View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events
Pages :
1
2
3
4
5
[
6]
7
8
ScottAlise
23rd October 2013, 10:38 AM
கப்பலோட்டிய தமிழன்
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளை படங்களில் ஒன்று ,சொன்னால் கொஞ்சம் நண்பா கஷ்டம் தான் இருந்தாலும் இந்த படத்தை வங்கி வைத்து , 4 ஆண்டுகளுக்கு அப்புறம் தான் எடுத்து பார்த்தேன் , பார்க்கும் பொது சிலிர்த்து விட்டேன் , அப்பப்பா என்ன ஒரு நடிப்பு , அதை balance செய்யும் விதத்தில் பந்தலு வின் இயக்கம் , தயாரிப்பு
நம்ம கோபால் சார் குறிப்பிட்டதை போலே இது ஒரு documentary டிராமா தான் , அதிலும் to be precisely the point இது ஒரு history , APN அவர்களின் படத்தில் போலே சிவன் இப்படி தான் இருப்பர் என்று ஒரு பிம்பம் மக்களிடம் இருக்கும் , ஆனால் VOC போன்ற தியாகிகளை மக்கள் நேராக கண்டு இருப்பார்கள் , அதனால் ஓவர் எக்ஷக்கெரடிஒன் க்கு வைப்பு இல்லை , இது நடிப்பு , மற்றும் இயக்கத்துக்கும் பொருந்தும்
இதுக்கு நிறைய மெனக்கெட்டு இருப்பார்கள் திரு பந்தலு மற்றும் சிவாஜி சாரும் , இந்த கூட்டணி கர்ணன் , வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற biopic , mythology படங்களையும் , பலே பாண்டிய என்ற நகைச்சுவை படங்களையும் கொடுத்து ,மக்கள் மத்தியில் நல்லதொரு மதிப்பை பெற்று இருந்தார்கள் .
இந்த படம் வந்த ஆண்டு 1961 . நடிகர் திலகத்தின் 10 படங்கள் ரிலீஸ் செய்ய பட்டது. அவருக்கு details சேகரிக்க நேரம் எங்கு இருக்கும் , இந்த காலத்து நடிகர்கள் போலே வருசத்துக்கு 1-2 படங்கள் இல்லை , 10 படங்கள் , இருந்தாலும் அவர் references எடுத்து செயதார், எப்படி என்று அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்
எப்படி சாத்தியம் , சிவாஜி ஒரு தேசியவாதியின் மகன் , சிறுவயது முதலே அவருக்கு தேசியமும் , தேசபக்தியும் இருந்தது எனவே இந்த வேடத்தை நன்றாக செய்ய முடிந்தது
சரி படத்துக்கு போவும்
படத்தின் நெலம் அந்த காலத்தில் 20-22 ரீல் அதாவது 3- 3.15 மணி நேரம் , இந்த 3 மணி நேரத்தில் ஒரு முழு மனிதனின் வாழ்கை வரலாற்றை விவரிக்க முடியுமா , சிரமம் தான் , சில cinematic liberties எடுத்து கொண்டு VOC யின் இளமை கால வாழ்வை overlook செய்து விட்டர்கள் என்று தான் சொல்ல வேண்டும் இன்னும் ஒரு 15 நிமிடம் படத்தின் நிலத்தை அதிகரிக்க செய்து கொஞ்சம் அதை காட்டி இருக்கலாம் .
என் போன்ற ஆட்கள் சினிமா பார்த்து , அதுக்கு அப்புறம் அது சம்பந்தமான புஸ்தகங்களை படிக்கும் பொது தான் இவர்கள் இதை விட்டது தெரிந்தது
இதில் என்னை கவர்ந்த பாத்திரம் பாரதி , சுப்பையா பிசி உதறி இருப்பர் அதிலும் பறவைகள் அரிசியை உண்ணும் பொது அவர் கொடுக்கும் reaction டாப் . அது போலே ஜெமினி மற்றும் பலர் எல்லாம் வாழ்ந்து இருக்கார்கள்
இவர்கள் இப்படி வெளிப்படும் பொது நம்மவர் சும்மா இருப்பார
இளமையில் நாடு பற்று கொண்ட வக்கீல் , அதுவும் தன் தந்தையே vella atral ulla oruvar , அதுக்கு அப்புறம் வீட்டில் அவர் காடும் பவ்யம் .
தொடர்ந்து தொழில் இடுபடாமல் போறதுக்கு காரணம் சுகந்திர தாகம் .அங்கே அவர் பேசும் வசனம் sharp
தொண்டர்ந்து அவர் ஒரு கப்பல் கம்பெனி க்கு முயற்சி செய்வதும் , அதுக்கு வரும் முட்டுகட்டைகளை சமாளிப்பதும் , தடைகளை மீறி கப்பல் ஓடும் பொது அவர் முகம் ஒரு entrepreneur தன் முயற்சி வெற்றி அடையும் பொது அடையும் உற்சாகம்
இதனால் அவர் சிறைக்குள் அடைக்கப்படும் போதும் , அவர் அனுபவிக்கும் கொடூர தண்டனை யும் உண்மையில் ரத்தம் வர வைக்கும் காட்சி
இனி நடிகர்திலகத்தின் பேட்டி இந்த பட்டை பற்றி
இதுக்கு நடிகர்திலகத்துக்கு கிடைத்த பரிசு :
voc அவர்களின் மகன் " எனது தந்தையை பார்த்தது போலே இருக்கு என்று சொன்னது"
நடிகர்திலகத்தை பிடிக்காதவர்கள் கூட அவர் படத்தை தான் போடுவார்கள் , சுகந்திர தினம் , மற்றும் குடியரசு தினங்களில்.
ஆனால் இந்த படம் muthal ரிலீஸ் ல் வெற்றி அடைய வில்லை
ஆனால் பிற்பாடு நன்றாக மக்களை பொய் சேர்ந்தது
இன்றும் ஒரு iconic status கொண்ட படம்
JamesFague
23rd October 2013, 09:33 PM
Very Natural acting from NT and watched the movie during re release at Noorjehan.
Unforgettable movie in NT's career.
mr_karthik
24th October 2013, 12:52 PM
Re-Submission of my previous post about my First Experience with ‘Kappalottiya Thamizhan’
'கப்பலோட்டிய த்மிழன்' படத்துக்கு 1976-ல் எமர்ஜென்ஸி காலத்தின்போதுதான் வரிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், அப்படத்தை முழு கட்டணத்திலேயே அரங்கு நிறைந்த காட்சியாக கண்டுகளித்த அனுபவம் எனக்கு.
1961 தீபாவளியன்று வெளியான இக்காவியம், அதன்பின்னர் என் நினைவுக்கெட்டிய காலம் வரை மறு வெளியீட்டுக்கு வராத நேரம். அந்த ஆண்டு வெளிவந்த மூன்று 'பா' வரிசைப் படங்களும் அடிக்கடி தியேட்டர்களில் திரையிடப்பட்டுக்கொண்டிருந்த போதிலும், ஏனோ கப்பலோட்டிய தமிழன் வரவில்லை. முதல் வெளியீட்டில் கிடைத்த ரிசல்ட்டைப்பார்த்து விநியோகஸ்தர்கள் பயந்தார்களோ என்னவோ தெரியவில்லை. அதன் காரணமாகவே இப்படத்தின் மீது அதிக ஆவலும் எதிர்பார்ப்பும் எகிறிப்போயிருந்தது.
இந்நிலையில் எனது பள்ளிமாணவப் பருவத்தின்போது 1972-ஜூன் மாதம் திடீரென்று தினத்தந்தியின் கடைசிப்பக்கத்தில் 'வெள்ளிக்கிழமை முதல் சித்ராவில்' என்று தலைப்பிட்டு கப்பலோட்டிய தமிழன் படத்தின் கால்பக்க விளம்பரம் வந்திருப்பதைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் விழிகள் அகன்றன. எவ்வளவு நாள் காத்துக்கிடந்த வாய்ப்பு என்று மனம் குதூகலித்தது. விளம்பரத்தில், கட்டம் போட்ட கைதி உடை மற்றும் தொப்பியுடன் நடிகர்திலகம் கீழே கிடக்க, ஒரு பெரிய பூட்ஸ் அணிந்த கால் (கால் மட்டும்தான்) அவரை மிதிக்க உயர்ந்திருப்பது போல விளம்பரமிட்டிருந்ததைப் பார்த்து மனம் எகிறியது. நண்பர்கள் கூடிப்பேசினோம். எப்படியும் முதல்நாளே பார்த்துவிட வேண்டுமென்று மனம் துடித்தது. ஆனால் கையில் காசு இல்லை. அதனால் வெள்ளிக்கிழமை போக முடியவில்லை. நண்பர்கள் சிலர் 'எப்படியும் சுற்றியடித்து நம்ம ஏரியா (வடசென்னை) தியேட்டருக்கு வரும் அப்போது பார்த்துக்கொள்ளலாம்' என்றனர். ஆனால் எனக்கு பொறுமையில்லை. இங்கே வரும் என்பது என்ன நிச்சயம்?. ஒருவேளை வராமல் போய்விட்டால்?. வந்த வாய்ப்பை விட்டுவிட முடியுமா?. (அப்போதெல்லாம் படம்பார்க்க தியேட்டரை விட்டால் வேறு வழி கிடையாது).
சனிக்கிழமை காலை தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அப்பாவிடம் போய் விளம்பரத்தைக்காட்டி, படம் பார்க்க பணம் கேட்டேன். (ஒரு மகன் தந்தையிடம் தைரியமாக சினிமாவுக்கு பணம் கேட்கும் அளவுக்கு விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே வந்த தரமான படங்களில் ஒன்றல்லவா இக்காவியம்). படத்தின் விளம்பரத்தைப்பார்த்ததும் அவரும் மறுபேச்சுப் பேசாமல் மூன்று ரூபாயை எடுத்துத்தந்தார். (அப்போது முதல் வகுப்பு டிக்கட் 2.60 ). மீண்டும் விளம்பரத்தைப்பார்த்து எந்த தியேட்டர் என்று உறுதி செய்து கொண்ட அவர், 'இந்தப்படத்துக்குத்தானே போறே?. போய்ட்டு வந்ததும் என்கிட்டே டிக்கட்டைக்காட்டணும்' என்று கண்டிஷன் போட்டார். (பைத்தியக்கார அப்பா, அவரே போகச்சொன்னாலும் இந்தப்படத்தை விட்டு வேறு படத்துக்குப்போக மாட்டேன் என்பது அவருக்குத்தெரியவில்லை).
பிராட்வே பஸ் ஸ்டாப்பில் ஏறி மவுண்ட்ரோடு தபால் நிலையத்தில் இறங்கினால் 25 பைசா டிக்கட். அதுவே பாரீஸ் வரை நட்ந்துபோய் அங்கு ஏறி, Hindu பத்திரிகை அலுவலகம் முன்பு இறங்கினால் டிக்கட் 15 பைசா. சிறிது தூரம் நடந்தாலும் பரவாயில்லையென நாங்கள் இரண்டாவதையே தேர்ந்தெடுத்தோம். மாலைக்காட்சிக்கு நேரமாகிவிட்டதால், ஓட்டமும் நடையுமாக ஓடிச்சென்றால், சித்ரா தியேட்டரின் வாசல்கேட்டில் மாட்டியிருந்த ‘Housefull’ போர்டு எங்களை வரவேற்றது. எங்களுக்கு, குறிப்பாக எனக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. நான் டிக்கட் வாங்கியபின் இந்த போர்டை மாட்டியிருந்தால் என்னைவிட சந்தோஷப்படுபவர் யாரும் இல்லை.
வந்ததற்கு எந்தப்படத்தையாவது பார்த்துவிடவேண்டும் என்று வந்திருந்த நண்பர்கள் உடனடி முடிவெடுத்து, 'சென்னை கங்கை'யின் மறு கரையிலிருந்த கெயிட்டி தியேட்டருக்கு ('குறத்தி மகன்' என்று நினைக்கிறேன்) பார்க்கப் போய்விட்டனர். ஆனால் கப்பலோட்டிய தமிழனைத்தான் பார்க்கவேண்டும் என்று வந்திருந்த நான் மட்டும், கேட்டுக்கு வெளியே கொஞ்சம் நேரம் நின்று, காம்பவுண்டுக்கு மேலே இருந்த தட்டிகளில் ஒட்டப்பட்டிருந்த இரண்டு பிரம்மாண்ட போஸ்ட்டர்களையே சிறிது நேரம் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்து விட்டு மீண்டும் 15 பைசா டிக்கட்டில் வீடு திரும்பினேன்.
பெரிய வால்வு ரேடியோவில் ஏதோ நிகழ்ச்சி கேட்டுக்கொண்டிருந்த அப்பா சற்று ஆச்சரியமாக தலையைத்தூக்கி, 'ஏண்டா, போகலையா?' என்று கேட்டார். 'போனேன்பா, நாங்க போகமுன்னாடியே ஃபுல் ஆயிடுச்சு' என்றதும், 'சரி அப்போ நாளைக்குப்போ' என்றவர் சட்டென்று 'வேணாம், நாளைக்கு இன்னும் கூட்டமாயிருக்கும். திங்களன்னைக்கு ஸ்கூல் விட்டு வந்ததும் போ' என்றார். பணத்தை திருப்பி வாங்கிக்குவாரோ என்று பயந்த எனக்கு குதூகலமாயிருந்தது. எனக்கென்னவோ, தன் மகன் எப்படியாவது இந்தப்படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்று அவரும் ஆர்வமாக இருந்தது போலத்தோன்றியது.
திங்கள் மாலை பள்ளிவிட்டு வந்ததும் தாமதிக்காமல் நான் மட்டும் தனியாக பஸ்ஸில் போனேன். பின்னே, நண்பர்கள்தான் இருந்த காசுக்கு 'குறத்திமகன்' பார்த்துவிட்டனரே. பாலத்தைக்க்டக்கும்போதே தென்பட்ட கூட்டம் மீண்டும் பயத்தைக்கிளப்பியது. இருந்தாலும் கிட்டே போய்ப் பார்த்தபோது சற்று தைரியம் வந்தது. சற்று முன்னமேயே சென்றுவிட்டதால் 2 ரூபாய் டிக்கட்டே கிடைக்கும்போல இருந்தது. சித்ரா தியேட்டரில் 2 ரூபாய் டிக்கட் எத்தனை என்று போர்டில் பார்த்து, அதில் பாதியை பெண்களுக்கு கழித்துவிட்டு, கியூவில் நின்றவர்களை தோராயமாக எண்ணிப் பார்த்ததில், டிக்கட் கிடைக்க வாய்ப்பிருப்பதாகத் தோன்றியது. கவுண்ட்டர் திறந்ததும், வழக்கம்போல பிஸ்த்தாக்கள் ஒரு பத்துபேர் வரிசையில் நடுவில் நுழைந்தனர். அச்சத்துடன் நெருங்கிப்போக, டிக்கட் கிடைத்து விட்டது. மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உடனே உள்ளே போகாமல், எனக்குப்பின் இன்னும் எத்தனை பேருக்கு டிக்கட் கிடைக்கிறதென்று பார்த்துக்கொண்டிருக்க, ஐந்தாறு பேர் வாங்கியதும் கவுண்ட்டர் அடைக்கப்பட்டது. நல்லவேளை 'வஸ்தாதுகள்' இன்னும் ஒரு ஐந்து பேர் நுழைந்திருந்தால் என் கதி அவ்வளவுதான். உள்ளே போய் சீட்டில் கர்சீப் போட்டுவிட்டு, வெளியே வந்து முதல் வகுப்பு பக்கம் போனால், அதுவும் ஃபுல். கடைசி கிளாஸ் டிக்கட் முடிந்ததும் திங்களன்றும் ‘Housefull’ போர்டு போட்டார்கள். சந்தோஷத்துக்குக் கேட்கணுமா?. நிறையப்பேர் இந்தப்படத்தை எதிர்பார்த்திருப்பார்கள் போலும்.
படம் துவங்கியதும் ரொம்ப உணர்ச்சி மயமாகப்போனது. ஆரம்பத்தில் கைதட்டியதுதான். அதன்பிறகு கைதட்டலுக்கெல்லாம் வேலையில்லாமல் அனைவரும் படத்தோடு ஒன்றிப்போனார்கள். ஆனால் கலெக்டர் வின்ச் துரை (எஸ்.வி.ரங்காராவ்) யிடம் நடிகர்திலகம் பேசும்போது, வீரபாண்டிய கட்டபொம்மன் பெயரைக்குறிப்பிட, வின்ச்துரை அதிர்ச்சியுடன் சிதம்பரனாரைப் பார்க்கும்போது அங்கே வ.உ.சி. முகம் மறைந்து கட்டபொம்மன் தெரியுமிடத்தில் கைதட்டலால் தியேட்டரே அதிர்ந்தது.
ஆனால் ஜெமினிகணேஷ் ஏற்றிருந்த மாடசாமி ரோலுக்கு தேவையில்லாமல் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அதிக சீன்களும், ஒன்றுக்கு இரண்டாக டூயட் கொடுத்ததும் அந்த வயதில்கூட எனக்குப்பிடிக்கவில்லை. படத்துக்கு ஸ்பீட் பிரேக்கர்கள் போலத்தோன்றியது.
ஒரு விஷயம் சொன்னால் உங்களில் பெரும்பாலோருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். படத்தின் சென்ஸார் சர்டிபிகேட் காண்பிக்கப்பட்டபோது, Kappalottiya Thamizhan (Part Colour) என்று சர்ட்டிபிகேட்டில் இடம்பெற்றிருந்தது. அதைப்பார்த்து விட்டு, படம் துவங்கியதும் அதை மறந்து போனேன். ஆனால் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது, சிதம்பரனார் சுதேசி கப்பல் கம்பெனிக்காக கப்பலை வாங்கிக்கொண்டு தூத்துக்குடி துறைமுகத்துக்கு வரும் அந்த வரலாற்று நிகழ்வில், கரையிலிருக்கும் திரண்ட கூட்டத்தோடு, பாரதியும், சுப்பிரமணிய சிவாவும் பாட, வ.உ.சி. கப்பலில் கையசைத்துக்கொண்டே வரும் "வெள்ளிப்பனி மலையின் மீதுலாவுவோம்" என்ற பாடல் மட்டும் கேவா கலரில் எடுக்கப்பட்டிருந்தது, ஆச்சரியமாக இருந்தது.
அதன்பிறகு இதுவரை கப்பலோட்டிய தமிழன் படத்தை குறைந்தது 25 முறையாவது பார்த்திருப்பேன். ஆனால் அந்தப்பாடலை கலரில் பார்த்தது அந்த ஒருமுறை மட்டுமே. அதன்பிறகு பார்த்ததபோது படம் முழுக்க கருப்புவெள்ளையில்தான். 1972-ல் முதன்முறையாக நான் பார்த்தபோது திரையிடப்பட்ட அந்த பிரிண்ட், அநேகமாக 1961-ல் படம் ரிலீஸானபோது உருவாக்கப்பட்ட பிரிண்ட்டாக இருக்கலாம். அதன்பிறகு எடுக்கப்பட்ட பாஸிட்டிவ்கள் அனைத்தும் கருப்புவெள்ளையில்தான் எடுக்கப்பட்டது.
வ.உ.சி. சிறைக்குச்செல்லும்போதே கண்களில் நீர்கட்டத்துவங்கி விட்டது. சிறையில் வழங்கப்படும் உணவின் வாடை தாங்காமல், அப்படியே வைத்து விட்டு, ஓட்டைவிழுந்த தகரக்குவளையிலிருந்து தண்ணீர் குடிக்க எடுக்கும்போது, தண்ணீர் முழுவதும் ஓடி, குவளை காலியாக இருக்கும் காட்சியில் கண்ணீர் வடியத்துவங்கியது. செக்கடியில் அவர் கழுத்தில் மாடுகளின் கழுத்தில் பிணைக்கும் சங்கிலியை மாட்டி, சிறைக்காவலன் அவரை அடித்து செக்கிழுக்கச்செய்ய, இவரும் கால்கள் தரையில் இழுபட செக்கிழுக்கும் காட்சியில் கேவிக்கேவி அழத்தொடங்கிவிட்டேன். என் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கிறது. அந்தக்கண்ணீர் வ.உ.சி.யின் தியாகத்துக்கா, நடிகர்திலகத்தின் அர்ப்பணிப்புக்கா, பாரதத்தாயின் அடிமைத்தனத்தை நினைத்தா என்பது தெரியவில்லை. தியேட்டர் முழுவதும் கேவல்கள், விசும்பல்கள்.
(அன்றைய இளம்பிராயத்தில்தான் அப்படியென்றில்லை. இன்றைக்கும் கப்பலோட்டிய தமிழனைப் பார்க்கும்போதெல்லாம், நினைக்கும்போதெல்லாம், ஏன் இப்போது பதிவிட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் அதே நிலைதான்).
படம் முடிந்து பஸ்ஸில்போகும்போதும் கண்ணீர்தான். இரவு சாப்பிடாமலேயே படுத்து விட்டேன். எவ்வளவு நேரம் அழுதேன் என்று தெரியாது. காலையில் கண்விழித்தபோது கண்கள் இரண்டும் சிவந்திருந்தன......
RAGHAVENDRA
24th October 2013, 10:01 PM
கார்த்திக் சார்
தங்களின் மீள் பதிவு மீண்டும் நெஞ்சை நெகிழ வைத்த பதிவு. இப்படத்தை நினைக்கும் போதே நெஞ்சம் உருகுகின்றது. நான் முதன் முதலில் இப்படத்தைப் பார்த்த போது பள்ளிச் சிறுவன். அவ்வளவாக விவரம் தெரியாத வயது. சென்னை மெரினா மைதானத்தில் அப்போது ஒரு மீன் கண்காட்சி acquarium நடைபெற்றது. மாலை வேளைகளில் கேளிக்கைகள் உண்டு. அதில் பொம்மலாட்டம் நடைபெறும். அது முடிந்த பின்னர் திரைப்படம் திரையிடப் படும். அப்படி அங்கு திரையிடப் பட்டு நான் பார்த்தவை இரு படங்கள். ஒன்று அம்பிகாபதி. கலர் பாடல் காட்சிகளுடன். அதே போல் கப்பலோட்டிய தமிழன் திரைப்படம். வெள்ளிப் பனி மலை பாடல் காட்சி கலரில். கட்டபொம்மன் திரைப்படம் எடுக்கப் பட்ட அதே வண்ணம். மிகவும் ரம்மியமாக இருக்கும். அதுவும் அந்த பொம்மலாட்டம் நடைபெறும் போது அம்பிகாபதி படத்தில் இடம் பெற்ற வடிவேலும் மயிலும் துணை பாடல் இசைக்கப் படும்.
இது போன்று திரைப்படம் பார்த்த நினைவுகள் இன்றும் பசுமையாக உள்ளன.
RAGHAVENDRA
24th October 2013, 10:03 PM
கப்பலோட்டிய தமிழன் ... படப்பிடிப்பு நிழற்படம்
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/magazinepages/KOTSHootspotfw_zps38e138eb.jpg
shankarbharath
25th October 2013, 05:07 PM
It is indeed a long time since I posted on Mayyam - and the first thread I visited was the NT section. I understand that from my last post, NT threads have gone on to No.9, then No.10 and now a new one....Karnan padam re-relase pannum podhu vandha vasool, industry jambavaangalai salute adikka vaithadhu....andha madhiri one has to salute the activity and buzz that NT commands even on a forum like this.
I wanted to share a few things with my comrades here - about NT of course. His sheer brilliance is clearly evident in one movie which came in the late 1960s - "Uyarndha Manidhan".
Now as many of you would know, VC Ganesan was a prominent and impactful stage actor before he made his indelible mark on the big screen. In those days, the technology and infrastructure available for plays was very less. Clear acoustics were not available till the 1960s-70s. Stage sets and art direction were pretty much straight forward, until RS Manohar set benchmarks. Similarly, dialogue delivery was considered the clear area of one Mr S S Rajendran, who was respected and is still remembered for his clear diction and dialogues.
But then, no one had owned the most important aspect called acting / facial expressions. This is where NT made it his space. As many of you would know, the early stage dramas had very difficult arrangements - so one had to talk loudly so that the last row audience could hear them. Also, facial expressions had to be exaggerated, so that an expression like Roudram or Sogam could be seen about 15 rows back. That is also the reason why facial makeup was also over the top.
It is in this context that NT had such commanding presence on screen. His voice would just boom across the screen and his face would twitch to show the expression. But many people in my generation felt that NT was actually over-acting or rather, he was exaggerating. This was a clear hangover from the stage days (at least that is what I thought).
And then I saw Uyarndha Manidhan.
This movie nailed it for me. Today, one sees facial expressions of Mohanlal and says "What subtlety". But you need not go beyond UM to see the meaning of subtle. Brilliantly restrained in his portrayal, NT was an absolute marvel, portraying a superbly written character (upper class man, who could not go against his father, sacrifices his love, and lives in guilt, yet mechanically carries on with his married life).
The sheer facial expressions and tone, were all markedly different from what he had portrayed so far. Gone were the booming voices - out came the low volume, refined tones, to depict his expressions. Gone were the thrombing eyebrows and booming face cheeks - out came the "look up and down in one glance" expression. Even his hand holding a pipe - was subtle. There is one superb scene, right at the beginning, where his man servant retires after many years of service. While his man servant is emotional, Sivaji is emotional too - but the way NT shows emotional restraint of the character - phenomenal.
I think UM is one of the all-time great acting performances by any actor. Though we know he received a raw deal by not winning awards, the truth is, it is such a treasure.
uvausan
26th October 2013, 02:32 PM
கப்பலோட்டியாய தமிழன் : என்ன அருமையான பதிவு கார்த்திக் சாரோட தும் கோபால் சாரோட தும் , ராகவேந்திர சாரோட தும் , ராகுல்ராம் சாரோட தும்- படித்துகொண்ட இருக்கலாம் போல் உள்ளது -
என்ன படம் சார் இது !- யாரால் இந்த மாதிரி நடிக்க முடியும் ?? சிறு வயதில் என் பெற்றோர் , தாத்தா , பாட்டியுடன் திரையில் பார்த்த nt படங்களில் இதுவும் ஒன்று - தேச பக்தியே இல்லாதவர்கள் ஒரு முறை இந்த படத்தை பார்த்தால் போதும் - அந்த காலம் எங்கே ! - இந்த காலம் எங்கே ? -
இவர்களை சிறையில் போட்டதனால் - சிறைச்சாலை ஒரு மதிப்பை பெற்றது - இன்றோ அதே சிறை சாலை , பண பேய்களையும் , பதவி பித்தர்களையும் சிறையில் தள்ளி , தான் சம்பாதித்து வைத்திருந்த நல்மதிப்பை தானே கொன்றுவிட்டது .
வ வு சி யை வெள்ளையர்கள் புரிந்து வைத்த அளவு கூட , தமிழக மக்கள் புரிந்து கொள்ள தவறிவிட்டார்கள் - சரியாக புரிந்துகொண்டிருந்தால் இந்த படம் மிக பெரிய வெற்றியை தங்க வைத்துகொண்டிருக்கும் - தமிழகம் எதைத்தான் சரியாக புரிந்துகொண்டு உள்ளது இதை புரிந்துகொள்ள ?!!
Ravi
:):(
RAGHAVENDRA
3rd November 2013, 08:11 AM
கப்பலோட்டிய தமிழன் சிறப்பு செய்திகள்
* இந்திய அரசினால் வரி விலக்கு சலுகை அளிக்கப் பட்ட முதல் தமிழ்த் திரைப்படம்
* மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கவிதைகளைத் திரைப்பாடல்களாகப் பயன்படுத்திய படம்
* முதல் வெளியீட்டில் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என்று சொல்லப் பட்டாலும், இலங்கையில் வெற்றி பெற்ற படம், கொழும்பு கிங்ஸ்லி மற்றும் யாழ் வின்சர் திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது. அது மட்டுமின்றி பின்னாட்களில் மறு வெளியீட்டில் திரையிட்ட இடங்களிலெல்லாம் மிகப் பெரிய வெற்றி பெற்று விநியோகஸ்தர்களுக்கு வசூலை வாரி வழங்கியது.
RAGHAVENDRA
3rd November 2013, 08:15 AM
கப்பலோட்டிய தமிழன் காணொளிகள்
முழுப்படம்
http://youtu.be/9T-RK6aTUEI
வெள்ளிப் பனி மலையின் மூதுலவுவோம்
http://youtu.be/skpI1Gl5cus
தன்னுடைய நடையிலேயே காண்போர் கண்களைக் குளமாக்கி நெஞ்சை நெகிழ வைக்கும் நடிகர் திலகத்தின் உன்னத நடிப்பிற்கு
நெஞ்சில் உரமும் இன்றி
http://youtu.be/mz6bkZvpq-Q
இசை மேதை ஜி.ராமநாதனின் காலத்தைக் கடந்து நிற்கும் இனிமையான பாடல்
காற்று வெளியிடைக் கண்ணம்மா
http://youtu.be/tVneworNKfI
என்று தணியும் இந்த சுதந்திர தாகம் வ.உ.சி.யின் மரணப் படுக்கைக் காட்சி
http://youtu.be/-Pa1M7NnQDw
சின்னக் குழந்தைகள் போல் விளையாடி
http://youtu.be/gRRSeN5SA4Q
RAGHAVENDRA
3rd November 2013, 11:09 AM
Sivaji Ganesan Filmography Series
75. பார்த்தால் பசி தீரும்Parthal Pasi Theerum
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/PPTReleaseAdfw_zps135acc96.jpg
தணிக்கை 08.01.1962
வெளியீடு 14.01.1962
நடிக நடிகையர்
[இத்திரைப்படத்தின் டைட்டில் கார்டில் நடிக நடிகையரின் பெயர்கள் இடம் பெறாமல், உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடித்த எனக் குறிப்பிடப் பட்டிருக்கும்.]
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, சௌகார் ஜானகி, சரோஜா தேவி, கமலஹாசன், கே.ஏ.தங்கவேலு, எம்.சரோஜா, சி.கே.சரஸ்வதி, காதர் மற்றும் பலர்
கதை ஏ.சி. திருலோக்சந்தர்
வசனம் – ஆரூர்தாஸ்
பாடல்கள் – கண்ணதாசன்
பின்னணி பாடியவர்கள் – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, ஏ.எல்.ராகவன்
இசை – மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராம்மூர்த்தி
ஒளிப்பதிவு – ஜி. விட்டல் ராவ்
எடிட்டிங் ஏ.பீம்சிங், பால் துரை சிங்கம், ஆர். திருமலை
கலை – ஆர் சாந்தா ராம்
தயாரிப்பு சி.ஆர். பஸவ ராஜா
இணைத் தயாரிப்பு – ஏவி.எம். சரவணன்
திரைக்கதை இயக்கம் ஏ. பீம்சிங்
வெற்றி நடை போட்ட அரங்குகள்
சேலம் ஓரியண்டல் – 105 நாட்கள்
கொழும்பு கிங்ஸ்லி – 102 நாட்கள்
யாழ்ப்பாணம் வெலிங்டன் – 102 நாட்கள்
மதுரை சென்ட்ரல் – 100 நாட்கள்
ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/PPTAd1-1_zps49073d1c.jpg
RAGHAVENDRA
3rd November 2013, 11:10 AM
சிறப்புச் செய்திகள்
1. கமலஹாசன் நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்த முதல் படம்.
2. குழந்தை நட்சத்திரமாக இரட்டை வேடத்தில் நடித்த படம்.
3. ஏ.சி. திருலோக் சந்தர் நடிகர் திலகத்துடன் இணைந்து பணியாற்றிய முதல் படம்.
RAGHAVENDRA
3rd November 2013, 11:11 AM
பாடல்கள்
மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராம மூர்த்தியின் புகழ் மகுடத்தில் ஓர் வைரக்கல் இத்திரைப்படம்
http://i.ytimg.com/vi/3pSAG6xuBMg/0.jpg
அன்று ஊமைப் பெண்ணல்லோ – ஏ.எல். ராகவன், பி.சுசீலா, குழு
பார்த்தால் பசி தீரும் – பி.சுசீலா
யாருக்கு மாப்பிள்ளை யாரோ – பி. சுசீலா
கொடியசைந்த்தும் காற்று வந்த்தா – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
உள்ளம் என்பது ஆமை – டி.எம்.சௌந்தர்ராஜன்
பிள்ளைக்குத் தந்தை ஒருவன் – டி.எம்.சௌந்தர்ராஜன்
RAGHAVENDRA
3rd November 2013, 11:13 AM
காட்சிகள்
முழுப்படமும் காண
http://youtu.be/pYRuGPI9kiM
பார்த்தால் பசி தீரும்
http://youtu.be/7KNmQ95kVn8
யாருக்கு மாப்பிள்ளை யாரோ
http://youtu.be/0rhppawuw9U
சரோஜா தேவியின் நடனக் காட்சி
http://youtu.be/UUiDa6eRtsw
அன்று ஊமைப் பெண்ணல்லோ
http://youtu.be/a0nMyZLFSQc
கொடி அசைந்ததும்
http://youtu.be/eT1LrnhwVGY
உள்ளம் என்பது ஆமை
http://youtu.be/96unpDLKjn8
அன்று ஊமைப் பெண்ணல்லோ - மறுமுறை
http://youtu.be/BrfkeFSt0LQ
பிள்ளைக்குத் தந்தை ஒருவன்
http://youtu.be/5tE8fNfCOUM
KCSHEKAR
3rd November 2013, 12:49 PM
கப்பலோட்டிய தமிழன்
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளை படங்களில் ஒன்று
இன்றும் ஒரு iconic status கொண்ட படம்
டியர் ராகுல்ராம் சார்,
கப்பலோட்டிய தமிழன் குறித்த தங்களது விமர்சனம் நன்று.
KCSHEKAR
3rd November 2013, 01:03 PM
Re-Submission of my previous post about my First Experience with ‘Kappalottiya Thamizhan’
படத்தின் சென்ஸார் சர்டிபிகேட் காண்பிக்கப்பட்டபோது, Kappalottiya Thamizhan (Part Colour) என்று சர்ட்டிபிகேட்டில் இடம்பெற்றிருந்தது. "வெள்ளிப்பனி மலையின் மீதுலாவுவோம்" என்ற பாடல் மட்டும் கேவா கலரில் எடுக்கப்பட்டிருந்தது, ஆச்சரியமாக இருந்தது.
படம் முடிந்து பஸ்ஸில்போகும்போதும் கண்ணீர்தான். இரவு சாப்பிடாமலேயே படுத்து விட்டேன். எவ்வளவு நேரம் அழுதேன் என்று தெரியாது. காலையில் கண்விழித்தபோது கண்கள் இரண்டும் சிவந்திருந்தன......
டியர் கார்த்திக் சார்,
இதுவரை தாங்கள் பதிவிட்டுவந்த தியேட்டர் முதல் நாள் அனுபவங்களில்
கப்பலோட்டிய தமிழன் குறித்த தங்களது விமர்சனம் மிகவும் வித்தியாசமானது. இதுவரை ஜாலியாக உங்கள் அனுபவங்களைப் படித்த எனக்கு, கப்பலோட்டிய தமிழன் அனுபவம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது.
கப்பலோட்டிய தமிழனை கலரில் கண்டுகளித்த தங்களுடைய அனுபவங்களைப் படிக்கும்போதே மெய்சிலிர்க்கிறது.
நன்றி.
KCSHEKAR
3rd November 2013, 01:14 PM
டியர் ராகவேந்திரன் சார்,
கப்பலோட்டிய தமிழன் குறித்த தங்களின் தகவல்கள், காட்சி இணைப்புகள் அருமை.
Trailor , சிறப்பு தகவல்கள், முழு விபரங்கள், காணொளிக் காட்சிகளுடன் தங்களுடைய பார்த்தால் பசிதீரும் பதிவு மிகவும் சிறப்பு.
பதிவுகளுக்கும், பார்த்தால் பசிதீரும் தாங்கள் அளிக்கவிருக்கும் தகவல்களுக்கும் பாராட்டுக்கள்,
நன்றி.
rsubras
12th November 2013, 02:45 PM
Sivaji Ganesan Filmography Series
75. பார்த்தால் பசி தீரும்Parthal Pasi Theerum
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/PPTReleaseAdfw_zps135acc96.jpg
தணிக்கை 08.01.1962
வெளியீடு 14.01.1962
நடிக நடிகையர்
[இத்திரைப்படத்தின் டைட்டில் கார்டில் நடிக நடிகையரின் பெயர்கள் இடம் பெறாமல், உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடித்த எனக் குறிப்பிடப் பட்டிருக்கும்.]
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, சௌகார் ஜானகி, சரோஜா தேவி, கமலஹாசன், கே.ஏ.தங்கவேலு, எம்.சரோஜா, சி.கே.சரஸ்வதி, காதர் மற்றும் பலர்
கதை ஏ.சி. திருலோக்சந்தர்
வசனம் – ஆரூர்தாஸ்
பாடல்கள் – கண்ணதாசன்
பின்னணி பாடியவர்கள் – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, ஏ.எல்.ராகவன்
இசை – மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராம்மூர்த்தி
ஒளிப்பதிவு – ஜி. விட்டல் ராவ்
எடிட்டிங் ஏ.பீம்சிங், பால் துரை சிங்கம், ஆர். திருமலை
கலை – ஆர் சாந்தா ராம்
தயாரிப்பு சி.ஆர். பஸவ ராஜா
இணைத் தயாரிப்பு – ஏவி.எம். சரவணன்
திரைக்கதை இயக்கம் ஏ. பீம்சிங்
வெற்றி நடை போட்ட அரங்குகள்
சேலம் ஓரியண்டல் – 105 நாட்கள்
கொழும்பு கிங்ஸ்லி – 102 நாட்கள்
யாழ்ப்பாணம் வெலிங்டன் – 102 நாட்கள்
மதுரை சென்ட்ரல் – 100 நாட்கள்
what is the relevance of the title with respect to the film, have seen the film (watched it very long ago) but could not get the context of the title... not sure if I missed it in the film........ :)
SejkoRau
22nd November 2013, 02:09 PM
what is the relevance of the title with respect to the film, have seen the film (watched it very long ago) but could not get the context of the title... not sure if I missed it in the film........ :)
At one stage, all those who were related to each other will miss each other for a long time. The title conveys the feeling of each character as to how they feel about whom they miss ! Each of them thinks, Paarthaal Pasitheerum !
Regards
parthasarathy
22nd November 2013, 02:16 PM
At one stage, all those who were related to each other will miss each other for a long time. The title conveys the feeling of each character as to how they feel about whom they miss ! Each of them thinks, Paarthaal Pasitheerum !
Regards
Savithri, the actual heroine of the movie (confusion is due to 3 top heroines in the film - in fact, because of the fight between these 3, the title card says "ungal abimaana nakshathirangal nadikkum") would yearn to see her beloved husband (Gemini), who not only loses him but also her eyes. It is this yearning, which is the relevance to the title, which is relevant.
Regards,
R. Parthasarathy
RAGHAVENDRA
17th March 2014, 08:18 AM
Sivaji Ganesan Filmography Series
76. நிச்சய தாம்பூலம் Nichaya Thamboolam
http://1.bp.blogspot.com/_2I2hYF2DQtI/TGwoqclbxHI/AAAAAAAAB-Y/MKa28Mjip0o/s1600/Nichaya+Thamboolam_Pavadai+thaniyil_tamilhitsongs. blogspot.com.VOB_thumbs_%5B2010.08.19_00.07.50%5D. jpg
தணிக்கை 19.01.1962
வெளியீடு 09.02.1962
தயாரிப்பு விக்ரம் ப்ரொடக்ஷன்ஸ்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜமுனா, பி.கண்மாம்பா, எம்.என்.நம்பியார், எஸ்.வி.ரங்காராவ், வி.நாகையா, டி.எஸ்.துரைராஜ், எஸ்.ராமராவ், ராஜஸ்ரீ, மாலதி, ஜோதி,
வசனம் விருதை ராமசாமி
பாடல்கள் கண்ணதாசன்
இசை விஸ்வநாதன் ராம்மூர்த்தி
பின்னணி பாடியவர்கள் – டி.எம்.சௌந்தர்ராஜன், எஸ்.சி.கிருஷ்ணன், பி.சுசீலா, ராஜேஸ்வரி
நடனம் ஏ.கே. சோப்ரா
கலை வாலி
செட்டிங்ஸ் டி.எஸ்.முனுசாமி
ஸ்டூடியோஸ் விக்ரம் ஸ்டூடியோஸ், சென்னை
ஆர் சி ஏ முறையில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது
ஸ்டூடியோ நிர்வாகம் எஸ்.ஏ. நடராசன்
ஸ்டில்ஸ் எம்.கே.சாமி
எலெக்ட்ரீஷியன்ஸ் – நடேசன், காளத்தி
புரோஸ்ஸிங் – பி.கோபிநாதன், கே.எஸ்.பால கிருஷ்ணன், டி.கே. ரங்கராஜன், விக்ரம் ஸ்டூடியோஸ் லாபரெட்டரீஸ் பி.லிட்.
ஸ்டண்ட் சோமு அண்ட் பார்ட்டி
புரொடக்ஷன் நிர்வாகம் வி.கே.சீனிவாசன்
ப்ப்ளிசிட்டீஸ் – பக்தா, ஆர்ட்ஸ் அண்ட் கம்பெனி, எம்.ஆர்.எஸ்.மணி, பிளட்லேப்
ஒப்பனை – கே.வி.சொர்ணப்பா, ரங்கசாமி, பீதாம்பரம், நாகேஸ்வர ராவ், கே.வி. சண்முகம்
உடை – வி.என். மூர்த்தி, ராமகிருஷ்ணன்
எடிட்டிங் பி.ஜி.மோகன், எம்.தேவேந்திர நாத்
ஒலிப்பதிவு டைரக்டர் என்.சேஷாத்ரி
சௌண்ட் ரிக்கார்டிஸ்ட் பி.எஸ்.சாமண்ணா, கேஸ்ரீகண்ட்
காமேராமேன் – ஜீ.வி. ரமணி
உதவி டைரக்ஷன் – பி.எஸ்.சுப்ரமணியம்
தயாரிப்பு டைரக்ஷன் – பி.எஸ்.ரங்கா
RAGHAVENDRA
17th March 2014, 08:20 AM
மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராம மூர்த்தியின் புகழ் மகுடத்தில் ஓர் வைரக்கல் இத்திரைப்படம்
http://i.ytimg.com/vi/3pSAG6xuBMg/0.jpg
பாடல்கள்
1. நெத்தியிலே ஒரு குங்குமப் பொட்டு
2. மாலை சூடும் மணநாள்
3. ஆண்டவன் படைச்சான்
4. பாவாடை தாவணியில்
5. படைத்தானே
6. இது வேறுலகம்
7. நீ நடந்தால் என்ன
RAGHAVENDRA
17th March 2014, 08:21 AM
சிறப்புச் செய்திகள்
1. தெனாலி ராமன் திரைப்படத்தைத் தயாரித்த விக்ரம் புரொடக்ஷன்ஸ் நடிகர் திலகத்தை கதாநாயகனாக நடிக்க வைத்துத் தயாரித்த மற்றொரு படம் நிச்சய தாம்பூலம்.
2. இப்படத்திற்காக பதிவு செய்யப் பட்ட பாடினார் கவிஞர் பாடினார் என்ற பாடல் இதில் இடம் பெறவில்லை. பின்னர் தென்றல் வீசும் திரைப்படத்தில் சேர்க்கப் பட்டது.
3. மெல்லிசை மன்னர்களின் இசை வரலாற்றில் தனியிடம் பெற்ற திரைப்படம் நிச்சய தாம்பூலம். குறிப்பாக இது வேறுலகம் பாடலுக்கான பின்னணி இசையில் பல புதுமையான இசை நுணுக்கங்களைப் பயன் படுத்தியிருப்பார்கள்.
4. கனவுக் காட்சியில் தத்துவப் பாடலை நடிகர் திலகம் பாடுவதாக அமைந்த பாடல்களில் படைத்தானே பாடலை முன்னோடி எனலாம். ஒரு மனிதன் கவலையில் இருக்கும் போது அதுவே அவனுக்குக் கனவிலும் வந்து துன்புறுத்தும் என்ற இயற்கையான நியதியை அடிப்படையாக வைத்து எடுக்கப் பட்ட பாடல். கனவுக்காட்சியில் சோகமும் தத்துவமும் உள்ளதாக வரும் பாடல்கள் படங்களில் இடம் பெற்றது நடிகர் திலகத்தின் படங்களில் தான் அதிகம் என்பதே அவருடைய சிறப்பைக் குறிப்பதாகும்.
5. மறு வெளியீடுகளில் மிகச் சிறப்பான வசூலை வாரிக் குவிக்கும் நடிகர் திலகத்தின் ஏராளமான படங்களில் நிச்சய தாம்பூலம் குறிப்பிடத் தக்கதாகும். குறிப்பாக பாடல் காட்சிகள் ரசிகர்களுக்குத் திகட்டாத தேனமுதாக மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் அமைந்த்து இப்படத்திற்குத் தனிச் சிறப்பு.
6. படைத்தானே பாடல் காட்சி படமாக்கப் பட்ட விதம் இன்றும் புதுமையாக இருப்பதும் குறிப்பிடத் தக்கதாகும். வாழ்க்கையின் த்த்துவத்தை இப்பாடல் காட்சியின் பின்னணி அரங்க அமைப்பு மிகத் தெளிவாக எடுத்துரைக்கும். இக்காட்சியில் அரங்க அமைப்பாளருக்கு நமது பாராட்டுக்கள். ஸ்டைல் என்ற வார்த்தைக்கு நடிகர் திலகம் அளித்துள்ள எண்ணற்ற பரிமாணங்களில் இப்பாடல் காட்சி குறிப்பிடத் தக்கதாகும்.
RAGHAVENDRA
17th March 2014, 08:21 AM
காணொளிகள்
பாவாடை தாவணியில்
http://youtu.be/wi-G7fvgZ7g
படைத்தானே
http://youtu.be/idjXZjHiV34
இது வேறுலகம்
http://youtu.be/3IykAnO7Qw8
மாலை சூடும் மணநாள்
http://youtu.be/7zRfhAMqOKA
ஆண்டவன் படைச்சான்
http://youtu.be/q--oOSZlz-g
முழுத்திரைப்படம்
http://youtu.be/2AR_3V7LUWA
JamesFague
17th March 2014, 02:14 PM
Thanks Mr Raghavendra Sir for your post in continuing this golden thread
and I am really glad to see your post. Pls contine your unfinished task for
the benefits for millions of NT's Fans.
Regards
RAGHAVENDRA
18th March 2014, 07:22 AM
மிக்க நன்றி சென்னை வாசு சார். இத்திரியின் மீதமிருக்கும் படங்கள் இனி வரும் நாட்களில் இடம் பெறும்.
RAGHAVENDRA
18th March 2014, 08:07 AM
Sivaji Ganesan Filmography Series
77. வளர்பிறை Valar Pirai
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/valarpiraiPP01_zpsde54486a.jpg]
நிழற்படத்திற்கு நன்றி ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்.
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMADS/valarpiraiadfw_zps523b0c24.jpg
தணிக்கை 20.03.1962
வெளியீடு 30.03.1962
தயாரிப்பு பத்மா பிலிம்ஸ்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, சரோஜா தேவி, எம்.வி.ராஜம்மா, வி.நாகையா, கே.ஏ.தங்கவேலு, நாகேஷ், லீலாவதி, எம்.சரோஜா, சாயிராம், சி.கே.சரஸ்வதி மற்றும் பலர்
மூலக்கதை – ஏ.எஸ். நாகராஜன்
கதை வசனம் – ஜாவர் சீதாராமன்
பாடல்கள் – கவிஞர் கண்ணதாசன்
சங்கீதம் – கே.வி.மகாதேவன்
பின்னணி பாடியவர்கள் – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, பி.லீலா, எல்.ஆர்.ஈஸ்வரி
ஒளிப்பதிவு – W.R.சுப்பாராவ்
வசனம் ஒலிப்பதிவு – நரசிம்ம மூர்த்தி
பாடல்கள் ரீரிக்கார்டிங் ஒலிப்பதிவு – T.S..ரங்கசாமி
டைரக்ஷன் – D. யோகானந்த்
ஸ்டூடியோ – வாஹினி, விஜயா, நெப்டியூன்
RAGHAVENDRA
18th March 2014, 08:08 AM
http://1.bp.blogspot.com/-N3Bj0rfFCWk/Ut4uTMdizaI/AAAAAAAALeY/zPjVLiiZysk/s1600/KV+Mahadevan.JPG
பாடல்களின் விவரங்கள்
1. பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு – டி.எம்.சௌந்தர்ராஜன்
2. சலசலக்குது காத்து – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
3. நாவல் பழத்திலேயும் – பி.லீலா, எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினர்
4. கூண்டு திறந்த்தம்மா – டி.எம்.சௌந்தர்ராஜன்
5. மௌனம் மௌனம் மௌனத்தினாலே – பி.சுசீலா
6. நான்கு சுவர்களுக்குள் – பி.சுசீலா
7. பச்சைக் கொடியில் மழை விழுந்து – பி.சுசீலா
RAGHAVENDRA
18th March 2014, 08:08 AM
வளர்பிறை சிறப்புச் செய்திகள்
1. நடிகர் திலகம் ஊமையாக நடித்த உன்னதத் திரைக்காவியம்.
2. சரோஜா தேவியின் மிகச் சிறந்த நடிப்பிற்கு மற்றொரு சான்று வளர்பிறை.
3. திரை இசைத் திலகம் கே.வி.எம். அவர்களின் இசையில் ஒவ்வொரு பாடலும் காலத்தை நின்று நிற்கும் சிரஞ்சீவித்துவம் வாய்ந்தவை. குறிப்பாக சலசலக்குது காத்து பாடல் காட்சி நெஞ்சில் நீங்கா இடம் பெற்று விடும். இதே போல் கூண்டு திறந்ததம்மா பாடல் காட்சியும் உலகத்திலேயே சிறந்த நடிகராக நடிகர் திலகம் ஏன் விளங்குகிறார் என்பதற்கான அத்தாட்சியாகும்.
4. கண்ணதாசனின் வரிகள் இன்றைக்கும் பொருந்தும் அளவில் தீர்க்க தரிசனமாக சமுதாயத்தில் மக்களின் மனநிலை எப்படியெல்லாம் இருக்கும் என்பதை எடுத்துக் கூறும்.
RAGHAVENDRA
18th March 2014, 08:09 AM
வளர்பிறை பாடல்களை இணையத்தில் கேட்க
http://www.inbaminge.com/t/v/Valarpirai/
RAGHAVENDRA
19th March 2014, 09:34 AM
Sivaji Ganesan Filmography Series
78. படித்தால் மட்டும் போதுமா PadithalMattumPodhuma
http://4.bp.blogspot.com/-DP8geOhwP2E/Ua7TK5v4III/AAAAAAAAAQc/-1ophvvZTY4/s1600/PadithalMattumPothma.jpg
வெளியீடு 14.04.1962
தயாரிப்பு – ரங்கநாதன் பிக்சர்ஸ்
திரைக்கதை, படத்தொகுப்பு மற்றும் இயக்கம் – ஏ. பீம்சிங்
கதை தாராசங்கர் பந்தோபத்யாயா
வசனம் – ஆரூர்தாஸ்
ஒளிப்பதிவு – ஜி. விட்டல் ராவ்
இசை – மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி
நடிக நடிகையர் – சிவாஜி கணேசன், கே.பாலாஜி, எம்.ஆர்.ராதா, சாவித்திரி, ராஜ சுலோச்சனா, கண்ணாம்பா, எம்.வி.ராஜம்மா, முத்துராமன், ஏ.கருணாநிதி மனோரமா, மற்றும் பலர்
பாடல்களின் விவரங்கள்
1. ஓஹோஹோ மனிதர்களே – கண்ணதாசன் – டி.எம்.சௌந்தர்ராஜன்
2. நல்லவன் எனக்கு நானே நல்லவன் – கண்ணதாசன் டி.எம்.சௌந்தர்ராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ் மற்றும் குழு
3. பொன் ஒன்று கண்டேன் – கண்ணதாசன் – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ்
4. தண்ணிலவு தேனிறைக்க – பூலாங்குளம் மாயவநாதன் – பி.சுசீலா
5. நான் கவிஞனும் இல்லை – கண்ணதாசன் – டி.எம்.சௌந்தர்ராஜன்
6. கோமாளி கோமாளி கோமாளி – கண்ணதாசன் – பி.பி.ஸ்ரீநிவாஸ், ஜி.கே. வெங்கடேஷ், ஏ.எல். ராகவன்
7. அண்ணன் காட்டிய வழியம்மா – கண்ணதாசன் – டி.எம்.சௌந்தர்ராஜன்
RAGHAVENDRA
20th March 2014, 10:00 PM
முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 31.3.1962
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5720-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 8.4.1962
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5719-1.jpg[img]
முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 13.4.1962
[img]http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5721-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 5.5.1962
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5722-1.jpg
50வது நாள் விளம்பரம் : The Hindu : 2.6.1962
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5723-1-1.jpg
10வது வார விளம்பரம் : The Hindu : 17.6.1962
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5724-1.jpg
75வது நாள் விளம்பரம் : The Hindu : 27.6.1962
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5725-1.jpg
75வது நாள் விளம்பரம் : தினத்தந்தி(மதுரை) : 27.6.1962
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5726-1.jpg
14வது வார விளம்பரம் : தினத்தந்தி(சென்னை) : 20.7.1962
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5727-1.jpg
100வது நாள் விளம்பரம் : The Hindu : 22.7.1962
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/PMP100-1.jpg
குறிப்பு:
அ. இக்காவியம் 100 நாள் விழா கொண்டாடிய அரங்குகள்:
1. சென்னை - மிட்லண்ட் - 105 நாட்கள்
2. சென்னை - பிராட்வே - 104 நாட்கள்
3. மதுரை - நியூசினிமா - 112 நாட்கள்
4. திருச்சி - ராஜா - 105 நாட்கள்
5. சேலம் - ஓரியண்டல் - 100 நாட்கள்
ஆ. சென்னை 'சயானி'யில் 84 நாட்கள் மற்றும் தென்னகமெங்கும் பல அரங்குகளில் 50 நாட்கள் முதல் 70 நாட்கள் வரை ஓடி ஜெயக்கொடி நாட்டிய "படித்தால் மட்டும் போதுமா", ஒரு சூப்பர்ஹிட் காவியம்.
மேற்காணும் தகவல்கள் மற்றும் நிழற்படங்கள் உபயம் ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்.
uvausan
25th March 2014, 04:43 PM
அருமை ராகவேந்திரா சார் - உங்களை பார்த்து எவ்வளவு தான் நாங்கள் கோடுகள் போட்டு கொண்டாலும் - புலியாக கத்த முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன் - பூனையாக இருந்தாலும் இந்த திரியில் இருப்பதற்காக பெருமை படுகிறேன் - உங்கள் பதிவுகளை படிப்பதில் பூரிப்பு அடைகிறேன் - தொடருங்கள்
அன்புடன் ரவி
:smile2::smokesmile:
Gopal.s
8th April 2014, 08:36 AM
படித்தால் மட்டும் போதுமா? 1962
எனக்கு மட்டுமல்ல ,பல சிவாஜி ரசிகர்களின் சிறந்த வரிசையில் ,நிச்சயம் இடம் பிடித்திருக்கும்.
அற்புதமான,புதுமையான வங்காள கதை களம் . பீம்சிங் ,ஆரூர்தாசை சரியாக வேலை வாங்கி இருப்பார்.(அளவோடு) .பாடல்கள் ஓஹோ ரகம்.(மாயவ நாதனின் தண்ணிலவு முதல் இடம்)
இந்த மாதிரி மேக் அப் உடன் நடிக்கவே ,ஒரு துணிவு வேண்டும்.தமிழ் பட உலகின் முதல் இட ஸ்டார் எத்தனை துணிச்சல் இருந்தால் இதை செய்வார்?
இந்த பட கோபால், பணக்காரனுக்குரிய தோரணை,வேட்டை காரனுக்குரிய தடாலடி(சிறிதே செயல் கோபம்),படிக்காததினால் ஒரு தயக்கம் கலந்த தாழ்வுணர்வு (மனைவியின் உதாசீனத்தில் இன்னும் கூடும்),மற்றவர்களின் மீது இயல்பான வாஞ்சை,அக்கறை,என்று ஒரு கலவையான ,கனமான பாத்திரம். இது என்ன பெரிய கனம் என்று சுகமான சுமையாக ஊதி தள்ளுவார் அற்புதமாய்.
நல்லவன்,நான் கவிஞனுமில்லை,பொன்னொன்று பாடல்களை முரளி,சாரதி அலசி விட்டார்கள்.
இந்த படத்தின் highlight ,கடைசி பதினைந்து நிமிடங்கள் (இறுதி காட்சி வரை) வசனமே இல்லாமல் (NT க்கு) படம் நகரும். ஒரு magic போல படம் இறுதியை அடையும்.
பார்த்தே ஆக வேண்டிய பா வரிசை.
RAGHAVENDRA
15th April 2014, 08:38 AM
Sivaji Ganesan Filmography Series
79. பலே பாண்டியா Bale Pandiya
http://tamilnation.co/images/hundredtamils/sivaji/balae%20pandiya.jpg
தணிக்கை 01.05.1962
வெளியீடு 26.05.1962
தயாரிப்பு – B.R. பந்துலு, பத்மினி பிக்சர்ஸ்
மூலக்கதை – மா.ரா., ஜோஷி
திரைக்கதை – தாதா மிராஸி
வசனம் – மா.ரா
பாடல்கள் – கவிஞர் கண்ணதாசன்
இசை – விஸ்வநாதன் – ராம மூர்த்தி
டைரக்ஷன் - B.R. பந்துலு
நடிக நடிகையர் [பாட்டுப் புத்தகத்தில் உள்ளவாறு]
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – அப்பாவி பாண்டியன், ரௌடி மருது, விஞ்ஞானி சங்கர்
நடிகவேள் எம்.ஆர்.ராதா – தனவந்தர் அமிர்தலிங்கம் பிள்ளை, கள்ளர் தலைவன் கபாலி
பாலாஜி, தேவிகா, சந்தியா, வசந்தி, எம்.எஸ்.எஸ்.பாக்கியம், எம்.ஆர்.சந்தானம், கே.வி.சீனிவாசன், தங்கராஜ், எஸ்.ஏ.ஜி.சாமி,
மல்யுத்தம் – கோபராஜ் குழு
ஒளிப்பதிவு வி.ராம மூர்த்தி
ஒலிப்பதிவு – பாடல்கள், ரீரிக்கார்டிங் – பி.வி. கோடீஸ்வர ராவ்
ஒலிப்பதிவு – வசனம் – டி.வி.நாதன், எம்.சிவராவ், பத்மினி பிக்சர்ஸ்
ஒப்பனை – ஹரிபாபு, ஆர்.ரங்கசாமி, கஜபதி, எம்.கே.சீனிவாசன், பத்ரையா, எஸ்.பார்த்தசாரதி, எம்.ராமசாமி
கலை – எம்.வர்தூர்கர்
எடிட்டிங் – ஆர்.தேவராஜன்
ஆடை அலங்காரம் – பி.ராமகிருஷ்ணன்
அரங்க நிர்மாணம் – என்.கிருஷ்ணன், வி. கண்ணன்
அரங்க ஓவியம் – ஆர்.முத்து, ஆர்.ராதாகிருஷ்ணன்
அரங்க அலங்கார பொருட்கள் சினி கிராப்ட்ஸ், டாக்டர் கிரி மியூஸியம்
அரங்க உதவி – எம்.சுப்ரமணியம், எம். மணி
புகைப்படம் – ஆர். வெங்கடாச்சாரி
எலக்ட்ரீஷியன் டி.எம்.தட்சிணா மூர்த்தி
ஸ்டூடியோ பரணி, நிர்வாகம் – ஏ.எல்.எஸ்.ப்ரொடக்ஷன்ஸ், அருணாச்சலம் ஸ்டூடியோஸ்
ப்ராஸஸிங் – விஜயா லேபரட்டரி, by வி.டி.எஸ்.சுந்தரம்
Recorded on Westrex & Stancil Hoffman Sound Systems
தயாரிப்பு நிர்வாகம் – கே. ராகவன்
பாடல்கள் உதவி – பஞ்சு அருணாச்சலம்
இசை உதவி – வெங்கடேஷ்
உதவி டைரக்ஷன் – கே.சிங்கமுத்து, இரா. சண்முகம், மதுரை எம்.ஆர்.கணேசன், பழ.செல்வராஜ்
பலே பாண்டியா விளம்பர, விமர்சன நிழற்படங்கள் - ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து ..
பொக்கிஷப் புதையல்
காவிய விளம்பரம் : சுதேசமித்ரன் : 8.3.1962
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5817-1.jpg
முதல் வெளியீட்டு [இன்று முதல்] விளம்பரம்: சுதேசமித்ரன் : 26.5.1962
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5816-1.jpg
முதல் வெளியீட்டு [Full Prints] விளம்பரம்: The Hindu : 9.6.1962
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5818-1.jpg
குறிப்பு:
பதினோரு நாட்களில் எடுக்கப்பட்ட "பலே பாண்டியா", சென்னை மற்றும் தென்னகமெங்கும், பல அரங்குகளில், 7 வாரங்கள் [49 நாட்கள்] ஓடி, நல்ல வெற்றி கண்டது.
காவிய விமர்சனம் : ஆனந்த விகடன் : 1962
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5826-1.jpg
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5827-1.jpg
RAGHAVENDRA
15th April 2014, 08:41 AM
பலே பாண்டியா பாடல்கள்
1. வாழ நினைத்தால் வாழலாம் – கண்ணதாசன் – t.m.s., p.s.
2. நான் என்ன சொல்லி விட்டேன் கண்ணதாசன் – t.m.s.
3. யாரை எங்கே வைப்பது என்று - கண்ணதாசன் – t.m.s.
4. நீயே உனக்கு என்றும் நிகரானவன் – கண்ணதாசன் – t.m.s., m.ராஜு
5. ஆதி மனிதன் காதலுக்குப் பின் – கண்ணதாசன் – p.b.s., k.ஜமுனா ராணி
6. அத்திக்காய் காய் – கண்ணதாசன் - t.m.s., p.s. P.b.s., k.ஜமுனா ராணி
7. வாழ நினைத்தால் வாழலாம் – பி. சுசீலா
8. அத்திக்காய் காய் – கண்ணதாசன் - t.m.s., p.s. P.b.s., k.ஜமுனா ராணி, எம்.ராஜு
RAGHAVENDRA
15th April 2014, 08:42 AM
பலே பாண்டியா திரைப்பட நிழற்படங்களுக்கான இணைப்பு... உபயம் நிழற்படத் திலகம் நெய்வேலி வாசு சார்
http://www.mayyam.com/talk/showthread.php?8593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-9&p=870840&viewfull=1#post870840
http://www.mayyam.com/talk/showthread.php?8593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-9&p=870853&viewfull=1#post870853
RAGHAVENDRA
15th April 2014, 08:45 AM
பலே பாண்டியா திரைப்படத்தைப் பற்றிய முரளி சாரின் கட்டுரை ... மீள் பதிவ
இணைப்பு 1 - http://www.mayyam.com/talk/showthread.php?5865-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-(Part-3)&p=264028&viewfull=1#post264028
பலே பாண்டியா
தயாரிப்பு: பத்மினி பிக்சர்ஸ்
இயக்கம்: பந்துலு
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
வெளியான தேதி : 26.05.1962
கட்டபொம்மன் மற்றும் கப்பலோட்டிய தமிழன் என்ற மாபெரும் படங்களுக்கு பிறகு பந்துலு எடுத்த ஒரு லைட் என்டர்டைனர். குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டு வெளியான படம்.
(நடிகர் திலகத்தின் கமெண்ட் " நான் அமெரிக்காவிற்கு போவதற்கு முன் நடித்து முடித்து நான் அமெரிக்கா போய் விட்டு வந்த பின் வெளியான படம்."). நடிகர் திலகம் மூன்று வேடங்களிலும் நடிகவேள் இரண்டு வேடங்களிலும் நடித்த படம். "ப" என்று பெயர் ஆரம்பித்தாலும் பீம்சிங் டைரக்ட் செய்யாத படம். கதை,திரைக்கதையை பொறுத்தவரை லாஜிக் பார்க்காமல் பார்க்க வேண்டிய படம்.
கதாநாயகனான பாண்டியன் ஒரு உயரமான கட்டிடத்தில் இருந்து தற்கொலைக்கு முயற்சிக்க முற்படுவதோடு படம் ஆரம்பம். பாண்டியனை பார்க்கும் கபாலி (ஒரு திருட்டு கும்பலின் தலைவன்) அவனை காப்பாற்றுகிறான். கிழே நிற்கும் கூட்டத்தில் காரில் வந்து இறங்கும் கீதாவும் அவரது தந்தை அமிர்தலிங்கம் பிள்ளையும் அடக்கம். மேலே இருந்து கீதாவை பார்க்கும் பாண்டியனுக்கு அவளை பிடித்து போய் விடுகிறது. ஒரு திருடன் அப்போது கீதாவின் கை பையைஅறுத்துக்கொண்டு ஓடுவதையும் பாண்டியன் கவனித்து விடுகிறான். கிழே வந்து அந்த திருடனை பிடித்து பையை வாங்கும் பாண்டியன் ஆனால் அதை கீதாவிடம் கொடுப்பதற்குள் அவள் போய் விடுகிறாள். கபாலியுடன் அவன் வீட்டுக்கு செல்கிறான். அங்கே ஒரு கூட்டமே இருக்கிறது ஆனால் பாண்டியன் கண்ணில் யாரும் தென்படுவதில்லை. கபாலியிடம் அடியாளாக வேலை செய்யும் மருது பாண்டியனை போலவே இருக்கிறான். பாண்டியனை ஒரு மாதம் தன்னுடன் இருக்க சொல்கிறான் கபாலி. அவன் திட்டம் என்னவென்றால் ஒரு மாதம் கழித்து பாண்டியனை கொன்று விட்டு மருது இறந்து விட்டதாக செய்தியை பரப்பி ஒரு லட்சம் ரூபாய் பணத்தை அடைவது. (இது எப்படி சாத்தியம் என்பது தெளிவாக இல்லை). இதற்கிடையில் கீதாவை தேடி போகும் பாண்டியனை முதலில் விரட்டும் அவள் பிறகு தன் சம்மதத்தை சொல்கிறாள். கீதாவின் அத்தை மகன் ரவி, கீதாவின் வீட்டிலேயே இருக்கிறான். இதற்கிடையில் ஒரு மாதம் முடிந்து விடுகிறது.
தன் திட்டப்படி பாண்டியனை கொல்ல கபாலி முற்படுகிறான். அவனிடமிருந்து தப்பித்து வரும் பாண்டியனுக்கு காரை ஒட்டி கொண்டு வரும் ஒரு பெண் லிப்ட் கொடுக்கிறாள். சிறிது தூரம் சென்றபிறகு தான் அந்த பெண்ணிற்கு கார் ஓட்ட தெரியாது என்றும் மனோ நிலை பாதிக்கப்பட்டவள் என்றும் புரிகிறது. ஆனால் அதற்குள் கார் ஒரு மரத்தில் மோதி விபத்துகுள்ளாகிவிடுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அந்த பெண் விபத்தில் பட்ட அடியால் இயல்பான நிலைக்கு திரும்புகிறாள். அவளின் தந்தை ஒரு பெரிய எஸ்டேட் முதலாளி. பாண்டியன் யாருமற்ற ஆள் என்று தெரிந்ததும் அவனை தன் மகனாக ஏற்றுகொள்கிறார். எஸ்டேட் செல்லும் பாண்டியனால் கீதாவை சந்திக்க முடியவில்லை. சிறிது நாள் கழித்து செல்லும் பாண்டியனை தன் தந்தையை வந்து சந்திக்க சொல்கிறாள் கீதா. தந்தையிடமும் அனுமதி வாங்குகிறாள்.
பாண்டியனை கொல்ல முயன்று தோல்வியுற்ற கபாலி அவனை தேடிக்கொண்டிருக்கிறான். கீதாவை சந்திக்க வரும் பாண்டியனை பார்த்து விடும் கபாலி அவனை சிக்க வைக்க போலீஸ் கண் முன்னால் ஒரு திருட்டை மருது மூலமாக நடத்துகிறான். பாண்டியன் சிக்கி கொள்ள அவனுக்கு சிறை தண்டனை கிடைக்கிறது. சொன்ன நாளில் வராததால் கீதாவின் தந்தை பாண்டியன் மேல் கோபமாக இருக்கிறார். சிறையிலிருந்து வெளி வரும் பாண்டியன் ரவியை சந்தித்து அவனோடு கீதாவின் வீட்டிற்க்கு செல்கிறான். அங்கே கீதாவின் தந்தையும் கபாலி போல் இருக்க கடுமையாக பேசி விட்டு வெளியே வர அங்கே வாசலில் கபாலி. உண்மை புரிந்து கபாலியிட்மிருந்து தப்பித்து எஸ்டேட் வந்து சேருகிறான். அங்கே வளர்ப்பு தந்தை இறந்து போன விவரம் தெரிகிறது. இத்தனை நாள் எங்கே போனீர்கள் என்ற வசந்தியின் (எஸ்டேட் முதலாளியின் மகள்) கேள்வியிலிருந்து தப்பிக்க, இல்லாத ஒரு அத்தை மகனை பற்றி கதை அடிக்க அது வசந்தியின் மனதில் ஒரு உறவிற்கு அச்சராமிடுகிறது. மீண்டும் கல்யாண விஷயமாக ரவியை சந்திக்கும் பாண்டியனின் கையில் இருக்கும் வசந்தியின் புகைப்படத்தை பார்த்து விட்டு யார் என்று கேட்க, எல்லாவற்றையும் பாண்டியன் சொல்லி விடுகிறான். பாண்டியன் ஊருக்கு செல்வதற்கு முன் ரவி சென்று வசந்தியிடம் தன்னை அத்தை மகனாக அறிமுகப்படுத்திக்கொள்ள அவர்கள் இருவருக்கும் காதல் அரும்புகிறது.
ஊருக்கு திரும்பி வரும் பாண்டியன் மூலம் உண்மை தெரிந்தும் கூட வசந்தி தன் முடிவில் உறுதியாக இருக்கிறாள். இதே நேரம் கல்யாணத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் தந்தையிடம் சண்டை போட்டு பாண்டியனை தேடி கீதா வந்து விட, இரு ஜோடிகளும் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள். இந்த விஷயத்தை அறிந்து கொண்டு விடும் கபாலி, அமிர்தலிங்கம் பிள்ளையாக கல்யாணத்திற்கு வந்து கலந்து கொள்கிறான். இரவு பாண்டியனை கடத்த திட்டம் போடுகிறான். இதற்குள் மனது மாறி அமிர்தலிங்கம் பிள்ளை மகளை தேடி வர குழப்பம் உருவாகிறது. விளக்கை அனைத்து விட்டு பாண்டியனை கடத்தி கொண்டு போய் விடுகிறான். அப்போது கேட்கும் கூக்குரலில் கீதா இறந்து விட்டதாக பாண்டியன் தவறாக புரிந்து கொள்கிறான். தனி அறையில் அடைத்து வைக்கப்படும் பாண்டியன் எஸ்டேட் வக்கீலிற்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அதில் தன் பங்கிற்கு உள்ள சொத்தை நிர்வகித்து அதில் வரும் வருமானம் தன்னை வளர்த்த அண்ணனுக்கு மாதா மாதம் கொடுக்க வேண்டும் என்றும் தான் உயிரோடு திரும்பி வந்தால் இதை மாற்றி கொள்ளலாம் என்றும் அதில் எழுதி வைத்து விடுகிறான்.
பாண்டியனை நடுக்கடலிலே கொண்டு போய் போட்டு விடுகிறார்கள். ஆனால் வேறொரு படகில் இருக்கும் மீனவர்கள் இதை பார்த்து விடுகிறார்கள். கபாலியும் மருதும் போலீஸ் கண்ணில் இருந்து தப்பிபதற்காக வேறொரு ஊருக்கு செல்ல அங்கே பாண்டியனை போல் இருக்கும் சங்கர் என்ற வயதானவரை பார்க்கிறார்கள். (இவர்தான் பாண்டியனின் அண்ணன்). அவரை பின் தொடர்ந்து செல்ல அவர் ஒரு ஆராய்ச்சியாளர் என்பதும் தன் ஆராய்ச்சிக்காக நிறைய கடன் வாங்கி இருப்பதும் கடன்காரர்களின் தொல்லையில் அவதிப்படுவதும் தெரிகிறது. ஒரு வேலைகாரனாக அந்த வீட்டில் சேர்கிறான் கபாலி. அந்த நேரத்தில் எஸ்டேட் வக்கீல் வந்து பாண்டியன் லெட்டர் விவகாரத்தை சொல்கிறார். பாண்டியனாக எஸ்டேட் சென்றால் முழு சொத்தையும் அனுபவிக்கலாம் என்று திட்டம் போடும் சங்கரின் மனைவி தன் கணவனை பாண்டியனாக மாறும்படி வலியுறுத்துகிறாள். மனைவி சொல்லை தட்டாத சங்கர் அதற்கு ஒப்பு கொள்கிறார். வக்கீல் சொல்வதை ஒட்டு கேட்ட கபாலி மருதுவை பாண்டியனாக்கி அனுப்ப முடிவு செய்கிறான். இதற்கிடையில் சங்கர் வீட்டிற்க்கு வரும் கீதா, வசந்தி, ரவி எல்லோரும் வேஷம் மாறி நிற்கும் சங்கரை பாண்டியன் என்று நினைத்து கொள்கிறார்கள். கீதா தன் கணவன் என்று நெருங்கி பழக சங்கருக்கு தர்ம சங்கடம் என்றால் அவரது மனைவிக்கு அளவிட முடியாத ஆத்திரம்.
மீனவர்களால் காப்பாற்ற படும் பாண்டியன் வக்கீலை வந்து சந்திக்க கீதா உயிருடன் இருப்பது தெரிந்து அவளை சந்திக்க தன் அண்ணன் வீட்டிற்க்கு செல்ல அங்கே உச்ச கட்ட குழப்பம். பாண்டியனை சுடும் கபாலியின் துப்பாக்கி குண்டிற்கு மருது இரையாக, அதை பார்த்து கபாலி தன்னை தானே சுட்டுக்கொண்டு சாக, சங்கர் பாண்டியன் குடும்பங்கள் ஒன்றாகின்றன.
(தொடரும்)
அன்புடன்
இணைப்பு 2 - http://www.mayyam.com/talk/showthread.php?5865-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-(Part-3)&p=264106&viewfull=1#post264106
பலே பாண்டியா - Part II
பலே பாண்டியாவை பொறுத்தவரை நடிகர்திலகம் மற்றும் ராதா இருவரின் வேடங்களுக்கு பொருத்தமாக ஒரு திரைக்கதை உருவாக்கபட்டது என்றே சொல்ல வேண்டும். நடிகர் திலகம் அமெரிக்கா செல்வதற்கு முன்னால் படத்தை முடிக்க வேண்டும் என்பதால் லாஜிக் எல்லாம் பார்க்காமல் திரைக்கதை எழுதப்பட்டது.. ஒரே உருவமுடைய இரண்டு பேர் இடம் மாறும் போது ஏற்படும் குழப்பங்களை வைத்து நிறைய படங்கள் வந்திருக்கின்றன என்றாலும் இது ஆள் மாறாட்டம் செய்ய முயற்சிக்கும் ஒருவனது கதையை சொல்லியது.
நடிப்பை பொறுத்தவரை முதல் மார்க் பாண்டியனுக்குதான். அந்த வெகுளியான கதாபாத்திரத்தை வெகு இயல்பாக செய்திருப்பார். முதல் காட்சியில் தன்னை காப்பாற்ற வரும் கபாலியிடமிருந்து பேசுவதில் ஆரம்பித்து (" Binocular சார் ") கடைசி வரை அதே momentum maintain ஆகும் கபாலியின் வீட்டை பார்த்து மலைத்து போய் கமெண்ட் அடிப்பது( இது வீடா சார்? அரண்மனை. ஆனால் அநியாயம் சார். அவனவன் இருக்க இடம் இல்லாம இருக்கிறான். இங்கே நூறு பேர் தாராளமாக இருக்க கூடிய இடத்திலே நீங்க தனி ஆளா இருக்கீங்க.") . தேவிகாவின் வீட்டுக்கு போய் பாண்ட் ஷர்ட் போட்டிருக்கும் அவரை ஆண் என்று நினைத்து பேசுவது.( "நீங்க நல்ல பேசுறீங்க. உங்க தங்கச்சி தான் எரிஞ்சு விழறாங்க") , உண்மை தெரிந்தவுடன் அசடு வழிவது எல்லாமே அக்மார்க் NT முத்திரை. அது போல் கபாலியின் சுய ரூபம் தெரியாமல் அன்பாக இருப்பது, வளர்ப்பு தங்கை மேல் வைக்கும் பாசம், அவள் ரவியைதான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதம் பிடிக்கும்போது கெஞ்சாத குறையாக பேசுவது( "வசந்தி, இவனை நீ உண்மையிலே விரும்பிறியா ?" அதற்கு ஆமாம் என்று வசந்தி சொல்ல " கெடுத்துட்டான் கெடுத்துட்டான் " என்று புலம்புவது, மறுபடியும் "அம்மாடி! உண்மையிலே கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைபடுறியா" அதற்கும் ஆமாம் என்று பதில் வர "ரொம்ப கெடுத்துட்டான்" என்று முனுமுனுப்பது) இவை எல்லாமே கிளாஸ். இந்த படத்தில் உணர்ச்சிவசப்படும் கட்டங்கள் குறைவு என்றாலும் வளர்ப்பு தந்தை இறந்து விட்டார் என்று தெரிந்ததும் வசனங்கள் இல்லாமல் சட்டென்று மாறும் முக பாவம்,அவரால் மட்டுமே முடியும்.
பாண்டியன் characterodu ஒப்பிடும் போது மருதுவிற்கு சின்ன ரோல்தான். ஆனால் அந்த லுங்கி கட்டிக்கொண்டு பீடியை உதட்டில் அப்படியும் இப்படியும் உருட்டிக்கொண்டு (45 வருடங்களுக்கு முன்பே) வருவது அவரது ஸ்டைல் முத்திரை. ஒரு கதாபாத்திரத்தை முழுமையாக புரிந்து கொண்டு நடிப்பவர் நடிகர் திலகம் என்பதற்கு ஒரு உதாரணம் மருது, பாண்டியனாக வேஷமிடும் போதும் அணிந்திருக்கும் பாண்டை லுங்கி போல மடக்க முயற்சிப்பது. வசனங்கள் குறைவு என்கின்றபோதும் மருது வரும் காட்சிகளில் எல்லாம் நடையிலும் உடல் அசைவிலும் ஸ்டைல் காட்டியிருப்பார்.
கடைசி அரை மணி நேரம் மட்டுமே வரும் கேரக்டர் ஷங்கர். ஆனால் கடன் தொல்லையால் அவதிப்படும் அந்த Hen pecked கேரக்டர்-ஐ வேறு யாராவது இவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. ஒவ்வொரு வார்த்தையையும் இரண்டு முறை சொல்வது( நடிக்க சொல்லும் மனைவியிடம் "It is not correct"),மனைவியின் முகத்தை பார்த்து விட்டு உடனே " நீ சொல்லி நான் எதை செய்யாமல் இருந்திருக்கேன்?" என்று அடங்கி போவது, தம்பி மனைவி தன்னை தம்பி என்று நினைத்து கொண்டு நெருங்கி வரும் போது ஒரு பக்கம் தர்ம சங்கடம் மறு பக்கம் தன் மனைவியின் முகத்தில் வெடிக்கும் கோபத்தை பார்த்து விட்டு நான் என்ன செய்வது என்பது போல் முகத்தை வைத்து கொள்வது, இப்படி சின்ன வாய்ப்பிலும் சிக்ஸர் அடிப்பார். ஒரே ஆள் எப்படி மூன்று வேடங்களையும் வித்யாசமாக செய்ய முடியும் என்பதற்கு காட்சிகளை அடுக்கி கொண்டே போகலாம்.
நடிகவேளின் திரைப்பட வரலாற்றில் இந்த படத்திற்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. இரண்டு வேடங்களையும் அழகாக கையாண்டிருப்பார்.. கபாலி அவருக்கே உரித்தான நக்கல் கேலி நையாண்டி கேரக்டர். ( வீட்டை பற்றி பேசும் பாண்டியனிடம் " பங்களவிற்கு வந்து politics பேச கூடாது" ). சமயம் கிடைக்கும் போதெல்லாம் தன் ஸ்டைல் வெளிப்படுத்த தயங்க மாட்டார்.. அமிர்தலிங்கம் பிள்ளையாக அடக்கி வாசித்திருப்பார். இரண்டு ராதாக்களும் நேருக்கு நேர் சந்திக்கும் காட்சி சுவையாக இருக்கும். (நிலை கண்ணாடிக்கு பதிலாக இன்னொரு ராதாவே நிற்பது).
கீதாவாக தேவிகா அழகு என்றால் ரவியாக பாலாஜி smart and handsome. வசந்தியாக மாலினி, ஷங்கரின் மனைவியாக (குமுதம்?) சந்தியா (JJ -வின் தாய்) கொடுத்ததை நன்றாக செய்திருப்பார்கள்.
பந்துலுவை பொறுத்தவரை பெரிதாக செய்வதற்கு ஒன்றுமில்லை என்றாலும் குழப்பமில்லாமல் கொண்டு போயிருப்பார். மா.ரா வின் வசனங்களும் Down to Earth.. படத்தின் இன்னொரு மிக பெரிய பலம் மெல்லிசை மன்னர்கள் - கவியரசு கூட்டணியில் வந்த பாடல்கள்.
1. வாழ நினைத்தால் வாழலாம் - ஆரம்பத்தில் வரும் இந்த பாடல் climax-irkku முன்பும் வரும். அப்போது பாடலின் பின்னணி இசை சிறிது வேறுபடும்.
2. நான் என்ன சொல்லிவிட்டேன் – TMS பாடல். NT - தேவிகா நடிக்க அழகாக எடுத்திருப்பார்கள்.
3. யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே - NT சிறையில் இருக்கும் போது பாடுவதாக அமைக்கப்பட்டிருக்கும். இந்த பாடலின் பின்னணிக்கு ஒரு சம்பவத்தை சொல்வார்கள். இந்த படம் வெளி வந்த காலத்தில் (1962) தமிழகத்திற்கு சட்டமன்ற பொது தேர்தல் வந்தது. திமுக தலைவர் அண்ணாதுரை காஞ்சிபுரம் தொகுதியில் தோற்று போனார். இதற்கு முன்னரே திமுகவை விட்டு வெளியேறிய கண்ணதாசன் தமிழ் தேசிய கட்சி என்ற அமைப்பை நிறுவி இருந்த போதிலும், அண்ணாதுரையின் தோல்வி அவரை பாதித்ததாகவும் அதனால் இந்த பாடல் எழுதினார் என்றும் சொல்லுவார்கள். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.[இதை போலவே தெய்வ மகன் படத்தில் வரும் தெய்வமே பாடலின் போது "முத்து போல என் தம்பி வந்தவுடன் முத்தம் சிந்த ஓடினேன்! அட என் ராச என் தம்பி வாடா" என்று TMS குரலில் பாடி விட்டு திடீரென்று NT தன் குரலில் அண்ணா! அண்ணா! என்று மூன்று தடவை சொல்லுவார். Top Angle Shot-aga எடுத்திருப்பார்கள். அது வெளி வந்த போது (1969 செப்டம்பர்) அண்ணாதுரை இறந்து விட்டார். (1969 Feb). NT- அண்ணாவிற்கு அஞ்சலி செலுத்தியதாக சொல்லுவார்கள். இதுவும் உறுதி செய்யப்படாத தகவல்]
4. நீயே என்றும் உனக்கு நிகரானவன் - ரொம்ப பிரபலமான பாடல். மாமா மாபிள்ளை பாடல் என்றும் சொல்லுவார்கள்.
5. ஆதி மனிதன் காதலுக்கு பின் - PBS, ஜமுனா ராணி - பாலாஜி, மாலினி ஜோடி பாடல்.
6. அத்திக்காய் காய் காய் – TMS, PS, PBS, ஜமுனா ராணி.
இந்த பாடலை பற்றி சொல்லவே வேண்டாம். என்றும் பசுமையாக இருக்கும் பாடல்.
மொத்தத்தில் சிரித்து ரசிக்க ஒரு படம்.
அன்புடன்.
RAGHAVENDRA
15th April 2014, 08:50 AM
பாடல் காட்சிகள் காணொளிகள்
முழுப்படம்
http://youtu.be/wg94axejzJw
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
http://youtu.be/b3ku7VgUi30
அத்திக்காய்
http://youtu.be/PyMnmtZFe_I
வாழ நினைத்தால் வாழலாம்
http://youtu.be/s0brrvQD8OU
நான் என்ன சொல்லி விட்டேன்
http://youtu.be/9tbiihqwehs
ஆதி மனிதன்
http://youtu.be/-0U84yDb7VA
யாரை எங்கே வைப்பது
http://youtu.be/iyClnF7PQxQ
Russellmai
15th April 2014, 02:47 PM
"Bale Raghavendra Sir" for the presentation of "Bale Pandiya"
Russellmai
15th April 2014, 10:28 PM
அன்புள்ள நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.எனது பெயர் கோபாலகிருஷ்ணன்.நான் ஓய்வு பெற்ற ஓர் அரசு ஊழியர்.நான் திருநெல்வேலியில் வசித்து வருகிறேன்.இந்த திரிகளில் உள்ள பதிவுகளை இரண்டாண்டுகளாகத் தொடர்ந்து படித்து வருகிறேன்.என்னுடைய பத்து வயது முதலே நான் தீவிர சிவாஜி கணேசன் ரசிகர்.இனி என்னுடைய பதிவுகள் இத்திரியில் தொடரும்.
RAGHAVENDRA
16th April 2014, 07:13 AM
வருக வருக கோபு எ கோபாலகிருஷ்ணன் அவர்களே, தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி. தங்களுடைய பதிவுகளைப் படிக்க ஆவலாயிருக்கிறோம். தொடருங்கள்.
RAGHAVENDRA
16th April 2014, 07:14 AM
அடுத்து
தமிழ்த்திரையுலகில் மறக்க முடியாத காலத்தால் அழிக்க முடியாத காவியங்களைப் படைத்த வெற்றிக் கூட்டணியின் முதல் படைப்பு... முத்தான படைப்பு ... திரை இசைத் திலகத்தின் இசை வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் பாடல்களைக் கொண்ட உன்னதத் திரைப்படம். வித்தியாசமான தோற்றத்தில் அட்டகாசமான கெட்டப்பில் நடிகர் திலகத்தின் வடிவுக்கு வளைகாப்பு திரைக்காவியத்தைப் பற்றிய தகவல்கள்...
RAGHAVENDRA
16th April 2014, 04:57 PM
Sivaji Ganesan Filmography Series
80. Vadivukku Valaikappu வடிவுக்கு வளைகாப்பு
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/vvkappu01_zps19669c42.jpg
தணிக்கை –
வெளியீடு – 07.07.1962
தயாரிப்பு – ஸ்ரீ லக்ஷ்மி பிக்சர்ஸ்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், திருமதி சாவித்திரி கணேஷ், வி.கே.ராமசாமி, எஸ்.வி.சுப்பய்யா, டி.கே.ராமச்சந்திரன், கருணாநிதி, குலதெய்வம் ராஜகோபால், எம்.என்.ராஜம், எஸ்.வரலக்ஷ்மி, மனோரமா, மற்றும் பலர்
பின்னணி பாடியவர்கள் டி.எம்.எஸ்., பி.சுசீலா, எஸ்.வரலக்ஷ்மி, எல்.ஆர்.ஈஸ்வரி, ஏ.எம்.ஆதம்ஷா
வாத்தியக்குழு நிர்வாகம் வயலின் கே.வி.மஹாதேவன்
நாதசுரம் சைதாப்பேட்டை நடராஜன் கோஷ்டியினர்
நடனம் சம்பத்-சின்னி, ராஜ்குமார், தங்கராஜ், கிருஷ்ணமராஜ்
மேக்கப் – ரங்க்சாமி, நாராயணசாமி, நாகேஸ்வர்ராவ், தக்ஷணாமூர்த்தி, குருசாமி
உடையலங்காரம் – ராமகிருஷ்ணன், உதவி ஸி.கே.ஹரி
நிர்வாகம் – வி.கே. முத்துராமலிங்கம்
ப்ரொடக்ஷன் நிர்வாகம் – எஸ்.வி.ராஜகோபால்
ஸ்டில்ஸ் ஆர். வெங்கடாச்சாரி
விளம்பரம் பாலு பிரதர்ஸ்
அரங்கப் பொருட்கள் ஸினி கிராப்ட்ஸ், கிரி மியூஸியம்
Recorded on RCA Sound System
Produced and Processed at Film Centre
செட்டிங்ஸ் – எஸ்.பெருமாள் ராஜு
ஓவியம் – வி.ராமலிங்கம், ராமஸ்வாமி
உதவி டைரக்ஷன் – கே.கே.ஸம்பத்குமார்
ஆர்ட் டைரக்டர் ஸி.எச்.ஈ.பிரசாத் ராவ்
எடிட்டிங் – கே.துரைராஜ்
லாபரட்டரி – பால் ஜி. ஸிந்தே, டீ.ஈஸ்வர்சிங்
ஒளீப்பதிவு – டீ.எம்.சுந்த்ரபாபு
ஒலிப்பதிவு வசனம் – பிரான்ஸிஸ் ஏ. சாமி,பிலிம் சென்டர்
ஒலிப்பதிவு பாடல்கள் ரீரிக்கார்டிங் – டீ.எஸ்.ரங்கசாமி, மெஜஸ்டிக்
பாடல்கள் கவிஞர் கண்ணதாசன், அ. மருதகாசி, அ.ச.நாராயணன்
சங்கீதம் கே.வி.மஹாதேவன் உதவி புகழேந்தி
கதை வசனம் டைரக்ஷன் – ஏ.பி.நாகராஜன்
தயாரிப்பாளர்கள் – வி.கே.ராமசாமி, ஏ.பி.நாகராஜன்
வடிவுக்கு வளைகாப்பு விளம்பர நிழற்படம் ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து...
முதல் வெளியீட்டு விளம்பரம் : மதி ஒளி : 15.7.1962
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3823a.jpg
RAGHAVENDRA
16th April 2014, 05:01 PM
திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில் வடிவுக்கு வளைகாப்பு திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களைப் பற்றிய விவரங்கள்
http://www.inbaminge.com/t/images/K%20V%20Mahadevan.jpg
1. திலகமே தமிழ்நாட்டுக் கலை உலகின் திலகமே – அ. மருதகாசி – டி.எம்.எஸ்
2. உன் மனம் இறங்கிட வேணும் – அ. மருதகாசி – எல்.ஆர்.ஈஸ்வரி கோஷ்டியினர்
3. சாலையிலே புளியமரம் – அ.ச. நாராயணன் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி கோஷ்டியினர்
4. தாமதம் செய்யாதே தோழி – அ.மருதகாசி – எஸ்.வரலக்ஷ்மி
5. சீருலாவும் இன்ப நாதம் – அ. மருதகாசி – டி.எம்.எஸ்.பி,சுசீலா
6. நில்லடியோ நில்லடியோ – கண்ணதாசன் – பி.சுசீலா
7. பிள்ளை மனம் கலங்குதென்றால் – கண்ணதாசன் – டி.எம்.எஸ்.
8. சூடு வெச்ச வெள்ளக் காலை – அ.ச.நாராயணன் – ஆதம்ஷா
9. சில்லெனப் பூத்து – கண்ணதாசன் – பி.சுசீலா
RAGHAVENDRA
16th April 2014, 05:03 PM
பாடல் காட்சிகள்
முகப்பிசை
http://youtu.be/WDL3CTzMpcQ
சீருலாவும் இன்ப நாதம்
http://youtu.be/QV4v19Yrn2I
இசைத்தட்டு வடிவம் ... முழுப்பாடலையும் கேட்டு மகிழ
http://youtu.be/Imezq1gBO1s
சில்லெனப் பூத்து
http://youtu.be/WQiG5qhia90
பிள்ளை மனம் கலங்குதென்றால்
http://youtu.be/QXFAnZWZ3x4
தமிழ் நாட்டுக் கலை உலகின் திலகமே
http://youtu.be/3YmUC53J7OY
தாமதம் செய்யாதே தோழி
http://youtu.be/fqxnGMuG2as
RAGHAVENDRA
16th April 2014, 05:18 PM
வடிவுக்கு வளைகாப்பு -- சில நினைவுகள்
நடிகர் திலகத்திற்கு கிடைத்த மிகச் சிறந்த டூயட் பாடல்களில் ஒன்று சீருலாவும் இன்ப நாதம் பாடல். குழந்தைப் பருவத்திலேயே மனதில் பசுமையாக பதிந்து விட்ட பாடல். ஆனால் படம் பார்க்கும் போது பல ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதும் இப் படம் பெற வேண்டிய வெற்றியைப் பெறாமல் போனதற்கு ஒரு காரணம். பாச மலர் பாதிப்பிலிருந்து மக்கள் மீளவில்லையோ என்னவோ.. இப்பாடல் முழுதும் இருவரும் இணைந்து நடிக்கவே யில்லை. பாடல் முடியும் போது மட்டும் கடைசி பல்லவியின் போது சேர்ந்து நடித்தார்கள். கிட்டத் தட்ட முழுப் பாடலிலுமே காதலர்களைத் தனித்தனியாக டூயட் பாட வைத்த பாடல் நடிகர் திலகத்திற்கு இது தான் முதன் முறையாக இருந்திருக்கும். அதுவும் இப்பாடலில் நடிகர் திலகத்தின் உடையலங்காரம் மிகவும் அட்டகாசமாக இருக்கும். ஆனால் மிட் க்ளோஸப்பில் காண்பித்து சொதப்பியிருப்பார்கள். பெரிய திரையில் தியேட்டரில் பார்க்கும் போது ஓரளவிற்கு பளிச்சென்று தெரியும் அளவிற்கு படப்பிடிப்பு இருந்தது. சுந்தரபாபு மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர். ஆனால் இக்காட்சியில் மனம் சிறிதும் லயிக்க முடியாமல் போய் விட்டது.
திலகமே பாடல் இன்று திரையரங்கில் மிகச் சிறந்த அளப்பரையைப் பெறும் பாடலாக அமைந்து விட்டது. அதுவும் அந்த நாகத்தை மயக்கி, குலதெய்வம் ராஜகோபாலை சைகையாலே அடக்கும் காட்சி மறக்க முடியாத காட்சியாகும்.
கே.வி.எம். அவர்களின் இசையில் அத்தனை பாடல்களும் என்றென்றும் புகழ் பெற்றவையாகும்.
நடிகர் திலகத்தின் வித்தியாசமான சிகை அலங்காரம் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தது
Russellmai
17th April 2014, 03:11 PM
தங்களது வரவேற்புக்கு நன்றி இராகவேந்திரா அவர்களே
அன்புடன்
Russellmai
18th April 2014, 11:47 AM
அன்புடன்அன்புள்ள இராகவேந்தர் அவர்களே
நடிகர் திலகத்தின் படங்கள் பற்றிய விவரங்களை அன்றைய செய்தித்தாள்களில்
வந்த அந்தப் படங்களின் விளம்பரங்களோடு தொகுத்து வழங்கும் தங்களது பணி
பாராட்டுதற்குரியது.அவற்றைப் படிக்கும் பொழுது என்னை அந்த காலகட்டத்திற்கு
என்னை இழுத்துச் செல்கிறது.
RAGHAVENDRA
18th April 2014, 04:43 PM
Sivaji Ganesan Filmography Series
81. Senthamarai செந்தாமரை
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/redlotusadkalki.jpg
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Senthaamarai1-1.jpg
தணிக்கை 12.09.1962
வெளியீடு 14.09.1962
தயாரிப்பு ஏ.எல்.சீனிவாசன், மதராஸ் பிக்சர்ஸ்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், ல்லிதா பத்மினி, ராகினி, கே.ஏ.தங்கவேலு, ஜே.பி.சந்திரபாபு, பி.ஆர்.பந்துலு, வி.கே.ராமசாமி, எஸ்.ராமராவ், மற்றும் பலர்
வசனம் – இராம. அரங்கண்ணல்
பாடல்கள் கவிஞர் கண்ணதாசன், கே.டி.சந்தானம்
இசையமைப்பு – விசுவநாதன்-ராம மூர்த்தி
ஸ்டூடியோ – பரணி நிர்வாகம் ஏ.எல்.எஸ்.புரொடக்ஷன்ஸ், சென்னை 14
திரைக்கதை டைரக்ஷன் ஏ.பீம்சிங்
நடனம் ஹீராலால், சின்னி சம்பத்
ஒளிப்பதிவு ஜி.விட்டல் ராவ், எம்.கர்ணன்
ஒலிப்பதிவு பாடல்கள் – ஈ.ஐ.ஜீவா, ரங்க்சாமி, பி.வி.கோடீஸ்வர ராவ்
ஒலிப்பதிவு வசனம் – லோகநாதன் நியூடோன், டி.வி.நாதன்
மேக்கப் – தனகோடி, ஆறுமுகம்-நியூடோன், கிருஷ்ணராஜ்
உடை அலங்காரம் – வி.கங்காதரன், ஆர்.விவேகானந்தம்
எடிட்டிங் – ஏ. பால் துரைசிங்கம், ஆர்.திருமலை
லேபரட்டரி – ஏவி.எம். சர்தூல் சிங் சேதி
தயாரிப்பு நிர்வாகம் – பிஎல். ராமநாதன்
புரொடக்ஷன் – கே.ஆர்.சோலை, எம்.பச்சையப்பன், கே.அப்பாசாமி, ஆர்.அப்பாவு, வி.லக்ஷ்மணன்
உதவி டைரக்ஷன் – ஆர்.திருமலை, ஜி.எஸ்.மஹாலிங்கம், ஆர்.சடகோபன்
RAGHAVENDRA
18th April 2014, 04:45 PM
செந்தாமரை விளம்பர நிழற்படங்கள் பேசும் படம் படக்காட்சிப் பக்கங்கள் - ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்
செந்தாமரை
[14.9.1962 - 14.9.2011] : பொன்விழா ஆண்டின் தொடக்கம்
பொன்னான பொக்கிஷங்கள்
முதல் வெளியீட்டு விளம்பரம் : பேசும் படம் : அக்டோபர் 1962
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4569a-1.jpg
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்
செந்தாமரை
[14.9.1962 - 14.9.2011] : பொன்விழா ஆண்டின் தொடக்கம்
பொன்னான பொக்கிஷங்கள்
காவியக்காட்சிகள் : பேசும் படம் : அக்டோபர் 1962
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4570-1.jpg
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4571a-1.jpg
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4572a-1.jpg
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4573a-1.jpg
RAGHAVENDRA
18th April 2014, 04:45 PM
செந்தாமரை பாடல் புத்தகத்தின் நிழற் படம்
http://i289.photobucket.com/albums/ll208/beeveeyaar/NADIGAR%20THILAGAM/sendhamarai1.jpg
http://www.mayyam.com/talk/showthread.php?9593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-8&p=739230&viewfull=1#post739230
கல்கி 30.09.1962 இதழில் வெளிவந்த விமர்சனம்
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/redlotusreviewkalkifw.jpg
RAGHAVENDRA
18th April 2014, 04:46 PM
இத்திரைக்காவியத்தில் நாட்டியப் பேரொளி பத்மினியின் நடனம் - திருப்பாவை பாசுரமான வாரணம் ஆயிரம் - பாடியவர் பி.லீலா மற்றும் ஈஸ்வரி
இங்கே பாடல் காட்சியாக
http://youtu.be/t-BlQubHy_4
RAGHAVENDRA
18th April 2014, 04:47 PM
பாடல்களைப் பற்றிய விவரங்கள்
1. பொன்னைத் தேடி வருவார் – கண்ணதாசன் - ஜிக்கி, எல்.ஆர். ஈஸ்வரி, அஞ்சலி
2. பொன்னெடுத்துச் செய்து வைத்த சிலை – கண்ணதாசன் – பி.லீலா, எல்.ஆர். ஈஸ்வரி, அஞ்சலி
3. மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் – தொகுத்தளிப்பு - கண்ணதாசன் – பி.லீலா, எல்.ஆர். ஈஸ்வரி, அஞ்சலி
4. பாட மாட்டேன் – கண்ணதாசன் – கே.ஆர்.ராமசாமி
5. பூவிருக்கு வண்டிருக்கு – கே.டி.சந்தானம் – டி.எம்.எஸ்., பி.சுசீலா
6. தாங்காதம்மா தாங்காது – கண்ணதாசன் – ஜே.பி. சந்திரபாபு
7. செந்தமிழ் சுவை மேவும் கலைவாணன் – கண்ணதாசன் – பி.சுசீலா
8. கனவே காதல் வாழ்வே – கே.டி.சந்தானம் – ஜி.கே. வெங்கடேஷ்
RAGHAVENDRA
19th April 2014, 07:00 AM
செந்தாமரை ... சில நினைவுகள்
நடிகர் திலகம் பீம்சிங் இணைந்த முதல் படம். மிகவும் தாமதமாகி வெளியானதால் இந்த பெருமையை இழந்து விட்டது. ராஜா ராணி அந்த பெருமையை பெற்றது.
கே.ஆர்.ராமசாமி, பாட மாட்டேன் என்று பாடியது அறச் சொல்லாக அமைந்து விட்டதாக அந்தக் காலத்தில் ஒரு எண்ணம் மக்களிடம் நிலவி வந்தது.
இரு பெரும் இயக்குநர்கள் இணைந்த படம். பீம்சிங் இயக்கத்தில் பந்துலு நடித்த படம்.
நடிகர் திலகத்தின் தோற்றத்தில் ஒரு சில காட்சிகளில் வித்தியாசம் தெரியும். குறிப்பாக முந்தைய பதிவு ஒன்றில் இடம் பெற்றிருக்கும் செந்தமாரை வண்ண நிழற்படத்தில் நடிகர் திலகத்தின் தோற்றமும் படம் வெளியான போது விளம்பரத்தில் இடம் பெற்ற நடிகர் திலகத்தின் தோற்றமும் இதைக் கூறும்.
RAGHAVENDRA
19th April 2014, 10:28 AM
Sivaji Ganesan Filmography Series
82. Pandha Pasam பந்த பாசம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/BandhaPaasam1a-1.jpg
தணிக்கை 25.10.1962
வெளியீடு 27.10.1962
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/BandhapasamAdfw.jpg
தயாரிப்பு சாந்தி பிலிம்ஸ்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.வி.ரங்கா ராவ், ஜே.பி.சந்திரபாபு, சாவித்திரி கணேஷ், தேவிகா, எம்.வி.ராஜம்மா, சந்திரகாந்தா, லட்சுமி பிரபா, சுகுமாரி, வி.கே.ராமசாமி, எம்.ஆர்.சந்தானம், கொட்டாப்புளி ஜெயராமன், கே.எம்.நம்பிராஜன், எஸ்.ஏ.கண்ணன் மற்றும் சிவாஜி நாடக மன்றத்தினர்.
கதை வசனம் வலம்புரி சோமனாதன்
பாடல்கள் மாயவநாதன் கவி ராஜகோபால்
பின்னணி பாடியவர்கள் டி.எம்.எஸ், பி.பி.ஸ்ரீனிவாஸ், சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா, எஸ்.ஜானகி
கலை கே.மோஹன் – மோஹன் ஆர்ட்ஸ், உதவி ஜெமினி எம்.ஆர்.ராமானுஜம்
செட்டிங்ஸ் – எஸ்.ரங்கசாமி, எம்.சொக்கலிங்கம், வி.வேங்கமலை – பெயிண்டிங்
ப்ளோர் இன்சார்ஜ் – ஜி.மணி அய்யர், ஆர்.என்.ராவ்
சீஃப் எலக்ட்ரீஷியன்ஸ் – வி.சேஷாத்திரி நாதன், கே.முருகேசன், கே.பாஸ்கர்
உடைகள் – பி.ராமகிருஷ்ணன், உதவி – குட்டை சாமிநாதன், கே.நாகப்பன்
நடன அமைப்பு – சின்னி-சம்பத்
மேக்கப் – ரங்கசாமி, ஹரிபாபு, நாகேஸ்வர ராவ், பத்ரையா, மாணிக்கம் உதவி – ஆர்.பத்மனாபன், ஏ.வி.சந்தான கிருஷ்ணன்
ஒலிப்பதிவு பாடல்கள்-ரீரிக்கார்டிங் – டி.எஸ்.ரங்கசாமி – மெஜஸ்டிக். உதவி – ஆர்.வேதமூர்த்தி, ஜோ அலையாசிஸ்
ஒலிப்பதிவு – வி.சி.சேகர், உதவி – எம்.வி.சங்கர், கே.கே.வேலாயுதம்
ஒளிப்பதிவு உதவி – டி.எஸ்.பாண்டியன், பி.ஜி.சுதர்சனம், ஏ.வி.ராமகிருஷ்ணன், எஸ்.கே.அன்வர் ஜான்
ப்ராஸஸிங் – சர்தூல் சிங் சேத்தி உதவி – டி.ராமசாமி, கே.பஞ்சாபிகேசன், எஸ்.பி.செல்லப்பா – ஏவி.எம்.ஸ்டூடியோ லாபரட்டரி
எடிட்டிங் மேற்பார்வை – ஏ.பீம்சிங்
எடிட்டிங் – ஏ.பால் துரைசிங்கம், ஆர்.திருமலை உதவி – பி.எஸ்.பிரகாஷ், ஜி.என்.ரங்கராஜ், பி.ஸ்டான்லி, ஹெச்.மோஹன்
பப்ளிசிடி – எலிகண்ட்
ஸ்டில்ஸ் – ஏ.சிம்மையா, சி.பத்மனாபன்
செட் பிராபர்டீஸ் – சினி கிராப்ட்ஸ்
அவுட்டோர் யூனிட் – பிரசாத் புரொடக்ஷன்ஸ் பி லிட்
புரொடக்ஷன் நிர்வாகம்- எஸ்.சம்பத், முகிலன் உதவி – ஏ.எல்.சதாசிவம், எம்.மாணிக்கம், கே.ராஜு, எஸ்.சுந்தரம், வி.என்.வேலுச்சாமி, பாண்டியன்
ஸ்டூடியோ – நெப்டியூன்
ஆர் சி ஏ சௌண்ட் சிஸ்டத்தில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது
உதவி டைரக்ஷன் – ஜி.எஸ்.மகாலிங்கம், ஆர்.சடகோபன்
கண்டினியூடி – எஸ்.எஸ்.தேவதாஸ், டி.பி.அருணாசலம்
அசோசியேட் டைரக்ஷன் – ஆர்.திருமலை
ஒளிப்பதிவு – ஜி.விட்டல் ராவ்
தயாரிப்பு – பெரியண்ணா
இசையமைப்பு – விஸ்வநாதன் ராம மூர்த்தி உதவி – ஹென்றி டானியல்
திரைக்கதை டைரக்ஷன் – ஏ. பீம்சிங்
கீழ்க்காணும் விளம்பர நிழற்படம் உபயம் ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்
முதல் வெளியீட்டு விளம்பரம் : பேசும் படம் : நவம்பர் 1962
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4866-1.jpg
RAGHAVENDRA
19th April 2014, 10:38 AM
http://www.mahanatisavitri.com/wp-content/themes/savitri/images/photos/tamilmovies/28big.jpg
பந்த பாசம் – பாடல்களின் விவரங்கள்
1. இதழ் மொட்டு விரிந்திட – மாயவநாதன் – பி.பி.ஸ்ரீநிவாஸ், சுசீலா
2. பந்தல் இருந்தால் கொடி படரும் – கவி. ராஜகோபால் – டி.எம்.சௌந்தர்ராஜன், எஸ்.ஜானகி
3. நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ – மாயவநாதன் – சீர்காழி கோவிந்தராஜன்
4. கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு – மாயவநாதன் – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ்
5. என் கதை தான் உன் கதையும் – கவி.ராஜகோபால் – பி.சுசீலா, எஸ்.ஜானகி
6. எப்போ வச்சுக்கலாம் – மாயவநாதன் – ஜே.பி.சந்திரபாபு
RAGHAVENDRA
19th April 2014, 10:43 AM
பந்த பாசம் பாடல் காட்சிகள்
பந்தல் இருந்தால் கொடி படரும்
http://youtu.be/7tav6K_egEI
நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ
http://youtu.be/vVffTg8AoWY
இதழ் மொட்டு விரிந்திட
http://youtu.be/6m2yX1TyaAk
என் கதை தான் உன் கதையும்
http://youtu.be/iq29dWwbyC0
கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு
http://youtu.be/hQjCTpgfaqw
RAGHAVENDRA
19th April 2014, 10:48 AM
எல்லா வகையான நடிப்புக்கும் இலக்கணம் வகுத்த நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த திரைப்படங்களில் பந்த பாசம் முக்கியமான இடம் பெறுவதாகும். தேவிகாவைக் காதலித்தாலும் சந்தர்ப்பத்தாலும் நெருக்கடியாலும் உடல் ஊனமுற்ற சந்திரகாந்தாவை மணப்பதாக திரைக்கதை அமைக்கப் பட்டிருக்கும். ஒவ்வொரு காட்சியிலும் நடிகர் திலகத்தின் Subtlity in acting இவ்வகை நடிப்பிற்கும் முதல் பாடமாய் விளங்குகிறது.
குறிப்பாக கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு பாடல் காட்சியை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத வகையில் நடிகர் திலகத்தின் மென்மையான உடல் மொழியுடன் கூடிய நடிப்பு நம்மைக் கட்டிப் போட்டு விடும்.
பல காட்சிகளில் உணர்ச்சி பூர்வமாக நடிக்க சந்தர்ப்பங்கள் இருந்தாலும் பாத்திரத்தின் தன்மைக்கேற்றவாறு மிகவும் மென்மையாக கையாண்டிருப்பார்.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய காட்சி திருமணக் காட்சி. சந்திரகாந்தாவை திருமணம் செய்ய கையெழுத்திடும் காட்சியில் சாட்சிக் கையெழுத்தை காதலியே இடுவதாக வரும் காட்சியில் தேவிகாவின் நடிப்பு மெய் சிலிர்க்க வைக்கும். பார்வையாலேயே இக்காட்சியைத் தூக்கி நிறுத்தி விடுவார் நடிகர் திலகம்.
இயல்பு நடிப்பு என்றால் என்ன என்பதற்கு இலக்கணம் பந்த பாசம் திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பு அமைந்திருக்கும்.
ஒவ்வொரு ரசிகனும் தவறாமல் பார்த்து ரசிக்க வேண்டிய திரைக்காவியம் பந்தபாசம்
JamesFague
19th April 2014, 09:08 PM
Mr Raghavendra Sir,
Pls mentioned the release of DVD also like before for the
benefit of the fans.
Regards
Subramaniam Ramajayam
20th April 2014, 08:23 AM
Sivaji Ganesan Filmography Series
82. Pandha Pasam பந்த பாசம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/BandhaPaasam1a-1.jpg
தணிக்கை 25.10.1962
வெளியீடு 27.10.1962
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/BandhapasamAdfw.jpg
தயாரிப்பு சாந்தி பிலிம்ஸ்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.வி.ரங்கா ராவ், ஜே.பி.சந்திரபாபு, சாவித்திரி கணேஷ், தேவிகா, எம்.வி.ராஜம்மா, சந்திரகாந்தா, லட்சுமி பிரபா, சுகுமாரி, வி.கே.ராமசாமி, எம்.ஆர்.சந்தானம், கொட்டாப்புளி ஜெயராமன், கே.எம்.நம்பிராஜன், எஸ்.ஏ.கண்ணன் மற்றும் சிவாஜி நாடக மன்றத்தினர்.
கதை வசனம் வலம்புரி சோமனாதன்
பாடல்கள் மாயவநாதன் கவி ராஜகோபால்
பின்னணி பாடியவர்கள் டி.எம்.எஸ், பி.பி.ஸ்ரீனிவாஸ், சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா, எஸ்.ஜானகி
கலை கே.மோஹன் – மோஹன் ஆர்ட்ஸ், உதவி ஜெமினி எம்.ஆர்.ராமானுஜம்
செட்டிங்ஸ் – எஸ்.ரங்கசாமி, எம்.சொக்கலிங்கம், வி.வேங்கமலை – பெயிண்டிங்
ப்ளோர் இன்சார்ஜ் – ஜி.மணி அய்யர், ஆர்.என்.ராவ்
சீஃப் எலக்ட்ரீஷியன்ஸ் – வி.சேஷாத்திரி நாதன், கே.முருகேசன், கே.பாஸ்கர்
உடைகள் – பி.ராமகிருஷ்ணன், உதவி – குட்டை சாமிநாதன், கே.நாகப்பன்
நடன அமைப்பு – சின்னி-சம்பத்
மேக்கப் – ரங்கசாமி, ஹரிபாபு, நாகேஸ்வர ராவ், பத்ரையா, மாணிக்கம் உதவி – ஆர்.பத்மனாபன், ஏ.வி.சந்தான கிருஷ்ணன்
ஒலிப்பதிவு பாடல்கள்-ரீரிக்கார்டிங் – டி.எஸ்.ரங்கசாமி – மெஜஸ்டிக். உதவி – ஆர்.வேதமூர்த்தி, ஜோ அலையாசிஸ்
ஒலிப்பதிவு – வி.சி.சேகர், உதவி – எம்.வி.சங்கர், கே.கே.வேலாயுதம்
ஒளிப்பதிவு உதவி – டி.எஸ்.பாண்டியன், பி.ஜி.சுதர்சனம், ஏ.வி.ராமகிருஷ்ணன், எஸ்.கே.அன்வர் ஜான்
ப்ராஸஸிங் – சர்தூல் சிங் சேத்தி உதவி – டி.ராமசாமி, கே.பஞ்சாபிகேசன், எஸ்.பி.செல்லப்பா – ஏவி.எம்.ஸ்டூடியோ லாபரட்டரி
எடிட்டிங் மேற்பார்வை – ஏ.பீம்சிங்
எடிட்டிங் – ஏ.பால் துரைசிங்கம், ஆர்.திருமலை உதவி – பி.எஸ்.பிரகாஷ், ஜி.என்.ரங்கராஜ், பி.ஸ்டான்லி, ஹெச்.மோஹன்
பப்ளிசிடி – எலிகண்ட்
ஸ்டில்ஸ் – ஏ.சிம்மையா, சி.பத்மனாபன்
செட் பிராபர்டீஸ் – சினி கிராப்ட்ஸ்
அவுட்டோர் யூனிட் – பிரசாத் புரொடக்ஷன்ஸ் பி லிட்
புரொடக்ஷன் நிர்வாகம்- எஸ்.சம்பத், முகிலன் உதவி – ஏ.எல்.சதாசிவம், எம்.மாணிக்கம், கே.ராஜு, எஸ்.சுந்தரம், வி.என்.வேலுச்சாமி, பாண்டியன்
ஸ்டூடியோ – நெப்டியூன்
ஆர் சி ஏ சௌண்ட் சிஸ்டத்தில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது
உதவி டைரக்ஷன் – ஜி.எஸ்.மகாலிங்கம், ஆர்.சடகோபன்
கண்டினியூடி – எஸ்.எஸ்.தேவதாஸ், டி.பி.அருணாசலம்
அசோசியேட் டைரக்ஷன் – ஆர்.திருமலை
ஒளிப்பதிவு – ஜி.விட்டல் ராவ்
தயாரிப்பு – பெரியண்ணா
இசையமைப்பு – விஸ்வநாதன் ராம மூர்த்தி உதவி – ஹென்றி டானியல்
திரைக்கதை டைரக்ஷன் – ஏ. பீம்சிங்
கீழ்க்காணும் விளம்பர நிழற்படம் உபயம் ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்
MY ninaivugal of the movie I have devloped the liking of watching NT movies on the release days when i was 13 yrs old being diwali release i was afraid of leaving the house that day on the net day along with my close friend went to BROADWAY and all the tickets were full and the return crowds because of not getting tickets very huge.
so we stated returnin home just opp to the theatre where erstwhile muugan theatre was there some ladies unknown to us called and gave tickets volountarily. we were very vert happy and allaparais great.
but the movie has not succesfulone so that day we have a taken a OATH not watching release of NT movies on the second day.
great days pasumaiyana ninaivugal
If not first day ONLY AFTER THREE OR FOUR DAYS later.
Gopal.s
20th April 2014, 12:59 PM
பந்த பாசம் எதிர்பார்த்த வெற்றியை பெறாதது கேள்வி குறியே. ஒரு நல்ல படம்.என்னை கவர்ந்தவை-
நித்தம் நித்தம் பாடல்- அப்படியே மனசை கீறி கசிய வைக்கும்.சீர்காழியின் குரல் ஜாலம்,உணர்ச்சி பிழம்பான ஏற்ற இறக்க கசிவுகள்.மாயவநாதன்,விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் மேஜிக்.
கவலைகள் கிடக்கட்டும்- ராகவேந்தர் குறிப்பிட்ட படி,சிவாஜியின் உடல் மொழி,பாவங்கள்,இயல்பான பாடலின் தாளகதிக்கேற்ப ,மனநிலைக்கேற்ப ...
என்ன சொல்வது?
பந்தல் இருந்தால்- ஆஹா ...வாணிக்கு அடுத்த அண்ணியின் இணைவில் ....
ஒரு அற்புதமான இடம்- காதலியை சந்திக்கும் போது,கதாநாயகன் மனநிலை சரியிருக்காது.ஒரு வார்த்தை கூட பேசாமல் வெடுவெடுவென்று இருந்து சென்று விடுவார்.இந்த மாதிரி ஒரு காட்சியமைப்பை வைத்த பீம்சிங்கிற்கு சிரம் தாழ்த்திய 2014 இன் வணக்கம்.
RAGHAVENDRA
21st April 2014, 08:36 AM
Sivaji Ganesan Filmography Series
83. ALAYAMANI ஆலயமணி
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2011/Aalayamani000011.jpg
தணிக்கை20.11.1962
வெளியீடு 23.11.1962
தயாரிப்பு - P.S.V. பிக்சர்ஸ்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், S.S.ராஜேந்திரன்,, B.சரோஜா தேவி, R. விஜயகுமாரி, M.R.ராதா, M.V.ராஜம்மா,புஷ்பலதா, T.R.ராமச்சந்திரன், V.நாகையா, P.S.வீரப்பா மற்றும் பலர்
மூலக்கதை: G. பாலசுப்ரமணியம்
திரைக்கதை வசனம் ஜாவர் சீதாராமன்
பாடல்கள் கவிஞர் கண்ணதாசன்
நடனம்: S.M. ராஜ்குமார்
செட் ப்ராபர்டீஸ் சினி கிராப்ட்ஸ்
ஒலிப்பதிவு பாடல்கல் பின்னணி இசை – T.S. ரங்கசாமி
ஒலிப்பதிவு வசனம்: K. துரைசாமி, முகுந்தன்
கலை A பாலு
மேக்கப் – ஹரிபாபு, ரங்கசாமி, கஜபதி, சுந்தரம், ராஜேந்திரன்
உடையலங்காரம்: P. ராமகிருஷ்ணன்
ஸ்டில்ஸ் – R.P. சாரதி
ஆபரேடிவ் காமிராமேன்: K.S. பாஸ்கர் ராவ்
விளம்பரம் – அருணா அண்ட் கோ
டிசைன்ஸ் – பக்தா
வெளிப்புறப் படப்பிடிப்பு – பிரசாத் ப்ரொடக்ஷன்ஸ் யூனிட்
ப்ராசஸிங் – விஜயா லாபரட்டரி
ஸ்டூடியோ – விஜயா வாஹினி, மெஜஸ்டிக்
உதவி டைரக்ஷன் - Ra.சங்கரன், , Rm. ராமசாமி, M.A. சௌந்தர்ராஜன்
எடிட்டிங்: K.சங்கர், K. நாராயணன்
ஒளிப்பதிவு – தம்பு
இசை – விஸ்வநாதன்-ராமமூர்த்தி
தயாரிப்பு - P.S. வீரப்பா
டைரக்ஷன்: K சங்கர்
RAGHAVENDRA
21st April 2014, 08:36 AM
ஆலயமணி விளம்பர நிழற்படங்கள்
உபயம் ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
கலைக்கடவுளின் "ஆலயமணி"
சாதனைப் பொன்னேடுகள்
'விரைவில் வருகிறது' விளம்பரம் : சுதேசமித்ரன் : 27.6.1962
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5076-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : ன்சுதேசமித்ர 18.11.1962
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5077-1.jpg
'இன்று முதல்' விளம்பரம் : சுதேசமித்ரன் : 23.11.1962
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5083-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 30.11.1962
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5078-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 6.12.1962
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5079-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : அறப்போர் : 7.12.1962
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5080-1.jpg
First Release Ad : The Hindu : 1962
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5084-1.jpg
50வது நாள் விளம்பரம் : சுதேசமித்ரன் : 11.1.1963
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5081-1.jpg
100th Day Ad : The Hindu : 2.3.1963
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5082-1.jpg
100வது நாள் விளம்பரம் : மாலை முரசு : 3.3.1963
[101வது நாளான 3.3.1963 ஞாயிறன்று கொடுக்கப்பட்டது]
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5075-1.jpg
குறிப்பு:
1. 3.3.1963 தேதியிட்ட 'மாலை முரசு' 100வது நாள் விளம்பரம், 101வது நாளில் கொடுக்கப்பட்டதால், மதுரையில் மட்டும், 101வது நாள் முதல் ஷிஃப்ட் செய்யப்பட்ட திரையரங்கமான 'பரமேஸ்வரி' இடம்பெற்றுள்ளது. "ஆலயமணி", மதுரை 'சென்ட்ரல் சினிமா'வில் 100 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றி கண்டது. ஏனைய ஏழு அரங்குகளிலும், 105 நாட்கள் ஓடி, 1962-ம் ஆண்டின் 'இமாலய வெற்றிக்காவியம்' என்கின்ற அந்தஸ்தை அடைந்தது.
2. அயல்நாடான இலங்கையிலும் " அபார வெற்றி "ஆலயமணி எழுப்பியது ஒலிகளை. 'கிங்ஸ்லி' திரையரங்கில் 100 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டது.
3. மெகாஹிட் காவியமான "ஆலயமணி", 1962-ம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படங்களிலேயே அதிக வசூல் செய்த Box-Office Record காவியம்.
…..
பக்தியுடன்,
பம்மலார்.
RAGHAVENDRA
21st April 2014, 08:38 AM
What wikipedia says about Alayamani:
http://en.wikipedia.org/wiki/Aalayamani
RAGHAVENDRA
21st April 2014, 08:43 AM
டியர் சித்தூர் வாசு
தாங்கள் ஆலோசனையின் படி இனி வரும் படங்களின் நெடுந்தகடு விவரமும் அளிக்க முயல்கிறேன்.ஆலயமணி திரைப்படத்திற்கு இது தேவைப்படாது.
RAGHAVENDRA
21st April 2014, 08:46 AM
ஆலயமணி - திரைக்காவியத்தின் பாடல்களைப் பற்றிய விவரங்கள்
1. மானாட்டம் தங்க மயிலாட்டம் - பி.சுசீலா
2. கண்ணான கண்ணனுக்கு - சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா
3. தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே - எஸ்.ஜானகி
4. பொன்னை விரும்பும் பூமியிலே - டி.எம்.சௌந்தர்ராஜன்
5. கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா டி.எம்.சௌந்தர்ராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி
6. சட்டி சுட்டதடா - டி.எம்.சௌந்தர்ராஜன்
Gopal.s
21st April 2014, 09:20 AM
ஆலய மணி- 1962
மன நலம் குன்றியவர்களை சமூகம் நடத்திய விதம் குறித்து ஆராய்ந்தால் மனம் பதைக்கும். 20 ஆம் நூற்றாண்டில்தான் psycho -analysis துறை fraeud என்பவரால் அறிமுக படுத்த பட்டு ,முன்னேற்றம் கண்டது. மன நலம் குன்றியவர் குறித்து சமூகத்தின் பார்வையும் மாறியது. அதற்கு முன் அவர்களுக்கு சமூகத்தால் சிகிச்சை என்ற பெயரிலும் (அரைகுறை வைத்தியர்,பூசாரி),வேண்டாத பிரஜைகள் என்ற முறையிலும் பட்ட கொடுமைகளை பற்றி ஒரு தனி பதிவே போடலாம். இதிலாவது,தன உலகத்தில் வாழும் ,வெளியுலகம் அறியா முழு மனம் குன்றியவர்கள் கொடுத்து வைத்தவர்கள். விளிம்பு நிலை மனிதர்களோ தன் உலகம்,சமூக உலகம் இரண்டிலும் ஊசலாடி, இரு நிலை பாதிப்பினால் சொல்லொணா துயரம் எய்தினர். இந்த வகை மன நிலை பிறழ்வுகளை வைத்து , 1950 களிலும், 1960 களிலும், வெகு சில ஹாலிவுட் படங்களே வெளியாயின. அவையும் பெரும்பாலும் thriller வகைதான். ஆனால் இந்திய சினிமா சரித்திர வரலாற்றிலேயே ,முதன் முறையாய், விளிம்பு நிலை பிறழ்வு கொண்ட ஒரு கதாநாயகனை, முன்னிறுத்தி , வடிவம்,உள்ளடக்கம் எல்லாவற்றிலும் ,மாறுபட்ட படமாய்(ஒரு அந்நிய பட inspiration ) ஒரு தமிழ் படம், சிவாஜி, ஜி.பாலசுப்ரமணியம்,ஜாவர் சீதாராமன்,கே.சங்கர், பீ.எஸ்.வீரப்பா கூட்டு முயற்சியில் வெளியானதும் இன்றி, எல்லாதரிப்பினராலும் ஆதரிக்க பட்டு பிரம்மாண்ட வெற்றி பெற்று, பிறகு தெலுங்கு,ஹிந்தி எல்லா மொழிகளிலும் தழுவ பட்டது. சினிமா சரித்திரமே, அதற்கு முன்னும்,பின்னும் ,அந்த ரசவாத அதிசயத்தை கண்டதில்லை.காணவில்லை. காதல்,நட்பு,விசுவாசம்,பொறாமை, possessiveness , மனித-மிருக மனநிலை போராட்டம்,எல்லாம் சம நிலையில் தேக்கிய ஒரு positive approach கொண்ட மிக நல்ல காவிய சித்திரம்தான் ஆலய மணி.
ஆலய மணியின் கதையை பார்ப்போம்.
பெரும் பணக்காரன் தியாக ராஜன் ,உறவினர் யாருமின்றி வாழும் தனியன். சிறு வயதில் அதீத possessive குணத்தினால்,நண்பன் ஒருவன் மரணத்திற்கு காரணமாகி (மீனா என்று பெயரிட பட்ட பொம்மைக்காக ) , சீர்திருத்த பள்ளியில் இருந்து மீண்டு , deep seated trauma வின் பாற்பட்டு குற்ற உணர்வில் இருந்து மீள துடிப்பவன்.அதீத கருணை, மனித நேயம், வள்ளன்மை,பெருந்தன்மை ஆகிய குணங்களை வளர்த்து மிருக குணங்களை பொசுக்கி வாழ நினைத்தாலும் அவ்வப்பொழுது தலை தூக்கும் போட்டி,பொறாமை குணங்களால் உந்த படுபவன். தற்செயலாய், சேகர் என்ற டாக்டருக்கு படிக்கும் ஒருவனின் நற்பண்புகளால் கவர பட்டு ,ஏழையான அவனை,சம-நிலை நண்பனாய் பாவித்து ஆதரித்து அன்பு செலுத்துகிறான்.சேகருக்கு வானம்பாடி என்ற புனை பெயர் காதலி. சேகருடன் சேர்ந்து படிக்கும் பிரேமா சேகரை ஒரு தலையாய் விரும்புகிறாள். பிரேமாவின் அப்பா ஆட்கொண்டான் பிள்ளையோ பண பேய். பெண்ணை தியாகுவிற்கு மணமுடிக்க விரும்புகிறார். தற்செயலாய் எஸ்டேட் கணக்கு பிள்ளை முத்தையாவின் இளைய மகள் மீனாவை சந்தித்து விரும்ப ஆரம்பிக்கிறான் தியாகு. சந்தர்ப்ப வசமாய் முத்தையாவின் மூத்த பெண் ,ஆட்கொண்டானால் வஞ்சிக்க படும் போது தலையிட்டு ,அந்த பெண்ணை விரும்பியவனே மணக்க காரணமான தியாகு,தன் நண்பன் சேகர் மூலம் தான் மீனாவை மணக்க விரும்புவதை தெரிவிக்கிறான். ஆனால் அந்த மீனாதான் ,தான் விரும்பிய வானம்பாடி என்ற உண்மை தெரிந்து அதிர்ச்சியடையும் சேகர்,தன் நண்பனின் விருப்பத்தை மதித்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறான்.மீனாவிடம் உண்மையை தியாகுவிடம் இருந்து மறைக்க சொல்கிறான்.
இதனால் பொறாமையடையும் ஆட்கொண்டான், மீனாவை பழிவாங்க, காரின் brake ஐ பிடுங்க,காப்பாற்ற முனையும் தியாகு,brain concoction மற்றும் multiple -fracture இனால் கால்களின் செயல் பாட்டை இழக்கிறான். திருமண நிச்சயம் செய்ய பட்ட மீனா ,தியாகுவிடம் ,தொடர்ந்து அன்பு செலுத்தி ஆதரவு காட்டுகிறாள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால்,மீனா -சேகரின் மேல் சந்தேகம் கொண்டு,சேகரை கொலை செய்ய மரண பாறைக்கு அழைத்து செல்கிறான் தியாகு . கொலை முயற்சியில் தப்பிக்கும் சேகர், உண்மையை சொல்ல,குற்ற உணர்ச்சியில் தியாகு தானே ,மரண பாறையில் இருந்து குதித்து விடுகிறான். பிறகு ,காப்பாற்ற பட்டு, கால்களை பெற்று, பிரேமா-சேகர், மீனா -தியாகு ,ஒன்று சேர சுபம்.
இந்த படத்தில் நடிகர் திலகம் ,பாத்திரத்தை மிக புரிந்து அசத்துவார். தாயன்பு அறியாத,தந்தையால் உதாசீன படுத்த பட்ட ,தனிமை பட்ட, தன்னை தூயவனாய் மாற்றி கொள்ள விழையும் பாத்திரத்தை முதல் காட்சியில் இருந்து ,கண் முன் நிறுத்துவார். (வழக்கொழிந்து கொண்டிருந்த தூய தமிழ் வசனங்கள் உறுத்தினாலும்).நண்பனுடன், என்னிடம் இல்லாத உயர்ந்த பண்பு உன்னிடம் உள்ளது என்று குறிப்பிட்டு, தானே ஒரு possessive type என்ற போதிலும்,நண்பன் ,ஒரு வாக்குவாதத்தில்(யார் காதலி உயர்ந்தவர்?) சட்டையை பிடித்து விட,ஒரே நொடியில் சுதாரிப்பார்.சம நிலை அடைவார். ஒரு explicit demonstrative பாணியில் நடிப்பார். நல்ல தன்மையை வளர்த்து கொள்ள விழையும் ஒருவனின் துடிப்பு அதில் நன்கு தெரியும். சரோஜா தேவியை முதல் முறை பார்த்து, ஒரு ஆச்சர்யம் கலந்த ஆசை பார்வை வீசும் போதும்,பிறகு ,உங்கள் பெண்ணின் வாழ்வு மலரட்டும் என்று சரோஜா தேவியிடம் திரும்பி ,ஒரு நொடி அர்த்தமுள்ள வாஞ்சையுடன் பண்ணும் gesture , deep seated trauma with shock and despair என்பதை காட்டும் சிறு வயது சம்பந்த பட்ட காட்சிகள், கால்கள் இழந்ததை உணரும் தருணம்,தனித்திருக்க விரும்பவதை வறட்சியுடன் சொல்வது எல்லாம் அற்புதம். நடிகர் திலகம் ,விஸ்வரூபம் எடுக்கும் இடங்கள்,, சந்தேகம் சூழ்ந்து மிருக உணர்ச்சி தலை தூக்கும் இடங்கள்.ஆசையுடன் ,தன் நிச்சயிக்க பட்ட பெண்ணை வெறிக்கும் எஸ்.எஸ்.ஆரை பார்த்து ஆத்திரப்பட்டு கத்தும் இடம், feeling of inadequacy யினால், விபரீத கற்பனையில் மூழ்கி(mind picture gives rise to restive passion and subsequent revenge attitude ),மிருக குணத்தில் தன்னை அமிழ்த்தும் இடங்களில்,அடடா முழு படமும் மிருகமாகவே இருந்திருக்கலாமே என்று ஏங்க வைக்கும் நடிப்பு.
இந்த படத்தை உயரத்தில் தூக்கி நிறுத்துவது, கதை,திரைக்கதை , எடிட்டிங், இயக்கம்,பாடல்கள்,இசை,சக நடிக-நடிகையரின் அபார பங்களிப்பு ஆகியவை. சிறிது சறுக்க வைப்பது out -dated தூய தமிழ். அதுவும் ஒரே ஒரு பாத்திரம் மட்டுமே தூய தமிழ் பேசும். நல்ல வசனங்களை கொண்டிருந்த ஆலய மணி,ஆண்டவன் கட்டளை போன்ற படங்களில் இந்த வகை வசனங்கள் பெரும் குறையாக படும்.
மிக மிக குறிப்பிட பட வேண்டியது எஸ்.எஸ்.ஆரின் அபார நடிப்பும்,சரோஜா தேவியின் நல்ல பங்களிப்பும்.(பாலும் பழமும்,இருவர் உள்ளம் போல்)
விஸ்வநாதன்-ராமமூர்த்தி -கேட்கவே வேண்டாம். full form இருந்த போது வந்த படம்.கண்ணதாசன் - இரட்டையர் இசையில், கண்ணான கண்ணனுக்கு,தூக்கம் உன் கண்களை ,மானாட்டம்,பொன்னை விரும்பும், கல்லெல்லாம் மாணிக்க, சட்டி சுட்டதடா,எல்லாமே பயங்கர ஹிட் பாடல்கள்.படத்திலும் மிக நல்ல முறையில் படமாக்க பட்டிருக்கும்.
பட துவக்கமே ,அன்றைய ரசிகர்களுக்கு shock value கொண்டதாக பட்டிருக்கும். கதாநாயகிகள் கற்புக்கரசிகளாய் வலம் வந்த இந்திய திரையில் infatuation பற்றி பேசியது சாதா விஷயமல்ல. அன்றைய முதல் இடத்தில் இருந்த ஸ்டார் நடிகரின் படத்தில் இரண்டாம் ஹீரோ கதாநாயகியுடன் டூயட் பாடியது, கதாநாயகனை விட ,நண்பனை உயர் குணத்துடன் சித்தரித்தது எல்லாவற்றையும் பார்த்தால், நடிகர் திலகம் என்பவர் எப்படி நல்ல படங்களுக்காக ஒத்துழைத்தார் என்பது இமேஜ் இமேஜ் என்று ஓவர்-மார்க்கெட் செய்யும் இளைய தலை முறைக்கு பாடம்.
ஆலய மணியில் எடிட்டர் ,இயக்குனர் கே.சங்கரின் பங்களிப்பு அபாரமானது. கத்தி மேல் நடப்பது போன்ற கதையமைப்பில் ,சிறிதும் சறுக்காமல், அனைத்தையும் லாஜிக் உடன் justify பண்ணும் இயக்கம்.ரசிகர்கள் விரும்பும் அம்சங்களையும் அழகாக கலந்து, காமெடி அது-இது என்ற கதையை தொய்ய வைக்காத அற்புத இயக்குனர். trauma சம்பந்த பட்ட காட்சி, பின்னால் சிவாஜியின் மன போராட்ட காட்சி(ஆண்டவன் கட்டளையிலும் அற்புதமாய் வந்திருக்கும்-தேவிகாவினால் அலைக்கழிக்க படும் காட்சிகளில்) என்று, எடிட்டிங்,நடிப்பு,இசை,இயக்கம் எல்லாம் கை கோர்த்து படத்தையே உயர்த்தும்.
இந்த படத்தை பொறுத்த வரை முதல் ஹீரோ கதைதான். ஜி.பாலசுப்ரமணியம் ஒரு மூல கதை மேதையாகவே போற்ற பட்டார்.(கே.எஸ்.ஜி, சோலைமலை,செல்வராஜ் போல்) சிக்கலான அமைப்பை கொண்ட கதைக்கு, மிக சிறந்த திரைகதையை கொடுத்த ஜாவர் பாராட்டுக்குரியவர்.
கோப காரன்,பொறாமைக்காரன், பாதி மனிதன்-பாதி மிருகம்,அழித்து விடும்(nihilistic ) உணர்வு மிகும் possessive உணர்வு கொண்ட மனிதன்,personality disorder இனால் வரும் நம்பிக்கை குலைவு(Feeling of inadequecy accentuates it), அதனால் எழும் பின்னலான மனித மன உணர்வுகள், மனித உணர்வுகளில் கறுபபு கறை படிந்து , அதன் நிழலில் மனசாட்சியின் குரலை நசித்து, மிருக வசப்படும் உணர்வை, மிகையில்லாமல், melo -drama குறைத்து , positive ஆக சொன்ன மிக மிக சிறந்த படைப்பு ஆலய மணி என்று அடித்து சொல்லலாம்.
Subramaniam Ramajayam
21st April 2014, 11:24 AM
ALAYAMANI===A golden crown on NADIGAR THILAGAM'S FILMS CHALANGING ROLE
SUPERBLY DONE BY OUR NT NO OTHER ACTOR CAN EVEN THINK OF DOING BETTER PERFORMANCE my favorie movie always'
that year pesum padam has given honours as best actor to gemini film sumaithangi
see the fate even that time
MGR's remark --thambi ganesan thavira yaralum ponna mudiyatha role --open comment--those days. what a great styles acting mied with good songs music what not. simply great first picture celebrated 1oo days successful run in 4 theatres in madras
after nododimannan record breaking collections at sri krishna mint area.
sivaa
23rd April 2014, 10:29 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/GEDC3823a_zpsfcafd662.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/GEDC3823a_zpsfcafd662.jpg.html)
இந்த விளம்பரத்தில் கீழ் பக்கத்தில் மேற்கண்ட படத்தின்
விநியோகிஸ்த்தர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது
இலங்கை விநியோகஸ்தரின் விபரமும் உண்டு
கவனித்து பாருங்கள் விபரம் பின்னர்
RAGHAVENDRA
27th April 2014, 11:40 AM
சிவா சார்
வடிவுக்கு வளைகாப்பு இலங்கை விநியோகம் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள ஆவலாயுள்ளோம்.
RAGHAVENDRA
28th April 2014, 07:42 AM
Sivaji Ganesan Filmography Series
84. Chitor Rani Padmini சித்தூர் ராணி பத்மினி
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/CRPstillfw_zpsa40a3cb8.jpg
தணிக்கை16.01.1963
வெளியீடு 09.02.1963
தயாரிப்பு – உமா பிக்சர்ஸ்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வைஜயந்தி மாலா, டி.எஸ்.பாலய்யா, எம்.என்.நம்பியார், டி.பாலசுப்ரமணியம், காகா ராதாகிருஷ்ணன், ருஷ்யேந்திர மணி, டி.பி.முத்துலக்ஷ்மி மற்றும் பலர்
நடனம் – ராகினி, ஹெலன்
திரைக்கதை வசனம் – இளங்கோவன், ஸ்ரீதர்
நடன அமைப்பு – வி.எஸ்.முத்துசாமி பிள்ளை, ஸோஹன் லால்
உடைகள் – பி.ராமகிருஷ்ணன், கே.ஏ.ரஹ்மான்
மேக்கப் – ரங்கசாமி, என். சிவராம், என்.ஆர். தேவ்
ஸ்டில்ஸ் – வெங்கடாச்சாரி
விளம்பரம் – ரவி பப்ளிசிட்டி சர்வீஸ்
ஸ்டண்ட் – ஸ்டண்ட் சோமு அண்ட் பார்ட்டி
ப்ராசஸிங் – விஜயா லேபரட்டரி
ஸ்டூடியோ – கோல்டன், வாஹினி
ஒலிப்பதிவு ஆர். கண்ணன் – ரேவதி (மதராஸ்)
எடிட்டிங் – எம்.ஏ. பெருமாள்
உதவி டைரக்டர் – கே.எம். கோவிந்த்ராஜன்
ஒளிப்பதிவு – பொம்மன் இரானி, வி.குமார தேவன்
கலை – ஏ.கே. சேகர்
இசை – ஜி.ராமநாதன்
தயாரிப்பாளர் – ஆர்எம். ராமநாதன்
இயக்கம் – சிஹெச். நாராயணமூர்த்தி
விளம்பர நிழற்படங்கள் – ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து
http://imageshack.com/a/img845/5369/2gsi.jpg
http://imageshack.com/a/img841/5610/0ao8.jpg
http://imageshack.com/a/img835/2990/9l7f.jpg
பாடல் விவரங்கள்
https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1.0-9/10153741_854241297926584_5248335391612612677_n.jpg
1. தேவி விஜய பவானி – சுரபி - பி.சுசீலா
2. ஓஹோ நிலா ராணி – கு.மா. பாலசுப்ரமணியம் – சீர்காழி கோவிந்தராஜன்
3. பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் – உடுமலை நாராயண கவி – சீர்காழி கோவிந்தராஜன்
4. ஆ... ஹம் டேக்கா மேலே ஹாய் ... தஞ்சை ராமய்யா தாஸ் எஸ்.ஜானகி
5. சிட்டு சிரித்த்து போலே – கண்ணதாசன் – சீர்காழி கோவந்தராஜன், பி.சுசீலா
6. வானத்தில் மீனொன்று கண்டான் – சுரபி – சூலமங்கலம் ராஜலட்சுமி
7. ஆடல் பாடல் காணும் போது – கு.மா.பாலசுப்ரமணியம் – எஸ்.ஜானகி
8. வானத்தில் சூழ்ந்த்து மேகம் – அ. மருதகாசி – பி.சுசீலா
RAGHAVENDRA
28th April 2014, 07:46 AM
சித்தூர் ராணி பத்மினி - பாடல் காட்சிகள்
தேவி விஜய பவானி
http://youtu.be/X7oBW8QsHmg
ஓஹோ நிலா ராணி
http://youtu.be/MpTJTxR_7iw
பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்
http://youtu.be/YOXZzH78aos
சிட்டு சிரிப்பது போலே
நடிகர் திலகத்திற்கு சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அபூர்வமான டூயட் பாடல் இடம் பெற்ற படம் சித்தூர் ராணி பத்மினி. இப்பாடல் இசை மேதை ஜி.ராமநாதனின் புகழ்க் கிரீடத்தில் மற்றுமோர் வைரமாய் மின்னுவதாகும். துவக்கத்தில் வரும் ஹம்மிங் நம்மை மெய்மறக்கச் செய்யும். கண்ணதாசனின் வரிகளை சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி.சுசீலா பாடியுள்ளனர்.
http://youtu.be/SziQ47p0FLk -
இயற்கையான நடிப்பு மட்டுமல்ல இயற்கையான அழகிற்கும் சொந்தக் காரர் நடிகர் திலகம் என்பதை நிரூபிக்கும் படங்களில் சித்தூர் ராணி பத்மினி குறிப்பிடத் தக்கதாகும். ராஜா ராணி பாத்திரங்களை யாரோ குத்தகைக்கு எடுத்தது போல் வர்ணித்து வந்த மீடியாக்களின் கூற்றுக்களைத் தவிடு பொடியாக்குவது சித்தூர் ராணி பத்மினியில் நடிகர் திலகத்தின் அட்டகாசமான தோற்றம். இப்பாடல் காட்சியில் அருகே வந்தால் என்ற வரிகளின் போது ஒரு புன்னகை புரிவார் பாருங்கள்... ராஜா ராணி வேடங்களைப் பற்றியும் நடிகர்களைப் பற்றியும் பாரபட்சமாக எழுத நினைக்கக் கூடிய மீடியாக்களுக்கு இது ஒரு பாடமாகும்.
வானத்தில் மீனொன்று கண்டேன்
http://youtu.be/W-vWBrBVYuA
ஹெலன் .. இந்தியத் திரையுலகின் கனவுக் கன்னியாக அந்தக் காலத்தில் ஏராளமான ரசிகர்களின் தூக்கத்தைக் கலைத்தவர் என்று புகழ் பெற்றவர். இவர் பல தமிழ்ப் படங்களில் நடனமாடியுள்ளார். இவற்றில் இசை மேதை ஜி.ராமனாதன் அவர்கள் இசையமைத்த பாடல்கள் பல அடங்கும். அப்படிப் பட்ட ஒரு பாடலை நீங்கள் பார்க்க உள்ளீர்கள்.
http://youtu.be/_pM7TrzyKbg
ஆடல் பாடல் இருக்கும் போது வீரம் தேவையா என நடன மங்கை கேட்பதாக பாடல் காட்சி. 1963ம் ஆண்டு வெளிவந்த சித்தூர் ராணி பத்மினி திரைப்படத்தில் இப்பாடல் இடம் பெற்றது. இப்படம் ஜி.ஆர். அவர்களின் இசை வரலாற்றில் மிகவும் முக்கியமானதாகும். வெறும் பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசையிலும் தான் மேதை என நிரூபித்த படங்களில் இதுவும் ஒன்று.
http://www.inbaminge.com/t/images/G%20Ramanathan.jpg
இப்பாடலில் ஒலிக்கும் இசைக் கருவிகள் பாடலின் சூழலைத் தத்ரூபமாக பிரதிபலிக்கும் வகையில் தேர்வு செய்யப் பட்டு இசைக்கப் பட்டுள்ளன. இந்திய இசையை மேல்நாட்டுக் கருவிகளில் அருமையாகக் கொண்டு வருவது ஜி.ஆர். அவர்களின் சிறப்பு. இதில் அவர் முன்னோடியாவார். இப்பாடல் அதற்கு ஒரு சான்று. நாகம் நடனமாடுவது போன்றி இசைக்கு க்ளாரினெட் மற்றும் வயலின்கள் ஒலிப்பது மிகவும் சிறப்பாக உள்ளது. பாடலின் வேகம், எஸ்.ஜானகியின் மயக்கும் குரல், ஹெலனின் வேகமான நடனம், இடையிடையே நடிகர் திலகத்தின் மயக்கும் புன்னகை என இப்பாடல் என்றென்றும் மறக்க முடியாத பாடலாக என் மனதில் இடம் பிடித்துள்ளது. பின்னணி இசையில் வயலின்களின் இணைப்பில் கிறங்க வைக்கும் உணர்வைக் கொண்டு வந்திருப்பது ஜி.ஆர். அவர்களின் திறமைக்கு சான்று.
RAGHAVENDRA
2nd May 2014, 07:23 AM
அடுத்து இங்கே இடம் பெறப் போகும் திரைப்படம்..
"நிறுத்துங்க... அதான் எனக்குத் தெரியுமே" என்கிறீர்களா...
Gopal.s
2nd May 2014, 07:44 AM
ஸ்ரீதரிடம் கதை கேட்டார் உமா பிக்சர் அதிபர். கல்யாண பரிசு கதை சொல்ல பட்டது. திருப்தி அடையாத அதிபர்,ஏதேனும் சரித்திர கதையாக சொல்லுங்கள்.சிவாஜி சாரை வைத்து பண்ண போகிறேன் என்றார். சித்தூர் ராணி பத்மினி விதை ஊன்ற பட்டது 1958-59 வாக்கில். நீண்ட நாள் தயாரிப்பு.என்னுடைய பிடித்தமான அந்த கால இயக்குனர்களில் ஒருவர் சி.எச்.நாராயண மூர்த்தி (அன்னையின் ஆணை இயக்குனர்).மற்றவர் டி.பிரகாஷ் ராவ்.(உத்தம புத்திரன்) . ஸ்ரீதர், சி.எச்.நாராயண மூர்த்தி,ஜி.ராமநாதன் என்ற திறமையாளர்கள். சிவாஜி -வைஜயந்தி என்ற அற்புத ஸ்டார் ஜோடி. நல்ல படம். என்ற போதும் ,பருவம் தவறி , ராஜா-ராணி கதை வழக்கொழிந்து ,குடும்ப-பொழுதுபோக்கு படங்கள் ரசிக்கப்பட்ட நேரத்தில் வந்து மாட்டி கொண்டது.அந்த தயாரிப்பின் கடைசி படமானது.
இருந்தாலும் ,இன்றும் ரசிக்க தக்க படமே.
Subramaniam Ramajayam
2nd May 2014, 08:01 AM
அடுத்து இங்கே இடம் பெறப் போகும் திரைப்படம்..
"நிறுத்துங்க... அதான் எனக்குத் தெரியுமே" என்கிறீர்களா...
raghavender sir I feel answers for earlier NT quiz questions not published. please let us know and also whether the programe is discintined or what/ pl clarify.
Gopal.s
2nd May 2014, 10:49 AM
அறிவாளி- 1963.
சபாபதி,தூக்கு தூக்கி, முதலிய படங்களில் பங்கு பெற்ற ஏ.டி.கிருஷ்ணசாமி எழுதி தயாரித்த வெற்றி படம் அறிவாளி. இவர் ஆங்கில இலக்கிய,சினிமா அறிவு நிரம்பிய நகைச்சுவை உணர்வுள்ளவர்.மெல்லிய நகைச்சுவை கொண்ட பொழுது போக்கு படங்களில் வல்லவர்.
taming of the shrew என்ற shakspere நாடகம் அறிவாளி என்று transcreat ஆனது.ஓஹோ என்று இல்லாவிட்டாலும் குடும்பத்தோடு ரசிக்க கூடிய ஜாலி படம். இதன் ஒலி சித்திரம் கூட பெரும் வரவேற்பை பெற்றது. சிவாஜி-பானுமதி காமெடி, தங்கவேல்-சரோஜா காமெடி எல்லாம் அன்றைய காலகட்டத்தில் பெரும் வரவேற்பு பெற்றது.
நல்ல ஒரு கருத்தையும் அழகாக சொன்ன ,துளி கூட ஆபாசம்,வன்முறை,காதல்,கூடுதல் உணர்ச்சி வெள்ளம்(melodrama ) எதுவும் கலக்காத casual &clean entertainer .
RAGHAVENDRA
2nd May 2014, 10:04 PM
Sivaji Ganesan Filmography Series
85. Arivali அறிவாளி
http://www.hindu.com/cp/2009/09/18/images/2009091850381601.jpg
தணிக்கை 19.02.1963
வெளியீடு 01.03.1963
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/Arivaliadfw_zps0dc837cf.jpg
http://upload.wikimedia.org/wikipedia/en/5/5d/Arivaali_Poster.jpg
http://1.bp.blogspot.com/_c70ddy4JCqw/RxJCF9Z92LI/AAAAAAAAB8k/P2eDWsp6NX8/s1600/Arivali.jpg
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – ஆளவந்தான்
பி.பானுமதி – மனோரமா
டி.எஸ்.பாலையா – நல்லமுத்து நாயக்கர்
கே.ஏ.தங்கவேலு – முத்துவேல்
கே.சாரங்கபாணி – தண்டபாணி பிள்ளை
டி.ஆர்.ராமச்சந்திரன் – டாம் குமார்
எஸ்.வி.ராமதாஸ் – ஜமீன்தார் அழகு சிங்காரம்
எம்.சரோஜா – இந்தியா
டி.பி.முத்துலட்சுமி – தங்கலட்சுமி
ஜெமினி சந்திரா மோகினி
கன்னையா - கந்தசாமி
திரைக்கதை வசனம்- ஏ.டி கிருஷ்ணசுவாமி
ஒளிப்பதிவு – கே.பாலு
ஒலிப்பதிவு – பாடல்கள் – வி.எஸ்.ராகவன். ஈ.ஐ.,ஜீவா, டி.எஸ்.ரங்கசாமி, கண்ணன்
வசனம் – ஜி.வெங்கட்ராமன்
Recorded on வெஸ்ட்ரெக்ஸ் ரிகார்டிங் சிஸ்டம்
இசை அமைப்பு – எஸ்.வி.வெங்கட்டராமன்
பாடல்கள் பாபநாசம் சிவன் மருதகாசி
பின்னணி பாடியவர்கள் ட்டி.எம்.சௌந்ர்ராஜன், எஸ்.வி. வெங்கட்டராமன், ராதா ஜெயலட்சுமி, லீலா, ஜமுனா ராணி, கே.ராணி
கலை – வி.எம்.
செட் ப்ராபர்டீஸ் – சினி கிராப்ட்ஸ்
உடைகள் ராமகிருஷ்ணன், பிரான்ஸிஸ்
எடிட்டிங் வி.எஸ்.ராஜன், வாசு
ஒப்பனை ரங்கசாமி, கஜபதி, பீதாம்பரம், ராமதாஸ், சொர்ணப்பா, பெரியசாமி, நாராயணசாமி, நவநீதம்
நடனம் சாயி சுப்புலட்சுமி
நடன அமைப்பு பி.எஸ்.கோபாலகிருஷ்ணன்
ஸ்டில்ஸ் ஆர்.என்.நாகராஜ ராவ்
விளம்பர டிசைன்கள் ஜி.ஹெச்.ராவ்
பத்திரிகை விளம்பரம் அருணா அண்ட் கோ
ப்ராஸ்ஸிங் விஜயா லேபரட்டரி எஸ்.ரங்கநாதன்
ஸ்டுடியோ நிர்வாகம் – வாஹினி – சி.எஸ்.பிரகாஷ் ராவ், எம்.ஜி.ராமதாஸ், பி.சுந்தரம் பரணி – சண்முகம்
ஸ்டூடியோ – வாஹினி, பரணி, மெஜஸ்டிக், ரேவதி
தயாரிப்பு நிர்வாகம் – என்.வி.ஸ்ரீராமன்
தயாரிப்பு டைரக்ஷன் ஏ.டி.கிருஷ்ணசுவாமி
RAGHAVENDRA
2nd May 2014, 10:23 PM
அறிவாளி – சிறப்புச் செய்திகள்
உலகப் புகழ் பெற்ற இலக்கிய மேதை வில்லியம் ஷேக்ஸ்பியரின் டேமிங் தி த ஷ்ரூ (Taming of the Shrew) நாடகம், பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்களுக்கு அடித்தளமாய் அமைந்த சிறப்பான கதையமைப்பைக் கொண்டது. . இந் நாடகம் திரு ஒய்.ஜி.பார்த்தசாரதி அவர்களின் யூ.ஏ.ஏ. குழுவினரால் ஓ வாட் எ கேர்ள் என்ற பெயரில் நாடகமாக நடிக்கப் பட்டது. இந் நாடகத்தில் ஜெயலலிதா அவர்களின் தாயார் சந்தியா அவர்களும் அவருடைய சகோதரி வித்யாவதி அவர்களும் நடித்திருந்தனர். ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகத்தை திரு ஏ.டி.கே. என்கிற ஏ.டி. கிருஷ்ணசாமி அவர்கள் தமிழுக்கேற்றவாறு நாடகமாக்கம் செய்திருந்தார். இதற்கு கிடைத்த நல்ல வரவேற்பு இதனைத் திரைப்படமாக்கும் எண்ணத்தை அவருக்குள் தூண்டியது.
முதலில் வேறு ஒரு நடிகரை வைத்து இப்படத்தை தயாரிக்கத் திட்டமிட்டிருந்தனர். பல்வேறு காரணங்களால் இத்தயாரிப்பு கைவிடப் பட்டது. பின்னர் நடிகர் திலகத்திடம் கேட்டு அவர் சம்மதித்த பின்னர் ஓரிரு ஆண்டுகள் கழித்து துவக்கப் பட்டது. அருணா பிலிம்ஸ் தூக்குத் தூக்கி தயாரான போதே இப்படமும் துவக்கப் பட்டதாகவும் அக்காலத்தில் பேசப் பட்டது.
நீண்ட கால தாமதத்திற்குப் பின்னர் ஒரு வழியாக 1963ம் ஆண்டு வெளியான அறிவாளி, ஒரு வெற்றித் திரைப்படமாகும். நடிகர் திலகத்தின் ஸ்டைலுடன் கூடிய நகைச்சுவை நடிப்பு, பானுமதியின் துடுக்கான பாத்திரப் படைப்பு, கே.ஏ.தங்கவேலு டி.பி.முத்துலட்சுமி இணையாக நடித்து புகழ் பெற்ற அதான் எனக்குத் தெரியுமே காட்சி, எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் இனிமையான பாடல்கள் அனைத்தும் இன்றளவும் அறிவாளி திரைப்படத்தை மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக வைத்துள்ளன.
குறிப்பாக ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும் பாடல் அதற்குப் பின் வந்த பல படங்களில் பழமொழியாக இடம் பெறும் அளவிற்கு பிரபலமானது என்று கூறுவர்.
இதே போல கண்ணாலே காணாமல் பாடலில் இடம் பெற்ற கம்பீரமானவன்டி, அழகானவன்டி என்று முடியும் வரிகள் பின்னாளில் சகல கலா வல்லவன் திரைப்படத்தில் இடம் பெற்ற கட்டவண்டி பாடலுக்கு Inspiration ஆகத் திகழ்ந்தன என்றால் மிகையில்லை.
தொடக்கம் முதல் இறுதி வரை நகைச்சுவை, விறுவிறுப்பு, இசை என அலுக்காமல் செல்லும் படம் அறிவாளி.
அறிவாளி திரைப்படத்தின் ஒரிஜினலான, ஓ வாட் ஏ கேர்ள் நாடகத்தின் சில நிழற்படங்கள் தங்கள் பார்வைக்கு இணையத்தில் முதன் முதலாக.
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/rare%20snaps/owag03fw_zps58f96ffa.jpg
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/rare%20snaps/owag01fw_zpsa729aebf.jpg
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/rare%20snaps/owag02fw_zpsc1184960.jpg
RAGHAVENDRA
2nd May 2014, 10:30 PM
காணொளிகள்
முழுப்படம் பார்க்க
http://www.youtube.com/watch?v=p_CPLwHeWXI
வாழிய நீடூழி
http://youtu.be/IlTk4b8Lc4E
அறிவுக்கு விருந்தாகும்
http://www.dailymotion.com/video/x16aok2_arivukku-virunthagum-arivali-1963_shortfilms
கூவாத இன்பக் குயில் கூவும்
http://www.dailymotion.com/video/x15qzee_koovadha-inba-kuyil-arivali-1963_shortfilms
ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்
http://www.dailymotion.com/video/x15opys_aadara-matta-aadi-arivali-1963_shortfilms
கண்ணாலே காணாமல்
http://www.dailymotion.com/video/x16aojs_kannu-rendum-arivali-1963_shortfilms
RAGHAVENDRA
2nd May 2014, 10:31 PM
அறிவாளி திரைப்படத்தின் பாடல்களைப் பற்றிய விவரங்கள்
1. கூவாத இன்பக் குயில் கூவும்- மருதகாசி – பி.பானுமதி
2. பட்டுப் போல் மேனி பளபளக்கும் – மருதகாசி – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.பானுமதி
3. ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும் – மருதகாசி – டி.எம்.சௌந்தர்ராஜன்
4. அறிவுக்கு விருந்தாகும் – மருதகாசி டி.எம்.சௌந்தர்ராஜன்
5. வாழிய நீடூழி புவிமீதிலே – மருதகாசி – ராதா ஜெயலக்ஷ்மி, பி.லீலா
6. வெங்கடரமணா பங்கஜ சரணா – பாபநாசம் சிவன் – பி.பானுமதி
RAGHAVENDRA
2nd May 2014, 10:34 PM
raghavender sir I feel answers for earlier NT quiz questions not published. please let us know and also whether the programe is discintined or what/ pl clarify.
The quiz has not been stopped Sir. It will continue. Pls refer the thread Kannukkulle ennai paaru
RAGHAVENDRA
5th May 2014, 07:33 AM
அடுத்து...
அனைவர் உள்ளங்களையும் கொள்ளை கொண்ட ...
http://www.inbaminge.com/t/i/Iruvar%20Ullam/folder.jpg
Gopal.s
6th May 2014, 07:32 AM
இருவர் உள்ளம்- 1963
நடிகர்திலகத்தின் நடிப்பில் மீண்டும் அவருடைய தெய்வ பிறவி,இரும்புத்திரை பாணி,இயல்பு நடிப்பில் அடக்கி வாசித்த படம் இருவர் உள்ளம். சிவாஜியின் குரு எல்.வீ.பிரசாத் இயக்கி தயாரித்து, கருணாநிதி மீண்டும் நடிகர்திலகத்துடன் இணைந்தார் குறவஞ்சிக்கு பிறகு மூன்று வருட இடை வெளியில். எழுத்தாளர் லட்சுமியின் புகழ் பெற்ற பெண் மனம் (ஆனந்த விகடனில் வெளியான தொடர்) என்ற நெடுங்கதையை தழுவி ,கருணாநிதி அவர்களால் திரைக்கதை அமைக்க பெற்றது.மூல கதையில் இருந்த பிராமண குடும்ப கதையை(ஜகன்னாதன்-சந்திரா) பிராமணம் அல்லாததாக (செல்வம்-சாந்தா) செய்து, அருமையாய் திரைக்கதை அமைத்திருந்தார்.
சிவாஜி ,எப்பவுமே, கதாநாயகியை மையமாய் கொண்ட கதா பாத்திரங்களிலும் நடிக்க தயங்காதவர்.(ஆனாலும் முதல் பரிசை தட்டி சென்று விடுவார்)
மங்கையர் திலகம்,பெண்ணின் பெருமை ,கை கொடுத்த தெய்வம், நீல வானம்,சிவகாமியின் செல்வன்,வாணி-ராணி உதாரணங்கள். இந்த வரிசையில் நாயகியை மைய படுத்தினாலும்,கதையின் நாயகனுக்கும் நிறைய scope கொடுத்த மிக சிறந்த படம் இருவர் உள்ளம்.
இருவர் உள்ளத்தின் கதை-
மிக பெரிய செல்வந்தர் வீட்டு இளைய மகன் செல்வம் டாக்டருக்கு படிக்கிறேன் என்ற பெயரில் பெண்களுடனும்,தவறான நண்பர்களுடனும் சீரழிந்து கொண்டிருப்பவன். செல்வத்தின் தந்தை பெரிய வக்கீல். மூத்த அண்ணன் ,வக்கீலுக்கு படித்திருந்தாலும்,தொழிலில் திறமையின்றி ,நிறைய பிள்ளை குட்டிகளோடு, கூட்டு குடும்ப நிழலில் வாழ்பவன்.செல்வத்திற்கு ஒரு தங்கை.செல்வத்தின் நடவடிக்கை பிடிக்காமல் ,படிப்பை பாதியில் நிறுத்தி ஊருக்கே வர வழித்து விடுகிறார் தந்தை. செல்வம் ஊரில் வந்தும் திருந்தாமல்,இஷ்டப்படி வாழ்கிறான்.
ஒரு நாள், காரில் தன பெண் நண்பி ஒருத்தியுடன் திமிராக சென்று, சாந்தா என்ற ஏழை டீச்சர் பெண்ணை, இடிப்பது போல் நிறுத்தி tease செய்கிறான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ,அவள் மேல் காதலில் விழுந்து அவளை பின் தொடர்கிறான். சாந்தா காதலுக்கு பச்சை கொடி காட்ட மறுக்கிறாள்.அவளை அடையும் ஆசையில் செல்வம் ஒரு முறை, அவளை யாருமில்லா நேரம் ,தன வீட்டுக்கு தந்திரமாக வர வழைத்து அவள் காதலை வேண்டுகிறான். ஆனால் சாந்தா மறுத்து விட்டு செல்லும் போது,தவறுதலாய் பார்த்தவர்கள் ,ஊரில் தவறாக பேச,ஏழை சாந்தா விருப்பமின்றி ,செல்வத்தை மணமுடிக்கிறாள்.
மணமுடித்த நாளில் இருந்து, செல்வத்தை வெறுக்கும் சாந்தா தாம்பத்ய உறவில் விருப்பமின்றி இனங்குவதால்,செல்வம் , அவள் தன்னை விரும்பி ஏற்கும் வரை,கணவன் என்ற உரிமையை எடுக்க மாட்டேன் என்று சத்யம் செய்கிறான். குடும்பத்தினர் அனைவருமே,செல்வம் திருந்தி வாழ நினைப்பதை அறியாமல், செல்வத்தையே குற்றம் சொல்கின்றனர். ஒரு சமயம் ,நெருங்கி வரும் சந்தர்ப்பத்தில்,செல்வத்தில் பழைய பெண் நண்பியின் குறுக்கீட்டால் திரும்ப பிளவு அதிகமாகிறது. சந்தர்ப்ப சூழ்நிலை சதி செய்ய,செல்வம் ,சாந்தா நெருங்கவே முடியாமல் இருக்கும் தருணம்,சாந்தா செல்வம் திருந்தி விட்டதை உணர்ந்து அவனிடம் தன்னை ஒப்படைக்க முயலும் தருணத்தில், செல்வத்தின் பழைய நண்பியை கொன்ற பழி(செய்தது அவளின் புது நண்பன்) விழ, தந்தை செல்வத்திற்கு எதிராகவும்,அண்ணன் செல்வத்திற்காகவும் வாதாடி, செல்வம் விடுதலையாகி ,சாந்தாவுடன் சேர்கிறான்.
முதல் காட்சியிலேயே களை கட்டி விடும் இருவர் உள்ளம். நடிகர் திலகம் அழகென்றால் அவ்வளவு அழகாக ,ஸ்டைல் ஆக தொப்பியுடன் ,காரில் பறவைகள் பலவிதம் பாட ஆரம்பிப்பார். பல பெண்களுடன் ,நடிகர்திலகத்தின் அத்தனை பாடல்,நடன காட்சிகளும் பிரமாதமாய் வந்திருக்கும்.(யாரடி நீ மோகினி,பறவைகள் பலவிதம்,காதல் மலர் கூட்டம் ஒன்று,ஏன் ஏன் ஏன்,ராஜா யுவ ராஜா,கண்ணா லீலாவிநோதம்,என் ராஜாத்தி வாருங்கடி).கே.வீ.எம்.மாமாவின் பாடலுடன் ,மன்மதனின் ஆடல் (ஜெயந்தி முதல் பத்மினி பிரியதர்ஷினி வரை இந்த பாட்டில்) கேட்க வேண்டுமா குதூகலத்தை?
அடுத்தடுத்த காட்சிகளில் காமெடியில் தூள் பரத்துவார். பல பெண்கள் ஒன்றாக வந்து விட ஒருத்திக்கு தெரியாமல் இன்னொருத்தியை சமாளிக்கும் அழகு. தன்னை நோட்டம் பார்க்க வந்த மாமாவிடம் கையும் களவுமாக மாட்டி கொண்டு முழிப்பது,மாட்டுவது, முதல் காட்சியிலேயே சரோஜா தேவியை டீஸ் பண்ணி விட்டு பிறகு இம்ப்ரெஸ் ஆவது, பிறகு தங்கைக்காக சாந்தா டீச்சரை சிபாரிசு செய்து மாட்ட பார்ப்பது,டீச்சர் தங்கைக்கு டியூஷன் எடுக்கும் போது வழிவது, கீசகன் கதையை சொல்லும் சாக்கில் தன்னை கன்னா பின்னாவென்று திட்டும் சரோஜாதேவியுடன் இனிமே எதுவும் சொல்ல தேவையில்லை அவன் போறான் என்று வாபஸ் வாங்குவது, திருட்டு தனமாக டிரைவர் வேடத்தில் சரோஜா தேவியை வீட்டுக்கு வர வழைத்து விளையாட்டாய் முதலில் பேசி பிறகு தன் காதலை வெளியிட்டு கெஞ்சுவது, தன்னை புரிந்து கொள்ளாத மனைவியிடம் முதலிரவில் விட்டு கொடுப்பது, இதய வீணை பாட்டில் சரோஜா தேவி தன் துயரத்தை அப்படியே வெளியிட,நண்பர்களின் கேலி கண்டு, கூனி குறுகி, நாணி குமுறுவது,குடும்பத்தினரும் தன்னை புரிந்து கொள்ளாதது கண்டு மௌனமாய் உருகுவது , ஒவ்வொரு முறையும் மனைவியுடன் நெருங்கும் சந்தர்ப்பத்திலும் பழைய நண்பர்களாலும்,நண்பிகளாலும் கெடும் போது பதைத்து, பதறுவது, மனைவியிடம் தன் நிலையை சொல்லி வருந்துவது என்று நடிகர்திலகம் ஒவ்வொரு பிரேமிலும் பிரமாத படுத்துவார்.
சரோஜாதேவிக்கு நடிக்கும் வாய்ப்பே நடிகர்திலகத்துடன் இணையும் போதுதான்.(பாக பிரிவினை,பாலும் பழமும்,புதிய பறவை,தேனும் பாலும்)என்னும் போது தோதாக இப்படி ஒரு பாத்திரம். விடுவாரா? ஆரம்ப காட்சியில் தன்னை சீண்டிய பெரிய இடத்து வாலிபனிடம் வெறுப்பை உமிழ்வதில் துவங்கி,அவனின் காதலை சொல்லும் அனைத்து முயற்சிகளையும் முறித்து போடுவது, அவமான படுத்த பட்டு கல்யாணத்திற்கு கட்டாய படுத்த படுவது, கணவனுடன் ஒட்டாத வாழ்க்கை,நெருங்க விரும்பும் நேரத்தில் கணவனின் பழைய வாழ்க்கையின் நிழல் துரத்தி அவமான பட நேரும் தருணங்கள்,பிறகு அவனின் நல்ல மனத்தை அறிந்து சேர வரும் போது,மிக பெரிய பிரச்சினையை எதிர் கொள்ள நேருவது என்ற தருணங்களில் பாத்திரத்தின் தன்மையுணர்ந்து நடிகர் திலகத்துக்கு ஈடு கொடுப்பார்.
ரங்கா ராவ், எம்.ஆர்.ராதா,சந்தியா, ராமா ராவ்,கருணாநிதி,முத்து லட்சுமி,பத்மினி பிரிய தர்சினி,ராமச்சந்திரன் அனைவருமே அவரவர் பங்கை சிறப்பாக செய்திருப்பார்.
சிவாஜி-கருணாநிதி இணைவில் வந்த அத்தனை சமூக படங்களுமே magic தான். பராசக்தி,திரும்பிப்பார்,ராஜாராணி,புதையல்,இருவ ர் உள்ளம் எல்லாமே அருமை. (மனோஹரா ஒரு சரித்திர பட சாதனை அதிசயம்) திரைக்கதை அமைப்பில் மு.க ஒரு மேதை. மூலக்கதை சிதையாமல்,பாத்திர வார்ப்பு கெடாமல், படிக்கும் கதை வேறு பார்க்கும் படம் வேறு என்பதை தெளிந்து திரைக்கதை அமைத்த இரண்டே மேதைகள் மு.கவும்,ஏ.பீ.என். மட்டுமே. மு.க தன திரைக்கதையால் படத்தை மிக மிக சுவாரஸ்யமாக்கி பாத்திரங்களுடன் ஒன்ற வைப்பார்.வசனங்களும் அவ்வளவு அருமையாய்,காலத்தை ஒட்டியதாய் அமைத்து படத்தை மெருகேற்றும். காமெடி, பஞ்ச் வசனங்கள் என்று கலக்கியிருப்பார்.(குடுக்கும் போது வாட்ச் பண்றதாலேதான் வாட்ச்னு பெயர் வச்சாங்களா)
பிரசாத் என்ற அற்புதமான இயக்குனர் ,தயாரிப்பாளராகவும் அமைந்து விட்டால்? கேட்கவா வேண்டும்? எல்லா technical அம்சங்களும் நன்கு கவனிப்பு பெற்றிருக்கும்.(கேமரா,எடிட்டிங்) சிவாஜியும் இவரை தன் குருவாக மதித்ததால் ,இவர் சொன்னதை உள்வாங்கி மிதமாய் நடித்ததை சிவாஜியே குறிப்பிட்டுள்ளார்.அற்புதமான இயக்கம்.
கே.வீ.மகாதேவன் ,சிவாஜியுடன் இணைந்ததில் மறக்க முடியாத சமூக படங்களில் ஒன்று.(மற்றவை- பாவை விளக்கு,குலமகள் ராதை,குங்குமம்,ரத்த திலகம்,அன்னை இல்லம்,செல்வம்,பேசும் தெய்வம்,வியட்நாம் வீடு,வசந்த மாளிகை).பறவைகள் பலவிதம், புத்தி சிகாமணி, கண்ணெதிரே தோன்றினால், இதய வீணை தூங்கும் போது, நதி எங்கே போகிறது, ஏனழுதாய், கண்ணே கண்ணே உறங்காதே, அழகு சிரிக்கிறது போன்ற படத்தோடு ஒட்டிய சூப்பர்-ஹிட் பாடல்கள் கே.வீ.எம்-கண்ணதாசன் இணைப்பில். இந்த படத்தின் மிக மிக சிறப்பான அம்சங்களில் ஒன்று ரி-ரெகார்டிங் எனப்படும் பின்னணி இசை சேர்ப்பு. பின்னாளில் பெரிதாக பேச பட்ட கேரக்டர் based மூட் மியூசிக் ,எனக்கு தெரிந்து இந்த படத்தில்தான் அறிமுகமானது.(சிவாஜி,சரோஜாதேவியை பின் தொடரும் இடங்கள்).இதைதான் இளைய ராஜா தன் பதினாறு வயதினிலே,முள்ளும் மலரும் போன்ற படங்களில் தொடர்ந்து பெயரெடுத்தார்.
பெண்ணின் மனதை விலை கொடுத்து வாங்க முடியாது, அப்படி வாங்கினாலும் உடலன்றி உள்ளம் உன்னை சேராது, மனதை அடையும் ஒரே வழி தூய நல்லிதயத்தின் அன்பு ஒன்றுதான் என்ற கான்செப்ட் ,அனைவரின் கூட்டு முயற்சியால் ,பிரம்மாண்ட வெற்றி படமாகி, இன்றளவும் ரசிகர்களை மட்டற்ற குதூகலத்தில் ஆழ்த்தும் அற்புத படமாகவே,காலத்தை கடந்து ஒளி வீசி கொண்டிருக்கிறது.
RAGHAVENDRA
8th May 2014, 07:32 AM
பிரமாதம் ராகவேந்திரன் சார்.
ஆஹா!ஆஹா! அற்புதம் ராகவேந்திரன் சார். அதகளம் நடத்தியிருக்கிறீர்கள். 'அறிவாளி' படத்தின் அரிய விஷயங்கள் அதிலும் குறிப்பாக 'ஓ வாட் எ கேர்ள்' நாடகம் (அறிவாளிக்கு மூலம்) நாடகத்தை பற்றிய அரிய தகவல்களையும், மிக மிக அரிய புகைப்படங்களையும் தந்து இன்றைய நாளை மறக்க முடியாமல் செய்து விட்டீர்கள். நிஜமாகவே மிக மிக அரிய பொக்கிஷம் நீண்ட நாட்களுக்குப் பிறகு.
என் மனம் கவர்ந்த 'அறிவாளி'யைப் பற்றி அணுஅணுவாக ரசித்து எழுத ஆசை. அது எனக்கு இன்னோர் 'ஞான ஒளி' என்று சொன்னால் கூட மிகை இல்லை. 'தெனாலிராமன்' வரிசையில் சேர்ந்த படம் இல்லை இல்லை காவியம் இது.
தங்கள் உடல்நலம் குன்றியிருந்த போதிலும் சிரமம் பாராது இப்படிப்பட்ட அரிய அபூர்வ தகவல்களை அளிப்பதின் மூலம் தாங்கள் நடிகர் திலகத்தின் தலையாய ரசிகர்களில் முதல்வர் என்று மீண்டும் நிரூபித்து விட்டீர்கள்.
வாழ்க உங்கள் உங்கள் தொண்டு.
தலை சாய்க்கிறேன் தங்கள் அரிய சேவைக்கு.
நன்றி! நன்றி!
தங்கள் அன்பிற்கும் பாராட்டிற்கும் உளமார்ந்த நன்றி வாசு சார். தங்களுடைய ஊக்கமும் ஆதவும் என்றைக்கும் தொடர வேண்டும் என வேண்டுகிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்
RAGHAVENDRA
8th May 2014, 07:34 AM
Sivaji Ganesan Filmography Series
86. iRUVAR uLLAAM இருவர் உள்ளம்
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/IU2weekadfw_zpsa052b6f7.jpg
தணிக்கை – 21.03.1963
வெளியீடு - 29.03.1963
தயாரிப்பு பிரசாத் மூவீஸ்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சரோஜா தேவி, எம்.ஆர்.ராதா, எஸ்.வி.ரங்காராவ், டி.ஆர். ராமச்சந்திரன், எஸ்.ராமாராவ், ஏ.கருணாநிதி, வி.எஸ்.ராகவன், டி.பி.முத்துலட்சுமி, சந்தியா, பத்மினி பிரியதர்ஷிணி, ஜெயந்தி, லட்சுமி ராஜம், டி.ஈ. சூர்யா, மற்றும் பலர்
கௌரவ நடிகர் – கே.பாலாஜி
கதை லக்ஷ்மி அவர்களின் பெண் மனம் நாவல்
திரைக்கதை வசனம் – கலைஞர் மு. கருணாநிதி
மேக்கப் – ஹரிபாபு, வி.வெங்கடேஸ்வர ராவ், பீதாம்பரம், எம்.கஜபதி, ரங்கசாமி, திருச்சி முத்து
உடை – கே.அச்சுதராவ், பி.ராமகிருஷ்ணன் [சிவாஜி], ரெஹ்மான் [சரோஜா தேவி], உதவி எம்.சையத்
ஸ்டில்ஸ் – சிட்டிபாபு
நடன அமைப்பு – ஹீராலால்
விளம்பரம் மௌலிஸ்
விளம்பர டிசைன்ஸ் – பரணி, எஸ்.ஏ. நாயர்
செட் ப்ராபர்டீஸ் – சினி கிராப்ட்ஸ்
வெளிப்புறப் படப்பிடிப்பு சாதனங்கள் – பிரசாத் புரொடக்ஷன்ஸ் பி.லிட். சென்னை 17
ஆர்.சி.ஏ. சௌண்ட் சிஸ்டம் முறையில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது
பிராசஸிங் விஜயா லேபரட்டரி, ரங்கநாதன்
பெயிண்டிங் – ஆர். ஜெயராம் ரெட்டி
செட்டிங்ஸ் – கே.சீனிவாசன், டி.நீலகண்டன்
மோல்டிங் – துரைசாமி
எலக்ட்ரீஷியன் – எம்.சங்கர நாராயணன்
ஸ்டுடீயோ புரோகிராம்ஸ் – சி.எஸ்.பிரகாஷ் ராவ், எம்.ஜி.ராமதாஸ், பி.சுந்தரம்
ஸ்டூடியோ – விஜயா-வாஹினி
புரொடக்ஷன் நிர்வாகம்- சி.வி.ராதா பாபு
உதவி டைரக்ஷன் – ஸ்ரீகாந்த் , ஆரணி ராமசாமி
கலை – தோட்டா
எடிட்டிங் – ஏ.சஞ்சீவி
பாடல்கள் ஒலிப்பதிவு ரீரிக்கார்டிங் – டி.எஸ்.ரங்கசாமி – மெஜஸ்டிக்
ஒலிப்பதிவு வசனம் – கே.ஹரநாத் வாஹினி
ஒளிப்பதிவு டைரக்ஷன்- கே.எஸ்.பிரசாத்
ஒளிப்பதிவாளர்கள் – வி.மதன்மோகன், ஆர்.எஸ்.பதி
பாடல்கள் – கண்ணதாசன் உதவி பஞ்சு அருணாச்சலம்
இசை –
http://www.inbaminge.com/t/images/K%20V%20Mahadevan.jpg
திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் உதவி புகழேந்தி
தயாரிப்பாளர் ஆனந்த்
இயக்கம் எல்.வி.பிரசாத்
http://www.lvprasad.org/image/sivaji.jpg
RAGHAVENDRA
8th May 2014, 07:37 AM
சிறப்புச் செய்திகள்
1. இப்படத்தில் நடிகர் திலகத்தின் தொப்பி டெக்ஸாஸ் கேலன் என்கிற வகையைச் சார்ந்த்து என்றும் நடிகர் திலகத்தின் உடையலங்காரம் பிரமிக்கத் தக்கதாகவும் அற்புதமாகவும் இருந்த்து என்றும் அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் சமீபத்தில் மிகவும் லயித்து சொன்னது குறிப்பிடத் தக்கது. இது பற்றிய குறிப்பு ஒய்.ஜி.மகேந்திரா அவர்கள் தினமலருக்காக எழுதிய நான் சுவாசிக்கும் சிவாஜி தொடரில் இடம் பெற்றுள்ளது.
2. சிறந்த திரைக்கதை அமைப்பிற்கான உதாரணமாய் திரைப்படக் கல்லூரிகளில் பாடமாய் வைக்கப் படும் படங்களில் ஒன்று.
3. Black and white வசந்த மாளிகை என்று காதல் காவியமாய் சிவாஜி ரசிகர்கள் கொண்டாடும் படம்.
4. Subtle Acting என்பதற்கு இலக்கணமாய் நடிகர் திலகம் வகுத்த படங்களில் ஒன்று.
சென்னையில் வெளியான திரையரங்குகள்
சாந்தி, பிராட்வே, சயானி
நூறு நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகள்
கொழும்பு சென்ட்ரல் – 126 நாட்கள்
யாழ்ப்பாணம் ராஜா – 106 நாட்கள்
சென்னை சாந்தி – 105 நாட்கள்
மதுரை நியூசினிமா – 100 நாட்கள்
சேலம் பேலஸ் – 100 நாட்கள்
RAGHAVENDRA
8th May 2014, 07:39 AM
Image of the Texas Gallon hat
http://wiki.teamfortress.com/w/images/thumb/9/9d/Painted_Texas_Ten_Gallon_141414.png/800px-Painted_Texas_Ten_Gallon_141414.png
RAGHAVENDRA
8th May 2014, 07:41 AM
இருவர் உள்ளம் திரைப்படப் பாடல்களின் விவரங்கள்
பாடல்கள்
1. பறவைகள் பல விதம் – டி.எம்.சௌந்தர்ராஜன்
2. புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை – ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி
3. கண்ணெதிரே தோன்றினாள் – டி.எம்.சௌந்தர்ராஜன்
4. இதயவீணை தூங்கும் போது – பி.சுசீலா
5. நதி எங்கே போகிறது – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
6. அழகு சிரிக்கின்றது – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
7. ஏன் அழுதாய் ஏன் அழுதாய் – டி.எம்.சௌந்தர்ராஜன்
8. கண்ணே கண்ணே உறங்காதே – பி.சுசீலா
RAGHAVENDRA
8th May 2014, 07:45 AM
பேசும் படம் பத்திரிகையில் வெளிவந்த இருவர் உள்ளம் படக்காட்சிகள்.
ஆவணத்திலகம் பம்மலார் அவர்களின் பொக்கிஷத்திலிருந்து.
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/GEDC6274-1_zpsdb850c2c.jpg
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/GEDC6277-1_zpsb1e44170.jpg
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/GEDC6276-1_zpsfc047b81.jpg
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/GEDC6275-1_zps399c1bc9.jpg
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/GEDC6279-1_zps7adcf6ad.jpg
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/GEDC6278-1_zpsb691f669.jpg
RAGHAVENDRA
8th May 2014, 07:46 AM
இருவர் உள்ளம் பாடல் காட்சிகள்
கண்ணே கண்ணே உறங்காதே –
http://youtu.be/Y3NCOgGNYZc
நதி எங்கே போகிறது
http://youtu.be/7guKJYxRwPc
கண்ணெதிரே தோன்றினாள்
http://youtu.be/KbGgniBSATY
இதய வீணை தூங்கும் போது
http://youtu.be/WlbCfTDv9Q8
அழகு சிரிக்கின்றது
http://youtu.be/BK6zanXsUmQ
ஏனழுதாய்
http://youtu.be/W5WitKgT44o
பறவைகள் பலவிதம்
http://youtu.be/ZF7FKLbVOpY
Russellmai
8th May 2014, 09:54 AM
இருவர் உள்ளம் திரைக்காவியம் தொடர்பான தங்களின்
தொகுப்பு மிகவும் அருமை.இராகவேந்திரர் அவர்களே
தொடரட்டும் தங்களது திருப்பணி
RAGHAVENDRA
8th May 2014, 10:47 AM
பாராட்டிற்கு நன்றி கோபு அவர்களே.
இருவர் உள்ளம் கதாசிரியர் லக்ஷ்மி என்கிற திரிபுர சுந்தரி அவர்களைப் பற்றி நாம் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். அவருடைய இரண்டு நாவல்கள் சினிமாவுக்காக தேர்ந்தெடுக்கப் பட்டன. பெண் மனம் இருவர் உள்ளம் என்கிற பெயரில் வெளிவந்து விட்டது. மற்றோர் நாவல் காஞ்சனையின் கனவு. இதுவும் அருமையான கதை. 1950களின் மத்தியில் காஞ்சனா என்று ஒரு படம் வந்தது. அது லக்ஷ்மியின் நாவல் தானா என்பதும் தெரியவில்லை.
http://www.arusuvai.com/timages/lakshmi.jpg
லக்ஷ்மி அவர்களைப் பற்றிய வலைதளத்திற்கான இணைப்பு
http://www.arusuvai.com/tamil/node/15877?page=2
RAGHAVENDRA
9th May 2014, 10:02 AM
அடுத்து...
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2011/NaanVanangumDeivum00003.jpg
Science Fiction எனப்படும் வகையான அம்சத்துடன் முதலில் வெளிவந்தது நடிகர் திலகம் கௌரவ வேடத்தில் நடித்த குழந்தைகள் கண்ட குடியரசு திரைப்படம். இப்படம் அந்த ஜானரை சாரா விடினும் ஒரு விஞ்ஞானி குழந்தைகளை சோதனை அடிப்படையில் விண்ணில் அனுப்பும் முயற்சியை அடிப்படையாக வைத்து சயின்ஸ் ஃபிக்ஷன் அம்சம் இடம் பெறச் செய்தனர். அப்படிப் பார்த்தால் இதுதான் இவ்வகைப்படங்களுக்குத் தமிழில் முன்னோடி எனலாம்.
இதற்கு அடுத்து நடிகர் திலகம் நடித்த மற்றோர் திரைப்படம் நான் வணங்கும் தெய்வம். ஒரு சோதனையை மேற்கொண்ட விஞ்ஞானி அதனை பயனீடு செய்யும் போது தவறு ஏற்பட்டு விடுகிறது. முக விகாரத்துடன் உலவும் அந்த மனிதனைக் கண்டு மக்கள் பயப்படுகின்றனர். பல்வேறு இடையூறுகளைக் கடந்து மாற்று மருந்தைக் கண்டுபிடித்து அந்த மனிதனின் பழைய முகத்தை எவ்வாரு விஞ்ஞானி கொண்டு வருகிறார் என்பதாக கதையின் கரு அமைந்த படம் தான்
நான் வணங்கும் தெய்வம்
RAGHAVENDRA
12th May 2014, 06:35 AM
Sivaji Ganesan Filmography Series
87. Nan Vanangum Deivam நான் வணங்கும் தெய்வம்
http://raretfm.mayyam.com/pow07/images/nvdeivam.jpg
வெளியீடு - 12.04.1963
விளம்பர நிழற்படங்கள் ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து..
'இன்று முதல்' விளம்பரம் : The Hindu : 12.4.1963
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5684-1.jpg
குறிப்பு:
தென்னகமெங்கும் 12.4.1963 வெள்ளியன்று வெளியான இக்காவியம், சென்னையில் மட்டும் 27.4.1963 சனிக்கிழமையன்று வெளியானது. [அரங்குகள் : காஸினோ, ஸ்ரீகிருஷ்ணா, உமா].
தயாரிப்பு – ஸ்ரீ சத்யநாராயணா பிக்சர்ஸ்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், டி.ஆர். ராமச்சந்திரன், பத்மினி, ராகினி, வி.நாகையா, கே.சாரங்கபாணி, பி.டி.சம்பந்தம், எம்.ஆர்.சந்தானம், எஸ்.ராமராவ், நாகேஷ் மற்றும் பலர்
நடனம் – குமாரி கமலா
கதை வசனம் – ரா.வே.
இசையமைப்பு – கே.வி.மகாதேவன்
நடன அமைப்பு – தண்டாயுதபாணி, சின்னி-சம்பத், மாதவன்
ஒளிப்பதிவு – வேணு
ஒலிப்பதிவு – கிருஷ்ணன்
எடிட்டிங் – என்.எம். சங்கர்
ஆர்ட் – தோட்டா
ஸ்டூடியோ – விஜயா, வாஹினி
தயாரிப்பாளர் – சி.டி.செட்டியார்
டைரக்ஷன் – கே. சோமு
RAGHAVENDRA
12th May 2014, 06:36 AM
பாடல்களின் விவரங்கள் –
கனவும் பலித்தது – மருதகாசி – பி.சுசீலா
வந்தாலும் வந்தாளே- மருதகாசி – ஜமுனா ராணி, ரத்னமாலா
முல்லைப்பூ மணக்குது – மருதகாசி – ஏ.எல்.ராகவன், ஜிக்கி
எட்டாத கிளை மேலே – மருதகாசி – ஜமுனாராணி
எல்லாம் இங்கோர் சூதாட்டம் – மருதகாசி – பி.பி.ஸ்ரீநிவாஸ்
தயவில்லையோ அன்னையே – மருதகாசி – பாலசரஸ்வதி
வீணாக ஜாலங்கள் செய்வதேனடி - மருதகாசி – ஜமுனாராணி, ராஜேஸ்வரி, ரத்னமாலா
நாகரீகமாய் வாழணும் – கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் – ஜமுனாராணி, ராஜேஸ்வரி
பாடல்களைக் கேட்டு மகிழ
http://www.inbaminge.com/t/n/Naan%20Vanangum%20Deivam/
RAGHAVENDRA
12th May 2014, 06:36 AM
டிவிடி முகப்பு
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/NVDVDCoverfw.jpg
RAGHAVENDRA
12th May 2014, 06:37 AM
நான் வணங்கும் தெய்வம் – நடிகர் திலகம் இயக்குர் சோமு கூட்டணியில் கடைசி படம்.
இயக்குநர் சோமு அவர்கள் நடிகர் திலகத்துடன் இணைந்த சில அபூர்வ நிழற்படங்களை இத்தருணத்தில் இங்கு பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.
டைரக்டர் சோமு நடிகர் திலகத்துடன்
மக்களைப் பெற்ற மகராசி படப்பிடிப்பில்
http://directorksomu.com/gallery/films/mpm/gal_2.jpg
சம்பூர்ண ராமாயணம் படப்பிடிப்பில் கே.சோமு, ஏபி.என்.னுடன் நடிகர் திலகம்
http://directorksomu.com/gallery/films/ramayanam/gal_1.jpg
வி.கே.ஆர். டைரக்டர் சோமு, ஏபி.என்.னுடன் நடிகர் திலகம்
http://directorksomu.com/gallery/films/pv/gal_3.jpg
RAGHAVENDRA
14th May 2014, 06:29 AM
Sivaji Ganesan Filmography Series
88. Kulamagal Radhai குலமகள் ராதை
http://pyramidtalkies.com/catalog/images/Kulamagal%20Radhai_500_X743_resized.jpg
வெளியீடு – 07.06.1963
தயாரிப்பு – ஸ்பைடர் பிலிம்ஸ்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சரோஜா தேவி, , தேவிகா, ஆர். எஸ். மனோகர், கண்ணாம்பா, கே.சாரங்கபாணி, சந்தியா, டி.கே. பகவதி, மனோரமா, டி.என்.சிவதாணு, என்.ஆர்.சாந்தினி, பி.டி.சம்பந்தம், எம்.லக்ஷ்மி பிரபா, எஸ்.வி.ராஜகோபால், சுந்தரி, சாய்ராம், குண்டு கருப்பையா மற்றும் பலர்.
மூலக்கதை – அகிலன் (வாழ்வு எங்கே நாவலைத் தழுவியது)
இசை அமைப்பு – கே.வி.மகாதேவன், உதவி – புகழேந்தி
ஒளிப்பதிவு டைரக்டர் – W.R. சுப்பா ராவ்
ஆபரேடிவ் காமிரா மேன் – டி.எம். சுந்தரபாபு, சி. நமசிவாயம்
கலை – சிஹெச். வி. பிரசாத ராவ்
ஸ்டில்ஸ் – ஆர். வெங்கடாச்சாரி
பாடல்கள் ஒலிப்பதிவு – டி.எஸ். ரங்கசாமி
வசனம் ஒலிப்பதிவு – வி.சிவராமன்
ஒலிப்பதிவாளர் – ஜி.வெங்கட்ரமணன் – வாஹினி ஸ்டூடியோ
வாத்ய கோஷ்டி நிர்வாகம் – வயலின் கே.வி. மஹாதேவன்
ஒப்பனை – ஹரிபாபு, ரெங்கசாமி, பத்ரய்யா, தெக்ஷிணாமூர்த்தி
உடையலங்காரம் – பி.ராமகிருஷ்ணன், சி.கே. ஹரி
செட்டிங்ஸ் – கே. சீனிவாசன், டி.நீலகண்டன்
பெயிண்டிங் – ஆர். ஜெயராம் ரெட்டி
மோல்டிங் – எம். துரைசாமி
ஸ்டூடியோ புரொடக்ஷன் –சி.எஸ்.பிரகாச ராவ், எம்.ஜி.ராமதாஸ், பி.சுந்தரம்
பிராசஸிங் – எஸ்.ரெங்கநாதன் – விஜயா லேபரட்டரி
விளம்பரம் – எலிகண்ட் பப்ளிசிட்டீஸ்
செட் பிராபர்டீஸ் – சினி கிராஃப்ட்ஸ்
சர்க்கஸ் காட்சிகள் – டி.பி.நாராயணன், பரதராஜ் – நேஷனல் சர்க்கஸ் கம்பெனி
தலைமை எலெக்ட்ரீஷியன் – எம்.சங்கர நாராயணன்
புரொடக்ஷன் உதவி – பி.எஸ்.நடேசன், எம். தண்டபாணி
பாடல்கள் பின்னணி சங்கீதம் – ஆர்சிஏ சவுண்ட் சிஸ்டம் – மெஜஸ்டிக் ஸ்டூடியோ
வசனம் – வெஸ்ட்ரெக்ஸ் ரிக்கார்டிங் சிஸ்டம் – வாஹினி ஸ்டூடியோ
புரொடக்ஷன் நிர்வாகம் – டி.என்.ராஜகோபால் – ஸ்பைடர்
ஸ்டூடியோ – விஜயா-வாஹினி
திரைக்கதை வசனம் டைரக்ஷன் – கலைஞர் ஏ.பி.நாகராஜன்
விளம்பர நிழற்படங்கள் --- ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து..
காவிய விளம்பரம் : சுதேசமித்ரன் : 19.10.1960
http://i1110.photobucket.com/albums/...GEDC6055-1.jpg
'விரைவில் வருகிறது' விளம்பரம் : தமிழ் சினிமா : 15.4.1961
http://i1110.photobucket.com/albums/...GEDC6056-1.jpg
'இன்று முதல்' விளம்பரம் : சுதேசமித்ரன் : 7.6.1963
http://i1110.photobucket.com/albums/...GEDC6057-1.jpg
RAGHAVENDRA
14th May 2014, 09:17 AM
குலமகள் ராதை நிழற்படங்களுக்கான இணைப்பு - உபயம் நிழற்படத் திலகம் நெய்வேலி வாசு சார்
http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=886778&viewfull=1#post886778
RAGHAVENDRA
14th May 2014, 09:18 AM
பாடல்களின் விவரங்கள்
1. உலகம் இதிலே அடங்குது – கண்ணதாசன் – டி.எம்.சௌந்தர்ராஜன்
2. சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா – மருதகாசி – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
3. ராதே உனக்குக் கோபம் ஆகாதடி – மருதகாசி – டி.எம்.சௌந்தர்ராஜன்
4. உன்னைச் சொல்லிக் குற்றமில்லை – கண்ணதாசன் – டி.எம்.சௌந்தர்ராஜன்
5. இரவுக்கு ஆயிரம் கண்கள் – கண்ணதாசன் – பி.சுசீலா
6. கள்ள மலர்ச் சிரிப்பிலே – மருதகாசி – பி.சுசீலா
7. பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் – கண்ணதாசன் – பி.சுசீலா
RAGHAVENDRA
14th May 2014, 09:19 AM
குலமகள் ராதை பாட்டுப் புத்தகத்தின் முகப்பு நிழற்படம்
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/KMRADHAISBI_zpsa79af9f2.jpg
RAGHAVENDRA
14th May 2014, 09:21 AM
குலமகள் ராதை படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் ஏபி.என்., கே.சோமு, சரோஜா தேவி
http://directorksomu.com/gallery/films/kulamagalRathai/gal_1.jpg
நன்றி இயக்குநர் சோமு அவர்களுக்கான இணைய தளம்
RAGHAVENDRA
14th May 2014, 09:23 AM
70களின் துவக்கத்தில் இப்படம் வெலிங்கடனில் திரையிடப் பட்டபோது அரங்கமே இப்பாடலில் அதிர்ந்தது உண்மை ... விண்ணை முட்டும் ஆரவாரம் ...அன்று ரசிகர்களின் அளப்பரை பசுமையாக இன்றும் நினைவில் உள்ளது.. இன்று திரையிட்டால் அ்தையும் மிஞ்சும் என்பது திண்ணம்...
என்றைக்கும் சோகப் பாடல்களுக்கு ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் ஒரே நடிகர் உலகிலேயே நடிகர் திலகம் மட்டும் தான். அதற்கு மற்றொரு சான்று உன்னைச் சொல்லி குற்றமில்லை பாடல்.
http://youtu.be/rMHD71WSkqg
இப்பாடலின் யூட்யூப் இணைய தளத்தில் வெளியாகியுள்ள கிட்டத் தட்ட நூறு விமர்சனங்களிலிருந்து நடிகர் திலகத்தைப் பற்றிய விமர்சனங்கள் இங்கே..
Madhu Mitha
1 year ago
what an acting by sivaji sir!!! thousand expressions at a time!!!!!!!!! always goosebumps on seeing his expressions.hats off sir
vadivelbs
1 year ago
siranda nadipu, siranda varigal, siranda isai, siranda kaatchi. arumai arumai armai
Nei Thalaan
1 year ago
வரிகளுக்கு உயிரூட்டியுள்ளார் கவியரசு கண்ணதாசன்- குரலால் நடித்திருக்கின்றார் டி எம் எஸ் - உடல்மொழி அசைவு சிவாஜி- தாள விளையாட்டு கே வி எம். - ஆகா அபாரம்
KRISHNA SARATHY
1 year ago
in reply to beeveeyaar
முக்கியமான விஷயத்தை மறந்து விட்டீர்களே , சிவாஜியும் ஏழு ஏழு ஜென்மத்திற்கும் பிறந்து வந்து நடிகர் திலகமாக வாழ வேண்டும் ! அப்போதுதானே நீங்களும் நானும் அவரின் நடிப்பினை ரசித்து வாழ்வையே ருசித்து அனுபவிக்க முடியும் ! சரிதானே ?
sivagod69
10 months ago
Shivagi is a great actor compatible
Kumarasamy Mariappan
1 year ago
Only one person...that is Sivaji Ganesan....No one can do.... Read the lines and see his face....
Dkay Yesan
1 year ago
woww, legende man , legende tout l'quipe de cette chanson, sivaji quel acteur man , incroyable , et la music et l avoix de tms egalement puissant . l'acting est terrifique
KRISHNA SARATHY
1 year ago
நடிப்பிற்கு உயிர் ஊட்டினார் சிவாஜி! பாடலுக்கு உயிர் ஊட்டினார் கண்ணதாசன் ! இருவரும் சேர்ந்து தமிழ் திரை உலகிற்கே உயிர் ஊட்டினார்கள் என்றால் அது மிகையில்லை
P.ASHOKAN PONKUMAR
1 year ago
shivaji action is very good
Ramanan S
1 week ago
Arumaiyana padal inimaiyana isai poruthamana varigal ganirenra kural indrum ninaivil nirkum padam sirantha nadigargalin asathalana nadippu thiraimagal thantha kulamagal rathai - ramani artiste
Mugunthan Mugunthaa
4 months ago
தேந்தமிழ் செல்வன் T.M.S அவர்களின் தெவிட்டாத மெட்டும் நடிகர் திலகத்தின் கற்பனையை கண்ணெதிரே உயிரோட்டத்துடன் பிரதிபலிக்கும் நடிப்பாற்றலும் என்றும் நெஞ்சைவிட்டு அகலாது.
RAGHAVENDRA
14th May 2014, 09:24 AM
உலகம் இதிலே அடங்குது
உண்மையும் பொய்யும் விளங்குது
கலகம் வருது தீருது
..
நம் மய்யத்தை சொல்வதாக உள்ளதா...
குலமகள் ராதை படத்தில் இடம் பெற்ற இப்பாடலின் வரிகள் இன்றைக்கும் பொருந்துவதைப் பாருங்கள்...
கம்போஸிடராக நடிகர் திலகம் ...
http://youtu.be/ePriq_xpWLo
RAGHAVENDRA
14th May 2014, 09:25 AM
பாகவதர் பாட்டையே பாடி விட்டேன் .. உன் கோபம் தீரலையா எனக் கேட்கிறாரா நடிகர் திலகம்
http://youtu.be/TYGlbIAIxfA
RAGHAVENDRA
14th May 2014, 09:25 AM
சந்தேக மேகம் சூழ்ந்திடும் போதிலே
சந்திரன் முகத்தையே அல்லி காண முடியுமா
படத்தில் சந்திரன் என்பது கதாநாயகன் பெயர்.. நாயகி நாயகனுக்காக காத்திருந்து வரவில்லை என்றதும் செல்லமாக கோபிக்கும் சூழ்நிலையைப் பாடலில் வர்ணிக்கும் கவியரசர் அல்லியை நாயகியுடன் ஒப்பிட்டு பாடலில் கருத்துக்களை வடித்திருப்பதை கவனியுங்கள்..
திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையில் என்றென்றும் இனிமையான பாடல் சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா
http://youtu.be/0pgxMJQhLuE
RAGHAVENDRA
14th May 2014, 09:26 AM
சுசீலா என்றவுடன் உடனே நினைவுக்கு வரக்கூடிய பாடல்களில் இது முக்கியமானதாகும்.
அங்கும் இங்கும் அலை போலே - தினம்
ஆடிடும் மானிடர் வாழ்விலே
எங்கே நடக்கும் எது நடக்கும் - அது
எப்படி முடியும் யாரறிவார் ...
என்ன யதார்த்தமான வரிகள்... காலத்தை கடந்து நிற்கும் பாடல் வரிகளுக்கு கவியரசரை விட்டால் வேறு யார் ..
ஒரு சில கவிஞர்களைப் போல் தனி மனித துதியிலேயே காலத்தை ஓட்டிய கவிஞரல்ல கண்ணதாசன்... ஒவ்வொரு பாடல் வரியும் சமூகத்தில் நிலவும் குடும்ப பிரச்சினைகளை அலசுவதோடு அதன் காரணங்கள், தீர்வுகள் இவற்றையும் விவாதிக்கும்...
இரவுக்கு ஆயிரம் கண்கள் பாடல் ...
http://youtu.be/yQHDlc2zvvY
RAGHAVENDRA
14th May 2014, 09:28 AM
திரை இசைத் திலகத்தின் தனித்தன்மையுடன் மிளிர்ந்து நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும் பாடல்களில் இது குறிப்பிடத் தக்கது.
http://youtu.be/3-YyMClLINk
பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் ..
http://www.dailymotion.com/video/x15oq3m_pagalilae-chandirana-kulamagal-radhai-1963_shortfilms
ஆருயிரே மன்னவனே
http://www.dailymotion.com/video/x15opzz_aruyire-manavare-kulamagal-radhai-1963_shortfilms
RAGHAVENDRA
16th May 2014, 08:20 AM
அடுத்து
மய்யம் தளத்தில் நடிகர் திலகம் திரியிலேயே முத்தாய்ப்பான பதிவாக மிகவும் விரிவான அளவில் ஆய்வு செய்யப் பட்ட படம்.... அதுவும் ஒரு நண்பரே இவ்வளவு விரிவாக அலசியது என்றால் அது இது தான். மற்றவை இதற்குப் பின்னால் எனவும் சொல்லலாம்... கிட்டத் தட்ட 7 பாகங்களாக நமது ஹப்பர் ஒருவர் அலசிய திரைப்படம்..
ஜமீன்தார் சிவலிங்கம் எந்த அளவிற்கு அந்த ரசிகரை ஆக்கிரமித்திருக்கிறார் என்பதைப் படிக்க..
பொறுத்துப் பாருங்களேன்...
chinnakkannan
16th May 2014, 10:23 AM
எங்க ஊர் ராஜா?
Subramaniam Ramajayam
16th May 2014, 09:11 PM
அடுத்து
மய்யம் தளத்தில் நடிகர் திலகம் திரியிலேயே முத்தாய்ப்பான பதிவாக மிகவும் விரிவான அளவில் ஆய்வு செய்யப் பட்ட படம்.... அதுவும் ஒரு நண்பரே இவ்வளவு விரிவாக அலசியது என்றால் அது இது தான். மற்றவை இதற்குப் பின்னால் எனவும் சொல்லலாம்... கிட்டத் தட்ட 7 பாகங்களாக நமது ஹப்பர் ஒருவர் அலசிய திரைப்படம்..
ஜமீன்தார் சிவலிங்கம் எந்த அளவிற்கு அந்த ரசிகரை ஆக்கிரமித்திருக்கிறார் என்பதைப் படிக்க..
பொறுத்துப் பாருங்களேன்...
paar magale paar a class movie o all times.
Gopal.s
17th May 2014, 09:05 AM
நடிகர் திலகத்தின் "பார் மகளே பார்" சாதனைத் துளிகள் :
பார் மகளே பார், நடிகர் திலகத்தின் 89வது திரைக்காவியம் (87வது கருப்பு - வெள்ளைக் காவியம்)
நடிகர் திலகத்தை பீம்சிங் இயக்கிய 13வது படம்; சிவாஜி - பீம்சிங் கூட்டணியின், "ப" வரிசைப் படங்களில், 10வது படம்.
வெளியான தேதி : 12.7.1963 (வெள்ளிக்கிழமை)
சென்னையில் சாந்தி, பிரபாத், சரஸ்வதி ஆகிய 3 அரங்குகளிலும் மற்றும் தென்னகமெங்கும் வெளியானது.
சென்னையில் சாந்தி திரையரங்கில் 64 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டது. சாந்தியில் 12.7.1963 அன்று வெளியாகி 13.9.1963 வரை ஓடியது. 14.9.1963 அன்று சாந்தியில் தேசிய திலகத்தின் இரத்தத்திலகம் வெளியானது. (சாந்தி 1214 இருக்கைகள்)
பார் மகளே பார் சாந்தியில் 64 நாட்கள் ஓடி முடிய பெற்ற மொத்த வசூல் ரு. 1,24,466 /-.
பிரபாத்தில் 12.7.1963 லிருந்து 5.9.1963 வரை, 56 நாட்கள் நல்ல வரவேற்புடன் ஓடியது. 6.9.1963 முதல் 13.9.1963 வரை 8 நாட்கள் பிரபாத்தில் மாயா மச்சீந்திரா என்ற திரைப்படம் நடைபெற்றது. மாயா மச்சீந்திரா முதன்முதலில் 22.4.1939 அன்று வெளியான படம். இதில் திரு. எம்.ஜி.ஆர். , எம்.ஜி. ராம்சந்தர் என்ற பெயரில் சிறிய வேடத்தில் தோன்றியிருப்பார்.14.9.1963 அன்று பிரபாத்தில், பாரத ஜோதியின் இரத்தத்திலகம் வெளியானது. (பிரபாத் 1277 இருக்கைகள்)
சரஸ்வதியில் 56 நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்றது. அதாவது, 12.7.1963 லிருந்து 5.9.1963 வரை ஓடியது. 6.9.1963 அன்று சரஸ்வதியில் நடிகர் திலகத்தின் பாலும் பழமும் மறு வெளியீடாக வெளியானது. (சரஸ்வதி 974 இருக்கைகள்)
மேலும், பார் மகளே பார், மதுரையில் 1662 இருக்கைகள் கொண்ட சென்ட்ரல் சினிமா திரையரங்கில் 12.7.1963 லிருந்து 13.9.1963 வரை 64 நாட்கள் ஓடி சிறந்ததொரு வெற்றியைப் பெற்றது. (64 நாள் மொத்த வசூல் ரு. 1,06,402 /-). 14.9.1963 அன்று சென்ட்ரல் சினிமாவில் தியாகத்திலகத்தின் இரத்தத்திலகம் வெளியானது.
திருநெல்வேலியில், பார் மகளே பார், 1352 இருக்கைகள் கொண்ட லட்சுமி திரையரங்கில், 50 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது.
நாகர்கோவிலில், 1088 இருக்கைகள் கொண்ட பயனீர் பிக்சர்பேலஸ் அரங்கில் 50 நாட்கள் ஓடி நல்லதொரு வெற்றியைப் பெற்றது.
மொத்தத்தில், 'ஏ' சென்டர்களில் 50 நாட்கள் முதல் 9 வாரங்களும், 'பி' சென்டர்களில் 5 வாரங்கள் முதல் 8 வாரங்களும், 'சி' சென்டர்களில் 4 வாரங்கள் முதல் 5 வாரங்களும் வெற்றிகரமாக ஓடி, சிவாஜி-பீம்சிங் கூட்டணிக்கு சிறந்ததொரு வெற்றியைத் தேடித் தந்த படம் 'பார் மகளே பார்'.
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு, நிரந்தர சக்கரவர்த்தி, சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !
அன்புடன்,
பம்மலார்.
Gopal.s
17th May 2014, 09:09 AM
As mentioned by Raghavendhar,Excellent write up by our fellow hubber Irene Hastings. Great work buddy.(Trend-setting)
Par magale par - Story - part 1
பார் மகளே பார் -கதை பகுதி - 1
http://i949.photobucket.com/albums/a...ofImage027.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image028.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image029.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image030.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image032.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image033.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage036.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage037.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage034.jpg
மதுரையை சேர்ந்த தொழில் அதிபர் நடிகர் திலகக்தின் மனைவி சவ்கார் ஜானகி ப்ரசவ வலி எடுத்து ஒரு மருத்துவமனையில் அவரின் பால்ய நண்பரும் தொழிலதிபருமான வி.கே.ஆர்.ரின் உதவியால் சேர்க்கப்படுகிறார். அச்சமயம் தொழில் காரணமாக சிவாஜி சென்னையில் முகாமிட்டிருக்க அவருக்கு செய்தி தெரிவிக்கப்படுகிறது. உடனே விரைகிறார் மதுரைக்கு.
ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கிறார் ஜானகி. அடுத்த அறையில் சுலோசனா என பெயருடன் ஒரு நடனமாடும் பெண்ணுக்கும் ஒரு பெண் குழந்தை பிறக்க, பணிப்பெண்கள் இரு குழந்தைகளையும் நீராட்டுவதற்காக இன்னொரு அறைக்குச்செல்ல , அங்கு துரதிர்ஷடவசமாக மின்சாரம் தாக்கி இருவரும் இறக்க, ஒன்றோடு ஒன்றாக இரு குழந்தைகளும் இருக்க தலைமை மருத்துவரும் வேறு வழி தெரியாமல் ( சுலோசனா , திடீரென்று காணாமல் போக குழப்பம் மிகுதியாகிறது ) ஜானகியை வேண்ட அவரும் வழி தெரியாமல் தவிக்க, மருத்தவரின் யோசனைப்படி இருவரும் ஜானகிக்கே பிறந்தவை என ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறார். வி.கே.ஆர்.ரும் இதை ஆமோதித்து இந்த உண்மையை எந்த காலத்திலும், எந்த சந்தர்பத்திலும் யாருக்கும் தெரிவிக்க மாட்டேன் என்று வாக்குறுதி கொடுக்க, அப்போது அதற்கு ஜானகி பதில் சொல்லும்முன், சிவாஜி அமர்களமாக வந்து தன் அன்பு மனைவியை முதலில் விசாரித்து விட்டு, அருகில் இருக்கும் குழந்தைகளை கண்டு...ஓ ....இரட்டை குழந்தைகளா !!! என்று வியந்து மிகவும் உற்சாகத்தில் மிதக்க அத்தருணத்தில் ஒன்றும் பேச இயலாமல் ஜானகியும் அதை ஏற்றுக்கொள்ள, குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா இனிதே நடைபெற்று முறையே சந்த்ரா ( விஜயகுமாரி ) காந்தா ( புஷபலதா ) என பெயர்பெறுகின்றனர். சில நாட்களூக்குப்பின் சுலொசனாவின் சகோதரரான எம்.ஆர்.ராதா , மருதுவமனைமூலம் உண்மை தெரிந்து சிவாஜியின் விட்டிற்கு வர அப்போது ஜானகி மட்டும் தனியாக இருக்க , தன் சகோதரியின் குழந்தையை கேட்க, ஜானகி இரு குழந்தைகளையும் தன் உயிராக கருதுவதால் தானே வளர்ப்பேன் என மன்றாட இளகிய மனம் கொண்ட ராதாவும் அதற்கு சம்மதிக்க, அவருக்கு அவ்வீட்டிலேயே குழந்தைகளுக்கு நடனம் பயிற்றுவிக்கும் ஆசானாகவும் ஒரு வேலை கொடுக்கப்படுகிறது. குழந்தைகளும் நல்ல பண்புடனும் தாய் தந்தையின் அரவணைப்புடன் வளர்கின்றன.
Gopal.s
17th May 2014, 09:14 AM
Par magale par - the story - part 2
பார் மகளே பார் - கதை பகுதி - 2
நெருங்கிய நண்பர்களான சிவாஜி-வி.கே.ஆர். தங்கள் வர்தகத்தினை நடத்தும் முறை மாறுபட்டது. சிவாஜி சில கோட்பாடுகளுடன் முடிவுகளை எடுப்பார். ஆனால் வி.கே.ஆர்.ரோ அதிரடி முடிவுகளை எடுப்பவர். இந்த போக்கை சிவாஜி பலமுறை கண்டித்தாலும் அதற்கு வி.கே.ஆர். தன்னுடைய விளக்கங்களை கொடுப்பார்.
ஒரு நாள், வி.கே.ஆர். தன்னுடைய தொழிலில் லாபம் கிடைக்கவில்லை. தான் வேரொரு ஊருக்கு சென்று அங்கு புதிய தொழில் செய்யப்போவதாக சொல்வார். சிவாஜிக்கு அது பிடிக்காது. வாதம் செய்வார். முடிவில், " என்னால் முடிந்த்தை ஒரு நல்ல நண்பன் என்ற முறையில் சொல்லிவிட்டேன். இதற்கு மேல் வரும் விளைவுகளுக்கு நீ பின்னர் வருந்துவாய் என்று விடை பெறுவார்.வி.கே.ஆர். கேட்கும் உத்திரவாத தாளினையும் கொடுக்க மறுத்துவிடுவார். " உனக்கு பண உதவி வேண்டுமா ? நான் செய்வேன். மற்றபடி காரன்டி பத்திரம் எல்லாம் தர இயலாது என்று கண்டிப்பாகவும் சொல்வார். ஆப்த நண்பர்கள் ஒருவித வருத்ததுடன் விடை பெறுவர்.
வி.கே.ஆர்.ரின் மனைவிக்கும் ஜானகிக்கும் நெருங்கிய நட்பு பல வருடங்களாக. அவர் விடை பெறுவதை பார்த்து ஜானகி கண்ணீர் சிந்த அவரும் " என்றைக்கானாலும், எந்த சூழ்நிலையிலும் உன் பெண் தான் என்னுடைய மருமகள். இந்த வாக்குறுதியினை என்றும் மறக்காதே என்பார். ஜானகியும் பதிலுக்கு, " இது நான் உங்களுக்கு கொடுக்கும் வாக்கு. அன்பினால் ஏற்ப்பட்டது நம் நட்பு. எந்த சூழ்நிலையிலும் நான் விட்டுகொடுக்க மாட்டேன் " என்று பிரியாவிடை பெறுவர் இருவரும்.
பார் மகளே பார் - கதை பகுதி - 3
HTML Code:
http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage046.jpg
HTML Code:
http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage047.jpg
HTML Code:
http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage048.jpg
HTML Code:
http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage049.jpg
HTML Code:
http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage050.jpg
HTML Code:
http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage053.jpg
HTML Code:
http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage054.jpg
ஜமீந்தார் சிவலிங்கம் ( சிவாஜி ) ஒரு கறார் மனிதர் > தொழிலை பொறுத்தவரை... ஆனால் வீட்டிலோ 2 குழந்தைகளுக்கு உயிரான தகப்பன். மழலையிலிருந்தே அவர்களின் மீது ஒரு பாசம்.கண்ணும் கருத்துமாக வளர்ப்பார். சந்திரா மென்மையான குணமும் , காந்தா சற்று தைரியமான குணமும் கொண்டவர்கள். இதையும் சிவாஜி ரசிப்பார். " பாரேன். சந்திரா உன்னைபோன்றவள்... காந்த்தா என்னை போன்ற சுபாவம் கொண்டவள் " என்று ஜானகியிடம் சொல்லி மகிழ்வார் ! குழந்தைகளும் பெற்றோரிடம் மிகுந்த பாசத்துடன் பழகுவர். குழந்தைகளும் வளர்ந்து பெரியவராகின்றனர்.
விஜயகுமாரியும் முத்துராமனும் காதலர்கள். ஓரு நாள் முத்துவை தந்தையிடம் அறிமுகம் செய்ய முத்துராமனின் மறைந்த தந்தை தனக்கு மிகவும் தெரிந்தவர் என்றும் நல்ல அந்தஸ்து உள்ள குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் உணர்கிறார். உடனே அவரை பிடித்து போகிறது. சிறிது நாட்களுக்குப்பின் ஏ.வி.எம்.ராஜன் ( வி.கே.ஆர்.ரின் பிள்ளை ) , சிவாஜியை சந்தித்து தன் தந்தை இப்பொழுது செல்வம் அனைத்தையும் இழந்து ( தவறான வழிகளினால் ) இன்சால்வன்ஸி கொடுக்கும் நிலையில் இருப்பதாக சொல்ல சிவாஜி வருத்தப்படுகிறார். " உங்கள் நிருவனத்தில் எனக்கு ஒரு வேலை கொடுங்கள் " என் ராஜன் வேண்ட அதற்கு சம்மதிக்கும் சிவாஜி, எக்காரணஙகளுக்கும் தன்னுடைய நண்பனின் பிள்ளை என்று யாரிடமும் சொல்லவோ, அல்லது அதிகாரமோ செய்யக்கூடாது என்று கடுமையாகச்சொல்லி அவருக்கு ஒரு வேலையும் கொடுக்கிறார்.
சிவாஜி ஜானகியிடம் விஜயகுமாரியை முத்துராமனுக்கு மணம் முடிக்கும் ஒரு ஆசையை வெளியிட , அதற்கு ஜானகி சிறு வயதில் வி.கே.ஆர்.ருக்கு கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்த அதற்கு சம்மதிக்காத சிவாஜி, தன் நண்பன் இப்பொழ்து செல்வம் அனைத்தையும் இழந்ததை சொல்லி, தன்னுடைய மறுப்பை வெளியிடுகிறார். ஜானகி , இரு பெண்களுக்கும் ஒரே சமயத்தில் திருமணம் நடக்கவேண்டும் என்று கோரிக்க அதற்கும் சிவாஜி மறுக்கிறார். ஜானகி வி.கே.ஆர். குடும்பத்திற்கு ஏற்பட்ட நிகழ்வுகளுக்கு மிகவும் வருந்துகிறார் செய்வதறியாமல்.
சிவாஜி முத்துராமனின் தாயை சந்தித்து அவரின் ஒப்புதலும் பெற்று நிச்சயதார்த்தத்துக்கு நாளும் குறிக்க, ஜானகியோ " நீங்கள் உங்கள் நண்பருக்கு அவசியம் தெரிவிக்கவேண்டும்" என்று சொல்ல , அதற்கும் மறுத்த சிவாஜி, " அவன் இன்று மிகவும் நொடிந்த நிலையில் இருக்கிறான். இதை சொன்னால் அவன் இந்த நல்ல செய்திக்காக நிறைய செலவு செய்யத்துடிப்பான். பொருளாதாரரீதியாக அவனை நாம் எந்த விதத்திலும் ஒரு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்ககூடாது.
நாம் எனவே சொல்லக்கூடாது " என்று கண்டிப்பாக சொல்ல , ஜானகிக்கு ஒரே தவிப்பு.சிவாஜி, தன் பணியாளின் மூலம் உதவி பணம் கொடுத்தனுப்ப அந்த மனிதர் மூலம் வி.கே.ஆர்.ருக்கு நடைபெறவிருக்கும் நிச்சயதார்த்த செய்தி தெரியவருகிறது.
தொடரும்.
Dear Friends,
Even while covering the story part, I am extremely tempted to shower praise on Nadigar thilagam’s body language. See this episode is a classic example of what acting is all about :
1. Muthuraman gets introduced to Sivaji. See, he just gives a casual handshake. And also look at the hand position >>> Dominating, his hand is on top of Muthu’s, indicating that he is the supremo and the Boss.
2. Sivaji now enquires about his background and his father. He also introduces M.R.Radha, out of courtesy.
3. Now he gets into more detailing on Muthuraman. The left hand on the packet indicates , he is more inquisitive now. He is still having some doubts about Muthu. R.
4. Now he is thoroughly convinced that Muthuraman is from a respectable family and rich guy
5. Now, he expresses his intentions to wife
6. Back home, in seated posture, a serious discussion is about to begin. With his wife, he initiates the wedding proposal
7. Now, janaki is worried that the promise given to VKR will be broken. He is slanted on the pillar, trying to explain the issues of VKR and trying to convince that it is not on
8. Even while Janaki pleads, he emphatically puts an end to any scope of VKR proposal
To me, this is a perfect lesson to aspiring actors. See how terrific his body language is and how swiftly changes his handshakes in a deft manner and above all, the posture of cigarette while conversing with Muthuraman. Also, the left hand going inside pocket and finally a very happy and warm handshake to finish his conversation !
That posture of standing erect with shoulders held flat is a clear indicator of his background as a rich business man being introduced for a casual conversation to a common man. The body language will change if he meets another guy who is superior to him !
Now, onto dialogue with Sowcar Janaki ! Again, the positioning of cigarette and the seriousness on the face to express his frank opinion on a major decision to be taken as a Father .It all starts with a casual walk along with wife and slowly and gradually develops into a serious discussion !
Kudos to the entire team to bring the best out of Nadigar thilagam. Long live, Nadigar thilagam’s fame.
Par magale par - Story - part 4
பார் மகளே பார் - கதை பகுதி - 4
http://i949.photobucket.com/albums/a...s/Image008.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image009.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image014.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image016.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage057.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage058.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage059.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage060.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage061.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage063.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage064.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image010.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image021.jpg
நிச்சயதார்தம் தடபுடலாக ஆரம்பிக்க ஊர் பெரிய மனிதர்களின் இடையே ஜமீந்தார் சிவலிங்கம் மிக உற்சாகமாக. அப்பொழுது வி.கே.ஆர். தன் மனைவியோடு வர சிவாஜிக்கு அதிர்ச்சி. முகம் கொடுத்துகூட பேசுவதில்லை. அவரை விட்டு விட்டு மற்ற விருந்தினர்களை சிவாஜி இன்முகத்துடன் உபசரிக்க, வி.கே.ஆர்.ருக்கு அவமான உணர்ச்சி ஏற்பட, அவர் சிவாஜியை தனியாக அழைத்து, " சிவா, உனக்கு பிடிக்காவிட்டால் நான் சென்றுவிடுகிறேன்" என்று சொல்ல, அதற்கு சிவாஜி " ஏண்டா, இப்படி எல்லாம் பேசுகிறாய் "
வி.கே.ஆர் >> நான் இங்கு இருப்பது உன் கவுரவத்திற்க்கு குறைவாக இருந்தால், நாங்கள் உடனே போய் விடுகிறோம்.
சிவாஜ் : ஏன்டா இப்படி எல்லாம் உளருகிறாய் ?
வி : ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏரும். வண்டீயும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்.
சி : தயவு செய்து என் மானத்தை வாங்காதே
இப்படியாக இருவருக்கும் வாக்கு முற்ற , வி.கே.ஆர். கோபத்தின் உச்சியில் சந்திரகாந்தாவின் பிறப்பின் ரகசியத்தை எல்லார் முன்னிலையிலும் உடைக்க, அங்கு ரணகளமாகிறது. வி.கே.ஆர். சிவாஜியை ஒரு நன்றி கெட்டவன் என்று பழித்து.. " உன் குடும்பத்தின் மேன்மைகாக நான் எக்தனையோ உதவிகளை செய்துள்ளேன். ஆனால் நீயோ, ஒரு நன்றி கெட்டவன்.. உன் குழந்தைகளின் பிறப்பு சார்ந்த ரகசியத்தினை என் மனைவிக்குகூட இன்றுவரை நான் சொல்லவில்லை. அது உன் குல கவுரவதிர்காக. ஆனால் , நீயோ, என்னை மதிக்கவில்லை. உன் பணக்கார திமிர் , ஆணவத்தினால் நம் பழைய ச்னேகிதத்தை மறந்துவிட்டாய்.
வி.கே.ஆர். ஜானகியிடம் மன்னிப்பு கேட்கும் தருவாயில் " நான் இந்த உண்மையை ஏன் சொன்னேன் ? என் மகனுக்கு உன் பெண்ணை கொடுக்கவில்லை என்பதற்காக அல்ல. உன் கணவனை பிடித்து ஆட்டுகிறதே அந்த அந்தஸ்து எஙிற பேய் , அது ஒழிய வேன்டும். அதற்காக தான் " என்று சொல்லி அஙிருந்து சென்றுவிடுகிறார். நிச்சயதார்ததிற்காக வந்த அனைவரும் கலைந்து செல்ல, அதிற்ச்சி / கோபத்தின் உச்சியில் சிவாஜி.
தொடரும்..
Gopal.s
17th May 2014, 09:18 AM
பார் மகளே பார் - கதை பகுதி - 5
http://i949.photobucket.com/albums/a...s/Image022.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage066.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image025.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image024.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage067.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage068.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage070.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image023.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image026.jpg
நிச்சயதார்தம் நடைபெறாமல் போக அவமானம். 18 வருடமாக தன் அருமை மனைவி ஒரு மாபெரும் ரகசியத்தை மறைத்துவிட்டாளே . இத்தனை காலமும் தன் மாளிகையில் இருந்து குழந்தைகளுக்கு பணி புரிந்த எம்.ஆர்.ராதா ஒரு பெண்ணின் மாமா. தன் பால்ய நண்பன் அனைவரின் முன்னிலையிலும் தன்னை கேவலப்படுத்திவிட்டான். சமூகத்தில் தனக்கு என்று ஒரு தனி அந்தஸ்து உண்டு. தன் பெண்களில் ஒருத்தி தன்னுடையவள் இல்லை. சக தொழிலபதிகர்கள் தன்னை பற்றி என்ன நினைப்பார்களோ என்று அவமான உண்ர்ச்சி >>> இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து ஜமீந்தார் சிவலிங்கம் வீட்டில் நிம்மதியில்லாமல் தவிக்கிறார்.
ஜானகி எவ்வளவோ மன்றாடியும் சிவாஜியின் கோபம் முற்றிலுமாக அவர் பக்கம் சாய்கிறது.. " என் நண்பனுக்கு தெரிந்த ஒரு பெரிய ரகசியம் ஏன் எனக்கு தெரிவிக்கப்படவில்லை ? இனி நீ எனக்கு மனைவியில்லை. பெயரளவிற்கு தான் நம் உறவு "இரண்டு பெண்களும் மன்றாடியும் சிவாஜிக்கு கோபம், குழப்பம் தீரவில்லை. ஆத்திரத்தின் உச்சியில் அவர் எம்.ஆர்.ராதா.வை வீட்டை விட்டு விரட்ட, ராதா நடுதெருவில்.வீடே களையிழந்து கிடக்க, அருமை சகோதரிகள் இருவரும் தாம் எந்த நிலையிலும் ஒருவரை ஒருவரி விட்டுக்கொடுப்பதில்லை என்று தீர்மானமாக இருக்கின்றனர்.
தன்னுடைய உண்மையான குழந்தை யார் என்று தெரியும்வரை சிவாஜி ஓயமாட்டார். இந்த ப்ரச்னை தீரும்வரை வீட்டில் பழைய பொலிவும், உற்சாகமும் வராது என்று விஜயகுமாரி எண்ணி, தானே வீட்டை விட்டு ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் போய்விடுகிறார்.
சில நாட்களுக்குப்பின் ஒரு வயதான பெண்மணி, சிவாஜியின் முன் வந்து " நான் தான் அந்த சுலோசனா. என் பெண் இங்கு தான் வளர்வதாக கேள்விப்பட்டேன். தயவுசெய்து அவளை எனக்கே கொடுத்துவிடுங்கள். அவளுக்கு கழுத்தில் ஒரு மச்சம் இருக்கும். இது தான் அவளின் அடையாளம் " என்று சொல்ல சிவாஜி துள்ளிக்குதித்து , " அந்த பெண் எங்கள் வீட்டை விட்டு ஓடிவிட்டாள் எங்களிடம் சொல்லாமலே. இனிமேல் அவளுக்கும் எங்களுக்கும் எந்த உறவும் கிடையாது " என்று ஆத்திரமாக சொல்லி அந்த வயதான பெண்ணை அனுப்பிவிடுகிறார். இது தான் உண்மை என்று நம்பி, சிவாஜியோ மிகுந்த உற்சாகத்தில் மிதக்கிறார். " குணாதியசங்களை கொண்டே சொல்லிவிடலாம். என்னுடைய குணாதிசயங்கள் அனைத்தும் கொண்டவள் காந்தா. அவள் தான் என்னுடைய மகள்." என்று நிம்மதியடைய ஜானகியோ கண்ணீருடன். தன் சகோதரி எங்கே போனாள் என்று காந்தாவுக்கு கவலை.
சில நாட்களுக்குப்பின், போலிஸ் சிவாஜியை கண்டு ஒரு பெண்ணின் சடலம் ரயில் தண்டவாளத்தில் கிடைத்தது தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரின் அனைத்து உடைகள், அடையாளங்கள் சந்திராவை ஒத்தவை என்று ஒரு குண்டை தூக்கிபோட , சிவாஜி இந்த அனைத்து ப்ரச்சனை ஒரு முடிவிற்கு வந்ததுபோல உணர்கிறார். வீடோ துக்கம் அனுஷ்டிக்கிறது. மீளாத துயரத்தில் ஜானகியும், புஷ்பலதாவும். " நாம் வளர்த்த பாசத்திற்காக சந்திராவுக்கு எல்லா காரியங்களும் செய்யவேண்டும் " என்று ஜானகி கெஞ்ஜ , சிவாஜி அனுமதி அளிக்கிறார். எல்லா அனுஷ்டானங்களும் முடிந்தபின், சிவாஜி, புஷ்பலதா / ஜானகியிடம் , " இனிமேல் இவ்வீட்டில் சந்திராவை பற்றி யாரும் பேசக்கூடாது . அவள் கொண்ட எல்லா தொடர்பும் முடிந்தது " என்று கடுமையாக சொல்லி வீட்டில் உள்ள சந்திராவின் படத்தையும் எறியச்சொல்கிறார். மீளாத துக்கத்தில் ஜானகி படுத்த படுக்கையாகிறார்.
தொடரும்..
Par magale par - Story - Part - 6
பார் மகளே பார் - கதை பகுதி - 6
http://i949.photobucket.com/albums/a...Image071-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image072-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image073-1.jpg
உண்மையில் சந்திரா இறக்கவில்லை. அவர் ஒரு தொண்டு நிருவனத்தில் அடைக்கலம் புகுந்து அமைதி தேடுகிறார். அதை நடத்தும் மாதுவிடம் தன்னைப்பற்றி சொல்லி யாரிடமும் உண்மையை சொல்ல வேண்டாம் என்று வேண்ட, அம்மாதுவும் மனமிரங்கி அவருக்கு ஒரு ஆசிரியர் வேலை கொடுக்குறார்.
முத்துராமனுக்கு, தன் நிச்சயதார்த்தம் நின்று போனதில் வருத்தம் . ஆனால் அவர் சந்திராவை விரும்பியது அவர் ஒரு செல்வந்தரின் பெண் என்பதால் அல்ல. நல்ல குணங்களும் பண்பும் அவரை கவர்ந்த காரணத்தாலே அவரை மணக்க விரும்பினார். இதை தன் தாயிடமும் சொல்லி சம்மதிக்க வைக்கிறார்.
இதற்கிடையே காந்தாவிற்கு தன் தந்தையின் போக்கு பிடிக்காமல் அவர் மேல் ஒரு வெறுப்பு ஏற்பட்டு, அவர் ஒரு தீர்கமான முடிவுக்கு வருகிறார். அதாவது , எந்த உயிர் நண்பரான வி.கே.ஆர்.ரை அவர் ஏழையாகிவிட்டார் என்ற காரணத்திற்காக அந்தஸ்து, கவுரவம் பார்க்கும் தன் தந்தையை பழி வாங்குவதற்காக , அவர், வி.கெ.ஆர்.ரின் மகனான ஏ.வி.எம்.ராஜனை மணக்கப்போகிறேன் என்று அவரையும் அழைத்து வந்து சபதமிடுகிறார். இந்த போக்கு ஜானகிக்கு துளி கூட பிடிக்கவில்லை. தந்தையின் மனம் நோகும்படி எதையும் செய்யாதே என்று அடிக்கிறார்.
ஒரு நாள், எம்.ஆர்.ராதாவும், கருணாநிதியும் , அந்த போலி சுலோசனாவை இழுத்து வந்து சிவாஜியிடம் எல்லா உண்மைகளையும் சொல்லவைக்கிறார். அதாவது, தன்னுடைய அங்க அடையாளங்களை ஒரு சாட்சியாக வைத்து, தன் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானத்தினையும், கவுரவத்தை நிலைநாட்டவும் காரணமாக்கொண்டு விஜயகுமாரியே ஒரு பொய் சொல்லச்சொல்லி வற்புறுத்தியதால் தான் , குடும்ப நன்மைக்காக இதை செய்யச்சொன்னார் என்று அந்த போலி சுலொசனா அனைதையும் சொல்லி மன்னிப்பு கேட்கிறார்.
இதை கேட்டவுடன் சிவலிஙகத்திற்கு கண்ணீர் பெருக்கெடுக்கிறது. தன் குடும்ப கவுரவத்தையும், அந்தஸ்தையும் காப்பாற்றுவதற்காக அந்த அபலை பெண் செய்த மாபெரும் தியாகத்தினை எண்ணி மனம் நெகிழந்து துடிக்கிறார். முத்துராமனுக்கு தன் காதலி இறந்த செய்தி கிடைக்க அவரும் கதறுகிறார். வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் இருக்கிறார்.
ஜானகியின் உடல்நிலை மிகவும் மோசமடைகிறது.
கதை பகுதி அடுத்த பதிவில் முடியும்..
நண்பர்களே,
இந்தப்பதிவோடு இணைக்கப்பட்ட மூன்று புகைப்படங்களை சற்று பாருங்கள் ! உங்களுக்கு அதன் பிண்ணனி புரியும் உடனே ! . அவை வேறு எந்த தருணத்தில் தெரியுமா ?
அந்த போலி சுலோசனா உண்மையை சொல்லும் கட்டம் தான் !
அனைத்தும் பொய் என்று அறிந்ததும் ஒரு அதிர்ச்சி
தன்னுடைய கவுரவம், அந்தஸ்து எல்லாவற்றையும் காப்பாற்றத்தான் அந்த அபலை ஒரு தியாகத்தினை செய்துள்ளாள் என்று அறிந்ததும் ஒரு மட்டற்ற மகிழ்ச்சி !
உடனே >>> ஓ ஓ.. தன் அருமை பெண் இப்போது நம்மிடையே இலையே. இந்த உலகத்தை விட்டே போய்விட்டாளே என்ற நிலையை மனத்தில் எண்ணி கண்ணீர்.
இந்த மூன்று நிலைகளையும் மின்னல் வேகத்தில் , அதாவது 5 நொடிகள் தான் எடுத்துகொள்கிறார்.
எத்தகைய வியத்தகு வெள்ளிப்பாடு ! பல்கலைகழகம் அல்லவா அவர் ! நடிப்புக்கு ஒரு திலகம் என்று கன்னட நடிகர் திரு ராஜ்குமார் வியந்து போற்றிய ஒரு திலகம் அல்லவா நம்மவர்!
Par magale par - Story - part 7
பார் மகளே பார் - கதை பகுதி - 7
http://i949.photobucket.com/albums/a...Image074-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image075-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image076-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image079-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image080-2.jpg
http://i949.photobucket.com/albums/a...Image081-2.jpg
http://i949.photobucket.com/albums/a...Image082-2.jpg
http://i949.photobucket.com/albums/a...Image083-2.jpg
http://i949.photobucket.com/albums/a...Image084-2.jpg
http://i949.photobucket.com/albums/a...Image085-2.jpg
சந்திராவை முத்துராமனால் மறக்க முடியவில்லை. சந்திராவை விரும்பியது ஒரு செல்வந்தரின் பெண் என்பதால் அல்ல. எனவே அவரின் அன்பு துளிகூட குறையவில்லை. தன் தாய் காந்தாவையாவது மணந்துகொள் எனறதையும் அவர் ஏற்கவில்லை. எம்.ஆர்.ராதாவை தன் நண்பராக ஏற்றுக்கொண்டு அவர் போகுமிடமெல்லாம் அழைத்து செல்கிறார்.
அவர் பணி காரணமாக ஒரு ஆசிரமத்திற்கு செல்ல அங்கு ஆசிரியராக சந்திராவை பார்த்து அதிற்ச்சி. ஆனால் தலைமை அதிகாரி அவரின் பெயர் சாரதா என்றும் அவர் சிறு வயதிலிருந்தே அங்கு தான் வளர்ந்தவர் என்றது ஒரே குழப்பம். முத்துராமனும் எம்.ஆர்.ராதாவும் அந்த தலைமைகாக்கும் மாதுவிடம் எல்லா நடந்தவைகளையும் சொல்ல இந்த அனைத்தினயும் சந்திரா மறைவிலிருந்து கேட்டு மிகவும் வருந்துகிறாள் . அதிலும் தான் தந்தை நிம்மதி இழந்து தவிப்பதையும் தன் தாய் நோய்வாய்பட்டு கிடைப்பதையும் தன் சகோதரி தன் வழியில் செல்வதையும் கேள்விப்பட்டு ஒரு முடிவுக்கு வருகிறார். அதாவது, தான் அருகிலிருந்தால் எப்போதாவது அவர்களை பார்க்கும் தவிப்பு ஏற்ப்பட்டுகோண்டே இருக்கும் எனவே அவர்களின் பார்வையிலிருந்தே முற்றிலுமாக சென்றுவிடமேன்று முடிவு செய்து மன்றாட, அவரை கல்கத்தாவிற்கு சென்று சேவை செய்ய வாய்ப்பு கிடைக்கிறது.
சிவலிங்கமோ முற்றிலும் நிம்மதி இழந்து அமைதியில்லாமல் இருக்கிறார். மகள் தன் அருகில்லில்லை. மனைவியோ படுத்த படுக்கை. தான் செய்த தவறுகளுக்காக வருந்துகிறார்.
எம்.ஆர்.ராதாவிற்கு ஒரு சந்தேகம் எப்போதும் இருந்த வருகிறது. அதாவது தான் பார்த்த பெண் சந்திராதான் என்று ஒரு சந்தேகம். அவர் சதாகாலமும் அந்த ஆசிரமத்தையே சுற்றித்திரிய அப்போது சந்திரா தலைமை அம்மையிடம் உண்மையினை உரைத்து தான் கல்கட்த்தா போகும் செய்தியினை கேட்டு உடனே ஓடோடி முதலில் முத்துராமனிடம் சொல்ல இருவரும் மிகுந்த உற்சாகத்துடன் சிவாஜியிடம் சென்று சொல்கின்றனர்.
செய்திகேட்ட சிவலிங்கம் உன்மத்தரைப்போல உற்சாகம் கொண்டு ஓட , ஒரு சாலையில் தற்செயலாக சந்திராவின் கார் ( கல்கத்தா செல்லும் வழியில் ) சிவாஜியை தாக்க, சிவாஜி அடிபட்டு விழ சந்திரா , அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்க , அவருக்கு ரத்தம் தேவைப்பட இரு பெண்களுமே அவருக்கு ரத்தம் அளிக்க , உடல் குணமாகி சிவாஜி, தான் செய்த தவறுகளுக்கும் , அந்தஸ்து என்ற மாயையிலுருந்து தான் வெளியே வந்துவிட்டேன் என்று ஒப்புக்கொண்டு , தன் அருமை பெண்கள் இருவரையும் ஒன்று சேர்ந்து பாசத்துடன் இணைத்துகொண்டு, வி.கே.ஆர்.ரிடன் மன்னிப்பு கேட்டுகொண்டு அவருடைய மகனான ராஜனுக்கு மணமுடிக்கிறார் காந்தாவை.
சந்திராவை முத்து கரம்பிடிக்க ...............சுபம்.
அடுத்து நாம் காண இருப்பது--- படத்தின் மற்ற சிறப்பு அம்சங்கள்
chinnakkannan
17th May 2014, 10:49 AM
பார் மகளே பார் வெகு சின்ன வயதில் பார்த்த படம் கோபால்.. .. அதன் பிறகு ஒரு தடவை தான் பார்த்திருக்கிறேன் ந.தியின் பெயர் சிவலிங்கம் என்பது நினைவிலில்லை.
வெகு அழகாகக் கதை எழுதியிருக்கிறீர்கள்..மறுபடியும் படத்தைப் பார்த்தாற்போலவே இருக்கிறது.. அந்த முதல் சீனில் உறைந்து போயிருந்திருக்கிறேன்.. என்ன அழகாக ஸ்டார்ட் அண்ட் பின் மெல்ல மெல்ல ந.தியின் குணாதிசயம்..
கடைசியில் இன்னார் தான் மகள் என்று சொல்லாமலேயே முடித்திருப்பதும் அழகு (அப்படித் தானே)
மிக்க நன்றி..மீண்டும் பார்க்க வேண்டும்..( அந்த லிங்க்ஸ் வேலை செய்யவில்லை..)
Gopal.s
17th May 2014, 04:39 PM
பார் மகளே பார் - கதாநாயகன் - சிவாஜி கணேசன்
http://i949.photobucket.com/albums/a...ofImage066.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image026.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image012.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image007.jpg
http://i949.photobucket.com/albums/a...Image005-1.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage048.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage067.jpg
http://i949.photobucket.com/albums/a...Image075-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image076-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image080-2.jpg
http://i949.photobucket.com/albums/a...Image071-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image073-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image081-2.jpg
http://i949.photobucket.com/albums/a...Image085-2.jpg
இப்படம் முற்றிலும் நடிகர் திலகத்தை பல கோணங்களில் காணலாம்:
முதல் காட்சியிலேயே நம்மை கவர்ந்துவிடுவார் ! நண்பர்களுடன் பில்லியர்ட்ஸ் ஆடுவது போல துவங்கம் அவர் வரும் காட்சி. ஒரு நடனமங்கை உங்களை பார்க்கவேண்டுமென்று விரும்புகிறார் என்று பணியாளர் சொன்ன உடனே முகபாவம் சற்று கோபமாக மாறி அந்த மனிதரை அனுப்பிவிடும் விதமே நமக்கு ஒரு செய்தி தரும்.....இவர் மற்றவர்களை போல இல்லை..மாறுபட்டவர் என்று !
தன் மனைவிக்கு ப்ரசவ வேதனை என்று செய்தி கிடைத்ததும் ஒரு வேகம்....
மருத்துவமனையில் தன் மனைவியை கண்டதும் ஒரு அன்பான அரவணைப்பு...
அருகில் 2 குழந்தைகளை கண்டதும்...." ஓ இரட்டை பிறவிகளா " என்று உற்சாகம்.
நண்பனின் போக்கு பிடிக்கவில்லை என்பதில் ஒரு தீர்மானமான முடிவு...அவர் அதில் காட்டும் கடுமை..ஒரு கைதேர்ந்த தொழிலதிபர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு...
குழந்தைகளிடம் அளவற்ற அன்பு....அதே சமயம் அவர்களிடம் ஒரு கண்டிப்பு...அவர்களை வளர்க்கும்விதத்தில்
தானாக வளர்த்துகொண்ட அந்தஸ்து என்ற பிடிவாத குணம்....அதனால் வெளிப்படுத்தும் ஒரு பெரிய மனிதனை போன்ற நடை, உடை , பாவனை
பணியாளர் கருணாநிதியிடம் முதலில் கண்டிப்பு.....
தன் பெண் ஒரு நல்ல குடும்பதை சேர்ந்த வாலிபனை மணக்க விரும்புகிறாள் என்றதும் ஒரு உற்சாகம், முத்துராமனிடம் சாதாரணமாக உரையாடத்துவங்கி உடனே தன் போக்கை மாற்றிக்கொள்ளும் விதம்..
ஒரு பெண் தன்னுடையவள் இல்லை என்று வி.கே.ஆர். சொன்னதும் ஒரு சீற்றம்..அதிற்ச்சி...
தன் அருமை மனைவி கூட தன்னிடம் மறைத்துவிட்டாளே என்று வெறுப்பு...
முதல் பெண் விஜயகுமாரி தன் மகள் இல்லை என்ற செய்தி கிடைத்ததும் ஒரு நிம்மதி..
பின் அவளை பற்றிய செய்தி அனைத்தும் தவறானது என்றதும் மீண்டும் பொங்கி எழும் ஒரு தந்தையின் பாசம். அன்பு.
ஆனால் அவள் இறந்து விட்டாளே என்று தாங்கமுடியாத சோகம்..அவலை நினைத்து நினைத்து வாடுவது... மனைவி படுத்த படுக்கையாகிவிட்டாளே என்று துயரம்..இயலாமை....
முடிவில் தன் பெண்ணை கண்டதும் சந்தோஷம்..மகிழ்ச்சி...
நண்பணிடம் மன்னிப்பு கேட்டுகொண்டு பழைய நட்பின்படி, தன் பெண்ணை நண்பனின் மகனுக்கே மணமுடித்தல்.............
இப்படி ஒரு கம்பீரத்துடன் துவங்கும் அவர், படிபடியாக தளர்ந்து தான் கொண்ட அந்தஸ்து, கவுரவம்..என்ற கோட்பாட்டிலிருந்து வரும் அவர் தான் படத்தின் நாயகன்...
உண்மையிலேயே தன் சொந்த பெண்ணை பறிகொடுத்தவர் போல துடிக்கும் காட்சி தான் தலை சிறந்த நடிப்பு...
மின்னல் வேகத்தில் அவர் காட்டும் முகமாற்றம் இப்படத்தின் சிறப்பு..
அவருடைய நடை , உடை , பாவனையிலேயே ஒரு பணக்கார தொழிலதிபரின் எல்லா குணாதிசயங்களையும் காணலாம்.
படத்தின் 3/4 பகுதி புகை பிடிப்பது போல ஒரு அமைப்பு... அதில் பாதி பகுதி அதை பிடித்துக்கொண்டே பலவிதமாக பேசும் ஸ்டையில் !
வடநாட்டு ஆடையான குர்தா-பைஜாமா ...இந்த உடையை அவர் பொது வாழ்க்கையில் எப்போதும் பயன்படுத்துவார்...இப்படம் முழுவது அதுதான் அவரின் உடை ! ஒரு அழகான குருந்தாடி கூட.!
34 வயதில் ஒரு நடுத்தர/ வயதான வேடம் செய்ய யாருக்கு தான் துணிச்சல் வரும்...
காதலி...மனைவியுடன் ஆடிப்பாட காதல் பாட்டு கிடையாது....
இப்படி படம் முழுவதும் ஆக்ரமித்துக்கொள்ளும் நம் நடிகர் திலகத்தின் திறமையை பற்றி எழுத ஒரு கட்டுரையே வேண்டும்
காலத்தை வென்ற நடிப்பு... நடிகர்களின் திலகம் தான் இவர் !
Thanks to Irene Hastings.
RAGHAVENDRA
18th May 2014, 08:49 AM
Sivaji Ganesan Filmography Series
89. Par Magale Par பார் மகளே பார்
http://i.ytimg.com/vi/hZjOgz1x_uM/0.jpg
வெளியீடு 12.07.1963
தயாரிப்பு –கஸ்தூரி பிலிம்ஸ்
பட்டு எழுதிய பெற்றால்தான் பிள்ளையா என்ற நாடகத்தைத் தழுவியது
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகவேள் எம்.ஆர்.ராதா, முத்துராமன், சௌகார் ஜானகி, விஜயகுமாரி, புஷ்பலதா, ருக்மணி,
ராஜன், வி.கே.ராமசாமி, ஏ.கருணாநிதி, தங்கராஜ், ஜெமினி பாலு, கே.கே.சௌந்தர், மற்றும்
புதுமுகம் சோ
மனோரமா, எஸ்.ஆர்.ஜானகி, சீதாலட்சுமி, தாம்பரம் ல்லிதா, எம்.எஸ்.எஸ்.பாக்கியம், ராதாபாய்
மற்றும் பலர்
திரைக்கதை – வலம்புரி சோமனாதன்
வசனம் ஆரூர்தாஸ்
பாடல்கள் கவிஞர் கண்ணதாசன், யோகி சுத்தானந்த பாரதியார்
பாடியவர்கள்
டி.எம்.சௌந்தர்ராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ், ஏ.எல்.ராகவன், எம்.எஸ்.ராஜு, பி.சுசீலா, சூலமங்கலம் ராஜலட்சுமி, எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும்
மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்
பாடல்கள் ஒலிப்பதிவு ரீரிக்கார்டிங் – டி.எஸ்.ரங்கசாமி – மெஜஸ்டிக் உதவி ஆர்.எஸ்.வேதமூர்த்தி, ஜோ அலோஷியஸ்
வசனம் ஒலிப்பதிவு – லோகநாதன் – நியூடோன், ஜி. மோஹன் – பரணி
ஒளிப்பதிவு உதவி – டி.எஸ்.பாண்டியன், எஸ்.கே.அன்வர்ஜான், ஆர்.விஜயராகவன், கே.எஸ்.மணி
நடனம் – பி.எஸ்.கோபாலகிருஷ்ணன், சின்னி-சம்பத்
மேக்கப் – ஹரிபாபு, ரங்கசாமி, கஜபதி, பத்ரையா, கிருஷ்ணராஜ், வீர்ராஜ், எஸ்.வி.மாணிக்கம்.
உடைகள் – பி.ராமகிருஷ்ணன், ஒய்.வெங்கட்ராவ்
கலை – கங்கா
செட்டிங்ஸ் – ராம. சண்முகம்
கார்பெண்டர்ஸ் – என்.கிருஷ்ணன், வி.கண்ணன், பாலசுந்தரம்
பெயிண்டிங்ஸ் – ஆர்.முத்து, ஆர்.ராதா, மாணிக்கம்
எலக்ட்ரீஷியன் – டி.என்.பி. மூர்த்தி
ப்ரோக்ராம்ஸ் – வி.சுப்பையா, ஏ.சுந்தர்ராஜன், என்.எஸ்.நாகப்பன்
அவுட்டோர் யூனிட் – பிரசாத் புரொடக்ஷன்ஸ் பி.லிட்.
செட் ப்ராபர்டீஸ் – சினி கிராஃப்ட்ஸ்
பப்ளிசிடி – எலிகண்ட்
ஸ்டில்ஸ் – ஏ.சிம்மையா, சி.பத்மனாபன்
ப்ராஸஸிங் – சர்தூல் சிங் சேத்தி
எடிட்டிங் மேற்பார்வை – ஏ.பீம்சிங்
எடிட்டிங் – ஏ.பால்துரைசிங்கம், ஆர்.திருமலை உதவி – பி.எஸ்.பிரகாஷ், ஜி.என்.ரங்கராஜ், பி.ஸ்டான்லி, ஹெச்மோஹன்
புரொடக்ஷன் நிர்வாகம் – எம்.வி. உமாபதி, சிட்டிபாபு
ஸ்டூடியோ – பரணி நிர்வாகம் ஏ.எல்.எஸ்.புரொடக்ஷன்ஸ், நியூடோன்
ஆர்.சி.ஏ. முறையில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது
உதவி டைரக்ஷன் – ஆர்.திருமலை, ஜி.எஸ்.மகாலிங்கம், ஆர்.சடகோபன்
கண்டின்யுடி – டி.பி.அருணாசலம், எஸ்.எஸ்.மணி
ஒளிப்பதிவு – ஜி.விட்டல் ராவ்
தயாரிப்பு – வி.சி.சுப்புராமன்
இசை மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி
உதவி கோவர்த்தனம் ஹென்றி டானியல்
டைரக்ஷன் – ஏ.பீம்சிங்
First Release Ad : The Hindu : 10.7.1963
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3842a.jpg
50th Day Ad : The Hindu : 30.8.1963
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3848aa-1.jpg
RAGHAVENDRA
18th May 2014, 08:52 AM
கோபால் சுட்டிக் காட்டியது போல் ஐஹீன் ஹேஸ்டிங்ஸ் ... (உங்கள் இயற் பெயர் என்ன சார்) அவர்களின் விரிவான ஆய்வு ஒன்றே போதும் பார் மகளே பார் திரைப்படத்தின் சிறப்பை எடுத்துரைக்க...
Hats Off Irene Hastings...
Link for Irene Hastings' Post:
http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5&p=458344&viewfull=1#post458344
http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5&p=458383&viewfull=1#post458383
RAGHAVENDRA
21st May 2014, 07:56 AM
Sivaji Ganesan Filmography Series
90. Kungumam குங்குமம்
http://i1.ytimg.com/vi/spkV_Gbhs2w/0.jpg
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/KungumamAdPesumPadamAug63fw.jpg
தணிக்கை 19.07.1963
வெளியீடு 02.08.1963
தயாரிப்பு – கே. மோஹன் (மோஹன் ஆர்ட்ஸ்) - ராஜாமணி பிக்சர்ஸ்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், விஜயகுமாரி, சாரதா, எஸ்.எஸ். ராஜேந்திரன், முத்துராமன், எஸ்.வி.ரங்காராவ், எம்.வி. ராஜம்மா, மனோரமா, எஸ்.வி.சஹஸ்ரநாமம், நாகேஷ், ஓ.ஏ.கே. தேவர், ஆர். பாலசுப்ரமணியம் மற்றும் பலர்
கதை நிஹர் ரஞ்சன் குப்தா
திரைக்கதை வசனம் – சக்தி கிருஷ்ணசாமி
இசை – கே.வி. மகாதேவன், உதவி புகழேந்தி
பாடல்கள் – கவிஞர் கண்ணதாசன், உதவி பஞ்சு அருணாச்சலம்
ஒலிப்பதிவு – பாடல்கள் T.S. ரங்கசாமி – மெஜஸ்டிக்
ஒலிப்பதிவு – வசனம் – வி.சி.சேகர் – நெப்டியூன்
ரீ ரிக்கார்டிங் – எஸ்.பி. ராமநாதன், ஏவி.எம்.
மேக்கப் – ஹரிபாபு, ரங்கசாமி, சுந்தரம், ராமசாமி
உடை – பி.ராமகிருஷ்ணன்
நடனம் – ஏ.கே. சோப்ரா, ரத்தன் குமார்
கலை – கே.மோஹன் – மோஹன் ஆர்ட்ஸ், உதவி – ஜெமினி ராமானுஜம், ஏழுமலை
ப்ராசஸிங் – சர்தூல் சிங் சேத்தி
எடிட்டிங் – எஸ். பஞ்சாபி, ஆர். விட்டல்
விளம்பரம் – மோஹன் ஆர்ட்ஸ், எலிகண்ட்
ஸ்டூடியோ – நெப்டியூன், சென்னை 28
ஸ்டில்ஸ் – ஜி.முருகேசன்
புரொடக்ஷன் எக்ஸிகியூடிவ் – வி.எஸ். ராமு
ஆபீஸ் நிர்வாகம் – சி.பாலசுந்தரம், என்.கிருஷ்ணசாமி
புரொடக்ஷன் மேனேஜர் – முகிலன்
ஒளிப்பதிவு – எஸ். மாருதி ராவ்
டைரக்ஷன் – கிருஷ்ணன் பஞ்சு
குங்குமம் விளம்பர நிழற்படங்கள்.. ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து...
First Release Ad : The Hindu : 28.7.1963
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4246a-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 2.8.1963
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4245a-1.jpg
RAGHAVENDRA
21st May 2014, 07:59 AM
கதைச் சுருக்கம்
"குங்குமம்"
பெற்ற மகனைக் குற்றவாளி என்று தெரிந்தவுடன் போலீஸாரிடம் ஒப்படைக்கத் துணியும் ஒரு வீரத்தாயின் கதை!
மதுரை மாநகரிலிருந்து, மேற்படிப்புக்கென அமெரிக்கா போகும் சுந்தரத்தை அவன் அன்புத்தாய் மலர் முகங்காட்டி அனுப்பி வைக்கிறாள்.
ஆண்டுகள் நான்கு திரும்பின. சுந்தரம் நாடு திரும்பினான். வீடு சென்றான். மலர் முகங்காட்டித் தாய் அவனை வரவேற்கவில்லை. காரணம் - தந்தை தற்கொலை செய்து கொண்ட கதை அவனுக்கு அப்போது தான் தெரியவந்தது. தன் குடும்பத்தின் இந்த அவல நிலைக்குத் தான் தான் காரணம் என்பதை உணர்ந்தான்.
வேலை தேடி பம்பாய் புறப்பட்டான். அவன் தங்கியிருந்த ஓட்டலில் இரவு ஒரு கொலை நடந்தது. சுட்டவனோ ஒரு நல்ல மனிதன். அவனைத் தப்பி ஓடச் செய்து விட்டுத் தன்னையே கொலைக் குற்றவாளியாகக் காட்டிக் கொண்டான் சுந்தரம்.
கொலையாளி சுந்தரத்தைப் போலீஸ் துரத்தியது.
ஒரு நாள் சுந்தரம் தாயைச் சந்தித்து, தான் ஒரு கொலையாளி என்று சொல்லிவிட, தன் மகனையே போலீஸில் ஒப்படைக்க முனைந்து விடுகிறாள் தாய். அவனுக்கு மாலையிடக் காத்திருக்கும் கோமதியோ, அவனைத் தப்புவிக்க முனைகிறாள்.
சுந்தரத்தின் நண்பன் தாஸ், அவனுக்கு நல்லது செய்யப் புறப்படுகிறான். இடையிலே வந்து புகுந்த சுசீலா என்னும் நங்கை ஒருத்தி சுந்தரத்திற்கெனத் தான் எதையும் செய்யத் தயார் என்று புறப்படுகிறாள்.
ஆனால் 'கொலைக் குற்றம்'என்ற அந்த ஒரே பலத்தால், இவ்வளவு நல்லவர்களையும் போலீஸ் துப்பாக்கி துரத்திக் கொண்டே இருக்கிறது.
* சுட்டவன் யார்? நல்லவன் ஏன் சுட்டான்?
* தாய் மகனைக் கடைசி வரை வெறுத்தாளா?
* கோமதி கடைசியி்ல் தன் அத்தானைக் கடைசியில் காப்பாற்றினாளா?
* தாஸும் சுசீலாவும் சுந்தரத்திற்கென என்ன செய்தார்கள்?
இவற்றுக்குரிய பதிலைத் தருவதுதான் 'குங்குமம்'
பாடல்களின் விவரங்கள்
1. பூந்தோட்டக் காவல்காரா – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
2. குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம் – பி.சுசீலா, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
3. காலங்கள் தோறும் திருடர்கள் இருந்தார் – பி.சுசீலா
4. தூங்காத கண்ணென்று ஒன்று – பி.சுசீலா, டி.எம்.சௌந்தர்ராஜன்
5. மயக்கம் எனது தாயகம் – டி.எம்.சௌந்தர்ராஜன்
6. சின்னஞ்சிறிய வண்ணப்பறவை – டி.எம்.சௌந்தர்ராஜன், எஸ்.ஜானகி – பாடலை எழுதியது பஞ்சு அருணாசலம்
7. மங்கல மங்கையர் குங்குமம் – பி.சுசீலா, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
RAGHAVENDRA
21st May 2014, 08:00 AM
ஊர்வசி விருது பெற்ற சாரதா அவர்களின் முதல் தமிழ்ப்படம் குங்குமம். இது பற்றி தினகரன் நாளிதழில் சாரதா அவர்களைப் பற்றிய குறிப்பு
http://www.thinakaran.lk/2013/11/12/?fn=f1311124&p=1
RAGHAVENDRA
21st May 2014, 08:01 AM
குங்குமம் திரைப்படத்தின் நெடுந்தகட்டின் முகப்பு
http://www.buycinemovies.com/images/detailed/0363-vcd162.jpg
RAGHAVENDRA
21st May 2014, 08:02 AM
Kungumam Story in the Plot section of wikipedia :
Sundharam (Sivaji Ganesan) loves Gomathi (C. R. Vijayakumari), where the latter is an orphan and lives with her uncle's family. Sundharam leaves to the United States of America for further studies. When Sundharam comes back four years later, he was shocked to see that his mother Vedhavalli (M. V. Rajamma) as a widow and was told that his father Sambasivam committed suicide due to of disgrace that unable to pay back the loans.
Sundharam leaves to Bombay for an interview where comes across a murder of broker Govindan tooks place and shocked to see that the murderer is Punniyakodi (S. V. Ranga Rao) who is later introduced as Gomathi's father in a police investigation. Sundharam helps Punniyakodi to escape and in turn is suspected by the police as the culprit instead. Police Superintendent Raja (S. S. Rajendran) is appointed to investigate the murder case. When Gomathi's uncle refuses to let her getting married to Sundharam, she leaves home following Vedhavalli to Madurai. Sundharam travels back to Madras where he bumps into Suseela (Saradha) on the road. Sundaram finds Govindan's family and offers help who initially refuses but later accepts when persuaded and explained. While leaving Gobvindan's house, Sundharam learns that Punniyakodi is living as a fugitive had changed his name as James and staying with a crook Kandhan (O. A. K. Thevar). Sundharam seeks his friend Dhas (R. Muthuraman) help in taking care of Punniyakodi for the time being and goes to Madurai ans explaines to Vedhavalli and Gomathi that he is a murderer and wanted by the police but Vedhavalli refuses to accept Sundharam as her son due to the conviction.
Sundharam upon reading an advertisement in the news paper, joins as a tuition teacher in disguise as Kalamegam. There Sundharam learns that Suseela's father is Justice Somanathan (S. V. Sahasranamam), her cousin is Inspector Raja, servants Arasan (Nagesh) and Kanniamma (Manorama). Meanwhile Superintendent Raja hatches a plan to move Vedhavalli and Gomathi to Dhas's house so that to ease to capture Sundharam if he happens to visit them but James leaves Dhas's home following Kandhan's temptation. Suseela refuses Raja's advances and developes a soft corner for Kalamegam but later finds out that he is Sundharam and his deeds but lies to Justice Somanathan that he is a good man. Suseela also lets Sundharam escape when Raja finds out about this.
Vedhavalli who is a staunch believer of justice, hates Sundharam for his conviction and arranges Gomathi to be married to Dhas but Gomathi refuses. In turn Gomathi pleads Sundhram to marry Suseela as Suseela had help them out a lot to prove Sundharam's innocence before gets shot by the police mistaken for Sundharam. A trial takes place where Sundharam accepts the all the charges onto him. A twist in the story occurs when Somanathan produces Punniyakodi and Kandhan in court. Punniyakodi admits in court that he is cheated by Kandhan into shooting broker Govindan where Kandhan earlier had told Punniyakodi that by the revolver is unloaded. Lastly Punniyakodi admits that he is actually Sambasivam and was introduced as Punniyakodi to the police by Sundharam who was only doing all these in order to save him. The judges sentences Kandhan for murder, further trials for Sambasivam and 6 months for Sundharam. At the end of the story, Sambasivam applies kungumam to Vedhavalli at the request of Sundharam.
Reproduced from: http://en.wikipedia.org/wiki/Kungumam_(film)
RAGHAVENDRA
21st May 2014, 08:04 AM
And here comes our NOV Sir's writing on Kungumam:
Since about 15 years ago when I listened to chinnan chiriya vanna paravai ennaththai solludhamma sung on stage during a Thaipoosam festival in Batu Caves, I have been completely floored by the excellent singing by TMS and S Janaki. The song seems like a competition between two vidhwans and both TMS and S Janaki had given all thier best in the song. Repeated hearings only increased my desire to see the action on the screen but my search for the film was fruitless. Until today that is....
Rajamani Pictures
Kungumam
Starring: Sivaji Ganesan, Vijayakumari, SS Rajendran, Saradha, Muthuraman, Rangarao, M Rajamma, Nagesh, Manorama, etc.
Producer: Mohan Arts
Lyrics: Kannadhasan/Panchu Arunasalam
Music: KV Mahadevan
Direction: Krishnan Panju
Story begins with Vijayakumari awaiting for her murai maaman, Sundaram (SG). She sings poonthOtta kaavalkkaaraa poo paraikka iththanai naalaa. Note the lyrics: this is the reason I maintain that new songs can never compete with the olden day songs. How beautifully Kannadhasan scripts of a woman in love awaiting her lover!!!
We learn that Sundaram is going to the States to further his studies. The titles come on with the fabulous kungumam mangala mangaiyar kungumam- sung to perfection by Soolamangalam Sisters - in the background. In the song, Kannadhasan pays tribute to Sivaji's mother in the line: raajamani ennum annai mugaththil milirum mangala kungumam!
When he returns from the States, Sundaram meets with despair written on everyone's face. He learns that his mother (Rajamma) is now a widow without kungumam! He is told that his father had commited a crime, jailed and had comitted suicide. Sundaram leaves for Bombay for business. While in the hotel room, he comes accross Rangarao shooting and killing a jewlery merchant. Sundaram takes the gun from Rangarao ( ) and claims to be the killer! He then escapes to Madras.
In Madras SSR is made the inspector in charge of the crime. Sundaram meets Sharada on the road. kaalangal thOrum thirudargal irunthar sings Sarada. He then seeks the wife and family of the jewler and gives her money to get by. To escape the police Sundaram dons a lady's dress with a big kungumam. Sivaji will be in his element here.
He meets Rangarao and takes him to his friend Muthuraman's house. When he meets his mother in Madurai, the righteous woman tries to turn him to the police. Sundaram once again escapes and returns to Madras. Sarada's father (Sahasranamam) advertises for a home tutor for his son. Sundaram comes in maaruvEdam as thamizh teacher Kaarmegam and joins the household. In the meantime Inspector SSR has eyes for Sarada!
Slowly but surely Sundaram and Saradha develop feelings for each other. thoongaadha kannendru ondru thudikkindra sugamendru ondru thaangaadha manamendru ondru thandhaayE nee ennai kandu. At the end of the song Karmegam removes his wig and make up and Saradha sees the real Sundaram.
SSR tries many ways to catch Sundaram but all his plans fail. In one scene he enters Muthuraman's house while Sundaram is there. Our master than dons another look and acts as Muthuraman's father.
Later Saradha asks Sundaram the reason for his dual personality who refuses to clarify but instead sings the masterpiece: mayakkam enadhu thaayagam mounam enadhu thaai mozhi. Thinking of his running away from th epoolice he sings: naanE enakku pagai aanEn en naadagathil naanE sirai aanEn, thEnE unakku unakku puriyaadhu, andha deivam varaamal vilangaadhu. He also contemplates about his promise to marry Vijayakumari and now his feelings for Saradha: vidhiyum madhiyum veramma, adhan vilakkam naandhaan paaramma, madhiyil vandhaval neeyamma, en vazhi maraithaal vidhiyamma! Hats off to Kannadhasan! And of course KVM and TMS.
To catch Sundaram, SSR comes as a beggar to Muthuraman's house (where Vijayakumari now stays), but Sundaram gets the one up by appearing as another beggar! Yes, five avathars in one movie!
Just as I was wondering when my beloved song will appear, Saradha is asked to do a katcheri and Sundaram/Karmegam follows. She sings chinna chiriya vanna paravai ennaththai solludhamma. Against my expectations, it was not a competition song and was just a song performed in a concert. At the end of the song, SSR recognises Karmegam as Sundaram. Sarasha comes to his rescue and switches off the lights to enable Sundaram to escape.
In the meantime, Sundaram's mother is adamant in wanting to give up Sundaram to the police. Sundaram promises to give himself up when he gets Vijayakumari to agree to marry Muthuraman. The police arrive and corner the house. People start running away and by mistake Vijayakumari is shot dead! As a last request she asks Sundaram to place the kungumam on her forehead.
Sundaram is brought before the judge. He admits to his crime and request to be punished. Rangarao appears and there is a complete twist to story...... best seen on the screen.
Link for the above post: http://www.mayyam.com/talk/showthread.php?6549-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-4&p=331666&viewfull=1#post331666
RAGHAVENDRA
21st May 2014, 08:04 AM
Videos
Sinnansiriya
http://youtu.be/UtlVTv1zkMk
title song
http://youtu.be/Tpwf0axbK7U
poonthotta kavalkara
http://youtu.be/FN-foH6RGOo
lady get up
http://youtu.be/spkV_Gbhs2w
thoongadha kannendru ondru
http://youtu.be/M6OJpL6PAUo
kalangal thorum
http://youtu.be/mUpQ74i8nfg
mayyakkam enadhu
http://youtu.be/LSJ1tvHG-m0
RAGHAVENDRA
23rd May 2014, 12:29 PM
Sivaji Ganesan Filmography Series
91. Raktha Thilakam இரத்தத் திலகம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/RT1-1.jpg
மேற்காணும் நிழற்படம் உபயம் ஆவணத்திலகம் பம்மலார்
வெளியீடு – 14.09.1963
இரத்தத் திலகம் வெளியீட்டு விளம்பர நிழற்படம் நன்றி ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்
முதல் வெளியீட்டு விளம்பரம் :
சுதேசமித்ரன் : 14.9.1963
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4582a.jpg
தயாரிப்பு: கண்ணதாசன், நேஷனல் மூவீஸ்
நடிக நடிகையர் –
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாகேஷ், புஷ்பலதா, மனோரமா, ஜானகி, சீதாலட்சுமி, செந்தாமரை, சண்முக சுந்தரம், பார்த்திபன், கண்ணப்பா, கன்னையா, வீராச்சாமி, நம்பிராஜன், நடராஜன்,
வசனம் கண்ணதாசன், பி.சி.கணேசன், அண்ட் தியாகன்
பாடல்கள் கண்ணதாசன் உதவி – பஞ்சு அருணாச்சலம், முக.நாயகம்
இசை – திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன், உதவி – புகழேந்தி, இசைக்குழு – வயலின் கே.வி.மகாதேவன்
பின்னணி – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி
வசனம் ஒலிப்பதிவு – கே.சீனிவாசன்
ஆபரேடிவ் காமிரா மேன் – சிட்டிபாபு
நடன அமைப்பு – டெஸ்மாண்ட், ராஜ்குமார்.
ஸ்டண்ட் – சாரங்கன்
நடனம் (சசி-கலா) மாலா
கலை – எம். அழகப்பன்
மேக்கப் – ஆர். ரங்கசாமி, நாகேஸ்வர ராவ், ராமசாமி, கிருஷ்ணராஜ், அழகிரி
ஆடை அணி மணி – ஆர்.சி. லிங்கம்
சக நடிகர்கள் ஏஜெண்ட் – டி.கே.பரமசிவம்- பி.கே.திருப்பதி
ஸ்டில்ஸ் – ஏ.சி. ராமனாதன்
விளம்பரம் அருணா & கோ
பப்ளிசிடி டிசைன் ஜி.ஹெச்.ராவ், கே.எஸ்.ராமு
அலங்காரப் பொருட்கள் – சினி கிராப்ட்ஸ்
ப்ராஸஸிங் கே.பரதன் மெஜஸ்டிக் ஸ்டூயோ லேபரட்டரி
எடிட்டிங் ஆர்.தேவராஜன்
ஸ்டூடியோ மெஜஸ்டிக்
ஆர்சிஏ முறையில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது
ஸ்டூடியோ புரோக்ராம் – எம்.சாகுல்
செட்டிங்ஸ் – எம்.எல்.ராயன்
சீப் எலக்ட்ரீஷியன் – சி.என்.புருஷோத்தமன்
தயாரிப்பு நிர்வாகம் – எஸ்.வீரய்யா
அலுவலக நிர்வாகம் – கே.நடராஜய்யர், எஸ்.சிவலிங்கம், எஸ்.வீரப்ப செட்டியார், எஸ்.பெல்.பழனியப்பன், சுப.மாணிக்கம்
ஒலிப்பதிவு டைரக்டர் – டி.எஸ்.ரங்கசாமி, மெஜஸ்டிக்
ஒளிப்பதிவு டைரக்டர் – ஜாகீர்தார்
அஸோஸியேட் டைரக்ஷன் – எஸ்.வி.வெங்ட்ராமன்
கூட்டுத் தயாரிப்பு – பி.வி. கிருஷ்ணன்
தயாரிப்பு – பஞ்சு அருணாச்சலம்
திரைக்கதை டைரக்ஷன் – தாதா மிராசி
RAGHAVENDRA
23rd May 2014, 12:34 PM
இரத்தத் திலகம் திரைக்காவியத்தைப் பற்றிய சில துளிகள்
நடிகர் திலகத்தை இயக்குநர் தாதா மிராசி முதல் முதலாக இயக்கிய படம்
இந்திய சீன யுத்தத்தைப் பின்னணியாக வைத்து எடுக்கப் பட்டது.
அன்பு திரைக்காவியத்திற்குப் பிறகு மீண்டும் நடிகர் திலகம் நடித்த ஒத்தெல்லோ நாடகம் இடம் பெற்றது.
மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்க வேண்டியது. நடிகர் திலகத்தின் படங்களின் தொடர் அணிவகுப்பினால் சற்றே பாதிக்கப் பட்ட படங்களில் இதுவும் ஒன்று.
பிரிவுபச்சாரத்திற்கென்று எந்த விழாவிலும் கட்டாயமாக இடம் பெறும் பாடல்
பசுமை நிறைந்த நினைவுகளே
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு - கவியரசர் கண்ணதாசன் தோன்றி நடித்த காட்சி
வாடைக் காற்றம்மா வாடைக் காற்றம்மா - ஈஸ்வரியின் குரலில் இனிமையான பாடல்
பனிபடர்ந்த மலையின் மேலே - மிகச் சிறந்த பாடல். தேச பக்திக்கு மிகச் சிறந்த உதாரணம்.
http://www.indiablooms.com/big_images/2299_Usha_Uthup_300.jpg
உஷா ஐய்யர் [உஷா உதுப்] குரலில் பாடல் இடம் பெற்ற முதல் தமிழ்ப் படம்.
http://youtu.be/LaikZQDFLwo
படத்தில் சாவித்திரி பிறந்த நாள் கொண்டாடும் போது இடம் பெறும் வாழ்த்துப் பாடல் Merry Go Round. இது உஷா அய்யர் அவர்கள் பாடியது. டைட்டிலில் இவர் பெயர் இடம் பெறவில்லை.
RAGHAVENDRA
23rd May 2014, 12:42 PM
பேசும் படம் பத்திரிகையின் ஜூலை 1963 இதழில் இடம் பெற்ற இரத்தத் திலகம் படக் காட்சிகள். உபயம் ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்.
காவியக்காட்சிகள் : பேசும் படம் : ஜூலை 1963
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4574a.jpg
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4575a.jpg
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4576a.jpg
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4577a.jpg
[img]http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4579a.jpg
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4580a.jpg
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4581a.jpg
RAGHAVENDRA
23rd May 2014, 12:49 PM
இரத்தத் திலகம் திரைப்படத்தைப் பற்றிய முரளி சாரின் சிறப்பான கட்டுரையின் மீள்பதிவு
Part 1 Link: http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5&p=367309&viewfull=1#post367309
Part 2 Link: http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5&p=367310&viewfull=1#post367310
இரத்த திலகம் - Part I
தயாரிப்பு : நேஷனல் பிலிம்ஸ்
இயக்கம்: தாதா மிராசி
வெளியான நாள்: 14.09.1963
கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் குமார், கமலா மற்றும் மதுரை. மதுரையின் தங்கை கமலா. கமலாவின் பெற்றோர் சிறு வயதிலேயே சைனாவின் தலைநகரமாம் பீகிங் (அன்றைய பேர்) நகரத்தில் செட்டிலாகி விட்டவர்கள். படிப்பிற்காக கமலா தமிழகத்திற்கு வந்திருக்கிறாள். குமாரும் கமலாவும் எப்போதும் எலியும் பூனையுமாக இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் இவர்கள் சூழ்நிலை காரணமாக கல்லூரி கலை விழாவில் ஒதெல்லோ நாடகத்தில் இணைந்து நடிக்க நேர்கிறது. அந்த இணைதல் அவர்கள் அடி மனதில் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருந்த ஆசையை வெளிக் கொண்டுவருகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பும் செய்தியை சொல்லும் போது கமலாவின் தந்தை ஆபத்தான நிலைமையில் இருப்பதால் உடன் சைனாவிற்கு கிளம்பி வருமாறு அழைப்பு வர அவள் கிளம்பி செல்கிறாள். சிறிது காலத்திற்குள்ளாகவே அவள் தந்தை காலமாகி விடுகிறார், அங்கே இருக்கும் ஒரு தமிழ் குடும்பம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது. அந்த குடும்பத்தின் ஒரே மகன் டாக்டராக இருக்கிறான்.
குமாருக்கு தாய் தந்தை இல்லை. தந்தை சுதந்திரப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகி. தாத்தா பாட்டி மட்டுமே உள்ளனர். பம்பாயில் ஒரு வானொலி நிலையத்தில் வேலைக்கு சேரும்படி குமாருக்கு கடிதம் வருகிறது. அந்த நேரத்தில் சைனா அத்து மீறி நமது எல்லைப் பகுதிக்குள் நுழைந்து சில பகுதிகளை கைப்பற்றிய செய்தி வருகிறது. பஞ்சசீல கொள்கையில் உறுதியாக நின்ற இந்தியா, சைனாவை நண்பனாக நினைக்க, சைனாவோ நம்மை ஆக்ரமித்தது. நமது நாட்டை காப்பாற்ற வீட்டிற்கு ஒருவர் முன் வரவேண்டும் என்று (அன்றைய) பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு வானொலியில் உரையாற்றுவதை கேட்கும் குமார் ராணுவத்தில் சேர முடிவு செய்கிறான். வானொலியில் இருந்து வந்த ஆர்டரை கிழித்து எறிகிறான். ராணுவத்தில் சேர கூடாது என்று தாத்தா மன்றாட, அவரை சம்மதிக்க வைக்கிறான்.
அடுத்து போர் முனையில் குமார். ராணுவத்தில் ஒரு மேஜராக பொறுப்பேற்கும் குமார் இழந்த இடங்களை மீட்க வியூகம் வகுக்கிறான். சீனர்கள் நமது இடங்களை பிடிப்பதற்கே பணம் பெற்றுக் கொண்டு நமது நாட்டினரே துரோகிகளாக மாறி உளவு சொன்னதுதான் காரணம் என்பதை தெரிந்து கொள்ளும் குமார் அவர்களில் ஒருவனை சுட்டு கொல்கிறான். துரத்தும் சீன ராணுவத்திடமிருந்து தப்பித்து ஓடும் குமார் ஒரு வீட்டில் தஞ்சம் புகுகிறான். அந்த வீட்டில் இருக்கும் வயதான தாய் அவனை காப்பாற்ற, தனியறையில் தன் திருமணமாகாத மகளுடன் சேர்ந்திருக்க சொல்லிவிட்டு அவனை தேடி வரும் ராணுவத்திடம் தன் மகளும் மருமகனும் உறங்குவதாக சொல்லி காப்பாற்றுகிறாள். அவனுக்கு உணவு கொடுத்து உபசரிக்கிறாள். மகன் என்ன வேலை செய்கிறான் என்று அவளுக்கு தெரியவில்லை. அந்த நேரத்தில் அவளது மகனின் சடலம் கொண்டு வரப்படுகிறது. தான் கொன்றது அந்த தாயின் மகனைத்தான் என்று அறியும் குமார் துடித்து போக, அந்த தாயோ விஷயத்தை புரிந்துக் கொண்டு நான் பெற்ற மகன் தேச துரோகியானான். உன்னை போன்ற ஒரு வீரனை என் மகனாக நினைக்கிறேன் என்கிறாள். மிகுந்த கனத்த மனதோடு குமார் அந்த இடத்தை விட்டு விலகி வருகிறான்.
இதே நேரத்தில் போர் ஏற்பட்டதால் சைனாவில் உள்ள இந்தியர்கள் திருப்பி அனுப்படுகின்றனர். போகாதவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்படுகின்றனர். இந்தியாவிற்கு போய் விடுவோம் என்று தாய் சொல்ல கமலா மறுக்கிறாள். சைனாவிற்கு விசுவாசமாக அங்கேயே தங்கி விடப் போவதாக சொல்லும் கமலாவை தாய் சபிக்கிறாள். என்ன சொல்லியும் கமலா வர மறுப்பதால் தாய் மட்டும் கிளம்பி இந்தியா செல்கிறாள். இவ்வளவு செய்தும் சீன அதிகாரிகளுக்கு அவள் மேல் நம்பிக்கை வராமல் ஒரு சீன குடிமகனை அவள் திருமணம் செய்து கொள்ள தயாரா என்று கேட்க கமலா சம்மதிக்கிறாள். குடும்ப நண்பரின் டாக்டர் மகனையே திருமணம் செய்து கொள்கிறாள். ஆனால் முதலிரவன்று தன்னை நெருங்கும் கணவனிடம் நாடு இன்றுள்ள நிலையில் நாம் மகிழ்வாக இருப்பது சரியாக இருக்காது என்று கூறி விலகுகிறாள். அவனும் அதை அதை ஒப்புக் கொள்கிறான். டாக்டர் என்ற முறையில் காயம்பட்ட வீரர்களுக்கு மருத்துவம் செய்ய அவனை போர் முனைக்கு சீன அரசாங்கம் அனுப்பி வைக்க, அவனுடன் செவிலயராக சேவை செய்ய கமலாவும் புறப்படுகிறாள்.
போர் முனையிலிருக்கும் குமாருக்கு கமலா நினைவு வருகிறது. அந்நேரம் அங்கே அவனுக்கு கிடைக்கும் ஒரு தமிழ் பத்திரிகையில் இந்திய- சைனா போர் நடக்கும் போது ஒரு சைனாக்காரனை ஒரு தமிழ் பெண் திருமணம் செய்துக் கொண்டாள் என்ற சேதியுடன் கமலாவின் புகைப்படமும் வெளியாகியிருக்க மனம் உடைந்து போகிறான் குமார். அவளை அந்த நிமிடம் முதல் அடியோடு வெறுக்க தொடங்குகிறான்.
ஆக்ரமித்துள்ள பகுதிகளில் கமலாவும் அவளது கணவனும் சென்று சீன ராணுவத்தோடு சேர்ந்து தங்குகிறார்கள். அவர்கள் வகுக்கும் போர் திட்டங்களை எல்லாம் கமலா குறிப்பெடுத்து இந்திய படைகளின் கைகளில் கிடைக்குமாறு செய்கிறாள். அவை எல்லாமே தற்செயலாய் குமார் கையிலே கிடைக்கிறது. அதை வைத்து படை நடத்தும் குமார் எதிரிகளை பல இடங்களில் வீழ்த்துகிறான். தாங்கள் போடும் திட்டங்கள் எல்லாம் எப்படி இந்திய படைகளுக்கு தெரிகின்றன என்று சந்தேகப்படும் சீன இராணுவம் ஒரு நாள் கமலாவை பிடித்து விடுகிறது. விசாரணையில் கமலா குற்றவாளி என்று தீர்ப்பாகி மரண தண்டனை விதிக்கப்படுகிறது. தண்டனையை நிறைவேற்றும் நேரம் இந்திய படைகள் அங்கே தாக்குதல் நடத்த கமலா தப்பி விடுகிறாள்.
இதனிடையே போர் முனையில் ஒரு இடத்தை கைப்பற்றும் முயற்சியில் தன் படையிடமிருந்து பிரிந்து விடும் குமார் எதிரிகள் கையில் அகப்பட்டுக் கொள்கிறான்.அவனை விசாரித்து ஒரு இடத்தில் அடைத்து வைக்க அங்கிருந்து தப்பி ஓடி வரும் அவன் ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஒளிந்து கொள்ளும் நேரத்தில் அங்கே கமலாவும் இருப்பதை பார்க்கிறான். அவளை தேச துரோகி என்று குற்றம் சாற்றும் குமார் அவளை கொல்ல முற்படுகிறான். அந்நேரம் எல்லா உண்மைகளையும் கமலா சொல்ல அவனுக்கு நிலைமை புரிகிறது. அவளை ஏற்று கொள்ள நினைக்கும் குமாரிடம் தனக்கு திருமணமாகி விட்டதால் அவனை ஏற்று கொள்ள முடியாது என்று மறுப்பு தெரிவிக்கிறாள். இருவரும் அங்கிருந்து தப்பி வரும் நேரம் அவள் கணவன் ஒரு சாமியார் வேடத்தில் வந்து அவளை சுட்டு விடுகிறான். அவனை கொன்று விட்டு அந்த பகுதியில் சீன ஆக்ரமிப்பை முறியடிக்கும் விதமாக சீன் கொடியை இறக்கி விட்டு மூவர்ண இந்திய கொடியை ஏற்றி வைக்கும் குமாரை எதிரிகள் நெற்றியிலே சுட அந்த ரத்த திலகத்துடன் இழந்த இடத்தை மீட்டு விட்டோம் என்ற நிறைவுடன் உயிர் துறக்கிறான்.
இரத்த திலகம் - Part II
இந்த படம் ஒரு உயரிய நோக்கத்திற்காக எடுக்கப்பட்டது. தி.மு.கவிலிருந்து விலகி தமிழ் தேசிய கட்சி கண்ட கண்ணதாசன் தன் தேசப்பற்றை இந்த படம் தயாரித்ததன் மூலமாக வெளிப்படுத்தினார். சுதந்திர பாரதம் நான்கு போர்களை சந்தித்திருக்கிறது. [கார்கிலையும் சேர்த்தால் ஐந்து] ஆனால் சீனப் படையெடுப்பு ஏற்படுத்திய கோவம் மிக பெரியது. காரணம் பாகிஸ்தான் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் சைனா நண்பனை போல் நடித்து நம்மை ஏமாற்றியது அதனால் மக்கள் கோபம் அதிகமாக இருந்தது.
இப்படிப்பட்ட நேரத்தில் மக்களின் பூரண ஆதரவு அரசுக்கு இருக்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்தது. ஆகவே பிரிவினை கோரிக்கைக்களை முன் வைக்கும் எந்த ஒரு அமைப்பும் தடை செய்யப்படும், அதன் தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவித்தது [நமது மாநிலத்தின் வீராதி வீரர்கள் எல்லாம் பெட்டிப் பாம்பாக அடங்கி போனது தனிக் கதை]. இந்த சூழ்நிலையில் கண்ணதாசன் இந்த படம் எடுத்தார். குறை சொல்ல முடியாத முயற்சி. ஆனால் கதை மற்றும் திரைக் கதையமைப்பில் போதிய கவனம் செலுத்தவில்லை என்பது உண்மை
இந்திய சீன போரைப் பற்றி படம் எடுக்க வேண்டும். அதற்காக நாயகியை சைனாவில் பிறந்து தமிழ்நாட்டில் படிக்கும் பெண்ணாக கதை எழுதியாகி விட்டது. போர் நடக்கும் போது அவள் சைனாவில் இருப்பது போலவும் சந்தர்ப்பத்தை அமைத்தாகி விட்டது. இந்தியர்கள் அனைவரும் நாடு திரும்பலாம் என்று சொன்ன பிறகும் நாயகி அங்கேயே இருப்பது ஏன் என்று ஒரு முடிச்சு விழுகிறது. ஆனால் முடிவில் நாயகி சொல்லும் காரணம் [எப்படி சைனா வெளியில் நட்பு பாராட்டி தீடீரென்று இந்தியா மீது படையெடுத்ததோ அது போல நானும் அவர்கள் பக்கம் இருப்பது போல நடித்து அவர்களை கவிழ்க்க முயற்சி எடுத்தேன்] வலுவாக இல்லை. ஏன் என்றால் அவர் நாடு திரும்ப வேண்டாம் என்று முடிவெடுக்கும் போது குடும்ப நண்பரின் மகனை திருமணம் செய்து கொள்ள போகும் எண்ணமே அவருக்கு இல்லை. அப்படியிருக்க இப்படி திருமணம் செய்து கொண்டு போர் முனைக்கு போய் உளவு சொல்வோம் என்று எப்படி திட்டம் போட முடியும்?
அது போல நாயகன் எடுத்தவுடன் மேஜர் பதவிக்கு வருவதும் அப்படியே. ஆனால் கதையை நகர்த்தி செல்ல இவை தேவை என்பதால் லாஜிக்கை மறந்து விடலாம். தந்தைக்கு உடம்பு சரியில்லை என்றவுடன் நாயகி மட்டுமே போகிறாள். அவள் அண்ணன் அதைப் பற்றி கவலைப்படவே இல்லை.
மற்றொரு குறை. சைனா நம் மீது போர் தொடுத்தது 1962 அக்டோபர் 20ந் தேதி. அப்போது நாயகன் படிப்பை முடித்து விட்டு ராணுவத்தில் சேருகிறான். ஆனால் அதற்கு முந்தைய காட்சி ஒன்றில் நாகேஷ் பேப்பர் கடையில் புத்தகம் வாங்கும் போது அங்கே தொங்கும் தினத்தந்தி போஸ்டரில் காமராஜர் ராஜினமா பற்றி ---- கருத்து என்று போட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டி மூத்த தலைவர்கள் அரசு பதவிகளை விட்டு விலகி கட்சி பணியாற்ற வேண்டும் என்ற கே பிளான் அதாவது காமராஜ் பிளான் அறிவிக்கப்பட்டது 1963 வருடம் ஜூலை/ஆகஸ்ட் மாதம். அதன்படி பெருந்தலைவர் பதவி விலகியது 1963 வருடம் அக்டோபர் 2 அன்று. இதை கவனித்திருக்கலாம். 2008-களிலே கூட இது போன்ற தவறுகள் நடக்கும் போது 45 வருடங்களுக்கு முன் வந்த படத்தில் இது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்றாலும் திரைகதையமைப்பு இன்னும் சுவையாக பின்னப்பட்டிருந்தால் இப்படிப்பட்ட நெருடல்கள் மறந்திருக்கும்.
நடிகர்களை பொருத்த வரை நடிகர் திலகம் நிறைந்து நிற்கும் கதை. மறுபடியும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. ஓவர் என்ற எண்ணமே மனதில் தோன்றாது. படம் முழுக்க இயல்பு.
முதல் பாதியில் படு காஷுவலாக வருவார். சாவித்திரியை கிண்டல் செய்வது எல்லாம் ரொம்ப இயல்பாக பண்ணியிருப்பார். இரண்டாம் பகுதியில் சீரியஸ். ஆனால் தேவையறிந்து பரிமாறியிருப்பார். ஷேக்ஸ்பியரின் மிக பிரபலமான ஒதெல்லோ நாடகம் தமிழ் சினிமாவில் இரண்டு முறை வந்திருக்கிறது. இரண்டுமே நடிகர் திலகத்தின் படத்தில் தான். அன்பு திரைப்படத்தில் தமிழில் வந்தது [அந்த விளக்கு அணைந்தால் இந்த விளக்கு அணையும்]. இந்த திரைப்படத்தில் ஷேக்ஸ்பியரின் ஆங்கில வரிகளே கையாளப்பட்டது. நடிகர் திலகம் ஒரு ஹாலிவுட் படத்தில் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதற்கு இந்த காட்சியை பார்த்தாலே போதும். அதே ஸ்டைலில் பண்ணியிருப்பார். ஒரே குறை, ராஜபார்ட் ரங்கதுரை போல இந்த படத்திலும் வேறு ஒருவரை பேச வைத்திருப்பார்கள். ஆனால் அதில் இவர் பேசவில்லை என்பது வெளிப்படையாக தெரிந்தது போல் இல்லாமல் இதில் ஓரளவிற்கு பொருத்தமான குரல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இறுதியில் சாவித்திரி தன் நிலையை விளக்கி சொன்னவுடன் பொங்கி வரும் அந்த ஏமாற்றத்தை தாங்கி கொண்டு, தான் உண்பதற்காக வைத்திருந்த ரொட்டி துண்டை சாவித்திரிக்கு சாப்பிட கொடுத்து விட்டு பக்கத்தில் உட்கார்ந்து நகத்தை கடித்தபடியே பார்க்கும் பார்வை இருக்கிறதே, நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும். இந்த படத்திலும் இமேஜ் பார்க்காமல் தன் உடல் பருமனை கிண்டல் செய்யும் வசனங்களை பேசியிருக்கிறார். "உங்கண்ணனை வேற தேசத்துக்காரன் பார்த்தான்னா, பஞ்சத்திலே அடிப்பட்ட நாடுன்னு நம்ம நாட்டை பத்தி நினைப்பான்" என்று நாகேஷை குறிப்பிட்டு சாவித்திரியிடம் சொல்ல, அதற்கு சாவித்திரி "உங்களை பார்த்தா அந்த பஞ்சத்திற்கே நீங்கதான் காரணம்னு நினைப்பான்" . அது போல ஊரிலிருந்து வரும் பாட்டி சிவாஜியை பார்த்து "என்னப்பா இப்படி இளைச்சு போயிட்டே"? என்று கேட்க "யாரு நானா?" என்று கேட்பார்.
நடிகையர் திலகத்திற்கு அவ்வளவாக வேலை இல்லை. முதலில் வரும் கோபம் குறும்பு மட்டுமே அவருக்கு ஸ்கோர் செய்ய கிடைத்த சந்தர்ப்பங்கள். நாகேஷ் நடிகர் திலகத்தோடு இணைந்த மூன்றாவது படம். அவர் மனோரமாவை திருமணம் செய்ய எடுக்கும் முயற்சியெல்லாம் ஏற்கனவே அது போல பார்த்து விட்டதால் நகைச்சுவை பஞ்சம். மேலும் அது கதையில் ஒட்டாமல் தனியாக இருக்கிறது. கல்லூரி பேஃர்வல் விருந்தின் போது அடுத்தவனிடம் மணி கேட்டு காபியை தன் கப்பில் மாற்றிகொள்வது மட்டும் புத்திசாலித்தனமான நாகேஷ். மற்றவர்கள் எல்லாம் இரண்டு மூன்று சீன் மட்டுமே.
இந்த படத்தின் மிகப் பெரிய பலம் பாடல்கள். கவியரசுவின் சொந்தப் படம் வேறு. மாமா மஹாதேவன் போட்ட அருமையான பாடல்கள்.
கவிஞர் நேரிடையாக திரையில் தோன்றி தன்னை பற்றிய சுய விமர்சனம் செய்த பாடல் [படத்தில் பழைய மாணவன் முத்தையா பாடுவதாக அறிவிப்பு]. அதிலும்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை.
என்ற வரிகள் என்றும் சாகாவரம் பெற்றவை.
அடுத்த பாடல் பசுமை நிறைந்த நினைவுகளே. தமிழக கல்லூரிகளில் பேஃர்வல் பார்ட்டி நடக்கின்ற காலம் இருக்கும் வரை இந்த பாடலும் சிரஞ்சீவியாக இருக்கும்.
எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ? என்ற வரியும்
இந்த நாளை வந்த நாளில் மறந்து போவமோ என்ற வரியும்
எப்போது கேட்டாலும் ஒரு காலத்தில் மாணவனாக இருந்த எல்லோருக்கும் அவர்களின் பசுமையான நினைவுகள் திரும்பி வரும்.
புத்தன் வந்த திசையிலே போர்
புனிதர் காந்தி மண்ணிலே போர்
என்ற வரிகள் கேட்பவர்கெல்லாம் உணர்வு ஊட்டக்கூடிய பாடல்.
பனி படர்ந்த மலையின் மீது
படுத்திருந்தேன் சிலையை போல
நட்பு பாராட்டிய நம் மீது அநியாயமாக போர் தொடுத்த சைனா மீது கோபம் கொண்ட ஒவ்வொரு இந்தியனின் மனக் குமுறல். இந்த படத்தில் தான் இந்த பாட்டின் மூலமாக தான் முதலில் காங்கிரஸ் பேரியக்கத்தையும் பெருந்தலைவர் மற்றும் நேரு போன்றவர்களை திரையில் நடிகர் திலகம் காண்பித்தார். இந்த பாடலின் இறுதி வரிகள்
வீரம் உண்டு தோள்கள் உண்டு
வெற்றி கொள்ளும் ஞானம் உண்டு
ஞானமிக்க தர்மம் உண்டு
தர்மமிக்க தலைவன் உண்டு,
என்ற வரிகளின் போது பிரதமர் நேரு அவர்களை காண்பித்து மக்களுக்கு ஒரு தைரியம் கொடுத்து பயப்பட வேண்டாம் என்று சொன்ன பாடல்.
இதை தவிர இசைத்தட்டுகளில் இடம் பெற்று படத்தில் இடம் பெறாமல் போன ஒரு அருமையான பாடல் தாழம்பூவே தங்கநிலாவே தலை ஏன் குனிகிறது. டி.எம்.எஸ் மற்றும் எல்.ஆர். ஈஸ்வரி பாடியது. இது இடம் பெறாததன் காரணம் தெரியவில்லை. எனக்கு தெரிந்த வரை அல்லது யூகிப்பது, இந்த பாடல் நடிகர் திலகம் மற்றும் புஷ்பலதா பாடுவதாக அமைக்கப்பட இருந்தது. தங்கள் வீட்டில் அடைக்கலம் புகும் நாயகனின் மனைவியாக நடிக்க வேண்டிய சூழ்நிலை புஷ்பலதா ஏற்ற கதாபாத்திரத்திற்கு. அந்த நேரத்தில் நடிகர் திலகத்தை ஒரு வித காதலுடன் புஷ்பலதா பார்ப்பதாக ஒரு ஷாட் வரும். அதன் தொடர்ச்சியாக இந்த பாடல் காட்சி அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் கதையோட்டத்திற்கு தடை செய்யும் என்றோ, பார்த்தவுடன் ஒரு பெண் காதல் வயப்பட்டு கனவு காண்பதை மக்கள் ஏற்பார்களா என்ற தயக்கமோ அல்லது நடிகர் திலகத்தின் மகளாக அந்த நேரத்தில்தான் புஷ்பலதா பார் மகளே பார் படத்தில் நடித்திருந்தார். ஆகவே இந்த நேரத்தில் இந்த பாடல் வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டதா என்பதும் தெரியவில்லை. ஆனால் பாடல் அருமையான ஒன்று.
14.09.1963 அன்று வெளியானது இரத்த திலகம். பெரிய வெற்றியை பெறவில்லை. வழக்கம் போல் பார் மகளே பார் வெளியாகி 60 நாட்களே ஆகியிருந்த நிலையிலும் குங்குமம் வெளியாகி 30 நாட்களே ஆன நிலையில் இது வெளியானது. இந்த படம் வெளியாகி 6 நாட்களில் [20.09.1963] நடிகர் திலகத்தின் கல்யாணியின் கணவன் வெளியானது. 60 நாட்களில் தீபாவளி - அன்னை இல்லம் ரிலீஸ். ஆகவே படத்தின் குறைகளும் போட்டி படங்களும் சேர்ந்து வெற்றியின் அளவை குறைத்து விட்டது.
ஆனால் ஒன்று. படத்தின் பின்னில் இருந்த உயரிய நோக்கம் மற்றும் காலத்தால் அழியாத பாடல்களுக்காவும் இந்த படம் என்றும் பேசப்படும்.
அன்புடன்
PS: This review dedicated to dear friend Senthil [Harish] who wanted me to write about this film.
RAGHAVENDRA
23rd May 2014, 12:51 PM
முரளி சாரின் மேற்காணும் கட்டுரைக்கு சகோதரி சாரதா அவர்களின் பதில் பதிவு.
இணைப்பு: http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5&p=367699&viewfull=1#post367699
டியர் முரளி,
'இரத்ததிலகம்' பற்றிய ஆய்வு மிக அருமை.
இப்படம் இந்திய சீன போரை மையமாகக் கொண்டதாயினும், போர் முடிந்தபின் எடுக்கப்பட்டது. (உ-ம்; நீங்கள் குறிப்பிட்ட பத்திரிகைச்செய்தி). ஆனால் போர் நடந்துகொண்டிருக்கும்போதே, நடிகர்திலகம் தன் சொந்த செலவில் 'சிங்கநாதம் கேட்குது' என்ற டாக்குமெண்ட்டரி படத்தை எடுத்து இலவசமாக வெளியிட்டார். இந்த டாக்குமென்டரியில் அப்போதைய பிரபல நடிகர்கள் (ஜெமினி, தங்க்வேலு உள்பட பலர்) இலவசமாக நடித்துக்கொடுத்தனர். தியேட்டரில் அரைமணி நேரம் ஒடும் இப்படம் எல்லாதிரையரங்குகளிலும் காண்பிக்கப்பட வேண்டும் என்று அன்றைய காங்கிரஸ் அரசால் உத்தரவிடப்பட்டு, அதன்படி தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளிலும் இடைவேளை முடிந்து, மெயின் படம் துவங்கும் முன்பாக காண்பிக்கப்பட்டது. அதிலும் தேசத்தலைவர்கள் பலர் காண்பிக்கப்பட்டனர். பார்த்த மக்கள் அனைவரும் தேசப்பற்றால் உந்தப்பட்டனர். யுத்தநிதியாக பணமாகவும், பொருட்களாகவும், நகைகளாகவும் அள்ளி வழங்கினர். நாடே ஒன்றுபட்ட நின்ற நேரம் அது. பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ண மேனன், உள்துறை அமைச்சர் ஒய்.பி.சவான் ஆகியோரைக்கொண்ட பாதுகாப்புக்குழுவில், தி,மு,கவைச்சேர்ந்த நாஞ்சில் மனோகரனையும் இடம் பெற வைத்தார் அண்ணாதுரை.
ஆனாலும், சுதந்திரம் பெற்றதிலிருந்து நமது பாதுகாப்புக்காக ராணுவத்தை பலப்படுத்த வேண்டும் என்று தேவையில்லாத நேரமாக இருந்ததால், அந்த போரில் இந்தியா தோற்றது. லடாக் பகுதி சீனர் வசமானது. (இந்தியா தோற்ற ஒரே போர் அதுதான்). அதன்பின்னர்தான் அண்டைநாடுகளின் வஞ்சக எண்ணத்தையறிந்த நேரு, ராணுவத்தை பலப்படுத்த முனைந்தார். நேருவின் உடல்நிலை பலவீனப்பட்டதற்கு சீனப்போரில் அடைந்த தோல்வியும் முக்கிய காரணம்.
இந்நிலையில்தான் இந்திய சீனப் போரை மையமாக வைத்து கண்ணதாசன் இப்படத்தை தயாரித்தார். ஆனாலும் நீங்கள் சொன்ன பலகுறைகளோடு.... தேவையில்லாத, செயற்கையான கல்லூரிக்காட்சிகள். அதோடு 'ஒதெல்லோ' நாடகத்தின் நீளம் அதிகமானதால் திகட்டிப்போனது.
ஆனாலும் போர்முனைக்காட்சிகள் உணர்ச்சியை ஊட்டின. 'பனி படர்ந்த மலையின்மேலே' பாடலின் ஒரு வரியில்...
பண்பில் நிறைந்த மகன், வள நாட்டின் மூத்த மகன்,
இருக்கின்றான் தாயே, ஏங்காதே என்றுரைத்தேன்
என்ற வரிகளின்போது, தனது அலுவலக அறையில் இருக்கும் தொப்பியில்லாத நேருவைக்காண்பிக்கும்போது நம் உணர்ச்சிகள் எல்லையை மீறும். (ஓடுவது காங்கிரஸ் ரத்தமல்லவா?)
சாவித்திரியின் சீனக்கணவராக வரும் சண்முகசுந்தரத்துக்கு இதுதான் முதல் படம். முதல் படத்திலேயே நடிகர்திலகத்துடன் நடித்ததை அவர் அடிக்கடி பெருமையாகச்சொல்வார். (பின்னர் 'கர்ணனில்' தேரோட்டி சல்லியனாக வந்து, போர்க்களத்தில் கர்ணனின் தேரை பள்ளத்தில் விட்டு விட்டுப்போகும் காட்சிதான் நமக்குத்தெரியுமே).
படத்தில் இடம்பெறும் இன்னொரு இனிமையான பாடல், புஷ்பலதாவுக்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய 'வாடைக்காற்றம்மா... வாடைக்காற்றம்மா, வாலிப வயசு நாளுக்கு நாளா வாட்டுவதென்னம்மா'. அன்றைக்கு இலங்கை வானொலியில் பட்டையைக்கிளப்பிய பாடல்.
'பசுமை நிறைந்த நினைவுகளே' பாடல், கல்லூரி ஃபேர்வல் விழா என்று மட்டுமில்லை. எந்த ஒரு பிரிவுபசார நிகழ்ச்சியிலும் ஒலிக்கும் பாடல். அதிலும் அந்த வரிகள்...
'எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ
எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ'
அப்படியே மனதை உருக வைக்கும்.
யாரும் நினைத்துப்பார்க்காத நேரத்தில் இரத்தத்திலகம் படத்தோடு வந்துள்ளீர்கள். இன்ப அதிர்ச்சி.
'ஆண்டவன் கட்டளை', 'குலமகள் ராதை', 'இரத்தத்திலகம்' பட ஆய்வுகளைத்தொடர்ந்து அடுத்தது என்ன?. எல்லோருக்கும் அதிகம் தெரியாத வடிவுக்கு வளைகாப்பு, கல்யாணியின் கனவன், வளர்பிறை, சித்தூர் ராணி பத்மினி இவற்றில் ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்கும்
RAGHAVENDRA
23rd May 2014, 12:54 PM
இரத்தத் திலகம் காணொளிகள்
பசுமை நிறைந்த நினைவுகளே Pasumai niraindha
http://youtu.be/gbjt59-KZDo
பனி படர்ந்த மலையின் மேலே
http://youtu.be/5VjT83Fl4Ww
புத்தன் வந்த திசையிலே போர்
http://youtu.be/oSPLcfIAvT4
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
http://youtu.be/ICSeUl6j66E
வாடைக் காற்றம்மா
http://youtu.be/zmqwLbZzmCg
திரைப்படத்தில் இடம் பெறாத தாழம்பூவே தங்க நிலாவே பாடலைக் கேட்டு மகிழ
http://youtu.be/giVoNX6QRao
Gopal.s
23rd May 2014, 06:27 PM
larger than life நடிப்பு முறைகளில் அடுத்ததாக நான் எடுக்க விரும்புவது அவருடைய shakespere நாடக பாணி காட்சிகள். பொதுவாக அக்காலத்தையும் ,இக்காலத்தையும் இணைக்கும் கண்ணி என்பது ceremonial military parade ,marches ,drilling . எக்காலத்திலும் மாற்ற முடியாத நிலைத்தன்மை கொண்டதால் ,shakespere நாடக நடிகர்கள் பின்பற்றும் முறை பெரும்பாலும் இதனை சார்ந்ததே.period படங்கள் சார்ந்த larger than life பாத்திரங்களுக்கு ஏற்ற முறை. கண் முன் பார்த்து பின் பற்ற கூடிய பாரம்பரிய தொடர்ச்சி முறை.
shakespere நடிகர்களை நான் லண்டன், நியூயார்க் நகரங்களில் நாடகங்கள் பார்க்கும் வழக்கமுடையவன் என்பதால் கூர்ந்து கவனித்துள்ளேன்.
அவர்கள் நடிக்கும் முறை கீழ்கண்டவாறே அமையும். முறையான பயிற்சியால் ஒவ்வொரு நடிகரிடமும் முறைகள் பெரிதாக மாறாது. ஆனால் உருவ அமைப்பு, குரல், மற்றும் இயற்கை திறமையில் சிறிதே வேறுபாடு தெரியும்.
உடல் மொழி, கால், கைகள் இயங்கு முறை geometric symmetry கொண்ட change in pace &abruptness in transition என்ற முறையில் அமையும்.Traditional ceremonial military parade /drill /marching முறை சார்ந்தே வகுக்க பட்டிருக்கும்.
நடைகளின் முறை பெரும்பாலும் quick march ,slow march ,cut the pace ,double march easy march ,mark time ,step forward முறையில் அமையும். ஆனால் command synchrony இல்லாமல் randomness கொண்டு கலையாக்க பட்டிருக்கும்.
உடலியங்கு முறை attention ,parade rest ,stand at ease என்று நான்கின் பாற்பட்டு advance ,retire ,left ,right ,retreat முறையில் saluting ,turning motions கொஞ்சம் கப்பலின் இயங்கு முறை சார்ந்ததாக இருக்கும்.
முகபாவங்கள் மிக இறுக்கமான தன்மை கொண்டு சிறிதே இள க்கம், சிறிதே மிக இறுக்கம் என்ற மூன்று நிலைகளில் slow transition கொண்டதாய் register ஆகும்.
ஆனால் கண்கள் body motion follow thru மட்டும் இன்றி சிறிதே cautionary alertness கொண்ட inert emotionless vibrations கொண்டு உயிர்ப்புடன் இயங்கும்.
voice pitch ,tonal modulations என்று ஆராய்ந்தால் mid -flat pitch இல் reciting rhythmically என்ற பாணியில் identifier ,precautionary ,cautionary ,executive ,guided emotional overtone என்ற பெரும்பாலும் parade command முறைமை கொண்ட ஏற்ற இறக்கங்கள் கொண்டதே.
இதை வைத்து நம் நடிகர்திலகத்தின் ரத்தத்திலகம் பட ஒதெல்லோ ஆராய்வோம்.
ஒதெல்லோ என்ற ராணுவ தலைவன், வீரன் என்றாலும் ,தன் கோரமான உருவத்தில் தாழ்மையுணர்வு கொண்டதால் உணர்ச்சி வசப்படும் பொறாமை காரன். desdemona தகப்பன் விருப்பம் இல்லாமல் ,அவளை மணந்து இனிய அன்பான மண வாழ்வில் திளைத்தாலும், ஒரு சாதாரண கைக்குட்டையை வைத்து லகோ என்பவன் ,அவளையும் காசயோ என்பவனையும் வைத்து பின்னும் சதி வலையால் சந்தேக பேய் பிடித்தாட்ட ,மனமின்றி, தூங்கும் மனைவியை கொலை செய்ய வரும் காட்சி.(Othello Act 5 scene 2)
ஒதெல்லோ பாத்திரத்தில் Paul Robeson நடிப்பும் (Stanislavsky கூட இந்த பாத்திரத்தை விரும்பி ஏற்பாராம்),ஹாம்லெட் பாத்திரத்தில் Laurence Olivier நடிப்பும்,சீசர் பாத்திரத்தில் Louis Calhern ,Rex Harrison நடிப்பும் விமரிசகர்கள் பார்வையில் மிக சிறந்ததாகும். ஆனால் நடிகர்திலகம் தனக்கு அந்நியமான இந்த மூன்று பாத்திரங்களையும் ஏற்று புரிதலுடன்,அந்தந்த பாணியில் தன் தனித்தன்மை விடாது நடித்த பாங்கு அலாதி. அவர் நடித்த காட்சிகள் அந்தந்த பாத்திரங்களுக்கு Highlight என்று சொல்ல தக்க உச்ச பட்ச சவால் கொண்ட காட்சிகள்.
முதல் வியப்பு உலகத்தின் அத்தனை விதமான பாத்திரங்களும் பொருந்தும் முக அமைப்பு.இரண்டாவது வியப்பு ஒதெல்லோ பாத்திரத்தில் மற்றவர் குரல் கொடுத்தாலும் அவர் உள்வாங்கி நடித்த சிறப்பு.
ஒதெல்லோ பாத்திரத்தில் மனமின்றி மனைவியை கொல்லும் நோக்கோடு தடுமாறி, அவள் அழகில் மயங்கி முத்தமிட்டு,தாழ்வு மனப்பான்மையும், பொறாமையும் மிக அவர் தன்னைத்தானே காதலும் இரக்க உணர்வும் தலை காட்டுவதை அடக்க முயலும் முக பாவங்களும் ,நடையிலேயே அத்தனை வசன சாரங்களை உள்வாங்கி புரியும் ஜாலங்களும் ,கைகளை தன் பாவத்தில் பங்கு கொள்ள இணங்க வைக்க முயல்வதும் , நான் ஏற்கெனெவே எழுதிய பின்னணியில் பொருத்தி பார்த்தால் புரியும்.Desdemona முழித்த பிறகு இறைஞ்சும் போது எங்கே இளகி மன்னித்து விடுவோமோ என்று அவர் காட்டும் கடுமை ,தடுமாற்றம் எல்லாமே அவரின் அபார பாத்திர உள்வாங்கலை காட்டும்.
RAGHAVENDRA
23rd May 2014, 10:47 PM
ஒத்தெல்லோ நாடகம்
http://youtu.be/lSAcVpljPE0
உபயம் நெய்வேலி வாசுதேவன் சார்
ஒதெல்லோ பாத்திரத்தில் Paul Robeson நடிப்பும் (Stanislavsky கூட இந்த பாத்திரத்தை விரும்பி ஏற்பாராம்),ஹாம்லெட் பாத்திரத்தில் Laurence Olivier நடிப்பும்,சீசர் பாத்திரத்தில் Louis Calhern ,Rex Harrison நடிப்பும் விமரிசகர்கள் பார்வையில் மிக சிறந்ததாகும். ஆனால் நடிகர்திலகம் தனக்கு அந்நியமான இந்த மூன்று பாத்திரங்களையும் ஏற்று புரிதலுடன்,அந்தந்த பாணியில் தன் தனித்தன்மை விடாது நடித்த பாங்கு அலாதி. அவர் நடித்த காட்சிகள் அந்தந்த பாத்திரங்களுக்கு Highlight என்று சொல்ல தக்க உச்ச பட்ச சவால் கொண்ட காட்சிகள்.
சிறப்பாகச் சொன்னீர்கள். ஷேக்ஸ்பியர் நாடகத்தை அவர்களுடைய பாணியில் அப்படியே செய்யாமல் தன்னுடைய பிரத்யேகமான திறனையும் ஷேக்ஸ்பியர் நாடகக் குழுவிலல்லாத, பிரிட்டனை சாராத, வேற்று நாட்டவர் அந்நாடகத்தை நடித்தால் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு உடல் மொழியை பிரயோகித்து அதன் மூலமாக அந்நாடகம் நமக்கு அந்நியமாய்த் தோன்றாதிருக்கும் வண்ணம் தன் நடிப்பைப் பயன்படுத்தி உலகத்தில் சிறந்த நடிகர் என்பதற்கு மற்றொரு உதாரணத்தையும் சான்றையும் படைத்து விட்டார் நடிகர் திலகம்.
இதே போலத் தான் அந்த ராணுவ நடையையும் அருமையாக எடுத்துரைத்திருக்கிறீர்கள். இந்த ராணுவ நடையை பதிபக்தி திரைப்படத்தில் மிக அருமையாக கொண்டு வந்திருப்பார்.
ராணுவ வீரர்களுக்கு அந்த மிடுக்கு நிரந்தரமாக அவர்களுக்குள் தங்கி விடும். பணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சில ராணுவ குணாதிசயங்கள் அவர்களை விட்டு இறுதி வரை மாறாது. இதை நாம் பலரை நேரில் காணும் போது தெரிந்து கொண்டிருக்கலாம். விடுமுறையில் ராணுவ வீரர்கள் ஒன்றாக தங்கள் முகாம்களை விட்டு வீடு திரும்ப புறப்படும் போது அவர்களுக்குள் இருக்கக் கூடிய அந்த மகிழ்ச்சியான மனநிலையும் அதே சமயம் அவர்களையும் மீறி அந்த நடையில் ராணுவ மிடுக்கு ஆளுமை செலுத்துவதையும் நன்கு உள்வாங்கிக் கொண்டு அதை அப்படியே பாத்திரத்தில் கொண்டு வந்திருப்பார் பதிபக்தி திரைப்படத்தில். தாங்கள் மேலே சொன்ன விஷயங்களை விஷுவலாக தெரிந்து கொள்ள இதோ அந்தப் பாடல்
http://youtu.be/Yff7wazrz2M
RAGHAVENDRA
27th May 2014, 09:36 AM
Sivaji Ganesan Filmography Series
92. Kalyaniyinkanavan கல்யாணியின் கணவன்
http://www.thehindu.com/multimedia/dynamic/01039/01cp_Kalyanin_Kana_1039536f.jpg
தணிக்கை 13.09.1963
வெளியீடு 20.09.1963
http://www.hindu.com/thehindu/gallery/sg/sg009.jpg
கதைச் சுருக்கம்
கல்யாணி தன் தோழியருடன் ஆற்றில் நீர் விளையாடிக் கொண்டிருக்கும் போது, வெள்ளத்தால் அடித்துச் செல்லப் படுகிறாள்.
கதிரேசன் அவளைக் காப்பாற்றுகிறான்.
அன்று முதல் இருவருக்கும் இடையே காதல் வளருகிறது.அதைக் கண்ட கல்யாணியின் தந்தை விஸ்வநாத் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கத் தீர்மானிக்கிறார்.
கல்யாணத்துக்கு இரண்டு நாட்கள் முன்னதாக கதிரேசனுக்கு ஓர் அனாமதேயக் கடிதம் வருகிறது. அதன் விளைவாக அவன் ஓர் பாழடைந்த பங்களாவுக்குச் சென்று, இருட்டில் இனம் தெரியாத ஒருவனுடன் போரிட நேருகிறது. முடிவு .. முதுகில் கத்தி பாய்ந்த ஒரு பிரேதம் கதிரேசன் காலடியில் கிடக்கிறது!
மறுநாள் கல்யாணம்!சபையோர் முன்னிலையில் கல்யாணி நடத்தை கெட்டவள் என்று கதிரேசன் குற்றஞ்சாட்டுகிறான்.
அடுத்த நிமிஷம் இவனைத் தேடி போலீஸார் அங்கு வருகின்றனர். ஆனால் அதற்குள் அவன் மாயமாய் மறைந்து விடுகிறான்!
அன்று முதல் விஸ்வநாத்தின் குடும்பத்தில் அடுக்கடுக்காய்த் துன்பங்கள் தொடர்கின்றன...!
இத்தனைக்கும் காரணம் யார்...?
கல்யாணி கதிரேசன் கதி என்ன...?
படத்தைப் பாருங்கள் ...
(பாட்டுப் புத்தகத்தில் உள்ளவாறு)
http://www.inbaminge.com/t/k/Kalyaniyin%20Kanavan/folder.jpg
படம் தற்போது குறுந்தட்டில் ஒளிக்காட்சிப் படமாக வெளிவந்துள்ளது.
பங்கு பெற்றுள்ள மற்ற கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்கள
பங்கு பெற்றுள்ள கலைஞர்கள்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சரோஜா தேவி, எம்.ஆர்.ராதா, எஸ்.வி.ரங்காராவ், டி.ஆர்.ராமச்சந்திரன், ஓ.ஏ.கே.தேவர், டி.பி.முத்துலட்சுமி மற்றும் பலர்.
சென்னையில் வெளியான திரையரங்குகள் - காஸினோ, ஸ்ரீகிருஷ்ணா, ராக்ஸி
கதை வசனம் - வேலவன்
பாடல்கள் - கவியரசர் கண்ணதாசன்
இசை எஸ்.எம்.சுப்பையா நாயுடு
நடன அமைப்பு - ஹீராலால்
ஒப்பனை - கஜபதி, பி.வி.ராகவன்
கலை - சி.கே.ஜான், பழனிவேலு
ஒலிப்பதிவு - எம்.டி.ராஜாராம்
ஒளிப்பதிவு - ஷைலன் போஸ்
படத்தொகுப்பு - ஜி.வேலுச்சாமி
லேபரட்டரி – எஸ்.வி.நாதன், ஏ.மோகன்
புரொடக்ஷன் – ஏ.பி. மணி
விளம்பரம் - மவுலீஸ்
தயாரிப்பு – பக்ஷிராஜா ஸ்டூடியோஸ் பிரைவேட் லிமிடெட், கோயம்புத்தூர்
திரைக்கதை,இயக்கம் S.M. ஸ்ரீராமுலு நாயுடு
பாடல்கள்
1.எனக்கு வாய்க்கும் மாப்பிள்ளை - பி.சுசீலா, கௌசல்யா, கமலா மற்றும் குழுவினர்
2.விருத்தம் ஐயா நின் கருணை - டி.எம்.சௌந்தர்ராஜன்
3.சொல்லித் தெரியாது சொல்ல முடியாது - டி.எம்.சௌந்தர்ராஜன் பி.சுசீலா
4.கையிருக்குது காலிருக்குது முத்தையா - டி.எம்.சௌந்தர்ராஜன்
5.ஆசை கொண்ட மனம் அதோ அதோ - பி.சுசீலா
6.எனது ராஜ சபையிலே ஒரே சங்கீதம் - டி.எம்.சௌந்தர்ராஜன் பி.சுசீலா
7.தோட்டத்துப் பூவுலே வாசமிருக்கு - ஏ.எல்.ராகவன், கௌசல்யா
8.கல்யாணப் புடவை கட்டி - பி.சுசீலா
9.சீதா அக்னிப் பிரவேசம் நடன நாடகம் - தங்கப்பன், பி.லீலா, டி.கமலா குழுவினர்
10.நொளொன்றும் பொழுதொன்றும் செல்லச் செல்ல - பி.சுசீலா
11.இதுவும் வேண்டுமடா - டி.எம்.சௌந்தர்ராஜன்
கல்யாணியின் கணவன் விளம்பர நிழற்படம் – நன்றி ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்
முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 20.9.1963
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4626a-1.jpg
அரிய நிழற்படம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/KK1-1.jpg
RAGHAVENDRA
27th May 2014, 09:38 AM
கல்யாணியின் கணவன் திரைப்படத்தைப் பற்றி ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரை
நன்றி - http://www.thehindu.com/news/cities/chennai/chen-columns/kalyaniyin-kanavan-1963/article3265936.ece
http://www.thehindu.com/template/1-0-1/gfx/logo.jpg
CHENNAI » COLUMNS
March 31, 2012
BLAST FROM THE PAST
Kalyaniyin Kanavan 1963
RANDOR GUY
HTTP://WWW.THEHINDU.COM/MULTIMEDIA/DYNAMIC/01039/01CP_KALYANIN_KANA_1039536F.JPG
Sivaji Ganesan, B. Saroja Devi, M. R. Radha, S. V. Ranga Rao, T. R. Ramachandran, O.A.K. Thevar, A. Karunanidhi, S. Rama Rao, K. V. Srinivasan, T. P. Muthulakshmi, Seethalakshmi, Radhika and Shantha Devi.
S. M. Sriramulu Naidu had a successful track record, producing and directing movies not only in Tamil but also in Telugu, Kannada, Malayalam, Sinhala and Hindi. Besides, he owned a studio in his hometown Coimbatore and later shifted his activities to Bangalore where for many reasons he was not as successful as he was in his earlier days in his native turf.
One of the movies he produced and directed under his famous banner Pakshiraja Films for some wealthy friends of Coimbatore was Kalyaniyin Kanavan, with Sivaji Ganesan and Saroja Devi in the lead.
The heroine Kalyani (Saroja Devi) goes swimming with friends in a river when she is carried away by strong waves. As she struggles, a bold young man Kathiresan (Sivaji Ganesan) saves her — expectedly, the saving of the damsel in distress leads to both falling in love.
Kalyani's father (Ranga Rao) is impressed by the young man's bravery and wishes to get them married on an auspicious day. Two days before the wedding, the hero receives an anonymous letter inviting him to an abandoned bungalow in the back of beyond. He goes and, in the cover darkness, fights an anonymous foe. At the end of it, he finds at his feet a body with a knife sticking out of its back! He leaves the place hurriedly….
The next morning, the hero, much to the shock of one and all, screams at the bride saying she is not of good conduct and refuses to go ahead with the wedding rituals. Meanwhile, cops enter the scene, looking for the bridegroom and cleverly he escapes! With the marriage stopped in a dramatic fashion, problems arise in the unhappy father's family. How they are solved and the marriage is performed much to the joy of all forms the rest of the story.
The story and dialogue were written by Velavan, a fairly popular writer then, while the screenplay was by Sriramulu Naidu. The lyrics were by Kannadasan, and the music was composed by S. M. Subbaiah Naidu. Noted cinematographer Sailen Bose handled the camera. The film was shot at Pakshiraja Studios, Coimbatore.
The scheming villain was played by the cult figure of Tamil Cinema, M. R. Radha, while S. V. Ranga Rao as the parent was brilliant. Sivaji Ganesan as usual was in his element, well supported by Saroja Devi, one of the most successful star-actors of Indian Cinema. One of the songs rendered off the screen by T. M. Soundararajan and P. Susheela, ‘Enathu Raaja sabhayiley orey sangeetham,' became popular. Ramachandran took care of the comedy assisted by Radhika who played supportive roles and performed dance sequences for a brief period. The two also sang a comedy number (voices A. L. Raghavan and Kausalya,)
Despite its impressive cast, Kalyaniyin Kanavan did not fare well at the box office.
Remembered for the excellent performances by Sivaji Ganesan, Ranga Rao, Radha and Saroja Devi, the pleasing music and excellent cinematography.
RAGHAVENDRA
27th May 2014, 09:41 AM
காணொளிகள்
எனது ராஜ சபையிலே
http://youtu.be/je40aunJDSs
கை இருக்குது காலிருக்குது
http://youtu.be/v2mZUk6vm_c
சொல்லித் தெரியாது
http://youtu.be/I-D7R60l_-g
இதுவும் வேண்டுமடா
http://youtu.be/M-606kg8rA8
Russellisf
27th May 2014, 06:50 PM
பராசக்தி '
படத்துக்கு ' திராவிடநாடு '
ஏட்டில் வந்த விளம்பரம் .
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/u_zpsb173a88c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/u_zpsb173a88c.jpg.html)
RAGHAVENDRA
28th May 2014, 04:28 PM
அன்புச் சகோதரர் ஆவணத் திலகம் பம்மலார் அவர்களின் பொக்கிஷத்திலிருந்து பராசக்தி விளம்பர நிழற்படத்தினை மீள்பதிவு செய்து நினைவூட்டிய யுகேஷ் பாபு அவர்களுக்கு மிக்க நன்றி.
Gopal.s
28th May 2014, 08:14 PM
அன்னை இல்லம்-1963
1963 வது வருடம் நடிகர்திலகம் -கே.வீ.மகாதேவன் இணைவில் ஒரு மறக்க முடியாத வருடம். மொத்தம் வந்த பத்து படங்களில் ஆறு படங்கள் மாமாவிற்கு(K.V.Mahadevan).ஒன்று எஸ்.எம்.எஸ்,ஒன்று G .ராமநாதன்,ஒன்று எஸ்.வீ.வெங்கட்ராமன்,ஒன்றே ஒன்று விஸ்வநாதன்-ராமமுர்த்தி.
பொன்னான வருடம் .இருவர் உள்ளம்,நான் வணங்கும் தெய்வம்,குலமகள் ராதை,குங்குமம்,ரத்தத்திலகம்,அன்னை இல்லம் என்று திரை இசை திலகத்தின் கொடி பறந்து எங்களை திக்கு முக்கில் ஆனந்த களியாட்டம் போட வைத்த வருடம்.
அன்னை இல்லத்தின் மடி மீது தலை வைத்து பாடல், சிவாஜி,தேவிகா,கண்ணதாசன்,மகாதேவன்,மாதவன் இணைவில் வந்த ஒரு erotic அதிசயம். ஒரு மெல்லிய இனிய இசையில் ,கஹுரஹொ வன்மையை சேர்த்து,ஆயிரம் சர வெடி காமத்தை ஆபாசமில்லாமல் தந்தனர் 60 களின் காதல் கிளிகள்.மெல்லிய வருடலுடன்,(உதட்டிலும்)காதலர்களின் விழைவு நோக்கு கொண்ட பார்வையில் ஆரம்பித்து,போகன் வில்லா மரத்தடியில் காம விளையாட்டு தொடங்கி,காதலர்களுடன் நம் உள்ளமும் உருளும்.சேவல் குரலை நிறுத்தி ,இரவை விடியாமல் வைக்க நம் மனமும் ஏங்கும் .சிவாஜியின் erotic விளையாட்டில் தேவிகா காம விழைவுடன் அள்ளும் பார்வை.அழைப்பு பார்வை.இணக்க பார்வை.கிரக்க பார்வை.
அய்யய்ய்யோ....காலடிகளின் கலப்புடன் ,காதலர்கள் கலந்து உறவாடுவதை, இன்ப வதையுடன் நாம் கனவோடை கலந்த நினைவில் இருத்தி ,இன்ப வாதையில் துடிப்போம் அல்லவா?
Gopal.s
28th May 2014, 08:17 PM
Blast from Sarathy past on annai illam.
நடிகர் திலகத்தின் நுணுக்கமான நடிப்பாற்றல்:-
நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி பலர் பலவிதமாக ஆராய்ச்சி செய்து நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் திரியில், நாமும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டு வருகிறோம்.
எந்த ஒரு சிறந்த கலைஞனும் ஒரு படைப்பினைத் தரும்போது, முதலில், தன்னை அந்தக் கட்டம் மற்றும் கணத்துக்குள் தன்னுடைய மனதை மட்டும் நுழைத்துக் கொண்டு, அதுவாகவே பாவித்து, தன்னுடைய அனுபவம், அறிவு மற்றும் திறமை மூலம், ஒரு படைப்பினைத் தர முயற்சிக்கிறான். இந்த internalisation பரிபூரணமாக அமையப் பெற்ற உன்னதக் கலைஞன் உலகில் நடிகர் திலகம் ஒருவரே என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. அவருக்கு நடிப்புக் கலை என்பது கலைமகள் அருளிய வரம். அவரிடம் இருந்த spontaneity இதனை நிரூபிக்கும். இருப்பினும், தன்னுடைய வாழ் நாளில் கடைசி வரை, எப்போதும், தன்னுடைய கலையை அவர் மெருகேற்றிக் கொண்டே வந்திருக்கிறார் - பல வித முறைகள் மூலம். இதில், மிக முக்கியமானது அவரது ஆழ்ந்த, கூர்ந்து நோக்கி அணுகும் திறன். எந்த ஒரு விஷயத்தையும், அவர் மேம்போக்காக அணுகாமல், நூறு சதவிகித பரிபூரணத்துவத்துடன் தான் அணுகிக் கொண்டு வந்திருக்கிறார். இதனால் தான், அநேகமாக அவருடைய எல்லா படங்களும் கனமாகவே இருக்கும். இலேசான படங்கள் (so called light movies) அவரிடமிருந்து மிகவும் குறைவு தான்.
சில நாட்களுக்கு முன்னர், நண்பர் திரு. வாசுதேவன் அவர்கள், "அன்னை இல்லம்" படத்தில் ஒரு (இல்லை இது மூன்று ஒன்றோடொன்று தொடர்புடைய காட்சிகள்) காட்சியைத் தரவேற்றியிருந்தார். இந்தக் காட்சியில், நடிகர் திலகம் முத்துராமன் வீட்டிற்கு வந்து, உண்பதற்கு அமர்ந்து எம்.வி.ராஜம்மா அவர்களைப் பார்த்து (அவருடைய சுமங்கலித் தோற்றத்தைப் பார்த்து), பக்கத்தில், அவருடைய கணவருக்காக வைக்கப் பட்டிருக்கும் இலையையும் பார்த்து, 'அம்மா! உங்களது இந்த சுமங்கலிக் கோலம் சீக்கிரம் போகப் போகிறது' என்று நினைத்து வெதும்பி, எதுவும் சொல்லாமல், வெறும் முக பாவனைகளின் மூலம் அந்த சோகத்தைக் காண்பித்து அங்கிருந்து சென்று விடுவார். (எம்.வி. ராஜம்மா அவருடைய கணவர் எஸ்.வி. ரங்கா ராவ் உயிருடன் தான் இருக்கிறார் என்று வலுவாக நம்பி எப்போதும், அவருக்காக ஒரு இலையைப் போட்டு அதில், உணவு வகைகளை எப்போதும் பரிமாறி வைப்பார், என்றாவது ஒரு நாள் திரும்பி வந்து சேர்ந்து உண்டு மகிழ்வார் என்ற நம்பிக்கையில்!. எம்.வி ராஜம்மாவிற்கு, ரங்காராவ் கூடிய சீக்கிரம் மரண தண்டனை பெற்று இறக்கப் போகிறார் என்று தெரியாது. இது நடிகர் திலகத்துக்கும் தேவிகாவுக்கும் மட்டுமே தெரியும்.). அடுத்து, வழக்கறிஞரை சந்தித்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி, இப்போது, வாய் விட்டுக் கூறிக் கதறுவார், தேவிகாவிடம்! முதல் இரண்டு காட்சிகளில் ஒரு சிகை அலங்காரத்துடன் வரும் நடிகர் திலகம், அடுத்த காட்சியில், வேறொரு சிகை அலங்காரத்துடன் வருவார். அதாவது, முதல் இரண்டு காட்சிகளில் நீளமாக இருக்கும் கிருதா உடனே வரும் அடுத்த காட்சியில், சிறியதாக இருக்கும். ஆக, அடுத்தடுத்து வரும் இந்த மூன்று காட்சிகளில், முதல் இரண்டு காட்சிகளும், மூன்றாவது காட்சியும் வேறு வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், முதல் இரண்டு காட்சிகளுக்கும் அடுத்த காட்சிக்கும் இருக்கும் அந்த உணர்ச்சிமயமான தொடர்பு சிறிதும் குறைந்திருக்காது. சரிய்யா, அவர் நுணுக்கமான நடிகர் என்று இப்போது தானே சொன்னீர், அதனால், அவருக்கு இருக்கும் நுணுக்கமான அறிவினாலும், ஈடுபாட்டினாலும், அவரைப் பொறுத்த வரை இது சுலபம் என்று நீங்கள் சொல்லலாம். ஒத்துக் கொள்கிறேன்.
இப்போது, அதே படத்தில் இடம் பெற்ற வேறொரு காட்சியைப் பார்ப்போம்.
இந்தக் காட்சி, முந்தைய காட்சியைப் போல பெரிய உணர்ச்சிக் குவியலான காட்சியல்ல. முந்தைய காட்சி படத்தின் இறுதிக் கட்டத்தில் வரும். இந்தக் காட்சியோ, படத்தின் நடுவில் வரும்.
நடிகர் திலகமும், முத்துராமனும் அருகருகே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். வழக்கம் போல, பக்கத்தில் ரங்கா ராவுக்காக ஒரு இலை போடப்பட்டு உணவு பரிமாறப் பட்டிருக்கும். அப்போது தான், முதன் முதல், அந்த வீட்டில் நடிகர் திலகம் சாப்பிடுவார். அப்போது தான், அவருக்கு அந்த இலையின் முக்கியத்துவம் தெரியும். எம்.வி. ராஜம்மாவின் பண்பை வியந்து பாராட்டி (எல்லாம் சாப்பிட்டுக் கொண்டே!), அவர்களை தன்னுடைய வீட்டிற்கு விருந்து சாப்பிட வர வேண்டும் என்னும் போது, எம்.வி. ராஜம்மா அவரிடம் "கண்டிப்பாக வருகிறோம். கல்யாண சாப்பாட்டிற்கு, வடை பாயாசத்துடன்" என்பார். அதற்கு, நடிகர் திலகமோ, "வடையாவது பாயாசமாவது, இங்கு உங்கள் வீட்டில், அந்த விருந்து, எனக்கு முன் வரப் போகிறது" என்று சொல்லி, முத்துராமனுடைய காதலைப் பற்றிக் கூறி, அந்தப் பெண் நல்ல நிறம், செக்கச் செவேரென்று இருப்பாள் என்று கூறி, மேலும் சில சம்பாஷணையுடன் அந்தக் காட்சி முடியும். இந்தக் காட்சி இரண்டு நிமிடங்கள் தான் வரும். இந்தக் காட்சியில், துவக்கத்திலிருந்து நீளமான கிருதாவுடன் வரும் நடிகர் திலகம், "அந்தப் பெண் செக்கச் செவேரென்று இருப்பாள்" என்று கூறும் அந்த ஒரு சில நிமிடங்கள் மட்டும், சடாரென்று, சிறிய கிருதாவுடன் காட்சி தருவார்! இது க்ளோசப்பில் எடுக்கப் பட்டிருக்கும். உடனே, மறுபடியும் அந்த சம்பாஷனை தொடரும் போது, பழைய நீள கிருதாவுக்கு மாறி விடுவார்! இத்தனைக்கும், முந்தைய காட்சியைப் போல, வேறு வேறு காட்சிகளல்ல இந்தக் காட்சி. தொடர்ந்து, இரண்டு நிமிடங்களுக்கு, நடிகர் திலகம், முத்துராமன் மற்றும் எம்.வி. ராஜம்மா நடிக்கும் காட்சி. இரண்டு வேறு வேறு காட்சிகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப் படும் போதே (எனக்குத் தெரிந்து குறைந்த பட்சம் இரண்டு நாட்கள் கழித்து தான் எடுக்கப் பட்டிருக்கும்), தொடர்பு காட்டுவதற்கு நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். நிலைமை இப்படியிருக்க, ஒரே நேரத்தில் எடுக்கப் பட்ட, நாம் மேலே கூறிய இந்தக் காட்சியில், தொடர்ந்து வரும் இரண்டு நிமிடங்களில், ஒன்றே முக்கால் நிமிடம் ஒரு ஒப்பனை, நடுவில், சில நொடிகள் மட்டும் வேறொரு ஒப்பனை; உடனே, கடைசி சில நொடிகளில் வேறொரு ஒப்பனை! இதுவும், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப் பட்ட காட்சிகள். அப்படி என்றால், எந்த அளவிற்கு, நடிகர் திலகம் ஈடுபாடும், அர்ப்பணிப்பும், முனைப்பும், முயற்சியும் செய்திருக்கிறார்!!
இது போல், பல படங்களில் காணலாம். ஆனால், அவை எல்லாம் வேறு வேறு காட்சிகளாய் வரும். உதாரணத்திற்கு, புதிய பறவையில், வரும் "சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து" பாடலின் முதல் சரணம் பூராவும், படம் தொடங்கும் போதே எடுக்கப் பட்டிருக்கும். வேறொரு நீள கிருதாவுடன் வருவார். பல்லவியிலும், அனு பல்லவியிலும், இரண்டாவது சரணத்திலும், படம் நெடுகிலும் வரும் சிறிய கிருதாவுடன் வருவார். ஆரம்பத்தில், ஊட்டி ரேஸ் கோர்ஸில், சரோஜா தேவியுடன் பேசும் ஒரு காட்சியிலும், அடுத்தடுத்து, இதே போல், வேறு வேறு கிருதாக் கோலங்களில் வருவார்.
நடிகர் திலகம் 1953-லிருந்து, 1987 வரை, தொடர்ந்து, மூன்று ஷிப்டுகளில், நடித்துக் கொண்டே இருந்தார். வருடத்திற்கு ஆறு, ஏழு படங்களில் (சில வருடங்கள் நீங்கலாக - 1965, 1966, 1977, மற்றும் சில வருடங்கள்) நடித்துக் கொண்டு! வேறு வேறு கெட்டப்புகளில், வேறு வேறு பாத்திரங்களில், ஒவ்வொன்றும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில், காலங்களில்! அப்படி இருந்தும், காட்சித் தொடர்பினைத் (continuity) தொடர்ந்து நூறு சதவிகிதம் கடைப்பிடித்தார். இப்போதெல்லாம், ஒரு நடிகர் ஒரு நேரத்தில், ஒரு படம் மட்டுமே நடிக்கின்றார், நன்றாக concentrate செய்து நடிப்பதற்கு! இன்னும் சொல்லப் போனால், வட நாட்டின் புகழ் பெற்ற நடிகர் திலீப் குமார் அவர்கள், அந்தக் காலத்திலேயே, ஒரு நேரத்தில், ஒரு படம் தான் நடித்தார், மேற்கூறிய காரணத்துக்காக!
வேறு வேறு காட்சிகள் என்றால், ஓரளவு நடித்து விடலாம். ஒரே காட்சியில், இரண்டே நிமிடங்கள் தொடர்ந்து பேசும் வசனக் காட்சியில், இடையில், ஒரு சில நொடிகள் மட்டும் வேறு ஒரு கட்டத்தில் எடுக்கப்படும் போது கூட, எப்படி அவரால் பரிபூரணத்துவத்தைக் காட்ட முடிந்தது? இத்தனைக்கும், அப்போதெல்லாம் நேரடியாக பேசி நடித்தாக வேண்டும். இப்போது போல தனி ட்ராக் எல்லாம் கிடையாது! எல்லாம் அந்தக் கலைக் கடவுளுக்கும், அவரை தமிழ் நாட்டிற்கு ஈந்த அந்தக் கலைமகளுக்கும் தான் வெளிச்சம்!!
நடிகர் திலகத்தின் பாடல் கட்டுரைகளினூடே, இந்த சிறிய பதிவை இட சந்தர்ப்பமளித்த திரு. வாசு மற்றும் திரு. வெங்கிராமுக்கு நன்றிகள்.
இந்தக் காட்சி பற்றி சொல்லி, திரு. ராகவேந்திரன் அவர்களிடம் கேட்டு, மீண்டும் ஒரு முறை அந்தக் காட்சியைப் பார்ப்பதற்கு, அவரிடம் உதவும்படிக் கோரிய போது, அவரும் உடனே, எனக்கு அந்தக் காட்சியை மட்டும், என்னுடைய சொந்த மெய்லுக்கு அனுப்பினார். அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
திரு. ராகவேந்திரன் அவர்களே, எனக்காக ஒரு முறை அந்தக் காட்சியைப் பதிந்து, கோடானு கோடி சிவாஜி ரசிகர்களின் நெஞ்சை நிறையச் செய்யுங்கள்.
Gopal.s
29th May 2014, 05:17 AM
Namma Ooru Velan sir's Review.
Annai Illam
Starring Sivaji Ganesan, Devika, Muthuraman, Ranga Rao, Kannamba, Nagesh, MN Nambiar, OAK Devar, VK Ramasamy etc
Producer: Kamala Pictures
Lyrics: Kannadhasan
Music: KV Mahadevan
Director: P. Madhavan
Paramasivam (Ranga Rao) is a rich man who believes in utmost charity. In the first 3 mins of the film, he gives away all his riches and becomes a destitude. In the meantime, his wife Gowri (Kannamba) is pregnant and is ready for delivery but Paramasivam is unable to collect money for treatment. In a moment of anger he fights with a moneylender and fearing for his life escapes. Nambiar seizes the moment and offers him refuge, saying that his wife had died in childbirth.
Nambiar is involved in smuggling and makes Paramasivam his accomplice. Meanwhile Paramasivam's elder son, Kumar, is raised by him while the new born Shanmugam is raised by Gowri (each unknowing of the other.) All these happens within 10 mins of the film.
Film opens with the grown Kumar (Sivaji) being pampered by his father. He drives to Geetha's (Devika) home who mistakes him as a driver and commands him to take her to college etc. A bemused Kumar plays along and one day deserts her along a lonely road. Angry Geetha attempts to walk off... nadaiyaa idhu nadaiyaa oru naadagam andrO nadakkudhu, idaiyaa idhu idaiyaa adhu illaadhadhu pOl irukkudhu
Geetha, daughter of rich judge VKR later realises the truth and promptly falls in love with Kumar. madi meedhu thalai vaiththu vidiyum varai thoonguvOm, marunaal ezhundhu paarppOm
In the meantime, Kumar meets Shanmugam and they become best of pals. Shanmugam has a girlfriend and in turn he asks Kumar if he has anyone special and if so, to describe her.... ennirandu padhinaaru vayadhu At the end of the song Kumar falls and hits a rock. Shanmugam brings him home and Kumar gets to know of Gowri (to whom he feels a strange affliation.)
Through Kumar, Shanmugam's wedding is arranged for and when the bride's side questions Shanmugam's ancestry, Paramasivam stands guarantee although he has yet to meet Gowri.
Things move fast and the police are on Nambiar's trail. Paramasivam is framed and once again he runs from the police (presumably) killing a constable along the way. He seeks refuge along the corridors of Gowri's house and is shocked to learn that she is alive. Unable to face her, he finally gets caught and is sentenced to death by the same judge friend VKR! In prison Paramasivam reveals the secret to Kumar but extracts a promise not to tell anyone about it.
Gowri chances on a newspaper report and learns that her husband is to die soon! Both mother and son (without the knowledge of Shanmugam) try all means to save the life of Paramasivam, by making appeals right up to the president.
When all fails a dejected Kumar sings sigappu vilakku eriyuthammaa.
In the meantime Shanmugam's in laws are adamant of holding the wedding on the earlier agreed date, which coincidentally is the date Paramasivam is scheduled to hang!
Will the wedding happen? Will Shanmugam learn the truth? What will happen to Paramasivam? To Gowri? To Kumar? See the silver screen for answers!
RAGHAVENDRA
29th May 2014, 06:31 AM
Sivaji Ganesan Filmography Series
93. Annai Illam அன்னை இல்லம்
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/aicollage_zpsa4c925c8.jpg
தணிக்கை 11.11.1963
வெளியீடு 15.11.1963
கதைத்துளி
வாழ்ந்தவன் தாழ்ந்து விட்டால் மீண்டும் அவனால் வாழ முடியாதா?
இந்த உலகில் கெட்டவர்கள்தான் வாழ்வுச் சக்கரத்தை சுலபமாக உருட்ட முடியுமா?
கெட்டுப்போன பிறகு, தனக்குத் தானே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவன், மற்றவர்களுக்காகவும் பகிரங்கமாக வாழ முடியுமா
இந்தக் கேள்விகளுக்குக் கிடைக்கும் விடைதான் 'அன்னை இல்லத்'தின் வரலாறு!
பரமேசன், கௌரி, குமரேசன், ஷண்முகம் - இது கயிலைநாதனின் தெய்வீகக் குடும்பம் அல்ல; கருணையே உருவான ஒரு மனித ஜீவனின் திருக்குடும்பம்!
'இல்லை' என்போருக்கு இல்லாது என்னாமல், அள்ளி அள்ளிக் கொடுத்தான். இறுதியில் அவனுக்கே இல்லை எனும் பொல்லாத நிலை வந்தது. மனைவியின் பிரசவத்துக்குப் பணம் தேவைப்பட்டது. கொடுத்தவர்களிடம் எல்லாம் கையேந்தினான் - யாரும் கொடுக்கவில்லை. மனம் மாறியது - குணம் மாறியது - கொலைகாரன் என்ற பழியோடு சட்டத்துக்கு பயந்து ஓடினான்.
வேடனின் வலையிலிருந்து தப்பிய மான் வேங்கையின் விழியில் பட்டது போல் நமது கொடைவள்ளல் ஒரு கொடியவனின் வலையில் சிக்கினான்.
வருடச் சக்கரம் இருபத்தைந்து முறைகள் சுழன்றது!
இந்த இடைக்காலத்தில் உலகில் எத்தனையோ மாற்றங்கள்!எத்தனையோ தோற்றங்கள்!பிரிந்து போன எத்தனையோ மனிதர்கள் கூடினர் - கூடியிருந்த எத்தனையோ உயிர்கள் பிரிந்தன! - ஆனால் நம் கொடைவள்ளலின் குடும்பமோ பிரிந்தது பிரிந்தபடியே தான் இருந்தது! அதற்காக உலகம் விடியாமலா போயிற்று? கருவிகள் இயங்காமலா இருநதது? இல்லை - இல்லை!
அந்தோ ?
ஒரு கணவன் - மனைவியைப் பிரிகிறான்.
ஒரு மனைவி - கணவனையும் மகனையும் பிரிந்தாள்.
ஒரு மகன் - தந்தையையும் தமையனையும் பிரிந்தான்.
இன்னொரு மகன் - தாயைப் பிரிந்தான்.
இவர்கள் எல்லோருமே ஒரே குடும்பமாக இருக்க வேண்டியவர்கள். ஒருவருக்கொருவர் யாரென்று தெரியாமலே இந்த உலகில் அவர்கள் பழகுகின்றனர்.
தந்தையும் மூத்த மகனும் ஒரு இல்லத்தில்!
தாயும் இளைய மகனும் இன்னொரு இல்லத்தில்!
இந்த இரண்டு இல்லங்கள் ஒன்று சேர்ந்தனவா!
- அன்னை இல்லம் திரைப்படத்தைப் பாருங்கள்
தயாரிப்பு – எம்.ஆர்.சந்தானம் - கமலா பிக்சர்ஸ்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தேவிகா, எஸ்.வி.ரெங்கராவ், எம்.வி.ராஜம்மா, எம்.என்.நம்பியார், ஆர்.முத்துராமன், வி.கே.ராமசாமி, நாகேஷ், எம்.எஸ்.சுந்தரிபாய், குமாரி ச்ச்சு, ஜெயந்தி, ஓ.ஏ.கே.தேவர், எஸ்.ஏ.கண்ணன் மற்றும் பலர்
மூலக்கதை – தாதா மிராஸி
திரைக்கதை – ஜி.பாலசுப்ரமணியம்
வசனம் – ஆரூர்தாஸ்
பாடல்கள் கவிஞர் கண்ணதாசன், உதவி-பஞ்சு அருணாச்சலம்
பின்னணி பாடியவர்கள் – டி.எம்.சௌந்தர்ராஜன், ஏ.எல்.ராகவன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி
சங்கீதம் – திரை இசை திலகம் கே.வி.மகாதேவன், உதவி – புகழேந்தி
பாடல்கள் ஒலிப்பதிவு & ரீரிகார்டிங் – டி.எஸ். ரங்கசாமி – மெஜஸ்டிக் ஸ்டூடியோ
மேக்கப் – ஹரிபாபு, ரங்கசாமி, பத்ரையா, பாண்டியன்
உடைகள் – பி.ராமகிருஷ்ணன் உதவி – டி.எம்.சாமினாதன், கே.பி.குப்புசாமி
ஒலிப்பதிவு – வி.சி.சேகர் – நெப்டியூன், உதவி ஹெச்.குப்புராவ், எம்.எஸ்.மணி
செட் சாமான்கள் – சினி கிராஃப்ட்ஸ்
செட்டிங்ஸ் – எஸ்.ரங்கசாமி, எம்.சொக்கலிங்கம்
எலக்ட்ரீஷியன் – வி.சேஷாத்திரிநாதன், W.முருகேசன், ஜி.பாஸ்கர்
பெயிண்டிங்ஸ் – வி.வேங்கைமலை
புரொடக்ஷன் நிர்வாகம் – கே.எஸ். துரை
ஆபீஸ் நிர்வாகம் – சி. மாணிக்க வாசகம்
ஆர்ட் – கங்கா உதவி – செல்வராஜ்
ஸ்டில்ஸ் – திருச்சி அருணாசலம்
விளம்பரம் – எலிகண்ட் பப்ளிசிடீஸ்
ஒளிப்பதிவு – பி.என்.சுந்தரம்
எடிட்டிங் – என்.எம். சங்கர்
பிராஸஸிங் – விடி.எஸ்.சுந்தரம், விஜயா லாபரட்டரி
ஸ்டூடியோ – நெப்டியூன்-வாஹினி
உதவி டைரக்ஷன் – கே.தங்கமுத்து, எஸ்.தேவராஜன், யூ.மோஹன்
டைரக்ஷன் – பி. மாதவன்
அன்னை இல்லம் விளம்பர நிழற்படங்கள் .. ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து
ஜூலை 1963-ல் வெளிவரப்போவதாக வெளியான விளம்பரம் : The Hindu : 14.4.1963
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5127-1.jpg
பின் அட்டை விளம்பரம் : பேசும் படம் : நவம்பர் 1963
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/AnnaiIllamPesumPadamBackCover-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5128-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் [மதுரை]
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/AnnaiIllamMaduraiThangamAd-1.jpg
50வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 3.1.1964
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5130-1.jpg
50th Day Ad : The Hindu : 3.1.1964
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/AnnaiIllam50DaysAd-1.jpg
100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 22.2.1964
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/AnnaiIllam100DaysAd1-1.jpg
100th Day Ad : The Hindu : 22.2.1964
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/AnnaiIllam100DaysAd2-1.jpg
RAGHAVENDRA
29th May 2014, 06:33 AM
நமது நெஞ்செல்லாம் நீக்கமற நிறைந்த நெய்வேலி வாசு சாரின் அற்புதமான பதிவு
(http://www.mayyam.com/talk/showthread.php?8593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-9&p=768704&viewfull=1#post768704)
டியர் ராகவேந்திரன் சார்,
.....
தங்களுக்கு மிகவும் பிடித்த 'அன்னை இல்லம்' திரைக்காவியத்தின் "சிகப்பு விளக்கு எரியுதம்மா"...பாடலைத் தங்களுக்காகத் தருவதில் மிகுந்த மகிழ்ச்சி.
'அன்னை இல்லம்' திரைக்காவியத்தின் "சிகப்பு விளக்கு எரியுதம்மா" வீடியோ வடிவில்.
http://youtu.be/4n1ZQfVfD0c
முன்னொருமுறை தங்களை சென்னையில் நேரில் சந்தித்தபோது 'அன்னை இல்லம்' திரைப்படத்தில் வரும் நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த ரசனையான
காட்சியைப் பற்றி தாங்கள் என்னிடம் மிகவும் ரசித்துப் பேசி மகிழ்ந்தது நன்றாக நினைவில் இருக்கிறது. இப்போது நீங்கள் மறுபடியும் நடிகர்திலகத்தின் அந்த அட்டகாசமான நடிப்புக் காட்சியைக் கண்டு ரசிக்கலாம்.
அதுமட்டுமல்லாமல் தன் தாயிடம் தன் தந்தைக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை வேதனையை வெளியேசொல்லமுடியாமல் மென்று விழுங்கி வசனமே இல்லாமல் அமைதியாக சில நிமிடங்கள் அசத்துவார் என்றால், அடுத்த காட்சியில் முன் நடித்த காட்சிக்கு எதிர்மறையாக தன் காதலி (தேவிகா) யிடம் தன் தந்தை (S.V.ரங்காராவ்) தன்னிடம் எப்படியெல்லாம் அன்பாக இருந்தார், எப்படியெல்லாம் தனக்கு பணிவிடைகள் செய்தார், எப்படியெல்லாம் தன்னை வளர்த்தார் என்று தந்தையின் அன்பை நினைத்து நினைத்து புலம்பித் தீர்த்து விடுவார்.
தன் தந்தையை தூக்கு தண்டனையில் இருந்து ஒரு மகனாகத் தன்னால் காப்பாற்ற முடிய வில்லையே என்ற இயலாமை, ஆற்றாமை,வேதனை, சோகம்,துக்கம் என்று அனைத்துவித உணர்ச்சிகளையும் ஒரு சேர மாறி மாறி பிரதிபலித்து, (குறிப்பாக தன் தந்தையின் தூக்குதண்டனை நிறுத்தத்திற்காக அளிக்கப் பட்ட கருணை மனு நிராகரிப்பை பற்றி தேவிகாவிடம் கூறும்போது," கருணை மனுவை நிராகரிச்சுட்டாங்க கீதா" என்று வேதனையோடு உரக்க சிரித்துக் கொண்டே சொல்வார்...பின் மீண்டும் ஒரு முறை சிரித்த படியே சொல்லி அப்படியே அதை அழுகையாய் அரை நொடியில் மாற்றுவார் பாருங்கள்... (அற்புதப் பிறவியே! எங்களைத் தவிக்க விட்டு விட்டு ஏன் அய்யா பிரிந்தீர்கள்)... அப்படியே அள்ளிக் கொண்டு போகும்.)
தாயிடம் அமைதி...
தாரமாகப் போகிறவளிடம் ஆர்ப்பாட்டப் புலம்பல்.
இரண்டையும் வேறுபடுத்திக் காட்ட அவரை விட்டால் வேறு யார்?...
அதே சீனில் இன்னொரு முத்திரை...தன் தந்தையின் அன்பைப் பற்றி தேவிகாவிடம் கூறுவார். "தாயில்லாதக் குறைய நான் உணரக் கூடாதுங்கறத்துக்காக அவர் (தன் தந்தை)எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார்... என்னென்ன ஏற்பாடெல்லாம் செய்தார்" என்று புலம்பிவிட்டு 'அடாடாடாடா'....என சிலாகித்து தன் தந்தையைப் பற்றி நினைவு கூர்வார். அந்த 'அடாடாடாடா' என்ற வார்த்தையை அவர் உச்சரிக்கும் விதம் அடடா...இவரல்லவோ நடிகர் என்று நம்மக் கூக்குரலிட வைக்கும் .
இந்த குறிப்பிட்ட சீனில் அவர் செய்யும் அட்டகாசங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்....
முகத்தில் பெருமை பொங்க தேவிகாவிடம்,"கீதா! எங்க வீட்டு வேலைக்காரன் இல்லே! கண்ணன்! (இந்த இடத்தில் ஒருவேலைக்காரன் தன் முதலாளி முன் எவ்வாறு கையைக் கட்டிக் கொண்டு நிற்பானோ அப்படிக் கையைக் கட்டிக் கொண்டு நிற்பார்) அவன் ஒரு நாளாவது எனக்கு காப்பி போட்டுக் கொடுத்திருப்பான்னு நெனைக்கிறியா?..
ஒரு நாளாவது சாப்பாடு போட்டுக் கொடுத்திருப்பான்னு நெனைக்கிறியா?....
ஒரு நாளாவது எனக்கு படுக்கை விரிச்சுக் கொடுத்திருப்பான்னு நெனைக்கிறியா?"....
என்று சொல்லிவிட்டு
"இல்ல கீதா! அவ்வளவு பணிவிடையும் எனக்கு எங்க அப்பாதான் கீதா...எங்க அப்பாதான்" என்று சொல்லியவாறே தன் தந்தையை நினைத்து பொங்கிக்கொண்டு அழ ஆரம்பிப்பது அவருடைய அசுரத் திறமை!
"உங்களுக்கு ஏன்ப்பா இவ்வளவு கஷ்டம்?...நான் என்ன குழந்தையான்னு கேப்பேன். அதுக்கு எங்கப்பா என்ன சொல்லுவார் தெரியுமா? என்று சொல்லிய படியே பின்னால் கைகளைக் கட்டிக் கொண்டு தன் தந்தை கூறுவது போல மகா தோரணையுடன் ,"ஏய்! நீ என்ன மனசுல பெரிய மனுஷன்னு நெனச்சுக்கிட்டு இருக்கியா?... ஒனக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை பிறந்து அந்தக் குழந்தை உன்ன அப்பான்னு கூப்பிட்டாலும் நீ எனக்குக் குழந்தை தாண்டா..ன்னு சொல்லுவார்"....என்று நடிகர் திலகம் ரசித்து ஒரு அட்டகாசச் சிரிப்பை தந்தையின் பாச நினைவாக உதிர்த்து நினைவலைகளில் மூழ்கியபடி தலையை ஆட்டிக்கொள்வது அதியற்புதம்.
இப்படிப்பட்ட தந்தையை தனக்கு கொடுத்ததற்காக கடவுளிடம் தான் தன் ஆயுசு முழுதும் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருப்பதைப் பற்றிக் கூறும் போது, "எத்தனை ஆயிரம் தடவை" (நன்றியை) என்று அந்த வீட்டின் சிறு தூணைப் பிடித்தபடி கூறி நிறுத்திவிட்டு தலையை மேல்நோக்கித் தூக்கியவாறு மறுபடியும் இரண்டாவது முறை "எத்தனை ஆயிரம் தடவைசொல்லியிருப்பேன்" என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுவது மெய்சிலிர்க்க வைத்துவிடும்.
ம்..... சொல்லிகொண்டே போகலாம். ஆனால் ஆயுசுதான் போதாது அவர் அசாத்தியத் திறமைகளைப் பற்றி எழுத...
அந்த மெய்சிலிர்க்க வைக்கும் அன்புத் தெய்வத்தின் அற்புத நடிப்புக் காட்சியை ராகவேந்திரன் சாருடன் நாமும் கண்டு களிக்கலாம்.
'அன்னை இல்லம்' திரைக்காவியத்தில் அதியற்புதமான நடிகர் திலகத்தின் நடிப்பில் மிளிரும் காவியக் காட்சி.
http://www.youtube.com/watch?v=zNE0LicphLM
RAGHAVENDRA
29th May 2014, 06:36 AM
நமது அன்பிற்குரிய மாடரேட்டர் நவ் அவர்களின் அற்புதமான பதிவு
http://www.mayyam.com/talk/showthread.php?5865-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-(Part-3)&p=257451&viewfull=1#post257451
Annai Illam
Starring Sivaji Ganesan, Devika, Muthuraman, Ranga Rao, Kannamba, Nagesh, MN Nambiar, OAK Devar, VK Ramasamy etc
Producer: Kamala Pictures
Lyrics: Kannadhasan
Music: KV Mahadevan
Director: P. Madhavan
Paramasivam (Ranga Rao) is a rich man who believes in utmost charity. In the first 3 mins of the film, he gives away all his riches and becomes a destitude. In the meantime, his wife Gowri (Kannamba) is pregnant and is ready for delivery but Paramasivam is unable to collect money for treatment. In a moment of anger he fights with a moneylender and fearing for his life escapes. Nambiar seizes the moment and offers him refuge, saying that his wife had died in childbirth.
Nambiar is involved in smuggling and makes Paramasivam his accomplice. Meanwhile Paramasivam's elder son, Kumar, is raised by him while the new born Shanmugam is raised by Gowri (each unknowing of the other.) All these happens within 10 mins of the film.
Film opens with the grown Kumar (Sivaji) being pampered by his father. He drives to Geetha's (Devika) home who mistakes him as a driver and commands him to take her to college etc. A bemused Kumar plays along and one day deserts her along a lonely road. Angry Geetha attempts to walk off... nadaiyaa idhu nadaiyaa oru naadagam andrO nadakkudhu, idaiyaa idhu idaiyaa adhu illaadhadhu pOl irukkudhu
Geetha, daughter of rich judge VKR later realises the truth and promptly falls in love with Kumar. madi meedhu thalai vaiththu vidiyum varai thoonguvOm, marunaal ezhundhu paarppOm
In the meantime, Kumar meets Shanmugam and they become best of pals. Shanmugam has a girlfriend and in turn he asks Kumar if he has anyone special and if so, to describe her.... ennirandu padhinaaru vayadhu At the end of the song Kumar falls and hits a rock. Shanmugam brings him home and Kumar gets to know of Gowri (to whom he feels a strange affliation.)
Through Kumar, Shanmugam's wedding is arranged for and when the bride's side questions Shanmugam's ancestry, Paramasivam stands guarantee although he has yet to meet Gowri.
Things move fast and the police are on Nambiar's trail. Paramasivam is framed and once again he runs from the police (presumably) killing a constable along the way. He seeks refuge along the corridors of Gowri's house and is shocked to learn that she is alive. Unable to face her, he finally gets caught and is sentenced to death by the same judge friend VKR! In prison Paramasivam reveals the secret to Kumar but extracts a promise not to tell anyone about it.
Gowri chances on a newspaper report and learns that her husband is to die soon! Both mother and son (without the knowledge of Shanmugam) try all means to save the life of Paramasivam, by making appeals right up to the president.
When all fails a dejected Kumar sings sigappu vilakku eriyuthammaa.
In the meantime Shanmugam's in laws are adamant of holding the wedding on the earlier agreed date, which coincidentally is the date Paramasivam is scheduled to hang!
Will the wedding happen? Will Shanmugam learn the truth? What will happen to Paramasivam? To Gowri? To Kumar? See the silver screen for answers!
RAGHAVENDRA
29th May 2014, 06:37 AM
காணொளிகள்
எண்ணிரண்டு பதினாறு வயது
http://youtu.be/wvAJ7FqPLrs
என்ன இல்லை எனக்கு
http://youtu.be/bX6zzXQgCP0
மடி மீதூ தலை வைத்து
http://youtu.be/w_R5KhMJlzs
நடையா இது நடையா
http://youtu.be/oSOv4hTHdo0
Gopal.s
31st May 2014, 05:02 AM
Karnan- 1964
கதைகளில் மகாபாரதத்தை மீறிய Epic உலகளவில் இல்லாதது போல ,கர்ணனை மீறிய பாத்திர படைப்பு இது வரை உலகம் கண்டதில்லை. வீரபாண்டிய கட்டபொம்மனை குறிப்பிடும் போது ஒரே single agenda , ஒரே பகைவன், ஒரு சில ஆள்காட்டிகள் என்பதோடு பன்முக தன்மை இல்லாத பாத்திரம். ஆனால் கர்ணனோ மிக பெரிய பராக்கிரம சாலியும் அவன்தான். உலகத்தின் மிக துர்பக்கியசாலியும் அவன்தான். மிக மிக போற்ற பட்ட மனிதனும் அவன்தான். ஆனால் எதிரிகளாலேயே சூழ பட்டு வாழ்ந்த மனிதனும் அவன்தான். எல்லோரும் கவனம் செலுத்திய மனிதனும் அவன்தான். ஆனால் தாய் முதல் ,வாழும் குலம்,பெண் கொடுத்தவர் முதல் உதாசீனம் செய்து ஒதுக்கிய மனிதனும் அவன்தான்.
அவன் நல்லியல்புகளே அவனுக்கு பகையாவதுடன், பகைகளும் உறவாடியே கெடுக்கின்றன. கண்ண தாசனின் வரிகள். செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் விழும் பாத்திரம்.மனோதத்துவ பின்னல்களுடன், non -linear முறையில்,multi -dimensions உடன் படைக்க பட்ட இந்த காவிய நாயகன் பாத்திரத்தை இன்னொரு காவிய உலக நடிகன் ஏற்று நடிக்கும் பொது நமக்கு கிடைத்த அனுபவம் சுனாமி போன்ற Psychedelic Trip .இன்றும் நம் மனதை பிசைந்து கண்ணீர் விட வைத்தாலும், ஒரு ecstatic உணர்வை தரும் அருமையான நடிப்பின் உன்னத சாதனை.
இதில் நான் குறிப்பிட விரும்பும் மூன்று கட்டங்கள்- இந்திரா தேவன் வேடம் புனைந்து கவச குண்டலங்களை கவரும் காட்சி.. கிருஷ்ணன் தூது வரும் காட்சி. குந்தி தூது (சூது?)வரும் காட்சி.
முதலில் இந்திரன் கவச குண்டலங்களை கவரும் காட்சி. தன் ஒளி கடவுளை கும்பிட்டு முடிக்கும் தருணத்தில் யாரோ ஒரு அந்தணர் வந்திருப்பதாக தகவல் வர , கர்ணனுக்கு வந்திருப்பவன் யார் என்றும் ,அவன் நோக்கம் என்ன என்று கடவுளால் குறிப்புணர்த்த பட்டும் அந்தணர் வேடத்தில் வந்த இந்திரனை வரவேற்று வேண்டுவதை கொடுக்கும் காட்சி...
இந்திரனுடன் இயல்பாக இருக்கும் மரியாதை உணர்வை மீறி , பொய் வேடமிட்டு தன் ஈகை குணத்தையே எள்ளுவதாக கர்ணன் துடித்து போய் ,தனக்கு தெரிந்து விட்டதை குறிப்புணர்த்தி , செயலை சினந்து நகையாடி,வேண்டுவதை கொடுக்கும் இடத்தில் நடிகர்திலகத்தின் மனோதத்துவ ஆழம் நிறைந்த நடிப்பு இந்த காட்சியை இமயத்தில் உயர்த்தும்.இந்திரனின் பொய்யான வர்ணனைகளை கேட்டு உவகை கொண்டாலும், நோக்கத்தினால் ஒரு எள்ளல் சிரிப்புடன் அதை ஏற்பதும், கவச குண்டலங்களை யாசித்ததும் கர்ணன் எதிர்பார்த்த ஒரு எள்ளலுடன் கேட்டதும், இந்திரன் பயம் கொண்டவன் போல பாவிக்க, கர்ணன் தள்ளாடிய தேகம், தள்ளாடாத நோக்கம், பொய்யான நடிப்பு,அதன் பின் மெய்யான பிடிப்பு, என்னிடம் வர வேஷம் வேண்டுவதில்லை, ஆனால் எடுத்த காரியத்தின் தன்மை அப்படி...அப்படி பொய்யுடம்பு போர்த்தி வர தூண்டியுள்ளது உம்மை என்று குறிப்பிடும் கண்களின் சத்திய ஒளி கொண்ட தீட்ஷன்யத்துடன்,இந்த சதி செயலை இடித்து ,தன்னுடன் இந்த நாடகம் தன்னை அவமதிக்கும் செயலே என்று உணர்த்தி , இந்திரன் தன் அசல் உருவில் வந்து கேட்டிருந்தாலே கொடுத்திருப்பேனே என்று உரைத்து ,அதனை செயல் படுத்தும் அந்த காட்சி ... நடிப்பால் மட்டுமே ஒரு காட்சியின் சிறப்பு எத்தனை உயரம் தொட சாத்தியம் கொண்டது என்று தன்னுடைய கவச குண்டலமான நடிப்பை அந்த நடிப்பு கர்ணன் நமக்கு வழங்கி விடுவார்.
கண்ணன் தூது வரும் காட்சியில் கர்ணன் ஒரு மௌன சாட்சி போல ,அவன் பங்கு அதில் குறைவு.துரியோதனன் சமாதானத்திற்கு ஒவ்வாமல் முரண்டு பிடிப்பான் என்றும் ,அங்கிருக்கும் அனைவரும் மனதளவில் பாண்டவர் பக்கம் நியாயம் என்று நம்புபவர்கள் என்றும், திருதராஷ்டிரன் பாசம்-நியாயம் இரண்டுக்கும் நடுவில் ஊசலாடுபவன் என்றும் தெரிந்த கண்ணன் , தூதில் சாதிப்பது விதுரன்-துரியோதனன் ,கர்ணன்-பீஷ்மர் இவர்களுக்கிடையில் பிரித்தாளும் சூழ்ச்சி ஒன்றைத்தான். இதில் கர்ணனின் பங்கே ,தனித்து விட படும் (சகுனி துணை என்றாலும் )துரியோதனனுக்கு அரணாக aggressive unconditional support தருவதுதான் என்று உணர்ந்து , தனக்கு ஒவ்வுகிறதோ இல்லையோ ,அவனுக்கு சார்பாக பேச வேண்டிய கடமையை உணர்ந்து செய்ய வேண்டும்.இந்த காட்சியில் நடிகர்திலகம் இதை உள்வாங்கி நடிக்கும் மேதைமை ,உடல்மொழி,பேசும் பாணி எல்லாவற்றிலும் பிரதிபலிக்கும்.
கண்ணன் உள்ளே வரும் போது ,முள் மேல் உட்காருவது போல மற்றவர் துரியோதனன் கட்டளைக்கு பணியும் போது ,கர்ணன் இதை ஓரக்கண்களால் உணரும் அழகே தனி.(இதில் தனக்கும் ஒப்புமை இல்லை என்ற ஒரு உடல்மொழி),துரியோதனன் தடுமாறி விழ வைக்க படும் நிலையில் எழும் கர்ணனின் முகத்தில் சிறிதே ஆசுவாசம் தெரியும்.கண்ணனுடன் வலுவில் வாதாடினாலும்,மனமின்றியே அதை வலுகட்டாயமாக செய்ய படுவதை காட்ட சிறிதே உரத்த வலுவான உடல் மொழியில் ,பாண்டவர் மனைவியை சூதாடிய இழிவை குத்தி (கண்ணன் கோப படும் அளவு)அந்த பேச்சு முறையில் தானே தனக்கு உரத்து சொல்லி ,தன்னை தானே convince பண்ணி கொள்ள முயலும் strain தெரியும்.மற்றோர் மன ரீதியான துரியோதனன் எதிர்ப்பை கூர்மழுங்க செய்யும் முயற்சி என்பது தெரியும் வகையில் நடித்திருப்பார்.
ஆனாலும் அடக்க முடியாமல் பீறிடும் நிலைக்கு தள்ள படுவார் ,விதுரன் பிறப்பை சொல்லி அவமான படுத்த படும் போது .கிட்டத்தட்ட தன நிலைக்கு சமமான அவமானத்தை ,தன்னிலை மறந்து உணர்ச்சி வச பட செய்யும்.
மற்றோருக்கும் ,நடிகர்திலகத்துக்கும் உள்ள வேற்றுமையே அதுதானே?கதாபாத்திரத்தின் ஆன்மாவில் புகுந்து கூடு விட்டு கூடு மாறும் மந்திரம்?கர்ணனுக்கு பங்கில்லா காட்சியிலும்,இந்த அற்புதமான உளவியல் புரிந்த அபார நடிப்பினால்,கர்ணனே முன்னிலை படுவான்.
குந்தி தேவியின் தூது காட்சி இந்திய சினிமா வரலாற்றிலேயே பொன்னெழுத்துக்களில் பொறிக்க பட வேண்டிய மிக சிறந்த ஒன்றாகும். வீரபாண்டிய கட்டபொம்மனின் laser sharp உணர்வு குவி மையம் என்ற நிலைக்கு முற்றிலும் மாறுபட்ட பல்வேறு உணர்வு நிலைகளின் கலவை கொண்ட விரிந்த தளத்தை ,பரப்பை உடைய உன்னத காட்சி. இது ஒரு emotional Roller coaster ride என்ற வகையில் ஏழு வகை மனநிலைகளின் கலப்பு போராட்டம் . Joy (சந்தோசம்),Hatred (வெறுப்பு),Sadness (துக்கம்),Reconciliation (தேற்றிகொள்வது),Surrender (சரணாகதி), Cynicism (எள்ளல் ),Assertion (இருப்புநிலை) . அற்புதமான வசனத்தை துணையாக கொண்ட துரித உணர்வு நிலைகளில்(concurrently running and at times in cocktail manner) மாற்றம் காட்டும் மாயாஜால நடிப்பு வித்தை.
சந்தோசம்- குந்தி தன் வீடு தேடி வந்ததை ஒரு பாக்கியமாக கருதும் போது ,அவர்தான் தன் அன்னை என்று அறியும் போது .தன் பிறப்பறியா களங்க நிலை மாறி தன் உயர்வை தானே உணரும் போது அடையும் உவகை.
வெறுப்பு- தன் அன்னையின் புறக்கணிப்பால் தான் பட்ட அவமானங்களை எண்ணும் போது
தாயை சபிக்கும் அளவு பெருகும் வெறுப்பு. தான் தன் முயற்ச்சியால் இவ்வளவு உயரங்களை அடைந்தும் பிறப்பின் அறியாமை, வளர்ப்பின் பின்னணியால் அடையும் அவமானம் சார்ந்த சுய வெறுப்பு நிலை.
துக்கம்-தன்னுடைய தாயை தேடி அலைந்த துயரம், பலர் வந்தும் சோதனையில் தோற்று ஓடியது, தன் தொடர் அவமானங்கள் சுமந்த பிறப்பறியா வேதனை,தன்னுடைய தாயின் பக்கம் செல்ல முடியாத இயலாமை,அவள் தன் தாயே என்று உலகத்திற்கு தான் உயிரோடிருக்கும் போது சொல்ல முடியாமல் சொல்லும் போங்கள் தாயே.
தேற்றி கொள்ளும் நிலை-குந்தி தன் தாய் என்று சொல்வது தன்னை அன்னையின் மீதுள்ள ஆத்திரத்தை தணிய வைப்பதற்காக என்று எண்ணும் போது , இன்றேனும் என்னை பெற்றேடுத்தாயே என்று மடியில் ஆயாசம் கொள்ளும் போது ,அர்ஜுனனோ,நானோ இருவரில் ஒருவர் என்று ஐந்து மகன்கள் என்று தாயிடம் உரைக்கும் போது ,துரியோதனன் நற்பண்புகளை சொல்லி தன் இருப்பை உணர்த்தி, தாயெனும் உண்மையை மறைக்க சொல்லும் போது ,தர்மம் வெற்றி பெற தெய்வம் போன்ற துணைவர் காட்டிய வழியில் அன்னையும் கைப்பாவையாய் மாற வேண்டிய நிலையை உணர்ந்து உணர்த்தும் நிலை.
சரணாகதி-நட்பின் உயர்வுக்கு தான் இறக்கும் வரை செய்ய வேண்டிய கடமைக்கு,தாயின் சுயநல வரங்களை மறுக்காமல் அளிக்கும் போது ,கேள்வி கேட்காமல் தாயின் நிலையை உணர்ந்து தாய்க்கு உரிய ஸ்தானம் அளிப்பது , தன்னையே அழித்து கொள்ளும் அளவு தன்னை மீறிய சுயம் கருதா பண்புக்கு என்று கேள்வி கேட்காத சரணாகதி நிலை.
எள்ளல்- தாயின் அணி மாற சொல்லும் வேண்டுகோளை நிராகரிப்பது.(இது சரியான பேச்சா தாயே), நாகாஸ்திரத்தை ஒரு முறைக்கு மேல் பிரயோகம் செய்வதில்லை என்ற சத்தியத்தை கேட்கும் போது ,அதன் மூலத்தை உணர்ந்த எள்ளல் .
இருப்புநிலை- தானிருக்க வேண்டிய இடம்,தாய்க்கு உரிய இடம், தான் சாகும் வரை நடக்க வேண்டியவை, செத்த பிறகு பிறப்பறியா இழிவை நீக்க வேண்டிய அவசியம்,தர்மம் வெற்றி பெற விழைவு, என்று அனைத்து இருப்பு நிலைகளின் நிதர்சனங்களும் உணர்த்த படும்.
இது அத்தனையும் மீறி மற்றோர் உணர்வு,இது வரை கர்ணனிடம் அந்த படத்தில் அதுவரை வெளிப்படாத ஆயாசம் நீங்கிய பெருமித உணர்வு .தன்னை பற்றி தானே அறிந்து விட்டதை உணர்ந்து ,இனி அடைய கடமையை தவிர எதுவுமில்லை என்ற உணர்வு நிலை.
இந்த உணர்வுகள் ஒரே குவி மையத்தில் இயங்காமல் ,ஒளி சிதறல்கள் போல தெறித்து நொடிக்கு நொடி முக பாவத்திலும்,உடல் மொழியிலும்,பேசும் மொழியிலும் நடிப்பின் வானவில் கலவை போல ஜாலம் காட்டி முடிவை அடையும்.
இந்த காட்சி போன்று இனி ஒன்று அமைய நடிகர்திலகம்,சக்தி கிருஷ்ணசாமி,பந்துலு இவர்கள் வியாசருடன் சேர்ந்து பிறந்து வந்தால் மட்டுமே சாத்தியம்.
mr_karthik
31st May 2014, 11:12 AM
Gopal,
what a deep analysis about karnan charector and the involvement of nadigarthilagam on that role.
I am totally surrender.
RAGHAVENDRA
1st June 2014, 06:47 AM
Sivaji Ganesan Filmography Series
94. KARNAN கர்ணன்
http://i.ytimg.com/vi/6pBWrbxGb-g/0.jpg
தணிக்கை – 24.12.1963
வெளியீடு – 14.01.1964
தயாரிப்பு – பி.ஆர். பந்துலு - பத்மினி பிக்சர்ஸ்
வசனம் – சக்தி கிருஷ்ணசாமி
பாடல்கள் – கவிஞர் கண்ணதாசன்
இசை – விஸ்வநாதன் – ராமமூர்த்தி
துணைத் தயாரிப்பு – சித்ரா கிருஷ்ணஸ்வாமி
தயாரிப்பு-டைரக்ஷன் – பி.ஆர்.பந்துலு
நடிக நடிகையர் –
கொடை வள்ளல் கர்ணனாக – நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
என்.டி.ராமராவ் – கிருஷ்ணன்
எஸ்.ஏ.அசோகன் – துரியோதனன்
முத்துராமன் – அர்ஜூனன்
ஓ.ஏ.கே.தேவர் – கனகன்
ஜாவர் சீதாராமன் – பீஷ்மர்
முத்தையா – சகுனி
கே.நடராஜன் - தேரோட்டி அதிரதன்
முஸ்தபா – கிருபாச்சாரியார்
வீராச்சாமி – துரோணாச்சாரியார்
ஆர்.பாலசுப்ரமணியம் – பரசுராமர்
வி.எஸ்.ராகவன் – விதுரர்
எஸ்.வி.ராமதாஸ் – இந்திரர்
குலதெய்வம் ராஜகோபால் – சுமந்தன்
பழ.செல்வராஜ் – துர்முகன்
எஸ்.ஏ.ஜி.சாமி – திருதராஷ்டிரன்
கண்ணன் – சஞ்சயன்
பிரேம்குமார் – தருமர்
சாண்டோ இந்திரஜித் – பீமர்
தங்கராஜ் – நகுலன்
சின்னையா – சகாதேவன்
சண்முகசுந்தரம் – சல்லியன்
கே.வி.ஸ்ரீநிவாசன் – முனிவர்
மாஸ்டர் ஸ்ரீதர் – அனாதைப் பையன்
மாஸ்டர் சுரேஷ் – விருக்ஷசேனன்
பிரபாகர் ரெட்டி – சூரியன்
சாவித்திரி கணேஷ் – பானுமதி
தேவிகா – சுபாங்கி
எம்.வி.ராஜம்மா – குந்தி தேவி
ஸந்தியா – கனகன் மனைவி
ருக்மணி – ராதை
ஜி.சகுந்தலா – தோழி மங்களா
கல்பனா – தரும தேவதை
ஜெயந்தி – திரௌபதி
ராஜேஸ்வரி – தோழி சத்யவதி
சரோஜா – இளம் குந்தி
மற்றும் ஸ்டண்ட் சோமு குழுவினரும், ராஜஸ்தான் போலீஸ் படையினரும், ஆயிரக்கணக்கான துணை நடிகர் நடிகைகளும்.
கலை நுணுக்கப் பொறுப்பு
ஒளிப்பதிவு டைரக்டர் – வி.ராமமூர்த்தி
தந்திரக்காட்சிகள் – ரவி உதவி – பி.எல்.நாகப்பா, வி.சூர்யகுமார்
ஒலிப்பதிவு பாடல்கள் & ரீரிக்கார்டிங் – டி.எஸ்.ரங்கசாமி
வசன ஒலிப்பதிவு – வி.சிவராம் உதவி – எஸ்.ஜே.நாதன், எச்.நாகபூஷணராவ், ஆர்.எஸ்.வேதமூர்த்தி, ஜோ.அலோஷியஸ், கே.ஜி.சீனிவாசன்
கலை – கங்கா உதவி – செல்வராஜ்
இசை உதவி – கோவர்த்தனம் – ஹென்றி டேனியல்
பாடல்கள் உதவி – பஞ்சு அருணாச்சலம்
திரைக்கதை – ஏ.எஸ்.நாகராஜன்
நடன அமைப்பு – பி.எஸ்.கோபால கிருஷ்ணன், பி.ஜெயராமன் உதவி – லட்சுமி நாராயணன்
எடிட்டிங் – ஆர்.தேவராஜன் உதவி – வி.பி.கிருஷ்ணன், சி.பழனி
ஒப்பனை – ஹரிபாபு, ஆர்.ரங்கசாமி, எம்.கே.சீனிவாசன், பீதாம்பரம், எஸ்.பார்த்தசாரதி உதவி – மணி, என்.ஏ.தாமோதரன்
ஆடை அலங்காரம் – எம்.ஜி.நாயுடு உதவி – மு.கணேசன், எல்.ராதா, ஏ.டி.சண்முகம்
தலை அலங்காரம் – ஜோஸஃபின்
அரங்க ஓவியம் – முத்து உதவி – என்.சுப்பய்யா, பி.சுப்பிரமணி
அரங்க நிர்மாணம் – ஏ.நாகரத்தினம் உதவி – டி.எஸ்.வெங்கடேசன்
சிற்ப வேலைப்பாடு – கே.ஜி. வேலுசாமி உதவி – பாட்சா
மின்சார மேற்பார்வை – வி.எஸ்.ராதாகிருஷ்ணன், வி.சந்திரன்
வர்ண ரசாயனம் – பிலிம் சென்டர் பம்பாய்
தயாரிப்பு நிர்வாகம் – பி.எஸ். சுப்ரமணியம்
அரங்க அலங்காரம் – எம்.சுப்ரமணியம், எஸ்.மணி
அரங்க அலங்காரப் பொருட்கள் – சினி கிராஃப்ட்ஸ், கிரி மியூஸியம்
புகைப்படம் – ஆர்.வெங்கடாச்சாரி
விளம்பர ஓவியம் – ஜி.ஹெச். ராவ்
விளம்பர நிர்வாகம் – அருணா & கோ.
அரங்க நிர்வாகம் - ஆர். பாலு உதவி – என்.வி.மூர்த்தி, டி.வெங்கடாச்சலம்
வில்வித்தை நிபுணர் – ராமமூர்த்தி
அணிகலன், ஒப்பனை சாதனங்கள் – கிரிஷ்கோ, கணேஷ் ஜுவல்லரி
துணிமணிகள் – இந்தியா சில்க் ஹவுஸ், ஸாரி சென்டர்
ஸ்டூடியோ – விஜயா, நிர்வாகம் – வீனஸ்-பத்மினி கம்பைன்ஸ்
உதவி டைரக்ஷன் – கே.சிங்கமுத்து, இரா.சண்முகம், பழ.செல்வராஜ்
RAGHAVENDRA
1st June 2014, 06:49 AM
கர்ணன் திரைக்காவியத்தில் இடம் பெற்ற பாடல்களின் விவரம்
https://i.ytimg.com/vi/Aa08VgC1YkE/hqdefault.jpg
1. மன்னவர் பொருள்களைக் கை கொண்டு நீட்டுவார் – டி.எம்.சௌந்தர்ராஜன்
2. என்னுயிர்த் தோழி – பி.சுசீலா
3. மழை கொடுக்கும் கொடையுமொரு – சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன்
4. என்ன கொடுப்பான் – பி.பி.ஸ்ரீநிவாஸ்
5. ஆயிரம் கரங்கள் நீட்டி – டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ், திருச்சி லோகநாதன்
6. கண்கள் எங்கே – பி.சுசீலா கோரஸ்
7. இரவும் நிலவும் வளரட்டுமே – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
8. கண்ணுக்கு குலமேது – பி.சுசீலா
9. போய் வா மகளே – சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
10. மஞ்சள் முகம் நிறம் மாறி – பி.சுசீலா கோரஸ்
11. மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா – சீர்காழி கோவிந்தராஜன்
12. உள்ளத்தில் நல்ல உள்ளம் – சீர்காழி கோவிந்தராஜன்
RAGHAVENDRA
1st June 2014, 06:54 AM
எத்தனை பக்கங்கள் எழுதினாலும் முடியாத இதிகாசங்களான மகாபாரதம், ராமாயணம் போன்று கர்ணன் திரைக்காவியமும் அதில் நடிகர் திலகம் நடிப்பும் சிறப்புப் பெற்றவை. கர்ணன் திரைக்காவியத்தின் சிறப்பைப் பற்றிச் சொல்வதற்கு மிகச் சிறந்த உதாரணம் 2012ம் ஆண்டு நவீன மயமாக்கலில் திரையிடப் பட்டு வரலாறு காணாத வெற்றியை அது பெற்றதேயாகும். கர்ணன் திரைப்படத்தின் மறு வெளியீடு மட்டுமின்றி முதல் வெளியீட்டில் அது பெற்ற வெற்றியைப் பற்றியும் ஆணித்தரமாக பம்மலார் எடுத்துரைத்திருந்தார். மேம்போக்கான வாதங்களை அர்த்தமில்லாததாக்கி விட்டு ஆசியாவிலேயே மிகப் பெரிய திரையரங்கமான மதுரை தங்கத்தில் 100 நாட்களுக்கு மேல் திரையிடப் பட்டு வசூல் சாதனை ஏற்படுத்தியது. எந்த பிரகஸ்பதியோ கர்ணன் முதல் வெளியீட்டில் சரியாகப் போகவில்லை என்று சொல்லி வைக்க அது அப்படியே காலம் காலமாய் பின்னால் வருபவர்களும் தொடர்ந்து சொல்லி வந்ததன் பலனாக கர்ணன் திரைப்படம் முதல் வெளியீட்டில் சரியாகப் போகவில்லை என்று ஒரு தவறான அபிப்ராயம் உருவாகி விட்டது. இதைப் பற்றியெல்லாம் விரிவான விவாதங்கள், நம்முடைய நடிகர் திலகம் திரியின் துணைத்திரியாக கர்ணன் திரைப்படத்தின் மறு வெளியீட்டின் போது துவங்கப் பட்டு அதில் இடம் பெற்றது. ஏராளமான ஆவணங்கள், தகவல்கள் என நம்முடைய நண்பர்களின் பங்களிப்புடன் பீடு நடை போட்டது.
நமது மதிப்பிற்குரிய மாடரேட்டர்கள் கர்ணன் திரைப்பட மறு வெளியீட்டினையொட்டி துவங்க்ப்பட்ட அத் திரியினை மீண்டும் நடிகர் திலகம் ஃபாரமில் இணைத்துத் தருமாறு வேண்டிக் கொள்கிறேன்.
RAGHAVENDRA
1st June 2014, 06:59 AM
பல பிரபல கர்நாடக இசைக் கலைஞர்களின் பங்களிப்பில் உருவாகியது கர்ணன் திரைக்காவியத்தின் இசையமைப்பு.
பிரபல ஷெனாய் மேதை உஸ்தாத் பிஸ்மில்லா கான் பங்கேற்று வாசித்த திரைக்காவியம் கர்ணன்.
மெல்லிசை மன்னரின் இசை வரலாற்றில் மிக மிக முக்கியமான திரைக்காவியம் கர்ணன். எத்தனையோ படங்களில் அவருக்கு பாடல்கள் பிரபலமாகியிருந்தாலும் அவருடைய இசை எல்லா வகையிலும் சிறப்பானது என்று நிரூபிக்க அவருக்கு ஒரு வாய்ப்பளித்த திரைக்காவியம் கர்ணன். கர்நாடக ஹிந்துஸ்தானி போன்ற சாஸ்த்ரீய சங்கீதங்களில் அவர்கள் சோபிக்க மாட்டார்கள் என்று விஸ்வநாதன் ராமமூர்த்தி மேல் இருந்த தவறான அபிப்ராயத்தை உடைத்தெறிந்து தாங்கள் எல்லா இசையிலும் வல்லவர்கள் என்று நிரூபித்துக் காட்ட வாய்ப்பளித்த திரைக்காவியம் கர்ணன்.
RAGHAVENDRA
1st June 2014, 07:05 AM
1964 - நடிகர் திலகத்தின் திரையுலக வரலாற்றில் மிகவும் குறிப்பிடத் தக்க ஆண்டுகளில் ஒன்று. ஏழு திரைக்காவியங்கள் அத்தனையும் உன்னதமானவை. இவையனைத்தும் இவ்வாண்டு 2014ல் பொன் விழாக் காணுகின்றன. கர்ணனில் தொடங்கி முரடன் முத்து வரையிலும் ஒவ்வொன்றிலும் மிக மிக வித்தியாசமான பாத்திரப் படைப்புகளுடன் நடிகர் திலகத்தின் தனித்துவம் வாய்ந்த, ஈடு இணையற்ற நடிப்பின் பல்வேறு பரிணாமங்களை வெளிப்படுத்தியவை.
கர்ணன்
பச்சை விளக்கு
ஆண்டவன் கட்டளை
கை கொடுத்த தெய்வம்
புதிய பறவை
முரடன் முத்து
நவராத்திரி
இவற்றில் இனி வரும் மாதங்களில் ஆண்டவன் கட்டளை தொடங்கி நவராத்திரி வரையிலும் நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பாக பொன்விழா கொண்டாடப்பட உள்ளன.
RAGHAVENDRA
1st June 2014, 07:08 AM
கோபால் சார்
கர்ணன் திரைக்காவியத்தைப் பற்றிய ஈடு இணையற்ற தங்கள் எழுத்துப் புலமையின் மூலம் பல்வேறு நுணுக்கமான விஷயங்களை தெரியப் படுத்தி அருமையாக அலசியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.
Russellisf
1st June 2014, 02:28 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zps89939747.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zps89939747.jpg.html)
Gopal.s
4th June 2014, 05:36 AM
தமிழுக்கும் ,தமிழருக்கும் பெருமை சேர்த்த உண்மை தமிழனை மறக்காமல் நினைவு கூர்ந்து,அளித்த அருமையான புகைப்பட பதிவுக்கு ,நெஞ்சார்ந்த நன்றிகள் யுகேஷ் பாபு அவர்களே.
RAGHAVENDRA
7th June 2014, 11:16 PM
Sivaji Ganesan Filmography Series
95. Pachhai Vilakku பச்சை விளக்கு
http://www.inbaminge.com/t/p/Pachai%20Vilakku/Pachai%20Vilakku.jpg
தயாரிப்பு – வேல் பிக்சர்ஸ்
ஏவி.எம்.ஸ்டூடியோவில் தயாரிக்கப் பட்டது
ஆர்சிஏ சவுண்ட் சிஸ்டத்தில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது.
திரைக்கதை இயக்கம் – ஏ.பீம்சிங்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஆர்.ராதா, எஸ்.வி.ரங்கா ராவ், தை.நாகேஷ், வி.நாகையா, ஏவி.எம்.ராஜன், ஸ்ரீராம், ஆர்.விஜயகுமாரி, சௌகார் ஜானகி, புஷ்பலதா, எஸ்.ஆர்.ஜானகி,.ராதா பாய், மிஸஸ்.ஜீன்ஸ் மற்றும் பலர்.
மூலக்கதை ஜி.கே.சூரியம்
வசனம் இராம. அரங்கண்ணல், கோ.இறைமுடிமணி
பாடல்கள் கவிஞர் கண்ணதாசன், உதவி பஞ்சு அருணாச்சலம்
பாடியவர்கள் டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, பி.பி.ஸ்ரீநிவாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி
நடன அமைப்பு – சின்னி சம்பத்
ஒளிப்பதிவு – ஜி.விட்டல் ராவ்
ஒளிப்பதிவு உதவி – டி.பாலகிருஷ்ணன். ஆர்எம்.சேது
ஒலிப்பதிவு – ஜே.ஜே. மாணிக்கம், வி.எஸ்.எம்.கோபால் ராம். உதவி கே.சம்பத், ஜி.வி. ராம மூர்த்தி
ஸ்டில்ஸ் சி.பத்மநாபன்
விளம்பரம் ஜி.ஹெச்.ராவ்
கலை ஏ.கே. சேகர்
செட்டிங்ஸ் எஸ். ஆறுமுக ஆச்சாரி, வி.நாகன் ஆச்சாரி
ப்ராஸ்ஸிங் சர்தூல் சிங் சேத்தி
எடிட்டிங் மேற்பார்வை – ஏ.பீம்சிங்
எடிட்டிங் ஏ. பால்துரைசிங்கம், ஆர்.திருமலை
மேக்கப் ராமச்சந்திரன், ரங்கசாமி, சக்கரபாணி, கஜபதி, சுந்தரம், ராமசாமி, வீர்ராஜ், கிருஷ்ணராஜ், டி.எம்.ராமச்சந்திரன்
உடைகள் பி.ராமகிருஷ்ணன், ஏ.ராமசாமி
புரொடக்ஷன் நிர்வாகம்- டி.எஸ்.ஆதிநாராயணன்
தயாரிப்பு – இராம. அரங்கண்ணல், ஏ.ஆர்.ஹஸேன் கான், டி.எஸ்.ஆதிநாராயணன்
ஸ்டூடியோ – ஏவி.எம்.ஸ்டூடியோ, சென்னை
உதவி டைரக்ஷன் – ஆர்.திருமலை, எஸ்.ராமநாதன், ஜி.எஸ்.மகாலிங்கம், எஸ்.எஸ்.தேவதாஸ், சுல்தான், ஏ.ஹுசேன்
இசையமைப்பு – மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – ராம மூர்த்தி. உதவி கோவர்த்தனம் ஹென்றி டேனியல்
RAGHAVENDRA
7th June 2014, 11:16 PM
காணொளிகள்
ஒளி மயமான எதிர்காலம்
http://youtu.be/poT0x6TjfQY
குத்து விளக்கெரிய
http://youtu.be/PejciwjAxQg
கன்னி வேண்டுமா
http://youtu.be/HRI63ioB1SA
கேள்வி பிறந்த்து அன்று
http://youtu.be/SIySsgAF970
தூது சொல்ல ஒரு தோழி
http://youtu.be/wUh5dxStGoU
அவள் மெல்ல சிரித்தாள்
http://youtu.be/6YWrochoxUA
eehaiupehazij
10th June 2014, 08:41 PM
Amazing Gopal Sir. Out of curiosity I have been going through all your write-ups one by one. Raghavendra sir and Murali sir's too. Earlier I had browsed some of Pammalar sir's write-ups, data and informations. Gopal Sir. These words come deep from my heart. Gopal-Raghavendra-Murali Srinivas combo will work out wonders if the materials are properly concocted with little bit of cutting and pruning. What a fantastic presentation that might have taken a lot of turmoil and painstaking efforts in collecting authentic information, processing them and preparing the output material for end users! NT during his lifetime had missed these monumental write-ups but you three doyens in tandem have showered tributes to the soul of acting in an incomparable manner. These write-ups are 'Pokkishams' to all hardcore NT fans and ....hats off sirs. Emulating the template set up by you, triumvirate of NT's name and fame messengers' we are motivated to contribute at least a 10 percent of what you have achieved.
joe
10th June 2014, 09:46 PM
பச்சை விளக்கு -ம் நானும்
http://cdjm.blogspot.sg/2005/10/blog-post.html
Russellisf
10th June 2014, 09:58 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/t_zps5b7973b1.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/t_zps5b7973b1.jpg.html)
படமும் - தகவலும்
--------------------------------
ஜெமினி கணேசன்
அவர்களுடன் நான் கொடைக்கானலில் 20 தினங்கள் தங்கி இருந்தேன். சென்னை வீட்டிலிருந்து அவருக்கு அழைப்பு வந்தவுடன், மதுரை விமான நிலையத்திற்கு திரும்பினோம்.
அங்கே முக்கியஸ்தர் அறையில் நுழைந்தவுடன் , அங்கே ஏற்கனவே வந்து அமர்ந்திருந்த நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் ஜெமினியை பார்த்தவுடன் "வாங்க மாப்பிள்ளே" என்று , சிரித்துகொண்டே........ தான் செல்லமாக வளர்க்கும் ,தாடியை தடவியவாறு, தன் அருகே அமரசொன்னார். .. நானும் என் பங்குக்கு சிவாஜியை பார்த்து, "வணக்கம் அண்ணே" என்றவாறு , அவர் அருகில் அமர்ந்தேன். அப்போது சிவாஜியுடன் வி.என்.சிதம்பரமும் கூட இருந்தார்.
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை இருந்தது. சிவாஜியுடன் எத்தனையோ போட்டோக்கள் எடுத்திருந்தாலும், சிவாஜி தாடி வைத்த கெட்டப்பில் ஒரு போட்டோவும் நான் எடுத்துகொண்டதில்லை. இதை விட ஒரு வாய்ப்பு கிடைப்பது அரிது என்று நினைத்த நான்,, அருகிலிருந்த வி.என்.சிதம்பரம் அவர்களிடம் என் சிறிய கேமராவை கொடுத்து சிவாஜி, ஜெமினி ஆகியோருடன் நான் அமர்ந்திருக்கும் காட்சியை படம் எடுக்க சொன்னேன். அவரும் படம் எடுத்து என் ஆசையை நிறைவேற்றினார்..
அப்போது விமான நிலைய அறிவிப்பு ஒன்று......சென்னை செல்லும் விமானம் ஒரு மணி நேரம் தாமதமாகும் என்றார்கள். சிவாஜி, ஜெமினி மிகவும் நொந்தவாறே , அங்கு கொடுத்த சிற்றுண்டி மெதுவாக சாப்பிட்டுக்கொண்டே அரசியல், சினிமா என்று அனைத்து விசயங்களையும் மனம் திறந்து பேசினார்கள். இடை இடையே நானும் கலந்துகொண்டேன்,. இருவருக்குமே நல்ல அரசியல் விஷயங்கள் ஏராளமாக தெரிந்து உள்ளன... ஆனால் .சிவாஜிக்கு அரசியல் ஒத்துவரவில்லை. ஜெமினியோ அதற்குள் நுழையவே இல்லை..
பத்திரிகையாளனாக நான் இருந்தும் அங்கு நடந்த உரையாடல்களை நான் வெளியே விடவில்லை....ஏனெனில், ..அது தான் நட்பு.!!! எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்courtesy net
Russellisf
10th June 2014, 10:45 PM
1986-ம் ஆண்டு தீபாவளிக்கு "பாலைவன ரோஜாக்கள்'', "விடிஞ்சா கல்யாணம்'' இரண்டு படங்களும் ரிலீசாயின. ஒரு ஹீரோவின் படம், ஒரே நேரத்தில் இப்படி பண்டிகை நாளில் ரிசீலானது இதற்கு முன்பு சிவாஜி சாருக்குத்தான் நடந்தது.
1970-ம் ஆண்டு தீபாவளிக்கு சிவாஜி சார் நடித்த "சொர்க்கம்'', "எங்கிருந்தோ வந்தாள்'' ஆகிய இரண்டு படங்களும் ரிலீசாயின. இரண்டுமே வெற்றி பெற்றன. 16 வருடம் கழித்து, இப்படி தீபாவளி தினத்தில் வெளியான என் படங்களும் வெற்றி பெற்று எனக்கு மகிழ்ச்சி தந்தன.
மலையாளத்தில் மம்முட்டி நடித்து வெற்றி பெற்ற படம்தான் தமிழில் "பாலைவன ரோஜாக்கள்'' என்ற பெயரில் ரீமேக் ஆனது. அது மாதிரி தமிழில் நான் நடித்த "பூவிழி வாசலிலே'', "கடமை கண்ணியம் கட்டுப்பாடு'' படங்களும் மலையாளத்தின் சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்த படங்களின் ரீமேக்தான்.
"மக்கள் என் பக்கம்'', "அண்ணா நகர் முதல் தெரு'', "பொம்முகுட்டி அம்மாவுக்கு'' என்று எனக்கு தொடர் வெற்றி தந்த படங்களும், மலையாள படங்களின் ரீமேக்தான். இந்த மூன்று படங்களிலும் மலையாளத்தின் இன்னொரு சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்திருந்தார்.
இதை நான் நன்றிப் பெருக்கோடு சொல்லக் காரணம் உண்டு. இந் தப் படங்களில் மாறுபட்ட சவாலான கேரக்டர்கள் எனக்குக் கிடைத்தன. இந்தப் படங்கள் என் ஹீரோ அந்தஸ்தை தக்க வைக்கவும் உதவின.
"பாலைவன ரோஜாக்கள்'' படத்தை அடுத்து, நானும் பிரபுவும் சேர்ந்து நடித்த படம் "சின்னதம்பி பெரியதம்பி.'' நண்பர் மணிவண்ணன்தான் இயக்கினார். படத்தை தயாரித்தவர் அண்ணன் `மாதம்பட்டி' சிவகுமார்.
வழக்கமாக அவுட்டோர் படப்பிடிப்பு என்றால், ஓட்டலில்தான் தங்குவேன். இந்தப் படத்துக்காக அண்ணன் மாதம்பட்டி சிவகுமார் வீட்டிலேயே மொத்த யூனிட்டும் தங்கிக் கொண்டோம். அந்த அளவுக்கு கடல் மாதிரி பரந்து விரிந்தது அவர் வீடு. நான், பிரபு, கேமராமேன் சபாபதி, டைரக்டர் மணிவண்ணன் ஒரே ரூமில் தங்கிக் கொண்டோம். காலை முழுக்க படப்பிடிப்பு; மாலையானால் கிரிக்கெட், டேபிள் டென்னிஸ் என்று ஒட்டுமொத்த யூனிட்டும் விளையாட்டு வீரர்களாகி விடுவோம். இரவானால் மாதம்பட்டி சிவகுமார் அண்ணனும், பிரபுவும் வேட்டைக்கு கிளம்பி விடுவார்கள்.
மாதம்பட்டி அண்ணன் வீட்டில், அப்போது யானை வேட்டைக்கு பயன்படுத்துகிற துப்பாக்கி உள்பட விதம் விதமான துப்பாக்கிகள் இருந்தன. வேட்டையாட தடை வந்த நேரத்தில், எல்லா ரக துப்பாக்கிகளையும் மொத்தமாக சரண்டர் பண்ணிவிட்டார். இப்படி ஆட்டம், கொண்டாட்டம் என்று ஒரே குடும்பம் போல பணியாற்றிய அந்தப் படமும் வெற்றி பெற்றது.
இதையடுத்து சிவாஜி சாருடன் "முத்துக்கள் மூன்று'' படம் வந்தது. இந்தப் படத்தில், சிவாஜி சாருடன் நானும் பாண்டியராஜனும் மற்ற 2 ஹீரோக்கள். படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 1-ந்தேதி குன்னூரில் தொடங்கியது. அன்று சிவாஜி சாரின் பிறந்த நாள். அதற்கு அடுத்த நாள் 2-ந்தேதி பாண்டியராஜனின் பிறந்த நாள். மறுநாள் 3-ந்தேதி என் பிறந்தநாள்! தொடர்ந்து மூன்று நாட்கள் படப்பிடிப்புடன் பிறந்த நாள் கொண்டாட்டமும் தொடர்ந்தது!
இந்த படப்பிடிப்பின் போது சிவாஜி சாருக்கு பக்கத்து ரூமை எனக்கு கொடுத் திருந்தார்கள். நான் காலையில் விழித்ததும் தண்டால், பஸ்கி போன்ற உடற்பயிற்சிகளை முடித்த கையோடு, `ஸ்கிப்பிங்'கும் செய்வேன். கயிற்றை கழற்றியபடி 2 ஆயிரம் தடவை தொடர்ந்து குதிப்பேன். அதன்படி, ரூமிலும் இந்தப் பயிற்சியை தொடர்ந்தேன். இதில் `ஸ்கிப்பிங்' குதியல் மட்டும் பக்கத்து ரூமில் தங்கியிருந்த சிவாஜி சாருக்கு `திங்... திங்...' என்று கேட்டிருக்கிறது.
கொஞ்ச நேரத்தில் பக்கத்து அறையில் இருந்து போன். எடுத்துப் பேசினால் பிரபு லைனில் வந்திருக்கிறார். "என்ன தலைவரே! ஸ்கிப்பிங் பண்றீங்களோ?'' என்று கேட்டார். "ஆமாம்'' என்றேன்.
"நீங்க குதிக்கிற சத்தம் அப்பாவுக்கு கேட்டிருக்கிறது. அப்பா எனக்குபோன் போட்டு, "சத்யராஜ் எவ்வளவு பொறுப்பா உடற்பயிற்சியெல்லாம் பண்றார். நீயும் ஏதாவது உடற்பயிற்சி செய்வதுதானே!'' என்று கேட்கிறார்'' என்றார்.
எனக்கு பாராட்டு. பிரபுவுக்கு அட்வைஸ். சிவாஜி சாரின் `பார்வை' சரிதானே!''
இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
RAGHAVENDRA
12th June 2014, 06:06 AM
நடிகர் திலகத்தின் நிழற்படத்திற்கும் தகவல்களுக்கும் மிக்க நன்றி யுகேஷ் பாபு சார்.
RAGHAVENDRA
12th June 2014, 06:06 AM
Sivaji Ganesan Filmography Series
http://img359.imageshack.us/img359/4663/snapshot20070907162345xq7.jpg
96. Andavan Kattalai ஆண்டவன் கட்டளை
12.06.1964 அன்று வெளியாகி (12.-06-2014) 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் இன்றைய நாளில் ஆண்டவன் கட்டளை திரைப்படத்தைப் பற்றிய தகவல்கள் பதிவிடுவது மிகவும் பொருத்தமாகவும் மனமகிழ்ச்சியாகவும் உள்ளது. என் பட்டியலில் முதல் பத்தில் இடம் பெறக் கூடிய நடிகர் திலகத்தின் இத்திரைக்காவியம் என்றென்றும் என்னைப் போன்ற ஒவ்வொரு சிவாஜி ரசிகர் நெஞ்சிலும் நிலைத்திருக்கும் வெற்றித் திரைக்காவியம்.
வெளியீடு – 12.06.1964
தயாரிப்பு – பி.எஸ்.வி.பிக்சர்ஸ்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தேவிகா. சந்திரபாபு, அசோகன், பாலாஜி, ராஜன், புஷ்பலதா, சுந்தரிபாய், சீதாலட்சுமி, பேபி ரமாமணி மற்றும் பலர்
கௌரவ நடிகர்கள் – பி.எஸ்.வீரப்பா, ஜாவர் சீதாராமன், வி.நாகையா
மூலக்கதை – கே.பி. கொட்டாரக்கரா
திரைக்கதை வசனம் – ஜாவர் சீதாராமன்
பாடல்கள் – கவிஞர் கண்ணதாசன்
இசை – மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்- ராமமூர்த்தி, உதவி – ஆர்.கோவர்த்தனம், ஹென்றி டேனியல்
பின்னணி பாடியவர்கள் – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, பி.பி.ஸ்ரீநிவாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி
எடிட்டிங் கே.நாராயணன், உதவி – எஸ்.முத்து, எஸ்.நீலகண்டன், கே.மோஹன்
ஒளிப்பதிவு டைரக்ஷன் – தம்பு
ஆபரேடிவ் கேமிராமேன் – கே.எஸ்.பாஸ்கர் ராவ்
ஒலிப்பதிவு பாடல்கள் – டி.எஸ்.ரங்கசாமி, உதவி – ஆர்.எஸ்.வேத மூர்த்தி, ஜோ.அலோஷியஸ்
ஒலிப்பதிவு வசனம் – பி.எம்.மதன கோபால் – வாஹினி, முகுந்தன்-சினி சவுண்டு சர்வீஸ்
கலை – ஏ.பாலு
நடனம் – ராஜ்குமார்
மேக்கப் – ரங்கசாமி, பத்ரையா, ராமச்சந்திரன், கிருஷ்ணராஜ், ராஜேந்திரன்
உடைகள் – பி.ராமகிருஷ்ணன், உதவி- மணி, ராஜ்
ஸ்டில்ஸ் – சாரதி
விளம்பரம் – அருணா அண்ட் கோ
டிசைன்ஸ் – பக்தா
புரொடக்ஷன் நிர்வாகம் – எஸ். கிருஷ்ணமூர்த்தி, சி.கிருஷ்ணன்
அசோஸியேட் டைரக்ஷன் – ரா.சங்கரன், நாமக்கல் ரா. பாலு, உதவி – தாமோதரன்
ஸ்டூடியோ – வாஹினி
தயாரிப்பு – பி.எஸ்.வீரப்பா- பி.எஸ்.வி. பிக்சர்ஸ்
டைரக்ஷன் – கே.சங்கர்
RAGHAVENDRA
12th June 2014, 06:07 AM
பாடல்கள்
1. கண்ணிரண்டும் மின்ன மின்ன – பி.பி.ஸ்ரீநிவாசன், எல்.ஆர்.ஈஸ்வரி
2. அழகே வா அருகே வா – பி.சுசீலா
3. அமைதியான நதியினிலே – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
4. ஆறு மனமே ஆறு – டி.எம்.சௌந்தர்ராஜன்
5. சிரிப்பு வருது சிரிப்பு வருது – ஜே.பி.சந்திரபாபு
6. தென்னை இளங்கீற்றினிலே – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
RAGHAVENDRA
12th June 2014, 06:08 AM
பம்மலாரின் ஆவணப் பொக்கிஷத்திலிருந்து
பொக்கிஷப் புதையல் : படப்பிடிப்புக் கட்டுரை
வரலாற்று ஆவணம் : இந்தியன் மூவி நியூஸ்(IMN) [சிங்கப்பூர்] : ஆகஸ்ட் 1964
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6060-1.jpg
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6061-1.jpg
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6062-1.jpg
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6061-1.jpg
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6062-1.jpg
இந்தியன் மூவி நியூஸ் [IMN, சிங்கப்பூர்] : ஆகஸ்ட் 1964
இந்த கிடைத்தற்கரிய ஆவணப்பதிவை அருமைச் சகோதரர் mr_karthik அவர்களுக்கு Dedicate செய்கிறேன்..!
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6116-1.jpg
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6117-1.jpg
RAGHAVENDRA
12th June 2014, 06:11 AM
ஆண்டவன் கட்டளை பாட்டுப் புத்தகத்தின் முகப்பு
http://nadigarthilagam.com/songbookcovers/andavankattalaisbc.jpg
RAGHAVENDRA
12th June 2014, 06:11 AM
பாடல் காட்சிகள்
ஆறு மனமே ஆறு
aru maname aru
http://youtu.be/G97Q6mVk4yc
அமைதியான நதியினிலே ஓடம்
amaidhiyana nadhiyinile
http://youtu.be/MHlEb86ZngQ
அழகே வா அருகே வா
azhage vaa
http://youtu.be/dAP0nlUVqjI
தென்னை இளங்கீற்றினிலே
Thennai Ilankaatrinile
http://youtu.be/RBpUtToZllI
சிரிப்பு வருது சிரிப்பு வருது
sirippu varudhu
http://youtu.be/9WV0EAxmv80
கண்ணிரண்டும் மின்ன மின்ன
kannirandum minna minna
http://youtu.be/68qHlhc9xeE
RAGHAVENDRA
12th June 2014, 06:12 AM
ஆண்டவன் கட்டளை திரைக்காவியத்தைப் பற்றி முரளி சாரின் அருமையான கட்டுரையின் மீள்பதிவு
கட்டுரையின் பாகம் 1க்கான இணைப்பு
http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5&p=357900&viewfull=1#post357900
15th January 2009, 02:01 PM
ஆண்டவன் கட்டளை - Part I
தயாரிப்பு - பி.எஸ்.வி. பிக்சர்ஸ்
இயக்கம் - கே. சங்கர்
வெளியான தேதி - 12.06.1964
கொண்ட கொள்கையில் உறுதியாக, கடமையே வெற்றிக்கு வழி என்று வாழும் ஒரு மனிதன் உணர்வுகளுக்கு அடிமையானால் அவனது வாழ்க்கை எந்தளவிற்கு திசை மாறி, நிலை தடுமாறி போகும் என்பதை திரையில் வடித்த படம்.
கல்லூரி பேராசிரியர் கிருஷ்ணன் வாழ்கையை ஒரு கட்டுப்பாடோடு வாழ்பவர். டிசிப்ளின் என்ற வார்த்தையின் மறு உருவம். அவர் கடையை கடந்து போகும்போது கடை முதலாளி கடிகாரத்தில் நேரத்தை சரி பண்ணி வைத்து கொள்ளக்கூடிய அளவிற்கு, அவர் சாலையை கடக்கும் போது போக்குவரத்து போலீஸ் டிராபிக்-ஐ நிறுத்த கூடியளவிற்கு பெர்பெக்ட்.
தான் மட்டுமல்ல தன் மாணவர்கள் அனைவரும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர். திறமையுள்ள மாணவன் கல்லூரி கட்டணம் செலுத்த பணமில்லாமல் ஹோட்டலில் வேலை பார்ப்பதை பார்த்து விட்டு தானே பணம் கட்டி படிக்க வைக்கும் அளவிற்கு நல்ல மனம் படைத்தவர். அவரின் குணங்களினால் கவரப்பட்ட பெரும்பான்மை மாணவர்கள் அவர் மேல் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள்.
ஊரில் அவரது தாய் மட்டும் தன் பேத்தியுடன் வசித்து வர, மாதம் ஒரு முறை தன் தாயை பார்க்க செல்வார் கிருஷ்ணன். செல்லும் போதெல்லாம் முறை பெண்ணை மணந்து கொள்ள சொல்லும் தாயை சமாளிப்பதே பெரிய வேலை. பிரம்மச்சரியத்தை முழுமையாக கடைப்பிடித்து கடமையே வெற்றிக்கு வழி என்பதை தாரக மந்திரமாக கொண்டு வாழ நினைக்கும் கிருஷ்ணன் திருமணத்தை விரும்பவில்லை. முறைப்பெண்ணும் (கோமதி) நகரத்தில் சந்தித்த ராமு என்ற இளைஞனை (கிருஷ்ணன் படிக்க வைக்கும் அதே இளைஞன்) காதலிக்கிறாள்.
அதே கல்லூரியில் படிக்கும் பெண் ராதா. அவளின் தாய் மாமன் மணி அந்த கல்லூரியில் ஸ்போர்ட்ஸ் மாஸ்டர். அவர் தன் பதவியை பயன்படுத்தி சில பல ஊழல்கள் செய்கிறார். ஆனால் தாய் மட்டுமே உள்ள ராதாவிற்கு தாய் மாமன் தயவில் வாழ வேண்டிய நிலைமை. மணிக்கு, கல்லூரியிலும் மாணவர்கள் மத்தியிலும் கிருஷ்ணனுக்கு இருக்கும் நல்ல பெயரை பார்த்து பொறாமையாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இவரின் சில தவறுகளை கிருஷ்ணன் பப்ளிக்காக சுட்டிக்காட்டுவதால் அந்த வெறுப்பு கூடுகிறது.
பெண் வாசனையே இல்லாமல் வாழும் கிருஷ்ணன் ஒரு முறை லேடீஸ் ஹாஸ்டலுக்கு போக அங்கே விளக்கு அணைக்கப்படுவதால் நாடக ஒத்திகையில் ஈடுபட்டிருக்கும் ராதா, கிருஷ்ணனை கட்டிப்பிடித்துக்கொள்ள முதல் முதலாக அனுபவிக்கும் பெண் ஸ்பரிசம் கிருஷ்ணனை சிறிது நிலை குலைய வைக்கிறது. கிருஷ்ணனை எந்த பெண்ணாலும் வீழ்த்த முடியாது என்று சக மாணவிகள் சொல்ல அதை ஒரு சவாலாக எடுத்து கொள்கிறாள் ராதா. அதன் பிறகு அவளது நடவடிக்கைகளில் மாற்றம். கிருஷ்ணனை கவர அவள் பல வழிகளை பயன்படுத்த அவர் மனதில் ஏற்படும் சலனம் கொஞ்சம் கொஞ்சமாக அவரது மனதை மாற்றி இறுதியில் அவரும் காதலிக்க தொடங்கி விடுகிறார். இது தெரிந்து மணி அவரை கல்லூரியில் அனைவருக்கும் முன்பில் அவமானப்படுத்தி விடுகிறான். அதுவரை கௌரவமாக வாழ்ந்த கிருஷ்ணன் வாழ்க்கையில் சறுக்கல்கள். ராதாவை கல்யாணம் செய்து கொள்ள விரும்பி வீட்டிற்கு வரும் கிருஷ்ணனிடம் சரி என்று ஒப்பு கொள்ளும் ராதாவின் தாயார் ஆனால் மனதுக்குள் வேறு திட்டம் போடுகிறாள்.
இதனிடையே ராதாவிற்கு வேறு கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்யும் குடும்பத்தினர் ஒரு சுரங்கத்தில் என்ஜினீயர் வேலை செய்யும் சங்கர் என்பவரை தேர்வு செய்கிறார்கள். அவர் மனைவியை இழந்து ஒரு குழந்தையுடன் வாழ்கிறார். கல்யாணத்திற்கு ஒப்பு கொள்ள மறுக்கும் ராதா, கிருஷ்ணனை சந்தித்து கல்யாணம் செய்து கொள்ள போகும் நேரம் ஏற்படும் படகு விபத்து அவர்களது வாழ்க்கையை திசை திருப்புகிறது. ராதாவை கொன்று விட்டதாக கிருஷ்ணன் கைது செய்யப்பட்டு அவருக்கு சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. மகன் கொலை குற்றவாளி என்று தெரிந்ததும் அவரை காண வரும் தாயும் அங்கே உயிரை விட அனாதை ஆகிறார் கிருஷ்ணன்.
தண்டனை காலம் முடிந்து வரும் கிருஷ்ணனை வரவேற்க யாரும் இல்லை. அவர் வளர்த்த நாயும் அவரை காப்பாற்றும் முயற்சியில் இறந்து போக கிட்டதட்ட ஒரு துறவு நிலைக்கு போய் விடுகிறார். அப்படியே அலைந்து திரியும் அவரை அவரது பழைய மாணவன் சந்திக்கிறான். இப்போது அவருடன் அவரது அக்கா மகள் கூட இருக்கிறாள். அவர்கள் சென்று வேலை தேடும் இடம் ஒரு சுரங்கம். அங்கே தலைமை பொறுப்பில் இருப்பவர் சங்கர்.
இதனிடையே தண்ணீரில் வீழ்ந்த ராதா காப்பாற்றப்பட்டு, அந்த எஞ்சினியர் சங்கர் வீட்டில் இருக்கிறாள். ஆனால் அம்னீஷியா பாதிக்கப்பட்ட அவளுக்கு பழைய நினைவுகள் ஞாபகம் இல்லை. இந்த நிலையில் ராதா - கிருஷ்ணன் சந்திப்பு நிகழ்கிறது. ராதாவை பார்க்கும் கிருஷ்ணனுக்கு திகைப்பு, ஆச்சர்யம், கோவம் எல்லாம் ஏற்படுகிறது. ஆனால் ராதாவிற்கு எதுவும் நினைவில்லை. இதனிடையே ராமு அந்த சுரங்கத்திற்கே எஞ்சினியராக வந்து சேருகிறான். எப்படி அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வருகின்றன என்பதே கிளைமாக்ஸ்.
(தொடரும்)
அன்புடன்
பாகம் 2க்கான இணைப்பு
http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5&p=357902&viewfull=1#post357902
15th January 2009, 02:05 PM
ஆண்டவன் கட்டளை - Part II
இந்த படத்தை பொருத்த வரை ஆலய மணி என்ற வெற்றிப்படத்தை தொடர்ந்து நடிகர் திலகம் - பி.எஸ்.வீரப்பா - கே.சங்கர் கூட்டணியில் வெளி வந்த அடுத்த படம்.
இந்த படத்தில் நடிகர் திலகத்தின் கதாபாத்திரத்தின் தன்மை மாறும்போதெல்லாம் அவரின் கெட் அப் மற்றும் ஹேர் ஸ்டைல் மாறுவது குறிப்பிட வேண்டிய விஷயம். கடமை உணர்வோடு வாழும் புரொபெஸராக வரும் போது நடு வகிடு எடுத்த ஹேர் ஸ்டைல். காதல் வயப்படும் போது அழகான ஹேர் ஸ்டைல் (புதிய பறவையில் பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலில் வரும் அதே ஸ்டைல்), குற்றவாளியாக ஜெயிலில் இருக்கும் போது நெற்றியில் முடி வழியும் ஸ்டைல், துறவு போன்ற நிலையில் மொட்டை அடித்தது போன்ற ஸ்டைல். இப்படி அடுக்கி கொண்டே போகலாம். கெட் அப் மற்றும் ஹேர் ஸ்டைல் போன்றவையே இப்படி என்றால், நடிப்பை பற்றி சொல்லவும் வேண்டுமா?
புரொபஸர் வகுப்பு எடுக்கும் ஸ்டைலே தனி. ஜுலியஸ் சீசர் பற்றி அவர் விளக்குவது, எப்படி came, saw, conquered ("vili,vidi,vitti "- Prabhu, correct-aa?) சீசருக்கு மட்டுமே பொருந்தும் அதை ஆண்டனிக்கு உவமைப்படுத்துவது தவறு என்று சுட்டிக்காட்டும் விதம், சாக்ரடீஸ் பற்றி எடுக்கும் லெக்சர், (Those who cannot obey cannot command என்று மாணவனை அடக்குவது) எல்லாமே ஒரு கண்டிப்பான புரொபஸரை கண் முன்னே நிறுத்தும். அதே மனிதன் மெல்லிய ஆனால் வலிமையான உணர்வுகளால் சலனப்படும்போது எப்படி மாறுவான் என்பதை எவ்வளவு அழகாக வெளிப்படுத்துகிறார். ஹாஸ்டல் நிகழ்ச்சி மனதை அலைக்கழிக்க, வீட்டில் இருக்கும் விவேகானந்தர், ராமகிருஷ்ணர் படங்களை பார்த்தும், புத்தகத்தை படித்தும் மனத்தை அமைதிப்படுத்துவது, மழை காரணமாக ராதாவுடன் ஏற்படும் ஒரு நிமிட நெருக்கம், அதை உணர்ந்தவுடன் curse the rain என்று கத்தி விட்டு பிறகு தவறு தன் மீது தான் என்று உணர்ந்ததும் bless the rain என்று சொல்லி விட்டு போவது, வகுப்பறையில் பாடம் எடுக்க முடியாமல் திணறுவது, ராதாவின் தாயார் கேட்கும் பணத்திற்காக சேட் கடையில் பணம் வாங்கும் போது அங்கு வேலை செய்யும் தன் ஊர்க்காரனை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் திரும்பவது, கடைக்கு வெளியே சந்திக்கும் ராமுவையும் ஒரு வார்த்தை கூட பேசாமல் தவிர்ப்பது, எல்லாம் துறந்த மன நிலையை வெளிபடுத்தும் அந்த நடை, அந்த பாடி லாங்க்வேஜ், வேலைக்கு சென்ற இடத்தில் சந்திக்கும் ராதாவிற்கு தன்னை தெரியவில்லை என்றவுடன் ஏற்படும் அந்த ஷாக், இவை எல்லாமே ஒன்றை ஒன்று வெல்லக் கூடியவை.
ஒவ்வொரு காட்சியையும் எவ்வளவு நுட்பமாக கவனித்து செய்வார் நடிகர் திலகம் என்பதற்கு இந்த படத்தில் வரும் இரண்டு காட்சிகள் போதும். பூங்காவில் மழையில் திடீரென்று ஏற்படும் இடி மின்னல் காரணமாக தன்னை அணைத்து கொள்ளும் ராதாவை அவரும் அணைத்து கொள்ள தேவிகா சொல்லும் வசனம் "மழை அழகா இருக்குலே". அதற்கு அவர் சொல்லும் பதில் "வானம் என்ற தந்தை பூமி என்ற அன்னையை அணைக்கும் காட்சி தானே மழை". இதை இரண்டாம் முறையும் சொல்லுவார். வசனத்தை அவர் சொல்லும் போது சிறிது blurred ஆக கேட்கும். அதாவது மழை கொட்டிக்கொண்டிருக்கும் போது நாம் ஏதாவது பேசினால் அது தெளிவாக அடுத்தவர் காதுக்கு விழாது. அதை அத்தனை நுட்பமாக செய்திருப்பார். [நண்பர் பிரபு ராம் பாணியில் சொல்வதென்றால் நேரொலியில் பேசியிருந்தால் அற்புதம். டப்பிங்கில் பேசியிருந்தால் அதி அற்புதம்]. மற்றொன்று எல்லோருக்கும் தெரிந்தது. ஆறு மனமே ஆறு பாட்டின் முடிவில் கடலையை ஊதி வாயில் போட்டுக்கொண்டே வரும் நடை (அந்த நீளமான நடையை ஒரே ஷாட்டில் எடுத்திருப்பார்கள்). அது போல அழகே வா அருகே வா பாட்டில் அவர் முகத்தை பார்த்தாலே அந்த பாத்திரம் அனுபவிக்கும் பல்வேறு உணர்வுகளும் அப்படியே வெளிப்படும். ரசிகர்களுக்காகவே சில ஸ்டைல் நடைகள், அமைதியான நதியினிலே ஓடம் பாட்டிலும் அது தூக்கலாக இருக்கும்.
ஜெயிலில் நடக்கும் தாய் மகன் சந்திப்பையும் சொல்ல வேண்டும். தன் மகன் கொலைகாரன் என்று கேள்விப்பட்டவுடன் அவன் மீது வைத்திருந்த நம்பிக்கை எல்லாம் போய் அவனை சபித்து உயிர் விடும் தாய், தான் நிரபராதி என்பதை தன் தாய் கூட நம்பவில்லையே என்று கதறும் மகன், கல்லூரி மைதானத்தில் அனைத்து மாணவர்களுக்கு முன்பில் அவமானப்படும் புரொபஸர், இந்த இரண்டும் குறிப்பிடத்தக்க காட்சிகள்.
தேவிகாவிற்கு ரொமான்ஸ் நன்றாக வரும் என்பது தெரியும். [பாலிருக்கும் பாடல், நான் என்ன சொல்லி விட்டேன் பாடல்,மடி மீது தலை வைத்து பாடல், கர்ணன் படத்தில் முதல் சந்திப்பு, கண்கள் எங்கே மற்றும் இரவும் நிலவும் பாடல், நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் பாடல் மற்றும் நீலவானம் படம்].
ஆனால் இந்த படத்தில் தேவிகா பிரமாதப்படுத்தியிருக்கிறார். முதலில் சாதாரணமாக வருபவர் ஒரு seductress பாத்திரத்தை செம்மையாக செய்திருக்கிறார். கிளாஸில் பாடம் நடத்தும் புரொபஸரை பார்க்கும் அந்த பார்வை, நமது மனதில் இருக்கும் நமது எதிரிகளான நுட்பமான உணர்வுகளை வெல்ல வேண்டும் என்று சொல்லும் புரொபஸரிடம் தனியாக வந்து அது என்ன என்று அப்பாவி போல கேட்பது, அழகே வா பாடலில் அந்த கடலில் குளித்து கொண்டே அவர் செய்யும் movements, புரொபஸர் தன்னை அனைத்துக்கொண்டதை ரசித்து கொண்டே கையை எடுக்கிறீங்களா என்பது, I am sorry என்று சொல்பவரிடம் But,I am not sorry என்று சொல்வது, what do you mean என்று அவர் கோபப்பட, இதுக்கெல்லாம் எப்படி சார் meaning சொல்றது என்று முகத்தில் வழியும் நீரை அவர் மீது செல்லமாக விசிறி விட்டு செல்வது - தேவிகாவிடம் இவ்வளவு காதல் குறும்பு நரம்புகளா என்று வியப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை. இடைவேளைக்கு பிறகு அவருக்கு அவ்வளவாக வேலை இல்லை.
மற்ற காரக்டர்கள் எல்லாம் படத்திற்கு உதவி செய்பவை. ஆனால் முழு நீள பாத்திரங்கள் அல்ல. சந்திரபாபு முற்பகுதியில் கொஞ்சம் அதிகமாக வருவார். ஆனால் காமெடி குறைவு தான். நடிகர் திலகம் படிக்க வைக்கும் மாணவனாக மற்றும் அவரது முறை பெண்ணை காதலிப்பவராக ராஜன், as usual. இளமையான புஷ்பலதா, மூன்று நான்கு காட்சிகள் வந்தாலும் மெஜெஸ்டிக்கான பாலாஜி, இரண்டு மூன்று காட்சிகளிலே பாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்தி விடும் சுந்தரி பாய் (ஏன் ஒரு பணக்கார மாப்பிளையை தேடுகிறேன் என்பதற்கு அவர் தேவிகாவிடம் விளக்கம் சொல்வது, பிறந்தது முதல் மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் ஒரு பெண்மணியின் ஆதங்கத்தை அப்படியே வெளிப்படுத்தும்), வழக்கம் போல அசோகன் (இந்த வருடத்தில்[1964] தான் அசோகன், நடிகர் திலகத்தோடு நடித்த மூன்று படங்கள் வெளியாகியுள்ளன. கர்ணன், ஆண்டவன் கட்டளை, முரடன் முத்து], கௌரவ தோற்றத்தில் ஜாவர், வீரப்பா, நாகையா ஆகியோர்.
ஜாவர் திரைக்கதை வசனம் பல இடங்களில் அவரது புத்தி கூர்மையை பறை சாற்றும். ஒரு குறை என்னவென்றால் கொஞ்சம் தூய தமிழ் தேவைக்கு அதிகமாகவே இடம் பெற்றிருக்கிறது. அது இயல்பான நடையில் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
தம்புவின் ஒளிப்பதிவு அவ்வளவு துல்லியம். ராஜன் புஷ்பலதா டூயட் பாடலான கண்ணிரெண்டும் மின்ன மின்ன- வின் போது திரை முழுக்க அருவி, அதற்கு முன்னாள் ராஜன், புஷ்பலதா, அழகே வா பாடலின் போது வர்கலாவில் (கேரளா) தென்னை மரங்களோடு கடல் வந்து பேசும் காட்சிகள், அதன் சுற்று வட்டாரத்திலே எடுக்கப்பட்ட அமைதியான நதியினிலே ஓடம் (அந்த படகு காட்சிகள் எவ்வித ஜெர்க்மின்றி இருக்கும்), இதை தவிர படம் முழுக்க கண்ணை உறுத்தாத காமிரா.
இசையை பற்றி தனியாக சொல்ல வேண்டும். எனக்கு தெரிந்து பல பேர் கவியரசர் - மெல்லிசை மன்னர்கள் கூட்டணியில் வந்த மிக சிறந்த பாடல்களாக இந்த படத்தின் பாடல்களை குறிப்பிடுவதை கேட்டிருக்கிறேன். அமைதியான நதியிலே ஓடம் பாடலை கேட்கும் போது தன்னிலை மறந்து கண்ணில் கண்ணீர் அரும்புவதையும் பார்த்திருக்கிறேன். கண்ணதாசனின் மிக சிறந்த தத்துவ பாடலாக ஆறு மனமே ஆறு பாடலை சொல்லுவதையும் கவனித்திருக்கிறேன். [நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் - எனக்கு மிகவும் பிடித்த வரிகள்]. இந்த பாடல் அறுபடை வீடுகளில் படமாக்கப்பட்டிருக்கும் . குறிப்பாக திருப்பரங்குன்றத்திலும், பழமுதிர் சோலையிலும் (அழகர் கோவில்) ஷூட்டிங் நடக்கும் போது கட்டுகடங்காத கூட்டம் என்று சொல்வார்கள். பாடல் பார்க்கும் போதே Frame- ல் மக்கள் கூட்டம் கூட்டமாக தெரிவார்கள். அதை கஷ்டப்பட்டு மறைத்து எடுத்திருப்பார்கள். அதுவும் அழகர் கோவிலில் விவேகானந்தர் உடையில் வெளி பிரகாரத்தில் நடிகர் திலகம் நடக்கும் ஸ்டைல் (பின்னால் துதிக்கையை தூக்கி ஆசீர்வதிக்கும் கணேசன்), தியேட்டரில் மட்டுமல்ல, நேரில் பார்த்தவர்களும் கை தட்டியது சரித்திரம்.
இது தவிர சுசீலாவின் சொக்க வைக்கும் குரலில் அழகே வா (சாதாரணமாக ஈஸ்வரி பாடும் சூழ்நிலை), பி.பி.எஸ் - ஈஸ்வரியின் கண்ணிரெண்டும் மின்ன மின்ன, சந்திரபாபுவிற்காகவே அமைக்கப்பட்ட சிரிப்பு வருது பாடல் எல்லாமே ரசிகர்கள் மனதில் நிரந்தரமாகவே குடியிருப்பவை.
இவை எல்லாம் அமையப் பெற்றதால் இயக்குனர் சங்கரின் வேலை எளிதானது. ஆனால் இவை அனைத்தும் இருந்தும் இந்த படம் நூறு நாட்கள் என்ற வெற்றிக்கோட்டை தொட முடியாமல் போனது வருத்தமான விஷயம். எனக்கு தோன்றுவது இரண்டு காரணங்கள். படத்தின் முடிவுக்கு இட்டு செல்லும் இடங்களில் அது வரை இருந்த இயல்பு போய் சிறிது செயற்கை நுழைந்து விட்டது ஒரு காரணம். இரண்டு, வெளியான வருடம் -1964. இந்த படத்திற்கு முன் கர்ணன், பச்சை விளக்கு, இந்த படத்திற்கு பின் கை கொடுத்த தெய்வம், புதிய பறவை, நவராத்திரி. ஆக இப்படிப்பட்ட படங்களுக்கு இடையில் வெளி வந்ததால் இந்த படம் பெற வேண்டிய வெற்றியை பெறாமல் போனதோ என்று தோன்றுகிறது. 70 நாட்கள் ஓடியது இந்த படம்.
1964 மே 27 அன்று ஜவகர்லால் நேரு மறைந்து போனார். 1964 ஜூன் 12 அன்று வெளியான இந்த படத்தின் இறுதி காட்சி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வகுப்பறையில் நடிகர் திலகம் பேசுவது போல் படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
பல முறை பார்த்திருந்தும் இப்போது பார்த்த போது தோன்றிய எண்ணங்களை இங்கே எழுதியிருக்கிறேன்.
அன்புடன்
.
RAGHAVENDRA
12th June 2014, 06:14 AM
முரளி சாரின் பதிவிற்கு சாரதாவின் துணைப் பதிவு மீள் பதிவாக இங்கே
சாரதா அவர்களின் பதிவிற்கான இணைப்பு
http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5&p=358270&viewfull=1#post358270
16th January 2009, 12:51 PM
டியர் முரளி,
'ஆண்டவன் கட்டளை' படத்தைப்பற்றிய ஆய்வு மிக அருமை. படம் பெரிய வெற்றியடையாமற்போன காரணங்களில், வழக்கம்போல ஒன்றன் பின் ஒன்றான படங்கள் என்பதையும் மீறி, படத்தின் முடிவில் தோன்றிய செயற்கைத்தனமே என்பதை நிச்சயம் ஒப்புக்கொள்ள வேண்டும். அன்றைய படங்களில் முடிவென்றால், ஒன்று காதலர்கள் சேருவதாக இருக்க வேண்டும், அல்லது மரணத்தில் முடிவதாக இருக்க வேண்டும் என்ற இரண்டே விதிகளின்படியே அமைக்கப்பட்டதால், இவற்றைத்தாண்டிய பரீட்சாத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இப்படம் அதற்கான ஒரு நல்ல களமாக அமைந்திருந்தபோதிலும் கோட்டை விட்டு விட்டனர் என்றே சொல்ல வேண்டும். 'ஆலயமணி'யில் அவ்வளவு சோகத்துக்குப்பிறகும், இறுதியில் தாடியை ஷேவ் பண்ணிவிட்டு சரோஜாதேவியுடன் கைகோர்த்து, 'பொன்னை விரும்பும் பூமியிலே' என்று ஸ்டைலாக நடந்ததை ஒப்புக்கொண்ட மக்கள், ஆண்டவன் கட்டளையில், 'மாமனிதர் நேரு மறைந்து விட்டார் என்பதைப் பொய்யாக்குவோம். அவர் நம் நெஞ்சங்களில் உறைந்துவிட்டார் என்ப்தை மெய்யாக்குவோம் என்ற வசனத்தோடு படம் முடிந்ததை அரைகுறை மனதோடே ஏற்றுக்கொண்டனர்.
என்னுடைய் 'ஆல் டைம் ஃபேவரிட்' தேவிகா இப்படத்தில் சூப்பரோ சூப்பர். அதிலும் 'அலையே வா' பாடலின்போது, பாறை மீது ஒருகைநீட்டிப் படுத்தவாறு, தலைமுடி நெற்றியில் விழ அவர்காட்டும் ஒய்யாரமான போஸ், அதிலும் அந்த துல்லியமான குளோஸப் ஷாட் நிச்சயம் ஆண்களைப் படாத பாடு படுத்தியிருக்கும். காரணம் அன்றைய காலகட்டத்தில் கதாநாயகிகள் அப்படி நடிப்பது ஒரு சவால். ஒரு வைஜயந்திமாலாவோ, அல்லது ஒரு ராஜஷ்ரீயோ இவ்வாறு நடித்திருந்தால் விந்தையில்லை. ஆனால் சாவித்திரி, சரோஜாதேவி, சௌகார், விஜயகுமாரி போன்றவர்கள் வரிசையில் இடம் பெற்றிருந்த தேவிகாவிடம் நிச்சயம் ரசிகர்கள் இதை எதிர்பார்த்திருக்க வாப்பில்லை. அதைப்பார்த்த ரசிகர்கள் நிச்சயம் உற்சாகம் கொண்டிருப்பார்கள். அதே போல, வகுப்பறையில் இரட்டை ஜடையோடு தன் காந்தப்பார்வையால் ப்ரொஃபஸரை படாத பாடு படுத்துவதும் ஜோர். (இதுபோல தேவிகா என்றதும் கண்ணுக்குள் நிற்கும் இன்னொரு காட்சி, கர்ணனும் மகனும் போருக்குப்போகும்போது அவர்களை வழியனுப்பும் வேளையில் மஞ்சள் நிற சேலையும், விரிந்து தொங்கும் தலைமுடியுமாக அவர் தோன்றுவது. அத்துடன், அன்புக்கரங்களில் பாவாடை தாவணி காற்றில் பறக்க சின்னப்பெண் போல துள்ளித்துள்ளி ஆடி 'உங்கள் அழகென்ன அறிவென்ன' பாடி சிவாஜியை டீஸ் செய்வது. ஏன், அந்திமக்காலத்தில் அவர் நடித்த பாரதவிலாஸில், சுடிதாருடன் 'ஜீலம் சட்லெஜ் நதிகள் பாயும் தீரம் காண ஆவோ' பாடுவது மட்டும் என்னவாம்). சுருக்கமாகச்சொன்னால் 'சிவாஜி-பத்மினி', மற்றும் 'சிவாஜி-கே.ஆர்.விஜயா' காலங்களுக்கிடையில் 'சிவாஜி-தேவிகா' காலம் ஒரு பொற்காலம் என்று சொல்லலாம்.
ஒரு தத்துவப்பாடலையே டூயட் பாடலாகத்தர கண்ணதாசனால் மட்டுமே முடியும். பின் என்ன...
தென்னை இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னைதனை சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை
என்பதெல்லாம் தத்துவ முத்துக்களன்றி வேறில்லை.
புரொஃபஸர் ரோட்டை கிராஸ் பண்ண ட்ராஃபிக்கையே கான்ஸ்டபிள் நிறுத்துவதைப்பார்த்து அதிசயிக்கும் நீதிபதி, அதே ப்ரொஃபஸர் தன் முன் கொலைக்குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கும்போது அவருக்கு பழைய ஃப்ளாஷ்பேக் தோன்றுவதைக் காண்பித்து, 'அவரா இப்படி?' என்று அதிரும் இடங்களில் சங்கர் இருக்கிறார்.
சந்திரபாபு பாடும் 'சிரிப்பு வருத்து சிரிப்பு வருது ' பாட்டில் கண்ணதாசனின் வரிகள், எக்காலத்துக்கும் பொருந்துபவை...
மேடையேறிப் பேசும்போது ஆறு போல பேச்சு
கீழேயிறங்கிப்போகும்போது சொன்னதெல்லாம் போச்சு
நல்ல கணக்கை மாத்து, கள்ள கணக்கை ஏத்து
நல்ல நேரம் பார்த்து நண்பனையே மாத்து (நண்பனை ஏமாத்து?)
உள்ளே பணத்தைப்பூட்டி வச்சு வள்ளல் வேஷம் போடு
ஒளிஞ்சுமறைஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு
பணத்தை எடுத்து, நீட்டு கழுதை பாடும் பாட்டு
ஆசை வார்த்தை காட்டு, உனக்கும் கூட ஓட்டு
ஆறுபடைவீடுகளை உள்ளடக்கிய 'ஆறு மனமே ஆறு' பாடல், எதிர்பாராமல் இடைச்செருகலாக வந்த போனஸ். ('சிந்துநதியின்மிசை நிலவினிலே' போல). சிறப்புத்தேண்கின்னம் வழங்கும் வி.ஐ.பிக்கள் அனைவரும் மறக்காமல் சிலாகித்துப்பேசுவது 'கேஷுவலாக வேர்க்கடலை தின்னும்' காட்சியில் அவர் காட்டும் இயல்போ இயல்பு.
வெற்றிப்படம்தான், ஆனால் நூறு நாட்கள என்ற எல்லைக்கோட்டைத்தொடவில்லை. எல்லாச்சிறப்பம்சங்களும் கொண்ட இரண்டு படங்களான ஆண்டவன் கட்டளையும், முரடன் முத்துவும் நூறு நாட்களைக்கடந்திருந்தால், 1964-ல் வெளியான அத்தனை (ஏழு) படங்களும் நூறு நாட்களைக்கடந்த சாதனைச்சிறப்பைப் பெற்றிருக்கும்.
ஆயினும் சோடை போகவில்லை.... ஒரு பக்கம் நடிகர்திலகத்தின் மற்ற படங்கள், இன்னொருபக்கம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் தெய்வத்தாய், பணக்கார குடும்பம், படகோட்டி படங்களின் அச்சுறுத்தல், இவை போக நகைச்சுவை, தேன் சொட்டும் பாடல்கள், வண்ணம் இவற்றோடு வந்து மோதிய காதலிக்க நேரமில்லை, வித்தியாசமாக கண்ணதாசன் தந்த கருப்புப்பணம் இவற்றை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை... இவற்றுக்கு நடுவே நடிகர்திலகம் அந்த ஆண்டில் நிகழ்த்திய்வை இமாலய வெற்றிகளே.
RAGHAVENDRA
12th June 2014, 06:50 AM
பேராசிரியர் கிருஷ்ணன் பாத்திரத்தை அறிமுகப் படுத்தும் ரயில்வே கேட் காட்சி உண்மைச் சம்பவத்தை வைத்து சித்தரிக்கப் பட்டது என சொல்வார்கள். தன் வீட்டிலிருந்து கிளம்பும் நடிகர் திலகம் கோடம்பாக்கம் ரயில்வே கிராஸிங் - தற்போதைய மேம்பாலம் - கேட் அருகே வரும் போது கேட் கீப்பர் தன் கடிகாரத்தில் மணியை பார்ப்பாராம். ஒவ்வொரு நாளும் முள் சரியாக அதே இடத்தில் இருக்குமாம், அதே நேரத்தைக் காட்டுமாம். ஒரு தடவை இதை நடிகர் திலகத்திடமே சொன்னாராம். உடன் இருந்த இயக்குநர் சங்கர் இதையே அறிமுகக் காட்சியாக வைத்து விட்டார் என்பார்கள்.
மெல்லிசை மன்னர்களின் இசை வரலாற்றில் இப்படம் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றதாகும். தமிழ் சினிமா வரலாற்றில் முதல் நூறு இடங்களைப் பிடிக்கும் பாடல்களைப் பட்டியலிட்டால் முதல் பத்திலிருந்து இருபதுக்குள் வரக் கூடிய பாடலாக அமைதியான நதியினிலே பாடல் இருக்கும். கவியரசர் கண்ணதாசன், வசனகர்த்தா ஜாவர் சீதாராமன், இயக்குநர் சங்கர், ஒளிப்பதிவாளர் தம்பு, உடன் நடித்த கலைஞர்கள் என அனைவரின் மிகச் சிறப்பான பங்களிப்பில் காலத்தால் அழியாத காவியம் ஆண்டவன் கட்டளை.
Gopal.s
12th June 2014, 07:17 PM
ஆண்டவன் கட்டளை-
சிவாஜி -தேவிகா இழைவில் கிக்கோ கிக்கென்று ஜிவ்வென்று எகிறும்.
செமை இழைசல். அலைகள் ஓய்வதில்லைக்கு அண்ணா ஒரு சீன் .
பூக்களின் நடுவே தண்ணீருக்குள் சிவாஜி-தேவிகா. யம்மோவ்.
அழகே வா- அய்யய்யோ ,அநியாயம் டோய் .
பாய் மரம் ஏறி விட்டது.
சிவாஜியின் மன போராட்ட காட்சி -சிவாஜி-சங்கர்-தம்பு -விச்சு-ராமு எல்லோரும் உச்சம் தொடும் அற்புத காட்சி.
படு மோசமான தூய தமிழ் வசனங்கள், இறுதி 40 நிமிடங்கள் படத்தை தொபீரென்று கீழே தள்ளும். ஆறு மனமே ஆறு வரை படம் அவ்வளவு அருமை.
Russellisf
13th June 2014, 05:52 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zps0cd4d569.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zps0cd4d569.jpg.html)
gkrishna
13th June 2014, 12:36 PM
ராகவேந்தர் சார்
ஆண்டவன் கட்டளை அலசல் மிக அருமை
இந்த திரியை சில நாள்கள் மறந்து இருந்தேன்
மன்னிக்கவும்
சுசீலாவின் அருமையான சோலோ சாங் "அழகே வா அருகே வா "
நம்ம NT fans association ஒரு நிகழ்ச்சிக்கு (படித்தல் மட்டும் போதுமா என்று நினைக்கிறன் ) சுசீலா அம்மா வரும் போதே இந்த பாடலை முனுமுனுத்து கொண்டே வந்தார்கள் .அப்போது உங்கள்டிமோ அல்லது முரளி சார் இடமோ இந்த பாடல் இந்த படத்திலா என்று கேட்டார்கள் அப்போது நீங்கள் அந்த பாடல் ஆண்டவன் கட்டளை படத்தில்
என்று விடை கூறியது நினைவிற்கு வருகிறது
JamesFague
13th June 2014, 05:57 PM
Prof Krishnan will be remembered not only for his punctuality but also
adopting to new ideas even in those days. Such a wonderful movie without
doubt.
Gopal.s
15th June 2014, 09:55 PM
Murali's Great write-up on our next Epic Film.
கை கொடுத்த தெய்வம்
தயாரிப்பு: பொன்னி புரொடக்ஷன்ஸ்
திரைக்கதை வசனம்: கே.எஸ். ஜி.
இயக்கம் : கே.எஸ்.ஜி.
வெளியான நாள்: 18 07.1964
அமிர்தசரஸ் நகரம். ரயிலிருந்து இறங்கும் இளைஞன் ரவி வேலை தேடி அலைந்து ஒரு பார்க்கில் மயங்கி விழுகிறான். அவனை தன் அறைக்கு கொண்டு வந்து உணவு கொடுத்து காப்பாற்றுகிறான் ரகு. தற்கொலை எண்ணத்தோடு வந்த ரவி, ரகு காட்டும் அன்பிற்கு கட்டுப்படுகிறான். தனக்கு கிடைத்த மானேஜர் வேலையை ரகு, ரவிக்கு விட்டுக் கொடுக்கிறான். தன்னைப் பற்றி எதுவும் சொல்ல மறுக்கும ரவி, ரகுவின் பெற்றோர்கள் ஊரில் கஷ்டப்படுவதை அறிந்து அவர்களுக்கு பணம் அனுப்புகிறான். இது அவர்களுக்கிடையே உள்ள அன்பை வலுவாக்கிறது. இருவரும் ஒரே அலுவலுகத்தில் பணி புரிகிறார்கள். ரவி மானேஜர், ரகு பியூன்.
மற்றொரு கதைக் களம் சென்னை. பெரிய செல்வந்தர் மகாதேவன். அவருக்கு இரண்டு மகள்கள். ஒரு மகன். மூத்த மகள் கோகிலா. இளைய மகள் சகுந்தலா. மூத்த மகள் கோகிலா வெறும் அப்பாவி. வெளுத்ததெல்லாம் பால் என நினைப்பவள். இரக்க குணம் அதிகம். வரதன் என்ற அயோக்கியனுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் மாட்டிக் கொள்கிறாள்.
அவள் பண உதவி செய்யாவிட்டால் தற்கொலை செய்துக் கொள்ள போவதாக மிரட்டியே அவளை தினமும் சந்தித்து பணம் வாங்குகிறான். இதை பார்க்கும் ஊர் மக்கள் அவளை தவறாக பேசுகிறார்கள். தன் பங்கிற்கு அந்த வரதனும் தனக்கும் கோகிலாவிற்கும் தொடர்பு இருப்பதாக செய்தி பரப்புகிறான். அவளின் கல்யாண ஏற்பாடுகளை தடுக்கும் விதமாக பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டாருக்கு மொட்டை கடுதாசி எழுதுவதிலிருந்து அவர்களை சந்தித்து அவதூறு பரப்புவதையும் வாடிக்கையாக வைத்துள்ளான். அவன் ஒரு பிக் பாக்கெட் கும்பலுக்கு தலைவனாக இருக்கிறான்.
ஊரார் பேசும் அவதூறு, அதன் காரணமாக நடக்காமல் போகும் கல்யாணம் இவையெல்லாம் அவளது தந்தையை மனமொடியச் செய்கிறது. இந்த அவமானம் தாங்காமல் கோகிலாவின் அண்ணன் ஊரை விட்டே ஓடிப போய் விடுகிறான். அந்த குடும்பத்திற்கு நெருக்கமான வக்கீல் மட்டுமே அவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறார் .
அங்கே அமிர்தசரசில் அலுவலகத்தில் வேலை பார்க்கும் டைப்பிஸ்டும் ரவியும் ஒருவரை ஒருவர் விரும்பிகின்றனர் என்பதை அறியும் ரகு அவர்களது திருமணத்தை நடத்தி வைக்கிறான். திருமணத்திற்கு பின்னும் ரகுவும் ரவியும் ஒரே வீட்டிலேயே சேர்ந்து வாழ்வது பற்றி அலுவலகத்தில் சிலர் தவறாக பேச அவர்களுடன் ரகு சண்டைக்கு போகிறான். ஒரு கட்டத்தில் இது அதிகமாகவே வீட்டை விட்டு வெளியேற முடிவெடுக்கும் ரகுவை ரவி தடுக்கிறான். ஊரார் பேச்சுக்கெல்லாம் பயந்து நமது வாழ்க்கையை நாம் நாசப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்துகிறான். அவன் அன்புக்கு கட்டுப்பட்டு ரகு அந்த வீட்டிலேயே தங்குகிறான்.
சென்னையில் மகாதேவனின் குடும்ப வக்கீல் ஒரு ஏழைக் குடும்பத்திற்காக வாதாடி அவர்களது சொத்தை மீட்டுக் கொடுக்கின்றார். எந்த வரனும் ஒத்து வராத நிலையில் மனம் உடைந்து நிற்கும் மகாதேவனுக்கு உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. அவரைப் பார்க்க வரும் வக்கீலுக்கு தான் கேஸ் ஜெயித்துக் கொடுத்த பெற்றோர்கள் தங்களின் ஒரே மகனுக்கு கல்யாணத்திற்கு பெண் இருந்தால் சொல்லும்படி சொன்னது நினைவுக்கு வருகிறது. அவர்களை தொடர்பு கொள்கிறார்.
அமிர்தசரசில் ரகுவிற்கு கல்யாணத்திற்கு பெண் பார்க்க வரும்படி கடிதம் வருகிறது. ரவி அலுவலக வேலை காரணமாக வர முடியாத சூழ்நிலையைச் சொல்ல, பெண் பார்த்து விட்டு பெண்ணின் புகைப்படத்தை அனுப்புவதாக சொல்லி விட்டு ரகு கிளம்பிச் செல்கிறான்.
சென்னையில் ரகு பயணம் செய்யும் கார் ரிப்பேராகி விட அந்த வழியாக வரும் கோகிலா தன் காரில் ரகுவிற்கு லிப்ட் கொடுக்கிறாள். முன் பின் தெரியாத அவனிடம் தன் மொத்த கதையையும் அவள் கூற, ரகு அவளை நன்கு புரிந்துக் கொள்கிறான். மறுநாள் பெண் பார்க்க செல்லும் ரகுவைப் பார்த்து கோகிலாவும் கோகிலாவைப் பார்த்து ரகுவும் சந்தோஷ அதிர்ச்சி அடைகிறார்கள். கலயாணத்திற்கு முழு சம்மதம் தெரிவிக்கும் ரகு கோகிலாவின் போஃட்டோவை வாங்கி ரவிக்கு அனுப்புகிறான். மகாதேவன் குடுமபத்திற்கு மிகப் பெரிய சந்தோஷம்.
புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறான் ரவி. இந்த பெண் உனக்கு ஏற்றவள் அல்ல என்று பதில் எழுதி விடுகிறான். அதை பார்த்து துடித்துப போகும் ரகு, கோகிலா வீட்டிற்கு கடிதத்தோடு வருகிறான். அங்கே சகுந்தலாவை பார்த்து விஷயத்தைச் சொல்ல அவள் அதிர்ந்து போகிறாள். கடிதத்தை படித்து பார்க்கும் அவளுக்கு அது தன் அண்ணன் எழுதிய கடிதம் எனப் புரிகிறது. இப்போது இந்த விஷயத்தை சொன்னால் தன் தந்தையால் அதை தாங்கிக் கொள்ள முடியாது என்றும் நேரம் வரும் போது தானே சொல்வதாகவும் சொல்லி கடிதத்தை வாங்கி கொண்டு ரகுவை அனுப்பி விடுகிறாள். தன் அண்ணனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள்.
மீண்டும் அமிர்தசரஸ் செல்லும் ரகு கையில் அந்தக் கடிதம் கிடைக்கிறது. அதை படித்து பார்த்து உண்மையை தெரிந்துக் கொள்ளும் ரகு, ரவியிடம் கேட்க, கோகிலா தன் தங்கைதான் என ஒப்புக் கொள்கிறான் ரவி. என்னை பற்றி அவதூறு பேச்சு வந்த போது எனக்கு அவ்வளவு அறிவுரை சொன்னாயே, இப்போது உன் தங்கையைப் பற்றியே இப்படி பேசுகிறாயே என்று ரகு கேட்க அதற்கு ரவி, என் தங்கை நல்லவளா கெட்டவளா என்று எனக்கு தெரியாது. ஆனாலும் தெரிந்தோ தெரியாமலோ அவப் பெயர் சுமக்க நேர்ந்த அவள் உனக்கு வேண்டாம், என் நண்பனுக்கு வேண்டாம் என்பதால் தான் அப்படி சொன்னேன் என்கிறான். அவனின் நட்பை எண்ணி பெருமைப்படும் ரகு தான் செய்ய வேண்டியதை முடிவு செய்து சென்னைக்கு செல்கிறான்.
அங்கே கல்யாண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. எப்படி சொல்வது என்று தெரியாமல் சகுந்தலா தடுமாறிக் கொண்டிருக்க அவள் ஒளித்து வைத்த ரவியின் கடிதம் அவளது தந்தையின் கையில் சிக்கி விடுகிறது. தன் மகனே இந்த கல்யாணத்தை நிறுத்தி விட்டான் என்பது தெரிந்ததும் இடிந்து போகும் மகாதேவன் அந்த கோபத்தை எல்லாம் கோகிலாவிடம் கொட்ட அந்த நேரம் ரகு அங்கே வந்து கோகிலாவை தான் ஏற்றுக் கொள்வதாக சொல்கிறான். அனைவரும் மகிழ்கிறார்கள்.
ஆனால் முடிவு?
இந்தப் படத்தை பொறுத்த வரை நடிப்புக்கென்றே எடுத்த படம் எனச் சொல்லலாம். இரு திலகங்களின் அபார நடிப்பு வெளிப்பட்ட படம் இது.
நடிகர் திலகத்தை பொறுத்த வரை மிக மிக இயல்பாக அதே சமயம் அவரின் ஒவ்வொரு உணர்வும் ஆழமாக பார்வையாளன் மனதில் பதியும் வண்ணம் நடித்திருப்பார். முதல் காட்சியில் மயங்கி கிடக்கும் எஸ்.எஸ்.ஆரை தூக்கிக் கொண்டு வைத்து அவரை உபசரிக்கும் இடத்திலிருந்து இறுதிக்காட்சியில் சாவித்திரியின் சோக முடிவை சொல்லி கலங்குவது வரை - டாப்.
அறிமுக காட்சியில் தனக்கே உரிய பாணியில் ஸ்டைலாக சிகரெட் பிடித்துக் கொண்டே எஸ்.எஸ்.ஆரை விசாரிக்கும் காட்சியே களை கட்டி விடும். வாசலில் போஸ்ட் குரல் கேட்கிறது.[அனேகமாக அதிகமாக போஸ்ட் என்ற குரல் கேட்டது இந்த படத்தில் தான் இருக்கும்]. லெட்டரை பிரிக்கிறார். படிக்கிறார். முகம் மாறுகிறது. கண்ணை மூடி திறக்கிறார். கண்ணில் நீர் கட்டி நிற்கிறது. [அவருக்கு தான் அது "கண்" வந்த கலையாயிற்றே]. என்னவென்று கேட்கும் நண்பனிடம், அப்பாக்கு உடம்பு சரியில்லையாம் ஆயிரம் ரூபாய் பணம் வேணும்னு அம்மா லெட்டர் போட்டுருகாங்க. நம்மாலே பணம் அனுப்ப முடியாது,ரெண்டு சொட்டு கண்ணீர் தான் விட முடியும். அந்த கடமையை செஞ்சாச்சு. நீ போய் ஷேவ் பண்ணு என்று சொல்லும் போது அந்த பாத்திரத்தின் உணர்வோடு நாமும் இணைந்து போவோம். நண்பன் தன் நிலை புரிந்து ஊருக்கு பணம் அனுப்பி வைத்தான் என்று தெரிந்ததும் அதிக வசனங்கள் இல்லாமல் அந்த நன்றியை கண்களில் சொல்வதும் அவரால் மட்டுமே முடிந்த ஒன்று.
தமிழ்நாட்டு சாப்பாடுக்கு அவர் ஏங்கும் ஏக்கம், அலுவலகத்தில் ஒரு பெண் சாப்பிடும் சாதத்தையும் குழம்பையும் அவ்வளவு ஏக்கத்துடன் பார்ப்பது, எப்போதும் சப்பாத்தி சாப்பிட்டு வெறுத்து போயிருக்கும் நேரத்தில் நண்பனுக்கு திருமணம் ஆக, அவன் மனைவியாவது நன்றாக சமைத்து போடுவாள் என ஆசையோடு காத்திருக்கும் போது அவளும் சப்பாத்தி செய்துக் கொண்டு வைக்க அவர் முகம் மாறும் பாவம் இருக்கிறதே, பிரமாதம். பிறகு தானே சமையல் அந்த பெண்ணிற்கு சொல்லிக் கொடுப்பதும் [அரிசியிலே கல்லை களையணும். அரிசியை களைஞ்சிரக் கூடாது] இருந்தாலும் என்னவோ குறைகிறதே என்று யோசித்து கணவன் புடவை கட்டி விட, இவர் தலை வாரி பூ சூட்டுவதும் ரசிக்க தகுந்த காட்சிகள். தன் தங்கையாய் பாவிக்கும் நண்பனின் மனைவியையும் தன்னையும் தியேட்டரிலும் அலுவலகத்திலும் அவதூறு பேசும் ஆட்களை அடித்து துவைப்பது ஆவேசம் என்றால் அதன் காரணமாக வீட்டை விட்டு வெளியேறும் தன்னை உன் மேலயே உனக்கு நம்பிக்கை இல்லை. அதனாலே தான் வெளியே போறே என்று சொல்லும் நண்பனை சட்டையை பிடித்து உலுக்கும் உக்கிரம் அதே நேரத்தில் அவன் வார்த்தைகளில் இருக்கும் உண்மையை உணர்ந்து உடைந்து அழுவது எல்லாமே டாப்.
இப்படி கலகலப்பாக இருக்கும் அவர் சென்னைக்கு சென்றவுடன் சாவித்திரியைப் பார்த்தவுடன் அவர் பேச்சைக் கேட்டவுடன் அவர் பாத்திரத்திற்கு ஒரு சீரியஸ்னெஸ் வருவதோடு அந்த பெண்ணின் மேல் உருவாகும் இரக்கத்தையும் முகபாவத்திலேயே வெளிப்படுத்தியிருப்பார். பெண் பார்க்க போகும் இடத்தில் எதிர்பாராமல் சாவித்திரி தான் பெண் என்று தெரிந்தவுடன் அவருக்குள் ஏற்படும் பலவேறு உணர்வுகளை அழகாக செய்திருப்பார். நண்பனுக்கு காண்பிக்க போஃட்டோ வேண்டும் என்று வெட்கத்துடன் கேட்பதாகட்டும், பதில் வரவில்லையே என்று தவிப்பதாகட்டும், கடிதம் வந்தவுடன் அந்த முகத்தில் வரும் சந்தோஷம் ["நான் சொன்னேன்லே கரெக்டா பதில் போட்டுட்டான் பாரு"], கடிதத்தை பிரித்துப் படிக்க ஆரம்பிக்க அந்த குரலில் ஏற்படும் தடுமாற்றம், அந்த பெண் உனக்கு ஏற்றவள் அல்ல எனபதை படித்து விட்டு இடிந்து போவது, தன் நிலையை எப்படிச் சொல்வது என்று தெரியாமல் புஷ்பலதாவிடம் வார்த்தை வராமல் தவிப்பது, தன் வீட்டிற்கு வந்து பெண்ணை குறை சொல்லும் ராதாவை கன்னத்தில் ஒரு அறை கொடுத்து ஊர்காரர்களை சத்தம் போடுவது, இறுதியில் சாவித்திரியை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கை கூடாமல் போய் விட, அவளின் உயர்வுகள் பற்றி குமுறி பேசுவது இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு சில படங்களில் ஆரம்பம் முதல் முடிவு வரை நடிகர் திலகத்தின் சிறப்பான நடிப்பை பற்றி சொல்ல வேண்டி வரும். அப்படிப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.
நடிகையர் திலகம் சாவித்திரி படத்தின் நாயகி. மொத்தம் ஒரு எட்டு அல்லது பத்து காட்சிகளில் தான் வருவார். ஆனால் அனாயசமாக செய்திருப்பார். இரு திலகங்களும் இணைந்து நடித்த படங்களில் பாசமலருக்கு பின் மிக சிறந்த படம் கை கொடுத்த தெய்வம். அந்த உடல் வளர்ந்த ஆனால் குழந்தை மனம் படைத்த கோகிலா பாத்திரத்தை வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியாது. ஒவ்வொரு முறையும் தங்கை தன் நடவடிக்கைகளைப் பற்றி ஏதாவது சொல்ல, அவர் அதற்கு கொடுக்கும் பதில், அப்பாவின் மேல் வைத்திருக்கும் பாசம், ராதாவிடம் முதலில் காட்டும் இரக்கம், பிறகு பயம் மற்றும் கோபம்,சிவாஜியை முதலில் பார்க்கும் போதே தன் கதை முழுக்க சொல்லும் அப்பாவித்தனம், முதல் நாள் பார்த்த சிவாஜியே மறு நாள் பெண் பார்க்க வர, ஓடி வந்து சேரை இழுத்துப் போட்டு பக்கத்தில் உட்கார்ந்து "ஆமா, நேத்து அப்புறம் உங்க பிஃரண்டை பார்த்திங்களா" என்று காஷுவலாக விசாரிப்பது, இறுதியில் தந்தையே தன்னை கடுமையாக திட்டி விட மனம் உடைந்து தூக்க மாத்திரை சாப்பிட்டதை சொல்வது - நடிகையர் திலகம் பின்னியிருப்பார் நடிப்பில்.
இந்த படத்தின் மிக பெரிய ஆச்சரியம் எஸ்.எஸ்.ஆர். வழக்கமான தன் பாணியை விட்டு விட்டு வெகு இயல்பாக செய்திருப்பார். சிவாஜியும் அவரும் இணைந்து வரும் எல்லாக் காட்சிகளுமே நன்றாக மிளிரும். பல்வேறு உணர்வுகளையும் வெளிப்படுத்தியிருக்கும் விதத்தில் அவரது அனுபவம் பளிச்சிடும். குறிப்பாக வீட்டை விட்டு வெளியே போகிறேன் என்று சொல்லும் சிவாஜியிடம் உன் மேலயே உனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லுவது, கோபப்பட்டு தன் கழுத்தை நெரிக்கும் சிவாஜியிடம் நீ வீட்டை விட்டு வெளியே போறேன்னு சொன்னா, நான் அப்படிதாண்டா சொல்லுவேன் என்று அசராமல் சொல்லும் இடம் எல்லாம் பிரமாதம். ஆனால் இவ்வளவு நன்றாக செய்து விட்டு அதற்கு ஒரு திருஷ்டி பரிகாரம் போல ஆயிரத்தில் ஒருத்தியம்மா பாடலின் போது நண்பனுக்கு கடிதம் எழுதுறேன் பேர்வழி என்று அவர் காட்டும் அபிநயம் இருக்கிறதே! -----
கே.ஆர்.விஜயா மராத்தி பெண்ணாக வந்து தமிழ் பெண்ணாக மாறும் ரோல். நடிப்பை கொடுப்பதற்கும் ஒன்றுமில்லை. கெடுப்பதற்கும் ஒன்றுமில்லை. புஷ்பலதா சாவித்திரியின் தங்கை சகுந்தலாவாக ஒரு perptual சோகத்தோடு காட்சியளிக்க வேண்டிய பாத்திரம். குறை சொல்ல முடியாது.
ரங்காராவ் - கோகிலாவின் அப்பா. அவர் எப்போது சோடை போனார் இதில் போவதற்கு? சமூத்தினால் வீண் அவதூறு பரப்பப்படும் ஒரு பெண்ணின் தந்தையை அப்படியே கொண்டு வந்து நிறுத்தியிருப்பார். எம்.ஆர்.ராதா - வில்லன் வரதன். அவருக்கு பெரிய அளவில் பேசும்படியான பாத்திரம் இல்லை. குறிப்பிடத் தகுந்த இன்னொருவர் வக்கீலாக வரும் சகஸ்ரநாமம். கர்நாடக சங்கீதத்தை ஹம்மிங் செய்தபடியே அவர் ஒவ்வொரு விஷயத்தையும் டீல் செய்வதே அழகு.
கே.எஸ்.ஜியின் படங்களிலே, மிகச் சிறந்த படம் இதுவென்றால் மிகையாகாது. சென்னையிலும் அமிர்தசரசிலும் நடக்கும் கதைகளை அழகாக எந்த நெருடலும் இல்லாமல் இணைப்பதை செவ்வனே செய்திருப்பார். சாதாரணமாக பக்கம் பக்கமாக வசனம் எழுதும் கே.எஸ்.ஜி. இதில் முற்றிலும் மாறுபட்டு இயல்பான வசனங்களை எழுதியிருப்பார். சிவாஜி முதலில் எஸ்.எஸ்.ஆரை தன் வீட்டிலேயே தங்குமாறு சொல்லும் போது வரும் வசனங்கள் அதற்கு சாட்சி. "சில பேருக்கு கூட்டம் பாரமா இருக்கலாம்.ஆனால் எனக்கு தனிமை பாரமாக இருக்கு" என்று சிவாஜி சொல்ல "உங்கள் அன்புக்கு கட்டுபடறேன். ஆனால் வார்த்தைக்கு கட்டுப்பட முடியவில்லை" என்று சொல்லும் எஸ்.எஸ்.ஆர். இது போல் சில பல நல்ல வசனங்கள் படம் முழுதும் தூவி விடப்பட்டிருக்கும். இப்படி பட்ட ஸ்டார் காஸ்ட் அமைந்து விட்ட பிறகு இயக்குனர் வேலை வெகு சுலபம். நடிகர் திலகத்தை வைத்து கே.எஸ்.ஜி. இயக்கிய முதன் முதல் படமே மறக்க முடியாத படமாக அமைந்தது தனிச் சிறப்பு. குறிப்பிடத் தகுந்த மற்றொரு விஷயம் நகைச்சுவை படத்திற்கு வெகு முக்கியம் என்று கருதப்பட்ட காலத்தில் காமடி டிராக் இல்லாமலே காமடி நடிகர்கள் இல்லாமலே படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்லலாம் என்பதை உணர்த்தியிருப்பார்கள்.
கர்ணன் காமிரா. ஆனால் கண்ணை உறுத்தும் angle-கள் இல்லாத சீரான ஒளிப்பதிவு. இசையைப் பொறுத்தவரை நான்கே பாடல்கள். ஆனால் நான்கும் வெகு பிரபலமான பாடல்கள்
1. குலுங்க குலுங்க சிரிக்கும் சிரிப்பில் இவள் ஒரு பாப்பா- சாவித்திரி தோழி பெண்களோடு கடற்கரையில் பாடும் பாடல்.
2. சிந்து நதியின் மிசை நிலவினிலே- மகாகவியின் மறக்க முடியாத பாடல். சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து என்ற வரிகளுக்கேற்ப இரண்டு சரணங்களுக்கிடையே தெலுகு வரிகள் மனதை வருடும் மெட்டில் அமைக்கப்பட்ட விதத்திற்காகவே மெல்லிசை மன்னர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆலப்புழையின் காயலில் [Back Waters] ஓடும் படகு பாட்டிற்கு மேலும் அழகை கொடுக்கும். அது மட்டுமா? மீசையும் தலைப்பாகை கட்டும் உள்ள முகம் மட்டுமே பெரும்பாலும் தெரியும் க்ளோஸ் அப் காட்சிகள் உள்ள இந்த பாடல் பாரதியை இன்றைக்கும் தமிழ் நாட்டிற்கு நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் ஒன்றல்லவா.
மேலும் கங்கை நதி தீரத்திலும் காவிரி நதி ஓரத்திலும் வாழும் விவசாயிகளை அவர்களின் பாரம்பரிய உடையோடு காண்பித்ததோடு மட்டுமல்லாமல் சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று வீர முழக்கமிட்ட சிங்க மராட்டிய திலகரை அந்த ஒரு கணத்தில் நடிகர் திலகம் நமக்கு அறிமுகப்படுத்தினாரே அது என்றும் மனதில் நிற்கும் காட்சியல்லவா. யானை தந்தம் தரும் நம்பூதிரி மட்டும் என்ன குறைந்தவரா என்ன?. எப்படிப் பார்த்தாலும் மறக்க முடியாத பாடல் மற்றும் காட்சி.
3. ஆஹா மங்கள மேளம் - நடிகர் திலகம் பெண் பார்க்க போகிறார் என்று தெரிந்ததும் விஜயா பாடும் பாடல். எஸ்.எஸ்.ஆர் சேலை கட்டி வருவார்(!)
4. ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ - மற்றொரு காவியப் பாடல். பாடல் வரிகளில் கண்ணதாசனும், இசையில் மன்னர்களும், பாடுவதில் டி.எம்.எஸ்ஸும் நடிப்பதில் சிவாஜியும் பின்னியிருப்பார்கள். சாந்தியில் வரும் யார் அந்த நிலவு பாடலில் முகத்தை காட்டாமல் முதுகை காட்டி கைதட்டல் வாங்குவார் நடிகர் திலகம் என்று சொல்லுவார்கள். ஆனால் அந்த படம் வருவதற்கு முன்பே வெளியான இந்த படத்தின் இந்தப் பாடலில் இரண்டாவது சரணம் தொடங்கும் போது பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும் என்ற வரிகளுக்கு முதுகை மட்டும் காட்டியபடி தன் வலது கை விரல்களை மட்டும் உயர்த்தி கைதட்டல் வாங்கிய ஒரே நடிகன் நடிகர் திலகம் மட்டுமே.
இப்படி எல்லாம் அமைந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பது சந்தோஷமான செய்தி. சென்னையில் வெளியான நான்கு தியேட்டர்களிலும் மதுரை கோவை முதலிய ஊர்களிலும் நூறு நாட்களைக் கடந்து ஓடியது இந்தப் படம்.
அந்த ஆண்டைப் [1964] பொறுத்த வரை தான் எப்படிப்பட்ட படங்களில் நடிகர் திலகம் நடித்தார்? தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத படங்கள்.
1. கர்ணன் - அதுவரை புராணத்தில் வில்லனாக இருந்த கர்ணன் நாயகனாக மாறினான். இன்று வரை அப்படியே நிலைக்கிறான்.
2. பச்சை விளக்கு - ரயில் என்ஜின் டிரைவர். குடும்பத்திற்காக தன்னை அழித்துக் கொள்ளும் சாரதி.
3. ஆண்டவன் கட்டளை - விவேகானந்தர் வழி நடந்தவர் சபலங்களினாலும் சலனங்களினாலும் திசை மாறி வாழ்வை கிட்டத்தட்ட தொலைத்து பின் மீண்டு எடுத்த கிருஷ்ணன்.
4. கை கொடுத்த தெய்வம் - நட்புக்காக எதையும் செய்யும் இதயம் படைத்த ரகு.
5. புதிய பறவை - வாழ்க்கையில் எல்லா விதமான வசதிகள் இருந்தும் ஒரு நிமிடம் உணர்ச்சி வசப்பட்டதால் நிம்மதியை இழந்து தவித்த கோபால்.
6. முரடன் முத்து - கண் மூடித்தனமான பாசமும் முரட்டு சுபாவமும் கொண்ட முத்து.
7.நவராத்திரி - ஒன்ற இரண்டா எடுத்து சொல்ல! நவரசமும் ஒன்று சேர்ந்து வந்த கொடையல்லவா இது!
இப்படிப்பட்ட ஒரு வருடத்தில் வந்த இந்த படத்தைப் பற்றி பேச எழுத வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி.
RAGHAVENDRA
16th June 2014, 09:27 AM
Sivaji Ganesan Filmography Series
97. KaiKoduthaDeivam கை கொடுத்த தெய்வம்
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSRo5XpiUdOfyyq3er4YzR_7um4Es4xh ZGwfVq4zLreK0n-nZhR
தணிக்கை 10.07.1964
வெளியீடு 18.06.1964
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், நடிகையர் திலகம் சாவித்திரி, கே.ஆர்.விஜயா, எஸ்.வி.ரங்காராவ், எஸ்.வி.சஹஸ்ரநாமம், எம்.ஆர்.ராதா, வி.நாகையா, புஷ்பலதா, புஷ்பவள்ளி, ராதா பாய் மற்றும் பலர்.
கதை டி.எஸ்.மகாதேவன்
பாடல்கள் – மகாகவி பாரதியார், கண்ணதாசன்
இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி
பின்னணி பாடியவர்கள் டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, ஜே.வி.ராகவலு
ஒளிப்பதிவு – எம்.கர்ணன்
ஒலிப்பதிவு – டி.எஸ்.ரங்கசாமி, டி.எஸ்.ராஜு
கலை – கங்கா
எடிட்டிங் ஆர்.தேவராஜ்
தயாரிப்பு – பொன்னி புரொடக்ஷன்ஸ் - எம்.எஸ்.வேலப்பன்
திரைக்கதை வசனம் இயக்கம் – கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
சென்னையில் வெளியான திரையரங்குகள்
மிட்லண்ட், பிரபாத், சரஸ்வதி, ராம்
நூறு நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகள்
சென்னை மிட்லண்ட் – 105 நாட்கள்
சென்னை பிரபாத் 100 நாட்கள்
சென்னை சரஸ்வதி – 100 நாட்கள்
சென்னை ராம் – 100 நாட்கள்
மதுரை சென்ட்ரல் – 108 நாட்கள்
கோவை கர்நாடிக் – 108 நாட்கள்
மற்றும் சேலம், திருச்சி, நாகர்கோவில், குடந்தை, வேலூர் மற்றும் திண்டுக்கள் ஆகிய ஊர்களில் 50 நாட்களுக்கு மேல் ஓடியது
கை கொடுத்த தெய்வம் விளம்பர நிழற்படங்கள் உபயம் ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்
முதல் வெளியீட்டு விளம்பரங்கள்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3910a.jpg
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3911a.jpg
50வது நாள் : சுதேசமித்ரன் : 5.9.1964
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3907a.jpg
100வது நாள் : தினத்தந்தி(மதுரை) : 25.10.1964
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3913a-1.jpg
RAGHAVENDRA
16th June 2014, 09:28 AM
சிறப்பு செய்திகள்
1. மகாகவி பாரதியார், திலகர் போன்றோரின் தோற்றங்களில் சிந்து நதியின் மிசை பாடல் காட்சியில் நடித்தார் நடிகர் திலகம்.
2. சென்னையில் திரையிடப் பட்ட நான்கு திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்து வெற்றி வாகை சூடிய திரைக்காவியம்
3. 1964ம் ஆண்டிற்கான சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான மத்திய அரசின் வெள்ளிப் பதக்கம், மற்றும் சென்னை சினிமா ரசிகர் சங்கத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருது இவற்றைப் பெற்றது.
RAGHAVENDRA
16th June 2014, 09:28 AM
கை கொடுத்த தெய்வம் பாட்டுப் புத்தகத்தின் முகப்பு
http://www.nadigarthilagam.com/songbookcovers/kkdsbc.jpg
RAGHAVENDRA
16th June 2014, 09:29 AM
Kai Kodutha Deivam videos
aha mangala melam
http://youtu.be/YCZ-cIZchh4
sindhu nadhiyin misai
http://youtu.be/AKLzxSGhVyw
kulunga kulunga
http://youtu.be/AIJLC6uQGjY
ayirathil oruthi
http://youtu.be/Wt6A8uxdZD0
Gopal.s
16th June 2014, 08:00 PM
புதிய பறவை- 1964
தமிழ் நாட்டின் எந்த தமிழறிந்த குடிமகனை கேட்டாலும், அவர்கள் எவர் ரசிகர்களாக இருந்தாலும் ,மறக்க முடியாத படங்களில் ஒன்றாக குறிப்பிடும் படம் புதிய பறவை.புதுமையான கதையமைப்பு, அற்புதமான நடிப்பு, மறக்க முடியாத பாடல்கள்,கேமரா, இயக்கம்,richness ,sophistication in making & great production value கொண்ட ahead of times வகை படம்.என்னிடம் யார் கேட்டாலும் எனக்கு பிடித்ததாக நான் சொல்லும் மூவர் கோபால்,விஜய். (நான்,என் மகன் என்பது ஒரு புறம்)மற்றும் விக்ரமன்.
அந்த படத்தை ரசித்த நிறைய பேர் கோபால் பாத்திரத்தை முழுதும் புரிந்து கொண்டார்களா என்பது சந்தேகமே. chekhov school நடிப்பில் என்னை கவர்ந்த Anthony Hopkins(laurence olivier சிஷ்யன்) ,Jack Nicholson ,Oleg yankovskiy இவர்கள் எல்லோரையும் தாண்டி சென்றவர் நமது நடிகர்திலகம். அவர்கள் எல்லோரையும் காலத்தாலும் முந்தியவர். கோபால் பாத்திரம் முழுக்க முழுக்க மனோதத்துவ பின்னணி கொண்ட மிக சிக்கலான பாத்திரம்.
கோபால் ஒரு வெளிநாட்டில் வாழும், பணக்கார conservative &cozy என்ற சொல்ல படும் ஒரு அம்மா பிள்ளை. அம்மாவின் மீது obsessive fixation கொண்டவன்.அம்மாவை அகாலமாக இழந்து இலக்கின்றி அலையும் போது impulsive ஆக ஒரு தவறான பெண்ணை தன் அம்மாவின் இழப்பிற்கு ஈடு செய்வாள் என்ற நம்பிக்கையில் தேர்ந்தெடுத்து, குடும்பத்தின் அமைதியே குலையும் அளவு கொண்டு சென்று, தன்னை உயிருக்குயிராய் நேசிக்கும் தந்தையையும் இழந்தவன். ஆனாலும் ,தானாக ஓடி போகும் சீர்கெட்ட மனைவியையும் கெஞ்சி திரும்ப அழைக்கும் பூஞ்சை மனம் கொண்ட கோழை.(குடும்ப கெளரவம் என்ற பெயரில்).மனைவி தானடித்த ஓரடியில் இறந்து விட , சட்டத்தில் இருந்து தப்பிக்க rail track இல் உடலை போட்டு, தற் கொலை என்று நம்ப வைத்து, குற்ற உணர்ச்சியுடன், சிறிது விடுபட்ட உணர்வுடன் ஊர் திரும்புபவன்.
தொடரும் தனிமை நிறைந்த boredom என்று சொல்ல படும் வாழ்க்கையில், neurotic -emotional distress என்று சொல்ல படும் வகையில்(தூக்கம் இழந்து தவிப்பவன்),tremor என்ற hysterical conversion மனநோயால் அவதியுருபவன்.இந்த வாழ்க்கையின் தவிப்பில்,லதா என்ற தேவதையால் சிறிது ஆசுவாசம் அடைந்து அவளை மணக்க இருக்கும் தருணம், பழைய மனைவி என்று சொல்லி அவள் உருவத்தில் உள்ள ஒருத்தி வாழ்க்கையில் புயலென நுழைய தொடரும் grief &misfortune அவன் அமைதியை மேலும் குலைத்து, depression நோக்கி தள்ளி விடுகிறது.ஆனாலும் வந்தவளை விரட்டி, லதாவை அடையலாம் என்ற நம்பிக்கை, அது குலையும் தருணம் ஏற்படும் ஏமாற்றம் கலந்த அதிர்ச்சி என்று hope &despair என்று வாழ்வு மாறி மாறி ஊசலாட, spurt of violence ,hallucination தலை தூக்க, இனி தப்பிக்க வழியில்லை என்ற stalemate நிலையில், தன்னை மறந்து உண்மையை back to the wall resolution ஆக ஒப்பு கொண்டு, குற்றத்திற்காக பிடி படுகிறான்.
எதிர்காலத்தில் யாருமே வெளிச்சமில்லாமல் ,பிறரின் தொடர்ந்த தலையீடு(ஆத்மார்த்தமாக இன்றி அனாவசிய),குறுக்கீடு இல்லாமல்,வாழவே வழியில்லாத நிலை மீடியா மற்றும் பல வகை electronic gadgets இனால் உருவாக்க படுவதை,allegory என்ற முறையில் சொன்ன படம் trumam show என்ற jim carrey யின் படம்.இதில் truman தவிர ஏனையோர் அனைவரும் நடிப்பவர்கள். கிட்டத்தட்ட இது போன்ற நிலைதான் நம் நாயகன் கோபாலிற்கு. அவனை தவிர சுற்றியிருப்போர் அனைவரும் நடிப்பவர்கள். கோபால் வாழ்க்கை, அவன் காணும் பிரச்சினைகள் எல்லாமே மற்றவர்களால் கட்டமைக்க படுபவை. கோபால் படும் அவதி மட்டுமே நிஜம். படத்திலேயே வருவது போல் பரிதாபத்துக்குரிய வாழ்க்கை.
இதில் கோபால் ஒரு தனியன். fixations ,obsessions ,உடைய பணக்கார sophisticated person with ceremonial politeness . Impulsive , breaks down at the first opportunity when confronted with adversity .
இந்த மாதிரி ஒரு பாத்திரத்தை நடிகர்திலகம் மட்டுமே அதன் நிஜமான உள்வாங்கலோடு , தன் அபார திறமையால் உள்வாங்கியதை மிக மிக துல்லியமாக வெளிபடுத்துவார்.இந்த படத்தில் ஒரு இயக்குனரின் அபார பங்களிப்பு அவர் பாத்திரத்தை இமயத்துக்கே உயர்த்தி விடும்.
இந்த படத்திற்காக நடிகர்திலகம் தேர்ந்தெடுத்த உடல் மொழி, ஒரு introverted ceremonial politeness கொண்டது. புகை வண்டியை காணும் போது ஒரு tremor (வலிப்பு அல்ல)என்ற mild hysterical action . பொதுவாக ஒரு சோர்வு ததும்பும் meloncholic look . சந்தோஷத்தை அளவாகவே வெளியிடுவார். Anxiety வரும் போது தடுமாறி உடைந்து போவார். depression என்ற அளவிற்கு தள்ள படும் போது விரக்தி கலந்த frustration .(உலகமே மூழ்கி விட்டது போல் ).நம்பிக்கை குலைவு ஏற்படும் போது அழிக்க நினைக்கும் (bout of nihilism )தன்னை மறந்த வெறி, வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ள படும் போது ஒரு பிரமை கலந்த monologue (தான் மட்டும் உண்மை. சுற்றியிருப்பதெல்லாம் பொருட்டில்லை என்ற பாவம் ), குழந்தை போல் தன் கருத்தை மட்டும் அழுத்தி சொல்லும் தன்முனைவு,சின்ன சின்ன தற்காலிக நம்பிக்கைகளை மலை போல் நம்பி குதூகலிக்கும் ,நம்ப ஆசைபடும் விழைவு என்று flawless character sketch .
மற்ற தொழிலாளர்களுடன் சாதாரணமாக நடந்து கொள்ளும் கோபால், ராஜு தாத்தாவிடம் வாஞ்சையுடன் நடந்து கொள்ளும் முறையிலேயே , கோபாலின் fixation tendencies establish ஆக தொடங்கும். பிறகு தோட்டத்தை தனியாக பார்வையிடுவது, தனியாக picnic சூழ்நிலையில் படித்து கொண்டிருப்பது என்று தனிமை ,boredom சொல்ல பட்டு விடும். தூங்காமல் முழித்திருக்கும் இரவில் வரும் லதாவுடன், இதமான உரையாடலில் தன் ஏக்கம் கலந்த தனிமை, தூக்கமில்லா இரவுகளை குறிப்பிடும் அந்த husky ஆன குரல், ஏக்கமும் சோர்வும் சோர்வும் தோய்ந்த விழிகள், லதாவிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து வெளியிட முடியாமல், குறியீடாக பாட்டு என்று ஒற்றை வார்த்தையில், தன் அமைதிக்கு லதாவால் துணை நிற்க முடியும் என்று உணர்த்தும் கண்ணியமான இதம்.அந்த உன்னை ஒன்று கேட்பேன் இரவு காட்சி தமிழ் பட உலகின் அழகுணர்ச்சிக்கு ஒரு மைல் கல் காட்சி.
பார்த்த ஞாபகம் பாடலில், எதோ ஒன்றை தொலைத்து பறி கொடுத்த ஏக்கத்துடன், நிலைத்த சூன்ய பார்வை, அவ்வப்போது பாட்டில் சூழலில் அடையும் பரவசம், இதையெல்லாம் மீறாமல் நம்மை இன்றளவும் கவரும் அந்த sophisticated புகை பிடிக்கும் ஸ்டைல்(நாக்கில் இருந்து சின்ன புகையிலை தூளை விரலால் துடைக்கும் லாவகம்,wine glass ஏந்தும் தோரணை. பாடகி சித்ராவிடம் உடனே காட்டும் impulsive ஈடுபாடு.கல்யாண காட்சி உடனே வரும் போதும் பழகிய உணர்வு தெரியும் அந்த ஒரே பாடல் காட்சியில் .
அந்த ரயில்வே கேட் காத்திருப்பு காட்சியில், tremor என்றவொரு, வலிப்பு -அதிர்ச்சி இடைப்பட்ட நிலையை அவ்வளவு தத்ரூபமாக எந்த நடிகனும் காட்டியதில்லை.
நிச்சய தார்த்தம் அன்று வந்து சேரும் தன் மனைவி போன்ற உருவம் கொண்ட, மனைவியாக சித்தப்பா என்றவொருவனுடன் வந்து நிற்கும் காட்சியில்... முதலில் அதிர்வு என்ற நிலையில் தொடங்கி denial mode க்குள் செல்வார். இருக்காது,இருக்க முடியாது என்று. பிறகு சிறிதே seriousness உணர்ந்து, தன் police நண்பன் துணையுடன் மிரட்ட தலை படுவார். ஆனால் நடக்காது என்றவுடன் புலம்பும் ,குழம்பும் நிலை.(என்ன,என்ன,என்னை கேட்டால் எனக்கு என்ன)death certificate தேடி எடுத்து(அப்படியே போட்டது போட்டபடி விரையும் ஆர்வம் கலந்த வேகம்), அதை ரங்கன் தூளாக்கியதும், போலீஸ் நண்பனுடன் சிறு அதிகார தொனியிலேயே கடைசி பலவீன முயற்சியை அதிகாரமாய் தொடுப்பதும், வழியில்லை என்று அடங்குவதும்-இந்த காட்சி ஒரு roller -coaster ride .
தொடரும் காட்சிகள், இந்திய பட உலகம் இது வர பார்க்க இயலா புதுமை கலந்த marvel ...நடிப்பின் உச்ச பட்ச சாத்தியங்கள்.
அதற்கு பிறகு வரும் பதினோரு காட்சிகள் அதற்கு முன்னும் பின்னும் இந்திய திரையுலகமே கண்டிராத miracle .நான் குறிப்பிட்ட படி emotional roller coaster ride . நடிகர்திலகம் போன்ற நடிகர் ஒருவரால் மட்டுமே முடித்து காட்ட முடிந்த அதிசயம். விறு விறுப்பு,பரபரப்பு, sentiments ,Technical excellence ,புதுமை எதற்கும் பஞ்சம் வைக்கா விட்டாலும் நடிப்பு என்ற விஸ்வரூப தரிசன ஜோதியில் மற்றதெல்லாம் கரைந்து போகும் ,அதியற்புத உன்னதம் தொடும் psychedelic ecstasy பார்வையாளர்களுக்கு.
லதாவையும், அவள் தந்தையையும் ரங்கனின் insult மீறி, வீட்டில் இருக்க வைக்க கெஞ்சி கூத்தாடும் காட்சியில், அவர்களுக்கு நம்பிக்கை விதைக்க பாடு படுகிறார் என்ற அளவில் மட்டுமே (தன் சந்தேக கணங்களை ,அவநம்பிக்கையை மறைத்து. அப்படி மறைப்பதை நொடிக்கு நொடி மாறும் முகபாவங்களில் நமக்குணர்த்தி )நடிப்பார்.அவர்களை convince பண்ண தன் anxiety மறைப்பாரே தவிர, மறையவில்லை என்பதை அந்த இறைஞ்சும் பாணியே உணர்த்தி விடும்.
விரலை சொடுக்கி யோசித்து எனக்கு தெரிஞ்சா உன்னிடம் ஏன் வருகிறேன் என்ற இயலாமை கலந்த ஆயாசம்.dining காட்சியில், சித்ரா அடிக்கும் பால் பேணி sixer இல், முதல் நம்பிக்கை தெறித்தோடும் போது , அடுத்து வேறு வழியின்றி அவர்களை பணம் கொடுத்து விரட்ட முயலும் காட்சி. எல்லா பணத்தையும் நான் எடுத்து கிட்டா நீங்க என்ன பண்ணுவீங்க என்பதற்கு பிச்சை எடுப்பேண்டா ,என்று லதாவுடன் தனக்கிருக்கும் அபார காதலை வெளியிடும் முறை, யாரோட சாவு எனக்கு சந்தோசம் தருதோ அவ இருக்கான்னு சொல்லி ஏண்டா சித்ரவதை செய்யறே என்று கெஞ்சி அதற்கும் இணங்காத போது சீ,போ என்று வீ சும் வெறுப்பில் breaking பாயிண்ட் desperation தெரிய ஆரம்பிக்கும்.
அந்த போலீஸ் ஸ்டேஷன் காட்சியில் அப்படியே எல்லாம் மூழ்கி விட்ட விரக்தியில், எல்லா கேள்விகளுக்கும் indifference ஆக ஆமாம் என்று பதிலில் (கண்ணை அழுத்தி தடவி)என்னவேண்டுமானாலும் நடக்கட்டும் என்ற விரக்தி தெரிய ஆரம்பிக்கும். அவனை போக சொல்லு என்ற அருவருப்பு தெரியும் வெறுப்பின் கொதிப்பில், மனசுக்குள் துப்பாக்கி எடுக்கும் கோபம் புலப்படும்.
அடுத்த கல்லை அவிழ்க்கும் காட்சியில் தனக்கு தெரிந்த லதாவின் காதலையே re -assure செய்து கொள்ளும் விதமாக, பொய் ஆச்சர்யம் காட்டி, தான் breakdown ஆக ஆரம்பித்து விட்டதை மறைத்து லதாவிற்கு நம்பிக்கை ஊட்ட முயலும் பொது, தானே நம்பாததை மற்றவருக்காக சொல்வதை இந்த மேதை உணர்த்தும் குறிப்பு, குரலும்,பாவங்களும், உடல் மொழியும் புரியும் ரசவாதம்.
லதாவின் அவநம்பிக்கை நிறைந்த சோகத்தால் வெறி கொண்டு, ரங்கனையும் சித்ராவையும் சுட வரும் போது ,மற்றவர்கள் தடுத்தவுடன் விரக்தி, கோபம் கொண்டு, தன்னிச்சையாக பார்த்த ஞாபகம் இசைப்பார் பியானோவில்.இந்த காட்சியில் பாடல் முழுதும் meloncholic serenity with puzzled look உடன்,நிலைகுத்திய விழிகளுடன், முடிவில் சித்ரா அந்த பாடல் எப்படி தெரியும் என்பதற்கு பதில் கூறியவுடன் ஏமாற்றத்துடன் திரும்பும் லதாவை பார்த்து திரும்ப violent ஆகி சித்ரா கழுத்தை பிடித்து வெறி பிடித்து கத்தி கொண்டு தோட்டத்திற்கு செல்லும் இடம்......
அங்கு தோட்டத்தில் லதாவுடன் ,நம்பிக்கை இழந்து அவரை போக சொல்லி விட்டு, அப்படியாவது பழைய நாட்களை அசை போட்டு வாழ்ந்து விட நினைக்கும் கோபால்,பதட்டத்துடன் சிகரெட் பற்ற வைப்பதிலேயே depressed hope less state வெளிப்பட்டு விடும்.போலீஸ் நண்பன் வரும் போது detached silent agony யில் கொடுக்கும் indifferent உடல் மொழி மற்றும் கை அசைவுகள் ....(அவசியமில்லை). நண்பன் கைரேகை எடுக்க சொன்னதும் அவன் குற்றவாளிகள் தப்பி விடும் சாத்யகூற்றை சொன்னதும் போய்தான் தொலயுட்டுமே என்ற அங்கலாய்ப்பு.
சித்ராவை வலையில் சிக்க வைக்க கடுகடுவென்ற பாவனையில் இருந்து போலீஸ் நண்பன் voice over க்கு தக்க படி gradual ஆக forced pleasantness கொண்டு வருவது. ரங்கன் வருவதை பார்த்து லதாவிடம் மனமில்லாமல் கடுமையாய் பேசி அனுப்பி விட்டு ரங்கன் ரேகை இருக்கும் பால் கிண்ணத்தை உடைத்தவுடன், அதை பார்த்து கோபம் நிறைத்த help less ness கையை கொண்டே காட்டுவார்.
இந்த படத்தின் முக்கியமான மூன்று சிறப்புகள் - முதல் முதல் sur realistic முறையில் எடுக்க பட்ட எங்கே நிம்மதி பாடல். படம் முழுதும் voice over என்ற முறையில் நடிகர்திலகத்தின் உணர்ச்சி மிகு nerration உடன் perfect ஆக sink ஆகும் அவரின் நடிப்பு.ஆச்சர்ய பட வைக்கும்.கையை பயன் படுத்தி அவர் அதீத மனநிலையை வெளிபடுத்தும் இடங்கள். ஒன்றை ஏற்கெனெவே பார்த்தோம். எங்கே நிம்மதி பாட்டில் எனது கைகள் மீட்டும் போது வரிகளில் புறங் கைகளால் action காட்டி கண்களால் follow thru பண்ணும் போது கைகளே அந்நியமான உணர்வை கொடுப்பார். சித்ரா அவர் அடித்த அடியில் இறந்து விட்டதும் இந்த கைதானே அவளை அடித்தது என்று தண்டிப்பது போல் .....
climax காட்சி இந்திய படங்களில் வந்ததிலேயே சிறந்த காட்சிகளில் ஒன்று.
stylised நடிப்பில், மனோதத்துவ முறையில் உச்சம் தொடுவார். அப்படியே ஒவ்வொரு நொடியும் மனதில் தைக்கும். பிரமை பிடித்த மாதிரி உட்கார்ந்து சொல்லும் எதுவும் காதில் ஏறாத மனநிலையில் ராஜு வந்ததை கேள்வி பட்டதும் அவர் துன்பமெல்லாம் நீங்கி விட்டதான நினைப்பில் காட்டும் அதீத stress relieved happiness ... இந்த காட்சி முழுவதும் hope -despair ஊசலாட் டமே. ராஜூவை கட்டி தேம்பி விட்டு, ஆட்டி வைக்கிராண்டா என்ற ஆத்திரத்தை கொட்டி ரங்கனை சித்ராவை பரபரப்பாய் வெற்றி களிப்பு விடுதலை உணர்வில் அழைக்கும் தோரணை ,சித்ரா வந்ததும் பேயை பார்த்த மாதிரி பின் வாங்கும் அவசரம்.ராஜு அவளை தங்கை என்றும், ரங்கனை சித்தப்பா என்றும் ஒப்பு கொண்டவுடன்,தன்னையே நம்ப முடியாமல் மீண்டும் கெஞ்சி விட்டு, மச்சத்தையும் பார்த்தவுடன் விரக்தியில் வீழும் இடம்... நண்பன் கைரேகையுடன் வந்ததும்,ஒவ்வொருவரிடமும் களிப்புடன் ரேகை...ரேகை என்று பிரச்சினையே முடிவு பெற்றது போல் கொண்டாட்ட மனநிலை சென்று, ரேகையும் ஒரே மாதிரி என்று சொன்னதும்,நம்பலியா,நீயும் நம்பலியா என்று லதாவிடம் புலம்பி கொண்டே confess பண்ணும் காட்சி.... நான் அசைவே இல்லாமல் லயித்து ஒன்றிய அதிசயம்.
confess பண்ணி முடித்ததும், அந்த train உடலை சிதைத்ததை விவரித்து விட்டு அதிர்ச்சி கலந்த பய உணர்வுடன் அலறி, ஒண்ணு மட்டும் உறுதி என்று சொல்லி விட்டு மூக்கை கைகுட்டையால் சிந்தும் improvisation (humanising the celluloid image ).குழந்தை போல் தன் conclusion சொல்லி விட்டு, பந்தாவாக எழுந்து வந்து எல்லோரிடமும் இல்லை என்ற பதிலை கேட்டு பெற்று ,லதா தன்னை கைது செய்ய சொன்னதும்,நம்பவோ,ஜீரணிக்கவோ முடியாமல் உண்மை உணர்ந்து என்ன அழகான நடிப்பு என்று சித்ராவிடம் சொல்லி(அப்போது கூட லதா நடிக்கவில்லை என்ற நம்பிக்கை)
அதை வைச்சா என்னை வீழ்த்திட்டே, அத்தனையும் நடிப்பா என்று குழந்தையின் ஏமாற்றம் நிறைந்த தேம்பலுடன் கேட்டு, லதா தன்னை உண்மையாய் நேசிப்பதை அறிந்து கொள்ளும் நெகிழ்வு..(தாடையை தடவி)
இப்போது சொல்லுங்கள். இந்த மாதிரி ஒரு அதிசயம் உலகத்தில் உண்டா?கண்டதுண்டா?
Artaud acting techniques.
Artaud's thinking placed heavy emphasis on invoking deep routed feelings through acting. He believed the theatre was about action and the element of surprise. His theatre of cruelty approach, of which he is better associated with, takes acting to the subconscious level. Using painful memories and strong feelings to invoke strong emotion. Antonin Artaud thought less of words and more of profound impact. Where as Brecht wanted the audience to go out and change society Artaud wanted them shaken to their soul and to look within and make Changes within themselves.
இந்த முறையில் சராசரியாக நாம் வாழ்க்கையில் காட்டும் முகபாவங்கள், வெளியீட்டு முறைகள் நிராகரிக்க பட்டு , நடிகர்கள் முகத்தை ரப்பர் போல இஷ்டத்துக்கு வளைத்து, கண் மூக்கு வாய் எல்லாவற்றையும் மிக கொடூரமாக உபயோக படுத்தி, வலிதரும் எண்ணங்களை,மிக மிக வலிமையுள்ள நினைவெழுச்சிகள்,மிகை உணர்ச்சிகளை ,நடிப்பை உள்மன போராட்ட நிலைக்கு எடுத்து சென்று , பார்ப்பவரின் ஆத்மாவை உலுக்கி எடுக்க வலியுறுத்தினார். இந்த முறை நடிப்புக்கு இந்தியாவில் ஒரு நடிகரும் தகுதி பெற முடியவே முடியாது ,நம் ஒரே உலக மேதையை தவிர.
நடிகர்திலகம் மட்டுமே மற்றவர்களால் இஷ்டப்படி இயக்கி கொள்ள முடியாத involuntary muscles என்பதையும் அவர் இயக்கி கொள்ளும் திறமை பெற்றிருந்ததால்(ஒரு டாக்டர் குறிப்பிட்டதாய் ஞாபகம்) அவரால் மற்றவர்களை விட அதிகமாக முகபாவங்களை காட்டி (அமெரிக்க நடிப்பு பள்ளி ஒன்றில் இது நிரூபிக்க பட்டது)இந்த வகை நடிப்பிலும் தேர்ந்து விளங்கினார்.
எதற்கு எங்கெங்கோ போவானேன்?புதிய பறவை climax காட்சி ஒன்று போதுமே! அதை chekhov பாணியில் ஆன stylised நடிப்பு என்றுதானே பார்த்தோம்?ஆனால் அதில் முழு காட்சியிலும் Astraud cruelty முறை பயன் படுத்த பட்டு அந்த காட்சி நம் ஆத்மாவில் ஊடுருவி நம் sub -conscious level உணர்விலும் ஊடுருவும் அதிசயத்தை நிகழ்த்தி Focus reach என்ற Acting Miracle நிகழ்ந்தது.
பிரமை பிடித்து உட்கார்ந்திருக்கும் நடிகர்திலகம் சித்ராவின் அண்ணன் pilot ராஜு வந்து விட்டதை படி படியாய் உள்வாங்கி அப்படியே பிரமை நீங்கி ,stress relieve ஆகி, ecstatic உணர்வை நம்பிக்கையின் உச்சத்திற்கே செல்வதை காட்டும் அந்த expression .
அதே மாதிரி confession முடித்து விட்டு train இல் சித்ரா உடல் சிதையும் காட்சியை மனக்கண்ணால் பார்த்து அலறும் போது கொடுக்கும் expression .
eehaiupehazij
17th June 2014, 08:21 PM
Dear Gopal Sir. I don’t find words to express my gratitude for the neat streamlined narration of NT’s multidimensional acting prowess, incorporating from A to Z of all acting schools in a single film ‘Pudhiya Paravai’. This is the only NT movie I have seen more than a 100 times in my life for reasons that are obvious : NT’s unparalleled acting with an inimitable body language expressing his mental agony as the character is haunted by the nightmarish memoirs of his married life in the past, is the prime mover of this film. Next, the songs that are really of the kind “thaen vandhu paayudhu kaadhinile”. The orchestration for “enge nimmadhi’ and “paarththa gyapagam illaiyo”. NT’s signature pose from beginning to end of the song sequence ‘enge nimmadhi’ particularly the segement “enadhu kaigal meetumpodhu veenai azhugindrathu…” Then the bench mark scenes : his BP rising at the railway crossing, his counters with MR Radha and second Sowcar, his final revelation of truth …… No other actor in this world would have undergone the level of turmoil NT depicts scene by scene. I don’t think any other NT movie will match ‘Pudhiya Paravai’ (Deivamagan and Navarathiri are nearer) where he has shown the entire ice berg of acting while in other movies only tips of the ice berg. Of course for the current generation wedded to cell phones, the telephone scenes, trunk call booking… may seem to be strange. Hats off Sir, for making my heart filled with joy by way of your inimitable riveting style of writing.
eehaiupehazij
18th June 2014, 10:04 PM
This movie was also a breakthrough movie for Sowkar Janaki suddenly shifting to glam from her typical weepy face roles hitherto. For Saroja Devi, unlike other NT movies where here latent talents were paraded properly this movie does not offer much scope except remaining a show piece in the other actor's movies. The Nagesh comedy is a bit overly done slapstick. In a movie 'Anbe Vaa' too the same Nagesh-Manorama jodi reprise their roles!The comedy track is a hurdle for the otherwise edgeseating pace of this movie. However, the single most 'sumai thaangi' of the movie is NT whose magnetism and charisma make us glued to the seat. I always like the blue tuxedo worn and the cigarette smoking and drinking style of NT in this movie during the song 'Paarththa Gyapagam illayo' as inspired by the introductory scene of the original James Bond 007 Sean Connery in DrNo!(courtesy Ravi Kiran Surya's recent presentaitions of the photo-gallery by Mr.Anand)
RAGHAVENDRA
25th June 2014, 07:16 AM
Sivaji Ganesan Filmography Series
98. Pudhiya Paravai புதிய பறவை
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_001091356.jpg
தயாரிப்பு – சிவாஜி பிலிம்ஸ்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பி.சரோஜாதேவி, எம்.ஆர்.ராதா, சௌகார் ஜானகி, சி.கே.நாகேஷ், மனோரமா, வி.கே.ராமசாமி, ஓ.ஏ.கே.தேவர், ஏ.கருணாநிதி, எஸ்.வி.ராமதாஸ், கே.நடராஜன், எஸ்.ஏ.ஜி.சாமி, சதன்,
பின்னணி பாடியவர்கள்
டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, ஹென்றி டேனியல்
நடனம் – தங்கப்பன், டெஸ்மாண்ட், ஜோசப்
ஒப்பனை – ரங்கசாமி, ராமதாஸ், கஜபதி, ராமசாமி, பாண்டியன்
உடையலங்காரம் – பி.ராமகிருஷ்ணன் உதவி – டி.எஸ்.நடராஜன், டி.எம்.சாமிநாதன், கே.பி.குப்புசாமி
புரொடக்ஷன் நிர்வாகம் – கே.எஸ்.துரை
ஆபீஸ் நிர்வாகம் – சி. மாணிக்க வாசகர், எஸ்.சம்பத்
ஸ்டில்ஸ் – ஆர்.என்.நாகராஜ ராவ், விளம்பரம் – எலிகண்ட்
டிசைன்ஸ் – சீநிசோமு
செட் சாமான்கள் – சினி கிராப்ட்ஸ்
செட்டிங்ஸ் – ஏ.நாகரத்தினம், டி.எஸ்.வெங்கடேசன்
பெயிண்டிங்ஸ் – எஸ்.சுப்பையா, பி.சுப்ரமணி
எலக்ட்ரீஷியன்ஸ் – வி.எஸ்.ராதாகிருஷ்ணன், வி.சந்திரன்
புரோகிராம்ஸ் – ஆர்.பாலு
Printed and Processed at Gemini Studios Laboratory, Madras
ஸ்டூடியோ – விஜயா நிர்வாகம் – வீனஸ்-பத்மினி கம்பைன்ஸ்
அவுட்டோர் யூனிட் – பிரசாத் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்
டைட்டில் & டிசால்வ்ஸ் – வி.மதன் மோஹன் – பிரசாத் புரொடக்ஷன்ஸ் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் டிபார்ட்மெண்ட்
உதவியாளர்கள்
டைரக்ஷன் – டி.பி. அருணாசலம், எஸ்.எஸ். மணி, ஒளிப்பதிவு – ஆர்.ராஜன், எம்.கே.ஆர். ரவீந்திரன், வி.சூர்யகுமார், கே.ஆர். சீதாராமன்
ஒலிப்பதிவு – ஹெச். நாகபூஷண ராவ், வி.ஜனார்த்தனன், ஆர்.எஸ் வேதமூர்த்தி, ஜோ அலோஷியஸ்
எடிட்டிங் – எம்.கண்ணன் கலை – பாபு புரொடக்ஷன் – குப்புசாமி, சம்பத், பாபு, எஸ்.சி.சேகர்
மூலக்கதை – “சேஷாங்கா” [ராஜ்குமார் மித்ரா]
வசனம் – ஆரூர்தாஸ்
பாடல்கள் கவிஞர் கண்ணதாசன்
எடிட்டிங் – என்.எம். சங்கர்
பாடல்கள் ஒலிப்பதிவு & ரீரிக்கார்டிங் – டி.எஸ்.ரங்கசாமி – மெஜஸ்டிக்
வசனம் ஒலிப்பதிவு – W. நரசிம்ம மூர்த்தி
கலை – கங்கா
திரைக்கதை, அசோஸியேட் டைரக்ஷன் – பி.பி.சந்திரா [நன்னு]
ஒளிப்பதிவு டைரக்டர் – கே.எஸ். பிரசாத்
இசையமைப்பு – மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி உதவி – கோவர்த்தனம், ஹென்றி டேனியல்
டைரக்ஷன் – தாதா மிராசி
RAGHAVENDRA
25th June 2014, 07:17 AM
புதிய பறவை விளம்பர நிழற்படங்கள் உபயம் ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்
காவிய விளம்பரம் : The Hindu : 14.4.1963
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4550a-1.jpg
'செப்டம்பர் வெளியீடு' விளம்பரம் : The Hindu : 15.8.1964
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4554a-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4551a-1.jpg
'பாரகன்' "புதிய பறவை"க்காக புதுப்பிக்கப்படும் விளம்பரம் : The Hindu : 4.9.1964
[நடிகர் திலகமே தம் சொந்த செலவில் 'பாரகன்' திரையரங்கை புதுப்பித்துக் கொடுத்தார்]
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4552a-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 6.9.1964
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4553a-1.jpg
அட்டைப்படம் : பேசும் படம் : ஜூலை 1964
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4561a-1.jpg
பின் அட்டை : பேசும் படம் : ஜூலை 1964
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4562a-1.jpg
விமர்சனம் : முத்தாரம் : 1.10.1964
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4559a-1.jpg
அரிய நிழற்படம் : கோபால் கெட்டப்பில் தனது மனைவியுடன்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4560a-1.jpg
RAGHAVENDRA
25th June 2014, 07:23 AM
pesum padam cover in b/w
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/NewBirdPesumPadAdfw.jpg
கல்கி 13.09.1964 தேதியிட்ட இதழில் வெளிவந்த விளம்பரத்தின் நிழற்படம்
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/newbirdreleasekalkiadfw.jpg
புதிய பறவை திரைக்காவியத்தில் நடிகர் திலகம் அமர்ந்திருந்து நடிக்கும் காட்சி படமாக்கப் பட்ட போது எடுக்கப் பட்ட நிழற் படம், பேசும் படம் பத்திரிகைக்காக பிரத்யேகமாக எடுக்கப் பட்டது. நடிகர் திலகத்திற்கும் நாகேஷுக்கும் நடுவில் நின்று கொண்டிருப்பவர் இயக்குநர் மற்றும் நடிகர் தாதா மிராஸி அவர்கள்.
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/NewBirdShootSpotfw.jpg
RAGHAVENDRA
25th June 2014, 07:27 AM
பம்மலாரின் விளம்பர நிழற்படங்கள் அணிவகுப்பு தொடர்ச்சி...
'இன்று முதல்' விளம்பரம் : சுதேசமித்ரன்: 12.9.1964
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4558a-1.jpg
'ஈஸ்ட்மென் கலர்' "ஜெமினி"யில் உருவாக்கபட்ட விளம்பரம் : சுதேசமித்ரன் : 13.9.1964
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4555-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 19.9.1964
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4556a-1.jpg
14வது வார விளம்பரம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4557a-1.jpg
இக்காவியம் அதிகபட்சமாக சென்னை 'பாரகன்' திரையரங்கில் 19 வாரங்கள் [132 நாட்கள்] ஓடி மாபெரும் வெற்றியைப் பெற்றது. 100வது நாள் விளம்பரம் கிடைக்கப் பெற்றவுடன் கண்டிப்பாகப் பதிவிடுகிறேன்.
RAGHAVENDRA
25th June 2014, 07:28 AM
ஹிந்து நாளிதழில் புதிய பறவை திரைக்காவியத்திற்காக மெல்லிசை மன்னர்களின் இசைக்குழுவில் செல்லோ இசைக் கருவி வாசித்த கலைஞரின் புதல்வர் செல்வராஜ் அவர்கள் ஹிந்து நாளிதழில் இதைப் பற்றிக் கூறுவதைப் படியுங்கள்
When the song ‘Yenge Nimmadhi,' for Pudhiya Paravai (1964), was being composed, the recording studio was packed with nearly 250 instrumentalists playing mammoth instruments in perfect sync. “Some of the instruments were imported just for the song. To sit at the studio and listen to the live performance was a heavenly experience,” recalls R.Selvaraj, a cello player, whose father was part of the orchestra.
- நன்றி, ஹிந்து நாளிதழ்
http://www.thehindu.com/features/friday-review/music/article452338.ece
RAGHAVENDRA
25th June 2014, 07:29 AM
videos
chittukkuruvi
http://youtu.be/RzjK5wzDeVc
partha gnyabagam
http://youtu.be/xNInBEF8E7M
aha mella nada
http://youtu.be/iyk3ofoFlf4
உலகத்தில் இனிமேலும் யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத மிகச் சிறந்த நடிப்பில், மிகச் சிறந்த இசையில், மிகச் சிறந்த குரலில், மிகச் சிறந்த வரிகளில், மிகச் சிறந்த பாடல்.
சோகப் பாடலுக்கு உலகில் பெரும் வரவேற்பைப் பெரும் ஒரே நடிகர் என நடிகர் திலகத்தை ஆணித்தரமாக உறுதி செய்த பாடல்... நிச்சய தாம்பூலம் படைத்தானே பாடலுக்கு இணையாக மிகப் பெரும் வரவேற்பை என்றும் பெறும் பாடல்...
எங்கே நிம்மதி என்று டி.எம்.எஸ். குரல் துவங்கும் போது ஏற்படும் உடல் சிலிர்ப்பினை அனுபவித்தால் தான் உணர முடியும்.
உணர்ந்து அனுபவிப்போம்
Enge nimmadhi
http://youtu.be/tHvMahBQ2u8
Our Neyveli vasu’s write up for unnai ondru ketpen
"உன்னை ஒன்று கேட்பேன். உண்மை சொல்ல வேண்டும்"..
புதிய பறவை திரைக் காவியத்தில் இரண்டாவது முறையாக வரும் 'உன்னை ஒன்று கேட்பேன்' பாடலில் தான் எவ்வளவு மென்மை! எவ்வளவு இனிமை! என்ன ஒரு மனதை வருடும் மெல்லிசை! மிக அழகாக நகரும் உணர்வுபூர்வமான காட்சிகள். தன்னையே மறந்து, காதல்வயப்பட்ட உணர்வுகளின் சங்கமத்தால் தவிக்கும் நடிகர் திலகம்.. அதே மனநிலையில் அபிநய சரஸ்வதி. கப்பலில் பாடிய அதே பாடலை அவர் விரும்பிக் கேட்க, காதல் உணர்வுகளை அற்புதமாய் சரோஜாதேவி அவர்களும் பாடலின் மூலம் பிரதிபலிக்க ....மனதில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் காதல் தீயை அங்கே குளிர் காய்வதற்காக எரிந்து கொண்டிருக்கும் விறகுக் கட்டைகள் சாட்சியமாய் சொல்ல, நாற்காலியில் தலை சாய்த்தபடியே பாடலின் இனிமையில் நடிகர் திலகம் உறங்கிப்போக ஒரு காதல் உருவாகி காவியமாக ஆகத் தொடங்கும் அந்த அமைதியான அழகான இரவுப் பின்னணிக் காட்சி...அற்புதத்திலும் அற்புதம்.
முதல்பாடல் ஆர்ப்பாட்டமும்,அளப்பரையும் என்றால் பின்னது அமைதியும் மென்மையும் குடி கொண்டது.
மெல்லிசை மன்னரின் மிக மெல்லிய மனதை வருடிக் கொடுக்கும் மெல்லிசையும், இசைக்குயிலின் இன்னிசைக் குரலும் நம்மைத் தென்றலாய்த் தாலாட்டுகின்றன.
அந்த அற்புத பாடல் இதோ...
http://youtu.be/YA50A8TqeRM
RAGHAVENDRA
25th June 2014, 07:31 AM
பியானோ வாசிப்பிற்காகவே மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் பாடல் காட்சி...
நடிகர் திலகமே வாசித்தாரோ என கேள்வி எழுப்பும் அளவிற்கு தத்ரூபமாக நடித்த மறக்க முடியாத காட்சி
பார்த்த ஞாபகம் இல்லையோ பாடல் காட்சி ...
http://youtu.be/PssvpdmuTGg
parthasarathy
26th June 2014, 10:28 AM
நண்பர்களே,
புதிய பறவை - பேசும் படம் அட்டைப்படம் - நடிகர் திலகம் க்ளோசப் - ஒரு மாதிரி அதிர்ச்சியைக் காட்டும்படி அமைந்திருப்பது.
நன்றாக உற்று நோக்கினீர்கள் என்றால் ஒரு மிகப் பெரிய விஷயம் நடிகர் திலகத்தின் ஈடு இணையற்ற திறன் விளங்கும்.
அவரது ஒரு கண் அதிர்ச்சியையும் மற்றொரு கண் சோகத்தையும் ஒரே சமயத்தில் காட்டுவதைப் பார்க்கலாம்.
பல வருடங்களுக்கு முன், அவர் ஜப்பானுக்குச் சென்றிருந்த போது, அங்கு ஒரு மேடையில் இதை செய்து, அரங்கமே அதிர்ந்து உறைந்ததாகச் சொல்லுவார்கள்.
கலைமகளின் மறு அவதாரத்திற்கு எது தான் சாத்தியமில்லை?
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
sivaa
27th June 2014, 09:04 AM
நண்பர்களே,
புதிய பறவை - பேசும் படம் அட்டைப்படம் - நடிகர் திலகம் க்ளோசப் - ஒரு மாதிரி அதிர்ச்சியைக் காட்டும்படி அமைந்திருப்பது.
நன்றாக உற்று நோக்கினீர்கள் என்றால் ஒரு மிகப் பெரிய விஷயம் நடிகர் திலகத்தின் ஈடு இணையற்ற திறன் விளங்கும்.
அவரது ஒரு கண் அதிர்ச்சியையும் மற்றொரு கண் சோகத்தையும் ஒரே சமயத்தில் காட்டுவதைப் பார்க்கலாம்.
பல வருடங்களுக்கு முன், அவர் ஜப்பானுக்குச் சென்றிருந்த போது, அங்கு ஒரு மேடையில் இதை செய்து, அரங்கமே அதிர்ந்து உறைந்ததாகச் சொல்லுவார்கள்.
கலைமகளின் மறு அவதாரத்திற்கு எது தான் சாத்தியமில்லை?
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
பார்த்தசாரதி
நீங்கள் குறிப்பிட்ட பின்தான் உற்று நோக்கினேன் உண்மைதான்
அவரது ஒரு கண் அதிர்ச்சியையும் மற்றொரு கண் சோகத்தையும் ஒரே சமயத்தில் காட்டுகிறது
பிறவி நடிகனையா வேறு எந்த நடிகனால் இது முடியும்?
ஜப்பான் நிகழ்ச்சி விபரம் ஆவணம் இருந்தால்
யாராவது பதிவிடுங்கள்
RAGHAVENDRA
29th June 2014, 10:10 AM
Sivaji Ganesan Filmography Series
99. Muradan Muthu முரடன் முத்து
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/mmcollage_zps1bd91187.jpg
தணிக்கை 13.10.1964
வெளியீடு 03.11.1964
தயாரிப்பு பத்மினி பிக்சர்ஸ்
நடிக நடிகையர் –
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தேவிகா, பி.ஆர்.பந்துலு, எம்.வி.ராஜம்மா, நாகேஷ், அசோகன், வி.கே. ராமசாமி, பிரேம் நஸீர், சந்திரகாந்தா, சி.கே.சரஸ்வதி, பேபி ஷகீலா, ஏ.கருணாநிதி, ஓ.ஏ.கே.தேவர், பக்கிரிசாமி, எஸ்.ஏ.கண்ணன், மற்றும் பலர்
திரைக்கதை வசனம் – எம்.எஸ்.சோலைமலை
பாடல்கள் கவிஞர் கண்ணதாசன்
இசை – டி.ஜி. லிங்கப்பா, உதவி – எம்.முத்து
துணைத் தயாரிப்பு – சித்ரா கிருஷ்ணஸ்வாமி
தயாரிப்பு டைரக்ஷன் – பி.ஆர். பந்துலு
ஒளிப்பதிவு டைரக்டர் – வி.ராம மூர்த்தி உதவி பி.எல். நாகப்பா
ஒலிப்பதிவு பாடல்கள் – டி.எஸ்.ரங்கசாமி – மெஜஸ்டிக் ஸ்டூடியோ, ஜே.ஜே. மாணிக்கம் – ஏவி.எம்.
ஒலிப்பதிவு வசனம் – எம்.சிவராம்
Recorded on RCA Magnetic & Westrex
கலை – செல்வராஜ்
நடனம் – தங்கப்பன் உதவி – சுந்தரம்
எடிட்டிங் – ஆர். தேவராஜன், உதவி – வி.பி.கிருஷ்ணன், சி.பழனி
ஒப்பனை – எம்.கே.சீனிவாசன், ஆர்.ரங்கசாமி, வி.பார்த்தசாரதி, ராமசாமி, பத்ரய்யா, உதவி – எஸ்.ஏ.தாமோதரன்
உடைகள் – எம்.ஜி.நாயுடு
அரங்க ஓவியம் – எஸ்.சுப்பய்யா, டி.சுப்ரமணி
அரங்க நிர்மாணம் – ஏ.நாகரத்தினம், உதவி – டி.எஸ்.வெங்கடேசன்
சிற்ப வேலை – கே.ஜி.வேலுச்சாமி, உதவி – எம்.ஜி.பாஷா
மின்சார மேற்பார்வை – வி.எஸ்.ராதாகிருஷ்ணன், டி.அய்யாதுரை
தயாரிப்பு நிர்வாகம் – பி.எஸ்.சுப்ரமணியம்
அரங்க அலங்காரம் – எம்.சுப்ரமணியம், எஸ்.மணி
அரங்க அலங்காரப் பொருட்கள் – சினி கிராஃப்ட்ஸ்
புகைப்படம் – ஆர்.வெங்கடாச்சாரி
விளம்பர ஓவியம் – ஸ்டூடியோ கேதா
விளம்பர நிர்வாகம் – அருணா & கோ
பிராஸஸிங் – விஜயா லேபரட்டரி by டி.எஸ்.ரங்கநாதன்
அரங்க நிர்வாகம் – ஆர். பாலு, உதவி – என்.வி.மூர்த்தி, டி.வெங்கடாசலம்
பேசும் பொம்மை உரிமையாளர் – புரொபஸர் ராவ்
ஸ்டூடியோ – விஜயா, நிர்வாகம் – வீனஸ்-பத்மினி கம்பைன்ஸ்
உதவி டைரக்ஷன் – கே.சிங்கமுத்து, ஆர்.கே.சண்முகம், பி.எஸ்.செல்வராஜ்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம் : The Mail : 2.11.1964
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4937-1.jpg
காவிய விமர்சனம் : முத்தாரம் : 15.11.1964
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4938-1.jpg
முரடன் முத்து விளம்பர நிழற்படம் உபயம் ஆவணத் திலகம் பம்மலார்
RAGHAVENDRA
29th June 2014, 10:33 AM
முரடன் முத்து பாடல்களின் விவரம்
1. செவ்வந்திப்பூ செண்டு போல – சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
2. கல்யாண ஊர்வலம் பாரு – பி.சுசீலா
3. தாமரைப்பூ குளத்திலே – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
4. கோட்டையிலே ஒரு ஆலமரம் – சீர்காழி கோவிந்தராஜன்
5. சிரிக்கின்ற முகத்தை சிலை செய்வேன் – எஸ்.ஜானகி
6. பொன்னாசை கொண்டோர்க்கு – டி.எம்.சௌந்தர்ராஜன்
RAGHAVENDRA
29th June 2014, 10:43 AM
முரடன் முத்து சிறப்புச் செய்திகள்
நடிகர் திலகத்தின் 99வது திரைப்படம்
கன்னடத்தில் சின்னத கொம்பே என்ற பெயரில் வெளியான திரைப்படத்தின் தமிழாக்கம்.
ஜெயலலிதா முதன் முதலில் திரையுலகிற்கு அறிமுகமான படம் சின்னத கொம்பே. கல்யாண்குமாருக்கு இணையாக நடித்திருந்தார். தமிழில் நடிகர் திலகம் தேவிகா நடித்த பாத்திரங்களில் கன்னடத்தில் கல்யாண்குமார் ஜெயலலிதா நடித்திருந்தனர்.
தாமரைப்பூ குளத்திலே பாடலின் கன்னட வடிவம் கல்யாண் குமார் ஜெயலலிதா நடித்த பாடல் காட்சி
http://youtu.be/5UZ9HtTG1Aw
செவ்வந்திப்பூ செண்டு போலே பாடலின் கன்னட வடிவம்
http://youtu.be/MW-tJH9l6Vc
கோட்டையிலே ஒரு ஆலமரம் பாடலின் கன்னட வடிவம். பாடியவர் பாணிக்ரஹி. இவர் தான் அவள் யார் படத்தில் பிரபலமான கண்காணும் மின்னல் தானோ பாடலைப் பாடியவர்.
http://youtu.be/4VzDEtC15ug
கல்யாண ஊர்வலம் பாரு பாடலின் கன்னட வடிவம். பாடியவர் பி.சுசீலா
http://youtu.be/hNfVHHK_xuI
பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளமில்லை பாடலின் கன்னட வடிவம். பாடியவர் பி.பி. ஸ்ரீநிவாஸ்
http://youtu.be/prOWhBuJFhI
RAGHAVENDRA
29th June 2014, 10:49 AM
முரடன் முத்து திரைப்படத்தின் பாடல் காட்சிகள்
பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளம் இல்லை
http://youtu.be/Uup7d8Mytak
தாமரைப்பூ குளத்திலே
http://youtu.be/bjHEHPJa9w0
சிரிக்கின்ற முகத்தை சிலை செய்தேன்
http://youtu.be/QMAVAyMltqU
கல்யாண ஊர்வலம் பாரு
http://youtu.be/Gq09rRQ-fUI
கோட்டையிலே ஒரு ஆலமரம்
http://youtu.be/LItSC-1OJCc
RAGHAVENDRA
4th July 2014, 07:56 AM
Sivaji Ganesan Filmography Series
100. Navarathiri நவராத்திரி
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/Navarathricollage01fw_zpsd228e381.jpg
தணிக்கை
வெளியீடு
தயாரிப்பு – ஸ்ரீ விஜயலக்ஷ்மி பிக்சர்ஸ்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சாவித்திரி கணேஷ், ருக்மணி, ராதாபாய், சிவகாமி, சீதாலக்ஷ்மி, குட்டி பத்மினி
கௌரவ நடிகர்கள் – கே.சாரங்கபாணி, வி.கே.ராமசாமி, நாகேஷ், ஈ.ஆர்.சகாதேவன், பி.டி.சம்பந்தம், வி.கோபாலகிருஷ்ணன்
கௌரவ நடிகையர் – மனோரமா, டி.பி.முத்துலக்ஷ்மி, சி.கே.சரஸ்வதி, சி.டி.ராஜகாந்தம், திலகம் ராஜகுமாரி, எம்.எஸ்.எஸ்.பாக்கியம்
பின்னணி பாடியவர்கள் – பி.சுசீலா, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, எல்.ஆர்.ஈஸ்வரி, ஜமுனா ராணி, அஞ்சலி, டி.எம்.சௌந்தர்ராஜன், எஸ்.சி.கிருஷ்ணன்
நடன அமைப்பு – சின்னி-சம்பத், டேஸ்மாண்ட், கள்ளபார்ட் நடராஜன், டி.வி.சௌந்தர்ராஜன்
மேக்கப் – ரங்கசாமி, கே.நாகேஸ்வர்ராவ், தக்ஷணாமூர்த்தி, சேது
ஆடை அலங்காரம் – பி.ராமகிருஷ்ணன், உதவி – சி.கே.ஹரி, நாகலிங்கம்
ஸ்டண்ட் – சாரங்கன் கோஷ்டியினர்
புலி, நரி – கோவிந்தராஜு
ஆர்ட் டைரக்டர் – சிஹெச். ஈ. பிரசாத் ராவ்
ஸெட்டிங்ஸ் – எல்.பெருமாள் ராஜு, உதவி – சி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
ஓவியம் – வி.ராமலிங்கம், உதவி – பி.ராமசாமி
கொலு பொம்மைகள் – சென்னை மண் காகித பொம்மைகள் உற்பத்தி செய்யும் கூட்டுறவுத் தொழில் ஸொஸைட்டி லிமிடெட்
ஸெட் அலங்காரம் – சினி கிராஃப்ட்ஸ்
எலெக்ட்ரீஷியன் – வி.ராமச்சந்திரன்
மின்விளக்கு அலங்காரம் – ராதா எலெக்ட்ரிகல், சென்னை-14
ஒளிப்பதிவு – W.R. சுப்பாராவ், உதவி – என்.கார்த்திகேயன், ஏ.கோபிநாத், குருமூர்த்தி
பாடல்கள் ஒலிப்பதிவு – டி.எஸ்.ரங்கசாமி, மெஜஸ்டிக், உதவி – வேதமூர்த்தி, ஜோ அலோஷியஸ்
வசனம் ஒலிப்பதிவு – பிரான்சிஸ் ஏ.சாமி, பிலிம்சென்டர், உதவி- எம்.ஜி.ராஜன் பி.பங்காரு
ரீரிகார்டிங் – எம்.பி.வால்கே, பிலிம்சென்டர், உதவி- மூஸா இப்ராஹிம்
எடிட்டிங் – ராஜன், டி.ஆர்.நடராஜன்
லாபரட்டரி – பால் ஜி. ஸிந்தே, லேப்-இன்-சார்ஜ், டி.ஈஸ்வரிசிங், உதவி-என்.எம்.அமோன்கர்
ஸ்டில்ஸ் – ஆர்.நாகராஜ ராவ், உதவி – ஆர்.என்.நரசிங்க ராவ், ஏ.சங்கர் ராவ்
விளம்பரம் – சாந்தி பப்ளிஸிடி சர்வீஸ்
பாடல்கள் – தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள், கவிஞர் கண்ணதாசன் உதவி – பஞ்சு அருணாசலம்
சங்கீதம் – திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன், உதவி – புகழேந்தி
நிர்வாகம் – கே.வெங்கடாஜலம், கே.என்.வைத்தினாதன்
புரொடக்ஷன் நிர்வாகம் – டி.என்.ராஜகோபால், எஸ்.வி.ராஜகோபால் உதவி- டி.வேலாயுதம், எஸ்.சுப்பய்யா, நடேசன்
Produced and Processed at Film Centre, Madras
Recorded on R.C.A. Sound System
உதவியாளர்கள் – டைரக்ஷன்-ஜே.கே.சஜாமி, எஸ்.வி.கணபதி,எம்.கருப்பய்யன், தஞ்சை மதி. எடிட்டிங் – என்.எம்.விக்டர்
அஸோஸியேட் டைரக்டர் – கே.கே. ஸம்பத்குமார்
கதை வசனம் டைரக்ஷன் – ஏ.பி.நாகராஜன்
நவராத்திரி விளம்பர நிழற்படங்கள் உபயம் ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்
காவிய விளம்பரம் : தினத்தந்தி : 2.1.1964
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4933-1.jpg
'இன்று முதல்' விளம்பரம் : முரசொலி : 3.11.1964
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4958-1.jpg
'வெற்றிகரமாக நடைபெறுகிறது' விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4959-1.jpg
'நடிப்புப் போட்டி' விளம்பரம் : சுதேசமித்ரன் : 15.11.1964
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4960-1.jpg
50வது நாள் விளம்பரம் : சுதேசமித்ரன் : 22.12.1964
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4961-1.jpg
100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 10.2.1965
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4962-1.jpg
100வது நாள் விளம்பரம் : The Hindu : 10.2.1965
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4963-1.jpg
…
குறிப்பு:
நவரசச் சக்கரவர்த்தியின் 100வது திரைக்காவியமான "நவராத்திரி", தமிழகமெங்கும் ஆறு அரங்குகளில் 100 நாட்களைக் கடந்த சூப்பர்ஹிட் காவியம். சென்னையில் 100 நாட்களைக் கடந்த நான்கு திரையரங்குகளைத் [மிட்லண்ட், மஹாராணி, உமா, ராம்] தவிர, மதுரை 'ஸ்ரீதேவி'யிலும், திருச்சி 'சென்ட்ரல்' திரையரங்கிலும் 100 நாட்களைக் கடந்தது. இக்காவியம் ஒரு மாபெரும் வெற்றிக்காவியம் என்பதே அன்றும், இன்றும், என்றும் வரலாற்று உண்மை.
RAGHAVENDRA
4th July 2014, 08:13 AM
நவராத்திரி நிழற்படங்கள் உபயம் ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்
கோடீஸ்வரன் : அற்புதராஜ்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Navarathiri1-2.jpg
பயம் : குடிகாரன்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Navarathiri2-1.jpg
கருணை : டாக்டர் : கருணாகரன்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Navarathiri3-1.jpg
கோபம் : கொலைகாரன்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Navarathiri4-1.jpg
சாந்தம் : விவசாயி : சாந்தப்பா
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Navarathiri5-1.jpg
அருவருப்பு : நோயாளி : தர்மலிங்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Navarathiri6-1.jpg
சிங்காரம் : நாடக நடிகன் : சிங்காரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Navarathiri7-1-1.jpg
வீரம் : போலீஸ் அதிகாரி : வீரப்பன்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Navarathiri8-1.jpg
ஆனந்தம் : கல்லூரி மாணவன் : ஆனந்த்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Navarathiri9-1.jpg
சிங்காரம் : நாடக நடிகன் : சிங்காரம் ('சத்தியவான்' வேடம்)
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SathyavanSavithri-1.jpg
Russellmai
4th July 2014, 02:39 PM
இராகவேந்திரர் சார்,
நடிகர் திலகத்தின் 100 படங்கள் பற்றிய விபரங்கள்
மற்றும் செய்தித்தாள்களில் வந்த அப்படங்களின் விளம்பரங்கள்
அனைத்தையும் மீண்டும் காண வாய்ப்பளித்தமைக்கு என் நன்றி
மற்றும் பாராட்டினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்பு கோபு
Gopal.s
4th July 2014, 03:22 PM
From Wikipedia
The film opens with the narrator explaining that there are nine types of human behaviors (Navarasam) such as Wonder (அற்புதம்), Fear (பயம்), Compassion (கருணை), Anger (கோபம்), Equanimity (சாந்தம்), Disgust (அருவருப்பு), Elegance (சிங்காரம்), Bravery (வீரம்) and Bliss (ஆனந்தம்) and that Sivaji Ganesan's nine roles represents one character per role.
Nalina (Savitri) is the only daughter of a rich man. When she happily celebrates Navaratri festival at her home with her friends her father informs about the visit of a groom and his parents for her wedding. Nalina is reluctant to the proposal as she wants to marry her college mate Anand. After arguments with her father, she leaves away from home without her father's knowledge at the first Navaratri night.
First Night (Wonder): She searches for her lover in the college hostel but finds that he has gone to get married. Nalina felts cheated by Anand and attempts for suicide where she is stopped by a widower Arputharaj (Sivaji Ganesan). He takes her to his house and introduces her to his daughter. He urges her to tell her address to drop her safely. Unwilling to return home she leaves the place the next early morning.
Second Night (Fear): The next day she damages the vegetables of a vendor. When vendor fights with her she was rescued by a homely looking woman. The woman takes Nalina to her home. Nalina meets several women in her house. But the house is actually a brothel house. She is trapped to a drunkard (Sivaji Ganesan). The drunkard justifies that he cannot seduce his own wife as she is a T.B patient. Though he does not want to betray his wife, he is not able to resist his feelings. Nalina advises and warns him in order to escape from him but he does not want to hear. After much struggle the drunkard falls into the floor and faints. Nalina escapes from the place.
Third night (Compassion): After escaping from the brothel house, Nalina is caught by a patrol police for wandering into the road at unusual time. At police station she pretends to be a mentally ill woman. The police admits her at a mental hospital. The old aged lonely doctor Karunaagaran (Sivaji Ganesan) understands that Nalina is fine but pretends to escape from cops and so he helps her. She stays in the hospital the whole night. Doctor finds a newspaper with the photograph of hers the next morning. But Nalina escapes, while the doctor is still looking at the newspaper.
Fourth Night (Anger): Nalina misunderstands the police jeep is coming for her. She dashes with a man with a gun (Sivaji Ganesan) and faints. The man takes her to his place. Nalina understands police is not looking for her but looking for the man as he is a killer who killed a rich businessman as a revenge for his brother's death. The gun man insists Nalina to leave. But she doesn't as she feels he is a good person and convinces him to surrender to police. In an attack the gunman is killed by the businessman's henchmen. Nalina escapes from the place.
Fifth night (Equanimity): Fed up by the life Nalina runs into a track for attempting suicide. An innocent villager (Sivaji Ganesan), looks at her and rushes to the track to save her and succeeds. He takes to his house and introduces to his elder sister. A local priest (Nagesh) visits their home and tells that Nalina is possessed by a spirit in order to cheat for money by performing some fake rituals. Nalina gets irritated by their acts and escapes away that night.
Sixth Night (Disgust): Nalina meets an old aged leper (Sivaji Ganesan), who once upon a time was a rich man. The man lost all his money in the treatment and charity (hoping that will help him from disease). He is disgusted by everyone including his own son who discarded him when his money ran out. Nalina helps him by taking him to a hospital. The doctor is surprised as he is one of the beneficiers who was benefitted with medicine degree by charity of the rich man. The doctor decides to stay with him until he is cured. Nalina leaves the hospital.
Seventh Night (Elegance): Nalina feels very tired and asks for water from one of the houses. People offer water for her. One of the men "Sathyavaan Singaaram" (Sivaji Ganesan), is a director and actor of stage plays and road side plays. They have been committed for nine stage plays in the village on the account of Navaratri celebration. But the heroine falls sick and his whole troop are in critical position in search of a replacement for the seventh day play failing on which will make them to lose their money and reputation in the village. He asks Nalina to help by acting with him for the day's play. Nalina agrees on a condition that she should be let gone after the play is over. The play is successful that night. The agent tries to misbehave with Nalina and the actor pulls him from it and warns him. But finds Nalina has left.
Eight Night (Bravery): Nalina disguises as a man and visits a house of a hunter Veerapan (Sivaji Ganesan). The hunter has been there for hunting a man-eater and for another purpose. Nalina introduces herself a Nathan a secret agent in search of a criminal. The hunter seems to believe her and gives a her an earnest welcome, feast and hospitality. Nalina finds that the hunter is actually a commissioner of police stayed in search of a criminal which actually faked by Nalina. She tries to escape from the place but she is caught by the hunter.
The hunter introduces himself as the paternal uncle of the groom whom her father proposed for her and the groom is none other than her lover - Anand. Nalina has actually left her home before her father knew that she is in love with a person and the lover is the same man he has arranged for his daughter. Also Nalina misunderstands that Anand actually is going to marry another girl but the girl is actually herself. Nalina leaves for the Anand's place the ninth day.
Ninth Day (Bliss): Anand (Sivaji Ganesan), looks pale and dull after Nalina left her home. He is neither interested to live usually nor to continue with his studies. His parents are worried and scolds him for wasting his life for a girl after all. Angered by this he shuts himself into a room. Nalina reaches his home that time. Anand's parents and Nalina fears that he is attempting suicide. But suddenly the room opens and Nalina runs inside.
Anand actually wanted to surprise Nalina about their marriage and that is why he did not inform her about the engagement. Due to miscommunication Nalina left home on the first Navatri Night and comes back on ninth Navaratri night.
Anand and Nalina happily marry. Except the dead gun man, her marriage is attended by the all the people she met during those eight days.
RAGHAVENDRA
5th July 2014, 07:04 AM
நண்பர்களே
கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி 21ம் நாள் இத்திரியைத் தொடங்கி கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த நூறு படங்கள் தகவல்களைத் திரட்டித் தருவதற்கே இப்படி என்றால் திரையுலகில் நுழைந்து 12 ஆண்டுகளில் இந்த 100 படங்களை நடித்து முடித்த அந்த மகானை எப்படிப் பாராட்டுவது. கலைவாணியின் அவதாரமாக ஒரு கோயிலில் விக்ரகமாக வைத்து வழிபட உண்மையான தகுதியுள்ளவராக தெய்வமாக விளங்கும் அந்த நடிகர் திலகத்தின் திரைப்பட விவரங்களைத் தொகுத்தளிக்கும் இத்திரியினை ஒரு தவமாக எடுத்து செய்து வருகிறேன். தங்கள் அனைவருக்கும் குறிப்பாக மிகவும் ஆரவமுடன் நேரிலும் இத்திரியின் தொடர் பங்களிப்பின் மூலமாகவும் ஆதரவும் ஊக்கமும் அளித்து வரும் கோபால் அவர்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் என் உள்ளம் கனிந்த நன்றி. முடிந்த வரையில் மீதமுள்ள 200 படங்களின் விவரங்களை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவிற்கு செய்ய முயல்கிறேன்.
தங்கள் அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த நன்றி மீண்டும்.
அன்புடன்
ராகவேந்திரன்
Gopal.s
5th July 2014, 08:30 AM
சிவாஜி மதத்தின் முக்கிய அப்போஸ்தகராகவும்,சிவாஜி குடும்பத்தின் அண்ணனாகவும் தங்களை பாவித்து,தங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன்.தங்களுக்கு அணிலாக சேவை செய்வது எனக்கு நிறைவே.
Subramaniam Ramajayam
5th July 2014, 10:29 AM
RAGHAVENDRAN You have done a marvelous job of covering FIRST 100 FILMS OF NT
with relevant datas including collections collected and specic sadhanagal of each film
which will remain as a POKKISAM not only for us for everyone who speaks ill of us or otherwise not accepting the facts.
good job done. all the very best for next episode.
RAGHAVENDRA
6th July 2014, 08:21 AM
ஆதரவான வார்த்தைகளைத் தந்து உள்ளம் மகிழ்வித்த கோபால் மற்றும் ராமஜெயம் சாருக்கு என் உளமார்ந்த நன்றி.
RAGHAVENDRA
6th July 2014, 08:22 AM
Sivaji Ganesan Filmography Series
Guest Roles
School Master (Malayalam)ஸ்கூல் மாஸ்டர்(மலையாளம்)
http://www.thehindu.com/multimedia/dynamic/00257/27KIMP_OLDGOLD_257965f.jpg
வெளியான தேதி 03.04.1964
தயாரிப்பு டைரக்ஷன் பி.ஆர்.பந்துலு
நடிக நடிகையர் – நடிகர் திலகம் சிவாஜி கணேசன், திக்குரிச்சி சுகுமாரன் நாயர், ஆரன்முள பொன்னம்மா, பிரேம் நசீர், கே.பாலாஜி, சௌகார் ஜானகி, ராகினி, அம்பிகா, விதுபாலா குழந்தை நட்சத்திரமாக.
பாடல்கள் வயலார் ராம வர்மா
இசை ஜி.தேவராஜன்
உரையாடல் பொங்ஙுன்னம் வர்கி
கதை - கஜனன் திகம்பர் மட்கல்கர்
1958ல் கன்னடத்தில் பி.ஆர்.பந்துலு அவர்களால் தயாரிக்கப் பட்ட ஸ்கூல் மாஸ்டர் திரைப்படம் வெற்றியையும் விருதுகளையும் வாங்கிக் குவித்தது மட்டுமின்றி ஹிந்தியிலும் தயாரிக்கப்பட்டது. கன்னடத்திலும் ஹிந்தியிலும் நடிகர் திலகம் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இரண்டுமே அந்தந்த மொழியில் அவருக்கு முதல் படம். இதே போல மலையாளத்திலும் ஸ்கூல் மாஸ்டர் திரைப்படம் தயாரிக்கப் பட்டது. திக்குரிச்சி சுகுமாரன் நாயர் அவர்களும் ஆரன்முள பொன்னம்மா அவர்களும் பிரதான பாத்திரத்தில் நடிக்க நடிகர் திலகத்தின் முதல் மலையாளப் படமாக ஸ்கூல் மாஸ்டர் அமைந்தது.
தகவல் - ஹிந்து நாளிதழ் http://www.thehindu.com/features/cinema/school-master-1964/article795361.ece
ஸ்கூல் மாஸ்டர் நடிகர் திலகம் நடித்த திரைப்படங்களைப் பொறுத்த வரையில் நம் வாசு சாரின் பங்கு அளப்பரியது. இத்திரைப்படங்களில் நடிகர் திலகத்தின் காட்சிகளை அவர் தனியாக எடுத்து யூட்யூபில் பகிரந்து கொண்டுள்ளார். அதற்கான இணைப்பினை விரைவில் தர முயல்கிறேன். அதுவரை முழுப்படத்தையும் காண
http://www.dailymotion.com/video/x18xyad_school-master-1964-full-length-malayalam-movie_shortfilms
சூப்பர் டூப்பர் ஹிட்டான ஜெய ஜெய ஜென்மபூமி பாடல்
http://www.youtube.com/watch?v=5KImBS77uc4
Russellbpw
6th July 2014, 09:18 AM
Dear Ragavendran sir
Words are not sufficient to appreciate and applaud your contributions of providing the cinema lovers of the world to have the repository of Nadigar Thilagam EPICs in one single cup board.
Not an easy job at all to have all these document collated at one single place. It requires lot of thinking behind to make all the records searcheable in a highly user friendly manner to access those information repository. Such done temple of worship, all devotees of the world and the general public can visit, look at every sculpture ( each film of his is one ) admire, acknowledge and be proud of.
You are making this possible with every step of yours !
Our Thalaivar in the form of noble soul will definitely shower his blessings for the noble work that you are carrying out.
Thanks a million sir !
RKS
RAGHAVENDRA
6th July 2014, 03:18 PM
Thank you RKS for the complements
RAGHAVENDRA
6th July 2014, 03:19 PM
Sivaji Ganesan Filmography Series
Guest Roles
Ramadasu (Telugu) ராமதாஸு(தெலுங்கு)
http://4.bp.blogspot.com/-vhqhpPhdU_8/UwpEUeXmVII/AAAAAAAAIp4/Y0GsH9CsMr0/s1600/Ramadasu+23-12-1964.jpg
தயாரிப்பு இயக்கம் – சித்தூர் வி. நாகையா
23.12.1964
நடிக நடிகையர் – நடிகர் திலகம் சிவாஜி கணேசன், என்.டி.ராமராவ், ஏ.நாகேஸ்வர ராவ், கும்மடி, பி.கண்ணாம்பா, முடிகொண்டா லிங்கமூர்த்தி மற்றும் பலர்
1964ம் ஆண்டிற்கான சிறந்த தெலுங்குத் திரைப்படத்திற்கான மத்திய அரசின் விருது
Music director aswathama
http://upload.wikimedia.org/wikipedia/te/8/82/Ashwathama_music_director.jpg
மிகச் சிறந்த பாடல்கள் ராமதாசு திரைப்படத்தின் சிறப்பாகும்.
பாடல்களின் விவரம் மொழிபெயர்ப்பு பிழை வராதிருக்க ஆங்கிலத்திலேயே தரப்படுகிறது.
1 Adigo Badradri Ghantasala
P. B. Srinivas
A. P. Komala
2 Dandakam Chittor V. Nagaiah
3 Dhanyudanaithini O Deva Chittor V. Nagaiah
4 E desamanununduvaru M. Satyam
5 Jai Seetharama Raghu Rama Chittor V. Nagaiah
6 Kaheka rona Mohammad Rafi
7 Kondanda Rama Chittor V. Nagaiah
8 Maa Bava Manchivadu P. Susheela
9 Mohanakaara Rama Sulamangalam Sisters
10 Naraharini Nammaka Chittor V. Nagaiah
11 O saadhulara Chittor V. Nagaiah
Kamala Devi
12 Padyams Chittor V. Nagaiah
13 Padyams Chittor V. Nagaiah
14 Pahimam Sri Ram ante Sulamangalam Sisters
15 Ram Naam Se Jyaada Mohammad Rafi
16 Rama Dasu Garu Chittor V. Nagaiah
M. Satyam
17 Rama Pahimam Sulamangalam Sisters
18 Rama Rama Anarada Chittor V. Nagaiah
பாடல் வரிகள் பக்கத்திற்கான இணைப்பு http://www.aptalkies.com/lyrics.php?id=6122
நடிகர் திலகம் நடித்த திரைப்படங்களைப் பொறுத்த வரையில் நம் வாசு சாரின் பங்கு அளப்பரியது. இத்திரைப்படங்களில் நடிகர் திலகத்தின் காட்சிகளை அவர் தனியாக எடுத்து யூட்யூபில் பகிரந்து கொண்டுள்ளார். அதற்கான இணைப்பினை விரைவில் தர முயல்கிறேன். அதுவரை முழுப்படத்தையும் காண
http://youtu.be/uPImzxFy6cE
RAGHAVENDRA
8th July 2014, 06:59 AM
Sivaji Ganesan Filmography Series
Guest Roles
Makkala Rajya (Kannada) மக்கள ராஜ்ய (கன்னடம்) (ಮಕ್ಕಳ ರಾಜ್ಯ)
http://www.zunekart.com/images/Makkala-Rajya-DVD.jpg
தணிக்கை – 26.07.1960
வெளியீடு – 05.08.1960
தயாரிப்பு எம்.வி.ஆர். பிக்சர்ஸ்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எம்.வி.ராஜம்மா, பி.ஆர்.பந்துலு, மாஸ்டர் உமேஷ், டிக்கி மாதவராவ், பாலகிருஷ்ணா, ஹனுமந்தாச்சார், வீரபத்ரப்பா, சுப்பண்ணா, மாஸ்டர் வெங்கடேஷ், கலா, நரசிம்மராஜு, காஞ்சனமாலா, லக்ஷ்மி தேவி, பேபி சந்திரகலாவதி, பேபி விமலா, பேபி லக்ஷ்மிபாய் மற்றும் பலர்
பாடல்கள் கனகல் பிரபாகர சாஸ்திரி, சதாசிவய்யா
உதவி இயக்குநர்கள் – கே.சிங்கமுத்து, புட்டண்ணா கனகல், இரா. சண்முகம், தசரத ராம ரெட்டி
கதை – தாதா மிராஸி
வசனம் – சதாசிவய்யா
ஒளிப்பதிவு – டபிள்யூ.ஆர். சுப்பா ராவ்
ஆபரேடிவ் காமிராமேன் – கர்ணன்
படத்தொகுப்பு – ஆர். தேவராஜன்
ஸ்டண்ட் – தூத்துக்குடி அருணாச்சலம் பார்ட்டி
நடனம் – உடுப்பி ஜெயராமன், மாதவன்
கலை வார்தூர்கர்
உடைகள் – எம் ராதா, ஆர் பாபு
மேக்கப் – ஹரிபாபு, ஏ.கே.சீனிவாசன், பி.கிருஷ்ணராஜு
ஸ்டில்ஸ் – ஆர். வெங்கடாச்சாரி
ஒலிப்பதிவு – பி.வி.கோடீஸ்வர ராவ், டி.வி.நாதன்
இசை – டி.ஜி. லிங்கப்பா
இயக்கம் – பி.ஆர்.பந்துலு
RAGHAVENDRA
8th July 2014, 07:00 AM
மக்கள ராஜ்ய திரைப்படப் பாடல்களின் பட்டியல்
1. மக்கள ராஜ்ய பிரேமத ராஜ்ய
2. ஜெயஜெய கோகுல பாலா
3. நின்ன நோடி மனசு கூடி
4. ஆடுவ ஆசெய உய்யாலே
5. நகலு பாரதோ
6. ஜாதக பலவே பலவய்யா
7. மதுபன கானசுதா
8. சாக்கு ஈ ஜம்பா
9. மளெயே சுரிது பா
RAGHAVENDRA
8th July 2014, 07:02 AM
மக்கள ராஜ்ய சிறப்பு செய்திகள்
மக்கள ராஜ்ய திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக பிரதான பாத்திரத்தில் அறிமுகமாகி கன்னடத் திரையுலகில் தனக்கெனத் தனி இடத்தைத் தன் நகைச்சுவை நடிப்பின் மூலம் பிடித்து சிறந்த குணசித்திர நடிகராகவும் விளங்கிய
உமேஷ்
http://www.thehindu.com/multimedia/dynamic/01158/27bgkpm-PAGE2-UMES_1158246e.jpg
விண்வெளியில் விஞ்ஞானி விண்ணுக்கு அனுப்பும் சிறுவனாக நடித்தவர் உமேஷ். முதல் படத்திலேயே நடிகர் திலகத்துடன் நடித்து மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
பாடல்களுக்கான இணைப்பு
மக்கள ராஜ்ய திரைப்படத்தின் பாடல்கள் சரிகம நிறுவனத்தால் யூட்யூப் இணைய தளத்தில் பதிவேற்றப் பட்டுள்ளன. இதில் குறிப்பிடத் தக்கது, கன்னடப் படமான மக்கள ராஜ்ய பாடல்களுக்கு நடிகர் திலகத்தின் நிழற்படத்தை சரிகம நிறுவனம் இணைத்திருப்பதேயாகும்.
இனி பாடல்களைப் பாருங்கள் அ கேளுங்கள்
மளையே சுரிது பா
http://youtu.be/T5dIPAkujNE
ஜெய ஜெய கோகுல பாலா
http://youtu.be/ZUJzH3HZlH4
ஆடுவெ ஆசையா
http://youtu.be/Udt83trPHwE
நகலு பாரதோ
http://youtu.be/QjBWACAzQlc
இந்த நகலு பாரதோ பாடலின் மெட்டு மர்ம வீரன் திரைப்படத்தில் ஜிக்கி பாடிய ஒரு பாடலை நினைவூட்டும்
Russellisf
10th July 2014, 11:40 PM
சிவாஜிகணேசன் நடித்த 'எதிரொலி' என்ற ஒரே படத்தைத்தான் கே.பாலசந்தர் இயக்கினார், என்றாலும், அதற்கு முன்பே சிவாஜியுடன் பழக்கம் உண்டு.
இதுபற்றி பாலசந்தர் கூறியிருப்பதாவது:-
'சிவாஜியின் அலங்கார நிபுணரான ராமகிருஷ்ணன் என்று ஒருவர் இருந்தார். என் நாடகங்களைப் பார்த்தவர். என் கதையில் சிவாஜி நடிக்க வேண்டும், அதை மாதவன் இயக்க வேண்டும் என்று விரும்பினார்.
நானும் சரி என்று சொல்லிவிட்டேன். மாதவனுடன் உட்கார்ந்து ஒரு கதை தயார் செய்தோம்.
சிவாஜியிடம் கதை சொல்ல ஏற்பாடு நடந்தது.
'நான் நாலைந்து நாட்கள் சூரக்கோட்டைக்குப் போகிறேன். அங்கு ஓய்வு எடுக்கும் வேளையில், கதையும் கேட்கலாமே. அவர்கள் இரண்டு பேரையும் சூரக்கோட்டைக்கு அழைத்துக்கொண்டு வந்துடுங்க' என்றார், சிவாஜி.
இதை, ராமகிருஷ்ணன் என்னிடம் தெரிவித்தார். அவருக்கு சிவாஜி ஏற்கனவே ஒரு படம் நடித்துக் கொடுத்திருக்கிறார். இது இரண்டாவது படம்.
கதை சொல்வதற்காக அதுவரை நான் எந்த வெளிïருக்கும் போனதில்லை. முதல் தடவையாக சூரக்கோட்டைக்கு சென்றேன்.
அங்கு, சிவாஜியின் வீடு பெரிதாக இருந்தது. நிறைய அறைகள் இருந்தன. மாதவன் அப்போது சிவாஜியை வைத்து படங்கள் இயக்கிக் கொண்டிருந்தார். நான் சூரக்கோட்டையில் மாதவனுடன் நான்கைந்து நாள் தங்கினேன்.
சிவாஜி அவ்வப்போது என்னை பார்ப்பார். 'சாப்பிட்டீங்களா?' என்று கேட்பார்.
நண்பர்களுடன் ஜாலியாக அரட்டை அடிப்பார். அவ்வப்போது வேட்டைக்குப் போவார். ஆனால், கதை கேட்க என்னை அழைக்கவில்லை.
சும்மா உட்கார்ந்து இருப்பது, எனக்கு போரடித்தது. இதுபற்றி ராமகிருஷ்ணனிடம் கூறினேன். `ஓய்வு எடுப்பதற்காக இங்கே வந்திருக்கிறார். அவரே உங்களைக் கூப்பிடுவார்' என்றார்.
அதேபோல, மூன்றாவது நாள் சிவாஜி என்னை அழைத்து கதை கேட்டார். நான் சொன்னேன். அவருக்குப் பிடித்து இருந்தது. 'கதை நன்றாக இருக்கிறது. பண்ணலாம்' என்று சொல்லிவிட்டார்.
ஆனால், பிறகு என்னுடன் பேசவில்லை. ஒருவேளை மாதவனிடம் பேசியிருக்கலாம். சிவாஜி பிசியாக இருந்ததால், படம் தள்ளிக்கொண்டே போயிற்று. இதற்கிடையே, ராமகிருஷ்ணன் இறந்து போனார். அதனால், அப்படம் தயாரிக்கப்படவில்லை.
இதன் பிறகு, சிவாஜியை வைத்து ஜி.என்.வேலுமணி தயாரித்த 'எதிரொலி' படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
முதல் நாள் படப்பிடிப்பு. சிவாஜியை முதன் முதலாக நான் இயக்கிடும் நேரம். எனது கை -கால் நடுங்கின. 'பராசக்தி', 'மனோகரா' படங்களைப் பார்த்து பிரமித்துப்போன எனக்கு, அவரை எப்படி இயக்குவது என்ற தடுமாற்றம்.
அவர் நடிப்பைப் பார்த்து ராத்தூக்கம், பகல் தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டவன் நான். அவரை இயக்கும் நேரம் வந்ததும், கை-கால் வெடவெடத்தன.
நிலைமையை சரி செய்து கொண்டு, முதல் காட்சியை அவருக்குச் சொன்னேன். பொதுவாக முதல் நாள் என்றால், ஒரு `சக்சஸ்' அல்லது `வெற்றி' என்று கூறும் வழக்கமான காட்சியாக இல்லாமல், ஒரு நீள வசனத்தை அவரைப் பேசச் சொன்னேன். அப்போது, கே.ஆர்.விஜயாவும் உடன் இருந்தார்.
'நான் உங்களுக்கு இப்படி ஒரு காட்சி வைத்துள்ளேன். சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். மாற்றம் எதுவும் செய்ய வேண்டுமானால் சொல்லுங்கள். மாற்றி அமைத்துக் கொள்ளலாம்' என்று சிவாஜியிடம் சொன்னேன்.
அவர் உடனே, 'அய்யய்யோ... நீங்கதான் டைரக்டர். நான் எதுவுமே சொல்லமாட்டேன். நினைக்கவும் மாட்டேன். எப்படி நடிக்க வேண்டும் என்று கூறுகிறீர்களோ அப்படியே நடிக்கிறேன்' என்றவர், வசனத்தைப் படித்துக் காட்டும்படி கூறினர்.
நான் படித்துக்காட்டினேன். 'நான் எப்படி பேசவேண்டும் என்பதையும், எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்க!' என்றார், சிவாஜி.
'என்ன சார் இது... நீங்க போய் என்னிடம் கேட்கறீங்க... உங்களுக்கு நான் சொல்லிக் கொடுப்பது சரியா வராது!' என்றேன்.
'இல்லை பாலு! நீங்க எத்தனையோ வெற்றி நாடகங்களை டைரக்ட் செய்திருக்கீங்க. எனக்கும் சொல்ல வேண்டியதுதானே... இந்த படம் என்கிற கப்பலுக்கு நீங்கதான் கேப்டன்' என்று விடாப்பிடியாகச் சொன்னார், சிவாஜி.
இவ்வாறு சிவாஜி சொன்ன பிறகு எனக்கு தைரியம் வந்தது. படப்பிடிப்பு படுவேகமாக நடந்தது.
இப்படி நடந்து வந்த படப்பிடிப்பின் நடுவே, ஒரு நாள் சிவாஜி என்னைத் தனியாக அழைத்தார். பட்டென்று ஒரு கேள்வி கேட்டார்.
தனது மனசை நீண்ட நாள் உறுத்திக் கொண்டிருந்த அந்தக் கேள்வியை அவர் கேட்டதும், நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். அவர் கேட்ட கேள்வி:-
'ஏன் பாலு... எனது நடிப்புக்கு ஏற்றபடி ஒரு காட்சியை எனக்காக வைக்கக்கூடாதா....?'
- இதுதான் சிவாஜி கேட்ட கேள்வி.
நான் திடுக்கிட்டேன். 'என்ன சார்... என்ன சொல்றீங்க?' என்று கேட்டேன்.
'இல்லை. நான் நடிக்கும்படியான ஒரு காட்சி இருந்தால் நன்றாக இருக்குமே' என்று மíண்டும் சொன்னார்.
எனக்குப் பெரும் அதிர்ச்சி. 'அப்படியானால், நீங்கள் இதுவரை நடித்ததெல்லாம் நடிப்பு இல்லையா?' என்று நான் கேட்க, 'இல்லை... அப்படி சொல்லவில்லை. உங்களுக்கே தெரியும்... நான் நன்றாக நடிப்பதாகச் சொல்கிறார்கள். நவரச நடிப்பும் கலந்து தரும்படி ஒரு காட்சி வைக்கக்கூடாதா?' என்று சிவாஜி கேட்டார்.
'இது அப்படி ஒரு கதை அல்ல. ஒரு வழக்கறிஞரின் வாழ்க்கை பற்றிய இயல்பான கதை. மிதமிஞ்சிய நடிப்பு இந்தக் கதையில் தேவைப்படாதே' என்று நான் சொல்ல, 'அப்படியென்றால் சரி. கதையும், காட்சியும் மிகச்சிறப்பாக அமைந்துவிட்டன. எனது ரசிகர்கள் இந்தப் படத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டால், படம் வெற்றிப்படம் என்பதில் சந்தேகம் இல்லை' என்று சொல்லி முடித்துவிட்டார், சிவாஜி.
அவர் சந்தேகப்பட்டபடி சிவாஜி ரசிகர்கள் இந்தப்படத்தை ஏற்கவில்லை. அதனால் படம் வெற்றி அடையவில்லை.'
இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.
Russellisf
10th July 2014, 11:40 PM
சிவாஜிகணேசன் நடித்த 'எதிரொலி' என்ற ஒரே படத்தைத்தான் கே.பாலசந்தர் இயக்கினார், என்றாலும், அதற்கு முன்பே சிவாஜியுடன் பழக்கம் உண்டு.
இதுபற்றி பாலசந்தர் கூறியிருப்பதாவது:-
'சிவாஜியின் அலங்கார நிபுணரான ராமகிருஷ்ணன் என்று ஒருவர் இருந்தார். என் நாடகங்களைப் பார்த்தவர். என் கதையில் சிவாஜி நடிக்க வேண்டும், அதை மாதவன் இயக்க வேண்டும் என்று விரும்பினார்.
நானும் சரி என்று சொல்லிவிட்டேன். மாதவனுடன் உட்கார்ந்து ஒரு கதை தயார் செய்தோம்.
சிவாஜியிடம் கதை சொல்ல ஏற்பாடு நடந்தது.
'நான் நாலைந்து நாட்கள் சூரக்கோட்டைக்குப் போகிறேன். அங்கு ஓய்வு எடுக்கும் வேளையில், கதையும் கேட்கலாமே. அவர்கள் இரண்டு பேரையும் சூரக்கோட்டைக்கு அழைத்துக்கொண்டு வந்துடுங்க' என்றார், சிவாஜி.
இதை, ராமகிருஷ்ணன் என்னிடம் தெரிவித்தார். அவருக்கு சிவாஜி ஏற்கனவே ஒரு படம் நடித்துக் கொடுத்திருக்கிறார். இது இரண்டாவது படம்.
கதை சொல்வதற்காக அதுவரை நான் எந்த வெளிïருக்கும் போனதில்லை. முதல் தடவையாக சூரக்கோட்டைக்கு சென்றேன்.
அங்கு, சிவாஜியின் வீடு பெரிதாக இருந்தது. நிறைய அறைகள் இருந்தன. மாதவன் அப்போது சிவாஜியை வைத்து படங்கள் இயக்கிக் கொண்டிருந்தார். நான் சூரக்கோட்டையில் மாதவனுடன் நான்கைந்து நாள் தங்கினேன்.
சிவாஜி அவ்வப்போது என்னை பார்ப்பார். 'சாப்பிட்டீங்களா?' என்று கேட்பார்.
நண்பர்களுடன் ஜாலியாக அரட்டை அடிப்பார். அவ்வப்போது வேட்டைக்குப் போவார். ஆனால், கதை கேட்க என்னை அழைக்கவில்லை.
சும்மா உட்கார்ந்து இருப்பது, எனக்கு போரடித்தது. இதுபற்றி ராமகிருஷ்ணனிடம் கூறினேன். `ஓய்வு எடுப்பதற்காக இங்கே வந்திருக்கிறார். அவரே உங்களைக் கூப்பிடுவார்' என்றார்.
அதேபோல, மூன்றாவது நாள் சிவாஜி என்னை அழைத்து கதை கேட்டார். நான் சொன்னேன். அவருக்குப் பிடித்து இருந்தது. 'கதை நன்றாக இருக்கிறது. பண்ணலாம்' என்று சொல்லிவிட்டார்.
ஆனால், பிறகு என்னுடன் பேசவில்லை. ஒருவேளை மாதவனிடம் பேசியிருக்கலாம். சிவாஜி பிசியாக இருந்ததால், படம் தள்ளிக்கொண்டே போயிற்று. இதற்கிடையே, ராமகிருஷ்ணன் இறந்து போனார். அதனால், அப்படம் தயாரிக்கப்படவில்லை.
இதன் பிறகு, சிவாஜியை வைத்து ஜி.என்.வேலுமணி தயாரித்த 'எதிரொலி' படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
முதல் நாள் படப்பிடிப்பு. சிவாஜியை முதன் முதலாக நான் இயக்கிடும் நேரம். எனது கை -கால் நடுங்கின. 'பராசக்தி', 'மனோகரா' படங்களைப் பார்த்து பிரமித்துப்போன எனக்கு, அவரை எப்படி இயக்குவது என்ற தடுமாற்றம்.
அவர் நடிப்பைப் பார்த்து ராத்தூக்கம், பகல் தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டவன் நான். அவரை இயக்கும் நேரம் வந்ததும், கை-கால் வெடவெடத்தன.
நிலைமையை சரி செய்து கொண்டு, முதல் காட்சியை அவருக்குச் சொன்னேன். பொதுவாக முதல் நாள் என்றால், ஒரு `சக்சஸ்' அல்லது `வெற்றி' என்று கூறும் வழக்கமான காட்சியாக இல்லாமல், ஒரு நீள வசனத்தை அவரைப் பேசச் சொன்னேன். அப்போது, கே.ஆர்.விஜயாவும் உடன் இருந்தார்.
'நான் உங்களுக்கு இப்படி ஒரு காட்சி வைத்துள்ளேன். சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். மாற்றம் எதுவும் செய்ய வேண்டுமானால் சொல்லுங்கள். மாற்றி அமைத்துக் கொள்ளலாம்' என்று சிவாஜியிடம் சொன்னேன்.
அவர் உடனே, 'அய்யய்யோ... நீங்கதான் டைரக்டர். நான் எதுவுமே சொல்லமாட்டேன். நினைக்கவும் மாட்டேன். எப்படி நடிக்க வேண்டும் என்று கூறுகிறீர்களோ அப்படியே நடிக்கிறேன்' என்றவர், வசனத்தைப் படித்துக் காட்டும்படி கூறினர்.
நான் படித்துக்காட்டினேன். 'நான் எப்படி பேசவேண்டும் என்பதையும், எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்க!' என்றார், சிவாஜி.
'என்ன சார் இது... நீங்க போய் என்னிடம் கேட்கறீங்க... உங்களுக்கு நான் சொல்லிக் கொடுப்பது சரியா வராது!' என்றேன்.
'இல்லை பாலு! நீங்க எத்தனையோ வெற்றி நாடகங்களை டைரக்ட் செய்திருக்கீங்க. எனக்கும் சொல்ல வேண்டியதுதானே... இந்த படம் என்கிற கப்பலுக்கு நீங்கதான் கேப்டன்' என்று விடாப்பிடியாகச் சொன்னார், சிவாஜி.
இவ்வாறு சிவாஜி சொன்ன பிறகு எனக்கு தைரியம் வந்தது. படப்பிடிப்பு படுவேகமாக நடந்தது.
இப்படி நடந்து வந்த படப்பிடிப்பின் நடுவே, ஒரு நாள் சிவாஜி என்னைத் தனியாக அழைத்தார். பட்டென்று ஒரு கேள்வி கேட்டார்.
தனது மனசை நீண்ட நாள் உறுத்திக் கொண்டிருந்த அந்தக் கேள்வியை அவர் கேட்டதும், நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். அவர் கேட்ட கேள்வி:-
'ஏன் பாலு... எனது நடிப்புக்கு ஏற்றபடி ஒரு காட்சியை எனக்காக வைக்கக்கூடாதா....?'
- இதுதான் சிவாஜி கேட்ட கேள்வி.
நான் திடுக்கிட்டேன். 'என்ன சார்... என்ன சொல்றீங்க?' என்று கேட்டேன்.
'இல்லை. நான் நடிக்கும்படியான ஒரு காட்சி இருந்தால் நன்றாக இருக்குமே' என்று மíண்டும் சொன்னார்.
எனக்குப் பெரும் அதிர்ச்சி. 'அப்படியானால், நீங்கள் இதுவரை நடித்ததெல்லாம் நடிப்பு இல்லையா?' என்று நான் கேட்க, 'இல்லை... அப்படி சொல்லவில்லை. உங்களுக்கே தெரியும்... நான் நன்றாக நடிப்பதாகச் சொல்கிறார்கள். நவரச நடிப்பும் கலந்து தரும்படி ஒரு காட்சி வைக்கக்கூடாதா?' என்று சிவாஜி கேட்டார்.
'இது அப்படி ஒரு கதை அல்ல. ஒரு வழக்கறிஞரின் வாழ்க்கை பற்றிய இயல்பான கதை. மிதமிஞ்சிய நடிப்பு இந்தக் கதையில் தேவைப்படாதே' என்று நான் சொல்ல, 'அப்படியென்றால் சரி. கதையும், காட்சியும் மிகச்சிறப்பாக அமைந்துவிட்டன. எனது ரசிகர்கள் இந்தப் படத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டால், படம் வெற்றிப்படம் என்பதில் சந்தேகம் இல்லை' என்று சொல்லி முடித்துவிட்டார், சிவாஜி.
அவர் சந்தேகப்பட்டபடி சிவாஜி ரசிகர்கள் இந்தப்படத்தை ஏற்கவில்லை. அதனால் படம் வெற்றி அடையவில்லை.'
இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.
kalnayak
11th July 2014, 10:21 AM
திரு. யுகேஷ்பாபு, உங்கள் பதிவுகள் அருமை. இவைகளை நடிகர்திலகத்தின் பொது திரி-14ல் பதியலாமே. என்ன தயக்கம்?
Russellbpw
11th July 2014, 12:21 PM
Source - Internet
The release of "Parasakti" in 1952 saw the birth of a star - Sivaji Ganesan - in Indian cinema.
His perfect delivery of dialogue and identification with every role he played, established him as an actor par excellence. K. HARIHARAN, film maker and scholar, writes on the thespian's successes and failures.
WITHIN the post-independent history of Indian Cinema the role of Tamil cinema has always been seen as a dysfunctional variant. For the powers to be and the Indian elite, Tamil Nadu and Tamil cinema were synonymous symbols of "kitsch" Madrasi culture. "Andu gundu nariyal paani" was how, even I was referred to in Mumbai where I grew up! And that's all my friends knew about Tamil Nadu. The only thing noteworthy for them about this southern State was its "classical" Mylapore culture - the world of Bharatanatyam and Carnatic classical music.
So to which culture did Sivaji Ganesan belong? The answer is obvious. The world of "kitsch!" And why did this happen? I would like to briefly elaborate here with the words of Edward Said, the renowned critic of post-colonial culture and politics. "In the first place culture is used to designate not merely something to which one belongs but something that one possesses. In the second place there is a more interesting dimension to this idea of culture as possessing possession. And that is the power of culture by virtue of its elevated or superior position to authorise, to dominate, to legitimate, demote, interdict and validate."
So it was imperative that after 1947, counter-culture in Tamil Nadu had to have a two-pronged attack for the people who actually "belonged" to this "andu gundu" culture. They had to fight the Delhi culture and the superiority complex of a local elite power, which decided what would constitute "Indian culture". The local Tamilian elite had to play mirror-reflection of "proper Indianness" and decide what to authorise and legitimise as good Tamil culture too. So in 1952 when "Parasakti" was released it must have been obvious to every "belonging" resident Tamilian that a great star had arrived. It was an overwhelming success. Sivaji Ganesan captured the spirit of the typical post- independence protest and disillusionment resting in every Tamil youth. The film also dovetailed with the resurgence of a strong pro-Tamil Dravidian movement and radical social reform processes and in the process stigmatised the Tamil elite as corrupt aliens.
There were many other stars in this game too. From MGR, SSR to Karunanidhi and Kannadasan, the list was really long. But thanks to his immense capacity to understand the melodramatic capacities of cinema, Sivaji Ganesan could easily translate any potential story into a series of powerful gestures. But the elite within and without, however dismissed his performance as pure "hamming" or stereotypical "overacting"! It was considered and it is still considered an embarrassment to even talk about his films. High- class newspapers would have pages on film festivals at Cannes and discuss films, which would never see the screen. Yet, of the 300 films that Sivaji Ganesan acted in, none of them were found deserving to win even one national award for him as "best actor". But so were stars like Raj Kapoor or Dev Anand, never considered worthy of any award. Fortunately they had to counter just a single establishment. But together they were all seen as "anti- social elements" fanning the taste for vulgarity, encouraging disobedience and promoting indiscipline.
Why is there an antipathy by the elite and their media towards anything which is genuinely "popular" by its own strength? Why do serious discussions on cinema never ever figure Sivaji Ganesan as an important element?
The problem is cultural. To accept Sivaji Ganesan is to befriend a whole grammar of protest, profanity and reform. When I said that he had the immense talent to convert any potential story into a series of powerful gestures it is precisely in this area that he demonstrates his versatility. Let's take the classic example of "Thillana Mohanambal". (I am sure if I had called this film a classic two weeks ago, several readers would have laughed but today they might accept it out of hypocritical reverence to a dead soul. What a way to achieve "classic" status!)
In this film, Sivaji had to combine in himself the traits of a "classical musician" falling in love with a "classical" dancer but, in an atmosphere of "low-brow" culture. Meaning, people who wear red blouses and blue saris, "zamindars" who live in multi- colored houses, and people who frequent cheap folk dancers. It is into this ambience that Sivaji brings in his precise yet different strokes. In an intuitive way he has observed the nuances and behavioural styles of musicians. He brings in his enormous talent of perfect dialogue intonations, flawless synchronisation of the musical instruments, and a good timing for action/ reaction. And still he had to rise above the character and display the sensuality of a Sivaji Ganesan. At this level Sivaji is at his melodramatic best. He knows exactly when to face the camera frontally, when to raise his voice and when to quiver his lips. Only he knew well how to add the right amount of profanity to an already complex script of love and sacrifice.
Several films breezed by in his repertoire. From comedies like "Bale Pandya" to mythologicals like "Thiruvilaiyadal", from historicals like "Veerapandiya Kattabomman" to family dramas like "Paava Mannipu", from rural subjects like "Pazhni" to urban gangster dramas like "Thanga Padhakam". But if I were to select his most comfortable position as an actor, it was when he played the insider, the typical family man caught in the crossfire of modernity and tradition. He was his best playing the vulnerable hero who had to take decisions in Catch-22 situations. "Motor Sundaram Pillai", "Padithal Mattum Podhuma", and "Aalaya Mani" are all films about a man torn between two loyalties. Any one way was bound to hurt and only providence could reconcile the differences. Besides being the perfect content for a man with such enormous histrionic talent, I somehow feel that this must have been close to his personal character too. The saga of the poor little lad who came from humble belongings to live in a big mansion on Boag road in T.Nagar. Seeing the house from outside, I have always imagined Sivaji as the simple man who always humbly depended on others to make all his decisions, a man who would religiously relish every morsel of "home-cooked" food (veetu saapaadu)!
I am told that he never saw himself as different from his brothers, his wife or his son. I have always been told that he was the most obedient actor on the set and a perfect co-actor to all the other characters in the film. Recordists in all dubbing theatres will always talk fondly about his speed and precision in voice dubbing.
No wonder he could never play a do-good "outsider" like his colleague MGR. The "insider" in Sivaji was just too strong to see others as schemers and capable of stabbing in the back. I am sure that it was the brief foray into politics that would have brought all those sycophants, who are the bane of true artists, inside his house. People who would call him the second best actor in the world and never ever tell who was actually the best! People who would put giant rose garlands on him and praise every small gesture that he made. Such people have the ability to put a brake on anybody's creative urge and catapult them into isolation and a false sense of megalomania.
In the summer of 1972, Sivaji Ganesan donning the robes of an emperor witnessed the biggest assembly of extras dressed up as soldiers. It was the shooting of the greatest magnum opus in Tamil cinema called "Raja Raja Chozhan". He had to accommodate all kinds of fancy demands by distributors who insisted that he had to dance, fight and romance around despite his bulk, his age and his brief foray into politics. With his death slowly, for all practical purposes, the Tamil cinema industry would be writing off this thespian as a non-viable entity. Writing about Sivaji Ganesan just a day after his death, I too would be joining the long list of ministers, bureaucrats, fellow film colleagues in singing praises of glory like an obligatory ritual. Imagine reading laudatory statements made by "important" people who would not have even seen a single film of his all their life. Having neglected him completely during his lonely days, may be lonely years, I certainly feel it is the greatest act of hypocrisy to mouth long passages of praise when someone is no more.
It is indeed my deep regret that I learnt to truly appreciate the great performative capabilities of a giant like Sivaji Ganesan only in the last decade. Like most members of the elite, I was acculturated into believing that acting could be worth considering only if it bordered on a kind of naturalism, which in fact has never been part of the so-called "Indian culture." Then whose culture is it? The elite and even premier film institutions like the Film and Television Institute of India (FTII) at Pune and the Satyajit Ray Film and Television Institute (SRFTI) at Kolkata will never question such positions, which are prescribed by European critical standards. May be the Directorate of Film Festivals and the National Film Development Corporation (NFDC) will now hold retrospectives of his films at some international venues while several non-popular film-makers will continue to have their films toured all over the world, endlessly. Is this the burden of being popular?
The writer is an alumni of FTII, Pune and has made "Thangaraj Enge" the first children's film in Tamil. His "Ezhavathu Manithan" won an international award, for the best Tamil film (at Moscow). He has also set up the first and only Indian Film Studies Department abroad (University of Pennsylvania).
Russellisf
12th July 2014, 01:13 AM
karmavirar kamarajar birthday special release
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்கி வெளியிட்டவர் இயக்குநர் பாலகிருஷ்ணன். அப்போது அந்தப் படம் சரியாக போகாத நிலையில் அதில் மீண்டும் சில காட்சிகளைச் சேர்த்து புதிதாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பாலகிருஷ்ணன். இந்நிலையில் அவரைச் சந்தித்தோம்.
‘காமராஜ்’ படத்தை மீண்டும் வெளியிடுவதற்கு என்ன காரணம்?
கடந்த முறை இந்தப் படத்தை வெளியிட்டபோது அது சரியான வகையில் மக்களைச் சென்று அடையவில்லை. பத்திரிகையாளர்கள் பாராட்டினாலும் படம் சரியாக போகவில்லை. படத்தை எடுத்து முடித்ததோடு எங்கள் கடமை முடிந்துவிட்டதாக நினைத்து நாங்களும் சும்மா இருந்துவிட்டோம்.
‘காமராஜ்’ படம் அப்போது மக்களைச் சென்று அடையாததற்கு அதுவும் ஒரு காரணம். அந்தப் படம் மக்களைச் சென்று அடையவேண்டும் என்பதற்காக இப்போது மீண்டும் அதை மெருகேற்றி வெளியிடுகிறோம்.
இந்த முறை எந்தெந்த காட்சிகளைப் புதிதாக சேர்த்திருக்கிறீர்கள்?
கடந்த முறை படம் வெளிவந்ததும் நிறைய கருத்துக்கள் வந்தன. படத்தில் டெல்லி அரசியலை காட்டவில்லை என்பது பெரும்பாலானவர்களின் கருத்தாக இருந்தது. அதேபோல் கடந்தமுறை படத்தை வெளியிட்டபோது அதைப் பார்த்த ஒருவர் எனக்கு போன் செய்தார். “இந்தப் படத்தில் ஒரு விஷயத்தை நீங்கள் விட்டு விட்டீர்கள். காமராஜர் இறந்ததும் அவரது வீட்டை சோதனை செய்யும் அதிகாரியாக நான்தான் சென்றேன்.
அவருக்கென்று எந்த சொத்தும் கிடையாது. அவரது கார் டி.வி.எஸ் கொடுத்தது, வீடு - நடராஜன் கொடுத்தது(வாடகை வீடு), அவருக்கு சொந்தமாக 110 ரூபாய் மட்டுமே இருந்தது. இதைப் பதிவு செய்யாமல் விட்டு விட்டீர்களே” என்றார்.
அவற்றையெல்லாம் இந்த முறை ‘காமராஜ்’ படத்தில் பதிவு செய்துள்ளோம். அந்த அதிகாரியாகத் தான் இயக்குநர் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். 15 நிமிடங்களுக்கு மேல் இவருடைய காட்சிகள் இருக்கும். அது போக 15 நிமிடங்கள் வேறு சில காட்சிகள் இருக்கும். மொத்தம் 30 நிமிட காட்சிகளை புதிதாக சேர்த்திருக்கிறோம்.
முதல் முறை வெளியான ‘காமராஜ்’ படத்தில் காமராஜராக நடித்த ரிச்சர்ட் மதுரம் இறந்துவிட்டார். அதனால் அவருடைய மகன் பிரதீப் மதுரம் இந்த படத்தில் காமராஜராக நடித்திருக்கிறார்.
இப்போதுள்ள அரசியல் தலைவர்களோடு ஒப்பீடுகையில் காமராஜர் எப்படிப்பட்ட தலைவர்?
இப்போதுள்ள அரசியல் தலைவர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டவர் காமராஜர். அரசியல்வாதி என்றால் மக்களுக்கு சேவை செய்பவர் என்பதுதான் அவரது கருத்தாக இருந்தது. ஒரு பத்திரிக்கையாளர் காமராஜரிடம், “நீங்க முதல்வரா இருக்கீங்களே. உங்களுக்கு அந்தப் பதவி பிடித்திருக்கிறதா” என்று கேட்டுள்ளார். அதற்கு காமராஜர், “யாருக்குப்பா வேணும் அந்த பதவி? தொரட்டி பிடிச்ச வேலை அது. எவன் பார்ப்பான் அதை. ஒரே தொந்தரவு. என்ன, இல்லாதவர்களுக்கு ஏதாவது செய்ய முடியுது. அதனால் மட்டுமே அந்த வேலையில் இருக்கேன்” என்று கூறியுள்ளார்.
காமராஜர் என்றைக்குமே பதவியைத் தேடிப் போனதில்லை. அவர் ஒரு கட்சியின் அடையாளம் அல்ல. தூய்மையின் அடையாளம். அவரிடம் காங்கிரஸ்காரர், தமிழன் இப்படி எந்த அடையாளத்தை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்.
தூய்மையான அரசியலின் வடிவம்தான் காமராஜர். இனி வரும் அரசியல்வாதிகளும் அவரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். மக்கள் பணிக்காக உருவாக்கப்பட்டதுதான் முதல்வர் பதவி என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
‘காமராஜ்’ படம் முதல் முறை சரியாக போகவில்லை என்கிறீர்கள். இரண்டாவது முறை எந்த நம்பிக்கையில் வெளியிடுகிறீர்கள்?
இந்த படம் முதலில் பண்ணும் போது பட்ட கடனையே இன்னும் அடைக்க வில்லை. 80 லட்ச ரூபாயில் செய்த படம் 30 லட்ச ரூபாய்தான் வசூல் செய்தது. அதனால் 50 லட்ச ரூபாய் கடனாகி விட்டது. திருமணமாகாதவன் என்பதால் என்னால் அதைச் சமாளிக்க முடிந்தது. பணத்தை விட காமராஜரைப் பற்றி மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதுதான் என் நோக்கம்.
காமராஜரைப் பற்றிய புது விஷயங்களைச் சேர்த்து, இம்முறை நன்றாகப் போகும் என்ற நம்பிக்கையோடு இந்தப் படத்தை வெளியிடுகிறோம். என் பணியை நான் சரியாக செய்திருக்கிறேன். ஒடவில்லை என்றால், சிறிது காலம் கழித்து இன்னொரு முறை முயற்சி செய்வேன்.
அடுத்ததாக என்ன படம் செய்யப் போகிறீர்கள்?
‘காமராஜ்’ படத்திற்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் உறவைப் பற்றி ஒரு படம் இயக்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. சகோதரர்களாக இருக்கவேண்டிய இரு நாட்டு மக்களிடையே ஏன் இடைவெளி கூடிக்கொண்டே போகிறது என்பதைச் சொல்லும் படமாக இது இருக்கும்.
courtesy the hindu tamil
Gopal.s
12th July 2014, 06:44 AM
யுகேஷ் பாபு சார்,
இந்த திரியில் சம்பத்த பட்ட படங்கள்,அது சார்ந்த விவரங்களை மட்டுமே குறிக்கிறோம்.ஏற்கெனெவே ராகவேந்தர் இது சார்ந்து ஒரு வேண்டுதல் விடுத்திருந்தார்.
நடிகர்திலகத்தின் பால் பற்று கொண்டவர் நீங்கள் என்பது தெரிந்த விஷயம் ஆகையால்,பொது திரியிலேயே எங்களுடன் பகிரலாமே?பதியலாமே. என்ன தயக்கம்?
RAGHAVENDRA
27th July 2014, 08:36 AM
Sivaji Ganesan Filmography Series
101. Pazhani பழநி
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/PAZHANINTCollage_zps372f8477.jpg
தணிக்கை 31.12.1964
வெளியீடு 14.01.1965
தயாரிப்பு – பாரத மாதா பிக்சர்ஸ்
ஆர் சி ஏ சவுண்ட் சிஸ்டத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது
மூலக்கதை – ஜீ.வி.அய்யர்
வசனம் எம்.எஸ்.சோலைமலை
பாடல்கள் – கவிஞர் கண்ணதாசன், உதவி – பஞ்சு அருணாச்சலம்
கதாகாலட்சேபம் பாடல்கள் – கொத்தமங்கலம் சுப்பு
பின்னணி நாகேஷ் அண்ட் பார்ட்டி
பின்னணி பாடியவர்கள் – டி.எம்.எஸ், சீர்காழி கோவிந்தராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ், ஏ.எல்.ராகவன், எஸ்.சி.கிருஷ்ணன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.ஜானகி, கே.ஆர்.எஸ்.சாமி
ஒலிப்பதிவு –
பாடல்கள் அண்ட் ரீரிக்கார்டிங் –
டி.எஸ்.ரங்கசாமி – சாரதா ஸ்டூடியோஸ் – உதவி – ஆர்.எஸ்.வேதமூர்த்தி, ஜோ.அலோஷியஸ்
ஜே.ஜே. மாணிக்கம் – ஏவி.எம். உதவி – கே.சம்பத், ஜி.வி.ராம்மூர்த்தி
ஒலிப்பதிவு வசனம் – எம்.லோகநாதன், உதவி – சி.ஜே.வி. பதி, பி.எஸ்.சௌந்தர்ராஜன், பி.வி.பாலன்
நடன அமைப்பு – சின்னி-சம்பத்
கலை – ஹெச். சாந்தாராம், உதவி – டி.வி. அண்ணாமலை
செட்டிங்ஸ் – கே.பாலசுந்தரம்
பெயிண்டிங்ஸ் – ஏ.மாணிக்கம்
ஃப்ளோர்-இன்-சார்ஜ் – எஸ்.ஆறுமுகம், எஸ்.ராஜகோபால்
சீஃப் எலக்ட்ரீஷியன்ஸ் – எஸ்.மீனாட்சிசுந்தரம், டி.பி.குப்புசாமி
மேக்கப் – ஏ.வி.ராமச்சந்திரன், ஆர்.ரங்கசாமி, எம்.கஜபதி, சுந்தரம், பெரியசாமி, ராமசாமி, மாணிக்கம், கிருஷ்ணராஜ். உதவி – சி.டி.கண்ணன், டி.ஆர்.வெங்கடேசன்
உடைகள் – பி.ராமகிருஷ்ணன், ஏ.ராமசாமி
ஸ்டில்ஸ் – சி.பத்மநாபன்
விளம்பர நிர்வாகம் – ஏ.ராமநாதன்
விளம்பரம் – எலிகண்ட்
விளம்பர டிசைன்ஸ் – பக்தா
ப்ராஸஸிங் – சர்தூல்சிங் சேத்தி, அஸோஸியேட் – டி.ராமசாமி உதவி – பி.சோமு, ஆர்.பரமேஸ்வரன் – ஏவி.எம்.ஸ்டூடியோஸ் லேபரட்டரி
எடிட்டிங் மேற்பார்வை – ஏ.பீம்சிங், எடிட்டிங் – ஏ.பால் துரைசிங்கம், ஆர்.திருமலை உதவி – பி.எஸ்.பிரகாஷ், பி.ஸ்டான்லி
புரொடக்ஷன் நிர்வாகம் – டி.எஸ். ஆதிநாராயணன், உதவி – டி.ராமானுஜம், சி.ரங்கையா, ஜி.எஸ்.வீரப்பன்
ஸ்டூடியோ – ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிடோன் லெஸ்ஸீஸ் ஆஃப் நியூடோன் ஸ்டூயோஸ் பி.லிட். சென்னை 10
ஒளிப்பதிவு – ஜி.விட்டல் ராவ்
உதவி டைரக்ஷன் – ஆர்.திருமலை, ஜி.எஸ்.மகாலிங்கம், என்.துரைசாமி, எஸ்.எஸ்.தேவதாஸ், எஸ்.சீனிவாசன், ஆர்.நாச்சிமுத்து
இசை – மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராம்மூர்த்தி , உதவி – ஆர்.கோவர்த்தனம், ஹென்றி டேனியல்
திரைக்கதை டைரக்ஷன் – ஏ.பீம்சிங்
RAGHAVENDRA
27th July 2014, 08:40 AM
பழநி - திரைப்படத்தின் பாடல்களின் பட்டியல்
1. ஆறோடும் மண்ணில் என்றும் நீரோடும்
2. அண்ணாச்சி வேட்டி கட்டும்
3. வட்ட வட்டப் பாறையிலே
4. உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது
5. இதயம் இருக்கின்றதே
6. அண்ணன் என்னடா தம்பி என்னடா
காணொளிகள்
ஆறோடும் மண்ணில் என்றும் நீரோடும்
http://www.youtube.com/watch?v=i7wZg2jW2ag
அண்ணன் என்னடா
http://www.youtube.com/watch?v=drBTwOv1QWk
இதயம் இருக்கின்றதே
http://www.youtube.com/watch?v=31lPks6WVLE
உள்ளத்துக்குள்ளே
http://www.youtube.com/watch?v=w8s6QNCFXP0
வட்ட வட்டப் பாறையிலே
http://www.youtube.com/watch?v=Gxl2MG5EhaA
அண்ணாச்சி வேட்டி கட்டும்
http://www.youtube.com/watch?v=RWirwT6XKSs
RAGHAVENDRA
27th July 2014, 08:44 AM
பழநி...
என்றென்றைக்கும் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த திரைக்காவியம்..
ஜோடி இல்லாமல் நடிகர் திலகம் நடித்த பல படங்களில் ஒன்று...
தன்னைப் பற்றி பெண்கள் மட்டும் கனவு காணும் ஹீரோயிஸம் இல்லை...
ஒருவரே பத்து ஆட்களை அடித்து விரட்டும் ஓவர் ஆக்டிங் இல்லை Graphics இல்லை...
ஏழையாக இருந்தாலும் விதவிதமாக நவநாகரீகமாக உடை அணியும் விந்தைகள் இல்லை..
எளிய கிராமத்தான்... யதார்த்தமான கிராமத்தான்...
இயல்பான நடிப்பு.. இயற்கையான கதாபாத்திர அமைப்பு..
எளிதில் மனதில் புகுந்து விடும் உன்னத நடிப்பு..
50 ஆண்டுகளானாலும் பழநி மக்கள் மனதில் நிலைத்து நிற்பதற்கான பல காரணங்களில் இவையும் அடக்கம்..
JamesFague
27th July 2014, 06:16 PM
Thanks a lot for restarting the series Mr Vendhar Sir.
Pazhani consisting of wonderful songs which suits even for modern life and also a wonderful movie.
Regards
mr_karthik
28th July 2014, 05:46 PM
டியர் ராகவேந்தர் சார்,
'பழனி'யில் பல்வேறு சிறப்புக்களோடு நடிகர்திலகத்தின் பெருந்தன்மையும் பலவாறாக வெளிப்பட்ட படம்...
** தான் உச்சத்தில் இருந்த கால கட்டத்திலும் கூட தனக்கு ஜோடியில்லாமல், அதனால் டூயட் இல்லாமல் நடித்ததோடு,
** அந்த காலகட்டத்தில் தனக்கு பொருத்தமான ஜோடியாக பல படங்களில் நடித்துக்கொண்டிருந்த நடிகையை, இதே படத்தில் தன் சக நடிகருக்கு ஜோடியாக விட்டுக்கொடுத்து, (அதுவும் யாருக்கு? தன்னோடு பினங்கிக்கொண்டு சிலகாலம் பேசாமல் இருந்த ஒருத்தருக்கு)
** அந்த ஜோடிக்கும் கூட ஒன்றுக்கு இரண்டாக அருமையான டூயட் கொடுத்து (வட்டவட்ட பாறையிலே, உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது)
அன்றைய நாளில் இதையெல்லாம் எவன் செய்தான்?. எவனுக்கு தைரியம் இருந்தது?. தனக்கு மட்டுமே குறைந்தது நாலு டூயட் வைத்துக்கொண்டு, மற்றவர்களை வெறும் டம்மியாக மட்டுமே வைத்திருந்தவர்கள் மத்தியில்.
தலைவா, உன் பெருந்தன்மைக்கு அளவே இல்லையா?...
Gopal.s
20th August 2014, 11:02 AM
என்ன ராகவேந்தர்,
நம்ம பிரிய திரியை தொங்கலில் விட்டுட்டீங்க?தொடருங்க.கூட வருவேன்.
RAGHAVENDRA
25th August 2014, 07:49 AM
டியர் கார்த்திக்
பழநி பற்றிய தங்கள் கருத்துக்கள் நம் ஒவ்வொருவரின் மனதையும் மிக அழகாக பிரதிபலித்தன.
தொடர்ந்து தங்கள் பங்களிப்பினை இத்திரியில் வழங்கவும் என வேண்டுகிறேன்.
RAGHAVENDRA
25th August 2014, 07:49 AM
Sivaji Ganesan Filmography Series
102. Anbukkarangal அன்புக்கரங்கள்
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/ANBUKKARANGALCOLLAGE_zps2c1db86b.jpg
தணிக்கை 11.02.1965
வெளியீடு 19.02.1965
நடிகர் நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தேவிகா, பாலாஜி, நாகேஷ், வி.கே.ராமசாமி, ஓ.ஏ.கே.தேவர், பி.டி.சம்பந்தம், சுப்பையா, மணிமாலா, மனோரமா, சீதாலட்சுமி, ஜி.சகுந்தலா, லட்சுமி பிரபா, எஸ்.டி.சுப்புலட்சுமி, காமாட்சி, மல்லிகா மற்றும் பேபி ஷகீலா மற்றும் பலர்
கதை வசனம் பாலமுருகன்
பாடல்கள் வாலி
பின்னணி பாடியவர்கள் – டி.எம்.எஸ்., பி.பி.ஸ்ரீநிவாஸ், பி.சுசீலா
ஒலிப்பதிவு
பாடல்கள் மற்றும் ரீரிக்கார்டிங் – ஜே.ஜே.மாணிக்கம் – ஏவி.எம், உதவி கே.சம்பத், ஜி.வி.ராமமூர்த்தி
வசனம் – கே.முகுந்தன் – மூவி சர்வீஸ், வி.பி.சி.மேன்ன் – விஜயா-வாஹினி, கே.என்.ஷண்முகம் – அருணாசலம்
கலை – ஏ.பாலு
கலை உதவி – பி.ராம்குமார், எம்.ஆர்.ராமானுஜம்,
அவுட்டோர் யூனிட் – மூவி சர்வீஸ்
செட் பிராபர்டீஸ் – சினி கிராஃப்ட்ஸ்
ஒப்பனை – ஆர்.ரங்கசாமி, பத்ரைய்யா, எம்.ராமசாமி, உதவி – ஆர்.பத்மனாபன், பி.வேணு
உடைகள் – பி.ராமகிருஷ்ணன், உதவி- கே.சாமிநாதன், கே.பி.குப்புசாமி
ப்ராஸ்ஸிங் – விஜயா லேபரட்டரி – எஸ்.ரங்கனாதன்
ஸ்டூடியோ – விஜயா-வாஹினி, அருணாசலம்
விளம்பரம் – எலிகண்ட் பப்ளிசிட்டீஸ்
விளம்பர டிசைன்ஸ் – கே.நாகேஸ்வர ராவ், சீநி சோமு
ஸ்டில்ஸ் – சாரதி
புரொடக்ஷன் மேனேஜர் – ஓ.என்.நாராயணசாமி,
ஆபரேடிவ் காமிராமேன் – கே.எஸ்.பாஸ்கர் ராவ்,
உதவி டைரக்ஷன் – ரா.சங்கரன், நாமக்கல் பாலு, இ.தாமோதரன்
எடிட்டிங் – கே.நாராயணன், உதவி – எஸ்.முத்து, எஸ்.நீலகண்டன், கே.மோகன்
ஒளிப்பதிவு டைரக்டர் – தம்பு
இசை – ஆர்.சுதர்ஸனம்
தயாரிப்பு – என். பெரியண்ணா
டைரக்ஷன் – கே.சங்கர்
RAGHAVENDRA
25th August 2014, 07:53 AM
அன்புக் கரங்கள் - சிறப்புச் செய்திகள்
கதாசிரியர் வசனகர்த்தா பாலமுருகன் நடிகர் திலகத்துடன் இணைந்த முதல் படம்
பாடலாசிரியர் வாலி அவர்கள் நடிகர் திலகத்துடன் இணைந்த முதல் படம்
சாந்தி பிலிம்ஸ் பெரியண்ணா நடிகர் திலகத்துடன் இணைந்த முதல் படம் பந்தபாசம்... இரண்டாவது அன்புக்கரங்கள் ..தொடர்ந்தவை.. தெய்வ மகன் மற்றும் தர்மம் எங்கே
RAGHAVENDRA
25th August 2014, 07:56 AM
பாடல்கள்
1. உங்கள் அழகென்ன அறிவென்ன - பி.சுசீலா
2. இரவு முடிந்து விடும் - பி.பி.ஸ்ரீநிவாஸ், பி.சுசீலா
3. ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் - டி.எம்.சௌந்தர்ராஜன்
4. காகிதத்தில் கப்பல் கட்டி - டி.எம்.சௌந்தர்ராஜன்
5. ராமனுக்கே சீதை என்று - பி.சுசீலா
காணொளிகள்
Kagidhathil kappal
http://www.youtube.com/watch?v=3ZOAMaT3ZnE
onna irukka kathukkanum
http://www.youtube.com/watch?v=4fL5GLsmtSk
ungal azhagenna
http://www.youtube.com/watch?v=Owqb3x3KuNw
iravu mudindhu vidum
http://youtu.be/bn7Xv5-J4Xk
Gopal.s
25th August 2014, 08:26 AM
அன்புக் கரங்கள் - சிறப்புச் செய்திகள்
சாந்தி பிலிம்ஸ் பெரியண்ணா நடிகர் திலகத்துடன் இணைந்த முதல் படம்... தொடர்ந்தவை.. தெய்வ மகன் மற்றும் தர்மம் எங்கே
இல்லையில்லை. பந்தபாசமே முதல்.
joe
25th August 2014, 08:35 AM
முரளி சார் / கோபால்,
திருவிளையாடல் வெற்றி விழாவுக்கு நாகேஷ் அழைக்கப்படவில்லை என்பது உண்மையா ? உண்மையென்றால் என்ன காரணம் ?
(முன்பே சொல்லியிருந்தால் தவற விட்டதற்கு மன்னிக்க)
Gopal.s
25th August 2014, 08:48 AM
முரளி சார் / கோபால்,
திருவிளையாடல் வெற்றி விழாவுக்கு நாகேஷ் அழைக்கப்படவில்லை என்பது உண்மையா ? உண்மையென்றால் என்ன காரணம் ?
(முன்பே சொல்லியிருந்தால் தவற விட்டதற்கு மன்னிக்க)
உண்மைதான் ஜோ. அப்போதைய விழா அமைப்பாளர்கள் முக்கியமான நாயகி,நாயகரை மட்டுமே கவுரவிப்பார்கள்.,விஸ்வநாதன்-ராமமூர்த்தி ,டி.எம்.எஸ் கூட நிறைய விழாக்களில் புறக்கணிக்க பட்டுள்ளனர்.
இது அப்போதைய நிதர்சன நிலை. எல்லோரும் நாகேஷின் பகுதிகளை வெட்டி விட துடித்த போது ,நிலையாக நின்று கை வைக்க விடாமல் செய்தவர் நடிகர்திலகம்.அவரால் செய்ய முடிந்தது அது மட்டுமே. இதை விடவா பெரிய கவுரவம் நாகேஷுக்கு வேண்டும்?நேரில் ,விமான நிலைய காத்திருப்பில் என்னுடன் இதை பகிர்ந்து,நான் சிவாஜியை புகழ்வதே உண்மை,மற்றதெல்லாம் சோத்துக்குப்பா என்று கண்ணீருடன் சிரித்தார்.(1996 சென்னை விமான நிலையம் )
பெரும்பாலும் விழாக்களை வெறுத்தவர் சிவாஜி. விழாக்களில்,அவர் முகத்தை கவனித்ததுண்டா?பாவம் ,அவர் இயல்புக்கு மாறானது பொது விழாக்கள்.
Richardsof
25th August 2014, 10:49 AM
http://i57.tinypic.com/afkjzl.jpg
Richardsof
25th August 2014, 10:53 AM
http://i62.tinypic.com/6zy040.jpg
Richardsof
25th August 2014, 10:58 AM
http://i60.tinypic.com/11gugrm.jpg
Richardsof
25th August 2014, 02:39 PM
http://i58.tinypic.com/2nges07.jpg
Richardsof
25th August 2014, 02:43 PM
http://i58.tinypic.com/nbdbop.jpg
Richardsof
25th August 2014, 02:45 PM
http://i57.tinypic.com/2uf3u2o.jpg
Richardsof
25th August 2014, 02:47 PM
http://i60.tinypic.com/29vl06c.jpg
RAGHAVENDRA
25th August 2014, 09:01 PM
இல்லையில்லை. பந்தபாசமே முதல்.
இப்போ தெரியுதா கோபாலின் சிறப்பு...
திருத்தம் செய்யப்பட்டு விட்டது. இதுக்கு தான் கோபால் வேணுங்கிறது...
RAGHAVENDRA
25th August 2014, 09:02 PM
எஸ்வீ சார்
அருமையான அட்டகாசமான அபூர்வமான ஆவணங்களுக்கு உளமார்ந்த நன்றி
Richardsof
27th August 2014, 08:27 AM
http://i60.tinypic.com/fveik6.jpg
Richardsof
30th August 2014, 10:07 AM
FLIMALAYA - MAGAZINE
http://i62.tinypic.com/11hweuc.jpg
RAGHAVENDRA
28th September 2014, 06:27 PM
ஃபிலிமாலயா பத்திரிகையில் வெளிவந்த நடிகர் திலகத்தின் நிழற்படங்களுக்கு மிக்க நன்றி வினோத் சார்.
RAGHAVENDRA
28th September 2014, 06:27 PM
Sivaji Ganesan Filmography Series
103. Santhi சாந்தி
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/santhicollage_zps2fbfc47a.jpg
தணிக்கை – 15.04.1965
வெளியீடு – 22.04.1965
தயாரிப்பு – ஏ.எல்.சீனிவாசன் –ஏ.எல்.எஸ்.ப்ரொடக்ஷன்ஸ்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஆர்.ராதா, நாகேஷ், நாகையா, ஆர். விஜயகுமாரி, தேவிகா, சந்தியா, கே.மனோரமா, தாம்பரம் லலிதா, சீதாலக்ஷ்மி, கௌரவ நடிகர் எஸ்.வி.சஹஸ்ரநாமம் மற்றும் பலர்
கதை வசனம் – எம்.எஸ்.சோலைமலை
பாடல்கள் – கவிஞர் கண்ணதாசன், உதவி பஞ்சு அருணாசலம்
பாடியவர்கள் – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ், பி.சுசீலா
ஒலிப்பதிவு டைரக்டர் – டி.எஸ்.ரங்கசாமி
ஒளிப்பதிவு – ஜி.விட்டல்ராவ்
ஒலிப்பதிவு – கே.துரைசாமி, உதவி – வேதமூர்த்தி, ஜோ அலோஷியஸ், கிருஷ்ணமூர்த்தி
கலை – ஹெச்.சாந்தாராம், அலங்காரம் – டி.வி.அண்ணாமலை
செட் பிராபர்டீஸ் – சினி கிராஃப்ட்ஸ்
ஸ்டில்ஸ் – சி.பத்மனாபன்
விளம்பர டிசைன் – ஜி.ஹெச்.ராவ்
பத்திரிகை விளம்பரம் – அருணா அண்ட் கோ
ஸ்டூடியோ நிர்வாகம் – டி.வி.வைத்தியநாதன்
மேக்கப் – ஆர். ரங்கசாமி, டி.டி.சுந்தரம், எம்.கஜபதி, ஆர்.ராமசாமி, பி.கிருஷ்ணராஜ், வி.பத்ரையா, பி.செல்வராஜ்
உடைகள் – பி.ராமகிருஷ்ணன், வி.கங்காதரன், என்.விவேகானந்தம்
தயாரிப்பு நிர்வாகம்- பிஎல்.ராமநாதன், ஏ.வி.சுந்தரம்
ப்ராசஸங் – ஏவிஎம் ஸ்டூடியோஸ் லாபரட்டரி
ஸ்டூடியோ – சாரதா [லெஸ்ஸீஸ் ஆஃப் மெஜஸ்டிக் ஸ்டூடியோஸ்]
ஆர்சிஏ சவுண்ட் சிஸ்டத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது
எடிட்டிங் – ஏ.பால்துரைசிங்கம்
அசோஸியேட் டைரக்ஷன் – ஆர்.திருமலை, ஜி.எஸ்.மகாலங்கம், உதவி – எஸ்.எஸ்.தேவதாஸ், சீனிவாசன்
இசையமைப்பு – மெல்லிசை மன்னர்கள் – விஸ்வநாதன்-ராமமூர்த்தி, உதவி – கோவர்த்தனம்-ஹென்றி டேனியல்
டைரக்ஷன் – ஏ.பீம்சிங்
இன்று முதல் விளம்பர நிழற்படம் – நன்றி இதயவேந்தன் வரலாற்றுச் சுவடுகள்
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/shanthireleaseadfw_zps0ea07b1c.jpg
RAGHAVENDRA
28th September 2014, 06:28 PM
சிறப்பு செய்திகள்
தணிக்கையில் சர்ச்சை ஏற்பட்டு மறுபரிசீலனைக்குப் பிறகு சான்றிதழ் வழங்கப்பட்ட படம். கௌரி என்ற பெயரில் ஹிந்தியில் நடிகர் திலகத்தின் திரைப்பட நிறுவனத்தால் தயாரிக்கப் பட்டது.
எம்.எஸ்.சோலைமலையின் ஏற்றிய விளக்கு நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்.
தனி நடிப்பு உத்தியில் மனப்போராட்டக் காட்சியில் நடிகர் திலகத்தின் உன்னத நடிப்பு தமிழ்த்திரையுலகில் நிலைத்த புகழ் பெற்றதாகும். இக்காட்சிக்கு உரையாடலை எழுதியவர் தஞ்சைவாணன்.
சென்னையில் வெளியான திரையரங்குகள் சாந்தி, மஹாராணி சயானி
நூறு நாட்கள் ஓடிய திரையரங்குகள்
சென்னை சாந்தி – 100 நாட்கள்
RAGHAVENDRA
28th September 2014, 06:29 PM
சாந்தி - பாடல்கள்
1. வாழ்ந்து பார்க்க வேண்டும் – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ்
2. நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் – பி.சுசீலா, எம்.எஸ்.ராஜு (விசில்)
3. செந்தூர் முருகன் கோவிலிலே – பி.சுசீலா, பி.பி.ஸ்ரீநிவாஸ்
4. செந்தூர் முருகன் கோவிலிலே – பி.சுசீலா
5. ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் – பி.சுசீலா
6. யாரந்த நிலவு – டி.எம்.சௌந்தர்ராஜன்
காணொளிகள்
யார் அந்த நிலவு
http://www.youtube.com/watch?v=R8mgrtqbfNw
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
http://www.youtube.com/watch?v=4WTNYltDmc4
செந்தூர் முருகன் – விஜயகுமாரி நடிகர் திலகம்
http://www.youtube.com/watch?v=4DLLz6WvKq0
செந்தூர் முருகன் விஜயகுமாரி தேவிகா எஸ்.எஸ்.ராஜேந்திரன்
http://www.youtube.com/watch?v=PltcGPIh_7A
ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்
http://www.youtube.com/watch?v=cGLE1UikfZQ
RAGHAVENDRA
28th September 2014, 06:46 PM
நடிகர் திலகம் - ஓர் உளவியல் அதிசயம்
சாந்தி...
நடிகர் திலகம் என்னும் நடிப்புச் சுரங்கத்தை அள்ள அள்ளக் கிடைக்கக் கூடிய ஏராளமான நடிப்புப் புதையலில் இன்னும் ஒரு குவியல். பல காட்சிகளில் மிகவும் நுட்பமான நுண்ணசைவுகளில் உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பார். ஒவ்வொரு காட்சியைப் பற்றியுமே ஏராளமான ஆய்வேடுகளைப் படைக்கலாம். நடிப்புப் பள்ளி நடிப்பிலக்கணம் என இவருடைய பரிமாணங்களுக்கு இன்னொரு சான்று.
தன் தாயிடம் தன் காதலை வெட்கத்தோடும் அதே சமயம் தீர்மானமாகவும் சொல்லும் காட்சி. இக்காட்சியில் ஒவ்வொரு வசனத்திலும் அவர் தரும் nuances உரையாடல் உணர்விற்கு எவ்வாறு பயன்படுத்தப் படலாம் என்பதற்கான உதாரணம்.
தனியே மனப் போராட்டத்தில் அல்லாடும் காட்சி...
கனவு என்றாலே கதாநாயகியை அரைகுறை ஆடைகளோடு ஆடவிட்டு காதல் என்ற பெயரில் அந்த ஒரு உணர்வைத் தவிர மற்ற அனைத்து உணர்வுகளையும் வெளியிடுவது தான் பொதுவாக தமிழ்த்திரைப்படங்களில் காணப்படும் கசப்பான நிகழ்வு. ஆனால் நாயகனின் மனப் போராட்டத்தையும் அவனுடைய சோகம், கோபம், ரௌத்திரம் போன்ற இதர உணர்வுகளும் ஒரு மனிதனின் கனவுகளில் இடம் பெறும் என்பதை எடுத்துக் காட்டியவர் நடிகர் திலகம். புதிய பறவை, நிச்சய தாம்பூலம் போன்ற படங்களில் அந்தக் கதாநாயகனின் உணர்வுகள் பாடலாக வெளிப்பட்டன. இப்படத்தில் உரையாடலாக வெளிப்படுத்தப் பட்டுள்ளன.
கனவுக் காட்சியில் உணர்ச்சி மயமான உரையாடல் காட்சியில் அதுவும் மோனோ எனப்படும் தனிநபர் மனப் போராட்டக் காட்சியில் நடித்து உலக அளவில் இலக்கணம் படைத்தவர் நடிகர் திலகம் மட்டுமே.
இன்னொருவனின் மனைவியுடன் சந்தர்ப்ப சூழ்நிலையால் கணவனாக நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம்.. உறவு முறையில் பெரிய அளவில் தடுமாற்றம் ஏற்படக் கூடிய, கத்தி மேல் நடப்பது போன்ற கதாபாத்திர அமைப்பில் சற்றும் வழுவாமல் மிகச் சிறப்பாக இப்பாத்திரத்தைத் திரையில் வடித்த நடிகர் திலகத்திற்கு இதற்காகவே நூறு முறை பாரத ரத்னா வழங்கலாம். உலக அளவில் இதைப் போன்ற மிகச் சிறந்த நடிப்பை யாராலும் தந்ததில்லை தர முடியாது என்பது நிதர்சனம்.
இதே போல நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் பாடல் காட்சி...
ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் விசில் அடித்துக் கொண்டே படிக்கட்டில் இறங்கவேண்டிய காட்சி. கீழே சற்றும் பார்க்காமல் அந்த டைமிங்கை வைத்தே அவளைப் பார்த்துக் கொண்டே விசிலடித்துக் கொண்டே டக்கென இறங்குவது..
தலைவா... நீ சரித்திர நாயகனய்யா..
ஓங்கி உரக்கக் கத்த வேண்டும் போலிருக்கிறது..
ஒவ்வொரு ஃப்ரேமிலும் கலக்கும் சாந்தி திரைப்படம் ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்ததற்கு இன்னொரு காரணம்...
http://www.indusladies.com/forums/attachments/movies/158821d1341158062t-black-and-white-actress-devika-1-.jpg
இன்னும் பல படங்கள் நடிகர் திலகம் தேவிகா இணையில் வந்திருக்கக் கூடாதா... என ஏங்க வைக்கும் கெமிஸ்ட்ரி...
இவற்றோடு தமிழ்த்திரையுலக இசைக்குப் பொற்காலம் அமைத்துத் தந்த மெல்லிசை மன்னர்கள் இணையில் வெளிவந்த உன்னத இசைக்காவியம்.
பாடல்கள் மட்டுமா... நடிகர் திலகத்தின் தனி நடிப்புக் காட்சியில் ட்ரம்ஸ் பயன்படுத்தியிருக்கும் உத்தி... ட்ரம்ஸ் மட்டுமே பயன்படுத்தியிருக்கும் உத்தி..
கவியரசரின் பாடல்கள் வரிகளிலேயே கதையைச் சொல்லும் தனித்துவம்..
தொய்வடையாத வகையில் படத்தை எடுத்துச் சென்றிருக்கும் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும்..
எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து தந்த பீம்சிங்கின் இயக்கம்..
சாந்தி மறக்கமுடியாத படம் மட்டுமல்ல, இதுவரை பார்க்காதவர்கள் கண்டிப்பாக பார்த்தே ஆகவேண்டிய படம்.
Gopal.s
28th September 2014, 07:40 PM
சாந்தி- 1965
ஒரு சிக்கலான முக்கோணம்.அது வரை பழைய காதலன் (அ) காதலி ,கணவன்(அ) மனைவி ,மனைவியான காதலி (அ) கணவனான காதலன் என்று பயணித்த பாதையில் புத்தம் புதுசாக இன்னொரு கல்யாணமான பெண்ணிற்கு கணவன் போல் நடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படும் நண்பன்.
பீம் சிங் இன் பா இல்லாத அறுபதுகளின் படம்.நிறைய சென்சர் பிரச்னையுடன் வந்து ஹிட் ஆன நல்ல படம்.சிவாஜி சுமாராக இளைக்க ஆரம்பித்து கற்றை முடி நெற்றியில் புரள(பின்னாளில் ரவி இதை நிறைய படங்களில்)புரள கியூட் ஆக இருப்பார்.எனக்கு மிக மிக பிடித்த சுசிலாவின் நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் பாடலும் ,மிக மிக பிடித்த டி.எம்.எஸ். இன் யாரந்த நிலவு பாடலும் இடம் பெற்ற காவியம்.
கம்பி மேல் வித்தை போன்ற கதைக்கு நல்ல திரைகதை அமைத்து (லாஜிக் மீறல் ஏராளம்)பீம் சிங் நன்கு இயக்கி ,ஏ.எல்.எஸ். தயாரிப்பு. விஸ்வநாதன் -ராமமூர்த்தி அருமையான இசை.காமெரா ரொம்ப சுமார் (நிறைய இடங்கள் வெளிரும்).Seperation lighting மிக மோசம்.
உற்சாகமாய் நண்பர்களுடன் வாழ்ந்து பார்க்க வேண்டும் என ஆரம்பித்து ,சீராக சென்று ,உணர்ச்சி கொந்தளிப்பில் ,இடை வேளை க்கு பிறகு சூடாகவே செல்லும்.தேவிகா உடன் மெல்லிய காமம் ததும்பும் நெஞ்சத்திலே காதல் காட்சி எனக்கு பிடித்த ஒன்று.அதில் ரெட்டை பின்னலை பிடித்து முகத்தோடு இழைவார் பாருங்கள்.காமத்தில் தோய்ந்த கவிதை.அம்மாவிடம் தனது காதலை கொஞ்சம் வெட்கம்,நிறைய ஆசை,சிறிது தயக்கம்,சிறிது எதிர்பார்ப்பு,சிறிது பரபரப்பு என்ற நடிப்பு கும்பமேளா ஒரு இடம் என்றால், யார் இந்த நிலவில் டி.எம்.எஸ் ஐ விழுங்க துடிக்கும் பாவங்கள். மனசாட்சி காட்சி(உபயம் தஞ்சை வாணன்)நடிகர் திலகத்தின் favourite காட்சி.அருமையாய் நடிக்க வேண்டிய இடத்தில் நடித்து அடங்க வேண்டிய இடத்தில் அடங்கி -இனிமேலும் உங்களுக்கு விளக்க என்ன இருக்கிறது?
எஸ்.எஸ்.ஆர். எப்போதும் போல் நல்ல சப்போர்ட்.தேவிகா தான் ஏ.பீ.என் படத்து கே.பீ.எஸ். போல் வந்து வந்து மாயமாகி விடுவார்.விஜயகுமாரி கு நானும் ஒரு பெண், பூம்புகார் வரிசையில் மற்றுமொரு முக்கிய படம்.ஆனால்........ எனக்கு என்னவோ விஜயகுமாரியை அசோகன் இன் பெண் உருவாகவே தெரியும்.என்ன உணர்சிகளை காட்டினாலும் செயற்கையான அருவருப்பை மூட்டி ,காமெடி ஆக தெரியும்.அவரை எஸ்.எஸ்.ஆறே விரும்பி இருப்பாரா என்பது சந்தேகம்.இந்த படத்தில் ஓரளவு தேறுவார்.
மற்றவர்கள் எம்.ஆர்.ராதா உட்பட வழக்கம் போல்.முடிவு எதிர்பார்த்தது.மக்கள் ஏற்றார்கள்.
பார்க்க வேண்டிய படம் என்பதை விட பார்க்க கூடிய படம் என்றே நான் தீர்ப்பு சொல்வேன்.
Gopal.s
28th September 2014, 07:41 PM
Thanks ESVEE.
Russellmai
6th October 2014, 10:10 AM
டியர் இராகவேந்தர் சார்,
நடிகர் திலகத்தின் 104வது திரைக் காவியப் பதிவுடன் உங்களது
திருவிளையாடலைத் துவங்குங்கள் இந்த திரியில்.
கோபு.
RAGHAVENDRA
7th October 2014, 11:39 PM
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி கோபு சார். நிச்சயம் தொடரும்..
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.