Results 1 to 10 of 421

Thread: Velan's Cuisine Extraordinaire

Hybrid View

  1. #1
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    தேங்காய் பற்றிய ஒரு சின்ன டிப்ஸ் தரேன்..

    தேங்காய் சட்னி செய்தால் அன்றைக்கே சாப்பிட வேண்டும். தேங்காய் சட்னி, துவையல் யாருக்கு தான் பிடிக்காது?

    ஆனால், முதல் நாள் அரைத்த சட்னியை மறுநாள் சாப்பிட முடியாது அல்லவா? பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டாலும் ஒரு மாதிரி சுவையும் துர்நாற்றமும் (rancid) வரக்கூடும்.

    அதனால், வெள்ளை சட்னியில் தேங்காய்க்கு பதில் ஆல்மண்ட்ஸ் சேர்த்து சட்னி அரைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும், இரண்டு, மூன்று நாட்களுக்கும் பிரிட்ஜில் வைத்தால் கேட்டும் போகாது. உங்களுக்கு ஏதுவான வகையில், வெள்ளை சட்னி எந்த ரெசிபியை செய்வீர்களா, அதே போல் இதையும் செய்யலாம். ஆல்மண்ட்ஸ் பற்றி நான் சொல்ல தேவை இல்லை, மிகவும் ஆரோக்கியமான ஒன்று, எல்லா வயதினரும் சாப்பிடலாம்.

    ஆனால் தேங்காய் மிகவும் நல்லது. உடைத்தவுடன் சாப்பிடுங்கள். ஆப்பிள் உட்பட மற்ற பழங்களோடும் சாப்பிடலாம்..

    குழம்பு வகைகளுக்கு தேங்காயை அரைத்து விடும் போது, அதிக நேரம் கொதிக்க விட கூடாது.. அது கெடுதலை விளைவிக்கும். தேங்காய் அரைக்கும் போது, உடன் சிறிதளவு வெங்காயமும், சோம்பும் சேர்த்து அரைத்து எல்லா குழம்பு வகைகளிலும் சேர்க்கலாம். சுவை வேறு லெவலுக்கு மாறிவிடும்.

    சாதம் குக்கரில் வைத்தாலும் சரி, வெடித்தாலும் சரி, 1 ஸ்பூன் தேங்காய் என்னை சேர்த்து கொள்ளுங்கள். இந்த சாதத்தை பிரிட்ஜில் வைத்து மறுநாள் சாப்பிட, அரிசி சாதத்தில் உள்ள கலோரி குறைந்து விடும். (Rice becomes resistant to the digestive enzyme). நேற்றைய சாதத்தை இன்று சாப்பிடுங்க, இன்றைய சாதத்தை நாளை சாப்பிடுங்க.. (நம்மூர்ல பழையது இப்படித்தானே சாப்பிட்டார்கள்).. குறைந்த கலோரியில் நிறைய சாப்பிடலாமே..

    கொரோனவை விட்டு தள்ளுங்க.. நன்றாக சாப்பிட்டு பிரேக்கை என்ஜாய் பண்ணுங்க.
    Last edited by rajaramsgi; 28th April 2020 at 03:00 PM.

  2. Likes NOV liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •