View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 11
Pages :
1
2
3
4
5
6
7
8
9
10
11
[
12]
13
14
15
16
RAGHAVENDRA
2nd October 2013, 08:38 AM
இன்றைய தினமலர் நாளிதழின் ஈபேப்பரிலிருந்து....
http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/DINAMALAR/2013/10/02/Article//011/02_10_2013_011_005.jpg
கோபால் சார்,
தங்கள் மனதை அப்படியே பிரதிபலிக்கிறது இந்த செய்தி...
தங்கள் மனதை மட்டுமல்ல என்னுடையதையும் மற்றும் நம் அனைத்து சிவாஜி ரசிக நண்பர்களுடைய மனதையும்....
இந்த செய்தியில் தகவலில் ஒரு தவறு உள்ளது. நடிகர் திலகம் நயாகரா மேயராக கௌரவிக்கப் பட்டது 1962ல். 1969ல் வெளியான தெய்வமகன் ஆஸ்கர் விருதுதுக்காக சிபாரிசு செய்யப் பட்டது 1970ல்.
RAGHAVENDRA
2nd October 2013, 08:47 AM
நடிகர் திலகத்தின் பிறந்த நாள் நிகழ்ச்சி பற்றிய செய்தி, இன்றைய தினத்தந்தி ஈபேப்பரிலிருந்து
http://www.dinathanthiepaper.in/2102013/FE_0210_MN_09_Cni7826.jpg
Subramaniam Ramajayam
2nd October 2013, 08:57 AM
NT 85th birthday celebrations very grandly staged successfully. no power, no jalras,
ONLY SIVAJI FANS who were/ are prepred to sacrifice any thing participated. still the crowds are growing bigger and bigger year after years. that shows the POWER SIVAJI
HAD /HAVING ALWAYS. GOPAL IS RIGHT BECAUSE OF CONGRESS HEALTH AND MONEY ONLY LOST FOR SIVAJI.
Gopal.s
2nd October 2013, 10:18 AM
இந்திய ஆன்மிகத்தையும், அரசியலையும் அழகாக குழைத்து இந்திய மக்களை தன் வச படுத்தி உலக அளவில் பெயர் பெற்ற உத்தமர் காந்தியை அவர் பிறந்த நாளில் விடுமுறையுடன் நினைவு கூர்வோம்.
பிற்பட்ட வகுப்பில் பிறந்து ஏழை மக்களின் துயரை உணர்ந்து ,முன்னேறி, முதல்வராகி, இலவச கல்வி,சத்துணவு, சமூக சமத்துவம்,தொழில் முன்னேற்றம்,வளர்ச்சி பாதை,அறம் சார்ந்த அரசியல்,இந்திய அரசியல் திருப்பு முனை முடிவுகள் ஆகியவற்றில் முன்னோடியான கர்ம வீரர் காமராஜ் அவர்களை நினைவு நாளில் நினைவு கூர்வோம்.
இந்த இருவருடனும் கடற்கரையில் நின்று, அவர்களையும், தனக்கு சமமான பெருமையுடன் வாழ வைக்கும் உலக மகா நடிகன், இந்திய கலாசாரத்தின் உலக தூதுவன், நாட்டு பற்று,இறைப்பற்று ,நல்லறம் சார்ந்து தன் வாழ்க்கை முறையை அமைத்து வாழ்ந்த நம் நடிப்பு கடவுளுக்கு எனது சாஷ்டாங்க நமஸ்காரம்.
வாழ்க நடிகர்திலகத்தின் புகழ்.
vasudevan31355
2nd October 2013, 10:41 AM
'உலகத்திலே ஒருவன்' என உயர்ந்து நிற்கும் திலகத்தின் 85-ஆவது பிறந்த நாள் விழா.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00439.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00439.jpg.html)
நேற்று அதிகாலை நானும், நண்பர் வெங்கடேசன் அவர்களும் நமது மகானின் பிறந்த நாள் நிகழ்சிகளுக்காக நெய்வேலியிலிருந்து சென்னை 'அன்னை இல்லம்' நோக்கிப் புறப்பட்டோம். சரியாக பத்தரை மணிக்கு அன்னை இல்லம் சென்றோம்.
என்ன இது! திருவிழாவா! அல்லது திருப்பதிக்கு வந்து விட்டோமா என்று நாங்களே எங்களைக் கிள்ளிப் பார்த்துக் கொள்ளும் அளவிற்கு தேர்க்கூட்டம் திருவிழாக் கூட்டம் டாக்டர் செவாலியே சிவாஜி கணேசன் சாலையை ஆக்கிரமித்திருந்தது.
அன்னை இல்லம் அன்பு ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. நடிகர் திலகம் உயிரோடு இருந்திருந்தால் எப்படி அவருடைய பிறந்த நாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுமோ அந்த எழுச்சியை நேற்று காண முடிந்தது. வருடா வருடம் கூட்டம் அதிகரித்துக் கொண்டு வருவது உண்மை என்றாலும் இந்த வருடம் பரமபதம் ஏணி போல ஒரே எக்காக கூட்டம் எகிறி விட்டது.
குறிப்பாக தாய்மார்கள், இளம் பெண்கள், குழந்தைகள் மிகக் கணிசமான எண்ணிக்கையில் வந்த வண்ணம் இருந்தனர். மதியம் இரண்டுமணி வரை கூட்டம் வருவது நிற்கவே இல்லை. குடும்பம் குடும்பமாக தாய்மார்கள் பல ஊர்களிலிருந்து வந்த வண்ணம் இருந்தனர்.
பல ஊர்களிலிருந்தும் ரசிகர்கள் வேன்களிலும், பஸ்களிலும், ரயிலிலும் வந்திருந்தனர். அன்னை இல்லம் முன் போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது. பல சமயம் அந்த சாலையே திரளான கூட்டத்தினால் போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்தது.
எங்கு பார்த்தாலும் தலைவர் புகழ் பாடும் பலவிதமான போஸ்டர் டிசைன்கள் ஒட்டப்பட்டிருந்தது. அன்னை இல்லம் முன் விக்ரம் பிரபு ரசிகர் மன்றம் சார்பாக பெரியவரை வாழ்த்தி மிகப் பெரிய நீண்ட பேனர் வைக்கப் பட்டிருந்தது.
ஒலிபெருக்கியில் தலைவர் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு ரசிகர்கள் உற்சாக கூச்சலிட்டனர். வழக்கம் போல ஒய்.ஜி. மகேந்திரா கரெக்டாக ஆஜர். வந்திருந்த ரசிகர்களை நடிகர் திலகத்தின் மூத்த புதல்வர் ராம்குமார் வரவேற்றார். அனைவரும் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
வீட்டினுள் நடிகர் திலகத்தின் அருமையான புகைப்படம் மலர்களாலும், மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு கோவிலின் கர்ப்பக் கிரஹம் போலக் காட்சியளித்தது. தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து தலைவரை வணங்கி சென்றது மனதைப் பிசைந்தது. பல ரசிகர்கள் கண்களை மூடி தியானம் செய்து தங்கள் தங்கத் தலைவரை உளமாரப் பூஜித்த வண்ணம் இருந்தனர். பலர் கண்களில் அவர்கள் அறியாமலேயே கண்ணீர் பெருகுவதையும் பார்க்க முடிந்தது.
கிராமத்திலிருந்து வந்த மூதாட்டி ஒருவர் ராம்குமார் சாரிடம் தலைவரைப் பற்றி உருகிப் பேசியது அனைவரையும் கண்ணீர் பெருக வைத்தது. வெளி வராந்தாவில் கடவுளர்கள் படத்துக்கு அருகில் தலைவர் படம் வைக்கப்பட்டு அதற்கு வழிபாடு நடந்த வண்ணம் இருந்தது.
வெளியே வீட்டின் முன் ஷாமியானா பந்தல் போடப்பட்டு நாற்காலிகளும் போடப் பட்டிருந்தன. திரு ராம்குமார் அவர்கள் அங்கு அன்னதானத்தை தொடக்கி வைத்தார். அனைவருக்கும் வெஜிடபிள் பிரியாணி பொட்டலங்கள் மற்றும் தக்காளி சாத பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
திரு நாஞ்சில் இன்பா அவர்கள் எழுதிய "தலைவன் இருக்கின்றான்" என்ற தலைவரைப் பற்றிய நூல் வெளியிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. பலர் விரும்பி அந்த நூலை வாங்கிச் சென்றனர். பல ஊர்களிலிருந்தும் வந்திருந்த ரசிகர்கள் தாங்கள் அடித்திருந்த நோட்டீஸ்களை அனைவருக்கும் வழங்கினர்.
அன்பு நண்பர்கள் வாசுதேவன் சார், ராகவேந்திரன் சார், பம்மலார் சார், கிரிஜா மேடம் அனைவரும் வந்திருந்தனர்.
மொத்தத்தில் நேற்று காலையில் இருந்து மதியம் வரை அன்னை இல்லம் நடிகர் திலகத்தின் அன்பு இதயங்களால் திக்கு முக்காடிப் போனது உண்மை.
நடிகர் திலகம் மறைந்து பன்னிரண்டு வருடங்கள் ஓடி விட்ட நிலையில் அந்த இமாலய நடிகரின்பால் அவர்தம் ரசிகர்களும் பொது மக்களும் கொண்டுள்ள என்றும் மாறாத அன்பை நேற்று கண்டபோது மெய் சிலிர்த்துப் போனது.
மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆன போதிலும் அவர் மேல் அனைவரும் குறிப்பாக பெண்கள் கொண்டுள்ள அந்த சகோதர அன்பு வார்த்தைகளில் வடிக்க முடியாதது.
அதே பழமொழிதான். சற்று மாற்றி
யானை இருந்தாலும் ஆயிரம் பொன்.
நடிகர் திலகம் மறைந்தாலும் கோடி பொன்.
வாழ்க அந்த மகானின் புகழ்.
Gopal.s
2nd October 2013, 11:03 AM
http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%A E%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%A E%BF/article5189516.ece?homepage=true
vasudevan31355
2nd October 2013, 11:09 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00507.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00507.jpg.html)
ஈவ்னிங் மியூசிக் அகாடமியில் நடைபெற்ற விழாவைப் பற்றிய பதிவை நம்முடைய முரளி சார் அழகைப் பதிவிட்டு விட்டார். நன்றி முரளி சார்.
விழா நிகழ்சிகளுக்கு உறுதுணையாய் நின்ற நமது ரசிக வேந்தருக்கும் மனமார்ந்த நன்றி!
அதே போல நமது அன்பு ஹப்பர்கள் முரளி சார், ராகவேந்திரன் சார், பம்மலார் சார், வாசுதேவன் சார், ராதாகிருஷ்ணன் சார், சேலத்திலிருந்து விழா நிகழ்ச்சிக்கு வந்திருந்த நம் பாலா சார், பார்த்தசாரதி சார், மற்றும் அன்பு நண்பர் ஸ்ரீனிவாசன் சார் அனைவருடனும் பேசி மகிழ்ந்தது மன நிறைவாக இருந்தது.
அனைவருக்கும் நன்றிகள்.
அதே போல நமது அன்புச் சகோதரி கிரிஜா மேடம் அவர்கள் எனக்கும், நமது நண்பர்களுக்கும் இலவச அனுமதி நுழைவுச் சீட்டினைத் தந்து பேருதவி புரிந்தார்கள்.
கிரிஜா மேடம்,
தங்களுக்கு அனைவர் சார்பிலும் என்னுடைய மனமார்ந்த நன்றி!
நிகழ்ச்சியில் இதய வேந்தன் சிவாஜி மன்றம் சார்பில் அனைவருக்கும் நடிகர் திலகம் புகைப்படமிட்ட காலண்டர்கள் வழங்கப் பட்டது. மியூசிக் அகாடமி நான்கு சக்கர வாகனங்களால் நிரம்பி வழிந்தது. விழா முடிந்ததும் போக்குவரத்து நெரிசல் குறைய அரை மணி நேரத்துக்கும் மேல் ஆனது.
நடிகர் திலகத்தின் அன்பு நண்பர் இலங்கை வானொலி முன்னாள் அறிவிப்பாளர் திரு பி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்து கண்டு களித்தார்.
பல்வேறு அலுவல்களுக்கு இடையேயும் நம் பார்த்தசாரதி சார், வாசுதேவன் சார் வந்திருந்தது மிக்க சந்தோஷம் அளித்தது.
(வாசுதேவன் சார், ஜாலியான கம்பெனிக்கு நன்றி!)
அன்பு பம்மலார் சார் நமது தலைவரின் புகழை தரணி எங்கும் பாட வரும் மலர் மாலை புத்தக தயாரிப்பில் பிஸியாக இருந்தார். மலர் மாலை மாபெரும் வெற்றியடையும் என்பதை சொல்லவும் வேண்டுமோ! வாழ்த்துக்கள் பம்மலாரே!
ராகவேந்திரன் சார் திரு ஒய்.ஜி. மகேந்திரா தினமலரில் எழுதும் தலைவரின் தொடருக்காக அந்நாளிதழ் வெளியிட்டிருந்த விளம்பரப் பக்கத்தை பல நூறு பிரதிகள் எடுத்து விழாவிற்கு வந்திருந்தோர்க்கு அளிக்க ஏற்பாடு செய்திருந்தார். அவருக்கும் மனமார்ந்த நன்றி!
நேரமின்மை காரணமாக முரளி சாரிடம் அதிகம் பேச முடியாதது பெரிய குறை எனக்கு. முரளி சார், அடுத்த முறை நிறைய டைம் எனக்காக ஒதுக்குங்கள்.
மொத்தத்தில் மன நிறைவான விழாவில் பங்கு பெற்று மனமில்லாமல் நம் நண்பர்களைப் பிரிந்து வந்தேன்.
vasudevan31355
2nd October 2013, 11:14 AM
இனி தலைவர் புகழ்பாடும் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்கள்.
என் காமிராவில் சிக்கியவை
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00522.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00522.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00523.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00523.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00506.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00506.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00504.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00504.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00503.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00503.jpg.html)
vasudevan31355
2nd October 2013, 11:16 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00497.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00497.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00496.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00496.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00495.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00495.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00482.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00482.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00481.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00481.jpg.html)
vasudevan31355
2nd October 2013, 11:17 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00479.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00479.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00478.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00478.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00477.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00477.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00476.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00476.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00472.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00472.jpg.html)
vasudevan31355
2nd October 2013, 11:18 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00471.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00471.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00469.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00469.jpg.html)
உற்சாகக் கூக்குரலிடும் இளைஞர்
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00468.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00468.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00467.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00467.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00466.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00466.jpg.html)
vasudevan31355
2nd October 2013, 11:20 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00461.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00461.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00460.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00460.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00452.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00452.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00451.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00451.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00450.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00450.jpg.html)
vasudevan31355
2nd October 2013, 11:21 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00449.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00449.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00448.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00448.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00447.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00447.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00444.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00444.jpg.html)
vasudevan31355
2nd October 2013, 11:23 AM
அலைகடலென வந்திருந்த கூட்டத்தினர்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00440.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00440.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00443.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00443.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00474.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00474.jpg.html)
புத்தக விற்பனை
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00486.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00486.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00487.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00487.jpg.html)
vasudevan31355
2nd October 2013, 11:25 AM
அன்னதானம் வழங்கப்படுகிறது
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00489.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00489.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00492.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00492.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00498.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00498.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00500.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00500.jpg.html)
vasudevan31355
2nd October 2013, 11:27 AM
மாலை மியூசிக் அகாடமிக்கு வந்திருந்த வாகனங்களின் அணிவகுப்பு
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00508.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00508.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00509.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00509.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00511.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00511.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00512.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00512.jpg.html)
vasudevan31355
2nd October 2013, 11:28 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00510.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00510.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00511.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00511.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00512.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00512.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00514.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00514.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00518.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00518.jpg.html)
vasudevan31355
2nd October 2013, 11:29 AM
வேனின் சைடில் தலைவர் போஸ்டர்ஸ்
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00521.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00521.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00520.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00520.jpg.html)
vasudevan31355
2nd October 2013, 12:34 PM
விரைவில் வருகிறது நடிகர் திலகத்தின் எவர்க்ரீன் மூவி
http://www.dinathanthiepaper.in/1102013%5CMDSN425256-MDS-M.jpg
vasudevan31355
2nd October 2013, 12:38 PM
நடிகர் திலகம் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் குறித்து வசந்த் தொலைகாட்சி நேற்று தினத்தந்தியில் அளித்திருந்த விளம்பரம்.
http://www.dinathanthiepaper.in/1102013%5CMDSG522244-M.jpg
vasudevan31355
2nd October 2013, 12:47 PM
அதிவிரைவில் பெங்களூருவில் சௌத்ரியின் ஆளுமை ஆரம்பம்.
http://imageshack.us/a/img29/4783/dnv5.jpg
http://imageshack.us/a/img835/2954/wtu2.jpg
vasudevan31355
2nd October 2013, 12:52 PM
NADIGAR THILAGAM 85TH BIRTHDAY CELEBRATIONS
http://behindwoods.com/tamil-movies/event-photos-pictures-stills/nadigar-thilagam-85th-birthday-celebrations/nadigar-thilagam-85th-birthday-celebrations-stills-photos-pictures-index-1.html
http://behindwoods.com/tamil-movies/event-photos-pictures-stills/nadigar-thilagam-85th-birthday-celebrations/nadigar-thilagam-85th-birthday-celebrations-stills-photos-pictures-pictures-75.jpg
http://behindwoods.com/tamil-movies/event-photos-pictures-stills/nadigar-thilagam-85th-birthday-celebrations/nadigar-thilagam-85th-birthday-celebrations-stills-photos-pictures-pictures-77.jpg
http://behindwoods.com/tamil-movies/event-photos-pictures-stills/nadigar-thilagam-85th-birthday-celebrations/nadigar-thilagam-85th-birthday-celebrations-stills-photos-pictures-pictures-54.jpg
vasudevan31355
2nd October 2013, 12:54 PM
http://www.kollytalk.com/stills/nadigar-thilagam-sivaji-ganesan-85th-birth-anniversary-celebration-photos-115421.html
vasudevan31355
2nd October 2013, 12:58 PM
வெற்றிநடை போடுகிறது சென்னை மகாலஷ்மியில். (நன்றி சுப்பு சார்.)
https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/1235376_4725272429497_456845338_n.jpg
https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/1233004_648659855158987_1639112620_o.jpg
https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-prn2/1294484_648657495159223_429766411_o.jpg
vasudevan31355
2nd October 2013, 01:01 PM
http://www.nthwall.com/ta/1000013711
http://www.kalakkalcinema.com/tamil_events_list.php?id=5684
RAGHAVENDRA
2nd October 2013, 01:38 PM
http://www.dinakaran.com/data1/DAanmeegam/Tamil-Daily-News-Paper_54318964482.jpg
வாசு சார்
முதலில் உங்களுக்குத் திருஷ்டி சுற்றிப் போட வேண்டும். நேற்று இரவு கிட்டத் தட்ட 9.30 மணி வரை நம்முடன் இருந்து விட்டுக் கிளம்பினீர்கள். எப்படிப் பார்த்தாலும் அதிகாலையில் தான் வீடு போய்ச் சேர்ந்திருப்பீர்கள். நிச்சயம் ஓய்வு எடுத்திருப்பது ஐயம் தான். ஏனென்றால் காலையிலிருந்தே தங்களின் பதிவுகள் தங்களுடைய கடினமான உழைப்பின் சின்னமாய் ஒளி வீசுகின்றன. நிழற்படங்களை தரவேற்றுவது, அவற்றிற்கு விளக்கம் தருவது என ஒரு பக்கம், விழா நிகழ்ச்சிகளின் விவரங்களுக்கான பதிவுகள் ஒரு பக்கம், தற்போது வெற்றிகரமாய் ஓடிக் கொண்டிருக்கும் நான் வாழ வைப்பேன் மற்றும் நேற்றைய தினத்தந்தியில் இடம் பெற்ற தங்க சுரங்கம் விளம்பரத்தைத் தேடிப் பிடித்து தருவது ஒரு பக்கம், என மூச்சு முட்டும் அளவிற்கு நம் நண்பர்களுக்காகத் தங்கள் பொன்னான நேரம், உழைப்பு, திறமை அனைத்தையும் அர்ப்பணித்துள்ளீர்கள்.
இதைக் குறிப்பிட்டுச் சொல்லக் காரணம், நேற்று காலையில் தங்கள் இல்லத்திலிருந்து கிளம்பி இது வரை தாங்கள் உறங்கி யிருக்க மாட்டீர்கள் என நான் எண்ணுகிறேன். அதுவும் குறிப்பாக நேற்று நாள் முழுக்க அன்னை இல்லத்திலும் பின்னர் மாலை விழா வளாகத்திலும் என பகலிலும் தாங்கள் செலவழித்த காரணத்தால் இதுவரை தாங்கள் உறங்கியிருக்க மாட்டீர்கள் என்பதே என் அனுமானம்.
நாம் எண்ணியது போல் ஒவ்வொரு ஆண்டும் வழக்கத்தை விட அதிகமாக ரசிகர்களின் வருகை அன்னை இல்லத்தில் அதிகமாகிக் கொண்டே போகிறது எனச் சொல்வதே ஒரு வழக்கமாகி விட்டது போல் தோன்றுகிறது. குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாய் ரசிகர்கள் வந்திருந்தது ஒரு புறம் என்றால் நிறைய இளைய தலைமுறையினரை அன்னை இல்லத்தில் பார்த்தது மகிழ்வூட்டியது. காலங் கடந்து நிற்கும் காவிய நாயகன், காலத்தை வென்ற சரித்திர நாயகன், நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் தாக்கம் தலைமுறைகளுக்கு அப்பாற்பட்டது என்பதையே இது நிரூபித்தது.
அதே போல் கார்களின் அணிவகுப்பு, இது ஒரு மாநாடு என்பது போன்று தான் மாலையில் தோற்றமளித்தது. அரங்கினுள் இவ்வளவு கூட்டம் நிரம்பி வழிந்து வெளியிலும் பலர் காத்திருந்தனர் என்பதை அறியும் போது இரு ஆலோசனைகள் தோன்றியன.
1. இதை விட சற்று பெரிய அரங்கில் விழாவை நடத்த வேண்டும்.
2. அல்லது அரங்கிற்கு வெளியே தொலைக்காட்சிப் பெட்டிகள் வைத்து நிகழ்ச்சியினை ஒளிபரப்பச் செய்ய வேண்டும்.
தந்தையைப் போலவே தனயனும் தீர்க்க தரிசி என்பதைப் போல் நம்முடைய நடிகர் திலகம் திரைப்படத் திறநாய்வு அமைப்பு உறுப்பினர்களுக்கு முன் கூட்டியே இருக்கை எண்களோடு அழைப்பிதழ் அனுப்பியது எவ்வளவு பெரிய உதவி என்பதை நேற்று கண்ணாரக் கண்டோம். இதற்காக நமது அன்புச் சகோதரர் ராம்குமார் அவர்களுக்கு நமது உளமார்ந்த நன்றிகள்.
வாசு சார், தொடரட்டும் தங்கள் தொண்டு. உடல் நலத்தையும் பேணவும், தேவையான ஓய்வு எடுத்துக் கொள்ளவும்.
vasudevan31355
2nd October 2013, 01:49 PM
பெருந்தலைவரின் நினைவு தினம்.
உலகப் பெரு நடிகரும், உலகப் பெருந்தலைவரும்.
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Kamarajar6.jpg
http://farm9.staticflickr.com/8497/8376169744_de8870d590_b.jpg
vasudevan31355
2nd October 2013, 01:56 PM
Thanks Ponnusamychandran
http://i44.photobucket.com/albums/f11/ponnusamychandran/Line%20drawing/Shivaji.jpg (http://s44.photobucket.com/user/ponnusamychandran/media/Line%20drawing/Shivaji.jpg.html)
uvausan
2nd October 2013, 02:23 PM
வாசு சார் , அபாரம்- எப்படி புகழ்வது என்றே தெரியவிலை - அபாரமான உழைப்பு , எல்லா புகை படங்களும் அருமை - நன்றி பல .
Ravi :smokesmile::-D
Gopal.s
2nd October 2013, 02:36 PM
Vasu, Thanks for very great updates. I can see it from Vietnam what exactly is the Grandness,Magnitude and enthusiasm of the people thru your exhibits.
Gopal.s
2nd October 2013, 02:40 PM
http://www.youtube.com/watch?v=BfjeLTkwt0g
Gopal.s
2nd October 2013, 02:46 PM
http://www.youtube.com/watch?v=BfjeLTkwt0g
Gopal.s
2nd October 2013, 02:54 PM
http://www.youtube.com/watch?v=TbHsgmSCglo
Gopal.s
2nd October 2013, 03:04 PM
நான் வாழ வைப்பேன் படம் மகாலட்சுமியில் வசூல் புரட்சி நடத்தி நமது நண்பரை நன்கு வாழ வைத்து புதிய சாதனை படைக்கிறது. விவரம் விரைவில்....
sankara1970
2nd October 2013, 03:37 PM
டியர் ராகவேந்திர சார், முரளி சார்
நேற்று மியூசிக் அகாடமி "சிவாஜி பிறந்தநாள்" நிகழ்ச்சி பிரமண்டமஹா இருந்ததாக என் அப்பா சொன்னார். மெலும் அவர் சொன்னது:
1. எதிர்பார்க்காத அளவு மக்கள் கூட்டம்
2. ஏகப்பட்ட கார்களில் நம் சிவாஜி மன்ற ரசிகர்கள் வைத்திருந்தனர்
3. அந்த ஏரியா உள்ளே நுழைய மிக சிரம பட வேண்டியிருந்தது
4. எல்லோரும் அமர இருக்கை என்னுடன் அழைபிதழ் அனுப்பி(தேங்க்ஸ் போர் பர்சனல் கேர்) இருந்தது சிறப்பு
5. நிகழ்ச்சி மிக பிரமாண்டம்
என்னால் இங்கிருந்த படி, இரவில் வசந்த் டிவி யில் நம் சிவாஜி முன்பு பேசிய நேர்காணலின் சில தொகுப்புகளை காண நேர்ந்தது.
அதில் அவர் தன தாய்க்கு அடுதபடியஹா, தன்னை திரை உலகுக்கு அறிமுக படுத்திய பெருமாள் அவர்களை தானும்
தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் போற்றுவதாக குறிப்பிட்டார்
uvausan
2nd October 2013, 03:54 PM
Dear Ragavendra /Gopal sirs
உங்கள் பதிவுகள் அருமை , உங்கள் குணம் - அடுத்தவர்களை , அவர்களின் திறமையை உடனே பாராட்டும் எண்ணம் மிகவும் பெருமைப்பட வைக்கின்றது - இந்த திரியில் என்னை பங்கேற்க தூண்டிவிட்டது , உங்களின் தீவிர NT பக்தி , வாசுவின் அருமையான தமிழ் நடை , முரளியின் அசராத உழைப்பு , கோபாலின் deep rooted passionate R&D on NT , கார்த்திக்கின் எழுத்துக்கள் , கண்படின் பதிவுகள் , நட் 360 யின் உழைப்பு, கக் சிரின் அயராத உழைப்பு , சின்ன கண்ணனின் நகைச்சுவை கலந்த மென்மையான பதிவுகள், நம் அன்பின் மொத படைப்பு Pammalar அண்ட் சாரதா மேடம் ( இன்னும் சில மேதைகளை விட்டிருந்தால் மன்னிக்கவும்) -NT திரி யின் புகழ் ,உண்மையான , நிரூபிக்கப்பட்ட ஆவணங்கள் வேறு எந்த திரியுலும் இல்லை , வரபோவதும் இல்லை - என்ன பக்தி அண்ட் என்ன உழைப்பு !!
இப்படி வேகமாக போகும் திரியில் வேண்டாமே சார் Speed Breakers , உள் பூசல் – எல்லோருடிய எண்ணமும் NT யை பற்றி இருக்கும் போது ஏன் இந்த war of words ?
ஒரு இரண்டு பதிவுக்குள் இப்படி ஒரு அட்வைஸ் ஆ ??? :twisted:
தயுவு செய்து என்னை தவறாக எண்ணவேண்டாம் - இந்த திரி வேகமாக போகவேண்டும் & எல்லோருடிய உழைப்பும் அவசியம் - யாரும் விரோதிகள் இல்லை NT யை தப்பாக சொல்பவர்களை தவிர, இந்த பேராசையில் தான் எழுதிகிறேன் - இன்னும் பலர் இந்த திரிக்கு வந்து பெருமை சேர்ப்பார்கள் , அந்த நாள் வெகுதூரம் இல்லை - அருமையாக எழுதுவோம் for அடுத்த generation , அன்புடன் பழகுவோம் , எதிரிகளை ஓட வைப்போம் , சர்ச்சை தூண்டும் வார்த்தைகளுக்கு விடை கொடுப்போம் -
Shall be grateful if anyone compiles the list of contact nos , e mails of all the Veterans of this hub ( I can do this if I get the details from each one of you) , சில முரண்பாடான பதிவுகளை discuss செய்துவிட்டு போஸ்ட் பண்ணலாம் - எனது சிறிய வேண்டுகோளுக்கு செவி கொடுத்ததிற்கு மிகவும் நன்றி.
எதாவது அனுபவத்துக்கு மீறி எழுதிருந்தால் மன்னிக்கவும்- இந்த திரிக்கு மிக பெரிய பெருமை சேர்க்கும் நீங்கள் இருவரும் ஒன்றுபட்டால் அந்த நாள் ஒரு இனிய நாள் அதுவே நாங்கள் எல்லோரும் வேண்டும் நாள்.
ஏன் அந்த இனிய நாள் இன்றாக இருக்ககூடாது ?
நன்றி - அன்புடன் ரவி
:smokesmile::smile2:
Gopal.s
2nd October 2013, 04:06 PM
Mr.Ravi,
உங்கள் யோசனைக்கு மிக மிக நன்றி சார். மிக சிறந்த பதிவு உங்களுடையது. நான் சொல்வது என்னவென்றால்,தமிழ் நாடே நடிகர்திலகத்தின் ரசிகர்களை கொண்டது. இதில் மற்ற கட்சிகளை சார்ந்தவர்கள்,மற்ற நடிகர்களை ரசிப்பவர்களும் அடங்குவர். நாம் எல்லோரையும் அணைத்து போய் அவர் புகழை பரப்பலாமே? அனாவசிய விமர்சனங்களை தவிர்க்கலாமே? அவருடைய உன்னத காவியங்களை இன்னும் பெருமை படுத்தி,அதன் அருமையை எல்லோரும் உணர செய்யலாமே?இதுவே எனது கட்சி.நடிகர்திலகத்தை போலவே அவர் பக்தனான எனக்கும் வாழ்க்கையில் நடிக்கவோ,தமிழ் நாட்டு பாணியில் அரசியல் பண்ணவோ தெரியாது.
நானும்,ராகவேந்தர் சாரும் நண்பர்களே. முரண்பாடு ,எங்கள் நெருக்கத்தை அதிகமாக்கியே உள்ளது.இது திரியை எந்த விதத்திலும் பாதிக்காது.கவலை கொள்ளாதீர்கள்.
uvausan
2nd October 2013, 04:32 PM
Dear Kartik sir
என்னுடிய "appeal " பதிவில்
உங்கள் பெயரை தமிழில் தவறாக உச்சரிததற்கு மன்னிக்கவும்
அன்புடன் ரவி
uvausan
2nd October 2013, 04:56 PM
Dear Gopalji
many thanks for your instant response . I derive lots of energy/ positive vibrations in visiting this thread and that helps me to unwind my stress in my job front - there also we are fighting against many uncertainties and building an infrastructure facility that too on public private partnership basis in India is very challenging as there is no a single window concept in approvals and clearances . When we return to thread , we find this place is not different either. Very fast followed by speed breakers , followed by some intruders' provoking comments and again picks up the speed and again emotional exchange of words and it goes on and becomes a vicious circle - though our intention is too good , the world is unfortunately vouching our actions only - that is why I appealed to both of you being stalwarts in this thread to set a positive tone and direction to readers of this great hub being built by brick by brick . Today we stand tall because of people like you , Ragavendra , Vasu , kartik , Murali , Pammalar ,Joe ,ganpat , chinnakannan, NT 360 . Parthasarathy and so many good hearted souls in this hub taking NT's fame to global . I took some privilege in writing to you and Mr Ragavendra sir in the best interest of new comers like us kindly don' t mistake me - kind regards
RAGHAVENDRA
2nd October 2013, 05:41 PM
Dear Ravi,
தங்களுக்கும் சரி, மற்ற நண்பர்களுக்கும் சரி என் பணிவான நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கோபாலும் நானும் கொள்கையைப் பொறுத்த வரையில் இரு துருவங்களாகத் தான் இருப்பதாகத் தெரிகிறது. என்றாலும் அதற்காக சண்டையெல்லாம் கிடையாது.
என்னைப் பொறுத்த வரையில் நடிகர் திலகத்தின் ரசிகர்களில் நான் தீவிரமாக இருப்பவன். அவரை நடிகர் என்கிற வட்டத்திற்குள் அடக்காமல் ஒரு சிறந்த தேசியவாதியாக, தமிழகத்தின் சிறந்த தலைவராக எண்ணிப் போற்றுகிறவன். அவருடைய கஷ்டங்களை அவருடைய உழைப்பை சிறு வயதிலேயே பார்த்தவன், காங்கிரஸை விட்டு வெளியே வந்த போது உடன் இரவு பகலாக தொகுதியில் சுற்றிச் சுற்றி உழைத்தவன், அதனைப் பெருமையுடன் எண்ணி மகிழ்பவன். மற்ற எந்தத் தலைவரை விட பல மடங்கு அதிக தகுதி வாய்ந்த தலைவராக அவரைத் தான் நான் கருதுகிறேன். நேர்மையின் சின்னமாக உண்மையாக வாழ்ந்து காட்டியவர், வெறும் வாய் ஜாலத்திற்காக அல்ல. தேர்தலில் தோல்வியடைந்து விட்டார் என்பதற்காக அவரை அரசியலில் இருந்து ஒதுக்கிப் பார்க்க முடியாது. ஒரு தலைமுறையையே தேசியவாதியாக, தேச பக்தனாக வளர்த்து விட்டவர் அவர். வாழ்க்கையிலும் அதை செயல் படுத்தினார். அவருக்காக இன்றும் ஏராளமான ரசிகர்கள் எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் உழைத்து வருகின்றனர். நம்முடைய சக்தியினை அதுவும் செயல் வடிவம் தந்தால் பல திருப்புமுனைகளை வரலாற்றில் ஏற்படுத்தக் கூடிய வலிமை வாய்ந்த சக்தியினை எதிர்காலத் தலைமுறைக்கும் அரசியல் தூய்மைக்கும் பலனளிக்கும் வகையில் பயன் படுத்த வேண்டும் என்பதே என் ஆவல்.
அரசியல் வேண்டாம் என்று சொல்பவர்கள் இருப்பார்கள். அதற்காக வேண்டும் என்று சொல்பவர்களை தவறாக சித்தரிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. இன்றைய நிலைமையில் அரசியலில் நேர்மையாளர்களும் நல்லவர்களும் வராமல் இருப்பதற்கு காரணமே இந்த மேம்போக்கான வாதங்கள். அரசியலுக்கு லாயக்கில்லை என்கிற ஒரு சொற்றொடர், ஒரு தேசத்திற்கே நன்மை ஏற்படுவதற்கு தடைக்கல்லாக இருப்பதை மக்கள் உணர வேண்டும். இந்த தடைக்கல்லை உடைத்தெறிந்து நல்லவர்களையும் நேர்மையாளர்களையும் இரு கரம் கூப்பி வரவேற்று உற்சாகப் படுத்தி ஆதரவளித்தால் தான் அரசியலில் தூய்மையையும் நேர்மையையும் நாம் எதிர்பார்க்க முடியும்.
அதற்காக நான் தற்போது எந்த இயக்கத்தையும் ஆதரிக்கச் சொல்ல வில்லையே. யாரையாவது குறிப்பிட்டுச் சொன்னால் அப்போது என்னை யாரும் சுட்டிக் காட்டலாம். கண்ணுக்கெட்டிய தூரத்தில் யாராவது தென்பட்டால், அதுவும் நடிகர் திலகத்தை தலைவராக ஏற்று அவர் வழி நடப்பதாக உறுதி கொண்டு அதனை நடைமுறையும் படுத்தினால் அப்போது இந்த சக்தி அதற்கு பயன் படட்டுமே. காரணம் நடிகர் திலகத்தைத் தலைவராக ஏற்றுக் கொள்பவர் நிச்சயம் அவருடைய கொள்கைகளையும் தத்துவங்களையும் ஏற்று செயல் படுத்துவார் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை.
இது தான் என் நிலைப்பாடு.
இதில் எனக்கு யாருமே ஆதரவு தரவில்லையென்றாலும் நான் அதைப் பற்றிக் கவலைப் பட மாட்டேன். தனியாக என்றாலும் கூட என்னுடைய எண்ணம் நிச்சயம் இங்கே கருத்தாக பிரதி பலித்துக் கொண்டிருக்கும்.
anasiuvawoeh
2nd October 2013, 07:20 PM
Dear Vasudevan Sir,I could not find a suiable word to appreciate your coverage of NT'S birthday celebrations.Though all of us have same affection towards NT,people like me have limitations to take part very actively.You have done great thing for people like us.Thanks/Regards
mr_karthik
2nd October 2013, 07:26 PM
டியர் முரளி சார்,
நேற்று மியூஸிக் அகாடமி அரங்கில் நடைபெற்ற நடிகர்திலகத்தின் பிறந்த நாள் நிகழ்ச்சி பற்றிய தங்கள் விவரமான பதிவு (வழக்கம்போல) மிக மிக அருமை. எளிய நடையில் அதே சமயம் அனைத்தையும் முழுவதுமாக கவர் செய்யும் விதத்தில் அமைந்திருந்தது. நீங்கள் சொன்னதுபோல தமிழ்க்கடல் திரு. நெல்லை கண்ணன் அவர்களின் உரையை எழுத்தில் வடித்து சுவையூட்டுவது கடினம். அதை நேரில் கண்டு, அல்லது கேட்டு அனுபவிக்க வேண்டும்.
தங்கள் வனவாசத்தின் இடையே மறவாமல் வந்து பதித்தமைக்கு மிக்க நன்றி. இதற்காகவே ஒவ்வொரு மாதமும் நடிகர்திலகத்தின் பிறந்த நாள் வந்தால் தேவலை. காரணம், திரியில் தங்கள் தரிசனம் கிடைக்குமே....
anasiuvawoeh
2nd October 2013, 07:34 PM
Dear all,Though I did not want to talk this topic,few discussions in the thread has made me to write this.Politics have become Poli"tricks"long before.People either accept or reject a political party or political leader for political reasons.People don't have attachment more than that,because if that is real,then a party which wins all the seats in one election,don't win single seat in next election.So even the people who have real attachment ,they are not deciders. For greatness of NT, inspite of no backup from political parties,the crowd coming to ANNAI ILLAM is the testimony .Let us not worry about things which are irrelevant to show our affection to NT and his beloved family.Before I finish,people talk about Golden rule of Great Kamaraj only after 37years of his death.SORRY,IF i HAD HURT ANYBODY"S SENTIMENTS.with Regards.
vasudevan31355
2nd October 2013, 08:57 PM
Nadigar Thilagam 85th Birthday Celebrations
http://www.youtube.com/watch?v=brDX09q90UQ&feature=player_detailpage
Russellfcv
2nd October 2013, 11:26 PM
Hello to all
Am Lakshmi Saraswathi. An ardent fan of Sivaji Sir. I got the invitation through my uncle to attend on 1st october at TTK Road.
I belong to Kodambakkam, United India Colony and working for Tata Consultancy Services as Project Lead.
I am reading Sivaji Sir's forum and other forums regularly and am happy to see all are contributing to a larger extent.
As far as possible, like how you are doing already, please put up with documentary evidences of Sivaji sir's achievement when it comes to the run in theaters as you have been doing all these days because most of the current generation consider and accept only proofed writing than spoofed writing.
I have shown to many of my collegues about this thread and they are quite surprised on the write-ups, ads etc., They are also comparing obviously, and are quite surprised on the achievements of Sivaji Sir. Some of my friends have downloaded many ads from here and have sent to their uncles and aunts who are working with dailies like The Hindu, Dinamalar and Time of India as chief editors, sub-editors etc.,
thanks to all for wonderful writeups.
Catch ya later
Russellfcv
2nd October 2013, 11:33 PM
Dear Ravi,
தங்களுக்கும் சரி, மற்ற நண்பர்களுக்கும் சரி என் பணிவான நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கோபாலும் நானும் கொள்கையைப் பொறுத்த வரையில் இரு துருவங்களாகத் தான் இருப்பதாகத் தெரிகிறது. என்றாலும் அதற்காக சண்டையெல்லாம் கிடையாது.
என்னைப் பொறுத்த வரையில் நடிகர் திலகத்தின் ரசிகர்களில் நான் தீவிரமாக இருப்பவன். அவரை நடிகர் என்கிற வட்டத்திற்குள் அடக்காமல் ஒரு சிறந்த தேசியவாதியாக, தமிழகத்தின் சிறந்த தலைவராக எண்ணிப் போற்றுகிறவன். அவருடைய கஷ்டங்களை அவருடைய உழைப்பை சிறு வயதிலேயே பார்த்தவன், காங்கிரஸை விட்டு வெளியே வந்த போது உடன் இரவு பகலாக தொகுதியில் சுற்றிச் சுற்றி உழைத்தவன், அதனைப் பெருமையுடன் எண்ணி மகிழ்பவன். மற்ற எந்தத் தலைவரை விட பல மடங்கு அதிக தகுதி வாய்ந்த தலைவராக அவரைத் தான் நான் கருதுகிறேன். நேர்மையின் சின்னமாக உண்மையாக வாழ்ந்து காட்டியவர், வெறும் வாய் ஜாலத்திற்காக அல்ல. தேர்தலில் தோல்வியடைந்து விட்டார் என்பதற்காக அவரை அரசியலில் இருந்து ஒதுக்கிப் பார்க்க முடியாது. ஒரு தலைமுறையையே தேசியவாதியாக, தேச பக்தனாக வளர்த்து விட்டவர் அவர். வாழ்க்கையிலும் அதை செயல் படுத்தினார். அவருக்காக இன்றும் ஏராளமான ரசிகர்கள் எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் உழைத்து வருகின்றனர். நம்முடைய சக்தியினை அதுவும் செயல் வடிவம் தந்தால் பல திருப்புமுனைகளை வரலாற்றில் ஏற்படுத்தக் கூடிய வலிமை வாய்ந்த சக்தியினை எதிர்காலத் தலைமுறைக்கும் அரசியல் தூய்மைக்கும் பலனளிக்கும் வகையில் பயன் படுத்த வேண்டும் என்பதே என் ஆவல்.
அரசியல் வேண்டாம் என்று சொல்பவர்கள் இருப்பார்கள். அதற்காக வேண்டும் என்று சொல்பவர்களை தவறாக சித்தரிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. இன்றைய நிலைமையில் அரசியலில் நேர்மையாளர்களும் நல்லவர்களும் வராமல் இருப்பதற்கு காரணமே இந்த மேம்போக்கான வாதங்கள். அரசியலுக்கு லாயக்கில்லை என்கிற ஒரு சொற்றொடர், ஒரு தேசத்திற்கே நன்மை ஏற்படுவதற்கு தடைக்கல்லாக இருப்பதை மக்கள் உணர வேண்டும். இந்த தடைக்கல்லை உடைத்தெறிந்து நல்லவர்களையும் நேர்மையாளர்களையும் இரு கரம் கூப்பி வரவேற்று உற்சாகப் படுத்தி ஆதரவளித்தால் தான் அரசியலில் தூய்மையையும் நேர்மையையும் நாம் எதிர்பார்க்க முடியும்.
அதற்காக நான் தற்போது எந்த இயக்கத்தையும் ஆதரிக்கச் சொல்ல வில்லையே. யாரையாவது குறிப்பிட்டுச் சொன்னால் அப்போது என்னை யாரும் சுட்டிக் காட்டலாம். கண்ணுக்கெட்டிய தூரத்தில் யாராவது தென்பட்டால், அதுவும் நடிகர் திலகத்தை தலைவராக ஏற்று அவர் வழி நடப்பதாக உறுதி கொண்டு அதனை நடைமுறையும் படுத்தினால் அப்போது இந்த சக்தி அதற்கு பயன் படட்டுமே. காரணம் நடிகர் திலகத்தைத் தலைவராக ஏற்றுக் கொள்பவர் நிச்சயம் அவருடைய கொள்கைகளையும் தத்துவங்களையும் ஏற்று செயல் படுத்துவார் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை.
இது தான் என் நிலைப்பாடு.
இதில் எனக்கு யாருமே ஆதரவு தரவில்லையென்றாலும் நான் அதைப் பற்றிக் கவலைப் பட மாட்டேன். தனியாக என்றாலும் கூட என்னுடைய எண்ணம் நிச்சயம் இங்கே கருத்தாக பிரதி பலித்துக் கொண்டிருக்கும்.
Raghavendran sir,
how are you ? do you remember me.? I met up with you yesterday in MA and told i will try to register myself in mayyam. Sorry that i had to leave in the middle of the function as i had to be at home by 7.
As told yesterday, I did it though late ..ie., registering in Mayyam. Better late than never types...lol...
thankyou sir..it was wonderful though it was a brief discussion yesterday.
LS
Murali Srinivas
3rd October 2013, 12:06 AM
நடிகர் திலகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு Sun Life தொலைக்காட்சி பல்வேறு நிகழ்சிகளை ஒளிப்பரப்பியது. அதில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி நடிகர் நமது ஹப்பர் மோகன்ராம் அவர்கள் வழங்கிய நிகழ்ச்சி. பலரும் மீடியாவில் சொல்ல தயங்கும் உண்மைகளை தைரியமாக கூறினார். நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை அவர் சிறப்பாக எடுத்துக் கூறியது பாராட்டுக்குரியது. அவரை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்த போது நன்றி கூறினார்.
வேலை நிமித்தம் காரணமாக அவராலும் நிகழ்ச்சியை பார்க்க முடியவில்லை என்று சொன்ன அவர் அந்த ஷோவை எழுதி இயக்கிய இளைஞர் கார்த்திக் சரண் உருவாக்கி வைத்திருந்த ஸ்கிரிப்ட்-யும் காண்பித்தார். நிகழ்ச்சியை கண்டிருந்த நான் ஸ்க்ரிப்டில் இருந்தவற்றோடு ஒப்பிட்டு பார்த்த போது ஒரு சில விஷயங்கள் விடுபட்டு போனது தெரிய வந்தது. நேரமின்மை காரணமாகவோ அல்லது அவர்களிடம் அந்தப் படத்தின் டெலிகாஸ்ட் rights இல்லாத காரணத்தினாலா என்று தெரியவில்லை. அதில் கண்ட ஒரு சில சுவையான விஷயங்களை இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன்.
நடிகர் திலகத்தின் நேரம் தவறாமையைப் பற்றி சொன்னது ஒன்று. பலரும் பல தடவை சொன்னதுதான் என்றாலும் நடிகர் திலகமே நேரிடையாக் சொன்ன ஒன்றை அங்கே பகிர்ந்து கொண்டார். ஒரு முறை நடிகர் திலகத்திடமே "நீங்கள் எப்போது retire ஆவீர்கள்" [அவர் உடல் நிலையை கருத்தில் கொண்டு] மோகன்ராம் கேட்க அதற்கு நடிகர் திலகம் செட்டிற்கு எப்போது லேட்டாக போகிறேனோ அன்று என்று சொல்லி விட்டு ஒரு இடைவெளி விட்டு இல்லேடா அன்னிக்கு கணேசன் செத்து போயிருப்பான் என்றாராம். நேரத்தை அந்தளவிற்கு பொன்னாக மதிப்பவர் என்றார். இதுவரை மோகன்ராம் சொன்னது தொலைக்காட்சியிலும் காண்பிக்கப்பட்டு ஆண்டவன் கட்டளையில் Professor கிருஷ்ணன் வட்டிக் கடையை கடந்து போகும் போது கடிகாரத்தை காலை 9.30 மணிக்கு திருப்பி வைக்கும் காட்சி காண்பிக்கப்பட்டது. மேற்சொன்ன விஷயத்திற்கு பின்னர் மோகன்ராம் அவர்கள் ஒரு வாக்கியம் சொல்லியிருக்கிறார். That's why he is never Late Sivaji Ganesan. என்ன காரணத்தினாலோ மிக அழகாய் பொருந்தி வந்த இந்த சொற்றொடர் இடம் பெறாமல் போயிருக்கிறது.
அது போன்றே முகத்தில் மட்டுமல்ல முதுகை காட்டினால் கூட அதில் உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் படைத்தவர் நடிகர் திலகம் என்பதை குறிப்பிட்டு அதற்கு எடுத்துக் காட்டாய் யார் அந்த நிலவு, ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ மற்றும் படைத்தானே பாடலகளையும் குறிப்பிட்டிருந்தார். அதுவும் இடம் பெறவில்லை.
நடிகர் திலகம் - KSG படங்களை பற்றி பேசியிருக்கிறார். அதில் செல்வம் படத்தில் என்னை மறந்து விடுங்கள், நான் உங்களை விரும்பவில்லை என்று KR விஜயா சொல்லிவிட அடக்க முடியாத கோவத்துடன் நடிகர் திலகம் வீட்டிற்கு வந்து தன் தாயிடம் பேசும் காட்சி. முதலில் KSG இதற்கு நடிகர் திலகம் பேசுவது போல் இரண்டு பக்க வசனங்களை எழுதியிருந்தாராம். படப்பிடிப்பு நடக்கும் போது கேஎஸ்ஜி அவர்களே இது இயற்கையாக இல்லையே காதலி தன்னை விரும்பவில்லை என்று சொன்னால் இப்படியா இரண்டு பக்க வசனம் பேசுவார்கள் என்று கேட்க நீதானே எழுதியிருக்கே இப்போ சரியா வருமான்னு என்னை கேட்கிறே என்று பதில் அளித்தாராம் நடிகர் திலகம். பிறகு கலந்து பேசி மறுநாள் ஷூட்டிங் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி மறுநாள் படப்பிடிப்பில் அந்த கோவத்தை ஏமாற்றத்தை தவிப்பை சொல்ல முடியாமல் வார்த்தைகள் வராமல் சிக்கி தவித்து மாடிப்படி ஏறி போய் மீண்டும் இறங்கி வந்து அதகளம் செய்தார் நடிகர் திலகம் என்று சொல்லி முடிக்கும் மோகன்ராம் அதுதான் அவளா சொன்னாள் பாடலுக்கு lead scene என்றும் சொல்கிறார். இதுவும் வரவில்லை. எனக்கு இந்த மேலே குறிப்பிட்ட காட்சியைப் பற்றி படித்ததும் நான் நமது திரியில் செல்வம் பற்றி விமர்சனம் எழுதியிருந்த போது [கோபால், விமர்சனம் என்பது சரிதானே?] இந்த காட்சியை குறிப்பிட்டு எழுதியிருந்தது நினைவிற்கு வந்தது. தனது பின்னூட்டத்தில் அதை பற்றி குறிப்பிட்டு இது போன்ற அருமையான காட்சிகளையெல்லாம் தொலைக்காட்சியில் சிறப்பு விருந்தினர்களாக வருபவர்கள் கண்டு கொள்வதேயில்லை என்று சாரதா குறைப்பட்டு எழுதியதும் நினைவிற்கு வந்தது.
அருமையான இந்த நிகழ்ச்சியை வழங்கியதற்கும் நிகழ்ச்சியின் ஸ்க்ரிப்டை நம்மோடு பகிர்ந்து கொண்டதற்கும் திரு மோகன்ராம் அவர்களுக்கு மீண்டும் நன்றி கூறி விடைபெற்றேன்.
அன்புடன்
Murali Srinivas
3rd October 2013, 12:15 AM
வாசு, சதீஷ், ஹைதராபாத் ரவி மற்றும் கார்த்திக் அவர்களுக்கு நன்றி.
கார்த்திக்,
வனவாசமெல்லாம் ஒன்றுமில்லை. கடந்த 7 வருடங்களாகவே நான் தினசரி பதிவிடும் பழக்கமில்லையே. இம்முறை இடைவெளி சிறிது அதிகமாகி விட்டது. அவ்வளவே.
உங்களுக்கு வேறு ஒரு விஷயதிற்காகவும் நன்றி சொல்ல வேண்டும். நான் எழுதிய ஒரு பதிவை பற்றி குறிப்பிடும் போது, நீங்கள் எழுதியதை நான் படிக்கவில்லை. ஆனால் ஒன்றை என்னால் உறுதியாக சொல்ல முடியும். உங்களால் யார் மனதையும் புண்படுத்த முடியாது. காரணம் உங்களுக்கு அது தெரியாது என்று சொன்னீர்களே அதற்கு என் மனதை புரிந்து சொன்னதற்கு நெஞ்சார்ந்த நன்றி.
அன்புடன்
RAGHAVENDRA
3rd October 2013, 06:03 AM
Raghavendran sir,
how are you ? do you remember me.? I met up with you yesterday in MA and told i will try to register myself in mayyam. Sorry that i had to leave in the middle of the function as i had to be at home by 7.
As told yesterday, I did it though late ..ie., registering in Mayyam. Better late than never types...lol...
thankyou sir..it was wonderful though it was a brief discussion yesterday.
LS
அன்புச் சகோதரி லட்சுமி சரஸ்வதி,
ஆஹா ... கலைமகள், மலைமகள், அலைமகள் மூவரின் அருளையும் ஒரே சேரப் பெற்ற உலகப் பெரு நடிகராம் நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு புகழ் மாலை சூட்ட மேலும் ஒரு ரசிகர் .. இங்கே தங்களின் வருகை உள்ளம் குளிர வைக்கிறது. தங்களின் பாராட்டிற்கு என் உளமார்ந்த நன்றி. நடிகர் திலகத்தைப் பற்றிப் பேச நாள் மாதம் போதாது, ஆயுளே தனியாக இறைவன் தர வேண்டும். அன்றைக்கு நண்பர்கள் யாருடனும் கலந்துரையாட சரியாக எனக்கு சந்தர்ப்பம் அமையாதது எனக்கு வருத்தமே. பிறிதொரு சந்தர்ப்பத்தில் நண்பர்களுடன் ஒரு கலந்துரையாடல் வைத்துக் கொண்டு நடிகர் திலகத்தின் சிறப்பை, நினைவுகளை பகிர்ந்து கொள்வோம்.
இத்திரியில் தங்களுடைய வரவு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தொடருங்கள் தங்கள் பங்களிப்பை.
அன்புடன்
ராகவேந்திரன்
RAGHAVENDRA
3rd October 2013, 06:08 AM
முரளி சார்
மோகன் ராம் சாரின் பேட்டி மிகவும் அற்புதமாக இருந்தது என நண்பர் ஒருவர் சொன்னார். அன்று முழுதும் அன்னை இல்லத்திலும் மியூஸிக் அகாடெமியிலுமாக பொழுதைக் கழித்து விட்டதால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியவில்லை. மறு ஒளிபரப்பும் நேற்று இடம் பெற்றதா தெரியவில்லை. நேற்று இரவு வேறு வேலையாக சென்று விட்டு வீடு திரும்பும் போது இரவு 11 மணியாகி விட்டது. ஒரு வேளை இரவு 10 மணிக்கு மறு ஒளிபரப்பு இடம் பெற்றிருந்தாலும் பார்க்க முடிந்திருக்காது.
மீண்டும் ஒளிபரப்பப் படும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
RAGHAVENDRA
3rd October 2013, 06:12 AM
Vikram Prabhu about his Grandfather's Birth Day
reproduced from: http://newindianexpress.com/entertainment/tamil/Thathas-birthday-was-like-an-open-day/2013/10/02/article1813710.ece
It has been 85 years since Sivaji Ganesan was born and his grandson Vikram Prabhu recalls memories of the birthday celebrations that would mark the legend’s birthday and what the day means to him, the family and fans.
Birthday with the big man: The celebrations would begin from 5.30 am when we all woke up. The entire family would gather in his room and would shower him with gifts. Then we would all pray at the family temple adjacent to our compound wall. Fans would have already gathered. Thatha would stop at our portico and meet them and spend time with them. Then, a huge feast would follow at lunch time. During the day, his friends and industry well-wishers would keep pouring in to wish him. They would stay on for lunch, which always had our family’s special biriyani.
Times haven’t changed: Today he’s no longer with us, but the celebrations are the still the same. In fact, earlier, our road would be blocked because of the traffic and a stage would be erected and fans would perform and act out his songs. But now, due to traffic restrictions, that has been stopped. For us, grandfather’s birthday has always been an Open day, when the public pours in all through the day. It’s the same even today. As during his time, the fans gather from early morning and we all wish each other with the greeting ‘Nadigar Dina Vazhthugal’. The family members, including appa and myself, meet the fans. In fact, they come right into the house and take photos with his giant portrait in our hall. We all share memories and talk about him.
Blooming memories: If he had been alive, he would have been 85 today. He would have been happy to see me as an actor. The day is special for me and I always spend it with the family, from morning till night. I feel that as an actor and a professional, he would have preferred me to be on the sets, acting, even on this day. But I avoid shooting as I feel it’s my duty to be at home instead, and share this day and some special memories, with my family.
RAGHAVENDRA
3rd October 2013, 06:14 AM
திரைப்படப் பட்டியல் திரியிலிருந்து மீள் பதிவு...
பாவ மன்னிப்பு ,,,, நிறைவு செய்யும் முன் ..
இது வரை இணையத்தில் அதிகம் தென்பட்டிராத தகவல் மற்றும் நிழற்படம்
இப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை உருவாக்க மெல்லிசை மன்னருக்குத் தேவைப்பட்ட காலம் ஆறு ஆண்டுகளும் 15 நாட்களும் ...
என்ன வியப்பாக உள்ளதா...
இப்படித் தான் மெல்லிசை மன்னர் கேட்கிறார்..
பாவ மன்னிப்பு பாடல் பதிவிற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன் ஒரு பாடலை கண்ணதாசன் எம்.எஸ்.வி.யிடம் தந்து ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பயன் படுத்திக் கொள்ள சொல்கிறார். அதை அப்படியே செய்வதாக சொல்லியிருந்தார் மெல்லிசை மன்னர். பாவ மன்னிப்பு படத்தில் ஒரு பாடலுக்கு வெகு நேரமாக யோசித்தும் மெட்டு புலப்படவில்லை. ஹார்மோனியத்தில் கண் வைத்தவாறு யோசனை செய்கிறார் மெல்லிசை மன்னர். கண்ணதாசன் ஆறு ஆண்டுகளுக்கு முன் தந்த பாடல் நினைவுக்கு வருகிறது. அப்பாடலை எடுத்து பார்க்கிறார். சிந்திக்கிறார்.
இரவு நேரங்களில் சாந்தோம் கடற்கரையிலிருந்து மீனவர்கள் முன்னிரவு நேரத்தில் ஏதோ ஒரு பாடலை பாடிய படி பொழுதைக் கழிக்கின்றனர். நெஞ்சை வருடிச் செல்லும் அந்த இனிய பாடல் அவருக்கு நினைவுக்கு வருகிறது. அதனை எண்ணிய படியே அப்போதைக்கு பாடல் பதிவு ஒத்திவைக்கப் படுகிறது. பிறகு மெல்லிசை மன்னர்கள் இருவரும் ஒரு ஆங்கிலப் படத்திற்கு செல்கின்றனர். திரைப்படம் துவங்கும் முன் ஆங்கிலப் பாடல் அல்லது இசை ஒலிக்கும். அன்று ஒலித்த அந்த இசையைக் கேட்டு அவர்கள் வியப்புறுகின்றனர். அந்த செம்படவர் பாடிய அதே மெட்டில் இந்த ஆங்கிலப் பாடல்... பொறி தட்டுகிறது...
மீண்டும் கவியரசரை அழைக்கிறார்கள். அமர்கிறார்கள். அந்த இரு ட்யூனின் அடிப்படை இனிமையினையும் மென்மையினையும் மட்டும் எடுத்துக் கொண்டு புதியதாக ஒரு மெட்டை உருவாக்குகிறார்கள். கவியரசர் பாடல் வரிகளை சொல்லச் சொல்ல எண்ணி 15வது நிமிடத்தில் பாடல் உருவாக்கம் முடிந்து விட்டது.
ஆறு ஆண்டுகள் 15 நிமிடங்கள் எடுத்துக் கொண்ட அப்பாடல் எது ... தெரியுமா...
விடையைச் சொல்ல முயலுங்கள். அது வரை இந்த அபூர்வமான நிழற்படத்தைப் பார்த்துக் கொண்டிருங்கள்.
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/ppfeb61msvtkrtroupefw_zpsbd5b4ace.jpg
விடை தெரிந்தால் அத்திரியில் சொல்லுங்கள்
Gopal.s
3rd October 2013, 07:05 AM
நடிகர் திலகத்தின் 85-வது பிறந்த நாள் விழா - 01.10.2013
கோபால், ஒரு முக்கியமான செய்தி. உங்கள் கோரிக்கை அன்னை இல்லத்திற்கு கேட்டு விட்டது. அது நிறைவேறவும் போகிறது. ஆம், அடுத்த ஆண்டு முதல் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவில் ஒன்றோ அல்லது இரண்டு ரசிகர்களையும் மேடையேற்றி கௌரவிக்கப் போகிறார்கள். இதை மேடையிலே பிரபு அறிவித்தார்.
முரளி சார்,
என் எழுத்துக்கு இவ்வளவு வலிமையா? சரி.நேரத்தை வீணாக்காமல் அந்த இரண்டு முதல் அதிர்ஷ்டசாலி ரசிகர்களை நேர்மையான ஜனநாயக முறையில் இந்த திரி ரசிகர்களை கொண்டு தேர்வு செய்து விடலாம். நான் இரண்டிரண்டு பெயர்களாக தேர்வு செய்து option கொடுக்கிறேன். 1,2,3,4,5..... இப்படி. ஓட்டளிப்பவர்கள் தங்கள் விருப்பத்தை (ஒன்றே ஒன்றுதான் பிடித்த ஒரு நம்பர்)குறித்தால் ,அதிக ஓட்டுக்கள் பெற்று கௌரவிக்க படும் அந்த எண்ணில் உள்ள இருவருக்கும் வாழ்த்துக்கள்.
1)பம்மலார்-கோபால்
2)ராகவேந்தர்-கோபால்
3)வாசுதேவன்-கோபால்
4)முரளி- கோபால்
5)கார்த்திக்-கோபால்
6)சாரதா- கோபால்
7)சந்திரசேகர்- கோபால்.
வாசகர்கள் சுதந்திரமாக ஒரு நம்பர் தேர்வு செய்யலாம்.
(இது சம்பந்தமாக PM பண்ணுவதோ,நண்பர்களுக்கு போன் செய்து campaign பண்ணுவதோ,தவிர்க்க பட வேண்டும்)
RAGHAVENDRA
3rd October 2013, 07:42 AM
மன்னிக்க வேண்டும் யுவர் ஆனர்,
என்னைக் கேட்காமல் என் பெயரைச் சேர்க்காதீர்கள். என் பெயர் வேண்டாம்.
Gopal.s
3rd October 2013, 07:54 AM
மன்னிக்க வேண்டும் யுவர் ஆனர்,
என்னைக் கேட்காமல் என் பெயரைச் சேர்க்காதீர்கள். என் பெயர் வேண்டாம்.
கோழியின் சம்மதம் கேட்டா மஞ்சளும் ,மசாலாவும் அரைப்பார்கள்?(சேச்சே ,அழகான கோர்ட் உரையாடலுக்கு கசாப்பு பாணியில் பதில் சொல்லி விட்டேனே?)
vasudevan31355
3rd October 2013, 07:54 AM
http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/ima4_zps809bca24.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/ima4_zps809bca24.jpg.html)
RAGHAVENDRA
3rd October 2013, 08:05 AM
கோழியின் சம்மதம் கேட்டா மஞ்சளும் ,மசாலாவும் அரைப்பார்கள்?(சேச்சே ,அழகான கோர்ட் உரையாடலுக்கு கசாப்பு பாணியில் பதில் சொல்லி விட்டேனே?)
இது வேகமாவும் நீண்ட தூரமும் பறக்கும் சக்தி அதிகம் உள்ளதாக்கும். உங்கள் கையில் சிக்காது...
RAGHAVENDRA
3rd October 2013, 08:09 AM
கோபால், ஒரு முக்கியமான செய்தி. உங்கள் கோரிக்கை அன்னை இல்லத்திற்கு கேட்டு விட்டது. அது நிறைவேறவும் போகிறது. ஆம், அடுத்த ஆண்டு முதல் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவில் ஒன்றோ அல்லது இரண்டு ரசிகர்களையும் மேடையேற்றி கௌரவிக்கப் போகிறார்கள். இதை மேடையிலே பிரபு அறிவித்தார்.
கோபால் பாரத விலாஸில் சொன்னதை ... வியட்நாமில் குண்டு வெடித்தால் விருது நகரில் வலி எடுக்கிறதே ... என்று சொன்னதை புதல்வர்கள் மறக்கவில்லை. வியட்நாமிலிருந்து கோபால் 2013ல் சொல்வார் என்பதை அந்த கோபால் 1973லியே சொன்னதும் இல்லாமல், அது வரை வேறு யார் சொன்னாலும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் கட்டளை இட்டு விட்டாரோ என்னவோ...
vasudevan31355
3rd October 2013, 09:00 AM
கோபால் அண்ணாச்சி
இன்னா பேராசை கண்ணு உனக்கு. வந்து ஒரு வருஷம் கூட முடியல்ல. ஏதோ ஒரே ஒரு கட்டுரை தொடர் போட்டுட்டு அதுக்குள்ளே மேடையேறி மரியாதை வாங்கிக்கணுமா? :) இன்னா கண்ணு அநியாயமா இருக்கு. நமக்கு மேலே எவ்வளவோ பெரியவங்களெல்லாம் இருக்காங்க தெரியுமில்லே. கர்ணன் படத்துக்கு இதுவரை வந்த அனைத்து விஷயங்களையும் கிரிஜா மேடம் ஒரு பெரிய தனி ஆல்பமா போட்டு அசத்தியிருக்காங்க. அவுங்களை பட்டியல்ல சேர்த்துக்கோ. ரசிக வேந்தர்,பம்மலார், முரளி சார், சந்திரசேகரன் சார், கார்த்திக் சாரெல்லாம் சரியான தேர்வு. ஆனா உன் பேரையும், என் பேரையும் போட்டு சொதப்பிட்ட. நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கு கண்ணு.
யோசி ராஜா யோசி.
vasudevan31355
3rd October 2013, 09:20 AM
விரைவில் சென்னையில் தங்கச்சுரங்கம் ராஜன் துப்பறிய வருகிறார். ராஜன் பளபளவென இருப்பதாகக் கேள்வி. பிரிண்ட் நன்றாக உள்ளதாம். வைரநெஞ்சமும் வந்து கலக்க இருக்கிறதாம்.
http://123tamilforum.com/imgcache2/2011/01/06172705869713310906-1.pnghttp://123tamilforum.com/imgcache2/2011/04/8e864fc3-1.png
vasudevan31355
3rd October 2013, 09:55 AM
இனியாவது இந்த ஜென்மங்கள் திருந்துமா?
நேற்றைய தினமலர்
http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/2_zpsafe07ba4.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/2_zpsafe07ba4.jpg.html)
sivaa
3rd October 2013, 10:30 AM
சிவாஜி ஒரு பண்பாட்டியல் குறிப்பு
http://www.youtube.com/watch?v=M3w9ii5GlxA&feature=share
KCSHEKAR
3rd October 2013, 11:39 AM
டியர் முரளி சார்
"சிவாஜி-பிரபு சாரிட்டீஸ் டிரஸ்ட்" சார்பில் நடைபெற்ற நடிகர்திலகத்தின் பிறந்தநாள் விழாத் தொகுப்பு அருமை.
KCSHEKAR
3rd October 2013, 11:40 AM
டியர் வாசுதேவன் சார்,
நடிகர்திலகத்தின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளை, புகைப்படங்கள், செய்தித்தாள் தொகுப்பு என்று வழக்கம்போல அசத்திவிட்டீர்கள். நன்றி.
Russellfcv
3rd October 2013, 11:48 AM
Dear All,
Just as i was watching the songs in you tube, i came across the following video too...
it says Nanvazhavaippen re-release on account of 85th birthday of Sivaji Sir..
lot of fans also giving their comments about this film. good crowd i can see.
where is this theater? can any of you tell me? i want to see this movie if it is still running.
am glad to present it here. good video.
Take Care
https://www.youtube.com/watch?v=KPGALWi4WeI
Russellfcv
3rd October 2013, 11:52 AM
இனியாவது இந்த ஜென்மங்கள் திருந்துமா?
நேற்றைய தினமலர்
http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/2_zpsafe07ba4.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/2_zpsafe07ba4.jpg.html)
Sir,
The association has inferiority complex and that's why they are deliberately insulting. what they fail to realise is, by insulting Sivaji Sir, they are insulting themselves.
Also, i think they are all now politicians and their priorities are making money in all possible ways than to honor legends.
LS
vasudevan31355
3rd October 2013, 11:52 AM
லக்ஷ்மி கடாட்சத்தோடு நமது திரிக்கு வருகை தரும் சகோதரி சரஸ்வதி லக்ஷ்மி அவர்களே வருக!
(என்னுடைய தாயார் பெயரும் தங்கள் பெயரில் பாதியே. சரஸ்வதி)
KCSHEKAR
3rd October 2013, 11:58 AM
நடிகர்திலகத்தின் 86-வது பிறந்த நாளையொட்டி தாங்களும், தங்கள் தலைமையில் இயங்கும் நடிகர்திலகம் சமூகநல பேரவையும் செய்த, செய்துவரும், செய்ய இருக்கும் நற்பணிகளைப் பாராட்ட வார்த்தைகளே இல்லையெனலாம்.
டியர் கார்த்திக் சார்,
தங்களுடைய / தங்களைப் போன்ற மூத்த ரசிகர்களின் வாழ்த்தே என்னை மேலும் மேலும் பணியாற்றத் தூண்டுகோலாக அமைகிறது.
தாங்கள் அன்னதானம் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். வருடா வருடம் நினைவு நாள் மற்றும் பிறந்த நாளில், கபாலீஸ்வரர் கோவில் அன்னதானம் மற்றும் பிறந்த நாளன்று எல்லா மாவட்டங்களிலும் நிகழ்ச்சிகளை நடத்துவதோடு, அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில், வெளி மாவட்டத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி என வரையறுத்துகொண்டு நிகழ்ச்சிகளை நடத்திகொண்டிருந்தோம்.
இந்த வருடம், ஜூலை 21 - நினைவு நாளையும் வெளி மாவட்டத்தில் (திருநெல்வேலியில்) பேச்சுப்போட்டி நடத்தி அனுசரித்தோம்.
அடுத்து, அக்டோபர் 1 - உலக முதியோர் தினமாக இருப்பதால் முதியோர் இல்லத்திலும் அன்னதானம் செய்யலாம் என்று யோசித்து செயல்படுத்தினோம். இதற்கு திரு.சீனிவாசன், பாஸ்கர், ராமஜெயம், சங்குராஜன் போன்ற நண்பர்களும் உறுதுனையாக இருந்தார்கள்.
மயிலாப்பூர், கிழக்கு மாடவீதியில் அமைந்துள்ள, அன்னை இல்லம் முதியோர் காப்பகத்தில் 100 வயதான ஒரு மூதாட்டி காலை சிற்றுண்டியைப் பெற்றுக்கொண்டு எங்களையெல்லாம் மனதார வாழ்த்தியது இன்னும் என் மனக்கண் முன்னே நிற்கிறது.
சென்னை தவிர, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை போன்ற சில ஊர்களிலும் முதியோர் இல்லங்களில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடிகர்திலகம் சிவாஜிசமூகநலப் பேரவை சார்பில் நடத்தப்பட்டிருக்கிறது.
அதேபோல நடிகர்திலகத்தின் 86-வது பிறந்த நாள், எப்போதும் ஒரு வெளி மாவட்ட சிறப்பு நிகழ்ச்சி என்பது விரிவடைந்து இந்த வருடம், நேற்று, (அக்டோபர் -2) திருச்சியில் நிகழ்ச்சி சிறப்பாக முடிவடைந்த நிலையில் வரும் அக்டோபர் - 6 ஆம் நாளன்று திருப்பூரில் பிறந்தநாள் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
வெளி மாவட்டங்களில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஏழை மாணவ, மானவிகள் சிலருக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்குதல் பொன்ற சில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் நேற்று திருச்சியில் நடைபெற்ற விழாவில் 11 மாணவ, மானவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது (தலா ரூ.2000/- மற்றும் ரூ.1000/-). அதேபோல் திருச்சியில் சமீபத்தில் மறைந்த நமது சிவாஜி ரசிகர் திரு.சிவாஜி ஸ்ரீதர் குடும்பத்திற்கு ரூ.5000/- உதவி வழங்கப்பட்டது. மற்றும், மூத்த சிவாஜி ரசிகர்கள் 10 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஜூனியர் பிரிவு தேசிய சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற திருச்சியை சேர்ந்த மாணவிக்கு கேடயம் வழங்கப்பட்டது. திருச்சியில் நடிகர்திலகம் சிவாஜிக்கு சிலை நிறுவப்பட்டு மூடப்பட்ட நிலையிலேயே இருந்தாலும், அதனைச் சுற்றியுள்ள ரவுண்டானாவை அழகான புல்வெளிகள் அமைத்து, தொடர்ந்து சிறப்பாகப் பராமரித்து வரும் b .g . நாயுடு ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மேடையில் கெளரவிக்கப்பட்டார்.
தங்களின் பாராட்டுக்கு மீண்டும் நன்றி.
KCSHEKAR
3rd October 2013, 12:05 PM
சரஸ்வதி லக்ஷ்மி அவர்களே,
வருக.
vasudevan31355
3rd October 2013, 12:23 PM
டியர் சந்திரசேகரன் சார்,
சிவாஜி சமூக நலப் பேரவை சார்பாக நடிகர் திலகத்தின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு நலத்திட்ட உதவிகள், அன்னதானங்கள் என்று சமூக அக்கறையோடு நடைபெற்றது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. அன்னதானம் என்பது மிக புண்ணியமானதொரு விஷயம். அதுவும் அனாதை சிறார்களுக்கும், ஆதரவற்ற முதியோர்களுக்கும் பேரவை மூலம் அன்னமும், பிற உதவிகளும் கிடைப்பது ஒவ்வொருவரும் பெருமைப் படத்தக்க விஷயம். தங்கள் தலைமையில் அது தொடர்வது சிறப்பு. தங்கள் நலத்திட்ட உதவிகள் மேன்மேலும் தொடரட்டும். தங்களுக்கும், சிவாஜி சமூக நலப் பேரவை அமைப்புக்கும் என் இதயம் கனிந்த பாராட்டுக்களும், மற்றும் நல்வாழ்த்துக்களும். தங்கள் அன்புப் பாராட்டிற்கும் எனது நன்றி!
Russellfcv
3rd October 2013, 01:11 PM
சரஸ்வதி லக்ஷ்மி அவர்களே,
வருக.
Thankyou sir
Russellfcv
3rd October 2013, 01:40 PM
May I request for an information to all members here..
Can anyone list the names movies released in Chennai from 1952 - 1982 which ran 25 Weeks of all actors?
Gopal.s
3rd October 2013, 01:52 PM
கோபால் அண்ணாச்சி
இன்னா பேராசை கண்ணு உனக்கு. வந்து ஒரு வருஷம் கூட முடியல்ல. ஏதோ ஒரே ஒரு கட்டுரை தொடர் போட்டுட்டு அதுக்குள்ளே மேடையேறி மரியாதை வாங்கிக்கணுமா? :) இன்னா கண்ணு அநியாயமா இருக்கு. நமக்கு மேலே எவ்வளவோ பெரியவங்களெல்லாம் இருக்காங்க தெரியுமில்லே. கர்ணன் படத்துக்கு இதுவரை வந்த அனைத்து விஷயங்களையும் கிரிஜா மேடம் ஒரு பெரிய தனி ஆல்பமா போட்டு அசத்தியிருக்காங்க. அவுங்களை பட்டியல்ல சேர்த்துக்கோ. ரசிக வேந்தர்,பம்மலார், முரளி சார், சந்திரசேகரன் சார், கார்த்திக் சாரெல்லாம் சரியான தேர்வு. ஆனா உன் பேரையும், என் பேரையும் போட்டு சொதப்பிட்ட. நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கு கண்ணு.
யோசி ராஜா யோசி.
ஏன்யா,
ஆவக்காய் ஊறுகாயை மூன்று வேளையும் தின்று தின்று ,சிரிக்கவே மறந்து விடுகிறாயே? அதுவாயா மேட்டர்?
Gopal.s
3rd October 2013, 01:56 PM
Thankyou sir
கொஞ்சம் சந்தேகம் தட்டுகிறது? (சுப்பு)லட்சுமி சரஸ்வதியே வருக.வருக. திரியில் உங்கள் பங்களிப்பு களை கட்டட்டும்.
Gopal.s
3rd October 2013, 02:16 PM
கார்த்திக் சாரின் ஐடம் தொடருக்கு பின் ,நடிகர்திலகத்தின் மிக சிறந்த காதல் காட்சிகள் தொடர் எழுதலாம் என்று உள்ளேன்.
vasudevan31355
3rd October 2013, 02:41 PM
கார்த்திக் சாரின் ஐடம் தொடருக்கு பின் ,நடிகர்திலகத்தின் மிக சிறந்த காதல் காட்சிகள் தொடர் எழுதலாம் என்று உள்ளேன்.
Ayyayyooooooo......
காதல் ராஜ்ஜியம் உனது...
ஆனால் காவல் ராஜ்ஜியம் எனது...:)
gkrishna
3rd October 2013, 03:46 PM
சார்
மியூசிக் அகாடமி கூட்டம் உண்மையில் ஒரு திருவிழா கூட்டம் தான் சற்று தாமதமாக சென்றதால் மாடியில்தான் இடம் கிடைத்தது முரளி சார் ராகவேந்தர் சார் வாசு சார் யாரையும் சந்திக்க முடியவில்லை வெளியில் வரும் போது ஸ்கூட்டர் எடுக்க ஒரே சண்டைதான் நெல்லை கண்ணன் உரை மிக அருமை எங்கள் நெல்லை மாவட்டத்துக்கு மிக பெரிய பெருமை சேர்த்தார் நெல்லை வழக்கு மொழி ஆன "துட்டு செத்தது" என்பதை மிக அழகாக விளக்கி பேசினார்
பிரபுவிடம் சினிமா பார்க்க வேண்டும் என்றால் எங்கள் நெல்லை மாவட்ட ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்க்க வேண்டும் என்று கூறினார்
IliFiSRurdy
3rd October 2013, 03:48 PM
கொஞ்சம் சந்தேகம் தட்டுகிறது? (சுப்பு)லட்சுமி சரஸ்வதியே வருக.வருக. திரியில் உங்கள் பங்களிப்பு களை கட்டட்டும்.
தேவேந்திரனே, தள்ளாடும் வேடத்தில் வந்தாலும், அவர் கேட்டதை கொடுக்கும் மரபில் வந்தவர் நாம்!
முதலில் கேட்ட கேள்விக்கு (#2830) பதில் சொல்லப்பாரும்!
ஊகங்களை அப்புறம் வைத்துக்கொள்ளலாம்.:):):)
mr_karthik
3rd October 2013, 04:21 PM
கார்த்திக் சாரின் ஐடம் தொடருக்கு பின் ,நடிகர்திலகத்தின் மிக சிறந்த காதல் காட்சிகள் தொடர் எழுதலாம் என்று உள்ளேன்.
டியர் கோபால் சார்,
அதை எதிர்பார்த்து இதை சுணக்க வேண்டாம். அது வரும்போது வரட்டும் நீங்கள் துவங்கி, தொடருங்கள். வாசுதேவன் சார் 'திரை நாயகியர் தொடர்', 'சண்டைக்காட்சிகள் தொடர்', 'ஆடைக்கேற்ற ஆணழகன் தொடர்' என மாறி மாறி பதிவிடுவது போல அதுபாட்டுக்கு அது, இதுபாட்டுக்கு இது என தொடரட்டும். சாம்பார் முடிந்தபின்தான் ரசம், ரசம் முடிந்தபின்தான் மோர் என்ற வரிசையை சாப்பாட்டோடு நிறுத்திக்கொள்வோமே. இங்கே பல்சுவையும் மாறி மாறி வரட்டும். ஆரம்பியுங்கள்.
என்ன ஒன்று....., காதல் தொடர் என்கிறீர்கள். கொஞ்சம் கவனம். (ஐட்டம் தொடர் எழுதுபவனிடம் இருந்து இப்படி ஒரு எச்சரிக்கையா)....
mr_karthik
3rd October 2013, 04:48 PM
கொஞ்சம் சந்தேகம் தட்டுகிறது? (சுப்பு)லட்சுமி சரஸ்வதியே வருக.வருக. திரியில் உங்கள் பங்களிப்பு களை கட்டட்டும்.
லட்சுமி சரஸ்வதி அவர்கள், ராகவேந்தர் சார் அவர்களை மியூஸிக் அகாடமி அரங்கில் நேரில் சந்தித்துப் பேசியதாக சொன்னபிறகும் கூட இந்த சந்தேகமும் அடைப்புக்குறியும் அவசியம்தானா..?....
Gopal.s
3rd October 2013, 04:56 PM
கார்த்திக் சார் ஆலோசனை ஏற்று,கூடிய விரைவில்....
முதல் அத்தியாயம்...
நடிகர்திலகத்தின் முதல் காதல்.
uvausan
3rd October 2013, 05:38 PM
மிகவும் அருமையான பதிப்பு - என்ன சத்தியமான வார்த்தைகள் - சிவாஜி யின் படங்களை கணக்கிலிருந்து எடுத்துவிட்டால் தமிழ் திரை உலகம் வறுமையின் அடி மட்டத்தில் தான் இருக்கும் - உணர்ந்து கூறிய வார்த்தைகள் - பொன் ஏட்டில் பதிக்கவேண்டிய வார்த்தைகள் .
நல்லவர்கள் சொல்வது ஒன்று தான் நடப்பதில்லை இந்த தமிழகத்திலே ! நடந்திருந்தால் இன்று உலகஅளவில் ஒரே ஒரு திரி தான் உபயோகத்தில் இருந்திருக்கும் - ம்ம் என்ன செய்வது விதியின் சதி ----
:???::smokesmile:
Ravi
Gopal.s
3rd October 2013, 05:49 PM
நடிகர்திலகத்தின் மேதைமையை எவ்வளவோ விவரித்தாயிற்று. ஆனாலும் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக.......
நேற்று உலகம் நீயாடும் சோலை... பாட்டும் பரதமும் படத்தில் தற்செயலாக பார்க்க நேர்ந்த போது ஒரு ஆச்சர்யம்.
மயிலின் முகம் ஒன்று அவர் தலைக்கு மேலே அந்த உடையின் பகுதியாக...அவர் நடன அசைவு கொடுத்து கொண்டே தலையில் மேலே இருக்கும் மயிலின் கழுத்து தலை பாகத்தை மயிலின் அசைவு போலவே தெரிய வைக்கும் விந்தை....
அடுத்த முறை அந்த காட்சி வரும் போது சிவாஜி முகத்துக்கு மேலே இருக்கும் அந்த மயிலின் கழுத்தையும்,முகத்தையும் மட்டுமே பாருங்கள். அவர் மேதைமை புலப்படும்.
JamesFague
3rd October 2013, 06:17 PM
Had a nice experience on 1st October at Annai Illam as well as at Music Academy where i have met
all the hubbers Mr Raghavendar, Mr Pammalar, Mr Neyveli Vasudevan, Mr Murali Srinivas, Mr Sarathy
and others. Special thanks to Mr Vasudevan for providing me an opportunity to see the function without
him I could not see the function. Had an wonderful experience with him by talking to various moments of
our god. Unprecedented crowds seen in this year and it shows that day by day the affection growing towards
our NT.
goldstar
3rd October 2013, 07:29 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT5_zps1405c6d9.png
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT1_zpsa3839488.png
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT7_zpsda28d911.png
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT2_zps165c1484.png
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT8_zpsafc58827.png
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT10_zps4bbfc23a.png
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT9_zps56c2fa47.png
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT3_zps2fda9660.png
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT4_zps934af056.png
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT6_zpsf77c7689.png
Murali Srinivas
3rd October 2013, 10:54 PM
சந்திரசேகர் சார்,
மிக்க நன்றி. ஸ்ரீரங்கத்தில் நேற்று நீங்கள் நடத்திய நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது என்று கேள்விப்பட்டேன். நமது நண்பர்கள் சொல்லுவதை விட பொது மக்களில் ஒருவர் வயதில் இளையவர் ஒருவர் என்னிடம் இதை கூறினார்.
என் சக ஊழியர் ஒருவர் நேற்று முன்னிரவு ஸ்ரீரங்கம் திருச்சி ரோடில் அரசு பேருந்தில் சென்ற போது [அவர் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர்] டிராபிக் jam ஆகி வாகனங்கள் நகர முடியாமல் நின்று விட்டனவாம். 20 நிமிடங்களுக்கு பிறகு ஊர்ந்து ஊர்ந்து பேருந்து சென்ற போதுதான் என்ன விஷயம் என்று பார்த்த போது விழா மண்டபம் நிறைந்து வழிந்து ஏராளமானோர் சாலையில் மண்டபத்திற்கு வெளியேயும் கூடி நின்ற காட்சியை பார்த்திருக்கிறார். நடிகர் திலகத்தின் போஸ்டர்கள் பானர்களை பார்த்துவிட்டு என்னவென்று கேட்க நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா என்று சொல்லியிருக்கிறார்கள். பேருந்தில் பயணம் செய்துக் கொண்டிருந்த ஒரு நபர் [நமது ரசிகர்?] யார் தயவும் இல்லாம என் தலைவனுக்கு வந்த கூட்டத்தை பாருங்க என்று உணர்ச்சியோடு முழக்கமிட்டாராம். அந்த கூட்டம், இந்த நபரின் பேச்சு ஆகியவற்றை கேட்ட உடன் என் colleague என்னை தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார். பேருந்தில் சிக்னல் சரியாக கிடைக்கவில்லை என்றார். மேலும் அடுத்த நிறுத்தமான அம்மா மண்டபத்தில் அவர் இறங்க வேண்டியிருந்ததால் நேரில் வந்து சொல்லலாம் என்று முடிவு செய்து இன்று காலை என்னை பார்த்தவுடன் முதலில் இந்த செய்தியைத்தான் பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் இன்றைய நாளே மிக மகிழ்ச்சியான ஒரு தகவலை கேட்டபடி தொடங்கியது.
உங்கள் சேவைகளுக்கு என் வாழ்த்துகளும் மனங்கனிந்த பாராட்டுகளும்.
அன்புடன்
Russelldwp
3rd October 2013, 11:13 PM
டியர் கார்த்திக் சார்,
தங்களுடைய / தங்களைப் போன்ற மூத்த ரசிகர்களின் வாழ்த்தே என்னை மேலும் மேலும் பணியாற்றத் தூண்டுகோலாக அமைகிறது.
அந்த வகையில் நேற்று திருச்சியில் நடைபெற்ற விழாவில் 11 மாணவ, மானவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது (தலா ரூ.2000/- மற்றும் ரூ.1000/-). அதேபோல் திருச்சியில் சமீபத்தில் மறைந்த நமது சிவாஜி ரசிகர் திரு.சிவாஜி ஸ்ரீதர் குடும்பத்திற்கு ரூ.5000/- உதவி வழங்கப்பட்டது. மற்றும், மூத்த சிவாஜி ரசிகர்கள் 10 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஜூனியர் பிரிவு தேசிய சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற திருச்சியை சேர்ந்த மாணவிக்கு கேடயம் வழங்கப்பட்டது. திருச்சியில் நடிகர்திலகம் சிவாஜிக்கு சிலை நிறுவப்பட்டு மூடப்பட்ட நிலையிலேயே இருந்தாலும், அதனைச் சுற்றியுள்ள ரவுண்டானாவை அழகான புல்வெளிகள் அமைத்து, தொடர்ந்து சிறப்பாகப் பராமரித்து வரும் b .g . நாயுடு ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மேடையில் கெளரவிக்கப்பட்டார்.
தங்களின் பாராட்டுக்கு மீண்டும் நன்றி.
Dear KC Sir
Yesterday Evening is Unforgottable event in my life since continuously 5th year You and your organsiation celebrated our great nadigar thilagam's Birthday function. Really amazing. Also at Chief minister constituency you have organised 2nd function sucessfully. In trichy i think this is the grand gala fans function for the past five years. Lot of emotion speeches given by most of our fans expecially Mr.Sivaji krishnamoorthy has given beutiful speech about Peravai starting and non opeing of sivaji statue. Really superb speech.Outside the meeting hall lot of public enquired about you and we told them about your tremendous service through your organisation. In srirangam some rajini fans surprised that continuously celebrating sivaji's birthday grand gala by sivaji peravai is really great achievement.Really you have done great effort for this function success and we appreciate for supporters like Sivaji shanmugam, sona ramanathan, srinivasan, Mukundan etc.Surely this kind of programmes will give more energy to all sivaji fans not only in trichy but also entire tamilnadu.
Keep it up
C.Ramachandran
Murali Srinivas
3rd October 2013, 11:28 PM
பாச மலர் டிஜிட்டல் பிரிண்ட் வெளியீடு
பாச மலர் வெளியான போதும் அதன் பிறகும் என்ன நடந்தது என்பதைப் பற்றியும் பாச மலர் படத்தின் restoration செய்யப்பட்ட விதம் பற்றியும் பாச மலர் படம் இப்படி restoration முறையில் வெளியிடப்பட வேண்டிய படம்தானா என்று பல கேள்விகள் எழுப்பபட்டிருக்கின்றன. நண்பர் ஜோ அவர்களும் இதை குறிப்பிட்டு என்னிடம் இதைப் பற்றி எழுதுங்கள் என்றார். அதற்காக இந்த பதிவுகள். பதிவுகள் என்று குறிப்பிட காரணம் கர்ணன் திரைப்படத்திற்கு பின்னர் வெளிவந்த இரண்டு சிவாஜி படங்களைப் பற்றிய ஒரு தவறான மதிப்பீடும் அவற்றைப் பற்றிய தவறான பரப்புரையும் இங்கே நிகழ்த்தப்படுகிறது. அதன் உண்மை நிலை பற்றியும், பாச மலர் படத்தின் restoration work பற்றியும், பாச மலர் படம் வெளியான போது நிகழ்ந்த சில சம்பவங்களையும் குறிப்பிடவே இந்த மூன்று பதிவுகள். சில காலத்திற்கு முன்பே பதிவிட வேண்டும் என்று நினைத்திருந்த போதினும் அதற்கான காலம் இப்போதுதான் வந்திருக்கிறது. மற்றொரு காரணம் நாம் தவறான தகவல்களை மறுக்கவில்லையென்றால் அவை உண்மை ஆகி விடக் கூடிய அபாயம் இருக்கிறது, ஆகவேதான் இப்போது இந்த பதிவுகள். மெயின் திரியில் பதிவிடும் நோக்கம் அனைத்து வாசகர்களையும் சென்று அடைய வேண்டும் என்பதற்காகவே.முதலில் கர்ணன் படத்திற்கு பின் வெளிவந்த திருவிளையாடல் மற்றும் வசந்த மாளிகை பற்றிய உண்மை நிலவரங்கள்.
(தொடரும்)
அன்புடன்
Murali Srinivas
3rd October 2013, 11:33 PM
திருவிளையாடல் டிஜிட்டல் பிரிண்ட் வெளியீடு
ஒரு பழைய படத்தை Restore செய்து மீண்டும் வெளியிடுவது எனபது ஒரு புதிய படத்தை தயாரித்து வெளியிடுவதற்கு சற்றும் குறைந்த செயலல்ல. படத்தின் நெகடிவ் உரிமையையும் வணிக ரீதியாக பிரிக்கப்பட்டிருக்கும் தமிழகத்தின் அனைத்து ஏரியாக்களின் விநியோக உரிமையையும் பெற்ற ஒருவரே இந்த முயற்சியில் இறங்க முடியும். பெரும்பாலோருக்கு இதைப் பற்றி தெரிந்திருக்கும். இருப்பினும் தெரியாதவர்களுக்காக திரைப்பட விநியோகம் வணிக ரீதியில் நடைபெறும் விதம் பின்வருமாறு. தமிழகம் மொத்தம் 7 ஏரியாக்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. சென்னை நகரம், NSC எனப்படும் வடஆற்காடு தென்னாற்காடு மற்றும் செங்கல்பட்டு, TT எனப்படும் திருச்சி தஞ்சாவூர், MR எனப்படும் மதுரை ராமநாதபுரம், TK எனப்படும் திருநெல்வேலி கன்யாகுமரி, கோவை நீலகிரி, சேலம் தருமபுரி ஆகியவையே அந்த 7 ஏரியாக்கள். இந்த ஏரியாக்களின் மொத்த விநியோக உரிமையும் நெகடிவ் உரிமையும் கைவசம் இருக்குமானால் அந்த நபரால் இந்த restoration work-ஐ எடுத்து செய்ய முடியும். இப்போது நாம் நம்முடைய படங்களுக்கு செல்வோம்.
கர்ணன் பெற்ற பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அடுத்து தலை காட்டியது திருவிளையாடல். இதன் பின்னணியில் இருந்தவர் அமரர் அருட்செல்வர் ஏ.பி.என். அவர்களின் குமாரர் திரு பரமசிவம் அவர்கள். வெளிநாட்டு வாழ் இந்தியரான அவர் இந்த படத்தை வெளிநாட்டு தொழில் நுட்ப உதவியோடு restoration செய்திருந்தார்.படத்தை வெளியிட அவர் முயற்சி எடுக்கும் போதுதான் வந்தது சிக்கல். 1976-ம் ஆண்டு ஏ.பி.என். அவர்கள், தான் தயாரித்துக் கொண்டிருந்த படத்திற்காக பைனான்ஸ் பெறுவதற்காக தன் சொந்த நிறுவனமான விஜயலட்சுமி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கிய திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், திருமால் பெருமை மற்றும் தில்லானா மோகனாம்பாள் ஆகிய ஐந்து படங்களின் நீண்ட கால விநியோக உரிமை மற்றும் நெகடிவ் உரிமைகளை மயிலாடுதுறையை சேர்ந்த ஒரு பழம்பெரும் விநியோகஸ்தரிடம் கொடுத்துவிட்டு பைனான்ஸ் பெற்றுக் கொண்டார். விநியோக துறையில் இந்த விநியோகஸ்தர் மாயவரம் செட்டியார் என்ற பெயரில் பிரசித்தம்.
படத்தை வெளியிட பரமசிவம் அவர்கள் முயற்சிக்க மாயவரம் செட்டியார் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. படத்தை வெளியிடும் அனைத்து உரிமைகளும் தன்னிடம் இருப்பதாகவும் ஆகவே பரமசிவம் அவர்கள் வெளியிட முயற்சிக்கும் ஸ்கோப் டிஜிட்டல் பதிப்பை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனபது அவரது கோரிக்கை. படத்தின் 35 mm உரிமை மட்டுமே தன தந்தையார் வழங்கியிருப்பதாகவும் தான் வெளியிடப் போவது டிஜிட்டல் ஸ்கோப் பிரதி என்றும் அதற்கான உரிமைகள் யாருக்கும் வழங்கப்படவில்லை என்றும் ஆகவே தன முயற்சியை நீதிமன்றம் தடை செய்யக் கூடாது என்றும் பரமசிவம் வாதிட்டார். படத்திற்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார்.
படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்து ட்ரைலர் வெளியீட்டு விழா நடத்தி படத்தை வெளியிட வேண்டும் என்று நினைத்திருந்த பரமசிவத்திற்கு அப்படிப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை. இந்த சட்ட சிக்கலிருந்து தப்பிக்க நீதிமன்றம் மூலம் கிடைத்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு திருவிளையாடல் படத்தின் டிஜிட்டல் ஸ்கோப் பிரதியை ஒரு காட்சியாக சென்னை உட்லாண்ட்ஸ் திரையரங்கில் வெளியிட்டார். அவர் strategy என்னவென்றால் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதனால் திரையிட தயங்கும் திரையரங்க உரிமையாளர்கள் படம் திரையரங்கில் வெளியாகி விட்டது என்று தெரிந்தால் தனக்கு ஆதரவளித்து படத்தை தங்கள் அரங்குகளில் வெளியிடுவார்கள் அதன் மூலம் படத்தை தமிழகமெங்கும் திரையிட்டு விடலாம் என்பதேயாகும். ஆனால் பட தயாரிப்பு மற்றும் விநியோக துறையைப் பற்றி ஏதும் அறியாத NRI பரமசிவம் விநியோக துறையில் பழம் தின்று கொட்டை போட்ட மாயவரம் செட்டியாரை குறைவாக மதிப்பிட்டு விட்டார். செட்டியார் அனைத்து மாவட்ட விநியோகஸ்தர்களிடம் கலந்து பேசினார். அவர் highlight செய்தது ஒரே ஒரு point-தான். அனைத்து மாவட்டங்களிலும் பழைய திரைப்படங்களின் விநியோக உரிமை பெற்றுள்ள நாம் அனைவரும் 35 mm பிரதிக்கு மட்டுமே உரிமை வைத்திருக்கிறோம். பரமசிவத்தை இப்போது இந்த டிஜிட்டல் ப்திப்பு வெளியிட அனுமதித்தால் பிறகு அனைத்து தயாரிப்பாளர்களும் அந்த முறையை பின்பற்ற ஆரம்பித்து விடுவார்கள்.இப்போது தடுக்கவில்லை என்றால் இப்படி ஸ்கோப், டிஜிட்டல் அல்லது 70 mm உரிமைகள் யாருக்கும் கொடுக்கப்படவில்லை ஆகவே நாங்கள் அந்த format-ல் படத்தை வெளியிடுவோம் என்று படத் தயாரிப்பாளாரோ அல்லது படத்தின் தற்போதைய உரிமையாளரோ step எடுத்தால், நாம் அனைவரும் தொழில் செய்ய முடியாது விநியோக நிறுவனத்தை இழுத்து மூட வேண்டியதுதான் என்றார்.இது மிக பிரமாதமாக வேலை செய்தது. விநியோகஸ்தர்கள் அவரவர்களின் ஏரியாவில் உள்ள திரையரங்க உரிமையாளர்களிடம் தாங்கள் எடுத்திருக்கும் முடிவை கறாராக சொல்லிவிட, அவர்களும் இந்த ஒரு படத்திற்காக எப்போதும் தங்களுக்கு படங்களை தரும் விநியோகஸ்தர்களை பகைத்து கொள்ள விரும்பாமல் திருவிளையாடல் டிஜிட்டல் version வெளியிட ஒத்துழைப்பு கொடுக்க மறுத்து விட்டனர்.
கோவை மாவட்ட விநியோகஸ்தர்/மீடியேட்டர் ஒருவர் மூலமாக கோவை நகரிலும் மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள ஊர்களிலும் திரையிடப்பட்ட திருவிளையாடல் திரைப்படம் விநியோகஸ்தர்கள் சங்கம் கொடுத்த பிரஷர் காரணமாக உடனே எடுக்கப்பட்டது. சென்னை மாநகரிலும் ஆனந்தா பிக்சர்ஸ் மூலமாக உட்லாண்ட்ஸ் மற்றும் ஆல்பர்டில் திரையிடப்பட்ட படம் மற்ற திரையரங்க உரிமையாளர்கள் ஒத்துழைக்கத காரணத்தினால் வேறு திரையரங்குகளில் திரையிடப்பட முடியாமல் போனது. ஒரு கட்டத்திற்கு மேல் இந்த விநியோகஸ்தர்கள் சங்கத்துடன் போராட முடியாமல் திரு பரமசிவம் அயல்நாட்டிற்கே திரும்பி சென்று விட்டார்.
சென்னை நகரில் படம் வெளியான உட்லாண்ட்ஸ் மற்றும் ஆல்பர்ட் வளாகங்களில் ஆனந்தா பிக்சர்ஸ் சுரேஷ் மூலமாக வெளியிடப்பட்டது. படத்தை வெளியிடும் போது படத்தின் வசூலை எப்படி பிரித்துக் கொள்வது என்பது பற்றி எந்த வித வாய் மொழி ஒப்பந்தம் கூட செய்துக் கொள்ளப்படாமல் திரையிடப்பட்டது. படம் வெற்றிகரமாக ஐந்து வாரங்களை நிறைவு செய்யும் போது கூட நிலைமை அப்படிதான் இருந்தது. வசூலை விகிதாச்சார அடிப்படையில் பிரித்துக் கொள்வதா இல்லை அரங்கத்திற்கு வார வாடகை இவ்வளவு என்ற முறையில் share செய்வதா என்று தெரியாத சூழல் நிலவ, இதற்கு மேலும் வசூலை எப்படி பகிர்வது என்று முடிவு செய்யாமல் முடியாது என்று அரங்க உரிமையாளர்கள் ஆனந்தா சுரேஷை நெருக்க அவர் பரமசிவத்தை கேட்டு சொல்கிறேன் என்று சொல்லி விட்டு பரமசிவத்தை தொடர்பு கொள்ள முயற்சித்தால் அவரை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. உங்கள் விருப்ப்படி செய்துக் கொள்ளுங்கள் என்று சுரேஷ் சொல்ல இப்படிப்பட்ட சூழலில் படத்தை தொடர்வது நல்லதல்ல என்று முடிவு செய்து அரங்க உரிமையாளர்கள் படத்தை நிறுத்தினார்கள்.
இவர்கள் அனுபவம் இப்படியென்றால் படத்தை தங்கள் அரங்கத்திலே திரையிட விருப்பம் தெரிவித்த சத்யம் நிறுவனத்திடம் ஒப்புதல் அளித்த பரமசிவம் அடுத்த வாரத்திலிருந்து படத்தை வெளிட சொல்லிவிட்டு படத்தின் டிஜிட்டல் பிரதியை முன்கூட்டியே சத்யம் நிர்வாகத்தினரிடம் அளித்தார். ஒரு சோதனை முயற்சியாக எந்த வித விளமபரமும்மின்றி சனி மற்றும் ஞாயிறு காலை சிறப்புக் காட்சியாக அதுவும் 9 மணிக்கு திரையிடப்பட்டது. இணையதள bookingலேயே படம் இரண்டு நாளும் ஹவுஸ் புல்.[இது நடைபெற்ற நாட்கள் செப் 22 மற்றும் 23, 2012]. ஆனால் அதன் பிறகு பரமசிவம் அவர்களுக்கும் சத்யம் நிர்வாகத்தினருக்கும் ஏற்பட்ட ஒரு கருத்து வேறுபாட்டின் காரணமாக திருவிளையாடல் படம் மேற்கொண்டு அங்கு திரையிடப்படவில்லை.
சுருக்கமாக சொன்னால் தமிழகத்தில் ஆக மொத்தம் 10 திரையரங்குகளில் மட்டுமே திருவிளையாடல் வெளியானது.இதே நேரத்தில் கர்ணன் இதுவரை சுமார் 300-330 அரங்குகளில் வெளியாகி ஓடியதை இங்கே நாம் குறிப்பிட்டாக வேண்டும். இதை படிப்பவர்களுக்கு இப்போது புரிந்திருக்கும், படங்களின் வணிக விநியோக உரிமைகளைப் பற்றி அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள், எல்லாம் தெரிந்த மாதிரி இணையத்திலும் பிரிண்ட் மீடியாவிலும் எழுதுபவர்கள் சிவாஜி மேல் 1952 முதலே "மாறா அன்பு" கொண்டவர்கள் இப்படிப்பட்டவர்கள்தான் வெறும் பத்தே பத்து திரையரங்குகளில் மட்டுமே வெளியான திருவிளையாடல் படம் ஓடவில்லை என்று பேசியும் எழுதியும் வருகிறார்கள். இதனால்தான் இந்த பதிவின் தொடக்கத்திலேயே தலை காட்டிய திருவிளையாடல் என்று குறிப்பிட்டேன். திரு பரமசிவம் அவர்கள் முயற்சி எடுத்து மாயவரம் செட்டியார் அவர்களுடன் பேசி ஒரு சுமுகமான முடிவை எடுத்து அதன் பின் இந்த படத்தை மீண்டும் வெளியிட்டால் படம் பெரிய வெற்றி பெறுவது திண்ணம். திருவிளையாடல் இப்படி என்றால் வசந்த மாளிகை வேறு விதம். அதை பற்றி இப்போது பார்ப்போம்.
(தொடரும்)
அன்புடன்
Murali Srinivas
3rd October 2013, 11:35 PM
வசந்த மாளிகை டிஜிட்டல் பிரிண்ட் வெளியீடு
வசந்த மாளிகை - ஏரியாக்கள் ஒரே ஆளின் கையில் இல்லாமல் பல்வேறு நபர்களின் கைகளில் பிரிந்து கிடந்த ஓர் சூழல். சென்னை நகரமும் NSC எனப்படும் வட, தென்னாற்காடு, செங்கை மாவட்டங்களின் விநியோக உரிமையை வைத்திருந்த வினியோகஸ்த நண்பர்கள் இந்தப் படத்தையும் டிஜிட்டல் சினிமாஸ்கோப் முறையில் வெளிக் கொண்டு வர விரும்பினார்கள். மற்ற ஏரியாக்களின் உரிமையை வைத்திருந்த விநியோகஸ்தர்களிடம் இவர்கள் பேச, அனைவருக்கும் விருப்பமே. ஆனால் நீ அவல் கொண்டு வா நாங்கள் உமி கொண்டு வருகிறோம் கதையாக சென்னை விநியோகஸ்தரிடம் நீங்கள் முயற்சிகளை தொடங்குங்கள் நாங்கள் பிறகு தருகிறோம் என்றும், படம் வெளியாகி ஓடும் போது வரும் வசூலில் ஒரு ஷேர் விகிதத்தை எங்கள் முதலீட்டிற்கு ஈடாக தருகிறோம் என்றும் கூறி விட்டனர். எடுத்த காலை பின் வைக்க விரும்பாமல் சென்னை விநியோகஸ்தர்கள் டிஜிட்டல் வேலையை ஆரம்பித்தனர்.
இங்கே ஒரு விஷயம் குறிப்பிட வேண்டும். சென்னை விநியோகஸ்தர்கள் பல காலமாக சினிமா விநியோக துறையில் இருப்பவர்கள். ஆனாலும் இன்னமும் small time distributors தான். ஆகவே அவர்களால் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே பணம் முதலீடு செய்ய முடியும் என்பதுதான் எதார்த்தம். அந்த லிமிட் படத்தை ஒரு high quality digital restoration range-ற்கு கொண்டு செல்வதற்கு போதுமானதல்ல. கிடைத்த பணத்தை வைத்து அவர்கள் படத்தை ஸ்கோப் மற்றும் டிஜிட்டல் முறைக்கு மாற்றினார்கள். ஆக compromise அங்கேயே ஆரம்பித்து விட்டது. இதில் நடந்த மற்றொரு technical பின்னடைவு பற்றியும் பார்ப்போம்.
Format change எனும் போது நாம் ஏற்கனவே சொன்னது போல் நெகடிவிலிருந்து பிரிண்ட் எடுத்து செய்ய வேண்டும். அதற்கு நெகடிவ் உரிமையாளர் lab ற்கு லெட்டர் கொடுக்க வேண்டும். அந்த லெட்டர் மூலமாக லேப்-ஐ அணுகி பிரிண்ட் எடுக்க வேண்டும்.இங்கே அது நடக்கவில்லை. அதற்கு இரண்டு வகையான காரணங்கள் சொல்லப்படுகின்றன. நெகடிவ் உரிமையாளரான ராமா நாயுடு லெட்டர் கொடுத்தார். ஆனால் நெகடிவ் நல்ல condition-ல் இல்லை எனவே எடுக்க முடியவில்லை எனபது விநியோகஸ்தர் தரப்பு. மற்றொரு சாரார் சொல்வது என்னவென்றால் ராமா நாயுடு மிகப் பெரிய தயாரிப்பாளர், small time distributors -ஆன இவர்களால் ராமா நாயுடுவை அணுக முடியவில்லை. அதன் காரணமாகவே புதிய பிரிண்ட் எடுக்க முடியவில்லை என்கிறார்கள். இதில் எது உண்மையோ, பிரிண்ட் எடுக்கவில்லை எனபது உண்மை. இதுவும் ஒரு பாதிப்பே.
ஆக ஏற்கனவே இருந்த பிரிண்டில் இருந்து மற்றொரு பிரிண்ட் எடுத்து அதை ஸ்கோப் format-ற்கு மாற்றினார்கள். சரியான முறையில் அது செய்யப்படாததால் பிரிண்ட் quality-ஐ அது மிகவும் பாதித்தது. படத்தி வெளியீட்டு தேதி முடிவு செய்யப்பட்டு விளம்பரம் வந்தது. நிகில் முருகன் அவர்கள் PRO பணியை சிறப்பாக செய்தார்.தமிழகமெங்கும் 72 அரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது வசந்த மாளிகை.
ஆவலுடன் திரையரங்குக்கு சென்ற ரசிகர்கள் படத்தின் பிரிண்ட் பார்த்து மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்கள். பல ஊர்களிலும் இது வெளிப்படையான குமுறலாக வெடித்தது. மிக பெரிய வெற்றியை தன்னிகரில்லாத வெற்றியை பெற வேண்டிய படம் விநியோகஸ்தர்களின் இந்த செயலால் ஒரு பின்னடைவை சந்தித்தது.
ஆனாலும் என்ன? வெளியான 1972 செப்டம்பர் 29 முதல் இன்று வரை கணக்கிலடங்கா அரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், இடைநிலைகாரர்கள் என்று ஒரு பெரும் கூட்டத்திற்கே கை கொடுத்த சின்ன ஜமீன் ஆனந்த் இவர்களை மட்டும் கை விட்டு விடுவாரா என்ன? படம் திரையரங்குகளில் பணத்தை கொண்டு கொட்டியது. கோவை சேலம் போன்ற ஏரியாக்களில் விநியோகஸ்தருக்கு ஜாக்பாட்டே அடித்தது. பல்வேறு ஊர்களில் படத்திற்கு வந்த வசூல் தொகையை இங்கே குறிப்பிடுவது தொழில் புரிவோருக்கு நியாயம் செய்வதாக அமையாது எனபதால் அதை இங்கே தவிர்க்கிறேன். ஒரே ஒரு உதாரணம் மட்டும். மதுரையில் நான்கு அரங்குகளில் முதல் வாரம் ஓடி இரண்டாவது வாரம் சரஸ்வதி திரையரங்கில் தொடர்ந்த வசந்த மாளிகை 10 வது நாள் ஞாயிற்றுக்கிழமை மற்றுமே பெற்ற வசூல் பல படங்கள் அதே அரங்கில் ஒரு வாரம் ஓடி பெற்ற வசூலை விட அதிகம். பதிமூன்றே நாட்களில் சரஸ்வதி அரங்கில் மட்டும் பெற்ற நிகர வசூல் [Nett Collection] ருபாய் 6 லட்சத்து எம்பதினாயிரம் ரூபாய் [Rs 6,80,000/-]. எந்த படமும் எட்டி கூட பிடிக்காத வசூல். மதுரையில் மற்றும் மூன்று அரங்குகள் [மினிபிரியா,வெற்றி மற்றும் மணி இம்பாலா] மற்றும் மதுரை முகவை மாவட்டங்களில் வந்த வசூலை நாம் கணக்கிலே சேர்க்கவில்லை.அது மட்டுமா நான்கு மாதங்களுக்கு பிறகு மதுரை அலங்காரில் மீண்டும் திரையிடப்பட்டு ஒரு வாரம் அமோக வசூலை அறுவடை செய்ததை நமது திரியிலே பதிந்திருக்கிறோம். இந்த ஒரு சாம்பிள் போதும் படம் எந்தளவிற்கு வசூலித்து எனபதற்கு.அது மட்டுமல்ல பல ஊர்களிலும் படம் வெற்றிகரமாக ஓடுவதையும் இங்கே பதிவு செய்திருக்கிறோம்.
சென்னையை எடுத்துக் கொண்டால் முதலில் வெளியாகி ஓடிய வசூலை எல்லாம் கூட விட்டு விடுவோம். ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் கிருஷ்ணவேணி அரங்கில் ஆறே நாட்களில் படம் Record collection நடத்தியது. அண்மையில் கடந்த மூன்று வருடங்களில் இது போல் எந்த படமும் வசூல் செய்யவில்லை என்று தியேட்டர் அதிபரே வியந்து போய் சொன்னார்.
சுருக்கமாக சொன்னால் முதல் 2 வாரங்களுக்குள்ளாகவே படத்திற்கு செலவான தொகை திரும்ப வந்ததும் அது மட்டுமல்லாமல் அனைத்து ஏரியா விநியோகஸ்தர்களுக்கும் லாபத்தை ஈட்டி தந்து விட்டது. இது வரை சுமார் 125 அரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்டிருக்கும் வசந்த மாளிகை கர்ணன் போல 300-350 அரங்குகளில் வெளியிடப்பட்டு ஓட்டத்தை நிறைவு செய்யும் போது மிக பெரிய லாபம் அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் கிடைத்திருக்கும்.
சுருக்கமாக சொன்னால் கர்ணன் மற்றும் வசந்த மாளிகை இரண்டு படங்களுமே வசூல் சாதனை புரிந்து முதலீடு செய்தவர்களுக்கு லாபத்தை ஈட்டிக் கொடுத்து விட்டது. திருவிளையாடல் படத்தைப் பொறுத்தவரை 10 அரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்டது. சுமுகமான சூழல் உருவானால் திருவிளையாடலும் அபார வெற்றி அடையும் என்பதில் ஐயம் இல்லை.
(தொடரும்)
அன்புடன்
Murali Srinivas
3rd October 2013, 11:37 PM
பாச மலர் டிஜிட்டல் பிரிண்ட் வெளியீடு - Part II
இனி இரண்டாம் பகுதியாக பாச மலர் படம் எப்படி உருவாக்கப்பட்டிருகின்றது என்பதை காண்போம்.
பாச மலர் என்று சொன்னால் அனைவரும் அறிவர் அது சகோதர பாசத்தை முன்னிறுத்திய குடும்ப சூழலில் நடைபெறும் கதை. கருப்பு வெள்ளையில் தீட்டப்பட்ட காவியம். அன்றைய நாளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஓடக்கூடிய படம்.
இன்று வரை அதன் நெகடிவ் நல்ல முறையில் நல்ல condition-ல் பராமரிக்கப்பட்டு வருகிறது என்பதே மகிழ்வுக்குரிய செய்தி. படத்தை அதன் தரம் குறையாமல், வீரியம் கெடாமல் ஸ்கோப் format -ல் மாற்றியிருக்கிறார்கள். திருவிளையாடலை தவிர்த்து விட்டு பார்த்தால் பாச மலர்தான் அடுத்த இடத்தை பிடிக்கும். யார் யார் யார் அவள் யாரோ பாடலில் ஒரு சில நொடிகள் வந்து போகும் இரண்டு ஷாட்களை தவிர வேறு எந்த frame-ம் conversion-ல் அடிபடவில்லை.
கருப்பு வெள்ளை படங்களுக்கே ஒரு depth உண்டு. அது இந்த format-ல் சரியாக அமைந்திருக்கிறது. படத்தின் நீளம் தற்கால தேவைக்கேற்ப குறைக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற trimming செய்யும் போது பொதுவாக ஹீரோவின் ஸின்களில் கத்திரி வைக்க மாட்டார்கள். ஆனால் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் அல்லவா நமது நடிகர் திலகம். அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளின் நீளமும் trim செய்யப்பட்டிருக்கிறது. பாட்டொன்று கேட்டேன் பாடலில் ஓரு சில ஷாட்கள் பாடலின் அனுபல்லவி repeat ஆகும் இடங்கள், நடிகர் திலகம் நம்பியாரிடம் கோவப்பட்டு பேசிய காட்சிக்கு அடுத்து நம்பியார் தன சொத்தையெல்லாம் தங்கை ராஜத்தின் பெயருக்கு மாற்றி கொண்டு கொடுக்கும் காட்சியின் தொடக்கம் மற்றும் அதன் தொடர்ச்சியாக வரும் இரண்டு மூன்று ஷாட்கள் நீக்கப்பட்டு நம்பியார் எம்.என்.ராஜத்திற்கு வெளிநாட்டில் போய் படிக்கும் வாய்ப்பு வந்திருக்கும் லெட்டரை கொடுக்கும் காட்சிக்கு நேராக சென்று விடுவது போல் எடிட் செய்யப்பட்டிருகிறது.
படத்தின் பாடல்கள் மற்றும் ரீ ரெகார்டிங் போன்ற முக்கியமான விஷயங்களில் கை வைக்கவில்லை எனபது பெரும் மகிழ்வுக்கு உரிய விஷயம். அதில் கை வைக்க வேண்டிய தேவையே ஏற்படவில்லை, ஏற்பட அந்த நாட்களிலேயே மெல்லிசை மன்னர்கள் விடவில்லை என்பதுதான் உண்மை. படத்தின் முக்கியமான பாடல்கள் குறிப்பாக மலர்ந்தும் மலராத, மயங்குகிறாள் ஒரு மாது, பாட்டொன்று கேட்டேன் போன்ற பாடல்கள் அகண்ட திரையில் ஓடும் படத்தோடு கச்சிதமாக பொருந்தி கேட்ட இனிமை இருக்கிறதே. அனுபவித்தவர்களுக்கே அது புரியும். அதிலும் குறிப்பாக இசையரசியின் குரல் தேனாக வந்து காதில் ஒலிக்கின்றது.
அன்றைய நாளில் படத்திற்கு தேவையாக இருந்தது தங்கவேலு எம்.சரோஜா நகைசுவை காட்சிகள். இன்றைய நாட்களில் அந்த காட்சிகள் எங்கெல்லாம் சற்று தொய்வை ஏற்படுத்துமோ அந்த இடங்களிலெல்லாம் நீளத்தை சற்றே குறைத்து ட்ரிம் செய்திருக்கிறார்கள்.
இதுவரையில் 35 mm-ல் மட்டுமே பார்த்திருந்த இந்த படத்தை சினிமாஸ்கோப் வடிவில் பார்த்தபோதும் வசனங்களையும் பாடல்களையும் stereo sound-ல் கேட்கும்போது அற்புதமாக இருந்தது. குறிப்பாக திலகம் மற்றும் ஜெமினி இடையில் தொழிற்சாலையில் வைத்து நடைபெறும் வாக்குவாத காட்சி, தோட்டத்தில் ஜெமினியும் சாவித்திரியும் பேசிக் கொண்டிருக்க நடிகர் திலகம் ஆத்திரத்துடன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வந்து விட்டு தங்கையின் பேச்சை கேட்டு மனம் மாறும் காட்சி, சாவித்திரியின் பிறந்த நாள் காட்சியில் வரும் சில காமிரா கோணங்கள், மலர்ந்தும் மலராத பாடல் காட்சி இவை அனைத்தும் ஒரு புதிய அனுபவமாக அமைந்தது.
ஆக scope format, கருப்பு வெள்ளையின் depth, தேவையான trimming ஆனால் படத்தின் மெயின் கதைக்கோ காட்சிகளுக்கோ பங்கம் வராமல், சேதமில்லாமல் செய்யப்பட்ட மெருகேற்றல் என்று அனைத்து அம்சங்களும் நிறைவாக அமைந்திருக்கின்றன. பாசமலர் படத்திற்கு ஸ்கோப் தேவையா என்று தொடுக்கப்பட்ட கேள்விக்கு கூட பதில் என்னவென்றால் இது போன்ற கருப்பு வெள்ளை காவியங்களுக்கும் கூட மெருகேற்றல் நடந்தால் அது அடுத்து வரும் தலைமுறைகளிடம் பத்திரமாக சரியான முறையில் போய் சேரும் எனபதுதான்.
(தொடரும்)
அன்புடன்
Murali Srinivas
3rd October 2013, 11:45 PM
பாச மலர் டிஜிட்டல் பிரிண்ட் வெளியீடு - Part III
பாச மலர் வெளியீட்டு சூழலும் அதன் பின் நடந்த நிகழ்வுகளும்
ஒரு பழைய படத்தை restore செய்து வெளியிடுவது என்பது ஒரு புதிய படத்தை தயாரித்து வெளியிடுவதற்கு சமம். இன்றைய சூழலில் செய்ய வேண்டியவன என்ன என்பதை பார்க்கலாம்.
தமிழகத்தின் அனைத்து ஏரியாக்களின் உரிமையை வாங்குதல்
நெகடிவ் உரிமை கிடைப்பின் அதை வாங்குதல்.
நெகடிவ் உரிமை கிடைக்காத பட்சத்தில் நெகடிவிலிருந்து நல்ல பிரதி ஒன்றை எடுத்தல்
நல்ல தொழில் நுட்ப வசதியுள்ள ஒரு லாபில் வல்லுனர்களை கொண்டு புதிதாய் போடப்பட்ட பிரிண்டை பயன்படுத்தி படத்தின் restoration வேலையை திறம்பட செய்தல்
ஒரு தேர்ந்த அனுபவ ஞானம் உள்ள எடிட்டர் ஒருவரை நியமித்து தற்காலத்திற்கேற்ப படத்தின் நீளத்தை trim செய்தல்
தேவையென்றால் படத்தின் ஒரிஜினல் இசைக் கோர்ப்பு சேதமடைந்திருக்கும் பட்சத்தில் அதை நெகடிவிலிருந்து பிரித்து தகுதியான நபர்களை கொண்டு பின்னணி இசையை மீண்டும் அமைத்து சேர்த்தல்.[இந்த வகை பின்னணி சேர்ப்பு தவிர்க்க முடியாத சூழலிலே மட்டுமே செய்ய வேண்டும்]
பட வெளியீட்டுக்கு முன் ட்ரைலர் வெள்யீட்டு விழாவை நடத்துதல்
அனைத்து ஊர்களிலும் நல்ல திரையரங்குகளில் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்தல்
படம் வெளியாகும் திரையரங்குகளில் அந்த ட்ரைலர் காண்பித்தல்
படம் வெளியாகும் தேதி பற்றிய விவரங்களை விளம்பரங்கள் மூலமாக மக்களிடையே கொண்டு செல்லுதல்
நாளிதழ்களில் விளம்பரம் எனும் போது ஆங்கில தின இதழ்களிலும் குறிப்பாக ஹிந்துவில் விளம்பரம் செய்தல்
படத்தை Qube format-ல் மாற்றி அமைத்தல்.
படத்திற்கு ஒரு பத்திரிக்கையாளர் preview காட்சிக்கு ஏற்பாடு செய்தல்
படம் வெளியாகும் நேரத்திலும் அதன் பின்னரும் படத்தின் விளமபரங்களை மக்களிடையே சென்று சேர்த்தல்
இப்படி பல விஷயங்களை உள்ளடக்கியது ஒரு பழைய படத்தின் restoration மற்றும் ரிலீஸ் வேலைகள்
இவை பாச மலருக்கு எப்படி நடந்தன?
ட்ரைலர் வெளியீட்டு விழா வரை சரியான பாதையில் பயணித்து கொண்டிருந்தது பாச மலர்.
படத்தை விநியோகம் செய்யும் உரிமைக்கும் போட்டி இருந்தது. இன்றைய சூழலில் விநியோக துறையில் அனுபவம் உள்ளவர்கள் இதை ஏற்று செய்தாலே சரியாக இருக்கும் என ஒரு முடிவெடுத்து அதன்படி சென்னை நகருக்கு பூமிநாதனே பொறுப்பு எடுத்துக் கொள்வது, NSC ஏரியா திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. இவை தவிர்த்து தமிழகத்தின் அனைத்து ஏரியாக்களையும் தான் எடுத்துக் கொண்டு விநியோகம் செய்வதாக தேனாண்டாள் பிலிம்ஸ் அதிபரும் திரைப்பட இயக்குனருமான ராம.நாராயணன் கேட்டுக் கொள்ள அது அப்படியே அவருக்கு வழங்கப்பட்டது.
ரிலீஸ் தேதி முடிவு எடுக்கும் நேரத்தில்தான் சிக்கல்கள் தொடங்கின. படத்தை ஆகஸ்ட் 15 அன்று திரைக்கு கொண்டு வரலாம் என்று ஆலோசனை சொல்லப்பட்டது.
படத்தை restoration செய்து வெளியிட்ட பூமிநாதனுக்கு ஒரு தயக்கம். காரணம் என்னவென்றால் ஆகஸ்ட் 9 அன்று தலைவா படம் வெளியாவதாக அறிவிப்பு வந்திருந்தது. அப்போது வெளியிட்டால் பாச மலர் படத்திற்கு தேவையான அரங்குகள் கிடைக்குமா என்ற யோசனை. ஆலோசனை சொன்னவர்கள் அதற்கு சொன்ன பதில், இப்போது தலைவா வருகிறது. சரி அதற்காக நாம் ரிலீஸ் தேதியை மாற்றி அமைக்கிறோம். அடுத்த மாதம் அஜித் படம் வருகிறது, கார்த்தி படம் வருகிறது, ஆர்யா மற்றும் விஷால் படங்கள் வருகிறது, பிறகு கமல் படம் வரும். இன்னும் சொல்லப் போனால் இன்றைய சூழலில் ஒவ்வொரு வாரமும் சின்னதும் பெரிதுமாக 3,4 படங்கள் வெளியாகி கொண்டேயிருக்கின்றன. அதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் நாம் பாச மலர் படத்தை திரையிடவே முடியாது என்று சொல்லப்பட்டது. ஆகவே 100 திரையரங்குகளில் திரையிட்டால்தான் ஆயிற்று என்ற நிலைப்பாட்டை எடுக்காமல் 40-50 அரங்குகளில் ரீலீஸ் செய்தால் போதும். பிறகு நாம் அரங்குகளின் எண்ணிக்கையை கூட்டி கொள்ளலாம் என்றும் சொல்லப்பட்டது. இந்த வாதம் லாஜிக்கின் அடிப்படையில் அமைந்திருந்ததால் ஏற்றுக் கொள்ளபப்ட்டு படத்தை ஆகஸ்ட் 15 அன்று திரைக்கு கொண்டு வரும் முயற்சிகள் துவங்கின. இந்த செயல் திட்டம் வெற்றி அடைந்திருக்கும், தலைவா முதலில் அறிவித்தப்படி ஆகஸ்ட் 9 அன்று வெளியாகியிருந்தால். ஆனால் அப்போதுதான் யாரும் எதிர்பார்க்காத அந்த twist நிகழ்ந்தது.
தலைவா ஆகஸ்ட் 9 அன்று வெளியாக வேண்டிய சூழலில் திடீரென்று முதல் நாளன்று படம் வெளிவராது என்று செய்தி. எப்போதும் வருவது போல் வதந்தி என்று பார்த்தால் படம் வெளிவரவில்லை. என்ன சிக்கல் என்று யாருக்கும் தெரியவில்லை இன்று வரை. மறு நாள் வெளியாகி விடும், அடுத்த நாள் வெளியாகி விடும் என்றெல்லாம் தகவல்கள் கசிந்தனவேயன்றி படம் வெளிவந்த பாடில்லை. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது பாச மலர் படம்தான். தலைவா சொன்னபடி வெளியாகியிருந்தால் படத்தின் ரிப்போர்ட் வந்திருக்கும், அதற்கேற்ப பாச மலர் படத்திற்கு அரங்குகள் கிடைப்பது உறுதிப்பட்டிருக்கும். ஆனால் படம் வெளியாகும் தேதி தெரியாததால் அரங்க உரிமையாளர்கள் பாச மலர் படத்திறகு தியேட்டர் கமிட் செய்ய தயங்கினார்கள். அதிலும் குறிப்பாக ஆகஸ்ட் 15 அன்று தலைவா எப்படியும் வெளி வந்து விடும் என்று வேறு யூகங்கள் வந்து கொண்டிருந்தன. இந்த பாதிப்பு சென்னை நகரத்தை விட அதிகமாக வெளிப்பட்டது மற்ற ஊர்களில்தான்.
கோவை தவிர ஏனைய நகரங்களில் நல்ல திரையரங்குகள் கிடைப்பதே அரிதாகி விட்டது. ராம.நாராயணன் பெரிய தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர், அவர் நல்ல திரையரங்குகளை ஒப்பந்தம் செய்வார் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருக்க அவரால் நியமிக்கப்பட்ட ஆட்கள் அது போன்ற எந்த முன்னேற்பாடுகளும் செய்யாமல் ஆகாத போகாத அரங்குகளையெல்லாம் ஒப்பந்தம் செய்தார்கள். குறிப்பாக திருச்சியில் பாலஸ் மற்றும் மதுரையில் அலங்கார் அரங்குகளை சொல்ல வேண்டும்.
ரசிகர்கள்களை மிகவும் கோவப்பட வைத்ததும் வேதனையில் ஆழ்த்தியதுமான சம்பவங்கள் இவை.படம் வெளியாகும் அன்று வேறு நல்ல அரங்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் தலைவா வெளியீடு மீண்டும் கேள்விகுறி ஆனதால் பாச மலர் ரிலீஸ் தியேட்டர்கள் எண்ணிக்கையும் கேள்விகுறி ஆனது. சொல்லப் போனால் பாச மலர் வெளியான ஒரு சில அரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டதே படம் வெளியாவதற்கு முந்தின இரவுதான்.
இப்படி அரங்குகள் கிடைக்காமல் திணறிக் கொண்டிருந்ததால் படத்தின் ட்ரைலர் எங்கும் திரையிடப்படவேயில்லை. பத்திரிக்கை விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்களும் மிக குறைவு. தந்தியில் மட்டுமே விளம்பரம் வந்ததால் ஆங்கில பத்திரிக்கைகளான ஹிந்து மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா மற்றுமே வாங்கும் சந்தாதாரர்களுக்கு படத்தின் ரிலீஸ் பற்றிய செய்திகள் சென்று சேரவேயில்லை. மற்றொரு பெரிய மைனஸ் பாயிண்ட் நிகில் முருகன் போன்ற ஒரு PRO அமையாமல் போனதுதான். இப்படிப்பட்ட சிக்கல்களையெல்லாம் தாண்டி படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியானது. சுமார் 45 முதல் 50 அரங்குகளில் வெளியானது. ஆனால் பிரச்னை என்னவென்றால் முதல் நாள் இரவுதான் கணிசமான அரங்குகள் முடிவானதால் பத்திரிக்கையில் வந்த இன்று முதல் விளம்பரத்தில் அரங்குகள் பெயர்களை சேர்க்க முடியவில்லை. இதனால் அந்தந்த ஊர்களில் எந்த அரங்கில் படம் வெளியாகிறது என்பது பற்றி அந்த ஊர்காரகளுக்கே தெரியவில்லை.
முதல் நாள் படம் பார்த்த அனைவரும் படத்தின் quality பார்த்து அசந்து விட்டனர். ஒரு கருப்பு வெள்ளை படத்தை இத்துணை அழகுற சினிமாஸ்கோப் format-ல் பார்த்ததே இல்லை என்பதால் பிரமிப்பு கூடுதலாகவே இருந்தது.முதல் நாள் reception நன்றாகவே இருந்தது.
இரண்டாம் நாள் ஆகஸ்ட் 16 வெள்ளி. வேலை நாள்.அன்று கடைசி ஆடி வெள்ளி. வரலட்சுமி விரதம். இதெல்லாம் போதாதென்று ஜெயா டிவியில் அன்று பாச மலர் படம் ஒளிபரப்பானது. இத்தகைய காரணங்களால் அன்றைய தினம் பாச மலர் படத்திற்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டது.
அடுத்த நாள் சனி அதற்கு அடுத்த நாள் ஞாயிறு இந்த இரண்டு நாட்களிலும் படம் மீண்டும் pick up ஆகி கூட்டம் வர ஆரம்பித்து விட்டது. சென்னை மட்டுமல்ல middle மற்றும் பெரிய நகரங்களிலும் இந்த நிலைமை இருந்தது, இந்த நேரத்தில்தான் பிரச்சனைகள் தீர்ந்து விட்டன தலைவா ஆகஸ்ட் 20 அன்று வெளியாகிறது என்ற செய்தி வருகிறது.
அந்த படம் வெளியாகிறது என்றவுடன் அரங்க உரிமையாளர்கள் அனைவரும் தலைவா படத்தை வெளியிட மும்முரம் காட்டினார்கள். நன்றாக ஓடிக் கொண்டிருந்த அரங்குகளிளிருந்தும் பாச மலர் மாற்றப்பட்டது. இதற்கு ஒரு சில உதாரணங்களை பார்க்கலாம்.
சென்னை சத்யம் அரங்கில் 3 நாட்கள் ஹவுஸ் புல். ஒரு நாள் 90% occupancy, ஒரு நாள் 60% occupancy. Inox அரங்கத்தை எடுத்துக் கொண்டால் மூன்று நாட்கள் 75 to 90% occupancy. PVR அரங்கிலும் இதே நிலை. சாந்தியில் ஞாயிறு மாலை ஹவுஸ் புல். ஆனாலும் சத்யம், Inox மற்றும் PVR போன்ற அரங்குகளில் படம் மாற்றப்பட்டது. இதில் வருத்தத்துக்குரிய விஷயம் என்னவென்றால் ஏன் படத்தை எடுத்தீர்கள் என்று கூட இந்த அரங்க உரிமையாளர்களை கேட்க முடியாது.காரணம் இன்றைய சூழலில் திரையரங்குகள் கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கும் நிலையில் இவர்களை கேள்வி கேட்கவோ வாதம் செய்யவோ எந்த விநியோகஸ்தரும் தயாராக இல்லை என்பதே உண்மை. இந்த அரங்குகள் ஒவ்வொன்றிலும் 5க்கும் மேற்பட்ட ஸ்க்ரீன்கள் இருக்கின்ற நிலையில் நிச்சயமாக இந்தப் படத்தை அவர்கள் தொடர்ந்திருக்கலாம்.
மதுரையில் அலங்காரில் திரையிடப்பட்ட பாச மலர் படத்திற்கு நல்ல reception, அதாவது அலங்கார் என்ற திரையரங்கில் மூன்று வருடங்களாக எந்தப் படமும் பெறாத வரவேற்பை இந்தப் படம் பெற்றது. பாச மலர் வருவதற்கு 3 வாரங்களுக்கு முன்பு இதே அலங்காரில் வெளியான வசந்த மாளிகை பெரிய வரவேற்பை பெற்றது. அதையும் தாண்டியது பாச மலர். முதல் வாரத்தில் வசூல் கிட்டத்தட்ட ரூபாய் 90 ஆயிரத்தை எட்டியது. இப்படி இருந்தும் ராம.நாராயணனின் ஆட்கள் அதை முன்னெடுத்து செல்ல எந்த துரும்பையும் கிள்ளிப் போடவில்லை. ராஜபாளையம் நகரிலும் படம் நன்றாகவே ஒரு வாரம் போனது
சேலத்தில் இரண்டு அரங்கங்கள், ஆத்தூர் கிருஷ்ணகிரி நாமக்கல் போன்ற இடங்களிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு. இங்கேயும் விநியோகஸ்தர் interest எடுக்கவில்லை. கோவை மாவட்டத்திலும் இதே நிலைதான். திருப்பூர் நகரில் இரண்டு அரங்குகளில் வெளியாகி இரண்டிலும் ஒரு வாரம் ஓடிய நிலைமை. நாகர்கோவிலில் எப்போதும் போல வரவேற்பு. இங்கேயும் படம் மாற்றப்பட்டு புதிய படம் வெளியானது. ஆனால் பாசமலர் பெற்ற வசூலை விட குறைவு.
இத்தனை இடர்பாடுகள். இவற்றை சரி செய்ய படத்தை வெளியிட்டவர்கள் ஏதேனும் முயற்சி எடுத்தார்களா என்றால் பதில் இல்லை என்றே சொல்ல வேண்டும். நான் முன்னரே சொன்ன மாதிரி ட்ரைலர் வெளியீட்டு விழா வரை சரியான பாதையில் சென்றவர்கள் அதன் பிறகு படத்தை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில், இப்படி ஒரு படம் இங்கே ஓடிக் கொண்டிருக்கிறது என்ற தகவல்களை கூட சரியான முறையில் விளம்பரப்படுத்தவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை. படம் வெளியான பிறகும் விளம்பரங்கள் செய்ய வேண்டும், போஸ்டர்கள் ஓட்டப்பட வேண்டும் திரையரங்குகளுக்கு Qube முறையில் படத்தை திரையிட வாரந்தோறும் வாடகை கட்ட வேண்டும் போன்ற விஷயங்களை கூட அவர்கள் யோசித்து பார்த்தார்களா என்பதே பெரிய கேள்விகுறி. படம் வெளியான ஊர்களில் இருந்து வரும் feedback என்ன அவற்றில் ஏதேனும் குறைகள் இருப்பின் அதை நீக்கி ஒரு solution தேடினார்களா என்றால் இல்லை. அப்படி செய்திருந்தால் திருச்சி போன்ற ஊர்களில் ரசிகர்களின் மனக்குமுறலை அவர்கள் அறிந்திருப்பார்கள். திருச்சி நகரில் பாழடைந்த நிலையில் இருக்கும் பாலஸ் அரங்கில் வெளியிட வேண்டாம் என்று சொன்னதை கேட்டிருப்பார்கள். படம் வெளியான பிறகு கூட ஏதேனும் நல்ல அரங்கில் படத்தை வெளியிட செய்யுங்கள் நிச்சயமாக படம் நன்றாக போகும் என்று சொன்னதை யாரும் காதில் வாங்கவேயில்லை. சென்னை NSC தவிர்த்து அனைத்து ஏரியாக்களையும் வாங்கிய ராம.நாராயணன் பெரிதாக ஏதோ செய்யப் போகிறார் என்று பார்த்தால் அவரும் அவர் பிரதிநிதிகளும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர் எடுத்துக் கொண்டிருந்த சொந்தப் படத்தைதான் அவர் பார்த்தார். [ஆனால் poetic justice போல அந்த படம் தியேட்டரில் குப்புற கவிழ்ந்தது].
விளம்பரங்களைப் பற்றி சொல்லும்போது ஒரு விஷயம் இகே குறிப்பிட வேண்டும். ராஜ் டிவி நிறுவனத்தினர் 1979-ல் வெளியான நினைத்தாலே இனிக்கும் படத்தை மீண்டும் restoration முறையில் திரையிடுகிறார்கள். அக்டோபர் 4 முதல் என்று இப்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருகின்ற இந்த படத்திற்கு ஜூலை 15 முதல் தினசரி தந்தியில் விளம்பரம் கொடுத்தார்கள், கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு புதிய படத்திற்கு கூட இல்லாத வகையில் தொடர்ந்து 70 நாட்களுக்கும் மேலாக இவர்கள் கொடுத்த விளம்பரங்களுக்கு ஆன செலவு மட்டும் ருபாய் 10 லட்சம் என்று சொல்கிறாகள். இது சற்றே அதிகம் என்றாலும் கூட விளம்பரம் எத்துனை முக்கியம் என்பதை சுட்டிக்காட்டவே இதை குறிப்பிட்டேன்.
சுருக்கமாக சொன்னால் பாச மலர் படத்திற்கு நேர்ந்தது பல்வேறு முனை தாக்குதல்கள் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள். படத்தை ஆகஸ்ட் 15 அன்று வெளியிடாமல் சற்று பொறுத்து வெளியிட்டுருந்தால் படம் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கும். இந்த சிந்தனை hindsight-ல் தோன்றும் ஒன்று என்று சொன்னால் கூட அதன் பிறகு நடந்த நிகழ்வுகளை கோர்வைப்படுத்தி பார்த்தால் அது சரி என்றே தோன்றுகிறது.எந்தெந்த புதிய படங்களெல்லாம் செப் மற்றும் அக்டோபர் மாதங்களில் வரும் என்று நினைத்து பாச மலரை ஆகஸ்ட் 15 அன்று ரிலீஸ் செய்ய சொன்னார்களோ அந்த படங்களெல்லாம் வெளியீட்டு தேதி மாறி தீபாவளி ரிலீஸ் படங்களாக போனதை இங்கே குறிப்பிட வேண்டும்.
இனி முதல் பதிவில் சொன்னபடி இந்த படம் restoration முறையில் ரிலீஸ் செய்திருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு வருவோம். கேள்வி எழுப்பியவர்கள் சொல்லும் காரணங்கள் படம் சோகப் படம், பாசத்தை மட்டுமே பேசும் படம் black and white படம் என்பதால் மக்களுக்கு ஒரு தயக்கம் இருக்கும் என்று.ஆனால் மேற் சொன்ன காரணங்களினால்தான் படம் சற்று பின்னடைவை சந்தித்ததா என்றால் அப்படி இல்லை என்றே தோன்றுகிறது. சோகமான Black & White படம் இளைய தலைமுறையிடம் பெரிய வரவேற்ப்பை பெறாமல் இருக்கலாம். ஆனால் இந்த படத்தின் target audience அவர்கள் இல்லை. நடுத்தர வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் தான் இந்தப் படத்தின் இலக்கு. ஆனால் அவர்கள் படம் வெளியான உடன் வர மாட்டார்கள்.சற்றே தாமதித்தே அவர்கள் திரையரங்கு பக்கம் வருவார்கள். எனவே அப்படிப்பட்ட ஆட்களிடம் படம் எந்த அரங்கில் எந்த காட்சிகளில் ஓடுகிறது என்பது பற்றிய விவரங்கள் சரியாக சென்று சேர்த்திருந்தால் அவர்கள் நிச்சயமாக வந்திருந்து படத்தை ரசித்திருப்பார்கள்.
இன்றைய சூழலிலும் கூட ஒன்றும் மோசம் போய் விடவில்லை. படத்தை எடுத்தவர்களுக்கு அவர்கள் செய்த பண முதலீட்டில் 50% திரும்பி வந்து விட்டது. இனியும் 5 வருடங்களுக்கு அவர்களுக்கு திரையிடும் உரிமை இருக்கிறது. சொந்தமாகவே qube format-ல் மாற்றி அமைக்கப்பட்ட பிரிண்ட்கள் இருக்கின்றன. எப்போதெல்லாம் திரையரங்குகளில் gap கிடைக்கிறதோ அப்போதெல்லாம் திரையிடலாம். அவர்கள் முதலீட்டிற்கு மேல் லாபம் கிடைப்பது நிச்சயம். அதற்கு எடுத்துக்காட்டாக சென்ற வாரத்தில் செங்கோட்டை ஆனந்த் அரங்கிலும் மதுரை ஷா அரங்கிலும் வெளியிடப்பட்டு ஓடியிருக்கிறது. இந்த சூழல் தொடரும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
படம் wrong choice அல்ல. இன்றைய காலகட்டத்தில் உறவு முறைகளில் பாசமும் நேசமும் அன்பும் அருகி வரும் சூழலில் அதிலும் nuclear family என்று அறியப்படும் one child family-யில் பெரியப்பா சித்தப்பா அத்தை மாமன் என்ற நெருங்கிய உறவு முறைகள் பற்றி கூட தெரியாமல் வளர்ந்து வரும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு சகோதர பாசத்தின் பெருமையை சொல்லும் இந்த மாதிரி படங்கள் கண்டிப்பாக தேவை எனபதே யதார்த்தம். அந்த வகையில் இபப்டிப்பட்ட சோக ரசம் சற்றே அதிகமாக இருந்தாலும் tragedy ending ஆக இருந்தாலும் அதையும் தாண்டி இப்படிப்பட்ட ஒரு Black & White காவியத்தை restoration முறையில் கொண்டு வர வேண்டும் என்று முயற்சி எடுத்து அதை சிறப்பாக செய்துக் காட்டிய பூமிநாதன் பாராட்டுக்குரியவர்.
ஒரு பக்கம் சமுதாயத்திற்கு நல்ல கருத்துகளை சொல்ல வேண்டும் அதை சொல்வதற்கு ஆளே இல்லை என்றெல்லாம் சொல்லிக் கொண்டே மறு பக்கத்தில் தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் நல்ல கருத்துள்ள இந்த படம் சரியாக போகவில்லை என்று கொண்டாடி மகிழ்கிறார்கள் சிலர் என்பதுதான் மிகவும் வேதனையான செய்தி. இதை பார்க்கும் போது படத்தில் வரும் பாடல் வரிகள்தான் நினைவிற்கு வருகிறது.
நெஞ்சில் ஒரு களங்கமில்லை
சொல்லில் ஒரு பொய்யுமில்லை
வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை.தோல்வியுமில்லை
என்று பாடியதோடு மட்டுமல்லாமல் அதன்படி வாழ்ந்தும் காட்டிய அந்த மாமனிதனின் ஆசிகள் இந்த முயற்சியையும் வெற்றி பெற வைத்து இந்த தயாரிப்பாளரையும் வாழ வைக்கும்.
இதை வாசித்த அனைவருக்கும் நன்றி.
அன்புடன்
Subramaniam Ramajayam
4th October 2013, 05:31 AM
MURALI SIR,
THANKS FOR your detailed writeups about thiruvilaiyadal-vmaligai-and pasamalar.
many facts known for limited circles only were highlighted and well informed to all sections of society thereby eliminating the .mistalks about these films to a larger extent.
we hope that these films will get a fresh openings sooner or later.
you have done a commandable job this way by removing \ falsepropagandas about nonperformances of these movies by some vested interests of the society.
nadigarthilagam always a SUPERSTAR WHETHER SOME PEOPLE I MEAN ONLY SOMEPEOPLE ACCEPT OR NOT.
vasudevan31355
4th October 2013, 06:43 AM
அருமை முரளி சார். வெளியுலகிற்குத் தெரியாத பல உண்மைகள், அவ்வளவு ஏன் எங்களுக்கே தெரியாத பல நிகழ்வுகள் தங்கள் பதிவின் மூலம் அனைவருக்கும் விளக்கமாகத் தெரிய வந்துள்ளன. நீங்கள் குறிப்பிட்டது போல திருவிளையாடல், வசந்த மாளிகை, பாசமலர் போன்ற படங்களுக்கு சொல்லி வைத்தார் போல துரதிர்ஷ்டவசமான பின்னணிகள், அறியாமையினால் ஏற்பட்ட தவறுகள், விநியோகச் சிக்கல்கள் என்று ஏகப்பட்ட சிரமங்கள். இனிமேலாவது இது போன்ற சிக்கல்கள் முன் கூட்டியே ஆராயப்பட்டு தீர்க்கப்பட வேண்டும் என்பதே நமது ஆசை.
இப்போது கூடப் பாருங்கள். சமீபத்தில் சென்னை மகாலக்ஷ்மியில் வெளியான நீதி, நான் வாழ வைப்பேன் இரண்டு படங்களும் சக்கை போடு போட்டுள்ளன. இதற்கே நடிகர் திலகத்தின் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களில் நமது ரசிகர்கள் மூழ்கிப் போன அந்த சூழ்நிலையிலும் நான் வாழ வைப்பேன் வசூலில் பின்னியுள்ளது. ரசிகர்கள் வரவு கம்மிதான் என்று தியேட்டர் நிர்வாகமே கூறியுள்ளது. ஆனால் பொது மக்கள் அமோக ஆதரவு அளித்து படத்தை எங்கோ தூக்கி நிறுத்தி விட்டார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? பொது மக்களின் ஏகோபித்த வசூல் சக்கரவர்த்தி நடிகர் திலகம் என்ற உண்மை மீண்டும் நிரூபணமாயிற்று என்றுதானே அர்த்தம்!
ஒரு நடிகர் திலகத்தின் படத்தை அதே தரத்தில் மீண்டும் ஒரு புதிய பிரிண்ட் போட்டு ரூபாய் ஐம்பதாயிரத்திலிருந்து அறுபதாயிரம் வரையில் ஆகலாம்).ஒரு பத்து தியேட்டர்களில் நல்ல விளம்பரம் செய்து வெளியிட்டாலே போதும். டிஜிட்டல், ரெஸ்டோர், கியூப் என்பதெலாம் இல்லாமல் அதே 35 mm இல் வெளியிட்டாலே போதுமானது என்பது என் தாழ்மையான கருத்து.
முரளி சார்,
மிக அபூர்வமான விஷயங்களை எங்களுக்காக சிரமப்பட்டு விசாரித்து இங்கே அழகாக, அருமையாகத் தொகுத்து வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசுவோரை மீண்டும் மறு சிந்தனை செய்ய வைத்துள்ளீர்கள். பல அரிய உண்மைகள் இப்போது தங்களால் தெரிய வந்துள்ளன.
விவரமான. வெகு நேர்த்தியான, உண்மையான, ஆதாரபூர்வமான, உணர்வுபூர்வமான தங்கள் இந்த தெளிய வைக்கும் கட்டுரைகளுக்கு எனது மனமார்ந்த ஆயிரமாயிரம் நன்றிகள்.
IliFiSRurdy
4th October 2013, 06:57 AM
நடிகர்திலகத்தின் மேதைமையை எவ்வளவோ விவரித்தாயிற்று. ஆனாலும் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக....... அவர் மேதைமை புலப்படும்.
லட்ச கணக்கில் இருக்கே கோபால் சார்!
ரங்கன் தயங்கித் தயங்கி அந்த வீட்டினுள் நுழைகிறான்.
சில மாதங்களுக்கு முன்தான் அவன் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருப்பான்.
அந்த வீட்டின் எஜமானன் அவனுக்கு தந்தை; எஜமானியம்மாள் தாய்.
ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள் /சதிகள் அவனை அந்த நல்லவர்களிடமிருந்து பிரித்து விடும்
வீட்டில் நுழையும் அவனுக்கு அங்குள்ள ஒரு அமானுஷ்ய அமைதி கலக்கத்தை கொடுக்க,
கண்கள் பயத்துடன் நாலாபுறமும் சுழலும்.அதோ அங்கே அவன் தந்தையின் படம்..
ஆனால்,ஆனால்..... அதற்கு மாலை அணிவிக்கப்பட்டுள்ளதே!
அந்த அதிர்ச்சி தாக்க, அப்படியே திரும்பும் அவன், அங்கு கீழே அமர்ந்திருக்கும் தாயைக் காண்கிறான்....
விதவைகோலத்தில்..
அப்படியே மனம் உடைந்து, இடி தாக்கியது போல “ஐயோ” என அலறிக்கொண்டு, கதறிக்கொண்டு,
வேரற்ற மரம் போல அவள் கால்களில் விழுகிறான்.
சில விநாடிகள்தான்!
பிறகு அந்த அழுகை போன இடம் தெரியவில்லை.
கண்களில் ஒரு வெற்றுப்பார்வை.
ஒரு காலியிடத்தை (vacuum)உருவாக்குவார் பாருங்கள்.!!
அனுபவித்தவர்களுக்கே தெரியும், ஒரு மாபெரும் சோகத்தை தொடர்வது இயலாமையின் பிரதிபலிப்பு..
இனி அழுது என்ன ஆகபோகிறது எனும் ஒரு விரக்தி கலந்த மனக்கசப்பு.
இப்படி ஒரு ஜீவனுள்ள, நம் கலாச்சாரம் கலந்த, ஆண்மகனின் உண்மையான சோகத்தை,
எந்த ஒரு நடிகனாலும் காட்ட முடியாது.பார்வையாளனை அப்படியே உலுக்கும் அந்த காட்சியில்
சோகத்திற்கு ஒரு இலக்கணமே படைக்கப்பட்டிருக்கும்.
இந்த spontaneity க்கு மறுபக்கம் செளத்திரியின் சோகம்.
காதல் மனைவியின் உடல் முன் அழக்கூடாது எனும் உறுதியுடன் வரும் போலீஸ் உயர் அதிகாரி
சிறிது சிறிதாக சிதைந்து கதறும் அந்த அற்புத காட்சி.
முந்தையது emotional fission என்றால் இரண்டாவது emotional fusion.
நடத்துபவரோ....
திரையுலகின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்..
நாம் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள்தான்!
IliFiSRurdy
4th October 2013, 07:16 AM
பாச மலர் டிஜிட்டல் பிரிண்ட் வெளியீடு - Part III
பாச மலர் வெளியீட்டு சூழலும் அதன் பின் நடந்த நிகழ்வுகளும்
அன்புடன்
Dear முரளி சார்,
ஒரு கைதேர்ந்த, திறமைசாலியான வழக்கறிஞரால் கூட தன் தரப்பு வாதங்களை இவ்வளவு தெளிவாக ஆழமாக எடுத்துரைக்க இயலுமா என்பது சந்தேகமே.
Simply Awesome and Brilliant.மனமார்ந்த நன்றி.
அன்புடன்,
Ganpat
Gopal.s
4th October 2013, 07:29 AM
முரளி,
அற்புதம் என்ற சொல்லை தவிர வேறு ஏதும் அகப்படவில்லை.(தங்களிடம் கடன் வாங்கியது)
இப்படி ஒரு மூளைகளை திரியில் கொண்டிருக்கிறோம்.என்ன ஒரு in -depth analysis !!!என்ன இருந்தாலும் பன்னாட்டு வங்கியின் அதிகாரியின் மூளை என்றால் சும்மாவா?
மிக மிக அர்த்தமுள்ள ,அற்புதமான,கேள்விகளுக்கு இடமே வைக்காமல், எல்லா தரப்பினரையும் சரியாக உணர செய்த பதிவுகள்.
ஆனால் மனமுதிற்சியற்று ,என்றோ தவறான பிரசாரங்களால் brainwash செய்ய பட்ட சிலர் ,பெருமைக்கும்,போற்றுதலுக்கும் உரிய அந்த தமிழனை, இன்னும் எதிரியாகவே கருதி கொண்டிருக்கும் கேவலம்???இந்த communication & information யுகத்தில் கூடவா? வக்கிரம் சுமந்த தீவிரவாதிகள் மதத்தில் மட்டுமல்ல,நம் இனத்திலும் இருப்பதுடன் ,அதை பெருமையாக வேறு கருதுகிறார்கள்.
RAGHAVENDRA
4th October 2013, 07:44 AM
டியர் முரளி சார்
திருவிளையாடல், வசந்த மாளிகை, பாச மலர் மூன்று திரைக்காவியங்களின் வெளியீடு நவீன மயமாக்கல் உள்பட அனைத்து விஷயங்களையும் Logical analysis மட்டுமின்றி நடைமுறையில் அவை சந்தித்த சோதனைகளையும் மிகவும் சிறப்பாக சொல்லி விட்டீர்கள். உலக மகா தமிழ்க் கலைஞனான நடிகர் திலகம் என்றைக்குமே வெற்றிகளை, சோதனைகளையும் சிரமங்களையும் சந்தித்தே பெற்றுள்ளார் என்பதற்கு நிகழ்கால சான்றாக இவை விளங்குகின்றன. ஒரு கலைஞன் அதுவும் நடிகர் திலகம் போன்ற சாதனையாளர் படம் என்றால் அதற்கு அத்துறையைச் சார்ந்தவர்களுக்கு இடையே வர்த்தக ரீதியாக போட்டி நிலவுகிறது என்பதே அவருடைய வெற்றித் தன்மைக்கு சான்றாக அமைந்து விடுகிறது. அப்படிப்பட்ட யுக கலைஞருக்கு ஓர் அஞ்சலியாக நினைத்து இத்தொழில் முனைவோர் இவ்வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பார்களேயானால் இவ்வித சிக்கல்கள் அதிகம் தோன்றாமல் இருந்திருக்கும். அதை இக்காலத்தில் எதிர்பார்ப்பது சரியில்லை என்றே என் சிற்றறிவுக்குத் தோன்றுகிறது.
பாச மலர் திரைப்படத்தைப் பொறுத்த வரை, தாங்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல், அது பொன் முட்டையிடும் வாத்து எனலாம். உரிமையாளரிடம் இருக்கும் உயர்தரமுள்ள பொருள், என்றைக்கு இருந்தாலும் விலை போகக் கூடியது. மீண்டும் ஒரு முறை குறைந்தது 25 லிருந்து 30 திரையரங்குகள் வரை திரையிட்டாலும் வசூலை வாரிக் கொடுத்து பொருளாதார நிலையை மேலும் உயர்த்தக் கூடிய வலிமை வாய்ந்தது.
இனி நம் வேண்டுகோள் எல்லாம் இது தான். எதிர்காலத்தில் நடிகர் திலகத்தின் திரைப்படங்களை நவீன மயமாக்கலில் உருவாக்குவோர், திட்டமிடலை இறுதிவரை செய்ய வேண்டும்.
1. முதலில் தெளிவான பிரதி வேண்டும். அதற்கு முடிந்த வரை நெகடிவிலிருந்து தான் எடுக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான படங்களுக்கு நெகடிவ் தமிழ்த் திரைப்படங்களுக்கு இல்லை என்ற சூழல் தான் நிலவுகிறது. இது பரிதாபத்திற்குரிய விஷயம். தமிழ் சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப் படும் விஷயத்தில் செலுத்தப் படும் அக்கறை பழைய படங்களின் நெகடிவ்களை பாதுகாப்பதற்கும் செலுத்தப் பட வேண்டும். இருப்பன வற்றையாவது தவறாமல் பத்திரப் படுத்த வேண்டும். அதற்கு அரசின் அக்கறையும் ஆர்வமும் அவசியத் தேவை.
2. சினிமாஸ்கோப்பிற்கு மாற்றும் போது Proporationate அடிப்படையில் தான் அவசர கதியில் மாற்றுவதாக கேள்விப் படுகிறேன். அதில் நிச்சயம் பலன் கிடைக்காது. அம்முறையில் மாற்றும் போது பிரேமின் தலைப்பகுதியும் கீழ்ப்பகுதியும் அடி வாங்கும். காட்சியிலிருந்து விலகி விடும். இதற்கு உதாரணம், வசந்த மாளிகையில் காதலிக்கு அம்மாளிகையைக் காட்டும் காட்சியில் நடிகர் திலகத்தின் வசனத்தின் போது, பிரேமில் விட்டத்தில் இருக்கும் விளக்கு மட்டும் தெரிவது. எனவே ஒவ்வொரு பிரேமையும் கவனித்து அதற்கேற்றவாறு பிரேமின் நீள அகலத்தை அமைத்துக் கொண்டால் காட்சி சிதையாது. படம் அடிபடாது. இன்றைய நவீன தொழில் நுட்ப வசதி கிடைக்கும் காலத்தில் இது ஒன்றும் முடியாத விஷயமல்ல.
3. ஒலி அமைப்பு ... இசையைப் பொறுத்த மட்டில் எந்த காம்ப்ரமைஸும் கூடாது. எக்காரணத்தைக் கொண்டும் மேற்கொண்டு புதியதாக இசையமைக்கக் கூடாது. இருக்கும் ஒலி சரியில்லை என்றால், அப்படத்தின் நெடுந்தகட்டிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். இது மிகவும் நன்றாக வரும். ஒலியமைப்பை சரி செய்து கொள்ள ஏராளமான வசதி இருக்கும் போது புது இசையை முற்றிலும் நிராகரிக்க வேண்டும். அது ஒரிஜினல் இசையமைப்பாளரின் படைப்பினை அவமானப் படுத்துவதும் அவ மரியாதை செய்வதுமாகும். குறிப்பாக மெல்லிசை மன்னரின் இசையில் எக்கச் சக்கமான நுணுக்கங்களை அவர் பாடல்களில் மட்டுமின்றி பின்னணி இசையிலும் அளித்திருக்கிறார். அந்த இசைக் கருவிகளின் ஒலிகளிலும் அவர் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கச் செய்திருக்கிறார். இவையெல்லாம் புதியதாக செய்தால் AESTHETICS கண்டிப்பாக பாதிக்கும்.
4. RESTORATION மற்றும் COLOR CORRECTION செய்யும் போது ஒரிஜினாலிட்டி பாதுகாக்கப் பட வேண்டும். மிகவும் தேவைப் பட்டாலன்றி கலர் மாற்றப் படக் கூடாது. இதுவும் இன்றைய தொழில் நுட்ப வசதியில் சாத்தியமே.
5. நிபுணத்துவம் வாய்ந்த எடிட்டர்கள் நிச்சயம் தேவை. அதுவும் குறிப்பாக இன்றைய தலைமுறை எடிட்டர்களிடம் விட வேண்டும். இன்றைய தலைமுறை ரசனையை அவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள். அதற்கேற்ப படத்தின் நீளத்தை நிர்ணயிக்கும் திறமை அவர்களுக்கு இருக்கும்.
6. இப்படி அனைத்து வகைகளிலும் மிகச் சிறந்த வகையில் படத்தின் பிரதி அமைந்து விட்ட பிறகு முரளி சார் சொன்னது போல் Post Production லிருந்து திரையீடு வரை திட்டமிட்டு செய்தால், நடிகர் திலகத்தின் படம் மட்டுமின்றி எந்த பழைய படமானாலும் மக்களிடம் சென்றடையும்.
நேரம் செலவழித்து இதைப் படித்ததற்கு தங்கள் அனைவருக்கும் நன்றி.
RAGHAVENDRA
4th October 2013, 07:53 AM
இந் நேரத்தில் திருவிளையாடல் திரைப்படத்தின் தரம் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஏற்கெனவே சொல்லப் பட்டது தான். இருந்தாலும் மீண்டும் சொல்கிறேன். உட்லண்ட்ஸ் திரையரங்கில் திருவிளையாடல் படத்தைப் பார்க்கும் போது ஏற்பட்ட பிரமிப்பு இன்று வரை அடங்க வில்லை என்பது தான் உண்மை. 31.07.1965 அன்று வெளியான போது எந்த பிரமிப்பை ஏற்படுத்தியதோ அதனை மீண்டும் உணர நேர்ந்தது. க்ரிஸ்டர் க்ளியர் என்பார்களே, அந்த அளவிற்குத் தெளிவான பிரதி, நவீன மயமான ஒலியமைப்பிலும் மிகவும் அட்டகாசமாகப் பொருந்தி ஒவ்வொரு இசைக் கருவியின் ஓசையையும் தெளிவாகக் கேட்கும் அளவிற்கு துல்லியமான ஒலிப்பதிவு இவையெல்லாம் பழைய படங்களுக்கும் நவீன மயமாக்கலில் சாத்தியமே என்பதற்கு முன் உதாரணம் திருவிளையாடல். இது கலர் படத்திற்கு உதாரணம் என்றால் கருப்பு வெள்ளை படங்களுக்கு மிகச் சிறந்ததாய், First is the Best என்பதாய் அமைந்து விளங்குவது பாச மலர்.
எப்படிப் பார்த்தாலும் தமிழ்த் திரையுலகில் முதன்மையானது, புதுமையானது என்றால் அங்கே நடிகர் திலகம் முதன்மையில் இருப்பார் என்பதை இவை எடுத்துரைக்கின்றன.
RAGHAVENDRA
4th October 2013, 07:57 AM
முந்தையது emotional fission என்றால் இரண்டாவது emotional fusion.
மிகச் சிறந்த விளக்கம் கண்பத் சார். இரண்டே வார்த்தைகளில் அந்தக் காட்சிகளைப் பற்றி ஏராளமான விஷயங்களை சொல்லி விட்டீர்கள்.
Gopal.s
4th October 2013, 08:20 AM
கண்பட் சார்,
உங்கள் Nerrations &Punchlines , உங்களுக்கு பெரிய ரசிகர் குழுமத்தையே இங்கு உண்டுபண்ணியுள்ளது. உங்கள் பதிவு வராத நாட்களில் உள்நாட்டு கலவரம் உருவாகும் சூழ்நிலையே உள்ளது.
Gopal.s
4th October 2013, 08:22 AM
Chinna kanna,
enge kanave kanum?
Russellfcv
4th October 2013, 08:41 AM
வசந்த மாளிகை டிஜிட்டல் பிரிண்ட் வெளியீடு
இங்கே ஒரு விஷயம் குறிப்பிட வேண்டும். சென்னை விநியோகஸ்தர்கள் பல காலமாக சினிமா விநியோக துறையில் இருப்பவர்கள். ஆனாலும் இன்னமும் small time distributors தான். ஆகவே அவர்களால் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே பணம் முதலீடு செய்ய முடியும் என்பதுதான் எதார்த்தம். அந்த லிமிட் படத்தை ஒரு high quality digital restoration range-ற்கு கொண்டு செல்வதற்கு போதுமானதல்ல. கிடைத்த பணத்தை வைத்து அவர்கள் படத்தை ஸ்கோப் மற்றும் டிஜிட்டல் முறைக்கு மாற்றினார்கள். ஆக compromise அங்கேயே ஆரம்பித்து விட்டது. இதில் நடந்த மற்றொரு technical பின்னடைவு பற்றியும் பார்ப்போம்.
Format change எனும் போது நாம் ஏற்கனவே சொன்னது போல் நெகடிவிலிருந்து பிரிண்ட் எடுத்து செய்ய வேண்டும். அதற்கு நெகடிவ் உரிமையாளர் lab ற்கு லெட்டர் கொடுக்க வேண்டும். அந்த லெட்டர் மூலமாக லேப்-ஐ அணுகி பிரிண்ட் எடுக்க வேண்டும்.இங்கே அது நடக்கவில்லை. அதற்கு இரண்டு வகையான காரணங்கள் சொல்லப்படுகின்றன. நெகடிவ் உரிமையாளரான ராமா நாயுடு லெட்டர் கொடுத்தார். ஆனால் நெகடிவ் நல்ல condition-ல் இல்லை எனவே எடுக்க முடியவில்லை எனபது விநியோகஸ்தர் தரப்பு. மற்றொரு சாரார் சொல்வது என்னவென்றால் ராமா நாயுடு மிகப் பெரிய தயாரிப்பாளர், small time distributors -ஆன இவர்களால் ராமா நாயுடுவை அணுக முடியவில்லை. அதன் காரணமாகவே புதிய பிரிண்ட் எடுக்க முடியவில்லை என்கிறார்கள். இதில் எது உண்மையோ, பிரிண்ட் எடுக்கவில்லை எனபது உண்மை. இதுவும் ஒரு பாதிப்பே.
ஆக ஏற்கனவே இருந்த பிரிண்டில் இருந்து மற்றொரு பிரிண்ட் எடுத்து அதை ஸ்கோப் format-ற்கு மாற்றினார்கள். சரியான முறையில் அது செய்யப்படாததால் பிரிண்ட் quality-ஐ அது மிகவும் பாதித்தது. படத்தி வெளியீட்டு தேதி முடிவு செய்யப்பட்டு விளம்பரம் வந்தது. நிகில் முருகன் அவர்கள் PRO பணியை சிறப்பாக செய்தார்.தமிழகமெங்கும் 72 அரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது வசந்த மாளிகை.
ஆவலுடன் திரையரங்குக்கு சென்ற ரசிகர்கள் படத்தின் பிரிண்ட் பார்த்து மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்கள். பல ஊர்களிலும் இது வெளிப்படையான குமுறலாக வெடித்தது. மிக பெரிய வெற்றியை தன்னிகரில்லாத வெற்றியை பெற வேண்டிய படம் விநியோகஸ்தர்களின் இந்த செயலால் ஒரு பின்னடைவை சந்தித்தது.
வெளியான 1972 செப்டம்பர் 29 முதல் இன்று வரை கணக்கிலடங்கா அரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், இடைநிலைகாரர்கள் என்று ஒரு பெரும் கூட்டத்திற்கே கை கொடுத்த சின்ன ஜமீன் ஆனந்த் இவர்களை மட்டும் கை விட்டு விடுவாரா என்ன? படம் திரையரங்குகளில் பணத்தை கொண்டு கொட்டியது. கோவை சேலம் போன்ற ஏரியாக்களில் விநியோகஸ்தருக்கு ஜாக்பாட்டே அடித்தது. பல்வேறு ஊர்களில் படத்திற்கு வந்த வசூல் தொகையை இங்கே குறிப்பிடுவது தொழில் புரிவோருக்கு நியாயம் செய்வதாக அமையாது எனபதால் அதை இங்கே தவிர்க்கிறேன். ஒரே ஒரு உதாரணம் மட்டும். மதுரையில் நான்கு அரங்குகளில் முதல் வாரம் ஓடி இரண்டாவது வாரம் சரஸ்வதி திரையரங்கில் தொடர்ந்த வசந்த மாளிகை 10 வது நாள் ஞாயிற்றுக்கிழமை மற்றுமே பெற்ற வசூல் பல படங்கள் அதே அரங்கில் ஒரு வாரம் ஓடி பெற்ற வசூலை விட அதிகம். பதிமூன்றே நாட்களில் சரஸ்வதி அரங்கில் மட்டும் பெற்ற நிகர வசூல் [Nett Collection] ருபாய் 6 லட்சத்து எம்பதினாயிரம் ரூபாய் [Rs 6,80,000/-].
சென்னையை எடுத்துக் கொண்டால் முதலில் வெளியாகி ஓடிய வசூலை எல்லாம் கூட விட்டு விடுவோம். ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் கிருஷ்ணவேணி அரங்கில் ஆறே நாட்களில் படம் Record collection நடத்தியது. அண்மையில் கடந்த மூன்று வருடங்களில் இது போல் எந்த படமும் வசூல் செய்யவில்லை என்று தியேட்டர் அதிபரே வியந்து போய் சொன்னார்.
சுருக்கமாக சொன்னால் கர்ணன் மற்றும் வசந்த மாளிகை இரண்டு படங்களுமே வசூல் சாதனை புரிந்து முதலீடு செய்தவர்களுக்கு லாபத்தை ஈட்டிக் கொடுத்து விட்டது. திருவிளையாடல் படத்தைப் பொறுத்தவரை 10 அரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்டது. சுமுகமான சூழல் உருவானால் திருவிளையாடலும் அபார வெற்றி அடையும் என்பதில் ஐயம் இல்லை.
(தொடரும்)
அன்புடன்
sir,
I have started reading the old threads to an extent for the last couple of days...i mean few threads that needs to be read, i have been reading.
Atleast now people who just for the sake of writing something negative and spread false, fake and misleading comments in other threads should stop doing so and appreciate the trend old films are creating. People who has stuff will win the rest can do only false propaganda. They seldom fail to realise that there is definitely a Sun Rise after Sunset.
Take Care
LS
Russellfcv
4th October 2013, 09:04 AM
Respected Senior Hubbers,
I would like to share my thoughts and observation here. I do not know if am correct on my views or not and therefore, i leave it to elders like Raghavendran sir, murali sir, gopal sir, etc.,
When old films are planned and decided to be re-released in theaters, i mean film that ages 40 plus years, that too in multiplex and airconditioned theaters, the distributors (whoever it is) of Sivaji Sir films atleast have the manasaatchi and spend quite a hefty amount on restoration, DTS etc., and then only they are releasing it making it VIEWABLE inline with the expectations of today's movie lovers (or) for general public in a COZY atmosphere. This is because, they do not want to cheat the public by using the same old prints which am sure would have lost its charm and quality in due course.
The intention I could see is, whether they make profit or loss...BUT, they provide something clean, neat and not horrible stuffs because the public is going to spend 80 - 120 bucks per ticket for old films. And, these films are screened every alternate day in any of the channel despite the availability of CD, DVDs etc., Only Distributors who have manasaatchi can do this.
public kitta namba enbadhu rooba ..nooru rooba vaangaporoam...so nalla quality print namma kudukkanum ..nalla theaterla podanum..comfortableaa public padam paakaanum...these are the genuine expectations from both the film viewer and the screener.
distributors nenacha dts, restoration edhuvum panaama...digital conversion mattum pannalaamae? yen adha pannala...? becos they don't like to cheat public by taking more money and use substandard stuffs. this is definitely appreciable. how many old films are being screened in this way i am not aware but i have seen Sivaji sir films am seeing regularly.
Take Care
LS
l
Russelldwp
4th October 2013, 09:10 AM
பாச மலர் டிஜிட்டல் பிரிண்ட் வெளியீடு
(தொடரும்)
அன்புடன்
Dear Murali Sir
I have read fully about thalaivar's re-release films Thiruvilayadal, Vasantha maligai and Pasamalar happenings. Super sir. Also as per your statement i had seen vasantha maligai at madurai saraswathi on sunday evening 2nd week and almost 95% full house.The film has to run 3 weeks but forced to stop the film after 2nd week.In Trichy very poor response for V.Maligai and most of the people commented that in cd itself print was very fine and sound is nice but in theatre after spending Rs.80 no digital effect and correct restoration. Coming to PASAMALAR as Mr.Ragavendran said digital conversion is excellent but time and theatre selection is very bad. Here in trichy suppose it should released in A/c theatre instead palace theatre even only 10 percent of sivaji fans are seen in this theatre becasue this film is 100% class and this theatre is not suitable for this film. Surely pasamalar will create record in some time later no doubt. So all new generation and fans always behind with our NT only. No doubt.
For your information NINAITHALE INIKKUM also screened only in PALACE THEATRE, Trichy because of new films engaged in all A/c theatres. This is the status
C.Ramachandran
vasudevan31355
4th October 2013, 09:17 AM
விரைவில் மிக மிக அபூர்வ புகைப்படங்களோடு ஓர் அரிய பதிவு.
(முரளி சாரின் அற்புத கட்டுரைகளைப் பற்றிய பின்னூட்டப் பதிவுகளுக்குப் பின்)
Gopal.s
4th October 2013, 09:17 AM
டியர் கோபால் சார்,
என்ன ஒன்று....., காதல் தொடர் என்கிறீர்கள். கொஞ்சம் கவனம். (ஐட்டம் தொடர் எழுதுபவனிடம் இருந்து இப்படி ஒரு எச்சரிக்கையா)....
கவலை வேண்டாம் தலைவா. உண்மையிலேயே காதல் மட்டுமே.குடும்பத்தோடு உட்கார்ந்து படிக்கலாம். (குடும்ப அங்கத்தினர் 18 வயதிற்கு மேற்பட்டிருந்தால்)
Russellfcv
4th October 2013, 09:27 AM
Dear All,
Just as i was watching the songs in you tube, i came across the following video too...
it says Nanvazhavaippen re-release on account of 85th birthday of Sivaji Sir..
lot of fans also giving their comments about this film. good crowd i can see.
where is this theater? can any of you tell me? i want to see this movie if it is still running.
am glad to present it here. good video.
Take Care
https://www.youtube.com/watch?v=KPGALWi4WeI
Did you all see this?
nobody wrote anything about this..why?
Russellfcv
4th October 2013, 09:42 AM
i found in the youtube...
Karnan 100 days Celebration
https://www.youtube.com/watch?v=MffLsNuZ3SY
Russellfcv
4th October 2013, 09:45 AM
from youtube..
Karnan - 150 days completion in re-release celebration
https://www.youtube.com/watch?v=Mn0XmWW10tw
Russellfcv
4th October 2013, 09:47 AM
from you tube...
Karnan 30 days completion function video
https://www.youtube.com/watch?v=dUHzw93-v6c
Russellfcv
4th October 2013, 09:50 AM
from you tube...
Vasantha Maligai in Bangalore - WOW !
https://www.youtube.com/watch?v=yac3fJ9_iRI
Russellfcv
4th October 2013, 09:53 AM
from youtube
Vasantha Maaligai in Bangalore - Can anybody imagine this ? Whether Chennai (or) Bangalore (or) Uzbekistan... ! A Big WOW !
https://www.youtube.com/watch?v=4C4TzmknEqw
Russellfcv
4th October 2013, 10:00 AM
from youtube
film ennai pola oruvan celebration....
https://www.youtube.com/watch?v=1RyYPTiSo8A
chinnakkannan
4th October 2013, 10:13 AM
நன்றி கோபால் சார்..) படித்தும் பார்த்தும் ரசித்தும் கொண்டிருக்கிறேன்..கொஞ்சம் குட்டிக் கோபம் கூட உண்டு உங்கள் மீது..எழுத்தாற்றல், அனலைஸ் செய்யும் தன்மை மிகக் கொண்ட் பெரியவர் நீங்கள் எல்லாம் சுலபமாக என். டியின் காதல் காட்சிகளை எழுதுகிறேனெனச் சொல்லிவிட்டீர்க்ள்.. சோகக் காட்சி எழுதிப் பார்க்கலாம் என யோசித்தால் கண்பட் சார் இரு காட்சிகளை எளிமையாகவும் வலிமையாகவும் விள்க்கி விட்டார்..என்ன செய்வது என்றறியாமல் தளர் நடை போட்டுக் கொண்டு இருந்தால்... அட..நான் ரசித்த நடையழகு என எழுதிப் பார்க்கலாமே! (கூட்வே ஹீரோயின்களின் இடை(என்று ஒன்று இருந்தால்) அழகும் வரும்..! (உன்னைத் திருத்தவே முடியாது கண்ணா)) மீண்டு வருகிறேன்..
Chinna kanna,
enge kanave kanum?
Gopal.s
4th October 2013, 10:24 AM
Did you all see this?
nobody wrote anything about this..why?
நான் வாழ வைப்பேன் நல்ல coverage .சுவாரஸ்யம். ரசிகர்கள், விநியோகஸ்தர்கள்,சுப்பு,சொக்கலிங்கம்,மகாலட்சும ி கொட்டகை அதிபர் ஆகியோர் பேச்சுக்கள் அருமை.
இந்த படம் ரசிகர்களால் ஓடுவதை விட ,பொதுமக்களால் வரவேற்பு பெற்று வசூல் சாதனை புரிவது, மற்றவர்களுக்கும் ,நடிகர்திலகத்துக்கும் உள்ள வேறுபாட்டை காட்டுகிறது.
IliFiSRurdy
4th October 2013, 10:27 AM
மனமுவந்து பாராட்டிய ராம லக்ஷ்மணர்களுக்கு(ராகவேந்தர்,கோபால் சார்கள்) இந்த சிறிய அணிலின் நன்றியும் வணக்கமும்.
(கல்லானாலும் கிம்பர்லி சுரங்க கல்லாவேன்! நான்,அணிலானாலும் அம்பானி வீட்டு அனிலாவேன் என்ற பிரசித்தி பெற்ற tms பாடல் ஒலிக்கிறது)
அப்புறம் ரொம்ப நன்றி சின்னக்கண்ணன் சார்.
பூரண நிலவை எத்தனை பேர் பார்த்து,பாடினாலும் அழகுதானே.உங்கள் பார்வையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
Gopal.s
4th October 2013, 10:32 AM
சின்ன கண்ணனின் நடையழகில்,நடிகர் திலகத்தின் நடையழகு (கொசுறாக இடையிடையில் கதாநாயகி அல்லது ஐடம் இடையழகு,என் ஆலோசனை கொஞ்சம் about turn (பின் அழகு)கூடுதல் கவனம் பெறலாம்) பிராக்கெட் லே பிராக்கெட் போட்டுட்டேன்.
KCSHEKAR
4th October 2013, 11:20 AM
டிஜிட்டல் பிரிண்ட் வெளியீடு
டியர் முரளி சார்,
ஸ்ரீரங்கம் நிகழ்ச்சி குறித்த தங்களின் பாராட்டுக்கு நன்றி.
கர்ணன், திருவிளையாடல், வசந்தமாளிகை, பாசமலர் மறுவெளியீடுகள் குறித்த தங்களுடைய swot analysis எல்லா ரசிகர்களின் மனதில் ஓடிக்கொண்டிருந்த என்ன ஓட்டங்களின் பிரதிபலிப்பாக, தொகுப்பாக அமைந்திருக்கிறது. அரசாங்கம் மூலம் விசாரணைக் கமிஷன் அமைத்து அறிக்கை கேட்டிருந்தால்கூட இப்படி பாரபட்சமில்லாமல் தெளிவாக கூற முடியாது. அந்த அளவிற்கு ஆய்வு செய்து எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள். நன்றி.
நெஞ்சில் ஒரு களங்கமில்லை
சொல்லில் ஒரு பொய்யுமில்லை
வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை.தோல்வியுமில்லை
தாங்கள் குறிப்பிட்டிரூப்பது சத்தியமான உண்மை.
KCSHEKAR
4th October 2013, 11:21 AM
டியர் வாசுதேவன் சார்,
திருச்சி நிகழ்ச்சி குறித்த தங்களின் பாராட்டுக்கு நன்றி.
chinnakkannan
4th October 2013, 11:21 AM
//(கல்லானாலும் கிம்பர்லி சுரங்க கல்லாவேன்! நான்,அணிலானாலும் அம்பானி வீட்டு அனிலாவேன் என்ற பிரசித்தி பெற்ற tms பாடல் ஒலிக்கிறது)// கண்பத் சார் ஹி ஹி :)
KCSHEKAR
4th October 2013, 11:25 AM
ரங்கன் தயங்கித் தயங்கி அந்த வீட்டினுள் நுழைகிறான்.
செளத்திரியின் சோகம்.
நாம் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள்தான்!
டியர் கண்பத் சார்,
தங்களுடைய ரங்கன், செளத்திரி கேரக்டர்கள் வர்ணனை அருமை. தாங்கள் கூறியபடி, நடிகர்திலகத்தின் காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்பதையும், அவருக்கு ரசிகர்களை இருக்கிறோம் என்று பெருமைப்ப்படும்போதும், அந்த பாக்கியத்தைப் பெற்ற நாம் கொடுத்து வைத்தவர்கள்தான்.
KCSHEKAR
4th October 2013, 11:34 AM
Dear KC Sir
Yesterday Evening is Unforgottable event in my life since continuously 5th year You and your organsiation celebrated our great nadigar thilagam's Birthday function. Really amazing. Also at Chief minister constituency you have organised 2nd function sucessfully.
Keep it up
C.Ramachandran
திரு.ராமச்சந்திரன் சார்,
திருச்சி விழா குறித்த பாராட்டுக்களுக்கு நன்றி. தங்களைப் போன்றவர்களின் ஒத்துழைப்போடும், ஆதரவோடும் நடைபெறும் இவ்விழா இனிவரும் காலங்களிலும் மென்மேலும் சிறப்போடு தொடர்ந்து நடைபெறவேண்டும் என்ற விழைதலோடு.......,
KCSHEKAR
4th October 2013, 11:39 AM
Saraswathi Lakshmi;
film ennai pola oruvan celebration....[/B]
என்னைப் போல் ஒருவன் விழாத் தொகுப்பு அருமை. மலரும் நினைவுகளாக கர்ணன் விழாக்களையும் அளித்ததற்கு நன்றி.
Gopal.s
4th October 2013, 12:27 PM
இது என்ன சில பட தலைப்புகளுக்கு மட்டும் போராட்டம்?இதிலும் ஓர வஞ்சனையா?(அதிலும் நமது ஆட்களே)
திருவிளையாடல்,சரஸ்வதி சபதம் தலைப்புகளுக்கு போராடியவர்களுக்கு ,ராஜா ராணி என்பது நடிகர்திலகத்தின் பிரபல படத்தின் தலைப்பு என்பது தெரியாது போனது ஏனோ?(பீம்சிங் முதல் முதலாக இணைந்த அற்புத படம்)
இது என்ன தேர்ந்தெடுத்த போராட்டங்கள்?
mr_karthik
4th October 2013, 12:48 PM
டியர் முரளி சார்,
என்ன ஒரு தீர்க்கமான ஆய்வு, திருவிளையாடல், வசந்த மாளிகை, பாசமலர் படங்களின் மறு வெளியீடுகளின்போது சென்னை முதல் குமரிவரை அனைத்து ஊர்களிலும் நடந்த உண்மைகளை தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ளீர்கள். தயாரிப்பாளர் தரப்பு, விநியோகஸ்தர் தரப்பு, அரங்க உரிமையாளர் தரப்பு என அனைத்து கோணங்களிலும் ஆராய்ந்து, நடந்தவைகளை அப்படியே புட்டுப்புட்டு வைத்ததோடு, இன்னும் எப்படியெல்லாம் செய்திருக்க வேண்டும் என்ற அருமையான ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறீர்கள். பதிப்பதில் உள்ள சிரமங்களைவிட அவற்றை திரட்டுவதில் இருந்திருக்கக் கூடிய சிரமங்கள் அதிகம் என்பது உண்மை.
பாசமலர் பட வெளியீட்டில் இருந்த சிரமங்களை அறியாமல் சிலர் அப்படத்தின் சமீபத்திய ஓட்டத்தில் ஏற்பட்ட குறைகளை (இல்லாதததும் பொல்லாததும் கூட சேர்த்து), மண்டை மண்டை சைஸ் எழுத்துக்களில் பதிவிட்டு மகிழ்ந்தார்கள். (நமது திரியில் அல்ல).
தொலைக்கட்சிகளில் அடிக்கடி ஒளிபரப்பப்படும் / டிவிடிக்களில் மிகவும் தெளிவாக கிடைக்கக்கூடிய படங்களை திரையரங்குகளில் திரையிடும்போது தரம் நன்றாக இருப்பதும், சரியான முறையில் மக்கள் மத்தியில் எடுத்துச்செல்வதும் போன்ற விஷயங்களை கையாண்டால் மட்டுமே எதிர்பார்க்கும் வெற்றியைப் பெற முடியும்.
மூன்று வெள்ளிவிழா படங்களின் மறு வெளியீடுகளின் பின்னணி நிலவரங்களை தெளிவாக உலகுக்கு உணர்த்திய தங்களுக்கு மிக்க நன்றி....
IliFiSRurdy
4th October 2013, 12:55 PM
டியர் கண்பத் சார்,
தங்களுடைய ரங்கன், செளத்திரி கேரக்டர்கள் வர்ணனை அருமை. தாங்கள் கூறியபடி, நடிகர்திலகத்தின் காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்பதையும், அவருக்கு ரசிகர்களை இருக்கிறோம் என்று பெருமைப்ப்படும்போதும், அந்த பாக்கியத்தைப் பெற்ற நாம் கொடுத்து வைத்தவர்கள்தான்.
அன்புள்ள சந்திரசேகர் சார்!
மிக்க நன்றி.
நாம் எனும் வார்த்தை உங்கள் பெருந்தன்மையையும் பேரன்பையும் காட்டுகிறது என்பதை
உங்கள் Profile Photo வே நிரூபிக்கிறது.
நீங்கள் பெற்ற பாக்கியம் வேறு.
உங்களுடன் அளவளாவும் பாக்கியம் மட்டுமே எனக்கு.
மரியாதையுடன்,
'அன்னை இல்லம்' நுழைந்தோர்கள் எல்லார்க்கும் அடியேன்.
KCSHEKAR
4th October 2013, 01:18 PM
இது என்ன சில பட தலைப்புகளுக்கு மட்டும் போராட்டம்?இதிலும் ஓர வஞ்சனையா?(அதிலும் நமது ஆட்களே)
திருவிளையாடல்,சரஸ்வதி சபதம் தலைப்புகளுக்கு போராடியவர்களுக்கு ,ராஜா ராணி என்பது நடிகர்திலகத்தின் பிரபல படத்தின் தலைப்பு என்பது தெரியாது போனது ஏனோ?(பீம்சிங் முதல் முதலாக இணைந்த அற்புத படம்)
இது என்ன தேர்ந்தெடுத்த போராட்டங்கள்?
டியர் கோபால் சார்,
திரைப்பட தலைப்பைப் பொருத்தவரை, அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு (25 ஆண்டுகள்) அந்தத் தலைப்பை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளவேண்டும். இல்லையெனில் அந்தத் தலைப்பை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலை உள்ளது. ஏ.வி.எம், ஏ.பி.என் போன்ற சில நிறுவனங்களே தங்களுடைய திரைப்படங்களுடைய தலைப்பை புதுப்பித்து வருகிறார்கள். சரஸ்வதி சபதம் தலைப்புகூட ஏ.பி.என் மகன் பரமசிவன் அவர்களுடைய ஒப்புதலோடேயே வைக்கப்பட்டதாக அந்தத் திரைப்படத் தயாரிப்பாளர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதுமாதிரி திரைப்படத்தின் தலைப்புகள் புதுப்பிக்கப்படாவிட்டால் அதே பெயரில் திரைப்படம் எடுப்பதை சட்ட ரீதியாக எதிர்க்கமுடியாது. சரஸ்வதி சபதம் தலைப்பைக் கூட எதிர்த்து வழக்கறிஞர் நோட்டீஸ் 12 மாவட்டங்களிலிருந்து அனுப்பவைத்ததோடு (உங்க பாணியில் சொன்னால் - சும்மா பயம் காட்ட) , சென்சார் போர்டு மற்றும் தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றுக்கும் கடிதம் எழுதி நெருக்கடி கொடுக்கப்பட்டது. சென்சார் போர்டிலிருந்து எனக்கு வந்த கடிதத்தை பார்வைக்கு இனைத்துள்ளேன்.
இது மாதிரி முக்கிய திரைப்படத் தலைப்புகளில் மீண்டும் திரைப்படம் எடுப்பதைத் தடுக்கவேண்டும் என்றும் அத்தகைய பெயர்களைப் பதிவு செய்வதே தவிர்க்கப்படவேண்டும் என்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஏற்கனவே கடிதம் மூலம் கோரிக்கை வைத்திருக்கிறேன்.
சில தேர்ந்தெடுத்த படங்களுக்கு மட்டுமே போராடக் கூடிய காரண காரியங்கள் இருந்தன. கடவுளர்களை (திருவிளையாடல், சரஸ்வதி சபதம்) சித்தரிக்கும் திரைப்படங்களுக்கு அத்தகைய காரணங்கள் இருந்தன. அதேபோல வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற தேசியத் தலைவர்களின் பெயரில் திரைப்படங்கள் எடுத்தால் எதிர்ப்பதில் ஒரு நியாயம் இருக்கும். சமூகப் படங்களை (கெளரவம், ராஜா ராணி) எதிர்ப்பது என்பது வெறும் கூசசலாகவே முடிந்துவிடக்கூடும். (ஆயிரத்தில் ஒருவன் பெயரில் கூட மீண்டும் திரைப்படம் வந்தது தங்களுக்கும் தெரியும்) உத்தம புத்திரன் திரைப்படம் முதலில் பி.யு.சின்னப்பா நடித்து, பின்னர் நடிகர்திலகம் நடித்து தற்போது தனுஷ் நடித்து என மூன்று திரைப்படங்கள் அதே பெயரில் வந்துவிட்டது.
இங்கு வெறும் எதிர்ப்பு என்பது மட்டுமல்ல. நம் எதிர்ப்பின் மூலம் அந்தப் படங்களின் பெயர்கள் மாற்றப்பட்டால்தான் அதில் அர்த்தம் இருக்கும். வெறும் அறிக்கை விட்டு எதிர்ப்பது என்பதல்ல.
இதன்மூலம் திரைப்படத் தலைப்பு சம்பந்தமாக சந்தேகம் இருப்பவர்களுக்கு (எனக்கு தெரிந்த அளவில்) விளக்கம் அளிக்க ஒரு வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி.
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/LetterfromCensorBoard002_zpsbdaf4dc2.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/LetterfromCensorBoard002_zpsbdaf4dc2.jpg.html)
mr_karthik
4th October 2013, 01:24 PM
டியர் சந்திரசேகர் சார்,
நடிகர்திலகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு ஊர்களிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பற்றிய தங்கள் விவரமான பதிவுக்கு மிக்க நன்றி. ஸ்ரீரங்கம் விழாவின் சிறப்பு பற்றி இருவர் அழகாக எடுத்துரைத்திருந்தார்கள். அடுத்து திருப்பூரில் நடக்க இருக்கும் விழா, ஸ்ரீரங்கம் விழாவை மிஞ்ச வாழ்த்துக்கள்.
நமது கண்பட் சார் சொன்னதுபோல, உங்கள் அவதார் போட்டோவைப் பார்க்கும்போதெல்லாம் மனதில் சற்று பொறாமை ஏற்படுவது உண்மை. அந்த மகானை சற்று தொலைவில் இருந்து பார்க்கும் பாக்கியம் மட்டுமே கிடைக்கப் பெற்றவன் நான். (கிட்டேயே இருந்து, பேசி, மகிழ்ந்து.... என்ன ஒரு கொடுப்பினை தங்களுக்கு)......
IliFiSRurdy
4th October 2013, 01:39 PM
//(கல்லானாலும் கிம்பர்லி சுரங்க கல்லாவேன்! நான்,அணிலானாலும் அம்பானி வீட்டு அனிலாவேன் என்ற பிரசித்தி பெற்ற tms பாடல் ஒலிக்கிறது)// கண்பத் சார் ஹி ஹி :)
நன்றி கண்ணன் சார்..ணி க்கும் னி க்கும் ஒரே சுழி தான் வித்தியாசம்,,அதுவே தலை சுழி.
chinnakkannan
4th October 2013, 01:50 PM
கண்பத் சார்.. நான் நகைச்சுவையை எண்ணித்தான் சிரித்தேன்..பிழை பார்க்கவே இல்லை..இப்போது அந்தப் பிழையும் பொருத்தமாய்த் தெரிகிறது ;) அனில் அம்பானியா..பெருமாள் தான் நீங்கள்..(பெருமாள் - பெரிய ஆள்)
நன்றி கண்ணன் சார்..ணி க்கும் னி க்கும் ஒரே சுழி தான் வித்தியாசம்,,அதுவே தலை சுழி.
mr_karthik
4th October 2013, 02:03 PM
டியர் கோபால் சார்,
ஏற்கெனவே 1985-லேயே மோகன், ராதிகா, ஊர்வசி நடித்த 'தெய்வப்பிறவி' என்ற படம் வந்தது (இந்திப்படம் 'தோபா' ரீமேக்). அதுபோக சில ஆண்டுகளுக்கு முன் சரத்குமார் நடித்த (வீரபாண்டிய இல்லாத) வெறும் 'கட்டபொம்மன்' மற்றும் 'நாடோடி மன்னன்' படங்கள் வந்தன. இப்போதோ பழைய படங்களின் பெயர் வைப்பது ஒரு பேஷனாகவே ஆகிவிட்டது.
கதைகளில் ரீமேக், தலைப்புகளில் ரீநேம், பாடல்களில் ரீமிக்ஸ் என்பதெல்லாம் சமீபத்திய படைப்பாளிகளின் (????) கற்பனை வறட்சியைக் காட்டுவதே தவிர வேறில்லை. எவனோ சிரமப்பட்டு சமைத்து வைத்ததை நோகாமல் எடுத்துப் பரிமாறுவது. உத்தமபுத்திரன் கதையையே திருப்பி எடுத்தாலும் அதற்கு 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' என்று தலைப்பிடவில்லையா?. அதுபோல புதிய தலைப்புகளை வைக்க வேண்டியதுதானே.
வேறு மொழிகளில் வந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யலாம். தமிழில் வந்ததையே மீண்டும் தமிழில் ஏன்?...
Gopal.s
4th October 2013, 02:21 PM
தமிழ்த் திரைக் களஞ்சியம்
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/SivajiFansEvents/7995b92c-0723-4a10-8e8d-9502004c68b6_zpsaea4ae92.jpg
Pl.All the interested hubbers &readers are requested to book your copy in advance by contacting Mr.pammalar.
chinnakkannan
4th October 2013, 02:34 PM
நடிகர் திலகத்தின் நடை (என்னைக் கவர்ந்தவை)
*
1. முதல் நடை என்னை அழைத்ததே..
*
நடை என்றால் என்ன நினைவுக்கு வருகிறது.? ,முதன் முதல் குழந்தை சற்றே எழப் பார்க்கிறது. படக் படக் என நீந்திச் சுவரருகே செல்கின்றது. பின் சுவற்றைப் பிடித்துப் பற்றியவண்ணம் கொஞ்சம் கொஞ்சமாய் நடக்கிறது ( நான் இந்தக் கட்டுரை எழுதுவதன் மூலம் செய்வதைப் போல). பின் விழுகிறது பின் பிடிப்பில்லாமல் தளர் நடை..முதலில் ஒரு கால்..பின் தொடரும் சிறுகால் அட நாம் கொஞ்சம் தூரம் நடந்து விட்டோமே என ப் பெருமை..யாராவது பார்த்து யே எனக் கைதட்டினால் பூரிப்பு பிறகு கிடுகிடுவென வந்து கால்களைக் கட்டிக் கொள்ளும்.. அது ஒரு நடை..
*
வளர்ந்து மங்கைப்பருவத்தை அடைந்த பெண் கண்களில் கனவு மின்ன தெருவில் அழகிய சுடிதாரணிந்து நடக்கையில் கொள்ளும் மென்மை நடை.. ராணுவத்தில் சேரும் வீரன் ஏகப் பட்ட பயிற்சிகளால் கொள்ளும் கம்பீர நடை..ஓ. நிறைய நடைகள் இருக்கின்றன..
*
இப்போது நடிகர் திலகம் ஒரு படத்தில் நடந்த நடை பார்க்கலாமா..
**
அவள் அழகி.. வண்ணக் கனவுகள் மின்னிடும் பருவம்..காலத்தின் கோலத்தில் அவள் எழில் கருப்பு வெள்ளையாய்த் தான் தெரிகிறது. நமக்கு .ம்ம் சொல்ல மறந்து விட்டேனே..அவள் இளம்பருவத்தில் இருப்பவள்..கண்களால் கொல் கொல்லெனச் சிரிப்பவள்.. இப்போது அந்தக் கண்களில் மயக்கம்..ஏனாம்..
*
ஏனெனில் அவளுக்குக் காதல் வந்து விட்டது..
சோதனையாய் உள்நுழைந்து சுட்டுவிடும் வேதனைகள்
காதலில் வந்திடும் காண்
என்று சில பெரியவர்கள் (?!) சொல்லியிருப்பது போல்.. துன்பங்கலந்த இன்பம்.. அவன் மனம் அவளிடம் இருக்கிறதா..இல்லையா தெரியவில்லை..வரச் சொல்லுகிறாள்..
*
அவன் என்றால் யார்..அவன் அவள் மனம் கவர்ந்தவன்..ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவன்..வாழ்க்கையெனும் போர்க்கள்ம் என்பார்கள்..அவன் வாழ்க்கையில் போர்க்களம் பல கண்டவன்..பல அடிகள் கொண்டவன்.. போர்க்களத்திலும் காலில் அடிபட்டு சற்றே ஊனமாகி விந்தி விந்தி நடப்பவன்..எல்லாவற்றிற்கும் மேலாய் அவளுடைய சகோத்ரியின் கணவர் அலுவலகத்தில் வேலை பார்ப்பவன்..கொஞ்சம் பூரித்த உடல்வாகு..சிரித்த முகம்..யெளவனப் பருவம்..திடகாத்திர உடல். மென்மைப் பேச்சு, கூரிய அறிவு...போதாதா பாவையின் உள்ளம் கொள்ளை போவதற்கு..
*
தனியாக அழைத்து விட்டாளெயொழிய அவனிடம் எப்படிச் சொல்வது..துடிக்குமிதழின் ஆசையை…ஓசையின்றி ஆர்ப்பரிக்கும் உள்மன ஓசையை… கேட்கிறாள் கேள்விகளாய்…
கொடியசைந்ததும் காற்று வந்ததா
காற்றுவந்ததும்கொடியசைந்ததா..
அவனும் பதில் பாடி வேகமாகவும் அவளது துள்ளல் நடைக்குப் போட்டியாக தனது விந்தும் நடையையும் வைத்து விரைவாக நடக்கிறான்..
*
ஓடி வந்ததும் தேடி வந்ததும் பாடி வந்ததும் பார்க்க வந்ததும் எனக் குறும்புக் கண்களும், கொஞ்சும் கண்ணுடனும் சற்றே கொழுக்மொழுக் கன்னமுமாக அந்த நாயகி கேட்க நாயகனும் குறும்புச் சிரிப்புடன்
“காதலென்பதா பாசமென்பதா கருணையென்பதா உரிமை என்பதா எனக் கேட்கிறான்..
*
ம்ம் அந்த வித்தியாச வேக நடை காதல் வயப்பட்ட மனது.. காட்டும் தன்மையில் இன்னும் நடிகர் திலகம் கண் முன் நிற்கிறார்
*
வாசக தோஷ ஷந்தவ்யஹ
*
(தொடரும்)
(ஸாரி கோபால் சார்..நடை என்றதும் இது தான் முதலில் என் நினைவுக்கு வந்தது..உங்கள் காதல் கட்டுரையில் குழப்புகிறேன் என ஊடல் கொள்ள வேண்டாம்!)
uvausan
4th October 2013, 03:05 PM
Murali Sir - there is no word in dictionary of any language to find a word worth to your write ups - "excellent " , superb are all outdated one - marvelous is some what close but still it was used by many Hubbers already - so I'm using a little inferior word - "thank you so much " - what a flow !!! How much realistic with facts and figures !!! how much hard work that has gone into your write ups - This thread is reaching an iconic status and all because of you , Vasu , gopal , Ragavendran sir , , KC sir , karthik ,Ganpat , NT 360 , chinna kannan , LS ( a new joinee in our hub) .
Taking names a highly risky one - there are enough chances to leave out other greats in this hub - though unintentional my apology for having left out any one's name ) - it might take generation to reach your level of writing but as small squirrels in Ramayana - we scrabble some thing here and there to keep the thread going . It pains , irrespective of what personality NT is , his talents are not praised in an unbiased manner - people still lacks that level of maturity to recognize talents and pride of a person who added so much laurels to tamil , Telungu , malayalam , kannada cine fields in his life time. Cheetah is a Cheetah , all cats who paint themselves with stripes cannot become cheetahs - you have once again proved his movies are immortal and money spinners if preparatory work is done with adequate care .
Ravi
:smokesmile::-D
Gopal.s
4th October 2013, 03:25 PM
நடிகர் திலகத்தின் நடை (என்னைக் கவர்ந்தவை)
(ஸாரி கோபால் சார்..நடை என்றதும் இது தான் முதலில் என் நினைவுக்கு வந்தது..உங்கள் காதல் கட்டுரையில் குழப்புகிறேன் என ஊடல் கொள்ள வேண்டாம்!)
ஊஹூம், நீயெல்லாம் சுத்த சைவம். என் காதல் track வேறே.கவலையே படாதே...(என் சிவகாமியின் செல்வன் எத்தனை அழகு பதிவு படித்ததில்லை போல....)
RAGHAVENDRA
4th October 2013, 03:33 PM
http://youtu.be/4rvNInoT6Sc
KCSHEKAR
4th October 2013, 03:34 PM
நடிகர் திலகத்தின் நடை (என்னைக் கவர்ந்தவை)
*
1. முதல் நடை என்னை அழைத்ததே..
*
டியர் சின்னக்கண்ணன் சார்,
தங்களின் "நடிகர்திலகத்தின் நடை" (நடையழகு என்றழைத்தால் நன்றாக இருக்கும்) தொடர் ஆரம்பமே அழகாக இருக்கிறது. தங்களின் நடையும் பிரமாதமாக இருக்கிறது. நான் எழுத்து நடையைச் சொன்னேன்.
எங்களுக்கு கோபால் சாரின் அசைவமும் வேண்டும், சின்னக்கண்ணன் சாரின் சைவமும் வேண்டும்.
chinnakkannan
4th October 2013, 04:35 PM
கோபால் சார், ராகவேந்திரா சார், சேகர் சார் நன்றி..
//ஊஹூம், நீயெல்லாம் சுத்த சைவம். என் காதல் track வேறே.கவலையே படாதே...(என் சிவகாமியின் செல்வன் எத்தனை அழகு பதிவு படித்ததில்லை போல....) //
ம்ம் அது சரி காதல் பாட்டுன்னு குத்தகை எடுத்துக்கிட்டு இப்படி சொன்னா என்னவாம்.. :) (அது சரி..பொண்ணுக்கென்ன அழகு தானே..சொல்லுங்க சொல்லுங்க!!)
Gopal.s
4th October 2013, 04:53 PM
ம்ம் அது சரி காதல் பாட்டுன்னு குத்தகை எடுத்துக்கிட்டு இப்படி சொன்னா என்னவாம்.. :) (அது சரி..பொண்ணுக்கென்ன அழகு தானே..சொல்லுங்க சொல்லுங்க!!)
என்ன குத்தகையா? விளையாடுறீங்களா தம்பி? எல்லோரும் யோக்யமாய் காட்டி கொள்ள,இந்த வேலையில் நம்மளை மாட்டி விட்டுட்டாங்க. நானும் கடமையை குறையற நிறைவேற்றி பணியை செவ்வனே செய்து கொண்டுள்ளேன்.
mr_karthik
4th October 2013, 05:00 PM
டியர் சின்னக்கண்ணன் சார்,
நடையழகுப் பாடல் தங்கள் நடையழகில் அருமை. அதன் விளைவு?. இதோ நாமும் எழுதுவோமே என்ற எண்ணம்.
காதல் வயப்பட்டு விட்டான் கட்டிளம் மங்கையிடம். அவளோ கண்களாலேயே காதல் மொழிபேசும் கலையில் தேர்ந்தவள். அவள் எப்படியிருப்பாள் என்று தன நண்பனிடம் (ஆம், நண்பனிடம்தான், ஏனெனில் அதுவரை தெரியாது அவன் தன் தம்பியென்று) விளக்கும் முகமாக பாடும் பாடலில்தான் அவனுக்கே சொந்தமான அந்த அழகு நடை..
கடற்கரையில் கட்டுமரத்தின் மீது அமர்ந்திருக்கும் நண்பனிடம் தன் காதலியின் அழகை வர்ணிக்கும்போதுதான் அவன் முகத்தில் என்ன மலர்ச்சி, மாறாத புன்னகை. அந்த உற்சாகத் துள்ளலோடு அவன் நடக்கும் நடையில்தான் எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது, எப்படி மனதை தட்டிப்பறிக்குது. கடற்கரையில் நடக்கும் அந்த ஸ்டைல் நடை அவனுக்கே உரிய தனிச்சொத்து. பலர் காப்பியடிக்க முயன்று தோற்றனர் செத்து.
காதலி 'அஹஹஹா' என்று ஹம்மிங் மட்டும் பிடிக்க, அவளை மனதில் நினைத்துக்கொண்டே அந்த ஸ்டைல் நடையுடன் பாடும் அழகில்தான் எத்தனை கம்பீரம்.......
'எண்ணிரண்டு பதினாறு வயது
அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது'
(நடையழகை எழுதுவது என்று ஆகிவிட்டது, அது 'அண்ணியின்' பாடலாக இருக்கட்டுமே)
RAGHAVENDRA
4th October 2013, 05:09 PM
கார்த்திக்கின் பதிவைப் பார்த்து, படித்து பின் உடனே மனதில் ஏனோ இந்தப் பாட்டு நினைவுக்கு வந்து விட்டது...
http://youtu.be/MJEpfLQCQfY
பாட்டு ஆரம்பமே நடையோடு... அதுவும் ....சரணத்தில் அந்த மணற் பரப்பில் தேவிகா பாடி ஆட, படகுகளின் ஓரமாய் தலைவரின் நடை..... ஆஹா....
chinnakkannan
4th October 2013, 05:26 PM
ஹாய் கார்த்திக் சார்..வெரி நைஸ்.. என்னா அழகுப் பாட்டு அது..ம்ம் அதுவும் ஜோடிப் பொருத்தம் வாவ்..
ராகவேந்திரா சார்.. அது என்ன பாட்டு பந்த பாசம் தானே படம்..என்னுடைய ஸ்பீக்கரில் ஆடியோ அவுட்..பாட்டுக் கேட்கவில்லை..ம்ம்
சரி சரி..பலவருடங்களுக்கு முன் தேவிகா பற்றி ஒரு இணையக் குழுவில் எழுதிய கட்டுரை..அடுத்த போஸ்ட்டில் ( I hope that post wont deviate this threads intention)
(விதி யாரை விட்டது :) )
chinnakkannan
4th October 2013, 05:32 PM
******************
தேவிகா....
**************
அது ப்ளஸ்டூ முடித்த சமயமா, கல்லூரி ஆரம்பித்த பொழுதா என எனக்குச் சரியாக நினைவிலில்லை. ஒன்று மட்டும் நினைவிருக்கிறது. பழைய- பார்க்காமல் விட்டுப் போன சிவாஜி படங்களைத் தேடிப் பார்த்த பருவமது.
• *
எங்களூர் (மதுரை) சாந்தி தியேட்டரில் வெள்ளி வெள்ளியன்று படம் மாற்றுவார்கள். சிவாஜி படமென்றால்
சனிக்கிழமை மாலைக்காட்சி நான் ஆஜர்.
• *
அப்படி சாந்தி தியேட்டரில் வராத ஒரு படம் செல்லூர் போத்திராஜாவில் ஓடுவதைக் கண்டேன். அதைப் பார்க்க
வேண்டுமென்று வழி கேட்டால் இப்படியே 25 ம் நம்பர் பஸ் -சென்ட் ரல் - குலமங்கலமோ ஏதோ போட்டுச் செல்லும்
அதில் போய்ச் செல்லூரில்(வைகையாற்றின் அக்கரையில்) இறங்கு என்றான் வக்கீலாத்து ராதா. சரி என்று ஒரு சனி
மாலை ஏறிச் சென்றால் அது ஒரு சின்னத் தியேட்டர்.. கைலி,வேட்டி, சேலை என்று கிராம பாஷையுடன் மனிதர்கள்
வர பேண்ட் போட்ட எனக்கு ராஜ மரியாதை. 80 பைசாவுக்கு மாடியில் டிக்கட். குஷியுடன் படம் பார்க்க ஆரம்பிக்க
அந்தக் கதானாயகி அறிமுகமாகும் காட்சியிலும் பின்னர் கண்டிப்புக்கார புரபஸர் சிவாஜி மழையில் அவளை
அணைக்க..குறும்புடன் அவள் இடி மழை புரபஸர் எனச் சொல்ல- ஆமாம் இடியும் மழையும் வானத்தின் குழந்தைகள் என்று
டால்ஸ்டாய் சொல்லியிருக்கிறார் என சிவாஜி வழிய- அந்த நாயகி என் மனதில் குட்டிச் சுவரில் சினிமாப்
படப் போஸ்டர் மாதிரி பச்சக் என்று ஒட்டிக் கொண்டாள்..
• *
அது தேவிகா.. படம்.. ஆண்டவன் கட்டளை..
இந்த பிரம்மா இருக்கிறாரில்லையா.. சரஸ்வதி கிச்சுக் கிச்சு மூட்டிக் கொண்டிருந்த தருணத்தில் அவளைப்
(தேவிகாவை) படைத்திருப்பார் போல.. முகம் முழுக்க குறும்பு. ஆப்பிளை நன்றாக அரைத்து அதனுடன் இட்லி
மாவையும் கலந்து இட்லித் தட்டில் எடுத்துவைத்த பொசு பொசு இட்லி மாதிரி கன்னங்கள். தள்ளுவண்டியில் வரும்
காய்கறிக் காரனிடம் பேரம் பேசி இரண்டு ரூபாய்க்கு வாங்கும் வாழைத் தண்டு மாதிரி முற்றலாக இல்லாமல்
நிஜமாகவே இளம் வாழைத்தண்டாட்டம் கைகள்.. மற்றும் என்று ஆரம்பித்தால் ராயர் கிளப்பில் மெம்பர்ஷிப் கான்ஸல்
செய்து விடுவார்கள்.
• *
1966 ல் பொம்மை -யின் முதல் இஷ்யூவில் அட்டைப் படமாக வந்தவராம் அவர். (அப்போது கைக்குழந்தையான எனக்கு
அம்மா நிலாச் சோறு ஊட்டியிருப்பார் என நினைக்கிறேன்)
• *
சிவாஜியுடன் நடித்த படங்களில் மட்டும் கொஞ்சம் நெருக்க்கம்.. மற்ற படங்களில் அப்படிக் கிடையாது..
எம்ஜிஆருடன் ஒரே ஒரு படம்..ஆனந்த ஜோதி..நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா..மறக்க
முடியாத பாடல்..
• *
ஆண்டவன் கட்டளை பார்த்த பிறகு தேவிகா படங்களாகத் தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தேன்.
*
மேற்கண்ட படத்தில் 'ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டு விட்டேன், நான் கேட்டதை எங்கே போட்டு விட்டாய், என்ன
தேடுகிறாய் எங்கே ஓடுகிறாய், உன் தேவைகளை ஏன் மூடுகிறாய்' என்று பாடிய போது அவர் முகத்தில்
பிரதிபலித்த குறும்பு, நீல வானத்தில் 'மலரில்லாத தோட்டமா கனியில்லாத வாழையா மனதில் மட்டும்
அன்னையா மகனே நீ இல்லையா..' என்ற சோக நடிப்பு,அதே படத்தில் 'வருடந்தோறும் வசந்தம் தேடி வருவோம்
இங்கே, வாடைக் காற்றில் மூடும் பனியை ரசிப்போம் இங்கே' என்ற உற்சாகம், கொழுக் மொழுக்கென்ற உடம்பு
முழுவதும் முழுத் திரையில் தெரிய 'குறை கொண்ட உடலோடு நானிங்கு மெலிந்தேன்' என்று கர்ணனில் பாடுவதைப்
பார்த்த போது சிரிப்பு, திருவிளையாடலில் box officeற்காக பாண்டிய ராணியாக 'பொதிகைமலை
உச்சியிலே புறப்படும் தென்றல்' எனப் பாடிய வண்ணம் நீராடிய போது கண்களில் காட்டிய நாணம் +ஆசை,
சாந்தியில் 'நூலிடை மீதொரு மேகலை ஆட மாலைக் கலைகள் ஆசையில் வாடும், ஏலப் பூங்குழல் இன்னிசை பாட
எண்ணம் யாவும் எங்கோ ஓட - காலையில் உறங்கி மாலையில் எழுந்தால் கண்கள் இரண்டில் நிம்மதி ஏது.. நிம்மதி
ஏது ' என்று காதல் வயப்பட்டுப் பாடுவதைப் பார்த்த போது போன நிம்மதி..ம்ம் சொல்லிக் கொண்டே
போகலாம்.
**
வாழ்க்கைப் படகில் 'மன்னவனே ஆனாலும் வாள்பிளந்து அறுத்தாலும் பெண்மனதை நீ அடைய முடியாது' என்று விழிகளில்
காண்பித்த சீற்றம்,ஜெமினியுடன் 'உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே' எனும் போது
கொள்ளும் வெட்கம், 'என் அன்னை செய்த பாவம் நான் மண்ணில் வீழ்ந்தது.. என் அழகு செய்த பாவம் உன்னைக்
கண்டது..என் கண்கள் செய்த பாவம்..' என்ற போது காண்பித்த சோகம் எனச் சேர்த்துக் கொள்ளலாம்..
• *
கண்ணதாசன் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் ' வாழ்க்கையில் ஜாக்கிரதையாக இருக்கத் தெரியாதவர்
தேவிகா (என்ன என எனக்குத் தெரியாது). நான் திரைப்படங்கள் எடுத்த போது நன்கு ஒத்துழைப்புக் கொடுத்த
நடிகை அவர்.. என்னை எப்போது பார்த்தாலும் அவர் பாடும் பாட்டு'பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர்
பெருமானே.. உனைப் புரிந்து கொண்டாள்.. ஒன்று தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே'' என்று
எழுதியிருந்தார் (குமுதத்தில் வெளியான கட்டுரை என நினவு).
• *
உண்மையான ரசிகனுக்கு நடிக நடிகையரின் பெர்ஸனல் வாழ்க்கையைப் பற்றி அவ்வளவு விருப்பம் கிடையாது எனச்
சொல்லலாம். அவனுக்குத் தேவை நடிப்பு + அழகு. பிற்காலத்தில் அவர் அண்ணி, அம்மா என நடித்திருந்த படங்களைப்
பார்த்த போது கொஞ்சம் வருத்தமாகத் தான் இருந்தது.
• *
எனக்குக் கல்யாணமான புதிதில் வேறு படம் கிடைக்காமல் வீடியோவில் கரகாட்டக் காரன் பார்த்துக் கொண்டிருந்த
போது - இந்த நடிகையின் தாய் தான் எனது க.க' என இலக்கியத் தனமாக உளறி விட என் அகம் கொடுத்த
எக்ஸ்பிரஷன் இருக்கிறதே.. மறக்கவே முடியாது.(கூடவே இலவச இணைப்பாக ஒரு கிள்ளும் கிடைத்தது வேறு
விஷயம்.)
• *
இப்போதும் கூட தேவிகாவின் படங்களைப் பார்க்கும் போதெல்லாம் - என் வீட்டில் 'யோவ்.. நாக்கை உள்ளே
இழுத்துக்கய்யா.. ஜொள்ளுவிடுவது தாங்கலை' எனப் பொறாமைக் குரல் வரும்.
•
• *
RAGHAVENDRA
4th October 2013, 06:15 PM
வருஷம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே...
வாடைக் காற்றில் மூடும் பனியில் மகிழ்வோம் இங்கே..
இந்த வரிகள் இரண்டாம் முறை ஒலிக்கும் போது
தலைவரின் முகத்தைப் பாருங்கள்....
எவ்வளவு அர்த்தங்கள் ... வருஷம் தோறும் என அவள் அடுத்த முறையையும் எதிர்பார்த்து பாடுவதாக ஒரு பொருள் கொண்டு வருந்துகிறார், அவள் அடுத்த வருடம் இருக்க மாட்டாளே என்று..
அவளோ அடுத்த வருடமும் வருவோம் என்கிற நம்பிக்கையில் பாடுகிறாள்.
வார்த்தைச் சித்தர் கண்ணதாசன் இரு பொருள் பொதியும் படி எழுத்தில் ஜாலம் காட்டி அந்த சூழலை அப்படியே வார்த்தையில் வடிக்க, மெல்லிசை மன்னரின் இசையில் அந்த வரிகளுக்கு சுசீலா இரு பொருளும் புலப்படும் படி உச்சரித்துப் பாட ...
தேவிகாவின் முகத்தில் நம்பிக்கையும், தலைவரின் முகத்தில் ஏமாற்றத்தை சந்திக்கப் போகிறோமே என்கிற வருத்தம், அவளுடைய உடல் நலத்தைப் பற்றிய சோகம் அனைத்தும் சேர்ந்து தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத பாடல் காட்சியாக அளித்து விட்டார்கள்.
தேவிகா என்ற உடனே நினைவுக்கு வரும் இப்பாடலைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியவில்லை, பார்க்காமலும் இருக்க முடியாது
http://youtu.be/ygjqxrk-Hsc
mr_karthik
4th October 2013, 06:28 PM
டியர் சின்னக்கண்ணன் சார்,
உங்களுக்கு கனவுக் 'கன்னி' அதனால் ஜொள்ளோ ஜொள்ளு என்று வழிகிறீர்கள். ஆனால் எனக்கோ (நானே என் மனதில் வரித்துக்கொண்ட) என் 'அண்ணி'. அதனால் லிமிட் தாண்ட முடியாது, தாண்ட மனம் விரும்பாது. அண்ணி தேவிகாவின் பாடல்களை அழகாய் பட்டியலிட்டீர்கள். இன்றைக்கும் கூட 'கங்கைக்கரை தோட்டம்' பாடலைப் பார்த்துக்கொண்டு இருக்கும்போது சுனாமி வந்தால், பாட்டைப் பார்த்து முடித்துவிட்டு ஓடுவோம் என்றிருப்பவன்.
'நானும் ஒரு தொழிலாளி' கமலும் அம்பிகாவும் ஜோடி என்றார்கள். மெல்லப்பர்த்துக்கொள்வோம் என்று நினைத்தேன். ஸ்ரீதர் இயக்கம் என்றார்கள். சுணங்கிப் பார்ப்போம் என்றிருந்தேன். தேவிகாவும் இருக்கிறார் என்றார்கள். செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டேன் தியேட்டருக்கு. அண்ணியின் கடைசிப்படம் என்று அப்போது தெரியாது எனக்கு. இருந்தாலும் மனதுக்குள் ஒரு உறுத்தலாய் அண்ணி வரும் காட்சியில் எல்லாம் சோகமே உருவாக பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் கமலுடன் தாய்ப்பாசத்தை பொழிந்து கொண்டிருந்தார். ஆனால் நான் மனதுக்குள் அவரோடு பேசிக்கொண்டிருந்தேன்.
கனகாவுடன் படப்பிடிப்புக்கு துணைக்கு வந்துகொண்டிருந்தவர், உடல்நிலை காரணமாக வருவதில்லை என்று செய்தி போட்டார்கள். அப்போதே எனக்குப் பொறி கலங்கியது. அண்ணன் மறைந்த அடுத்த வருடமே (2002) அண்ணனைத் தேடிப்போய்விட்டார் என்ற செய்தி இடியாய்த் தாக்கியது.
ஆயிரம் நடிகையர் இங்குண்டு... ஆனால் அண்ணி உன்போல் யாருண்டு.....
IliFiSRurdy
4th October 2013, 06:31 PM
******************
தேவிகா....
**************
•
• *
சின்ன கண்ணன் சார் in full form..
பலே பாண்டியா என பாராட்டலாமென ஆரம்பித்தால்..
என்ன சார் அதை விட்டுடீங்க?
வாழநினைத்தால் வாழலாம்..
இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்..
(நீங்க நிலாச்சோறு சாப்பிட்ட போது,நாங்கள் தட்டில் போட்டு பிசைந்து சாப்பிட்டவங்களாக்கும்!:smile::smile:)
Subramaniam Ramajayam
4th October 2013, 06:38 PM
வருஷம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே...
வாடைக் காற்றில் மூடும் பனியில் மகிழ்வோம் இங்கே..
இந்த வரிகள் இரண்டாம் முறை ஒலிக்கும் போது
தலைவரின் முகத்தைப் பாருங்கள்....
எவ்வளவு அர்த்தங்கள் ... வருஷம் தோறும் என அவள் அடுத்த முறையையும் எதிர்பார்த்து பாடுவதாக ஒரு பொருள் கொண்டு வருந்துகிறார், அவள் அடுத்த வருடம் இருக்க மாட்டாளே என்று..
அவளோ அடுத்த வருடமும் வருவோம் என்கிற நம்பிக்கையில் பாடுகிறாள்.
வார்த்தைச் சித்தர் கண்ணதாசன் இரு பொருள் பொதியும் படி எழுத்தில் ஜாலம் காட்டி அந்த சூழலை அப்படியே வார்த்தையில் வடிக்க, மெல்லிசை மன்னரின் இசையில் அந்த வரிகளுக்கு சுசீலா இரு பொருளும் புலப்படும் படி உச்சரித்துப் பாட ...
தேவிகாவின் முகத்தில் நம்பிக்கையும், தலைவரின் முகத்தில் ஏமாற்றத்தை சந்திக்கப் போகிறோமே என்கிற வருத்தம், அவளுடைய உடல் நலத்தைப் பற்றிய சோகம் அனைத்தும் சேர்ந்து தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத பாடல் காட்சியாக அளித்து விட்டார்கள்.
தேவிகா என்ற உடனே நினைவுக்கு வரும் இப்பாடலைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியவில்லை, பார்க்காமலும் இருக்க முடியாது
http://youtu.be/ygjqxrk-Hsc
Chinnakannan you have reminded me about the goldendays we have enjoyed sivaji- devika pair right from pandapasam days followed by cute A. KATTALAI NEELAVANAM ETC. LOVELY PAIR OF SIXTIES.
TODAYmy sleep has gone. one of my very close friend has ot taken food for several days when she paired with the other side star,
mr_karthik
4th October 2013, 06:49 PM
டியர் சுப்ரமணியம் ராமஜெயம் சார்,
ஐந்து பக்கங்களுக்கு ஒருமுறை நான் ஒரு வேண்டுகோள் பதிவை இடுவது வழக்கம் என்று சென்ற வாரம் கூட குறிப்பிட்டிருந்தேன். திரும்ப திரும்ப அந்த வேண்டுகோளை வைக்கும்போது மற்றவர்கள் மனம் வருத்தப்படுமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை......
Subramaniam Ramajayam
4th October 2013, 07:15 PM
Kartik sir.
As our anni devika's neelavanam song has to be enjoyed with my reply I have done like that, keeping in mind your early reminders very much. sorry it will not happen again.
chinnakkannan
4th October 2013, 09:04 PM
டியர் கார்த்திக் சார்.நன்றி..தேவிகா பற்றிய.இந்தக் கட்டுரை ராயர் காப்பி கிளப் இணையக் குழுவில் எழுதியது..சொல்லாமல் விட்ட விஷயம்..இது எழுதி சில தினங்களில் (மே 1) என நினைக்கிறேன். அவர் இறந்துவிட்டார் எனச் செய்தி வ்ந்து மிக வருத்தமாக இருந்தது..
கண்பத் சார் நன்றி.. அப்ப நான் ச்சின்னக் கண்ணன் தான் :) சார்லாம் வேண்டாம்.. பலே பாண்டியாவை விடவில்லை..எழுதும் போது கொஞ்சம் விடுபட்டு விட்டது (அதில் வரும் பாலாஜி லவ்வர் நன்னாயிட்டு இருக்கும் :) )
ராகவேந்திரா சார்..//தலைவரின் முகத்தைப் பாருங்கள்...// நடிகர் திலகத்தின் உணர்ச்சிகள் அபாரமாக இருக்கும்..இன்னொரு காட்சியில் ரோஜாச்செடி வளர்ந்து பதறுவதை..ம்ம் ஓ லஷ்மி ஓ ஷீலா ஓ மாலா வும் நினைவுக்கு வருகிறது...
சுப்ரமண்யம் ராம ஜெயம் சார்.. நன்றி :) ஆனந்த ஜோதி ஒன்று தானே அவர் எம்ஜியாருடன் நடித்த படம்.. நான் பாடல் மட்டும் பார்த்திருக்கிறேன்..
vasudevan31355
4th October 2013, 10:57 PM
பலே! பலே!
கண்பத் சார்,
ரங்கனின் அய்யய்யோவை அற்புதமாக வடித்திருக்கிறீர்கள்.
சின்னக் கண்ணா சார்,
உங்கள் காட்டில் அடை மழை. தேவிகா, பாடல்கள் என்று ஒரே கலக்கல்.
கார்த்திக் சார்,
தங்கள் பங்கிற்கு குறைவில்லை. கன்னி, அண்ணி என்று எதுகை, மோனை. எனக்கு மஞ்சு ஞாபகம் வந்து விட்டது.
ராகவேந்திரன் சார்,
பொருத்தமான வீடியோக்கள் அளித்து ஏனையோர் பதிவுகளுக்கு மெருகு அளித்துள்ளீர்கள்.
கோ,
அனைத்துக்கும் நீதான் காரணம். சந்திரசேகரன் சாரையே நீண்ட பதிவு போட வைத்து விட்டாயே! இதில் நீ நிஜமாகவே சாதனை படைத்து விட்டாய்.
சந்திர சேகரன் சார்,
படத்தலைப்புகளைப் பற்றிய தங்கள் விளக்கம் அருமை. ஏதேது?... முரளி சார், நீங்கள் எல்லாம் வக்கீல் தொழிலுக்கு வந்திருந்தால் பல பேரை கிலி கொள்ள வைத்திருப்பீர்கள் போல் இருக்கிறதே! எவ்வளவு அறிவார்ந்த பதிவுகள்! முரளி சார்! மீண்டும் தங்களுக்கு நன்றி! மறுமுறை அனுபவித்துப் படித்தேன்.
இன்று மதியப் பணி சென்றுவிட்டதால் நண்பர்களுடன் சேர்ந்து குதூகலித்து பதிவுகள் இட முடிய வில்லை. ஜாலியான பொழுதை இழந்து விட்டேன்.
எல்லோரும் கலக்குகிறீர்கள். முக்கியமாக தலைவரின் நடை பற்றிய தங்கள் அனைவரது நடையும் நயம்.
ம்ம்...எனக்குப் பிடித்த நடை! வருகிறேன். விரைவில் தருகிறேன்.
அனைவர்க்கும் நன்றி!
Murali Srinivas
4th October 2013, 11:21 PM
என் பதிவுகளை மனமுவந்து பாராட்டிய ராமஜெயம் சார், வாசு, கணேஷ் சார், கோபால், ராகவேந்தர் சார், திருச்சி ராமச்சந்திரன் சார்,சந்திரசேகர், கார்த்திக் மற்றும் ஹைதராபாத் ரவி ஆகியோருக்கு மனங்கனிந்த நன்றி.
நடிகர் திலகம் திரியில் தாமதமாக நுழைந்தாலும் தரமான நகைச்சுவை மற்றும் கவிதைகளால் கலக்கும் சின்னகண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள். [எங்கள் ஊர்காரர் அல்லவா, கலக்குவதற்கு கேட்கவா வேண்டும்? கோபால் நற நறவென்று பல்லைக் கடித்தாலும் இதுதான் உண்மை!]
கார்த்திக்,
ஜெய்குமாரி மற்றும் விஜயலலிதா இருவரும் நமது படங்களில் ஏற்று நடித்திருந்த சில கதாபாத்திரங்களை பற்றி நீங்கள் எழுதியிருந்த பதிவுகள் நல்ல ரசனையோடு எழுதப்பட்டிருந்தன. ஒரு சில வார்த்தை பிரயோகங்கள் எல்லாம் மிக பொருத்தமாக அமைந்திருந்தன.
அன்புடன்
Murali Srinivas
4th October 2013, 11:50 PM
நான் வாழ வைப்பேன் சென்னை மகாலட்சுமி திரையரங்கில் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறது. ஒரு வார வசூலில் பல படங்கள் 60 அல்லது 70 ஆயிரங்களை தொடுவதற்குள் நாக்கு தள்ளிப் போகும் சூழலில் அனாயாசமாக நான் வாழ வைப்பேன் 90 ஆயிரத்தை தொட்டிருக்கிறது. இத்தனைக்கும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் பெரும்பாலானோர் படத்தை பார்க்க செல்லவில்லை. நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா சம்மந்தப்பட்ட வேலைகள் மற்றும் ஞாயிறு மாலை T.Nagar வித்யோதயா பள்ளியில் நடைபெற்ற விசில் நிகழ்ச்சியினால் தியேட்டருக்கு போகாமல் இருந்தவர்கள் என்று பல்வேறு காரணங்களினால் ரசிகர்களின் பங்களிப்பு என்பதே bare minimum ஆகிப் போனது. சரி ரஜினியை விரும்புபவர்கள் சென்றார்களா என்றால் அதுவுமில்லை என்கிறார் அரங்க உரிமையாளர். முழுக்க முழுக்க பொது மக்கள் மட்டுமே அமோக ஆதரவு கொடுத்திருக்கின்றனர். திரும்ப திரும்ப ஒரு குரூப் ரசிகர்கள் மட்டுமே பார்க்கும் படமல்ல நடிகர் திலகத்தின் படங்கள். அவை அதையும் தாண்டிய எந்த மன்ற அல்லது அமைப்பு சார்புமற்ற பொது மக்களால் பார்க்கப்படுவது என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.If at all Proof was required! இந்த வெற்றி உடனே ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்ன தெரியுமா? சென்னை பிராட்வே திரையரங்கில் இன்று முதல் தினசரி மூன்று காட்சிகளாக விடுதலை படம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த மாதிரி படங்களாக,அதாவது நீதி [நாயகன்-நாயகி காரணமாக ஏதேனும் பிரச்சனைகள் வரக் கூடுமோ?] மற்றும் நான் வாழ வைப்பேன் [நாயக நடிகர்களின் ரசிகர்கள் இடையில்?] வெளியிடுகிறீர்களே சரியாக வருமா என்று சில பலர் சந்தேகம் கிளப்பிய போதும் நிச்சயம் நன்றாக வரும் என சொல்லி Fortune Favours the Brave என்ற பழமொழிக்கேற்ப தைரியமாக நின்று இன்று இந்த வெற்றிகளை குவித்திருக்கும் அருமை நண்பர் சுப்பு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
இது போன்ற மேலும் பல வெற்றிகள் உங்களை தேடி வரட்டும்!
அன்புடன்
Gopal.s
5th October 2013, 12:00 AM
(காதல் காட்சிகள் தொடரை நான் எழுத ஆரம்ப பதிவாகவும், அண்ணிகள் பற்றி நிறைய பேச படுவதால் என்னுடைய மீள் பதிவு அவசியமாகிறது.)
படம் - சிவகாமியின் செல்வன். -26 ஜனவரி 1974.
பாடல்- எத்தனை அழகு கொட்டி கிடக்குது.
பாடியவர்- எஸ்.பீ.பாலசுப்ரமணியம் .
பாடலாசிரியர்- புதுமை பித்தன்
இசையமைப்பு- மெல்லிசை மன்னர்.
நடிப்பு- சிவாஜி-வாணிஸ்ரீ.
இயக்கம்- சீ .வீ.ராஜேந்திரன்.
நான் பதினைந்து வயது வயதுக்கு வந்த விடலையாய் ,மீசை முளைக்கும் பருவத்தில், இனம் பிரியா குழப்ப இன்ப உணர்வுகள் வாட்டி வதைத்த போது ,நான் மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்ந்த படம் (குடந்தை நூர்மஹாலில் வரிசையாய் ஐந்து நாட்கள்)
அதிலும், என் விருப்பமான ஜோடியின் எத்தனை அழகு பாடலுக்காக மட்டும்(amatory மூட்,erotic arousal எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள்)இத்தனை முறை!!!!????
ஆனால் அதே பாடலை, உலகத்தில் இன்பங்கள் பாக்கி உண்டா என்ற பருவத்தில் பார்க்கும் போதும், ஒரு உருது கவிதை, ஒரு erotic சிற்பம் (அ )சித்திரம் பார்க்கும் புத்துணர்வை தருகிறது என்றால் எழத பட வேண்டியதே.
பொதுவாக சிவாஜி,பெண்களை விட ,பெண்களின் அம்மாக்களையே குறி வைத்தவைத்த முதல் அறுபதுகளில் இருந்து விடு பட்டு, பெண்களையும்,வாலிபர்களையும் ஈர்க்க தொடங்கி ,வசந்த மாளிகையில் ராஜாவாய் சுமதி சுந்தரியுடன் , இளைய மன்மதனாக ஜொலித்த கால கட்டம். வேறெந்த நடிகையுடன் நடித்ததை விட, வாணிஸ்ரீ.யுடன் அவர் நெருக்கம் உயர்ந்த மனிதனில் தொடங்கி நல்லதொரு குடும்பம் வரை தொடர்ந்தது.
காதல் காட்சி என்ற போதும் பொத்தாம் பொதுவாக நடிக்காமல், பாத்திர இயல்பு படி,வித்தியாசம் காட்டி ,சூழ்நிலை, கதையமைப்பு புரிந்து நடிக்கும் சுவை ஆஹா!! அதிலும் எத்தனை variety !!!எவன் எவனையோ காதல் மன்னன் என்று அழைக்கிறோமே?இவனல்லவோ காதல் பேரரசன் என்று தோன்றும்.
பொதுவாக erotism என்பது நமது கோவில்கள்,மத நூல்களில் கொண்டாட பட்ட போதும் ,british inhibitions காரணமாய் ,sexual slavery and deprivation இல் அகப்பட்டு, நல்ல hightened aesthetics என்று சொல்ல படும் erotic sensual intense romance என்று சொல்ல படும் காட்சிகளே எந்த இந்திய படங்களிலும் இல்லை.(அப்படியே ஒன்றிரண்டு வந்தாலும், காஞ்ச மாடு கம்பங்கொல்லையில் புகுந்த case தான் அல்லது மாலிஷ்.). எனக்கு தெரிந்த வரை இந்த Erotic genre இலும் முழு மதிப்பெண் நம் நடிகர் திலகத்துக்கே.நெஞ்சத்திலே நீ-சாந்தி, மெல்ல நட-புதிய பறவை,பலூன் காட்சி-சுமதி என் சுந்தரி, plum கடிக்கும் வசந்த மாளிகை என்று ஆயிரம் இருந்தாலும் ,இந்த குறிப்பிட்ட பாடல் erotic திலகம்.
எத்தனை அழகு பாடலில்(ஒரே டேக்கில் படமாக்க பட்டதாம்.hats off ! ஒரு சப்பை முத்த காட்சியை 20 டேக் எடுக்கும் கலிகாலம்) முதலில் களம். தங்களுக்குள் மண பந்த ஒப்பந்தம் புரிந்த(மற்றவர்கள் அறியாமல்) ஒரு ஜோடி ஒரு மழை நிறைந்த குளிர் இரவில்,ஒரு அறைக்குள் மாட்டி, தங்களை இழக்கும் காட்சி. அவனுக்கோ இன்பத்தை சோதிக்கும் ஆர்வமும், சுவைக்க துடிக்கும் அவசரமும்,தன்னை மறந்த நிலை. அவளுக்கோ, தயக்கம் கலந்த சம்மதம், தவிக்க விடும் நாணம்,உரிமையரியா உறவின் அறியா அச்சம் என இந்த ஜோடியின் தவிப்பை, சிவாஜியும் ,வாணிஸ்ரீ யும் அற்புதமாய் expressions ,body language ,suggestive movements என்று பின்னியிருப்பார்கள்.
முதலில் இந்த பாடலில் சி.வீ.ஆரின் colour sense and psychology யை பாராட்டியே ஆக வேண்டும்.(இதை அவர் சுமதி என் சுந்தரியிலேயே அற்புதமாக கையாண்டிருப்பார்) வாணிஸ்ரீ முதலில் ஒரு பிங்க் நிற புடவை அணிந்து அறைக்குள் வருவார். பிங்க் ஒரு வளர் சிறுமியின் பெண்மை குறியீடு. பிறகு சிவப்பு வண்ண அவசர ஆடைக்கும் மாறுவார்.சிவப்பு feeling of intense excitement ,romantic warmth ஐ enhance பண்ணும் நிறம்.ஆணுடையது வெளிர் பச்சை நிறம்.fertility ,bodily functional assurance குறிப்பது. இந்த இரண்டு நிறங்களின் இணைப்பே பாதி mood elater ஆக காரணியாகும்.
இதை விட hero -heroine physical ஆன எவ்வளவோ சிவாஜி பாடல்கள் கூட உண்டு. ஆனால், இந்த காட்சி தந்த intensity எந்த காட்சியும் தந்ததில்லை.
ஒரு இள விமானி, ஒரு target நோக்கி படையெடுக்கும் adventurism ,experimentation முதலிய உணர்ச்சிகளுடன்,ஒரு அவசரம் கலந்த காம விழைவை அற்புதமாய் பிரதிபலிப்பார் NT .வாணிஸ்ரீ (AVM ராஜன் சொல்வது போல சிவாஜிக்காக பிரம்மா ஸ்பெஷல் ஆய் படைத்த கருப்பழகி) சிவாஜியுடன் இழைந்தும், தயங்கியும், உணர்ச்சி வசபட்டும், சூழ்நிலையறிந்து விலகுவதும், இறுதியில் தொடர் தூண்டுதலால் இணங்குவதும் என அற்புதமாய் NT க்கு ஈடு கொடுத்திருப்பார்.
எழும் போதே suggestive ஆக தன் அவசர விழைவை வேட்கையை உணர்த்தி கையில் முத்தமிடுவார். , பிறகு ஒரு இலக்கில்லாமல் விலகும் வாணிஸ்ரீயை ஒரு குறிப்பின்றி தொடர்ந்து அலை பாயும் உணர்ச்சிகளை உணர்த்துவார் சிறு சிறு தொடல்களில். பிறகு ஒரு இலக்கில்லா passionate முத்தங்கள்(ஒரு awkward அவசரம் தெரியும்),பிறகு குறிப்பை உணர்த்தும் coat -stand காட்சி, திரை காட்சி என அவசர தூண்டல் ,ஓரு அனுபவமின்மையின் awkward desperation ஐ மிக அழகாக உணர்த்துவார். இதில், வாணிஸ்ரீயின் திரையை இறுக்கும் கைகள்,என்று எல்லாமே suggestive erotism .physical ஆக மிக குறைவான ,தேவையான அணைப்புகள் மட்டுமே இருக்கும்.
பிறகு மஞ்சத்தில் ஓரளவு தயார் நிலைக்கு ஆளானாலும் ,பிறகு அரை மனதுடன் தயங்கி விலகி, தலையணையை மார்புடன் வைத்து காத்து கொள்ள எண்ணும் வாணிஸ்ரீயை ,ஒரு இரையை குறி வைக்கும் இறுதி ஆவேசத்துடன் சிவாஜி அணைத்து இணங்க வைப்பார்.
ஆபாசம், கவர்ச்சிக்கு விடை தெரியாமல் இன்றும் முழிக்கும், நம் தமிழ் நாட்டு தாய்,தந்தை குலங்களுக்கு, இந்த காட்சியின் அழகும்,அமைப்பும், erotic hightened emotional aesthetics புரியாமல்,இந்த படத்தை கை விட்டனர்.இந்த காட்சியில்,மற்ற காதல் காட்சிகளில் இல்லாத, எந்த மிகையும் இருக்காது. சம்பத்த பட்டவர்களின் உணர்வு மிகு நடிப்பாற்றல்,அழகுணர்ச்சி மிகுந்த suggestive shots &gestures தவிர.,
chinnakkannan
5th October 2013, 02:50 AM
//நடிகர் திலகம் திரியில் தாமதமாக நுழைந்தாலும் தரமான நகைச்சுவை மற்றும் கவிதைகளால் கலக்கும்// முரளிஸ்ரீநிவாஸ் அவர்களுக்குமிக்க நன்றி..நானெல்லாம் ஒரு துக்கிணியூண்டு ரசிகன்..உங்கள் அளவுக்கு எழுத்தாற்றல் மிக்கவனல்ல.. மறுபடி நன்றி..
என்னங்க்ணா..கோபாலண்ணா :) //வாணிஸ்ரீ முதலில் ஒரு பிங்க் நிற புடவை அணிந்து அறைக்குள் வருவார். பிங்க் ஒரு வளர் சிறுமியின் பெண்மை குறியீடு. பிறகு சிவப்பு வண்ண அவசர ஆடைக்கும் மாறுவார்.சிவப்பு feeling of intense excitement ,romantic warmth ஐ enhance பண்ணும் நிறம்.ஆணுடையது வெளிர் பச்சை நிறம்.fertility ,bodily functional assurance குறிப்பது. இந்த இரண்டு நிறங்களின் இணைப்பே பாதி mood elater ஆக காரணியாகும்// சே இதெல்லாம் தெரியாம ஆன்னு வாணிஸ்ரீயே பாத்துக்கிட்டிருந்திட்டியே கண்ணான்னு இடித்துரைக்குது மனசாட்சி..:) எஸ்பி பி கூட இந்தப் பாட்டைக் கொஞ்சம் சிரமப்பட்டுப் பாடியதாக எங்கேயோ படித்த நினைவு.. கலக்குங்க..// ஒரு சப்பை முத்த காட்சியை 20 டேக் // என்னது இது அப்ப நீங்க என்னை மாதிரி யூத் இல்லையா
குத்தமெனக் குவிந்துவிடும் கொவ்வையிதழ் தன்னையே
முத்தமிட மாறிவிடும் பார் நு யாரோ முனிவர் சொல்லக் கேள்விப் பட்டதில்லையா?!.. ம்ம் நானே இப்போ தான் ராஜாராணி நயன்ஸ் பார்த்துட்டு வந்துருக்கேன்.(நைஸா உன்னப் பத்திச் சொல்லிடு.உன் ஜொ.க்கு அளவே இல்லை.. - மனசாட்சி.கம்னு இரு) ;)
** பார் நா உலகம்கற அர்த்தம்!
கோபால் சார், நீங்க இடலைன்னா நானே கேக்கறதா இருந்தேன். நாளைக்கு. நன்றி..
RAGHAVENDRA
5th October 2013, 08:35 AM
நடிகர் திலகம் 85வது பிறந்த நாள் விழா, 01.10.2013, சென்னை சங்கீத வித்வத் சபை அரங்கம் ... காணொளி
http://youtu.be/nksk3DR1ypg
Russellrco
5th October 2013, 09:15 AM
நான் வாழ வைப்பேன் சென்னை மகாலட்சுமி திரையரங்கில் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறது. ஒரு வார வசூலில் பல படங்கள் 60 அல்லது 70 ஆயிரங்களை தொடுவதற்குள் நாக்கு தள்ளிப் போகும் சூழலில் அனாயாசமாக நான் வாழ வைப்பேன் 90 ஆயிரத்தை தொட்டிருக்கிறது. இத்தனைக்கும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் பெரும்பாலானோர் படத்தை பார்க்க செல்லவில்லை. நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா சம்மந்தப்பட்ட வேலைகள் மற்றும் ஞாயிறு மாலை T.Nagar வித்யோதயா பள்ளியில் நடைபெற்ற விசில் நிகழ்ச்சியினால் தியேட்டருக்கு போகாமல் இருந்தவர்கள் என்று பல்வேறு காரணங்களினால் ரசிகர்களின் பங்களிப்பு என்பதே bare minimum ஆகிப் போனது. சரி ரஜினியை விரும்புபவர்கள் சென்றார்களா என்றால் அதுவுமில்லை என்கிறார் அரங்க உரிமையாளர். முழுக்க முழுக்க பொது மக்கள் மட்டுமே அமோக ஆதரவு கொடுத்திருக்கின்றனர். திரும்ப திரும்ப ஒரு குரூப் ரசிகர்கள் மட்டுமே பார்க்கும் படமல்ல நடிகர் திலகத்தின் படங்கள். அவை அதையும் தாண்டிய எந்த மன்ற அல்லது அமைப்பு சார்புமற்ற பொது மக்களால் பார்க்கப்படுவது என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.If at all Proof was required! இந்த வெற்றி உடனே ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்ன தெரியுமா? சென்னை பிராட்வே திரையரங்கில் இன்று முதல் தினசரி மூன்று காட்சிகளாக விடுதலை படம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த மாதிரி படங்களாக,அதாவது நீதி [நாயகன்-நாயகி காரணமாக ஏதேனும் பிரச்சனைகள் வரக் கூடுமோ?] மற்றும் நான் வாழ வைப்பேன் [நாயக நடிகர்களின் ரசிகர்கள் இடையில்?] வெளியிடுகிறீர்களே சரியாக வருமா என்று சில பலர் சந்தேகம் கிளப்பிய போதும் நிச்சயம் நன்றாக வரும் என சொல்லி Fortune Favours the Brave என்ற பழமொழிக்கேற்ப தைரியமாக நின்று இன்று இந்த வெற்றிகளை குவித்திருக்கும் அருமை நண்பர் சுப்பு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
இது போன்ற மேலும் பல வெற்றிகள் உங்களை தேடி வரட்டும்!
அன்புடன்
Murali Sir
Super Star Rajini acted in both Naan Vaazha Vaippen & Viduthalai; This is unforgettable fact.
mr_karthik
5th October 2013, 10:59 AM
Murali Sir
Super Star Rajini acted in both Naan Vaazha Vaippen & Viduthalai; This is unforgettable fact.
PMC,
You have mentioned less 'unforgettable facts'. But....
Justice Gopinath
Naan Vaazha Vaippen
Viduthalai
Padikkaathavan
Padaiyappa
are 'full unforgettable facts'.
Russellrco
5th October 2013, 11:05 AM
PMC,
You have mentioned less 'unforgettable facts'. But....
Justice Gopinath
Naan Vaazha Vaippen
Viduthalai
Padikkaathavan
Padaiyappa
are 'full unforgettable facts'.
Karthik Sir
I meant - rereleased movies (Naan Vaazha Vaippen and Viduthalai) and their run only. Credit equally should go to Rajini too.
That's all.
(I also know all the movies you listed)
chinnakkannan
5th October 2013, 11:23 AM
நடிகர் திலகத்தின் நடையழகு (என்னைக் கவர்ந்தவை)
*
2. உருவான செந்தமிழில் மூன்றானவன்!
*
• அவள் கொஞ்சம் அழகி..
*
என்ன..பொன்னிறமாய் எண்ணெயில் பொரித்தெடுக்கப் பட்டு வென்னீரில் போட்டு பின் ரசத்தில் போடப்பட்ட மாதிரி இல்லாமல், பொரித்தவுடன் நேரடியாய் ரசத்தில் போட்டு நன்கு ஊறிய ரச வடை போல கொஞ்சம் பூசினாற்போன்ற உடல் வாகு..
பின் என்ன..படிப்பு இருக்கிறது..அழகு இருக்கிறது..ஓ யெஸ்..காதலும் இருக்கிறது..ஆனால் அந்தக் காதல் தோல்வி அடைகிறது..இல்லை அடைந்துவிட்டதாக நினைத்து மகாதுயர் மனதில் கொண்டு ஒரு கிணற்றைப் பார்க்கிறாள்..குதித்து விடலாமா என யோசிக்கிறாள்..கிணறும் நடுங்குகிறது! ம்ம்..கொஞ்சம் ஏறப் பார்க்கையில் தடுக்கிறது ஒரு கரம்..திரும்பினால்….
• *
ஆஹா..என்ன தேஜஸ் மிக்க உருவம்.. கண்களில் ஆழ்ந்த கனவு..உடை மிகப் பணக்காரத் தனமாய் இருக்கிறது..ஆள் இளமையாகவும் இருக்கிறார்..
*
கொஞ்சம் யோசித்து வார்த்தைகளை விடுகிறது அந்த உருவம்..நமது உயிரை நாமே எடுத்துக் கொள்ளக் கூடாது..வா..என்னுடன்..திரும்பி வெகு வெகுமிடுக்காய் அந்த உருவம் நடக்கும் நடை..வாவ்
*
ஒரு அரண்மனை பங்களாவுக்குள் கூட்டிச் செல்கிறார்..அங்கிருக்கும் புகைப்படத்தில் ஒரு அழகிய பெண் சித்திரம். இது என் மனைவி எனச் சொல்கையிலே அப்பா என ஓடி வருகிறது சிறு பூப்பந்து..ஒரு சிறுமி.. இது என் மகள் என அறிமுகப் படுத்துகிறார்..காலை வரை இரு..உன் வீட்டில் சேர்க்கிறேன் என வெகு நயமாய்ச் சொல்லி தங்க வைக்கிறார்.. ஆனால் இடையில் நிகழ்ந்த நிகழ்வுகளால் அவள் அந்த இடத்தை விட்டுச் சென்று விடுகிறாள்..ஓஹ்.. என நளினமாக வருத்தப் படுகிறது அந்த அபூர்வ உருவம்..
*
தெரிந்திருக்குமே.. நவராத்திரியில் ந.தி யின் அற்புத ராஜ் வேடம்.. அந்தப் பாத்திரத்தில் நடந்த நடையை வேறு எந்தப் படத்திலும் அவர் திரும்பச் செய்யவில்லை என்பேன் (என் சிற்றறிவை எட்டிய வரை)..
*
அதே படத்தில் கருணை மனம் மிக்க பைத்தியக்கார ஆஸ்பத்திரி டாக்டர், அவரது மிருதுவான பேச்சு, சாவித்திரியுடன் நடக்கும் நடை, அவர் கதை சொல்ல கருணையுடன் பார்க்கும் முகபாவம் எல்லாம் அழகு தான்..ஆனால் இன்னொரு படத்திலும் திரும்ப வந்திருக்கிறதே..ஆனால் அந்தப் படத்தில் நடை மாற்றியிருப்பார்!
*
அதே நவராத்திரி- வீரக் காவல் துறை அதிகாரி..புலிபோல் கர்ஜித்தல், கம்பீர நடை ம்ம் இதுவும் மறுபடி வந்திருக்கிறது..! (பின்ன அத்தியாயங்கள் எழுதுவதற்கு எனக்கு நடை வேண்டாமா..!)
*
இந்தப் படம் பார்த்து விட்டு வந்து புரியாமல் “அது என்ன ஒன்பது சிவாஜிக்கா” என சகோதரியிடம் கேட்க அவர் ஒரு புரியாத முழி முழித்து “நாளைக்குச் சொல்றேன்..இப்ப தூங்கு” என்றதும் மறு நாள் “உலகத்துல ஒரே மாதிரி ஒன்பது பேர் இருப்பாங்களாம்..அதைத் தான் சிவாஜி செஞ்சுருக்கார்” எனச் சொல்லி விளக்கியதும் இன்னும் நினைவில்..
*
அது சரி..ஒரு சக்கரவர்த்தியை எதிர்த்த குறு நில மன்னனின் நடை..ம்ம் அது அடுத்த அத்தியாயம் (இந்த பில்டப் தானே வேணாங்கறது) :)
(தொடரும்)
mr_karthik
5th October 2013, 11:37 AM
டியர் கோபால் சார்,
மீள்பதிவானாலும் சுவையான பதிவு. நடிகர்திலகத்தின் காதல் பாடல்கள் அப்படித்தான். எந்த வயதில் பார்த்தாலும் புதுமையாகவே இருக்கும். 'காதல் பாடல்கள்' தொடரின் துவக்கத்திலேயே ஒரு கஜுராஹோ டைப் பாடலை அதிரடியாகப் பதிவிட்டு மிரட்டி விட்டீர்கள். நமது பயமெல்லாம் எல்லா பாடல்களையும் கஜுராஹோ ஆக்கி விடாதீர்கள்.
ஆய்வின் துவக்கத்தில் பாடலை படைத்தோர் பட்டியலில், பாடலை ஸ்ருங்கார ரசம் சொட்டச்சொட்ட, குழைந்த குரலில் அனுபவித்துப்பாடிய எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விடுபட்டுப்போய் விட்டார். நீங்கள் முதலில் பதித்தபோது திரியில் இந்தப்பாடலுக்கான வீடியோ தரப்பட்டுள்ளதா?.
எத்தனை அழகு பாடல் ஆய்வைப்படிக்கும்போது, இப்பதிவினால் ஏற்பட்ட தர்க்கத்தில் திரியிலிருந்து கழன்று கொண்ட ஈழத்து பெண்பதிவர் நினைவுக்கு வருகிறார்.
'பாடல் முழுவதும் ஒரே டேக்கில் எடுக்கப்பட்டதாம்' அல்ல. ஒரே டேக்கில், ஒரே ஷாட்டில், ஒரே கேமரா மட்டும் பயன்படுத்தி எடுக்கப்பட்டது. (இதன்பிறகு ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது 'மெட்டி ஒலி' சீரியலின் கிளைமாக்ஸ் காட்சி) . இந்தப்பாடல் படமாக்கப்படப் போகும் விதம் பற்றி முதல் நாளே சி.வி.ஆர். வாணிஸ்ரீஇடம் சொல்ல, வாணிக்கு இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் காட்சி பற்றியே சிந்தித்து மறுநாள் காலையில் வாணிக்கு கடும் ஜுரம். ட்ரீட்மென்ட் கொடுக்கப்பட்டு ஜுரம் தணிந்ததும் பிற்பகல் 3 மணிக்கு ஷூட்டிங்க் துவங்கி ஜஸ்ட் அரைமணிநேரத்துக்குள் படப்பிடிப்பே முடிந்து பேக்-அப் ஆனது. அதுவும் லைட் செட் பண்ணத்தான் இவ்வளவு நேரம். பாடல்காட்சி படப்பிடிப்பு வெறும் ஐந்து நிமிடங்களில் முடிந்தது.
gkrishna
5th October 2013, 12:28 PM
டியர் பிம்சி சார்
முரளி சார் ரஜினியை இழித்தோ நடிகர் திலகத்தை புகழ்ந்தோ சொல்லவில்லை இரண்டு மிக பெரிய புகழ் பெற்ற நடிகர்கள் நடித்தாலும் அவர்களின் ரசிகர்கள் இல்லாமல் பொது மக்களின் ஆதரவோடு வெற்றி நடை போடுகிறது என்று தான் சொல்கிறார் .
பொதுவாக நடிகர் திலகத்தின் படங்களுக்கு பொது மக்களின் ஆதரவு என்பது எப்போதும் உண்டு
என்றும் அன்புடன்
கிருஷ்ணா
gkrishna
5th October 2013, 12:41 PM
டியர் ஆல்
கடந்த வாரம் தலைவரின் அமரகாவியம் படம் பார்த்தேன் இளமை கொஞ்சும் மாதவி ஸ்ரீப்ரிய அழகான விச்சுவின் இசை
மிக பெரிய வெற்றி படமான முக்கந்தர் க சிக்கந்தர் தழுவல் இருந்தும் எங்கோ இடிக்கிறது டார்லிங் c .v r இல்லாமல் அமிர்தம் இயக்கம் காரணமா தெரியவில்லை நம் தலைவரிடமும் ஒரு சோர்வு முகத்தில் படம் முழுதும்
விச்சுவின் மகன் கோபி முதலில் ஜெய்ஷங்கர் நடிக்க வேண்டும் என்று சொன்னதாகவும் ஆனால் விச்சு தலையீட்டால் நம்மவர் ஹீரோ என்று எப்போதோ படித்த நினவு . செல்வமே ஒரே முகம் பார்கிறேன் சூப்பர் பாடல்
mr_karthik
5th October 2013, 01:10 PM
துள்ளல் நடையில் நடிகர்திலகம்...
ஸ்டைல்நடை, சிருங்காரநடை, அழகுநடை இவற்றில் மட்டுமல்ல துள்ளல் நடையிலும் தானே மன்னன் என்று நிரூபித்த பாடல். வெளிநாட்டிலிருந்து திரும்பியபின், அடுத்த துப்பறியும் பொறுப்பேற்க இன்னும் சில நாட்கள் இடைவெளியிருக்க, அதைப்பயன்படுத்தி, பல ஆண்டுகள் தான் பார்த்திராத தாயைக்கான கிராமத்துக்கு வரும்போது கையில் ப்ரீப்-கேஸ், தலையில் தொப்பி, கழுத்தில் கட்டித்தொங்கவிடப்பட்ட ஸ்வெட்டர் சகிதம்,.. தான் பிறந்த நாட்டின் பெருமைகளைப் பாடிக்கொண்டு வரும்போதுதான் எவ்வளவு அழகான அதே சமயம் வேகமான துள்ளல் நடை.
நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது - இங்கு
பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது
தென்னாட்டிலே தண்ணீரும் பொன்மீனும் விளையாடுது
மூன்று தமிழ் தோன்றுமிடம் எங்கள் நாடு........ ஹோய்
குளிக்கும் பெண்களை ஒளிந்து பார்க்கும் கள்ளமனம் இல்லை, அதனால் அவர்கள் குளிக்கும் படித்துறையிலேயே தலைகுனிந்து அதே துள்ளல் நடையுடன் அனுபல்லவி, குளிக்கும் பெண்கள் மனதிலும் கள்ளமிலாததால், அதை அவர்கள் ரசிக்கும் அழகு...
பொட்டழகும் கட்டழகும்
பூவழகும் தண்டைக்காலழகும்
எங்கள் மங்கையரின் கலையல்லவா
திரு மஞ்சள்முக சிலையல்லவா
துள்ளல் நடையின் இடையே சிறு பாலத்தின் மீது கொஞ்சம் மெதுவான நடை, சைக்கிளின் கேரியரில் பயணம் செய்யும்போது சைக்கிள் ஓடிக்கொண்டிருக்கும்போதே இறங்கும் நேர்த்தி, செடிகளுக்கு நடுவே குனிந்து வரப்பின்மீது நடக்கும் அழகு, மாட்டுவண்டியில் தாவி ஏறும் லாவகம்.
இப்படி ஒருபடம் எப்போது வருமென ஏங்கிய ரசிகர்களின் ஆவலைத்தீர்க்க தோண்டப்பட்ட தங்கச்சுரங்கத்தில், இப்பாடலில்தான் என்னவொரு துள்ளல் நடை.
இவர் நடிகர்திலகம் மட்டுமல்ல, 'நடையில்திலகமும்' கூட.....
KCSHEKAR
5th October 2013, 01:40 PM
நான் பதினைந்து வயது வயதுக்கு வந்த விடலையாய் ,மீசை முளைக்கும் பருவத்தில், இனம் பிரியா குழப்ப இன்ப உணர்வுகள் வாட்டி வதைத்த போது ,நான் மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்ந்த படம் (குடந்தை நூர்மஹாலில் வரிசையாய் ஐந்து நாட்கள்)
.,
டியர் கோபால் சார்,
தங்களின் சிவகாமியின் செல்வன் மீள்பதிவு மீண்டும் படித்தாலும் சிறப்பாக இருந்தது.
இப்பதான் தெரியுது, நீங்க பிஞ்சுலேயே பழுத்தது.
RAGHAVENDRA
5th October 2013, 02:20 PM
கார்த்திக் சார்,
பாடல் முழுதும் ஒரே டேக்கில், ஒரே ஷாட்டில், சிவகாமியின் செல்வன் எத்தனை அழகு பாடலைப் போலவே, இன்னொரு பாடல், பிரபு நடித்த ஆயுள் கைதி திரைப்படத்திற்காக படமாக்கப் பட்டது. பிரபு ரேவதி நடித்த ஒரு டூயட் பாடல். அதன் வரிகள் நினைவில் இல்லை
RAGHAVENDRA
5th October 2013, 02:21 PM
நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது...
http://youtu.be/tdzOv-qOQkI
மீண்டும் தங்க சுரங்கம் திரைக்கு விரைவில் மறு வெளியீடு... மனம் கிடந்து துடிக்கிறது... எப்போது... எப்போது ... என்று ...
chinnakkannan
5th October 2013, 02:47 PM
//,.. தான் பிறந்த நாட்டின் பெருமைகளைப் பாடிக்கொண்டு வரும்போதுதான் எவ்வளவு அழகான அதே சமயம் வேகமான துள்ளல் நடை. // என்னைக் கவர்ந்த நடைகளில் இதுவும் ஒன்று..
ஒரே ஷாட்டில் ஒரே டேக்கில் எடுக்கப் பட்ட சி.செ. வியக்க வைக்கிறது.தகவலுக்கு நன்றி கார்த்திக் சார்...ம்ம் த.சு வும் சி.செயும் மறுபடி பார்க்க வேண்டும்...
vasudevan31355
5th October 2013, 06:09 PM
நெய்வேலி டவுன்ஷிப்பில் தீவிர சிவாஜி பக்தரான திரு. மரியந்துவான் நடிகர் திலகத்தின் பிறந்த நாளையொட்டி அடித்துள்ள போஸ்டர்.
http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/20131003-003_zps7e6a37fe.jpeg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/20131003-003_zps7e6a37fe.jpeg.html)
vasudevan31355
5th October 2013, 06:10 PM
http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/20131001-001_zps55ca05fa.jpeg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/20131001-001_zps55ca05fa.jpeg.html)
vasudevan31355
5th October 2013, 06:25 PM
டியர் கார்த்திக் சார்,
தங்கச்சுரங்கத்தின் நான் பிறந்த நாட்டுக்கு எந்த நாடு பெரியது பாடலைப் பற்றி அற்புதமாக கவர் செய்து மகிழ்வித்துள்ளீர்கள். பாடல் முழுதுமாக வரும் நடிகர் திலகத்தின் உற்சாகத் துள்ளல்களை அழகாக ரசிக்கும் வகையில் படைத்து விட்டீர்கள்.
தங்களுக்கு ஒஅர் உற்சாகமான செய்தி. வேலன் பிக்சர்ஸ் வெளியிடும் 'தங்கச் சுரங்கம்' 2014 ஜனவரி மாதம் 3 ம் தேதி அனேகமாக சென்னை மகாலஷ்மியில் வெளியாகலாம் என்று தகவல் கிடைத்துள்ளது. பிரிண்டின் தரம் மிக நன்றாக உள்ளதாம். நமது சுப்பு சார் இந்த தகவலை அளித்துள்ளார்.
மேலும் 'நான் வாழ வைப்பேன்' படத்திற்கு நான் என்னால் முடிந்த அளவிற்கு ஒரு ட்ரைலர் உருவாக்கிக் கொடுத்தேன். சமீபத்தில் 'நான் வாழ வைப்பேன்' மகாலஷ்மி திரையரங்கில் ஓடிகொண்டிருந்தபோது அந்த ட்ரைலரை சென்னை லோக்கல் தனியார் தொலைகாட்சி ஒன்றில் ஒளிபரப்பி அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததாம். சுப்பு சார்தான் இந்தத் தகவலையும் அளித்தார். இதற்குக் காரணமாய் இருந்த சுப்பு சாருக்கும், வேலன் பிக்சர்ஸ் உரிமையாளருக்கும், ட்ரைலரை ஒளிபரப்பிய அந்த தனியார் தொலைக்காட்சிக்கும் நமது திரியின் சார்பில் எனது மனமார்ந்த நன்றி!
கார்த்திக் சார்,
நீங்கள் விரைவில் சென்னை வருவதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். தங்கச்சுரங்கம் பட வெளியீடு சமயத்தில் தாங்கள் வர முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தங்கச்சுரங்கத்தையும், உங்களையும் சேர்த்துதான்.
நன்றி!
vasudevan31355
5th October 2013, 06:44 PM
நெய்வேலி டவுன்ஷிப்பில் கர்ணன் சிவாஜி நற்பணி இயக்கம் சார்பாக நடிகர் திலகத்தின் பிறந்தநாளுக்கு ஒட்டப்பட்ட போஸ்டர்.
http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/po_zps60901457.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/po_zps60901457.jpg.html)
vasudevan31355
5th October 2013, 07:15 PM
கர்நாடகாவில் முப்பெரும் விழா.
கர்நாடக சிவாஜி - பிரபு அறக்கட்டளை சார்பாக நாளை (6-10-2013) நடைபெறவிருக்கும் முப்பெரும் விழாவையொட்டி கர்நாடகா மாநிலத்தின் 'தினச்சுடர்' நாளிதழில் வந்துள்ள அட்டகாச விளம்பரம். விழா இனிதே நடைபெற கர்நாடக சிவாஜி - பிரபு ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள்.
http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/thinasudar_zpsd4794a92.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/thinasudar_zpsd4794a92.jpg.html)
Harrietlgy
5th October 2013, 07:16 PM
Thank you Mr. Ragahvendra sir, for your Nellai kannan speech posting
vasudevan31355
5th October 2013, 07:39 PM
'தினச்சுடர்' (6-10-2013)
http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/kk_zpsc2290db6.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/kk_zpsc2290db6.jpg.html)
mr_karthik
5th October 2013, 07:54 PM
பதிவுகளைப் பாராட்டிய முரளி சார், வாசுதேவன் சார், சின்னக்கண்ணன் சார் ஆகியோருக்கு நன்றி.
பதிவைப் பாராட்டியதோடு சுடச்சுட வீடியோவையும் பதித்த ராகவேந்தர் சார் அவர்களுக்கு நன்றி.
டியர் வாசுதேவன் சார்,
தங்களது அயராத பணிகளுக்கிடையே நான் வாழ வைப்பேன் படத்துக்கு ட்ரைலர் ஒன்றையும் தயாரித்து, அது தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான செய்தி வியக்கவைத்தது. தங்கச்சுரங்கம் விரைவில் மகாலட்சுமியில் வெளியாக இருப்பது மிக்க மகிழ்ச்சி. அதைத்தொடர்ந்து மௌன்ட்ரோடு அண்ணா தியேட்டரிலும் திரையிட்டால் வெளியீட்டாளர்கள் நல்ல அறுவடை பார்க்கலாம்....
Russellfcv
5th October 2013, 08:52 PM
Vasudevan sir's trailer of Naan Vaazha Vaippen has been put in Behindwoods.com
http://www.behindwoods.com/tamil-movies/naan-vaazha-vaippen/naan-vaazha-vaippen-trailer.html
Russelldwp
5th October 2013, 10:07 PM
நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது...
மீண்டும் தங்க சுரங்கம் திரைக்கு விரைவில் மறு வெளியீடு... மனம் கிடந்து துடிக்கிறது... எப்போது... எப்போது ... என்று ...
Dear Ragavendran Sir
Thank you for this Song. Thalaivar looks Romantic and cute performance. Super song. Whole song he is giving Stylish steps. Superb
C.Ramachandran.
Russelldwp
5th October 2013, 10:14 PM
[QUOTE=Saraswathi Lakshmi;1080022]Vasudevan sir's trailer of Naan Vaazha Vaippen has been put in Behindwoods.com
Dear Vasudevan sir / SL Madam
Trailer is Very good. Really all class movie. Thalaivar looks majestic and colorful. Thanks
C.Ramachandran.
Russelldwp
5th October 2013, 10:20 PM
Dear Karnataka State Sivaji Prabhu Trust / Thangapathakkam Fans Group
Our Heartiest Wishes for your GRAND GALA MUPPERUM VIZHA ON 06-OCT-13 GRAND SUCCESS
THIS IS REAL CINEMA 100 YEARS FUNCTION
ALWAYS BANGALORE FANS ARE GREAT AND SMART. KEEP IT UP
C.Ramachandran
RAGHAVENDRA
5th October 2013, 11:09 PM
வாசு சார்
நெய்வேலி டவுன்ஷிப் போஸ்டர் அட்டகாசம். அதனை இங்கு நம்மோடு பகிரந்து கொண்ட தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி. தொடரட்டும் தங்கள் சேவை.
அதே போல் கர்நாடகா விழா பற்றிய போஸ்டரும் செய்தித் தாள் பக்கமும் நிழற்படங்களாக தங்கள் உபயத்தில் இங்கே இத்திரியில் இடம் பெற்றதற்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
கர்நாடகா சிவாஜி பிரபு அறக்கட்டளை 8ம் ஆண்டு விழா, தங்கப் பதக்கம் மன்றத்தின் 38வது ஆண்டு விழா இவற்றையும் நடிகர் திலகத்தின் 85வது பிறந்த நாளுடன் சேர்ந்து கொண்டாடும் கர்நாடக சிவாஜி ரசிகர்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
RAGHAVENDRA
5th October 2013, 11:15 PM
பழைய விழாக்களைக் கொண்டாடும் போது சிறிது பழைய நினைவுகளும் நெஞ்சில் நிழலாடும். அதை நாமும் அனுபவிப்போமே.
சென்னை சாந்தி திரையரங்கில் வா கண்ணா வா திரைப்படம் ஓடும் போது தலைவரின் கட் அவுட்டைப் பாருங்கள். இந்த மாதிரி வயதான வேடத்தில் கட் அவுட் இடம் பெற்ற ஒரே நடிகர் நடிகர் திலகம் மட்டும் தான் இருக்க முடியும். இமேஜ் என்கிற வட்டத்தை உடைத்தெறிந்து கம்பீரமாக நடிகர் திலகம் நிற்பதைப் பாருங்கள்.
இக்காட்சி நெஞ்சங்கள் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/ShantiVKVa03_zps71ef71f5.jpg
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/ShantiVKVa04_zpsf7a287c2.jpg
மேலே உள்ள புகைப்படத்தில் நடிகர் திலகம் நிற்கும் இடத்தைப் பாருங்கள். அவருக்குப் பின்னே சுவற்றில் பல்வேறு விதமான போஸ்டர்கள் ஒட்டப் பட்டிருப்பதைக் காணலாம். இக்காட்சியின் படப் பிடிப்பு முடிந்த சில நாட்களுக்குள்ளேயே நாங்கள் நடிகர் திலகத்தின் படப் பட்டியலை இந்த இடத்தில் எழுதுவற்கான ஏற்பாடுகளைத் துவங்கி விட்டோம். சந்திப்பு படம் வெளியான அன்று அது திறக்கப் பட்டது. பின்னர் நடிகர் திலகத்தின் மறைவிற்குப் பின்னர் மற்றோர் சகோதர மன்றத்தின் உபயத்தால் கல்வெட்டாகப் பொறிக்கப் பட்டது மனதிற்கு மிகவும் சந்தோஷமான விஷயம்.
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/ShantiVKVa02_zpsefa1fad6.jpg
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/ShantiVKVa01_zps82a87322.jpg
chinnakkannan
5th October 2013, 11:25 PM
வா கண்ணா வா வில் நான் இன்றும் நினைத்து சிரிக்கும் நகைச்சுவை:
ந.தி: என்னடா சோகமா இருக்க
நாகேஷ்: என்னோட பூனை செத்துப் போச்சுங்க
நடிகர்திலகம்: அச்சச்சோ ஆசையா வளர்த்தயேடா என்னாச்சு
நாகேஷ்: அது தண்ணில விழுந்துடுத்துங்க்
ந.தி: அப்புறம்
நாகேஷ்: நனைஞ்சுடுச்சேன்னு கொஞ்சம் பிழிஞ்சுட்டேன்!. ந.தி அடப்போடா என என்னவோ சொல்லி நகர்ந்து விடுவார்..
anm
6th October 2013, 01:00 AM
Dear Raghavendra Sir,
Thanks for uploading the video of 85th Birthday Celebrations. Can you upload the full video and it will be pleasant to watch Nellai Kannan's full speech.
I trust you can upload.
Anand
anasiuvawoeh
6th October 2013, 11:23 AM
Dear Murali Sir,Excellent details with lot of inputs about the re-release problems faced by the movies,which were unforeseen.Anyway let us hope further movies ,overcome these problems and give successful results for the investors,though the movies need not prove anything,since already they have established their class..
Russelldwp
6th October 2013, 12:46 PM
[QUOTE=RAGHAVENDRA;1080061]பழைய விழாக்களைக் கொண்டாடும் போது சிறிது பழைய நினைவுகளும் நெஞ்சில் நிழலாடும். அதை நாமும் அனுபவிப்போமே.
சென்னை சாந்தி திரையரங்கில் வா கண்ணா வா திரைப்படம் ஓடும் போது தலைவரின் கட் அவுட்டைப் பாருங்கள். இந்த மாதிரி வயதான வேடத்தில் கட் அவுட் இடம் பெற்ற ஒரே நடிகர் நடிகர் திலகம் மட்டும் தான் இருக்க முடியும். இமேஜ் என்கிற வட்டத்தை உடைத்தெறிந்து கம்பீரமாக நடிகர் திலகம் நிற்பதைப் பாருங்கள்.
இக்காட்சி நெஞ்சங்கள் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
மேலே உள்ள புகைப்படத்தில் நடிகர் திலகம் நிற்கும் இடத்தைப் பாருங்கள். அவருக்குப் பின்னே சுவற்றில் பல்வேறு விதமான போஸ்டர்கள் ஒட்டப் பட்டிருப்பதைக் காணலாம். இக்காட்சியின் படப் பிடிப்பு முடிந்த சில நாட்களுக்குள்ளேயே நாங்கள் நடிகர் திலகத்தின் படப் பட்டியலை இந்த இடத்தில் எழுதுவற்கான ஏற்பாடுகளைத் துவங்கி விட்டோம். சந்திப்பு படம் வெளியான அன்று அது திறக்கப் பட்டது. பின்னர் நடிகர் திலகத்தின் மறைவிற்குப் பின்னர் மற்றோர் சகோதர மன்றத்தின் உபயத்தால் கல்வெட்டாகப் பொறிக்கப் பட்டது மனதிற்கு மிகவும் சந்தோஷமான விஷயம்.
Dear Ragavendran Sir
Thanks for Thalaivar's Vaa Kanna Vaa Cutout photo. Nice memories. If possible please arrange to display SANTHIPPU AND RAJAKUMARAN release cutout also
Thanks a lot
C.Ramachandran
mr_karthik
6th October 2013, 06:13 PM
நடிகர்திலகத்தின் படங்களில் ஐட்டம் நடிகையர் (4)
'லிட்டில் ப்ளவர்' ராஜஸ்ரீ
ஒரு கதாநாயகி நடிகையை ஐட்டம் லிஸ்ட்டில் சேர்க்கலாமா என்று சிலரது புருவங்கள் உயரக்கூடும். கதாநாயகியரில்கூட ஐட்டம் டைப் கதாநாயகியாக வந்து போனவர்தான் இவர். இவர் திரைக்கு வந்தபோது ஒரேயடியாக சாந்தம் காட்டிய சாவித்திரி, ஒரேயடியாக கொஞ்சிவழிந்த சரோஜாதேவி, ஓவராக வீரம்பேசிய விஜயகுமாரி, தேவைக்குமேல் அழுது தீர்த்த சௌகார்ஜானகி இவர்களுக்கு மத்தியில் ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டி கவர்ச்சி விருந்தளித்தவர் ராஜஸ்ரீ. (கவர்ச்சி என்றதும் உடனே அனுஷ்காவோடெல்லாம் கம்பேர் பண்ணிடக்கூடாது. சேலையை இழுத்துப் போர்த்திக்கொண்டு நடித்த காலத்தில் இறுக்கமான சுடிதார், டைட்பேன்ட்,
ஷர்ட்டெல்லாம் கூட கவர்ச்சிதான்). காதலிக்க நேரமில்லையில் (அன்றைய) கவர்ச்சி உடையில் இவர் பண்ணிய அலம்பலில் தூக்கத்தைத் தொலைத்த அன்றைய இளைஞர்கள் பலர். கொஞ்சம் பொக்கைவாயாக இருந்தாலும் 'மற்ற சில' விஷயங்களுக்காக இவரை விரும்பினர். இனி நடிகர்திலகத்தின் படங்களில் என்ன செய்தார் என்று பார்ப்போம்....
'நீலவானம்'
நடிகர்திலகத்தின் காதலியாக ராஜஸ்ரீ நடித்த ஒரே படம் (என்று நினைக்கிறேன்). அண்ணியைக் கரம் பற்றுவதற்கு முன்பாக இவரைத்தான் அண்ணன் லவ்வுவார். அதிர்ஷ்ட வசமாக இருவருக்கும் உடல்வாகு கெமிஸ்ட்ரி நன்றாகவே இருந்தது. நீச்சல் குளத்தில் 'ஓ லக்ஷ்மீ... ஓ ஷீலா' பாடல் ரொம்ப ரசிக்கக்கூடியதாக இருந்தது என்றால், நடிகர்திலகம் மட்டும் பாட இருவரும் ஆடும் 'ஹோய் லிட்டில் ப்ளவர்' பாடலும் பிரேக் நடனமும் படு அட்டகாசமாக அமைந்து விட்டது. டைட்டான பேண்ட், ஷர்ட்டை மாட்டிக்கொண்டு, அடிக்கடி திரும்பித் திரும்பி ஆடி ரசிகர்களை படாதபாடு படுத்தினார். சந்தர்ப்ப வசத்தால் இவரைக்கைவிட்டு அண்ணியை மணக்க நேர்ந்ததும், காதலனுக்கு வில்லியாக மாறினார். நடிகர்த்திலகத்தைக் காதலிக்கும்போது, சாந்தி தியேட்டருக்கு திரைப்படம் பார்க்க வருவதும், அங்கே நடிகர்திலகம் வாசலில் டிக்கட் கிழிப்பவராக(????) வேலை செய்வதை கண்டுபிடிப்பதும் சுவாரஸ்யமான காட்சிகள். இந்த காட்சியிலும் ராஜஸ்ரீயின் உடைகள் சூப்பராக இருக்கும். கொடைக்கானல் காட்சிகளிலும் நடிகர்திலகம்-ராஜஸ்ரீ கெமிஸ்ட்ரி படு ஓ.கே.
சொர்க்கம்
சொர்க்கம் படத்தில் கதாநாயகியை பார்த்து ஏமாந்தவர்களின் வாட்டம் போக்க சில அடிஷனல் அட்ராக்ஷன்களை இணைத்து அட்ஜஸ்ட் செய்திருந்தார் இயக்குனர் ராமண்ணா. அதில் ஏற்கெனவே விஜயலலிதாவை பார்த்தோம். 'அழகுமுகம் பழகுசுகம்' பாடலில் வரும் ஐந்து கவர்ச்சி பாம்களைப் பற்றி கோபால் அவர்களும் வாசுதேவன் அவர்களும் விளக்கியிருந்தார்கள். அப்படத்தில் இன்னொரு அட்ராக்ஷன் 'அஞ்சனா' என்ற பாத்திரத்தில் வரும் ராஜஸ்ரீ. நடிகர்திலகத்தின் ஜோடி அல்ல. தொழிலதிபர் தர்மலிங்கமாக வரும் (நல்ல) மனோகரின் மகள். இவருக்கும் நடிகர்திலகத்துக்கும் காம்பினேஷன் காட்சி என்று பார்த்தால், நல்ல மனோகரைக் கடத்திவிட்டு, அவரைப்போல நடிக்கும் கெட்ட மனோகரைப் பற்றி ராஜஸ்ரீயிடம் எச்சரிக்கும் காட்சியைச் சொல்லலாம். அவளுடைய தந்தையாக வீட்டில் இருப்பவர் அவள் தந்தை அல்ல. அதுவரை அவளே பார்த்திராத அவளுடைய சித்தப்பா என்று உஷார் படுத்தும் சீன்.
கதாநாயகி விஜயா பாடும் 'ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து' பாடலின்போது, ராஜஸ்ரீயையும் தக தக உடையில் (சில நடனமாதருடன்) ஆட விட்டு பாடலுக்கு அடிஷனல் அட்ராக்ஷன் சேர்த்து சுவையூட்டி இருப்பார் இயக்குனர்.
ராஜஸ்ரீ நமது படங்களில் அதிகம் நடித்ததில்லை. 'அந்தப்பக்கம்' தான் அதிகம் வாய்ப்புப் பெற்றுள்ளார். இருப்பினும் ஒருமுறை தொலைக்காட்சியில் சிறப்பு தேன்கிண்ணம் வழங்கியபோது நடிகர்திலகத்தை பற்றி மிக மிக உயர்வாகப்பேசி 'ஹோ... லிட்டில் ப்ளவர்' பாடலை ஒளிபரப்பினார். அந்த நன்றிக்காகவே ராஜஸ்ரீயைப் பற்றிய இப்பதிவு.....
chinnakkannan
6th October 2013, 06:35 PM
//கதாநாயகி விஜயா பாடும் 'ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து' பாடலின்போது, ராஜஸ்ரீயையும் தக தக உடையில் (சில நடனமாதருடன்) ஆட விட்டு பாடலுக்கு அடிஷனல் அட்ராக்ஷன் சேர்த்து சுவையூட்டி இருப்பார் இயக்குனர். //
நல்ல writeup கார்த்திக் சார்..பட் ஐட்டம் நடிகையர் என ராஜஸ்ரீயை ஏற்க முடியவில்லை. நீலவானம் டூ.. நன்றாகத் தான் நடித்திருப்பார்..! சொர்க்கத்தில் அடிஷனல் அட்ராக்*ஷன் தான்.. நீங்கள் சொன்னதுபோல.
//.இருப்பினும் ஒருமுறை தொலைக்காட்சியில் சிறப்பு தேன்கிண்ணம் வழங்கியபோது நடிகர்திலகத்தை பற்றி மிக மிக உயர்வாகப்பேசி 'ஹோ... லிட்டில் ப்ளவர்' பாடலை ஒளிபரப்பினார். அந்த நன்றிக்காகவே ராஜஸ்ரீயைப் பற்றிய இப்பதிவு...// ஓகே. அப்ப சரி
Subramaniam Ramajayam
6th October 2013, 06:37 PM
Our heartiest felicitations for KARNATAKA SIVAJI PRABHU MUPPERUM VIZHA and thangapathakkam release mela. all the very best colleques you are always doing the best to keep up our NT FLAG VERY HIGH ALWAYS.
KINDLY LOAD THE PHOTOS IN THE HUB.
GOOD LUCK AND GOOD EVENING.
vasudevan31355
6th October 2013, 09:44 PM
டியர் ராகவேந்திரன் சார்,
'நெஞ்சங்கள்' படத்தில் இடம்பெறும் நம் கண்ணனின் 'வா கண்ணா வா' கட்-அவுட் பதிவிற்கு நன்றி.
இப்போது இன்னொன்று. 'எமனுக்கு எமன்' படத்தில் எமனாக நடிகர் திலகம் சித்ரகுப்தன் தேங்காயோடு பூலோகத்திற்கு வந்து சுற்றிப் பார்ப்பது போன்ற சீனில் தலைவர் சாந்தி திரையரங்கில் நின்று பேசுவது போல ஒரு ஷாட்
எடுத்திருப்பார்கள். அப்போது எந்தத் திரைப்படமும் இதுவரை விஞ்ச முடியாத வசூலை அள்ளிக் கொட்டிய நமது தலைவரின் 'திரிசூலம்' படம் சாந்தியில் ஓகோவென ஓடிக் கொண்டிருப்பதைக் காணலாம். தலைவர் 'குரு' பாத்திரத்தில் பின்னி எடுக்கும் போஸ் பின்னால் கட்-அவுட்டாக நிற்பதைக் காணுங்கள். அதே போல ஜெய்கணேஷ், தேங்காய், புஷ்பலதா, வி.கே.ஆர், நம்பியார் ஆகியோர் வரையப்பட்ட பேனரையும் நாம் காணலாம்.
வசனகர்த்தா திரு ஏ.எல்.நாராயணன் அவர்கள் தலைவருடன் நடிக்கும் சீனையும் இங்கு காணலாம்.
http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/5a_zps2c1a1b9c.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/5a_zps2c1a1b9c.jpg.html)
http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/4a_zps639540ab.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/4a_zps639540ab.jpg.html)
http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/1_zpsca4c1cf9.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/1_zpsca4c1cf9.jpg.html)
'குரு' கட்-அவுட்
http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/2a_zpsd7062089.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/2a_zpsd7062089.jpg.html)
வசனகர்த்தா திரு ஏ.எல்.நாராயணன் அவர்கள் தலைவருடன்
http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/3a_zps68d11eed.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/3a_zps68d11eed.jpg.html)
Murali Srinivas
7th October 2013, 12:12 AM
சவாலே சமாளி - சினிமா நூற்றாண்டு விழா சிறப்பு காட்சி
படத்திற்குள் போகும் முன் ஒரு சில நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். சினிமா நூற்றாண்டு விழாவின் பாகமாக சவாலே சமாளி திரைப்படம் இரண்டு முறை திரையிடப்பட்டது. முதன் முறை உட்லண்ட்ஸ் சிம்பனி அரங்கிலும் இரண்டாம் முறை சத்யம் அரங்கில் செப் 22-ந் தேதி ஞாயிறு அன்றும் பகல் காட்சியாக நடைபெற்றது.
ஞாயிறு noon show-விற்கு சென்றிருந்தோம். நிகழ்ச்சி நடந்து இரண்டு வாரங்கள் ஆகி விட்டன என்ற போதினும் அப்போது அங்கே நிகழ்ந்த சில விஷயங்களை பற்றி சொல்லலாம் என நினைக்கிறேன். அரங்க வளாகத்திற்கு சென்ற போது நல்ல கூட்டம். ஆனால் யாரிடமும் டிக்கெட் இல்லை. என்னவென்று கேட்டால் அரங்க நிர்வாகத்தினர் அரங்கின் capacity -க்கு கொடுத்து விட்டோம் என்கிறார்கள். ஆனால் உள்ளே இருந்து வரும் செய்தியோ வித்தியாசமாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் en bloc ஆக டிக்கெட்டுகளை முன்னரே வாங்கி விட்டனர் என்றும் ஆனால் அவர்கள் படத்திற்கு வர மாட்டார்கள் என ஒரு செய்தி பேசப்படுகிறது. அதற்கு என்ன காரணம் என்று கேட்டால் படத்தின் கதையமைப்பின்படி நாயகனும் நாயகியும் மோதிக் கொள்ளும் காட்சிகள் நிறைய வரும். அதிகமான அளவில் சிவாஜி ரசிகர்கள் இருந்தால் அரங்கத்தில் reaction வேறு விதமாக இருக்கும். அதை தவிர்க்கவே இப்படி என்று விளக்கம்.
படம் ஆரம்பித்து விட்டது. ஆனால் ரசிகர்கள் திரும்பி போகவில்லை. அரங்க நிர்வாகத்தினரோடு ஒரு வாக்குவாதம் நடைபெறுகிறது. அரங்கத்தின் உள்ளே இருக்கைகள் free யாக இருக்கின்றன. அந்த நிலையில் எங்களை அனுமதித்தால் என்ன? என்பது ரசிகர்களின் வாதம். நிரவாகதினரோ நாங்கள் ஏற்கனவே திரையிடப்பட்டிருக்கும் அரங்கத்தின் capacityகேற்ப அனுமதி சீட்டுகளை வழங்கி விட்டோம். அதை வாங்கியவர்கள் வரவில்லையென்றால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. அவர்கள் வரவில்லை என்பதால் வேறு ஆட்களை அனுமதிக்க முடியாது என்கிறார்கள். ரசிகர்கள் விடவில்லை. காசு கொடுத்து அனுமதி சீட்டு வாங்கியவர்கள் வரவில்லையென்றால் நீங்கள் சொல்வது சரி.ஆனால் இன்றைய சூழல் அதுவல்ல. ஏற்கனவே வாங்கி சென்றதாக நீங்கள் சொல்லும் நபர்களும் complimentary டிக்கெட்தான் வாங்கி போயிருக்கிறார்கள்.இப்படி ஒரு சூழலில் இலவச அனுமதி சீட்டு பெற்று சென்றவர்கள் வரவில்லை எனும் போது எங்களை அனுமதிப்பதில் தவறொன்றுமில்லை என்ற வாதத்தை ரசிகர்கள் முன் வைக்க அனுமதி சீட்டு பெற்றவர்கள் வந்தால் நாங்கள் என்ன பதில் சொல்வது என்று நிர்வாகத்தினர் கேட்க, அப்படி அவர்கள் வந்தால் நாங்கள் எழுந்து இருக்கைகளை அவர்களுக்கு தந்து விடுகிறோம் என்று ரசிகர்கள் பதிலளிக்க அதன் பின்னரே அந்த நிபந்தனையின் பேரில் ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.இதனால் படம் தொடங்கி 20-30 நிமிடங்களுக்கு பின்னரேஒரு கணிசமான கூட்டத்தினரால் உள்ளே வர முடிந்தது ஒரு கட்டத்திற்கு பிறகு அனுமதிக்க மாட்டார்கள் என நினைத்து கணிசமான பொதுமக்களும் ரசிகர்களும் திரும்பி சென்று விட்டனர். மிக மிக வேதனையான சம்பவம் இது.
படம் முடிந்து வரும்போது நிர்வாகத்தில் உள்ள ஒருவருடன் ஆப் தி ரெகார்ட் ஆக பேசிய போது அவர் என்ன நடந்தது என்ற தகவலை சொன்னார். மற்ற அரங்குகளைப் போல் அல்லாமல் சத்யம் வளாகத்தில் reservation counter-லேயே இந்த சினிமா நூற்றாண்டு விழா சிறப்பு காட்சிகளுக்கும் டிக்கெட்கள் கொடுக்கப்பட்டிருகின்றன அந்த நேரத்தில் நிர்வாகத்தினரிடம் படம் இபப்டிப்பட்ட கதை சூழலை கொண்டது.படம் திரையிடப்படும் போது மாற்று தரப்பினரும் படத்திற்கு வந்திருந்தால் ஏதேனும் பிரச்சினைகள் வரலாம் என்று யாரோ போய் சொல்லியிருக்கின்றனர் அதை கேட்ட நிர்வாகம் உடனெ டிக்கெட் விற்பனையை நிறுத்தி விட்டது. காட்சிக்கு வந்தவர்களிடம் டிக்கெட் தீர்ந்து விட்டது என சொல்லி விட்டார்கள்.சிவாஜி ரசிகர்களை தவறாக நினைக்கவில்லை என்றும், 120 ரூபாய் டிக்கெட் விலை இருந்த போது கூட கர்ணன் படம் ஓடிய 153 நாட்களிலும் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்த்தவன் சிவாஜி ரசிகன். ஆகவே இது யாரோ சொன்ன செய்தியால் இல்லை வதந்தியால் வந்த குழப்பம் என்றார். நாங்கள் அவரிடம் சொன்னோம்.இரண்டு நாட்களுக்கு முன்பு உட்லண்ட்ஸ் சிம்பனி அரங்கில் இதே படம் திரையிட்ட போது சத்யம் ஸீசன்ஸ் அரங்கை விட அதிக capacity உடைய சிம்பனி அரங்கம் நிறைந்தது. ஆனால் படம் ஓடிய மூன்று மணி நேரமும் சிவாஜி ரசிகர்கள் நாகரீகம் காத்தார்கள். ஆரவாரம் அலப்பரை எல்லாம் இருந்த போதும் அனைத்தும் லிமிட்க்குள் இருந்தது. அப்படியிருக்க இங்கே எப்படி ஒரு மோதல் போக்கை கடைபிடிப்பார்கள் என்ற கேள்விக்கு அவரிடமிருந்து ஒரு சிரிப்பு மட்டுமே பதில்.
நடிகர் திலகம் இன்றில்லை.12 வருடங்கள் ஓடி விட்டன அவர் இப்பூவுலகை விட்டு நீங்கி.அவருக்கென்று ஒரு அரசியல் கட்சியோ, அமைப்போ,ஆட்சியில் அதிகாரத்தில் பங்கோ இல்லை. அவர் ரசிகர்களும் ஒரே அமைப்பை ஆதரிப்பவர்களில்லை.சிவாஜி மீது "மாறா அன்பு" கொண்டவர்கள் அவர் எந்த சாதனையையும் செய்யவில்லை என்றும் சொல்கிறார்கள்.அவர்கள் கூற்றுப்படியே எந்த சாதனையையும் புரியாத ஒருவரை எந்த அரசியல் அதிகார பின்புலமும் இல்லாத அவர்தம் ரசிகர்களை பார்த்து இத்துணை கோவமும் ஆத்திரமும் ஏன் ஏற்படுகிறது என்பதுதான் புரியாத புதிர். எதிர்ப்பிலே வளர்ந்த நடிகர் திலகம் இன்றும் அதே எதிர்ப்பையே சந்தித்துக் கொண்டிருக்கிறார். அன்றைய நாட்களில் அதிகமாக அவர் முகம் தாங்கிய போஸ்டர்கள்தானே உரம் போட்டு வளர்க்கப்பட்டது. இன்றும் அது வேறு வடிவத்தில் தொடர்கிறது எனபதுதான் வேதனை.
(தொடரும்)
அன்புடன்
Murali Srinivas
7th October 2013, 12:19 AM
சவாலே சமாளி - சினிமா நூற்றாண்டு விழா சிறப்பு காட்சி = Part II
இனி படத்திற்கு வருவோம். முழு படத்தையும் பற்றி பேசப் போவதில்லை. குறிப்பாக இரண்டே இரண்டு காட்சிகள். ஒன்று முதல் இரவில் சந்தர்ப்ப சூழ்நிலையால் தன் மனைவி ஆகி விட்ட நாயகியுடன் மனம் திறந்து பேசும் காட்சி. அதுவரை ஒரு பிடிவாத குணம் கொண்ட ரோஷகார இளைஞன் மாணிக்கம் என்ற முறையில் மட்டுமே பார்வையாளர்களுக்கு அறிமுகமாகியிருப்பார். அந்தக் காட்சியில்தான் தான் நாயகி மேல் கொண்டுள்ள காதலை வெளிப்படுத்துவார்.[உன்னை மொத மொத பார்த்தபோதே என் மனசை பறி கொடுத்துட்டேன்] தானும் அவளும் எப்படி இரண்டு வர்க்கங்களை சேர்ந்தவர்கள் என்பதை சொல்லுவார். நாம் இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறதுதான் உண்மையான ஜனநாயக சோஷலிசம். இதைதான் நம்ம தலைவர்கள் எல்லாரும் சொல்றாங்க.[இந்த வசனம் வரும்போது 1971 ஜூலை மாதம் ஸ்ரீதேவியில் எழுந்த கைதட்டல் இன்றைக்கும் நினைவில் இருக்கிறது]. உன்னளவிற்கு நானும் படிச்சிருக்கேன். ஆயிரம் வயலை உழுதவ்னும் ஆயிரம் புத்தகங்களை படிச்சவனும் ஒன்னும்பாபாங்க.
இந்த டயலாக் டெலிவரி எல்லாம் தியேட்டரில் கேட்கும் போது அவ்வளவு அருமையாக இருக்கும். அந்த modulation, முக பாவம், உடல் மொழி எல்லாமே அற்புதமாக இருக்கும். பேசிக் கொண்டே வெகு இயல்பாக தோளில் கை வைக்க அதை படாரென்று தட்டி விட்டு என்னை தொடாதீங்க என்று கோபாவேசமாய் பேசும் JJ-வை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு, இனி நீயா வந்து என்னை தொடரவரைக்கும் நான் உன்னை தொட மாட்டேன் என்று சொல்லி விட்டு போகும் அந்த look பிரமாதம். அன்றைய தினம் இந்தக் காட்சியோடு இடைவேளை விட்டதால் இதைப் பற்றியே நானும் சாரதியும் கிருஷ்ணாஜியும் பேசிக் கொண்டிருந்தோம்.
இரண்டாவது காட்சி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொள்ள போகும் JJவை கயிறு மூலம் பிடித்து இழுத்து அவரிடம் தான் உள்ளக் குமுறலையெல்லாம் கொட்டி தீர்க்கும் காட்சி. முழுப் படத்திலும் இந்தக் காட்சிதான் நடிகர் திலகத்தின் நடிப்பில் highlight ஆன காட்சி. எனக்கு உங்கிட்டே பிடிச்சதே அந்த பிடிவாதம்தான். ஏன்னா நானும் பிடிவாதக்காரன். உன்னை நான் உண்மையா நேசிச்சேன். என்னுடைய மனைவி ஆன பின்னாடி என்னுடைய வாழ்க்கைக்கு ஏத்த மாதிரி உன்னை மாத்தறதுக்கு உனக்கு பழக்கமில்லாத வேலையெல்லாம் செய்ய சொன்னேன். ஆனா நான் உன்னை கொடுமைப்படுத்தறதா நீ நினைச்சுக்கிட்டே. நான் எப்ப தூங்குவேன்னு நீ பார்த்துட்டிருந்தே நீ எப்ப ஏம்மாத்துவேனு நான் பார்த்துட்டிருந்தேன்.
இந்த வசனங்களை எல்லாம் [நான் மேலே எழுதின வசனங்கள் படத்தில் verbatim ஆக இருக்காது] அவர் பேசும் போது பார்க்க வேண்டுமே! இத்தனைக்கும் இரண்டு மூன்று ஷாட்களுக்குள் மொத்த காட்சியும் வந்து விடும். ஆனாலும் continuity miss ஆகாமல் உணர்வுகள் அப்படியே அந்த வார்த்தை பிரயோகங்களில் வந்து விழும் அந்த modulation! என்ன ஒரு மேதமை!
நான் உன் வாழ்க்கையை விட்டு விலகினா இல்லை நான் செத்து போயிட்டா உனக்கு சந்தோசம் கிடைக்கும்முனா, நீ இழந்த வாழ்க்கை கிடைக்கும்னுனா இதோ இதே கிணற்றிலே என்னை பிடிச்சு தள்ளிட்டு அந்த பாறங்கல்லையும் தூக்கி என் தலயிலே போட்டுடு. நான் பத்து எண்ணுவேன். பத்து எண்றத்துக்குள்ளே என்னை பிடிச்சு தள்ளி விட்டுடு என்று சொல்லிவிட்டு நடிகர் திலகம் ஏறி நிற்க நடுங்கும் கைகளினால் அவர் அருகில் கைகளை கொண்டு சென்று விட்டு முடியாமல் JJ திரும்பி நிற்க கிணற்றின் கைப்பிடி சுவரிலிருந்து இறங்கி வந்து சொல்வாரே நீ மட்டும் செத்து போயிருந்தா அடுத்த நிமிஷமே நானும் செத்துப் போயிருப்பேன் என்று தன மனதில் உள்ள காதலை வெளிப்படுத்துவாரே அந்த ஒரு காட்சியில் மொத்தப் படத்தின் credit-ஐயும் அவர் தட்டிக் கொண்டு போய் விடுவார்.
இதை சொல்வதற்கு காரணம் கிளைமாக்ஸ். அதுவரை மூன்றே மூன்று காட்சிகளில் கொல்லன் பட்டறையில் இரும்பை காய்ச்சி அடிக்கும் வேலையை மட்டும் செய்துக் கொண்டிருக்கும் முத்துராமன் கதாபாத்திரம் அந்த கிளைமாக்ஸ் scene-ல் புயலென உள்ளே புகுந்து வில்லனை அடித்து உதைத்து ஒரு ஹீரோ லெவலுக்கு செயல்பட, கதை மற்றும் திரைக்கதையின் போக்குப்படி அப்படிதான் முடிக்க வேண்டும் என்ற சரியான தீர்மானத்தின் காரணமாக முத்துராமனுக்கு விட்டுக் கொடுத்து விட்டு அமைதியாக நடிகர் திலகம் நிற்பார். என் தங்கச்சி மானம் போயிடக் கூடாதுதானே அடியெல்லாம் வாங்கிக்கிட்டு நான் பேசாமே நிக்கிறேன். நீ இப்படி எல்லார் முன்னாடியும் என் தங்கச்சி மானத்தை வாங்கிட்டேயேடா மாரிமுத்து என்று மனம் உருகி பேசுவார்.
எந்த நடிகர் விட்டுக் கொடுப்பார்? இரண்டு மூன்று படங்களில் ஹீரோவாக நடித்தவுடனே இயக்குனரிடம் இதை மாற்றி விடுங்கள். நான் அந்த கிளைமாக்ஸ் scene-ல் ஸ்கோர் பண்ணற மாதிரி மாத்திடுங்க என்று சொல்லக்கூடிய தமிழ் திரைப்பட உலகில், உச்சத்தில் நிற்கும் போதும் தன்னுடைய 150-வது படமாக இருந்த போதினும் கதையின் இயல்பான போக்குப்படியே கிளைமாக்ஸ் இருக்கட்டும் என்று விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மை நமது நடிகர் திலகத்தை விட்டால் வேறு யாருக்கு வரும்?
குறிப்பிடத்தக்க மற்றொரு நபர் நாகேஷ். சின்ன பண்ணையாக பெரிய பண்ணை T.S பகவதியுடன் கூடவே இருந்து குழி பறிக்கும் அந்த character-ஐ ஜாலியாகவும் வெகு இயல்பாகவும் செய்ய நாகேஷை விட்டால் யார் இருக்கிறார்கள்? பண்ணைக்கு ஆதரவாக பேசுவது போல் சிவாஜியின் மாணிக்கம் character-க்கு lead எடுத்துக் கொடுப்பது [ஏம்பா, தேர்தலிலே தோத்தா பணம் கொடுக்காம அவர் பெண்ணையா உனக்கு கொடுப்பார்?] எல்லாம் அக்மார்க் நாகேஷ். சரியாக மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடிகர் திலகம் படங்களில் நாகேஷ் செமத்தியாக ஸ்கோர் செய்திருக்கிறார். 1965 ஜூலை திருவிளையாடல், 1968 ஜூலை தில்லானா, 1971 ஜூலை சவாலே சமாளி!
மொத்தத்தில் அந்த ஞாயிறு நண்பகல் சற்று கசப்புணர்வுடன் ஆரம்பித்தாலும் நடிகர் திலகம் என்ற மாபெரும் கலைஞனின் அற்புதமான பாத்திர சித்தரிப்பினால் மனம் குளிர்ந்து மகிழ்ந்தது.
அன்புடன்
sivaa
7th October 2013, 04:27 AM
சவாலே சமாளி - சினிமா நூற்றாண்டு விழா சிறப்பு காட்சி
படத்திற்குள் போகும் முன் ஒரு சில நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். சினிமா நூற்றாண்டு விழாவின் பாகமாக சவாலே சமாளி திரைப்படம் இரண்டு முறை திரையிடப்பட்டது. முதன் முறை உட்லண்ட்ஸ் சிம்பனி அரங்கிலும் இரண்டாம் முறை சத்யம் அரங்கில் செப் 22-ந் தேதி ஞாயிறு அன்றும் பகல் காட்சியாக நடைபெற்றது.
ஞாயிறு noon show-விற்கு சென்றிருந்தோம். நிகழ்ச்சி நடந்து இரண்டு வாரங்கள் ஆகி விட்டன என்ற போதினும் அப்போது அங்கே நிகழ்ந்த சில விஷயங்களை பற்றி சொல்லலாம் என நினைக்கிறேன். அரங்க வளாகத்திற்கு சென்ற போது நல்ல கூட்டம். ஆனால் யாரிடமும் டிக்கெட் இல்லை. என்னவென்று கேட்டால் அரங்க நிர்வாகத்தினர் அரங்கின் capacity -க்கு கொடுத்து விட்டோம் என்கிறார்கள். ஆனால் உள்ளே இருந்து வரும் செய்தியோ வித்தியாசமாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் en bloc ஆக டிக்கெட்டுகளை முன்னரே வாங்கி விட்டனர் என்றும் ஆனால் அவர்கள் படத்திற்கு வர மாட்டார்கள் என ஒரு செய்தி பேசப்படுகிறது. அதற்கு என்ன காரணம் என்று கேட்டால் படத்தின் கதையமைப்பின்படி நாயகனும் நாயகியும் மோதிக் கொள்ளும் காட்சிகள் நிறைய வரும். அதிகமான அளவில் சிவாஜி ரசிகர்கள் இருந்தால் அரங்கத்தில் reaction வேறு விதமாக இருக்கும். அதை தவிர்க்கவே இப்படி என்று விளக்கம்.
படம் ஆரம்பித்து விட்டது. ஆனால் ரசிகர்கள் திரும்பி போகவில்லை. அரங்க நிர்வாகத்தினரோடு ஒரு வாக்குவாதம் நடைபெறுகிறது. அரங்கத்தின் உள்ளே இருக்கைகள் free யாக இருக்கின்றன. அந்த நிலையில் எங்களை அனுமதித்தால் என்ன? என்பது ரசிகர்களின் வாதம். நிரவாகதினரோ நாங்கள் ஏற்கனவே திரையிடப்பட்டிருக்கும் அரங்கத்தின் capacityகேற்ப அனுமதி சீட்டுகளை வழங்கி விட்டோம். அதை வாங்கியவர்கள் வரவில்லையென்றால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. அவர்கள் வரவில்லை என்பதால் வேறு ஆட்களை அனுமதிக்க முடியாது என்கிறார்கள். ரசிகர்கள் விடவில்லை. காசு கொடுத்து அனுமதி சீட்டு வாங்கியவர்கள் வரவில்லையென்றால் நீங்கள் சொல்வது சரி.ஆனால் இன்றைய சூழல் அதுவல்ல. ஏற்கனவே வாங்கி சென்றதாக நீங்கள் சொல்லும் நபர்களும் complimentary டிக்கெட்தான் வாங்கி போயிருக்கிறார்கள்.இப்படி ஒரு சூழலில் இலவச அனுமதி சீட்டு பெற்று சென்றவர்கள் வரவில்லை எனும் போது எங்களை அனுமதிப்பதில் தவறொன்றுமில்லை என்ற வாதத்தை ரசிகர்கள் முன் வைக்க அனுமதி சீட்டு பெற்றவர்கள் வந்தால் நாங்கள் என்ன பதில் சொல்வது என்று நிர்வாகத்தினர் கேட்க, அப்படி அவர்கள் வந்தால் நாங்கள் எழுந்து இருக்கைகளை அவர்களுக்கு தந்து விடுகிறோம் என்று ரசிகர்கள் பதிலளிக்க அதன் பின்னரே அந்த நிபந்தனையின் பேரில் ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.இதனால் படம் தொடங்கி 20-30 நிமிடங்களுக்கு பின்னரேஒரு கணிசமான கூட்டத்தினரால் உள்ளே வர முடிந்தது ஒரு கட்டத்திற்கு பிறகு அனுமதிக்க மாட்டார்கள் என நினைத்து கணிசமான பொதுமக்களும் ரசிகர்களும் திரும்பி சென்று விட்டனர். மிக மிக வேதனையான சம்பவம் இது.
படம் முடிந்து வரும்போது நிர்வாகத்தில் உள்ள ஒருவருடன் ஆப் தி ரெகார்ட் ஆக பேசிய போது அவர் என்ன நடந்தது என்ற தகவலை சொன்னார். மற்ற அரங்குகளைப் போல் அல்லாமல் சத்யம் வளாகத்தில் reservation counter-லேயே இந்த சினிமா நூற்றாண்டு விழா சிறப்பு காட்சிகளுக்கும் டிக்கெட்கள் கொடுக்கப்பட்டிருகின்றன அந்த நேரத்தில் நிர்வாகத்தினரிடம் படம் இபப்டிப்பட்ட கதை சூழலை கொண்டது.படம் திரையிடப்படும் போது மாற்று தரப்பினரும் படத்திற்கு வந்திருந்தால் ஏதேனும் பிரச்சினைகள் வரலாம் என்று யாரோ போய் சொல்லியிருக்கின்றனர் அதை கேட்ட நிர்வாகம் உடனெ டிக்கெட் விற்பனையை நிறுத்தி விட்டது. காட்சிக்கு வந்தவர்களிடம் டிக்கெட் தீர்ந்து விட்டது என சொல்லி விட்டார்கள்.சிவாஜி ரசிகர்களை தவறாக நினைக்கவில்லை என்றும், 120 ரூபாய் டிக்கெட் விலை இருந்த போது கூட கர்ணன் படம் ஓடிய 153 நாட்களிலும் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்த்தவன் சிவாஜி ரசிகன். ஆகவே இது யாரோ சொன்ன செய்தியால் இல்லை வதந்தியால் வந்த குழப்பம் என்றார். நாங்கள் அவரிடம் சொன்னோம்.இரண்டு நாட்களுக்கு முன்பு உட்லண்ட்ஸ் சிம்பனி அரங்கில் இதே படம் திரையிட்ட போது சத்யம் ஸீசன்ஸ் அரங்கை விட அதிக capacity உடைய சிம்பனி அரங்கம் நிறைந்தது. ஆனால் படம் ஓடிய மூன்று மணி நேரமும் சிவாஜி ரசிகர்கள் நாகரீகம் காத்தார்கள். ஆரவாரம் அலப்பரை எல்லாம் இருந்த போதும் அனைத்தும் லிமிட்க்குள் இருந்தது. அப்படியிருக்க இங்கே எப்படி ஒரு மோதல் போக்கை கடைபிடிப்பார்கள் என்ற கேள்விக்கு அவரிடமிருந்து ஒரு சிரிப்பு மட்டுமே பதில்.
நடிகர் திலகம் இன்றில்லை.12 வருடங்கள் ஓடி விட்டன அவர் இப்பூவுலகை விட்டு நீங்கி.அவருக்கென்று ஒரு அரசியல் கட்சியோ, அமைப்போ,ஆட்சியில் அதிகாரத்தில் பங்கோ இல்லை. அவர் ரசிகர்களும் ஒரே அமைப்பை ஆதரிப்பவர்களில்லை.சிவாஜி மீது "மாறா அன்பு" கொண்டவர்கள் அவர் எந்த சாதனையையும் செய்யவில்லை என்றும் சொல்கிறார்கள்.அவர்கள் கூற்றுப்படியே எந்த சாதனையையும் புரியாத ஒருவரை எந்த அரசியல் அதிகார பின்புலமும் இல்லாத அவர்தம் ரசிகர்களை பார்த்து இத்துணை கோவமும் ஆத்திரமும் ஏன் ஏற்படுகிறது என்பதுதான் புரியாத புதிர். எதிர்ப்பிலே வளர்ந்த நடிகர் திலகம் இன்றும் அதே எதிர்ப்பையே சந்தித்துக் கொண்டிருக்கிறார். அன்றைய நாட்களில் அதிகமாக அவர் முகம் தாங்கிய போஸ்டர்கள்தானே உரம் போட்டு வளர்க்கப்பட்டது. இன்றும் அது வேறு வடிவத்தில் தொடர்கிறது எனபதுதான் வேதனை.
(தொடரும்)
அன்புடன்
முரளி சார்
சிலவற்றை நினைக்கும்பொழுதுமனம் கனக்கிறது
உலகைவிட்டு மறைந்துபோன ஒரு கலைஞனை கண்டு
ஒரு கூட்டம் இன்னமும் பயப்படுகிறது
வெடகம் வெட்கம்
sivaa
7th October 2013, 04:41 AM
Murali Srinivas
நான் உன் வாழ்க்கையை விட்டு விலகினா இல்லை நான் செத்து போயிட்டா உனக்கு சந்தோசம் கிடைக்கும்முனா, நீ இழந்த வாழ்க்கை கிடைக்கும்னுனா இதோ இதே கிணற்றிலே என்னை பிடிச்சு தள்ளிட்டு அந்த பாறங்கல்லையும் தூக்கி என் தலயிலே போட்டுடு. நான் பத்து எண்ணுவேன். பத்து எண்றத்துக்குள்ளே என்னை பிடிச்சு தள்ளி விட்டுடு என்று சொல்லிவிட்டு நடிகர் திலகம் ஏறி நிற்க நடுங்கும் கைகளினால் அவர் அருகில் கைகளை கொண்டு சென்று விட்டு முடியாமல் JJ திரும்பி நிற்க கிணற்றின் கைப்பிடி சுவரிலிருந்து இறங்கி வந்து சொல்வாரே நீ மட்டும் செத்து போயிருந்தா அடுத்த நிமிஷமே நானும் செத்துப் போயிருப்பேன் என்று தன மனதில் உள்ள காதலை வெளிப்படுத்துவாரே அந்த ஒரு காட்சியில் மொத்தப் படத்தின் credit-ஐயும் அவர் தட்டிக் கொண்டு போய் விடுவார்.
இதை சொல்வதற்கு காரணம் கிளைமாக்ஸ். அதுவரை மூன்றே மூன்று காட்சிகளில் கொல்லன் பட்டறையில் இரும்பை காய்ச்சி அடிக்கும் வேலையை மட்டும் செய்துக் கொண்டிருக்கும் முத்துராமன் கதாபாத்திரம் அந்த கிளைமாக்ஸ் scene-ல் புயலென உள்ளே புகுந்து வில்லனை அடித்து உதைத்து ஒரு ஹீரோ லெவலுக்கு செயல்பட, கதை மற்றும் திரைக்கதையின் போக்குப்படி அப்படிதான் முடிக்க வேண்டும் என்ற சரியான தீர்மானத்தின் காரணமாக முத்துராமனுக்கு விட்டுக் கொடுத்து விட்டு அமைதியாக நடிகர் திலகம் நிற்பார். என் தங்கச்சி மானம் போயிடக் கூடாதுதானே அடியெல்லாம் வாங்கிக்கிட்டு நான் பேசாமே நிக்கிறேன். நீ இப்படி எல்லார் முன்னாடியும் என் தங்கச்சி மானத்தை வாங்கிட்டேயேடா மாரிமுத்து என்று மனம் உருகி பேசுவார்.
எந்த நடிகர் விட்டுக் கொடுப்பார்? இரண்டு மூன்று படங்களில் ஹீரோவாக நடித்தவுடனே இயக்குனரிடம் இதை மாற்றி விடுங்கள். நான் அந்த கிளைமாக்ஸ் scene-ல் ஸ்கோர் பண்ணற மாதிரி மாத்திடுங்க என்று சொல்லக்கூடிய தமிழ் திரைப்பட உலகில், உச்சத்தில் நிற்கும் போதும் தன்னுடைய 150-வது படமாக இருந்த போதினும் கதையின் இயல்பான போக்குப்படியே கிளைமாக்ஸ் இருக்கட்டும் என்று விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மை நமது நடிகர் திலகத்தை விட்டால் வேறு யாருக்கு வரும்?
.
அன்புடன்
உண்மைதன் முரளி சார்
சிவாஜி என்ற மாமேதை
தன் நடிப்பில் அவருக்கு இருந்த தன்நம்பிக்கை
எதற்கும் யாரையும் கண்டு பயப்பட்டதில்லை
vasudevan31355
7th October 2013, 07:04 AM
முரளி சார்,
தாங்கள் 'சவாலே சமாளி' சினிமா நூற்றாண்டு விழா சிறப்பு காட்சி பார்த்த ஒரு சில தினங்களுக்குள் நான் கை பேசியில் தங்களிடம் உரையாடும் போது தாங்கள் நடிகர் திலகத்தின் ஆளுமை கொடிகட்டிப் பறக்கும் அந்த கிணற்று சீனைப் பற்றி இன்று பதிவில் குறிப்பிட்டது போல் அவ்வளவு அழகாகச் சொல்லி சிலாகித்து மகிழ்ந்தீர்கள். இன்று தங்கள் கருத்தை பதிவின் மூலமாகக் கண்டதும் அந்த சுகத்தை வேறு கோணத்தில் அனுபவித்தேன். நான் அந்த காட்சியைப் பற்றி இதுநாள் வரையில் என்னென்ன மனதில் நினைத்திருந்தேனோ அதை அப்படியே தங்கள் பதிவில் வார்த்தெடுத்து விட்டீர்கள். எனக்கு அந்தக் காட்சியைப் பற்றி எழுத வேண்டும் என்று மிக மிக ஆசை.
நாம் செல்லில் பேசிய அன்று என்னைத் தூங்க விடாமல் செய்தீர்கள்.
இன்று அதிகாலை எழுந்து தங்கள் அருமையான பதிவைப் படித்துவிட்டு மீண்டும் படுத்த போதும் உறக்கம் வரவில்லை. அந்தக் காட்சியே மனத்திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது.
மிக்க நன்றி.
RAGHAVENDRA
7th October 2013, 07:21 AM
முரளி சார்
சவாலே சமாளி திரையீடு பற்றிய தங்கள் பதிவு நம் அனைவரின் உள்ளத்திலும் நிழலாடிக் கொண்டிருக்கும் எண்ணங்களே. 40 ஆண்டுகளுக்கு முன் நினைவுகள் செல்கின்றன. சென்னை சாந்தி திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சியிலேயே ஜெயலலிதா அவர்களிடம் நடிகர் திலகம் கிணற்றடியில் பேசும் காட்சி பலத்த வரவேற்பைப் பெற்றது. அதே போல் இறுதியில் நடிகர் திலகத்தை விட்டுக் கொடுக்காமல் பேசும் காட்சியிலும் ஏகப்பட்ட கரகோஷம். தமிழ்த் திரையுலகில் மிகச் சிறந்த நடிகையருள் ஒருவரான ஜெயலலிதா அவர்களின் சிறந்த நடிப்பிற்கு ஸ்கோப் அளித்த படங்களில் சவாலே சமாளியும் ஒன்று. நடிகர் திலகத்தைப் போலவே அவருடைய ரசிகர்களும் சிறந்த நடிப்பை யார் வழங்கினாலும் பாராட்டத் தயங்க மாட்டார்கள் என்பதற்கு முதல் நாள் அக்காட்சிகள் பெற்ற வரவேற்பே சாட்சி.
அன்றைய நாளில் சென்னை சாந்தி திரையரங்கில் ரசிகர்களின் திரையலங்காரங்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்று விட்டன. அரங்கு நுழைவாயில் அருகில் சற்றுத் தள்ளி சுவற்றில் ஆரம்பித்து வாசல் வரைக்கும் நீளமான பேனர் அமைத்து அதில் 150 படங்களும் பட்டியல் இடப் பட்டிருந்தன. ஒவ்வொரு படத்திற்கும் ஒரு சின்ன சதுர வடிவிலான பேனர் என சின்னச் சின்னதாய் 150 பேனர்கள். அரங்கு முழுவதும் தோரணங்கள், கொடிகள், ஸ்டார்கள் எனத் திருவிழாக் கோலம். இன்றும் அந்தத் திருவிழாக் கோலம் தொடர்கிறது என்பதே அவருடைய தாக்கத்தின் வலிமையைப் புரிந்து கொள்ளலாம். ஒரே ஒரு வித்தியாசம் அன்றை அளவிற்கு இன்று ஸ்டார்களும் தோரணங்களும் இடம் பெறுவதில்லை. நடிகர் திலகத்துடன் இணைந்து நடிக்கும் கலைஞர்கள் பாராட்டைப் பெறாமல் இருந்ததில்லை என்பது நிதர்சனமானது.
சவாலே சமாளி நடிகர் திலகத்தின் ரசிகர்களில் நீங்கா இடம் பெற்ற திரைக்காவியம். இப்படத்தைப் பற்றிய தங்கள் பதிவு என்னை அந்தக் காலத்திற்கு இட்டுச் சென்றதன் விளைவே இப்பதிவு.
vasudevan31355
7th October 2013, 07:41 AM
மிக்க நன்றி முரளி சார், சவாலே சமாளியை நினைவு படுத்தியதற்கு. தங்களுக்கு எனது சிறிய அன்புப் பரிசு.
http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/36867565_VIIuO3Aa_1380369673_zpse8c48619.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/36867565_VIIuO3Aa_1380369673_zpse8c48619.jpg.html)
Gopal.s
7th October 2013, 08:56 AM
சின்ன கண்ணன் சார்,
நவராத்திரியும் அதுவுமாய், கஜுரஹோ ஞாபக படுத்தி தொலைத்த இக்கயவனின் இழி செயலை, அழகான நவராத்திரி பதிவினால் நேர்செய்து அம்மன் அருளை திரிக்கு மீட்டு கொண்டு வந்து விட்டீர்கள்.
கார்த்திக் சார்,
நான் பிறந்த நாட்டுக்கொரு பதிவாக ,அழகாக துள்ளி ,பெண்களை அழகாக மஞ்சளரைத்து ரசித்து விட்டீர்கள். இந்த பாடலும்,சக்தி தென்னாடு பாடலும் jamesbond படத்தின் மூட்,டோன் இரண்டையும் கெடுக்கும். வேறு எந்த படத்தில் வந்திருந்தாலும் மிக மிக ரசிக்க வைத்திருக்கும்.
உங்கள் ஐடம் ராஜஸ்ரீயை, காதல் காட்சி தொடரின் சின்ன மலராக விரிக்க (விறிக்க) போகிறேன்.
வேண்டுமென்றே ஆலத்தை கொண்டு வராமல் இதய துடிப்பை அதிக (படுத்துகிறீர்கள்).
வாசு,
உன்னுடைய பிறந்த நாள் பங்களிப்புகள்,முத்தமிழ் விழாக்களுக்கு நன்றி.
ராகவேந்தர் சார்,
எந்த பதிவு வந்தாலும் அதையொட்டிய தங்கள் பதிவுகள் சுவாரஸ்யம்.
முரளி,
சனி,ஞாயிறில் எங்களுக்கு விருந்து படைத்து ,எங்கள் விடுமுறை நாட்களை இனிதாக்கி விட்டீர்கள். இது வரை தனி காட்டு ராஜாக்களாக இருந்த நாங்கள்,தங்களின் இந்த சவாலை எப்படி சமாளிக்க போகிறோம்? எல்லா பதிவுகளுமே மிக மிக ரசிப்புக்குறியவை. தாங்கள் தர வேண்டிய செய்தியை package செய்யும் அழகு,பத்திரிகையாளர்களுக்கே பாடம் சொல்லும்.
omeuforivo
7th October 2013, 09:24 AM
சவாலே சமாளி - சினிமா நூற்றாண்டு விழா சிறப்பு காட்சி = Part II
இரண்டாவது காட்சி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொள்ள போகும் JJவை கயிறு மூலம் பிடித்து இழுத்து அவரிடம் தான் உள்ளக் குமுறலையெல்லாம் கொட்டி தீர்க்கும் காட்சி. முழுப் படத்திலும் இந்தக் காட்சிதான் நடிகர் திலகத்தின் நடிப்பில் highlight ஆன காட்சி.
Savale Samaali - Nadigar thilagam Sivaji's acting is very manly and superb.
Russellfcv
7th October 2013, 10:10 AM
சவாலே சமாளி - சினிமா நூற்றாண்டு விழா சிறப்பு காட்சி
நடிகர் திலகம் இன்றில்லை.12 வருடங்கள் ஓடி விட்டன அவர் இப்பூவுலகை விட்டு நீங்கி.அவருக்கென்று ஒரு அரசியல் கட்சியோ, அமைப்போ,ஆட்சியில் அதிகாரத்தில் பங்கோ இல்லை. சிவாஜி மீது "மாறா அன்பு" கொண்டவர்கள் அவர் எந்த சாதனையையும் செய்யவில்லை என்றும் சொல்கிறார்கள்.அவர்கள் கூற்றுப்படியே எந்த சாதனையையும் புரியாத ஒருவரை எந்த அரசியல் அதிகார பின்புலமும் இல்லாத அவர்தம் ரசிகர்களை பார்த்து இத்துணை கோவமும் ஆத்திரமும் ஏன் ஏற்படுகிறது என்பதுதான் புரியாத புதிர். எதிர்ப்பிலே வளர்ந்த நடிகர் திலகம் இன்றும் அதே எதிர்ப்பையே சந்தித்துக் கொண்டிருக்கிறார். அன்றைய நாட்களில் அதிகமாக அவர் முகம் தாங்கிய போஸ்டர்கள்தானே உரம் போட்டு வளர்க்கப்பட்டது. இன்றும் அது வேறு வடிவத்தில் தொடர்கிறது எனபதுதான் வேதனை.
(தொடரும்)
அன்புடன்
dedicated to those who still abuse & try to establish false claims on nadigar thilagam:
இங்கு எரிந்து கொண்டிருக்கும் மின்சார பல்புகளை எல்லாம் அணைத்து விட்டாலும்கூட, இந்த இடத்தில் ஒரே ஒரு சின்னஞ்சிறு அகல் விளக்கு எரிந்து கொண்டிருக்கும். அந்தச் சொற்ப வெளிச்சத்தின் அடியில் அற்பர்கள் துணையின்றி ஒரே ஒரு உருவம் மட்டும் ஓடி வேலை செய்து கொண்டிருக்கும். அதுதான் இந்த ராஜு!
போ – மூலைக்கு மூலை நின்று முரசு கொட்டு........ திட்டு........கெட்... அவுட்’.
KCSHEKAR
7th October 2013, 11:23 AM
சவாலே சமாளி - சினிமா நூற்றாண்டு விழா சிறப்பு காட்சி
எதிர்ப்பிலே வளர்ந்த நடிகர் திலகம் இன்றும் அதே எதிர்ப்பையே சந்தித்துக் கொண்டிருக்கிறார். அன்றைய நாட்களில் அதிகமாக அவர் முகம் தாங்கிய போஸ்டர்கள்தானே உரம் போட்டு வளர்க்கப்பட்டது. இன்றும் அது வேறு வடிவத்தில் தொடர்கிறது எனபதுதான் வேதனை.
அன்புடன்
டியர் முரளி சார்,
சவாலே சமாளி சிறப்புக் காட்சி குறித்த தங்களின் கருத்துக்கள் ரசிகர்கள் அனைவரின் என்ன ஓட்டத்தை அப்படியே பிரதிபலிப்பாக உள்ளது.
mr_karthik
7th October 2013, 11:25 AM
டியர் முரளி சார்,
சத்யம் அரங்கில் சவாலே சமாளி திரைப்படம் காணச்சென்ற தங்களது அனுபவம் மனதை வலிக்கச்செய்தது (அதாவது அரங்கில் நுழைவதற்கு முன் ஏற்பட்ட அனுபவம்). திரைப்பட நூற்றாண்டு கொண்டாட்டத்துக்கு நடிகர்திலகத்தின் பல சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்படவில்லை என்று ஏற்கெனவே பெரிய குற்றச்சாட்டும் மனவலியும் இருக்கும்போது, அப்படி தேர்ந்தெடுத்த படங்களைத் திரையிடுவதிலும் இத்தனை சங்கடங்களா?. இப்படத்தின் கதைப்போக்கு என்னவென்பது அவர்களுக்குத் தெரியாதா?. படங்களைத் தேர்வு செய்ததே "அவர்கள்தானே" . அப்படியிருக்க திரையிடப்படும்போது குளறுபடிகள் ஏன்?. ஒரு மாபெரும் கலைஞனை எந்த அளவுக்குத்தான் அவமானப்படுத்துவார்கள்?.
ஒன்று மட்டும் உண்மை. யாரும் கண்டுக்காத வரையில் எந்த இயக்கமும் வளராது. எதிர்க்க எதிர்க்கத்தான் வளர்ச்சியை நோக்கி முன்னேறும். நம்முடைய படையைக்கண்டு, அதிகாரத்தில் இருக்கும் பெரிய இயக்கங்களே பயப்படுவது நமக்குப்பெருமை.
அன்று தலைவரின் சுவரொட்டிகளில் சாணியடித்துக் கொண்டிருந்த படிக்காத பாமரனை விட, மெத்தப்படித்து விட்டு இன்று இணையத்தின் வழியாக சாணியடித்துக் கொண்டிருக்கும் 'மே(ல்) தாவிகள்' கேவலமாகிப்போன அவலத்தை என்ன சொல்வது?.
படத்தைப் பொறுத்தவரை, முதலிரவில் நடிகர்திலகம் பேசும் காட்சியும், அதைத்தொடர்ந்து வரும் 'நிலவைப்பார்த்து வானம் சொன்னது' பாடலும், அதேபோல அந்தக் கிணற்றடிக் காட்சியும் எப்போதுமே படத்தின் ஹைலைட். அதுபோல படத்தின் துவக்கத்தில், கணவனைப் பார்க்கப்போய் திரும்பி வரும் தங்கையிடம் பேசும் காட்சியும், கோயிலில் தேர்தல் ஒப்பந்தம் எழுதும் காட்சியும் ஹைலைட்தான். மொத்தத்தில் படம் துவக்கம் முதல் இறுதிவரை செம டெம்போதான், தொய்வே கிடையாது.
கடைசியில் ஒரு சவால் விட்டீர்களே அதுதான் உச்சமான ஹைலைட். படத்தின் பவர்புல் கிளைமாக்ஸ் சண்டையை சக நடிகனுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு சும்மா அமைதியாக நின்று ஸ்கோர் பண்ண வேறு யாருக்கும் தைரியம் இருந்ததா?. இருக்கிறதா?. இந்த சவாலை சமாளிக்க யாராலும் முடியாது.
நம்மைப் பார்த்து பயப்படுகிறார்கள் அல்லவா, அங்கேயே நாம் வென்று விட்டோம். "தம்பி நாமம் வாழ்க".......
KCSHEKAR
7th October 2013, 11:29 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Malaimurasu5Oct2013002_zpse6743119.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Malaimurasu5Oct2013002_zpse6743119.jpg.html)
KCSHEKAR
7th October 2013, 11:30 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Arasiyal9Oct2013Pg1_zps763b8b67.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Arasiyal9Oct2013Pg1_zps763b8b67.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Arasiyal9Oct2013Pg2_zps1e5eaf73.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Arasiyal9Oct2013Pg2_zps1e5eaf73.jpg.html)
KCSHEKAR
7th October 2013, 11:33 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Malaimurasu3Oct2013_zps54a06840.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Malaimurasu3Oct2013_zps54a06840.jpg.html)
Gopal.s
7th October 2013, 12:48 PM
கார்த்திக் சாரின் வேண்டுகோளை ஏற்று கஜுரஹோ factor குறைத்து என் காதல் தொடர் தொடரும்.
கீழ்கண்ட படங்கள் முக்கியமாக பரிசீலனையில்....
1)பராசக்தி
2)புதையல்
3)ராஜா ராணி
4)தெய்வ பிறவி
5)இரும்பு திரை
6)பாவை விளக்கு
7)கல்யாணியின் கணவன்
8)ஆண்டவன் கட்டளை
9)புதிய பறவை
10)சாந்தி
11)நீலவானம்.
12)கலாட்டா கல்யாணம்.
13)தங்க சுரங்கம்.
14)தெய்வ மகன்.
15)நிறை குடம்.
16)சிவந்த மண்.
17)சுமதி என் சுந்தரி.
18)வசந்த மாளிகை.
19)உத்தமன்
20)ரோஜாவின் ராஜா
21)திரிசூலம்.
22)முதல் மரியாதை
ஏதாவது ஆலோசனை இருந்தாலோ ,விட்டு போயிருந்தாலோ இணைக்கலாம்.
Gopal.s
7th October 2013, 12:58 PM
http://tamil.oneindia.in/news/tamilnadu/shivaji-welfare-forum-condemns-nadigar-sangam-184827.html
vasudevan31355
7th October 2013, 01:10 PM
'சவாலே சமாளி' (கிணற்று சீன்)
'சவாலே சமாளி' யின் அந்த பாப்புலரான கிணற்று சீன் பலநாள் என் தூக்கத்தைக் கெடுத்த பெருமை உடையது. ஜெயலலிதா உயிரை மாய்த்துக் கொள்ளப் போகும் அந்த இடம்தான் படத்தின் உயிர்நாடியே! நடிப்பின் உயிர்நாடியும் கூட. ஜீவனுள்ள இக்காட்சி ஜீவன் உள்ளவரை மறக்காது.
தேர்தல் பந்தயத்தில் பண்ணையாரிடம் ஜெயிக்கும் மாணிக்கம் பந்தய பொருளாக அவர் மகள் சகுந்தலாவை பெற்று ஊரார் முன்னிலையில் தாலி கட்டி விடுகிறான் அவள் விருப்பமில்லாமலேயே. பணக்கார சகுந்தலாவுக்கும், ஏழை விவசாயி மாணிக்கத்திற்கும் பொருத்தமே இல்லாத திருமணம். பணக்காரத் திமிர் கொண்ட மனைவியை ஏழை மாணிக்கம் அடக்கி ஒடுக்க நினைக்கிறான் அவள் தனக்கேற்றவாறு இருக்க வேண்டும் என்று எண்ணி. தன் நிலத்து வேலைகளையும், வீட்டு வேலைகளையும் அவளைச் செய்யச் சொல்லி ஆணையிடுகிறான். முதலிரவில் கூட தொட அனுமதிக்காத சகுந்தலா கணவன் (இல்லை அவளைப் பொருத்தவரை அவன் கயவன்) இடும் பழக்கமில்லாத வேலைகளில் மனம் நொந்து போகிறாள். ஆனால் மாணிக்கத்திற்கோ உள்ளுக்குள் அவள் மீது உயிர். அவன் வெளிக்காட்ட மாட்டான். அவளுக்கோ அவன் ஒரு வஞ்சகன், பழி உணர்ச்சி கொண்டவன். அவனைப் பழிவாங்கவோ அல்லது தன மனதிற்குப் பிடிக்காதவனோடு வாழப் பிடிக்காமலோ அவள் தன் உயிரை தோட்டத்துப் பக்கம் உள்ள கிணற்றில் குதித்து மாய்த்துக் கொள்ள முற்படுகிறாள். மனைவியைப் பற்றி நன்கறிந்த மாணிக்கம் கண்கொத்திப் பாம்பாக அவளைக் கவனித்து அவளை காப்பாற்றுகிறான். தன்னவள் தன்னைப் பற்றி தெரிந்து புரிந்து கொள்ளாமலேயே உயிரை விட எத்தனித்து விட்டாளே... நமக்கு பழிபாவத்தைச் சேர்க்க இருந்தாளே என்று மனம் வெதும்பி அவளுக்குத் தன் நிலையை விளக்குகிறான். மனம் விட்டு தன் உள்ளத்தில் பொங்கும் உணர்ச்சிகளை அருவியாய் வார்த்தைகளில் அவளிடம் கொட்டித் தீர்க்கிறான். தான் குற்றமற்றவன்...அவள் மேல் தீராத அன்பு கொண்டவன் என்பதை அவளுக்குத் தன்னாலான மட்டில் புரிய வைக்க முயல்கிறான்.
இதுதான் சிச்சுவேஷன். மாணிக்கமாக மாசில்லாத நம் நடிப்புலக மாணிக்கம். மனைவி சகுந்தலாவாக ஜெயா மேடம்.
ஆஹா! எப்பேர்பட்ட பங்களிப்பு நடிகர் திலகத்துடையது.! கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளப் போகும் நேரத்தில் கயிற்றால் ஜெயலலிதாவை பிடித்து இழுத்துக் காப்பாற்றப் போகும் போது நடத்த ஆரம்பிக்கும் நடிப்பு சாம்ராஜ்யம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து எல்லைகளின்றிப் பரவி ஆக்கிரமிக்கும் அதிசயத்தை என்னவென்று சொல்ல!
கயிற்றால் ஜெயலலிதாவை கட்டி இழுத்துக் காப்பாற்றும் போது அவரது கண்களில் தெரியும் ஆழம் அளவுகோல் இல்லாதது. (எனக்குத் தெரியாம நீ எதுவும் செஞ்சுடுவியா...செய்யத்தான் விட்டுடுவேனா? உன் இஷ்டத்திற்கு நீ ஆட்டம் போடுவே! நான் பார்த்துகிட்டு சும்மா இருக்கணும்! ம்.... )
கயிற்றால் ஜெயா இவரை அடிக்க அடிக்க கயிற்றின் ஒவ்வொரு பகுதியாக பிடித்தபடி சிரிக்கும் சிரிப்பு. (பார்த்தியா! இங்கேயும் ஜெயிச்சது நான்தான்)
ஜெயலலிதா இவரை திட்டித் தீர்த்தவுடன் (ஒரு பெண்ணுங்கிற இரக்கம் கூட இல்லாம இப்படி அரக்கத்தனமா நடந்துக்குற நீங்க மனுஷனே இல்ல!) என்று குமுறி அழும் போது
"அழு... நல்லா அழு... வாய்விட்டுக் கதறு.... அப்பத்தான் உன் வெறி அடங்கும்...உன் சந்தோஷத்தையெல்லாம் குழி தோண்டிப் பொதச்சவன் நான். நான் உயிரோட இருக்கிற வரைக்கும் அது உனக்குக் கிடைக்காது... அதுதானே உன் குற்றச்சாட்டு.... சரி! உன் சந்தோஷத்தை யெல்லாம் அழிச்ச நானே அழிஞ்சி போயிட்டா....உனக்கு அது திரும்ப கிடைச்சுடுமில்லையா?" என்றபடி வயிற்றுப் பகுதியில் கைகளைக் கட்டியபடியே சாவின் வாயிலிலும் நிற்கும்போது கூட நிற்கும் அந்த ஆண்மை நிறைந்த கம்பீர போஸ்.
ஒன்று இரண்டு மூன்று எண்ணி பத்தைத் தொடும் போது கைகள் இவரைத் கிணற்றில் தள்ளத் தயார் நிலையில் இருந்தும் மனம் மறுத்த காரணத்தால் ஜெயலலிதா தோற்றுவிட நடிகர் திலகம் கீழே இறங்கி
"உனக்கு அந்த துணிச்சல் இல்ல. உன் மனசுல பலவீனம்தான் மண்டிக் கிடக்குது அதனாலதான் சாகத் துணிஞ்ச"..... என்று பேசிக் கொண்டே வருவார்.
"நீ என்கூட வாழ்ந்துதான் தீரணும்னு உன்னை நிர்ப்பந்தப்படுத்துறது உன் கழுத்துல கிடக்கிற இந்த மஞ்சக் கயிறுதானே! நான்தானே அதை உன் கழுத்தில கட்டினேன். இப்ப ஒரு நிமிஷம்... ஒரு நிமிஷம் உன்னைத் தொடரத்துக்கு அனுமதி கொடுத்தீனா நானே அந்தக் கயித்த அறுத்து எறிஞ்சிட்டுப் போறேன். அதுக்கப்புறம் உன் இஷ்டப்படி எப்பிடி வேணும்னாலும் வாழலாம்...என்று சொல்லி திரும்பவும்
'எப்பிடி வேணும்னாலும்'
என்று இரண்டாம் முறை அழுத்தம் கொடுப்பார். தான் அப்படி வழங்க இருக்கும் அனுமதியை ஆணித்தரமாக கூறுவதாக அர்த்தம் தொனிக்கும்படி வசங்களை டெலிவிரி செய்வார்.
"நீ எனக்கேத்த மனைவியாய் வாழணும்ங்கிற ஆசையினால உனக்குப் பழக்கமிலாத வேலைகளை செய்யச் சொல்லி உன்னைக் கட்டாயாப் படுத்தினேன். அது உனக்குக் கொடுமையாப் பட்டுது. நீ நெஞ்சு வெடிச்சு கதறி அழுகிறத பார்க்கும் போது உன்னைப் போலவே எனக்கும் கதறி அழுகணும் போல தோணுது... என்ன செய்யிறது? நான் ஆம்பிளயாச்சே! அதனாலதான் மனசுல இருக்கிற வேதனைகளையெல்லாம் வெளியே சொல்ல முடியாமே அப்படியே வாய்க்குள்ளேயே போட்டு மென்னு முழுங்கிக்கிறேன்.... முழுங்கிக்கிறேன்" என்று மனக்குமுறல்களைக் கொட்டித் தீர்ப்பார்.
இந்தக் காட்சியில் வசனங்கள் மிகப் பெரிய பலம். வசனங்களைச் சொல்லாமல் இந்தக் காட்சியை விவரிக்க இயலாது.
"உன்னதான் தொட முடியல்ல...உன் மனசையாவது தொடலாம்னு பாக்குறேன்". சொல்லி நிறுத்துவார். முடியல்ல என்பதை கைகளைக் கொட்டி உணர வைப்பார். ஒரு விசும்பு விசும்புவார்.
"நீ உன் மனசுல இருந்ததையெல்லாம் ஒளிவு மறைவு இல்லாம கொட்டித் தீர்த்த மாதிரி நானும் என் மனசுல இருந்ததையெல்லாம் ஒளிவு மறைவு இல்லாம கொட்டித் தீர்த்துட்டேன். ஒருவேளை உன்னை என்னால காப்பாத்த முடியாம போய் இருந்தா நான் உன்னப் பத்தி என் மனசுல நினச்சுக்கிறதெல்லாம் உன்கிட்ட விளங்க வைக்க முடியாமலேயே போயிருக்கும்". (உதடுகளை அவ்வளவு அழகாகக் குவித்து சோகத்தையும், துயரத்தையும் கண்களில் தேக்கிக் காண்பிப்பார்)
ஜெயலலிதாவிடம் முழுவதுமாகத் தன் நிலையை விளக்கிவிட்டு புயல் அடித்து ஓய்ந்து போன சூழ்நிலையைக் காண்பிப்பார். பேசி முடித்த பின் கிணற்றின் மேல் கால்களுக்கிடையில் கைகளை கொடுத்து அப்படியே ஒடுங்கிப் போய் உட்கார்ந்திருப்பார். ("இதுக்கு மேலே உனக்கு விளக்க என்னாலாகாது தாயே! புரிஞ்சா புரிஞ்சுக்கோ! இல்லைன்னா உன் இஷ்டம்" என்பது போல.)
போகும் போது,
" நீ செஞ்ச இந்த பைத்தியக்கரத்தனமான காரியத்தை நான் யாருகிட்டேயும் சொல்லல.... நான் வீட்டுக்குப் போறேன்...நீ வரற்தா இருந்தா வரலாம்" (இடது கை காது மடல்களை பிடித்து திருவியபடி ஒரு அற்புதமான மானரிசத்தைக் காட்டுவார்)
என்று சொல்லி விட்டு விரக்தியுடன் செல்லுவார்.
வாவ். என்ன ஒரு காட்சி. ஜெயலலிதாவிடம் கோபமாக வாதம் தொடக்கி, பின் ஜெயாவை பேச முடியாதபடி வாயடைக்கச் செய்து, கோப வார்த்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி. மனைவி மேல் கொண்ட உண்மையான அன்பை கனிவான வார்த்தைகளில் கொட்டி. அவள் புரிந்து கொள்ளாத நிலையை குரல்கள் உடைந்து நா தழுதழுக்க விளக்கி, அதுவரை அழாதவர் அதிகமாக அழுது புரளாமல் தேவையான அழுகையை மட்டுமே சிந்தி, அவ்வளவுதான் நம் விதி என்ற விரக்தியோடு இறுதியான ஒட்டிக் கொண்டிருக்கும் சிறு நம்பிக்கையில் 'அவள் திருந்தி வந்தால் வரட்டும்... இல்லையென்றால் அவள் இஷ்டம்' என்ற வெறுப்பு கலந்த விரக்தி சூழ்நிலையைக் காட்ட நம் நடிக தெய்வத்தைத் தவிர எவரால் முடியும்?
ஒரு நடிகன் என்பவன் நடித்து விட்டு சென்று விடுவான்.. அந்த நேரம் நாம் அவனைப் பார்ப்போம். அத்தோடு மறந்து விடுவோம். ஆனால் இந்த நடிகன் அப்படியா?
பாத்திரத்தை உணர்ந்து நடிப்பவனே மகாநடிகன்.
அந்த பாத்திரத்தின் தன்மையை பார்க்கிறவர்களுக்குப் புரிய வைக்கும் காரியத்தையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கிறானே... அவன் உலக மகா நடிகன்.
அது மட்டுமல்ல. அந்த உணர்வை உயிருள்ள வரையில் நம் தசை நாளங்களில் பரவச் செய்து நம்மை உணர்வுகளின் சங்கமம் என்ற கயிற்றில் பின்னிப் பினைக்கிறானே... அவன்... அவனை என்னவென்று சொல்வது?!
அவரைத்தான்
நடிகர் திலகம் என்ற நடிப்பு மகான் என்கிறோம்.
mr_karthik
7th October 2013, 01:48 PM
டியர் கோபால் சார்,
பட்டியல் ஓ.கே.தான். ஆனால் எங்களை மறந்துவிட்டீர்களே என்று கர்ணனும் சுபாங்கியும் வருத்தப்படுவது கேட்கலையா? ('இரவும் நிலவும் வளரட்டுமே'). - இது எனக்காக.
அவன்தான் மனிதன் மஞ்சு எங்கே?. - இது வாசுவுக்காக.
உயர்ந்த மனிதனின் 'வெள்ளிக்கின்னம்தான்' எங்கே? - இது கோபால் உங்களுக்காக. ..
chinnakkannan
7th October 2013, 01:58 PM
முரளி ஸ்ரீனிவாஸ் சார்..கொஞ்சம் வேதனைக் குரிய விஷயம் தான்..இருப்பினும் பல டைவர்ஷன்ஸ், எளிதில் கிடைக்கும் டிவிடி, நெட்டில் கூட (இருக்கும் என நினைக்கிறேன்) பார்க்கும்படியான தன்மை என வந்திருக்கும் இந்தக் காலத்திலும் தியேட்டரில் சென்று பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் கொண்டது ந.திலகம் தான். சவாலே சமாளி பதிவும் நன்று..
வாசு சார்..
//சரி! உன் சந்தோஷத்தை யெல்லாம் அழிச்ச நானே அழிஞ்சி போயிட்டா....உனக்கு அது திரும்ப கிடைச்சுடுமில்லையா?" என்றபடி வயிற்றுப் பகுதியில் கைகளைக் கட்டியபடியே சாவின் வாயிலிலும் நிற்கும்போது கூட நிற்கும் அந்த ஆண்மை நிறைந்த கம்பீர போஸ்.// கொய்ங்க் கொய்ங்க் என்று தாவித் தாவி உணர்ச்சிக் கொந்தளிப்பாய்ப் பதிவிட்டிருக்கிறீர்கள்..சுவாரஸ்யம் மட்டுமல்ல ந.தி.யின் மீது உஙகள் பக்தியும் தெரிகிறது..
mr_karthik
7th October 2013, 02:03 PM
டியர் வாசுதேவன் சார்,
சவாலே சமாளி கிணற்றடி சீனை அருமையாக விவரித்து விட்டீர்கள். நீங்கள் சொல்வது உண்மை, வசனங்களை அப்படியே எழுதாமல் இக்காட்சியை உருவகப்படுத்தவே முடியாது. வசனங்களும் நடிகர்திலகத்தின் முகபாவ மாற்றங்களும் இக்காட்சிக்கே உயிர்நாடி.
கதாநாயகி ஜெயலலிதா மீது அனுதாபப் படவைக்கும் இரண்டு சீன்கள். வீம்புக்காக எதுவும் சாப்பிடாமல் இருந்து விட்டு, எல்லோரும் தூங்கிய பின் பசி தாங்காமல் பழைய சோற்றைத் தின்னும்போது, தலைவர் கூச்சல் போட்டு எல்லோரையும் கூட்டும் இடம். இக்கட்டத்தில் தலைவர் மீது சற்று எரிச்சலும் தலைவி மீது அனுதாபமும் ஏற்படும். (கூச்சல் போடுவதற்கு பதிலாக மனைவியை கனிவோடு ஒரு பார்வை பார்த்திருந்தால் காட்சி எங்கோ போயிருக்கும்).
இன்னொன்று வயலில் நாற்று நட்டுக்கொண்டு இருக்கும்போது, தந்தையின் செருப்பைக் கழுவிக்கொடுப்பது ("அப்பா, எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்")...
chinnakkannan
7th October 2013, 02:07 PM
டியர் கோபால் சார்..
//நவராத்திரியும் அதுவுமாய், கஜுரஹோ ஞாபக படுத்தி தொலைத்த இக்கயவனின் இழி செயலை, // ஏன் இப்படி எல்லாம்
நினைத்துக் கொள்கிறீர்கள்.. நன்றாகத் தான் இருந்தது..
அடுத்து என் விருப்பம் எனச் சொல்வதைப் பார்த்தால் நான் தப்பானவன் ஆகிவிடுவேனா என்ன..
பத்துப் பதினாறு முத்தம் முத்தம்..(அ.பெ.520) இது சி.கவிற்காக..
பொண்ணுக்கென்ன அழகு (என் மகன்)
இடை கையிரண்டில் மோதும் (விடி வெள்ளி)
சொல்லப் போவது காட்சியா பாட்டா..காட்சி எனில் ஆ.கட்டளை (குட்மார்னிங்க் பாய்ஸ் குட்மார்னிங்க் கேர்ள்ஸ்..அம்பிகாபதி என்ன ஆனான் மாண்டான்)
குலமகள் ராதை (சிவாஜி சரோஜாதேவி)
Gopal.s
7th October 2013, 02:15 PM
டியர் கோபால் சார்,
பட்டியல் ஓ.கே.தான். ஆனால் எங்களை மறந்துவிட்டீர்களே என்று கர்ணனும் சுபாங்கியும் வருத்தப்படுவது கேட்கலையா? ('இரவும் நிலவும் வளரட்டுமே'). - இது எனக்காக.
அவன்தான் மனிதன் மஞ்சு எங்கே?. - இது வாசுவுக்காக.
உயர்ந்த மனிதனின் 'வெள்ளிக்கின்னம்தான்' எங்கே? - இது கோபால் உங்களுக்காக. ..
தன்னுடைய இலைக்கு மாத்திரம்(மூன்று பரிமாறிய பின்னும்) இன்றி பக்கத்து இலைகளுக்கும் பாயாசம் கேட்கும் உங்கள் நாசூக்கு..... பரிமாற படும்.
Gopal.s
7th October 2013, 02:20 PM
சின்ன கண்ணன்,
குண சித்திரம்,சூழ்நிலை,காட்சிகள்,பாடல்கள் எல்லாம் கலந்து காதலை மைய படுத்திய மிக சிறந்தவற்றின் தொகுப்பு. விடிவெள்ளி,குலமகள் ராதை,அஞ்சல் பெட்டி சேர்த்தாயிற்று. கே.ஆர்.விஜயா,சௌகார் ஜானகி,பானுமதி சம்மத்தப்பட்டவை கட்டாயம் கிடையாது.
JamesFague
7th October 2013, 02:31 PM
Mr Murali Sir,
You have brought out the real story of Savele Samali which makes me really painful why these people
are after him even after his demise.
Mr Vasu Sir,
That scene not only liked by NT's fans but every one all over the world.
JamesFague
7th October 2013, 02:45 PM
Mr KC Sir,
Your efforts to open the statue at Trichy as well as the Mani Madapam for our Acting God will
definitely will suceed and the days are not far away.
Congratulations for the sucessful meet at Trichy.
chinnakkannan
7th October 2013, 02:49 PM
//கே.ஆர்.விஜயா,சௌகார் ஜானகி,பானுமதி சம்மத்தப்பட்டவை கட்டாயம் கிடையாது.// தாங்க் யூ :)
(என்னடாப்பா ஈஸி சேர்ல அக்கடான்னு படுத்துட்ட..
ஒண்ணுமில்ல மனசாட்சி..கோபால் சார் தொடரொண்ணு தரப் போறாராம்..அதான் ரிலாக்ஸ் பண்றேன்!)
KCSHEKAR
7th October 2013, 02:49 PM
டியர் வாசுதேவன் சார்,
சவாலே சமாளி கிணற்று சீன் - அருமையாக விவரித்திருக்கிறீர்கள்.
goldstar
7th October 2013, 05:35 PM
சவாலே சமாளி - சினிமா நூற்றாண்டு விழா சிறப்பு காட்சி
நடிகர் திலகம் இன்றில்லை.12 வருடங்கள் ஓடி விட்டன அவர் இப்பூவுலகை விட்டு நீங்கி.அவருக்கென்று ஒரு அரசியல் கட்சியோ, அமைப்போ,ஆட்சியில் அதிகாரத்தில் பங்கோ இல்லை. அவர் ரசிகர்களும் ஒரே அமைப்பை ஆதரிப்பவர்களில்லை.சிவாஜி மீது "மாறா அன்பு" கொண்டவர்கள் அவர் எந்த சாதனையையும் செய்யவில்லை என்றும் சொல்கிறார்கள்.அவர்கள் கூற்றுப்படியே எந்த சாதனையையும் புரியாத ஒருவரை எந்த அரசியல் அதிகார பின்புலமும் இல்லாத அவர்தம் ரசிகர்களை பார்த்து இத்துணை கோவமும் ஆத்திரமும் ஏன் ஏற்படுகிறது என்பதுதான் புரியாத புதிர். எதிர்ப்பிலே வளர்ந்த நடிகர் திலகம் இன்றும் அதே எதிர்ப்பையே சந்தித்துக் கொண்டிருக்கிறார். அன்றைய நாட்களில் அதிகமாக அவர் முகம் தாங்கிய போஸ்டர்கள்தானே உரம் போட்டு வளர்க்கப்பட்டது. இன்றும் அது வேறு வடிவத்தில் தொடர்கிறது எனபதுதான் வேதனை.
(தொடரும்)
அன்புடன்
Well said Murali sir...
Our NT will be in our heart and Tamil people heart for centuries to come
Savale Samali photos for you
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT1_zpsc376258c.png
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT2_zps94b27cbb.png
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT6_zps996c1e28.png
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT3_zps36c15af8.png
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT11_zpscd6f4793.png
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT9_zps7e8f22c0.png
goldstar
7th October 2013, 05:36 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT4_zps29fa7efa.png
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT7_zpsd0e5ba9e.png
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT10_zpsede8241d.png
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT8_zpsef6d70dd.png
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT12_zps02f7d70a.png
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT5_zps510c08f8.png
Russellfcv
7th October 2013, 06:31 PM
Dear Chandrasekhar sir
Your efforts will definitely yield good result some day or other.
What you sow is what you reap..!
So, you are doing your best interms of chanting the name of Sir.Sivaji
Great Efforts sir
Harrietlgy
7th October 2013, 08:24 PM
சவாலே சமாளி படத்தை சமீபத்தில் டிவி யில் பார்த்தேன். ஒரு சிறிய குறை அடிக்கடி தலைவரின் கிருதா அளவு மாறி மாறி வரும். யாரும் என்னை தவறாக எண்ண வேண்டாம். இது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது . மற்ற படி படத்தை யாரும் குறை சொல்ல முடியாது .
venkkiram
7th October 2013, 09:37 PM
சவாலே சமாளி படத்தை சமீபத்தில் டிவி யில் பார்த்தேன். ஒரு சிறிய குறை அடிக்கடி தலைவரின் கிருதா அளவு மாறி மாறி வரும். யாரும் என்னை தவறாக எண்ண வேண்டாம். இது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது . மற்ற படி படத்தை யாரும் குறை சொல்ல முடியாது . நமக்கு நாமே திட்டத்தின்படி பார்த்தாலும் கிருதாவின் அளவு ஒரே அளவில் இருக்காதே! இடம் வலம் என அடிக்கடி அங்க இங்க பிசிறு தட்டுமே! :)
Murali Srinivas
7th October 2013, 10:45 PM
சவாலே சமாளி பற்றிய பதிவுகளை பாராட்டிய அனைவருக்கும் நன்றி. அந்த கிணற்றடி காட்சியை மீண்டும் கண் முன்னே கொண்டு வந்த வாசுவிற்கு ஸ்பெஷல் நன்றி.
கார்த்திக் சார்,
ராஜஸ்ரீ பற்றிய write up உங்கள் பாணியில் நச். அவர் நடித்த மற்றொரு நடிகர் திலகத்தின் படம் நிச்சய தாம்பூலம். நடிகர் திலகம் [ரகு எனபது பாத்திரத்தின் பெயர்] என்று நினைத்துக் கொண்டு ஐயா தெரியாதையா ராமாராவை காதலிப்பார்.
சின்ன ஜமீன் ஆனந்த் ஈரோடிற்கு விஜயம். ஈரோடு சங்கீதா திரையரங்கில் சென்ற 4-ந் தேதி வெள்ளிக்கிழமை முதல் வசந்த மாளிகை வெற்றி பவனி.
பாரிஸ்டர் ரஜினிகாந்த் சேலம் நகருக்கு ஒரு short விசிட் அடித்து விட்டு போயிருக்கிறார். சென்ற வாரத்தில் சேலம் ஓரியண்டல் சக்தி திரையரங்கில் கெளரவம் வெளியாகி வெகு சுமார் பிரிண்ட் ஆக இருந்தும் கணிசமான அளவில் மக்களையும் ரசிகர்களையும் தியேட்டருக்கு வரவழைத்திருக்கிறது.
தகவல் உதவி திரு ராமஜெயம்.
அன்புடன்
RAGHAVENDRA
8th October 2013, 06:54 AM
08.10.2013 தேதியிட்ட இன்றைய தி இந்து தமிழ் நாளிதழிலிருந்து...
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/HinduTamilquiz81013_zpsd4fd7d6e.jpg
IliFiSRurdy
8th October 2013, 07:50 AM
[quote=raghavendra;1080533]08.10.2013 தேதியிட்ட இன்றைய தி இந்து தமிழ் நாளிதழிலிருந்து...
/quote]
இந்த ஜூஜூ பியில் இந்து ஊழியர்கள் மற்றும் மய்யம் அங்கத்தினர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்றும் அறிவித்திருக்கலாம்.
(பின் குறிப்பு:இந்துவின் வள்ளல்குணம் ஜகத் பிரசித்தம்.அவர்கள் பரிசு என்றாலே ஒரு போன வருஷ டயரி ஆகத்தான் இருக்கும்.இந்தமுறை "சிறு" பரிசு வேறு!!)
vasudevan31355
8th October 2013, 08:49 AM
கோபால் சார்,
நீங்கள் நினைக்கும்படி அப்படியெல்லாம் சிலவற்றை விட்டு விட முடியாது. கே.ஆர் விஜயா என்றால் உங்களுக்கு அவ்வளவு இளப்பமா? ஏதோ சௌகாரை சொன்னால் கூட ஒத்துக் கொள்ளலாம். ஊட்டி வரை உறவை மறந்து விட்டீர்களா?
பூமாலையில் புது நாடகத்தில் நடிக்க வந்த நாயகியின் மாலை மயக்கதுக்காக அவ்வளவு இளமை கொஞ்சிய ஜோடிக்கு அன்று ஈடு இணை உண்டா?
ஒழுங்காக இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இன்னும் இருக்கிறது. இல்லையென்றால் உண்ணாவிரதப் போராட்டாம்தான். அம்புடுதேன். சொல்லிபுட்டேன்.
Subramaniam Ramajayam
8th October 2013, 10:56 AM
Vasu sir,
Iwill also join your fasting if KRVIJAYA is omitted by gopal, what a lovely pair ooty varai uravu slim sivaji and cute vijaya also a majestic pair in later year films. she has the credentials of acting maximum no of movies, good reminder to gopalatrighttime.whata song from nenjirukkum varai.
KCSHEKAR
8th October 2013, 11:25 AM
Mr KC Sir,
Your efforts to open the statue at Trichy as well as the Mani Madapam for our Acting God will
definitely will suceed and the days are not far away.
Congratulations for the sucessful meet at Trichy.
Thanks for your appreciation.
KCSHEKAR
8th October 2013, 11:26 AM
Dear Chandrasekhar sir
Your efforts will definitely yield good result some day or other.
What you sow is what you reap..!
So, you are doing your best interms of chanting the name of Sir.Sivaji
Great Efforts sir
Thanks for your appreciation.
KCSHEKAR
8th October 2013, 11:28 AM
கோபால் சார்,
நீங்கள் நினைக்கும்படி அப்படியெல்லாம் சிலவற்றை விட்டு விட முடியாது. கே.ஆர் விஜயா என்றால் உங்களுக்கு அவ்வளவு இளப்பமா? ஏதோ சௌகாரை சொன்னால் கூட ஒத்துக் கொள்ளலாம். .
டியர் கோபால் / வாசுதேவன் சார்,
செள்காருக்கு யாருமே இல்லை என்று இளக்காரம் வேண்டாம். பார்த்த ஞாபகம் இல்லையோ பாடல் ஒன்றுக்காகவாவது செள்காரையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இது எச்சரிக்கை இல்லை. கோரிக்கை.
KCSHEKAR
8th October 2013, 11:38 AM
இன்று பிறந்த நாள் காணும் நண்பர் திரு.ஜெ. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Gopal.s
8th October 2013, 11:59 AM
ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
vasudevan31355
8th October 2013, 12:59 PM
இனிய நண்பர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு என் மனப்பூர்வமான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
mr_karthik
8th October 2013, 01:40 PM
Dear Shri. Radhakrishnan,
Wish you many happy returns of the Day.
Regards,
Mister Karthik.....
parthasarathy
8th October 2013, 05:14 PM
Dear Shri. Radhakrishnan,
Wish you many happy returns of the Day.
Regards,
R. Parthasarathy
kalnayak
8th October 2013, 05:31 PM
Dear Radhakrishnan sir,
Wish you many more happy returns of your birthday!!!
KCSHEKAR
8th October 2013, 05:35 PM
தினமலர் - வாரமலர்
நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஓய்.ஜி. மகேந்திரா (2)
http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=17435&ncat=2
RAGHAVENDRA
8th October 2013, 07:35 PM
டியர் ராதா கிருஷ்ணன் சார்
தங்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
தங்களுக்காக இதோ இப்பாடல்
http://youtu.be/pzO8BBL_Zu8
Subramaniam Ramajayam
8th October 2013, 08:11 PM
Many many happy returns of the day my dear radhakrishnan sir,
and blessings to you.
Gopal.s
8th October 2013, 08:22 PM
சிவாஜியின் காதல்கள்- 1
பராசக்தி- முதற்காதல்.
புது பெண்ணின் மனசை தொட்டு போன அந்த புத்தம் புது நாயகன்.
முதற்காதல் என்றால் எல்லோருக்குமே புது அனுபவம். ஐம்பதுகளின் இளைஞர்களுக்கு முதற்காதல் பிராணநாதா,பிரபோ என்ற ரேஞ்சில் இல்லாவிட்டாலும் அட்லீஸ்ட் ஒரு அத்தான்,மாமா,ஏன்னா ,என்னாங்க அளவிலாவது வாய்த்திருக்கும். ஆனால் அந்த இளைஞனுக்கு வாய்த்தது வா,போ,குணா என்று விளிக்கும் ஒரு பாரதி கனவு கண்ட புதுமை பெண்.பேஷ் பேஷ் அந்த இளைஞனின் முதற்காதலே மிக நன்றாக வாய்த்துள்ளதே? பத்மினியுடன் முதற்படம்.என்ன திகைக்கிறீர்கள்?படம் டைட்டில் கார்டு பண்டரி பாய்(பத்மினி)என்றே காட்டும்.விமலாவுடன் குணாவின் முதற்காதலை பார்க்கு முன் ஜாலியுடன் (கண்ணம்மா) ஜாலியாக பார்த்த முதல் நடனத்தை (சிவாஜியின் முதல் பாடல் காட்சி)பார்த்து விடலாமா?
அந்த பணக்கார ,பர்மா செல்ல பிள்ளை ,தமிழ் நாட்டில் முதல் குரலை ஏளனம் செய்து ,ஹோட்டல் paradise (பர்தேஸ்) நுழையும் அமர்க்களமாய். ஸ்டைல் ஆக அலட்சியம் கலந்த curiosity யுடன் அறையை ஒரு நோட்டம் விட்டு,காப்பி ஆர்டர் செய்து,ரூம் பாயிடம் காசை சுண்டி டிப்ஸ் கொடுக்கும் தோரணை!!என்ன சொல்ல?கீழே வந்து மஜுராவிற்கு டிக்கெட் கேட்க ,அன்றைக்கு டிக்கெட் இல்லாமல் ,மறுநாள்தான் ,பண்ணி விடலாமா என்று கேட்கும் reception ஆளிடம், ஓரிரு நொடி கடுப்பு கலந்து ஏமாற்றம் காட்டி சரி என்பான்.அறைக்கு திரும்பி வந்தால் ,படுக்கையில் ஒரு முன் பின் அறியாத பெண்.பட படப்புடன் வியர்வையை டையால் துடைத்து, பிறகு அந்த பெண் தன் தவறுதான் என்றதும் ,காப்பியை கொடுத்து உபசரித்து,ஒரு ஆர்வம்,தயக்கம்,தடுமாற்றம்,பயம் கலந்த akwardness என்ற எல்லா உணர்வும் காட்டி, நடனத்திற்கு செல்ல அரை மனதாக சம்மதம் கொடுக்கும் அழகு!!பின் அழைப்பது பெண்ணல்லவா?ஒரு பெண்ணின் அருகாமை ,அக்கால இளைஞர்களுக்கு(50 களின்) கொடுக்கும் உணர்வை பார்க்க விழைவோர் ,இக்காட்சியை பார்த்தே ஆக வேண்டும்.நெளிந்து கொண்டு நாட்டியத்தில் முள் மேல் அமர்வது போல ,நடுவில் போய் விடலாமே என்று தயக்கம் கலந்த அரை மனதை, உணர்த்தியும்,பெண்ணின் அருகாமை தரும் சிறு சலனத்தால் பாவம் இளைஞன்...
இந்த காட்சியில் நடித்தவன் யாரோ கணேசன் என்ற புது முகமாம்!!
அதே இளைஞன். கதாநாயகி அறிமுக காட்சியில் பெட்டியை பிடுங்கி வில்லன் ஓட ,கதாநாயகன் அவனுடன் போராடி ,பெட்டியை மீட்டு தந்து,காதலை பெறுவதையே பார்த்த நமக்கு ஒரு அதிர்ச்சி. பெட்டியை ,கதாநாயகியிடம் இருந்து பறித்து ஒடுபவனே நாயகன்தான்.பெட்டியை விட்டு ,சாப்பாட்டை எடுத்து ,காக்கைகளுடன் (முதல் பாடலுடன் பாடல் காட்சி-சிவாஜிக்கு)பகிர்ந்து பாடி, மகிழும் இடம் ,கதாநாயகியின் வீடாகவே இருக்க வேண்டுமா?அவளை கண்டதும் ஒரே ஓட்டம்.
பிறகு பௌர்ணமி நாளில்,ஒரு நதிக்கரையில் அதே பெண். அவள் நல்ல மனமறிந்து, அவள் அழைப்பை ஏற்று வீடு சென்றால்....
காதல் மொழியா பேசினாள் கட்டிளம் கன்னி?குணா என்றும்,வா,போ என்றும் டோஸ்தான்.பிச்சைஎடுக்க வெட்க படவில்லை.பைத்தியமாக நடிக்க வெட்க படவில்லை,திருட வெட்க படவில்லை ஆனால் நீ ஏமாந்ததை சொல்ல வெட்கம், உன்னை ஏமாற்றிய அந்த ஜால காரியை பாராட்டுகிறேன்,அவளால்தான் நீ இந்த உலகத்தை பார்த்தாய் என்றெல்லாம் lecture பாணியில் டோஸ்..ஆனால் கடைசியில் சிறிதே கனிந்து ஒருவரையொருவர் புரிவர்.(அண்ணாவிடம் கற்றவளாம்). பிறகு இரவு தூங்காமல் தங்கையை எண்ணி குணசேகரன் உருக... விமலாவோ குணசேகரனின் காதல் கனவில் உருக...
சிவாஜியின் கதாநாயகி மட்டும் பாடும் முதல் காதல் டூயட்.சுரிதாரில் அமர்க்களமாக முதல் பட கூச்சம் சிறிதும் இன்றி, கனவு காணும் கதாநாயகியின் எண்ண ஓட்ட படியே காதல் செய்வார்.(அந்த பாத்திர நடைமுறை சாயல் அற்று)
இந்த காட்சியில் நடித்தவன் யாரோ கணேசன் என்ற புதுமுகமாம்!!!
கடைசி காட்சியில் சுபம் போடும் முன்னால், நான் போகட்டுமா என தயங்கி கேட்கும் நாயகியை ,சோபாவின் கை பிடியில் காப்பி குடித்து கொண்டே தன் எண்ணத்தை உணர்த்தும் அழகு. பிறகு பெரிய நூலால் அவள் தலைப்பை இழுத்து சொந்த குரலில் பெண்ணின் மனதை தொட்டு பாடி கிண்டலிக்கும் இளமை.பார்த்து விட்டு சிறிய நூல் போதுமே என்று சொல்லும் அண்ணியின் முன் நாண சம்மதம்.
இந்த காட்சியிலும் யாரோ கணேசன் என்ற புதுமுகமாம்!!!!
chinnakkannan
8th October 2013, 09:06 PM
//இந்த காட்சியிலும் யாரோ கணேசன் என்ற புதுமுகமாம்!!!! // அமர்க்கள ஆரம்பம்.. தொடருங்கள்... தொடருங்கள்
Russelldwp
8th October 2013, 09:06 PM
Dear Mr.Radhakrishnan
Happy Birthday Wishes to You and Many Many Happy Returns of the Day
C.Ramachandran.
RAGHAVENDRA
8th October 2013, 09:24 PM
300 படங்களின் விஷயங்களையும் முதல் படத்திலேயே கோடிட்டுக் காட்டிய கோமகனைப் பற்றிய முதல் காதல் பாடல்கள் தொடரை முன்னூறாவது பக்கத்தில் துவக்கியது என்ன பொருத்தம்... ( யதார்த்தமான தமிழ் சொற்றொடர் தான்... உடனை நினைவுகளை எங்கோ கொண்டு செல்ல வேண்டாம் ).
கோபால் ... சூப்பர்...
Harrietlgy
8th October 2013, 09:31 PM
நல்ல துவக்கம் திரு. கோபால் தொடர்ந்து எழுதுவதை எதிர் பார்க்கிறேன்.
J.Radhakrishnan
8th October 2013, 10:24 PM
நடிகர்திலகத்தின் புகழ் பாடும் அன்பு இதயங்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.
நடிகர்திலகத்தை தெய்வமாக வணங்கும் இந்த எளியவனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறிய சந்திரசேகர் சார், கோபால் சார், வாசுதேவன் சார், கார்த்திக் சார், பார்த்தசாரதி சார், கல்நாயக் சார், ராகவேந்தர் சார்,சுப்பிரமணியம் ராமஜெயம் சார், ராமசந்திரன் சார் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
RAGHAVENDRA
8th October 2013, 10:39 PM
http://galleries.celebs.movies.2.pluz.in/albums/abirami/uploads/Kollywood/2012/Nov/24/Vasantha_Maligai_Re-Releasing_Movie_Stills_/Vasantha_Maligai_Re-Releasing_Movie_Stills_1099c7c4d403f55f0f4869a0e6b ad141.jpg
இன்று 8.10.2013 முதல் தினசரி 3 காட்சிகளாக திருநாகேஸ்வரம் லட்சுமி திரையரங்கில் ஆனந்தின் திக் விஜயம்.
தகவலளித்த பம்மலார் அவர்களுக்கு மிக்க நன்றி.
vasudevan31355
8th October 2013, 10:50 PM
சிவாஜியின் காதல்கள்- 1
பராசக்தி- முதற்காதல்.
புது பெண்ணின் மனசை தொட்டு போன அந்த புத்தம் புது நாயகன்.
http://meowchie.snydle.com/files/2013/05/fathers-day-gift-ideas-8.jpg
Murali Srinivas
8th October 2013, 11:34 PM
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பர் ராதாகிருஷ்ணன் அவர்களே!
இது போன்ற பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு என்றென்றும் அமையட்டும்!
அன்புடன்
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.