PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events



Pages : [1] 2 3 4 5 6 7 8

RAGHAVENDRA
21st January 2013, 06:52 AM
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களைப் பற்றிய தகவல் தொகுப்பு.

தொடக்கமாக அவர் படங்களின் பட்டியல்


பராசக்தி 17.10.1952
பணம் 27.12.1952
பரதேசி (தெலுங்கு) 14.01.1953
பூங்கோதை 31.01.1953
திரும்பிப்பார் 10.07.1953
அன்பு 24.07.1953
கண்கள் 05.11.1953
பொம்புடு கொடுகு 13.11.1953
மனிதனும் மிருகமும் 04.12.1953
மனோகரா 03.03.1954
இல்லற ஜோதி 09.04.1954
அந்த நாள் 13.04.1954
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி 13.04.1954
மனோகரா (ஹிந்தி) 03.06.1954
மனோகரா (தெலுங்கு) 03.06.1954
துளி விஷம் 30.07.1954
கூண்டுக்கிளி 26.08.1954
தூக்குத்தூக்கி 26.08.1954
எதிர்பாராதது 09.12.1954
காவேரி 13.01.1955
முதல் தேதி 12.03.1955
உலகம் பல விதம் 14.04.1955
மங்கையர் திலகம் 26.08.1955
கோட்டீஸ்வரன் 13.11.1955
கள்வனின் காதலி 13.11.1955
நான் பெற்ற செல்வம் 14.01.1956
நல்ல வீடு 14.01.1956
நானே ராஜா 25.01.1956
தெனாலி ராமன் 03.02.1956
பெண்ணின் பெருமை 17.02.1956
ராஜா ராணி 25.02.1956
அமர தீபம் 29.06.1956
வாழ்விலே ஒரு நாள் 21.09.1956
ரங்கூன் ராதா 01.11.1956
பராசக்தி (தெலுங்கு) 11.01.1957
மக்களைப் பெற்ற மகராசி 27.02.1957
வணங்காமுடி 12.04.1957
புதையல் 10.05.1957
மணமகன் தேவை 17.05.1957
தங்கமலை ரகசியம் 29.06.1957
ராணி லலிதாங்கி 21.09.1957
அம்பிகாபதி 22.10.1957
பாக்கியவதி 27.12.1957
பொம்மல பெள்ளி (தெலுங்கி) 11.01.1958
உத்தம புத்திரன் 07.02.1958
பதிபக்தி 14.03.1958
சம்பூர்ண ராமாயணம் 14.04.1958
பொம்மை கல்யாணம் 03.05.1958
அன்னையின் ஆணை 04.07.1958
சாரங்கதாரா 15.08.1958
சபாஷ் மீனா 03.10.1958
காத்தவராயன் 07.11.1958
தங்க பதுமை 10.01.1959
நான் சொல்லும் ரகசியம் 07.03.1959
வீரபாண்டிய கட்டபொம்மன் 16.05.1959
மரகதம் 21.08.1959
அவள் யார் 30.10.1959
பாக பிரிவினை 31.10.1959
இரும்புத் திரை 14.01.1960
குறவஞ்சி 04.03.1960
தெய்வப் பிறவி 13.04.1960
ராஜ பக்தி 27.05.1960
படிக்காத மேதை 25.06.1960
பாவை விளக்கு 19.10.1960
பெற்ற மனம் 19.10.1960
விடிவெள்ளி 31.12.1960
பாவ மன்னிப்பு 16.03.1961
புனர் ஜென்மம் 21.04.1961
பாச மலர் 27.05.1961
எல்லாம் உனக்காக 01.07.1961
ஸ்ரீ வள்ளி 01.07.1961
மருத நாட்டு வீரன் 24.08.1961
பாலும் பழமும் 09.09.1961
கப்பலோட்டிய தமிழன் 07.11.1961
பார்த்தால் பசி தீரும் 14.01.1962
நிச்சய தாம்பூலம் 09.02.1962
வளர் பிறை 30.03.1962
படித்தால் மட்டும் போதுமா 14.04.1962
பலே பாண்டியா 26.05.1962
வடிவுக்கு வளைகாப்பு 07.07.1962
செந்தாமரை 14.09.1962
பந்த பாசம் 27.10.1962
ஆலயமணி 23.11.1962
சித்தூர் ராணி பத்மினி 09.02.1963
அறிவாளி 01.03.1963
இருவர் உள்ளம் 29.03.1963
நான் வணங்கும் தெய்வம் 12.04.1963
குலமகள் ராதை 07.06.1963
பார் மகளே பார் 12.07.1963
குங்குமம் 12.08.1963
ரத்த திலகம் 14.09.1963
கல்யாணியின் கணவன் 20.09.1963
அன்னை இல்லம் 15.11.1963
கர்ணன் 14.01.1964
பச்சை விளக்கு 03.04.1964
ஆண்டவன் கட்ட்ளை 12.06.1964
கை கொடுத்த தெய்வம் 18.07.1964
புதிய பறவை 12.09.1964
முரடன் முத்து 03.11.1964
நவராத்திரி 03.11.1964
பழநி 14.01.1965
அன்புக் கரங்கள் 19.02.1965
சாந்தி 22.04.1965
திருவிளையாடல் 31.07.1965
நீலவானம் 10.12.1965
மோட்டார் சுந்தரம் பிள்ளை 26.01.1966
மகாகவி காளிதாஸ் 19.08.1966
சரஸ்வதி சபதம் 03.09.1966
செல்வம் 11.11.1966
கந்தன் கருணை 14.01.1967
நெஞ்சிருக்கும் வரை 3.02.1967
பேசும் தெய்வம் 14.04.1967
தங்கை 19.05.1967
பாலாடை 16.06.1967
திருவருட் செல்வர் 28.07.1967
இரு மலர்கள் 01.11.1967
ஊட்டி வரை உறவு 01.11.1967
திருமால் பெருமை 16.02.1968
ஹரிச்சந்திரா 11.04.1968
கலாட்டா கல்யைணம் 12.04.1968
என் தம்பி 07.06.1968
தில்லானா மோகனாம்பாள் 22.07.1968
எங்க ஊர் ராஜா 21.10.1968
லட்சுமி கல்யாணம் 15.11.1968
உயர்ந்த மனிதன் 29.11.1968
அன்பளிப்பு 01.01.1969
தங்க சுரங்கம் 28.03.1969
காவல் தெய்வம் 01.05.1969
குரு தட்சணை 14.06.1969
அஞ்சல் பெட்டி 520 27.06.1969
நிறை குடம் 09.08.1969
தெய்வ மகன் 05.09.1969
திருடன் 10.10.1969
சிவந்த மண் 10.11.1969
எங்க மாமா 14.01.1970
தர்த்தி (ஹிந்தி) 06.02.1970
விளையாட்டுப் பிள்ளை 20.02.1970
வியட்நாம் வீடு 11.04.1970
எதிரொலி 27.06.1970
ராமன் எத்தனை ராமனடி 15.08.1970
எங்கிருந்தோ வந்தாள் 29.10.1970
சொர்க்கம் 29.10.1970
பாதுகாப்பு 27.11.1970
இரு துருவம் 14.01.1971
தங்கைக்காக 06.02.1971
அருணோதயம் 05.03.1971
குலமா குணமா 26.03.1971
பிராப்தம் 13.04.1971
சுமதி என் சுந்தரி 13.04.1971
சவாலே சமாளி 03.07.1971
தேனும் பாலும் 22.07.1971
மூன்று தெய்வங்கள் 15.08.1971
பாபு 18.10.1971
ராஜா 26.01.1972
ஞான ஒளி 11.03.1972
பட்டிக்காடா பட்டணமா 06.05.1972
தர்மம் எங்கே 15.07.1972
தவப் புதல்வன் 26.08.1972
வசந்த மாளிகை 29.09.1972
நீதி 07.12.1972
பாரத விலாஸ் 24.03.1973
ராஜ ராஜ சோழன் 31.03.1973
பொன்னூஞ்சல் 15.06.1973
எங்கள் தங்க ராஜா 15.07.1973
கௌரவம் 25.10.1973
மனிதரில் மாணிக்கம் 07.12.1973
ராஜபார்ட் ரங்கதுரை 22.12.1973
சிவகாமியின் செல்வன் 26.01.1974
தாய் 07.03.1974
வாணி ராணி 14.04.1974
தங்க பதக்கம் 01.06.1974
என் மகன் 21.08.1974
அன்பைத் தேடி 13.11.1974
மனிதனும் தெய்வமாகலாம் 11.01.1975
அவன் தான் மனிதன் 11.04.1975
மன்னவன் வந்தானடி 02.08.1975
அன்பே ஆருயிரே 27.09.1975
டாக்டர் சிவா 02.11.1975
வைர நெஞ்சம் 02.11.1975
பாட்டும் பரதமும் 06.12.1975
உனக்காக நான் 12.02.1976
கிரகப் பிரவேசம் 10.04.1976
சத்யம் 06.05.1976
உத்தமன் 26.06.1976
சித்ரா பௌர்ணமி 22.10.1976
ரோஜாவின் ராஜா 15.12.1976
அவன் ஒரு சரித்திரம் 14.01.1977
தீபம் 26.01.1977
இளைய தலைமுறை 28.05.1977
நாம் பிறந்த மண் 07.09.1977
அண்ணன் ஒரு கோயில் 10.11.1977
அந்தமான் காதலி 26.01.1978
தியாகம் 04.03.1978
என்னைப் போல் ஒருவன் 19.03.1978
புண்ணிய பூமி 12.05.1978
ஜெனரல் சக்கரவர்த்தி 16.06.1978
தச்சோளி அம்பு (மலையாளம்) 27.10.1978
பைலட் பிரேம்நாத் 28.10.1978
ஜஸ்டிஸ் கோபிநாத் 16.12.1978
திரிசூலம் 26.01.1979
கவரி மான் 06.04.1979
நல்லதொரு குடும்பம் 03.05.1979
இமயம் 21.07.1979
நான் வாழ வைப்பேன் 10.08.1979
பட்டாக்கத்தி பைரவன் 19.10.1979
வெற்றிக்கு ஒருவன் 08.12.1979
ரிஷிமூலம் 26.01.1980
தர்மராஜா 26.04.1980
யமனுக்கு யமன் 16.05.1980
ரத்தபாசம் 14.06.1980
விஸ்வ ரூபம் 06.11.1980
மோகன புன்னகை 14.01.1981
சத்திய சுந்தரம் 21.02.1981
அமர காவியம் 24.04.1981
கல் தூண் 01.05.1981
லாரி டிரைவர் ராஜாக்கண்ணு 03.07.1981
மாடி வீட்டு ஏழை 22.08.1981
கீழ் வானம் சிவக்கும் 26.10.1981
ஹிட்லர் உமாநாத் 26.01.1982
ஊருக்கு ஒரு பிள்ளை 05.02.1982
வா கண்ணா வா 06.02.1982
கருடா சௌக்கியமா 25.02.1982
சங்கிலி 14.04.1982
வசந்தத்தில் ஓர் நாள் 07.05.1982
தீர்ப்பு 21.05.1982
நீவுரு கப்பின நெப்பு (தெலுங்கு) 24.06.1982
தியாகி 03.09.1982
துணை 01.10.1982
பரீட்சைக்குக நேரமாச்சு 14.11.1982
ஊரும் உறவும் 14.11.1982
நெஞ்சங்கள் 10.12.1982
பெஜவாடா பொப்பிலி (தெலுங்கு) 14.01.1983
நீதிபதி 26.01.1983
இமைகள் 12.04.1983
சந்திப்பு 16.06.1983
சுமங்கலி 12.08.1983
மிருதங்க சக்கரவர்த்தி 24.09.1983
வெள்ளை ரோஜா 01.11.1983
திருப்பம் 14.01.1984
சிரஞ்சீவி 17.02.1984
தராசு 16.03.1984
வாழ்க்கை 14.04.1984
சரித்திர நாயகன் 26.05.1984
சிம்ம சொப்பனம் 30.06.1984
எழுதாத சட்டங்கள் 15.08.1984
இரு மேதைகள் 14.09.1984
தாவணி கனவுகள் 14.09.1984
வம்ச விளக்கு 23.10.1984
பந்தம் 26.01.1985
நாம் இருவர் 08.03.1985
படிக்காத பண்ணையார் 23.03.1985
நீதியின் நிழல் 13.04.1985
நேர்மை 03.05.1985
முதல் மரியாதை 15.08.1985
ராஜரிஷி 20.09.1985
படிக்காதவன் 11.11.1985
சாதனை 10.01.1986
மருமகள் 26.01.1986
ஆனந்தக் கண்ணீர் 07.03.1986
விடுதலை 11.04.1986
தாய்க்கு ஒரு தாலாட்டு 16.07.1986
லட்சுமி வந்தாச்சு 01.11.1986
மண்ணுக்குள் வைரம் 12.12.1986
ராஜ மரியாதை 14.01.1987
குடும்பம் ஒரு கோவில் 26.01.1987
முத்துக்கள் மூன்று 06.03.1987
வீர பாண்டியன் 14.04.1987
அன்புள்ள அப்பா 16.05.1987
விஸ்வநாத நாயக்கடு (தெலுங்கு) 14.08.1987
அக்னி புத்ருடு (தெலுங்கு) 27.08.1987
கிருஷ்ணன் வந்தான் 28.08.1987
ஜல்லிக்கட்டு 28.08.1987
தாம்பத்யம் 20.11.1987
என் தமிழ் என் மக்கள் 02.09.1988
புதிய வானம் 10.12.1988
ஞான பறவை 11.01.1991
நாங்கள் 13.03.1992
சின்ன மருமகள் 23.05.1992
முதல் குரல் 14.08.1992
தேவர் மகன் 25.10.1992
பாரம்பர்யம் 13.11.1993
பசும்பொன் 14.04.1995
ஒன்ஸ் மோர் 04.07.1995
ஒரு யாத்ரா மொழி (மலையாளம்) 15.08.1997
என் ஆச ராசாவே 28.08.1998
மன்னவரு சின்னவரு 15.01.1999
படையப்பா 10.04.1999
பூப்பறிக்க வருகிறோம் 17.09.1999

மர்மவீரன் 03.08.1956
தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை 14.04.1959
குழந்தைகள் கண்ட குடியரசு 29.07.1959
தாயே உனக்காக 26.08.1966
சினிமா பைத்தியம் 31.01.1975
உருவங்கள் மாறலாம் 14.01.1983
நட்சத்திரம் 12.04.1980
பில்லலு தெச்சின தெல்லலு ராஜ்யம் (தெலுங்கு) 01.07.1960
ராமதாஸு (தெலுங்கு) 23.12.1964
பங்காரு பாபு (தெலுங்கு) 15.03.1973
பக்த துகாராம் (தெலுங்கு) 05.07.1973
ஜீவன தீராலு (தெலுங்கு) 12.08.1977
சாணக்ட சந்திரகுப்தா (தெலுங்கு) 25.08.1977
ஸ்கூல் மாஸ்டர் (கன்னடம்) 31.01.1958
மக்கள ராஜ்ய (மலையாளண்) 05.08.1960
ஸ்கூல் மாஸ்டர் (ஹிந்தி) 03.04.1964


நமது அன்பு நண்பர்கள் பம்மலார் மற்றும் வாசுதேவன் அவர்கள் இங்கே ஏற்கெனவே வேறு திரிகளில் அளித்துள்ள நிழற்படங்கள் இங்கே பயன் படுத்தப் படும். அவற்றிற்காக மீண்டும் அவர்களுக்கு நம் உளமார்ந்த நன்றிகள்.

This thread is dedicated to the pioneer for nt in this mayyam - thiru murali sir, incomparable thiru neyveli vasudevan sir and the one and only archive expert pammal swaminathan sir.

a quick glance or classification of contents

1. Sivaji ganesan filmography
2. news and events
3. Video of the film concerned

RAGHAVENDRA
21st January 2013, 07:00 AM
Sivaji Ganesan Filmography Series

This will be a source of info on the filmography of Sivaji Ganesan to be produced chronologically starting from his first film.

1. PARASAKTHI

http://www.shotpix.com/images/31713868331032389396.png

RELEASED ON : 17.10.1952

Story: M. Balasundaram
Dialogue: M. Karunanidhi
Music: R. Sudarsanam
Direction: Krishnan-Panchu
Produced by : P.A. Perumal for National Pictures
Cinematography: S. Maruthi Rao
Cast: Sivaji Ganesan, S.V. Sahasranamam, S.S. Rajendran, V.K.Ramasamy, Pandari Bai, Sri Ranjani and others.

RAGHAVENDRA
21st January 2013, 07:02 AM
Yesterday, 20.01.2013 saw the First Anniversary of our NTFAnS - Nadigar Thilagam Film Appreciation Association. Shri Nalli Kuppusamy, Shri AV.M. Saravanan, Shri Dushyanth Ramkumar participated. Our Murali Sir, presided and lead the Stage. Sri Saravanan Sir shared his nostalgia on the film Uyarntha Manithan.
The classic "Uyarntha Manithan" was screened at the occasion.

Details follow soon

Richardsof
21st January 2013, 09:03 AM
DEAR RAGAVENDRAN SIR

VERY NICE BEGINING .

Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

WISH YOU ALL SUCCESS.... SUCCESS ...SUCCESS

WITH CHEERS

esvee

Richardsof
21st January 2013, 09:08 AM
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்

உங்கள் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை .

உலகில் உள்ள எந்த ஒரு நாட்டிலும் , எந்த ஒரு மொழியிலும் , இல்லாத சிறப்பு நமது திலகங்களின்
படங்கள் , பாடல்கள் ,தனிப்பட்ட அவர்களது சிறப்புக்கள் ,பற்றி தொடர்ந்து பல கட்டுரைகள் - ஆய்வுகள் -நிழற் படங்கள் -வீடியோ -அன்றாட செய்திகள் - என்று அவர்கள் நினைவாகவே வாழ்ந்துவரும் பக்தர்கள் நாம் என்று சொல்வதில் உள்ள பெருமை -திருப்தி -......புண்ணியம் செய்தவர்கள் நாம் .

நீங்கள் குறிப்பிட்டதுபோல் 1960-1977 கால கட்டங்களில்
நவீன தொழில் நுட்பம் இல்லாத நேரத்தில் கடித போக்குவரத்து மட்டுமே ரசிகர்களை இனைய வைத்தது .

இன்று கடந்த காலத்தையே நேரில் காணும் அளவிற்கு
தொழில் நுட்பம் உண்டாக்கிய தாக்கம் மக்கள் திலகம் - நடிகர் திலகம் இருவரின் சாதனைகள் மீண்டும் மையம்
இணய தளத்தில் மூலம் புகழ் பரப்பிடும் சாதனமாக
மாறி வருவது ரசிகர்களாகிய நமக்கு இந்த திரி ஒரு வரபிரசாதம்தான் .

நீங்கள் மற்றும் பம்மலார் - நெய்வேலி வாசு சார்
மூவரும் நடிகர் திலகத்தின் அத்தனை சாதனைகளையும்
சுமார் 10 திரிகளில் பதிவிட்டு சாதனை புரிந்துள்ளீர்கள் .
அதே போல் கடந்த 2012 முதல் நானும் மற்ற நண்பர்களும் மக்கள் திலகம் திரியில் பாகம் 2-3-4 என்று பயணம் செய்கின்றோம் .

திரியில் ஒரு கட்டுரை பதிவு செய்யவோ - நிழற்படம் மற்றும் வீடியோ பதிவு செய்வதோ - எந்த அளவு கால விரயம் - தேடுதல் - உழைப்பு -அளவிட முடியாத பணியாகும் .

நமது சேவையின் அருமையினை பலரும் உணர்ந்துள்ளனர் .

மையம் திரியில் தினமும் பதிவிடுவது - பார்வையிடுவது

மூலம் கிடைக்கும் ஒரு ஆத்ம திருப்தி வேறு எதற்கும் ஈடாகாது .

இந்த அரிய வாய்ப்பு தந்த மையம் நிறுவனத்திற்கும் நன்றி .

நடிகர் திலகம் திரியின் மூலம் ஏற்பட்ட நட்பு வட்டத்துக்கும் ,மக்கள் திலகம் திரி மூலம் மேலும் பல நண்பர்கள் இணைந்து இன்று பாகம் 4 வெற்றி நடை போடுவதற்கும் மூல காரணமான மக்கள் திலகம் - நடிகர் திலகம் இருவருக்கும் நன்றி கூறி நாம் தொடர்ந்து பயணம் செய்வோம் .

RAGHAVENDRA
21st January 2013, 09:33 AM
அன்பு சகோதரி வனஜா,
தங்களுடைய அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி. தங்களுடைய தொகுப்பான வீடியோவைக் காண ஆவலுடன் காத்திருப்போம்.

RAGHAVENDRA
21st January 2013, 09:43 AM
டியர் வினோத் சார்,
தாங்கள் சொல்வது போல் இங்கு பங்கு கொள்ளும் அனைவருமே அவரவர்க்கு ஏற்ற வகையில் சிவாஜி எம்.ஜி.ஆர். இருவருக்குமே தொண்டு புரிந்து வருகிறார்கள். ஒவ்வொருவரும் தங்களுடைய நேரம், அறிவு, திறமை, உழைப்பு ஆகியவற்றைத் தங்களால் இயன்ற வகையில் செலவழிக்கிறார்கள். அவர்கள் அனைவருக்குமே நமது பாராட்டுக்களும் நன்றிகளும். இந்தத் திரியில் நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய விவரங்கள், நிழற்படங்கள், போன்றவற்றை நாம் பதிவிட்டால், ஆராய்ச்சி செய்வர்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். இதே போல் தாங்களும் திரு எம்.ஜி.ஆர். அவர்களின் படங்களைப் பற்றிய தகவல்கள், நிழற்படங்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ளலாமே. இதன் மூலம் இருவருடைய படங்களைப் பற்றிய விவரங்களையும் அனவைரும் அறிந்து கொள்ள உதவும். இங்கு நடிகர் திலகத்தின் படங்களின் பெயர்களை மட்டும் பட்டியலிட்டாலே பதிவு நீண்டதாய் ஆகிவிடும் என்பதால் அது தரப் படவில்லை. தாங்கள் எம்.ஜி.ஆர். அவர்களுக்காக துவங்கும் எண்ணமிருந்தால் முதலில் படங்களின் பெயர்களைப் பட்டியலிடலாம். 136 படங்களின் பட்டியல் என்னும் போது பதிவின் நீளம் அவ்வளவு பெரியதாய் இருக்காது.

தங்களுக்கு மீண்டும் எனது நன்றி.

RAGHAVENDRA
21st January 2013, 09:44 AM
பராசக்தி - விளம்பரங்களின் நிழற் படங்கள் ... உபயம் நம்முடைய இணையில்லாத ஆவண திலகம் பம்மலார் அவர்கள்.

The Hindu : 13.10.1952
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4820-1.jpg
The Hindu : 14.10.1952
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4821-1.jpg
திராவிட நாடு : 19.10.1952
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/PSAd1-1.jpg
திராவிட நாடு : 26.10.1952
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/ParasakthiAd-1.jpg
The Hindu : 24.10.1952
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/parasakthiad2a-1-1.jpg
The Hindu : 26.10.1952
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4823aa-1.jpg

RAGHAVENDRA
21st January 2013, 09:58 AM
நீங்கள் மற்றும் பம்மலார் - நெய்வேலி வாசு சார் மூவரும் நடிகர் திலகத்தின் அத்தனை சாதனைகளையும் சுமார் 10 திரிகளில் பதிவிட்டு சாதனை புரிந்துள்ளீர்கள் .

தங்களுடைய பாராட்டுக்களுக்கு நன்றி சார். இருந்தாலும் இதற்கெல்லாம் மூல காரணம் இந்த திரியின் மாடரேட்டர்கள், ஜோ மற்றும் முரளி சார். நான் 2008ல் தான் வந்தேன். ஆனால் முரளி சார், ஜோ சார் போன்றோர் அதற்கும் முன்னரே, இணையம் என்ற கான்செப்ட் மக்களிடம் பரவத் தொடங்கிய அந்தக் காலத்திலேயே இவர்கள் இந்த பணியைத் தொடர்ந்து 10 பாகங்கள் வரையில் தொடர காரண கர்த்தாவாக இருப்பவர்கள். இந்தப் பெருமையெல்லாம் அவர்களைத் தான் சேரும். பின்னர் பம்மலார் மற்றும் வாசுதேவன் இருவரும் புதிய பரிணாமத்தில் இதனை கொண்டு சென்று மற்ற இழைகளுக்கு வழிகாட்டியாய் உழைப்பைத் தந்துள்ளனர்.

அனைவருக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்.

JamesFague
21st January 2013, 10:16 AM
Mr Raghavendra Sir,

Congratulation for starting a new thread for our Acting God.


l

adiram
21st January 2013, 11:45 AM
Dear Mr. RAGHAVENDAR sir,

It is a nice thread you have started now and I wish to have a grand sucess and spread Shivaji's fame every corner of the world.

RAGHAVENDRA
21st January 2013, 12:27 PM
பராசக்தி -
சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு
பராசக்தி வெளியீட்டின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிவாஜி பிரபு அறக்கட்டளை சார்பில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப் பட்டது. அதனுடைய நிழற்படம் இதே

http://1.bp.blogspot.com/_rQdqjfXOKY0/SmQ9rJ9ebMI/AAAAAAAAAMY/8BgVjY6q1p4/s1600/001.jpg

http://1.bp.blogspot.com/_rQdqjfXOKY0/SmQ9r2LnbPI/AAAAAAAAAMg/VsxqzaQOU5E/s1600/001%2B(2).jpg

இந்நிழற்படங்களுக்கு நன்றி நமது மய்ய நண்பர் திரு மோகன் ராம் அவர்கள். இந்நிகழ்ச்சியினைப் பற்றிய அவரது வலைப்பூவிற்கான இணைப்பு

http://mohanramanmuses.blogspot.in/2009/07/parasakthi-special-day-cover.html

RAGHAVENDRA
21st January 2013, 12:38 PM
FORTHCOMING EVENTS SERIES

வரும் 26.01.2013 அன்று இந்திய குடியரசு 63ம் ஆண்டினைப் போற்றிடும் வகையில் மதுரையில் ஆசிய ஜோதி பண்டிட் ஜவஹர்லால் நேரு மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படத்திறப்பு விழா நடைபெற உள்ளது. விவரங்கள் கீழே உள்ள படத்தில் தரப் பட்டுள்ளன.

http://sphotos-h.ak.fbcdn.net/hphotos-ak-ash3/149561_465866570142970_691827813_n.jpg

sankara1970
21st January 2013, 01:13 PM
டியர் ராகவேந்திர இந்த புது திரிக்கு வாழ்த்துகள்
நடிகர் திலகத்தின் பட திறப்பு விழா வுக்கு வாழ்த்துகள்

kalnayak
21st January 2013, 03:34 PM
Dear Ragavendra Sir,

Congratulations for creating another thread to analyse NT's filmography and to give news and events. I wish this thread to achieve a grand success as other NT threads.

RAGHAVENDRA
21st January 2013, 09:40 PM
Thank you kalnayak. There are multi-dimensions to do research on Nadigar Thilagam. For the sake of ease, I thought we shall share the filmography, images, news events etc. separately so that discussions may go on in a parallel thread. Those who are interested in news events, images etc. might be able to access them easily if there is a separate thread. This will also serve a supportive role to the discussions thread.

RAGHAVENDRA
21st January 2013, 10:25 PM
பராசக்தி பாடல்கள்

1. வாழ்க வாழ்க - பாரதிதாசன் - எம்.எல்.வசந்த குமாரி
2. இல் வாழ்வினிலே ஒளி ஏற்றும் தீபம் - மு.கருணாநிதி - ஹூசேனி, டி.எஸ். பகவதி
3. ஓ ரசிக்கும் சீமானே - கே.பி.காமாட்சி சுந்தரம் - எம்.எஸ்.ராஜேஸ்வரி
4. பூமாலை நீயே - மு.கருணாநிதி - டி.எஸ்.பகவதி
5. தேசம் ஞானம் கல்வி - உடுமலை நாராயண கவி - சி.எஸ்.ஜெயராமன்
6. கொஞ்சும் மொழி சொல்லும் - கே.பி.காமாட்சி சுந்தரம் - டி.எஸ்.பகவதி
7. கா கா கா - உடுமலை நாராயண கவி - சி.எஸ்.ஜெயராமன்
8. பொருளே இல்லார்க்கு - கே.பி.காமாட்சி சுந்தரம் - டி.எஸ்.பகவதி
9. புதுப் பெண்ணின் மனதைத் தொட்டு - கே.பி.காமாட்சி சுந்தரம் - எம்.எஸ்.ராஜேஸ்வரி
10. நெஞ்சு பொறுக்குதில்லையே - பாரதியார் - சி.எஸ்.ஜெயராமன்
11. எல்லோரும் வாழ வேண்டும் - அண்ணல் தங்கோ - டி.எஸ். பகவதி, எம்.எல்.வசந்த குமாரி

பாடல்களின் விவரத்தில் சில பிழைகள் திருத்தப் பட்டுள்ளன. ஏற்கெனவே விவரங்களை சேமித்தோர், தற்போது உள்ள திருத்தங்களை தங்கள் கோப்பில் செய்து கொள்க.

பிழைகளின் விவரம்
வாழ்க வாழ்க பாடலை இயற்றியது பாவேந்தர் பாரதிதாசன்
கொஞ்சும் மொழி பாடலை இயற்றியது கே.பி.காமாட்சி சுந்தரம்
எல்லோரும் வாழ வேண்டும் பாடலை இயற்றியவர் அண்ணல் தங்கோ.

நன்றி

RAGHAVENDRA
21st January 2013, 10:31 PM
MULTI DIMENSIONAL FACE IN THREE DIMENSIONS - SERIES

Now and then we can have a look of Nadigar Thilagam's images in 3D. Of course, you need a anaglyph (3d) glass to view it.

To begin with

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/my3d/navarathriNT3d1.jpg

RAGHAVENDRA
21st January 2013, 10:40 PM
Dear Mr. RAGHAVENDAR sir,

It is a nice thread you have started now and I wish to have a grand sucess and spread Shivaji's fame every corner of the world.

Thank you Adiram for your kind words and wishes.

Murali Srinivas
22nd January 2013, 12:35 AM
Raghavendar Sir,

Congrats! It was a pleasant surprise when I saw this new offering from you! All the best wishes for this thread!

Thank You for your kind words about me! But I will put Joe ahead of me since he ploughed a lonely furrow in the initial stages!

Hope to see hitherto unknown information about the movies of NT and the man himself!

Once again all the best wishes! God Bless!

Regards

vasudevan31355
22nd January 2013, 05:34 AM
டியர் ராகவேந்திரன் சார்,

திலகத்திற்கு தனித் திரி கண்ட தங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள். தாங்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி! திரி வெற்றிநடை போட என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.


http://i46.tinypic.com/18klg8.jpg

Subramaniam Ramajayam
22nd January 2013, 07:02 AM
டியர் ராகவேந்திரன் சார்,

திலகத்திற்கு தனித் திரி கண்ட தங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள். தாங்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி! திரி வெற்றிநடை போடா என் மனப்போர்வமான
வாழ்த்துக்கள்.

http://i46.tinypic.com/18klg8.jpg

Really a big surpraise for me also when I saw the new thread.
You are a very capable person in bringing forth the news informationsof our LEGEND in a facile manner. wish you all the very BEST in your new venture. GOOD LUCK.

abkhlabhi
22nd January 2013, 11:33 AM
Congrats to Mr.Raghavendra Sir,

http://www.tamiltvshows.net/2013/01/kollywood-king-19-01-2013-vijay-tv-19.html

RAGHAVENDRA
22nd January 2013, 06:26 PM
டியர் முரளி சார்,
தாங்கள் கூறியது மிகவும் சரி. இந்த ஐடியா திடீரென்று மின்னல் போல் தோன்றியதே. அதனால் பலருக்கும் இது சர்ப்ரைஸாகத் தான் இருக்கும். நம்முடைய விவாதங்களின் நடுவில் படங்களைப் பற்றிய விவரங்கள் வந்தாலும் அதே போல் படங்களைப் பற்றிய தகவல்களூடே விவாதங்கள் வந்தாலும் இரண்டுமே தத்தம் சிறப்பினை இழக்கும் அபாயம் உள்ளது. அது மட்டுமின்றி புதியதாக வரக் கூடிய ரசிகர் நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றியோ அல்லது நிகழ்ச்சிகளைப் பற்றியோ அறிய வேண்டும் என்றாலும் அல்லது ஏதேனும் விவாதத்தின் முந்தைய பகுதிகளைப் படிக்க வேண்டும் என்றாலும் பக்கங்களைப் புரட்ட வேண்டியதிருக்கும், அல்லது பாகங்களையே புரட்டிப் பார்க்க வேண்டியதிருக்கும். ஓரளவு இவற்றை தனித்தனியாகத் தந்தோமானால் யாருக்கு எது வேண்டுமோ அவர்களுக்கு சுலபமாக இருக்கும் என்கிற எண்ணத்தின் அடிப்படையிலேயே இது துவங்கப் பட்டுள்ளது. ஏற்கெனவே பம்மலாரும் வாசுவும் மற்ற நண்பர்களும் பகிர்ந்து கொண்ட பல்வேறு தகவல்கள், நிழற்படங்கள், காணொளிகள் போன்றவையே இங்கு மறுபடியும் இடம் பெறப் போகின்றன. எனவே நம் இதய தெய்வம் நடிகர் திலகத்தின் திரிகளுக்கு துணை நிற்கும் வகையில் இது விளங்கும்.

இதே போல் வாழ்த்துரை வழங்கிய ராமஜெயம் சார், பாலகிருஷ்ணன் சார், கோபால் சார் ஆகியோருக்கு மிக்க நன்றி.

அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
22nd January 2013, 06:34 PM
வாசுதேவன் சார்,
தங்களுடைய ஆதரவான வார்த்தைகளுக்கும் குறிப்பாக கட்டபொம்மன் நிழற்படத்திற்கும் மிக்க நன்றி. தொடர்ந்து தங்களுடைய அன்பையும் ஆதரவையும் எதிர்நோக்கும்,
ராகவேந்திரன்

eehaiupehazij
22nd January 2013, 07:05 PM
dear raghavendra sir. best wishes for a speedy pace of this thread. filmwise chronological presentation will certainly impress upon even the younger generation to admire and adore our NT's inimitable and incomparable achievements.

RAGHAVENDRA
22nd January 2013, 07:06 PM
Dear Senthil,
Thank you for the kind words. You have expressed what I have in mind.
Raghavendran

vasudevan31355
22nd January 2013, 07:12 PM
16-12-2012 அன்று வெளிவந்த 'சினிமா எக்ஸ்பிரஸ்' இதழின் 'திருப்புமுனைத் திரைப்படங்கள்' தொடரில் வெளிவந்த தலைவரின் 'பாசமலர்' காவியம் பற்றிய கட்டுரை. படித்து மகிழுங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/pasa_zpsc1a9e7a2.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
22nd January 2013, 07:13 PM
Sivaji Ganesan Filmography Series

2. Panam

Released on: 27.12.1952 all over South and 01.01.1953 in Madras.

ad images courtesy: the one and only Pammalar

The Hindu : 21.12.1952
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Panamad-1.jpg

The Hindu : 27.12.1952
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/panamad1-1.jpg

குண்டூசி : ஜனவரி 1953
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/panamad3-1.jpg

The Hindu : 3.1.1953
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/panamad2-1.jpg

Indian Express : 1.1.1953
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Panamad-2-1.jpg

The Hindu : 9.1.1953
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Panamad4-1.jpg

The Hindu : 23.1.1953
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Panamad5-1.jpg

RAGHAVENDRA
22nd January 2013, 07:15 PM
...contd...

The Hindu : 11.2.1953
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Panamad6-1.jpg

Following text also belongs to Pammalar


குறிப்பு:
1. "பணம்", சென்னையில் 'சித்ரா'வில் 42 நாட்களும், 'பிரபாத்'தில் 48 நாட்களும், 'திருமகள்' திரையரங்கில் 43 நாட்களும், 'காமதேனு'வில் 36 நாட்களும் ஓடி மாநகரில் வெற்றிக்காவியமாகத் திகழ்ந்தது. மேலும், கணிசமான வெளி ஊர்களின் அரங்குகளில் 50 நாட்கள் ஓடிய இக்காவியம், அதிகபட்சமாக மதுரை 'ஸ்ரீதேவி'யில் 84 நாட்கள் ஓடி 'நல்ல வெற்றிக்காவியம்' என்கின்ற பெயரைப் பெற்றது. மதுரையில் ஷிஃப்டிங் முறையில் "பணம்" 100 நாட்களைக் கடந்தது.

2. மெல்லிசை மாமன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைந்து இசையமைத்த முதல் திரைக்காவியம் "பணம்".

3. 1952 டிசம்பரில் திறக்கப்பட்ட சென்னை 'காமதேனு' திரையரங்கில் வெளியான முதல் புதிய தமிழ்த்திரைக்காவியம் "பணம்".

RAGHAVENDRA
22nd January 2013, 07:19 PM
Neyveli Vasudevan Sir's contributions:

images of artists in Panam

http://img231.imageshack.us/img231/9267/vlcsnap2011110509h57m00.png

http://img249.imageshack.us/img249/5896/vlcsnap2011110509h54m32.png

http://img197.imageshack.us/img197/179/vlcsnap2011110509h52m27.png

http://img233.imageshack.us/img233/4042/vlcsnap2011110509h57m16.png

http://img338.imageshack.us/img338/2171/vlcsnap2011110509h55m09.png

http://img560.imageshack.us/img560/5712/vlcsnap2011110514h13m36.png

http://img830.imageshack.us/img830/9639/vlcsnap2011110514h12m57.png

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Panam1.jpg

http://www.moserbaerhomevideo.com/images/titleimages/large/VTAF0853.jpg

RAGHAVENDRA
22nd January 2013, 07:22 PM
Neyveli Vasudevan Sir's contribution... contd...

"பணம்" 'தினத்தந்தி' நாளிதழின் வரலாற்று ஆவணம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-17.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-23.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG_0005-1.jpg

RAGHAVENDRA
22nd January 2013, 07:27 PM
டியர் வாசுதேவன் சார்,
சினிமா எக்ஸ்பிரஸ் கட்டுரை பிரமாதம் ... டிசம்பர் 2012 இதழில் வெளிவந்த பாசமலர் படத்தைப் பற்றிய குமுதம் செல்லப்பாவின் கட்டுரையை உடனடியாக இங்கு நாம் அனைவரும் காணக் கொடுத்த தங்களுக்கு உளமார்ந்த நன்றி. இது போல் காணக் கிடைக்காத பல ஆவணங்களின் அணிவகுப்பாக இது திகழும் என்பதற்கு தங்களுடைய இந்தப் பதிவே முத்தாய்ப்பாக அமைந்துள்ளது.
தொடர்ந்து தங்களின் பங்களிப்பினை ஆவலுடன் எதிர்பார்க்கும்
அன்புடன்
ராகவேந்திரன்

J.Radhakrishnan
22nd January 2013, 08:40 PM
டியர் ராகவேந்தர் சார்,

நம் நடிகர்த்திலகதிற்கென தங்களின் இந்த புதிய திரி இன்ப அதிர்ச்சியாக இருந்தது, இதன் மூலம் உலகெங்கும் உள்ள நம் நடிப்பு கடவுளின் பக்தர்களை சென்றடையும் என்பது திண்ணம்.

RAGHAVENDRA
22nd January 2013, 09:48 PM
தங்களுடைய மகிழ்ச்சிக்கு இத்திரி உதவுகிறது என்பதே எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி ராதாகிருஷ்ணன்.

RAGHAVENDRA
22nd January 2013, 09:50 PM
பணம் - மோசர் பேர் நிறுவனத்தின் நெடுந்தகடு வரிசையில் இடம் பெற்றுள்ளது.

திருடன், பணம், திரும்பிப் பார் என்ற மூன்று படங்கள் கொண்ட டிவிடியின் நிழற்படம் இதோ நம் பார்வைக்கு

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/panamthirudanthirumbipar.jpg

RAGHAVENDRA
22nd January 2013, 09:55 PM
பணம் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களின் விவரம்

இசை - மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி - முதல் படம்
பாடலாசிரியர்கள் - பாவேந்தர் பாரதிதாசன் [பசியென்று வந்தால்], மற்ற பாடல்கள் - கண்ணதாசன்

குரல்கள் - என்.எஸ்.கிருஷ்ணன், சி.எஸ்.ஜெயராமன், ஜி.கே.வெங்கடேஷ், எம்.எல்.வசந்தகுமாரி, குமாரி ரத்தினம், ஜெயலட்சுமி

1. பணம் பந்தியிலே
2. மானத்தோடு வாழ்வோம்
3. குடும்பத்தின் விளக்கு
4. ஆணுக்கோர் நீதி
5. ஙொப்பனைக் கேட்டே முடிப்பேன்
6. எங்கே தேடுவேன்
7. தீனா மூனா கானா
8. இதயத்தை இரும்பாக்கி
9. பசியென்று வந்தால்
10. என் வாழ்வில்
11. ஏழையின் கோயிலை நாடி

vasudevan31355
22nd January 2013, 10:07 PM
எங்கே தேடுவேன்...


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=UEao9rctBBw

uvausan
22nd January 2013, 11:44 PM
Dear Mr.Raghavendran - excellent beginning - your dedication is amazing - hope your presence will continue in our existing threads also - of late there is so much silence on the release of NT movies like Pasamalar , Vasanthamaligai - any update is possible on this sir ? Wishing you all the best in your new endevours. Regards -Ravi :-:-

RAGHAVENDRA
22nd January 2013, 11:47 PM
எங்கே தேடுவேன் நண்பரை
எங்கே தேடுவேன்
உள்ளம் செழிக்க உதவும் நண்பரை
எங்கே தேடுவேன்

இங்கே தேடினேன்
நண்பரை இங்கே தேடினேன்
உள்ளம் செழிக்க
உதவும் நண்பரை
இங்கே தேடினேன்

நடிகர் திலகம் என்னும் இறைவன்
நமக்களித்த பொக்கிஷ மாக
பம்மலாரும் வாசு தேவனும்
மற்றும் இங்கே உள்ளோர் யாவரும்

என்றே உணர்ந்தேன்
மனதில் என்றும் உணர்ந்தேன்.

... நண்பர்களுக்கு நன்றி ... வாசு சார் தங்களுடைய ஊக்கமான ஒத்துழைப்பு அருமை.

RAGHAVENDRA
22nd January 2013, 11:49 PM
Dear Ravi,
Thank you for your kind words. Yes. This will serve as a platform for updates on events, releases etc. of NT's Films/ Programmes etc. Of course, whatever little knowledge I have on NT, shall share it in the discussions threads.
Thank you once again

RAGHAVENDRA
22nd January 2013, 11:51 PM
பணம் பாட்டுப் புத்தகத்தின் பக்கங்கள் நம் பார்வைக்காக

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/panamsbc01fw.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/panamsbc02fw.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/panamsbc03fw.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/panamsbc04fw.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/panamsbc05fw.jpg

RAGHAVENDRA
22nd January 2013, 11:52 PM
பணம் பாட்டுப் புத்தகத்தின் பக்கங்கள் நம் பார்வைக்காக

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/panamsbc06fw.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/panamsbc07fw.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/panamsbc08fw.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/panamsbc09fw.jpg

Murali Srinivas
23rd January 2013, 12:11 AM
Dear Mr.Raghavendran - excellent beginning - your dedication is amazing - hope your presence will continue in our existing threads also - of late there is so much silence on the release of NT movies like Pasamalar , Vasanthamaligai - any update is possible on this sir ? Wishing you all the best in your new endevours. Regards -Ravi :-:-

Dear Ravikumar,

Vasantha Maligai is ready in all aspects. The distributors are waiting for the tax exemption certificate to be issued by the Commercial Taxes department of TN Govt. If in case it is issued in the next few days chances of Vasantha Maligai hitting the screens on Feb 8th is bright. Another hurdle is there are so many new films releasing [on an average of 3,4 films a week] that the availability of good theatres for such films becomes a problem. The distributors are working on this.

Regarding Pasa Malar, the distributor is planning a mid March release like Karnan. Let's hope for the best!

Regards

RAGHAVENDRA
23rd January 2013, 09:10 AM
Sivaji Ganesan Filmography Series

3. Paradesi (Telugu)

Date of Release: 14.01.1953

http://www.song.cineradham.com/songsadmin/movies/paradesi(1953).jpg

Movie: Paradesi 1953 పరదేశి
Cast: Anjali Devi, Pandari Bai, Vasantha, Suryakantham, Anasuya, A.N.R, Ganeshan, S.V.Ranga Rao, Relangi, Raayadu Satyam, Janardhan, Mohan
అంజలి దేవి, పండరీ బాయి, వసంత, సూర్యకాంతం, అనసూయ, ఎ.ఎన్.ఆర్, గణేషన్, యస్.వి.రంగా రావు, రేలంగి, రాయుడు సత్యం, జనార్ధన్, మోహన్
Producer: Laxman Murthy లక్ష్మణ మూర్తి
Director: Prasad ప్రసాద్

Banner
:
Anjali Pictures Combine
Cast
:
Anjali Devi, Nageshwara Rao
Music
:
Adi Narayana Rao
Producer
:
Adi Narayana Rao
Director
:
L.V.Prasad

http://www.sakhiyaa.com/paradesi-1953-%E0%B0%AA%E0%B0%B0%E0%B0%A6%E0%B1%87%E0%B0%B6%E0%B 0%BF/

From Neyveli Vasudevan's Post (http://www.mayyam.com/talk/showthread.php?8593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-9&p=804882&viewfull=1#post804882)



Cast: 'Nadigar thilagam' Sivaji Ganeshan (Anand),Akkineni Nageswara Rao (Chandram), Anjali Devi (Lakshmi), SV Ranga Rao (Rangadu), Pandaribai (Susheela), Vasantha (Tara), , Relangi
Lyrics: Malladi Venkata Krishna Sharma
Music: P. Adi Narayana Rao
Cinematography: Kamal Ghosh
Producers: Anjali Devi and P. Adi Narayana Rao
Director: LV Prasad
Banner: Anjali Pictures
Release Date: 14 January
Trivia: This was made in Telugu and Tamil simultaneously.

Popular Songs:
1. Jeevitame haayi
2. Nenenduku raavaali evari kosamo
3. Pilichindi kaluva puvvu

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/pa.jpg

http://2.bp.blogspot.com/-3-ZhpiAkcmw/TvL6MKMoC0I/AAAAAAAAFZc/9ve-ZT9TzbY/s1600/paradesi.png

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-56.jpg

குறிப்பு: 'பரதேசி' தெலுங்குப் படத்தைத் தழுவி பின்னாளில் திரு.'முக்தா' ஸ்ரீனிவாசன் அவர்கள் 'அந்தமான் காதலி' காவியத்தை கொடுத்தார். தெலுங்கில் திரு நாகேஸ்வரராவ் அவர்கள் செய்த பாத்திரத்தை தமிழில் அந்தமான் காதலியில் பிய்த்து உதறியிருந்தார் நடிகர் திலகம். பரதேசி திரைப் படத்தில் நாகேஸ்வரராவ் அவர்கள் மகனாக நடிகர் திலகம் ஏற்றிருந்த வேடத்தை தமிழில் அந்தமான் காதலியில் தெலுங்கு நடிகர் சந்திரமோகன் அவர்கள் செய்திருந்தார்.


அன்புடன்,
வாசுதேவன்.

parthasarathy
23rd January 2013, 10:07 AM
Dear Raghavender Sir,

Hearty congratulations for starting a new thread for NT. This will take our NT to more people, for sure.

Regards,

R. Parthasarathy

parthasarathy
23rd January 2013, 10:08 AM
Dear Vasudevan (Neyveli) Sir,

I feel really glad to see you come back to the thread. Please come and post regularly to make every one (including me) happy.

Regards,

R. Parthasarathy

JamesFague
23rd January 2013, 11:13 AM
Mr Raghavendran Sir,

Fantastic Series and it will help younger generation to know our
NT's records and performance

Mr Vasudevan Sir,

What a stunning photograph of VPKB and article abount Pasamalar
Pls continue your good work and support Mr Raghavendra in this venture
Hope Mr Pammalar also will join at the earliest.Do not forget to post in other
NT's thread also

KCSHEKAR
23rd January 2013, 11:55 AM
Dear Ragavendiran Sir,

Congrats for your New Thread for our NT. All the best

HARISH2619
23rd January 2013, 01:27 PM
Dear raghavendra sir,
my heartiest congratulations for this new thread .hope mr pammalar will also join us very soon in this thread

RAGHAVENDRA
23rd January 2013, 03:35 PM
டியர் பார்த்தசாரதி, வாசுதேவன், சந்திரசேகர், செந்தில்,
தங்களுடைய ஆதரவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. இது நம் அனைவரின் கூட்டு முயற்சியில் இயங்கும் திரியே அன்றி தனி ஒருவனால் அல்ல. எனவே தங்கள் அனைவருடைய அன்பையும் ஆதரவையும் பங்களிப்பினையும் பெற்று இத்திரி முந்தைய திரிகளுக்குத் துணைபுரியும் என்பதில் ஐயமில்லை.

vasudevan31355
23rd January 2013, 05:51 PM
தலைவரே துணை.

குமுதம் 26-12-2012 இதழில் வெளிவந்த "நடிப்புன்னு வந்துட்டா வெயிலாவது... மழையாவது"...கட்டுரை.

எனக்கு மிகவும் ஏன் நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த 'துணை' திரைப்படத்தில் நடிக தெய்வத்துடனான தனது அனுபவங்களை கதாசிரியர், வசனகர்த்தா, மற்றும் இயக்குனர் 'வியட்நாம் வீடு' சுந்தரம் அவர்கள் இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-18_zpsc80238c5.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-9_zpsa141293a.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-18_zps0179f542.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
23rd January 2013, 06:04 PM
மேற்கண்ட குமுதம் கட்டுரையில் 'வியட்நாம் வீடு' சுந்தரம் தலைவருக்கு நடித்துக் காட்டிய விவரத்தையும், ஸ்டில்லையும் பார்த்திருப்பீர்கள். இப்போது அதே சீனை தலைவர் நமக்கு நடித்துக் காட்டியதைப் பாருங்கள்! அப்பா! என்ன ஒரு expression மற்றும் உடல்மொழி. மலைப்பாகத்தானே இருக்கிறது!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/valippilvathangumthasaratharaaman.jpg

vasudevan31355
23rd January 2013, 06:06 PM
டியர் ராகவேந்திரன் சார்,

'பணம்' படத்தின் அற்புதமான, கிடைத்தற்கரிய பாட்டுப் புத்தகப் பதிவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். தொடரட்டும் தங்கள் வெற்றி முத்திரை.

vasudevan31355
23rd January 2013, 06:08 PM
டியர் பார்த்தசாரதி சார், மற்றும் சித்தூர் வாசுதேவன் சார்,

தங்கள் அன்பிற்கு நன்றி!

RAGHAVENDRA
23rd January 2013, 10:23 PM
டியர் வாசுதேவன் சார்,
குமுதம் இதழில் வெளிவந்த துணை படத்தைப் பற்றிய திரு வியட்நாம் வீடு சுந்தரம் அவர்களுடைய நினைவலைகள் நடிகர் திலகத்தின் Perfection ஐ திறம்பட எடுத்தியம்புகிறது. அதனை நிழற்படமாக்கி இங்கு நம்முடன் பகிர்ந்து கொண்ட தங்களுக்கு உளமார்ந்த நன்றி. இது போல் பல அரிய தகவல் தொகுப்புகளைத் தாருங்கள்.
அன்புடன்

RAGHAVENDRA
23rd January 2013, 10:30 PM
rare info and interesting tid bits series
அபூர்வ தகவல்கள் மற்றும் சுவையான துணுக்குகள் தொகுப்பு

நடிகர் திலகத்தின் திரைப்படங்களைப் பற்றிய அபூர்வமான சம்பவங்கள் நிகழ்வுகள் இங்கே இடம் பெறும். இந்தத் தொகுப்பின் தொடக்கமாக நமது வாசுதேவன் அவர்கள் மேலே தந்துள்ள துணை திரைப்படத்தைப் பற்றிய நினைவலைகளைக் கருதிக் கொள்வோம். இதைத் தொடர்ந்து மேலும் பல செய்திகள், துணுக்குகள் இங்கே இடம் பெறும்.

ஞாயிறும் திங்களும் - நடிகர் திலகம் தேவிகா நடித்து கிட்டத் தட்ட முழுமையடைந்த படம். பாடல்கள் சூப்பர் ஹிட். மெல்லிசை மன்னரின் இசையில் பட்டினும் மெல்லிய பெண்ணிது பாடலும் பூமகள் மேனி துளிர் விடும் காலம் பாடலும் அநேகமாக அனைத்து சிவாஜி ரசிகர்களும் அறிந்திருப்பர்.

இப்படத்திற்குள்ள ஒரு சிறப்பு - மெல்லிசை மன்னர் இசையில் கே.பி.சுந்தராம்பாள் பாடிய ஒரே படம் என்பது மட்டுமல்ல. டி.எம்.எஸ்., கே.பி.சுந்தராம்பாள், பி.சுசீலா மூவரும் இணைந்து பாடிய ஒரு பாடல் இடம் பெற்றதாகும். இது மிக மிக அபூர்வமானதாகும்.

.... தொடரும்....

RAGHAVENDRA
23rd January 2013, 10:34 PM
RARE IMAGES - அபூர்வமான நிழற்படங்கள்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/NTRaginiAnbullaAthanfw.jpg

RAGHAVENDRA
24th January 2013, 07:28 AM
RARE IMAGES - அபூர்வமான நிழற்படங்கள்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/thacholiambushieldfw.jpg

RAGHAVENDRA
24th January 2013, 07:37 AM
RARE IMAGES - அபூர்வமான நிழற்படங்கள்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/PALUMPAZHAMUMSHOOTINGfw.jpg

RAGHAVENDRA
24th January 2013, 07:40 AM
RARE IMAGES - அபூர்வமான நிழற்படங்கள்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/bommaimar80nvp100thdayfw01A.jpg

JamesFague
24th January 2013, 10:01 AM
Fascinating Photo's of NT. We salute your hardwork Mr Raghvaendra Sir,

vasudevan31355
24th January 2013, 10:31 AM
மோட்டார் சுந்தரம் பிள்ளை' அவர்களின் சுந்தரமான தோற்றம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ms_zpsb0b70d0c.jpg

vasudevan31355
24th January 2013, 11:00 AM
திக்கெட்டும் புகழ்க்கொடி நாட்டிய நம் நடிகர் திலகம் புகழ் பாடும் மார்லன் பிராண்டோ

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-18_zpsb45b82f3.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-9_zps3e6b0730.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-18_zps54fcef78.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

JamesFague
24th January 2013, 11:07 AM
Thank you Mr Vasudevan Sir, for the rare information.

kalnayak
24th January 2013, 11:41 AM
இடைவெளி விட்டு மீண்டும் வந்து கலக்கத் துவங்கியிருக்கும் சகோதரர் நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு வாழ்த்துகள். புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி மேல் வெற்றி கொள்ளும் ரசிகவேந்தர் ராகவேந்திர சாருக்கும், அரிதான புகைப்படங்களை வழங்கி மகிழ்வித்தமைக்கு எனது நன்றிகள்.

vasudevan31355
24th January 2013, 12:10 PM
அட்டகாசமான புகைப்படங்களுக்கு நன்றி ராகவேந்திரன் சார்.

vasudevan31355
24th January 2013, 12:11 PM
சகோதரி வனஜா, கல்நாயக் சார் மற்றும் வாசுதேவன் சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

vasudevan31355
24th January 2013, 12:18 PM
http://moviegalleri.net/wp-content/gallery/kumki-latest-photos/kumki_latest_photos_stills_vikram_prabhu_lakshmi_m enon_937d9fb.jpg

விக்ரம் பிரபுவின் 'கும்கி' நெய்வேலி டவுன்ஷிப்பில் கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் ஓடி (ஸ்ரீ நிதி ரத்னா)) சுமார் பதினாறு லட்ச ரூபாய் வசூலை அள்ளிக் குவித்துள்ளது. நெய்வேலியைப் பொறுத்த வரையில் இது மிகப் பெரிய வசூல் சாதனையாகும். ஆண்டவரின் ஆசீர்வாதமே இதற்கு காரணம் என்றால் அது மிகையல்ல.

RAGHAVENDRA
24th January 2013, 01:42 PM
டியர் வாசுதேவன் சார்,
மார்லன் பிராண்டோ நடிகர் திலகத்தை சந்தித்தது பற்றிய ஆரூர்தாஸின் கட்டுரை அபாரம். அதை விட அதனை இங்கு பகிர்ந்து கொண்ட தங்களின் உள்ளத்திற்கு பணிவான நன்றிகள்.

அதே போல் நெய்வேலி டவுன்ஷிப்பில் கும்கி யின் அபார வெற்றி உள்ளத்தில் உவகையூட்டுகிறது. அருமைத் தலைவரின் பேரன் அவர் ஆசீர்வதித்துத் தந்த இந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

நன்றியுடன்

RAGHAVENDRA
24th January 2013, 01:44 PM
பாராட்டுக்களுக்கு நன்றி நெய்வேலி வாசுதேவன், சித்தூர் வாசுதேவன், கல்நாயக் மற்றும் சகோதரி வனஜா.

தங்களுக்காகவும் மற்ற நண்பர்களுக்காகவும் ...

RARE IMAGES - அபூர்வமான நிழற்படங்கள்

சென்னை சாந்தி திரையரங்கில் திரிசூலம் திரைப்படத்தின் பேனர் வைக்கப் பட்டிருந்த போது எடுக்கப் பட்டிருந்த நிழற்படம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/thirisulamShantibnr_zpsa1825afe.jpg

RAGHAVENDRA
24th January 2013, 02:03 PM
Is there any chance of viewing the stills taken in the movie in which NT & Devika acted? I'd love to see the movie too. I mostly like info about NT's movies released in 50's.

Is there any particular film you have in mind? or working still ?

RAGHAVENDRA
24th January 2013, 02:04 PM
டியர் வாசு சார்,
மோட்டார் சுந்தரம் பிள்ளை .... என்ன ஒரு அருமையான காட்சி ... என்ன ஒரு அருமையான நிழற்படம் ... பாராட்ட வார்த்தைகளில்லை .. மிக்க நன்றி சார்...
அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
24th January 2013, 02:09 PM
RARE IMAGES - அபூர்வமான நிழற்படங்கள்

சென்னை அண்ணாசாலையில் திரிசூலம் திரைப்படத்திற்காக வைக்கப் பட்டிருந்த பேனரில் நடிகர் திலகத்தின் கட்-அவுட்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/rare%20snaps/thirisulamcutout1979.jpg

RAGHAVENDRA
24th January 2013, 02:17 PM
RARE IMAGES - அபூர்வமான நிழற்படங்கள்

பெங்களூருவில் தங்கப் பதக்கம் முதல் வெளியீட்டின் போது சங்கீதா திரையரங்கில் வைக்கப் பட்டிருந்த பேனர்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/rare%20snaps/goldmdlbnr.jpg

uvausan
24th January 2013, 02:19 PM
Dear Mr Murali - thanks for your instant response - it's worth waiting to see the repeated success like Karnan for VM and PM also -Regards :-D

KCSHEKAR
24th January 2013, 02:37 PM
அரிதான புகைப்படங்களுக்கு நன்றி ராகவேந்திரன் சார்.

KCSHEKAR
24th January 2013, 02:39 PM
டியர் வாசுதேவன் சார்,
குமுதம் இதழில் வெளிவந்த துணை படத்தைப் பற்றிய திரு வியட்நாம் வீடு சுந்தரம் அவர்களுடைய நினைவலைகள் நடிகர் திலகத்தின் Perfection ஐ திறம்பட எடுத்தியம்புகிறது. அதனை நிழற்படமாக்கி இங்கு நம்முடன் பகிர்ந்து கொண்ட தங்களுக்கு உளமார்ந்த நன்றி. இது போல் பல அரிய தகவல் தொகுப்புகளைத் தாருங்கள்.


Thanks Vasu Sir

RAGHAVENDRA
24th January 2013, 03:27 PM
rare info and interesting tid bits series
அபூர்வ தகவல்கள் மற்றும் சுவையான துணுக்குகள் தொகுப்பு

தன் மகன் பேருந்தில் அடிபட்டு இறந்து விட்டான் என்ற செய்தியைக் கேட்டதும் ஒரு தந்தையின் துடிதுடிப்பு எப்படியிருந்திருக்கும் ...
உடனே பரீட்சைக்கு நேரமாச்சு படம் நினைவுக்கு வருகிறதல்லவா ..

இந்தப் பகுதி ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து சித்தரிக்கப் பட்டதாம். ஜெனரல் சக்கரவர்த்தி படப் பிடிப்பின் போது இயக்குநர் யோகானந்த் மும்முரமாக படப்படிப்பின் பணிகளை கவனித்துக் கொண்டிருந்த போது அரங்கத்தில் அவருக்கு தொலைபேசி ...

தாங்கள் மேலே படித்தீர்களே அது தான் நடந்தது ... ஆம் தொலைபேசியில் யோகானந்த் அவர்களின் புதல்வர் இறந்து விட்டதாக செய்தி வந்ததாகவும் அவரை நடிகர் திலகம் ஆறுதல் சொல்லி உடனே அனுப்பி வைத்ததாகவும் கேள்விப் பட்டிருக்கிறேன். யோகானந்த் அவர்களின் புதல்வர் சாலை விபத்தில் இறந்ததாக செய்தி வந்தது கேட்டு அவருடைய துடிதுடிப்பைப் பார்த்த நடிகர் திலகம் அவரை உடனே செல்லப் பணித்தார். இயக்குநரோ அந்த குறிப்பிட்ட காட்சியினை மட்டுமாவது முடிக்காமல் செல்ல மாட்டேன் எனச் சொல்லி அதே மாதிரி செய்தார்.

இயக்குநரின் துயரம் நடிகர் திலகத்தின் உள்மனதில் ஆழப் பதிந்து பின்னாளில் பரீட்சைக்கு நேரமாச்சு படத்தில் வெளிப்பட்டது.

RAGHAVENDRA
24th January 2013, 04:18 PM
Sivaji Ganesan Filmography Series

1953ம் ஆண்டில் வெளிவந்த நடிகர் திலகத்தின் படங்கள்

பரதேசி தெலுங்கு - 14.01.1953
பூங்கோதை - 31.01.1953
திரும்பிப்பார் - 10.07.1953
அன்பு - 24.07.1953
கண்கள் - 05.11.1953
பெம்புடு கொடுகு தெலுங்கு - 13.11.1953
மனிதனும் மிருகமும் - 04.12.1953


4. பூங்கோதை

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/PoongothaiMovieAd_zpsaa331c5f.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-73.jpg

பரதேசி தெலுங்குப் படத்தின் தமிழ் வடிவம்

வெளியான நாள் - 31.01.1953

தயாரிப்பு - அஞ்சலி பிக்சர்ஸ்
இயக்கம் - எல்.வி.பிரசாத்
உரையாடல் - சக்தி கிருஷ்ணசாமி
ஒளிப்பதிவு - கமால் கோஷ் - இப்படத்தின் ஒளிப்பதிவாளர் கமால் கோஷின் உதவியாளர் தான் பிரபல ஒளிப்பதிவு மேதை ஏ.வின்சென்ட் அவர்கள். இவரிடம் தான் இயக்குநர் பிரசாத் அவர்கள் நடிகர் திலகத்தின் கண்களைப் பார்த்து, சிறந்த நடிகராக வருவார் என தீர்க்க தரிசனமாக கணித்தார்
இசை - ஆதி நாராயண ராவ்

நடிக நடிகையர்
சிவாஜி கணேசன், ஏ.நாகேஸ்வர ராவ், அஞ்சலி தேவி, எஸ்.வி.ரங்காராவ், பண்டரி பாய், புதுமுகம் வஸந்தா மற்றும் பலர் நடித்தது.

இப்படத்தின் பாடல்களுக்கான இணைப்பு

http://www.inbaminge.com/t/p/Poongothai/

RAGHAVENDRA
24th January 2013, 09:47 PM
RARE IMAGES - அபூர்வமான நிழற்படங்கள்

பட்டிக்காடா பட்டணமா திரைக்காவியத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பு மதுரையை அடுத்த சோழ வந்தான் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்றது. அப்போது அங்கு வசித்து வந்த திரு டி.ஆர்.மகாலிங்கம் அவர்களை நடிகரி திலகம் சந்தித்தார். அந்த சந்தர்ப்பத்தில் நடிகர் திலகத்தை தன் வீட்டிற்கு அழைத்து உபசரித்தார் திரு டி.ஆர்.மகாலிங்கம் அவர்கள். அவருடைய அழைப்பை ஏற்று அவர் வீட்டில் நடிகர் திலகமும் கமலா அம்மா அவர்களும் விஜயம் புரிந்த போது எடுத்த படம்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/wTRMinPPSozhavandhan_zps34597b8e.jpg

RAGHAVENDRA
24th January 2013, 10:14 PM
தங்களுடைய பாராட்டுக்கு நன்றி சந்திரசேகர் சார்

anm
25th January 2013, 12:59 AM
Dear Raghavendra Sir,

It is a pleasant surprise for me to-day to see a new thread started by you and I warmly welcome it as I was keeping away for more than ten days now from our regular thread the reason being I was not at all happy of the incidents someone blaming our Mr.Vasudevan and write-ups against you in particular and I was fed up with controversial write-ups.

I am very happy to see a new thread and all the best wishes for the success of this thread.

Anand

RAGHAVENDRA
25th January 2013, 07:37 AM
Thank you Anand for your kind words of encouragement. This thread is exclusively for the filmography, events coverage, news, sharing of images etc. in other words this will be more oriented towards archival purpose and discussions may be limited to the provided material. Hence I do not hope any such situation arises.
Thank you once again.

RAGHAVENDRA
25th January 2013, 07:38 AM
RARE IMAGES - அபூர்வமான நிழற்படங்கள்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/nt02_zps2bad62bf.jpg

vasudevan31355
25th January 2013, 08:22 AM
டியர் சந்திரசேகரன் சார்,
மிக்க நன்றி!

ஆனந்த் சார்,
தங்களின் அன்பான ஆதரவிற்கு நன்றி!

vasudevan31355
25th January 2013, 08:39 AM
டியர் ராகவேந்திரன் சார்,

'பரிட்சைக்கு நேரமாச்சு' துணுக்கு பலருக்குத் தெரியாத அபூர்வமான தகவல். பேசும்படம் மலரின் 'பூங்கோதை' நிழற்படம் மிக நன்று. எங்கு தேடியும் கிடைக்க முடியாத அபூர்வ பொக்கிஷம். நிஜமாகவே கண்களைவிட்டு அகலாத உன்னதமான பதிவு. தங்களால் இந்ததத் திரி தொடங்கப்பட்டதின் பயனை இப்போது இந்த அட்டகாசப் பதிவின் மூலம் உணர்கிறேன். திரு டி.ஆர்.மகாலிங்கம் அவர்கள் தலைவருக்கு அவர் வீட்டில் விருந்தளித்து கௌரவித்ததும் இதுவரை நான் அறிந்திராத விஷயம். அந்தப் புகைப்படமும் பொக்கிஷ வரிசையில் சேர்கிறது. மிக அற்புதமான பதிவு. தங்களின் புது அவ்தாராக நெஞ்சையள்ளும் தலைவரின் படு ஸ்டைலான அந்த கருப்பு வெள்ளை புகைப்படம் பூஜையறையில் வைத்து வணங்கத் தக்கது. திரிசூலம், தங்கப்பதக்கம் பேனர்களும் அந்தக் காலகட்டங்களுக்கே நம்மை அழைத்துச் செல்கின்றன. தங்களின் விலைமதிப்பற்ற சேவையில் திரி திக்கெட்டும் கொடி நாட்டப் போவது உறுதி. அனைத்து அபூர்வப் பதிவுகளுக்கும் என் வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள்.

vasudevan31355
25th January 2013, 08:53 AM
Trisoolam painting

http://farm3.staticflickr.com/2317/2209617194_37375b58f5_z.jpg?zz=1

vasudevan31355
25th January 2013, 09:23 AM
'பூங்கோதை' யைத் தழுவி எடுக்கப்பட்ட 'அந்தமான் காதலி'

http://i.ytimg.com/vi/wNnm5Y0PrnY/0.jpghttp://i.ytimg.com/vi/BntrIvh0sMY/0.jpg

RAGHAVENDRA
25th January 2013, 09:35 AM
டியர் வாசு சார்,
திரிசூலம் ஓவியம் அமர்க்களம். வரைந்தவருக்கும் அதனை இங்கு பதிவிட்ட தங்களுக்கும் உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும். அதே போல் பூங்கோதையின் மறு வடிவமான அந்தமான் காதலி நிழற்படம் கண் குளிர வைக்கும் தெள்ளத் தெளிவான பிரதிக்கும் நன்றிகள். தொடரட்டும் தங்கள் தொண்டு.
அன்புடன்
ராகவேந்திரன்

vasudevan31355
25th January 2013, 09:37 AM
Nadigar thilagam (Dot image)

http://2.bp.blogspot.com/-t299aAhjKms/TfHg-U7l_eI/AAAAAAAAB6Y/862BLTm_eBw/s1600/100_0445.JPG

RAGHAVENDRA
25th January 2013, 09:38 AM
RARE IMAGES - அபூர்வமான நிழற்படங்கள்

இதுவரை வெளிவராத நிழற்படம். திரிசூலம் திரைக்காவியத்தின் 200வது நாள் விழாவில் வானொலி விளம்பரதாரர் எல்.ஆர்.ஸ்வாமி நிறுவனத்தார் சார்பில் நடிகர் திலகத்திடம் கேடயம் பெறும் காட்சி. நன்றி நண்பர் திரு பாண்டியன்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/THRISHIELDLRSWAMY_zps0321b75c.jpg

RAGHAVENDRA
25th January 2013, 09:39 AM
டாட் நிழற்படம் சூப்பரோ சூப்பர் வாசு சார். போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்

vasudevan31355
25th January 2013, 09:41 AM
'Gowravam' 100 days

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-snc7/s720x720/387836_134366043335833_817692026_n.jpg

vasudevan31355
25th January 2013, 09:43 AM
நன்றி: தமிழ்த்திரை.

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash4/s720x720/393733_134366080002496_1126851230_n.jpg

vasudevan31355
25th January 2013, 09:49 AM
நன்றி: தமிழ்த்திரை.

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash4/s720x720/388022_134366173335820_491355364_n.jpg

vasudevan31355
25th January 2013, 09:53 AM
Sivandha Mann 100 days

http://upload.wikimedia.org/wikipedia/en/2/22/Sivandha_Mann.png

JamesFague
25th January 2013, 10:42 AM
Mr Raghavendra Sir & Mr Vasudevan Sir,

Asathalana Photo's of NT. Super.

HARISH2619
25th January 2013, 01:20 PM
Dear raghavendra sir & vasu sir,
all the stills are very super.as they say nt is the only actor who looks good in all the 360 degree angle.

RAGHAVENDRA
25th January 2013, 06:21 PM
MULTI DIMENSIONAL FACE IN THREE DIMENSIONS - SERIES

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/my3d/thirisulampainting.jpg

VASUDEVAN SIR, THANK YOU FOR THE IMAGE.

KCSHEKAR
25th January 2013, 08:18 PM
http://www.facebook.com/photo.php?fbid=254996517965161&set=a.101214793343335.859.100003644430621&type=1&theater

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/INTUCFunctionNellai_zps66183fd6.jpg

RAGHAVENDRA
25th January 2013, 11:35 PM
RARE IMAGES - அபூர்வமான நிழற்படங்கள்

வெளிவராத பம்பாய் பாபு திரைப்படத்திலிருந்து அபூர்வமான ஸ்டில்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/bbabu01_zps49f9b008.jpg

vasudevan31355
26th January 2013, 06:42 AM
http://www.koodal.com/contents_koodal/women/images/2012/Republic%20Day-jpg-1193.jpg
குழந்தைகள் கண்ட குடியரசு.(1960)

தயாரிப்பு: பத்மினி பிக்சர்ஸ்

நடிகர்கள்: சிம்மக் குரலோன், 'ஜாவர்' சீத்தாராமன், பி.ஆர்.பந்துலு, 'குலதெய்வம்' ராஜ கோபால், கே.ஆர். சாரங்கபாணி, மாஸ்டர் கோபி

நடிகைகள்: வழக்கம் போல (பத்மினி பிக்சர்ஸ்) எம்.வி.ராஜம்மா, லட்சுமி ராஜம், பேபி லட்சுமி.

கதை: தாதாமிராசி

வசனம்: விந்தன்

பாடல்கள்: கு.மா. பாலசுப்ரமணியம்

இசை: டி .ஜி.லிங்கப்பா.

ஒளிப்பதிவு டைரக்டர் :W.R.சுப்பாராவ்.

ஒளிப்பதிவு: M .கர்ணன்.

ஒப்பனை : ஹரிபாபு. (நடிகர் திலகத்தை முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காட்டிய இந்த 'ஹரி' ஒரு 'ஒப்பனை சிங்கம்'.)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-18_zps7e39311e.jpg

இந்த குடியரசு தினத்தில் பத்மினி பிக்சர்ஸ் 'குழந்தைகள் கண்ட குடியரசு' படத்தில் தலைவரின் நடிப்பைப் பற்றி எழுதுவது பொருத்தமாய் இருக்கும் எனத் தோன்றியது. நம் ரசிகர்களே அதிகம் பார்த்திருக்க முடியாத மிக அபூர்வப் படமென்றும் சொல்லலாம். நடிகர் திலகத்திற்கு கௌரவ வேடம்தான். ஆனால் படத்திற்கே அதுதானே கௌரவம்! நடிகர் திலகத்திற்கு கௌரவத் தோற்றம்தானே என்று சொல்லி அலட்சியப்படுத்திவிட முடியாத முக்கியமான ப(வே)டம்.

B.R.பந்துலு அவர்களின் தயாரிப்பு + இயக்கத்தில் தமிழ், (குழந்தைகள் கண்ட குடியரசு) கன்னடம், (மக்கள ராஜ்யா 1960) தெலுங்கு, (பிள்ளலு தெச்சின செல்லனி ராஜ்ஜியம் 1960) என மும்மொழிகளில் வெளியானது. குழந்தைகளே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்தப் படத்தின் கதையை ஓரிரு வரிகளில் முடித்து விடலாம்.

மாயாபுரி நாட்டின் மன்னன் (B.R.பந்துலு) நல்லவன். முடியாட்சியை முடித்து வைத்து மக்களாட்சியை மலரச் செய்வதே அவன் எண்ணம். கெட்ட எண்ணம் கொண்ட தளபதி (ஜாவர்) மன்னனை தீர்த்துக் கட்ட துணிகிறான். மன்னன் மக்களுடன் குடியாட்சியின் மகத்துவத்தைப் பற்றி உரையாற்றிக் கொண்டிருக்கையில் மன்னர் குடும்பத்தை வெடி வைத்து கொல்ல தளபதி முயற்சி செய்கிறான். அதிர்ஷ்டவசமாக மன்னன் மகாராணியுடன் (எம்.வி ராஜம்மா) தப்பித்து, விதிவசத்தால் ஒரு பூதத்தின் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாகி, பத்து வருடங்களுக்கு மாமரமாக ஆகி விடும்படி சபிக்கப்பட்டு விடுகிறான். தளபதியோ ஆட்சியைக் கைப்பற்றி, மன்னனாக மகுடம் தரித்து கொடுங்கோலாட்சி புரிகிறான். கர்ப்பம் தரித்திருந்த மகாராணி நல்லவர் ஒருவரால் காப்பாற்றப்பட்டு ஆண் குழந்தை ஒன்றை ஈன்றெடுக்கிறாள். இளவரசன் வில்லேந்தி (மாஸ்டர் கோபி) என்ற அந்தக் குழந்தை வளர்ந்து வீரச் சிறுவனாகிறான். மாமரமாகிப் போன மன்னரான தன் தந்தையின் சாபத்தை போக்கவும் , தாய்க்கு சாபத்தின் காரணமாக நேர்ந்த இழந்து போன ஞாபக சக்தியை திரும்பக் கொண்டு வருவதற்கும் தேவையான சர்வகலாமணியை வில்லேந்தி ஒரு விஞ்ஞானி (தலைவர்தான்) உதவியுடன் சந்திர மண்டலத்திலிருந்து எடுத்து வந்து, தாய் தந்தையரின் சாபங்களைப் போக்கி, அந்நாட்டின் குழந்தைகளுடன் (தளபதியின் பெண் சிறுமியான இளவரசியையும் சேர்த்து) கைகோர்த்து, கொடுங்கோலாட்சி புரியும் தளபதியுடன் போராடி, வெற்றி பெற்று, அவனைத் திருத்தி, குடியரசையும் மலரச் செய்கிறான்.

சிறுவனான வில்லேந்தி சாபங்களைப் போக்கும் சர்வகலாமணி சந்திர மண்டலத்தில் கிடைக்கும் என்று கேள்விப்பட்டு சந்திர மண்டலத்திற்கு போவது எப்படி என்று விழித்து நிற்க, ஆபத்பாந்தவனாய் ஆருயிர் நடிகர் திலகம் சந்திர மண்டல ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானியாக இடைவேளைக்குப் பின் அட்டகாச அறிமுகம். சந்திரனுக்கு மனிதனை தான் கண்டுபிடித்து வைத்துள்ள விண்கலத்தில் அனுப்பி ஆராய்ச்சி செய்வதே அவர் நோக்கம். மனித உயிர்கள் எவரும் அவர் முயற்சிக்கு முன் வராததால் வெறுப்புற்று சந்திரனுக்கு ஒரு நாயை சோதனை முயற்சியாக வைத்து தன்னுடைய விமானத்தில் விஞ்ஞானி அனுப்ப எத்தனிக்க, அங்கு தன் தாய், தந்தையரின் சாபங்களைப் போக்கக் கூடிய சர்வகலாமணி இருப்பதாகவும், அதைக் கொண்டுவர சந்திர மண்டலத்திற்கு தன்னை அனுப்பும்படியும் அவரிடம் வேண்டுகோள் விடுக்கிறான் வில்லேந்தி. அவனுடைய முயற்சியில் மனம் மகிழ்ச்சி கொண்ட விஞ்ஞானி தன்னுடைய அறிவியல் ஆராய்ச்சி நோக்கமும் நிறைவேறப் போகிறதே என்ற மகிழ்ச்சியில் வில்லேந்தியையும், அவன் தோழனையும் ('குலதெய்வம்' ராஜகோபால்) உடல் ரீதியாக பரிசோதித்து இருவரையும் பொது மக்கள் முன்னிலையில் விமானத்தில் சந்திரனுக்கு அனுப்பி வைக்கிறார். அதற்கான இயந்திரங்களை அவர் பூமியிலிருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார். எதிர்பாராத விதமாக அதில் ஒரு இயந்திரம் உடைந்து விடுகிறது. அதை எப்படியும் சரி செய்து விடுவதாகக் கூறி அதற்கான முழு முயற்சியில் ஈடுபடுகிறார் விஞ்ஞானி. அதற்குள் பொறுமை, மற்றும் அறிவிழந்த மானிடக் கூட்டம் விஞ்ஞானியின் திறமை மீது நம்பிக்கை இழந்து (!) சந்திர மண்டலத்திற்கு சென்ற வில்லேந்தி மற்றும் அவன் தோழன் உயிருடன் திரும்ப முடியாததற்கு காரணம் விஞ்ஞானிதான் என்று அவர் மீது அவசரப்பட்டு பழி சுமத்தி, அவரை அடித்துத் துவைத்து துவம்சம் செய்கிறது. குற்றுயிரும், கொலையுயிருமாய் மரண வாசலை நெருங்கிக் கொண்டிருக்கும் அந்த விஞ்ஞானி தன் உயிர் போகும் அந்தத் தருவாயிலும் பழுதான இயந்திரத்தை சரி செய்து வில்லேந்தியையும், அவன் தோழனையும் திரும்ப பத்திரமாக பூமிக்கு வரவழைக்கிறார். சந்திரனுக்கு மனிதனை அனுப்பி சோதனை செய்த முயற்சியில் தனக்கு முழு வெற்றி கிடைத்து விட்டது என்ற திருப்தியுடன் தன் உயிர் போகக் காரணமாக இருந்த மக்களையும் மன்னித்து, பரமேஸ்வரன், பார்வதியை வணங்கியபடியே உயிரை விடுகிறார்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4-6_zps08985ac6.jpg

தோள்பட்டை வரை நீளும் முற்றிலுமாக படர்ந்த, பஞ்சடைந்த, கலைந்த தலைமுடி. நடு வகிட்டிலிருந்து நெற்றியின் மீது இருபுறமும் கீற்றாய் படரும் வெண் முடிக் கற்றைகள். அகோரமான அருவருக்கத்தக்க மிகப் பெரிய சேதமடைந்த கருட மூக்கு. மூக்கின் கீழே வரைகோடிட்டாற் போன்ற தெரிந்தும் தெரியாத மெல்லிய மீசை. அடிக்கடி வாயிலிருந்து உதட்டோரமாய் அரணை போல வெளியே தள்ளும் நாக்கு. முழுதான கூன் விழுந்த முதுகு. கண்களுக்குக் கீழே காணச் சகியாத தடிமன் வீக்கங்கள். முகவாய்க்கட்டையிலிருந்து நீளும் சற்றே நீண்ட வெண் குறுந்தாடி. அறிவியல் ஆர்வத்தை அள்ளித் தெளிக்கும் அரிய பெரிய கண்கள். பருத்த கனத்த வயிறு. நீண்ட பிரில் வைத்த கருப்பு அங்கி. முதுமையை வெளிப்படுத்தும் சற்றே தள்ளாடிய தடுமாறும் ஓட்டமும் நடையுமான நடை. (அந்த சிம்மக் குரல் மட்டும் காட்டிக் கொடுக்கவில்லையென்றால் "யார் அது கணேசனா?" என்று அனைவரும் வாயடைத்துப் போவார்கள்) அப்படி ஒரு அபார ஒப்பனை. வித்தியாசம்... வித்தியாசம்... வித்தியாசம். ஆம். நடிப்பை ஆராய்ந்து முடித்த நடிப்புலக விஞ்ஞானிக்கு சந்திர மண்டல ஆராய்ச்சி செய்ய, அங்கு ஆள் அனுப்பும் இப்படி ஒரு வித்தியாச விஞ்ஞானி வேடம் இந்த 'குழந்தைகள் கண்ட குடியரசு' படத்தில். இதுவரை எந்த ஒரு படத்திலும் அவர் செய்திராத ரோல். நடிப்புக்கே ரோல் மாடலாக விளங்கியவருக்கு இந்த விஞ்ஞானி வேடம் சவால் விட்டு பின் "ஐயோ எமகாதகா' என்று எகிறிக் குதித்து அலறி இவரிடம் தோற்றோடிப் போனது. அறிவியல் ஆராய்ச்சி நிபுணர் வேடம் தரிக்க வேண்டும். அதுவும் அந்தக் கால கட்டத்திலேயே. இந்த ரோலை எப்படி உள்வாங்கிக் கொள்வது என்பதற்கு அடையாளம் தெரிந்து கொள்ள எவ்வித முகாந்திரமும் அப்போது இருந்திருக்க வாய்ப்பில்லை. மீடியாக்களோ, சேனல்களோ, டிவி பெட்டியோ, இணைய வலைத்தளங்களோ இல்லாத கால கட்டம். அறிவியல் சம்பந்தமாக அப்போது அல்லது அதற்கு முன்னால் எடுக்கப் பட்ட அயல் நாட்டு சினிமாக்களை முடிந்தால் பார்த்திருக்கலாம். அது சம்பந்தமான புத்தகங்கள் இருந்திருக்கலாம். படித்திருக்கலாம். ஆனால் இந்த ஜாம்பவான் கொடிகட்டிப் பறந்த அந்தக் காலத்தில் அதற்கெல்லாம் இவருக்கு நேரம் இல்லை. அப்படியே நேரம் இருந்து இவற்றையெல்லாம் பார்த்து நம்மவர் கிரகித்திருந்தாலும் பார்த்தவற்றின் பிரதிபலிப்பைக் நம்மிடம் காட்டிவிடக் கூடாது. நடிகர்களுக்கெல்லாம் நாயகர் என்பதால் காட்டிவிடவும் முடியாது. அப்படியே காட்டிவிட்டாலும் அதைக் கண்டுபிடித்து வெட்ட வெளிச்சமாக்கிவிடும் அறிவு சார்ந்த ஜாம்பவான்கள் நிறைய பேர் உண்டு. (நம்ம கோபால் சாரைப் போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்.) ஆனால் இந்த சரித்திர புருஷருக்கு இதெல்லாம் தேவையே இல்லயே! மற்றவர்களைத் தன் பக்கம் திருப்பித்தானே நம் திலகத்திற்குப் பழக்கம்! அடுத்தவர் பக்கம் திரும்பிப் பழக்கம் இல்லையே! அதனால்தான் இந்த சவால்மிகு பாத்திரத்தை சந்தித்து சரித்திர சாதனை ஆக்கினார் நம் சாதனை நாயகர்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/6-5_zps652fe1e0.jpg

வில்லேந்தி தலைவரை சந்திக்கப் போகும் போது தன்னுடைய ஆராய்ச்சிக் கூடத்தில் தரையில் அமர்ந்தபடியே பின் பக்கம் முதுகைக் காட்டி அமர்ந்தவாறு விண்வெளிக் கூண்டு போன்ற கலத்தில் உள்ளே நாயை வைத்து மூடி, நாய்க்கு "வலது புறம் விசை... இடது புறம் விசை...இப்போது வரிசையாக எல்லாம்" என்று இயக்க command கொடுக்கும் அந்தக் கணமே நடிப்பு அரக்கன் நயமாக நடிகர் திலகத்துடன் சங்கமிக்க ஆரம்பித்து விடுகிறான். தன்னுடைய கட்டளையை உள்ளே உள்ள நாய் சரியாக நிறைவேற்றியவுடன் "மனிதனால் செய்ய முடியாததை ஒரு நாய் நீ செய்துவிட்டாயே" என்ற தொனியில் "மகா புத்திசாலிடா நீ" என்று அவரது கம்பீரக் குரலிலே கரைபுரண்டோடும் உற்சாகம் இருக்கிறதே....(இத்தனைக்கும் இன்னும் முகத்தைக் காட்டவில்லை).

இந்த சம்பவங்களைப் பார்க்கும் வில்லேந்தியும், அவனுடன் வந்தவர்களும் தன்னையறியாமல் கொல்'லென்று ஏளனமாகச் சிரித்து விட, சட்டென்று முகம் திருப்பி (யப்பா.. நடிகர் திலகமா அது!) நாக்கை பாம்பு போல வெளியே நீட்டி "யாரது? என்று மிரட்டும் தொனி வில்லேந்தி கூட்டத்தை மட்டுமல்ல நம்மையும் மிரள வைக்கிறதே...எள்ளி நகையாடியவர்களை சாடிவிட்டு 'சரித்திரத்தில் யாருமே சாதிக்க முடியாத காரியத்தை நான் சாதித்தேன்" (உண்மை! உண்மை! படத்தில் அவர் விஞ்ஞானியாய் செய்த சாதனையை சொன்னாலும் நடிகர் திலகம் நடிப்பில் தன்னிகரில்லா சாதனை புரிந்ததுதானே நமக்கு ஞாபகம் வருகிறது!) (இந்த வசனத்தின் மூலம் விந்தனின் ஆழ்மனதில் நடிகர் திலகம் எவ்வளவு தூரம் ஊடுருவியுள்ளார் என உணர முடியும்) என தான் கண்டு பிடித்த சாதனத்தைப் பற்றி கூறி பெருமையில் தனக்குத் தானே பூரித்துக் கொள்வது ஜோர். "சிரிக்கிறார்கள்" என்று பதிலுக்கு அவர்களைப் பார்த்து "ஹேஹே" என கைகளால் நையாண்டி செய்து பழித்துக் காட்டி நகைப்பதோ இன்னும் ஜோர்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4-6_zps08985ac6.jpg

"சந்திர மண்டலத்துக்கு நீங்களே போயிட்டு வரக் கூடாதா?" என ஒரு அம்மணி கேட்க "நான் போனால் இங்குள்ள இயந்திரங்களையெல்லாம் யார் இயக்குவது?" என்று எகத்தாள எதிர்க் கேள்வி வேறு கேட்பார். இயக்குவது என்ற வார்த்தையின் போது கைகள் இயந்திரங்களை சர்வ சாதாரணமாக handle செய்வது போன்ற பாவனயில் பின்னுவார்.

வில்லேந்தி அவரைப் புரிந்து கொண்டு, "என்னை சந்திரனுக்கு அனுப்புங்கள்" என்றவுடன் அதை கொஞ்சமும் எதிர்பாராமல் ஆச்சர்யம், வியப்பு, சந்தோஷம், பெருமிதம் அனைத்தையும் ஒரு வினாடியில் முகத்தில் கொண்டு வந்து கொட்டுவார். அத்துணை பாவங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வராமல் ஒரு சேர முகத்தில் ஒன்றாக சட்டென சங்கமிக்கும். வில்லேந்தியை தன் வயிற்றோடு சேர்த்து அணைத்துக் கொண்டு "பலே! சிறுவனாய் இருந்தாலும் சிங்கமாய் இருக்கிறாய்" என்று சடுதியில் அவனை நமக்கு பெருமை பூரிக்க சுட்டிக் காட்டுவார். அற்புதமாய் இருக்கும். பின் இருவரையும் சந்திரனுக்கு அனுப்ப தயாராவார். வில்லேந்தியும் அவனது தோழனும் விசேஷ கவசங்கள் அணிந்து நிற்கையில் இருவரின் உடல் நிலையை பரிசோதிப்பார். இருவரின் நாடிகளைப் பிடித்துப் பார்த்து 'நாடித் துடிப்பு நன்றாக இருக்கிறது' என்பதை தன் தலையாட்டலில் விளக்குவார். நாக்கை மட்டும் மறக்காமல் அடிக்கடி வெளியே தள்ளியபடி இருப்பார். எந்த ஒரு இடத்திலும் தவறு நேரவே நேராது. (அதுதான் நடிகர் திலகம் என்கிறீர்களா!)

மீன் வடிவிலான விமானத்தில் இருவரையும் ஏற்றி விட்டு சற்று பதைபதைத்தவாறு அனைவரையும் அழைத்துக் கொண்டு இயந்திரங்கள் இருக்கும் பகுதிக்கு வருவார். அந்த நடையில் ஒரு பதட்டம் தெரியும். என்னதான் பெரிய அறிவார்ந்த விஞ்ஞானியாய் இருந்தாலும் முதன் முதலில் தன்னுடைய கண்டுபிடிப்பான இயந்திரத்தில் மனிதர்கள் பயணம் செய்கிறார்களே என்ற தன் இயல்பு மீறிய படபடப்பு உணர்வினை அந்த நடையிலேயே காட்டி விடுவார். இயந்திரங்களை இயக்கிக் கொண்டிருக்கையில் ஒரு இயந்திரம் எதிர்பாராமல் வெடித்துச் சிதறும்போது உள்ளுக்குள் இவர் வெடித்துச் சிதறுவது நமக்குப் புரியும்... தெரியும்.... கைகளை ஒன்றோடொன்று பிசைந்தவாறு ஒருகணம் செய்வதறியாது குழம்பி நிற்பார். மறு வினாடி தன்னம்பிக்கை துளிர்விட "சீக்கிரமே சரி செய்து விடுகிறேன்" என்று வில்லேந்தி நண்பன் காதலியிடம் தைரியம் சொல்லுவார்.

அதற்குள் கொந்தளிக்கும் ஜனம் அவரது திறமை மீது அவநம்பிக்கை கொண்டு கற்களால் அவரைத் தாக்கும் போதும், பின் ஜனத்திரள் அவரை சூழ்ந்து கண்மண் தெரியாமல் தாக்கும் போதும் அடி வாங்கும் பாவனைகளில் நம்மை பதற வைப்பார். அடிதாங்க மாட்டாமல் கீழே வீழ்ந்து கிடக்கும் சமயத்தில் தான் அனுப்பிய கலம் திரும்பி வரும் சப்தம் கேட்டதும்

"அதோ பாருங்கள்... அவர்கள் வந்து விட்டார்கள்" என்று தரையில் ஒரு காலை முட்டி போட்டவாறு மறு காலைக் கெந்திக் கெந்தி படுத்தவாறே எழுந்திருக்க இயலாமல் ஒருக்களித்தாற் போன்று தவழ்ந்தவாறே தடுமாற்றத்துடன் நகர்ந்து செல்வதை என்னவென்று எழுதுவது!. எழுத்துகளுக்கும், வார்த்தை வர்ணிப்புகளுக்கும் அப்பாற்பட்ட மாமேதை அல்லவோ அவர்! பின் தட்டுத் தடுமாறி எழுந்து கைகளை கால்களாகி தரையில் ஊன்றி பின் மறுபடி எழுந்து இயந்திரத்தை நிறுத்தி சட்டென்று முடியாமல் கீழே சாய்ந்து விடுவார். வில்லேந்தி, அவனது நண்பனுடன் திரும்பி வந்தவுடன் நண்பனின் மடியில் சாய்ந்து விடுவார். கைகள் துவண்டு விடும். முகம் வெளிறி வலியின் வேதனைகளை பிரதிபலிக்கும். "ஆண்டவன் எனக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்திருந்தால் எத்தனையோ அற்புதங்களை சாதிக்கத் திட்டமிட்டிருந்தேன். நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்" என்று அமைதியாக மரண தருவாயில் அவர் கூறுவதை நான் கண்ணுற்ற போது எனது கண்கள் பனித்தன. (உண்மையாகவே அவர் இன்னும் உயிரோடு இருந்திருந்தால், நல்ல உடல் நலத்துடன் இருந்திருந்தால் இன்னும் எவ்வளவோ அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பார். நமக்குக் கொடுப்பினை இல்லையே! இன்னும் ஆயிரம் வருடங்கள் மறக்க முடியாத சாதனைகளை அவர் ஆயுளில் அவர் நிகழ்த்தியிருக்கிறாரே! அது மட்டும் சாந்தப்படுத்திக் கொள்ளவேண்டியதுதான்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-9_zps38ae55d5.jpg

பின் அவரை கைத்தாங்கலாக அழைத்து வந்து பரமேஸ்வரன் பார்வதி தெய்வச் சிலைகளின் முன் அமரச் செய்தவுடன், "பரமேஸ்வரா... இந்த மக்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது... இவர்களை மன்னித்து விடு",என்று அமைதியாக உயிரை விடுவார்.

கிட்டத்தட்ட பத்து நிமிட நேரம்தான். பத்து நிமிடத்திலும் பத்தாயிரம் முகபாவங்கள். நாம் காணாத பல்வேறு உடல்மொழிகள். அற்புதமான பாத்திரம். எந்த நடிகன் தான் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்காக தன்னை, தன் உருவத்தை உருக்குலைத்தது, சிதைத்துக் கொள்கிறானோ அவனே மக்கள் மனதில் நிற்பான்... அவனே நடிகன். ஈகோ, இமேஜ் என்ற மாய்மாலங்களையெல்லாம் உடைத்தெறிந்து இந்த நடிப்புலக ஞானி இந்தப் படத்தில் கூனனான, குரூபியான விஞ்ஞானியாக வி(ந்)த்தைகள் புரிந்து வியக்க வைக்கிறார் வழக்கத்திற்கும் மேலாக.

என்றென்றும் வாழ்க நம் தெய்வத்தின் புகழ்.

இந்தப் படத்தில் தலைவர் போர்ஷனுக்குதான் முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருக்கிறேன். வித்தியாசமான கோணத்தில் தலைவரை சிந்தித்துப் பார்த்த கதாசிரியர், ஒப்பனைக் கலைஞர் மற்றும் இயக்குனருக்கு நன்றி. 1960-லேயே சந்திர மண்டலத்திற்கு விண்கலம் மூலம் மனிதனை அனுப்பும் முயற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அதுவும் அந்த விஞ்ஞானி பாத்திரத்தில் தலைவரை கற்பனை செய்து பார்த்து நடிக்க வைத்து, நாம் இதுவரை காணாத புதிய பரிமாணத்தில் அவரை பரிமளிக்கச் செய்தது நமக்கு ஆச்சர்யம் கலந்த ஆனந்தத்தை அளிக்கிறது. இதில் நடித்துள்ள குழந்தைகளும் அற்புதமாக நடித்திருப்பார்கள். வில்லேந்தியாக வரும் கதாநாயகச் சிறுவன்தான் சற்று அதிகப் பட்சமாகப் பண்ணியிருப்பான். ஜாவர் காமெடி கலந்த வில்லன் தளபதி வேடத்தில் கனப் பொருத்தம். பந்துலு, ராஜம்மா as usual. காமெடிக்கு சாரங்கபாணியும், குலதெய்வமும். படமும் மாயாஜாலம், சந்திர மண்டலம், குழந்தைகள் குறும்புகள், வீர வசனங்கள் என்று போரடிக்காமல் செல்லும். குழந்தைகளோடு குதூகலித்துப் பார்க்க இது ஒரு நல்ல படமே. பாடல்களைப் பற்றி அவ்வளவாக ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

(இந்தப் படத்தின் DVD மற்றும் CD க்கள் எங்கும் கிடைப்பதாகத் தெரியவில்லை. கண்டிப்பாக சந்தர்ப்பம் வரும்போது மிஸ் செய்யாமல் பாருங்கள். புதியதொரு பரிணாமத்தை நடிகர் திலகத்திடம் காண்பீர்கள். இதனுடைய தெலுங்கு பதிப்பு (பிள்ளலு தெச்சின செல்லனி ராஜ்ஜியம்) இணையத்தில் உள்ளது. அதைப் பார்த்தும் ஆனந்தப் படலாம். ஆனால் நம்மவருக்கு சொந்தக்குரல் அல்ல. முக்கமாலாதான் நடிகர் திலகத்திற்கு தெலுங்கில் பின்னணி கொடுத்திருப்பார். (அப்படிதானே முரளி சார்! ஜக்கையா என்றும் சந்தேகமாக இருக்கிறது). தமிழில் நடிகர் திலகத்தின் சிம்ம கர்ஜனையில் பார்ப்பதே தனி சுகம். கௌரவ தோற்றம் என்றாலும் இப்படிப்பட்ட பிரமிக்க வைக்கும் நம்மவரின் நடிப்பைக் கொண்டுள்ள இந்தப் படமும், இதைப் போன்ற வேறு சில படங்களும் வெட்ட வெளிக்கு வந்து ஒளி வீச முடியாமல் குடத்தினுள் இட்ட விளக்காகவே ஒளி வீசுகின்றன. இதில் நிறையவே எனக்கு வருத்தம் உண்டு. அந்த ஆசையில் முன்னம் எழுதப்பட்டதுதான் 'பக்த துக்காராமு'ம் கூட. நம் ரசிகர்கள் கூட இவற்றிக்கெல்லாம் அதிக முக்கியத்துவம் தருவதில்லையோ என்ற சந்தேகமும், அது சார்ந்த வருத்தமும் எனக்கு அடிக்கடி எழுவதுண்டு. இப்படிப்பட்ட சில அபூர்வ படங்களில் தலைவரால் உழைக்கப்பட்ட அசாதாரணமான உழைப்பு சூரியக் கதிர்களாய் உலகெங்கும் பரவி ஒளி வீசி, அவர் புகழ் அகிலமெல்லாம் பிரகாசிக்க வேண்டும் என்ற ஆசையில் வடிவமைக்கப்பட்டதுதான் இந்த ஆய்வு. இதில் ஒரு சதவிகிதம் வெற்றி பெற்றால் கூட எனக்கு அளப்பரிய ஆனந்தம் கிட்டும் என்பது மட்டும் திண்ணம். நன்றி!)


அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
26th January 2013, 08:14 AM
டியர் வாசுதேவன் சார்,
குழந்தைகள் கண்ட குடியரசு திரைப்படத்தை நேரில் காணும் உணர்வை அளித்து விட்டது தங்கள் பதிவு [இப்படத்தை சிறுவனாக இருந்த பொழுது குழந்தைகளுக்காக சென்னை பாலர் அரங்கில் - பின்னாளில் கலைவாணர் அரங்கம் என பெயர் சூட்டப் பட்டு சில ஆண்டுகள் இயங்கி தற்போது இடித்து தரைமட்டமாக்கப் பட்ட இடம் - பார்த்தது என்றாலும்]. அந்தக் கால கட்டத்திலேயே மிகவும் புதுமையான நடிப்பினை அளித்திருந்தார் நடிகர் திலகம். தங்களுக்கு மிக்க நன்றி.

தங்களுக்காகவும் மற்றும் நம் மக்களின் பார்வைக்காகவும் அப்படத்தின் பாட்டுப் புத்தகத்தின் பக்கங்கள்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/KKKCOVERFW.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/KKK01.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/KKK02.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/KKK03.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/KKK04.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/KKK05.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/KKK06.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/KKK07.jpg

RAGHAVENDRA
26th January 2013, 09:54 AM
http://sphotos-b.ak.fbcdn.net/hphotos-ak-prn1/14976_515892281788796_310608235_n.jpg

குடியரசு தினத்தையொட்டி நண்பர் ஆனந்த் அவர்கள் முகநூல் இணைய தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ள நிழற்படம். நன்றி ஆனந்த்

RAGHAVENDRA
26th January 2013, 09:56 AM
இத்திரியினையும் நமது வாசுதேவன் சார், மற்றும் இங்குள்ள அனைவரின் பங்கினையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டிய நண்பர்கள் குமரேசன் பிரபு மற்றும் சுப்ரமணியம் ஆகியோருக்கு நமது உளமார்ந்த நன்றி.

vasudevan31355
26th January 2013, 11:36 AM
ராகவேந்திரன் சாருக்கும் மற்றும் நண்பர்கள் குமரேசன் பிரபு மற்றும் சுப்ரமணியம் ஆகியோருக்கும் எனது உளமார்ந்த நன்றி.

vasudevan31355
26th January 2013, 01:31 PM
நண்பர் ஆனந்த் அவர்களின் அற்புதமான இணையதள நிழற்பட வடிவமைப்பு மிக நன்றாக உள்ளது. ஆனந்த் அவர்களுக்கு மனம் நிறைந்த எனது பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
26th January 2013, 09:38 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ETR01-1.jpg

Murali Srinivas
27th January 2013, 12:02 AM
நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய இந்த திரியை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்த்து வரும் ராகவேந்தர் சாருக்கும் அவருக்கு உறுதுணையாய் பல்வேறு புகைப்படங்கள், பல்வேறு பருவ இதழ்களில் வெளிவந்த செய்திகள் என்று பங்களிப்பு செய்யும் வாசு அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

நடிகர் திலகத்தைப் பற்றி அவரது படங்களைப் பற்றிய துணுக்கு செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம் என ராகவேந்தர் சார் சொல்லியிருப்பதற்கு ஏற்ப என் நினைவிற்கு வந்த இந்த செய்தியை இங்கே பதிகிறேன். அதிலும் ராகவேந்தர் சார் அவருக்கு மிகவும் பிடித்த படம் என்று சொன்ன படத்தைப் பற்றிய பகிர்வு.

ஆம்! சிவகாமியின் செல்வன்! நம் அனைவருக்கும் பிடித்த படம்! இதே நாளில் [ஜனவரி 26] இன்றைக்கு 39 வருடங்களுக்கு முன் வெளியாகி நம்மை கொள்ளை கொண்ட படம் பற்றிய ஒரு துணுக்கு.

50-களில், 60-களில் 70-களில் முற்பகுதியில் பிறந்தவர்களுக்கு நான் சொல்லும் விஷயம் பரிச்சயமாகி இருக்கும். அன்றைய கால கட்டங்களில் ஒரு திரைப்படம் வெளியான பிறகு வாரா வாரம் புதிய போஸ்டர்கள் ஒட்டப்படும்! 2-வது வாரம், 3-வது வாரம் என ஆரம்பித்து 7 வாரம் வரை போகும். 8-வது வாரத்திற்கு பதிலாக 50-வது நாள் போஸ்டர் வரும். மீண்டும் 9,10 வாரத்தின் போஸ்டர். பிறகு 75-வது நாள் (சில நேரங்களில் இது 11-வது வார போஸ்டராகவும் வரும்]. அதன் பிறகு 12,13,14 என தொடர்ந்து 100-வது நாள் போஸ்டர் சுவர்களில் இடம் பிடிக்கும்.

இதை ரசிகர்கள் அனைவரும் வெகு ஆவலோடு எதிர்பார்ப்பார்கள். ஒவ்வொரு வாரமும் எந்த டிசைனில் போஸ்டர் அடிக்கப்பட்டிருக்கிறது? என்ன கலர் என்றெல்லாம் எதிர்பார்ப்பு இருக்கும்! இந்த வார போஸ்டர் பார்த்தாயா என்று ரசிகர்கள் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்வதையும் பார்க்க முடியும். போஸ்டர்கள் தங்கள் எண்ணப்படி அமையாமல் சொதப்பும் போது அதைப் பற்றிய சூடான விமர்சனங்களும் ரசிகர்களால் முன் வைக்கப்படும்!

சிவகாமியின் செல்வன் வெளியான அந்த 1974 ஜனவரி கால கட்டத்திலும் இதுதான் வழக்கம்! படம் வெளியாகி நல்ல wom (word of mouth) பரவி படம் வெற்றிகரமாக அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. சாதாரணமாக இரண்டாவது வார துவக்க நாளன்று 2-வது வாரம் போஸ்டர் ஓட்டப்படவிடும். ஆனால் பிப்ரவரி 2-ந் தேதி சனிக்கிழமையன்று போஸ்டர்கள் ஒட்டப்படவில்லை. மறுநாள் ஞாயிறு அன்றும் ஒட்டப்படவில்லை. ரசிகர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.போஸ்டர் வந்து சேரவில்லையா இல்லை வேறு ஏதாவது விஷயமா என்று குழம்பினர். காரணம் அன்றைய காலங்களில் தினத்தந்தி விளம்பரம் போஸ்டர் விளம்பரம் இவை இரண்டு மட்டுமே ஒரு படத்தின் publicity -யாக விளங்கிய காலம். அனைவரும் தந்தி படிப்பார்கள் என்று சொல்ல முடியாது. எனவே ஒரு படத்தின் விளம்பரத்திற்கு போஸ்டர்கள் கண்ணில் பட்டுக்கொண்டிருக்க வேண்டும். அது இல்லை என்று சொல்லும்போது படத்தின் long run-ஐ அது பாதிக்குமோ என்ற அச்சம் எழுந்தது. மதுரையைப் பொறுத்தவரை படத்தின் தயாரிப்பாளரான ஜெயந்தி பிலிம்ஸ்தான் மதுரை மாவட்ட விநியோகஸ்தரும் கூட. அன்றைய நாளில் அவர்களின் அலுவலகம் திண்டுக்கல் ரோட்டில் மாடர்ன் ரெஸ்டாரண்ட் என்ற புகழ் பெற்ற ஹோட்டலின் நேர் எதிரே உள்ள கட்டிடத்தில் இயங்கி வந்தது. ரசிகர்கள் அந்த அலுவலகத்திற்கு நேரே சென்று விட்டனர். ஆனால் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அங்கே யாரும் இல்லை. மறுநாளும் திங்களன்றும் போஸ்டர் இல்லை என்றவுடன் இது ஒரு பெரிய விஷயமாக சர்ச்சை செய்யப்பட ஆரம்பித்து விட்டது. அன்று படம் திரையிடப்பட ஸ்ரீதேவி தியேட்டருக்கும் ஜெயந்தி பிலிம்ஸ் அலுவலகத்திற்கும் ரசிகர்கள் கூட்டமாக சென்று விட்டனர். போஸ்டர்கள் அப்போதுதான் வந்ததாகவும் இரவு ஒட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மறுநாள் செவ்வாய் அன்று சுவர்களை அலங்கரித்த சுவரொட்டிகளைப் பார்த்தவர்களுக்கு surprise அல்லது shock என்று சொல்லலாம். காரணம் நார்மலாக காணப்படும் 2-வது வார போஸ்டருக்கு பதிலாக வெற்றிகரமான 11-வது நாள் போஸ்டர் அங்கே காணப்பட்டதுதான். இந்த புதுமை அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.அடுத்த 10 நாட்கள் கழித்து 22-வது நாள் போஸ்டர் ஒட்டப்பட்டது. சரி அடுத்து 33-வது நாள் வரப் போகிறது என்று நினைத்திருக்கும் போது 35-வது நாள் போஸ்டர் வந்தது. அதன் பிறகு நேராக 51-வது நாள் போஸ்டர்தான் வந்தது. அந்த 51-வது தின ஞாயிறன்று [மார்ச் 17] அன்று தினத்தந்தியில் முழு பக்க விளம்பரமும் வந்தது.

அதுவரை நடைமுறையில் இருந்த வழக்கத்தை மாற்றி புதிய முறையில் போஸ்டர் அடிக்கப்பட்ட முதல் படம் சிவகாமியின் செல்வன் என்று சொல்லலாம். நான் முதலில் சொன்னது போல் இதை பலர் வரவேற்றாலும் ரசிகர்களில் ஒரு சாரார் இதை ஏற்றுக் கொள்ளவில்லை.வழமையான முறையில் விளம்பரம் செய்திருந்தால் படம் நிச்சயமாக 100 நாட்களை தொட்டிருக்கும் என்பது அவர்களின் ஆதங்கமாக இருந்தது.

இப்படிப்பட்ட போஸ்டர் விளம்பரமே வழக்கொழிந்து போன இன்றைய காலக்கட்டத்தில் வாழும் இளைய தலைமுறையினருக்கு இது சுவாரஸ்யமாக இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் அன்றைய ரசிகர்களுக்கு அதுவும் இந்த ரிலீஸ் நாளில் இது ஒரு நினைவூட்டலாக அமையும் என நம்புகிறேன்!

அன்புடன்

anm
27th January 2013, 12:32 AM
http://www.koodal.com/contents_koodal/women/images/2012/Republic%20Day-jpg-1193.jpg
குழந்தைகள் கண்ட குடியரசு.(1960)

தயாரிப்பு: பத்மினி பிக்சர்ஸ்

நடிகர்கள்: சிம்மக் குரலோன், 'ஜாவர்' சீத்தாராமன், பி.ஆர்.பந்துலு, 'குலதெய்வம்' ராஜ கோபால், கே.ஆர். சாரங்கபாணி, மாஸ்டர் கோபி

நடிகைகள்: வழக்கம் போல (பத்மினி பிக்சர்ஸ்) எம்.வி.ராஜம்மா, லட்சுமி ராஜம், பேபி லட்சுமி.

கதை: தாதாமிராசி

வசனம்: விந்தன்

பாடல்கள்: கு.மா. பாலசுப்ரமணியம்

இசை: டி .ஜி.லிங்கப்பா.

ஒளிப்பதிவு டைரக்டர் :W.R.சுப்பாராவ்.

ஒளிப்பதிவு: M .கர்ணன்.

ஒப்பனை : ஹரிபாபு. (நடிகர் திலகத்தை முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காட்டிய இந்த 'ஹரி' ஒரு 'ஒப்பனை சிங்கம்'.)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-18_zps7e39311e.jpg

இந்த குடியரசு தினத்தில் பத்மினி பிக்சர்ஸ் 'குழந்தைகள் கண்ட குடியரசு' படத்தில் தலைவரின் நடிப்பைப் பற்றி எழுதுவது பொருத்தமாய் இருக்கும் எனத் தோன்றியது. நம் ரசிகர்களே அதிகம் பார்த்திருக்க முடியாத மிக அபூர்வப் படமென்றும் சொல்லலாம். நடிகர் திலகத்திற்கு கௌரவ வேடம்தான். ஆனால் படத்திற்கே அதுதானே கௌரவம்! நடிகர் திலகத்திற்கு கௌரவத் தோற்றம்தானே என்று சொல்லி அலட்சியப்படுத்திவிட முடியாத முக்கியமான ப(வே)டம்.

B.R.பந்துலு அவர்களின் தயாரிப்பு + இயக்கத்தில் தமிழ், (குழந்தைகள் கண்ட குடியரசு) கன்னடம், (மக்கள ராஜ்யா 1960) தெலுங்கு, (பிள்ளலு தெச்சின செல்லனி ராஜ்ஜியம் 1960) என மும்மொழிகளில் வெளியானது. குழந்தைகளே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்தப் படத்தின் கதையை ஓரிரு வரிகளில் முடித்து விடலாம்.

மாயாபுரி நாட்டின் மன்னன் (B.R.பந்துலு) நல்லவன். முடியாட்சியை முடித்து வைத்து மக்களாட்சியை மலரச் செய்வதே அவன் எண்ணம். கெட்ட எண்ணம் கொண்ட தளபதி (ஜாவர்) மன்னனை தீர்த்துக் கட்ட துணிகிறான். மன்னன் மக்களுடன் குடியாட்சியின் மகத்துவத்தைப் பற்றி உரையாற்றிக் கொண்டிருக்கையில் மன்னர் குடும்பத்தை வெடி வைத்து கொல்ல தளபதி முயற்சி செய்கிறான். அதிர்ஷ்டவசமாக மன்னன் மகாராணியுடன் (எம்.வி ராஜம்மா) தப்பித்து, விதிவசத்தால் ஒரு பூதத்தின் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாகி, பத்து வருடங்களுக்கு மாமரமாக ஆகி விடும்படி சபிக்கப்பட்டு விடுகிறான். தளபதியோ ஆட்சியைக் கைப்பற்றி, மன்னனாக மகுடம் தரித்து கொடுங்கோலாட்சி புரிகிறான். கர்ப்பம் தரித்திருந்த மகாராணி நல்லவர் ஒருவரால் காப்பாற்றப்பட்டு ஆண் குழந்தை ஒன்றை ஈன்றெடுக்கிறாள். இளவரசன் வில்லேந்தி (மாஸ்டர் கோபி) என்ற அந்தக் குழந்தை வளர்ந்து வீரச் சிறுவனாகிறான். மாமரமாகிப் போன மன்னரான தன் தந்தையின் சாபத்தை போக்கவும் , தாய்க்கு சாபத்தின் காரணமாக நேர்ந்த இழந்து போன ஞாபக சக்தியை திரும்பக் கொண்டு வருவதற்கும் தேவையான சர்வகலாமணியை வில்லேந்தி ஒரு விஞ்ஞானி (தலைவர்தான்) உதவியுடன் சந்திர மண்டலத்திலிருந்து எடுத்து வந்து, தாய் தந்தையரின் சாபங்களைப் போக்கி, அந்நாட்டின் குழந்தைகளுடன் (தளபதியின் பெண் சிறுமியான இளவரசியையும் சேர்த்து) கைகோர்த்து, கொடுங்கோலாட்சி புரியும் தளபதியுடன் போராடி, வெற்றி பெற்று, அவனைத் திருத்தி, குடியரசையும் மலரச் செய்கிறான்.

சிறுவனான வில்லேந்தி சாபங்களைப் போக்கும் சர்வகலாமணி சந்திர மண்டலத்தில் கிடைக்கும் என்று கேள்விப்பட்டு சந்திர மண்டலத்திற்கு போவது எப்படி என்று விழித்து நிற்க, ஆபத்பாந்தவனாய் ஆருயிர் நடிகர் திலகம் சந்திர மண்டல ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானியாக இடைவேளைக்குப் பின் அட்டகாச அறிமுகம். சந்திரனுக்கு மனிதனை தான் கண்டுபிடித்து வைத்துள்ள விண்கலத்தில் அனுப்பி ஆராய்ச்சி செய்வதே அவர் நோக்கம். மனித உயிர்கள் எவரும் அவர் முயற்சிக்கு முன் வராததால் வெறுப்புற்று சந்திரனுக்கு ஒரு நாயை சோதனை முயற்சியாக வைத்து தன்னுடைய விமானத்தில் விஞ்ஞானி அனுப்ப எத்தனிக்க, அங்கு தன் தாய், தந்தையரின் சாபங்களைப் போக்கக் கூடிய சர்வகலாமணி இருப்பதாகவும், அதைக் கொண்டுவர சந்திர மண்டலத்திற்கு தன்னை அனுப்பும்படியும் அவரிடம் வேண்டுகோள் விடுக்கிறான் வில்லேந்தி. அவனுடைய முயற்சியில் மனம் மகிழ்ச்சி கொண்ட விஞ்ஞானி தன்னுடைய அறிவியல் ஆராய்ச்சி நோக்கமும் நிறைவேறப் போகிறதே என்ற மகிழ்ச்சியில் வில்லேந்தியையும், அவன் தோழனையும் ('குலதெய்வம்' ராஜகோபால்) உடல் ரீதியாக பரிசோதித்து இருவரையும் பொது மக்கள் முன்னிலையில் விமானத்தில் சந்திரனுக்கு அனுப்பி வைக்கிறார். அதற்கான இயந்திரங்களை அவர் பூமியிலிருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார். எதிர்பாராத விதமாக அதில் ஒரு இயந்திரம் உடைந்து விடுகிறது. அதை எப்படியும் சரி செய்து விடுவதாகக் கூறி அதற்கான முழு முயற்சியில் ஈடுபடுகிறார் விஞ்ஞானி. அதற்குள் பொறுமை, மற்றும் அறிவிழந்த மானிடக் கூட்டம் விஞ்ஞானியின் திறமை மீது நம்பிக்கை இழந்து (!) சந்திர மண்டலத்திற்கு சென்ற வில்லேந்தி மற்றும் அவன் தோழன் உயிருடன் திரும்ப முடியாததற்கு காரணம் விஞ்ஞானிதான் என்று அவர் மீது அவசரப்பட்டு பழி சுமத்தி, அவரை அடித்துத் துவைத்து துவம்சம் செய்கிறது. குற்றுயிரும், கொலையுயிருமாய் மரண வாசலை நெருங்கிக் கொண்டிருக்கும் அந்த விஞ்ஞானி தன் உயிர் போகும் அந்தத் தருவாயிலும் பழுதான இயந்திரத்தை சரி செய்து வில்லேந்தியையும், அவன் தோழனையும் திரும்ப பத்திரமாக பூமிக்கு வரவழைக்கிறார். சந்திரனுக்கு மனிதனை அனுப்பி சோதனை செய்த முயற்சியில் தனக்கு முழு வெற்றி கிடைத்து விட்டது என்ற திருப்தியுடன் தன் உயிர் போகக் காரணமாக இருந்த மக்களையும் மன்னித்து, பரமேஸ்வரன், பார்வதியை வணங்கியபடியே உயிரை விடுகிறார்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4-6_zps08985ac6.jpg

தோள்பட்டை வரை நீளும் முற்றிலுமாக படர்ந்த, பஞ்சடைந்த, கலைந்த தலைமுடி. நடு வகிட்டிலிருந்து நெற்றியின் மீது இருபுறமும் கீற்றாய் படரும் வெண் முடிக் கற்றைகள். அகோரமான அருவருக்கத்தக்க மிகப் பெரிய சேதமடைந்த கருட மூக்கு. மூக்கின் கீழே வரைகோடிட்டாற் போன்ற தெரிந்தும் தெரியாத மெல்லிய மீசை. அடிக்கடி வாயிலிருந்து உதட்டோரமாய் அரணை போல வெளியே தள்ளும் நாக்கு. முழுதான கூன் விழுந்த முதுகு. கண்களுக்குக் கீழே காணச் சகியாத தடிமன் வீக்கங்கள். முகவாய்க்கட்டையிலிருந்து நீளும் சற்றே நீண்ட வெண் குறுந்தாடி. அறிவியல் ஆர்வத்தை அள்ளித் தெளிக்கும் அரிய பெரிய கண்கள். பருத்த கனத்த வயிறு. நீண்ட பிரில் வைத்த கருப்பு அங்கி. முதுமையை வெளிப்படுத்தும் சற்றே தள்ளாடிய தடுமாறும் ஓட்டமும் நடையுமான நடை. (அந்த சிம்மக் குரல் மட்டும் காட்டிக் கொடுக்கவில்லையென்றால் "யார் அது கணேசனா?" என்று அனைவரும் வாயடைத்துப் போவார்கள்) அப்படி ஒரு அபார ஒப்பனை. வித்தியாசம்... வித்தியாசம்... வித்தியாசம். ஆம். நடிப்பை ஆராய்ந்து முடித்த நடிப்புலக விஞ்ஞானிக்கு சந்திர மண்டல ஆராய்ச்சி செய்ய, அங்கு ஆள் அனுப்பும் இப்படி ஒரு வித்தியாச விஞ்ஞானி வேடம் இந்த 'குழந்தைகள் கண்ட குடியரசு' படத்தில். இதுவரை எந்த ஒரு படத்திலும் அவர் செய்திராத ரோல். நடிப்புக்கே ரோல் மாடலாக விளங்கியவருக்கு இந்த விஞ்ஞானி வேடம் சவால் விட்டு பின் "ஐயோ எமகாதகா' என்று எகிறிக் குதித்து அலறி இவரிடம் தோற்றோடிப் போனது. அறிவியல் ஆராய்ச்சி நிபுணர் வேடம் தரிக்க வேண்டும். அதுவும் அந்தக் கால கட்டத்திலேயே. இந்த ரோலை எப்படி உள்வாங்கிக் கொள்வது என்பதற்கு அடையாளம் தெரிந்து கொள்ள எவ்வித முகாந்திரமும் அப்போது இருந்திருக்க வாய்ப்பில்லை. மீடியாக்களோ, சேனல்களோ, டிவி பெட்டியோ, இணைய வலைத்தளங்களோ இல்லாத கால கட்டம். அறிவியல் சம்பந்தமாக அப்போது அல்லது அதற்கு முன்னால் எடுக்கப் பட்ட அயல் நாட்டு சினிமாக்களை முடிந்தால் பார்த்திருக்கலாம். அது சம்பந்தமான புத்தகங்கள் இருந்திருக்கலாம். படித்திருக்கலாம். ஆனால் இந்த ஜாம்பவான் கொடிகட்டிப் பறந்த அந்தக் காலத்தில் அதற்கெல்லாம் இவருக்கு நேரம் இல்லை. அப்படியே நேரம் இருந்து இவற்றையெல்லாம் பார்த்து நம்மவர் கிரகித்திருந்தாலும் பார்த்தவற்றின் பிரதிபலிப்பைக் நம்மிடம் காட்டிவிடக் கூடாது. நடிகர்களுக்கெல்லாம் நாயகர் என்பதால் காட்டிவிடவும் முடியாது. அப்படியே காட்டிவிட்டாலும் அதைக் கண்டுபிடித்து வெட்ட வெளிச்சமாக்கிவிடும் அறிவு சார்ந்த ஜாம்பவான்கள் நிறைய பேர் உண்டு. (நம்ம கோபால் சாரைப் போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்.) ஆனால் இந்த சரித்திர புருஷருக்கு இதெல்லாம் தேவையே இல்லயே! மற்றவர்களைத் தன் பக்கம் திருப்பித்தானே நம் திலகத்திற்குப் பழக்கம்! அடுத்தவர் பக்கம் திரும்பிப் பழக்கம் இல்லையே! அதனால்தான் இந்த சவால்மிகு பாத்திரத்தை சந்தித்து சரித்திர சாதனை ஆக்கினார் நம் சாதனை நாயகர்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/6-5_zps652fe1e0.jpg

வில்லேந்தி தலைவரை சந்திக்கப் போகும் போது தன்னுடைய ஆராய்ச்சிக் கூடத்தில் தரையில் அமர்ந்தபடியே பின் பக்கம் முதுகைக் காட்டி அமர்ந்தவாறு விண்வெளிக் கூண்டு போன்ற கலத்தில் உள்ளே நாயை வைத்து மூடி, நாய்க்கு "வலது புறம் விசை... இடது புறம் விசை...இப்போது வரிசையாக எல்லாம்" என்று இயக்க command கொடுக்கும் அந்தக் கணமே நடிப்பு அரக்கன் நயமாக நடிகர் திலகத்துடன் சங்கமிக்க ஆரம்பித்து விடுகிறான். தன்னுடைய கட்டளையை உள்ளே உள்ள நாய் சரியாக நிறைவேற்றியவுடன் "மனிதனால் செய்ய முடியாததை ஒரு நாய் நீ செய்துவிட்டாயே" என்ற தொனியில் "மகா புத்திசாலிடா நீ" என்று அவரது கம்பீரக் குரலிலே கரைபுரண்டோடும் உற்சாகம் இருக்கிறதே....(இத்தனைக்கும் இன்னும் முகத்தைக் காட்டவில்லை).

இந்த சம்பவங்களைப் பார்க்கும் வில்லேந்தியும், அவனுடன் வந்தவர்களும் தன்னையறியாமல் கொல்'லென்று ஏளனமாகச் சிரித்து விட, சட்டென்று முகம் திருப்பி (யப்பா.. நடிகர் திலகமா அது!) நாக்கை பாம்பு போல வெளியே நீட்டி "யாரது? என்று மிரட்டும் தொனி வில்லேந்தி கூட்டத்தை மட்டுமல்ல நம்மையும் மிரள வைக்கிறதே...எள்ளி நகையாடியவர்களை சாடிவிட்டு 'சரித்திரத்தில் யாருமே சாதிக்க முடியாத காரியத்தை நான் சாதித்தேன்" (உண்மை! உண்மை! படத்தில் அவர் விஞ்ஞானியாய் செய்த சாதனையை சொன்னாலும் நடிகர் திலகம் நடிப்பில் தன்னிகரில்லா சாதனை புரிந்ததுதானே நமக்கு ஞாபகம் வருகிறது!) (இந்த வசனத்தின் மூலம் விந்தனின் ஆழ்மனதில் நடிகர் திலகம் எவ்வளவு தூரம் ஊடுருவியுள்ளார் என உணர முடியும்) என தான் கண்டு பிடித்த சாதனத்தைப் பற்றி கூறி பெருமையில் தனக்குத் தானே பூரித்துக் கொள்வது ஜோர். "சிரிக்கிறார்கள்" என்று பதிலுக்கு அவர்களைப் பார்த்து "ஹேஹே" என கைகளால் நையாண்டி செய்து பழித்துக் காட்டி நகைப்பதோ இன்னும் ஜோர்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4-6_zps08985ac6.jpg

"சந்திர மண்டலத்துக்கு நீங்களே போயிட்டு வரக் கூடாதா?" என ஒரு அம்மணி கேட்க "நான் போனால் இங்குள்ள இயந்திரங்களையெல்லாம் யார் இயக்குவது?" என்று எகத்தாள எதிர்க் கேள்வி வேறு கேட்பார். இயக்குவது என்ற வார்த்தையின் போது கைகள் இயந்திரங்களை சர்வ சாதாரணமாக handle செய்வது போன்ற பாவனயில் பின்னுவார்.

வில்லேந்தி அவரைப் புரிந்து கொண்டு, "என்னை சந்திரனுக்கு அனுப்புங்கள்" என்றவுடன் அதை கொஞ்சமும் எதிர்பாராமல் ஆச்சர்யம், வியப்பு, சந்தோஷம், பெருமிதம் அனைத்தையும் ஒரு வினாடியில் முகத்தில் கொண்டு வந்து கொட்டுவார். அத்துணை பாவங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வராமல் ஒரு சேர முகத்தில் ஒன்றாக சட்டென சங்கமிக்கும். வில்லேந்தியை தன் வயிற்றோடு சேர்த்து அணைத்துக் கொண்டு "பலே! சிறுவனாய் இருந்தாலும் சிங்கமாய் இருக்கிறாய்" என்று சடுதியில் அவனை நமக்கு பெருமை பூரிக்க சுட்டிக் காட்டுவார். அற்புதமாய் இருக்கும். பின் இருவரையும் சந்திரனுக்கு அனுப்ப தயாராவார். வில்லேந்தியும் அவனது தோழனும் விசேஷ கவசங்கள் அணிந்து நிற்கையில் இருவரின் உடல் நிலையை பரிசோதிப்பார். இருவரின் நாடிகளைப் பிடித்துப் பார்த்து 'நாடித் துடிப்பு நன்றாக இருக்கிறது' என்பதை தன் தலையாட்டலில் விளக்குவார். நாக்கை மட்டும் மறக்காமல் அடிக்கடி வெளியே தள்ளியபடி இருப்பார். எந்த ஒரு இடத்திலும் தவறு நேரவே நேராது. (அதுதான் நடிகர் திலகம் என்கிறீர்களா!)

மீன் வடிவிலான விமானத்தில் இருவரையும் ஏற்றி விட்டு சற்று பதைபதைத்தவாறு அனைவரையும் அழைத்துக் கொண்டு இயந்திரங்கள் இருக்கும் பகுதிக்கு வருவார். அந்த நடையில் ஒரு பதட்டம் தெரியும். என்னதான் பெரிய அறிவார்ந்த விஞ்ஞானியாய் இருந்தாலும் முதன் முதலில் தன்னுடைய கண்டுபிடிப்பான இயந்திரத்தில் மனிதர்கள் பயணம் செய்கிறார்களே என்ற தன் இயல்பு மீறிய படபடப்பு உணர்வினை அந்த நடையிலேயே காட்டி விடுவார். இயந்திரங்களை இயக்கிக் கொண்டிருக்கையில் ஒரு இயந்திரம் எதிர்பாராமல் வெடித்துச் சிதறும்போது உள்ளுக்குள் இவர் வெடித்துச் சிதறுவது நமக்குப் புரியும்... தெரியும்.... கைகளை ஒன்றோடொன்று பிசைந்தவாறு ஒருகணம் செய்வதறியாது குழம்பி நிற்பார். மறு வினாடி தன்னம்பிக்கை துளிர்விட "சீக்கிரமே சரி செய்து விடுகிறேன்" என்று வில்லேந்தி நண்பன் காதலியிடம் தைரியம் சொல்லுவார்.

அதற்குள் கொந்தளிக்கும் ஜனம் அவரது திறமை மீது அவநம்பிக்கை கொண்டு கற்களால் அவரைத் தாக்கும் போதும், பின் ஜனத்திரள் அவரை சூழ்ந்து கண்மண் தெரியாமல் தாக்கும் போதும் அடி வாங்கும் பாவனைகளில் நம்மை பதற வைப்பார். அடிதாங்க மாட்டாமல் கீழே வீழ்ந்து கிடக்கும் சமயத்தில் தான் அனுப்பிய கலம் திரும்பி வரும் சப்தம் கேட்டதும்

"அதோ பாருங்கள்... அவர்கள் வந்து விட்டார்கள்" என்று தரையில் ஒரு காலை முட்டி போட்டவாறு மறு காலைக் கெந்திக் கெந்தி படுத்தவாறே எழுந்திருக்க இயலாமல் ஒருக்களித்தாற் போன்று தவழ்ந்தவாறே தடுமாற்றத்துடன் நகர்ந்து செல்வதை என்னவென்று எழுதுவது!. எழுத்துகளுக்கும், வார்த்தை வர்ணிப்புகளுக்கும் அப்பாற்பட்ட மாமேதை அல்லவோ அவர்! பின் தட்டுத் தடுமாறி எழுந்து கைகளை கால்களாகி தரையில் ஊன்றி பின் மறுபடி எழுந்து இயந்திரத்தை நிறுத்தி சட்டென்று முடியாமல் கீழே சாய்ந்து விடுவார். வில்லேந்தி, அவனது நண்பனுடன் திரும்பி வந்தவுடன் நண்பனின் மடியில் சாய்ந்து விடுவார். கைகள் துவண்டு விடும். முகம் வெளிறி வலியின் வேதனைகளை பிரதிபலிக்கும். "ஆண்டவன் எனக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்திருந்தால் எத்தனையோ அற்புதங்களை சாதிக்கத் திட்டமிட்டிருந்தேன். நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்" என்று அமைதியாக மரண தருவாயில் அவர் கூறுவதை நான் கண்ணுற்ற போது எனது கண்கள் பனித்தன. (உண்மையாகவே அவர் இன்னும் உயிரோடு இருந்திருந்தால், நல்ல உடல் நலத்துடன் இருந்திருந்தால் இன்னும் எவ்வளவோ அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பார். நமக்குக் கொடுப்பினை இல்லையே! இன்னும் ஆயிரம் வருடங்கள் மறக்க முடியாத சாதனைகளை அவர் ஆயுளில் அவர் நிகழ்த்தியிருக்கிறாரே! அது மட்டும் சாந்தப்படுத்திக் கொள்ளவேண்டியதுதான்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-9_zps38ae55d5.jpg

பின் அவரை கைத்தாங்கலாக அழைத்து வந்து பரமேஸ்வரன் பார்வதி தெய்வச் சிலைகளின் முன் அமரச் செய்தவுடன், "பரமேஸ்வரா... இந்த மக்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது... இவர்களை மன்னித்து விடு",என்று அமைதியாக உயிரை விடுவார்.

கிட்டத்தட்ட பத்து நிமிட நேரம்தான். பத்து நிமிடத்திலும் பத்தாயிரம் முகபாவங்கள். நாம் காணாத பல்வேறு உடல்மொழிகள். அற்புதமான பாத்திரம். எந்த நடிகன் தான் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்காக தன்னை, தன் உருவத்தை உருக்குலைத்தது, சிதைத்துக் கொள்கிறானோ அவனே மக்கள் மனதில் நிற்பான்... அவனே நடிகன். ஈகோ, இமேஜ் என்ற மாய்மாலங்களையெல்லாம் உடைத்தெறிந்து இந்த நடிப்புலக ஞானி இந்தப் படத்தில் கூனனான, குரூபியான விஞ்ஞானியாக வி(ந்)த்தைகள் புரிந்து வியக்க வைக்கிறார் வழக்கத்திற்கும் மேலாக.

என்றென்றும் வாழ்க நம் தெய்வத்தின் புகழ்.

இந்தப் படத்தில் தலைவர் போர்ஷனுக்குதான் முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருக்கிறேன். வித்தியாசமான கோணத்தில் தலைவரை சிந்தித்துப் பார்த்த கதாசிரியர், ஒப்பனைக் கலைஞர் மற்றும் இயக்குனருக்கு நன்றி. 1960-லேயே சந்திர மண்டலத்திற்கு விண்கலம் மூலம் மனிதனை அனுப்பும் முயற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அதுவும் அந்த விஞ்ஞானி பாத்திரத்தில் தலைவரை கற்பனை செய்து பார்த்து நடிக்க வைத்து, நாம் இதுவரை காணாத புதிய பரிமாணத்தில் அவரை பரிமளிக்கச் செய்தது நமக்கு ஆச்சர்யம் கலந்த ஆனந்தத்தை அளிக்கிறது. இதில் நடித்துள்ள குழந்தைகளும் அற்புதமாக நடித்திருப்பார்கள். வில்லேந்தியாக வரும் கதாநாயகச் சிறுவன்தான் சற்று அதிகப் பட்சமாகப் பண்ணியிருப்பான். ஜாவர் காமெடி கலந்த வில்லன் தளபதி வேடத்தில் கனப் பொருத்தம். பந்துலு, ராஜம்மா as usual. காமெடிக்கு சாரங்கபாணியும், குலதெய்வமும். படமும் மாயாஜாலம், சந்திர மண்டலம், குழந்தைகள் குறும்புகள், வீர வசனங்கள் என்று போரடிக்காமல் செல்லும். குழந்தைகளோடு குதூகலித்துப் பார்க்க இது ஒரு நல்ல படமே. பாடல்களைப் பற்றி அவ்வளவாக ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

(இந்தப் படத்தின் DVD மற்றும் CD க்கள் எங்கும் கிடைப்பதாகத் தெரியவில்லை. கண்டிப்பாக சந்தர்ப்பம் வரும்போது மிஸ் செய்யாமல் பாருங்கள். புதியதொரு பரிணாமத்தை நடிகர் திலகத்திடம் காண்பீர்கள். இதனுடைய தெலுங்கு பதிப்பு (பிள்ளலு தெச்சின செல்லனி ராஜ்ஜியம்) இணையத்தில் உள்ளது. அதைப் பார்த்தும் ஆனந்தப் படலாம். ஆனால் நம்மவருக்கு சொந்தக்குரல் அல்ல. முக்கமாலாதான் நடிகர் திலகத்திற்கு தெலுங்கில் பின்னணி கொடுத்திருப்பார். (அப்படிதானே முரளி சார்! ஜக்கையா என்றும் சந்தேகமாக இருக்கிறது). தமிழில் நடிகர் திலகத்தின் சிம்ம கர்ஜனையில் பார்ப்பதே தனி சுகம். கௌரவ தோற்றம் என்றாலும் இப்படிப்பட்ட பிரமிக்க வைக்கும் நம்மவரின் நடிப்பைக் கொண்டுள்ள இந்தப் படமும், இதைப் போன்ற வேறு சில படங்களும் வெட்ட வெளிக்கு வந்து ஒளி வீச முடியாமல் குடத்தினுள் இட்ட விளக்காகவே ஒளி வீசுகின்றன. இதில் நிறையவே எனக்கு வருத்தம் உண்டு. அந்த ஆசையில் முன்னம் எழுதப்பட்டதுதான் 'பக்த துக்காராமு'ம் கூட. நம் ரசிகர்கள் கூட இவற்றிக்கெல்லாம் அதிக முக்கியத்துவம் தருவதில்லையோ என்ற சந்தேகமும், அது சார்ந்த வருத்தமும் எனக்கு அடிக்கடி எழுவதுண்டு. இப்படிப்பட்ட சில அபூர்வ படங்களில் தலைவரால் உழைக்கப்பட்ட அசாதாரணமான உழைப்பு சூரியக் கதிர்களாய் உலகெங்கும் பரவி ஒளி வீசி, அவர் புகழ் அகிலமெல்லாம் பிரகாசிக்க வேண்டும் என்ற ஆசையில் வடிவமைக்கப்பட்டதுதான் இந்த ஆய்வு. இதில் ஒரு சதவிகிதம் வெற்றி பெற்றால் கூட எனக்கு அளப்பரிய ஆனந்தம் கிட்டும் என்பது மட்டும் திண்ணம். நன்றி!)


அன்புடன்,
வாசுதேவன்.

வாசுதேவன் சார்/ ராகவேந்திர சார்,

"குழந்தைகள் கண்ட குடியரசு" வைப் பற்றி எழுதி கலக்கிடீங்க, பிரமாதம் உங்கள் எழுத்து, இப்பொழுது எங்களை எல்லாம் அந்த படத்தைப் பார்க்கத் தூண்டி விட்டீர்களே!

பழையப் பொக்கிஷங்களை இவ்விடம் பதிய வைத்து, பிரமாதம் ராகவேந்திர சார்.

ஆனந்த்

Subramaniam Ramajayam
27th January 2013, 06:35 AM
வாசுதேவன் சார்/ ராகவேந்திர சார்,

"குழந்தைகள் கண்ட குடியரசு" வைப் பற்றி எழுதி கலக்கிடீங்க, பிரமாதம் உங்கள் எழுத்து, இப்பொழுது எங்களை எல்லாம் அந்த படத்தைப் பார்க்கத் தூண்டி விட்டீர்களே!

பழையப் பொக்கிஷங்களை இவ்விடம் பதிய வைத்து, பிரமாதம் ராகவேந்திர சார்.

ஆனந்த்

Kudos vasu sir for lively album of K K KUDIYARASU on the eve of REPUBLIC DAY. padam partha mathiri ulladhu.
Murali sir as for as madras is concerned only if the results of a particular movie is not good only then POSTERS WITH TITLES SECOND WEEK appears in thanthi and wallposters. otherwise it will mot be there only regular adv will e there.
JAN 26 1966 also a hisorical day PADMASRI being conferred to NT
and MS PILLAI release date also lot of jubliation and crackers through out the day at CROWN mint junction. great days.

RAGHAVENDRA
27th January 2013, 07:30 AM
டியர் முரளி சார்,
தங்களது அன்பான பாராட்டுக்களுக்கு உளமார்ந்த நன்றி.

சிவகாமியின் செல்வன் - ரசிகர்களின் அபிமான முதல் பத்து அல்லது 20 படங்களில் நிச்சயம் இடம் பிடிக்கும். ராமஜெயம் கூறுவது சரி. சில படங்களுக்கு ரிசல்ட்டைப் பொறுத்து சுவரொட்டி ஒட்டுவார்கள் .. அது மிகச் சில படங்களே. மற்ற படி பெரும்பாலான படங்களுக்கு போஸ்டர்கள் மாநிலம் முழுமைக்குமா ஓரிடத்தில் அச்சடிக்கப் படும். சில படங்களுக்கு ஒரே காரணத்தில் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு டிசைன்களில் போஸ்டர்கள் தயாரிக்கப் படும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் ஒரு குறிப்பிட்ட படத்திற்கு 50வது நாள் போஸ்டர் என்றால் அது சென்னையில் ஒரு டிசைனும் மற்ற ஊர்களில் விநியோகஸ்தர் அல்லது தியேட்டர் நிர்வாகம் சார்பாக வேறு டிசைனிலும் போஸ்டர்கள் வெளியாகலாம்.

தாங்கள் கூறிய சிவகாமியின் செல்வன் போஸ்டர் கவலை எங்களுக்கும் ஏற்பட்டது. இங்கும் அதே போல ரசிகர்கள் படையெடுப்பு. ஓரிரு ரசிகர்கள் இங்கிருந்து மதுரைக்கு சென்று தயாரிப்பாளர்-விநியோகஸ்தரை நேரில் சந்தித்து கேட்ட போது, தாங்கள் புதுமையாக 10வது நாள், 20வது நாள் என்ற முறையில் போஸ்டர் அடிக்க உள்ளதாகக் கூறிய பின்னரே நண்பர்கள் திரும்பினர். அதே போல் போஸ்டரும் வெளிவந்தது.

ஆனந்த் சார்,
தங்களுடைய பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.

RAGHAVENDRA
27th January 2013, 07:33 AM
பெங்களூரு சிவாஜி பிரபு நல சங்கம் சார்பில் பராசக்தி 60வது ஆண்டு வைர விழா அழைப்பிதழின் நிழற்படம். நன்றி திரு செந்தில் மற்றும் திரு குமரேசன் பிரபு அவர்கள். முதன் முறையாக எல் ஈ டி தொழில் நுட்பத்தில் சுவற்றில் காட்சிகள் திரையிடப் படுவதாக அழைப்பிதழ் கூறுகிறது. நேற்று இவ்விழா சிறப்புற நடைபெற்றிருக்கும் என எண்ணுகிறோம்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/SenthilHarris01_zps5edca9d6.gif

RAGHAVENDRA
27th January 2013, 12:09 PM
Sivaji Ganesan Filmography Series

http://allmoviedatabase.com/movieImages/Thirumbi%20Paar.jpg

5. THIRUMBIPPAAR

விளம்பர நிழற்படங்கள் உபயம் - ஆவணத் திலகம் பம்மலார்

முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 10.7.1953
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3834a.jpg

Third Week Running Ad : The Hindu : 24.7.1953
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3836a.jpg

வெளியான நாள் - 10.07.1953
தயாரிப்பு - மாடர்ன் தியேட்டர்ஸ்
கதை வசனம் - மு.கருணாநிதி
சென்னையில் வெளியான திரையரங்குகள் - பாரகன், பிரபாத், சரஸ்வதி, நூர்ஜஹான்
இசை - இசை மேதை ஜி.ராமநாதன்
படத்தொகுப்பு - எல்.பாலு
ஒளிப்பதிவு - W.R.சுப்பாராவ்
இயக்கம் டி.ஆர். சுந்தரம்

நடிக நடிகையர்
பி.வி.நரசிம்ம பாரதி, பண்டரிபாய், கிரிஜா, கிருஷ்ணகுமாரி, டி.எஸ்.துரைராஜ், ஏ.கருணாநிதி, டி.பி.முத்துலட்சுமி மற்றும் பலர்

பிற்சேர்க்கை 24.02.2013

சென்னை நகரில் வெளியான திரையரங்குகள் - பாரகன், பிரபாத், சரஸ்வதி, நூர்ஜஹான்

100 நாட்களுக்கு மேல் ஒடிய திரையரங்கு - சேலம் ஒரியண்டல்

தகவல் உபயம் - ஆவணத் திலகம் பம்மலார்

RAGHAVENDRA
27th January 2013, 12:24 PM
திரும்பிப் பார் நெடுந்தகட்டின் முகப்புகள்

மோசர் பேர் நிறுவனத்தின் மூன்று படங்களடங்கிய நெடுந்தகடு

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/panamthirudanthirumbipar.jpg

மாடர்ன் சினிமாஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள நெடுந்தகட்டின் முகப்பு

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20covers/THIRUMBIPARDVDCOVER.jpg

RAGHAVENDRA
27th January 2013, 01:05 PM
திரும்பிப் பார் படத்தின் சில நிழற்படங்களின் கலவை

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/tpcollage_zpsc9b3138d.jpg

RAGHAVENDRA
27th January 2013, 07:02 PM
RARE IMAGES அபூர்வ நிழற்படங்கள்

வெளிவராத படமான லட்சியவாதிக்காக எடுக்கப் பட்ட நிழற்படம். மிக அபூர்வமானது.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NTLATCHIYAVADHI01_zpsb32c9710.jpg

vasudevan31355
27th January 2013, 07:53 PM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்களுடைய அன்புப் பாராட்டிற்கு நன்றிகள். 'குழந்தைகள் கண்ட குடியரசு' பட ஆய்வுக்கு மெருகேற்றும் வகையில் தாங்கள் வெளியிட்டுள்ள அமர்க்களமான அப்பட ஸ்டில்களுக்கு ஆத்மார்த்தமான நன்றி! அழகுப் பெட்டகமாய் தலைவர் ஜொலிக்கும் ஸ்டில்லைத் தந்த தாங்களும் ஒரு 'லட்சியவாதி' தான் நடிகர் திலகத்தின் புகழைப் பரப்புவதில். 'பைரவர்' தங்கள் புண்ணியத்தால் என் டெஸ்க்டாப்பை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார். என்ன ஒரு அருமையான ஸ்டைலான ஸ்டில்! 'திரும்பிப்பார்' பதிவுகள் அருமை. தங்கப் புதையல்களை அள்ளித் தரும் தங்களுக்கு என் அருமை நன்றிகள்.

vasudevan31355
27th January 2013, 07:57 PM
"குழந்தைகள் கண்ட குடியரசு" பதிவைப் பாராட்டிய ஆனந்த் சார், சுப்பிரமணியம் ராமஜெயம் சார் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

vasudevan31355
27th January 2013, 08:14 PM
என் மகன்' படத்தில் சற்றே வயதான நம் லட்சியவாதி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/vlcsnap-90477_zps2f01d5f1-1_zps5411ff11.jpg

vasudevan31355
27th January 2013, 08:50 PM
'டியர் முரளி சார்,

தங்களின் 'சிவகாமியின் செல்வன்' போஸ்ட்டர் மேட்டர் வெகு சுவாரஸ்யம். அதற்காக என் நன்றி! நான் கடலூரில் 11ஆவது வார போஸ்ட்டரை 'திரிசூலம்' காவியத்திற்கு கண்டு மகிழ்ந்திருக்கிறேன். 'கவரிமான்' இடையில் நுழைந்ததால் 'திரிசூலம்' நூறாவது நாள் போஸ்ட்டரைப் பார்க்க முடியாமல் போனதில் இன்றளவும் வருத்தம்தான்.

kaveri kannan
28th January 2013, 01:37 AM
அன்பு இராகவேந்திரர், பம்மலார், முரளி ஶ்ரீனிவாஸ், வாசுதேவன் உள்ளிட்ட
அனைத்து இதயவேந்தனின் இதயங்களுக்கும்...

என்ன சொல்லி என் மகிழ்ச்சியை, நன்றியைப் பகிர..

இத்திரிக்கு கோடி நன்றிகள் இராகவேந்திரருக்கு..

ஞாயிறும் திங்களும் பாடலைக் கேட்கவைத்த இந்நாள் எனக்குப் பொன்னாள்..

http://www.youtube.com/watch?v=ZjiRKDmIDj ((இப்பாடலுக்கு இமயம் எப்படி உயிர் அளித்திருப்பார் என மனக்கண்ணில் காண்கிறேன்..)


இன்னோர் பாடல் ( ஜானகி குரலில்)
http://music.cooltoad.com/music/song.php?id=459672&PHPSESSID=

இலட்சியவாதி கண்ணில் மின்னும் வைரங்களுக்கு விலையுண்டோ?

விலைமதிப்பில்லாப் பொக்கிஷங்களை வழங்கும் அன்பளிப்பு நாயகனின் இதயங்களைப் போற்றுகிறேன்..

RAGHAVENDRA
28th January 2013, 09:35 AM
டியர் கண்ணன்,
தங்களுடைய பாராட்டுக்களுக்கு என் உளமார்ந்த நன்றி. ஞாயிறும் திங்களும், ஜீவ பூமி, லட்சியவாதி, இது போன்று பல படங்கள் ... இவற்றையெல்லாம் வெண்திரையில் நாம் கண்டோமானால் ....

RAGHAVENDRA
28th January 2013, 09:38 AM
RARE IMAGES அபூர்வமான நிழற்படங்கள்

அபூர்வமான நிழற்படங்கள் வரிசையில் ...

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/rare%20images/collage1970_zps5e5c7692.jpg

இது போன்று இந்தக் காலத்தில் கணினி தொழில்நுட்பத்தில் எளிதாகவும் விரைவாகவும் செய்ய முடியும். ஆனால் அந்தக் காலத்தில்... இதில் நூறு படங்களின் நிழற்படங்களை இருத்தி அதன் நடுவே மையமாக நடிகர் திலகத்தின் ஒப்பனையற்ற இயற்கை நிழற்படத்தை வைத்து அதனை ஒரு ரசிகர் ஆட்டோகிராப் வாங்கி வைத்திருந்தார். அது பெரிய அளவிலான படம். அதனை புகைப்படமெடுத்து அந்தக் காலத்தில் நண்பர்களுக்கு கொடுத்திருந்தார். அவற்றிலிருந்து ஒரு பிரதி அடியேனுக்குக் கிடைத்தது பெரிய பாக்கியம். இது நடந்தது 1969-70 வாக்கில் என எண்ணுகிறேன். பின்னர் எப்படியோ அது கடைகளுக்கும் வந்து விட்டது.

கிடைத்தற்கரிய பொக்கிஷம் என்றால் அது மிகையில்லை.

vasudevan31355
28th January 2013, 10:55 AM
'நீதி' யில் நீதிமான்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/Neethi4_zps2ae9651b-1_zps334898bc.jpg

vasudevan31355
28th January 2013, 11:00 AM
'அமரகாவியம்' படத்தில் காவிய அமரர்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/AmaraKaviyam1png-1_zpsb3212bbe-1_zps16a7d79a.jpg

JamesFague
28th January 2013, 01:30 PM
Mr Vasu Sir,

Unbeliveable write up of KKK and excellent photo's of our God.

Mr Raghavendra Sir,

You are taking this thread into greater heights. Thanks.

vasudevan31355
28th January 2013, 02:10 PM
Thans and very kind of u vasu devan sir.

vasudevan31355
28th January 2013, 02:14 PM
காவேரிக்கண்ணன் சார்,

'ஞாயிறும் திங்களும்' பாடல்களை அளித்தமைக்கு மிக்க நன்றி!

RAGHAVENDRA
28th January 2013, 06:19 PM
டியர் வாசுதேவன் சார்,
நீதிமான் படைத்தவை எல்லாமும் என்றும் அமர காவியங்கள் தான் என்று பறை சாற்றி, அதற்கு சான்றாக நிழற்படங்களையும் தந்த உங்களை உளமாரப் பாராட்டுகிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
28th January 2013, 06:20 PM
டியர் சித்தூர் வாசுதேவன் சார்
தங்கள் பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி
அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
28th January 2013, 06:24 PM
அன்பு இதயங்களே,
நடிகர் திலகத்தின் தரிசனத்திற்கே நாள் கணக்கில் மக்கள் காத்திருப்பார்கள் ... இது என்றைக்குமே பொதுவானது. அந்தக் கால கட்டத்தில் ஆட்டோகிராப் வாங்குவது என்பது மிகப் பெரிய விஷயம். அவர் மறைந்து 11 ஆண்டுகள் கடந்த பின்னர் இன்றைய தலைமுறையினருக்கு அவரது ஆட்டோகிராப் வாங்குவது என்பது நடக்காத ஒன்று என்றாலும் அப்படி விரும்பக் கூடியவர்களுக்கு அன்புப் பரிசாகவும், நம் தலைமுறையிலும் அவருடைய ஆட்டோகிராப் கிடைக்கப் பெறாதவர்கள் பலரிருக்கக் கூடும், அவர்களுக்காகவும் முன்னர் அளித்த 100 பட நிழற்படத்திலிருந்து நடிகர் திலகம் ஆட்டோகிராப் இடும் பகுதி தனியாக இப்போது இங்கே ...

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/rare%20images/autographNT_zpsa741e0dc.jpg

RAGHAVENDRA
28th January 2013, 07:04 PM
RARE IMAGES அபூர்வமான நிழற்படங்கள்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/rare%20images/rare02_zps0496fd68.jpg

vasudevan31355
28th January 2013, 08:34 PM
'விஸ்வரூப' ஜுரம்

எப்போதோ 'விஸ்வரூபம்' எடுத்துவிட்ட வித்தகர்.

நடிப்பு விற்பன்னர் இரு மாறுபட்ட வேடங்களில் தூள் பரத்தும் "விஸ்வரூபம்".

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_1VOB_000831203.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_1VOB_002114889.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_1VOB_000179140.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_1VOB_002473802.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_2VOB_002319624.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_3VOB_001219592.jpg

RAGHAVENDRA
28th January 2013, 09:05 PM
விஸ்வரூபம் எடுத்த தெய்வப் பிறவியின் மேன்மையை உரைக்க விஸ்வரூபம் எடுத்த வாசுதேவரே ....

தங்களின் உழைப்பை எங்களால் ஈடு கட்ட முடியாது காரணம்

பாடலைக் கேளுங்களேன்


http://youtu.be/SxeODtxmL9M

RAGHAVENDRA
28th January 2013, 09:32 PM
SIVAJI GANESAN FILMOGRAPHY SERIES

6. அன்பு - 24.07.1953

விளம்பர நிழற்படங்கள் உபயம் - ஆவணத் திலகம் பம்மலார்



[ஜுலை 24 வெள்ளியன்று சென்னை தவிர தென்னகமெங்கும் வெளியான இக்காவியம் சென்னையில் மட்டும் ஆகஸ்ட் 7 வெள்ளியன்று வெளியானது]

பட விளம்பரம் : சுதேசமித்ரன் : 18.7.1953

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4118a.jpg

முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 24.7.1953
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4112aa.jpg

முதல் வெளியீட்டு விளம்பரம் [சென்னை மட்டும்] : சுதேசமித்ரன் : 7.8.1953
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4114a.jpg

ஆறாவது வாரம் : சுதேசமித்ரன் : 28.8.1953
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4115a.jpg

இப்படத்தின் இப்பாடலை எண்ண எண்ண இன்பமே


http://www.dailymotion.com/video/xcyp36_enna-enna-inbame_creation

RAGHAVENDRA
28th January 2013, 09:39 PM
அன்பு திரைப்பட கலைஞர்கள் மற்றும் பாடல்களைப் பற்றிய விவரங்கள்

நடிக நடிகையர்

சிவாஜி கணேசன் - செல்வம்
டி.எஸ்.பாலையா - திருமலை
கே. துரைசாமி - ராஜமாணிக்கம்
தங்கவேலு - மிஸ்டர் குமார்
பிரண்ட் ராமசாமி - மிஸ்டர் பாஸ்கர்
ஸி.வி. நாயகம் - ஆடிய பாதம்
எஸ். சுந்தரேசய்யர் - நம்மாழ்வார்
டி.வி. ஷண்முகம் பிள்ளை - பொன்னம்பலம்
சேதுபதி - ஹெட் கிளார்க் மற்றும் சாயபு

டி.ஆர். ராஜகுமாரி - தங்கம்
லலிதா - ரீடா
பத்மினி - மாலதி
எம். ருஷ்யேந்திர மணி - விஜயா
டி.எஸ். ஜெயா - பாலாமணி
எஸ். பத்மா - லக்ஷ்மி
ஆதிலக்ஷ்மி - அமிர்தம்
குமாரி ராஜம் - கலா
ரீடா, சரஸ்வதி, மோகனா, தங்கம் - மாணவிகள்

RAGHAVENDRA
28th January 2013, 09:43 PM
அன்பு - மற்ற கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்கள்

கதை - எம். நடேசன்
வசனம் - விந்தன்
சங்கீதம் - டி.ஆர். பாப்பா
படப்பிடிப்பு - ஜி.விட்டல்ராவ்
ஒலிப்பதிவு - மீனாக்ஷி சுந்தரம், எஸ். விமலன்
நடனம் - தண்டாயுதபாணி பிள்ளை, ஹீராலால், கோபால கிருஷ்ணன்
மேக்கப் - ஹரிபாபு, தனக்கோடி, துரைசாமி, கே.ஜி. நாயர்
எடிட்டிங் - எஸ்.ஏ. முருகேஷ் (இவர் தான் உலகம் பல விதம் படத்தின் இயக்குநர்)
உதவி டைரக்ஷன் - எஸ். கிருஷ்ணமூர்த்தி
ஸ்டூடியோ - நியூடோன், சிட்டாடல்
பாடல்கள் ஒலிப்பதிவு - ரேவதி, by ரங்கசாமி
தயாரிப்பாளர் இயக்குநர் - எம்.நடேசன்
தயாரிப்பு - நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ்

RAGHAVENDRA
28th January 2013, 09:47 PM
பாடல்கள்

பாட்டுப் புத்தகத்தின் சில பக்கங்கள் இல்லை. எனவே பின்னணி பாடகர்களின் முழு விவரம் தெரியவில்லை.

1. காப்பதுன் பாரமம்மா - பாபநாசம் சிவன்
2. ஆடவரே நாட்டினிலே - சுரதா
3. கனவில் கண் காட்டி - கம்பதாசன்
4. எண்ண எண்ண இன்பமே - கா. மு. ஷெரீப்
5. வெந்தழலாய் எரிக்கும் வெண்மதியே - தண்டாயுதபாணி
6. ஒண்ணும் புரியவில்லை தம்பி - விந்தன்
7. மனம் நாடும் தெய்வம் நீ
8. அன்பாலே உலகில் - டி.என். ராஜப்பா
9. மனது மகிழவே - கா.மு.ஷெரீப்
10. ஐயா முதலாளி வாங்க - கா.மு.ஷெரீப்
11. வானம் சென்றாயோ - கம்பதாசன்

kaveri kannan
29th January 2013, 01:15 AM
இராகவேந்திரரும் வாசுதேவரும் மாறிமாறி ஜுகல்பந்தி விருந்து பரிமாறப்.. பரிமாற..
விழிகளால் மீண்டும் மீண்டும் புசித்தும் பசியாறாமல் பசியேறிய காயசண்டிகையாய் நான்..

ஆபுத்திரன் நம் நடிகர்திலகம்.. அட்சயப்பாத்திரம் அவர் திருமுகம்..
கிரேக்கச்சிற்பங்களை விஞ்சும் உருவ இலக்கணம் பொருந்திய ஒளிமுகம்.. களைமுகம்..

நீதி படத்தில் நெற்றியில் காயமும்.. நெஞ்சில் உள்ள பச்சாதாபம் உணரப்படாத ஆற்றாமையுமாய்..

இருவரியில் பெருங்கருத்து குறள் என்றால்..
ஒரு பாவனையில் நெடுங்கவிதை நடிகர்திலகம் முகம்..


தொடரட்டும் இத்தலைவாழை விருந்து ..
பரிமாறும் இராகவேந்திரர் + வாசுதேவர் கரங்களுக்கு என் நெகிழ்நன்றிகள்..

Subramaniam Ramajayam
29th January 2013, 06:07 AM
இராகவேந்திரரும் வாசுதேவரும் மாறிமாறி ஜுகல்பந்தி விருந்து பரிமாறப்.. பரிமாற..
விழிகளால் மீண்டும் மீண்டும் புசித்தும் பசியாறாமல் பசியேறிய காயசண்டிகையாய் நான்..

ஆபுத்திரன் நம் நடிகர்திலகம்.. அட்சயப்பாத்திரம் அவர் திருமுகம்..
கிரேக்கச்சிற்பங்களை விஞ்சும் உருவ இலக்கணம் பொருந்திய ஒளிமுகம்.. களைமுகம்..

நீதி படத்தில் நெற்றியில் காயமும்.. நெஞ்சில் உள்ள பச்சாதாபம் உணரப்படாத ஆற்றாமையுமாய்..

இருவரியில் பெருங்கருத்து குறள் என்றால்..
ஒரு பாவனையில் நெடுங்கவிதை நடிகர்திலகம் முகம்..


தொடரட்டும் இத்தலைவாழை விருந்து ..
பரிமாறும் இராகவேந்திரர் + வாசுதேவர் கரங்களுக்கு என் நெகிழ்நன்றிகள்..

Pammalarum vandhu vittal MUKKANIYIN taste marupadium MANAKKUM.
kaveri mannan kavithai suvaiyaga ulladu.
raghavender the thread is gaining lot of momentum ALL THE BEST.

vasudevan31355
29th January 2013, 08:53 AM
ஆபுத்திரன் நம் நடிகர்திலகம்.. அட்சயப்பாத்திரம் அவர் திருமுகம்..
கிரேக்கச்சிற்பங்களை விஞ்சும் உருவ இலக்கணம் பொருந்திய ஒளிமுகம்.. களைமுகம்..

இருவரியில் பெருங்கருத்து குறள் என்றால்..
ஒரு பாவனையில் நெடுங்கவிதை நடிகர்திலகம் முகம்..

கவிதை நடையில் கலைக்குரிசில் புகழ் பாடும் காவிரியின் கண்ணன் அவர்களே!

தமிழோடு விளையாடவே தாங்கள் இருக்கிறீர்கள்.
அதை அள்ளிப் பருகவே நாங்கள் இருக்கிறோம்.

அற்புதம். அருமை. பாராட்டுக்கள்.

தங்களுக்காக இதோ நம் ஜூலியஸ் சீஸர்.

கிரேக்கச்சிற்பங்களை விஞ்சும் உருவ இலக்கணம் பொருந்திய ஒளிமுகம்.. களைமுகம்..

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Sorgam1970TamilDvDRipXviDMP3SubsMeNavi_008868875.j pg

http://img52.imageshack.us/img52/905/sorgamdvdripxvidsubstmg.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Sorgam1970TamilDvDRipXviDMP3SubsMeNavi_008879152.j pg

இந்த ஒரு உடல் மொழிக்கே உலகத்தை இவருக்கு விலையாகத் தரலாம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Sorgam1970TamilDvDRipXviDMP3SubsMeNavi_008914787.j pg

"நான் காணாத களமில்லை ...
பெற்றுத் தராத வெற்றி இல்லை...
என் உடலில் வெற்றிவடு படாத இடமில்லை...

என்னை எதிர்த்தவர்கள் தங்களையே அழித்தவர்கள் ஆவார்கள்...

புத்தி உள்ளவன் திருந்துவதுதான் புகழுக்குரியது...
புத்தி உ(ள்)ளதா... இ(ல்)லையா"...

http://upload.wikimedia.org/wikipedia/en/3/36/Sorgam.jpg

சீறும் சிங்கமென நம் சீஸர் முழங்குவதை 'சொர்க்க'த்தில் காணலாம்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-zyxs-tVB_Q

லூயிஸ் கல்ஹெர்ன் ஜூலியஸ் சீஸர் ராகவும், 'ஹாலிவுட் சிவாஜி' மார்லன் பிராண்டோ மார்க் ஆண்டனி யாகவும், ஜேம்ஸ் மேஸன் புருட்டஸாகவும் நடித்த ஜூலியஸ் சீஸர் (1953) ஆங்கிலப் படத்திலிருந்து அதே காட்சி.

திறமையான நடிகர்கள்தான். அதில் சந்தேகமில்லைதான். ஆனால் எம் தலைவன் முன் இவர்கள் எம்மாத்திரம்? வீடியோவில் பாருங்கள் எவ்வளவு வித்தியாசம் என்று!

http://4.bp.blogspot.com/-r-NP6ITrKxo/T2HqY8_pIlI/AAAAAAAAA5g/wSPT_HW9LNU/s1600/ides_of_march+02.jpg


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Je0gTnheVe4



அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
29th January 2013, 09:52 AM
டியர் வாசு சார்,
சொர்க்கம் - ஜூலீயஸ் சீஸர் ஸ்டில்கள் வர்ணனைகள் ... ஆஹாஹா ... உங்கள் பதிவே சொர்க்கம் ... வேறென்ன சொல்ல...

RAGHAVENDRA
29th January 2013, 09:52 AM
வாசு சார்
தங்களுக்காக மிக அபூர்வமான சிவகாமியின் செல்வன் ஸ்டில்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/rare%20images/SSRare01_zps7037685c.jpg

RAGHAVENDRA
29th January 2013, 05:26 PM
விழியாலே காதல் மொழி பேசும் ... சிவகாமி ... அசோக் .... இனியவளே என்று பாடியவர் இனியவள் தான் என்று ஏன் ஆக மாட்டார் இந்தப் பார்வையினால் ...

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/SIVSEL01.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/SIVSEL02.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/SIVSEL03.jpg

சிவகாமியின் செல்வன் பற்றிய முரளி சாரின் அற்புதமான பதிவிற்காக அவருக்கு அர்ப்பணிக்கப் படுகிறது ...

JamesFague
29th January 2013, 06:48 PM
Nice photo's of Mr Anand and Julius Ceaser.

JamesFague
29th January 2013, 06:49 PM
I wrongly mentioned as Mr Anand instead of Mr Ashok.

RAGHAVENDRA
29th January 2013, 08:06 PM
My Choice - என் விருப்பம்

ஒவ்வொரு ரசிகரும் நடிகர் திலகத்தின் எந்தப் பாடலானாலும் விரும்பிப் பார்ப்பார் இதில் ஐயமில்லை. இருந்தாலும் இதையெல்லாம் தாண்டி நமக்கென்று பல பாடல்கள் நம் நெஞ்சில் ஆழமாக பதிந்து இருக்கும். அதில் மறக்க முடியாத நினைவுகள் அனுபவங்கள் இருக்கலாம் அல்லது பாடலின் சிறப்பு காரணமாகவும் இருக்கலாம். அப்படி நமக்குள் என்றும் ஒரு ஓரத்தில் நிழலாடிக்கொண்டே இருக்கும் பாடலையும் அது தொடர்பான நினைவுகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூட மனதில் அவ்வப்போது தோன்றியிருக்க வாய்ப்புண்டு.

அப்படி நம் ஒவ்வொருவருக்குள்ளும் நிழலாடிக் கொண்டிருக்கும் நடிகர் திலகத்தின் படப் பாடலைப் பகிர்ந்து கொள்ளவே இப் பகுதி. இதில் பாடலைப் பற்றிய தங்கள் மனதில் உள்ள எண்ணங்களோடு அப்பாடலை குறிப்பிட்டு இங்கே பகிர்ந்து கொள்ளலாம். விவாதங்கள் என்ற அடிப்படையில் இல்லாமல், நினைவுகளின் பகிர்வு என்ற அடிப்படையில் இதனை கொண்டு செல்வோம்.

துவக்கமாக நம் அனைவர் நெஞ்சிலும் நீங்கா இடம் பெற்ற பாடலான அவன் ஒரு சரித்திரம் திரைப்படத்தில் இடம் பெற்ற வணக்கம் பல முறை சொன்னேன் பாடலை வழங்க விரும்புகிறேன். தமிழகமெங்கும் மட்டும் அல்லாது இலங்கை மலேசியா என அனைத்து இடங்களிலும் பிரபலமான பாடல். கவியரசரின் வரிகளில் மெல்லிசை மன்னரின் இசையில் டி.எம்.எஸ்., பி.சுசீலா குரலில் காலத்தால் அழியாத பாடல். முதல் நாள் முதல் காட்சியில் விண்ணதிரும் கரவொலியோடு பார்த்தது பசுமையாக நினைவில் உள்ளது. அன்று முதல் பல ஆண்டுகளாக மெல்லிசை மேடைகளில் தவறாமல் இடம் பெறும் பாடல்.

ஒரு மாவட்ட ஆட்சியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக அமைக்கப் பட்ட கதா பாத்திரம். அதற்கு உயிர் கொடுக்கும் வகையில் நடிகர் திலகம் வாழ்ந்து காட்டியிருப்பார். இப் பாடல் காட்சியில் நடிகர் திலகம், காஞ்சனா, மஞ்சுளா மூவருடன் தங்கவேலு, வி.கே .ராமசாமி, சோ உட்பட பலர் பங்கேற்றிருப்பர். கேட்ட முதல் முறையிலிருந்து இன்று வரை என் நெஞ்சில் தொடர்ந்து கொண்டே வரும் பாடல்.


http://youtu.be/hW3ttn2hqfU

நண்பர்கள் தங்கள் விருப்பப் பாடலைப் பகிர்ந்து கொள்ளும் போது இத்தலைப்பினையும் குறிப்பிட்டால் ஒரு தொடராக அமையும்.

RAGHAVENDRA
29th January 2013, 08:30 PM
மிக்க நன்றி சகோதரி. இப்பகுதிக்கு நம் அனைவருக்குமே பிடிக்கும் என்று நான் நினைத்திருந்தேன். அதே போன்று தாங்கள் மிகச் சிறந்த பாடலின் மூலம் அதனை வரவேற்றுள்ளீர்கள். மகிழ்ச்சியாக உள்ளது.

இந்தப் பாடலை நான் மிகவும் சிறிய வயதில் கேட்ட போதே நெஞ்சில் தங்கி விட்டது. இப்படத்தின் முதல் வெளியீட்டின் போது நான் பள்ளிச் சிறுவன். சுவர்களில் போஸ்டர்களில் இப்பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் அட்டகாசமான போஸ் இடம் பெற்றிருக்கும். நன்கு நினைவில் உள்ளது. வானொலி, மின்சாரம் இவை போன்ற எந்த வசதியும் இல்லாத கால கட்டத்தில் கடற்கரையில் மாலை வேளையில் ஒலிபரப்பப் படும் பாடல்களுக்காக அமர்ந்திருப்போம். பசுமையான நினைவுகள். பின்னர் 60களின் பிற்பகுதியில் திரையரங்கில் ஆரவாரங்களுடன் பார்க்கும் போது புதிய பரிமாணம் தென் பட்டது. அன்று தொடங்கி இன்று வரை ஒவ்வொரு முறையும் புதுப்புது கோணங்களில் நடிகர் திலகத்தின் ஸ்டைலும் நடிப்பும் நம்மை பரவசப் படுத்தி வருகின்றன.

வாய்ப்புக்கு நன்றி சகோதரி.

vasudevan31355
29th January 2013, 08:55 PM
டியர் ராகவேந்திரன் சார்,

தாங்கள் தொடங்கி வைத்துள்ள 'என் விருப்பம்' பாடல் தொடரை முழு மனதுடன் வரவேற்கிறேன். விரைவில் நானும் இதில் பங்கு கொள்ளும் மகிழ்ச்சியில் இருக்கிறேன். தங்களின் 'அசோக்' ஸ்டில் பதிவுகள் அமர்க்களம். அதுவும் எனக்கு ஸ்பெஷலாக தாங்கள் மனமுவந்து அளித்த கருப்பு-வெள்ளை புகைப்பட ஸ்டைலான, அசத்தலான 'அசோக்' கிற்கு ஆர்ப்பாட்டமான நன்றிகள். பத்திரமாக சேமித்து வைத்துக் கொண்டேன்.

kaveri kannan
30th January 2013, 02:22 AM
வாசுதேவரின் சொர்க்கம் பதிவு சுகமோ சுகம்..இராகவேந்திரர் அளித்த அசோகச் சித்திரங்களோ அபாரம்... அபூர்வம்..

கூடுதல் கலக்கலாக ''என் விருப்பம்'' முதல் இரு தெரிவுகள் முத்து முத்தாய்..

என் வரவேற்பும் ஊக்கமும் என்றும் உங்களுடன்..

-----------------------------------------------------------------------------
என் விருப்பம்:

ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல.. நடிகர்பெருமான் நடிப்பில் விளைந்த
எண்ணற்றப் பாடலோவியங்களில் எதை முதலாய் எடுத்துச் சொல்ல?


ஊழ்வினை வந்து உறுத்த , நடந்ததற்கு வருந்திய நல்ல உள்ளம்..
புண்பட்டதால் பண்பட்டு உருவமும் கனிந்த துறவுக் கோலம்..
அக உணர்வு உலர்ந்து அந்த வறட்சியில் மலரும் ஞானக்கோட்டம்
முகமும் நடையும் தலையசைவும் அணிந்த துணியும் காட்டும் நடிப்பின் உச்சக்கட்டம்..


ஆண்டவன் கட்டளையாய் என் முதல் விருப்பம்..


http://www.youtube.com/watch?v=O5As4LT9ct8

RAGHAVENDRA
30th January 2013, 11:35 AM
SIVAJI GANESAN FILMOGRAPHY SERIES

7. கண்கள் - 05.11.1953


http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Kangal1-1-1.jpg

முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 4.11.1953
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4966-1.jpg

மேற்காணும் நிழற்படங்கள் உபயம் ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்

கண்கள் திரைப்படத்தைப் பற்றி நமது அன்பு நண்பர் வாசுதேவன் அவர்களின் குறிப்புகள்



S.V.வெங்கட்ராமன்('கண்கள்' திரைப் படத்தின் இசை அமைப்பாளர்).
http://s3images1.filmorbit.com/media/14/89/86/1489864-191277-opt.jpeg
S.V.வெங்கட்ராமன் அவர்களின் தேனிசையில் ஒலிக்கும் 'கண்கள்' படத்தின் சில அற்புத பாடல்கள்.

"ஆளு கனம் ஆனால் மூளை காலி"....J.P.சந்திரபாபு அவர்களின் உற்சாகக் குரலில்...

"பாடிப் பாடி தினம் தேடினாலும்"...

"வருங்காலத் தலைவன் நீயே பாப்பா".. கேட்டு மகிழ...

லிங்க் கீழே.

http://www.inbaminge.com/t/k/Kangal/

எம்.எல்.வசந்தகுமாரி


"இன்ப வீணையை மீட்டுது அவர் மொழியே" எம்.எல்.வசந்தகுமாரியின் அற்புதக் குரலில். (கம்பதாசன் அவர்களின் காவிய வரிகளில்).

லிங்க் கீழே.

http://www.muzigle.com/album/kangal-...inba-veenaiyai

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/RVasudevan137-3.jpg


திரு வாசுதேவன் இப்படத்தைப் பற்றித் தந்துள்ள பதிவிற்கான இணைப்பு
http://www.mayyam.com/talk/showthread.php?8593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-9&p=763700&viewfull=1#post763700



கண்கள் திரைப்படத்தின் பாட்டுப் புத்தக முகப்பின் நிழற்படம்
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Song%20Book%20Covers/KanngalSBCfw.jpg

RAGHAVENDRA
30th January 2013, 11:39 AM
டியர் காவிரிக் கண்ணன்
விழி விரிக் கவிதையைத் தந்த
விழுப்புரத்தானின்
மொழி விரி மேன்மையை
மொழிந்துள்ள தங்கள்
பொழிப்புரையாய் ஏற்று
பொங்குகிறோம் மகிழ்வால்

பாராட்டுக்கள் காவிரிக் கண்ணன், தங்கள் விருப்பப் பாடல்களைத் தொடர்ந்து தாருங்கள்.

JamesFague
30th January 2013, 11:39 AM
Rare photo's and records of Kangal. Thanks Mr Raghavendra Sir

RAGHAVENDRA
30th January 2013, 12:52 PM
தங்கள் பாராட்டிற்கு நன்றி சித்தூர் வாசுதேவன் அவர்களே

RAGHAVENDRA
30th January 2013, 12:53 PM
கண்கள் நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் விவரம்
நடிக நடிகையர்
சிவாஜி கணேசன், எஸ்.வி.சஹஸ்ரநாமம், வி.கே.ராமசாமி, சந்திரபாபு, பண்டரிபாய், மைனாவதி, எம்.என்.ராஜம், சி.டி. ராஜகாந்தம், மற்றும் பலர்.
கதை வசனம் – என்.வி.ராஜாமணி
பாடல்கள் – கம்பதாசன், கே.பி. காமாக்ஷி, சுரபி
சங்கீதம் – எஸ்.வி.வெங்கட்ராமன், ஜி.ராமநாதன்
நடனம் – நடராஜ், சகுந்தலா பார்ட்டி
நடன அமைப்பு – நடராஜ், ஹீராலால், தண்டாயுத பாணி பிள்ளை
நடனக் காட்சி ஜோடனை – பி. அங்கமுத்து
பின்னணி குரல்கள் – எம்.எல்.வசந்த குமாரி, பி.ஜி. கிருஷ்ணவேணி – ஜிக்கி, எஸ்.வி.வெங்கட்ராமன்
கோரஸ் குரல்கள் – ரத்னமாலா, ராணி, கஸ்தூரி, காந்தா, பத்மா
ஆர்ட் – எஸ். அம்மையப்பன்
மேக்கப் – கோபால் ராவ்
உடைகள் – ப்ரான்ஸிஸ், டி.எஸ்.ராவ் [பெங்களூர் எம்போரியம்]
ஒளிப்பதிவு – ஆர்.ஆர். சந்திரன்
ஒலிப்பதிவு – வி. ரங்காச்சாரி
பாட்டு ஒலிப்பதிவு – டி.எஸ்.ரங்கசாமி
ஸ்டூடியோ – ரேவதி
ப்ரொடக்ஷன் நிர்வாகம் – கே. வேலாயுதம் பிள்ளை
செட்டிங்ஸ் – எஸ். கோவிந்தசாமி, டி.நீலகண்டன்
டைரக்ஷன் – கிருஷ்ணன் – பஞ்சு

பாடல்கள்
1. பொங்கி மலருதே மங்கையின் வாழ்வு – சுரபி – கோரஸ்
2. கூடு செல்லும் பறவைகளே – கே.பி.காமாக்ஷி – ஜிக்கி
3. கண்ணை இழந்தேன் கனலில் விழுந்தேன் – சுரபி – எம்.எல்.வசந்தகுமாரி
4. இன்ப வீணையை மீட்டுது – கம்பதாசன்- எம். எல். வசந்தகுமாரி
5. அன்னை கரமென – கம்பதாசன் – எம். எல். வசந்தகுமாரி
6. சின்னப் பெண்ணே வாடி – கம்பதாசன் – கோரஸ்
7. காதலாகிக் கசிந்து – கே.பி.காமாக்ஷி – ஜிக்கி
8. முத்துச் சிரிப்புடனே – கம்பதாசன் – ஜிக்கி
9. ஆளுகனம் – கம்பதாசன் – சந்திரபாபு
10. பிஸ்மில்லா – கம்பதாசன் – எஸ்.வி.வெங்கட்ராமன்

vasudevan31355
30th January 2013, 04:14 PM
அகில இந்திய சிவாஜி மன்ற சென்னை மாநாட்டு சிறப்பு மலர்

கலையுலகப் பிரதமர் சிவாஜி மன்றம்
ஜெய்ஹிந்துபுரம், மதுரை-11.

1983-இல் நடிக வேந்தனின் நீதிபதி, சந்திப்பு, மிருதங்கச் சக்கரவர்த்தி, வெள்ளை ரோஜா காவியங்கள் வசூலில் படைத்த சாதனை விவரங்கள்.(மலரில் உள்ளபடி)

http://1.bp.blogspot.com/-WO0P1L-pitE/UG_qUVpulrI/AAAAAAAA7Xk/PlRs2su6L98/s1600/movieposter.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-18_zps7f22366b.jpg

http://padamhosting.com/out.php/i71761_vlcsnap476057.png

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-18_zps12c037c3.jpg

http://i.ytimg.com/vi/1DUiHHNsTo8/0.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-9_zps63f0a2c2.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/VR100.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4-6_zpsf0f08591.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
30th January 2013, 04:45 PM
டியர் ராகவேந்திரன் சார்,

இத்திரியின் கண்களான தங்களின் 'கண்கள்' பற்றிய பதிவு மிக அபூர்வமானது ஆகும். தங்கள் உழைப்பின் பெருமையை சொல்ல வார்த்தைகள் வரவில்லை. மிக அபூர்வ விஷயங்களை மனம், உடல் தளராமல் தாங்கள் எங்களுக்களிப்பது நிஜமாகவே பாராட்டுக்குரியது. நன்றி!

JamesFague
30th January 2013, 05:06 PM
Mr Vasudevan Sir,

Sadhanaigalukku Sonthakkarar Nam NT Only.

vasudevan31355
30th January 2013, 08:06 PM
'ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்' வைர வரிகள் (ஞான ஒளி) என் (!) காவியத்தில் அல்லவா! 'உயர்ந்த மனிதன்' அல்லவே!

RAGHAVENDRA
30th January 2013, 08:07 PM
அன்புச் சகோதரி வனஜா,
தாங்கள் சொல்ல வந்தது ஒரு பாடல் இணைத்தது வேறு பாடலா அல்லது இப் பாடலுக்கும் பொருந்தக் கூடிய வரிகள் என்ற அடிப்படையில் தந்துள்ளீர்களா என்பது ஒரு பக்கம் இருந்தாலும் தங்கள் விருப்பம் நம் அனைவரின் விருப்பமும் கூட என்பதில் மாற்றுக் கருத்தில்லை. உள்ளங்கையில் அந்த ஊன்றுகோலை செங்குத்தாக வைத்துக் கொண்டு பாடிக் கொண்டு ஒயிலாக நடந்து கொண்டு கண்களில் அந்த எண்ண ஓட்டத்தைப் பிரதிபலித்துக் கொண்டு ... எழுதுவதற்கே மூச்சு வாங்குகிறதே... இத்தனையையும் செய்து காட்டிய மேதையை என்னென்பது ... நிச்சயம் காலத்தால் நெஞ்சை விட்டு நீங்காத பாடல்..

நன்றி

RAGHAVENDRA
30th January 2013, 08:09 PM
இன்றைய சூழ்நிலையில் நம் நெஞ்சில் இக்காட்சி நிழலாடுவதைத் தவிர்க்க முடியுமா?


http://youtu.be/ul9Xvjt83eI

RAGHAVENDRA
30th January 2013, 08:12 PM
டியர் வாசுதேவன் சார்,
வெள்ளை ரோஜா வெற்றி விவரம் சூப்பர்.. அதுவும் 100 வது நாள் விளம்பரம் அட்டகாசம். பாராட்டுக்களும் நன்றியும்

vasudevan31355
30th January 2013, 08:30 PM
'என் விருப்பம்' (1)

படம்:உயர்ந்த மனிதன்
பாடல்: வெள்ளிக்கிண்ணம்தான்... தங்கக் கைகளில்...

சகோதரி வனஜா அவர்கள் தேர்ந்தெடுத்த 'உயர்ந்த மனிதன்' படத்தில் வரும் 'இந்த' காவியப் பாடல்தான் நடிகர் திலகம் பாடல்களில் என்னுடைய முதல் விருப்பமான பாடல். ஆம். காலம் அழிக்க முடியாத காவியப் பாடல்.

வெள்ளிக்கிண்ணம் தங்கக் கைகளில் ஏந்தி முத்துப் புன்னகையை அந்தக் கண்களில் தாங்கி வரும் வைரச்சிலை நாயகி பக்கத்தில் இருக்க எம் தங்க நாயகர் நளினமாக காதல் சரசம் செய்யும் பால்சுவைப் பாடல். இந்தப் பாடல்தான் என் முதல் விருப்பமான பாடல். TMS வரிகளை முடிக்க வரிகள் முடியுமுன்னரே ஆரம்பிக்கும் சுசீலாவின் சுந்தர ஹம்மிங்கிற்கு ஈடும் இல்லை இணையும் இல்லை. எம் தலைவர் நடந்து காட்டும் நடையழகும், பாடலின் முடிவில் நாயகியின் இடது கையை அழகாக வாங்கி அழைத்துச் செல்லும் பாங்கழகும் பார் புகழ்வதே!


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=F_6iBSY8yuw

vasudevan31355
30th January 2013, 09:59 PM
அய்யய்யோ! :oops::oops:[நான் ஞான ஒளி பாடலைத் தெரிவு செய்வதா அல்லது உயர்ந்த மனிதன் பாடலைத் தெரிவு செய்வதா என்று திண்டாடினேன், அதனாலேற்பட்ட குழப்பம் தான். சுட்டிகாட்டியமைக்கு நன்றி திரு வாசு அவர்களே

azhagaana, arivaarntha, rasikka vaitha thindaattam. adikkadi thindaadungal thangaiye!

vasudevan31355
30th January 2013, 10:09 PM
அரசியல் சாராமல் இதுவரை இருந்து வந்த இந்த கமல் என்ற நல்ல கலைஞனை ஒரே நாளில் அரசியல் இப்படி வருந்தச் செய்து விட்டதே! இதுதான் அரசியல். இதற்குப் பெயர் தான் அரசியல். அவரின் அன்பு ரசிகர்கள் ஆசியினாலும், தன்னுடைய குலையாத அசாத்திய தன்னம்பிக்கையாலும் கமல் நிச்சயம் மீண்டு வருவார். விஸ்வரூபம் விஸ்வரூப வெற்றிபெற வாழ்த்தும்

வாசுதேவன்.

vasudevan31355
30th January 2013, 10:13 PM
அமர தீபமாய் எங்கள் நெஞ்சில் ஒளி வீசும் எங்கள் குல தெய்வம் நடிகர் திலகம். (ராஜா ராணி)

http://sim.in.com/5088aa5c0824d88171ee25222525357d_ls_lt.jpghttp://img.youtube.com/vi/zz48wuiYr1M/0.jpg

RAGHAVENDRA
30th January 2013, 10:45 PM
டியர் வாசுதேவன் சார்,
வெள்ளிக்கிண்ணத்தில் ஏந்தி தங்கள் விருப்பத்தை விருந்தாய் பரிமாறி விட்டீர்கள். மிக்க நன்றி. என்ன ஸ்டைல் ... சூப்பர் பாட்டு ... மெல்லிசை மன்னருக்கும் வாலி, டி.எம்.எஸ்., சுசீலா, வாணிஸ்ரீ மற்றும் திரைக்குப் பின் கலைஞர்கள் என்று அனைவருக்கும் பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
30th January 2013, 10:48 PM
நடிகர் திலகம் என்ற தீர்க்க தரிசியின் ஆசியுடன் இச்சிக்கலில் இருந்து கமல் அவர்கள் வெளிவருவார் என்பது திண்ணம். எந்த அரசியல் நடிகர் திலகத்திற்கு இடையூறாக இருந்ததோ அதே நிலைமையே இப்போது கமலுக்கும். இந்த கஷ்டங்களிலிருந்து அவர் மீண்டு வந்து விஸ்வரூபம் படம் வெற்றி பெற நமது வாழ்த்துக்கள்.

RAGHAVENDRA
30th January 2013, 11:34 PM
RARE IMAGES அபூர்வ நிழற்படங்கள்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/rare%20snaps/rare03.jpg

என்ன ஒரு GRACE ....

RAGHAVENDRA
31st January 2013, 07:19 AM
டியர் முரளி சார்,
இன்று பிறந்த நாள் காணும் தங்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். மேன்மேலும் சிறப்புக்களும் எல்லா நலன்களும் பெற்று வளமாக வாழ உளமார வாழ்த்துகிறேன். தங்களுக்கு பிறந்த நாள் பரிசாக நடிகர் திலகத்தின் மற்றொரு அபூர்வமான படம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/rare%20images/rare01_zpsfedaa1e6.jpg

RAGHAVENDRA
31st January 2013, 09:20 AM
SIVAJI GANESAN FILMOGRAPHY SERIES

8. PEMBUDU KODUKU పెంబుడు కొడుకు

http://www.kinema2cinema.com/data2012/reviews/thumbs/pempudu.jpg

RELEASED ON : 13.11.1953

CAST: SIVAJI GANESAN (brief appearance), S.V. RANGA RAO, SAVITHIRI, PUSHPAVALLI, L.V. PRASAD AND OTHERS
MUSIC: S. RAJESWARA RAO
DIRECTION: L.V. PRASAD
PRODUCED BY: A.V. SUBBA RAO

SPECIAL FEATURES
ORIGINAL VERSION OF PETRA MANAM, NADIGAR THILAGAM'S TAMIL FILM
BOTH THE WIVES OF GEMINI GANESAN - SAVITHIRI AND PUSHPAVALLI - CO-STARRED IN THIS FILM


Pempudu Koduku was the first film to be made under Prasad Art pictures. Though the film was not a huge commercial success, it had the elements to attract all class of audience. S V Ranga Rao and Savitri's performance in this film was appreciated by everyone. The major highlight of this film was that both the wives of Gemini Ganeshan (Savitri and PushpaValli) were co stars in this film. Check out the review written in Kinema magazine.

From : http://www.kinema2cinema.com/kinema-movie-reviews/pempudu-koduku-movie-review-29.html

JamesFague
31st January 2013, 09:57 AM
Mr Vasudevan Sir,

Thanks for uploading the super song.

kaveri kannan
31st January 2013, 11:47 AM
முரளி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

வனஜா, வாசுதேவன் அவர்களின் விருப்பத்தேர்வுகள் அசத்தல்...

கருப்புவெள்ளையில் காந்தர்வரின் அரியக் கோலங்கள்.
கண்கள், பெம்புடு கொடுகு - தகவல்கள்...
அள்ளித்தரும் சுரங்கம்..-இராகவேந்திரருக்கு நனறி..

------------------------------------------------------------------------------------------

kaveri kannan
31st January 2013, 12:08 PM
என் விருப்பம்:

அழகுக் கரங்கள்..


நடிகர்திலகத்தின் முக வசீகரம் அதீதமானது. அவர் பக்கத்தில் யார் இருந்தாலும் பார்க்கவிடாமல் ஈர்க்கும் அதிசயக் காந்தம் அது..

தாடிவைக்காமல் கொஞ்சம் நீலம் காட்டும் கன்னங்களும்..
நாட்கணக்கில் ஒரே நீலவண்ண உடையும் பக்கவாத்தியங்களாக
நம்மவர் முகமும் விழிகளும் வாசிக்கும் மன ஆவர்த்தனம்....

கப்பல் கவிழ்ந்தவனின் சோகம் பாருங்கள்..
இரவிக்குமார் என்ற சூரியனே இருண்ட கொடுமையைப் பாருங்கள்...
கலங்கிய விழிநீர் கரையைக் கடக்காமல் வைரச்சீலையாய் போர்த்திய விழிமின்னல் வீச்சைக் காணுங்கள்..
ஆனந்தபவனத்தை அவுட் ஹவுசுக்குள் அடக்கிய விதியைக் கேளுங்கள்...

பாவனை இனிப்பைத் தின்னும் மேல்சிரிப்பைக் கிழிக்கும் சோகத்தைப் பாருங்கள்..

அறிவுக்கு நெற்றியையும்
பாசத்துக்கு நெஞ்சை நோக்கியும்
பார்த்தனுக்கு செங்குத்தாய்
கடலுக்கு விரிந்த சிறகாய்
கலங்காததற்கு அலரும் தாமரையாய்
விலகுவதற்கு குளத்தோர அலையாய்

தலைவனின் அழகுக் கரங்கள் காட்டும் அபிநயங்கள்..
பத்மா சுப்ரமணியமே பொறாமைப்பட்ட தவப்புதல்வரின் கரநடங்கள்..

மொழிபுரியாதவரும் பொருள்புரியச்செய்யும் நடிகர்திலகம் உடல்மொழி..

இந்த அழகுக்கரங்களுக்கு தனிமரியாதை அளிக்க
அந்தக் காந்த முகத்திலிருந்து சற்றே மனம் விலக்கி முயலுங்கள்...


http://www.youtube.com/watch?v=H7xlhIaJFSQ

KCSHEKAR
31st January 2013, 12:15 PM
Nadigarthilagam Portrait Opening Function at INTUC Office Tirunelveli on 28th January 2013 (Press Coverages)

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Dinakaran29Jan2013_zps674ea124.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/DinamaniDinathanthi29Jan2013_zps322e4ed1.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Dinamalar30Jan2013_zps54ac4e57.jpg

KCSHEKAR
31st January 2013, 12:40 PM
Ananda Vikatan - Pokkizham - 06-02-2013

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/AnandhaVikatan021_zpsb83e4223.jpg

selva7
31st January 2013, 04:21 PM
அரசியல் சாராமல் இதுவரை இருந்து வந்த இந்த கமல் என்ற நல்ல கலைஞனை ஒரே நாளில் அரசியல் இப்படி வருந்தச் செய்து விட்டதே! இதுதான் அரசியல். இதற்குப் பெயர் தான் அரசியல். அவரின் அன்பு ரசிகர்கள் ஆசியினாலும், தன்னுடைய குலையாத அசாத்திய தன்னம்பிக்கையாலும் கமல் நிச்சயம் மீண்டு வருவார். விஸ்வரூபம் விஸ்வரூப வெற்றிபெற வாழ்த்தும்

வாசுதேவன்.

வாசுதேவன் & ராகவேந்தர் அவர்களுக்கு நன்றி.
நடிகர் திலகத்தின் ஆசியுடன், விஸ்வரூபம் தடைகளைக் கடந்து வெல்லும்.

RAGHAVENDRA
31st January 2013, 04:26 PM
தலைவனின் அழகுக் கரங்கள் காட்டும் அபிநயங்கள்..
பத்மா சுப்ரமணியமே பொறாமைப்பட்ட தவப்புதல்வரின் கரநடங்கள்..

டியர் காவிரிக் கண்ணன்
தாங்கள் எவ்வளவு தேர்ந்த கவிஞர் அறிஞர் என்பதற்கும் எந்த அளவிற்கு கலையையும் கலைஞர்களையும் நேசப்பவர் என்பதற்கும் அதை மிக நன்கு ரசிக்கத் தெரிந்த ரசிகர் என்பதற்கும் மேற்கூறிய வரிகளே சாட்சி
உளமார்ந்த பாராட்டுக்கள்

RAGHAVENDRA
31st January 2013, 04:31 PM
கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் - அது
கையளவே ஆனாலும் தயங்க மாட்டேன்

பிறவிக் கலைஞர் நடிகர் திலகம் என்பதற்கு மிகச் சிறந்த சான்றான படம் அவன் தான் மனிதன். 175 என்கிற எண்ணுக்கு மிகப் பெரிய அளவில் பெருமை சேர்த்த படம், நடிப்பு. அவன் தான் மனிதன் படம் முடிந்த பிறகு ஒரு சில நாட்களுக்கு அந்த hangover ஒவ்வொருவருக்கும் நிச்சயம் இருக்கும். இதுவும் முதல் நாள் முதல் காட்சியில் பார்த்த படம். சாந்தியில் பால்கனி வகுப்பிற்கு போட்டி அதிகம் இருக்கும். காரணம் ரசிகர்கள் கூடை கூடையாக பூக்களைப் பொழிவதற்கு சௌகரியமாக இருக்கும் என்பதால். புரொஜக்டரின் ஒளியில் அந்த பூக்கள் ஜொலிக்கும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

நன்றி

vasudevan31355
31st January 2013, 08:39 PM
கண்ணன் சார்,

அற்புத நடையிலே 'ஆட்டுவித்தால் யாரொருவர்' பாடலைப் பற்றி எழுதி மனதை இனம் புரியா உணர்வால் ஆட்டுவித்து விட்டீர்கள். அற்புதம்.

vasudevan31355
31st January 2013, 08:41 PM
டியர் சந்திரசேகரன் சார்,
Ananda Vikatan - Pokkizham - 06-02-2013 புகைப்படம் அருமை. நன்றி!

vasudevan31355
31st January 2013, 08:46 PM
Nadigar thilagam with Ilayaraja.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/406246_430488193661247_1079745643_n_zps7e6c7de7-1_zpscfc89baf.jpg

vasudevan31355
1st February 2013, 07:06 AM
Exclusive

சமீபத்தில் வெளி வந்த 'Life of Pie' ஆங்கிலப் படத்தில் நமது நடிகர் திலகத்தின் 'வசந்த மளிகை' போஸ்டர் இடம் பெற்றுள்ள காட்சி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/a1944ac0-d6f5-417f-8cbf-993ad58f7d3d.jpg

RAGHAVENDRA
1st February 2013, 07:16 AM
SIVAJI GANESAN FILMOGRAPHY SERIES

9. MANIDANUM MIRUGAMUM மனிதனும் மிருகமும்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/MMNewspaperStill-1.jpg

Released first on :04.12.1953

அரிதான விளம்பர நிழற்படங்கள் உவயம் ஆவணத் திலகம் பம்மலார்

சுதேசமித்ரன் : 28.11.1953
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/MM1-1.jpg

சுதேசமித்ரன் : 4.12.1953
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/MM2-1.jpg

சுதேசமித்ரன் : 11.12.1953
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/MM3-1.jpg

சுதேசமித்ரன் : 18.12.1953
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/MM4-1.jpg

சுதேசமித்ரன் : 25.12.1953
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/MM5-1.jpg

RAGHAVENDRA
1st February 2013, 07:18 AM
டியர் வாசு சார்
life of pie ஆங்கிலப் படத்தில் வசந்த மாளிகை போஸ்டர் இடம் பெற்ற காட்சியின் நிழற்படத்தை இங்களித்து அசத்தி விட்டீர்கள்.
பாராட்டுக்களும் நன்றியும்
அன்புடன்

RAGHAVENDRA
1st February 2013, 07:26 AM
மறைந்த கர்நாடக இசை மேதை எம்.எல்.வசந்த குமாரி அவர்கள் இப்படத்திற்காக பாடி அந்தக் காலத்தில் சூப்பர் ஹிட்டான பாடல், இமய மலைச் சாரலிலே ... கேட்கக் கேட்க தெவிட்டாச இசையமுது. அவருடைய படங்களை இணைத்து இப்பாடலை வழங்கியுள்ளார்கள். அவருக்கு நன்றி. இப்படத்தினுடைய காணொளி இதுவரை கிடைக்கப் பெறவில்லை.


http://youtu.be/WidYUMWM0bc

RAGHAVENDRA
1st February 2013, 09:02 AM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/ntsbc/MANANDANIMALSBC_zps66c3a01f.jpg

மனிதனும் மிருகமும்
நடிக நடிகையர்
சிவாஜி கணேசன் – பாரிஸ்டர் மாதவன்
கே. சாரங்க பாணி – பேராசிரியர் சேகர்
டி.ஆர். ராமச்சந்திரன் – பேபி
எம்.என்.கண்ணப்பா – சுந்தரம்
நந்தாராம் – தேவேந்திர பூபதி
டி.கே. சம்பங்கி – பாரிஸ்டர் ராமானுஜம்
டி.என். சிவதாணு – டைகர்
டி.எஸ். மாணிக்கம் – நடேசன்
ஈ.ஆர். சகாதேவன் – சாமி
மாதுரி தேவி – வாணி
எம்.என்.ராஜம் – ராணி
கே.எஸ். சந்திரா – மீனாட்சி

நடனம் – குமாரி கமலா

கதை வசனம் பாடல்கள் – எஸ்.டி.சுந்தரம்
சங்கீதம் – எம். கோவிந்தராஜுலு நாயுடு
பின்னணி பாடியோர் – எம்.எல். வசந்தகுமாரி, சி.எஸ்.ஜெயராமன், ஜிக்கி, ராதா ஜெயலட்சுமி, எம்.எம்.மாரியப்பா
ஸ்டூடியோ – ரேவதி
டைரக்ஷன் – கே.வேம்பு எஸ்.டி.சுந்தரம்
பாடல்களின் பட்டியல்
1. ஜெகம் யாவும் சுக வாழ்வின்
2. தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
3. மோட்டாருக்கு பேட்டரி போல்
4. இன்பக் குயில் குரலினிமை
5. இமய மலைச் சாரலிலே – எம்.எல்.வசந்த குமாரி
6. காலமென்னும் சிற்பி செய்யும் - எம்.எல். வசந்த குமாரி
7. உன்னை நினைக்க நினைக்க

பாட்டுப் புத்தகம் பைண்ட் செய்யப் பட்டுள்ள படியால் ஓரத்தில் சரியாக ஸ்கேன் செய்ய முடியவில்லை. மன்னிக்கவும்.

vasudevan31355
1st February 2013, 12:55 PM
நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)

நடிகர் திலகத்தின் நாயகிகள் (11) ஜமுனா

ஜமுனாவின் அழகிய தோற்றம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/jam0.jpg

நடிகர் திலகத்தின் முக்கியமான ஜோடிகளில் ஒருவர். தெனாலி ராமன், பொம்மைக் கல்யாணம், 'பொம்மல பெள்ளி' (தெலுங்கு) தங்கமலை ரகசியம், நிச்சயத் தாம்பூலம், மருத நாட்டு வீரன் ஆகிய படங்களில் நடிகர் திலகத்திற்கு இவர் இணை. அன்றைய நாட்களில் ஸ்லிம்மாக இருந்த ஒரு சில நடிகைகளில் இவரும் ஒருவர். இவரது முக ஜாடை வட இந்தியக் 'கனவுக் கன்னி' ஹேமமாலினி அவர்களின் முக ஜாடையை சற்றே ஒத்திருப்பது போல எனக்கு தோன்றும். அழகான அலட்டல் இல்லாத நடிகை. 'அமுதைப் பொழியும் நிலவாக' அமர்க்களம் புரிந்தவர். "பாவாடை தாவணியில் பார்த்த உருவமா?" பாடலை நாம் கேட்கும் போதெல்லாம் நடிகர் திலகத்திற்கு பிறகு நம் மனதில் இவர் நிழலாடுவது தவிர்க்க முடியாத ஒன்று. 'பொம்மைக் கல்யாணம்' திரைப்படத்தில் வரதட்சணைக் கொடுமையால் அவதியுறும் நாயகியாக அற்புதமாக நடித்திருப்பார். 'நிச்சயத் தாம்பூல'த்திலும் ('நெற்றியிலே ஒரு குங்குமப் பொட்டு' பாடலை மறக்க முடியுமா?!) அருமையான ரோல். கணவன் சந்தேகத்தால் அவதியுறும் மனைவி கேரக்டர். இதிலும் முத்திரை பதித்திருப்பார். 'தெனாலி ராமன்' திரைப்படத்தில் அமைதியே உருவாக ராமனின் மனைவியாக நடித்திருப்பார். தெலுங்கில் கொடி கட்டிப் பறந்த முன்னணி நடிகை. கர்நாடகத்தில் பிறந்த இவர் ஆந்திராவில் செட்டிலானவர். தெலுங்கில் சாவித்திரிக்கு ஈடான புகழ் பெற்றவர். தனது 14-ஆவது வயதிலேயே 'மாபூமி' என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமானவர். 'மிலன்' (1967) என்ற இந்திப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது இவருக்குக் கிடைத்தது. (சாவித்திரி அவர்கள் நடிகர் திலகத்தை வைத்து தயாரித்து இயக்கிய 'பிராப்தம்' படம் 'மிலன்' இந்தியைத் தழுவி எடுக்கப்பட்டது. இதில் சந்திரகலா ஏற்று நடித்த பாத்திரத்தை இந்தியில் ஜமுனா செய்திருந்தார்).1980-இல் இந்திரா காந்தி அவர்களின் தயவால் எம்பியாக காங்கிரசிலும், பின் பிஜேபி யிலும் இருந்தவர். சமூக நலப் பணிகளில் ஆர்வம் உடையவர்.

'பொம்மைக் கல்யாணம்' திரைப்படத்தில் ஜமுனா

http://padamhosting.com/out.php/i140140_vlcsnap2012012408h23m56s101.png

'தங்கமலை ரகசியம்' திரைப்படத்தில் நடிகர் திலகத்துடன்.

http://padamhosting.com/out.php/i88823_vlcsnap2011062110h31m29s130.png

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/jam1.jpg

நடிகர் திலகத்தின் படங்களில் தொடர்ந்து நடித்ததால் சிவாஜி தரப்பு நடிகை என்ற மாபெரும் பெருமை பெற்ற நடிகர். இதை அவரே ஒரு பேட்டியிலும் சொல்லியிருக்கிறார். மற்றவர்களுடன் இவர் நடித்த படங்களில் 'குழந்தையும் தெய்வமும்' மற்றும் 'அன்புச் சகோதரர்கள்' படங்கள் குறிப்பிடத்தக்கவை. ஏவிஎம்மின் 'தூங்காதே தம்பி தூங்காதே' படத்தில் கமலின் தாயாராக நடித்துள்ளார்.

'தங்கமலை ரகசியம்' திரைப்படத்தின் தலைவர், ஜமுனாவுக்கான அற்புதமான டூயட். ("இகலோகமே... இனிதாகுமே...")


http://www.youtube.com/watch?v=9kzJUIcahGE&feature=player_detailpage

'நிச்சயத் தாம்பூலம்' படத்தில் மறக்க முடியாத ("பாவாடை தாவணியில் பார்த்த உருவமா!")


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=wi-G7fvgZ7g

'பொம்மைக் கல்யாணம்' திரைப்படத்தில் ("இன்பமே பொங்குமே!") அபூர்வமான அருமையான டூயட். ('தங்கச் சுரங்க'த்தின் தலைவரின் ஸ்டைலை 'பொம்மைக் கல்யாண'த்திலேயே காணலாம். தலைவர் என்ன அழகு! என்ன ஒரு dress sense!)


http://www.youtube.com/watch?v=ASDtDM6DZa4&feature=player_detailpage

'மருத நாட்டு வீரன்' படத்தில் மறக்க முடியாத ("பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா!!") அட்டகாசமான டூயட்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=T5iEm9kt7Gs

kaveri kannan
1st February 2013, 01:26 PM
வாசு அவர்களே...

புதுவையில் தொடங்கும் லைஃப் ஆஃப் பை கதை வாசித்திருக்கிறேன்.
நீங்கள் அளித்த நிழற்படம் திரைப்படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது...


என் பங்குக்கு பிபிசி ஆவணப்படத்தில் நம் தலைவரின் கம்பீரமான இராஜராஜச் சோழரைக் காணுங்கள்..



http://www.youtube.com/watch?v=_QgFLDjKBAk

kaveri kannan
1st February 2013, 01:30 PM
இராகவேந்திரர் அவர்களே

பம்மலாரும் நீங்களும் வழங்கும் அருங்கொடை இப்புதையல்கள்...

ஓரம் சரியாக ஸ்கேன் செய்ய இயலாமைக்கெல்லாம் மன்னிக்க வேண்டுவது தகுமா?

அரும்பணியைச் செவ்வனே தொடர்ந்து முடிக்க என் வாழ்த்தும் ஊக்கமும்..

மனிதனும் மிருகமும் தகவல்கள் சொல்லொணா நல்லுணர்வு தருகின்றன..
நம்மவரின் ஆரம்பகாலம் தற்போது கண்முன் விரிவதுபோல்...

kaveri kannan
1st February 2013, 01:36 PM
வனஜா அவர்களே,

கருங்குயில் பூங்குன்றத்துக் கொலை ( மரகதம் படத்தின் மூலநாவல்) படப்பாடல் மூலம் என் காலைப்பொழுதை இனிமையாக்கினீர்கள்.. நன்றி..

ஒரு சூரியன்..


பல மலர்கள் அவனால் மலர்ந்தாலும்

தாமரைக்கும் சூரியகாந்திக்கும் காவிய அந்தஸ்து அவ்வுறவால்..

பத்மினி தாமரைதான்..

சூரியகாந்தி யாராம்?

வாணிஶ்ரீ?தேவிகா? ஜமுனா? சரோஜாதேவி?

parthasarathy
1st February 2013, 05:46 PM
நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள் (தொடர்ச்சி...)

7. "எல்லோரும் கொண்டாடுவோம்" படம்:- பாவ மன்னிப்பு (1961); பாடியவர்கள்:- டி.எம்.சௌந்தரராஜன், நாகூர் ஹனீபா மற்றும் குழுவினர்; பாடல் ஆசிரியர்:- கவியரசு கண்ணதாசன்; இசை:- மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி; இயக்கம்:- ஏ.பீம்சிங்; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன்/சித்தூர் நாகையா மற்றும் குழுவினர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, என்னுடைய பாடல் ஆய்வினைத் தொடர சந்தர்ப்பம் அளித்த இறைவனுக்கு முதற்கண் நன்றி.

இந்தத் தொடர் நடிகர் திலகத்தின் புதிய வித்தியாசமான முன்னோடி முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை மறுபடியும் குறிப்பிடுகிறேன்.

சுற்றிப் பின்னப்பட்ட சதி வலையால், குழந்தையாய் இருக்கும்போது, ஒரு இஸ்லாமியப் பெரியவரிடம் வளர்ந்து வரும் ரஹீம் (நடிகர் திலகம்) வரும் அறிமுகக் காட்சி. ஒரு பாடலோடு நடிகர் திலகம் அறிமுகமாகும் இந்தக் காட்சியை ஒவ்வொரு முறை இந்தப் படத்தைப் பார்க்கும் போதும் தவற விட்டதில்லை. அந்த முதல் காட்சியிலேயே, ஒரு இஸ்லாமிய சகோதரர் எப்படி இருப்பார் என்ற இலக்கணத்தையும், ரசிகனின் கற்பனை மற்றும் எதிர்பார்ப்பினையும் நூறு சதவீதம் பூர்த்தி செய்திருப்பார். ஆக, தோற்றத்தின் மூலம் அந்தக் கதாபாத்திரத்துக்குள் முதலில் முழுமையாக நுழைந்து, பார்க்கும் ஒவ்வொருவரையும் அவருள் நுழைத்துக் கொண்டு விடும் (வழக்கம் போல்) நடிகர் திலகம், கையில் உள்ள மேளத்தை இலாகவமாகவும் தேர்ந்த கலைஞரைப் போலும் சர்வ சாதாரணமாக அதே நேரத்தில், உயிர்ப்புடனும் தட்டிக் கொண்டு துவங்கும் அழகு!

இந்தப் பாடலில் பொதிந்துள்ள அழகு வேறெந்தக் கலைஞருக்கும் கிட்டாதது.

இந்தப் பாடல் மற்றப் பாடல்களைப் போல வாயசைப்பு மற்றும் அதற்கேற்ற பாவனைகள் இல்லாமல், இசைக் கருவியையும் சேர்த்து இயக்கிக் கொண்டே பாட வேண்டிய கட்டாயம் கொண்ட பாடல்.

முதலில் வாயசைப்பு:-

“எல்லோரும் கொண்டாடுவோம்” என்று துவங்கி "அல்லாவின் பெயரைச் சொல்லி" எனும் போது கோரஸோடு பாடும் போது, சாதாரணமாக இருக்கும் அவரது வாயசைப்பு, க்ளோசப்பில், அவரை மட்டும் காண்பிக்கும் போது, தனியாக அவர் மட்டும் "அல்லாவின் பெயரைச்சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி" என்று முடிக்கும் போது மட்டும் இலேசாக வாயசைப்பில் ஒரு அழுத்தம் பெறும். அந்த இடத்தில் அழுத்தம், பாடியவர் கொடுத்ததால், அந்த வரிகளுக்குத் தேவைப் படுவதால். அதுவும் மிகச் சரியாக க்ளோசப்பில் அவரது முகம் வரும் போது இது இன்னும் கூடுதல் கவனம் பெறுகிறது. அதனால், அந்த வரிகளுக்கே ஒரு வசீகரம் வருகிறது. இப்போது முதல் சரணம், "கல்லாகப் படுத்திருந்து களித்தவர் யாருமில்லே... என்று கூறி “கல்லாகப் படுத்திருந்து” என்று அவர் நிறுத்த, "களித்தவர் யாருமில்லே" என்று கூட்டத்தில் ஒருவர் (நகைச்சுவை நடிகர் மற்றும் எழுத்தாளர் ஏ.வீரப்பன் அவர்கள்) சத்தமாக முடிப்பார். இப்படிப் போய் "இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்" என்று முடியும் போது, இந்த முதல் சரணத்தில் மட்டும் ஒரு நார்மலான வாயசைப்பு இருக்கும். இரண்டாவது சரணம். தொகையறாவில் தொடங்கும். "நூறு வகை பறவை வரும்... ஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா ஆ..ஆ..ஆ" என்று முடிக்கும் போது ஒரு தேர்ந்த பாடகனுக்குரிய வாயசைப்பு. "முதலுக்கு தந்தை என்போம் முடிவுக்கு அன்னை என்போம்" எனும்போது அழுத்தம் தரும் வாயசைப்பு. மூன்றாவது சரணம். மறுபடியும் தொகையறாவில் தொடங்கும். "ஆடையின்றிப் பிறந்தோமே...ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ ஒ..ஒ..ஒ.." என்று மறுபடியும் தேர்ந்த பாடகருக்குரிய வாயசைப்பு. "எடுத்தவன் கொடுக்க வைப்போம் கொடுத்தவன் எடுக்க வைப்போம்" என்று முடிக்கும் போது அழுத்தம் கொடுக்கும் வாயசைப்பு.

அடுத்தது, முக பாவம்:-

பாடல் துவங்கும் போது, "எல்லோரும் கொண்டாடுவோம்" என்று கூட்டமாகச் சேர்ந்து வரும் போது தெரியும், ஒரு இலேசான குதூகலம். அப்படியே மேளத்தை இசைத்துக் கொண்டே, பாடிக் கொண்டே, தந்தையாரை பார்த்து பாவத்திலேயே acknowledge செய்யும் அழகு. முதல் சரணத்தில் அந்த வரிகளின் பொதுவான கருத்துகளுக்கேற்ப சாதாரணமான (normal) பாவம். “வந்ததை வரவில் வைப்போம் செய்ததை செலவில் வைப்போம்” எனும் போது கொடுக்கும் அழுத்தம். இரண்டாவது சரணம் – “நூறு வகை பறவை வரும்……… ஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா" என்ற தொகையறாவில் கொடுக்கும் ஒரு விதமான தெய்வீக பாவம். மூன்றாவது சரணம். "ஆடையின்றிப் பிறந்தோமே" என்று துவங்கி, "ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ" எனும் தொகையறாவில் இலேசாக கண் கலங்கி கண்களில் கண்ணீரைத் தேக்கி வைத்துக் கொண்டே பாடும் போது, பார்க்கும், ஏன் பாடல் இயற்றியவனே கண் கலங்கியிருப்பானே! உடனே, “எடுத்தவன் கொடுக்க வைப்போம் கொடுத்தவன் எடுக்க வைப்போம்” எனும் போது சுதாரித்துக் கொண்டு, அந்த வரிகளுக்குத் தேவைப்படும் அந்த அழுத்தம் கலந்த சூளுரையைக் காண்பிக்கும் விதம்!

இப்போது, மேளம் தட்டும் அழகு.

பாடல் துவங்கி மேளம் அடிக்கத் துவங்கியவுடன், அவரது கைகள் மேளத்தில் நர்த்தனம் ஆடும் அழகு; லயம். அப்படியே போய், அந்தத் தாளம் முடிந்து, நாகைய்யாவைப் பார்த்துக் கொண்டே, அவரை acknowledge செய்து கொண்டே, தாளம் அழுத்தமாக முடியும் போது, அதே அழுத்தத்தைக் காட்டி முடித்து, "எல்லோரும் கொண்டாடுவோம்" என்று துவங்கும் அழகு. முதல் சரணம் துவங்குவதற்கு முன் வரும் இசை மற்றும் தாள கதிக்கேற்ப இவர் மேளத்தைத் தட்டி கொண்டே இருப்பார். இசையும் தாளமும் முடிந்து முதல் சரணம் துவங்கும் போது, மேளத்திலிருந்து கையை எடுத்து, "கல்லாகப் படுத்திருந்து" என்று துவங்கும் போது, சரியாக மறுபடியும் தாளத்துடன் பாடி/தட்டிக் கொண்டே துவங்குவார். பாடிக் கொண்டே, "இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்" என்று ஒவ்வொரு வார்த்தையின் அழுத்தமான தாளத்துடன் ஒன்றி மேளத்தை அழுத்தமாக அதே தாள கதியில் அடித்து/ பாடிக் கொண்டே முடித்து, மறுபடியும் அனு பல்லவி வேறொரு தாளத்தில் வலுவாகத் துவங்கும் போது, உடனே, அந்த தாள அழுத்தத்தை மேளத்தில் தட்டித் துவங்குவார். இந்த கையசைப்பை, ஒவ்வொரு முறை சரணம் முடிந்து அனு பல்லவி துவங்கும் போதும், சரியாகச் செய்திருப்பார். பாடல் நிறைவடையும் போது, கொஞ்சம் கொஞ்சமாக அந்தத் தாளம் அந்த வலுவைக் குறைத்துக் குறைத்து முடியும் அழகை, தன்னுடைய விரல்களில் மிகச் சரியாகக் காட்டிக் கொண்டே முடிப்பார்.

ஆக, ஒரு பாடலுக்கு ஒரு மிகச் சிறந்த நடிகன் காட்டும், இரண்டு பாவங்களையும் - அதாவது, வாயசைப்பு, பாடும் வரிகளுக்கேற்ப பாவத்தை முகத்தில் காண்பிப்பது. இவற்றைக்காட்டியாகி விட்டது. எப்பேர்ப்பட்ட நடிகனும் இரண்டு விஷயங்களைக் கஷ்டப்பட்டு செய்து விடுவான். ஆனால், மூன்றாவதாக, ஒரு கருவியை இசைத்துக் கொண்டே வாயசைப்பையும், வார்த்தைகளுக்கேற்ற பாவங்களையும் சுருதி கொஞ்சமும் பிசகாமல் செய்வது பிரம்ம பிரயத்தனம். இது கூட உலகில் விரல் விட்டு எண்ணக்கூடிய மிக மிகச் சிலரால் முடியும்.

ஆனால், மேற்கூறியவை மட்டுமல்லாமல் பாடல் நெடுக, நடிகர் திலகம் அவரது பிரத்தியேக ஸ்டைலில் தலையை ஒருவாறு மிதமாக ஆட்டிக் கொண்டே பாடுவதும், அவ்வப்போது தந்தையாரையையும் மற்றவரையும் acknowledge செய்யும் விதமும்! எப்படி இந்த மனிதர் ஒரே நேரத்தில், இத்தனை விஷயங்களை, ஒன்றோடொன்று அழகாக இணைத்து, காட்சியையும், பாடலையும், வேறொரு உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றார் என்பது இன்று வரை புரியாத புதிராகத் தான் இருக்கிறது.

இந்தப் பாடல் மற்றும் நடிகர் திலகத்தின் பல பாடல்கள் மற்றும் படங்கள்/காட்சிகளைப் பார்க்கும் போதெல்லாம் பல வருடங்களுக்கு முன்னர் திரு முக்தா சீனிவாசன் அவர்கள் கூறியது நினைவுக்கு வருகிறது. "சதை படர்ந்த அந்த முகத்தில் ஒவ்வொரு அணுவும் நடிக்கும், முகம் நடிக்கும்; முகத்தில் உள்ள முடியும் நடிக்கும்".

ஒரு படத்தில், பாடலில், எத்தனையோ நடிகர்கள் இசைக்கருவிகளை வாசித்துக் கொண்டே நடித்திருக்கிறார்கள். நான் மேற்கூறிய முதல் மூன்று பாவங்கள் - வாயசைப்பு, வார்த்தைகளின் அர்த்தங்களுக்கேற்ற பாவம், மற்றும் இசைக்கருவியையும் கூடவே பிசிறில்லாமல் வாசிக்க வேண்டிய கட்டாயம். இவைகளை கோர்வையாக, மிகச் சரியாக செய்தது மட்டுமல்லாமல், கூடவே ஒரு வித ஸ்டைலையும், சுற்றி இருப்பவர்களை கவனித்தல்/மற்றும் acknowledge செய்தல், இவைகளையும் கோர்வையாகச் செய்து, இந்தப் பாடலைக் காட்சிப்படுத்திய வகையில், இந்தப்பாடல் முன்னோடி மட்டுமல்ல. இனி வேறொருவரால் வெற்றிகரமாக செய்வதைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்றாகிறது.

இந்தப் பாடலின் வெற்றிக்கு அரும்பாடுபட்ட அத்தனை கலைஞர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு கோரஸ் பாடலில், கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் சரியாகப் பங்களித்து பாடலை மேலும் ரசிக்கும்படி செய்திருப்பார்கள். இந்தப் பாடலில் தான் படத்தில் வரும் பிரதான பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுவார்கள் (ஜெமினி கணேசன், சாவித்திரி மற்றும் தேவிகா).

தொடரும்,

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

RAGHAVENDRA
1st February 2013, 06:22 PM
எல்லோரும் கொண்டாடும் இமயத்தின் இணையற்ற பாடலை எல்லோரும் கொண்டாடும் படி எழுதிய சாரதி சார் .. பாராட்டுக்கள். சரியான நேரத்தில் சரியான பாடல். எல்லாக் கலைஞர்களுக்கும் முன் உதாரணமாய் விளங்கும் நடிகர் திலகத்தின் நடிப்பு இன்று வரை எல்லோரும் கொண்டாடும் படி இருப்பதே சான்று. வாழ்க்கையின் எந்த சூழ்நிலைக்கும் அவர் படத்தில் விடை உள்ளது. உதாரணத்திற்கு தேவர் மகன். இன்று எப்படி பொருந்துகிறது.

பாவ மன்னிப்பு படத்தை மனதில் நினைத்து திரைக்கதை அமைப்பதே மத நல்லிணக்கத்திற்கு சிறந்த வழிகாட்டியாக அமையும். இப்பாடல் இன்றைய சூழலுக்கு எவ்வளவு பொருத்தமாய் உள்ளது.

பாராட்டுக்கள் சாரதி சார்.. மீண்டும் ...

J.Radhakrishnan
1st February 2013, 07:14 PM
டியர் சாரதி சார்

இன்றைய சூழலுக்கு மிக பொருத்தமான பாடல், மிக நுணுக்கமாக ஆய்வு செய்துள்ளீர்கள், நன்றி!

RAGHAVENDRA
1st February 2013, 07:26 PM
என் விருப்பம் My Choice


http://youtu.be/jJtEEZ_g6Tk

மரகதம் அல்லது கருங்குயில் குன்றத்துக் கொலை ... எஸ்.எம்.சுப்ய்யா நாயுடு அவர்களின் பிரபலமான படங்களில் ஒன்று. பாடல்கள் ஒவ்வொன்றும் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவை. சகோதரி வனஜா அவர்கள் மிகச் சிறந்த பாடலைப் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். நடிகர் திலகம் பத்மினி இணையாய் நடித்து இலக்கிய மணம் வீசும் காதல் காட்சி நிறைந்த படங்களில் ஒன்று. கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு பாடல் ஒரு சிறப்பு என்றால் இப்போது நாம் காண உள்ள இப்பாடல் மேலும் சிறப்பு வாய்ந்தது. நெடுந்தகட்டில் இப்பாடல் இடம் பெறவில்லை என எண்ணுகிறேன். இப்பாடல் கிராமபோன் இசைத் தட்டில் இருபக்கமும் ஒலிக்கும். படத்தில் மேலும் அதிக நேரம் இடம் பெறும். காரணம், இடையிடையே நடிகர் திலகமும் பத்மினியும் பேசும் காதல் வசனங்களும் சேரும். ஆனால் இப்போது இணையத்தில் தரவேற்றப் பட்டுள்ள காணொளியில் வசனங்கள் இடம் பெறவில்லை. என்றாலும் அதற்கு வேலையின்றி இருவரும் விழிகளாலேயே பேசும் அழகைக் காணுங்களேன்.

எனதுள்ளம் இன்றல்லவோ தனியே
இன்புற்று அலைகின்றதே...

கனவில் நடப்பதைப் போல் காண்பதெல்லாம்
கணத்தில் மறையுதடி...

பாடலாசிரியர் கவியோகி சுத்தானந்த பாரதி என எண்ணுகிறேன்.

இப்பாடலில் டி.எம்.எஸ். அவர்களும் ராதா ஜெயலட்சுமி அவர்களும் தங்கள் குரல்களில் உண்மையிலேயே தேனைத் தடவியது போல் அவ்வளவு இனிமையினைத் தந்துள்ளனர்.

பார்க்கப் பார்க்க தெவிட்டாத தெள்ளமுதை
பருக ...

இந்த வரிகளில் நடிகர் திலகத்தின் விழிகளை கவனியுங்கள். அதே போல் ஓவியத்தையும் பார்த்துக் கொண்டு ஓரக் கண்ணால் காதலியையும் பார்த்து குறும்புடன் அவர் காட்டும் காதல் சுவை ...

பாருங்கள் ... கேளுங்கள் ...

RAGHAVENDRA
1st February 2013, 08:29 PM
ஒரு சின்ன புதிர் ...

தெய்வப் பிறவி படத்திற்கு முதலில் வைத்த பெயர் என்ன...

RAGHAVENDRA
1st February 2013, 09:19 PM
ஒரு க்ளூ வேண்டுமானால் .... இதோ...

அந்தப் பெயர், மூன்று வார்த்தைகள் கொண்ட நடிகர் திலகத்தின் ஒரு படத்தின் பெயரில் முதல் சொல்லாக அமைந்திருக்கும்.

RAGHAVENDRA
1st February 2013, 10:05 PM
Rare Info அபூர்வ தகவல்கள்

கௌரவம் -
ஒவ்வொரு சிவாஜி ரசிகர் நெஞ்சிலும் ஆழப் பதிந்து விட்ட இக் காவியம் வியட்நாம் வீடு சுந்தரம் எழுதி யூ.ஏ.ஏ.வின் நாடகக் குழுவால் கண்ணன் வந்தான் என்ற பெயரில் மேடை நாடகமாகப் புகழ் பெற்றது பலருக்கும் தெரிந்திருக்கும். இது படமாக்கத் திட்டமிட்டு பூஜை போட்டது என்று தெரியுமோ...?

1971ம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம் தேதி காலை சுமார் 7.30 மணி.

RAGHAVENDRA
1st February 2013, 10:13 PM
Rare Images அபூர்வ நிழற்படங்கள்

ஞாயிறும் திங்களும் திரைக்காவியத்திலிருந்து

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/sunmoon1_zps473d333e.jpg

நிழற்படம் மங்கலாக உள்ளது. முடிந்த வரை சரி செய்ய முயன்றுள்ளேன்.

RAGHAVENDRA
1st February 2013, 11:02 PM
Rare Info அபூர்வ தகவல்கள்

http://tamilnation.co/images/hundredtamils/sivaji/SubbiahPillai.jpg

கிளாரினெட் சுப்பையா பிள்ளை ... இவருக்கும் நடிகர் திலகத்திற்கும் என்ன சம்பந்தம் ...

படியுங்கள் ...இந்த இணைப்பில் (http://www.sangam.org/taraki/articles/2005/12-19_Lesson_in_Gratitude_from_Sivaji_Ganesan.php?pri nt=sangam)

kaveri kannan
1st February 2013, 11:53 PM
அன்பு இராகவேந்திரர் அவர்களே..

உங்கள் சுட்டி அருமை..

கே டி சந்தானம் நிகழ்வை கோலிவுட் கிங் நிகழ்ச்சியில் கேட்டேன்.

கிளாரினெட் நிகழ்வு புதிதாய் அறிந்தேன்.. நன்றி..

நம்மவர் பி.ஏ. பெருமாள் அவர்களிடம் எத்துணை பக்தியாய் இருந்தார் என்பதும் நாம் கற்கவேண்டிய பாடம்.

காலந்தவறாமை, மொழி+ பண்பாட்டின் வேர் விடாப்பாசம், தேசப்பற்று, பெற்றவர் மதித்தல், குடும்பப் பாசம், குருபக்தி, நட்பு மறவாமை..

கற்கவேண்டியவை ஏராளம் நம் நடிகர்பெருமானிடம் இருந்து!

kaveri kannan
1st February 2013, 11:54 PM
அன்பு இராகவேந்திரருக்கு

உங்கள் ஞாயிறும் திங்களும் நிழற்படம் அப்படம் காணும் ஆவலை விசிறி எரியவைக்கிறது..

நன்றி...

vasudevan31355
2nd February 2013, 08:21 AM
'இமய மலைச்சாரலிலே' இனிமை....

'மனிதனும் மிருகமும்' நினைவூட்டல்கள் மறக்க முடியாதவை.

'புன்னகை தவழும் மதிமுகமோ'... புளகாங்கிதம் அடைய வைக்கிறது.

நன்றி ராகவேந்திரன் சார். ('ஞாயிறும் திங்களும்' இதுவரை காணாத அறிய நிழற்படத்திற்கு ஸ்பெஷல் நன்றி.)

vasudevan31355
2nd February 2013, 08:25 AM
காவேரி கண்ணன் அவர்களே!

தாங்கள் பதிவிட்டுள்ள பிபிசி ஆவணப்பட பதிவை கண்டு களிப்புற்றேன். அற்புதமான சுட்டிக்கு நன்றிகள்.

vasudevan31355
2nd February 2013, 10:56 AM
நல்லவர் புகழை பறைசாற்றும் 'நக்கீரன்' கட்டுரை.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-18.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-18.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-9.jpg

kaveri kannan
2nd February 2013, 12:46 PM
மனதைத் தைக்கும் சின்னக்குத்தூசியின் சொல்லாடலில் நல்ல கட்டுரை..

எடுத்து வழங்கிய வாசு அவர்களுக்கு நன்றி..

வாசுதேவன் அவர்களே..

உங்களைச் சிறப்படையாளமாய் எப்படி அழைப்பது? நெய்வேலி வாசு? பாதுகாப்பு வாசு?

JamesFague
2nd February 2013, 01:09 PM
NT always a Dhuruva Natchathiram. Iranthum Vazhum MAHAN.

vasudevan31355
2nd February 2013, 01:21 PM
கண்ணன் சார்,

நன்றி! உங்கள் 'அன்பு வாசு' என்றே அழைக்கலாம்.

RAGHAVENDRA
2nd February 2013, 07:15 PM
http://artie.com/veterans_day/arg-rwb-drum-207x165-url.gif

அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

நீண்ட நாள் ஆவலுடன் காத்திருந்த வசந்த மாளிகை வெளியீடு உறுதி செய்யப் பட்டு விட்டது. இது தொடர்பான அரசு நடைமுறைகள் முடிந்து சான்றிதழ் பெறப் பட்டு விட்டது. 15 அல்லது 22 பிப்ரவரி வெளியாகலாம் என்றும் 8ம் தேதி நாளிதழ் விளம்பரங்கள் வரலாம் எனவும் தகவல்.

RAGHAVENDRA
2nd February 2013, 07:25 PM
புதிருக்கான விடை .....?

RAGHAVENDRA
2nd February 2013, 08:02 PM
SIVAJI GANESAN FILMOGRAPHY SERIES

10. MANOGARA மனோகரா

http://padamhosting.com/out.php/i38515_vlcsnap229180.png

படத்தின் நீளம் - 17885 அடிகள்

வெளியான நாள் - 03.03.1954
தயாரிப்பு - மனோஹர் ப்ரொடக்ஷன்ஸ்
இயக்கம் - எல்.வி.பிரசாத்
இசை - எஸ்.வி.வெங்கட்ராமன் மற்றும் டி.ஆர்.ராமநாதன்
கதை - ராவ் பஹதூர் பம்மல் சம்பந்த முதலியார்
வசனம் - மு.கருணாநிதி
ஒளிப்பதிவு - பி.ராமசாமி, ஜி.கே.ராமு
படத் தொகுப்பு - எம்.ஏ. திருமுகம்
நடன அமைப்பு - ஏ.கே. சோப்ரா, ஹீராலால்
நடிக நடிகையர் - பசுபலேட்டி கண்ணாம்பா, கிரிஜா, எஸ்.ஏ. நடராஜன், டி.ஆர்.ராஜகுமாரி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், காகா ராதாகிருஷ்ணன் மற்றும் பலர்

RAGHAVENDRA
2nd February 2013, 08:06 PM
மனோகரா காணொளி

இப்படம் யூட்யூப் இணைய தளத்தில் முழுவதுமாக தரவேற்றப் பட்டுள்ளது. அதற்கான இணைப்பு


http://youtu.be/Cgcr4LtxRos

RAGHAVENDRA
2nd February 2013, 08:07 PM
வாசு சார்,
நக்கீரன் இதழில் வெளிவந்த சின்னக் குத்தூசி அவர்களின் கட்டுரை மிகவும் அரிய பொக்கிஷம். பகிர்ந்து கொண்டதற்கு உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.
அன்புடன்
ராகவேந்திரன்

vasudevan31355
2nd February 2013, 08:30 PM
மனோகரா

http://padamhosting.com/out.php/i38515_vlcsnap229180.png

http://padamhosting.com/out.php/i38517_vlcsnap231310.png

http://padamhosting.com/out.php/i38516_vlcsnap229924.png

vasudevan31355
2nd February 2013, 08:32 PM
http://www.hindu.com/cp/2009/03/06/images/2009030650321601.jpg

RAGHAVENDRA
2nd February 2013, 09:00 PM
ராஜ் வீடியோ விஷன் வெளியிட்டுள்ள மனோகரா திரைப்படத்தின் நெடுந்தகட்டின் முகப்பு

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/manogaradvdcover_zpsd517f08e.jpg

kaveri kannan
2nd February 2013, 09:02 PM
கண்ணன் சார்,

நன்றி! உங்கள் 'அன்பு வாசு' என்றே அழைக்கலாம்.

ஆகட்டும் அன்பு வாசு..

எனக்கு அனைவரும் சார் என்று தட்டச்சி நேரவிரயமாக்க வேண்டாம்..
கண்ணன் - போதும்..
மிச்சமாகும் அந்நேரத்தை nt புகழ்பாடச் செலவிடலாம்.

kaveri kannan
2nd February 2013, 09:10 PM
பராசக்திக்குப் பிறகு வசூல்சக்ரவர்த்தி மகுடத்தைச் சூட்ட அடித்தளமிட்டக் காவியம் மனோகரா..
3 மொழிகளில் வெளியானது என நினைவு..

இராகவேந்திரரும், அன்பு வாசுவும் அரிய படங்கள், சுட்டிகள் தந்து இம்மைல்கல் காவியத்துக்கு அணி சேர்க்கிறார்கள்.. நன்றி!

---------------------------------------------------------------------

வனஜா அவர்களின் விருப்பப்பாடல் தெரிவுக்குப் பாராட்டுகள்.

இப்பாடலில் சில நொடிகள்...
விரக்திச்சிரிப்புடன்..மேலேறும்
நம் நடிகர்திலகம் விழிகள் வரைந்த கவிதை....


நீ கண்ணன்.. நான் அறிவேன்..
உன் நாடகம் முழுமை அடைய நான் உதவுவேன்..
உனை அறியாதுபோல் நான் நடிப்பதும் என் கொடை..
பிழைத்துப்போ கண்ணா... என் பெயர் கர்ணன்..

RAGHAVENDRA
2nd February 2013, 09:36 PM
1964ல் வெளி வந்த கர்ணன் அக்காலத்திய இளைஞர்களிடம் ஏற்படுத்தியிருக்கக் கூடிய தாக்கத்தைக் காட்டிலும் 2012ல் வெளிவந்த கர்ணன் இக்காலத்திய இளைஞர்களிடம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் நிச்சயம் பல மடங்கு அதிகம் எனவே சொல்லலாம். காரணம், அக்காலத்திய இளைஞர்களுக்கு பெற்றோர்கள் மூலமாக பரவலாக மகாபாரதமும் கர்ணன் பாத்திரமும் முன் கூட்டியே ஓரளவிற்குத் தெரிந்திருந்தது. நடிகர் திலகத்தின் மூலம் அது இன்னும் அதிகமாக அப்போது சென்றடைந்தது. ஆனால் 2012ல் மகாபாரதமும் ராமாயணமும் மற்ற இதிகாசங்களும் இளைஞர்களுக்கு சென்று சேர்க்கும் அளவிற்கு வலுவான சாதனங்கள் இல்லை. முதல் சாதனம் பெற்றோர் அல்லது தாத்தா-பாட்டி போன்ற மூதாதையர். பெரும்பாலான குடும்பங்கள் தனிக்குடித்தனம் செய்வதால் மூதாதையர் இருக்கும் வாய்ப்புக் குறைவு. பெற்றோர் மூலமாக குழந்தைகளுக்கு சென்று சேருமா என்றால், பெரும்பாலான வீடுகளில் பெற்றோர்கள் இருவருமே வேலைக்குச் செல்வதால் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதே பெரிய விஷயம்.

இப்படிப் பட்ட சூழலில் வாராது வந்த மாமணி போல் கர்ணன் திரைக்காவியம், இளைஞர்களுக்கு அவர்களுக்குப் பிடித்த வடிவத்தில் வந்தது மட்டுமல்லாமல், நடிகர் திலகம் என்கிற மாபெரும் பொக்கிஷம் தமிழகத்திற்கு கிடைத்ததையும், இந்திய புராணங்களின் மகிமையையும் அதிலும் மகாபாரதத்தில் உள்ள சமுதாய குடும்ப சிக்கல்களின் சூழல்களையும், கர்ணன் பாத்திரத்தின் சிறப்பையும் கூறி, நடிகர் திலகத்தின் சிறப்பை ஆணித்தரமாக நிரூபித்து அவர்களுக்குள் மிகப் பெரிய அளவில் இடம் பெறக் காரணமாயிருந்தது. இதன் மூலம் நடிப்பின் மேன்மையை இப்போது தான் அவர்கள் உணரத் துவங்கியுள்ளனர்.

இந்த அளவிற்கு இன்றைய தலைமுறையிடம் கர்ணன் சென்று சேர்ந்ததற்கு மற்றொரு காரணம் மெல்லிசை மன்னர்களின் இசை. குறிப்பாக பாடல்கள். அதிலும் குறிப்பாக சீர்காழி கோவிந்தராஜன் குரலில் இந்தப் பாடல் சென்ற ஆண்டின் மிகச் சிறந்த பாடல் என்று கூறும் அளவிற்கு தாக்கம் ஏற்படுத்தியுள்ளது.

இப்பாடல் நம் அனைவருக்குமே என்றுமே விருப்பமாக உள்ளது என்பது உண்மை.

இச்சந்தர்ப்பத்தில் திவ்யா பிலிம்ஸ் நிறுவனத்தையும் நம்மால் நினைவு கூறாமல் இருக்க முடியாது. அவர்களுக்கு நமது நன்றிகள் என்றென்றும்.

மிக்க நன்றி சகோதரி.

kaveri kannan
3rd February 2013, 01:59 AM
என் விருப்பம்:

Fantasy,Concept/ Album அக்காலத்திலேயே மிக மிக புதிதாய் யோசித்து, தமிழ் இரசிகர்களுக்கு வழங்கிய கலைவள்ளல் நம் நடிகர்திலகம்.

அவரின் அங்கத்துடிப்பைக் கண்ட பின்னரே அந்த ஆழிப்பேரலை இசை உருவாக்கியதாய் மெல்லிசை மன்னர் சொல்வார்... '' எங்கே நிம்மதிக்கு?''



காகிதத்தில் கப்பல் கட்டி - அன்புக்கரங்கள்
யாரந்த நிலவு - சாந்தி
நதியினில் வெள்ளம் -தேனும் பாலும்

இப்படி நடிகர்திலகம் கற்பனைக்கு மேனி தந்து நமக்களித்த கவின்விருந்துகள் பலப்பல..

அவற்றில் ஒன்று இன்றைய விருப்பமாய்..

கரங்களுக்குச் சவால் விடும் கால் அசைவுகளில் தாளலயம் கேளுங்கள்..

நேர்க்கோடுகள் நடுவே நின்று ஜியோமெட்ரிக் கோலங்கள் காட்டும் அங்கங்களின் அளந்த கோணங்கள் காணுங்கள்..

மதுவின் ஊற்று திராட்சைக்கொத்தில் ஒன்றைக் கொய்யும் உருவகம் பாருங்கள்..

எத்தனை சுமைகளடா எனும்போது- தாங்கிச் சாய்ந்தவனின் உன்னத உடல்மொழிக் கவிதை சுவாசியுங்கள்..

காலத்தை வென்ற கலைஞனின் தீர்க்கதரிசனப் படைப்பழகைச் சுவையுங்கள்...


http://www.youtube.com/watch?v=6O1YxXvkc2Q

RAGHAVENDRA
3rd February 2013, 09:26 AM
டியர் காவிரிக்கண்ணன்
படைத்தானே படைத்தானே -
நம்மை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே
மனதில் ரசனையை வளர்த்தானே

இருந்தால் இவர் போல் இருந்திட வேண்டும்
என்பது உண்மையடா
குடும்பம் மனைவி என்பது எல்லாம்
இவரின் பாடமடா

ஆசை பாசம் காதல் என்பது
வாழ்வில் உண்மையடா
இளமை தொடங்கி முதுமை வரையில்
என்றும் திலகமடா நமக்கு
அவரே திலகமடா

பல சரணங்கள் எழுதிக் கொண்டே போகலாம் ... தமிழ்த்திரையுலகில் சரித்திரம் படைத்த பாடல்களின் வரிசையில் முதல் பத்து இடங்களுக்குள்ளாகவே வரத் தகுதியுள்ள பாடல். Class to the peak எனச் சொல்லும் அளவிற்கு இப்பாடல் சிறப்பு வாய்ந்தது. கண்ணதாசன் மெல்லிசை மன்னர் சௌந்தர் ராஜன் இவர்கள் நடிகர் திலகத்திற்காக உருவாக்கும் பாடல்கள் .... இணையற்றவை ....

தங்களின் சிறந்த தேர்வுக்கு பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
3rd February 2013, 09:50 AM
இன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள். நடிகர் திலகத்தின் வாழ்வில் திருப்பு முனை உண்டாக்கிய சிவாஜி கண்ட ஹிந்து ராஜ்யம் நாடகத்தில் அவரை நடிக்க வைத்த அண்ணா அவர்கள் அம் மேடையில் நடிகர் திலகத்துடன் தோன்றும் காட்சியின் நிழற்படத்தின் மூலம் அவருக்கு நம் அஞ்சலி செலுத்துவோம்.

http://2.bp.blogspot.com/-VS0g2hCjeU8/UAfUym_sXbI/AAAAAAAAFbU/p-vIvl5csIg/s1600/3.jpg

RAGHAVENDRA
3rd February 2013, 11:14 AM
SIVAJI GANESAN FILMOGRAPHY SERIES
http://3.bp.blogspot.com/-mXF8x1ql5hw/UGVxXes2EzI/AAAAAAAA6pA/UFRYynBZGfY/s400/Illara%2BJothi.jpg

11. ILLARA JOTHI இல்லற ஜோதி

வெளியான நாள் 09.04.1954
தயாரிப்பு – மாடர்ன் தியேட்டர்ஸ்
இயக்கம் – ஜி.ஆர். ராவ்
மேற்பார்வை – டி.ஆர்.சுந்தரம்

கதை வசனம் பாடல்கள் – கண்ணதாசன்
அனார்கலி நாடக வசனம் – மு.கருணாநிதி
இசையமைப்பு – ஜி.ராமநாதன்
இசைக்குழு – ஜி.ராமநாதன் இசைக்குழு
நடன அமைப்பு – ஏ.கே.சோப்ரா, மாதவன்
ஆடை அலங்காரம் – எம்.அர்த்தனாரி
மேக்கப் – ஜி.மாணிக்கம், டி.குருநாதன்
லேபரட்டரி – பி.வி.மோடக், டி.பி.கிருஷ்ணமூர்த்தி
எடிட்டிங் – எல்.பாலு
ஸ்டூடியோ – மாடர்ன் தியேட்டர்ஸ்
நடிக நடிகையர்
சிவாஜி கணேசன் – மனோஹர்
தங்கவேலு – நெட்டிலிங்கம்
அசோகன் – மோஹன்
பெருமாள் – புரொபஸர்
கிருஷ்ணன் – மக்கு
திருப்பதிசாமி – சாவதானப் பிள்ளை
கொட்டாப்புளி ஜெயராமன் – கதை பார்ப்பவர்
சௌந்தர் – ராஜா மான் சிங்
ராமாராவ் – அமீனா
சேதுபதி – யூனானி டாக்டர்
பத்மினி – சித்ரலேகா
ஸ்ரீரஞ்சனி – காவேரி
சரஸ்வதி – அனந்தா
கமலம் - லக்ஷ்மி
நடனம் – சந்திரா, கமலா
பின்னணி பாடியோர்
பி.லீலா, ஜிக்கி, ஸ்வர்ணலதா, காந்தா, கஜலக்ஷ்மி, ஆண்டாள், ஏ.எம்.ராஜா
பாடல்கள்
1. கல்யாண வைபோக நாளே
2. பார் பார் பார் இந்த பறவையைப் பார்
3. சிட்டுப் போலே வானகம் எட்டிப் பறந்தே
4. பெண்ணில்லாத ஊரிலே
5. களங்கமில்லா காதலிலே
6. கேட்பதெல்லாம் காதல் கீதங்களே
7. சிறுவிழி குறுநகை சுவைதரும் மழலையின்
8. கண்கள் இரண்டில் ஒன்று போனால்
9. கலைத் தேனூறும் கன்னித் தமிழ் பேசுவேன்
10. உனக்கும் எனக்கும் உறவு காட்டி

இப்படத்தின் நெடுந்தகடு ஜெயம் ஆடியோ நிறுவனத்தால் வெளியிடப் பட்டுள்ளது.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/IJFR.jpg

RAGHAVENDRA
3rd February 2013, 11:17 AM
இல்லற ஜோதி திரைப்படத்தின் காணொளிகள்

Anarkali play அனர்கலி நாடகம்

http://youtu.be/L-zuhcyBblY

Ketpathellam கேட்பதெல்லாம் காதல் கீதங்களே

http://youtu.be/qT_RJI-m1qM

Kalangamilla – களங்கமில்லா காதலிலே

http://youtu.be/4g-4V2TjqA8

Siru vizhi – சிறு விழி

http://youtu.be/xx9iKti-njs

Paar paar – பார் பார்

http://youtu.be/caCzS9qamHU

kalyana vaiboga nale – கல்யாண வைபோக நாளே

http://youtu.be/kZAVRnIO2Ow

Unakkum Enakkum – உனக்கும் எனக்கும்

http://youtu.be/HFLfaDgxz_s

chittu pole – சிட்டுப் போலே

http://youtu.be/8qtn5UNCT0Q

காணொளிகள் உபயம் யூட்யூப் இணைய தளம்.

sankara1970
3rd February 2013, 01:33 PM
Dear Ragavendra
VM release news ku nandri-any chance the movie can be released in DTH?-nowadays new movies are shown in VijayHITS channel, and airtel movies, etc.

kaveri kannan
3rd February 2013, 01:55 PM
நடிகர்திலகம் பற்றி நினைவுத்தாம்பூலக் கவிதை தந்து மகிழ்வித்த இராகவேந்திரருக்கு நன்றி....

---------------------------------------------

இல்லற ஜோதி தகவல்கள், சுட்டிகளால் இன்றைய பொழுது இனிமையானது..

அனார்கலி கல்லறை முன் வசனம்.. அப்போது அவர் கரங்கள் குரலோடு இணைந்து வடிக்கும் உணர்வோவியம்..

வீணை, வயலின் வாசிக்கும் நேர்த்தி ( பாட்டும் நானேவுக்கு ஒத்திகை ...!!!!)

உழைத்து எமக்காய் எடுத்தளிக்கும் உன்னதப்பணிக்கு பாராட்டுகள் இராகவேந்திரருக்கு..

RAGHAVENDRA
3rd February 2013, 02:25 PM
டியர் சங்கர்,
டி.டி.எச். வடிவம் அல்லது வெளியீடு பற்றிய எந்தத் தகவலும் தற்போதைக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

RAGHAVENDRA
3rd February 2013, 02:26 PM
தங்கள் பாராட்டிற்கும் கவிதைக்கும் நன்றி காவிரிக் கண்ணன்.

RAGHAVENDRA
3rd February 2013, 02:27 PM
பல ரசிகர்களின் நீண்ட நாள் விருப்பத்தினைப் பூர்த்தி செய்யும் வகையிலும், இது வரை பார்த்திராதவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் வெளியாகி யுள்ளது நடிகர் திலகத்தின் மாடி வீட்டு ஏழை திரைக்காவிய நெடுந்தகடு. ஜி.எல்.வி. நிறுவனம் இப்படத்தின் நெடுந்தகட்டினை வெளியிட்டுள்ளது.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/MVYDVDC_zpseeb10784.jpg

kaveri kannan
3rd February 2013, 03:22 PM
நடிகர்திலகம் பற்றிய தகவல்கள் இரும்பு என்றால் - நீங்கள் காந்தம் இராகவேந்திரர் அவர்களே..

திரட்டித் தரும் அரும்பணிக்குப் பாராட்டுகள்!



சென்னை பிராட்வேயில் முதல் நாள் முதல் காட்சி பார்த்தது நினைவாடலில்...

RAGHAVENDRA
3rd February 2013, 04:06 PM
தங்கள் பாராட்டிற்கு நன்றி காவிரிக்கண்ணன் அவர்களே. எல்லாப் புகழும் அவருக்கே

vasudevan31355
3rd February 2013, 06:28 PM
மிக மிக அரிய பதிவு.

பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு நினைவு அஞ்சலி.

பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு, நடிகர் திலகத்திற்கு பெரியாரால் 'சிவாஜி' என்ற பட்டம் கிடைக்கக் காரணமாய் இருந்த அண்ணா அவர்களின் 'சிவாஜி கண்ட இந்து சாமராஜ்யம்' நாடகத்தில் வரும் சில காட்சிகளின் வசனங்கள் இதோ உங்களுக்காக. மராட்டிய சிவாஜியாக நம் நடிகர் திலகமும், காகப்பட்டராக பேரறிஞரும் நடித்துள்ள அருமையான தமிழ்நடை கொண்ட வசனங்கள்.

பக்கம் 1

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-19.jpg

பக்கம் 2

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-19.jpg

பக்கம் 3

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-10.jpg

பக்கம் 4

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4-6.jpg

பக்கம் 5

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/5-6.jpg

பக்கம் 6

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/5-6.jpg

பக்கம் 7

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/7-3.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

kaveri kannan
3rd February 2013, 07:07 PM
பொருத்தமான நாளில் பொருத்தமான பதிவு..

அன்பு வாசுவிற்கு பாராட்டுகள்..

எங்கிருந்து அள்ளுகிறீர்கள் இப்பொக்கிஷங்களை?

முன்னோடி ஹப்பர்களை மலைத்தபடி பாராட்டிமகிழ்கிறேன்..

vasudevan31355
3rd February 2013, 07:22 PM
நன்றி ராகவேந்திரன் சார். வசந்த மாளிகை வரும் நாளை அறிவித்தமைக்கு நன்றி. முழு காணொளியில் மனோகரனைத் தந்து மகிழ்ச்சி பொங்கச் செய்து விட்டீர்கள். அண்ணாவுக்கு அஞ்சலி அருமை. இல்லறஜோதியின் இனிய பாடல்களின் தொகுப்புக்கு இனிய நன்றி! நீண்ட நாட்களாக ஏழையாய் இருந்த எங்களுக்கு மாடி வீட்டை பரிசாகத் தந்து மனம் குளிர செய்திருக்கிறீர்கள். அனைத்திற்கும் என் நன்றிகள்.

vasudevan31355
3rd February 2013, 07:29 PM
களிப்புற்றேன் கண்ணன் சார். அளப்பரிய அற்புதங்களை அள்ளித் தந்த அழியாப் புகழ் பெற்ற அருமை நடிக தெய்வத்தைப் படைத்தானே அந்த ஆண்டவன்... அவனுக்கு முக்காலமும் நன்றி! 'படைத்தானே' பாடலை பாங்காக கவிதை நடையில் இங்கு வழங்கிய தங்களுக்கும் என் அன்பு நன்றி!

vasudevan31355
3rd February 2013, 07:33 PM
தங்கை வனஜா,

உங்கள் விருப்பமாக கர்ணனின் நல்ல உள்ளத்தை இங்கு படம் பிடித்து எங்களை உறங்காமல் செய்து விட்டீர்கள். நன்றி!

vasudevan31355
3rd February 2013, 08:14 PM
என் விருப்பம் (2)

'வெள்ளிக்கிண்ண'த்தை அடுத்து எப்போதும் என் உதடுகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் பலாச்சுளைப் பாடல்.

அயல் நாட்டு மண்ணிலே என் ஆண்டவன் முதன் முதலாக அடியெடுத்து தொடங்கி வைத்த பாடல்.

ஈபில் டவரின் அழகை மிஞ்சும் ஈடு இணையற்ற தலைவரின் அழகு.

நிறைய எண்ணெய் தடவிய அடர்ந்த இருள் கேசத்தில், அளந்து தைத்த ஆடையில், அசகாய சூரனின் நடையழகில், காஞ்சனமாலையின் கைகோர்த்து... ஆண்டுகள் ஆயிரம் போனாலும் அ(ஜெ)கத்தை விட்டு அழியாத பாடல்.

http://www.kaathal.com/songs/lyrics/paarvai_yuvaraani.gif

(விடுபட்ட மூன்றாவது சரணம்)

ஒருபக்கம் நான் பார்த்து மறுபக்கம் நான் பார்க்க ஒருநாளும் போதாதம்மா
மணிமுத்தம் வாய்சிந்த சிறுவெட்கம் முகம் சொல்லும் அதுமட்டும் போதாதம்மா
என் கேள்வி சுகமென்று உனைக் கேட்பது
நான் சொல்வேன் சொன்னாலும் புரியாதது

(பார்வை)

இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் இனம் புரியா இன்பம் மனதை இன்பச் சித்ரவதை செய்வதை எப்படி சொல்ல!


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=0jn0ZS5ePlU

vasudevan31355
3rd February 2013, 08:24 PM
தங்கையே! நிஜமாகவே உங்கள் விருப்பமா... அல்லது வம்பு விளையாட்டிற்காகவா? அது சரி! அறிஞர் அண்ணாவின் அற்புத தமிழை படித்து முடித்தீர்களா!

kaveri kannan
3rd February 2013, 08:39 PM
பார்வை யுவராணி..

வித்தியாசமான சொல்லாடலால் எடுத்த எடுப்பிலேயே கவரும் பல்லவி..

முழுக்கச் செந்தேனில் முக்கிய இனிக்கும் தமிழில் சரணங்கள்..

தாமே படக்கருவிகள் சுமந்து உதவி, ஒப்பனை இன்றி இயற்கை அழகை அப்படியே காட்டி நடித்துத்தந்த
நடிகர்திலகத்தின் காந்த முகம்.. பாவனைகள்...

பாரீசின் கண்கவர் பின்புலம்..
காஞ்சனையின் பக்கபலம்..

எனக்கும் இப்பாடல் இதயத்துக்கு நெருக்கம்..

விசிறிவிட்ட அன்பு வாசுவுக்கு நன்றி..

vasudevan31355
3rd February 2013, 09:06 PM
படித்தேன். ஆனால் அதை நடிகர் திலகம் பேசிக்கேட்டால்தான் நன்றாக இருக்கும்!

அந்தக் கொடுப்பினைதான் இல்லாமல் போய் விட்டதே!

vasudevan31355
3rd February 2013, 09:11 PM
:froggrin:என்ன இன்று எல்லா அண்ணன்மார்களும் ஒரே romantic mood இல் இருக்கிறாப்பல!:noteeth:

அப்படி அல்ல தங்கையே! என்னைப் பொறுத்தவரை நான் முழுதுமாக இப்பாடலில் மயங்கி நிற்பது நடிகர் திலகம் உடல்மொழியைப் பார்த்து. இன்ப சித்ரவதை என்று அதைத்தான் சொன்னேன். escape. வுடு ஜூட்.

RAGHAVENDRA
4th February 2013, 06:50 AM
SIVAJI GANESAN FILMOGRAPHY SERIES

12. ANDHA NAAL அந்த நாள்
வெளியான நாள் 13.4.1954

FACEBOOK PAGE FOR ANDHA NAAL (http://www.facebook.com/pages/Andha-Naal/216551238388509)

http://3.bp.blogspot.com/-qqhe5HQJA_s/T3nZdWpbaCI/AAAAAAAABJs/bAWXH-SMyDw/s1600/AndhaNaal.jpg

Running time: 130 minutes

விளம்பர மற்றும் விமர்சன நிழற்படங்கள் உபயம் - ஆவணத் திலகம் பம்மலார்

முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 10.4.1954
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5697-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 11.4.1954
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5696-1-1.jpg

RAGHAVENDRA
4th February 2013, 07:00 AM
பங்கு பெற்ற கலைஞர்கள்
தயாரிப்பு ஏவி.எம்.
கதை இயக்கம் – எஸ்.பாலச்ச்தர்
திரைக்கதை வசனம் – ஜாவர் சீதாராமன்
இசை – ஏவி.எம். இசைக்குழு
ஒளிப்பதிவு – எஸ்.மாருதிராவ்
படத் தொகுப்பு – எஸ்.சூர்யா
நடிக நடிகையர்
சிவாஜி கணேசன், பண்டரிபாய், ஜாவர் சீதாராமன், பி.டி.சம்பந்தம், சூர்யகலா மற்றும் பலர்



Andha Naal created history in Tamil cinema as the first movie sans song, dance or stunt sequence and is still being talked about. It is impossible for any producer to even dream of making such a movie today! The emerging Indian movie mogul AV. Meyyappan created history when he produced Andha Naal, which was less than 12,500 feet long, while most Tamil films of that day were 15,000 feet and above. The film was written and directed by the multi-faceted S. Balachandar who later attained fame as a veena player. The dialogue was written by ‘Javert’ Seetharaman and the film was photographed by talented lensman Maruthi Rao.
Many people to this day are under the impression that the film was an adaptation of the Akira Kurosawa classic Rashomon. Interestingly, the Japanese film was released in theatres in India soon after it created history in the international movie circuit and in the first international film festival held in India in 1952, thanks to the efforts of Pandit Nehru. The Japanese film was a brilliant narration of a single event seen through the eyes of the protagonists, each at variance with the other about what was the truth. However, Andha Naal, though bearing thematic resemblance to the Kurosawa classic, was actually an intelligent adaptation of a British movie Woman in Question made by Anthony Asquith (son of the British Prime Minister Lord Asquith), one of the three British movie maestros, the other two being Carol Reed and David Lean. Asquith’s film was a flashback on the murder of a woman with several people claiming to be the killer. Andha Naal was about the killing of Sivaji Ganesan by his wife (Pandari Bai, revealed to the audience) and many people claiming to be the killer. This film won a Central Government Award, and critical and public acclaim.
However, it did not fill the coffers of Meyyappan who understandably never thought of making a similar film later. Balachandar had an assistant in the directorial department, young and talented who later emerged as a successful filmmaker, Muktha V. Srinivasan.
The cast consisted of Sivaji Ganesan as a traitor, leaking secrets to the Japanese during the Second World War, Pandari Bai as his patriotic wife, ‘Javert’ Seetharaman, T. K. Balachandran, Suryakala, Menaka and P. V. Sambandam. Even today after five decades and more, this film sustains interest.
Balachandar, a brilliant technician had acquired vast knowledge of the art of cinema by watching movies from abroad, mostly from Hollywood. He put to good use his acquired skills and talents in this film, especially in the lighting to create mood and character. Sample this: in a sequence the anti-hero (Sivaji Ganesan) is totally in the dark while his abandoned sweetheart is brightly lit to bring about the contrast in the mood and the characters. In Hollywood lingo, it is known as ‘painting with light.’
Remembered for being the first Tamil film which had no dance, song or stunt sequence and for Balachandar’s impressive direction and fine performances by Sivaji Ganesan and Pandari Bai.
RANDOR GUY


courtesy: The HIndu, Blast from the Past, Friday, Dec 12, 2008 (http://www.hindu.com/cp/2008/12/12/stories/2008121250381600.htm)

RAGHAVENDRA
4th February 2013, 07:03 AM
அந்த நாள் நிழற்படங்கள்

http://3.bp.blogspot.com/-qqhe5HQJA_s/T3nZdWpbaCI/AAAAAAAABJs/bAWXH-SMyDw/s1600/AndhaNaal.jpg http://www.hindu.com/mp/2008/12/13/images/2008121353200701.jpg

http://i.imgur.com/L8UXy.png http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTev_kNyVya_4kgWhvw0_-DBJC3xEbdZ8EcWFNCg5j5K1LTuA7Nfw.jpg

http://img386.imageshack.us/img386/231/an1ix5.jpg http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQUMFkOD_rDTIt1lwpO_SlDIcTKMUTeh UvRtyq3G108BCBYFwz3Yw

http://img387.imageshack.us/img387/2809/an4qt4.jpg http://i1.ytimg.com/vi/xDDGP0CmjOg/mqdefault.jpg
http://i.ytimg.com/vi/IaqA0mx85uk/0.jpg

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSC1Xq04bNf7TgB7rxmRIP4moAxnvizK yBz-Fck5YOv6XEZHnjM.jpg

RAGHAVENDRA
4th February 2013, 07:07 AM
அந்த நாள் திரைக்காவியத்தைப் பற்றி நமது நடிகர் திலகம் திரியில் முந்தைய பாகங்களில் பாலாஜி மற்றும் சாரதா அவர்களின் ஆய்வுகள்

S.Balaji (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=540)
Posted: Tue Nov 28, 2006 2:53 pm Post subject: Andha Naal - a real suspense thriller and an epic of a movie

aradha Prakash (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=555S)

Posted: Fri Dec 01, 2006 8:55 am Post subject:

vasudevan31355
4th February 2013, 07:36 AM
'அந்த நாள்' என் பங்கிற்கு

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTnExxNJKmYKCbGBxFRRcida-1XtVHUDnMOe5Mm2bOKQGPrOHVohttp://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQ17khhm5qpwFe04A8TCwKjWyskHkt02 qVWEqG5TuC-fvX-XMCm-whttp://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQEbXxBBIr8nIVwzA8_3bFtS_MEbRXr_ l79lPp9JyiGoMw1EmozOQ

http://i.imgur.com/3EnV2.png

http://shotpix.com/images/79827703247746307991.png

vasudevan31355
4th February 2013, 07:37 AM
'அந்த நாள்'

மிரள வைக்கும் நிழற்படங்கள்.

http://img600.imageshack.us/img600/528/vlcsnap2011091319h15m18.png

http://img109.imageshack.us/img109/7019/vlcsnap2011091319h14m30.png

http://img546.imageshack.us/img546/3805/vlcsnap2011091319h12m32.png

http://img27.imageshack.us/img27/5466/vlcsnap2011091319h13m49.png

http://img830.imageshack.us/img830/7991/vlcsnap2011091319h15m36.png

vasudevan31355
4th February 2013, 07:43 AM
'Antha Naal' DVD 9 Details

http://img23.imageshack.us/img23/4161/vlcsnap2011091319h13m42.png

http://img163.imageshack.us/img163/2263/vlcsnap2011091319h07m29.png

http://img846.imageshack.us/img846/8941/vlcsnap2011091319h07m38.png

http://img651.imageshack.us/img651/7022/vlcsnap2011091319h07m43.png

http://img231.imageshack.us/img231/5725/vlcsnap2011091319h07m50.png