Results 1 to 10 of 12

Thread: கண்ணோட்டம்...!!!!!!!

Threaded View

  1. #2
    Senior Member Veteran Hubber Madhu Sree's Avatar
    Join Date
    Mar 2008
    Location
    Singaaaaaara chennai...
    Posts
    3,926
    Post Thanks / Like
    மணி இரவு 9, கீர்த்தனா வெளியில் நின்று கொண்டிருந்தாள்...
    உள்ளே அம்மா அப்பா தம்பி கிருஷ் dinner சாப்பிட்டு கொண்டிருந்தனர்...
    அம்மா-ஆ ஆ ஆ என்று ஜன்னல் வழியே கெஞ்சலாய் கூவினாள் கீர்த்தனா ...
    சரி விடுங்க உள்ள கூப்டலாம் பொண் கொழந்தை என்றாள் அம்மா...
    வாய மூடிட்டு சாப்பிடுங்க எனக்கு எப்போ கூப்டனும்னு தெரியும் என்று மனதையும் குரலையும் சேர்த்து கனமாக்கிக்கொண்டு சொன்னார் அப்பா...
    நல்லா வேணும் என்பது போல கொக்கு காண்பித்தான் தம்பி கிருஷ் ...

    வெறுப்பு, கோவம், சோகம், இவை அனைத்துடன் பசி, எல்லாம் கலந்து தாரை தரையாக வழிந்தது கண்ணீர்...கீர்த்தனா ஓரமாய் உட்கார்ந்து விசும்பிக்கொண்டு இருந்தாள் ...
    ஹாய் கீர்த்தனா, என்றவுடன் திரும்பினாள் ... பத்ரீ தான்,
    இவர்கள் இருப்பது ஒரு பிளாக், மொத்தம் 50 வீடுகள், ஐந்து வீடு தள்ளி இருப்பது பத்ரீயின் வீடு ...
    சுகன்யாவுடையது பத்து வீடு தள்ளி இருந்தது...
    அவனுக்கு தெரியாமல் கண்ணீரை வியர்வையை துடைத்துக்கொள்வது போல் துடைத்துக்கொண்டாள் கீர்த்தனா...
    ஹோ ஹாய் பத்ரீ ...
    சாப்டாச்சா, என்ன இப்போ வெளிய நின்னுட்டு இருக்க? 9:30 ..ஆகுது.. என்றான் பத்ரீ
    .ம்ம்ம்...அதுவா சும்மா தான் bore அடி-chings என்று சிரித்தாள் கீர்த்தனா...
    ஹ்ம்ம் ok ok, என்று அவன் வீட்டுக்கு சென்றான் பத்ரீ ...ரோஷமாய் இருந்தது அவளுக்கு..

    10 ஆனது,11 ஆனது, 12:30-ம் ஆக அப்பா கதவை திருந்தார்...இனிமே அவ வீட்டுக்கு போன செருப்பு பிஞ்சிடும்...என்றார்
    வெறுப்பாய் முறைத்தாள் கீர்த்தனா...உள்ள போ டீ என்று கடுமையாய் சொன்னார் அப்பா...
    ச்ச என்று நினைத்துக்கொண்டாள், உள்ளே செல்ல, அம்மா ஆறி போன பூரி கிழங்கை சூடு செய்து தட்டில் வைத்து கீர்த்தனாவுக்கு கொடுத்தாள், 'ஒன்னும் தேவையில்ல' என்று முரண்டு பிடிக்க முயற்சித்தாள் கீர்த்தனா...
    இங்க பாரு வேண்டாம்னா குப்பை தொட்டில போட்டிடுவேன் ஒழுங்கு மரியாதையா கொட்டிக்கோ என்றார் அப்பா...

    பூரி கிழங்கை ஒரு தரம் பார்த்தாள் ..அதுவோ கீர்த்தனாவை மயக்க..வெட்கம் மானம் விட்டு எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்....
    அம்மா தலையை கோதி விட்டாள்...
    ஆமா போட்டு குடுக்கரதெல்லாம் போட்டு குடுத்துட்டு இப்போ எதுக்கு நடிக்கற...? என்று முகத்தை திருப்பிக்கொண்டாள் கீர்த்தனா...
    எரும நான் ஒண்ணும் போட்டு கொடுக்கல, அப்பா இன்னிக்கு சீக்கிரம் வந்திட்டார், நீ வீட்ல இல்ல.. கோவம் வராதா பின்ன அப்பாக்கு...உன் நல்லதுக்கு தானே சொல்றார்..எதுக்கு நீ அவ வீட்டுக்கு போற டா செல்லம்...என்று செல்லம் கொஞ்சினாள் அம்மா...
    அவ என் friend ம்மா இது என்ன வம்பா போச்சு, அப்பா office போறது எதுக்குன்னு நான் கேக்கேறேனா?....
    ஹ்ம்ம் கொழந்த மாதிரி பேசிட்டு இருக்க...நீ வயசுக்கு வந்து 2 வருஷம் ஆச்சு அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோ..
    so what? கிருஷ் மட்டும் எங்க வேணாலும் போலாம் நான் மட்டும் போக கூடாது அதானே...!!!??!?!?!?போ ம்மா...
    எல்லா வாதம் முடிந்து களைப்பாகி தூங்க சென்றாள் கீர்த்தனா...

    கீர்த்தனாவுக்கு சுகன்யாவை ரொம்ப பிடிக்கும்...ஏனோ அவள் அப்பா அம்மாவுக்கு அவ்வளவு நல்ல அபிப்ராயம் இல்லை.. சுகன்யா அவள் பருவத்திர்க்கேற்ற துள்ளல், மற்றவர்களை மயக்கும் பேச்சுடையவள் ... கொஞ்சி கொஞ்சி தான் பேசுவாள்...அவள் எதையும் தெரிந்து செய்வதில்லை அது அவள் சுபாவம்..கீர்த்தனாவுக்கு ஏன் சுகன்யாவை இவ்வளவு பிடிக்கும்??? 6-ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது எதற்கோ அவள் teacher கீர்த்தனாவை திட்டி 'உன் friends இங்க யாரு யாருலாம் சொல்லு' என்றார்...
    ஒருவரும் கையை கூட தூக்கவில்லை, சுகன்யா மட்டுமே எழுந்து நின்றாள்...அன்றிலிருந்து சுகன்யா மட்டுமே இவள் தோழி, எல்லாம்.... அதற்க்கும் மேல் அவ்வளவு நன்றியுணர்ச்சி.....

    இப்படியே அம்மா அப்பா மற்றும் தோழி சுகன்யாவுக்கு நடுவில் கீர்த்தனாவின் போராட்டம் தொடர்ந்துகொண்டே சென்றது...
    அன்று school-க்கு விடுமுறை..., மழை பொழிய போவதாய் radio மற்றும் tv-யில் அறிவித்ததால் இந்த விடுமுறை...ஆனால் என்றைக்கும் இல்லாததுபோல் சுள்ளென்று பொறித்து தள்ளியது வெய்யில்...
    அம்மா ஒரு half hour சுகன்யா வீட்டுக்கு போயிட்டு வரேனே please-ம்மா என்றாள் கீர்த்தனா..

    பாவமாய் தோன்றியது அம்மாவுக்கு...சரி வெளியலாம் நிக்க கூடாது ok-வா... correct-ஆ 3 மணிக்கு வந்திரணும் என்றாள் அம்மா..
    'thanks மம்மி' என்று அம்மாவுக்கு ஒரு முத்தம் கொடுத்து விட்டு சென்றாள் கீர்த்தனா...
    தன்னுடைய மகள் துள்ளி செல்லும் அழகை ரசித்துக்கொண்டே lunch basket பின்னிக்கொண்டிருந்தாள் அம்மா...

    'சுக்க்ஸ் என்ன டி பண்ணிட்டு இருக்க...'என்று சுகன்யா வீட்டுக்குள் நுழைந்தாள் கீர்த்தனா
    ஹப்பாஆஆ வாடி இன்னைக்கு அம்மா அப்பாக்கு office so, எனக்கு செம்ம bore, எல்லா friends-க்கும் call பண்ணி பேசிட்டு இருந்தேன் டி...
    ஹோ... ஹ்ம்ம்... எங்க வீட்டுல landline apply பண்ணியிருக்காங்க..டீ ..
    நீங்க very late டீ , இங்க பாரு cordless என்று பெருமையாய் சொன்னாள் சுகன்யா...
    கொஞ்சமாய் ரோஷம் தலை தூக்க அதை அடக்கி சிரித்தாள் கீர்த்தனா...
    கொஞ்ச நேரம் brainvita விளையாடி கொண்டிருந்தனர் இருவரும்...
    சரி வா கொஞ்ச நேரம் வெளிய நிக்கலாம்...bore அடிக்குது என்றாள் சுகன்யா...
    no டீ, அம்மா பாத்தாங்கன்னா கொன்னுடுவாங்க...வெளியலாம் போக கூடாதுன்னு சொன்னாங்க...
    அதெல்லாம் நான் பாத்துக்கறேன் என்று கதவு பக்கம் வந்து ஒரு நிமிடம் நின்றாள் சுகன்யா...
    கீர்த்ஸ் நான் கதவ திறக்கறேன் நீ அங்க அந்த பத்ரீ group இருக்கானு பாத்து சொல்லேன் என்றாள் சுகன்யா...
    எதுக்கு டீ என்றாள் கீர்த்தனா...
    அவங்க இருந்தாங்கன்னா அப்புறம் உங்க அம்மா திட்டுவாங்கள்ள?!!!!?!?!?!என்று சூட்சமமாய் பேசினாள் சுகன்யா...
    ஹோ ஆமா டீ correct-ஆ சொன்னடி என்றாள் கீர்த்தனா...
    கதவை திறக்க எட்டி பார்த்தாள் கீர்த்தனா...
    பத்ரீ group விளையாடி கொண்டிருந்தனர் சுகன்யா வீட்டு கதவு திறக்க அவர்களும் பார்த்தனர்...கீர்த்தனா தான் தெரிந்தாள் ..
    ஹே ஹே என்று கையை ஆட்டினர்...
    கீர்த்தனாவும் கையை ஆட்டிக்கொண்டே ரகசியமாய்..சுகன்யாவிடம்...'ஆமா டி இருக்காங்க; என்றாள்
    டமால் என்று கதவை சாற்றினாள் சுகன்யா..
    ஏண்டி இப்போ கதவ சாத்தின? என்றாள் கீர்த்தனா
    ஷ்ஷ்ஷ் உனக்கு ஒன்னும் தெரியாது...ஹே அங்க பத்ரீ இருந்தானா ??? என்றாள் சுகன்யா..
    பாக்கலியே எதுக்கு டீ கேக்கற? என்றாள் சுகன்யா..
    ம்ம்ம்ம்....ஒன்னும் இல்லப்பா...பத்ரீ கிட்ட ஒரு book குடுக்கணும் அதான், நான் திரும்பவும் கதவை தொறக்கறேன் நீ பாத்து சொல்றியா என்றாள் சுகன்யா...
    ம்ம்ம்ம்ம் ok ok என்றாள் கீர்த்தனா.....
    கதவை திறக்க, அங்கே பத்ரீ இருப்பதை பார்த்தாள் கீர்த்தனா, அனைவரும் சுகன்யா வீட்டு கதவையே பார்த்து கிசு கிசுத்துக்கொண்டிருந்தனர்...
    இருக்காண்டி என்று சொல்லி புன்னகைத்தாள் கீர்த்தனா...
    மறுபடியும் டமால் என்று கதவை சத்தமாய் சாத்தினாள் சுகன்யா...
    ஏண்டி இப்படி பண்ற கோவிச்சுக்க போறாங்க என்றாள் கீர்த்தனா..
    ஹோ அப்டி சொல்றியா சரி அப்போ திரும்ப கதவு திறந்து ஒரு தடவை ஹாய் சொல்லலாம் என்ன என்றாள் சுகன்யா...
    ok என்றாள் கீர்த்தனா...
    கதவை மறுபடியும் திறக்க அங்கே ஒருவரும் இல்லை... ஒன்றும் புரியவில்லை இருவருக்கும்...
    சரி டீ 3 ஆச்சு, நான் வீட்டுக்கு போறேன், உனக்கு bore அடிச்சா அங்க வா என்று கீர்த்தனா அவள் வீட்டுக்கு செல்ல...பத்ரீ and group அம்மாவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்...
    கீர்த்தனாவுக்கு பகீர் என்றிருந்தது...
    இவள் வீடை நெருங்கும் போது அனைவரும் களைந்து சென்றிருந்தனர் ...

    உள்ளே இதை பற்றி ஒண்ணும் பேசாமல் மெல்ல civics book-ஐ எடுத்து சும்மாவே புரட்ட ஆரம்பித்தாள் ...
    அம்மா மெல்ல பக்கத்தில் வந்து உட்க்கார்ந்து கீர்த்தனாவையே கூர்மையாக .பார்த்துக்கொண்டிருந்தாள்.
    கவனிக்காதது போல் இருந்து, பொறுமையாய் இழந்து, 'என்னம்மாஆஆஅ' என்று பயமும் சந்தேகமுமாய் கேட்டாள் கீர்த்தனா...
    சுகன்யா வீட்டுல என்ன பண்ணிட்டு இருந்த? என்றாள் அம்மா...
    ஏம்மா ஆஆஆ ...சும்மா பேசிட்டு தான் இருந்தேன்...
    ம்ம்ம்ம்ம் பேசின அப்புறம்?? என்று தீர்கமாய் கேட்டாள் அம்மா...
    'போச்சு' என்று மனதுக்குள் அலாரம் அடித்தது...பயந்துகொண்டே அவ்வளவுதான்ம்மா... என்றாள்
    ஹ்ம்ம்ம்ம் சரி என்கிட்டே சொல்ல விருப்பம் இல்லேன்னா வேண்டாம் என்று எங்கேயோ பார்த்து அழ ஆரம்பித்தாள் அம்மா...
    என்னாம்மாஆஆஆ ஆச்சு...கலவரமானாள் கீர்த்தனா...
    இங்க பாரு டீ நீ எனக்கு ஒரே பொண்ணு நீ நல்லா இருக்கணும்னு தான் இங்க அங்க போகாதனு சொல்றது...
    சரி இப்போ என்ன அதுக்கு ??? ஒன்றுமே புரியவில்லை கீர்த்தனாவுக்கு...
    நீ சுகன்யா வீட்டுக்கும் போ படி நான் எதுவும் சொல்ல மாட்டேன், அங்க கதவை ஏன் தொறந்து தொறந்து மூடின?என்றாள் அம்மா....
    'என்ன?' 'நானா' 'நான் திருந்து மூடினேனா' என்று அதிர்ச்சியாய் கேட்டாள் கீர்த்தனா...
    நானும் பாத்துட்டு தான் இருந்தேன்...ஹ்ம்ம்ம்ம் இங்க என்ன நடந்துதுன்னு தெரியுமா...

    பத்ரீ கலை எல்லாம் கீழே நின்னு பேசிட்டு இருந்தனர்...
    கலை பத்ரீயிடம்...,

    டேய் பத்ரீ அங்க பாரு சுக்கு காப்பி ...
    ச்ச இல்ல அம்பாஸிடர் டா...
    ஹ்ம்ம்ம்ம் டேய் ஜகன் அம்பாஸிடர் உனக்கு தான் route போடுது போல???
    டேய் சும்மா இருடா என்றான் ஜகன்...
    கதவு சாத்திட்டாங்க டோய்
    கலை, 'திரும்பவும் திறக்கும் பாரு'
    பத்ரீ, 'ஹே ஆமா டா'
    கலை, 'ஜகன் ஜமாய்'
    ஜகன், 'டேய் அடி வாங்க போற!'

    அதிர்ச்சியாய் இருந்தது கீர்த்தனாவுக்கு, வாயை பொளக்க கேட்டாள் கீர்த்தனா..
    அம்மா சத்தியமா சொல்றேன் ம்மா, promise நான் திறக்கலை, அது சுகன்யா தான் அந்த பக்கம் நின்னு இந்த வேலைய பண்ணினா...
    அவ செஞ்சானு நீ சொல்ற, நான் நம்பறேன், ஆனா மத்தவங்க?
    இங்க பாரு கீர்த்தூ, ஊர் வாய் பொல்லாதது, மதியானம்கறதால எல்லாரும் உள்ள இருந்தாங்க, இதே எல்லாரும் இருக்கறப்போ நடந்தா...யோசிடீ என்றாள் அம்மா...
    சரி மா promise-ஆ நான் இனிமே போகல மா, அவ நல்ல பொண்ணு தான்ம்மா 'மனதில் ஏன் அவளுக்கு வக்காலத்து வாங்கறோம் என்று புரியவில்லை கீர்த்தனாவுக்கு
    சரி உனக்கெப்படி தெரிஞ்சிது...
    இங்க தான் ஜன்னல் வழியா பாத்தேன், நான் அவங்கள கூப்ட்டு ஏம்பா நாம எல்லாரும் இதே block ல தான் இருக்கோம், இப்படி நடந்துக்கலாமா ப்பா , வீட்டுக்கு வந்து கூட நீங்க பேசலாம், ஆனா இந்த மாதிரியெல்லாம், comment அடிக்ககூடாதுன்னு பொறுமையா சொன்னேன், நான் இதை விசாரிக்கறேனு சொல்லி அனுப்பி வெச்சேன், பசங்க நல்ல பசங்க தான் அவங்க correct-ஆ எடுத்துப்பாங்க, correct-ஆ நடந்துக்கறது உன் பொறுப்பு...
    நீ ஒழுங்காத்தான் இருக்க,அவ பின்னாடி நின்னு உன் பேர கெடுக்கறாளே , அவள குத்தம் சொல்லல,நல்ல பொண்ணுதான்,உங்க வயசுல இதெல்லாம் சகஜம் தான், இனிமே ஜாக்றதையா இருங்க என்ன? என்றாள் அம்மா..

    அன்று தான் அம்மாவை புரிந்துக்கொண்டாள் கீர்த்தனா..

    இதோ 2014, இன்று தனக்கு ஒரு மகள் பிறந்து அவளுக்கு 13 வயது ஆகும் போது தான் தெரிகிறது ஒரு பெண்ணை வளர்ப்பது எவ்வளவு கடினம் என்று... அதுவும் இந்த காலத்தில்.... அந்த காலம் எவ்வளவோ தேவலாம்...
    இதை நினைத்த போது கொஞ்சமாய் நீர் திரை விழ, அம்மாவுக்கு தான் வாங்கி குடுத்த cellphone-க்கு call செய்து, 'அம்மா எப்படிம்மா இருக்க, அப்பா எப்டி இருக்காரு, கிருஷ்ணா சாக்ஷி நல்லா இருக்காங்களா, சாப்டியா,',
    அம்மாவோ, 'அவங்க இருக்கட்டும் பட்டு,நீ மாப்ள கொழந்த நல்லா இருக்கீங்களா?'என்று ஒரு மணி நேரம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தனர்...
    அம்மா பெண் உறவு ஒரு தனி வகை தான், இணையில்லை...!
    Last edited by Madhu Sree; 12th December 2018 at 01:44 AM.
    எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்...!!!

  2. Likes Russellhni liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •