கல்லாக காத்திருந்தேன்
சிலையாய் செதுக்க வந்தான்
காற்றில் கலந்திருந்தேன்
கானமாய் எனை பாடினான்
சொல்லாய் இறைந்திருந்தேன்
கவிதையாய் கோர்த்துவிட்டான்
நதியாய் ஓடி வந்தேன்
கடலாய் கைகளில் தாங்கினான்
பெண்ணை பேரரசியாக்கும்
பெரிய மந்திரவாதி மணாளனே