View Full Version : Compromise...!!!!!!!!!
Madhu Sree
25th August 2012, 07:22 PM
//Happily announcing my second story... :D thanks for all your support...!!!!!!!!!!!!! :bow: //
டேட்ஷீட் '02-03-1981' என்று காட்டியது ,
ச்ச ச்ச இந்த வீட்ல யாரும் இத கவனிக்க மாட்டேங்குறாங்க ..!!!!!!!!! என்றான் சிவராமன்... 'சர்ர்ர்' என்ற சத்தத்துடன் கிழிபட்ட பிறகு, '10-03-1981' என்று சரியாய் காண்பித்தது.
அம்மா அம்மா, ஜானகியோட ஜாதகத்த தா, ஒரு வரன் வந்திருக்கு இங்க தான் பக்கத்து ஊரு, நானே நேர பாத்து குடுத்துட்டு வந்திடறேன்... என்றான் சிவராமன்...
அம்ருதம் பத்மாவதி ஜோடிக்கு பிறந்த ஏழு குழந்தைகளில், மூத்த பிள்ளை.. வரன் நடுவில் பிறந்த ஜானகிக்கு தான்...
சிவராமா, பையன் யாரு என்ன, ஒன்னும் சொல்லாம இப்படி ஜாதகத்த மட்டும் கேட்டா நியாயமா...
ஏம்மா அதெல்லாம் எதுக்கு உனக்கு, நான் அப்பா கிட்ட சொல்லிக்கறேன், நீ ஜாதகத்த குடு அப்புறம் கேள்வி கேக்கலாம்...
என்னமோ செய் என்று ஜாதகைத்தை கொடுத்தாள் பத்மாவதி...
என்ன டா..., சிவராமா.., வா ஒரு ஆட்டம்(சீட்டாட்டம் தான்) போடுவோம் என்றார், தாத்தா(பத்மாவதி அப்பா, PV Gopalakrishnan, PVG என்று அனைவராலும் செல்லமாய் அழைக்கப்படுபவர்)...
'தாத்தா சாயங்காலமா ஒரு ஆட்டம் போடாலாம்' என்று கண்ணடித்து திரும்ப, அம்ருதம் எரிப்பதை போல் பார்த்தார்...
அம்ருதம் gem of a person, எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர், இந்த சீட்டாட்டம் அறவே புடிக்காது ஏனென்றால் சீட்டாட்டத்தில் தான் அவர் அப்பா எல்லாத்தையும் இழந்தார்,
வாழ வழியில்லாத போது PVG தான், அவரை கரை சேர்த்தார்... படிக்கவைத்து, வளர்ந்த பின் தன் மகள் பத்மாவதியையும் கொடுத்து சந்தோஷப்பட்டவர்... PVG அம்ருதத்தை கண்ணா என்று ஆசையாய் அழைப்பார்...
கண்ணா நான் தானேடா கூப்ட்டேன், ஏன் அவன மொறைக்கற... சிவராமா ஏன் நிக்கற போ போ... என்று பேரனை தப்ப வைத்தார் அந்த ஆசைத் தாத்தா...
நல்லா இருக்கு இப்படி பேரன கெடுக்கறது...!!!! என்று ஆத்தாத்துப்போனாள் முத்தம்மா PVG யின் தர்ம பத்தினி..
கண்ணா இந்த நீர்மோர்.
வாங்கிக்கொண்டு அம்ருதம் நெற்றியை தேய்த்துக்கொண்டே ஒன்றும் பேசாமல் உள்ளே சென்றார்...
சிவராமன் மாப்பிள்ளை வீட்டுக்கு மாட்டுவண்டியில் சென்றான்... நல்ல ஒட்டு வீடு.. வெளியில் நின்று 'யாரவது இருக்கீங்களா' என்று குரல் கொடுத்தான்...
யார் வேணும்...
இங்க மகேசன்னு...
ஆமா என் புள்ள தான் ...
ம்ம்ம் நான் ஜானகியோட அண்ணா சிவராமன், என் சிநேகிதன் பாலு சொன்னான் உங்க பையனுக்கு பொண்ணு பாக்கறீங்கன்னு...
ஆஆங்.. வா பா.. சிவராமனா, பாலுவோட அம்மா சொல்லிச்சு உன்ன பத்தி.. ஏன் வெளிய நிக்கற உள்ள வா... உள்ளே கூப்பிட்டு சென்று ஒரு சொம்பு நீர்மோர் கொடுத்தாள் பார்வதி...
ஈஸ்வரன், பார்வதிக்கு மூன்று பிள்ளை, மூன்று பெண்கள்... மூணாவது பிள்ளை சிறுவயதிலேயே குரங்கு கடித்து இறந்தது... மூத்தபிள்ளை சுப்ரமணியன்,
பெரிய உத்தியோகத்தில் இல்லாததால் பெண் பார்க்க முடியவில்லை, இரண்டாவது பிள்ளை மகேசனுக்கு தான் பெண் தேடும் படலம்...
இந்தாங்க என் தங்கை ஜானகியோட ஜாதகம், அப்படியே உங்க பையனோட ஜாதகம் குடுத்தீங்கன்னா நாங்களும் பொருத்தம் பாத்து, எல்லாம் ஒத்துப்போச்சுன்னா மேல பேசலாம்...என்றான் சிவராமன்
ஓ கண்டிப்பா... இந்தாப்பா...
சரி, உங்க பையன் என்ன பண்றார்...
'என் புள்ளைக்கு என்ன, ராசா, கவர்மெண்டு உத்தியோகம் கை நிறைய சம்பளம்... இதோ இதோன்னு எவ்ளோ ஜாதகம் வருது' என்று முகவாய்கட்டையை கையில் ஏந்தினாள்...bank officer பொண்ணாம், இப்போ தான் கொஞ்சம் முன்னாடி தான் வந்து ஜாதகம் குடுத்துட்டு போனாங்க... பாப்போம்... என்று வெட்டி ஜம்பமடிதாள் பார்வதி...
சரிங்க, அதுக்குள்ள எதாச்சும் அமைஞ்சா நீங்க முடிச்சுடுங்க சற்று தோரணையாய் கூறினான் சிவராமன்...
சரக்கென்று பின்வாங்கினாள் பார்வதி, 'ச்ச ச்ச, அப்டிலாம் சட்டுன்னு முடிக்க முடியுமா... போட்டோவை பார்த்து ம்ம்ம் பொண்ணு நல்லா இருக்காளே... சரிப்பா பாக்கலாம், ஜோசியர் கிட்ட காமிச்சு சொல்லியனுப்பறேன்...
சரி நான் கெளம்பறேன்... புறபட்டான் சிவராமன்.. வெளியே மாட்டு வண்டியில் ஏறவும், மகேசன் வீட்டுக்கு வரவும் சரியாக இருந்தது.. நல்ல உயரம், ஒல்லியும் இல்லாமல் குண்டாகவும் இல்லாமல் நல்ல ஆண்மகனாய் தெரிந்தான் மகேசன்...
மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டே,
செவ்வாய் தோஷ ஜாதகத்துக்கு இப்படி நல்ல வரனா கிடைக்கும்னு நினைக்கல... இந்த வரன் அமைய வேண்டும் என்று மனதில் வேண்டிக்கொண்டே வீட்டுக்கு சென்றான் சிவராமன்...
வீட்டுக்குள் வந்தவுடன், என்னடா பாத்தியா பேசினியா... என்று கேட்டாள் பத்மாவதி
மொதல்ல காபித்தண்ணி குடும்மா... ம்ம்ம் பேசினேன், பையனோட அம்மா கொஞ்சம் அல்டாப்பு சுந்தரி, மத்தபடி வெகுளியா தெரியறாங்க, பையன பாத்தேன் எனக்கு ஓகே, இந்த ஜாதகத்த ஜோசியர் கிட்ட காமி...
இரண்டு நாட்கள் ஓடியது,
டேய் ஜாதகம் நல்லா ஒத்துபோயிருக்காம்... என்று சந்தோஷமாய் சொன்னாள் அந்த அன்பு தாய் பத்மாவதி...
சிவரமா சிவராமா வாசலில் யாரோ கூப்பிட்டுக்கொண்டு வர..
யாரு பாலுவா வா உக்காரு... என்று டபரா டம்ப்ளரில் காபி கொடுத்தாள் பத்மாவதி
வாடா என்ன விஷயம் என்றான் சிவராமன்...
டேய் ஜாதகம் நல்லா ஒத்துபோகுதாம்.. வர புதன்கெழம பெண்பாக்க வராங்களாம், சொல்லிட்டேன் என்றான் பாலு...
சந்தோஷம்பா, பிள்ளையாரப்பா நல்லா அமையனும் இந்த சம்மந்தம்... என்று வேண்டிக்கொண்டே உள்ளே சென்றாள் பத்மாவதி...
பாலு, பையன பத்தி விசாரிச்சியா... என்றான் சிவராமன்...
அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல டா, நல்ல சம்மந்தம் விட்டுறாத, செவ்வாய் தோஷம் ஜாதகத்துக்கு இது அமஞ்சதே ஜானகி பண்ணின புண்ணியம் தான் என்று கூறி இடத்தை காலி செய்தான் பாலு...
Madhu Sree
25th August 2012, 07:23 PM
புதன்கிழமை...
மகேசா அப்டியே வீட விசாரி நாங்க பூ பழம் வாங்கிட்டு வந்துடறோம் என்றார் அப்பா ஈஸ்வரன்...
மகேசன் விசாரித்துக்கொண்டே வர, PVG வாசலிலே காத்துக்கொண்டிருந்தார்...
யாரிந்த பையன் நல்ல கலையா இருக்கு முகம்... என்று யோசித்துக் கொண்டிருந்தவரை,
இங்க 'சிவராமன்...ன் ன் ன் ... னு......' என்று மகேசன் இழுக்க 'நீ..ஈ ஈ ஈ ...ங்க ' என்று PVG இழுத்தார்...
நான் மகேசன் என்றவுடன்,
வாங்க வாங்க மாப்ள என்று புகையலை போட்டு பழுப்பு நிற பற்கள் தெரிய வரவேற்றார் PVG..
மகேசன் நல்ல உயரம் என்பதால், கவனிக்காமல், வாச நிலையில் தலை இடித்துக்கொள்ள..
ஐயோ பாத்துமாப்ள, குனிஞ்சு வாங்க என்று அக்கறையாய் சிரித்தார் PVG
யாரும் மாப்பிள்ளை இப்படி தனியாக வருவார் என்று எதிர்ப்பார்க்கவில்லை... திருதிருவென விழித்தாள் பத்மாவதி, சிவராமன் மாட்டு வண்டியில் ஈஸ்வரன் பார்வதியை அழைத்துக்கொண்டு வந்தான்...
'என்னடா விசாரிக்க சொன்னா வீட்டுக்கே போய்டியா ஹி ஹி ஹி' என்று இளித்தார் ஈஸ்வரன்...
'மற்ற விசாரிப்புகள் மற்றும் அறிமுகம் எல்லாம் முடிந்தவுடன் மெல்ல ஈஸ்வரன் ஆரம்பித்தார்...
ம்ம்ம் பொண்ண பாக்கலாமா என்று கேட்டு பிள்ளையை பார்த்து கண்ணடித்தார்... மகேசன் நல்ல வசதியான சேர்-இல் உட்காந்திருந்தும் நெளிந்தான்...
உள்ளே ஜானகிக்கு படபடவென்றிருந்தது, அக்கா மகா, தங்கை உமாவிடம் மாப்பிள்ளை எப்படி என்று விசாரித்தாள்...
ஏய் கூட அவரோட தங்கை புருஷனாம், நல்ல சிகப்பா இருக்கார், அவர்தான் மாப்ளன்னு நெனைச்சிடாத டீ, இவர் கொஞ்சம் மாநிறத்துக்கு கொஞ்சம் கூட தான், ஆனா முகம் கலையா இருக்குடி, போய் மடக்கி போட்ரு என்று உமாவும் மகாவும் ஜானகியை ரொம்பவே சீண்டிக்கொண்டிருந்தனர்...
ஜானகி உயரம் அவ்வளவு இல்லை, ஆனால் நல்ல எலுமிச்சை நிறம், அழகோ அழகு... வயது 25 ஆக, கல்யாணம் ஆகவில்லை என்ற பேச்சுக்கள் ஆரம்பிக்க, முதலில் பார்த்த வரன் அமையவேண்டும் என்று யாருக்கும் தெரியாமல் வேண்டிக்கொண்டாள்.. இனிமேலும் அப்பா அம்மாக்கு தொந்தரவு குடுக்க வேண்டாம் கடவுளே என்று பதட்டத்துடன் இருந்தாள்...
பத்மாவதி மகாவை கூப்பிட்டு ஜானகியை அழைத்து வர சொன்னாள்...
சிறு சிறு அடியாக எடுத்துவைத்து அழகுப்பதுமையாய் நளினமாய் நடந்து வந்தாள் ஜானகி ... எல்லோரும் மகேசனையே பார்த்துக்கொண்டிருக்க.. மகேசனோ மறுபடி நெளிந்தான்...
கூட வந்த தங்கை புருஷன் ரவி, பேச்சு கொடுத்து திசைமாற்ற, அதான் சாக்கென்று ஜானகியை பார்த்தான்...
ஆஹா இவ்ளோ அழகா, ஃபோடோல குண்டா தெரிஞ்சா நேர்ல இவ்ளோ ஒல்லியா இருக்காளே... என்று மனதில் நினைத்துக்கொண்டே ஈஸ்வரனை பார்த்து இளித்தான் மகேசன்,
அதை புரிந்து கொண்ட அப்பா ஈஸ்வரன் பெண்ணை பாடசொன்னார்...
ஜானகி நன்கு பாடுவாள், ஒரு கர்நாடக கீர்த்தி ஒன்று எடுத்து விட, தொபுகடீரென்று அதில் விழுந்தான் மகேசன்...!!!!!!!!!!!!
சரி சரி.. எல்லாம் ஆச்சு... நீ உள்ள போ மா ... சந்தோஷம்... ம்ம்ம் சரி மத்த விஷயம்லாம் பேசிடலாமே ஹீ ஹீ ஹீ...என்றார் ஈஸ்வரன்
அதுவரை ஸ்னேஹாவாய் இருந்த பார்வதி வைஜெயந்தி ஐபிஎஸ் கணக்காய் ஆனாள்...
'ஆமா ஆமா.. இங்க பாருங்க, என் புள்ள கவர்மெண்டு உத்தியோகம், கை நிறைய சம்பாதிக்கறான்...'
சரி எவ்ளோ வாட்டி தான் இதை சொல்வீங்க என்று மனதுக்குள் சபித்தான் சிவராமன்...
கைல மட்டும் ஆயிரம் ரூபா வரும்னா பாருங்க, ஏகப்பட்ட ஜாதகம் வந்துது, bank ஆபிசர் பொண்ணு, அது இதுனு... நாங்க எதுக்கு இங்க வந்தோம்னா உங்க குடும்பத்த பத்தி கேள்விப்பட்டோம்...எவ்ளோ செய்வீங்கன்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்...
ஜானகிக்கு இதை கேட்டவுடன் பயம் பற்றிக்கொண்டது, 'இவ்ளோ கஷ்டம் குடுக்குறோமே அப்பா அம்மாக்கு' என்று வருந்தினாள்...
எங்க பொண்ணுக்கு என்ன ராசாத்தி, நல்லாவே செய்வோம்... என்றார் அம்ருதம்...
சர்ர்ர்...ரி, எவ்ளோன்னு சொன்னாதானே தெரியும்... என்று நீட்டிமுழக்கினாள் பார்வதி
ம்ம்ம் ஒரு இருவ.... என்று அம்ருதம் ஆரம்பிக்க
ஆங் ஆமாப்பா... என்று இடையில் மரித்தான் சிவராமன்... கண்டிப்பாங்க, 15 சவரன் நகை போடுவோம்... வெள்ளி சாமான் குத்துவிளக்கு அது இதுனு செஞ்சி வெச்சிருக்கோம் என்றான்...
15-ஆஆஆ ... அடியாத்தீ... என்ன இப்படி சொல்லிட்டீஹ... நான் ஏதோ இருவத்தஞ்சி சொல்வீங்கள்ல நெனச்சேன்... என் புள்ளைக்கு போட்டி போட்டுகிட்டு பொண்ணு தர ரெடியா இருக்காங்க... யோசிச்சு சொல்லுங்க...
அதெல்லாம் சரிங்கம்மா இது ரெண்டாவது பொண்ணு, பாத்தீங்கன்னா, இவளுக்கு அப்புறம் 3 பொண்ணுங்க இருக்கு, எங்களால எவ்ளோ முடியுமோ கண்டிப்பா போட்ருவோம், பொண்ண வெறுங்கையோட அனுப்புற பழக்கம் இல்ல... என்றார் அம்ருதம்...
வைரத்தோடு போட்டேயாகனும் சொல்லிட்டேன் என்று பிடிவாதமாய் இருந்தாள் பார்வதி...
ஒரு 1 மணி நேரம் சென்றது இந்த வாக்குவாதம்... வாழ்கையே வெறுத்துவிடும் போலிருந்தது ஜானகிக்கு பிறகு மஹா அவளை மொட்டை மாடிக்கு கூட்டி சென்றுவிட்டாள்...
பிறகு எப்படியோ சாமர்த்தியமாக 18க்கு முடித்தான் சிவராமன்... உள்ளே இருந்த அம்மாவிடம் 18 -ஐ பற்றி சொன்னவுடன், ஏன்டா, 15 க்கு மேல பேசாதனு சொன்னேன்ல, இப்போ மகா வந்து எனக்கு 15 தானே போட்டனு கேட்டு சண்ட போடுவா.. அப்புறம் இருக்கற மூணு பொண்ணுக்கும் 18 போட நான் எங்கடா போவேன்...
சும்மா இருமா, செவ்வதோஷ ஜாதகம் ஞாபகம் இருக்கட்டும், எனக்கு குடுக்கனும்னு எதாச்சும் வெச்சிருப்பியே அதுல இருந்து செஞ்சுடு... என்று ஒரியடியாய் அடிக்கினான் சிவராமன்..
ஒரு வழியாய் தேதியும் பார்த்து, திருமணமும் சிறப்பாய் நடைபெற்றது...!!!!!!!!!
madhu
25th August 2012, 07:23 PM
ஒரு துண்டு போட்டு இந்த இடத்தை ரிசர்வ் செஞ்சுக்கறேன்
Madhu Sree
25th August 2012, 07:23 PM
திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்கு வந்தாள் ஜானகி...
இங்க பாத்தியா எவர்சில்வர் பாத்திரம், 18 சவரன் போட்டு வந்த உனக்கு எங்க இதெல்லாம் தெரியபோவுது... என்று வந்த நாள் முதல் 18-ஐ பிடித்து தொங்கினாள் பார்வதி...
புதுபொண்டாட்டியை அங்கேயே விட்டு சென்னைக்கு வேலைக்கு புறப்பட்டான் மகேசன், கூடிய சீக்கிரம் கூப்பிட்டுகொள்வதாய் வாக்களித்து சென்றான்...
ஜானகி இன்னிக்கு காரகொழம்பும், வெண்டக்கா வதக்கலும் செஞ்சிடு என்று தண்ணீர் எடுத்து வர சென்றாள் பார்வதி...
எண்ணெயைச் சூடாக்கி, கடுகு தாளிக்க, அஞ்சறை பெட்டியை திறந்தாள் ஜானகி, பெட்டியில் இரண்டு ரூபாய்க்கு சில்லறைகள், அனைத்தையும் பொறுமையாய் பொறுக்கி எடுத்து, குழாயடிக்கு சென்றாள் ஜானகி..
'இந்தாங்க அத்த, அஞ்சற பொட்டில இருந்துச்சு' என்று குடுத்துவிட்டு சமயலறைக்கு சென்றாள்... தண்ணி தூக்கி வர மறந்த ஜானகி மறுபடியும் குழாயடிக்கு செல்ல.. அங்கே...
'ஏம்மா நீ அஞ்சற பொட்டிலலாம் காசு வைக்கமாட்டியே, காசுல கெட்டியாச்சே நீ, ஏன் அங்க வெச்ச' என்றாள் இரண்டாம் நாதனார் சாவித்திரி
'ஒன்னும் இல்ல டீ, இது நக ஒன்னும் பெருசா போட்டுகிட்டு வரல, பாத்திரமும் ஒன்னும் பெருசா கொண்டும் வரல, சரி கை நீளமோனு தெரிஞ்சிக்க இப்படி பண்ணினேன், பரவாயில்ல நல்ல பொண்ணு தான்' என்று விஷத்தை கக்கினாள் பார்வதி
இதைக் கேட்ட ஜானகிக்கு அவமானம் பிடுங்கி தின்றது, நகை நட்டுடன், பாத்திரம் பண்டத்துடன் வந்தாலும், இவ்வளவு அசிங்கப் படுத்துகிறார்களே என்று கோபம் வந்தது, புருஷனிடம் கூறி அழுதாள்...
இப்படியே மூன்று மாதங்கள் ஓடின...
எப்படியோ சென்னையில் ஒரு வீடு பார்த்து மனைவியை கூட்டிக் கொண்டான் மகேசன்... ஹப்பாடா எல்லா பிரச்சனைக்கும் விடிவு கிடைத்ததாக எண்ணி மகிழ்ந்துக் கொண்டிருந்தாள் ஜானகி...
திருமணமாகி புருஷனுடன் சென்னையில், அதுவும் தனியாக, கேட்கவா வேண்டும், சுகம் என்னவென்று சொல்லவா வேண்டும்... ஒரு மாதம் தனிக்குடித்தனம் மிக இனிமையாய் ஓடியது ...
மகேசன் சம்பள கவருடன் வந்தான்... ஜானகி இந்தா சம்பளம் என்று கொடுத்தவுடன், தன்னை நம்பி புருஷன் கொடுத்ததை எண்ணி பூரித்துப்போனாள் ஜானகி...
வாங்கி எண்ணினாள், 250 மற்றும் சில்லறை இருந்தது..
என்னங்க ஆயிரம் ரூபானாங்களே உங்க அம்மா... இதுல என்ன 250 தான் இருக்கு...
அவ்ளோதாண்டி என் சம்பளம், அம்மா ஒன்னும் 1000-ன்னு ஒன்னும் சொல்லல, நீயா எதாச்சும் கத கட்டாத என் அம்மாவ பத்தி எதாச்சும் சொல்லலேனா உனக்கு தூக்கம் வராதே... என்று அந்த இடத்தில் இருந்து நழுவினான் மகேசன்...
அசையாமல் நின்று கொண்டிருந்தாள் ஜானகி, மனதில் எண்ணங்கள் பிண்ணியது...
'கைல மட்டும் ஆயிரம் ரூபா வரும்னா பாருங்க, ஏகப்பட்ட ஜாதகம் வந்துது, bank ஆபிசர் பொண்ணு, அது இதுனு... நாங்க எதுக்கு இங்க வந்தோம்னா உங்க குடும்பத்த பத்தி கேள்விப்பட்டோம்...எவ்ளோ செய்வீங்கன்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்... '
'இங்க பாத்தியா எவர்சில்வர் பாத்திரம், 18 சவரன் போட்டு வந்த உனக்கு எங்க இதெல்லாம் தெரியபோவுது... '
'இது நக ஒன்னும் பெருசா போட்டுகிட்டு வரல, பாத்திரமும் ஒன்னும் பெருசா கொண்டும் வரல, சரி கை நீளமோனு தெரிஞ்சிக்க இப்படி பண்ணினேன், பரவாயில்ல நல்ல பொண்ணு தான்'
மனதில் பார்வதி ஆடின ஆட்டம் வந்துப்போனது...
தன்னோடு தன் குடும்பமும் ஏமாந்ததை எண்ணி ஒன்றும் செய்யமுடியாமல் சோர்வாய் சுவற்றில் சரிந்து உட்கார்ந்தாள்...
தன்னை எப்படியோ சமாதனம் செய்துக்கொண்டு அந்த 250 ரூபாயில் கௌரவமாய் குடும்பம் நடத்த கற்றுக்கொண்டாள் ஜானகி...!!!!!!!!!!
வாழ்கையும் ஓட, இன்றும் மிடில் கிளாஸ் தகுதியில் இருந்து மேலே வர போராடிக்கொண்டு தான் இருந்தாள்...!!!!!!!!
முற்றும்...!!!!!!!!!! :happydance:
madhu
25th August 2012, 07:33 PM
O... இதுதான் "ஆயிரம்"னு பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ற வழியா ? புரியுது.. புரியுது..
ஆனா இது கொஞ்சம் பழங்காலத்தில் நடந்த கதை என்பதால் accept செஞ்சுக்க முடியுது. ( இந்தக் காலத்தில் compromise என்ற வார்த்தைக்கே இடமில்லையே )
பாவமாக இருந்தாலும் பதிலுக்கு அந்த பார்வதியின் அஞ்சறைப் பெட்டியில் ரெண்டு தேளை விட்டு வச்சிருந்தால் கொஞ்சம் சந்தோஷமாக இருந்திருக்கும் :evil:
வர வர மயிலம்மாவின் கதையில் ஒரு மெசேஜ் வர ஆரம்பிச்சிருச்சு. ( இன்னொரு வாட்டி செக் செஞ்சு சின்ன சின்ன வார்த்தைப் பிழைகளையும், punctuation marks-aiyum சரி செஞ்சுடுங்களேன். )
:clap: :clap: அடுத்ததாக ஒரு புரட்சிகரமான கதையை எதிர்பார்க்கிறேன். உங்கள் நகைச்சுவை உணர்ச்சியை கொட்டி ஒரு முழு நீள சிரிப்புக் கதையும் எழுதுங்க. :welcome:
Madhu Sree
25th August 2012, 07:40 PM
:ty: madhupappaa... yes idhu oru 25 varusham munaadi nadandha kadhaiyaathaan yosichu ezhudhinen :D definetely not this generation's stry...
thiruthitte irukken nandri :bow: :D
rajraj
25th August 2012, 08:27 PM
Madhu Sree: Dowry menace? :( I think you should modernize the story and change 'government job' to 'Microsoft job' ! :lol: I can give you more real life stories about dowry menace. :) Good to see social issues in your story! :) Looks like you moved from Tanjore district to Chettinad area! :lol:
Madhu Sree
25th August 2012, 08:37 PM
Thanks uncle... :D idhu real lifela naan kelvippatta chinna chinna incidentsaa ittukatti ezhudhinen.. :D
enna amma periyamma paatti avanga kadhaigal solvaanga :D adhula irundhu enakku thoninadhu ezhudhinen
pavalamani pragasam
25th August 2012, 08:48 PM
சொன்னாப்ல கதை கொஞ்சம் பழங்காலத்தியது! இப்போ பொண்ணு வீட்டுக்காரங்க கையில்ல ஓங்கியிருக்கு!
Madhu Sree
25th August 2012, 08:49 PM
True PPmaa.. :D en thambikku kooda ponnu paathikittu irukkom... evlo expectations and demands-greenga...
en amma kaalathula bank, government jobnaa avlo mavusu :razz:
rajraj
25th August 2012, 09:59 PM
amma periyamma paatti avanga kadhaigal solvaanga :D adhula irundhu enakku thoninadhu ezhudhinen
paappaa paappaa kadhai ezhudhu
appaa ammaa sonna kadhai
thaaththaa paatti sonna kadhai
periyammaavum sonna kadhai
paappaa paappaa kadhai ezhudhu
:)
madhu
25th August 2012, 10:32 PM
paappaa paappaa kadhai ezhudhu
:)
ennai edhukku kadhai ezhutha solraaru ? :think:
Madhu Sree
25th August 2012, 10:36 PM
madhu pappaa thoongaliyaa :redjump: konjam drama thread paathittu thoonga pogavum : pidivaadham_pidichings:
chinnakkannan
26th August 2012, 02:00 PM
ஹை.. இரண்டாவது கதையா..குட்..எழுதற ஆர்வம் ரொம்ப நல்லது.. அதுவும் எழுதியும் முடிச்சுடறீங்க பாருங்க அதுக்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப்..
எம்.எஸ்.. எதையுமே அவசரமா எழுதணும்னு அவசியம் இல்லை.. நிறுத்தி நிதானமா எழுதி.. கொஞ்சம் படிச்சுப்பார்த்துட்டு கரெக்ட் பண்ணி எழுதலாம்...
முதல் கதை..நல்லா இருக்குன்னு சொல்லிட்டு விட்டுட்டேன்.. அதுலயும் டபக்குனு கல்யாணம் ஆகி மறுபடி ஒரு இன்சிடெண்ட் நு வேகமாப் போய்ட்டீங்க..கொஞ்ச்ம் நிதானமா எழுதியிருக்கணும்..எழுத முடியும் உங்களால்..
இதிலும் கதையின் காலம் இல்ல..அப்புறம்..பாவம் 250 ரூபாயில் குடித்தனம் பண்ண ஆரம்பிச்சு ப் போராடிக்கிட்டிருக்கா ஜானகி..ன்னு முடிச்சுருக்கீங்க.. கொஞ்சம் இன்னும் யோசிச்சு எழுதினா இன்னும் நல்லா இருக்கும்..
கதை - என்பது நல்லதொரு ஆரம்பம்..- வாசகரை உள்ளிழுக்க - நடுப்பகுதி..சிக்கல் அல்லது கஷ்டம் .. முடிவுப் பகுதி..க்ளைமாக்ஸ்.. என இருக்கவேண்டும் - என்று எ.க.எ. எழுதிய - சமீபத்தில் மறைந்த - பெரிய எழுத்தாளர் ரா.கி ரங்கராஜன் கூறியிருக்கிறார்..
முன்பு தினம் ஒரு கவிதை என்னும் மின் குழுவில்..கொஞ்சம் கதைக்கலாம் வாங்க - என ஒரு தொடர் எழுதியிருந்தேன்.. படித்த கதைகள்/நாவல்கள்..அதை எழுதியவர்களைப் பற்றிக் கொஞ்சம் அறிமுகம் எனச் செல்லும் அந்தத் தொடர்..
அதில்..புதிதாக எழுத வருபவர்கள் முக்கியமான ஒன்றை மறந்து விடுகிறார்கள்.. என எழுதியிருந்தேன்..
அந்த ஒன்று என்ன தெரியுமா..படிக்கும் வாசகரைத் தான்..
எனில் எழுதும் போது - அரதப் பழசான விஷயமாக இருந்தாலும் கொஞ்சம் சுவாரஸ்யமாக் எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும்....
கொஞ்சம் வெளியிலும் உற்றுப் பாருங்களேன்.. நீங்கள் தற்போது இருக்கும் இடம்..அந்தப் பிண்ணனி.. எவ்வளவு அழகு..அதிலும் உங்களுக்குக் கிடைக்குமே..வர்ணனைகளும் இன்னும் புதுமையாக..எழுதலாமே..
உங்களிடம் கற்பனை நிறைய இருக்கிறது.. எழுதவும் வருகிறது..பின் என்ன..இன்னும் எழுதுங்கள்..எழுதி..எழுதியதைப் படித்து..எடிட் செய்து மாற்றி எழுதிப்பார்க்கலாம்..
(இது வெறும் மன்ற மையம் தானே..என் நண்பர்கள் தானே படிப்பார்கள், என்னோட ஃப்ரீ டைம்ல நான் எதையோ எழுதறேன்.. நீ என்னய்யா சொல்றது..பெரிய இவனாட்டம் சொல்ல வந்துட்டான்.. என்றெல்லாம் நினைக்க வேண்டாம் ...)
(இதே மன்றமையத்தில் எழுதி எழுதிப் பழகியவ்ன் நான்..முதலில் சொதப்பல் அப்புறம் சுமாராக எழுத வந்து கொண்டிருக்கிறது..
டச் விட்டதாலா சோம்பேறித் தனமா என த் தெரியவில்லை.. சிறுகதைகள் கொஞ்சம் தந்தி அடித்துக் கொண்டிருக்கிறது எனக்கு..)
எழுத்து என்பது சும்மா இல்லை.. எல்லோருக்கும் சுலபமாக வராது.. சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை எனும் போது எழுதப் பட்ட எழுத்து..எவ்வளவு காஸ்ட்லி..
ஜாலியான விஷயங்களை..இன்னும் சுவாரஸ்யமாக எழுதிப் பாருஙக்ள்..உங்களுக்கு வரும்.. ஐயாம் ஷ்யூர் அபெள்ட் இட்..(தவறாக நினைக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்)
ஏதேனும் தவறாக எழுதியிருப்பின் மன்னிக்க.
madhu
26th August 2012, 02:22 PM
mayilamma-vukku pressure yeriduchaam :redjump: :bluejump:
chinnakkannan
26th August 2012, 02:27 PM
madhu..have I written any thing wrong.. I was about to delete this post..Friendkku advise paNNak koodaathaa..
ms.. just ennOda eNNangaLai ezhuthinEn..
madhu
26th August 2012, 03:40 PM
madhu..have I written any thing wrong.. I was about to delete this post..Friendkku advise paNNak koodaathaa..
ms.. just ennOda eNNangaLai ezhuthinEn..
ada raamaa... ungalukku yen pressure ? neenga sonnadhu edhuvume thappu illaiye ?
idhellam mayilammaa-vai kalaaikka solradhu. :ashamed:
mm... unga kadhaiyai podunga.. appuram unga kittE party ketka varrom :yes:
Madhu Sree
26th August 2012, 04:01 PM
CK, thanks a lot :bow: :bow: :ashamed: :lol2:
avasaraamaalaam ezhudhala, nidhaanamaathaan ezhudhinen, naalu tharam padichu thaan potten, seriously en kannukku vaarththai pizhai theriyala, :lol2: ammaakku than sella pillai evlo thappu senjaalum theriyadhu paarunga andha maadhiri :rotfl2:
(இது வெறும் மன்ற மையம் தானே..என் நண்பர்கள் தானே படிப்பார்கள், என்னோட ஃப்ரீ டைம்ல நான் எதையோ எழுதறேன்..
yen ivlo yosikkareenga... apdilaam naan ennikkum nenachadhilla ck :D
yes yes, kandippaa ezhudha try panren... Thanks again ... :D
Madhu Sree
26th August 2012, 04:08 PM
mayilamma-vukku pressure yeriduchaam :redjump: :bluejump:
en mela ivlo edhirpaarppaa.. :lol2:
Madhu Sree
26th August 2012, 04:15 PM
kadhaiyin kaalam update pannitten... :bow:
madhu
26th August 2012, 04:30 PM
kadhaiyin kaalam update pannitten... :bow:
enakku innum orEy column-than theriyudhu :oops: :noteeth:
Madhu Sree
26th August 2012, 04:35 PM
madhu, adhu appadithaan... :D
Shakthiprabha
27th August 2012, 11:08 AM
madhusree....therichiyaana nadai varugirathu.........romba nalla talent.....niraiya ezhuthunga......thodarnthu ezhuthunga........ur narration skills are fantastic :thumbsup:
Madhu Sree
28th August 2012, 05:00 PM
Thanks SP, ippodhaan gavanikkaren :ty:
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.