PDA

View Full Version : Filmography of Tamil Cinema 1931-1940



RAGHAVENDRA
12th February 2013, 04:29 PM
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நமது மய்யத்தின் பங்கு தமிழ் சினிமாவின் வரலாற்றில் தனியிடம் பெற்று வருகிறது, அதனுடைய வளர்ச்சியிலும் பங்காற்றி வருகிறது. இதனை ஒரு ஆவணப் பொக்கிஷமாக பலர் பயன் படுத்தி வருகின்றனர். இதற்கு மேலும் வலு சேர்த்திடும் வகையில் தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சியை அறிந்து கொள்வது அவசியம். அதற்கு முதல் தேவை, தமிழ்த்திரைப்படங்களின் பட்டியல் மற்றும் அவை தொடர்பான தகவல்கள். இந்த தேவையைப் பூர்த்தி செய்யும் முயற்சியில் இத்திரி தொடங்கப் படுகிறது. 1931 தொடங்கி 1990 வரையிலான 60 ஆண்டு கால வரலாற்றினை இந்த TAMIL FILM CLASSICS பிரிவில் நாம் பதிவு செய்யலாம். அதற்குப் பிந்தைய கால கட்டங்கள் நடப்பு பிரிவில் இடம் பெறுகின்றன. இந்த 60 ஆண்டு கால படங்களையும் ஒரே திரியில் கொண்டு வருவது கடினம். எனவே ஒவ்வொரு பத்து ஆண்டு கால கட்டத்தையும் தனித் திரிகளாக அமைத்து அதில் தகவல்களை நாம் பகிர்ந்து கொள்வோம். அனைவருமே இதில் தகவல்களைத் தருவது முழுமையடைய உதவும். வரிசைக் கிரமமாக படங்களின் தகவல்களை பதிவு செய்வதே சரியாக இருக்குமாதலால் அனைவருமே இந்த வரிசைக் கிரமத்தை கடைப்பிடிக்க வேண்டுகிறேன். ஒவ்வொரு ஆண்டிற்கும் துவங்கும் போது அந்த ஆண்டு வெளிவந்த படங்களின் பட்டியலும் இங்கு தரப்படும். எங்கெங்கு முடியுமோ அங்கு தேதியும் தரப்படும்.




முக்கிய குறிப்பு -
சிவாஜி கணேசன் மற்றும் எம்.ஜி.ஆர். திரைப்படங்களின் பட்டியல்களுக்குத் தனி இழைகள் உள்ளன. அவற்றிற்கான இணைப்பு இங்கே தரப் படுகிறது. எனவே அவற்றின் விவரம் இங்கும் மீண்டும் தர வேண்டியதில்லை. படங்களின் பெயர்கள் மட்டுமே இடம் பெறும். வேறு தகவல்கள் இங்கு இடம் பெறாது.

சிவாஜி கணேசன் பட விவரங்களுக்கான இணைப்பு
http://www.mayyam.com/talk/showthread.php?10239-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Filmography-News-and-Events

எம்.ஜி.ஆர். பட விவரங்களுக்கான இணைப்பு
http://www.mayyam.com/talk/showthread.php?10240-Ponmanachemmal-m-g-r-Filmography-news-amp-events



தங்கள் அனைவரின் ஒத்துழைப்பிற்கும் மற்றும் மய்யம் திரிக்கும் முன் கூட்டிய நன்றி.

1931-1940 கால கட்டத்தில் ஒவ்வொர் ஆண்டின் துவக்கப் பதிவிற்கான இணைப்புகள்.

1931 (http://www.mayyam.com/talk/showthread.php?10260-Filmography-of-Tamil-Cinema-1931-1940&p=1016330&viewfull=1#post1016330)
1932 (http://www.mayyam.com/talk/showthread.php?10260-Filmography-of-Tamil-Cinema-1931-1940&p=1016410&viewfull=1#post1016410)
1933 (http://www.mayyam.com/talk/showthread.php?10260-Filmography-of-Tamil-Cinema-1931-1940&p=1018132&viewfull=1#post1018132)
1934 (http://www.mayyam.com/talk/showthread.php?10260-Filmography-of-Tamil-Cinema-1931-1940&p=1019659&viewfull=1#post1019659)
1935
1936
1937
1938
1939
1940
குறிப்பு – ஒவ்வோர் ஆண்டின் பட்டியல் முடிந்த பின் இணைப்புகள் கொடுக்கப்படும்.


ஆண்டு 1931

வெளிவந்த படங்களின் எண்ணிக்கை - 1

காளிதாஸ்

http://upload.wikimedia.org/wikipedia/commons/b/b9/Kalidas_sudesamitran_poster.jpg

இயக்குநர் - எச்.எம்.ரெட்டி
தயாரிப்பு அர்தேஷிர் இரானி
நடிக நடிகையர் - பி.ஜி. வெங்கடேசன், எல்.வி.பிரசாத், டி.பி.ராஜலக்ஷ்மி, தேவாரம் ராஜாம்பாள், ஜே.சுசீலா, சுசீலா தேவி, எம்.ஆர்.சந்தான லக்ஷ்மி
வெளியான நாள் 31.10.1931

இப்படத்தில் சுமார் 50 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பிடத் தக்கது, ராட்டினமாம் காந்தியின் கை பாணமாம், இந்தியர்கள் நம்மவர்க்குள் ஏன் வீண் சண்டை.

இத்திரைப்படத்தைப் பற்றிய மேற்காணும் தகவல்கள் விக்கிபீடியா இணைய தளத்திலிருந்து தரப்பட்டுள்ளன. மேலும் தகவலறிய விக்கிபீடியா வலைப்பக்கத்திற்கான இணைப்பு
http://en.wikipedia.org/wiki/Kalidas_%28film%29

தமிழ்த் திரைப் பட உலகின் தகவல் பிதாமகன் பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களுக்கு இத்திரி சமர்ப்பிக்கப்படுகிறது.

http://www.thehindu.com/multimedia/dynamic/01079/11FR_ANANDAN_KVS_1079260f.jpg

RAGHAVENDRA
12th February 2013, 06:35 PM
ஆண்டு 1932

வெளி வந்த தமிழ்த் திரைப்படங்கள் - 4


1. காலவா
2. பாரிஜாத புஷ்பஹாரம்
3. ராமாயணம்
4. ஹரிச்சந்திரா

RAGHAVENDRA
12th February 2013, 06:42 PM
காலவா

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20Three/KAALAVAA_zpse2e3a09d.jpg

தயாரிப்பு - சாகர் பிலிம் கம்பெனி
இயக்கம் - பி.பி.ரங்காச்சாரி

பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் காலவா ரிஷி என்ற நாடகமே காலவா என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கப் பட்டது. புராண காலத்தில் இருந்த காலவா ரிஷி என்ற முனிவரைப் பற்றிய படம் காலவா.

திரைப்படமாக எடுக்கப் பட்ட முதல் தமிழ் நாடகம் காலவா என்ற பெருமையைப் பெற்றது.

நடிக நடிகையர் - வி.எஸ்.சுந்தரேச ஐயர், பி.பி.ரங்காச்சாரி, டி.ஆர். முத்துலக்ஷ்மி

இப்படத்தைப் பற்றி மற்ற தகவல்கள் இருந்தால் நண்பர்கள் பகிர்ந்து கொள்க.

Richardsof
12th February 2013, 07:08 PM
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்

உங்களின் புதுமையான இந்த முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் .

60 ஆண்டுகள் சினிமா வரலாறு - இன்றைய இளைய தலைமுறையினரும்
. வருங்கால தலை முறையினரும் அறிந்து கொள்ள இந்த திரி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை .
நீங்கள் துவங்கியுள்ள இந்த பொக்கிஷம் - பாராட்டுக்குரியது .
வாழ்த்துக்கள் சார்
அன்புடன்
வினோத்

RAGHAVENDRA
12th February 2013, 09:31 PM
டியர் வினோத் சார்,
தங்கள் ஆதரவான மற்றும் அன்பான வார்த்தைகளுக்கு எனது உளமார்ந்த நன்றிகள். இது நிச்சயமாக ஒரு கூட்டு முயற்சி. அனைவரின் பங்களிப்பும் இருந்தால் தான் வெற்றி நடை போட முடியும். எனவே அனைவருக்குமே எனது நன்றிகள் உரித்தாகும். தங்களுடைய பங்களிப்பும் இதில் சேரும் போது இது மேலும் சிறப்படையும் என்பதில் ஐயமில்லை.
அன்புடன்
ராகவேந்திரன்

kaveri kannan
13th February 2013, 04:27 AM
அன்பு திரு ராகவேந்திரா அவர்களுக்கு

உங்களின் இந்த முயற்சியும் முழுவெற்றி அடைய வாழ்த்துகள்..

Richardsof
13th February 2013, 05:43 AM
http://youtu.be/gAfzrgAgNJs

vasudevan31355
13th February 2013, 09:54 AM
ராகவேந்திரன் சார்!

அற்புதமான முயற்சி. நூலைக் கட்டி மலையை இழுப்பது போன்ற மிகப் பெரிய முயற்சி. வெற்றி கிட்டப் போவது நூலைக் கட்டி இழுக்கும் தங்களுக்கே! தங்களோடு நாங்களும் சேர்ந்து கொள்கிறோம். பாராட்டுக்கள்.

vasudevan31355
13th February 2013, 10:24 AM
பாண்டவர்களில் அர்ஜுனனை அடிப்படையாக வைத்து பின்னப்பட்ட கதையே காலவா. முதன் முதலில் முழுப்படமும் தமிழிலேயே பேசிய பெருமை கொண்ட படம். இயக்கம் பி.பி .ரங்காச்சாரி.

vasudevan31355
13th February 2013, 10:27 AM
காளிதாஸ்

http://www.indolink.com/tamil/cinema/Memories/98/fna/images1/kalidas.jpg

T.P.Rajalaxmi

http://www.indolink.com/tamil/cinema/Memories/98/fna/images1/tprajalak.jpg

http://upload.wikimedia.org/wikipedia/en/5/5f/Kalidas_1931.jpghttp://i.indiaglitz.com/tamil/news/kalidas311011_2.jpg

It was inevitable! In 1931, the talkies came to Tamil Nadu. The first Talkie with Tamil in it was Kalidas. It was directed by H.M.Reddy and produced by T. P. RajalakshmiArdeshar Irani's Imperial Movie Tone and released on 31st October. Kalidas was produced in a hurry, and was technically flawed. It was not a pure Tamil talkie, in the sense that the artistes spoke (mainly) both in Tamil and Telugu. It starred T.P.Rajalaxmi as its heroine. She was a stage artiste who gained immense popularity as a movie actress and went on to make movies herself. Though it was a puranic story - both Thyagaraja Kirtanas and the Indian National Congress publicity songs had a place in the picture. Its curiosity factor, if anything guaranteed its success at the box-office.

Thanks to indolink.com

vasudevan31355
13th February 2013, 10:34 AM
'Kalidas', having released on October 31 way back in 1931. This trend setting film was the first talkie in Tamil and the only film that released in 1931. Released under the banner Imperial Film Company, Bombay, it was one trend setting venture.

The film starred T P Rajalakshmi, P G Venkatesan, Thevaram Rajambal, T Sushila Devi, M.S.Santhanalakshmi and LV Prasad. The story and the lyrics were penned by Madhura Kavi Bhaskara Das who also composed the music. The film was directed by HM Reddy and was produced by Ardeshir M Irani. This mythological film that had a length of 10,000 ft was released with a 'U' certificate in black and white and was a box-office blockbuster.

http://i.indiaglitz.com/tamil/news/kalidas311011_1.jpg

'Kalidas' was the first talkie made in Tamil, shot at Bombay. It was produced on the sets of India's first talkie Alam Ara (Hindi) by Ardeshir Irani. The director was Irani's former assistant, HM Reddy. The film had dialogues and songs in Tamil and Telugu since both the languages were spoken in Madras Presidency back then.

Though it was a Tamil film, it's characters spoke a variety of languages including Tamil (Princess Vidyadhari), Telugu (Kalidas, Naradhar) and Hindi (Temple priest). The sound recording was done using the Vitaphone process, by German technicians using German equipment.

The film was released in Madras (now Chennai) Kinema Central (later called Murugan Theatre). It was a big hit as it was a novelty for the audience to witness an audio visual with dialogues and songs of their language. When the film reels were brought to Madras, thousands gathered at Madras Central Railway station and followed the reel box to Kinema Central. Crowds showered rose petals, broke coconuts and burnt incense sticks in the procession of the reels of the film, all along Wall Tax Road from the railway station!

About 'Kalidas'

The film was based on folk myth on the life of the legendary third century Sanskrit poet Kalidas, the creator of many classics like "Shakunthalam" and "Megha Sandhesham". The story revolves around the beautiful Princess Vidyadhari (T.P. Rajalakshmi) who caught the attention of a powerful and cunning minister in the court of her father, King Vijayavarman of Thejavathi. He wants her to marry his son to bolster his own power in the Kingdom but she rebuffs him. As revenge he tricks her into marrying an illiterate, lowly goatherd. Realizing her mistake, she prays to Goddess Kali for help, resulting in her husband receiving knowledge and literary abilities. Soon, the humble goatherd is transformed into famous poet Kalidas (PG Venkatesan).

The Film was completed in just eight days. Produced at a cost of Rs.8,000/-, the film grossed over Rs.75,000/-. 'Kalidas' was the first Indian multi-lingual movie since the film had Tamil, Telugu, Hindi and Bengali dialogues by various characters. The Director HM Reddy has also directed the first Telugu Talkie (Bhaktha Prahaladha in 1931). LV Prasad (who later founded Prasad Studios), acted in this film, has also acted in the first Hindi talkie (Alam Ara) and first Telugu talkie (Bhaktha Prahaladha). It was a rare distinction of a person common to all the three first talkies of India.

An advertisement announcing this film was published on the October 30 issue of Swadesamitran as "First Tamil-Telugu Talking Picture." A review of the film was also published in the same newspaper a day earlier, which means a press show, was held before the release of the film.

Despite the historical importance, no print of the film has survived and even the song-book is not traceable. The gramophone record of the film is also not available.

The film had around fifty songs in Tamil and Telugu. It had compositions of Saint Thyagaraja, an icon of Carnatic classical music. The songs, which became popular, were: "Rattinamam ... Gandhi Kai Baanamaam..." (sung by Rajalakshmi) highlighted Indian freedom movement and Mahatma Gandhi. "Manmada Baanamadaa...Maarinil payuthadaa..." (sung by Rajalakshmi) became very popular among young women. "Indhiyargal nammavarkalukkul eno veen sandai ..." was another song on freedom movement. Some of the songs also featured the nationalist slogan Vande Matharam.

Critical Appreciations

Tamil magazine Swadesamitran wrote a favourable review for 'Kalidas' on 29th October 1931, even before the film was released. The magazine said that, the film will certainly run for few weeks and appreciated the singing of the actress T.P. Rajalakshmi and finally said the film is a "must watch" for all.

Films which followed the trend

The same film was made again in 1937 and in 1955 with different star cast namely 'Kaviratna Kalidas' (1937) and 'Mahakavi Kalidas' (1955) and each time it was highly appreciated and achieved success. In addition, the film is a trendsetter for talkies in Tamil cinema.

Landmark achievement

First talkie in Tamil and was the only film to be produced in 1931, creating history.

Filmmaker

HM Reddy (Hanumappa Muniappa Reddy: 1892 - 1960) was the former assistant to Ardeshir M. Irani., the first talkie filmmaker (Alam Ara) in India. Reddy was one of the veterans of Indian cinema and has the distinction of directing the first talking pictures in Tamil (Kalidas in 1931) and Telugu (Bhaktha Prahaladha in 1931). He began his career in silent films in Bangalore with Surya Films and later shifted to Bombay and assisted Irani. He then directed movies in Hindi before shifting to Madras. He produced successful Telugu movies such as Tenali Ramakrishna (1941), Gruha Lakshmi (1938) and Partigna (1953). He introduced Chittor V. Nagaiah and other artists to the film industry. In a career spanning 23 years, he produced 3 films in Telugu and directed 19 films. Out of them only three films were in Tamil (Kalidas in 1931, Mathruboomi in 1939 and Niraparadhi in 1951). Rest of them, were in Telugu.

Source: Best of Tamil Cinema: 1931 to 2010 by G Dhananjayan

vasudevan31355
13th February 2013, 01:48 PM
முதல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பேசும் பட (காளிதாஸ்) கதாநாயகி டி.பி.ராஜலஷ்மி. (அன்று) அருகில் உட்கார்ந்து இருக்கும் கிருஷ்ணன் யாரென்று சொல்லுங்கள் பார்ப்போம்!

http://4.bp.blogspot.com/-w0_iSy9Zibo/TgMD1g_ke3I/AAAAAAAAAsI/LONoGMS9eHY/s1600/18062011507.jpg

vasudevan31355
13th February 2013, 01:49 PM
முதல் தமிழ் பெண் இயக்குனர் டி.பி.ராஜலஷ்மி. (மிஸ்.கமலா)

http://2.bp.blogspot.com/-B1j9mJMewfs/TgMD25rVu6I/AAAAAAAAAsY/53jRuwgI_Fo/s1600/T.P.Rajalakshmi%2B1.jpg


திருவையாறு P ராஜலக்ஷ்மி , இவர் தான் தமிழ் திரையுலகின் முதல் பெண் இயக்குனர், தயாரிப்பாளர். தமிழ் திரையுலகில் மட்டுமல்ல இந்திய அளவிலும் இவர் தான் முதல் பெண் இயக்குனர் என்று கூறுகிறார்கள்.

ராஜலக்ஷ்மி 1911 இல் திருவையாறில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர், இவரது தந்தை ஒரு குருக்கள். இவருக்கு 11 வயது இருக்கும் போது திருமணம் ஆனது, துரதிர்ஷ்டவசமாக இவரது மன வாழ்க்கை ஆரம்பிக்கும் முன்னமே முடிந்து விட்டது. வரதட்சனை கொடுக்க முடியாத காரணத்தினால் இவரது கணவர் இவரை விட்டு பிரிந்தார். இதனால் மனமுடைந்த இவரது தகப்பனார் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்பு ராஜலக்ஷ்மி அவரது தாயாருடன் திருவையாறை விட்டு வெளியேறினார். நாடக கம்பெனி ஒன்றில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார்


புகழ்பெற்ற சங்கரதாஸ் சுவாமிகள் குழுவில் இனைந்து நாட்டியம், சங்கீதத்தில் நல்ல தேர்ச்சி பெற்றார். 1931 இல் காளிதாஸ் என்ற படத்தில் கதாநாயகியாய் நடித்த பிறகு இவர் புகழின் உச்சிக்கு சென்றார். இந்த திரைப்படம் தமிழின் முதல் பேசும் படம் என்று அறியப்படுகிறது. முன்னதாக இவர் 1929 லேயே திரையுலகில் காலெடுத்து வைத்தவர், கோவலன் என்ற பேசாத படத்தில் நடித்திருக்கிறார். காளிதாஸ் திரைப்படத்திற்கு பிறகு இவர் அந்நாளைய சூப்பர் ஸ்டார்களாகிய கிட்டப்பா, தியாகராஜ பாகவதர் போன்றவர்களுடன் இனைந்து நடிக்கும் அளவிற்கு பெரிய நடிகையானார்.

காந்தியவாதியான இவர் இந்தியத் தாய் என்ற ஒரு திரைப்படத்தை தயாரித்தார், அங்கிலேயர் ஆட்சியில் தணிக்கையில் சிக்கிய இத்திரைப்படம் வெளிவராமலே போனதாக தகவல். இருப்பினும் தன்னாலான அளவில் சுதந்திர போராட்டத்தில் இவர் கலந்து கொண்டிருக்கிறார். மிஸ். கமலா என்ற திரைப்படம் மூலம் இவர் 1936 இல் இயக்குனர் ஆனார். 1929 முதல் 1950 வரை இவர் 23 திரைப்படங்களில் நடித்திருக்கிறார், இவற்றில் மிஸ் கமலா, மதுரை வீரன் ஆகிய படங்களில் இவர் நடித்தும் இயக்கியும் இருக்கிறார்.


இவர் நடித்த திரைப்படங்கள்:

01 கோவலன் 1929
02 ராஜேஸ்வரி 1930
03 உஷா சுந்தரி 1930
04 காளிதாஸ் 1931
05 சாவித்திரி சத்யவான் 1933
06 பூர்ண சந்திரா 1935
07 லலிதாங்கி 1935
08 பக்த குசேலா 1935
09 குலே பகாவலி 1935
10 பாமா பரிணயம் 1936
11 சீமந்தினி 1936
12 மிஸ் கமலா 1936
13 கவுசல்யா பரிணயம் 1937
14 அனாதை பெண் 1938
15 மதுரை வீரன் 1938
16 நந்தா குமார் 1938
17 தமிழ் தாய் 1939
18 சுகுணா சரஸா 1939
19 பக்த குமரன் 1939
20 உத்தமி 1943
21 பரஞ்சோதி 1945
22 ஜீவஜோதி 1947
23 இதய கீதம் 1950

vasudevan31355
13th February 2013, 01:50 PM
வயதான டி.பி.ராஜலஷ்மி தன் குடும்பத்தாருடன்

http://kubbi90.blog.com/files/2011/12/IMG_0002-1.jpg

vasudevan31355
13th February 2013, 01:52 PM
ஆண் உடையில்

http://kubbi90.blog.com/files/2011/12/IMG_0003.jpg

vasudevan31355
13th February 2013, 02:22 PM
முதல் தமிழ் படத்தின் நாயகி என்ற பெருமைக்குரியவர் அதுமட்டுமல்லாமல் அந்தக் காலத்திலேயே துணிச்சல் மிக்க முதல் தமிழ் பெண் இயக்குனர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் என்பதால்தான் ராஜலஷ்மி அவர்களுக்கு இவ்வளவு மரியாதை.

RAGHAVENDRA
15th February 2013, 06:22 PM
ஆண்டு 1932

3. சம்பூர்ண ஹரிச்சந்திரா

தயாரிப்பு - சாகர் பிலிம் கம்பெனி, பம்பாய்
சரித்திரப் படம்

இயக்கம் - ராஜா சந்திரசேகர்

நடிக நடிகையர் - வி.எஸ்.சுந்தரேச ஐயர், டி.ஆர்.முத்துலக்ஷ்மி

RAGHAVENDRA
15th February 2013, 06:38 PM
ஆண்டு 1932

4. பாரிஜாத புஷ்பஹாரம்

தயாரிப்பு - இம்பீரியல் பிலிம் கம்பெனி
புராண படம்

இயக்கம் - ராஜா சாண்டோ

நடிக நடிகையர் - நரசிம்ம ராவ், கே.டி.ருக்மணி, ஆர். நாகேந்திர ராவ், லீலா

vasudevan31355
15th February 2013, 06:57 PM
Raja Sandow in Harischandra (1932)

http://lite.epaper.timesofindia.com/Repository/TOICH/2012/04/29/4/Img/Pc0041200.jpg

http://upload.wikimedia.org/wikipedia/commons/4/47/Raja_Sandow_in_Harischandra_%281932%29.jpg

RAGHAVENDRA
16th February 2013, 07:28 AM
தங்களுடைய முழு ஈடுபாட்டுடன் கூடிய ஒத்துழைப்பு இத்திரியினை தகவல் பெட்டகமாக உருவாக்கும் முயற்சியில் முன் நிற்கிறது. பாராட்டுக்களும் நன்றியும் வாசுதேவன் சார்.

RAGHAVENDRA
16th February 2013, 07:32 AM
ஆண்டு 1933

வெளியான படங்களின் எண்ணிக்கை 7


1. கோவலன்

2 சத்யவான் சாவித்திரி

3 நந்தனார்

4 பிரகலாதா (நியூ தியேட்டர்)

5 பிரகலாதா (ஈஸ்ட் இந்தியா பிலிம் கம்)

6 வள்ளி (பயனீர் பிலிம் கம்)

7 வள்ளித் திருமணம்


ஒரே ஆண்டில் பிரகலாத சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இரு படங்கள் ஒரே பெயரில் வெளிவந்த காரணத்தால் நிறுவனத்தின் பெயருடன் அடையாளம் காட்டப் பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1939 வரை தணிக்கை முறை இல்லாதது, மற்றும் திரைப்பட நிறுவனங்களுக்கான அமைப்பு ஏதும் இல்லாதது, போன்ற காரணங்களால் இது போன்று ஒரே பெயரில் ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.

RAGHAVENDRA
19th February 2013, 06:30 PM
1933

1. கோவலன்
தயாரிப்பு - இம்பீரியல் பிலிம் கம்பெனி
இடம் - பம்பாய்
களம் - சரித்திரம்

நடிப்பு - நரசிம்ம ராவ், லீலா

2. சத்யவான் சாவித்ரி
தயாரிப்பு - மதன் தியேட்டர்ஸ்
களம் - புராணம்
நடிப்பு - எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, டி.எஸ்.மணி. டி.பி.ராஜலக்ஷ்மி

3. நந்தனார்
தயாரிப்பு - நியூ தியேட்டர்ஸ், கல்கத்தா
களம் - புராணம்
நடிப்பு - சுப்பையா தேவர், அங்கமுத்து

4. பிரகலாதா
தயாரிப்பு - நியூ தியேட்டர்ஸ் கல்கத்தா
புராணம்

5. பிரகலாதா
ஈஸ்ட் இந்தியா பிலிம் கம்பெனி
புராணம்
நடிப்பு - எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சாரதாம்பாள்

6. வள்ளி
தயாரிப்பு - நேஷனல் மூவிடோன், பம்பாய்
நடிப்பு - டி.எஸ்.சந்தானம், பங்கஜம்

7. வள்ளித் திருமணம்
தயாரிப்பு - பயோனீர் பிலிம் கம்பெனி, கல்கத்தா
களம் புராணம்
இயக்கம் - பி.வி.ராவ்
பாடல்கள் - பூமி. பாஸ்கரதாஸ்
நடிப்பு - சி.எம்.துரைசாமி, டி.வி.சுந்தரம், டி.பி.ராஜலக்ஷ்மி

RAGHAVENDRA
21st February 2013, 08:21 AM
1934ம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப் படங்கள்
எண்ணிக்கை – 15
பட்டியல்

1. கிருஷ்ண லீலா (ஸ்ரீ)
2. கிருஷ்ண முராரி (ஸ்ரீ)
3. கோவலன்
4. சக்குபாய்
5. சகுந்தலா
6. சதி சுலோச்சனா
7. சீதா கல்யாணம்
8. சீதா கல்யாணம்
9. திரௌபதி வஸ்த்ராபஹரணம்
10. தசாவதாரம்
11. பவளக்கொடி
12. திரௌபதி வஸ்த்ராபஹரணம்
13. பாமா விஜயம்
14. லவ குசா
15. ஸ்ரீநிவாச கல்யாணம்

RAGHAVENDRA
21st February 2013, 08:21 AM
1. ஸ்ரீ கிருஷ்ண லீலா
தயாரிப்பு – ஏஞ்சல் பிலிம்ஸ், கல்கத்தா
களம் – புராணம்
இயக்கம் – பி.வி. ராவ்
பாடல்கள் – 60 பாடல்கள்
நடிக நடிகையர்
சி.எஸ்.ஜெயராமன், பி.எஸ். சிவ பாக்கியம், சி.எஸ். ராமண்ணா, சி.வி.வி. பந்துலு, கே.எஸ்.ராஜாம்பாள், எம்.எஸ்.முத்து கிருஷ்ணன் மற்றும் பலர்

RAGHAVENDRA
21st February 2013, 08:22 AM
2. ஸ்ரீ கிருஷ்ண முராரி
தயாரிப்பு – சுதர்சன் டாக்கோடோன்
பம்பாய்
களம் – புராணம்

RAGHAVENDRA
21st February 2013, 08:23 AM
3. கோவலன்
தயாரிப்பு – ராயல் டாக்கீஸ்
கல்கத்தா
களம் - சரித்திரம்
நடிக நடிகையர் – வி.ஏ. செல்லப்பா, டி.பி. ராஜலக்ஷ்மி மற்றும் பலர்

RAGHAVENDRA
21st February 2013, 08:24 AM
4. சக்குபாய்
தயாரிப்பு – பரூவா பிக்சர்ஸ்
களம் - புராணம்
வெளியான தேதி – 24.03.1934
வசனம் பாடல்கள் – டி.சி. வடிவேலு நாயக்கர்
நடிக நடிகையர் – மதுரை ஆசாரி, கே.ஆர். சாரதாம்பாள்

RAGHAVENDRA
21st February 2013, 08:25 AM
5. சகுந்தலா
தயாரிப்பு – பயோனியர் பிலிம்ஸ்
களம் – சரித்திரம்
வெளியான தேதி – 11.08.1934
இயக்கம் – பி.வி. ராவ்
பாடல்கள் – மதுரை பாஸ்கர தாஸ்
நடிக நடிகையர் - பி.எஸ். வேலு நாயர், டி.எஸ். வேலம்மாள், எம்.எஸ்.முருகேசன், சாந்தா தேவி, எல். நாராயண ராவ், டி.எம். ராமசாமி

RAGHAVENDRA
21st February 2013, 08:25 AM
6. சதி சுலோச்சனா
தயாரிப்பு – பாரத் லக்ஷ்மி பிக்சர்ஸ்
களம் – புராணம்
வெளியான தேதி – 22.09.1934
தயாரிப்பாளர் – பாபுலால் சௌஹானி
கதை வசனம் இயக்கம் – ப. சம்பந்த முதலியார்
இசை – ஜனார்த்தனம்
ஒளிப்பதிவு – பி.சௌத்ரி
கலை – டீன் ஷா இராநி
எடிட்டிங் – மதுசூதன் பர்மன்
நடனம் – கிரிதர்லால் ராயர்
ஸ்டில்ஸ் – மணி குஹா
நடிக நடிகையர் – எம்.ஜி. நடராஜ பிள்ளை, நாகர்கோயில் சுந்தராம்பாள், டி.என். நடராஜ பிள்ளை, டி.கே. ருக்மணி, ஏ.ஆர். சாரங்க பாணி, துர்கா பாய், பி.சுப்பையா தேவர், சுலோச்சனா

RAGHAVENDRA
21st February 2013, 08:28 AM
7. சீதா கல்யாணம்

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/29/Seethakalyanam1934.jpg/220px-Seethakalyanam1934.jpg

தயாரிப்பு – பிரபாத் டாக்கீஸ்
களம் – புராணம்
வெளியான தேதி – 24.02.1934
இயக்கம் – பாபு ராவ் பண்டர்கர்
வசனம் – எம்.எஸ். சுப்ரமண்ய ஐயர்
இசை – ஏ.என்.கல்யாண சுந்தரம்
பாடல்கள் – பாபநாசம் சிவன்
நடிக நடிகையர் – எஸ்.ராஜம், எஸ்.ஜெயலக்ஷ்மி, ஜி.கே.சேஷகிரி, கமலா, எஸ்.பாலச்சந்தர், சுந்தரம் ஐயர்

பிரபாத் டாக்கீஸ் தயாரித்தி சீதா கல்யாணம் என்கிற இப்படத்தின் சிறப்பம்சம், திரு எஸ். பாலச்சந்தர் அவர்களின் குடும்பத்தில் பலர் பங்கேற்றதாகும். திரு எஸ். பாலச்சந்தர் நடித்த முதல் படம், அவருடைய மூத்த சகோதர்ரும் மிகச் சிறந்த ஓவியருமான திரு எஸ். ராஜம், அவர்களுடைய சகோதரி எஸ்.ஜெயலக்ஷ்மி என அனைவரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

சகோதர சகோதரிகளான எஸ்.ராஜம் அவர்கள் ராமராகவும், எஸ்.ஜெயலக்ஷ்மி அவர்கள் சீதாவாகவும் ஜோடியாக நடித்தது அந்தக் காலத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படத்தின் மூலம் எஸ்.பாலச்சந்தர் அவர்களும் எஸ்.ராஜம் அவர்களும் பிரபாத் டாக்கீஸ் நட்சத்திரங்கள் என்ற அடைமொழியைப் பெற்றனர்.


இப்படத்தைப் பற்றி விக்கிபீடியா இணைய தளத்தில் வந்துள்ள குறிப்புகளுக்கான இணைப்பு (http://en.wikipedia.org/wiki/Seetha_Kalyanam_%281934_film%29)


திரு எஸ்.ராஜம் அவர்களைப் பற்றி ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரை



http://www.hindu.com/thehindu/fr/hindux.gif

Friday, Feb 05, 2010

Friday Review Chennai and Tamil Nadu

Rajam's romance with cinema

RANDOR GUY

Celluloid Handsome and charismatic the artist found a new dimension here.

PHOTOS: HINDU ARCHIVES

http://www.hindu.com/fr/2010/02/05/images/2010020551080501.jpg
Into limelight:Rajam as Muruga in ‘Sivakavi' and (right) as Rama in ‘Seetha Kalyanam.' Photos

During the dawn of the 1930's Papanasam Sivan, then virtually unknown, relocated to Madras in search of greener pastures. Here in the metropolis, capital of the sprawling Madras Presidency, he found a Good Samaritan in a Mylapore lawyer, V. Sundaram Iyer. Mylapore was then the stronghold of successful lawyers. Sundaram Iyer became his friend, guide and patron. Sivan taught music to the lawyer's children, the eldest son, the strikingly handsome artistic teenager, and his sister Jayalakshmi.

This handsome lad, hardly sixteen and stunningly charismatic with a wide array of inborn talents and acquired skills was Sundaram Rajam. He became the first disciple of Papanasam Sivan in Madras and the guru boarded with the affluent amiable lawyer during the early days. Rajam learnt Carnatic music from the soon to be famous teacher and quickly acquired high degree of proficiency and professional skills. Being a lawyer's son his education was not neglected. He studied at the famous P.S. High School then on North Mada Street in Mylapore.

He had flair for drawing and painting. And those were not all. Rajam was also an avid moviegoer. Not many are aware that in the 1920s-early 1930's Mylapore had its share of ‘tent cinemas' where silent films were regularly screened. The tickets were cheap with the ‘floor' going for one 'kalana' or 3 'dambidis!' Rajam saw many silent films in a tent cinema located in an open space behind the P.S. High School compound.

Meanwhile far away in Kolhapur, V. Shantaram, one of the greatest filmmakers of India then feeling his way in cinema with the celebrated Prabhat Pictures wrote to a Madras-based movie magazine, Sound and Shadow seeking help to make a Tamil film using the sets, props and all of his Hindi film, ‘Sairandhri' (1933, India's first film in colour). The film had not done well and the company was trying to cut its losses by launching a Tamil film using the same material. The magazine was being run by the talented trio, Muthuswami Iyer (later filmmaker under the name, 'Murugadasa'), A.K. Sekhar (art director, production designer, and master of all, and later a big name in south Indian cinema), and K. Ramnoth (brilliant technician and genius of south Indian cinema, sadly neglected today). A rich impresario and fine arts - lover, and talent -scout and all, G. K. Seshagiri, financially backed them.

Soon the trio, Seshagiri, the Mylapore lawyer, his children, Rajam, Jayalakshmi and the youngest son, the seven year old prodigy, S. Balachandar, and members of an amateur drama troupe boarded a train at Madras to Miraj en route to Kolhapur. Accompanying them was Papanasam Sivan as music composer blissfully unaware that he was on his way to fame and fortune…

Rajam as an actor

Rajam faced a movie camera for the first time in ‘Seetha Kalyanam' (1934). A Prabhat production it was directed by the well known Marati and Hindi filmmaker of his day, Baburao Phendharkar.

The success of ‘Seetha Kalyanam' (1933) brought its handsome singing hero, S. Rajam into limelight. That was the period when most Tamil movie heroes came from theatre and were not as handsome and charismatic as Rajam!

His aristocratic bearing, sharp features and slim figure made him a favourite among women of all ages! Jayalakshmi, his sister played Sita. (That some prudes raised an objection to this pairing is a different issue).

Some of the songs that Rajam sang in ‘Seetha Kalyanam' became popular. ‘Nal Vidai Thaarum…' (Raga Kalyani, based on Tyagaraja's ‘Amma Raavamaa…')…. ‘Kaananam Ethu Swami…' (raga Kaanada based on the Purandaradasa composition, ‘Sevaka Kana Ruchirey…') The music composer was Papanasam Sivan making his debut in movies.

Rajam's next movie was ‘Radha Kalyanam' (1935). It was produced by Meenakshi Movies and directed by C. K. Sathasivan better known as ‘Saachi.' (Remembered as the mentor of now sadly forgotten musician, N. C. Vasanthakokilam).

C. K. Saachi hailed from a family of noted and successful lawyers of Coimbatore. He was drawn to the new medium of cinema and he sailed into it with glee and gusto. He gave up law and learnt the rudiments of filmmaking and also underwent limited training in London.

A man of wide contacts in Madras in its social and cultural circles he worked as associate director with the noted American Tamil filmmaker, Ellis R. Dungan in his historic maiden movie ‘Sathi Leelavathi' (1936).

Rajam played Lord Krishna while Radha was the noted star of yesteryear, M.R. Santhanalakshmi. Hailing from the temple town of Kumbakonam, she entered Tamil theatre and made a mark with her good looks, buxom figure and singing talents and skills. Saachi, a keen talent scout brought her into movies with this film. Santhanalakshmi was much older to Rajam and not surprisingly he felt embarrassed while doing the romantic sequences! The film did not do well and few remember this movie today…

Then came ‘Rukmini Kalyanam' (1936) and Rajam played Lord Krishna again. The famous Marati filmmaker, actor, and Dadasaheb Phalke Award winner, Balji Phendharkar directed it. He was Baburao's brother (who directed ‘Seetha Kalyanam'). He was very fond of ice-cream and according to Rajam he took chunks of it for breakfast! This film too did not do well… Rajam played a supporting role in the Thyagaraja Bhagavathar hit movie ‘Sivakavi' (1943). He played the role of Lord Muruga who comes in disguise to test the 'bhakti' of the hero (MKT). In fact he and his father had gone to Coimbatore, escorting Jayalakshmi (who was by then married) who played the heroine. Sundaram Iyer plays the role of a patasala guru in sequences with N. S. Krishnan and others.

By now Rajam married and as his wife was not in favour of his acting in movies, it was goodbye to cinema, romantic scenes with elderly heroines and all that…! But later in 1948 Rajam worked as music composer (with no credit) and also sang a song off-screen, ‘Kaathal puyalthaniley thurumbupol…' in V. Shantaram's ‘Nam Nadu.'

* * *

‘Stilted, artificial'

( Randor Guy found in his modest ‘archives' a magazine interview with Rajam by the icon of Tamil Literature, Kalki (Ra. Krishnamurthy). It appeared in Ananda Vikatan of 1930s when Kalki was its Associate Editor. Extracts translated from the Tamil original.)

Kalki: Can you tell us something about how to improve Tamil cinema?

S. Rajam: Beshaaa! Acting is important and equally important is the delivery of dialogue. But in Tamil cinema nobody really bothers about it! Much of it is written only a few days before the shooting and what does it prove?

K: That Dialogue is not vital for a film!

SR: You are right! Dialogue writers should know something about cinema but it is not so! They write long sentences in high-flown language and nobody talks like that! So you cannot act in a realistic manner… It's all stilted…. Artificial! They don't pay attention to minor roles… in a film all roles are important…

K: Were all these things followed in your films?

SR: I don't think so! Otherwise they would have been better!

K: What do you think of directors not knowing Tamil directing such films?

SR: Let's take my recent film, ‘Rukmini Kalyanam.' The director did not know Tamil but in a way it helped us! He (Balji Phendharkar) was also the writer. His dialogue was translated and we spoke them. If we made any mistakes he would spot them at once! He was also a fine actor… And he was very brilliant.... Of course all are not so!



quoted from the HIndu online page: http://www.hindu.com/fr/2010/02/05/stories/2010020551080500.htm

RAGHAVENDRA
21st February 2013, 08:28 AM
8. சீதா கல்யாணம்
தயாரிப்பு - ஈஸ்ட் இந்தியா கம்பெனி
நடிக நடிகையர் – நாட்டு அண்ணாஜி ராவ், திருச்சூர் ருக்மணி

RAGHAVENDRA
21st February 2013, 08:29 AM
9. திரௌபதி வஸ்த்ராபஹரணம்
தயாரிப்பு – ஏஞ்சல் பிலிம்ஸ்
கல்கத்தா
களம் – புராணம்
நடிக நடிகையர் – வி.ஏ. செல்லப்பா, டி.பி. ராஜலக்ஷ்மி, டி.என்.வாசுதேவ பிள்ளை, பி.எஸ்.சிவபாக்கியம், சி.எஸ்.ராமண்ணா, சி.வி.வி. பந்துலு

RAGHAVENDRA
21st February 2013, 08:30 AM
10. தசாவதாரம்
தயாரிப்பு – ஜெயவாணி பிலிம்ஸ்
நடிக நடிகையர் – மணி, சாரதாம்பாள்

RAGHAVENDRA
21st February 2013, 08:31 AM
11. பவளக் கொடி
தயாரிப்பு – மீனாட்சி சினிடோன்
பம்பாய்
களம் – புராணம்
இயக்கம் – கே.சுப்ரமணியன்
பாடல்கள் – பாபநாசம் சிவன்
நடிக நடிகையர் – எம்.கே.தியாகராஜ பாகவதர், எஸ்.டி. சுப்புலக்ஷ்மி, எஸ்.எஸ். மணி பாகவதர், கே.கே. பார்வதி பாய், ஆர்.எஸ். சுந்தராம்பாள்

தமிழ்த் திரையுலகின் மெகா ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்களின் முதல் படம்

RAGHAVENDRA
21st February 2013, 08:32 AM
12. திரௌபதி வஸ்த்ராபஹரணம்
தயாரிப்பு – சீனிவாஸ் சினிடோன்
நடிக நடியைகர் – டி.எஸ். சந்தானம், கே.ஆர். சாரதாம்பாள்

RAGHAVENDRA
21st February 2013, 08:33 AM
13. பாமா விஜயம்
தயாரிப்பு – பயோனியர் பிலிம் கம்பெனி
கல்கத்தா
களம் – புராணம்
இயக்கம் – எம்.எல். டான்டன்
பாடல்கள் – கே. தியாகராஜ தேசிகர்
நடிக நடிகையர் – எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி, பி.எஸ்.ரத்னா பாய், ஜி.எந். பாலசுப்ரமணியம், பி.எஸ். சரஸ்வதி பாய், எம்.எஸ்.முருகேசன், அங்கமுத்து

***இதே பெயரில் பின்னாளில் கே.பாலச்சந்தர் இயக்கிய படம் வெளியானது தெரிந்ததே.

RAGHAVENDRA
21st February 2013, 08:33 AM
14. லவ குசா
தயாரிப்பு – தமிழ் நாடு டாக்கீஸ்
பம்பாய்
களம் – புராணம்
நடிக நடிகையர் – சீனிவாசன், சீதா, நாராயணன், லக்ஷ்மி

RAGHAVENDRA
21st February 2013, 08:34 AM
15. ஸ்ரீநிவாச கல்யாணம்
தயாரிப்பு – ஸ்ரீநிவாசா சினிடோன்
களம் – புராணம்
தயாரிப்பாளர் – ஏ. நாராயணன்
வசனம் பாடல்கள் – ராமானுஜ ஐயங்கார்
இசை – சி.ஆர்.எஸ். மூர்த்தி
பாடல்கள் பதிவு – மீனா நாராயணன்
ஒளிப்பதிவு – ஆர். பிரகாஷ்
கலை – சி.எஸ். இரானி
நடிக நடிகையர் – பி.எஸ்.ஸ்ரீநிவாச ராவ், ஆர்.பி.லக்ஷ்மி தேவி, செருகளத்தூர் சாமா, பி.எஸ். கமலவேணி, எம்.டி. பார்த்சாரதி, அங்கமுத்து
முழுக்க முழுக்க சென்னையில் தயாரான முதல் படம்
மீனா நாராயணன் – முதல் பெண் ஒலிப்பதிவாளர்

RAGHAVENDRA
26th February 2013, 07:56 AM
ஆண்டு 1935

எண்ணிக்கை – 37

பட்டியல்


1. அதி ரூப அமராவதி
2. அல்லி அர்ஜூனா
3. குலேபகாவலி
4. கோபால கிருஷ்ணா
5. கௌசல்யா
6. ஞான சௌந்தரி
7. சந்திரசேனா (ராவணன்)
8. சாரங்கதரா
9. சிறு தொண்ட நாயனார்
10. சுபத்ரா பரிணயம்
11. டம்பாச்சாரி
12. துருவ சரித்திரம்
13. தூக்கு தூக்கி
14. நல்ல தங்காள்
15. நல்ல தங்காள்
16. நள தமயந்தி
17. நவீன சதாரம்
18. தூக்கு தூக்கி
19. நவீன சதாரம்
20. பக்த ந்ந்தனார்
21. பக்த துருவன்
22. பக்த ராமதாஸ்
23. பட்டினத்தார்
24. பூர்ணசந்திரன்
25. மார்க்ண்டேயா
26. மாயா பஜார்
27. மேனகா
28. மோகினி ருக்மாங்கதா
29. ராதா கல்யாணம்
30. ராஜ போஜா
31. ராஜாம்பாள்
32. லங்கா தகனம்
33. ல்லிதாங்கி
34. ஹரிஸ்சந்திரா

RAGHAVENDRA
26th February 2013, 07:59 AM
1. அதிரூப அமராவதி

தயாரிப்பு - சுந்தரம் டாக்கீஸ்
களம் - புராணம்
இயக்கம் - சி.வி. ராமன்
பாடல்கள் - எஸ்.எஸ். சங்கர லிங்கம்
ஒளிப்பதிவு - சுந்தர்லால் நட்கர்னி

நடிக நடிகையர் -
சிவக் கொழுந்து, டி.எஸ். வேலாம்பாள், பி.எம். சுந்தர பாஷ்யம், ரங்கநாயகி, கே.கே. தங்கவேலு, பி.எஸ். கிருஷ்ணவேணி

RAGHAVENDRA
26th February 2013, 08:02 AM
2. அல்லி அர்ஜூனா

http://www.avm.in/img/movies/001-Alli-Arjuna.jpg

தயாரிப்பு - சரஸ்வதி சவுண்ட் ப்ரொடக்ஷனஸ்
களம் - புராணம்
தயாரிப்பு - ஏவி. மெய்யப்பன்

நடிக நடிகையர்
அப்துல் காதர், கே.ஆர். காந்திமதி பாய், கே.எஸ். அனந்த நாராயண ஐயர், டி.எஸ். பவானி பாய், எல்.நாராயண ராவ், டி.எம். ஷேக் தாவூத்

ஏவி.எம்.தயாரித்த முதல் படம்

ஏவி.மெய்யப்பன் அவர்கள் தன்னுடைய தந்தையுடன்
http://upload.wikimedia.org/wikipedia/en/2/2b/AVMeiyappan_young.jpg

RAGHAVENDRA
26th February 2013, 08:10 AM
3. குலேபகாவலி

தயாரிப்பு தமிழ்நாடு டாக்கீஸ்
களம் - சரித்திரம்
ஒளிப்பதிவு மணி சன்யால்

நடிக நடிகையர்
வி.ஏ.செல்லப்பா, டி.பி.ராஜலக்ஷ்மி, எம்.எஸ்.ராமச்சந்திரன், ராஜேஸ்வரி, ராணி பாலா, பாலா மணி

RAGHAVENDRA
4th March 2013, 06:47 AM
4. கோபால கிருஷ்ணா

களம் புராணம்

தயாரிப்பு - எஸ்.டி.ஆர். பிக்சர்ஸ்

நடிக நடிகையர் - பிரபல ஓவியர் எஸ். ராஜம், கௌரி

RAGHAVENDRA
4th March 2013, 06:50 AM
5. கௌசல்யா

வெளியான தேதி - 25.09.1935
தயாரிப்பு - சவுத் இந்தியன் பிலிம் கார்ப்பரேஷன்
களம் - புராணம்
இயக்கம் - பி.எஸ்.வி. ஐயர்

நடிக நடிகையர் - ஆர். செல்லம்

RAGHAVENDRA
4th March 2013, 06:52 AM
6. ஞான சௌந்தரி

தயாரிப்பு - ஸ்ரீநிவாசா சினிடோன்
களம் - சரித்திரம்

நடிக நடிகையர் - ஸ்ரீநிவாச ராவ், சரோஜினி

பின்னாளில் இதே பெயரில் இரு பெரிய நிறுவனங்கள் தயாரித்து வெளியிட்டதற்கு முன்னோடி.

RAGHAVENDRA
4th March 2013, 06:56 AM
7. சந்திரசேனா[ராவணன்]

தயாரிப்பு - பிரபாத் பிலிம் கம்பெனி
களம் - புராணம்

இயக்கம் - வி.சாந்தாராம்
வசனம் - கே.ராகவன்
பாடல்கள் - பாபநாசம் சிவன், ஏ.என்.கல்யாண சுந்தரம், அருணாச்சல கவிராயர்
ஒளிப்பதிவு - கே. தைபர்
கலை - கே.பதேவால்

சேஷாத்திரி, ராஜீவி, சுந்தர்ராஜன், டி.டி.கனகம். பி.எஸ்.ஸ்ரீநிவாசன், எஸ். பங்கஜம், கே. நடராஜன்

RAGHAVENDRA
4th March 2013, 06:58 AM
8. சாரங்கதரா

தயாரிப்பு - லோட்டஸ் பிக்சர்ஸ்
களம் - சரித்திரம்
இயக்கம் - வி.எஸ்.கே. பதம்

நடிக நடிகையர் - கே.ஸ்ரீநிவாசன், டி.எம். சாரதாம்பாள்

RAGHAVENDRA
4th March 2013, 07:00 AM
9. சிறுத் தொண்ட நாயனார்

தயாரிப்பு - மாலிக் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன்-ராதா பிலிம்ஸ்

களம் - புராணம்

நடிக நடிகையர் - டி.கே. சுந்தரப்பா, சொர்ணாம்பாள்

RAGHAVENDRA
5th March 2013, 09:04 PM
10. சுபத்ரா பரிணயம்

வெளியான தேதி - 27.04.1935

தயாரிப்பு - பயனீர் பிலிம்ஸ், வெரைட்டி ஹால் டாக்கீஸ்

களம் - புராணம்

இயக்கம் - பிரபுல்லா கோஷ்
ஒளிப்பதிவு - பால் ப்ரிக்ப் - பில் மேயர் பர்க்லெட்

எஸ்.வி.சுப்பய்யா பாகவதர், டி.எஸ்.வேலம்மாள், பபூன் சண்முகம், டி.கே. ருக்மணி அம்மாள், காரைக்குடி கணேச ஐயர், காசி விஸ்வநாத ஐயர், ராமசாமி பிள்ளை

RAGHAVENDRA
5th March 2013, 09:06 PM
11. டம்பாச்சாரி

தயாரிப்பு - பயோநீர் பிலிம்ஸ்
இயக்கம் - எம்.எல்.டாண்டன்
கதை - திருவொற்றியூர் காசி விஸ்வநாத முதலியார்

களம் - தமிழ்த் திரையுலகின் முதல் சமூகப் படம்

எம்.ஆர். கிருஷ்ண மூர்த்தி
பி.எஸ்.ரத்னா பாய்
சி.எஸ். சாமண்ணா - இவர் இப்படத்தில் 7 பாத்திரங்களில் நடித்துள்ளார்
பி.எஸ்.சரஸ்வதி பாய்
எம்.எஸ். ராகவன்
எம்.எஸ். முருகேசன்

RAGHAVENDRA
5th March 2013, 09:08 PM
12. துருவ சரித்திரம்

தயாரிப்பு - பயோனீர் பிலிம் கம்பெனி

எம்.எஸ். தங்கப்பா, பி.எஸ். ஞானாம்பாள், வி.சுவாமிநாதன், ஆர்.பி.லக்ஷ்மி தேவி

RAGHAVENDRA
5th March 2013, 09:11 PM
13. தூக்குத் தூக்கி

தயாரிப்பு - ராயல் டாக்கீஸ்
இயக்கம் - ஆர். பிரகாஷ்
கதை வசனம் பாடல் - உடுமலை நாராயண கவி
ஒளிப்பதிவு - ஆர். பிரகாஷ்

சி.வி.வி. பந்துலு, கே.டி.ருக்மணி, கிளௌன் சுந்தரம், எம்.ஆர்.கமலம், தேவகி

RAGHAVENDRA
5th March 2013, 09:16 PM
நல்ல தங்காள்

நல்ல தங்காள் கதை இப் பெயரில் இவ்வாண்டிலே 2 படங்கள் வெளிவந்துள்ளன. பின்னரும் சில முறைகள் வெளி வந்துள்ளன.

14. நல்ல தங்காள் - ஏஞ்சல் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பு

வெளியான தேதி - 01.06.1935
களம் - கிராமியம்
இயக்கம் - பி.வி. ராவ்

எம்.எஸ். தாமோதர ராவ், கே.ஆர். காந்தி மதி பாய், சி.எஸ். ஜெயராமன், பி.எஸ். சிவபாக்கியம்

இசையமைப்பாளர் சி.எஸ். ஜெயராமன் நடித்த படம்

RAGHAVENDRA
5th March 2013, 09:19 PM
15. நல்ல தங்காள்

தயாரிப்பு - பயோநியர் பிலிம்ஸ்

இயக்கம் - ஆர். பத்மநாபன்

எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி, ரத்னா பாய், எம்.எஸ். முருகேசன், சரஸ்வதி பாய்

RAGHAVENDRA
12th March 2013, 09:49 AM
16. நள தமயந்தி

தயாரிப்பு - பயோநியர் பிலிம்ஸ்
களம் - சரித்திரம்
இயக்கம் - பிரேம் சேத்னா

நடிப்பு - எஸ்.வி.வெங்கட்ராமன் - பிரபல இசையமைப்பாளர், மங்கல் ராஜேஸ்வரி

RAGHAVENDRA
12th March 2013, 09:52 AM
17. நவீன சதாரம்

தயாரிப்பு - மதறாஸ் யுனைடெட் கார்ப்பரேஷன்
களம் - சரித்திரம்
திரைக்கதை, தயாரிப்பு இயக்கம் -கே. சுப்ரமணியன்
இசை - பாபநாசம் சிவன்

நடிக நடிகையர் - வித்வான் சங்கரலிங்கம், எஸ்.டி.சுப்புலக்ஷ்மி, ஜி.பட்டு அய்யர், கே.கே. பார்வதி பாய், எஸ்.எஸ்.மணி பாகவதர், இந்து பாலா, குஞ்சிதபாதம், எம்.டி.ராஜம்

RAGHAVENDRA
12th March 2013, 10:01 AM
18. பக்த நந்தனார்

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/61/Nandanar_1935_Poster.JPG/220px-Nandanar_1935_Poster.JPG

தயாரிப்பு - அசன்தாஸ் கிளாஸிகல் டாக்கீஸ்

களம் - புராணம்

இயக்கம் - எம்.எல். டாண்டன்

நடிக நடிகையர்
மஹாராஜபுரம் விஸ்வநாத அய்யர் - வேதியர்
கே.பி. சுந்தராம்பாள் - நந்தனார்

கே.பி.சுந்தராம்பாள் நந்தனார் வேடத்தில் நடித்த படம். ஏற்கெனவே நாடகத்தில் அவர் நடித்த வேடம். இப்படத்தைப் பற்றி பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் திரைக்கலை படத்தில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது எனப் பார்ப்போமா



கே.பி.சுந்தராம்பாள் நாடகத்தில் நடித்த வேடம். பம்பாயைச் சேர்ந்த தயாரிப்பாளர், கே.பி.சுந்தராம்பாளை வைத்து படம் எடுக்க ஆசை. மானசீகக் கணவர் எஸ்.ஜி. கிட்டப்பா இறந்து விட்டதால் நாடத்திலேயே நடிப்பதில் விருப்பமில்லாமல் இருந்தார். அரசியல் வாதி சத்யமூர்த்தியின் சிபாரிசு கடிதத்துடன் சென்றும் நடிக்க மறுத்து விட்டார். தொந்தரவு கொடுத்தனர். அவர்களை விரட்ட, ஒரு லட்ஷ ரூபாய் கொடுத்தால் நடிக்கிறேன் என்று சொல்ல, அவர்கள் அத்தொகைக்கு சம்மதிக்க, வேறு வழியில்லாமல் அப்படத்தில் நடித்தார். வெற்றிப் படம்.


- சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு, பக். 28-4

இப்படத்தைப் பற்றி ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரையைப் படிக்க

http://www.hindu.com/cp/2008/02/08/stories/2008020850351600.htm

விக்கிபீடியா குறிப்புக்கு

http://en.wikipedia.org/wiki/Nandanar_%281935_film%29


http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b5/Nandanar_1935_film.jpg/200px-Nandanar_1935_film.jpg

RAGHAVENDRA
12th March 2013, 10:05 AM
19. பக்த துருவன்

தயாரிப்பு - ஏஞ்சல் பிலிம்ஸ்
களம் - புராணம்
இயக்கம் - பி.வி. ராவ்

நடிக நடிகையர் - சி.எஸ். ஜெயராமன், பி.எஸ். சிவபாக்கியம், பி.எஸ். சிவராமலிங்கம் பிள்ளை, எஸ்.ஆர். ஜானகி பாய், சி.எஸ். கோபாலகிருஷ்ணன், சி.எஸ்.சாமண்ணா சுந்தரம்