டிவி நடிகர் பிரதீப் குடும்பத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை


சுமங்கலி சீரியல் நாயகன் பிரதீப் கடந்த 3-ம் தேதி ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிர்ச்சி செய்தி தமிழ், தெலுங்கு சீரியல் வட்டார நடிகர் நடிகைகளை உறைய வைத்தது. இதனால் சென்னையில் உள்ள சின்னத்திரை வட்டாரங்களில் அனைவரும் கவலையான முகத்துடன் காணப்பட்டனர்.


மேலும், நடிகர் பிரதீப்பின் மரணம் தற்கொலை என்றபோதும், அவரது உடம்பில் காயங்கள் இருந்ததாக கூறப்பட்டதால், யாரேனும் அவரை கொலை செய்திருப்பார்களோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரது உடலை போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தற்போது அவரை யாரும் கொலை செய்யவில்லை. தற்கொலைதான் என்று மருத்துவ பரிசோதனை முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், பிரதீப்பின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து அறிய, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் ஐதராபாத் போலீசார் தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். குறிப்பாக, பிரதீப்பின் மனைவியும், நடிகையுமான பாவனி ரெட்டியின் உறவினர் ஷெராவன் என்பவரும் அவர்களது வீட்டில் தங்கியிருந்ததால், பிரதீப்பின் தற்கொலையில் அவருக்கும் சம்பந்தம் இருக்குமோ என்கிற அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நன்றி: தினதந்தி