ9TIXjklcLpnIKC2q3h3A

arumai except that this song would have gone to a very gr8 level if at all it was by TMS & PS

vasudevan31355
16th October 2013, 06:49 AM
இது ஒரு ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில். தலைவர் ஜம்மென்று ஸ்டைலாக நாற்காலியில் அமர்ந்து நடிகை ஜெயாவுடன் பேசிக் கொண்டிருக்க ஜெயலலிதா அதை ரசித்தபடி இருக்கிறார். ஜெயலலிதாவின் வலது புறம் நிற்பது இயக்குனர் பி ஆர். சோமு அவர்கள்.

இது என்ன படத்தின் ஷூட்டிங் ஸ்டில் என்று தெரிகிறதா? தெரிந்தவர்கள் கூறுங்கள்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/d1533416-1470-41e4-994a-ba125353cef3_zpse40dfd7c.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/d1533416-1470-41e4-994a-ba125353cef3_zpse40dfd7c.jpg.html)

vasudevan31355
16th October 2013, 10:19 AM
நடிகர் திலகம் பிளே பாயாக தூள் பரத்தும் சில பாடல்களைப் பார்ப்போம்.

இருவர் உள்ளம்

'பறவைகள் பலவிதம்'

இருவர் உள்ளத்தில் பல சிட்டுக்களுடன் நடிகர் திலகம் சிருங்கார ரசம் சொட்ட ஸ்டைல் நடை நடந்து, ஒவ்வொரு பறவையாக மடக்கிப் பிடித்து அனைவரையும் மயங்க வைத்த பாடல்.


http://www.youtube.com/watch?v=ZF7FKLbVOpY&feature=player_detailpage

தெய்வ மகன்

'காதல் மலர்க் கூட்டம் ஒன்று'

காதல் மலர்க் கூட்டம் வீதி வழி போகும் என்று யாரோ சொன்னதைக் கேட்டு பாதம் முதல் கூந்தல் வரை பால் வடியும் கிளிகளை (வக்கீலாத்து வசந்தா) உட்பட அனைவரயும் தன் ஓரக்கண் ஸ்டைல் பார்வையால் மடக்கி அதகளம் புரியும் பாடல்.


http://www.youtube.com/watch?v=H_hwsxnPjK0&feature=player_detailpage

தீபம்

'ராஜா யுவராஜா'

நாள் தோறும் ஒரு ரோஜாவோடு ஸ்டைல் நாயகன் புரியும் லீலைகள்.

நடிப்பிலே எவரையும் மயக்கும் நாயகன் ப்ளு கலர் சபாரியில் பீச்சில் நடந்து வரும் சந்திரலேகாவை கூலிங் கிளாஸ் சகிதம் ஒரு ஸ்டைல் லுக் விட்டு, கண் ஜாடையாலே மயக்கிப் பிடித்து, நடு விரலால் சிகெரெட்டை சுண்டும் எவரும் தொட முடியாத புதிய ஸ்டைலில் கலக்கும் அத்தனைக்கும் மேலான மாஸ்டர் பீஸ் பாடல்.


http://www.youtube.com/watch?v=_Sbagbaanow&feature=player_detailpage

திரிசூலம்

'என் ராஜாத்தி வாருங்கடி'

நடிப்பின் 'குரு' பல ராஜாத்திகளோடு தன் ராஜாங்கக் கோலாகலத்தைக் கண்டு மகிழச் செய்த பாடல்.


http://www.youtube.com/watch?v=YAw_jdAX1HA&feature=player_detailpage

நல்லதொரு குடும்பம்

'கண்ணா உன் லீலா வினோதம்'

ஐந்து சிட்டுக்களுடன் கண்ணனின் லீலா வினோதங்கள். ஆளுக்குக் கொஞ்சம் காதலில் பங்கு கொடுத்து வம்பை விலைக்கு வாங்கும் பாடல்.


http://www.youtube.com/watch?v=plmLTysF0HE&feature=player_detailpage

mr_karthik
16th October 2013, 10:35 AM
// 1997 – Kalaimamani from the Government of Tamil Nadu //

Nadigarthilagam was awarded Kalaimamani in 1962, not in 1997.

ScottAlise
16th October 2013, 12:24 PM
Vasu sir,

That movie was one among the unfinished movie which had a story line of Hero (Sivaji ) a thief and Jayalalitha a part in his gang, it was planned as a complete thriller but after shooting for about 8 reels the movie got shelved due to financial issues


Don't know the name

ScottAlise
16th October 2013, 12:27 PM
http://www.youtube.com/watch?v=kmQhveb7D8A

This is an interview of Super star krishna watch it from 11.40 min , he says he had acted in remake of Kai kodutha Deivam, When anchor asks if he attempted to Copy NT style of acting, he candidly replied , it is impossible , he is greatest actor in India

Really goosebumps after hearing it

ScottAlise
16th October 2013, 12:29 PM
http://www.youtube.com/watch?v=wXKmpQQhTF0


NT emotional sppech about Kalingar & NT made it

ScottAlise
16th October 2013, 12:31 PM
Sivaji Sir in baktha ramadasu

http://www.youtube.com/watch?v=Fz-AMoNAUlg

ScottAlise
16th October 2013, 12:33 PM
Sivaji sir in battlefield , loved his get up

http://www.youtube.com/watch?v=N4BpZfujEyQ

The same was used as logo for Sivaji films (kalingan)

JamesFague
16th October 2013, 12:45 PM
Mr Vasu Sir,

You can include Yaradi Nee Mohini in that series and to some extent Oru Kinnathai from
VM.

mr_karthik
16th October 2013, 04:17 PM
டியர் வாசு சார்,

ஐட்டம் நடிகையரோடு நடிகர்திலகம் ஆட்டம் போடும் நான்கு பாடல்களும் செம ஜோர். எவ்வளவு நேர்த்தியாக தொகுத்துள்ளீர்கள். மெல்லிசை மன்னர், திரையிசைத் திலகம் பாடல்கள் இரண்டும் கேட்க அருமை என்றால், இசைஞானியின் பாடல்கள் இரண்டும் படமாக்கிய விதத்திலும் அருமை. அதிலும் 'ராஜ யுவராஜா' பாடலின் ஒளிப்பதிவும், நடிகர்திலகத்தின் வித்தியாசமான கேட்-அப் வித் வித்தியாசமான சன்கிளாஸ். இடம்பெற்ற ஐட்டங்களும் அவர்களின் உடைகளும் ஆஹா.... (கர்சீப் ப்ளீஸ்).

பாடலின் கடைசி ஐட்டமாக குறத்தி போன்ற உடையில் வந்து (பார்ப்பவர்களை) கொல்பவர் சந்திரலேகா என்று அறிந்து கொண்டேன். இவங்க பேரல்லாம் கூட தெரிஞ்சு வச்சிருக்கீங்களே. (பள்ளிப்பருவத்தில் நண்பனோடு சினிமாவுக்குப் போகும்போது, படத்தில் துணிக்கடையில் துணி அளந்துகொடுக்கும் ஆளையெல்லாம் காட்டி 'இது யார்' என்று கேட்பான். இப்போது கேட்டானென்றால் 'வாசுவிடம் கேள். அவருக்குத்தெரியும்' என்று சொல்லி விடுவேன்)...

J.Radhakrishnan
16th October 2013, 10:15 PM
டியர் வாசு சார்,

நடிகர்திலகம் ப்ளேபாயயாக தூள் கிளப்பியதில் என்னை மிகவும் கவர்தது ராஜாயுவராஜா தான். பாடல் முழுவதுமே அசத்தல் என்றாலும் "அடிக்கடி வலது கண் துடிக்குது புது புது வரவுகள் இருக்குது" என்ற வரிகளின் போது அவர் பின்னோக்கியபடி steps போட்டு வருவார். ஆஹா அற்புதம். திரையுலகில் ஸ்டைல் மன்னர் அன்றும் இன்றும் இவர் ஒருவரே.

RAGHAVENDRA
16th October 2013, 10:34 PM
Dear Rajesh
Thank you for the appreciation. Vani Jayaram has done full justice on her part and it definitely has enhanced the song. Of course, Susheela is always there and Ilaiya Thalaimurai is no exception.

In fact, the TMS P Susheela duet given below was the talk of the town in 1976 when aired in Ceylon Radio. We were running crazily to listen to this from juke box to juke box.
And here it is :

http://www.inbaminge.com/t/i/Ilaya%20Thalaimurai/

Observe the BGM / Preludes / Interludes. You can listen shades of bgm from the songs Hum Tum (Bobby) and Inbame Undhan Per (Ithayakkani) in the song.

RAGHAVENDRA
16th October 2013, 10:57 PM
வாசு சார்
தங்களுடைய கண்ணோட்டமே தனி. வித விதமாக சிந்தித்து தலைவரின் நடிப்பில் உள்ள நுணுக்கங்களைப் பல்வேறு கோணங்களில் அவை திரைப்படங்களில் எப்படி இடம் பெற்றிருக்கின்றன என்பதை ஆராய்ந்து அதை மிகவும் சுவையாகவும், விறுவிறுப்பான நடையிலும் எந்த ஒரு சின்ன நுணுக்க்த்தையும் விடாமலும் அழகாக தந்து வருகிறீர்கள். தங்களுடைய ஒவ்வொரு தொடரும் ஒரு சிறப்பு என்றால், ப்ளேபாய் கண்ணோட்டமும் புதியதாய் உள்ளது. அதுவும் கார்த்திக் சொன்னது போல் துணை நடிகையரின் பெயர்களை ஒருவர் விடாமல் தாங்கள் தெரிந்து வைத்திருப்பது ஒவ்வொரு கலையிலும் ஒவ்வொருவருக்கும் உரிய மரியாதையைத் தருவதில் தங்களுக்குள்ள ஈடுபாட்டினைக் காட்டுகிறது.

அதுவும் ராஜா யுவராஜா பாடலில் அந்த நீல சபாரி சூட்டில் தனியாக ஒரு நடை நடந்து வருவாரே...சிம்ப்ளி சூப்பர்...
சூப்பர் சார்...தொடருங்கள் தங்கள் பணியை.

RAGHAVENDRA
16th October 2013, 10:59 PM
ராகுல்
கிருஷ்ணா அவர்கள் பேட்டியில் நடிகர் திலகத்தைப் பற்றிக் குறிப்பிட்டது மிகவும் சந்தோஷமாயிருந்தது. அதனை இங்கு பகிர்ந்து கொண்ட தங்களுக்கு நன்றி.

RAGHAVENDRA
16th October 2013, 11:01 PM
எஸ் எல்
நடிகர் திலகத்தின் பல்வேறு சிறப்புகளையும் விருதுகளையும் கூறியுள்ள தங்கள் பதிவுகளுக்கு பாராட்டுக்கள்.

uvausan
17th October 2013, 01:07 AM
ஒரு புதிய கோணத்தில்- NT உடன் நடித்த நடிகைகளின் வேறு பட்ட பாத்திரங்கள் எப்படியலாம் Transformation ஆகி உள்ளன - இந்த analysis ல் KR விஜயாவும் , பண்டரிபாய் யும் தான் அதிகமா Transformation ஆகி உள்ளனர் - சில நடிகைகளை தவற விட்ருக்கலாம் - பொறுத்துக்கொள்ளவும் .NT ஒருவரால் மட்டுமே இப்படி வேறுபாடுகளை வெற்றியுடன் நடத்திகொடுக்க முடியும் என்பதை ஊர்ஜிதம் பண்ணவே இந்த analysis


Heroine Daughter Lover/wife Mother M'law Akka/ anni /Sister in law Thangai
Teacher


KR Vijaya Thirumal Perumai Many - For Example Thirisulam - Patikkatha pannaiyar Nenchirukkum varai
Bharatha Vilas

Jayalalitha Motor Sundram Pillai Many - For EG Pattum Bharathamum
Deviamagan


Kanchana Motor Sundram Pillai Sivantha Mann -


Rukumani - Kappolottiaya Thamizhan Ennai Pol Oruvan Villayattu pillai
( Lakshmi's mother)

Varalakshmi - veerapandiya kattaboman Thanga surangam


Padmini Many - eg Ethiparathathu Guruthakchanai
Thilana Mohanambal


Devika Many - eg karnan Engiruntho vanthal

Savithiri navarathiri - Doctor's role Many - e.g ellam unakkaga Patithal mattum poduma Pasamalar


Vijayalaksmi - Maha kavi kalidas - one sided love Ooty varai Uravu

Lakshmi Raja Raja Cholan Many - eg Thiyagam - - Thangaikaga


Vanishree - Many - e.g Vasantha maligai Sivakamiyin Selvan - - -

radhika Pasumpon En aasai rasave

Sripriya Vasanthathil Oru naal Many - thirusulam

Srividya - Imayam - - Ezuthatha Sattangal

Pandaribai - Many - Gowravam Deiva magan Dr Siva Motor Sundaram Pillai Kangal -

vasudevan31355
17th October 2013, 06:43 AM
Kumudham (7-08-2013)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/Kumudam07-08-2013-45_zpsd60f4cf1.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/Kumudam07-08-2013-45_zpsd60f4cf1.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/2_zpsd4be3021.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/2_zpsd4be3021.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/3_zpsd56a432e.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/3_zpsd56a432e.jpg.html)

RAGHAVENDRA
17th October 2013, 06:55 AM
http://kannadasan.files.wordpress.com/2012/05/kaviyarasar-with-sivaji.jpg

இன்று தங்கள் நினைவு நாளாம். நாங்கள் தங்களை மறந்தால் தானே நினைப்பதற்கு...32 ஆண்டுகளுக்கு முன் உங்கள் பூவுடல் மட்டுமே எங்களை விட்டுப் பிரிந்தது. தாங்கள் இன்னும் எங்கள் நெஞ்சில் நிறைந்து வாழ்கிறீர்கள்.

இதோ சாகாவரம் பெற்ற தங்களின் பாடல்களில் ஒன்று எங்கள் நடிகர் திலகத்தின் மூலம் உயிர் பெற்று தங்களை இங்கே கொண்டு வந்து நிறுத்துவதைப் பாருங்கள்..

http://youtu.be/fdjQG6CbYKs

RAGHAVENDRA
17th October 2013, 06:56 AM
வாசு சார்
வெள்ளை ரோஜா திரைப்பட ஷூட்டிங் ஸ்பாட்டில் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் திலகம் ... அருமையான அபூர்வமான ஆனந்தமான நிழற்படம். மிக்க நன்றி...

RAGHAVENDRA
17th October 2013, 06:59 AM
தற்போது வெளிவந்துள்ள, ஆனந்த விகடன் தீபாவளி மலரில், நடிகர் திலகத்துடன் பணியாற்றிய நமக்கெல்லாம் மிகவும் பிடித்த இயக்குநர், சி.வி.ராஜேந்திரன் அவர்கள் நடிகர் திலகத்துடன் பணியாற்றிய 10 இயக்குநர்களைப் பற்றியும் அதில் நடிகர் திலகத்தை இயக்கிய அவர்களின் படங்களைப் பற்றியும் கூறியுள்ளார். முழுப் பக்கத்திற்கு நடிகர் திலகத்தின் அழகிய நிழற்படம் இடம் பெற்றுள்ளது.

அவசியம் வாங்கிப் படிக்கவும்.

RAGHAVENDRA
17th October 2013, 07:01 AM
டியர் ரவி
நடிகர் திலகத்துடன் நடித்த கதாநாயகி நடிகையரின் பாத்திரங்களைப் பற்றிய தங்கள் அலசல் அருமை. இதனை நம் வாசு சார் அவர்கள் மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொரு நடிகையின் கதாபாத்திரங்களைப் பற்றியும் நாயகியர் தொடரில் எழுதி வருகிறார். இன்னும் நிறைய வர உள்ளன.

parthasarathy
17th October 2013, 09:35 AM
On the one hand, I always remember this day as my favourite poet-laureate Kaviyarasu departed this day. In fact, me and my college mate went to his residence, waited in queue for hours and placed a wreath (made by us in college campus) on the body.

On the other hand, all of us remember this day as on this day in 1952, a Super Star was born thro' "Parasakthi".

Regards,

R. Parthasarathy

irituja
17th October 2013, 10:42 AM
இன்று நடிப்பின் பிறந்த நாள்
கலையின் பிறந்த நாள்

ஆம் பராசக்தி இன் 61 ஆவது உதய தினம்

Russellfcv
17th October 2013, 10:48 AM
நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஓய்.ஜி. மகேந்திரா






பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2013,00:00 ist


என்றும் மனதில் நிலைத்து நிற்கும், பல அற்புதமான படங்களில், சிவாஜியோடு நடித்த பத்மினி. சிவாஜி மீது, மிகுந்த மரியாதையும், பாசமும் கொண்டவர். அமெரிக்காவில் வசித்த அவர், சென்னைக்கு வந்திருந்த போது, அவரை சந்தித்து, "சிவாஜி பெயரில் அளிக்கப்படும் விருதை, நேரில் வந்து, பெற்றுக் கொள்ள வேண்டும்...' என்று, கேட்டுக் கொண்டேன்.

"நிச்சயமாக வருவேன். சிவாஜி பெயரில் இருக்கற விருது, எனக்கு கிடைப்பதென்றால், பெருமை தானே...' என்றார் பத்மினி. ஆனால், விதி, சதி செய்து விட்டது. நிகழ்ச்சி நடக்கும் ஒரு சில நாட்களுக்கு முன், அவருக்கு, திடீரென்று, உடல்நலம் மோசமாகி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். ஸ்ட்ரெச்சரில், அவரை அழைத்துச் செல்லும் போது, உடன் இருந்த நடிகை ஷோபனாவிடம், "என்னை சீக்கிரம் குணப்படுத்தி அனுப்ப சொல்லு. மகேந்திரன் என்னை கூப்பிட்டிருக்கான். சிவாஜி பேராலே விருது தந்து கவுரவிக்குறாங்க. கண்டிப்பாக நான் போகணும்...' என்று, பத்மினி கூறியுள்ளார். ஆனால், சிகிச்சை பயனளிக்காமல், அமரராகி விட்டார்.

பொதுவாக, திரைப் படங்கள் சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு, பத்மினியின் மகன் பிரேம் வருவதில்லை. ஆனால், தாயார் இறந்த சில தினங்களில், எங்கள் நிகழ்ச்சிக்கு வந்து, "என் தாயார், இந்த நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக வர வேண்டும் என்று, ஆவலாக இருந்தார். இன்று, அவர் நம்முடன் இல்லை. அவர் சார்பில், நான் இந்த விருதை பெற்றுக் கொள்கிறேன்...' என்று குறிப்பிட்டார். உடல் நலம் மோசமாக இருந்த போதும், பத்மினி, நடிகர் திலகத்தின் மீது, வைத்திருந்த மரியாதை, பாசம், என்னை நெகிழ வைத்தது. "தன் உடல் நிலையை பற்றி கூட நினைக்காமல், உங்கள் விழாவை பற்றி, பப்பி அம்மா @பசிட்டிருந்தாங்க...' என்றார் ஷோபனா.

அன்னை இல்லத்தில், நடிகர் திலகத்தின் உடல், கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டிருந்தது.
கலை உலகமே, கண்ணீரோடு நின்றது. கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, கட்டுப்@பாட்டு வந்த நாகேஷை, நான் உள்ளே அழைத்துச் சென்@றன்.

சில நிமிடங்கள் மவுனமாக இருந்தவர், திடீரென்று, "சார்... என்ன சார் இப்படி செய்துட்டீங்க! டேய்... (என்னைப்பார்த்து) இவர் இல்லைன்னா, தருமி இல்லடா...' என்று சொல்லி, உணர்ச்சி வசப்பட்டு அழுதார். அதற்கு மேல், அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. மெதுவாக வெளியே சென்றார்.

நடிகர் திலகத்துடன், பராசக்தி படத்திலிருந்து கூடவே நடித்து, நெருங்கி பழகிய, லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், "ஷூட்டிங்கிற்கு, நான் லேட்டாக வரும் போதெல்லாம், "ராஜு, டயத்துக்கு வாயேன். சரியான நேரத்துக்கு வரணும்'ன்னு சொல்லுவேய்யா... இப்போ நான் டயத்துக்கு வந்திருக்கேன்யா. பாராட்ட நீ இல்லேய்யா...' என்று கதறினார்.

அவரோடு நடித்த எல்லா நடிகர், நடிகைகளுக்கும் அவரிடம், ஒரு ஈடுபாடு கண்டிப்பாக இருக்கும்.

காரணம், அவரோடு நடித்த, எந்த நடிகர், நடிகைகளை வேண்டு மானாலும் எடுத்துக்கொண்டால், அவர்களின் கலைப் பயணத்தில், மெகா வெற்றி பெற்ற மூன்று படங்கள் என்று எடுத்தால், அதில் சிவாஜியுடன் நடித்த ஒரு படம், கண்டிப்பாக இருக்கும். ஏன், சிலருக்கு இரண்டு படங்கள் கூட இருக்கலாம்.

தனக்கு மட்டும் பெயர் வந்தால் போதாது; கூட நடிக்கிறவங்களும் சமமாக பெயர் கிடைக்க @வண்டும், அப்போது தான் படம் நிற்கும் என்பதில், சிவாஜி எப்போதுமே தெளிவாக இருந்தார்.

கடந்த, 1960ல், சென்னை எழும்பூரில் உள்ள, டான் பாஸ்கோ பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது, நாங்கள் பாந்தியன் ரோடில் வசித்து வந்தோம். வீட்டுக்கு அருகே ஸ்கூல். என் தாயார் ஒய்.ஜி.பி., பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியை ஆரம்பித்த நேரம். நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில், கட்டடம் இல்லாமல், கூரை போடப்பட்ட வகுப்பு அறைகள். பள்ளி ஆண்டு விழாவிற்கு, சிவாஜி கணேசன் வந்திருந்தார். அவர்தான் தலைமை. மாணவர்கள், பெற்றோர் எல்லாரும் பெஞ்ச்களிலும், தரையிலும் உட்கார்ந்திருந்தனர். நான் சிவாஜி சாரை, முதல் முறையாக அன்று தான் பார்த்தேன்.

என் தாயார், சிவாஜியை வரவேற்று பேசும்போது, "கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சுகிட்டு கொடுக்கும் என்பர். எங்களுக்கு கூரை கூட இல்லை. தெய்வம் எவ்வளவு கொடுத்தாலும், மகிழ்ச்சியாக, நன்றியோடு பெற்றுக் கொள் வோம்...' என்றார்.

விழாவில், சிவாஜி பேசும்போது, "மொத்த ஸ்கூலுக்கும், கூரை போட முடியுமா என்று தெரியவில்லை. என்னால் முடிந்த, 10 ஆயிரம் ரூபாயை இந்தப் பள்ளி கட்டட நிதிக்கு, நன்கொடையாக அளிக்கிறேன். இந்தப் பள்ளி கண்டிப்பாக, பெரியதாக வளரும்...' என்று, வாழ்த்தினார். அவருடைய வாழ்த்து பலித்தது. இன்று, என் தாயார் நடத்தும் பத்ம சேஷாத்ரி பள்ளி, பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது.

தகுதியான காரியங்களுக்கு, நிறைய தர்மம் செய்வார் சிவாஜி. அவர் செய்யும் தர்ம காரியங்களை, கொடுக்கும் நன்கொடைகளை, விளம்பரப்படுத்திக் கொண்டதில்லை. அதுதான் அவருடைய உண்மையான குணம்.

சிவாஜியின் தம்பி சண்முகத்தின் மகன் முரளி, எங்கள் பள்ளியில் தான் படித்தார். என் பெற்றோருக்கு, நெருக்கமாக இருந்தாலும், சிவாஜி என்றுமே ஸ்பெஷல் சலுகைகள் கேட்டதில்லை. என் தாயார் இந்த பள்ளியை, மிகுந்த கட்டுப்பாட்டோடு, ஒழுக்கமாக நடத்துகிறார் என்பதால், சிவாஜிக்கு, என் தாயார் மீது மிகுந்த மரியாதை உண்டு.

எப்போதாவது, மாணவர் சேர்க்கை பற்றி பேச வேண்டியிருந்தாலும், என்னிடமோ, அப்பாவிடமோ தான் பேசுவார். "டேய் உங்கப்பாவே, ராஷ்மியிடம் கேட்கிறதுக்கு, பயப்படுவாரு; நீ கேட்டு சொல்லு...' என்பார்.

எங்கள், "யுனைட்டெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்ஸ்' குழு, வியட்நாம் வீடு சுந்தரத்தின் கதை வசனத்தில், மேடையேற்றிய நாடகம், "கண்ணன் வந்தான்!' அது தான் சிவாஜி, இரு வேடங்களில் நடித்த, கவுரவம் படம். அந்த நாடகத்தை, சிவாஜி ஒரே ஒரு முறை மட்டும் தான் பார்த்தார். பாரிஸ்டர் ரஜினிகாந்த் ரோலை, நாடகத்தில் செய்த என் தந்தையிடம், "ஒய்.ஜி.பி., நல்லா பண்ணியிருக்கே. ஆனால், இதை எங்க கொண்டு போகிறேன் பாரு...' என்றார் சிவாஜி.

"பாரிஸ்டர் ரஜினிகாந்த் ரோலை, நான் öŒ#து, ஜூனியர் வழக்கறிஞர் கண்ணன் ரோலுக்கு சிவகுமாரையோ, முத்துராமனையோ நடிக்க சொல்லலாம். "நீ கொஞ்சம் கம்மியாக நடி, அப்போ தான் பாரிஸ்டர் கேரக்டர் நிக்கும்'ன்னு கேட்க முடியுமா... அவங்க மனசு புண்படாது?... நானே இரண்டு பாத்திரங்களிலும் நடித்தால், கண்ணன் ரோலை, அன்டர் பிளே செய்வேன். பாரிஸ்டர் கேரக்டரை, ஞாபகத்தில் வைத்து நடிப்பேன். மொத்தத்தில் ஆடியன்ஸ் மனசுல, அந்த கேரக்டரும், படமும் நிற்கணும்...' என்றார். அவரது தொழில் பக்தியை நினைத்து, வியந்து போனேன்.

* ஜெயா "டிவி'யில் ஒளிப்பரப்பாகும், "ஆல்பம்' நிகழ்ச்சியில், நடிகர் பிரபு பேட்டி அளித்தார். சிவாஜி, பிரபு மற்றும் நான் மூவரும் இருந்த படத்தை, அவருக்கு காட்டி அதுபற்றி கேட்டனர். "என் தந்தையைப் பற்றிய விவரங்கள், அவரது நடிப்பு மற்றும் நடிப்பின் நுணுக்கங்கள் பற்றி சொல்ல வேண்டும் என்றால், தயவு செய்து அண்ணன், "ஒய்.ஜி.மகேந்திராவை கேளுங்கள். எங்களுக்கு (ராம்குமார், பிரபு) தெரியாததையும், அவர் சொல்வார். எங்கள் குடும்பத்தில், மூத்த சகோதரர் ஒய்.ஜி.மகேந்திரா...' என்று, குறிப்பிட்டார்.

Russellfcv
17th October 2013, 11:02 AM
நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரன்

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2013,00:00 ist


"கண்ணன் வந்தான்' நாடகத்திலும், கவுரவம் படத்திலும், மாதிரி கோர்ட் சீன் ஒன்று வரும். டிராமாவில், அந்த சீனில், நான் கிடையாது. ஆனால், படத்திற்கு அந்த காட்சி எடுக்கும் போது, "மகேந்திரனும் இந்த காட்சியில் இருக்கட்டும். அவனுக்கு டிராமா முழுவதும், மனப்பாடம். நாம ஏதாவது விட்டாலும், அவன் சொல்வான்...' என்றார் சிவாஜி.

சிவாஜி, தன் வாதத்தை முடிக்கும் போது, நீண்ட ஆங்கில வாக்கியத்தை, ஸ்டைலாக பேசி, "தட் இஸ் ஆல் யுவர் ஆனர்' என்று, முடித்தார். செட்டில் இருந்த அனைவரும், அவரது நடிப்பை, வசன உச்சரிப்பை வியந்து, மெய்மறந்து கை தட்டினர். சிவாஜி என்னை பார்த்தார். செட்டில் இருந்த நாகேஷûம், நானும் மகிழ்ச்சியை காட்ட வில்லை.

எங்கள் இருவரின் தோளிலும், கையை போட்டு, தனியாக அழைத்துச் சென்று, "நீங்க ரசிக்க மாட்டீங்களா?' என்று கேட்டார், கேலியாக.

"நீ சொல்லு' என்றார் நாகேஷ். "இல்ல... நீங்க சொல்லுங்க...' என்றேன் நான். சற்று தயக்கத்துடன், நாகேஷ் சொன்னார்: "கடைசியாக நீங்க பேசின டயலாக்கிலே, ஆங்கில உச்சரிப்பு, சரியாக இல்லை யென்று, நாங்க, "பீல்' பண்றோம்...' என்றார் நாகேஷ்.

எங்களை முறைத்துப் பார்த்தார் சிவாஜி. கவுரவம் படம் தான் எனக்கு, அவரோடு முதல் படம். இதுவே, முதலும், கடைசியுமான படம் ஆகிவிடுமோ, என்ற பயம் வந்து விட்டது.

"ஏன்டா... இதை சொல்லக் கூடாதா?

நான் என்ன கான்வென்ட்டிலா படிச்சேன்! இல்ல, இவங்க அம்மா (ராஷ்மி) எனக்கு பத்மா சேஷாத்ரி, பள்ளியிலே, "அட்மிஷன்' தந்தாங்களா? எனக்கு பழக்கத்துல வந்த, ஆங்கிலத்தை வைத்து பேசினேன்...' என்றார்.

ஒளிப்பதிவாளர் வின்சென்ட்டை கூப்பிட்டு, "இந்த ஷாட்டை, ரீ-டேக் செய்துடுப்பா...' என்றார்.

"அண்ணே, எந்தினா... நன்னாயிட்டு இருக்கு ஷாட்டு...' என்று, மலை யாளம் கலந்த தமிழில் அவர் சொன்னார்.

"என்னுடைய மூவ் மென்ட், நான் நடந்து வந்தது, சரியாக வர வில்லை என்று நினைக் கிறேன். ஒன் மோர் டேக் ப்ளீஸ்...' மீண்டும், அந்த காட்சியை நடித்து, எங்களை நோக்கி, "சரியா' என்கிற மாதிரி பார்த்தார்.

நாங்கள் இருவரும், "தம்ஸ் அப்' பாணியில், கட்டை விரலை உயர்த்தி காண்பித் தோம். 150 படங்களில் நடித்து, மாபெரும் நடிகர் என்று பெயர் வாங்கிய பின்னரும், ஒரு காட்சிக்கு தானே, மீண்டும், ரீ-டேக் கேட்டு நடிக்கும் நடிகரை, உலக அளவில், விரல் விட்டு எண்ணி விடலாம்.

இப்போது சொல்லுங்க, நான் சிவாஜி பித்தனாக இருப்பதில் தவறு இருக்கிறதா...?
அகில இந்திய சிவாஜி மன்றம், கடந்த ஜூலை மாதம், பாசமலர் டிரெயிலர் வெளியீட்டு விழா அழைப்பிதழில், என் பெயரை, "சிவாஜி பித்தன்' என்று போட்டிருந்தனர். நான் சிவாஜி பித்தன் தான் என்பதை, பெருமையாக சொல்லிக் கொள்கிறேன்.

கவுரவம் படத்தின், முதல் நாள் படப்பிடிப்பு. இந்த காட்சி, டிராமாவில் இல்லாதது. அவருக்கு எல்லாமாக இருந்த மகன் போன்ற கண்ணன், அவரை விட்டு பிரிந்து போய் விடுகிறான். இந்நிலையில், அவர், தனக்கு தானே பேசிக் கொள்ளும் காட்சியை, முதலில் எடுத்தனர்.

சிவாஜி வசனங்களை நன்றாக பேசி நடித்தாலும்,"ஏண்டா... ஒரு கட்டபொம்மன், வியட்நாம் வீடு என்றால், பல முறை நடித்த நாடகம். என் கேரக்டர் முழுமையாக தெரியும். எடுத்த எடுப்பிலே, எந்த சீன் வேண்டுமானாலும் நடிக்கலாம். இந்த நாடகத்தை, நான் ஒரே முறை தான் பார்த்திருக்கிறேன். படத்தின் கிளைமேக்சுக்கு முன் வருகிற, ஹெவியான சீனை, முதல் ஷாட்டாக எடுக்குறீங்களே... கேரக்டரின் மூடு, பாவத்திற்குள் நான் வர வேண்டாமா? சிவாஜி கணேசன் என்றால், என்ன வேண்டுமென்றாலும் செய்து விடுவான்... அவன் தலையிலே, பாரத்தை போடலாம் என்று எடுக்குறீங்களா.... எடுங்க எடுங்க. இதை சவாலா எடுத்து, செய்து காண்பிக்கிறேன்...' என்றார்.

கவுரவம் பட ஷூட்டிங்கின் போது, சில நாட்கள், காலையில், பாரிஸ்டர் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுப்பர். மதியம், ஜூனியர் அட்வகேட் கண்ணன் வரும் காட்சிகளை எடுப்பர்.

காலையில்,மேக் - அப் போட போகும் போதே, சிவாஜி கம்பீரமாக, மிடுக்காக போவார். அப்போதிலிருந்தே, அந்த கேரக்டருக்குள் நுழைந்து விடுவார். அதே போல மதியம், மேக்-அப் போட போகும் போது அடக்கமாக, சாந்தமாக இருப்பார். இதை நாகேஷ் கவனித்து, என்னிடம் சொல்வார். நானும், அதை கவனித்து வியந்திருக்கிறேன்.

கவுரவம் படத்தில் வரும், "நீயும், நானுமா' பாடல் காட்சியில், இரு சிவாஜிகளும், அரச உடையில் வருவர்.

இங்கிலாந்து அரசர், ஐந்தாம் ஜார்ஜ் போன்ற தோற்றத்தில், சிவாஜி கம்பீரமாக இருப்பார். அந்த காஸ்ட்யூம் அவருக்கு மிகவும் பிடிக்கும். கவுரவம் படத்தின் விளம்பரங்களில், அந்த தோற்றம் நிறைய உபயோகிக்கப்பட்டது. "அன்னை இல்லம்' வீட்டில், மாடிப்படி ஏறுமிடத்தில், ஜார்ஜ் மன்னன் தோற்றத்திலுள்ள, அவரது, பெரிய படம் மாட்டப்பட்டிருக்கும்.

பாரிஸ்டர் ரஜினிகாந்த் கேரக்டரை எடுக்கும் போது மட்டும், சிவாஜியிடம், ஒரு தனி ஸ்டைல் இருக்கும். இடது கையால் ஒரு சொடுக்கு போட்டு, கேஸ் கட்டை எடுப்பார். பல பக்க வசனங்கள் சொல்ல முடியாத அர்த்தங்களை, அந்த, ஒரு சொடுக்கு, எடுத்துக் காட்டும்.

சென்ற நூற்றாண்டின், மிகச் சிறந்த அறிவாளி என்று, கருதப்படும் ராஜாஜி, சினிமா பார்ப்பதில், விருப்பம் இல்லாதவர். ஆனாலும், சம்பூர்ண ராமாயணம் படத்தை, அவரை பார்க்க வைத்தனர். அப்படத்தில், ஒரு சில காட்சியில், கவுரவ நடிகராக, பரதன் வேடத்தில், சிவாஜி நடித்திருப்பார். ராமன் காட்டுக்கு சென்றதும், வெறிச்சோடியிருக்கும் அயோத்தி நகரத்தின் காட்சி, தன் தாய் கைகேயியை, கோபித்துக் கொள்ளும் காட்சி, ராமரை கூப்பிட, காட்டுக்கு செல்லும் காட்சி என, சில காட்சிகளிலேயே வந்திருந்தாலும், படத்தில் சிவாஜியின், பரதன் பாத்திரம் தான் நிற்கும். படம் பார்த்த பின், ராஜாஜியிடம், படத்தை பற்றிய விமர்சனம் கேட்டனர்.

"பரதனுக்கு என் பாராட்டுகள்' என்று, ஒரே வரியில் கூறினார் ராஜாஜி. அவர், படத்தில், சிவாஜியை பார்க்கவில்லை. பரதனை மட்டும் தான் பார்த்திருக்கிறார்.

சென்னை கமலா தியேட்டர் அதிபர், காலம் சென்ற, வி.என் சிதம்பரம், சிவாஜியின் நெருங்கிய நண்பரும், ரசிகரும் ஆவார். நாங்கள் நடத்தும், சிவாஜி நினைவு நிகழ்ச்சிகளுக்கு, டிக்கெட் வாங்கி வந்து, பார்த்து, ரசிப்பார். அவர், சிவாஜியை, புட்டபர்த்தி அழைத்துச் சென்றார். புட்டபர்த்தி சென்ற போது, பொது நுழைவு வாசல் அருகே, சிறிது நேரம், அவர்களை உட்கார வைத்து, பின், அழைத்து சென்றனர். நீண்ட தூரம் நடக்க வேண்டியிருந்தது. பிரத்யேக வழி வழியாக, உள்ளே செல்ல அனுமதிப்பர் என்று தான், சிதம்பரம் நினைத்திருந்தார். ஆனால், அது நடக்கவில்லை.

புட்டபர்த்தி சாய்பாபாவிடம், இருவரும் சென்ற போது, பாபா தெலுங்கில், "மெயின் நுழைவு வாயிலிலிருந்து, நடக்க வைத்து விட்டேனே என்று, கோபம் தானே உனக்கு... சிவாஜியின் நடிப்பில், ரொம்ப ரசிக்கத் தக்கது, அவருடைய நடை தான் என்று, எல்லாரும் சொன்னாங்க. எனக்கு உன் நடையை பார்க்கணும்ன்னு ஆசை. அதனாலதான், உன்னை இவ்வளவு தூரம் நடக்க வைத்தேன்...' என்றார். சிவாஜிக்கு, தெலுங்கு நன்றாக புரியும். பாபா சொன்னதைக் கேட்டு, நெகிழ்ந்து விட்டார்.

what an avtaar nadigar thilagam is !

vasudevan31355
17th October 2013, 11:05 AM
நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)

நடிகர் திலகத்தின் நாயகிகள் (16) மைனாவதி

(தொடர்-16)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/VTS_05_1VOB_001117049_zps65deac4e.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/VTS_05_1VOB_001117049_zps65deac4e.jpg.html)

நடிகர் திலகத்தின் முதல் நாயகி பண்டரிபாய் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அந்த பண்டரிபாயின் தங்கைதான் இந்தத் தொடரின் நாயகி மைனாவதி. பெரும்பாலும் அதிக பரிச்சயம் இல்லாத நடிகை. ஆனால் கன்னடத் திரையுலகில் கோலோச்சியவர். தன் அக்காவின் சாயலை அப்படியே கொண்டவர். தலைவருடன் நடிக்கும் பெரும் பாக்கியத்தைப் பெற்றவர். நடிகர் திலகத்தின் அபூர்வமான நாயகியர் லிஸ்ட்டில் சேருபவர்.

'சாந்தா சக்கு' என்ற கன்னடப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன இவர் 1956 இல் 'பக்த விஜயா' என்ற கன்னடப் படத்தில் பெரிய ரோலில் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாருடன் நடித்தார். கிட்டத்தட்ட 100 கன்னடப் படங்களுக்கு மேல் நடித்து சாதனை புரிந்தவர்.

பொம்மைக் கல்யாணம், குறவஞ்சி போன்ற படங்களில் தலைவருடன் இணைந்தவர்.

'பொம்மைக் கல்யாணம்' படத்தில் தலைவருடன் மைனாவதி

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/VTS_05_3VOB_000048192_zpsf62698c9.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/VTS_05_3VOB_000048192_zpsf62698c9.jpg.html)

'பொம்மைக் கல்யாண'த்தின் நாயகி ஜமுனா. இரண்டாவது நாயகி மைனாவதி. நடிகர் திலகத்தின் முறைப்பெண் 'கண்ணம்மா' என்ற துடுக்குத்தனமான கேரக்டர். அத்தானைச் சுற்றி சுற்றி வரும் வேடம். சுறுசுறுப்பாகவும், துருதுருவென்றும் வெகுளித்தன வேடத்தை மைனாவதி நன்றாகவே செய்திருப்பார். குள்ளம் இவரது மைனஸ் பாய்ன்ட். குடும்பப்பாங்கான முக அமைப்பைக் கொண்டவர்.

தலைவருடன் கலகலப்பான 'ஆச வச்சேன்... ஆச வச்சேன்' பாடலில் (கிட்டத்தட்ட டூயட் போலத் தான்) கலக்குவார். தலைவர் இப்பாடலில் கொள்ளையோ கொள்ளை அழகு!

ஜமுனா வரதட்சணைக் கொடுமையால் மாமியார் சாந்தகுமாரியிடம் அவஸ்தைப்பட, முறைப் பெண்ணான மைனாவதியை தலைவருக்குக் கட்டி வைக்க சாந்தகுமாரி ப்ளான் போட, இறுதியில் எதுவும் நிறைவேறாமல் ஏமாந்து போகும் முறைப்பெண் பாத்திரம் மைனாவதிக்கு. அழுது வடியாமல் கல கலவென பண்ணியிருப்பது தனிச் சிறப்பு.

'பொம்மைக் கல்யாணம்' படத்தில் 'ஆச வச்சேன் ஆச வச்சேன்' என்று மைனாவதி தலைவர் மேல் ஆசை வைத்து பாடும் இளமைத் துள்ளல் பாடல். (இருவரும் என்ன ஒரு சுறுசுறுப்பு)


http://www.youtube.com/watch?v=NusuMjJc3FI&feature=player_detailpage

அடுத்து 1960-இல் வெளிவந்த 'குறவஞ்சி' படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரி மெயின் ரோலில் நடித்திருந்தாலும் நடிகர் திலகத்தின் ஜோடியாக நடிக்கும் பொன்னான வாய்ப்பை மைனாவதி பெற்றார்.

'குறவஞ்சி' படத்தில் தலைவருடன் மைனாவதி

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/VTS_06_3VOB_000037729_zps83c033ff.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/VTS_06_3VOB_000037729_zps83c033ff.jpg.html)

'குறவஞ்சி' படத்தில் வித்தியாசமான கெட்-அப்பில் மைனாவதி

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/VTS_06_1VOB_002718615_zps093e7a45.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/VTS_06_1VOB_002718615_zps093e7a45.jpg.html)

படம் தொடங்கி முக்கால் மணி நேரத்திற்கு பின் 'பொன்னி' என்ற மீனவ குல பெண்ணாக மைனாவதி 'எந்நாளும் தண்ணியிலே எங்க பொழப்பு' என்ற பாடலில் அறிமுகமாவார். அந்த வேடமும் அவருக்கு மிகப் பொருத்தம்.

அரச குமாரியான சாவித்திரியின் காதலை நிராகரித்து 'பொன்னி' என்ற மீனவ மைனாவதியைக் காதலிப்பார் கதிரவனான நடிகர் திலகம்.

ஒரு கட்டத்தில் கொடுங்கோல் மன்னனின் ஆட்கள் மைனாவதியை கடற்கரையில் துரத்த அங்கே வரும் நடிகர் திலகம் மைனாவதியை காப்பாற்ற அவரை இழுத்துக் கொண்டு ஓடி ஒரு குகையினுள் ஒளிந்து கொள்வார். பல பாழடைந்த சிலைகளின் நடுவே இருவரும் நிற்கையில் நடிகர் திலகம் எதேச்சையாக குகை மேலிருந்து படர்ந்து தொங்கும் ஒரு கொடியைப் பிடித்து இழுக்க, குகையிலிருந்து இருவர் மேலும் வெண் புழுதியாகக் கொட்ட, அதையே சாதகமாக்கி வில்லன் ஆட்கள் தேடுகையில் அங்கிருக்கும் ஜோடி சிலைகளோடு சிலைகளாக புழுதியோடு நடிகர் திலகமும்,மைனாவதியும் போஸ் கொடுத்தபடி நின்று தப்பிக்கும் காட்சி ரசமானது. நல்ல கற்பனை.

இறுதியில் வில்லன்கள் இமயா (ஒ.ஏ.கே.தேவர்), முகாரி (வகாப் காஷ்மீரி) சூழ்ச்சியினால் மன்னன் ஆர்.பாலசுப்ரமணியம் தீர்ப்பின்படி நடிகர் திலகமும், மைனாவதியும் உயிரோடு கல்லறையில் புதைக்கப் படுவார்கள். அதில் நடிகர் திலகம் தப்பித்து மைனாவதியைக் காப்பாற்ற முயல, மைனாவதி கல்லறையிலேயே பிணமாகி விடுவது நெஞ்சை உருக்கும் காட்சி. மைனாவதியின் பிணத்தை மடியில் வைத்து நடிகர் திலகம் கதறுவது இன்னும் நெஞ்சை உருக்கும் காட்சி. மைனாவதி இந்தக் காட்சியில் பரிதாப ஓட்டுக்களை அள்ளிக் கொண்டு போய் விடுவார். இறுதிக் காட்சியில் நடிகர் திலகம் மைனாவதியின் சடலத்தை சோகத்துடன் தூக்கியபடி கடற்கரையை நோக்கி நடக்கும் காட்சி மனதை பிசையும் ஒரு அற்புதக் காட்சி.

'குறவஞ்சி' படத்தின் கிளைமாக்ஸ் காட்சி. மைனாவதியைத் தூக்கியபடி நம் மன்னவர்

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/VTS_06_4VOB_002164495_zpsc7fc3c39.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/VTS_06_4VOB_002164495_zpsc7fc3c39.jpg.html)

இன்னொரு சிறப்பம்சம். 'குறவஞ்சி'யில் அக்காள் பண்டரிபாயும், (இமயாவின் (ஒ.ஏ.கே.தேவர்) மனைவி சித்ரா) தங்கை மைனாவதியும் இணைந்து நடித்திருப்பார்கள். ஆனால் இருவரும் சந்திக்கும் காட்சிகள் கிடையாது.

'குறவஞ்சி' படத்தில் 'காதல் கடல் கரையோரமே' பாடல்.


http://www.youtube.com/watch?v=vDdQaPzAHXI&feature=player_detailpage

முதுமையிலும், இளமையிலும்

http://www.chitraloka.com/images/images1/mynavathi.jpg

மைனாவதி 2012 ஆம் ஆண்டு தனது 78 ஆவது வயதில் மாரடைப்பால் பெங்களூருவில் உயிர் நீத்தார். சில கன்னட டெலிவிஷன் சீரியல்களில் மைனாவதி நடித்துள்ளார். 'நானே பாக்கியவதி' அனுராதா, அன்னபூர்ணா, அம்மா போன்ற சூப்பர் ஹிட் கன்னடப் படங்களில் நடித்துள்ளார். கன்னட உலகின் முடிசூடா நாயகர்கள் ராஜ் குமார், கல்யாண் குமார், உதயகுமார் ஆகியோருடன் ஜோடி சேர்ந்துள்ளார். இவர் நடித்த சில பிரபலமான தமிழ்ப் படங்கள்.

வண்ணக் கிளி
குலதெய்வம்.
ஆரவல்லி.

மைனாவதி நடிப்பில் 1957-இல் வெளியான 'ஆரவல்லி' என்ற படத்தில் மறக்க முடியாத ஜிக்கியின் குரலில் வாழ்நாளெல்லாம் நம்மைக் கட்டிப் போட்டு ஜென்ம ஜென்மத்துக்கும் கிறங்கடிக்கும் பாடல்

இப்பதிவின் சிறப்பு போனஸ் பாடலாக மைனாவதி அவர்களுக்கு செலுத்தும் அஞ்சலிப் பாடலாக இடம் பெறுகிறது.

ஆம்... இதோ!

'சின்னப் பெண்ணான போதிலே
அன்னையிடம் நான் ஒரு நாளிலே'


http://www.youtube.com/watch?v=8T7u0n2aZu4&feature=player_detailpage

(நாயகியர் தொடருவர்)

அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்

RAGHAVENDRA
17th October 2013, 11:36 AM
வாசு சார்
நாயகியர் தொடர் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் தங்களுடைய கடுமையான உழைப்பின் பிரதிபலிப்பாக உள்ளது. இதில் எவ்வளவு சிரமம் உள்ளது என்பதையும் என்னால் யூகிக்க முடிகிறது. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

மைனாவதி ... அதிகம் அறியப் படாதவரென்றாலும் சிறப்பாக நடிக்கக் கூடியவர்களில் ஒருவர். குறவஞ்சியில் ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய சிறந்த நடிப்பு பரிமளிக்கும். தாங்கள் குறிப்பிட்ட அந்தக் குகைக் காட்சியானாலும் சரி, க்ளைமாக்ஸ் காட்சியிலும் சரி ரசிகர்களின் நெஞ்சில் சட்டென்று இடம் பிடித்து விடுவார்.

ஆரவல்லி பாட்டு... அருமையான பின்னணி இசை, ஏ.எம்.ராஜா ஜிக்கியின் மயக்கும் குரல் ... மறக்க முடியாத தமிழ்ப் பாடல்களில் இதுவும் ஒன்று...

பாராட்டுக்கள்.

mr_karthik
17th October 2013, 12:40 PM
டியர் வாசுதேவன் சார்,

'நடிகர்திலகத்தின் திரை நாயகியர்' வரிசையில் அதிகம் பிரபலமில்லாத மைனாவதியைப் பற்றிய தொகுப்பு மிகவும் சுவை. இதுபோன்ற அபூர்வ நடிகர், நடிகையர் பற்றிய விவரங்களையும், காணொளிகளையும் தேடிப்பிடித்து சேகரிப்பது மிக மிக சிரமம். அதை செவ்வனே செய்திருக்கிறீர்கள். பொம்மைக்கல்யாணம் பார்த்ததில்லை.. குறவஞ்சியில் இவரது ரோல் நினைவிருக்கிறது. மோகனப்புன்னகை கிளைமாக்ஸ் பார்த்தபோது, இதேபோன்ற ஒரு காட்சியை நடிகர்திலகத்தின் இன்னொரு படத்தில் பார்த்ததுண்டே என்று யோசித்து யோசித்து பின்னர் அது குறவஞ்சி என்று கண்டுகொண்டேன்.

பாராட்டுக்கள்....

vasudevan31355
17th October 2013, 02:45 PM
கவிஞர்க்கெல்லாம் கவிஞனே!

உன் நினைவு தினத்தில் உன்னை வணங்கி துதிக்கிறோம்.

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash4/431500_384995328236247_1822162545_n.jpg

விளக்கே நீ கொண்ட ஒளி நானே


http://www.youtube.com/watch?v=DwVr1xxpfsE&feature=player_detailpage

vasudevan31355
17th October 2013, 03:02 PM
'பராசக்தி' உதய தினம் 17.10.1952

http://img15.imageshack.us/img15/4167/parasakthi.jpg

http://imageshack.us/a/img571/8365/parashakthidvdripmovie7.pnghttp://img153.imageshack.us/img153/5360/parashakthidvdripmovie9.png
http://img577.imageshack.us/img577/446/parashakthidvdripmovie1.pnghttp://img826.imageshack.us/img826/446/parashakthidvdripmovie1.png
http://img805.imageshack.us/img805/446/parashakthidvdripmovie1.pnghttp://img194.imageshack.us/img194/446/parashakthidvdripmovie1.png

vasudevan31355
17th October 2013, 03:04 PM
http://img33.imageshack.us/img33/1376/parashakthidvdripmovie3.pnghttp://img203.imageshack.us/img203/7738/parashakthidvdripmovie4.png
http://img21.imageshack.us/img21/9757/parashakthidvdripmovie6.pnghttp://img849.imageshack.us/img849/7614/parashakthidvdripmovie8.png
http://img607.imageshack.us/img607/446/parashakthidvdripmovie1.pnghttp://img407.imageshack.us/img407/446/parashakthidvdripmovie1.png
http://img694.imageshack.us/img694/446/parashakthidvdripmovie1.pnghttp://img405.imageshack.us/img405/4483/parashakthidvdripmovie2.png

vasudevan31355
17th October 2013, 03:12 PM
http://img607.imageshack.us/img607/8503/parasakthi00066.pnghttp://img12.imageshack.us/img12/8264/parasakthi00056.png
http://img59.imageshack.us/img59/9116/parashakthi36.jpghttp://img121.imageshack.us/img121/8799/parashakthi52.jpg
http://img838.imageshack.us/img838/5521/parashakthi47.jpghttp://img862.imageshack.us/img862/7286/parashakthi64.jpg

vasudevan31355
17th October 2013, 03:15 PM
http://t1.someimage.com/1m6C8qK.jpghttp://t1.someimage.com/YDppJOO.jpg
http://t1.someimage.com/0mWvb3M.jpghttp://t1.someimage.com/Ns0ZF9H.jpg
http://t1.someimage.com/8i90u5t.jpghttp://t1.someimage.com/sl3hPjx.jpg

Gopal.s
17th October 2013, 03:17 PM
அன்னை பராசக்தியையும், அவள் பெற்றெடுத்த அற்புத பிறவியாம் விழுப்புரம் சின்னையா பிள்ளை கணேச மூர்த்தியையும் போற்றுகிறோம்.

Gopal.s
17th October 2013, 03:20 PM
பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன் படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா
என்பது போன்ற தமிழ் இலக்கிய தத்துவ முத்துக்களை சலித்தெடுத்து, சுலப சினிமா பாடலாக்கி பெயரெடுத்து, இலக்கிய அந்தஸ்தில் உயர்ந்து விட்ட உனக்கு என் சிரம் தாழ்ந்த அஞ்சலி.

vasudevan31355
17th October 2013, 03:26 PM
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2011/Parasakthi00006.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2011/Parasakthi00005.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2011/Parasakthi00004.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2011/Parasakthi00002.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2011/Parasakthi00007.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2011/Parasakthi00009.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2011/Parasakthi00010.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2011/Parasakthi00008.jpg

vasudevan31355
17th October 2013, 03:32 PM
http://ttsnapshot.com/out.php/i18283_vlcsnap-2012-08-01-10h36m15s131.pnghttp://ttsnapshot.com/out.php/i18288_vlcsnap-2012-08-01-10h37m28s101.png
http://ttsnapshot.com/out.php/i18285_vlcsnap-2012-08-01-10h36m49s221.pnghttp://ttsnapshot.com/out.php/i18286_vlcsnap-2012-08-01-10h37m03s105.png
http://ttsnapshot.com/out.php/i18287_vlcsnap-2012-08-01-10h37m11s188.pnghttp://ttsnapshot.com/out.php/i18290_vlcsnap-2012-08-01-10h37m50s68.png
http://ttsnapshot.com/out.php/i18284_vlcsnap-2012-08-01-10h36m32s49.pnghttp://ttsnapshot.com/out.php/i18283_vlcsnap-2012-08-01-10h36m15s131.png

vasudevan31355
17th October 2013, 03:37 PM
http://ttsnapshot.com/out.php/i46111_vlcsnap-2012-12-23-15h14m46s245.pnghttp://ttsnapshot.com/out.php/i46112_vlcsnap-2012-12-23-15h04m26s170.png
http://ttsnapshot.com/out.php/i46114_vlcsnap-2012-12-23-15h06m52s98.pnghttp://ttsnapshot.com/out.php/i46119_vlcsnap-2012-12-23-15h14m25s23.png
http://ttsnapshot.com/out.php/i46118_vlcsnap-2012-12-23-15h12m01s119.pnghttp://ttsnapshot.com/out.php/i46117_vlcsnap-2012-12-23-15h04m11s31.png

vasudevan31355
17th October 2013, 03:44 PM
http://i1.ytimg.com/vi/B4--ARPcRVo/movieposter.jpg?v=4f8c1310

http://i.ytimg.com/vi/SdnOlP94x2g/0.jpghttp://i1.ytimg.com/vi/H2kPbPF7dIE/hqdefault.jpg
http://i1.ytimg.com/vi/KsqfDbJv33U/hqdefault.jpghttp://i1.ytimg.com/vi/4Jh2J1Y-kbU/hqdefault.jpg

vasudevan31355
17th October 2013, 03:46 PM
http://www.inbaminge.com/t/p/Parashakthi/Parashakthi.jpg

IliFiSRurdy
17th October 2013, 04:10 PM
அன்னை பராசக்தியையும், அவள் பெற்றெடுத்த அற்புத பிறவியாம் விழுப்புரம் சின்னையா பிள்ளை கணேச மூர்த்தியையும் போற்றுகிறோம்.

தமிழர்களின்,
இந்தியர்களின்,
உலக சினிமா ரசிகர்களின்
பொற்காலம்
தொடங்கிய நாளாம்
இப்புனித நாளை
போற்றி வணங்குவோம்.

KCSHEKAR
17th October 2013, 04:28 PM
http://www.inbaminge.com/t/p/Parashakthi/Parashakthi.jpg

டியர் வாசுதேவன் சார்,

நாயகிகள் தொடரில் கார்த்திக் சார் குறிப்பிட்டமாதிரி அதிகம் அறியப்படாத மைனாவதி பற்றி அழகாக விவரித்து அதற்கேற்ற புகைப்படங்களையும் அளித்திருக்கிறீர்கள். நன்றி.

தமிழ்த் திரையுலகம் தன்னிகரில்லா தவப் புதல்வனை ஈன்றெடுத்த இந்த பொன்னான நாளை, பராசக்தி பொக்கிஷப் புகைப்படங்களைப் பதிவு செய்து எல்லோரையும் கொண்டாடவைத்த தங்களுக்கு பாராட்டுக்கள், நன்றி.

KCSHEKAR
17th October 2013, 05:12 PM
இன்று கவியரசர் கண்ணதாசன் நினைவு நாள். அவருடைய நினைவைப் போற்றும் எனக்குப் பிடித்த ஒரு முத்தான தத்துவப் பாடல்
http://www.youtube.com/watch?v=H7xlhIaJFSQ

uvausan
17th October 2013, 08:58 PM
Vasu Sir கலக்கறீங்க
Great postings
:smokesmile::-D

uvausan
17th October 2013, 09:11 PM
:-D:smokesmile:

கொடுங்கள்.. பெறுவீர்கள்!....

வாழ்கையில் NT நடந்துகொண்ட முறை :

நடிப்பை மட்டும் கொடுக்கவில்லை , அன்பையும் , சந்தோஷத்தையும் அதுவே பல திரிகள் கடந்து வெற்றியுடன் சென்று கொண்டிருக்கின்றது - அவரிடம் இருந்து கற்று கொள்ளவேண்டியவை இன்னும் எவ்ளவோ !!!--------------------------------------------

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்கத் தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்தப் பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.

அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."

அந்தப் பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்தத் தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.


அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போகத் தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி
எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர்
குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும்
மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?

அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச்
சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.

அடுத்தப் படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதைக் கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம்.மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும்
கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.


எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள்.செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகித் திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்

uvausan
17th October 2013, 09:29 PM
NT shown the way - Part 2

NT எவ்வளுவு அழகாக இரண்டாவது நிலையையும் , முன்றாவது நிலையையும் தனது வாழ்க்கையிலும் , சினிமா துறையிலும் எடுத்து காட்டினார் . முதலாவது நிலை நட் க்கு தெரியாத ஒன்று .

மனிதனின் மூன்று நிலைகள்

.கடும் மழை.ஒருவர் மருத்துவ மனை செல்ல வேண்டும்.எல்லா ஆட்டோவும் நிற்காமல்செல்கின்றன.ஒரு ஆட்டோ டிரைவர் மட்டும் இதுதான் தருணம் என்று முப்பதுரூபாய் தூரத்துக்கு 200 ரூ கேட்கிறார்.அந்த மனிதர் ஆட்டோவில் ஏறி வேறுஒரு இடத்தில் நிறுத்தி ஒரு பாட்டியைக் கைத்தாங்கலாக ஆட்டோவில் ஏற்றிமருத்துவமனை செல்கிறார்.receptionist பாட்டியின் பெயரைக் கேட்க'இவர் என் பாட்டி இல்லை.தெருவில்மயங்கிக் கிடந்தார். உதவும் எண்ணத்தில் அழைத்து வந்தேன் " என்றார்.ஆட்டோ டிரைவர் மனதினுள் "இவ்வளவு நல்ல மனிதரிடம் அநியாயமாகப் பணம் பேசிவிட்டோமே என்று வேதனை அடைகிறார்.வைத்தியம் முடிந்ததும் டிரைவரே பாட்டியைத் தூக்கி ஆட்டோவில் ஏற்றி உரியஇடத்தில் இறக்கி விட்டுப் பணம் வாங்க மறுத்து விடுகிறார்.
மனிதனிடம் மூன்று நிலைகள் உள்ளன.

1சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எவ்வளவு கறக்க முடியுமோ அவ்வளவு கறக்கவேண்டும் என்று அற்பமாக நினைத்தல்

2.தானும் மனிதனாக நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுதல் இரண்டாவது நிலை.

3.பிறரைவிட சற்றேனும் கூடுதலாக நல்ல குணத்தை வெளிப் படுத்த நினைத்தால் மூன்றாம் நிலை.

ஆட்டோ டிரைவரிடம் இந்த மூன்று நிலைகளும் படிப் படியாகக் காணப் படுகின்றன.ஒரு தெளிவான மனமாற்றம் ஏற்படுகிறது. எல்லா மனிதரிலும் இப்படிப்பட்ட ஈர உள்ளம் இருக்கவே செய்கிறது.ஆனால் மனதின் அடி ஆழத்தில் உள்ளது.ஆழ் துளை borewell மூலம் ஈரத்தை வெளிக் கொணர வேண்டியுள்ளது. இந்த borewell போடும் பணியினை NT பல படங்கள் மூலமாக எடுத்துகூறியவர் ( Eg : Irumbu thirai , Avan thaan Manithan etc., ) - எதை விட வேறு என்ன பெருமை நமக்கு இருக்க முடியும் ?
:smokesmile::):)


NT எவ்வளுவு அழகாக இரண்டாவது நிலையையும் , முன்றாவது நிலையையும் தனது வாழ்க்கையிலும் , சினிமா துறையிலும் எடுத்து காட்டினார் . முதலாவது நிலை நட் க்கு தெரியாத ஒன்று .

ஆழ் துளை borewell மூலம் ஈரத்தை வெளிக் கொணர வேண்டியுள்ளது. இந்த borewell போடும் பணியினைச்

RAGHAVENDRA
18th October 2013, 06:43 AM
வாசு சார்

ஹப்ப்ப்ப்பப்பா.........பராசக்தி வெளியீட்டு 62வது ஆண்டை இதை விட சிறப்பாக கொண்டாட முடியாது என்கிற அளவிற்கு அற்புதமாக பிரமிப்பூட்டும் வகையில் கொண்டாடி விட்டீர்கள். 40க்கும் மேற்பட்ட Snapshots .... WOW ..... ஒவ்வொரு ஸ்டில்லுக்கும் மிகவும் சிரமப்பட்டு கடினமாக உழைத்து இந்த ரிசல்டைக் கொண்டு வர வேண்டும். எந்த ஒரு கலைஞனும் விட்டு விடாமல் அனைவரையும் தங்களுடைய பதிவுகளில் கவர் செய்து விட்டீர்கள். பதிவுத் திலகம் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள்.
பாராட்டுக்கள்.. சார்... தொடருங்கள்...

ராகவேந்திரன்

RAGHAVENDRA
18th October 2013, 06:44 AM
ரவி ...
தங்கள் அட்டகாசமான பதிவிற்குப் பாராட்டுக்கள்.

vasudevan31355
18th October 2013, 07:13 AM
டியர் ராகவேந்திரன் சார், கார்த்திக் சார், சந்திரசேகரன் சார், ரவி சார்

நாயகியர் தொடர், பராசக்தி பதிவுகளுக்கான தங்கள் பாராட்டிற்கு என் நெஞ்சார்ந்த நன்றி!

vasudevan31355
18th October 2013, 07:17 AM
இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும்
மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?


அருமை ரவி சார். சத்தியமான வார்த்தைகள். பலருக்கு இது புரிவதில்லை.

அழகான குட்டிக் கதைகள் கூறி நடிகர் திலகத்துடன் அவற்றை ஒப்பீட்டு சிறப்பு சேர்த்து விட்டீர்கள். பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
18th October 2013, 08:38 AM
இன்றைய இந்து தமிழ் நாளிதழில் பி.பி.சி.யின் தொடக்கத்தைப் பற்றிய நினைவு கூறல் வெளிவந்துள்ளது. அதில் நடிகர் திலகத்தின் பி.பி.சி. வானொலி பேட்டி பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/HinduTamilNT181013BBCfw_zpse8519689.jpg

RAGHAVENDRA
18th October 2013, 08:46 AM
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 85வது பிறந்த நாள் விழா, 01.10.2013 அன்று மாலை சென்னை மியூசிக் அகாடெமி அரங்கில் நடைபெற்றது. விழாவில் நெல்லை கண்ணன் அவர்களின் உணர்ச்சி மிக்க உரை நம் பார்வைக்காக. இணையத்தில் முதன் முதலா முழுமையாக. நன்றி யூட்யூப் மற்றும் சிவாஜி பிரபு அறக்கட்டளை.

http://www.youtube.com/watch?v=VJeuHPqUFXA&feature=share&list=UUHZ9TIXjklcLpnIKC2q3h3A

vasudevan31355
18th October 2013, 09:35 AM
டைரக்டர்கள் பாணி

ஒரு ஜாலி பார்வை.

நம் தமிழ்ப்பட இயக்குனர்கள் அனைவரும் அவரவர்களுக்கென்று ஒரு தனிப் பாணியை கடைப் பிடிப்பார்கள். சில விஷயங்களை அவர்களால் விட்டுக் கொடுக்கவே முடியாது. அது படத்திற்கு சிறப்பு சேர்த்தாலும் சரி! படத்தை பஸ்பமாக்கினாலும் சரி. சரி! சில இயக்குனர்களின் பாணிகளைப் பற்றி ஜாலியாகப் பார்ப்போம். இது பொதுவான ஒரு பார்வைதான். நடிகர் திலகங்களின் படங்களும் இதில் சேர்ந்து கொள்ளும். அவர் இல்லாமலா?

கிருஷ்ணன் பஞ்சு:

http://www.sangam.org/2011/10/images/DirectorduoKrishnanonleftandPanjuonright.jpg

பார்ப்பதற்கு கிராமத்து ஏர் உழவர்கள் போல் அப்பாவிகள் போல இருப்பார்கள். பார்த்தால் இயக்குனர்கள் போலவே தெரியாது. ஆனால் கில்லாடிகள். ஹை-கிளாஸ் ரசனை உள்ளவர்கள். உருவத்திற்கும், இயக்ககத்திற்கும் சம்பந்தமே இருக்காது. இவர்களுக்கு ஒளிப்பதிவு நச்சென்று இருக்க வேண்டும். இவர்கள் இயக்கம் படங்களின் காட்சிகள் போட்டோ பிரேம் போல இருக்கும். பராசக்தி ஒன்று போதாதா! அதே போல காட்சிகளின் கோர்வை அட்டகாசமாக இருக்கும். காட்சிகள் தவ்வாது. அதிகமான நடிக நடிகையர்களைக் கையாளுவார்கள். காட்சிகளில் அழுத்தம் கொடுத்து மனதில் ஆழமாகப் பதிய வைப்பதில் கை தேர்ந்த திறமை சாலிகள். படு ஜென்டிலாக படத்தைக் கொண்டு போவார்கள். உயர்ந்த மனிதன் போன்ற சிக்கலான கதையமைப்பு, பாத்திரம் இவைகளை அநாயாசமாகக் கையாளுவார்கள். பாத்திரத்தின் தன்மை கெடாது. நிஜமாகவே உயர்ந்த மனிதர்கள். இந்த நாள் உங்கள் நாள் போல் இன்பமாயில்லையே? அது ஏன்... ஏன்? கிருஷ்ணன் பஞ்சுவே!

ராமண்ணா:

இவர் பாணியே தனி. கமர்ஷியல் பைத்தியம். குடும்பக் கதையை எடுத்துக் கொண்டு ஆக்க்ஷன் பேக்கேஜ் ஆக்குவார். ஆக்ஷன் படங்களில் குடும்பப் பாசத்தை நுழைப்பார். தங்கச் சுரங்கம் ஞாபகத்திற்கு வருமே!

இவரது படங்களில் நீளம் அதிகமாக இருக்கும். கத்தரி வைக்க மாட்டார். கத்தரியும் போட மாட்டார். எப்படியோ ரசிகர்களின் நாடி பார்த்து உட்கார்ந்து ரசிக்க வைத்து விடுவார். செலவுக்கு கொஞ்சமும் அஞ்சாத இயக்குனர். பணத்தை தண்ணீராக செலவழிப்பார். காட்சிகளிலும் பணத்தைப் பறக்க விடுவார். உடைகளில் கூட சில்லறைகளைப் பதிப்பார். அப்போதே நிறைய கலர் படங்களை எடுத்து தள்ளியவர்.

கவர்ச்சிப் பிரியர். ஹீரோயின்களை படு கிளாமராகக் காட்டுவதில் சூரர். (நான்- ஜெயா பிகினி சீன். மூன்றெழுத்து ஸ்ரீவித்யா போட்டில் ஆட்டம். தங்கச்சுரங்கம்- நிர்மலா குளியல்) துணை நடிகைகளை அதிகமாக பயன் படுத்துவார். சண்டைக் காட்சிகள் நிறைய சேர்ப்பார். ஏராளமான நட்சத்திரப் பட்டாளம் உண்டு. ரவிச்சந்திரன் என்றால் இவருக்கு ரசகுல்லா.

இவருக்கு ஒரு தனிப் பாணி உண்டு. ஹீரோயின்களை சேற்றில் மூழ்க வைத்துப் பார்ப்பதில் இவருக்கு தனி சுகம்.(பாரதி) ஹீரோயின்கள் மாத்திரமல்ல. வண்டிகளையும்தான். சொர்க்கம் படத்தின் கிளைமாக்ஸ் சண்டையில் சேற்றில் தான் படமே ஓடும். அது போல நடிகைகளின் மேலே பெயின்ட்டைப் பீய்ச்சிப் பார்பதிலும், பார்க்க வைப்பதிலும் கை தேர்ந்தவர். துப்பாக்கி வழியாக் கூட பெயின்ட்டைப் பாய்ச்ச வைப்பார். (மூன்றெழுத்து) குளியல் சீன கண்டிப்பாக உண்டு. டப்பாங்குத்து ஆட்டம் இல்லாமல் இவர் படம் இருக்காது. கட்டழகு பாப்பா, ஆணாட்டம் பெண்ணாட்டம், இரவில் வந்த குருவிகளா, ராஜா கண்ணு போகாதடி) லாரி, கார், பெட்டி, என்றால் இவருக்கு அல்வா. (பெட்டிக்குள்ளே போட்டடைத்த பெட்டைக் கோழி, போதுமோ இந்த இடம், சொல்லாதே யாரும் கேட்டால், என்னைப் போல் ஒருவன் கிளைமாக்ஸ் சண்டை) ஜெயலிதா மேடம் என்றால் இவருக்கு உயிர். (சக்தி வந்தாளடி) நிறைய படங்களில் பாக்தாத் பேரழகி நாயகி. குலுக்கு ஆட்டப் பைத்தியம். (பொன் மகள் வந்தாள்) அசோகன், மனோகர் இல்லாமல் இவர் படம் பெரும்பாலும் இருக்காது. ரிஸ்க் எடுப்பது இவருக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரி. இல்லையென்றால் திரையுலகின் இரு துருவங்களையும் இணைத்து கூண்டுக்கிளி எடுத்து இரு தரப்பு ரசிகர்களையும் இன்று வரை சிறைக் கூண்டுக்குள் தள்ளியபடி இருப்பாரா!

கே.எஸ். கோபால கிருஷ்ணன்

http://www.top10chennai.com/01_Cinemas/Directors/images/large/1969%27s-60%27s/K.%20S.%20Gopalakrishnan.jpg

பலே கில்லாடி. ஆள்தான் பார்க்க நோஞ்சான். ஆனால் கீர்த்தி பெரிது.

குடும்பம், குழப்பம், விரிசல், உணர்ச்சிப் பிரவாகம் இப்படியாகக் காய் நகர்த்துவதில் கை தேர்ந்தவர். இவர் பள்ளியில் படிக்கும் போது பரீட்சை சமயங்களில் டீச்சரிடம் எக்ஸ்ட்ரா பேப்பர் வாங்கியே அவரை கொன்னு இருப்பார் போல. பக்கம் பக்கமாக வசனங்கள் எழுதுவார். அளவுக்கு அதிகமாக நடிகர்களை எக்ஸ்ப்ரெஷன் கொடுக்க வைப்பார்.

இவருக்குப் பிடித்த நடிகர்கள் 'எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்' வீராசாமி, சாமிக்கண்ணு, ரங்காராவ், தேங்காய் சீனிவாசன், கே.ஆர்.விஜயா.

இப்போதுதான் நீங்கள் ஆழமாக கவனிக்க வேண்டும். இவர் ஒரு குறப் பிரியர். ஆமாம் சார். இவர் படங்களில் பெரும்பாலும் குறவர்கள் டான்ஸ் அல்லது அது தொடர்பான டான்ஸ் இல்லாமல் இருக்காது. அவ்வளவு ஏன்? குறத்தி மகன் என்று முழு நீள அதுவும் கலர்ப்படமாக எடுத்து விட்டாரே! நீர் நிலம் நெருப்பு அப்படிப்பட்ட டைப்தான். ஏன்? தலைவர், பத்மினிக்கு பேசும் தெய்வத்தில் அழகான இதய ஊஞ்சல் ஆடவா பாட்டைக் கொடுத்து பின் இருவரையும் குறவர்களை விட மோசமான டப்பங்குத்து ஆடவைத்து அந்தப் பாட்டைக் கெடுத்தாரே! ஆயாலோ! ஆயாலோ! கண்டவர் கண்ணு படும் செல்லாத்தா.

ஒரு குடும்பத்தை வைத்து அதில் குழப்பம் உண்டாக்க இரு வில்லிகளை (மாமியாரோ, நாத்தனாரோ) வைத்து விடுவார். (அந்தக் காலத்தில் சுந்தரிபாய், தாம்பரம் லலிதா இடைக்காலத்தில் ராஜசுலோச்சனா, சி.ஐ.டி.சகுந்தலா) செக்ஸை லாவகமாகப் புகுத்துவதில் வல்லவர். கே. ஆர். விஜயாவையே நத்தையில் முத்துவில் ஓடும் நதியில் குளிக்க வைத்து ஆடையை ஓட வைத்தவர் ஆயிற்றே. இவரின் ஆஸ்தான நடிகை கே.ஆர்.விஜயா. தமிழ்ப்படங்கள் கலரை நோக்கி ஓடும் போது அடுக்குமல்லி என்ற கருப்பு வெள்ளை, பாலாபிஷேகம் என்ற கருப்பு வெள்ளை படங்களைக் கொடுத்து மாபெரும் வெற்றி அடையச் செய்து அனைவரையும் மிரள வைத்த பேர்வழி. சாமிப் படங்களையும் வெற்றி பெறச் செய்து காட்டியவர். ஆதி பராசக்தி எடுத்து அப்போதே தசாவதாரம் காட்டியவர்.

இவர் ஜெமினியை வைத்து எடுத்த உறவுக்குக் கை கொடுப்போம் படுதோல்வி அடைந்தது. ஆனால் பின்னாளில் விசு இதே கதையை சுட்டு சம்சாரம் அது மின்சாரம் எடுத்து சூப்பர் ஹிட்டானது. இதுதான் விதி. கன்னட உதயசந்திரிகாவை வைத்து சுவாதி நட்சத்திரம் என்ற ஒரு நல்ல படத்தையும் அளித்தவர்.

எப்படியோ! குடும்பக் கதையா? கூப்பிடு கோபாலை (நான் கோபால் கிருஷ்ணனை சொன்னேன்பா....குடும்பக் கதைக்கும் கோபாலுக்கும் என்ன சம்பந்தம்?) என்று சொல்லுமளவிற்கு வெற்றிகளைக் குவித்தவர். படிக்காத பண்ணையார்தான் ஷாமியோவ்.

ஏ.சி.திருலோகசந்தர்.

http://i1.ytimg.com/vi/7_h74wf_UOk/hqdefault.jpg

நம்ம இயக்குனர். கலக்கல் பேர்வழி. அப்போதே M.A. இவர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தால் தலைவர் எழுந்து நிற்பாராம். படிப்புக்கு நடிப்பு கொடுக்கும் மரியாதை.

இவர் எப்படி தெரியுமா? ஏறினால் ரயில். இறங்கினால் ஜெயில். பின்னு பின்னுவென்று பின்னுவார். தங்கை, இருமலர்கள், தெய்வ மகன், திருடன், என்று கலக்கி காக்டெயில் விருந்து படைப்பார். அதே நேரத்தில் அன்பே ஆருயிரே, அன்புள்ள அப்பா என்று தடம் புரள்வார். கொஞ்சம் கத்தரி போட மறந்து விடுவார். இழுவை சில படங்களில் ஜாஸ்தி. இவரும் ஒரு கே.ஆர்.விஜயா பிரியர். ஒன்றிரண்டு சண்டைக் காட்சிகள் வேண்டும் இவருக்கு. தலைவரை சக்கை வேறாக சாறு வேறாகப் பிழிந்து எடுத்து விடுவார். துணிச்சல்காரர். விஜயஸ்ரீயை காபரே ஆட வைத்த இவர் கே.ஆர். விஜயாவையே காபரே டான்ஸ் ஆட வைத்து நம்மை ஓட வைத்த இயக்குனர். இருமலர்களை அருமையாகப் பண்ணி சக்செஸ் ஆக்கினார். தெய்வ மகனைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

(இவரைப் பற்றி ஒரு சமயம் தலைவரிடம் பேசி நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டேன். இவரைப் பற்றி ஏதாவது சொன்னால் தலைவருக்கு கோபம் வந்து விடும்.)

ம்...நிஜமாகவே அவன்தான் மனிதன் இந்த தெய்வ மகன் (வீரத் திருமகன் ஆயிற்றே)! கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா...கிருஷ்ணா.

ஏதோ! என் இஷ்டத்திற்கு எழுதி விட்டேன். பிடித்திருந்தால் சொல்லுங்கள். இன்னும் சில இயக்குநர்களைப் பற்றி தொடர்கிறேன். இல்லையென்றால் கழட்டிக் கொள்கிறேன்.

ஓ.கே.வா.?

uvausan
18th October 2013, 11:58 AM
வாசு சார் - எங்கிருந்து இப்படியெல்லாம் ம் புதிய ideas உங்களுக்கு வருகிறது - எனக்கு ஒரு chinese statement நினைவுக்கு வருகிறது

A great thinker was asked -
What is the meaning of life ?
He replied -
" LIFE itself has no MEANING ,
LIFE is an OPPORTUNITY to create a MEANING"


நீங்கள் ஒரு positive meaning யை இந்த திரிக்கு கொடுத்தவண்ணம் இந்த திரியின் LIFE யை பல படுத்துகிறீர்கள் பன்மன்டங்கு

Ravi
:smokesmile::)

rsubras
18th October 2013, 12:21 PM
அதே நேரத்தில் அன்பே ஆருயிரே, அன்புள்ள அப்பா என்று தடம் புரள்வார்

Not too much sure about Anbe..as i havent seen it much...but whats wrong with Anbulla Appa....

KCSHEKAR
18th October 2013, 12:38 PM
டைரக்டர்கள் பாணி
ஒரு ஜாலி பார்வை.
.?

டியர் வாச்தேவன் சார்,

இயக்குனர்கள் பற்றிய தங்களின் பார்வை மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த நேரத்தில் இயக்குனர்கள் கிருஷ்ணனன் பஞ்சு அவர்களைப் பற்றி நடிகர்திலகம் கூறியவற்றைப் பகிர்ந்துகொள்ள எண்ணுகிறேன்.

1992 ஆம் வருடம் (என்று நினைக்கிறேன்) இதயவேந்தன் சிவாஜி மன்றத்தின் சார்பில் சென்னை ராஜா அண்ணாமலைமன்றத்தில் நடிகர்திலகத்தின் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் நடிகர்திலகமும் கலந்துகொள்ளவேண்டும் என்று வற்புறுத்தி வந்தார்கள். விழா அழைப்பிதழைப் பார்த்தவுடன் நடிகர்திலகம் அதிர்ச்சியடைந்தார். காரணம் அதில் சிறப்பு விருந்தினர் பட்டியலில் டைரக்டர் கிருஷ்ணன் பெயரும் இடம் பெற்றிருந்ததால். என்னைக் கூப்பிட்டு கிருஷ்ணன் அண்ணனுக்குக் கார் அனுப்பபட்டுள்ளதா என்றும், அவரைக் கூப்பிட்டு வர யாராவது செல்கிறார்களா என்பதையும் கவனித்துக்கொள்ளச் சொன்னார். திரு.ராஜசேகரன் உடல்நலக் குறைவு காரணமாக என்னை விழாவிற்கு நடிகர்திலகத்துடன் காரில் செல்லப் பணித்தார். விழா நாளன்று, கிருஷ்ணன் அண்ணன் வருவதற்கு முன் தான் செல்லவேண்டும் என்று கூறி அதன்படியே முன்கூட்டியே சென்று அமர்ந்திருந்த நடிகர்திலகம், டைரக்டர் கிருஷ்ணன் வந்தவுடன் மேடையிலேயே அவருடைய காலில் விழுந்து வணங்கினார். விழா முடிந்து காரில் வரும்போது, கிருஷ்ணன் அவர்களைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசிக்கொண்டே வந்தார். பராசக்தி ஆரம்பத்தில் பஞ்சு அவர்கள் தன்னிடம் கடுமையாக நடந்துகொண்டாலும், கிருஷ்ணன்தான் தன்னை ஊக்கப்படுத்தி, உற்சாகம் தருவார் என்று கூறியதோடு, அடுத்த நாள் காலை என்னை, அப்போது தென்சென்னை மாவட்டத் தலைவராக இருந்த வளர்மதியன் அவர்களைக் கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வரச்சொன்னார். அவர் கூறியபடியே அடுத்த நாள் காலை அன்னை இல்லம் சென்றோம். ரூ.5000/- ஐ எங்களிடம் கொடுத்து, கிருஷ்ணன் அண்ணன் வீட்டிற்குச் சென்று அவருடைய மனைவியிடம் இதைக் கொடுத்துவிட்டு வாருங்கள் என்று கூறினார் நடிகர்திலகம். கிருஷ்ணன் அவர்களிடம் கொடுத்தால் அவர் அதை அனாவசிய செலவு செய்துவிடுவார் என்று அப்படிக் கூறியிருக்கிறார். அதன்படியே டைரக்டர் கிருஷ்ணன் அவர்களின் மனைவியிடம் அந்தப் பணத்தைக் கொடுத்தபோது, நன்றி தெரிவித்ததோடு, அவ்வப்போது கணேசு தான் பண உதவி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

டைரக்டர் கிருஷ்ணன் அவர்கள் மீது மரியாதை வைத்திருந்ததோடு, அவருக்கு வெளியில் தெரியாமல் உதவி செய்துவந்த நடிகர்திலகத்தின் நன்றி மறவா குணத்தை எவ்வாறு போற்றுவது?

இந்தத் தகவலைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

தாங்கள் ஏற்கனவே தாங்கள் பதிவில் குறிப்பிட்ட இயக்குனர்களுடன் நம் நடிகர்திலகம்
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NadigarthilagamwithDirectors/KrishnanPanju005_zps9d03261b.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NadigarthilagamwithDirectors/KrishnanPanju005_zps9d03261b.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NadigarthilagamwithDirectors/KSGopalakrishnan_zps637ef18d.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NadigarthilagamwithDirectors/KSGopalakrishnan_zps637ef18d.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NadigarthilagamwithDirectors/Thrilogachander_zps52fa9c3a.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NadigarthilagamwithDirectors/Thrilogachander_zps52fa9c3a.jpg.html)

vasudevan31355
18th October 2013, 12:38 PM
Not too much sure about Anbe..as i havent seen it much...but whats wrong with Anbulla Appa....

நான் படங்களின் hit basic ஐ சொன்னேன் சார்.

vasudevan31355
18th October 2013, 12:42 PM
ரூ.5000/- ஐ எங்களிடம் கொடுத்து, கிருஷ்ணன் அண்ணன் வீட்டிற்குச் சென்று அவருடைய மனைவியிடம் இதைக் கொடுத்துவிட்டு வாருங்கள் என்று கூறினார் நடிகர்திலகம்.

கிருஷ்ணனுக்கே கொடை கொடுத்த கர்ணன். நன்றி சந்திரசேகரன் சார் தங்களுடைய அருமையான நினைவலைகளுக்கு.