View Full Version : நிலவே முகம் காட்டு...!!!!
Madhu Sree
26th August 2012, 06:40 PM
/after admiring the pics by madhuppappaa... am following the footsteps :bow:
My third attempt, en karppanai kuthirai odikondirukkiradhu :lol2:
idhu semma mokkaiyaana kadhai... spoiler alert...!!!!!!!!! :bow: /
http://3.bp.blogspot.com/-o6yp0YZDvr4/TYnVYQ3WiqI/AAAAAAAAAOY/b8qVqczReQk/s1600/MoonGirl.gif
1
நல்ல பௌர்ணமி இரவு...
ச்சிக்குமா இந்தா ஒரு வாய் சாப்டிட்டு தூங்குவியாம்... கவிநயா தன் மகள் ரோஜாவுக்கு பால்சாதம் ஊட்டிக்கொண்டிருந்தாள்...
விண்டோ வழியே தெரிந்த நிலாவைப் பார்த்து, மம்மி அந்த நிலவுக்கு அந்த பக்கம் என்னமா இருக்கும்... என்று தன் கேள்விக்கணைகளை தொடுக்க ஆரம்பித்தாள் ரோஜா...
அங்க ஒரு நிலாராஜா இருக்கானாம்...
'நிலாரஜாவா..ஆ..ஆ.' என்று கண்கள் விரிய கேட்டாள் ரோஜா...
ம்ம்ம்ம் ஆமாண்டி கண்ணு, நிலாராஜா, தன்னோட நிலாராணிக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கானாம்...!!!!!!!
யாரு மம்மி அந்த நிலாராணி ...
நீதாண்டி கண்ணு...
'நானா..ஆ..ஆ..ஆ..' என்று குதித்தாள் ரோஜா...
கவி night shift போனும் dinner செஞ்சியா இல்லையா.. கூவினான் ஸ்ரீஷன்...ம்ம்ம்ம் வந்துட்டேன்... நீ படுத்துப்பியாம் அம்மா இப்போ வந்திடறேன் என்ன...
அந்த machine-இல் இரண்டு மாத்திரையை போட்டு சிறிது தண்ணீரை ஊற்றினாள், அந்த பச்சை button-ஐ அழுத்தினாள், ஐந்தே நிமடத்தில் 'பொலக்'கென்ற சத்தத்துடன் இரண்டு இட்லி வந்து விழுந்தது...
நிலாவைப் பார்த்துக்கொண்டே இருந்தாள் இந்த குட்டி நிலா... பார்த்துக் கொண்டே இருக்கையில் நிலாவில் ஒரு முகம் தெரிந்து மறையே, ரோஜா ஆச்சர்யத்தில் ஆழ்ந்தாள்...
மம்மி மம்மி கம் ஹியர் மம்மி நிலாராஜா தெரியறான்...
என்னடி சொல்றா அவ,
ஒன்னும் இல்ல சும்மா கதை சொல்லிட்டு இருந்தேன்,
ஏண்டி நவ் இட் இஸ் 2312, இந்த காலத்திலும் நிலாகதைலாம் சொல்லிட்டு என்ன இதெல்லாம்... டெல் சம்திங் இண்டரஸ்டிங்...
இதெல்லாம் செய்யணும் ஸ்ரீ, எவ்ளோ வருஷம் ஆனா என்ன, kids has to enjoy certain things இல்லையா... என்று புன்னகைத்து 'நீ கெளம்பு இப்போ' என்று கணவனை வழியனுப்பினாள் கவி...
அடுத்தடுத்த நாட்களில் நிலாவுடன் பேசிக்கொண்டே தூங்கினாள் ரோஜா...
மெல்ல நிலா மறைய தொடங்க, ரோஜா, 'அம்மா என்னமா நிலா குட்டி ஆகிட்டே இருக்கு என்று சோகமாய் கேட்டாள்...
ஒன்னும் இல்லடி கண்ணு, நிலாராஜா, நிலாராணிக்கு... என்று ஆரம்பிக்க
'எனக்காம்மா..' என்று எதிர்ப்பார்ப்புடன் கேட்டாள் ரோஜா
'ஹஹஹஹா... ஆமா ஆமா உனக்கு தான்...' என்று தலைய வருடிவிட்டு... 'உனக்கு நெறையா jewellery, dress-லாம் வாங்கிட்டு வர அடிக்கடி out of station போய்டுவான், தூரமா போக போக சின்னதா தெரிவான்...' என்று சமாதனம் கூறினாள் கவி...
'ஓ ஹோ...சீக்கிரம் வர சொல்லுமா நிலாராஜாவ'
'சரி சரி.. sleep now.. என்று iMusic-இல் ஒரு மெலடி ஸாங் போட்டு விட', அழகாய் தூங்கினாள் ரோஜா...
அன்று இரவு நிலாவை பார்க்க வந்த ரோஜா, 'மம்மி, ஹோ நோ மம்மி' என்று அலற... என்னவோ ஏதோ என்று பதறிக்கொண்டு வந்தாள் கவி, 'என்னடி ஆச்சு'...
'நிலாராஜாவ காணும் மம்மி...' என்றவுடன்,,
இன்னிக்கு அம்மாவாசை-ஓ அதான் என்று யோசித்துவிட்டு,
ஹோ அதுவா, நிலாராஜா உன் கூட hide and seek விளையாடுறான்... நீ வேணா பாரு இன்னும் கொஞ்ச நாள்ல நீயே கண்டுபிடிப்ப...
சொல்லிவைத்தாற்போல் அதுவும் நடந்தது... வளர்பிறையும் ஆரம்பிக்க, 'அம்மா நான் கண்டுபுடிச்சிட்டேன் பாரு' என்று வெற்றிப்புன்னகையுடன் கூறினாள் ரோஜா...
இப்படியே நிலவை ரசித்தே வளர்ந்தாள் ரோஜா...
இப்பொழுது இருவது வயது, நிலாராஜா இன்னும் அவள் மனதில் ஒளிவீசிக்கொண்டுதான் இருந்தான்...
தோழி பூஜா, 'ஏண்டி ஏதோ சின்ன வயசுல நிலாராஜா அப்படின்னு கதை சொல்லியிருகாங்க உங்க மாம், இன்னும் நிலாராஜானு ஒருத்தன் வருவான் உன்ன அங்க கூட்டிட்டு போவான்னு 2327la சொல்லுறது, கொஞ்சம் too much-ஆ இல்ல' என்றாள்...
பூஜா, logicaa யோசிச்சா நீ சொல்றது கரெக்ட், பட் இப்படி யோசிச்சு பாரு, இங்க நாம இருக்கறப்போ, நிலவுக்கு அந்த பக்கம் யாராச்சும் இருக்க மாட்டாங்களா என்ன ... and NASA has proved the existence of living things there.... பூஜாவால் பதில் சொல்ல முடியவில்லை தான்...!!!!!!!!!!!!!!!
Madhu Sree
26th August 2012, 06:53 PM
2
வாரத்திற்கு ஒரு முறை கூடும் meeting-ர்க்கு ராஜா சந்திஷ் வந்தான், உயரம் பத்தடி இருக்கும், ஆஜானுபாகுவாய், சுருள் சுருளாய் முடியுடன், கம்பீரமாய் வந்து உட்கார்ந்தான் சந்திஷ்... பால் நிறமே மங்கலாய் தெரியும் அவன் பக்கத்தில்...
இவர்களின் பாஷையோ ஜாமூன்...
'அஷிஷ்மா அஷிஷ்மா', 'ஜாமூன்' பாஷையில் உட்காருங்கள் என்று அர்த்தம்...
'ஜாலீஷ்ஷா சந்திஷ்', அதாவது ராஜா சந்திஷ்க்கு வணக்கம் கூறினான் தளபதி யாக்ஷான்...
(இனி 'ஜாமூன்' பாஷை இங்கே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது)
'நாம இங்க மறைஞ்சு மறைஞ்சு வாழ்ந்தாலும், பூமியிலிருந்து satelittes-லாம் அனுப்பி நம்மள கண்டுபிடிக்கிறதுல அவங்களுக்கு என்ன அப்படி ஒரு சந்தோஷமாம்...
செவ்வாயிலிருந்து திசை மாறி வந்த ஜந்துக்கள் தானே மனிதர்கள்... தங்களுது பூர்வீகமே தெரியாத இவர்கள் நம்மளை கண்டுபிடிப்பதா' என்றான் யாக்ஷான்...
'யாக்ஷான், பொறுமை, உனக்கு பூமி ஜந்துக்களை பிடிகாதென்பது எமக்கு தெரியும், அதற்காக இப்படியா' என்று வெண்மையான பற்கள் தெரிய வசீகரமாய் சிரித்தான் சந்திஷ்...
'ராஜா சந்திஷ்க்கு தெரியாதது ஒன்றும் இல்லை, இங்கே நாம் இருப்பது தெரிந்தால், அந்த ஜந்துக்கள் இங்க வர நேரிடும்...' பதற்றமாய் கூறினான் யாக்ஷான்..!!!!!!.
'சரி வந்தால் என்ன ஆகும்......'
'புரட்சி செய்வது தங்களுக்கு பிடித்திருக்கலாம், ஆனால், பகையை சம்பாதிப்பது ராஜாவுக்கு அழகில்லை' என்று பீடிகை போட்டான் யாக்ஷான்
'பகையா' என்று புருவம் உயர்த்தினான் சந்திஷ்...
'amstrong இங்கு வந்து இறங்கிய போதே, ராஜா marsidon கூறினது ஞாபகம் இருக்கட்டும், நம் ஆட்சி சரியில்லை எப்படி ஒரு மனித ஜந்து நம்மிடத்தில் வரலாமென்று நம்மிடம் கேள்வி கேட்டது தங்களுக்கு தெரியாததில்லை...'
நெற்றியை தேய்த்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வந்தான் சந்திஷ்.. 'யாக்ஷான், கொஞ்சம் நாட்கள் பொறுத்திருப்போம், மறுபடியும் நம் வழியில் இந்த மனித ஜந்துக்கள் வந்தால் நாம் என்ன செய்யலாமென்று யோசிப்போம்'...
'ஆகட்டும் ராஜா' என்று சபை கலைந்தது...!!!!!
chinnakkannan
26th August 2012, 08:26 PM
ஷ் ருப்..யம்மி..(தமிழ் பாஷையிலேயே நல்ல ஆரம்பம்..தொடருங்கள் :) )
madhu
26th August 2012, 08:32 PM
அட ராமா..
இந்தக் கதை பிரசுரமாகும் சமயம் நிலாவில் முதலில் காலடி வைத்த புஜபலம் ( அதாங்க ஆர்ம்ஸ்டிராங் ) பரலோக ப்ராப்தி அடைந்து விட்டார். அதற்கு காரணம் நிலாமந்திரி யாக்ஷானின் ஐந்தாம் படை ஒன்று உலகத்தில் இருப்பதுதான் என்று விச்சு ( டார்லிங் டிடெக்டிவ் ஏஜென்சிதான் ) கண்டு பிடித்திருக்கிறான்.
நிலா ராஜா சந்திரேசன் (சுருக்கமா சந்தீஷ் ) விச்சுவுக்கு வேண்டப்பட்டவன். அதனால் அவன் கேட்டுக் கொண்டபடி துப்பறிந்ததில் பதினாறு வயது படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகையின் பெயருள்ள ஒருவர்தான் இதற்கு காரணம் என்று தெரிய வந்திருக்கிறது. அவர் எழுதிய கதை மூலமாக குட்டு வெளிப்பட்டு விட்டது..
இப்போ கதைக்காக :clap: & :thumbsup: நிலாவில் காலடி வைக்க பயப்படுத்தியதற்காக :hammer:
அது சரி... இந்த கதையும் இன்னும் நீஈஈஈஈஈளமா வளரும் போலத் தெரியுதே.. ! பேஷ் பேஷ் !
P.S.
அந்த அழகான படத்துக்கு ஒரு தனி :hammer: ஓ.. சாரி சாரி.. தப்பான ஐகான் விழுந்திருச்சு :noteeth:
இதோ ஒரு :clap:
chinnakkannan
26th August 2012, 08:45 PM
எப்படிப்படமெல்லாம் போடறது.. :sad:
madhu
26th August 2012, 08:48 PM
எப்படிப்படமெல்லாம் போடறது.. :sad:
எந்தப் படம் போடறீங்களோ அதோட URL-ஐ காப்பி செஞ்சு அதுக்கு முன்னாலே போட்டு பின்னாலே போட்டா படம் வந்துடும்.
for example if this is the URL http://fullodia.com/sites-pic/867/1344539384-lord-krishna-wallpaper1.jpg
அதுக்கு முன்னும் பின்னும் நான் சொன்ன HTML tags போட்டால் படமாகத் தெரியும். இல்லாவிட்டால் லிங்க் ஆக தெரியும்.
Madhu Sree
26th August 2012, 08:51 PM
madhupappaa.. :rotfl2: enakku chandhishkkum ippadi oru link :yessir:
anyhow I always had this kind of thought... :happydance:
btw, yes oru thodakkadhaiyaa ezhudhalaamnu but siruthodarthaan mindla iruku...
mega thodar ungala pola, matrum nam hubin members, maadhiri jaambavaaangal-aal thaan saathiyam... :bow:
btw, idhu night enakku dhideernu nilavapathappooo thonichu, sudden spark again, semma flow, sarasaranu 4 episodes ezhudhitten,
morning ezhundhu paaththaa armstrong irandhu news.... :( (whatteee coincidenc :shock: ) RIP neil armstrong :bow:
ippo kudhirai sandippanudhu :D naaalaikku office leave thaan.. night thirumbavum kadhai ezhudha mood varum appo ezhudhikkalaamnu konjam break potu vechirukken... :D
PS:
madhu pappaa, enakku andha pic roumba pidichirundhudhu, adhaan select panni poten... kadhaikku roumba poruthamaana picaa manasula pattudhu :D
madhu
26th August 2012, 08:54 PM
மயிலம்மா..
எழுதிய நாலு எபிசோடுல ரெண்டுதானே இங்கே இருக்கு ... மீதி ரெண்டு எங்கே ?
( அதான் இந்த ரெண்டுன்னு வாழைப்பழ ஜோக அடிக்கக் கூடாது :notthatway: )
Madhu Sree
26th August 2012, 08:56 PM
CK, nandri :bow: am trying to improve ... :D
Madhu Sree
26th August 2012, 08:57 PM
madhuppaappaa... mmmm podaren... audience resposne paarththu podalaamnu :noteeth: borenu sollittaaa adhukku mela kashtappaduththa venddaamnu...
idho podaren... :bow:
chinnakkannan
26th August 2012, 09:12 PM
Thanks madhu anna.. naay padam pOttuttEn..!
Madhu Sree
26th August 2012, 09:15 PM
3
mommy bye meet you in two days என்று அம்மாக்கு டாட்டா -காண்பித்து, பூஜாவுடன் மினி கூபர்-இல் பறந்தாள் ரோஜா...
'ரோஜா, ஆட்டோ டிரைவிங்-ல போட்டு இங்க back seat-க்கு வா,அப்படியே cintrogen-யும் ignite பண்ணிவிடு...' என்றாள் பூஜா...
சொன்னதை செய்தாள் ரோஜா.. mini cooper 'woooooooooooooozzzzzzzzzzzzzzzzzzzzz' என்ற சத்தத்துடன் அப்படியே மெல்ல காற்றில் பறந்து மிக விரைவாய் சென்றது...
தன் காலேஜ் தோழிகளும் அதே போல் parallel-aai பறந்து வர, அந்தரத்தில் 'டொக்'கென்று ரெட் சிக்னல் விழ, காத்திருந்தனர்...
இப்பொழுது கிரீன் சிக்னல் விழ, ரோஜா 'adventure mode' என்றவுடன் voice recognize செய்து அந்தரத்தில் பல்டி எல்லாம் அடித்து சென்றது minicooper.. இந்தியாவிலிருந்து USA-க்கு பத்தே நிமிடத்தில் வந்து சேர்ந்தனர் அனைவரும்...
அனைவரும் pub-க்குள் நுழைந்தனர்... 'ஹே..எ.எ.எ.எ... poo' என்று கூப்பிட்டு கொண்டு வந்தான் ரிச்சர்ட்... பூஜாவின் தற்போதைய boyfriend...
ஸ்விம்மிங் pool-kkul காலை விட்டுக் கொண்டு தனியாக அமர்ந்திருந்தாள் ரோஜா...
தன் boyfriend ரிச்சர்டுடன் பூஜா அந்த ஸ்விம்மிங் pool பக்கம் வந்தாள்...
ரிச்சர்ட் 'poo, you are so sexy' என்று அவன் கைகள் பூஜாவின் உடலில் எதையோ research செய்து கொண்டிருக்க. இதை பார்த்த ரோஜாவோ மேலே நிமிர்ந்து நிலாவை பார்த்தாள்...
மிகநீள முத்தத்திற்கு பின் பூஜா ஒரு வழியாக ரிச்சர்டிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, ரோஜாவிடம் வந்தாள்...
'ரோஜா, I love richard a lot... We have planned to move in to a relationship soon' என்று குதூகலமாய் கொஞ்சம் வெட்கத்துடனும் கூறினாள் பூஜா...
'பூஜா, எனக்கென்னவோ கண்டிப்பா நிலாவுக்கு அந்த பக்கம் ஏதோ இருக்குனு தான் தோணுது' என்று நிலவை ரசித்து பின், பூஜாவை பார்த்து கண் சிமிட்டினாள் ரோஜா...!!!
இதை கேட்டவுடன், 'ரோஜா, you must be crazy' என்று american accent-இல் எரிந்துவிழுந்துவிட்டு தன் flying waterfalls tent-யினுள் நுழைந்து கொண்டாள் பூஜா...
'ஹ்ம்ம்ம்ம்ம்மம்மம்ம்ம்ம்' என்று ஒரு பெருமூச்சை விட்டு தூங்க சென்றாள் ரோஜா...
Madhu Sree
26th August 2012, 09:18 PM
madhupapaa third episode ungaluku banned.. only 18+ can read :lol2: paappaakkalukku thadai :poke:
pavalamani pragasam
27th August 2012, 08:03 AM
வாவ்! என்ன ஒரு கற்பனை வளம்! சரளமான நடை! சுஜாதாவின் விஞ்ஞான கதைகள் தோற்றது! தொடருங்கள், ms!
madhu
27th August 2012, 09:29 AM
:cry2: இந்த எபிசோட் நான் படிக்க கூடாதுன்னு 288 போட்டுட்டாங்க :cry2: //
Shakthiprabha
27th August 2012, 11:10 AM
Madhusree, niraiya changes....indha storykkum first story kkum....unga ezhuthu nadai.....nalla maturity varugirathu........keep on writing....
your creative imagination is BIGGEST PLUS and.......
laziness ilaama udane ezhuthareenga paarunga :ashamed:........ there is ur victory :thumbsup:
waiting for part 4
sivank
27th August 2012, 11:56 AM
Very interesting thought MS. Very nice to read. Keep it up :clap:
Madhu Sree
27th August 2012, 04:19 PM
Thanks PPma :bow:
Madhu Sree
27th August 2012, 04:19 PM
Thanks SP... :happydance:
Madhu Sree
27th August 2012, 04:20 PM
:ty: sivan anna.. :bow:
Madhu Sree
27th August 2012, 05:17 PM
4
யாக்ஷானும் சந்திஷும், சபையில் வேண்டுமானால் தளபதி ராஜாவை போல இருந்தாலும், வெளியில் நல்ல நண்பர்கள்...!!!!!!!!!!
'யாக்ஷான், வா அப்படியே எங்கேயாவது உலாவிவிட்டு வருவோம்' என்றான் ராஜ சந்திஷ்...!!!!!!
'ராஜா, செல்லலாம், மனித கண்களுக்கு நாம் தெரியப்போவதில்லை, ஆனால், அவர் அனுப்பி இருக்கின்றனரே sattellites என்று பெயரில் நமக்கு எமன்... அதுக்களின் கண்களிலிருந்து தப்பிப்பதே கடினம்...!!!!!!!!!' என்று எச்சரிக்கையாய் சொன்னான் யாக்ஷான்..!!!!!!!
'நாமெல்லாம் இதற்கு பயப்படக்கூடாது யாக்ஷான்..!!!!! உன்னிடம் நான் ஒன்று சொல்லவேண்டும்...!!!!!!! அதான் உன்னை அழைத்தேன்...!!!!!!'
'வருவது வரட்டும்...!!!!!!' என்று மனதினுள் நினைத்து, 'சரி, வாருங்கள் ராஜா' என்று யாக்ஷான் சந்திஷுடன் அந்த மாயமாளிகையை விட்டு வெளியேறினான்...!!!!!
மாயமாளிகை சுற்றி அருவி அதுதான் அந்த satellites-யிடம் இருந்து மாயமாளிகையை மறைத்து வைத்திருந்தது...!!!!!!!!
மெல்ல வெளியே வர, அறிவியிலிருந்து சாரல் சந்திஷின் வெண்மையான முகத்தில் பட்டு மோட்சம் அடைந்தது...!!!!!!
சாரலை துடைத்துக்கொண்டே வெளியே வர எத்தனித்தபோது மேலே பார்த்தான் சந்திஷ், அந்த satellite பறந்து சென்றது.
'ராஜா இப்படி வாருங்கள்', என்று கொஞ்சம் மறைந்தாற்போல் அழைத்து சென்றான் யாக்ஷான்'
'இந்த எமனை என் காலால் எட்டி உதைக்கலாம் போல் இருக்கிறது ராஜா... அந்த மனித ஜந்துக்களை... ' என்று ஆத்திரமும் கோபமுமாய் கூறினான் யாக்ஷான்...
'ஹஹஹஹா.. பொறுமை பொறுமை... அவர்களை கோபிக்காதே... ஒவ்வொரு நாளும் எவ்வளவு வேண்டுதல்கள் தெரியுமா, நம்மை நம்பி அங்கே எவ்வளவோ லட்ச கோடி ஜந்துக்கள் இருக்கின்றன... வா போகலாம்' என்று சமாதானம் கூறி அழைத்துச் சென்றான் சந்திஷ்...
வெளியே வர, முத்தும் வைரங்களும் செதுக்கிய அழகிய ரதம் நின்றுக்கொண்டிருந்தது... ரதத்தில் ஒரு வெள்ளை குதிரை பூட்டப்பட்டிருந்தது...!!!!!!!! குதிரையின் பெயர் 'திங்கள்'
நீண்ட வால்... ஒய்யாரமாய் இங்கும் அங்கும் தன் தலையை சிலுப்பிக்கொண்டே நின்றிருந்தது..!
'என்ன, திங்கலாறே, எமக்காக காத்திருந்தீரோ' என்று செல்லமாய் அதன் கழுத்தை வருடிவிடான் சந்திஷ்...!!!!!!!!
'ஆமாம்' என்பது போல சந்திஷிடம் தன் தலையை சாய்த்து செல்லம் கொஞ்சியது திங்கள்...!!!!!!!
'ராஜா, அமருங்கள்' என்று கூறி ராஜா ரதத்தில் அமர, தளபதி யாக்ஷான், தேரோட்டியாய் மாறினான்...!!!!!!!
கொஞ்சம் தூரம் சென்ற பிறகு... 'ராஜா ஏதோ சொல்லவேண்டும் என்றீரே' என்று ஆரம்பித்தான் யாக்ஷான்...!!!!!!!!
'ஆங்... யாக்ஷான், என்னை யாரோ, ம்ம்ம் ம்ம்ம்... எனை யாரோ பார்ப்பது போல, என்னிடம் பேசுவது போல ஒரு உணர்வு' என்றான் சந்திஷ்...
'ஹாஹஹா, ராஜா, தங்களுக்கு நகைச்சுவை உணர்வு இருப்பது எனக்கு இப்பொழுது தான் தெரியும்..' என்று நகைத்தான் யாக்ஷான்...
'என்ன...' என்று சற்று தர்மசங்கடத்துடன் கேட்டான் சந்திஷ்...
'மன்னிக்கவேண்டும், பிறகு என்ன ராஜா, இப்பொழுது தானே கூறினீர்கள், லட்சக் கோடி வேண்டுதல்கள் என்று... அதனால் தானே அந்த ஜந்துக்களை ஒன்றும் செய்யாமல் விட்டிருக்கிறோம்' என்று எரிச்சல் பற்றிக்கொள்ள கூறினான் யாக்ஷான்...
'ஹோ அதை கூறினாயா, இல்லை யாக்ஷான் இது சற்று வித்தியாசமாய் இருக்கிறது, குறுகுறுவென எனக்குள் ஒரு... ஒரு...' என்ன தடுமாறினான் சந்திஷ்...
'ஒன்று இல்லை ராஜா, மனதை குழப்பிக் கொள்ளவேண்டாம், தங்களுக்கு ஒய்வு தேவை...' என்றான் யாக்ஷான்...
'ம்ம்ம்ம்... சரி வா நாம் மாளிகைக்கே செல்வோம்'... மறுபடி மாய மாளிகைக்கு திரும்பினர் சந்திரனும், யாக்ஷானும்..!!!!!!!!!
sattelite அர்ஜுன், இந்தியா-விலிருந்து அனுப்பப்பட்டது, அதன் reminder, வீக்லி ரிப்போர்ட் அனுப்ப வேண்டும் என எச்சரிக்க, 'Send Report' என்று பட்டனை அழுத்தி, இந்தியா-விற்கு அனைத்தையும் அனுப்பியது sattelite அர்ஜுன்...!!!!!!!!!!!
madhu
27th August 2012, 06:04 PM
அப்பாடா.. ரெண்டு எபிசோடையும் படிச்சுட்டேன். 3வது எபிசோடில் ரெண்டு வரி அரைக் கண்ணால் மட்டும் படிச்சேன். So no problem.
அப்போ டெலிபதி போல சந்தீஷ் மனசில் மூட்டைப்பூச்சியாக ஊரும் நினைவு பூமியில் இருக்கும் ஒரு ரெண்டு கால் ஜந்துவால்தானே ! யாக்ஷான் வில்லனாக மாறாமல் இருந்தால் சரி.
குதிரை பேரு திங்களா ? அப்போ இன்னும் இந்து, மதி, நிலா, மூன், சந்தா, அம்புலி, சசி எல்லாம் இருக்கே !
இந்த எபிசோடுக்கு :clap: அடுத்த எபிசோடுக்கு வெயிட்டிங்.
Madhu Sree
27th August 2012, 06:36 PM
//cha, madhu papaa, ambuli per marandhuruchu, illanaaa andha per kudhiraikku vechirukkalaam... :D thanks, I will use it in further episodes... nandri hein :bow: //
pavalamani pragasam
27th August 2012, 08:06 PM
Good going! Please continue fast!
madhu
27th August 2012, 08:08 PM
Good going! Please continue fast!
:notthatway: PP akka..
mayilamma already diet-la irukkanga.. avangla pOi fast continue seyya sonnA :shock: ?
Madhu Sree
27th August 2012, 10:49 PM
5
இதெல்லாம் நல்ல இல்ல சொல்லிட்டேன் என்றான் ஸ்ரீஷன்...
why dad... I want to be an astronaut... அதுக்கான இந்த course படிக்கணும்... இது ஒரு crash course...
nowadays, practicalkku spacekku கூட்டிட்டு போறாங்க...!!!!!!
அதெல்லாம் வேண்டாம் ரோஜா... சொல்றத கேளு, இப்போலாம் beauticians-kku தான் மவுசு ஜாஸ்த்தி...
நான் சொல்லற மாதிரி இந்த course எடுத்தா நீ எங்க கூடயே இருக்கலாம், career-ம் ஆச்சு என்றான் ஸ்ரீஷன்...
'noway dad, please dont force me' என்று தீர்மானமாய் கூறினாள் ரோஜா...
கவிநயாவும் ஸ்ரீஷனும் cheque panel-ai கொடுத்தனர்... இந்தா இதுல electronic cheque store பண்ணியிருக்கேன்,
இதுல உன் fingerprint வெச்சின்னா உன் accountkku money transfer ஆகிடும், goahead with ur dreams என்று கிரீன் சிக்னல் கொடுத்தார் ஸ்ரீஷன்...
'ohhh dad you are a darling' என்று கட்டிக்கொண்டாள் ரோஜா..
அந்த university-இல் சேர்ந்து முதல் நாள்...!!!!!!!!!!
'ரோஜா, I dont give a damn about this course, நீ சொன்னங்றதால தான் join பண்ணினேன்...' என்றால் பூஜா...
'it will be intersting டீ dont worry'என்றாள் ரோஜா...
'ஹாய், ஐயம் மதி' என்றான் மதி... அந்த உனிவேர்சிட்டி-இல் அனைத்து பெண்களின் dream boy...
திருதிருவென விழித்தாள் ரோஜா... 'ஹாய்' என மென்மையாய் கூறினாள்...
'ஹே ஆர் யூ ஆல்ரைட்' என்று கனிவாய் கேட்டான் மதி...
'ya, am fine , by the way நீங்க இங்க first year course join பண்ணியிருகிங்களா...'
'ஹஹஹஹா, நோ நோ ஐயம் யுவர் சீனியர்' என்றான்
'ஹோ....' அசுடு வழிய இளித்தாள் ரோஜா...
இருவருக்கும் நல்ல நட்பு மலர்ந்தது... காலங்கள் ஓடின ...
IASA(Indian Aeronautics and Space Administration) அந்த university-யிலிருந்து செலக்ட் செய்த ஐந்து மாணவர்களில், மதியும், ரோஜாவும் ஒன்று...
ஸ்ரீஷனும், கவிநயாவும், பூரித்து, ரோஜாவை, மதியுடன் IASA-விற்கு அனுப்பினர்...
First day @IASA, Mr. X, Satellite அர்ஜுன் அனுப்பிய ரிப்போர்ட்-இல் நிலாவில் நூற்றுக்கும் மேற்பட்ட உயிரினங்கள் இருப்பதாக தெரிந்தது...
அதனால் அதை பற்றி ஆராய இந்தியவிலிருந்து astronauts நிலாவுக்கு செல்வதாகவும், அவர்களை assist செய்ய, மற்றும் course practicals-காகவும் இந்த ஐவரும் செல்வார்கள் எனவும் தெரிவித்தார்...
அதற்காக ரோஜாவும் மதியும் கடுமையாய் உழைத்தனர், அனைத்தையும் கற்றுக்கொண்டனர்...
ரோஜாவுக்கு தான் நினைத்தப்படி நிலாவுக்கு செல்வதில் அவ்வளவு குதூகலம்...!!!!
Madhu Sree
28th August 2012, 04:00 AM
6
அந்த நாளும் வந்தது...
ரோஜா தன் அம்மாவிடம், அப்பாவிடம் பேசிவிட்டு... தன் trainer-யிடம் வந்தாள்...
'here it is roja, all the very best, wear this space suit on, be here within 10 minutes' என்றார்...
அந்த பெரிய பையை வாங்கிக்கொண்டு தன் அறைக்கு சென்றாள் ரோஜா...
பையை திறந்து பார்த்தாள்... புசு புசு வென்று மென்மையாக, வெள்ளை நிறத்தில் பளபளவென்று இருந்தது...
அதை அணிந்து கொண்டாள்... பொம்மை போல் நடந்து வந்தாள்...
அனைவரும் space craft-இல் அமர்ந்து நிலாவுக்கு கிளம்பினர்...
oooooooooooooooozzzzzzzzzzzzzzzzzz என்ற சப்தத்துடன் கிளம்பியது...
தன் இஷ்டதெய்வத்தை வேண்டிக்கொண்டே அமர்ந்திருந்தாள்... அப்பொழுது மதி அவள் கைகளை பிடித்துக்கொண்டான்..
ஏதோ ஆறுதலாய் இருந்தது ரோஜாவுக்கு...
மனதினுள் நிலாவுக்கு சென்று அங்கு என்னதான் இருகின்றது என்று பார்க்க ஆவலாய் இருந்தாள்...
பத்து நாட்கள் ஓடியது, உள்ளே மிதந்துக்கொண்டே மதியிடம் வந்தாள் ரோஜா...
க்ராவிடி 'ஆன்' பட்டனை தட்டியவுடன், மெல்ல கீழே வந்து நின்றாள்...!!!
'மதி இன்னும் எவ்வளவு நாள் ஆகும் நிலாவுக்கு போக' என்று கேட்டாள் ரோஜா...
அதெல்லாம் சரி, இப்போ இந்த space helmet தேவையா, ஹஹஹ்ஹா உன் தொல்ல தாங்கல ரோஜா... என்றான் மதி...
space helmet-ஐ கழற்றி, தலை முடியை அவிழ்த்து விட்டு, 'ம்ம்ம் போதுமா, கேட்டதுக்கு பதில்' என்றாள் ரோஜா...
அது வரை அவளிடம் ஈர்க்கபடாத மதி இப்பொழுது மனதில் ஏதோ சரக்கென்று நழுவியது...
ஹேய்ய்ய்ய் மதி....
'ஆங்... ம்ம்ம்' குரலை செருமி தன்னை சமாளித்துக்கொண்டான் மதி...என்ன கேட்ட
ம்ம்ம்ம்ம்ம் எப்போ மூனுக்கு போவோம்னு...
இரு ஒரு நிமிஷம், என்று அந்த transparent panel-ஐ இழுத்து, அதில் travel status-ஐ பார்த்தான்...
'சரியா இன்னும் மூணு நாட்கள்ல மூனுக்கு போய்டுவோம் ரோஜா....' என்று ரைமிங்காக கூறினான் மதி
ஹோ குட்... சரி பசிக்குது, வா மீல் ரூம்க்கு போவோம், என்று க்ராவிடி ஆப் பட்டனை தட்ட.. மறுபடி மிதந்துக்கொண்டே மீல் ரூமிற்கு சென்றனர்...
சாப்பிட்டு விட்டு view point-க்கு வந்தாள் ரோஜா, கண்கள் விரிய அந்த அழகு காட்சியை பார்த்தாள்...
நிலா மிக அருகில் மிக பெரியதாய் தெரிந்தது... 'மதி அங்க .. அங்க பாரு.. அங்க பாரு... அங்க.. நிலா..' என்று குதூகலித்தாள்...
கண்களிலிருந்து கண்ணீர் வழிய,,
ஹேய்ய்ய்ய் என்ன இவ்ளோ எமோஷனல் ஆகுற என்றான் மதி...
நோ மதி உனக்கு தெரியாது, சின்ன வயசிலிருந்தே am so exited about நிலாராஜா
வாட் நிலாராஜாவா......
'ம்ம்ம்ம்...... I mean நிலா' என்று தன்னை சமாளித்துக்கொண்டாள் ரோஜா...
'நிலாராஜா' 'நிலாராஜா'... காதுகளில் ரீங்காரமாய், யாரோ தன்னை கூப்பிடுவதைப்போல உணர்ந்தான் சந்திஷ், யாராவது வந்தார்களா என்று பார்க்க வெளியே வந்தான் சந்திஷ்...
அந்த space craft பறந்து வந்து அந்த மாளிகையை தாண்டி செல்லவும், சந்திஷ் வெளியில் வரவும் சரியாக இருந்தது...
ராஜா என்ன ஏதாவது வேண்டுமா..என்றான் யாக்ஷான்...!!!
ஆங், இல்லை யாரோ கூப்பிடுவது போல் தோணியது
ஹோ, ராஜா இன்னும் சிறிது நாட்களில் க்ரஹனம் என்று கேள்விப்பட்டேன் ஆதலால் நாம் சற்று ஜாகிரதையாக இருப்பதே நல்லது என்றான் யாக்ஷான்...
எந்த இருள் வந்தாலும் எமக்கு பயம் இல்லை தளபதியே... என்று சற்று குரல் எழுப்பி கூறினான் சந்திஷ்...
சரி ராஜா தங்கள் சித்தம் என்று விடைப்பெற்றுக்கொண்டான் யாக்ஷான்...!!!
space craft, நிலாவில் இறங்கியது.....!!!!!!!!!!!!!!!
madhu
28th August 2012, 06:14 AM
இது மயிலம்மாவை கலாய்க்கும் நேரம்
ஐந்து மாணவர்களில், மதியும், ரோஜாவும் ஒன்று..
:think: எப்படி அதுக்குள்ளே ரெண்டு பேரும் ஒண்ணா ஆனாங்க ?
காலங்கள் ஓடியது...
காலங்கள் பன்மை. ஓடியது ஒருமை. ம்ம்ம்ம் :think:
wear this space suit on, be here within 10 minutes'
அந்தக் காலத்திலும் கூட லேடீஸ் சீக்கிரத்துல டிரஸ் செஞ்சுகிட்டு வர மாட்டாங்கன்னு தெரியுது.
ம்ம்ம்ம்ம்ம் எப்போ மூனுக்கு போவோம்னு...
ஹய்யோ.. இதுக்குப் பதில் சொல்ல ஆசையா இருக்கு. ஆனா சரி வராதே :cry2:
'தண்ணி சமாளித்துக்கொண்டாள் ரோஜா.
நிலா போறப்போ தண்ணி அடிப்பது தவறு :notthatway:
Ok Ok.... :ashamed:
கதை நகரும் விதம் :thumbsup:
சட்டென்று சில வருடங்களைத் தாண்டி கதை ஓடிப் போச்சு. உலக ஜந்துக்களை விட எனக்கே அந்த
நிலா ராஜா மேல் ஒரு பிடிப்பு வந்திருச்சு. ( அதற்கு சில பல காரணங்கள் உண்டு ). எதிர்கால கதை
என்பதால் எப்படி வேண்டுமானாலும் கொண்டு போக முடியும். ஆனாலும் ஐ வாண்ட் ஒன்லி ஹாப்பி டைம்ஸ்.
அதை கவனத்தில் வச்சுகிட்டு அடுத்த எபிசோட் எழுதவும்.
நிலா ராஜா மேல ஒரு கீறல் விழுந்தாலும் கதாசிரியர் :hammer: :devil:
pavalamani pragasam
28th August 2012, 07:07 AM
Soooooo romantic!!!:thumbsup:
Shakthiprabha
28th August 2012, 10:44 AM
//அது வரை அவளிடம் ஈர்க்கபடாத மதி இப்பொழுது மனதில் ஏதோ சரக்கென்று நழுவியது... //
romba pudichathu ms... :D ... :D
thodarungaL...
engalukkelaam ippo
nilaraaja vs madhi
:( yaar thotraalum manasu varautha padum....ippo thaan madhu manasu vera nazhuvithu :(
madhu
28th August 2012, 11:22 AM
ippo thaan madhu manasu vera nazhuvithu :(
naan kataka lagnam. day of birth monday. en official perai gavaninga :p
Shakthiprabha
28th August 2012, 11:58 AM
I meant "madhi" :lol:
madhu
28th August 2012, 12:08 PM
u thought "I" but u said "U" so.. mathi becomes madhu. so i told u that U becomes I.
Madhu Sree
28th August 2012, 01:51 PM
Thanks madhuppapaa for the correction... maaththitten... :ty:
All,
Wait n watch :boo: :lol2:
Madhu Sree
29th August 2012, 03:17 AM
7
'மூன் லேன்டிங் successful ' என்றது அந்த எந்திர குரல்...
அனைவரும் கை தட்டினர்...
'ஹேய்ய்ய்ய் ரோஜா we did it' என்று மதி, கை கொடுக்க அவன் கைகளை நீட்ட...
ரோஜா, அவனை தாவி கட்டிகொண்டாள்... அதை சற்றும் எதிர்பார்க்காத மதி, தூண்டிலில் மாட்டிக்கொண்ட மீன் போல், அவன் இதயம் தத்தளித்தது ...
சுவற்றில் மாட்டிய காலேண்டர் காற்றில் ஆடுவதைப் போல, அவன் இதயம்...விழலாமா விழவேண்டாமா என்று ஆடி கொண்டிருந்தது, மூச்சு காற்று சூடானது...
'we did it மதி, we did it, we are alive and we are on moon' என்று குதூகலமாய் கூறி மற்ற டீம் மெம்பெர்ஸ்-யிடம் வாழ்த்துக்களை தெரிவிக்க நகர்ந்தாள் ரோஜா...
கை நீட்டியவன்னமே நின்றுக்கொண்டிருந்தான் மதி... வாய் மட்டும், 'ஐ லவ் யு ரோஜா' என்று முணுமுணுத்தது...
Trainer ராபர்ட், மதியை பார்த்து, 'டேய் போதும்டா உருகினது, உன்ன கட்டிகிட்டா மாதிரி தான் என்னையும் ஹக் பண்ணினா' என்றான்...
'அது வந்து... ஹி ஹி...' என்று பின்னந்தலையை சுரண்டிக்கொண்டு வழிந்தான் மதி...
சரி சரி வா, போய் tracker-ஐ ஆன் செய்யணும், அப்புறம் ரிப்போர்ட் அனுப்பனும், இல்லனா, india-ல நாம என்னமோ இங்க பார்ட்டிக்கு வந்தாப்ல அங்க சில stomach burn பார்டீஸ் ஆரம்பிக்கும்...
'ஹஹஹஹா ஆமா ராபர்ட், ஓகே நான் போய் பவர் plug-ஐ ரீடைரக்ட் பண்ணிட்டு வரேன்... ' என்று நகர்ந்தான் மதி.
மனதில் ரோஜா தன்னை கட்டிக்கொண்டதை நினைத்து, ரசித்து சிரித்துக்கொண்டே தலையை ஆட்டிக்கொண்டே நடந்தான் மதி...
ராபர்ட் ரோஜாவைப் பார்த்து, 'ரோஜா மூன்-ஐ பாக்கனும்னியே, என்ன, போய் பாக்கறியா' என்றான்...
'ஹோ ரியல்லி, நான் போகட்டா' குதிப்பது ஒன்று தான் குறை, முகத்திலேயே அவ்வளவு துள்ளலுடன் கேட்டாள் ரோஜா...
'ஐயம் நாட் ஜோக்கிங், ஸ்ரேயாஸ் is getting down, go ahead, first change your space suit to spacewalk suit' என்றான் ராபர்ட்...
spackwalk suit-க்கு மாறினாள் ரோஜா, அவள் மற்றொரு trainer ஸ்ரேயாஸுடன் நிலாவில் இறங்க தயாரானாள்...
space craft கதைவைத் திறக்க, பளீரென்ற வெளிச்சம்...
'வாவ்வ்வவ்வ்வவ்வ்வ்வ்' என்று சொல்லிக்கொண்டே மெல்ல கீழே இறங்கினாள் ரோஜா...
இறங்கியவுடன் கீழே குனிந்து மண்ணை தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டாள் ரோஜா...
'ஹேய்ய்ய் ரோஜா, ஹஹஹஹா dont be crazy, ஓவராக்ட் பண்ணாத, u go east, நான் south பக்கம் போறேன்' என்றான் ஸ்ரேயாஸ்...
'ஹீ ஹீ' என்று அசடு வழிய இளித்து அவன் சொன்ன திசையில் தத்தி தத்தி சென்றாள் ரோஜா... மனது பந்து போல் bump-ஆகி கொண்டிருந்தது,,
'ரோஜா shreyaz here, ரோஜா shreyaz here' என்று microphone-இல் அழைத்தான் ஸ்ரேயாஸ்
'ரோஜா here, I can hear you shreyaz'
'Am marching towards south, if there is any issue, call me'
'Sure shreyaz, what I have to do now'
'First look for water particles'
'ok over'
'over and out'
ஹ்ம்ம்ம் எங்கே பாத்தாலும் இவ்ளோ வெளிச்சமா இருக்கே... ஆனா ஒருத்தரையும் காணும்..
ஹ்ம்ம் சரி வேலைய பாப்போம்... தன் lunar scanner-ஐ வைத்து நீர் இருக்கும் இடத்தை ஆராய நினைத்தாள்...
மெல்ல அதை தரையில் வைத்து ஒரு ஐந்து நிமிடம் நகர்த்திக்கொண்டே வந்தாள்... மெல்ல lunar scanner-இல் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது...
ஹோ வாவ்வ் வந்த நாள் அன்னிக்கே நீர் இருக்கும் இடத்தில் தான் இறங்கி இருக்கிறோம்...
எண்ணிக்கை கூட கூட, அந்த scanner-இன் சிகப்பு நிறம் மெல்ல மஞ்சள் நிறத்திருக்கு மாறியது...
'நீர் இருக்கற இடத்துல தான் யாராவது இருக்க சான்ஸ் இருக்கு' என்று நினைத்து வேண்டிக்கொண்டே, மேலும் முன்னே சென்றாள் ரோஜா...
ஒரு இடத்தில், lunar scanner-இன் எண்ணிக்கை நூறைத் தொட்டது, அப்பொழுது மஞ்சள் நிறம் பச்சையாக மாறி, 'பீப் பீப்' என்று அலறியது...
'வாவ்வ் ஐ found இட்' என்று தலை நிமிர்ந்து பார்த்தாள் ரோஜா... முகமே சுருங்கி போக, ஏமாற்றம்...
'ச்ச, எங்க தண்ணி, ஒண்ணுமே இல்ல..... இந்த lunar scanner எதாச்சும் repair ஆகிடுச்சா, work ஆகல..' என்று யோசித்துக்கொண்டிருந்தாள்...
ஆனால் அவள் எதிரே, அந்த அருவியின் சலசலப்பில், மிதக்கும் மாளிகையின் வாசலில் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் மாறி மாறி தாக்க, ரோஜாவை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் சந்திஷ்...!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
pavalamani pragasam
29th August 2012, 07:41 AM
wow! Thrilling!
chinnakkannan
3rd September 2012, 08:38 PM
அப்ப்றம் என்ன ஆச்சு எம் எஸ்...
madhu
4th September 2012, 04:24 AM
ம்.. நிலாவுல இருக்குறதும் ம்ண்ணுதானா ?
இதை டிராமாவா போட்டா நாந்தான் நிலாராஜா :redjump:
Madhu Sree
4th September 2012, 02:04 PM
:sigh2: konjam busy... indha week ezhudidaren... :redjump:
Madhu pappaaa... :thumbsup:
Madhu Sree
6th September 2012, 04:23 PM
8
'யார் இவள்... என்ன இது வேடிக்கையான உடை... பொம்மை போல் நடக்கிறாளே... இது என்ன தலை கூடு...' என்று நமுட்டு சிரிப்பு சிரித்தான்...
அந்த தலைகூட்டுக்குள் அவள் கண்கள் மட்டும் தெரிந்தது...
கண்களே இவ்வளவு அழகாய் இருக்கிறதே, அவள் முகத்தை பார்க்க வேண்டுமே...
ரோஜா அங்கேயிருந்து மெல்ல எதிர் திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்... ஒரு மேடு மேல் ஏறி இறங்கி, சிறு தூரம் சென்று ஒரு இடத்தில் சோர்ந்து போய் உட்கார்ந்தாள்...
'ஹ்ம்ம்மம்ம்ம்ம் இங்க யாருமே இல்லையா அப்போ' என்று ஏமாற்றமாய் இருந்தது ரோஜாவுக்கு...
தன் பாக்கெட்-இல் இருந்த அந்த சின்ன சுருக்கு பையை எடுத்தாள்... அதிலுருந்த முத்துமாலையை எடுத்துப் பார்த்தாள்..., மண்ணில் சிறு குழி ஒன்று தோண்ட ஆரம்பித்தாள்...,
பூமி மணல் போன்று மென்மையாக இல்லை என்பதால் சற்று கஷ்டப்பட்டு தான் தோண்டினாள்...!!!!!!
ஏதோ சப்தம் கேட்க திரும்பி பார்த்தாள்...
ஒருவரும் இல்லை...
'ஹ்ம்ம்ம் யாரு இங்க வர போறாங்க... '
மெல்ல அந்த சுருக்கு பையை அந்த சிறு குழியில் புதைத்து, அதில் 'நிலாராஜாவுக்கு' என்று எழுதிவிட்டு நகர்தாள்...
மேட்டின் பின் மறைந்திருந்த சந்திஷ் மெல்ல அந்த குழிப்பக்கம் வந்து 'நிலராஜாவுக்கு' என்று எழுதி இருந்ததைப்பார்த்து அதிர்ந்தான்...
'ஹோ இவள் தானா என்னை 'நிலராஜா நிலராஜா' என்று இத்தனைக் காலம் அழைத்து என் மனதில் உறுத்தலாய் இருந்தது......' என்று அவள் போவதை பார்த்துக்கொண்டிருந்தான்...
ரோஜாவுக்கு ஏதோ ஒன்று மனதை சொரிய, சடக்கென்று திரும்பிப் பார்த்தாள்... அவள் அந்த சுருக்கு பையை புதைத்த இடத்தைப் பார்த்தாள்,
அங்கே, மணல் மெல்ல இங்கும் அங்கும் வாரி சிதற, ஒரு குழி தானாகவே உருவானது...
அந்த சுருக்கு பை அந்தரத்தில் எழும்பி, அந்த முத்து மாலை தானே வெளிய வந்து எதிர் திசையை நோக்கி பறந்து சென்றுக்கொண்டிருந்தது...
சிரித்துக்கொண்டே சந்டிஷ் அந்த மாலையை அணிந்துக்கொண்டு நடந்தான்... அவள் வருகிறாளா என்று குறும்பாய் பார்த்தான்...
அதிர்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை ரோஜாவுக்கு...
பயந்துக்கொண்டே 'யாரது... யாரது' என்று கேட்டுக்கொண்டே அந்த அந்தரத்தில் மிதந்துக்கொண்டிருந்த மாலையை தொண்டர்ந்து சென்றாள்...!!!!!!!!!
திடீரென்று வேகமாய் நகர ஆரம்பித்தது அந்த மாலை... 'இந்த சூட் போட்டு நடக்கறதே கஷ்டம் இதுல ஓடவேற வேணுமா' என்று தத்தி தாவி சென்றுக் கொண்டிருந்தாள் ரோஜா...!!!!!!!!
சந்திஷ் வேகமாய் நடையும் ஓட்டமுமாய் அந்த மிதக்கும் மாளிகைக்குள் தாவி சென்று திரும்பி பார்த்தான்...
ரோஜா மாளிகை இருக்கும் திசையை பார்த்துக்கொண்டே நின்றுக்கொண்டிருந்தாள்...!!!!!!!!!!!!!!
'ரோஜா ரோஜா' என்று microphone-இல் அழைத்தான் ஸ்ரேயாஸ்...
'.................'
'ரோஜா, ஸ்ரேயாஸ் ஹீயர்'
'..........'
'ரோஜா, வாட் happened'
நினைவு திரும்பியவளாய் ரோஜா 'ஆங், ம்ம்ம்.. எஸ் ஸ்ரேயாஸ், டெல் மீ'
'என்ன ஆச்சு, எனி ப்ராப்ளம்'
'அதெல்லாம் இல்ல'
'ok let us return to space shuttle' என்றான் ஸ்ரேயாஸ்
'ஓகே ஸ்ரேயாஸ் am on my way' என்று கூறிவிட்டு, நிமிர்ந்து பார்த்தாள், 'இங்க நாளை திரும்பவும் வரலாம்' என்று எண்ணிக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்...
'இதை பற்றி யாரிடமும் இப்பொழுது சொல்ல வேண்டாம்' என்று முடிவு செய்தாள்...
சந்திஷ் அவள் திரும்ப செல்வாள் என்று சற்றும் எதிர்ப்பார்க்காததால் அவள் பின் செல்வதற்கு அந்த மாளிகை விட்டு வெளியேற எத்தனித்தபோது யாக்ஷான் அங்கு வந்தான்...
யாக்ஷானுக்கு இவள் இருப்பது தெரிந்தால் ஆபத்து என்று நினைத்து, ரோஜாவை மறைத்துக்கொண்டு நின்றான் சந்திஷ்... மெல்ல யாக்ஷான் பார்வையிலிருந்து ரோஜா வேறு திசையில் மறைந்தாள்...
நிம்மதி பெருமூச்சு விட்டு, 'யாக்ஷான், நண்பா ம்ம்ம் கூறு' என்றான் சந்திஷ்
'ராஜா, இங்கு சில மனித ஜந்துக்கள் திரிவதாக தெரிய வந்துள்ளது, நாம் இம்முறை அவர்களை விடக் கூடாது' என்றான் யாக்ஷான்...
pavalamani pragasam
6th September 2012, 06:43 PM
mmmm.....appuRam?
Madhu Sree
6th September 2012, 06:57 PM
PP maa... innaikku night pottudaren :D
madhu
6th September 2012, 06:59 PM
PP maa... innaikku night pottudaren :D
what ? :shock: nalla vELai ! pOttu thaLLiduveengaLOnnu bayandhutten :shaking:
BTW ennathai poda poraanga ? :think:
Madhu Sree
6th September 2012, 07:38 PM
nestttu episodeaa... innum 2 - 3 episodes la mudiyum endru edhirpaarkkalaam... :boo:
madhu
7th September 2012, 04:21 AM
PP maa... innaikku night pottudaren :D
night-na irutta irukkum... thoonga solluvanga...:think:
adhu vandhutu poyiduchE ! :shock:
sudha india
3rd September 2013, 05:27 PM
Oru varusham aachu......... ammani kadhai andharathile / nilavile irukku.
Madhu Sree
3rd September 2013, 05:49 PM
:ashamed: akkaa... even I was thinking yesterday... :cry2:
madhu
3rd September 2013, 08:25 PM
moonjiya moodikitta sariya poyiduma :evil:
sudha india
5th September 2013, 09:55 AM
:ashamed: akkaa... even I was thinking yesterday... :cry2:
MS : unmaya urimaya unna thitren. I would like to present you with an interesting story book without the last few pages.
BTW, indha kadhai unnudaiyadhuthane ? Ille mandapathula yaravadhu sonnadha ? Mudivu sollaama poitaangala ??
Ozhunga kadhiya continue pannu...
Paaru Madhuvoda paappa face evil face ayiduchu.
Madhu Sree
5th September 2013, 12:50 PM
akka... ofcourse, en story thaan...
konjam polishing work irukku... appram thamizhla type panni podanum... :sigh2:
avasara avasaramaa potu ellaathaiyum keduthukka virumbala... :) vera oru reasonum illa... :D
sudha india
5th September 2013, 04:17 PM
Hey MS.... that was just to provoke you and make you write. Avasaramae..ille...........2013 kulla mudicha nalla irukkum. :smile:
madhu
5th September 2013, 04:24 PM
:sigh2:
avasara avasaramaa potu ellaathaiyum keduthukka virumbala... :)
அப்படின்னா நிதானமா எழுதி கெடுத்துக்கலாம்னு நினைப்பா ? :rolleyes:
yosikka vendiya vishayam :think:
innaikku amavasai.. adhanal nilavu mugam kaattaadhu... vara pournamikkulla adutha episode-ai postunga... :yes:
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.