நெஞ்சம் மறப்பதில்லை: 9-ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புத்தம் புதிய தொடர் நெஞ்சம் மறப்பதில்லை. தற்போது விஜய் டி.வி வித்தியாசமான தொடர்களை பிரமாண்டமாக ஒளிபரப்புகிறது. பாகுபலி பிரமாண்டத்தில் தமிழ் கடவுள் முருகன் தொடரை ஒளிபரப்புகிறது. முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் சின்னத்தம்பியை ஒளிபரப்புகிறது. அந்த வரிசையில் நெஞ்சம் மறப்பதில்லை குளுகுளு கொடைக்கானில் நடக்கிறது.


இதில், காதல் முதல் கல்யாணம் வரை புகழ் அமித் பார்கவ் ஹீரோவாக நடிக்கிறார். புதுமுகம் சரண்யா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்கள் தவிர நிஷா முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். அமித் பார்கவ் கொடைக்கானலுக்கு புதிய போலீஸ் அதிகாரியாக வருகிறார். கொடைக்கானில் ஒரு காலத்தில் அவர் காதலை நிராகரித்த சரண்யா இருக்கிறார். இவர் வந்த நேரம் சரண்யாவின் தந்தை விபத்தில் இறந்து போகிறார். அவரும் ஒரு போலீஸ் அதிகாரிதான். சரண்யா அமித் பார்கவ் மீது சந்தேகம் கொள்கிறார். இப்படி தொடங்குகிறது சீரியல். காதல் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லரா தயாராகிறது சீரியல். வருகிற 9-ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு பிரைம் டைமில் ஒளிபரப்பாகிறது.

நன்றி: தினமலர்