Madhu Sree
12th September 2012, 09:06 PM
காலை ஐந்து மணி, கண் விழித்தான் ஜெய்...
தன் மனைவி நிஷாவுக்கு கைபேசியில் அழைத்தான், அவள் எடுக்கவில்லை...
நெற்றியை தேய்த்துக்கொண்டே பாத்ரூமுக்குள் சென்றான், oral-B ப்ருஷை எடுத்து, டூத்பேஸ்ட்-ஐ பார்த்தான்,அந்த டூத்பேஸ்ட் தீர்ந்துவிடும் நிலையில் இருந்தது...
'ஐயோ டூத்பேஸ்ட் வாங்க மறந்துட்டேனே ச்ச' என்று தன்னை நொந்துக்கொண்டான், ஹால்-இல் இருந்த கோத்ரேஜ் பூட்டை எடுத்து டூத்பேஸ்ட்-ஐ தேய் தேய் என்று தேய்த்த போது, மெல்ல பிதிங்கிக்கொண்டு வெளியே வந்தது பேஸ்ட்.
'ஹப்பா' என்று சொல்லிக்கொண்டு பல் தேய்த்து, குளித்து மணியை பார்த்தான், சரியாக 6 என்று காண்பித்தது... சுட சுட ப்ரூ காபி போட்டு குடித்தான்...
மறுபடி நிஷாவின் மொபைல் நம்பருக்கு டயல் செய்தான், 'தாங்கள் டயல் செய்த என் சுவிட்ச் ஆஃப் செய்ய பட்டுள்ளது' என்றாள் ஒரு பெண் எந்திரத்தனமாக... 'ஹ்ம்ம்ம்' என்று பெருமூச்சொன்று விட்டு, மணியை பார்த்தான், 7:58 என்றது வால் கிளாக்.
மெல்ல வீட்டு கதவை பூட்டிவிட்டு பஸ் ஸ்டாப்க்கு நடக்க ஆரம்பித்தான் ஜெய்.
பஸ் ஸ்டாப்-ஐ அடைந்த போது கவனித்தான், என்ன ஆச்சர்யம் கூட்டமே இல்லை... திரும்பி பார்த்தான் ஓரமாய் அமர்ந்திருந்த அவனை கவனித்தான்,
சிநேகமாய் சிரித்ததைப் பார்த்தபோது, நட்பை விரும்பும் விதமாய் இருந்தது, மெல்ல அருகில் வந்தான் அவன்.. இருவரும் பேச தொடங்கினர்...
தினம் இது வாடிக்கையாகவே இருந்தது... சில நாட்கள் செல்ல, இருவருக்கும் நல்ல நட்பு மலர்ந்தது...
அன்றும் ஜெய் வழக்கம் போல ஆபீஸ்-க்கு கிளம்பினான்...
'என்ன கெளம்பியாச்சா' என்று பின்னாலிருந்து ஒரு குரல்... பஸ் ஸ்டாப் சிநேகிதன் தான்...
'ஹோ நீயா ம்ம் சொல்லு' என்றான் ஜெய்.
'இன்னிக்காவது நிஷா ஃபோன் பண்ணினாங்களா' என்றான் அவன்
இல்ல... என்று உதட்டை பிதுக்கினான் ஜெய்...
'ஹ்ம்ம்ம் விடு கவலைபடாத, ஒரு நாள் உன்ன கண்டிப்பா புரிஞ்சிப்பாங்க' என்றான் அவன்..
நேத்திக்கு ஷேர் மார்க்கெட்ல வேற 50000 இழந்தேன்..., வாழ்கையே வெறுத்துடும் போல இருக்கு என்று சோகமாய் கூறினான் ஜெய்
உன் life-ல இவ்ளோ கஷ்டம் இருந்தாலும் நீ அதெல்லாம் பொருட்படுத்தாம வாழ்க்கைய ஓட்ற, என்ன பாரு, உயிரை வாங்குறாங்க,
அவங்க பண்ற தொல்லைக்கு எனக்கு உயிரெடுக்கணும் போல வெறி வருது ச்ச, வாழ்க்கைல ஒரு கட்டத்துக்கு மேல பிரச்சன வந்தா செத்துடனும்... என்று நொந்துகொண்டான் அவன்...
ஹ்ம்ம்ம் சாவு ஒரு solution இல்ல, சாவு ஒரு நாள் வரத்தானே போகுது, வரும்போது வரட்டும் என்றான் ஜெய்...
இல்ல ஜெய், life-ல எவ்ளோ தான் கஷ்டம் வரும் சொல்லு, போனவாரம் நீதானே சொன்ன, உன் ஆபீஸ்ல ஞாபகம் இருக்கா, நிலான்னு ஒரு பொண்ணு தற்கொல பண்ணிக்கிச்சு,
எல்லாரும் கோழைத்தனமா பண்ணிகிட்டாளேன்னு சொன்னாங்க, பேப்பர்ல நியூஸ் வேற வந்திச்சு ஆனா அவளுக்கு என்ன பிரச்சனையோ...
என்னவாத்தான் இருக்கட்டும், அதுக்காக தற்கொல பண்ணிகிட்டது... ஹ்ம்ம்... எனக்கு அதுல உடன்பாடு இல்ல அவளாலே எல்லாரோட மனசும் எவ்ளோ சங்கடம் ஆகிடுச்சு தெரியுமா... என்றான் ஜெய்
நான் ஒன்னு கேள்விப்பட்டேன், அந்த பொண்ணு பிடிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்டாளாம், அதுக்கு மேல வாழமுடியலன்னு அப்டி உயிரை விட்டுட்டாளாம் என்றான் அவன்...
'ஹ்ம்ம்ம் என்னவோ life is not easy ' என்று எங்கேயோ வெறித்து பார்த்தான் ஜெய்...
ஆபீசுக்குள் நுழைந்தான், ஷேர் சைட்-ஐ நோட்டமிட்டான், மறுபடியும் மூன்று லட்சம் இழந்ததாய் தெரிவித்தது... சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை ஜெய்...
தலையில் கைவைத்து சோர்ந்து desk மேல் சாய்ந்து படுத்தான்... அரைநாள் லீவ் சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பினான் ஜெய்... கோவில் சென்று ஒரு தேங்காய் உடைக்கணும் என்று நினைத்துக்கொண்டே இருக்கையில்,
'என் கண்ணை பிடிங்கிக்கொள் பெண்ணே என்னை காதல் குருடன் ஆக்கிவிடு' என்று ரிங்டோன் ஒலிக்க, நிஷா என்று காண்பித்தது iPhone.
சந்தோஷமாய், 'ஹலோ ஹலோ நிஷா நிஷா' என்றான் ஜெய்...
'ஜெய், எனக்கு இந்த மாதிரி கால் பண்றதுக்கு பதிலா, என்னை divorce பண்ணினா நானாச்சும் நல்லா வாழ்வேன்ல' என்றாள் நிஷா
'நிஷா, ஏன் இப்டி பண்ற, இதனால என் life எவ்ளோ affect ஆகும்னு நீ யோசிக்கவே மாட்டியா' என்று குரல் தழுதழுக்க கேட்டான் ஜெய்
'ஜெய் please try to understand, என்னால உங்க கூட வாழ முடியாது...'
'நமக்கு marriage ஆகி அடுத்த வாரமே நீ போய்ட்ட, இன்னியோட ஒரு மாசம் ஆகுது... என் லைப் ரொம்ப நல்லா இருந்துது, இப்படி என் life-ஆ திருப்பி போட தான் நீ வந்தியா' என்று கதறினான் ஜெய்
'ஜெய், எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு உங்கள இப்படி கதறவிடறதுக்கு, நான் ஏற்கனவே ஒருத்தர லவ் பண்ணி என் அப்பா அம்மா force பண்ணினதால தான் உங்கள marriage பண்ணிக்கிட்டேன் எவ்ளோ தடவ சொல்லுறது'
'அப்புறம் என்ன ம***க்கு என்னை marriage பண்ணிக்கிட்ட, உன் அம்மா அப்பாவ கொல்லனும் டீ, அப்டியே உன் அப்பா அம்மா-வ conference-ல போடு, நாக்க புடிங்கிக்கறா மாதிரி நாலு வார்த்த கேக்கறேன், என்ன நெனச்சிட்டு இருக்கீங்க, ஒட்டுமொத்த குடும்பமே என் life மோசம் பண்றீங்க'
'mind your words ஜெய், ஏதோ பரிதாபமா இருக்குனு, ஃபோன் பண்ணினா, இஷ்டப்படி பேசுறீங்க, நீங்களா divorce பண்ணிடீங்கன்னா உங்களுக்கு நல்லது or else .. ம்ம்ம்ம்... நீங்க ஆம்பளையே இல்லன்னு கண்ட ரீஸன்-அ சொல்லி உங்க பேர கெடுத்து divorce வாங்க வைக்காதீங்க'
'சீ நீயெல்லாம் ஒரு மனுஷியா, get lost' என்று iPhone-ஐ தூக்கி விட்டெறிந்தான் ஜெய்...
அவன் சொன்னது கரெக்ட் தான், வாழ்கையில ஒரு கட்டத்துக்கு மேல வாழவே கூடாது, என்று திரும்ப, ஒரு லாரி வந்து கொண்டிருந்தது, சரக்கென்று பாய, லாரி ஸ்பீட் ப்ரேகர்-இல் ஏறுவது போல் அவன் மேலே ஏறி இறங்கியது... தரதரவென்று இழுத்து சென்று சட்னி ஆக்கியது...
ரோட்டில் இருந்த அனைவரும் அலற, அந்த பஸ் ஸ்டாப் நண்பன், தன்னை நொந்துக்கொண்டு மெல்ல மேலே பறந்து, தனக்காக காத்துக்கொண்டிருந்த காளை மாட்டில் ஏறி பறந்து சென்றான்...!!!!!!!!!!
முற்றும்...!!!!!