PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events



Pages : 1 2 3 4 [5] 6 7 8

RAGHAVENDRA
18th June 2013, 06:40 AM
நான் சொல்லும் ரகசியம் நகைச்சுவை அம்சம் நிறைந்த படம். குறிப்பாக சந்திர பாபு வைத்தியராக வந்து அதகளம் பண்ணுவார். ஒரு நோயாளி நாய்க்கடிக்கு வைத்தியம் பார்க்க வரும் காட்சி திரையரங்கில் மிக பலத்த ஆரவாரம் பெறும். டி.வி.டியில் அந்தக் காட்சி இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தாலும் மற்ற காட்சிகளிலும் அவருடைய நகைச்சுவை சிறப்பாக இருக்கும். நடிகர் திலகத்தின் மிக ஸ்டைலான உடையலங்காரம், சொல்லவே வேண்டாம். பாகம் 11ல் வாசு சார் எழுதி வரும் ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகன் தொடரில் நான் சொல்லும் ரகசியம் இடம் பெறும் போது அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.

பார்க்க வேண்டிய படம் நான் சொல்லும் ரகசியம். ஜி.ராமநாதன் அவர்களின் இசையில் இடம் பெற்ற கண்டேனே உன்னை கண்ணாலே பாடல் நடிகர் திலகத்திற்கு மறைந்த பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்கள் பாடியுள்ள டூயட் பாடல் என்பது குறிப்பிடத் தக்கது.

நான் சொல்லும் ரகசியம் வெற்றிப் படமாகும். 100 நாட்கள் ஓடவில்லை என்றாலும் வசூலில் நல்ல பலனளித்தது. இந்த தயாரிப்பாளரின் மறக்க முடியாத காவியங்களில் ஒன்று தான் நடிகர் திலகத்தின் பார் மகளே பார் திரைப்படமாகும்.

இது வரை நான் சொல்லும் ரகசியம் திரைப்படத்தைப் பார்க்காதவர்களின் தகவலுக்காக நெடுந்தகட்டின் முகப்பு இங்கே பகிர்ந்து கொள்ளப் படுகிறது.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/NSRDVDC_zps8b3e2383.jpg

RAGHAVENDRA
18th June 2013, 06:43 AM
பாடல் காட்சிகள்

கண்டேனே உன்னைக் கண்ணாலே

http://youtu.be/yiOrWn5ksxc

பார்க்காத புதுமைகள் - ஹெலன் அவர்களின் நடனக் காட்சி .. ஹெலன் அவர்களின் நடனம் இடம் பெற்ற நடிகர் திலகத்தின் படங்களில், உத்தம புத்திரன், வணங்காமுடி, சித்தூர் ராணி பத்மினி ஆகியவை அடங்கும்.

http://youtu.be/QYBFNS6VI7w

நான் சொல்லும் ரகசியம் - டி.எம்.சௌந்தர்ராஜன்

http://youtu.be/nTxe-ZhwO7U


ஒரு தொலைக்காட்சிக்கு அஞ்சலி தேவி அளித்துள்ள பேட்டியில் நடிகர் திலகத்தைப் பற்றிக் குறிப்பிடும் காணொளி

http://youtu.be/6hjpngnsQvk

vasudevan31355
18th June 2013, 08:59 AM
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSGDiar7uBYBTVJUdLLY1Z89gVEuNSyD sgYw9BLMAzOErjjQAr5

Chevilo Rahasyam 1959 చెవిలో రహస్యం


தெலுங்கில் செவ்வில்லோ ரஹஸ்யம் என மொழி மாற்றம் செய்யப் பட்டது.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1959-chevilo-rahasyam-1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/1959-chevilo-rahasyam-1.jpg.html)

Subramaniam Ramajayam
18th June 2013, 09:35 AM
http://www.youtube.com/watch?v=P0OHDJvcjnw&feature=player_detailpage

The vidieo is wonderful. Kathavarayan one of the movvies I have missed those days, as iwas not impressed by the reports or vimasarnams i have received. I truly regret for having missed the picture after seeing story-clippings in the thread that way this filomography doing good job not only for general public,and alsofor some of our diehard fans like me, thanks to raghavender.
iam not getting the link in you tube for the picture.

vasudevan31355
18th June 2013, 09:55 AM
'நான் சொல்லும் ரகசியம்' படத்தின் இன்னொரு சிறப்பம்சம் மனோரமா ஆச்சி அவர்கள் ஒரு காட்சியில் எஸ்.வி.சுப்பையா அவர்களின் மனைவி காமாட்சியாக அதாவது அஞ்சலி தேவியின் அம்மாவாக வருவார். ஒரே ஒரு காட்சி மட்டும். தற்கொலை செய்து கொள்ளப் போகும் சுப்பையா அவர்களை மறைந்து போன அவர் மனைவி காமாட்சி மனசாட்சியாய் வந்து தடுத்து நிறுத்தும் காட்சி. இதில் இன்னொரு வேடிக்கை தெரியுமா? மனோரமாவின் மகளாக வரும் அஞ்சலிதேவியின் பெயர் இந்தப்படத்தில் மனோரமா.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/AVSEQ02DAT_003475200.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/AVSEQ02DAT_003475200.jpg.html)

1958-இல் வெளியான 'மாலையிட்ட மங்கை மனோரமாவின் முதல் படம். '1963-இல் வெளியான 'கொஞ்சும் குமரி'யில் மனோரமா அவர்கள் கதாநாயகியாக அறிமுகமான படம். ஆனால் அதற்கு முன்னமேயே 1957-இல் நடிகர் திலகத்தின் இந்தப் படத்தில் மனோரமா தோன்றுவது ஆச்சி அவர்கள் நடிகர் திலகத்தின் மேல் கொண்ட அளவற்ற பற்றுக்கு நமது திலகம் அளித்த ஆசியோ!

RAGHAVENDRA
18th June 2013, 05:36 PM
வாசு சார்
நான் சொல்லும் ரகசியம் திரைப்படத்தின் தெலுங்கு வடிவத்தின் நிழற்படம் மிகவும் அருமை. அபூர்வமானது கூட. இதைத் தேடித் தந்த தங்கள் கடும் உழைப்பிற்கு என் பணிவான நன்றிகள். தங்கள் பங்களிப்பினால் இந்த திரியின் மாண்பு மென்மேலும் கூடுகிறது.
பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
18th June 2013, 05:36 PM
நான் சொல்லும் ரகசியம் திரைப்படத்தின் முகப்பிசை, முதன் முறையாக இணையத்தில் நமக்காக.

http://www.mediafire.com/?s035pkpco926x5d

Gopal.s
19th June 2013, 08:14 AM
நான் சொல்லும் ரகசியத்திற்கு இவ்வளவு பங்களிப்பா? வேந்தரும்,வாசுவும் என்னை அதிசயிக்கவே வைக்கிறீர்கள்.

RAGHAVENDRA
19th June 2013, 08:46 AM
நான் சொல்லும் அதிசயத்தை... சாரி... ரகசியத்தைப் புரிந்து கொண்டீர்களா கோபால் சார்... இந்தப் படத்திலும் நடிகர் திலகத்தின் காஸ்ட்யூம் ஸ்டைல் ,, என்று ஏராளமான விஷயங்கள் உள்ளன. டாக்டர் ஷைலக் .. சந்திரபாபு காமெடி அட்டகாசமாய் இருக்கும். நான் முன்னர் கூறியது போல் அந்த நாய்க்கடி நோயாளி காட்சி அமர்க்களமாய் கிட்டத் தட்ட 3 நிமிடங்கள் ஓடும். ஆனால் டிவிடியில் சட்டென்று முடிந்து விடுகிறது. இந்தக் காட்சியின் போது தியேட்டரில் ஏக அமர்க்களமாய் இருக்கும். படத்தைப் பாருங்கள்.

Gopal.s
19th June 2013, 09:33 AM
தேனும் பாலும் கூட கஸ்துரி பிலிம்ஸ் தானே? வீ.சி.சுப்பராமன் -இவர் nt தவிர வேறு யாரையும் வைத்து படங்கள் எடுத்ததாக நினைவில்லை.

mr_karthik
19th June 2013, 01:56 PM
தேனும் பாலும் கூட கஸ்துரி பிலிம்ஸ் தானே? வீ.சி.சுப்பராமன் -இவர் nt தவிர வேறு யாரையும் வைத்து படங்கள் எடுத்ததாக நினைவில்லை.

நான் சொல்லனும்னு நினைத்தவன், எதற்கும் 'தேனும் பாலும்' விளம்பரத்தைப் பார்த்து கன்பர்ம் பண்ணிட்டு வருவோமேன்னு தேடிப்பார்த்து கன்பர்ம் செஞ்சுட்டு வந்து பார்த்தால் அதுக்குள்ள நீங்கள் முந்திட்டீங்க. அது சரி, நீங்க சொன்னா என்ன நான் சொன்னா என்ன.

Gopal.s
19th June 2013, 07:11 PM
நீங்கள் வேறு ,நான் வேறல்ல என்ற புரிதலுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் கார்த்திக் சார்.

Gopal.s
20th June 2013, 10:05 AM
வீரபாண்டிய கட்டபொம்மன்- 1959.

நடிகர்திலகம் Focusreach முறையில் நம் ஆத்மாவுக்குள் நுழைந்து சாதித்த அதிசயம்.

தன் ஆத்மாவுக்குள் அந்த வீரனை நுழைத்து அவர் சாமியாடியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.Hysteric delirium which mesmerises the audience with psychedelic trip .

இந்த படம் நடிகர்திலகத்தின் focusreach கொண்டே cult status அடைந்து ,எந்த கலைஞனை கேட்டாலும் இந்த பட காட்சியை நடித்ததே தன் முதல் audition என்று சொல்ல வைத்த அதிசயம்.இதை விரிவாக பார்ப்போம்.

1)Focusreach முறையின் முக்கியம் அதீத energy level . சக்தியின் உக்கிர வெளிப்பாடு.உடலின் சோர்வு,பசி,துன்பத்தை கருதாது நோக்கத்தை நோக்கி செல்லும் அதீத வெளியீடு.இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும், இதுதான் உச்ச சக்தி என்று நாம் கருதும் போது அடுத்தது அதனை மிஞ்சி உச்ச காட்சியில் இமயத்துக்கு மேலும் செல்லும்.

2)அதுவரை நிகழ்ந்த அனைத்தையும் விட மேல் தளத்தில் விரிந்து நாயகனை superhero ஆக உணர்த்தும் விந்தை. இதை செயல்களின் துணையின்றி உணர்ச்சி வெளிப்பாட்டு சக்தியிலேயே சாதித்து ,நமக்கு மேலே அவர் என்று உணர வைத்த விந்தை. நாசரே இவர் உயரம் பல அடிகள் மேலே என்று நினைக்க வைத்த சாதனை.அனைத்து தரப்பினரையும்,வயதினரையும் ,தன் கீழ் பட்டவர்களாக படம் பார்க்கும் போது உணர வைத்த சாதனை.

3)focus focus focus reach a peak ,move to other peaks என்ற முறையில் நடிப்பின் உணர்ச்சி வரைபடத்தில்(Emotional intensity mapping) சிகரம் தொட்டு தொட்டு மேற்செல்லும் முறை.

4)மெய் வருத்தம் பாராத,தன்னை வருத்திய ஒரு முக சிந்தனை வெளிப்பாடு.
(ரத்தமெல்லாம் கக்கி துடைத்து கொண்டு தொடர்வாராம்)

5)வித விதமான வேறு பட்ட முயற்சி,சிந்தனை அதன் வழி செயல் பாடுகள்.

6)சரி- தவறு என்ற ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டு ,தான் செய்வதே மிக சரி என்று அனைவரையும் உணர வைக்கும் சக்தி. எடுத்த நோக்கமும் உன்னதமானதாக இருந்ததால் double impact .

7) Adrenalin Rushes with High Stress levels . இந்த படம் எடுத்து கொண்ட காலகட்டமே stress level கட்டபொம்மனுக்கும் மேலாக இருந்தது. சிவாஜியின் Type A personality கொண்ட வெளியீட்டு முறை ,பார்க்கும் நமக்கும் வாளெடுத்து போர் புரிய வைக்கும் அளவு நரம்புகளை முறுக்கேற்றும்.வசனங்களும் அற்புதமாக இதற்கு இசையும்.

8)அவர் மட்டுமே அந்த கணத்தில் முக்கியமானவர் என்று அந்த இருட்டின் கணங்களில் கட்டி வைக்கும் ஈர்ப்பு.

எனக்கு தெரிந்த அளவில் இந்த focusreach அதிசயம் ,இந்த படத்தில் நடிப்பினால் அமைந்த அதிசயம் எந்த இந்திய படத்துக்கும் அதற்கு முன்போ பின்போ நடந்ததே இல்லை.

vasudevan31355
20th June 2013, 08:32 PM
டியர் ராகவேந்திரன் சார்,

நன்றி! இதோ... தங்களுக்கு மட்டுமல்ல... எனக்கும் மிகவும் பிடித்த Dr.ஷைலக்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/AVSEQ02DAT_003797400.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/AVSEQ02DAT_003797400.jpg.html)

iufegolarev
20th June 2013, 08:57 PM
கட்டபொம்மன் - தன்னுடைய சிறுபிள்ளை பருவத்திலிருந்து கட்டபொம்மனை தெருக்கூத்து, மற்றும் நாடகம் மூலம் பார்த்து உணர்ச்சி பொங்க அந்த வீரனை மனதோடு ஆத்மார்த்தமான ஆராதனை செய்ததன் பலனோ என்னவோ, கட்டபொம்மன் என்ற நாடகத்தை தான் நடத்தும்போதும் சரி, திரைப்படமாக எடுக்கும்போது தான் நடிக்கும்போதும் சரி, கிட்டத்தட்ட SPLIT PERSONALITY போல நாம் கட்டபொம்மனைத்தான் காண்போம், நம் சித்தர் சிவாஜியின் வடிவில்.

CONVENTIONAL PERFORMANCE எல்லாவற்றையும் தூள் தூளாக்கி அதற்க்கு நான்கு அடுக்கு மேல் உள்ள SPIRITED PERFORMANCE அதுவும் HIGHEST EFFERVESCENCE நாம் காணமுடியும். இதில் நாம் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், நாடகத்தில் நாம் பார்ப்பது ஒரு விதமான Performance. அதே நாடகம் திரைப்படமாக எடுக்கும்போது நாம் கண்டது மேற்கூறிய SPIRITED PERFORMANCE WITH HIGHEST EFFERVESCENCE .

ஒருவர் மற்றவராக மாறும் தன்மை அதாவது psychiatry யில் கூறும் A possession state ,நாம் காட்சிக்கு காட்சி பார்க்கலாம். உதாரணமாக , தானாதிபதி பிள்ளையை கைது செய்ய எத்தனிக்கும் போது, " என்ன துணிச்சலடா உனக்கு " என்று கணநேரத்தில் கர்ஜிக்கும் இடமாகட்டும். அதற்க்கு சற்று முன்பு.."நான் பொருத்துகொள்ளலாம் பிள்ளை அவர்களே..ஆனால் நம்மை தூற்றமாடர்களா அந்நியர்கள் ....என்று பொருமலுடன் புலம்புவதகட்டும்...இப்படி பல காட்சிகள் நம் கண்முன்னே "ஒருவர் மற்றோருவராக மாறிய தன்மையை நன்கு புரியவைக்கும் !

திரை உலகின் சித்தர் அல்லவா நம் நடிகர் திலகம், சிவாஜி கணேசன் என்ற உடலில் கட்டபொம்மன் என்ற ஆன்மாவை வரவழைத்து தனது உடலில் ஐகியபடுத்தி, கட்டபோம்மனயே பல நூறு ஆண்டுகளுக்கு பின் பேசவைத்த பெருமை கொண்டவர் நம் திரை உலக சித்தர் சிவாஜி அவர்கள்.

ScottAlise
20th June 2013, 11:05 PM
The movie which made Kattabomman immortal, which is a research material till now for cinema buffs, which registered Sivaji's face as kattabomman in previous generations (thata,appa), current(Myself), future(My children)

A long cherished dream from age of 7 came true for NT at age of 30

Staged many times countless times as drama, ran like a hurricane in BO
how much who ever types , it will always be liked
NT didn't act he lived in that role
Kattabomman voice could have been soft who knows,

He broke all methods, schools of acting , performed like a lion roars in the movie

ScottAlise
20th June 2013, 11:06 PM
Gopal sir,

Your analysis is super, reading it again & again but searching for words to greet it, then how could I, if you are so good daily

Gopal.s
21st June 2013, 06:41 AM
Thanks Sowri sir for your write up on VPKB.
Ragul, Thanks for your appreciation and definitely youngsters like you can take it further.

RAGHAVENDRA
21st June 2013, 07:05 AM
நான் சொல்லும் ரகசியம் திரைப்படத்தின் நிழற்படம்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/NSRCollage01_zps9a60c68a.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/nt%20snaps/NSRCollage01_zps9a60c68a.jpg.html)

RAGHAVENDRA
21st June 2013, 07:10 AM
வாசு சார்
நான் சொல்லும் ரகசியம் சந்திரபாபு வின் ஷைலக் தோற்றம் அருமையான நிழற்படம். அந்த பிரபலமான நாயக்கடி நோயாளி காட்சியில் அந்த நோயாளிக்கு வைத்தியம் பார்க்க இவரே நாய் போன்று மேஜைக்கு அடியில் குனிவதும், உடனே நோயாளி குனிவதும், ஒரு தட்டில் மருந்தை திரவமாக ஊற்றி அதை நாய் போல் குடிப்பது போல பாவலா காட்டுவதும் உடனே அந்த நோயாளி அதனைக் குடித்து விடுவதும் சிறந்த நகைச்சுவை மட்டுமின்றி, டாக்டரின் சமயோசித புத்தியையும் காட்டுகிறது. அதே போல் குரங்கு குடி நீரில் மருந்தை கலந்து விடுவதும் அது தெரியாமல் ஜி.சகுந்தலா அந்த மருந்தை நோயாளிக்குக் கொடுக்க ஏற்கெனவே பைத்தியமாய் இருந்த நோயாளி உடனே பைத்தியம் குணமாவது போல் வரும் காட்சிகள் எப்பேர்ப்பட்ட சிடுமூஞ்சியையும் சிரிக்க வைக்கும் வல்லமை படைத்தவை. குறிப்பாக நாய்க்கடி நோயாளி நாயைப் போல ஒரு காலைத் தூக்கப் போக உடனே சந்திரபாபு ஓடி வந்து அவரை சங்கிலியால் இழுத்துக் கொண்டு போவது போல் பாத்ரூமிற்கு அழைத்துச் செல்லும் காட்சி செம ரகளை. ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த காட்சி டிவிடியில் எகிறி விடுகிறது.

Gopal.s
21st June 2013, 05:05 PM
என்னதான் நடிகர்திலகம் Strasberg/Stanislavsky method Acting செய்தாலும்,Meisner பாணியில் நடித்தாலும் ,நிறைய நல்ல படங்கள் கொடுத்து பெரும் பாராட்டுதல்களை பெற்றாலும் , என் கருத்தில் நடிகர்திலகம் நடித்த Chekhov பாணி படங்கள்,Oscar Wilde /Stella Adler /Shakespere school படங்களே அவரை உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று நம்மை ஓங்கி சொல்ல வைக்கிறது. ஏனென்றால் பிற இந்திய நடிகர்கள் method Acting பாணியில் நடித்து அவருடைய நடிப்பில் ஒரு 60% தொட முடிந்துள்ளது. ஆனால் அவருடைய மற்ற பாணி நடிப்பில் 5% கூட தொட யாருக்கும் தகுதியில்லை என்று தைரியமாக கூற முடியும். அவரால் மட்டுமே முடியும் என்று சொல்ல கூடியவை. ஒரு சோகம் என்னவென்றால்,இந்த வேறு பட்ட பள்ளிகள் சார்ந்த நடிப்பை ரசிக்க ரசிகன் நன்கு தயார் படுத்த பட வேண்டும் ரசனையில். இந்த காலமே ,நடிப்பின் எல்லைகளை சுருக்கி ,ரசிகனின் ரசனை எல்லையை சுருக்கி ,அவர்களுக்கு பல விஷயங்களில் பரிச்சயம் இல்லாமல் செய்து ,நேரமும் இல்லாத நிலையில் மற்றவற்றை உதாசீன படுத்த வைக்கிறது.(what ever I dont know doesn't have right to exist ) என்ற மோசமான நடத்தைக்கு பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,நட்பு வட்டம் எல்லாமே காரணியாகி விடுகிறது. ஆனால் உன்னதமான ஒன்றை சரியான படி marketing செய்தால் விழுந்து விழுந்து ரசிப்பார்கள் என்பதற்கு கர்ணன் படத்தின் ஒப்பில்லா இமாலய வெற்றி ஒரு சான்று.

Larger than life என்பது சராசரி மனிதனை விட மேற் தரத்தில் உள்ள (பணம்,பதவி,நோக்கம்,புகழ்,தலைமை,போராட்ட குணம் ,இறை நிலை ) மக்களை பேசும் வலுவான நோக்கம் கொண்ட ,அதீத உணர்ச்சிகள்,போராட்ட நிலை உள்ளதாகவே அமையும். மேற்தர மனிதர்களின் பிரச்சினையும் அதற்குரிய பிரம்மாண்டம் கொண்டே அமைவது தவிர்க்க இயலாதது. இன்றைய காலத்தில் ஒரு NRI குழந்தை,ஒரு அரசாங்க மேற்பணியானர்,தலைவர்,அமைச்சர், புகழ் பெற்ற மருத்துவர் இவர்களை பார்த்தாலே இவர்களின் பொது நடத்தை விந்தையாகவே தெரியும். முற்காலங்களில் அரசர், பிரபுக்கள் ,மதகுருமார்கள் இவர்கள் சராசரி மனிதர்களிலிருந்து வேறு பட்ட உடை, தலை அலங்காரம் (கொம்பா முளைச்சிருக்கு.இல்லை கிரீடம் )நடை,பேச்சு தோரணை, பெரிய பொறுப்பு அதற்குரிய பெரும் பிரச்சினைகள் என்று வேறு பட்டே வாழ்ந்தவர்களை ,நிறைய இக்கால மேதாவிகள் சொல்வது போல் soft contemporary முறையில் நடிப்பது அபத்தத்திலும் அபத்தம்.

உதாரணத்திற்கு வீர பாண்டிய கட்டபொம்மன் படம் ஒரு Epic தன்மை கொண்ட folklore .மக்களுக்கு அதை பற்றி ஒரு பிரம்மாண்ட image இருக்கும். இங்கு சரித்திரம் புறம் தள்ள பட்டே ஆக வேண்டும். (சரித்திர கட்டமைப்பில் எவ்வளவு சதவிகிதம் உண்மை என்பதே கேள்வி குறி. எல்லோரை பற்றியும் தேவையான சரித்திர குறிப்புகளும் இல்லை.)இந்த நிலையில் Costume Drama என்ற வகை பட்ட பிரம்மாண்ட படத்திற்கு ஒரு உன்னத நடிகரின் கற்பனை சார்ந்த , உயிரிலும் உணர்விலும் அந்த நடிகன் கனவு கண்ட ஒரு பாத்திரத்தை ,கட்டபொம்மன் எப்படி இருந்திருக்க வேண்டும் என்ற எல்லோருடைய fantasy ஐயும் பூர்த்தி செய்வதாகத் தானே அமைய வேண்டும்? அப்படித்தான் அமைந்தது. அதை மொழிக்கு அவசியம் இன்றி உலகமே வியந்தது. எந்த காலத்திலும் எந்த கலைஞனும் அதில் ஒரு நுனியை கூட தீண்ட முடியாது

parthasarathy
21st June 2013, 05:59 PM
என்னதான் நடிகர்திலகம் Strasberg/Stanislavsky method Acting செய்தாலும்,Meisner பாணியில் நடித்தாலும் ,நிறைய நல்ல படங்கள் கொடுத்து பெரும் பாராட்டுதல்களை பெற்றாலும் , என் கருத்தில் நடிகர்திலகம் நடித்த Chekhov பாணி படங்கள்,Oscar Wilde /Stella Adler /Shakespere school படங்களே அவரை உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று நம்மை ஓங்கி சொல்ல வைக்கிறது. ஏனென்றால் பிற இந்திய நடிகர்கள் method Acting பாணியில் நடித்து அவருடைய நடிப்பில் ஒரு 60% தொட முடிந்துள்ளது. ஆனால் அவருடைய மற்ற பாணி நடிப்பில் 5% கூட தொட யாருக்கும் தகுதியில்லை என்று தைரியமாக கூற முடியும். அவரால் மட்டுமே முடியும் என்று சொல்ல கூடியவை. ஒரு சோகம் என்னவென்றால்,இந்த வேறு பட்ட பள்ளிகள் சார்ந்த நடிப்பை ரசிக்க ரசிகன் நன்கு தயார் படுத்த பட வேண்டும் ரசனையில். இந்த காலமே ,நடிப்பின் எல்லைகளை சுருக்கி ,ரசிகனின் ரசனை எல்லையை சுருக்கி ,அவர்களுக்கு பல விஷயங்களில் பரிச்சயம் இல்லாமல் செய்து ,நேரமும் இல்லாத நிலையில் மற்றவற்றை உதாசீன படுத்த வைக்கிறது.(what ever I dont know doesn't have right to exist ) என்ற மோசமான நடத்தைக்கு பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,நட்பு வட்டம் எல்லாமே காரணியாகி விடுகிறது. ஆனால் உன்னதமான ஒன்றை சரியான படி marketing செய்தால் விழுந்து விழுந்து ரசிப்பார்கள் என்பதற்கு கர்ணன் படத்தின் ஒப்பில்லா இமாலய வெற்றி ஒரு சான்று.

Larger than life என்பது சராசரி மனிதனை விட மேற் தரத்தில் உள்ள (பணம்,பதவி,நோக்கம்,புகழ்,தலைமை,போராட்ட குணம் ,இறை நிலை ) மக்களை பேசும் வலுவான நோக்கம் கொண்ட ,அதீத உணர்ச்சிகள்,போராட்ட நிலை உள்ளதாகவே அமையும். மேற்தர மனிதர்களின் பிரச்சினையும் அதற்குரிய பிரம்மாண்டம் கொண்டே அமைவது தவிர்க்க இயலாதது. இன்றைய காலத்தில் ஒரு NRI குழந்தை,ஒரு அரசாங்க மேற்பணியானர்,தலைவர்,அமைச்சர், புகழ் பெற்ற மருத்துவர் இவர்களை பார்த்தாலே இவர்களின் பொது நடத்தை விந்தையாகவே தெரியும். முற்காலங்களில் அரசர், பிரபுக்கள் ,மதகுருமார்கள் இவர்கள் சராசரி மனிதர்களிலிருந்து வேறு பட்ட உடை, தலை அலங்காரம் (கொம்பா முளைச்சிருக்கு.இல்லை கிரீடம் )நடை,பேச்சு தோரணை, பெரிய பொறுப்பு அதற்குரிய பெரும் பிரச்சினைகள் என்று வேறு பட்டே வாழ்ந்தவர்களை ,நிறைய இக்கால மேதாவிகள் சொல்வது போல் soft contemporary முறையில் நடிப்பது அபத்தத்திலும் அபத்தம்.

உதாரணத்திற்கு வீர பாண்டிய கட்டபொம்மன் படம் ஒரு Epic தன்மை கொண்ட folklore .மக்களுக்கு அதை பற்றி ஒரு பிரம்மாண்ட image இருக்கும். இங்கு சரித்திரம் புறம் தள்ள பட்டே ஆக வேண்டும். (சரித்திர கட்டமைப்பில் எவ்வளவு சதவிகிதம் உண்மை என்பதே கேள்வி குறி. எல்லோரை பற்றியும் தேவையான சரித்திர குறிப்புகளும் இல்லை.)இந்த நிலையில் Costume Drama என்ற வகை பட்ட பிரம்மாண்ட படத்திற்கு ஒரு உன்னத நடிகரின் கற்பனை சார்ந்த , உயிரிலும் உணர்விலும் அந்த நடிகன் கனவு கண்ட ஒரு பாத்திரத்தை ,கட்டபொம்மன் எப்படி இருந்திருக்க வேண்டும் என்ற எல்லோருடைய fantasy ஐயும் பூர்த்தி செய்வதாகத் தானே அமைய வேண்டும்? அப்படித்தான் அமைந்தது. அதை மொழிக்கு அவசியம் இன்றி உலகமே வியந்தது. எந்த காலத்திலும் எந்த கலைஞனும் அதில் ஒரு நுனியை கூட தீண்ட முடியாது

Dear Mr. Gopal,

Outstanding presentation and amazing assertion! In fact, tears rolled down especially for these lines!! "எந்த காலத்திலும் எந்த கலைஞனும் அதில் ஒரு நுனியை கூட தீண்ட முடியாது".

Regards,

R. Parthasarathy

Gopal.s
22nd June 2013, 02:43 PM
ராகவேந்தர் சார்,
என்ன இப்படி சஸ்பென்சில் வைத்துள்ளீர்கள் வீர பாண்டிய கட்ட பொம்மனை?

RAGHAVENDRA
22nd June 2013, 05:44 PM
அது தான் நான் சொல்லும் ரகசியமாச்சே...

RAGHAVENDRA
22nd June 2013, 08:19 PM
வருகிறார் வீராதி வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன்.

முதலில் டைட்டில் மியூஸிக்..

http://www.mediafire.com/?bbujdlaf3bopnmr

RAGHAVENDRA
22nd June 2013, 08:46 PM
தயாரிப்பாளர் இயக்குநர் பி.ஆர். பந்துலு அவர்களின் அறிமுக உரை

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/VPKBFW01_zps5767ac56.jpg



வணக்கம். தமிழ்நாட்டில் விடுதலைப் போருக்கு முதல் முழக்கமிட்ட வீரபாண்டிய கட்டபொம்முவின் வரலாற்றைப் படமாக்கி சுதந்திரம் பெற பாடுபட்ட அத்தனை தியாக ரத்னங்களுக்கும் இதைப் பெருமையோடு சமர்ப்பிக்கிறோம்.

17ம் நூற்றாண்டின் முற்பகுதியிலே, வெள்ளைக்காரக் கூட்டத்தால் கிழக்கிந்தியக் கும்பெனி என்ற பெயரோடு சென்னப் பட்டினத்துக்கு வந்து வியாபாரம் செய்யத் தொடங்கினார்கள். பண்டங்களின் பாதுகாப்புக்கென செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டிக் கொண்டார்கள். அப்போது தமிழ்நாட்டில் பல பாளையங்களுக்கு தலைமையரசராக இருந்த ஆற்காட்டு நவாபுக்கு கும்பனியார் அளவுக்கு அதிகமாக கடன் கொடுத்தார்கள். கடனைத் திருப்பித் தர முடியாத நவாப் 1792ம் ஆண்டில் பாளையக் கார்ர்களிடமிருந்து வரி வசூல் செய்யும் அதிகாரத்தை கும்பனியாருக்கே உரிமையாக்கி விட்டார். அன்று தான் நம் நாட்டில் ஆங்கில ஆட்சி தொடங்கியது. இதைத் தடுக்கத் துணிந்தவர்களில் முதன்மையானவர் தான் வீரபாண்டிய கட்டபொம்மன். வீர நெஞ்சம் படைத்த அப்பெரு மன்ன்ன் சிறந்த பக்திமான். திருச்செந்தூர் முருகப் பெருமானின் உச்சிக் காலப் பூஜை நடப்ப்தை அறிவிக்க, திருச்செந்தூரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி வரையிலுள்ள 40 கல் தூரத்திற்கு பல மணி மண்டபங்கள் அமைத்திருந்தார்.

ஒரு நாள்..



இதனைப் பந்துலு அவர்களின் குரலில் கேட்டால் .... தத்ரூபமாய் இருக்கும் அல்லவா...

இதோ கேளுங்கள் ...

http://www.mediafire.com/listen/y453ze9m1kq568q/VPKBBANTHULUINTRODIALOGUE.mp3

படத்தில் காட்டப் படும் வீரபாண்டிய கட்டபொம்மன் கட்டிய மணிமண்டபம் ...

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/VPKBFW02_zpsd5f6ec76.jpg

RAGHAVENDRA
22nd June 2013, 08:56 PM
Sivaji Ganesan Filmography

55. வீரபாண்டிய கட்டபொம்மன் Veerapandiya Kattabomman

http://upload.wikimedia.org/wikipedia/en/d/df/Veerapandiya_Kattabomman_Poster.jpg

தணிக்கை – 11.04.1959
வெளியீடு – 16.05.1959

தயாரிப்பு – பத்மினி பிக்சர்ஸ்

வரலாறு-திரை அமைப்பு ஆராய்ச்சிக்குழு தலைவர் – ம.பொ.சிவஞான கிராமணியார்
வரலாறு – திரை அமைப்பு ஆராய்ச்சிக்குழு உறுப்பினர்கள் –

சக்தி கிருஷ்ணமசாமி, பி.ஆர்.பந்துலு, சிவாஜி கணேசன், பி.ஏ.குமார், கே.சிங்கமுத்து, எஸ்.கிருஷ்ணசாமி

கதை வசனம் – சக்தி கிருஷ்ணசாமி

பாடல்கள் – கு.மா. பாலசுப்பிரமணியம்

இசை – ஜி.ராமநாதன்
இசைக்குழு – ஜி.ராமநாதன் பார்ட்டி

பின்னணி பாடியவர்கள்
டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், பி.பி.சீனிவாச ராவ், வி.என்.சுந்தரம், வி.டி.ராஜகோபால், சுசீலா, டி.வி.ரத்னம், ஏ.பி.கோமளா, ரத்னமாலா, ஜமுனா ராணி, மற்றும் பலர்

நடன அமைப்பு – ஹீராலால், கோபால கிருஷ்ணன், மாதவன்
உதவி – சின்னி சம்பத்

நடனம் – சுகுமாரி

ஆங்கில நடன இசை – ஜோ.டி.க்ரூஸ்

ஒளிப்பதிவு டைரக்டர் – டபிள்யூ.ஆர்.சுப்பராவ்
காமிரா இயக்குநர் – கர்ணன்

ஒலிப்பதிவு டைரக்டர் – பி.வி.கோடீஸ்வர ராவ்
வசன ஒலிப்பதிவு – ஜி.மோகன்

கலை – கங்கா

ஒப்பனை – ஹரிபாபு, டி.தனகோடி, ஆர்.ரங்கசாமி, எம்.கே.சீனிவாசன், பி.கிருஷ்ணராஜ்

தலை அலங்காரம் – டி.தனகோடி, ஜோசபின்

ஆடை அலங்காரம் – எம்.ஜி.நாயுடு

ஜரிகை வேலைப்பாடு – பி.பாண்டுரங்கம்
மணி மகுடங்கள் – கோபால் ராவ்
நகைகள் – களஞ்சியம் சகோதர்ர்கள்
அலங்காரத் துணி மணிகள் – பனாரஸ் எம்பிராய்டரி மியூசியம், சென்னை – 2.
தொகுப்பாளர் – ஆர்.தேவராஜன்
ஸ்டூடியோ – பரணி, நிர்வாகம் – ஏ.எல்.எஸ்.ப்ரொடக்ஷன்ஸ்
வெஸ்ட்ரெக்ஸ் சவுண்டு சிஸ்டத்தில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது

நடிக நடிகையர்
சிவாஜி கணேசன் – கட்டபொம்மன்
ஜெமினி கணேசன் – வெள்ளையத் தேவன்
பத்மினி – வெள்ளையம்மாள்
எஸ்.வரலட்சுமி – ஜக்கம்மாள்
ராகினி – சுந்தரவடிவு
வி.கே.ராமசாமி – எட்டப்ப நாயக்கர்
ஜாவர் சீதாராமன் – பானர்மேன்
ஓ.ஏ.கே. தேவர் – ஊமைத்துரை
எம்.ஆர்.சந்தானம் – தானாபதி சுப்பிரமணிய பிள்ளை
வி.ஆர்.ராஜகோபால் – கரியப்பன்
ஏ.கருணாநிதி – சுந்தரலிங்கம்
பக்கிரிசாமி – பொன்ன்ன்
சின்னய்யா – அடப்பக்காரன்
ஸ்டண்ட் சோமு – கோபால அய்யர்
கே.வி.சீனிவாசன் – துபாஷ் ராமலிங்க முதலியார்
ஆனந்தன் – துரைசிங்கம்
நடராஜன் – கர்ணம் மாக்ஸ்வெல்
எஸ்.ஏ.கண்ணன் – காப்டன் டேவிசன்
பார்த்திபன் – டபிள்யூ.சி.ஜாக்சன்
கிருஷ்ணசாமி – ஆலன்
கண்ணன் – கவர்னர்
முத்துலட்சுமி – காமாட்சி
தாம்பரம் ல்லிதா – வள்ளி
பேபி காஞ்சனா – குழந்தை மீனா

உதவி டைரக்ஷன் – கே.சிங்கமுத்து, இரா.சண்முகம், எஸ்.ஆர்.புட்டண்ணா

தயாரிப்பு டைரக்ஷன் – பி.ஆர். பந்துலு

RAGHAVENDRA
22nd June 2013, 08:59 PM
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தைப் பற்றிய தகவல் மற்றும் கருத்துப் பரிமாற்றங்களுக்கு சற்று அதிக கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். படம் பெற்ற பாராட்டுக்கள், நடிகர் திலகம் பெற்ற ஆசிய ஆப்பிரிக்க சிறந்த நடிகர் விருது, சிறந்த இசையமைப்பாளர் விருது, தமிழ் மொழியின் வளர்ச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் பங்கு, அன்று தொடங்கி இன்று வரை அநைத்துத் தலைமுறையினர் மீதும் அப்படம் ஏற்படுத்தியுள்ள தாக்கம், என்று ஏராளமான தகவல்கள் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப் பட உள்ளன. பொறுமையாக எல்லாவற்றையும் பார்ப்போம்.

RAGHAVENDRA
22nd June 2013, 09:47 PM
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்திற்கு இசை ஜி.ராமநாதன் என்றாலும், அதில் இடம் பெற்ற ஒரு ஆங்கில நடன இசையை ஜோ.டி.க்ரூஸ் என்பவர் இசையமைத்திருந்தார். அந்த ஆங்கில நடன இசை இணையத்தில் முதன் முதலாக நம் செவிகளுக்கு

http://www.mediafire.com/?bcd76ka5v9ag8r2

Murali Srinivas
23rd June 2013, 12:22 AM
பாஞ்சாலகுறிச்சியின் சிங்கத்தை வரவேற்க தயாராவோம். நமது திரியில் மட்டுமல்ல. மும்பை நகரத்தில் இந்த சிங்கத்திற்கு மெருகேற்றும் வேலை மிக சுறுசுறுப்பாக நடைபெறுகிறதாமே ? படத்தின் உரிமையை வைத்திருப்பவர்கள் இப்போதே வணிகம் பேச ஆரம்பித்து விட்டனராமே? City NSC ஏரியாவின் வணிக தொகையை கேட்டாலே அதிருகிறதாமே?

அன்றும் இன்றும் என்றென்றும் சாதனை சித்திரத்தின் மறு பெயராக விளங்கி கொண்டிருக்கும் சிம்மக் குரலோனின் Magnum Opus-ஐ வரவேற்க தயாராவோம்!

அன்புடன்

RAGHAVENDRA
23rd June 2013, 01:22 AM
பாஞ்சாலகுறிச்சியின் சிங்கத்தை வரவேற்க தயாராவோம். நமது திரியில் மட்டுமல்ல. மும்பை நகரத்தில் இந்த சிங்கத்திற்கு மெருகேற்றும் வேலை மிக சுறுசுறுப்பாக நடைபெறுகிறதாமே ? படத்தின் உரிமையை வைத்திருப்பவர்கள் இப்போதே வணிகம் பேச ஆரம்பித்து விட்டனராமே? City NSC ஏரியாவின் வணிக தொகையை கேட்டாலே அதிருகிறதாமே?

அன்றும் இன்றும் என்றென்றும் சாதனை சித்திரத்தின் மறு பெயராக விளங்கி கொண்டிருக்கும் சிம்மக் குரலோனின் Magnum Opus-ஐ வரவேற்க தயாராவோம்!

அன்புடன்

மன்னா... தங்களின் வருகையை எங்களை விட அதிகமாக மற்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள்...

அதாவது...

தங்கள் வருகையை நம்மை விட மற்றவர்கள் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள்...

அதாவது....

தங்கள் வருகையை மற்றவர்களின் எதிர்பார்ப்பு நம்மை விட அதிகமாக உள்ளது...

அதாவது...

தங்களுக்கு முன்னால் வந்தாலும் பின்னால் வந்தாலும் தங்கள் கம்பீரத்தின் முன்னால் தாங்கள் எடுபடாமல் போய் விடுவோமோ என்று தயங்குகிறார்கள்...

அதாவது...

பழைய படங்கள், மறு வெளியீடு, நவீன மயமாக்கல் வெற்றி மேல் வெற்றி என்பதற்கெல்லாம் அர்த்தம் என்று ....

அதாவது...

நடிகர் திலகமாகிய தாங்கள் தான் என்று கட்டியம் கூறத் தயாராய் இருக்கிறார்கள் மன்னா...

அதாவது...

இன்னும் என்ன அதாவது... அது தான் எல்லாம் நீங்கள் தான் என்றாகி விட்டதே.. சரித்திரம், சாதனை எதாவதாக இருந்தாலும் தாங்கள் தானே..

RAGHAVENDRA
23rd June 2013, 07:18 AM
வீரபாண்டிய கட்டபொம்மன் ... பாடல்களின் பட்டியல்

• சீர் மேவும் பாஞ்சாலங் குறிச்சியிலே - சீர்காழி கோவிந்தராஜன், வி.என்.சுந்தரம், திருச்சி லோகநாதன் Seermevum Paanchi Nagar - Seerkazhi Govindarajan , V. N. Sundaram & Thiruchi Loganathan
• மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு - டி.எம்.சௌந்தர்ராஜன், டி.வி.ரத்னம் Maattu Vandi Poottikkittu - T. M. Sounderarajan & T. V. Rathinam
• அஞ்சாத சிங்கம் என் காளை Anjaatha Singgam En Kaalai - P. Suseela
• சிங்காரக் கண்ணே - எஸ். வரலட்சுமிSinggara Kanne - S. Varalakshmi
• இன்பம் பொங்கும் வெண்ணிலா - பி.பி.ஸ்ரீநிவாச ராவ், பி.சுசஜீலா Inbam Ponggum Vennila - P. B. Sreenivos & P. Suseela
• டக்கு டக்கு - எஸ்.வரலட்சுமி, பி.சுசீலா, ஏ.பி.கோமளா Takku Takku - S. Varalakshmi , P. Suseela & A. P. Komala
• ஆத்துக்குள்ளே ஊத்து வெட்டி - திருச்சி லோகநாதன், கே.ஜமுனா ராணி, வி.டி. ராஜகோபாலன் மற்றும் ஏ.ஜி. ரத்னமாலா Aathukkulle Oothu Vetti - Thiruchi Loganathan , K. Jamuna Rani , V. T. Rajagopalan & A. G. Rathnamala
• வெற்றி வடிவேலனே, சக்தி உமை பாலனே மனம் கனிந்தருள் வேல் முருகா - வி.என்.சுந்தரம், எஸ்.வரலட்சுமிManam Kanintharul - V. N. Sundaram & S. Varalakshmi
• போகாதே போகாதே - ஏ.ஜி. ரத்னமாலா Pogathe Pogathe - A. G. Rathnamala
• கறந்த பாலும் - டி.எம். சௌந்தர்ராஜன் Karantah Paalum - T. M. Sounderarajan
• ஜக்கம்மா வேறில்லை திக்கம்மா - சீர்காழி கோவிந்தராஜன் Jakkamma - Seerkazhi Govindarajan

RAGHAVENDRA
23rd June 2013, 07:29 AM
வீரபாண்டிய கட்டபொம்மன் - ஆவணத் திலகம் பம்மலார் இல்லாமலா ... வந்து விட்டார் ... நன்றி பம்மலார் சார்...



விடுதலை வேள்விக்கு முதல் முழக்கமிட்ட வீரத்திலகம் வருகிறார்...

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Kattabomman1-1.jpg

பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்

முதன்முதலில் "கட்டபொம்ம"னை, திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்கள்தான் தனது 'ஜெமினி ஸ்டூடியோஸ்' பட நிறுவனம் சார்பாக, ஒரு முழுநீள திரைப்படமாக தயாரிக்க முடிவுசெய்து, 1953-ம் ஆண்டு அதற்கான விளம்பரத்தையும், அறிவிப்பினையும் பத்திரிகைகளில் வெளியிட்டார். அதில் 'கட்டபொம்ம'னாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பதெல்லாம் குறிப்பிடப்படவில்லை. அந்த அபூர்வ ஆவணங்கள் அன்புள்ளங்களின் பார்வைக்கு:

[size=2]ஜெமினியின் 'கட்டபொம்மன்' விளம்பரம் : சுதேசமித்ரன் : 5.11.1953 (தீபாவளித் திருநாள்)[size]
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5771-1.jpg

[size=2]ஜெமினியின் 'கட்டபொம்மன்' அறிவிப்பு : ஆனந்த விகடன் : 8.11.1953 (தீபாவளித் திருநாள்)[size]
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5772-1.jpg

அதன் பின்னர் "கட்டபொம்ம"னுக்கான படத்தயாரிப்பு பணிகளும் 'ஜெமினி'யில் மும்முரமாக நடைபெறவில்லை. நாடக உலக ஜாம்பவான்களான டி.கே.எஸ்.சகோதரர்கள் தங்களது நாடக மன்றம் சார்பில் 'கட்டபொம்ம'னை, "முதல் முழக்கம்" என்ற பெயரில் நாடகமாக நடத்தினர். ஆரம்பத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்நாடகம், தொடர்ந்து பொதுமக்களிடம் போதிய வரவேற்பு பெற முடியாமல் போனதால் அவர்களின் "முதல் முழக்கம்" நிறுத்தப்பட வேண்டியதாயிற்று. இடையிடையே 'கட்டபொம்மன்' கனவு சிலருக்கும் வந்து அது பலிக்காமலும் போனது. அதன் பின்னர் 'கட்டபொம்மன்' சரிதையை, நமது நடிகர் திலகம் 'கட்டபொம்ம'னாக உருமாறி, 'வீரபாண்டிய கட்டபொம்மன்" என்ற பெயரில், தனது 'சிவாஜி நாடக மன்றம்' சார்பில், நாடகமாக உருவாக்கி 28.8.1957 புதனன்று, சேலம் கண்காட்சி கலையரங்கில் அரங்கேற்றம் செய்தார். "வீரபாண்டிய கட்டபொம்ம'னுக்கு மக்களிடம் அமோக வரவேற்பு. அவ்வகையில் 'கட்டபொம்மன்' கலையுலகில் கடந்து வந்த பாதையை விவரிக்கும் ஒரு கட்டுரை:

'கட்டபொம்மன்' கலையுலகில் கடந்து வந்த பாதை

வரலாற்று ஆவணம் : தென்றல் திரை : 5.10.1957
(சிவாஜியின் "கட்டபொம்மன்" நாடகச் சிறப்பிதழ்)

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5785-1.jpg

"வீரபாண்டிய கட்டபொம்மன்" திரைப்படம் வெளியாகும் வரை இந்நாடகம் 100 முறை மிகமிக வெற்றிகரமாக நடத்தப்பட்டது. திரைப்படம் வெளிவந்து ஓடிமுடிந்தபின்பும் ஒரு 12 முறை நடத்தப்பட்டது. ஆக, இந்த 112 முறையில், இந்நாடகத்தின் அபார வசூல் மூலம் நமது நடிகர் திலகம் பல்வேறு ஸ்தாபனங்களுக்கும், பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் மற்றும் பல்வேறு நற்செயல்களுக்கும் அள்ளி அளித்துள்ள நன்கொடை மட்டும் ரூபாய் முப்பத்து இரண்டு லட்சம். இத்தொகை இன்றைய பொருளாதார மதிப்பீட்டில் பற்பல கோடிகளுக்குச் சமம்.

1957 முதல் மிகமிக வெற்றிகரமாக நடைபெற்று வந்த "வீரபாண்டிய கட்டபொம்மன்" நாடகத்தை அதே பெயரில் திரைப்படமாக தயாரிக்க, நடிகர் திலகத்தின் ஆப்த நண்பரான 'பத்மினி பிக்சர்ஸ்' திரு.பி.ஆர்.பந்துலு அவர்கள் விருப்பம் தெரிவித்தார். இதற்கு வாசன் அவர்களும், நடிகர் திலகமும் சம்மதம் தெரிவிக்கவே, பி.ஆர். பந்துலுவின் 'பத்மினி பிக்சர்ஸ்' தயாரிப்பாக, நமது தேசிய திலகம் 'கட்டபொம்மு'வாக வாழ்ந்து காட்டிய "வீரபாண்டிய கட்டபொம்மன்", திரைப்படமாக வெளிவந்து வெள்ளிவிழா கண்டது. 1960-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய-ஆப்பிரிக்கப் படவிழாவில் கலந்து கொண்ட இத்திரைப்படம், நமது நடிகர் திலகத்துக்கு ஆசிய-ஆப்பிரிக்க கண்டங்களின் சிறந்த நடிகர் என்ற மிகப்பெரிய விருதைப் பெற்றுத் தந்தது. திரை இசைத்துறையில் சிறந்த இசையமைப்பாளராக திரை இசை மாமேதை ஜி.ராமநாதன் அவர்களும் விருதுக்கு உரியவரானார். நடிகர் திலகத்தின் ஈடு-இணையில்லா நடிப்பாற்றலுக்கு என்றென்றும் கட்டியம் கூறும் காலத்தை வென்ற காவியமாக மறுவெளியீடுகளிலும் இக்காவியம் வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய பெருமைகளுக்குரிய "வீரபாண்டிய கட்டபொம்மன்" வண்ணத் திரைக்காவியத்தின் துவக்க விழா பற்றி:

"வீரபாண்டிய கட்டபொம்மன்" திரைக்காவியத் துவக்க விழா

வரலாற்று ஆவணம் : இந்தியன் மூவி நியூஸ் (IMN Singapore) : 1957

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5783-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5784-1.jpg

Gopal.s
23rd June 2013, 07:52 AM
பம்மலாரை மஞ்ச பிள்ளையார் மாதிரி வச்சாத்தான் பூஜையே களை கட்டுகிறது.

RAGHAVENDRA
23rd June 2013, 08:17 AM
16.05.2009 அன்று 50வது ஆண்டை நிறைவு செய்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்திற்கு சிவாஜி பிரபு அறக்கட்டளை சார்பில் விழா எடுக்கப் பட்டது. சென்னை ருஷ்ய கலாச்சார மய்ய அரங்கில் நடைபெற்ற விழாவையொட்டி ஒரு கண்காட்சி ஒன்றும் அடியேன் பொறுப்பில் அமைக்கப் பட்டது. அதனைப் பற்றிய விரிவான கருத்துரைகள் நம் மய்யத்தில் விரிவாக எழுதப் பட்டுள்ளன. அதனைப் பற்றிய அடியேனின் மீள்பதிவு ஒன்றும் சென்ற ஆண்டு இடம் பெற்றது. அதனை இங்கே மீண்டும் நம் பார்வைக்கு.



வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்பட வெளியீட்டிற்கு முந்தைய பல அரிய தகவல்களை பலர் அறிந்திருக்க மாட்டீர்கள். அவற்றையெல்லாம் ஆவணம் மூலமாக உலகிற்கு எடுத்துரைத்த பம்மலார் அவர்கள் நடிகர் திலகத்திற்கு மிகச் சிறந்த தொண்டன் என்கிற பெருமைக்கு ஆளாகி விட்டார். அவருக்கு பாராட்டுக்கள்.

16.05.1959 அன்று வெளியாகி 16.05.2009 அன்று தனது 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்த கட்டபொம்மனுக்கு நமது சிவாஜி பிரபு சேரிட்டீஸ் மற்றும் ருஷ்ய கலாச்சார மய்யங்களின் சார்பில் விழா எடுக்கப் பட்டது இன்று நினைவு கூரத் தக்கது. அதனைப் பற்றிய விவரங்கள் நமது நடிகர் திலகம் இணைய தளத்தில் விரிவாக உள்ளது.

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்பட 50வது ஆண்டு நிறைவு விழா

விழாவினையொட்டி ஒரு கண்காட்சி நடத்தப் பட்டது. அந்தக் கண்காட்சியில் பல அரிய தகவல்கள் புகைப்படங்களுடன் அப்படத்திற்காக பயன் படுத்தப் பட்ட பொருட்களும் பார்வைக்கு வைக்கப் பட்டன. அவற்றில் சில இங்கே நம் பார்வைக்கு...

கண்காட்சியை ருஷ்யக் கலாச்சார மய்ய அதிகாரி திறந்து வைக்கிறார்

http://www.nadigarthilagam.com/vpkb50anniv/vpkb50ap6.jpg

கண்காட்சி நடைபெற்ற ஹால்

http://www.nadigarthilagam.com/vpkb50anniv/vpkb50ap1.jpg

அப்படத்திற்காக படம் வெளியான பொழுது ஒட்டப் பட்ட சுவரொட்டியின் படம். இதை ருஷ்யன் கலாச்சார மய்ய அதிகாரிக்கு ராம்குமார் அவர்கள் விளக்குகிறார்.

http://www.nadigarthilagam.com/vpkb50anniv/vpkb50ap8.jpg

படப்பிடிப்பின் போது பயன் படுத்தப் பட்ட பொருட்கள்

http://www.nadigarthilagam.com/vpkb50anniv/vpkb50ap4.jpg

ஜாக்சன் துரையாக நடித்த திரு பார்த்திபன் அவர்கள் கௌரவிக்கப் பட்ட காட்சி.

http://www.nadigarthilagam.com/vpkb50anniv/vpkb50ap9j.jpg

விழாவினையொட்டி வெளியிடப் பட்ட அஞ்சல் உறை

http://www.nadigarthilagam.com/vpkb50anniv/sdcoverfront.jpg

[img]http://www.nadigarthilagam.com/vpkb50anniv/sdcoverrear.jpgp/img]

RAGHAVENDRA
23rd June 2013, 08:22 AM
ஆவணத் திலகம் பம்மலாரின் நிழற்படங்கள்... தொடர்ச்சி...



பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்

காவியம் குறித்த கலந்துரையாடல் (Film Discussion) : அரிய நிழற்படம்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5786-1.jpg

அட்டைப்படம் : பேசும் படம் : ஏப்ரல் மலர் 1959

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5792-1.jpg

RAGHAVENDRA
23rd June 2013, 08:23 AM
வாசு சாரின் அரிய ஆவணப் பொக்கிஷத்திலிருந்து...



'தினத்தந்தி' 'வீரபாண்டிய கட்டபொம்மன்' சிறப்பு அரிய ஆவணம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5-35.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-51.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-37.jpg

RAGHAVENDRA
23rd June 2013, 08:26 AM
A design from our beloved hubber BALAA

http://i1074.photobucket.com/albums/w417/SALEMBALU/Untitled-3copy.jpg

Dear Balaa,, Pls join... It's a very long break...

RAGHAVENDRA
23rd June 2013, 08:31 AM
ஆவணத் திலகம் பம்மலாரின் ஆவண நிழற்படங்கள்... தொடர்ச்சி....




சாதனைப் பொன்னேடுகள்

காவிய விளம்பரம் : 'தமிழ்நாடு' நாளிதழ் : 14.1.1959
[1959 ஏப்ரலில் வெளிவருவதாக வெளியான விளம்பரம்]

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5773-1.jpg[/img

முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 7.5.1959

[img]http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5774-1.jpg

முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 9.5.1959

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5798-1.jpg

முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : __.5.1959

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5779-1.jpg

சென்னை 'சித்ரா' [Decoration Ad] : The Hindu : 14.5.1959

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5782-1.jpg

முதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 15.5.1959

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5775-1.jpg

முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 23.5.1959

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5778-1.jpg

முதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 29.5.1959

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5776-1.jpg

முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 30.5.1959

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5799-1.jpg

50வது நாள் விளம்பரம் : The Hindu : 4.7.1959

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5780-1.jpg

RAGHAVENDRA
23rd June 2013, 08:35 AM
பொக்கிஷத் திலகம் வாசு சாரின் பங்களிப்பில்...




23-05-2012 'குமுதம்' இதழில் வெளிவந்துள்ள 'வீரபாண்டிய கட்டபொம்மன்' அற்புத கட்டுரை இதோ தங்கள் அனைவருக்காகவும்.(அரிய, அற்புத புகைப்படத்துடன்)

"நாடகங்களிலும் சரி... சினிமாவிலும் சரி... வசனங்களுக்கு உயிர் கொடுத்து நடிக்கக்கூடிய ஒப்பற்ற கலைஞர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒருவர்தான்"-கலைஞர் கருணாநிதி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-97.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-96.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-72.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-52.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-38.jpg

RAGHAVENDRA
23rd June 2013, 08:39 AM
ஆவணத் திலகம் பம்மலாரின் ஆவண நிழற்படங்கள் ... தொடர்ச்சி....




100வது நாள் விளம்பரம் : The Hindu : 23.8.1959

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5800-1.jpg

வெள்ளிவிழா குறும்பிரசுர விளம்பரம்
[மதுரை-ராம்நாட்-திருநெல்வேலி ஏரியாக்களின் விநியோகஸ்தரான 'அஜந்தா பிக்சர்ஸ்(மதுரை)' வெளியிட்டது]

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5801-1.jpg

குறிப்பு:
அ. "வீரபாண்டிய கட்டபொம்மன்", நமது தேசிய திலகத்தின் 55வது திரைக்காவியம் மற்றும் முழுமுதல் வண்ணச்சித்திரம். முழுவதும் 'கேவா' கலரில் தயாரிக்கப்பட்டு பின் 'டெக்னி' கலராக மாற்றப்பட்டு திரையிடப்பட்ட திரைக்காவியம். 'டெக்னி' கலர் பிரதிகள் லண்டன் மாநகரில் உருவாக்கப்பட்டன. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் 'டெக்னி' கலரில் வெளிவந்த முதல் திரைக்காவியம்.

ஆ. முதல் வெளியீட்டில் வெளியான அனைத்து ஊர்களின் அரங்குகளிலும் 50 நாட்களைக் கடந்த இக்காவியம், அதில்,25 அரங்குகளில் 97 நாட்களும் அதற்கு மேலும் மிகமிக வெற்றிகரமாக ஓடி விண்ணை முட்டும் சாதனையைப் புரிந்தது. இதில் ஒரு அரங்கில் வெள்ளிவிழா கொண்டாடியது.

இ. வெள்ளிவிழா கொண்டாடிய அரங்கு : 1
1. மதுரை - நியூசினிமா (1358 இருக்கைகள்) - 181 நாட்கள்

ஈ. 97 நாட்கள் முதல் 24 வாரங்கள் வரை ஓடி விழாக் கொண்டாடிய அரங்குகள் : 24
1. சென்னை - சித்ரா (929 இருக்கைகள்) - 125 நாட்கள்
2. சென்னை - கிரௌன் (1017 இருக்கைகள்) - 111 நாட்கள்
3. சென்னை - சயானி (842 இருக்கைகள்) - 111 நாட்கள்
4. சேலம் - ஓரியண்டல் (1210 இருக்கைகள்) - 160 நாட்கள்
5. திருச்சி - ஜுபிடர் - 153 நாட்கள்
6. நாகர்கோவில் - பயோனீர்பிக்சர்பேலஸ் (1088 இருக்கைகள்) - 118 நாட்கள்
7. திண்டுக்கல் - சக்தி (1208 இருக்கைகள்) - 111 நாட்கள்
8. வேலூர் - ராஜா - 104 நாட்கள்
9. திருவனந்தபுரம் - பத்மனாபா - 104 நாட்கள்
10. கொழும்பு(இலங்கை) - கெயிட்டி - 140 நாட்கள்
11. கோவை - ராஜா (1423 இருக்கைகள்) - 97 நாட்கள்
12. பொள்ளாச்சி - நல்லப்பா (1130 இருக்கைகள்) - 97 நாட்கள்
13. ஈரோடு - ராஜாராம் (1104 இருக்கைகள்) - 97 நாட்கள்
14. நெல்லை - ராயல் (1053 இருக்கைகள்) - 97 நாட்கள்
15. தூத்துக்குடி - சார்லஸ் (1383 இருக்கைகள்) - 97 நாட்கள்
16. தஞ்சை - யாகப்பா (1280 இருக்கைகள்) - 97 நாட்கள்
17. குடந்தை - டைமண்ட் - 97 நாட்கள்
18. விருதுநகர் - ராதா (731 இருக்கைகள்) - 97 நாட்கள்
19. தர்மாபுரி - சென்ட்ரல் - 97 நாட்கள்
20. கடலூர் - நியூசினிமா - 97 நாட்கள்
21. பாண்டிச்சேரி - கமர்ஷியல் - 97 நாட்கள்
22. ஆரணி - லக்ஷ்மி (1197 இருக்கைகள்) - 97 நாட்கள்
23. காஞ்சிபுரம் - கண்ணன் (1210 இருக்கைகள்) - 97 நாட்கள்
24. பல்லாவரம் - ஜனதா (1034 இருக்கைகள்) - 97 நாட்கள்

உ. நமது நடிகர் திலகத்தின் 56வது திரைக்காவியமாக "மரகதம்", 21.8.1959 வெள்ளியன்று, "வீரபாண்டிய கட்டபொம்மன்" வெளியான 98வது நாளில் வெளியானதால், 97 நாட்கள் ஓடியிருந்த நிலையில் இக்காவியம், "மரகத"த்திற்கு வழிவிடவேண்டியதாகிவிட்டது. இதனால் இந்த வண்ணக்காவியம் 14 அரங்குகளில் ஷிஃப்டிங் முறையில் 100 நாட்களைக் கடந்தது.

ஊ. மெகாமகா வெற்றிக்காவியமான "வீரபாண்டிய கட்டபொம்மன்", தமிழ்த் திரை வரலாற்றில், 1959-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய திரைக்காவியம்.

எ. 1959-ம் ஆண்டில் தமிழ்த் திரையுலக பாக்ஸ்-ஆபீஸில் வசூலில் மாபெரும் சாதனை புரிந்த திரைக்காவியங்கள்:
1. வீரபாண்டிய கட்டபொம்மன்
2. பாகப்பிரிவினை
3. கல்யாண பரிசு

ஏ. ஏழிசை வேந்தர், சாதனைச் சிகரம் எம்.கே. தியாகராஜ பாகவதருக்குப் பின் ஒரே வருடத்தில் இரு வெள்ளிவிழாக் காவியங்களை அளித்த பெருமை நமது நடிகர் திலகத்திற்கு கிடைத்தது. நமது நடிகர் திலகத்தின் 1959-ம் ஆண்டு வெளியீடுகளான "வீரபாண்டிய கட்டபொம்மன்" மற்றும் "பாகப்பிரிவினை", இரண்டுமே வெள்ளிவிழாக் கொண்டாடிய காவியங்கள். இதே சாதனையைப் பின்னர் 1961, 1972, 1978, 1983, 1985 என இன்னொரு ஐந்து முறை செய்து காட்டியிருக்கிறார் நமது சாதனைச் சக்கரவர்த்தி. [பாகவதருக்கு 1937-ல், "சிந்தாமணி"யும், "அம்பிகாபதி"யும் பொன்விழா(50 வாரங்கள்) கொண்டாடின.]

ஐ. தமிழ்த் திரையுலகில், முதல்முறையாக, ஒரே ஆண்டில், ஒரு கதாநாயக நடிகரின் இரு காவியங்கள், ஒவ்வொன்றும், முழுவதும் ஓடி முடிய, முக்கால் கோடி ரூபாய்க்கு மேல் (75 லட்ச ரூபாய்க்கு மேல்) வசூலை வாரிக் குவித்தது 1959-ல்தான். அந்த இரு காவியங்கள் : "வீரபாண்டிய கட்டபொம்மன்", "பாகப்பிரிவினை"; அந்தக் கதாநாயகன் : நமது நடிகர் திலகம்.

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !

RAGHAVENDRA
23rd June 2013, 08:40 AM
வாசு சாரின் கை வண்ணத்தில் அற்புதமான வடிவமைப்பில் கட்டபொம்மன் கம்பீரமாக...

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/super.jpg

RAGHAVENDRA
23rd June 2013, 08:43 AM
quote from Vasu Sir's earlier post




http://1.bp.blogspot.com/_Re6aMmhHQQ0/SS-ToiLpOFI/AAAAAAAAAt8/aIixIhJNif8/s320/Lp-Veerapandiya+Kattabomman.JPG

The Gramophone Company of India Ltd தயாரித்த 'வீரபாண்டியக் கட்டபொம்மன்' காவியத்திற்கான (R.P.M. Record) இசைத்தட்டில் உள்ள பாடல்களின் விவரங்கள். "டக்கு டக்கு" மற்றும் "சிங்காரக் கண்ணே" பாடல்கள், பாடல்கள் விவர அட்டையில் miss ஆகி இருப்பதைக் காணலாம்.

http://2.bp.blogspot.com/_Re6aMmhHQQ0/SS-UK7S5v0I/AAAAAAAAAuE/1NQ5G0JrGTM/s1600/Lp-Veerapandiya+Kattabomman+(Back).JPG

இணையதளம் ஒன்றில் கிடைத்த தலைவரின் பென்சில் ஸ்கெட்ச் கட்டபொம்மன் ஆர்ட். வரைந்தவர் பெயர் குறிப்பிடப்படவில்லை, அந்த ஓவியருக்கு நம் வாழ்த்துக்கள். அந்த தளத்திற்கும் நம் நன்றிகள்.

http://farm5.static.flickr.com/4070/4580858939_20a8698440_b.jpg

RAGHAVENDRA
23rd June 2013, 08:46 AM
quote from my earlier post




கெய்ரோ ஆசிய ஆப்பிரிக்க விழாவில் நடிகர் திலகம் சிறந்த நடிகர் பரிசு பெற்றது தெரியும். அந்த விழாவினைப் பற்றிய செய்தி, மற்ற விவரங்கள் நாம் அறிந்து கொண்டால் முழுமை அடையும்.

மார்ச் 15 1960 அன்று நடைபெற்றது இரண்டாம் ஆசிய ஆப்பிரிக்கத் திரைப்பட விழா

Prince of Samarkand என்கிற ருஷ்யப் படமும் தாஜ் மஹல் என்கிற இந்திய குறும்படமும் இணைந்து தங்கக் கழுகு பரிசுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டன. சிறந்த நடிகருக்கான வெள்ளிக் கழுகு விருதிற்கு சிவாஜி கணேசனும் சிறந்த இசையமைப்பாளருக்கான வெள்ளிக் கழுகு விருதிற்கு ஜி.ராமநாதன் அவர்களும் தேர்ந்தெடுக்கப் பட்டனர். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு சிறப்பு விருதிற்கு தேர்ந்தெடுக்கப் பட்டது. Kaiss and Laila என்ற படத்தில் நடித்த மகதா என்கிற எகிப்து நடிகையும் Five Golden Flowers என்ற படத்தில் நடித்த Yan Li Tchun என்கிற சீன நடிகையும் சிறந்த நடிகைக்கான வெள்ளிக் கழுகு விருதினை பகிர்ந்து கொண்டனர். இதே சீன படத்தை இயக்கிய Wang Chia Ni என்பவர் சிறந்த இயக்குநருக்கான வெள்ளிக் கழுகு விருதினைப் பெற்றார். முழு நீள படங்களில் பங்கேற்றவர்களுக்கான 12 சிறந்த பங்களிப்பிற்கான நற்சான்றிதழ் பத்மினி அவர்களுக்கும் வழங்கப் பட்டது.

இந்த விவரங்கள் ஹிந்து பத்திரிகையின் இணைய பதிப்பில் தரப் பட்டுள்ளன.

நடிகர் திலகத்திற்கு வழங்கப் பட்ட சான்றிதழின் நிழற்படம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/ntawards/afroasianawardforweb.jpg

எகிப்து நடிகை மகதா நடித்த கைஸ் மற்றும் லைலா படத்திலிருந்து ஒரு நிழற்படம்

http://www.nadigarthilagam.com/images9/kaisleila.jpg

சீன நடிகை நடித்த சீன மொழிப் படத்திலிருந்து ஒரு நிழற்படம்

http://www.nadigarthilagam.com/images9/fgf.jpg

RAGHAVENDRA
23rd June 2013, 08:48 AM
ஆவணத் திலகம் பம்மலாரின் ஆவணத்தின் நிழற்படம்... தொடர்ச்சி...




1959-ல் முதல் வெளியீட்டில், வெள்ளிவிழா கொண்டாடிய அதே (உங்கள்)மதுரை 'நியூசினிமா' திரையரங்கில், சற்றேறக்குறைய முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1989-ல் மீண்டும் வெளியாகி சக்கைபோடு போட்ட இக்காவியத்தின் 'இன்று முதல் [7.4.1989]' விளம்பரம்:

வீரத்திலகத்தின் "வீரபாண்டிய கட்டபொம்மன்"

மறு வெளியீட்டு விளம்பரம் : தினகரன்(மதுரை) : 7.4.1989

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5828-1.jpg

RAGHAVENDRA
23rd June 2013, 08:50 AM
ஆவணத் திலகம் பம்மலாரின் ஆவணங்களின் நிழற்படங்கள் .... தொடர்ச்சி...




இசைத்தட்டு விளம்பரம் : The Hindu : 14.8.1959
[திரைக்கதை-வசனம் மற்றும் பாடல்கள் அடங்கியது]

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5781-1.jpg

காவிய விமர்சனம் : ஆனந்த விகடன் : 24.5.1959
["கட்டபொம்மன்" விமர்சனம் 'விகட'னில் மூன்று பக்கங்களில் வெளிவந்தது]

முதல் பக்கம்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5822-1.jpg

இரண்டாவது பக்கம்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5823-1.jpg

மூன்றாவது பக்கம்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5824-1.jpg

iufegolarev
23rd June 2013, 03:04 PM
வீரபாண்டிய கட்டபொம்மன் - இந்த வரலாற்று காவிய நாயகனை நம் நடிகர் திலகத்தை தவிர யாரால் செவ்வன செய்திருக்க முடியும்? ஏழு வயது கனவல்லவா நம் திரை உலக சித்தருடயது.

இனி எந்த சுதந்திரத்திற்கு பாடுபட்டவர்களை பற்றியும் திரைப்படம் எடுக்க முடியாத சூழல் தான் நம் நாட்டில் அதுவும் தமிழ்நாட்டில் நிலவுகிறது..காரணம் ..நம் திரையுலக சித்தரை போல எடுத்துக்கொண்ட பாத்திரத்திற்கு ஒப்ப பொருந்தும் ஒரு நடிகன் நம் தமிழ்நாட்டில் இல்லவே இல்லையே ?

இன்றைய சூழலில் எந்த நடிகனுக்கு தலையில் கிரீடம் மற்றும் கையில் செங்கோல் வைத்தால் நன்றாக இருக்கும் ? சற்று யோசித்து பாருங்கள். ?
அப்படியே வேஷ பொருத்தம் ஒரு 25% பொருந்துகிறது என்று வைத்துகொண்டாலும் அந்த "குரல்" எந்த நடிகருக்கு இருக்கிறது ? தமிழ் ஒழுங்காக எவன் பேசுகிறான் ? " ல " போடவேண்டிய இடத்தில் "ள" போடுகிறான். "ழ " போடவேண்டிய இடத்தில் "ள" "லா" போடுகிறான் ! இதுதானே இன்றைய நிலை.

மேலும் தயாரிப்பாளர்கள் நம் சித்தரை இது போன்ற காவியங்கள் எடுக்க முதலில் அணுகும்போது நடிகர் திலகம் இதுபோன்ற subject தேர்வு செய்தது முழு முழு வியாபாரநோக்கம் மட்டுமே அல்ல !

இந்த சமுதாயத்திற்கு, இளைய தலைமுறையினருக்கு தன்னால் முடிந்தவரை தமிழறிஞ்சர்கள், பெரியவர்கள், விடுதலைக்கு பாடுபட்ட வீரர்கள், இதிகாச நாயகர்கள், வரலாற்று விற்பன்னர்கள் இவர்களை நினைவுபடுத்தி, அறிமுகபடுத்தி நம் தேசத்தின் பெருமைகளை அவர்கள் உணரவேண்டும் என்ற ஒரு புனிதமான நோக்கமும் கொண்டதால், தன்னுடைய கடமையில் அதுவும் முக்கியமான ஒன்று என்று கருதியதால் தான் நமக்கு இதுபோன்ற காவியங்கள் கிடைக்கபெற்றனர். திரை உலகின் சித்தரே நாங்கள் என்ன பேறு செய்தோம் உம்முடைய ரசிகராக பிறக்க.

நம் நடிகர் திலகம் செய்தது போல இந்திய உலக அளவில் எந்த ஒரு நடிகரும் இதை செய்ததில்லை இனி செய்யபோவதும் இல்லை என்பது உறுதி !

இப்பொழுதுள்ள நடிகர்கள் எவர் இதை போல செய்ய நினைத்தாலும் அது வெற்றி பெறாது, காரணம் அவர்களிடம் அதை நல்ல எண்ணத்திற்காக செய்யவேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணம் இல்லை !

வெறும் வியாபாரம் மட்டுமே குறிகோளாக உள்ளது..! When there is no sincerity and dedication towards benefit of the society they will never succeed ! நடிகர் திலகம் 3 மாதத்தில் முடிக்கும் கட்டபொம்மன் போன்ற ஒரு படத்தை இவர்கள் முடிக்க மூன்று அல்லது ஐந்து வருடங்கள் எடுத்துகொள்வார்கள் ! காரணம் கேட்டால் ஆயிரம் காரணங்கள் கூறுவார்கள். இத்தனைக்கும் இவர்கள் வருடத்தில் ஒரு படம் கூட ஒழுங்காக நடிப்பதில்லை.

தமிழ் திரைஉலகு உள்ளவரை தமிழர்களுக்கு நாயகர்களான கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் ஆகிய காவியங்கள் தான் நினைவில் இருக்கும் வேறு எந்த நாயகர்களும் நினைவில் நிற்க்கமாடார்கள் என்பது திண்ணம் !

நடிகர் திலகத்திற்கு உரிய அங்கீகாரம் கொடுக்க மறுக்கும், தாழ்புனற்சியால், தலைகனத்தால் குள்ளநரித்தனம்கொண்ட, மக்களை ஏமாற்றும் ஊழல் புரியும் துரோகிகளுக்கு அரணாக விளங்கும் தமிழக மண்ணே ...இந்த இழிவு உனக்கா ! அவருக்கா !

ScottAlise
23rd June 2013, 08:02 PM
Dear Ragavendran sir,

Its raining info about வீரபாண்டிய கட்டபொம்மன், truly feeling blessed seeing it

1000 thanks

iufegolarev
23rd June 2013, 11:23 PM
வீரபாண்டிய கட்டபொம்மன்

இந்த ஒரு காட்சி போதும் நம் சித்தரின் சிறப்பை சொல்வதற்கு -

இறைவனை கும்பிடும் நேரத்தில் அந்த முகத்தில் எவ்வளவு சாந்தம். பின்னர் வீரன் வந்து பநேர்மன் வருகையை சொன்னதும் எட்டப்பன் காட்டிகொடுத்த செய்திகேட்டு...போர் அறிவிப்பு வெளியிடும் இந்த ஒரு காட்சி.....

முகம் சாந்த நிலையிலிருந்து எவ்வளவு டிகிரி கோப கனல் வீசுகிறதென்று பார்த்தால் புரியும். இந்த காட்சியில் நடிகர் திலகம் இல்லவே இல்லை ...அது உண்மையான கட்டபொம்மன் தான் என்று கற்பூரம் அடித்து கூறும் அளவிற்கு கிட்டத்தட்ட ஒரு Split Personality முறையில் உண்மையான கட்டபொம்மன் நம் கண் முன்பு தோன்றும் காட்சி.

எக்காலத்திலும் எந்த ஒரு நடிகராலும் இதை மிஞ்சும் ஒரு நடிப்பை வெளிகொண்டுவரமுடியவே முடியாது !

Nadigar Thilagam has set the top most standard of performance in his 25% capacity which none can dream of. No wonder, you were adjudged the Best Actor in the whole of Asia - Africa and was made the One Day Mayor and presented with the Golden key of Cairo on par with Pandit Jawaharlal Nehru. It is 2013 now and none was able to achieve that across India since 1960. - Truly A universal Actor, by all means !

http://www.youtube.com/watch?v=aGo6fJM3WgY

vasudevan31355
24th June 2013, 07:27 AM
வீரபாண்டிய கட்டபொம்மன்

http://i.minus.com/ibkNu1mapthn4d.jpg

vasudevan31355
24th June 2013, 07:28 AM
http://i4.sdlcdn.com/img/product/main/149823_M_1_2x.jpg

vasudevan31355
24th June 2013, 07:33 AM
http://ttsnapshot.com/out.php/i17508_vlcsnap-2012-07-27-16h40m00s39.png

http://ttsnapshot.com/out.php/i17506_vlcsnap-2012-07-27-16h44m04s189.pnghttp://ttsnapshot.com/out.php/i17512_vlcsnap-2012-07-27-16h54m27s12.png
http://ttsnapshot.com/out.php/i17504_vlcsnap-2012-07-27-16h43m58s128.pnghttp://ttsnapshot.com/out.php/i17510_vlcsnap-2012-07-27-16h50m43s84.png
http://ttsnapshot.com/out.php/i17511_vlcsnap-2012-07-27-16h55m53s104.pnghttp://ttsnapshot.com/out.php/i17509_vlcsnap-2012-07-27-16h54m44s187.png

vasudevan31355
24th June 2013, 07:37 AM
Veerapandiya Kattabomman (Tamil: வீரபாண்டிய கட்டபொம்மன்) was a 1959 Tamil feature film written by Sakthi T. K. Krishnasamy and directed by B. Ramakrishnaiah Panthulu. The cast includes Sivaji Ganesan, Gemini Ganesan, Padmini, S. Varalakshmi, and V. K. Ramaswamy.

It was one of the memorable films of Sivaji Ganesan, it was produced and directed by B.R. Banthulu, Veerapandiya Kattabomman was the Tamil chieftain who rose in rebellion against the East India Company and fought with alien combination. One of the earliest freedom fighters of India he laid his life in sacrifice at the altar of freedom of his motherland.

This role of a historic figure Kattabomman was played with majesty and grandeur by this great actor Sivaji Ganesan portrayed this spitfire personality of the rebel hero in a most effective manner. His larger than life performance won him an international award at the Egypt Film Festival.

Veerapandiya Kattabomman is notable for being the first Tamil film to be shot in Technicolor process.

Eighteen kilometres north west of Tirunelveli lies the hamlet of Panchalankurichi, a place of historical significance. The chieftains ruling Panchalankurichi put up stiff resistance against the British East India Company, between 1798 and 1801.

Veerapandiya Kattabomman was a fearless chieftain who refused to bow down to the demands of the British for agricultural tax on native land, a brave warrior who laid down his life for his motherland. The fight he launched in Panchalankurichi has been hailed as the inspiration behind the first battle of independence of 1857, which the British called the Sepoy Mutiny.

http://i.imgur.com/0HanR.jpg

vasudevan31355
24th June 2013, 07:42 AM
http://i4.ytimg.com/vi/iGf_-Lr-KiY/movieposter.jpg

http://padamhosting.com/out.php/i136231_vlcsnap2012010509h34m04s28.pnghttp://padamhosting.com/out.php/i136232_vlcsnap2012010509h35m34s158.png
http://padamhosting.com/out.php/i136233_vlcsnap2012010509h35m28s97.pnghttp://padamhosting.com/out.php/i136235_vlcsnap2012010509h34m11s98.png
http://padamhosting.com/out.php/i136236_vlcsnap2012010509h34m31s38.pnghttp://padamhosting.com/out.php/i136234_vlcsnap2012010509h35m00s69.png

vasudevan31355
24th June 2013, 07:46 AM
Veerapandiya Kattabomman 1959 - a Sivaji Rocker

http://img27.imageshack.us/img27/7198/veerapandyakattabomman1.pnghttp://img37.imageshack.us/img37/6429/clipveerapandyakattabom.png
http://img401.imageshack.us/img401/6429/clipveerapandyakattabom.pnghttp://img715.imageshack.us/img715/4297/vlcsnap2012042612h19m57.png
http://img859.imageshack.us/img859/6429/clipveerapandyakattabom.pnghttp://img100.imageshack.us/img100/6429/clipveerapandyakattabom.png

vasudevan31355
24th June 2013, 07:58 AM
http://padamhosting.com/out.php/i48774_vlcsnap53943.pnghttp://padamhosting.com/out.php/i48773_vlcsnap55081.png

vasudevan31355
24th June 2013, 08:03 AM
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQIsRk4EcXcMy5Ddx7SSm-QUq7G0-mcYc1SXEwI1GDq_Bzb3K70JAhttp://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTXDwbxDiakoBoMGW7aSW5CbN9gNFdZi 8TZ6lPwWzyZlfbTw8Qh
http://i715.photobucket.com/albums/ww156/gowthamw595/vlcsnap-44296.png (http://s715.photobucket.com/user/gowthamw595/media/vlcsnap-44296.png.html)
http://i2.ytimg.com/vi/yxLGv6QSu-A/hqdefault.jpg?feature=og
http://img341.imageshack.us/img341/5903/snapshot20080112095714pc0.jpg

vasudevan31355
24th June 2013, 08:06 AM
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTWvJzE1oAFB1-g3xzdzAodksSt8XJQXDSToZwzFqOH5Y117jJ4
http://i1.ytimg.com/vi/0MGMEclxNno/hqdefault.jpghttp://i1.ytimg.com/vi/PNGKyJgFRC4/hqdefault.jpg

vasudevan31355
24th June 2013, 08:14 AM
http://www.freewebs.com/pammalar/Kattabomman2.jpg

Gopal.s
24th June 2013, 09:54 AM
வாசுதேவன்,
உன்னுடைய still choice என்னுடைய favourite .
பம்மலாரின் அசுர சாதனையை உணர்த்தும் ராகவேந்தர் சாரின் உழைப்புக்கு நன்றி. பார்த்த விழி பார்த்திருந்து பூத்து விட்டாலும் ,காத்திருப்புக்கு தகுந்த பரிசுதான். நன்றி.

RAGHAVENDRA
25th June 2013, 06:36 AM
பார்வையாளர்களோடு அரங்கில் கட்டபொம்மன் நாடகம் நடைபெறும் காட்சி

http://3.bp.blogspot.com/-TqF1JUcKhmM/UApQPjND6kI/AAAAAAAACpY/QAMiuHE9O08/s1600/252748_253571161413137_1804921649_n.jpg

RAGHAVENDRA
25th June 2013, 06:50 AM
மறக்க முடியாத திரைப்படங்கள் என்ற தொடரில் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தைப் பற்றி... வேறோர் இணைய தளத்திலிருந்து...




http://tamizharivu.files.wordpress.com/2012/12/1.jpg

பள்ளிக் காலத்தில் வரி விலக்கு அளிக்கப்பட்டு வெறும் இருபத்தைந்து பைசாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நினைவு தெரிந்த நாட்களின் முதல் திரைப்படம், இன்றைக்கு வரைக்கும் "வீரபாண்டிய கட்டபொம்மன்" என்கிற ஒரு வரலாற்றுப் பாத்திரத்தின் வடிவத்தை வேறு எந்த ஒரு மாற்று ஊடகத்தின் தாக்கத்துக்கும் ஆளாக்காமல் எனக்குள் (அனேகமாக நம் அனைவருக்குள்ளும்) வைத்திருக்கும் திரைப்படம், திரைப்படம் எத்தனை வலிமையான கலை என்பதை நான் இன்று வரை வியக்கும் ஒரு திரைப்படம், ஒரு நடிகனின் மகத்தான அடையாளங்களை, மிடுக்கை, மேதமைகளை தன்னந்தனியனாக நின்று களமாடும் "சிவாஜி கணேசன்" என்கிற நமது கலைஞனை வியந்து பார்க்க வைத்த திரைப்படம் என்று பல குறிப்புகளை இந்தப் படம் தனக்குள் கொண்டிருந்தாலும், அவை எல்லாவற்றையும் கடந்த ஒரு ரசிகனுக்கான எல்லாவற்றையும் உள்ளடக்கியது என்பது தான் இந்தப் படத்தின் தனிச்சிறப்பு, வரலாற்று முகவரி, விடுதலைப் போராட்டத்தின் பதிவுகள், நகைச்சுவை, காதல், பாடல்கள் என்று ஒரு காட்சியிலும் தொய்வு இல்லாமல் நகர்த்தப்பட்ட பொழுது போக்குச் சித்திரமாகவும் இந்தப் படம் இன்று வரை வரலாற்றில் அழியாமல் இருப்பது ஒரு வியக்கத்தக்க சாதனை.



இதற்கான இணைப்பு (http://tamizharivu.wordpress.com/2012/12/28/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%A E%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%A F%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D/)

RAGHAVENDRA
25th June 2013, 06:54 AM
திருப்பு முனை திரைப்படங்கள் என்ற தொடரில் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி ... சினிமா எக்ஸ்பிரஸ் இணைய தளப் பக்கத்திலிருந்து...



திருப்புமுனை திரைப்படங்கள் - 32

வீரபாண்டிய கட்டபொம்மன் (1959)

.....ஏற்கெனவே கட்டபொம்மன் கதையை சிறந்த முறையில் வடிவமைத்து சிவாஜி நாடக மன்றத்தார் நாடகமாக நடித்து பிரபலமாகியிருந்தது. சக்தி கிருஷ்ணசாமி எழுதிய அந்த நாடகத்தில் நடித்து வந்தார் சிவாஜி. மூதறிஞர் ராஜாஜி, அறிஞர் அண்ணா, இந்த நாடகத்தைப் பார்த்து பாராட்டினார்கள்.
வெள்ளையனை எதிர்த்துக் குரல் கொடுத்த பாஞ்சாலங்குறிச்சி சிங்கமான வீரபாண்டிய கட்டபொம்மன் கதையை படமாக்க முடிவு செய்தார் பத்மினி பிக்சர்ஸ் பி.ஆர். பந்துலு. அவரே டைரக்ட் செய்யத் திட்டமிட்டார். நாடகத்துக்கு வசனம் எழுதிய சக்தி கிருஷ்ணசாமியே சினிமாவுக்கும் எழுத வேண்டும் என்று பலரும் கேட்டுக் கொண்டார்கள். வழக்கமாக நாடகங்களில் எழுதப்படும் வசனங்களைப் போல் அல்லாமல், புதிய பாணியில் அவரது வசனங்கள் உயிரோட்டத்துடன் எழுதப்பட்டிருந்தன. சிவாஜிக்கு மட்டுமல்ல தமிழ் திரை உலக வரலாற்றிலேயே வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு சரித்திர சாதனைப் படமாக அமைந்தது. சிவாஜியின் புகழ் தரணி எங்கும் பரவியது.
இன்னொரு சிறப்பு இந்தப் படத்தின் கதை ஆலோசனை குழுத் தலைவர் பொறுப்பை ம.பொ. சிவஞானம் அவர்கள் ஏற்றுப் பணிபுரிந்தார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தைப் பற்றி பல ருசிகர தகவல்கள் உண்டு. கட்டபொம்மன் நெல்லைச் சீமையில், பாஞ்சாலங்குறிச்சியில் வாழ்ந்த விடுதலை போராட்ட வீரன். கட்டபொம்மன் வாழ்ந்த, இடங்கள் பொட்டல் காடாக இருந்ததால் இப்படத்தை எங்கு எப்படிப் படமாக்குவது என்பதில் சிக்கல் ஏற்பட்டது.
ஒருமுறை பார்லிமெண்டில் கே.டி.கே. தங்கமணியின் ஒரு கேள்விக்கு மத்திய மந்திரி டாக்டர் கேஸ்கர் பதில் அளிக்கையில், ""கட்டபொம்மன் வரலாற்றை யாராவது சினிமாவாக எடுத்தால், அரசு அவர்களுக்கு உதவிகளைச் செய்யும் என்று அறிவித்திருந்தார்.
பி.ஆர். பந்துலு அதை நினைவில் கொண்டு, மத்திய அரசை அணுகினார். மத்திய அரசு ஜெய்ப்பூரில் வீரபாண்டிய கட்டபொம்மனை திரைப்படமாக்க அனுமதி கொடுத்ததோடு, இராணுவத்தின் குதிரைப் படைகளையும் தந்து உதவியது. திரைப்படத்தின் பெரும் பகுதிக் காட்சிகளை ஜெய்ப்பூரிலே படமாக்கினர்.
காதல் இல்லாமல் சினிமா முழுமை பெறாது என்பதால், அழகான ஒரு காதல் கதையை, பத்மினி ஜெமினி கணேசனுக்காக சிறப்பாக உருவாக்கி இருந்தார் பி.ஆர். பந்துலு.
இன்பம் பொங்கும் வெண்ணிலா பாடலை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. அதுபோல போகாதே போகாதே என் கணவா பாடலும், மக்கள் மனதில் எழுச்சியை ஊட்டிய பாடல் காட்சிகளாகும்.
ஜெமினிகணேசன் நடித்த பாத்திரத்தில் எஸ்.எஸ். ராஜேந்திரன் நடிப்பதாக இருந்தது. வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட சிவகங்கை சீமை படத்தில் அவர் நடித்ததால், இப்படத்தில் நடிக்கவில்லை. கேவா கலரில் உருவாக்கப்பட்டு, லண்டர் போய் டெக்னிக் கலராக மாற்றி வெளியிட்டார்கள்.
பல ஊர்களிலும் 100 நாள் விழா கண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் தமிழ்பட உலகின் பெருமையை உயர்த்தி இமயம் மாதிரி நிமிர்ந்து நின்றது.
எல்லாவற்றிற்கும் முத்தாப்பு வைத்தது போல, 1960 ஆண்டு கெய்ரோவில் நடந்த ஆசிய ஆப்பிரிக்கா திரைப்பட விழாவில், சிறந்த நடிகர் என்ற உயர்ந்த பரிசை சிவாஜிக்கு பெற்றுத் தந்தது. அத்துடன் இசை அமைப்பாளர் ஜி. இராமநாதனுக்கும் சிறந்த இசை அமைப்பாளர் விருது கிடைத்தது.
படங்கள்: ஃபிலிம் நியூஸ் ஆனந்தன்
நடிக, நடிகையர் : சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், ஜாவர் சீதாராமன், ஓ.ஏ.கே. தேவர், வி.கே. ராமசாமி, ஏ. கருணாநிதி, பத்மினி, ஜி. வரலட்சுமி, மற்றும் பலர்.
இசை : ஜி. ராமநாதன்
பாடல்கள் : கு.மா. பாலசுப்ரமணியம்
தயாரிப்பு : பத்மினி பிக்சரஸ்
டைரக்ஷன் : பி.ஆர். பந்துலு

Gopal.s
25th June 2013, 08:53 AM
மராட்டிய மண்ணில், நம் நடிகர்திலகத்துக்கு அபார வரவேற்பை தந்து லதாஜி, ப்ரித்விராஜ் கபூர் ,ராஜ் கபூர் போன்றோர்களை நம் நிரந்தர ரசிகர்களாய் ஆக்கியதில் மும்பை ஷண்முகானந்த சபையில் மேடையேறிய வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்துக்கு பெரும் பங்குண்டு.

iufegolarev
29th June 2013, 10:33 AM
என் நினைவில் நிழலாடும் வீரபாண்டிய கட்டபொம்மன்.

வரிவிலக்கு அளிக்கப்பட்டு சென்னை திருவல்லிகேணியில் உள்ள ஸ்டார் திரைஅரங்கில் மறுவேளியிடு என்று அப்போது நாங்கள் தங்கி இருந்த திருவல்லிக்கேணி வீடு பக்கத்தில் இருந்த தட்டான் கடையில் தினத்தந்தியில் பார்த்தவுடன் எனக்கு ஒரே குஷி. ஆஹா ! சிவாஜி படம் கட்டபொம்மன் (அப்போது இறுதியில் கட்டபொம்மன் தூக்கிலிடபடுவார் என்பது தெரியாது) ராஜா கெட்-அப் பார்த்தவுடன் இந்தபடத்தை விடக்கூடாது என்று வீட்டில் அடம் பிடித்து, எனக்கு சிபாரிசாக பக்கத்து குடித்தனம் மாமி, கீழ் வீட்டு மாமி மற்றும் அவரது பிள்ளைகள்...இப்படி ஒரு 14 பேர் வெள்ளிகிழமை அன்று மதியம் செல்வதென்று முடிவுசெய்யப்பட்டது. காலை 10 மணிக்கு கவுன்டரில் சென்று டிக்கெட் வாங்கிவிடலாம் என்று வாடகை சைக்கிள் எடுத்துகொண்டு நானும் கீழ்வேட்டு சகோதர நண்பர்கள் சந்துரு, ராஜு ஆகியோர் சென்றோம்.

மண்ணெண்ணெய் ரேஷன் கடையில் வாங்க நிற்கும் Q போல அப்படியொரு மக்கள் வெள்ளம் ! அவ்வளவு மக்கள் கூட்டம் அதுவரை நான் பார்த்ததில்லை அப்படி ஒரு கூட்டம். 400 meters தொலைவில் உள்ள மசூதி வரை வரிசை...கிட்டத்தட்ட சுமார் ஒன்றரை மணிநேரம் நின்றிருப்போம்.

கடைசியில் கிடைத்ததோ மாலை காட்சிக்கு டிக்கெட். சரி, கிடைத்தது அதிர்ஷ்டம் என்று நினைத்து வீடு வந்து சேர்ந்தோம் ...வாங்கினோம் பாருங்கள் திட்டு...மறக்கவேமுடியாது...மாலை காட்சிக்கு ஏன் வாங்கினீர்கள்...நாளை காலை அல்லது மதியம் வாங்கவேண்டியது தானே என்று திட்டு. காரணம் எங்களுடைய தந்தையார் உத்தியோகத்திலிருந்து வந்துவிடுவார்களே..ஆகையால் இந்த திட்டு. ஹ்ம்ம்.... ஒருவழியாக பொது தொலைபேசியில் தந்தையாரிடம் பேசி கட்டபொம்மனை காண ஆயுத்தம் ஆனோம்.

மாலை 545 க்கு தியேட்டரில் ஆஜர். ஒரு 25 நிமிட காத்தலுக்கு பின், அரங்கின் உள்ளே நாங்கள். எனக்கு எப்போதும் போல நடு சீட். திரையில், முதல் நாள் என்பதால் newsreel எல்லாம் இல்லை. நேராக படம்தான் ! பெயர்போடும் காட்சியில் இருந்தே அப்படியொரு ஆரவாரம் ...கூடை கூடாக பூக்களை வைத்து...ஒவொவொரு காட்சியிலும் பூக்கள் தூவினர் ரசிகர் மன்ற பிள்ளைகள். அப்போது எனக்கு ஒன்றும் புரியவில்லை எதற்கு என்று...காரணம் நான் சிறுவன்..!

ஆனால் சிவாஜி அவர்களை காட்டும்போதெல்லாம் ரோஜா பூக்கள் தூவும்போது என்மனதில் என்னமோ அவ்வளவு சந்தோஷமும் பூரிப்பும். காரணம் அப்போது விளங்கவில்லை..இப்போது புரிகிறது ! கிட்டத்தட்ட படம் முடியும் வரை இந்த பூ தூவும் நிகழ்ச்சி நடந்தது...!

கடைசி காட்சி கட்டபொம்மன் தூகில்டுவதர்க்கு முன் பந்நேர்மன் உரையாடல்...ரசிகர்கள் பந்நேர்மனை நல்ல மொழிகளால் வசவுசெய்வது காதில் விழுகிறது..நான் அப்போது சிறுவன் என்பதால் பந்நேர்மன் சிவாஜியை உண்மையாகவே சங்கிலியால் பிணைதிருந்தான் அதனால் இவர்கள் அவரை திட்டுகிறார்கள் என்று நினைத்தேன்.

அவர்களை பார்த்து நானும் என்னை மறந்து...சங்கிலியை அவுத்துவிடுங்க சார் ! ப்ளீஸ் ! என்று உரக்க சொன்னதுதான் தாமதம்..முன் வரிசையில் மற்றும் பின் வரிசையில் உள்ளவர்கள் "ஹ..ஹ..ஹ.." என்ற குபீர் சிரிப்பு ..உடனே என் அம்மா " பட்" என்று ஒரு அடி கையில் வைத்து "ஒக்காருடா ...மானத்த வாங்காதே ! " என்று கூற ..இப்போது நினைத்தாலும் ஒரு சிரிப்பு ஒரு பெருமை !

இதற்குள் திரையில்..கட்டபொம்மன் தூக்கிலிடும் காட்சி....துணிந்தவருக்கு தூக்குமேடை பஞ்சுமெத்தை என்ற வசனம்...முடிந்ததும் படக் என்று தூக்குமாட்டி இறக்கும் காட்சி..."ச..ச...ச..ச..." என்று அரங்கம் முழுதம் என்னமோ..தெரியவில்லை..ஒரு பரிதாபத்தை வெளிபடுத்தும் சத்தம்....திரையில் மக்கள் அழுவதை பார்த்து எனையும் அறியாமல் அழுதுவிட்டேன் ! ஏன் அழுதேன் என்று அன்று புரியவில்லை ! அனால் இப்போதும் அதை நினைத்தால் ஒரு பெருமை..!

RAGHAVENDRA
3rd July 2013, 06:40 AM
டியர் சுப்பு சார்
குழந்தைப் பருவத்தில் கட்டபொம்மன் பார்த்த அனுபவம், அதை தாங்கள் விவரித்த விதம், இரண்டுமே சுவையாக இருந்தது. பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
3rd July 2013, 06:40 AM
Sivaji Ganesan Filmography Series

56. மரகதம் Maragatham
[கருங்குயில் குன்றத்துக் கொலை]

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Decorated%20images/maragathamcollagefw.jpg

தயாரிப்பு – பக்ஷிராஜா ஸ்டூடியோஸ்

வசனம் – முரசொலி மாறன்

நடிகர்கள்
சிவாஜி கணேசன், டி.எஸ்.பாலைய்யா, சந்திரபாபு, எஸ்.பாலச்சந்தர், டி.எஸ்.துரைராஜ், ஓ.ஏ.கே. தேவர், நாராயண பிள்ளை, சந்தானம், கன்னையா, பக்கிரிசாமி, நடராஜன்,
நடிகைகள்
பத்மினி, சந்தியா, ஞானம், முத்துலக்ஷ்மி, லக்ஷ்மிபிரபா, காமாட்சி, லக்ஷ்மிராஜம், சரஸ்வதி

இசையமைப்பு – எஸ்.எம்.சுப்பய்யா

பாடல்கள்
வாகி சுத்தானந்த பாரதியார், பாபநாசம் சிவன், ரா.பாலு, கு.மா.பாலசுப்ரமணியன், மருதகாசி

பின்னணி பாடியோர்
டி.எம்.சௌந்தர்ராஜன், ஜெயலக்ஷ்மி, லீலா, ஜமுனா ராணி, அலமு மற்றும் சந்திரபாபு

நடன அமைப்பு – ஹீராலால்

ஒலிப்பதிவு – ஈ.ஐ. ஜீவா, மணி
கலை – ஏ.கே. சேகர்
லேபரட்டரி – நாதன், மோஹன்
எடிட்டிங் – வேலுச்சாமி
மேக்கப் – குமார், தனகோடி
ஸ்டில்ஸ் – அனந்தன்
செட்டிங் – பக்தவத்சலம்
ஆர்ட் – அந்தோணி
ஓவியம் – துரைசாமி
ஒளிப்பதிவு – சைலன் போஸ்
தயாரிப்பு – டைரக்ஷன் – எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு

Gopal.s
3rd July 2013, 06:41 AM
வீரபாண்டிய கட்டபொம்மனை பற்றி இன்னும் நிறைய பதிவுகள் எதிர்பார்க்க படுகின்றன.
பிறகு அடுத்தது தொடரும்.

RAGHAVENDRA
3rd July 2013, 06:41 AM
மரகதம் திரைப்பட விளம்பர நிழற்படங்கள்
உபயம் ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்



பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 7.8.1959

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4361a-1.jpg

முதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 21.8.1959

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4362a-1.jpg

"மரகதம்" சென்னை 'வெலிங்டன்' திரையரங்கில் 100 நாட்கள் ஓடிய சிறந்த வெற்றிக் காவியம்.

RAGHAVENDRA
3rd July 2013, 06:42 AM
மரகதம் விமர்சனம்
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/maragathamreview.jpg

மரகதம் திரைப்படத்தின் மற்றொரு விளம்பரம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/maragathamAdfw.jpg

RAGHAVENDRA
3rd July 2013, 06:48 AM
மரகதம் திரைப்படத்தின் பாடல் காட்சிகள்

1. மாலை மயங்குகின்ற நேரம்

http://youtu.be/3fS7rA13Ho0

2. கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு

http://youtu.be/z7110AGgpb0

3. குங்குமப் பூவே

http://youtu.be/sImmra6WO8o

4. புன்னகை தவழும் மதிமுகமோ

http://youtu.be/SBr-nbFuYsc

Gopal.s
3rd July 2013, 06:56 AM
மரகதம்

வடுவூர் துரைசாமி என்பவர் எழுதிய கருங்குயில் குன்றத்து கொலை என்ற கதையை தழுவி முரசொலி மாறன் வசனத்தில் பட்ஷி ராஜா என்ற ஸ்ரீராமுலு நாயுடு இயக்கி தயாரித்தது. இவர் நடிகர்திலகத்தின் பால் ,மிக மிக மரியாதை கொண்ட ரசிகர். மலை கள்ளன் படத்தில் நடிக்க கிட்டத்தட்ட ஒரு மாதம் நடிகர்திலகத்தை வேண்டி நின்றார். சென்னையில் ஏக பட்ட commitments இருந்ததால் ,கோவையில் சென்று பக்ஷிராஜா படத்திற்கு ஒத்துழைப்பது கடினம் என்றதால் நடிகர்திலகம் கைகாட்டிய வழியிலேயே பிற நடிகர்களை போட்டு படத்தை எடுத்தார். ஆனாலும் ,நடிகர்திலகத்தின் பால் உள்ள
பெருமதிப்பினால் ,மரகதம்,கல்யாணியின் கணவன் போன்ற படங்களை எடுத்தார்.
சுப்பையா நாயுடுவின் இசை நன்றாக வந்திருக்கும். கண்ணுக்குள்ளே என்னை பாரு மிக அருமையான பாடல். சிவாஜி-பத்மினி chemistry கண் படும் அளவு அருமை-இனிமை-இளமை.
படம் சிறிதே தொய்ந்தாலும்(நீளம் காரணமாக ,Filler scenes அதிகமானதால்), மாறன் வசனங்கள் அன்னையின் ஆணை அளவு sharp ஆக இல்லாவிட்டாலும் ,lead pair chemistry ,மூலக்கதை வலிமை கொண்டு ,நல்ல வெற்றியடைந்தது.

RAGHAVENDRA
3rd July 2013, 08:14 PM
மரகதம் சிறப்புச் செய்திகள்

1. முக்கிய கதாபாத்திரங்களுக்குப் படத்தில் இரண்டு பெயர்கள் சில சமயம் குழப்பம் ஏற்படுத்துவது போல் தோற்றமளிக்கும் திரைக்கதையமைப்பு இருந்தாலும் அது படத்தின் வெற்றியை பாதிக்காதது குறிப்பிடத் தக்கது.

2. வாசு சாரின் ஆடைகளுக்கென்ற பிறந்த ஆணழகன் தொடருக்கு ஏகப் பட்ட தீனி தரும் படம் மரகதம். இப்படத்தில் நடிகர் திலகம் மற்றும் பத்மினியின் உடையலங்காரம் .... அட்டகாசம், அபாரம் .... இன்னும் என்ன வேண்டுமானாலும் நிரப்பிக் கொள்ளுங்கள்...

3. வடுவூர் துரைசாமி ஐயங்காரின் பிரபலமான மூலக்கதை, சிறப்பான இசை, இனிமையான பாடல்கள், கண்ணைக் கவரும் ஷைலன் போஸின் ஒளிப்பதிவு என சிறப்பான அம்சங்கள் குறிப்பிடத் தக்கவை.

சென்னையில் வெளியான திரையரங்குகள்

வெலிங்டன், கிருஷ்ணா, உமா

100 நாட்கள் ஓடிய திரையரங்கு. சென்னை - வெலிங்டன்

RAGHAVENDRA
3rd July 2013, 08:18 PM
எஸ்.எம்.சுப்பய்யா அவர்களின் இசையில் மரகதம் திரைப்படத்தில் இடம் பெற்ற இனிமையான பாடல்கள்

1. காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு - நாமக்கல் இரா. பாலு - டி.எம்.சௌந்தர்ராஜன் - டைட்டில் கார்டில் ஒலிக்கும் பாடல்.
2. மாலை மயங்குகின்ற நேரம் - கவியோகி சுத்தானந்த பாரதி - ஜெயலக்ஷ்மி
3. புன்னகை தவழும் மதி முகமோ - பாபநாசம் சிவன் - டி.எம்.சௌந்தர்ராஜன், ஜெயலக்ஷ்மி - கேட்கக் கேட்கத் தெவிட்டாத பாடல், காணக் காண சலிக்காத ஜோடி .... ஆஹா.. இரவை இனிமையாக்க இது போதுமே..
4. கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு - நாமக்கல் இரா. பாலு - டி.எம்.சௌந்தர்ராஜன், ஜெயலக்ஷ்மி -- தலைவரின் ஸ்டைலைப் பார்ததுக் கொண்டே இருக்கலாம்...
5. ஆடினாள் நடனம் ஆடினாள் - நாமக்கல் இரா. பாலு - ஜெயலக்ஷ்மி
6. குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே - கு.மா. பாலசுப்ரமணியம் - சந்திரபாபு, ஜமுனா ராணி ... சந்திரபாபுவின் இந்தப் பாடலை இன்று இசைக்காத மேடை நிகழ்ச்சியே இல்லை எனலாம்...
7. பச்சைக்கிளி போல - மருதகாசி - பி.லீலா, ஜமுனா ராணி
8. கா வா வா கந்தா - பாபநாசம் சிவன் - அலமு

Gopal.s
8th July 2013, 12:40 AM
அவள் யார்?
கே.ஜே .மகாதேவன் தமிழ் பட உலகால் சரியாக புரிந்து கொள்ள படாத ஒரு மேதை. இவருடைய ராஜி என் கண்மணி (city lights என்ற சாப்ளின் படத்தை தழுவியது), அவள் யார், ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் போன்றவை குறிப்பிட வேண்டிய நல்ல படங்களாகும். அவள் யார் படத்தை பார்க்கும் சந்தர்பம் ஒரு முறையே எனக்கு கிடைத்தாலும், சிவாஜியின் performance அவ்வளவு பிரமாதமாக இருக்கும்.
அவள் யார் படத்தை பாக பிரிவினையுடன் வெளியிட்டால் ,mass appeal இல்லாத Dry intellectual content உள்ள அவள் யார் வெற்றி பாதிக்கும் என்று சிவாஜி அறிவுரை கூற, வினாச காலே விபரீத புத்தி என்று கே.ஜே .மகாதேவனின் அதிக பிரசங்கித்தனமான எதிர்ப்பு ,மூர்க்கமான பிடிவாத குணம் அவருக்கே எமனாய் வந்தது.
சிவாஜியின் அறிவுரை ஏற்க பட்டிருந்தால்?

Gopal.s
8th July 2013, 09:47 AM
Music- S.Rajeswara Rao.
Aval Yaar Songs
தமிழ்

Album: Aval Yaar
Cast: Sivaji Ganesan , Pandaribai , Jawar Seetharaman
Music: Old
Year: 1959
Director: K.J. Mahadevan
Play Selected Play All Add to Playlist

Songs Singers Duration Lyrics
Kan Kaanum Minal Panigrahi 3:08 Not Available
Naan Thedum Poodhu Panigrahi 3:10 Not Available
Pattu Poochi Polum AM. Rajah, Jikki 2:56 Not Available

RAGHAVENDRA
8th July 2013, 11:10 AM
Sivaji Ganesan Filmography Series

57. அவள் யார் Aval Yaar

விளம்பர நிழற்படங்கள் உபயம் ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்

தணிக்கை – 22.10.1959
வெளியீடு – 30.10.1959

நிழற்படங்கள் .உபயம் ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்


காவியக்காட்சிகள் : பேசும் படம் : ஏப்ரல் மலர் 1959
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4888-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4889-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4890-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4891-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4892-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4893-1.jpg




முதல் வெளியீட்டு விளம்பரம் : தென்னகம் : 6.11.1959
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4879-1.jpg

விமர்சனம் : ஆனந்த விகடன் : 22.11.1959
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4880-1.jpg
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4881-1.jpg

RAGHAVENDRA
8th July 2013, 11:11 AM
பம்மலாரின் ஆவணங்கள் ... தொடர்ச்சி




வரலாற்று ஆவணம் : பேசும் படம் : செப்டம்பர் 1959

["அவள் யார்" காவியம் குறித்தும், அதில் நடிகர் திலகத்தின் கதாபாத்திரம் குறித்தும், அவை இரண்டும் சரிவர அமைய அதன் தயாரிப்பாளர்-இயக்குனர் கே.ஜெ.மகாதேவன் அவர்கள் எடுத்து கொண்ட பெருமுயற்சி குறித்தும் விளக்குகிறது இந்த எட்டு பக்கப் படக்கட்டுரை]

முதல் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4894-1.jpg

இரண்டாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4895-1.jpg

மூன்றாவது பக்கம்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4896-1.jpg

நான்காம் பக்கம்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4897-1.jpg

ஐந்தாம் பக்கம்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4898-1.jpg

ஆறாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4899-1.jpg

ஏழாவது பக்கம்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4900-1.jpg

எட்டாம் பக்கம்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4901-1.jpg

RAGHAVENDRA
8th July 2013, 11:12 AM
அவள் யார் திரைப்படம் .... பம்மலாரின் ஆவணங்கள் ... தொடர்ச்சி...



காவியத்தின் கதைச் சுருக்கம் : ஒரிஜினல் பாட்டுப் புத்தகத்திலிருந்து
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4902.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4903.jpg

அட்டைப்படம் : பேசும் படம் : அக்டோபர் 1959

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4885-1.jpg

சிறப்பு நிழற்படம் : பேசும் படம் : அக்டோபர் 1959
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4886-1.jpg

RAGHAVENDRA
8th July 2013, 11:20 AM
அவள் யார் ...

நீதியரசராக நடிகர் திலகம் நடித்த முதல் படம். பின்னாளில் எதிரொலி மற்றும் நீதிபதி படங்கள். அவள் யார் படத்தில் மிகச் சிறப்பான நடிப்பினை வழங்கியிருப்பார். வழக்கறிஞராக இருந்து நீதிபதி பதவி கிடைத்த பிறகு அந்த மகிழ்ச்சியைத் தன் முகத்தில் வெளிப்படுத்தும் காட்சி, கண்ணாடியை லேசாக உயர்த்தியவாறு பார்த்துக் கொண்டே நீதிபதி ஆசனத்தில் அமர்வது, தான் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பூட்டியிருப்பார். கொஞ்சம் பொறுமை காத்து, நடிகர் திலகத்தின் அறிவுரையை ஏற்று நிதானமாக படத்தை வெளியிட்டிருந்தால் நடிகர் திலத்தின் டாப் டென் பட்டியலில் இடம் பெற்றிருக்கும்.

பாடல்களில் பாணிக்கிரஹி பாடிய நான் தேடும் போது நீ ஓடலாமா, ஏ.எம்.ராஜா ஜிக்கி பாடிய பட்டுப் பூச்சிப் போலும் ராஜா பாடல்கள் காலத்தால் அழியாத சிரஞ்சீவித்துவம் பெற்ற இனிய பாடல்களாகும். எஸ்.ராஜேஸ்வரராவ் அவர்களின் சிறந்த இசைக்கு இப்படம் இன்னோர் உதாரணம்.

RAGHAVENDRA
8th July 2013, 11:24 AM
அவள் யார் திரைப்படத்தில் அன்று நீதிபதி சதாசிவம் திரையில் தோன்றினார். அது இன்று பலித்து விட்டது. இன்றைய உச்ச நீதி மன்ற நீதியரசர் பெயர் சதாசிவம் ... இது இயற்கையின் விந்தையல்லவா

RAGHAVENDRA
8th July 2013, 02:58 PM
அவள் யார்

நடிக நடிகையர்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பண்டரி பாய், எஸ்.வி.சஹஸ்ரநாமம், சௌகார் ஜானகி, டி.கே.ராமச்சந்திரன், மற்றும் பலர்

தயாரிப்பு, இயக்கம் - சுதர்ஸனம் பிக்சரஸ், கே.ஜே. மகாதேவன்

இசை - எஸ்.ராஜேஸ்வர ராவ்

வசனம் பாடல்கள் - வித்வான் வே. லக்ஷ்மணன்

தெலுங்கில் பதி கௌரவமே சதிக்கானந்தமு என மொழி மாற்றம் செய்யப் பட்ட்து.

Gopal.s
8th July 2013, 03:25 PM
அவள் யார்

தெலுங்கில் பதி கௌரவமே சதிக்கானந்தமு என மொழி மாற்றம் செய்யப் பட்ட்து.
அப்போ படம் கிடைக்க சான்ஸ் இருக்கு. தெலுங்கு என்றால் வாசுவிடம் கட்டாயம் இருக்கும்.

RAGHAVENDRA
10th July 2013, 09:49 PM
அடுத்த மிகப் பெரிய காவியத்திற்குப் போகும் முன் 1959ம் ஆண்டு நடிகர் திலகத்தின் சிறப்புத் தோற்றத்தில் வெளிவந்த இரு படங்களைப் பார்ப்போம் ..

1. தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை
2. குழந்தைகள் கண்ட குடியரசு

RAGHAVENDRA
11th July 2013, 08:47 AM
Sivaji Ganesan Filmography Series

Guest Roles

Thaayai Pola Pillai Noolai Pola Selai தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை

தணிக்கை – 07.04.1959
வெளியான தேதி – 14.04.1959

தயாரிப்பு – ஸ்ரீ லக்ஷ்மி பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக, வி.கே. ராமசாமி மற்றும் ஏ.பி.நாகராஜன்

இயக்கம் – கே. சோமு
ஒளிப்பதிவு – வி.கே. கோபண்ணா
கதை வசனம் – ஏ.பி. நாகராஜன்
இசை – கே.வி. மகாதேவன்
பாடல்கள் – அ. மருதகாசி
கலை – சி.ஈ. பிரசாத் ராவ்
எடிட்டிங் – விஜய ரங்கம், கே.துரைராஜ்
நடனம் – சின்னி-சம்பத்
ஸ்டில்ஸ் – ஆர்.வெங்கடாச்சாரி

நடிக நடிகையர் –
ஆர்.எஸ்.மனோகர், பசுபலேடி கண்ணாம்பா, வி.கே.ராமசாமி, எம்.என்.ராஜம், கே.சாரங்கபாணி, சிவகாமி, டி.என்.சிவதாணு, பண்டரிபாய், டி.கே.ராமச்சந்திரன், பத்மினி பிரியதர்ஷினி
இவர்களுடன்
பொற்கைப் பாண்டியனாக சிறப்புத் தோற்றத்தில் நடிகர் திலகம்

பாடல்களுக்கான இணைப்பு

1. சின்ன மீனைப் போட்டுத் தான் – கே.ஜமுனா ராணி

2. காரியத்தில் கண்ணா இருக்கணும் – கே.ஜமுனா ராணி

3. விலை மதிப்பில்லா அரும்பொருள் – பி.லீலா

http://www.inbaminge.com/t/t/Thayai%20Pola%20Pillai%20Noola%20Pola%20Selai/

நல்ல குடும்பம் – ஆர். பாலசரஸ்வதி

http://music.cooltoad.com/music/song.php?id=446742&PHPSESSID=9b9119c7204caac5d8e85e5c8ed298b4

RAGHAVENDRA
11th July 2013, 06:10 PM
Sivaji Ganesan Filmography Series

Guest Roles

Kuzhandhaigal KaNda Kudiyarasu குழந்தைகள் கண்ட குடியரசு

வெளியான தேதி – 29.07.1959

குழந்தைகள் கண்ட குடியரசு திரைப்படத்தைப் பற்றி நமது பதிவுத் திலகம் வாசு சார் அளித்துள்ள விவரங்களும் நிழற்படமும்



குழந்தைகள் கண்ட குடியரசு.(1960)

தயாரிப்பு: பத்மினி பிக்சர்ஸ்

நடிகர்கள்: சிம்மக் குரலோன், 'ஜாவர்' சீத்தாராமன், பி.ஆர்.பந்துலு, 'குலதெய்வம்' ராஜ கோபால், கே.ஆர். சாரங்கபாணி, மாஸ்டர் கோபி

நடிகைகள்: வழக்கம் போல (பத்மினி பிக்சர்ஸ்) எம்.வி.ராஜம்மா, லட்சுமி ராஜம், பேபி லட்சுமி.

கதை: தாதாமிராசி

வசனம்: விந்தன்

பாடல்கள்: கு.மா. பாலசுப்ரமணியம்

இசை: டி .ஜி.லிங்கப்பா.

ஒளிப்பதிவு டைரக்டர் :W.R.சுப்பாராவ்.

ஒளிப்பதிவு: M .கர்ணன்.

ஒப்பனை : ஹரிபாபு. (நடிகர் திலகத்தை முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காட்டிய இந்த 'ஹரி' ஒரு 'ஒப்பனை சிங்கம்'.)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-18_zps7e39311e.jpg



குழந்தைகள் கண்ட குடியரசு திரைப்படத்தைப் பற்றி நமது பதிவுத் திலகம் வாசு அவர்களின் அருமையான கட்டுரைக்கான இணைப்பு

http://www.mayyam.com/talk/showthread.php?10239-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Filmography-News-and-Events&p=1005697&viewfull=1#post1005697

RAGHAVENDRA
11th July 2013, 06:11 PM
குழந்தைகள் கண்ட குடியரசு திரைப்படப் பாட்டுப் புத்தகத்தின் பக்கங்கள்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/KKKCOVERFW.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/KKK01.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/KKK02.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/KKK03.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/KKK04.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/KKK05.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/KKK06.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/KKK07.jpg

RAGHAVENDRA
16th July 2013, 09:31 PM
Sivaji Ganesan Filmography Series

58.பாகப் பிரிவினை Baga Pirivinai

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/sivaji1-1-1.jpg

தணிக்கை – 13.10.1959
வெளியீடு – 31.10.1959

தெலுங்கில் – கலசி உண்டே கலது சுகம்
மலையாளத்தில் – நிறகுடம்
ஹிந்தியில் - காந்தான்

தயாரிப்பு – சரவணா பிலிம்ஸ்

கதை வசனம் – எம்.எஸ்.சோலைமலை

பாடல்கள் – கவிஞர் கண்ணதாசன், ஏ.மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகவேள் எம்.ஆர்.ராதா, பி.சரோஜா தேவி, எம்.வி.ராஜம்மா, டி.எஸ்.பாலையா, எஸ்.வி.சுப்பையா, எம்.என்.நம்பியார், எஸ்.ராமராவ், என்.ல்லிதா, சி.கே.சரஸ்வதி, சி.டி.ராஜகாந்தம், எஸ்.ஆர். ஜானகி, பத்மினி பிரியதர்ஷினி, சந்திரா மற்றும் பலர்.

பின்னணி டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எல்.ராகவன், ஜி.எஸ்.மணி, பி.லீலா, பி.சுசீலா, ஜமுனா ராணி

நடன அமைப்பு – வி.மாதவன், சின்னிலால், சம்பத்

ஒளிப்பதிவு – ஜி.விட்டல் ராவ்

ஒலிப்பதிவு – வி.சி.சேகர் – வசனம், டி.எஸ்.ரங்கசாமி – பாடல்கள், ரீரிக்கார்டிங்

எடிட்டிங் – ஏ.பீம்சிங், உதவி – ஏ.பால்துரைசிங், பி.எஸ்.பிரகாஷ்

பிராஸ்ஸிங் சார்தூல் சிங் சேதி, உதவி – டி.ராமசாமி, மனோஹர் சிங் ரேவட், பி.சோமு, கே.பஞ்சு – ஏவி.எம்.ஸ்டூடியோ

கலை – பி.பி.சௌத்ரி

உடைகள் – பி.ராமகிருஷ்ணன்

மேக்கப் – ஹரிபாபு, ஆர்.ரங்கசாமி, எம்.கஜபதி, ஏ.பெரியசாமி, எம்.கே.சீநிவாசன்

செட்டிங்ஸ் – எஸ்.ரங்கசாமி, எம்.சொக்கலிங்கம்
செட் பிராபர்டீஸ் – சினி கிராப்ட், கிரி மியூஸியம்

ப்ளோர் இன்-சார்ஜ் – சி.சி.அனந்தப்பன், ஆர். நரசிம்ம ராவ், ஜி.மணி அய்யர்

ஸ்டில்ஸ் – ஏ.சிம்மையா

ப்ப்ளிசிடி இன்சார்ஜ் – எம்.செல்லப்பன்

விளம்பர டிசைன்ஸ் – கே.நாகேஸ்வர ராவ்

பத்திரிகை விளம்பரம் – எலிகண்ட் ப்ப்ளிசிடி

புரொடக்ஷன் நிர்வாகம் – பி.எம்.நாச்சிமுத்து

ஸ்டூடியோ – நெப்டியூன் ஸ்டூடியோ லிமிடெட், சென்னை 28.

ஆர் சி ஏ சவுண்ட் சிஸ்டத்தில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது

உதவி டைரக்ஷன் – ஆர்.திருமலை, ஜி.எஸ்.மகாலிங்கம்

தயாரிப்பு – ஜி.என்.வேலுமணி

இசையமைப்பு – விஸ்வநாதன்-ராம்மூர்த்தி

திரைக்கதை டைரக்ஷன் – ஏ.பீம்சிங்

பாகப்பிரிவினை – விளம்பர நிழற்படங்கள் – உபயம் ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்



பொக்கிஷப் புதையல்

காவிய விளம்பரம் மற்றும் விமர்சனம் : தென்னகம் : 1959

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4911-1.jpg

பொக்கிஷப் புதையல் : காவிய விமர்சனங்கள்

ஆனந்த விகடன் : 15.11.1959

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4919-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4920-1.jpg

கல்கி : 15.11.1959

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4921-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4922-1.jpg

100வது நாள் விளம்பரம் [ஒரு பகுதி மட்டும்] : தினத்தந்தி : 7.2.1960

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4916-1.jpg

100வது நாள் விளம்பரம் [மதுரை] : தினத்தந்தி(மதுரை) : 7.2.1960

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4917-1.jpg

[இக்காவியத்தின் வெள்ளிவிழா விளம்பரமும், முழுமையான 100வது நாள் விளம்பரமும் கிடைக்கப் பெற்றவுடன் இங்கே பதிவாக இடுகை செய்யப்படும்.]

குறிப்பு:
"பாகப்பிரிவினை"யின் வெள்ளிவிழா மற்றும் 100 நாள் அரங்குகள்:

வெள்ளி விழா கண்ட ஊர் / அரங்கு : 1 / 1

1. மதுரை - சிந்தாமணி (1560 இருக்கைகள்) - 216 நாட்கள்

100 நாட்களுக்கு மேல் ஓடிய ஊர்கள் / அரங்குகள் : 8 / 10

1. சென்னை - சித்ரா (929 இருக்கைகள்) - 125 நாட்கள்

2. சென்னை - கிரெளன் (1017 இருக்கைகள்) - 104 நாட்கள்

3. சென்னை - சயானி (842 இருக்கைகள்) - 104 நாட்கள்

4. மதுரை - சிந்தாமணி (1560 இருக்கைகள்) - 216 நாட்கள்

5. கோவை - ராயல் (1680 இருக்கைகள்) - 118 நாட்கள்

6. நெல்லை - ரத்னா (1064 இருக்கைகள்) - 100 நாட்கள்

7. சேலம் - ஓரியண்டல் (1210 இருக்கைகள்) - 110 நாட்கள்

8. திருச்சி - பிரபாத் (1289 இருக்கைகள்) - 125 நாட்கள்

9. திண்டுக்கல் - என்.வி.ஜி.பி. (1284 இருக்கைகள்) - 110 நாட்கள்

10. ஈரோடு - ஸ்டார் (1097 இருக்கைகள்) - 100 நாட்கள்

சற்றேறக்குறைய, 35 அரங்குகளில் வெளியான பாகப்பிரிவினை, 1 அரங்கில் 31 வாரங்களும், 9 அரங்குகளில் 100 நாட்களும் அதற்கு மேலும், ஏனைய அரங்குகளில் 50 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய மெகா மகா ஹிட் காவியம்.


நன்றி பம்மலார் அவர்களே..

RAGHAVENDRA
17th July 2013, 06:38 AM
பாகப் பிரிவினை திரைப்படத்தை இது வரை பார்க்காதவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு உதவும் பொருட்டு நெடுந்தகட்டின் முகப்புகள்


http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/bpdvdcoverF_zps504b902b.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/bpdvdcoverR_zps4499bb85.jpg

RAGHAVENDRA
17th July 2013, 06:42 AM
பாகப் பிரிவினை ... நிழற் படங்கள் ...

http://tamildada.com/wp-content/uploads/2011/01/Bagapirivinai-Songs.jpg

http://2.bp.blogspot.com/_2I2hYF2DQtI/TGtN8J8rdZI/AAAAAAAAB9U/G5xK_X_NyGs/s400/Bhaga+Pirivinai_thangathila+oru_tamilhitsongs.blog spot.com.VOB_thumbs_%5B2010.08.18_08.34.29%5D.jpg

http://img708.imageshack.us/img708/6286/bhagapiravinaiwwwuyirva.jpg

RAGHAVENDRA
17th July 2013, 06:43 AM
பாகப் பிரிவினை திரைப்படத்தின் இசைத்தட்டு உறையின் நிழற்படம்

http://s.ecrater.com/stores/47612/4811c432958bc_47612b.jpg

RAGHAVENDRA
17th July 2013, 06:46 AM
பிரெஞ்சு மொழியில் வேறோர் இணையதளத்தில் பாகப் பிரிவினை திரைப்படத்தைப் பற்றிய குறிப்புகள்.




http://www.fantastikindia.fr/site/IMG/jpg/baghapirivinai.jpg

Bagapirivinai (Le partage de l’héritage)
Casting : Sivaji Ganesan, Saroja Devi, M.R.Radha
Réalisateur : A. Bhim Singh
Compositeurs : Viswanathan-Ramamoorthy
Genre : Drame familial

Bagapirivinai est un film rural qui parle de fraternité et de différence. Fraternité car il aborde la double histoire de deux duos de frères sur deux générations. Tout d’abord, il y a deux frères inséparables qui partagent tout, même les enfants, car le jeune frère décide de faire adopter son jeune fils par son grand frère qui ne peut en avoir. Ensuite, il y a les deux garçons de ce jeune frère, dont l’un, adopté par son grand frère, part étudier en ville et l’autre reste au village à cause de son handicap. Ce film aborde aussi la question de la différence car le premier fils du jeune frère perd l’usage d’un bras et cela le prive de beaucoup de choses, en plus de ne pas pouvoir aller étudier en ville comme son jeune frère, et il développe un profond complexe d’infériorité. Bien sûr, l’amour ne tarde pas à le trouver et lui apporter du réconfort.



இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு




http://www.fantastikindia.fr/site/IMG/jpg/baghapirivinai.jpg

Bagapirivinai (sharing the inheritance)
Cast: Sivaji Ganesan, Saroja Devi, MRRadha Director: A. Bhim Singh Composers: Viswanathan-Ramamoorthy Genre: Family Drama




Bagapirivinai is a rural film about brotherhood and difference. Brotherhood as it addresses the double story of two pairs of brothers on two generations. First, there are two inseparable brothers who share everything, even the children, because the younger brother decides to take his young son by his older brother who can not have. Then there are the boys of the younger brother, one of which was adopted by his older brother to study in another city and stay in the village because of his disability. The film also addresses the issue of the difference as the first son of the younger brother lost the use of one arm and it deprives him of many things, in addition to not being able to study in the city as his younger brother, and develops a deep inferiority complex. Of course, love does not take long to find and bring him comfort.



courtesy: http://www.fantastikindia.fr/site/Annees-50

RAGHAVENDRA
17th July 2013, 06:51 AM
பாகப் பிரிவினை திரைப்படத்தின் இயக்குநர் ஏ. பீம்சிங் அவர்களின் நிழற்படம்

http://www.upperstall.com/files/imagecache/preview/profile/A%20Bhimsingh.jpg

பாகப் பிரிவினை திரைப்படத்தின் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி அவர்களின் நிழற்படம்

http://media.dinamani.com/2013/04/18/C17DMSRM.jpg/article1549828.ece/alternates/w460/C17DMSRM.jpg

RAGHAVENDRA
17th July 2013, 06:52 AM
பாகப் பிரிவினை திரைப்படத்தின் பாடல்களைக் கேட்க

http://www.raaga.com/channels/tamil/movie/T0000223.html

RAGHAVENDRA
17th July 2013, 06:59 AM
பாகப் பிரிவினை திரைப்படப் பாடல்களின் காணொளிகள்

ஆனைமுகனே என்று தொடங்கும் பாடல்

http://youtu.be/IWZB-XkYXFU

தாழையாம் பூ முடிச்சு

http://youtu.be/gkhMbyxVKKc

ஏன் பிறந்தாய் மகனே

http://youtu.be/CSD1juEt_eY

தேரோடும் எங்க சீரான .... [ எழுதவும் வேண்டுமா... முரளி சார் சொல்வதாயிற்றே.]

http://youtu.be/AGtutIb5JWQ

மந்தரையின் சோதனையால்

http://youtu.be/yeyGT5xxeXM

ஆட்டம் ஆட்டம்

http://youtu.be/-L_tsHts-eg

தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்

http://youtu.be/ywMG5HRCpEs

RAGHAVENDRA
17th July 2013, 07:05 AM
Bhaga Pirivinai fetched the President's Silver Medal for Regional Awards in Tamil for the year 1959

http://iffi.nic.in/Dff2011/7th_nff/7th_nff_img_2.jpg

http://iffi.nic.in/Dff2011/7th_nff/7th_nff_img_13.jpg

http://iffi.nic.in/Dff2011/7th_nff/7th_nff_img_14.jpg

RAGHAVENDRA
17th July 2013, 07:16 AM
என்.டி.ராமராவ், சாவித்திரி முதலானோர் நடித்த பாகப் பிரிவினை தெலுங்குப் படமான கலசி உண்டே கலது சுகம் படத்தின் காணொளி

http://youtu.be/oIGgPWk30Dw

RAGHAVENDRA
17th July 2013, 07:21 AM
சுனில் தத், நூடன் நடித்த காந்தன் ஹிந்திப் படத்தின் காணொளி

http://youtu.be/VD8YwRlFH_c

RAGHAVENDRA
17th July 2013, 07:36 AM
A rare image from the film Baga Pirivinai

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/for%20quiz/share01_zps9ff3ad5b.jpg

iufegolarev
19th July 2013, 09:13 PM
.....

RAGHAVENDRA
27th July 2013, 07:31 AM
மாயக் கோட்டையின் இரும்புத் திரையை உடைத்தெறிந்து தன் சாம்ராஜ்யத்தை நிலைநாட்டிய சக்கரவர்த்தியின் மற்றொரு புதிய சகாப்தத்தைத் தொடங்கிய 60களை வரவேற்கும் உன்னதத் திரைக்காவியம் அடுத்து வெகு விரைவில் இங்கு இடம் பெற உள்ளது. அதனுடன் சேர்ந்து பாகப் பிரிவினை திரைப்படத்தைப் பற்றிய தகவல்களும் அனுபவப் பகிர்வுகளும் தொடரலாம்.

RAGHAVENDRA
27th July 2013, 10:41 AM
நடிகர் திலகத்தின் நடிப்பை ஒவ்வொரு காட்சியினையும் அணு அணுவாக ரசிக்க வேண்டிய உன்னதத் திரைக்காவியம் இரும்புத் திரை. மிக விரிவாக அலச வேண்டிய பல காட்சிகள் இரும்புத் திரை திரைக்காவியத்தின் மேன்மையை சித்தரிக்கும். அடுத்து நம் திரைப்படப் பட்டியல் தொடரில் இடம் பெற விருக்கும் திரைப்படம் இரும்புத் திரை.

Subramaniam Ramajayam
27th July 2013, 12:36 PM
நடிகர் திலகத்தின் நடிப்பை ஒவ்வொரு காட்சியினையும் அணு அணுவாக ரசிக்க வேண்டிய உன்னதத் திரைக்காவியம் இரும்புத் திரை. மிக விரிவாக அலச வேண்டிய பல காட்சிகள் இரும்புத் திரை திரைக்காவியத்தின் மேன்மையை சித்தரிக்கும். அடுத்து நம் திரைப்படப் பட்டியல் தொடரில் இடம் பெற விருக்கும் திரைப்படம் இரும்புத் திரை.

hearty welcome to irumbuthirai. One of the movies i will not forget.
it was released on the same date of relelese in karnataka, small centres like SHIMOGA an indutrial town where we saw the movie release day. what a reception for NT in that centre, we really wondered.i was a school going student may be my affinity started growing that time. it ran more than 3 weeks there, which was unique record that time.

RAGHAVENDRA
27th July 2013, 09:28 PM
Sivaji Ganesan Filmography Series

59. இரும்புத் திரை THE IRON CURTAIN

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/12507339_1037560652961273_1420960888804636934_n.jp g?oh=543e9466dbb1ec9730ced16f627686cf&oe=57005A03
A rare still from Irumbuthirai. Courtesy: Ithayakkani Cinema Special.

http://www.hindu.com/thehindu/fr/2003/05/23/images/2003052301510603.jpg

தணிக்கை – 12.01.1960
வெளியீடு – 14.01.1960

தயாரிப்பு – ஜெமினி ஸ்டூடியோஸ்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வைஜயந்தி மாலா, பி.சரோஜா தேவி, கே.ஏ.தங்கவேலு, எஸ்.வி.ரங்கா ராவ், எஸ்.வி.சுப்பய்யா, வசுந்தரா தேவி, டி பாலசுப்ரமணியன், பண்டரி பாய், வனஜா மற்றும் பலர்.

கதை – ஜெமினி கதை இலாகா
வசனம் – கொத்தமங்கலம் சுப்பு
பாடல்கள் – பாபநாசம் சிவன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கொத்தமங்கலம் சுப்பு
இசை அமைப்பு – எஸ்.வி.வெங்கடராமன்
மேக்கப் – சகாதேவ ராவ் எஸ்.தப்கிரே
ஆடை அலங்காரம் – என்.ஸ்ரீராமுலு
ஒளிப்பதிவு டைரக்டர் – பி.எல்லப்பா
படப்பிடிப்பு – என்.பாலகிருஷ்ணன்
லைட்டிங் – ஆர்.கே.ஜெயராமன்
ஸ்டில் - சோமு
ஒலிப்பதிவு டைரக்டர் – ஸி.ஈ. பிக்ஸ்
ஒலிப்பதிவு – எஸ்.ஸி.காந்தி
ஒலிப்பதிவு – ஆர்சிஏ முறை
படத்தொகுப்பு – எம்.உமாநாத்
பிரதிகள் தயாரிப்பு – ஜெமினி ஸ்டூடியோஸ் லாபரேட்டரி
மேற்பார்வை – கே.வி.ராமன்
உதவி டைரக்டர் – கிட்டப்பா
கோர்வை கவனம் – டி.டி.குமரவேல்
துணை டைரக்டர்கள் – ஸி.ஸ்ரீநிவாசன், சந்துரு
தயாரிப்பு டைரக்ஷன் – எஸ்.எஸ்.வாஸன்

பாடல்களின் பட்டியல்

1. படிப்புக்கொரு கும்பிடு பட்டத்துக்கொரு கும்பிடு
2. என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே
3. நிக்கட்டுமா போகட்டுமா
4. ஆசை கொண்ட நெஞ்சிரண்டு
5. நெஞ்சில் குடியிருக்கும்
6. கையிலே வாங்கினேன்
7. டப்பா டப்பா டப்பா வாங்குறேன்
8. ஹோ... ஏரைப் பிடிச்சவனும் இங்கிலீசு படிச்சவனும்
9. நன்றி கெட்ட மனிதருக்கு அஞ்சி நிற்க மாட்டோம்
10. மனிதரை மனிதர் சரி நிகர் சமமாய்

RAGHAVENDRA
27th July 2013, 09:29 PM
இரும்புத் திரை படத்தைப் பற்றி விக்கிபீடியா இணயதளத்தில் இடம் பெற்றுள்ள தகவல்களுக்கு

Wikipedia link: http://en.wikipedia.org/wiki/Irumbu_Thirai

இரும்புத் திரை படப் பாடல்கள்

நெஞ்சில் குடியிருக்கும்

http://youtu.be/7vB8a-2g7jE

என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே

http://youtu.be/5jzv-GXFxtI

கையிலே வாங்கினேன்

http://youtu.be/UDhOVDUouhc

ஆசை கொண்ட நெஞ்சிரண்டு

http://youtu.be/CPINGX_FcMs

RAGHAVENDRA
27th July 2013, 09:31 PM
http://www.thehindu.com/multimedia/dynamic/00555/22fr_svv2_jpg_555707f.jpg

இரும்புத்திரை படத்தின் இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன் அவர்களைப் பற்றி ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரைக்கான இணைப்பு

Hindu page link: http://www.thehindu.com/features/friday-review/music/article1715085.ece

RAGHAVENDRA
27th July 2013, 10:46 PM
இரும்புத் திரை - விளம்பர நிழற்படங்கள் ... உபயம் - இதய வேந்தனின் வரலாற்றுச் சுவடுகள்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/ITpaperad_zps06988583.jpg

Gopal.s
3rd August 2013, 03:15 PM
இரும்புத்திரை (iron curtain )- 1960

எனக்கு சிறு வயதில் கம்யுனிச கோட்பாட்டில் மயக்கம் உண்டு. தொழிலாளர் 19ஆம் நூற்றாண்டில் நடத்த பட்ட விதங்களை படித்தால் தூக்கமே வராது.அடிப்படை உரிமைகளான வேலை நேரம்,குறைந்த பட்ச கூலி,கொத்தடிமை,குழந்தை தொழிலாளர், சம உழைப்பு சம கூலி,அடிப்படை பாதுகாப்பு,தொழிற்சங்கம்,முதலாளி-தொழிலாளி உறவு, கூலி உயர்வு,அடிப்படை உரிமைகளுக்கான தொழிற்சங்க கூட்டு பேச்சு வார்த்தை,வேலை நிறுத்தம் போன்ற உரிமைகளை பெற ,வளர்ச்சி பெற்ற நாடுகளிலேயே பலர் ரத்தம் சிந்தி உலக தொழிலாளர் கூட்டு நிறுவனம்(I .L .O ) உறவான பின்புதான் ,தொழிற்புரட்சியின் சிறிதளவு பலனாவது உழைப்பாளிகளை வந்தடைந்தது. நான் வளர்ந்த நெய்வேலியில் தொழிற்சங்க அமைப்புகள் வலுவானவை. ஆனால் அன்றும் ,நம் நாட்டில் விவசாய தொழிலாளர்கள்,தனியார் நிறுவன தொழிலாளர் நிலை பரிதாபத்துக்கு உரியது. முக்கியமாக ஆலை தொழிலாளர் நிலை.கீழ் வெண்மணி போன்ற நிகழ்வுகள் சர்வ சாதாரணம். நான் முதல் முதலில் இரும்பு திரை பார்த்தது ,எனது அப்பாவின் நண்பர் ஒருவர் சொல்லி, 1971இல். சவாலே சமாளி பார்த்து ஆஹோ ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி கொண்டிருந்த போது , இதை விட வலுவாக,realistic ஆக பிரச்சினை பேசும் படம் ,இதற்கு மூலம்,அதனால்தான் வாசன் படத்தை போட்டு மல்லியம் மரியாதை செய்தார் என்று சொல்லி,இப்படத்தை பார்க்க தூண்டினார்.அதிர்ஷ்ட வசமாக,சொரத்தூர் ஜோதி என்ற டூரிங் கொட்டாயில் ,இந்த படம் டிசம்பர் 1971இல் வெளியானது.
படம் பார்த்து,அந்த பாதிப்பில் சவாலே சமாளி மோகம் சற்றே குறைந்தது.

மாணிக்கம் ,ரிக்ஷா இழுத்து ,அந்த உழைப்பில்,தொழிற்கல்வி கற்கும் மாணவன். ஜெயந்தி என்ற அம்மாவுடன் தனியாக வாழும் ஏழை பெண்ணுக்கு ஒரு அவசர நேரத்தில் உதவி அறிமுகம் ஆகிறான். ஜெயந்தி பட்டதாரி .மாலதி என்ற பணக்கார ,மில் முதலாளி பெண்ணில் சிபாரிசில் ,அவள் மில்லிலேயே டைபிஸ்ட் ஆக வேலை கிடைக்கிறது. அதே ரங்கநாதா மில்லில் ,மோகன ரங்கம் என்ற முதலாளியின் கீழ் விசுவாசமான தொழிலாளி தான் மாணிக்கத்தின் அண்ணன் சரவணன். அம்மா, மனைவி,பிள்ளை,பெண்ணுடன் வாழ்ந்து வருகிறான்.பெண்ணுக்கு ,நடராசன் என்று ஒரு பையனுடன் நிச்சயம் செய்கிறான்.படிப்பு முடிந்து ஊருக்கு அண்ணனை பார்க்க வந்த மாணிக்கத்தை சரவணன் மில்லுக்கு அழைத்து செல்ல ,மாணிக்கம் ஒரு பெரும் பிரச்சினையை,இறக்குமதி செய்ய அவசியமின்றி ,சுமுகமாக தீர்க்க ,முதலாளி chief mechanic ஆக வேலை போட்டு கொடுக்கிறார். அங்கேயே வேலை செய்யும் ஜெயந்தியுடன் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஆக வளர்கிறது.முதலாளி மகள் மாலதியும்,மாணிக்கத்தை ஒருதலை பட்சமாக விரும்ப தொடங்குகிறாள்.
தீபாவளி போனஸ் சமயம் பிரச்சினை துவங்குகிறது. மூன்று மாத போனஸ் என்று கையெழுத்து வாங்கி,ஒரு மாத போனஸ் கொடுக்கும் பொது,மாணிக்கம் அதை வாங்க மறுத்து கேள்வி கேட்கிறான். அண்ணனோ ,தம்பிக்கு எதிர் நிலை. முதலாளி விசுவாசத்தில் தம்பியுடன் மோதுகிறான்.இன்னொரு சந்தர்ப் பத்தில் வேலை நேரத்தில் விபத்தில் சிக்கும் தொழிலாளிக்கு நியாயமாக கொடுக்க பட வேண்டிய compensation தர படாமல் முதலாளி சூழ்ச்சி செய்ய மாணிக்கம் வேலை நிறுத்தம் செய்து,தொழிற்சங்கம் ஆரம்பிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ள படுகிறான்.சரவணன் ,மாணிக்கத்தை வீட்டை விட்டு போக சொல்ல,சரணன் பெண் கல்யாணம் தடை பட,மாணிக்கம் உறுதியாக தொழிலாளர் பக்கமே நிற்கிறான்.இடையில்,மாணிக்கம்-ஜெயந்தி காதலிப்பதை அறிந்து,மாலதி ஜெயந்தியை வேலையை விட்டு நீக்குகிறாள். மோகன ரங்கம் மில்லுக்கு அருகிலேயே ஒரு மளிகை கடையும் நடத்தி கலப்பட வியாபாரம் செய்கிறார்.இடையில் முதலாளியை தற்செயலாக சந்திக்கும் ஜெயந்தியின் அம்மா தன்னை ஏமாற்றி விட்டு போன காதலன்தான் மோகன ரங்கம் என்று அறிந்து,ஊரை விட்டு போக முயன்று வழியில் உயிர் பிரிகிறது. தன தகப்பனே மில் முதலாளி என்று அறிந்து ,வீட்டுக்கு சென்று அவருடன் மோத ,மோகன ரங்கம் சூழ்ச்சியை அறிந்து ,ஜெயந்தி கோபத்துடன் மில்லை கொளுத்த முயல,மாணிக்கம் அங்கு வந்து தீ பந்தத்தை கையில் வாங்கி ,பழியை ஏற்கிறான்.
இறுதியாக,முதலாளியின் கோர முகத்தை அறியும் சரவணன் மனம் மாற, ஜெயந்தி தன் சகோதரி என்று தெரிந்து மாலதி மனம் மாற,நீதி மன்றத்தில் உண்மை தெரிந்து மாணிக்கம் விடுதலை யாகிறான்.முதலாளி-தொழிலாளி உறவு சீர்படுகிறது.

இரும்பு திரை 1960 இல் ஜெமினி நிறுவனம் தயாரித்து வெளி வந்த படம்.Stanislavsky School நடிப்பில் நடிகர் திலகம் கொடி பறந்த பொற்காலம். ஆனால் சிவாஜியை பொறுத்த வரை எந்த வகை நடிப்பாக இருந்தாலும் ,அவரை தவிர யாரையும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு perform செய்து விடுவார்.

ஒரு நல்ல இயக்குனர், வசனகர்த்தா, கூட நடிக்கும் நடிகை/நடிகர்களின் நல்ல பங்களிப்பு இருந்தால் ,நம்மவருக்கு கேட்கவா வேண்டும்?அப்படி ஒரு scope நிறைந்த படம் இரும்புத்திரை.அவருடைய பாத்திர படைப்பிலேயே,மிக கவனம் எடுத்து செதுக்கியிருப்பார்கள்.ஒரு அடக்கமான,உதவும் தன்மை நிறைந்த ,சுயமாய் தன்னை உருவாக்கி கொள்ளும் ஒரு கீழ் மத்திய வகுப்பை சார்ந்தவர். பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து ,யாருக்கும் பாதிப்பில்லாமல் தீர்க்க நினைக்கும் லட்சிய-யதார்த்த வாதி.உறவுகளை,நட்பை அது சார்ந்த பிரச்சினைகளை மென்மையாய் அணுகும் ஒரு இதமான பிள்ளை/சகோதரன்/காதலன்/நண்பன்.இதை உள்வாங்கி நடிகர் திலகம் நடிக்கும் பாங்கு இருக்கிறதே அடடா!! என்னவென்று சொல்ல!!??

ஆரம்ப காட்சியிலேயே ,வைஜயந்தி மாலா அம்மாவின் உடல் நிலைக்காக ,ரிக்ஷா தேடும் போது , உதவி செய்து(பண உதவியும்தான்) அறிமுகம் ஆவதிலிருந்து அவர் கொடிதான்.அண்ணன் ,முதலாளியுடன் அறிமுக படுத்த அழைத்து செல்லும் போது ,ஒரு முக்கிய யந்திரம் பழுதாகி விட,அதை ஒரு சவாலாக எடுத்து சரி செய்யும் காட்சியில் வசனங்கள், அத்தனை ஆழம்.ஒரு கிண்டல் தொனியிலோ அல்லது சவால் விடும் தொனியிலோ யாரையும் புண் படுத்தாமல் , நம்பிக்கை விதைத்து எதிராளிகளையும் தன மேல் நம்பிக்கை கொள்ள செய்வார்.அந்த gearwheel தயாரிப்பிலும் , இசை கருவியை கையாளும் போது காட்டும் அதே perfection காட்டுவார்.(ஒரு பொறியாளனாக நானே வியந்த காட்சி).எல்லோரிடமும் அதே மென்மை ,நயம் கொண்டு ஒரு மதிப்போடு நடுத்துவார் தன் நிலை தாழாமல்.

இந்த படத்தில் மிக மிக சிறப்பான காட்சிகள் வைஜயந்தி-சிவாஜி சம்பத்த பட்ட அற்புதமான காட்சிகள்.(இந்த ஜோடி அம்பிகாபதி,தில்லானா மோகனாம்பாள்,புதிய பறவை போன்ற படங்களிலும் சேர்ந்திருந்தால்???)அப்படி ஒரு இழைவு, இசைவு,அனுசரணை,chemistry தமிழ் பட உலகம் சில படங்களில் மட்டுமே கண்டிருக்க கூடிய அதிசயம். முதலில் அவர்களின் சோலை சந்திப்பில்,நயமான கிண்டலுடன்(தனக்கு புல்லாங்குழல் வாசிக்க தெரியாதது போல்) காதல் அரும்புவதாகட்டும்,தனது சிறு வயது infatuation அனுபவத்தை ரசித்து சொல்வதில் ஆகட்டும்(வைஜயந்தியின் reaction பத்மினியை தூக்கி சாப்பிட்டு விடும்),கண்ணில் குடியிருக்கும் பாடல் ----ஆஹாஹா துளிக்கூட காமம்,விரசம் இன்றி காதலை இப்படி ஒரு ரசனையான அனுபவம் ஆக்க முடியும் என்று ரசவாதம் புரிவார்கள் சிவாஜியும்,வைஜயந்தியும்.

சரோஜா தேவி,தன ஒரு தலை காதலை சொல்ல வலிய பேச்சு கொடுக்கும் போது ,அவரை புண் படுத்தாமல், நயமாக,நாகரிகமாக பதில் பேசி, இடையில் வரும் வைஜயந்தியிடன் எரிந்து விழும் நயம்.(பிறகு அவரிடம் வேவு பார்க்கத்தானே வந்தே என்ற சீண்டல்).இப்படி ஒரு மறுப்பை,எதிர் நிலையை நயமாக வெளியிடும் அழகு .... என்ன சொல்ல?முதலாளியிடம் பேசும் முறையிலும் ,அந்த மதிப்பை குறைக்காமல்,பிரச்சினையை நயமாக உரைத்து,அதை தீர்ப்பதிலேயே கவனம் காட்டுவாரே அன்றி ,எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் பேசவே மாட்டார். இந்த காட்சிகளில் சிறிய எதிர்ப்பை உடல் மொழியில்,எதிராளி மனம் புண் படாமல் காட்டும் நயம் அத்தனை மெருகோடு இருக்கும்.பின்னொரு காட்சியில், இழப்பீடு வாங்க தங்கவேல் செய்த மோசடியை தான் ஒப்பு கொள்ளவில்லை என்பதை உணர்த்தி ,அவரை இடிக்காமல் ,சரியான பாதைக்கு திருப்புவார்.ஒரே ஒரு இடத்தில்தான் தன்னை மறந்து உணர்ச்சி வச படுவார். அண்ணன் பெண் திருமணம் பிரச்சினையில் உள்ள போது .(அப்போதும் ஒரு நம்பிக்கை தொனிக்கும்)

தான் சிறையிலிருக்கும் போது ,அன்னையின் சவ ஊர்வலம் போகும் போது , தன துக்கத்தை மிக மிதமாக,அமைதியாக வெளியிடுவார்.(இந்த மேதை ,துக்கத்தை கூட, பாத்திர தன்மையறிந்து,சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து ,பல விதங்களாக,பல படங்களில் ,வித,விதமாக நடித்து காட்டியுள்ளார்.பொத்தாம் பொதுவாக ஒரே விதமாக நடித்த சராசரிகளின் மேல் நமக்கு ஈர்ப்பு உண்டாகாமல் இருக்க, இந்த மேதைதான் முழு காரணம்)

இந்த மாணிக்கம், வைரத்தை விட அதிகமாக ஒளி வீசுவதில் ,என்ன ஆச்சர்யம்?


இரும்பு திரையில் வைஜயந்தி மாலா ,தன் பங்கை செம்மையாய் செய்து ,நடிகர்திலகத்துக்கு ஈடு கொடுத்திருப்பார். சரோஜா தேவி, பொறாமை நிறைந்த பணக்கார பெண் பாத்திரத்தை ,உணர்ந்து நடித்திருப்பார். ரங்கா ராவ், சுப்பையா,வசுந்தரா(வைஜயந்தியின் உண்மை தாயும் கூட.),முதலியோர் நல்ல பங்களிப்பை,இந்த படத்திற்கு அளித்திருப்பார்கள்.

கதையை, ஜெமினி கதை இலாகா(மகாதேவன், வேப்பத்தூர் கிட்டு, கொத்தமங்கலம் சுப்பு,வாசன் அடங்கியது),வசனம் கொத்தமங்கலம் சுப்பு(தில்லானா மோகனாம்பாள் மூல கதாசிரியர்).இயக்கம் ஜெமினி அதிபர் இந்தியாவின் "செசில் பி டிமிலி" வாசன் அவர்கள். வசனங்களில் படு இயல்பான கூர்மை இருக்கும். பாத்திரங்கள் இயல்பு மீறாத நடிப்புக்கு வசனங்கள் துணை நிற்கும். முக்கியமாய், இந்திய பொறியாளர்களின் திறமை பற்றி சிவாஜி பேசும் வசனம். சிவாஜி-வைஜயந்தி காதல் காட்சி வசனங்கள். ரங்கா ராவ் உடன் எதிர்-நிலை வசனங்கள்.(வழிகாட்டி திருத்தும் உணர்வுடன் இருக்கும்.முதலாளியை irritate செய்வது போல் வரம்பு மீறாது. positive energy நிறைந்த வசனங்கள்.) வீட்டு பிரச்சினை,போராட்டங்கள் எல்லாமே படு பாந்தமாய் வசனங்களில் ஜொலிக்கும்.

இந்த படத்தில், சீரான விறுவிறுப்பு ,திரைகதையில் இருக்காது. ஆனால் ,ஒரு முக்கிய உலக பிரச்சினை கருவாகும் போது ,தவிக்க முடியாத குறை.

தங்கவேலு விற்கு நான்கு பாடல்கள். அவர் நகைச்சுவையும்,கல்யாண பரிசு,அறிவாளி தரத்தில் இருக்காது. ஆனால் கதையை ஒட்டிய நகைச்சுவையாய்(தொழிலார்களின் கடன் சுழல்) ,உயர்தரமாய், எதிர்மறை நிலையை விளக்கும்(misuse of compensation law )

பாடல்கள் பட்டத்துகோர் கும்பிடு, என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே, ஆசை கொண்ட நெஞ்சிரண்டு, நெஞ்சில் குடியிருக்கும் ,கையில வாங்கினேன் ஆகியவை நல்ல முறை கர்நாடக இசையை பின் பற்றியவை.(எஸ்.வீ.வெங்கட்ராமன்)மற்ற பாடல்கள் படு சுமார். எட்டு பாடல்கள் ,ஐந்தாக குறைக்க பட்டிருக்கலாம்.

பொதுவாக ,மிக சரியாக, சார்பின்றி, தொழிலாளர் பிரச்சினை பேசிய இந்த படம் , வெற்றி படம்.(ஆலைகள் நிறைந்த கோவை நகரில் வெள்ளி விழா). ஹிந்தியில் பிரம்மாண்ட வெற்றி.இந்த படத்தில் சிவாஜியின் ஈடுபாட்டையும்,நடிப்பு திறனையும் கண்ணுற்ற திலிப் குமார் ,சிவாஜி ரசிகர் ஆகி, நண்பராகவும் ஆனார்.(இவருக்காக அவர் ஆலய மணியும், அவருக்காக இவர் கங்கா ஜமுனாவும் பண்ணினார் என்று கேள்வி)

வாசன் சிவாஜியின் திறமையறிந்து , அவரின் மிக பிரம்மாண்ட மக்கள் செல்வாக்கு அறிந்து, இதற்கு பின்னும்,மோட்டார் சுந்தரம் பிள்ளை(1966),விளையாட்டு பிள்ளை (1970) என்ற படங்கள் எடுத்ததுடன், சிவாஜி உலகிலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டி(தில்லானா மோகனாம்பாள்,வியட்நாம் வீடு பார்த்து) ,125 வது விழாவிலும் கலந்து கொண்டார்.

மிக மிக ,உண்மையான பிரச்சினையை எடுத்து, எடுத்து கொண்ட கருவில் விலகாமல், சரியான தீர்வை, சரியான பொழுது போக்கு விகிதத்துடன் தந்த மறக்க முடியாத Nadigar thilagam உன்னத காவியங்களுள் ஒன்று.

RAGHAVENDRA
12th August 2013, 09:15 AM
இரும்புத் திரை ... மிகவும் அருமையான சரியான திறனாய்வு ... கோபால் சார் ...

எடுத்துக் கொண்ட கருவிலிருந்து விலகாமல், சரியான அளவுகோல் விகிதத்துடன் தந்த மறக்க முடியாத கோபாலின் சிறந்த திறனாய்வுகளில் ஒன்று.

பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
12th August 2013, 09:17 AM
Sivaji Ganesan Filmography Series
60. குறவஞ்சி Kuravanji
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/KuravanjiNTcollage_zps496707cf.jpg

http://upload.wikimedia.org/wikipedia/en/9/97/Kuravanji.jpg

தணிக்கை 29.02.1960
வெளியீடு – 04.03.1960
தெலுங்கில் வீராதி வீருடு

image courtesy: Pammalar
http://www.freewebs.com/pammalar/Kuravanji1.jpg

தயாரிப்பு – மேகலா பிக்சர்ஸ்

கதை வசனம் – மு.கருணாநிதி

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சாவித்திரி, மைனாவதி, பண்டரிபாய், ஓ.ஏ.கே. தேவர், குலதெய்வம் ராஜகோபால், ஆர்.பாலசுப்ரமணியம், வகாப் காஷ்மீரி, சுசீலா, ராதாபாய், வனஜா (கௌரவ நடிகை), சி.கே.சரஸ்வதி, மற்றும் பலர்

நடனம் – பத்மினி பிரியதரிசினி, விஜயலட்சுமி, லட்சுமி ராஜம்

பாடல்கள் – கவிஞர் கண்ணதாசன், தஞ்சை ராமையா தாஸ், ரா.கிருஷ்ணமூர்த்தி, மற்றும் மு.கருணாநிதி

குறவஞ்சி நடனப் பாடல்கள் – திரிகூட ராசப்பக் கவிராயரின் குற்றாலக் குறவஞ்சி

இசையமைப்பு – டி.ஆர்.பாப்பா

பின்னணி பாடியோர் – இசைச் சித்தர் சி.எஸ்.ஜெயராம், ராகவன், லீலா, சுசீலா, ஜிக்கி, கோமளா, ரத்னமாலா, ஜமுனாராணி,
நாயன இசை – குழிக்கரை பிச்சையப்பா குழு

நடனம் – தண்டாயுதபாணி பிள்ளை

ஒளிப்பதிவு – ஜி.துரை

இசை ஒலிப்பதிவு – இ.ஐ.ஜீவா

வசன ஒலிப்பதிவு – சேகர் [நெப்டியூன்], துரை [மெஜஸ்டிக்]

அரங்க அமைப்பு – மோகன், மோகன் ஆர்ட்ஸ்

ஆடை அலங்காரம் – எஸ்.நடராஜன்

உடைக்கலை – மணியம்

ஒப்பனை – ரங்கசாமி, ராமசாமி, நாறாயணசாமி, நாகேஸ்வர ராவ்

எடிட்டிங் – ஆ. சாஸ்தா

பிராசஸிங் – சர்தூல் சிங் சேத்தி, ஏவி.எம்.ஸ்டூடியோ லாபெரெட்டரீஸ்

சண்டைக்காட்சிகள் – ஸ்டண்ட் சோமு அண்ட் குழுவினர்

பெயிண்டிங்ஸ் – மாணிக்கம்

செட்டிங்ஸ் – ராயன்

ஸ்டில்ஸ் – நாகராஜ ராவ்

காட்சிப் பொருள்கள் – சினி கிராப்ட்ஸ்
ஆபரணங்கள் – களஞ்சியம் பிரதர்ஸ்

விளம்பர ஓவியம் – ஓவிய மன்னர் கே.மாதவன், ஆரூர் ஜீவன்

தயாரிப்புத் துறை – மாயூரம் சௌந்தர், எஸ்.பிச்சாண்டி

அலுவலகம்-தயாரிப்புத் துறை நிர்வாகம் – பி.எல்.மோகன் ராம்

ஸ்டூடியோ – மெஜஸ்டிக் அண்ட் நெப்டியூன்

ஆர்சிஏ சௌண்ட் சிஸ்டத்தில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது

டைரக்ஷன் – காசிலிங்கம்

RAGHAVENDRA
12th August 2013, 10:20 AM
குறவஞ்சி திரைப்படப் பாடல் காட்சிகள்

1. நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே

http://youtu.be/LPaZhIljwyE

2. உனக்கும் புரியுது எனக்கும் புரியுது

http://youtu.be/V1qO4q_ibE8

3. படியளப்பேனென்று பாராள வந்தவன்

http://youtu.be/8UmxjBdfc_A

4. காதல் கடல் கரையோரமே

http://youtu.be/vDdQaPzAHXI

5. காதல் பொல்லாது காத்திருக்க சொல்லாது

http://youtu.be/KCqMqWF8NKk

RAGHAVENDRA
12th August 2013, 10:24 AM
குறவஞ்சி திரைப்படத்தின் பாடல்கள் பட்டியல்

1. நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே - ரா.கிருஷ்ணமூர்த்தி - சி.எஸ்.ஜெயராமன்
2. தொகையறா தண்ணீரில் மீனிருக்கும் - உனக்கும் புரியுது எனக்கும் புரியுது - கண்ணதாசன் - சி.எஸ்.ஜெயராமன், பி.லீலா
3. காதல் பொல்லாது காத்திருக்க சொல்லாது - தஞ்சை ராமையா தாஸ் - பி.சுசீலா
4. செங்கயல் வண்டு கலின் கலின் என்று - திரிகூட ராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சி - சி.எஸ்.ஜெயராமன், பி.லீலா, ஏ.பி.கோமளா, ஏ.ஜி.ரத்னமாலா
5. காதல் கடல் கரையோமே - தஞ்சை ராமையா தாஸ் - சி.எஸ்.ஜெயராமன், பி.லீலா, பி.சுசீலா
6. அலை இருக்குது கடலிலே - மு.கருணாநிதி - கே.ஜமுனா ராணி
7. என்னாளும் தண்ணியிலே - தஞ்சை ராமையா தாஸ் - ஏ.எல்.ராகவன், ஜிக்கி
8. படி அளப்பேனென்று - கண்ணதாசன் - சி.எஸ்.ஜெயராமன்
9. அடி அத்தாச்சி நாழி பத்தாச்சி - தஞ்சை ராமையா தாஸ் - ஏ.எல்.ராகவன், ராஜேஸ்வரி
10. ஆலையிட்ட கரும்பாக - கண்ணதாசன் - சிதம்பரம் ஜெயராம்

RAGHAVENDRA
12th August 2013, 10:43 AM
குறவஞ்சி ... நடிகர் திலகத்தின் முத்திரைப் படங்களில் இதுவும் ஒன்று. கிணற்றுக் கடியில் வறியவனாக நடிக்க வேண்டிய காட்சியில் பழைய துணி இல்லாததால், அங்கிருந்த கோணியை அணிந்து நடித்தார். இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள நடிகர் திலகம், அரண்மனை தர்பாரில் வழக்காடும் காட்சியில் தமிழ் மொழியின் சிறப்பையும், சாதி மறுப்புத் திருமணத்தின் சிறப்பையும் கலைஞரின் உரையாடலுக்கு உயிர் கொடுத்து நடித்திருப்பார். இந்தக் காட்சியில் நடிகர் திலகம் வழக்காடும் நேர்த்தி, மிகச் சிறந்த வழக்கறிஞராய் வாழ்வில் வரத்துடிப்பவர்களுக்கு நல்லதொரு பாடமாய் அமைந்திருக்கும். இன்னும் சொல்லப் போனால் என் தனிப்பட்ட பார்வையில் பராசக்தி வழக்காடும் காட்சியை விட இது பல மடங்கு சிறப்பாக அமைந்திருக்கும். அதற்கு ஒரு காரணம் இந்த கால இடைவெளி எனலாம். ஒவ்வொரு படத்திலும் தன் நடிப்பில் மெருகேற்றிக் கொண்ட வந்த நடிகர் திலகத்திற்கு இந்தக் காட்சி நல்லதொரு தீனியாய் அமைந்ததும் குறிப்பிடத் தக்கது.

இக்காட்சியைப் பாருங்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற செம்மொழிச் சொற்றொடர் இக்காட்சியிலிருந்து உந்து சக்தியினைப் பெற்றது எனக் கூறலாம்.

http://youtu.be/ZInoSCgG60Q


குறவஞ்சி திரைப்படத்தை இது வரை பார்க்காதவர்களின் தகவலுக்காக

நெடுந்தகட்டின் முகப்பு

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/kuravanjidvdc_zps75306d2d.jpg

JamesFague
12th August 2013, 10:59 AM
Watched the movie during college days at Rajalakshmi theatre near Velachery.
Highly watchable movie with unexpected climax.

Gopal.s
13th August 2013, 07:59 AM
1960- Kuravanji was expected to make it big as it was the first after NT parted from DMK to team with Mu.Ka but could stand upto expectation. I dont remember it too well as I saw it early 1970.

I remember few sharp witty dialogues by Mu.Ka and few mischievous dialogue delivered by NT.

Gopal.s
13th August 2013, 08:57 AM
தெய்வ பிறவி-1960

அதுகாறும் தூய தமிழ் பேசி வந்த (சமயத்தில் பிராமின் மொழி) படங்கள் மக்களை பெற்ற மகாராசி புண்ணியத்தால் வட்டார மொழிக்கு(ஹீரோ மட்டும்தான் வட்டாரம் பேசுவார் ) அறிமுகமாகி பிறகு பேச்சு வழக்குக்கு வந்தது பாக பிரிவினை புண்ணியத்திலும் பிறகு தெய்வ பிறவியிலும் தான்.
புண்ணியத்தை கட்டி கொண்டவர்கள் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.(மல்லியம் ராஜகோபால் தன கதை என்று சொன்னதாக ஞாபகம்.பிறகு அவரே
சவாலே சமாளி எடுத்தார்)கருத்து வேற்றுமையில் (vpkb vs sgs) இருந்த சிவாஜி,எஸ்.எஸ்.ஆர்.மாமன் ,மச்சானாக,பத்மினி ஜோடியாக.இந்த வெற்றி காவியம் ஏ.வீ.எம். தயாரித்து கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில்.ஓரளவு ரியலிசம் என்று சொல்லப்படும் படங்களுக்கு தமிழ் முன்னோடி .நடிப்பில்,கதையமைப்பில் இந்த படமே. சிவாஜியே சரவணன் இடம் ஹிந்தியில் எடுக்காதே ,எங்களை போல் உயிரை கொடுத்து நடிக்க ஆளில்லை என்று கூறிய படம்.பத்மினி கம்போஸ் செய்த பாடல் காட்சி ஹை லைட்.(அன்பாலே)

சுலபமான குடும்ப கதை போல் தோற்றமளிக்கும கஷ்டமான கதையமைப்பு.மினிமம் காரன்டி காக கதையோடு ஒட்டி திணிக்கப்பட்ட நகைச்சுவையை ஒதுக்கினால் விறு விருப்பாக நகரும் கதை.

நடிகர் திலகம் ஒரு கட்டிட மேஸ்திரி , உரிமையாளராக மாறும் உழைப்பாளி,தம்பியுடன் அனாதையாக வாழும் அவர் தன அன்னையுடன்,தம்பியுடன் வாழும் பத்மினி யை கல்யாணம் செய்து மனைவி வீட்டரையும் தன்னோடு வாழ செய்யும் பெருந்தகை.இவர் தம்பியை மனைவியும்,மனைவி தம்பியை இவர் உம அரவணைத்து வாழ ,அப்பாவால் கைவிடப் பட்ட சிற்றன்னை ,அரை தங்கையை தற்செயலாக பார்த்து அடைக்கலம் கொடுத்து ,உண்மையை யாருக்கும் சொல்லாமல் மறைத்து,அதனால் எழும் பிரச்னை,துரோகம்,சந்தேகம்,முக்கோண காதலில் இருவர் தம்பிகள் என சுபமாய் முடியும் படம்.

நடிகர் திலகத்தின் நடிப்பை வர்ணிக்க என்னிடம் தமிழ் இல்லை.தனது சித் தாளை நோட்டமிடும் அழகென்ன,சம்பளம் கொடுக்கும் பொழுது நாசூக்காக சீண்டும் நயமென்ன,பெண்ண கேட்க போகும் போது உள்ள தயக்கம்,பிறகு அமைதியான மனைவி தம்பியை கண்டிக்கும் போது கொதிக்கும் போது ரசிப்பதாகட்டும்,தாம்பத்யம்,பாசம்,நேசம ,கண்டிப்பு எல்லாவற்றிலும் பத்திரந்த்தின் தன்மைகேற்ற படு படு இயல்பாக இருப்பார்.
ஆனால் நடிப்பு கடவுள் வெளிப்படும் நேரம்,சந்தேக நெருடலின் ஆரம்பம்,சொல்ல முடியாத தவிப்பு,இப்படி இருக்காதே என்று உள்ளம் சொன்னாலும் உதடுகள் பாதை தவறி பேசும் காட்சிகள்.கடவுளே,என்னை அடுத்த ஜென்மத்திலும் இந்த நடிப்பு கடவுளின் ரசிகனாகவே படைத்து விடு.சந்தேகம் கொண்டு உதடுகள் பேசும் ஆனால் பார்வை நேசத்தை வெளிப்படுத்தும்.உடல் தடுமாற்றத்தை காட்டும்.பிறகு உதட்டின் குற்றத்திற்காக கண்களும்,உடலும் வருந்தும். எடுத்து கொண்ட பாத்திரத்துக்காக நடிப்பு கடவுளின் முக பாவம்,நடை,வசன உச்சரிப்பு,எல்லாவற்றிலும் அவ்வளுவு இயல்புத்தன்மை.

எந்த கோணத்தில் நின்று அலசினாலும் உன்னத படம். சிவாஜி,எஸ்.எஸ்.ஆர்.,பத்மினி சம்பந்தப்பட்ட உணர்ச்சிமிகு காட்சி ஒன்று மிகவும் பேச பட்டது.

mr_karthik
13th August 2013, 12:28 PM
அன்பு கோபால் சார், 'தெய்வப்பிறவி' அலசல் அருமை.

நடிகர்திலகம் - பத்மினி கலக்கலோடு சி.எஸ்.ஜெயராமனின் 'அன்பாலே தேடிய' மட்டுமல்லாது ஜமுனாராணியின் மூன்று முத்தான பாடல்களையும், தங்கவேலுவின் அட்டகாசமான நகைச்சுவையையும் ("ஏம்மா ரேடியோ, இன்னைக்கு என்ன டெலிவிஷன், வயர்லஸ் எல்லாத்தையும் கூட்டிக்கிட்டு வந்துட்டியா?") உள்ளடக்கியது.

'தெய்வப்பிறவி' ஷூட்டிங்கின்போது காட்சிக்கான வசனங்கள் தவிர மற்ற நேரங்களில் நடிகர்திலகமும், எஸ்.எஸ்.ஆரும் பேசிக்கொள்வது கிடையாது. (ஆலயமணியின்போதுதான் நிலைமை சீரானது. அதன்பின் கைகொடுத்த தெய்வம், பச்சைவிளக்கு, பழனி, சாந்தி என்று கலக்கினர்).

தெய்வப்பிறவி படப்பிடிப்பில் நடந்தவற்றை ஒருமுறை பத்மினி தொலைக்காட்சி பேட்டியில் சொல்லியிருந்தார். சிவாஜியும் எஸ்.எஸ்.ஆரும் எதிரெதிரே நின்றாலும் பத்மினிதான் மீடியேட்டர். சிவாஜி பத்மினியிடம் "பப்பி, ராஜுவை இந்த இடத்தில் நிற்கச்சொல்லு. அப்போதான் நான் நடந்துவந்து நிற்பதற்கும் ராஜு வசனத்தை ஆரம்பிக்கவும் சரியாக இருக்கும்" என்பாராம். அதற்கு எஸ்.எஸ்.ஆர். "இல்லே பப்பிம்மா, கணேஷை இந்தப்பக்கமாக வரச்சொல்லுங்கள். இல்லேன்னா அவர் முதுகு மட்டும்தான் கேமராவில் தெரியும். முகம் தெரியாது" என்பாராம்.

அதற்கு பத்மினி, "என்ன இது, ரெண்டுபேரும் ஸ்கூல் பசங்க சண்டைபோட்டுக்கிட்டு பேசுற மாதிரி பேசிக்கிறீங்க" என்று சொல்லி சிரிக்க செட்டில் இருப்பவர்களும் சிரிப்பார்களாம்...

RAGHAVENDRA
16th August 2013, 05:13 PM
Sivaji Ganesan Filmography Series

61. தெய்வப் பிறவி Deiva Piravi

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/DP2-1.jpg

Produced by: Kamal Brothers at AVM Studios, Madras
Recorded on RCA Sound System
Directed by Krishnan Panju

தயாரிப்பு – கமால் பிரதர்ஸ் பிரைவேட் லிமிடெட்

நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.என்.ராஜம், கே.ஏ.தங்கவேலு, டி.ஆர்.நடராஜன், கே.சாரங்கபாணி, ஏ.கருணாநிதி, எஸ்.ராமராவ், என்.ல்லிதா, எம்.எஸ்.சுந்தரிபாய் மற்றும் பலர்

கதை வசனம் – கே.எஸ்.கோபால கிருஷ்ணன்

பாடல்கள் – உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமைய்யா தாஸ், கே.எஸ்.கோபால கிருஷ்ணன், கவி ராஜகோபால்

சங்கீத அமைப்பு – ஆர்.சுதர்சனம், பின்னணி இசை – ஏவி.எம்.வாத்ய கோஷ்டி

பின்னணி பாடியவர்கள் – சிதம்பரம் ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தர்ராஜன், எஸ்.சி.கிருஷ்ணன், கே.ஜமுனா ராணி, ஆர்.ராஜலக்ஷ்மி, எல்.ஆர்.ஈஸ்வரி

நடன அமைப்பு – கே.என்.தண்டாயுதபாணி பிள்ளை, ஏ.கே.சோப்ரா, பத்மா

ஒளிப்பதிவு – எஸ்.மாருதி ராவ், ஆபரேடிவ் காமெராமேன் – எம்.புண்ணியகோட்டி

ஒலிப்பதிவு டைரக்டர் – எம்.முகுல் போஸ்
ஒலிப்பதிவு – எஸ்.பி.ராமனாதன்

ஆர்ட் – ஹெச்.சாந்தாராம்

புரோஸஸிங் – சார்தூல் சிங் சேத்தி

எடிட்டிங் – எஸ்.பஞ்சாபி

மேக்கப் – கே.என்.கினி, டி.எம்.ராமச்சந்திரன், டி.தனகோடி, கே.குருசாமி

செட்டிங்ஸ் – எஸ்.ஆறுமுக ஆசாரி, வி.நாகன் ஆசாரி

புரொடக்ஷன் எக்ஸிக்யூடிவ் – எம்.சரவணன்

புரொடக்ஷன் மேனேஜர்கள் – கே.கே.ரத்னம் பிள்ளை, என்.எஸ்.மணி

ஸ்டூடியோ – ஏவி.எம்.ஸ்டூடியோ, சென்னை

உதவி டைரக்ஷன் – ஆர்.பட்டாபிராமன், ஆர்.விட்டல்

டைரக்ஷன் – கிருஷ்ணன் பஞ்சு


கீழ்க்காணும் நிழற்படங்கள் உபயம் ஆவணத் திலகம் பம்மலார்



http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/DP1-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/DP3-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/DP4-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/DP5-1.jpg

ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் : இயக்குனர்கள் கிருஷ்ணன்-பஞ்சு - பத்மினி - நடிகர் திலகம்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/DP6-1.jpghttp://i1110.photobucket.com/albums/h452/pammalaar/DP6-1.jpghttp://i1110.photobucket.com/albums/h452/pammalaar/DP6-1.jpg

RAGHAVENDRA
16th August 2013, 05:18 PM
ஆவணத் திலகம் பம்மலாரின் விளம்பர நிழற்படங்கள் மற்றும் தகவல்கள்



பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள் : முதல் வெளியீட்டு விளம்பரங்கள்

The Mail : 8.4.1960
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC2627-1.jpg
The Mail : 10.4.1960
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC2626-1.jpg
The Mail : 5.5.1960
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC2629-1.jpg
The Mail : 12.5.1960
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC2628-1.jpg
The Mail : 16.5.1960
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC2631-1.jpg
The Mail : 19.5.1960
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC2630-1.jpg
குறிப்பு:
அ. 1960-ம் ஆண்டின் சூப்பர்ஹிட் காவியமான "தெய்வப்பிறவி" 100 நாட்களைக் கடந்த அரங்குகள்:

1. சென்னை - பிளாசா - 121 நாட்கள்

2. சென்னை - பிராட்வே - 107 நாட்கள்

3. சென்னை - ராக்ஸி - 100 நாட்கள்

4. திருச்சி - வெலிங்டன் - 107 நாட்கள்

5. சேலம் - ஓரியண்டல் - 107 நாட்கள்

6. கோவை - ராஜா - 100 நாட்கள்

[100வது நாள் விளம்பரம் கிடைத்தவுடன் பதிவிடுகிறேன்...!]

ஆ. இதர முக்கிய நகரங்களான மதுரையில்[சென்ட்ரல் சினிமா] 79 நாட்களும், நெல்லையில்[ரத்னா] 79 நாட்களும், திண்டுக்கல்லில்[சோலைஹால்] 73 நாட்களும், வேலூரில்[நேஷனல்] 66 நாட்களும், நாகர்கோவிலில்[பயோனீர்பிக்சர்பேலஸ்] 58 நாட்களும், இன்னும் கணிசமான ஊர்களின் அரங்குகளில் 50 நாட்களும் ஓடிய இக்காவியம், 1960-ம் ஆண்டில் பாக்ஸ்-ஆபீஸ் வசூல் சாதனையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. முதல் இடத்தைப் பிடித்த காவியம் கலையுலக மாமேதையின் "படிக்காத மேதை".

RAGHAVENDRA
16th August 2013, 05:22 PM
தேசீய திரைப்பட விருது 1960 – அகில இந்திய தரச் சான்றிதழ்

http://iffi.nic.in/Dff2011/8th_nff/8th_nff_1961_img_0.jpg

http://iffi.nic.in/Dff2011/8th_nff/8th_nff_1961_img_1.jpg

http://iffi.nic.in/Dff2011/8th_nff/8th_nff_1961_img_2.jpg

http://iffi.nic.in/Dff2011/8th_nff/8th_nff_1961_img_10.jpg

http://iffi.nic.in/Dff2011/8th_nff/8th_nff_1961_img_11.jpg

RAGHAVENDRA
16th August 2013, 05:23 PM
பாடல்களுக்கான இணைப்பு

http://www.raaga.com/channels/tamil/album/T0001269.html

RAGHAVENDRA
16th August 2013, 05:24 PM
பாடல் காணொளிகள்

1. காளை வயசு
http://youtu.be/vfXy8i_7hvY

2. அன்பாலே தேடிய
http://www.youtube.com/watch?v=rO0uDgO2gz0&feature=share&list=PL773F5CC29BBF9CF5

3. தன்னைத் தானே
http://youtu.be/nDdif7Tqyug

4. வயசுப் பெண்ணை
http://youtu.be/qKJbA-fztdY

5. கட்டடத்துக்கு மனைப் பொருத்தம்
http://youtu.be/wxt4iEdakxA

6. ivar khana
http://youtu.be/1IZDOznuhEk

7. thara thara vanthara
http://youtu.be/OJOgw-z4HtY

RAGHAVENDRA
16th August 2013, 05:24 PM
பத்மினியை சந்தேகப் படும் காட்சி

http://youtu.be/GwIwZbwhmoI

sivaji blames padmini

http://youtu.be/eKTKSB5CTQs

sivaji ganesan wants to marry Padmini

http://youtu.be/xI5EtC_hq6A

RAGHAVENDRA
18th August 2013, 08:21 AM
தெய்வப் பிறவி திரைப்படத்திலிருந்து சில நிழற்படங்கள்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/NTDP02fw_zps95748ca6.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/NTDP01fw_zps451eb740.jpg

RAGHAVENDRA
25th August 2013, 01:40 PM
தெய்வப் பிறவி திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்திலிருந்து ... நிழற்படத்திற்கு நன்றி, ஏவி.எம்.மின் முகநூல் பக்கம்.

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn2/q71/s720x720/1146669_283232315148075_603935122_n.jpg

இணைப்பு - https://www.facebook.com/photo.php?fbid=283232315148075&set=a.157075757763732.35106.156705927800715&type=1&relevant_count=1

மேற்கண்ட இணைய தளத்திலிருந்து இன்னொரு நிழற்படம்

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-prn1/s720x720/15875_190956307709010_1017485912_n.jpg

RAGHAVENDRA
26th August 2013, 10:10 PM
அபூர்வ நிழற்படம்

தெய்வப் பிறவி திரைப்படத்தின் நூறாவது நாள் விழா புகைப்படம், பேசும் படம் செப்டம்பர் 1960 இதழிலிருந்து.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/magazinepages/DP100Functnfw_zps4b69206a.jpg

தெய்வப் பிறவி திரைப்படத்தின் தகவல் பரிமாற்றங்களை இத்துடன் முடித்துக் கொண்டு அடுத்த திரைப்படத்திற்குப் போகலாமா...

Gopal.s
27th August 2013, 07:02 AM
ராஜ பக்தி 27.05.1960


சிவாஜி ,வைஜயந்திமாலா கைகளை ஏந்தியபடி ஒரு காட்சி. கீழே நடிகர்திலகத்தின் கமெண்ட் .....
நட்சத்திர குவியல் ,ஆனால் ஒளி இல்லையே என்று.
நான் கொட்டகை போன போது மூன்று போஸ்டர்களில் (1971) பத்மினி,பண்டரிபாய்,பானுமதி,வைஜயந்தி என்று நாலு நட்சத்திரங்கள். படத்தில் நடிகர்திலகம் தாய் நாட்டை வில்லி பானுமதியிடம் இருந்து காக்க பாடு படுவார். பண்டரி முதல் ஜோடி.சித்திரவதையில் சாகடிக்க படுவார். வைஜயந்தி அடுத்த ஜோடி. பத்மினி பாலையா ஜோடியாக கணவனை எதிர்க்கும் வீராங்கனையாக.சிவாஜி பெயர் விக்ராந்தகன் என்று ஞாபகம். இந்த மாதிரி படங்களிலும் அவர் நடிப்பு ஒளி வீசும். ஒரு வீரனுக்குரிய அடக்கமான வீர நடிப்பு. அமைதியுடன் அமெரிக்கை கலந்திருக்கும்.
இதுவும் ,குறவஞ்சியும் குடும்ப பட trend நிலவிய போது மாட்டி எதிர்பார்த்த வெற்றி வாய்ப்பை இழந்தவை.

RAGHAVENDRA
29th August 2013, 04:47 PM
Sivaji Ganesan Filmography Series

62. ராஜ பக்தி Raja Bhakthi

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/rbn01_zps5fab12bb.jpg

தணிக்கை – 10.05.1960
வெளியீடு – 27.05.1960

தயாரிப்பு – பி. ராஜமாணிக்கம்
மூலக்கதை – வி.ஸி.கோபால ரத்தினம்
திரைக்கதை வசனம் – கு.ராஜவேலு, எம்,எஸ். முத்து கிருஷ்ண வாத்தியார்

பாடல்கள் – மருதகாசி, ராஜவேலு, பொன்முடி, தமிழ்ழகன்

சங்கீதம் – கோவிந்தராஜுலு நாயுடு

பின்னணி பாடியோர் – பி.சுசீலா, எம்.எல்.வசந்தகுமாரி, பி.லீலா, ஜிக்கி, ராதா ஜெயலட்சுமி, ஏ.பி.கோமளா

நடிகைகள் – பானுமதி, பத்மினி, வைஜெயந்திமாலா, பண்டரிபாய், ஈ.வி.சரோஜா
நடிகர்கள் – சிவாஜி கணேசன், டி.எஸ்.பாலையா, எம்.என்.நம்பியார், ஸ்டண்ட் சோமு மற்றும் பலர்

ஒளிப்பதிவு – என்.சி.பாலகிருஷ்ணன்

ஸ்டூடியோ – கோல்டன் சினி ஸ்டூடியோஸ்

ஸ்டில்ஸ் – ஆர்.என்.நாகராஜ ராவ்

டைரக்ஷன் – கே. வேம்பு

அசோசியேட் டைரக்ஷன் – டி.ஜி.ரத்தினம்

தயாரிப்பு – பி.ராஜமாணிக்கம்

ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து




பொன்னுக்கு மேலான பொக்கிஷம்

முதல் வெளியீட்டு [இன்று முதல்] விளம்பரம் : தினமணி : 27.5.1960

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5815-1.jpg

RAGHAVENDRA
29th August 2013, 04:52 PM
ராஜ பக்தியின் இனிமையான பாடல் காட்சி

http://youtu.be/YCbo6Ewmo6U

RAGHAVENDRA
29th August 2013, 04:54 PM
ராஜ பக்தி திரைப்படத்தை இது வரை பார்க்காதவர்களுக்காக நெடுந்தகட்டின் முகப்பு

http://upload.wikimedia.org/wikipedia/en/d/d6/Raja_bakthi.jpg

RAGHAVENDRA
29th August 2013, 04:56 PM
ராஜ பக்தி திரைப்படத்தைப் பற்றி விக்கிபீடியா பக்கத்தில் படிக்க

http://en.wikipedia.org/wiki/Raja_Bakthi

RAGHAVENDRA
29th August 2013, 05:04 PM
நடிகர் திலகத்தின் ஸ்டைல் நடிப்பிற்கு மற்றொரு படம். அவலை நினைத்து உரலை இடித்த கதை, அல்ல்து இது போன்ற ஏதாவதொரு பழமொழியை நினைவூட்டிக் கொள்ள வாய்ப்பளித்த படம். பானுமதி மதாலஸா என்ற ராணியாக நடித்திருந்தார். பத்மினி வைஜயந்திமாலா பண்டரிபாய் என பெண்கள் முக்கியமான பாத்திரங்களில் அமைக்கப் பட்டிருந்தாலும் சுவாரஸ்யமற்ற திரைக்கதை படத்தை மிகவும் மெதுவாக நகர்த்தி வேகத்தைக் குறைத்து விட்டது. நடிகர் திலகத்தின் அருமையான நடிப்பு அழகான தோற்றம் இவையனைத்தும் விழலுக்கு இரைத்த நீராக்கி விட்டன. நடிகர் திலகத்தின் பாத்திரப் படைப்பை மேலும் மெருகூற்றி திரைக்கதையை அமைத்து அவர் இன்னும் அதிக காட்சிகளில் நடிக்க வாய்ப்பளித்திருந்தால் மிகச் சிறந்த படமாக வந்திருக்கும். வலுவான கதை, பலவீனமான திரைக்கதை அமைப்பு படத்தை மக்களிடம் சரியான முறையில் சென்றடைய விடாமல் செய்து விட்டன. நடிகர் திலகத்தைத் தவிர இப்படத்திற்கு ஆறுதல் சேர்த்தவை, பாலகிருஷ்ணனின் ஒளிப்பதிவும் கோவிந்தராஜுலு நாயுடு அவர்களின் இசையமைப்பும்.

பாலசரஸ்வதி தேவியின் பெயர் பின்னணி பாடகர்கள் பட்டியலில் இல்லை. ஆனால் இசைத் தட்டில் பார் முழுதும் பாடலைப் பாடியவர் பெயராக அவர் பெயர்தான் இடம் பெற்றது என கேள்விப் பட்டுள்ளேன்.

Subramaniam Ramajayam
29th August 2013, 06:05 PM
Sivaji Ganesan Filmography Series

62. ராஜ பக்தி Raja Bhakthi

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/rbn01_zps5fab12bb.jpg

தணிக்கை – 10.05.1960
வெளியீடு – 27.05.1960

தயாரிப்பு – பி. ராஜமாணிக்கம்
மூலக்கதை – வி.ஸி.கோபால ரத்தினம்
திரைக்கதை வசனம் – கு.ராஜவேலு, எம்,எஸ். முத்து கிருஷ்ண வாத்தியார்

பாடல்கள் – மருதகாசி, ராஜவேலு, பொன்முடி, தமிழ்ழகன்

சங்கீதம் – கோவிந்தராஜுலு நாயுடு

பின்னணி பாடியோர் – பி.சுசீலா, எம்.எல்.வசந்தகுமாரி, பி.லீலா, ஜிக்கி, ராதா ஜெயலட்சுமி, ஏ.பி.கோமளா

நடிகைகள் – பானுமதி, பத்மினி, வைஜெயந்திமாலா, பண்டரிபாய், ஈ.வி.சரோஜா
நடிகர்கள் – சிவாஜி கணேசன், டி.எஸ்.பாலையா, எம்.என்.நம்பியார், ஸ்டண்ட் சோமு மற்றும் பலர்

ஒளிப்பதிவு – என்.சி.பாலகிருஷ்ணன்

ஸ்டூடியோ – கோல்டன் சினி ஸ்டூடியோஸ்

ஸ்டில்ஸ் – ஆர்.என்.நாகராஜ ராவ்

டைரக்ஷன் – கே. வேம்பு

அசோசியேட் டைரக்ஷன் – டி.ஜி.ரத்தினம்

தயாரிப்பு – பி.ராஜமாணிக்கம்

ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து
RAJABAKTHI
MUCH PUBLICISED AND EXPECTED MOVIE WHICH ATTRACTED HUGE CROWDS FOR RESERVATIONS AND OPENING DAY. Unfortunately NT was not utilised properly and the cofused story and poor dirction made it a flop. that was the talk on those days in our colony and film circles.

Gopal.s
30th August 2013, 09:57 AM
படிக்காத மேதை ரங்கன் மூடனுமல்ல ,உலகம் தெரியாதவனும் அல்ல. படத்தின் தலைப்பே சொல்வது போல formal education தர படாத ,transparency கொண்ட, நேரிடை சிந்தனை கொண்ட (no crookedness ), utility man என்று சொல்ல படும் நல்லவன் .(வெகுளி என்ற சொல்ல விரும்பினால் அது உங்கள் விருப்பம்)

பின்னாளில் பிரபலமான Emotional Intelligence (intelligence Quotient என்ற பிரபல மனித வள மதிப்பீட்டு முறைக்கு மாற்றானது) என்பதை ஒட்டி Forest Gump போன்ற படங்கள் 1990 களில் பிரபலம் அடைந்தது. ஆனால் 1960 இல் இதை நம் கே.எஸ்.ஜி, பீம்சிங் ,சிவாஜி இணைவு கொடுத்ததை நாம் அவசியம் பாராட்டியே ஆக வேண்டும்.

இதில் முக்கிய அம்சங்கள் -
Emotional Intelligence, or EI, describes an ability or capacity to perceive, assess, and manage the emotions of one's self, and of others.* EQ, or Emotional Quotient, is how one measures Emotional Intelligence.*

Impulse Control- Delay his own gratification by allowing others ahead on priority.
Self Awareness-Understand his own moods and Emotions .
Self Management-More Action and utility oriented.
Social Awareness- Ability to connect and develop Rapport with new people.
Relationship Management-Understand other's emotions and treat them as they wish to be treated.(Empathy)

பல ஆய்வுகள் நடத்தி ,மனிதர்களின் திறனை,வாழ்க்கையில் அடைய போகும் உயரங்களை வெற்றிகளை நிர்ணயிக்க IQ போதுமானதல்ல என்று கண்டு பின்னாளில் develop ஆனா ஒரு concept EQ . ஆனால் நமக்கு சிவாஜியின் வழி 1960 இலேயே கிடைத்தது. நம் இனம் அதை புரிந்து ஆதரித்ததா என்பது வேறு. ஆனால் 1960 யின் அதிக பட்ச வசூலை கொடுத்தது தமிழகம்.

நடிகர்திலகத்தின் நடிப்பிலேயே மிக மிக சிறந்த படங்களில் ஒன்று. பாத்திரத்தை மிக மிக துல்லியமாக புரிந்து கொண்டு நூல் பிடித்து accurate ஆக ரசிக்கும் படி கலை நுட்பத்துடன் பின்னியிருப்பார்.(What a Spontaneity???)

iufegolarev
31st August 2013, 10:01 AM
RAJABAKTHI
MUCH PUBLICISED AND EXPECTED MOVIE WHICH ATTRACTED HUGE CROWDS FOR RESERVATIONS AND OPENING DAY.

https://www.youtube.com/watch?v=MfdZ03zVK1A

Gopal.s
31st August 2013, 06:06 PM
360- இது நானே ராஜா பட பாடல். திடீரென்று 420 ஆகி விட்டாயே?

Gopal.s
2nd September 2013, 12:07 PM
படிக்காத மேதை ரங்கன் மூடனுமல்ல ,உலகம் தெரியாதவனும் அல்ல. படத்தின் தலைப்பே சொல்வது போல formal education தர படாத ,transparency கொண்ட, நேரிடை சிந்தனை கொண்ட (no crookedness ), utility man என்று சொல்ல படும் நல்லவன் .(வெகுளி என்ற சொல்ல விரும்பினால் அது உங்கள் விருப்பம்)

பின்னாளில் பிரபலமான Emotional Intelligence (intelligence Quotient என்ற பிரபல மனித வள மதிப்பீட்டு முறைக்கு மாற்றானது) என்பதை ஒட்டி Forest Gump போன்ற படங்கள் 1990 களில் பிரபலம் அடைந்தது. ஆனால் 1960 இல் இதை நம் கே.எஸ்.ஜி, பீம்சிங் ,சிவாஜி இணைவு கொடுத்ததை நாம் அவசியம் பாராட்டியே ஆக வேண்டும்.

இதில் முக்கிய அம்சங்கள் -
Emotional Intelligence, or EI, describes an ability or capacity to perceive, assess, and manage the emotions of one's self, and of others.* EQ, or Emotional Quotient, is how one measures Emotional Intelligence.*

Impulse Control- Delay his own gratification by allowing others ahead on priority.
Self Awareness-Understand his own moods and Emotions .
Self Management-More Action and utility oriented.
Social Awareness- Ability to connect and develop Rapport with new people.
Relationship Management-Understand other's emotions and treat them as they wish to be treated.(Empathy)

பல ஆய்வுகள் நடத்தி ,மனிதர்களின் திறனை,வாழ்க்கையில் அடைய போகும் உயரங்களை வெற்றிகளை நிர்ணயிக்க IQ போதுமானதல்ல என்று கண்டு பின்னாளில் develop ஆனா ஒரு concept EQ . ஆனால் நமக்கு சிவாஜியின் வழி 1960 இலேயே கிடைத்தது. நம் இனம் அதை புரிந்து ஆதரித்ததா என்பது வேறு. ஆனால் 1960 யின் அதிக பட்ச வசூலை கொடுத்தது தமிழகம்.

நடிகர்திலகத்தின் நடிப்பிலேயே மிக மிக சிறந்த படங்களில் ஒன்று. பாத்திரத்தை மிக மிக துல்லியமாக புரிந்து கொண்டு நூல் பிடித்து accurate ஆக ரசிக்கும் படி கலை நுட்பத்துடன் பின்னியிருப்பார்.(What a Spontaneity???)
என்ன மக்களே,
முன்பு திருவிளையாடல் முன்னிறுத்தி, transaction analysis செய்த போதும், இப்போது படிக்காத மேதையை முன்னிறுத்தி E I பற்றி பேசும் போதும் ஈ காக்கா காணவில்லை? இப்படியிருந்தால் புதுசு புதுசாக தலைவரை பற்றி எப்படி analyse செய்வதில் ஆர்வம் தூண்டுவது?

iufegolarev
4th September 2013, 07:57 AM
என்ன மக்களே,
முன்பு திருவிளையாடல் முன்னிறுத்தி, transaction analysis செய்த போதும், இப்போது படிக்காத மேதையை முன்னிறுத்தி E I பற்றி பேசும் போதும் ஈ காக்கா காணவில்லை? இப்படியிருந்தால் புதுசு புதுசாக தலைவரை பற்றி எப்படி analyse செய்வதில் ஆர்வம் தூண்டுவது?

கா...கா ஏன் இல்லை...இருக்கிறதே :-)

http://www.youtube.com/watch?v=H2kPbPF7dIE

Gopal.s
10th September 2013, 04:39 PM
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வசனங்களும்,பாத்திர படைப்பும், சிவாஜி அதை கையாண்ட விதம் எல்லாமே ஒரு magic . படிக்காத மேதை சிவாஜியின் நடிப்பு ஆபரணங்களில் ஒரு கோஹினூர் வைரமாய் மின்னும்.
1)ஆரம்ப அறிமுக காட்சி.
2)சௌகாரை கல்யாணம் செய்ய ஒப்பும் காட்சி.
3)சௌகாரின் முதலிரவு அறைக்குள் தள்ளப்பட்டு அவர் மாமாவுடன் ஜீப்பில் சென்ற அனுபவம்.
4)மற்றவர்களின் உதாசீனத்தை பொருட்படுத்தாமல் ,நல்லது என்ற பட்டதை சொல்லி மற்றவர்களை அடக்க முயலும் காட்சிகள்.
5)சௌகார் மனமறியாமல் அவரை கண்டித்து அடக்கும் காட்சி.
6)மாமா வெளியேற சொல்லும் சொல்ல அவர் முறைக்கும் காட்சி. பிறகு வண்டியில் செல்லும் காட்சி.
7)சிகரெட்டுடன் மாமாவை சந்திக்க வரும் காட்சி.
8)மாமாவின் மரண காட்சி.பிறகு தொடரும் இறுதி சடங்கு காட்சிகள்.
அப்பப்பா ,இதற்கு மேலும் Stanislavsky நினைத்தும் பார்க்க முடியுமா?
இந்த படம் 200 முறையாவது பார்த்திருப்பேன். இன்றும் நண்பர்கள் வந்தால் இந்த படத்தை போட்டு பார்ப்பது என் மகிழ்ச்சிகளுள் தலையானது.

gkrishna
10th September 2013, 05:37 PM
கோபால் வாசு முரளி கார்த்திக் சுப்ரமணியன் ராகவேந்திரன் சார் அவர்களின் எண்ணங்களை எழுத்துகளை படிக்கும் போது தோன்றிய ஒரு சிறிய பொறி
சுந்தர காண்டம் என்பது இராமாயணத்தில் ஒரு பகுதி ஹனுமார் ராமரின் கணையாழியை சீதாவிடம் கொடுபதற்காக ஸ்ரீலங்கா சென்று கணையாழியை சீதாவிடம் கொடுத்து பின்பு சிறிலங்காவை எரித்து ராமரிடம் வந்து கண்டேன் சீதையை என்று சொல்லும்வரை.
பல பெரியவர்கள் ராமாயணம் படித்தால் மிக பெரிய புண்ணியம் அதை விட சுந்தர கண்டம் படித்தால் அதை விட புண்ணியம் என்பார்கள் . அதே போல்தான் நமது திரியும்
சுந்தர காண்டத்தில் ஹனுமார் சீதையை யார் என்று தெரியாமல் தேடி கண்டு பிடித்து கணையாழியை ஒப்படைக்க வேண்டும் தவறான இடத்தில சேர்பிதுவிடகூடாது அப்போது வால்மீகி ஹனுமார் சீதை யார் என்று கண்டு கொளவர்துகு சில டெக்னிக்கலை கடை பிடிப்பார் ஒரு சிறிய உதாரணம் ஹம்சதுலிக மஞ்சத்தில் மண்டோதரி உறங்கி கொண்டு இருக்கும் போது இது சீதை ஆக இருக்குமோ என்று தவறாக நினைத்து பிறகு சீதையோ கணவனை பிரிந்தவல் எப்படி இப்படி நிம்மதியாக உறங்கி கொண்டு இருப்பாள் என்று மேனஜ்மெண்ட்
கான்செப்டில் elimination process என்ற ஒன்றை கடைபிடிப்பர் பிறகு identification process மூலமாக சீதையை அசோகா வனத்தில் கண்டுபிடிப்பார் ராமாயணத்தை கதையாகவும் படிக்கலாம்
மேனஜ்மெண்ட் கான்செப்டில் அனலிசிஸ் செய்யவும் செய்யலாம ்
அதே போல் நம்மவரின் திரைப்படங்களை திரைப்படமாகவும்
பார்கலாம் கோபால் சார்/வாசு சார் போல் மனோதத்துவ ரீதியாக அலசுவும் செய்யலாம்

RAGHAVENDRA
14th September 2013, 09:37 AM
Sivaji Ganesan Filmography Series

63. படிக்காத மேதை Padikkadha Medhai

http://www.freewebs.com/pammalar/Krishna1.jpg

தணிக்கை – 21.06.1960
வெளியீடு – 25.06.1960

தயாரிப்பு – பாலா மூவீஸ் என்.கிருஷ்ணசாமி

மூலக்கதை – ஆஷா பூர்ண தேவி

வசனம் – கே.எஸ்.கோபால கிருஷ்ணன்

இசை – கே.வி.மகாதேவன்

பாடல்கள் – அமரகவி சுப்ரமணிய பாரதியார், மருதகாசி, கண்ணதாசன்

பின்னணி பாடியவர்கள் – டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எல்.ராகவன், பி.சுசீலா, பி.லீலா, எம்.எஸ்.ராஜேஸ்வரி, கே.ஜமுனா ராணி, எல்.ஆர்.ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி

ஒளிப்பதிவு – நிமாய் கோஷ் மற்றும் விட்டல் ராவ்

திரைக்கதை, எடிட்டிங், டைரக்ஷன் – ஏ.பீம்சிங்

நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எஸ்.வி.ரங்காராவ், பி.கண்ணாம்பா, சௌகார் ஜானகி, டி.ஆர்.ராமச்சந்திரன், ஈ.வி.சரோஜா, டி.எஸ்.துரைராஜ், முத்துராமன், சந்தியா, டி.பி.முத்துலட்சுமி, எஸ்..ஏ.அசோகன், சிவகாமி, எம்.ஆர்.சந்தானம் மற்றும் பலர்

சென்னையில் வெளியான திரையரங்குகள்
சித்ரா, கிரௌன், சயானி

100 நாட்களும் அதற்கு மேலும் வெற்றி நடை போட்ட திரையரங்குகள்

1. சென்னை சித்ரா – 24 வாரங்கள்
2. சென்னை கிரௌன் – 116 நாட்கள்
3. சென்னை சயானி – 116 நாட்கள்
4. மதுரை தங்கம் – 116 நாட்கள்
5. கோவை டிலைட் – 116 நாட்கள்
6. கொழும்பு கெயிட்டி – 117 நாட்கள்
7. திருச்சி ஜூபிடர் – 116 நாட்கள்
8. சேலம் பேலஸ் – 116 நாட்கள்

வேலூர் தாஜ் திரையரங்கில் 90 நாட்களும், மற்றும் 26 அரங்குகளில் 50 நாட்களைக் கடந்தும் வெற்றி நடை போட்டது.


விளம்பரம் மற்றும் திரை நிழற்படங்கள் – உபயம் இதயவேந்தன் சிவாஜியின் வரலாற்றுச் சுவடுகள் புத்தகம் மற்றும் ஆவணத் திலகம் பம்மலார்.


100 நாள் விளம்பரம் சென்னைப் பதிப்பு
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/padi100daysadfw_zpsb38c1448.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/padi16weekad_zpsd7a27b16.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/pmsvrnt_zps2451240e.jpg

RAGHAVENDRA
14th September 2013, 09:42 AM
பாடல்களின் விவரங்கள்

1. விந்தையிலும் பெரிய விந்தையடி - பி.லீலா
2. உள்ளதைச் சொல்வேன் - டி.எம்.சௌந்தர்ராஜன்
3. இன்ப மலர்கல் பூத்துக் குலுங்கும் - பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி
4. பக்கத்திலே கன்னிப் பெண் இருக்கு - ஏ.எல்.ராகவன், கே.ஜமுனா ராணி
5. சீவி முடிச்சு - டி.எம்.சௌந்தர்ராஜன்
6. படித்ததினால் அறிவு பெற்றோர் - எம்.எஸ்.ராஜேஸ்வரி
7. ஒரே ஒரு ஊரிலே - டி.எம்.சௌந்தர்ராஜன், சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
8. எங்கிருந்தோ வந்தான்- சீர்காழி கோவிந்தராஜன்
9. ஆடிப் பிழைத்தாலும் - பி.லீலா
10. ஒரே ஒரு ஊரிலே - டி.எம்.சௌந்தர்ராஜன்

RAGHAVENDRA
14th September 2013, 09:45 AM
பாடல் காட்சிகளின் காணொளிகள்

1. விந்தையிலும் பெரிய விந்தையடி

http://www.youtube.com/watch?v=uAR7wYw90BE

2. உள்ளதைச் சொல்வேன்

http://www.youtube.com/watch?v=K1I3c64ieBs

3. இன்ப மலர்கள் பூத்துக் குலுங்கும்

http://www.youtube.com/watch?v=PUPgvp8FBlc

4. பக்கத்திலே கன்னிப் பெண் இருக்கு

http://www.youtube.com/watch?v=yZ3Y2HCj2zs

5. சீவி முடிச்சு சிங்காரிச்சு

http://www.youtube.com/watch?v=UFD_RsdulWw

6. படித்ததினால் அறிவு பெற்றோர்

http://www.youtube.com/watch?v=YD5JQ49vN4M

RAGHAVENDRA
14th September 2013, 09:47 AM
எங்கிருந்தோ வந்தான் பாடல் காட்சி

http://youtu.be/rV8yRtU8jmo

RAGHAVENDRA
14th September 2013, 09:47 AM
ஒரே ஒரு ஊரிலே

http://youtu.be/Uh3980VY49Y

RAGHAVENDRA
14th September 2013, 09:48 AM
ஆடிப் பிழைத்தாலும் பாடிப் பிழைத்தாலும்

http://youtu.be/EiVoDQBzsko

JamesFague
14th September 2013, 10:14 AM
Even today If I watched the movie, NT makes me to cry in certain scene particularly
when he meets Kannamba after Ranga Rao Death.Not only me every one will cry while
watching that scene. That is the greatness of NT.

RAGHAVENDRA
14th September 2013, 10:25 AM
படிக்காத மேதை ... திரைப்படத்தைப் பற்றிய முரளி சாரின் பதிவு மீண்டும் இங்கே நமக்காக

பதிவிட்ட நாள் - 01.01.2008



படிக்காத மேதை

திரைக்கதை இயக்கம்: பீம்சிங்
வசனம்: கே.எஸ்.ஜி
தயாரிப்பு: பாலா மூவிஸ்
இசை : கே.வி.மஹாதேவன்
வெளியான நாள்: 25.06.1960

மறக்க முடியாத ப வரிசை படங்களில் ஒன்று.

ஊரில் பெரிய செல்வந்தர் ராவ்பகதூர் சந்திரசேகரன் பிள்ளை. அவருக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள். மூத்த மகள் ராஜம்மா ஒரு விதவை. அவளின் மகன் சந்துரு. மூத்த மகன் தியாகு அவன் மனைவி கமலா. இரண்டாவது மகன் ஸ்ரீதர், அவன் மனைவி மங்களா. மூன்றாவது மகன் சேகர், கடைக்குட்டி கீதா. இவர்கள் அனைவரும் (சந்திரசேகரின் மனைவியையும் சேர்த்து) ஒன்றாக வசிக்கிறார்கள். இவர்கள் வீட்டில் இருக்கும் இன்னொரு முக்கியமான நபர் ரங்கன். ஒரு தூரத்து உறவினர் மகன். ஆனால் சிறு வயது முதல் இங்கே வாழ்ந்து வருபவன். ரங்கன் படிக்கவில்லை. ஆனால் வீட்டில் உள்ள எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்பவன். சந்திரசேகருக்கு மணி விழா (60th Birthday) கொண்டாட்டத்துடன் படம் ஆரம்பம்.

அந்த மணி விழாவிலே சந்திரசேகரின் நண்பரான ஒரு தொழில் அதிபருக்கு கீதாவை பிடித்து போய் விடுகிறது. அவரது மகனுக்கு இந்த பெண்ணை மனமுடிக்கலாம் என்று நினைக்கிறார். சந்திரசேகரின் மூன்றாவது மகன் சேகர் ஒரு பெண்ணை காதலிக்கிறான். அவள் ஒரு சாதரண குடும்பத்தை சேர்த்த பெண். ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வீட்டில் வேலை பார்க்கும் அவளை அந்த வீட்டு பெண்ணாக நினைத்துக்கொண்டு கல்யாணம் செய்து கொள்ள நினைக்கிறான். அந்த பெண் தன் அக்கா வீட்டில் இருக்கிறாள். அக்காள் கணவன் ரிக்க்ஷா ஓட்டுகிறான். இதற்கிடையில் சந்திரசேகரின் மனைவி கோவிலில் வைத்து தன் பழைய Friend-ai பார்க்கிறாள். அவளின் பெண்ணையே தன் மருமகளாக்கி கொள்ள முடிவெடுக்கிறாள். ஆனால் மகன் ஒப்பு கொள்ள மறுத்து வீட்டை விட்டு வெளியேறுகிறான். கொடுத்த வாக்கை காபாற்றுவதற்க்காக ரங்கன் அந்த பெண் லக்ஷ்மியை கல்யாணம் செய்துகொள்கிறான். கல்யாணத்தன்று சந்திரசேகரின் மூன்றாவது மகனுக்கு தான் காதலித்த பெண் பணக்கார வீட்டு பெண் இல்லை என்று தெரிகிறது. வீட்டுக்கு சென்று சொத்தில் பங்கு கேட்கும் மகனை சந்திரசேகர் துரத்தி விடுகிறார்.

கீதாவிற்கு கல்யாணம் நிச்சயமாகிறது. தடபுடல் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்திருந்த 20 லட்சம் நஷ்டமாகிறது. இதனால் கல்யாணம் நின்று போகிறது. ராஜம்மாளும் அவளது மகனும் சேர்ந்து வீட்டில் உள்ள பொருட்களை திருடி விற்கிறார்கள். பழி லக்ஷ்மியின் மேல் விழுகிறது. சந்திரசேகருக்கு வீட்டில் மரியாதை குறைகிறது. மகன்களும் மருமகள்களும் அவரை உதாசினப்படுத்துகின்றனர். காரை விற்க வேண்டிய சூழ்நிலை வருகிறது. இந்த சூழ்நிலையில் தன் மாமாவிற்கும் அத்தைக்கும் விசுவாசமாக இருக்கும் ரங்கனுக்கும் மகன்கள்- மருமகள்கள் இடையே சண்டை வருகிறது. ரங்கனின் மனைவி லக்ஷ்மி நாம் தனி குடித்தனம் போய்விடலாம் என்று சொல்ல ரங்கனுக்கு பயங்கர கோபம் வருகிறது.

இதையெல்லாம் பார்க்கும் சந்திரசேகர் ரங்கனை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். முதலில் வேடிக்கையாக சொல்கிறார் என்று நினைக்கும் ரங்கனுக்கு அவர் சீரியசாக சொல்கிறார் என்று தெரிந்ததும் திகைத்து போய் சண்டை போட்டும் அவர் மனசு மாறவில்லை. மனைவியுடன் வெளியே போகும் அவனுக்கு சேகரின் சகலையின் நட்பு கிடைக்கிறது. தன் வீட்டிலேயே அவர்களை தங்க வைத்து ஒரு மில்லில் வேலையும் வாங்கி கொடுக்கிறான். சம்பளம் வாங்கின பணத்திலிருந்து மாமாவிற்கு பிடித்தமான சிகரெட்டை வாங்கி போக, அவர் சத்தம் போட்டு அவனை அனுப்பி விடுகிறார். மகன்களின் உதாசினம் மற்றும் ரங்கனின் பிரிவு அவரை அதிகமாக பாதித்து அவர் உயிரை பறித்து விடுகிறது. ஆனால் அவரின் மரணம் பற்றி ரங்கனுக்கு தகவல் தெரிவிக்காமலே எல்லாம் முடிந்து விடுகிறது.

இது தெரியாமல் வீட்டிற்க்கு வரும் ரங்கன் உடைந்து போய் விடுகிறான். தகப்பனாருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை பணம் செலவாகி விடும் என்று செய்யாமல் தவிர்க்கும் மகன்களை பார்க்கும் போது அவனுக்கு கோபம் வருகிறது. தன் அத்தை கல்யாணத்தின் போது போட்ட நகைகளை விற்று பொருட்கள் வாங்கி வரும் ரங்கனை " பெற்ற மகன்களுக்கே இல்லாத அக்கறை உனக்கு ஏன்" என்று சொல்லி சத்தம் போடும் அத்தையிடம் ரங்கன் வாக்கு வாதம் செய்ய, அத்தை கோவத்தில் நீ வீட்டு வாசல்படி மிதிக்க கூடாது என்று சொல்லி அனுப்பி விடுகிறாள். அந்த வீட்டிற்க்கு மேலும் பல கஷ்டங்கள். வெளியிலிருந்து கேள்விப்படும் ரங்கன் தன்னால் ஆன உதவிகளை செய்ய முற்படுகிறான்.

மில்லில் ஒரு பெரிய விபத்திலிருந்து முதலாளி மகனை காப்பாற்றும் ரங்கன் அவன்தான் கீதாவை கல்யாணம் செய்து கொள்ள மறுத்தவன் என்பது தெரிந்ததும் அவனையும் அவனது தந்தையையும் கடுமையாக பேசி விடுகிறான். ராஜம்மாளின் மகன் சந்துருவை கடன்காரார்களிடமிருந்து காப்பாற்றும் ரங்கன் அவனுக்கும் மில்லில் வேலை வாங்கி கொடுக்கிறான். சந்திரசேகரின் மகன் சேகர் மனைவியோடு திரும்பி வர அவனையும் வாழ வைக்கிறான்

சோதனைகளின் உச்சக்கட்டமாக சந்திரசேகரின் வீடு ஏலத்திற்கு வர, அவரது மனைவியை அது கடுமையாக பாதிக்கிறது.. மகன்கள் இருவரும் கை விரித்து விட அவள் நோய்வாய்ப்படுகிறாள்

அத்தையின் உயிருக்கே ஆபத்து என்று தெரிந்ததும் ஒரு ஆன்மிகவாதியிடமிருந்து ஒரு மந்திர தாயத்து வாங்கி கொண்டு வீட்டிற்க்குள் சுவரேறி குதிக்கும் ரங்கனை (அத்தை வீட்டு வாசல் படி மிதிக்க கூடாது என்று சொன்னதால்) இரு மகன்களும் தாக்க அப்போது உண்மையை சொல்கிறான்.

சந்திரசேகரின் தொழில் அதிபர் நண்பர் அந்நேரம் ஏலம் போன வீட்டை மீட்டு அதை ரங்கன் பெயருக்கே பதிவு செய்து கொண்டு வருகிறார். மேலும் கீதாவை தன் மகனுக்கு கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார். ரங்கனின் பெயரில் வீடு வந்து விட்டது என்று தெரிந்ததும் வீட்டை விட்டு வெளியேற நினைக்கும் தியாகுவையும் ஸ்ரீதரையும் ரங்கன் நீங்க ரெண்டு பேரும் இல்லேன்னா நானும் இந்த வீட்டிலே இருக்கபோறதிலே என்று சத்தம் போட, அவர்களுக்கு ரங்கனின் பாசமும் பண்பும் புரிகிறது. எல்லோரும் மீண்டும் அந்த வீட்டில் சந்தோஷமாக வாழ தொடங்குகிறார்கள்.

அன்புடன்

பாகம் 2

நடிகர் திலகத்தின் ஒரு சில படங்களை பற்றி விமர்சிக்கும் போது சில காட்சிகள் நம்மை வெகுவாக கவரும். அதைப்பற்றி எழத தூண்டும். வேறு சில படங்களை எடுத்துகொண்டோமானால் எதை எழுதுவது எதை விடுவது என்று திகைத்து போய் நிற்போம். அந்த இரண்டாவது ரகத்தை சேர்ந்தது படிக்காத மேதை. நண்பர் சிவன் சொன்னது போல இப்படியும் நடிக்க முடியுமா என்ற மலைப்பு பார்ப்பவர் மனதினில் அலையடிக்கும்.

NT அறிமுகமாகும் முதல் காட்சியிலிருந்து A Film from Krishnaswamy Bala Movies என்று படம் முடியும் வரையிலும் பின்னியிருப்பார். எப்போதுமே வெகுளி,அப்பாவி வேடங்கள் என்றால் வெளுத்து வாங்கும் NT இதில் முரட்டுத்தனமான விசுவாசமிக்க ரங்கன் கதாபாத்திரத்தை மெருகேற்றி ஜொலிக்க வைத்திருப்பார். சில உதாரணங்கள். மணி விழாவில் குடும்பத்தினரை எல்லாம் நண்பருக்கு அறிமுகப்படுத்தும் காட்சி. எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு கொண்டு செய்யும் NT-யை யார் என்று கேட்க, தூரத்து சொந்தக்கார பையன் என்று ரங்கராவ் சொல்ல அதற்கு " அட போங்க மாமா! தூரத்து, பக்கத்து எல்லாம் சொல்லிக்கிட்டு, யாருமில்லாத அனாதை பய, சின்ன வயசிலிருந்தே நம்ம வீட்டிலே தான் இருக்கான்னு சொல்லுவீங்களா" என சாதாரணமாக சொல்வது, மூன்றாவது மகன் தாய் சொல்லும் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டு சென்று விட, கொடுத்த வாக்கை நினைத்து தாய் கவலைப்பட, அங்கே வரும் NT " நான் பண்ணிக்கிறேன் அத்தை" என்பார். "ஏண்டா நீ பொண்ணை பார்க்க வேண்டாமா?" என்று கேட்கும் போது "வேண்டாம்! வேண்டாம்! நீ பார்த்திடில்லே,அம்புடுதான். காரியத்தை முடி! காரியத்தை முடி!" என்று NT பதில் சொல்லுவது அவ்வளவு அருமையாக இருக்கும்.

கீதாவை பெண் பார்க்க வரும் மாப்பிளையின் கையை பிடித்து பலம் பார்த்துவிட்டு ஆள் நல்ல பலசாலிதான் என்று முகபாவத்திலேயே வெளிப்படுத்துவது, தன்னை மட்டம் தட்டும் மருமகள்களையும் மகன்களையும் அழகாக பதில் சொல்லி மடக்குவது, இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்த்து நாம் தனியே போய் விடலாம் என்று சொல்லும் மனைவியிடம் கோபப்படுவது (" என்னது பிறத்தியாரா? தியாகுவையும் ஸ்ரீதரையுமா நீ பிறத்தியார்னு சொன்னே? நாங்க இன்னிக்கு அடிச்சிகுவோம்,நாளைக்கு சேர்ந்துகுவோம். இனிமே இந்த மாதிரி பேசினே எனக்கு கெட்ட கோபம் வரும்"), வீட்டை விட்டு வெளியே போக சொல்லும் மாமாவிடம் பேசும் பேச்சு (இதை நண்பர் பிரபுராம் ஏற்கனவே எழுதிவிட்டார்), வேலை கொடுக்க லஞ்சம் (1960 லியே அன்பளிப்பு என்ற வார்த்தை வந்து விட்டது) கேட்கும் கிளார்க்கை மானேஜரிடம் மாட்டி விடுவது, முதல் சம்பளம் வந்தவுடன் மாமாவிற்கு பிடித்த Black & White சிகரெட் பாக்ஸ் ஐ வாங்கி கொண்டு போய் நீட்ட, அவர் "உன் மனைவிக்கு சம்பளத்தை கொடுத்தியா" , உடனே NT " இல்லை " என்று casuala-ga சொல்ல, மாமா சத்தம் போட, NT அதற்கு " புரிஞ்சிடுச்சு! தலையை சுத்தி மூக்கை தொடறீங்க. நீ வீட்டுக்கு வந்தது பிடிக்கலேனு நேரடியா சொல்லாம இப்படி சொல்றீங்க" என்று கோபித்து கொள்வதாகட்டும்,கையில் இருக்கும் கட்டை பார்த்து என்னவென்று கேட்க " ஓவர் டைம் பண்ணும் போது கொஞ்சம் கண்ணசந்துடேனா, சுத்தியை கையிலே போட்டுடாங்க" என்று கூலாக பதில் சொல்லுவது, மாமா இறந்து தெரிந்தவுடன் வெடித்து சிதறுவது, மாமாவின் காரியங்களுக்கு செலவு செய்ய மகன்கள் யோசிக்கும் போது எல்லா சாமான்களையும் தானே போய் வாங்கி வருவது, ஏது பணம் என்று கேட்கும் அத்தையிடம் " என் கல்யாணத்திற்கு நீ போட்ட நகையை வித்தேன்" என்று சொல்லுவது, அத்தை கோபித்து கொண்டவுடன் வீட்டுக்கு போகாமல் இருப்பது, அத்தைக்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்தவுடன் டாக்டரை பணம் கொடுத்து அனுப்பி வைப்பது, மனைவியிடம் புலம்புவது ("உனக்கு கொஞ்சம் கூட இரக்கம், நன்றி உணர்ச்சியே இல்லை. என்னைத்தானே வீட்டுக்கு வரவேண்டாம்னு சொன்னாங்க, நீ போய் பார்த்துட்டு வரலாம்லே"), வீட்டு வாசலில் அசோகனிடம் "அத்தையையும் சாகடிச்சுடீங்கனா உங்களுக்கு நிம்மதியாடும். நான் இந்த Road-ile நின்னு பார்த்துட்டு போறேன்" என்று உணர்ச்சிவசப்படுவது, தனக்கு உதவி செய்ய வரும் முதலாளி மகனை கீதாவை கல்யாணம் செய்து கொள்ள மறுத்ததை கண்டிப்பது, கிளைமாக்ஸ்-ல் தாக்கப்படும் அவர் அதற்கான காரணத்தை சொல்லுவது ( "மந்திர தாயத்து கொடுக்க வந்த என்னை இந்த தியாகு பய மண்டையிலே அடிச்சிபிட்டான்"), வீட்டை விட்டி வெளியேற முற்படும் மகன்களை தடுத்து நிறுத்துவது (ஏண்டா, நீங்க வீட்டை விட்டு விட்டு வெளியே போனா, என் மகன்களை வீட்டை விட்டு துரத்திட்டியேனு மாமா என்னக்கு சாபம் கொடுக்க மாட்டாரு?")

ஒரே வரியில் சொன்னால் அவர் அறிமுகமாகும் முதல் காட்சியிலிருந்து கிளைமாக்ஸ் வரை எல்லா காட்சிகளையுமே குறிப்பிட வேண்டும்.

இந்த படத்தின் மற்றொரு தூண் ரங்காராவ். அவரது மிக சிறந்த படங்களை எடுத்தால் அதில் படிக்காத மேதைக்கும் கண்டிப்பாக இடம் உண்டு. அவருக்கே உரித்தான அந்த casualness இதிலும் வெளிப்படும். எல்லாவற்றையும் easy-aga எடுத்துக்கொள்ளும் மனோபாவம் ( "அவன் Point of View-vile அவன் சொல்லறது கரெக்ட்,இவன் Point of View-vile இவன் சொல்றதும் கரெக்ட்."). NT-யை வெளியே போக சொல்லிவிட்டு அவர் படும் வேதனை, செலவை குறைக்க சொன்னவுடன் மருமகள்கள் தான் சிகரெட் குடிப்பதை குத்தி காட்ட, சிகரெட் பாக்ஸ்-ஐ தூக்கி எரிந்துவிட்டு,கையில் புகையும் சிகரெட்டை கடைசியாக ஒரு இழுப்பு இழுத்துவிட்டு தூக்கி போடுவது கிளாஸ். எங்கிருந்தோ வந்தான் பாடல் காட்சி அவரது மற்றொரு சிறப்பு.

கணவனுக்காக வாழும் மனைவியாக சௌகார் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பார். கண்ணாம்பா என்றாலே சோகம் என்பதற்கு இதுவும் விதி விலக்கல்ல. அசோகனும் முத்துராமனும் மகன்கள். சந்தியாவும் வசந்தாவும் மருமகள்கள். வீட்டை விட்டு ஓடி போகும் மகனாக T.R. ராமசந்திரன், TRR காதலிக்கும் பெண்ணாக ஏ.சகுந்தலா,விதவை மகளாக சுந்தரிபாய். கடைக்குட்டி கீதாவாக E.V.சரோஜா, NT-kku உதவும் தம்பதிகளாய் T.S..துரைராஜ், T.P.முத்துலக்ஷ்மி எல்லோரும் குறைவற செய்திருப்பார்கள்.

கே எஸ் ஜியின் Down to Earth வசனம் படத்திற்கு மிக பெரிய பலம். “மாமா” இசை அமைப்பில் பீம்சிங் இயக்கிய மிக சில படங்களில் இதுவும் ஒன்று (மற்றொன்று பாலாடை). பாடல்கள் எல்லாமே தேனிசை பாடல்கள்.

சிந்தையிலும் பெரிய - E.V.சரோஜா டான்ஸ் பாடல்

பக்கத்திலே கன்னி பெண்ணிருக்கு - TRR, ஏ.சகுந்தலா பாடுவது

சீவி முடிச்சு சிங்காரிச்சு - E.V. சரோஜவை கிண்டல் செய்து NT பாடுவது

இன்ப மலர்கள் - இந்த பாடலை விட பாடலின் ஆரம்பத்தில் வரும் Prelude ரொம்ப பிரபலம். இலங்கை தமிழ் சேவை வானொலியில் மாலை 4 மணிக்கு தினமும் இது ஒலிபரப்பாகும்.

ஒரே ஒரு ஊரிலே - இதை பற்றி எதுவும் சொல்ல தேவை இல்லை

உள்ளதை சொல்வேன் - NT பாடுவது.

எங்கிருந்தோ வந்தான்- சீர்காழியின் டாப் 10 பாடல்களில் ஒன்று. கிருஷ்ண பரமாத்மாவாக தோற்றமளிக்கும் NT எந்த வேஷவும் தனக்கு கச்சிதமாக பொருந்தும் என்பதை நிருபித்திருப்பார்.

படித்ததனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு - சௌகார் பாடும் பாடல்.

இது தவிர குழந்தைகளுக்கு நடன பயிற்சி அளிக்கும் E,V.சரோஜா பாடும் ஒரு பாடலும் உண்டு.

இந்த படம் வியாபார ரீதியாகவும் மிக பெரிய வெற்றி பெற்ற படம் என்பதற்கு ஒரு சான்று, ஆசியாவிலேயே மிக பெரிய திரையரங்கமான மதுரை தங்கம் தியேட்டரில் 112 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது.

ஒரே வரியில் சொல்வதென்றால் நடிகர் திலகத்தின் மணி முடியில் ஒரு வைரம்.

அன்புடன்.


மேற்காணும் பதிவுகளுக்கான இணைப்பு

http://www.mayyam.com/talk/showthread.php?5865-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-(Part-3)&p=265378&viewfull=1#post265378

http://www.mayyam.com/talk/showthread.php?5865-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-(Part-3)&p=265379&viewfull=1#post265379

RAGHAVENDRA
14th September 2013, 11:07 AM
தொடர்ந்து வருகிறது...

http://img707.imageshack.us/img707/5650/snapshot20110301201303.jpg

RAGHAVENDRA
14th September 2013, 11:15 AM
Prabhu Ram's analysis on Padikkadha Medhai

http://www.mayyam.com/talk/showthread.php?8593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-9&p=752019&viewfull=1#post752019



17th October 2011, 11:37 AM

Yes. The thing is, he works us to such an emotion high with his demeanor that after a point every single moment is touching.
I guess it is pretty much like what they say about stand up comedy. It is the ice-breaking and getting the first laughs that is the problem. But once you've got the audience going you every joke is going to get a laugh.

Similarly here, Sivaji pierces through my cynicism and thereafter I am totally captivated. Every line, every scene works. The scene where he learns Sundari Bai's son has worked overtime to redeem the jewel he stole and pawned, all he says is: "என் மாமா வீட்டு பிள்ளைங்க, யாருமே கெட்டவங்க இல்லை". Regard for the family dominates every fibre of his being. Extremely moving. Look at the time when he says that, it is when Asokan and Muthuraman are still at their worst behaviour.


When asked about the money for spending on the tenth day ceremony: உன் பணம் தானே அத்த...நீ தானே நகை பண்ணி கொடுத்தே, அதைத் தான் வித்தேன்....மாமாவுக்கு இல்லாம பின்ன இந்த அம்மா போட்டு மினுக்குறதுக்கா?. It is uncharitable of him to talk about his wife - who is the most undemanding person - in such a manner. But even she knows that he is saying that out of love for RangaRao. That it seems obvious to him, that that is the course of action, is moving in itself. And his expression heightens the emotions. It is not even selflessness, in the normal meaning of putting others before oneself. But truly breathing meaning to the word selflessness in not even being aware of oneself as a separate entity, and relegating one's interest being a natural, unconscious response.

The scene where he meets SundariBai gathering wood when he running to meet the sAmiyAr is just fantastic. "உனக்கு அறிவு இருக்கா" he rails at her for not coming to his home directly. Her wrongs do not even register with him. This is not even a நன்னயம் செய்து விடல் or a "they know not what they are doing", this is just being a much larger person than anyone around him. In the end also, when Sowcar Janaki asking him about his bleeding head, he says dismissively: "இந்தப்பய அடிச்சுட்டாம்....போறான் விடு"

His posture with when he talks to the piLLaiyAr, is just earnestness personified. When the sAmiyAr asks him to bathe, in one shot he plunges into the pond and hastily crawls back out to her.

.....

SVR is terrific. Their scenes together are simply on a different level. Such ease of performance.
அடிக்கடி தான் நினைச்சிக்கிறீங்களா...எனக்கு சதா உங்க நினைப்பு தான்.

He describes his work as 'nothing too difficult' and elaborates on his salary: எட்டு மணிநேரம் வேலை பார்த்தா த்ரீ ருபீஸ்...ஓவர்டைம் பார்த்தா ட்டூ ருபீஸ்...அகமொத்தம் ஃபைவ் ருபீஸ்.The way he pronounces the 'rubees' has a childishness that cannot be explained, nor can one imagine it being taught. Only experienced. So much so that the 'உள்ளதைச் சொல்வேன், சொன்னதைச் செய்வேன், வேறொன்றும் தெரியாது' is rendered an unnecesaary elaboration - when after all he exudes that in every action, every word, intonation.

....

When he asks him why he bought him cigarettes and didn't buy his wife anything, he says

"ஓ..இப்படி (தலையை சுத்தி மூக்கைத் தொடுவார்)...இப்படி கேக்குறீங்களாக்கும். ஏண்டா வந்தேங்கறதை....ஏண்டா சிகரெட் வாங்கிட்டு வந்தேன்னு"

In their whole exchange, their are parts where his mumbling is even unintelligible, still they are communicating. Their is a free flow of emotions on the surface and simultaneously a torrent of emotional running deeper - which these two fantastic actors make it so evident to us, the audience. We think we have perceived a miscommunication. That we 'understand' SVR's concerns, but the simple Rangan is not getting it. But at the same time we are conscious that they share a communication whose depth is just beyond what we can perceive. A bond so strong, that while we are moved, we perhaps cannot entirely dismiss a jealousy we feel for their bond.

.....

In the end he says, with a bleeding head: ஏண்டா நான் திருடன்னு நினைச்சு தானேடா அடிச்சீங்க....இப்பொ நான் நல்லவன்னு தெரிஞ்சதும் ஏண்டா வீட்டை விட்டு போறேன்றீங்க?

The logic is astounding, isn't it? Sounds like wise words that tumble out of a child's mouth and stun us adults, who considered ourselves the child's intellectual superiors all along.

Of course they will leave. That is their natural reaction (and so too goads Sundaribai). But the way Rangan puts it, he points out that what they are abandoning is 'goodness itself'. That is what he regards the house to be. An embodiment of goodness. Why on earth, will people who seek good, leave it? Even in their misconception of taking him to be a thief, he can see the goodness of their thinking that ' a thief deserves to be beaten'. Jaw dropping how he is able to see goodness every-bloody-where!

And he is just incapable of taking offence. When Kannamba thoughtlessly asks him if he has indeed stolen like those around accuse him (and we the audience are annoyed with her for asking Rangan such a question), Rangan says: என்ன அத்த நீயும் வரவர என்னை சந்தேகப்பட ஆரம்பிச்சுட்ட. The way he says it, it is abundantly clear he has not taken it to heart. Merely pointing out the silliness in her supposition.

And the cherry is of course his response to Kannamba when she asks him why he didn't come by the door. I can't recall a moment which matches this in stature in being simultaneously hilarious and poignant.

திருவாசகத்துக்கு உருகாரும் இப்படத்துக்கு உருகுவார்.

Gopal.s
14th September 2013, 12:03 PM
Prabu Ram and Murali's posts are like Rangarao and Sivaji dual in Padikkatha medhai. This thread is badly missing these two.

Gopal.s
14th September 2013, 12:04 PM
Thanks for your great Effort in re-producing them Ragavendhar Sir. We are grateful to you. Thanks to Pammalar.

Gopal.s
15th September 2013, 06:14 AM
பாவை விளக்கு

இது அகிலன் என்ற ஞான பீட பரிசு பெற்ற எழுத்தாளரின் கதை.(குலமகள் ராதையும் ). சொந்த கதை என்று கேள்வி. கதை படி எழுத்தாளன் தன் வாழ்வில் சந்திக்கும் நான்கு பெண்களுடன் ஏற்பாடும் ஈர்ப்பு ,அதனால் விளையும் உணர்ச்சி போராட்டங்கள். ஆடோக்ராப் படத்திற்கு மூலம்.
படம் எடுக்க பட்ட விதம் சற்றே கேள்விக்குரியது. ரொம்ப தொய்வு கொண்ட திரைகதை.
படத்தின் highlights என்று சொல்ல போனால் நடிகர்திலகம் எழுத்தாளர் தணிகாசலம் என்ற பாத்திரத்தை பிரமாதமாக அசத்தியிருப்பார். இவருடைய நடிப்பு ஒன்றிற்காகவே நான் இப்படத்தை நிறைய முறை கண்டு களித்திருக்கிறேன்.
இரண்டாவது கே.வீ.மகாதேவன் (மாமா) இசை. அடடா என்ன பாடல்கள் !!!!! வண்ண தமிழ் பெண்ணொருத்தி,ஆயிரம் கண் போதாது,காவியமா ...... 1960 இல் சி.எஸ்.ஜெயராமன் நடிகர்திலகத்திற்கு நிறைய பாடினார். 1961 முதல் ஒரு பாடல் கூட பாடியதாக நினைவில்லை.
1952-1960- சி.எஸ்.ஜெயராமன், கண்டசாலா,டி.எம்.சௌந்தரராஜன்,ஏ.எம்.ராஜா,
சீர்காழி கோவிந்தராஜன், மோத்தி,பீ.பீ.ஸ்ரீநிவாஸ்,சுந்தரம் போன்ற பலர் குரல் கொடுத்தாலும் , 1960-1975 -95% பாடல்கள் டி.எம்.எஸ் பாடியவையே.

RAGHAVENDRA
18th September 2013, 10:10 PM
Sivaji Ganesan Filmography Series

64.பாவை விளக்கு Paavai Vilakku

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/PV1-1.jpg

தணிக்கை – 15.10.1960
வெளியீடு – 19.10.1960

தயாரிப்பு – ஸ்ரீ விஜய கோபால் பிக்சர்ஸ்

கதை அகிலன்

படத் தொகுப்பு - கே. துரைராஜ்

கலை - சிஹெச்.ஈ.பிரசாத ராவ்

நடனம் - கே.என். தண்டாயுத பாணி பிள்ளை

ஒளிப்பதிவு - விந்தன்



திரைக்கதை வசனம் – ஏ.பி.நாகராஜன்

இயக்கம் – கே. ஸோமு

இசை – கே.வி.மகாதேவன்

பாடல்கள் – மருதகாசி

தயாரிப்பாளர்கள் – கோபண்ணா, விஜயரங்கம்

நடிக நடிகையர் – நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பண்டரி பாய், எம்.என்.ராஜம், குமாரி கமலா, சௌகார் ஜானகி, எஸ்.வி.ரங்கா ராவ், சந்தியா,

ஆவணத் திலகம் பம்மலாரின் விளம்பர நிழற்படங்கள்



பொக்கிஷப் புதையல் : முதல் வெளியீட்டு விளம்பரங்கள்


The Hindu : 14.1.1960

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/PVAd1-1.jpg

The Hindu : 9.9.1960

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/PVAd2-1.jpg


சுதேசமித்ரன் : 14.10.1960

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/PVAd3-1.jpg

கலைமகள் : தீபாவளி மலர் : 1960

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/PVAd4-1.jpg

பொக்கிஷப் புதையல் : கிடைத்தற்கரிய முதல் வெளியீட்டு விளம்பரம்


Full Prints : சுதேசமித்ரன் : 26.10.1960
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4799-2.jpg

பொக்கிஷப் புதையல் : வரலாற்று ஆவணம்

நடிகன் குரல் : நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உலக வெற்றி உலா மலர் : ஆகஸ்ட் 1962


நடிகர் திலகம் பற்றி சாகித்ய அகாடெமி விருது பெற்ற பெரும் எழுத்தாளர் திரு.அகிலன்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4801-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4802-1.jpg

பொக்கிஷப் புதையல் : வரலாற்று ஆவணம்


மதி ஒளி : 1.11.1962
[நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பத்தாண்டு நிறைவு [1952-1962] மலர்


நடிகர் திலகம் பற்றி ஒலிப்பதிவு மேதை டி.எஸ்.ரங்கசாமி

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4800-1.jpg

RAGHAVENDRA
18th September 2013, 10:44 PM
பாடல்கள்


1. மங்கியதோர் நிலவினிலே – பாரதியார் – சி.எஸ்.ஜெயராமன்
2. நீ சிரித்தால் நான் சிரிப்பேன் – மருதகாசி – சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
3. காவியமா நெஞ்சின் ஓவியமா – மருதகாசி – சி.எஸ்.ஜெயராமன், பி.சுசீலா
4. வெட்கமாக இருக்குது – மருதகாசி – சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
5. ஆயிரம் கண் போதாது – மருதகாசி – சி.எஸ்.ஜெயராமன்
6. நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ – மருதகாசி –பி. சுசீலா
7. வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி – மருதகாசி – சி.எஸ்.ஜெயராமன், சிவாஜி கணேசன், எல்.ஆர்.ஈஸ்வரி
8. சிதறிய சதங்கைகள் போலே – மருதகாசி – பி.சுசீலா

RAGHAVENDRA
18th September 2013, 10:50 PM
பாடல் காட்சிகள்

நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ

http://www.metacafe.com/watch/6578463/pavai_vilakku_tamil_nan_unnai_kamala_tandav_dance/

வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி

http://youtu.be/Vd_RC89xYeg

காவியமா நெஞ்சின் ஓவியமா

http://youtu.be/RuXW83PLumE

RAGHAVENDRA
19th September 2013, 06:59 AM
Sivaji Ganesan Filmography Series

65. பெற்ற மனம் Petra Manam

தணிக்கை 17.10.1960
வெளியீடு 19.10.1960

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/petramanamimg02fw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/petramanamimg01fw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/petramanamadfw.jpg

தயாரிப்பு – நேஷனல் பிக்சர்ஸ்
1953ல் வெளியான, நடிகர் திலகத்தின் பெம்புடு கொடுகு தெலுங்குப் படத்தின் தமிழ் வடிவம்
தயாரிப்பு – நேஷனல் பிக்சர்ஸ், பி.ஏ. பெருமாள் முதலியார்
கதை – மு. வரதராசனார் அவர்களின் நாவல்
வசனம் – திருவாரூர் தியாகராஜன்
இசை – எஸ். ராஜேஸ்வர ராவ்
ஒளிப்பதிவு – ஜி.விட்டல் ராவ்
ஒலிப்பதிவு – பாடல்கள் மற்றும் ரீரிகார்டிங் – ஈ.ஐ. ஜீவா
ஒலிப்பதிவு வசனம் – விசுவநாதன், நெப்டியூன் ஸ்டூடியோ மற்றும் ராஜூ, பரணி ஸ்டூடியோ
பாடலாசிரியர்கள் – அண்ணல் தங்கோ, ஆத்மநாதன், பாரதிதாசன்,.கே.பி.காமாட்சி, கண்ணதாசன்
நடனம் – கே.என். தண்டாயுத பாணி, தங்கப்பன், முத்துசாமி பிள்ளை
ஸ்டில்ஸ் – விஷ்ணுஜித்தன்

நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், புஷ்பவல்லி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், பத்மினி பிரியதர்ஷினி, சந்திரபாபு, எல்.விஜயலக்ஷ்மி, எஸ்.வி.சுப்பையா, எம்.என்.ராஜம், டி.வி.நாராயணசாமி, குமாரி

ஆவணத் திலகம் பம்மலாரின் விளம்பர நிழற்படங்கள்




பொக்கிஷப் புதையல் : முதல் வெளியீட்டு விளம்பரங்கள்

தென்றல் : 20.12.1955

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4829-1.jpg

The Hindu : 19.2.1960

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4830-1.jpg


சுதேசமித்ரன் : 15.10.1960

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4831-1.jpg

சுதேசமித்ரன் : 19.10.1960

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4833-1.jpg

RAGHAVENDRA
19th September 2013, 07:07 AM
மீண்டும் ஒரே நாளில் இரு படங்கள். பாவை விளக்கு பெற்ற மனம் இரண்டும் ஒரே நாளில் அதாவது 19.10.1960 அன்று வெளியாகின. இதற்கு முன் கூண்டுக் கிளி, தூக்குத்தூக்கி, இரண்டும் ஒரே நாளில். பின்னர் ஒரு நாள் இடைவெளியில் அவள் யார், பாகப் பிரிவினை இரண்டும். இதைத் தொடர்ந்து பாவை விளக்கு பெற்ற மனம் இரண்டும்.

பாவை விளக்கு அகிலனின் நாவல் என்றால் பெற்ற மனம் மு.வ. அவர்களின் நாவல். இரு படங்களுமே தமிழிலக்கியத்தில் தனிப் புகழ் பெற்றவை. இரண்டிலுமே மேதைகளின் பாடல்கள் இடம் பெற்றன. பாவை விளக்கில் பாரதியார் பாடல் என்றால் பெற்ற மனத்தில் பாரதி தாசன் அவர்களின் பாடல். இரண்டிலுமே நடிகர் திலகத்தின் நடிப்பும் தோற்றமும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். பெற்ற மனம் திரைப்படத்தின் கூடுதல் விசேஷம், பெரியாரை மனதில் வரித்து நடிகர் திலகம் நடித்திருந்தது தான். இதைப் பற்றி அ்வரே தன் கருத்தைச் சொல்லியிருக்கிறார்.

இரண்டிலும் உள்ள ஒற்றுமைகளில் இன்னொன்று, இரண்டிலுமே நடிகர் திலகத்தின் குரலுடன் பாடல்கள் ஒலித்தன. வண்ணத்தமிழ்ப் பெண்ணொருத்தி பாடல் இன்றளவும் உலகளாவிய பிரசித்தி பெற்றது என்றால் அதற்கு சற்றும் சளைக்காத பாடல் எம்.எல்.வசந்த குமாரி அவர்கள் பாடிய சிந்தனை செய்யடா பாடல். வாழ்ந்து கெட்டவனின் வேதனையை பிரதிபலிக்கும் பாடல். எம்.எல்.வி. அவர்களின் பாட்டும் பாடலின் நடுவே நடிகர் திலகத்தின் குரலும் பாடலின் சூழலை மிகவும் சிறப்பாக எடுத்துரைக்கும்.

பெற்ற மனம் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்த்தே ஆக வேண்டிய படம். துரதிருஷ்டவசமாக அதன் பிரதி கிடைக்கவில்லை. இறைவனை வேண்டுவோம்.

RAGHAVENDRA
19th September 2013, 07:12 AM
பெற்ற மனம் பாடல்களைக் கேட்பதற்கான இணைப்பு

audio link

1. சினிமா சினிமா டிராமா
2. காதல் கரும்பு கண்டேன்
3. ஒரே ஒரு பைசா
4. சிந்தனை செய்யடா

http://www.inbaminge.com/t/p/Petra%20Manam/

RAGHAVENDRA
19th September 2013, 07:37 AM
பெற்ற மனம் பாடல்களின் விவரங்கள்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/PetramanamSBC_zpsa0f18073.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/PetramanamSBCr_zpsdbcd5af3.jpg

முழுப் பாடல் விவரங்களும் முதல் முறையாக இணையத்தில்


1. அன்.புத் தோழா ஓடிவா – கு.மு. அண்ணல் தங்கோ – சீர்காழி கோவிந்தராஜன்
2. கண்ணே நீ சென்று வாடா – ஆத்மநாதன் – ஏ.பி.கோமளா
3. ஒரே ஒரு பைசா – பாரதி தாசன்- சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
4. பாடிப் பாடிப் பாடி – பாரதிதாசன் – சந்திரபாபு
5. காதற் கரும்பு கண்டேன் – கண்ணதாசன் – சி.எஸ்.ஜெயராமன், ஜிக்கி
6. மனதிற்குகந்த மயிலே – பாரதி தாசன் – சந்திரபாபு
7. துள்ளித் துள்ளி ஓடும் – கே.பி.காமாட்சி சுந்தரன் – ஜிக்கி
8. தெற்குப் பொதிகை மலை – பாரதி தாசன் டி.எம்.சௌந்தர்ராஜன், ஜமுனா ராணி
9. வேண்டாமையன்ன விழுச்செல்வம் – எம்.எல்.வசந்தகுமாரி, சிவாஜி கணேசன்

RAGHAVENDRA
19th September 2013, 07:55 AM
பெற்ற மனம் சிறப்புச் செய்திகள்

1. இப்படத்தில் எஸ்.வி.ரங்காராவ் அவர்களுக்குக் குரல் கொடுத்திருப்பவர்

http://www.thehindu.com/multimedia/dynamic/01051/13FRACTOR_SRINIVAS_1051381g.jpg

திரு கே.வி.சீனிவாசன்.

ரங்காராவ் அவர்கள் தன் ஒரிஜினல் குரலிலேயே தமிழை நன்றாகப் பேசக் கூடியவர். என்றாலும் என்ன காரணத்தாலோ இப்படத்தில் அவருக்கு இரவல் குரல் பயன் படுத்தப் பட்டது.

திரு கே.வி.சீனிவாசன் அவர்கள் மனோகரா நாடகத்தில் நடிகர் திலகம், பத்மாவதியாக நடித்த போது மனோகரனாக நடித்தவர்.


2. பாரதிதாசன் பாடலை சந்திரபாபு இப்படத்தில் மட்டுமே பாடியுள்ளதாகத் தெரிகிறது. வேறெந்தப் படத்திலேனும் அவர் பாரதிதாசன் பாடல்களைப் பாடியுள்ளாரா என்பதை தெரிந்த நண்பர்கள் இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

3. இப்படத்தில் இடம் பெற்றுள்ள டி.எம்.எஸ். பாடல் இது வரை வெளியே அதிகம் ஒலித்ததாகத் தெரியவில்லை. மிகவும் அருமையான பாடல்.

RAGHAVENDRA
19th September 2013, 09:51 AM
Sivaji Ganesan Filmography Series
66. விடிவெள்ளி VIDIVELLI

http://www.thehindu.com/multimedia/dynamic/01561/25cp_Vedi_velli_jp_1561617f.jpg

தணிக்கை – 24.12.1960
வெளியீடு – 31.12.1960
தெலுங்கில் கஷ்ட சுகாலு

தயாரிப்பு – பிரபுராம் பிக்சர்ஸ்
நடிக நடிகையர்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சரோஜா தேவி, எஸ்.வி.ரங்கா ராவ், எம்.என்.ராஜம், கே.பாலாஜி, பத்மினி பிரியதர்ஷினி, டி.ஆர்.ராமச்சந்திரன், சாந்தகுமாரி, எம்.ஆர்.சந்தானம் மற்றும் பலர்

ஒளிப்பதிவு டைரக்டர் – ஏ.வின்சென்ட்
ஒளிப்பதிவு – பி.என். சுந்தரம்

ஒலிப்பதிவு டைரக்டர் – ஏ. கிருஷ்ணன்
ரிக்கார்டிங், ரீரிக்கார்டிங் – டி.எஸ். கிருஷ்ணா

நடன அமைப்பு – பி.எஸ்.கோபால கிருஷ்ணன்

உடை அலங்காரம் – பி. ராமகிருஷ்ணன்

ஆர்ட் டைரக்ஷன் – கங்கா, உதவி செல்வராஜ்

ஸ்டில்ஸ் – திருச்சி கே. அருணாச்சலம்

மேக்கப் – ஹரிபாபு, பீதாம்பரம், ரங்கசாமி, ராமசாமி, குருசாமி, பாண்டியன்

எடிட்டிங் – என்.எம். சங்கர், உதவி – வி.விஸ்வநாதன்

புரொடக்ஷன் மற்றும் நிர்வாகம் – பி. நடராஜன், உதவி – தசரதன்

ப்ரொடக்ஷன் உதவியாளர்கள் – பொன்ராஜ், குப்புசாமி, ஜி.கே.ராஜு, பொன்னுரங்கம்

அசோஸியேட் டைரக்ஷன் – பி. மாதவன்

உதவி டைரக்ஷன், உதவி எடிட்டிங் – கே.எஸ். துரை

உதவி வசனம் – டி.ஏ. சடகோபன்

ஸ்டூடியோ – விஜயா வாகினி

கதை வசனம் டைரக்ஷன் – சி.வி.ஸ்ரீதர்

RAGHAVENDRA
19th September 2013, 09:53 AM
பாடல்கள்


1. பண்ணோடு பிறந்த்து தாளம் – கண்ணதாசன் – ஜிக்கி, பி.பி.ஸ்ரீநிவாஸ்
2. என்னாளும் வாழ்விலே – மருதகாசி – பி.சுசீலா
3. இடை கையிரண்டில் ஆடும் – கண்ணதாசன் – ஏ.எம்.ராஜா, பி.சுசீலா
4. காரு சவாரி ஜோரு – கு.மா.பாலசுப்ரமணியன் – ஜிக்கி, திருச்சி லோகநாதன்
5. நினைத்தால் இனிக்கும் சுபதினம் – மருதகாசி – ஜிக்கி
6. என்னாளும் வாழ்விலே சோகம் – மருதகாசி – பி.சுசீலா
7. நான் வாழ்ந்த்தும் உன்னாலே – கண்ணதாசன் – ஜிக்கி
8. கொடுத்துப் பார் பார் – ஏ.எம்.ராஜா, பி.சுசீலா, திருச்சி லோகநாதன், ஜிக்கி

RAGHAVENDRA
19th September 2013, 09:56 AM
விடிவெள்ளி பாட்டுப் புத்தகத்தின் நிழற்படங்கள்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Song%20Book%20Covers/Song%20Books/VIDISBP01.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Song%20Book%20Covers/Song%20Books/VIDISBP02.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Song%20Book%20Covers/Song%20Books/VIDISBP03.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Song%20Book%20Covers/Song%20Books/VIDISBP04-1.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Song%20Book%20Covers/Song%20Books/VIDISBP05.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Song%20Book%20Covers/Song%20Books/VIDISBP06.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Song%20Book%20Covers/Song%20Books/VIDISBP07.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Song%20Book%20Covers/Song%20Books/VIDISBP08.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Song%20Book%20Covers/Song%20Books/VIDISBP09.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Song%20Book%20Covers/Song%20Books/VIDISBP10.jpg

RAGHAVENDRA
19th September 2013, 09:59 AM
ஆவணத் திலகம் பம்மலாரின் விளம்பர நிழற்படங்கள்



பொக்கிஷப் புதையல் : கிடைத்தற்கரிய நிழற்படங்கள்

சாதனைச் செப்பேடுகள்

காவிய விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5443-1.jpg

காவிய விளம்பரம் : The Hindu : 5.10.1960
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5444-1.jpg

முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 24.12.1960

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/VidivelliAd1-1.jpg

முதல் வெளியீட்டு விளம்பரம் : The Mail : 28.12.1960

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/VidivelliAd2-1.jpg

முதல் வெளியீட்டு விளம்பரம் : கலைமகள் : ஜனவரி 1961

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5445-1.jpg

100வது நாள் விளம்பரம் : The Hindu : 9.4.1961

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Vidivelli100-1.jpg

குறிப்பு:
1. இக்காவியம் 100 நாள் கண்ட அரங்குகள்:
சென்னை - சித்ரா - 104 நாட்கள்
சென்னை - கிரௌன் - 104 நாட்கள்
மதுரை - சிந்தாமணி - 104 நாட்கள்

2. சென்னை 'சயானி'யில் 76 நாட்களும் மற்றும் கணிசமான ஊர்களின் அரங்குகளில் 50 நாட்களைக் கடந்தும் ஓடிய இக்காவியம், ஒரு சிறந்தவெற்றி கண்ட காவியம் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

3. "விடிவெள்ளி" மற்றும் "பாசமலர்" திரைக்காவியங்கள், 1959-ல் ஒரே நாளில் பூஜை போடப்பட்டு துவங்கப்பட்டன. "விடிவெள்ளி" 31.12.1960 அன்றும், "பாசமலர்" 27.5.1961 அன்றும் வெளிவந்தன.

வரலாற்று ஆவணம் : முரசொலி : 2.10.1959


"விடிவெள்ளி" தொடக்கவிழா
[இந்நிழற்படத்தில் எஸ்.எஸ்.வாசனுக்கு அருகே இடதுஓரம் வி.சி.சண்முகம், முத்துமாணிக்கத்திற்கு அருகே ஸ்ரீதர், ராம்குமாரைதோளில் தூக்கிவைத்துக் கொண்டுள்ளார்; முத்துமாணிக்கத்திற்கு முன்னே நின்றுகொண்டிருக்கும் குழந்தை, பிரபு]

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5450-1.jpg

பொக்கிஷப் புதையல்

வரலாற்று ஆவணம் : நடிகர் திலகம் பற்றி டைரக்டர் ஸ்ரீதர்

நடிகன் குரல் (நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உலக வெற்றி உலா மலர்) : ஆகஸ்ட் 1962

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5460-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5461-1.jpg

Gopal.s
19th September 2013, 12:16 PM
ராகவேந்தர் சார்,
நாம் கூட்டு பிரார்த்தனையே செய்வோம்.உங்கள் தலைமையில்.
அவள் யார், பெற்ற மனம், வளர்பிறை நமக்கு முழுமையாக கிடைக்க வேண்டும்.

Gopal.s
19th September 2013, 12:28 PM
விடிவெள்ளி.
ஸ்ரீதர் இயக்கத்தில் சிவாஜி நடித்த முதல் படம்.அருமை நண்பருக்கு விடிவெள்ளி என்று நடிகர்திலகத்தின் கமெண்ட். கல்யாண பரிசு வெற்றி பெற்றும் போதிய வாய்ப்பு பெறாத ஸ்ரீதருக்கு உதவியாய் இந்த படத்தை நண்பரை வைத்து தயாரித்தார். ஏ.எம்.ராஜா ,நடிகர்திலகத்திற்காக இசையமைத்த முதலும் கடைசியும் ஆன படம். தமிழில் ஓட்ட நடை பாடல்கள் மிகவும் குறைவு. அவ்வாறு வந்தவற்றில் மிக சிறந்தவை கொடுத்து பார் பார் பார் உண்மை அன்பை,இரவுக்கும் பகலுக்கும்(எங்கள் தங்க ராஜா).
மற்ற பாடல்கள் எந்நாளும் வாழ்விலே,இடை கையிரெண்டில், பண்ணோடு பிறந்தது. எல்லாமே superb .
சிவாஜி-சரோஜாதேவி இணை மிக பாந்தம். கொடுத்து பார் துள்ளல்,காதல் காட்சிகள் (சிவாஜி சிறிதே குற்ற உணர்வில்)நன்றாக இருக்கும். படமும் நன்றாக துவங்கி துவளும். இறுதியில் லாஜிக் உதைக்கும்.எந்த தகப்பனாவது காதலை பிரிக்க ,சிறு வயதில் இறந்த தன் மகனையே மகளோடு இணைத்து பேச வாய்ப்புண்டா?
மிக சிறப்பான வெற்றி பெற்றாலும்,இன்னும் உயரம் தொட்டிருக்க வேண்டிய படம்.நடிகர்திலகம் அருமையாய் பண்ணியிருப்பார்.இதற்கு பிறகு ஸ்ரீதர்-சிவாஜி இணைந்தது 7 வருடம் கழித்தே.(நெஞ்சிருக்கும் வரை)ஊட்டி வரை உறவு நீண்ட நாள் தயாரிப்பினால் பிந்தி விட்டது ரிலீசில்.

RAGHAVENDRA
20th September 2013, 08:11 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/goldenera_zps98f6b461.jpg

Gopal.s
20th September 2013, 08:42 AM
பாவ மன்னிப்பு 16.03.1961

தேவிகா சம்பத்த பட்ட அனைத்து காதல் காட்சிகள். ரஹீமாக சிவாஜி உள்ளூர ஆசையிருந்தாலும் , சந்தர்ப்ப-சூழ்நிலை கருதி restraint ஆக வெளியிடும் முறை.

பாடாமல் பாடி விடும் பாலிருக்கும் பாட்டில் எவ்வளுவு அழகு இந்த திராவிட மன்மதன்.!!!!

எல்லோரும் கொண்டாடுவோம், வந்த நாள் முதல், சிலர் சிரிப்பார் பாடல் காட்சிகள்.

சிவாஜியும்- beemsingh உம் சிலர் சிரிப்பார் பாட்டில் உச்சம் தொட்டனர். நமக்கு இடப்புறத்தில் பழுதாகாத முக பகுதியுடன் சிரிக்கும் சிவாஜி. வலப்புறத்தில் பழுதான முக பகுதியுடன் அழும் சிவாஜி. நடுவில் சிரித்து கொண்டே அழும் சிவாஜி.

அன்னையுடன் அவர் அன்னை என்று தெரிந்து வீட்டில் சந்திக்கும் காட்சி ,பின்னால் வர போகும் தெய்வ மகனுக்கு அடிக்கல் நாட்டி விடுகிறது.

Acid வீச்சு பட்டு அவர் புழுவென துடிப்பது.

அட்டகாசமாக antics செய்யும் M .R .ராதாவை மிக மிக பொறுமை, பொறுமை, சிறிது நிதானம் தவறி, பதில் கடுமை என்ற வெவ்வேறு நிலைகளில் அவர் deal செய்யும் காட்சிகள்.

படம் துவக்கத்திலிருந்தே method acting முறையில் அந்த மேதை, ரஹீம் பாத்திரத்தை கையாளும் முறை . Subbudu , நடிகர்திலகம் அவர்களின் நடிப்புக்காக, பதின்மூன்று முறை தொடர்ந்து பார்த்தேன் என்ற விமர்சனம் எழுதினர்..உயர்ந்த எண்ணங்கள்,நோக்கம் கொண்ட இறை முறையில் வாழும் ரஹீம் எப்படி நடந்து கொள்ள , பேச வேண்டுமோ ,அப்படி நடித்து எல்லோர் உள்ளங்களிலும் நிறைந்தார்.

gkrishna
21st September 2013, 03:51 PM
.

ragavender sir gopal sir
if you see the ad of "petra manam" in 1955 in direction it was mentioned as "prasad" and also "viraivil veli varugiradhu"
but movie released only in 1960 with "bhimsingh direction"
Is there any history for this late release and also change in direction, if so please share

regards

Gk

gkrishna
21st September 2013, 03:59 PM
sirs,

Some one month back the same Vidivelli was mentioned wrongly by "Randor gay" in The Hindu as not done well despite good performance by Sivaji/Sarojadevi and neat script by Sridhar. It was also pointed out by Mr.Subbu in our NT part 11 thread

Pavai vilakku producer Gopanna is one of our TN Congress leader Gopannava sir

Regards

Gk

Subramaniam Ramajayam
24th September 2013, 05:20 PM
பாவ மன்னிப்பு 16.03.1961

தேவிகா சம்பத்த பட்ட அனைத்து காதல் காட்சிகள். ரஹீமாக சிவாஜி உள்ளூர ஆசையிருந்தாலும் , சந்தர்ப்ப-சூழ்நிலை கருதி restraint ஆக வெளியிடும் முறை.

பாடாமல் பாடி விடும் பாலிருக்கும் பாட்டில் எவ்வளுவு அழகு இந்த திராவிட மன்மதன்.!!!!

எல்லோரும் கொண்டாடுவோம், வந்த நாள் முதல், சிலர் சிரிப்பார் பாடல் காட்சிகள்.

சிவாஜியும்- beemsingh உம் சிலர் சிரிப்பார் பாட்டில் உச்சம் தொட்டனர். நமக்கு இடப்புறத்தில் பழுதாகாத முக பகுதியுடன் சிரிக்கும் சிவாஜி. வலப்புறத்தில் பழுதான முக பகுதியுடன் அழும் சிவாஜி. நடுவில் சிரித்து கொண்டே அழும் சிவாஜி.

அன்னையுடன் அவர் அன்னை என்று தெரிந்து வீட்டில் சந்திக்கும் காட்சி ,பின்னால் வர போகும் தெய்வ மகனுக்கு அடிக்கல் நாட்டி விடுகிறது.

Acid வீச்சு பட்டு அவர் புழுவென துடிப்பது.

அட்டகாசமாக antics செய்யும் m .r .ராதாவை மிக மிக பொறுமை, பொறுமை, சிறிது நிதானம் தவறி, பதில் கடுமை என்ற வெவ்வேறு நிலைகளில் அவர் deal செய்யும் காட்சிகள்.

படம் துவக்கத்திலிருந்தே method acting முறையில் அந்த மேதை, ரஹீம் பாத்திரத்தை கையாளும் முறை . Subbudu , நடிகர்திலகம் அவர்களின் நடிப்புக்காக, பதின்மூன்று முறை தொடர்ந்து பார்த்தேன் என்ற விமர்சனம் எழுதினர்..உயர்ந்த எண்ணங்கள்,நோக்கம் கொண்ட இறை முறையில் வாழும் ரஹீம் எப்படி நடந்து கொள்ள , பேச வேண்டுமோ ,அப்படி நடித்து எல்லோர் உள்ளங்களிலும் நிறைந்தார்.

silar sirippar silar azuvar song best suited answer by NADIGARTHILAGAM for the BIG QUESTIONS OF THE DAY.

Russellcdm
27th September 2013, 01:43 PM
sirs,

Some one month back the same Vidivelli was mentioned wrongly by "Randor gay" in The Hindu as not done well despite good performance by Sivaji/Sarojadevi and neat script by Sridhar.



Regards

Gk

Dear Sri.Krishna

You may speak this directly to Mr.Randorguy seeking a clarification on how he managed to say this if at all if your statement is right.
If you need his contact number, please message me in mail and I will share the same.

Nice

Russellcdm
27th September 2013, 01:45 PM
Dear Friends,

I shall catch up later.

I have to take medicines post lunch and rest for couple of hours, I shall take leave now for a while.

Nice

mr_karthik
28th September 2013, 11:43 AM
பாவமன்னிப்பு

தமிழ்த்திரையின் அற்புதமான ஜோடிக்கு வித்திட்ட முதல் படம். அது சத்யம் வரை தொடர்ந்த அழகு. மூன்று மதங்களையும் இணைத்து எம்மதத்தவரும் மனம் புண்படாத வகையில் அமைந்த திரைக்கதை. பிறப்பால் இந்துவான நால்வர், வளர்ப்பால் மூன்று மதங்களை சென்றடைந்த கதையை நேர்த்தியாக சொன்ன விதம். ஆளவந்தார், ஜேம்ஸ், இஸ்மாயில் என்ற அருமையான கதாபாத்திரங்களுடன் துவங்கும் கதை. பின்னர் பிரதான நான்கு கதாபாத்திரங்களையும் அவர்கள் மத அடையாளத்துடனேயே ஒரே பாடலில் குழப்பமின்றி அறிமுகப்படுத்தும் விந்தை...... பாவமன்னிப்பு ஒரு திரை அதிசயம்.

ஒருபக்கம் தன்னை வளர்த்த தந்தையோடு 'எல்லோரும் கொண்டாடுவோம்' என்று சந்தோஷமாக பாடிக்கொண்டிருக்கும் ரகீமை அறிமுகப்படுத்திய சில வினாடிகளில், தலையில் அரைமுக்காடிட்டபடி ஏசுவின் படத்தின் முன்னிருந்து எழுந்து, வளர்த்த தந்தை ஜேம்ஸின் கையை முத்தமிடும் மேரி. ஆகா, என்னேவொரு கண்கொள்ளாக்காட்சி.

'பாலிருக்கும் பழமிருக்கும்' பாடல் காட்சி ஒரு காதல் காவியம். அதிலும் பாடல் முடிந்தபின், ரகீமும் மேரியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க, பின்னணியில் சுசீலாவும், எம்.எஸ்.வி.யும் மெலிய குரலில் 'பாலிருக்கும்' பாடலை இசைக்க, நடிகர்திலகம் நீட்டிய கைகளில் தேவிகா முகத்தைப் புதைத்துக் கொண்டு அழ, நடிகர்திலகமும் கண்கலங்கும் அந்தக்காட்சி தமிழில் வந்த தலையாய காதல் காட்சிகளில் ஒன்று என்றால் அது மிகையல்ல.

mr_karthik
28th September 2013, 11:50 AM
வெள்ளிவிழா காவியமான 'பாவமன்னிப்பு' படத்தின் 50-வது நாள், 100-வது நாள், மற்றும் வெள்ளிவிழா விளம்பர ஆவணங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

பம்மலார் அவர்கள் கருணை காட்டுவாரா..??.

RAGHAVENDRA
30th September 2013, 08:20 AM
Sivaji Ganesan Filmography Series

67. பாவமன்னிப்பு Pava Mannippu

http://iffi.nic.in/Dff2011/9th_nff/9th_nff_1962_img_7.jpg

தணிக்கை – 09.03.1961
வெளியீடு – 16.03.1961

நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, தேவிகா, எம்.ஆர். ராதா, எஸ்.வி.சுப்பய்யா, எம்.வி.ராஜம்மா, வி.நாகய்யா, டி.எஸ்.பாலய்யா, கே.ஏ.தங்கவேலு மற்றும் பலர்
மூலக்கதை – ஜே.பி.சந்திரபாபு
திரைக்கதை – ஏ.பீம்சிங்
வசனம் – எம்.எஸ்.சோலைமலை
ஸ்டூடியோ – ஏவி.எம்.
இசை – விஸ்வநாதன் – ராம்மூர்த்தி
பாடல்கள் – கண்ணதாசன்
பின்னணி பாடியவர்கள் – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, பி.பி.ஸ்ரீநிவாஸ், நாகூர் ஹனீபா, ஜி.கே.வெங்கடேஷ், எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் எம்.எஸ்.விஸ்வநாதன்
தயாரிப்பு – ஏவி.எம். மற்றும் புத்தா பிக்சர்ஸ்

RAGHAVENDRA
30th September 2013, 08:23 AM
பாவ மன்னிப்பு திரைப்படம் சென்னையில் வெளியான அரங்குகள் - சாந்தி, கிருஷ்ணா, ராக்சி

வெள்ளி விழா கண்ட திரையரங்கு – சென்னை சாந்தி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/p2-3-1.jpg?t=1345386162

100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகள்

1. சென்னை சாந்தி – 177 நாட்கள்
2. சென்னை கிருஷ்ணா – 127 நாட்கள்
3. சென்னை ராக்ஸி – 107 நாட்கள்
4. திருச்சி ராஜா – 120 நாட்கள்
5. கோவை கர்நாடிக் – 100 நாட்கள்
6. நெல்லை நியூ ராயல் – 109 நாட்கள்
7. நாகர்கோவில் ஸ்ரீ லட்சுமி – 103 நாட்கள்
8. சேலம் ஓரியண்டல் – 130 நாட்கள்
9. வேலூர் ஸ்ரீ ராஜா – 105 நாட்கள்
10. காஞ்சி கண்ணன் – 100 நாட்கள்
11. ராமநாதபுரம் சிவாஜி – டூரிங் டாக்கீஸ் .. கீற்றுக் கொட்டகை – 100 நாட்கள்
12. மதுரை சென்ட்ரல் – 141 நாட்கள்
13. திருவனந்தபுரம் பத்மநாபா – 103 நாட்கள்
14. பெங்களூர் ஸ்டேட் சினிமா – 154 நாட்கள்
15. கொழும்பு கிங்ஸ்லி – 106 நாட்கள்
இது இல்லாமல் வெளியான திரையரங்குகளில் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 50 முதல் 84 நாட்கள் வரை ஓடியது.

தகவல் உபயம் – இதய வேந்தனின் வரலாற்றுச் சுவடுகள் மற்றும் ஆவணத் திலகம் பம்மலார்.

RAGHAVENDRA
30th September 2013, 08:24 AM
பாவ மன்னிப்பு – சிறப்புச் செய்திகள்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Rahim1-1.jpg


1. முதன் முதலாக கீற்றுக் கொட்டகையில் .. டூரிங் டாக்கீஸில் 100 நாட்கள் ஓடிய தமிழ்ப் படம்
2. சென்னை நகரில் முதல் முதலில் குளிர்சாதன திரையரங்கில் வெள்ளி விழாக் கண்ட படம். சென்னை சாந்தி திரையரங்கு திறக்கப் பட்டு வெளியான முதல் நடிகர் திலகத்தின் திரைப்படம்.
3. பாவ மன்னிப்பு பாட்டுப் போட்டி தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானதோடு, ஏராளமான விடைகள் பெறப் பட்டு சிறந்த பாடல் ரசிகர்களின் ஆதரவிற்கேற்றவாரு வரிசைப் படுத்தப் பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை சென்ட்ரல் திரையரங்கில் நடைபெற்ற விழாவில் பரிசுகள் வழங்கப் பட்டன. இது மட்டுமின்றி கிராமபோன் ரிகார்டு விற்பனையில் முந்தைய சாதனைகளை முறியடித்தது.
4. 1961ம் ஆண்டின் அகில இந்திய அளவில் சிறந்த படங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு நற்சான்றிதழ் பெற்றது.
5. தமிழ்த்திரையுலகில் முதன் முதலில் பலூன் மூலம் விளம்பரம் செய்யும் யுக்தி கடைப் பிடிக்கப் பட்டது பாவ மன்னிப்பு திரைப்படத்திற்குத் தான்
6. தெலுங்கில் பாப பரிஹாரம் என்று மொழி மாற்றம் செய்யப் பட்டு மாபெரும் வெற்றி பெற்றது.
7. வான வில் நாடகத்தில் நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்ந்து நடித்த தேவிகா, சிவாஜி ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற ஜோடி நடிகையாக தேவிகா திகழ அடித்தளம் இட்டதும் முதல் படமாக அமைந்த்தும் பாவ மன்னிப்பு.
8. ஒரே பிரேமில் நான்கு பரிமாணங்களில் சிவாஜியைத் தோற்றுவித்த சிலர் சிரிப்பார் பாடல் காட்சி, அக்காலத்தில் புதுமையாக்க் கருதப் பட்டது.
9. ஹிந்தியில் பின்னாளில் சஞ்சய் கான் நடிக்க சப் கா சாத்தி என்ற பெயரில் தயாரிக்கப் பட்டு பீம்சிங் இயக்கத்தில் வெளியானது.
10. அக்காலத்தில் கேரளத்தில் 100 நாட்கள் ஓடிய சில தமிழ்ப் படங்களில் பாவ மன்னிப்பு திரைப்படமும் ஒன்று
11. திராவக வீச்சினால் ஏற்பட்ட பாதிப்பில் முகம் சிதைந்து போன தோற்றத்தோடு ஒரு கதாபாத்திரம் திரையில் காட்டப் பட்டது முதன் முதலில் பாவ மன்னிப்பு படத்தில் தான்
12. அது வரை பல்வேறு திரைப்படங்களில் பாடியிருந்தாலும், பி.பி.ஸ்ரீநிவாஸ் என்கிற மிகச் சிறந்த பாடகரைத் தமிழ்த் திரையுலகில் பிரபலமாக்கியது காலங்களில் அவள் வசந்தம் பாடலே.
13. எல்லாவற்றிற்கும் மேலாக நடிக வேள் எம்.ஆர்.ராதா அவர்களின் வாழ்க்கையில் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக, அவருக்கு நிலையான புகழைப் பெற்றுத் தந்த வாய்ப்பாக அமைந்த்து பாவ மன்னிப்பு.

RAGHAVENDRA
30th September 2013, 08:31 AM
இதோ நம் அனைவரின் ஆவலையும் தீர்க்க ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷ அணிவகுப்பு


முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 5.3.1961


http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6496-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 5.3.1961


http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6519-1.jpg



முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 10.3.1961


http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6527-1.jpg


கார்த்திக் சார் ... தங்களுடைய ஆவல் ... பூர்த்தியாகி விட்டதா...

நன்றியை பம்மலாருக்கும் இதயவேந்தன் புத்தகத்திற்கும் தெரிவிப்போம்...

பாவ மன்னிப்பு நூறாவது நாள் மற்றும் வெள்ளி விழா விளம்பர நிழற்படம்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/PM100SJADSfw_zpsde8be7f1.jpg

RAGHAVENDRA
30th September 2013, 08:34 AM
1961ம் ஆண்டிற்கான தேசீய திரைப்பட விருதுகளில் பாவ மன்னிப்பு .. மிக மிக அரிய ஆவணம். நன்றி ... தேசீய திரைப்பட விருதுகள் இணையதளம். இணைப்பு http://iffi.nic.in/Dff2011/Frm9thNFAAward.aspx?PdfName=9NFA.pdf)

http://iffi.nic.in/Dff2011/9th_nff/9th_nff_1962_img_0.jpg
http://iffi.nic.in/Dff2011/9th_nff/9th_nff_1962_img_2.jpg
http://iffi.nic.in/Dff2011/9th_nff/9th_nff_1962_img_6.jpg
http://iffi.nic.in/Dff2011/9th_nff/9th_nff_1962_img_8.jpg

mr_karthik
30th September 2013, 01:35 PM
பாவமன்னிப்பு ஆவணப் புதையலை அள்ளித்தந்த ராகவேந்தர் சார் அவர்களுக்கும், பம்மலார் சார் அவர்களுக்கும், இதயவேந்தன் வரலாற்றுச்சுவடு இதழின் ஆசிரியர் கா. வந்தியத்தேவன் அவர்களுக்கும் மிக்க நன்றி.

தங்கள் அனைவரின் உழைப்பாலும் வரலாறு புதுப்பிக்கப் படுகிறது.

Gopal.s
30th September 2013, 02:42 PM
தங்கள் அனைவரின் உழைப்பாலும் வரலாறு புதுப்பிக்கப் படுகிறது.
வரலாறு புதுப்பிக்க படவில்லை. நினைவுறுத்த படுகிறது.

புதுப்பிக்க படுவது வேறொரு இடத்தில். 1956 இல் ஒரு படம் 150 திரையரங்குகளுக்கு மேல் 50 நாட்கள் ஓடியதாய்.. அன்று முதல் ரிலீசில் படங்கள் 35 திரையரங்குகளுக்கு மேல் வெளியானதே இல்லை.

RAGHAVENDRA
30th September 2013, 04:17 PM
1961ம் ஆண்டில் வெளிவந்த, நடிகர் திலகத்தின் புகழ்க் கிரீடத்தில் மற்றோர் வைரக்கல்லாக மின்னும் ...

புனர் ஜென்மம்

அடுத்ததாக...

RAGHAVENDRA
2nd October 2013, 09:16 PM
பாவ மன்னிப்பு ,,,, நிறைவு செய்யும் முன் ..

இது வரை இணையத்தில் அதிகம் தென்பட்டிராத தகவல் மற்றும் நிழற்படம்

இப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை உருவாக்க மெல்லிசை மன்னருக்குத் தேவைப்பட்ட காலம் ஆறு ஆண்டுகளும் 15 நாட்களும் ...

என்ன வியப்பாக உள்ளதா...

இப்படித் தான் மெல்லிசை மன்னர் கேட்கிறார்..

பாவ மன்னிப்பு பாடல் பதிவிற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன் ஒரு பாடலை கண்ணதாசன் எம்.எஸ்.வி.யிடம் தந்து ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பயன் படுத்திக் கொள்ள சொல்கிறார். அதை அப்படியே செய்வதாக சொல்லியிருந்தார் மெல்லிசை மன்னர். பாவ மன்னிப்பு படத்தில் ஒரு பாடலுக்கு வெகு நேரமாக யோசித்தும் மெட்டு புலப்படவில்லை. ஹார்மோனியத்தில் கண் வைத்தவாறு யோசனை செய்கிறார் மெல்லிசை மன்னர். கண்ணதாசன் ஆறு ஆண்டுகளுக்கு முன் தந்த பாடல் நினைவுக்கு வருகிறது. அப்பாடலை எடுத்து பார்க்கிறார். சிந்திக்கிறார்.

இரவு நேரங்களில் சாந்தோம் கடற்கரையிலிருந்து மீனவர்கள் முன்னிரவு நேரத்தில் ஏதோ ஒரு பாடலை பாடிய படி பொழுதைக் கழிக்கின்றனர். நெஞ்சை வருடிச் செல்லும் அந்த இனிய பாடல் அவருக்கு நினைவுக்கு வருகிறது. அதனை எண்ணிய படியே அப்போதைக்கு பாடல் பதிவு ஒத்திவைக்கப் படுகிறது. பிறகு மெல்லிசை மன்னர்கள் இருவரும் ஒரு ஆங்கிலப் படத்திற்கு செல்கின்றனர். திரைப்படம் துவங்கும் முன் ஆங்கிலப் பாடல் அல்லது இசை ஒலிக்கும். அன்று ஒலித்த அந்த இசையைக் கேட்டு அவர்கள் வியப்புறுகின்றனர். அந்த செம்படவர் பாடிய அதே மெட்டில் இந்த ஆங்கிலப் பாடல்... பொறி தட்டுகிறது...

மீண்டும் கவியரசரை அழைக்கிறார்கள். அமர்கிறார்கள். அந்த இரு ட்யூனின் அடிப்படை இனிமையினையும் மென்மையினையும் மட்டும் எடுத்துக் கொண்டு புதியதாக ஒரு மெட்டை உருவாக்குகிறார்கள். கவியரசர் பாடல் வரிகளை சொல்லச் சொல்ல எண்ணி 15வது நிமிடத்தில் பாடல் உருவாக்கம் முடிந்து விட்டது.

ஆறு ஆண்டுகள் 15 நிமிடங்கள் எடுத்துக் கொண்ட அப்பாடல் எது ... தெரியுமா...

விடையைச் சொல்ல முயலுங்கள். அது வரை இந்த அபூர்வமான நிழற்படத்தைப் பார்த்துக் கொண்டிருங்கள்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/ppfeb61msvtkrtroupefw_zpsbd5b4ace.jpg

rajeshkrv
3rd October 2013, 02:34 AM
Athan ennathan avar ennaithaan padal thaan sir

Subramaniam Ramajayam
3rd October 2013, 05:29 AM
Athan ennathan avar ennaithaan padal thaan sir

Is it KALANGALEL AVAL VASANTHAM;; my guess.

RAGHAVENDRA
4th October 2013, 08:01 AM
ராஜேஷ்,
இச்செய்தியைத் தாங்கள் முன்பே அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். சரியான விடையைச் சொல்லி விட்டீர்கள். பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
4th October 2013, 08:02 AM
Sivaji Ganesan Filmography Series
68. புனர் ஜென்மம் PUNAR JENMAM

தணிக்கை 17.04.1961
வெளியீடு 21.04.1961

தயாரிப்பு – விஜயா பிலிம்ஸ்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி, கே.ஏ.தங்கவேலு, ராகினி, டி.ஆர்.ராமச்சந்திரன், கண்ணாம்பா, எம்.ஆர்.சந்தானம், சுந்தரிபாய், சாயிராம், பக்கிரிசாமி, புளிமூட்டை ராமசாமி மற்றும் பலர்
தயாரிப்பு – என்.எஸ். திரவியம், விஜயா பிலிம்ஸ்
சங்கீதம் – டி.சலபதிராவ்
துணை டைரக்டர் – கே.எம். நாராயணன்
திரைக்கதை வசனம் – ஸ்ரீதர்
கலை – கங்கா
ஒளிப்பதிவு டைரக்ஷன் – ஏ.வின்சென்ட்
ஒளிப்பதிவு – பி.என். சுந்தரம்
மேக்கப் – ஹரிபாபு, தனக்கோடி, திருச்சி முத்து
நடன ஆசிரியர்கள் – ஹீராலால், மாதவன், ஸோஹன்லால்
ஒலிப்பதிவாளர்கள் – ஏ.கிருஷ்ணன், வி.சிவராம் – வாஹினி, டி.எஸ்.ரங்கசாமி – மெஜஸ்டிக், ஜீவா – அருணாச்சலம் ஸ்டூடியோ
ரிக்கார்டிஸ்ட் – டி..ஏ.ஜகன்னாதன், வாஹினி
பிராசஸிங் – விஜயா லேபரட்டரி – எஸ்.ரங்கநாதன்
செட்டிங்ஸ் – குப்புசாமி, டி..நீலகண்டன், கே.சீனிவாசன்
உடைகள் – பி.ராமகிருஷ்ணன்
ஸ்டில்ஸ் – திருச்சி அருணாச்சலம்
விளம்பரம் – எலிகண்ட் பப்ளிசிட்டீஸ்,
டிசைன்ஸ் - கே.நாகேஸ்வர ராவ், பக்தா
தயாரிப்பு நிர்வாகம் – ஏ.வி. சுந்தரம்
நிர்வாகம் – பி.எம்.ராமசாமி
எடிட்டிங் – பி.வி. நாராயணன்
ஸ்டூடியோ – விஜயா - வாஹினி

டைரக்டர் – ஆர்.எஸ். மணி

RAGHAVENDRA
4th October 2013, 08:04 AM
பாடல்களின் விவரம்


1. நானில்லை என்றால் ஆட்டமில்லை – கவிஞர் கண்ணதாசன் – சீர்காழி கோவிந்தராஜன், ஜானகி, சரசுவதி
2. எங்கும் சொந்தமில்லை – சுப்பு ஆறுமுகம் – பி.பி. ஸ்ரீநிவாசன்
3. மனம் ஆடுது ஆடுது – அ. மருதகாசி – ஜிக்கி, ஜானகி
4. உருண்டோடும் வாழ்வில் – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் – சுசீலா
5. கண்ணாடிப் பாத்திரத்தில் கல்லேறு பட்டது போல் – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் – சுசீலா
6. போதும் சரிதான் மிஸ்டர் – சுப்பு ஆறுமுகம் – பி.பி.ஸ்ரீநிவாசன், ஜிக்கி
7. என்றும் துன்பமில்லை – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் – டி.எம். சௌந்தர்ராஜன்
8. உள்ளங்கள் ஒன்றாகி – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் – சுசீலா, ராஜா
9. என்றும் துன்பமில்லை – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் - சுசீலா

RAGHAVENDRA
4th October 2013, 08:05 AM
ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து விளம்பர நிழற்படங்கள்



பொக்கிஷப் புதையல் : முதல் வெளியீட்டு விளம்பரங்கள்


The Hindu : 21.4.1961

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/PJ1-1.jpg

சுதேசமித்ரன் : 28.4.1961

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5732-1.jpg

குறிப்பு:
சென்னை மற்றும் தென்னகமெங்கும் பல அரங்குகளில், 50 நாட்கள் முதல் 63 நாட்கள் வரை ஓடிய "புனர்ஜென்மம்", ஒரு ஹிட் காவியம்.

RAGHAVENDRA
4th October 2013, 08:14 AM
புனர் ஜென்மம் சிறப்புச் செய்திகள்

1. நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த Subtle நடிப்பிற்கு மற்றுமோர் உதாரணம், புனர் ஜென்மம்.

2. ஸ்ரீதரின் வசனங்கள் புனர் ஜென்மம் படத்திற்கு மற்றுமோர் பலம். தன் தாயைப் பற்றி உணர்ந்து பிறகு மனம் வருந்தி நடிகர் திலகம் பேசும் வசனம் அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமானது. எனக்கு ஒரு நல்ல தாயைக் கொடுத்த இறைவன், உனக்கு ஒரு நல்ல மகனைக் கொடுக்கத் தவறி விட்டானே என்ற வசனம் காஸினோ தியேட்டரில் அமர்க்களமான வரவேற்பைப் பெற்றது. அதுவும் அந்த வசனத்தை நடிகர் திலகம் பேசும் போது அதில் உள்ள அந்த ஜீவன், அந்த வேதனை, தாயைப் பற்றிய அருமையை அறிந்த பின் ஏற்படும் உணர்வு, என்றென்றும் மறக்க முடியாததாகும். இதனை விளம்பரத்திலும் குறிப்பிட்டிருந்தார்கள். அந்த விளம்பர நிழற்படம் நமது அருமை பம்மலார் தயவால் நமக்குக் கிடைத்து மேலே தரப் பட்டுள்ளது. அவருக்கு மிக்க நன்றி

3. பத்மினி சிவாஜி - கன்னத்தில் அறையும் காட்சி மிகவும் பிரசித்தம் மிகவும் சிறப்பான காட்சியாக அமைந்து விட்டது.

4. நடிகர் திலகத்தின் படங்களில் சுப்பு ஆறுமுகம் எழுதிய ஓரிரு படங்களில் ஒன்று. என்றும் துன்பமில்லை பாடலை பட்டுக்கோட்டையார் எழுத, எங்கும் துன்பமில்லை என்ற பல்லவியுடன் தொடங்கும் பாடலை சுப்பு ஆறுமுகம் எழுதியுள்ளார் என பாட்டுப் புத்தகம் கூறுகிறது.

5. ஏ.எம்.ராஜா, டி.எம்.எஸ்., பி.பி.ஸ்ரீநிவாஸ் மூவருமே இப்படத்தில் நடிகர் திலகத்திற்குப் பின்னணி பாடியுள்ளனர்.

RAGHAVENDRA
4th October 2013, 08:21 AM
சலபதி ராவ் அவர்களின் இசையமைப்பில் புனர் ஜென்மம் திரைப்படத்தின் பாடல்கள் காலத்தை வென்று இன்றும் ஹிட்டாக ஒலித்துக் கொண்டுள்ளன.

உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதிலே பாடலை எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காது. இப்பாடலி்ல் நடிகர் திலகம் பத்மினி இளமை துள்ளும் கெமிஸ்ட்ரி, காதல் பாடல்களுக்கு ஓர் எடுத்துக் காட்டு. கோபால் சாரின் ஆய்வில் நிச்சயம் இடம் பெறும் என்பது என் நம்பிக்கை.

http://youtu.be/Z8f3IAZ3GY0

RAGHAVENDRA
4th October 2013, 03:51 PM
புனர் ஜென்மம் படத்தின் சிறப்புகளுள் ஒன்று என்றும் சொந்தமில்லை பாடலாகும். இரண்டு மூன்று முறை படத்தில் இடம் பெறும். ஒரு முறை இப்பாடல் பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்களின் குரலில் ஒலிக்கும். அதன் காணொளி இதோ

http://youtu.be/aGW8Bzl3Akg

RAGHAVENDRA
4th October 2013, 04:04 PM
துள்ளிக் குதித்து ஓடி வருவதாகப் படித்திருக்கிறோம். ஆனால் நடையிலேயே துள்ளலைக் காண்பித்த மனிதர் நடிகர் திலகம். லட்சக் கணக்கான முறை பார்த்தாலும் கூட மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் பாடல் காட்சி. அந்த கருப்புக் கண்ணாடியுடன் அந்தப் பாலத்தின் கைப் பிடிச்சுவரில் அவர் அமர்ந்தவாறே பாடுவதைக் காணக் கண் கோடி வேண்டும். நீங்களும் பாருங்கள்.

http://youtu.be/FEjfMal_UvY

RAGHAVENDRA
4th October 2013, 04:07 PM
இசையரசியின் குரலில் என்றும் துன்பமில்லை பாடல் உயிர்த்தெழுவதைக் கேளுங்கள், பாருங்கள்.

http://youtu.be/EHjFCXZp6dc

RAGHAVENDRA
4th October 2013, 04:09 PM
திருச்சி லோகநாதன், ஜிக்கி குரல்களில் இதுவும் சூப்பர் ஹிட் பாடலாக்கும்

http://youtu.be/pN84Ejxyv1E

RAGHAVENDRA
4th October 2013, 04:14 PM
காலத்தைக் கடந்து நிற்கும் இசையரசியின் பாடல்களில் இது குறிப்பிடத் தக்கதாகும்

http://youtu.be/uWUd1yaV6fU

mr_karthik
5th October 2013, 12:36 PM
டியர் ராகவேந்தர் சார்,

புனர்ஜென்மம் பற்றிய தகவல்கள், விளம்பர ஆவணங்கள், பாடல்களின் வீடியோ அனைத்துக்கும் மிக்க நன்றி.

இப்படத்தை முதன்முதலில் பார்த்தது மைலாப்பூர் காமதேனு தியேட்டரில் 1973 மறு வெளியீட்டின்போது. அப்போதுதான் வசந்தமாளிகை சக்கைபோடு போட்டு முடிந்திருந்த நேரம். அதனால் புனர்ஜென்மம் போஸ்ட்டர்களில் 'நடிகர்திலகத்தின் கடந்தகால வசந்தமாளிகை' என்று விளம்பரப்படுத்தியிருந்தனர். 1961-ல் பாவமன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும் என்ற முப்பெரும் 'பா'க்களின் நடுவில் சிக்கி தவித்த படங்களில் இதுவும் ஒன்று. இன்னொன்று 'எல்லாம் உனக்காக'.

பீம்சிங் நடிகர்திலகத்தை அருமையான கௌரவமான ரோல்கள் கொடுத்து அற்புதமாக மோல்டு பண்ணிக்கொண்டு வந்துகொண்டிருந்த வேளையில் இதுபோன்ற பொறுப்பில்லாதவன், குடிகாரன், ஊதாரி போன்ற ரோல்களில் அவரை காண்பித்தது ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் பிடிக்கவில்லை. அதனால் கௌரவமான ஒரு வெற்றியை பெற முடியவில்லை.

முதன்முதலில் 'உள்ளங்கள் ஒன்றாகி' பாடலைக் கேட்டபோது, அது ஏ.எம்.ராஜா குரலில் இருந்ததால் ஜெமினி கணேசனின் ஏதோ ஒரு படத்தில் என்று நினைத்திருந்தேன். பின்னர் வானொலியில் படத்தின் பெயரோடு கேட்டபோதுதான் 'அடடே, நம்ம தலைவர் படம்' என்று குதூகலித்தேன். (இதேபோல் ஏமாந்த இன்னொரு பாடல் 'இடை கையிரண்டில் ஆடும்' - விடிவெள்ளி).

புனர்ஜென்மம் நடிகர்திலகம், கண்ணாம்பா, பத்மினி ஆகியோரின் சிறந்த நடிப்பில் உருவான நல்ல படம். (இப்படத்துடன் பத்மினிக்கு நடிகர்திலகத்துடன் முதல் இன்னிங்க்ஸ் முடிந்தது என்று நினைக்கிறேன். திருமணம் செய்துகொண்டு அமெரிக்கா போய்விட்டார். இரண்டாவது இன்னிங்க்ஸ் சரஸ்வதி சபதம் (ஜோடியில்லாமல்), பேசும் தெய்வம் (ஜோடியாக) என்று தொடர்ந்து 'லட்சுமி வந்தாச்சு' வரை நீடித்தது)....

Subramaniam Ramajayam
6th October 2013, 10:20 AM
PUNARJENMAM..... collections very nice. Grand music with melodious songs coupled with fine performances of NT PADMINI and kannamba made the film a memorable one
unfortunately it has not acheived expected level of success rate. for me it is always a great movie. bradway madras attracted huge ladies crowds till closing day.

RAGHAVENDRA
6th October 2013, 11:22 PM
கார்த்திக் சார், தங்கள் பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி. புனர் ஜென்மம் பற்றிய தங்கள் கருத்துக்கள் புதிய தலைமுறை இதுவரை அறிந்திராத செய்தியாயிருக்கும். இது போல் நம்முடைய நினைவுகளை அந்தந்தப் படங்களின் போது பகிரந்து கொள்வது மிகவும் பயனுள்ளதாயும் ஸ்வாரஸ்யமாயும் இருக்கும்.

தொடர்வது காலத்தால் அழியாத பாசமலர்

RAGHAVENDRA
6th October 2013, 11:23 PM
Sivaji Ganesan Filmography Series

69. பாச மலர் Pasa Malar

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/jjj.jpg

வெளியீடு – 27.05.1961
தயாரிப்பு – கே.மோகன், எம்.ஆர்.சந்தானம் – ராஜாமணி பிக்சர்ஸ்
கதை – கே.பி. கொட்டாரக்கரா
திரைக்கதை – ஏ. பீம்சிங்
வசனம் – ஆரூர்தாஸ்
இசை – விஸ்வநாதன் – ராம்மூர்த்தி
ஒளிப்பதிவு – ஜி. விட்டல் ராவ்
ஸ்டூடியோ – நெப்டியூன்
பாடல்கள் – கண்ணதாசன்
பாடியவர்கள் – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ், பி.சுசீலா, எம்.எஸ்.விஸ்வநாதன், கே. ஜமுனா ராணி, எல்.ஆர்.ஈஸ்வரி,
இயக்கம் – ஏ. பிம்சிங்

நடிக நடிகையர் –
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, எம்.என்.ராஜம், எம்.என்.நம்பியார், கே.டி.சந்தானம், கே.ஏ.தங்கவேலு, பி.எஸ்.ஞானம், எம்.சரோஜா, சுகுமாரி, மற்றும் பலர்
பாடல்கள் –
1. மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் – டி.எம்.சௌந்தர்ராஜன்
2. எங்களுக்கும் காலம் வரும் – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா கோரஸ்
3. யார் யார் அவள் யாரோ – பி.பி.ஸ்ரீநிவாஸ், பி.சுசீலா
4. பாட்டொன்று கேட்டேன் – கே.ஜமுனா ராணி கோரஸ்
5. வாராயென் தோழி – எல்.ஆர்.ஈஸ்வரி கோரஸ்
6. மயங்குகிறாள் ஒரு மாது – பி.சுசீலா
7. மலர்ந்தும் மலராத – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
8. அன்பு மலர் ஆசை மலர் – எம்.எஸ். விஸ்வநாதன்ட
9. தங்கை உயிர் எண்ணி – டி.எம்.சௌந்தர்ராஜன்

RAGHAVENDRA
6th October 2013, 11:24 PM
'பாசமலர்' வெள்ளிவிழா கேடயம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sh.jpg

RAGHAVENDRA
6th October 2013, 11:25 PM
ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து விளம்பர நிழற்படங்கள்



நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்

பாசமலர்

பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்

'இன்று முதல்' விளம்பரம் : தினமணி : 27.5.1961

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5936-1.jpg

50வது நாள் விளம்பரம் : The Hindu : 15.7.1961

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5937-1.jpg


[நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஒரு மிகப் பெரிய ஹீரோ, தான் கதாநாயகனாக நடிக்கும் ஒரு திரைக்காவியத்தில் - அதுவும் கிட்டத்தட்ட தனது சொந்த தயாரிப்பு போன்ற ஒன்றின் - 50வது நாள் விளம்பரத்தில், Stamp-Sizeசில் கூட தனது புகைப்படத்தை வெளியிட்டுக் கொள்ளாமல், அக்காவியத்தில் நடிக்கும் மற்ற இரண்டு முன்னணி நட்சத்திரங்களின் புகைப்படத்துடன் மட்டும் கூடிய ஒரு 50வது நாள் விளம்பரத்தை அளிக்க முடியுமா..?! 'அது என்னால் மட்டுமே முடியும்' என நிரூபித்தவர், பெருந்தன்மையின் மறுவடிவமான நமது நடிகர் திலகம்..! மேற்காணும் "பாசமலர்" 50வது நாள் விளம்பரமே அதற்கு சரியான சான்று..! ஈரேழு பதினான்கு லோகங்களிலும் நடிகர் திலகத்தை போன்ற ஒரு பெருந்தன்மையான, விட்டுக்கொடுக்கும் குணம் கொண்ட ஒரு அதியற்புத மனம் படைத்தவர் எவருமில்லை..!]



75வது நாள் விளம்பரம் : The Hindu : 9.8.1961

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5938-1.jpg

100வது நாள் விளம்பரம் : தினமணி : 3.9.1961

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5939-1.jpg

வெள்ளிவிழா விளம்பரம் : The Hindu : 11.11.1961

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5942-1.jpg

வெள்ளிவிழா விளம்பரம் : தினத்தந்தி : 14.11.1961

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5941-1.jpg

'வெள்ளிவிழா கொண்டாட்ட' விளம்பரம் : The Hindu : 17.11.1961

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5943-1.jpg

26வது வார [176வது நாள்] விளம்பரம் : The Hindu : 18.11.1961

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5944-1.jpg



குறிப்பு:
அ. மெகாஹிட் காவியமான "பாசமலர்", வெள்ளிவிழா மற்றும் 100 நாள் விழா கொண்டாடிய திரையரங்குகள்:
1. சென்னை - சித்ரா - 176 நாட்கள்
2. சென்னை - கிரௌன் - 132 நாட்கள்
3. சென்னை - சயானி - 118 நாட்கள்
4. மதுரை - சிந்தாமணி - 164 நாட்கள்
5. திருச்சி - ஸ்டார் - 164 நாட்கள்
6. கோவை - ராயல் - 118 நாட்கள்
7. சேலம் - பேலஸ் - 105 நாட்கள்
8. வேலூர் - நேஷனல் - 105 நாட்கள்
9. பெங்களூர் - ஸ்டேட்ஸ் - 100 நாட்கள்
10. கொழும்பு - கிங்ஸ்லி - 110 நாட்கள்

ஆ. சென்னை 'சித்ரா' திரையரங்க வரலாற்றிலேயே, வெள்ளிவிழா கொண்டாடிய தமிழ்த் திரைப்படங்கள் இரண்டு:
1. பாசத்திலகத்தின் "பாசமலர்(1961)".
2. கலைநிலவு ரவிச்சந்திரன் கதாநாயகனாக நடித்த "நான்(1967)".

இ. "பாசமலர்", பெங்களூரிலும், இலங்கையிலும் தாமதமாக வெளியாகி 100 நாள் விழாக் கொண்டாடியது.

ஈ. இக்காவியம், தீபாவளித் திருநாளான 7.11.1961 அன்று வெளியான தீபாவளித் திரைப்படங்களுக்காக, மதுரையிலும், திருச்சியிலும் நூலிழையில் வெள்ளிவிழாவைத் தவறவிட்டது.

உ. முதல் வெளியீட்டின் அத்தனை பிரிண்டுகளும் 50 நாட்களும் அதற்கு மேலும் ஓடி இமாலய வெற்றி.

ஊ. 1961-ம் ஆண்டில், தமிழ் சினிமா பாக்ஸ்-ஆபீஸில், இரண்டாவது அதிக வசூல் ஈட்டிய திரைக்காவியம் "பாசமலர்". 1961-ல், வசூல் சாதனையில், முதல் இடத்தைப் பிடித்த திரைக்காவியம் நமது நடிகர் திலகத்தின் "பாவமன்னிப்பு".

எ. ஒரே ஆண்டில்(1961) வெளியான ஒரு கதாநாயக நடிகரின் இரு காவியங்கள்["பாவமன்னிப்பு", "பாசமலர்"], இரண்டுமே அந்தக் காலண்டர் ஆண்டிலேயே - அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பருக்குள் - பெரிய திரையரங்குகளில், ரெகுலர் காட்சிகளில் வெள்ளிவிழாக் கண்ட பெரும்பெருமை தமிழ்த் திரையுலக வரலாற்றிலேயே நமது நடிகர் திலகத்துக்கும் அவர்தம் காவியங்களுக்கும் மட்டுமே சொந்தம். இதே ரக சாதனையை 1983-ல் "நீதிபதி", "சந்திப்பு" திரைக்காவியங்களின் மூலம் மீண்டும் நமது நடிகர் திலகம் நிகழ்த்திக் காட்டியிருந்தாலும், "நீதிபதி", ரெகுலர் காட்சிகளில் வெள்ளிவிழாக் கண்டது மதுரை 'மினிப்ரியா'வில். எனவே, 1961 காலண்டர் வருடத்தில். "பாவமன்னிப்பு" மற்றும் "பாசமலர்" காவியங்களின் வெள்ளிவிழா சாதனை தமிழ் சினிமாவிலேயே யாருமே செய்யாத தனிப்பெருஞ்சாதனை.

ஏ. ஒரே ஆண்டில் வெளியான இரு காவியங்கள், இரண்டுமே வெள்ளிவிழா, என்கின்ற இமாலய சாதனையை 1959-க்குப்பின் மீண்டும் 1961-ல் நிகழ்த்திக் காட்டினார் நமது நடிகர் திலகம். இதே சாதனையை மேலும் 4 முறையும்[1972, 1978, 1983, 1985] நிகழ்த்தியுள்ளார்.

ஐ. தமிழ்த் திரையுலகில், முதல்முறையாக, ஒரே ஆண்டில் வெளியான ஒரு கதாநாயக நடிகரின் மூன்று காவியங்கள், ஒவ்வொன்றும், முதல் வெளியீட்டில் முழுவதும் ஓடி முடிய, முக்கால் கோடி ரூபாய்க்கு மேல் [75 லட்ச ரூபாய்க்கு மேல்] வசூலைக் குவித்தது 1961-ல் தான். அந்த மூன்று காவியங்கள் : "பாவமன்னிப்பு", "பாசமலர்", "பாலும் பழமும்"; அந்தக் கதாநாயகன் : நமது பாசத்திலகம்.




சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்துக்கு நிரந்தர சக்கரவர்த்தி
சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே..!!

RAGHAVENDRA
6th October 2013, 11:31 PM
1961ம் ஆண்டிற்கான தேசீய திரைப்பட விருதுகளில் சிறந்த மாநில மொழிப் படங்களுக்கான விருதுகளில் இரண்டு படங்கள் நடிகர் திலகம் நடித்தவை. பாச மலர் மற்றும் கப்பலோட்டிய தமிழன். .. மிக மிக அரிய ஆவணம். நன்றி ... தேசீய திரைப்பட விருதுகள் இணையதளம். இணைப்பு http://iffi.nic.in/Dff2011/Frm9thNFAAward.aspx?PdfName=9NFA.pdf)

http://iffi.nic.in/Dff2011/9th_nff/9th_nff_1962_img_0.jpg

http://iffi.nic.in/Dff2011/9th_nff/9th_nff_1962_img_4.jpg

http://iffi.nic.in/Dff2011/9th_nff/9th_nff_1962_img_27.jpg

http://iffi.nic.in/Dff2011/9th_nff/9th_nff_1962_img_28.jpg

RAGHAVENDRA
7th October 2013, 08:05 AM
பாச மலர் திரைப்படத்திற்கென தனியே உள்ள தலைப்பிற்கான இணைப்பு

http://www.mayyam.com/talk/showthread.php?10284-Paasa-Malar-for-Human-Values

RAGHAVENDRA
7th October 2013, 08:07 AM
பாச மலர் திரைக் காவியத்தைப் பற்றி நமது நண்பர்களின் பதிவுகள்

மோஹன் ரங்கன் 2008ல் எழுதியது



PAASA MALAR

Rajamani Pictures – Released in 1961.

Produced by M.R. Santhanam (Actor, director Santanabharathy’s father. He also plays Thangavelu’s father-in-law character in the film) & K.Mohan (Mohan Arts – a famous cine banner artist company)
Story : Kottarakkara ; Cinematography : G. Vittal Rao
Dialogues : Aroordas
Music : Viswanathan & Ramamurthy
Playback singers : T.M. Sounderarajan, P. Susheela, P.B. Srinivas, Jamuna Rani & L.R.Eswari

Screenplay – Direction : A. Bhimsingh

CAST :

Nadigar Thilagam Sivaji Ganesan, Nadigayar Thilagam Savithri, Gemini Ganesh, M.N. Nambiar, K.A. Thangavelu, M.N. Rajam, B.Saroja, P.S. Gnyanam & others


[html:507fcb69e9]

[/html:507fcb69e9]



First of all I don’t know from where I got the guts to even start to write about this great classic. Many of my senior hubbers here possess great knowledge about NT & this film whereas I start to write about this film just for one reason – I LOVE THIS FILM and I wanted to share it with everybody. So, if you find any mistakes (obviously you would find many) please forgive me and don’t hesitate to highlight the same.

BRIEF STATISTICS ABOUT NT WITH REGARDS TO THIS FILM : NT was born in 1928. So, he was just 33 years old during the release of Paasa Malar !!!. But amazingly, it was is 69th film !!! (Parasakthi was released in 1951) ; 68 films in just 9 years !!! The role of Rajasekar demands abundant acting skills. Fortunately, it fell into the golden hands of a young & talented Sivaji Ganesan, and the rest is history.

MY EXPERIENCE : Recently also saw it in DVD for the nth time and it never failed to induce the same magic as it would do for every viewing. First time I saw it in theatre (re-release, of course) when I was in my early twenties. I was cautioned by some well wishers !!! that it’s an அழுமூஞ்சி film, and that the audience come out of theatre with a wet hand kerchief. But, ignoring those scare mongers, I went on to watch the film, purely because of my penchant for black & white film, especially that of NT’s. I was contented with the film, though I failed to notice the nuances. But upon repeated viewing over the years, I will confidantly proclaim that Paasa Malar is on of THE BEST tamil films ever made. It’s a master-piece, a classic, a cult film….and what not ???

STORY : The story, which is neatly woven with all the required emotional intricacies, is about a brother & sister who lived and sacrificed their lives for each other. This significant factor is well established in the very beginning itself by showing a statuette of a boy affectionately hugging his sister in his arms. The children, Raju & Radha played (lived, to be precise) by two great actors, Nadigar Thilagam Sivaji Ganesan & Nadigayar Thilagam Savithri become orphans after losing their mother. After they grow, Raju becomes a worker in a mill and his sister helps him at home and they live happily. One day, Anandan (played by Gemini Ganesan), also working in the same mill, saves Radha from a mishap. This largely impresses Raju and they both become good friends. Meanwhile, Anandan is attracted towards Radha and also manages to win her heart. Anandan is a self-made person and can never take things for granted when it comes to his self-respect. He sort of carry revolutionary ideas laced with communism, whereas, Raju is more self-centered and lives only for the welfare of his sister. Though they are poles apart in their ideologies, they remain to be good friends.

At one point of time, Anandan, who lives with his aunt & her son Chengalvarayan (played by K.A. Thangavelu), leaves the town to attend a family litigation. During this short period Raju & Radha become rich. Yes, the mill owner, who is very much impressed by Raju’s diligence & sincerity, requests him to take over his mill. Though, initially Raju hesitates later gets ready for the challenge and through his commendable hard-working nature increased the profit column in his balance sheet.

When Anandan returns, he feels happy for his friend and goes to meet him in his office and asks for a job in the same mill. Raju is hesitant for a while (in,fact he doesn’t like this proposal at all) but concedes to Anand’s obligation later.

After a series of events, Anandan weds Radha with everybody’s consent & Raju gets married to Nambiar’s sister M.N.Rajam. Anand comes to live in Raju’s house alongwith his aunt & cousin, as requested by Raju. Now, fate plays spoil sport in the form of Aandan’s “athai”. This old lady, (excellent portrayal by Smt.P.S.Gnyanam – no way she would have escaped from the wrath of each & every audience in those days) always sounds scornful & obnoxious. She cunningly hatches a series of plots against Raju & Radha and is a major source to cause a big rift between the two. She succeeds in her evil deeds and separate the families. Unknowingly, Anandan becomes a scapegoat for all her actions.

Meanwhile, Raju is gifted with a boy & Radha, with a girl. Raju’s wife leaves abroad to continue her higher studies. Living without his sister causes great pain to Raju, so he transfers his entire property and without a word to anyone, leaves for pilgrimage with his son and a loyal servant. Upon knowing this, Radha too falls in deep despair.

After a few years, Raju returns completely shattered both physically & morally. Unfortunately he meets with a fire accident in the process of saving a child, who incidentally happened to be his sister’s daughter. Raju loses his eyesight. When Raju & Radha meet finally, the restrained love and affection that has been suppressed for all these years, gushes out.

Now comes one of the most moving and emotional climax tamil film has ever seen. Every aspect like performance, dialogues, music & direction will be appropriately blended in a fine manner.

As the two noble souls exhange their love and affection for each other, Raju, in a moment of frenzy, gets up and jumps in joy. As he is already in a battered form, this over-excitement of his, results in a series of strong convulsions and the great man falls down leaving his last breath. Radha is shell shocked after seeing her loving brother falling dead in front of her eyes, also falls by his side and follows him to heaven.

DIALOGUES : Dialogues by Aroordas played a very significant role in this film and is truly praiseworthy. Not pure Senthamizh dialogues, just simple, yet powerful ones that penetrates deep into your hearts, builds a throne, and sits there majestically. Especially the one’s which comes in the climax – even the most stone hearted person can’t help but break down. To savour a few of them….

எத்தனையோ வீட்ல விளக்கேத்திவச்ச உங்களுக்கா இந்த உலகம இருட்டாயிடுச்சி. அண்ணா வைரம் போல ஜொலிச்சு விரோதியையும் வசீகரிக்கக் கூடிய உங்க கண்ணு எங்கே நீங்க மௌணமா இருந்தாலும் ஆயிரமாயிரம அன்புக் கதைகளை எனக்குச் சொல்லுமே அந்த அழகுக் கண்கள் எங்கேண்ணா..

உன்னையும் என்னையும் எந்த விதி பிரிச்சுதோ அதே விதிதாம்மா என் கண்ணையும் பரிச்சுது.

..அப்போ உனக்கு ஒரு வயசு, சின்னக் குழந்த, எனக்கு பத்து வயசு. நீ அழுதுகிட்டே இருப்ப, உன்ன என் மடியிலேயே உக்கார வச்சிகிட்டு கைவீசம்மா கைவீசு, கடைக்கி போகலாம் கைவீசு முட்டாய் வாங்கலாம கைவீசு.


உன் பேர் என்னம்மா, சாந்தி - வாழ்க்கையில எனக்கு கிடைக்காதத உங்கம்மா உனக்கு பேரா வெச்சிருக்காளா

My eyes are filled with tears even as I write this…I’ve even heard that the cameraman, while shooting the climax, dropped the camera and broke down after watching the splendid performance by both the NT’s.

SONGS :

1) Anbu malar, aasai malar : A short song during the title which helps you to prepare yourself for the journey

2) Malargalaippol thangai : Evergreen classic.

3) Engalukkum kaalam varum

4) Yaar yaar yaar aval yaaro

5) Paattondru kaetten

6) Vaarayen thozhi :

7) Mayangugiraal oru maadhu

8) Malarndhum malaraadha : I feel a lump in my throat even as I just utter the first few lines of this song……” Siragil enai moodi arumai magal pola valartha kadhai sollava, kanavil ninayadha kaalam idai vandhu piritha kadhai sollava…..” (VR, Susheela amma, Kaviyarasar & NT Savithri amma – just no words to explain my feelings…)
“ Kannin mani pola maniyin nizhal pola kalandhu thirindhomada, indha mannum kadal vaanum vandhu maraithalum pirikka mudiyaadhada..”


SCENES THAT DESERVE SPECIAL MENTION : I might have missed out many other great scenes, but giving a few that warrants special mention.

1) The scene where Anandan alongwith a few workers, confronts with Raju in his cabin. The way in which Raju deftly ignores Anandan & his team is a treat to watch. NT at his best.
2) Anandan comes to greet Radha on her birthday and is caught by Raju. The wordy dual flames up and ends up in an exchange of blows in a closed room. One terrific scene indeed, where you can find a raging NT losing his temper and at the same time maintaining his status as well.
3) The garden scene, where NT happens to over hear the conversation between Gemini & Savithri
4) The scene where Nambiar objects NT for giving away his entire property to his sister. In split seconds his facial expressions will change and shoot at Nambiar saying, “ Mr Bhaskar, idhu en soththu vishayam sondha vishayam….” Class.
5) My favourite climax scene. Just see it, to get dissolved in it.

To conclude, let me say PAASA MALAR is a rare gem in the crown of Tamil Cinema.

In the process of glorifying the film, I have made it as a very lengthy post. Thanks for one and all who have read this patiently.


பதிவு செய்த நாள் - 16.06.2008

பதிவிற்கான இணைப்பு - http://www.mayyam.com/talk/showthrea...l=1#post304273

RAGHAVENDRA
7th October 2013, 08:09 AM
மோஹன் ரங்கன் பதிவிற்கு பிரபுராம் அவர்களின் இணைப் பதிவு


Very good post rangan_08. The extent to which you enjoyed the film is evident in the post. I owe the film a revisit as I am able to recall only a subset of the best-scenes you mention.

Quote Originally Posted by Shakthiprabha
What I did not digest was IMPRACTICABLE love between sis and bro. It overrides any other passion or love. I mean ONCE u marry off ur sister, atleast in olden days, where joint family system prevailed, its better off to keep a distance and shower MORE LOVE. I felt technically those 2 characters lacked reality.
This doomed nature of the relationship makes it all the more attractive.

There is fantastic poem by AK Ramanujan titled "Love Poem to a Wife".

It starts with the most romantic lines :

“Really what keeps us apart at the end of years
is unshared childhood.”

I can't imagine a better line that captures the truth of that statement. The poet.narrator's wife is easily the most important person in his life (and he in hers). And over the years this will go on to be the case more and more. But none of that will change the fact they did spend an important part of their lives without knowing each other existed. What more they spent it with companions one will feel justifiably envious over.

The poem itself is presented over an evening where his wife and her brother discuss the details of their childhood home. The narrator and his sister-in-law (wife'e brother's wife) watch on mutely as the most important person in their life shares a passionate memory with someone else than themselves.
It a fantastic moment not without a natural gnawing jealousy borne out of love.

The poem proceeds to use rather controversial allegories but it is employed beautifully. So I won't quote further....thEdi padichikkOnga

Anyway I digress..... I present this poem as an example not just of a relationship doomed by a combination of precticality and present social mores. That is exactly what makes it beautiful in this film IMO.

Their separation is eventual so they should have met it with moderation and dignity - is all easier said than done. Appidi paarthA even death is eventual - can it be faced with equanimity ?

The bricks and canes are not for you, it is only for the notion that relationships can always be guided by logic.

பிரபு ராம் அவர்களின் பதிவிற்கான இணைப்பு http://www.mayyam.com/talk/showthread.php?6549-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-4&p=304281&viewfull=1#post304281

RAGHAVENDRA
7th October 2013, 08:11 AM
தினத் தந்தி நாளிதழில் சனிக்கிழமை தோறும் இடம் பெறும் முத்துச் சரம் பகுதியில் ஆரூர்தாஸ் அவர்களின் தொடரில் 08.06.2013 அன்று பாச மலர் திரைப்படம் உருவானதைப் பற்றி வெளிவந்துள்ள கட்டுரை


கடற்கரையில் உருவான காவியம்

பாசமலருக்கு வசனம் எழுதும் என் பணி ஆரம்பமாகியது.

‘எங்கே வைத்து எழுதுகிறீர்கள்?, எந்த ஓட்டலில் ரூம் போடவேண்டும்’ என்று

என்னை ‘ராஜாமணி பிக்சர்ஸ்’ தயாரிப்பாளர்களான அண்ணன்

எம்.ஆர்.சந்தானமும், ‘மோகன் ஆர்ட்ஸ்’ மோகனும் கேட்டார்கள்.

சற்று நேரம் யோசித்தேன்.

அந்த நாட்களில் 1960–ல் இன்றைய அடையாறு ‘பெசன்ட்நகர்’ ‘அஷ்டலட்சுமி

ஆலயம்’, ‘புனித ஆரோக்கிய மாதா ஆலயம்’ அமைந்துள்ள அந்தப் பகுதி

முழுவதுமே கண்களுக்கு எட்டிய தூரம் வரை வெறும் கடற்கரை மணலாகவே

இருந்தது. அடையாறில் வசிப்பவர்கள் கோடை காலத்தில் காற்று

வாங்குவதற்கு அங்கு வருவதுண்டு. அது தவிர ஆங்காங்கே மீனவர்களின்

குடிசைகள் இருந்தன.

அக்காலத்தில் அந்த இடத்திற்கு ‘எலியட்ஸ் பீச்’ என்று பெயர். அங்கு கடலில்

குளிக்க வந்து நீந்தி, அலைகளால் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டு உயிர்

துறந்த ஒரு ஆங்கிலேய அதிகாரியின் நினைவாக, வளைவு ஒன்று

கட்டப்பட்டிருந்தது.

அத்துடன் கூட, அன்றைய சென்னை வாழ் பிரமுகர்களும்,

பெருந்தனக்காரர்களும், தொழிலதிபர்களும் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை

நாட்களில் அங்கு வந்து தங்கி, கடற்காற்று வாங்கி உல்லாசமாகப் பொழுது

போக்கும் பொருட்டு, கரையோரமாக வரிசையாகச் சிறுசிறு கட்டிடங்களையும்

ஓலைக் குடிசைகளையும் கட்டி, அவற்றைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை

மீனவர்களிடம் ஒப்படைத்திருந்தனர்.

அந்தப் பகுதியில் அவ்வப்போது சினிமா படப்பிடிப்பு நடை பெறுவதும் உண்டு.

கடற்கரைக் காதல் காட்சிகள், ஹீரோ – ஹீரோயின் டூயட் பாடல் காட்சிகள்

போன்றவற்றை பல டைரக்டர்கள் அங்கு படமாக்குவார்கள்.

ஒரு நாள் புகழ் பெற்ற அடையாறு ஆலமரத்தைப் பார்க்கச்சென்ற நான்

அதைப்பார்த்துவிட்டு அப்படியே எலியட்ஸ் பீச்சுக்கும் சென்றேன். அழகும்

அமைதியுமான அந்த இடத்தில் கட்டப்பட்டிருந்த சிறு சிறு குடில்களும்

அவற்றின் எதிரே அலைவீசிக் கொண்டிருந்த வங்கக் கடலும் என் கண்களைக்

கவர்ந்தன!

என் இளமைக் காலத்தில் கிராமியச் சூழ்நிலையில் நான் வளர்ந்து

வாழ்ந்தவனாதலால், இயற்கையை நேசிப்பதிலும், அதன் எழிலை ரசிப்பதிலும்

அதிக ஆர்வம் கொண்டிருந்தேன்.

ஆகவே, அந்தக் கடற்கரைக் குடிசையொன்றில் அமர்ந்து ஒரு படத்திற்குக் கதை

வசனம் எழுதவேண்டும் என்று ஆசைப்பட்டேன். நீண்ட நாளைய அந்த ஆசை

நிறைவேறும் தருணம் இப்போது வந்தது.

அந்தக் குடிசைகளைக் குறிப்பிட்டு அதில் ஒன்றில் உட்கார்ந்து எழுத ஏற்பாடு

செய்ய முடியுமா? என்று கேட்டேன்.

தயாரிப்பாளர்கள் சிரித்தார்கள்.

‘‘ஏன் சிரிக்கிறீங்க?’’

‘‘இல்லே. ஒவ்வொருத்தர் ஊட்டி, கொடைக்கானலுக்குப் போயி எழுதிக்கிட்டு

வரலாம். இல்லேன்னா கன்னிமாரா ஓட்டல்லே ஏ.சி. ரூம் போடுங்கன்னு

கேப்பாங்க. நீங்க என்னடான்னா கடற்கரைக் குடிசை கேக்குறீங்களே?

ஆச்சரியமா இருக்கு. சரி. ஒங்க விருப்பப்படியே ஏற்பாடு பண்றோம்’’ என்றவர்,

‘முகிலன்’ என்று பெயர் கொண்ட ஓர் இளம் தயாரிப்பு நிர்வாகியிடம் இது பற்றி

கூற, அவர் உடனே அங்கு சென்று ஒரு மீனவரிடம் பேசி முடித்து, அவருடைய

கண்காணிப்பில் இருந்த ஒரு ஓலைக் குடிசையை ஏற்பாடு செய்துவிட்டு

என்னை கம்பெனி காரில் அழைத்துக் கொண்டு போய் ‘‘இந்தக் குடிசை தான்’’

என்று காட்டினார்.

அதன் உள்ளே நுழைந்தேன். நான்கைந்து பேர் உட்காரக் கூடிய அளவிற்கு இடம்

இருந்தது. கீழே, தரையில் கடற்கரை மணற்குவியல்! அதைத் தவிர மேஜை

நாற்காலிகள் எதுவும் இல்லை.

‘‘இங்கே ஒங்களுக்கு வேற என்ன வசதிங்க வேணும்?’’ என்று முகிலன்

கேட்டார். அவர் திருவாரூரை அடுத்த மாயவரத்தைச் (இன்றைய

மயிலாடுதுறை) சேர்ந்தவர். ஆகவே அந்த மண் பாசம் என் மீது அவருக்கு

இருந்தது.

நான் கேட்டேன்:–

‘‘முகிலன்! கீழே தரையிலே ஒக்காந்து எழுதுறதுக்கு வசதியா, நம்ம ஊர்ல

கணக்கப்பிள்ளைங்க வச்சிருப்பாங்களே, அந்த மாதிரி ஒரு சின்ன மேஜை! ஒரு

கோரைப்பாய், ரெண்டு தலையணைங்க வேணும்.

‘‘அவ்வளவுதானா? வேற ஒண்ணும் வேண்டாமா?’’

‘‘வேற ஒண்ணுமில்லை – ‘ஒண்ணுமே வேண்டாம்.’ இந்த ‘ஒண்ணுமே’ என்ற

வார்த்தையைச் சற்று அழுத்தமாக உச்சரித்தேன்.

அவர் சிரித்தார். சினிமா கம்பெனியில் இருப்பவர் அல்லவா? உடனே அந்த

வார்த்தையின் பொருளைப் புரிந்து கொண்டார். (அதாவது ‘‘ஒண்ணுமே

வேண்டாம்’’ என்று நான் சொன்னதன் பொருள் ‘சிகரெட், சீசாக்கள்’ முதலியன).

தயாரிப்பு நிர்வாகி முகிலன் அடையாறில் எங்கெங்கேயோ அலைந்து திரிந்து

நான் கேட்ட கணக்குப் பிள்ளை மேஜை, பாய் தலையணைகள் மற்றும்

நொறுக்குத் தீனி தின்பண்டங்கள் வாங்கி வந்து கொடுத்தார். அத்துடன்

மத்தியானத்திற்கு மட்டன் கறிக்குழம்பு, வறுவலுடன் சாப்பாட்டிற்கு ஏற்பாடு

பண்ணியிருப்பதாகவும் தெரிவித்தார்.

மணல் தரையில் பாயை விரித்தேன். அதன் மீது அந்தக் குட்டி மேஜையை

வைத்தேன். பின்னால் சாய்ந்து கொள்வதற்கு ஒரு தலையணை! பக்கத்தில்

ஆதரவாக ஒரு தலையணை! வரும் பொழுதே வாங்கிக்கொண்டு வந்த ‘புல்

ஸ்கேப்’ வெள்ளை பேப்பரை இரண்டு இரண்டாகக் கிழித்து ரைட்டிங் பேடின்

கிளிப்பில் பொருத்திக்கொண்டேன்.

மேஜைக்கு அடியில் இரண்டு கால்களையும் வாட்டமாக நீட்டிக்கொண்டு, கிழக்கு

முகமாக அமர்ந்தேன். ஏறிட்டுப் பார்த்தேன். எதிரே நீலக்கடல்! அதன் மீது

கவிந்திருந்த நீல
வானம்! அலுப்பில்லாமல் அடிக்கடி எழுந்து எழுந்து புரண்டுப் புரண்டு

நுரையுடன் வந்து கரையை முத்தமிட்டு முத்தமிட்டுப் பின்வாங்கிச் செல்லும்

பேரலைகள்! அவற்றின் தாளகதியும் சுதியும் கூடிய இரைச்சல் ஒலி! கடற்
குருவிகளின் காதுக்கினிய இசை! ஈரமணல் படிந்த கரையோரம் ஆங்காங்கே

சிறு சிறு குழிக்குள் இருந்து வெளிவரும் நண்டுகளின் நர்த்தனம்! விழிகளுக்கு

ரம்மியமோ ரம்மியம்!

ஐந்து நட்சத்திர ஓட்டல் அறையில், இந்த அற்புத இயற்கை எழிற்காட்சிகளைக்

காண இயலுமா? – ஆயிரம் ஆயிரமாகப் பணம் கொடுத்தாலும்!

வழக்கம்போல காகிதத்தின் உச்சியில் சிலுவையை வரைந்து, அதன் கீழே

‘மாதா துணை’ என்று எழுதினேன்.

ஒருகணம் கண்களை மூடி அவற்றின் உட்திரையில் தோன்றிய என் அன்னை –

ஆண்டவரின் திருஉருவங்களைக் கண்டு கரங்கூப்பியபடி எனக்கு நானே

கூறிக்கேட்டுக் கொண்டேன்:–

‘‘எனக்கு முன்னிருந்து வழிகாட்டிய அன்னையே! பின்னிருந்து ஒளிகாட்டி

என்னை அழைத்து வந்த ஆண்டவரே! நீங்கள் எனக்கு வழங்கிய இந்த அரிய

பெரிய வாய்ப்பினை நான் நன்கு பயன்படுத்திக் கொண்டு, என் கடமையைச்

சரியாகச் செய்து, அதனால் பெயரும், புகழும் பெற்று மகிழ எனக்கு

உறுதுணையாக இருந்து உதவி புரியுமாறு உளமார உங்களை வேண்டிக்

கொள்கிறேன்.’’

அவ்வளவுதான்!

‘பாசமலர்’ படத்திற்கான வசனங்கள் எழுத்து வடிவங்கொள்ளத்

தொடங்கிவிட்டன!

காட்சி–1:– வெளிப்புறச்சாலை.

நேரம்: பகல்.

சுமார் பத்து வயதுடைய ஒரு சிறுவன் தன் கையில் மருந்து சீசாவுடன்

வேகமாக ஓடி வருகிறான்.

காட்சி 1–ஏ:– ஒரு குடிசையின் உட்பகுதி.

உள்ளே வந்த அந்தச் சிறுவன் தன் நோயாளித் தாய் இறந்து கிடப்பதைப்

பார்த்து அதிர்ச்சி அடைகிறான். அவன் கையிலிருந்த மருந்து சீசா நழுவிக் கீழே

விழுந்து உடைகிறது. தாயின் அருகில் தன் இரண்டு வயதுத் தங்கை அழுது

கொண்டிருக்கிறது. அவன் அந்தக் குழந்தையைத் தூக்கி அன்புடன் அணைத்துக்

கொள்கிறான். படத்திற்கான பெயர் வரிசை (டைட்டில்) ஆரம்பமாகிறது.

‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் அளிக்கும் ‘ராஜாமணி பிக்சர்ஸ்’ ‘‘பாசமலர்.’’

டைட்டில் முடிகிறது. ‘டயம் லேப்ஸ்.’

காட்சி–2:– ராஜு வீடு (உள்ளே – பகல்)

தங்கை ராதா (சாவித்திரி அறிமுகம்)

டிபன் பாக்சில் இட்லி வைத்துக்கொண்டிருக்கிறாள். ஆலையின் சங்கு ஒலிக்கும்

ஓசையைக் கேட்டபடி அண்ணன் ராஜு (சிவாஜி கணேசன்) அறிமுகமாகி

தங்கையிடம் வந்து ‘‘அம்மாடி! சங்கு ஊதிட்டான். சீக்கிரம் சீக்கிரம்.’’

ராதா:– ‘‘அண்ணே! இன்னிக்கு ஒங்களுக்குப் பிரியமான தக்காளி குருமா

வச்சிருக்கேன்.’’

ராஜு:– ‘‘இப்படி வாய்க்கு ருசியா கொடுத்தின்னா அப்புறம் டிபன் மட்டுமில்லே,

பாக்சும் திரும்பி வராது.’’ (என்று வாங்கிக்கொண்டு ஓடுகிறான்)

இதில் தொடங்கி இரண்டு வாரங்கள் தொடர்ந்து 249 காட்சிகளுக்கான

வசனங்களையும், அவை சம்பந்தப்பட்ட மற்ற விவரங் களையும் எழுதி

முடித்தேன்.

இறுதியாக அண்ணனும், தங்கையும் சேர்ந்தாற்போல் இறந்து போகும் அந்த

உச்சகட்டக் காட்சிக்கு வந்தேன். எழுதத் தொடங்குவதற்கு முன்பு சிறிது நேரம்

சிந்தித்தேன்.

இத்துடன் பாசமலர் படம் முடிகிறது. இந்த இறுதிக்காட்சியைக் கண்டு அழாத

கண்களும் அழவேண்டும். ஒரு துக்க வீட்டிற்குச் சென்று திரும்புவதைப்

போன்ற கனமான சோக உணர்வுடன் மக்கள் தியேட்டரை விட்டு வெளியே

வரவேண்டும். அவரவர் தங்கள் வீட்டில் நடந்ததுபோல எண்ணி அந்தக்

காட்சியோடு – சினிமாப்படம் என்பதையும் மறந்து ஐக்கியமாகி தங்களையும்

மீறி அந்தச் சோகத்தை சுமந்து செல்ல வேண்டும். அப்பொழுதுதான் இந்தப்படம்

மகத்தான வெற்றி பெற்று எக்காலத்திலும் மறக்க இயலாத ஒரு

‘சிரஞ்சீவித்துவம்’ கொண்ட சிறந்த படமாக அமையும்’ என்று முடிவு செய்து

கொண்டேன்.

இதுவரையில் நான் வசனம் எழுதிக்கொண்டு வந்த எந்த ஒரு காட்சியைப்

பற்றியும் இவ்வளவு நேரம் சிந்தித்ததில்லை. எல்லோரையும் அழவைக்க

வேண்டும். எப்படி? சிந்தித்தேன் – சிந்தித்தேன். அப்படிச் சிந்தித்தேன்.

‘வசனம் எழுதிக்கொண்டு வரும்பொழுதே முதலில் என் கண்கள் கலங்கி

அவற்றில் நீர் நிரம்ப வேண்டும். அப்போதுதான் படம் பார்க்கும் மக்களையும்

கண்ணீர்விட வைக்க முடியும்.

இந்தப் படத்திற்கு நான் எழுதியிருக்கும் மொத்த வசனங் களுக்கும் இந்த சோக

ரசக் காட்சிக்கான வசனம் ஒரு சிகரமாக அமையவேண்டும்.’

‘‘உங்க திறமை பூராவையும் இந்த ஒரே படத்தில் காட்டி சிவாஜியைப்

பிடிச்சிடணும்’’ என்று நான் அட்வான்ஸ் பணம் வாங்கிய அன்றைக்கு அண்ணி

சாவித்திரி சொன்னாரே – அது இப்பொழுது என் நினைவிற்கு வந்தது.

நான் சிவாஜியைப் பிடிப்பது பிறகு இருக்கட்டும். முதலில் ரசிகப்பெருமக்களைப்

பிடிக்க வேண்டும்!

எண்ண மேகங்கள் சூழ்ந்திருந்த மனதில், என் இளமைக்கால நிகழ்ச்சியொன்று

மின்னலாகத் தோன்றி மறைந்தது.

என் தாயார் நான்கு ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகளை

ஈன்றெடுத்தவர்! நான் தலைப்பிள்ளை. பழைய கதைகள், தாலாட்டுப்

பாடல்களை என் தாயார் நன்கு அறிந்தவர். அதைக்கூறி, பாடி குழந்தைகளைத்

தூங்க வைப்பார். நான் மூத்த பிள்ளையாதலால் அவர் பாடும் தாலாட்டுப்

பாடல்களைக் கேட்டு அவற்றை மனப்பாடம் செய்து வைத்திருந்தேன்.

‘‘சாஞ்சாடும்மா, சாஞ்சாடு
அன்னக்கிளியே சாஞ்சாடு
அழகு மயிலே சாஞ்சாடு.’’
‘‘கைவீசம்மா கை வீசு
கடைக்குப் போகலாம் கைவீசு.
மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய் திங்கலாம் கைவீசு!’’

இவை போன்ற இன்னும் பல பாடல்களை அம்மா பாடுவார். அதைக்கேட்டு என்

தம்பிகள், தங்கைகள் உறங்கி விடுவார்கள்.

நாங்கள் ஏழு பேர்களில் என் கடைக்குட்டித் தங்கையின் பெயர் வாசமேரி!. அது

ஒரு வயதுக் குழந்தையாக இருந்தபொழுது எப்பொழுதும் அழுதுகொண்டே

இருக்கும். அதனால் அதைத் தூக்கிக்கொண்டு போய் பாட்டுப்பாடி அழுகையை

நிறுத்தும்படி அம்மா என்னிடம் சொல்வார். அதன்படி நான் அம்மாவின்

பாட்டைப்பாடி என் தங்கையின் அழுகையை நிறுத்துவேன்.

இந்த ‘‘கைவீசம்மா கைவீசு’’ பாட்டு இப்பொழுது என் நினைவுக்கு வந்தது.

இதைக் கடைசியாக வைத்துக்கொண்டு, இதற்கு இணைப்பாக முன்னாலிருந்து

வசனங்களை எழுதிக்கொண்டு வந்தேன்.

கண் பார்வை இழந்த அண்ணன் சிவாஜி, தன் அருகிலிருக்கும் அருமைத்தங்கை

சாவித்திரியிடம் சொல்வார்:–

‘‘அம்மா! ஒன்னைவிட்டு இந்த உலகத்துல நான் எங்கே போனாலும்,

என்னைச்சுத்தி நீ போட்டிருக்குற அந்த அன்பு வட்டத்துக்குள்ளேதாம்மா

சுத்திக்கிட்டிருக்கேன். அதை விட்டு என்னால வெளியே வரமுடியலேம்மா.

அம்மா! நாம எப்பவுமே சின்னக் குழந்தைகளாகவே இருந்திருக்கக்கூடாதா?

அப்போவெல்லாம் நீ அழுதுக்கிட்டிருப்பே. ஒன்னை என் கையிலே தூக்கி

வச்சிக்கிட்டு, நான் பாடுவேன்:–

கைவீசம்மா கைவீசு, கடைக்குப் போகலாம் கைவீசு, மிட்டாய் வாங்கலாம்

கைவீசு’’

இதற்கு மேல் பாட முடியாமல் அந்த அன்பு அண்ணன் அழுது குமுறுகிறான்.

இதைக்கேட்டுத் தாங்க முடியாத தங்கை துக்கம் பீறிட்டு தன் அருமை

அண்ணனுடன் சேர்ந்து கதறி அழுது கண்ணீர் வடிக்கிறாள்.

இந்த வசனத்தையும், அதன் விவரத்தையும் நான் எழுதிய அந்த ஆண்டு 1960.

இன்றைக்கு 53 ஆண்டுகளுக்குப் பிறகுங்கூட இதை அப்படியே நினைவு

வைத்திருந்து இப்பொழுது நான் எழுதும் போதுகூட, என் இரு விழிகளையும்

நீர்த்திரை மறைத்து மேற்கொண்டு எழுத முடியாமல் நிறுத்திவிட்டு எழுந்து

சென்று என் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு வந்தமர்ந்து சில நிமிட நேரம்

அமைதியாக இருந்து அதன் பிறகு மீண்டும் தொடர்கிறேன்.

இந்த உச்சக்கட்டக் காட்சிக்கான வசனங்களை அன்றைக்கு எழுதியபோது கூட,

எனக்கு இந்த மனோ நிலை ஏற்பட்டது.

படைப்பாளியான எனக்கே இந்த நிலை என்றால், படத்தைப் பார்ப்பவர்கள்

உள்ளம் உருகி அழமாட்டார்களா என்ன?

எழுதியபோதே, இந்த உச்சக்கட்டக் காட்சியில் அமைந்த உணர்ச்சி மிக்க

வசனங்களை வைத்து இதன் வெற்றியை நான் உறுதிப்படுத்திக் கொண்டேன்.

‘பாசமலர்’ படத்திற்கான மொத்த வசனங்களையும் ஒரே மூச்சில் எழுதி

நிறைவு செய்து கொண்டு, என் இதயங்கவர்ந்த ‘எலியட்ஸ்’ கடற்கரையின்

எளிய குடிசையிலிருந்து பிரிய விருப்பம் இல்லாமல் பிரிந்து விடைபெற்றேன்.

முழுவதும் எழுதி முடித்துவிட்டேன். அதுவும் இரண்டே இரண்டு

வாரங்களுக்குள் என்று தெரிந்தும் சிவாஜியோ அல்லது இயக்குனர் பீம்சிங்கோ

அதைப் படித்துக்காட்டும்படி என்னிடம் கேட்கவே இல்லை.

‘விரலால் தட்டிப்பார்க்கவோ, காதருகில் வைத்து உள்ளே நீர் இருந்து

ஆடுகிறதா என்று அசைத்துப் பார்க்கவோ அவசியம் இல்லாத நன்கு முற்றிய

நெற்றுத்தேங்காய் நான்’ என்று அவர்கள் இருவருமே முடிவு செய்துவிட்டார்கள்

போலும்!

நம்பிக்கை பிறந்து விட்டால், சோதித்துப் பார்க்கவேண்டிய அவசியம் வராது

அல்லவா!

சீசாக்கள்... சிங்காரிகள்...

எனது அருமையான அறுவடைக் காலத்தில், ஜெமினி ஸ்டூடியோ படங்களைத்

தவிர, மற்றபடி அனேகமாக அதிக கம்பெனிகளின் படங்களுக்கு வசனங்கள்

எழுதியிருக்கிறேன். எந்த ஒரு கம்பெனியிலும், எந்தச் சந்தர்ப்பச்

சூழ்நிலையிலும் – பணந்தான் வாங்கியிருக்கிறேனே தவிர, ‘பாட்டில்கள்’

கேட்டதே கிடையாது. இது சத்தியம்! இந்த எனது சத்தியத்திற்கு இன்றைய

நேர்முகச் சாட்சிகள் ஏவி.எம்.சரவணன், ஏ.சி.திருலோகசந்தர் ஆகிய இருவரும்!

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக என்னைப்பற்றி அங்குலம் அங்குலமாக

அறிந்தவர்கள் இவர்கள்! என்னைச் சரியாக எடைபோட்டு வைத்திருப்பவர்கள்!

‘‘நோ விஸ்கி, நோ விமன், நோ சிகார், ஹி ஈஸ் ஆரூர்தாஸ்’’ என்று

ஆங்கிலத்தில் கூறி திருலோகசந்தர் என்னை விமர்சிப்பார். இந்த ஆங்கிலச்

சொற்றொடரை அவர் இயக்கிய ‘‘நீ இன்றி நான் இல்லை’’ என்ற படத்தில் ஒரு

காட்சியில் நான் வசனமாக எழுதியிருக்கிறேன்.

இதை தமிழில் நான் மொழிபெயர்த்துச் சொல்வேன்:–

‘‘சீசாக்கள் இல்லை, சிங்காரிகள் இல்லை, சிகரெட் இல்லை – அவர்தான்

ஆரூர்தாஸ்.’’

இதைக்கேட்டு அவர் சிரிப்பார்.

என் மீது உள்ள பிரியத்தில் நான் எது கேட்டாலும் வாங்கிக் கொடுக்கத்

தயாரிப்பாளர்கள் தயாராய் இருந்தார்கள். ஆனால் நான்தான் தயாராக இல்லை.

‘ஓசி’யில் கிடைக்கிறது என்பதற்காக வாங்கி ஊற்றிக்கொண்டு உடலையும்,

குடலையும் பாழாக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை!

ஆசைப்பட்ட ஆகார வகைகளை வாங்கி வரச்சொல்லி உண்பேனே தவிர,

ஆகாததைக் கேட்கமாட்டேன். அதனால்தான் எல்லா தயாரிப்பாளர்கள் –

இயக்குனர் களாலும் நான் விரும்பப்பட்டு ஏராளமான படங்களுக்கு எழுதக்கூடிய

வாய்ப்பு பெற்றேன்.

இது எனக்கு எப்படி சாத்தியம் ஆனது? சினிமாவில் எனது ஆரம்ப நுழைவே

‘தேவர் பிலிம்ஸ்’ என்ற ராணுவ முகாம்! அதில் தேவரண்ணன் ஓர் உயர்

அதிகாரியாக இருந்து முழுக்க முழுக்க ஒழுக்கத்தைக் கண்டிப்புடன்

கடைப்பிடித்தார்!

தாம்பூலம் தரித்துக் கொள்வதைத்தவிர, வேறு தகாத விஷயங்கள் எதையுமே

அறியாத அண்ணன், தன்னைப்போலவே தன் நிறுவனம் சார்ந்த எல்லோருமே

இருக்கவேண்டும் என்று எண்ணினார்.

தேவர் பிலிம்ஸ் அலுவலகத்தை அவர் சினிமா கம்பெனியாக அல்ல. செந்தூர்

முருகன் ஆலயம் போல வைத்திருந்தார்!

அன்றாடம் கட்டிக் கற்பூரம் ஏற்றிக்காட்டி, கந்தனை வழிபட்டு கடமையிலும்,

கண்டிப்பிலும் கவனம் செலுத்தினார்.

அலுவலகத்தின் உள்ளே யாராவது சிகரெட் பிடித்தாலோ, சீசாக்கள்

திறந்தாலோ, சீட்டு ஆடினாலோ அடித்தே கொன்று விடுவார் என்ற அச்சம்

அனை
வருக்குமே இருந்தது. அதனால்தான் அன்றைக்கு அந்த நிறுவனம் ஒழுக்கத்
தின் உறைவிடமாக
விளங்கியது!

இன்றைக்கும் – இந்த எனது எண்பத்து இரண்டு வயதிலும் நான் கடைப்பிடித்து

வரும் ஒழுக்கம், ஒழுங்கு, அனுபவ அறிவு, ஆற்றல் இந்த நான்கையும் –

அன்றைக்கு நான்கு சினிமா மேதைகளிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன்.

அந்த நால்வர்:–

1. தேவரண்ணன்!
2. ஏவி.எம்.செட்டியார்!
3. எல்.வி.பிரசாத்!
4. வாகினி நாகிரெட்டியார்!

தேவரண்ணனிடமிருந்து ஒழுக்கத்தையும், ஏவி.எம். செட்டியாரிடமிருந்து

ஒழுங்கையும், எல்.வி.பிரசாத்திடமிருந்து அனுபவ அறிவையும்,

நாகிரெட்டியாரிடமிருந்து செயலாற்றலையும் கற்றுக் கொண்டு, என்னால்

இயன்ற அளவுக்கு அவற்றை அனுசரித்து வருகிறேன்.

அவையே இன்றைக்கு எனக்கு பலத்தையும், நலத்தையும், வளத்தையும்,

நல்வாழ்வையும் கொடுத்திருக்கிறது என்று நான் கூறினால் அது மிகை அல்ல.

ஆன்றோரும், சான்றோரும் ஆண்டவனின் பிரதிநிதிகள் ஆவர்! அவர் களைப்

பின்பற்றி நடந்தால் பிறவிப்பெரும் பயன் அடையலாம். இது என் அனுபவம்!

சிற்றினம் சேர்ந்தால் வாழ்வு சிதையும்.

RAGHAVENDRA
7th October 2013, 08:12 AM
ஆரூர்தாஸ் அவர்களின் கட்டுரை தொடர்ச்சி... 15.06.2013




1960 டிசம்பர் 25.
அன்றைக்கு கிறிஸ்துமஸ் திருநாள்.

சிவாஜி, ஜெமினி, பீம்சிங் மூவருமே கிறிஸ்துவத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். அதனால் தான் அவர்களுடைய கூட்டுக்குழுவிலிருந்து அக்காலத்தில் ‘பாவமன்னிப்பு’ படம் உருவாகியது.

கிறிஸ்துமஸ் விழாவும் அதுவுமாக அடையாறு நெப்டியூன் ஸ்டூடியோவில் ‘பாசமலர்’ முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கியது.

அதற்கு முன்னதாக அடையாறு ‘மெக்கரனெட்’ பேக்கரியில் இருந்து ஒரு பெரிய சாக்லட் கேக் வந்திருந்தது.

அதன் மீது ‘ஹேப்பி கிறிஸ்துமஸ்’ என்றும், ‘பாசமலர்’ என்றும் ஆங்கிலத்தில் வெள்ளை கிரீமினால் வரையப்பட்டிருந்தது.

சிவாஜி தன் கரங்களால் கேக் வெட்டி முதல் துண்டை எடுத்துக்கொண்டு ‘ஆரூரான்’ என்று அழைத்தார்.

அருகில் சென்றேன், முதல் துண்டை என் வாயில் ஊட்டினார். எல்லோரும் கைதட்டினார்கள்.

தொடர்ந்து இயக்குனர் ஏ.பீம்சிங், ஜெமினிகணேசன், சாவித்திரி, ஒளிப்பதிவாளர் ஜி.விட்டல்ராவ் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் கேக் ஊட்டினார்.

பீம்சிங் ஒரு துண்டை எடுத்துத் தன் கரங்களால்
சிவாஜிக்கு ஊட்டினார். தொடக்க விழாவே களை (கலை) கட்டி இருந்தது.

படப்பிடிப்பு தொடங்கியது.

சிவாஜியின் எளிய வீட்டிலிருந்து காட்சி ஆரம்பம்.

சிவாஜி வீட்டில் இருக்கமாட்டார் என்று எண்ணிய ஜெமினி, கையில் மல்லிகைப்பூவுடன் சாவித்திரியைப் பார்க்க உள்ளே வருவாரே, அந்தக் காட்சி முதன் முதலாகப் படமாக்கப்பட்டது.

அத்துடன் மதிய உணவு வேளை வந்தது. நான் சிவாஜியுடன் சாப்பிட்டேன். அவருடன் சேர்ந்து சாப்பிட்டது அதுதான் முதல் முறை!

அவருடைய வீட்டிலிருந்து சாப்பாடு வந்திருந்தது.

அப்பொழுது அவர் ராயப்பேட்டை சண்முக முதலி தெருவிலிருந்த சொந்த வீட்டில் வசித்து வந்தார். தியாகராயநகர் இன்றைய செவாலியே சிவாஜிகணேசன் சாலை (பழைய தெற்கு போக் ரோடு) பங்களாவை வாங்கி ‘அன்னை இல்லம்’ என்று பெயரிட்டுப் புதுப்பித்துக் கொண்டிருந்தார்.

மதிய உணவிற்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது.

சிவாஜி தொழிலாளியாக வேலை செய்த அந்த ஆலைக்கே முதலாளியாகி அவரிடம் வேலை கேட்டு ஜெமினி வருவாரே – அந்தக்காட்சி படமாக்கப்பட இருந்தது.

அதில் சாவித்திரிக்கு வேலை இல்லாததால் அவர் வீட்டிற்குப் போய்விட்டார்.

அது ஒரு சாதாரண காட்சிதான். வேலையிலிருந்து விலக்கப்பட்ட தொழிலாளர் சார்பில் ஜெமினி வந்து சிவாஜியிடம் காரணம் கேட்கிறார். அவ்வளவு தான்.

இதை நல்ல வசனங்களால் ஒரு ‘ஹைலைட்’ அதாவது மிகவும் சிறப்பான காட்சியாக்கிக் காட்ட வேண்டுமென்ற எண்ணத்துடன் இலக்கிய நயமுள்ள அழகிய வசனங்களை அமைத்திருந்தேன்.

நிறைய வசனங்கள் இருந்ததால், முழுவதையும் ஒரு முறை படித்துக்காட்டி விடுகிறேன் என்று சொல்லி, நான் நடுவில் நின்றுகொண்டு, எனக்கு இடது, வலது புறமாக சிவாஜி – ஜெமினியை வைத்துக்கொண்டு வாசிக்கலானேன்.

எதிரில் பீம்சிங் நின்றுகொண்டு நான் வாசிக்கும் வசனங்களைக் கவனமுடன் கேட்டார்.

அரங்கமே அதிரும் அளவுக்குக் கைத்தட்டல் பெற்றதும், ‘நான் ஒரு சிறந்த வசனகர்த்தா’ என்று எனக்கு ‘ஐ.எஸ்.ஐ’ முத்திரை குத்தி, ‘அக்மார்க்’ வழங்கப்பட்டதுமான அந்த வசனங்களின் ஒரு பகுதியை இங்கு எழுதுகிறேன்:–

ஜெமினி:– ‘இவர்களை வேலையிலிருந்து விலக்கி விட்டாயாமே?’.

சிவாஜி:– ‘ஆமாம். அதிக வேலை இல்லாத காரணத்தால் ஆட்குறைப்பு செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டது’.

ஜெமினி:– ‘இல்லை, இவர்கள் என்னுடைய ஆட்கள் என்பதற்காக விலக்கியிருக்கிறாய்’.

சிவாஜி:– ‘நன்றி கெட்டவர்களையும், நயவஞ்சகர்களையும் நண்பர்களாக்கிக் கொள்வதைவிட, அவர்களை விலக்கி விடுவதே மேல்’.

(ஜெமினியுடன் வந்துள்ள தொழிலாளர்களை நோக்கி...) ‘சொந்த விஷயத்திற்காகவும், சுய நலத்திற்காகவும் பகை கொண்டு என்னைப் பழிவாங்கப் படை எடுத்து வந்திருக்கிறார். உங்களுக்காகப் பரிந்து பேசவரவில்லை’.

ஜெமினி:– ‘யார் சுயநலவாதி? ஒருவன் வாழவேண்டும் என்பதற்காகப் பலர் பாடுபடவேண்டுமென்ற ஏகாதிபத்திய மனப்பான்மை கொண்ட நீ சுயநலவாதியா?, பலர் வாழவேண்டும் என்பதற்காக ஒருவன் பாடுபடவேண்டுமென்ற கொள்கை கொண்ட பொது நலவாதியான நான் சுயநலவாதியா?.

சிவாஜி:– ‘பொது நலம்! எது பொது நலம்?. பொறியிலே பலகாரம் வைப்பது எலியின் பசியைப் போக்கவா?. புற்றுக்கு அருகே நின்று மகுடி ஊதுவது நாகத்தின் காதுகளை நாதத்தால் குளிர வைக்கவா?. காட்டிலே குழிபறிப்பது யானை ஓய்வு பெறுவதற்கா?. கணையை வில்லில் பொருத்துவது கலைமானுக்கு வேடிக்கை காட்டுவதற்கா?... இல்லை. இவையெல்லாம் பிறர் துன்பத்தில் இன்பம் காண வேண்டும் என்ற பேய் வெறி! அந்த வெறிதான் உனக்கும்’.

ஜெமினி:– ‘இல்லை, மெழுகுவர்த்தி எரிந்து ஒளியைக் கொடுப்பதுடன் தன் மேனியையும் உருக்கிக் கொள்கிறது. ஊதுவத்தி எரிந்து நறுமணத்தைக் கொடுத்த பிறகு உருவமற்றுச் சாம்பலாகிறது! தேய்ந்து தேய்ந்து மணத்தைக் கொடுக்கும் சந்தனக் கட்டை போன்றவர்கள் தியாகிகளும், பொதுநலவாதிகளும் என்பதைப் புரிந்துகொள்’.

சிவாஜி:– ‘புரிகிறது, அன்று நம்மோடு வேலை பார்த்தவன் இன்று இந்த உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டானே என்ற வயிற்றெரிச்சல் உனக்கு’.

ஜெமினி:– ‘தவறு, தனக்குத் தண்ணீர் இல்லாததால் ஒரு செடி கருகுமே தவிர, வேறொரு செடிக்குக் கிடைக்கிறதே என்ற ஏக்கத்தால் எந்தச் செடியும் எரிவதில்லை.

இந்தத் தத்துவத்தில் வளர்ந்து, தன்னம்பிக்கையில் மலர்ந்து, கவலை இல்லாத வாழ்க்கை நடத்துகிற என்னை விட்டு விட்டு வேறு எவனாவது கையாலாகாதவனிடம் உன் வயிற்றெரிச்சல் கதையைக் கூறு’.

சிவாஜி:– (கோபத்துடன் எழுந்து நின்று)

‘Mister Anand! I am The Sole Proprieter of This Concern. I Can do Whatever I Want’

(மிஸ்டர் ஆனந்த்! ஐயேம் தி ஸோல் புரோப் ரைட்டர் ஆப் திஸ் கன்ஸர்ன்! ஐ கேன் டு வாட் எவர் ஐ வாண்ட்– ‘மிஸ்டர் ஆனந்த்! நான் இந்த நிறுவனத்தின் முழு முதலாளி. நான் என்ன நினைத்தாலும் அதைச் செய்ய முடியும்’).

ஜெமினி:– (அதிகக் கோபத்துடன் சிவாஜியை நெருங்கி)

‘Those Days Have Gone Mister Raju. Now Each for All and All for Each’.

(தோஸ் டேஸ் ஹேவ் கான் மிஸ்டர் ராஜு. நவ் ஈச் ஃபார் ஆல் அண்ட் ஆல் ஃபார் ஈச்– அந்தக்காலம் போய்விட்டன மிஸ்டர் ராஜு. இன்று எல்லாம் எல்லாருக்கும் சொந்தம். எல்லாரும் எல்லாவற்றிற்கும் சொந்தம்’).

(இந்த ஆங்கில வசனங்களை சிவாஜியும், ஜெமினியும் மாறி மாறிக் கூறியதைக் கேட்டு, 52 ஆண்டுகளுக்கு முன்பு – அன்றைக்கு அரங்கங்களே கையொலியாலும், ரசிகர்களின் விசில் சப்தத்தினாலும் அதிர்ந்தது!)

ஜெமினி தொடர்கிறார்:–

ஜெமினி:– ‘நாளை உன் தொழிற்சாலையின் கதவுகள் பூட்டப்படும்’.

சிவாஜி:– ‘அத்துடன் உன் கரங்களிலும் விலங்குகள் மாட்டப்படும்’.

ஜெமினி:– ‘பார்க்கலாம்’.

சிவாஜி:– ‘ஆனந்தா! இங்கு எரிந்து கொண்டிருக்கும் மின்சார பல்புகளை எல்லாம் நீ அணைத்து விட்டாலும்கூட, இந்த இடத்தில் ஒரே ஒரு சின்னஞ்சிறு அகல் விளக்கு எரிந்து கொண்டிருக்கும். அந்தச் சொற்ப வெளிச்சத்தின் அடியில் அற்பர்கள் துணையின்றி ஒரே ஒரு உருவம் மட்டும் ஓடி வேலை செய்து கொண்டிருக்கும். அதுதான் இந்த ராஜு!

போ – மூலைக்கு மூலை நின்று முரசு கொட்டு, திட்டு, கெட்... அவுட்’.

இந்த வசனங்களை நான் உணர்ச்சிப்பூர்வமாக சிவாஜி – ஜெமினி இருவருக்கும் ஏற்றபடி என் குரலை ஏற்றித்தாழ்த்தி ‘மாட்யுலேஷனுடன்’ படித்து முடித்தேன்.

இதைக்கேட்டு இருவருமே சற்று உணர்ச்சி வசப்பட்டு நின்றனர்.

சிவாஜியின் கண்கள் லேசாகச் சிவந்திருந்தன. தன் இடது கையை என் தோள் மீது வைத்து வலது கையால் என் கன்னத்தில் தட்டியபடி, ‘வெரிகுட்! வெரிகுட்! கொன்னுட்டே. ஒன்னை முதல் முதல்லே சந்திச்ச அன்னிக்கே உன்னை நான் நல்லா புரிஞ்சிக்கிட்டேன். நல்லாருக்கு. ரொம்ப நல்லாருக்கு. நீ எழுதியிருக்கிற விதம்! அதைப்
படிச்சி சொன்ன முறை – பிரமாதம்!’.

(ஜெமினியை நோக்கி) ‘டேய் கணேசா! எனக்கு ஒரு அருமையான வசனகர்த்தாவைக் கொடுத்தேடா, தேங்க் யூ!’.

இதைக்கேட்டதும் ஜெமினியின் முகத்தில் பத்து தாமரைப்பூக்கள் மலர்ந்ததை நான் பார்த்தேன். சிவாஜியிடம் அவர்தானே என்னை அறிமுகம் செய்து எழுத வைத்தார். என்னைவிட அவருக்குத்தானே அதிக மகிழ்ச்சி. இருக்காதா பின்னே?

சிவாஜி தொடர்ந்தார்:–

‘‘இதோ பார் கணேசா! தம்பி ஆரூரான் படிச்சிக்கிட்டு வரும்போதே பாதி எனக்கு மனப்பாடம் ஆயிடுச்சி. இனிமே அங்கங்கே ஷாட்டுக்கு ஷாட்டு அவன் என்னை ‘டச்’ பண்ணுனா போதும். சொல்லிடுவேன். நீ மறுபடியும் இன்னொரு தடவை அவனைப் படிக்கச் சொல்லிக் கேட்டு நல்லா மனப்பாடம் பண்ணிக்க. ஏன்னா? தியேட்டர்ல ‘கிளாப்ஸ்’ வாங்கக்கூடிய டயலாக் இது. நம்ம ரெண்டு பேருக்கும் நல்லா பேலன்ஸ் பண்ணி எழுதியிருக்கான். அவன் இப்போ படிச்சி சொன்னது மாதிரியே ஒழுங்காப் பேசி நல்லா நடிக்கணும் தெரிஞ்சிதா?’’

டைரக்டர் பீம்சிங் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். அவரும் சிவாஜியும் எப்பொழுதுமே ஒருவரை ஒருவர் ‘பாய்’ என்றுதான் கூப்பிட்டுக் கொள்வார்கள். ‘பாய்’ என்னும் இந்தி மொழிச் சொல்லுக்கு ‘சகோதரன்’ என்று பொருள்.

சிவாஜி:– ‘‘பாய்! சீன் – டயலாக் ‘பில்ட் அப்’ நல்லாருக்குல்ல?’’

பீம்சிங்:– ‘‘ரொம்ப நல்லாருக்கு. இது சாதாரண சீன்தான். டயலாக்கால இவ்வளவு நல்லா ‘டிராமா பில்டப்’ ஆகும்னு நான் நினைக்கலே.’’

சிவாஜி:– ‘‘நான் ரெடி – நீங்க ‘ஷாட்’ வைக்கலாம்.’’

இந்தக் காட்சி படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே தளத்திற்கு வெளியில் என்னைப்பற்றியும், வசனங்கள் பற்றியும் மற்றவர்கள் விமர்சனம் செய்து கொண்டிருந்தார்கள். எல்லோருமே என்னை ஒருமாதிரியாகப் பார்த்தார்கள். அதன் பொருள் என்ன? எனக்குப் புரியவில்லை.

மாலைச்சிற்றுண்டி வேளை வந்தது.

ஜெமினி என்னைத் தனியாக அழைத்துக்கொண்டு போய் சொன்னார்:–

‘‘தாசு! உன் வண்டி புறப்பட்டுடுச்சி. சிவாஜிக்கும், பீம்சிங்குக்கும் உன்னை ரொம்பப் பிடிச்சிப்போச்சி. அவ்வளவுதான். இனிமே இங்கே நீதான் ‘ஆஸ்தான ஆசிரியர்’ ஆகப்போறே. என் வேலை முடிஞ்சிது. ‘கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்’ என்று சொல்லி அவர் கையை என் தலையில் வைத்தார். பதிலுக்கு நான் என் கையை அவர் காலில் வைத்தேன். அவர் என்னைப் பிடித்து உயர்த்தித் தன் மார்போடு அணைத்துக்கொண்டார்.

அவர் மகிழ்ந்தார்! நான் நெகிழ்ந்தேன்!

---

புராணம் மாறிப்போயிடுச்சி...

பாசமலர் படப்பிடிப்பு தொடங்கிய அடுத்த நாள்.

அன்றைக்கு ஜெமினிக்கு வேலை இல்லை.

சிவாஜி – சாவித்திரி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருந்தன.

காலையில் ஸ்டூடியோவுக்கு வந்தேன். சிவாஜியுடன் டிபன் சாப்பிட்டுவிட்டு சாவித்திரியின் ‘மேக்–அப்’ ரூமுக்குள் நுழைந்தேன்.

நாற்காலியில் அமர்ந்து மேக்–அப் போட்டுக் கொண்டிருந்தார். எதிரே கண்ணாடியில் தெரிந்த என் உருவத்தைப் பார்த்தபடி பேசினார்:–

அவர்:– ‘நேத்து மத்தியானத்துக்கப்புறம் எடுத்த சீன்ல டயலாக் பிச்சி உதறிட்டிங்களாமே!’.

நான்:– ‘அண்ணன் சொன்னாரா?’.

அவர்:– ‘ஆமா, சிவாஜியும் நானும் போட்டிப் போட்டுக்கிட்டு டயலாக் பேசி நடிச்சிருக்கோம். ‘ரஷ்’ வந்ததும் நீ பாரு. உன் கொழுந்தனை இனி சிவாஜி விடமாட்டான்’னு சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டாரு. டிபன் சாப்பிட்டிங்களா?’.

நான்:– ‘சாப்பிட்டேன்’.

அவர்:– ‘எங்கே?’

நான்:– ‘சிவாஜியோட வீட்லேருந்து இட்லியும், மீன் குழம்பும் வந்திருந்துச்சி’.

இதைக்கேட்டதும் சாவித்திரி சிரித்தார்.

‘ஏண்ணி சிரிக்குறே?’.

அவர்:– ‘அவ்வளவுதான். இனிமே போக் ரோட்டுக்குப் போயிடுவீங்க. அபிபுல்லா ரோட்டை அடியோட மறந்திடுவீங்க’.

(‘போக் ரோடு’ என்று குறிப்பிட்டது சிவாஜி வீட்டை, ‘அபிபுல்லா ரோடு’ என்றது அவருடைய வீட்டை)

அதற்கு நான் பதில் சொன்னேன்.

‘அண்ணி! டி.நகர்ல எந்த ரோடை மறந்தாலும், ரெண்டு ரோடை மட்டும் எப்பவுமே மறக்கமாட்டேன். ஒண்ணு ‘நுங்கம்பாக்கம் ஹைரோடு’ (ஜெமினி வீடு) இன்னொண்ணு ‘அபிபுல்லா ரோடு’ (சாவித்திரி வீடு)

பாயசம் சாப்பிடணும்னா பாப்ஜி அம்மா (ஜெமினியின் துணைவியார்) கிட்டே போவேன். பாயா சாப்பிடணும்னா ஒங்கிட்டே வருவேன். பீர்க்கங்காய் சட்னி அங்கே! பெஸரட் இஞ்சிச்சட்னி இங்கே!’.

இதைக்கேட்டு சாவித்திரி சிரித்து:– ‘அண்ணனும் தம்பியும் சதா திங்குறதுலேயே இருங்க. நல்லாச் சேந்திங்க. ஒரு அய்யரும் ஒரு கிறிஸ்துவரும்’.

நான்:– ‘அதோட ஒரு ஆந்திராவும்னு ஒன்னையும் சேத்துக்க அண்ணி! ஒனக்கு விஷயம் தெரியுமா...?’

அவர்:– ‘என்ன?’

நான்:– ‘போன ஜன்மத்துல அண்ணன் ராமரா இருந்தாராம். நீ சீதையா இருந்தியாம். நான் தம்பி லட்சுமணனா இருந்தேனாம்’.

அவர்:– ‘யார் சொன்னது? ராமருக்கு ஒரே ஒரு சீதை தானே! அப்போ நான் சூர்ப்பனகையாவுல இருந்திருக்கணும்’.

நான்:– ‘கரெக்ட் தான். அந்த ஜன்மத்துல சூர்ப்பனகை ராமர் மேல ஆசைப்பட்டு அவரை அடைய முடியலே. அதனால தான் இந்த ஜன்மத்துல சாவித்திரியா பொறந்து அண்ணனை அடைஞ்சிருக்கே. அது சரி! சாவித்திரி அடையவேண்டியது சத்தியவானைல்ல. நீ எப்படி இவரை...’

அவர்:– ‘புராணம் மாறிப்போயிடுச்சி’ என்று சொல்லிவிட்டு சிரித்தார்.

அந்தச் சிரிப்பில் அழகும் இருந்தது! ஓர் அர்த்தமும் இருந்தது!.

RAGHAVENDRA
7th October 2013, 08:17 AM
22.06.2013 அன்று வெளியான ஆரூர்தாஸ் அவர்களின் கட்டுரை நிழற்படமாக. நன்றி நெய்வேலி வாசுதேவன் சார்




http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-43.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-43.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-28.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4-21.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/5-14.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/6-14.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/7-12.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/8-7.jpg

Gopal.s
7th October 2013, 08:41 AM
My write-up as part of school of Acting and relevant to pasamalar.


Meisner பள்ளி Stanislavsky பள்ளியிலிருந்து உருவானதுதான் என்றாலும் முக்கியமாக வேறுபட்டது Sense Memory முறை தவிர்த்து instict மற்றும் improvisation ஆகியவற்றுக்கு முக்கிய துவம் தந்து , நடிக்கும் போது தன்னுணர்வு கொண்ட முன் நிர்ணய அடிப்படையில் அமையாமல், கூட நடிப்பவர்களின் தன்மைக்கு ஏற்ப dynamic ஆக கணங்களின் சத்தியத்துக்கு ஏற்ப தகவமைப்பது. கீழ்கண்ட விவரங்கள் இன்னும் தெளிவாக்கும்.(Meisner எங்கே Stanislavsky முறையில் வேறு பட்டு நிற்பது என்பது.

1)Sense Memory முறை அறவே தவிர்க்க படுதல்.
2)எதையும் முன்கூட்டிய தீர்மானம் செய்யாமல் Spontaneous ,Instinct &Impulse அடிப்படையில் நடிப்பு.
3)ஒரு பாத்திரத்தை முன்கூட்டி வடிவமைக்காமல் ,செய்ய ஆரம்பித்த பிறகு உடன் நடிப்பவர்,காட்சிகளின் எண்ண எழுச்சிக்கு தக்கவாறு dynamism கொண்டிருத்தல்.
4)பகல் கனவில் மிதப்பது போல , உணர்ச்சிகளின் வயப்பட்ட நடிப்பு. வசனங்களை கூட முன் கூட்டிய உணர்ச்சி தீர்மானங்களில் அமையாமல் moment to moment அடிப்படையில் தீர்மானிப்பது.
5)Improvise to access an emotional life .

பாசமலர் ராஜசேகரனாக சிவாஜி நடித்ததை மீறி இந்த பள்ளி வகை சார்ந்த நடிப்புக்கு உதாரணம் தேடுவது மிக கடினம்.ஆரம்ப சில காட்சிகள்,கடைசி மூன்று காட்சிகள் (Stanislavsky method Acting ) தவிர்த்து அவர் பணக்காரன் ஆவதிலிருந்து , மலர்ந்தும் மலராத காட்சி வரை Meisner பள்ளி நடிப்புக்கு இலக்கணம் எழுத படும்.

பாசமலரை ரசிகர்கள் எந்தளவு புரிந்து கொண்டாடினார்கள் என்பதை என்னால் அளக்க முடியாது.வெளிப்படையாக பாசத்தை அடிப்படையாக கொண்டது போல தோற்றமளிக்கும் இந்த காவியம் ,திரைக் கதை பாத்திர வார்ப்புகள் , பாத்திரங்களின் உள்ளுணர்வுகள் ,மதிப்பீடுகள் ,உறவுகள்,பிளவுகள்,பிரச்சினைகள் அனைத்துமே உருவம்,உள்ளடக்கம் முற்றிலும் மற்ற சராசரி படங்களில் இருந்து வேறு பட்டது.துன்பியல் முடிவை நோக்கி அமைக்க பட்ட இறுதி காட்சியின் வெற்றி இதை பாசக் காவியமாக்கி விட்டாலும், இதன் எல்லைகள் மிக விரிந்தவை. nerrative surprise ஏராளம்.

அண்ணன்-தங்கை தங்களை தவிர யாருமில்லாமல் ஒருவருக்காக ஒருவர் என்று எவரும் கவனிக்க விரும்பாத சராசரி ஏழ்மையில் ஆற்றொழுக்காக செல்லும் உறவு, எல்லோருடைய கவனம் ஈர்க்கும் சமூக பொருளாதார உயர் நிலை அடையும் போது மற்றவர்களுடைய உறவு,நட்பு தலையீடுகளால், முறுக்கிக்கொண்டு கெட்டு நரகமாவதை அருமையாய் சொல்லும் காவியம்.ஏனெனில் அடிப்படையில் நம்மை நாமே உணர்வதற்கு நமக்கு முக்கியமானது நம்மை சுற்றியிருக்கும் மற்றவர்களே.நம்மை பற்றி எண்ண நீட்சியில் மற்றவர் மதிப்பீடு புகுந்து ,உறவுகள் சீர்கெடுமானால்,மற்றவர்கள் சார்ந்து நம் வாழ்க்கை நரகத்தில் தள்ள பட்டு விடும்.அதிலும் நாம் வாழும் முறை ஊர் சார்ந்த முறைமையில் வேறு பட்டிருந்தால்.

கதாநாயகன் பாத்திர வார்ப்பிலும் , மற்ற கதாபாத்திரங்களுடன் இணைவு-முரண் அனைத்திலுமே deviant என்று சொல்லப் படும் தன்மை கொண்டது .ஒரே ஒரு விஷயத்தை முன்னிறுத்தியே (தங்கை ,அவள் நல்வாழ்வு) நாயகன் முடிவுகள் அமைவது போல தோற்றம் கொடுத்தாலும், அந்த முடிவுக்கு வருமுன் பலவித குழப்பங்கள், உணர்ச்சி வெளிப்பாடுகள், சுயநலங்கள், சிறு சிறு வேற்றுமைகள் என்று இந்த படத்தின் பின்னல்கள்,சிடுக்குகள் நிறைந்த ஆழம் , ரசிகர்களால் உணரப் பட சிறிதே பாதை மாறி பயணம் செய்து ,நடிப்புக்கு வருகிறேன்.

இதில் அண்ணன்-தங்கை symbiotic relationship ,ஒருவரை தவிர மற்றோருக்கு எந்த பிடிப்போ,பற்றோ அற்ற ஒரு முனை பட்ட உறவு. இது ஒரு வித brainwash போல ,ஒருவரை தவிர இன்னொருவருக்கு எதுவும் முக்கியமில்லை என்ற psychotic obsession . இதை நான் வாழ்க்கையில் சந்தித்த சில முக்கியமான மனிதர்களுடன் கண்டிருக்கிறேன். முக்கியமாக அம்மா,சகோதரி சம்பந்த பட்ட உறவுகளில். இந்த மாதிரி மனிதர்கள் எடுக்கும் ,முடிவுகள், தியாகங்கள்,மற்ற முக்கிய உறவுகளின் சிதைந்த நிலை மற்றோருக்கு illogical தோற்றம் கொடுத்தாலும்,சம்பத்த பட்டவர்களின் கண்ணுக்கு அவை நியாயமே.

ராஜசேகரனை பொறுத்த வரை அவனுக்கு மேற்பட்ட சிந்தனை எவையும் கிடையாது. உண்மையானவன்,உழைப்பாளி என்பதெல்லாம் இருந்தாலும் பொதுநலன், குழு சார்ந்த பார்வை என்பது அறவே கிடையாது. அவன் பழைய வாழ்வை மறந்து பணம் பகட்டு ,அந்தஸ்து,கெளரவம் போன்ற மாயைகளில் உழல்பவனே.நிறைய இடங்களில் தன் நலன் சார்ந்து தங்கையின் நலனுக்காக ,மற்றோரை குப்பையாக தூக்கி எறிபவன்.அவனிடம் ஒரே நல்ல தன்மை தங்கை பாசம் மட்டுமே. மூர்க்க தனமான கண்ணை மறைக்கும் பாசம், தங்கையின் சேமிப்பாலும் ,ஆலோசனையாலும் கிடைக்கும் செல்வ நிலை அவளுக்கே சொந்தம், தான் guardian /custodian மட்டுமே என்று வாழும் நிலையில் தனக்கென்று உருவான குடும்பத்தை அந்நிய படுத்துவதும் அல்லாமல் ,தங்கையின் கணவன் தன்னோடுதான் இருக்க வேண்டும் என்று மற்றோர் சுயத்தை சீண்டும் முடிவுகளையும் நடைமுறை படுத்துகிறான்.இந்த மாதிரி சிக்கலான பாத்திரம் தமிழ் திரை கண்டதில்லை.என்னிடம் பல பேர் கேட்ட கேள்வி ,ஏன் எல்லாவற்றையும் தங்கைக்கு கொடுத்து இப்படி தெருவில் அலைய வேண்டும் என்ற கேள்வி? நான் ஏற்கெனெவே சொன்னது போல அசாதரணமான உறவு, மனநிலை,ஒருமுனை பட்ட உறவின் தாக்கம்,மூர்க்கத்தனமான பாசம் இவற்றில் ராஜசேகரின் செயலுக்கு அவனாலுமே விளக்கம் சொல்ல முடியாது.நான் பலமுறை வாழ்க்கையில் பார்த்த நிலைதான் இது.

நடிகர்திலகம் பீம்சிங் படங்களில் ஏற்ற பாத்திரங்களின் range மிக அபூர்வமான ஒன்று.

படிக்காத EQ நிறைந்த வெளிப்படையான ரங்கன், பகட்டு புதுப் பணக்கார தோரணை காட்டும் ராஜசேகர்,sophisticated பணக்கார ஆனால் rawness கொண்ட படிக்காத சிறிது தாழ்மையுணர்வு கொண்ட கோபால்,பிறவி பணசெருக்கு கொண்டு மற்றவரை துச்சமாக கருதும் சிவலிங்கம் என்று அவர் காட்டும் வித்தியாசங்கள் பார்த்து உணர்ந்து ரசிக்க வேண்டிய அதிசயங்கள்.

பாசமலரை பொறுத்த வரை ,ஒரு புதுமை கொண்ட உன்னத நடிப்பு - கிழக்கையும்,மேற்கையும் இணைத்து stylised ஆன ஒரு meisner பாணி நடிப்பு -

இனி முழுக்க அதில்தான் புகுவேன்.

Meisner பள்ளி சார்ந்த நடிப்பு என்பதால் ,சூழ்நிலை மற்றும் மற்ற கதாபாத்திரங்களை ஆழமாக அலசி விட்டு பிறகு நடிகர்திலகத்தின் நடிப்பை விரிவாக பார்ப்போம் .

நான் ஏற்கெனெவே கூறியபடி இந்த படத்தில் வில்லன் யாருமே கிடையாது அண்ணன் தங்கையின் அதீத பாசம்தான் ஒரே வில்லன். இந்த குருட்டு பாசமே இருவர் அழிவுக்கும் காரணமாகி defeatism நோக்கி பாத்திரங்களை தள்ளுகிறது.

ராஜசேகர் , ஆசை பட்டு பணக்காரனாகி பணக்கார வாழ்வின் அந்தஸ்து,தோரணை,வறட்டு கெளரவம் எல்லாம் சுமப்பவன்(நண்பன் புகழும் போது வெளிப்படையாய் ரசிக்கும் அளவு).நண்பனே ஆனாலும் ஆனந்தனை மாப்பிள்ளையாக ஏற்கும் பெருந்தன்மையோ,அவர்களை சுதந்திரமாக வாழவிடும் எண்ணமோ இல்லாதவனே. சில விஷயங்களில் குருட்டு பிடிவாதங்கள் உண்டு.சொத்தை பிரிப்பது என்பது அவன் பாசத்தை பிரிப்பது போல obsession கொண்டு நடப்பது, சுதந்திர மனப்பான்மை கொண்ட professional மனைவியிடம் ஒட்டாத சமூக வாழ்க்கை வாழ்ந்தாலும், அவளுக்கு அளிக்கும் சுதந்திரம் ஒரு விதத்தில் அவனை உயர் தளத்தில் வைத்தாலும் ,அவளுக்கு தன் வாழ்வில் இடமில்லை என்ற அளவில் by default நடப்பதாகவே உணர்வோம்.தன்னுடைய சக நண்பர்கள் காட்டும் வாஞ்சையை அவர்களுடன் திருப்புகிறானா என்பதே கேள்விகுறி. தங்கை அவள் சார்ந்த obsessions இதை தவிர வேறு சிந்தனையோ ஒட்டுதலோ இல்லாதவன்.மற்றவர் மாறி வளரும் போது emotional வளர்ச்சி காணாது ,மனதில் செல்வந்தனாய் மட்டும் உணர்ந்து விடுகிறான்.

ராதா தன் அண்ணனின் நல்ல நண்பன் (அங்கீகரிக்கப்பட்ட)என்ற சுவாதீனத்தில் காதலில் விழுந்தாலும் ராஜசேகரன் மனதளவில் பணக்காரனாகி விட்டது போல, சில செல்வ வளங்களை அனுபவித்தாலும் மனதளவில் பழைய ராதாவாகவே தொடர்வது பின்னால் பல சிக்கல்களை விளைவிக்கும் முரணாகிறது. பாசம் பழைய படியே தொடர்ந்தாலும் நிஜமான பணக்கார அண்ணனுடன் , செல்வ சுகங்களை அனுபவிக்கும் ஏழை ராதாவாகவே தொடர்வது பெரிய முரண்.பிறகு தான் தன் கணவன் என்ற பெண்ணுக்குரிய அனுசரணை சார்ந்த சுய நலம் எட்டி பார்ப்பது ராஜசேகர் மனநிலைக்கு ஒத்ததாக இல்லாதது அடுத்த நிலைக்கு சிக்கலை வளர்க்கிறது.

ஆனந்தன், நடைமுறை லட்சியவாதி ஆனாலும்,ராஜசேகரன் உயர்நிலையை ஒப்பு கொள்கிறான்.(இரு முறை அடிபடும் போதும் எதிர்க்காமல் ).இந்த தாழ்மையுணர்வு ,வீட்டோடு மாப்பிள்ளையாய் இருக்க நேர்கையில் இன்னும் அவனை ஏற்கெனெவே சிறிது சீர்கெட்ட நண்பனுடன் ஆன உறவை சந்தேக கண் கொண்டே அளக்க,செயல்பட வைத்து விடுகிறது . அவன் ஏழை ராதாவை விரும்பி, அவளை பணக்காரியாய் பல சிக்கல்களுடன் அடைந்தது ,அவன் குணத்திலும் சிறிது குழப்பத்தை விளைவிக்கிறது.

விதவை ஏழை ,மீனாக்ஷி அம்மாளோ ,தனது ஒரே மூலதனமான மருமகனை வைத்து தன்னுடைய நிலையை உயர்த்த விடாமல் இடையூறாய் ஒரு ஒட்டு வாழ்வு. அவளுக்கு அண்ணன் தங்கை பிரிந்து பாகமும் பிரிந்தால் மட்டுமே அவள் ஒரு வீட்டில் தலைமை ஏற்று அவள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.இதற்கு ராதாவோ, ஆனந்தனின் நேர்குணங்களோ உதவாது என்பதால் சிறிதே தடம் மாறுகிறாள்.

மாலதி தன்னுடைய தொழில் சார்ந்த வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுக்க விரும்பும் குடும்ப பின்னணியில் வந்து இந்த மூட பாச சுழல் நிறைந்த இடத்தில் பொறியில் மாட்டிய எலியாய் அவதி பட்டு, ஒட்டாத வாழ்க்கையில் சடங்கு போல வாழ்ந்து தன் கணவன் மதிப்பு,சுயமரியாதை ,பணம் எதையும் காக்க இயலாததால் அண்ணன் காட்டிய வழியில் சென்று விடுகிறாள் (பேருக்கு மறுத்து விட்டு ,பிள்ளையையும் கணவனிடம் விட்டு தப்பிக்கிறாள்)

பாஸ்கரன் ஒரு நல்ல சகோதரனாக வழிகாட்டியாய் இருக்க நினைத்தாலும் , ராஜுவின் பைத்தியகாரத்தன பாசம், தன் தங்கையை நிம்மதியாக வாழ விடாது என்பது புரிந்து, ராஜுவின் சவாலை (முடிந்தால் நீ உன் தங்கைக்கு எதாவது பண்ணு என்னை போல் )மெளனமாக professional ,நல்ல பாரம்பரிய குடும்பத்து முறையில் சிக்கலில்லாது லட்சிய போர்வையில் தங்கைக்கு தற்காலிக விடுதலை தருகிறான்.

நண்பர் ரத்தினம் , எப்போதெல்லாம் ராஜுவின் மீது அக்கறை செலு த்துகிறாரோ ,அப்போதெல்லாம் (திருமண ஏற்பாடு,முனிசிபல் சேர்மேன்,குடும்ப சொத்து தீர்வு)அப்போதெல்லாம் அண்ணன் தங்கையின் எடுத்தோம் கவிழ்த்தோம் முடிவுகளில் மூக்குடைப்பே பெறுகிறார்.

இது அழகான பாசத்தின் கதையாக அமர துவம் பெற்றாலும் , இந்த குருட்டு பாசமே வில்லனாகி அவர்களையும்,சுற்றி இருப்பவர்களையும் இந்த அளவு மன கிலேசம் கொள்ள வைப்பது ,இந்த படத்தின் வெளிப்படையான பல மாயைகளை தகர்த்து, பல வேறு பட்ட தளங்களில் சிக்கலான தளங்களில் திரைக் கதை பயணிக்கிறது.

சிவாஜி இந்த nuances உணர்ந்து நடித்ததால்தான் படம் இந்த அமரத்துவத்தை அடைந்துள்ளது.

நடிகர்திலகம் ஏற்கெனெவே சிறிது மேற்கத்திய பாணியில் திரும்பி பார்,மணமகள் தேவை,அன்னையின் ஆணை படங்களில் ,நடித்திருந்தாலும் ,இந்த படம் நம் கலாச்சார மதிப்பீடுகளை சமரசம் செய்யாமல் மேலை நாட்டு பாணியில் அமைந்த திருப்பு முனை படம்.

ஒரு பணக்கார வாழ்க்கையை முழுவதும் சுவைத்து அதனுடன் தோய விரும்பும் (ஆங்கிலம்,பியானோ ) ராஜசேகரனை ரத்தமும் சதையுமாக காணலாம்.அடர்த்தி புருவம், ஒழுங்கான சிகை அலங்காரம், உடைகள் என்று ஏழ்மையை உதறி கனவான் போர்வையை உடல்,மனம்,எண்ணம்,எல்லாவற்றிலும் சுமக்கும் ஒருவனை , அந்த உணர்வுகளையும்,எண்ணங்களையும் மற்றோர் மனநிலைக்கேற்ப வெளியிடும் அந்த மென்மையாய் உறுதி காட்டும் குரல் ஜாலம் , நடிப்பை நடைமுறையுடன் இணைக்கும் ஒரு முனை படாமல் பல செயல்களை மனநிலைக்கேற்ப இணைவாகவோ, பேதமாகவோ காட்டி meisner பாணிக்கு இலக்கணம் தருவார்.இந்த படம் அவரின் உலக அளவு தரத்தில் உயர்நடிப்பின் ஒரு சாதனை திறவுகோல் .

ஆனந்தன் வேலை கேட்டு வரும் இடம், தங்கையின் தலையில் பூ வைக்கும் நண்பனை கண்டு வரும் ஆத்திரம், தொழிற்சாலையில் ஆனந்தன் கூட்டாளிகளுடன் வாக்குவாதம்,தங்கை தோட்டத்தில் ஆனந்தனுடன் பேசி கொண்டிருப்பதை கேள்வி பட்டு ஆத்திரமுற்று பிறகு நடைமுறைக்கு வரும் காட்சி,தங்கையின் வாட்டத்தை அவள் ஆசையை நிறைவேற்றி போக்கும் காட்சி, வீட்டில் செங்கல்வரயனின் அட்டகாசங்களை கண்டிக்கும் போது ஆனந்தன் பரிந்து வருவதால் நிலைமை எல்லை மீறுவதை புரிந்து தணிவது,மீனாக்ஷியம்மாளின் சூழ்ச்சியால் மோதல் போக்கு எல்லை மீறி ஆனந்தனை வேண்டுவது,நண்பர்களுடன் தேர்தலுக்கு நிற்பதை பற்றி பேசுவது,தங்கை வீட்டிற்கு வரும் போது தன்னிலையை சொல்ல மனைவிக்கு தரும் இடம்,பாஸ்கருடனான உரசல் ,பிறகு இதமான அனுசரணை என்று அவர் புதுமை நிறைந்த நடிப்பின் கொடி கதாபாத்திர இணைவுடன்,மற்ற பாத்திரங்களுடன் எதிர்-உடன்-குழப்ப நிலைகளில் ஒரு அதிசய பயணம் நிகழ்த்தும்.

ஆனந்தன் வருகையை எதிர்பார்த்திருந்தாலும் ,வந்தவுடன் நீ ஒரு பொருட்டில்லை என்று பல பொருள்களில் கவனம் குவிக்கும் அலட்சியம், ஆத்திரம் கலந்த அகந்தை, பென்சில் சீவி கொண்டு பார்க்கும் வன்மம் குரூரம் கொண்ட பார்வை என்ற இந்த தொழிற்சாலை மோதல் காட்சி improvisation என்ற meisner பள்ளி நடிப்புக்கு ஒரு நடைமுறை உதாரணம்.

தன் விசுவாச ஊழியனின் கழுத்தை நெரித்து தள்ளி ,துப்பாக்கியுடன் கொலை வெறியுடன் சென்று தன் தங்கை தனக்காக காதலை துறக்க செல்லும் பாசத்தில் அந்த கொலை கருவியினாலேயே தன் கண்ணீரை துடைத்து, அதை தூக்கி எறியும் கவிதாபூர்வ நடிப்பு.

வாராயென் தோழி பாடலில் மலராத பெண்மை மலரும் வரிகளில் ஒரு திருமணமாகாத ஆணின் வெட்கம் (embarassment கலந்த),தன் தங்கை அடைய போகும் இன்ப வாழ்வை நினைந்த நெகிழ்ச்சி,அங்கிருந்து அகல விரும்பும் அவசரம் எல்லாவற்றையும் பத்து நொடிகளில் காட்டும் மேதைமை.

தங்கை தன் முறிந்த திருமணத்தை பேசும் போது சங்கடத்துடன் சிகரெட்டை பார்த்து (ஒருமுறை வாய் வரை சென்று தவறும்),தங்கையை குற்றம் சாட்டுவது போல அமையாமல் அவர் பேசும் விதம்.

செங்கல்வரயனை இந்த வீட்டில் இருந்து மரியாதையை குலைக்கும் விதத்தில் நடக்காதே என்று சொல்லும் போது ,ஆனந்தன் குறுக்கிட்டு இதில் தவறில்லை ,வேறு ஏதோ நோக்கத்தில் குத்துவதாக சொல்ல விருப்பமின்றி தணியும் விதம்.

தங்கையை அவள் கணவன் அடித்தவுடன் நிலைமை மறந்து ஆத்திரத்துடன் பாயும் உணர்ச்சி வேகம் ,பின் தன்னிலை உணர்ந்து ஆனந்தனை சமாதான படுத்தும் பாங்கு (பாசம்,கெளரவம் கலந்த உணர்வுடன் தனித்து பேசும் நேர்த்தி),என் கணவன் கௌரவத்தில் ,உயர்வில் எனக்கு அக்கறை உண்டு ,உங்கள் தங்கை அவள் கணவனுக்காய் பேசுவது போல எனக்கும் உரிமை உண்டு என்று கோரும் மனைவியின் நியாயம் உணர்ந்து ,பாசத்தில் துடித்தாலும் விலகி நின்று மனைவிக்கு உரிமை தரும் கண்ணியம்,தனக்கு நியாயம் சொல்லும் மனைவியின் அண்ணனை , தன் நிலை படி தங்கைக்கு உதவ சொல்லி சீறும் கட்டம்,பிறகு சற்று சோர்வாக வரும் பாஸ்கருடன் குற்ற உணர்வுடன் நியாயத்தை உணர்ந்து அவர் கோரிக்கைக்கு பணிவது, மனைவியுடன் ஓட்ட ஆரம்பிக்கும் கட்டத்தில் நடைபிணமாய் வழியனுப்பும் வேதனை .

இந்த படத்தில் அவர் நடிப்பை அணு அணுவாக கூறு போட்டு எழுத எத்தனை பக்கங்கள் கொடுத்தாலும் போதாது .ஒவ்வொரு முறை காணும் போதும் புதுமையாய் உணரும் ஒரு புத்துணர்வு கலந்த பிரமை.

RAGHAVENDRA
7th October 2013, 08:42 AM
Just I was looking for the post of Gopal Sir on Pasa Malar for quoting here and thank you Gopal for the same

RAGHAVENDRA
7th October 2013, 09:04 AM
அடுத்து,

உலகின் பல்வேறு நடிப்புப் பள்ளிகளுக்குப் பாடம் வைக்க வேண்டிய உன்னதமான நடிப்பிற்கோர் உதாரணமாக, வேறு சமயங்களில் வெளியிடப் பட்டிருந்தால் உரிய வரவேற்பைப் பெற்றிருக்கக் கூடிய,

எல்லாவற்றிற்கும் மேலாக என்னுடைய டாப் டென்னில் இடம் பெற்றுள்ள

காலத்தை வென்ற திரைக்காவியமான பாச மலர் திரைப்படம் அடிக்கடி நம்முடைய விவாதங்களில் பங்கு பெறக் கூடியது, அது மட்டுமின்றி மறு வெளியீட்டின் காரணமாக தனித்திரி வேறு உள்ளது போன்ற காரணங்களால் மிக விரைவில் இங்கு...

எல்லாம் உனக்காக..

Gopal.s
7th October 2013, 09:49 AM
எல்லாம் உனக்காக..
வாசு சாரின் தயவால் நீண்ட நெடும் நாட்களுக்கு பிறகு எல்லாம் உனக்காக DVD கிடைத்து பார்த்தேன். சிவாஜி, சாவித்திரி,ரங்கா ராவ் நடிப்பிலும், கே.எஸ்.கோபால கிருஷ்ணனின் அற்புத வசனங்களாலும் ஒரு நிறைவான படம் பார்த்த திருப்தியை அளித்தது. மகளுக்காகவே வாழ்ந்து மறையும் ஒரு அதிசய பாத்திரம் ரங்கா ராவ். குறையுள்ள பெண்ணின் அன்பு கணவனாக,இலட்சியவாதியாக நடிப்பது நம் நடிப்பு கடவுளுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. ஊதி தள்ளி விடுவார்.
கே.வீ.எம் பாடல் மலரும் கொடியும் ...அடடா....
ஒரு pleasant surprise package இந்த படம்.

Subramaniam Ramajayam
7th October 2013, 10:16 AM
PASAMALAR''' Endrum manakkum vadatha malar. Crown theatre mint had a festive look through out the 134 days run, the theatre owner himself come and monitor the ladies crowds always then only he will leave after fiing HOUSEFULL boards.
one of the famous magazines in their review quoted pasamalar as the highest emotional lively drama come in that recent times and also requested the theatre owners to compliment one small handtowel aong with the tickets so that they can control their emotions to some etent, it is kumudam or kalkandu.
ennai sivaji veryanakkia RAJASEKARAN.

RAGHAVENDRA
9th October 2013, 10:30 PM
Sivaji Ganesan Filmography Series

70. எல்லாம் உனக்காக Ellam Unakkaga


http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/eusnap01_zps617e827e.jpg

தணிக்கை 24.06.1961
வெளியீடு 01.07.1961

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/EUAd01.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/EUAd02.jpg


தயாரிப்பு – சரவண பவா & யூனிட்டி பிக்சர்ஸ்

நடிக நடிகையர்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சாவித்திரி கணேஷ், டி.எஸ்.பாலையா, எஸ்.வி.ரங்காராவ், டி.ஆர். ராமச்சந்திரன், வி.நாகையா, சி.கே.சரஸ்வதி, எம்.எஸ். சுந்தரிபாய், எஸ்.ஏ.நடராஜன், ராமராவ், கே.வி. சாந்தி, பி.சுசீலா, ராதா பாய் டி.பி.ஹரிசிங், கணபதி பட் மற்றும் பலர்

கதை – ஆச்சார்ய ஆத்ரேயா
வசனம் – கே.எஸ். கோபால கிருஷ்ணன்
இசை அமைப்பு – கே.வி. மகாதேவன், உதவி – புகழேந்தி
நடன அமைப்பு – பி.எஸ். கோபால கிருஷ்ணன்
நிர்வாகம் – ஏ.கே. பாலசுப்ரமணியம், சி.சுந்தரம்
ஒளிப்பதிவு டைரக்டர் – பி. ராமசாமி
ஒளிப்பதிவாளர் – பி. தத்
ஒலிப்பதிவு – ஏ. கோவிந்தசாமி
பாடல்கள் ஒலிப்பதிவு – ஏ.கோவிந்தசாமி – நெப்டியூன், ஆர். கண்ணன் – ரேவதி, ரங்கசாமி – பாரமௌண்ட்
எடிட்டிங் – கே. கோவிந்தசாமி
ஆர்ட் டைரக்ஷன் – எஸ்.கிருஷ்ணா ராவ்
திரை ஓவியம் – வி.எஸ். ராவ்
செட்டிங்ஸ் – எஸ்.ரங்கசாமி, எம்.சொக்கலிங்கம்
உடையலங்காரம் – பி.ராமகிருஷ்ணன்
ப்ளோர் இன்சார்ஜ் – சி.சி. அந்தப்பன், ஆர்.என்.ராவ்
மேக்கப் – ஆர்.ரங்கசாமி, நாகேஸ்வர ராவ், பெரியசாமி
ஆபீஸ் நிர்வாகம் – டி.ஏ.நடராஜன்
பப்ளிசிட்டி நிர்வாகம் – சீதாராம்
ப்ரொடக்ஷன் மேனேஜர்கள் – எஸ்.ஏ.ஆறுமுகம், பி.ரங்கராஜ், திருவேங்கடம், கண்ணன்
ஸ்டில்ஸ் – ஆர்.என். நாகராஜ ராவ், கே.வினாயகம்
ஸ்டூடியோ – நெப்டியூன், சென்னை 28
டைரக்ஷன் – ஏ. சுப்பாராவ்

RAGHAVENDRA
9th October 2013, 10:32 PM
பாடல்களின் பட்டியல்



1. காக்கா பிடிக்காது டேக்கா குடுக்காது – தஞ்சை ராமையா தாஸ் – ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி குழு

2. மனசு போல மாப்பிளையை பாத்துக்க – கொத்தமங்கலம் சுப்பு – பி.சுசீலா, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, எல்.ஆர். ஈஸ்வரி குழு

3. அசைந்து குலுங்கும் சதங்கை ஒலி – அ. மருதகாசி – பி.சுசீலா

4. மலரும் கொடியும் பெண்ணென்பார் – கண்ணதாசன் – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா

5. நான் பாத்தா மொறைக்கிறா – கு.ம.கிருஷ்ணன் – ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி

6. தங்க மகனே இன்பம் தந்த செல்வமே – கண்ணதாசன் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி குழு

7. கொஞ்சி வரும் நெஞ்சில் இன்று – கண்ணதாசன் – பி.சுசீலா

8. கடமையை செய்வோம் கவலையை மறப்போம் – கண்ணதாசன் – டி.எம்.சௌந்தர்ராஜன் குழு

RAGHAVENDRA
9th October 2013, 10:33 PM
எல்லாம் உனக்காக - காணொளிகள்

கொஞ்சி வரும் நெஞ்சில் இன்று

http://youtu.be/Xz50gYQtTfs

மலரும் கொடியும் பெண்ணென்பார்

http://youtu.be/IaxGu--YQpQ

RAGHAVENDRA
9th October 2013, 10:33 PM
பாட்டுப் புத்தகப் பக்கங்கள்

முன் அட்டை

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/EUSBCFfw_zps177ff820.jpg

பின் அட்டை

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/EUSBCRfw_zps2957a429.jpg

கதைச் சுருக்கம்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/SONG%20BOOK%20PAGES/EUSBStoryfw_zpse8f90fc8.jpg


நெடுந்தகட்டு முகப்பு



http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/eudvdcover_zpsd815b390.jpg

RAGHAVENDRA
9th October 2013, 10:37 PM
எல்லாம் உனக்காக - காணொளிகள்

அசைந்து குலுங்கும்


இப்பாடலைப் பற்றிய ஆங்கில விளக்கவுரை யூட்யூப் இணைய தளத்திலிருந்து...


This is a classic example of subtle acting. Sivaji and Savithri simply steal your hearts in the scene. This should be completely watched to understand the situation and hence the song is preceded and followed by the related narration. Anand (Sivaji) happens to marry Sarala (Savithri), physically handicapped. This is the first night scene. See how to the understanding between husband and wife is explored in this situation. She plays the visuals of her dance performance and both husband and wife look each other on seeing the visual. There is so much of mind expressed in their looks. At one stage Sarala sings along the song which moves Anand.

An outstanding performance in a intricate relationship sequence stands testimony to the genius in Sivaji and Savithri.

Film: ELLAM UNAKKAGA
Direction: Athurthi Subba Rao
Cast: Sivaji Ganesan, Savithri, Ranga Rao, T.S. Balaiah, C.K. Saraswathi and others.
Music: K.V. Mahadevan


உலகத்திலிருக்கும் அத்தனை விதமான நடிப்புப் பள்ளிகளிலும் பாடமாக வைக்கப் பட வேண்டிய காட்சி. இந்தப் பாடலைத் தனியாகப் பார்ப்பதை விட அதன் முன்னும் பின்னும் தொடர்புடைய காட்சிகளோடு பார்த்தால் தான் இதன் மகத்துவம் விளங்கும் என்பதற்காக காட்சிகளுடன் தரவேற்றப் பட்டுள்ளது. குறிப்பாக திரையில் தன்னுடைய நாட்டியத்தைப் பார்த்தவாறே சாவித்திரி கலங்குவதும் சாவித்திரியை திரையிலும் அருகிலுமாக மாற்றி மாற்றிப் பார்த்து தன் மன ஓட்டத்தை முகத்தில் பிரதிபலிப்பதும், உலகத்தில் இவர்களை மிஞ்சிய நடிக நடிகையர் இருப்பார்களா என்ற கேள்வியைக் கட்டாயம் ஒவ்வொருவர் நெஞ்சிலும் எழுப்பும்.

http://youtu.be/aDMB2fTqLaQ

RAGHAVENDRA
11th October 2013, 09:02 AM
Sivaji Ganesan Filmography Series

71.ஸ்ரீ வள்ளி Srivalli

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/NTSriValli02_zpsfc69b0a6.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/NTSriValli01_zps498486b4.jpg

http://www.thehindu.com/multimedia/dynamic/00489/27cp_blast_sri_vall_489047e.jpg

தணிக்கை – 06.06.1961
வெளியீடு – 01.07.1961

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/SriValliAd01forPB.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/SriValliAd02forPB.jpg

தயாரிப்பு – கே.வெங்கடேசன், எல்.வெங்கட்ராமன் - நரசு ஸ்டூடியோஸ், சேலம்

நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி, ராகினி, ஹெலன், டி.ஆர்.மகாலிங்கம், ஈ.ஆர்.சகாதேவன், ஜே.பி.சந்திரபாபு, வி.ஆர்.ராஜகோபால், சி.எஸ்.பாண்டியன், சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன், சி.ஆர்.பார்த்திபன், பேபி உமா, சி.கே.சரஸ்வதி, பட்டம்மாள், வத்ஸலா மற்றும் பலர் நடித்த்து.

கதை வசனம் பாடல்கள் – தஞ்சை ராமையா தாஸ்
இசை – ஜி.ராமனாதன்
ரீரிகார்டிங் சங்கீதம் – சி.என். பாண்டுரங்கன்
ஆர்கெஸ்ட்ரா- ஜி.ராமனாதன் இசைக்குழுவினர்

பின்னணி பாடியவர்கள் – டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா, ஜிக்கி,

நடன அமைப்பு – பி.எஸ்.கோபால கிருஷ்ணன், கே.என். தண்டாயுத பாணி பிள்ளை, கே.டி. தங்கராஜு, வி.மாதவன்
ஒலிப்பதிவு – கே.ராமச்சந்திரன்
ஆர்ட் டைரக்ஷன் – கங்கா
ஒளிப்பதிவு – கே.ஹெச். கபாடியா, பாபுபாய் உதேஷி
தந்திரக் காட்சிகள் – பாபுபாய் உதேஷி
ஆப்டிகல்ஸ் – ராவ்கோ எபெக்ட்ஸ் ஸர்விஸ்
எடிட்டிங் – ஆர்.ராஜகோபால்
மேக்கப் – டி.தனகோடி, ஆர்.ரங்கசாமி, சுந்தரம்
உடை – எம்.ஜி.நாயுடு, ஏ.அங்குசாமி,
ஸ்டில்ஸ் – போட்டோ ஆர்ட் சென்டர்
செட்டிங்ஸ் – எம்.எஸ்.சுப்ரமண்யம்
செட் ப்ராப்பர்டீஸ் – சினி க்ராப்ட்ஸ்
புரடக்ஷன் மேனேஜர் – வி.நாராயணன்
உதவி டைரக்ஷன் – கே.ஷண்முகம், பி.எம்.மணி
பிராசஸிங், பிரிண்டிங் – கேவா கலர், பை பிலிம் சென்டர், பாம்பே
சவுண்ட் பிராசஸிங் – மெட்ராஸ் சினி லேபரட்டரீஸ்
ஸ்டூடியோ – நரசு
வெஸ்ட்ரெக்ஸ் சவுண்டு சிஸ்டத்தில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது
டைரக்ஷன் – டி.ஆர்.ராமண்ணா

RAGHAVENDRA
11th October 2013, 09:05 AM
மீண்டும் ஒரே நாளில் இரு படங்கள்... ஜூலை 1, 1961 ... பாச மலர் வெற்றி பவனி வந்து கொண்டு தமிழகத்தையே கலக்கிக் கொண்டிருக்கும் போது ... இது தேவையா ... என ரசிகர்களின் உள்ளக் குமுறல்களைக் கண்டு கொள்ள யாரும் இல்லாமல், எல்லாம் உனக்காக, ஸ்ரீ வள்ளி இரண்டும் ஒரே நாளில் வெளியாகின்றன. சென்னை அண்ணா சாலையிலேயே பாரகனிலும் காஸினோவிலும் சித்ராவிலும் மூன்று நடிகர் திலகத்தின் புதிய படங்கள். பின்னாலேயே ஆகஸ்டில் மருத நாட்டு வீரன்...

என்ன சொல்ல...

RAGHAVENDRA
11th October 2013, 09:07 AM
ஸ்ரீ வள்ளி நிழற்படங்கள்

பால முருகனாக நடிகர் விஜயகுமார்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/vijayakumarSriValli01_zps6b7ff639.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/vijayakumarSriValli02_zps48005fb2.jpg

டி.ஆர்.மகாலிங்கம் நாரதராக, நடிகர் திலகம் முருகனாக

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/NTSriValli03_zps0311246c.jpg

எழில் தாரகை நாட்டியப் பேரொளியின் கண்கவரும் தோற்றம்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/PadminiSriValli_zpsbcce6183.jpg

நடிகர் திலகமும் நாட்டியப் பேரொளியும்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/NTSriValli04_zpscbc09582.jpg

RAGHAVENDRA
11th October 2013, 09:08 AM
ஸ்ரீ வள்ளி காணொளிகள்

உனக்காவே பிறந்த அழகன்

http://youtu.be/_DKeeOQAoYk

ஹெலன் நடனப் பாடல்

http://youtu.be/P6hvzTTP3mk


ஸ்ரீ வள்ளி திரைப்படப் பாடல்களைக் கேட்க

http://www.inbaminge.com/t/s/Sri%20Valli/

mr_karthik
12th October 2013, 04:48 PM
எல்லாம் உனக்காக படத்தை நான் பார்த்தது எழுபதுகளின் துவக்கத்தில் வடசென்னை ஸ்ரீ முருகன் தியேட்டரில் சிவாஜி வாரம் கொண்டாடப்பட்டபோது. (தினம் ஒரு படம் வீதம் செல்வம், எல்லாம் உனக்காக, இருவர்உள்ளம், நிச்சயதாம்பூலம், குங்குமம், அன்னைஇல்லம், அறிவாளி என ஏழு படங்கள். எப்படி நினைவிருக்கிறது என்றால் ஏழு படங்களையும் தினமும் மாலைக்காட்சி பார்த்தேன். All Black & White Classics. இதில் இன்னொரு விசேஷம் ஏழு படங்களிலும் ஏழு வெவ்வேறு கதாநாயகிகள்). அந்த வகையில் எல்லாம் உனக்காக என் மனதுக்கு நெருக்கமான படம்.

படத்தைப்பற்றி சொல்ல வேண்டுமானால் மிக மிக அருமையான படம். நடிகர்திலகமும் சாவித்திரியும் அவ்வளவு அற்புதமாக நடித்திருந்தார்கள். பாசமலருக்கு முன் வந்திருந்தால் நிச்சயம் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் என்பது திண்ணம். அந்த அளவுக்கு படத்தின் தரம் அமைந்திருந்தது. இருவரும் ஜோடியாக நடித்த படங்களில் இது சிறந்த படமென்பேன். பார்த்தபோது எனக்கு இன்னொரு சந்தோஷம் என்னவென்றால், சிவாஜி வாரத்தில் இப்படம் சரியாக ஞாயிறன்று வந்து மாட்டியது. அரங்கில் நல்ல கூட்டம். எல்லா தரப்பினரும் நன்றாக ரசித்தார்கள். குறிப்பாக தாய்மார்கள்.

'மலரும் கொடியும் பெண்ணென்பார்' பாடலை சிறுவயதில் பலமுறை வானொலியில் கேட்டு மனப்பாடம் ஆகியிருந்தது. படத்தில் காட்சியைப்பார்த்ததும் அழுது விட்டேன். இரண்டு திலகங்களும் என்ன ஒரு அற்புதமான அமைதியான நடிப்பு.

அன்பு நடமாடும் கலைக்கூடமே பாடலைப் பார்த்தபோது, பொன்னை விரும்பும் பூமியிலே பாடல் நினைவு வந்தது போல, இப்படம் பார்த்த சில மாதங்களிலேயே வெளியான தங்கப்பதக்கத்தில் 'சுமைதாங்கி சாய்ந்தால்' பாடலைப் பார்த்தபோது 'மலரும் கொடியும் பெண்ணென்பார்' பாடல்தான் நினைவுக்கு வந்தது.

எல்லாம் உனக்காக பார்த்துவிட்டு வெளியே வரும்போது ரசிகர்கள் பெரும்பாலோர், இப்படம் பாசமலருடன் clash ஆனதைப்பற்றி வருத்தத்துடன் பேசியபடியே வந்தனர்.

பார்க்க வேண்டிய அருமையான படம் 'எல்லாம் உனக்காக'....

mr_karthik
12th October 2013, 05:37 PM
'ஸ்ரீ வள்ளி' நடிகர்திலகம் நடித்த இரண்டாவது முழுநீள வண்ணப்படம். முதல் கேவா கலர்ப்படம். (முதல் வண்ணப்படம் கட்டபொம்மன் டெக்னிக் கலர்) . இதற்கு முன் அம்பிகாபதியில் 'மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு' பாடல் மட்டும் கேவா கலரில் படமாகியிருந்தது.

இப்படத்தை முதல்முறை பார்த்தது சென்ட்ரலை அடுத்த வால்டாக்ஸ் ரோட்டிலிருந்த ஸ்ரீபத்மநாபா தியேட்டரில். அதன்பிறகு எஸ்.ஐ.ஏ.திடலில் நடந்த பொருட்காட்சியில். அப்புறம் பார்க்க வாய்ப்பில்லை. அப்போதைக்கு நன்றாக இருந்தது.

ஒருமுறை சாந்தி வளாகத்தில் திருச்சியைச்சேர்ந்த பெரியவர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது திருச்சியின் அந்தக்கால நிகழ்வுகளை சொன்னார். திருச்சியில் ஒரே காம்பவுண்டுக்குள் இருந்த வெலிங்டன், ராக்ஸி தியேட்டர்களில் வெலிங்டனில் ஸ்ரீவள்ளியும் ராக்ஸியில் சபாஷ் மாப்பிள்ளையும் ஒரே நேரத்தில் ரிலீசாகி ஓடிக்கொண்டிருந்ததாம். இருதரப்பு ரசிகர்களுக்கும் தினமும் சண்டைதான் என்று சொன்னார்...

RAGHAVENDRA
14th October 2013, 06:53 AM
கார்த்திக்,
தங்கள் நினைவாற்றல் அபாரம், பிரமிக்க வைக்கிறது. நானும் இப்படத்தை அங்கே இரண்டாம் முறை பார்த்தேன். அதற்கு சில வாரங்கட்கு முன்னர் தான் அம்பத்தூர் அருகே சற்று தள்ளி இருந்த ஒரு கிராமத்தில் கீற்றுக் கொட்டகையில் பார்த்தது.
அதே போல் ஸ்ரீ வள்ளி திரைப்படத்தையும் தாங்கள் பார்த்ததைப் பற்றிக் குறிப்பிட்டிருந்ததும் தங்கள் நினைவாற்றலுக்கு மற்றோர் சான்று.

RAGHAVENDRA
16th October 2013, 07:33 AM
Sivaji Ganesan Filmography Series

72. மருத நாட்டு வீரன் MARUTHANATTUVEERAN

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/nadigar_thilagam_various_poses_from_marutha_naat.j pg
[மேற்காணும் நிழற்படம் உபயம் நெய்வேலி வாசுதேவன் சார்]


வெளியீடு – 24.08.1961
தயாரிப்பு – ஸ்ரீ கணேஷ் பிரசாத் மூவீஸ் – பி.ராதாகிருஷ்ணா
விஜயா-வாஹினி ஸ்டூடியோவில் தயாரிக்கப் பட்டது.
வெஸ்ட்ரெக்ஸ் ரிக்கார்டிங் சிஸ்டம் முறையில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது.

இயக்கம் – டி.ஆர். ரகுநாத்
பாடல்கள் – கண்ணதாசன், அ.மருதகாசி

சங்கீத டைரக்ஷன் – எஸ்.வி.வெங்கட்ராமன்
ஒளிப்பதிவு டைரக்ஷன் – ஆர். சம்பத்
ஒளிப்பதிவு – டி.வி. ராஜா ராம்
ஒலிப்பதிவு டைரக்ஷன் – ஏ.கிருஷ்ணன்
ஒலிப்பதிவு – ஏ.வி. பார்த்தசாரதி
ஆர்ட் டைரக்ஷன் – கே. நாகேஸ்வர ராவ்
ஸெட்டிங்ஸ் – சி.குப்புஸ்வாமி நாயுடு, கே.ஸ்ரீநிவாசன், டி.நீலகண்டன்
சீனிக் எபெக்ட்ஸ் – ஆர்.ஜெயராம் ரெட்டி
மோல்டிங்ஸ் – எம். கோபால் பிள்ளை
சீப் எலெக்ட்ரீஷியன் – எம். சங்கர நாராயணன்
புரோஸ்ஸிங் – விஜயா ரபரேடரி, செயலாளர் – வி.டி.எஸ். சுந்தரம்
எடிட்டிங் மேற்பார்வை – டி.ஆர். ரகுநாத்
எடிட்டிங் - பி.கே.கிருஷ்ணன், ஏ.பி.ஜெகதீஷ்
மேக்-அப் – ஹரிபாபு, பீதாம்பரம், பி.பி.சந்திரா [நானு]
ஆடைகள் – ராமகிருஷ்ணன்
நடன டைரக்ஷன் – பி.எஸ். கோபால கிருஷ்ணன்
நடனம் – எல். விஜயலக்ஷ்மி
ஸ்டண்ட் டைரக்ஷன் – ஸ்டண்ட் சோமு
செட் பிராபர்டீஸ் – ஸினி கிராப்ட்ஸ், நாதமுனி சன்ஸ், கிரி மியுஸீயம்
ஸ்டில்ஸ் – ஆர்.என்.நாகராஜ ராவ்
விளம்பரம் – கே.நாகேஸ்வர ராவ், டி.டி,ராஜன்
பத்திரிகை விளம்பரம் – அருண் – விஜயா ப்ப்ளிஸிடி
ஜெனரல் நிர்வாகம் – சி.நாராயணன்
புரொடக்ஷன் நிர்வாகம் – ஓ.என். நாராயணசாமி
ஸ்டூடியோ புரோகிராம்ஸ் – சி.எஸ்.பிரகாஷ் ராவ், சி.சுந்தரம், ஜி.ராமதாஸ்
பின்னணி பாடியவர்கள் – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ், ஏ.எல்.ராகவன், பி.சுசீலா, எஸ்.ஜானகி, ரத்னமாலா


நடிக நடிகையர் – நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜமுனா, கண்ணாம்பா, ஸ்ரீராம், பி.எஸ்.வீரப்பா, ஏ.கருணாநிதி, எம்.ஆர்.சந்தானம், கே.ஆர்.ராம்சிங், கணபதி பட், எம்.சரோஜா, ராமாராவ், சந்தியா, கே.வி.சாந்தி, மற்றும் பலர்



மருத நாட்டு வீரன் விளம்பர நிழற்படங்கள்.
உபயம் – ஆவணத் திலகம் பம்மலார்




வீரப் பொக்கிஷங்கள்

காவிய விளம்பரம் : கலைத்தோட்டம் : 15.6.1959

[15.6.1959 தேதியிட்ட 'கலைத்தோட்டம்' பருவ இதழ் சற்றேறக்குறைய அப்பொழுது ஒரு மாதத்திற்குமுன் வெளியாகி விண்ணை முட்டும் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த "வீரபாண்டிய கட்டபொம்மன்" திரைக்காவிய சிறப்பு மலராக மலர்ந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.]

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4416a-1.jpg

முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 24.8.1961

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4417a-1.jpg

RAGHAVENDRA
16th October 2013, 08:48 AM
மருதநாட்டு வீரன் சிறப்புச் செய்திகள்


1. மருத நாட்டு வீரன் திரைப்படத்திற்காக பூனா அருகில் பனாலா கோட்டையில் படப்பிடிப்பிற்காக நடிகர் திலகம் சென்றிருந்த பொழுது அங்கே அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அந்த ஊர் மக்கள் சார்பில் தரப் பட்டது. அந்த ஊரில் ஒரு பள்ளியில் தமிழ் கற்றுத் தரப்பட்டு வந்த்து., அந்த தமிழ் ஆசிரியர் நடிகர் திலகத்தை அப்பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்தார். அதை ஏற்றுக் கொண்டு அப்பள்ளிக்கு சென்ற நடிகர் திலகம், பள்ளிக்கு நன்கொடையும் அளித்தார்.
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/mnvpanalasnap.jpg

2. மருத நாட்டு வீரன் திரைப்படத்தில் நடிகர் திலகம் பல்வேறு விதமான தோற்றங்களில் அமர்க்களப் படுத்தியிருப்பார். இதனை முந்தைய பதிவில் வாசு சார் அளித்துள்ள நிழற்படத்தில் காணலாம்.

3. பாடல்கள் அத்தனையும் தெள்ளமுது. குறிப்பாக பருவம் பார்த்து அருகில் வந்து வெட்கமா பாடல் எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாது.

4. கிட்டத் தட்ட மூன்று மணி நேரம் என்றாலும் படம் விறுவிறுப்பாக செல்லும்.

RAGHAVENDRA
16th October 2013, 08:57 AM
மருத நாட்டு வீரன் காணொளிகள்

பார்க்கப் பார்க்கத் திக்ட்டாக தெள்ளமுது, ஸ்டைல் சக்கரவர்த்தியின் சூப்பர் தோற்றம், நெஞ்சில் சப்பணமிட்டு அமர்ந்து சாவகாசமாக உண்டு உறங்கும் சௌந்தர ராஜனின் குரல், தேனினும் இனிதான வெங்கட்ராமன் அவர்களின் மெட்டமைப்பு, கேட்டுக்கொண்டும் பார்த்துக் கொண்டும் இருக்க வைக்கும் பாடல், மருத நாட்டு வீரன் திரைக்காவியத்தில் இடம் பெற்ற பருவம் பார்த்து அருகில் வந்து வெட்கமா...

இதுவரை பார்த்திராதவர்கள் இப்பாடலை மறுபடியும் முதலிலிருந்து பார்ப்பார்கள் என்பது திண்ணம். இதோ நம் பார்வைக்கு

http://youtu.be/eMl17UP5uFE

விழியலை மேலே
http://youtu.be/Q6cuXQBe8og

முழுத் திரைப்படமும் காண
http://www.youtube.com/watch?v=vFUPRmzwPyM&feature=share&list=PLC4747D7DCA410FC6

ஆசைக் காதல்
http://youtu.be/xn13Vy2Csow

புது இன்பம் ஒன்று
http://youtu.be/-SGtxL8ofo4

அரும்புதிர முத்துதிர
http://youtu.be/3qV6s5InQoI

ராமராவ் பாட்டு
http://youtu.be/3qV6s5InQoI

எங்கே செல்கின்றாய்
http://youtu.be/5lQeZ5ubDIc

RAGHAVENDRA
16th October 2013, 08:59 AM
மருத நாட்டு வீரன் திரைப்படத்தைப் பற்றிய நம் வாசு சாரின் பதிவிலிருந்து




நடிகர் திலகத்தின் 72- ஆவது வெற்றிப் படைப்பு "மருத நாட்டு வீரன்"

கேரளாவில் அமோக வெற்றி பெற்ற காவியம். 'ஸ்ரீ கணேஷ் பிரசாத் மூவீஸ்' தயாரிப்பில் 24.8.1961 அன்று வெளியான இப்படத்திற்கு இயக்குனர் திரு.T.R.ரகுநாத் அவர்கள். பல வெற்றிப் படங்களை உருவாக்கியவர்.

ஜமுனா, கண்ணாம்பா, சந்தியா, P.S.வீரப்பா, ஸ்ரீராம், A.கருணாநிதி ஆகியோர் நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்திருந்தனர்.

இசை திரு.SV. வெங்கடராமன் அவர்கள். நடிகர் திலகத்தின் அறிவாளி, இரும்புத் திரை (நெஞ்சில் குடியிருக்கும்... அன்பருக்கு நானிருக்கும்...) ,கண்கள், கோடீஸ்வரன் மற்றும் மனோகரா போன்ற பல படங்களுக்கு இசை அமைத்தவர்.

பாடல்களை இயற்றிவர்கள் திரு.மருதகாசி மற்றும் 'கவியரசர்' கண்ணதாசன்.

சமாதானமே தேவை....
புது இன்பம் ஒன்று..உருவாகி இன்று...
பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா?...
விழியலை மேலே..செம்மீன் போலே...
அரும்புதிர முத்துதிர அழகு சிரிக்குது ....

போன்ற அற்புதமான பாடல்கள் இந்தத் திரைக் காவியத்தில்..

இது தவிர "எங்கே செல்கின்றாய்?" என்ற P.B.ஸ்ரீநிவாஸ் அவர்களின் குரலில் சோகமான பின்னணியில் ஒலிக்கும் பாடல், நடிகர் திலகத்தின் இந்தப் படத்தில் ஒலிப்பது புதுமை.

"கேரள மக்கள் அமோக ஆதரவு அளித்த படம்" என்று நடிகர் திலகம் அவர்கள் தன் சொந்தக் கருத்தாக இப்படத்தைப் பற்றிக் கூறியுள்ளார்.

மருத நாட்டு வீரனாக, சீன கைரேகை நிபுணராக, சமையல்காரராக,வேதியராக இப்படி பல மாறுபட்ட வேடங்களில் தோன்றி நடிகர் திலகம் அசத்திய படம்.

'சமாதானமே தேவை'

கட்சி பேதங்கள் எதற்காக...
பல கலகமும் பகையும் எதற்காக...
ஒற்றுமையால் நாம் உயர்ந்திடுவோம்...
ஒரே கட்சியாய் இருந்திடுவோம்...

ஆம்..நடிகர் திலகத்தின் கட்சியாய் இருந்திடுவோம்.

இதோ நடிகர் திலகம் அவர்களின் குண நலன்களை விளக்கும் ஒரு ஒலி-ஒளிக் காட்சி....
http://youtu.be/nDQW9uCoYQ8

சமாதானத்தை விரும்பிய அந்த வெள்ளை மனம் கொண்ட மாசில்லா மாணிக்கம் நமக்கு அறிவுறித்திய "சமாதானமே தேவை" பாடல் ஒலி-ஒளிக் காட்சி வடிவில்...

http://youtu.be/OPRjgxrPoDg


வாசு சாரின் முந்தைய பதிவிற்கான இணைப்பு

http://www.mayyam.com/talk/showthread.php?9593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-8&p=728943&viewfull=1#post728943

mr_karthik
16th October 2013, 07:05 PM
'மருத நாட்டு வீரன்'
தனியார் தொலைக்காட்சி சேனல்கள் வருவதற்கு முன், கலர் டி.வி.க்கள் வருதற்கு முன், சென்னை கருப்பு வெள்ளை தூரதர்ஷனில் ஒவ்வொரு ஞாயிறன்றும் திரைப்படம் ஒலிபரப்பாகும்போது பார்த்த படம். (வண்ணப்படங்களைஎல்லாம் கூட கருப்பு வெள்ளையில் பார்த்த கொடுமைக்காலம்).

'பருவம் பார்த்து அருகில்', மற்றும் 'விழியலை மேலே' பாடல்கள் இலங்கை வானொலி தயவில் ரொம்ப ஹிட்டாகி இருந்தன. மற்ற பாடல்கள் அவ்வளவாக பேமஸ் இல்லை.

இந்தப்படத்தில் பதினான்கு கெட்டப்களில் வந்து நடிகர்திலகம் புதிய சாதனை படைத்தார். அதற்கு முன் திகம்பர சாமியார் படத்தில் ஒரே ரோலில் பனிரெண்டு கெட்டப்களில் நம்பியார் நடித்திருந்ததுதான் சாதனையாக இருந்தது. அமைதியான அழகு கொண்ட நடிகைகளில் ஜமுனாவும் ஒருவர். அடுத்து நிச்சயதாம்பூலத்தில் அவரைக்காண ஆவலாய் இருக்கிறோம். (நிச்சயதாம்பூலம் விளம்பரப்பதிவுகள் நம் திரியில் இதுவரை எங்குமே இடம்பெறவில்லைஎன்று நினைக்கிறேன்)....

RAGHAVENDRA
18th October 2013, 07:59 AM
Sivaji Ganesan Filmography Series

73. பாலும் பழமும் Palum Pazhamum

http://www.thehindu.com/multimedia/dynamic/01469/28MP_PAALUM_PAZHAM_1469198g.jpg

தணிக்கை – 23.08.1961
வெளியீடு – 09.09.1961

ஆனந்த விகடன் 03.09.1961 தேதியிட்ட இதழில் வெளியான பாலும் பழமும் திரைக்காவியத்தின் விளம்பரம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/PALUMPAZHAMUMRELEASEADfw.jpg

தயாரிப்பு – சரவணா பிலிம்ஸ், ஜி.என்.வேலுமணி
திரைக்கதை, இயக்கம் – ஏ.பீம்சிங்
கதை – ஜி.பாலசுப்ரமணியம் – பாசுமணி
இசை – விஸ்வநாதன் – ராம்மூர்த்தி
ஒளிப்பதிவு – ஜி.விட்டல் ராவ்
எடிட்டிங் – ஏ.பீம்சிங், பால்துரைசிங்கம், திருமலை
பாடல்கள் – கண்ணதாசன்
குரல்கள் – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா

நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பி.சரோஜா தேவி, சௌகார் ஜானகி, பிரேம் நசீர், டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா, கே.டி.சந்தானம், சாயிராம், ஏ.கருணாநிதி, மற்றும் பலர்


பாலும் பழமும் ஷீட்டிங் ஸ்பாட் அபூர்வ நிழற்படம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/PALUMPAZHAMUMSHOOTINGfw.jpg

RAGHAVENDRA
18th October 2013, 08:04 AM
ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து




பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்

முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 19.8.1961
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4533a-1.jpg

முதல் வெளியீட்டு விளம்பரம் : திராவிட நாடு : 3.9.1961

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4531a-1.jpg

'இன்று முதல்' விளம்பரம் : The Hindu : 9.9.1961

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4534a-1.jpg
'இப்பொழுது நடைபெறுகிறது' விளம்பரம்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4535a-1.jpg

காவிய விளம்பரம் : The Hindu : 14.10.1961
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4536a-1.jpg

50வது நாள் : The Hindu : 28.10.1961
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4537a-1.jpg

12வது வாரம் : The Hindu : 25.11.1961
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4538a-1.jpg

100வது நாள் : The Hindu : 17.12.1961

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4541a-1.jpg

குறிப்பு:
100 நாள் விழாக் கொண்டாடிய திரையரங்குகள் மொத்தம் பத்து, அவையாவன:

1. சென்னை - சாந்தி (1214 இருக்கைகள்) - 127 நாட்கள்

2. சென்னை - ஸ்ரீகிருஷ்ணா (1198 இருக்கைகள்) - 127 நாட்கள்

3. சென்னை - உமா (762 இருக்கைகள்) - 111 நாட்கள்

4. மதுரை - சென்ட்ரல் (1662 இருக்கைகள்) - 127 நாட்கள்

5. திருச்சி - பிரபாத் (1289 இருக்கைகள்) - 127 நாட்கள்

6. சேலம் - பேலஸ் (1222 இருக்கைகள்) - 127 நாட்கள்

7. கோவை - கர்னாடிக் - 139 நாட்கள்

8. திண்டுக்கல் - சோலைஹால் (1117 இருக்கைகள்) - 105 நாட்கள்

9. பெங்களூர் - ஸ்டேட்ஸ் - 112 நாட்கள்

10. கொழும்பு - கிங்ஸ்லி - 103 நாட்கள்



RAGHAVENDRA
18th October 2013, 08:11 AM
ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷம் ... தொடர்ச்சி...




பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள் [தொடர்ச்சி...]

"பாலும் பழமும்" வெளியீட்டு தினமான செப்டம்பர் 9, 1961 சனிக்கிழமையன்று, இக்காவியத்தின் இயக்குனரான பீம்சிங் அவர்கள், சென்னை சாந்தி திரையரங்கிற்கு வருகை புரிந்து தான் உருவாக்கிய உன்னத படைப்பை ரசிகர்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், பிரமுகர்கள் புடைசூழ அனைவருடனும் இணைந்து கண்டு களித்தார். இந்நிகழ்வு குறித்த ஒரு விரிவான மிகமிக அரியதொரு கட்டுரைத் தொகுப்பு:

வரலாற்று ஆவணம் : பேசும் படம் : நவம்பர் 1961

முதல் பக்கம்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4542a-1.jpg

இரண்டாவது பக்கம்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4543a-1.jpg

மூன்றாவது பக்கம்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4544a-1.jpg

நான்காம் பக்கம்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4545a-1.jpg

ஐந்தாம் பக்கம்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4546a-1.jpg

ஆறாவது பக்கம்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4547a-1.jpg

ஏழாவது பக்கம்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4548a-1.jpg

எட்டாம் பக்கம்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4549a-1.jpg

RAGHAVENDRA
18th October 2013, 08:13 AM
பாலும் பழமும் திரைப்படத்தைப் பற்றிய சகோதரி சாரதா அவர்களின் பதிவு ...

எம்எஸ்விடைம்ஸ்.காம் இணைய தளத்திலிருந்து...



பாடல் பிறந்த கதை..... (5)

"என்னை யாரென்று எண்ணி எண்ணி..."
(பாலும் பழமும்)


'காதலித்து ம்ணந்த முதல் மனைவியைப் விபத்தில் பறிகொடுத்து விட்டு (சந்தர்ப்ப சூழ்நிலையால் அவள் இறந்துவிட்டதாக நினைத்து) பற்றற்ற வாழ்க்கை வாழும் ஒரு புற்று நோய் டாக்டர். தன்னை வளர்த்து ஆளாக்கியவர்களுக்கு செலுத்தும் நன்றிக்கடனாக (விருப்பமில்லாமல்) செய்து கொண்ட இரண்டாவது திருமணத்தில் மனம் ஈடுபடாத வாழ்க்கை. அவளோடு ஏற்ப்பட்ட வாக்குவாதத்தால் விபத்து நேர்ந்து கணகளையும் இழந்து தவிக்க, அசந்தர்ப்பமாக முதல் மனைவியே அவருக்கு நர்ஸாக வர, இரண்டாவது மனைவியோடு தன் கணவர் விரும்பாத வாழ்க்கை வாழ்வது அறிந்து அவரை அவள் பால் திருப்ப எடூக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக, உடல் நலமில்லாத அவரை வாக்கிங் அழைத்துப்போகும்போது அவர் மனம் மாற்றம் ஏற்பட பாட, அதற்கு மறுப்பு தெரிவித்து கணவர் பாடும் பாடல்... இதுதான் சிச்சுவேஷன் இதற்கு பாடல் எழுதுங்கள்'

இயக்குநர் பீம்சிங் ஒரே மூச்சில் சொல்லி முடித்தார். பல்லவிக்காக மெல்லிசை மன்னரும் மூன்று ட்யூன்கள் போட்டு காண்பித்தார். அதில் ஒன்று பிடித்துப்போக, பல்லவிக்காக வரிகளை யோசித்துக்கொண்டிருந்த கண்னதாசன், தன் உதவியாளர் பஞ்சு அருணாச்சலத்திடம்..

"டேய் பஞ்சு, காரில் என் ஃபைல் இருக்குல்ல? அதை எடுத்துகிட்டு வா" என்றார்.

பஞ்சுவும் ஃபைலுடன் வந்தார். அதைப்புரட்டி, ஒரு தாளை எடுத்த கவிஞர்..

"இந்த வரிகளைப் பாருங்கள், கண்ணனைப்பற்றி நான் எழுதிய பாடல். இதில் 'அவன்' என்பதை அவள் என்று மாற்றிப்பாருங்கள். விசு போட்ட சந்தத்துக்கும் நீங்க சொன்ன சிச்சுவேஷனுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்" என்றார். பீம்சிங் பாடலை வாங்கிப்பார்த்தார். பாடல் இப்படி இருந்தது

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்
நான் 'அவன்' பேரை தினம் பாடும் குயிலல்லவா
என்பாடல் 'அவன்' தந்த மொழியல்லவா

இதில் அவன் என்று வந்த இடங்களை அவள் என்று மாற்றி விஸ்வநாதன், தன் மெட்டோடு பாட.... வாவ்... கனகச்சிதமாக பொருந்தியது. எல்லோரும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள். மெல்லிசை மன்னர் துள்ளி குதித்தார் "எப்படி கவிஞரய்யா இது...?"என்று .

சொற்களை மாற்றியபின் பாடலின் தன்மை அப்படியே மாறிப்போனது. கடவுளைப்பற்றி கவிஞர் எழுதிய பாடல், இரண்டாவது மனைவியோடு சேர்ந்து வாழும்படி நர்சாக வந்த முதல் மனைவி அட்வைஸ் செய்ய, அவர் அதை மறுப்பதாக அமைந்தது...

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்
நான் 'அவள்' பேரை தினம் பாடும் குயிலல்லவா
என்பாடல் 'அவள்' தந்த மொழியல்லவா

தொடர்ந்து கவிஞர்

என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா
சருகான மலர் மீண்டும் மலராதய்யா

என்று வரிகளை அடுக்கினார்.

பாடல் தயார். மறூநாள் ரிக்கார்டிங். விஸ்வநாதன்-ராமமூர்த்தி குழுவினர் தயார் நிலையில் இருந்தார்கள், சுசீலாவும் வந்து தன் போர்ஷன்களை பாடிப்பார்க்க துவங்கி விட்டார். ஆனால் டி.எம்.எஸ். வரவில்லை. சிறிது நேரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வர, பீம்சிங் தான் பேசினார்.

"என்ன் சௌந்தர்ராஜன்... குரல் ஒரு மாதிரியாக இருக்கு?"

"அதைச்சொல்லத்தான் ஃபோன் செய்தேன். நேற்று இரவு முதல் ஜலதோஷம். அதனால் இன்னைக்கு ரிக்கார்டிங்கை கேன்ஸல் செஞ்சுடுங்க. இரண்டு நாள் கழித்து வச்சுக்கலாம்".

(இப்போ மாதிரி ட்ராக் சிஸ்டம் எல்லாம் அப்போது கிடையாது. பாடகர்கள், இசைக்குழுவினர் எல்லோரும் ஒரே நேரத்தில் அமர்ந்து பாடலை ரிக்கார்டிங் செய்து முடிக்க வேண்டும். ஒருவர் தவறு செய்தாலும் அத்தனை பேரும் மீண்டும் வாசிக்க வேண்டும். இப்போது 'டூயட்' பாடல் என்றால் அனுராதா ஸ்ரீராம் தன்னுடைய போர்ஷனை பாடி விட்டு போய்விடுவார். தன்னோடு உடன் பாடுவது எஸ்.பி.பி.யா, மனோவா, அல்லது திப்புவா என்பது கேஸட் வெளியான பின்புதான் அவருக்கே தெரியும்)

பீம்சிங் கேட்டார்.... "உங்களுக்கு ஜலதோஷம் மட்டும் தானா? அல்லது ஜுரம் ஏதாவது அடிக்கிறதா?"

"இல்லீங்க வெறும் ஜலதோஷம் மட்டும்தான்"

"அப்படீன்னா உடனே புறப்பட்டு ரிக்கார்டிங் தியேட்டருக்கு வாங்க. நீங்க இப்போ பேசுகிற குரல்தான் இந்தப்பாடலுக்கு வேண்டும்" என்றார் பீம்சிங்.

டி.எம.எஸ்ஸும் வந்து விட்டார். "அப்படி என்னென்னே இன்று என்னுடைய குரலில் விசேஷம்?" என்று கேட்க, இயக்குநர் சொன்னார் "இந்தக்காட்சியில் சிவாஜி உடல்நிலை சரியில்லாதவராக இருக்கிறார். அதோடு வாக்கிங் போகும்போது மழையிலும் நனைந்து விருகிறார். அதனால் இந்தக் காட்சிக்கு இப்போதுள்ள் உங்கள் ஜலதோஷக்குரல் கச்சிதமாக பொருந்தும்" என்றார்.

டி.எம்.எஸ். ஒத்திகை பார்த்து விட்டு ரிக்கார்டிங்குக்கு தயாரானார். அப்போது விஸ்வநாதன் அவர்கள் " அண்ணே..., மூக்கை உறிஞ்சுவது, தும்மல் போடுவது எல்லாத்தையும் ரிக்கார்டிங் துவங்கும் முன்ன்ர் பண்ணிக்குங்க. இடையில் பண்ணிடாதீங்க". என்றார்.

அதற்கு பீம்சிங்.. "பரவாயில்லை, அப்படியே தும்மல் வந்தாலும் போடுங்க. படத்தில் சிவாஜி சாரையும் தும்ம வைத்து எடுக்கிறேன்" என்று சொல்ல அனைவரும் சிரித்தனர்.

நல்லவேளையாக பாடல் முடியும் வரை டி.எம்.எஸ். அவர்கள் தும்மல் எதுவும் போடவில்லை. இப்போதும் கூட அப்பாடலைக்கேட்கும்போது, டி.எம்.எஸ்ஸின் ஜலதோஷக்குரல் ந்மக்கு நன்றாக தெரியும்....

மீண்டும் சந்திப்போம்)


இந்தப் பதிவிற்கான இணைப்பு

http://www.msvtimes.com/forum/viewtopic.php?t=159&start=15

RAGHAVENDRA
18th October 2013, 08:17 AM
முரளி சாரின் பதிவு



டாக்டர் ரவியை அவரது பல்வேறு முகபாவங்களை உணர்வுகளை இங்கே பதிந்ததற்கு வாசுதேவன் சாருக்கு நன்றி. ராகவேந்தர் சாருக்கு நன்றி. நான் பொதுவாக சுவாமிக்கு நன்றி கூறுவதில்லை. காரணம் அதையேதான் தினசரி செய்து கொண்டிருக்க வேண்டும். அது மட்டுமல்ல சுவாமியுடன் அன்றாடம் உரையாடுபவன் என்ற முறையில் what Swami is capable of என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் சில நேரங்களில் எனது கணிப்பையும் மீறி சுவாமி சில ஆச்சரியங்களை அளிப்பார். அப்படிப்பட்ட ஒன்றுதான் பேசும்படம் பீம்சிங் பேட்டி அழகான நேர்முக வர்ணனையோடு இன்றைக்கு மிக சரியாக 50 வருடங்களுக்கு முன் இதே நாளில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை காணும் போது மனதில் ஒரு nostalgic feeling. நன்றி சுவாமி!

பாலும் பழமும் படத்திற்கு மனதில் ஒரு தனி இடம் உண்டு. அந்த வருடம் வெளியான மூன்று பா வரிசை படங்களில் பாலும் பழமும் படமும் சரி, நடிகர் திலகத்தின் பாத்திரப் படைப்பும் சரி class என்று சொல்வோமே அந்த வகையில் அமைந்திருக்கும். அவரது நடிப்பை பற்றி சொல்ல ஆரம்பித்தால் முதலில் மருத்துவமனையில் நடந்து வரும் ஸ்டைல், நர்ஸ் சாந்தியின் அறிவு, அவரது தொழில் பக்தியை கவனிப்பது, அவர் மேல் உண்டாகும் பரிவு, ஒரு நாள் கிளம்புவதற்கு நேரமாகிவிட, shall I drop you, if you dont mind? என்று கேள்வி கேட்கும் நேர்த்தி, நான் பேச நினைப்பதெல்லாம் பாடலில் வெறும் ஹம்மிங்கிலேயே அசத்துவது, அதிலும் குறிப்பாக இரண்டாவது சரணத்தில் ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே! உயிர் சேர்ந்த பின்னே என்ற வரியை சரோஜாதேவி பாடியவுடன் ஊஹுகும் என்ற ஹம்மிங்க்கு வாயசைத்தவாறே அந்த இடது புருவத்தை மட்டும் ஏற்றி இறக்குவாரே, ஆஹா!, அது மட்டுமா?

அது போல மாலையில் சீக்கிரம் வருகிறேன் என்று மனைவியிடம் சொல்லும்போது மனைவியை டா போட்டு பேசுவார். இன்றைக்கு பெண்களை பார்த்து ஆண்கள் மிகவும் common ஆக உபயோகிக்கும் இந்த வார்த்தையை 50 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்து வைத்தவர் நடிகர் திலகம். சோகத்தின் கனம் முகத்தில் தெரிய மனைவியை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக் கொண்டே பாலும் பழமும் கைகளில் ஏந்தி என்று பாடும் அந்த பாவம் [13 வருடங்களுக்கு பின்னால் அதே போல் ஒரு காட்சியமைப்பு என்றாலும் கூட சுமைதாங்கி சாய்ந்தால் பாடலில் சோகத்திலும் ஒரு கம்பீரத்தை காட்டி அந்த மாறுபாட்டை வெளிப்படுத்துவார். என்ன இருந்தாலும் அது எஸ்.பி. சௌத்ரி அல்லவா!]. படத்தின் உயிர்நாடியான பாடலைப் பற்றி சொல்லவே வேண்டாம். அந்த மலை பாதையில் அந்த நடை! அந்த முகம்!

கண் பாதிக்கப்பட்டு முடிந்து கட்டோடு படுத்திருக்க அப்போது நர்சாக சேரும் சரோஜாதேவியின் குரல் கேட்டு சாந்தி என்று எழுந்திருப்பாரே! எப்படி அதை வர்ணிப்பது? அந்த நேரத்தில் விரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது இரண்டு கால்களுக்கு நடுவில் காமிரா கோணம் வைக்கப்பட்டு படமாக்கப்பட்டிருக்கும் அழகை என்னவென்று சொல்வது?என்னை யாரென்று பாடல் மட்டும் குறைந்ததா என்ன? சரோஜாதேவி கையைப் பிடித்துக் கொள்ள வேகமாக நடக்கும் அந்த நடை! இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

படத்தில் போனால் போகட்டும் போடா பாடலின் அதே உயரத்திற்கு வரும் ஒரு பாடல் இருக்கிறது. காதல் சிறகை காற்றினில் விரித்து பாடல். மன்னர்கள், கவியரசர், இசையரசி மூவர் கூட்டணி அந்த பாடலை எங்கேயோ கொண்டு போய் விடுவார்கள்.

முதல் நாள் காணும் திருமணப் பெண் போல்
முகத்தை மறைத்தல் வேண்டுமா
முறையுடன் மணந்த கணவன் முன்னால்
பரம்பரை நாணம் போகுமா

என்ற வரிகளும் சரி அதற்கு பிறகு வரும்

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் நின்றால்
பேச மறந்து சிலையாய் நின்றால்
அதுதான் தெய்வத்தின் சன்னதி
அதுதான் காதல் சன்னதி

என்று சுசிலா பாடும் போது அதிலும் குறிப்பாக காதல் சன்னதி என்ற வார்த்தையை அவர் உச்சரிக்கும் விதம் இருக்கிறதே காதலிக்காதவர்களை கூட காதலின் பால் ஈர்த்துவிடும்! அந்த வரி முடிந்தவுடன் ஒரு ஹம்மிங் வரும் அதை சுசிலா பாடியிருப்பதை கேட்கும் போது இதை விட இனிமை வேறு உண்டா என்று தோன்றும். இந்த இடத்தை குறிப்பிட்டு வைரமுத்து சொல்வார். அந்த ஹம்மிங்கை கேட்கும் போதெல்லாம் என் உயிர் கூட்டை விட்டு பறந்து போய் விட்டு ஹம்மிங் முடிந்தவுடன் மீண்டும் உடலில் வந்து உட்கார்ந்து கொள்ளும் என்பார்.

தினசரி அருந்தினாலும் உட்கொண்டாலும் எப்படி பாலும் பழமும் நமக்கு அலுப்பதில்லையோ அது போலதான் பாலும் பழமும் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் அதை பற்றி பேசினாலும் நமக்கு அலுப்பதில்லை.

அன்புடன்



இப்பதிவிற்கான இணைப்பு
http://www.mayyam.com/talk/showthread.php?9593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-8&p=737773&viewfull=1#post737773

mr_karthik
18th October 2013, 11:44 AM
"BOX OFFICE RECORD" of PAALUM PAZHAMUM by our beloved Pammalar (Posted on 09.09.2010)

பாக்ஸ் ஆபீஸில் 'பாலும் பழமும்'

இன்று 9.9.2010, நடிப்பிலும், சாதனையிலும் தன்னிகரில்லா சிகரங்களைத் தொட்ட நடிப்புலக மகான், சாதனைகளின் சக்கரவர்த்தி நமது நடிகர் திலகத்தின் "பாலும் பழமும்" திரைக்காவியத்திற்கு பொன்விழா ஆண்டின் தொடக்கம்.

பதிபக்தி (1958)[100 நாள்],
பாகப்பிரிவினை (1959)[31 வாரம்],
படிக்காத மேதை (1960)[22 வாரம்],
பாவமன்னிப்பு (1961)[25 வாரம்],
பாசமலர் (1961)[25 வாரம்]
ஆகிய ஐந்து மெகாஹிட் காவியங்களுக்குப் பிறகு, அதே "ப" வரிசையில், வெள்ளிவிழா டைரக்டர் பீம்சிங், சிவாஜி கூட்டணியுடன் வழங்கிய ஆறாவது மெகாஹிட் காவியம் "பாலும் பழமும்". [ராஜா ராணி(1956) மற்றும் பெற்ற மனம்(1960) ஆகிய காவியங்களை சேர்த்துக் கணக்கிட்டால் பாலும் பழமும்(1961) வரை பீம்சிங் இயக்கிய சிவாஜி படங்கள் 'எட்டு' எனப் புள்ளி விவரம் கூறும்.]

தையல் மற்றும் உடையலங்கார நிபுணராக விளங்கிய ஜி.என்.வேலுமணி அவர்களை 'சரவணா பிலிம்ஸ்' என்கின்ற படக் கம்பெனியின் முதலாளியாக, திரைப்படத் தயாரிப்பாளராக உயர்த்திய பெருமை சிவாஜி பெருமானையே சாரும். இவர் மட்டுமல்ல. இவரைப் போல பல சாமானியர்களை சீமான்களாக உருவாக்கிய, உயர்த்திய பெருமை, பெருந்தன்மை என்றென்றும் சிங்கத் தமிழனுக்கே!

'சரவணா பிலிம்ஸ்' நிறுவனத்தின் முதல் தயாரிப்பு பாகப்பிரிவினை(1959). இரண்டாவது தயாரிப்பு பாலும் பழமும்(1961). இரண்டுமே மகத்தான இமாலய வெற்றிக்காவியங்கள். வேலுமணி "மணி(Money)" உள்ளவர் ஆனார். கணேச கடாட்சத்தால் அவருக்கு லட்சுமி கடாட்சம் கிட்டியது. சாதாரண நிலையில் இருந்தவர், இந்த இரு காவியங்களின் மகத்தான வெற்றியினால் லட்சாதிபதியாக, மிகப் பெரிய செல்வந்தராக உயர்ந்தார்.

இனி "பாலும் பழமும்" முதல் வெளியீட்டில் ஏற்படுத்திய பாக்ஸ் ஆபீஸ் சாதனைப் பிரளையத்தை சற்று விரிவாகக் காண்போம்.

"பாலும் பழமும்" - கலைக்குரிசிலின் 73வது திரைக்காவியம், 71வது கருப்பு-வெள்ளைக் காவியம், இருபது வாரங்கள் ஓடிய இமாலய வெற்றிக் காவியம்.

வெளியான தேதி : 9.9.1961 (சனிக்கிழமை)

வெளியான ஊர்கள் / திரையரங்குகள் : 39 / 42

100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய ஊர்கள் / அரங்குகள் : 8 / 10

[ஊர் - அரங்கம் (இருக்கைகள்) - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்]

1. சென்னை - சாந்தி (1214 இருக்கைகள்) - 127 நாட்கள்

2. சென்னை - ஸ்ரீகிருஷ்ணா (1198 இருக்கைகள்) - 127 நாட்கள்

3. சென்னை - உமா (762 இருக்கைகள்) - 111 நாட்கள்

4. மதுரை - சென்ட்ரல் (1662 இருக்கைகள்) - 127 நாட்கள்

5. திருச்சி - பிரபாத் (1289 இருக்கைகள்) - 127 நாட்கள்

6. சேலம் - பேலஸ் (1222 இருக்கைகள்) - 127 நாட்கள்

7. கோவை - கர்னாடிக் - 139 நாட்கள்

8. திண்டுக்கல் - சோலைஹால் (1117 இருக்கைகள்) - 105 நாட்கள்

9. பெங்களூர் - ஸ்டேட்ஸ் - 112 நாட்கள்

10. கொழும்பு - கிங்ஸ்லி - 103 நாட்கள்

50 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய ஊர்கள் / அரங்குகள் : 25 / 25

[ஊர் - அரங்கம் (இருக்கைகள்) - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்]

1. நெல்லை - ரத்னா (1064 இருக்கைகள்) - 75 நாட்கள்

2. நாகர்கோவில் - பயோனீர்பிக்சர்பேலஸ் (1088 இருக்கைகள்) - 75 நாட்கள்

3. குடந்தை - ராஜா (1100 இருக்கைகள்) - 75 நாட்கள்

4. தஞ்சாவூர் - நியூடவர் (1101 இருக்கைகள்) - 75 நாட்கள்

5. வேலூர் - நேஷனல் (1330 இருக்கைகள்) - 75 நாட்கள்

6. பெங்களூர் - ஆபெரா - 75 நாட்கள்

7. பழனி - ஜெயராம் (975 இருக்கைகள்) - 59 நாட்கள்

8. விருதுநகர் - நியூமுத்து (939 இருக்கைகள்) - 59 நாட்கள்

9. மாயவரம் - சுந்தரம் (1135 இருக்கைகள்) - 59 நாட்கள்

10. திருவாரூர் - அம்மையப்பா (1045 இருக்கைகள்) - 59 நாட்கள்

11. புதுக்கோட்டை - பழனியப்பன் (882 இருக்கைகள்) - 59 நாட்கள்

12. கரூர் - லைட் ஹவுஸ் (1375 இருக்கைகள்) - 59 நாட்கள்

13. தூத்துக்குடி - சார்லஸ் (1383 இருக்கைகள்) - 59 நாட்கள்

14. தென்காசி - பாக்யலக்ஷ்மி (1608 இருக்கைகள்) - 59 நாட்கள்

15. ஈரோடு - ராஜாராம் (1104 இருக்கைகள்) - 59 நாட்கள்

16. ஊட்டி - ஏடிசி (706 இருக்கைகள்) - 59 நாட்கள்

17. திருப்பூர் - கஜலக்ஷ்மி (1055 இருக்கைகள்) - 59 நாட்கள்

18. நாமக்கல் - ஜோதி (1077 இருக்கைகள்) - 59 நாட்கள்

19. தர்மபுரி - கணேஷ் (960 இருக்கைகள்) - 59 நாட்கள்

20. பாண்டி - ராஜா (2000 இருக்கைகள்) - 59 நாட்கள்

21. சிதம்பரம் - வடுகநாதன் (1240 இருக்கைகள்) - 59 நாட்கள்

22. கடலூர் - பாடலி (874 இருக்கைகள்) - 59 நாட்கள்

23. விழுப்புரம் - சீதாராம் (1141 இருக்கைகள்) - 59 நாட்கள்

24. காஞ்சி - கிருஷ்ணா - 59 நாட்கள்

25. பல்லாவரம் - ஜனதா (1034 இருக்கைகள்) - 59 நாட்கள்

6 வாரங்கள் ஓடிய ஊர்கள் / அரங்குகள் : 7 / 7

[ஊர் - அரங்கம் (இருக்கைகள்) - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்]

1. பரமக்குடி - தங்கம் - 41 நாட்கள்

2. காரைக்குடி - ராமவிலாசம் (1106 இருக்கைகள்) - 41 நாட்கள்

3. பட்டுக்கோட்டை - முருகையா - 41 நாட்கள்

4. பொள்ளாச்சி - கலைமகள் (912 இருக்கைகள்) - 41 நாட்கள்

5. உடுமலைப்பேட்டை - கல்பனா - 41 நாட்கள்

6. ஆத்தூர் - ஸ்ரீதரன் (1112 இருக்கைகள்) - 41 நாட்கள்

7. ஆற்காடு - ஜோதி (1344 இருக்கைகள்) - 41 நாட்கள்

பாவமன்னிப்பு, பாசமலர் திரைக்காவியங்களுக்குப் பின் அதே 1961-ம் ஆண்டில் மூன்றாவது பெரிய இமாலய வெற்றிக்காவியமாக திகழ்ந்தது "பாலும் பழமும்". தமிழ் சினிமா சரித்திரத்திலேயே, இன்னும் சொல்லப் போனால் உலக சினிமா சரித்திரத்திலேயே, ஒரே ஆண்டில் (1961), மூன்று Blockbusterகளை (மெகாஹிட் இமாலய வெற்றிக் காவியங்களை), கொடுத்த முதல் நடிகர் என்ற பெருமைக்குரியவரானார் நமது கலையுலக முதல்வர்.

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!

அன்புடன்,
பம்மலார்.

(Thank you Pammalar sir)

RAGHAVENDRA
20th October 2013, 03:02 PM
டியர் கார்த்திக்,
பம்மலாரின் சாதனைப் பட்டியல் மீள் பதிவிட்டு பாலும் பழமும் திரைப்படத்தின் வெற்றிப் பயணத்தை அழகாக அனைவருக்கும் புரியும் படி விளக்கி விட்டீர்கள். மிக்க நன்றி.

தங்களுக்காகவும் மற்ற நண்பர்களுக்காகவும், இணையத்தில் முதன் முதலாக

பாலும் பழமும் படத்தின் டைட்டில் இசை

https://soundcloud.com/veeyaar/palum-pazhamum-title-music

கேட்டு மகிழுங்கள்

RAGHAVENDRA
20th October 2013, 03:10 PM
காலத்தால் அழிக்க முடியாத நடிகர் திலகம் - பீம்சிங் - கண்ணதாசன் - விஸ்வநாதன் - ராம மூர்த்தி வெற்றிக் கூட்டணியில் டி.எம்.எஸ். பி.சுசீலா அவர்களின் ஈடு இணையற்று குரல்களில் பாலும் பழமும் பாடல்கள் அமரத்துவம் வாய்ந்தவை. நம் பார்வைக்கு இப்போது..

பாலும் பழமும் கைகளில் ஏந்தி...

http://youtu.be/usRpe2nB3MY

நெஞ்சை உருக வைக்கும் .... என்னை யாரென்று எண்ணி எண்ணி

http://youtu.be/AtrOLDpmaT8

சுசிலாவின் குரல் நம்மை உருக வைத்து விடும் இப்பாடலில்

தாவி வரும் மேகமே என் தாய்நாடு செல்லாயோ
ஊருலகம் போற்ற வரும் என் உத்தமனைக் காண்பாயோ
இன்று மணமுடித்த ஏந்திழை போல் நானிங்கே
சொந்தம் கொண்டாடுவதை சொல்லி விடமாட்டாயோ

http://youtu.be/KwnLqaCpsA0

பின்னால் வந்த பல சோலோ சோகப் பாடல்களுக்கு முன்னோடி எனலாம்....

என்ன நடையப்பா.... சின்னக் கண்ணன் சார்.... சீக்கிரம் வாங்களேன் ...

http://youtu.be/Pkywv_mRuTI

உலகெங்கும் உள்ள தமிழர்கள் வாழும் இடத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 100 இடங்களிலாவது ஒலிக்கும் பாடல்

நான் பேச நினைப்பதெல்லாம்

http://youtu.be/lWDg8dheihg

அந்நாளைய இளைஞர்கள் பலரது தூக்கத்தைக் கெடுத்த பாடல் ...

அபிநய சரஸ்வதியின் PROFILE POSE ஒரு கையை அந்த சுவற்றின் மீது வைத்து பக்கவாட்டில் நின்று கொண்டு தரும் போஸ் .... வர்ணிக்க வார்த்தைகளில்லா ஓவியம் ...

ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்

http://youtu.be/6meifsU2vwI

நான் பேச நினைப்பதெல்லாம் ... சோகம் ...

http://youtu.be/XdaSEorBQyA

இதயத்தைப் பிழிய வைக்கும் பாடல் ... சுசீலா ஒருவரால் தான் இந்த அளவிற்கு உணர்வினைக் கொண்டு வர முடியும்

http://youtu.be/gR8J_IZxq2c

rajeshkrv
23rd October 2013, 01:30 AM
காலத்தால் அழிக்க முடியாத நடிகர் திலகம் - பீம்சிங் - கண்ணதாசன் - விஸ்வநாதன் - ராம மூர்த்தி வெற்றிக் கூட்டணியில் டி.எம்.எஸ். பி.சுசீலா அவர்களின் ஈடு இணையற்று குரல்களில் பாலும் பழமும் பாடல்கள் அமரத்துவம் வாய்ந்தவை. நம் பார்வைக்கு இப்போது..

பாலும் பழமும் கைகளில் ஏந்தி...

http://youtu.be/usRpe2nB3MY

நெஞ்சை உருக வைக்கும் .... என்னை யாரென்று எண்ணி எண்ணி

http://youtu.be/AtrOLDpmaT8

சுசிலாவின் குரல் நம்மை உருக வைத்து விடும் இப்பாடலில்

தாவி வரும் மேகமே என் தாய்நாடு செல்லாயோ
ஊருலகம் போற்ற வரும் என் உத்தமனைக் காண்பாயோ
இன்று மணமுடித்த ஏந்திழை போல் நானிங்கே
சொந்தம் கொண்டாடுவதை சொல்லி விடமாட்டாயோ

http://youtu.be/KwnLqaCpsA0

பின்னால் வந்த பல சோலோ சோகப் பாடல்களுக்கு முன்னோடி எனலாம்....

என்ன நடையப்பா.... சின்னக் கண்ணன் சார்.... சீக்கிரம் வாங்களேன் ...

http://youtu.be/Pkywv_mRuTI

உலகெங்கும் உள்ள தமிழர்கள் வாழும் இடத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 100 இடங்களிலாவது ஒலிக்கும் பாடல்

நான் பேச நினைப்பதெல்லாம்

http://youtu.be/lWDg8dheihg

அந்நாளைய இளைஞர்கள் பலரது தூக்கத்தைக் கெடுத்த பாடல் ...

அபிநய சரஸ்வதியின் PROFILE POSE ஒரு கையை அந்த சுவற்றின் மீது வைத்து பக்கவாட்டில் நின்று கொண்டு தரும் போஸ் .... வர்ணிக்க வார்த்தைகளில்லா ஓவியம் ...

ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்

http://youtu.be/6meifsU2vwI

நான் பேச நினைப்பதெல்லாம் ... சோகம் ...

http://youtu.be/XdaSEorBQyA

இதயத்தைப் பிழிய வைக்கும் பாடல் ... சுசீலா ஒருவரால் தான் இந்த அளவிற்கு உணர்வினைக் கொண்டு வர முடியும்

http://youtu.be/gR8J_IZxq2c

arumai ... arumai ..

RAGHAVENDRA
23rd October 2013, 07:48 AM
நன்றி ராஜேஷ்

RAGHAVENDRA
23rd October 2013, 07:49 AM
Sivaji Ganesan Filmography Series

74. KAPPALOTTIYA THAMIZHAN

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/KTColor1-2.jpg
img courtesy: pammalar


வெளியீடு – 07.11.1961
தயாரிப்பு – பத்மினி பிக்சர்ஸ்
கதை – சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள் எழுதிய நூலையும் சரித்திரத்தையும் தழுவியது
திரைக்கதை – சித்ரா கிருஷ்ணஸ்வாமி
வசனம் – எஸ்.டி.சுந்தரம்
பாடல்கள் – அமரகவி சுப்பிரமணிய பாரதியார்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – வ.உ.சிதம்பரம் பிள்ளை
ஜெமினி கணேசன் – மாடசாமி
சாவித்திரி – கண்ணம்மா
டி.கே. சண்முகம் – சுப்பிரமணிய சிவா
எஸ்.வி.சுப்பையா – பாரதியார்
பாலாஜி – வாஞ்சிநாதன்
நாகய்யா – உலகநாதம் பிள்ளை
டி.எஸ்.துரைராஜ் – சங்கன்
கருணாநிதி – மன்னார்சாமி
எம்.என்.கண்ணப்பா – மீனாட்சிசுந்தரம்
எம்.ஆர்.சந்தானம் – ஏட் ஏகாம்பரம்
டி.என்.சிவதாணு – வாஞ்சியின் மாமனார்
வீராச்சாமி – வக்கீல்
ஈஸ்வரன் – நீலகண்ட பிரம்மச்சாரி
கே.வி.சீனிவாசன் – சங்கர கிருஷ்ணய்யர்
பார்த்திபன் – ஜட்ஜ் பின்ஹே
நடராஜன் – பாண்டித்துரைத் தேவர்
எஸ்.ஏ.கண்ணன் – சேலம் விஜயராகவாச்சாரியார்
நன்னு – பக்கீர் முகம்மது சேட்

குமாரி ருக்மணி – வ.உ.சி.யின் மனைவி மீனாட்சி அம்மாள்
ஜெமினி சந்திரா – வாஞ்சியின் மனைவி பொன்னம்மாள்
டி.பி.முத்துலட்சுமி – சுதந்திரா தேவி சிங்கம்மா
எஸ்.ஆர்.ஜானகி – மாடசாமியின் தாயார்
சரஸ்வதி – அய்யங்காரின் மனைவி
ச்சிகலா – பாரதியார் மனைவி செல்லம்மாள்
ராதாபாய் – பரமாயி அம்மாள்

மாஸ்டர் தியாகராஜன், குட்டி பத்மினி மற்றும் பலர்
கௌரவ நடிகர்கள்
எஸ்.வி.ரங்காராவ் – விஞ்ச்
அசோகன் – ஆஷ்
கே.சாரங்கபாணி – ராயர்
ஓ.ஏ.கே.தேவர் – வடுகுராமன்
ஸ்டண்ட் சோமு – சுடலை

ஒளிப்பதிவு டைரக்டர் – டபிள்யு.ஆர்.சுப்பாராவ்
காமிரா இயக்குனர் – கர்ணன்

ஒலிப்பதிவு டைரக்டர் – பி.வி. கோடீஸ்வர ராவ்
வசனம் ஒலிப்பதிவு – டி.வி. நாதன், எம்.சிவராவ் (பத்மினி பிக்சர்ஸ்)

கலை – ஏ.கே. சேகர்

இசை அமைப்பு – ஜி.ராமநாதன்
இசைக்குழு – ஜி.ராமநாதன் குழுவினர்

பின்னணி பாடியவர்கள்
சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், பி.பி.சீனிவாஸ், வி.டி.ராஜகோபால், சுசீலா, ஜமுனா ராணி, ஆர்.ஈஸ்வரி, ரோஹிணி

நடன அமைப்பு – ஜெயராமன்

தொகுப்பாளர் – ஆர்.தேவராஜன்

ஒப்பனை – ஹரிபாபு, ஆர்.ரங்கசாமி, பீதாம்பரம், எம்.கே.சீனிவாசன், ராமசாமி, வி.பார்த்தசாரதி

ஆடை அலங்காரம் – பி.ராமகிருஷ்ணன், எம்.ராதா, ஆர்.பாலு

அரங்க ஓவியம் – ஆர்.முத்து, ஆர்.ராதா

ரசாயனக் கூடம் – விஜயா லேபரட்டரி, பொறுப்பாளர் – வி.டி.எஸ்.சுந்தரம்

வண்ணப்பட ரசாயனம் – பிலிம் சென்டர், பம்பாய்
தயாரிப்பு நிர்வாகம் – டி.ஆர்.சீனிவாசன், எஸ்.சீதாபதி

புகைப்படம் – ஆர்.வெங்கடாச்சாரி
விளம்பர ஓவியங்கள் – எ.கே. கோபால்
விளம்பர நிர்வாகம் – அருணா அண்ட் கோ
அரங்க அலங்காரப் பொருட்கள் – சினி கிராப்ட்ஸ், டாக்டர் கிரி மியூஸியம், பிலிமோ கிராப்ட்ஸ்

ஸ்டூடியோ – பரணி, நிர்வாகம்- ஏ.எல்.எஸ்.புரொடக்ஷன்ஸ்
வெஸ்ட்ரெக்ஸ் முறையில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது

உதவி டைரக்ஷன் – கே.சிங்கமுத்து, இரா. சண்முகம், எம்.ஆர்.கணேசன்

தயாரிப்பு டைரக்ஷன் – பி.ஆர்.பந்துலு

RAGHAVENDRA
23rd October 2013, 07:51 AM
சிறந்த மாநிலப் படமாக மத்திய அரசின் விருது பெற்ற படம் கப்பலோட்டிய தமிழன்

http://iffi.nic.in/Dff2011/9th_nff/9th_nff_1962_img_0.jpg

http://iffi.nic.in/Dff2011/9th_nff/9th_nff_1962_img_4.jpg

http://iffi.nic.in/Dff2011/9th_nff/9th_nff_1962_img_26.jpg

http://iffi.nic.in/Dff2011/9th_nff/9th_nff_1962_img_27.jpg

RAGHAVENDRA
23rd October 2013, 07:52 AM
ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து விளம்பர நிழற்படங்கள்



பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்

காவிய விளம்பரம் : The Hindu : 14.1.1960
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4975-1.jpg

முதல் வெளியீட்டு விளம்பரம் : பேசும் படம் : நவம்பர் 1961
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4977-1.jpg

'இன்று முதல்' விளம்பரம் : சுதேசமித்ரன் : 7.11.1961

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4978-1.jpg

'வெற்றிகரமாக நாடெங்கும் நடைபெறுகிறது' விளம்பரம் : சுதேசமித்ரன் : 14.11.1961

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4976-1.jpg

முதல் வெளியீட்டு சாதனை விளம்பரம் : The Hindu : 2.12.1961

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4996-2.jpg

காவிய விமர்சனம் : கலை : 1961

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4997-1.jpg


காவிய விமர்சனம் : தென்றல் : 11.11.1961

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4998-1.jpg

RAGHAVENDRA
23rd October 2013, 07:53 AM
ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷங்களிலிருந்து...
தொடர்ச்சி....



'கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.'யாக நடித்தது பற்றி விளக்குகிறார் நமது தேசிய திலகம்

வரலாற்று ஆவணம் : பேசும் படம் : ஜனவரி 1975
['எனக்கு பிடித்த பாத்திரம்' என்கின்ற தலைப்பில் "கப்பலோட்டிய தமிழன்" கதாபாத்திரம் குறித்து நமது நடிகர் திலகம் அளித்த விரிவான கருத்துரை 'பேசும் படம்' மாத இதழில் ஐந்து பக்கங்களில் வெளிவந்தது]



http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4999-2.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5000-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5001-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5002-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5003-1.jpg


Pammalar images
http://www.freewebs.com/pammalar/VOC1.jpg

RAGHAVENDRA
23rd October 2013, 07:56 AM
Reviews / quotes

Films on patriotism are many. But Panthulu's ‘Kappalottiya Tamizhan' stands apart for the natural portrayal of Sivaji Ganesan as VOC, and S.V. Subbiah who came up with a brilliant performance as Bharatiar. The film remains a perfect showcase of the Independence Movement in the South! “
… Malathi Rangarajan in a write up in The Hindu (http://www.thehindu.com/features/cinema/article2853657.ece)



“``Kappalottiya Thamizhan''. ``Enacting a doctor, an engineer and others are not very difficult. But to portray a person, a revered freedom fighter, whom people had met, seen and moved with, is a different proposition. So when the late Panthulu asked me to enact the role, I first hesitated. Then I decided to meet the challenge. I got all the material on V. O. Chidambaram Pillai and studied it.
``On seeing the film, I cried, not because my performance was moving but because it hit me with new impact - the sacrifice VOC and others had made for the country. When VOC's son Subramaniam said that he saw his father come alive on the screen, I considered it the highest award.''
From The Hindu write up in its tribute to Nadigar Thilagam …
http://www.hindu.com/2001/07/27/stories/09270226.htm

Gopal.s
23rd October 2013, 07:57 AM
கப்பலோட்டிய தமிழன்

இந்தியாவிலேயே Docu -drama என வகை படும் ,biographical படங்களுக்கு முன்னோடி கப்பலோட்டிய தமிழன். அகில இந்திய அளவில் கொண்டாட பட்டு ,உலக அளவில் தூக்கி பிடிக்க பட்டிருக்க வேண்டிய உன்னத சிறந்த படைப்பு. திலக், விபின் சந்திரா, அரவிந்தர், லாலா லஜபதி முதலியோர் வழியில் வந்து இந்திய சுதந்திரத்திற்காக பல தியாகங்கள் செய்த ஒப்பற்ற தமிழன் வ.உ .சிதம்பரம் பிள்ளை. காங்கிரஸ் ,மற்றும் காந்தியோடு முரண் பட்டவர் என்பதாலேயே ,single political agenda கொண்டிருந்த (அதாவது சுதந்திரமே காந்தி,நேரு, காங்கிரஸ் சாதனை. மற்றோர் ஒரு பங்களிப்பும் இல்லை ) அன்றைய அரசாங்கத்திற்கு இந்த படம் உவப்பில்லை.திராவிட கட்சிகளுக்கும், உண்மையான தலைவர்களிடம் ஈடு பாடில்லை. (அது பிள்ளை ஆகவே இருந்த போதும்).ஆனால் உன்னத தேச பக்தர்களான பந்துலுவும்,நடிகர்திலகமும் இந்த தமிழனை தமிழர்களுக்கு கொண்டு சேர்த்தனர்.

இந்த படம் நடிகர்திலகத்தின் histrionics என்று சொல்ல படும் உன்னத வேறுபட்ட நடிப்புக்கு அதிகம் scope இல்லாதது.உள்ளதை உள்ள படி உரைக்க வேண்டும். பார்த்து பழகிய contemporaries உயிரோடிருக்கும் போது ,இந்த தலைவனை ரத்தமும் சதையுமாக நம் முன் நிறுத்த வேண்டும்.கட்ட பொம்மன் போல அபார நடிப்பு திறமையால் கட்டபொம்மன் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று காட்டியது போல் செய்ய முடியாது. கப்பலோட்டிய தமிழன் எப்படி இருந்தார் என்று காட்ட வேண்டும்.

இந்த மேதை தேர்ந்தெடுத்த நடிப்பு பள்ளி முறை Stanislavsky ,Strasberg method Acting சார்ந்தது. method Acting is not just acting or Reacting but behaving the way character should have done .அந்த பாத்திரமாக வாழ வேண்டும் ,அந்த வாழ்க்கை முறையின் உணர்வுகள் போலி செய்ய படாமல் ,நடிப்பவனின் நினைவில் அடுக்ககளில் இருந்து கட்டமைக்க பட்டு, வ.உ.சி. வாழ்க்கையோடு,பாத்திரத்தோடு பொறுத்த பட்டு இணைவு பெற வேண்டும்.

நடிகர்திலகம் தேச பக்தி கொண்ட பாரம்பரியத்தில் இருந்து வந்தவர். அவரது தந்தை சுதந்திர போராட்டத்தில் ஈடு பட்டு குடும்பத்தை தவிக்க விட்ட தியாகி. சிறை சென்று பல அவதிகள் உற்றவர் .நினைவின் அடுக்குகளுக்கு பஞ்சமில்லாத வகையில் பின்னணி.

இவ்வளவு அற்புதமான advantage இருக்கும் போது ,உண்மைக்கு மிக மிக அருகில் வந்த அற்புதமான திரைக்கதையும் தயாரான போது ,ஒரு கலைஞனின் அறிவும்,மனமும் ,உணர்வும் அதில் தோயும் பொது ,அதில் தோய்பவன் உலகத்திலேயே மிக சிறந்த நடிகனாக இருக்கும் போது, அந்த magic நிகழத் தானே வேண்டும்?

நிகழ்ந்ததா?

கப்பலோட்டிய தமிழனின் நோக்கம், தேசியம், விடுதலைக்காக செய்த உன்னத தியாகங்கள்.ஒரு தனி மனிதன் தன் சொந்த பந்தங்கள் சொத்து சுகங்கள் அத்தனையும் தேசத்துக்காக அர்ப்பணித்த உன்னதம், தேச விடுதலைக்காக பொருளாதார ,வியாபார உத்தியை கையிலெடுத்த துணிச்சல் மிகுந்த enterprenership ,ஒரு முதலாளியாகவே இருந்தும், தொழிலாளர் உரிமைக்காக போராடும் நேர்மை, ஆதிக்கத்தை கண்டு அஞ்சாமை,ஆனால் கடைசியில் நம்பியவர்களால் கை விடப்பட்டதும் அல்லாமல், கண்டு கொள்ளாமலும் விட பட்ட சோகம் இவற்றை முன்னிறுத்திய super -objective கொண்ட உண்மை theme .

இதில் வ.உ .சி இளமை காலங்கள் சொல்ல படவே இல்லை. ஆரம்பமே கல்யாணமாகி ,pleader பணியில் இருக்கும் நாட்களே. பொது வாழ்வின் ஆரம்ப நாட்களில் இருந்து தொடக்கம். பிறகு அவருடைய அந்நிய பொருள் பகிஷ்கரிப்பு, சுதேசி கப்பல் கம்பெனிக்கான முனைவு, தொழிற்சங்க, அரசியல் போராட்டங்கள் என்று விரியும். பிறகு சிறை வாழ்க்கை, வெளியில் வந்ததும் ஏமாற்றம் நிறைந்த பொது வாழ்வு மற்றும் தனி வாழ்வு. என்று மூன்று கட்டங்களில் விரியும்.

இதற்காக நடிகர் திலகம் செய்த home work அபாரமானது. முதலில் மொழி. தமிழில் slangs ,ஓட்டபிடாரம் பிள்ளைகளுக்கு உரிய வட்டார மொழி என்பது இருந்தாலும் அது தொட்டு கொள்ள ஊறுகாய் போல ஒரு சில குடும்ப காட்சிகளில் உபயோக படுத்த படுவதோடு சரி.மற்ற படி ஒரு வழக்கறிஞர், பொது வாழ்க்கைக்கு வந்த, இலக்கியம் ,ஆங்கிலம் அறிந்த மனிதர்களுக்கு உண்டாகும் பொது மொழி தேர்ந்தெடுப்பு மிக சரியானது.(நினைத்திருந்தால் மக்களை பெற்ற மகராசி கொங்கு தமிழ் போல பிள்ளை தமிழ் பேசியிருக்கலாம்.).

அடுத்து personality . ஒரு வசதியான வீட்டு படித்த மனிதர். முதலாளி ,leadership quality உள்ள abnormal enterprener and a practising lawyer .அதற்குரிய constructive arrogance ,மிடுக்கு, அதே நேரத்தில்
exhibitionist politeness , commitment to the cause ,எதிரில் இருப்பவரின் தரமறிந்து நடக்கும் பழகும் இங்கிதம்,public life outwardly courageous conviction என்பவை கொண்ட முதல் கட்ட பாத்திர குண வார்ப்பு.

இரண்டாவது கட்ட பாத்திர வார்ப்பு ,அவர் சிறையில் தனக்கு பழக்கமில்லா கடின உடலுழைப்பு, சிறிதே physical abuse , தனிமை சிறை வாசம் என்று உடலை சோர வைத்தாலும் மனதில் உறுதி தளரா நிலைமை.

மூன்றாவது கட்டமோ , குடும்பம் சிதைந்து, அவர் உருவாக்கிய கம்பனியை வெள்ளையனுக்கே விற்று விட்ட துரோகம்,மக்களின் பாரா முகம், ஒன்றன் பின் ஒன்றாக நண்பர்களின் துயரம் மற்றும் இழப்பு, ஒரு defeatist introverted சுருங்கல், உடலும் மனமும் சோர்ந்து இலக்கிய பணியில் ஒதுங்கி மீதி நாட்களை இறப்பு வரை கடத்துவது என்கிற phase

படத்தின் துவக்கத்திலேயே எனக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. எனக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் போது class teacher என் அம்மாதான்.டீச்சர் என்றுதான் வகுப்பிலும், பள்ளியிலும் கூப்பிட வேண்டும், அம்மா என்று கூப்பிட கூடாது என்று கண்டிப்பான உத்தரவு. கூப்பிட கூடாது என்ற deliberate consciousness என்னை அடிக்கடி தவற வைக்கும். முதல் காட்சியில் தந்தைக்கெதிராக ஒரு வழக்கில் ஆஜராகும் போது வாய் தவறி அப்பா என்று ஆரம்பித்து மன்னிக்கவும் எதிர் கட்சி வக்கீல் என்பார். சிறிதானாலும் என்னால் மறக்க முடியாது.

ஒவ்வொருவருடனும் interract பண்ணும் போது அதற்குரிய ஒரு தனி சிறப்பான விசேஷம். சிவாவுடன் ஒரு மதிப்புக்குரிய ஆசிரிய தோழன் ,பாரதியுடன் விளையாட்டு கலந்த புரவல உரிமை, மாடசாமியிடம் மகனை போன்ற ஆனால் வேலையாள் என்ற நிலையும் தலை காட்டும் தோரணை, கப்பல் கம்பனி இயக்குன நிர்வாகிகளுடன் வணிக நோக்கம் கலந்த நட்பு,தொழிலாளர்களிடம் பரிவான ஒரு வாஞ்சை(பரிமாறிய சோற்றை எடுத்து உண்டு தரம் பார்க்கும் ஒரு leadership கலந்த exhibitionist good gesture ), adverse situation போது வெளிப்படும் assertive firmness (கப்பல் தர மறுக்கும் ஷா விடம்),திலக்கிடம் பேசும் போது பணிவும் ,மரியாதையும் கலந்த ஆங்கில(எவ்வளவு நல்ல உச்சரிப்பு) விண்ணப்பம்,ஆஷ் மற்றும் விஞ்ச் இவர்களுடன் விட்டு கொடுக்காத அலட்சிய பேச்சு என்று வ.உ .சி போல behave செய்து பாத்திரமாக வாழ்ந்திருப்பார்.

சிறையில் தனக்கு பழக்கமில்லாத உடலுழைப்பில் ஈடு படுத்த படும் போது விருப்பமில்லா கஷ்டத்தை வெளியிடும் முறை, மனத்தை உறுதியாக வைத்திருக்க பிரயத்தனம் கலந்த மெனக்கெடல், டாக்டருடன் interract செய்யும் போது அலட்சியம் காட்டினாலும் இதற்கு மேல் என்ன என்ற வகையிலேயே, சிறையிலிருந்து விடுதலை என்றதும் நாட்டுக்கா விடுதலை என்று மேலுக்கு பேசினாலும், வெளியில் வந்ததும் அடையும் சுதந்திர உணர்வை ,அந்த காற்று பட்ட உணர்வை, பறவைகளை பார்த்து அடையும் பரவசத்தை காட்டியும் விடுவார்.

ஏமாற்றத்தை உணர்ந்தாலும் (ஒருவர் கூட அழைக்க வராததில்), மேலுக்கு சமாதானம். சிவாவை பார்த்து அடையும் அதிர்ச்சி கலந்த பரவசம்,தம்பி மனநிலை பிறழ்வில் தலையில் அடித்து அடையும் தாங்கொணா துயரம், மக்களின் உதாசீனத்தை அனுபவித்து கூட்டுக்குள் முடங்கும் சுருக்கம், இழப்பில் காட்டும் ஏமாற்றம் நிறைந்த தனிமை சோகம் என்ற அளவில் method acting முறையில் மூன்று phases என்று வரும் நிலைகளிலும் பாத்திரத்தை வார்த்ததில் மூன்று முக்கிய compliments .

முதல் ஒன்று சிவாஜியிடம் இருந்து சிவாஜிக்கு---- நான் நடித்ததிலேயே மிக சிறந்த பாத்திரம் என்று. இரண்டாவது வ.உ.சி மகன் ஆறுமுகத்திடம் இருந்து தந்தையை தத்ரூபமாக கண்டேன் என்றது. மூன்றாவது வ.உ .சி மற்றும் சுப்ரமணிய சிவாவை அனைத்து நிலைகளிலும் நேரில் கண்ட என் தாத்தா வின் பரவச compliment . "வேறு எவண்டா இப்படி பண்ண முடியும்? நடிக்கலைடா. அப்படியே வாழ்ந்துட்டான், நான் நேர்லயே பாத்திருக்கேண்டா அவர்களை எல்லாம். அதை வைச்சு சொல்றேன்". என்ற மனமார்ந்த பரவசம்.

இதற்கு மேலும் வார்த்தை ஏது சொல்ல?

RAGHAVENDRA
23rd October 2013, 08:00 AM
கோபால் சார்,
மிக்க நன்றி.

கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் நடிகர் திலகத்தின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம். இப்படத்தைப் பற்றிய நம் ஒவ்வொருவருடைய கருத்தும் இங்கே பதியப் பட வேண்டும். ஒருவர் விடாமல் பங்களித்து இப்படத்தின் மேன்மையை பறை சாற்றுவோம். கோபால் மிகச் சிறப்பாக இதனைத் தொடங்கி வைத்துள்ளார். அனைவரும் இதனைப் பின் தொடர வேண்டுகிறேன்.