Results 1 to 10 of 626

Thread: TV tid bits

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி
    சினிமாத்துறையில் தாக்குப் பிடிக்க வேண்டுமென்றால் அதற்கு அசாத்திய திறமைகள் இருக்க வேண்டும். பெரிய பெரிய ஜாம்பவான்களையே இருந்த இடம் தெரியாமல் மாற்றிவிடக் கூடிய வல்லமை படைத்தது இந்த சினிமா. இத்துறையில் பெண்களாலும்

    வெற்றி பெற முடியும் என நிரூபித்திருக்கிறார் புஷ்பா கந்தசாமி. இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மகள் என்ற அடையாளம் இருந்தாலும் தனித்துவமான தயாரிப்பாளர். அவரைச் சந்தித்தோம்.

    சினிமா துறைக்கு எப்படி திடீர்னு வந்தீர்கள்?

    எனக்குச் சின்ன வயதிலிருந்தே சினிமா தெரியும். தூங்கினது, சாப்பிட்டது எல்லாமே சினிமாவோடதான். திருமணத்துக்குப் பிறகு அப்பாவோட கம்பெனில இருந்து ஏதாவது செய்யலாம்னு தோணுச்சு. அப்பாகிட்டே கேட்டேன். சரின்னுட்டார்.

    அப்போ மிஸ்டர் நடராஜன் எக்ஸிகியூட்டிவ் டைரக்டரா இருந்தார். அவருக்கு கீழே அப்சர்வ் பண்ணி நிர்வாகத்தை பார்த்துகிட்டேன். அவர் வெளியேறிய பிறகு, மேனேஜிங் டைரக்டர் பொறுப்பை எங்கிட்ட கொடுத்தார் அப்பா.

    டைரக்டர் மனைவி, நடிகர் மனைவி, மகள் போன்றவர்கள் பெரும்பாலும் காஸ்டியூம் டிசைனராக சினிமாவுக்கு வருவார்கள். நீங்கள் மிகப் பெரிய பொறுப்பான தயாரிப்பு துறையைக் கையில் எடுத்தது எப்படி?

    அப்போ எனக்கு பயமே தெரியல. இளங்கன்று பயம் அறியாதுன்னு சொல்லுவாங்கல்ல. அது மாதிரி. அப்பா சொன்னார்ன்னு உட்கார்ந்துட்டேன். இப்போ யோசிச்சா மலைப்பா இருக்கு.

    அப்போ ஒன்றுமே தெரியாமல் உட்கார்ந்து செய்ய ஆரம்பிச்சேன். அவரோட சப்போர்ட் பேக்ரவுண்ட்ல இருந்தாலும் கூட, நானா நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன்.

    தயாரிப்பு துறையில இறங்கும் போது நீங்க எடுத்த சில முடிவுகள் தோல்வியைச் சந்தித்திருக்கும். சில முடிவுகள் வெற்றியைத் தேடி தந்திருக்கும். அப்போது என்ன நினைத்தீர்கள்?

    தப்பு முதல்லேர்ந்து நடந்துக்கிட்டுதான் இருக்கு. இப்போது பத்து, பதினைந்து வருஷமாகுது. நிறைய அனுபவம் கிடைச்சிருக்கு. ஆனால், இந்தத் துறையில எப்போ பார்த்தாலும் புது அனுபவமா இருக்கு. புது தப்பு செய்யக்கூடாதுன்னு தீவிரமா இருந்தா. பழைய தப்பு மறந்து போகுது. அப்படியேதான் இருக்குது.

    ரஜினி சார் ‘முத்து' படத்துக்கு கால்ஷீட் கொடுக்கிறார்ன்னு சொன்ன நேரத்துல, நேரடியா தியேட்டர்ல போடலாம்னு முடிவு பண்ணினோம். கிட்டதட்ட நூற்றி ஐம்பது தியேட்டர் ஓனரையும் இன்டர்வியூ வைத்து அவங்ககிட்டே வியாபாரம் பண்ணினோம். அதுல தமிழ்நாட்டில் இருக்கிற தியேட்டர் வரலாறு தெரிஞ்சது. யார் யார் நேரடியா பார்த்துகிறாங்க. யார் யார் மேனேஜர் மூலமா பார்த்துக்கிறாங்க என எல்லா இன்ஃபர்மேஷனும் தெரிஞ்சுக்க அந்தப் படம் யூஸ்புல்லா இருந்தது. அது ஒரு நல்ல அனுபவம்.

    ‘சாமி' படத்துக்கு முன்பு ரெண்டு, மூணு சின்ன படங்களில் அடிபட்டு போனேன். இனிமே பெரிய ஹீரோவ வெச்சிதான் படம் பண்ணனும்னு முடிவு பண்ணுனேன்.

    ரஜினி படம் மாதிரியே ‘சாமி'யும் பெரிய எதிர்பார்ப்போட வரணும்னு முடிவு பண்ணி உருவாக்கினோம். அதேமாதிரி அந்தப் படம் மக்கள்கிட்டே நல்ல பாராட்டு வாங்குச்சு.

    ரவி ராகவேந்தர், காவ்யா

    2003-ல ‘திருமலை'. அது பெரிய ஹிட். என்னோட சினிமா கேரியர்ல ‘திருமலை' எனக்கு திருப்புமுனையா அமைஞ்ச படம்னு பலமுறை விஜய் தன்னோட பேட்டிகள்ல சொல்லியிருக்காரு. அந்த மாதிரி சில முடிவுகளை துணிச்சலா எடுத்தேன். இந்த ரெண்டு முடிவுக்கும் என்னை நானே கன்கிராஜூலேட் பண்ணிக்கிட்டேன். சில முடிவுகள் தவறாகவும் ஆயிருக்கு. அதற்கும் நான்தான் காரணம். அதற்காக வருத்தப்பட்டது கிடையாது. அது அனுபவம்தான்.

    இப்போது தயாரித்து வரும் படங்களைப் பற்றி கூற முடியுமா?

    இப்போது ரெண்டு படம் தயாரிப்புல இருக்குது. ஒண்ணு ‘கிருஷ்ணலீலை'. இது ஜீவன் நடிக்கிற படம். கண்டிப்பா ஹிட் ஆகும்னு நம்புறேன். பட்ஜெட்டுக்கு மேல செலவு பண்ணி எடுக்கிறோம்.

    இன்னொன்னு ‘நூற்றுக்கு நூறு' படம். செல்வா டைரக்ட் பண்றார். முன்னாடி அப்பா பண்ணுன சப்ஜெக்ட். அதை இப்போ இருக்கிற ஸ்டைலுக்கு பண்றார். அதுல விநய் ஹீரோவா நடிக்கிறார்.

    சின்னத்திரையில் உங்கள் பங்கு என்ன?

    சின்னத்திரையை பொருத்தவரை நாங்க மின்பிம்பங்கள் நிறுவனத்தின் மூலமா நிறைய நல்ல சீரியல்கள் பண்ணியிருக்கோம். இப்போ கவிதாலயா பேனர்லயே கடந்த ஒரு வருஷமா கலைஞர் டிவியிலேயும், ஜெயா டிவியிலேயும் புரோகிராம் பண்ணியிருக்கோம். அது முடிஞ்சிப்போச்சு. இப்போ ஜீ தமிழ் சேனல்ல ‘சொல்லத்தான் நினைக்கிறேன்' சீரியல் பண்றோம். இது டிபிக்கல் கே.பி.ஸ்டைல் தொடர்.

    சஹானா தொடர்ல நடித்த காவ்யா இதுல மகளா நடிக்கிறாள். ரொம்ப வருஷம் கழித்து திரும்பி வந்து நடிக்கிறாள். ரவிராகவேந்தர் தந்தையா நடிக்கிறார். யுவராணி ஒரு முக்கிய பாத்திரத்துல நடிக்கிறாங்க. தேவதர்ஷினி, பாத்திமா பாபு என சின்னத்திரை நட்சத்திர பட்டாளமே இருக்காங்க. இது இன்னொரு சீரியல் மாதிரியே இருக்காது. வேற மாதிரி புதுசா இருக்கும் பாம்பே சாணக்யா டைரக்ட் பண்ணியிருக்கார். அப்பா திரைக்கதை, தவமணி வசீகரன் வசனம் எழுதியிருக்கார். இந்தத் தொடர் இந்த மாதம் 23-ம் தேதியில் இருந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு ஏழு மணிக்கு டெலிகாஸ்ட் ஆகுது.

    உங்கள் குடும்பம் பற்றி?

    என்னோட குடும்பம் ரொம்ப சின்னதுதான். ஜனனின்னு ஒரே ஒரு பொண்ணு. பி.டெக். முடிச்சிட்டு எம்.பி.ஏ. படிக்கப் போறா. நல்ல இன்டலிஜென்ட் கேர்ள். ஆனால், சினிமாவுல இன்னும் இன்வால்வு ஆகல. பியூச்சர்ல வரலாம். என் கணவர் கந்தசாமி இந்த நிறுவனத்துல எக்ஸிகியூட்டி டைரக்டரா இருக்கார். பேமிலியா இந்த கம்பெனியை எவ்வளவு தூரம் எடுத்துக்கிட்டு போக முடியுமோ போயிகிட்டு இருக்கோம். மக்களை நம்புறோம். அவர்களின் ரசனையை நம்புறோம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Similar Threads

  1. Musicians,events,anecdotes and tid-bits
    By rajraj in forum Indian Classical Music
    Replies: 223
    Last Post: 16th November 2020, 09:33 AM
  2. IR music bits as ringtone (mp3)
    By dochu in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 8
    Last Post: 17th June 2009, 03:05 PM
  3. Tid Bits Memories of Yesteryears
    By R.Latha in forum Memories of Yesteryears
    Replies: 0
    Last Post: 24th April 2009, 01:18 PM
  4. Tit Bits
    By R.Latha in forum TV,TV Serials and Radio
    Replies: 5
    Last Post: 1st March 2009, 12:13 AM
  5. THAMIZH - THULHIHALH (Tamil Tit-Bits & Episodes)
    By Oldposts in forum Tamil Literature
    Replies: 62
    Last Post: 29th January 2009, 10:02 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •