தொழில் அதிபர் தோனியை மணக்கிறார் மேக்னா நாயர்


குழந்தை நட்சத்திரமாக விளம்பர படங்களில் நடித்து அதன்பிறகு மலையாள சின்னத்திரை நடிகை ஆனவர் மேக்னா நாயர். மலையாளத்தில் பல சீரியல்களில் நடித்து விட்டு தற்போது தமிழில் தெய்வம் தந்த வீடு தொடரில் சீதாவாக நடிக்கிறார். இதே சீரியலின் மலையாள வெர்ஷனான சந்தனமழா தொடரிலும் மேக்னா நடித்து வருகிறார். கயல் படத்தில் ஆனந்தியின் தோழியாக நடித்தவர் அதன் பிறகு சினிமாவில் நடிக்கவில்லை.


மேக்னா தொழில் அதிபர் தோனியை திருமணம் செய்ய இருக்கிறார். மலையாள தொடர் ஒன்றில் உடன் நடித்த நடிகையின் அண்ணன் தோனி. நீண்ட நாட்களாக காதலித்து வந்தவர்கள் இப்போது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். வருகிற ஏப்ரல் 22ந் தேதி கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் நிச்சயதார்த்தம் நடக்கிறது. திருமணம் 30ந் தேதி திருச்சூரில் நடக்கிறது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து சின்னத்திரை, பெரிய திரை இரண்டிலும் நடிக்க முடிவு செய்திருக்கிறார் மேக்னா.

நன்றி: தினமலர்