12/08/07

01. காமெடியில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் இல்லை வருத்தப்படுகிறார் டி.வி. நடிகை சோபனா

என்.எஸ்.கிருஷ்ணன் டி.ஏ. மதுரம், தங்கவேலு சரோஜா, நாகேஷ் மனோரமா, கவுண்டமணி, செந்தில் கோவை சரளா ஜோடி போட்டு நடிக்கும்போது காமெடியில் லேடி கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுத்து டயலாக் இருந்தது. இப்ப லேடி கேரக்டருக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

நடிகர்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து காமெடி சீன்கள் எழுதறாங்க! "டிவி'யிலும், சினிமாவிலும் காமெடி நடிப்பில் ஆர்வம் காட்டும் "டிவி' நடிகை சோபனாதான் இப்படி வருத்தப்படுகிறார். "ஆறு மனமே ஆறு' தொடர் ஷூட்டிங் கில் நடித்துக்கொண்டிருந்த அவரை "பேட்டி'க்காக சந்தித்த போது உடனே "யெஸ்' என்று சொல்லி அமர்ந்துவிட்டார். ஆரம்பம் முதல் கடைசி வரை காமெடிதான். சோபனாவின் பேட்டி:

* காமெடி கேரக்டரில் நடிக்க நீங்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக சொன்னார்களே?

காமெடி கேரக்டரில் நடிப்பது அவ்வளவு ஈசியில்லை. மீண்டும் மீண்டும் சிரிப்பு சீரியலில் நடிக்க அழைச்சாங்க. வெண்ணிறாடைமூர்த்தி சீன்ல அடிக்கிற லுõட்டியை பார்த்ததும் நாமும் டயலாக் பேசி கலக்கிடனும்ணு நம்பிக்கை வச்சு நடிச்சேன். கிளிக் ஆயிடுச்சு. எப்படி நடிச்சா, பேசினா ரசிகர்களை சிரிக்க வைக்க முடியும்ன்னு பல்ஸ் பார்ப்பதில் மூர்த்தி சார் கெட்டிக்காரர். எதார்த்தமாகவே அவரது ஒவ்வொரு செயலிலும் காமெடி கலந்திருக்கும். நாமும் சிரித்து மற்றவங்களையும் சிரிக்க வைப்பதுங்கிறது பெரிய விஷயம். அதனால தான் காமெடி சீன்ல நடிக்க ஆசைபடுகிறேன்.

* காமெடி சீனில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று நீங்கள் வருத்தப்பட்டதாக சொன்னார்களே?

முன்பெல்லாம் காமெடியில் லேடி கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுத்து டயலாக் இருந்தது. இப்ப லேடி கேரக்டருக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நடிகர்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து காமெடி சீன்கள் எழுதறாங்க. பெயருக்கு டயலாக் போர்ஷன் வைப்பதால திறமை இருந்தாலும் நடிப்பில் சோபிக்க முடியாமல் போய்விடுகிறது.

* காமெடி நடிகை என்று முத்திரை குத்திவிடுவார்களோ, மற்ற சீரியல்களில் வாய்ப்பு கிடைக்காதோ என்று பயந்ததுண்டா?

காமெடி சீன்ல நடிக்க நடிகர்கள் நிறைய பேர் இருக்காங்க. ஆனா லேடின்னு பார்க்கப்போன விரல் விட்டு எண்ணிடலாம். மனோரமா ஆச்சி, கோவை சரளாவுக்கு பிறகு அடுத்து எந்த நடிகை ஜொலிப்பவங்க யார்ன்னு தெரியலை. காமெடி சீன்ல கலக்கணும்ன்னு ஆசையிருக்கு. அதற்கு எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கணும்ல ஜில்லுனு ஒரு காதல், கோவை பிரதர்ஸ், எம்மகன், பிறப்பு படங்களில் நடிச்சேன். இப்ப தீக்குச்சி'ங்கிற படத்தில நடிச்சிட்டிருக்கேன் "ஆறு மனமே ஆறு' சீரியலிலும் எனக்கு நல்ல ரோல் கிடைச்சிருக்கு. வித்தியாசமான ஸ்டோரி

காமெடி சீரியல்களில் நடிகைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் சினிமாவில் இல்லையே?

* காமெடி சீன்களில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கிடைக்காததற்கு காமெடி நடிகர்கள்<தான் காரணம் என்று நினைக்கிறீர்களா?

""படத்தில் காமெடி சீன் எவ்வளவு தேவை, அதை எப்படி வைக்கலாம் என்று முடிவு செய்றது டைரக்டர்கள்தான். அப்படியிருக்க நடிகர்களை எப்படி குறை சொல்ல முடியும். நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாதுன்னு காமெடி நடிகர்கள் நினைப்பதில்லை. சின்ன சீனாக இருந்தாலும் எல்லோர் நடிப்பிலும் அந்த சீன் நல்லா வரணும்ன்னுதான் அவுங்க நினைப்பாங்க. வடிவேல், வெண்ணிறாடை மூர்த்தி, மனோரமா ஸ்ரீப்ரியா ஆகியோர் சீன் நல்ல வரணும்ன்னு துடிப்பாக இருப்பாங்க. சீன்ல இருக்கிற சக நடிகர்களையும் நல்லா நடிக்க வைக்க திடீர் திடீர்ன்னு நல்ல, நல்ல ஐடியாக்களை அள்ளிவிடுவாங்க. நினைச்சமாதிரி சீன்ல இருப்பவங்க நடிக்காட்டி எத்தனை "டேக்' ஆனாலும் வடிவேலுவும், வெண்ணிறாடை மூர்த்தியும் விடமாட்டாங்க. திருப்தி வரும் வரை சீன் எடுப்பாங்க. கூட நடிப்பவர்களை நல்லா நடிக்கணும்ன்னு நினைப்பாங்க. ஸ்ரீப்ரியா ஷூட்டிங் ஸ்பாட்ல காமெடியை சரமாரியா அள்ளவிடுவார்,'' என்றவரை டைரக்டர் அடுத்த சீன் ஷூட்டிங்கிற்கு அழைக்க பறந்தார்.