மீண்டும் நடிக்க வந்த மகிமா


பொம்மலாட்டம் தொடரில் வந்த சிவகாமி சித்தியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க முடியாது. அந்த கேரக்டரில் நடித்தவர் மகிமா. அதன்பிறகு அழகி உள்ளிட்ட சில தொடரில் முக்கியமான கேரக்டரில் நடித்தார். பெரும்பாலான தொடர்களில் அண்ணி, அக்கா, அத்தை மாதிரியான குணசித்திர கேரக்டர்களில் நடித்து வந்தார். திடீரென சின்னத்திரையிலிருந்து விலகி இருந்தார்.


குழந்தைகளுக்கு அம்மாவாகவும், கணவருக்கு நல்ல மனைவியாகவும் இருந்து குடும்ப பொறுப்புகளை சுமக்க வேண்டியது இருந்தால் அவரால் நடிக்க முடியாமல் போனது. இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். சின்னத்திரையில் மட்டுமல்ல சினிமாவிலும் அம்மா கேரக்டரில் நடிக்கும் முடிவில் இருக்கிறார்.


"குடும்ப பொறுப்புகள் சிலவற்றை முடிக்க வேண்டியது இருந்ததால் சீரியல்களிலிருந்து கொஞ்சம் விலகி இருந்தேன். இப்போது மகன் கல்லூரிக்கு போகிறான். அவனே "விரும்பம் இருந்தா நடிம்மா" என்ற ஊக்கப்படுத்தினான். அதனால் மீண்டும் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். சின்னத்திரையில் மட்டுல்ல சினிமாவிலும் அம்மாவாக நடிக்க இருக்கிறேன். இதற்காக கதை கேட்டு வருகிறேன். விரைவில் சின்னத்திரை, பெரிய திரை இரண்டிலும் என்னை பார்க்கலாம் என்கிறார்" மகிமா

நன்றி: தினமலர்