Results 1 to 10 of 27

Thread: தல புராணம்

Threaded View

  1. #5
    Senior Member Seasoned Hubber geno's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    601
    Post Thanks / Like
    Quote Originally Posted by P_R View Post
    வலையெனும் பெருங்கடலில் தேடி Elizabeth Barret Browning translation படிச்சிக்கிட்டு இருக்கேன் வரிசையா வரேன்.
    அதையெல்லாம் படிச்சுட்டு சிரிச்சிட்டு இருக்கீங்களா?! எனக்கே மறந்து போச்சு.. அது ஒரு காலம்.

    Quote Originally Posted by P_R View Post
    தருமு சிவராமு, ப்ரமிள் ஒரே ஆள் தானே? ஒரு வேளை அந்த இரண்டு பெயர்கள்ல வந்த கவிதை style வெவ்வேற மாதிரியா?
    ஆமாம் - இரண்டும் ஒருவரே (பசுவைய்யா = சுந்தர ராமசாமி போல) அவர் நிசத்தில் பல புனை பெயர்களில் எழுதியிருக்கிறார். ஆரம்பத்தில் தருமு சிவராமு.. இரண்டு பெயர்களில் வெளிவந்த கவிதைகளையும் படித்த நினைவு..

    உண்மையில் - திராவிட இயக்க சித்தாந்தங்களுக்கு வெளியில் இயங்கிய படைப்புகளைப் படிக்க வேண்டும் என்கிற சுய விருப்பத்தின் பேரில் படித்தவை - பெரும்பாலானவை; அப்போது கணையாழியை தீவிரமாக வாசிப்பேன் - சில படைப்புகளின் இயங்குதளம் புரியாமலே கூட.

    "வர்ணம்" பற்றி பேசுவதைத் தவிர்த்து - அன்றந்த காலகட்டத்து சமூக நிகழ்வுகளின் மீதான ஆழப்பார்வையையும் தவிர்த்து - தத்துவ விசாரமும், தமிழ் அடையாள அரசியல் மறுப்பை/ கேலியை - உள்ளீடாகக் கொண்டே பெரும்பாலான "க.ந.சு" "சி.சு.செ" குழாம் கவிதைகள் - பரிமளித்துக் கொண்டிருந்தன என்அதே என் பார்வையாக இருந்தது; ஆனால் (திராவிட இயக்கம் தவிர்த்த/ வாணியம்பாடி குழு தவிர்த்த) வானம்பாடிக்குழு , மற்றும் சிசுசெ,கநசு குழுக்கள் - வேறு பல வீச்சுகளை அறிமுகம் செய்து கொண்டிருந்தன.

    Quote Originally Posted by P_R View Post
    Haha. மகுடேஸ்வரனோட 'சிற்றின்பம்' ன்ற கவிதை ஞாபகத்துக்கு வருது. சரியா வரிகள் ஞாபகம் இல்லை. தேடிக் கிடைச்சதும் சுட்டி தரேன்.
    Any pagadi involved in it - for what i had uttered earlier?!

    Quote Originally Posted by P_R View Post
    I think maiam guys would be pretty interested if you do manage to find them.
    Will certainly do if i lay my hands on them again!


    Quote Originally Posted by P_R View Post
    ஞானக்கூத்தன் - ஓரளவுக்கு கல்யாண்ஜி - தவிர ரொம்ப பிடிச்சவங்கன்னு யாரையும் சொல்ல முடியாது.
    ஞானக்கூத்தனுக்கு ஒரு திரி ஆரம்பிச்சு நகரவே இல்லை : http://www.mayyam.com/talk/showthrea...3-GnAnakoothan

    அவர் கவிதைகளைப் பத்தி நீட்டி முழக்கி எழுதணும்னு - பரிமேலழகனும்னு - நினைப்பேன். கவிதையைப் பத்தி எழுதி ரொம்ப தட்டையாக்கிடுவோம்னு ஒரு தயக்கம். புறநானூறு பத்தி ஒரு podcast பண்ணி ரொம்ப flat ஆயிடுச்சு. அதுனால ஞானக்கூத்தன் பிழைச்சிக்கிட்டே வரார். ஒருநாள் சிக்க வச்சிருவேன்.
    கண்டிப்பாக அங்கே வருகிறேன்; சோம்பேறித்தனமும், அதிகமாக எழுதுவதில் எனக்கே இருக்கும் சலிப்பும்(! ) - சில நேரங்களில் படிப்பதில் இருக்கும் விருப்பம், எழுதுவதில், எதிர்வினையாற்றுவதில் இல்லை - அதற்கு ஒரு காரணமும் இல்லை - யாரையும் போர் அடிக்க விருப்பம் இல்லாததும் ஒரு காரணம்.

    Quote Originally Posted by P_R View Post
    ] Paruthiveeran sidekick kid: நீ இந்த மாதிரி பேசி நான் பார்த்ததேயில்லப்பா!
    கவிதைப் பக்கங்களில் நான் இப்படித்தான் பேசியிருக்கிறேன்! (இப்போ இந்தப் பக்கம் வருவதே இல்லை!) ...தவிர எழுதுவததை விட, அசை போடுவதிலும், அமைதியாயிருப்பதிலும் உள்ள 'லயம்' அதிகமாகப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது!
    Last edited by geno; 10th February 2013 at 12:20 AM.
    M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....

    இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
    இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!

    டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!

    "The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •