Quote Originally Posted by tiruttakkan View Post
ஜீனோ, ஸ்ரீமங்கை!

ஞாபகம் வருதே!

நமக்குப் பிடித்த ஒன்றின் சுவை எப்படியிருக்குமென்று ஓர்
அறியாதவர் கேட்டால், நாக்கை நீட்டி, மடக்கி, படம் வரைந்து,
பாகங்கள் குறித்து, பாடி, ஆடி, பொம்மலாட்டம் செய்தெல்லாம்
விளக்கமுடியாது. ஆனால், கூடி உண்டு கொண்டாடியவர்கள்
நிலை வேறு. மஞ்சள் என்று நான் சொல்வதை நீங்களும் மஞ்சள்
என்றால் ஒரு வித உணர்வு! எனக்குள் தெரியும் அதே மஞ்சளை
நீங்கள் உணர்ந்தீர்களா என அறிய வழியில்லை! நீலமென்று வெட்டிப்
பேசிவிட்டாலோ வேறு மகிழ்வு!

வெகு நாட்களுக்குப் பின் தமிழ் எழுதுகிறேன்...மரத்துப் போன காலில்
மீண்டும் உணர்வு திரும்பும் நேரம் ஒரு பாடு படுத்துமே அது போன்ற
ஓர் இன்னலும் இன்பமும் கலந்த குறுகுறுப்பு!

அன்புடன்

திருத்தக்கன்.
அடடா! இரசனைக்கும், உணர்வலைகள் சேரும் நண்பர் குழாமுக்குமான பொருத்தத்தை உங்களுக்கே உரிய நடையில் சொல்லிவிட்டீர்கள்! நான் வராவிட்டால் என்ன...

தனியே கிடக்கும் குவளைப்பூவுக்காக மட்டுமா தென்றல் வீசும்? சோலையைத் தாலாட்டும் தென்றல் தேடி "கா" விரிந்து கிடக்கிறது (கிடையாய்க் கிடக்கிறது!) வீசுங்கள் தென்றலே!