PDA

View Full Version : Filmography of Tamil Cinema 1961-1970



RAGHAVENDRA
16th February 2013, 07:56 PM
தமிழ்த் திரையுலகில் 1931 முதல் 1990 ஆண்டு வரையிலான கால கட்டத்தில் வெளிவந்த திரைப்படங்களைப் பற்றிய விவரங்களில் 1961-1970 ஆண்டுகளுக்கான விவரங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளப் படும்.




முக்கிய குறிப்பு -
சிவாஜி கணேசன் மற்றும் எம்.ஜி.ஆர். திரைப்படங்களின் பட்டியல்களுக்குத் தனி இழைகள் உள்ளன. அவற்றிற்கான இணைப்பு இங்கே தரப் படுகிறது. எனவே அவற்றின் விவரம் இங்கும் மீண்டும் தர வேண்டியதில்லை. படங்களின் பெயர்கள் மட்டுமே இடம் பெறும். வேறு தகவல்கள் இங்கு இடம் பெறாது.

சிவாஜி கணேசன் பட விவரங்களுக்கான இணைப்பு
http://www.mayyam.com/talk/showthread.php?10239-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Filmography-News-and-Events

எம்.ஜி.ஆர். பட விவரங்களுக்கான இணைப்பு
http://www.mayyam.com/talk/showthread.php?10240-Ponmanachemmal-m-g-r-Filmography-news-amp-events



LINKS FOR OTHER THREADS ON TAMIL CINEMA FILMOGRAPHY
1931-1940 (http://www.mayyam.com/talk/showthread.php?10260-Filmography-of-Tamil-Cinema-1931-1940)
1941-1950 (http://www.mayyam.com/talk/showthread.php?10262-Filmography-of-Tamil-Cinema-1941-1950)
1951-1960 (http://www.mayyam.com/talk/showthread.php?10263-Filmography-of-Tamil-Cinema-1951-1960)


ஆண்டு 1961

வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 33

பட்டியல் அகர வரிசையில் தரப் படுகிறது
1. அக்பர்
2. அரசிளங்குமரி – 01.01.1961
3. அன்பு மகன் – 27.01.1961
4. எல்லாம் உனக்காக – 01.07.1961
5. என்னைப் பார் – 16.06.1961
6. கப்பலோட்டிய தமிழன் – 07.11.1961
7. கானல் நீர் – 21.07.1961
8. குமார ராஜா – 21.04.1961
9. குமுதம் – 29.07.1961
10. கொங்கு நாட்டுத் தங்கம் – 14.04.1961
11. சபாஷ் மாப்பிளே – 14.07.1961
12. தாய் சொல்லைத் தட்டாதே – 07.11.1961
13. தாயில்லாப் பிள்ளை – 18.08.1961
14. திருடாதே – 23.03.1961
15. தூய உள்ளம் – 14.01.1961
16. தேன் நிலவு – 30.09.1961
17. நல்லவன் வாழ்வான் – 31.08.1961
18. நாக நந்தினி – 10.02.1961
19. பணம் பந்தியிலே – 07.11.1961
20. பங்காளிகள் -
21. பனித் திரை – டிசம்பர் 1961
22. பாக்கிய லக்ஷ்மி – 07.11.1961
23. பாச மலர் – 27.05.1961
24. பாலும் பழமும் – 09.09.1961
25. பாவ மன்னிப்பு – 16.03.1961
26. புனர் ஜென்மம் - 21.04.1961
27. மருத நாட்டு வீரன் – 24.08.1961
28. மல்லியம் மங்களம் –
29. மணப் பந்தல்
30. மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே – 27.04.1961
31. யார் மணமகன் – 22.09.1961
32. ரேவதி – 19.01.1961
33. ஸ்ரீ வள்ளி – 01.07.1961

RAGHAVENDRA
16th February 2013, 09:10 PM
1. அக்பர்

மொகலே ஆஸம் ஹிந்தி திரைப்படத்தின் தமிழாக்கம்.

RAGHAVENDRA
16th February 2013, 09:14 PM
3. அன்பு மகன்

தயாரிப்பு - ஜெயலக்ஷ்மி பிக்சர்ஸ்
நீளம் 15120 அடி
தணிக்கை - 10.01.1961
வெளியான நாள் - 27.01.1961

தயாரிப்பு - டி.வி.எஸ்.ராஜு
இயக்கம் - டி.பிரகாஷ் ராவ்
வசனம் - மாறன்
இசை - டி.சலபதி ராவ்

ஏ. நாகேஸ்வர ராவ், சாவித்திரி மற்றும் பலர் நடித்தது.

RAGHAVENDRA
17th February 2013, 02:24 PM
5. குமுதம்

http://padamhosting.com/out.php/i73447_kumudam4.png

http://padamhosting.com/out.php/i73446_kumudam5.png

http://padamhosting.com/out.php/i73445_kumudam6.png

http://padamhosting.com/out.php/i73443_kumudam8.png

நடிக நடிகையர் - எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி, எம்.ஆர்.ராதா, சௌகார் ஜானகி, எஸ்.வி.ரங்காராவ் மற்றும் பலர்

இசை - கே.வி.மகாதேவன்
இயக்கம் ஆதுர்த்தி சுப்பாராவ்

இப்படம் மோசர் பேர் நிறுவனத்தால் குறுந்தகடு மற்றும் நெடுந்தகடு வடிவில் வெளியாகியுள்ளது.

RAGHAVENDRA
17th February 2013, 02:26 PM
குமுதம் படப் பாடல்களில் சிலவற்றின் காணொளிகள்

என்னை விட்டு ஓடிப் போக முடியுமா - சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா


http://www.dailymotion.com/video/xie5uf_ennai-vittu-odi-poga-mudiyuma_auto#.USCYyvKjKWI

கல்யாணம் ஆனவரே சௌக்கியமா - பி.சுசீலா


http://youtu.be/Vdx5wf2xEAg

மாமா மாமா - டி.எம்.சௌந்தர்ராஜன், கே.ஜமுனா ராணி - சூப்பர் ஹிட் பாடல்


http://youtu.be/ZLtKerokcPg

RAGHAVENDRA
19th February 2013, 03:50 PM
குமுதம் கலைஞர்கள் முழு விவரம்

மாடர்ன் தியேட்டர்ஸ் அளிக்கும்
குமுதம்

கதை வசனம் – கே.எஸ்.கோபால கிருஷ்ணன்
பாடல்கள் – கண்ணதாசன், மருதகாசி
பின்னணி பாடியவர்கள் – சுசீலா, ஜமுனா ராணி, ராஜேஸ்வரி, டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்த ராஜன், ராகவன்

இசையமைப்பு கே.வி.மஹாதேவன், உதவி புகழேந்தி
வாத்ய கோஷ்டி – கே.வி.மஹாதேவன் குழுவினர்

நடன அமைப்பு – ஹீராலால், பி.ஜெயராம்
நடனம் – கள்ளபார்ட் நடராஜன், வி.என்.ஜோதி

ஒளிப்பதிவு டைரக்டர் – ஆர். சம்பத்

ஒலிப்பதிவு
பாடல்கள் – ஆர்.ஜி. பிள்ளை
வசனம் – பி.எஸ்.நரசிம்மன்
ஆர் சி ஏ சவுண்ட் ரிகார்டிங் முறையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது

ஆர்ட் மற்றும் செட்டிங்ஸ் – பி.நாகராஜன்
பேக்ரவுண்டு பெயிண்டிங் – கே.வேலு
ஆடை அலங்காரம் – எம்.அர்த்தநாரி
மேக்கப் – பி.ஆர்.சிங், பி.எம்.வேலாயுதம்
லேபரட்டரி – டி.பி.கிருஷ்ணமூர்த்தி
எடிட்டிங் – எல்.பாலு
ஸ்டில்ஸ் – ஏ.ஜி.ஜோசப்

நடிக நடிகையர் –
எஸ்.எஸ்.ராஜேந்திரன், எஸ்.வி.ரங்காராவ், எம்.ஆர்.ராதா, டி.எஸ்.முத்தையா, ராமராவ், சி.எஸ்.பாண்டியன், பி.டி.சம்பந்தம், சாயிராம், விஜயகுமாரி, சௌகார் ஜானகி, பி.எஸ்.சரோஜா, சுந்தரிபாய், மோகனா, சீதாலக்ஷ்மி மற்றும் பலர்

ஸ்டூடியோ – மாடர்ன் தியேட்டர்ஸ்

டைரக்ஷன் – ஏ.சுப்பாராவ்

parthasarathy
20th February 2013, 11:06 AM
Dear Mr. Raghavendiran,

Your efforts to compilation of Tamil Films is mind blowing, especially this series and the NT filmography and link.

Coming to "Kumudham", if I am right it's a remake or bilingual - in Telugu, its "Manchi Manushulu" the cast almost same except lead Artistes - A. Nageswara Rao (SSR's role), Savitri (Vijayakumari's role) and Nagabhushanam (MRR's role - In fact, he consistently repeated MRR's role in Telugu in remakes and went on to stage "Rakthakanneeru" drama, remake of MRR's "Rathakkanneer" with amazing success.). Adhurthi Subba Rao was the Director in both languages.

It ran for more than 100 days in both languages.

Regards,

R. Parthasarathy

RAGHAVENDRA
20th February 2013, 02:14 PM
Dear Sarathy,
Thank you for the nice words of appreciation. Hope this is a valuable addition to the treasure trove called mayyam.
And thank you for the information on Kumudham and its success,
Regards
Raghavendran

adiram
20th February 2013, 03:54 PM
Mr. Raghavendra sir mentioned about three wonderful songs in kumudham, with video form..

some more songs in 'Kumudham' are....

kaayame idhu poyyada (for m.r.radha & ramaroa) by tms

miyaav miyaav poonaikkutty ( for sowkar) by m.s.rajeswari

kallile kalaivannam kandaan ( for s.s.r.) by sirkazhi govindarajan

kumudham is a 100 days movie in many centres.

Isai Rasigan
21st February 2013, 10:26 PM
"என்னைப்பார்" என்ற திரைப்படமும் 1961இல் வெளி வந்தது என்று நினைக்கிறேன்.

Isai Rasigan
21st February 2013, 10:36 PM
"நிச்சய தாம்பூலம்" திரைப்படம் "நிச்சயமாக" 1961 தான்.

Murali Srinivas
22nd February 2013, 12:01 AM
"நிச்சய தாம்பூலம்" திரைப்படம் "நிச்சயமாக" 1961 தான்.

நிச்சயமாக நிச்சய தாம்பூலம் 1961-ல் வெளியாகவில்லை. அது வெளியான தேதி 09-02-1962. அதாவது 12 நாட்களுக்கு முன்தான் 51 வருடங்களை நிறைவு செய்தது.

அன்புடன்

RAGHAVENDRA
22nd February 2013, 07:27 AM
டியர் இசை ரசிகன்
தங்களுடைய சுட்டிக் காட்டலுக்கு நன்றி. என்னைப் பார் படம் 1961ல் தான் வெளியானது. ஒரு சில படங்கள் விட்டுப் போனவை அனைத்தும் சேர்த்து முழுமையான பட்டியல் தரப் பட்டுள்ளது. தங்களுடைய உதவிக்கு என் உளமார்ந்த நன்றி.

முரளி சார் சொன்னது போல் நிச்சய தாம்பூலம் படம் 1962ல் வெளியானது.

RAGHAVENDRA
22nd February 2013, 08:06 AM
என்னைப் பார்
தணிக்கையான நாள் 01.06.1961
வெளியான நாள் 16.06.1961

http://shakthi.fm/album-covers/ta/d9c72a20/cover_m.jpg

தயாரிப்பு – பழநியப்பா ப்ரொடக்ஷன்ஸ்

நடிக நடிகையர்

டி.ஆர்.மகாலிங்கம், பி.எஸ்.சரோஜா, எம்.என். நம்பியார், எல். விஜயலக்ஷ்மி, வி.ஆர். ராஜகோபால், ஜி. சகுந்தலா, டி.பாலசுப்ரமணியம், சி.கே. சரஸ்வதி, காகா ராதாகிருஷ்ணன், குசலகுமாரி மற்றும் பலர்
நடன அமைப்பு – பி.ஜெயராமன், டெஸ்மாண்ட்

வசனம் ச. அய்யாப்பிள்ளை, தமிழ்ப் பித்தன்

ஒலிப்பதிவு –

பாடல்கள் – ஈ.ஐ. ஜீவா – அருணாச்சலம் ஸ்டூடியோ, டி. மோகன சுந்தரம் – கோல்டன்
வசனம் – டி. லாசரஸ்

எடிட்டிங் – கே. கோவிந்த சாமி

ஆர்ட் டைரக்டர் – ப. அங்கமுத்து

ஒப்பனை – ஜி. மாணிக்கம், தனக்கோடி, பீதாம்பரம்

ஆடை அணிமணி – ஆர். சொக்கலிங்கம்

ஸ்டில்ஸ் – கோ. கோட்டி, ஆர்.பி. சாரதி

பிராசஸிங் – எம்.எஸ். பாஸ்கர், எம்.பி. எத்திராஜ் – கோல்டன் சினி லேப்

தயாரிப்பு நிர்வாகம் – சிடி ஏ.ஆர். ஆறுமுகம் – ஸ்டூடியோ, சிவபுரி சண்முகம் – அலுவலகம்

உதவி டைரக்ஷன் – தமிழ்ப் பித்தன், ஆர். நடராஜன்

இசை அமைப்பு – டி.ஜி. லிங்கப்பா

திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம் – ஜி.ஆர். நாதன்

ஸ்டூடியோ – கோல்டன் சினி ஸ்டூடியோஸ் லிட், சென்னை 26

தயாரிப்பாளர்கள் – சிதம்பரம், ஆரோக்கியசாமி

பாடல்கள்

1. காட்சியும் நீதான் – அ. மருதகாசி – டி.ஆர். மகாலிங்கம், எஸ். ஜானகி
2. கன்னியரே கன்னியரே – கண்ணதாசன் – பி.சுசீலா
3. மூத்தோர் சொல் வார்த்தைகள் – தமிழ்ப் பித்தன் – வி.என். சுந்தரம்
4. எதிர் கொண்டு வரவேற்குதே – அ. மருதகாசி – டி.ஆர். மகாலிங்கம், எஸ்.ஜானகி
5. வானின்றி நிலவில்லை – அ. மருதகாசி – டி.ஆர். மகாலிங்கம்
6. சின்னப் பொண்ணே – ச. அய்யாப் பிள்ளை – எஸ்.சி. கிருஷ்ணன், கே.ஜமுனாராணி
7. வஞ்சியரின் குணமோ – கண்ணதாசன் – பி.சுசீலா
8. காதல் என்பது கதை தானோ – கு.மா. பாலசுப்ரமணியம் – கே. ஜமுனா ராணி
9. பார் பார் என்னைப் பார் – ஏ.எல். ராகவன், கே.ஜமுனா ராணி

பாடல்களைக் கேட்பதற்கான இணைப்பு

http://www.raaga.com/channels/tamil/album/T0001587.html

RAGHAVENDRA
26th February 2013, 10:32 AM
கானல் நீர்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/KANALNEERAD_zps523b9201.jpg

தணிக்கையான தேதி - 02.06.1961
வெளியான தேதி - 21.07.1961

தயாரிப்பு - பரணி பிக்சர்ஸ்
தயாரிப்பாளர் இயக்குநர் - பி.ராமகிருஷ்ணா
வசனம் - வலம்புரி சோமநாதன்
இசை - மாஸ்டர் வேணு

நடிப்பு - ஏ.நாகேஸ்வரராவ், தேவிகா, பி.பானுமதி

தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் தயாரான படம்.

RAGHAVENDRA
26th February 2013, 10:41 AM
குமார ராஜா

http://www.thehindu.com/multimedia/dynamic/00941/04cp_blast_kumara_r_941777e.jpg

தணிக்கை - 17.04.1961
வெளியான நாள் - 21.04.1961

தயாரிப்பு - சிவகாமி பிக்சர்ஸ்
தயாரிப்பாளர் - கே. முனிரத்னம்
இயக்கம் - ஜி.கே. ராமு
இசை - டி. ஆர் பாப்பா

நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல தான் ஒரு சிறந்த குணசித்திர நடிகரும் கூட என சந்திரபாபு நிரூபித்த மற்றொரு படம்.

மிக அருமையான பாடல்கள் டி.ஆர். பாப்பா இசையில் மிகவும் பிரபலமாயின. மணமகளாக வரும் என்ற பாடல், வி.என்.சுந்தரம் அவர்கள் பாடியது, பி.லீலா பாடிய நான் வந்து சேர்ந்த இடம் நல்ல இடம் தான், மேலே பறக்கும் ராக்கெட்டு மின்னல் பூச்சி ஜாக்கெட்டு, மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக நம் நெஞ்சை உருக்கும் சந்திரபாபுவின் குரலில் என்றைக்கும் பொருந்தும் வரிகளைக் கொண்ட ஒண்ணுமே புரியலே உலகத்திலே பாடல் இவையாவும் இன்றைக்கும் இப்படத்தை மறக்க முடியாத படங்களின் வரிசையில் சேர்த்து விட்டன.

குமார ராஜா திரைப்படத்தைப் பற்றி ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரை



http://www.thehindu.com/template/1-0-1/gfx/logo.jpg

March 4, 2012

Randor Guy

http://www.thehindu.com/multimedia/dynamic/00941/04cp_blast_kumara_r_941777e.jpg

J. P. Chandrababu, T. S. Balaiah, M. N. Rajam and Suryakala

Chandrababu, the talented singing star and comedian, was one of the leading figures of Tamil Cinema in the bygone era. Following his brilliant double role in the B. R. Panthulu's Shabash Meena, he became a sought-after actor. Producers and directors saw potential in him as a hero instead of a mere comedian. In some films such as Annai and Sahodari , he was brought on board late in the production to save the films which he did with his portrayals, natural and, of course, laugh-raising. There was a touch of the West in everything he did, including his singing, and he remains till today the only artist in Tamil Cinema who could ‘yodel.' One of the films in which he played the hero was Kumara Raja. He excelled in the song and dance sequences. The film was directed by G. K. Ramu, the talented cinematographer and filmmaker, and was produced by Muniratnam of Sivakami Pictures who also produced the MGR-starrer Puthumai Pitthan written by Mu. Karunanidhi.

Kumara Raja (Chandrababu) is the playboy son of a wealthy man (T. S. Balaiah). The father dreams of getting the right wife for his son whose only interests in life are to sing and dance with women. He has a young friend (Suryakala) with whom he sings and dances, while his father finds a modest girl to become his wife (Rajam). Life changes unexpectedly and, as it often happens in the movies, the hero turns over a new leaf thanks to his wife.

Kumara Raja became a memorable movie mainly because of its melodious music. Its popular songs include ‘Naan vandhusendha idam' (P. Leela), ‘Manamagalaga varum' (V. N. Sundaram) and ‘Onnumey puriyaley' (Chandrababu).

The composer who set to tune such songs was T. R. Papa. A violinist with great knowledge of Carnatic music, he began composing after gaining experience as an orchestra player in movies and his music in Joseph Thaliath's Iravum Pagalum won him much recognition.

The vamp in the movie was played by the Telugu starlet Suryakala. She rose to prominence with the Tamil film Anbu Engey, starring K. Balaji, Pandari Bai, Devika and S. S. Rajendran. In this film, the song picturised on Suryakala, ‘Minnal poochi jacket' became a hit. However, Suryakala did not make it to the top and sadly slipped into oblivion, eventually picking up whatever roles came her way.

The father's role was played by the brilliant character actor T .S. Balaiah. Interestingly, he sings a song ‘Manamagalaga varum' in the movie with voice lent by the Carnatic singer V. N. Sundaram, and it became a hit.

Remembered for the melodious music by T. R. Papa, with some songs becoming hits, and the impressive performances by Chandrababu and Balaiah.


Link for The Hindu online page: http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article2958611.ece



குமார ராஜா படப் பாடல்களை இணைய தளத்தில் கேட்பதற்கான இணைப்பு

http://www.raaga.com/channels/tamil/album/T0001659.html

RAGHAVENDRA
2nd March 2013, 09:25 AM
கொங்கு நாட்டுத் தங்கம்

http://padamhosting.com/out.php/i131545_vlcsnap2011121611h00m42s84.png

தணிக்கை - 05.04.1961
வெளியீடு - 14.04.1961

தயாரிப்பு - தேவர் பிலிம்ஸ் - எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர்
இயக்கம் - எம்.ஏ.திருமுகம்
கதை வசனம் - ஆரூர் தாஸ்
இசை - கே.வி.மகாதேவன்

நடிக நடிகையர் - எம்.ஆர். ராதா, புஷ்பலதா, சி.எல்.ஆனந்தன்


கரும்பாக இனிக்கின்ற பருவம் உள்பட மிக இனிமையான பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன.

பாடல்களை இணையத்தில் கேட்க
http://www.raaga.com/channels/tamil/album/T0002179.html

பாடல் காட்சிகள்

நெஞ்சினிலே

http://youtu.be/BQdX0Wz3myE

மற்ற பாடல் காட்சிகளுக்கான இணைப்புகள்

கந்தா உன் வாசலிலே
http://www.youtube.com/watch?v=cpVGUaZBrZo

உலகில் எல்லா
http://www.youtube.com/watch?v=rNmnSZcu0VI

கந்தா உன் வாசிலலே
http://www.youtube.com/watch?v=cpVGUaZBrZo

கண்டதைக் கேட்டதை
http://www.youtube.com/watch?v=UxAgLF90Uw0

Russellmai
14th June 2014, 05:44 PM
அன்புள்ள இராகவேந்திரா சார்
இந்த திரியிலும் தங்களது பதிவுகளைத் தொடர
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
அன்பு கோபு