View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 68 of 159 FirstFirst ... 1858666768697078118 ... LastLast
Results 671 to 680 of 1587

Thread: new serials/programs

  1. #671
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Sabash Meera- Timings

    Jaya TV is rescheduling its popular show ‘Sabash Meera' with Kovai Sarala in the lead, to 9.30 p.m. instead of 8 p.m. Poovum Pottum will now be telecast at 9 p.m.


    நன்றி: Hindu
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #672
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    தங்கமான புருஷன்



    கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ``தங்கமான புருஷன்'' தொடர் 300-வது எபிசோடை நெருங்கிக் கொண்டிருக்கிறது. `எவர்ஸ்மைல்' நிறுவனம் சார்பில் ஈ.ராமதாஸ் தயாரித்து வழங்கும் இந்த நெடுந்தொடரை இயக்குநர் சுந்தர் கே.விஜயன் இயக்குகிறார்.

    நடிகர் பிரேம் சாய் கதாநாயகனாக ``கல்யாண்'' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடைய இரண்டாவது மனைவியாக ராசி என்ற கதாபாத்திரத்தில் நடிகை `சேது' புகழ் அபிதா நடிக்க, முதல் மனைவி அகல்யா வேடத்தில் நடிகை வினோதினியும், அவரின் தாயாராக நடிகை பாத்திமாபாபுவும் நடிக்கிறார்கள்.

    வரப்போகும் எபிசோடுகளில் இரண்டாவது மனைவியோடு அமைதியாக வாழ்க்கை நடத்தும் கதாநாயகனைத் தேடி முதல் மனைவி வர இருக்கிறார். அது நிச்சயமாக, அவர்கள் வாழ்க்கையில் ஒரு புயலை ஏற்படுத்தும். நேயர்கள் மத்தியிலும் ஒரு பிரளயத்தை உண்டு பண்ணும்.



    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  4. #673
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    டைரக்டர் கே.பாக்யராஜ் திரைக்கதையில் உருவாகும் சின்னத்திரை தொடர் `விளக்கு வச்ச நேரத்திலே'. கலைஞர் டிவியில் ஜனவரி மாதம் 18-ம்தேதி முதல் தினமும் இரவு 8 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகத் தொடங்குகிறது. தொடரை இயக்குபவர் டைரக்டர் சி.ரங்கநாதன். இந்த தொடரின் சிறப்பு அம்சம் என்ன என்று டைரக்டர் சி.ரங்கநாதனிடம் கேட்டபோது...

    "ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அடுத்தடுத்து ஏற்படுகிற சம்பவங்கள்தான் கதையின் முடிச்சு. இந்தப் பெண்ணுக்கு அடுத்து என்ன நடக்கும்? எந்த மாதிரியான சோதனையை அவள் எதிர்கொள்ளப் போகிறாள் என்பது தொடரின் மற்ற கதாபாத்திரங்களுக்கு தெரிந்திருக்கும். அவர்கள் மூலம் தொடரை பார்க்கிற ரசிகர்களுக்கும் தெரிந்திருக்கும். ஆனால் தொடரின் நாயகிக்கு மட்டும் தெரியாது. இதனால் காட்சிக்கு காட்சி சஸ்பென்ஸ் கூடி ஒருவித பரபரப்பு, தொடரைத் தொடர்ந்து கொண்டிருக்கும்.

    பொதுவாக நம் குடும்பங்களில் நடக்கிற விஷயம் தான் கதை. அதில் அடுத்தது என்ன என்ற ஆவலை ரசிகர்கள் மனதில் ஏற்படுத்துகிற சம்பவக்கோர்வை ரசிகர்களுக்கு `சம்திங் ஸ்பெஷலாக' இருக்கும்.

    குடும்பப்பாங்கான கதை என்றாலும் அதில் இழையோட்டமாய் காமெடிக் காட்சிகளும் கதைக்குத் தேவையான விதத்தில் இடம் பெற்றிருக்கும். பெரிய திரையில் தொடர் வெற்றிகளைத் தக்கவைத்துக்கொண்ட டைரக்டர் கே.பாக்யராஜ் இந்த தொடர் மூலம் சின்னத்திரையிலும் ஒரு மாபெரும் தாக்கம் ஏற்படுத்துவார். பார்க்கும் ரசிகர்களுக்கு சினிமா பார்க்கும் உணர்வை ஏற்படுத்தப்போகிறது என்பதும் நிச்சயம்.''

    தொடரின் நட்சத்திரங்கள்: சுஜிதா, சஞ்சீவ், கவுசிக், அனுராதா கிருஷ்ணமுத்தி, சிவன்சீனிவாசன், சுரேஷ்வர், மதுமிதா, பயில்வான்ரங்கநாதன், சித்ரா லட்சுமணன், பாக்யஸ்ரீ, இளவரசன், நித்யா, கலாரஞ்சனி, ஷ்ரவன், `ஊர்வம்பு' லட்சுமி, காத்தாடி ராமமூர்த்தி, சிவாஜி, குமரேசன், பாபுஸ், சுந்தர், மாஸ்டர் கனிஷ்கர், தனலட்சுமி ஆகியோருடன் டைரக்டர் சி.ரங்கநாதனும் ஒரு முக்கிய கேரக்டரில்

    நடிக்கிறார்.பாடல்: வைரமுத்து. இசை: தேவா. டைட்டில் பாடலுக்கு நடனம்: டான்ஸ் மாஸ்டர் அசோக்ராஜா. கதை, திரைக்கதை-வசனம்: கே.பாக்யராஜ். இயக்கம்: சி.ரங்கநாதன். எவர்ஸ்மைல் நிறுவனம் சார்பில் தொடரை தயாரித்து வழங்குபவர் ஈ.ராமதாஸ்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  5. #674
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பாலசந்தர் பங்கேற்கும் `காதோடுதான் நான் பாடுவேன்'

    கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு வித்தியாசமான இசைத் தொடர் `காதோடுதான் நான் பாடுவேன்.' வெள்ளிக்கிழமை தோறும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், டைரக்டர் கே.பாலசந்தரின் திரைப்படங்களில் இடம் பெற்ற மறக்க முடியாத பாடல்களை பிரபல பாடகர்கள் பாடுகிறார்கள். 1965 முதல் 1975 வரை திரைக்கு வந்த பாலசந்தரின் திரைப்படங்களில் இருந்து பிரபலமான பாடல்கள் இடம்பெறுகின்றன.

    இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம் டைரக்டர் கே.பாலசந்தரே ஒவ்வொரு பாடல் உருவான விதத்தையும் நேயர்களுடன் பகிர்ந்து கொள்வது தான். பின்னணி பாடகி மஹதி அவருடன் கலந்துரையாடுகிறார்.

    சின்னத்திரை நடிகர் சாய்ராமின் என்சான்டர்ஸ் இசைக்குழுவுடன் இணைந்து பிரபல இசைக்கலைஞர்கள் மீரா கிருஷ்ணா, முகேஷ், கோவை முரளி, மஞ்சு, சித்ரா, துர்கா, வெங்கட், அய்யப்பன், கணேஷ் கிருபா, ஸ்ருதி, ஸ்டெல்லா சுரேஷ் ஆகியோர் பாடுகிறார்கள். பிரபல சின்னத்திரை நட்சத்திரங்கள் ஒவ்வொரு பாடலுக்கு முன்பும் தங்களுக்கு அந்த பாடல் பிடித்திருப்பதன் காரணத்தை பகிர்ந்து கொள்கிறார்கள்.

    சின்னத்திரை நடிகரும் பாடகருமான சாய்ராம் தனது ஏபிஎஸ் கிரியேட்டிவ் நிறுவனம் மூலம் இந்த நிகழ்ச்சியை தயாரிக்கிறார்.

    [html:aedf91ba58]<div align="center"></div>[/html:aedf91ba58]


    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  6. #675
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சிகரங்களின் சங்கமம்!

    திருநெல்வேலியில் நடந்த விஜய் டிவியின் `சிகரங்களின் சங்கமம்' நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நிகழ்ச்சியை நேரடியாக கண்டுகளித்தனர்.

    இசை உலகில் மாபெரும் கலைஞர்களான எம்.எஸ்.விஸ்வநாதன், டி.எம்.சவுந்தர்ராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ் ஆகியோருக்கு பிரத்தியேகமாக சமர்ப்பிக்கப்பட்ட நிகழ்ச்சியாகும் இது.

    இந்த நிகழ்ச்சியில் இவர்கள் மூவரின் பாடல்களையும் இளைய தலைமுறை பாடகர்களான பிரபல பின்னணி பாடகர்கள் ஸ்ரீநிவாஸ், சுசித்ரா, சைந்தவி மற்றும் நவீன் ஆகியோர் மேடையில் பாடினர். இவர்களுடன் விஜய் டிவியின் `சூப்பர் சிங்கர்' போட்டியில் பிரபலமடைந்த போட்டியாளர்களான அஜீஷ், ரவி, ரேணு, பிரசன்னா, ராகினிஸ்ரீ ஆகியோரும் பங்குபெற்றனர்.

    நடிகைகள் சங்கவி, அனுயாவின் நடனங்களும் இந்த இசை நிகழ்ச்சியில் இடம்பெற்றது. புதிய மற்றும் பழைய பாடல்களுக்கு இவர்கள் நடனமாடியது நேயர்களை கவர்ந்தது. மேலும் இவர்களோடு `உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' நட்சத்திரங்களான ஷெரிப், மனோஜ்குமார், பிரேம்கோபால், ஜெயலட்சுமி, சாய் பல்லவி மற்றும் திவ்யா ஆகியோரும் பாடல்களுக்கு நடனமாடினர்.

    நாளை மாலை 4 மணிக்கு விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
    [html:250186fa9e]<div align="center"></div>[/html:250186fa9e]

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  7. #676
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ஜெய் அனுமான்

    மெகா டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய பக்தி தொடர், `ஜெய் அனுமான்`.

    வாயுதேவனுக்கும், அஞ்சனாதேவிக்கும் மகனாக பிறந்த அனுமானின் பிறப்பு மகத்துவமிக்கது. அனுமான், அஞ்சனா தேவியின் மகன் என்பதால் ஆஞ்சநேயர் என்றும் வாயுதேவனுக்கு பிறந்ததால் வாயுபுத்திரன் என்றும் அழைக்கப்பட்டார்.

    தமது பால பருவத்திலேயே மலைச்சிகரங்களை தாண்டும் சக்தி பெற்றவர். மகத்துவமிக்க பிறப்பு முதல் குழந்தைப் பருவம், இளமைப்பருவம், ராம சேவை என தொடர்ந்து ராமர் பட்டாபிஷேகம் வரையிலான ராம பக்த அனுமானின் அதிபராக்கிரமசாலித்தனம் மற்றும் ராமபக்தியை படம் பிடித்துக்காட்டும் தொடர் இது.

    திங்கள் முதல் வியாழன்வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரில், அனுமானாக ராஜ்பிரேமி நடித்துள்ளார். ராமனாக சிராஜ் முஸ்தபாவும், லட்சுமணனாக முனிஸ்கானும் நடித்துள்ளனர். சீதாப்பிராட்டியாக பிரியாமுகர்ஜி மற்றும் மீனாட்சி தாகூர் ஆகியோர் நடித்துள்ளனர். ராவணனாக நடித்திருப்பவர்அனில் யாதவ். சஞ்ஜெய்கான் தயாரித்து இயக்கியுள்ளார்.


    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  8. #677
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    கலைஞர் டிவி-யில் விரைவில் ஜே.கே.ரித்தீஸ்-ஸின் "ஆண்டாள்" தொலைக்காட்சித் தொடர் நடிகரும், திமுக எம்.பி-யுமான ரித்தீஸ் ஒரு மெகா தொலைக்காட்சித்தொடரை இயக்கியிருக்கிறார். ஆரிக் மீடியா சார்பில் வெகு விமரிசையாக முடித்திருக்கும் இந்த 'ஆண்டாள்' சீரியல் இம்மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து கலைஞர் டிவி-யில் ஒளிபரப்பாக உள்ளது. இதனையடுத்து ஜே.கே.ரித்தீஸின் பல வருட நெருங்கிய நண்பர் ஆதம் பாவா இயக்கத்தில் வேட்டைப்புலி திரைப்படத்தில் நடிக்கிறார். இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் தயாராக இருக்கும் இப்படத்திற்கு பெரிய பட்ஜெட்டை ஒதுக்கியுள்ளார் தயாரிப்பாளர். பூஜையை மிகப்பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளதோடு, தமிழ், இந்தி மொழிகளில் உள்ள முக்கிய நடிகைகளுடன் பேச்சு வார்த்தை நடந்து கொண்டுள்ளது.
    "அன்பே சிவம்.

  9. #678
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Palich Penngal (Jaya TV, Sundays, 10 a.m.)

    The search for the brightest woman in the State begins with this new talent hunt. The aim is to bring out the hidden talent of women from across Tamil Nadu. The first stop is Madurai. This fun-filled show is hosted by Suhasini Mani Ratnam.

    Contests in singing, oration and hair styling will test the confidence levels of the participants. Also, relationships including compatibility between mother-in-law and daughter-in-law or mother and daughter, will be evaluated. Besides, there are contests for gossip and cookery. So, try your luck!

    நன்றி: Hindu
    "அன்பே சிவம்.

  10. #679
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Makkal TV,

    Muthamizh Mudhiram ( Thursday-Saturday, 12 noon)

    This programme showcases the talent of medical college students who took part in an inter-collegiate cultural event. Nearly 2,500 students from 200 colleges participated in various competitions — dance, music, drama, poetry and painting.

    Aalayam (Monday to Friday, 6.05 p.m.)

    This new programme, to be launched on Pongal Day (January 14), will focus on the temples of India. Architecture, history, music, dance… every aspect will be discussed here.

    Paati Sollum Kathai( Monday to Friday, 5.30 p.m.)

    This is a cartoon series based on grandmother's tales. Stories from the Panchatantra, folk tales and ‘needhi kathaigal' will form the content of this series. This first story will be telecast on January 14.

    நன்றி: Hindu



    பொங்கல் கொண்டாட்டம்

    மக்கள் தொலைக்காட்சியில் தைத்திருநாள் பொங்கல் கொண்டாட்டம் மற்றும் தமிழர் புத்தாண்டு நான்கு நாட்கள் விடிய விடிய கொண்டாடப்படுகிறது.

    பழையன கழித்து புதியன புகுத்தும் போகியில் தொடங்கி பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் ஆகிய நான்கு நாட்களும் மண்மணக்கும் வண்ணமயமான நிகழ்ச்சிகளை மக்கள் தொலைக்காட்சியில் காணலாம்.

    தமிழர்களின் பண்பாட்டையும் கலைக்கூறுகளையும் தங்கள் படைப்புகள் மூலம் உலகறியச் செய்த படைப்பாளிகளின் நேர் காணல், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கூத்து, வில்லிசை, காவடியாட்டம் முதலான மண்ணின் கலைகள், வேலூர் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களுக்கிடையே நடந்த முத்தமிழ் முதிரத்தின் கனவு காகிதம் கற்பனை, ஆலித்தமிழாரல் நடன நிகழ்ச்சி, தங்கத் தமிழ்ச்சிமிழ் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன.

    ஆலயம்

    வரும் 14-ந் தேதி தமிழர் திருநாள் முதல் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய நிகழ்ச்சி `ஆலயம்'

    திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.05 மணிக்கு தினமும் ஒளிபரப்பாகிறது இந்த `ஆலயம்' நிகழ்ச்சி. சமயம் என்பது வெறும் சடங்குகளின் தொகுதியல்ல. ஆன்மிகம் என்பது ஆர்ப்பாட்டத்தின் வடிவமல்ல. கோவில்கள் தமிழகத்தின் அடையாளங்கள், வரலாற்று ஆவணங்கள். தமிழகத்தில் எண்ணிறந்த ஆலயங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்றவை.

    இப்படி ஆலயத்தின் தல வரலாறு, தனிச்சிறப்பு, இவற்றோடு, ஒவ்வொரு பெயரில் ஆலயத்திற்குள் விளங்கும் அறிவியலையும் எளிமையாக விளக்கும் நிகழ்ச்சி..

    முதல் நிகழ்ச்சியில் அருள்மிக காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பர் திருக்கோவில் இடம் பெறுகிறது.

    பாட்டி சொல்லும் கதைகள்
    மக்கள் தொலைக்காட்சியில் பொங்கல் முதல் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய நிகழ்ச்சி பாட்டி சொல்லும் கதைகள்.

    ஒரு ஊர்ல ஒரு ஏரி இருந்தது. அதுல ஒரு முதலை ஜோடி வாழ்ந்தது. அந்த முதலைக்கு ஒரு குரங்கு நண்பனா இருந்தது. அந்த முதலைகளில் பெண் முதலைக்கு குரங்கின் ஈரலை சாப்பிட ஆசை வந்தது.... என்று பல நீதிக்கதைகளை பாடத்திலும் படித்திருக்கிறோம். பாட்டி சொல்லியும் கேட்டிருக்கிறோம்.

    இதுவும் அதுபோன்ற பாட்டி சொல்லும் கதைதான். ஆனால் கதை சொல்லப் போவது கார்ட்டூன் பாட்டி. கார்ட்டூன் பாட்டி ஒவ்வொரு கதையாக சொல்லத் தொடங்குவார். கதை சித்திரக் காட்சிகளாக நகரும்.

    குழந்தைகளுக்கானது இந்த பாட்டி சொல்லும் கதைகள். இன்று சித்திரக் கதைகள் குழந்தைகளின் மனதில்
    வன்முறையை தூண்டும் விதமாக உள்ளன. வன்முறை காட்சிகள் இல்லாமல் ஒளிபரப்பாகும் தரமான சித்திரக் கதை இது. குழந்தைகளின் சிந்தனையை வளர்க்கும் பஞ்ச தந்திரக் கதைகள், ஈசாப் நீதிக் கதைகள், தெனாலிராமன் கதை போன்றவற்றின் தொடராக வரவுள்ளது இந்த பாட்டி சொல்லும் கதைகள்.

    இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 5.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  11. #680
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Vijay TV

    Pongal Special(Thursday, Friday and Saturday)

    January 14: The day begins with Arul Urai and Samarpanam at 7 a.m. and 7.30 a.m. respectively. At 8 a.m., in ‘Kaviarangam - Thai Magalae Varuga', young lyricists from the film industry recite lines from their poetry. At 9 a.m. watch actor Surya play moderator and interact with talented youngsters. At 3 p.m. the ‘Ayirathil Oruvan' cast and crew discuss the project. At 7.30 p.m., a curtain raiser of the Dhanush-Shriya starrer ‘Kutty' will be aired.

    January 15: The day begins with ‘Aanmiga Pattimandram' at 7 a.m. Actors Dhanush and Shriya are special guests in ‘Koffee With Anu' at 9 a.m. At 10.30 a.m. is a special show with director-actor Venkat Prabhu. At 4.30 p.m. and 5.30 p.m., it's time for curtain-raisers of ‘Thamizh Padam' and ‘Porkalam,' respectively.

    January 16: At 9 a.m., ‘Jodi Porutham' will be aired. Following this, watch the story of a silk weaver unfold in the critically acclaimed film ‘Kanchivaram', directed by Priyadarshan. An interview with national award winner Prakash Raj will be aired at 10 a.m.

    Namma Veetu Kalyanam (Vijay TV, Sunday, 7 p.m.)

    The star-studded wedding of actor Sridevi (daughter of actor Vijayakumar) to NRI businessman Rahul will be the subject this week. Rajnikanth, Kamal Haasan, Radhika-Sarathkumar, Aishwarya-Dhanush, Jeyam Ravi-Aarthi, Kushboo, Meena and Vikram were some of the tinsel town celebs to wish the couple.

    Kamal 50 - Ulaganayaganin Paarvaiyil(Vijay TV, Monday to Wednesday, 6 p.m.)

    Vijay TV is ready to air ‘Kamal 50' where the top film personalities across South India showered praises on Kamal Haasan. This time, Kamal himself will go down memory lane and talk about the emotions that he went through at every stage of his 50-year-long career.

    நன்றி: Hindu
    "அன்பே சிவம்.

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •