Results 1 to 10 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

Hybrid View

  1. #1
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நமது மக்கள் திலகம் அவர்களுடைய திரியில் தினமணியில் பொய் செய்தி மன்னர் திரு தீனதயாளன் அவர்களுடைய கற்பனையில் உருவாகி வெளியிட்டுள்ள ஒரு மகா மெகா புளுகு திரியில் பகிர்ந்திருன்தது. பொதுமக்கள் படிக்கும் திரிகளில் இது போல பொய் செய்திகளை வருவதால் படிப்பவர்கள் அதனை தவறாக உண்மை என நினைக்கும் நிலை உருவாகலாம் என்ற காரணத்தால் அதற்க்கு விளக்க உரை எழுதியிருக்கிறேன். அதனை திரி நண்பர்களுக்கு இங்கு பகிர்ந்துள்ளேன்.




    Quote Originally Posted by Shahriyar Akbar View Post
    நடிகை சாவித்திரிக்கு பணமும் வீடும் கொடுத்த தங்கத் தலைவன்

    from dinamani

    சாவித்ரி-18. ஏமாற்றத்தின் பள்ளத்தாக்குகளில்!
    By பா. தீனதயாளன்
    First Published : 05 September 2015 10:00 AM IST

    ஜெமினியை நாயகனாக நடிக்கச் செய்து சாவித்ரி தயாரித்து இயக்கிய குழந்தை உள்ளம் மூலம் நாலு லட்சம் லாபம் வந்தது. சிவாஜியிடம் செல்லாமல் ஜெமினியை வைத்தே தொடர்ந்து பல சினிமாக்களை சாவித்ரி தயாரித்து இயக்கி இருக்கலாம்.

    பிராப்தம் உருவான நேரத்தில் எம்.ஜி.ஆர்.- சிவாஜிக்கு நிகராக, ஜெமினி கணேசனுக்கும் மார்க்கெட் உச்சத்தில் இருந்தது.

    சாவித்ரி உடன் பிறவா சகோதரர் சிவாஜியை முழுதாக நம்பி களத்தில் இறங்கினார். கடைசியில் அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாகி விட்டது!

    காதலன் கணேசனும் நிரந்தரமாக சாவித்ரியைக் காப்பாற்றவில்லை. ‘பாசமலர்’ அண்ணன் கணேசனும், பிராப்தத்துக்குப் பின்னர் சாவித்ரியை அடியோடு மறந்து விட்டார்.

    --------------ஆனாலும் சாவித்ரி தேடிப் போகாமலே, காப்பாற்றுங்கள் என்று கேட்காமலே, ஒரே ஒருவர் ஓடோடி வந்து உதவி செய்தார்.

    பொன்மனச்செம்மல். வள்ளல். மக்கள் திலகத்தைத் தவிர, அவர் வேறு யாராக இருக்க முடியும்?

    மகாதேவிக்காக வேட்டைக்காரன் கொடுத்த பரிசு! பொது மக்களுக்குத் தெரியாது. கருணையிலும் கண்ணியம். இரக்கத்திலும் ரகசியம்!
    திரு தீனதயாளன் அவர்களின் அருமையான கற்பனையில் உருவான ப்ராப்தம் கதை

    ப்ராப்தம் திரைப்படம் பார்த்தால் தெரியும் எந்தளவிற்கு படம் சிக்கனமாக எடுக்கப்பட்டதென்று !

    ஆடம்பர காட்சிகள் இல்லை....ஆடம்பர உடைகள் இல்லை....ஊட்டி கோடை போன்ற இடங்களில் கூட காட்சி அமைப்புகள் இல்லை...!

    ப்ராப்தம் எடுக்கும்போது திருமதி சாவித்திரி மிக பெரிய கோடீஸ்வரிகளில் ஒருவர்.

    அப்படிப்பட்டவர் எந்த ஆடம்பர காட்சிகளோ, பாடல்களோ, அமைப்புகளோ, உடை அலங்காரங்களோ இல்லாமல் மிகவும் சிக்கனமாக ( அதுவும் தமது சம்பளத்தில் வெறும் 10 சதவிகிதம் மட்டுமே சாவிதிரிக்காக வாங்கி நடித்தார் நடிகர் திலகம் ) ப்ராப்தம் படம் எடுத்து ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டார் .....என்று மறைமுகமாக நண்பர் தீனதயாள் ஒரு கட்டுகதையை அவிழ்த்து விட்டுள்ளது பெரும் வியப்பு.

    எப்படி பட்ட ஒரு புளுகு மூட்டையை இவர் அவிழ்த்து விடுகிறார் என்று !

    சமீபத்தில் திருமதி சாவித்திரி புதல்வியார் அவர்களிடம் திருமதி சாவித்திரி அவர்களுக்கு மக்கள் திலகம் அவர்கள் வீடும் பணமும் கொடுத்ததாக ஒரு செய்தி உள்ளதே என்றபோது...அவர் கூறிய பதில் "அம்மா சாவித்திரியிடம் இதனை பற்றி யாரும் கேட்டு இனி தெரிந்துகொள்ள முடியாது என்கின்ற நம்பிக்கையில், தைரியத்தில் இப்படி பல கட்டு கதைகளை கூறுவது வழக்கம்தானே என்று புன்வுருவளோடு கூறியுள்ளார் !

    கற்பனைகதைகளை தொடர்ந்து எழுதட்டும் அவர்கள் விருப்பம்...ஆனால் நடிகர் திலகம் அவர்களை குறைத்து எழுதும் போக்கு கண்டிக்கத்தக்கது.

    சாவித்திரி அவர்கள் பற்றிய உண்மையான தகவல் கொண்ட புத்தகம் "சாவித்திரி - கலைகளில் ஓவியம் " நாஞ்சில் இன்பா எழுதியுள்ளார். சாவித்திரி மகளுடன், உறவினருடன், திரை உலகில் சாவித்திரி அவர்களுடைய நெருங்கி பழகியவர்களுடன் உரையாடி புத்தகம் எழுதியுள்ளார்.

    அந்த புத்தகத்தில் நடிகர் திலகம் அவர்கள் நடிப்பில் சுமதி என் சுந்தரி திரைப்படத்துடன் ப்ராப்தம் திரைப்படம் ஒரே நாளில் வெளியானது. ஆயினும் ப்ராப்தம் திரைப்படம் 100 நாட்கள் ஓடவில்லையே தவிர வெளியிட்ட அனைத்து திரை அரங்கிலும் 4 வாரங்களுக்கு குறையாமல் ஓடியது.

    அதிகபட்சமாக மதுரை சிந்தாமணியில் 67 நாட்கள் ஓடியது.

    ஸ்ரீ சாவித்திரி ப்ரோடக்ஷேன் சார்பில் தயாரிக்கப்பட்ட ப்ராப்தம் திரைப்படம் எடுக்க செலவு சுமார் ஆறு லட்சத்தி நாற்பதாயிரம் ரூபாய்.(app. Rs. 6,40,000 ) தமிழகத்தில் ப்ராப்தம் வசூல் செய்த தொகை பதினைந்து லட்சத்தை தாண்டியுள்ளது (Over Rs. 15,00,000 வசூல் தகவல் உபயம் : திரு பம்மலார்)

    ஜெமினியோடு கருத்துவேறுபாடு குழந்தை உள்ளம் திரைப்படம் சாவித்திரி தயாரித்தபோதே உருவானது..காரணம் திரு ஜெமினி அவர்கள் சாவித்திரியை திருமணம் செய்த பிறகும் குழந்தை பிறந்த பிறகும் மதுரையில் பரந்த மீன்கொடியில் தம் கண்களை கண்டார் என்பது தமிழ் திரை உலகறிந்த விஷயம். நடிகர் திலகம் அவர்கள் இதனை திரு ஜெமினியுடன் உரையாடி ஞாயம் கேட்கப்போக இருவருக்கும் சிறிது மனகசப்பு உண்டானது உலகம் அறிந்தது - இது உண்மை !

    மேலும் சில உண்மையான தகவல்கள் பார்க்கலாம் - இதை திருமதி சாவித்திரி அவர்களுடன் நல்ல முறையில் நேர்மையான தொடர்பில் இருந்த எவரிடம் கேட்டு விசாரித்து கொள்ளலாம் !

    அப்போது தெரியும் நண்பர் தீனதயாள் அவர்கள் அவிழ்த்து விட்டுள்ள கதையின் நம்பகத்தன்மை பற்றி -

    திருமதி சாவித்திரி 1981 மே 11, பெங்களுரு சாளுக்ய ஹோட்டல் அறையில் மயங்கி நினைவற்று போனார். பெங்களுரு லேடி க்ரூசன் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள செய்தனர். ஹைபோ கிளி சமிக்கு கோமா நிலை.

    அவரை அங்கிருந்து தனி விமானம் மூலம் திரு குண்டுராவ் அவர்களை தொடர்புகொண்டு சென்னைக்கு கொண்டு வர உதவியவர் திருமதி சரோஜாதேவி.

    17-05-80 தனி விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட திருமதி சாவித்திரியை லேடி வெல்லிங்டன் மருத்துவமனைக்கு நேராக கொண்டுசென்று வைத்தியம் தொடங்கப்பட்டது அவர் நினைவு திரும்புவதற்கு. வைத்தியம் செய்தது பிரபல நரம்பியல் நிபுணர் மருத்துவர் ராமமூர்த்தி அவர்கள் குழு.

    ஜூன் மாதம் மூன்றாவது வார இறுதி 1981 வரை அங்கு இருந்து பிறகு அவரை அதே நிலையில் சாவித்திரி ஆரம்பகாலத்தில் வாங்கிய அண்ணா நகர் வீட்டில் வைத்து வைத்தியம் பார்த்தார் திரு ஜெமினி கணேசன். அவரை மன உளைச்சலுக்கு ஆளாகியதன் பிரயசிதமாக அத்தனை செலவையும் தாமே செய்தார் ஜெமினி.

    டிசம்பர் 22, நிலைமை மிக மோசமாக அவரை மீண்டும் லேடி வெல்லிங்டன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 26 டிசம்பர் 1981 உயிர் நீத்தார் நடிகையர் திலகம் ! அவரை அவரது சொந்த அண்ணா நகர் வீட்டில் அதாவது முதன் முதலாக இவர் எந்த வீட்டில் இருந்து ஜெமினியை மணக்க வெளியே வந்தாரோ அந்த வீட்டில் வைத்தே இறுதி காரியங்கள் நடைபெற செய்தார் ஜெமினி...

    இதுதான் உண்மையான நிகழ்வு !

    இதில் இருந்தே சாவித்திரிக்கு எந்த வீடும் பணமும் யாரும் கொடுக்கவில்லை என்பது தெள்ளம் தெளிவாக தெரிகிறது !

    திரு தீன தயாளன் அவர்கள் கற்பனை கதை மன்னன் என்பதற்கு இன்னொரு சான்று.

    ஜெமினி கணேசன் அவர்கள் தொடர்ந்து பல வருடங்கள் ஒரு டஜன் படங்களில் தொடர்ந்து நடித்தார் என்பது. அப்படி ஒரு உலக அதிசயம் நடக்கவே இல்லை.

    திரு ஜெமினி அவர்கள் 1972இல் அதிக பட்சமாக 13 படங்களில் நடித்தார். அதில் ஆறு படங்கள் ஒன்று முதல் மூன்று வருடங்களாக படபிடிப்பு நடக்காததால் குறித்த நேரத்தில் வெளியீடு தள்ளிப்போன படங்கள் !
    1969 இல்10 படங்கள்
    1970 இல் 6 படங்கள்
    1071 இல் 4 படங்கள்
    1972 இல் 13 படங்கள்
    1973 இல் 6 திரைப்படங்கள்
    1974 இல் 4 படங்கள்
    1975 இல் 3 படங்கள்
    1976 இல் 5 படங்கள்
    1977 இல் 3 படங்கள் ,
    1978 இல் 2,
    1979 இல் 1,
    1980 1 ( மலையாளம் மட்டும் தமிழ் இல்லை )
    1981, 1982 படங்கள் இல்லை

    நடிகர் திலகம் அவர்கள் நடித்த படங்கள்

    1969 - 9 படங்கள்
    1970 - 9 படங்கள்
    1971 - 10 படங்கள்
    1972 - 7 படங்கள்
    1973 - 9 படங்கள்
    1974 - 6 படங்கள்
    1975 - 8 படங்கள்
    1976 - 6 படங்கள்
    1977 - 8 படங்கள்
    1978 - 9 படங்கள்
    1979 - 7 படங்கள்
    1980 - 6 படங்கள்
    1981 - 7 படங்கள்
    1982 - 13 படங்கள்
    1983 - 8 படங்கள்
    1984 - 10 படங்கள்
    1985 - 8 படங்கள்
    1986 - 7 படங்கள்
    1987 - 10 படங்கள்

    எத்தனை புதுமுகங்கள் வந்தாலும் எத்தனை விதமாக ரசனை மாறினாலும் நடிகர் திலகம் அவர்களுடைய மார்க்கெட் உடல் நிலை ஒத்துழைத்த வரை என்றும் உச்சத்தில் மட்டுமே இருந்தது என்பதன் சான்று அவர் நடித்த படங்களின் எண்ணிக்கைகள் !

    திரு தினமணி தீனதயாலுவின் கற்பனை கதை மட்டுமே அன்றி உண்மை எள்ளளவும் இல்லை என்பது இதன்மூலம் வெளிச்சத்திற்கு வருகிறது !

    அப்பட்டமான புளுகு மூட்டை இவர் தொடர்ந்து நடிகர் திலகத்தை இறக்கி எழுதி வருவது, இவரது கற்பனை கதைகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு நன்கு புரியும் !

    எதற்குதான் இந்த கேடுகெட்ட பொழைப்போ இந்த தீனதயாளுவிர்க்கு என்பது தெரியவில்லை.

    நடிகர்திலகம் பற்றி தவறான பொய் செய்தி தொடர்ந்து புளுகும் பொய் செய்தி மன்னன் தினமணி திரு தீனதயாளன் கற்பனை கதை இங்கு பதிவானதால் நான் ஒரு ரசிகன் என்ற அடிப்படையில் இங்கு அந்த செய்தி படிக்கும் வெளி மக்கள் தவறாக நினைத்துவிடகூடாது என்பதால் இந்த உண்மை விளக்கம் கொடுக்க நேர்ந்தது !

    RKS
    Last edited by RavikiranSurya; 15th December 2015 at 07:27 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •